Archive for August, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-2–6-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

பிணங்கள் இடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல  சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-

மல்லை -பெருமை உள்ள

——————————

வியாக்யானம் –

பிணங்களடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் –
மனிச்சு கலவாத நெஞ்சை உடைய
ருத்ரனோடு கூட –
ஸ்மசாந பூமியிலே ஆடா நின்றுள்ள
ருத்ரனோடே கூட –
அபிமான உபஹதரானவர்களுக்கும்
நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க
திருமேனியில் இடம் கொடுத்து இருக்கும் நீர்மையைச் சொல்லுகிறது –
திரு வாழி ஆழ்வானைச் சொல்லுகிற இடம்
நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம்-

விசும்பில் கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல  சயனம் –
இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை
அனுசந்தித்து நித்ய ஸூரிகள் சஞ்சரிக்கிற படியை
சொல்லிற்றாகவுமாம் –

அன்றிக்கே
ஆகாசத்தில் போக பிரதானரான
யஷ கந்தர்வர்கள் சஞ்சரியா நின்றுள்ள
பெருமையை உடைய திருக் கடல் மல்லையை –

வணங்கும் மனத்தாரவரை –
தொழும் நெஞ்சு உடையாரை –

வணங்கு என் தன் மட நெஞ்சே –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே
உனக்குத் தொழுகைக்கு விஷயம்
அவர்கள் தாங்கள் கிடாய்-

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

செழு நீர் மலர்க் கமலம் திரை யுந்து வன் பகட்டால்
உழு நீர் வயலுழ வருழப் பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே  –2-6-8-

வல் பகட்டால் -வலிய எருதுகளைக் கொண்டு -பகடு -எருது -யானைக்கும் பெயர் –
பிழைத்து எழுந்த கழு நீர் -உழவுக்கு தப்பி எழுந்த செங்கழுநீர் மலர்களினுடைய
முன்–உழ–பின் -பிழைத்து எழுந்த-செங்கழுநீர் மலர்களினுடைய-முன் பின் – இடத்திலும் காலத்திலும்
திரை யுந்து -என்பதை விட -திரை யுந்தி -பாடம் வ்யாக்யானத்துக்கு சேரும்
உழு நீர் -வயலுக்கும் உழவர்க்கும் அடை மொழி –
எப்பொழுதும் உழுவதே இயற்கையாக யுடையவர் உழவர்
வயலும் எப்பொழுதும் உழப் பட்டுக் கொண்டே இருக்கும்

———————————————————–

வியாக்யானம் –

செழு நீர் மலர்க் கமலம் திரை யுந்து-
மலர்ந்த தாமரைகளையும்
ஜல சம்ருத்திகளையும் உடைத்தாய் யாயிற்று வயல் இருக்கும் படி –
இவ் வயலை தரை கண்டு உழுகைகாக
அத் திரைகளையும் தாமரைகளையும் காலாலே தள்ளுவார்கள் –

வன் பகட்டால் –
பிரளயத்திலும் உழவற்றாய்-ஆயிற்று அவ் எருதுகள் இருப்பது –

உழு நீர் வயலுழ வருழப்-
எப்போதும் நடுவது உழுவதாய்ப் போருகையாலே
உழுவதே ஸ்வ பாவமாக வுடைத்தான வயலை
கர்ஷகரானவர்கள் உழ-

பின் முன் பிழைத்து எழுந்த கழு நீர் கடி கமழும்-
இவர்கள் உழா நிற்க –
பின்னும் பின்னும் தப்பி நின்ற செங்கழு நீரானது
இவர்கள் ஸ்ரமத்தை ஆற்றுகைக்கு உறுப்பாக
பரிமளத்தை ப்ரவஹியா நிற்கும் –
முன் பின் – இடத்திலும் காலத்திலும்

அன்றிக்கே –
இவர்கள் முன்னே உழுது கொடு போகா நிற்க
பின்னே தப்பி நின்ற கழுநீர் கடி கமழும் என்றுமாம் –

அங்கன் அன்றிக்கே-
வயலுழ வருழப்பின் முன் பிழைத்து எழுந்த-(வயல் உழ உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த)
முன்பே ஒரு கால் உழுது வைப்பார்கள் இறே –
அப்போது தப்பி நின்ற செங்கழுநீர்
அலருகைக்கு ஒரு சஞ்சாரம் பண்ணினால் போலே இருக்கும் –

கடல் மல்லைத் தல சயனம் தொழு நீர் மனத்தவரைத் –
திருக் கடல் மல்லையைத் தொழுகை
காதா சித்கமாகை தவிர்ந்து
ஸ்வபாவம் ஆம் படி யான நெஞ்சை யுடையாரை –

தொழுவாய் என் தூய் நெஞ்சே  –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரை யானவோபாதி
அவர்கள் தங்களை தொழுகை கிடாய் உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே
உன் சுத்தி இருக்கிறது –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

பிரதிபந்தங்கள் உள்ளனவே என்று கலங்க வேண்டாம்
அவற்றைப் போக்கி அடியார்க்கு நம்மை ஆள் கொள்ளப் பண்ணுவான்

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-

—————————————————–

வியாக்யானம் –

பஞ்சிச் சிறு கூழை உருவாகி –
பஞ்சு போலே ம்ருதுவாய்க்
குழன்று பிடித்துக் கட்ட ஒண்ணாத படியான
மயிர் முடியை உடைய பாலருடைய வடிவை உடையனாய் –
பெய்யும் பூங்குழல் பிள்ளை-நம்மாழ்வார் -என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
கூழை என்றால் ஸ்திரீகள்  உடைய குழலுக்கு பேர் ஆகையாலே
மிருதுவாய் குழன்று பிடித்துக் கட்ட ஒண்ணாத படியான
மயிர் முடியை உடைய பூதனை உடைய மயிர் முடியைச்
சொல்லிற்று ஆகவுமாம்-
யசோதைப் பிராட்டி வடிவு அழகை கொடு வருகிறாள் ஆகையாலே
தன்னைப் பேணிக் கொண்டு வரும் இறே –
சிறு கூழை என்றதுக்கு செய்வது என் என்றால்
எல்லாம் செய்தாலும் பின்னையும் பாறிப் பரந்து கிடக்கும் இறே-

மருவாத வஞ்சப் பெண்-
ஹிருதயத்தில் பிராதி கூல்யத்தை உடையளாய்
அது தன்னை ஆநு கூல்ய பாவத்தாலே
பேணிக் கொடு வரும் இறே –
சமைந்து  வந்த பூதனை உடைய –

நஞ்சுண்ட அண்ணல்-
அவளுடைய விஷத்தை அமுது செய்த ஸ்வாமி-
ஸ்தன்யந்தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீஜ் ஜகத் குரோ –
என்னக் கடவது இறே –
ஜகத் சேஷியான தன்னை இறே நோக்கித் தந்தது –
( ஜகத் குரோ -தன்னை ரஷித்து அருளி ஜகத்தையே ரஷித்து அருளிய படி )

முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் –
முன்பு கம்சன் விட்ட விரோதிகளை நிரசித்த படி சொல்லிற்று –
விரோதி வர்க்கத்துக்கு வேர் பற்றான இப் பையல் தன்னைக்
கிழங்கு எடுத்தபடியைச்   சொல்லுகிறது –
ஒரு படியாலும் கிட்டோம் என்று இருந்த கம்சனை நிரசித்து
அநு கூலருக்கு துணையாக வேணும் என்று வந்து
கிடக்கிறவனுடைய திருக் கடல் மல்லையை –

நெஞ்சில் தொழுவாரைத் –
வாய் விட ஷமர் அன்றிக்கே
இருக்குமவர்களை –

தொழுவாய் –
அந்த திருக்கடல் மல்லையையும்
அங்கு கிடக்கிற நாயனாரையும்
தேடி இராதே
தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு

என் தூய் நெஞ்சே –
ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான
சுத்தியை யுடையை யிறே நீ –

—————————————————————————- .

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

புலன் கொள் நிதிக் குவையோடு  புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

நான்று — தாழ்ந்து-

—————————————————-

வியாக்யானம் –

புலன் கொள் நிதிக் குவையோடு –
கண்டார்க்கு -ம மேதம் -என்ன வேண்டும்படி இருக்கிற
பொற் குவையோடே-

புழைக் கைம்மா களிற்றினமும் –
துளையை உடைத்தான கையை உடைய
பெரிய மத்த கஜங்களுடைய திரளும் –

நலம் கொள் நவ மணிக் குவையும் –
நவ ரத்ன திரளும் –
நலங்கொள் என்கிறது
இக்கரையிலே கொடு வந்து ஒருவர் கையிலே இட்டு
நன்மை பார்க்க வேண்டாதபடி இருக்கை –

சுமந்து —
நற் சரக்காகையாலே
பொறுக்கும் பொறாது என்று பாராதே
ஏறிடுவர்கள் ஆயிற்று —

எங்கும் நான்று (தாழ்ந்து) ஒசிந்து கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
அங்கே இற்றது இங்கே முறிந்தது என்னும்படி
பயத்தோடு மரக்கலங்கள் ஆனவை சஞ்சரியா
நின்றுள்ள பெருமையை உடைத்தான
கடல் மல்லைத் தல சயனம் –

இது கொண்டு தாம் விநியோகம் கொள்ளுகைகாக
சொல்லுகிறார் அன்று  இறே –
அச் சோலையோபாதி அங்குத்தைக்கு அலங்காரம்
என்று இவர் ஆதரிக்கிறது –

வலங்கொள் மனத்தாரவரை –
திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை –

பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டருமாக பிரதஷிணம்
பண்ணும் போது நான் பின்னே போனேன் –
நம்மைப் போலே தேவைக்கு பரகு பரகு என்று வருகை அன்றிக்கே –
திரு மாளிகைகளையும் திரு கோபுரங்களையும்
கண்ணாலே பருகுவாரைப் போலே பார்த்து
கொடு போகும் படி காண்-என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

வலங்கொள் என் மட நெஞ்சே-
அவரை வலம் கொள் –
நமக்கு அவர்கள் நின்ற நிலை போராது
அவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –

என் மட நெஞ்சே –
என்னோடு ஒரு மிடறாய்
எனக்கு பவ்யமான நெஞ்சு
என்கிறார்-

அவர்கள் அவன் பக்கல் நெஞ்சு சுழி பட்டு இருக்க நெஞ்சே நீ அவர்கள் பக்கல்
நெஞ்சு சுழி பட்டு மட்டும் இல்லாமல் கைங்கர்யமும் செய்ய வேண்டும்

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

பிச்சச் சிறு பீலி சமண்  குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே–2-6-5-

விச்சைக் கிறை-வித்யைக்கு நிர்வாகர்
கச்சிக் கிடந்தவனூர்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டு அருளுபவர்
நச்சென்றன்நன்னெஞ்சே -நச்சு என்று என் தன் நன்னெஞ்சே

———————————————–

வியாக்யானம் –

பிச்சச் சிறு பீலி –
நிழலுக்கு ஈடாக கையிலே பிச்சைத்தைப் பிடித்து –
ஒரு கையிலே பீலித் தழையைப் பிடித்து –
கண்டாருக்கு இவர்களும் தார்மிகரோ என்று தோற்றும் படி
அநு கூல வேஷத்தைப் பரிகிரஹித்து-

சமண் குண்டர்  —
அமண தர்சனத்தைத் தரித்துக் கொண்டு நிற்கிற நீசர் –
குண்டு  என்று ஆழமாய் -அத்தால் தாழ்ச்சியைச் சொல்லிற்றாய்-
நீசர் என்றபடி -வேத பாஹ்யரான நீசர்  –

முதலாயோர் –
முதலானார் என்றபடி –
அவர்கள் துடக்கமான பௌத்தரையும் லோகாதிகரையும் நினைக்கிறது –

விச்சைக் கிறை யென்னும் –
வேதைகச மதி கம்யனான ஈஸ்வரனை இல்லை என்று
சர்வஞ்ஞன் என்று ஒருவனை கல்ப்பிப்பர்கள் –
பின்னை அவனுடைய சர்வஞ்ஞத்வதுக்கு பிரமாணம் தேட வேண்டி வரும் –
அது தன்னை தம் தாமுடைய உக்திகளாலே சாதிப்பார்கள் –
அது பின்னை அப்ரமாணமாய் அது இல்லையாய்த் தலைக் காட்டும் –
வித்தைக்கு நிர்வாஹகன் என்று ஒருவனைக் கொள்வார்கள் –

அவ் விறையைப்
அவ்விறை என்று முகத்தை
திருப்பி வைத்துச் சொல்கிறார் –

பணியாதே —
ஆப்தன் என்று கொண்டு அவர்கள் சொல்லுகிறவற்றை
ஆஸ்ரயித்து வர்த்தியாதே –

கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் –
ஆஸ்ரிதர்க்காக
திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற  தேசம் –
அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –

நச்சித் தொழுவாரை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே
நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும்  என்று
தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய
அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி
(அவர்கள் பெருமாள் விஷயத்தில் செய்வதை நெஞ்சே நீ அவர்கள் பக்கல் செய்வாய் )

நச்சென்றன்நன்னெஞ்சே –
நச்சு என்று என் தன் நன்னெஞ்சே –
இது சொல்லுகிறது என் சாபலம் இறே –
என்னுடைய உபதேச நிரபேஷமாக முன்னே ப்ராவண்யத்தை
உடையையாய் இருக்கிற உனக்குச் சொல்ல வேண்டா விறே –
எனக்கு கூட வழி காட்டுகிற உனக்கு
நான் வழி காட்டுகிறேனோ –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-
என்னக் கடவது இறே-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 14, 2013

ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்; இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார். 2மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது; இத் திருவாய்மொழியில் உபேயத்தைப்பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக்கடவது. 3மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரமஸ்லோகம்போலேஇரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், 2அது சக்தியோகத்தாலே வருமது அன்றோ; வெவ்வேறு நிலைகளைப்பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக்கடவன.

3மிகப்பெரிய துன்பத்தோடே பரமபதத்திலே கேட்கும்படி கூப்பிடச்செய்தேயும் சர்வரக்ஷகனானவன் வந்து முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள்கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய் உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் 4“நினைவிற்கும் எட்டாத சொரூபத்தையுடைய உலகநாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடுகூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”

என்கிறபடியே, நித்தியசூரிகட்குக் காட்சிகொடுத்துக்கொண்டு இருக்கக் கூடிய சர்வேசுவரன், பலரும் நம்மை இழக்க நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்; அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்கவேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து திருமலையிலே நாய்ச்சியாருடனேகூட நின்றருளினான்;1அதிகாரிநியதி, காலநியதி, அங்கநியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே, பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறுகதி இல்லாமையை விண்ணப்பம் செய்து சரணம்புக்குத் தம்முடைய எண்ணத்தை அறிவிக்கிறார்.

2மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே ‘தர்மிபுக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்; இங்கு அது தன்னையே வாய்விடுகிறார். 3மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே. 4திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அதுபோலே இத் திருவாய்மொழி. 5“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப்பார்த்துப் பிரமன் கூறியது.சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”

என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.

‘இழந்ததுபெறவேணும்’ என்னுமதுவும் 1அவ்வளவே. 2ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே. 3தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்திபண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே. 4ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனேயன்றோ ( சீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே. யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – 4செல்வம் ஆத்ம்பிராப்தி பகவத்பிராப்தி விரோதி இவை எல்லாம் உன்னைக்கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது. இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று, எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.இனித்தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும்வேணும்; தான் அதிகாரியாகவும் வேணும். 2நற்குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அதுதானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணாநின்றோம் அன்றோ. 3இங்ஙனே இருக்கச்செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம் கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம். 4இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்கவேணும்; 5சரணம்புகா, பலித்தது இல்லை என்னா, “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது “க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.

. 6“மயர்வறமதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக்கொண்டு புறப்படுவார் வேணும். 1செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடியுடையார்க்குக் காரியகரம் ஆகாதே அன்றோ. 2“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப்போகிறேன்; வானரவீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.

என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு, மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ. “க்ஷமயாஹி ஸமாயுக்தம் – 3‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்; இங்கே வருணனை வழிவேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டாநின்றார்; இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி, வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். – 2“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே, கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர்கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை; ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை. அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திராநின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை. மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக்காணும் தன்னை நினைத்திருக்கிறது; தன்னை மீன்படுகுட்டமாக அறிகிறது இல்லை. அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ளவல்லோம் என்று அறிகிறது இல்லை. இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில், திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம். 3விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது? கோபத்தைப்போன்று, காரியகாலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம். அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறைகொண்டு காரியம் கொள்ளவேண்டாவோ?

என்னில், ஈத்ருஸேஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை. இதுக்கு 1இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியாநின்றதே. 2ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார். 

652.

    உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.

பொ-ரை :- பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே! எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே! உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! தொன்றுதொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை கூறியருள வேண்டும்.

வி-கு :- உலகுக்குத் திலதமாய் என் மாற்றுக.

இத் திருவாய்மொழி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

ஈடு :- முதற்பாட்டு. 3உன்னை ஒழிய வேறுகதி இன்றிக்கே இருக்கிற என்னை உன் திருவடிகளிலே சேரும்படி செய்தருள வேண்டும் என்கிறார்.

உலகம் உண்ட பெருவாயா – 4தேவர் திருவடிகளைக் கிட்டாத அன்று எனக்கு உண்டான தளர்த்தி, பத்துப் பிரளய ஆபத்தைப்போன்றதேயா மன்றோ? 1பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவன்றிக்கே இருக்கும் பாரிப்பையுடையவனே! 2உன் பாரிப்புக்கும் என் துயரத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? 3நீ, அறிந்த சம்பந்தமும் ஆபத்துமே கைம்முதலாகக் காப்பாற்றுமவன் அன்றோ! 4ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ? பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ? 5அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ? 6சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ? ஜலப்பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ? 7‘சரணம்புகாதாரை ரக்ஷிக்கவேண்டும்7 என்கிற நியதி உண்டோ! சரணம்புக்காரை ரக்ஷிக்கலாகாதோ? 8ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று இருக்கக்கடவ உனக்கு என்னுடையரக்ஷணத்தில் கலவாமல் கைவாங்கி இருத்தல் போருமோ? 1பிரளயாபத்தை ரக்ஷித்துப் பின்பும் ‘நாம் இவற்றுக்குச் செய்தது ஒன்று உண்டோ’ என்று உடன் கிடந்தாரை மடிதடவி, பின்னர் ‘என் செய்தோமானோம்’ என்று தபிக்கின்றவர்களைப் போலே இழவுபட்டிருப்பான் ஒருவன் அன்றோ நீ!

2பெருவாயா – பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது, 3அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி. பெருவாயா – 4திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க, சபையில் துச்சாதனன் உண்டாக்கின மானபங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தருமபுத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் 5“வட்டிக்கு வட்டி ஏறின கடனைப்போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை” என்று கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- 
என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.

குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும் “நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில் புண்ணோடேயன்றோ எழுந்தருளினான். உலப்பு இல் கீர்த்தி அம்மானே – 1இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையதுகொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்; இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது. 2பொழில் ஏழும் காவல்பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம், 10.3இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியையுடைய சர்வேசுவரனே! 4“அந்தப் பரமாத்மாவின் கீர்த்தி பெரியது” என்றும், 5“கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்” “யஸஸ: ச ஏகபாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19.என்றும் உபதேசத்தால் அறிய வேண்டும்படி அன்றிக்கே, 6“எல்லாராலும் அறியப்பட்டவர்”“விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.
சுந். 21 : 20.
என்று பகைவர்கள் கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது. 7‘பாதகத்தின் சந்நிதியிலே பாதிக்கப்படும் பொருளும் ஜீவிக்கும்படி அன்றோ உன்னுடைய ஆணை இருப்பது. அவன் நினைத்த அன்று பாதகந்தானே பாதிக்கப்படுகிற பொருளுக்குப் பால்ஊட்டி வளர்த்தா நிற்குமன்றோ. உலப்பு இல் கீர்த்தி அம்மானே – 8“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்” என்றும், 1“அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்” “ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸபுராணம்.
என்றும், 2“ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய கல்யாணகுணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல” என்றும்வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ணபர்வம்.

, 3“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன” பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

என்றும் சொல்லுகிற குணங்களும் முடிவு இன்றிக்கே இருக்கை. இவற்றை எல்லைகாண நினைத்தால் கரைகண்டு மீள ஒண்ணாது. மதிக்குறைவாலே மீளுமத்தனை.

நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி – 4பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விடஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி. ஒரு கருமம் காரணமாக வந்து அது வற்ற வற்றுவது அன்று ஆதலின் ‘நிலவும்’ என்கிறது. 5உள்ளு மண்பற்றாய்ப் புறம்பு ஒளிஊட்டியிருத்தல் அன்றிக்கே, “ஒளிகளின் திரள்” திருவாய். 1. 7 : 4.என்கிறபடியே, ஒளிப்பொருள்களைத் திரட்டிப் பிடித்தாற்போலே இருத்தலின் ‘சுடர்சூழ்’ என்கிறது. இராசத தாமதங்களால் கலந்தது அன்றிக்கே, சுத்தசுத்துவமயமாய் நிரவதிக தேஜோரூபமாய், நெய்திணுங்கினாற்போலே உள்ளும்புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.

“உயர்வினையே தரும் ஒண்சுடர்க்கற்றை” என்னக்கடவதன்றோ. 1திருமேனிதன்னைப் “பஞ்ச சக்தி மயம்” என்றும் சொல்லா நின்றார்கள்; “ஷாட்குண்ய விக்ரஹம்” என்றும் சொல்லா நின்றார்கள்; ஆராய்ந்து பார்த்தால் பொருளின் நிலைமைதான் “பஞ்சசக்திமயம்” என்றே இருக்கும்; ‘ஷாட்குண்ய விக்ரஹம்’ என்றது, திருமேனிதான் குணங்களுக்குத் திரோதாயகம் அன்றிக்கே பிரகாசகமாய் இருக்கையாலே. 2“மன்மதன்போன்ற சுந்தரமான உருவமுடையவர்; கவர்ச்சிகரமான காந்தியுடையவர்” “ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந் தந்தர்ப்பஇவ மூர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 30.

என்றும் 3“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்” “தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . . . .ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.

என்றும் சொல்லுகிறபடியே யன்றோ இருப்பது.

நெடியாய் – 4மேலேகூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண அடியேன் ஆர்உயிரே – 1வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னைவிட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே! 2“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க இதனைக் கூட்டக் கடவது. திலதம் உலகுக்கு ஆய்நின்ற – பெண்களுக்கு நிறைந்திருக்கின்ற ஆபரணம்போலே ஆயிற்று பூமிக்குத் திருமலை. திருவேங்கடத்து எம்பெருமானே அடியேன் ஆர் உயிரே – திருமலையில் நின்று என்னுடைய சேஷத்வ முறையை அறிவித்து, உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே! இவ்வளவும் வர, அவனுடைய சொரூபம் சொன்னார்; இனி, தம் சொரூபம் சொல்லுகிறார்: குல தொல் அடியேன் – குலமாகப் பழையதான அடியேன். இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்; தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் 3ஒருவர்க்கேயாய் இருப்பாரை வேறு சிலர் நோக்குதல் இல்லை அன்றோ. உனபாதம் கூடுமாறு கூறாய் – 4சொரூபம் இதுவான பின்பு, சொரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய். அடியேன் உனபாதம் கூடுமாறு – 5அடியவன் உன்னைக்கூட என்னுமது ‘உன பாதம்கூட’ என்பதே அன்றோ. உனபாதம் கூடுமாறு – 6இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி. கூறாய் – உனக்கு ஒரு சொல்;ஒண்ணாதபடியாயிருக்கை. 5“மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தறை காண ஒண்ணாதிருக்கிறபடி.எனக்குச் சொரூபலாபம் கண்டாய். 1அவன் ஒரு வார்த்தை அருளிச்செய்ய, தளப்பம் தீரும் அன்றோ இவர்க்கு. 2“மாசுச: – துக்கப்படாதே” என்னவேணும்.

பிராப்ய வேஷம் கீழ் சொல்லி
இதில் பிராபக வேஷம்
சர்வேஸ்வரத்வம் ஸ்ரீ ய பதித்வம்  பரத்வம் சௌலப்யம் போக்யதை சொல்லி
மேலே அடையும் வழியை சொல்லுகிறார் –
இரண்டிலும் இரண்டும் இருந்தாலும் பிரதானம் இதுவே
திரு மந்த்ரம் போலே கீழ் திருவாய்மொழி
இது சரம ஸ்லோகம் போலே –
ஸ்வரூபம் பிராப்யம் புருஷார்த்தம் மூன்றும் திரு மந்த்ரம்
ஸ்வரூபம் திருமந்தரம்
உபாயம் சரம ஸ்லோகம்
உபேயம் த்வயம்
என்றும் சொல்வாரே
இருந்தாலும் பிரதானம்
சக்தி யோகத்தால் வருவதால் இரண்டும் உண்டே
அவஸ்தா நிலை எம்பெருமான்
ஆத்திக்கீரை கொண்டு பசுவை வர வளைத்து
ஏணி வாங்கி -மோஷத்துக்கு கூட்டி போன பின்பு
ஏணி உபாயம்
போகும் வரை உபாயம்
அங்கு போன பின்பு உபாய ஆகாரம் வாங்கி உபேயம் ஆகாரம் மட்டும் தானே
ஆர்த்தி உடன் கூப்பிட்டாலும் -முகம் காட்ட வில்லை சர்வ ரஷகன்
துக்கம் மிக்கு
ஸ்ரீ ய பதியாய் -வைகுண்டம் -ஜகத் பதி
விஷ்ணு -அசிந்த்யாத்மா மனசால் நினைக்க முடியாதவன்
நெடும் கை நீட்டாது இழக்க  ஒண்ணாது என்று பலரும் இழக்க கூடாது என்று
ராம கிரிஷ்ணாதி அவதாரங்கள் செய்து
சமகாலத்தார் அனுபவிக்க
பிறபாடரும் இழக்காமல் ருசி ஜனகனாய் கொண்டு திருமலையில் நாச்சிமார் உடன் இருக்கக் கண்டு

அதிகாரி நியதி பிரகார கால நியதி இன்றி
சரணம் புக்கு அத்யாவச்சாயம் தெரிவிக்கிறார்
அநந்ய கதிகளாய்-
கீழேயும் பிரபத்தி செய்தார் -நோற்ற நாலும்
லஷ்மி சம்பந்தம் ஸ்பஷ்டமாக இல்லை ஒரே இடம் திருமாலே ஒரே பாசுரம் 40 பாட்டில்
இது தான் பரி பூர்ண சரணா கதி -அகலகில்லேன் இறையும்-என்று அலர் மேல் மங்கை உறை மார்பா –
பிரிக்க முடியாத விசேஷணம் தான் பிராட்டி –
ஸ்வரூப நிரூபக விசேஷம் –
தரமி புகுந்த இடத்தில் –
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்
கீழ் திரு மந்த்ரம் போலே
இது த்வயம் போலே
உ காரத்தாலும் அகாரத்தலும்
அடிமை செய்யும் பொழுது கிருஹினிக்கு
அர்த்தால்  உண்டு அங்கு எல்லாம்
இங்கு சப்தமும் உண்டே
முக்த கண்டம் -வாய் விட்டு சொல்வது
எம்பெருமானைக் கண்டால் வேற விஷயம் ஆசை வராதே
பிரபத்தி சர்வ பலத்துக்கும்
சரணம் அடைந்ததும் துக்கம் போகும்
முன்பு தான் வாஞ்சை மோகம் இருக்கும்
எல்லாம் அவனாக இருக்குமே அவனை பற்றினதும் –
இழந்தது பெற போகிறான்
சாபலம்
மோகித்து -ஐஸ்வர்யம் தேகத்துக்கு கேட்டு போகிறான்
அவன் தான் ஆனந்திப்பிக்கிறான் அறிந்ததும்
அசேஷ -பாபங்களும் போக்கி
ஐஸ்வர்யம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி போக்கி
சரணம் புகுகிறார்
சரணாகதி ஸ்வரூபம்
சரண்யன் ஸ்வரூபம் -சர்வ சக்தன் சர்வஞ்ஞன்
பண்ணுகிறவன் ஸ்வரூபம் அசக்தன் அனந்யகதி அகிஞ்சனன்
மாறி இருந்தால் சரணா கதி பலிக்காதே
பெருமாள் சமுத்திர ராஜன் -சரண் அடைந்து பலிக்க வில்லையே
பானம் கொண்டு வழிக்கு கொண்டுகிறவர் அநந்ய கதி இல்லையே
பலிக்க -சரண்யன் கையில் அதிகாரி செய்ய வேண்டும்
பகவத் பின்ன சேதனன்
வ்யதிரிக்த விஷயத்தில் செய்தால் அதுவே கட்டை வெட்டும்
பரசுராமன் -தசரதர் சரணா கதி போலே
அது பூர்ண அவதாரம் இல்லையே  –

அதிகாரி நியமமோ
தேச நியமமோ
கால நியமமோ
பிரகார நியமமோ
பல நியமமோ இல்லை சரணா கதிக்கு
எங்கும் யாராவாது எப்பொழுதாவது எவ்வாறாகவும் எதுக்கும் பண்ணலாம்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்ப பலம் கேட்க மாட்டான்
விஷய நியமம் ஒன்றே உள்ளது
சரண்யன் சரணா கதிக்கு அருகன் இல்லையே
பரம சேதனன் மட்டுமே அருகன் இல்லை
சரணா கதன்-அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் -கொண்டேபண்ணுவான்  –
பகவத் பின்ன சேதனன் மட்டுமே பண்ணலாம் –
அநந்ய கதித்வம் உபாயம் வேறு இன்றி உபேயமும் வேறு இன்றி
அகிஞ்சன அகதி பிரார்த்தனா மதி சரணா கதி
அறிவு ஒன்றும் இல்லா -ஆய்க்குலம்
தீமைகள் எல்லாம் உண்டு
நன்மைகள் எதுவும் இல்லை
குளித்து போது குரங்கு உம்பர் ஊர்  ஐந்தும்
அடுத்து ஐந்தும் –
கையை கூப்பி ஆகிஞ்சன்யம் காட்டி
காலை சேர்த்து அநந்ய கதித்வம் காட்டி
தாளும் தடக்கையும் கூப்பி  பணியுமவர் கண்டீர்-

அவனுக்கு சக்தி கிருபையும் வேண்டுமே -சரண கதி பலிக்க
பூர்த்தி ஒரே வார்த்தை -சர்வஞ்ஞன் சர்வ சக்தன்
பூர்த்தி உள்ள இடமே விஷயம்
அர்ச்சாவதரமே பூர்த்தி உள்ள இடம்
திருவேம்கடமுடையான் இடம் பண்ணுகிறார் –
சாதனம் அநந்ய கதித்வம் ஆகிஞ்சன்யம்  இல்லை –
இவை அதிகாரி விசேஷணம் தான் என்று புரிய வேண்டும் –

சில இடங்களில் பலிக்கலாம்
வேடன் முயலை விட்டானே
கோபம் குரோதம் உள்ள இடத்திலே பலித்தால் கிம் புன நியாயம் -கைம்முதிக நியாயம்-அவன் இடத்தில் பலிக்குமே

மெய்யாக அநந்ய கதித்வம் வேண்டும் –
சாமர்த்தியம் தனக்கு தானே உள்ளவன் சரண் அடைந்தாள் பலிக்காதே-

பெருமாள் சமுத்திர ராஜன் -மகராலாய மீன் குட்டை இது என்றானே கடலை –
மயர்வற மதி நலம் அருளினவரும் மடல் எடுத்து
சாகரம் சோஷயிஷ்யாமி-
திரு விருத்தம் இதே வியாக்யானம் –
ஜல தத்வம் இல்லாமல் பண்ணுவேன்
நாலே போதும் சிருஷ்டிக்கு -என்றான் இ றே
ஷமையோடு கூடின என்னை –
பெண் பெண்டாட்டி சொல்ல கைகேயி வந்தவர்
இங்கே சீறி –
ஷமா பொறுமைக்கு விஷயம் உண்டு -என்று சொல்ல லாமா
ஷமை பெருமாள் காலைக் கட்டிக் கொண்டு –
வாலி புறப்படும் பொழுது தாரை காலைக் கட்டிக் கொண்டது போலே –
மாம் -யார் என்று நினைத்தாய் -பெருமாள் சொல்வதாக
சக்ரவர்த்தி பிள்ளை யாக்கும்

தூங்குபவன் குடித்தவன் கோபித்தவன் தனது ஸ்வா பம் மறைக்க முடியாதே

நம்மை ஐயர் மகன் என்று அறிகிறது இல்லை –
ஷத்ரியத்வம் உணர்ந்தார் -பெருமாளும் -இப்பொழுது –
அயம் -தன்னை சிறாகித்து இருக்கிற நம்மை அறிகிறது இல்லை
மீன் தங்கிய
அயோதியை கோசல சாம்ராஜ்யம் என்று நினைத்து வெறும் மீன் படு குட்டை தெரியாமல் –
செவ்வை கெட பரிமாறுவாரையும்-விரோதிகளையும் ஒக இட்டு கார்யம் கொள்வோம் அறியாமல்
சுக்ரீவன் விபீஷணன் இருவரையும் சேர்த்துக் கொண்டு –
கோபம் வர வளைத்துக் கொண்டு
கார்ய காரத்தில் அழைத்து கார்யம் கொள்ள பார்த்து
கோபச்ய வசமே இவா திருவடியை அடித்ததும் –
இங்குள்ளார் சம்பந்தம் -பலியா நின்றது
ராஷச சம்பந்தம் –
ஒன்பது பாட்டாலும் சரண்யன் படி சொல்லி
பத்தாம் பாட்டில் சரணா கதி பண்ணுகிறார்-

முதல் மூன்று வரி சரண்யன் படி சொலி
இறுதியில் சரணா கதி
உலகம் உண்ட பெருய வாயை உடையவன்
முடிவில்லா புகழ் உடையவன்
ஒளி நிலவும் திரு விக்ரகம்
அடியேன் ஆர் உயர்
திரு வேங்கடத்து எம்பெருமான்
குல தொல் அடியேன்
பிரளயம் -ஜகத் ரஷன சிந்தை கொண்டு –
கேட்க்காமலே வந்து காத்து அருளி
ஆபத்தே செப்பாடாக வந்து -காத்து  அருளி
ஒருவனுக்கே பத்து பிரளயம் இந்த்ரியங்கள்
பெரு வாயா -பாரிப்பு மிக்கு -உனது பாரிப்புக்கும் எனது ஆர்த்திக்கும் -சேர்த்தி உண்டாக கூடாதா
சம்பந்தம் ஆபத்தே கொண்டு ரஷித்து-நீ அறிந்த சம்பந்தம் –
ஒரு விபூதிகாகா ஆபத்தை நோக்கி
ஒருவனுக்கு அவ்வளவு பெரிய ஆபத்து வந்தால் ரஷிக்க மாட்டாயா
பிரளய அர்ணவத்தில் நோக்கி சம்சார பிறவி பெரும்கடலில்
அபேஷியாதாரை தான் நோக்குவாயா
சரீர்ரதுக்கு வரும் ஆபத்தை நோக்கி ஆத்மாவுக்கு வந்தால்
ஜல பிரளயம் விரக பிரளயம்
பிறரால் வரும் ஆபத்தை நோக்கி உன்னால் வந்த ஆபத்தை நோக்க மாட்டாயா
சரணம் என்று புகாதாரை தான் காப்பாயா
காத்து சமைந்து பின்னையும் ஒன்றும் செய்திலேன் என்று இருக்கும் நீ -ரஷிகாமல் போகலாமா

பிரளய ஆபத்தில் காத்தும் ஒன்றும் செய்யவில்லை என்று நினைந்து
உளன் கிடந்தாரை மடி தடவி -உபகாரம் செய்யாமல் அபகரிதோம் -என்று நினைப்பாரைப் போலே
என்ன செய்தோம் தவிப்பாரை
பெரு வாயா பாரிப்பு மிக்கு
உலகம் உண்ட பெரு வாயா ரஷ்யத்தின் அளவு இல்லாத ரஷகன்
கொண்டல் -வெண்ணெய் உண்ட வாயன் பெரு வாயன் இல்லை அங்கெ
பெரு -வாயை திற -வாயுக்குள்ளே போக போகிறானா -வைத்தியர்
பாரிப்பு மிக்கு –
தளிகை  பிரசாதம் -கொண்டு போக பாத்ரம் கொண்டு போக –
அந்த பெரிய பாரிப்பு போலே என் பக்கல் வெறுப்பு கொண்டு இருக்கிறாய் –
சரணம் த்ரௌ பதி உக்தி மட்டும்
சதஸில் பரிபவம் போக்கி குழலையும் முடித்து –
மைதுனமார் –உத்தரை சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன்-
அடுப்பு மூட்ட வெந்நீர் சுடலை கிருஷ்ணா என்பாள் வருவானாம் ஊதுவானாம்

அர்ஜுனன் இடம்
தன்னுடை சோதிக்கு போகும் பொழுது ரிணம்-ப்ரவர்தம் இவமே -குறைவாளனாய் -வட்டிக்கு வட்டி மிக்கு
இத்தனையும் பண்ணின பின்பும் –
சரணம் உக்திக்கு ஈடாகாதே என்ற திரு உள்ளம்
ஆழ்வார் கதறுகிறார்
நெஞ்சு வேகாமல் போனானாம் -கண்ணன்
உலப்பில் கீர்த்தி
ரஷணம் வந்தேறி இல்லையே
புகழ் முன்பே உண்டே
பொழில் எழும் காவல் பூண்ட -புகழ் உண்டே
லோகம் அனைத்தும் காத்து
யசஸ்-புகழுக்கே இருப்பிடம்
உபதேச கம்யம் அன்றிக்கே லோகத்திலும் பிரசித்தம்
சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தம்
பாதகத்தின் சந்நிதியில் பாத்யமும்  ஜீவிக்கும்
தீர்த்தம் பாக்யத்தை உண்டா உரிமை -பாதகத்தை தான் உண்டு
இவன் நினைத்தால்பாத்க்கப் படுபவனும்
சுமுகன் கருடன் -கையிலே காட்டி பாலூட்டி வளர்க்கப் பண்ணி
ரஷகன் நீ பாதகன் ஆகலாமா எனக்கு

உலப்பில் கீர்த்தி அம்மானே -குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் -முடிவு இன்றிகே இருக்கை-
கரை கண்டு மீள முடியாது
சக்தி இன்றி தான் மீள வேண்டும்
ஸ்வரூபம் குணத்துக்கு தோற்றி
ஒளி நிலவும் சுடர் சூழ் மூர்த்தி -அழகு விட ஒண்ணாத
நிலவும் மூர்த்தி -கர்மம் அடியாக வந்து போவது போலே அன்றி
சுடர் சூழ் ஒளி திவ்ய மங்கள விக்ரஹம் தேஜஸ் பதம்
உள்ளும் புறம்பும் தேஜஸ்
தேஜசாம் ராசி மூர்த்திதாம் திரட்டி பிடித்தால் போல் ஒண் சுடர் கற்றை
சுத்த சத்வ மயம்
அளாவி -கலந்து -அலாவுதல் விளாவுதல் -கதை அளக்கிறாய்
நிரதிசய தேஜோ –
பஞ்ச சக்தி மயம் -திரு மேனி -கொண்டவன் –
ஷாட் குணிய விக்ரஹம் என்பாரும் உண்டே
ஆராய்ந்து பார்த்தால் பஞ்ச சக்தி மயம் தான்
குணங்கள் வெளியில் தெரியும் படி இருப்பதால் இப்படியும் சொல்லி –
பிரகாசமாய் திரு மேனி இருப்பதால்
ரூபவான் சுப ஸ்ரீ மான் ஸ்கந்த மிவ பீதாம்பர சாஷாத் மன்மத
கீழே சொன்ன உலப்பில் கீர்த்தி கல்யாண குணங்களை காட்டும் திரு மேனி என்கிறார் இத்தால் –
நெடியாய்
எல்லை -இல்லாத சௌந்தர்ய லாவண்யம் -ரூபகுணங்கள்
ஆத்மா குணங்கள் ஸ்வரூப குணங்கள் போலே இன்றி –
மகான் தொட்ட தொட்ட இடம் எல்லாம் தரை காண முடியாமல்
அடியேன் ஆர் உயிர் -பிரிந்தால் தரித்து இருக்க முடியாதே
வடிவையும் குணத்தையும் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
திருவேங்கடத்து எம்பெருமானே அடியன் ஆர் உயிர் என்கிறார்
திலக பூரணமான ஆபரணம் திருமலை பூமிப் பிராட்டிக்கு
சௌமாங்கல்யம் கொடுக்கும் அனைவருக்கும்
சேஷத்வ முறை அறிவித்து உன்னை அல்லால் செல்லாமல் பண்ணி அருளி

இவ்வளவும் வர அவன் ஸ்வரூபம் சொல்லி
குல தொல் அடியேன் -ஆதிக்யம் சொல்ல வில்லை அநந்ய கதித்வம் சொல்லுகிறார்
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -பெருமை உடன் அங்கு
இன்று வந்து ஆஸ்ரியத்தவனையும் பழ அடியேன் என்று நினைப்பான்
அடிமை தன்மை நிரந்தரம்
அறியாமல் இழந்தான் இது வரை
மாணிக்கம் சானைக் கல் ஒளி கூட்ட வில்லை அழுக்கை நீக்கி தான் காட்டுகிறது

அடிமைத் தன்மை -திரை விலக்கி -brushing memory –
எல்லாம் தேவர் போட்ட சிஷை தான்
இருந்தவற்றை என்னைக் கொண்டு விலக்கி வைத்தான் –
சேஷத்வம் ஜீவாத்மாவுக்கு ஸ்வரூபம்
குல தொல் அடியேன் –
பழ அடியேன் நீங்காதது -ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி
இங்கு சரணா கதி பண்ணும் இடத்தில் அநந்ய கதித்வம் ஒருவருக்கே இருப்பாரை வேறு சிலர் நோக்குவர் இல்லையே
உன்ன பாதம் கூடுமாறு
ஸ்வரூப அநு ரூபா கைங்கர்யம்
உனது திருவடி சேர்த்து ஒல்லை
தலை சேர்த்து கொக்குவாயும்  படு கண்ணியம் போலே
பாதம் கூட அடியேன்
திருவடிகளிலே சேருவோம்
சாயுஜ்யம் -பாதம் கூடுவது ஆழ்வாருக்கு
ஒரு சொல் எனக்கு ஸ்வரூப லாபம்
வார்த்தை அருளிச் செய்ய
மாசுசா போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

கீழே நில மங்கைக்காக ஸ்ரீ வராஹ நாயனார்
சீதா -மலர் மங்கை – நிலமகள் ஆனாள் -அவளுக்கு பெருமாள் செய்தவை இதில்

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-

விண்டாரை வென்று -கூடாரை வெல்லும் சீர்
கொண்டாடு மல்லகலம்–கொண்டு ஆடு மல் அகலம்

————————————————-

அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே
ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து
ஈடுபடுமவர்கள்
என் ஒருவன் அளவன்றிக்கே
என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-

வியாக்யானம் –

விண்டாரை வென்று –
நல்ல வார்த்தை சொல்லச் செய்தேயும்
ந நமேயம் -என்று இருப்பாரை யாயிற்று வெல்லுவது –
வாலியை நிரசித்து
கடலை அணை செய்து
ஊரைச் சூழப் போந்து –
இலங்கையை அடை மதிள் படுத்தி –

இனித்தான் அநு கூலிக்கப் படுமோ -என்று
அங்கதப் பெருமாளைப் போக விட்டு
நல் வார்த்தை சொல்லுவித்து

அதுவும் கேளாது ஒழிய
பையல் கண் முகப்பே பரிகரத்தை அடைய நிரசித்து
அதுக்குப் பொருந்தாதே வந்து எதிரிட
நிராயுதனாய் மிடுக்கறப் பண்ணி விடச் செய்தேயும்
பிற்றை நாளும் வந்து என்னை கொல்ல அமையும்
என்ன பின்னை இறே கொன்றது –
விண்டாரை யாயிற்று கொல்ல வல்லது –

அநு கூல சங்கை உள்ள இடங்களில்
சுக்ரீவம் சரணம் கத –
லோக நாத புரா 00சுக்ரீவம் நாதம் இச்சதி –
என்று தான் சரணம் புகா நிற்கும் –

பெருமாள்
நத்யேயம் கதஞ்சன –
ஏதத் வ்ரதம் மம-
என்று நின்றார்
மஹா ராஜர் –
வத்யதாம் என்றே நின்றார்
என்று இவ் விடத்துக்கு பட்டர் அருளிச் செய்யும்படி –
இருவரும் சரணாகத ரஷணத்துக்கு பிணங்கு கிறார்கள்-

ஆவி விலங்குண்ண-
அவர்கள் பேணிப் போந்த பிராணங்களை
கழுகும் பருந்தும் பற்றி முடிக்க -அதாவது என் என்னில் –
குற்று உயிராயக் கிடக்கிற சமயத்தில் இவை வந்து
மேலிட்ட படியாலே சேஷித்த ப்ராணங்கள் அவற்றோடு
போகையைச் சொல்லுகிறது –

மெல்லியலார் இத்யாதி –
ஸ்திரீகள் ஆதரிக்க -அத்தாலே பேணி வளர்ந்த போந்த மார்பிலே –
துஷ்ட சத்வங்களை கண்ட நாய்கள் மேல் விழப் பிற்காலிக்குமா போலே பிற்காலித்துப் போந்த
அக்நி தத்வமானது வந்து பிரவேசிக்க –

வெஞ்சமத்து  மல்லகலம் அழலேற கண்டாரை-
தனி இடத்திலே அநு கூல வேஷத்தோடு வந்து தோற்றி
வஞ்சகரான பையல்களை கூட்டிக் கொடு வந்து
ராஜ புத்ரர்களை அகற்றி –
களவிலிலே பிடித்துக் கொண்டு போந்த பையல்களைப் போலே அன்றிக்கே
நேராக சொட்டைப் பூசலிலே –
பிராட்டி தானும்
உடோ வாராய் வீரர்கள் வர்த்திக்கும் வழி அல்ல காணும் நீ செய்தது -என்றாள்-

அழலேற கண்டாரை–
அத்யவை நிர்ப்பய லங்காம் பிரவிஷ்டாஸ் ஸூர்ய ரஸ்மய
என்கிறபடியே அவன் பட்டுக் கிடக்க துணுக்கு என்றே எழுந்து இருக்கும் என்று பார்த்து
உன் எல்லைக்குள்ளே ஆதித்ய கிரணங்கள் வந்து புகுரா நின்றன கிடாய் -என்றாள் இறே-
அப்படி மதிப்பனாய் இருக்கிற அவனுடைய மார்விலே
அக்நியை பிரவேசிப்பித்து –

கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை –
சாமத்துக்கு செல்லாதாகில் அன்றோ
தண்டத்துக்கு இழிய வேண்டுவது
என்று இளைப்பு கிடக்கிறவரை-
(சாம பேத தண்டம் )

கொண்டாடும் நெஞ்சுடையார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்
நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் –
(திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார்
அவரே என் குல தெய்வம்)

அவர் எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார்
என்னும் அளவல்ல எங்களது-
ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

(வலமங்கை பெருமாள் -ராஜாக்காக -இங்கே சேவை -ஹரி கேசன் -பக்தி -கிழவராக வந்து பசி தீர்க்க –
வரண கலாபம் –
புண்டரீக ரிஷிக்காக –தலைமாடு
புஜங்க சயனம்
சித்திரை விசாகம்
நில மங்கைத் தாயார்
பூதத்தாழ்வார் திரு அவதாரம்
மல்லபுரீசாய கமலால வஷஸே ஞானப் பிரபா ஸ்வரூபாயா -ஞான ஒளி )

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

வலம் கொள்ள–அனுகூல கைங்கர்யம் கொள்ள

—————————————————————-

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
அப்போது ஏறிட்டுக் கொண்ட வடிவை காட்டி
பழைய வடிவை அழித்தான்-
அபிமத விஷயத்தோடே கலக்கைக்காக
அவர்கள் உகக்கும் படியே ஒப்பிப்பாரைப் போலே –
படுக்கைப் பற்றை நோக்கி பிரதான மகிஷிகள் பக்கல் முகம் பெறுவாரைப் போலே
மஹா வராஹமான  வடிவில் எழிலைக்  காட்டி
இவள் எழிலைக் கொண்டான் –
(கோல வராஹம் ஒன்றாய் -பெரும் கேழலார் -புண்டரீகம் )

பூமிப் பிராட்டி உடைய விபூதியை பிரளயம் கொள்ள
அத்தை எடுக்கைகாக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு வந்து எடுத்து நோக்கி
நித்ய ஸூரிகள் நடுவே ஓலக்கம் இருக்கக் கடவன்
இவ் வடிவைக் கொண்டது நமக்காக விறே என்று
அந் நீர்மையிலே தோற்று எழில் இழந்தாள் ஆயிற்று –

வானத்திலவர் –
பரமபதத்தில் நித்ய ஸூரிகள் –

முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள –
இது நமக்கு நன்று என்னும் புத்தியாலே இறே இங்குள்ளார் ஏத்துவது
ப்ரீதி பூர்வகமாக ஏத்துவார் அவர்கள் இறே

முறையால் –
எங்கேனும் புகுரில் முறை தப்பாமல் ஏத்துவர்கள் இறே அவர்கள் –
பரம பதத்தில் அடிமை செய்யும் க்ரமத்தில் ஏத்தி
அநு கூல வ்ருத்தி பண்ண –
(அவன் எப்படி அவதாரம் பண்ணினாலும் -ஜென்ம கர்ம மே திவ்யம் -அவதார ரஹஸ்யம் அறிந்தவர்கள்)

கானத்து இத்யாதி –
ஸ்ரீ பூமிப் பிராட்டி எழில் இழக்க
நித்ய ஸூரிகள் ஏத்தா நிற்க –
இவற்றை அடைய காற்க்கடைக் கொண்டு
தன் ஜாதிக்கு அநு ரூபமாக காட்டை விரும்பினான் ஆயிற்று –
ஏனம் ஆனதுக்கு அநு ரூபமாக காட்டை விரும்பினான் –
(மேற்கு காடு கிழக்கு கடல் அன்றோ இங்கு )

கடல் மல்லைத் தல சயனத்து –
பிரளயம் வந்தால் உதவப் பார்த்து இருக்க ஒண்ணாது
என்று ஏற்கவே இவற்றை ரஷிக்கும்படியை அனுசந்தித்துக் கொண்டு இருக்கிறவனை –

ஞானத்தின் ஒளியுருவை –
ஞான ஸ்வரூபனாய்  உள்ளவனை – (உரு -ஸ்வம் ரூபம் -ஸ்வரூபம் )

நினைவார் என் நாயகரே –
ஒருதலைக் காமமாய் போகாமே
இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும்
நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது
வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –
(ஏவ காரம் -இதில்
கீழே ஆள்வார் -கைங்கர்யம் கொள்வார்
கொள்ளா விட்டாலும் இவர்களே நாயகர் )

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 13, 2013

பார் வண்ண மட மங்கை  பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில்  இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது முந் நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-

புருஷகாரமும் மிகையாகும்படி அவனுடைய ஊர்
முது முந் நீர்-பழைய ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர்
எம்மை யாள்வாரே-ஆழ்வார்களை எல்லாரையும் கூட்டி அருளிச் செய்கிறார்-(பல சாதன சிஸ்ரூஷா )

——————————————————

முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே
படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி
சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள்
என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-

வியாக்யானம் –

பார்வண்ண மட மங்கை
பாரை வண்ணமாக உடையாளாய்
ஆத்ம குணத்தை உடையாளாய் இருக்கிற
ஸ்ரீ பூமி பிராட்டி –
பூமிக்கு அபிமானியாய் இருக்குமவள் இறே-
அவன் தனக்கு கூட பொறைக்கு உவாத்தாய் இறே இவள் இருப்பது –
தன் பக்கலிலே எல்லா பிரதி கூல்யத்தையும்
பண்ணிக் காலிட்டு துகையா நின்றாலும்
துகையா நின்றோம் என்று கூச வேண்டாதே இறே இருப்பது -ஷமை என்று இறே பேர் –
(சாஷாத் ஷமா என்றே பெயர் -க்ஷமை உடையவள் என்னாதே க்ஷமையே இவள் நிரூபகம் )

பனி நன் மா மலர்க் கிழத்தி –
பிறர் குற்றம் நெஞ்சில் படாதபடியான மார்த்தவத்தை உடைய தலைவி –
சர்வ கந்த -என்கிற வஸ்துவையும்
தன்னுடைய போக்யதையாலே துவக்கி
ஆஸ்ரிதர் குற்றம் நெஞ்சில் படாதபடி பண்ணுமவள்-
அழகிய தாமரைப் பூவில் -பரிமளம் உபாதாநமாக பிறந்தவள் –
இத்தால் சர்வேஸ்வரனுக்கு தன்னோடே பணி
போரும்படியான போக்யதையை உடையவள் என்கை –
இவர்கள் –

நீர் வண்ணன் மார்வகத்தில்  இருக்கையை முன் நினைந்து –
கடல் போலே இருக்கிற குளிர்ந்த வடிவில் இடவருகிலும்
திரு மார்பிலும் எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தித்து –
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே
சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில்
பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை-

யத்ர கிருஷ்ணவ் ச கிருஷ்ண ச சத்யபாமாச பாமி நீ –
கிருஷ்ணனும் சத்யா பாமை பிராட்டியும்
அர்ஜுனனும் த்ரௌபதியுமாக
கால் மேலே கால் ஏறிட்டு ஒருவருக்கும் சென்று கிட்ட ஒண்ணாதபடி
ஏகாந்தமாக இருக்கிற இடத்தில்
சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
இவ் விருப்பு காண உகப்பான் ஒருத்தன்
இது தன்னையும் உகவாதார் மண் உண்ணும்படி
சொல்ல  வல்லான் ஒருவன் -புகுர விடு -என்றான் இறே

ந சாபிமன்யூர் நய மௌ தம்தேச மபிஜக்மது –
மாதா பிதாக்கள் இருந்த இடத்தில்
பிரஜைகள் சென்று கிட்டுகையில்
ஒரு அருமை இல்லை இறே –
ஆயிருக்கச் செய்தே அந்த பிரஜைகளும் கிட்ட ஒண்ணாதபடி இருக்கிற சமயத்திலே யாயிற்று
இவனை அழைத்து காட்சி கொடுத்தது-

————————————————-

(பாகவத சமாகம் -உபாயமாகவா- புருஷகாரமாகவோ -ப்ராப்யமாகவோ-
ஆனுகூலஸ்ய இத்யாதிகளில் பாகவத சமாகம் இல்லையே -இதுக்கு மீண்டும் அவதாரிகை )

அநாதி காலம் சம்சரித்திப் போருதிற இச் சேதனர் விஷயமாக
சர்வேஸ்வரன் திரு உள்ளத்தாலே
ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம்-என்கிறபடியே பண்ணுவித்த தொரு
சௌஹார்த்தம் உண்டு இறே –
இவனுடைய சத் கிரியைக்கு ( யாதிருச்சாதிகள்-நன்மை என்று பேர் இடலாவது தீமைகள் )பல வ்யாப்தி
உண்டாகா நின்றால் அவனுடைய அனுக்ரகத்துக்கு பல வ்யாப்தி இன்றிக்கே இராது இறே –
ஆகையால் அது தான் ஒரு நாள் ஓர் அவகாசத்திலே
பலிக்கவும் கடவதாய் இருக்கும் இறே –
அத்தாலே இவனுக்கு ஈஸ்வரன் பக்கலிலே ஆபி முக்யம்
பிறந்து அது அடியாக அவன் விசேஷ கடாஷம் பண்ண –
அநந்தரம் -இவனுக்கு அவன் பக்கலிலே
ருசி விஸ்வாசங்கள் பிறந்து
ப்ராபகனும் ப்ராப்யனும் அவனே என்று அத்யவசித்தால்
பின்பு அவன் இருக்க கடவ படியைச் சொல்லுகிறது-
(பாகவத சேர்க்கையில் விருப்பமும் அபாகவத சேர்க்கையும் வெறுப்பும் –
இது உபாய கோடியிலா உபேய கோடியிலா என்பதுக்கு விளக்கம் மேல் )

இனி உபாயத்தில் வந்தால்
சர்வஞ்ஞனாய் –
சர்வ சக்தியாய் –
உபய விபூதி உக்தனாய் –
அவாப்த சமஸ்த காமனாய் –
இருக்கிற சர்வேஸ்வரனை இஸ் சம்சார சேதனன்
உபாயமாக வரித்தால் -பின்னை அவனுடைய சர்வ
பரங்களையும் தானே ஏறிட்டுக் கொண்டு நிர்வஹிப்பான் ஆகில்
அவன் செய்யுமதுவும் இவன் தானும் ஒரு தலைப் பற்ற வேண்டும்
படி இராமையால் பின்னை ஹித சேஷத்தில்
தனக்கு செய்ய வேண்டுவது ஓன்று இல்லை –

உபேயம் ஆகிறது -கர்ம நிபந்தனமாக பரிகிரஹித்த
இத் தேக சம்பந்தம் அற்று ஒரு கதி விசேஷத்தாலே போய்
ஒரு தேச விசேஷத்திலே புக்கால் பண்ணுவதொரு
வ்ருத்தி விசேஷம் ஆகையால் அது இதுவாகக் கூடாது

பிராபக அம்சத்தில் கர்தவ்ய அம்சம் இல்லை யாகில்
ப்ராப்ய அம்சத்தில் இது அந்வயித்தது இல்லை யாகில்
பின்னை இதுவாவது பழைய விஷய ப்ராவண்யமே
சித்தித்து விடுகிறதோ என்னில் கூடாது இறே –
ப்ராப்யம் இன்னது என்று நிஷ்கர்ஷித்து ப்ராப்ய ஸ்வீகாரம் பண்ணுகையாலே –
அதாவது
பிராப்ய ஆபாசங்களிலே ருசி நிவ்ருத்தி பூர்வகமாக இறே ப்ராப்ய பிரதிபத்தி ஆகையாலே
தூரதோ நிரஸ்தம் இறே அது –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில்
விஹித கர்மங்களும் நிஷித்த பரிஹாரார்தமாக
செய்யுமவை (பிராயச்சித்த தர்மங்களும் )எல்லாம் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே
இவையும் த்யாக விஷயமாய்  அன்வயிக்கும் என்று அர்த்த ப்ராப்தமாய்
பழைய பாபங்களையே சொல்லிற்றே வராதோ -வென்னில் -வாராது இறே

உபாய ஸ்வரூபத்தாலும்
அதிகாரி ஸ்வரூபத்தாலும்
(உபேய ஸ்வரூபத்தை பார்த்தாலும் )
அப்படியே இருக்கிறது இதுவும் -( ப்ராக்ருத விஷயாந்த ப்ராவண்யம் வாராது என்றபடி )

சரீர சமனந்தரத்திலே ப்ராப்ய சித்தியாய் இருக்கையாலும் –
இனி சமஸ்த கல்யாண குணாத்மகனை உபாயமாக வரிக்கையாலும்
இவன் தான் விதி பர தந்த்ரனாய்
சாதனா புத்யா இங்கு அனுஷ்டிப்பது ஓன்று இல்லாமையாலும்
ஜ்ஞானம் பிறந்த பின்பு செய்யுமவை எல்லாம் தான்
ஸ்வீகரித்த பிராப்யத்தோடும் ப்ராபகத்தோடும் சேர்ந்தது அல்லாது இராது –

நினைத்தார் நினைத்தபடி மூலையடியே திரிகிற
அஞ்ஞ்ரைக் காட்டில் இவனுக்கு ஒரு வ்யாவ்ருத்தி வேணும் இறே –
இன்று நாளை நீர் வரும் ஆறு
அங்கே இங்கே சினையாறு பட்டுக் காட்டுமா போலே
மேல் தான்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் –
அவர்களோடு கூடி அனுபவிக்கும் அத்தை பேறாகச் சொல்லுகையாலே இவனுக்கு இது சரம சரீரம் ஆன பின்பு
இவை இங்கே பிறக்கக் காண வேணும் இறே-

அவை ஆகிறவை தான் எவை என்னில்
அபாகவதர்களோடு பொருந்தாமையும்
பாகவதர்களை ஒழியச் செல்லாமையும்
இறே
அவை இரண்டும் தமக்கு உண்டான படியை அருளிச் செய்கிறார் –

பார்யைக்கு அறிவு பிறக்க பிறக்க பர்த்தாவின் பக்கல் பாவ பந்தம் உண்டாம் –
பர்த்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணுமது இறே இவள் அவனுக்கு ஆகாது ஒழிகை ஆகிறது –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மந்தர் -என்னா நின்றது இறே –

பிரபன்னருடைய லஷணம் சொல்லுகிற போது
இப்படி சர்வேஸ்வரன் உத்தேச்யம்  என்று ஞானம் பிறக்க பிறக்க
பாகவதர் பக்கல் பாவ பந்தம் உண்டாகலாம் –
இந்த ஞான அர்த்தமாக விட வேணும் இறே அபாகவாத சம்பந்தம் –
(பார்த்தாவின் சரீரம் -கால் கை இவற்றில் ஈடுபாடு போல் பாகவதர் மேல் ஈடுபாடு –
அவன் திருமேனி அன்றோ இவர்கள்)

மூன்று தசைகள் பாகவதருக்கு என்பதை அருளிச் செய்கிறார்
இனி பாகவதர் ஆகிறார் –
பிரதம தசையில் ஈஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவித்து –
அவ்வழி யாலே புருஷகார பூதராம் ஆவார்கள் –
இவன் தான் சேதனனாய் உபகாரம் கொண்டவன் ஆகையாலே  கிருதஞ்ஞனாய் இருக்கக் கடவன் –

இனி சரம தசையில் வந்தால் ப்ராப்யத்தில் எல்லை இவர்கள் ஆகையால் அவன் தன்னோபாதியும்
உத்தேச்யராய் இருக்கக் கடவர் –

இனி நடுவு பட்ட நாள் –
இவனுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு
உடலாய் இருப்பார்கள் ஆகையால்
சர்வ அவஸ்தைகளிலும் இவர்களே உத்தேச்யம் என்னும் இடம் சொல்லிற்று –

ஆனுகூலச்ய சங்கல்ப -இத்யாதிகளால் ஆறு வகையாக இருக்கும் சரணாகதி என்று சொல்லா நின்றது –
அஹம் அஸ்ம்ய அபராதநாம் ஆலய அகிஞ்சன அகதி த்வமே உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்தனா மதி சரணாகதி -என்று
தன் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு நீயே உபாயமாக
வேணும் என்று அபேஷிக்குமத்தை சரணாகதியாக சொல்லா நின்றது –

இதில் ஒன்றை விட்டு ஒன்றை ஸ்வீகரிக்கும் அன்று மற்றையதுக்கு அப்ராமண்யம் சித்திக்குமாய் இருந்தது –
ஆனால் இவை இரண்டும் அவிருத்தமாக அன்வயிக்கும்படி-( நயிக்கும் -படி பொருந்த விட்டபடி -) எங்கனே என்னில்

த்வமே -என்கிற இடத்தில் உபாயாந்தர நைரபேஷ்யம் தோற்றி இருக்கையாலே சரணா கதியினுடைய
ஸ்வரூபம் சொல்லுகிறது அந்த ஸ்லோகத்தாலே-

அச் சரணா கதி புக்க இடத்தே புகக் கடவதாய் சரணா கதன் ஆனவனுக்கு சம்பாவித ஸ்வாபாவங்களை சொல்லுகிறது
இந்த ஸ்லோகத்தாலே –

சரணா கதியினுடைய ஸ்வரூபத்தைப் பார்த்தால் வேறு ஒன்றைப் பொறாத படியாய் இருக்கும் –
இனி ஒதுங்கின ஆஸ்ரயத்தை பார்த்தால் இஸ் ஸ்வாபாவங்களோடு கூடி  அல்லாது இராது –

ஷட் விதா சரணா கதி -என்று கொண்டு இக் குணங்களை சரணா கதிக்கு அங்கமாக சொல்லா நிற்க
இவனுக்கு சம்பாவித ஸ்வா பாவம் என்னும்படி எங்கனே என்னில் –
பிரார்த்தனா மதி சரணா கதி -என்கிற இடத்தில் பிரார்த்தனா புத்தி இச் சேதனன் கையில் கிடக்கச் செய்தே
எங்கனே சரணா கதி லஷணம் விஷயமாய் கிடக்கிறபடி –
ஆனுகூலச்ய -என்கிற ஸ்லோகம் விதி பரதந்த்ரமாய் செய்யும் அன்று –
பல அபேஷை இல்லாத போது தவிரலுமாய் இருக்கும் –
ஸ்வரூப நிவேசியாமன்று செய்யாத போது ஸ்வரூப ஹானியே சித்திக்கும் இறே –
ஸ்வர்க்க காமனாய் இல்லாத போது ஜ்யோதிஷ்டோமம் தவிரலாய் இருக்கும் –
அங்கனே செய்ய ஒண்ணாதபடி யாய் இருக்கும் இறே –
இத்தலையால் ஒரு பலம் சொல்லாத நித்ய அனுஷ்டான விதிக்கும் –
(உபாயத்துக்கு அங்கங்கள் என்றால் பலம் சித்தித்த பின்பு இவை தொடராக கூடாதே
இவை இங்கும் அங்கும் தொடருமே -ஸ்வரூபத்துடன் சேர்ந்தே இருக்குமே –
பாகவத சமாகம் அவர்ஜனீயம் -சந்த்யா வந்தனாதிகள் போல் -பலத்திலே அந்வயிக்கும் என்றவாறு )

இதில் முதல் பாட்டில் -அபாகவதரோடு பொருந்தாமை சொல்லுகிறது –
இவை இரண்டும் உத்தேச்யமானால் க்ரம விசேஷத்தத்துக்கு கருத்து என் என்னில் –
ஆநு கூல்யத்துக்கு அவதி இல்லாமையாலே சங்கல்பமே அமைந்தது –
இதில் முதல் அடி இட்டானாவதும்  இஸ் ஸ்வா பாவம் உண்டானால்  ஆகையாலே இத்தை முந்துறச் சொல்லுகிறது –

(பண்ணுவேன் என்று சொல்லாமல் பண்ணுவேன் என்ற சங்கல்பமே போதும்
பிரதிகூல வ்ரஜம் விட்டே இருக்க வேணுமே )

விரோதி த்யாக பூர்வகமாக  இறே உபாய ஸ்வீகாரத்தை விதிக்கிறது –

பரித்யக்யா மயா லங்கா -என்றும் –
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ச -என்றும் இறே
ராகவம் சரணம் கத -என்கிறது

தன்னைப் பேணாதே பிரயோஜனாந்த பரருக்காக உடம்பு நோவக்
கடல் கடைந்து அமுதத்தைக் கொடுத்த சர்வேஸ்வரன்
அந்த அம்ருத்தோ பாதியாகிலும் நம்மை விரும்புவார் சிலரைக் கிடைக்க வற்றோ என்று
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு சாய்ந்து அருள
அவனை விட்டு புறம்பே போது போக்குகிற வர்களை
நான்  ஒருவனாக புத்தி பண்ணி இரேன் என்கிறார்-

———————————————————————

நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு-
ஆசூர பிரகிருதிகள் நடுவே
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காகப் போய் புக்கு –
சர்வேஸ்வரன் தேவாசுர விபாகம் பண்ணுகிற இடத்தில்
இவ்விரண்டாகாரம் எங்கும் ஒக்க உண்டாம்படி பண்ணினான் ஆயிற்று
அப்போது அர்ஜுனன் -நான் எக் கோடியிலே போகிறேனோ என்று சோகிக்க
மாஸூஸ சம்பதம் தைவீ மபி ஜாதோசி பாண்டவ -என்று
உனக்கு என் -நீ சத் பிரகிருதி அல்லையோ -என்றான் இறே –

மனுஷ்யராய் இருந்து வைத்து ஆசூர பிரகிருதி களாய் இருப்பார் கோடியில் அன்றிக்கே
இவர்களுடைய ஆசூரத்வம் ஜன்ம ப்ரப்ருதி உண்டாய் இருக்கை-
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வைத்து உக்ரசேனன் நிலை
அல்லவாம்படி இறே-கம்சனுக்கு உண்டான ஆசூரத்வம்
ஈஸ்வரனோடு பொருந்தாமை ஸ்வ பாவமாக உடையராய்
தாங்கள் அதுக்கு மேலே சாயுதருமாய் இருப்பர்கள்-

வாள் அவுணர் இடைப்புக்கு –
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய
தோள் கண்டு புகுகிறதோ –
பர ஹிம்சை பண்ணுகைகாக பரிகரம் கொண்டு இருக்கிறவர்கள் நடுவே இறே போய்ப் புக்கது –
இப்படி போய் புக்கலுமாம் இறே  தன் வாசி அறியாத சிலருக்கு செய்யப் பெற்றதாகில் –

வானவரை –
கார்ய காலத்தில் பல் காட்டி
அநந்தரம்
அவனைத் தள்ளி -ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்காக வாயிற்று –
இவனை தங்களோடு சஜாதீயனாகப் புத்தி பண்ணுதல் (தேவேந்திரன்-உபேந்த்ரன் )அன்றிக்கே –
இவன் ஒரு மூங்கில் வளைத்த போதாக நம்மில் அதிகன் என்று இருத்தல் செய்யுமவர்கள் இறே –
(பாரிஜாத வ்ருஷ வ்ருத்தாந்தம்-வில்லை வளைத்த வ்ருத்தாந்தம் -ஹூங்காரம் கேட்டே வில் முறிந்ததே )
இதில் இன்னும் அந்த சஜாதீய புத்தி தானே நன்று இறே –
அவ் அவுணரில் இவர்களுக்கு வ்யாவிருத்தி பெரிது அல்ல வாயிற்று –
அவர்கள் இவனுடைய ரஷ்ய வர்க்கத்தை அழியச் செய்து கொடு திரியப் புக்கார்கள் –
இவர்கள் அவன் பக்கலிலே அபேஷித்தார்கள் இத்தனை யாயிற்று வாசி –

இவர்களுக்கு கார்யம் செய்தாலும் இறே தன் ஸ்வரூபம் அழியாதபடி கார்யம் செய்யப் பெற்றோம் ஆகில் –
பெண்ணாகி –
(மோஹினி திருக்கோலம் )
தன்னை அழிய மாறி நிற்கச் செய்தேயும்
தூது போவது
சாரத்தியம் பண்ணுவது ஆனான் இறே
அவ்வளவு அல்லவாயிற்று –
அஹமஸ்மி மஹா பாஹோ -என்றும் –
இமௌஸ்மம் முநி சார்த்தூல கிங்கரௌ சமுபஸ் த்தி தௌ-
என்றும் ருஷிகளும் ஏவிற்றுச் செய்வானாக தன்னைத் தாழ விட்டுத் திரிந்தவன் ஆயிற்று –
புருஷோத்தமான தன்னை இறே தன் ஸ்வரூபத்துக்கு போராதபடி அழிய மாறிற்று

கிழக்கே ஐயாற்றிலே (திருவையாற்றில் ) யாதவ ராயர் வந்து இருக்க ஜீயர் என்னை இறையிலிக்  கார்யத்துக்காக அநேகம்
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கூடப் போக விட்டார் –
நான் அவன் கூடத்திலே வந்து அவசரம் பார்த்து இருக்கச் செய்தே
பலரும் வந்து என்னை அனுவர்திக்கக் கண்டவாறே அங்கே
மஹா மகேஸ்வரனாய் இருப்பான் ஒரு பையல் –
பிள்ளாய் நீர்  பொருளுக்கு கடவீர் ( எப் பாட்டுக்கும் அர்த்தம் ) என்று கேட்டோம்
எங்களுடைய வற்றிலே அரியல்லால் தேவு இல்லை என்று உண்டாய் இருந்தது –
அதுக்கு பொருள் சொல்ல வேணும் -என்ன

நான் இதுக்கு அதிகரித்தேன் ஒருவன் அல்லேன் -என்ன
ஆகிலும் நீர் அனைத்துக்கும் சொல்வீர் சொல்லிக் காணும் என்ன –
நீ தான் தேவர்க்கு-ருத்னனுக்கு- ஒரு உத்கர்ஷத்தையும்
ஈஸ்வரனுக்கு ஒரு அபகர்ஷத்தையும்
நினைத்து கேட்கிறாய் ஆகில்
புருஷோத்தமன் என்று புராணங்களில் சொல்லா நிற்க
ஆஸ்ரித அர்த்தமாக அவன் தன்னை அழிய மாறினான் என்றால்
இது அவனுக்கு குணவாயாம் அல்லது தோஷாவாயாகாது-
இனி ஆண் பிள்ளை சோறாள்வியை-( சமையல் காரர் )- ஸ்திரீ என்று துடர்ந்து
திரிவாரைப்  போலே துடர்ந்து திரியா நின்றார் -என்று
தேவரை அஞ்ஞர் ஆக்குவதில் காட்டில் இது சொன்னவன்
அநாப்தன் அஞ்ஞன் என்று இருக்க அமையாதோ -என்று சொன்னேன் என்று அருளிச் செய்தார் –

அமுதூட்டும் –
இப்படி அழிய மாறினாலும் இறே
தன்னையே விரும்பி பெற்றதாகில்
சரீரத்தை பூண் கட்டி கொடுப்பதானத்தை  இறே விரும்புகிறது –

ஊட்டும்
கடல் கடைகையும்-யத்நிக்கையும் எல்லாம் தனக்கு பணியாய்
இவர்களுக்கு கர்த்தவ்யம் புஜிக்கையிலேயாய்
இவர்கள் மிடற்றுக்கு கீழ் இழிச்சுமது தனக்கு உபகரித்தார்களாய் இருக்கும்
எங்களுக்கு அம்ருதமே வேணும் -என்றல்
அத்தை உத்பாதித்துக் கொடுத்து விடுமத்தனை  இறே –
அதுக்கு ஈடான ஒரு வடிவைக் கொண்டு நின்று புஜிப்பிக்கிறது தான் நீர்மை இறே –
உறங்குகிற பிரஜையை எழுப்பி ஊட்டும் தாயைப் போலே
இது தான் தனது பேறாக வாயிற்று செய்தது-

இப்படி செய்கைக்கு நிபந்தனம் என் என்னில்
பெருமானார் –
சேஷித்வ பிரயுக்தமான சம்பந்தம் ஆயிற்று –

மருவினிய இத்யாதி –
மருவினிய தேசம் ஆயிற்று

தண்ணார்ந்த
ஸ்ரமஹரத்தை விஞ்சி இருக்கை
அதாவது ஸ்ரீ வைகுண்டத்தைப் போலே ரஷ்யம் பெற்றிலோம்
என்னும் குறை தீரும்படியாய் இருக்கை –

கடல் மல்லைத் தல சயனம் –
ஆஸ்ரிதன் ஒக்கப் பணி செய்தான் என்று அவனுக்காக
காற்கடை தலைமாடாக வந்து தரையிலே சாய்ந்து அருளின இடம்  இறே-

உறைவாரை –
ஆஸ்ரிதர் விரும்பின இடம் என்று விட்டுப் போக மாட்டாதே
நித்ய வாஸம் பண்ணுகிற இடம் –
அவ் ஆசூர பிரக்ருதிகளில் குறையாதார் நடுவே இறே வந்து கிடக்கிறது –

எண்ணாதே  இருப்பாரை –
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினவன்
ஸ்ரீ வைகுண்டத்திலே குறைவற இருக்கக் கடவன்
சம்சாரிகள் நடுவே -தன்னைப் பேணாதே -சாய்ந்து அருளின இது நமக்காகச் செய்தான் –
நின்று இருந்து  வெக்கணைக்   கிடந்தது என்ன நீர்மையே -என்று
இத்தை அனுசந்திக்க வேண்டி இருக்க இதில் நினைவு இன்றிக்கே
புறம்பே உண்டு உடுத்து கால ஷேபம் பண்ணித் திரியுமவர்களை –
இருப்பாரை –
எண்ணாதே இருக்கை யாவதும்
ஒழியல் ஆவதும்-அதுக்கடியான கர்ம ஷயம் பிறவாமையாலே
சைதன்ய கார்யம் இறே -இப்படிச் செய்திலோம் என்னும் அனுதாபம் பிறக்குமது-
அதுவும் இன்றிக்கே இருக்குமவர்களை –

இறைப் பொழுதும் எண்ணோமே-
சேதனராய் இருந்து வைத்து அஞ்ஞராய் எண்ணுவதொரு
போது உண்டு இறே
அப்போதும் எண்ணக் கடவோம் அல்லோம் –
அ வஸ்துகளைப் பரிகணிப்பதும் ஒரு போது உண்டு இறே
அப்போதும் எண்ணோம் –

அவர்கள் தாங்கள் தாங்களை கனக்க நினைத்து  இருந்தார்கள் ஆகிலும்
அவர்களை ஒன்றாக நினைத்து இரோம்
இவர் தாம் நினைக்கிற்  போலே அவர்களுக்கு வஸ்துத்வம் உண்டாவது –
மாநிடவர் அல்லர் என்று  என் மனத்தே வைத்தேன் -என்னக் கடவது இறே
கல்லிலும் செம்பிலும் வெட்டிற்று என்னுமா போலே-( கல் வெட்டு தாமர பத்ரம் போல்)

அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -என்று இறே தம்மைச் சொல்லுகிறது –
ஜ்ஞான ஆநந்தங்கள் அன்று காணும் இவர்க்கு நிரூபகம் –
பாகவத சேஷம் ஆயிற்று

—————————————————————-

பிரவேசம் –

பார் வண்ணம் இத்யாதி –
நீர் பொருந்தாதாரை-இன்னார் என்று அறிந்தோம் –
நீர் பொருந்துவாரும் சிலர் உண்டோ என்ன –
அவர்கள் ஜன்ம வ்ருத்தாதிகளைக் கொண்டு கார்யம் இல்லை –
அவர்கள் தாங்கள் ஆரேனுமாக அமையும் –
இது உண்டாம் இத்தனையே இறே அவர்கள் தம்மை நிர்வஹிக்கை என்கிறார் –

நீர் பிரதிகூலர் விஷயத்தில் இருக்கும்  படி அறிந்தோம்
அனுகூலர் விஷயத்தில் இருக்கும் படி என் என்ன –
அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –
இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
(நிந்திக்க ஆழ்வார் -வாழ்த்த நித்யர்கள் நம்மாழ்வார் மொய் மா பூம் பொழிலில்)

வியாக்யானம் –

பார் வண்ண மட மங்கை
பூமிக்கு தனக்கு பிரகாரமாய் வுடையாளாய்
ஷமாதி குணங்களாலே குறை வற்று இருந்துள்ள ஸ்ரீ பூமிப் பிராட்டி –

பனி நன் மா மலர்க் கிழத்தி –
ஸ்ரமஹரமாய் -விகசிதமாய்-அழகியதாய் இருந்துள்ள
தாமரைப் பூவை ஜென்மமாக உடையவள் –

இவர்கள் –
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்து –
ஸ்ரமஹரமான திரு மேனியில்
இடவருகைப் பற்றவும்
அத் திருமார்பைப் பற்றவும் இருக்கிற இருப்பை அனுசந்தித்து –
நீர் வண்ணன் மார்வகத்தில் -பனி நன் மா மலர்க் கிழத்தி –என்று அந்வயம் ஆகவுமாம்  –
மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு கிட்டலாய் இருக்கும் இறே-

அவனூர் இத்யாதி –
அவன் பரமபதத்தை விட்டு நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரமஹரமான திருக் கடல் மல்லையை
கறுத்த நிறத்தை உடைத்தாய்
பழையதாய் இருந்துள்ள
மூத்து முதிர்ந்துள்ள
முந்நீர் உண்டு கடல் -அதின் அருகே இறே

ஆர் எண்ணும் நெஞ்சுடையார் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்
ஏதேனும் வ்ருத்தம் ஆகவுமாம்
ஏதேனும் ஜ்ஞானம் ஆகவுமாம் –
இவ்விடத்தை எண்ணும் நெஞ்சு உடையாராம் இத்தனையே வேண்டுவது –

அவர் இத்யாதி –
அவர்கள் நின்ற நிலைகளிலே
பிரமாணம் காட்டாதே
நம்மை கார்யம் கொள்ள வுரியார் –

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 13, 2013

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.

பொ-ரை :- தெளிதல் நினைத்தல் தியானித்தல் ஆகிய இவற்றால் அறியமுடியாத திருமாலுக்கு உரிமைப்பட்ட தொண்டர்களுக்குத் தொண்டரான ஸ்ரீ சடகோபராலே தெளியும்படியாகச் சொல்லப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உலகத்தையெல்லாம் உண்டவனான சர்வேசுவரனுக்கு உரிமைப்பட்ட தொண்டராகச் செய்யும்.

  ஈடு :- முடிவில் 1இப்பத்தும் கற்றவர்கள் சர்வேசுவரனுக்கு அந்தரங்கமான தொண்டராவர் என்கிறார்.

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு-கேள்வி விமரிசம் பாவனை இவைகளால் அளவிடமுடியாத திருமகள் கேள்வனுக்கு. 2“இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்” என்கிறபடியே

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய:
ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய:
தஸ்யஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.

. 3கேவலம் கேள்வி முதலானவைகட்கு அப்பாற்பட்டவனாயிருப்பான்; 4அல்லாதபோது இவை தாம் அநுபவமாய்ச் சேருமன்றோ. இதற்கு அடி, திருமகள் கேள்வனாயிருத்தலாதலின் ‘திருமாலுக்கு’ என்கிறார். 5அதுவன்றோ சர்வாதிக வஸ்துக்கு அடையாளம். திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் – திருமகள் கேள்வனான சர்வேசுவரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார், 6சம்சாரத்தின் தன்மையை நினைத்தகொடுமையாலும், பகவத்விஷயத்திலே மூழ்கின கனத்தாலும், பெருவிடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. 1இது இவருடைய அகம்புத்தி இருக்கிறபடி. 2தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அகம்புத்தியைப் பண்ணுவான்; ‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்தபோது ஆத்மாவிலே அகம் புத்தியைப் பண்ணுவான்; தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்தபோது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக்கொண்டு போவன்; ‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்தபோது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன். 3“பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய்மொழிக்குப் பின்பு அடியார்கட்கு அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று, இவருடைய அகம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது. 4இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது.

மற்றுமோர் தெய்வம் உளதென் றிருப்பாரோடு
உற்றிலேன்; உற்றதும் உன்னடியார்க் கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ண புரத்துறை யம்மானே!-
என்ற திருப்பாசுரம் நினைவு கூர்க. பெரிய திருமொழி.

தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் – பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் சம்சாரத்தினுடைய தோஷத்தையும் தெளிவாகச் சொன்ன இருப்பத்தும். உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-சர்வரக்ஷகனான சர்வேசுவரனுக்கு அநந்

யார்ஹசேஷமாக்கும் இத் திருவாய்மொழி. 1சம்சாரம் நன்றுமாய், பகவத்விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.“குணக்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூபப்ரயுக்தமான
தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதால் – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரிமா றன்சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு.

கைங்கர்யம் செய்யப் பெறுவார்
தெரிதல் அறிந்து கொண்டு
நினைதல்-
எண்ணுதல் ப்ரீதி பூர்வகமாக எண்ணுதல்
சரவணம் மனனம் நிதித்யாசனம் –
கேவலம் இவை மட்டும் கூடாதே  -ஈடு பாடு வேண்டுமே
ப்ரீதி பூர்வகமாக இருக்க வேண்டுமே –
அவன் விஷயமாக -அனுபவமாய் அன்வயிக்கும் இவை
சூசுகம் கர்த்வம் சாதனா வேளையிலே இவை இனிக்கும் –
திருமால் இதுக்கடி ஸ்ரீ ய பதி-சர்வாதிகனுக்கு அடையாளம்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
அனந்யார்க்க சேஷ பூதன்
சம்சார வெக்கை பேசி -கொடு உலகம் துக்கம் ஆட
பெரு விடாயன் மடுவில் விழுமா போலே –
சந்தஸ் இடம் இல்லை மேலே மேலே சொல்ல
இவருடைய அஹம் புத்தி –
ஆழ்வார் அஹம் சொன்னாலும் சரம
நாம் தொண்டர் —தொண்டர் சொன்னாலும் நான் சொல்வது போலே
தேகம் ஆத்மா -நான் புத்தி உடலையே பேணி
ஆத்மா வேற -ஆத்மாவில் அஹம் புத்தி கைவல்யம் அஹம் ப்ரஹ்மாசி சொல்லி அத்வைதிகள் போலே
பிரகார மாத்ரம் இன்றி

தன்னை பகவத் சேஷ பூதன் -பிரகார மாத்ரம் நின்று
தானே அனுபவித்து ஐஸ்வர்யம் கொண்டு போகிறான்
செஷத்வமே புருஷார்த்தம் அறிந்து கொண்டால் பகவான் கூட நிற்காமல் பாகவத சேஷத்வம்
ததீய சேஷத்வம்
பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு -எவரேலும் அவர் கண்டீர் அடியார் –அடியோம்களே
இவ்வளவு தூரம் வந்தால்  தான் அனந்யார்ஹம்
தெரிய சொன்ன -தோஷங்களையும் காட்டி பகவத் விஷய உயர்தியையும் காட்டி
உரிய தொண்டர் ஆகுவார்
சம்சாரம் நன்றாக இருந்தாலும் பகவத் விஷயம் கஷ்டமாக இருந்தாலும் விட மாட்டார்கள்
கைங்கர்யமே போதும் என்பார் உரிய தொண்டர்கள் –
சாரம் -மா முனிகள்
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய
ஆழ்வார் கதற
மாலுக்கும் விசும்பில் இருப்பு அரிதாக
ஆறாத காதல் மாறன் சொல்லே
உஜ்ஜீவிக்கும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.