செழு நீர் மலர்க் கமலம் திரை யுந்து வன் பகட்டால்
உழு நீர் வயலுழ வருழப் பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே –2-6-8-
வல் பகட்டால் -வலிய எருதுகளைக் கொண்டு -பகடு -எருது -யானைக்கும் பெயர் –
பிழைத்து எழுந்த கழு நீர் -உழவுக்கு தப்பி எழுந்த செங்கழுநீர் மலர்களினுடைய
முன்–உழ–பின் -பிழைத்து எழுந்த-செங்கழுநீர் மலர்களினுடைய-முன் பின் – இடத்திலும் காலத்திலும்
திரை யுந்து -என்பதை விட -திரை யுந்தி -பாடம் வ்யாக்யானத்துக்கு சேரும்
உழு நீர் -வயலுக்கும் உழவர்க்கும் அடை மொழி –
எப்பொழுதும் உழுவதே இயற்கையாக யுடையவர் உழவர்
வயலும் எப்பொழுதும் உழப் பட்டுக் கொண்டே இருக்கும்
———————————————————–
வியாக்யானம் –
செழு நீர் மலர்க் கமலம் திரை யுந்து-
மலர்ந்த தாமரைகளையும்
ஜல சம்ருத்திகளையும் உடைத்தாய் யாயிற்று வயல் இருக்கும் படி –
இவ் வயலை தரை கண்டு உழுகைகாக
அத் திரைகளையும் தாமரைகளையும் காலாலே தள்ளுவார்கள் –
வன் பகட்டால் –
பிரளயத்திலும் உழவற்றாய்-ஆயிற்று அவ் எருதுகள் இருப்பது –
உழு நீர் வயலுழ வருழப்-
எப்போதும் நடுவது உழுவதாய்ப் போருகையாலே
உழுவதே ஸ்வ பாவமாக வுடைத்தான வயலை
கர்ஷகரானவர்கள் உழ-
பின் முன் பிழைத்து எழுந்த கழு நீர் கடி கமழும்-
இவர்கள் உழா நிற்க –
பின்னும் பின்னும் தப்பி நின்ற செங்கழு நீரானது
இவர்கள் ஸ்ரமத்தை ஆற்றுகைக்கு உறுப்பாக
பரிமளத்தை ப்ரவஹியா நிற்கும் –
முன் பின் – இடத்திலும் காலத்திலும்
அன்றிக்கே –
இவர்கள் முன்னே உழுது கொடு போகா நிற்க
பின்னே தப்பி நின்ற கழுநீர் கடி கமழும் என்றுமாம் –
அங்கன் அன்றிக்கே-
வயலுழ வருழப்பின் முன் பிழைத்து எழுந்த-(வயல் உழ உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த)
முன்பே ஒரு கால் உழுது வைப்பார்கள் இறே –
அப்போது தப்பி நின்ற செங்கழுநீர்
அலருகைக்கு ஒரு சஞ்சாரம் பண்ணினால் போலே இருக்கும் –
கடல் மல்லைத் தல சயனம் தொழு நீர் மனத்தவரைத் –
திருக் கடல் மல்லையைத் தொழுகை
காதா சித்கமாகை தவிர்ந்து
ஸ்வபாவம் ஆம் படி யான நெஞ்சை யுடையாரை –
தொழுவாய் என் தூய் நெஞ்சே –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரை யானவோபாதி
அவர்கள் தங்களை தொழுகை கிடாய் உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே
உன் சுத்தி இருக்கிறது –
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply