பிணங்கள் இடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-
மல்லை -பெருமை உள்ள
——————————
வியாக்யானம் –
பிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் –
மனிச்சு கலவாத நெஞ்சை உடைய
ருத்ரனோடு கூட –
ஸ்மசாந பூமியிலே ஆடா நின்றுள்ள
ருத்ரனோடே கூட –
அபிமான உபஹதரானவர்களுக்கும்
நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க
திருமேனியில் இடம் கொடுத்து இருக்கும் நீர்மையைச் சொல்லுகிறது –
திரு வாழி ஆழ்வானைச் சொல்லுகிற இடம்
நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம்-
விசும்பில் கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல சயனம் –
இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை
அனுசந்தித்து நித்ய ஸூரிகள் சஞ்சரிக்கிற படியை
சொல்லிற்றாகவுமாம் –
அன்றிக்கே
ஆகாசத்தில் போக பிரதானரான
யஷ கந்தர்வர்கள் சஞ்சரியா நின்றுள்ள
பெருமையை உடைய திருக் கடல் மல்லையை –
வணங்கும் மனத்தாரவரை –
தொழும் நெஞ்சு உடையாரை –
வணங்கு என் தன் மட நெஞ்சே –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே
உனக்குத் தொழுகைக்கு விஷயம்
அவர்கள் தாங்கள் கிடாய்-
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply