Archive for August, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

வளங்கனி–சீதாபிராட்டி / இளங்கனி-பரகால நாயகி

————————————————————————

வியாக்யானம் –

உளம் கனிந்து இருக்கும்
உள்ளமானது இங்கனே பக்வமாய்
அகவாயில் ஓடுகிறது வாய் விட மாட்டாதே இருக்கும் –

ஹிருதயம் பரி பக்குவமாகையாது என் என்னில் –
புஜிக்க கடவ அவன் புஜித்தது இல்லை யாகில் ஆஸ்ரயம் இல்லையாய் இருக்கை –

உன்னையே பிதற்றும் –
இது தான் பாவ பந்தத்தாலேயோ -யென்று இருந்தாள் இவள் வாய் விடும் அளவும் திருத் தாயார் –
(வாய் விட்ட பின்பு தான் ஒருதலைக்காதல் என்று அறிந்தாள்)

உம்முடைய பக்கலிலும் ஒரு அபிசந்தி இன்றிக்கே
ஜாமதக்ய யஸ்ய ஜல்பத -என்கிறபடி
அடைவு கேடாக சொல்லா  நின்றாள் –
(பீஷ்மர் அர்ஜுனன் இடமும் துரியோதனன் இடம் சொல்லும் வார்த்தை -பரசு ராமர் அடைவு கேடாக சொல்லக் கேட்டுள்ளேன்)
ஒரு அபிசந்தி பூர்வகமாக வந்ததாகில் அடைவு  பட்டு இருக்கும் இறே-

உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்-
நம்மையும் ஒரு கால் சொல்லாளே-யென்னும் நசை அறுத்தாள்-
அவனுக்காம்படி இவ்வளவாக்கினார் பக்கலிலே யாதல்
அவன் பக்கலிலே யாதல் இறே
பாவ பந்தம் இவளுக்கு –

வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
இவ்வளவான பிரேமத்துக்கு அவன் கிருஷி
பண்ணின படியைச் சொல்லி வாய் வெருவும் –

சம்ருத்தமான பழங்களை உடைத்தாய்
பொழிலாலே சூழப்பட்ட திருமலையிலே
ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு
முகம் கொடுத்து நிற்கிற
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து
பின்னை வாசனையே உபாத்யாயராக சொல்லுமது ஒழிய
உணர்த்தியுடன் சொல்லுவது ஒரு வார்த்தையும் இல்லை –

வாய் வெருவும் –
விசிந்தயா வாசா ப்ருவதீதமேவ
முற்பட அனுசந்தியா
பின்னை அது தானும் மாட்டாதே
வாசனையாலே சில சொல்லும் அத்தனை-

களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-

எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது

அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்

அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும்  இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய்  இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –

மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –

உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –

சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க

ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-

உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –

காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று

த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது  இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்
உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-

காரிகை –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள்  –

பெரிது இத்யாதி –
கவலையும் அவலமும் ஆகிறது
மானசமையும் சாரீரமாயும் வரும் வ்யதை-
கவலை யாகிறது நெஞ்சில் தடுமாற்றம் –
அவலம் ஆகிறது வடிவைப் பேணாமை –

இளங்கனி –
நீர் வில்லை முறித்துச் சென்று கைப்பிடித்த
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளிலும் இளையவள் இவள் –

உம்மைப் பிரிந்தால் அவளைப் போலே
சமா த்வாதச தத்ராஹம் –அமானுஷன் போகான் -யென்று ஆசை இட்டு தரிக்க வல்லவள் அன்று
இப்படி பருவம் இளையாள் ஆகில்

முன்பே சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தம் ஆகில் அன்றோ
இப்படி படக் கடவது என்றில் –
இயற்கையிலே அவள் கலந்து வைக்குமே –
அத்தை தாயார் அறியாளே-

என் இத்யாதி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக
ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே
விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக
திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர்
இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 15, 2013

வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன் னடிசேர அடியேற்கு ஆஆ என்னாயே.

பொ-ரை :- கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேகவண்ணா! ஆச்சரியத்தையுடைய அம்மானே! மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும் பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே! உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கியருள்வாய்.

வி-கு :- மருள்கொள் வண்ணம் என்க. “ஆஆ” என்பது, இரக்கக் குறிப்பு. என்னாய் என்பது, விதிவினை; இரங்கி யருளவேண்டும்.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 3“அருளாய்” என்றீர்; இங்ஙனே நினைத்தபோதாக அருளப்போமோ? என்ன : வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞாரலாபத்தைப்பண்ணித் தந்த உனக்கு, பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? என்கிறார். என்றது, என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ என்றபடி.

1வண்ணம் அருள்கொள் அணி மேகவண்ணா – வண்ணமானது – பிரகாரமானது, அருள்கொண்டிருப்பதாய், காண்பதற்கு இனிய மேகம்போன்ற வடிவையுடையவனே! அன்றிக்கே, வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம். 2“மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. அங்ஙனம் அன்றிக்கே, 3மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி என்னலுமாம். மாய அம்மானே – வெறும் வடிவழகே அன்றிக்கே, ஆச்சரியமான குணங்களாலும் செயல்களாலும் பெரியன் ஆனவனே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே – 4தெய்வப்பிறவியிலே பிறந்து ஒரு சாதனத்தைச்செய்து அதனாலே பெற்றுப் புஜிக்கும்போது இனிதாகை அன்றிக்கே, 5இன்னார்க்குஎன்று அன்றிக்கே நினைத்த மாத்திரத்தாலே தானே வந்து புகுந்து இனிதாகை. 1உள்ளுந்தொறும் தித்திக்கும் அமுது அன்றோ.

இமையோர் அதிபதியே – 2மதுவிரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள். தெள் 3நல் அருவி மணிபொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே – தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற சர்வேசுவரனே! அண்ணலே – திருமலையிலே வந்து நின்று எனக்கு உன் சேஷித்வத்தை 4உதறிப்படுத்தவனே! 5இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள்கொள் அணிமேக வண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க்கொண்டு, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்கிறார். உன் அடிசேர அடியேற்கு ஆஆ என்னாய் – 6கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்! உன் திருவடிகளை அடையும்படி வேறுகதி இல்லாத எனக்கு ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருளவேண்டும். உன்னடி அன்றோ? 7உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.

அருளப் போமோ கேட்டானாம்
காலம் உண்டே -சொன்ன போது அருள முடியுமா
வ்யதிரிக்த விஷயம் -உள்ளம் தேறி அடியை அடைந்து
ஞான லாபம் பண்ணி அருளி -மானச அனுபவம் காட்டிய பின்பு
சாஷாத்காரமாக காட்டுவது எளியது தானே
என்னால் வந்த குறையையே முடித்தாய்
உன்னால் வந்த குறை தீர்ப்பது கஷ்டமா

மேக வண்ணா -நிறமும் ஸ்வா பம் –
மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
இமையோர் அதிபதி
தெளிந்த அருவிகள் பொன்னையும் முத்தையும் சேர்க்கும்
அண்ணலே
அடியேற்கு ஆ ஆ யென்று அருளாயே
ஆவா யென்று ஆராய்ந்து அருள்
நான் வர வேண்டி இருக்க நீர் வரலாமா
மேக வண்ணா –
அருளே வடிவமான மேகம் போலே
கண்டார் நெஞ்சை இருளைப் பண்ணும்படி மைப்படி மேனி
மயக்கும் படி இருள் அன்ன மா மேக வண்ணா

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து
உள்ளம் அவனை போல் இருக்க முடியாதே
கிருபை உன்னாலும் ஏறிட்டு கொள்ள முடியாதே
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே பட்டர்
ஸ்வா தந்த்ர்யம் கலசி இருக்கும் காருண்யம்
நிக்ரஹமே அறியாத நாச்சியார் போலே ஆக முடியாதே
கண் காட்டினால் கதவு திறக்கும் இன்றும் ரேகை எல்லாம் மாறிப் போனதே
மாய அம்மானே குண செஷ்டிதங்களால்-அழகு மட்டும் இல்லை -ஆசார்யம்
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே
மனோ ரதம் –
இனிமையான வஸ்து அனுபவிக்க சாதனா அனுஷ்டானம் செய்ய வேண்டுமே
ஊர்வசி போகம் ஜ்யோதிஷ்ட ஹோமம்

அசுவ மேத யாகம் -வதம் செய்து குதிரை கட்டி படுத்து போன்ற கஷ்டங்கள் உண்டே
எண்ணம் புகுந்து தித்திக்கும் -யார் எண்ணம் சொல்லாமல் -இன்னார்க்கு யென்று இல்லாமல்
எல்லார் எண்ணத்திலும்
மனோ ரதம் நினைக்கும் காலத்திலேயே இனிக்கும்
சுசுகம் கர்த்தும் த்யாநிப்பதே ஆனந்தம்
அபிமத விஷயத்தை நெஞ்சில் வைப்பவன் போலே
உள்ளும் தோறும் தித்திக்கும் அமுது -கூப்பிடுவாருக்கு காத்து இருப்பவன் இல்லை
இமையோர் அதிபதி -நாடாக உடையவன் அப்படி உள்ளுவாரை
இன்று வந்த அடியாருக்கும்
மது வரதம் போலே இவ்வமுதமே ஜீவனமாக இருக்கும் நித்யர்
கோதில் அடியார் -சாதகப் பறவை போலே
தெளிந்த அருவி –
மாணிக்கம் -பொன் -முத்தகளை
செழு மா மணிகள் சேரும்
அனந்தாழ்வான் மா முனிகள் போல்வார் வந்து சேர்ந்த திருமலை
அண்ணலே -சேஷித்வம் உறுதிப் படுத்தி
பரம பத நிலை விட கைக்கு எட்டும் இடத்தில் அனைவருக்கும் காட்டி அருளி
ஸ்பஷ்டமாக காட்டி
உன் அடி சேர் வண்ணம் அடியேற்கு ஆவா என்னையே
கிட்டி நின்று உறவையும் காட்டி அருளி
முறை சேஷி சேஷ பாவம்
பிராப்தி கைங்கர்யம் வேண்டுமே
ஆவா என்னாயே- தயை செய்து அருளி
ஐயோ ஐயோ யென்று தயை செய்து அருளுவாய்

இரங்கி
தேவாதி தேவனை நாம் சேவித்தல் ஆ வா யென்று ஆராய்ந்து
மாறி பாசுரத்திலும் ஆ வா
தயை செய்து அருளுவாய்
உன் அடி அன்றோ பிராபகம் பிராபகம் போக்கியம்
சேரும்படி
நீயே ஆராய்ந்து
அடி சேர் வண்ணம்
வார்த்தைகளும் போக்கியம் காட்டி அருளி
24000 படி –
ஐயோ
வடிவு அது
குண செஷ்டிதங்கள் அவை
ரச்யத்தை அது
மேன்மை அது
சௌலப்யம் அது
இவ்வளவையும் காட்டி அருளிய பின்பு
அனுபவம் கொடுத்து அருள வேண்டாமா –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 15, 2013

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன் னடிசேர் வண்ணம் அருளாயே.

பொ-ரை :- கொடிய வலிய அசுரர் கூட்ட முழுதும் கூறு கூறு ஆகிச் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகும்படியாகச் சீறி, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய சக்கரத்தை வலக்கையில் தரித்திருப்பவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சேறு பொருந்திய சுனைகளிலே தாமரை மலர்கள் சிவந்த நெருப்பினைப்போன்று மலர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! குறைவுபடாத அன்பினையுடைய அடியேன் உனது திருவடிகளைச் சேரும்படி திருவருள் புரியவேண்டும்.

வி-கு :- அசுரர் குலம் எல்லாம் கூறு ஆய் நீறு ஆய் நிலனாகிச் சீறா எரியும் திரு நேமி என்க. ‘ஆகி’ என்பதனை ‘ஆக’ எனத் திரிக்க. ஆகச் சீறி எரியும் என்க. அன்பில் – அன்பினையுடைய.

ஈடு :- இரண்டாம்பாட்டு. 3‘கூடக்கடவீர்; அதற்கு ஒரு குறை இல்லை; ஆனாலும், தடைகள் கனத்து இராநின்றனவே’ என்ன, உன் கையில் திருவாழி இருக்க, நீ இங்ஙன் சொல்லலாமோ? என்கிறார்.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திருநேமி வலவா – 4நீ கைகழலா நேமியானாய்இருக்கிறதற்கும் என் தீவினைகள் கிடக்கைக்கும் என்ன சேர்த்தி உண்டு? 1தடை இல்லதா சக்தியையுடைய திவ்விய ஆயுதங்களானவை இவனுடைய பாபங்கள் எல்லாவற்றையும் போக்கிக் காப்பாற்றக் கூடியனவாயிருக்கும். 2அவனாலே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும். “எல்லா ஆபத்துக்களினின்றும் காப்பாற்றுகின்றன” என்னப்படுவன அன்றோ. “ஸகல” என்ற சொல்லுக்குள்ளே இவனும் உண்டே. 3இனித்தான், பாவங்கள், “ஸம்ஸாரங்களில் பாபிகளான மனிதர்களைத் தள்ளுகிறேன்” என்கிறபடியே,“ஸம்ஸாரேஷு நராதமாந். . .க்ஷிபாமி”-என்பது ஸ்ரீகீதை, 16 : 19.

இவன் பக்கல் குற்றங்களைக் கண்ட அவனுடைய நிக்கிரஹத்தாலே வருமவை அன்றோ, அங்ஙனே வருமவற்றையும் போக்கக்கூடியனவாயிருக்கும் இவை. அதற்கு அடி, அவன் 4அடியில் செய்த அநுக்கிரஹதையே நினைத்திருக்கையாலே. 5இனித்தான், ‘இவற்றின் தோஷங்களைக்கண்டு நாம் ஒரு காரணம்பற்றிச் சீறின போதும் நீங்கள் கைவிடாமல், நாம் அடியிற்செய்த நம்முடைய இயல்பான அருளைப்பார்த்து நீங்கள் காப்பாற்றுங்கோள்’ என்று அவன் பக்கல் பெற்றுடையர்களாய் இருப்பர்கள் அன்றோ. 6அருளார் திருச்சக்கரம் அன்றோ-திருவிருத்தம், 33.-

பண்டே அவனைக் கைகண்டிருப்பவர்கள் அன்றோ. அவன் அருள் மறுத்தபோதும் இங்குத்தை அருள்மாறாதே அன்றோ இருப்பது. ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.

கூறாய் நீறாய் நிலனாகி-திருச்சரம்போலே “சிந்நம் பிந்நம்”“சிந்நம்பிந்நம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
என்கிற பரும்பணிக்கு விட்டுக்கொடாத திருவாழி. 2திருச்சரத்துக்கு, இதனை நோக்க ஒரு குணத்தின் சேர்க்கை உண்டு என்கிறார், 3முற்பட, இருதுண்டமாக்கிப் பின்னை நீறாக்கிப் பின்னை அது காண ஒண்ணாதபடி வெறும் தறையாக்கும். ஆகி – ஆக்கி. அல்லது, ஆகும்படி என்றுமாம். கொடு வல் அசுரர் – 4சீறுகைக்குக் காரணம் இருக்கிறபடி. கொடிய செய்லகளைச் செய்யக் கடவராய், ஒருவரால் வெல்ல ஒண்ணாதபடி வலியையுடையரான அசுரர். குலம் எல்லாம் – ஒருவன்செய்த குற்றமே ஜாதியாக முடிக்கவேண்டும்படி இருக்கையாலே, ஒருவரும் தப்பாமல் கோலி முடித்தபடி. 5அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசிஅற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை. 6“வளைவாய்த் திருச்சக்கரத்து எங்கள் வானவனார்” இது, திருவிருத்தம், 70.-என்று, அவன் வளைவிலே அகப்பட்டுப் பின்பேயன்றோ மேல்போயிற்று. கூறாய்நீறாய் நிலனாகைக்குச் செய்த செயல் ஏது?என்ன, ‘சீறா எறியும்’ என்கிறார். என்றது. இவை முடிந்துபோகச் செய்தேயும் கொண்ட 1குதை மாறாமல், இரை பெறாத பாம்புபோலே ஒளி விடாநிற்கும். திரு நேமி வலவா – 2நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!

தெய்வக் கோமானே – 3இப்படி அடியார்களுக்காக வந்து படுகிறவன் ஆள் இல்லாதவன் அல்லன் கண்டீர்! அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர். 4அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது; 5இருதுண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ. இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே. ‘அகல்விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’ திருவிருத்தம், 33.
என்கிறபடியே, 6அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும். அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும். அங்குள்ளார்க்குக் கைமேலே ஜீவனமாயிருக்கும்; இங்குள்ளார்க்கு விரோதியைப்போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே. என்? நாம் இப்போது சேய்மையில் உள்ளோம் அல்லோமோ? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் மேல் : சேறு ஆர் சுனைத்தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே – சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப்போலே மலராநிற்கும். 1எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது; 2நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது. ஆறா அன்பில் அடியேன் – 3இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி. 4சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது. மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. 5ஊற்றுடைத்தே. 6கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ. உன் அடி சேர் வண்ணம் அருளாயே – உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படிஎன் பக்கலிலே கிருபைபண்ணி அருளவேணும். 1நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! 2என் அன்புக்கு இரை

கூடப் பெறுவீர்
பிரதிபந்தகங்கள் போக வேண்டாமா
அதுக்கு தான் உமக்கு பரிகரங்கள் உண்டே திவ்ய ஆயுதங்கள் என்கிறார்

திரு ஆழி கையில் இருக்க -பிரதிபந்தகங்களை போக்க முடியுமே
முதல் மூன்று வரியிலும் எம்பெருமானை பற்றி –
அசுரர்களை அழிக்க-
கூறாக்கி தூள்ளாக்கி வெறும் தரையாக்கி –
சுனைகளில் தாமரை மலர் செந்தீ மலர் உள்ள திருவேங்கடத்தான்
கை கழலா நேமியான் –
சூர்யன் பிரகாசிக்க இருட்டுக்கு சேர்த்தி இல்லை
அது போலே எனது பிரதிபந்தகங்கள் நில்லாவே
தடை இல்லாத சக்தி உடைய திவ்ய ஆயுதங்கள்
பாபங்களைப் போக்கி உத்தரிப்பிக்க -பண்ணுமே
அவனாலே வருமவையும் பரிகரிக்க வல்லவை –
சகல ஆபத்துக்களையும் போக்கும்
சகல சப்தத்துக்கு உள்ளே இவனும் உண்டே

தோஷம் கண்டு நிக்ரஹம் மூலம் வரும் பாபங்களையும் போக்க வல்லவை
அசுர யோனியில் தள்ளுவானே –
சக்கரத்து ஆழ்வார் -இரண்டு வித பாவம்
சுதர்சன பகவான் -அந்தர்யாமி
அவனைக் காட்டிலும் பரிவு உண்டே என்பதாலும்
அருளார் திருச் சக்கரம்
அருளாழி அம்மான்
அருளார் புள் கடவி –
ஹேதி ராஜன் –
அவன் அடியில் பண்ணின அனுக்ரஹத்தை நினைந்து இருக்குமே –
ஔ பாதிகம் மூலம் நான் சீறினாலும் நீங்கள் ரஷிக்க வேண்டும்
கை விடாதே –
கை விட்டு போனால் அழிக்க
நீரிலே நெருப்பு கிளறினால் போலே
குளிர்ந்த  திரு உள்ளத்தில் சீற்றம் பிறந்தால்

பண்டே அவனைக் கை கண்டு இருக்கும்
அருள் மாறாமல் இருக்கும்
அவன் பிரசாதம் பெற்றவர் திரு ஆழி கூர்மையை தஞ்சமாக நினைத்து இருப்பார்
கூராழி வெண்சங்கு ஏந்தி
காகாசுரன் -தர்பை சகரத் ஆழ்வார் அம்சம் சரணம் புகும் வரை விட்டு வைத்தானே
அம்பரீஷனை -அதிலும் பார்த்தோம்
அசுரர்
திருச் சரம் போலே சின்னம் பின்னம்
இரு பிளவாக -மேலும் பிளந்து தத்தம் தூளாக்கி
மறு பணிக்கு விட்டு விடாமல்
திருச் சரத்துக்கு -நாண் பட்டு-குண ஸ்பர்சம் இருந்தால் வேலை செய்யும் –
ஆகி -ஆக்கி -ஆம்படி என்னுதல்
பொரு வல்லசுரர்
சீருகைக்கு ஹேது
பொருவர் -கொடுமையான கார்யம் செய்பவர்
குலம் எல்லாம் -வளைவில் அகப்படாதார்
வளைவார் திருச்சக்கரத்து
அழகில் அனுகூலர் அகப்பட
பராக்ரமத்தில் பிரதி பஷ அகப்படுவர்
சீரா சீறி எரியும்
முடிந்த போதும் கோபம் மாறாது -பாம்பு இறை பெறாத படி சீறி
தெய்வக் கோமானே -ஆள் இல்லாதவன் இல்லையே
நித்ய சூரிகளை கீழே உடையவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி
கையும் திரு ஆழியும் ஆன அழகை அனுபவிப்பார் மட்டும் அங்கெ
கூறாக்க ஆள் இங்கே தான்
பராக்கிரமம் அங்கெ காட்ட முடியாதே
இரண்டு விபூதியும் ஆளுவது
அருளார் ஆழி -மண்ணும் விண்ணும் -அகல் விசும்பும் திரு விருத்தம்
கூர்மை அங்கெ குமர் இருக்கும் –
இங்கே அழகு குமர் இருக்கும் –
கை மேலே ஜீவனம் அங்கு உள்ளாருக்கு –
விரோதி போக்கி பின்னை ஆயிற்று ஜீவனம் இங்கு

தன்னையே கொடுத்தல் தானே ஜீவனம்
அங்கு உள்ளார் அவன் கையையே பார்த்து இருக்கிறார்
பாரதந்த்ர்யமே ஸ்வரூபம்
கர்மம் காரயமாக மறந்து அது இல்லையே
நாம் இப்பொழுது அசந்னி ஹிதர் அன்றோ என்றானாம்
திருவேங்கட மலையில்
சேறுகள் ஆர்ந்து உள்ள சுனைகளில் தாமர்ரை செந்தீ போலே மலர்ந்து
விளக்கு ஏற்றி வைத்தால் போலே இருக்குமே
நீராலே எரியும் விளக்கை அனுபவிக்க ஆசைபடுகிறார்
நீரிலே நெருப்பு எழுந்தது போலே இருக்க
குளிர்ந்த திரு உள்ளத்தில் சீற்றம் பிறந்ததோ -என்னுமா போலே
ஆரா அன்பில் அடியேன் -இவருக்கு நிரூபகம் இருக்கும் படி
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்பே வடிவாய்

சுனைகள் நீர் வற்றினாலும் இவர் அன்பு வற்றாதே –
மயர்வற மதி நலம் அருளி பெற்ற அன்பு இ றே
அனுக்ரகம் மாறாது அன்பும் மாறாதே
மதி ஞானம் நலம் அன்பு பக்தி
அருளும் வற்றாது அருளின பக்தியும் வற்றாது
ஊற்று உடைத்தாய் இருக்கும்
இரண்டு புஷ்கரணி
ராமானுஜ புஷ்கரணி -ஸ்வாமி புஷ்கரணி –
கீழே பாறை ஊற்று பெருகி வரும் அனந்தாழ்வான் தோட்டத்தில்
வெளி தீர்த்தம் அதில் விட
இதில் தீர்த்தம் வெளியில் கொட்டுகிறார்கள்
ஸ்வாமி புஷ்கரணி -ஆசார்யர் புஷ்கரணி
இதில் இருந்து அதற்க்கு சேர்க்க வேண்டும்

வற்ற அடிக்க முடிய வில்லை
எந்த இடத்தில் ஏரி வெட்டணும் அறிந்து அனந்தாழ்வான் செய்து அருளிய கைங்கர்யம்
தொண்டனூர் ஏரி அங்கெ செய்து அருளி ராமானுஜர் காட்டி
ஆச்சார்யர்களுக்கு ஆழ்வார் மயர்வற மதி நலம் அருளி ஊற்று மாறாமல் -இது தான் -நம் வரை வருமே
க்ரமம் பிராப்தி வரும் வரை ஆறி இருக்க முடியாதே
அடி சேர் வண்ணம் அருளாயே
கிருபை பண்ணி அருள வேண்டும்
திரு மலையில் நின்ற நிலைக்கு பிரயோஜனம் பெறப் பார்
அவசர ப்ரதீஷனாய் -ஸ்தாவர ப்ரதிஷ்டையாய்-
ஆழ்வார் அனுபவிக்க எம்பெருமான் -புளிங்குடி
த்வரை துடிக்க பண்ணிற்றே அவனுக்கு
நின்று இருந்து கிடந்தது -போகய பாத த்வரை காட்டி
என்னுடைய அன்புக்கு இறை இடப் பாராய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

சாதனாந்தர சம்பந்தம் இல்லாத குடி அன்றோ -நமஸ் சப்தார்த்த நிஷ்டையான
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கும் பிரபன்ன குடி அன்றோ என்ன –
பேற்றுக்கு தரிக்கும் நாராயணாயா சப்தம் பற்றி இருக்கிறாள் –
உண்ணாது உறங்காது ஒலி கடலை அடைத்து வருபவர் வரவில்லையே என்று மயங்குகிறாள் –

ஆதி வராஹ க்ஷேத்ரம்
மேகநாதன் -பலி-பிள்ளை
மாலி மால்யவான் உதவி கேட்டு வர
இந்திரன் தபஸ் செய்து மகிழ்ந்து சேவை

நித்ய கல்யாண பெருமாள்
தாலவர் -ரிஷி குனியின் பெண்ணுக்கும் தாலவர் ரிஷிக்கும் –365-பெண்கள் –
இவள் திருவடியைப் பற்றித் தன்னைப் பற்ற
கோமள வல் லி தாயார்
வராஹ தீர்த்தம் கல்யாணி தீர்த்தம் –

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

————————————————————-

வியாக்யானம் –

தன் குடிக்கேதும் –
நம் குடி என்னாதே தன் குடி என்கிறாள் ஆயிற்று-

எம்பெருமானார் தர்சனம் -என்னுமா போலே –
நம் பிரதிபத்தியால் சொன்னோம் ஆகை அன்றிக்கே
பெருமாள் இராமானுசன் உடையார் என்றே அருளிச் செய்வர் –
பெரு விலையனான ரத்னத்தை நடுவே இட்டு கோத்தால்
முன்னும் பின்னும் ஒக்க விலை போமா போலே -காண் -என்று பிள்ளான் –
(நாயக ஸ்ரீ -ஹார மத்ய மணி நியாயம் -திருவடி சம்பந்தமும் திருமுடி சம்பந்தமும் உண்டே )

தன் குடிக்கேகேதும் தக்கவா நினையாள்-
ஜனகானாம் குலே -என்கிறபடியே இவள் பிறந்த பின் யாயிற்று
இக் குடியில் முன்பு இல்லாத ஏற்றம்  எல்லாம் உண்டாயிற்று –

ஒரு நாள் பட்டர் இனிதாக வாசித்த படியைக் கேட்டருளி
எம்பார் எழுந்து இருந்து நின்று
கண்ண நீரை விழவிட்டு
சிதிலாந் தரகரணராய்-பட்டரைக் காட்டி –
ஜனகானாம் குலே கீர்த்தி மகாரிஷ்யதி மே ஸூதா -என்று
அருளிச் செய்தாராம் –

தத் தஸ்ய -என்கிறபடியே
நம்முடைய பேற்றுக்கு நாம் வருந்துகைக்கு ப்ராப்தி இல்லை
அவனாலே பேறு-என்று இருக்கும்படி யாயிற்று –
பெறுவது அவனை யாகில் இக் க்ரமம் கொண்டு கார்யம் என்
என்று இரா நின்றாள் அவள் –
முகத்திலே விழித்துக் கொண்டு நின்று க்ரமம் பார்க்க அமையாதோ என்று இரா நின்றாள் இவள் –
எப்பொழுது கனியும் என்று இருக்க வேண்டும் -அவள்
நம்பியை நான் கண்ட பின் முடியுமா-இவள்

இவள் நிலை இருந்த படி இது –
நீ உன் குடிக்குத் தக்கவா நினைக்க வேண்டாவோ –
தண்டகாரண்ய ரிஷிகள் இடம் சொன்னீரே –
நீர் இனி உம்முடைய மரியாதையை நோக்கிக் கொள்ளப் பார்த்தீரோ இல்லையோ என்கிறாள் –
இவளை துடங்கி காணும் இக்குல மரியாதை நடத்துவதாக நினைத்து இருந்தது –
தன்னைத் துடங்கி குல மரியாதை நடத்துவதாக நினைத்து இருக்க –
தான் இத்தை கடலிலே கவிழ்க்கப் பார்க்கிறாள் –

ஏதும் தக்கவா நினையாள் –
மடலைக் கடைக்கணிப்பது-வேண் யுத்க்ரத நத்தில்
ஒருப்படுவதாக நின்றாள் –

நினையாள் –
திருத் தாயார் தான் இவள் நினைவையும் அடி
ஒத்துகிறாள் காணும்
இவளை இழக்க மாட்டாமையாலே –

தடங்கடல் நுடங்கெயிலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் –
வேண் யுத்க்ரத நத்தில் ஒருப்பட வேண்டாத படி
வந்து உதவும் படியை அனுசந்தித்து இனியளாகா நிற்கும் –
அதிலே ஒருப்பட்ட அளவிலே வந்து உதவினவன் இறே –
பரப்புடைதான கடலை அகழாக உடைத்தாய்
சத்ருக்கள் கேட்ட போதே நுடங்கும்படியான மதிளை உடைத்தாய் –
அன்றிக்கே
புரிப்புடைத்தான மதிள் என்னுதல் –

யிலங்கை வன் குடி மடங்க –
ஊரிலே அரணே அன்றிக்கே
வர பலத்தாலே பல்கிப் பரந்துள்ள குடியானது
திரியட்டும் முடிந்து போம் படியாக –
ராஷசரைப் போலே மாயையால் அன்றிக்கே
நிறம் உடைத்தான பூசலிலே வன் குடி மடங்க
துளைத்த வார்த்தை உண்டு -ஸ்ரீ இராமாயண வ்ருத்தாந்தம் –
அத்தைக் கேட்டு

இன்புறும் –
நம் அவஸ்தை உடையாள் இருப்பாள் ஒருத்திக்கு உதவின போதே
எனக்கும் உதவினவன் அன்றோ -என்று
அத்தாலே இனியளாம்-

மயங்கும் –
உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே
உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –
என்று மோஹிக்கும்-

நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ
என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும் –

மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை
மயங்கினால் இழக்கலாம் அவளோ -இவள் –
மின் கொடி போலே இருக்கும் இடையானது சுருங்கும் படியாக
மேலே நெருங்கா நிற்கும் ஆயிற்று –
மேலே இருந்து கீழே வெட்டுவரைப் போலே தன் குடி இருப்பை அழியா நின்றதாயிற்று-

மென் முலை –
முலைக்கு காடிண்யம் ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே
மென் முலை என்கிறது விரஹ அசஹம் அல்லாமையாலே –

பொன் பயத்திருந்த –
இதடைய மண்ணீடாய்க் கழிந்த தாயிற்று –

என் கொடி-
இவளுடைய வை லஷண்யத்துக்கு
உதவாது ஒழியிலும்
தன் வயிற்றில் பிறப்புக்கு
உதவாது ஒழிய ஒண்ணாது என்று இருக்கிறாள் –
(சரம ஸ்லோகம் -பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பை நம்பிய ஆண்டாள் போல்)

இவளுக்கு என் நினைந்து இருந்தாய் –
இவளுடைய
வை வர்ண்யமும்
அத்யாவச்யமும்
செல்லாமையும்
வடிவு அழகும்
பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-

இடவெந்தை யெந்தை பிரானே –
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய
உத்யோதகம் இறே திருவிடவெந்தை யில் இருப்பு –

உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற
திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-

(தேவிகளைப் பிரிந்து விரஹத்தால் அன்றோ ஸ்ரீ பூ வராஹப் பெருமாள்
மகாத்மாக்கள் பிரிந்து இருக்க முடியாத மார்த்வம் உமக்கும் உண்டே )

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

அந்ய பரையாக வைத்து மறப்பிக்க மாட்டீர்களோ என்ன அதுக்கு பதில் இந்த பாசுரம்

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

பேதையன் பேதை –சபலமான என் பெண்ணும் சபலை
பிள்ளைமை பெரிது-லௌகிக விஷயம் அறியாமை பெரிது

————————————————–

வியாக்யானம் –

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் –
முதல் தன்னில் வார்த்தை சொல்லாதே இருக்கும் போதே –
பெரியது சொன்னாலோ
ஐயர் ஆய்ச்சி என்னத்தை தவிர்ந்தாள்-

உருகும் நின் திரு வுரு நினைந்து –
நாமத் த்வாரா தர்மியை அனுசந்தியா
நீர்ப் பண்டம் போலே மங்கி இருக்கும் –

காதன்மை பெரிது –
வடிவு அழகின் அளவல்ல
ஆயிற்று ஆசையின் பெருமை –

கையற வுடையள் –
ஆசையின் அளவல்ல
ஆயிற்று இழவின் கனம் –

இழவுக்கு அவதி என் என்னில்-
கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்-
கயல் போல் முக்தமாய்
பரப்பு உடைத்தாய் இருக்கிற கண் –
பெரிய ஊர்கள் குடி வாங்கினால் போலே
கண்ணின் பரப்பு அடங்கலும் நித்ரா தத்வம் குடி வாங்கிற்று –

பேதையன் பேதை –
அறிவு கேடியான என் பெண் பிள்ளை –
விளைவு அறியாதே
இவளைப் பெற நோன்பு நோற்கும்படியான அறிவு கேட்டை உடைய –
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் -திரு விருத்தம் -என்கிறபடியே –

பிள்ளைமை பெரிது –
பருவத்தில் அளவு அல்ல வாயிற்று மௌக்யத்தின் பெருமை –
லோக யாத்ரையில் வந்தால் தன் பருவத்தில் உள்ளார்க்கு உள்ள அறிவு போராது-

தெள்ளியள்-
உம் அளவில் வந்தால்
சுருதி உபநிஷத்கள் அளவிலும் அல்லள்-

வள்ளி நுண் மருங்குல் –
இவள் ஸ்வபாவத்தை அனுசந்தித்து
கை விட ஒண்ணாத படி யாயிற்று வடிவில் பசை –

பிள்ளைத் தனமும்-தெள்ளியமும்–அப்ரயோஜகம் –
வடிவு போருமாயிற்று -கை விட ஒண்ணாமைக்கு-

ஏதலர் முன்னா –
ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே
என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –

வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
த்வத் அக்ரே சரணாகதானாம் பராபவ ந தே அநுரூப-ஸ்தோத்ர ரத்னம்
உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப்
பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –

நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –
இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

———————————————————————– .

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

புலம்பலில் விவரணம் இதில்

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும் சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு  என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

ஏழை என் பொன்னுக்கு-அதி சபலையான ஸ்லாக்யையான ஏன் பெண் விஷயத்தில்

——————————————-

வியாக்யானம் –

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் –
ஒரு கல்பம் ஆகிலும் சம்ஹ்ருதமாய்க் கிடக்கிறது
பாடாற்றலாம் அந் நாழிகைகளை-
காவலாய் இருக்கிறது இல்லை –
நேதி நேதி என்கை ஒழிய -இன்னத்தொடு ஒக்கும் என்று சொல்ல ஒண்ணாது
ஊழி பெருத்து நாழிகை சிறுத்து இறுகக் கடவதான
மரியாதை குலைந்தது –

ஒண் சுடர் துயின்றதால் யென்னும் –
நாழிகையை அளந்து தருகிற ஆதித்யனும்
போய் முடிந்தான் என்கிறாள் –
கல்பத்திலும் உப சம்ஹ்ருதமாம் பதார்த்தங்கள் உடன்
சம்ஹர்யன் ஆனான் இறே ஆதித்யன் –
இப்போது அங்கன் இன்றிக்கே உளனாய்
சஞ்சரியா நிற்கச் செய்தேயும்
கார்யம் பிறக்க காண்கிறிலோம்-
தன்னுடைய சந்நிதியாலே ராத்ரி வியசனத்து அடைய போக்கிக் கொடு வந்து தோற்றக் கடவ
ஆதித்யனும் வந்து தோற்று கிறிலன்-பீஷோதேதி சூர்ய-என்கிற ஈஸ்வர ஆஞ்ஞை குலைந்தது போலே –
நித்ரையை நினைத்தல்
தீர்க்க நித்ரையை நினைத்தல்

ஆழியும் புலம்பும் –
நம்மில் சிறியது பாதகமாகா நிற்க
நாம் தான் பேசாது இருக்கிறது என்
என்று கடலானது பாதகமாய்ப் புக்கது –
பேர் அளவுடைய கடலானது தைர்ய பங்கம் பிறந்து புலம்புகிறபடி –
பேர் அளவுடையவன் தன்னளவிலே தைர்ய பங்கம் பிறந்து
பேசும் பேச்சுக்கும் ஷமரமாய் நலியா நின்றதாயிற்று –
(கடல் போன்ற கம்பீரம் உள்ள ராமன் புலம்பினது போல் )

அன்றிலும் உறங்கா –
அன்றில் அடைய உறங்காமல்
சம்ஸ்லேஷ சமயத்தில்
நித்ரா விரஹத்துக்கு ஸ்மாரகமாக நின்றது ஆயிற்று –

தென்றலும் தீயினில் கொடிதாம் –
தென்றலின் குளிர்த்தி யானது
நாயகனுடைய சம்ஸ்லேஷத்துக்கு–காந்தனுடைய கர ஸ்பர்சத்துக்கு -ஸ்மாரகமாய் பாதகமாக நின்றது
தென்றல் உடைய வெம்மை ஆற்ற வேண்டில்
கேவல அக்னியில் பொகட்டு ஆற்ற வேண்டும்படி நின்றது –

தோழியோ வென்னும் –
தாம் ஓன்று பாதகம் ஆனால்
அம்மே என்கைக்கு நான் பாக்கியம் பண்ணிற்றிலேன்
அவனோடு சேரவே சகல பதார்த்தங்களும் அனுகூலமாய் குட நீர் வார்க்கும் -காண் –
ஊர் பகையாம் படி பண்ணினாயே -பாவீ

இவள் தோழியோ என்னப் பார்த்து இராதே பருவம்
துணை முலை யரக்கும்-
முலைகள் ஆனவை என்னுடைய விஷயத்தை நீ காட்டு என்று
நலியப் புக்கவாறே
ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்றால்
வாய் வாய் என்பாரைப் போலே
முலை அரக்காய் நிற்கும் ஆயிற்று-

முன்னிருந்து மூக்கின்று –
காக்கக் கடவை பருவத்தை கழியா நின்றதாயிற்று
பருவம் கழிதானால் பின்னை இவள் முதுகிலே ஆனால் ஆகாதோ –

சொல்லுமின் என் செய்கேன் யென்னும் –
தென்றல் துடக்கமான பதார்த்தங்கள் போலும் அன்றி  இறே முலைகள் நெருக்கப் புக்கால் உண்டான நலிவு
அவை பாதகம் ஆகிற போது தோழியோ என்றாள்-
இவை பாதகமாக புக்கவாறே
தோழிமார் உடன் தாய் மார் உடன் வாசி அற
எல்லாரையும் சேர்த்து சொல்லுங்கோள் என்கிறாள்-

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-
ஏழை
கிடையாதது தான் என்றால்
கிடைக்கும் அதில் போலே சாபலத்தை
பண்ணுமவள்

பொன்னுக்கு
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று
ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –

இடவெந்தை –
உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற
இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ
நினைத்து இருக்கிறது என்
(கிரியை-இடந்து எடுத்து இடது பக்கம் வைத்துள்ளாய் )

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக் கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி  வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-

——————————————————–

வியாக்யானம் –

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் –
(எங்களால் நோக்கும் காலம் கழிந்தது )வாளா நோக்கும் காலம் எல்லை கழிந்தது
பழகப் புதைத்து ஆறி குளிர்ந்த சாந்தும்
முத்தாராமும் சந்தனக் குழம்பும் –

தட முலைக் கணியிலும் தழலாம்-
நிதானம் அறியாதே நாம் இருந்து
பரிஹாரம் பண்ணுகை யாவது என் என்று
முன்பு எல்லாரும் கை வாங்கி இருப்பார்கள் –
பின்னையும் இவள் பக்கல் ஒரு வாசி இன்றிக்கே நோவு படக் காண்கையாலே
இனி நாட்டார் செய்யுமவற்றை ஆகிலும்
செய்து பார்ப்போம் என்று இவற்றைக் கொண்டு
சிசு ரோபசாரம் பண்ணப் புகுவர்கள்  –
புக்கால் அவை தானே இந்தனளமாய் வேவா நிற்கும் –

பூண் என்றால்
முத்தாரம் தோற்றுமோ என்னில்
ஆசுவாச கரமாய் பண்ணுகிறது ஆகையாலே
முத்தாரமாய் இருக்கும் இறே-

சாந்து
வெவ்விய பதார்த்தம் அன்றோ என்னில்
அதுக்காகா இறே  ஆறிக் குளிர்ந்து என்றது

சந்தனம்-
இது சம்சார மக்களோடு கூடியது என்று தோற்றுமோ என்னில்
சிசிரோ உபசாரத்துக்கு சொல்லுகிறது ஆகையால்

வைரமும் வைரத்தோலும் ஒன்றாக வேமா போல் ஆயிற்று
இவை எல்லாம் ஒன்றாக வேவும்படி
உலர்ந்த விறகிலே நெருப்பைக் கொளுத்தினால் போலே
விரஹ க்ருரூமான சரீரத்திலே
இவை பட்ட வாறே பற்றி எரியா நின்றது ஆயிற்று-
பரதாழ்வான் விரஹ தாபத்தால் வெந்து இருப்பதால் சரயு காய்ந்து போகும் படி இருக்குமே என்றது போல்

போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் –
அப்போது தோன்றின சந்தரன் உடைய இள நிலா ஒளி பட
அத்தாலே மெலியா நின்றாள்  –
நிலா சுடப் புக்கால் விலக்கலாவது ஓன்று இல்லையே –
இனி தான் கூடி இருந்த போது-முகிழ்த்த முகிழ்  நிலா -பெரிய திரு மடல் -என்று அநு கூலமாம் இறே –

பொரு கடல் புலம்பிலும் புலம்பும் –
திரையொடு திரை பொரா  நின்றுள்ள
கடல் கோஷிக்க புக்கவாறே
எதிரே ஒரு கடல் ஸ்பர்த்தித்து கூப்பிடுமா  போலே
தம்மோடு கூப்பிடா நிற்கும் –

மாந்தளிர் மேனி  வண்ணமும் –
மாந்தளிர் உடைய நிறம் போலே இருக்கிற நிறமும்
விவரணமாகா நின்றது ஆகா நின்றது –

வளைகளும் இறை நில்லா-
ஆகாசத்தில் நிற்பது ஒரு வளை இல்லையே
சைதில்யம் உபாயாந்த சுரேஷூ யாச்யபி -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -பக்தியால் -விரஹ தாபத்தால் )
இன்னம் இவற்றில் அவனுக்கு வாசி உண்டு
அவன் பிரியேன் என்று பிரிவை உணர்த்தி யாகிலும் போம் இறே
இவையோ சடக்கெட போய்க் கொடு நின்றது

என் தன் ஏந்திழை இவளுக்கு-
என்னுடையவள்- தரிக்கப்பட்ட ஆபரணத்தை உடையவள் –
இவள் ஆபரணங்களால் அலங்க்ருதையாய்
இருக்கும் இருப்பைக் கண்டு கொண்டு இருக்குமதே தாரகமாக
காணுமவள் தான் நினைத்து இருப்பது –
இவள் ஆபரணம் பூண்டு இருக்கும் இருப்பை
கண்டு அனுபவிக்க எனக்கு இவளோட்டை பர்யவசிக்குமா போலே இருந்தது –

என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
நை வார்த்தைர் ந ச பூஷணை-( ராக்ஷஸிகள் மத்யம் சீதாப்பிராட்டி புலம்பல் ) -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது
ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 15, 2013

துளம்படு முறுவல் தோழியார்க் கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழியாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

—————————————————————

வியாக்யானம் –

துளம்படு முறுவல் –
துளம்பு என்று -மாதுளமாய்-அத்தை
தந்த பந்திக்கு ஒப்பாக சொல்லக் கடவது இறே-
அத்தை சொல்லிற்றாதல் –
துளம் என்று பீலிக் காம்பை சொல்லுகிறது -என்று ஒரு தமிழன்
சொன்னனான ஜீயர் அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர் –
வெண்மையைப் பற்றி சொல்லாம் இறே –
படுகை யாவது உண்டாகையாய் –
துளம் தோற்ற முறுவல் –
இத்தைக் கண்டவாறே அதை ஸ்ம்ருதி விஷயமாகை-
அன்றிக்கே
படுகையாவது அழிகையாய்
இம் முறுவலுக்கு தோற்ற படியை சொல்லிற்று ஆதல் –
இரண்டு வகையாலும் உபமானம் சொல்லுவார்கள் இறே –

தோழியர்க்கு அருளாள்-
தாய்மார் முன்பு தன் வெறுப்பாலே ஸ்மிதம் பண்ணாளே-
இனி நாயகனுக்கு சர்வ ஸ்வம்மாய் இருப்பதும் இது தான் இறே –
காந்த ஸ்மிதா என்று அவன் ஈடுபடும் அது இறே –
(சீதா பிராட்டி முறுவலை நினைத்து பெருமாள் லஷ்மணன் இடம் சொல்லி வருந்தின வ்ருத்தாந்தம் )
அதுவே இறே தோழி யார்க்கு ஜீவனம் –
ஆக தன் கை பார்த்து இருக்கிற தோழி மாரை பட்டினி கொள்ளா நின்றாள் –
இவள் நாயகனோட்டை சம்ஸ்லேஷத்தால்
வந்த ஹர்ஷம் தோற்ற ஸ்மிதம் பண்ணினால்
அதுவே தாரகமாக வாயிற்று அவர்கள் இருப்பது –

துணை முலை இத்யாதி –
நாயகனையும் பட்டினி கொள்ளா நின்றாள் –
துணை முலை –
புறம்பு உபமானம் ஓன்று இன்றிக்கே
தன்னில் தான் ஒப்பாக சொல்ல வேண்டும்படி இருக்கிற முலைகள் –

சாந்து கொண்டு அணியாள் –
இவள் அவன் வரவை உத்தேசித்து
முலைகளை சாந்து கொண்டு அலங்கரிக்க புக்காள் இறே
இவளுக்கு இது அபேஷிதம் ஆகாதே -என்று
அவனுக்கு கிஞ்சித் கரிக்கைககு அவகாசம் உள்ளது –
ஆகையாலே அவனுக்கு அவகாச பிரதானம் பண்ணுகிறிலள்-

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தனக்கு மேல்
என்னாவி தங்கும் -என்றாள் இறே ஆண்டாள்

குளம் இத்யாதி –
அறாக் கயத்திலே-( தண்ணீர் வற்றாத தடாகம் ) நின்று அலர்ந்த
குவளை போன்ற கண்களை மங்களார்த்தமாக அஞ்சனம்
கொண்டு அலங்கரிக்கிறிலள்
ரத்நாகாரம் போலே குணகரமான வஸ்துவை
அனுபவிக்கிற கண் ஆகையாலே ஓன்று கொண்டு
அலங்கரிக்க வேண்டா இறே –
(சமுத்திர இவ காம்பீரம் -அவனை அனுபவிக்கும் கண்கள் -வைத்த கண் வாங்காமல் பார்க்க –
மைப்படி மேனியான் இருக்க மை இட வேண்டாமே)
இனி அஞ்சனம் கொண்டு அலங்கரிப்பது மங்களார்த்தமாக விறே
இவள் அஞ்சனத்தாலே அலங்கரிக்கப் புகும் அன்று இறே
அவனுக்கு கிஞ்சித் கரித்தானாக அவகாசம் உள்ளது –
அது செய்கிறிலள்-

கோலம் இத்யாதி –
கலம்பகன் அல்லது தனிப் பூ சூட்டுப் பொறாத குழலைப்
புஷ்பம் கொண்டு அலங்கரிகிறிலள்-
வாசம் செய் பூங்குழலாள்-(நம்மாழ்வார்)-ஆகையாலே புஷ்பம் கொண்டு
அலங்கரிக்க வேண்டா விறே –
மங்களார்த்தமாக புஷ்பம் கொண்டு அலங்கரிகிறிலள்-
நாயகன் விரும்பி இருக்கும் இடங்களை
இவள் அலங்கரியாது ஒழிகை யாவது
அவனுடைய தாரக த்ரவ்யத்தை விலக்குகை இறே

வளம் இத்யாதி
சர்வ சாதாரணமான ரஷணத்தைப் பண்ணுமவன்
என்னளவிலே நெகிழ இரா நின்றான் –
(முன் அளந்த -கிருத யுகத்தில் ரஷித்தான் )
வளம் படு முந்நீர் –
ரத்நாகாரம் என்னுதல்-
வளம் படு வையம் -என்று வஸூ மதி என்னுதல்
மால் என்னும்
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தின் உடைய
ரஷணத்தில் பிச்சேறி இருக்குமவன்
இவ் வ்யக்தி ஒன்றையும் உபேஷித்து இரா நின்றான் –
(நேராக இருக்க படர்க்கையில் பேசுகிறாள் )

மாலின மொழியாள் –
தன்னுடைய வ்யாமோஹத்துக்கு சேர்ந்த
பேச்சை உடையவள் –
வ்யாமோஹம் வழிந்து உறப்பட்டு அது
சொல் ஆனால்  போலே இருக்கை-
(மால் -உடையவள் இவள் -திருமால் -பக்தி -உள்ளத்தில் உடையவள் )

இளம்படி இவளுக்கு –
இளையதான படியை உடைய இவளுக்கு –
ம்ருது ஸ்வபாவையான இவளுக்கு –
உம்முடைய பக்கல் நின்றும் பிரித்து பத்து மாசம்
அசோகா வநிகையில் வைத்த விடத்திலும்
பின்னை -தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று இருந்த அவள் படி அல்லாத
மார்த்வத்தை உடைய இவளுக்கு –
பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் இறே
உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –
இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ஸ்லேஷம் விஸ்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும்  படி -என்று –

(முது படி சீதா பிராட்டி இவள் இள படி
சம்ஸ்லேஷத்தில் அனுபவிக்கவும் விஸ்லேஷத்தில் ஆறி இருக்கவும்
அமானுஷன் போகான் 12 வருஷம் அனுபவித்தேன்
பிரிந்தால் கடியன் கொடியன் நெடுமால் என்பவள்
பதறவும் வல்லவள்
குலசேகர பெருமாள் ராஜ குலா மஹாத்ம்யம் விஸ்லேஷத்தில் -சினம் தீர்வான் நானே பேசுவார்
பெரியாழ்வார் பெண் பிள்ளை விஸ்லேஷத்தில் தன்னை அலங்கரித்து காரை பூணும்
சம்ஸ்லேஷத்தில் மகிழ்ந்து பாடவும் வல்லவள்
திரு மங்கை நங்கை மார்த்தவமே ப்ரக்ருதி
பிரிந்தும் கலந்தும் பல பாசுரம் பாட வல்லவர் அல்லரே )

இவளுக்கு இத்யாதி –
இவளுடைய பிரகிருதி அறிந்து
கலக்கைக்காக
திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

—————————————————————————– .

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

திரு வல எந்தை -கீழே பார்த்தோம்
இதில் இட எந்தை
இது தான் முதல் நாயகிகா பாவம் –
முதல் பத்திலும் -ஆறாம் பத்திலும் நாயிகிகா பாவம் இல்லை –
தோழி பாவம் வியக்தமாக இல்லை
எட்டு பதிகங்கள் தாய் –
16-பதிகங்கள் மகள் –
10–4-5-7-யசோதை பாவம் இரண்டு -கோபிகா ஸ்திரீயாக ஒரு பதிகம் –
இங்கும் 27 பதிகம் நம்மாழ்வார் போல்
எல்லா தாய் மகள் பதிகமும் திவ்ய தேச

2-7-தாய்
2-8-மகள்
3-6-மகள்
3-7 -தாய்
4-8 தாய் பார்த்தன் பள்ளி
5-5–திருவரங்கம் -தாய்
7-5 தேர் அழுந்தூர் மகள் –வியக்தமாக 7-8-9 பாசுரங்கள்
8-1/2–முதல் இரண்டு பதிகம் தாய் பதிகம்
8-3/4/5- மகள்
9-2-திரு நாகை-மகள்
9-3-மகள் திருப்புல்லாணி
9-4-மகள்
9-6- திருக்குறுங்குடி
9-9-திருமாலிருஞ்சோலை
10-4-5-யசோதை பாவம்
10-7-கோபிகள் பாவம்
10-8-மகள் ஊடல் பதிகம்
10-10-மகள் பதிகம்
11-1/2/3 மகள் பதிகம்
11-5-தாய் பதிகம்

மொத்தம் –27
11-திவ்ய தேசம் நாயிகா பாவம் பதிகம் -இதிலியே பல திவ்ய தேச துணுக்கு பாசுரங்களும் உண்டே

——————–

பிரவேசம்

ததீய சேஷத்வ பர்யந்தமாக பகவத் அனுபவம் பண்ணுகையாலே
தம்முடைய அனந்யார்ஹ சேஷத்வத்தை
அனுசந்தித்தாராய் நின்றார் கீழ் –
அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில்
(ஒருவர்க்கு உரியேனோ என்று -8-9-சொல்லி -8-10-உன் அடியார்க்கு அடிமை )
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றார் இறே-

தம்முடைய சேஷத்வத்துக்கு எதிர் தலையான அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்த இடத்தில்
அது தமக்கு ரசித்து இருக்கும் படியாலே அவனை அனுசந்திபதாகப் பாரித்தார் –
அப்போதே நினைத்தபடி அனுபவிக்கப் பெற்றிலர் –
அவ் விழவாலே தாமான தன்மை போய்
பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்-
அந் நிலை தானும் போய் குலைந்தது
அதாவது தன் ஆற்றாமையை தானே வாய் விட்டு ஆற்றுகை அன்றிக்கே
பிறர் வாயாலே சொல்லுகை இறே -(அந்யாபதேசம் )
(பர உபதேசம் -ஸ்வாபதேசம் -அந்யாபதேசம் -மூன்றும் உண்டே )

ஆக
நாயகனோடு நினைத்த படிகளை பரிமாறாமையாலே
நம்முடைய கோயில் திருவாய்மொழி-7-2- படியாலே
ஸ்த்திதி கமன சயநாதிகளிலே ஒரு நிலை இன்றிக்கே
அரதியாய் நோவு படுகிற பெண் பிள்ளை உடைய தசையை
அனுசந்தித்த திருத் தாயார்
இவளுக்கு உண்டான செல்லாமையையும் -(ஆகிலும் ஆசை விடாளால் )
அவன் இவ்வளவில் வந்து முகம் காட்டாதே இருக்கிற இருப்பையும் –
இவளுடைய தசைக்கு தன்னால் ( பேதையேன் ) ஒரு பரிஹாரம் இன்றிக்கே இருக்கிறபடியையும்-
அவனை இட்டே பரிஹரித்துக் கொள்ள வேண்டும்  படியாய் இருக்கிற இருப்பையும்
அனுசந்தித்து இதுக்கு நேரே நிதான பூதரராய் இருக்கிற அவர் இருக்க
வழியே போவாரோ பாதியான நமக்கு இது தெரியுமோ –

ஆன பின்பு அவர் தம்மையே இதுக்கொரு போக்கடி கேட்போம்
என்று அத்யவசித்து
திருவிட வெந்தை நாயனார் -திருவடிகளிலே
இவளைக் கொடு போய் பொகட்டு
எங்களை காற்கடைக் கொண்டு
உம்முடைய சௌந்தர்ய சீலாதிகளிலே துவக்குண்ட இவள்
உம்மை நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே –
மிகவும் நோவு படா நின்றாள் –
நீர் இவளுடைய திறத்து செய்ய நினைத்து இருக்கிறது என்
என்று கேட்கிற திருத் தாயார் பாசுரத்தாலே
தமக்குப் பிறந்த தசையை பேசுகிறார் ஆயிற்று –

(உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு
பேற்றுக்கு அடி கிருபை இரக்கம்
இழவுக்கு அடி நம் கர்மம்
கர்மா காரணம் -ஜென்மம் கார்யம் –
இரக்கம் அடைவதும் அவனே பேற்றை அடைவதும் அவனே
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
இந்த கருத்தை வெளியிடவே இந்த பதிகமும் திருவாய் மொழி -7-2-
கேவலம் மதீ யைவ தயையால் )

——————————————————–

திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு  நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-

சொல்லு–இந்த பதிகம் அனைத்துக்கும் இதுவே வினைச் சொல் –
பேதை பதுமை அரிவை -பருவங்கள் —
கொல்லி அம் பாவை –கொல்லி மலையில் பொன்னால் செய்த பதுமை தான் இவளுக்கு ஒப்பு
இவள் திறத்து என் சிந்தித்து இருந்தாய் அங்கு -7-2-

———————————————————

வியாக்யானம் –

இவளுடைய ஆசைக்கு அளவில்லாமை சொல்லுகிறது –
தன்னில் அளவுடையார் ஆழங்கால் படக் கண்டால்
கரையிலே நின்றார்க்கு தப்ப விறே அடுப்பது –
(ஆழங்கால் பட்டு தண்ணீர் தண்ணீர் -அகலகில்லேன் இறையும் என்னும் அவளைக் கண்டும் )

திவளும் வெண் மதி போல் –
ஆழங்காலே யாகிலும்
முழுகி மண் கொள்கைக்கு ஈடான
அளவுடைமையைச் சொல்லுகிறது –

திவளும் –
ஒளி விடுகை யாதல்-
ஒளியின் மிகுதியால் பளபளத்து இருக்கிறபடியைச் சொல்லுதல் –

வெண் மதி போல் –
யௌவனத்தாலே பாண்டரமாய்-( வெண்மையாய் ) இருக்கை-
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
அத்ருப்தி மாறாதே இருக்கிற படியைச் சொன்னபடி –

திரு முகத்து –
முக காந்திக்கு நேர் கொடு நேர்
சந்தரன் ஒப்பாகப் போராமையாலே திரு முகம் என்று அது தன்னையே சொல்லுகிறது –
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம் -என்னக் கடவது இறே –
மறுவும் குறைகையும் இன்றிக்கே இருக்கை –
எப்போதும் ஏக ரூபனாய்
தன் பக்கல் உள்ளது எல்லாம் அனுபாவ்யமாய்
இருப்பான் ஒரு சந்தரன் போலே இருக்கை –

அரிவை –
முகத்தில் காந்தி ஒழியவேயும்
துவக்க வற்றாய் ஆயிற்று பருவம் இருப்பது –
இது பருவம் இருந்தபடி –
மேல் பிறப்பு இருக்கிறபடி சொல்லுகிறது –

செழும் கடல் அமுதினில் பிறந்த –
முதலிலே பாற் கடலாய்
அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –
அவ் வம்ருதம் தானே கோதாம்படி
பிறந்தவள் ஆயிற்று –
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது -என்னக் கடவது இறே-

பரார்தமாக கடல் கடைந்தான் என்று
ஔ தார்யம் கொண்டாடினது அடையப் போய்
தனக்கு நல்லது பெற வ்யாபாரித்தான் இத்தனை –

அவளும் –
வடிவு அழகாலும்
பருவத்தாலும்
பிறப்பாலும்
வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –

நின்னாகத்து –
அவளுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமான மார்பு ஆயிற்று –
அகலகில்லேன் இறையும்-என்கிற படி –
இம் மார்பில் இருப்புக்கு ஏதேனும் இழவு வரில்
செய்வது என் என்று துணுக்கு துணுக்கு என்று
ஆயிற்று வர்த்திப்பது –
(நின் -ஒரே சொல் இவனுக்கு -விசேஷணம் இல்லாமல் -இவர்கள் தவித்து இருப்பதே போதுமே )

இருப்பதும் –
இருந்தால் கலந்தாளாய்
பின்னை பிரிவும் பொறுக்க மாட்டாள் –
( இருப்பதும் கலப்பதும் வேறே வேறே இல்லையே -தொழுவதும் எழுவதும் ஒன்றே போல் )

அறிந்தும் –
அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள்
என்ன ஒண்ணாதே –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று
பற்றினவளை-

ஆகிலும் ஆசை விடாளால்-
அவளும் அங்கே இருக்கச் செய்தே
எனக்கு இழக்க வேண்டுகிறது என் -என்று
அது தானே இவளுக்கு ஆசைக்கு உடலாயிற்று –
அதுவாயிற்று இவளுக்கு ஆசைப்படுகைக்கு ஆலம்பனம்

(அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும்
அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க
அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே
பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம் )

குவளை யங்கண்ணி –
அவளில் இவளுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று
அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –
அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும் போருமாயிற்று
அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
(துஷ்கரம் ராமோ பிரபு -துல்ய- சீலம் வயோ வ்ருத்தம் -ராகவோ அர்ஹதி வைதேகி –
அஸி தேஷணை–அந்தக்கண் அழகிக்கு -திருவடி )

கொல்லியம் பாவை –
கொல்லி மலையிலே ஒரு பாவை உண்டு –
எல்லாரும் உருவ ஒப்புக்கு தமிழர் சொலுவது ஓன்று
பிறப்பால் ஒப்பு சொல்ல ஒண்ணாது
ஒன்றிலே எழுதிக் காணில் காணும் இத்தனை –

சொல்லு –
இதுக்கு ஒரு போக்கடி நீர் நினைத்து இராமை இல்லை இறே
அவ்வளவும் போராது-
எங்களுக்கு பயம் தீரும்படி -மாஸூச -என்கிறாப் போலே
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

நின்  தாள் நயந்து இருந்த –
இதுவும் அவளில் காட்டில் இவளுக்கு உண்டான ஏற்றம்
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரையும் பற்றும்-அப்ரமேயம் தத் தேஜஸ் ஜனகாத்மஜா-
மிதுனமே உத்தேச்யம் )

இவளை –
சொன்ன ஏற்றம் எல்லாம் போராத படி இருக்கையாலே
கையாலே காட்டி இவளை
என்கிறார் –

உன் மனத்தால் –
கை கழிந்தவற்றுக்கும் ஒரு போக்கடி பார்த்து இருக்கக் கடவ
உன் திரு உள்ளத்தாலே நினைந்து இருந்தது என்-

உன் மனத்தால் –
என் நெஞ்சால் இதுக்கு ஒரு போக்கடி தேடுமது உண்டு என்பதை விட்டேன்
இனி உன் நெஞ்சால் நினைந்து இருந்தது என் –

இடவெந்தை பிரானே –
கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே
(கலங்கா பெரு நகர் காட்டுவான்0 மூன்றாம் திருவந்தாதி )
கை கழியப் போனாரும்
பிழைக்கைக்காக திருவிட வெந்தையிலெ
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே
பின்னானார் வணங்கும் -என்கிறபடியே
(பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழிக் களத்தான் )

சொல்லு என்று கிரியை

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 14, 2013

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

—————————————————–

வியாக்யானம் –

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் –
பரிமளம் பிரவஹியா நின்றுள்ள
பெரிய வீதிகளை உடைத்தான
திருக் கடல் மல்லையிலே வந்து
கண் வளர்ந்து அருளுகிற
சர்வ ஸ்வாமி உடைய திருவடிகளையே
அனுசந்திக்கும் சேஷ பூதர் சேஷத்வத்திலே நின்றவன் –
ஜ்ஞான ஆநந்தங்கள் அல்ல நிரூபகம்
பாகவத சேஷத்வமே என்கிறார் –

வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி யொலி வல்லார் –
காக்கைக்கு-ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே
ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
கூர்மையையும் ஒழுகு நீட்சியையும் உடைத்தான
வேலை உடையராய்-பிரதிபந்த நிரசன சமர்த்தராய்
இருந்துள்ள ஆழ்வார் உடைய
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –

முடி கொள் நெடு மன்னர் தம் முதல்வர் முதலாவாரே-
முடியை உடையராய்
நாட்டுக்கு அநந்ய பிரதானராய்
இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய்
நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

நண்ணாமல் மால் அடியார் அல்லாரை சீர் மல்லையான்
தொண்டர் தம் தொண்டரையே ஆறு பேறாய் -திண்ணிதா
எண்ணு நீலன் தொண்டர் எல்லைத் தானாய்ச் சொல் இன் தமிழை
எண்ண மதி திவளும் -16-

தொண்டரை அடையாவிடிலும் தொண்டர் அல்லாரோடு கூடாமையே முக்கியம்
அடியாரையே ஆறு பேறாகக் கொள்வதே நம பத தாத்பர்ய அர்த்தம்
வாய்த்த திரு மந்திரத்தின் மத்திமம் பாதத்தின் எல்லையான பொருளை நாம் எண்ண
நம்முடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாம் ஸ்வரூபம் -நன்கு பிரகாசிக்கும் –
மதி திவளும் -புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
சீர் -திரு மல்லைக்கும் -மல்லையானிலும் மல்லை தொண்டரிலும் -மல்லையான் தொண்டர் தம் தொண்டரிலும் அந்வயிக்கும் –

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்