Archive for July, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-5-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 25, 2013

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ணபி ரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.

பொ-ரை :- நித்தியமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள் வாழ்கின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைப் பார்த்த பின்னர் இவள் அடக்கம் என்னுமது ஒன்றனை அடியோடு விட்டாள்; நம்மை மீறினாள்; தாய்மார்களே! கற்கப்படுகின்ற கல்வி முழுதும் கரிய கடல்போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான் என்று சொல்லிக்கொண்டே தளர்ச்சி சிறிதும் இல்லாதவளாயிருக்கின்றாள்; மகிழ்ந்து மகிழ்ந்து மனம் களித்துக் குழையாநின்றாள்.

வி-கு :- அன்னைமீர்! இவள் தொலைவில்லி மங்கலம் கண்டபின் அறவுறாள் மலிந்தாள் என்க. அற்கம் – அடக்கம். ஒற்கம் – தளர்ச்சி.

ஈடு :- நான்காம் பாட்டு. 1அந்த ஊரினையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் யாதொருநாள் கண்டாள், அன்று தொடங்கித் தடைநிற்கை தவிர்ந்தாள் என்கிறாள்.

நிற்கும் நான்மறை-நித்தியமான நான்கு வேதங்கள். 2நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம். ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ. வாணர் – வியாசபதம் செலுத்தவல்லராயிருப்பவர்கள். வாழ் – வேதப் பொருளாய் விளங்குமவனைக் கண்ணாலே கண்டு வாழாநிற்பர்கள். வாழ் தொலைவில்லி மங்கலம் – வேததாத்பரியனானவனைக்கண்டுநித்தியாநுபவம் பண்ணுகிற ஊர். 1“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ்வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக்கடவன்” என்னுமளவன்றியே, ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்”

என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2. ஆரூடயோகர் –  சித்தித்தயோகத்தையுடையவர்.

“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேதபாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்யவேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள். கண்டபின் – 2அவ்வூரில் வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர்கோள். அற்கம் ஒன்றும் அற உறாள் – நம்சொல்வழி வந்திருக்கும் இருப்புத் தவிர்ந்தாள். அற்கம் – அல்குதல். அதாவது, அடக்கம். மலிந்தாள் – நம்மால் ஹிதம்சொல்லி மீட்க ஒண்ணாதபடி மிக்காள். என்றது, மீட்கைக்குத் தகுதியுமில்லாதபடி ஆனால் என்றபடி. அன்றிக்கே, எனக்கும் தெரியாதபடி இவள் பகவானிடத்தில் ஈடுபட்டிருத்தலில் விஞ்சினாள் கண்டீர் என்னுதல்.

அன்னைமீர் – 3மீட்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாகச் சொல்லுகிற என்னோடு வாசிஇல்லை தெரியாமைக்கு. நித்தியசூரிகள் யாத்திரை சம்சாரிகளுக்குத் தெரியிலன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது. கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்வண்ணன் கண்ணபிரான் என்றே – சொல்லும் சொல்லெல்லாம் திருநாமமேயாய், அவற்றிலும் வடிவழகிற்கும் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருத்தற்கும் வாசகங்களான திருநாமங்களையே சொல்லாநின்றாள். 4“கிருஷ்ணனாகில் அடியார்கட்குப் பவ்யன்” என்பது பிரசித்தமன்றோ. அவ்வடிவழகைத் தாழநின்று இவளை அநுபவிப்பித்த உபகாரகனாதலின் ‘பிரான்’ என்கிறது. திருநாமங்களை இடைவிடாதேசொல்லா நின்றால் இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இராநின்றாள் என்பாள். ‘என்றே ஒற்கம் ஒன்றும் இலள்’ என்கிறாள். 1‘விரஹத்தால் வலியற்று இருத்தலாலே திருநாமத்தை முட்டச்சொல்லமாட்டாள்’ என்று இராநிற்கச்செய்தே, வருத்தம் அறச்சொல்லாநின்றாள். 2திருநாமந்தான் தரிப்பினைக் கொடுத்துச்சொல்லுவிக்கும்போலே காணும்; 3“பாடி இளைப்பிலம்” –திருவாய்மொழி, 1. 7 : 10.-என்றாரே யன்றோ முன்னம். ஒற்கம் – மிடி. என்றது, இளைப்பின்றிக்கே என்னுதல்; அன்றிக்கே, ஒற்கமாவது, ஒடுக்கமாய், தாய்மார் முன்பே ‘இப்படிச் சொல்லாநின்றோமே’ என்னும் நாணம் இன்றிக்கே என்னுதல். உகந்து உகந்து – திருநாமங்களைச் சொல்லுதல் மூலமாக அவனுடைய அழகு சீலம் முதலிய குணங்களை நினைத்து மேன்மேல் எனப் பிரீதியுடையவள் ஆகாநின்றாள். உள்மகிழ்ந்து குழையும் – மனத்திலே உண்டான பிரீதியின் மிகுதியாலே உடல் அழியாநிற்பாள்.

துன்பமொரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான்
 எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்”-
என்றார் கம்பநாட்டாழ்வார்.

யானே தன்னைத் தான் பாடி –
உரை கொள் மொழியாள் -தனது படியை தானே பாடும்படி -தோழி பாசுரமாக
அந்த திவ்ய -தேசமும் அங்கு உலா ஸ்ரீ வைஷ்ணவர்களையும் சேர்ந்து கண்ட இவளை மீட்க முடியுமா
நிற்கும் நான் மறை நித்தியமான வேதங்கள்
அற்க்கம் -அடக்கம்
இவன் கற்கும் கல்வி எல்லாம் கடல் வண்ணன்
ஒர்க்கம் ஒடுக்கம்
நித்யத்வம் பூர்வ பூர்வ உச்சாரண க்ரமம் பற்ற –
உத்தர உத்தர உச்சாரண
நிர் தோஷம் -அபௌ ருஷ்த்வம்
வாணர் வல்லவர்
கண்ணாலே கண்டு வாழா -நிற்பார் வாழ்ச்சி கைங்கர்யம் செய்வதே
வேத  தாத்பர பூதனை கண்டு நித்ய அனுபவம் செய்து வாழும்
ஸ்வ அத்யயனம் செய்து -யோகம் செய்து –
வேதம் அவனை அறிந்து கைங்கர்யம் செய்ய தான்
யோகம் -அவன் உடன் சேர்ந்து
யோகம் வந்த பின்பு -ஆரூட யோகன்
செர்தியைக் காட்டிக் கொடுத்து கெடுத்து –
அடக்கம் இன்றி-தமது சொல்லை கேட்க்காமல்
மீட்கைக்கு யோக்யதைக்கு இன்றி
பகவத் ப்ராவண்யம் -தோழிக்கும் அறியாத படி விஞ்சி இருக்கும் படி
நித்ய சூரிகள் யாத்ரை சம்சாரிகள் அறியாத படி
தமது பேச்சு தாமே சொல்லிக் கொண்டது இது
சொலும் சொல் எல்லாம் திரு நாமங்கள் கடல் வண்ணன் கண்ணபிரான்
ஸ்ரமஹரமான வடிவு அழகாய் உபகரித்த பிரான்
விரகத்தால் திரு நாமங்கள் முற்ற சொல்ல முடியாமல் இருப்பாளோ
சொல்வதே தரிப்பைக் கொடுக்கும்
திரு நாமம் சொல்லி தரித்து மேலும் சொல்லி
பாடி இளைப்பு இலோம்
துக்கம் இன்றி
தாய் முன்னே திரு நாமம் சொல்லும் லஜ்ஜை இன்றி சௌந்தர்யம் சீலம் அனுசந்தித்து
யானி நாமானி கௌணாநி –
உகந்து உகந்து
உள் மகிழ்ந்து குழையும்
ஆத்மாவும் கரைய -உருகி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-5-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 25, 2013

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்
[கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசையின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.

பொ-ரை :- தாமிரபரணி ஆற்றின்கரையைத் தன்னகப்படுத்திக் கொண்டிருக்கிற பசுமைநிறம்பொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த மருத நிலங்களையுடைய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்திலே கொண்டுபுக்கு, உலகத்தாரால் கொண்டாடப்படுகின்ற இனிய சொற்களையுடைய இவளை நீங்கள் உங்களுக்கு ஆசையில்லாமல் அகற்றிவிட்டீர்கள்; அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சயனித்திருப்பதையும் திசைகளோடு கூடிய உலகத்தை எல்லாம் தாவி அளந்ததையும் பசுக்களை மேய்த்ததையும் ஆகிய இவைகளையே பிதற்றிக்கொண்டு பெரிய கண்களிலே நீர்பெருக்கு எடுக்கும்படி நிற்கின்றாள்.

வி-கு :- கொண்டுபுக்கு அகற்றினீர் என்க. பௌவம் – கடல், பிதற்றி நிற்கும் – பிதற்றிக்கொண்டு நிற்கின்றாள்.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 1திருநாளிலேதான் கொண்டுபோக வேண்டினால், திருச்சோலை உள்ளிட்டுக் கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – திருப்பொருநல்கரையைப் பொழில் விழுங்கி இருக்கை. 2கரையைப்பொழில் கொண்டாற்போலே, இவளைக் குணம் கொண்டபடி. அன்றிக்கே, 3அந்தத்திருச்சோலையை உங்களுடைய நல்வார்த்தைகளால் பேர்த்துக் கொடுப்போம் அன்றன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது! என்னுதல். பரந்த பொழிலையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைய திருத்தொலைவில்லி மங்கலத்திலே கொடுபுக்கு. உரைகொள் இன்மொழியாளை – 4“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம் குத்துண்ணும்படியான பேச்சு என்னுதல்; “பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.

அன்றிக்கே, பொருளில் இழியவேண்டாமல் ‘உரையே அமையும்’ என்னும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, ‘இது ஓர் உரையே! பேச்சே!’ என்று உலகத்தார் கொண்டாடும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல்; அன்றிக்கே, உரை – அடைவு சொல் என்னுதல். நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் – அந்தப்பேச்சில் வாசிஅறிந்து அநுபவிக்கமாட்டாமல், நீங்களே ஆசையின்றி அகற்றினீர்கோள்.

அவ்வூரிலே கொடுபுகுகையும், இவள்பக்கல் நசை அறுகை என்பதும் பரியாயம். ஆயிட்டு ‘இவள் வேண்டா’ என்று அன்றோ கொடுபுக்கது என்கிறாள்.

திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் – தன் சந்நிதானத்தாலே கிளராநின்றுள்ள திரைகளையுடைத்தான திருப்பாற்கடலிலே பிரமன் முதலாயினாருடைய கூக்குரல் கேட்கும்படியாகக் கண்வளர்ந்தருளினதுவும்; 2இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக்கொடுக்க அடியிட்டபடியும். திசை ஞாலம் தாவி அளந்ததும் – திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும். திசைஞாலம் தாவி அளந்ததும் – 3‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்கவேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது. ஆசை – திக்கு. ‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்டவேணும்’ என்று ஆசைப்பட்டுக் காணும் கிடக்கிறது பூமி. படுகை – உடைத்தாகை. பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது. நிரைகள் மேய்த்ததும் – அவ்வளவன்றிக்கே, அறிவு கேட்டுக்குத் தலையான பசுக்களோடே சேர்ந்து வாழ்ந்தபடியும். பிதற்றி – இவற்றையே அடைவுகெடக் கூப்பிட்டு. நெடும் கண் நீர்மல்க – இக்கண்ணில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறத் தண்ணீர் உண்டாவதே! நிற்குமே – பிதற்றவும் சக்தியில்லாமல், கண்ணீர் மல்குகை ‘தன்னுடைய குண நிலை’ என்னும்படி செயலற்று நில்லாநின்றாள்.

சோலை வழியே கூட்டிப் போக வேண்டுமோ
கரைகள்
பொழில்கள் சூழ்ந்த
உரை கொள் இன் மொழியாள்
ஆசை இன்றி அகற்றினீர்
பிஒதற்றி கண்ணீர் மல்க நிற்கிறாள்
திருபாற் கடல் வாமன நிரை மேயத சரித்ரம் நினைத்து
கரையை பொழில் கொண்டால் போலே –
இவளை அவன்கல்யான குணங்கள் விழுங்கி –
சோலையை பெயர்க்க முடியுமானால் இவளை மீட்க முடியும்
உரை கொள் –
ஸ்ரீ ராமாயணம் குசல்வர்கானம் கொண்டு பாடி
மகா பாரதம் கானம் இல்லை
இதிகாசத்தில் இது ஸ்ரேஷ்டம்
அது கூட குத்துண்ணும் படியான திருவாய்மொழி –
அருளிச் செயலில் இது சாரம்
கங்கா சுப்பிரமணியம் காங்கேய போல [பேசி
அர்த்தத்தில் இழிய வேண்டாதபடி உரையே கொள்ளும்படி இன் மொழி
காஞ்சி ஸ்வாமி -எத்தனை உரை இட்டாலும் கொள்ளும் படியானதிருவாய்மொழி
6000 படி /9000/12000/24000 படிகள் முதல் 36000 படி
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் –
ஒன்றில் சொல்லாதது இன்னும் ஒன்றில் உண்டே –
பர  வியூக விபவங்களையும் இவள் அனுபவிக்கும்படி
இது ஒரு உரையே பேச்சே கொண்டாடும்படி
ஆசை இன்றி அகற்றினீர்
உரை அடைவு உடன் எழுத்து
உரை நடை
கவி -எழுது சீர் மட்டும் இருந்தாள் போறாது -விஷயத்தில் சத்து இருக்க வேண்டும்
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டான் எலி -காஞ்சி சுவாமி காட்டி
சொற்கள் அடைவு -அர்த்தம் உடன் கவி
காளி  தாசன் -கதை
மற்றவர் சேர்ந்து எழுத
உபமானம் உவமை
சொல்வதில் போஜனம் ராஜேந்திர
கிருத சுபம் நெய்யும் பருப்பும்
தாசி வீட்டுக்கு போக
சரஸ் சந்திர போலே
தயிர் வெளுமை

அங்கு கொடு புக்கையும் ஆசை இன்றி அகற்றுவதும் பரியாயம்
ஓன்று தான் –
இவளை வேண்டாம் என்று தான் கூட்டி வந்தீர்
திரை கொள் அலை எறியும் கடல்
ஸ்வ சந்நிதானத்தால் ஆனந்த கூத்தாடும் திருப் பாற் கடல்
கூப்பீடு கேட்கும் இடம்
பாட்டு கேட்கும் இடம் ப்ரஹ்மாதிகள் குரல் கேட்காதே
திசை ஞானம் தாவி -அளந்து இரப்பாளனாய் -தாவி -இந்த்ராதிகள் காக்க
திசை திக் ஆசை
ஆசையுடன் தாவி அளந்தான்
பூமிக்கும் இவன் திருவடி தீண்ட ஆசைப்பட்டு இருந்ததாம்
பூமி ஆசை திக்கு பட்டுக் கிடப்பதே
பரம பதம் விட்டு திருப் பாற் கடல் -திரு விக்ரமன் -பசுக்கள் சேர்ந்து வர்த்தித்து
அடைவு கெட கூப்பீட்டு –
பிதற்றி
கண் நீர் மல்க –
நிற்குமே பிதற்றவும் இன்றி ஸ்தப்தயாய் நிற்கிறாள்
வசம் இழந்து இருக்க –
அறிந்தே கூப்பிட்டு வந்தீர்கள்
மின்னிடை -அன்னம் வில்லி புத்தூர் உறைவான் -ஆண்டாள்
இது என்ன நியாயம்
வில்லி புத்தூர் உறைவான் பொன்னடி காண ஆசைப் பட்டாள்
அது எதனால் நிறைவேற்ற
முடியவில்லை பிரகிருதி அறிந்து கோயிலுக்கு கூட்டிச் செல்வர் இல்லை
கிடந்ததோர் கிடக்கை கண்டும் நம் போல் இல்லையே

தானே போக முடியாமல் உருகி இருக்கிறாள்
ஆண்டாளை கூட்டிப் போக வில்லை
இவரை கூட்டிப் போனார்கள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 25, 2013

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.

பொ-ரை :- ஒலிக்கின்ற ஒசையையுடைய திருவிழாவின் ஒலி பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்திற்குக்கொண்டு சென்று, அமுதம் போன்ற இனிய மெல்லிய சொற்களையுடைய இவளை உங்களுக்கு ஆசையில்லாமல் அகலும்படி நீங்கள் செய்தீர்கோள்; இவள், திமிர் கொண்டாற் போன்று நிற்கிறாள்; தேவ தேவபிரான் என்றே நெளிகின்ற வாயோடு கண்களில் நீர்பெருகி நிற்கும் படியாகக் கட்டுக் குலைந்து தளர்ந்து கரையாநிற்கின்றாள்.

வி-கு :- ஓசைவேறு, ஒலிவேறு; “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். கொண்டுபுக்கு அகற்றினீர் என்க, நிமிதல் – நெளிதல்.

ஈடு :- இரண்டாம்பாட்டு. 2அவ்வூரில் கொடுபுக வேண்டினால், திருநாளிலே கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.

குமுறும் ஓசை விழவு ஒலித் தொலை வில்லிமங்கலம் கொண்டு புக்கு – 1“பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தையுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது” தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.

என்கிறபடியே, ஓத்துச்சொல்லுவார், சங்கீர்த்தனம் பண்ணுவார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகின்ற ஒலியையுடைய திருநாளில் ஆரவாரம். 2பாவியேன்! இந்த ஒலி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது! ‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறுபோலே காணும் ஒலி இருக்கிறது. 3அவ் வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டுவைத்து இவளைக்கொண்டு புகுவார் உளரோ? கொண்டு புக்கு – இவள் அறியாதிருக்க நீங்களே கொண்டுபுக்கு. அமுதமென் மொழியாளை – இவள்மொழி, கேட்டார்க்கு அழியாத தன்மையைக் கொடுக்குமே! இந்த இனிய பேச்சைக்கேளாதபடி புண்ணியம்இல்லாதவர்கள் ஆவதே நீங்கள். 1அதாவது, அவ்வூரில் புக்க பின்பு இவர்களுடன் வார்த்தை சொல்லத் தவிர்ந்தாளாயிற்று என்றபடி. 2“அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது.“மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.

3இதுகேட்க ஆசைப்பட்டிருக்குமவன் பெற்றுப் போனான். அமுதத்தினின்றும் வேறுபாடுதோற்ற ‘மென்மொழி’ என்கிறார்கள். கேட்பதற்குத் தக்கதாய் இராதே அமுதம்: வேணுமாகில் இனிமைக்கு ஒரு சொல்லுக்கு நிற்கிறது, மிருதுத்தன்மை இதற்கே உளதாமித்தனை.

நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் – இவள் பேச்சினைக் கேட்டுப்போகிற நீங்களே உங்களுக்கு இவள் வழிபடாதபடி செய்தீர் கோள். திமிர்கொண்டால் ஒத்துநிற்கும் – 4“செயல் அற்றவன் ஆகிறாய்” என்னுமாறுபோலே, அநுபவிக்கக்கூடிய விஷயத்தை அநுபவிக்கவும் மாட்டாதே செயல் அற்றவளாய் நில்லாநின்றான். அன்றிக்கே, “செயல்அற்றவன் ஆகிறாய்” என்கிறபடியே, பரிபூரணஞானிகளைப் போலே இராநின்றாள் என்னலுமாம். மற்று இவள்-இவள் இதற்குமேலே வார்த்தை சொல்லில். தேவதேவபிரான்என்றே – 1இங்கே கண்டாலும் அயர்வறும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து சுலபனானான் என்றாயிற்று இவள் புத்திபண்ணுவது. 2நாயகனுடைய மேன்மைக்குத் தோற்று வார்த்தை சொல்லுகிற இவளை மீட்கப்போமோ? என்றே நிமியும் – ‘அப்பெரியவன் இப்படிச் சுலபனாய்ச் சீலவானாவதே!’ என்று அந்தச் சீலகுணத்தைச் சொல்லப்புக்குத் தலைக்கட்டமாட்டாதே, உதடு நெளிக்கும். நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க-உதடு நெளிக்கிற வாயோடே கண்கள் நீர் மல்க. நெக்கு – கட்டுக்குலைந்தவளுமாய். ஒசிந்து – பரவசப்பட்டவளாய். கரையும் – நீராகாநின்றாள். நெக்கு ஒசிந்து கரையும்-3பெருவெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்துபோமாறுபோலே, ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகாநின்றாள்.

உபாய அத்யவசாயம் தாய் அருள
சம்பந்தம் தோழி உணர்த்த
உத்சவம் நடக்கும் நாளில் கூட்டிப் போன பின்பு –
ஆசை மிகுந்து போகுமே -ஈடுபட்டு கிடக்கிறார்
ஓசை விழவு ஒலி மிக்கு
அயோத்யை -புண்யா வசன கோஷம் -கம்பீரம் மதுர
ஒத்து சொல்வார் சங்கீதம்பண்ணுவார்  இயல் விண்ணப்பம் சொல்வார் -த்வனி உடையார்
விரஜை போலே
கொண்டு மீள அன்றோ அடுத்தது
பிள்ளை கொல்லி த்வனி அன்றோ
தெரிந்தும் கொண்டு புக்கு -இவள் அறியாது இருக்க -நீங்களே கூட்டிப் போக
அமுதம் மென் மொழியாள்
கேட்டாருக்கு நித்யத்வம் கொடுக்கும் திருவாய்மொழி
அறிய கற்று வல்லார் நித்யர் ஆவாரே
இனிய பேச்சை கேளாதபடி பாஹ்ய ஹீனர் ஆனீர்
அமுதம் மென் இனிமை மிருத
மதுரா மதுரா லாபா -சீதை வார்த்தையை பெருமாள் திருவடி இடம் கேட்டது
ஆலாபனம் இனிமை பார்க்கவும் இனிமை-

இது கேட்க ஆசைப்பட்டவன் போக
அமுதத்தில் வ்யாவர்த்தி மென் மொழி
ஸ்ரவண யோக்யமாய் இருக்காதே அமுதம்
காதுக்கும் நாக்குக்கும் இனிமை
ரஸ்யம் -ஒரு சொல் சொல்லிப் பார்த்தால் நாக்குக்கு
இனிக்கும் கேட்டால் காதுக்கு இனிக்கும்
உங்கள் பேச்சு கேட்கும் படி இல்லை இவள்
திமில் -கொண்டால் போலே ஸ்தம்பித்து இருக்க
ஸ்தம்பம் இவ நிற்கிறாள் –
அனுபாவ்ய விஷயத்தை அனுபவிக்க மாட்டாமல்
சாந்தோக்ய
உபநிஷத் ஸ்வேதா கேது பிள்ளையை அனுப்ப
-வந்ததும் உத்தாரகேது கேட்க
ப்ரமை பிடித்து நிற்க -ஸ்தம்பித்து நிற்கிறாய் ப்ரஹ்மத்தை அறிந்தாயோ கேட்டார்
தெரிந்து கொள்ளாமையால் ஸ்தம்பித்து நின்றான்
அறிந்தவனும் வாயால் சொல்ல முடியாது
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் கம்பர்

முழுவதாக உணர்ந்தவர் ஸ்தம்பித்து இருப்பார் -திமில் கொண்டால் ஒத்து நிற்கும் இவர்
குருகுல வாசம் -7 -22 வயசில் -15 வருஷம் முன்பு
12 + 3 இன்றும்  M A -படிக்க –
வாசிக்காத கிரந்தமும் வாசித்து போலே இருக்கும் குருகுல வாசம் முடிந்த பின்பு
தெரியாது பதில் சொல்லும் எந்த கேள்வி கேட்டாலும் சொல்லும் பதில் என்ன
அதற்கும் தெரியாது என்றானாம்
தேவ தேவ -பிரான்
மனுஷ்யர்க்கு தேவர்போலே தேவருக்கும் தேவன் பரத்வம்
இங்கே வந்து
மேன்மைக்கு தோற்று சொல்லும் வார்த்தை
சீலம் சொல்ல தலைக்கட்டாமல் நிமித்து -வாயை
நெகிழ்த்து கண்கள் நீர்
மல்க நெக்குருகி
சிதிலம்
ஒசிந்து
பரவசையாய் கரையும்
வெள்ளத்தில் மணல் கரை போலே –
பொசிந்து கரையுமா போலே
அவயவம் காண முடியாதபடி சிதைந்து போனாள்
அர்ச்சாவதார சௌலப்யம் நினைந்து

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-5-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 24, 2013

ஐந்தாந் திருவாய்மொழி – “துவளில்”

முன்னுரை

    ஈடு :- 1இத் திருவாய்மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமானைக் கவிபாடினார்; இத் திருவாய்மொழியில் தம்முடைய படி சொல்லுகிறார். 2சிம்ஹாவலோகந நியாயத்தாலே 3“பொய்ந்நின்ற” என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும் வரத் தமக்குப் பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார். 4“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பர்கள். 5பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினையுடையவராய், “வேதவாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும்போதும்.

1
ஸ்ரீஜனகராஜன் திருமகள் பிறந்த சமயத்திலே சோதிடர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் என்?’ என்று கேட்க, ‘இவள் ஜீவிக்கும்படிகளில் ஒரு குறை இல்லை, எல்லாவுலகங்களையுமுடைய ஒருவனைக் கைப்பிடிக்கவும் கடவள்; இங்ஙனே இருக்கச் செய்தேயும் வனவாச ரசம் அநுபவிக்கக் கடவள்’ என்றார்கள்; அப்படியே, இப் பெண்பிள்ளை பிறந்தபோது இவள் திருத்தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் எங்ஙனே?’ என்று கேட்க, ‘எல்லாம் நன்றாகத் தலைக்கட்டக்கடவன; ஆனாலும், இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அது தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும். அதாவது, திருத் தொலை வில்லி மங்கலத்திற் கொடுபோகாதே ஒழியப் பெறில் இவளைப் பெறலாம்’ என்றார்கள். 2இவள் மரணத்தையே அடையினும் திருத்தொலை வில்லிமங்கலத்தில் கொடுபோகாது ஒழியவல்ல குடி அன்றே; 3‘இவள் அங்கேபுக்கு இறப்பினும் அமையும்’ என்று இருப்பார் சிலர் அன்றோ. 4பிராட்டி வனவாச ரசம் அநுபவியாத அன்றே அன்றோ இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் புகாதொழிய வல்லளாவது. ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது.
  1தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும் ‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலைமாற்றப் போகாதவாறுபோலே, இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறைசொல்லி மீட்கப் போகாது. 2சிற்றின்பத்திலே ஈடுபாடு உடையராயிருப்பார் ‘அதர்மம்’ என்றும், ‘பழி’ என்றும், ‘மேல் நரகம்’ என்றும் சொன்னால் சிற்றின்பத்தில் நின்றும் மீளார்களே அன்றோ. 3இங்குக் குணாதிக விஷயமாகையாலே ஒரு குறை சொல்லி மீட்கப்போகாதே. 4‘குறை சொல்லுவோம்’ என்று நினைக்கிலும் குணங்களின் மிகுதியைச் சொல்லுமத்தனை அன்றோ. 6அது பின்னை ஈடுபாட்டுக்குக் காரணமாமத்தனை அன்றோ. 6பழியும் உண்டாயிடுக, மதிப்புக்கேடும் வருக; ஆனாலும், அது கண்டு மீளமாட்டாத உறுதியன்றோ இவளது. 7அங்ஙனேயாகிலும், இவர்கள் இவ்விஷயத்தில் நின்றும் இவளை மீட்கப் பார்க்கிறது என்? என்னில், ‘பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் நம்மளவு அல்லாத அளவு கடந்த ஈடுபாடு இவளுக்கு விளையா நின்றது; அது இவளை இழக்க வரின் செய்வது என்?’ என்னும்அச்சமாயிற்று இவர்களுக்கு ஓடுகிறது. 1இனித்தான், அளவு கடந்த ஈடுபாடு சாதனத்தை அநுஷ்டிப்பார் கையிலே கிடக்கக் காண்கையாலே ‘இவள் சாதன புத்தியால் இழியின் செய்வது என்?’ என்னும் அச்சத்தாலே மீட்கவும் பார்ப்பரே. 2‘இந்த ஈடுபாடு சொரூபத்திற்கு விரோதமானாலன்றோ சாதனத்தில் சேர்வது என்றே அன்றோ இருப்பது இவள். 3‘சொரூபபேதத்துக்கு இசைந்தால் சொரூபத்திற்குத் தகுதியான காரியங்களுக்கு இசைய வேண்டாவோ?’ என்று காணும் இவள் கருத்து. 4சேஷிக்கு உபாயமாயிருத்தல் சொரூபத்திற்குச் சேர்ந்தது ஆனபின்பு, சேஷனாயிருப்பவனுக்கும் பிராவண்யம் சொரூபத்தில் கட்டுப்பட்டதாகக் கடவதன்றோ.

5
இனித்தான், மேல் திருவாய்மொழியோடு இத் திருவாய்மொழி சேர்ந்திருக்கும்படி என்? என்னில், கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியாநிற்கச்செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி அதுதானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே, அந்த அநுபவம்தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார். அதாவது, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே, தமக்குப் பிறந்த
பிராவண்யத்தின் மிகுதியை அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மேலே அநுபவித்த அநுபவம்தான் மானச அநுபவமாத்திரமாய், புறத்திலேயும் அநுபவிக்கவேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து, அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். 1இப்பெண்பிள்ளையின் தன்மையை அறியச் செய்தேயும் தாய்மார் விழுக்காடு அறியாமையாலே திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடுபுக, அவள் “அரவிந்தலோசந” என்பது, “தேவபிரான்” என்பது: நீர்மையைச் சொல்லுவது, மேன்மையைச் சொல்லுவது, ஒப்பனை வாசி அறிந்தமை தோற்றச் சொல்லுவதாய் வாய்வெருவ, இவள் நிலை இருந்தபடியால் ‘இவள் கிடைக்கமாட்டாளே அன்றோ’ என்று தாய்மார் வெறுத்துத் தோழிபாடே வந்து, ‘இவள்படி உனக்குத் தெரியாமை இல்லை; இவளை மீட்கலாம் விரகு சொல்லவேண்டும்’ என்ன, தோழி, 2‘நீங்களே இவளுக்குப் பிராவண்யத்தை உண்டாக்கி இப்போதாக இவளை மீட்க ஆசைப்படுகிற இதனால் பிரயோஜனம் என்? முன்னரே விலக்கப் பெற்றிலீர்; இனி, இவள் பக்கல் நசை அறுங்கோள்; இவளைத் தடைசெய்யப் பாராமல் நீங்களும் துணையாக இருந்து இவள் உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பாருங்கோள்’ என்கிறாள். 3தாய்மார் கேட்கத் தோழி அன்றோ சொல்லுகிறாள்; 4பகவத் விஷயத்துக்குப் “பழையார், புதியார்” என்று இலர்; தேசிகர் சொல்ல ஆதரமுடையார் கேட்குமித்தனை.ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:” என்று இளையபெருமாள் படியை ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளன்றோ சொல்லுகிறார். ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே“ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1. சுலோகத்திற்குப் பொருள் அருளிச்
செய்கிறார் ‘வாக்கு இந்திரியத்திற்கு’ என்று தொடங்கி. “மஹாத்மந:”
என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,
சிறிது சொன்னான் என்றபடி.

. அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்தபின்பு. ஸத்பாவம் – 2“இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்” “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”-  என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.

என்றும், 3“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

என்றும் 4சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான். லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான். பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே. குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள்நிலை அறியும்படி நிலவரானார். அன்றிக்கே, இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

துவளில்மாமணி மாடமோங்கு 5தொலைவில்லி மங்க லம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லைவிடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.

  பொ-ரை :- குற்றம் இல்லாத பெரிய மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்து விளங்குகின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தொழுகின்ற இவளிடத்தில், அன்னைமீர்! உங்களுக்கு இனி ஆசைவேண்டா; நீங்கள் ஆசையை விடுங்கோள்; வெண்ணிறத்தையுடைய பிரகாசம் பொருந்திய சங்கு என்றும் சக்கரம் என்றும் தாமரை போன்ற விசாலமான திருக்கண்கள் என்றும் சொல்லிக்கொண்டு அழகிய குவளைமலர் போன்ற கண்களிலே தண்ணீர் தேங்கும்படி நின்று நின்று குமுறுவாள்.

வி-கு :- அன்னைமீர்! தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை; இனி நீர் விடுமின் என்றும், கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறும் என்றும் கூட்டுக. இவளை, வேற்றுமை மயக்கம். ‘இவளை விடுமின்’ என்று கூட்டி நேரே பொருள் கோடலுமாம்.

இத்திருவாய்மொழி, எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்

ஈடு :- முதற்பாட்டு. 1இவள் தன்மை அறியாதே திருத்தொலை வில்லிமங்கலத்தைக் காட்டின பின்பு உங்கள் நல்வார்த்தைக்கு இவள் மீளுவாளோ? என்கிறாள்.

துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை இனி நீர் விடுமின் – 2‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலேயுள்ளவை’ என்னுதல், ‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல், உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ? அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி? 1சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ? 2அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது? குற்றமுண்டாகிக் கழிந்தது அன்று. ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச்செய்தே, ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்; பரமாத்மாகுற்றங்கள் சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்; அப்படியேயாயிற்று, 3அவ்வூரில் மாடங்களில் இரத்தினங்களும். துவள்-குற்றம். இல் – அது இன்றிக்கே இருக்கை. மா மணி – ஒளியே அன்று; பெருவிலையனுமாயிருக்கும். ஓங்கு – அவ்வூரில் மாடங்களின் நிழலீடு திருநகரியளவும் வந்து காணும் இருப்பது. ‘இடமணித்து’ என்று போலே காணும் நாயகன் பிரிந்தது. மாளிகையின் நிழற்கீழே இட்டு வைத்துக் காணும் பிரிந்தது. 4அவன் பிரிந்தபோது தொடங்கி அவ்வூரையும் அவ்வூரில் மாடங்களையும் அவற்றில் மாணிக்கங்களையும் பார்த்து, வைத்த கண் வாங்கமாட்டாதே இருந்தாள்போலே காணும். 3துருப்புக்கூடுபோலே அவ்வூரை அன்றோ இவள் விரும்பியதுஎன்பாள் ‘தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கிறாள். ‘கறுத்திருக்கும், வெளுத்திருக்கும்’ என்னுமாறு போலே, தொழுகையே நிரூபகமாகவுடையவள் என்பாள் ‘தொழு மிவளை’ என்கிறாள். 1“கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிறவனுமானவனைப் பார்த்துச் சொன்னார்” இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.

என்னுமாறு போலே; “கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே. 2இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்திபண்ணியன்றோ மீட்பது! இவள்படி கைமேலே காணாநிற்கச்செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே? பழி சொல்லப் பணைக்கிறவள் இவள், பழியை நீக்குவதற்குப் பார்க்கிறீர்கோள் நீங்கள் என்பாள் ‘இவளை நீர்’ என்கிறாள்.

தொழுகை தேகயாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்கவேண்டும் என்பாள் ‘இனி’ என்கிறாள். பகவத்விஷயத்தில் 3மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது; பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக்கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள். தக்க பருவத்தினையுடையவர்களானார் பக்கல் பெற்றவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ? புக்க இடத்தே ஈடுபட்டவர்களாகாநிற்க, பெற்ற சம்பந்தம் கொண்டு மீட்கவோ என்பாள் ‘உமக்கு ஆசை இல்லை’ என்கிறாள். விடுமினோ – இவ்வளவில் நீங்கள் கைவாங்க அமையும்.1பெற்ற தாய்மார் ‘விடுமின்’ என்ற அளவிலே விடார்களே அன்றோ; பின்னையும் நிர்ப்பந்திக்க வேண்டா, இவளுக்கு ஓடுகிற ரசத்தைக் கண்டுகொடு நிற்கப்பாருங்கோள் என்கிறாள் என்றது, இவளுடைய அனுபவத்திற்குத் தண்ணீர்த் துரும்பு ஆகாதே இதனைக் கண்டு கொடு நிற்க அமையும் என்கிறாள் என்றபடி. 2‘எங்களை ‘ஆசைப்படவேண்டா, விடுங்கோள்’ என்கிறது என்? என்னில், இவள் பேச்சிலும் நினைவிலும் நீங்களாதல் நானாதல் உண்டோ? “புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலையன்றோ இவளது! “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.

    தவளம் ஒண் சங்கு – கரியநிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தாய், 3“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகையுடைத்தான சங்கு. சக்கரம் – அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாத அழகையுடைய சக்கரம். என்றும் – ‘இவற்றைக்காணவேணும்’ என்னுதல்; ‘இவற்றோடே வரவேணும்’ என்னுதல் சொல்லமாட்டுகின்றிலள் பலக்குறைவாலே. தாமரைத்தடம் கண் என்றும் – அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக்கண்கள். தாமரையை ஒருவகைக்கு ஒப்பாகச் சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற திருக்கண்கள் ஆதலின் ‘தடம்கண்’ என்கிறாள். 4ஒருமலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே விட்டு விட்டுச் சொல்லுகிறாள் என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள். 5திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது. குவளை ஒண்மலர் கண்கள் நீர்மல்க – 1இந்தக் கண்களைக்கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர்மல்க அடுப்பது? 2கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டுகொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு அடுப்பது? 3“பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்தகண்ணீரையுடையவனாய், மயிர்கூச்சு எறிகின்ற சரீரத்தையுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய், மக்களால் பார்க்கத்தகுந்தவனாய் இருப்பான் ஞானி” என்பது விஷ்ணுதத்வம்.   “ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்

இதனால், எப்பொழுதும் தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒருதேசம் தேடிப்போக வேண்டாகாணும் என்பதனைத் தெரிவித்தபடி. குவளைப்பூப்போலே அழகிய கண்கள் நீர்மல்க. 4அவள் தன்னுடைய பெண் தன்மையைக் காற்கடைக்கொள்ள, நீங்கள் எங்ஙனே மீட்கப் பார்க்கும்படி? கண்ணநீர் பாய்கையாவது, பெண்தன்மை அழிதலே அன்றோ. நின்று நின்று குமுறும் – 5பேச்சுப்போய்க் கண்ணநீராய், கண்ணநீர்போய்த் தடுமாறுகிறநிலையிலே மீட்கப்போமோ?

    6இராஜகோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர்பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன், ‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.

தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கையாலே, சரீரத்தின் செயல் சொல்லிற்று; ‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடங்கண் என்றும்’ என்று சொல்லுகையாலே, வாக்கின் செயல் சொல்லிற்று; ‘குமுறும்’ என்கையாலே, மனத்தின்செயல் சொல்லிற்று.

தம்படிகளைத் தாமேசொன்னால், தற்புகழ்ச்சி ஆகாதோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது,
ஆப்தியின் பொருட்டுச் சொல்லுகிறாராகையாலே குற்றமில்லை என்றபடி.

  மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.–என்பது நன்னூல்.

    திருவடி தன்னைப் புகழ்ந்து பேசுதலையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும்.

தோழி  பாசுரமாக செல்லும் திருவாய்மொழி இது
அவனே எல்லாமாக கொண்டு இருக்கிறாள்
பெரிய ஆனந்தம் -துக்கம் ஆக மாறி -மானச அனுபவம் என்பதால்

ஆனந்தத்துடன் அருளிச் செய்த
சன்மம்
வீற்று இருந்த
குரவை ஆய்ச்சியர் மூன்றும்
இதில் பூரணமாக கிருஷ்ண அவதார அனுபவம்
இப்ப்பொழுது துக்கம் ஏற்பட காரணம்
தீர்ப்பாரை -யாமினி -அசங்யேந சங்கதி என்பர்
இதில் சங்கதி -இரண்டு நிர்வாகம்
மானச அனுபவம் -பூர்வம்
பட்டர் -கீழ் நிரவதிக ஆனுபவம் அதுவே துக்கம்
தாகம் மிக்கவன் அதிக தண்ணீர் குடித்து -விக்கித்து -இருப்பது போலே
பொய் நின்ற ஞானம் முதல் இது வரை பூர்ண அனுபவம் இல்லை
கீழ் எல்லாம் சர்வேஸ்வரனை பேசி
இதில் தம்மை பேசுகிறார்
மேலும் எம்பெருமானை படுவார்
ஆழ்வார் ஈடுபாட்டை தோழி பேசுவதாக
யதோ வாச நிவர்த்தந்தே விஷயத்தை தாம் அல்லது பேச முடியாதே
அது போலே தமது அபிநிவேசம் பேச தாம் அல்லது வேறு ஒருவரால் பேச முடியாதே
சாதனா புத்தியாக பேச கூடாது தோழி
இவள் துடிக்க
சிம்ஹம் அவலோக நியாயம்
நடந்து திரும்பி பார்த்து மேலும்
நடக்கும் அது போலே தாம் வந்த தூரம் திரும்பி பார்த்து
தமது அபிநிவேசம் -பகவத் விஷயத்தில் பிராவண்யஅதிசயத்தை
ஆழ்வார் பிரகிருதி பேசுகிறது என்று முதலிகள் போர  அனுபவித்து பேசுவார்
சம்பந்த உபாய பலங்களில் -தோழி தாயார் மகள் பாசுரம்
பகவத் பிரசாத்தால் லப்த ஞாநம் கொண்டு –
ஸ்ரீ ஜனக ராஜர் திரு மகள் -அவதரித்த பின்பு ஜோசியர் கூட்டு கேட்டு
இவள் ஜீவிக்கும்படி என்
சார்வபௌமன் கை பிடித்து -வனவாசம் உண்டுஎன்றார்
தடுத்தால் பிரிவு ஏற்படாது
பராங்குச நாயகி -அது போலே திருத் தாயார்
கேட்க எல்லாம் நன்றாக -ஒரு கண்டம் தப்பினால் சுகமே
ஜீவிக்கலாம் திரு தொலை வில்லி மங்கலம் கூட்டிப் போக கூடாது என்றார்களாம்
ஜீவியாது ஒழியிலும் கூட்டிப் போகாத குடி இல்லை
பிரார்த்தனை ஸ்தலம் இன்றும் அங்கு
பிரியா விடை
தொலை வில்லி மங்கலம் உத்சவம் -மாசி ஒரு நாள் உண்டு
ஆற்றம்கரை மணலில் எழுந்து அருளுவார்
கண் மறையும் வரையில் அப்படியே
அது போலே நவ திருப்பதி கருட சேவை பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பார்
சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும்
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த சடகோபன்
வனவாசம் பிராட்டி போனது போலே-

ஸ்ரீ நளர் வார்த்தையை நினைப்பது
பெருமாள் காடேற -சீதை அபகரிப்பது -இப்படி துக்கம் வரும் என்று நினைத்தாரா
அது போலே இதுவும் நடக்கும் –
அணை கட்ட வார்த்தை சொல்லி –
பெரிய ஜீயர் காலம் தொடங்கி அர்த்தம் அறியாமல்
ராமானுஜ பிள்ளை அர்த்தம் சொல்லி –
சமுத்திர ராஜன் உக்தி சத்தியமே
ஏமம் உக்த்வா சமுத்ரேண -ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள இடத்தை கண்டு கொள்வது
வருமது தப்பாது
சர்வ பிரகாரத்தாலும் உகந்து அருளின நிலங்களில் இருந்து மீட்க முடியாதே
தேகம் குறைய வளர -சம்சாரிகள் தாம் என்று நினைப்பது போலே
இவருக்கும் அனைத்தும் சர்வேஸ்வரனே என்றே இருப்பார்
அதுவும் -இப்படி சொல்லி மீட்க முடியாதே
ஷூத்ர -விஷயம் போவான் பழி -நரகம் வரும் என்றாலும் மீளாதது போலே
இங்கு குணாதிக விஷயம் குறை சொல்லி மீட்க முடியாதே
குறை சொன்னாலும் குணாதிகம் சோழ அதுவே ப்ராவண்யம் வளர உடலாகும்
பழி உண்டானாலும் மதிப்பு கேடு உண்டானாலும் மீள மாட்டேன் என்கிற அத்யவசாயம் உண்டே
அங்கனே ஆகிலும் இவளை மீட்க பார்ப்பது எதனால்
பருவம் நிரம்பால் இருக்க செய்தேயும் நம் போல் இன்றி அதிகமான ப்ரீதி
இவளை இழக்க கூடாது என்று அச்சம்
அபி மாத்திர ப்ராவண்யம் சாதனர் -உபாசகர் இடமும் உண்டே –
இவளும் அது போல் செய்கிறாளோ என்று நினைத்து சாதனமாக கூடாது என்று மீட்க
ஆனால் இவளுக்கு இது ஸ்வரூபத்தில் -சேர்ந்தது அதி மாத்திர ப்ராவண்யம் ஆத்மாவிலே சேர்ந்து இருக்குமே
ஸ்வரூபத்துக்கு இசைந்தால் ஸ்வரூப அனுரூபமான ப்ராவண்யம் கைங்கர்யம் இசைய
வேண்டாவோ என்றே இவள் இருப்பாள்
சேஷிக்கு உபாய பாவம் ஆக நாம் -கொண்டால் அது ஸ்வரூபத்தில் சேர்ந்து -சித்த உபாயம்
அனுஷ்டிக வேண்டாதபடி ஸ்வரூபத்திலே இருக்குமா போலே -இதுவும் ஸ்வரூப அனுபந்தி
சங்கதி -இரண்டும் காட்டி –
கிருஷ்ண குண அனுபவம் -தரித்து அனுபவித்து -அதுவே -விக்கி -அதனால் பரவசம்
அடைந்து
அவ்வஸ்து தானே பாரவச்யத்தால் மோஹித்து
பூர்ண அனுபவம் இதில் மட்டும் -என்பதால்
பூர்வர்கள் -மானச அனுபவம் கீழ் -அது பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறப்பித்து கிடைக்காமல் துக்கம்

அரவிந்த -லோசனன் நீர்மையை சொல்லி
தேவபிரான் -மேன்மையை சொல்லி
வாசியும் வாய் வெருவ
தாய் வெறுக்க
தோழிமார் இடம் இவளை மீட்க விரகு கேட்டு
அவர்கள் -நீங்களே இவளுக்கு பிராவண்யம் விளைவித்து இப்பொழுது மீட்க
ஆசைப்படுவதால் என்ன பிரயோஜனம்
நசை அறுக்க முடியாது  சஹாகரித்து உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பார்க்க சொல்லி
தாய் கேட்க தோழி சொல்லும் திருவாய்மொழி
பெற்றவள் -தோழி இடம் கேட்கலாமா தாங்களே உணர்ந்து இருக்க வேண்டாவோ
பகவத் விஷயம் பேச பழையவர் புதியவர் இல்லையே
முறை உடன் அறிந்தவர் எல்லாரும் பேசலாமே
ஸ்ரீ ராமாயணம் –
குகன் -ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் இளைய பெருமாள் பெருமை பேச
தான் தூங்காமல் தமையனை காத்து இருந்த நிலையை புகழ்ந்து
யார் யாரைப் பற்றி யார் இடம் சொல்வது –
சொல்லப்படுவது பாகவத வைபவம் என்பதால் யாரும் சொல்லாம் யாரும் கேட்கலாம்

க்கன கோசர காட்டு வாசி குகன்
பரதன் அப்ரமேயாய
-லஷ்மணன் -மகாத்மா
மூன்று விசெஷணங்கள் மூவருக்கும்
ஆசசக்ஷே சொல்லத் தொடங்கி -வாக் இந்த்ரியம் சொல்ல முடியாததை
அத -பரதன் பெருமை அறிந்த பின்பு
சத்பாவம் சத்தை யோடு வ்யாப்தமான ஸ்வபாவம் தன்மை மட்டும் இல்லை ஸ்வரூப அனுபந்தியாக கொண்டவன்
பால்யாத் பிரவர்த்தி உண்டே
மீன் தண்ணீர் உள்ளிருப்பது போலே

கடலை கையாலே இறைக்கத் தொடங்கினான்
பரதனுக்கு -அளவிட முடியாத -கழியின்  பெருமையை கடலுக்கு சொன்னான்
அப்ரமேயச்ய -லஷ்மணன் போலே நிர்பந்தித்து அடிமை செய்யாமல் –
உப்பும் கலி back water போலே லஷ்மணன் -கடல் போலே பரதன் –
இன்னார் இன்னாருக்கு உபதேசிப்பது என்று இல்லையே
காட்டில் மரங்களின் வாசி அறிபவன் இவர்கள் வாசி அறிந்து பேசுகிறான்
ராம விரகத்தால் –
தேசிகர் -அனுபவ ஆள் கிடைத்ததே
குகையில் துக்கம் -தேசிகர் கண்டவாறே பேச
ப்ராப்ய தவரையில் அதிமாத்ரா ப்ராவண்யம் ஆழ்வாருக்கு
ஆஸ்ரயம் அழியப் பண்ணுமே
உபாயத்திலே மூட்டும் என்று தாயார்
உபாய அத்யவசாய -காட்ட
சம்பந்த ஞானம் -உணர்த்த -தோழி –
பேற்றில் த்வரை -தலை மகள் பாசுரம்
சம்பந்த ஞானம் -தோழி பாசுரம்
உபாய அத்யவசாயம் -தாயார்
உணர்த்தி துணிவு த்வரை -ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
இது அவனால் ஏற்பட்டது தோழி உணர்த்த சம்பந்த ஞானம் இங்கும் காட்டி –
தீர்ப்பாரை யாம் இனி போலே

துவளில் மா மணி
குற்றம் இல்லாத மணி களால் இழைக்கப் பெற்ற மாடங்கள்
granite building போலே

குற்றம் இல்லாத மணிகள் கொண்டு சமைத்த மாடங்கள் –
ஓங்கு -இருக்கும்
அன்னைமீர் –
உமக்கு ஆசை -இன்றி
கண்ணீர் நீர்
மல்க நின்று நின்று குமுறும் –
உனக்கு இப்போது உதவாதபடி தூரச்தம் –
பூத கால அவதாரம் கொண்டு மீட்க
உகந்து அருளின திவ்ய தேசம் போலே இல்லை
அசலிட்டு -சரமாவதியில் இருக்கும் இவள்
பிரதமாவதி -மேல் எழுந்து இவர்கள்
மாடங்களில் குற்றம் இல்லை
சரக்கில் குற்றம் உண்டு இருந்தால் மீட்கலாம்
கழியாமல் நித்யர் ஹேய சம்சர்க்க
அபகத பாப்மா –
கர்மம் கழிந்து பெற்றது இல்லை
ஏறிக் கழிந்தது இல்லை
முக்தாத்மாவுக்கு தோஷம் ஏறிக் கழிந்தது
தூ மணி -மாடம் -நாயனார் -பாகவத சேஷத்வம் சொல்லி திருப்பாவை -விசேஷ
அர்த்தம் குறையை பிரஸ்தாபித்து கழிக்க வேண்டாமே
பாங்காகா எழுந்து இருக்கிறீரா
வியாதி இன்றி இருக்கிறீரா –
அர்த்தம் -ஒன்றானாலும் -தோஷம் பிரஸ்துதம் ஆனதே
அப்படியே மாடங்கள்
இங்கு மா -ஒளி -விலையும் மிக்கு
granite -பெரியதாக கொண்டால் விலையும் அதிகம்
ரத்னமும் அப்படியே
அளவு பெரிதாக ஆக மதிப்பு
நிழல் ஈடு திரு நகரி வரை வரும்படி ஓங்க
அதனால் -நிழல் கீழே இட்டு வைத்து வாழ வைத்தான்
வைத்த கண் வாங்க மாட்டாமல் இருந்தாள்
துருப்பு கூடாக -முழுவதுமாக இவள் தேசம் பூர்த்தியையும் விரும்புகிறாள்
தொழுகை ஸ்வரூபம் இவளுக்கு
கறுத்து இருக்கும் வெளுத்து இருக்கும் போலே தொழுகை ஸ்வரூபம்
இளைய பெருமாள் போலே
கணபுரம் கை தொழும் பிள்ளை போலே
அடையாளம் தொழுகை
-இவளை
மீட்க தேடுவது எங்கனே
ஈடுபட்டாள் சோழ சொல்ல
மிழ கு ஆழ்வான் வைஷ்ணவன் சொன்னதும் சந்தோஷம் அடைந்தது போலே
இனி தொழுகை தேக யாத்ரை ஆன பின்பு

பெற்றவர்கள் அசக்யங்களில் இழியலாமா
உமக்கு ஆசை இல்லை
பிராப்த யவனம் ஆனபின்பு -பெற்றவர்களுக்கு பிராப்தி உண்டோ
புக்க இடம் பிரவிணையாய் இருக்க
வேண்டாம்
இவளுக்கு ஓடும் ரசத்தை கண்டு கொண்டு நிற்கப் பாரும்
இவள் அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு ஆகாதே
தடையாக ஆகி விடாதீர்
இவள் பேச்சிலும் நினைவிலும் நீங்கள் நாங்கள் இல்லையே -விடுமினோ
த்யஜ்வா புத்ராம்ச தாராம்ச -போலே
தவள ஒண் சங்கு -பரபாகமான
வெளுத்த -சக்கரம் விசேஷணம் சொல்ல ஒண்ணாத
தாமரை கண் என்னும்
பல ஹாநி
ஆழ்வார்கள் அளவும் அலை எறியும் திருக் கண்கள்
இதை அர்ச்சிராதி எடுத்து கடியத்திலும் சொல்வார்கள்
என்றும் -என்றும் –
மலை எடுத்தாப் போலே சொல்லுக்கு சொல் தளர்ந்து
அவ்வளவு ஈடுபாடு
திவ்ய ஆயுதம் கண் அழகால் தோற்பித்தான்
குவளை கண்டால் அவன் கண்ணீர்
பெருக்கும்படி கண்ணும் கண்ண நீருமாய் இருப்பதே அழகு
திருவடி சீதை கண்டு -பெருமாள் காண வேண்டியது -ராமன் கமலா பத்ராஷன் ஈடு பட வேண்டி இருக்க தடுக்க பார்க்கிறீர்கள்
சீத நேத்ராம்பு ஆசைப்படும்படி
குளிர்ந்த கண்ணீர் பார்த்து ஆனந்தம்
தா தர்சனம் தேச விசேஷம் போக வேண்டாதபடி
ஸ்த்ரீத்வம் கால்கடை கொண்டாள்
நின்று நின்று
பேச்சு போய் கண்ண நீராய்
உள்ளுக்குள் குமுற
ராஜ கோஷ்டியில்
உகும் -இரும் பிரித்து அர்த்தம் சொல்ல
கன்றை கட்டி வைத்தால் பசு முலை கடுப்பால் -குமுறுவது போலே
குமுறும் வாயாலே சொல்ல முடியாமல் உள்ளே
உள்ளே கிலேசம் வாய் விட மாட்டாதே
இவை வார்த்தையோ
உள்ளே இருந்து சுழிக்கிற படி
என்றும் -என்றும் வாசிக வியாபாரம்
குமுறும் மானச வியாபாரம்
முக் கரணங்களாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 23, 2013

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணைமிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே.

பொ-ரை :- எல்லா உலகங்கட்கும் நாயகனாய், எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் தன் வயிற்றினுள் வைத்துப் பிரளயம் நீங்கினவுடனே அவற்றை உமிழ்ந்தவனாய், சராசரங்கள் அனைத்துமாய், அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன்பக்கல் தட்டாதவனுமாய் இருக்கின்ற கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட பரிசுத்தமான ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களால் குற்றமின்றிப் பக்தர் ஆவார்கள்.

வி-கு :- வாயகம் – வாயிடம். புகவைத்தல் – செலுத்தல்; உண்டு என்றபடி, தூய – பரிசுத்தமான. துவள் – குற்றம்.

ஈடு :- முடிவில், 1கிருஷ்ணனுடைய செயல்களைப் பேசின இப்பத்தும் கற்றார், தம்மைப் போன்றே கிருஷ்ணபக்தராவர் என்கிறார்.

முழு ஏழ் உலகுக்கும் நாயகன் ஆய் – சேதந அசேதநங்கள் எல்லாவற்றையும் நியமிக்கின்றவனாய். முழு ஏழ் உலகும் தன்வாயகம் புக வைத்து உமிழ்ந்து – பிரளயாபத்தில் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளிருந்து நெருக்குப் படாமல் வெளிநாடு காணப் புறப்பட விட்டு. அவையாய் – எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்கிற சொல்லிலே அடங்கும்படி அவற்றைப் 2பிரகாரதயா சரீரமாகவுடையனாய் அவை அல்லனுமாய் – இப்படி இருக்கச்செய்தே அவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாயிருக்கின்ற. கேசவன் அடியிணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன – கேசி என்னும் அசுரனைக்கொன்ற சர்வேசுவரன் திருவடிகளிலே. 3“மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேசுவரத்வத்தையும், இத்திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர். அன்றிக்கே,

எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல், தூய ஆயிரத்து இப்பத்தால் துவள் இன்றிப் பத்தர் ஆவர் – இப்பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர். இப்பத்தினையுடைத்தாகையாலே தூய்மையையுடைத்தான ஆயிரம் என்னுதல்; அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையையுடைத்தான இப்பத்து என்னுதல். துவள் இன்றியே பத்தர் ஆவர் – துவள் – குற்றம். குற்றம் இல்லாமையாவது, வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி 

        குரவைமுத லாம்கண்ணன் கோலச் செயல்கள்
இரவுபகல் என்னாமல் என்றும் – பரவுமனம்
பெற்றேன்என் றேகளித்துப் பேசும் பராங்குசன்தன்
சொற்றேனில் நெஞ்சே! துவள்.

கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிற இத்திருவாய்மொழியில், சர்வேசுவரனாந்
தன்மையைச் சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. என்றது, ‘நாயகன் முழுவேழ்
உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல்குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேசுவரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய
கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக்கட்டுகிறார்
என்றபடி. மேலதற்கே, வேறும் ஒருவகையில் விடை அருளிச்செய்கிறார்
‘எல்லா வுலகங்கட்கும்’ என்று தொடங்கி. என்றது, உலகத்தைப் படைத்தல்
காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறவன்
கண்ணபிரானே என்று சொல்லுகையாலே, இத்திருவாய்மொழியிற் கூறிய
கிருஷ்ணன் செயல்களையே, இப்பாசுரத்திலே அநுபாஷித்துத்
தலைக்கட்டுகிறார் என்றபடி. ‘கிருஷ்ணவிஷயமே சொல்லுகிறது’ என்றது,
இப்பாசுரம் முழுதும், கிருஷ்ணனுடைய செயல்களையே கூறுகிறது என்றபடி.

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”

என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.

தம்மைப் போலே கிருஷ்ண பக்தர் ஆவார்
முழு உலகுக்கும் நாயகன்
உண்டு ரஷித்து
சர்வ வஸ்துக்களும் தான் என்று அடங்கும்படி உமிழ்ந்து
அவை அந்தர்யாமி -அல்லன் -தோஷம் தட்டாமல் கேசவன்
கேசி ஹந்த சர்வேஸ்வரன்
கீழ் திருவாய்மொழியில் சொன்ன சர்வேஸ்வரனே கிருஷ்ணன்
பூரணமாக கிருஷ்ண விருத்தாந்தம் இப்பத்து
குற்றம் இன்றி கற்றவர்
அவதாரந்தம் போகாத குற்றம் இல்லாதபடி
கிருஷ்ண பக்தர் ஆவார்
சாரம் –
குரவை முதலா கண்ணன்
செயல்கள் இரவும் பகலும்
என்னும் பராங்குசன் சொல் தேனில்
நெஞ்சே துவள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 23, 2013

  மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே?

பொ-ரை :- பூமியின்மேலே பெரிய பாரம் நீங்கும்படி ஒப்பற்ற மிகப் பெரிய பாரதமாகிய போரைச்செய்து ஆச்சரியமான காரியங்களைச் செய்து சேனைகள் பாழ்படும்படியாக மந்திரித்துப் போய்ப் பரமாகாசமான தன்னுடைய வைகுண்டலோகத்தைச் சென்று அடைந்த பரஞ்சோதியினுடைய திருவடிகளைச் சேர்ந்து நான் வணங்கப்பெற்றேன்; எனக்குத் தலைவர் வேறுயாவர் உளர்?

வி-கு :- நீங்கப் பண்ணிச் செய்து நூற்றிட்டுப் போய்த் தனதாமமே மேவிய சோதி என்க. நூற்றிட்டு – சாம்பலாக்கி என்னலுமாம். நூறுதல் – கொல்லுதல்.

ஈடு :- பத்தாம்பாட்டு. 1அபாயங்களே மிகுதியாகவுடைய சம்சாரத்திலே வந்து அவதரித்து யாதொரு அபாயமும் இல்லாமல் பரமபதத்திற் போய்ப் புக்க படியை அனுபவிக்கப்பெற்ற எனக்கு வேறே சிலர் நிர்வாஹகர் வேண்டும்படி குறையுடையவனோ நான்? என்கிறார்.

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க – 3‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களையுடைத்தாய்த் தாங்கக்கூடிய தான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர்வர்க்கம்

திரண்டபடி, 1பரமபதத்தில் “எந்தப் பரமபதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:”

என்பது, புருஷசூக்தம். இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று;
யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.

2தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள். ஓர் மாபெரும் பாரதப்போர் பண்ணி – ஒப்பற்றதான மஹாபாரதமாகிற மஹா யுத்தத்தைச் செய்து. மாயங்கள் செய்து – பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது, எதிரிகளுடைய மாமத்தைக் காட்டிக்கொடுப்பது ஆனவை தொடக்கமானவற்றைச் செய்து. சேனையைப் பாழ்பட நூற்றிட்டு – சேனை வெறுந்தறையாம் படி மந்திரித்து. 3“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம்புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது” என்னக்கடவதன்றோ.“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரைலோக்ய நாதஸ்ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”-என்பது, பாரதம் ஆரண்யபர்வம், 49 : 20.

4‘ஆயுதம் எடுக்க ஒட்டோம், என்கையாலே சூழ்ச்சியாலே அழித்தான்.

போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் – 5பகைவர்களை அழித்ததற்குமேலே அன்றோ இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரமபதத்திலே போய்ப் புகப்பெற்றபடி என்று உகக்கிறார். 1பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரமபதத்து ஏறப் போகப் பெறுவதே! 2“ப்ருது லோசந: ப்ருதிவ்யா: பாராவதரணம் க்ருத்வா – நீண்ட கண்களையுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து, மோஹயித்வா ஜகத்சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழவிட்டு, அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்; கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண்மிசைத் தன தாமமே புக்கான். உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே, தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி

பூமியின் பாரத்தைப் போக்கித் தன் தாமத்தை அடைந்ததற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘பிருது லோசந:’ என்று தொடங்கி.

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”-  என்பது, பாரதம் மௌசலபர்வம்.

. 3ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறுபோது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து, “யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே, அதிசுகுமாரமான திருமேனியைக்கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக்கொள்ளாநிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச்செய்வர். நண்ணி நான் வணங்கப்பெற்றேன் – 4காலயவனன், ஜராசந்தன் தொடக்கமானாரைப்போலே, எதிரிட்டுக் கிட்டு கை அன்றிக்கே, முறையாலே கிட்டப்பெற்றேன். எனக்கு நாயகர் பிறர் ஆர் – 1அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தேபோய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார். 2“பயிலும் திருவுடையார்யவரேலும்” என்றதனை மறந்தார்போலே இருந்தது. அன்றிக்கே, அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.

எனக்கு யார் நாயகர் பிறர் -எம்பெருமானை தவிர என்கிறார்
பெரும் பாரம் நீங்க பாரத பெரும் போர் பண்ணி
சேனைகள் அழித்து
தன்னுடை சோதி தனதானம் புகுந்து
அவன் திருவடிகளை நண்ணி வணங்கப் பெற்றேன்
பூமிக்கு பாரம் -பொறை -விஸ்வம் -தாங்கும் ஷமை உடையவள்
தரிக்க கடவ பூமியாலும் பொறுக்க முடியாமல்
கனத்தார் -மூன்று பங்கு இருந்தாலும் அங்கு பாரம் இல்லை
தங்கள் பாரத்தை அவன் தலையில் வைத்து இருப்பார்கள் அங்கு
பாரத யுத்தம் அத்வதீயம்
மகா -பாரதம் -யுத்தத்துக்கே பெயர்
பாரத்தை போக்க வந்த யுத்தம் பாரத யுத்தம்
இதிகாசத்துக்கு மட்டும் பெயர் இல்லை
மாயங்கள் பகலை
இரவாக்கி ஆயுதம் எடேன் சொல்லி ஆயுதம் எடுத்து எதிரிகள் மர்மம் காட்டிக் கொடுத்து
கொல்லா மா கோல் -கொண்டு
நூற்றல் -செய்து யோஜனை
மந்த்ரியாகவும் ரஷகனாகவும் இருந்து
சூழ்ச்சியால் அழித்து
பிரதி கூல நிரசனதுக்கு மேலே தன்னுடை சோதிக்கு எழுந்து அருளி
நல்ல வேளை போனானே ஆழ்வார் சந்தோஷிக்கிறார்
பொய் ஆசனம் -இடுவார் பழி சொல்லும் சிசுபாலன் -போலே
அன்றி பரிவர் உள்ள ஸ்தானம் போனானே
தன்னுடைய வசஸ்தானம்
மேவிய ஜோதி
மோஹயித்வா ஜகத் சர்வம்
பிரதி கூலரை கோலால்
அனுகூலரை கண்ணால்
உத்தமம் ஸ்தானம் -பரிவர் உள்ள தேசம்

தீர்த்த தினம் அன்று
சூர்ய அஸ்தமம் ஆன பின்பு
கர்பக்ருஹம் ஏற
ஆண்டான் எம்பார்
அதி சுகுமாரமான திரு மேனி கொண்டு பத்து கோடி நடுவே பத்து நாள்
தண்டன் இட்டு தழுவிக் கொள்ளா நிற்க
நஞ்சீயர் கண்டேன் என்று அருளிச் செய்வர்
முதலி ஆண்டானை நஞ்சீயர் சேவித்து இருப்பாரா கேள்வி உண்டே
ஆண்டான் சரம தசை சரியாக இல்லை
எம்பெருமானாருக்கு பின்பே நஞ்சீயர்
கந்தாடை ஆண்டான் என்பர்
சம வயசாக இருக்க வேண்டுமே தழுவிக் கொள்ள
நஞ்சீயர் வந்த பின்பும் ஆண்டான் இருந்து இருக்க வேண்டும்
பூர்வாஸ்ரமத்தில் பார்த்து இருக்கலாமே
அத்வைதீயாக இருந்த போதே பார்த்து இருக்கலாம்
எதிரிட்டு கிட்டுகி அன்றி
நண்ணி முறையாக கிட்டப் பெற்றேன்
முழுக்க அனுபவிக்கப் பெற்றேன்
முதலா தன்னுலகம் புக்கதீரா
யார் எனக்கு நிகர்
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் எனக்கு நாயகர் மறந்தார் போலே
யார் நாயகர் என்கிறார்
அவர் பிறராக நினையார் இ றே
அந்த கோஷ்டியில் சேர்த்தார் இவர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 23, 2013

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?

பொ-ரை :- ஏழ்கடலும் ஏழ்மலையும் உலகு ஏழும் ஒக்கக் கழியச் செலுத்தி, முடியத் தேரைக் கொண்டு சென்ற ஆச்சரியமும் முதலான மற்றும் பலவான ஆச்சரியமான செயல்களையுடைய, சக்கரம் சங்கு இவற்றை வலக்கையிலும் இடக்கையிலுமாகவுடைய மால் வண்ணனை வேறுபடும்படி செய்கிற பாசுரங்களைப் பாடுகின்ற நாக்கினையுடைய எனக்கு இந்த மண்ணின்மேல் ஒப்பாவார் உளரோ?

வி-கு :- மால்வண்ணன் – கரிய நிறத்தை யுடையவன். மலக்குதல் – கலங்கச் செய்தல்.

ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 1வைதிக புத்திரர்களைக் கொண்டு வந்து தருதல் முதலான வெற்றிச் செயல்களையுடைய சர்வேசுவரனை மலக்கும் நாவீறுடைய என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகுஎழும் கழியக் கடாய்-ஏழ்கடல் ஏழ்மலை உலகுஏழும் கலக்கக் கழியக் கடாய். கலக்க-ஒக்க: அதாவது, தேரை நடத்துகிறபோது நீரோடு மலையோடு தறையோடு வாசி அற ஒக்க நடத்தினபடி. அன்றிக்கே, கலக்க என்பதனைக் கடலுக்கு அடைமொழியாக்கி, கலங்குதலையுடைய கடல் என்று பொருள் கூறலுமாம். அங்ஙன மன்றிக்கே, ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழையும் கழிய நடத்துகிறபோது அதிர நடத்தி என்றுமாம். கலக்க-அதிர. உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் – காரியமான தேரினைக் காரணமான மூலப்பகுதியிலே நடத்துகிற இடத்தில் அழியாதபடி நடத்தின ஆச்சரியமும். உலக்க-முடிய. உட்பட மற்றும் பல-வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டுபோருகையும், போன செவ்வியிலே கொடுவந்து கொடுக்கையும், காலையில் செய்யவேண்டிய யாககாரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும். வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு – 2இவ்விடத்தைப் பட்டர்அருளிச்செய்யா நிற்கச்செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர், மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன, 1“சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார். ‘சோளேந்திர சிங்கன்’ என்பது, பெருமாளுடைய யானை. உளுக்காக்க
– இருக்கும்படி. என்றது சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து
கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.

2அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள். 3“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்” “அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார். மால்வண்ணனை – கறுத்த நிறத்தையுடைய சர்வேசுவரனை. மலக்கும் நாவுடையேன் – 4இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன்தான். 5இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலேயன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி. இம் மண்ணின்மிசை மாறு உளதோ – 6பரமபதத்தில் அநுபவம் வாய்புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர். இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.

அன்றிக்கே, ‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால், ‘இம் மண்ணின்மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

வைதிக புத்திரன்
பெரிய சரித்ரம்
அது இது உது
அது -மாதவன் புத்ரனை சாந்தீபன் -12 வருஷம் அடுத்து
பிறப்புகத்தே -நான்கு பிள்ளைகளை
மருமகன் சந்ததியை உயிர் மீட்டான்
மூன்றும் அது –
கடல் ஏழும் மலை ஏழும் உலகு ஏழும்
பூமி -உப்பு -சமுத்ரம் -கரும்பு பால் அமிர்தம்
மலை ஆணி அடித்தாப் போலே
தேரை கொண்டு சென்ற மற்றும் பல
மலக்கு நாவுடையேன்
ஒப்பு யார்
தேரை நடத்தும் பொழுது நீரோடு கடலோடு மலையோடு ஒக்க கடந்து
கலங்கிய கடலை கடந்து
சமுத்ரம் கலங்கும்படி அதிர நடத்தி
கார்யமான தேரை காரணமான மூல பிரக்ருதியில் அழியாமல் நடாத்தி
உலப்பு முடிவு இல்லாதபடி
வைதிக புத்ரர் கொண்டு வந்து கொடுத்து
பிராட்டிமார் சீராட்டி -இவன் திருக் கோலம் காண
உடலோடு கொண்டு கொடுத்தவன்
சன்மம் பல பல திருவாய்மொழி பார்த்தோம்
ந ச புன ஆவர்த்ததே
சாஸ்திரம் இவனுக்கு கட்டுப்பட்டதே
இவன் ஸ்வா தந்த்ரம் யாராலும் கேட்க முடியாதே

பரத்வ சின்னம்
வலக்கை திரு ஆழி இடக்கை பாஞ்ச சன்யம் ஏந்திக் கொண்டு
பட்டர் –
அவிக்ருதமான  வஸ்துவுக்கு –
எனது திருவாய்மொழி கேட்டு தெனா தெனா என்ன
வைக்கும்படி மலக்கு நா உடையேன் என்கிறார்
பட்டத்து யானை -சோழேந்திர சிங்கன் பெயர் -பெருமாள் உடைய யானைக்கு பெயர்
அங்குசம் கொண்டு பாகன் அடக்குவது போலே
உருக்காக்க -வசப்படுதுகிறேன்
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம் திவ்ய ஆயுதங்கள் கொண்டு
அவனையே ஆட வைக்கும்
மால் வண்ணன் கறுத்த நிறம்
அவனையே உருக்கி
கலங்கி சொல்வது போலே கேட்கும் பொழுதும் கலங்குகிறான்
வாய் புகு நீர் போலே பரமபதம்
அனுபவித்த பின்பு போகம் இல்லையே
நித்ய விபூதியில் இல்லை இவருக்கு ஒப்பு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 23, 2013

  நீணிலத்தொடு வான்வியப்ப நிறைபெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்டமாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?

பொ-ரை :- பெரிய உலகத்திலேயுள்ள மக்களோடு தெய்வலோகத்திலேயுள்ள தேவர்களும் கண்டு ஆச்சரியப்படும்படியாக, குறைவில்லாத பெரிய போரைச் செய்து வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களைத் துணித்ததும் முதலான மற்றும் பலவான, பிரமசாரியாய் நிலத்தை வாங்கின மாயனாகிய என்னப்பனுடைய ஆச்சரியம் பொருந்திய செயல்களையே காண்கின்ற நெஞ்சினையுடையேன்; ஆதலால், எனக்கு இனி என்ன கலக்கம் இருக்கின்றது?

வி-கு :- வியப்பப் போர்கள் செய்து துணித்ததும் என்க. மற்றும் பலவான மாயங்கள் என்க. மாணி – பிரமசாரி.

ஈடு :-
எட்டாம்பாட்டு. 3வாணனை வெற்றிகொண்டது முதலான கிருஷ்ணன் செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சினையுடைய எனக்கு ஒரு கலக்கம் இல்லை என்கிறார்.

   நீள்நிலத்தொடு வான்வியப்ப – பூமியிலுள்ளாரோடு சுவர்க்கத்திலுள்ளாரோடு வாசிஅற ஆச்சரியப்பட. கண்டவற்றுக்கெல்லாம் ஆச்சரியப்படும் மனிதர்களோடு ஒக்க, ஒன்றற்கும் வேறுபட்டவராகாதே தந்தாமைப் போரப் பொலிய நினைத்திருக்கும் தேவர்களும் ஆச்சரியப்படும்படி. கும்பிடுவாரோடு கும்பீடு கொள்வாரோடு வாசிஅறும்படியாக என்றபடி. ‘வியப்ப’ என்று மேலே வருகையினாலே, ‘கட்டில்கள் கூப்பிடுகின்றன’ என்பது போன்று, ‘நிலம், வான்’ என்பன ஆகுபெயர்கள். நிறை பெரும் போர்கள் செய்து-குறைவற்ற மஹாயுத்தத்தைச் செய்து. அதாவது, ஈசுவர அபிமானிகளான சிவன் முதலாயினோர்களும் கெட்டு ஓடும்படியான போரைச் செய்து என்றபடி. வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் – 1சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி. 2‘இவன் கரபாதை ஆற்றமாட்டாமல் கண்டார்கால்களில் எல்லாம் குனிந்து திரியாநின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்துவிட்டான். 3‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கரபாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு அடைத்துவிட்டான். 4வாணன் வேறு தெய்வத்தை பஜனம் பண்ணுகையன்றோ, அவனுக்கு இங்ஙனம் கை பிழைபாடு வந்தது என்று நாட்டார் கைவந்தபடி செய்கைக்காகச்செய்தான். 1“ஈசுவரனை வணங்கும் பொருட்டு” என்றேயன்றோ சரீர சம்பத்தைக் கொடுத்தது. ஈசுவரன், கை வந்தபடி செய்யாதவர்களைக் கைமேலே தண்டிக்கை தக்கதே அன்றோ. சர்வேசுவரன் தன்னைப் பற்றுகைக்காக இவனோடே கைசெய்தன்றோ அடியிலே விட்டது. 2‘அதனை மதித்திலன், இவன் அறக் கை விஞ்சினான்’ என்று தண்டித்துவிட்டான். 3வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்றுவிட்டான். 4பகவானைப் பற்றுவதற்குக் கைம்முதல் இல்லாமை விட்டான் அன்றே. உட்பட மற்றும் பல – அவனுக்கும் 5பெருநிலை நின்றாரையும் முதுகுகாட்டும்படி செய்தபடி. 6“கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ” என்று க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.

பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.

மாணியாய் நிலம் கொண்ட மாயன் – பெறில் ஜீவிப்பானாய்ப் பெறாவிடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக்கொண்டு. 1இவர் அந்த அவதாரத்திலே கால்வாங்குகிறார் அல்லர்; கண்ணழிவற்ற அழகாலும், வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும், அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும், செய்யும் ஆனைத்தொழில்களாலும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார். நிலம் கொண்ட மாயன் என் அப்பன் – ‘திருஉலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்துகொண்டது தம்மை என்று இருக்கிறார். அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.

கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து”-(பெரிய திருவந். 28.) என்பது, ஈண்டு அநுசந்தேயம்

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – ‘இந்த விஷயத்தைக் காணப்பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ? அன்றிக்கே, 3வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும், ஈசுவரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும், ‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

பாண விஜயம் போன்ற
வான் உலகும் வியக்கும்படி
நினைக்கும் எனக்கு கலக்கம் ஒன்றும் இல்லையே
நெஞ்சாலே காண்கிறேன்
கண்டதுக்கும் ஆச்சர்யப்படும் மனுஷ்யர் உடன் ஒக்க ஒன்றுக்கும் விகிரதராய் -வானவரும் ஆச்சர்யம் படும்படி
கும்பிடுவாரும் கும்பிடு கொள்வாரும்
மஞ்சா குரோசக்தி போலே ஆகு பெயர்
-உலகம் உலகில் உள்ள மனுஷ்யர் -உயர்ந்தோர் மட்டும் என்ற அர்த்தம் இங்கு இல்லை
மகா யுத்தம் -பண்ணி  ருத்ராதிகளும் கெட்டு ஓடும்படி
நேர் செறிந்தான் –முக்கண் மூர்த்தி
கண்டீர் வாணன் திண் தோள் கொண்ட வன்றே
ஆழ்வார் பாசுரங்களில் பிள்ளையார் இல்லை
7 நூற்றாண்டு அப்புறம் தான் என்பர்
அமுதனார் கார்திகையானும் கரி –முகத்தானும் -மோடியும் -வெற்பும் முதுகிட்டு
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏற்றும் பூர்ணர் ராமானுசன்
ஆயிரம் தோள்களை துணித்து
வகுத்த விஷயம் அல்லாத -சேவித்த -பாகாத விஷயம் அனுவர்தித்த
கரைபாதி -தோள் தினவு கழித்து
கண்டார் ,காலில் உனிய
நின்றான் கை கழிய போய் ருத்ரனை ஆஸ்ரயிக்க
தேவதாந்தர பஜனம் செய்தது கை பிழைப்பாடு ஆனது
நாட்டார் கை வந்த படி
செய்கைக்கு ஈஸ்வரன் கை வந்த படி
சர்வேஸ்வரன் கை செய்து தன்னை
ஆச்ரயிக்க அரை கை விஞ்சி கையிலே பலன்
கை முதல் இல்லை
ருத்ரனை ஆச்ரயித்த ஒன்றுமே கை பட்டது
உன்னாலே நான் பட்டது அழ கைகள் வேண்டுமே

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ பின்பு தன உள்ளபடி அறிந்தான்
மாணி பிரமாச்சாரியார் -இரப்பில் தழும்பு
வாமன அவதாரத்தில் கால் வாங்குகிறார் அல்லர்
கண் அழிவற்ற அழகு
வரையாதே எல்லாரையும் தீண்டி
செய்யும் ஆனைத் தொழில்
ஆஸ்ரிதர் பஷ பாதம்
இவற்றால் இரண்டு அவதாரத்துக்கும் சாம்யம்
விளாம் பழம் விழுங்கி சாரம் உண்டு கொட்டை வெளியிலே உமிளுமாம் யானை தொழில்
சரீரம் குறி அழியாமல் இருக்க ஆத்மாவைக் கொண்டு
உலங்கு உண்ட விளம் கனி போலே ஆண்டாள்
ஆனைத் தொழில் -ஆச்சர்யம் உண்டே

ஆலிலை கண்ணன் இப்படி தான்
பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான்
அதுவும் இப்படி சாம்யம் உண்டே
உலகு அளந்து கொண்டவன் எனக்கு ஸ்வாமி -உபகரிக்க செய்தான்
முடியானே கரணங்கள்
நினைக்கும் நெஞ்சு -முன்பு
சொல்லி காணும் நெஞ்சு இங்கே
பிள்ளான் பணிக்கும்
கட்கண் உட் கண் -சாஷாத் கரித்தல்
கலக்கம் உண்டோ எனக்கு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 23, 2013

  மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.

பொ-ரை :- மனத்தில் துக்கத்தோடே தாழ்ந்த மனித வர்க்கத்தில் தனக்கு வேண்டிய உருவினைக்கொண்டு தான் அவதரித்து, தான் தனது சீற்றத்தினை முடிக்கும், புனத்துழாயினை முடியிலே தரித்த மாலை பொருந்திய மார்பினையுடையவனான என் அப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே நினைக்கின்ற மனத்தினையுடையேன்; இனி நீண்ட பெரிய உலகத்தில் எனக்கு ஒப்பாவார் யாவர்?

வி-கு :- அழுக்கு மானிடச் சாதியில் தனக்கு வேண்டுருக்கொண்டு தான் மனப்பரிப்போடு பிறந்து என்க. புனம் துழாய்மாலை முடிமார்பன் எனக் கூட்டலுமாம், சீற்றத்தினை முடிக்கும் என்னப்பன் என்க.

ஈடு :- ஏழாம்பாட்டு. 2தன்னை அடைந்த அடியார்களைப் பிரதிகூலர் நலியுமதனைப் பொறுக்கமாட்டாமல் அவதரித்து அவர்களை அழியச்செய்யும் செயல்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியின் நிகர் இல்லை என்கிறார்.

மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து – 1நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன்தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்; 2குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே

  கூவத்தில் வீழும் குழவி யுடன்குதித்தவ்
வாபத்தை நீக்குமந்த அன்னைபோல் – பாபத்தால்
யான்பிறப்ப னேலுமினி எந்தை எதிராசன்
தான்பிறக்கும் என்னையுய்ப்ப தா.-என்பது, ஆர்த்திப் பிரபந்தம். 9.

, 3‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’ என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடேவந்து பிறந்தவனாதலின் ‘மனப் பரிப்போடு பிறந்து’ என்கிறது. குற்றங்களுக்கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான்பிறந்து’ என்கிறது. அன்றிக்கே, 4பிறப்பதற்குக் கர்மம்செய்து வைத்தவரும்கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர் கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல். இதற்கு அடி பரம கிருபை அன்றோ. தனக்கு வேண்டு உருக்கொண்டு – 5பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்ய திருமேனியையுடையனாய்க்கொண்டு. அன்றிக்கே, அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! என்னுதல்.இரண்டு தோள்களுடையவனா? நான்குதோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.த்விபுஜோ வா சதுர்புஜோவா” என்பது.

2ஈசுவரத் தன்மையைக் கைகழிய விட்ட பின்பு அன்றோ இவனுக்கு இங்கு இடம் கொடுத்தது. இவைதாம் அடியார்களுக்காக ஆகையாலே தனக்கே விரும்பத் தக்கனவாயிருக்கும். அன்றிக்கே, இச்சையால் எடுத்தவை என்றுமாம்.நாற்றோளன் இருதோளன் ஆகைக்குக் காரணம் என்? என்ன,
‘சம்சாரத்தினுடைய கொடுமை’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஈசுவரத்தன்மை’ என்று தொடங்கி. ‘கை கழியவிட்ட’ என்பதற்கு, கைகளை
கழியவிட்ட என்றும். கை கழியும்படி விட்ட என்றும் பொருள். இதற்கு
நோக்கு, “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர்புஜம்-எல்லாருக்கும்
அந்தராத்மாவாக இருப்பவனே! நான்கு தோள்களோடு கூடின இந்த
உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.

தான் தன சீற்றத்தினை முடிக்கும் – 3அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கையன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை; தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன்சினம் தீருமாறுபோலே. 4“இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து, பிறகு மஹாபராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது, “ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா ப்லவகசார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.

ஸ்ரீ ராமாயணம். புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம்செய்து ஒப்பித்து, திருமேனியின் பரிசத்தாலே தன்நிலத்தில் நின்றாற்போலே செவ்விபெற்று இருக்கின்ற திருத்துழாய் மாலையினைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையவனாய், அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக்கொண்டவன். தன்மாயங்களே நினைக்கும்நெஞ்சுடையேன்-1“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது” என்று“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”-  என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.

பொதுவாகையன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சையுடையேன். எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பூமி பரப்பையுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ? 2பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப்போலே கவிபாடி அடிமைசெய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவிபாடி அடிமை செய்யப்பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.

பிரதி கூலர் -ஆஸ்ரிதர் விரோதிகள்
அழுக்கு மானிட சாதியில் தான் -பிறந்து துக்கத்துடன் பிறந்து
தனக்கு வேண்டிய உருக் கொண்டு
சீற்றம் காட்டி
விரோதிகளை முடித்து துழாய் மார்பன்
நினைக்கும் எனக்கு யார் நிகர்
அழுக்கு உடம்பு நாட்டாருக்கு அழிக்க தான் பிறந்து -அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தானே -பிறக்க வேண்டாதவன் பிறந்து
பிரஜை கிணற்றில் விழுந்தால் தாய் நெஞ்சில் துக்கத்துடன் குதித்து எடுப்பது போலே
உதவ பெற்றிலோம் திரு உள்ளத்தில் தளர்த்தி உடன் வந்து பிறக்க
அநன்யார்ஹ சேஷத்வம் உடைய -வஸ்து தேக சம்பந்த்தாலே பகுமுகமாய் நோவு படுகிறதே
ப்ரஹ்மாதிகளும் அருவருக்கும் மனித உருவில்
தான் -ஹேய பரத்திய நீகன் கர்ப்பவாசம் கொண்டு
அகர்ம வச்யன் தான் பிறந்து –

அப்ராக்கிரத  திவ்ய சமஸ்தானத்தை
ஒரு படியில் இன்றி
இரண்டு திருக் கைகள் நான்கு திருக்கை கொண்டு
ஈச்வரத்தை கை கழிய விட்டு இ றே இவனுக்கு இங்கு
இடம் ஆஸ்ரித அபிமத அர்த்தமாக
தானே வேண்டி கொண்டு எடுத்த உரு என்னவுமாம் தன்னுடைய சினம் தீர்க்க
பிரஜையை -அடித்த
தாய் அந்த விரோதி தீர்த்து தனது சினம் தீர்க்க
என் கையாலே அறைந்தால் தான் எனக்கு திருப்தி
யானைகாகி முதலை மேல் சீறி வந்தார் நீர் புழு
பிரஜையை நலிந்தவரை தான் நலிந்து தனது சினம் தீருமா போலே
தான் பிறந்து
தனக்கு வேண்டிய உரு கொண்டு
தான் தன் சீற்றம் முடிக்கும்
கிருஷ்ண அவதாரம் மனசில் கொண்டு அருளிய பாசுரம்
கோபச்ய வசதீ -திருவடி மேலே பட்ட அம்பால் வந்த சீற்றம்
ஜித க்ரோத -இப்பொழுது கோப வசம் ஆனாரே
ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை -நஞ்சீயர்
துழாய் -மாலை விரோதி நிரசனதுக்கு பின் -தீர்த்தமாடி ஒப்பித்து
திருமேனியின் ஸ்பர்சத்தால் -புனத் துழாய் -ஆனதே
தன்னிலம் போலே செவ்வி பெற்று
ஒப்பனை யாலே என்னை எழுதிக் கொண்டான்
நினைக்கும் நெஞ்சை பந்தம் மோஷம் இரண்டுக்கும் மனசே காரணம்
மோஷத்துக்கே ஹேதுவான எனது நெஞ்சு
எனக்கு ஒப்பார் உண்டோ
பரம பதத்தில் -பூமியிலும் இல்லை
சம்சாரத்தில் இருந்து நினைத்து கவி பாடும் எனக்கு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 23, 2013

  இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.

பொ-ரை :- பகைமை கொண்ட பகாசுரன் என்னும் பறவையின் வாயினைப் பிளந்ததும், திமில்களையுடைய இடபங்கள் ஏழனையும் அழித்ததும், உயர்ந்து ஓங்கித் தழைத்த குருந்த மரத்தினை முறித்ததும் முதலாக வேறும் இத்தன்மையவான, அகன்ற பூலோகத்தை அளந்த மாயப் பிரானாகிய என்னப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே பகலும் இரவும் துதிக்கப் பெற்றேன்; எனக்கு மனத்தின்கண் துக்கம் என்ன இருக்கிறது?

வி-கு :- இகல்-வலிமையுமாம். மற்றும் பலவாகிய மாயங்கள் என்க. பரிவு – பரிப்பு – துக்கம்.

ஈடு :- ஆறாம் பாட்டு 1கிருஷ்ணனுடைய பிரதிகூலர்களின் நிரசன பரம்பரையை அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு மனோதுக்கம் இல்லை என்கிறார்.

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் – 2கேவலம் புள் மாத்திரமாய் வந்து தோற்றுகை அன்றிக்கே போரினை மேற்கொண்டு எதிரிட்ட புள்ளினை அழித்ததும். அசுராவேசத்தோடு வரச்செய்தேயும் ‘பாதிக்க வருகிறது’ –பெரியாழ்வார் திருமொழி, 2. 5 : 4.
-என்று பிறர் அஞ்சாத வடிவு கொண்டு வந்தபடி. பள்ளத்திலே மேயும் பறவை உருக்கொண்டு வந்தது. இமில் ஏறுகள் செற்றதுவும், திமிலையுடைத்தான இடபங்களைச் செற்றதுவும். உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் – ஓக்கத்தையுடைத்தாய்ச் சோலைசெய்து நின்ற குருந்தமரத்தை முறித்ததும். 3‘இளைஞராயிருப்பார்க்குக் கவர்ச்சிகரமாயிருக்கும்’ என்று தழைத்து நின்றது;இனி, இதனை முறித்துக் காரியம் கொள்ளுவோம் என்று பொடிபடுத்தினான். உட்பட மற்றும் பல – இப் புடையிலே பகைவர்களை அழித்தல் பலவே அன்றோ. அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – பரப்பையுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே. பகல் இராப்பரவப் பெற்றேன் – 1நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும் இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு, இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ? பரிவு – துக்கம். அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.

இகல் கொள் புள்ளை -பகாசுர வதம்
உட்பல மற்றும்பல செய்தவன் வையம் அளந்த
மாயன் பகல் இரா பரவப் பெற்றேன்
எனக்கு என்ன துக்கம்
இகல் யுத்தம் -முகமாக எதிரிட்ட புள்ளை பிளந்து
அசுர ஆவேசத்தில் வந்தும் ஹிம்சை பண்ண வந்தது போல் அறியாமல் கொக்கு வடிவம்
கொண்டு
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு –
பள்ளம் ஜலம் மீன் அதை உண்ண வந்தது -என்று கள்ள அசுரர்
பொசுக்கென் வாயைக் பிளந்து
இமில் -ககுஸ்து
குருந்தை முறித்ததும்
மற்றும் பல பிரதிகூல நிரசயனங்கள் கன்று விளம் காய்
திர்யக் -ஸ்தாவரங்கள் கைங்கர்யத்துக்கு நித்யர் கொள்ளும் உரு
அசுரர் அதே திர்யக் ஸ்தாவரம் உருக் கொண்டு -இங்கு
பாப ப்ராதுல்யம் -அடி அங்கு இச்சை அடி
அகன்ற வையம் அளந்த மாயன்
பூர்த்தியாக கிருஷ்ண அவதாரம்
வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யம் உண்டே -இருவருக்கும்
இருவரும் குழைந்தை
உருவம் வருக வருக இங்கே வாமன நம்பி
ஓங்கி உலகு அளந்த உத்தமன்
ஆச்சர்ய செஷ்டிதங்களை பரவா பெற்றேன்
போகம் அனுபவிக்க இரவு பகலாக நாட்டார் அபிமத விஷயம் புஜிக்க
இவ்விஷயம் அனுபவிக்க எனக்கு -துக்கம் இன்றி இரவும் பகலும்
பரிப்பு -பரிவு -துக்கம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.