Archive for July, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 22, 2013

வேண்டித்தேவர் இரக்கவந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டுஅன்று அன்னை புலம்பப் போய்அங்கொர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டுநான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?

பொ-ரை :- தேவர்கள் வேண்டி இரக்க வந்து பிறந்ததும், அற்றைய நாளில் செறிந்த இருட்டிலே தாயாகிய தேவகிப்பிராட்டியானவள் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு புலம்ப, அந்நிலையிலே சென்று ஒப்பற்றதான ஆயர்பாடியிலே புக்கதும், கம்சனுடைய ஆட்கள் காணாதபடி வளர்ந்து கம்சன் இறக்கும்படியாக வஞ்சனை செய்ததுமான செயல்களை இப்போது இருந்து சொல்லப்பெற்றேன்; எனக்கு என்ன விரோதம் உளது?

வி-கு :- கஞ்சனை – கம்சனானவன். மயக்கமாகக்கொள்ளாது, நேரே பொருள் கோடலுமாம். துஞ்சுதல் – இறத்தல்.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1அவதரித்து, கம்சன் அறியாதபடி வளர்ந்து கம்சனை மாய்த்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஓர் எதிர் இல்லை என்கிறார்.

தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் – 2‘எங்கள் அளவு அறியாதே ஒருவனுக்கு வரம் கொடுத்து அவனை உயரப் பார்த்தோம்: எங்களுக்குக் குடி இருப்பு அரிதாயிற்று’ என்று தேவசாதி கப்படம் கட்டிக்கொண்டு செல்ல3 “தந்தையாக அடையவேண்டும் என்று விரும்பினார்” என்கிறபடியே,தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.

தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும், அன்றிக்கே, 4“என்னுடைய மாயையாலே” –ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.

என்னும் படி அன்றோ என்னுதல். என்றது, என்னுடைய இச்சையாலே என்றபடி. 5‘மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு. 6இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கையன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது. 7தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்கமாட்டானேயன்றோ. பிறந்ததும் வீங்கு இருள்வாய் – 1“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ.

“மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணுபுரா. 5. 3 : 7.

2‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது, இருளாலே அன்றோ நாம் பிழைத்தது. இனி, இந்த இருளைச் சரணம்புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளையுறங்காவில்லிதாசர் பணிப்பாராம். 3“ஊர் எல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ. 4வீங்கு இருள்வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப்போய் என்று கூட்டுக. 5“மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்” –பெரியாழ்வார்
திருமொழி, 5. 3 : 1.
-என்கிறபடியே, பெற்றுப் பெற்று இழந்தவள் ஆகையாலே, இவனையும் இழக்கிறோமோ! என்று விரகபயத்தாலே, காலைப் பூண்டு கிடந்து கூப்பிடப்போய். 6பிள்ளை பக்கல் அன்பினாலே இவள் கூப்பிட, இவன் முலைச்சுவடு அறியாமையாலே போனபடி. வீங்கு இருள் – வளர்கிற இருள்.
அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் – 1 அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். 2‘குடிவாய் உடன்பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லையாகில் உழக்கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள். காண்டல் இன்றி வளர்ந்து – கம்சனும் அவன் வரக்காட்டின தீயோர் கூட்டமும் காணாதபடி வளரப்பெறுவதே! கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்-ஸ்ரீ நாரத பகவான் அறிவித்தபின்பு ஒருபோது தாழாதே வந்து, அவன்தான் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடே போக்கினதும். கம்சன் முடியும்படியாக வஞ்சனை செய்தது, 3இராமாவதாரம் போலே ‘செவ்வைப்பூசல் அல்லது அறியேன்’ என்று இராமை அன்றோ. ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் –“அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

“நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.

ஊராண்மை, உபகாரியாந்தன்மை: அஃதாவது, இலங்கையர் வேந்தன்
போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது
நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற் செல்லாது ‘இன்றுபோய்
நாளை நின் தானையோடு வா’ என விட்டாற் போல்வது” என்பது,
பரிமேலழகருரை. திருக்குறள், 773.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன். ஈண்டு – இப்போது. எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்டபின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ? இகல் – பகை. அன்றிக்கே, கம்சனை முடித்தபடியை இன்று இருந்து அநுபவிக்கப்பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை என்கிறாராகவுமாம்.

அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

“நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல்உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.

தாழ்வே இல்லை
வேண்டி தேவர் இரக்க வந்து –
தேவர் இரக்க -வந்து பிறந்தான்
வேண்டி இரக்க இரண்டு பதங்கள்
தனக்கே ஆசை இருந்தது -தானாக வேண்டி
எங்கள் அளவு அறியாமல் ஒருவனுக்கு வரம் கொடுத்து -குடி இருப்பு பறித்து –
கப்படம் கட்டிக் கொண்டு யாசிக்க
பிதரம் யார் என்று தேர்ந்து எடுத்து
ஆத்ம மாயயா -தோன்றி –
மாயா -ஆச்சர்யம் ஞானம் பர்யாய பதம் -இச்சையால் சங்கல்ப ஞானத்தால்
இரக்கிரவர்கள் தாழ்வும் பாராமல் வந்து தோன்றி
வீங்கு இருள்வாய் மத்திய ராத்ரியில் -ஜாயமானே ஜனார்தனே
பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
இருளாலே பிழைத்தோம் பணிப்பாராம்
கம்சன்-சிறைக் கூடம் விழுக்காடு அறியாமல் இவனும் அகப்பட
இருட்டு நமக்கு காத்து கொடுத்ததே
இருளைசரணம் புகுவாரம் பரிவின் காரணம்
ஊரெல்லாம் துஞ்சி  இருள் இவருக்கு உத்தேச்யம் இப்பொழுது
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
அஞ்சினார் புகல் இடம் உண்டே
கம்சன் பாதகன் என்று அறியாதவர்கள்
செற்றார் திரள அழிய சென்று செறு செய்யும்
தயிரும் பாலும் கப்பம் கொடுத்து கோ சமிர்த்தி உண்டே அங்கு
குடிவாய் உடன் பட்டு இருந்தால் இருக்கட்டும்
மாடு மேய்க்கும் கோலால் கொன்று
கம்சன் படை எடுத்து போக முடியாத வீரம் உண்டே  இங்கே
ஓர் ஒப்பற்ற ஆய்க் குலம்
காண்டல் இன்றி வளர்ந்து
கம்சனும் பாதகமும் காணாமல் வளர்ந்து
ஒருத்தி மகனாய் ஓர் இரவில் வீங்கு இருளில்
காஞ்சனை துஞ்ச வஞ்சனை அவன் நினைவை அவன் இடமே செய்து அருளி

முடியும்படி வஞ்சனை செய்து ராமன் போலே செவ்வைப் பூசல் இன்றி
ஈண்டு அலட்ரப் பெற்றேன்
தேவகி சமகாலத்தில் பயந்து இருக்க
இப்பொழுது நான் அலற்ற  பெற்றேன் பயம் கெ ட்டு இருந்து
இகல் சத்ரு
அவன் சத்ருக்கள் போன பின்பு
அவனும் நாராயணன் சத்ருக்கள் இல்லை
பகவத் விமுகர் ஆழ்வாருக்கு சத்ரு
இனி இகல் துக்கும் இல்லை என்கிறார் ஆகவுமாம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 22, 2013

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?

பொ-ரை :- யசோதைப் பிராட்டி நோவும்படி உரலோடு இழுத்துக் கட்ட அச்சத்தால் அழுததும், வஞ்சனை பொருந்திய பூதனையானவள் இறக்கும்படி பாலினை உண்டதும், ஊர்ந்து வந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்ததுமான, அழகிய தேவப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைந்து இச்செயல்களோடே மனம் பொருந்தும்படி காலங்கள் கூடப் பெற்றேன்; இனி, எனக்கு வேண்டுவது என்?

வி-கு :- நோவ ஆர்க்க இரங்கிற்று என்க. பெண்ணை : வேற்றுமை மயக்கம். பெண்ணானவள் என்பது பொருள். சாடியதுமான செய்கை என்க.

ஈடு :- நான்காம் பாட்டு. 3தன்னை அடைந்தவர்கட்குத் தான் பவ்யனாயிருக்கும் இருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை அநுபவிக்கப்பெற்ற எனக்கு அடையத்தக்கது ஒன்று உண்டோ என்கிறார்.

ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் – 4சீயர், இத் திருப்பாசுரத்தை இயல் அருளிச்செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச்செய்யும் அழகு காணும். ‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே.’ 1ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே சிநேகமுள்ள அளவும் இடைநிற்கும் அன்றோ கோபமும். தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்; வாய்விட்டு அழமாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது. 2“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை” என்கிறபடியே, ஒரு மத்தயானையைத் தறியோடே சேர்த்தாற்போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை. ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக்கொண்டு போகமாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி. 3“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ. உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் – உரலோடே கட்ட இரங்கிற்றும். 4துரியோதனாதியர்களுடைய கட்டாகில் அன்றோஅறுக்க விரகு சிந்திப்பது. இரங்கிற்றும் – மானசபீடையை அநுசந்தித்தபடி. இரக்கம் – ஈடுபாடு.

வஞ்சப் பெண்ணைச் சாவப் பால் உண்டதும் – 1கெட்டேன்! பேய்த்தாய்பக்கலிலும் அங்ஙன் அருந்தானாகில் என்படக் கடவது தான்? 2சூர்ப்பணகியைப் போலே அங்கத்தைக் குறைத்துப் பூசலை விளைப்பியாதே முடித்துவிட்டானாதலின் ‘சாவ’ என்கிறார். 3யசோதைப்பிராட்டியின் முலை உண்ணும்போதும் தான் உயிர்பெற உண்ணுமாறுபோலே காணும், இவள் முலை உண்கிறபோதும் தான் உயிர்பெற முலையுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார். பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் அன்றோ-பெரிய திரு. 1, 3 : 1.-; 4இவன் பிள்ளையாயே முலை உண்டானத்தனை;“புகர்கொள் வானவர்கள் புகலிடந் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை”
(திருவாய். 8. 4. 8.)என்பது, ஈண்டு அநுசந்தேயம்.– பொருளின் இயல்பாலே பிரதிகூலர் முடிந்ததித்தனையன்றோ. ஊர் சகடம் இறச்சாடியதும் – 5தூண்டுகின்றவர்கள் வேண்டாதபடி தானே வந்து நலிந்தபடி. ஒரு மனிதவடிவு கொண்டு வந்து நலியிலன்றோ தடுக்கலாவது. இத்தால் சொல்லிற்றாயிற்று, வேறு துணை வேண்டாமலே பாதகமாகும் தன்மையில் உறைப்புச் சொன்னபடி. இறச்சாடியதும் – 6“தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப் பிளந்து” -திருவாய். 6. 9 : 4.-என்று சொல்லக்கடவதன்றோ. 1வருத்தமில்லாமல் திருவடிகளை நிமிர்க்கச் செய்தேயும், ஓர் இளைஞனுடைய செயலாகையாலே போரப் பொலியச் சொல்லுகிறார். “பேர்ந்தோர் சாடிறச், செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்”-‘, திருவாய். 5. 10 : 3.– என்னக்கடவதன்றோ. தேவக் கோலப் பிரான் – 2மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே. அதிபால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனைபோலே இருக்கிறபடி. தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் – அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் 3உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க்கொண்டு காலம் போக்கப்பெற்றேன். நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன். எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத்தக்கது ஒன்று இல்லை என்கிறார்.

ஆஸ்ரித பவ்யனான இருப்பில் எதிரிகளை அழித்தான்
நோவ -கண்ணன் நோவும்படி கட்ட
இரங்கிற்றும்
உரவிடை ஆப்புண்ட சரித்ரம்
வஞ்சனை சாலப் பால் உண்டதும்
நஞ்சீயர்  -இயல் அருளப் புக்கால் நோவ -ஆழ்வார் தமது திரு மேனியில் கயிறு உறுத்தும்படி
வயிற்றை  எக்கச் சொல்லி கட்டினாளே -நோவ
சினேக கார்யமான கோபத்தால் -வெண்ணெய் இவன் உடம்புக்கு ஆகாதே
தாய் எடுத்த சிறு கோலுக்கு விம்மி அழுதான்
அழாமல் இருக்க –
முழுதும் வெண்ணெய் அளந்து -கை தோள் வரை போனால் நிறைய வரும்
தொட்டும் -நிறைய நேரம் வைத்து சாப்பிட தொட்டு உண்ணும்
தாமரைக் கை
எழில் கொள் தாம்பு கொண்டு
அடித்தாலும் நோவாத வைக்கோல் போலே
தாம்பு -கெட்டியாக முறுக்கேறி இருக்க எருதுகள் கட்ட
பின்பு பசுக்கள் பழைய
பின்பு கன்று குட்டிக்கு
தயிர் கடைய
அப்புறம் இவனை கட்ட
எள்கிய  நிலை
வெண்ணெய் முகம் தடவ -கையில் இருந்தால் அறிவாள் என்று
கையிலும் வாயிலும்
முகம் தடவினால் எனக்கே தெரியாதே அவளுக்கு தெரியுமா பிள்ளைத்தனம்
அழுகையும்
மிரட்ட புக்க வாறே
பீரிட்டு நெளிக்க
தொழுகையும்
அஞ்சலி கொண்டு மற்றவர் கார்யம் செய்வதை உணர்ந்து
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
வாய் விட்டு அழ மாட்டாமல் இருப்பதால் ஆழ்வார் அலட்ருகிறார்
விம்மி அழுதான்
உறியார்ந்த -பெரிய திரு மொழி -மத்த கஜம் தறியிலே சேர்த்தாப் போலே
அபலை கட்டிய கயிற்றை அறுக்க மாட்டாதே
சக்தி இருந்தால் போ என்றாளாம்
கட்ட முடியாமல் தவித்து இருந்தாள்
இத்து போன தாம்பு கயிறு சொல்லாலே கட்டினாள்
அப்புறம் போனால் சௌலப்யம் நீங்கி அவதார பிரயோஜனம் போகுமே
துரி யோதனன் பந்தம் அறுக்கலாம்
மல்லர் கட்டிய கயிற்றை அறுத்து போனவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்க்கு அறிய வித்தகன்
சாலப் பால் உண்டதும் -கெட்டேன் பேய் தாய் இடம் அங்கனே இல்லாமல் இருந்தானே
சாவும் படி
அங்க ஹானி உடன் விடாமல் செய்து –
மாற்றாரை மற்று அழிக்க வல்லன் கண்ணன்
அக்னி விரோதி சேஷம் வைக்க கூடாது
உயிர் பெறுவதற்காக பால் உண்டான்
உயிரை வற்ற வாங்கி உண்டான்
ஆனந்தம் வேகமாக உறிஞ்சி உயிர் கூட வந்தது
பிள்ளையாய் உயிர் உண்டான்
வஸ்து ஸ்வாபம் அவள் முடிந்தாள்
சகடம் சாடியது
தானே வந்து –
மனுஷ்யர் ரூபம் இன்றி தானே ஊர்ந்து வர
சகாயாந்தர நிரபேஷ்யம் -விரோதி
இற்று போகும்படி சாடி
காலை பாலுக்கு அழுகிறவன் போலே நிமிர்க்க
செய்த நின்சிறுச் சேவகமும்
அதி பால்ய செயல் -அப்ராப்த செயலுக்கு ஈடு
மாய கோலப் பிரான் ஆச்சர்ய அழகிய -உபகரித்தவன்
அவன் செஷ்டிதங்கள் அனுசந்தித்து
காலம் போக பெற்றேன்
நெஞ்சு நெகிழ்ந்தாலும் அனுபவிக்கப் பெற்றேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 22, 2013

நிகரில் மல்லரைச்செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?

பொ-ரை :- ஒப்பு இல்லாத மல்லர்களைக் கொன்றதும், பசுக்களை மேய்த்ததும், நீண்ட நெடிய கையையுடைய மலைபோன்ற பெரிய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றதும், இவற்றைப் போன்றவையும் பிற செயல்களுமான, பேரொளிப்பிழம்பின் மயமான திருமேனியையுடைய கண்ணபிரானது செயல்களை நினைந்து, புலம்பி என்றும் அநுபவிக்கும்படியாக நாள்கள் கழியப்பெற்றேன்; யான் இனி எதற்கு வருந்தவேண்டும்?

வி-கு :- போல்வனவும் பிறவுமான செய்கை என்க. நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் என்க. வைகப்பெற்றேன் – கழியப் பெற்றேன்.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 2கிருஷ்ணனுடைய செயல்களையே அநுபவித்துக்கொண்டு காலம் போக்கப்பெற்ற எனக்கு ‘இன்னது பெற்றிலேன்’ என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார்.

நிகர் இல் மல்லரைச் செற்றதும் – மிடுக்குக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கும் மல்லரைச் செற்றதும். 3பால் வெண்ணெய் இவற்றை உண்கையாலே மிருதுத் தன்மையராய் இருப்பார் இரண்டு பிள்ளைகள் அல்லரோ; மாமிச பக்ஷணங்களாலும் சஸ்திர அஸ்திர சிக்ஷைகளாலும் மலைகள்போலே திண்ணியவான தோள்களையுடைய மல்லரைப் பொடிபடுத்தினார்கள்; 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே இங்ஙனே வாய்த்துக்கொண்டு நிற்கக்கண்ட தித்தனைமானத்து வண்டல் உழ ஓர் எழுத்தின்
வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.

. 2இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ. 3“ஒவ்வாத போர் என்று கூறினர்” – “ந ஸமம் யுத்தம் இத்யாஹு:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 103 : 6.

என்கிறபடியே எல்லாரும் அஞ்சும்படி அன்றோ அற்றைச் செயல். 4‘ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை’ பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.- தாமாகவே வந்து மேல்விழுந்தால் அன்றோ ‘முடியாது’ என்று வாங்கலாவது? கம்சனுக்குப் பரதந்திரர்களாய் வருகையாலே இங்குத் தோற்றார்களாகில் அவன் அங்கே தோள்களைக் கழிக்குமாயிற்று; ஆனபின்பு, ‘கோழைகளாய்க் கொலையுண்பதில் புகழோடே முடிய அமையும்’ என்று மேலிட்டார்கள். ‘சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன்’5கூனி சாத்திவிட்ட சாந்து குறியழியாமலே காணும் அவர்களோடு போர்த் தொழில் செய்தது. 6மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச்செய்தே, சாத்தின சாந்து குறிஅழிந்தது இல்லை காணும். 1கூனி சாத்திவிட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ. இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ. 2இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள். இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே. ஏன்று எதிர்ந்து வருகையாவது, பொரக்கடவோம் என்று நெஞ்சிலே துணிந்து வருகை.

நிரை மேய்த்ததும் – முதற் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும். இரண்டாம் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும்: க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்; ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான். 3அன்றிக்கே, பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருதபோதும் உள்ளது என்னலுமாம். நீள் நெடும் கைச் சிகரம் மா களிறு அட்டதும் – 4மல்லர்க்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாது கண்டீர் இதற்கு. தூரப்போய்த் தப்ப ஒண்ணாதபடி கையாலே வளைத்துக் கொள்ளவற்றாயிருத்தலின் ‘நீள் நெடும்கை’ என்கிறது. ‘நெடுங்கை’ என்னாநிற்கச் செய்தே ‘நீள் நெடுங்கை’ என்கிறதன்றோ, அதன் பெருமை இருக்கிறபடி. ஒரு கை தான் வேண்டுமோ? இது தன்னைக் காணவே அமையுமாதலின் ‘சிகர மா களிறு’ என்கிறது. 1“ஆனை மா மலை” –8. 4 : 1.-என்னக் கடவதன்றோ. மலைச் சிகரம் போலே யாயிற்றுப் பெருத்து இருக்கிறபடி. அட்டதும் – முடித்ததும். இவை போல்வனவும் பிறவும் – இவை தொடக்கமான கேசியைக் கொன்ற செயல் முதலானவைகளும். புகர் கொள் சோதி – குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளிபெற்ற தேஜஸ்ஸு. பிரான் – உபகாரகன். 2“வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்” “ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம்அத்யருணேக்ஷணம்
கஜயுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54

என்னும்படி இருக்குமன்றோ. யானையோடே பொருதாலும் இங்ஙனேயோ வேர்ப்பது? முலையாகிற மலையோடு பொருததோடு யானையாகிற மலையோடு பொருததோடு வாசி இல்லை காணும் இவனுக்கு.

தன் செய்கை நினைந்து புலம்பி – உபகாரம் செய்தலையே இயல்பாகவுடையவனுடைய செயல்களை நினைத்து, அது உள்ளடங்காமை புலம்பி. என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் – நாடோறும் அநுபவித்துக்கொண்டு, வைகலானது வைகப்பெற்றேன்-வைகல் வைகப்பெற்றேன்-காலமானது கழியப்பெற்றேன். 3வைகல்-கழிதல். அன்றிக்கே, அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப்பெற்றேன் என்றுமாம். அப்போது, வைகுதலாவது – நெடுகுகை. எனக்கு என் இனி நோவதுவே – ‘காலம் நெடுகுவதுகுறுகுவது ஆகாத இடந்தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தியுண்டோ எனக்கு என்கிறார். 1அன்றிக்கே, அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல். 2இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ. உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

கிருஷ்ண செஷ்டிதம் அனுபவித்து காலம் போக்க இனி எனக்கு நோவு ஒன்றும் இல்லையே
மிடுக்குக்கு சதுர்சம் இல்லாத மல்லரை
திரு மேனி -மிருத ஸ்வபாவம்
பசுக்கள் -கவ்ய சேவை பண்ணி –
ஆகார சுத்தி –
இனிப்பு -சாத்விகம்
காரம் ராஜசம்
கசப்பு புளிப்பு தாமசம்
கோபம் எதற்கு உப்பு புளி சாப்பிடுகிறேன்
தொட்டி பிரசாதம் கல் சட்டியில் மணவாள மா முனிகள் –
கீரை இருந்ததாம் ஒரு நாள் நினைவு கொஞ்சம் குறைய
நாய் எலும்பு கீழே இருந்ததாம்
அத்தை விட்டாராம்
அபத்திய பஷணங்கள்-உண்டு  -சஸ்திரம் கொண்டு அடி கொண்ட சரீரம் இவர்களுக்கு
அஸ்தரம் மந்த்ரங்கள் உடன் கூடிய அம்பு
திண்ணிய தோளை உடைய மல்லர்
மல்லாண்ட திண் தோள் -வெண்ணெய் உண்டு -வஜ்ரம் சரீரம் இவர்களுக்கு
புழு குறித்தது எழுத்து ஆம் போலே –
ஏவிற்று செய்வான் -கம்சன் ஏவப்பட்ட -ஸ்வ தந்த்ரராய் வந்து மேலிட்டால் ஓடலாம்
கம்சனால் ஏவப்பட்ட கார்யம் -இங்கு தோற்றால் அங்கு தோள்கள் போகுமே –
பெரியாழ்வார் திருமொழி
எதிர்ந்து வந்த மல்லரை சாவ தகர்த்த
சாந்து அணி தோள் சதுரன் சாமர்த்திய சாலி
கூனி சாத்தின சாந்து குறி அழியாமல் -காணும் அவர்கள் உடன் வ்யாபரித்தது
அவ்வளவு சுலபமாக யுத்தம்
மதுரை பெண்கள் கண்களால் பார்த்து இலச்சினை பட
வேல் விழி-  சேல் கயல் –
மல்லர்களால் அழிக்கப் பட்டாலும் இலச்சினை போனால் பெண்கள் வருந்துவார்கள்
அழித்து போனால் ஆகில் பெண்கள் கோஷ்டிக்கு ஆகாதவான் ஆவான்
ஏன்று எதிர்ந்து வந்தார்கள்
நிரை மேய்ந்ததும் -இரண்டாம் பிறவி செயல் இடைக்குலம் -நப்பின்னை திருக் கல்யாணம்
முதல் பிறவி -செயல் மல்லர்களை -ஷத்ரிய குல செயல்
இரண்டு தாயார் -இரண்டு மாதா
ருக்மிணி நப்பின்னை இருவரையும் கொள்ள

ஓன்று போன்ற செயல் இரண்டும் சரமம் இன்றி
மல்லர் இடம் தப்பினாலும் தப்ப ஒண்ணாத குவலயா பீடம்
நெடும் கை -நீள் நெடும் கை -ராஜ லஷணம் -ஆஜானு பாஹு
அட்டதும்
இவை தொடக்கமான கேசி போல்வன
புகர் கொள் சோதி விரோதி நிரசனம் செய்யப் பெற்றோம் என்பதால்
பிரான் –
மதுரா நகர ஸ்திரீகள் வயிற்றில் நெருப்பு கட்டி இருக்க
தன்னை ரட்ஷித்து கொடுத்தது மகா உபகாரம்
அபிமத விஷயம் அணைத்து கொள்ள செய்த கார்யம்
நினைந்து –
காலம் கழிய பெற்றேன் வைகல் =காலம் /நெடுக
நெடுகப் பெற்றேன்
இவருக்கு நோவு -அவனுக்கு வரும் நோவு
அது கழியப் பெற்றேன் -என்கிறார்
உயிர்க்கு வரும் நோவு உடலுக்கும் உண்டே-

வலி துன்பம் அர்த்தம் இல்லை வாயிற்று நோவு என்பர் திரு நாராயணபுரத்தில்
ஆழ்வார் துக்கிக்க எம்பெருமானும் துக்கிக்க
இவர் சந்தோஷிக்க அவனும் மகிழ
எம்பெருமான் விரோதி நிரசனம் துக்கம் போக இவருக்கும் போனதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 22, 2013

  கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டைஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.

பொ-ரை :- வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும், மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன; ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.

வி-கு :- மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து – குழைய; எச்சத்திரிபு. கேயம் – பாட்டு. கழிந்த – கழிகின்றன; காலமயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்தபோது – கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்” என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே, திருநாட்டிலேதான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கேயம் தீம்குழல் ஊதிற்றும் – 2தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும். கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையையுடைய பாட்டு என்றபடி. நிரை மேய்த்ததும் – கும் பசுமேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம். 1குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும். 2சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி. கெண்டை ஒண் கண்வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் – 3கரனைக் கொன்ற அன்று, பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்” –“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.

என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று, பசுமேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக்குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனையுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும். கெண்டை ஒண்கண் – கெண்டை போலே மிக இளமையினையுடையனவாய், அமிருதத்தைப் பெய்தாற்போலே குளிர நோக்குகிற திருக்கண்கள். வாசம் பூங் குழல் – 4வாசம் செய் பூங்குழலிற் காட்டிலும் –திருவாய். 10. 10 : 2.-பொலிவையுடைத்தான தன்னே்ற்றமுடைய குழலையுடையவள். பின்னை தோள்கள் மணந்ததும் – அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும். மணத்தல் – கலத்தல். 5“தோளி” –இது, திருவாய். 4. 2 : 5.-என்கிறபடியே, இவளுக்கு அழகு 6கைவிஞ்சியிருக்குமே.

பெண்களை அழைக்கைக் மற்றும் பல-மற்றைப் பிராட்டிமாரோடு கலந்தபடி. 1சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சாஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறுபோலே, இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ. மாயம் கோலம் பிரான்-2நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க ஆச்சரியமான ஒப்பனையுடைய உபகாரகன். 3அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே, அல்லாத பிராட்டிமார் “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய திருமுலைத்தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம். தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது – அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன்வசம் இன்றி அழியும்படி. 4“நினைதொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது. நேயத்தோடு கழிந்தபோது – 5நினைக்கப்படுகின்ற பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்தபோது. நேயம் – நேசம். எனக்கு எவ்வுலகம் நிகர் – ஒரு தேச விசேடத்தில்தான் எனக்கு ஒப்பாவார் உளரோ? 6அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக்கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு? 1ஆகாசவாயர் எனக்கு எதிரோ! வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரமபதமாகிற இடத்திலுள்ளார்தாம் எனக்கு ஒப்பாரோ!! உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய சூரிகள் என்றபடி.

பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

கேயம் = பாட்டு
தீம்  = இனிமை
இனிமை உடைய பாட்டு
பரதந்த்ரனாய் பசு மேய்க்க போகையாலே வரவு தாழ்த்தது இத்தனை
நெஞ்சை உருக்க குழல் வழியே பதில் சொல்கிறான் -பாசுரங்கள் இசை உடன் சொல்லி
நிரை மேய்த்ததும்
பெண்களை அளிக்கவும் பசுக்களை மேய்க்கவும் குழலே பரிகரம்
மான் கணங்கள் மெய்கை மறந்து
குழல் உஊதவெ பசுக்கள் வயிறு நிறையும்
சக்கரவர்த்தி திரு மகன் வில் வித்தை கை வந்தது போலே
இவனுக்கு குழல் ஊதுவது
கெண்டை போன்ற கண் –
பசு மேயத வந்த சரமம் தீர நப்பின்னை அணைத்து
கரணாதி சத்ரு ஹன்தாரம் ஆனபின்பு சீதை பிராட்டி ஆலிங்கனம்
இப்பொழுது தான் அணைத்து -முன்பு ஸ்திரீ பு ருஷ விக்ரஹம் என்று
நப்பின்னை குளிர நோக்கி -முக்தம் இளைமையான கண்கள்
திருக் குழல் பரிமளம் வாசிதம் ஆக்கி
சர்வ கந்த வஸ்துவுக்கு
கெண்டை போலே -அமிர்தம் வர்ஷிக்கும்
வாசம் செய் பூம் குழல் -பெரிய பிராட்டியார்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
இதனாலே பின்னை திரு நாமம்
நீளா தேவி நப்பின்னை -ஆயர் பாவை நப்பின்னைக்கு தன்  இறை
பிற் பட்டவள் பின்னை என்னவுமாம்-

மணத்தால் =கலத்தல்
தோள் அழகும் உள்ளவள்
அழகு கை விஞ்சி இருக்கும்
மற்றும் பல -மற்றும் பல பிராட்டிமார் உண்டே
ராமன் போலே இல்லையே கிருஷ்ணன்
ருக்மிணி சத்தியபாமை நப்பின்னை
அத்யயனம் ஆசார்ய சேவை அஸ்த்ர சஸ்திர பயிற்சி மூன்றும் அவனுக்கு
குங்குமப் பூ தடவி -அணைத்து கொண்டு இவன் பெற்றான்
செய்கை நினைந்து மனம் குழைந்து
செயல்கள் நினைந்து நெஞ்சு இடும்
நேசம் -நேயம் உடன் கழிய
எனக்கு யார் தான் நிகர்
தேச விசேஷத்திலும் யாரும்நிகர் இல்லை அனுபவ நினைவு வேளையிலும் நெஞ்சு உருகி இனிக்க
ஆகாச வாயர் எனக்கு எதிரோ
வாய் =இடம்
உலகம் எனபது உயர்ந்தோர்  ஆகையால் சூரிகள் என்றவாறு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 22, 2013

நான்காந் திருவாய்மொழி – “குரவை” 

முன்னுரை

    ஈடு :- 1இத்திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர். அவனும் இராமாவதாரமல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே. இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்; இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.2 அன்றிருக்கே, “சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு ‘பரநிலையும் கூட வேண்டேன்’ – “ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”-  என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.

என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல். 3“சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான்” என்கிறபடியே, கிட்டிநின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர, பூமியிலே ஆகப் பெற்றது; “தொல்லருள் நல்வினையால் சொலக்கூடுங்கொல்?” என்றே யன்றோ இவர் ஆசைப்பட்டது. அதாவது, நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது 4புண்ணியத்தின் பலமே அன்றோ. 5“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி ஸ்ரீ பிருந்தா

வனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, அவை இறந்தகாலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே, சமகாலத்தில் நடக்கும் செயல்போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

1“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை ‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து, இப்படி வல்லார் இவன் அல்லது இலர்கண்டீர் என்று தலைக்கட்டுகிறாராயிருக்கிறது. 2“சன்மம் பலபல” என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே; அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில், அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை; இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க, தம்வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய்விடுகிறார்.

586

    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கைநாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாயவினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும்3 தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.

பொ-ரை :- ஆய்ச்சியரோடு குரவைக்கூத்தினைக்கோத்து விளையாடியதும், கோவர்த்தனம் என்னும் மலையை ஏந்திக் குடையாகப் பிடித்ததும், வலிய தண்ணீரையுடைய பொய்கையிலே கிடந்த காளிங்கன் என்னும்பாம்பினை ஓட்டினதும், இவை முதலான மற்றும் பலவான, ஆதிசேட சயனத்தையுடைய பெருமானது ஆச்சரியமான செயல்களையே சொல்லிக் கொண்டு நல்ல இராப்பொழுதும் நல்ல பகற்பொழுதும் தவிரேன்; எனக்கு வேறு என்ன குறை உளது?

வி-கு :- மற்றும் பல மாய வினைகளை என்று கூட்டுக. அலற்றித் தவிர்கிலன் என்க.

இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.

ஈடு :- 1முதற் பாட்டு. பகலும் இரவும் கிருஷ்ணனுடைய குணங்களைப் பிரீதி முன்னாக அநுபவிக்கப் பெற்ற எனக்கு, இனி ஒரு குறை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியரோடு குரவை கோத்ததும்-“பிறந்தவாறும்” என்றாற்போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், 2இதிலே இழிவான் என்? என்னில், “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேரவிட்டுக் கொண்டபடி, திருக்குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே, அது முன்னாகப் பேசுகிறார். அன்றிக்கே, 3நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது! அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக்கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் என்னுதல், திருக்குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது. 4ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி. 5தன் செல்லாமையாலே ஆயர் பெண்களுடைய மாலையிலே தன்னைமுதன்மை இல்லாதவனாகச் செய்து கொண்டு கோத்ததும். 1“குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார். 2பெண்களுடைய மாலையிலே இடையீடாகத் தன்னைக் கோக்கிறபோது, ‘விஜாதீயன் ஒருவன் கலந்தான்’ என்று தோற்றாதபடி அவர்களோடே ஒரு நீராகக் கலந்தபடி. பெண்களும் பெண்களும் அல்லவோ கைகளைக்கோத்து விளையாடுவார். 3திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாததுபோலே காணும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி, கோக்கை – தொடுத்தல். கைகோத்துக் கொண்டு ஆடும் கூத்து அன்றோ, குரவைக் கூத்து ஆகிறது.

குன்றம் ஒன்று ஏந்தியதும் – 4சுவர்க்கம் என்று கொண்டு ஒரு போக பூமியாய், அங்கே தேவமாதர்களோடே கழகம் இருந்து புண்ணியத்தின் பலத்தை அநுபவம் பண்ணி மிக்க சுகத்தோடு இருப்பான் இந்திரன் ஒருவன் உளன் அன்றோ; அந்த அநுபவத்தைப் பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடேகூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு அது பொறுக்கமாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல்மழையைப் பெய்வித்தான்; அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக்கொண்டு நின்றபடி. 5ஒருவன் இங்கே ஒருநாள் மூக்குப் புதைக்குங் காட்டில் ‘நம்முடைய போகம் பகுந்து போகப் புகாநின்றது’ என்று அஞ்சி அவரை உவரைவரவிட்டுக் கலக்குமவன் அன்றோ. 1‘இப்படி அநுபவிக்கிறான் சர்வேசுவரன்’ என்று அறியான் அன்றோ; 2இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக்கொண்டு இருக்கையாலே. 3அன்றைய தினத்தில் கல்மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற்போலே யாகாதே, இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும். ஏந்தியதும்-4பிறர்பொருட்டு ஆகையாலே கைக்கு ஓர் ஆபரணம் போலே ஆயிற்று. அது தான் வருத்தமற்று இருந்தபடி. பூ ஏந்தினாற் போலே இருந்தது. 5ஏழு வயதிலே ஏழுநாள் ஒருபடிப்பட தரித்துக்கொண்டு அன்றோ நின்றது! ‘இப்படி ஏழு வயதிலே ஏழு நாள் தரித்ததற்கு என் செய்வோம் நாம்’ என்று ஒருவர் நெஞ்சாறல் படாதபடி சகோத்திரியாய் நின்றே அன்றோ இவன் இவற்றை ரக்ஷித்தது.

உரவு நீர்-தறை காண ஒண்ணாமையால் உண்டான ஆழத்தையுடைத்தான மிடுக்கையுடைய நீர் என்னுதல். அன்றியே, காளியனுடைய விஷத்தால் ஒருவர்க்கும் கிட்ட ஒண்ணாத வலியையுடைய நீர் என்னுதல். அன்றிக்கே, 6முதுநீர் ஆகையாலே வலிய நீர் என்னுதல். உரவு – விஷம். நாகம் காய்ந்ததும் – நாகத்தை ஓட்டியதும். 7பாம்பு அடித்து மேலிட்டுக் காணும் பெண்களோடே ஜலக்கிரீடை பண்ணிற்று. உள்பட மற்றும் பல – இவை முதலானசெயல்களுக்கு ஓர் எண் இல்லை. 1“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்; இங்கு, உகப்புத்தலைமண்டையிட்டுச் சொல்லமாட்டுகிறிலர். மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் 2தண்ணீர்த்துரும்பு அறுத்தவை பலவாம். அரவில் பள்ளிப் பிரான் – 3நாட்டார் உறக்கம், தமோகுணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்; இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும். 4உறங்குவான்போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.– உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்; உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்! அரவில் பள்ளிப்பிரான் – 5மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று; இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது. அங்கு, போகத்தைக் காற்கடைக் கொண்டமை சொல்லிற்று; இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது. 6பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்; அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான். 1இவன்தான் பலபல முகமாக அநுகூலிக்கும்; அவனும் பலபல முகமாக அடிமை கொள்ளும். 2ஆயிரம் பைந்தலை அனந்தன் அல்லனோ.-பெரியாழ்வார்  திருமொழி, 4. 3 : 10.

அரவில் பள்ளிப் பிரான் – 3அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்; அன்றியே, 4“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல். தன்மாய வினைகளையே அலற்றி – அவனுடைய ஆச்சரியமான செயல்களையே வாய்விட்டுத் துதிசெய்து. இரவும் நன்பகலும் தவிர்கிலன்-பகவானுடைய அநுபவத்திற்கு உறுப்பாகாத அன்றே அன்றோ 5சுடர்கொள் இராப் பகலாக இருப்பது; – திருவாய். 2. 1 : 4.-அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார். பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது, என்ன குறைவு எனக்கே – 6“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்றுகொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேசவிசேடம் தேடி அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதிசோறு கட்ட வேண்டும்படி குறைவாளனாயிருந்தேனோ? ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;

“காலம் ஸபசதே தத்ர ந கால: தத்ரவை ப்ரபு:”

என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பட்டைப்பொதி சோறு – பாக்குப் பட்டையில் கட்டுகிற சோறு.

7பல இருதுக்களில் விளையாடினார்” –“விஜஹார பஹூந் ருதூந்”-  என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

என்கிறபடியே, அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டானஅநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ? அன்றிக்கே, பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது; சீலகுண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.

இப்படி எம்பெருமானை அனுபவித்த எனக்கு என்ன குறை –
பிறந்தவாற்றில் குணங்களை தரித்து நிற்க சரணம் புக்கார்
அப்புறம் தூது விட்டார் –
ஊடினார்
சேர விட்ட அனுக்ரகம் உபகார   இதில் கிருஷ்ண அவதாரம் அனுபவித்து குறை இல்லை என்கிறார் –
வால்மீகி பகவானை போலே அவன் ராமாவதாரம் அல்லது அறியார்
இத் திருவாய்மொழியும் கிரிஷ்ணனை மட்டுமே சொல்லுமே
வேறு ஒன்றும் அறியாதபடி
உயர்ந்த தேவ பிரானை எப்படி அனுபவிக்க இழவு தீர
ராமனாய் கிரிஷ்ணனாய் கிட்டி நின்று அனுபவிக்க இங்கே வந்து காட்டி அருளி
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன்
கண்ணன் காட்டிக் கொடுக்க
பூத காலம் போலே இன்றி அனுபவிக்க சம கால போலே
கிட்டி நின்று அனுபவிக்கிறார்
சேர விட்டு கொண்ட படியை அனுசந்தித்து
இப்படி செய்தவன் கிரிஷ்ணனே
சன்மம் பல பல போலே –
வாசி -இதற்க்கு உண்டே
இதர லாபத்தால் வந்த லாபம்
சம்சாரிகளை காட்டில் வ்யாவர்த்தன் ஆவேன் என்றார் அங்கு
இங்கு குணங்கள் அனுபவிக்க தரித்து சரண்  பேற்றை பெற்றபடி
ஹ்ருஷ்டராய் திருவாய்மொழி அருளுகிறார்

என்ன குறை நமக்கு குரவை கூத்து போன்ற லீலைகளை அலற்றி இரவும் பகலும்
பிறந்தவாறும் தொடங்கி -அங்கே -இங்கு குரவை ஆய்ச்சியர் குரவை கூத்து
குரவை ஆய்ச்சிமாரும்
தம்மை சேர விட கொண்ட படி பெண்கள்  கலந்து அனுபவித்தது போலே
சரித்ரம் முன்னாக
பேசுகிறார் அவன் அனுபவித்தபடி பேசுவார் இ றே
சபரி விருத்தந்தம் குசேலர் சரித்ரம் திவ்ய ப்ரபந்தம் இல்லை
விபீஷணன் சரண் அடைந்ததும் இல்லையே
சரித்திர பாடம் இல்லையே
அவன் காட்டிக் கொடுத்த க்ரமம் ஆழ்வார்கள் அருளுவார்கள்
கலவியை இப்பொழுது முதலில் காட்டிக் கொடுத்தது
பஞ்ச லஷம் பெண்கள் உடன் கலந்த ப்ரீதி ஆழ்வார் உடன் கலந்த
ஆய்ச்சியர் உடன் இவன் கோத்து கொண்டான் -தாழ விட்டு கொண்டு
அது இது உது –
குழகம்
பெண்கள் -விசஜாதிடன் என்று சொல்ல முடியாமல்
கை கோத்து கும்மி அடித்து ஸ்திரீ போலே
ஒவ் ஒரு கோபிக்கும் இரண்டு கண்ணன் உண்டே
இவனை ஒழிய பெண்களுக்கு செல்லாமை போலே ஆழ்வார் ஒழிய இவனுக்கு செல்லாமை

இந்த்ரன் அப்சரஸ் -பொறாமை கொண்டு ஹிம்சிக்க
நமக்கு இட்ட சோற்றை உண்டான்
கைக்கு இட்டதோர் மலையை கொண்டு
மூக்கு புதைக்கும் காட்டில் போகம் பங்கு போடா -வருவான்
பிரணாயாமம் செய்து இங்கே வருப்வான் என்று அஞ்சி
ரம்பை மேனகை அனுப்பி குலைக்க
மனுஷ்ய சஜாதீயன் என்றே எண்ணி
மின்னிடை மடவார் ப்ரணய வர்ஷம்
தீர்த்து கைக்கு ஆபரணம் போலே ஏந்தி கொண்டு இருந்தான்
ஏழு வயசில் ஏழு நாள் -தரிததுக்கு என்ன செய்வோம்
பட்டர் –
பரிவி கொள்ள வேண்டாதபடி சகோத்ரியாய்
ஆழம் உள்ள நீர் -கருமையான நீடப் காழியன் விஷம் கிட்ட முடியாத வலிய
காளியனை வலித்ததும்
-மற்றும் எண்ணில்லாத செஷ்டிதன்கள்
பிறந்தவாறும் பல ஹானியால் சொல்ல முடியாது
இங்கு ஆனந்தம் மிக்கு அனைத்தும் சொல்ல முடியாதே
அரவு பள்ளி பிரான்
தமோ குணம் மற்றவர் உறக்கம்
இவன் உறங்குவான் போலே யோகு ஸ்ர்ய்பவன் பிரான்
பாம்புடன் சேராமை கீழே –
இங்கே பாம்புடன் சேர்ந்தது
அங்கு போகத்தை கார்கடை கொண்டதை சொல்லி
இங்கே போகம் ப்ராவண்யம் சொல்கிறது
நாகம் காய்ந்ததும் அர விணை பள்ளிப் பிரான் இதுவும் விருத்த விபூதி
அவன் அநந்த முகமாக அனுபவிக்கிறார்
இவனும் அநந்த முகமாக அடிமை கொள்ளும்
மாய வினைகளை அலற்றி
இரவும் பகலும்
அனுபவ போக்கியம் ஆதலால் நல்ல பகல் நல்ல இரவு
விச்லேஷத்தில் நெருப்பை உருக்கு இரட்டிப்பது போலே
இங்கே ஆனந்தம்
இரவும் பகலும் இல்லாமை பரம பதம்
பொதி சோறு கட்டி போக வேண்டாமே
தேடித் போக வேண்டாதபடி இங்கேயே
அவ்வோ காலங்கள் அங்கு இலையே
ருது கால புஷ்பம் பழம் கொண்டு
ஆராதிக்கவும் சீல குணம் அனுபவிக்கவும் இங்கேயே
அனுபவித்த எனக்கு என்ன குறை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 21, 2013

கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட களிறென்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10

—————————————————————

வியாக்யானம் –
கரிய இத்யாதி –
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகையாலே கறுத்த நிறத்தை உடைத்தாய்
மஹா மேகங்களின் உடைய சமூஹங்கள் ஆனவை –
முகந்த நீர் கனத்தாலே பேர்ந்து போக  மாட்டாதே கிடந்த இடத்தே கிடந்தது முழங்க –
நீர் குறையும்படி வர்ஷித்து வெளுத்ததும் அன்றிகே கறுத்து
அது தான் மேக சகலமுமாய் இருக்கை அன்றிக்கே-துண்டு மேகமாக இல்லாமல்- -மா முகிலாய் –
அவை தான் ஓன்று இரண்டு அன்றிக்கே –
சமூஹங்களும் ஆனவை -முகந்த நீர் கனத்தாலே கால் வாங்கிப் போக மாட்டாதே –
வாயுவாலும் ப்ரேரிக்க ஒண்ணாத படி –
கறுத்து அது இருந்த இடத்தே கிடந்தது
கர்ப்ப வேதனையால்  முழங்குவாரைப் போலே முழங்கும் ஆயிற்று-

களிறென்று –
நிறத்தினுடையவும் -அதிருகிற த்வநியினுடையவும் சர்வதா சாம்யத்தாலே யானை என்று

பெரிய மாசுணம் –
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற மலைப் பாம்புகள்
ஆனையை விழுங்கும் படி யாயிற்று பெருமை இருப்பது –

வரை எனப் பெயர் தரு –
அம்மலைப் பாம்புகள் ஆனவை அவற்றுக்கு அஞ்சி மலை போலே பேர்ந்து போய்
புற்றிலே புகா நிற்கும் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்ய
(காருடைய மின் என்று
நாகம் வாரணத்தை அஞ்சி ஒளிக்கும் )
இதுவோ இது அருளிச் செய்யும்படி -என்று ஸ்ரீ நம்பிள்ளை கேட்டருள
நீர் இப்படி கேட்கும் போது ஒற்றை நினைத்து அல்லது கேளீர் அத்தைச் சொல்லும் என்ன

பெயர் தரு-பேயருகை யாவது தான் போக்குவரத்து இரண்டுக்கும் சாதாரணமாயிற்று இருப்பது –
இனித் தான் மலைக்கு சிறப்பு சொல்லுமவர்கள் -மலைப் பாம்புகள் யானையை விழுங்கும் -என்றார்கள் -ஆகையாலே
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது முழங்குகிறவற்றை -பெரிய மாசுணம் ஆனது யானையாக புத்தி பண்ணி
ஆமிஷார்த்தமாக மலை பேர்ந்தாப் போலே கால் வாங்கி வந்து கிட்டா நிற்கும் ஆயிற்று என்றாலும் -என்ன –
அதுவே யிறே பொருள் என்று போர கொண்டாடி அருளினார் என்று அருளிச் செய்வர் –
ஆகை யிறே -பெரிய மாசுணம் என்றது ஆனையை விழுங்கும்படி யாயிற்று இதனுடைய பெருமை இருப்பது-
(மலைக்கு சிறப்பு -மலைப்பாம்புக்கு சிறப்பு -சொல்லவும் -பிரபன்னர் என்றதுக்கும் இதுவே பொருந்தும் )

வரி கொள் இத்யாதி –
வரியை உடைத்தாய் -தர்ச நீயமாய் இருந்துள்ள வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணிக் களித்து த்வனியா நின்றுள்ள பரந்த பொழிலை  உடைத்தாய்
ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று

அரிய இன்னிசை
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தம் வாயாலே அரிய இன்னிசை -என்பதே என்று அருளிச் செய்வர்

ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சிலரோடு பிணக்கி
கையிலே தாளத்தை பொகட்டு-இந்த பதிகத்தை என்னுடன்-
இயலிலும் இழியலாம்
பொருளிலும் இழியலாம்
இசையில் ஒருவராலும் இழிய ஒண்ணாது

அருமையால் நினைக்கிறது பெருமை
இனிமையால் நினைக்கிறது -சுவைப் பாட்டை –
அருமை பெருமைகளையும் சுவைப் பாட்டையும் உடைத்தாய் இருக்கும்-

நல்லடியவர்க்கு –
இத்தைப் பாடுமவர்கள் ஆயிற்று சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகிறார்

அரு வினை-
அவர்களை பாபங்கள் கிட்டாது –

சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக  புத்தி பண்ணி மேல் விழுமா போலே
இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி
அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி
அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்

இப் பாசுரங்களைச் சொன்னவர்களை –அச் சொல் வழியே சர்வேஸ்வரன்-
அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-
நடுவில் பாபங்களுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் ஓடிப் போகுமே –
சர்வேஸ்வரன் போக்க வேண்டுமா -வினைகள் தாமே போகுமே –
பகவத் அனுபவத்தில் ஈடுபடாமல் இருக்க வினைகள் கிட்டும்
அவனை அனுபவிக்கவே இவை தன்னடையே போகுமே –
மோக்ஷயிஷ்யாமி -அவனும் வேண்டாமே நானும் வேண்டாமே -தன்னடையே விலகிப் போகுமே –
மத் மன பவ இத்யாதி-

—–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வால் இமயம் வானோர் வணங்கவும் பத்தர் தம்
பால் அகலத் துன்பம் இன்பம் மிகவும் மால் சேர்
பிரீதி அடை நெஞ்சே என்னும் கலியன் நம் பால்
அருவினை அகற்றும் முற்றும் —

வால் -வெண்மை –

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 21, 2013

(ஸ்ரீ பரிமள வல்லி தாயார்
ஸ்ரீ கோவர்த்தன்மை விமானம்
ஸ்ரீ இந்திர தீர்த்தம்
பள்ளி கொண்டு அருளும் பெருமான் -என்று மங்களா சாசனம் )

ஆஸ்ரயிக்க தடங்கலாக உள்ளவற்றையும் போக்கி கைங்கர்யங்களையும் தானே ஏற்றுக் கொண்டு
அருளுபவர் அன்றோ

ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-9-

உரு துயர் -அனுபவ விநாஸ்ய பிரதிபந்தகங்கள்
பிண்டி -அசோகா புஷ்பம்
தேனைக் குடித்து பூ என்று உணரும் -முன்பு நெருப்பு -பயக்ருத் பய நாசன் –
அவனை நினைக்க பயம் போகும் நம்மை நினைக்க பயம் வருமா போலே

வியாக்யானம்-
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு-
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லி
அவற்றின் உடைய அர்த்த அனுசந்தானம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –
ஒரு திரு நாமத்தைச் சொல்லி -அவ்வளவில் பர்யவசிக்க மாட்டாதே
ஆயிரம் திரு நாமங்களையும் அடைவு படச் சொல்லி
அந் நாமத்வாரா நாமி யானவனை மனனம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –

உறு துயர் அடையாமல்-
உறக் கடவதாய் நிற்கிற பாபங்கள் பல அனுபவத்துக்கு இவனைத் தொடராதபடியாக
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்றும் –
ந புக்தம் ஷீ யதே -என்றும் சொல்லுகிறபடியே அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள்
பல அனுபவத்துக்கு வந்து கிட்டாதபடியாக

ஒரு பிசாசம் -கண்டா கர்ணன் – நரகாத ஜகந்நாத நாராயண பராயண என்று சொல்ல
ஆத்மாநாம் வாசுதேவோ ஸ்லாக்கியம் சிந்தயந்த் -என்று ஸ்வ அனுபவம் பண்ணி
அந்ய பரதையாய் இருக்கிற அளவிலே இத்தைக் கேட்டு
கஸ்ய முக்தி கரேஸ்திதா -என்று நம் பேரைச் சொல்லி நம்மை எழுதிக் கொண்டவர் -என்றான் இறே
(தாம் சென்று அடிமை செய்யும் படி -என்றவாறு )

ஏதம் என்று துக்கமாய் – வருத்தத்தை நினைக்கிறது
இத் திரு நாமத்தை சொன்னால் இத்தை உடையவன் செவிப்ப்படும்படி அண்ணியானாய் நிற்க –
ஆஸ்ரயிப்பாருக்கு வருத்தம் இன்றிக்கே ஒழிகைக்கு உடலாய் இருக்கும் இறே
இவர்களுக்கும் வருத்தம் இல்லாதபடி இருக்கும்-

உறு துயர் இத்யாதி
வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உனை வாய்க் கொள்ள மாட்டேன் -என்று
அசித் சம்சர்க்கத்தை அனுசந்தித்து -நாம் அங்குத்தைக்கு யோக்யராய் பரிமாறுகை யாவது என் -என்று
தன் அயோக்யதையை அனுசந்திக்கைக்கு அவகாசம் இல்லாதபடி
(நின்று அருளும் நம் பெரும் தகை -)ஆஸ்ரயணீயனான தான் சந்நிஹிதன் ஆகையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஒரு வருத்தமும் வாராத படி இருக்கிற
மஹா ப்ரபாவன் வந்து வர்த்திக்கிற விலஷணமான ஹிமவானில்-

தாது இத்யாதி
தாது மிக்கு இருந்துள்ள அசோக புஷ்பம் ஆனது விட்டலருகிற போதை
அக்னி கல்பமான எழிலைப் பார்த்து
பேதை வண்டுகள்
அசோக புஷ்பங்களை நித்ய அனுபவம் பண்ணா  நிற்கச் செய்தேயும்
நித்யமாக பிரமிக்க வல்ல மௌக்யத்தை உடைய வண்டுகள் ஆயிற்று

தானும் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும்-
அதுவும் நாள் தோறும் மலரா நிற்கச் செய்தேயும்-
எப்போதும் ஒக்க இது நெருப்பு  இது நெருப்பு -என்று ப்ரமிக்கும்படியாய் இருக்கும்
முன்னாள் இது அக்னி என்று சங்கித்து விசாரித்து -அன்று என்று நிர்ணயித்து
பிற்றை நாள் அது அன்று என்று இருக்க மாட்டாதே -நெருப்பு -என்றே அஞ்சி இரா நிற்கும்
அதுக்கடி
பய நிவ்ருத்தியும் நித்தியமாய் பயமும் நித்தியமாய் இருக்கையாலே-

இதுக்கு திருஷ்டாந்தமாக திரு வெள்ளறை திரு மொழியில் -5-3-9-ஒரு பாசுரம் அருளிச் செய்வர்

(ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —5-3-9-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
மகாபலியினுடைய யஞ்ஞவாட மான அவ்விடத்தில்
தன்னை இரப்பாளனாக்கிக் கொண்டு சென்று
பூமிப் பரப்பை அடங்கலும்

பாங்கினில் கொண்ட பரம
அவனது ஆக்கிக் கொண்ட சர்வாதிகனே
-ராவணாதிகளைப் போலே தலையை அறுத்துப் பொகட்டு
வாங்கிக் கொள்ளலாய்   இருக்கச் செய்தே
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால்
தன்னை இரப்பாளனாக்கிஅவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –

நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே  –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி
போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர –
ஆகாச அவகாசம் வெளி யடையும் படி
வளர்ந்த அசோகம் ஆனது
சிவக்கப் பூத்துக் கிடக்க
இதிலே மது பானம் பண்ணலாம் என்று -அதுக்காக வண்டுகள் சஞ்சரிக்க

மா  வேறித் தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –
அத்தைக் கண்ட குயில்கள் ஆனவை-நெருப்பு என்று
அருகே செல்ல அஞ்சி நின்ற மாவிலே ஏறி
இவை நெருப்பிலே அகப்பட்டனவாகக் கொண்டு
அந ஷர ரச பேச்சாலே  -படுகொலை கிடி கோள் -என்றாப் போலே
கூப்பிடா நின்றது யாய்த்து –
இதில் வாசமும் நித்யமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் யாய்த்து -படப்பை –கொடித் தோட்டம் –)

ஆங்கு மாவலி வேள்வியில் சென்று இரந்து
மஹா பலியினுடைய யஞ்ஞா மாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று

அகலிடம் முழு தினையும் இத்யாதி
பூமிப் பரப்பதைய வாங்குகிற அன்று
அவனை எதிரிட்டு கொண்டு வாங்குகை  அன்றிக்கே ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
ஔதார்யத்துக்கு அநு ரூபமாக வாங்கினான்
ராவணாதிகளைப் போலே தலை அறுக்க வேண்டிற்று இல்லை
ஔ தார்யம் என்று ஒரு அனுகூல லேசம் கிடைக்கையாலே
இவன் கொடுக்க உகந்து இருந்தான் என்று தன்னை இரபபாளன் ஆக்கி
அவனோடு இசைய கொண்டான்
தன்னைதான பூமியை இறே அவன் தந்ததாக கொண்டான்
ஆக நம்முடைய ஆத்ம சமர்ப்பணம் போலே இருப்பது ஓன்று இறே அவனுடைய தானமும்

அதவா
கின்நு  சமர்ப்பயாமி -அநந்தரம் அநுசயிக்க வேண்டும்படி இறே இது இருப்பது –
விழுக் காட்டில் ஆத்ம சமர்ப்பணத்தோடு ஆத்ம அபஹாரத்தோடு வாசி அற்று இறே இருப்பது –
ஆகை இறே உபாய நிரபேஷ்யம் சொல்லுகிறது

பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –
சர்வாதிகனே -உன்னை வணங்கி உஜ்ஜீவிக்கிற எனக்கு பிரசாதத்தை பண்ணி அருள வேணும் –
ஆஸ்ரயணத்துக்கு பல வ்யாப்தி உண்டு இறே

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழிதர மா வேறி தீம் குயில் –
ஆகாசம் இடம் அறும்படி வளர்ந்து பரப்பு மாறப் பூத்த
அசோகத்தின் உடைய சிந்திய பூக்களில் –
மது பான அர்த்தமாக வண்டுகள் சஞ்சரிக்க
தர்சநீயமான குயில்கள் ஆனவை -இவை நெருப்பிலே புகை என்றே நிச்சயித்து
அது தன்னைத் தட்டாதபடி மாவிலே போய் ஏறி கூப்பிடா நிற்கும் ஆயிற்று –
சிவந்த பூப் பூவாத மாத்தேடி ஏறி நின்று –

மிழற்றும் –
எழுத்தும் சொல்லும் தெரியாதபடி கூப்பிடா நிற்கும்
இவற்றின் உடைய தயநீய தசையைக் கண்டு இன்னது என்று பாசுரம் இட்டு
சொல்ல மாட்டாதே -கடக்க நின்று -தர்ம ஹாநி கிடி கோள் -என்பாரைப் போலே
அவ்யக்தமாக கூப்பிடா நிற்கும் –

படைப்பை –
இது ஆயிற்று ஊரில் கொடித் தோட்டங்கள் இருக்கும்படி-

இத்தால்
அவனுடைய சர்வாதிகத்வத்தையும்
அவனை அனுபவிப்பதாக சொல்லுகிற தங்களுடைய சம்சாரித்வத்தையும்
அனுசந்தித்து
நான் சென்று கிட்டுகை  யாவது என் என்று துணுக் துணுக் என்னா நிற்பர்கள் -ப்ரஹ்மாதிகள் –
இவ்வண்டுகள் ஆனவை புஷ்ப சாமான்யத்தைக் கொண்டு மது பான அர்த்தமாக
மேல் விழா நிற்பது அக்னி என்று கிட்ட மாட்டாதே இறாய்த்து வெருவதாக நிற்கும் ஆயிற்று —
அன்றிக்கே
ஆஸ்ரயிப்பாருக்கு -அதசோ பயம் கதோ பவதி -என்னும் இதுவும் உண்டாய்
போக்யதையால் வந்த பயம் என்றும் உண்டாய் இருக்கும் என்னுதல் –
(பெருமானை நெருங்க உண்டாகும் பயம் ப்ரஹ்மாதிகளுக்கு -போக்யத்தையால் உண்டான பயம் அஸ்தாநே பய சங்கை )
ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு
தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து பயப்படவும் வேண்டா –
அசோக புஷ்பத்தை அக்னியாய் கொண்டு வண்டுகள் அஞ்சுகிற அச்சம் நித்யமாக செல்லா நிற்கும்-

(அவனைக் கண்டால் தங்கள் வினைகளைக் கண்டு அஞ்ச வேண்டாமே
அங்கு உள்ள வண்டுகளைப் பார்க்க இவ்வளவு பக்தி நமக்கு இல்லையே என்றும் பயம் உண்டாகும் )

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.

பொ-ரை :- உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளையுடைய சர்வேசுவரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப்பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி நித்தியசூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.

வி-கு :- சடகோபன் சொன்ன திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.

ஈடு :- முடிவில், இத்திருவாய்மொழி 3வல்லார் நித்தியசூரிகளுக்கு நாள்தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை – 4‘உங்கள் தலைகளிலே நான் காலைவைக்கக்

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை. காண்மின்கள் – 1இது ஓர் ஆச்சரியம் என்னவேண்டிற்றுக்காணும் ‘தலைகளிலே அடிபடப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று. குருகூர்ச் சடகோபன் சொன்ன – 2இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தையாகையாலே ஆப்தம் என்கை. ஆயிரத்து ஆணை திருவிண்ணகர் இப்பத்தும் வல்லார் – ஈசுவரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார். விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் – நித்தியசூரிகளுக்குக் காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர். இதில் கோணை இல்லை – ஒருமிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின், சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, 3நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில், அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலாவிபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை, ‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.-  என்ற திருக்குறளையும், அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.

திருவாய்மொழி நூற்றந்தாதி

    நல்லவலத் தால்நம்மைச் சேர்த்தோன்முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன்என்று – எல்லையறத்
தானிருந்து வாழ்த்தும் தமிழ்மாறன் சொல்வல்லார்
வானவர்க்கு வாய்த்தகுர வர்.

தெற்கு திருமலை இது
காண்மின்கள்
மண் அளந்த இணைத் தாமரைகள்
தாள் கொண்டு மண் தாவிய ஈசன்
இவனே திரு விக்ரமன் கண் முகப்பே -உலகீர் காணும்
தலை மேல் காலை வைக்க போவேன் என்றால் இசையார் என்று
காண்மின்கள் செப்படி வித்தை போலே
கண் முகப்பே திருவடி நிமிர்த்த
திருவடிகளை உடையவன் -விஸ்மயம் –
தலையிலே அடி பட புக்கவாறே இறாய்ப்பார்கள்
குருகூர் சடகோபன் சௌலப்யம் அனுபவித்து ஆப்தர் வார்த்தை
ஈஸ்வரன் ஆணை சாஸ்திரம் போலே ஆணை ஆயிரம்
ஈஸ்வரன் ஆஞ்ஞை போலே திருவாய்மொழி
கோணை -சங்கை இன்றி -நித்யர்கள் கொண்டாடுவார்கள் –
பொருந்தாமை இல்லை
கால தத்வம் அளவும நித்யருக்கு குரவர் ஆவார்
சேற்றில் விழுந்து வந்தோமே எங்கனே என்னில்
அங்கெ இருந்து -ததீய ஆகாரத்தால் லீலா விபூதியும் அனுசந்தித்து ஆனந்தம் படும் பொழுது
சம்சாரம் இருந்தும் நமது படி ஒருவருக்கு உண்டாவதே கொண்டாடி இருப்பார்
ஸ்ரீதரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே

சாரம்
நல்ல வளத்தால் நம்மை சேர்த்தோம்
முன் நன்னாரி வெல்லும்
பூரணன் விருத்த விபூதிகன் -விபூதியன்
வாழ்த்தும் தமிழ் மாறன் சொல்
வானவர்களுக்கு வாய்த்த குரவர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண்இலம்; காண்மின்களே.

பொ-ரை :- நிழலும் வெய்யிலுமாகி, சிறுமையும் பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி, மற்றுமாகி, அவை அல்லனுமாகி, இசைபாடுகின்ற இளமைபொருந்திய வண்டுகள் வாழ்கின்ற திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடிகளே அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே காணுங்கோள்.

வி-கு :-
அல்லனுமாய் மன்னு பிரான் என்க. களைகண் – பற்றுக்கோடு.

ஈடு :- பத்தாம்பாட்டு. 1அவன் திருவடிகள் அல்லாமல் வேறு ஒரு ரக்ஷகம் இல்லை என்னுமிடத்தைப் புத்திபண்ணுங்கோள் என்கிறார்.

நிழல் வெய்யில் – குளிர்ச்சிக்குக் காரணமான நிழலும். உஷ்ணத்திற்குக் காரணமான வெய்யிலும். சிறுமை பெருமை – சிறுமைக்கு எல்லையான அணுத்வமும், பெருமைக்கு எல்லையான மகத்வமும் குறுமை நெடுமை மத்திம அளவிலுண்டான குறுகுதல் நீளுதல்கள். சுழல்வன நிற்பன – ஜங்கமங்களும், தாவரங்களும். மற்றுமாய் – சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது. அவை அல்லனுமாய் – 2அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று மேலே சொல்லப்பட்டதே அன்றோ; இனி, இங்கு என்? என்னில், அவற்றிற்கு வரும் அவஸ்தைகளையுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி. அவை: சேதனனிடத்தே உள்ள சுகதுக்கங்களும், அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம். மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னுபிரான் – பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களையுடைத்தான வண்டுகள் வாழாநின்றுள்ள திருவிண்ணகரிலே நித்தியவாசம் செய்கிற உபகாரகன். கழல்கள் அன்றி மற்று ஓர் களைகண் இலம் – அவன் திருவடிகளை ஒழிய

வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம். 1“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே, திருவடிகள்தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம்’ என்கிறார்.

“மாமேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.

“மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி”-  என்பது, பரிபாடல்.

காண்மின்களே – இது 2அர்த்தவாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.அர்த்தவாதம் – புனைந்துரை.

திருவடி அல்லது வேறு ரஷகம் இல்லை
நிழல் வெய்யில்
அனுகூலர்களுக்கு நிழல்
பிறர்களுக்கு அறிய வித்தகன்
சுழல்வன நிற்பன
மற்றுமாய் சொல்லாதவற்றை சேர்த்து
அவை அல்லனுமாய் தோஷம்
தட்டாமல் அவற்றுக்கு வரும் அவஸ்தைகளும் இன்றி
தோஷம் போக்குவதும் இவனே
விசேஷ அர்த்தமும் காட்டி அருளி
சுகம் துக்கம் சேதனம் மாற்றி அசேதனம் விகாரம் மாற்றி
மழலை வாய் கொண்ட வண்டுகள் வர்த்திக்கும் திவ்ய தேசம்
மாமேகம் சரணம் வுராஜா -திருவடிகளையே காட்டி
காண்மின் அர்த்தவாதம் இல்லை நாமும் காணலாமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

  என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன்1 மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தஅப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.

பொ-ரை :- எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித்தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப்போன்றவனும் மணியைப் போன்றவனும் முத்தைப்போன்றவனும் என்அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.

வி-கு :- எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை – தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.

ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 2எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார். அன்றிக்கே, எனக்கு எல்லாவகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை, ‘அல்லேன்’ என்ன, வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.

எனக்கு என் அப்பன் ஆய் – எனக்கு அசாதாரணனாய்ச்சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய். 3பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப்போல் அன்றியிலே, தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக்கடவ தமப்பனாய். இகுளாய் – எனக்கு நடந்த செயலைப்பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய். இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது. என்னைப் பெற்றவளாய் – வளர்த்துக் கொள்ளியான தாயைப்போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலேவைத்து நோக்கிப் பெற்ற தாயாய். பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் – வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள; எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன். மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – மின்னாநின்றுள்ள பொன்மதிளாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே நின்ற உபகாரகன். தன் ஒப்பார் இல் அப்பன் – சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்கவல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன். இதற்கு, 1‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ, ‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள, ‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச்செய்வர். தன தாள் நிழல் தந்தனன் – 2‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக, “அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கைப் போக்கி, திருவடிநிழலை எனக்குத் தந்தான். 3அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.

திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி. திருவடிகள்
என்றும், தண்டனை என்றும் பொருள்.

எனக்கு உபகாரகம் செய்து
எனக்காய் என் அப்பன்
அழிய மாறி என்னை நோக்க கடவ அப்பன்
தகப்பனார் ரஷகன் அல்லன்
இகுளை -விருத்த கீர்த்தனம் செய்யும் செவிலித் தாயாகவும் -தோழி யாகவுமாம்
தாய்க்கு தோழியாய் செவிலித் தாய்
என்னைப் பெற்றவளாயும்
வயிற்றில் வைத்து நோக்கிய
பொன்னப்பன் மணி அப்பன்
பொன் போலேயும் மணி போலேயும் முத்தாகவும் எனக்கு உபகாரகன்
தனக்கு ஒப்பார் இல்லா
மின் அப்பன் -மின்னல் போலே அழகிய –
மதிள் சூழ்ந்த
ஒப்பிலி அப்பன் -தன ஒப்பார் இல் அப்பன்
கிரித்ரிமம் -உப்பில்லா அப்பன் விருத்த விபூதி தத்வம்
6-1 பெரிய திரு மொழி -வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே
குமுத வல்லி தாயார் உடன் இவர் ஒருவரே சேவை ஆழ்வார்களில்
கல்யாண பிரார்த்தனை இங்கே செய்து

இதுவும் விருத்த விபூதி வைபவம்
அருளுதியேல் -அருள் இல்லை என்றால் வேண்டாம் -அருளினான்
உபகாரத்வத்தில் இவனை போல் இல்லை
ஜீயர் -அருளிச் செய்தபடி
மின்னிடை மடவாரில் மேல் விழ நான் தள்ள -உனக்கு ஹிதம் தெரியாது
உனக்கு நான் வேணும் காண் என்று மேல் விழுந்து -செய்து அருளிய உபகாரகன்
வலுக்கட்டாயமாக தன்னை ஆழ்வார் இடம் திணித்து கொண்டு
தன்னை எனக்கு தந்தவன் ஒப்பார் இல் அப்பன்
தந்தான் திருவடி நிழல்
உன்னை ஒழிந்த வெயிலே அமையும் என்று நான் போக சிற்றிலும் சிறு சோறும் திருவடியால்
அழித்து பாத சாயையை எனக்கு கொடுத்து
அடி பட்டவாறே -எனக்கு என்று வைதவற்றையும் பொகடுவாறே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.