கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்
[கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசையின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.
பொ-ரை :- தாமிரபரணி ஆற்றின்கரையைத் தன்னகப்படுத்திக் கொண்டிருக்கிற பசுமைநிறம்பொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த மருத நிலங்களையுடைய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்திலே கொண்டுபுக்கு, உலகத்தாரால் கொண்டாடப்படுகின்ற இனிய சொற்களையுடைய இவளை நீங்கள் உங்களுக்கு ஆசையில்லாமல் அகற்றிவிட்டீர்கள்; அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சயனித்திருப்பதையும் திசைகளோடு கூடிய உலகத்தை எல்லாம் தாவி அளந்ததையும் பசுக்களை மேய்த்ததையும் ஆகிய இவைகளையே பிதற்றிக்கொண்டு பெரிய கண்களிலே நீர்பெருக்கு எடுக்கும்படி நிற்கின்றாள்.
வி-கு :- கொண்டுபுக்கு அகற்றினீர் என்க. பௌவம் – கடல், பிதற்றி நிற்கும் – பிதற்றிக்கொண்டு நிற்கின்றாள்.
ஈடு :- மூன்றாம்பாட்டு. 1திருநாளிலேதான் கொண்டுபோக வேண்டினால், திருச்சோலை உள்ளிட்டுக் கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – திருப்பொருநல்கரையைப் பொழில் விழுங்கி இருக்கை. 2கரையைப்பொழில் கொண்டாற்போலே, இவளைக் குணம் கொண்டபடி. அன்றிக்கே, 3அந்தத்திருச்சோலையை உங்களுடைய நல்வார்த்தைகளால் பேர்த்துக் கொடுப்போம் அன்றன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது! என்னுதல். பரந்த பொழிலையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைய திருத்தொலைவில்லி மங்கலத்திலே கொடுபுக்கு. உரைகொள் இன்மொழியாளை – 4“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம் குத்துண்ணும்படியான பேச்சு என்னுதல்; “பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.
அன்றிக்கே, பொருளில் இழியவேண்டாமல் ‘உரையே அமையும்’ என்னும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, ‘இது ஓர் உரையே! பேச்சே!’ என்று உலகத்தார் கொண்டாடும்படியான பேச்சு என்னுதல்; அன்றிக்கே, மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல்; அன்றிக்கே, உரை – அடைவு சொல் என்னுதல். நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் – அந்தப்பேச்சில் வாசிஅறிந்து அநுபவிக்கமாட்டாமல், நீங்களே ஆசையின்றி அகற்றினீர்கோள்.
அவ்வூரிலே கொடுபுகுகையும், இவள்பக்கல் நசை அறுகை என்பதும் பரியாயம். ஆயிட்டு ‘இவள் வேண்டா’ என்று அன்றோ கொடுபுக்கது என்கிறாள்.
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் – தன் சந்நிதானத்தாலே கிளராநின்றுள்ள திரைகளையுடைத்தான திருப்பாற்கடலிலே பிரமன் முதலாயினாருடைய கூக்குரல் கேட்கும்படியாகக் கண்வளர்ந்தருளினதுவும்; 2இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக்கொடுக்க அடியிட்டபடியும். திசை ஞாலம் தாவி அளந்ததும் – திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும். திசைஞாலம் தாவி அளந்ததும் – 3‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்கவேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது. ஆசை – திக்கு. ‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்டவேணும்’ என்று ஆசைப்பட்டுக் காணும் கிடக்கிறது பூமி. படுகை – உடைத்தாகை. பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது. நிரைகள் மேய்த்ததும் – அவ்வளவன்றிக்கே, அறிவு கேட்டுக்குத் தலையான பசுக்களோடே சேர்ந்து வாழ்ந்தபடியும். பிதற்றி – இவற்றையே அடைவுகெடக் கூப்பிட்டு. நெடும் கண் நீர்மல்க – இக்கண்ணில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறத் தண்ணீர் உண்டாவதே! நிற்குமே – பிதற்றவும் சக்தியில்லாமல், கண்ணீர் மல்குகை ‘தன்னுடைய குண நிலை’ என்னும்படி செயலற்று நில்லாநின்றாள்.
சோலை வழியே கூட்டிப் போக வேண்டுமோ
கரைகள்
பொழில்கள் சூழ்ந்த
உரை கொள் இன் மொழியாள்
ஆசை இன்றி அகற்றினீர்
பிஒதற்றி கண்ணீர் மல்க நிற்கிறாள்
திருபாற் கடல் வாமன நிரை மேயத சரித்ரம் நினைத்து
கரையை பொழில் கொண்டால் போலே –
இவளை அவன்கல்யான குணங்கள் விழுங்கி –
சோலையை பெயர்க்க முடியுமானால் இவளை மீட்க முடியும்
உரை கொள் –
ஸ்ரீ ராமாயணம் குசல்வர்கானம் கொண்டு பாடி
மகா பாரதம் கானம் இல்லை
இதிகாசத்தில் இது ஸ்ரேஷ்டம்
அது கூட குத்துண்ணும் படியான திருவாய்மொழி –
அருளிச் செயலில் இது சாரம்
கங்கா சுப்பிரமணியம் காங்கேய போல [பேசி
அர்த்தத்தில் இழிய வேண்டாதபடி உரையே கொள்ளும்படி இன் மொழி
காஞ்சி ஸ்வாமி -எத்தனை உரை இட்டாலும் கொள்ளும் படியானதிருவாய்மொழி
6000 படி /9000/12000/24000 படிகள் முதல் 36000 படி
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் –
ஒன்றில் சொல்லாதது இன்னும் ஒன்றில் உண்டே –
பர வியூக விபவங்களையும் இவள் அனுபவிக்கும்படி
இது ஒரு உரையே பேச்சே கொண்டாடும்படி
ஆசை இன்றி அகற்றினீர்
உரை அடைவு உடன் எழுத்து
உரை நடை
கவி -எழுது சீர் மட்டும் இருந்தாள் போறாது -விஷயத்தில் சத்து இருக்க வேண்டும்
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டான் எலி -காஞ்சி சுவாமி காட்டி
சொற்கள் அடைவு -அர்த்தம் உடன் கவி
காளி தாசன் -கதை
மற்றவர் சேர்ந்து எழுத
உபமானம் உவமை
சொல்வதில் போஜனம் ராஜேந்திர
கிருத சுபம் நெய்யும் பருப்பும்
தாசி வீட்டுக்கு போக
சரஸ் சந்திர போலே
தயிர் வெளுமை
அங்கு கொடு புக்கையும் ஆசை இன்றி அகற்றுவதும் பரியாயம்
ஓன்று தான் –
இவளை வேண்டாம் என்று தான் கூட்டி வந்தீர்
திரை கொள் அலை எறியும் கடல்
ஸ்வ சந்நிதானத்தால் ஆனந்த கூத்தாடும் திருப் பாற் கடல்
கூப்பீடு கேட்கும் இடம்
பாட்டு கேட்கும் இடம் ப்ரஹ்மாதிகள் குரல் கேட்காதே
திசை ஞானம் தாவி -அளந்து இரப்பாளனாய் -தாவி -இந்த்ராதிகள் காக்க
திசை திக் ஆசை
ஆசையுடன் தாவி அளந்தான்
பூமிக்கும் இவன் திருவடி தீண்ட ஆசைப்பட்டு இருந்ததாம்
பூமி ஆசை திக்கு பட்டுக் கிடப்பதே
பரம பதம் விட்டு திருப் பாற் கடல் -திரு விக்ரமன் -பசுக்கள் சேர்ந்து வர்த்தித்து
அடைவு கெட கூப்பீட்டு –
பிதற்றி
கண் நீர் மல்க –
நிற்குமே பிதற்றவும் இன்றி ஸ்தப்தயாய் நிற்கிறாள்
வசம் இழந்து இருக்க –
அறிந்தே கூப்பிட்டு வந்தீர்கள்
மின்னிடை -அன்னம் வில்லி புத்தூர் உறைவான் -ஆண்டாள்
இது என்ன நியாயம்
வில்லி புத்தூர் உறைவான் பொன்னடி காண ஆசைப் பட்டாள்
அது எதனால் நிறைவேற்ற
முடியவில்லை பிரகிருதி அறிந்து கோயிலுக்கு கூட்டிச் செல்வர் இல்லை
கிடந்ததோர் கிடக்கை கண்டும் நம் போல் இல்லையே
தானே போக முடியாமல் உருகி இருக்கிறாள்
ஆண்டாளை கூட்டிப் போக வில்லை
இவரை கூட்டிப் போனார்கள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply