குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.
பொ-ரை :- ஒலிக்கின்ற ஒசையையுடைய திருவிழாவின் ஒலி பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்திற்குக்கொண்டு சென்று, அமுதம் போன்ற இனிய மெல்லிய சொற்களையுடைய இவளை உங்களுக்கு ஆசையில்லாமல் அகலும்படி நீங்கள் செய்தீர்கோள்; இவள், திமிர் கொண்டாற் போன்று நிற்கிறாள்; தேவ தேவபிரான் என்றே நெளிகின்ற வாயோடு கண்களில் நீர்பெருகி நிற்கும் படியாகக் கட்டுக் குலைந்து தளர்ந்து கரையாநிற்கின்றாள்.
வி-கு :- ஓசைவேறு, ஒலிவேறு; “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். கொண்டுபுக்கு அகற்றினீர் என்க, நிமிதல் – நெளிதல்.
ஈடு :- இரண்டாம்பாட்டு. 2அவ்வூரில் கொடுபுக வேண்டினால், திருநாளிலே கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.
குமுறும் ஓசை விழவு ஒலித் தொலை வில்லிமங்கலம் கொண்டு புக்கு – 1“பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தையுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது” தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.
என்கிறபடியே, ஓத்துச்சொல்லுவார், சங்கீர்த்தனம் பண்ணுவார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகின்ற ஒலியையுடைய திருநாளில் ஆரவாரம். 2பாவியேன்! இந்த ஒலி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது! ‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறுபோலே காணும் ஒலி இருக்கிறது. 3அவ் வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டுவைத்து இவளைக்கொண்டு புகுவார் உளரோ? கொண்டு புக்கு – இவள் அறியாதிருக்க நீங்களே கொண்டுபுக்கு. அமுதமென் மொழியாளை – இவள்மொழி, கேட்டார்க்கு அழியாத தன்மையைக் கொடுக்குமே! இந்த இனிய பேச்சைக்கேளாதபடி புண்ணியம்இல்லாதவர்கள் ஆவதே நீங்கள். 1அதாவது, அவ்வூரில் புக்க பின்பு இவர்களுடன் வார்த்தை சொல்லத் தவிர்ந்தாளாயிற்று என்றபடி. 2“அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது.“மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.
3இதுகேட்க ஆசைப்பட்டிருக்குமவன் பெற்றுப் போனான். அமுதத்தினின்றும் வேறுபாடுதோற்ற ‘மென்மொழி’ என்கிறார்கள். கேட்பதற்குத் தக்கதாய் இராதே அமுதம்: வேணுமாகில் இனிமைக்கு ஒரு சொல்லுக்கு நிற்கிறது, மிருதுத்தன்மை இதற்கே உளதாமித்தனை.
நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் – இவள் பேச்சினைக் கேட்டுப்போகிற நீங்களே உங்களுக்கு இவள் வழிபடாதபடி செய்தீர் கோள். திமிர்கொண்டால் ஒத்துநிற்கும் – 4“செயல் அற்றவன் ஆகிறாய்” என்னுமாறுபோலே, அநுபவிக்கக்கூடிய விஷயத்தை அநுபவிக்கவும் மாட்டாதே செயல் அற்றவளாய் நில்லாநின்றான். அன்றிக்கே, “செயல்அற்றவன் ஆகிறாய்” என்கிறபடியே, பரிபூரணஞானிகளைப் போலே இராநின்றாள் என்னலுமாம். மற்று இவள்-இவள் இதற்குமேலே வார்த்தை சொல்லில். தேவதேவபிரான்என்றே – 1இங்கே கண்டாலும் அயர்வறும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து சுலபனானான் என்றாயிற்று இவள் புத்திபண்ணுவது. 2நாயகனுடைய மேன்மைக்குத் தோற்று வார்த்தை சொல்லுகிற இவளை மீட்கப்போமோ? என்றே நிமியும் – ‘அப்பெரியவன் இப்படிச் சுலபனாய்ச் சீலவானாவதே!’ என்று அந்தச் சீலகுணத்தைச் சொல்லப்புக்குத் தலைக்கட்டமாட்டாதே, உதடு நெளிக்கும். நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க-உதடு நெளிக்கிற வாயோடே கண்கள் நீர் மல்க. நெக்கு – கட்டுக்குலைந்தவளுமாய். ஒசிந்து – பரவசப்பட்டவளாய். கரையும் – நீராகாநின்றாள். நெக்கு ஒசிந்து கரையும்-3பெருவெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்துபோமாறுபோலே, ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகாநின்றாள்.
உபாய அத்யவசாயம் தாய் அருள
சம்பந்தம் தோழி உணர்த்த
உத்சவம் நடக்கும் நாளில் கூட்டிப் போன பின்பு –
ஆசை மிகுந்து போகுமே -ஈடுபட்டு கிடக்கிறார்
ஓசை விழவு ஒலி மிக்கு
அயோத்யை -புண்யா வசன கோஷம் -கம்பீரம் மதுர
ஒத்து சொல்வார் சங்கீதம்பண்ணுவார் இயல் விண்ணப்பம் சொல்வார் -த்வனி உடையார்
விரஜை போலே
கொண்டு மீள அன்றோ அடுத்தது
பிள்ளை கொல்லி த்வனி அன்றோ
தெரிந்தும் கொண்டு புக்கு -இவள் அறியாது இருக்க -நீங்களே கூட்டிப் போக
அமுதம் மென் மொழியாள்
கேட்டாருக்கு நித்யத்வம் கொடுக்கும் திருவாய்மொழி
அறிய கற்று வல்லார் நித்யர் ஆவாரே
இனிய பேச்சை கேளாதபடி பாஹ்ய ஹீனர் ஆனீர்
அமுதம் மென் இனிமை மிருத
மதுரா மதுரா லாபா -சீதை வார்த்தையை பெருமாள் திருவடி இடம் கேட்டது
ஆலாபனம் இனிமை பார்க்கவும் இனிமை-
இது கேட்க ஆசைப்பட்டவன் போக
அமுதத்தில் வ்யாவர்த்தி மென் மொழி
ஸ்ரவண யோக்யமாய் இருக்காதே அமுதம்
காதுக்கும் நாக்குக்கும் இனிமை
ரஸ்யம் -ஒரு சொல் சொல்லிப் பார்த்தால் நாக்குக்கு
இனிக்கும் கேட்டால் காதுக்கு இனிக்கும்
உங்கள் பேச்சு கேட்கும் படி இல்லை இவள்
திமில் -கொண்டால் போலே ஸ்தம்பித்து இருக்க
ஸ்தம்பம் இவ நிற்கிறாள் –
அனுபாவ்ய விஷயத்தை அனுபவிக்க மாட்டாமல்
சாந்தோக்ய
உபநிஷத் ஸ்வேதா கேது பிள்ளையை அனுப்ப
-வந்ததும் உத்தாரகேது கேட்க
ப்ரமை பிடித்து நிற்க -ஸ்தம்பித்து நிற்கிறாய் ப்ரஹ்மத்தை அறிந்தாயோ கேட்டார்
தெரிந்து கொள்ளாமையால் ஸ்தம்பித்து நின்றான்
அறிந்தவனும் வாயால் சொல்ல முடியாது
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் கம்பர்
முழுவதாக உணர்ந்தவர் ஸ்தம்பித்து இருப்பார் -திமில் கொண்டால் ஒத்து நிற்கும் இவர்
குருகுல வாசம் -7 -22 வயசில் -15 வருஷம் முன்பு
12 + 3 இன்றும் M A -படிக்க –
வாசிக்காத கிரந்தமும் வாசித்து போலே இருக்கும் குருகுல வாசம் முடிந்த பின்பு
தெரியாது பதில் சொல்லும் எந்த கேள்வி கேட்டாலும் சொல்லும் பதில் என்ன
அதற்கும் தெரியாது என்றானாம்
தேவ தேவ -பிரான்
மனுஷ்யர்க்கு தேவர்போலே தேவருக்கும் தேவன் பரத்வம்
இங்கே வந்து
மேன்மைக்கு தோற்று சொல்லும் வார்த்தை
சீலம் சொல்ல தலைக்கட்டாமல் நிமித்து -வாயை
நெகிழ்த்து கண்கள் நீர்
மல்க நெக்குருகி
சிதிலம்
ஒசிந்து
பரவசையாய் கரையும்
வெள்ளத்தில் மணல் கரை போலே –
பொசிந்து கரையுமா போலே
அவயவம் காண முடியாதபடி சிதைந்து போனாள்
அர்ச்சாவதார சௌலப்யம் நினைந்து
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply