மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
பொ-ரை :- மனத்தில் துக்கத்தோடே தாழ்ந்த மனித வர்க்கத்தில் தனக்கு வேண்டிய உருவினைக்கொண்டு தான் அவதரித்து, தான் தனது சீற்றத்தினை முடிக்கும், புனத்துழாயினை முடியிலே தரித்த மாலை பொருந்திய மார்பினையுடையவனான என் அப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே நினைக்கின்ற மனத்தினையுடையேன்; இனி நீண்ட பெரிய உலகத்தில் எனக்கு ஒப்பாவார் யாவர்?
வி-கு :- அழுக்கு மானிடச் சாதியில் தனக்கு வேண்டுருக்கொண்டு தான் மனப்பரிப்போடு பிறந்து என்க. புனம் துழாய்மாலை முடிமார்பன் எனக் கூட்டலுமாம், சீற்றத்தினை முடிக்கும் என்னப்பன் என்க.
ஈடு :- ஏழாம்பாட்டு. 2தன்னை அடைந்த அடியார்களைப் பிரதிகூலர் நலியுமதனைப் பொறுக்கமாட்டாமல் அவதரித்து அவர்களை அழியச்செய்யும் செயல்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியின் நிகர் இல்லை என்கிறார்.
மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து – 1நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன்தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்; 2குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே
கூவத்தில் வீழும் குழவி யுடன்குதித்தவ்
வாபத்தை நீக்குமந்த அன்னைபோல் – பாபத்தால்
யான்பிறப்ப னேலுமினி எந்தை எதிராசன்
தான்பிறக்கும் என்னையுய்ப்ப தா.-என்பது, ஆர்த்திப் பிரபந்தம். 9.
, 3‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’ என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடேவந்து பிறந்தவனாதலின் ‘மனப் பரிப்போடு பிறந்து’ என்கிறது. குற்றங்களுக்கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான்பிறந்து’ என்கிறது. அன்றிக்கே, 4பிறப்பதற்குக் கர்மம்செய்து வைத்தவரும்கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர் கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல். இதற்கு அடி பரம கிருபை அன்றோ. தனக்கு வேண்டு உருக்கொண்டு – 5பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்ய திருமேனியையுடையனாய்க்கொண்டு. அன்றிக்கே, அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! என்னுதல்.இரண்டு தோள்களுடையவனா? நான்குதோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.த்விபுஜோ வா சதுர்புஜோவா” என்பது.
2ஈசுவரத் தன்மையைக் கைகழிய விட்ட பின்பு அன்றோ இவனுக்கு இங்கு இடம் கொடுத்தது. இவைதாம் அடியார்களுக்காக ஆகையாலே தனக்கே விரும்பத் தக்கனவாயிருக்கும். அன்றிக்கே, இச்சையால் எடுத்தவை என்றுமாம்.நாற்றோளன் இருதோளன் ஆகைக்குக் காரணம் என்? என்ன,
‘சம்சாரத்தினுடைய கொடுமை’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஈசுவரத்தன்மை’ என்று தொடங்கி. ‘கை கழியவிட்ட’ என்பதற்கு, கைகளை
கழியவிட்ட என்றும். கை கழியும்படி விட்ட என்றும் பொருள். இதற்கு
நோக்கு, “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர்புஜம்-எல்லாருக்கும்
அந்தராத்மாவாக இருப்பவனே! நான்கு தோள்களோடு கூடின இந்த
உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.
தான் தன சீற்றத்தினை முடிக்கும் – 3அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கையன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை; தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன்சினம் தீருமாறுபோலே. 4“இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து, பிறகு மஹாபராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது, “ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா ப்லவகசார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.
ஸ்ரீ ராமாயணம். புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம்செய்து ஒப்பித்து, திருமேனியின் பரிசத்தாலே தன்நிலத்தில் நின்றாற்போலே செவ்விபெற்று இருக்கின்ற திருத்துழாய் மாலையினைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையவனாய், அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக்கொண்டவன். தன்மாயங்களே நினைக்கும்நெஞ்சுடையேன்-1“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது” என்று“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.
பொதுவாகையன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சையுடையேன். எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பூமி பரப்பையுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ? 2பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப்போலே கவிபாடி அடிமைசெய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவிபாடி அடிமை செய்யப்பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.
பிரதி கூலர் -ஆஸ்ரிதர் விரோதிகள்
அழுக்கு மானிட சாதியில் தான் -பிறந்து துக்கத்துடன் பிறந்து
தனக்கு வேண்டிய உருக் கொண்டு
சீற்றம் காட்டி
விரோதிகளை முடித்து துழாய் மார்பன்
நினைக்கும் எனக்கு யார் நிகர்
அழுக்கு உடம்பு நாட்டாருக்கு அழிக்க தான் பிறந்து -அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தானே -பிறக்க வேண்டாதவன் பிறந்து
பிரஜை கிணற்றில் விழுந்தால் தாய் நெஞ்சில் துக்கத்துடன் குதித்து எடுப்பது போலே
உதவ பெற்றிலோம் திரு உள்ளத்தில் தளர்த்தி உடன் வந்து பிறக்க
அநன்யார்ஹ சேஷத்வம் உடைய -வஸ்து தேக சம்பந்த்தாலே பகுமுகமாய் நோவு படுகிறதே
ப்ரஹ்மாதிகளும் அருவருக்கும் மனித உருவில்
தான் -ஹேய பரத்திய நீகன் கர்ப்பவாசம் கொண்டு
அகர்ம வச்யன் தான் பிறந்து –
அப்ராக்கிரத திவ்ய சமஸ்தானத்தை
ஒரு படியில் இன்றி
இரண்டு திருக் கைகள் நான்கு திருக்கை கொண்டு
ஈச்வரத்தை கை கழிய விட்டு இ றே இவனுக்கு இங்கு
இடம் ஆஸ்ரித அபிமத அர்த்தமாக
தானே வேண்டி கொண்டு எடுத்த உரு என்னவுமாம் தன்னுடைய சினம் தீர்க்க
பிரஜையை -அடித்த
தாய் அந்த விரோதி தீர்த்து தனது சினம் தீர்க்க
என் கையாலே அறைந்தால் தான் எனக்கு திருப்தி
யானைகாகி முதலை மேல் சீறி வந்தார் நீர் புழு
பிரஜையை நலிந்தவரை தான் நலிந்து தனது சினம் தீருமா போலே
தான் பிறந்து
தனக்கு வேண்டிய உரு கொண்டு
தான் தன் சீற்றம் முடிக்கும்
கிருஷ்ண அவதாரம் மனசில் கொண்டு அருளிய பாசுரம்
கோபச்ய வசதீ -திருவடி மேலே பட்ட அம்பால் வந்த சீற்றம்
ஜித க்ரோத -இப்பொழுது கோப வசம் ஆனாரே
ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை -நஞ்சீயர்
துழாய் -மாலை விரோதி நிரசனதுக்கு பின் -தீர்த்தமாடி ஒப்பித்து
திருமேனியின் ஸ்பர்சத்தால் -புனத் துழாய் -ஆனதே
தன்னிலம் போலே செவ்வி பெற்று
ஒப்பனை யாலே என்னை எழுதிக் கொண்டான்
நினைக்கும் நெஞ்சை பந்தம் மோஷம் இரண்டுக்கும் மனசே காரணம்
மோஷத்துக்கே ஹேதுவான எனது நெஞ்சு
எனக்கு ஒப்பார் உண்டோ
பரம பதத்தில் -பூமியிலும் இல்லை
சம்சாரத்தில் இருந்து நினைத்து கவி பாடும் எனக்கு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply