கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.
பொ-ரை :- கற்பகச்சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களையுடையவனுக்கு, பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த அழகிய தாமரை மலர்கள்போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.
வி-கு :- கா – சோலை. அன்ன – ஒத்த. சுடர் பொற் குன்று என மாற்றுக.
ஈடு :- ஆறாம் பாட்டு. 1பெரும் புறக்கடலிலே திருப்பள்ளி கொண்டவனுடைய அவயவ சௌந்தர்யத்திலே அகப்பட்டு இவள் தன்னுடைய மெய்யினை இழந்தாள் என்கிறாள்.
கற்பகம் கா அன்ன நல் பல தோளற்கு – 2தன் அவயவங்களைக் காட்டி இவளுடைய அவயவியைக் கொண்டான். கற்பகச்சோலை போலேயாய், அவ்வளவன்றியே விலக்ஷணமான பல திருத்தோள்களை யுடையவனுக்கு. சுடர் பொன் குன்று அன்ன பூந் தண் முடியற்கு – ஒளியையுடைய பொன்மலை போலேயாய்க் காண்டற்கு இனியதாய்த் திருமுடிக்குத் தகுதியான திருவபிடேகத்தையுடையவனுக்கு. பூ என்பதற்கு, மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட என்னலுமாம். திருமுடியைக் கூறியது, எல்லா ஆபரணங்களுக்கும் உபலக்ஷணம். நல் பல நாள் தாமரை மலர்க் கையற்கு – நன்றாய்ப் பலவாய்ச் செவ்வித்தாமரைப் பூப்போலே இருக்கிற திருக்கைகளையுடையவனுக்கு. என் வில்புருவம் கொடி – வில்போலே இருக்கிற என்பெண். 3பிரஹ்மாஸ்திரத்தைக்கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது! தோற்றது மெய்யே – 4“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்” “ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10.
என்னப் பண்ணும் வடிவைக் காட்டி, 1“கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” “சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.
என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது. தன்வசப்படாத சரீரத்தையுடையவளானாள் என்பது கருத்து.
அவயவ சௌந்தர்யம் அகப்பட்டு
மெய் இழந்தாள்
அவயவம் காட்டி அவயவியைக் கொண்டான்
ஒளியை உடைத்தாய் கிரீடம்
பூ மாலைகளால் அலங்கரிக்கப் பட்டு
திருவேம்கடமுடையனுக்கு கிரீடம் பூ உண்டே
நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை போலே திருக் கரங்கள்
உன் புருவ நெரிப்புக்கு
பயப்படுபவன் பிரம்மாஸ்திரம் கொண்டு பட்டு கிடப்பாள் போலே
தோற்றது மெய்யே
எந்த வடிவை காட்டி எந்த வடிவை அபஹரித்தான்
ஒரு மாதம் ஜீவிப்பேன் -ஒருஷணம் ஜீவிப்பேன் –
காசு இழந்தவன் -பொன்னை இழந்தவன் போலே
குறைந்த அழகை காட்டி பெரிய அழகான வடிவைக் கொண்டான்
மெய்யைக் கவர்ந்தான்
எனது வசத்தில் இல்லை
மூர்ச்சையாகி இருக்க வைத்தான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.