சூர்ணிகை -94-
சாத்ய சமானம் விளம்ப அசஹம் என்று இ றே சாதனத்துக்கு ஏற்றம்
சாத்ய ப்ராவண்யம் அடியாக இ றே சாதனத்தில் இழிகிறது
சூர்ணிகை -95-
இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது
இந்த பிராவண்யம்
சூர்ணிகை -96-
மாற் பால் மனம் சுழிப்ப
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –
சூர்ணிகை -97
ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும்
சாத்தியமான எம்பெருமான் மேலில் ஈடுபாடு காரணமாக செய்யும் அதி பிரவ்ருதிகள்
சாத்திய ப்ராவண்யம் அடியாக செய்தவை
அளவற்ற ஈடுபாடு –
காமன் காலில் விழுவது நோன்பு நூற்று -பெருமை காரணமாக
எத்தை தின்னால் பித்தம் தெளியும்
சமதமாதி ஆத்ம குணங்கள் இருந்து இருந்து ஈடு பட வில்லை
உண்டாக்கிக் கொண்டு இழிய வேண்டுமா
பகவத் ப்ராவண்யம் வந்தால் இவை தன்னடையே -வருமே
சம தம -நியத ஆத்மா -அமாநித்வம் போன்ற குணங்கள்
அனுகூல சகவாஸ -சாஸ்திர அப்யாசம் -ஆசார்ய உபதேசாதிகள் -இவை போல்வன விட
பகவத் ப்ராவண்யம் தானே முக்கிய காரணம்
மூன்று பிரமாணங்கள்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
பரமாத்மா மேல் -அத்தால் இதர விஷயத்தில் விரக்தி
பரமாத்மா யோ ரக்த அபரமாத்மா விரக்தி
கண்டு -கேட்டு ஒண் டோடியாள் நீயுமாக நிலா நிற்க கண்ட சதிர் கண்டு சிற்றின்பம் ஒழிந்தேன்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு -ஐந்து இந்த்ரியங்கள்
சேர்த்தி கண்டு அங்கெ ப்ராவண்யமாய் –
அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் -கைவல்யம் கூட போக்கி விட்டேன்
சுவையோடு நாற்றமும் எல்லாம் நீயே என்கிற நிலை அடைந்த பின்பு
சேர்த்தியைக் கண்டு அங்கே ப்ரவணராய் -இதர விஷய விரக்தி தன்னடையே வரும் –
அவகாசத்தில் ஸ்வேதம் போலே
உலக்கை குற்ற வேர்வை தன்னைடையே உண்டாகுமே
வேர்வை உண்டாக்கிய பின்பு உலக்கை குத்த வேண்டாமே
ஜலத்தில் குதித்து நீச்சல் தன்னடையே கற்றுக் கொள்வது போலே –
கைங்கர்யம் செய்ய செய்ய நமக்கே ஆசாரம் அனுஷ்டானம் கொள்ள ஆசை வருமே –
பாலகனாய் பல தீமைகள் செய்து விட்டேன்
சாதனமாக நினைக்காமல் பலமாக கொள்ள வேண்டும் இந்த ஆத்ம குணங்களை
கீழே அருளிச் செய்த விஷயங்களின் தொடர்ச்சி இது –
இதர விஷய வைராக்கியம் மட்டும் இல்லை –
ஆத்ம குணங்களும் வரும்
சமம் அந்த கரண நியமம் -மனஸ் அடக்கம்
தமம் -பாஹ்ய கரணங்கள் நியமம் -இந்திரியங்கள் அடக்கம் –
இரண்டும் வேண்டுமே
தபஸ் த்யானம் ஸ்திரீ போக
பார்த்ததால் கலைந்து போக கண்ணை கட்டி
அடுத்த நாள் காலடி ஓசை -காதை அடைக்க
வாசனை அடுத்த நாள் -மூக்கை மறைக்க
நித்யம் இத்தனை நேரம் போவாள் -மனஸ் நினைக்க -கல்லை வைத்து அடைக்க முடியுமா
நின்றவா நில்லா நெஞ்சு
தமோ பாஹ்ய கரண அர்த்த விஷயமேன நியமனம்
சம சித்த பிரசாந்தி -அந்த கரண நியமம்
ஸ்ரீ பாஷ்யம் -கீதா ஸ்லோஹ வியாக்யானம் -பிரதானம் இவை இரண்டும்
கீழ் சொன்ன விரக்தி -ஹேதுத்வம் -சம தமங்கள்
இவை சகல ஆத்ம குணங்களுக்கும் உப லஷணம் –
சூர்ணிகை -98
இவை இரண்டும் உண்டானால் ஆசார்யன் கை புகுரும் –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -என்கிறபடி
ப்ராப்ய பூமி கை புகுரும்-
ஆசார்யன் கை புகுரும் இவை வந்த பின்பு
ஓன்று இருந்தால் அடுத்து தானே வரும்
ஸ்ரீ பாஷ்யம் கற்று கற்பித்து
-திருவாய்மொழி கற்று கற்பித்து
-த்வயம் அனுசந்தானம் –
திவ்ய தேச கைங்கர்யம்
ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானம் –
திரு நாராயணபுரம் குடில்
ஏதாவது ஓன்று என்றால் ஆறும் சமமா கேள்வி வருமே
ஞான மண்டபம் குடில் கட்டி இருந்தால்
ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானம் தானே வருமே -பழக ஆரம்பித்து
கோயில் தவிர வேறே இல்லையே
broad band -cell phone -tv வந்தால் அணைத்து கேட்டதும் தானே வருமே
திவ்ய தேச கைங்கர்யம்
அருளிச் செயல் ஆசை பிறந்து
பஞ்ச சம்ஸ்காரம் செய்து
த்வயம் கற்று
கால ஷேபம் கேட்டு
ஸ்ரீ பாஷ்யம் இது கொண்டு சூத்திர வாக்கியம் ஒருங்க விடுவார்
ஓன்று மேலே மேலே கூட்டிப் போகுமே பரம்பரையாக
சமுத்ரம் -இறங்க கையில் தள்ளாதா -அதுவே உள்ளே கூட்டிப் போகுமே-
பகவத் ப்ராவண்யம் அடியாக இது கிட்டி -இவ்வாதம குணம் கண்டு
இதன் அடியாக அனைத்தும் கை புகுரும்
ஆசார்யன் இவனுக்கு வஸ்யமாகை
இது இருக்கா பார்க்க தான் எம்பெருமானார் திருக் கோஷ்டியூர் 18 தடவை நடக்க –
ஆத்மகுணம் இருந்தால் ஆசார்யன் உகந்து -கூட்டி அங்கீகரிப்பார்
பெரிய திருமந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து
ப்ரஹ்ம வித்தை பெற -சாந்தி தாந்தி வேண்டுமே
உபபன்னாயா பிரசாந்த சித்தையா -சமான்விதாயா -ப்ரோவாசா –
அஹங்காரியான சிஷ்யருக்கு உபதேசிக்க கூடாது –
முத்தரை வைக்கும் முன் பரிட்ஷை வைத்து
திருக் கோஷ்டியூர் பரிட்சை செய்தது தப்பு இல்லையே
சொல்வதை கவனித்து கேட்க வேண்டுமே
எல்லாம் புரிந்ததா வால் மட்டும் நுழையவில்லை கதை போலே இல்லாமல்
உபாசனம் பண்ணுபவன் -சம தமம் போலே இல்லை -அது அஷ்டாங்க யோகம் பர்யந்தம்
ஸ்ரவணதுக்கு வேண்டியவை மட்டுமே
திரு மந்த்ரம் கை புகும் -இது ஆசார்யன் ஆதீனம்
நெஞ்சிலே பதியும் -அர்த்தத்துடன்
ப்ரஹ்மத்தை அறிந்தவன் பிராமணன்
வெறும் நூல் மட்டும் விலை செல்லாது
ப்ரஹ்ம வித் -ஆசார்யன்
மந்திர அதீனம் இட்ட வழக்கு ஈஸ்வரன்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்தி பூர்வகமாக ப்ராபகன் ஆகிறான்
திருமந்தரம் அறிந்தவன்
உன்னுடைய திரு உள்ளம் மகிழ உனக்கு கைங்கர்யமே இஷ்டம்
இஷ்டம் அநிஷ்டம் -இந்த அதிகாரக்கு அறிவோமே
ஈஸ்வரன் கை புகுந்த பின்பு
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கை அதுவே
1973-பகவத் விஷயம் அச்சு போடபொறுப்பு 1 லஷம் -19 வயசில் கொடுத்தார் காஞ்சி ஸ்வாமிகள்
சவரன் 400
இன்று 50 மடங்கு
நாலாம் பத்து முடியும் பொழுது advance கேட்டு
முடித்தால் கொடுப்பேன்
late ஆனது
மற்றது கை அதுவே கண்ட உடன் மற்றது கை அதுவே –
தைவாதீனம் ஜகத் சர்வம்
உபய விபூதியும் ஈஸ்வரன் இட்ட வழக்கு தானே
பிராப்ய பூமியும் கிட்டுமே
பகவத் ப்ராவண்யம் இது வரை கூட்டிப் போகுமே
ஆரோக க்ரமம்
அவரோக க்ரமம் அடுத்து சொல்லி
சூர்ணிகை -99
பிராப்ய லாபம் பிராபகத்தாலே
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே
திரு மந்திர லாபம் -ஆசார்யனாலே
ஆச்சர்யலாபம் -ஆத்ம குணத்தாலே
வாக்ய குரு பரம்பரை -கீழே -இருந்து -ஆரோக க்ரமம்
ஸ்லோக குரு பரம்பரை -அவரோக க்ரமம்
பிராப்ய லாபம் -பிராபகத்தாலே
ஸ்ரீ வைகுண்டம் எம்பெருமானாலே தானே
பிராபக லாபம் -திரு மந்தரத்தால் -இது ஆச்சர்யனாலே -இது ஆத்ம குணத்தாலே
அவஸ்யம் இவை இரண்டும் உண்டாக வேணும் என்பதால்
மீண்டும் மீண்டும் அருளி
ஈச்வரனே பிராபகம் -உபாயன் -வழி
அவனே பிராப்யமும்
சூர்ணிகை -100
இது தான் ஐஸ்வர்ய காமருக்கும்
உபாசகருக்கும்
பிரப்பன்னர்கும்
வேணும்-
இவை ஐஸ்வர்ய காமர்க்கும்
உபாசகருக்கும்
பிரபன்னருக்கும்
வேணும்
சாதன அனுஷ்டான வேளையில் இவை வேண்டுமே
வாயவ ஹோமம் செய்பவன் -இந்த்ரியங்களை முதலில் அடக்கி தான் செய்ய வேண்டும்
திருஷ்டாந்தம்
லோகத்தில் பணம் சம்பாதிக்க –
சௌக்யமாக இருக்க கஷ்டப்பட்டு படித்து –
வேடிக்கை கதை
வெறுமனே பொழுது போக்க -படித்து -என்ன செய்வன்
பணம் சம்பாதித்து
நிம்மதியாக இருக்கிறேன்
retire ஆனால் ஹாயாக பொழுது போக்கலாம்
அதை இப் பொழுதே செய்கிறேனே என்றானாம்
சாதன அனுஷ்டானம் வேளையில்
ராவணன் -மண்டோதரி வார்த்தை
இந்த்ரியங்களை அடக்கி மூன்று லோகம் வென்றாய்
அவை வன்மம் தீர்க்க உன்னை படுத்தி இப்படி ஆனாயே
ஐம்புலன் வென்று ஆழ்வார்
உபாசகர் -வித்யைக்கு அங்கமாக அஷ்ட அங்கம் வேண்டுமே -முதலில் சமம் தமம்
தஸ்மாத் எவம் வித் சாந்தோ தாந்தோ
ஞான நல சுடர் -புன புல வழி அடக்கி இலச்சினை செய்து -seal வைக்க
நன்புல வழி -திரு மழிசை ஆழ்வார்
ஏகாந்தி கிருஷ்ண பிராப்தௌ -பிரமாணம் –
ஐந்து அடக்கி ஆசை யாமவை துவக்கு அறுத்து –
அனைவருக்கும் வேணும்
சூர்ணிகை -101-
வைத்துக் கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு
சூர்ணிகை -102-
மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும்
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்
இவனுக்கு இது ஆதிக்யம் சொல்லவே அல்லாதவரை இங்கே காட்டி
மற்ற இருவருக்கும் நிஷித்த விஷய நிவ்ருத்தி
மற்றவர் இடம் உள்ள ஆசை விட்டால் போதும்
இதர விஷய வைராக்கியம்
பிரபன்னனுக்கு சாஸ்த்ரத்தில் அனுமதி உள்ளவர் இடமும் விரக்தி வேண்டும்
நிரடல் –
உயர்ந்த ideal இது
ஐஸ்வர்யம் = நியமன சாமர்த்தியம்
இஷ்டப்படி நியமித்து அனுபவிக்க –
பதவி மேல் ஆசை -அதற்கும் ஐஸ்வர்யம் பெயர்
எல்லை மேலே மேலே போகும் hitlar
ராவணன் மகா பலி மூன்று லோகங்களும் நியமிக்க ஆசைப்பட்டு
சாஸ்திர நிஷித்த பரதாராதி விஷய நிவ்ருதியே அமையும்
பிரபன்னனுக்கு சுதாரத்தில் கூட நிவ்ருத்தி வேணுமே
தர்ம புத்யா பிரவ்ருத்தி சாதன தசையில் கூட இல்லை
ஆசை உடன் அணுக கூடாது
க்ரஹ்ச்த ஆஸ்ரமம் -நிராசமம் -ஆஸ்ரமம் இல்லாமல் இருக்க கூடாது
வயசானால் கூட மறு கல்யாணம் செய்தார்கள்
நைஷ்டிக பிரமச்சாரி இவர் -பிள்ளை லோகாச்சார்யர் -நாயனாரும்
ப்ரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருது தன்னேற்றம்
போக்ய்தா புத்தி வேறு ஒன்றில் கூடாதே
பகவத் விஷயம் அனுபவம் ஒன்றிலே
கைங்கர்ய புத்யா செய்யலாமே தர்ம புத்யா இல்லாமல் -விசேஷ தர்மம் -இது
போக்யதா புத்தியால் இழியாமல் கைங்கர்யா புத்யா செய்யலாம்
சூர்ணிகை -103
இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும்
சிலர்க்கு அருளாலே பிறக்கும்
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும்-
அழகை பார்த்து வைராக்கியம் பிறக்கும்
அருள் -அனுக்ரக்கத்தால் பிறக்கும்
சிலருக்கு ஆசார்யத்தால்
பக்தி பரவசர் ஆழ்வார் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் -போதரே -தன பால் ஆதாரம்
பெருக வைத்த அழகன்ப்ர் அரங்கன் -கண் அழகு கொண்டு
மழைக்கு அன்று
வலையுள் பட்டு அழுந்துவேனை நோக்காமல்
உன்னை அழைக்கின்றேனே
கல்லாலே வந்த ஆபத்தை கல்லாலே போக்கினாய்
கண்ணாலே வந்த ஆபத்தை கண்ணாலே போக்க வேண்டாமோ –
சௌந்தர்ய அனுபவத்தால்
ஞானாதிக்ய பிரபன்னர் -அருளால் பிறக்கும்
அனுபவிக்க இட்டுப் பிறந்த வஸ்து அனர்த்தப் படுவதே பரம கிருபை
நம் போல்வாருக்கு
பூர்வாச்சார்யர் ஆசார்யம் அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும்
சூர்ணிகை -104
பிறக்கும் க்ரமம் என் என்னில்
அழகு -அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் -அருசியை விளைக்கும்
ஆசாரம் -அச்சத்தை விளைக்கும்
அழகு அஞ்ஞானம் விளைக்கும்
சித்த அபஹாரி ஆகையாலே
விஷயாந்தரங்கள் அறிய முடியாமல் போக்கும்
அருள் -அருவருத்து -வைராக்கியம்
ஆசாரம் -அனர்த்தமே உண்டாக்கும் அச்சம்
ஓர் இருவர் உண்டாகில் இவை -உண்டாகும்
சூர்ணிகை -104
இவையும் ஊற்றத்தை பற்றி சொல்கிறது
இவர்களுக்கு ஊற்றம் அதிகம்
அதாவது
விரக்தி ஹேதுக்கள்
சாஷாத்கரித்து -அனுபவிப்பதால் அழகே உறைத்து இருக்கும்
ஆசார்யர் -அர்ச்சாவதார அனுபவம் -கிருபை -அருசிக்கு அடியான கிருபை உறைத்து இருக்கும்
அஞ்ஞான பிரபன்னருக்கு எப்பொழுதே சேவித்து
கிருபையும் உண்டாகி இருக்க செய்தே
பூர்வர் ஆசார்யர் ஆசாரமே அனுஷ்டித்து போவதால் இது ஊன்றி இருக்கும்
கறைவைகள்
அறிவு ஒன்றும் இல்லா ஆய்க் குலம்
இடையர்கள் போராட்டம் செய்வார்கள்
ஆண்டாள் அருளியது
ஜாதி குறிப்பிட்டு சொல்ல கூடாதே
ஞானம் எனபது சிறிதும் இல்லாத கோபாலர் -சொல்லினால் தப்பு இல்லை
புரியாதபடி சொல்ல வேண்டும்
அத்யந்த பாரதந்த்ர்யம் வேண்டும் -அநந்ய போக்யத்வம் -வேண்டுமே
விகித விஷய நிவ்ருத்தி வேண்டுமே பிரபன்னனுக்கு
அபத்னி-பிரமசாரியும் சஞாசியும் யாகம் செய்ய கூடாது அபத்னி பட்டர் கொடி ஏற்ற கூடாது
அஸ்வமேத யாகம் செய்ய பெருமாள் யோக்யதை இல்லை
சீதை பிராட்டி போலே தங்க பிரதிமை செய்து ஆவாகனம்செய்த்து செய்ய சொல்லி
சபத்நியாக இருப்பாரையே பிரமணார்தம் இருக்க -தீட்டு கூட இருக்க கூடாது
சாஸ்திரம் விதித்து இருக்கிறது
பிரபன்னனுக்கு சு தார போக்யமும் கொள்ளக் கூடாது
தர்ம புத்யா ப்ரவர்த்தியும் குற்றம் தான்
வடக்கு திரு வீதி பிள்ளை இடம் கைங்கர்யமாக சந்நிதி
வர ஒரு நாள் கூடி இருக்க நியமித்தார் நம்பிள்ளை
விசேஷ தர்மம் கைங்கர்யம் தானே-
சூர்ணிகை -105-
அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் –
அழகு கண்ணில் பட வேற ஒன்றும் அழகாக தோன்றாதே
அருள் -அருசியை பிறக்கும் எம்பார் போல்வாருக்கு
-ஆச்சாரம் அச்சம் -விளைக்கும்
இவையும் ஊற்றத்தை பற்ற சொல்கிறது
முக்கிய காரணம் இது -மற்றவையும் உண்டே –
அருசி -உலகியல் வாழ்வில் ஈடுபாடு இன்றி -தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும்
வெறுப்பு ஏற்பட வஸ்துவில் தோஷம் இருக்க வேண்டுமே –
சம்சார அனுபவம் குற்றம் உண்டே அல்பம் அஸ்தரம் -போல்வன உண்டே
ஐந்து புலன்கள் –
நாக்கு ரசம் -வஸ்து நாக்கில் இருக்கிற அளவு தான்-
சூர்ணிகை -106-
அது பிரதான ஹேது அன்று
சூர்ணிகை -107
அப்ராப்ததையே பிரதான ஹேது
மின்னின் நிலை இல -ஆக்கைகள்
இருப்பது போலே பிரமம் உண்டாக்கி –
தோஷ தர்சனம் செய்து -அருசி பிறக்குமா
விஷய வை லஷண்ய -அதிசயத்தாலே -பகவத் விஷயம் அறிந்து
விஷயாந்தர அஞ்ஞானம் விளையக் கூடும் –
அபிமத விஷயம் அச்சம் -பிறக்கலாம்
அருசி பிறக்கை கஷ்டம் தானே
அருள் வேண்டும் இது பிறக்க
இதற்க்கு தோஷம் -தர்சனம் அபேஷிதம்
ஸ்திரீ அணைத்து –சீயும் வேண்டா நாற்றம் மிகு உடல்
தோலை வைத்து மூடி -திண்ண அழுந்த கட்டி
பிரத்யஷ பிரமாணங்களால் தர்சிக்கை
அது கூட -தோஷ தர்சனம் கூட -பிரதான ஹேது இல்லை
அப்ராப்த்யையே ஹேது
தகுதி இல்லை இவனுக்கு
ஸ்வரூபத்துக்கு சேராது என்பதே பிரதான காரணம்
-பிராப்தி ஏற்றது தகுதியானது
-அப்ராப்தம் தகாது -தோஷம் இல்லை -என்றாலும் கூடாதே
பகவத் ஏக போகம் என்பதருக்கு சேராதே
அருசி உண்டாக்கினாலும் அப்ராப்தி என்பதையே முக்கிய காரணம்
தோஷ தர்சனம் secondary
சூர்ணிகை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று –
பகவத் விஷயத்தில் இழிவதும் குணம் கண்டு இல்லை
பிராப்தி என்பதால் தான்
பாகவத சேஷத்வம் வருவது கஷ்டம்
நஞ்சீயர் -பகவத் விஷயம் விட்டு இங்கே வருவது
விஷயாந்தர தோஷம் கண்டு
அதுவோ ஆரா அமுதம் -விட்டு போவது
எத்தை சொல்லி இதை கழிப்பது
கையை பிடித்து -காலை பிடித்து கார்யம் கொள்ளுவது போலே என்று சொல்வார்
ஸ்வரூப பிராப்தம்
குணம் இருக்க பார்க்க கூடாது
பர்த்தா பார்யை போலே அற்று தீர்ந்து இருக்க வேண்டும்
குணத்தோடும் கூடி இருக்கிறது-
வகுத்த விஷயம் என்பதால் பற்றுகிறோம்
சூர்ணிகை -109-
இப்படி கொள்ளாத போது
குண ஹீனம் என்று நினைத்த தசையிலே
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அநுசந்தான தசையிலே
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும் கூடாது –
சூர்ணிகை -110-
கொடிய வென்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இ றே –
இப்படி கொள்ளாத பொழுது
கடியன் கொடியன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
சம்சாரத்தில் குறை அறிவோம் –
இதர விஷயத்தில் அருசிக்கு காரணம் தோஷ தர்சனம் என்றும்
பகவத் விஷயத்தில் ருசிக்கு காரணம் குணம் என்றும் இருந்தால் –
அவன் முகம் -காட்டாலும் அவன் என்றே இருப்பார்கள் -சேராதே
சம்சாரத்தில் -மாதா பிதாக்களும் -துக்க பிரத்யஷமாக அறிந்தும் -விடாமல்
வம்புலாம் கூந்தல் மனைவியை துரந்து -செம்பினால் எரியும் பாவையை பாவி தழுவு என்பர்
அதுக்கு பெரிய q -நாம் போகும் பொழுது ஜில் ஆகி விடும் -சொல்லி தப்பு செய்கிறார்கள்
தோஷ தர்சனம் கண்டும் பிரவர்தியில் இருந்து மீளுகிறது இல்லையே
அபிநிவேசம் மறந்து
செல்லாமல் தத்வ வித்துக்கள் மக ரிஷி தொடக்கமானவர்கள்
விச்வாமித்ரர் போல்வார் –
வியாசர் -சாமான்ய தர்மத்தில் புத்தி பண்ணி -சம்சாரத்தில் பிரவர்த்தி செய்து
ஆழ்வார்கள் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
கடியன் -சு கார்யம் செய்து கொண்டு
கொடியன் பிறர் நோவு அறியான் மாயத்தான் எட்டாதவன் வஞ்சகன்
ஆகிலும் அடியேன் நான் நீ என்றே இருப்பேன்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -கரும்பைக் கண்டாலும் விரும்பாதே -அப்ராப்தம் என்பதால்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
நீ வேம்பு போலே இருந்தாலும் உனது திருவடிகளை அன்றி மற்று அறியேன்
கடல் மலை கிடந்த கரும்பே –
சூர்ணிகை -111-
குணா க்ருத தாஸ்யத்தில் காட்டில்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இ றே
பிரதானம் –
குணத்தை இட்டே இ றே ஆழ்வாரை கொண்டான்
குண தாஸ்யம் உபாகத
அஹம் அஸ்ய
ராமனுக்கு நான் பின் பிறந்த
தம்பி குணங்களால் அடிமை -சாதாரணமான அர்த்தம்
செய்கிறேன் குணங்களுக்கு தோற்று
அடியவன் அசய -அவனுக்கு நான் தம்பி
அவன் அபிப்ராயத்தால் தம்பி
நான் அவனுக்கு அடிமை -என்கிறார் இளைய பெருமாள்
குகன் கேட்க இளைய பெருமாள் அருளிய வார்த்தை
அவன் தம்பி என்று நினைக்க நான் வேலைக்காரன் என்றாரே
குணத்துக்கு தோற்று அடிமை
அதை விட ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் சிறந்ததே –
சூர்ணிகை -112-
அநசூயைக்கு பிராட்டி அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது
ஸ்வரூபத்தால் தாஸ்யம் இருந்தாலும் குணம் பிரிக்க முடியாதே
ஔ பாதிகம் குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -முக்கியம்
அர்த்தங்களை நெஞ்சில் பட எடுத்துக்காட்டுகள் காட்டி ஆசார்யர்கள்
அநசூயை பிராட்டி -அத்ரி பகவான் ஆஸ்ரமம்
பிராட்டிக்கு அலங்காரம் செய்து வார்த்தை பேச –
பெருமாள் பின்னே காட்டில் போனது
பந்து -ஜனம் அபிமானம் விட்டு ஐஸ்வர்யம் விட்டு
தெய்வ யோகத்தால் கூடி
பெருமாள் வனத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும்
நல்ல வரோ கெ ட்டவரோ வெறுக்க கூடாது
பெருமாள் விஷயமான அனுகூலித்து போக வேண்டும்
பிராட்டி -ச்வகதா பாவ பந்தம்
எனக்கு குணவாளர் என்பதால் இல்லை குணாதிகர் என்பதால்
அவருக்கே அற்று தீர்ந்தவள்
காட்ட முடியாது குணங்களை பிரிக்க முடியாமல்
இதை காட்டவே அக்னி பிரவேசம்
சூர்ணிகை -113-
பகவத் விஷய ப்ரவ்ருத்தி பின்னை சேருமோ வென்னில்
அதுக்கடி பிராவண்யம்
அதுக்கடி சம்பந்தம்
அது தான் ஔபாதிகம் அன்று
சத்தா ப்ரயுக்தம் –
மடல் எடுத்தல் போல்வன சேருமோ இப்படி என்றால் –
கீழ் சொன்னவை பிரசாங்கிகமாக கொண்டு மீண்டும் அதே விஷயம் அருளுகிறார்
அவனே -உபாயம் அநந்ய உபாயத்வம் குலையும் படி நோன்பு செய்தல் பிராண த்யாகம் செய்தது சேருமோ
அதுக்கடி பிராப்வண்யம் -அதுக்கடி -சம்பந்தம் அதுக்கடி சத்தா பிரயுக்தம்
அபிமாத்ர -ப்ராவண்யம் பண்ண கூடாத செயல் செய்கிறார்கள்
பிராவண்யம் -விஷய வை லஷண்யம் இல்லை -சம்பந்தம் என்கிறார் இங்கு
குணம் இல்லாவிடிலும் செய்ய வேண்டுமே
சம்பந்தம் சேஷ சேஷி பாவம் -நவ வித சம்பந்தங்கள் உண்டே
பிதா–ரஷகன் -சேஷி -பர்த்தா -ஸ்வாமி -ஆதாரம்-ஆத்மா -போக்தா
காரணத்தால் வரும்
-கர்மம் அடியாக பார்யை -பர்த்தா
இயற்கையாக அவன் உடன் சம்பந்தம்
சத்தா பிரயுக்தம் ஆத்மா உடைய சத்தை யே -பிடித்து
சூர்ணிகை -114-
அந்த சத்தை ப்ராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும்
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய் –
ப்ராப்தங்களுமாய் –
இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் –
ஆத்மாவின் சத்தையே பிடித்து உள்ளது
சம்பந்தமும் நித்யம்
ஆத்மா நித்யம் என்பதால்
சத்தை போலே பிராவண்ய கார்யம் நித்யம்
அனுபவம் இல்லாத பொழுது சத்தை குலையும்
அது குலையாத படிக்கி அதி பிரவர்த்தி தவிர்க்க முடியாதே
நப்பின்னை -பிராட்டி அடைய அவனே கரு மாரி பாய்ந்தாகிலும் அடைய
முயன்றானே விஷயத்தில் -ஈடுபாடு எதுவானாலும் செய்யலாமே
ஈட்டி குளத்தில் வைத்து குதிப்பார்
கொண்டாட தக்கதாக இந்த அதி பிரவர்த்தி கார்யம்
இது பிராப்தமாகவும் இருக்கும்
பகவத் விஷய அதி பிரவர்த்தி சேரும் உபேயத்துக்கு இவை எல்லாம் சேரும்
இளைய பெருமாள் திருக்கண்ண மங்கை ஆண்டான் அரையர் பெரிய உடையார்
போன்றவர் செய்தவை சேரும்
இல்லாத பொழுது ஆத்மாவே அழியுமே
மடல் எடுத்தல் போன்ற -பலவும் தவிர்க்க முடியாதவை
ப்ரீதி உடன் செய்யும் கார்யங்கள் இவை –
எம்பெருமான் உகப்பான்
சேஷிக்கு அதிசயம் விளைக்கும்
சங்கை இத்தால் நீக்கி அருளுகிறார்
நான்கு பிரகரணங்களில் முதல் பிரகரணம் முடிந்தது
ஒன்பதில் இரண்டாவது பிரகரணம் முடிந்தது
ஸ்வரூபத்துக்கு சேராது
வேறு ஒன்றை உபாயமாக கூடாது தோஷம் என்பதால் இல்லை
பிரபகாந்தரம் ஸ்வரூபதுக்கு சேராதே
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்பதை விவரிக்கிறார் -அடுத்து
——————————————————————————————————————————————————————————
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .