ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதார பிரயோஜனம் -வி நாசாய துஷ்கரம்
இனி தர்ம சம் ஸ்தானம் மோக்ஷ பிரதம்

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-

(பேரருளாளன் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி -திரு ஹஸ்திகிரி நாதன் தானே
தொழுது எழு-ஆஸ்ரயித்து உஜ்ஜீவி
தொழுது எழு மனனே-நம்மாழ்வார்
தொழா விட்டால் விழுவோம் -தொழுதால் எழுவோம் )

வியாக்யானம் –

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு
இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே
நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –

நீர் உறுதியாக சொல்லும் காட்டில்
அவர் நம் விரோதியைப் போக்கி
நன்மையை தருமோ என்ன-

பிணி இத்யாதி
நம் விரோதியையும் போக்கி
பரம பதத்தையும் நமக்குத் தரும்

ஒரு கால் ஆஸ்ரயித்த மாத்ரத்திலே
நம் விரோதியைப் போக்கி
நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும்
பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-(எளிமையும் பரத்வமும்)

அணி இத்யாதி –
கிருஷ்ணன் படியாய் ஆயிற்று ஜலத்தின் உடைய செருக்கும் இருப்பது
மலராலே அணியப்பட்ட குழலை உடையராய்
அப்சரஸ்கள் உடைய பரிவட்டத்தையும் ஹாரத்தையும் வாரி
அணிகிற நீர் என்னுதல்
அழகிய நீர் என்னுதல்
இவற்றைத் திரட்டிக் கொண்டு தர்ச நீயமான நீரானது
ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு
வந்து இழியா நின்றுள்ள
வதரி யாஸ்ரமத்து உள்ளானை –

தொழுது எழு -என்கிற இது
இத் திரு மொழிக்கு எல்லாம் கிரியை-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading