திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

  பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.

பொ-ரை :- பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள் செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கல்வியை இழந்தாள்.

வி-கு :- மண் – அணுக்கள். “மண்திணிந்த நிலனும்” என்பது, புறம். (செய்-2.) கற்பு – கல்வி.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 2வேதங்களைக் கொடுத்தல் முதலான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்மகள் கல்வியினை இழந்தாள் என்கிறாள்.

பண்புடைவேதம் – 3ஈசுவரனை உள்ளபடியே காட்டித் தரும்

நீர்மையையுடைய வேதம். பயந்த – 1தூங்கினவன் எழுந்தான் என்ற கணக்கிலே பிரமனுக்குக் கற்பிக்கை.

இவ்விடத்தில்

ஸம்ஸ்காரம் ப்ரதி ஸஞ்சரேஷு நிததத் ஸர்கேஷு தத்ஸ்மாரிதம்
ரூபம்நாமச தத்ததர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத
ஸு ப்தோத்புத்த விரிஞ்சபூர்வஜநதாம் அத்யாப் யதத்தத்திதம்
சாஸந்நஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத்வேதா: பிரமாணம் தத:–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 17-வது சுலோகம் அநுசந்தேயம்.

பரனுக்கு-2“அந்தப் பகவான் உலகங்களைப் படைப்பதற்கு முன்பு பிரமனைப் படைத்து அவனுக்கு வேதங்களை உபதேசித்தார்” யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி   தஸ்மை” என்பது. இது, ஸ்வேதாஸ்வதரம்.-

என்கிறபடியே, மேற்பாசுரத்தில், “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்பதனையும்,
இப்பாசுரத்தில் “யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை”
என்பதனையும் சொல்லுகிறது என்று அருளிச்செய்வர்

பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கையாலும், வேதங்களிலேயே அறியப்படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக்காட்டிலும் மேலானவனுக்கு. 3அறிவு இழய்தார்க்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான். மண்புரைவையம் – மண்மிக்க பூமி. இடந்த வராகற்கு

ஸ்திதே மனஸி ஸு ஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமகம்.

  ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம்.– என்பன வராக சரமம்.

4மண்ணோடு விண்ணோடு வாசி அறத் தன்முகத்தால் ரக்ஷித்தபடி. 5பிறருடைய சொரூப சித்திக்காகத் தன்னை அழியமாறுமவன். 6அழிவுக்கு இட்டவடிவுக்கு ஆலத்தி வழிக்கவேண்டும்படி யன்றோ இருப்பது. 1“மானமிலாப் பன்றியாம்தேசு” –நாய்ச்சியார் திருமொழி, 11. 8,-என்னக் கடவதன்றோ. 2“மண் மிகுதி சொல்லிற்று, எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக. வராகற்கு 3அல்லாத ரக்ஷணம்போல் அன்றியே, எல்லார்க்கும் ஏற முக்கியமான ரக்ஷணம் இதுவன்றோ. 4“எயிற்றிடை மணகொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்” என்கிறபடியே, பெரியாழ்வார் திருமொழி, 5. 2 : 3. ‘இவளைப் போன்றோர்க்கு’ என்றது, பெரியாழ்வாரை.

இவளைப் போன்றார்க்கு ஞானத்தைக் கொடுக்கிறவன் இவளை அறிவு அழித்தான்.

தெண் புனல் பள்ளி – தெளிந்த புனலையுடைய ஏகார்ணவத்தைப் படுக்கையாகவுடையவன். 5அழிந்த உலகத்தைப் படைத்து, படைக்கப்பட்ட சேதநர்க்கு அறிவு கொடுக்கக் கிடக்கிறவனுக்கு. 6சத்தையே பிடித்து உண்டாக்கி அறிவு கொடுக்கக்கடவ அவன்கண்டீர் உண்டான அறிவினை வாங்கிக்கொள்ளுகிறான்! எம் தேவபிரானுக்கு – பிரமன் சிவன் முதலானவர்கட்கும் உபகாரகனானவனுக்கு. 1“ஈசுவரோஹம்” என்று இருந்தாளாகில் அறிவு இழக்கவேண்டா கண்டீர்! என் கண் புனை கோதை – 2கண்டார் கண்கள் பிணிப்பு உண்கையாலே, அவற்றை ஆபரணமாகவுடைய மயிர்முடியையுடையவள்.

பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையாம் என்று நின்றாள்
  கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே நீண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக் கென்றாள்.-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப்படலம்.

அதாவது, வைத்த கண் வாங்க ஒண்ணாதிருக்கை, கண்களுக்கு விஷயம் தலையாய்விட்டது. இழந்தது கற்பே – எல்லார்க்கும் ஞானத்தைக் கொடுக்கக்கூடியவனான அவனுக்குங்கூட அறிவினைக் கொடுக்கும் இவள் கண்டீர் அறிவினை இழந்தது! 3“இராஜாக்களின் இலக்ஷணங்களை அறிந்தவளே” அன்றோ. தேவகார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்டசேதநா
அபிஜ்ஞா ராஜதர்மாணாம் ராஜபுத்ரம் ப்ரதீக்ஷதே”–
என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.

ஈஸ்வரனை உள்ளபடி காட்டும் வேதம்
நீர்மை உடையவை
பரன் இவன் ஒருவனே
ப்ரஹ்மாவுக்கு வேத சஷுஸ் கொடுத்து
சர்வ ஸ்மாத் பரன்
அறிவு இல்லாதவர்க்கு அறிவை கொடுத்தவன் இவள் அறிவை பரித்தான்
மண்-விண் வாசி அர முக பேதென ரஷித்து
வேதம் கொடுத்தது விண்ணை ரசித்து 
வராஹ முகத்தால் இங்கு மண்ணை
அழிய மாறி
அழிவுக்கு இட்ட அழகுக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி அவதாரம் –
காந்தாரி குந்தி
யானை தங்கத்தால் பூஜிக்க
குந்தி மண்ணால் பூஜிக்க
யானை விளக்கு இன்றும் ஏற்றுவார்கள் -மண்ணால் செய்து
திருநாராயணபுரத்தில்
மூன்றாம் நாள் ஜலத்தில் சேர்த்து
மானமில்லா பன்றியாய் தேசு -உபமானம் இல்லாத
மண் மிகுதி சொல்லிற்று எடுக்கையில் அருமை சொல்ல
ஆழ்வார் -எய்ற்றில் மண் கொண்ட ஞானம் பிரதானம்
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே 
பாழியான் அருளே
இவளோட்டை பூமிப்பிராட்டி -வராஹ சரம ச்லோஹம்
அழிந்த ஜகத்தை சிருஷ்டித்து
சேதனர் கார்யம் செய்ய ஏகார்ணவம் -ஆதி சிருஷ்டி ஒரே ஆர்ணவம்
அறிவு கொடுக்க
சத்தியே பிடித்து உண்டாக்கி
இவளுக்கு சத்தையை அழிக்க பார்க்கிறான்
தேவ பிரான் -ஈச்வரோஹம் ப்ரஹ்மாதிகள் -போல்வாருக்கும் அறிவு கொடுத்து 
அஹங்கரித்தால் ஞானம் கிடைக்கும்
நான் உனக்கு அற்று தீர்ந்தேன் தாசோஹம் என்றல் அறிவு இழக்க
தாயார் வார்த்தை
கண்டார் கண்கள் -கோதை -கூந்தல் உடையவள்
மாலை அர்த்தமும் கோதை
வைத்த கண் -வாங்காமல் கண்களுக்கு விஷயம் தலையாய் இருக்க
இருவரையும் திருத்துவது உபதேசத்தால்
வைதேகி -அவிஞ்ஞா ராஜா தர்மாணாம் -பெருமாளுக்கும் உபதேசித்து
இப்பொழுது
கற்பு கல்வி கற்கப்படுவது ஞானம் இழந்தாள்

கற்பு – கல்வி, அதாவது, ஞானம்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading