பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்குஎன்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.
பொ-ரை :- பெருமைபொருந்திய பிரமனை உண்டாக்கினவனுக்கு, செல்வம்பொருந்திய பூமியை அளந்த மணவாளனுக்கு, உலகத்தையுடையவர்களான பாண்டவர்களுக்குத் தூதுசென்ற நம்பிக்கு, என்னுடைய, பரப்புப் பொருந்திய அல்குலையுடைய பெண்ணானவள் பண்பினை இழந்தாள்.
வி-கு :- மணாளன் என்பது, மணவாளன் என்பதன் திரிபு. பாடுடை அல்குல்: அன்மொழித் தொகை.
ஈடு :- நான்காம்பாட்டு. 2பிரமனைப் படைத்தவன் என்னும் மேன்மையைப்பாராதே தன்னை அடைந்தவர்களுக்காகத் தூதுசென்ற மஹாகுணத்தையுடையவனுக்கு இவள் நீர்மையை இழந்தாள் என்கிறாள்.
பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு – 3பதினான்கு உலகங்களையும் படைக்கவல்ல பெருமையையுடைய பிரமனைப் படைத்தவனுக்கு, பீடு – பெருமை. மாடு உடை வையம் அளந்த மணாளற்கு – திருவுலகு அளந்தருளின வஞ்சனை பொருந்திய செயலாலே 4தன்னை எனக்கே யுரியவனாகச் செய்தவனுக்கு.
மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்; ‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல். நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு – நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூதுபோய் அதனாலே பூர்ணனானவனுக்கு. 1பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும். 2“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனா தியர்களாக இருக்க. “ஈ இருக்குமிடமெனினும் இப்புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”
என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.) குறிச்சி – குப்பம்; சிறிய ஊர்.
3“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச் செய்யத்தக்க செயலைச் செய்து முடித்தவரானார்” அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.
என்றது போன்று. ‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள். 4அடியிலே உலகத்தை உண்டாக்கி, அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழிதொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி இவள் நீர்மையைக் கவர்ந்தான். என்பாடுடை அல்குல்-இடமுடைத்தான நிதம்பப்பிரதேசத்தையுடையவள். பாடு – இடம். 5“திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்” பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-என்பது, பாரதம்.
என்பது போன்று, ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.1அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.
புண்ணவாம் புலவு வாட்கை பொலன்கழல் புனைந்த பைந்தார்க்
கண்ணவாம் வனப்பி னாளைக் காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப் படாமுலைப் பரவை அல்குல்
பெண்ணவா நிற்கு மென்றால் பிணையனாட் குய்தல் உண்டோ?–என்பது, சிந்தாமணி. 1528.
“ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பதுஅச் சழக்கி நாமமே”-என்பது, கம்பராமாயணம், தாடகை வதைப்பட.
அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.
சதுர முகன் ச்ரேஷ்டா
வையம் அளந்து
தூது சென்று
மேன்மை உடையவன் நீர்மை காட்டி
இவள் நீர்மை இழந்தாள்
பீடு உடை -சதுர முகனுக்கு பெருமை அவனால் படைக்கப் பட்டதால்
மாடுடை வையம் செல்வம் வசுமதி
பரப்பை உடைத்தான இடம்
உலகு அளந்த -காட்டி அடிமை ஆக்கிக் கொண்டான்
பாண்டவர் தூதன் பரிபூர்ணன் ஆனான்
நாடுடை மன்னர் பாண்டவர்
நாடு இல்லாத காலத்தில் தூது
பகவத் அபிப்ராயத்தால் சொல்லுகிறார்
இவர்களுக்கு தான் சொந்தம் உரியது அவன் முடிவு பண்ணி விட்டான்
குரிச்சி கிராமம் கொடுக்க மாட்டோம் –
இலங்கை -விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் கடல் கரையிலே செய்து அருளி –
அன்றே முடிவு செய்தார் பெருமாள் -அது போலே நாடுடை மன்னராக விபீஷணன் ஆனானே –
நம்பிக்கு பூரணன் இன்னார் தூதன் என்ற செயலால் இட்ட சட்டை மீறும் படி
பீறும் படி பூர்ணன் ஆனான்
இன்னார் தூதன் -நின்றான் -இப்பொழுது தான் தரித்து நின்றான்
நின்றான் -அவதாரம் எடுப்பதில் இருந்தும் நின்றான்
இதுக்கு கீழே சௌலப்யம் காட்ட முடியாதே
அடியிலே ஜகத்தை உண்டாக்கி –
அபஹரித்தார் உண்டாகில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
ஆஸ்ரிதர் வாழ தான் இழி தொழில்
நீர்மை காட்டி நீர்மை அபஹரித்தான்
பாஞ்சாலி அழகை கண்டு சஜாதீயர் அழிக்கும் வடிவு அழகு
இவள் பெண்கள் சித்தம் அபஹரிக்கும் அழகு உள்ளவள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply