திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

   நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.

பொ-ரை :- கரிய நிறத்தையுடையவனுக்கு, பெரிய உலகத்தை உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினையுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை எல்லாம் அடக்கிய கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையையுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலையுடைய பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.

வி-கு :- பிறங்கிருங் கூந்தல் : அன்மொழித் தொகை. கறங்குதல் – கழலுதல்.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 1ஆலிலையில் சயனித்தவனுடைய படிகளிலே அகப்பட்டு இவள் தன் பெருமையை இழந்தாள் என்கிறாள்.

நிறம் கரியானுக்கு – 2“இழந்தது மாமைநிறம்” என்றாள்; அந்த நிறமும் அவன் பக்கலிலே கிடக்கையாலே இரட்டித்துக் காட்டிற்று வடிவு. 3தன் நிறத்துக்கு மேலே ஒருநிறம் உண்டாயிற்று. “நீலக் கருநிற மேக நியாயற்கு” என்ன வேண்டாவாயிற்று; நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே. நெய்த்துக்குளிர்ந்து சிரமத்தைப் போக்குகின்ற வடிவினையே சொல்லுகிறாள். நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் – பரப்பையுடைத்தான பூமியைத் திருவயிற்றிலே வைத்த பிரகாரத்தைக் கோட் சொல்லாநின்ற திருவதரத்தையுடைய. கிளருகை – சொல்லுகை. 4“வையம் ஏழும் கண்டாள் பிள்ளைவாயுளே”- பெரியாழ்வார் திருமொழி, 1. 1 : 6.– என்னக்கடவதன்றோ. ரக்ஷிக்குந்தன்மையை விளக்கிக் காட்டுகின்ற திருவதரம். சிறுக் கள்வனவர்க்கு – 5சிறுவயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலையுடையவனுக்கு. நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் – 1வேறு ஒருவர்வாயாலே கேட்கவேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி. சிறுக்கள்வனவர்க்கு – 2வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி. தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

கறங்கிய சக்கரக் கையவனுக்கு-பகைவர்களை அழிக்கவேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலாநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலேயுடையவனுக்கு: 3தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி. 4அவன் கைப்பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையராயன்றோ இருப்பது. 3ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க்கரையிலே நின்று ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியாநிற்கும். என் பிறங்கு இரும் கூந்தல் – சுற்றுடைத்தாய் ஒழுகு நீண்ட மயிர்முடியையுடையவள். அன்றிக்கே, மிகவும் பெரிய குழலையுடையவள் என்றுமாம். இருமை – பெருமை. இங்குப் பெருமையாவது, நீட்சி. பிறங்குதல் – மிகுதல். கூந்தல் – மயிர். “கூந்தல் ஐம்பால். . . . . .குழல்” என்பது, திவாகரம், மக்கள் பெயர். 6எதிர்த்தலையைத் தோற்பிக்கும் குழலையுடையவள் கண்டீர் தன்பெருமையை இழந்தாள். பீடு – பெருமை.“ஸ்ரீஜனக மகாராஜனுடைய புத்திரியான அந்தச் சீதா பிராட்டி’ யாதொருவருக்கு மனைவியாக இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமும் அளவிட முடியாதது” –அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா ந த்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 18.

என்று அவனுக்கும் பெருமையைக் கொடுக்கும் பெருமையை அன்றோ இவள் இழந்தது.

ஆலிலை -உலகுண்ட கள்வன் இடம் ஈடுபட்டு
பெருமை இழந்தாள்
இழந்த இவள் நிறம் அவன் இடம் சேர்ந்து -நிறம் கரியான்
த்ரௌபதி கிருஷ்ணா கருப்பாக இருப்பதால்
தன் நிறமும் அவன் பக்கலிலே இருப்பதால் இரட்டித்து
நீல மேக நிறமும் ஒப்பாகாதே
நிறம் கரியானுக்கு என்கிறாள்
நீடு உலகு உண்ட -சிறு கள்வன் அவர்க்கு -கரியானுக்கு அவனுக்கு
பரப்பை உடைத்தான உலகு
உதரத்தில் கொண்டான் -ரஷகம் காட்டும் திரு அதரம் -கோள் சொல்லும் வாய்
ரஷகத்வ பிரகாசமான
பரிச்சேதிக்க  ஒண்ணாத செஷ்டிதங்கள் உடையவனுக்கு
அவன் வாயாலே கேட்டவள்
வடிவில் சிறிய –
ரஷகத்வம் காட்டி
சக்கர கை
சுழலும் விரோதி நிரசன்னா த்வரையால்
பரிகரமும் ரஷனத்துக்கு சித்தம்
அவன் கை பிடித்தார் எல்லாரும் ரஷனத்தில் தீஷிதை
வாய் கரையிலே நின்று
பாஞ்ச ஜன்யமும் ஓசை விளைத்து -முடிக்கலாமே பாரித்து இருப்பான்
கூந்தல் உடைய இவள் –
சுற்று உடைத்தாய் -அடர்த்தி நெய்தது கருத்து -பெரிய
இருமை -பெருமை -நீட்சி
அவிழ்த்து விட்டால் கால் வரை விழும் சௌரி
ஐம்பால்
எதிர் தலையை தோற்ப்பிக்கும் தோகை மா மயில்
இவள் தனது பெருமை இழந்தாள்
அப்ரமேயச்த யஸ்யா ஜனகாத்மஜா
அவனுக்கும் தேஜஸ் கொடுக்க கூடியவள் இவள் இழந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading