Archive for July, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 30, 2013

அதுக்கும் முன்னே உண்டான ராம வ்ருத்தாந்த்தைச் சொல்லுகிறது –

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

தேரா வரக்கர்-பெருமாள் எவ்வளவு பலவான் என்று ஆராயாத அரக்கர்-

———————-

வியாக்யானம் –
ஊரான் –
திரு ஊரகத்தை தனக்கு இருப்பிடமாக உடையவன்-

குடந்தை உத்தமன்
அவர்கள் அபேஷை இன்றிக்கே -ஆஸ்ரித ரஷணத்துக்காக
தானே திருக் குடந்தையிலே வந்து சாய்ந்தருளி
நீர்மையில் ஏற்றத்தை உடையவன்

அன்றிக்கே
திருக்குடந்தை ஊரான் உத்தமன் -என்றும் சொல்லாம்

ஒரு கால்
ஒரு கால் நுனி
இரு கால் சிலை வளைய
வில் இரண்டு கோடியும் வளையும்படியாக
ராவணன் தான் வளையாமலே வில்லை வளைத்தான்

தேரா வரக்கர்-இத்யாதி-
சக்கரவர்த்தி திரு மகன் இறே நமக்கு எதிரியாக வருகிறான் என்று
மதிக்க அறியாத ராஷசர் உடைய தேர் வெள்ளத்தை அழியச் செய்தான் ஆயிற்று
(அசஹாய ஸூ ரனாக கர தூஷணாதிகளைச் சொன்னதாகவும்)

வற்றா-இத்யாதி–
நின்ற நீர் வற்றக் கடவது அன்றிக்கே
மேன்மேலும் வாரா நின்றுள்ள
புனலை உடைத்தாய் இருக்கிற
திருப் பேரைத் தனக்கு வாசஸ்தானமாக உடையவன்-

பேர் ஆயிரம் உடையான்–
தன் குண  சேஷ்டிதங்களுக்கு வாசகமான
அநேகம் திருநாமங்களை உடையவன் –
அந் நாம த்வாரா அனுபவிக்கும் வடிவைச் சொல்லுகிறது-

பிறங்கு -இத்யாதி–
நெருங்கி இருந்துள்ள சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணி
அறையா நின்றுள்ள
மாலையை உடையவன்

தாரா வயல்–இத்யாதி—
ஊர் அடங்கலும் மனுஷ்யர் குடி இருப்பு நெருங்கி இருக்குமா போலே
தாராவாகிற பஷிகளாலே
நெருங்கி இருந்துள்ள வயலாலே சூழப் பட்டு இருந்துள்ள
சாளக்கிராமம் அடை நெஞ்சே-

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

வென்றி விரலாழி வலவன்-பரமாத்மன்-சங்கு சக்ர கதாதர -மண்டோதரி
பவான் நாராயண தேவ நான்முகன் -தேவர்களும் இவனே திருமால்
இவற்றை திரு உள்ளம் கொண்டு இப்பாசுரம்-

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே—1-5-3-

ஆய் நின்றான்–சாமாநாதி கரண்யம்-காரண காரிய பாவம் -மண் குடம் தங்கச் சங்கிலி பட்டு வேஷ்டி போலே
சரீரம் சரீரீ பாவமும் ஆகவுமாம்-நீராய் –அயனாய் -இத்யாதி போலே

————————————————————————

வியாக்யானம் –
உலவு -இத்யாதி –
சஞ்சரியா நின்றுள்ள திரையை உடைத்தாய் –
பெரிய கோஷத்தை உடைத்தான கடலும் மலையும் துடக்கமாக-

ஊழி முதலா வெண் திக்கும்-
காலோ பலஷிதமான சகல் பதார்தங்களுமான எட்டுத் திக்கும் –

சில நாள் வர்த்திக்க கடவராய் இருக்கிற சந்திர சூர்யர்களும்
அதற்க்கு எதிரான இருளுமாய்
அதடைய -தான் -என்கிற சொல்லாலே சொல்லலாம் படி
தனக்கு பிரகாரமாக உடையானாய்  நின்றான் –
இத்தால் ஜகதாகாரனாய் நிற்கும் நிலை சொல்லிற்று-
(பரன் திறம் அன்றி மற்று இல்லை பல்லுலகீர்)
மேல் அசாதாராண திவ்ய விக்ரஹ உக்தனான நிலையைச் சொல்லுகிறது-

வென்றி -இத்யாதி –
ஆஸ்ரித ரஷணத்துக்கு பரிகரமான
திரு ஆழியை வலவருகே உடையவன்

வானோர் தம் பெருமான் –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயனானவன் –

மருவா –
கண் வளர்ந்து அருளும் போதும் தன்னோடு பொருந்தாத ஆசூர வர்க்கத்துக்கு –
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து-திரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே
சாத்ரவத்தையை உடையனாய் இருக்குமவன்
ஏவம் விதன் ஆனவன் வந்து சந்நிதி பண்ணுகிற
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமாய் இருக்கிற
ஸ்ரீ சாளக்கிராமத்தை அடைந்து ஆஸ்ரயிக்கப் பாராய்

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே—1-5-2-

————————————–

ராவணனை நிரசித்தபடியைச் சொல்லிற்று முதல் பாட்டில்
அதுக்கு உறுப்பாக அவனுடைய முதல் நாள் படை எழுச்சி சொல்லுகிறது -இதில்

வியாக்யானம் –
கடம் சூழ் இத்யாதி –
ருஷி தான் படை எழுச்சியை சொன்ன க்ரமத்திலே சொன்னார் இவரும் –
மத ஜலத்தை உடைத்தாய் -மலை வடிவு கொண்டு நடந்தாற் போலே இருக்கிற ஆனைத் திரளும்
அதுக்கு அநந்தரம்
குதிரைத் திரளும் –
கோஷத்தை உடைத்தாய் இருந்துள்ள பெரிய தேர்களும்
காலாளும்
இவை அடைய ஒன்றாகத் திரண்டு
பெரிய கிளர்த்தியோடே தோற்றின

அரண் உடைத்தான இலங்கை
ஸ்மசாந சத்ருசீ பவேத் -என்கிறபடியாய் போம்படிக்கு ஈடாக
வடித்த வாயை உடைத்தான சரத்தை நடத்தினான் ஆயிற்று –

இடம் -இத்யாதி –
பூமியில் அவகாசம் உள்ள இடங்கள் எல்லாம் பரந்து கொண்டு
பரப்பை உடைத்தான ஸ்வர்க்கத்தில் தேவர்கள்
ஆஸ்ரயிக்க பரிமள பிரசுரமான தடாகங்களை உடைத்தாய்
எங்கும் ஒக்க தர்ச நீயமாய் இருக்கிற
ஸ்ரீ சாளக்கிராமத்தை ஆஸ்ரயிக்கப் பார்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

கண்டகி நதி –25000–26000-அடி உயர மலைகள்
இவர் ஹிமாவானின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள சாளக்கிராமம் –
மலை பகுதியாகவே சென்று சேவிக்கிறார்
அங்கு இருந்து இறங்கி நைமிசாரண்யம் மங்களா சாசனம் –
வடதிசை மதுரை -அனைத்து திவ்ய தேசங்களையும் சேர்த்து பெரியாழ்வார் மங்களா சாசனம்
மந்த்ர ப்ரதன்-இரண்டு பதிகம் அருளிய பின்பும் -இவர் உகந்து அருளின பிரவணராய்
பல அர்ச்சா நிலங்களில் மண்டி நமக்காக அருளிச் செய்கிறார்

——–

பிரவேசம் –

சௌபரி போகத்துக்கு உறுப்பாக அநேகம் வடிவு கொண்டாற் போலே
ஆஸ்ரிதரை அனுபவிக்கைக்கு உறுப்பாக
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புகுந்து
சந்நிதி பண்ணினான் ஆயிற்று அவன் –

இனி இவர் தாமும் 
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி-
எங்கும் புக்கு அனுபவிக்கையிலே யாயிற்று அபேஷை பண்ணி இருப்பது –
ஒரு விஷயத்தை அனுபவிக்கப் புக்கால்
அவ்விஷயத்தில் அவயவங்கள் தோறும் ஸ்ப்ருஹை பண்ணுவாரைப் போலே யாயிற்று
இவர் எங்கும் புக்கு அனுபவிக்கப் பாரிக்கிறதும்

ஆக –
விரோதி நிரசன சீலனுமாய்
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வாபவனாய்
ப்ரஹ்மாதிகள் ஆபன்நராம் அன்று -அவ் வாபத்துக்களைப் போக்கி
அவர்களுக்கு துக்க நிவர்தகனாய் இருக்கிறவன் –
நித்ய ஸூரிகளோடு
தம் பக்கல் ருசி உடையாரோடு
கேவலம் ப்ராஹ்மணரோடு
வாசி யற -சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
ஸ்ரீ சாளக்ராமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்-
அங்கே  போய் அவனை ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார்-

கோசல ஜன பதமாகப் பெருமாளதாய் இருக்குமா போலே
ஒரு மண்டலமாக தனக்கு விஷயமாகக் கொண்டு
சந்நிஹிதனாக குறையற வர்த்திக்கிற தேசம் ஆயிற்று –

————————————————————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-

அஸாஹய ஸூரன்
கடந்து போய்-காட்டை அடைந்து இல்லை -விபீஷணனை அங்கீ கரிக்கவே -கடந்து சென்றான்

———————————————

வியாக்யானம் –
கலை -இத்யாதி –
கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்-

சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து-
தே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே
படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே
காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது-
(கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)

அப்படியே இங்கும்
துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து
பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும்  ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய்
வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்
(கர தூஷணாதிகளை கொள்ள முடியாதே -கடந்து போய் என்பதால் இலங்கைக்கு சென்று என்றே கொள்ள வேண்டும்-)
அங்கு போய் புகுகிற இடத்து துணை யார் என்னில்-

சிலையும் கணையும் துணையாக-
வில்லும் அம்பும் துணையாக வாயிற்று போயிற்றது –
லஷ்மணாதிகளோ -என்னில்
அவர்களையும் ஓர் அவயவ விசேஷங்களாக நினைத்து இருந்தார்
இத்தனை போக்கி -தனித்து ஒரு துணையாக நினைத்து இருந்திலர் ஆயிற்று இவர் –
ராமஸ்ய தஷிணோ பாஹு –
முதலிகள் அடங்கலும் பெருமாளுக்கு குழைச் சரக்கானார்களாம் இத்தனை இறே
ரஷ்ய வர்க்கம் இறே
ராம லஷ்மண குப்தாச-(தூதர் வாக்கியம்-இவர்களால் ரக்ஷிக்கப்படும் முதலிகள் என்றவாறு )

வென்றிச் செருக்களத்து –
நலிய வேணும் என்னும் அபிசந்தி உண்டாய்
நலியாத மிருகங்களை தப்பிப் போனால்
பின்னையும் போய் புகுமிடம் யுத்த பூமியாய் ஆயிற்று
வெற்றியை உடைத்தான போரை விளைக்க கடவ யுத்த பூமியிலே –

அங்குப் போய் புக்க பின்பு செய்த சேஷ்டிதங்களை சொல்லுகிறது மேல்-

மலை -இத்யாதி –
பெரிய ஷோபத்தை உடைத்தான கடலை
நீரிலே ஆழக் கடவ மலைகளைக் கொண்டு அணையாகக் கட்டி –
மதிளையும் அதுக்கு-அரணான – கடலையும் உடைய இலங்கையை
கலவிருக்கையாக உடையவனுமாய் –
ஒரு தேவதையை ஆஸ்ரயித்து
அதின் பக்கலிலே ஒரு வாளைப் பெற்று
அது தனக்கு அரணாக நினைத்து இருப்பவனாய் –
துர் வர்க்கத்துக்கு எல்லாம் நியாமகனாய் –
இருக்கிற ராவணனுடைய
தலைகள் பத்தையும் அறுத்து –

தேவர்களும் தம் தாமுடைய குடி இருப்பு பெற்றார்கள்
ருஷிகளும் தம் தாமுடைய ஆஸ்ரமங்களில் இருந்து தபஸ் பண்ணப் பெற்றார்கள்
என்று உகந்தவன்
(ராமம் விராமம் -வரமும் -வரம் கொடுத்த நான்முகனும் வரம் பெற்ற ராவணனும் ஒய்வு )

அப்படி
ஆஸ்ரித விரோதியைப் போக்கி
பிற்பட்டாருக்கும் உதவுகைக்காக
வந்து வர்த்திக்கிற ஸ்ரீ சாளக்ராமத்தை
ஆஸ்ரயிக்கப் பாராய் -நெஞ்சே -என்கிறார்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

திரை -அலைகள்
மணி –தெளிந்த
வரம் செய்த-பகவத் பிரசாதத்தால் அருளிச் செய்த

——————————————-

வியாக்யானம் –
வரும் -இத்யாதி –
பெரிய வேகத்தோடே வருகிற திரளை உடைத்தாய் –
தெளிந்த ஜலத்தை உடைத்தான –
கங்கையின் கரை மேலே
ஸ்ரீ பதரி காஸ்ரமத்திலே இருக்கிற
சர்வேஸ்வரனை கவி -பாடிற்று-

கரும் கடல் முந்நீர்–இத்யாதி –
முந்நீரான கரும் கடல் –
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர் -வர்ஜ ஜலமான -மூன்று வகை நீரை உடைத்தாய்
கறுத்த நிறத்தை உடைய கடல் போலே இருக்கிற நிறத்தை உடையவனை அனுசந்தித்து
ஆழ்வார் அருளிச் செய்த பாட்டுக்கள்-

இவை தாம்
வரம் செய்த –
பகவத் பிரசாத லப்தமான பத்துப் பாட்டையும் வல்லவர்கள்
அன்றியே –
வரிஷ்டமான பத்துப் பாட்டையும் -என்னுதல்-

வானவர்—இத்யாதி —
பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி
பின்பு
ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம்
நித்ய சூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவன் அபிசந்தி பண்ணின எல்லாவற்றையும் தரும் என்றபடி-

அறிவுடையார் அபுருஷார்தம் என்று காற் கடைக் கொண்ட ஐஸ்வர்யத்தை
வேண்டேன் மனை வாழ்க்கை –என்றும்
போந்தேன் -என்றும்
வீத ராகராய்–விரக்தராய் போன இவர்
இப்போது ஐஸ்வர்யத்தை பலமாக சொல்லுவான் என் -என்று
ஜீயர் பட்டரைக் -கேட்க
திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான
ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்துக்கு உள்ளே புக்கு போயிற்று காணும் –

ஈஸ்வரனோ ஆகவுமாம்
நித்ய சூரிகளோ ஆகவுமாம்
ராஜா ஆகவுமாம்
பறித்து -கொள்ளை அடித்து- பாகவத சேஷத்வம் பெறலாம் ஆகலாம் ஆகில் -என்றாம் இவர் இருப்பது
என்று அருளிச் -செய்தாராம்

ஓர் ஆகாரத்தால் த்யாஜ்யம்
வேறே ஓர் ஆகாரத்தால் உபாதேயம்
ததீயாருக்கு விநியோகம் ஆக்கினால்
ஈஸ்வர பதார்த்தம் ததீயாருக்கு ஆக்கினால் அவனுக்கு உகப்பு -பக்தானாம் -என்று இருப்பானே
ராஜா த்ரவ்யம் -ததீயருக்கு ஆக்கினால் -அவன் செய்யாததை செய்தபடி -ஸ்வரூப அனுரூபம்
பாகவத ஐஸ்வர்யம் பறித்து பாகவதருக்கு கொடுத்தால் -பாகவதர் விஷயத்தில் விநோயோகம் ஆனால் தப்பு இல்லை
சம்பன்னராக சிலர் இருக்க -இல்லாதவர்களுக்கு கொடுக்க -அவர்களும் உகப்பார்கள் –
ப்ரமபதம் -ஐஸ்வர்ய மேல் எல்லை

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஏனமானான் உய்ய நர நாராயணனாய் எட்டு எழுத்தின்
ஞானம் ஈந்து கங்கை வதரி யுள்ளானவனை
நெஞ்சை வணங்க பரகாலன் தான் பணிக்கும்
செஞ்சொல் நாம் உய்யும் கலை–4-

ஞானப் பிரான் உலகை இடந்து -/ நர நாராயணனாய் சிங்காமை விரித்தவனும் ஞானம் அளித்து -தர்மி ஐக்கியம்
விரோதி நிரசனத்வம் -ஆஸ்ரித ரக்ஷணத்வம் -கங்கை கங்கை வாசகம் என்று கங்கையின் பெருமை பாட்டுக்கள் தோறும் உள்ள பதிகம்-

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-9-

அவனி யாளலமர-பூமா தேவி அலமரும் படி-
ஊழி-கல்பங்கள்-
அண்டம் -இங்கு பிரம்மலோகம்-
பிந்து சரஸ் -பளிங்கு பாறை போலே -இங்கு தான் சிவன் தலையால் தாங்கிய இடம் –

வியாக்யானம் –
கொண்டல் மாருதங்கள் -இத்யாதி
மேகங்கள்
வாயுஸ் கந்தம் -குல பர்வதங்கள் -தங்கள் ஜலராசியை உடைத்தாய்
கோஷியா நின்றுள்ள  கடல் -லோகங்கள் உடைய சர்வ பதார்த்தங்களையும்-வைக்கப்பட்ட

மா வயிற்றோன்
இவற்றை வயிற்றில் வைத்த  இடத்திலும்
இவை தான் அளவு பட்டு பெருத்து இருக்கை
வல் வயிற்றுப் பெருமான் -என்னக் கடவது இறே-
(இத்தால் ஆபத்சகத்வம் சொல்லிற்று)

ஒண் சுடர்–இத்யாதி-
சந்திர சூர்யர்களை உடைத்தான உபரிதந லோகத்தையும்
கால விசேஷமான பிரளய காலத்தையும்
தான் – என்று சொல்லலாம்படி ஆனான்
இவை பிரகாரமாக -தான் பிரகாரியாக -நின்றான்-
(அவன் அஹம் என்றால் சர்வத்தையும் சொன்னபடி அன்றோ -நாராயணன் -நாரங்கள் அனைத்தும் இவனுக்குள்
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம்)

அண்டமூடறுத்து–இத்யாதி-
அண்டம் உண்டு
ப்ரஹ்ம லோகம்
அதன் நடுவே வழி கண்டு போந்து
அதுக்கு இவ்வருகில் அந்தரிஷத்திலே போந்து இழிந்து
எல்லாவற்றையும் பொறுக்கக் கடவ
அவனியாள் உண்டு- பூமி -அவள் பொறுக்க மாட்டாதே
தடுமாறும் படி பெருகும் ஆயிற்று –

மண்டு மா மணி நீர் –
எங்கும் ஒக்க பரந்து பெரு நீராய்
அது அடைய தெளிந்து இருப்பதான
கங்கையின் கரை மேல்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

ப்ரஹ்ம கிரி கோதாவரி பிறக்கும் இடம் -நாசிக் பஞ்சவடி அருகில்
பெருமாள் -நரஸிம்ஹன் -ஹரசாப விமோசனம் -மூன்றையும் சேர்த்து அருளுகிறார் –
முடை அடர்த்த சிரம் ஏந்தி —இடர் கெடுத்த திருவாளன்-மேலே இவரே இத்தை அருளுகிறார்-

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-

தவம் புரிந்து உயர்ந்த மா முனி–விசுவாமித்திரர் -க்ஷத்ரியாராக பிறந்து ரிஷி ராஜ ரிஷி-
ப்ரஹ்ம ரிஷியாக உயர்ந்தார் அன்றோ
சுமதி அரசன் இப்படி ராஜ குமாரர்கள் தாமரை அன்ன பொன்னார் அடிகளை நடந்தே
கூட்டி வந்த சாஹாச செயல் என்றானாம்

வியாக்யானம் –
மான் முனிந்து-இத்யாதி –
பெருமாளை -இம்மானைப் பிடித்து தர வேணும் -என்று பிராட்டி அருளிச் செய்ய –
அவரும் அதன் பின்னே துடர்ந்து போன இடத்து மாயா மிருகம் ஆகையாலே அது பிடி தராதே ஒழிய
அத்தைச் சீறி அதன் மேலே தர்சநீயமான வில்லை வளைத்த செருக்கன்-

பொன்னிறத்து உரவோன்–இத்யாதி –
பொன் போலே இருந்துள்ள நிறத்தையும் மிடுக்கையும் உடையவனான ஹிரண்யன் -என்றபடி-
அவனுடைய துர் மானத்தாலே வளர்ந்த மாம்சத்தை சீறி அதுக்கு ஆஸ்ரயமான உடலானது இரு பிளவாம்படி
திரு உகிரினுடைய நுனியை -மாட்டி

அயன் இத்யாதி –
பிராட்டி திறத்தில் செய்யுமத்தை ஒரு சிருக்கன் விஷயத்தில் செய்தான் –
அவன் விஷயத்தில் செய்ததை துர் மாநியான ருத்ரன் விஷயத்தில் செய்தான் ஆயிற்று
முற்பட இவன் செருக்கித் திரிகிறது பொறுக்க மாட்டாமை செய்திடுவானுக்கு –
அன்று என் தலையை அறு -என்று அனுமதி பண்ணி பின்னையும் 
தானே இவன் இப்படி செய்தான் என்று
கபாலீத்வம் பவிஷ்யசி -என்று பழி இட்டான் ஆயிற்று –
பெற்ற தமப்பனே பகையாக -அவனில் அண்ணிய உறவாய் உதவுமவனும் ஆயிற்று-
(பிரகலாதன் ருத்ரன் இருவருக்கும் இவ்வாறு ரஷித்து அருளினான்)

தவம் -இத்யாதி
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த -என்கிறது -விச்வாமித்ரனை-
அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே –
அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே
அத்தை சொல்லிற்று ஆகவுமாம்

தபஸை செய்து உயர்ந்த என்ற –
இதுக்கு ஸ்ரீ பராங்குச தாசர் -ஜீயா மா முனி புகன்ற -என்று பாட பேதத்தை பண்ணி
அதினுடைய பிரபாவத்தை பிள்ளைகளுக்கு சொல்லிப் போந்தான் இறே அத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் -என்ன
அதுக்கு நமக்கு பலம் போராது -என்று அருளிச் செய்வர்-

அன்றிக்கே
(உயர்ந்த தவம் புரிந்தார் என்று கொண்டு)
பகீரதன் தன்னையே சொல்லுகிறதாய் அவன் கொடு வந்த கங்கை என்னுதல்

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

ப்ரயோஜனாந்தர பரருக்கும் ஐஸ்வர்யாதிகளை அருளியும்
அநந்ய ப்ரயோஜனருக்கும் தன்னையே அருளுமவன்-

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-

அருளி-ஆயிரம் முகத்தால் இழியும் படி அருளி -திரு உள்ளத்தில் சங்கல்பிக்க –

வியாக்யானம்

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரர்க்கு அருளி
ஐராவதத்தையும்
கடலில் அமிர்தத்தையும்
ஸ்வர்க்கத்தையும்
அத்தோடு கூட தேவர்களுக்கு ராஜாவாய் இருக்கும் இருப்பையும்
இந்தரனுக்கு கொடுத்து அருளின –

(தன்னையே -அத்யாஹாரம் செய்து )
எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
எனக்கு சேஷி-
எனக்கு (தன்னை) தந்து அருளின -எந்தை –
(எமக்கும் -என்றதால் -களிறு இத்யாதிகள் இவருக்கு -பிரக்ருதிக்கு சேராதே -தன்னை -அத்யாஹரித்து வியாக்யானம் )

எனக்கு தந்தை
காரண பூதன்
எனக்கு ஸ்வாமி
இவற்றாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஒரு  முகம் செய்து  வந்து
புகில் கடல் பொறாது என்று பார்த்து
ஆயிரம் முகத்தினால் போய்ப் புகு என்று -சர்வேஸ்வரன் திரு உள்ளமாய் அருள
அப்படி மந்திர பர்வதத்தில் நின்றும் வந்து இழிந்தது ஆயிற்று –
அன்றிக்கே –
கங்கை தன்னை ஆஸ்ரயிக்க
அது தான் அருளுகையாகவுமாம் –

ஆயிர முகத்தினால் –
மேருவிலே இழிந்து
மந்த்ரத்திலே இழிந்து
ஹிமவானில் இழிந்து
இங்கே பல வகைகளிலே வரும்படியை சொல்லக் கடவது இறே-

மந்த்ர பர்வமும் அங்கு -அமுதம் வந்ததால் -மந்த்ரம் -அஷ்டாக்ஷரமும்-அவனும் -என்றுமாம் –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 29, 2013

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-6-

தேர் அணங்கு -அல்குலுக்கு உதாரணம் சொல்ல கஷ்டப்பட்டு -சாம்யம் –
மறத் தொழில் புரிந்து-அறத்தில் இருப்பவன் கோபத்துடன் செய்த செயல்-
கயத்த-தகைத்த–பாட பேதம்
மேற்கு நாராயணன் கிழக்கே நர பர்வதம்
ஊர்வசி பர்வதம்-சிவ பர்வதங்களும் உண்டே
ஐராவதம் -பிளந்த விருத்தாந்தம்

வியாக்யானம் –
தேர் இத்யாதி
தேரானது பொருந்தி ஒப்பாய் நின்றுள்ள அல்குலை உடையளாய்
நிதம்ப பிரதேசத்தை உடையளாய்
அல்குல் என்று நோவு படுகைக்கு பேர்
தேர் தட்டை நிதம்பத்துக்கு ஒப்பாக சொல்லக் கடவர்கள்

அழகிய கயலொடு ஒத்த கண்களை உடைய
நப்பின்னை பிராட்டிக்காக மறத்தை-(கடிய) உடைத்தாய் இருப்பதொரு
செயலைச் செய்து -பூமியாக நோவு படும்படியாக
ககுத்துக்களை உடைய ருஷபங்கள் ஏழையும் நசித்து

அநந்தரம்
விரோதியைப் போக்கப் பெற்ற ஹர்ஷத்தாலே
குளிர்ந்த மேகம் போலே இருந்துள்ள
வடிவை உடையவனாய்
அவ்வடிவைக் கொண்டு என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவன்

காரணம் இத்யாதி –
பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிற போது நடு வழியிலே
ஒரு மலை தடுத்து கொடு நிற்பதாய் -அத்தை இரண்டு பிளவாம் படி குத்தி
யானைகளையும் உருட்டிக்  கொண்டு இவ்வருகே போந்து
இழிந்ததாக சொல்லப்பட்டது இறே –
அதுக்கடி என் என்றால் –

காரணம் தன்னால்-
தன்னுடைய தபோ பலத்தால் பஸ்மமாய்க் கிடந்த தன்னுடைய பாட்டன்மாருடைய-(சகரனின் -60000-)
சுத்தி அர்த்தமாக கங்கையை பெற வேணும் என்று இறே தபஸ் பண்ணினான் இறே -(ஹரித்வாரில் பகீரதன் தபம்)
அந்த காரணத்தாலே

பழைமையாலே வந்த மிடுக்கை உடைய –
ஜலத்தை உடைத்தான கரு வரையானது இரண்டு பிளப்பாம்படி குத்தி –
அங்கு உண்டான ஆனைகளை தள்ளிக் கொண்டு வந்து இழிகிற –

அன்றிக்கே
அம்மலை தகைந்த அளவிலே -இந்த்ரனை நோக்கி தபஸ் பண்ணினனாய்
பின்னை அவன் தந்த -சதுர்த் தந்தியை -ஐராவதத்தை-இடுவித்து -அம்மலை இரு பிளவாம்படி குத்துவித்து
பின்னை அவ்வானை கொண்டு வந்ததாக ஒரு பிரமாண பிரசித்தி உண்டு –
அத்தை சொல்லிற்றாகவுமாம்-

————

(ஸ்வயம் வக்த க்ஷேத்ரம்
அஷ்டாக்ஷர க்ஷேத்ரம்
இலந்தை மரம் அடியில் தாபம்
நீல கண்ட -ஊர்வச–நாராயண -நர -நான்கு பர்வதங்கள்

மூர்த்தி -தர்ம ராஜன் -பிள்ளை நாராயணன்
மூர்த்தி சந்நிதி இங்கு உண்டு
வருஷம் ஒரு தடவை எழுந்து அருளுகிறார்
வியாசர் -ஓலை சுவடிகள் போலே மலைகள்

ஏழு பேரும் உள்ளே சேவை –கருடன் -பத்ரி விஷால் -நர நாராயணன் நாரதர் -குபேரன் -உத்தவர்
எதிரிலும் கருடன்
ராவலஜி கேரளா நம்பூதிரி
அலகானந்த உள்ளே மறைந்தார் -நாரத கண்டம் உள்ளே மறைந்தார்-தப்த கண்டம் உள்ளே மறைந்தார்-
கண்டாகர்ணன் கூட ஒரு தடவை பிரதிஷடை
பஞ்ச சிலா -கருட சிலா நாரத சில மார்க்கண்டேயர் சில நரசிம்மர் சிலா வராஹ சில
ப்ரஹ்ம தீர்த்தம் பிண்ட பிரதானம் )

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

  மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.

பொ-ரை :- திருமேனிக்குப் பொருந்தின பலவகைப்பட்ட ஆபரணங்களைக் காட்சிக்கு இனியதாம்படி அணிந்திருப்பவனுக்கு, படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடையவனுக்கு, திருக்கரங்களும் திருவடிகளும் செந்நிறத்தோடு கூடின கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய சோபையை இழந்தாள்.

ஈடு :- ஏழாம்பாட்டு. 2திருப்பாற் கடலிலே திருக்கண் வளர்கின்றவனுடைய ஆபரணசோபை முதலானவைகளிலே அகப்பட்டு இவள் லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள்.

மெய் அமர் பல் கலன் – திருமேனியிலே பூத்தாற்போலே பொருந்தியிருந்துள்ள திருமுடி முதல் நூபுரம் ஈறாகவுள்ள திரு ஆபரணங்கள். நன்கு அணிந்தானுக்கு – பூணவல்லபடியாலே வந்த அழகு. பைஅரவின் அணைப் பள்ளியினானுக்கு – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடையவனாய், நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை இயல்பாகவுடையவனைப் படுக்கையாகவுடையவனாய், அதிலே திருக்கண்வளர்ந்தருளுகிறவனுக்கு: 3இதுவும் ஓர் ஆபரண விசேடம்போலே காணும்; அநந்தமுகமான ஆபரணம் அன்றோ. 4மேலே கூறிய ஒப்பனை நிறம்பெறும்படியான படுக்கை அன்றோ.கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு – திருமேனிக்குப் பரபாகமான சிவப்பையுடைய திருக்கைகளையும், திருவடிகளையுமுடையவனாய் உபகாரசீலனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு. 1திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியாலேயாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை பூர்ணமாயின. என் தையல் இழந்தது தன்னுடைச் சாய் – என் பெண்பிள்ளை இழந்தது, மாணிக்கத்தின் ஒளிபோலே தனக்கு நிறங்கொடுக்கும் லாவண்யத்தை. 2கழற்றிப் பூணும் ஆபரணத்தைக் காட்டிக் கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான். தையல் – பெண். சாய் – லாவண்யம்.

லாவண்யம் இழந்தாள்
மெய்யிலே அமர்ந்த பல் கலன்கள்
பூத்தாப் போலே இருக்கும் ஆபரணங்கள்
நன்றாக அணிந்து
திருவரை பூத்தாப் போலே கட்டியம் வார்த்தை
ஸ்பர்சத்தால் விகசிதமான பணங்கள் உடைய திரு அநந்த ஆழ்வான்
இதுவும் ஆபரணம் போலே
அநந்த முகமான ஆபரணம் இது
கீழ் சொன்ன ஒப்பனை நிறம் பெரும் ஆபரணம் இ றே
கண்ணன் -பிரான் உபகரித்தவன்
தையல்
இழந்தது சாயல் -லாவண்யம்
கழற்றிப் போடும் ஆபரணம் கொண்டு கழற்ற முடியாத ஆபரணம் கொண்டான்
திரு மேனி நிழல் கொண்டான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.