ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

துகில் -வஸ்திர அபஹரணம் -ஸ்ரீ கிருஷ்ணன் -நினைவால் -சங்கதி-

பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-

பேய் இடைக்கிருந்து வந்த-தாய் போலே வேஷம் இட்டு வந்த பூதனை இடையில் இருந்து
இடைக்கிருத்தல் அஞ்சுவன்-போதனையின் மடியில் இருந்த இருப்பை நினைத்து அஞ்சுகிறாள்
செம் பொன் செய் விலங்கலில்-மேருவில் –
வாய் முகடு-இடமுடைத்தான சிகரம்-

வியாக்யானம்-

பேய் இத்யாதி
யசோதை பிராட்டி உடைய வடிவைக் கொண்டு
வந்த பூதனை உடைய மடியிலே இருந்து –
அதுக்கே மேலே அவளுடைய பெரிய முலையையும் உண்டிட
(அஹங்காரம் மமகாராம் -காம க்ரோதங்கள் போலே)

பெற்ற தாய் இத்யாதி –
இத்தைக் கண்ட யசோதை பிராட்டி யானவள்
நாம் மடியிலே வைத்து முலை கொடுத்துப் போந்த
வாசனை கொண்டு இவன்
கண்ட பாதகராய்
நம்மை அநு கரித்து வந்தார் மடியிலே பொருந்தி
அவள் முலை உண்கிறது என்று கூசி
அவள் பரிந்து வளர்க்க வளர்ந்த என் தலைவன் –

சேய் இத்யாதி –
ஓங்கி இருந்துள்ள சிகரத்தின் உடைய
உச்சியிலே அண்டத்தை தரிக்கிற சிவந்த பொன்னாலே
செய்யப்பட மேருவிலே விளங்கா நின்றுள்ள
இடமுடைத்தான சிகரத்தில் நின்றும்
இழிந்த கங்கையின் கரை மேல்
வதரி யாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading