ஆறாந் திருவாய்மொழி – “மாலுக்கு”
முன்னுரை
ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க் கிடக்க, அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க, இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார் இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிறபடியைக் கண்டு, அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள். 2ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள் வேவப்புக்கால், ‘ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப்போலே. 3மேல் திருவாய்மொழியிலே பெறாத நிலைமையாய், ‘கிடையாது’ என்றாலும் விடமாட்டாதபடி தம்முடைய மனம் வாக்குக் காயங்கள் அவ்விஷயத்திலே மிக்க ஈடுபாடு உண்டானபடி சொல்லிற்று; இதில், அந்த அலாபத்தால் வந்த பரவசப்பட்ட தன்மையைச் சொல்லுகிறது. 4“நெடுமால் என்றே கூவுமால்” என்று தன்னுடைய வியாமோகத்தைக் காட்டியாயிற்று இவளை இப்படி விளைத்தது; 5பெரியவன் தாழ நின்றால் பொறுக்க
லாய் இராதன்றோ. 1“பெருமாளால் அபயம் கொடுக்கப்பட்டபோது, இராவணன் தம்பியும் மஹாபுத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக்கொண்டு வணங்கினான்” –ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-என்று இவன் தறைப்படும்படியன்றோ அவனுடைய வியாமோகம் இருப்பது.
கரங்கள்மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களு முருக நோக்கும் காதலான் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத் திறைஞ்சு கின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்.–என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக்கலப். 140.
608.
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்குஎன் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.
பொ-ரை :- திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனைபொருந்திய கூந்தலையுடைய மகள் இழந்தது சங்கவளையலேயாம்.
வி-கு :- மேக நியாயன் – மேகம்போன்ற தன்மையன். ஏலம்-வாசனை. சங்கு – சங்கவளையல்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 2இவள் வாமன அவதாரத்தில் குணங்களிலும் செயல்களிலும் அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.
மாலுக்கு – 1“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, நீ எனக்கு வேண்டா என்ன, நீ எனக்கு வேண்டும் என்று தடுமாறி நின்ற நிலையைக் காட்டியாயிற்று இவளை இப் பாடுபடுத்திற்று. 2சர்வேசுவரனான உயர்வு தோற்ற நின்றானாகில் இப் பாடுபடாள் கண்டீர்! வையம் அளந்த மணாளற்கு – 3உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம். “அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக்கொண்டான் அன்றோ. 4அச்செயலுக்கு எழுதிக்கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ; 5“மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். பெரிய திருமொழி, 9. 4 : 2. இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி. உரை என்று
மாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்று
கொண்டாட்டத்தைக் கூறுவதாய், உலகத்தாருடைய
கொண்டாட்டத்தையுடைத்தாயிருக்கும் என்னுதல்.
அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே. மணாளன் – அநுபவிக்கிறவன். நீலக் கருநிற மேக நியாயற்கு-நெயத்துக் கறுத்த நிறத்தையுடைய மேகத்தைப் போன்ற தன்மையற்கு. அன்றிக்கே, நியாயம் – சமம், ஒப்பு என்னுதல். 6வேறு பிரயோஜனம் கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாதபோது உடம்பு வெளுக்கையும். 1வியாமோகம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஒளதார்யமும் இருக்கிறபடி. நீலக் கரு நிற மேக நியாயற்கு – 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.-திருவிருத்தம், பாட்டு. 94.
கோலம் செந்தாமரைக் கண்ணற்கு – காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து, மலர்ச்சி முதலானவைகளையுடையவான திருக்கண்களையுடையவனுக்கு. 6“தாமரைத்தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக்கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது. 6விசேடணம் தோறும் அவனுக்கு என்று தனித்தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள். ‘மாலுக்கு’ என்று தொடங்கி, 7தன்மகள்மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்; இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று. என் 8கொங்கு அலர் ஏலம் குழலி – தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களையுடைத்தாய், நறு நாற்றத்தையுடைத்தான குழலையுடைய என்பெண்பிள்ளை. கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம். 1இவள் மயிர்முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழிநீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்! பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறுபோலே- இழந்தது சங்கே – 2இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக்கடவதனை இவள் இழந்தாள்.
இவள் உடைய மோகம் பார்த்து
வளைகள் போன்றவை தாமாகவே போக
தானாகவே போவதை தாயார் வார்த்தையால் அருளி
கீழே மோஹித்த இவர் நிலை தோழி பாசுரம்
இது தாயார் பாசுரம்
ஏறாளும் இறையோனும் -எம்பெருமான் விரும்பாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாம் என்றார்
இதில் அவை தன்னடையே போகும் படியை அருளுகிறார் –
நிறம் வளை போவதை -அவன் மேல் ஈடுபாடு காரணமாக
தளர்ந்து போன தசையை தாயார் அருளுவதாக –
வியசனம் முற்றி -அது கண்டு ஆற்ற முடியாமல் தோழிகளும் மோஹிக்க
என்னில் முன்னம் அவர்கள் –
இத்தசையிலும் -இவளை தரிப்பிக்க வழி யோசித்து
அதனால் தரித்து
வளை நிறம் தனித் தனியாக சொல்லி
பட்டணம் வேவப் புக்கால் -இந்த மாளிகை விழுந்தது -அந்த மாடம் -சொல்லுவது போலே
வ்ரகம் அக்நியால் இழந்ததை சொல்லிக் கொண்டு
கீழில் தசையில் அலாப்ய தசை -கிடையாது என்றாலும் விட ஒண்ணாத
அதி பிரவணம் சொல்லி
அந்த அலாபத்தால் வந்த பாரவச்யம் இதில் சொல்லி
நெடுமால் என்றே நின்று கூவுமே -வ்யாமோஹம் காட்டி இவளைப் பண்ணி அருளினான்
உருக ஆரம்பிக்க
பெரியவன் தாள நின்றாள் பொறுத்துக் கொள்ள முடியாதே
ராகவன் அபயம் அளித்த பின்பு விபீஷணன் வார்த்தை போலே
ராவணன் தம்பி எனக்கு போய் அனுக்ரகம் செய்தானே ராகவன் –
அவன் பெருமையையும் -தனது தாழ்ச்சியும் சொன்னது போலே
துடிப்புக்கு ஏற்ப அனுபவம் கிடைக்கவில்லை ஆற்றாமை மிக்கு கீழ் சொன்ன தசையும் கலங்கி
சம்பந்த ஞானம் தரிப்புக்கு உடலாக அன்றி தளர்ச்சிக்கு உறுப்பாக
உபாய அத்யவசாயம் இத்தனையும்
சம்பந்த ஞானம் தோழி பாசுரம் ஆனது
இது தாய் பாசுரம் -உபாயத்தில் துணிவு தான் தரித்து இருக்க
பிராப்ய அலாப்ய நிபந்தனம் -பாரவச்யம்
தான் வேண்டாம் என்று சொன்னவை தன்னடையே போவதை தாய் பாசுரமாக அருளிச் செய்கிறார்
ராமன் திருக்கல்யாண குணங்களில் ஈடு பட்டு
மாலுக்கு -வையம் அளந்த -மணாளன் –
கொங்கு அலர் -சங்கு இழந்தாள்
மின்னிடை மடவாரில் -எனக்கு வேண்டாம் என்று தள்ளினாலும் நீ எனக்கு வேண்டும் என்று
மேல் விழுந்த -தடுமாறி நின்ற நிலையைக் காட்டி
இவளை இப்பாடு படுத்தி
சர்வேஸ்வரன் என்று தள்ளி நில்லாமல்
தனி தனியாக சொல்லி -மாலுக்கு -வ்யாமோஹம் காட்டி
வையம் அளந்த மணாளர் -உகவாதாரையும் விடாத வாமனன் -மாலுக்கு திருஷ்டாந்தம் இது
மால் -கருமை பெருமை மையல் மூன்றும் அர்த்தம் –
இவளையும் கால் கீழே இட்டுக் கொண்டான்
அழித்தாய் திருவடியால் -சிற்றிலை மட்டும் இல்லை சிந்தையும் சிதைக்க கடவாயோ
அச் செயலுக்கு எழுதிக் கொடுத்தவள் இவள் ஒருத்தி இ றே
மற்றவர் உண்டியே உகந்து ஓடினார்கள்
வைவர்ண்யம் -மாலாகி பொன் பயந்தேன் –
இரந்து மண் பெற்றான்
உகந்து பொன்னைப் பெற்றால் இவள்
உகப்பாலே பெறுவது உறைத்து இருக்குமே
மணாளன்-போக்தா
மேக சியாமளன் -நீல -பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை
கொடுக்க பெறாத பொழுது உடம்பு வெளுக்கை –
வ்யாமோஹம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
மகா பலியை வடிவை காட்டி அபஹரித்தான்
இவளையும் வடிவைக் காட்டி அபஹரித்தான்
வஞ்சித்து நெஞ்சு உருக்கி –
இவள் பிச்சேற்ற வைக்க இருக்கிற மை இருக்கிற படி
மை -கருப்பு மேகம்
மைப்படி மேனி இ றே
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
தர்சநீயம்
வாத்சல்யத்தால் சிவந்து
விகாசம்
அகவலைப் படுத்தி
கண்ணாலே
தனித்தனியாக அகப்பட்ட துறை தனித் தனியாக
மால் -அன்புகளை சொல்லி -மார்பில் பட்ட அம்பை பிடுங்கி காட்டுகிறாள்
இது ஒரு குத்து வெட்டு அம்பு எண்ணுவாரைப் போலே
கொம்பு அலர் -ஏல
தேன் பூ நறுநாற்றம்
அவன் இத்தால் மோஹிக்க இருக்க
தனி வீரன் போலே இவளை அழித்தான்
இழந்தது சங்கே
இவள் கரு முடியைக் கண்டு
சங்குக்கு கொடுக்க வேண்டிய அமிர்தத்தை இவளுக்கு கொடுக்க வேண்டும்
இவள் சங்கை இழந்தாள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply