ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

நான் கண்ட நல்லதுவே ஞானப்பிரான் என்றார் ஸ்ரீ நம்மாழ்வார்
பூமா தேவியை ரஷித்து -இதில் ஸ்ரீ சீதா தேவி ரக்ஷணம் -இப்படி சங்கதி

பன்றியாய் அன்று கீண்ட பாழியான் -கீழ் பாசுரம்
வாலி மா வலத்து நினைவால் -இதில் என்றுமாம்

கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-2-

உரவோன்-மிடுக்கனான வாலி –
வெம் மொருவன்-என் ஸ்வாமி ஒப்பற்றவன் -அத்விதீயமான பலத்தை உடையவன் –
தேவர் சென்று சென்று-நான் நான் என்று முன்னிட்டு-ஆஸ்ரயிக்க -உறுப்பாக -நீராட –

வியாக்யானம் —

கானிடை யுருவை-
தன் நிலமான காட்டிலே சஞ்சரிக்கிற
உரு உண்டு –
மான் -மாயாம்ருகம் -அத்தைக் கண்டு

சுடு சரம் துரந்து –
ஒருவருக்கும் தோற்றாதபடி
மறைந்து தோற்றுவதாய் திரிகிற
(சிபி சக்கரவர்த்தி வெள்ளை பன்றி -திரு வெள்ளறை -போக்கு காட்டி -அங்கும் இங்கும்)
அத்தைக் கண்டு பொறுக்க  ஒண்ணாத படியான அம்பை விட்டு-

கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன் –
க்ரூரமான செயலை உடையனான வாலி யினுடைய
தசைந்து அகன்று இருந்துள்ள மார்விலே
கொலை அம்பானது அழுந்தும்படி பண்ணி
அவ்வழியாலே அவனுடைய பிராணனை அபஹரித்து
மஹா ராஜர் விரோதி போகப் பெற்றோம் -என்று
உகந்த அத்விதீயமான பலத்தை உடையவன் –

தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு –
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யச்சிராமத்துள்ளானே –
திரு நாபி கமலத்தை
உத்பத்தி ஸ்தானமாக உடைய ப்ரஹ்மாவோடே
தேவர்கள் ஆனவர்கள்
அஹம் அஹமிகயா இழிந்து
ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக ஸ்நானம் பண்ணப் புக்கவாறே
ஒன்றால் குறைதல் நிறைதல் செய்யாதே
ஏக ரூபமாய் இருக்கக் கடவ ஜலம் பெருகும் ஆயிற்று –
திருவடிகள் ஸஹ்யம் ஆகையாலே-திருக் காவேரிக்கு ஸஹ்ய பர்வதம் உத்பத்தி ஸ்தானம் ஆனால் போலே

வானிடை முது நீர்-
ஆகாசத்திலே யாய்ப் பழையதான நீர் என்றபடி-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading