Archive for June, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

அறிவரிய பிரானை ஆழி அம்கையனையே அலற்றி
நறிய நன்மலர்நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறிகொள் ஆயிரத்து ளிவைபத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத் துள்ளே.

பொ-ரை :- தங்கள் தங்கள் முயற்சியால் அறிய ஒண்ணாத பிரானும், சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்றவனுமான சர்வேச்வரனையே பேசி, வாசனை பொருந்திய சிறந்த மலர்களைத் தேடி, நல்ல திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் திருக்குறுங்குடியதன்மேல் சொன்ன குறிகளைக்கொண்ட இப்பத்துப் பாசுரங்களையும் அறியக் கற்று வல்லவர்கள் ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட இந்தப் பூலோகத்திலே வைஷ்ணவர்கள் ஆவார்கள்.

வி-கு :- அலற்றி நாடி சொன்ன இவை பத்து என்க. வல்லார் ஞாலத்துள்ளே வைட்ணவர் என்க.

ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே வைஷ்ணவர்கள் என்கிறார்.

அறிவு அரிய பிரானை-2நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக்கொள்ளப்படுவது அன்றிக்கே ஒழியப்பெற்றோமே முன்னம். 3வஸ்துதான் உண்டானால் நினைத்தபோது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ. 4இவர்கள் பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில், ஆகவேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்தபோதே, ‘தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ. ஆழி அம் கையனையே அலற்றி – “சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கினபடியே தலைக்கட்டுகிறார்.அவனைக் 1கைவிடாமல் அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்; இதில், 2கையும் திருவாழியுமான அழகையாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது. நறிய நன் மலர் நாடி-பரிமளத்தையுடைத்தாய் நன்றாயிருக்கிற 3மலர்களைத் தேடிக்கொண்டு, “அடிசூட்டலாகும் அந்தாமம்” என்னக்கடவதன்றோ. நன் குருகூர்ச் சடகோபன்-4இந்தக் காதல் உண்டாகைக்கு அடி அவ்வூரில் பிறப்பாயிற்று. குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்-ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, நம்பியுடைய 5அழகினை மெய்காட்டுக்கொண்ட இப்பத்தும் திருக்குறுங்குடி விஷயம். அன்றிக்கே, 6திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய அழகைத் திரளச்சொன்ன பத்தும் என்னுதல். அறியக் கற்று வல்லார்-இதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நித்தியசூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக்காட்டிலும், திருக்குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது

என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள். 1வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம். ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் – 2மருபூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்தியசூரிகளோடு ஒக்கச்சொல்லலாம் படி ஆவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        எங்ஙனே நீர்முனிவது என்னைஇனி நம்பிஅழ
கிங்ஙனே தோன்றுகின்ற தென்முன்னே – அங்ஙன்
உருவெளிப் பாடா உரைத்த தமிழ்மாறன்
கருதுமவர்க் கின்பக் கடல்.

சம்சாரத்தில் இருந்தே வைஷ்ணவர்கள் ஆவார்கள்
அறிய முடியாதவன் -ஸு யத்னத்தால் முடியாமல்
வஸ்து தான்

ஆழி அம் கையனை” என்பது என்? “சங்கினோடும் நேமியோடும்”
என்பது போன்றவைகளால் மற்றைய ஆழ்வார்களுடைய சேர்த்தி
அழகினையும் இத்திருவாய்மொழியில் அநுபவிக்கவில்லையோ? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கையும் திருவாழியுமான’ என்று
தொடங்கி. இதற்கு முன்பெல்லாம் – இத்திருவாய்மொழிக்கு முன்பெல்லாம்.
அன்றிக்கே, இத்திருப்பாசுரத்திற்கு முன்பெல்லாம் என்னுதல். உருவ
-இடையீடில்லாமல்.

3. ‘மலர்களை’ என்றது, மலர்கள் போன்று இருக்கின்ற சொற்களைக்
குறித்தபடி. பாட்டுகள் மாலையாய் இருக்குமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் “அடிசூட்டலாகும்” என்று தொடங்கி. இது, திருவாய்.-2. 4 : 11.

மீள முடியாது அறியாமல் –
தம்மால் அறிந்தால் மீள முடியும்
ஆழி அம் கையுமாய் -கை விடாமல் -அழகை சேவித்து –
சங்கிநோடும் நேமியோடும் -நடுவில் மற்றவை
அனுபவித்து அடி சூட்டலாகும்
அந்தாமம் நன்மை மிக்க -சடகோபன்
காதல் உண்டாகைக்கு அடி அங்கு அவதாரம்
நம்பியை வடிவழகை மெய் காட்டி கொண்ட இப்பத்தும்
திவ்ய ஆபரண திவ்ய ஆய்த சேர்த்தி அழகை
திவ்ய லாஞ்சனை -வைஷ்ணவன் -சங்கு
சக்கரம் அறிந்து கற்கை
ஆவது நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்டம் போலே இன்றி இங்கே குணாதிக்யம்
அர்ச்சை ஏற்றம்
ஆழ கடல் ஞாலத்துள் வைஷ்ணவன் ஆவார்
பாலைவனத்தில் சோலை போலே
வைஷ்ணவ நம்பி –

வடுகன் போலே வந்து –
மந்த்ர உபதேசம் சாதித்து வைஷ்ணவ வாமனம் –
-சாரம்
நம்பி அழகை இங்கனே தோன்றுகிறது உரு வெளிப்பாடாக
உரைத்த தமிழ் மாறன் கற்றவருக்கு இன்ப சாரம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

கழிய மிக்கதொர் காதலள் இவள்என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.

பொ-ரை :- மிக அதிகமானதொரு காதலையுடையவள் இவள் என்று, தாயானவள், காண்பதற்கு என்னை விடுகின்றிலள்; குற்றம் இல்லாத கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பிறகு, நித்தியசூரிகள் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கைகூப்பித் தொழுது வணங்கச் சோதி வெள்ளத்தின் நடுவில் தோற்றுகிற ஒப்பற்ற வடிவம் எனது மனத்துக்குள்ளே தோன்றுகிறது; இதனை, எத்தனையேனும் ஞானமுடையராயிருப்பினும் அறிந்து கோடல் அரிது.

வி-கு :- கழி: உரிச்சொல்; மிகுதிப் பொருளைக் காட்டும். வழு-குற்றம். தேவர்-நித்தியசூரிகள்.

ஈடு :- பத்தாம் பாட்டு. 3நம்பியுடைய திருமேனி என் நெஞ்சிலே பிரகாசிக்கிறபடி ஒருவர்க்கும் அறிய ஒண்ணாது என்கிறாள்.கழிய மிக்கது ஓர் காதலள் இவள் – 1எல்லாருடைய காதலைக்காட்டிலும் வேறுபட்ட காதல்; அன்றிக்கே, நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல். நாட்டார், 2“நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்; 3எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாராநின்றது” என்னக் கடவதன்றோ. அன்னை காணக் கொடாள்-‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள். ஆனால், இப்போது 4இங்ஙனம் படுகிறது என்? என்னில், தர்மிலோபம்  வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே, சரீரம் உண்டாய் மேல் நடக்கவேணும் என்று இருப்பவள் அன்றோ. காண்கையாவது – அநுசந்தித்தல். 5“நெஞ்சு என்னும் உட்கண்” என்னக்கடவதன்றோ. நெஞ்சையுங்கூட வாய்கட்டா நின்றாள்.   வழு இல் கீர்த்தி – குறைவற்ற கீர்த்தியையுடைய. நான்-அக்கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று, அவனை ஒழியத் தனித்து நிலைபெறுதல் இல்லாத நான். கண்ட பின் -இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில், அடியில், 1‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி 2‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல 3ஒரே வாக்கியமே அன்றோ, நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ. குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ – திரள் திரளான நித்தியசூரிகள், கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கைகோத்துக்கொண்டு இழியும்படி. சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-4“ஒளிகளின் திரள்” என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது. என் நெஞ்சுள் எழும் – நித்திய சூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது. ஆர்க்கும் அறிவு அரிது – 5எனக்கு மறக்க ஒண்ணாதாப்போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

திருமேனி பிரகாசிக்கும் படி யாருக்கும் கோசரம் இல்லை என்கிறாள்
யாராலும் அறிய முடியாது
கழிய மிக்கது ஓர் காதல் -யாருக்கும் இல்லாத
நாள் கழிய பெருகும் காதல் -இரண்டு அர்த்தம்

நாள் கழியக் கழியப் பெருகி வருவதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘நாள் செல்லச் செல்ல’ என்று தொடங்கி.

“ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி
மமச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4.

நாட்டார் அபிமத விஷயம் பிரிந்து இருப்பது போலே அன்றி –
நாள் செல்ல சோகம் பெருகி -கழிய மிக்கதோர் காதல் –

“காண” என்பதற்கு, அநுசந்தித்தல் என்பது பொருளானால், நினைக்க
ஒட்டாள் என்னாமல், “காணக் கொடாள்” என்பான் என்? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘நெஞ்சென்னும்’ என்று தொடங்கி.

அன்றேநம் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருனவ நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.-என்றது, பெரிய திருவந். 28.

தர்மி அழியாமல் இருக்க வேண்டுமே
ஆஸ்ரயணம் செய்ய இவள் இருக்க வேண்டுமே -அதனால் தடுக்கிறார்கள்
காண -அனுசந்திக்கை –
பேசாதே பார்க்காதே சொல்லலாம் நினைக்காத உத்தரவு போட முடியுமா
கீர்த்தி உடைய -கீர்த்தி பிரிக்க முடியாதது போலே நான் –
அடியில் பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே வரை மநாச அனுபவம்
கண்டேன் கமல மலர்  பாதம் -போல்வன ஏக வாக்கியம்
வெள்ளத்தில் இழிவார் கை கோத்து குழுமி -தேவர் குழாங்கள் -அனுபவிக்க
நித்ய சூரிகள் கை தொழ
சோதி வெள்ளம் -தேஜஸ் நடுவில் ஊகித்து அறியும் படி

“தேஜஸாம் ராயிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 9:67.
அது போலே நெஞ்சுக்குள் பிரகாசிக்க
இது யாருக்கும் அறிய ஒண்ணாத படி
அவனே காட்டக் கண்டேன்
ஸு யத்னத்தால் முடியாதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னுமாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன்
கன்னல்போல் அமுதாகி வந்துஎன் நெஞ்சம் கழியானே.

பொ-ரை :- முன்னே வந்து நிற்கின்றாய் என்று தோழிமார்களும் தாய்மார்களும் முனியாநின்றீர்கள்; நிலைபெற்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், தலையில் அணிந்திருக்கின்ற நீண்ட திருமுடி முதலான எண்ணில்லாத ஆபரணங்களையுடைய எம்பெருமான், கன்னலாகிப் பாலாகி அமுதாகி வந்து என்நெஞ்சத்தை விட்டு நீங்கமாட்டுகின்றிலன்.

வி-கு :- மன்னுதல்-நிலைபெறுதல், பொருந்துதலுமாம். உலப்பு கணக்கு: முடிவு. அணிகலம்-அணிந்திருக்கிற ஆபரணம்; அழகிய ஆபரணமுமாம். கன்னல்-கரும்பு.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 3நம்பி, இனிமைகள் எல்லாவற்றோடுங்கூட என்நெஞ்சிலே புகுந்து விடுகின்றிலன் என்கிறாள்.

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் – 4தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள்போலே காணும் இவள்தான். 1“எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். 2இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள். மன்னுமாடம் – 3“கண்ணபிரானுடைய திருமாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங்கூட அழியாது என்றிருக்கிறாள். நான் கண்டபின் – 4பிற்காலியாதபடியான நான் கண்டபின். என்றது, நாணம் நீங்கப் பெற்ற நான் கண்டபின் என்றபடி. சென்னி நீண்முடி ஆதியாய உலப்பு இல் அணி கலத்தன் – தலையான முடி தொடக்கமான முடிவில்லாத ஆபரணங்களையுடையவன். அன்றிக்கே, சென்னியில் தரித்திருக்கிற ஆதிராஜ்ய சூசகமான திருமுடி தொடக்கமான எண்ணிறந்த திவ்விய ஆபரணங்களையுடையவன் என்னுதல். 5சேர்த்தி இருக்கிற

படியைத் தெரிவிப்பாள் ‘அணிகலத்தன்’ என்கிறாள். கன்னல் பால் அமுதாகி – இவை, எல்லா ரசங்களுக்கும் உபலக்ஷணம். வந்து என்நெஞ்சம் கழியானே – வந்து என்நெஞ்சில் நின்றும் போகின்றிலன். 1முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று, ‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது. 2எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.

நம்பி புகுந்து விடுகின்றிலன்
முன் நின்றாய் -“முன்நின்றாய்” என்கையாலே, முன்பு, இவர்கள் முன்பு நின்று அறியாள்
என்பது தோன்றுகையாலே அதனை அருளிச்செய்கிறார் “தோழிமார்”
என்று தொடங்கி.

பட்ட மகிஷி
என்பதால் வனவாசம் போகும் பொழுது அனைவரும் பார்த்தால் போலே

ஒருவர் முன்பும் நின்று அறியாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எந்தச்
சீதாபிராட்டி’ என்று தொடங்கி.

“யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதைராகாஸகைரபி
டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதாஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.

ஈடுபாடு உள்ளது கண்டு
மன்னு மாடம் -த்வாரகை வாசுதேவ க்ரஹம் மட்டும் முழுகாமல் இருப்பது போலே பேட் த்வாரகை

“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசுதேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.38:9.

பிரளயாதிகளிலும் அழியாமல்
நான் கண்ட பின்
சென்னி நீண் முடி -திரு ஆபரணங்கள் -ஆதியாய தொடங்கி
இன்னது சொல்ல முடியாமல் உவப்பில் அணிகலன்கள்
சேர்த்தி இருக்கிறபடி –
கன்னல் பால் அமுது சர்வ ரசங்களும்
வந்து எனது நெஞ்சில் நின்று -போகின்றிலன்
வயிற்றில் பிறந்தது காரணமாக என்னை வைகிறார்கள்
எனக்கும் மறைக்கை தேட்டம் முடியாமல் உள்ளேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.

பொ-ரை :- மிருதுத்தன்மை பொருந்திய முகத்தைக் கையுள்ளே வைப்பாள், வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்; மேகங்கள் தங்கியிருக்கின்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், செந்தாமரை போன்ற திருக்கண்களும் அல்குலும் சிறிய இடையும் வடிவும் செறிந்த நீண்ட குழல் தாழ்ந்திருக்கின்ற தோள்களும் பாவியேனாகிய என்முன்னே நிற்கின்றன.

வி-கு :- மை-கருமையுமாம். அல்குல்-அரையின் கீழே இருப்பதோர் உறுப்பு; இருபாலார்க்கும் பொதுவானது. “அடியும் கையும் கண்ணும் வாயும், தொடியும் உந்தியும் தோளணி வலயமும், தாளும் தோளும் எருத்தொடு பெரியை, மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை” என்பது, பரிபாடல் 13. 51-54. மொய்ய நீள் குழலும் தாழ்ந்த தோள்களும் என உம்மைத் தொகையாகக் கோடலுமாம்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1எல்லா இடத்திலும் உள்ள அங்க சோபை என்முன்னே நின்று நலியா நின்றது என்கிறாள்.

கையுள் நன்முகம் வைக்கும் – அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையாநின்றாள். 2இத்தனை சாகசத்திலே துணியும்படி ஆவதே இவள். 3தன்முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.1“உலகநாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக்கை. இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக்கடவதன்றோ. 2கணவனுடைய கரத்தின் பரிசமேயாயிற்றுப் பொறுப்பது. 3இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. 4அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. 5இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் 6இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ. நையும்-தன் கையும் கூடப் பொறாமையாலேவருந்துவாள். என்று அன்னையரும் முனிதிர்-1ஊரவர் கவ்வைக்கு நான் வெறுக்கிறது என்?

மை கொள் மாடம்-பழைமையாலே யாதல்; 2“ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலேயாதல். நான் கண்டபின்-அம்மாடத்தைப் போன்று 3நைவுக்குப் பழையேனான நான் கண்டபின்; 4“நைவாய எம்மேபோல்” என்னக் கடவதன்றோ. செய்ய தாமரைக் கண்ணும்-தனக்கே உரிமையாக்குகின்ற திருக்கண்களும், அல்குலும் – அந்த நோக்குக்குத் தோற்றார் தரித்து இளைப்பாறும் அல்குலும், சிற்றிடையும் – 5இரண்டும் ஒரு தொடையாயிருக்கையாலே ஊஹிக்கப்படும் இடையும், வடிவும்-என்னை மீள ஒட்டாத வடிவும், 6மெய்யே மீள ஒட்டுகிறது இல்லைகாணும் இவளை. மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் – காட்சிக்கு இனியதாய், கண்டார்க்கு ஒரு காலும் மறக்க ஒண்ணாதபடி இருக்கிற திருக்குழலானவை தாழ்ந்து, அணைக்கைக்குத் தகுதியான திருத்தோள்களும், பாவியேன் முன்நிற்குமே – 7அநுபவத்திற்குத் தகுதியில்லாதவை முன்னே நிற்கையாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ. 1‘முன் நிற்கும்’ என்னாநிற்கச்செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது. 2கண்களுக்குத் தோற்றாநிற்கச்செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

கையுள் நன்முகம் வைக்கும் நையும் -அந்வயம்
திரு மந்த்ரம் அர்த்தம் தாத்பர்யம்
கீழே சரம ஸ்லோகம்
கையில் முகத்தில் வைப்பது சாகசம்
நாயகன் கையை வைக்க வேண்டி இருக்க -நான் வைப்பது தப்பு –
ரஷணம் அவன் பொறுப்பு -அவன் தலையிலே பொகட்டு இருக்க வேண்டுமே

தன் கையையுங்கூடப் பொறாமைக்கும் பிரமாணம் காட்டுகிறார்
‘உலகநாதனான’ என்று தொடங்கி.

“உபதாயபுஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம்
கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 21:19. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

நம பத அர்த்தம் –
தனது முகத்தின் வாசி தான் அறியாமல் –
அவன் தாங்க வேண்டிய முகம் –

நமஸ் ஸப்தார்த்தம் என்கைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இதனுடைய’ என்று தொடங்கி. என்றது,
என்சொல்லியவாறோ? எனின், இதனுடைய சுருக்கமான உகாரத்திலேயும்,
அந்யசேஷத்வநிவ்ருத்தி சொல்லப்பட்டிருக்க, மீளவும் “நம:” என்னும்போது
ஸ்வசேஷத்வ நிவ்ருத்தி ரூபமாய், தன்னொடு தனக்கு அந்வயம் இல்லாத
பாரதந்திரியமே “நம:” என்ற சொல்லால் சொல்லப்பட்ட பொருளாக
வேணும் என்றபடி. ‘உகாரத்திலே’ என்றது, பிரணவத்திலே உள்ள
உகாரத்திலே என்றபடி. பிரிநிலையை, உகாரத்திற்குப் பொருளாக
அருளிச்செய்வர்.

காந்தன் கர ஸ்பர்சம் தான் பொறுக்க வேண்டிய முகம்
தன்னோடு -தனக்கு அந்வயம் இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யம்
நான் எனக்கு உரியன் அல்லேன் –
உகாரத்தில் -இது உண்டாய் இருக்கச் செய்தே -அவனுக்கே அடிமை பட்டவன் சொல்லி –
இங்கே தனியாக சொல்லி -பிறருக்கும் அன்று தனக்கும் அன்று
நையும் -தனது கையையும் பொறாமல் நைந்து போகும்
கறுத்த மாடம் -அவன் நிழல் ஈட்டாலே -சோபைய தண்டகாரண்யம் போலே

“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

செய்ய தாமரை கண்ணன் –
இடை நிர்ணயித்து அறியும் படி
மெய்யே -உண்மையாக திருமேனி
தர்சநீயமாய் –
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாள போலே
பாவியேன் -முன் நிற்குமே -துக்கம் விளைக்கும்
பிரசாதம் முன் வைத்து பசியன் துக்கிப்பது போலே
கட்டி அணைக்க முடியாமல் –
ஆனைக்கு குதிரை வைப்பது போலே –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

நிறைந்த வன்பழி நம்குடிக்குஇவள் என்று அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமிஅம் கைஉளதே.

பொ-ரை :- இவள் செய்கின்ற காரியம் நம் குடிக்கு நிறைந்த கொடிய பழியைத் தருவதாகும் என்று தாயானவள் நம்பியை நான் காண்பதற்கு விடுகின்றிலள்: சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், நிறைந்த பிரகாசத்தின் கூட்டத்தாலே சூழப்பட்ட நீண்ட அழகிய திருமேனியோடும் என் மனத்துக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான்; திருச்சக்கரமும் அழகிய கையிலே இருக்கின்றது.

வி-கு :- சூழ்ந்த மேனி என்க நின்றொழிந்தான்: ஒருசொல்.

ஈடு :- ஏழாம் பாட்டு. 1நம்பியுடைய திருமேனியில் அழகு வெள்ளம் என் நெஞ்சிலே வேர் வீழ்ந்தது என்கிறாள்.

நிறைந்த வன்பழிநம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – 2ஆண்டாள், ஒருநாள் பட்டரையும் சீராமப்பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள், பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக்காட்டு’ என்ன, அவர்களையும் கொண்டு திருமுன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப்பாடிட்டு, ‘ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திருவுள்ளமாக, “இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லா நின்றார்கள்” என்ன, ‘நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச்செய்ய, பிற்றை நாள் மன்னியைக் கொடுவந்து நீர் வார்த்தார்கள்.ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம்தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி காணும். 1“அதபாதக பீத: த்வம் – 2‘தருமபுத்திரன் ஓர் ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ. அடுத்து அடுத்து ராஜசூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை. “அதபாதக பீத: த்வம் – 3மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், 4அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியாகலாபமடைய, ‘கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த் தோற்றின ஆயிற்று. வி முக்தாந்ய சமாரம்ப: சர்வபாவேன நாராயண பர: பவ- 5உப்பைத் தொட்டுப் புளியைத்தொட்டு நீ நின்றுசிலவற்றைச் செய்யாமல், புறம்புள்ளவற்றை முழுதையும் போகட்டு, ‘உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் போகட்டிருக்கப்பார்.” 1இப்போது ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிறது நம்பியிடத்துள்ள பிராவண்யத்தை அன்றோ; 2“பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத்தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற இந்த இரண்டு நிலைகளும் ஆழ்வார்தமக்குப் பிறந்த அவஸ்தா விசேடங்களே அன்றோ; 3பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத்தாயார் வார்த்தையான இடம், சரமஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அநுபாஷித்தாற்போலே இருக்கிறதாயிற்று. ‘பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், 4சரமஸ்லோகத் தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாயிற்று. ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, 1உபாயத்தில் கொத்தை அறுக்கிறது; 2பழி என்று மீளேன், என்கிற இது, உபேயத்தில் கொத்தை அறுக்கிறது; ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி; 3“தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்” என்கிற இதில், மிகுதியாய்த் தியாஜ்யமாய் இருப்பது ஒன்று இல்லை அன்றோ. 1உபாய அம்சத்தில் வந்தால் ‘செய்தே தீர வேண்டும்படியான காரியங்களிலேயும் உபாயபுத்தி பிறக்கிறதோ’ என்று அச்சம் கொள்ள வேண்டும்படியாயிருக்கும்; உபேயத்தைப் பார்த்தால், “நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்” என்கிறபடியே, விடத்தக்கது ஒன்று இல்லையாயிருக்கும். 2பழைய நாஸ்திக்யத்தாலே செய்யவேண்டிய காரியங்களில் சோம்பிக் கைவாங்கினதை ‘உபாய விரோதியான ஆகாரத்தாலே விட்டேன்’ என்னுமதுவும் வார்த்தை அன்று; உபேய ருசியாலே செய்யுமவற்றை, ‘இவை உபேயமாகச் சேரின் செய்வது என்?’ என்று விடுமதுவும் வார்த்தை அன்று. 3உலகத்தாரைப் போன்று செய்ய வேண்டிய காரியங்கள் முழுதினையும் செய்து கொண்டிருக்கச் செய்தே, அவற்றில் உபாய புத்தி பண்ணாமலே போரும் நம் முதலிகளுடைய அநுஷ்டானமாய் இருக்கும்படி அன்றோ இது.1ஆக, ‘இது பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இடம், சரமஸ்லோகத்தில் முன்பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி. ‘இது பழி’ என்று மீளாது ஒழிகிற இடம், சரமஸ்லோகத்தில் பின்பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி.

சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை – தகுதியாயிருந்துள்ள கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை. நான் கண்டபின் – அக்கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்டபின். 2“யாவரொருவருக்கு அந்தச் சானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராமபிரானுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக்கூடாததாய் இருக்கிறது அன்றோ” என்கிறபடியே, அவனுக்கு அக்கீர்த்தியைப் போன்று, தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ. நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது. 3ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப்படுவதாயாயிற்று இருப்பது. அவ்வடிவுதான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் சிலாக்கியமாய் இருக்கும்.

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – 4ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலேபிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வவிஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது; உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக்கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்; இனி, 1ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம். நேமி அம் கை உளதே-2வடிவழகு எல்லாம் ஒரு தட்டும், கையுந் திருவாழியுமான அழகு ஒரு தட்டுமாயாயிற்று இருப்பது. என்றது, அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ? அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி. உங்கள் ஹிதவசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள், நிறைந்து என்உள் நின்றொழிந்தான்’ என்கிறாள். இனி, போக்கிடம் இல்லையாம்படி அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள், ‘நின்றொழிந்தான்’ என்கிறாள் என்னுதல். அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்லமாட்டீர்களோ நான் என்பழி நீக்குவதற்கு. வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப்போமோ, 3அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என்பழி நிறைவினைக் குறைக்கவோ.

அன்னை -நிறைந்த வன் பழி -ஸு பிரவர்த்தி -துடிப்பு கூடாதே
கூரத் ஆழ்வான் –அனுஷ்டானம்

இங்கே பழியாகச் சொல்லுகிறது, ஸ்வாபதேசத்திலே, இவ்வுலக இன்பம்
அவ்வுலக இன்பம் என்னும் வேறுபாடு அற இரண்டினுக்கும் அவனே
கடவன் என்று அவன் கையைப் பார்க்குமது ஒழிய, அவற்றிற்காகத் தான்
செய்யும் முயற்சியை என்று கூறத் திருவுள்ளம் பற்றி, ‘தன் முயற்சி பழி’
என்னுமதற்கு, ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘ஆண்டாள்’ என்று தொடங்கி.
ஆண்டாள்-கூரத்தாழ்வானுடைய திருத்தேவியார். இதனால், இவ்வுலக
இன்பத்திற்காகவுங்கூட ஈச்வரனை ஒழியத் தானாகவே ஒரு முயற்சியைச்
செய்தல் ஸ்வரூபத்திற்கு விரோதம் என்று தோற்றுகையாலே, அவ்வுலக
இன்பத்திற்குத் தான் முயற்சி செய்தல் ஸ்வரூபத்திற்கு விரோதமாகின்ற
காரணத்தால் தாழ்வாம் என்பது சொல்லாமலே போதரும். மன்னியை-கன்னியை.

இதனால் பிரபந்நனுக்கு இவ்வுலக இன்பத்தின்பொருட்டுச் செய்கின்ற
முயற்சியும் பழி என்ற போதே, தன் முயற்சியால் வருகின்ற வேறு
உபாயங்கள் பழியாம் என்னுமதனைத் திருவுளத்தேகொண்டு, அதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘அதபாதக’ என்று தொடங்கி.

“அதபாதகபீத: த்வம் ஸர்வபாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணுதர்மம்.

தர்மபுத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.

பெரிய நம்பி வம்சத்தில் பட்டர் திருக் கல்யாண நடக்க பெருமாள் -அத்யவசாயம் இருந்தால் நடக்கும் –
பகவான் சங்கல்பத்தால் தான் நடக்கும் -அவன் இடம் ஒப்படைக்க நாம் நினைக்க வேண்டும் –

கங்குலும் பகலும் இதே ஐதீகம் விஸ்தீரமாக அருளி இருக்கிறார்

அத்தலையால் வருவது ஒழிய -நாம் செய்வது பழி என்று இருக்கும் குடி
பாதக பீதர் -அஸ்வத்தாமா ஹதா -தர்ம புத்திரன் –
தர்ம தேவதை  வர -தர்ம தேவதை -தம்பிகள் நரகத்தில் இருக்க அங்கெ போக
சாஷாத் தர்மம் இருக்க -சாமான்ய தர்மம் நோக்கிய தால்  நரக தர்சனம் –

மேலே செய்து போந்தவை’ என்றது, ராஜசூயம் முதலானவற்றை.

4. மேலே செய்து போந்த இராஜசூயம் முதலானவைகள், பாதக சமமான
காரியங்களாகத் தோற்றுகைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அகங்காரம்’ என்று தொடங்கி. கிரியா கலாபம்
-செயல்களின் கூட்டம்; கருமங்களின் கூட்டம்.

நான் பண்ணினேன் அஹங்காரம் உண்டே -நிறைந்த வன் பழி
உப்பை தொட்டு புளியைத் தொட்டு -சர்வ தரமான் பரித்யஜ்ய –
அவன் பக்கலிலே பரத்தை பொகட்டு இருக்க பார் -தர்ம தேவதை சொல்லி –

மேலே கூறியவற்றிற்குப் பரிஹாரம் அருளிச்செய்கிறார் ‘பழி என்று
பரிஹரிக்கப் பார்க்கிற’ என்று தொடங்கி. ‘மேலுள்ளவற்றை’ என்றது,
பகவத்கீதையில் பதினெட்டாம் அத்தியாயத்திலுள்ள சரம ஸ்லோகத்திற்கு
முன்னர்க் கூறப்பட்ட மற்றைய உபாயங்களை. ‘அநுபாஷித்தாற்போலே’
என்றது, அநுபாஷித்து விலக்கிய முன் வாக்கியத்தைப் போலே என்றபடி.
என்றது, “ஸர்வதர்மாந்பரித்யஜ்ய” என்று அநுவதித்து எடுத்து
விலக்கியதைப்போன்று என்றபடி. அநுபாஷித்தல்-ஒரு காரணம்பற்றிப்
பின்னும் எடுத்துக்கூறல்.

4. ‘சரமஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாற்று’ என்றது,
சரமஸ்லோகத்தின் பிற்பகுதியில் சொல்லப்படுகின்ற பாவங்களினுடைய
நிவர்த்தி இடையிலே வரக்கூடியது; பகவத் அநுபவ கைங்கர்யமே முக்கிய
பலம்; ஆகையாலே, கைங்கர்யத்தின் நிஷ்கர்ஷத்திலே நோக்கான
சரமஸ்லோகத்தின் பின்வாக்கியத்தின் அர்த்தம்போலே என்றபடி.
சரமஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம்-பகவத் கைங்கர்யம்.

    ஆக, சரமஸ்லோகத்தின் முன்வாக்கியத்தின் அர்த்தம்போலே
திருதாயார் வார்த்தை. சரமஸ்லோகத்தின் பின்வாக்கியத்தின் அர்த்தம்
போலே இவளுடைய வார்த்தை என்றபடி.

மேலே அருளிச்செய்த இரண்டு வாக்கியங்களாலும் பலித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘உபாயத்தில்’ என்றும், ‘உபேயத்தில்’ என்றும் தொடங்கி.
‘உபாயத்தில் கொத்தை அறுக்கிறது’ என்றது, ஈச்வரனாகிய சித்தோபாயத்தைப்
பற்றியிருக்குமவனுக்கு வேறு உபாயங்களைச் செய்யத் தொடங்குதல்
குற்றமாம்; ஆதலால், கூடாது என்று மற்றைய உபாயங்களை விலக்குகிறது
என்றபடி. ‘உபேயத்தில் கொத்தை அறுக்கிறது’ என்றது, ‘கைங்கர்யத்தைப்
பெற்றபோது பெறுகிறோம்’ என்று ஆறியிருத்தல், உபேயமான
கைங்கர்யத்திற்குக் குற்றமாம், ஆகையாலே, அந்தக் கைங்கர்யத்தின்
சித்திக்குக் காரணமான செயலுக்கு இன்றியமையாத பிராவண்யம், உபேயத்தில்
குற்றத்தை அறுக்கிறது என்றபடி.

ஆக, உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை (வேறு ஒன்றினையும்
விரும்பாமையைப்) பார்த்தால், தங்களுடைய முயற்சிகள் அனைத்தும்
குற்றமாயிருக்கும்; உபேய வைலக்ஷண்யத்தைப் பார்த்தால், விரையாமல்
ஆறியிருத்தல் குற்றமாயிருக்கும்; ஆகையால், இரண்டு குற்றங்களையும்
அறுக்கிறது என்றபடி. கொத்தை-குற்றம்.

2. ‘பழி என்று மீகளன்’ என்கிற இது, கைங்கர்யமான உபேயத்தில் குற்றத்தை
அறுத்தாலும், சர்வேச்வரனாகிய சித்தோபாயத்திற்குக் குறைவு அன்றோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்வரூபமாய்’ என்று தொடங்கி.
‘ஸ்வரூபமாய் அந்வயித்ததில்’ என்றது, ஸ்வரூபத்திற்குள்ளாகச் சேர்ந்த
பரபக்தி முதலானவைகளில் என்றபடி. ‘மிகுதியாய்க் கழிவது’ என்றது,
தியாஜ்யமாய்க் கழிவது என்றபடி. ‘என்றபடி’ என்றது, ‘பழி என்று மீளேன்’
என்றதற்கு அபிப்பிராயம் என்றபடி.

3. நன்று; பரபக்தி முதலானவைகள் ஸ்வரூபத்திற்குள் சேர்ந்த வையாமோ?
என்ன, பிரமாணமூலமாக அதற்கு விடை அருளிச்செய்கிறார் ’தன்’ என்று
தொடங்கி.

“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”
என்பது, சாந்தோக்யம். 8:12.

    இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது, அபஹத
பாப்மத்வாதிகள், சேஷத்வ பாரதந்திரியாதிகள், பரபக்திகள் இவற்றைப்
பெறுகிறான் என்றபடி.

கார்யம் பலன் கொடுக்காதே
அதனால் த்ருப்தனான சேதனன் -அருளுவான்
உபாயத்தில் கொத்தை தாயார் அறுக்க
உபேயத்தில் கொத்தை மகள் அறுக்க
அஹம் சர்வ கரிஷ்யாமி -உபேயத்தில் நிஷ்டை
துரும்பு நறுக்க பிராப்தி இல்லை உபாயத்தில் -நிஷ்டை
எனது உடம்பு அழுக்கை நானே போக்கி கொள்வேனோ

மேலே ‘உபாயத்தில் கொத்தை அறுக்கிறது, உபேயத்தில் கொத்தை
அறுக்கிறது’ என்கிற இரண்டு தன்மைகளும், சித்தோபாய
நிஷ்டராயிருப்பார்க்கும் ஒத்தது ஆகையாலே, அவர்கள் அநுஷ்டிக்கிற
நித்தியநைமித்திக ரூபமான அவசியம் செய்யக்கூடிய காரியங்களில்’
மேற்கூறிய இரண்டு தன்மைகளுக்கும் தகுதியாக அவர்களுக்கு உண்டாகும்
கௌரவ விசேடங்களைக் காட்டுகிறார் ‘உபாய அம்சத்தில்’ என்று
தொடங்கி. ‘உபாய அம்சத்தில் வந்தால்’ என்றது, உபாய அதிகாரமாகிற
தன்மையைப் பார்த்தால் என்றபடி. ‘உபேயத்தைப் பார்த்தால்’ என்றது,
உபேய அதிகாரத்தைப் பார்த்தால் என்றபடி.

சமுத்ரம் ஜலம் கையால் இரைப்பாரைப் போலே
அர்க்க்யம் ஜலம் இங்கே விட்டால் அங்கே போகுமா நாஸ்திகன் –
உபாயம்
கைங்கர்யம்
நேராக விடாமல் உபேய ருசியால் செய்வான் -உபாயமாக அன்வயிக்காமல்
கர்மம் அனுஷ்டித்துக் கொண்டே உபாய புத்தி பண்ணாமல் -பூர்வர்கள் -அனுஷ்டானம் –
பகவத் ஆஞ்ஞையா பகவத் கைங்கர்ய ரூபமாக செய்ய வேண்டும்

நமஸ்காரம் போல்வன உபாயமாக எண்ணாமல் –
உபேயத்தை பார்த்தால் விட வேண்டியது ஒன்றும் இல்லாமல் அஹம் சர்வம் கரிஷ்யாமி 
என்னுமா போலே அனைத்தும் செய்ய வேண்டி -இருக்கும்
கர்த்தவ்யம் அனுஷ்டியா நிற்க செய்தே -உபேய ருசியால் செய்யுமத்தை -துடிப்பால்
உபாயமாக செய்வது வார்த்தை இல்லை
பண்ணாது இருப்பதும் தப்பு -உபாயமாக நினைப்பதும் தப்பு –
காம்யார்த்தம் விட வேண்டியது -தான் –
சாஸ்திரம் அவஸ்யம் அனுஷ்டிக்க விதித்தவை விட -கூடாது
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் –
அனுஷ்டிப்பது எப்படி கைங்கர்யம் ஆகும் -ஸ்ருதி ஸ்மரதி மம ஆஞ்ஜை சொல்லியதால் –
ஜ்யோதிஷ்டா காம யாகம் காம்ய பலன் -வேண்டாமே
முதலிகள் யாத்ரையாக இருக்கும் நிலை –
ஆயுஷ் ஹோமம் -திருநாராயண புரம் செய்யாமல் காம்ய -புத்தியால்
பகவத் கைங்கர்யம் செய்ய நீண்ட ஆயுள் வேண்டும் என்ற எண்ணத்தால் செய்வது தப்பு இல்லை
நம்பி பிம்பி பேர் வைக்காமல் கேசவன் பேர் இட்டு -தாயார் கேசவன் தாயார் –
நரகம் புகாள் –
பெரிய நம்பி போலே திருநாமம் உண்டே
 பூரணன் அழகு -என்ற எண்ணம் இன்றி -எம்பெருமான் திருநாமமாக வைத்தால் தப்பு இல்லை
அபிப்ராயம் தான் வேண்டும் –

சிறந்த கீர்த்தி -தகுதியாய் இருக்கும் கீர்த்தி
அது போலே தகுதியான நான் -பராங்குச நாயகி
எம்பெருமானைக் கண்ட பின் -இவளோட்டை -சம்பந்தம் தது தேஜ அப்ரமேயம்
யஸ்ய தா ஜனகாத்மஜா
நிறைந்த சோதி -பிரகாசமே மேனி போலே
தேஜஸ் -தரங்கம் கங்கை அலையில் வசிப்பது போலே –
நிறைந்து என்னுள்ளே -பரிபூரணமாக –
ஸ்வரூப வ்யாப்தி அந்தர்யாமி
இங்கே திருமேனியே வ்யாப்தம்
அனுப்ரேவேச்ய -உள்ளே வ்யாப்தி ஸ்வரூப
உபாசகன் -திரு மேனி உடன் வ்யாப்தி
அர்த்த பஞ்சகம் இத்தை விவரிக்க
-நஞ்சீயர் -திருக் குருகை பிள்ளான் -இடம் கேட்ட ஐதிகம்

“நீண்ட பொன்மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்”
   என்று விக்கிரஹ வியாப்திக்கு ஐதிஹ்யம் அருளிச்செய்கிறார் ‘ஒரு நாள்’
   என்று தொடங்கி. சீயர் – நஞ்சீயர். இவர் பட்டருடைய மாணாக்கர்;
   ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தை அருளிச்செய்தவர். பிள்ளான் –
   திருக்குருகைப்பிரான் பிள்ளான்; இவர் எம்பெருமானாருடைய மாணாக்கர்;
   ஆறாயிரப்படி வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்.

ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:

  “யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா
   அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது, இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.
  விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்:

      “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.
  சர்வ விஷயமாக ஸ்வரூப வ்யாப்தி உண்டு
உபாசகர் -சுபாஸ்ரயமாக பாவித்த விக்ரஹத்துடன் எழுந்து அருளி இருக்கும்
ஸ்வரூப -அந்தர் பகித்ச
நீல தோயதா -விசேஷ வ்யாப்தி இரண்டு பிரமாணம் –
நேமி -கையில் சேர்த்தி -ஒப்பற்றது -பிடித்திலன் ஆகில் ஈடுபட்டு இருக்க மாட்டேன்
கையில் திரு ஆழி இருக்க பழிக்கு அஞ்சி மீளப் போமோ
இனி கர்த்தவ்யம் இல்லாமல் – நின்று ஒழிந்தான்
வெறும் புறத்திலே ஆலத்தி கழிக்கும் படி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள்என்று அன்னை காணக்கொடாள்
சோலை சூழ்தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே.

பொ-ரை :- இவள், மேலும் நம் குடிக்குக் கொடிய பழியை உண்டாக்குமவள் என்று சொல்லிக்கொண்டு தாயானவள் நம்பியைக் காணுதற்கு இடம் தருகின்றிலள், சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அழகோடு மிகவும் நீண்டிருக்கின்ற திருமூக்கும் தாமரை போன்ற திருக்கண்களும் கோவைக்கனி போன்ற திருவாயும் கரிய திருமேனியும் நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சத்தினிடத்தில் நிறைந்து விட்டன என்கிறாள்.

வி-கு :- நீள்கொடி : ஒருபொருட்பன்மொழி.

ஈடு :- ஆறாம் பாட்டு. 1நம்பியுடைய திவ்விய அவயவ சோபைகள் என்நெஞ்சு நிறையப் புகுந்து நலியாநின்றன என்கிறாள்.

மேலும் நம் குடிக்கு வன் பழி இவள் என்று-இப்போது சிலர் நான்கு வார்த்தைகள் சொல்லிவிடுனக அன்றிக்கே, மேலும் இக்குடிக்கு உருவ நிலைநின்ற பழியை விளைக்குமவள் இவள் என்று. அன்னை காணக் கொடாள்-2தன்னோடு ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற இவளும் இப்படிச் சொல்லாநின்றாள். சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை – சிரமஹரமான சோலைகள் சூழ்ந்ததிருக்குறுங்குடி நம்பியை. நான் கண்டபின் – 1பழி புகழாம்படி இவ்விஷயத்திலே மூழ்கிய நான் கண்டபின். என்றது, ‘பழி’ என்று அச்சம் உறுத்தி மீட்க ஒண்ணாதபடி மூழ்கிய நான் கண்டபின் என்றபடி. கோல நீள் கொடி மூக்கும் – அழகு மிக்க கொடி போலே இருக்கிற திருமூக்கும், தாமரைக் கண்ணும் – 2அதன்படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக்கண்களும், 3அந்தக் கொடி பூத்தாற் போலேயாயிற்றுத் திருக்கண்கள் இருப்பது. கனிவாயும் – அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனிவாயும், நீல மேனியும் – அத்தாமரையின் இலைபோலே நீலமாய் இருக்கிற திருமேனியும், நான்குதோளும் – ஒரு பெருவெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, 4அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும், என் நெஞ்சம் நிறைந்தனவே-உங்கள் ஹிதவசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.

நம்பி திரு முக திவ்ய அவயவ சோபை
குடிக்கே நாசம் -ஸ்திரீ அடக்கம் விட்டால் -வன் பழி -என்று காண விடாள்
எனது நெஞ்சத்தில் நிறைந்ததே அவன் அவயவ சோபை –
அன்னை ஏக வசனம் இங்கு -வயிற்றில் கொண்டவள் -நோன்பு நோற்று பெற்றவள்
ஸ்ரமஹரமான சோலைகளால் சூழப் பெற்ற
நான் -இவர்கள் பழி எனக்கு புகழ்
மீட்க ஒண்ணாத
கோல -கொடி மூக்கு அதிலே பொத்த தாமரைக் கண் -கனி வாய் பழம் –
தாமரை -ஜல தத்வம் -செடி கொடி வகை இல்லாதது –
இங்கு கொடி பூ கனி -அபூத உபமானம் இல் பொருள் உவமை
பெரு -வெள்ளம் -நீஞ்ச தெப்பம் போலே திருத் தோள்கள்
அழகு நிறைந்த நெஞ்சில் நீங்கள் சொல்வது ஏறாதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

பக்கம் நோக்கி நிற்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டைவாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக்கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.

பொ-ரை :- அவன் வருவதற்குரிய பக்கத்தையே நோக்கிக் கொண்டு நிற்பாள், வருந்துவாள் என்று அன்னையராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; தக்க கீர்த்தி நிறைந்த திருக்குறுங்குடியிலேயுள்ள நம்பியை நான் பார்த்தபிறகு, கோவைக்கனி போன்ற பிரகாசம் திரண்டிருக்கிற திரு அதரமும் நீண்ட புருவங்களும் தக்கனவான தாமரை போன்ற திருக்கண்களும் பாவியேனாகிய என்னுடைய உயிரிடத்திலே தங்கி நலியாநின்றன.

வி-கு :- ஆவியின்மேலன: என்பதில், மேல் என்பது, ஏழாம் வேற்றுமையுருபு. ஆவியினிடத்தன என்பது பொருள்.  ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என் உயிர்நிலையிலே நலியாநின்றன என்கிறாள்.பக்கம் நோக்கி நிற்கும் – அவன் வருகைக்குச் சம்பாவனையுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று. 2“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை, ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தையுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.” என்றது, 3அரக்கியர்களைப் பார்ப்பதோடு புஷ்பங்களையும் பழங்களையுமுடைய மரங்களைப் பார்ப்பதோடு வாசி அற்று இருக்கிறது காணும் இவளுக்கு. அருகிருந்தவர்களையும் பாராளாயிற்று என்றபடி. நையும்-அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள். என்று அன்னையரும் முனிதிர் – 4அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்தபடியை அறியும் நீங்களும் முனியாநின்றீர்கோள்.1“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள்தன்படி. தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் – சொன்னபடி எல்லாம் தகும்படி இருக்கிற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை அக்கீர்த்தியினையே ஜீவனமாக இருக்கும் நான் கண்டபின். தொக்க சோதித் தொண்டை வாயும் – 2“கோலம் திரள் பவளக் கொழுந்துண்டம்” என்னுமாறு போன்று, ஒளிப்பொருளே திரண்டாற் போலே இருக்கிற தொண்டை போன்ற திருவாயும். தொண்டை – கோவை. இதனை, அதரத்துக்கு ஒப்பாகச் சொல்லக் கடவதன்றோ. நீண்ட புருவங்களும் – 3உபமானம் அற்றதாய், தனக்கு ஓர் அவதி இல்லாமையாலே தன்னேற்றமே சொல்லும்படியிருக்கிற திருப்புருவங்களும். தக்க தாமரைக் கண்ணும் – அதனுடைய நெடுமைக்கு எல்லை இல்லாதது போன்று அளவிட்டு அறிய முடியாததாய், அப்புருவங்களுக்குத் தகுதியாயிருக்கிற தாமரைக் கண்களும். 4தாமரையை ஒரு போலியாகச் சொல்லில் சொல்லலாமத்தனை. பாவியேன் ஆவியின் மேலனவே-உயிர் நிலையிலே நலியாநின்றன. 5அகவாயில் வெளிச்சிறப்பு அழகிது. அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.

அப்படிப் பார்த்துக்கொண்டிருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இந்தச் சீதை’ என்று தொடங்கி.

“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்பபல த்ருமாந்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம்ஏவ அநுபஸ்யதி”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.

“அன்னையரும்” என்ற உம்மைக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அறியாக்
காலத்துள்ளே’ என்று தொடங்கி. அதனைத் திருஷ்டாந்தத்தோடு
விவரிக்கிறார் ‘இளமைப்பருவமே’ என்று தொடங்கி.

“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்”-என்பது, திருவாய். 3. 3 : 3.

“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமிவர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.

“கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங்கொலோ அறியேன்?” என்பது,  திருவாய். 7. 7 : 3.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று அன்னையரும் முனிதிர்
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன்முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.

பொ-ரை :- கண்களிலே தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கின்றன என்று அன்னையரும் முனிகின்றீர்கள்; தேனைக் கொண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையும் பொன் முடியும் திருமேனியும் அழகாகத் தோன்றுகிற பட்டாடையும் அரைநாணும் பாவியேனாகிய என்னுடைய பக்கங்களிலேயே இருக்கின்றன.

வி-கு :- நீர்கள் நில்லா என்க. பாங்கு – தகுதி. நாண் – அரை ஞாண்.ஈடு :- நான்காம் பாட்டு. 1காத்தலுக்குக் கவித்தமுடியும், தனி மாலையும், பரிவட்டப்பண்பும் முதலானவை பக்கங்களிலே நின்று என்னை நலியாநின்றன என்கிறாள்.

நீங்க நில்லா கண்ண நீர்கள் – அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை. அன்றிக்கே, நீங்க நில்லா-2பேரநில்லா என்னுதல். அன்றிக்கே நீங்கநில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு 3நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல். நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது. அன்னையரும் முனிதிர்-உங்கள் கண்கள் 4ஆனந்தபாஷ்பமும் பாய்ந்து அறியாவோ. தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி-அந்தச் சோலையில் தேனை வற்றச் செய்யமாட்டீர்களோ நான் என் கண்ண நீரையும் மாற்ற. 5இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும். நான் கண்ட பின்-6அவனுடைய ஸ்வாபாவிகமான மேன்மையை அறியும் நான் கண்டபின். பூந் தண் மாலைத் தண் துழாயும் – இரண்டு உலகங்களுக்குமாக முதலியாக விட்ட, காட்சிக்கு இனிதாய்க் குளிர்ந்த செவ்வித் திருத்துழாய்த் தனி மாலையும், பொன்முடியும் – இரண்டு உலகங்களும் தன்முடியிலே செல்லும்படி கவித்த திருமுடியும். வடிவும் – அம்மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும்உரியான்’ என்று 1படி எடுத்துக் காட்டலாமே. 2“‘வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர். பாங்கு தோன்றும் பட்டும்-திரு அரை பூத்தாற்போலே அங்குத்தைக்குப் பாங்காத் தோற்றுகிற திருப்பீதாம்பரமும், நாணும் – விடுநாணும், பாவியேன் பக்கத்தவே-அநுபவிக்கத் தருதல், உருவெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் செய்யாதபடியான மஹா பாவத்தைச் செய்தேன். 3அருகே நின்று பிகாசித்துக்கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை. 4அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 7, 2013

நின்றிடும் திசைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும்வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.

பொ-ரை :- செயல் அற்று நிற்பாள், பின் அறிவு கலங்குவாள், பின் வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; மலைகளைப்போன்று மாடங்கள் உயர்ந்து காணப்படுகின்ற திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னர், வெற்றி பொருந்திய வில்லும் தண்டமும் வாளும் சக்கரமும் சங்கமும் ஒருபடிப்பட நின்று கண்களுள் தோன்றி நீங்குகின்றன இல்லை; நெஞ்சுக்குள்ளேயும் நீங்குகின்றன இல்லை. என் செய்வேன்?

வி-கு :- என்று முனிதிர்: கண்டபின் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்கா என்க.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1நம்பியுடைய திவ்விய ஆயுதங்களின் சேர்த்தி அழகு, உள்ளும் புறம்பும் ஒக்க எப்பொழுதும் தோன்றாநின்றது என்கிறாள்.

நின்றிடும் திசைக்கும் கையும் – 2“ஸ்ரீராமபிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராமபாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய 3அழகுகளும். 4ஒன்றுசெயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடிபோக்கும், ஒன்று அறிவைக்கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள், அறிவுகெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியாநின்றீர்கோள். அன்னையரும் முனிதிர் – 1தெளிந்திருப்பார்தாம் பொடியப்பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயாயிருக்கிற நீங்கள் இப்படிச் செய்யக் கடவதோ. 2தெளிவது கலங்குவதாய் இவைதாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள். “ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன்” என்னுமவர்கள் அலரோ. 3யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப்பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ. இந்தக் குடிக்காகப் பகவத்பிராவண் யமே யாத்திரைபோலே காணும். குன்றம் மாடம் திருக்குறுங்குடி-மலைகளை நெருங்க வைத்தாற் போலே இருக்கிற மாடங்களையுடைத்தான திருக்குறுங்குடி.நான் கண்ட பின் – 1ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ! 2பெருமாளுக்கு வில் எடுத்துக்கொடுப்பவள் பிராட்டி அன்றோ.

3பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே, ‘நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை இருடிகள் வந்து சரணம் புகுவார்கள்; அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டிவரும்; அது பின்னை சாதிப் பகையாம், பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும். ஆன பின்னர், வில்லைப் போகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ. பெருமாள்பக்கல் சாங்கமே அன்றோ இப்படிச் சொல்லுவித்தது. வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா – 4திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க்காட்டு உண்டுகாணும். 5போர்த்தலையில் ஆயிற்றுஆயுதம் என்று அறியலாவது. “இந்திரன் வில்லுக்கு ஒப்பானவையும் பகைவர்களைக் கொல்லக்கூடியனவுமான விற்களைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற நீங்கள்” என்கிறபடியே, அநுகூலர் கண்டு ஜீவிக்கைக்கும், பகைவர்களுக்குப் பிடித்த பிடியிலே முடிகைக்கும் காரணமாக இருக்குமன்றோ. வென்றி வில்லும்-உகப்பாரோடு உகவாதாரோடு வாசி அற வெற்றியே இயல்பாக இருக்கின்ற திருவில்லும். தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-அந்த வில்லின் ஸ்வபாவத்தையுடைத்தான மற்றைய திவ்ய ஆயுதங்களும். நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா-கண்வட்டத்தை விடாதே நின்று தோன்றாநின்றன. இவை கண்முகப்பே நின்று நலியப் புக்கவாறே, அஞ்சிக் கண்களைச் 1செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின. நெஞ்சுள்ளும் நீங்கா – மேலே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்; இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள். இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும். அவ்வழகு எங்கும் ஒக்க நலிகிறாப்போலே ஆயிற்று, இவளும் கட்கண்ணாலும் உட்கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.

“சிந்நம்பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ரபீடிதம்
பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.

‘தெளிவது கலங்குவதாய்’ என்றது, யௌவன தசையில் தெளிவது
கலங்குவதாய் இருந்ததைக் குறித்தபடி. அப்படி இருந்ததற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘ஆழியொடும்’ என்று தொடங்கி.

இன்னார் என்றறியேன்
அன்னே! ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை
இன்னார் என்றறியேன்.-என்பது, பெரிய திரு. 10. 10 : 9.

இது, பெண்பிள்ளை வார்த்தையானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,
அத்யவசாயநிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும்
தெளிவதும் கலங்குவதும் உண்டு ஆகையாலே, இங்குப் பிரமாணமாகக் குறை இல்லை.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

June 6, 2013

என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.

பொ-ரை :- என்னை முனிந்துகொள்ளாமல் என் நெஞ்சினாலே அநுபவித்துக் காண்பீராக; தெற்குத் திக்கிலேயுள்ள சிறந்த சோலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பின்னர், மின்னுகின்ற பூணுநூலும் குண்டலங்களும் திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரியபிராட்டியாரும் ஸ்ரீவத்சமும் நிலைபெற்ற ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் அங்கு அங்கே வந்து நிற்கின்றன.

வி-கு :- நோக்கிக் காணீர்: நோக்கல் நோக்கம். அநுபவித்து அறிமின் என்பது பொருள். முனியாதே காணீர் என்க. கண்டபின் எங்கும் நின்றிடும் என்க. திருமறு – அழகிய மறுவுமாம்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 3நம்பியுடைய தோள் அழகும் ஆபரணங்களின் அழகும் எல்லாத் திக்குகளிலும் நின்று நலிகின்றன என்கிறாள்.

நாங்களும் நம்பியை அநுபவித்தே பெண் தன்மை கெடாமல் இருக்கின்றிலேமோ? என்ன, என் நெஞ்சினால்நோக்கிக் காணீர் – 1நீங்கள் என்னைப் பொடியாதே உங்களையே பொடிந்து கொள்ளும்படி, என் நெஞ்சை இரவலாக வாங்கிப் பார்க்கவல்லீர்கோளே. என்றது, ‘இவளையன்றோ நாம் இத்தனை சொல்லிற்று’ என்று பின்னை உங்களை நீங்களே பொடிந்து கொள்வீர்கோள் என்றபடி. என்னை முனியாதே – 2“கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக்கூடியதாக இருக்க, நம் வயிற்றிற்பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்றநிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள். ‘என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’ என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள் என்றபடி. ஆயின், பக்தியினால் அன்றிச் சாஸ்திரங்களின் அறிவைக்கொண்டு அவனை அறியப்போகாதோ? என்ன, “பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்-பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே, 3சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒருசேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம். இங்ஙனமிருக்கவும், நான் உன்பக்கலிலே கேட்டு அறியவேண்டும்படி உனக்கு இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன, எனக்குள்ள வாசி கேளாய், மாயாம் ந சேவே – நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும்தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே, பத்ரந்தே – உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான். நவ்ரு தா தர்ம மாசரே-நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன். சுத்த பாவம் கத:-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன். பக்த்யா-வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடுகூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ. 1“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது, வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று, தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு 2கைம்முதலுடையார்க்கு அவனை அறியப்போகாது என்றதே அன்றோ. 3அப்படியே, நீங்களும் என் நெஞ்சினையுடையீராய்க்கொண்டு அறியப்பாருங்கோள் என்கிறாள்.

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை – 4நம்பியுடைய வடிவிற்கு ஆபரணம் போலேயாயிற்று ஊருக்குச் சோலை. 5தெற்குத் திக்கிலேயுள்ள நன்றான சோலைஎன்னுதல். அன்றிக்கே, “தென்னன் கொண்டும்” என்னுமாறு போலே, பாண்டியனால் கொண்டாடப்படுகின்ற திருக்குறுங்குடி என்னுதல். நான் கண்ட பின் – 1ஆபரணச் சேர்த்தியையும் சோலையின் சிறப்பையும் அறிந்த நான் கண்ட பின். மின்னுநூலும் – மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும். குண்டலமும்-பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலே இருக்கிற திருமகரகுண்டலமும். மார்பில் திருமறுவும்-வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற ஸ்ரீவத்சமும். மன்னுபூணும் – நாய்ச்சிமாரோடு கலக்கும் போதும் கழற்ற வேண்டாதபடி இருக்கிற ஆபரணங்களும். என்றது, மிகுந்த சுகத்தைக் கொடுக்கக்கூடியதாயிருத்தலைக் குறித்தபடி. நான்கு தோளும்-2“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பகதரு பணைத்தாற் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும். வந்து எங்கும் நின்றிடும் – ‘உங்கள் ஹிதவசனத்தின்படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பலவகையாக வாராநின்றன. 3“மரவுரி, மான்தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராமபிரானை, பாசக்கயிற்றைக் கையிலேயுடைய யமனைப்போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய்விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் 4காணீர்கோள்.

எனது நெஞ்சிலே நோக்கி காணும்
மின்னு  நூலும் –
குண்டலமும்
ஸ்ரீ வஸ்தம்
ஆபரணங்கள் நான்கு தோளும்
ஸ்த்ரீச்துவம் கெடாமல் இருக்கிறோமோ
இரவல் வாங்கி பார்த்து கொள்ளும்

“என்னை முனியாதே” என்றதற்கு, என்னைக் கொண்டாடும்படி என்றாய்,
அதனால் பலித்தது, உங்களை முனிந்து கொள்ளும்படியாக்கி, அதனைப்
பிரமாண மூலமாக அருளிச்செய்கிறார் ‘கணபுரம்’ என்று தொடங்கி.

முள்ளெயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என்செய்கேன்?
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையைப் பிள்ளைஎன் றெண்ணப் பெறுவரே.

என்பது, பெரிய திருமொழி, 8. 2: 9.

இதே நிலைமை உனக்கு வந்தால் தெரியும்
என்னுடைய பார்வையால் பார்த்து கொள்ளும்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே போலே
பக்தி உள்ள நெஞ்சால் தான்
சஞ்சயன் திருதராஷ்ட்ரன் -உதாராணம் காட்டி

“பக்தியா” என்ற சுலோகத்துக்குப் பொருள் அருளிச்செய்யத்
திருவுள்ளம்பற்றி அதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘சஞ்சயனை
நோக்கி’ என்று தொடங்கி. இந்தச் சுலோகம், பாரதம் உத்யோக பர். 68:5

பக்தியோடுகூடிய சாஸ்திரத்தால் அன்றி, கேவல சாஸ்திர ஞானத்தால்
அறியப்போகாமைக்கு மற்றுமோர் பிரமாணம் காட்டுகிறார்
‘திருதராட்டிரரே’ என்று தொடங்கி.

“வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.

சுத்தமான மனசால் தான் அறிய முடியும் –
பக்த்யா சாஸ்த்ரத்தாலும் ஜனார்த்தனனை உள்ளபடி அறிந்து -கொண்டு –
சேர்ந்து சாஸ்திரம் -கற்றோம் உன்னிடம் கேட்டு அறிந்து கொள்ள வண்டிய நிலை
வஞ்சனங்கள் -இல்லாமல் –
பத்ரம் -மங்களா சாசனம் -செய்து அரசன் -என்பதால் -my lord சொல்வது போலே –
நீதி பதி -சக்கரவர்த்தி ஸ்தானம் –
வீண் தர்மம் அனுஷ்டிக்காமல் சுத்த பாவம் மனசு வாய் காயம் மூன்றும் ஒன்றாக கொண்டு –
பக்த்யா -ப்ரீதி உடன் –அறிந்தேன்
என் நெஞ்சினால் நோக்கி காணீர்
மம வித்யா அழியாது
நீ கேசவனை அறியவில்லை
அவனே கட்ட கண்டு -அறிந்தவன் -அப்படிப்பட்ட நெஞ்சை கொண்டு அறியப்  பாரும்

தென்னன் சோலை திருக்குறுங்குடி
சோலை
ஆபரணம் தெற்கு திக்கில் நன்றான சோலை
தென்னன் கொண்டாடும் பாண்டியர் -நெடுமாறன் –

தென்னன்” என்பதற்கு இரண்டு பொருள். முதற்பொருளில், “தென்னன்”
என்பது, தொடர்மொழி. இரண்டாவது பொருளில் ஒருமொழி.

  “கொன்னவில் கூர்வேல் கோன்நெடு மாறன் தென்கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே”- 
என்பது, பெரியாழ்வார் திருமொழி. 4. 2 : 7.

மேகத்தில் மின்னும் -மின்னல் போலே நூலும்
மன்னு  பூணும் பொருந்தி
இருக்கும் நாய்ச்சிமார் உடன் கலக்கும் பொழுதும் கழற்ற வேண்டாத படி திரு
ஆபரணங்கள் அத்யந்த சுக ஸ்பர்சம் கொண்டவை
ஆபரணங்களுக்கு ஆபரணம் நான்கு தோளும்
வந்து –
கடக்க -நிற்கவும் அங்கே வந்து
-மாரீசன் ராம -வருஷம் தோறும் ராமன் கண்டது போலே
உகப்பாருக்கும் உக வாதாரவருக்கும் பலம்
ஓன்று ப்ரீதி பயம் காரணங்கள் தான் வேற

“ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.

3. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம்
க்ருஹீத தநுஷம் ராமம் பாஸஹஸ்தம் இவஅந்தகம்”

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.
மாரீசன் கூற்றுக்குக் காரணம், அச்சம். இங்கே, “எங்கும் நின்றிடும்”
என்பதற்குக் காரணம், ஈடுபாடு.

4. “அன்னைமீர்” என்று, உபாய அத்யவசாய நிஷ்டரைச்
சொல்லுகிறதாகையாலே, “அறிவரிய பிரானை” என்றவிடத்திற்போலே,
த்வரா நிஷ்டராய் மங்களாசாசனபாரான தம்முடைய நினைவாலே
அவர்களை அஜ்ஞராக நினைத்து, “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்”
என்கிறார் என்று இப்பாசுரத்திற்குச் சுவாபதேசப்பொருள் அருளிச் செய்வர்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.