திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.

பொ-ரை :- என்னை முனிந்துகொள்ளாமல் என் நெஞ்சினாலே அநுபவித்துக் காண்பீராக; தெற்குத் திக்கிலேயுள்ள சிறந்த சோலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பின்னர், மின்னுகின்ற பூணுநூலும் குண்டலங்களும் திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரியபிராட்டியாரும் ஸ்ரீவத்சமும் நிலைபெற்ற ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் அங்கு அங்கே வந்து நிற்கின்றன.

வி-கு :- நோக்கிக் காணீர்: நோக்கல் நோக்கம். அநுபவித்து அறிமின் என்பது பொருள். முனியாதே காணீர் என்க. கண்டபின் எங்கும் நின்றிடும் என்க. திருமறு – அழகிய மறுவுமாம்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 3நம்பியுடைய தோள் அழகும் ஆபரணங்களின் அழகும் எல்லாத் திக்குகளிலும் நின்று நலிகின்றன என்கிறாள்.

நாங்களும் நம்பியை அநுபவித்தே பெண் தன்மை கெடாமல் இருக்கின்றிலேமோ? என்ன, என் நெஞ்சினால்நோக்கிக் காணீர் – 1நீங்கள் என்னைப் பொடியாதே உங்களையே பொடிந்து கொள்ளும்படி, என் நெஞ்சை இரவலாக வாங்கிப் பார்க்கவல்லீர்கோளே. என்றது, ‘இவளையன்றோ நாம் இத்தனை சொல்லிற்று’ என்று பின்னை உங்களை நீங்களே பொடிந்து கொள்வீர்கோள் என்றபடி. என்னை முனியாதே – 2“கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக்கூடியதாக இருக்க, நம் வயிற்றிற்பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்றநிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள். ‘என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’ என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள் என்றபடி. ஆயின், பக்தியினால் அன்றிச் சாஸ்திரங்களின் அறிவைக்கொண்டு அவனை அறியப்போகாதோ? என்ன, “பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்-பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே, 3சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒருசேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம். இங்ஙனமிருக்கவும், நான் உன்பக்கலிலே கேட்டு அறியவேண்டும்படி உனக்கு இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன, எனக்குள்ள வாசி கேளாய், மாயாம் ந சேவே – நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும்தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே, பத்ரந்தே – உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான். நவ்ரு தா தர்ம மாசரே-நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன். சுத்த பாவம் கத:-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன். பக்த்யா-வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடுகூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ. 1“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது, வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று, தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு 2கைம்முதலுடையார்க்கு அவனை அறியப்போகாது என்றதே அன்றோ. 3அப்படியே, நீங்களும் என் நெஞ்சினையுடையீராய்க்கொண்டு அறியப்பாருங்கோள் என்கிறாள்.

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை – 4நம்பியுடைய வடிவிற்கு ஆபரணம் போலேயாயிற்று ஊருக்குச் சோலை. 5தெற்குத் திக்கிலேயுள்ள நன்றான சோலைஎன்னுதல். அன்றிக்கே, “தென்னன் கொண்டும்” என்னுமாறு போலே, பாண்டியனால் கொண்டாடப்படுகின்ற திருக்குறுங்குடி என்னுதல். நான் கண்ட பின் – 1ஆபரணச் சேர்த்தியையும் சோலையின் சிறப்பையும் அறிந்த நான் கண்ட பின். மின்னுநூலும் – மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும். குண்டலமும்-பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலே இருக்கிற திருமகரகுண்டலமும். மார்பில் திருமறுவும்-வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற ஸ்ரீவத்சமும். மன்னுபூணும் – நாய்ச்சிமாரோடு கலக்கும் போதும் கழற்ற வேண்டாதபடி இருக்கிற ஆபரணங்களும். என்றது, மிகுந்த சுகத்தைக் கொடுக்கக்கூடியதாயிருத்தலைக் குறித்தபடி. நான்கு தோளும்-2“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பகதரு பணைத்தாற் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும். வந்து எங்கும் நின்றிடும் – ‘உங்கள் ஹிதவசனத்தின்படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பலவகையாக வாராநின்றன. 3“மரவுரி, மான்தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராமபிரானை, பாசக்கயிற்றைக் கையிலேயுடைய யமனைப்போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய்விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் 4காணீர்கோள்.

எனது நெஞ்சிலே நோக்கி காணும்
மின்னு  நூலும் –
குண்டலமும்
ஸ்ரீ வஸ்தம்
ஆபரணங்கள் நான்கு தோளும்
ஸ்த்ரீச்துவம் கெடாமல் இருக்கிறோமோ
இரவல் வாங்கி பார்த்து கொள்ளும்

“என்னை முனியாதே” என்றதற்கு, என்னைக் கொண்டாடும்படி என்றாய்,
அதனால் பலித்தது, உங்களை முனிந்து கொள்ளும்படியாக்கி, அதனைப்
பிரமாண மூலமாக அருளிச்செய்கிறார் ‘கணபுரம்’ என்று தொடங்கி.

முள்ளெயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என்செய்கேன்?
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையைப் பிள்ளைஎன் றெண்ணப் பெறுவரே.

என்பது, பெரிய திருமொழி, 8. 2: 9.

இதே நிலைமை உனக்கு வந்தால் தெரியும்
என்னுடைய பார்வையால் பார்த்து கொள்ளும்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே போலே
பக்தி உள்ள நெஞ்சால் தான்
சஞ்சயன் திருதராஷ்ட்ரன் -உதாராணம் காட்டி

“பக்தியா” என்ற சுலோகத்துக்குப் பொருள் அருளிச்செய்யத்
திருவுள்ளம்பற்றி அதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘சஞ்சயனை
நோக்கி’ என்று தொடங்கி. இந்தச் சுலோகம், பாரதம் உத்யோக பர். 68:5

பக்தியோடுகூடிய சாஸ்திரத்தால் அன்றி, கேவல சாஸ்திர ஞானத்தால்
அறியப்போகாமைக்கு மற்றுமோர் பிரமாணம் காட்டுகிறார்
‘திருதராட்டிரரே’ என்று தொடங்கி.

“வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.

சுத்தமான மனசால் தான் அறிய முடியும் –
பக்த்யா சாஸ்த்ரத்தாலும் ஜனார்த்தனனை உள்ளபடி அறிந்து -கொண்டு –
சேர்ந்து சாஸ்திரம் -கற்றோம் உன்னிடம் கேட்டு அறிந்து கொள்ள வண்டிய நிலை
வஞ்சனங்கள் -இல்லாமல் –
பத்ரம் -மங்களா சாசனம் -செய்து அரசன் -என்பதால் -my lord சொல்வது போலே –
நீதி பதி -சக்கரவர்த்தி ஸ்தானம் –
வீண் தர்மம் அனுஷ்டிக்காமல் சுத்த பாவம் மனசு வாய் காயம் மூன்றும் ஒன்றாக கொண்டு –
பக்த்யா -ப்ரீதி உடன் –அறிந்தேன்
என் நெஞ்சினால் நோக்கி காணீர்
மம வித்யா அழியாது
நீ கேசவனை அறியவில்லை
அவனே கட்ட கண்டு -அறிந்தவன் -அப்படிப்பட்ட நெஞ்சை கொண்டு அறியப்  பாரும்

தென்னன் சோலை திருக்குறுங்குடி
சோலை
ஆபரணம் தெற்கு திக்கில் நன்றான சோலை
தென்னன் கொண்டாடும் பாண்டியர் -நெடுமாறன் –

தென்னன்” என்பதற்கு இரண்டு பொருள். முதற்பொருளில், “தென்னன்”
என்பது, தொடர்மொழி. இரண்டாவது பொருளில் ஒருமொழி.

  “கொன்னவில் கூர்வேல் கோன்நெடு மாறன் தென்கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே”- 
என்பது, பெரியாழ்வார் திருமொழி. 4. 2 : 7.

மேகத்தில் மின்னும் -மின்னல் போலே நூலும்
மன்னு  பூணும் பொருந்தி
இருக்கும் நாய்ச்சிமார் உடன் கலக்கும் பொழுதும் கழற்ற வேண்டாத படி திரு
ஆபரணங்கள் அத்யந்த சுக ஸ்பர்சம் கொண்டவை
ஆபரணங்களுக்கு ஆபரணம் நான்கு தோளும்
வந்து –
கடக்க -நிற்கவும் அங்கே வந்து
-மாரீசன் ராம -வருஷம் தோறும் ராமன் கண்டது போலே
உகப்பாருக்கும் உக வாதாரவருக்கும் பலம்
ஓன்று ப்ரீதி பயம் காரணங்கள் தான் வேற

“ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.

3. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம்
க்ருஹீத தநுஷம் ராமம் பாஸஹஸ்தம் இவஅந்தகம்”

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.
மாரீசன் கூற்றுக்குக் காரணம், அச்சம். இங்கே, “எங்கும் நின்றிடும்”
என்பதற்குக் காரணம், ஈடுபாடு.

4. “அன்னைமீர்” என்று, உபாய அத்யவசாய நிஷ்டரைச்
சொல்லுகிறதாகையாலே, “அறிவரிய பிரானை” என்றவிடத்திற்போலே,
த்வரா நிஷ்டராய் மங்களாசாசனபாரான தம்முடைய நினைவாலே
அவர்களை அஜ்ஞராக நினைத்து, “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்”
என்கிறார் என்று இப்பாசுரத்திற்குச் சுவாபதேசப்பொருள் அருளிச் செய்வர்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading