கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.
பொ-ரை :- மிருதுத்தன்மை பொருந்திய முகத்தைக் கையுள்ளே வைப்பாள், வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்; மேகங்கள் தங்கியிருக்கின்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், செந்தாமரை போன்ற திருக்கண்களும் அல்குலும் சிறிய இடையும் வடிவும் செறிந்த நீண்ட குழல் தாழ்ந்திருக்கின்ற தோள்களும் பாவியேனாகிய என்முன்னே நிற்கின்றன.
வி-கு :- மை-கருமையுமாம். அல்குல்-அரையின் கீழே இருப்பதோர் உறுப்பு; இருபாலார்க்கும் பொதுவானது. “அடியும் கையும் கண்ணும் வாயும், தொடியும் உந்தியும் தோளணி வலயமும், தாளும் தோளும் எருத்தொடு பெரியை, மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை” என்பது, பரிபாடல் 13. 51-54. மொய்ய நீள் குழலும் தாழ்ந்த தோள்களும் என உம்மைத் தொகையாகக் கோடலுமாம்.
ஈடு :- எட்டாம் பாட்டு. 1எல்லா இடத்திலும் உள்ள அங்க சோபை என்முன்னே நின்று நலியா நின்றது என்கிறாள்.
கையுள் நன்முகம் வைக்கும் – அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையாநின்றாள். 2இத்தனை சாகசத்திலே துணியும்படி ஆவதே இவள். 3தன்முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.1“உலகநாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக்கை. இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக்கடவதன்றோ. 2கணவனுடைய கரத்தின் பரிசமேயாயிற்றுப் பொறுப்பது. 3இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. 4அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. 5இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் 6இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ. நையும்-தன் கையும் கூடப் பொறாமையாலேவருந்துவாள். என்று அன்னையரும் முனிதிர்-1ஊரவர் கவ்வைக்கு நான் வெறுக்கிறது என்?
மை கொள் மாடம்-பழைமையாலே யாதல்; 2“ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலேயாதல். நான் கண்டபின்-அம்மாடத்தைப் போன்று 3நைவுக்குப் பழையேனான நான் கண்டபின்; 4“நைவாய எம்மேபோல்” என்னக் கடவதன்றோ. செய்ய தாமரைக் கண்ணும்-தனக்கே உரிமையாக்குகின்ற திருக்கண்களும், அல்குலும் – அந்த நோக்குக்குத் தோற்றார் தரித்து இளைப்பாறும் அல்குலும், சிற்றிடையும் – 5இரண்டும் ஒரு தொடையாயிருக்கையாலே ஊஹிக்கப்படும் இடையும், வடிவும்-என்னை மீள ஒட்டாத வடிவும், 6மெய்யே மீள ஒட்டுகிறது இல்லைகாணும் இவளை. மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் – காட்சிக்கு இனியதாய், கண்டார்க்கு ஒரு காலும் மறக்க ஒண்ணாதபடி இருக்கிற திருக்குழலானவை தாழ்ந்து, அணைக்கைக்குத் தகுதியான திருத்தோள்களும், பாவியேன் முன்நிற்குமே – 7அநுபவத்திற்குத் தகுதியில்லாதவை முன்னே நிற்கையாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ. 1‘முன் நிற்கும்’ என்னாநிற்கச்செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது. 2கண்களுக்குத் தோற்றாநிற்கச்செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.
கையுள் நன்முகம் வைக்கும் நையும் -அந்வயம்
திரு மந்த்ரம் அர்த்தம் தாத்பர்யம்
கீழே சரம ஸ்லோகம்
கையில் முகத்தில் வைப்பது சாகசம்
நாயகன் கையை வைக்க வேண்டி இருக்க -நான் வைப்பது தப்பு –
ரஷணம் அவன் பொறுப்பு -அவன் தலையிலே பொகட்டு இருக்க வேண்டுமே
தன் கையையுங்கூடப் பொறாமைக்கும் பிரமாணம் காட்டுகிறார்
‘உலகநாதனான’ என்று தொடங்கி.
“உபதாயபுஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம்
கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 21:19. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
நம பத அர்த்தம் –
தனது முகத்தின் வாசி தான் அறியாமல் –
அவன் தாங்க வேண்டிய முகம் –
நமஸ் ஸப்தார்த்தம் என்கைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இதனுடைய’ என்று தொடங்கி. என்றது,
என்சொல்லியவாறோ? எனின், இதனுடைய சுருக்கமான உகாரத்திலேயும்,
அந்யசேஷத்வநிவ்ருத்தி சொல்லப்பட்டிருக்க, மீளவும் “நம:” என்னும்போது
ஸ்வசேஷத்வ நிவ்ருத்தி ரூபமாய், தன்னொடு தனக்கு அந்வயம் இல்லாத
பாரதந்திரியமே “நம:” என்ற சொல்லால் சொல்லப்பட்ட பொருளாக
வேணும் என்றபடி. ‘உகாரத்திலே’ என்றது, பிரணவத்திலே உள்ள
உகாரத்திலே என்றபடி. பிரிநிலையை, உகாரத்திற்குப் பொருளாக
அருளிச்செய்வர்.
காந்தன் கர ஸ்பர்சம் தான் பொறுக்க வேண்டிய முகம்
தன்னோடு -தனக்கு அந்வயம் இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யம்
நான் எனக்கு உரியன் அல்லேன் –
உகாரத்தில் -இது உண்டாய் இருக்கச் செய்தே -அவனுக்கே அடிமை பட்டவன் சொல்லி –
இங்கே தனியாக சொல்லி -பிறருக்கும் அன்று தனக்கும் அன்று
நையும் -தனது கையையும் பொறாமல் நைந்து போகும்
கறுத்த மாடம் -அவன் நிழல் ஈட்டாலே -சோபைய தண்டகாரண்யம் போலே
“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.
செய்ய தாமரை கண்ணன் –
இடை நிர்ணயித்து அறியும் படி
மெய்யே -உண்மையாக திருமேனி
தர்சநீயமாய் –
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாள போலே
பாவியேன் -முன் நிற்குமே -துக்கம் விளைக்கும்
பிரசாதம் முன் வைத்து பசியன் துக்கிப்பது போலே
கட்டி அணைக்க முடியாமல் –
ஆனைக்கு குதிரை வைப்பது போலே –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply