Archive for February, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

வம்மின் புலவீர்!நும் மெய்வருத்திக் கைசெய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர்இப் போதுஇல்லை நோக்கினோம்;
நும்இன் கவிகொண்டு நும்நும்இட் டாதெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே.

பொ-ரை : ‘புலவீர்! வாருங்கோள்; உங்களுடைய சரீரத்தை வருத்திக் கைத்தொழில் செய்து உஜ்ஜீவியுங்கோள்; நிலை பெற்ற இந்த உலகத்தில் செல்வமுடையார் இலர்; இப்போது நோக்கினோம்; உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு உங்கட்கு இஷ்டமான தெய்வத்தைத் துதித்தால், அக்கவிகள் மிகச்சிறந்த ஒளி பொருந்திய முடியையுடைய என் திருமகள் கேள்வனுக்குச் சேரும்,’ என்கிறார்.

வி-கு : முதலடியில், ஆழ்வார் அருளிச்செய்யும் உபாயம் ஊன்றிக் கவனித்தற்குரியது. மன் – நிலைபேறு. வியாக்கியானம் காண்க.

ஈடு : ஆறாம் பாட்டு. 3‘ஜீவனத்தின்பொருட்டு மனிதர்களைக் கவி பாடுகிறோம்’ என்ன, ‘புல்லரைக் கவிபாடி வாழ்வதிலும் உடம்பு நோவப் பணி செய்து வாழ்தல் நன்று,’ என்கிறார்.

புலவீர் வம்மின் – 1நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக் காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார். ‘எங்களை நீர் அழைக்கின்றது என்? எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன, மெய்யே வாழ வேண்டினாலும் உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ? நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள். இதற்கு, 2‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர். ‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன, அது ஆகுமே அன்றோ, பெற்றால்?

இம் மன் உலகில் செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை; 3‘இவர்கள் நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்குப் பயன் உண்டோ?’ என்று இப்போது ஆராய்ந்து பார்த்தோம்; ஒருவரும் இலராய் இருந்தது. 1செல்வர் முன்பும் இலர் ஆதலின், ‘இப்போது இல்லை’ என்ன வேண்டா; ஆதலின், ‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆயின், ‘இப்போது நோக்கினோம்’ எனின், முன்பு நோக்கிற்றிலரோ?’ எனின், ‘முன்பு இவர்தாம் உலக வாழ்க்கையில் கண்வைக்குமவர் அன்றே? இவர்கள் வறிதே துக்கப்படுகிறார்களோ? ஏதேனும் பயன் உண்டோ? என்று இப்போது பார்த்தோம்,’ என்கிறார்.

‘நன்று; மனிதர்களில் அன்றோ இல்லாதது? தேவர்கள் மனிதர்களில் வேறுபட்டவரே; இக்கவிகளைக்கொண்டு எங்களுடைய இஷ்ட தெய்வங்களைத் துதிக்கிறோம்,’ என்ன, நும் இன் கவி கொண்டு நும் நும் இஷ்டா தெய்வம் ஏத்தினால் – உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு, இராஜஸராயும் தாமஸராயும் இருக்கிற உங்களுக்குப் பொருந்தும் இராஜஸராயும் தாமஸராயும் உள்ள தெய்வங்களைத் துதித்தால். அது, செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேரும் – தடையில்லாத (எங்கும் பரந்த) பிரகாசமான ஒளியையுடைய ஆதிராச்சியத்திற்கு அறிகுறியான திருமுடியையுடைய திருமகள் கேள்வன் பக்கலிலே சேரும்; நீங்கள் சில ஏற்றங்களைச் சொல்லி அன்றோ கவி பாடுவது? அவை அவர்களைச் சாரமாட்டா; ‘தாமரைக் கண்ணான்’ என்றால், அது உள்ள இடத்தே போம்; 2விரூபாக்ஷகன் பக்கல் போகாதே? மற்றும், ‘சர்வாதிகன், சமஸ்த கல்யாண குணாத் மகன், சர்வ ரக்ஷகன்’ என்றாற்போலே அன்றோ கவி பாடுவது? அவை சென்று சேர்வன அவை உள்ள இடத்திலே அன்றோ? ஆகையால், உங்களுக்குக் கிடைக்கும் பலன் சௌரியமே.அன்றிக்கே, ‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, 1‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி. ஆதலால், எல்லாச் சொற்களும், சரீரமும் அந்தச் சரீரத்தால் அபிமானிக்கப்படுகின்றவனான உயிரும் அந்த உயிருக்குள் அந்தர்யாமியான பரமாத்துமாவுமான இக்கூட்டத்துக்கு வாசகங்கள் ஆகையாலே விசேடியப் பிராதான்யத்தாலே அவனையே சொல்லினவாம். 2‘எவர்கள், பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடின பிராமணர்களையும் பூஜிக்கின்றார்களோ, அவர்கள், எல்லாப் பூதங்கட்கும் அந்தரியாமியாய் இருக்கிற விஷ்ணுவையே பூஜித்தவர்கள் ஆவர்கள்,’ என்பது ஸ்மிருதி.

உடம்பு நோவ கார்யம் செய்து உய்ம்மினோ
வம்மின் புலவீர் –
நும் இன்கவி கொண்டு தேவதைகளை பாடாமல் -இஷ்ட தெய்வம்
அநாதரம் தோற்ற
செங்கண் முடி திருமாலுக்கு சேருமே
மடுவை காட்டி காட்டுத் தீயில் அகப்பட்டாரை கூப்பிடுகிறார்
தரம் குறைய ஜீவிக்க வேண்டுமோ
நும் மெய் சரீரம் வருத்தி –
எம்பார் வார்த்தை கோட்டை சுமத்தல் -புல் செதுக்கி
அனந்தாழ்வான் கழுதை மேய்த்து ஜீவிக்கலாகாதோ
பூரணமாக ஜீவிக்கல்  ஆகாதே என்ன –
இம்மண் உலகில் செல்வர் ஸ்ரீ மான்கள் இல்லையே
இப்போது நோக்கினோம் ஆராய்ந்து பார்த்து –
முன்பும் இல்லையே
நன்கு நோக்கினோம் இப்போது இல்லை என்று அந்வயம்
மயர்வற மதிநலம் அருளின பின்பு இப்பொழுது பார்க்கிறார் –அனைத்தும் நாராயணன் குறிக்குமே -விசேஷ ப்ராதான்யம்
சர்வ பூத அந்தராத்மா
பித்ரு தேவதை பிராமணர் அக்னி ஆராதித்தாலும் விஷ்ணுவை குறிக்கும்
வாக்கை எச்சில் ஆக்காமல் அவனையே ஸ்தோத்ரம் செய்ய அருளுகிறார்

மனுஷ்யர் இல்லை என்றால் -தேவதைகள்
இஷ்ட தெய்வம் ஏத்தினால்
ராஷசர் தாமசராயும் இருக்கும் –
நும் இன்கவி கொண்டு நும் இஷ்ட தெய்வம் ஏத்தினால் –
குண அநு  ரூபமாய
கல்லும் கட்டையும் இருக்க கல் என்றால்
புண்டரீகாட்ஷனை சேருமே
சூத்திர தேவதை
விரூபாஷான் அவன் ருத்ரன்
ஆதி ராஜ்ய சூசுகமான
திருட்டு பலம் தான் உங்களுக்கு கிட்டும்
சர்வ ரஷகன் -இவனுக்கே சேரும் –
மின்னார் மணி முடி -செவ்வி திருமுடி திருமால்
என் திருமால் -இடம் சேரும்
ஒருவனையே நோக்கும் உணர்வு ஞானம் அவனையே
தாமரை சூர்யன்
ஆறு கடல்
போல
சர்வ சப்த வாச்யன் அவன் தானே
அசித் -சித் -ஈஸ்வரன் பர்யந்தம் போகுமே சப்தங்கள்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

கொள்ளும் பயன்இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றுஎல் லாம்தரும் கோதுஇல்என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மினோ.

பொ-ரை : நீங்கள் அடையக்கூடிய பயன் ஒன்றும் இல்லை; குப்பையைக் கிளறினாற்போன்ற இழிக்கத் தக்கதான செல்வத்தை மிக அதிகமாகப் புகழ்ந்து உங்களுடைய வாக்கின் வன்மையை இழக்கின்ற புலவீர்காள்! கவி பாடுதற்குப் பொருளாகக் கொள்ளுவதற்கு வேண்டிய குணங்கள் எல்லாம் குறைவு இல்லாதவன்; நீங்கள் விரும்பின அனைத்தையும் தருவான்; குற்றம் இல்லாத வள்ளல்; மணி போன்ற நிறத்தையுடையவனான இறைவனைக் கவி சொல்ல வாருங்கள்.

வி-கு : இரண்டாம் அடியில் ‘வள்ளல்’ என்பது, புகழ்ச்சியின் மிகுதியைக் குறிக்க வந்தது. வேண்டிற்றெல்லாம் – ஒருமை பன்மை மயக்கம்.ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘உபகாரகரும் அன்றிக்கே, கவி பாடுகிறவர்களுக்குத் தாழ்வு உண்டாகும்படி இழிந்தவர்களுமாய் இருக்கின்றவர்களைக் கவி பாடாதே, எல்லா நற்குணங்களையும் உடையனுமாய் விரும்புவன எல்லாவற்றையும் கொடுக்கின்றவனுமான சர்வேசுவரனைக் கவி பாட வாருங்கள்,’ என்கிறார்.

கொள்ளும் பயன் இல்லை – 2‘பிறரைக் கவி பாட இழிகின்றது அவர்கள் உத்தேஸ்யராய் அன்றே? ஒரு பிரயோஜனத்துக்காகவே; அது இல்லை’ என்கிறார். என்றது, ‘நீங்களும் இசையவே கவிபாடுதலே பிரயோஜனம் அன்றே? பிரயோஜனத்தை விரும்புகின்றவர்களாகவே கவி பாடுகிறது; அது இல்லை என்னாவே, மீளுவர் என்று பார்த்து முந்துற முன்னம் ‘இல்லை’ என்கிறார்’ என்றபடி. நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்கு பெரிய இலாபம்காணும் ‘கொள்ளும் பயன் இல்லை’ என்கை. என்றது, ‘கொள்ளக் கூடியது ஒரு பிரயோஜனம் இல்லை என்கை’ என்றபடி. ஆக, உங்களுக்காக ஒரு பிரயோஜனம் இல்லையாய் இருந்தது.

‘தங்களுக்கு ஒரு பயன் இல்லையேயாகிலும், பிறருடைய நன்மைக்காகவும் செய்யத் தொடங்கலாம் அன்றே? அதுதான் உண்டோ?’ எனின், ‘குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை’ என்கிறார்; ‘குப்பையைக் கிளறினாற்போலே இருக்கின்ற செல்வத்தை’ என்றது, ‘மறைந்து கிடக்கிற குற்றங்களை வெளியிடுகையாலே அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக் கூடியதாமித்தனை. குப்பையைக் கிளறினால் உள் மறைந்து கிடக்கிற கறைச்சீரை முதலாக உள்ளவை அன்றோ வெளிப்படுவன? 3‘ஆகையால்,அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக்கூடியதாம் அளவன்றிக்கே, தங்களுக்கும் தூய்மை இல்லாதவற்றைத் தீண்டுதலாகிய குற்றம் உண்டாம்,’ என்கை. வள்ளல் புகழ்ந்து – உதாரமாகப் பாடி. என்றது, ‘அவன் தனக்கும் ஒரு நன்மை இன்றிக்கே பிறர்க்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கவும், அவனுக்கு நன்மை உண்டாகிறதாகவும் அதுதான் தம் பயனுக்கு அடியாய் இருக்கிறதாகவும் நன்றாகப் புகழ்ந்து’ என்றபடி.

நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நீங்கள் கொள்ளும் பயன் இதுவே. 1‘இரண்டும் இல்லை’ என்று சொன்னார் அன்றோ முன்னர்? ஆகையாலே, நீங்கள் ‘வாக்மின்கள் – எளிதிற்கவி பாடுமவர்கள்’ என்ற பிரசித்தியை இழக்குமித்தனை? அன்றியே, ‘வாய்மை என்று மெய்யாய், 2நாடு அறிய இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகையாலே பொய் சொன்னீர்களாமத்தனை நீங்கள்’ என்னுதல். புலவீர்காள் – 3‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே! வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன் ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.

‘நன்று; நாங்கள் கவி பாடுகின்றவர்களைக்காட்டிலும் நீர் சொல்லுகின்ற தலைவனுக்கு நன்மை உண்டோ?’ என்னில்,கொள்ளக் குறைவிலன் – மேலே கூறிய இரண்டனையும் 1மாறாடிச் சொல்லுகிறார், ‘கொள்ளும் பயனும் உண்டு; குப்பை கிளர்த்தன்ன செல்வமும் அன்று’ என்று. நீங்கள் யாவை யாவை சில ஏற்றங்களை இட்டுக் கவி பாடுகின்றீர்கள்? அவற்றை ஏற்குமிடத்தில் ஒரு குறையுடையவன் அல்லன்! எல்லா நற்குணங்களையும் உடையவன். வேண்டிற்று எல்லாம் தரும் – ‘கொள்ளும் பயனும் பெரிது,’ என்கிறார்; நீங்கள் கவி பாடினால் போக மோக்ஷங்கள் வேண்டுமவை எல்லாம் தரும். என்றது, ‘இவனை ஒழிந்தார் ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், கொள்கின்றவனுக்கு மற்றொன்று விருப்பமானால், அது கொடுக்க மாட்டார்களே அன்றோ? இவனிடத்தில் விரும்புகிறவர்கள் தாழ்வாலே இழக்கில் இழக்குமித்தனை; அவன் தரமாட்டாமையாலே இழக்க வேண்டா,’ என்றபடி. 2‘மோக்ஷத்தைத் தருபவரான பகவான், தியானம் செய்கின்றவர்களுக்கு இவ்வுலகில் விருப்பமானவற்றையும், சுவர்க்கங்களில் உள்ள பேறுகளையும், சுவர்க்கத்தில் உள்ளவர்களால் சேவிக்கப்படுகின்ற அந்தப் பரமபதத்தையும் கொடுக்கிறார்’, 3‘விஷ்ணு பகவான் எல்லாப் பலன்களையும் கொடுக்கிறார்’ என்பன விஷ்ணு தர்மம்.

கோது இல் – ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது, 4‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல், கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன, என் வள்ளல் – நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன். மணி வண்ணன் – கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு. உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்; கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்? மணி வண்ணன்தன்னைக் கவி சொல்ல வம்மின் – 2நான் சொல்லுகிற படியை உடையவனைக் கவி பாட வாருங்கோள். ‘பிற்காலியாதே கடுகப் புகுரப் பாருங்கோள்’ என்பார், ‘வம்மின்’ என்கிறார்.

உபகாரகரும் அன்றிக்கே
அவத்யமாய் ஹேயமாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகன் இருக்க
கொள்ளக் குறை வில்லை
குப்பை கிளறினது போன்ற செல்வம் பெறுவீர்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல் இவன்
அவன் ஆசை படாமல் இவன் பாட வில்லை
பணம் கொடுப்பான் என்ற காரணத்தால் பாட போகிறீர்
நீங்களும் இசையவே-ஸுயம் பிரயோஜனமாய் பாட
முந்துற முன்னம் இல்லை என்கிறார் -கொள்ளும் பயன் இல்லை
என்கிறார் -முதலில் -பெரிய லாபம் -நெஞ்சு படாத பாடு பட்டு பாட –
தங்களுக்கு பிரயோஜனம் இல்லா விடிளும்பிரருக்கு ஹிதம் அருள
நாலடியார் குறள் போல்வன –
குப்பைகிளர
மறைந்து கிடந்த தோஷத்தை காட்டுமே உங்கள் கவிகள் –
கரைசீரை அழுக்கு வெளி வருமே
அவத்யம்
தங்களுக்கும் அசுத்தி ஸ்பர்சம்
வள்ளல் புகழ்ந்து -நன்றாக புகழ்ந்து –
நும் வாய்மை இழக்கும் -கொள்ளும் பயன் இது தான்
சாமர்த்தியம் சாக்கடையில் போட்டீர்
வாய்மை மெய்யாய் பொய் சொல்வது போலே
கவிதைக்கு பொய் அழகன்

‘கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்;
காடுஎறியும் மறவனைநாடு ஆள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
போர்முகத்தை அறியானைப் புலிஏறு என்றேன்;
மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்;
இல்லாத சொன்னேனுக்கு இல்லை என்றான்;
யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே!’

என்பது தனிப்பாடல்.

பேறு இழவு அறிந்தவர் செய்யலாமா
சர்வ சப்த வாச்யன் அவன் ஆகையாலே
கொள்ளக் குறை இலன் -அவன்
என்ன பாடினாலும் போதாது இங்கே –
குப்பை கிளறிய செல்வம் இல்லை
சமஸ்த கல்யாண குணாத்மகன்
போக மோஷங்கள் வேண்டிற்று எல்லாம் தருவான் –
அபெஷித்தார் தாழ்வால் இழக்கும் இத்தனை இங்கே
ஸ்வர்க்கம் பூமி மநோ ரதம் -எத பதம் மநோ ரதம் ததாமி
சர்வ பல பிரதோ விஷ்ணு
கோதில் வள்ளல் –
குற்றம் இல்லாத
கொடுக்கும் இடத்தில் -தேச கால பாத்ரம் பார்த்து கொடுத்தல் -குறை
பிரயோஜனம் எதிர்பார்க்காமல்
இன்னும் ஒன்றும் கொடுக்க வில்லை என்ற நினைவால் கொடுத்தால்
மணி வண்ணன் -கொடுக்கா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
இவனையே கவி பாட
கைக்கூலி கொடுத்து விரும்பா நின்றது ரூபா ஆபாசங்களை
அவன் நமக்கு கொடுப்பான்
நான் சொல்லுகிற படியை -உடையவனை கவி பாட வாரும்
வம்மின் கடுக்க வாரீர்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய் யாமையும் கொள்ளுமே.

பொ-ரை : புலவீர்காள்! ஆவது என்? அழிந்து போகின்ற மனிதர்களைப் பாடிப் படைக்கும் பெரிய பொருள் எத்தனை நாள்களுக்குப் போதும்? ஒளி பொருந்திய மணி முடியைத் தரித்த விண்ணவர் தாதையைப் பாடினால் தனக்கே உரியவனாக நினைத்துப் பிறவி அறும்படியும் செய்வான்.

வி-கு : மன்னுதல் – நிலைபெறுதல். விண்ணவர் – நித்திய சூரிகள். தாதை – தமப்பன்.

ஈடு : நான்காம் பாட்டு. 1‘கவி பாடினார்க்குத் தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுக்குமவனைக் கவி பாடுமது ஒழிய, குறைந்த ஆயுளையுடைய புல்லரைக் கவி பாடிப் பெறுவது என்?’ என்கிறார்.

என் ஆவது – ஒன்றும் ஆவது இல்லை. ஒரு பிரயோஜனத்துக்காக அன்றோ பிறரைக் கவி பாடுகிறது நீங்கள்? அதில் நீங்கள் நினைக்கிறது கிடைக்காது. ‘ஆனால் கிடைப்பது என்?’ என்னில், 2மேலே கூறிய தண்மையே கிடைப்பது. உங்கள் நினைவால் சில பொருட்பேறு, என் நினைவால் 3செல்வத்தின்பொருட்டு மிகத்தாழ்ந்த நிலையில் விழுதலேயாம். ‘ஒன்றும் இல்லை என்பது என்? கவி பாடுவாரும் பாடினவர்களுக்குக் கொடுப்பார்களுமாய் அன்றோ போருகிறது?’ எனின், எத்தனை நாளைக்குப் போதும் – ‘இல்லை’ என்றதனைப் போன்றதேயாய் அன்றோ அதுதான் இருப்பது? நிரூபித்தால் 1கவி பாட்டு இட்டிறையாய் அன்றோ இருப்பது? என்றது, ‘கவி கேட்பித்தற்குத் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக் கேட்பித்துப் பெறுமதுவும், கவி பாடின நாள்களில் பிழைப்பதற்குப் பணையம் வைத்த பொருள்களை மீட்கவும் போராதபடி அன்றோ இருப்பது?’ என்றபடி. புலவீர்காள் – உங்கள் விசேடமான அறிவிற்குப் போருமோ இது? ‘பாடின கவியின் நேர்மை இது, பேறு இது, இதற்கு இது போரும், போராது’ என்று நீங்களே அறிய வேண்டாவோ?’ என்கிறார். இனி, ‘புலவீர்காள்’ என்பதற்குச் ‘சொற்பொருள்களின் வாசி அறியுமவர்களே!’ என்னுதல்.

மன்னா மனிசரை – சிறிது உண்டாய் அற்பமாகிலும் நீங்கள் பெறுவது, நீங்கள் செல்லுமளவும் அவர்கள் தாம் இருக்கில் அன்றே? 2‘அவரே மாண்டார்’ என்று எதிரே வருவரே! பாடிப் படைக்கும் பெரும்பொருள் – ‘இந்தத் திருமகள் கேள்வன் குறைவு அறக் கொடானோ?’ என்று பழிக்கிறார். மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் – நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனானவனைக் கவி பாடினால். 3‘பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, கவி பாடி முடி சூடி இருக்கின்றவர்கள் அன்றோ? ஆதலின், ‘ஒளி மிக்க மணிகளையுடைய முடியுடை வானவர்’ என்பார், ‘மின்னார் மணிமுடி விண்ணவர்’ என்கிறார். இதனால், ‘சென்று காணும் திரள் கவி பாடி முடி பெற்றவர்கள்’ என்றதனைத் தெரிவித்தபடி. 4‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்கிறபடியே, கவி பாடிச் சென்றவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டாடிக் கேட்பிப்பாரும் அவர்கள் என்பார், ‘விண்ணவர் தாதை’ என்கிறார். ‘பாடுதலே பிரயோஜனம்போரும்’ என்பார், ‘பாடினால்’ என்கிறார். இனி, முடி இறைவனுக்கே அடை ஆகும்போது, ‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை.

தன்னாகவே கொண்டு – 1‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ என்றும், 2‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும், 3‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும் கூறப்படுகின்றவாறே தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கே உரியவனாகக் கொண்டு’ என்னுதல். சன்மம் செய்யாமையும் கொள்ளும் – பின்னர் ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும். கவி பாடுகைக்கு அடி பிறவி ஆதலின், ‘சன்மம் செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார். அரசபுத்திரன் தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டி விடுமாறு போன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப் பின்பு இராவணனைக் கொன்றாற்போலவும், நித்திய சூரிகள் தரத்தைக் கொடுத்துப் பின்னை சமுசார சம்பந்தத்தை அறுப்பான் ஆதலின், ‘தன்னாகவே கொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார்.

என்னாவது
எத்தை நாளைக்கு போதும் –
இம்மையிலியே பிச்சை தம் கொள்வர் பின்பு வருமே
தனக்கு சமனாக பேற்றை கொடுக்கும் அவன் இருக்க
பிரயோஜனம் -சித்தியாதே -தண்மையே சித்திக்கும்
அர்த்த சித்தி உங்கள் நினைவால் –
எனது நினைவால் கீழே போவீர்
பாடுவாரும் கொடுப்பாருமுண்டே என்ன
வித்யாரண்யர் தேசிகன் -சம்வாதம்
மலை மேல் நிதி உண்டே –
இல்லை எனபது போலே தான் அவர்கள் கொடுப்பது -இட்டிலையாய்
தானே இருக்கும் –
கவி கேட்ப்பிக்கைக்கு சக காரிகளை கூட்டிக் கொண்டு போய் –
கவி எழுத நாள் ஜீவனம் பணையம் வைத்து –
கொடுத்தது இதற்கே போகாமல் –

புலவீர்காள் -தகுமா தகாதா அறியீரோ
பாடலாமா –
மன்னா மனிசராய் -அல்பம் கிடைத்தாலும் நிச்சயம் இல்லை
செல்லும் அளவும் இருக்க வேண்டுமே –
ஆண்டவரே மாண்டார் -எதிரே வருவார்களே

அரசாகிமுன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார்அந் தோ!மனை வாழ்க்கைதன்னை
வேண்டேன் நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே!’

என்பது, பெரிய திருமொழிப்பாசுரம், 6. 2 : 5.

ஸ்ரீ ய பதி -இருக்க
மின்னார் மணி முடி விண்ணவர் தாதை
கவி பாடி முடி பெற்றவர்கள் சென்று காணும் திரள்
விண்ணவர்கள்  நாதன் –
மின்னார் முடி இருவருக்கும் விசெஷணம் –
ஒளி மிக்க முடி தரித்த நித்யர் –
ஓலக்கம் கொடுத்து கேட்ப்பிக்கும் அவர்களே
கூட்டம் சேர்க்க வேண்டாமே
கேட்டு ஆரார வானவர் செவிக்கு இனிய செஞ்சொல் கவிகாள்
முடி அவன் தனக்கு விசேஷணம்
கவி பாடினவருக்கு கொடுக்க சூடிய முடி
தன்னையே ஒக்க அருள் செய்யும்
தன்னாகவே கொண்டு
பாடினதே போதும் வேறே என்ன பிரயோஜனம் வேண்டாமே
தனக்கே யாக கொண்டு
தன்னோடு ஒக்க பண்ணி
சன்மம் செய்யாமையுமஅருளி –
பிறவி அறுத்து இந்த மானிடர் கவி பாடும் துர்கதி போக்கி
பரம பதம் கொடுத்து பிறவி அறுத்து -அப்புறம் சொன்னது
ராஜா சிறையில் இருக்க
விலங்கை அறுக்கும் முன் முடி சூட்டு விப்பது போலே
முதலில் நித்யர் ஸ்தானம் கொடுத்து
விபீஷண ஆழ்வானை பட்டாபிஷேகம் செய்து ராவண வதம் செய்தது போலே
இரண்டு பட்டாபிஷேகம் உண்டே அவனுக்கு

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

ஒழிவுஒன்று இலாதபல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்க்
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதிஓர் மானிடம் பாடல் என்னாவதே?

பொ-ரை : புலவீர்காள்! சிறிதும் இடையீடு இல்லாத பலப்பல ஊழிக்காலமெல்லாம் நிலை நின்று அனுபவிக்கும்படி செல்லுகின்ற வழியைத் தருகின்ற, நம்முடைய வானவர் தலைவனை ஒழிய, புறம்பே சென்று, மிக மிக நல்லவான உயர்ந்த கவிகளைக்கொண்டு உங்களைத் தாழ்வாக நினைத்துச் சிறிய மனிதர்களைப் பாடுதலால் ஆகும் பயன் என்?

வி-கு : ‘ஒன்று ஒழிவு இல்லாத’ என மாறுக. நங்கள் என்பதில் ‘கள்’ அசை நிலை. ‘கழிய மிக நல்ல வான்’ என்ற அடைமொழிகள் கவியின் உயர்வினைப் புலப்படுத்த வந்தன. ‘ஓர் மானிடம்’ என்றவிடத்து ‘ஓர்’ என்பது சிறுமையைப் புலப்படுத்த வந்தது.

ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘வேறுபட்ட மிக்க சிறப்பினை உடையவனாய் உபகாரகனாய் இருக்குமவனை ஒழிய, அற்ப மனிதரைக் கவி பாடுவதனால் என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவ – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் இடைவிடாமல் தங்கும்படி. என்றது, 2’மீண்டும் வருகிறான் இல்லை’ என்கிறபடியே, ‘உயிர் உள்ள காலம் வரையிலும் சரீரத்தின் சம்பந்தம் அற்று வழுவிலா அடிமை செய்கைக்கு’ என்றபடி. காலத்தால் வேறுபாடு இல்லாத தேசத்திலே (பரமபதத்தில்) அனுபவத்தைச் சொல்லாநிற்கச்செய்தேயும், காலம் நடையாடும் தேசத்திலே வாழ்கின்றவர் ஆதலின், ‘பல் ஊழிதோறு ஊழிநிலாவ’ என்று காலத்தை மாட்டேற்றிச் சொல்லுகிறார். போம் வழியைத் தரும் – 1‘போய் அனுபவிக்குமது அளவிற்கு உட்பட்டது’ என்னும்படி தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமையையுடைய அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும். அன்றிக்கே, ‘தன்னைக் கிட்டும் வழியைத் தரும்’ என்னுதல்; கிட்டும் வழியைத் தருதலாவது, தானே வழியும் ஆதல். அன்றிக்கே, ‘வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான் போம் நெறியாய், அதாவது, என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச் சொல்லுகிறது.

நங்கள் வானவர் ஈசனை நிற்க – 2‘புணைகொடுக்கிலும் போக ஒட்டார்’ என்கிற பேற்றைக் கவி பாடினார்க்கு அவன் கொடுத்தாலும், ‘இவன் செய்ததற்கு நாம் செய்தது போருமோ?’ என்று மேன்மேல் எனக் கொடுப்பிக்குமவர்களை உடையவனை விட்டு. அன்றிக்கே, அவன், ‘இவன் ஒரு சொல் சொல்ல வல்லவனே!’ என்று காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்க என்னுதல். போய்-புறம்பே பாடுகைக்கு விஷயம் தேடிப் போய். அன்றிக்கே, ‘இவன் கவி பாடி வாராநின்றான்’ என்று கேட்டவாறே கழியப் போம், இவன் கவி கேட்டு யாதேனும் தான் கொடுக்கவேண்டுமே என்று நினைத்து; இவனும் அவன் புக்க இடம்புக்கு ‘இதனைக் கேட்பித்து ஒன்று பெற்றோமாய்விட வேண்டும்’ என்று தொடர்ந்து போமே. ஆக, அவன் போக இவன் போகப் போகாநிற்குமித்தனை ஆதலின், ‘போய்’ என்கிறார் என்னுதல். 3‘ஆஜகாம – வந்தார்’ என்கிறபடியே, பகவத் விஷயத்தில் ஓர் அடி வாராநின்றவாறே வேறு ஒருவர் வீட்டினின்றும் தன் வீட்டிலே புகுந்தாற்போலே இருக்கும்; வேறே சிலரைப் பற்றி அருகே இருக்கிலும் கழியப் போயிற்றதாய் இருக்குமாதலின், ‘போய்’ என்கிறார் என்னுதல்.

கழிய – ‘கவி, பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை இட்டுச் சொல்லுகையாலே அவனிடத்தில் அடங்காததாய் இருக்கும் அன்றே? ஆகையாலே, அவனை விட்டுக் கழிய’ என்னுதல். அன்றிக்கே, ‘இவன் யாரைச் சொல்லுகிறது? நம்மை அன்றோ?’ என்று கலங்கியிருப்பான்; ஆகையாலே, அச்சொற்பொருள்கள் அவனை விட்டுக் கழிய’ என்னுதல். என்றது, ‘அவனுக்கு இல்லாதனவற்றை இட்டுப் பாடினால், அவற்றை உடையவனை அன்றோ அக்கவிகள் காட்டும்?’ என்றபடி. மிக நல்ல – எத்தனையேனும் நன்றான. வான் கவி – கனத்த கவி. அதாவது, 1‘சேர்க்கப்பட்ட தொகை சந்தி இவைகளையுடையதும்’ என்கிறபடியே, சொற்செறிவுடைத்தாய் இருக்கை. ஆக, ‘மிகவும் நல்லவாய் அரணியவான கவிகளைக்கொண்டு’ என்றபடி.

புலவீர்காள் – இக்கவிக்கும் பாட்டு உண்கிறவர்களுக்கும் வாசி அறியும் நீங்கள். என்றது, ‘விசேடித்துச் சொல்லப்படுகின்ற அறிவினையுடைய நீங்கள் இப்படிச் செய்யத்தக்கவர்களோ?’ என்கிறார் என்றபடி, இழியக் கருதி – அறிவுடையரானால் நின்ற நிலைக்கு மேலே ஓர் ஏற்றம் தேடிக்கொள்ளுமது ஒழிய, கீழே போய் மிகத்தாழ்ந்த நிலைக்குச் செல்லத் தேடுவார் உண்டோ? ஓர் மானிடம் பாடல் – மிகச்சிறிய மனிதனைப் பாடல். என் ஆவது – 2‘உங்கள் விசேடமான அறிவிற்குச் சேருமதாயோ, அவர்களுக்கு ஒரு நன்மை உண்டாயோ? உங்களுக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயோ, கவிக்குத் தகுவதாயோ? எதற்காகப் பாடுகிறீர்கள்?’ என்கிறார்.

ஒழிவு ஒன்றும் இல்லாத -நிரந்தரமாக –
அர்ச்சிராதி கதி போம் வழி -தரும்
நாங்கள் வானவர் ஈசன் நிற்க
கவிகள் -வார்த்தைகள் உயர்ந்தவை -அத்தை பாழ் பட
மானிடரை ஸ்தோத்ரம் செய்து –
யாவதாத்மபாவி –
உஊழி காலம் -காலமே கிடையாதே அங்கெ
காலத்தை இட்டு சொல்லுவான் என்
இது காலம் நடமாடும் தேசம் என்பதால்
போம் வழியை தரும்
இருக்கும் இருப்பை தரும் சொல்லாமல்
அதுவே பரிச்சேதம் என்னும்படி இது நல்ல வழி என்பதால் –
போம் வழியைத் தரும்’ என்பதற்கு மூன்று வகையான பொருள்
அருளிச்செய்கிறார்: ஒன்று, போம் வழி – போகிற அர்ச்சிராதி மார்க்கம்;
இரண்டு, போம் வழி – கிட்டும் உபாயம்; மூன்று, போம் வழி – நடக்கிறவழியாய், அதாவது,

அநுவர்த்தன ஸ்வபாவமாய், இயற்கையான கைங்கரியம்.

உபாயம் தருபவனே அவனே -இரண்டாவது அர்த்தம்
அருளினன் சப்தம் இத்தை காட்டுமே –
என்றும் ஒக்க அனுவர்த்திக்கும் -பிராப்தம் -கதி -ஆதல் –
அடையும் வஸ்து தன்னை தரும் -மூன்றாவது அர்த்தம் –
போற வழிக்கு புண்ணியம் வார்த்தை -பலத்தையே சொல்லும் போலே –
நாங்கள் வானவர் ஈசன் -சௌலப்யம் ஔ தார்யம்
வாயினால் நமோ நாராணன் -புணை கொடுக்கிலும் போக ஒட்டார் நித்யர் –
புணையம் வைத்து அகல பார்க்கிலும் போக ஒட்டார்
பெரியாழ்வார் திருமொழி, 4. 5 : 2.

‘நி்ற்க’ என்பதற்கு இரு வகைப்பொருள்: ஒன்று, நிற்க – ‘அவனை
விட்டு’ என்பது. இரண்டாவது பொருள், நிற்க – ‘காலத்தை எதிர்
நோக்கினவனாய் இறைவன் நிற்க’ என்பது

பேற்றை கொடுத்தாலும் -செய்ததருக்கு போதாது என்று நித்யர் இருப்பார்களாம் –
அடியார்கள் மிக்க ஔ தார்யம் -காட்டி அருளுகிறார் –
மேலே மேலே கொடுப்பிக்கும் பரிமரம் உடைய எம்பெருமானை விட்டு –
ஈசனை விட்டு மற்றவரை பாட
இவன் ஒரு சொல் சொல்ல வல்லனே என்று அவனும் காத்து நிற்க -எதிர்பார்த்து
இருக்கிறானே -அவனை விட்டு பொய்
புறம்பே பாட விஷயம் தேடித் போய்
கவி பாடி வாரா நின்றான் என்ற கேட்டதும் கழிய போகிறார் வாசலில் போய்
ஆஜகாமா -வந்து சேர்ந்தான் விபீஷணன் அது தான் ஸு ஸ்தானம்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேன்
அக்கரை அநர்த்த கடல் பெரியாழ்வார்

போய் -சப்தம் ஜகாமா -சம்சாரம் இருக்க வேண்டிய இடம் விட்டு அகன்றதும்
கழிய மிக நல்ல வான் நான்கு விசெஷணங்கள் -கவிக்கு
மிக மிக மிக மிக சிறந்த –
இல்லாத ஒன்றை சொல்வதால் விபரீதம் விளைக்குமே
அவனுக்கு அடங்காதாதாக இருக்குமே
இது யாரை சொல்கிறது நம்மை அன்றே -பிரமித்து
அவன் இவனை விட்டு கழிய –
மிக நல்ல
வான் கனத்த
ஆதி கவி வால்மீகி ஸ்ரீ ராமாயணம்  பெருமை சொல்வது போலே
பொருத்தமாக அமைந்த -சங்கல்ப அநந்தரம் சொல்லும் ஸ்லோகம்
தத் உபகத -மதுர -ரகுவர சரிதம் -சமாசம் சாந்தி யோகம் பொருந்திய
புலவீர்காள் -வாசி அறிந்தவர் –
இருந்தும் நழுவி
இழிய கருதி -ஓர் ஷூத்ரனை பாடல் என்னாவது
புலவர் ஆக இருப்பதற்கு பொருந்துமோ

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

உளனாக வேஎண்ணித் தன்னைஒன் றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்கும்இம் மானிடத் தைக்கவி பாடிஎன்
குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன்ஆய எந்தையை எந்தைபெம் மானை ஒழியவே?

பொ-ரை : குளங்கள் நிறைந்திருக்கின்ற கழனிகள் சூழ்ந்துள்ள இடம் அகன்ற நல்ல குறுங்குடியில் சௌலப்யம் முதலிய குணங்களைப் பிரகாசிப்பித்துக்கொண்டு நித்தியவாசம் பண்ணுகின்ற எந்தையை எந்தைக்குப் பெருமானை ஒழிய, தன்னை உள்ளவனாகவே கொண்டு ஒரு பொருளாக எண்ணித் தன் செல்வத்தை மிக உயர்ந்ததாக மதித்திருக்கும் இம்மானிடத்தைக் கவி பாடுவதால் பயன் யாது?

வி-கு : ‘தன்னை ஒன்றாக எண்ணி மதிக்கும் இம்மானிடம்’ என்க. ‘என்’ என்பது ஈண்டு இன்மை குறித்து நின்றது. குளன் – குளம் என்பதன் போலி. ‘பெம்மானை ஒழிய, கவி பாடி என்?’ எனக் கூட்டுக.

ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘என்றும் உள்ளதுமாய் நிறைந்திருப்பதுமான செல்வத்தையுடையவனாய், சொரூப ரூப குணங்களால் நிறைந்தவனுமாய், அடையத் தக்கவனுமான சர்வேசுவரனை விட்டு, ஒரு சொல் சொல்லுகைக்கும் விஷயம் இல்லாத செல்வமுமாய், அது தானும் நிரூபித்தால் நிலை நில்லாமையாலே பொய்மையுமாம் அது தனக்குப் பற்றுக்கோடும் தேடிப் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கிற புல்லரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.உளன் ஆகவே எண்ணி – 1இலன் ஆகவே அறுதியிட்டு இருக்கிறார் ஆயிற்று இவர். ‘அந்தப் பரம்பொருளைத் தவிரப் பலவகைப்பட்ட பொருள்கள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே, அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒரு பொருள் இல்லை என்று இருக்கும்படியாலே. 2‘நினைக்கின்ற காலத்திலும் அவனை உளன் ஆக நினையாத போது ‘இவனும் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, தாம் உளர் அன்றிக்கே இருப்பர் அன்றோ? அவனை ‘உளன்’ என்று நினைத்துத் தான் உளனாக வேண்டியிருக்க, அவனை ‘இலன்’ என்று தான் உளனாக விரகு இல்லையே?’ என்றபடி. 3தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ? 4தன்னைக் கட்டிக்கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ, அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?

ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார். தன்னை – 1உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே, ‘அவன் நமக்கு உளன்காண்’ என்றால் பின்னை அச்சம் அற்றவனாய் மார்விலே கைவைத்து உறங்கலாம்படி இருப்பான் ஒருவனை உளன் என்றுதான் நினைக்கிறானோ? தன்னுடைய உண்மை அவனுடைய உண்மையாலேயாய் இருக்க, அவனை ஒழிய ‘பிரஹ்மத்தை இல்லை என்று அறிகிறானாகில் அவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே, இன்றியே இருக்கிற தன்னை.

ஒன்றாக – போரப் பொலிய நினைத்து. தன் செல்வத்தை – ‘ஸதி தர்மிணி தர்மா: – தர்மி உண்டானால் தர்மம் இருக்கும்,’ என்கிறபடியே, தான் உண்டானால் அன்றே தர்மம் உண்டாவது? தன்னையே தேடிப்பிடிக்க வேண்டும்படியாயிருக்கத் தனக்கு ஒரு செல்வம் உண்டாக நினைக்கிறான் அன்றோ? வளனா – ‘வளமாக’ என்றபடி. அதாவது, ‘அழகியதாக’ என்னுதல், ‘மேலாக’ என்னுதல். ‘இறைவன் செல்வத்துக்கும் மேலாய் அன்றோ தன் செல்வத்தை நினைத்திருக்கிறான்?’ என்றபடி. மதிக்கும் – தானே இதனைக் குவாலாக மதிக்குமித்தனையே அன்றோ? புறம்பே இதனை ஒன்றாக நினைத்தற்கு இவனைப்போன்ற மாக்கள் இல்லை என்றபடி.

2கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட, அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய, அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன, ‘ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே? கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான். இம்மானிடத்தை – 3மேலேஉரித்து வைத்தாரே அன்றோ அவர்கள் தன்மையை? அறிவு இல்லாத பொருள்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்; 1தன்னை மெய்யாக அறியாதவன் அறிவு இல்லாத பொருள்களுக்குச் சமமானவன் ஆகையாலே மனிதன் என்று சொல்லவும் பாத்தம் காண்கின்றிலர்காணும். கவி பாடி என் – இவர்கள் மறைத்திட்டு வைக்கிற குற்றங்களைப் பிரபந்தமாக்கி வெளியிட்டால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு?

குளன் ஆர் கழனி – விளைநிலங்களைக்காட்டிலும் ஏரிக்கட்டே விஞ்சி இருக்குமாயிற்று. இல்லையாகில், சாவி போம் அன்றோ? இதனால், காப்பாற்றப்படுகின்ற பொருள்களைக்காட்டிலும் இறைவனுடைய பாதுகாக்கும் தன்மையே விஞ்சின ஊர் என்பதனைத் தெரிவித்தபடி. குளன் – குளம். ஆர்தல் – மிகுதல். கண்ணன் குறுங்குடி – சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம். ‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப் பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்; அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்பது பொருள். மெய்ம்மையே உளனாய – கவிகளில் கேட்டுப்போமித்தனையேயாய்த் தன் பக்கல் ஒரு நன்மையும் இன்றிக்கே இருக்கை அன்றியே, சொன்னவை எல்லாம் மெய்யே பத்தும் பத்தாகக் காணலாம்படி இருக்கும் ஸ்வாமி. இவ்விஷயத்தில் 2அர்த்தவாதம் இல்லை; புறம்பே உள்ளவற்றில் அர்த்தவாதம் அல்லது இல்லை. இவ்விஷயத்தில் உள்ளன எல்லாம் சொல்லி முடியா; புறம்பே உள்ளவற்றில் சொல்லலாவது இல்லை.

எந்தையை – நான் கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை. அன்றிக்கே, ‘கவிபாடுகைக்கு வகுத்த விஷயமானவன்’ என்னுதல். ‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி. எந்தை பெம்மானை ஒழியவே – சம்பந்தம்தம்மளவோடு முடிவு பெறாமையாலே, ‘என் குலநாதன்’ என்கிறார். ‘எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாக இருப்பவனாய் அடையத் தக்கவனுமான இவனை ஒழிய, குணம் என்பது சிறிதும் இன்றிக்கே மிகச் சிறியருமாய் அடையத் தகாதவருமாய் இருக்கிற மனிதரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 18, 2013

ஒன்பதாந்திருவாய்மொழி – ‘சொன்னால் விரோதம்’

முன்னுரை

    ஈடு : 1இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சமுசாரிகள். தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்; 2‘பருகிக் களித்தேனே!’ என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கு 3‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று, இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சமுசாரிகளைப் பார்த்தார்; அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்; 4‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே, பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும், பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும், தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும், வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும், 1‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப் பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.

2அவர்களைக் கண்டவாறே, 3வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; 4பிறர் கேட்டினைக் கண்டால் அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும் கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான 5நல்வார்த்தை அருளிச்செய்ய, அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர், அவர்களில் 6தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.

7அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் 1உடையனாய், திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக் 2‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்றும், 3‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும் சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய், கவி பாடினார்க்கு வழங்குகைக்கு 4‘வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய், அவர்களுக்குக் கொடுக்கைக்கு 5உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், 6‘வல்லது ஓர் வண்ணம் சொன்னால், அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும் குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே, 7‘எங்கும் உளன் கண்ணன்’ என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், 8சுலபனுமாய், கவி பாடினார்க்குப் போகம் மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம் போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க அவனை விட்டு; கவி பாடுகைக்கு ஈடான 1நன்மைகள் ஒன்றும் இன்றியே தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனிஇருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும் இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே 2நூறு கற்றையாதல் ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; இவன்தான் பலநாள் கூடி நெஞ்சுகன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் 3‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய், ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, 4இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு போன்றே அன்றோ கவி பாடுவது? ‘ஆனால், வருவது என்?’ என்னில், பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமேஇவன்தனக்கு? மறந்தவற்றை அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது? அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை விளைவிக்கின்றவர்களாய், பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி பாடினவன் அன்றோ இவன்?’ என்று, ‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;

‘ஆத்துமா இறைவனுக்கு அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு பிறரைத் துதித்தல் ஈடு அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே அது பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’ என்று பார்த்து, ‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு தப்பிப் போனார் மகிழுமாறு போன்று 1தமக்கு உண்டான வேறுபாட்டினை நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.

ஆயிர மாமறைக் கும்அலங் காரம், அருந்தமிழ்க்குப்
பாயிரம், நாற்கவிக் குப்படிச் சந்தம், பனுவற்கெல்லாம்
தாய்,இரு நாற்றிசைக் குத்தனித் தீபம்,தண் ணங்குருகூர்ச்
 சேய்இரு மாமர பும்செவ்வி யான்செய்த செய்யுள்களே.’

என்பது சடகோபரந்தாதி.

‘திங்களின் இளங்குழவிச் செம்மல்இவன் என்றும்
செய்யபரி திக்குழவி ஐயன்இவன் என்றும்
தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமும்
தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே.’

என்றார் சயங்கொண்டார்.

(கலிங்கத்துப் பர. 238.)

1. ‘உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
‘தமக்கு உண்டான வேறுபாட்டினை அநுசந்தித்து’ என்கிறார்.

சொன்னால் விரோதம்இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என்நாவில் இன்கவி யான்ஒரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாஎன்று வண்டு முரல்திரு வேங்கடத்து
என்ஆனை என்அப்பன், எம்பெரு மான்உள னாகவே.

பொ-ரை : ‘நான் இந்த நலத்தைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்லுவன் கேளுங்கள்: வண்டுகள் தென்னா தென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானையும் என் அப்பனும் ஆய எம்பெருமான் உளனாய் இருக்க, என் நாவினின்றும் வருகின்ற இனிய கவிகளை யான் ஒருவர்க்கும் கொடேன்,’ என்கிறார்.

வி-கு : ‘இது சொன்னால் விரோதம்’ என மாறுக. என் ஆனை – எனக்கு யானை போன்றவன். ‘உளனாக யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ எனக் கூட்டுக.

ஈடு : முதற்பாட்டில், 1மனிதர்களைக் கவி பாடுகை உங்களுக்கு நன்மை அன்று என்று உபதேசம் செய்யப் புகுந்தவர், அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக, ‘நான் இருக்கிறபடி பார்த்தீர்கள் அன்றோ?’ என்று தம்முடைய மதத்தை அருளிச்செய்கிறார்.

2இது சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் – வேறு ஒரு பிரயோஜனத்தைக் கருதினவர்களாய்க் கவி பாடுகிற உங்களைக் ‘கவி பாடாதே கொள்ளுங்கோள்’ என்று கூறுதல், உம்தம் பிரயோஜனத்தைத் தவிர்த்தலேயன்றோ? ‘நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த்தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு? ஆயிருக்கவும் சொல்லுகிறேன்,’ என்கிறார்.

அன்றிக்கே, 1‘காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ? இருந்தால் சொல்லப்படட்டும்,’ என்கிறபடியே, திருநாமத்தைச் சொன்னால் உடனே இடிவிழும் என்று வரும் கேட்டினைச் சொல்லுங்கோள்; இன்றேல் திருநாமத்தைச் சொல்லுதல் செய்யுங்கோள்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததேயாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.

அன்றிக்கே, 2‘காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின்மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று, ஓலக்கத்திற்சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும் என் வாயாற்சொல்ல ஒண்ணாது; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ? இங்ஙனம்இருக்கவும், சொல்லும்படி அன்றோ இருக்கின்றது நீங்கள் நிற்கிற தீய நெறியின் தன்மை?’ என்னுதல்.

ஆகிலும் சொல்லுவன் – ஆயிருக்கவும் சொல்லுகிறேன். ‘நன்று; இப்படி இருக்கவும் சொல்லுகிறது என்?’ என்னில், நீங்கள் 1சமம் தமம் முதலிய குணங்களோடு கூடினவர்களாய்ச் சமிதை தரித்த கைகளையுடையவர்களாய் வரச்சொல்லுகிறேன் அன்றே? உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்; ஆகையால் அதற்குப் பரிகாரம் பிறக்குமளவும் சொல்லுகை தவிரேன். என்றது, நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார் என்றபடி. கேண்மினோ – ‘இது கேட்ட பின்னர் நடைமுறை அளவும் வரவேண்டும் அன்றோ?’ என்று அஞ்ச வேண்டா; செவி தாழ்க்க அமையும்; அதனைச் செய்ய வேண்டா.

‘அது என்?’ நலத்தை விரும்பியே அன்றோ சொல்லுகிறது?’ என்னில், கேட்கவே, மக்கள் ஆகையாலே மேல் விழுவர்கள் அன்றோ? ஆசையோடு அடையத் தக்கவாய் வருமவற்றுக்கு நாம் சொல்லவேண்டா; ஆகையால், நாம் அதனை விதித்தோம் ஆகிறது என்? என்று? ‘கேண்மின்’ என்கிறார். ‘கடலோசைக்குச் செவி புதையாதே கேட்கின்றமை உண்டன்றே? 2அவ்வோபாதியாகிலும் கேண்மின்,’ என்பார், ‘கேண்மினோ’ என்கிறார். கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை வாய்பாட்டால் அருளிச்செய்கின்றார். பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போன்று பகவத் விஷயத்தைக் கேட்பதற்குக் கால் பிடிக்கிறார் இவருடைய செல்லாமையாலேஎன் நா – 1இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடையது,’ என்கிறபடியே, நான் அவனுக்கு அடிமை ஆகையாலே, எனக்குக் காரணமாய் அவனுக்கு அடிமை ஆன என் நா. 2‘வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார். ‘என்னைப் போலே நாவால் காரியம் கொண்டார் உளரோ?’ என்கிறார் என்றபடி. இன் கவி – 3இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி. தலைவனுக்கு இனியதான வழியாலே அன்றோ அடிமையாக உள்ளவனுக்கு இனியதாவது? ‘ஆயின், தொண்டு செய்கிற அடியவனுக்கு இனிமைக்குக் காரணம் உண்டோ?’ எனின், ஆண் பெண் இருவர் கலவாநின்றால், இரண்டு தலைக்கும் உள்ள இன்பம், சேஷ சேஷிகள் பரிமாற்றத்திலும் உண்டே அன்றோ? அன்றிக்கே, அவனுக்கு இனியதாய் அவ்வழியாலே தனக்கு இனியதாகை அன்றோ அடியவனாக உள்ளவனுக்கு வாசி என்னுதல்?

யான் – அவனுக்கே உரிய அடியவனாய் இருக்கிற யான். 4இதனை நினைத்தே அன்றோ மேல் ‘யஸ்யை தே – இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ’ என்றது? ஒருவர்க்கும் கொடுக்கிலேன் – ‘ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ என்னும் இது, மேலே கூறிய அத்தியந்த பாரதந்திரியத்தோடு சேர்ந்ததாய் இல்லையே? ‘புறம்பு ஒருவர்க்கும் கொடேன்’ என்கையாலே, ‘இறைவன் விஷயத்தில் கொடுப்பேன்,’ என்கிறார் ஆவர்;தனக்கு என்று ஒன்று உண்டாய்க் கொடுப்பது கொள்ளுவது ஆதல் சேருமோ சொரூபத்துக்கு?’ என்னில், 1அடியிலே இறைவன், நினைந்து அறியும் ஆற்றலையும் தொழில் செய்தல் செய்யாமைக்குரிய சத்தியையும் கொடுத்து வைத்தால், பின்னர் ‘நான் கொடுத்தேன்’ என்னலாம் அன்றோ? 2இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது? கோதானத்திலே பிதா புத்திரன் கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான் பெற்றானாய் இருக்குமாறு போன்று, இவனும் தனக்கே உரித்தான செல்வத்தைத் தந்தானாய், இவன் சர்வஸ்வதானம் பண்ணத் தான் பெற்றானாக நினைத்திருக்கும் இறைவனுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.

3‘என்னால் தன்னை இன் தமிழ் பாடிய’ என்கிறபடியே, தான் இவரையிட்டுப் பாடுவித்து, இவர் தன்னைப் பாடினாராக நினைத்திருக்குமவன் அன்றோ இறைவன்? ‘நன்று; ‘யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ என்கைக்குக் காரணந்தான் என்?’ என்னில், ‘அல்லாதார் புறம்பு உள்ளார்க்குத் தங்கள் கவியைக் கொடுத்து வைக்கையாலே, யான் ஒருவர்க்கும் கொடுக்க மாட்டேன்,’ என்கிறார். ஆக, ‘இதனால், வழி கெடப் போகிற நீங்கள், ஒருவன் வழியே போகாநின்றால் ‘நாமும் அப்படியே போகவேண்டும்’ என்று இருக்க வேண்டாவோ மக்கட் பண்பு இருந்தால்? நான் இருக்கிறபடி கண்டீர்களே அன்றோ? அப்படியே அன்றோ உங்களுக்கும் இருக்க அடுப்பது?’ என்கிறார் என்றபடி.தென்னா தெனா என்று வண்டு முரல் – 1இதுகாணும் இவர் கவி பாடினபடி. என்றது, ‘வண்டுகள் மதுவைக் குடித்த மயக்கத்தாலே பிரீதிக்குப் போக்கு விட்டு முரன்றது இசையாய் விழுந்தாற்போலே ஆயிற்று, இவரும் பகவானை அனுபவித்தலால் உண்டாகும் உவகைக்குப் போக்கு விட்டது கவி ஆயிற்று,’ என்றபடி. பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை. 2பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?

திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக்காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும் தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான 3ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன். 4யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார். ஆக, 1‘வண்டுகளானவை மதுபானப் பிரீதியாலே தென்னா தெனா என்று ஆளத்தி வைப்பாரைப்போலே ஒலிக்கிற திருமலையிலே அண்மையில் இருப்பவனாய் எனக்கு யானை போலே அனுபவிக்கத் தக்க பொருளாய் உள்ளவனை’ என்றபடி. அவ்வண்டுகளோடே சகோத்திரிகளாய் அனுபவிக்கிறார்.

என் அப்பன் – நாட்டார் பிறரைக் கவி பாடித் திரியாநிற்க, அவர்களுக்கும் நன்மை சொல்ல வல்லேன் ஆம்படி பண்ணின மஹோபகாரகன். எம்பெருமான் – தீமையே செய்யினும் விட ஒண்ணாத சம்பந்தம். உளன் ஆகவே – 2‘ஆஸயா யதிவா ராம: – ஸ்ரீ ராமபிரான் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்னும் ஆசையால் அங்கே இருந்தேன்,’ என்பது போன்று பிரார்த்திக்கப்படுமவன் என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ? அன்றிக்கே, ‘அஸந்நேவ – இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, ‘தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று, தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது, நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல். 1‘ஆன பின்னர், என்னைப் போலே இருக்கை காணுங்கோள் உங்களுக்கும் அடுத்திருப்பது’ என்கிறார் என்றபடி.

சுற்றி இருப்பாரை பார்த்தாராம் –
துக்கம் பார்த்து –
சொன்னால் விரோதம்
ஆகிலும் சொல்வேன் -என்கிறார் –
என் நாவில் இன் கவி யாருக்கும் சொல்லேன்
என்கிறார்
பர உபதேசம் –
வீடு முன் முற்றவும் -அடுத்த விரோதி ஸ்வரூப பதிகம் இது –
தம்முடைய இழவுக்கு கூப்பிட்டார் கேட்டார் கண்கள் நீராகும் படி
அடியார்கள் குழாம் -பருகி  களித்த பின் கூட்டுத் தேட ஆழ்வார் –
போதயந்த பரஸ்பரம் நித்ய சூரிகளை தேடி
அது போலே துக்கம் ஏற்பட -அதுக்கும் துக்கத்துடன் இருக்கும் சம்சாரிகளை நோக்க
சம்சாரிகள் கூட்டு என்று பார்த்தால் –
அவர்கள் பேற்றுக்கு கூட்டு அல்லாது போலே இழவுக்கும் கூட்டு இல்லை

கூட்டின்றிக்கே இருந்தமைக்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அறியார் சமணர்’ என்றது முதல், ‘திரிகின்றவர்களுமாய்
இருந்தார்கள்’ என்றது முடிய. ‘அறியார் சமணர்’ – இது, நான்முகன்
திருவந். 6.
மேற்கோள் பாசுரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
‘பொருத்தமில்லாதவைகளை’ என்று தொடங்கி. ‘பொருத்தமில்லாதவைகளைச்
சொல்லுவாரும்’ என்றது, தத்துவத்தின் உண்மையை அறியாமல்
சொல்லுகின்றவர்களை; என்றது, சமணரை. ‘ஞானசந்தானத்தைக் கொள்ளுவார்’
என்றது, பௌத்தர்களை. ஞானசந்தானம் – ஞானபரம்பரை. ‘பிரத்யபிஜ்ஞ
அர்ஹமாம்படி’ என்றது, ‘அனுபவித்ததை மீண்டும் நினைப்பதற்குத்
தகுதியாம்படி’ என்றவாறு. ‘தன்னைப் போன்றான் ஒரு க்ஷேத்ரஜ்ஞனை
‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்’ என்றது, சைவர்களை. க்ஷேத்ரஜ்ஞன் –
ஆத்துமா. இங்குக் கூறப்படுவனவற்றை முதற்பத்து அவதாரிகை ‘திருமகள்
கேள்வன் ஒன்று’ பக். 9-13 இல் காணலாம்.

திருத்தி தம்முடன் சேர்த்து கொள்ள அருளுகிறார் –
ஞான சந்தானம் பௌத்தர் -ஷணம் தூறும் அழியும் வஸ்து
விளக்கு திரி எண்ணெய்  –
தொ டர்ந்து வருவதால் இருப்பது போலே தோன்றுமே
ஷேதரரஞ்-வேற சில்லறை தெய்வம் சேர்த்து –
– அவர்களே தேவலை போலே சப த்தாதிகள் ஆசைப் பட்டு கவி பாடி திரியும்
சம்சாரிகள் –
வாளேறு காண தேளேறு மறந்தது போலே –
பெரிய துக்கம் கண்டு தமது துக்கம் மறந்து –
பிறர் அநர்த்தம் கண்டால் அதை பரிகரித்து
கூட்டிப் போக ஹிதம் அருளிச் செய்கிறார் த் பேசி –
கூடாதவனாய் இருக்கும் இருப்பை பேசுகிறார் –
ஏற்கும் பெரும் புகழ் புகழ்
கவிக்கு விஷயம் போகும்படியாய் இருக்கும் ஒருவன் அவன்

கொண்டாட ஈடாக வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்
கேட்டு வானவர் ஆரார
தொண்டர்க்கு அமுது உண்ண
வேண்டிற்று எல்லாம் தரும்  என் வள்ளல் –
கொடுக் கைக்கு விபூதி உள்ளவன்
பாடின கவி -எங்கும் உளன் கண்ணன்
சுலபன்
மோஷாதி சகல மும் கொடுப்பவனாய்
பாடு கையே பிரயோஜனம்
மொட்டைத் தலையன் -கதை
இழி கண்ணன் புண்டரீகாட்ஷன் சொல்லி –
இல்லாமையால் நூறு கத்தை
நூறு கற்றையாதல்’ என்னும் இவ்விடத்தில்,

‘வார்த்தை பதின்கலம் வழியில்ஓர் எண்கலம்
கூட்டில் அறுகலம் கொடுப்பது முக்கலம்
ஆள்கலம் போக்கிப் பதர்கலம் போக்கி
நான்கலம் பெற்றேன் பிள்ளைகாங் கேயர்க்கே.’

என்ற செய்யுளை நினைத்தல் தகும். பொய்த்தரவு – பொய்யோலை.

இப்படி பொய்த்தரவு இருக்குமே லோகத்தில் –
இருந்தும் இழவாய -நிலை இன்றி போயும் இழவாய –
இரு மருங்கும் துய்யான்

ராவணன் மால்யமான் மாரீசன் விபீஷணன் சொல்லியும் கேட்க்காமல் இருப்பது போலே இருக்க –
தமது நிலை பார்த்து -விசேஷ கடாஷம்
வழி பறிக்கும் இடத்தில்தனது கைப் பொருளைக் கொண்டு தப்பிப் போவது போலே –
ஸு லாபத்தை பேசித் தலைக்கட்டுகிறார் –
அவர்களுக்கு ருசி பிறக்க தமது நிலையை முதலில் அருளுகிறார் –
இந்த முதல் பாசுரத்தில் பிறர் கவி பாடும் இழி செயலை அருள வில்லையே

வண்டு முரலும் திருவேங்கடத்து
ஆனை அப்பன் இருக்க –
சொன்னால் விரோதம் –
கவி பாடாதே இரும் என்றால் பிரயோஜனம் பெற்று போவீர்களே –
விரோதம் ஆனாலும் சொல்லுவேன் என்கிறார் –
அன்றிக்கே –
திருநாமம் சொன்னால் அநர்த்தம் வரும் -இடி விழும் -என்று அனர்த்தம் இல்லை
அவசாதம் -துக்கம் இருந்தால் திருநாமம் துயர் வரின் சொல்லுமின்
துக்கம் இல்லாத பொழுது சொன்னாலும் இடி விழாது –
ஆசுர பிரக்ருதிகளுக்கு பிரகலாதன் -சொல்லிய வார்த்தை –

விபரீதம் உண்டானாலும் -இரண்டாவது அர்த்தம்
அன்றிக்கே
ராஜ பத்னி -ர்ண மூல மது சூதன -யமன் தூதர்களுக்கு காதோடு சொல்லிய வார்த்தை –
நமனும் தமது தூதுவரைக் கூவி செவிக்கு -உரக்க சொல்லாமல் –
ராஜ தார ப்ராவண்யம் நிஷேதம் உபதேசிக்க –
மூன்றாவது அர்த்தம் -எனக்கே விரோதம் ஆகலாம் ஆகிலும் சொல்லுவேன்

அசேவ்ய சேவை கூடாதே –
சமம் தமம் சமித் பாணியாய் -வர வேண்டாம்
லஷ்யம் பன்னாவிடிலும் சொல்லுவேன்
பரிகாரம் வரும் வரை சொல்லுவேன்
அபிமதம் மீளாமல் நீங்கள் இருக்க
சொல்லுவதே உபதேசம்
தேள் கொட்ட ரஷிக்க ஸ்வாபம் ரிஷி கதை போலே
கேண்மினோ –
அனுஷ்டானம் வேண்டாம்
காது கொடுத்தால் போதும்
கேட்டால் மேல் விழுவார் இவர் நினைவு
கடலோசை கேட்க செவி உண்டே அது போலே கேண்மின் என்கிறார்

கேண்மின் -பன்மை
அநர்த்தம் எல்லாருக்கும்
பால் குடிக்க கால் பிடிக்கிறார் –
நானும் அவ்வழியே போக -வழி தெரியாமல் இருக்க -பின் பற்றலாமே
இருக்கும்படியை கண்டு இருப்பது அடுப்பது
எச்ய -நான் அவனுக்கு சேஷம் -எனக்கு கரணம் நா வும் அவனுக்கு சேஷம் –
பார்யா -தாஸ்யா -சுதாகா -பிள்ளை -பணத்துக்கு கிடையாது எஜமானுக்கு உரியவர்கள்
என்னுடைய இந்திரியங்கள் -என் நா -அவனுக்கு சேஷமாய் உள்ள
இன் கவி -ஈஸ்வரன் கேட்டு பிரசன்னனாய் இருக்க
அவ்வழியால் இன் கவி
சேஷிக்கு இனியதான வழியே செஷபூதனுக்கு
மிதுனமாய் கலவா நின்றால் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
யான் –
அவனுக்கு அனன்யார்க செஷபூதன் அறிந்த நான்
புறம்பு ஒருவனுக்கு கொடுக்கிலேன் –
தனது வஸ்து ஒன்றுமே இல்லையே
அத்யந்த பாரதந்த்ர்யம் -இப்படி சொலலாமா
சரீரம் இந்திரியம் அவன் கொடுத்தது
கார்யம் இவர் பண்ணிக் கொடுப்பது
அவனுடைய வஸ்துவை அவனுக்கே கொடுத்து என்னது சோழ உரிமை உண்டே
கோ தானம் பிதா பித்ரு கையில் கொடுத்து -வாங்கிக் கொள்வது போலே
தமப்பனுடைய செல்வத்தை புத்திரன் ‘என்னது’ என்று
கூறலாம்,’ என்பது கருத்து.

உரிமை சொல்லப் பண்ணுகிறது -பிராப்தி இருக்கும் நிலை –
மகா பலி தானம் கொடுப்பது போலே -தன்னது
இவனும் புதிசாக கொண்டது போலே
என்னால் -இவர் தன்னைப் பாடினதாக அவன் நினைத்து இருக்கிறான் –
தென்னா தெனா -வண்டு
இது தானும் இவர் கவி பாடின படி
வண்டுகள் முரலுவது ப்ரீதிக்கு போக்குவீடாக்கி
இசையாய் போனது போலே –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 18, 2013

நிகமத்தில் –
புலம்பு சீர் -உடைய எம்பெருமான்
லோகம் அடையும் புலம்பும் படி
பூமியை அளந்து
அந்ய சேஷத்வம் ஸ்வ ச்வாதந்த்ர்யம் கழிய
நலம் கொள் சீர் -கரணங்கள் ஆத்மா உடன் சேராமல் சேதன சமாதி
விடாய் -தான் நலம் கொள்
அனுபவு அபிநிவேசம்
நன் குருகூர்
சொல் -வலம் கொண்ட ஆயிரம்
சொல்ல வேண்டிய அர்த்தத்தை சொல்லி –
எம்பெருமானை கொடுக்கும்
பிரதிபாத்ய வஸ்துவை வலம் கொண்டு விழா க்கொலை கொண்ட ஆயிரம்
பரம பதம் -இவையும் ஓர் பத்து –
யாவரும் ஏறுவார் வேறுபாடு இன்றி
அங்கெ இந்த்ரியங்கள் திண்டாடாமல்
பல ரூபங்கள் பல சரீரம் கொண்டு புகப் பெறுவார்
இலங்கு வான் ஏறுவார்

விளங்கிய பரம பதம்
சடகோபன் சொல் -அளிக்குமே
சாரம் -முடியாத -ஆசை -கரணங்கள் முற்றும்
அடியார் தம்மை விட்டு –
அவன் பல் படிந்து
ஓன்று ஒன்றின் செயலைவிரும்ப
உள்ளது எல்லாம் தான் விரும்ப
மாறன் சொல் வெளி வந்ததே

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 18, 2013

பொருந்திய மாமரு தின்னிடை போயஎம்
பொருந்தகாய்! உன்கழல் காணிய பேதுற்று
வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?

பொ-ரை : பொருந்திய பெரிய மருதமரங்களினிடையே சென்ற எம் பெருந்தகாய்! உன் திருவடிகளைக் காணவேண்டும் என்று மயங்கி வருந்தி வார்த்தைகளாகிய மாலையைக் கொண்டு இருந்து உன்னையே எத்தனை காலம் புலம்புவேன்?

வி-கு : ‘போய பெருந்தகாய்’ என்க. காணிய – வினையெச்சம்.. பேதுறல் – அறிவு திரிதல்.

ஈடு : பத்தாம் பாட்டு. 2‘உன்னைக் காணப்பெறாத துன்பத்தால் வருந்துகிற நான், இன்னம் எத்தனை காலம் கூப்பிடக் கடவேன்?’ என்கிறார்.

பொருந்திய மா மருது – மருது, மா மருது, பொருந்திய மா மருது. மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, 3‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி. ‘மா’ என்கையாலே, மாறு என்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம். ‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி. ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டையுடையராய், சீற்றத்தையுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி. இடை போய – இப்படி நிற்கிறவற்றின் அருகே போகையுங்கூடப் பயங்கரமாய் இருக்க, இவற்றின் நடுவே, 1ஒன்றிலே வெளி கண்டு போவாரைப் போலே போனான் ஆயிற்று. எம் பெருந்தகாய் – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!

உன் கழல் காணிய – 2‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவைமுரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. என்றது, 3‘தாமரைக் கண்ணரான அந்தக் கண்ணபிரான் சென்றார்’ என்று புரிந்து பார்த்த கண்களைக் காண ஆசைப்பட்டான் மஹரிஷி; தவழ்ந்து போகிற போதைத் 4திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றபடி. எல்லா நிலைகளிலும் அவனை அடி விடாரே. ‘மஹரிஷியைப் போன்று கண்ணழகைக் காண ஆசைப்படாமல், இவர் திருவடிகளின் அழகைக் காண ஆசைப்படுவான் என்?’ எனில், தந்தாம் ஜீவனத்தை நோக்கத் தேடுமித்தனை அன்றோ எல்லாரும்? ஆகையாலே, இவரும் தம்முடைய 1ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.

பேதுற்று – அறிவு கெட்டு. வருந்தி – இழந்த விஷயத்துக்குத் தக்கபடி அன்றோ கிலேசமும் இருப்பது? நான் – 2அடியே பிடித்து ஜீவித்துப் போந்த நான்; 3‘நின் செம் மா பாத பற்புத்தலை சேர்த்து ஒல்லை’ என்கிறபடியே, அத்திருவடிகள் பெறில் 4தலையாக ஜீவித்து, அஃது இல்லையாகில் இல்லையாம்படியான நான் என்றபடி. வாசகமாலை கொண்டு – 5ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று, இவர்க்கு ஒரு சொற்கொண்டு சொல்லுகை. உன்னை – 6‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை. இருந்து இருந்து – 7ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால் அது தலைக்கட்டுகைக்கு நடுவே பதின்கால் பட்டைப் பொதிசோறு அவிழ்க்க வேண்டுங்காணும். எத்தனை காலம் புலம்புவனே – 1‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.

விசனத்தால் கிலேசப்படுகிற நான்
எத்தனை நாள் புலம்புவனே
வாசகமாலை கொண்டு
பெரும் தகை
மருது இரட்டை யாக இருக்கும்
பொருந்தி
ஒற்றுமையாக இருக்கும் இரட்டையர் –
நெருக்கமாக இருக்க
அசுரா வேஷம் பொருந்திய
ரிஷி சாபம் தீர்க்க நடுவில் போனான்
மருது மரம் -மரத்தை போலே வலி ய நெஞ்சு
மா மருது -விழுந்தால் என்ன செய்வது
பொருந்திய விரோதம் பொருந்தி
சங்கேதம் கொண்டு சீற்றம் கிருஷ்ண தர்சனத்தாலும் நெகிழா நெஞ்சு
அதனால் மரம் போலே வந்தார்கள்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 18, 2013

கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற
கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள்துணித்த
புள்வல்லாய்! உன்னைஎஞ் ஞான்று பொருந்துவனே?

பொ-ரை : ‘மஹாபலி! நான் கொள்வேன்; மூவடி மண்தா,’ என்ற கள்வனே! கம்ஸனைக் கொன்று, வாணனுடைய மனவலிமை தீரும்படி ஒப்பற்ற ஆயிரம் தோள்களையும் துணித்த கருடவாகனனே! உன்னை எப்பொழுது சேர்வேன்?

வி-கு : ‘மூவடி’ என்றது, மூவடி மண்ணினைக் குறித்தது. ‘வஞ்சித்துத் துணித்த புள் வல்லாய்’ என்க. புள் வல்லாய் – புள்ளைச் செலுத்துவதில் வல்லவனே.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘பாதுகாப்பதற்கு உரிய உபாயத்தை உடையனுமாய் விரோதிகளை அழிக்கிற சீலனுமான உன்னை நான் கிட்டுவது என்று?’ என்கிறார்.

கொள்வாள் – 2மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று. அன்றிக்கே, இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு ‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி; ‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல். நான் – 3உன்பக்கல் பெற்றால் அன்றி ஓர் அடி இடாத நான். மாவலி – 4பிறந்த அன்றே பிக்ஷையிலேஇறங்கினான் ஆகையாலே பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லி அறியானே! முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லியறியான்; பிறந்த பின்பு வாசனை பண்ணுகைக்கு நாள் இல்லை; அதனாலே, ‘மாவலி’ என்கிறான்.

எல்லோரும் தன்னை உயர்த்திச் சொல்லுமது ஒழிய இப்படிச் சொல்லக் கேட்டு அறியாமையாலே ‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்றான். ‘மூவடி’ என்கிறான். தன் பக்கல் கொள்ளுமவர்களில் இப்படிச் சிறுக விரும்புகின்றவர்கள் இல்லாமையாலே விருப்பு இன்றியே இருந்தான்; ‘பராமுகம் பண்ணாதே ‘தா’ என்கிறான். என்ற கள்வனே – இந்திரன் சரணம் புக்கு நின்றான்; கொடையாளியாய் இருப்பான் ஒருவன் அவனுடைய இராச்சியத்தைப் பறித்துக்கொண்டான்; ‘இராவணன் முதலியோர்களைப் போன்று அழியச்செய்யப் போயிற்று இல்லை, சிறிது தர்மத்தை ஏறிட்டுக்கொண்டு நிற்கையாலே; இந்திரனோ, சரணம் புக்கு நின்றான்; இனிப் போம் வழி என்?’ என்று பார்த்துத் தன்னை இரப்பாளன் ஆக்கி, சுக்கிரன் முதலியோர், ‘இவன் தேவ காரியம் செய்ய வந்தான்,’ எனச்செய்தேயும், அவ்வார்த்தைகள் அவன் நெஞ்சில் படாதபடி அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.

கஞ்சனை வஞ்சித்து – கம்ஸன் மாமனாய், விழிப்புடன் இல்லாமையாலே புகுந்ததாகத் தானும் துக்கத்தையுடையனாய்க் கண்ண நீர் பாய்த்துவானாக வாசலிலே குவலயாபீடத்தையும் மல்லரையும் நிறுத்தி வைக்க, அவற்றை அழித்து, கம்ஸன் கோலின வஞ்சனத்தை அவன்தன்னோடே போக்கினவனே! வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் – 1‘சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி 2கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை வந்தவனே! ‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப்பண்ணிற்று’ என்று 1அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’ என்பார், ‘உள் வன்மை தீர ஆயிரம் தோள் திணித்த’ என்கிறார். 2‘ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ என்றார் திருமழிசைப்பிரான். 3‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி. ‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – 4சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 5‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற் போலே இருக்கிறதுகாணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி. ‘சொரூபஞானம் பிறந்தால் அவன் பக்கல்நின்றும் பிரிந்தது போன்று தோன்றும்படி எங்ஙனே?’ எனின், சொரூபஞானம் பிறந்தவாறே முன்புள்ள காலமெல்லாம் சமுசாரியாய் நின்ற நிலை வந்தேறியாய்த் தோன்றிற்று. ஆயின், பொருந்துதல் நிச்சயமாமோ ‘எஞ்ஞான்று’ என்கைக்கு?’ எனின், 6‘முற்றறிவினனாய்ச் சர்வசத்தியையுடையனாய்ச் சீலம் முதலான குணங்களையுடையனான உன்னைப் பார்த்தால் இழக்க வேண்டுவது இல்லை; நான் இழக்கமாட்டாதவனாய் இருந்தேன்; ஆன பின்பு, உன்னைக் கிட்டும் காலம் சொல்லாய்,’ என்கிறார்.

எல்லா ஆத்துமாக்களுக்கும் அடிமையாய் இருக்கும் தன்மை பொதுவாக இருக்கச் செய்தேயும், பத்தரும் முத்தரும் நித்தியரும்என்கிற பிரிவைப் போன்றதே அன்றோ பிராட்டிமார்களும்? ஆகையால், ‘வேறுபட்டவள் ஆக மாட்டேன்’ என்கிற பிராட்டியினுடைய வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது? ‘ஆயின், ஈசுவரனோடு ஐக்கியமாக ஈசுவர கோடியாகச் சொல்லாநிற்க, பிராட்டியை உயிர்கள் கூட்டத்தோடு சொல்லுதல் என்?’ எனின், ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன; ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் ‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக ஓர் உருவிலே அருளிச்செய்தார். ‘வாணனுடைய 1கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.

ரஷனண உபாயம் அறிவாய்
வாமன வ்ருத்தாந்தம்
கள்வன் -கொள்வான் நான்
மாவலி மூவடி தா நான் கொள்வன்
காஞ்சனை வஞ்சித்தான்
கொள்வன் -கொண்டு அல்லது போகேன் என்றான் –
மலையாளவளைப்பு போலே -ஸ்வாபம்
அழகான கோலம் கண்டு கொடுக்க நினைத்த மகாபலி நினைவு அறிந்து கொள்வன்
வடிவில் -கையில் ஓன்று கொள்ளுமோ என்று இருக்க கொள்ளுவானோ நினைக்க
கொள்வன் என்கிறார்
நான் -உனது பக்கல் பெற்றால் அன்றி ஒரு அடி போகாத நான்
மாவலி -கூப்பிட பெயரை சொல்லி
சப்தம் வந்த திக்கை பார்க்க
மூவடி தா
பிச்சை கேட்டு வழக்கம் இல்லாமல் –
தாழ்வு சொல்லி அறியான்

மூவடி
சிறியதாக கேட்க
தா
கள்வன்
இந்த்ரன் சரணம் புக்கு நின்றன்
உதாரன் ராஜ்ஜியம் பறிக்க
தர்ம ஆபாசம் இருக்க கொல்ல முடியாதே
போகும் வலி பார்த்து தன்னை இரப்பாளி
சுக்ராதிகள் சொல்வதை செவியில் படாமல் இருக்க அழகு வடிவு பேச்சு அழகு
வஞ்சனை -நினைத்து -கள்வனே
கம்சனை வஞ்சித்து
மாதுலனாய் -இருக்க
கண்ண நீர் பாய்ச்சுவானாக குவாலாயாபீடம் நிறுத்தி –
பிரமாதத்தால் வந்ததாக பாவித்து அழ நின்றானே கஞ்சன் –
அந்த வஞ்சனை அவன் மேலே வைத்து –
கஞ்சன் கருத்தினை -பிழைப்பித்த நெடுமால்
வாணனை –
ஆயிரம் தோள் துணித்த

நெஞ்சின் உரம் வலிமை -வன்மம் கை மேல் போகும் படியாக
சாலிகை புறப்பாடு –
கை விஞ்சினான் என்று கை கழிய  விட்டான்
புள் வல்லாய் –
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனெ
சேருவேன் கேட்க்காமல் அவன் பக்கல் இருந்து பிரிந்தாது போலே இருக்குமே ஸ்வரூப ஞானம் பிறந்ததும்
அநன்யா பிரியாத பிராட்டி அசோகா வன வார்த்தை -போலே –
சம்சாரி நிலை வந்தேறி
நீ தான் வல்லவன்
சர்வ சக்தன் சர்வஞ்ஞன் சர்வ குனாத்மகன்
நான் இழக்க மாட்டாமல் இருக்க
கிட்டும் காலம் சொல்லி அருளாய்
சேஷத்வம் அனைவருக்கும் உண்டே

பிராட்டியும்ஜீவ கோடி
பக்தர் முக்தர் நித்யர் போலே
எல்லாருக்கும்சொல்லாம் படி அனந்யா –
ஐக்கியம் சொல்லும் இடம் பாரதந்த்ர்யா காஷ்டை -தனி வஸ்துவாய் இருந்தாலும் –

அன்யோன்யதை சொல்லும் ஐக்யம்
ஆயிரம் தோள் -கர உபாதை இ றே இவனை கலங்க பண்ணிற்று
அடுதேராக வந்த கரங்களை கழித்து பிராப்த கரத்தில் நிற்க வாய்த்த –

கைப்பற்று அழித்து -இறை வரி இல்லையே
ருத்ரன் ஓடிப்போக
இறை இல்லாதவன் ஆக்கி
கரவும் -எட்டு நாளில் –
தேவதையும் வரியும் இல்ல்லாமல் ஆக்கி

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 18, 2013

கோலமே! தாமரைக் கண்ணதுஓர் அஞ்சன
நீலமே! நின்றுஎனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்றுசெல் லாதன முன்நிலாம்
காலமே! உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே?

பொ-ரை : அழகே உருவமானவனே! தாமரை போன்ற கண்களையுடையதான ஒப்பற்ற அஞ்சனத்தினது நீல நிறமே ஒரு வடிவாக உடையவனே! நிலைபெற்று எனது உயிரை அறுக்கின்ற சீலமே வடிவாக உடையவனே! இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலமும் நீ இட்ட வழக்காம்படி இருப்பவனே! உன்னை என்று கண்டு அனுபவிப்பேன்?

வி-கு : ஈர்தல் – அறுத்தல். முன்னிலாங்காலம் – எதிர்காலம்.

ஈடு : எட்டாம் பாட்டு. 3‘உம்முடைய விருப்பத்தைச் செய்கைக்கு ஒரு காலம் இல்லையோ? அது வருமே அன்றோ?’ என்ன, ‘அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்.

கோலமே – 4அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி. 5ஞாதாவின் பக்கலிலே ஞான வியபதேசம் பண்ணா நின்றதேயன்றோ தத்குணசாரத்துவத்தாலே? அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார். தாமரைக் கண்ணது – அதற்குப் பற்றுக்கோடான திருவுடம்பு இருக்கிறபடி. 1அதுதன்னிலும் ஒரோ அவயவமே அமைந்திருக்கிறபடி. சிவப்பாலும் மலர்ச்சியாலும் மிருதுத்தன்மையாலும் தாமரையை ஒரு வகை உவமை சொல்லலாம்படி இருக்கிற கண்ணழகையுடையவனே! அஞ்சன நீலமே – 2‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி. ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார். அன்றிக்கே, ‘அஞ்சனத்தினது நீலநிறத்தை வடிவாக வகுத்தாற் போன்ற வடிவை உடையவனே!’ என்னலுமாம். ‘நன்று; அழகும் வடிவுமேயாய் அகவாயில் ஒரு பசை அற்று இருக்குமோ?’ என்னில், ‘இராது’ என்கிறார் மேல்: நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே – பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை. அன்றிக்கே, ‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.

‘இப்படி அழகும் குணங்களும் உண்டானாலும், பெறும் இடத்தில் இன்ன காலம் என்று இல்லையோ?’ என்னில், சென்று செல்லாதன முன்னிலாம் காலமே – இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே! இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார் என்றபடி. ‘சென்று’ என்கிறது, இறந்த காலத்தை. ‘செல்லாதன’ என்கிறது, நிகழ்காலத்தை. ‘முன் நிலாம் காலம்’என்கிறது, இனி வருகின்ற எதிர்காலத்தை. 1‘காலத்திற்கும் எமனுக்கும் இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கட்கும் பகவான் ஒருவனே ஏவுகின்றவன் ஆகிறான்; உனக்குச் சொல்லுகிறேன்; இது சத்தியம்,’ என்பது சஞ்சயன் கூற்று. உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது, 2‘பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’ என்றாற்போன்று, நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.

காலம் நீ இட்ட வழக்கு தானே
கோலமே -அழகும் ஆஸ்ரயமும் இரண்டு இன்றி அழகே வடிவு எடுத்த படி –
கிருஷ்ண பக்தி -நம் ஆழ்வார் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே
அறிவு கொழுந்து -அறிவு உடையவனை சொல்வது போலே
ஞாதா பக்கலில் ஞானம்
அழகே விஞ்சி இருப்பதால் கோலம் உடையவன் சொல்லாமல் கோலமே
அழகுக்கு ஆஸ்ரயம் –
ஒவ்வொரு அவயவம்
சிகப்பு மார்தவம் விகாசம் ஒப்பனை தாமரை
அஞ்சனமே நீலமே
அங்கும் இங்கும் கதிர் பொறுக்கிறார்

நீலமே வடிவு எடுத்தவன் -தத்வ சாரத்வாத் போலே –
அகவாயும்
நின்று நின்று ஆவியை ஈர்க்கின்ற சீலமே
வடிவை மறக்கிலும் குணம் மறக்க முடியாமல் –
சீலமே வடிவு எடுத்து
நெஞ்சினால் நினைப்பவன் எனன் அர்ச்சை
வள ஏழு உலகில் சேர விட்டுக் கொண்ட சீலம்
அழகும் சீலமும் இருந்தாலும் காலமும் நீ இட்ட வழக்கு

கால சக்கரம் யுக சக்கரம் எல்லாம் எம்பெருமான் இட்ட வழக்கு
சஞ்சயன் வார்த்தை –
சிருஷ்டிக்கும் முன்பும் அழித்த பின்பும் தானே இருந்து –
மிர்துயு உபசேஷணம் -ஊருகாய் போலே விழுங்கி
என்றும் ஒக்க உணர்ந்து இருந்து –
நியமிக்கும் ஒருவனே –
சத்யம் -ஆக இருப்பவன் –
ஸ்தோத்ரம் சொல்லும் அர்த்தவாதம் வாக்கியம் இல்லை –
வாயவ்யாகம் செய்து -அசைக்க முடியாத தேவதை வாயு -சொல்லும் போலே இல்லை –
தன்னை ஆப்தன் என்று விச்வசிதவனுக்கு பொய் சொல்வது இல்லை –
சென்று பூத
செல்லாதான பவிஷ்ய
முன்னிலா வர்த்தமான
முக்காலம் கால த்ரயம் நீ இட்ட வழக்கு
கலக் கழிவு செய்யேல்
உன்னைக் காண்பது என்று சொல்லி
இந்நாள் காணக் கடவாய்
பஞ்சமி திதி அன்று 14 வருஷம் வருவேன் சொல்லி -பெருமாள் குறித்து போலே
சுக்ல பஷம் பஞ்சமி காட்டுக்கு போக –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.