திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய் யாமையும் கொள்ளுமே.

பொ-ரை : புலவீர்காள்! ஆவது என்? அழிந்து போகின்ற மனிதர்களைப் பாடிப் படைக்கும் பெரிய பொருள் எத்தனை நாள்களுக்குப் போதும்? ஒளி பொருந்திய மணி முடியைத் தரித்த விண்ணவர் தாதையைப் பாடினால் தனக்கே உரியவனாக நினைத்துப் பிறவி அறும்படியும் செய்வான்.

வி-கு : மன்னுதல் – நிலைபெறுதல். விண்ணவர் – நித்திய சூரிகள். தாதை – தமப்பன்.

ஈடு : நான்காம் பாட்டு. 1‘கவி பாடினார்க்குத் தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுக்குமவனைக் கவி பாடுமது ஒழிய, குறைந்த ஆயுளையுடைய புல்லரைக் கவி பாடிப் பெறுவது என்?’ என்கிறார்.

என் ஆவது – ஒன்றும் ஆவது இல்லை. ஒரு பிரயோஜனத்துக்காக அன்றோ பிறரைக் கவி பாடுகிறது நீங்கள்? அதில் நீங்கள் நினைக்கிறது கிடைக்காது. ‘ஆனால் கிடைப்பது என்?’ என்னில், 2மேலே கூறிய தண்மையே கிடைப்பது. உங்கள் நினைவால் சில பொருட்பேறு, என் நினைவால் 3செல்வத்தின்பொருட்டு மிகத்தாழ்ந்த நிலையில் விழுதலேயாம். ‘ஒன்றும் இல்லை என்பது என்? கவி பாடுவாரும் பாடினவர்களுக்குக் கொடுப்பார்களுமாய் அன்றோ போருகிறது?’ எனின், எத்தனை நாளைக்குப் போதும் – ‘இல்லை’ என்றதனைப் போன்றதேயாய் அன்றோ அதுதான் இருப்பது? நிரூபித்தால் 1கவி பாட்டு இட்டிறையாய் அன்றோ இருப்பது? என்றது, ‘கவி கேட்பித்தற்குத் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக் கேட்பித்துப் பெறுமதுவும், கவி பாடின நாள்களில் பிழைப்பதற்குப் பணையம் வைத்த பொருள்களை மீட்கவும் போராதபடி அன்றோ இருப்பது?’ என்றபடி. புலவீர்காள் – உங்கள் விசேடமான அறிவிற்குப் போருமோ இது? ‘பாடின கவியின் நேர்மை இது, பேறு இது, இதற்கு இது போரும், போராது’ என்று நீங்களே அறிய வேண்டாவோ?’ என்கிறார். இனி, ‘புலவீர்காள்’ என்பதற்குச் ‘சொற்பொருள்களின் வாசி அறியுமவர்களே!’ என்னுதல்.

மன்னா மனிசரை – சிறிது உண்டாய் அற்பமாகிலும் நீங்கள் பெறுவது, நீங்கள் செல்லுமளவும் அவர்கள் தாம் இருக்கில் அன்றே? 2‘அவரே மாண்டார்’ என்று எதிரே வருவரே! பாடிப் படைக்கும் பெரும்பொருள் – ‘இந்தத் திருமகள் கேள்வன் குறைவு அறக் கொடானோ?’ என்று பழிக்கிறார். மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் – நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனானவனைக் கவி பாடினால். 3‘பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, கவி பாடி முடி சூடி இருக்கின்றவர்கள் அன்றோ? ஆதலின், ‘ஒளி மிக்க மணிகளையுடைய முடியுடை வானவர்’ என்பார், ‘மின்னார் மணிமுடி விண்ணவர்’ என்கிறார். இதனால், ‘சென்று காணும் திரள் கவி பாடி முடி பெற்றவர்கள்’ என்றதனைத் தெரிவித்தபடி. 4‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்கிறபடியே, கவி பாடிச் சென்றவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டாடிக் கேட்பிப்பாரும் அவர்கள் என்பார், ‘விண்ணவர் தாதை’ என்கிறார். ‘பாடுதலே பிரயோஜனம்போரும்’ என்பார், ‘பாடினால்’ என்கிறார். இனி, முடி இறைவனுக்கே அடை ஆகும்போது, ‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை.

தன்னாகவே கொண்டு – 1‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ என்றும், 2‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும், 3‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும் கூறப்படுகின்றவாறே தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கே உரியவனாகக் கொண்டு’ என்னுதல். சன்மம் செய்யாமையும் கொள்ளும் – பின்னர் ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும். கவி பாடுகைக்கு அடி பிறவி ஆதலின், ‘சன்மம் செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார். அரசபுத்திரன் தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டி விடுமாறு போன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப் பின்பு இராவணனைக் கொன்றாற்போலவும், நித்திய சூரிகள் தரத்தைக் கொடுத்துப் பின்னை சமுசார சம்பந்தத்தை அறுப்பான் ஆதலின், ‘தன்னாகவே கொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார்.

என்னாவது
எத்தை நாளைக்கு போதும் –
இம்மையிலியே பிச்சை தம் கொள்வர் பின்பு வருமே
தனக்கு சமனாக பேற்றை கொடுக்கும் அவன் இருக்க
பிரயோஜனம் -சித்தியாதே -தண்மையே சித்திக்கும்
அர்த்த சித்தி உங்கள் நினைவால் –
எனது நினைவால் கீழே போவீர்
பாடுவாரும் கொடுப்பாருமுண்டே என்ன
வித்யாரண்யர் தேசிகன் -சம்வாதம்
மலை மேல் நிதி உண்டே –
இல்லை எனபது போலே தான் அவர்கள் கொடுப்பது -இட்டிலையாய்
தானே இருக்கும் –
கவி கேட்ப்பிக்கைக்கு சக காரிகளை கூட்டிக் கொண்டு போய் –
கவி எழுத நாள் ஜீவனம் பணையம் வைத்து –
கொடுத்தது இதற்கே போகாமல் –

புலவீர்காள் -தகுமா தகாதா அறியீரோ
பாடலாமா –
மன்னா மனிசராய் -அல்பம் கிடைத்தாலும் நிச்சயம் இல்லை
செல்லும் அளவும் இருக்க வேண்டுமே –
ஆண்டவரே மாண்டார் -எதிரே வருவார்களே

அரசாகிமுன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார்அந் தோ!மனை வாழ்க்கைதன்னை
வேண்டேன் நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே!’

என்பது, பெரிய திருமொழிப்பாசுரம், 6. 2 : 5.

ஸ்ரீ ய பதி -இருக்க
மின்னார் மணி முடி விண்ணவர் தாதை
கவி பாடி முடி பெற்றவர்கள் சென்று காணும் திரள்
விண்ணவர்கள்  நாதன் –
மின்னார் முடி இருவருக்கும் விசெஷணம் –
ஒளி மிக்க முடி தரித்த நித்யர் –
ஓலக்கம் கொடுத்து கேட்ப்பிக்கும் அவர்களே
கூட்டம் சேர்க்க வேண்டாமே
கேட்டு ஆரார வானவர் செவிக்கு இனிய செஞ்சொல் கவிகாள்
முடி அவன் தனக்கு விசேஷணம்
கவி பாடினவருக்கு கொடுக்க சூடிய முடி
தன்னையே ஒக்க அருள் செய்யும்
தன்னாகவே கொண்டு
பாடினதே போதும் வேறே என்ன பிரயோஜனம் வேண்டாமே
தனக்கே யாக கொண்டு
தன்னோடு ஒக்க பண்ணி
சன்மம் செய்யாமையுமஅருளி –
பிறவி அறுத்து இந்த மானிடர் கவி பாடும் துர்கதி போக்கி
பரம பதம் கொடுத்து பிறவி அறுத்து -அப்புறம் சொன்னது
ராஜா சிறையில் இருக்க
விலங்கை அறுக்கும் முன் முடி சூட்டு விப்பது போலே
முதலில் நித்யர் ஸ்தானம் கொடுத்து
விபீஷண ஆழ்வானை பட்டாபிஷேகம் செய்து ராவண வதம் செய்தது போலே
இரண்டு பட்டாபிஷேகம் உண்டே அவனுக்கு

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading