கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற
கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள்துணித்த
புள்வல்லாய்! உன்னைஎஞ் ஞான்று பொருந்துவனே?
பொ-ரை : ‘மஹாபலி! நான் கொள்வேன்; மூவடி மண்தா,’ என்ற கள்வனே! கம்ஸனைக் கொன்று, வாணனுடைய மனவலிமை தீரும்படி ஒப்பற்ற ஆயிரம் தோள்களையும் துணித்த கருடவாகனனே! உன்னை எப்பொழுது சேர்வேன்?
வி-கு : ‘மூவடி’ என்றது, மூவடி மண்ணினைக் குறித்தது. ‘வஞ்சித்துத் துணித்த புள் வல்லாய்’ என்க. புள் வல்லாய் – புள்ளைச் செலுத்துவதில் வல்லவனே.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘பாதுகாப்பதற்கு உரிய உபாயத்தை உடையனுமாய் விரோதிகளை அழிக்கிற சீலனுமான உன்னை நான் கிட்டுவது என்று?’ என்கிறார்.
கொள்வாள் – 2மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று. அன்றிக்கே, இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு ‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி; ‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல். நான் – 3உன்பக்கல் பெற்றால் அன்றி ஓர் அடி இடாத நான். மாவலி – 4பிறந்த அன்றே பிக்ஷையிலேஇறங்கினான் ஆகையாலே பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லி அறியானே! முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லியறியான்; பிறந்த பின்பு வாசனை பண்ணுகைக்கு நாள் இல்லை; அதனாலே, ‘மாவலி’ என்கிறான்.
எல்லோரும் தன்னை உயர்த்திச் சொல்லுமது ஒழிய இப்படிச் சொல்லக் கேட்டு அறியாமையாலே ‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்றான். ‘மூவடி’ என்கிறான். தன் பக்கல் கொள்ளுமவர்களில் இப்படிச் சிறுக விரும்புகின்றவர்கள் இல்லாமையாலே விருப்பு இன்றியே இருந்தான்; ‘பராமுகம் பண்ணாதே ‘தா’ என்கிறான். என்ற கள்வனே – இந்திரன் சரணம் புக்கு நின்றான்; கொடையாளியாய் இருப்பான் ஒருவன் அவனுடைய இராச்சியத்தைப் பறித்துக்கொண்டான்; ‘இராவணன் முதலியோர்களைப் போன்று அழியச்செய்யப் போயிற்று இல்லை, சிறிது தர்மத்தை ஏறிட்டுக்கொண்டு நிற்கையாலே; இந்திரனோ, சரணம் புக்கு நின்றான்; இனிப் போம் வழி என்?’ என்று பார்த்துத் தன்னை இரப்பாளன் ஆக்கி, சுக்கிரன் முதலியோர், ‘இவன் தேவ காரியம் செய்ய வந்தான்,’ எனச்செய்தேயும், அவ்வார்த்தைகள் அவன் நெஞ்சில் படாதபடி அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.
கஞ்சனை வஞ்சித்து – கம்ஸன் மாமனாய், விழிப்புடன் இல்லாமையாலே புகுந்ததாகத் தானும் துக்கத்தையுடையனாய்க் கண்ண நீர் பாய்த்துவானாக வாசலிலே குவலயாபீடத்தையும் மல்லரையும் நிறுத்தி வைக்க, அவற்றை அழித்து, கம்ஸன் கோலின வஞ்சனத்தை அவன்தன்னோடே போக்கினவனே! வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் – 1‘சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி 2கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை வந்தவனே! ‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப்பண்ணிற்று’ என்று 1அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’ என்பார், ‘உள் வன்மை தீர ஆயிரம் தோள் திணித்த’ என்கிறார். 2‘ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ என்றார் திருமழிசைப்பிரான். 3‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி. ‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – 4சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 5‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற் போலே இருக்கிறதுகாணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி. ‘சொரூபஞானம் பிறந்தால் அவன் பக்கல்நின்றும் பிரிந்தது போன்று தோன்றும்படி எங்ஙனே?’ எனின், சொரூபஞானம் பிறந்தவாறே முன்புள்ள காலமெல்லாம் சமுசாரியாய் நின்ற நிலை வந்தேறியாய்த் தோன்றிற்று. ஆயின், பொருந்துதல் நிச்சயமாமோ ‘எஞ்ஞான்று’ என்கைக்கு?’ எனின், 6‘முற்றறிவினனாய்ச் சர்வசத்தியையுடையனாய்ச் சீலம் முதலான குணங்களையுடையனான உன்னைப் பார்த்தால் இழக்க வேண்டுவது இல்லை; நான் இழக்கமாட்டாதவனாய் இருந்தேன்; ஆன பின்பு, உன்னைக் கிட்டும் காலம் சொல்லாய்,’ என்கிறார்.
எல்லா ஆத்துமாக்களுக்கும் அடிமையாய் இருக்கும் தன்மை பொதுவாக இருக்கச் செய்தேயும், பத்தரும் முத்தரும் நித்தியரும்என்கிற பிரிவைப் போன்றதே அன்றோ பிராட்டிமார்களும்? ஆகையால், ‘வேறுபட்டவள் ஆக மாட்டேன்’ என்கிற பிராட்டியினுடைய வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது? ‘ஆயின், ஈசுவரனோடு ஐக்கியமாக ஈசுவர கோடியாகச் சொல்லாநிற்க, பிராட்டியை உயிர்கள் கூட்டத்தோடு சொல்லுதல் என்?’ எனின், ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன; ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் ‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக ஓர் உருவிலே அருளிச்செய்தார். ‘வாணனுடைய 1கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.
ரஷனண உபாயம் அறிவாய்
வாமன வ்ருத்தாந்தம்
கள்வன் -கொள்வான் நான்
மாவலி மூவடி தா நான் கொள்வன்
காஞ்சனை வஞ்சித்தான்
கொள்வன் -கொண்டு அல்லது போகேன் என்றான் –
மலையாளவளைப்பு போலே -ஸ்வாபம்
அழகான கோலம் கண்டு கொடுக்க நினைத்த மகாபலி நினைவு அறிந்து கொள்வன்
வடிவில் -கையில் ஓன்று கொள்ளுமோ என்று இருக்க கொள்ளுவானோ நினைக்க
கொள்வன் என்கிறார்
நான் -உனது பக்கல் பெற்றால் அன்றி ஒரு அடி போகாத நான்
மாவலி -கூப்பிட பெயரை சொல்லி
சப்தம் வந்த திக்கை பார்க்க
மூவடி தா
பிச்சை கேட்டு வழக்கம் இல்லாமல் –
தாழ்வு சொல்லி அறியான்
மூவடி
சிறியதாக கேட்க
தா
கள்வன்
இந்த்ரன் சரணம் புக்கு நின்றன்
உதாரன் ராஜ்ஜியம் பறிக்க
தர்ம ஆபாசம் இருக்க கொல்ல முடியாதே
போகும் வலி பார்த்து தன்னை இரப்பாளி
சுக்ராதிகள் சொல்வதை செவியில் படாமல் இருக்க அழகு வடிவு பேச்சு அழகு
வஞ்சனை -நினைத்து -கள்வனே
கம்சனை வஞ்சித்து
மாதுலனாய் -இருக்க
கண்ண நீர் பாய்ச்சுவானாக குவாலாயாபீடம் நிறுத்தி –
பிரமாதத்தால் வந்ததாக பாவித்து அழ நின்றானே கஞ்சன் –
அந்த வஞ்சனை அவன் மேலே வைத்து –
கஞ்சன் கருத்தினை -பிழைப்பித்த நெடுமால்
வாணனை –
ஆயிரம் தோள் துணித்த
நெஞ்சின் உரம் வலிமை -வன்மம் கை மேல் போகும் படியாக
சாலிகை புறப்பாடு –
கை விஞ்சினான் என்று கை கழிய விட்டான்
புள் வல்லாய் –
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனெ
சேருவேன் கேட்க்காமல் அவன் பக்கல் இருந்து பிரிந்தாது போலே இருக்குமே ஸ்வரூப ஞானம் பிறந்ததும்
அநன்யா பிரியாத பிராட்டி அசோகா வன வார்த்தை -போலே –
சம்சாரி நிலை வந்தேறி
நீ தான் வல்லவன்
சர்வ சக்தன் சர்வஞ்ஞன் சர்வ குனாத்மகன்
நான் இழக்க மாட்டாமல் இருக்க
கிட்டும் காலம் சொல்லி அருளாய்
சேஷத்வம் அனைவருக்கும் உண்டே
பிராட்டியும்ஜீவ கோடி
பக்தர் முக்தர் நித்யர் போலே
எல்லாருக்கும்சொல்லாம் படி அனந்யா –
ஐக்கியம் சொல்லும் இடம் பாரதந்த்ர்யா காஷ்டை -தனி வஸ்துவாய் இருந்தாலும் –
அன்யோன்யதை சொல்லும் ஐக்யம்
ஆயிரம் தோள் -கர உபாதை இ றே இவனை கலங்க பண்ணிற்று
அடுதேராக வந்த கரங்களை கழித்து பிராப்த கரத்தில் நிற்க வாய்த்த –
கைப்பற்று அழித்து -இறை வரி இல்லையே
ருத்ரன் ஓடிப்போக
இறை இல்லாதவன் ஆக்கி
கரவும் -எட்டு நாளில் –
தேவதையும் வரியும் இல்ல்லாமல் ஆக்கி
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply