கொள்ளும் பயன்இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றுஎல் லாம்தரும் கோதுஇல்என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மினோ.
பொ-ரை : நீங்கள் அடையக்கூடிய பயன் ஒன்றும் இல்லை; குப்பையைக் கிளறினாற்போன்ற இழிக்கத் தக்கதான செல்வத்தை மிக அதிகமாகப் புகழ்ந்து உங்களுடைய வாக்கின் வன்மையை இழக்கின்ற புலவீர்காள்! கவி பாடுதற்குப் பொருளாகக் கொள்ளுவதற்கு வேண்டிய குணங்கள் எல்லாம் குறைவு இல்லாதவன்; நீங்கள் விரும்பின அனைத்தையும் தருவான்; குற்றம் இல்லாத வள்ளல்; மணி போன்ற நிறத்தையுடையவனான இறைவனைக் கவி சொல்ல வாருங்கள்.
வி-கு : இரண்டாம் அடியில் ‘வள்ளல்’ என்பது, புகழ்ச்சியின் மிகுதியைக் குறிக்க வந்தது. வேண்டிற்றெல்லாம் – ஒருமை பன்மை மயக்கம்.ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘உபகாரகரும் அன்றிக்கே, கவி பாடுகிறவர்களுக்குத் தாழ்வு உண்டாகும்படி இழிந்தவர்களுமாய் இருக்கின்றவர்களைக் கவி பாடாதே, எல்லா நற்குணங்களையும் உடையனுமாய் விரும்புவன எல்லாவற்றையும் கொடுக்கின்றவனுமான சர்வேசுவரனைக் கவி பாட வாருங்கள்,’ என்கிறார்.
கொள்ளும் பயன் இல்லை – 2‘பிறரைக் கவி பாட இழிகின்றது அவர்கள் உத்தேஸ்யராய் அன்றே? ஒரு பிரயோஜனத்துக்காகவே; அது இல்லை’ என்கிறார். என்றது, ‘நீங்களும் இசையவே கவிபாடுதலே பிரயோஜனம் அன்றே? பிரயோஜனத்தை விரும்புகின்றவர்களாகவே கவி பாடுகிறது; அது இல்லை என்னாவே, மீளுவர் என்று பார்த்து முந்துற முன்னம் ‘இல்லை’ என்கிறார்’ என்றபடி. நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்கு பெரிய இலாபம்காணும் ‘கொள்ளும் பயன் இல்லை’ என்கை. என்றது, ‘கொள்ளக் கூடியது ஒரு பிரயோஜனம் இல்லை என்கை’ என்றபடி. ஆக, உங்களுக்காக ஒரு பிரயோஜனம் இல்லையாய் இருந்தது.
‘தங்களுக்கு ஒரு பயன் இல்லையேயாகிலும், பிறருடைய நன்மைக்காகவும் செய்யத் தொடங்கலாம் அன்றே? அதுதான் உண்டோ?’ எனின், ‘குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை’ என்கிறார்; ‘குப்பையைக் கிளறினாற்போலே இருக்கின்ற செல்வத்தை’ என்றது, ‘மறைந்து கிடக்கிற குற்றங்களை வெளியிடுகையாலே அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக் கூடியதாமித்தனை. குப்பையைக் கிளறினால் உள் மறைந்து கிடக்கிற கறைச்சீரை முதலாக உள்ளவை அன்றோ வெளிப்படுவன? 3‘ஆகையால்,அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக்கூடியதாம் அளவன்றிக்கே, தங்களுக்கும் தூய்மை இல்லாதவற்றைத் தீண்டுதலாகிய குற்றம் உண்டாம்,’ என்கை. வள்ளல் புகழ்ந்து – உதாரமாகப் பாடி. என்றது, ‘அவன் தனக்கும் ஒரு நன்மை இன்றிக்கே பிறர்க்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கவும், அவனுக்கு நன்மை உண்டாகிறதாகவும் அதுதான் தம் பயனுக்கு அடியாய் இருக்கிறதாகவும் நன்றாகப் புகழ்ந்து’ என்றபடி.
நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நீங்கள் கொள்ளும் பயன் இதுவே. 1‘இரண்டும் இல்லை’ என்று சொன்னார் அன்றோ முன்னர்? ஆகையாலே, நீங்கள் ‘வாக்மின்கள் – எளிதிற்கவி பாடுமவர்கள்’ என்ற பிரசித்தியை இழக்குமித்தனை? அன்றியே, ‘வாய்மை என்று மெய்யாய், 2நாடு அறிய இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகையாலே பொய் சொன்னீர்களாமத்தனை நீங்கள்’ என்னுதல். புலவீர்காள் – 3‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே! வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன் ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.
‘நன்று; நாங்கள் கவி பாடுகின்றவர்களைக்காட்டிலும் நீர் சொல்லுகின்ற தலைவனுக்கு நன்மை உண்டோ?’ என்னில்,கொள்ளக் குறைவிலன் – மேலே கூறிய இரண்டனையும் 1மாறாடிச் சொல்லுகிறார், ‘கொள்ளும் பயனும் உண்டு; குப்பை கிளர்த்தன்ன செல்வமும் அன்று’ என்று. நீங்கள் யாவை யாவை சில ஏற்றங்களை இட்டுக் கவி பாடுகின்றீர்கள்? அவற்றை ஏற்குமிடத்தில் ஒரு குறையுடையவன் அல்லன்! எல்லா நற்குணங்களையும் உடையவன். வேண்டிற்று எல்லாம் தரும் – ‘கொள்ளும் பயனும் பெரிது,’ என்கிறார்; நீங்கள் கவி பாடினால் போக மோக்ஷங்கள் வேண்டுமவை எல்லாம் தரும். என்றது, ‘இவனை ஒழிந்தார் ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், கொள்கின்றவனுக்கு மற்றொன்று விருப்பமானால், அது கொடுக்க மாட்டார்களே அன்றோ? இவனிடத்தில் விரும்புகிறவர்கள் தாழ்வாலே இழக்கில் இழக்குமித்தனை; அவன் தரமாட்டாமையாலே இழக்க வேண்டா,’ என்றபடி. 2‘மோக்ஷத்தைத் தருபவரான பகவான், தியானம் செய்கின்றவர்களுக்கு இவ்வுலகில் விருப்பமானவற்றையும், சுவர்க்கங்களில் உள்ள பேறுகளையும், சுவர்க்கத்தில் உள்ளவர்களால் சேவிக்கப்படுகின்ற அந்தப் பரமபதத்தையும் கொடுக்கிறார்’, 3‘விஷ்ணு பகவான் எல்லாப் பலன்களையும் கொடுக்கிறார்’ என்பன விஷ்ணு தர்மம்.
கோது இல் – ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது, 4‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல், கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன, என் வள்ளல் – நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன். மணி வண்ணன் – கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு. உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்; கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்? மணி வண்ணன்தன்னைக் கவி சொல்ல வம்மின் – 2நான் சொல்லுகிற படியை உடையவனைக் கவி பாட வாருங்கோள். ‘பிற்காலியாதே கடுகப் புகுரப் பாருங்கோள்’ என்பார், ‘வம்மின்’ என்கிறார்.
உபகாரகரும் அன்றிக்கே
அவத்யமாய் ஹேயமாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகன் இருக்க
கொள்ளக் குறை வில்லை
குப்பை கிளறினது போன்ற செல்வம் பெறுவீர்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல் இவன்
அவன் ஆசை படாமல் இவன் பாட வில்லை
பணம் கொடுப்பான் என்ற காரணத்தால் பாட போகிறீர்
நீங்களும் இசையவே-ஸுயம் பிரயோஜனமாய் பாட
முந்துற முன்னம் இல்லை என்கிறார் -கொள்ளும் பயன் இல்லை
என்கிறார் -முதலில் -பெரிய லாபம் -நெஞ்சு படாத பாடு பட்டு பாட –
தங்களுக்கு பிரயோஜனம் இல்லா விடிளும்பிரருக்கு ஹிதம் அருள
நாலடியார் குறள் போல்வன –
குப்பைகிளர
மறைந்து கிடந்த தோஷத்தை காட்டுமே உங்கள் கவிகள் –
கரைசீரை அழுக்கு வெளி வருமே
அவத்யம்
தங்களுக்கும் அசுத்தி ஸ்பர்சம்
வள்ளல் புகழ்ந்து -நன்றாக புகழ்ந்து –
நும் வாய்மை இழக்கும் -கொள்ளும் பயன் இது தான்
சாமர்த்தியம் சாக்கடையில் போட்டீர்
வாய்மை மெய்யாய் பொய் சொல்வது போலே
கவிதைக்கு பொய் அழகன்
‘கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்;
காடுஎறியும் மறவனைநாடு ஆள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
போர்முகத்தை அறியானைப் புலிஏறு என்றேன்;
மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்;
இல்லாத சொன்னேனுக்கு இல்லை என்றான்;
யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே!’
என்பது தனிப்பாடல்.
பேறு இழவு அறிந்தவர் செய்யலாமா
சர்வ சப்த வாச்யன் அவன் ஆகையாலே
கொள்ளக் குறை இலன் -அவன்
என்ன பாடினாலும் போதாது இங்கே –
குப்பை கிளறிய செல்வம் இல்லை
சமஸ்த கல்யாண குணாத்மகன்
போக மோஷங்கள் வேண்டிற்று எல்லாம் தருவான் –
அபெஷித்தார் தாழ்வால் இழக்கும் இத்தனை இங்கே
ஸ்வர்க்கம் பூமி மநோ ரதம் -எத பதம் மநோ ரதம் ததாமி
சர்வ பல பிரதோ விஷ்ணு
கோதில் வள்ளல் –
குற்றம் இல்லாத
கொடுக்கும் இடத்தில் -தேச கால பாத்ரம் பார்த்து கொடுத்தல் -குறை
பிரயோஜனம் எதிர்பார்க்காமல்
இன்னும் ஒன்றும் கொடுக்க வில்லை என்ற நினைவால் கொடுத்தால்
மணி வண்ணன் -கொடுக்கா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
இவனையே கவி பாட
கைக்கூலி கொடுத்து விரும்பா நின்றது ரூபா ஆபாசங்களை
அவன் நமக்கு கொடுப்பான்
நான் சொல்லுகிற படியை -உடையவனை கவி பாட வாரும்
வம்மின் கடுக்க வாரீர்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply