பொருந்திய மாமரு தின்னிடை போயஎம்
பொருந்தகாய்! உன்கழல் காணிய பேதுற்று
வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?
பொ-ரை : பொருந்திய பெரிய மருதமரங்களினிடையே சென்ற எம் பெருந்தகாய்! உன் திருவடிகளைக் காணவேண்டும் என்று மயங்கி வருந்தி வார்த்தைகளாகிய மாலையைக் கொண்டு இருந்து உன்னையே எத்தனை காலம் புலம்புவேன்?
வி-கு : ‘போய பெருந்தகாய்’ என்க. காணிய – வினையெச்சம்.. பேதுறல் – அறிவு திரிதல்.
ஈடு : பத்தாம் பாட்டு. 2‘உன்னைக் காணப்பெறாத துன்பத்தால் வருந்துகிற நான், இன்னம் எத்தனை காலம் கூப்பிடக் கடவேன்?’ என்கிறார்.
பொருந்திய மா மருது – மருது, மா மருது, பொருந்திய மா மருது. மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, 3‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி. ‘மா’ என்கையாலே, மாறு என்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம். ‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி. ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டையுடையராய், சீற்றத்தையுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி. இடை போய – இப்படி நிற்கிறவற்றின் அருகே போகையுங்கூடப் பயங்கரமாய் இருக்க, இவற்றின் நடுவே, 1ஒன்றிலே வெளி கண்டு போவாரைப் போலே போனான் ஆயிற்று. எம் பெருந்தகாய் – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!
உன் கழல் காணிய – 2‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவைமுரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. என்றது, 3‘தாமரைக் கண்ணரான அந்தக் கண்ணபிரான் சென்றார்’ என்று புரிந்து பார்த்த கண்களைக் காண ஆசைப்பட்டான் மஹரிஷி; தவழ்ந்து போகிற போதைத் 4திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றபடி. எல்லா நிலைகளிலும் அவனை அடி விடாரே. ‘மஹரிஷியைப் போன்று கண்ணழகைக் காண ஆசைப்படாமல், இவர் திருவடிகளின் அழகைக் காண ஆசைப்படுவான் என்?’ எனில், தந்தாம் ஜீவனத்தை நோக்கத் தேடுமித்தனை அன்றோ எல்லாரும்? ஆகையாலே, இவரும் தம்முடைய 1ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.
பேதுற்று – அறிவு கெட்டு. வருந்தி – இழந்த விஷயத்துக்குத் தக்கபடி அன்றோ கிலேசமும் இருப்பது? நான் – 2அடியே பிடித்து ஜீவித்துப் போந்த நான்; 3‘நின் செம் மா பாத பற்புத்தலை சேர்த்து ஒல்லை’ என்கிறபடியே, அத்திருவடிகள் பெறில் 4தலையாக ஜீவித்து, அஃது இல்லையாகில் இல்லையாம்படியான நான் என்றபடி. வாசகமாலை கொண்டு – 5ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று, இவர்க்கு ஒரு சொற்கொண்டு சொல்லுகை. உன்னை – 6‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை. இருந்து இருந்து – 7ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால் அது தலைக்கட்டுகைக்கு நடுவே பதின்கால் பட்டைப் பொதிசோறு அவிழ்க்க வேண்டுங்காணும். எத்தனை காலம் புலம்புவனே – 1‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.
விசனத்தால் கிலேசப்படுகிற நான்
எத்தனை நாள் புலம்புவனே
வாசகமாலை கொண்டு
பெரும் தகை
மருது இரட்டை யாக இருக்கும்
பொருந்தி
ஒற்றுமையாக இருக்கும் இரட்டையர் –
நெருக்கமாக இருக்க
அசுரா வேஷம் பொருந்திய
ரிஷி சாபம் தீர்க்க நடுவில் போனான்
மருது மரம் -மரத்தை போலே வலி ய நெஞ்சு
மா மருது -விழுந்தால் என்ன செய்வது
பொருந்திய விரோதம் பொருந்தி
சங்கேதம் கொண்டு சீற்றம் கிருஷ்ண தர்சனத்தாலும் நெகிழா நெஞ்சு
அதனால் மரம் போலே வந்தார்கள்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply