வம்மின் புலவீர்!நும் மெய்வருத்திக் கைசெய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர்இப் போதுஇல்லை நோக்கினோம்;
நும்இன் கவிகொண்டு நும்நும்இட் டாதெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே.
பொ-ரை : ‘புலவீர்! வாருங்கோள்; உங்களுடைய சரீரத்தை வருத்திக் கைத்தொழில் செய்து உஜ்ஜீவியுங்கோள்; நிலை பெற்ற இந்த உலகத்தில் செல்வமுடையார் இலர்; இப்போது நோக்கினோம்; உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு உங்கட்கு இஷ்டமான தெய்வத்தைத் துதித்தால், அக்கவிகள் மிகச்சிறந்த ஒளி பொருந்திய முடியையுடைய என் திருமகள் கேள்வனுக்குச் சேரும்,’ என்கிறார்.
வி-கு : முதலடியில், ஆழ்வார் அருளிச்செய்யும் உபாயம் ஊன்றிக் கவனித்தற்குரியது. மன் – நிலைபேறு. வியாக்கியானம் காண்க.
ஈடு : ஆறாம் பாட்டு. 3‘ஜீவனத்தின்பொருட்டு மனிதர்களைக் கவி பாடுகிறோம்’ என்ன, ‘புல்லரைக் கவிபாடி வாழ்வதிலும் உடம்பு நோவப் பணி செய்து வாழ்தல் நன்று,’ என்கிறார்.
புலவீர் வம்மின் – 1நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக் காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார். ‘எங்களை நீர் அழைக்கின்றது என்? எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன, மெய்யே வாழ வேண்டினாலும் உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ? நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள். இதற்கு, 2‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர். ‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன, அது ஆகுமே அன்றோ, பெற்றால்?
இம் மன் உலகில் செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை; 3‘இவர்கள் நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்குப் பயன் உண்டோ?’ என்று இப்போது ஆராய்ந்து பார்த்தோம்; ஒருவரும் இலராய் இருந்தது. 1செல்வர் முன்பும் இலர் ஆதலின், ‘இப்போது இல்லை’ என்ன வேண்டா; ஆதலின், ‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆயின், ‘இப்போது நோக்கினோம்’ எனின், முன்பு நோக்கிற்றிலரோ?’ எனின், ‘முன்பு இவர்தாம் உலக வாழ்க்கையில் கண்வைக்குமவர் அன்றே? இவர்கள் வறிதே துக்கப்படுகிறார்களோ? ஏதேனும் பயன் உண்டோ? என்று இப்போது பார்த்தோம்,’ என்கிறார்.
‘நன்று; மனிதர்களில் அன்றோ இல்லாதது? தேவர்கள் மனிதர்களில் வேறுபட்டவரே; இக்கவிகளைக்கொண்டு எங்களுடைய இஷ்ட தெய்வங்களைத் துதிக்கிறோம்,’ என்ன, நும் இன் கவி கொண்டு நும் நும் இஷ்டா தெய்வம் ஏத்தினால் – உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு, இராஜஸராயும் தாமஸராயும் இருக்கிற உங்களுக்குப் பொருந்தும் இராஜஸராயும் தாமஸராயும் உள்ள தெய்வங்களைத் துதித்தால். அது, செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேரும் – தடையில்லாத (எங்கும் பரந்த) பிரகாசமான ஒளியையுடைய ஆதிராச்சியத்திற்கு அறிகுறியான திருமுடியையுடைய திருமகள் கேள்வன் பக்கலிலே சேரும்; நீங்கள் சில ஏற்றங்களைச் சொல்லி அன்றோ கவி பாடுவது? அவை அவர்களைச் சாரமாட்டா; ‘தாமரைக் கண்ணான்’ என்றால், அது உள்ள இடத்தே போம்; 2விரூபாக்ஷகன் பக்கல் போகாதே? மற்றும், ‘சர்வாதிகன், சமஸ்த கல்யாண குணாத் மகன், சர்வ ரக்ஷகன்’ என்றாற்போலே அன்றோ கவி பாடுவது? அவை சென்று சேர்வன அவை உள்ள இடத்திலே அன்றோ? ஆகையால், உங்களுக்குக் கிடைக்கும் பலன் சௌரியமே.அன்றிக்கே, ‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, 1‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி. ஆதலால், எல்லாச் சொற்களும், சரீரமும் அந்தச் சரீரத்தால் அபிமானிக்கப்படுகின்றவனான உயிரும் அந்த உயிருக்குள் அந்தர்யாமியான பரமாத்துமாவுமான இக்கூட்டத்துக்கு வாசகங்கள் ஆகையாலே விசேடியப் பிராதான்யத்தாலே அவனையே சொல்லினவாம். 2‘எவர்கள், பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடின பிராமணர்களையும் பூஜிக்கின்றார்களோ, அவர்கள், எல்லாப் பூதங்கட்கும் அந்தரியாமியாய் இருக்கிற விஷ்ணுவையே பூஜித்தவர்கள் ஆவர்கள்,’ என்பது ஸ்மிருதி.
உடம்பு நோவ கார்யம் செய்து உய்ம்மினோ
வம்மின் புலவீர் –
நும் இன்கவி கொண்டு தேவதைகளை பாடாமல் -இஷ்ட தெய்வம்
அநாதரம் தோற்ற
செங்கண் முடி திருமாலுக்கு சேருமே
மடுவை காட்டி காட்டுத் தீயில் அகப்பட்டாரை கூப்பிடுகிறார்
தரம் குறைய ஜீவிக்க வேண்டுமோ
நும் மெய் சரீரம் வருத்தி –
எம்பார் வார்த்தை கோட்டை சுமத்தல் -புல் செதுக்கி
அனந்தாழ்வான் கழுதை மேய்த்து ஜீவிக்கலாகாதோ
பூரணமாக ஜீவிக்கல் ஆகாதே என்ன –
இம்மண் உலகில் செல்வர் ஸ்ரீ மான்கள் இல்லையே
இப்போது நோக்கினோம் ஆராய்ந்து பார்த்து –
முன்பும் இல்லையே
நன்கு நோக்கினோம் இப்போது இல்லை என்று அந்வயம்
மயர்வற மதிநலம் அருளின பின்பு இப்பொழுது பார்க்கிறார் –அனைத்தும் நாராயணன் குறிக்குமே -விசேஷ ப்ராதான்யம்
சர்வ பூத அந்தராத்மா
பித்ரு தேவதை பிராமணர் அக்னி ஆராதித்தாலும் விஷ்ணுவை குறிக்கும்
வாக்கை எச்சில் ஆக்காமல் அவனையே ஸ்தோத்ரம் செய்ய அருளுகிறார்
மனுஷ்யர் இல்லை என்றால் -தேவதைகள்
இஷ்ட தெய்வம் ஏத்தினால்
ராஷசர் தாமசராயும் இருக்கும் –
நும் இன்கவி கொண்டு நும் இஷ்ட தெய்வம் ஏத்தினால் –
குண அநு ரூபமாய
கல்லும் கட்டையும் இருக்க கல் என்றால்
புண்டரீகாட்ஷனை சேருமே
சூத்திர தேவதை
விரூபாஷான் அவன் ருத்ரன்
ஆதி ராஜ்ய சூசுகமான
திருட்டு பலம் தான் உங்களுக்கு கிட்டும்
சர்வ ரஷகன் -இவனுக்கே சேரும் –
மின்னார் மணி முடி -செவ்வி திருமுடி திருமால்
என் திருமால் -இடம் சேரும்
ஒருவனையே நோக்கும் உணர்வு ஞானம் அவனையே
தாமரை சூர்யன்
ஆறு கடல்
போல
சர்வ சப்த வாச்யன் அவன் தானே
அசித் -சித் -ஈஸ்வரன் பர்யந்தம் போகுமே சப்தங்கள்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply