திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கோலமே! தாமரைக் கண்ணதுஓர் அஞ்சன
நீலமே! நின்றுஎனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்றுசெல் லாதன முன்நிலாம்
காலமே! உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே?

பொ-ரை : அழகே உருவமானவனே! தாமரை போன்ற கண்களையுடையதான ஒப்பற்ற அஞ்சனத்தினது நீல நிறமே ஒரு வடிவாக உடையவனே! நிலைபெற்று எனது உயிரை அறுக்கின்ற சீலமே வடிவாக உடையவனே! இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலமும் நீ இட்ட வழக்காம்படி இருப்பவனே! உன்னை என்று கண்டு அனுபவிப்பேன்?

வி-கு : ஈர்தல் – அறுத்தல். முன்னிலாங்காலம் – எதிர்காலம்.

ஈடு : எட்டாம் பாட்டு. 3‘உம்முடைய விருப்பத்தைச் செய்கைக்கு ஒரு காலம் இல்லையோ? அது வருமே அன்றோ?’ என்ன, ‘அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்.

கோலமே – 4அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி. 5ஞாதாவின் பக்கலிலே ஞான வியபதேசம் பண்ணா நின்றதேயன்றோ தத்குணசாரத்துவத்தாலே? அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார். தாமரைக் கண்ணது – அதற்குப் பற்றுக்கோடான திருவுடம்பு இருக்கிறபடி. 1அதுதன்னிலும் ஒரோ அவயவமே அமைந்திருக்கிறபடி. சிவப்பாலும் மலர்ச்சியாலும் மிருதுத்தன்மையாலும் தாமரையை ஒரு வகை உவமை சொல்லலாம்படி இருக்கிற கண்ணழகையுடையவனே! அஞ்சன நீலமே – 2‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி. ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார். அன்றிக்கே, ‘அஞ்சனத்தினது நீலநிறத்தை வடிவாக வகுத்தாற் போன்ற வடிவை உடையவனே!’ என்னலுமாம். ‘நன்று; அழகும் வடிவுமேயாய் அகவாயில் ஒரு பசை அற்று இருக்குமோ?’ என்னில், ‘இராது’ என்கிறார் மேல்: நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே – பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை. அன்றிக்கே, ‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.

‘இப்படி அழகும் குணங்களும் உண்டானாலும், பெறும் இடத்தில் இன்ன காலம் என்று இல்லையோ?’ என்னில், சென்று செல்லாதன முன்னிலாம் காலமே – இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே! இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார் என்றபடி. ‘சென்று’ என்கிறது, இறந்த காலத்தை. ‘செல்லாதன’ என்கிறது, நிகழ்காலத்தை. ‘முன் நிலாம் காலம்’என்கிறது, இனி வருகின்ற எதிர்காலத்தை. 1‘காலத்திற்கும் எமனுக்கும் இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கட்கும் பகவான் ஒருவனே ஏவுகின்றவன் ஆகிறான்; உனக்குச் சொல்லுகிறேன்; இது சத்தியம்,’ என்பது சஞ்சயன் கூற்று. உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது, 2‘பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’ என்றாற்போன்று, நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.

காலம் நீ இட்ட வழக்கு தானே
கோலமே -அழகும் ஆஸ்ரயமும் இரண்டு இன்றி அழகே வடிவு எடுத்த படி –
கிருஷ்ண பக்தி -நம் ஆழ்வார் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே
அறிவு கொழுந்து -அறிவு உடையவனை சொல்வது போலே
ஞாதா பக்கலில் ஞானம்
அழகே விஞ்சி இருப்பதால் கோலம் உடையவன் சொல்லாமல் கோலமே
அழகுக்கு ஆஸ்ரயம் –
ஒவ்வொரு அவயவம்
சிகப்பு மார்தவம் விகாசம் ஒப்பனை தாமரை
அஞ்சனமே நீலமே
அங்கும் இங்கும் கதிர் பொறுக்கிறார்

நீலமே வடிவு எடுத்தவன் -தத்வ சாரத்வாத் போலே –
அகவாயும்
நின்று நின்று ஆவியை ஈர்க்கின்ற சீலமே
வடிவை மறக்கிலும் குணம் மறக்க முடியாமல் –
சீலமே வடிவு எடுத்து
நெஞ்சினால் நினைப்பவன் எனன் அர்ச்சை
வள ஏழு உலகில் சேர விட்டுக் கொண்ட சீலம்
அழகும் சீலமும் இருந்தாலும் காலமும் நீ இட்ட வழக்கு

கால சக்கரம் யுக சக்கரம் எல்லாம் எம்பெருமான் இட்ட வழக்கு
சஞ்சயன் வார்த்தை –
சிருஷ்டிக்கும் முன்பும் அழித்த பின்பும் தானே இருந்து –
மிர்துயு உபசேஷணம் -ஊருகாய் போலே விழுங்கி
என்றும் ஒக்க உணர்ந்து இருந்து –
நியமிக்கும் ஒருவனே –
சத்யம் -ஆக இருப்பவன் –
ஸ்தோத்ரம் சொல்லும் அர்த்தவாதம் வாக்கியம் இல்லை –
வாயவ்யாகம் செய்து -அசைக்க முடியாத தேவதை வாயு -சொல்லும் போலே இல்லை –
தன்னை ஆப்தன் என்று விச்வசிதவனுக்கு பொய் சொல்வது இல்லை –
சென்று பூத
செல்லாதான பவிஷ்ய
முன்னிலா வர்த்தமான
முக்காலம் கால த்ரயம் நீ இட்ட வழக்கு
கலக் கழிவு செய்யேல்
உன்னைக் காண்பது என்று சொல்லி
இந்நாள் காணக் கடவாய்
பஞ்சமி திதி அன்று 14 வருஷம் வருவேன் சொல்லி -பெருமாள் குறித்து போலே
சுக்ல பஷம் பஞ்சமி காட்டுக்கு போக –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading