Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள்–

March 19, 2024

ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள் திருநட்சத்திரம் –பங்குனி புனர்பூசம்
–இன்று(19/03/24).🙏💐🌷🌺🌻🌼🥀🌹🙏

ஸ்ரீ உ.வே.காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமிகளின்
118 ஆவது திருநட்சத்திரம் பங்குனி புனர்பூசம்.அண்மைக் காலத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாய மஹான்களில் சிறந்து விளங்கிய “நியாய வேதாந்த மஹா வித்வான் ஸ்ரீ காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமிகள்”,
1906 ஆம் ஆண்டு பஞ்ச கிராமங்களில் ஒன்றான காரப்பங்காடு கிராமத்தில்(ராஜ மன்னார்குடிக்குப் பக்கத்தில்), ஸ்ரீ திருவேங்கடம் அய்யங்காருக்கும்,லக்ஷ்மி அம்மங்காருக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.ஸ்வாமியின் மாதாமகரும்,சிறந்த சாஸ்திர வல்லுநருமான,
ஸ்ரீ சிங்கப்பெருமாள் ஸ்வாமி வேங்கடாசார்யரைத் தமது ஸ்வீகார புத்திரராக ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷ்யங்களையும்,சாஸ்த்ர அர்த்தங்
களையும் கற்றுக் கொடுத்தார்.
ஸ்வாமி திருவையாறு சம்ஸ்கிருதக்கல்லூரியில் சேர்ந்தும் பயின்றார்.
திருமலை அனந்தாண் பிள்ளை வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ கோவிந்தப்பங்கார் ஸ்வாமி காரப்பங்காடு ஸ்வாமியின் சமாஸ்ரயண ஆசார்யர்
ஆவார்.

ஸ்வாமியின் தனியன்:
🔔🥁🎻🎺🎷🎸🥁🔔
“ஆத்ரேயாந்வய பூஷணாச்ச ஜநகாத்லப்த்வா நரசிம்ஹார்யத:
சாஸ்த்ராணி ப்ரதிதாத்ததைவ வரதாச்சார்யாத் பரஸ்தாதபி :
கோவிந்தார்ய பதாச்ரிதம் நிருபம ப்ரக்யாத வாக்வைபவம்
தாந்த்யாத் யாத்மகுணாகரம் குருவரம் ஸ்ரீ வேங்கடாசார்யம் பஜே !!”

“சீர்மிகுந்த ஆத்திரேயன் தெளிசிங்கப் பெருமாள் சேய்,
கூர்மதியன் வரதார்யன் கொடுத்த அருங்கலைச் செல்வன்,
பார்புகழும் கோவிந்தன் பதம் பணியும் வேங்கட நம்
பேர் பெற்றான் திருவடியே பெரும் பேறாம் நமக்கே !”

ஸ்ரீரங்கநாராயண ஜீயரிடம் காலட்சேபம் !
🙏👌👍🙏👌👍🙏
ஸ்ரீரங்க நாராயண ஜீயராக எழுந்தருளியிருந்த தேசிக வரதாசார்யர் ஸ்வாமிகளிடம், நம் காரப்பங்காடு
ஸ்வாமி ஸ்ரீபாஷ்யம்(ஸ்ருதிப் பிரகாசிகை),ஸ்ரீ வசனபூஷணம்,
ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சென்று,
ஆசூரி ராமாநுஜாசார்யர் ஸ்வாமியிடம் நியாய பாஸ்கரம் (தர்க்க சாஸ்த்ரம்) பயின்றார்.
அதன்பின் தில்லைத் திருச்சித்திர கூடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தர்க்க சாஸ்த்ரத் துறை யில் மூன்றாண்டுகள் பேராசிரியராகப்பணியாற்றினார்.

சென்னையில் காலட்சேப கைங்கர்யம் !
💐💐💐💐💐💐💐💐💐
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷ்யங்களை, ஆசையுடையோருக்கு எல்லாம்
உரைத்துப் பரப்பும் வகையில், நம் ஸ்வாமி 1937 ஆம் ஆண்டு தலைநகர் சென்னைக்கு எழுந்தருளி காலட்சேபம் செய்ய ஆரம்பித்தார்.
ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளின் பேரருளால் கீர்த்தி மிகுந்த வித்வானாக விளங்கினார்.

ஸ்வாமி காலட்சேபம் செய்த சம்பிரதாய விஷ்யங்கள்:

1.ஸ்ரீமத் பகவத் கீதை(பல முறை)
2.பகவத்விஷ்யம்–ஈடு(3 முறை)
3.ஸ்ரீ பாஷ்யம்
4.ஸ்ரீ ராமாயணம்
5.ஸ்ரீமத் பாகவதம்.
6.ஸ்ரீ விஷ்ணு புராணம்
7.ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்.
8.மஹாபாரதம்.
9.ரஹஸ்யகிரந்தங்கள்(முமூக்ஷுப்படி,
ஸ்ரீவசனபூஷணம்,தத்வத்ரயம்,
ஆசார்ய ஹ்ருதயம்)
10.திருப்பாவை(50 முறைக்கு மேல்)
11.மற்ற பிரபந்தங்கள்

காரப்பங்காடு ஸ்வாமியின் காலட்சேப கோஷ்டியை அலங்கரித்த
சீலமிகு சிஷ்யர்கள்:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1.ஸ்ரீ உ.வே.வேளுக்குடி வரதாசார்யர்
2.ஸ்ரீ உ.வே.பிள்ளைலோகம் பாஷ்யகாரர்
3.ஸ்ரீ.உ.வே.சதாபிஷேகம் கோவிந்த நரசிம்மாசார்யர்.
4.ஸ்ரீ உ.வே.காரப்பங்காடு ரங்கராமாநுஜாசார்யர்.
5ஸ்ரீ உ.வே.பிருந்தாவனம் கோவர்த்தன ரங்காசார்யர்.
6ஸ்ரீ உ.வே.அப்பன் ஸ்ரீநிவாசாசார்யர்.
7.ஸ்ரீ உ.வே.குமார வேங்கடாசார்யர்
8.ஸ்ரீஉ.வே. அப்பன் ராமாநுஜாசார்யர்.
9.ஸ்ரீ உ.வே.பிள்ளைலோகம் ஸ்தலசயனத் துறைவர்.
10.ஸ்ரீ.உ.வே.லக்ஷ்மி தாதாசார்யர்
(மேல்கோட்டை)
11.அரையர் ஸ்ரீ.உ.வே.ஸ்ரீராம ஐயங்கார்.
12.ஸ்ரீ உ.வே.வங்கிபுரம் பட்டங்கி ராமாநுஜாசார்யர்
13 ஸ்ரீ உ.வே.ஸ்ரீநிவாசாசார்யர்
(ஸ்ரீவில்லிபுத்தூர்)

ஸ்வாமியின் கிரந்தங்கள்:
📔📕📗📘📙📒
1.திரெளபதியும் திருநாமமும்.
2.ஸ்ரீ ராமாயண ஸாரம்.
3.கீதா ஸாரம்.
4 ஸ்ரீ வைஷ்ணவ கோட்பாடுகள்.

மேலும் ஸ்வாமி சாதித்த காலட்சேபங்களின் தொகுப்பாகவும் சில கிரந்தங்கள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள் 07/08/1971 அன்று தமது 65 ஆவது திருநட்சத்திர ஆண்டில் ஆசார்ய திருவடி அடைந்தார்.-

ஸ்ரீ ரெங்க மங்கள மணிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யது சைல தீபம்

பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில்
மம தாம சதுஷ்டயம் -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி -யாதவாத்ரி

வைகுண்டவர் தனம் நாம க்ஷேத்ரம் தத் ஸத்யம் உச்யதே
பிரமாணம் தஸ்ய விஜ்ஜேயம் பரிதோ யோஜந த்வயம்
நரஸிம்ஹ கிரீம் த்ருஷ்ட்வா தூரேநமத பக்தித
யஸ்ய தர்சன மாத்ரேண தூரம் கச்சதி துஷ் க்ருதம்

அஷ்டோத்தர சத ஸ்தான சாரே யாதவ பூதரே

1614 ஆண்டு -சாலி வாஹன சகாப்தம் ஆனந்த வருஷம் ஆஷாட மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி வெள்ளிக்கிழமை
மைசூர் ராஜ உடையார் செல்லப்பிள்ளை இணைத் தாமரை அடிகளுக்கு
உயர் ரகக் கற்களைக் கொண்டு 144 வராகன் எடை கொண்ட ராஜ முடி சமர்ப்பிக்கப் பட்டது –

பெரிய திருமலை நம்பி வம்ச லஷ்மி குமர தாத்தாச்சாரியார் திருவடி சம்பந்தம் இந்த ராஜ வம்சம் –
உடையார் வம்சத்தில் வந்த தேவ ராஜர் பேரனும் தொட்ட தேவராஜரின் புதல்வர் சிக்க தேவ ராஜர்
20 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தால்
ஸ்ரீ வைஷ்ண கோட்ப்பாடுகள் அடங்கிய 30 விண்ணப்பங்களை திரு நாரணன் திரு முன்பே வைத்தார்
அவற்றுள் 11-விண்ணப்பங்கள் விவரித்து -1952-வருஷம் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் மேலக்கோட்டையில் உபந்நியசித்தார் –
ரஹஸ்ய கிரந்தம் இது -கன்னட மொழியில் அஷ்ட ஸ்லோஹி -ஸப்த காதை போன்றவை
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் ஆத்ம ஷேமமே உத்க்ருஷ்டமாகக் கொண்ட ஷத்ரிய அரசர் இவர் –
பகவத் பக்தியே இவரது குல தனம் –

முதல் விண்ணப்பம்
பரார்த்தமான திவ்ய மங்கள விக்ரஹம் –
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தானாம் த்வம் ப்ரகாஸசே
இரண்டாம் விண்ணப்பம்
இவனே ஸமஸ்த வஸ்துக்களும் த்ரிவித காரணன்
மூன்றாம் விண்ணப்பம்
இவனே வேத ஸாஸ்த்ர ப்ரமேயம்
நான்காம் விண்ணப்பம்
இவனை தெரிவிக்கும் ஒரே பிரமாணம் வேதமே –வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே
ஐந்தாம் விண்ணப்பம்
வேதமும் வேத அங்கங்களும் உப அங்கங்களும் பரம் பொருளை எவ்வாறு ப்ரதிபாதிக்கிறது என்று விவரிக்கும்
ஆறாம் விண்ணப்பம்
சமன்வயப்படுத்தி எல்லாமே ஸ்ரீ மன் நாராயணனையே காட்டும் என்கிறது
ஏழாம் விண்ணப்பம்
ஜகத் மித்யா வாத கண்டனம்
எட்டாம் விண்ணப்பம்
கனவில் தோன்றுமாவையும் மெய்யே என்று நிரூபணம்
ஒன்பதாம் விண்ணப்பம்
அவன் ஸர்வ சமன் என்று நிரூபணம்
பத்தாம் விண்ணப்பம்
பகவத் ஸ்வரூப நிரூபணம் நிகமனம்
அடுத்த பத்து விண்ணப்பங்கள் ஜீவாத்மா பரமானவை
அடுத்த பத்தும் அசித் பரமானவை –

யதா யதா ஹி தர்ம ஸய க்லாநிர் பவதி பாரத அப் யுத்தாநம தர்மஸ்ய தத் ஆத்மநாம் ஸம்ருஜாம் அஹம் –
அஹம் ஸம்பவாமி -என்று அருளிச் செய்யாமல் ஆத்மநாம் ஸம்ருஜாம் அஹம் -ஞானிகளைப் பிறப்பிக்கிறேன்

திருப்பாவாடை உத்சவம் திருவல்லிக்கேணியில் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்து
கீதை உபதேசம் பண்ணும் திருக்கோலம் சாத்தச் சொல்லி -இன்றும் நடைபெறுகிறது
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை –பார்த்த சாரதி அன்றோ முன் நின்று
பீஷ்மர் சரவர்ஷம் தங்கி -ரஷித்து அருளினான் –

வரதன் கண்ட வேங்கடவன் –
கர்த்தரி கர்மணி -வரதன் வேங்கடவனைக் கண்டதாகவும் -வரதனை வேங்கடவன் கண்டதாகவும் கொள்ளலாம்
வேதாந்தக்காட்டிலே ஸிம்ஹம் நம் கார்ப்பங்காட்டு ஸிம்ஹம் -ஸ்ரீ உ வே சிங்கப்பெருமாள் திருக்குமாரர் இவர் –
பேர் அருளாளன் -கார்ப்பங்காடு ஸ்வாமி -வேளுக்குடி வரதாச்சார்யரை மூவரையும் சொன்னவாறு –
இவருக்கு ஆச்சார்யர் ஒரு வரதன் -ஸ்ரீ தேசிக வரதாச்சார்யர்
இவருக்கு பெருமாள் ஒரு வரதன் -பேர் அருளாளன்
சிஷ்யனும் ஒரு வரதன் -ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யார் –

உபதேசத்தில் ஸ்ரீ கீதாச்சார்யனை ஒப்பார்
உபதேச முறையிலே ஸ்ரீ நம்பிள்ளையை ஒப்பார்
வைராக்யத்திலும் கருணையிலும் எம்பெருமானாரை ஒப்பார்
உபதேச தெளிவாலும் சாந்தியிலும் திரு மேனி காந்தியிலும் மா முனிகளை ஒப்பார் –
லோக ஹிதை ஷித்வத்திலே சர்வேஸ்வரனையே ஒப்பார் –

———–

ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தம் மற்றும் திருவேங்கடமுடையான்

ஸ்ரீ காரப்பங்காடு வெங்கடாச்சாரியார் செய்த உபன்யாசம்-1940களில் நம்மாழ்வார் சந்நிதியில் சுவாமி-திருப்பதி-

விசிஷ்டாத்வைதம் வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி,--இது காலமற்றதாக கருதப்படுகிறது.
வித்தியாசமாக சமயங்களில் அது மறைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டது
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் மூலம். சுவாமி நம்மாழ்வார் மற்றும் சுவாமி ராமானுஜர் தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள்
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் மத்தியில் இருவரும் கொண்டு வந்துள்ளனர்-இந்த விசிஷ்டாத்வைத சம்பிரதாயம் உலகத்திற்காக பிரகாசிக்கச் செய்தனர் -.

ஆழ்வார்கள் மங்களா ஸாஸனம் செய்து அருளிய 108 திவ்யதேசங்களில், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை மற்றும் பெருமாள் கோயில்(திருக்கச்சி வரதராஜப் பெருமாள் கோயில்) மூன்றும் பிரதானமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் அனைத்து ஆழ்வார்களாலும்,மங்களா ஸாஸனம் செய்யப்பட்டது
தொண்டரடிப்பொடி ஆழ்வார். தவிர மற்றவர்களால் திருமலை மங்களா ஸாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்
இதனாலேயே கோயிலை முதலாவதாகக் கருதுகிறார்கள் திவ்யதேசங்களில் திருமலை இரண்டாவது இடமாக இருப்பினும், நம்மாழ்வாரால் முதலில் மங்களா ஸாஸனம்
செய்யப்பட்டதால் திருமலைக்கு ப்ராதான்யம் உண்டே
திருப்பாணாழ்வார் அமலனாதி பிரானில் அரங்கனைப் பார்த்த கண்கள் மற்று வேறு ஒன்றையும் காணாது என்று அருளிச் செய்து இருந்தாலும் முதல் மற்றும் மூன்றாவது பாசுரங்களில். -விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவனே அரங்கன் என்று ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த திருக்கோலத்துடன் இருந்து இங்கு திருமலையில் முதலில் நின்றது பின்னர் ஸ்ரீரங்கத்தில் கண் வளர்ந்து அருள்கிறான் என்றும் -மந்தி பாய் வட வேங்கடம் என்று மூன்றாம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்
திருமலையில் நின்றதால் -அமலனாதி பிரான் அடிப்படையில் திருவேங்கடமுடையானே அரங்கன் என்றதாயிற்று -.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்வார்கள் ஒரே குரலில் பேசுபவர்கள் -ஏக கண்டர்கள் .-

ஸ்வாமி நம்மாழ்வார் மற்றும் ஸ்வாமி எம்பெருமானார்
இருவரும் திருமலையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தனர்.
த்வய மந்திரத்தின் இரண்டும் - மிதுனத்தில் சரணாகதியும் சரணடைந்ததைத் தொடர்ந்து நித்திய கைங்கர்யமும்.மிதுனத்தில் பிரார்திக்கிறது
நம்மாழ்வார் "ஒழிவில்காலம்"-உலகமுண்ட பெரு வாயா திருவாய்மொழிகளில் இவற்றை திருவேங்கடமுடையான் விஷயமாகவே அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் பரஸ்மை ஸ்ரீநிவாஸன் -ப்ரஹ்மம் திருவேங்கடமுடையானே -என்றும் -வேதார்த்த சங்கிரஹத்தையும் திருமலையிலே அருளிச் செய்தார்
இவ்வாறு, ஸ்ரீ நம்மாழ்வார் மற்றும் ஸ்ரீராமானுஜர் திருமலை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதால் இதுவே முதல் திவ்யதேசம் என்று கருதலாம். (நஹி நிந்த நியாயம்).

முமுக்ஷஸ் ("முமுக்ஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே").
ஸ்ரீ நம்மாழ்வார் பக்தி மார்க்கத்தையும் பிரபத்தி மார்க்கத்தையும் உபதேசித்துள்ளார்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் பக்தியையும் கத்ய த்ரயங்களில் பிரபத்தியையும் அருளிச் செய்துள்ளார்

இனி ஆழ்வாரின் பிரபத்தியைப் பார்ப்போம்.
("அஹம் சர்வம் கரிஷ்யாமி") கிரியதாம் மாம் குருஷ்வ என்ற இளைய பெருமாளைப் போல் ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வ வித கைங்கர்யங்களையும் நம்மாழ்வார் பிரார்திக்கிறார்
அகலகில்லேன் இறையும் என்று அவளுடைய இருப்பால், முன்னுக்கு வரும் கல்யாண குணங்கள்வாத்சல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம் மற்றும்
சௌலப்யம். நான்கையும்
நிகரில் புகழாய் -உலகம் மூன்று யுடையாய் -என்னை ஆள்வானே திருவேங்கடத்தானே -என்று அருளிச் செய்து திருவேங்கடமுடையானிடம் பூரண சரணாகதி செய்து அவனிடம் கைங்கர்ய பிரார்த்தனையை ஒழிவில் காலம் எல்லாம் திருவாய் மொழியில் அருளிச் செய்துள்ளார்

—————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம்

March 5, 2024

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–ஸ்ரீ
பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.

ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தை பெற்றார்.

மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே
“[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]

என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார். “உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர். அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன் அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டுஅருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான். அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.

பெரியவாச்சான் பிள்ளைக்கு “பரம காருணிகர்” மற்றும் “அபார கருணாம்ருத சாகரர்” என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் “அபயப்ரதராஜர்” என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், “இராமாயணப் பெருக்கர்” என்றும் இவருக்கு ஒரு பெயர்உண்டு.

பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான “நாயனாச்சான் பிள்ளை” என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும் நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும் அறிந்து கொள்ளலாம். அவைகளில் சில கீழே:

  1. “நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
    அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம் உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம் [நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள். ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.
  2. இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று. பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது, உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது (சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது. இவையே பாரதந்த்ரியம்”.
  3. மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?  நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”. பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல. எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
  4. ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”. அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து, அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
  5. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது, பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார். பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ – பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும் அதுவும் நன்மைக்கே’ என்கிறான். ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார். இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே, அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
  6. ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது  எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
  7. ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச்செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே.”
-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய கிரந்தங்கள்

  1. அபய ப்ரதான வியாக்கியானம்
  2. அனுசந்தான ரஹஸ்யம்
  3. ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
  4. உபகார ரத்னம்
  5. கத்ய த்ரய வ்யாக்யானம்
  6. கலியன் அருள்பாடு
  7. சகல ப்ரமான தாத்பரியம்
  8. சரம ரகசியம்
  9. தனி ஸ்வோகி வ்யாக்யானம்
  10. திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
  11. நவரத்னமாலை
  12. நிகமனப் படி
  13. பரந்த படி
  14. பரந்த ரகசிய விவரணம்
  15. பாசுரப்படி இராமாயணம்
  16. மாணிக்கமாலை

இந்த விரிவுரை நூல்களுடன் பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார். 1. ரகஸ்யத்ரய விவரணம் 2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம் 3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம் 4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம் 5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம் 6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம் 7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம் 8. திருமாலை வ்யாக்யாநம் 9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம் 10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம் 11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம் 12. பெரியதிருமொழி வ்யாக்யாநம் 13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம் 14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம் 15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம் 16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம் 19. திருவிருத்தம் வ்யாக்யாநம் 20. திருவாசிரியம் வ்யாக்யாநம் 21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம் 22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம் 23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம் 24. பெரிய திருமடல் வ்யாக்யாநம் 25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம் 26. பரந்த ரஹஸ்ய விவரணம் 27. மாணிக்கமாலை 28. நவரத்னமாலை 29. ஸகல ப்ரமாண தாத்பர்யம் 30. உபகார ரத்னம் 31. கத்யத்ரய வ்யாக்யானம் 32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம் 33. சதுச்லோகி வ்யாக்யானம் 34. சரம ரஹஸ்யம் 35. அநுஸந்தான ரஹஸ்யம் 36. நிகமனப்படி 37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி 38. பாரதாதி தனி ஸ்லோகம் 39. அபய ப்ரதான சாரம் 40. ரகஸ்ய தீபிகை 41. பரந்தபடி 42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம் 43. கலியனருள்பாடு 44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம் பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

————-

ஸ்ரீ யபதியாய்
விஷ்ணு வாஸூதேவ நாராயணாதி ஸப்த வாஸ்யனான
ப்ரஹ்மம் ஒன்றுமே முமுஷுவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று
ஸகல ப்ராமண தாத்பர்யம்

(ப்ரமாணம் -நல்ல அறிவுக்கு வழி –ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் போல்வன-தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி ந அந்நிய பந்தா-பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -திருவில்லாததேவரை தேறேன் மின்

ப்ரஹ்மம் தான் பெரியவனாய் தன்னை ஆஸ்ரயித்த அனைவரையும் பெரியவனாக்கும்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா
||-)

அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும் விசேஷ்யம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
விசேஷணம் ஆகிறது விசேஷ்யத்தோடே பிரிந்து இராத தர்மம் –
விசேஷ்யம் ஆகிறது ஸ்வ விசேக்ஷணத்தோடே பிரித்து இராத தர்மம்

(விசேஷணம் -சார்ந்து இருக்குமது -பூவைச் சார்ந்த மணம் –ரத்னத்தைச் சார்ந்த ஒளி -தர்மம் குணம் -குணியை- தர்மியைச் சார்ந்து இருக்கும்-விசேஷணங்கள் வ்யாவர்த்தி அர்த்தம்-வேறுபடுத்திக் காட்டும்-சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸமஸ்த குண -ஞான ஸக்த்யாதி -விஸிஷ்ட ப்ரஹ்மம் -திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஸர்வ வியாபகம் ஸர்வாந்தர்யாமி)

(ஸரீராத்மா பாவம் நமது அசாதாரண தர்மம்–யஸ்ய சேதனஸ்ய யத்த்ரவ்யம் ஸர்வாத்மனா ஸ்வார்தே நியந்தும் தாரயிதம் ச ஷக்யம் தத் .அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷ சாயினேI நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று-சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்-நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்)

(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –-உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டதுசர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்-நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்)

விசேஷணமும் போக உபகரணம் என்றும்
லீலா உபகரணம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
போகமாகிறது
இஷ்ட பல அநு பாவம்
லீலையாகிறது காலாந்தரத்திலே ஒரு பலம் அன்றிக்கே தாத் காலிக ரஸ ஹேதுவான வியாபாரம்

(கர்த்தா உபகரணங்களைக் கொண்டு கர்மாவைச் செய்கிறான்
குயவன் சக்கரம் கொண்டு மண் குடம் பண்ணுகிறான்
ப்ரஹ்மமே ப்ரஹ்மத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் -போக ஸ்ரீ நிவாஸன் -பேரர் உண்டே திருமலையில்-
இதற்கு லோக த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே)

போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனன் என்றும் த்விவிதம்
சேதனமாகிறது ஞான ஆஸ்ரய வஸ்து
அசேதனம் ஆகிறது ஞான சூந்ய வஸ்து

அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வி விதம்
நித்ய வர்க்கமாகிறது ஒரு நாளும் ஸம்ஸாரத்தை ஸ்பர்ஸியாதே பகவந் நித்ய கைங்கர்ய நிரத ரஸராய் இருந்துள்ள அநந்த வைநதேய விஷ்வக் ஸேநாதி ஸூரி (வர்க்கம்)சங்கம்
-(அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தமே இல்லாதவர்-ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் கூரத்தாழ்வான் -இவர்களையும் கீழே அனுப்பி கார்யம் கொள்ளுவான்)
முக்த வர்க்கமாகிறது (
நிர்ஹேதுகமான)பகவத் கிருபையால் அநாதியான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு நித்ய வர்க்கத்தோடே கலந்து அது முதலாக யாவதாத்மபாவி (நித்தியமாக)பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –

அசேதனம் ஆகிறது ஸூத்த ஸத்வாத்மகமாய் தன்னோடே சம்பந்தித்த சேதனர்க்கு ஸ்வரூப ப்ரகாசகமாய் –நித்யமாய்- ஸ்வயம் ப்ரகாசகமாய் -கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே திவ்ய விக்ரஹங்களாய் -திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஜன பதங்களாய் அபரிச்சின்னமாய் நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும்

(உபய விபூதி நாயகன் உத்தம புருஷன் திரு வயிற்றில் மூன்று மடிப்புக்கள்- த்ரிவித சேதன அசேதன –கீழ் போக -நித்ய விபூதி பார்த்தோம் -மேல் லீலா விபூதி பார்க்கப் போகிறோம்)

இனி லீலா உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதிலே சேதன ஜாதியும் -சம்சாரிகளை யென்றும் முமுஷுக்கள் என்றும் த்வி விதம்
ஸம்ஸாரிகள் ஆகிறார் அநாதியான அசித் ஸம் ஸம்பந்தத்தாலே திரோஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய்
அது அடியாக அந்யதா ஞான விபரீத ஞானங்களை யுடையராய் -(
அந்யதா ஞான-குணமே மாறாடுவது -வெளுத்த சங்கத்தை மஞ்சளாகப் பார்ப்பது -சேஷத்வம் அடிமைத்தனம்-குணம் பார்க்காமல் ஸ்வ தந்திரம் என்று நினைக்க-விபரீத ஞானங்களை –பொருளையே மாறாடிப் பார்ப்பது யுடையராய் -தேஹமே ஆத்மா என்று பிரமித்து)
தத் கார்யங்களான ராக த்வேஷாதி (விருப்பு வெறுப்பு முதலாக)ஜன்யங்களான புண்ய பாப ரூப நாநா வித கர்மங்களை யுடையராய் அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர் வித நாநா சரீரங்களிலே நிரந்தரமாக ப்ரவேசியா நின்று கொண்டு அந்த சரீரங்களிலும் சரீர அனுபந்திகளிலும் அஹங்கார மமகாரங்களாலே வருகிற துக்கங்களில் ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு விஷய ப்ரவணராய் தாப த்ரய தஹ்மானராய் நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள்

(காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?)

முமுஷுக்களும் (ஸம்ஸாரம் விடுபட ஆசை கொண்டவர்)ஆத்ம பிராப்தி காமர் என்றும் பகவத் பிராப்தி காமர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்ஆத்ம பிராப்தி காமர் ஆகிறார் (கேவலர்)-ராஜ பதம் அளவாக யுடைத்தான ஐஹிக ஐஸ்வர்யமும் பிரம பதம் பர்யந்தம் உள்ள ஆமுஷ்மிக ஐஸ்வர்யமும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விவேகித்து -ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் இருக்கையாலே ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுமவர்கள் -இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள்

பகவத் பிராப்தி காமர் ஆகிறார் -ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய் -ஞான ஆனந்த மயனாய் -அபரிச்சின்னமான குணகனுமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷமாகையாலே -அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு ஸ்வ அனுபவம் அணுவாய் -ஸ்வ தந்திரமுமாகையாலே -ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து –
நித்தியமாய் -நிர்மலமாய் -அபரிச்சின்ன ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய் -ஸர்வ சேஷியாய் -ஸர்வ சரண்யனாய் -ஸர்வ ப்ராப்யனான -ஸ்ரீ யபதியுடைய திருடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பரம புருஷார்த்தமாக நிச்சயித்து -ஒரு தேச விசேஷத்திலும் தேஹ விசேஷத்திலும் அன்றியே சித்திப்பதாகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான தேச சம்பந்தமும் தேஹ சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள்

இவர்களும் உபாஸக நிஷ்டர் என்றும் ந்யாஸ நிஷ்டர் என்றும் த்வி விதம்
உபாஸக நிஷ்டர் ஆகிறார் -பல சங்க பரித்யாக பூர்வகமாக -யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்ட்டிக்க விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸுக்கள் நன்றாக நசித்து -யதா ஞான ஹேதுவான ஸத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஞானம் யுண்டாய்
அது ஸாஷாத் கார ஸமானமாய் -அந வரத பாவனை யுண்டாய் -பக்தி ரூபா பன்னமாய்
ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய்-
ஸாஸ்திரங்களிலே மோக்ஷ சாதன தயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள்

(வேதந – ஸ்மரண – த்யான -உபாஸன–அன்பு கலந்த பக்தி -அறிந்து -உபாயம் -சமீபத்தில் அழைத்துச் செல்லும்-நம் யத்னம் -சாதன உபாயம் -ஸாத்ய உபாய நிஷ்டை -ஞான தர்சன பிராப்தி தசைகள் -பர பக்தி பர ஞான பரம பக்தி –

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-


ஸ்வா தந்திரம் லேசமும் இல்லாமல் பாரதந்த்ரம் கொண்டு – -அவனைப் பற்றுவதே சரணாகதி பிரபத்தி ந்யாஸம் -ப்ரஹ்மமே ந்யாஸம் -ஸித்த உபாயம்
சரணம் இதி ஆகதி -நீயே உபாயம் என்று வந்து விடுவதால் -நம்புவதே சரணாகதி -ஸித்த உபாய நிஷ்டை -அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் -)

ந்யாஸ நிஷ்டராகிறார் -உபாஸனமும் அநேக ஜன்ம ஸாத்யமாகையாலே துஷ் கரம் என்றும் -தேச கால அதிகாரி ப்ரப்ருத் யனேக நியம அபேக்ஷமாகையாலே ஸ அபாயம் என்றும்
ப்ராரப்த கர்மாவஸாந பலமாகையாலே ஸ விளம்பம் என்றும்
அசேதனமாகையாலே அஸமர்த்தம் என்றும்
ஸ்வ யத்ன ஸாத்யமாகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
பின்னையும் சொல்லப்படுகிற உபாய ஆபாசங்கள் எல்லாவற்றையும் ஸ அங்கமாகவும் ஸ வாஸநமாகவும் விட்டு

அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
நிவ்ருத்தி சாத்யமாகையாலும்
ஸக்ருத் அநுஷ்டேயமாகையாலும்
ஸூ கரமாயும்
ஒரு நியமமும் வேண்டி இராமையாலே நிர் அபாயமாயும்
தேஹ அவஸாந பலிதமாகையாலே சீக்ர பல ப்ரதமாயும்
பரம சேதனமாகையாலே பல ப்ரதாநத்தில் ஸ்வயம் ஸமர்த்தமாயும்
நிருபாதிகமாகையாலே ஸ்வரூப அநு ரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலக்ஷண உபாயமாக நிச்சயித்து
அதிலே ந்யஸ்த பரராய் இருக்குமவர்கள்

இந்த ந்யாஸ நிஷ்டரும் ஸ்வயம் ந்யஸ்த பரர் என்றும் பர ந்யஸ்த பிறர் என்றும் த்வி விதம்
ஸ்வயம் ந்யஸ்த பரராகிறார் -ஸதாச்சார்ய கிருபையாலே லப்த ஞானராய் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து ஹித பரனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தைத் தாங்களே ஆஸ்ரயிக்க அஞ்சி -ஸர்வேஸ்வரனுக்குப் பத்நியாய் -வல்லபையாய் -ஸர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநியாய் -மாதாவாய் -அவனோடே நித்ய ஸம் யுக்தையான பிராட்டி பிரஸாதத்தாலே பயம் கெட்டு
வாத்சல்யாதி ஸமஸ்த கல்யாண குண கண விஸிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளைத் தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள்

பர ந்யஸ்த பரராகிறார் -தங்களுக்காக ஆசார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட ஏதாத்ருஸ ந்யாஸத்தை யுடையவர்கள்
இவரும் ஸ நிபந்தன பர ந்யஸ்த பரர் என்றும் நிர் நிபந்தன பர
ந்யஸ்த பரர் என்றும் த்வி விதமாய் இருப்பார்கள்

ஸ நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தம்முடைய அநு வர்த்தநாதிகளாலே மந்த்ர பிரதனனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

நிர் நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தனக்கு ப்ராப்தமான புருஷார்த்தத்தினுடைய யுக்த வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அது இவர்களுக்கு இல்லாத மாத்திரம் அன்றிக்கே இவர்கள் படுகிற துர்க் கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

இவர்களில்
ஸம்ஸாரிகள் ஈஸ்வரனுடைய சிக்ஷைக்கு விஷயமானவர்கள்
கேவலர் -உபேக்ஷைக்கு விஷயமானவர்கள்
உபாஸகர் அனுக்ரஹத்துக்கு விஷயமானவர்கள்
ப்ரபன்னர் கிருபைக்கு விஷயமானவர்கள்

(அருள் தயா அனுக்ரஹம் கிருபை அனுகம்பா -பர்யாய பதங்கள்
அனு க்ரஹம் பின் தொடர்வது அனு பத பிரயோகம் -யாத்திரை அனு யாத்ரை -யாகம் அநுயாகம்
அனு க்ராஹதம் -பண்ணினதால் பலன் -பக்தி செய்வதால் அருள் -சோபாதிகம் -உபாதி இருக்க வேண்டுமே
கிருபா -நிருபாதிகம் -அளவுக்கு உட்படாமல் -)

ப்ரபன்னர் எல்லாருக்கும் தேஹ அவசானத்திலே பலமே ஒக்கும்
உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரிகள்
இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்வி விதம்
ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் (
கூண்டுக்குள்)இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோற்றித் தந் நிவ்ருத்திக்குத் த்வரிக்குமவர்கள்

(இனி இனி இருப்பதின் கால் -திரு விருத்தத்தில் 3 தடவையும் திருவாய் மொழியில் 17 தடவையும் கூப்பிடடாலும் இங்கேயே வைத்தான்
இனி என்றதும் உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று ஆக்காமல்
பிரபந்தம் தலைக் கட்ட -நச்சுப் பொய்கை ஆகாதற்காக -ஆர்த்தி பெருக்க -வீடு திருத்த -இங்கே வைத்தான்-த்யாஜ்ய தேகத்தில் பிராவண்யம் மிக்கு இத்துடன் கூட்டிச் செல்லப் பார்த்தான் -அவனுக்கும் மங்க ஒட்டு உன் மா மாயை உபதேசித்தார் அன்றோ)


த்ருப்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான தேஹாந்தர ஸம்பந்தமும் ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய் தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள்

இவரும் ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் என்றும் ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்
ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் –சரீர அவசானத்திலே போகம் எத்தனையேனும் விலக்ஷணமானாலும் ருசி வாசனைகளாலே இத்தை விட்டு விட த்வரியாதவர்கள்

ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் -தனக்கும் அவனுக்கும் உண்டான நிருபாதிக சரீர சரீரி ஸம்பந்தத்தை அனுசந்தித்து அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக போக தாஸ்யத்திலே மண்டி இருக்குமவர்கள்

ஆர்த்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோன்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள்
இவரும் பிரதி கூல போக ர்த்தர் என்றும் அநு கூல போக ர்த்தர் என்றும் த்வி விதம்

பிரதி கூல போக ர்த்தர் ஆகிறார் -ப்ரத்யக்ஷ ஸித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் ஸஹமாய்த் தோன்றி அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும் தேசிகருடைய ஸஹ வாஸத்தையும் பொறாதே ஸாஸ்த்ர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்களுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய் -அந்த துக்க கந்தமும் இன்றிக்கே நிரதிசயமான பகவத் பிராப்தி ரூப ஸூகத்திற்கு த்வரைப் படுமவர்கள்

அநு கூல போக ர்த்தர் ஆகிறார் -நிரந்தரமான த்வய அநு சந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தினுடைய வைலக்ஷண்யம் விசதமாக பிரகாஸிக்க அது இல்லாத க்ஷண காலமும் கல்ப ஸஹஸ்ரமாய்த் தோன்றும்படி (ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ)ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கின்றவர்கள் –

இந்த ப்ரபந்ந விஷயமான உபாய க்ருத்யம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்தியும் என்று த்வி விதமாய் இருக்கும்(அநிஷ்டமும் இஷ்டமும் அதிகாரிகளுக்குத் தக்க வேறு வேறாகவே இருக்கும்)
அநிஷ்டம் தான் பூர்வாகம் என்றும் உத்தராகம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அகமாகிறது புண்ய பாப ரூபமான கர்மம் –
ஸ்வர்க்காதி சாதனமாக புண்யமும் பாபம் போலே பேற்றுக்கு பிரதிபந்தகமாகையாலே அகம் எனப்பட்டது

இதிலே பூர்வாகம் ஆகிறது -ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –
இதுவும் ஸஞ்சிதம் என்றும் ப்ராரப்தம் என்றும் த்வி விதமாய் இருக்கும்

ஸஞ்சிதமாகிறது -பல ப்ரதானத்துக்கு உத் யோகியாமல் இருக்கிறது
ப்ராரப்தமாகிறது -பல பிரதானத்துக்கு உத் யோகிக்கிறது

ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்தராரப்தம் என்றும் த்வி விதம்

உத்தராகமாகிறது –ஆஸ்ரயணக்கு அநந்தரம் தேஹ அவசான பர்யந்தம் வாஸநா பலத்தாலே செய்யப்பட கர்மம்
இதுவும் ஞான க்ருதம் என்றும் அஞ்ஞான க்ருதம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
இதுவும் ஸ அநுதாபம் என்றும் நிரநுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்வி விதமாய் இருக்கும்

இப்படிப்பட்ட பேதங்களை யுடைத்தான அநிஷ்டத்தை இவன் இடத்திலே ப்ரீதி அதிசயத்தாலே உபாய பூதனான ஈஸ்வரன் போக்கும்படி எவ்வாறு என்னில்

(ஸஞ்சித பிராரப்த ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -நானும் வேண்டா நீயும் வேண்டா -தன்னடையே போகும்)

(போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-மாரீசனை ஒட்டி ஸூ பாஹுவை முடித்தால் போல்-ஏழு வர்க்க பாபங்கள் -ஸஞ்சித கர்மா மூட்டை பெரியது –
பக்தி உபாசகனுக்கும் ப்ரபன்னனுக்கும் முடிக்கும் முறை -அநுகூல பிரதிகூல இடம்
சரீராராப்த ஆரப்த கர்மம் -தீயில் இட்ட பஞ்சு போல் அழித்தே விடுகிறான் -பக்தனுக்கு இது இல்லை
மூன்றாவது வர்த்தமான சரீர ஆரப்த கர்மாவை ப்ரபன்னனுக்கு தேக அவசா னத்திலே அதற்குள்ள அனுபவம் கொடுத்து தீர்க்க வேண்டும்
ஆகவே ஸரணாகதி செய்த உடன் ஸுகமீ என்று சொல்ல முடியாது -மோக்ஷம் நிச்சயம்-அஜ் ஞான க்ருத பாபம் அப்படியே காணாக் கண் இட்டு இருப்பான்-

சிந்தையந்திக்கு அப்போதே -வேணுகானம் கேட்டு ஆனந்தம் புண்யங்களைப் போக்கி -கண்ணனைப் பார்க்கப் போகாமல் துக்கப்பட்டு பாபங்களை போக்கி அப்போதே பேறு -அவள் ஆர்த்த ப்ரபந்தனை
நம்மாழ்வார் தீர்க்க சிந்தையந்தி)


வர்த்தமான சரீரார்ப்பத்தை ஒழித்து பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை இவனை ஸ்நேஹித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
பாப அம்சத்தை த்வேஷித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
ஸரீராரப்தத்தை ஸரீரத்தோடே போக்கும்
இவனுக்கு எப்போதும் அநு கூல போகார்த்தி யுண்டாம்
அந்த ஆர்த்தி ரூபமான மஹா துக்கத்தினாலும் தத் ஹேதுவான அநுபவ ஆஹ்லாத ரூபமான மஹா ஸூகத்தினாலும் சரீர அநுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
உத்தராகத்தில் அஞ்ஞான க்ருதமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றிக்கே போம்
ஸ அநுதாபமான ஞான க்ருதமும் அவனுடைய க்ஷமைக்கு விஷயமாம்
அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அநு தாபத்தாலே போம்
பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அநு தாபத்தாலே போம் –
நிரநுதாப ஞான க்ருதமும் சரீர அநு பாவ்யம் போலே அனுபவித்துப் போக்குவன்

ஸாமான்ய நிஷித்த அநுஷ்டானமும் பகவந் நிக்ரஹ ஹேதுவாகையாலும் சிஷ்ட ஐந கர்ஹிதமாகையாலும் க்ரூரம்
பகவத் விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தரம்
பாகவத விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தமம்
ஆகையாலே ப்ரபந்நன் பகவத் பாகவத் ப்ரஸாதத்துக்கு ஒழிய க்ஷமைக்கு விஷயமாகை அநுரூபம் அல்லாமையாலே ஸாவதாநத்தோடே நடக்க வேணும்
ஆகையாலே ஞான க்ருதமான் ஸ அநு காமமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அநுதாப சூந்யமும் தூரதோ நிரஸ்தம்
ஆனாலும் ஈத்ருஸ கடிந ப்ரக்ருதிகள் உண்டாகுவாரோ என்று ஸாஸ்த்ரம் சொல்லிற்று ஆயிற்று

இப்படி ஸர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் யாகையாலே தத் கார்யமான தேஹ ஸம்பந்தம் இல்லை
தேஹ ஸம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை
இம் மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாஸநா ருசிகள் இல்லை
ஆகையாலே ப்ரபன்னனுக்கு சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர க்ரியைகளும் உபாயம் அன்று
ஆனாலும் உத்தர க்ரியைகளும் ஆந்ரு ஸம்ஸ்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை

இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்வி விதம்
ஐஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்வி விதம்
கைங்கர்யமாவது -இஷ்டம் செய்கை (
கிம் கரோ -என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்து கேட்டு செய்ய வேண்டுமே)-அது தான்
ஸாமான்ய விஹித அநுஷ்டானமும் (
வர்ணாஸ்ரம தர்ம அநுஷ்டானம்)பகவத் ஸந்தோஷமாகையாலே கைங்கர்யம் என்னக் கடவது இறே
பகவானுக்கு இஷ்டம் ஸாஸ்த்ர முகத்தாலே அறிய வேணும்
பாகவதருக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும் –

ஆக கைங்கர்யமும் மாநஸம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
மாநஸ மாகிறது -அந்நிய பரமாகாமல் தத் பரமாக்குகை (
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நாம் கொள் சிறப்பே)-அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும் -செய்யக் கடவ உபகாரத்தை அபேக்ஷிக்கையும் என்று த்வி விதம்
இதில் ஈஸ்வரன் செய்த உபகாரமாகிறது -ஸதாசார்யனை ஆஸ்ரயிப்பிக்கையும் -தத் அர்த்தமான அதிகாரி ஸம்பத்தும்
ஆமுஷ்மிகமான கைங்கர்யமும் இதுவே
அந்தக் கைங்கர்யமும் வாசிகம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
வாஸிகமாகிறது -ஸ்துதி -திருநாம ஸங்கீர்த்த நாதிகள்(
வாசிகமான அங்கு கைங்கர்யம் செய்தான் மொய் மாம் பொழில் -பதிகம்)
காயிகமாகிறது -ஸம்மார்ஜமான மாலா
பந்தநாதிகள்

பாகவத கைங்கர்யமும் ஆசார்ய கைங்கர்யம் என்றும் தத் துல்யரான பாகவத கைங்கர்யமும் என்றும் த்வி விதம்

ஆசார்யரும் மந்த்ர ப்ரதர் என்றும் -மந்த்ர ரத்ன பிரதாரி யென்றும் த்வி விதம்
இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்த ஸமமாய் இருக்கும்
பகவானுடைய திருவடிகள் இரண்டிலும் வைஷம்யம் உண்டாகில் இறே ஆசார்ய விஷயத்தில் வைஷம்யம் உண்டாவது

(மந்த்ரத்திலும் மந்த்ர ப்ரதிபாத்ய வஸ்துவிலும் மந்த்ர ப்ரதான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கணக்கா உண்டாக வேணுமே -பெரிய திருமொழி முதல் நான்கு பதிகமும் இத்தைக் காணலாம்
மந்த்ரம் கொடுத்த திருநறையூர் நம்பி மந்த்ரார்த்தம் கொடுத்தக திருக்கண்ணபுரத்துக்கும் 100 பாசுரங்கள் மங்களா சாசனம்
ஸ்ரீ ரெங்கம் மட்டுமே 50 பாசுரம் -வேறே யாருக்கும் இல்லையே)


இப்படிப்பட்ட ஆசார்யர்கள் செய்த உபகாரமாகிறது -அநாதி காலம் விமுகனான சேதனனை பகவத் விஷயத்தில் அபி முகனாகச் செய்கையும் -மந்த்ரார்த்த முகத்தாலே அஞ்ஞானத்தை நிரஸித்து ஞானத்தை யுண்டாக்கி தத் அநு ரூபமான வ்ருத்தியிலே நியமித்து ததீய அந்தர் பவாத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகையும்
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-

உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி ————-62-

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-

இனி பாகவதர் செய்த உபகாரமாவது -குண லேசமும் இன்றிக்கே தோஷங்களினாலே பூர்ணனான தன்னை ஆசார்ய ஸம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அநு ரூபமான போகத்திலே கூட்டிக் கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயமாக்குகை

(-அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆஸ்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்.-திருவேங்கடமுடையான் அனந்தாழ்வானுக்கு சமர்ப்பித்த தனியன்)

இனி லீலோ உபகரணமான அசேதனமும் ப்ரக்ருதி என்றும் காலம் என்றும் த்வி விதம்
ப்ரக்ருதி யாகிறது -ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய் நித்யமாய்- தன்னோடே சம்பந்தித்த சேதனருக்கு தத் தத் கர்ம அநு குணமான தேஹ இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -ஸப்தாதி விஷய ப்ராவண்யத்தையும் பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்

காலமாகிறது -நித்தியமாய் -நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹு விகாரங்களை யுடைத்தாய் சேதனருடைய கர்மத்துக்கும் தத் அநு குண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்

இனி லீலா பரிகரமும் போக பரிகாரமுமான சேதன அசேதன வர்க்கம் -ஸ்வ விஸேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு வ்யாப்யமாய் –தார்யமாய் -நியாம்யமாய் -சரீரமாய்- சேக்ஷமாய் இருக்கும்

இனி விசேஷ்யமும் அகில ஹேய ப்ரத்ய நீகமாய்- கல்யாணை கதாநமாய் -ஸதைக ரஸமாய் -விபுவாய்- நித்யமாய் -ஞான ஆனந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய் -ஞான ஸக்த்யாதி அநந்த குண கண பூஷிதமாய் -ஸ்வ விசேஷணமான ஸகல சேதன அசேதனங்களுக்கும் வ்யாபகமாய் -தாரகமாய் -நியாமகமாய் -ஸரீரியாய் -சேஷியாய் -விலக்ஷண விக்ரஹ யுக்தமாய்- லஷ்மீ பூமி நீளா ஸமேதமாய் -நித்ய முக்தர் அநு பாவ்யமாய் -ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய் -ஸர்வ லோக சரண்யமாய் -ஸகல பல ப்ரதமாய் -ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும்- ஸநக ஸநந்தாதி யோகிகளுக்கும் -அவாங் மநஸகோசரமாய் -ஸ்ருத் ஏக ஸமதி கம்யமாய் -ஸமாஸ்ரித ஏக ஸூலபமாய் -தத் உஜ்ஜீவந ஏக ப்ரயோஜனமாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார ரூபங்களை யுடைத்தாய் இருக்கும்

இப்படிப்பட்ட ஸமஸ்த விசேஷண விஸிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன்
இந்த அதிகாரியே ஞானாதிகரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நித்ய முக்தர்களுக்கும் ஆசார்யனுக்கும் பிராட்டிக்கும் ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த பிரிய தமன்

ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம் முற்றிற்று

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

திருக்குறளும் ஸநாதந தர்மமும்

February 12, 2024

1; “அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன்‌ முதற்றே யுலகு,

எழுத்தெல்லாம்‌ – எல்லா எழுத்துக்களும்‌, அகர
முதல-அக.ரத்தை முதலெழுத்தாக உடையன : (அது
போல), உலகு-உலகம்‌, ஆதிபகவன்‌ முதற்று- கடவுளை
முதலாக உடையது, ஏ அசை,

எல்லா எழுத்துக்களுக்கும்‌ எப்படி. அகரம்‌ முதலெழுத்தோ, அப்படியே உலகத்திலுள்ள எல்லரவற்‌றுக்கும்‌ கடவுள்‌ முகற்பொருள்‌ என்பது கருத்து.
அதிலிருந்து கடவுள்‌ எனப்படும்‌ பரம்பொருள்‌ ஒன்றுஉண்டு என்பது பெற்‌ப்பட்டது, காரணமின்றிக்‌ காரிய மில்லாமையின்‌,
அகரமுதல–அகாமாகிய முதல்‌. என்பது அகரமுதல்‌எனத்‌ தொகையாகும்‌. தொகை என்பதை வடமொழியில்‌ ஸமாஸம்‌. என்பர்‌. ‘ அகரமுதல்‌ என்பதற்குப்‌ பலவின்‌ யால்விஞூதி ஆகிய ௮ சேர்க்கப்பட, அகரமுதலஎனக்‌ குறிப்புவினைமுற்று ஆயிற்று, எழுத்து என்பது ஈண்டுப்‌ பன்மை, ஆதி பகவன்‌ என்பது ஆதியாய பகவன்‌ என விரியும்‌, ஆதி என்பதும்‌ பகவன்‌ என்பதும்‌வடமொழிச்சொற்களின்‌ தற்பவம்‌, பகம்‌ என்றசொல்‌ ஐச்வர்யம்‌, வீர்யம்‌, ர்த்தி, இரு, ஞானம்‌, வாக்கியம்‌ என்ற ஆறினையுங்‌ குறிக்கும்‌; பகத்தை.யுடையவன்‌ பகவான்‌. பகவான்‌ என்பதன்‌ இடை.க்குறை பகவன்‌ என்பது, பகவர்‌ பலர்‌ ஆ.தலாலும்‌, அவருள்‌
முதல்வர்‌ கடவுள்‌ ஆதலாலும்‌ கடவுளைக்‌ குறிக்க ஆதி பகவன்‌ என ஆரியர்‌ வழங்கினர்‌. “ ஆதி பகவன்‌ ஆகிய முதல்‌? என்பது ஆதிபகவன்முதல்‌ என ஆயிற்று;
அதற்கு து விகுதி சேர்க்க, ஆதிபகவன்முதற்று என்ற குறிப்புவினை வந்தது, உலகு என்பது *உலகம்‌” என்‌பதின்‌ கடைக்குறை; அச்சொல்‌ பல பொருள்களைக்‌
குறிப்பினும்‌, சொல்வகையான்‌ ஒருமையாகலான்‌ ஒருமை வினையைக்‌ கொண்டது.

“ அகரத்திற்குக்‌ தலைமை…சாதமாச்‌ திரையாகிய இயல்பால்‌ பிறத்தலானும்‌” எனப்‌ பரிமேலழகர்‌ கூறுவர்‌.
ருக்வேதகம்‌ ஐதரேயஆரண்யகம்‌ மூன்றாவது அத்தி யாயம்‌ ஆறாவது கண்டம்‌ அகரமே * சர்வவாக்கும்‌,அகரமே ஸ்பர்சங்களாலும்‌ (வாய்க்குள்ளிருக்கும்‌ பல உறுப்புகள்‌ ஒன்றோடொன்று தொட்டு சேர்வதினாலும்‌), ஊஷ்மங்களினாலும்‌ (அவ்வுறுப்புகள்‌’ கேரே
சேராமல்‌ சற்று விலகி இருஈ்து கொண்டு இடையில்‌ கொஞ்சம்‌ காற்று விட்டு ஊதுவதினாலும்‌), வெளியாக்‌ கப்பட்டு ககாரம்‌, மகரம்‌, பாகரம்‌ முதலிய பல்வேறு
எழுத்துருவங்களை அடைகின்‌ ௨22 எனப்பொருள்‌ படும்‌படி. கூறுகிறது.

மேதபாஷ்யம்‌, ஆகாயத்தின்‌ குணமாகிய காதம்‌ ஒன்றே காகஸ்வரம்‌, புல்லான்‌ குழல்‌, வீணை, தம்பட்டை முதலிய கருவிகளுக்கு ஏற்றவாறு ஒலிப்பது போலவும்‌, பஞ்ச லோகங்கள்‌ உருக்குக்குழாய்களின்‌ சன்மைக்‌ கேற்ப ‘நடராஜவிக்ரஹம்‌, விஷ்ணுவிக்ரஹம்‌ முதலிய பல வேறுவடி.வங்களை அடைவகைப்‌ போலவும்‌ இயல்பாசிய
கரதமாத்திசையாம்‌ அகரமும்‌ உதடு, பல்‌, அண்‌ணம்‌. _ இவற்றின்‌ ‘தொழிலிற்கு  வேறு
எழுத்துக்களாய்‌. வருகின்றது.

அதற்கு மற்றொரு காரணம்‌ “ அக்ஷரங்களுள்‌ அகரம்‌ ஆகின்றேன்‌ யான்‌ (அக்ஷராணாம்‌ – அகாரோ –அஸ்மி – பகவத்‌ கீதை – 10 வது அத்தியாயம்‌ 88 வது சுலோகம்‌)” எனப்‌ பகவத்‌ கீதையில்‌ கண்ணன்‌ கூறிய.மாகு மென்பர்‌; அப்பகவத்‌ தகைத்தொகூரின்‌ கருத்த-எழுத்துக்களுள்‌ தன்னை அகாரமாக உ்பாஸிக்கவேண்டும்‌-என ஆதிசங்கரசாரிய ஸ்வாமிகள்‌ கூறி இருத்தலின்‌ அவர்கூற்று ஆராய்தற்பாலது

உலகில்‌ உண்டாக்கப்படும்‌ காரியப்பொருள்களுக்‌ ‘கெல்லாம்‌ பொதுவாக முதற்காரணம்‌ எனப்படும்‌ உபாதான காரணமொன்றும்‌, நிமித்த காரணம்‌ எனப்படும்‌ மற்‌ றொரு காரணமும்‌ இருப்பதைக்‌ காண்கிறோ ம்‌. “ஒரு மூலமில்லாமல்‌ இவ்வுலகமிராது ‘” எனச்‌ சாந்தோக்கிய உப நிஷத்‌திற்‌ சொல்லப்படிருக்கறது (சா- உப- அத்யா 6கண்டம்‌ 8, மந்த்ரம்‌ 8),

உதாரணமாக மட்கலத்‌திற்கு மண்‌ முதல் காரணம்‌ (அதாவது உபாதான காரணம்‌),குயவன்‌ நிமித்த காரணம்‌, ஆனால்‌ பகவான்‌ உலகத்‌தை ஸிருஷ்டிக்கும்போது அவர்‌ இரண்டற்ற பரம்‌ பொருளாகையால்‌ தானே முதற்காரணமுமாகிறார்‌ என்பது திரு நான் மறை முடியான வேதாந்த சாஸ்திரத்தின்‌ கருத்து,

இக் கருத்தையே ஆதிபகவன்‌. முதற்றே வுலகு!” என்னு மிடத்‌தில்‌ முதல் காரணத்‌தைக்‌ குறிக்கும்‌ முதற்றே என்றும்‌ சொல்லால்‌: உணர்த்துகிறார் போலும்‌. இதனால்‌ தேவர்‌ குறளும்‌ திருநான்மறைமுடியும்‌ ஒரு வாசகமென்றுணர்‌
என்னும்‌ ஒளவையாரின்‌ வாக்கின்‌ உண்மை வெளியாகிறது .

எல்லா உலகும்‌ ஆவாய்‌ நீயே என்னும்‌ தத்துவத்தையே இக் குறள்‌ உவமை வாயிலாகப்‌ போதிக்‌கிறது :
கடவுள்‌ எல்லா சராசாரப்‌ பொருளிலும்‌ அவற்றின்‌ தன்மையாய்‌ நிற்குமாறு போல்‌ அகரம்‌ எல்லா எழுத்துக்களிலும்‌ கலந்து தனியாய்‌ நிற்கும்‌” என்று தொல் காப்பியம்‌ எழுத்ததிகாரத்தில்‌ எழுதும்‌ சமயத்தில்‌ சொல்லியிருக்கிறார்‌ நச்‌சினார்க்கினியர்‌. அதற்குப்‌ பலமாக முன்னரே கூறிய படி. அக்ஷரங்களுக்குள்‌ அகாரமாகின்றேன்‌ யான்‌ என்து கண்ணன்‌ சொல்வதை எடுத்துக்‌ காட்டியிருக்கிறார்‌.

அதே 10 வது அத்தியாயத்தில்‌ 20 வது சுலோகத்தில்‌.
“ஸமஸ்த பூதங்களின்‌ ஹிருதயத்தில்‌ இருக்கிற ஆத்மா நானே… பூதங்களுக்கு ஆதியும்‌ ஸ்திதியும்‌ அந்தமும்‌
நானே
(அஹம்‌ – ஆத்மா .மாலாகேச – ஸர்வ வஷதா- சயஸ்யித : | அஹம்‌-ஆதிஸ்௪ -ம;ப* பஞ்ச- வுடு கானாம்‌-
அந்த – ஏவ- ௪)” என்று கண்ணன்‌ கூறி 89 வது சுலோ:கத்தில்‌
“ சகலபூதங்களுக்கும்‌ காரணம்‌ அல்லது விதை
எதுவோ ௮து நான்‌. ஜங்கமம்‌, ஸ்தாவரம்‌, ஆகிய என்னையன்றி வேறில்லை;
யச்சாமி.-ஸர்வ -வ-தானாம்‌- ஜம்‌ – தத்‌- அஹம்‌- அர்ஜுன |. அஸ்தி- வினா -யத்‌ – ஸ்யாத்‌-மயா- ஹஷதம்‌- சாசாம்‌?” என்று சொல்லி முடிக்கிறார்‌. –
ஆகையினால்‌ கண்‌னன்‌ அதிஷ்டானம் பற்றித்‌ தன்னைச்‌ சராசரப் பொருள்‌களுக்கு முதற்காரண்மாகக்‌ கூறினார்‌ என்பது உறுதியாகிறது,
ஆகையால்‌ நச்சினார்க்கு இனியார் அகரம்‌ மற்ற
எமுத்‌துக்களில்‌ கலந்து நிற்றலுக்குக்‌ கடவுள்‌ மற்‌ற ௪ராசரங்களில்‌ கலந்து நிற்பதை உவமையாக எடுத்தது மூதற்காரணம் பற்றியே,

2… கற்றதனாலாய பயனென்கொல்‌ வாலறிவனற்றாள்‌ தொழா ரெனின்‌.

(உலகு) உலகத்தார்‌,
வாலறிவனற்றாள்‌ சுத்தமான அறிவினையுடைய கடவுளின்‌ திருவடிகளை,
‘தொழார்‌ எனின்‌ -வணங்காம லிருந்தால்‌, (அவர்‌)
(எழுத்து – நூல்களை) கற்‌றதனால்‌ – படித்ததால்‌, ஆயஆகிய, பயன்‌ பலன்‌, என்‌ கொல்‌ = என்னமோ? (ஒன்றுமில்லை என்பது கருத்து),

உலகு, எழுத்து என்பன முதற் குறளிலிருக்து எடுத்‌துக் கொள்ளப்பட்டன. வட மொழிநூலாசிரியர்‌அனுவர்த்தித்தன. என்ற சொல்லை வழங்குமிடத்து தமிழில் அதிகரித்தன. என்ற சொல்லை வழங்குகிறார்கள்

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -இத்தையே ஆதிபகவன் -வாலறிவன்
ஸாஸ்‌திரங்களைக்‌ சுற்றதின்‌ பயன்‌ கடவுளின்‌ சரணங்களைத்‌ தொழுது மறு ஜன்ம மில்லாமல்‌ செய்து கொள்வது தான்‌ எனப்‌ பொருள்‌ படும்படி. இக் குறளின்‌ கருத்தைப்‌ பரிமேலழகர்‌ வெளியிட்டிருக்‌கிறார்‌. இக் கருத்தையே ஸ்ரீபாகவத்தில்‌ 8 வது ஸ்கந்தத்தில்‌ விதுர மைத்ரேய ஸம்வாத த்தில்‌
“ஸ்ருதஸ்ய-பும்ஸாம்‌-ஸுஈசிரஸ்ரவஸ்ய – நநு -அஞ்‌ஜஐஸா ஸூரிவி:-ஈவிதோ -ர்த்த: |யத்‌- தத்‌ – குணாதுச்ரவணம்‌ – முகுக்‌, – பாஉாரவிக்‌உம்‌ – ஹ்ரு,யேஷு-ஈயேஷாம்‌?’ என்னும்‌ (8-18-4) ஸ்லோகத்தில்‌ சொல்‌லப் பட்டி ருக்கிறது.

3-மலர்மிசை யேகினான்‌ மாணடி சேர்ந்தார்‌
நிலமிசை நீடு வாழ்வார்‌.

மலர் மிசை – (உள்ளமாகிய) தாமரை மலரின்‌
கண்‌,ஏகினான்‌ – (அன்பால்‌ நினைப்பவர்‌ நினைத்த வடிவோடு விரைந்து) சென்றடைந்தவனுடைய,
மாணடி.– மாட்‌சிமைப்பட்ட அடிகளை ,
நீடு _ வெகு காலம்‌, | வாழ்வார்‌ இருப்பார்‌.

காரிய பிரமம்‌. எனப்படும்‌ _ஸகுணபரமாத்மாவை.உபாஸனை செய்வோர்‌ அக் காரியப் பிரம்ம லோகத்தில்‌ மகாப் பிரளய பர்யந்தம்‌ இருப்பர்‌. என்ற வேதாந்தக்‌ கொள்கையை இக் குறள்‌ கூறுகிறது

மலர்மிசை என்னும்‌ சொல்‌ கரரியப் பிரம்மமாகும்‌; திரிமூர்‌த்திகளில்‌ சேர்ந்த திருமாலைத்‌ திக்கும்‌ “மனன: – மலமற – மலர்‌ மிசை யெழுதரு – மனனுணர்‌ – வளவி லன்‌”’ என்னும்‌ நம்மாழ்வார்‌ (திருவாய்மொழி 1-1. 2) பாசுரத்தில்‌ காணப்படுகிறது.” இதை அனுசரித்து மலர்‌!மிசையேகினான்‌ என்னும்‌ பதத்‌திற்குத்‌ திருமாலெனப்‌பொருள்‌ கொள்ளலாம்‌. அவ்விதம்‌ கொள்ளின்‌ இவ்வாசிரியர்‌ மேலே கடவுளைக்‌ குறிக்குமிடத்‌து, –தாமரைக் கண்ணான்‌, உலகளந்தான்‌” என்னும்‌ பதங்களை ப்ரயோகிப்பதும்‌ பொருந்தும்‌.

ஸ்ரீ பாகவதத்திலும்‌ முதல்‌ ஸ்கந்தத்தில்‌ நாரதர்‌ தன் வரலாற்றைக்‌ கூறுமிடத்து,
“ஹட த. இவ-மே-சீஷ்‌ ரம்‌- உர்றானம்‌-யா தி. செதஹி’?(1-6-584) என்று சொல்லப்பட்டிருக்கிறது  இதன்‌ பொருள்‌ :-விளிக்கப்படும்‌ ஒருவன்‌ விரைந்து. செல்வது
போல்‌ பகவான்‌ உள்ளத்தின் கண்‌ (உள்ளத் தாமரையின்‌ கண்‌) தர்பனம்‌ கொடுக்க விசைந்து செல்லுகிறான்‌-என்‌றவாறு. இக்குறளிலுள்ள மலர்‌ மிசை யேகினான்‌ என்‌னும்‌ சொற்றொடருக்கு அன்பால்‌ நினைவாரது உள்ளக்‌ கமலத்தின்‌ கண்‌ அவர்‌ நினைத்த வடிவோடு விரைந்து சென்றவன்‌”? என்று பரிமேலழகர்‌ உரை செய்தது மேற்‌ கூறப்பட்ட பாகவத ஸ்லோகத்தின்‌ கருத்தை அனுசரித்திருக்கிறது
மலர்‌ என்பதற்குத்‌. தாமரை யோன்ற ஹிருதயம்‌! என்றும்‌ பொருள்‌ கூறுவர்‌.
மலர்மிசை என்பதை பூமேல்‌ நடந்தான் என்‌பதோர்‌ பெயர் பற்றிப்‌ பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும்‌ உளர்‌?! என்று பரிமேலழகர்‌ கூறியிருக்கிறார்‌.
பிறிதொரு கடவுள்‌ ! என்பதால்‌ ஜைனக் கடவுளாம்‌ அருகனையே அவர்‌ ‘குறிப்ப்பார் என்பர் ,
ஆனால்‌ திருவள்ளுவர்‌ திருக் குறள் முழுவதுமே வேதக் கொள்கையையே தழுவி வருவதாலும்‌,
அருகன்‌. என்னும்‌ மூன்று இடங்களில்‌ ஈசனைக்‌ குறிக்கப்பட்டிருப்பதாகும் -அச்சொல்‌
வேதக்கடவளாம்‌ சிவனையே குறிப்பகாகக் கொள்ளலாம்‌, மற்றும்‌ அக்காலத்தில்‌ அநாதியாய்‌ உள்ள வேதத்திலுள்ள சிவனையே ஜைனர்கள்‌ அருகக் கடவுளாகத்‌
தொழுது வந்தார்கள்‌ என்பதும் ஜைன மதத்திலும் சொல்வர் ,
ஜைன சமயத்தினராகிய முனைப்பாடியார்‌ என்பவரால்‌ இயற்றப்பட அற நெறிச் சாரம்‌ என்னும்‌ நூலில்‌ அவன்கொல்‌.இவன்‌ கொல்‌-என்று ஐயப்படாதே.வன்‌ கண்ணே செய்ம்மின்கன்‌ –
சரதை இவன்றானும்‌ – நின்று கால் சீக்கும்‌-ரிழறிகமும்‌ -பிண்டிக்‌கும்‌ – வென்றிச்‌ சீர்முக்‌ குடையான்‌ வேந்து”என்னும்‌ 219-வ௮ செய்யுளில்‌::
சிவன்‌ பாலே சிந்தையை நிறுத்தங்கள்‌, அச்சிவனும்‌ அசோக மரத்தின்‌ பக்கம் நின்று குடைகளுடையவனை அருகனே யாவான்‌” என்று சொல்லியிருக்கிறார்‌, .

1800. வருஷங்‌களுக்கு முன்‌ சக்கரவர்த்தியாயிருந்த -ப்ரீஹர்ஷர்‌”?என்ற மகாகவி மூன்றுநாடகங்களியற்றியிருக்கிறார்‌.
அவற்றுள்‌ ரத்னாவளி என்னும்‌ நாடகத்தில ஆரம்பத்தில்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ சிவனையும்‌, பார்வதியையும்‌, விஷ்ணுவையும்‌, நாகாநந்தம்‌ என்னும்‌ நாடகத்தில்‌ ஜைனக்‌கடவுளையும்‌ துதித்‌திருக்கிறார்‌.
திருவள்ளுவரும்‌ அக்காலத்தவரரதலால்‌ வேதக்‌ கொள்கையை அனுசரித்தே கடவுளை இம் மூன்று முறைகளிலும்‌ அநு சந்தித்து இருக்கக்‌ கூடும்‌,

4, வேண்டுதல்‌ வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்‌கி
யாண்டு மிடும்பை யில.
வேண்டுதல்‌ வேண்டாமையிலான்‌ அடி சேர்ந்தார்க்கு-விருப்பம்‌, வெறுப்பு அற்‌று கடவுளின்‌ அடிகளை இடைவிடாது தியானிப்பவற்கு,
யாண்டும்‌-ஒரு பொழுதும்‌,
இடும்பை –பிறவித்‌ துன்பங்கள்‌,
இல –இல்லை.

இல என்பது பன்மையாதலின்‌ இடும்பை என்பது பன்மைப் பெயராகும்‌.
“சரீரம் அற்றவரை ப்ரியம்‌, அப்ரியம்‌ இவ்விரண்டும்‌ அணுகா” என்னும்‌ சாந்தோக்கிய உபநிஷத்‌ (8-12-1) தொடரும்‌,
“என்னை யடைந்த மகாத்‌மாக்கள்‌ துக்கத்‌திற்கு இருப்பிடமாயும்‌ சாஸ்வத மற்றதாயும்‌ உள்ள மறுபிறப்பை யடையார்கள்‌”
(மாம்‌. உபேத்ய-புனர்‌ – ஜன்ம-உ௱£₹வாலயம்‌ – அஸாஸ்வதம்‌-ந -ஆப்‌நு வந்தி- மஹாத்மான:- ஸம்ஹிதியிம்‌ – பரமாம்‌ _ மதா-என்றும்‌ அர்த்தமுள்ள பகவத்தீதை (8-15) தொடரும்
இங்கு குறிக்கத்‌ தக்கன.

5. பொறி வாயி லைந்தவித்தான்‌ பொய்தீரொழுக்க
நெறி நின்றார்‌ நீடு வாழ்‌வார்‌.

பொறி- வாயில்‌ – ஐந்து – அவித்தான்‌- பொய்‌ தீர்‌ -‘ஒழுக்ககெறி – நின்றார்‌ –இந்திரியங்களின்‌ மூலம்‌ நேரும்‌
ஐவகைப் பொருள்களின்‌ நுகர்ச்சியைப்‌ போக்கிய கட.வுளின்‌ உண்மையான தர்ம மார்ககத்தில்‌ அசைவற்று நிற்‌பவர்‌,
நீடு வாழ்வார்‌ முக்‌தி யடைவர்‌.
மூன்றாம்‌ குறளில்‌ நிலமிசை என ஆரியர்‌ கூறியிருத்‌தலானும்‌, இக் குறளில்‌ அச் சொல்லைக்‌ கூறாமையாலும்‌,
அக் குறள்‌ காரியப் பிரம்ம லோகத்தைக்‌ குறிக்கின்றது
என்றும்‌,
இக் குறள்‌ முக்‌தியையே குறிக்கின்றது என்றும்‌. கொள்ள வேண்டும்‌.
ஸ்ரீ சங்கராசாரியசுவாமிகள் பிருஹதாரண்யகோபனிஷத்‌4 வது அத்தியாய பாஷ்யத்தில்‌ “ப்ரஹ்ம லோக:” என்பதற்கு “ப்ரம்மணோ லோக: (ப்ரம்மாவினுடைய லோகம்‌)”” என்றும்‌ “ப்ரஷஹ்மைவ லோக; (ப்ரம்மமாகிய லோகம்‌)” என்றும்‌ இருவகையாக விரி கூறியிருத்தல்‌ நோக்கத் தக்கது.
“ப்‌. ரஹ்மைவ லோக: என்பதை ஒட்டியே சிறப்பென்னும்‌ செம்‌ பொருள்‌ என இவ்வாசிரியர்‌ பின்னர்‌ (69 ம்‌ ‘ குறள்‌) கூறுகின்றார்‌:
ப்ரஹ்மைவ லோக- என்பது ௮த்வைதக் கொள்கையேயாகும்‌.
Ar Bus ற்‌ கையவா நீப்பின்‌”,ஆரா வியற்கை யவா நீப்பின் என்ற (71 வது) குறளில்‌ கூறப்பட்ட ஜீவன் முக்தியும்‌:
அத்வைதக் கொள்கையே.
“எப் பொருள்‌ எத்தன்மைத் தாயினும்‌’” என (66 வது )குறளில்‌ கூறப்படும்‌ அய” யாஸமும்‌ அத்வைதக் கொள்கையே
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம்‌, மாறுபாடு, ரஸம்‌, காந்தம் இவை எப்போதும்‌ இல்‌லாதவனும்‌, ஆதி, அந்தம்‌ இவை அற்‌றவனுமான கடவுளைத் தியானிப்பவர்‌ யமனிடமிருந்து விடப்படுகின்‌ றனர்‌ ””என்ற கடோபனிஷத்‌ (1-3-15) தொடரும்‌
“அழந்மம்‌- அரஸஸ்பர்பாம்‌-அருப்தம்‌-அபரி.ல ரஹம்‌.! அரூபம்‌-அர.ஹி ஜ்னோேயம்‌-5 ருஷ்ட்லா – ஆத்மானம்‌ – விமுச்யதே” என்‌னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 20 வது அத்யாயம்‌-10 வது ஸ்லோகமும்‌ ஒப்பிடத்தக்கன.

6. பிறவிப்‌ பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்‌.
இறைவனடி. கடவுளின்‌ திருவடிகளை,
(சேர்ந்தார்‌- இடைவிடாது தியானிப்பவர்‌),
பிறவிப் பெருங்கடல்‌–பிறவி யாகிய பெருங்கடலை,
நீந்துவர்‌ – தாண்டுவர்‌ ;
சேராதார்‌– தியானிக்காதவர்‌,
(அதனை) நீந்தார்‌- தாண்ட மாட்டார்‌.
சேர்ந்தார்‌ என்பது ப்ரகரணத்தால்‌ கிடைக்கின்‌றது
விடுபட்டவர்களாகி ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறார்களோ”! என்கிற பொருளுள்ள,
“யம்‌ – த்ருஷ்ட்வா யதாய தாத -ந ஸோ சந்தி – மத-ஜ்வார: ஜன்ம-
ம்ருத்யு – ஸ்யாத்‌-முக்தா :- தீர்ணா:-ஸம்ஸார- ஸாகரம்‌?”
என்னும்‌ மஹாபாரதம்‌ அனுஸாஸனபர்வம்‌ 167 அத்யாயம் 42 வது சுலோகம்‌ கூறும்‌.
அதனையே ஸம்ஸார . -ஸாகாம்‌ – கோரம்‌- தரிஷ்யக்தி – ஸூ ஸ் தரம் ” என்‌னும்‌ மகாபாரதம்‌ அச்வமேத பர்வம்‌ 19 வது அத்‌யாயம்‌ 88 வது சுலோகமும்‌ கூறும்‌,

7. வானின்‌று உலகம்‌ வழங்கி வருதலான்‌
தான் அமிழ்த மென்றுணரற்‌ பாற்று.
வானின்று-மழை காரணமாக,
உலகம்‌ –உலகத்தில் உள்ள பொருள்கள்‌,
வழங்கி வருதலான்தான்‌ -ஜீவித்துவருதலாலேயே, அமிழ்தம்‌- அம்ருதம்‌, என்று,
உணரற்‌ பாற்று -உணரத் தக்கது

நீரை வடமொழியில்‌ அம்ருதம்‌ என்ற சொல்லால்‌ வழங்குகின்றனர்‌. அச்சொல்லிற்கு மரணமற்றது என்‌பது காரணப் பொருள்‌.
மழை உலகத்துப்பொருளின்‌ மரணமின்மைக்குக்‌ காரணமாய்‌ இருத்தலின்‌, அதனை அச் சொல்லால்‌ குறித்‌தனர்‌ என இவ்வாசிரியர்‌ கருதுகின்றார்
வடமொழி அம்ர்தம்‌ என்ற சொல்‌ -.தமிழில்‌ அமிழ்தம்‌, அமிழ்து, அமிர்தம்‌, அமிர்து, அமுதம்‌ அமுது என வழங்குகிறது.
வானின்று என்றவிடத்து நின்று என்பது ஏதுப்‌ பொருளில்‌ வந்த ஐந்தாம்‌ வேற்றுமைச் சொல்லுருபு எனக்‌ கொள்ளல்‌ தகும்‌.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்‌
வறக்குமேல்‌ வானோர்க்கு மீண்டு,
வானம்‌ – மழை,
வறக்குமேல்‌ – பெய்யாவிடின்‌
ஈண்டு –இப்பூவுலகிலிருந்து
வானோர்க்கு–தேவர்க்கு,
சிறப்பொடு – சிறப்பாக
பூசனை -பூசனம்
செல்லாது -நடவாது
வானோர்க்குப்‌ பூசனையாவது யாகம்‌, ஹோமம்‌ முதலியன, வானோர் எனபதிலுளள, வான்‌” என்பது ஸ்வர்க்கதைக் குறிக்கும்‌.
ஸ்ரீ கீதை 11-12-13 ஸ்லோகங்களில்
வானவர்‌ மானிடரை மழையாலும்‌, மானிடர்‌ வானவரை யஜ்ஞத்தாலும்‌ பரஸ்‌பரம்‌ .’உபசரித்துக்‌ கொள்ளுவதால்‌ இருவரும்‌ நிரந்‌தரமான நன்மையை அடைவார்கள்‌ எனப்‌ பொருள்‌ படக் கூறியிருக்கிறது,

தேவாந் பாவய தாநேந தே தேவா பாவ யந்து வ–
பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷

இஷ்டாந் போகாந் ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா–
தைர் தத்தாந் அப்ரதாயை யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷

யஜ்ஞ ஸிஷ்டாஸிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த் யாத்ம காரணாத்—৷৷3.13৷৷

9, தானம்‌ தவமிரண்டுக்‌ தங்கா வியனுலகம்‌
வானம்‌ வழங்கா தெனின்‌.
வானம்‌ -மழை,
வழங்காது எனின்‌ -பெய்யாவிடின்‌,
வியனுலகம்‌ அகன்ற உலகத்தின்‌ கண்‌,
தானம்‌, தவம்‌ -தானமும் தபஸ்‌ஸும் ,- இரண்டும்‌,
தங்கா -உண்டாகாது
இக்குறளினின்று வெளியாகும்‌ நாயனார் கருத்தாவது :–வானின்று பெய்யும்‌ மழையின்‌. உத்தேசம்‌ மக்கள்
உயிர்‌ பிழைத்திருப்பது. முக்கியமல்ல என்பதே;
மக்கள்‌ அவரவர் அதிகரரத்திற்குத்‌ தகுந்தபடி, தானமோ,
தவமோ செய்யார் எனின்‌. அவர்கள்‌ உயிர்‌ பிழைத்திருப்‌பது வீணே.
இக்கருத்தையே த வா-வம்ஷஷி-நிவேஷ்‌ உ௨வ்யெள-சண்டே வதய” வா-திரு ஷாம்‌-ஸ்பிலாம்‌-பூனவரு்‌ தம்‌ அஉரதாரம்‌-உரிக ரம்ச அதபஸ்வினம்‌’? என்னும்‌ மஹா
பாரதம்‌, உச்யோக பர்வம்‌-33 அத்யாயம்‌ 67 . சுலோகம்‌ கூறுகிறது,
அந்த ஸ்லோகத்தில்‌ இப் பொருள்‌ சற்று கடுமையாகவே கூறப்பட்டிருக்கிறது,
தானம்‌ செய்யாத பணக்காரனையும்‌ தவம்‌ செய்யாத தரித்திரனையும்‌ கழுத்தில்‌ கல்லைக் கட்டி. சமுத்‌திரத்‌தில்‌ விட்டு விடலாம்‌ என்று கூறுகிறது.
இதனால ஈகை இல்லாத பணக்காரனும்‌ தவம்‌ செய்யாத ஏழையும்‌ பூதேவிக்கு பாரமே என்னும்‌ தத்துவம்‌ குறிப்பிடப்படுகிறது –
அவ்‌விதம்‌ பாரமாயிருப்பவர்கள்‌ உலகில்‌ அதிகமாகும்‌ பொழுது தான்‌ யுத்தங்கள்‌, கலஹங்கள்‌, கொள்ளை நோய்‌கள்‌ முதலியவைகளின்‌ மூலம்‌ பூ பாரம்‌ குறைக்கப்படுகிறது
ஆகையால்‌ அவைகளுக்கெல்லாம்‌ மருந்து தானமும்‌ தவமுமே.

10: இருமை வகை தெரிர்‌ தீண்டறம்‌ பூண்டார்‌
பெருமை பிறங்குற்‌ றுலகு.
இருமை வகை – இம்மை, மறுமை இவ்விரண்டின்‌ தன்‌மையை,
தெரிந்து -ஆராய்ந்து பார்த்து,
ஈண்டு இவ்‌ வுலகத்தில்‌,
௮றம்‌ பூண்டார்‌ பெருமை –துறவறத்தைக்‌ கொண்டவரின்‌ பெருமை,
உலகு. உலகத்தில்‌,
பிறங்‌கிற்று சிறப்புள்ளது ஆகும்‌,
இவ்வதிகாரம்‌ நீத்தாரைப் பற்றிக்‌ கூறுதலான்‌ ஈண்டு அறம்‌ என்பது துறவறத்தைக்‌ குறிக்கும்
இருமை வகை என்பதற்கு “பிறப்பு வீடு என்னும்‌ இரண்டினது கூறுபாடுகளை” என்று பொருள்‌ கூறுகிறார்‌ பரிமேலழகர்‌.

11-உரனென்னுக்‌ தோட்டியா னோரைந்துங்‌-காப்‌பான்
வரனென்னும்‌ வைப்பிற்கோர்‌ வித்து.
உரன்‌- மனத் திண்மை,
என்னும்‌ -என்ற,
தோட்டியால் -சம்மட்டியால்
ஓர்‌ ஐக்தும்‌ -ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களையும்‌,
காப்பான்‌ -கெட்ட வழியிற்‌ செல்லாது காப்பவன்‌,
வரன்‌ எல்லாவற்றிற்கும்‌ மிகுந்தது
என்‌னும்‌ -எனச் சொல்லப்படும்‌,
வைப்பிற்கு – நிலைக்கு,
ஓர்‌வித்தாம்‌– ஒரு விதை ஆவான்‌..
இந்திரியங்கள்‌ எவரையும்‌ இழுத்துவிட ஆற்றல்
உள்ளமையால்‌ அவை ஒப்பற்றன எனக்‌ கூறப்பட்டது,
“ஐந்து என்பது ஐந்து ஞானேந்திரியங்களை குறிக்‌கும்‌,
உரனைத்‌ தோட்டிக்கு உவமித்தலான்‌, இந்திரி.ங்களை ஐந்து யானைகளுக்கு உவமிக்கப்பட்டதாகக்‌ கொள்ளவேண்டும்‌””,
“ப்ரஹ்ம வித்்‌ பரத்தை ௮டைகிறான்‌-என்ற தைத்திரீய உபனிஷத்‌ (2, 1) தொடரில்‌ பரம்‌ என்பது மோக்ஷத்தைக்‌ குறித்தலின்‌ வரன்‌?” என்பதற்கு மோக்ஷம்‌ என்ற பொருள்‌ கூறப்பட்டது,

மனமானது இந்திரியங்களின்‌ வழியாய்‌ எப்போதும்‌
“வெளி முகமாவே சென்று கொண்டிருப்பதினால்‌ தான்‌
தன்னுள்ளே ஜ்வலிக்கும்‌ ௮கண்ட. ஆனந்த ப்ரகாஸத்தைக்‌ காணாது வீணாகின்‌றன .
இப் பொ ருள்‌ கடோபனிஷத்தில்‌ (2-1.1) கூறப்பட்டிருக்கிறது
இக்குறளில்‌ இந்திரியங்களை அடக்குவது வித்து என்று கூறப்படுவதால்‌ இதற்கு அடுத்தபடியான ஸகுண
ஈஸ்வர த்யானம்‌ முளை எனவும்‌, அவர்‌ அருளால்‌ ஏற் படும்‌ ஆத்மஜ்ஞானம்‌ புஷ்பம்‌ எனவும்‌, வரன்‌, என்னும்‌-
மோஷமானது’ பிறவி என்னும்‌ விருக்ஷத்தின்‌ ‘பலனாம்‌:
பழமாகவும்‌ பெறப்படுகிறது. :
இந்த்ரியங்களைத் தம் தம் விஷயங்களில் இருந்து மனத்‌
தால்‌ ஒருவன்‌ திருப்பனால்‌ ஆத்மாவில்‌ ஜ்வலிக்கும்
ப்ரம்மத்தைப்‌ பார்க்கிறான்
இந்திரியாணி இந்த்ரியார்த்தே -மனஸர-விநி”வர்தயேத் தத; பஸ்யதி- தத்‌ – ப்ரஹ்ம-ஜ்வலத்‌-ஆத்‌மனி – ஸம்ஸ்ஸிதம்‌’? என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசன பர்வம்‌ 167 வது அத்தியாயம்‌ 31, 37-ம்‌ ஸ்லோகங்கள்‌ கூறும்‌.

1. ஐந்து வைத்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங்‌ கரி,
ஐந்தவித்தான்‌ –ஐந்து இந்திரியங்களையும்‌ அடக்கிய துறவியின்‌,
ஆற்றல்‌ -சக்‌திக்கு,
அகல் விசும்‌புளார்‌ கோமான்‌ -௮கன்ற ஸ்வர்க்கத்தில்‌ உள்ளோர்க்கு அரசனாகிய இந்திரனே,
கரி – சாக்ஷி,
சாலும்‌ – பொருந்தும்‌.
ஈண்டு ஐந்தவித்தான்‌ என்று
இந்திரனை ஆயிரங்கண்ணன்‌ ஆக்கிய கெளதமரையும்‌,
இந்திரப்‌ பட்டம்‌ எய்திய நகுஷனைப்‌ பாம்பாக்கிய அகஸ்தியரையும்‌,
ஸோம யாகத்தில்‌ ஸோமத்தில்‌ ஒருபாகத்தை ௮ச்‌வினி தேவதைகளுக்கு இந்திரனைக்‌ கொடுக்கச்‌ செய்த ச்யவனரையும்‌,
மருத்தன்‌ யாகத்தில்‌ இநதிரனை வரச்‌
செய்த சம்வர்த்தரையும்‌,
பன்னிரு ஆண்டுகளில்‌ தான்‌ யாகம்‌ செய்ய அப்போது மழைபெய்யாமல்‌ தடுத்த இநதிரனை மழை பெய்யும்படி. செய்வித்த அகஸ்‌தியரையும்‌ குறிக்கும்‌.
இக் கதைகளை மகாபராதம்‌ அனுஸாஸன பர்வம்‌, அச்வமேத பர்வம்‌ முதவியவனிதில்‌ காண்க.
மூவுலகையும்‌ ஆளும்‌ ஐஸ்வரிய முடையோனுடைய
ஆற்‌றலைவிட பஞ்சேந்திரியங்களையும்‌ அடக்கிய தவசியின்‌ ஆற்றல்‌ பெரிது என்னும்‌ உண்மை இக்குறளினின்றும்‌ பெறப்படுகிறது,
13. சிறப்பீனுஞ்‌ செல்வமு மீனு மறத்தினாங்கு
ஆக்க மெவனோ வயிர்க்கு
உயிர்க்கு -மனிதர்க்‌கு
சிறப்பு-மோ க்ஷத்தை,
ஈனும் -தருவதும்
செல்வமும் -இம்மைச் செல்வமும் மறுமைச் செல்வமுமாம் ஸ்வர்க்காதி இன்பங்களையும்‌,
ஈனும்‌ – தருவதுமான,
அறத்தின்‌ – தருமத்தைக்‌ காட்டி லும்‌,
ஓங்கு-மேலான,
ஆக்கம்‌ -மேன்மையைத்‌ தருவது
எவன்‌ யாது?
சிறப்பு, செல்வம்‌ என்பன கடோபநிஷத்தில்‌ கூறப்‌படும்‌” சிரேயஸ்‌, ப்ரேயஸ்‌ 1-2-2) என்பவற்றைக்‌ குறிக்கும்‌.
ஸ்வர்க்காதி சுகத்தைத்‌ தரும்‌ ப்ரவ்ருத்தி தர்மமும்‌
மோக் ஷசுகத்தைக்‌ கொடுக்கும்‌ “நிவ்ருத்தி தர்மம்‌
ஆக தர்ம மார்க்கம்‌ இரண்டுவிதமென்று சொல்லப்படும்‌
எனப்‌ பொருள் கொண்ட
“ஸு வாவ” யுயிகம்‌ சைவ நைஸ்ரேயஹிகமேவ – ௪. ப்ரவ்ருத்தம்‌ – ௪- நிவ்ருத்‌தம்‌ – ௪ – த்விவிதம்‌ – கர்மவைஷிகம்‌ என்னும்‌. மனு ஸ்ம்ருதி -19வ.து அத்யாயம்‌ 88-வது ஸ்லோகமும்‌ ஈண்டு குறிப்பிடத்‌ தக்கது .
14, அன்றறிவா மென்னாதறஞ்‌ செய்க மற்றது
பொன்றுங்காற்‌ பொன்றாத் துணை.
(உயிர்‌ மனிதர்‌), அன்று கிழத் தனத்தில்‌,
அறம்‌-தர்மத்தை,
அறிவாம்‌ – செய்வோம்‌,
என்னாது – என்று நினையாமல்‌, (தருமத்தை),
செய்க-(இப்போதே) செய்‌தல் வேண்டும்‌.
அது-அத் தருமத்தின்‌ பயன்‌,
பொன்றுங்‌ கால்‌ -சாகும் பொழுது,
(அவர்க்கு) பொன்றாத்‌. துணை –அழிவில்லாத துணை,(ஆகும்‌).
மற்று என்பது அசைநிலை,
பர லோகத்தில்‌ மனிதர்க்குச்‌ சகாயமாமிருப்பதது தர்மமே என
தர்ம – ஏகோ – மனுஷ்யாணாம்‌-ஸஹாய:-பாரலெளகிக:” என்னும்‌ மகாபரரதம்‌ அனுசாஸநிக பர்வம்‌ 178-வது அத்யாயம்‌ 16-வது ஸ்லோகம்‌ கூறும்‌.
ஸ்தூல சரீரத்தை விட்டு ஜீவன்‌ செல்லும்‌ போது அவனுடைய நற் செயல்‌ தீச் செயல்‌ இவற்றின்‌ பயனே அவனுடன்‌ செல்லுமாகையாலும்‌, எப்போது
தனக்கு மரணம்‌ நேரிடும்‌ என்று அறியப்படாமையாலும்‌” அப்போதைக் கப்போதே ஒவ்வொருவரும்‌ தர்மச் செயல்களைச்‌ செய்யவேண்டும்‌ என்பது கருத்து
கல்வியையும்‌ பொருளையும்‌ சம்பாதிக்கும்‌’ விஷயத்‌தில்‌ தான்‌ சரஞ்ஜீவி என்‌ற எண்ணத்தைக்‌ கொண்டே.
அவ்விரண்டையும்‌ சம்பாதித்துக்‌ கொள்ள வேண்டும்‌,
தர்மம்‌ செய்யும்போதோ யமன்‌ தன்னைப்‌ பிடித்‌து விட்‌டான்‌ என்து நினைத்துக் கொண்டு உடனே செய்ய வேண்‌டும்‌ எனக்‌ கூறும்‌
“அஜராமரவத்‌ – ப்ராஜ்ஞ:-.விதியாம்‌- அர்பூம்‌-௪ – ஸாயயேத்‌ – க்ருஹீ.த-இவ- கேஸேஷு ம்ருத்யுநா யர்மம் ஆசரேத் என்னும்‌ ச்லோகம்‌ இதன்‌ பொருளையே கூறுகிறது.
ஸ்வ கார்யம்‌ அதீய-குர்வீத-பூர்வ.௮ஹ்நே-ச-௮பராஹ்நிகம்‌
ந-ஹி-ப்ரதிக்ஷதே – ம்ருத்யு-க்ருதம்‌-வா-௮ஸ்ய.ந .வா-அக்ருதம்‌,
அய.ஏவ.குரு-யத்‌-ஸரேய: மா.ஃத்வாம்‌ -கால:.அத்யகா-மஹான்‌ உ
க:-ஹி.ஜாநாதி-கஸ்ய-அதீய.ம்ருத்யு:-காலே;-ஷவிஷ்யதி,
அக்ருதேஷு-ஏவ-கார்யேஷ-ம்ருத்யு – வை.சம்ப்‌ரகர்ஷதி,
யுவா-ஏ௫-பர்மசீல:-ஸ்யாத்‌-அநி மித்தம்‌. ஹி-ஜீவிதம்‌ !-சாந்தி – 283-14 16.
செளமாரே..ஆசரேத்‌ ப்ராஜ்ஞூ:-யூர்மான்‌. மா மவதான்‌.. இஹ துர்லபம்‌.மானுஷம்‌ – ஜன்ம-தத்‌.அபி-௮,ப* ருவம்‌-அர்உ௦-ஸ்ரீமத்‌ பாகவதம்‌ – 7-வது ஸ்கந்தம்‌.
15. அறத்தா ரிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானெ டூர்ந்தா னிடை.
அறத்தாறு – தர்மத்தின்‌ பிர யோஜனம்‌,
இதுவெனே வேண்டா இது என்று கூற வேண்டாம்‌,
அது, சிவிகை-பல்லக்கை,
பொறுத்தானோடு தூக்குகின்றவனோடு
ஊர்கந் தானிடை- தூக்கப்படுகின்‌றவனிடத்தில்‌ (காணப்‌ படும்‌).
பல்லக்குக்குள்‌ இருக்கின்‌றவன்‌ தர்மத்தைச்‌ செய்‌தவன்‌ என்பதும்‌ அதனைத்‌ தூக்குகின்றவர்கள்‌ தர்மத்‌தைச்‌ செய்யாதவர்‌ என்பதும்‌ வெளிப்படையாக அறியப்படும்‌. “சிலர்‌ சிபிகையைத்‌ தூக்குகின்றனர்‌, இலர்‌
அதனுள்‌ இருக்கின்‌றனர்‌ * என
வஹந்தி சிவிகாம் அன்யே-யாந்தி அன்யே-சிவிகாஹ தா:” என்று மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 331-வ.து அத்யாயம்‌ 42-வது ஸ்லோகம்‌ கூறும்‌: உலகத்தில்‌ நல்வினை தீவினை இருக்கும் வரை, அதாவது, உலகம்‌ இருக்கும் வரை, மேல் கண்ட. வினைகளின்‌ பயனாக மேல்‌ கீழ்‌ நிலைகள்‌ எம்முறையிலாவது இருந்தே தீரும்‌. ஞானிக்கு இருவினைகளும்‌ அழிந்த ஞான்று பொய்யான இவ்வுலகமும்‌ அழியும்‌, உண்மையான ஆன்மா வெளிப்படும்‌.
16. அறத்தான்‌ வருவதே இன்பமற்‌ றெல்லாம்‌
புறத்த புகழு மில.
அறத்தான்‌ – தர்மத்தால்‌,
வருவதே -பெறப்படுவதே ,
இன்பம்‌. இன்பம்‌ (ஆகும்‌).
மற்றெல்லாம்‌-வேறு எல்லாம்‌,
(அதன்‌)புறத்த- இன்பத்தைத்‌ தருவனவல்ல,
புகழும்‌ – கீர்த்தியையும்‌,
இல – உடையன வல்ல.
இன்பத்தையும்‌ புகழையும்‌ கொடுப்பது தர்மச் செயலே யன்றி வேறில்லை என்பது கருத்து.
பாவத்தான்‌ வரும்‌ பிறனில் விழைவு முதலாயின
அக்கணத்துள்‌ இன்பமாய்த்‌ தோன்றுமாயினும்‌ பின்‌
துன்பமாய்‌ விளைதலின்‌ “புறத்த? என்றார்‌ ” என்கிறார்‌ பரிமேலழகர்‌.
பகவத்கீதையில்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானும்‌
நான்‌ மக்களிடை தர்மத்திற்கு விரோதமில்லாத இன்பமாக அமர்ந்திருக்கிறேன்‌

பலம் பலவதாமஸ்மி காம ராக விவர்ஜிதம்.–
தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப৷৷7.11৷৷-பலவதாம் ச அஹம் –பாட பேதம்

பரதர்ஷப–பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே
அஹம் -நான்
பலவதாம் -பலமுடையவர்களுடைய
காம ராக விவர்ஜிதம் பலம் அஸ்மி .–காமங்களில் ஆசை அற்ற பலமாகவும் இருக்கிறேன்
பூதேஷு–ஜீவ ராசிகள் இடம்
தர்மாவிருத்தோ -அறத்துக்கு முரண் அல்லாத
காமோஸ்மி –காமமாய் இருக்கிறேன்

பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே -நான் பலமுடையவர்களுடைய காம்யங்களில்
ஆசையற்ற பலமாகவும் இருக்கிறேன்
ஜீவ ராசிகள் இடம் அறத்துக்கு முரண் அல்லாத காமமாய் இருக்கிறேன்
பலவான்களின் பலமும் –காமம் ஆசை அற்றும்-அற்ற பலன் -ராவணாதிகள் பலம் இல்லை என்று விலக்க —
ஸூசுகத்துக்காக ஆசை காமம் -முன்னிலை ராகம் – தர்மத்துக்கு விரோதம் அற்ற ஆசைகள் நானே —
மற்றும் உள்ள நன்மைகள் அனைத்தாகவும் -உள்ளேன் -இவை அனைத்தும் என் சரீரம் பிரகாரம் –

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ் தாமஸாஸ்ச யே.–
மத்த ஏவேதி தாந் வித்தி நத்வஹம் தேஷு தே மயி৷৷—7.12৷৷

ஸ ஏவ ஸாத்த்விகா பாவா -ஸத்வ குணம் மிகுதி யுடையதாகவே உலகில் யாவை சில பொருள்கள் உள்ளனவோ
ஸ ஏவ ராஜஸாஸ் தாமஸாஸ் பாவா .–ரஜோ குணம் மிகுதி யுடையதாகவே தமோ குணம் மிகுதி யுடையதாகவே உலகில் யாவை சில பொருள்கள் உள்ளனவோ
தாந் மத்த ஏவ இதி -அவற்றை என்னிடம் இருந்தே உண்டானவை என்றும்
தே மயி இதி -அவை என்னிடமே உள்ளன என்றும்
வித்தி -அறிவாய்
அஹம் து -நானோ என்னில்
ந தேஷு -அவற்றை ஒட்டி இல்லை –

சத்வ குண மிகுதியை யுடையவையாகவே -உலகில் -யாவை சில பொருள்கள் உள்ளனவோ –
ரஜோ குண மிகுதியையோ -தமோ குண மிகுதியையோ உடையவையாகவே யாவை சில பொருள்கள் உள்ளனவோ
அவற்றை என்னிடம் இருந்தே உண்டானவை என்றும் அவை என்னிடமே உள்ளன என்றும் அறிவாய் -(உபாதான காரணம் நானே )
நானோ எனில் அவற்றை ஒட்டி இல்லை –

17. இல் வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்‌கும்‌
நல்லாற்றி னின்ற துணை.
இல்வாழ்வான்‌ -கிருஹஸ்தன்‌ (இல்லறத்திலிருப்பவன்‌),
என்பான்‌ என்று சொல்லப்படுவன்‌,
இயல்பு -ஸாஸ்த்ர முறையை
உடைய – அனுசரிக்க,
மூவர்க்‌கும்‌ -பிரம்மசாரி, வானப்ரஸ்தன்‌ சன்னியாசி என்கிற மூவர்க்கும்‌,
நல்லாற்றின்‌ – தரும ஒழுக்கத்தின்‌ கண்‌,
நின்ற -இருக்கின்‌ற ,
துணை – துணை (அவன்‌), .
கிருஹஸ்தன்‌ மற்ற மூவர்க்கும்‌ உணவு, உடை, வஸிக்கு மிடம்‌ இவற்றைக்‌ கொடுக்க வேண்டுமென்பது கருத்து.
“கிருஹஸ்தாஸ்ரமத்தை அண்டி ஏனைய ஆசிரமங்களெல்லாமிருக்கின்றன” என்ற பொருளுள்ள
ஏவம்‌ – ஹா ர்ஹஸ்ம யம்‌ ஆஸ்ரித்ய – வர்தந்தே -இதராஸ்ரமா:” என்னும்‌ மகாபாரதம் சாந்தி பர்வம்‌ 269-வது
அத்யாயம்‌, 6-வது சுலோகமும்‌,
* தாயை அண்டி எல்லா ஜந்துக்களும்‌ ஜிவிக்கின்றன. –போல கிருஹஸ்தாஸ்ரமத்தை அண்டி ஏனைய ஆஸ்ரமங்கள் ஜீவிக்கின்றன -என்னும் பொருளுள்ள.
யதா மாதரம்‌- ஆஸ்ரித்ய- ஸர்‌வே – ஜீவந்தி- ஜந்தவ;, ததா-ம்‌ கிருஹாஸ்ரமம்‌ -ப்ராப்ய ஸர்வே – ஜீவந்தி – சாஸ்ரமா:”’ என்னும்‌ மகாபாரசம்‌ – அனுஸாநிக பர்வம்‌ 211-வது – அத்யாயம்‌ 49 – வது ஸ்லோகமும கூறும்‌,
இக்கருத்தையே ** தயைவ ஆஸரமிண ;–ஸர்வே-கிருஹஸ்யே -யாந்தி ஸம்ஸ்ஸிதிம்‌.!’ என்‌னும்‌ மநுஸ்ம்ருதி 6-ஆவது அத்யாயம்‌ 90-வது சுலோகமும்‌ கூறுகிறது.
இக் கருத்தைக்‌ கொண்டே சாந்தோக்யோபனிஷத் கிருஹஸ்தனைக்‌ கூறி முடிக்கின்றது
என வியாஸருடைய ப்ரஹ்ம ஸூத்ரம்‌ 3-வது அத்யாயம்‌, 4-வது பாதம்‌ 48-வது ஸூத்ரம் கூறும்‌,
18. தென்புலத்தார்‌ தெய்வம்‌ விருந்தொக்க றானென்றாங்கு
ஜம்புலத்தா றோம்ப றலை… _
தென்புலத்தார்‌- பித்ரு தேவதைகள்
தெய்வம்‌.-தெய்வங்கள்
விருந்து -விருந்தினர்
ஒக்கல்‌ -சுற்றத்‌தார்கள்
தான்
என்ற ஆங்கு ஐம்புலத்து -என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும்
ஆறு -தர்மத்தை
ஓம்பல் -தவறாமல் செய்தல்
தலை -இல் வாழ்வானுக்கு சிறந்தது ஆகும்
தேவதை அதிதி பிருத்தியூர் பிதிரர் தான் ஆகிய ஐவருக்கும் செலுத்த வேண்டிய கடனுடன் ஜீவன் பிறக்கிறான் என்று
தேவதாதி அதித்யாநாம் பித்ரூணாம் ஆத்ம ந-ய நிர்வபதி பஞ்சாணாம் உச் ஜீவசன் -ந -ஸ -ஜீவதி -வனபர்வம் -314-60-என்றும்
தேவதா ஸ்து அதிதி த்யேய பித்ரு ஹய ச ஆத்மனாஸ் தயா ருணவான் -ஜாயதே மர்த்ய -தஸ்மாத் அந்த ருணதாம் வ்ரஜேத் -சாந்தி பர்வம் -292-9-
பித்ருதேவதைகள் தெற்கு இருப்பதை தைத்ரீய ஸம்ஹிதை 6-1-1 கூறும்
பித்ரு தேவதையும் தேவதைகளுக்கும் அடங்கும் என்றாலும் ப்ராமண வஸிஷ்ட நியாயப்படி சிறப்பு நோக்கித்தானியாக கூறப்பட்டார்கள்
யாது சிறப்பு எனில் -அவர்கள் எப்போதும் ப்ரஹ்மசாரிகளாயும் சுத்தராயும் கோபம் அற்றவர்களாயும் இருக்கின்றனர்
அக்ரே சயர் ஸுசபரா ஸததம் ப்ரஹ்மசாரிணா ந்யஸ்த ஸாஸ்த்ரா மஹா தேவா பிதர பூர்வ தேவதா -மநு –33-192-
தெற்கு வழி பித்ரு லோகத்துக்குச் செல்லும் மார்க்கம்
உத்தர மார்க்கம் –வடக்கு வழி -தேவலோகம் செல்லும் மார்க்கம் எண்டு உபநிஷதும் கீதையும் கூறும்
பித்ரு கர்மங்கள்‌ செய்யும்‌ போது தென் தோளில்‌ (வலதுதோளில்‌) பூணூலையும்‌, தேவ கார்யம்‌ செய்யும் போது வட தோளில்‌ (இடது தோளில்‌) பூணூலையும்‌ தரிக்க வேண்‌டுமென்று வேதமும்‌ தர்ம சாஸ்த்ரங்களும்‌ கூறுகின்‌றன:
ஒருவன்‌ இழக்கு திக்கை நோக்கி நிற்கும்போது வலது
‘தோள்‌ தென் தோளாகவும்‌ இடது தோள்‌ வட தோளாகவும்‌: ஆகிறது.
அண்டத்தில்‌ உள்ளது பிண்டத்தில்‌ என்ற நியாயப்படி, ஒவ்வொரு உடலிலும்‌ வலது பாகம்‌ தென்புறமாகையால்‌ பித்ரு க்ருத்யம்‌ செய்யும் போது பூணூலை வலமாகத்‌ தரிப்பது பித்ருக்களைத்‌ தென் புலத்‌தார்‌ என்று நாயனார்‌ அழைப்பதற்குச்‌ சான்றாகும்‌.
மூவர்‌ணத்தவர்‌ அல்லாமல்‌ நான்காம்‌ வர்ணத்தவராகிய வேளாளரும்‌ கூட பித்ரு கார்யங்களில்‌ வலது தோளில்‌ பூணால்‌ தரிப்பது இன்றும்‌ காணலாம்‌,
பித்ரு கார்யங்‌களினின்றும்‌ தெய்வ கார்யங்களினின்றும்‌ சாஸ்த்ர முறையில்‌ விடுபட்ட துறவிக்கு இருவகைப்‌ பூணூலும்‌ இல்லை.
உலகமானிடரிடமிருந்து மாத்‌திரமல்லாமல்‌
பித்ருக்கள்‌, தேவர்கள்‌, இவர்களிடமிருந்தும் கிடைககும்‌ பயன்களிலும்‌ ஆசையற்றவனே உண்மைத் துறவி
யாவான்‌.
இக் குறளின்படி, ஒருவன்‌ நடந்து, தன்‌ வருவாயில்‌ ஆறில்‌ ஒரு பங்கைப்‌ பகிர்ந்து தன்னை அண்டி வருவோருக்‌காக ஒதுக்கி வைத்து ஒவ்வோரு நாளும்‌ ஒருவருக்காவது:
விருந்தளித்துக்‌ கொண்டு வந்தால்‌ உலகில்‌ உணவில்லாத்திண்‌டாட்டம்‌ அறும்‌.
நாயனார்‌ கூறுகிறபடி ஒவ்வோருவரும்‌ தெய்வ கர்மம்‌ செய்து வந்தால்‌ கெட்ட கார்யங்களும்‌, அவைகளுக்குக்‌ காரணமான கெட்ட எண்ணமும்‌ குறையும்‌.
அரசாங்கத்திற்குக்‌. கண்காணிப்புச் செலவும் சேனைச் செலவும்‌ குறையும்‌. அப்போது அரசாங்கத்திற்கு ஒவ்வொருவருடைய வருவாயிலும்‌’ ஆறில்‌ ஒருபங்கு கொடுப்பதினாலேயே அரசாங்கச் செலவு கட்டிக் கொண்டு போகும்‌.
அரசனுக்கு ஆறில்‌ ஒருபங்கு கொடுப்பது என்பது ஆன்றோர்‌ வழக்கு.


* ஆடிதி க. பலிஞ்ஈ. அபி.ப்ரஜா ஹூ ப 2.குரு கக்‌௨௧,
கைட்‌ ஹாமும்‌ . அரிதப்ரஜ்ஞ:. தாஸாம்‌ ஏவ .- அவிஸூந்தயே! – சாந்திபர்வம்‌ 26-9 ஸ்லோகமும்
தபஷ்ஷட்மா மும்‌-அக்ஷய்யம்‌- உதி . ஆரண்யகா..
ஹி ஈ:” என்னும்‌ சாகுந்தளம்‌ -2- 13 வது ஸ்லோகமூம்‌,
“ஆஃதித. அழு. ஷட்ஹா மும்திருமாச்௪ – way – wiGaprb” a sr
னும்‌ மனுஸ்ம்ருதி 7- 130வது ஸ்லோகமும்‌ இந்த கருத்தைத் தான்‌ கூறுகிறது. ்‌
மற்ற ஐந்து பங்குகளுக்கும்‌ வினியோகத்தை இக்‌
குறளில்‌ நாயனார்‌ தெளிவுபடுத்தியிருக்கிறார்‌.
விருந்தோம்பல்‌ என்பது நம்மை அண்டி.வந்வர்களை
ஓம்பல்‌, சுற்றத்தாரில்‌ உபகாரத்‌திற்குக்‌ தகுதியானவர்‌களை நாமே தேடி உபகரிக்க வேண்டுமென்பது கருத்து ,
“* செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்‌!” என்பது ஒளவையார் வாக்கு. “ர-ஷிதா ஜீவ லோகஸ்ய-ஸ்வ ஜனஸ்ய-ச -ரக்ஷிதா !’ என்பது வால்மிகி யினுடைய வாக்கு. பாலகாண்டம்‌ 1 18-14 வது ஸ்லோகங்கள்‌).
இவ்வாக்கின்படி பொதுவாக உலகத்திலுள்ள
ஜீவர்களை யெல்லாம்‌ ரக்ஷிக்கும்‌ பொறுப்போடு கூட தன்‌
சுற்றத்தாரையும் ரக்ஷிக்கும்‌ பொறுப்பு விசேஷித்து கூறப்டுகிறது

இவ்வெல்லா தர்மங்களையும்‌ செய்‌வதற்கு தான்‌ கேடில்லாமல்‌ வாழ வேண்டியது இன்றியமையாதலால்‌ தன்னையும்‌ ரக்ஷித்துக் கொள்ள வேண்‌டும்‌ என்னும்‌ கருத்தை நாயனார்‌ தான்‌ என்னும்‌ பதத்‌தால்‌ குறிப்பிடுகிறார்‌.
இதையே தைத்தரீய உபனிடதம்‌;குசலமாக. இருக்கும்‌ விஷயத்தில்‌ (அதாவது தன்‌ யோக ஷேமத்தில்‌) அலக்ஷியமாய்‌ இராதே? என்று சிக்ஷவல்லி 11 வது ௮னுவாகம்‌ முதலாவது மந்திரத்தில்‌ கூறுகிறது
இக்குறளின் தொடக்கத்திலுள்ள “தென்‌ புலத்தார்‌-என்னும்‌ சொல்லைக் கொண்டே வைதிக நூல்களில்‌ நாயனாருக்கு எவ்வளவு ஆற்றல்‌ இருக்கின்‌றது என்பது நன்றாகப்‌ புலப்படுகிறது
தேவ கார்யாத் அபி முனே – பித்ரு -கார்யம்‌ – விசிஷ்பதே?? – சாந்தி பர்வம் – 347-59 339-58,
எல்லா கர்மங்களையும்‌ ஸ்ரத்தையுடன்‌ செய்ய“வேண்டியது a விதியாயினும்‌ தென்புலத்தாருக்குச்‌ செய்‌யும் கடைமையே ஸ்ரார்த்தம் – அதாவது ஸ்ரத்தை பூர்வகமான கர்மம் என்று வழங்கப்படுகிறது
அஹீ யர் ஹிதம் பூர்வம்‌” என்பது பாணினி ஸூத்ரம் -விசேஷமாக ஆராதிக்கப்படுவதை முதலில் சொல்ல வேண்டும் என்பதே இச்சூத்திரத்தின்‌ கருத்து,
இதை அனுசரித்தே நாயனார்‌ தென்புலத்தாரை முதலில்‌ கூறினார்‌ போலும்‌.
நாயனாருக்கு ஆழ்ந்த சாஸ்த்ர நுட்பங்‌களிலுள்ள ஆர்வமும்‌ ஆற்றலும்‌ இக் குறளைக்‌ கொண்டே அறிந்து கொள்ளலாம்‌.

19, வையத்துள்‌ வாழ்வாங்கு வாழ்பவன்‌ வானுறையுந்
தெய்வத்துள்‌ வைக்கப்‌ படும்‌.-
வையத்துள்‌ – பூமியில்‌,
வாழ்‌ வாங்கு– வாழவேண்‌டிய முறைப்படி,
வாழ்பவன்‌,
வான்‌ -வானின் கண்‌,
உறையும்‌- தங்கும்‌,
தெய்வத்‌துள்‌ – தேவதைகளுள்
வைக்கப்படும் -வைக்கப் படுவான்‌.
“ தனக்கு விதிக்கப்பட்ட .கர்மாக்களைச்‌ செய்பவன்‌ தேவர்களோடு ஒப்பாவான்‌”” என “ப்ரவ்ருத்தம்‌- கர்‌ம-.ஸம் ஸேவ்ய – தேவானாம்‌ – ஏதி – ஸாம்யதாம்‌’” என்னும்‌ மனு ஸ்ம்ருதி 13- 90 ஸ்லோகம்‌ கூறுகிறது.

20. பெண்ணிற்‌ பெருந்தக்க யாவுள கற்பென்‌னும்
திண்மை யுண்‌டாகப்‌ பெறின்‌
கற்பு- பாதி வ்ரத்யம்‌,
என்னும்‌ -என்ற,
திண்மை-கலங்காத நிலைமை,
உண்டாகப் பெறின்‌ – இருந்தால்‌,
பெண்ணின்‌- மனைவியைக்‌ காட்டிலும்‌;,
பெருந்தக்க -மேம்பட்ட “பொருள்கள்‌,
யா -எவை
உள -இருக்கின்‌றன
பெண்டிர்க்குப் பழமையான தன்மை பாதி வ்ரதாத்வம்‌- நாரீணாம்‌ – ஏதத்‌ -ஏவ -ஸநாதனம்‌” எனும்‌ அனுசாஸனிக பர்‌வம்‌ 249 – 19 வது ஸ்லோகம்‌ கூறுகிறது…
இன்னும்‌ நம்‌ நாட்டில்‌ புருஷர்களை விட ஸ்த்ரீகளிடையே
தர்ம ஸ்ரத்தை அதிகமாய்க்‌ காணப்படுகிறது.
நம் நாட்டில்‌ இதர நாடுகளை விடவும்‌ இதர தர்மங்களை விடவும்‌ ஸாஸ்த்ரங்களில் பாதி வ்ரத்யம் வற்புறுத்தப் பட்டு இருப்பதே இதற்க்குக் கரணம்
புருஷர்கள்‌ உத்தம கதியை யடைய வேண்டுமானால்‌ ஊன் கண்ணுக்குத்‌ தெரியாத கடவுளை மனதால்‌ உருவாக்கி வழி பட வேண்டும்‌.
ஸ்த்ரீகளுக்கோ வென்றால்‌ கண்ணுக்குப்‌ ப்ரத்தியஷமாய்ப்‌ புலப்படும்‌ கணவனையே தெய்வமாக்கி வழிபட்டு உத்தம கதியை அடையுமாறு கடவுளின்‌ ஆணையான சாஸ்த்ரம்‌ விதித்திருப்பதால்‌, அக் கணவனிடம்‌.குணமிருப்பினும்‌ குற்றமிருப்பினும்‌ கடவுளே ௮க் கணவனிடம்‌ உட் புகுந்து பெண்டிர்க்கு உத்தமகதியை அளிக்‌கின்றான்‌.
பசு கோணலான கொம்புடைய தாயிருப்பினும்‌- அதைப்‌ பூஜிப்பவர்களுக்கு அதனுள்‌ நின்று கடவுளே நன்மை பயக்குவது போல.

21- தெய்வந் தொழா அள்‌ கொழுநற்‌ றொழுதெழுவாள்‌
பெய்யெனப்‌ பெய்யு மழை.
தெய்வம்‌ -(வேறு)தெய்வத்தை,
தொழாள்‌ – வணங்‌காமல்‌,
கொழுநன்‌ – கணவனையே,
தொழுது -வணங்கி
எழுவாள்‌ -(படுக்கையை விட்டு) எழுந்திருப்பவள்‌,
பெய்‌ என-பெய்‌ என்று கூ.ற
மழை, பெய்யும்‌.
“கொழுநன்‌”” என்பது பழந்தமிழில்‌ கணவனைக்‌ குறிக்கும்‌. “பெண்டிர்க்குப்‌ பதியே தெய்வம்‌ ; வேறு புகலிடம்‌ இல்லை? என
“பதி: ஹி.- தை வதம்‌ – ஸ்த்ரீணாம்‌-பதி :-வச்யூ- :- பதி: மதி : ந- அன்யாம்‌ – மதம்‌. அஹம்‌ – பஸ்யே – ப்ரமஉாயா ;- யமா – பதி :” என்னும்‌ அனுசாஸனிகபர்வம்‌ 550 -95 வது ஸ்லோகமும்‌ “* ௮திகமாய்‌ காயக்லேசம்‌ முதலியவைகள்‌ செய்து அதனால்‌ புருஷன்‌ அடையும்‌ பலத்தைப்‌ பதியை பூஜை செய்வதினாலேயே ஸ்த்ரீயானவள்‌ வெகு ஸுலபமாய் அடைந்து விடுகிறாள்‌ ‘? என
“காய – கிலேமான – மஹதா – புருஷ. ப்ராப்னுயாத்‌ – ஹலம்‌ – தத் ஸர்வம்‌ – லபதே – நாரீ . ஸுவேந – பதி – பூஜயா
என்னும்‌ மேற்கண்ட அனுசாசனிக பர்வம்‌ 980 -96 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை, .
நீதி தவறா நெறியினோர்க்கு ஓர் மழை,
காதல்கற்புடை மங்கையர்க்கோர்‌ மழை,
மாதம்‌ மும்மழை பெய்யெனப்‌ பெய்யுமே”-என்பது-ஆன்றோர் வாக்கு
பொதுவாய்‌ ஒரு ஜீவன்‌ கடைத்‌தேற வேண்டுமானால்‌ பகவானிடத்‌தில்‌ எல்லை கடந்த அன்பு ஏகாரக்கிர சித்தத்துடன் நிலைத்‌ திருக்க வேண்டும்‌.
ஆனால்‌ இவ் விதம்‌ அன்பு செய்யும்‌ ஜீவன்‌ ப்ரத்யக்ஷமான கண்களால்‌ பகவானைப்‌ பார்த்திரானாகையால்‌ சாஸ்‌திரங்களைக்‌ கொண்டும்‌, அனுபவிகளின்‌ . வார்த்தையைக் கொண்டும்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைத்‌ தன் மனதால்‌ ஊகித்துக்‌ கொண்டு அந்த ஊூகித்த ஸ்வரூபத்தில்‌ அன்பையும்‌ ஏகாக்‌ரதையையும்‌ செலுத்தியாக வேண்டும்‌.
ஆனால்‌ பதிவ்‌ரதைகளான ஸ்தரீகளுக்கோ இந்த சிரமம்‌ இல்லை.-ஏனெனில்‌ நமது சாஸ்திர முறைப்படி. ஸ்த்ரீகள்‌ இந்த ஊனக் கண்ணிற்கே புலப்படும்‌ தங்கள்‌ பதிகளிடத்தே பேரன்பும்‌ ஏகாக்ரசித்தமும்‌ வைக்கும் போது அந்த. ஸ்த்ரீகள்‌ விஷயத்தில்‌ மாத்திரம்‌ பகவானே அந்த கணவனுடைய சரீரத்தில்‌ ஆவிர்பவித்து அவர்கள்‌ ஜன்மத்‌தைக்‌ கடைத்தேற்றி வைக்கிறான்‌.
ஏனையோருக்குப்‌ ‘பசவானுடைய ஸ்வரூபத்தை மனதால்‌ கற்பனை செய்ய வேண்டிய சிரமமும்‌, அவ்விதம்‌ மனதில்‌ உருவாக்கப்‌ பட்ட பகவானுக்கென்று நினைத்து செய்யப்படவேண்‌டிய யக்ஞம்‌, தானம்‌ முதலிய கர்மானுஷ்டான சிரமமும்‌ இல்லாமல்‌ ப்ரத்தியஷமாகப்‌ புலப்படும்‌ பதியை வழிபட்டு அவனுக்குச்‌ செய்யும்‌ பணிவிடையே யக்ஞ தான முதலிய எல்லா ஸத் கர்மானுஷ்டானமாக நிற்பதால்‌ மற்றவர்களை விட பதிவ்ரதா ஸ்த்ரீகள்‌ சுலபமாய்‌ கடைத்தேறும்‌ பாக்கியம்‌ பெற்றவராகி யிருக்கிறவர்‌கள்‌.
நமது சாஸ்திர மூறைப்படி பெண்கள்‌ கன்னிப்‌ பருவத்தில்‌ பரமேஸ்வரனையே பதியாக பாவித்து அனுஷ்டிக்க வேண்‌டிய சில நோன்புகள்‌ ஏற் பட்டிருக்‌கின்றன,
இந்த நோன்புகள்‌ தெலுங்கு கன்னட நாடுகளில்‌ இன்னமும்‌ அனுஷ்டி.க்கப்பட்டு வருகின்றன. –
கல்‌யாணமான பின்னர்‌ பதியையே கணவனாகப் பாவித்து
தொழுதல் வேண்டும்‌-இதுவே பதி விரதம்‌ அல்லது கொழுனன்‌ நோன்பு. ஒவ்வொரு உள்ளத்திலும்‌ ஈசன்‌
அந்தர்யாமியாமிருக்கிறான்‌ என்பது வேதத்தின்‌ துணிபு. அம் முறையில்‌ நமது உள்ளத்திலேயே எல்லாம்‌ அறியும்‌ படியான சர்வஜ்ஞத்வமும்‌, எல்லாவற்றையும்‌ ஆக்கும்‌ வல்லமையாம்‌ சர்வ சக்தியும்‌ உறைந்திருக்கிறது
இந்த சக்தி நமக்குப்‌ புலப்பட்டு வெளியாகாமலிருப்பதற்குக்‌
காரணம்‌ நம் மனம்‌ ஐம்புலன்களின்‌ வழியாய்‌ வெளிமுகமாயத்‌ திரிந்து கொண்டிருப்பதே. அத்திரிதலை நிறுத்தி அது ஒருமுகப்படும் பொழுது அது உள் நோக்கும்‌ ஆற்‌றலை அடைகிறது.
அவ்விதம்‌ உள்‌ நோக்க ஆரம்பிக்‌கும்பொழுது உள்ளிருக்கும்‌ ஈசத் தன்மை சிறிது சிறிதாக வெளியாகிறது . வெளியிலிருக்கும் உலகம் எல்லாம்‌ ‘நம்முள்ளத்தில்‌ உறைந்திருக்கும்‌ ஈசனிடம்‌ அடங்கி யிருக்கறது.
அவ்வீசச் தன்மை வெளிப்படும்போது உலகத்தில்‌ எக்காரியத்தையும்‌ ஆக்கும்‌. ஆற்றலும்‌ ப்ரகாசிக்கிறது
மழை பெய்யென்னால்‌ பெய்க, வெளி முகமாகத்‌. திரியும்‌ ஐம்புலன்களைத்‌ திரியாமல்‌ தடுக்க உபாயமென்னவென்றால்‌ வெளிப்பொருள்களில்‌. மாறி மாறி வரும்‌ அன்பைவிட ஒரே இடத்தில்‌ அசையாத ப்ரேமை அல்லது பேரன்பு ஏற்படுவதே,
முறுக்கு தின்று கொண்டிருக்கும்‌ ஒரு குழந்தையிடம்‌ மிட்டாயைக்‌ காட்டினால்‌ முறுக்கைக்‌ கீழே போட்டுவிட. அது
போல்‌ அதிக -அன்பிற்குப்‌ பாத்திரமான ஒரு பொருளை மனம்‌ கவரும்போது அல்ப சுகப் பொருளைத் தானாகவே விட்டு விடுகிறது – அவ்வித அன்பை என்றும்‌ அழியாத. கடவுளிடம்‌ வளர்ப்பதே அடியாரின்‌ பக்தியோகம்‌,
கண்ணுக்கெதிரே புலப்படும்‌ கடவுளாம்‌ கணவனிடம்‌ அப்பேரன்பை வளர்ப்பதே பதிவ்ரதம்‌.
அப்பிரேமை வளர்ச்சி முதிரும்போது மனம்‌ ஒருமைப்‌ படுகிறது.-மனம்‌ ஒருமைப்பட்டபோதே உள்‌ நோக்க இடந்தருகிறது.-
உள்நோக்கும்போது ஈசத்தன்மை வெளியாகின்றது. அப்போது பெய்யெனப்‌ பெய்யும்‌ மழை.-பெரிய யோகிக்கு ௮திக சிரமத்தின் பேரில்‌ கிடைக்கும்‌ பக்தி பதிவ்ரதைக்கு மிகவும்‌ சுலபமாய்க்‌ இடைக்கிறது
“கொக்கென்று நினைத்தாயோ-கொங்கணவா?’-என்‌னும்‌ கதையில்‌ சொல்லியிருக்கிறபடி, ஒரு பதிவ்ரதை
தன்னுடைய பாதி விரதத்தாலே தூரத்தில்‌ நடந்ததைத் தெரிந்து கொண்ட கதை ஸ்ரீ மகாபாரதம்‌ வன
பர்வம்‌ 209 அத்யாயத்தில்‌ சொல்லப்பட்‌ டிருக்கிறது.

“என்னுடைய பதி சேவையின்‌ ப்ரபாவத்தினாலேயே
கொக்குக்‌ கதையை நான்‌ அறிந்துகொண்டேன்‌ “எனப்‌ பொருள்படும்‌
” சுற்ரூஷாயா :-ஹலம்‌–பஸ்ய- பத்யு:-ப்ராஹ்மண – யாத்ருஸும்‌ -வலாகா ;:_-ஹி-த்வயா ம உம்‌பாட ரோலாத்‌ – தத்‌ – விஷிதம்‌–மயா ்‌ என்னும்‌ மகாபாரதம்‌ வனபர்வம்‌ 209-வது அத்யாயம்‌ 89, 38 சுலோகங்கள்‌ குறிப்பிடத்‌ தக்கன.
அதையே நாயனார்‌, ‘தெய்வம் தொழா அள்‌’என்றார்‌;காணாத தெய்வத்தைக்‌ கற்பனையால்‌ உருவாக்கித்‌ தொழும்‌ சிரமமின்றி என்பது பொருள்‌.

22. இறைகாக்குங்‌ காப்பெவன்‌ செய்யு மகளிர்‌
நிறைகாக்குங்‌ காப்பே தலை.
மகளிர்‌ -மனைவிகளை,
சிறை –காவல்களால்‌,’ காக்‌கும்‌ காப்பு, எவன்‌ என்ன, செய்யும்‌ ?
நிறை தம் மனத்திண்மையால்‌, காக்கும்‌ காப்பே, தலை சிறந்தது.
நன்மையைச்‌ செய்யும்‌ புருஷர்களால்‌ காக்கப்பட்ட மகளிர்‌ காக்கப்பட்டவர்‌ ஆகார்‌; தம்மைத் தாமே காப்‌பவரே காக்கப் பட்டவர்‌!? என
“அரஷிதா க்ருஹேயா –புருஷை :–ஆப்‌தகரரிஹி :–ஆத்மானம்‌- ஆத்‌மனா-யா;து – ரஷேயு :–தர.ஸ்ுரகூதிதர:? என்‌னும்‌ மனுஸ்ம்ருதி 9-வது அத்யாயம்‌ 19-வதுஸ்லோகம் ‘
“துன்பம்‌ வரும்‌ காலத்திலும்‌ தம்மைகத் தாமே காத்‌துக்கொள்ளும்‌ மகளிர்‌ ஸ்வர்க்கமடைவது திண்ணம்‌”
என
“வைலஷம்யம்‌ அபி-ஸம்ப்ராப்தா…. மோாபாரயக்‌ தி-.குலஸ்த்ரிய :–ஆத்மானம்‌- ஆ த்மனா-ஸ த்ய:–ஜித :–அங்வர்யமோ-ந-ஸம்ஸாய : ॥| என்னும்‌ மகாபாரதம்‌ வனபர்‌வம்‌ 68-வது அத்யாயம்‌ 8-வது ஸ்லோகமும்‌ கூறுகிறது.
ஸ்ரீ ராமாயணத்திலும்‌ ராவண வதத்திற்குப்‌ பிறகு விபிக்ஷணர்‌ சீதா தேவியை ஸ்ரீராமனிடம்‌ மூடுபல்லக்கில்‌ அழைத்துக் கொண்டு வரும்‌ சமயத்தில்‌ வானரங்கள்‌.
‘தேவியைப்‌ பார்க்க வேண்டுமென்று ஆவலுடன் அருகில்
குழுமி வரா , விபீஷணர்‌ அவைகளைத்‌ துரத்தி யடித்தார்‌.
அதைப் பார்த்த ஸ்ரீராமன்‌ விபீஷணரைப்‌ பார்த்து
இந்த வானரங்கள்‌ என்னுடைய ஸ்வ ஜனங்கள்‌, இவர்‌களை விரட்ட வேண்டாம்‌”?” என்று விபீஷணரை
நிறுத்தி விட்டு மேலும்‌ சொல்லுகிறார்‌
வீடுகளோ, படுதாக்களோ, கோட்டை ,மதில்களோ, முகமூடிகளோ,ஸ்த்ரீகளை ரக்ஷிப்பதில்லை, மற்றும்‌ இவைகளைப்‌ போன்ற கட்டுப்பாடான. அரண்மனை ஏற்பாடுகள்‌ ஸ்த்ரீகளை ரக்ஷியா ; நற்சீலம்‌ ஒன்றே பெண்களுக்கு _ உண்மையான வேலி மேனி,
“நிவர்தய – ஏலம்‌. உத்யோ.மம்‌ ஜனோயம்‌ – ஸ்வஜனோ- மம | ந- ம்‌ ருஹாணி-ஈ – வஸ்த்ராணி -ஈ-ப்ரா காசா:- திரஸ்க்ரியா : |- ஈத்ருஸமா – ராஜஸத்கரரா ; வ்ருத்தம்‌ ஆவசணம்‌ – ஸ்த்ரியா :”?யுத்தசாண்டம்‌ 111/-வ௫ சர்க்கம்‌ 25, 26-வதுஸ்லோகங்கள்‌) என்று சொல்லி விட்டு ஸீதா தேவியைப்பல்லக்கை விட்டு இறங்கச்‌ செய்து எல்லோரும்‌ பார்க்கும்படியாக காலாலேயே வரும்படி. கட்டளையிட்டார்‌,
“ விஸ்ருஷ்ய. புஎபி/காம்‌-சஸ்மாத்‌-பத்‌ ஏயாமேவ – அபசார்‌:
பத | ஸமீபே – மம – வைஷேஷஹீம்‌ – பரா்யந்து – இமே-
வனெளகஸ: ॥ [ஸ்ரீமத்‌ ராமாயணம்யுதக்தகாண்டம்‌ 117
ஸர்க்கம்‌ 50) வதா சலோகம்‌.|
சீதாதேவியின்‌ சீலம்‌. ராு்ஷஸர்களும்‌, வானரங்களும்‌, க்ஷத்ரியர்களும்‌ ஒரு. மனப்பட்டு மனமுருகி அன்புக்கடலில்‌ முழுகும்படி.. செய்தது. வகுப்பு வேற்றுமை, நாட்‌டு வேற்றுமை. முதலியவைகளால்‌ ஏற்படும்‌ மனவேற்றுமை ஒழிந்து உண்மையான ஓற்றுமைக்குக்‌ காரணமான அன்பைப்‌ பெருக்க உண்மையான சீலம்‌ அழியாத சக்தி வாய்ந்தது என்பதற்கு இது சாஸ்வதமான அத்தாஷி.

25. பெற்றாற்‌ பெறிற் பெறுவர்‌ பெண்டிற்‌ பெருஞ்‌ சிறப்புப்‌
புத்தேளிர்‌ வாழு முலகு.
பெண்டிர்‌ – மனைவியர்‌,
பெற்றான்‌ -(தம்மை.எய்‌திய)கணவனை,
பெறின்‌ -கற்போடு அடைவார்களாயின்‌,
புத்‌தேளிர்‌ –தேவர்கள்‌ வாழும்‌,
உலகு– உலகின்கண்‌_
பெருஞ்‌ சிறப்பு = மேலான சிறப்பை,
பெறுவர்‌ – அடைவர்‌,
நாஸ்தி யஞ்ஞா -ஸ்த்ரியா;- கஸ்சித்‌-ந-ஸ்.ரர தயூம்‌ நஅபி.உபோஷணம்‌ யா – து – ஷர்‌ தரி – ஸூஸ்ரூஷா -ஸா ஸ்வர்‌காய. அஹி ஜாயதே” என்னும்‌ மகாபாரதம்‌ விராட
பர்வம்‌ 20வது அத்யாயம்‌ 47 வது ஸ்லோகம்‌ -இத்தையே கூறுகிறது,
ஸ்ரீமத்‌ ராமாயணத்தில்‌ ஸ்ரீராமன்‌ வனத்தில்‌ அத்ரி மகரிஷியின்‌ ஆஸ்ரமத்தை யடைந்த பொழுது அங்கு அந்த ரிஷியின்‌ பத்தினியான ௮நஸூயா தேவி ஸீதா தேவியைப்‌ பார்த்து காட்டில்‌ கஷ்டப்படும்‌ ஸ்ரீராமனைப்‌ பதி வ்ரதையான சீதை பின்‌ தொடர்ந்து வந்திருக்கும்‌ விஷயத்தில்‌ தன்னுடைய ஆனந்தத்தைத்‌ தெரிவிக்கும் போது, “கொழுநன் நரகத்தில் இருப்பினும்‌ வனத்‌திலிருப்பினும்‌, பாவியாயிருந்தாலும்‌, அவ லஷணமாயிருப்பினும்‌ எந்த. ஸ்த்ரீகளுக்கவன்‌ ப்ரியமான வஸ்துவோ அவர்களுக்கு உத்தம லோகங்கள்‌ இடைக்கும்‌
[நரகஸ்யோ – வனஸ்மோ.- வா_ஸூ ஹோவா யதி வா அஸூஹ யாஸாம்‌ – ஸ்த்ரீணாம்‌ – ப்ரியோ – மஹரார்தா – தாஸாம்‌ – லோகா:- மஹோதயா;-அயோத்யா-17-22-23] என்று பொருள்‌ படும்படி கூறுகிறாள்‌.
அனசூயாதேவிக்குச்‌ சீதை மறுமொழி கூறும் இடத்தும் அக்னி சாக்ஷியாக நான்‌ ஸ்ரீராமனை மணந்த காலத்தில்‌ என்‌ தாயார்‌ எனக்கு உபதேஸித்த வாக்‌கியங்களையே தாங்களும்‌ எனக்கு இன்று ஞாபகப்படுத்துகிறீர்கள்‌.-கணவனைக் கற்புடன்‌ அடைவதைக் காட்டி,லும்‌ பெண்டிருக்கு வேறு தவமில்லை. சத்தியவானை
அடைந்த சாவித்திரி இன்று ஸ்வர்க்கத்தில்‌ ப்ரகாசிக்‌கிறாள்‌. தாங்கள்‌ பதி ஸிஸ்ரூஷையினாலேயே தேவர்கள்‌ வாழும்‌ உலகை அடையப்‌ போகிறீர்கள்‌. இவ்விதமே எத்தனையோ உத்தம ஸ்‌திரீகள்‌ த்ருடமான பதிவ்ரதா தர்மத்‌தினால்‌ தேவர்கள்‌ வாழும்‌ உலகத்தில்‌ பெரு வாழ்வு வாழ்கின்றனர்‌.
(சாவித்ரீ -பதி- ஸூஸ்ரூஷாம்‌ – க்ருத்‌வா – ஸ்வர் கே – மஹீயதே – தயா திவம்‌– – ஏவம்‌. – வியாஸ்௪’ப்ரவரா :-ஸ்த்ரிய :- பர்த்ரு – த்ருடவ்‌ரதா:- தேவலோகே- மஹியந்தே-புண்யேந -ஸ்வேந – கர்மணா’ (அயோத்யா,
118 வத சர்க்கம்‌-10, 12 சுலோகங்கள்‌) என்று சொல்லுகிறாள்‌. இக்கருத்தையே ஸ்ரீபாகவகம்‌ ப்ருது சரித்ரத்‌தில்‌ 4 வது ஸ்கந்தம்‌ 2& வது அத்யாயம்‌ “* அஹோ-இயம்‌ வதூ : – தன்யா -யா – ச -ஏவம்‌ – ஸூஹு ஜாம் – பதிம்‌ – ஸர்வாத்மனா-பதிம்‌ ஹேஜே – யஜ்ஜேஸம்‌ – ஸ்ரீ :- வயு ரீவ-ஸைஷா . நூநம்‌ – வ்ரஜதி -ஊர்த்வம்‌ – அமும்‌ – வைன்யம்‌ – பதிம்‌ – ஸதீ – பஸ்யத – அஸ்மான்‌-அதீத்ய – அர்சி :- துர்விஹாவ்யேன-கர்மணா””என்னும்‌ 25, 26 வது ஸ்லோகங்கள்‌ கூறுகின்றன.

24–, தம் பொருள் என்ப தம்‌ மக்கள் அவர் பொருள்
தம் தம்‌ வினையான்‌ வரும்‌.
தம் மக்கள்‌ – தம்முடைய மக்களை,
தம்‌ – தம்முடைய
தம் பொருள்‌ என்ப -பொருள் என்று கூறுவர் .
அவர் பொருள் அவர் செய்த பொருளின் பயன்
தம் தம் வினையால் -தம்மால் செய்யப்பட வினைப்பயனோடு வரும்‌.
இறந்த பின்னர்‌ அவரவர்‌ செய்த நல் வினை தீவினைகள்‌ பயன்களும்‌, மக்கள்‌ செய்த ஈமச் சடங்கு ௮தாவது, சிராத்தம்‌, தானம்‌ முதலியவற்றின்‌ பயனும்‌ வரும்‌ என்‌பதை இக் குறள்‌ உணர்த்திற்று,
“இம்மையிலும்‌ மறுமையிலும்‌ பெரிய ஆபத்திலிருந்து மனிதரை மக்கள்‌ காக்கின்றமையான்‌, அவர்‌மக்கட்‌ பேற்றினை விரும்புகின்றனர்‌ ” என
* ய௨ர்மம்‌புருஷ்ல்யாவ” ச – புத்ரம்‌ – இச்ஷஹக்தி – மானவா :- ப்ரேத்ய- இஹ – ௪- சம்ப்ராப்தா:- தீராயந்தே-மஹதோ – ஒயாத்॥”” என்னும்‌ மகாபாரதம்‌ த்ரோணபர்வம்‌ 196 வது அச்யாயம்‌ 17 வது ஸ்லோகம்‌ கூறும்‌.
இவ்வுலகலிருந்து வேற்றுலகத்திற்கு மனிதர்‌ செல்ல மக்கள்‌ துணை புரிதலான்‌ சுயநலத்தைக்‌ கருதியே அவர்‌ மக்கட்‌ பேற்றினை விரும்புகின்றனர்‌ ‘ என
* இச்மக்தி – பிதர :-புத்சான்‌ – ஸ்வார்யஹேதோ :- வடொத்கச – இஹ லோகாத்‌ – பரே – லோகே – தாரமிஷ்யசக்தி – மானவா:”என்னும்‌ மகாபாரதம்‌ துரோணபர்வம்‌ 174 வது அதியாயம்‌ 54 வது ஸ்லோகம்‌ கூறும்‌.

25… மக்கண் மெய்‌ தீண்டல் உடற்கின்ப மற்றவர்‌
சொற் கேட்டல் இன்பஞ்‌ செவிக்கு.
மக்கள்‌ – தம்மக்கள்‌, மெய்‌-(தம்முடைய) உடலை,
தீண்டல்‌ தொடுதல்‌, உடற்கு– உடலுக்கு, இன்பம்‌ –சுகத்திற்குக்‌ காரணம்‌ (ஆகும்‌). அவர்‌ சொல்‌ கேட்‌டல்‌ அவர்களுடைய சொல்லை கேட்குதல்‌, செவிக்கு -காதுக்கு, இன்பம்‌ — இன்பத்திற்குக்காரணமாகும்‌.

இங்கு மக்கள்‌ என்பது தம்மக்களையே குறிக்கும்‌.
‘இன்பம்‌ என்ற சொல்‌ இரண்டிடத்திலும்‌ இன்பத்‌திற்குக்‌ காரணம்‌ என பொருள்‌ படுதலின்‌ ஆகுபெயர்‌. அவர்‌ என்ற சொல்‌ தம் மக்களையே குறிக்கும்‌.
குழந்தையால்‌ ஆலிங்கனஞ்‌ செய்யப்பட்டபோது உண்‌டாம்‌ சுகத்திற்கு ஈடின்மையால்‌, குழந்தையின்‌ ஸ்பர்சத்தைக்‌ காட்டிலும்‌ இனிமையானது வேறொன்றுமில்லை ??: என
“ஸ்ரிறானா-ஆலிங்‌ ம்‌ யமானஸ்ய-ஸ்பர்பா-ஸ௫தே :- யயா – ஸுவ: புத்ரஸ்பர்ஸாத்‌ – ப்ரியதர :- ஸ்பர்போ லோகே. ஈ வித்தே? என்னும்‌ மகாபாரதம்‌ ஆதிபர்வம்‌ 98 வது அத்யாயம்‌ 51வது சுலோகமும்‌,
“புத்ரஸ்‌. பர்றாத்‌ -து – லோகேஷு -ந – அன்யத்‌ – ஸுயவூம்‌ –
. அதி – இவ.- ஹி? என்னும்‌ மேற்சொன்ன ஆதிபர்வம்‌
64 வது அச்யாயம்‌ 67 வது ஸ்லோகமும்‌,
குழந்தையின் மழலைச் சொற் போல்‌ இனிமையாயுள்ளது ” என-ஓுரக்யம்‌ – கார்தம்‌-வவிஷ்யதி – வாலஸ்ய-இவ- ப்£வ்‌ருத்தஸ்ய – கலம்‌ – அவ்யக்தம்‌ – அத்‌ ஷுதம்‌ ” என்னும
மகாபாரதம்‌ அனுசாஸனபர்வம்‌ 181 வது அத்யாயம்‌ 41 வது. ஸ்லோகமும்‌ கூறும்‌,

குழலினிது யாழினிது என்பர்‌ தம்‌ மக்கள்‌
மழலைச்சொல்‌ கேளாதவர்‌ :
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கட்‌
சிறுகை யளாவிய கூழ்‌ ?” .
என்னும்‌ குறள்கள்‌ இங்கு குறிப்பிடத்தக்கன.
சுட்டிய இனை நிலைக் கிளவி என்பர்‌ ஆசிரியர்‌ தொல்காப்‌பியனார்‌.

26. அன்பிலா ரெல்லாசம் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர்‌ பிறர்க்கு. ்‌
அன்பு-அன்பினை, உடையார்‌, என்பும்‌ -எலும்பினாலும்‌, பிறர்க்கு, உரியர்‌; அன்பு அன்பினை, இலார்‌ -.உடைத்தாயிராதவர்‌, எல்லாம்‌ எல்லாப் பொருளாலும்‌, தமக்கு தமக்கே, உரியர்‌,
இந்திரன்‌ வ்ருத்தாசுரனை வெல்ல வஜ்ராயுதம்‌ செய்‌வதற்குத்‌ தச முனிவரின்‌ முதுகெலும்பு வேண்டும்‌ என
அவரை இந்‌திரன்‌ வேண்ட, அம்முனிவர்‌ யோக சக்தியால்‌ ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்க, அவன்‌: முதுகு எலும்பால் வஜ்ராயுதம்‌ செய்யப்பட்டதை ஈண்டு இவ்வாசிரியர்‌.குறிக்கின்‌றனர்‌.
இந்த வ்ருத்தாந்தம்‌ ஸ்ரீபாகவதம்‌ 6வது. ஸ்கந்தம்‌ 9, 10 வது அத்யாயங்களில்‌ பார்க்க,
சிபி சக்ரவர்த்தி தன்‌ உடலப்‌ புறாவுக்கு கொடுத்ததையும்‌, கர்ணன்‌ தன்‌ உடலோடு பிறந்த கர்ண குண்டலங்களை இந்தரனுக்‌’குக்‌ கொடுத்ததையும்‌ மகாபாரதம்‌ வனபர்வம்‌ 182,188 வது அத்யரயங்களும்‌ -வனபர்வம்‌ 811 வது அத்யாயமும்‌ கூறுகின்றன.

27. என்பி லதனை வெயில் போலக்‌ காயுமே
அன்பி லதனை யறம்‌.
-என்பிலதனை -எதும்பில்லாத ‘ உடம்பை, வெயில்‌ காயும்‌ போலே -தகிக்குமாறு, அறம்‌ = தர்மக்கடவுள்‌,-அன்பிலதனை- துன்பப்படுத் தும்‌,
அன்பு. இருத்தலும்‌ இல்லாமையும்‌ மக்களிடமே நிகழமாதலால்‌; அன்பில்லாத மக்கள்‌ ௮ஃறிணைப்‌ பொருட்கட்குச்‌ சமம்‌ என்பதைக்‌ குறிக்க “அன்பிலாரை என்ற சொல்லை ஆசிரியர்‌ வழங்காது -அன்பிலதனை -என்ற சொல்லை வழங்கியது நோக்கத்தக்கது
ஆறாம் என்பது ஈண்டு அறத்திற்கு பதிதேவதையாய்‌ இருக்கும்‌ தர்மராஜனைக்‌ “குறிக்கும்‌.

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்து இருப்பான்
நல் விருந்து வானத்தவருக்கு
இல் -வீட்டில் இருந்து -செல் விருந்து -செல்கின்ற விருந்தினரை -ஓம்பி -உபசரித்த பின்னர் -இல் -வீட்டுக்கு -வரு விருந்து -வருகின்ற விருந்தினரை -பார்த்து இருப்பான் -எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவன் -வானத்தவருக்கு -தேவர்களுக்கு -நல்ல விருந்து ஆவான்
மனு ஸ்ம்ருதி -3-106 இத்தையே சொல்லும்
இது விஷயத்தில்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 90 வத அத்தியாயம்‌ நகுலோபாக்யானம்‌ இங்கு குறிப்‌
பிடக்தக்கது. அதன்‌ கதை பின்வருமாறு:..தர்மபுத்திரர்‌ அசுவமேத யாகம்‌ செய்தபிறகு அன்னதானம்‌ ஏராள மாய்ச்‌ செய்தார்‌. அந்த அன்னதானத்தைச்‌ சபையி லுள்ளோர்‌ அனைவரும்‌ புகழ்ந்தனர்‌. ௮ந்த சமயம்‌ ஒரு பக்கம்‌ தங்கமாய்ப்‌ பிரகாசித்த சரீரத்துடன்‌ கூடிய ஒரு ,
கீரிப்பிள்ளை ௮ங்குவந்து “குருஷேத்திரத்தில்‌ :மாவைக்
கொடுத்த உஞ்சவருத்தி: பிராம்மணனுடைய தானத்‌;திற்கு இந்த யாகம்‌ ஈடாகாது?” எனச்‌ சொல்லிற்று.
இதைக்‌ கேட்ட சபையோர்கள்‌ ஆச்சரியமடைந்து ௮ந்தக்‌ கீரிப்பிள்ளையைப்பார்தது, “நீயார்‌? நீ என்‌ இப்படிச்‌
சொல்கிறாய்‌?” என்று கேட்டார்கள்‌. கீரிப்பிள்ளை அடி.யில்‌ வருமாறு சொல்லிற்று:
குருஷேத்திரத்தில்‌ உஞ்ச வ்ருத்தி செய்து பிழைக்‌கும்‌. பிராமணன்‌ ஒருவன்‌ இருக்கிறான்‌. அவனுடைய குடும்பத்தில்‌ அவன்‌ மனைவி, புத்ரன்‌, நாட்டுப்பெண்‌ஆகிய மூவர்‌ இருந்தனர்‌. இந்த பிராமணன்‌ கொண்டு வருவ திவிருந்தே அவர்கள்‌ ஜீவித்து வந்தனர்‌. ஒரு சம யம்‌ தேசத்தில்‌ துர்பிக்ஷம் ஏற்படவே அவருக்கு கோதுமை மாவுதான்‌ ” கொஞ்சம்‌ கிடைத்தது. அதை
4 பாகமாய்ச்‌ செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்‌. அந்த சமயத்தில்‌ ஒரு அதிதி வந்து சேர்ந்தார்‌. உஞ்ச வ்ருத்தி
பிராமணன்‌ வந்தவரை உபசரித்து தன்னிடம்‌ இருந்த மாவைக்‌ கொடுத்து அதைச்‌ சாப்பிடச் சொன்னார்‌. அதிதிக்கு அதைச் சாப்பிட்டும்‌ பசி தீரவில்லை. அவருடைய ஸ்திதியைப்‌ பார்க்க பிராமணர்‌ வருத்தமடைந்தார்‌-இதைப் பார்த்த அவருடைய பத்னி தன்‌ பாகத்தையும் கொடுத்தாள்‌. அசைச் சாப்பிட்டும்‌ அவருடைய பசி தணியவில்லை
பிறகு பிராமணனுடைய புத்ரனும்‌, நாட்டுப்‌ பெண்ணும்‌ தங்களுடைய பாகத்தைக்‌ கொடுத்தார்கள்‌. உடனே தேவலோகத்தில் இருந்து .புஷ்பவர்ஷம்‌ பெய்தது.
வந்த அதிதி உஞ்சவ்ருத்தி பிராமணனைப்‌ பார்த்து“உங்கள்‌ குடும்பத்தாரைப்‌ போல்‌, நான்‌ கண்ட தில்லை, தங்களுக்கென்று கொஞ்சங்கூட வைத்துக்கொள்ளாமல்‌ எல்லாவற்றையும்‌ எனக்காகக்‌ கொடுத்துவிட்டீர்‌களே. உங்களுடைய தானமே தானம்‌.
“உங்‌களை ஸ்வர்க்க. கதிக்கு அழைத்துச்‌ செல்ல தேவதைகள்‌ விமானத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்‌. உன்னுடைய பச்னி, மகன்‌, நாட்டுப்பெண்‌ இவர்களுடன்‌ ஸ்வர்க்கத்தை – அடைவாயாக. நான்‌ தர்ம தேவதை. என்று சொல்லி மறைந்தார்‌. அவர்கள்‌ நான்கு பேரும்‌. விமானத்தில்‌ ஏறி ஸ்வர்க்கக்தை அடைந்தனர்‌, அந்த மாவைச்‌ சாப்பிட்ட சமயத்தில்‌ ழே உதிர்ந்த மாவும்‌ ஜலமும்‌ பட்டு என்‌ சரீரத்தின்‌ ஒருபாகம்‌ தங்க மயமாய்‌ ஆகி விட்டது . மற்றொரு பாகம்‌ அம்மாதிரியாகும்‌ என நினைத்து அநேக யாகங்களுக்குப்‌ போனேன்‌, இந்த யாகத்திற்கும்‌ ஆசையுடன்‌ வந்தேன்‌ ; ஆனால்‌ என்‌ சரீரத்தின்‌ மற்ற பாகம்‌ தங்கமயமாக ஆகவில்லை, . அதனால்‌ தான்‌ இந்த யாகம்‌ அந்த ப்ராம்மணனுடைய தானத்‌திற்கு ஈடில்லை என்று சொன்னேன்‌ ?? என்று சொல்‌லிற்று, இதிலிருந்து அதிதி ஸத்காரத்தின்‌ விசேஷம்‌ வெளியாகிறது ,
அடியிற்குறிப்பிட்டிருக்கும்‌ ஸ்லோகங்களும்‌ அதிதி
சத் காரத்தின்‌ மஹிமையையே கூறுகின்றன :–
அதிஸி :– பூஜித :–யத்‌ .. ஹி-யூ* யாயதே – மனஸா -பலம்‌ | ௩. தத்‌- கீரது – ( ரதேக- அபி . துல்யம்‌- ஆஹ: இரிஷிண மபண்ையை – மு ருஹஸ்‌ஸ்‌:ப “து. முச்சத |௩ -அன்யதீ.தஸ்மாத்‌ – பரஃ-பூர்ம இதி – ப்ராஹு:.”மரீஷிண : |தஸ்மாத்‌ – ம்‌ ருஹஸ்‌. மாடு ரமஸ்ய : ௩. அன்யத்‌ – ற உவதம்‌..அஸ்திவை_ருதே – அதிஸ்ிம்‌ – ஈரவ்பாவ* ர.மனஸா.ஏதத்‌ .. வீசாய்‌ ”_ மகாபாரதம்‌ – அனுசாசனிகபர்வம்‌ 2 வது அத்தியாயம்‌ 107, 86, 106 வது ஸ்லோகக்கள்‌. ்‌

30. இனைத் துணைத்தென்ப தொன்‌றில்லை விருந்தின்
றுணைத் துணை வேள்விப்‌ பயன்‌
வேள்விப் பபன்‌ -(விருந்தினரை) உபசரித்தலாகிய வேள்வியின்‌ பபன்‌, இனைத் துணைத்து -இவ்வளவுக்குட்
பட்டது என்பது,== ஒன்று ஒன்றும்‌, | இல்லை; விருந்தினை — விருந்தினருடைப, துணைத்‌ துணை -யோக்யதைக்‌குத்‌ தகுந்தது ஆகும்‌.
அதிதி பூஜனத்தை மனுஷ்ய யஜ்ஞம்‌ (ந்ருயத்ஜோதியிபூஜனம்‌) என்று மனு தர்ம சாஸ்த்ரம்‌ கூறும்‌,
“ஐம்பெரும்‌ வேள்விகளுள்‌ ஒன்றாதலின்‌ வேள்விஎன்றும்‌, பொருளளவு தான்‌ சிறியதாயமினும்‌ தக்கார்‌ கைப்பட்டால்‌ வான்‌ சிறிதாப் போர்த்து விடு மாதலின்‌, இனைத்துணைத்தென்ப தொன்றில்லை என்று கூறினார்‌:
– இதனால்‌ இருமையும்‌ பயத்தற்கு காரணம்‌ கூறப்பட்‌டது” என்கிறார்‌ பரிமேலழகர்‌,
தானம்‌ செய்பப்படம்‌ பொருள்‌ சிறிதாயினும்‌ அது தகுதியான சத்பாத்திரத்தின்‌ கையில்‌ சேர்ந்தால்‌ மிகவும்‌ பெரிய ஆகாசத்தைபும்‌ சிறிது என்னும்படி மேலான பயனைத்‌ தந்துவிடும்‌ என்பதுபோல்‌ நாம்‌ செய்‌யும்‌ விருந்தின்‌ பயனும்‌ விருந்தினரின்‌ யோக்யதைக்குத்‌ தக்கபடி பயனளிக்கும்‌ என்பது கருத்து.
“ யதிஹமஸ்தே-ஜலம்‌. த்வா-ை?க்ஷம்‌-உத்‌ மாதபுகர்ஜலல்‌ | தீஉன்னம்‌-மேருணா.துல்யம்‌-தஜ்ஜலம்‌..ஸா.மமோபமம்‌? ॥ ‘என்பது பராசருடைய வசனம்‌ பராசர சம்ஹிதை ஆசார காண்டம்‌ அத்யாயம்‌ 1- ஸ்லோகம்‌ 53).
பாத்ரஸ்யடஹி-விஸேஷண.ஸற* ர திஉயாகதயைவ-௪ | அல்பம்‌-வா- பஹ -உஃவா-ப்ரேத்ப. உரநஸ்ய-ஹலம்‌- அஸ்ர்‌ துதே*? என்று மனு ஸ்ம்ருதி 7-வது அத்யாயம்‌ .86-வது ஸ்லோகம்‌ கூறுகிறது.

31. அல்லவை தேய வறம் பெருகு நல்லவை:
நாடி. யினிய சொலின்‌.
நல்லவை– புண்ணியங்களை, நாடி- கருதி, இனிய -இனிய சொற்களை, சொல்லின்‌ – கூறினால்‌, அல்லவை-பாபங்கள்‌, தேய- குறைய, அறம்‌ – தர்மம்‌, பெருகும்‌,
முதன்‌ முதலில் பாபச்செயல்களின் பயனைப் போக்க முயல வேண்டும்‌. -அது அழிந்தால்‌ புண்ணியச்‌ செயல்‌களின்‌ பயன்‌ தானே பெருகும்‌ என்பது கருத்து.-* ஜிஹ்வாழ்‌ ரே-வர்ததேஃலக்ஷ்மீ : *,-நீதி சாஸ்த்ரம்‌,

32. எழுமை யெழு பிறப்பு முள்ளுவர்‌ தங்கண்‌
விழுமம் துடைத்தவர்‌ நட்பு.
(பயன்‌ தெரிவார்‌ -உபகாரத்தின்‌ பயனை ஆராய்‌வார்‌)-தங்கள்‌ – தம்மிடத்தில்‌, விழுமம்‌– துன்பத்தை,
துடைத்தவர்‌ நட்பு-போக்கியவருடைய சினேகத்தை
எழமை–‘எழு பிறப்பும்‌- புண்ய பாபங்கள்‌ தொடரும்‌ எழு
வகைப்பட்ட -பிறப்புக்களிலும்‌, உள்ளுவர்‌ நினைப்பர்‌,
தனது ஏழு ஜென்மங்களிலும் , தன்‌ சந்நிதியில் எழுதலை முறைகளிலும் மறக்க முடியாதது. -தனக்கு ஒருவர் ஆபத்துக்கு காலத்தில் உதவியது என்றும் கருத்துக் கொள்‌ளலாம்‌.–தனது மறு ஜன்மங்களில் அனேகமாய்‌ எல்லாருக்கும் போர்வை ஜென்ம நினைவு மறந்து போயினும் பேர் உதவி செய்தவரை மறு லான்மத்தில் காண நேர்ந்தால் நம்மை யறியாமலேயே அவரிடம்‌ பூர்வ ஜன்ம வாசனையினால்‌ பேர் அவா ஏற்படலாம்‌ என்பது கருத்து.

33. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
ஓன்று நன்று உள்ளக்‌ கெடும்‌.
கொன்றன்ன (முன்‌ நன்மை செய்தவர்‌)
கொல்லுதலை ஓத்‌த, இன்னாச்செயலை, -செயினும்‌- செய்‌தாலும்‌, அவர்‌ செய்த ஒன்றா நன்று ஒரு உபகாரத்தை, உள்ள – நினைக்க, (௮து ) கெடும்‌ — போக்கப்படும்‌.
அய்ய வனை
முன்பு உபகாரம்‌ செய்தவன்‌ பின்னர்ப்‌ பெரிய அபகாரத்தைச்‌ செய்யினும்‌, அவன்‌ செய்த உபகாரத்தை. நினைத்து அபகாரத்தை மறப்பது கடனாகும்‌ என,
“பூர்‌:லோபகாரீ -ய:- தே – ஸ்யரத்‌ . அபராயே – மரீயஹி -; உபகாரேண – தத்‌ . தஸ்ய- ௯்ஷக்தல்யம்‌ -அபசரயின :’?: என்று. மகாபாரதம்‌ வன பர்வம்‌ 98 வது அத்யாயம்‌ 27 வது ஸ்லோகம்‌ கூறும்‌.

34, எந் நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்‌வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு–
எந்நன்றி -எவ்வகைப்பட்ட அறத்தையும்‌, கொன்‌றார்க்கும்‌-சிதைத்தவர்க்கும்‌, உய்வு-பிராயச்சித்தம்‌;-உண்டாம்‌ இருக்கிறது ; செய்ந் நன்றி- செய்யப்பட்ட உபகாரத்தை,-கொன்ற மகற்கு மறக்காதவனுக்கு, உய்வு-பிராயச்சித்தம்‌, இல்லை. ்‌
“ப்ரம்ம ஹத்தி செய்தவனுக்கும்‌, கள்ளினைக்‌ குடித்‌தோனுக்கும்‌, திருடனுக்கும்‌, விரதம் இழந்தவனுக்கும் பெரியோர்களால்‌ பிராயச்சித்தம் விதிக்கப்பட்டது.
செய் நன்றி கொன்றோனுக்கு விதிக்கப்படவில்லை”’ என
“ப்ரஹ்மவ” நே – ௪ -ஸுராபே -௪- சோரே.. ஷம்‌நவ்ரதே தியா. ட நிஷ்க்ருதி:- விஹிதா – ஸத்‌ ஷி :- க்குதீவே – சாஸ்தி நிஷ்க்ருதி:” | என்று.
ஸ்ரீமத்‌ ராமாயணம்‌ கிஷ்கிந்தா. காண்டம்‌ -34- 12-வது ஸ்லோகமும்‌, மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌277-வது அத்யாயம்‌ 11-ம்‌ ஸ்லோகமும்‌ கூறும்‌.
* ஆன்முலை யறுத்த அறனில்‌ லோர்க்கும்‌,
மாணிழை மகளிர்‌ கருச்சிதைத்‌ தோர்க்கும்‌,
பார்ப்பார்‌ தப்பிய கொடுமை யோர்க்கும்‌,
வழுவாய்‌ மருங்கிற்‌ கழுவாயு முளவென,
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்‌,
செய்தி கொள்றார்க்‌ குய்தி யில்லென..
அறம் பா டிற்மே ஆயிழை கணவ”-என்னும்‌ புதகானூற்று 34 வது) செய்யுளும்‌ இக்கருத்‌தையே கூறும்
தையே கூறும்‌, ்‌

35. சமன் செய்து சீர் தூக்குங்‌ கோல் போலமைந்தொருபால்‌
கோடாமை சான்றோர்க்‌ சணி.
கோல்‌–தூக்கும்கோல்‌, –சமன்செய்து – (இருபுறமும்‌) சமனாகச்‌ செய்யப்பட்டு, –சீர்‌ – சமமான நிறையை,
தூக்கும் போல்‌- தூக்கக்‌ காட்டுகிறது போல்‌,
௮மைந்து (வாதிகள்‌ இருவரிடமும்‌) சமமான எண்ணத்‌தோடு இருந்து, ஒருபால்‌–ஒரு பக்கத்தில்‌, கோடாமை -நடுநிலை தவறாமை, சான்றோர்க்கு -மேலோருக்கு–அணி -ஆபரணம்‌ (ஆகும்‌). ..
இக்கருத்தையே பின்னர்க்‌ கூறப்பட்ட புற நானூாறு.மதுரைக்‌ சாஞ்சி, கலித் தொகை இவற்றிலுள்ள அடிகள்‌ குறிக்கும்‌…
விரிசீர்த்‌ –
தெரிகோன்‌ மென்ன போல வொருதிறம்‌ .
பற்றலிலியரோ (புறநானாறு, 6, 8—9)
ஜெமன்‌ கோலன்ன செம்மைத்தாகி (மதுரைக்கா 4-1)
ஓர் வுற்றோரு திற மொல்‌ காத நேர்கோல்‌
அறன்‌.புரி நெஞ்சத்தவன்‌, (கலித்‌. 42, 14- 15).
ஸம: – அஹம்‌ – ஸர்வ வஹுதேஷு பச்ய – மே – ஜாகலே -வ்ரதம்‌ | துலா-மே – ஸர்வஷு்தேதேஷ-ஈ – ஸமா -திஷ்டதி ஜாஜலே |என்ற சாந்தி பர்வம்‌ 238-10- சுலோகம்‌ இங்கு குறிப்பிடத்‌தகும்‌.

36. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்‌ பேணிப்‌
பிறவும் தம் போற்‌ செயின்‌.
பிறவும்‌- பிறருடைய பொருள்களையும்‌, தம் போல்‌-தம்முடைய பொருள்கள் போல, பேணி- போற்றி, செயின்‌ செய்தால்‌, அஃதே, வாணிகஞ்செய்வார்க்கு-வணிகர்க்கு, -வாணிகம்‌- உயர்ந்த வணிகத்‌ தன்மை (தகும்‌),
இக் குறள்‌ வைஸ்யரின்‌ சிறப்புத் தன்மையைக்‌ கூறுகின்றது.

37. அடக்கம் அமரருளுய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும் .
அடக்கம்‌ -இந்‌திரியங்களை. அடக்குதல்‌ , அமரருள்‌.-தேவர்களுள்‌, உய்க்கும்‌ — செலுத்தும்‌; அடங்காமை-அவற்றை அடக்காமை, ஆரிருள்‌ -நெருங்கிய இருளோடு கூடிய நரகத்தில்‌, உய்த்துவிடும்‌- திண்ணமாய்ச்‌ செலுத்தும்‌,
இந்திரியங்களின்‌ இயற்கை தாம்‌ எவ் விஷயத்தைக்‌ கொள்ளக் கூடாதோ அவற்றைக்‌ கொள்ளுதலே ஆகும்‌. அவற்றைத்‌ துஷ்டக் குதிரைகட்கு ஒப்பிடும்‌ கடோபனி
ஷத்து (1-3-5-). அவ்வாறு அவைகளைப்‌ போக விட்டால்‌ அதன்‌ பயன்‌ நரகத்தை அடைவதே யாகும்‌ ; அவ்வாறு“போக விடாது அவற்றை இழுத்துக், கொள்ள வேண்டிய விஷயங்களிற்‌ செலுத்தினால்‌ அதன் பயன்‌ ஸ்வர்க்கத்தை அடைதல் ஆகும்
ஆர் இருள் என்பதும் ஈஸாவாஸ உப நிஷத்தில்‌ உள்ள அந்நியம் – தமஸ் -என்றுமாம்

38. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்‌
எழுமையு மேமாப்‌ புடைத்து.
ஆமைபோல்‌, (உயிர்‌ – மனிதன்‌), ஒருமையுள்‌ -ஒரு பிறப்பில்‌, ஐந்த ஜந்து ஞானேந்த்ரியங்களையும்‌, அடக்‌கல்‌ ஆற்றின்‌-அடக்கினால்‌, அஃது, எழுமையும்‌-ஏழு பிறப்புக்களிலும்‌, ஏமாப்பு உடைத்து – ஷேமம்‌ தருதலை உடைதது,
ஆமை எவ்வாறு எல்லா அங்கங்களையும்‌ குறுக்கிக்‌ கொள்ளுமோ, அவ்வாறு இந்திரியங்களை அவ்வவற்றின்‌ விஷயத்தில்‌ செல்லாது அடக்குபவன்‌ நிலைபெற்ற பிரகஜ்ஜையை அடைவான்‌–என
4யஉ£.- ஸம்ஹூதே.- ௪.
அயம்‌ – கூர்ம;-அங்கானி.. இவ – ஸர்வ:ற:. “இர்‌ திரியாணி2 இந்திரியார்பேவ்‌ய : – தஸ்ய… ப்ரஜ்ஞா -என்னும்‌ பகவத்கீதை 2வது அத்யாயம்‌ 58 வது ஸ்லோகம் கூறும்‌
**பட ா.மம்ஹரதே … சாமான்‌ . கூர்ம: – அ. மூனி-இவ ஸர்வா |சரா3.”-ஆத்மஜ்யோதி:. ஆத்மா-அயம்‌- ஆத்மன்யேவ .ப்ரபஸ்ர்யதி-என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 173 வது – 51வது ஸ்லோகமும்‌ இந்த கருத்தையே கூறும்‌,
௮9, கதங்காத்துக்‌ கற்றடங்க லாற்றுவான்‌ செவ்வி
அறம்பார்க்கு மாற்றி னுழைக்து,

389-கதம்‌ காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கதம் -கோபத்தை,காத்து போக்கி -கற்று – நூல்களை ஆராய்ந்து, அடங்கலாறறுவான்‌ செவ்வி-இந்திரியங்களை அடக்குவானுடைய நன்மைக்குரிய | பக்‌ககுவ காலத்தை,–அறம்‌ -தர்மக்கடவுள்‌, ஆற்‌றின்‌ – “அவன்‌ வழியே சென்று, பார்க்கும்‌ –நோக்கி நிற்கும்‌.
இந்தி ரிய ரநிக்ரஹம்‌ செய்வோனை அனுக்ரகிக்க அறக்கடவுள்‌ காத்துக் கொண்டிருக்கு மென்பது கருத்‌து .
‘இந்திரியங்களை அடக்குவதற்குத தர்ம சாஸ்திரங்களின்‌ அறிவும்‌, தூய்மையான செயலைச்‌ செய்தலும்‌, அக் காரணம்‌ பற்றி வரும்‌ மனத் தூய்மையும்‌ காரணமாகும்‌ என்
கட(1-3-6-8-) விளக்கும்‌.

40-ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்‌
இழிந்த பிறப்பாய்‌ விடும்‌.
ஒழுக்கம்‌ -தர்ம சாஸ்‌திரங்களில்‌ தத் தம்‌ வர்ணங்‌களுக்கேற்ற முறைப்படியும்‌, பெரியோரால்‌ நடக்கப்‌பட்ட முறைப்டியும்‌ நடத்தலை,– உடைமை, “குடிமை நற் பிறப்பிற்குக்‌’ கரணம்‌, (ஆகும்‌) ; இழுக்கம்‌– சதாசாரத்‌திலிருந்து தவறுகை, இழிந்த பிறப்பு –இழிந்த
பிறப்பிற்குக்‌ காரணம்‌, ஆய் விடும்‌ — ஆகும்‌.
குடிமை, பிறப்பு, இவை அவற்றின்‌ கரரணம்‌’ எனப்‌: பொருள்‌ தருதலின்‌ ஆகு பெயராகும்‌.
தர்ம நூல்கள்‌ தன்‌ வர்ணத்திற்கு விதித்த அனுஷ்‌டானங்களைச்‌ செய்தால்‌ அதுவே உயர்வு என்றும்‌.பிறருக்கேற்பட்ட தர்மத்தை அனுஷ்டித்தால்‌ தன்‌ பிறப்பினின்று நழுவி விடுகிறான்‌’? என்ற கருத்துள்ள “வரம்‌ – ஸ்வயர்ம :- விரூண :- ஈ- பாரக்ய; – ஸ்வனுஷிடுத மேண . ஜீவன்‌. ஹி… ஸ£$ய :.. பததி – ஜாதித:” என்னும்‌ மனு ஸ்ம்ருதி 10வது அத்யாயாம்‌ 97 வது ஸ்லோகம்‌ கூறுவது இங்கு நோக்கத் தகுந்தது,
*ஸ்வஹாவ- விஹிதம்‌… கர்ம- குர்வன்‌ – ஈ . அப்னோதி – கல்ஞ9ஷம்‌,? :பரயூர்‌ மோ. ஒயாவஹ:” என்னும்‌ பகவத் கீதை 18வது அத்‌யாயம்‌ 85 வது ஸ்லோகத்திலுள்ள வாக்கியமும்‌ இக் கருத்‌தையே சொல்லும்‌,

41, மறப்பினும் ஒத்துக் கொளலாகும்‌ பார்ப்பான்
பிறப்பொழுக்கங்‌ குன்றக்‌ கெடும்‌.
ஓத்து (கற்ற) வேகத்தினை, –மறப்பினும்‌ -மறந்தானாயினும்‌,-கொளல்‌ ஆகும்‌ -வருணம்‌ கெடாமையின் பின்னும்‌ அஃது ஓதிக் கொள்ளலாம்‌. பார்ப்பான்‌ = அந்தணனது, பிறப்பு–(உயர்ந்த) வருணம்‌,-ஒழுக்கம்‌ குன்‌ற-தன்‌ ஒழுக்கம்‌ குன்ற, கெடும்‌.
“மறந்த வழி இழி குலக்தனாமாகலின்‌’ “மறக்கலாகாது” என்னும்‌ கருத்தான்‌ * மறப்பினும்‌?” என்றார்‌..

சிறப்புடைவருணத்திற்கு மொழிந்தமையின்‌, இஃது .ஏனைய வருணங்களுக்கும்‌ கொள்ளப்படும்‌ என்று கூறுகிறார்‌ பரிமேலழகர்‌.
ஒவ்வொரு பிராம்மணனும்‌ வேதாத்யயனம்‌ செய்து
(வேதங்களை மறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌, மறப்‌பின்‌ மறுபடியும்‌ அத்யயனம்‌ செய்யவேண்டும்‌ என்றும்‌,
பிராம்மணனாய்ப்‌ பிறந்தது முதல்‌ பிராம்மண தர்மங்‌களிலிருந்து ஒரு போதும்‌ தவறக் கூடாதென்றும்‌, . தவறினால்‌ அதனாலுண்டாகும்‌ கேட்டை அனுபவித்தே தீர வேண்டும்‌ என்றும்‌ இக்குறள்‌ கூறும்‌, –
பார்ப்பான்‌ தன்‌ பிறப்பிற்குரிய ஒழுக்கங்‌ குன்றின்‌ கேடு அவனுக்கு மாத்திரமன்றி, நாட்டில்‌ உள்ளோர்‌ அனைவர்க்கும்‌ கேடு நிகழும்‌ என்பதை உணர்த்து வதற்கே பரர்ப்பானின்‌ பிறப்பொழுக்கம்‌ ஒருக் காலும்‌ தவறக் கூடாது என்று உரை கூறுவாருமுளர்‌
ஸூர்ய க்ரஹணம் முதலிய புண்ணிய காலங்களில் சொல்லப்படும் மஹா சங்கல்பத்தில் வரும் ஜாதி ஷீரம் ச கராணாம் –என்ற பதத்தினால் குறிக்கப்படும் பாபத்தையே இங்கு ஒழுக்கம் குன்ற என்ற தொடரினால் ஆசிரியர் குறிக்கிறார்

42, பிறன்மனை நோக்காத: பேராண்மை சான்‌’றோர்க்கு
, அறனொன்றோ வான்ற வொழுக்கு
பிறன்மனை -பிறன் மனைவியை, நோக்காத. பாராத,–சான்‌’றோர்க்கு-கிருஹஸ்தர்களுக்கு, ஒன்று — ஒப்பற்ற, அறனோ -தர்மமும் -ஆன்ற மேலான, ஒமுக்கு–ஒழுக்கமும்‌, (ஆகும்‌).
புறப் பகைகளை யடக்கும்‌ ஆண்மை யுடையவர்க்கும்‌ உட்பகையாகிய காமம்‌ அடக்குதற்கு அருமையின்‌ அதனை அடக்கிய ஆண்மையைப்‌ பேரண்மை என்றார்‌?” என்று:
கூறுகிறார்‌ பரிமேலழகர்‌,

48 திறனல்ல தற்பிறர்‌ செய்யினு நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
தன்‌ -தனக்கு, பிறர்‌,திறனல்ல -செய்யத்தகாத காரியங்களை, செய்யினும்‌ – செய்தாலும்‌, (அதனால்‌ அவர்‌கட்‌குவரும்‌) நோ வருத்தத்‌திற்கு,-நொந்து வருத்தப்‌பட்டு, அறனல்ல- தர்மமல்லாத காரியங்களை, செய்‌யாமை, நன்று -நல்லது , .
தமக்குத்‌ தீங்கு செய்தோர்க்குக்‌ தாமும்‌ தீங்கு இழைக்க வேண்டும்‌ என நினைத்கல்‌ இயற்கையாயினும்‌… அதனைத்‌ தடுடுத்தலே மேலானது என்பது கருத்து.
ஸ்ரீமத்‌ சரமாயணத்தில்‌ அயோத்யாகாண்டம்‌ 1 1வதுசர்க்கம்‌ 11 வது சுலோகத்தில்‌ “ந – ஸ்மரதி – அபகாராணாம்‌ – சதம்‌ –அபி- ஆத்மவத்தயா’-என்று ஸ்ரீராமனுடைய குணங்களை வர்ணிக்குமிட்த்தில்‌ சொல்லப்பட்‌டிருக்கிறதைப்‌ பார்க்கவும்‌. ஒருவன்‌ தனக்கு நூற்றுக்‌ கணக்கான இன்னல்கள்‌ செய்யினும்‌ தனது. பெருந் தன்மையினால்‌ அவைகளை நினைக்கக் கூட மாட்டான்‌ ஸ்ரீராமபிரான்‌ என்பது இதன்‌ பொருள்‌.

44-அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்‌றின்
ஏதம்‌ படுபாக்‌ கறிந்து.
(நினைப்பவர்‌ – ஆராய்வோர்‌) இழுக்காற்றின்- கெட்ட வழி காரணமாக, ஏதம்‌ – தீமை, படுபாக்கு.- வருதலை அறிந்து அழுக்காற்றின்‌- பொறாமையால்‌, அல்லவை -தீயச் செயல்களை, செய்யார்‌- செய்ய மாட்டார்கள்‌.

45.–சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம்‌ வேண்டு பவர்‌.
மற்றின்பம்‌ – பேரின்பத்தை (மோஷத்தை),-‘வேண்டு பவர்‌,’சிற்றின்பம்‌_ சிற்றின்பத்தை, வெஃகி -விரும்பி, ௮றனல்ல– தியச் செயல்களை, செய்யார்‌ – செய்ய மாட்டார்‌.

இம்மையின்பம்‌, மறுமையின்பம்‌-இரண்டும்‌ சிற்றின்பம்‌ எனப்படும்‌, இரண்டிற்கும்‌ எல்லை இருத்‌தலின்‌.

46, புறங்கூறிப்‌ பொய்த்துயிர்‌ வாழ்தலிற்‌ சாதல்‌
அறங்கூ.று மாக்கந்‌ தரும்‌.
(ஒருவன்‌) புறங்கூறி-ஒருவர்‌ இல்லாத இடத்து அவரைப் பற்றிக்‌ கூற்றம்‌ கூறி, பொய்த்து-௭திரில்‌ பொய்யாக நடித்து, உயிர் வாழ்‌ தலின்‌ -உயிரோடு இருத்‌தலைக் காட்டிலும்‌,-சாதல்‌, அறம்‌- தர்ம நூல்கள்‌,-கூறும்‌ -சொல்லும்‌, ஆக்கம்‌-நன்மையை, தரும்‌-கொண்டு வரும்‌.
புறங்கூறுதலால்‌ வரும்‌ பாவத்தைச்‌ சாதல்‌ தடுக்கும்‌ என்பது கருத்து
47. மறந்தும்‌ பிறன் கேடு சூழற்க சூழின்‌
அறஞ்சூழுஞ்‌ சூழ்ந்தவன்‌ கேடு,
(ஒருவன்‌) மறந்தும்‌, பிறன்கேடு-பிறனுக்குக்‌ கேட்டினை, சூழற்க–செய்ய நினைக்கக்‌ கூடாது ; சூழின்‌-நினைத்தால்‌, சூழ்ந்தவன் – நினைத்தவனுக்கு, கேடு-கேட்டினை, அறம்‌ அறக் கடவுள்‌, சூழும்‌ –நினைக்கும்‌,
*கெடுவான்‌ கேடு -நினைப்பான்‌, விநாச காலே விபரீத புத்தி என்பன ஆன்றோர் வாக்கியங்கள்‌.

.

48. புத்தே ளூலகத்து மீண்டும்‌ பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
ஒப்புரவின்‌-உபகராரத்தைக்‌ காட்டிலும்‌, பிற -வேறான, நல்ல – நற் செயல்களை, புத்தேளுலகத்தும்‌ -ஸ்வர்க்கத்திலும்‌, ஈண்டும்‌ – இவ்வுலகத்‌திலும்‌, பெறல்‌ -பெறுதல்‌, அரிது இல்லை ஏ அசை
இம்மையிலும்‌ மறுமையிலும்‌ பர உபகாரகமே சிறந்தது கே என்பது கருத்து.
இந்த கருத்தையே பின்‌ குறிக்கப்பட்டிருக்கும்‌ ஸ்ரீமத் பாகவத ஸ்லோகக்களும்‌ வெளியிடுகின்‌றன :….
பஸ்ர்யத-ஏதான்‌-மஹா ஹா .மான்‌-பர-அர்‌ பூ-ஏகாந்த-ஜீவிதான்‌-
வாத-வர்ஷு- ஆதப-ஹிமான்‌-ஸஹந்த:-வாரயநக்தி நஃஅஹோ-ஏஷாம்‌-வரம்‌-ஜன்‌ ம-ஸர்.வ-ப்ராணி-உபஜீவனம்‌-
ஸுஜனஸ்ய-இவ-யேஷாம்‌-வை-விமுபா-யாந்தி-ந-அர்‌ புநின:-
பத்‌ ர-புஷ்ப-௨டல-தநாயா-மூல-வல்கல.-2 ஈர ஹி:-
கந்‌ -கிர்யாஸ- ஷஸ்ம; ௮ஸ்ஸ்ரி-தோக்மை:-காமான்‌ -விதன்‌ வதே-
ஏதாவத்‌.ஜன்‌ ம-ஸாஹல்யம்‌- உ ஹிஞம்‌-இஹ-ே ஹிஷ-ஈ
ப்ராணை : அர்டை..யியா-வாவா-ஸ்்ரேய-ஏவ-ஆசரேத்‌.ஸஉ
ஸ்ரீ பாவதம்‌ 10 வதுஸ்கந்தம்‌ 23 வது அத்யாயம்‌ 32-35.-ஸ்லோகங்கள்

49, அருள் சேர்ந்த நெஞ்சினார்க்‌ இல்லை யிருள்‌ சேர்ந்த
இன்னா வுலகம் புகல் –
அருள்‌ -தயையோடு, சேர்ந்த கூடிய, நெஞ்சினார்க்‌கு — மனமுடையவர்க்கு, இருள்‌ சேர்ந்த இன்னா உலகம்‌-இருளோடு கூடிய அர்த்த புகல்‌ -புகுதல்‌, இல்லை –
“எல்லா பூதங்களிடத்தும்‌ அபயத்தைக்‌ கொடுப்‌போன்‌ சிறந்த விஷ்ணுவின்‌ பரம பதத்தை யடைவான்‌ ”
– என, *அபயம்‌-ஸர்வ-ஷஹ ஒதேவய: -ய;_உஉ௱ இ- மஹிபசே ஸ- மச்ஹூதி- பரம்‌ – ஸ்தானம்‌ – விஷ்ணோ:- பஉம்‌ – அனா மயம்‌ – என்னும்‌- மகாபாரதம்‌ ஸ்‌திரிபர்வம்‌ 7 வது அத்‌ யாயம்‌ 25வது ஸ்லோகம்‌ கூறும்‌.
அருளுடையார்க்கு நரக வேதனை இல்லை என்பது கருத்து.

50. அருளில்லார்க்‌ கவ்வுலக மில்லை பொருளில்லார்க்‌
கிவ்வுலக மில்லாதி யாங்கு.
பொருள்‌ இல்லார்க்கு, இவ்வுலகம்‌ . இவ்வுலகத்‌தின்பம்‌, இல்லாதியாங்கு-இல்லாதது போல, அருளில்‌லார்க்கு, அவ்வுலகம்‌ -காரிய ப்ரம்ம லோகத்தின்‌ இன்‌பம்‌, இல்லை.
துறவறத்தைப்‌ பூண்டமையால்‌ அவர்‌ ப்ரம்‌ம லோகத்தை யடைந்த போதிலும்‌ அருளில்லாத காரணம்‌ ‘ பற்றி அவர்‌ ஆங்கு இன்பத்துடன்‌ இரார்‌ என்பதே. இக் குறளுக்குக்‌ கருத்து என்றும் கூறலாம்‌-

51. தன்னூன்‌ பெருக்கற்குத்‌ தான் பிறி தூனுண்‌பான்‌
எங்கனம் ஆளும் அருள் –
தன்‌ – தன்னுடைய, ஊன் பெருக்கற்கு -உடம்பை வளர்த்ததற்கு, தான்‌, பிறிதூன்‌ -வேறொன்றின்‌ ஊனை உண்பான்‌, அருள்‌ -அருளை, எங்கனம் -எப்படி,ஆளும்‌ – தன் வசப்படுத்‌துவான்-
மற்றொன்றன்‌ மாமிசத்தால்‌ தன்‌ மாமிசத்தை வளர்க்க விரும்புகின்றவனைக்‌ காட்டிலும்‌ கொடியன்‌ இல்லை” எனப்‌ பொருள் பட
“ஸ்வ – மாம்ஸம்‌ – பர மாம்ஸேந – யேர – வர்யயிதும்‌ – இச்ஹதி – நாஸ்தி-ஷுத்திரதா தஸ்மாத்‌ – ந – நிருஸிம்ஸதரோ – நர? என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசனபர்வம்‌ 178 அத்தியாயம்‌ 13 வது சுலோகமும்‌; “ ஸ்வ – மாம்ஸம்‌ -ப.ர – மாம்ஸேன- யோ – வர்யூயிதும்‌- இச்ஹதி -உத்விம்ன வாஸம்‌ லஹதே-யத்ர-யத்‌ரஉபஜாயதே” என்னும்‌ அதே பர்வம்‌ 233 அத்யாயம்‌ 6வது ஸ்லோகமும்‌,
“ஸ்வ-“மாம்ஸம்‌ – பரமாம்ஸேன-யோ – வர்யயிதும்‌-இச்‌ ஊதி – அவி. வாஸ்யேச.. அவஹவீடேக்‌ – ஸ – இதி – ஹோவாச நார -என்று மேற்படி பர்வம்‌ 177 வது அத்யாயம்‌.14 வது ஸ்லோகமும்‌,
“*ஸ்வமாம்ஸம்‌- பரமாம்ஸேன -யா – வயமிதும்‌ – இச்ஹஊதி – அனஹியர்ச்ய – பித்ரூன்‌ -தெவான்‌ -ததோ – நாஸ்தி அபுண்யக்ருத்‌’ என்று மனு ஸ்ம்ருதி 5 அத்யாயம்‌ 62 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.

52. அவி சொரித்தாயிரம்‌ வேட்டலின்‌ ஒன்றன்‌
உயிரசெகுத்‌ துண்ணாமை ஈன்று. ‘
அவி– ஹவிஸ்ஸூக்களை, சொரிந்து மிகுதியாகக்‌ கொடுத்து, (இல்லறத்தான்‌), ஆயிரம்‌ வேட்டலின்‌ –
ஆயிரம்‌ யாகங்கள்‌ செய்வதைக் காட்டிலும்‌, ஒன்றன்‌ -ஒன்றினுடைய, உயிர்‌ – பிராணனை, செகுத்து போக்கி (துறவறத்தான்‌)), ஊன்‌ – மாம்ஸத்தை உண்ணாமை,-நன்று -நல்ல பயனைத்‌ தரும்‌.
இந்த குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ அடியில்‌ கண்டவாறு உரைசெய்‌திருக்கிறார்‌:- ்‌
அவிசொரிந்து-(தீயின் கண்‌ நெய்‌ முதலிய) அவிகளைச்‌ சொரிந்து, ஆயிரம்‌ வேட்டலின்‌ — ஆயிரம்‌ வேள்வி வேட்டலினும்‌, , ஒன்‌றன்‌ உயிர்செகுத்து உண்ணாமை -ஒரு விலங்கின்‌ உயியைப் போக்கி (௮து நின்று ஊனை) உண்‌ணாமை நன்று,

அவ் வேள்விகளான்‌ வரும்‌ பயனிலும்‌ இவ் விரதத்‌தால்‌ வரும்‌ பயனே பெரிதென்பதாம்‌.
– **மாதம்‌ ஒரு அச்வமேதமாக நூறு வருஷம்‌ செய்பவனும்‌, மாமிசம்‌ தின்னாதவனும்‌ சமம்‌!” என
“*மாஷஹி-|ம்ரஹி- அஸ்வமேயேன-யோ-யஜேத-மதம்‌ -ஸமா:-ந ஸ்‌ வாஉதி- ௪-யோ-மாம்ஸம்‌ – ஸமம்‌ – ஏதத்‌ – மதம்‌- மம.” என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசன பர்வம்‌. 177 வத அத்‌யாயம்‌ 16 வது ஸ்லோகமும்‌,
“ தவத்தோர்‌ மாம்சம்‌ உண்ணுவஇல்லை”? என்‌ *:ந- பக்ஷ யந்தி – அதோ – மரம்ஸம்‌ தபோயுக்தா :-மனீஷிண:-‘ என்னும்‌ 176 வது அத்யாயம்‌11 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.
*வர்ஷே – வர்ஷே – அஸ்‌வமேயேன – யோ – யஜேத – பாதம்‌ – ஸமா ₹- மாம்ஸானி௪-ந- வாதேத்-ம :- தயோ :- புண்யஹலம்‌ – ஸமம்‌?” என்னும்‌ மனுஸ்மிருதி 5 வது அத்யாயம்‌ 53 வது ஸ்லோகமும்‌ இந்தக் கருத்தையே கூறும்‌, ‘ °
இக் குறளால்‌ வேள்விகளுக்குப்‌ பயனுண்டென்பதே ஆசிரியர்‌ கருத்து. வேள்வி ஒரு. பாபச்செயல்‌. என்பது ஆசிரியர் கருத்து அன்று.
“ஆயிரம்‌ ஏகாதசி உபவாசஙகளக்‌ காட்டிலும்‌ ஒரு சிவராத்திரி உபவாசம்‌ உயர்ந்தது என்று சொல்லுமிடத்து ஏகாதச உபவாசமும்‌ ஒரு புண்‌ணிய வ்ரதம் தான்‌ என்றே சொல்லப்பட்டதாகும்‌.
அங்கனமில்லாது எகதசி உபவாசம்‌ ஒரு பாப காரியமாயிருந்தால் ஒவ்வொரு சிவ ராத்திரிவ்ரதமும்‌: அதைவிட ஆயிரம்‌ மடங்கு பாபத்தைக் கொடுக்கக்‌ கூடியதென்ற விபரீதார்த்‌தமே ஏற்படும்‌, ஆதலால்‌ வேள்வி என்பது ஒரு புண்ணிய காரிபமென்ற கருக்தை3ப இங்கு நாயனார்‌ தெரிவிக்கிறார்‌.

இக் குறளைப்பற்றிச்‌ சிலர்‌ கீழ்வருமாறு அபிப்பிராயப் படுகிறார்கள்‌ :–
தமிழ் நாட்டில்‌ பண்டை சங்கநூல்களில்‌ புலால்‌ உண்ணுவது ஆஷேபிக்கப்படாதது மாத்திரமே யன்றி அது போற்றப்பட்டு மிருக்கறது . பழைய தமிழ் மக்‌கள்‌ புலாலருந்துவதைச்‌ சிறப்பாகத்தான்‌ கொண்டிருக்‌ தார்கள்‌. வேதங்களிலும்‌ யாகம்‌ முதலியவைகளில்‌ மாம்சம்‌ உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத்‌ செரிகிறது.. ஆதலால்‌ திருவள்ளுவர்‌ வைதிகக்‌ கொள்கையினராயிருந்தாலும்‌ முதன்‌ முதலாக புலால்‌ மறுத்தலைப்‌ பிரசாரம்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ என்ன எனில்
அவர் காலத்தில்‌ வடநாட்டிலிருந்து . புத்த சமண மதப்‌ரசாரங்கள்‌ தென்னாட்டில்‌ ‘ ஆரம்பிக்கப்‌பட்டன. . அப்போதிருந்த வைதிக மகான்கள்‌ பெளத்‌தர்களுடையஅஹிம்‌ஸக் கொள்கையைத்‌ தங்களுடைய மதத்தில்‌ சேர்‌.த்துக் கொண்டார்கள்‌. அதனால்தான்‌ இக் காலத்து பிராமணர்கள்‌ புலால்‌ தவிர்த்‌திருந்து இருக்கிறார்‌கள்‌ போலும்‌, : ்‌
ஆனால்‌ இவ்விதம்‌ அபிப்பிராயப்படுவது சரியாகத்‌: தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸா தர்மத்தை உபதே சித்திருப்பது பெளத்த சமயக் கொள்கைகளை அநுசரித்து அன்று, வேதங்களிலும்‌ தர்ம சாஸ்திரங்களிலும்‌. உபதேஸிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸா தர்மத்தை யனுசரித்ததே அகும்‌, அதெப்படியென்றால்‌, வேதங்களும்‌ தர்மசாஸ்த்ரங்களும்‌ ஒருவன்‌ கிரகஸ்தாச்ரமத்தை விட்டு. சன்யாஸாச்ரமத்தை யடையும்‌ போது உலகில் உள்ள எல்லாப்பிராணிகளுக்கும் அபயப்பிரதான ப்ரதிஜ்ஜை செய்து அஹிம்ஸா விரதத்தைக்‌ கைக் கொள்ளும்‌படி. உபதேஸிக்கின்றமன, பெளத்த மதமோ அம் மதத்தில்‌
சேர்ந்தோர்‌ எல்லாருக்குமே கொல்லாமையை உபதேதசிக்கிறது. அனால்‌ அந்த உபதேசம்‌ அனுஷ்டானத்தில்‌ விபரீதமாகவே முடிந்திருக்கிறது. : தற்காலம்‌ பெளத்த மதம்‌ பெருவாரியாக வழங்கும்‌ தேசங்கள்‌ பர்மா, சீனா, ஜப்பான்‌, முதலியன. பொதுலாய்‌ மக்கள்‌ எல்லோரும்‌ அஹிம்ஸா தர்மத்தை யனுஷ்டிக்க வேண்டும்‌ என்கிற இயற்கைக்கு மாறான உபதேசத்தைஅந்த மதம்‌ செய்த தின்‌ பயனாக அந்நாடுகளில்‌ மாமிசம்‌ சாப்பிடாதவர்‌களே இல்லை என்கிற விபரீத அனுஷ்டானம்‌ எற்பட்டுப்‌ போய்விட்டது. பெளத்த நாடுகளில்‌ பெளத்த மக்கள்‌ பாம்பு, தவளைகளைக்‌ கூட தின்று விடுவதாகச்‌ சொல்லப்‌ படுகிறது . ஆனால்‌ பர்மா முதலிய நாடுகளிலுள்ள பெளத்தர்கள்‌ “பெளத்தர்கள்‌ நேராகவே கொல்லுவது இல்லை. துலுக்கர்‌ முதலிய இதரமதஸ்தர்கள்‌ கொல்‌வதை நாங்கள்‌ தின்கிறோம்‌.-அதில் என்ன தோஷம்‌”என வாதிக்கிறார்கள்‌ என்றுகேள்வி. ஆதி புத்த பகவான்‌ மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில்‌ ‘ அவனால்‌ பரிமாரப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத்‌ .தின்‌று விட்டதால்‌ ஏற்பட்ட அதிசாரம்‌ காரணமாகத்‌ தான்‌ என்று புத்தருடைய சரித்திரங்கள்‌ கூறுகின்‌றன, . பிறர்‌ கொன்றதைக்‌ தாம்‌ சாப்பிட்டால்‌ தவறில்லை என்ற கொள்கையை நாயனார் இக் குறளில்‌ –
‘பரிஹசித்‌திருக்கிறார்‌ ; —
தினற்பொருட்டாற்‌ கொல்லா துலகெகெனின்‌
யாரும்‌ விலைப்பொருட்டா லூன்றருவாரில்‌.””
இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ கீழ்வருமாறு உரை ” செய்திருக்கிறார்‌.
தினல்‌ பொருட்டால்‌ = (பேதைமை காரணமாகவல்லது)ஊன் தின்‌கை காரணமாக, உலகு உலகம்‌,-கொல்லாது எனின்‌ – கொல்லாதாயின்‌, விலைபொருட்‌டான்‌ ஊன்தருவார்‌ -பொருள்‌ காரணமாக ஊன்விற்பார்‌, யார்‌ உம்‌ யாவரும்‌, இல்‌ இல்லை.
“பின்‌ நிகழும்‌ தின்கை முன்‌ நிகழும்‌ கொலைக்குக்‌ காரணமாகாமையின்‌, தின்பார்க்குக்‌ காரணத்தானல் வரும்‌ பாவம்‌ இல்லை!” என்ற வாதியை நோக்கி அருத்‌தாபத்தியளவையால்‌ காரணமாதல்‌ சாதித்தலின்‌
இதனான்‌ மேலது வலியுறுத்தப்பட்டது. [இவன்‌ வாங்குவான்‌ என்ற நம்பிக்கையே கொலைஞன்‌ கொல்லுவதற்கு ‘காரணமாசையால்‌], “கொன்று தின்னாது விலைக்குக்‌ கொள்ளுவர்க்குக்‌ குற்மமென்னை யென்பார்க்கு அதனாலும்‌ கொலைப்பாவம்‌ வருமென்பர்‌ மணக்குடவர்‌. இந்தக் கருத்தையே “ய2ி – சேத்‌- வாடிகோ – ஈ – ஸ்யாத்‌ – ௩,த௨ா – வாதகோ “வாடிகார்மாய – த்த்‌ வாதயதி- வை-௩ ;”’ என்னும்‌ மகாபாரதம்‌ ௮னுசாசன பர்வம்‌ 177 வது அத்யாயம்‌ 30-வது ஸ்லோகமும்‌ கூறுகிறது.
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லா மக்களுக்கும்‌ பூர்ண அஹிம்ஸா தர்மத்தை உபதேசிக்க வில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு
மாத்திரம்‌ உயிருள்ள ஒரு செடி.யமினுள்ள இலையைக் கூடக்‌ கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம்‌ உபதேஸிக்கிறது. வர்ணாச்ரமங்களின்‌ படிகளையனுசரித்‌து அஹிம்ஸா தர்மமும்‌ படிப்படியாக கடுமையாக்கப்‌ பட்டிருக்கிறது.
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபனிட தத்தின்‌ முடிவில்‌
.கிருஹஸ்தாச்சமத்தைச்‌ சொல்லிக்‌ “குடும்பத்திலிருந்து கொண்டே சுத்தமான தேசத்தில்‌ யக்ஞங்களைத்‌ தவிர
மற்றைப் பொழுது எவ்வித ஹிம்ஸையையும்‌ செய்யாமல்‌ இருப்பவன்‌ ப்ரம்மலோகம்‌ எனும்‌ மோக்ஷத்தை யடைகிறான்‌?” என்று கூறப்பட்டிருக்கிறது , இவ்வுலகத்தில்‌
யுத்தம்‌ முதலிய காரியங்களுக்கு. நாம்‌ அனேக மக்கள்‌ தம்முயிரைப்பலியிடுதல்‌ எப்படி. அவச்யமான தர்மமாக ஆகிறதோ அவ்விதம்‌ நம்‌ மனுஷ்ய சக்தியை மீறி வானின்று நமக்குக்‌ கிடைத்து நாம்‌ அனுபவிக்கும்‌, மழை, காற்று, ப்ரகாசம்‌, மின்சார சக்தி, முதலியவைகளுக்குக்‌ கைம்மாறக இல்வுலகத்திலுள்ள செடி, கொடிதான்யம்‌ முதல் மனிதன்‌ ஈறாக உள்ள” உயிர்களை வானுலகின்‌ தளர்ச்சி.யின்மையின்பொருட்டு நம்‌ பகுத்தறிவிற்கெடடாத வேத.விதிப்படி. அர்ப்பணம்‌ செய்வதே யக்ஞம்‌,
மநிதர்‌ ஊன்‌ உண்பதற்காக: யக்ஞம்‌ ஏற்பட்டதல்ல. யக்ஞங்களில்‌ சோமலதையோ, சீந்துக்கொடியோ, பாபரகிதமான ஒருகசப்பு ரசத்தை யுடையதே யன்றி மயக்கம் தரும்‌ மதுப்பிரிவைச் சேர்ந்ததல்ல,. இது வைத்திய நிகண்டுகளைப்‌ பார்த்தாலே தெளிவாகசத் தெரிகிறது. ஆதலாலே தான்‌ நம்‌ திருவள்ளுவ நாயனார்‌ கொல்லாமை என்ற அறத்தை(வேத சாஸ்திரங்களின்‌ கொள்கையை யனு சரித்து துறவிகளுக்காகவே துறவறவியலில்‌ சொல்லியிருக்கிறார்‌. வேதியரை “அறுதொழிலோர்‌? என்று மற்றொரு குறளில்‌ சொல்லுவதினாலேயே வேதியர்க்கு, வேட்டல்‌ (யாகங்‌களைச்‌ செய்தல்‌), வேட்டுவித்தல்‌(யாகங்கள்‌ செய்வித் தல்‌] இரண்டும்‌ ஸ்வதர்ம்மெனக்‌ கருதுகிறார்‌,
இதிலிருந்து தற்காலமுள்ள வேதியர்கள்‌ யக்ஞத்தைத்‌தவிர இதர காலங்களில்‌ கொல்லாவிரதம்‌ பூண்‌டு இருப்பதும்‌, திருவள்ளுவர்‌ கொல்லாமையை உபதேசித்து இருப்பதும்‌, பெளத்தம்‌ முதலிய நாஸ்திகமதங்களின்‌ வாசனையால்‌ அல்ல என்பதும்‌, ஆஸ்திக மதமான :அநாதி’வேத சாஸ்த்ரங்களை யனுசரித்தே யென்பதும்‌ அறியப்‌ படுகின்றன. தமிழ்‌ நாட்டு சங்ககாலத்துநூல்களிலும்‌: மாம்சத்தை உண்டு களிக்கும்‌ பழக்கத்தைக்‌ குறிக்கும்‌. பாடல்கள்‌ அறுதொழிலோராகிய வேதிய இல்லறத்‌தவரையோ அல்லது அந்தணரெனும்‌ சொல்லால் குறிக்கப்பட்ட எவ்வுயிர்க்கும்‌ செந்தண்மை பூண்டு ஒழுகும் ஸன்யாஸாச்‌ரமிகளையோ பற்றி எழுந்ததல்ல என்பது வெளிப்‌படை.

54. வேண்டிய வேண்டியாங்‌ கெய்தலாற்‌ செய்தவம்‌
ஈண்டு முயலப்‌ படும்‌.
(ஒருவன்‌), வேண்டிய விரும்பியவற்றை, வேண்டி.யாங்கு -விரும்பியபடியே, எய்தலான்‌ -அடைதலான்‌,-ஈண்டு -இவ்வுலகத்தில்‌, செய் தவம்‌ செய்ய வேண்டிய தவம் ,(ஒருவனால்‌), முயல முயல்‌, படும்‌ -பொருந்தும்
எவை நினைத்தற்கும்‌ அடைதற்கும்‌ அரிதோ அவை யெல்லாம்‌ தவத்தால்‌ அடையப்படும்‌ என
யத்‌. உ௱ரரபம்‌ – உுராம்னாயம்‌.உ௱சாயர்வஒம்‌ – உ௱ரன்வயம்‌ தத்‌ ஸர்வம்‌ – தபஸா – ஸாய”யம்‌-சபோ.ஹி- உமர்‌ அதிக்.ரமம்‌” என்னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌
அதியாயம்‌ 17 வது ஸ்லோகம்‌ கூறுகிறது
மாண்ட மனம் பெற்றார்‌ மாசிலுறக்கத்து வேண்‌டிய வேண்டி யாங்‌ கெய்துதல்‌ வாய்‌ ” என கலித் தொகை-143- வது செய்யுள்‌ கூறும்‌.

55. துறந்தார்க்குத்‌ துப்புரவு வேண்டி மறந்தார்‌ கொல்‌
மற்றை யவர்க டவம்‌.
துறந்தார்க்கு- துறவறம்‌ பூண்டார்க்கு, துப்புரவு -உபசாரத்தை, வேண்டி– செய்யவேண்டி, மற்றையவர்‌கள்‌– இல்லறத்திலுள்ளார்‌, தவம்‌- தவத்தை, மறந்தார்‌கொல்‌ -மறந்தாரோ
மற்றையவர்கள்‌ என்பது ப்ரம்மசாரி, க்ருஹஸ்தன் –
இருவரையும்‌ குறிக்க. ஆற்றல் உடைத்‌தாயினும்‌, துப்புரவு
செய்தல்‌ ப்ரம்மசாரியால்‌ முடியாதாகையால்‌ அச் சொல்‌ க்ருஹஸ்‌தரையே குறிக்கும்‌ என்க.
*இல்வாழ்வா னென்‌பான்‌ இயல்புடைய மூவர்க்கும்‌
நல்லாற்றினின்‌ற. துணை(17 வது குறள்‌)” என்பது ஈண்டு ஒப்பிடத்தக்கது.

5.5- வஞ்ச மனத்தான்‌ படிற்றொழுக்கம்‌ பூதங்கள்‌
ஜந்து மகத்தே நகும்‌.
வஞ்சமனத்தான்‌ படிற்றொழுக்கம்‌- வஞ்சகத்தோடு கூடிய மனத்தை யுடையானின்‌ குற்றமுள்ள நடத்தையை (கண்டு), அகத்து-உடலில்‌, (உள்ள) பூதங்கள்‌ ஐந்தும்‌-ஐந்து பூதங்களும்‌, நகும்‌ -பரிகசிக்கும்‌.
– “கர்மேந்த்ரியாணி – ஸம்யம்ய – ய – ஆஸ்தே – மனஅறா – ஸ்மான்‌ – இந்தரியார்மான்‌. மியாயா- ஆசார ;.-ஸ-உச்யேே த (கீதை.3-6-.) என்‌னும்‌ ஸ்லோகம்‌ இங்கு குறிப்பிடத்‌ தகுக்தது .மனம்‌ கெட்டு, வெளிப் புறத்தில்‌ நன்னடடத்தையோடு கூட இருப்பதாக நடித்தல்‌. துறவறத்தான்‌ கொள்ளத்‌ தகுந்தது அன்று என்பது கருத்‌து.

56. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத நூலோர்‌
தொகுத்தவற்று ளெல்லாம் தலை.
நூலோர்‌- சாஸ்திரங்கள்‌ எழுதிய பெரியோர்‌,தொகுத்தவற்றுள்‌ எல்லாம்‌–தொகுத்துக்கூறிய-தர்மங்‌கள்‌ எல்லாவற்றுள்ளும்‌, தலை சிறந்தது, (துறவறத்‌தான்‌) பகுத்து – (உண்பதனை பல சிறு உயிர்கட்கும்‌,பிரித்துக் கொடுத்து , உண்டு–உண்பித்து, பல்லுயிர்‌ -பலப்ராணிகளையும்‌, ஓம்புதல்‌ காத்தல்‌, ஆகும்‌,
வானப்ரஸ்தன்‌ ஒருவருஷத்திற்கு வேண்டிய பொருளைச்‌ சேகரித்து வைத்துக் கொள்ளலாமென்றும்‌- அதிதிகளை உபசரிக்க வேண்டும்‌ என்றும்‌ தர்மசாஸ்த்‌ரங்கள்‌ கூறுவதை ஈண்டு இந்நூலாசிரியர்‌ கூறியிருத்தல் நோக்கத் தக்கது, இக்குறளில்‌ துறவறத்தான்‌ என்பது ‘வானப்ரஸ்தனை மாத்திரம்‌ குறிக்கும்‌.”
“ஸமா – நிசய – ஏவ-வா”’ என்கிறது மனு ஸ்ம்ருதி ,,6 – 18 வது ஸ்லோகம்‌,

57-. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்‌
புல்லறி வாண்மை கடை,
நில்லாதவற்றை – நிலையில்லாத பொருள்களை, நிலையின-நிலை யுள்ளவை, என்று, உணரும்‌,-புல்லறிவாண்மை.-சிற்‌றறிவைக்‌ கொள்ளுதல்‌, கடை-இழிந்தது – ஆகும்‌.
இப் பொருள்‌ நித்தியம்‌ இப் பொருள்‌ அநித்‌தியம்‌.
என்ற விவேகம்‌ சன்னியாசிக்கு வேண்டும்‌ என்பது இக்‌ குறளின்‌ கருத்து
.
58. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்‌
பெருமை யுடைத்திவ்‌ வுலகு.
இவ்வுலகு – இந்த உலகம்‌, ஒருவன்‌, நெருநல்‌ -நேற்று, உளன்‌-இருந்தான்‌, இன்று– இப்பொழுது.இல்லை -இறந்து விட்டான்‌, என்னும்‌ – என்று கூறப்‌படும்‌, பெருமை-பெருமையை, உடைத்து.
இங்குப்‌.பெருமை என்பது அதற்கு மாறான இழிவு என்ற. பொருளைக்‌ கொண்டது.
ஸுஷ்ம சராீரத்தோடு கூடிய ஜீவன்‌ ஸ்தூல சரீரமின்றி ஒரு செயலையுஞ்‌ செய்யத் தகாதவனாகையாலும்‌,-ஸ்தூல சரீரம்‌ எப்போது அழியும்‌ எனத் திண்ணமாய்க் கூற இயலாமையாலும்‌, அது நன்னிலையில்‌ இருக்கிறது என எண்ணுங்காலத்தே அழியுமாகையாலும்‌ அதனை நிலையுள்ளது என்று எண்‌ணுதல்‌ சன்னியசிக்குத் தகாது .
“நேற்று இருந்தான்‌, இப்பொழுது இறந்தான்‌?”என ருக்வேதம்‌ 10 வது மண்டலம்‌ 85 வத ஸூக்தமும்‌,
அதர்வண வேதம்‌ 9வதுகாண்டம்‌ 10 ஸூக்‌ தமும்‌, “இப்‌போதே நான் கண்ட அவன்‌ எவ்வாறு இறந்தான்‌!” என
“இதானீம்‌- தாவத்‌ – எவ – ௮ஸெள்‌ -மயா . தீருஷ்ட :- கமம்‌ – என்னும்‌ மகாபாரதம்‌ -சாந்தி பர்வம்‌-227 வது அதயாயம்‌ 99-100 வது ஸ்லோகமும்‌ கூறும்‌,

59. குடம்பை தனித்து ஒழியப் புட் பறந்தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
உடம்போடு – ஸ்தூல சரீரத்‌துடன்‌, உயிரிடை -உயிர்க்கு,(உள்ள) நட்பு – சம்பந்தம்‌, குடம்பை-மூட்டை, தனித்து , ஒழிய -கிடப்ப, புள்‌ – பறவை,-பறந்தற்று-பறந்தது போன்றது.
பறவை குஞ்சாகப்‌ பொறிக்கப்படும்‌ வரை அதற்கு முட்டை யோட்டுடன்‌ சம்பந்தமும்‌, குஞ்சாகப்‌ பொறிக்‌கப்பட்ட பின்னர்‌ அதற்கு அதனோடு சம்பந்தமின்மையும்‌, அது வெளியில்‌ எறியப்படுவதும்‌ நோக்கத்தக்கன.

61. யாதனின்‌ யாதனின்‌ னீங்கியொன் நோதல்‌
அதனி னதனி னிலன்‌.
யாதனின்‌ யாதனின்‌ – எவ்வெப்பொருள்களினின்‌றும்‌, நீங்கியான்‌ – பற்றை விட்டவன்‌, ௮தனின்‌ அதனின்‌ -அவ்வப்பொருள்களினின்றும்‌, கோதல்‌ இலன்‌ – வருத்‌தத்தை அடையான்‌.
இக் கருத்தையே “யதோ யதோ -நிவர்ததே – தத :- சத : விமுச்யதே – நிவர்தனாத்‌ – ஹி. ஸர்வதோ … ஈ -வேத்தி – ௨௱;வூம்‌ – அணு – அடி என்னும்‌ மகாபாரதம்‌
உத்யோக பர்வம்‌ 36 வது அக்யாயம்‌ 14 வது ஸ்லோகமும்‌
“யதா.யதா-௪-பர்யேதி.லோக தந்த்ரம்‌ அஸாரவத்‌ – ததா .. ததா… விராக:..-அத்ர – ஜாயதே -ந. அத்ர . ஸம்மய:”” என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்‌வம்‌ 374 வது அத்யாயம்‌ 4 வதுஸ்லோகமும்‌ கூறும்‌.
பொருளிள் கண்‌ உள்ள பற்றே அப் பொருள் பற்றி அரும்‌ வருத்தத்திற்குக்‌ காரணமே யன்றி, பொருள்‌ தானே யில்லை என்பது இக் குறளின்‌ கருத்து.

61. அடல்வேண்டு மைந்தன்‌ புலத்தை விடல்‌ வேண்டும்‌
வேண்டிய வெல்லா மொருங்கு
ஐந்தன்‌- ஐந்து இந்திரியங்களின்‌, புலத்தை = விஷயங்களின்‌ நுகர்ச்சியை -, அடல்‌ வேண்டும்‌ – .அழியும்படி செய்ய வேண்டும்‌ ; வேண்டிய எல்லாம்‌ –சேர்க்கப்பட்ட பொருள்கள்‌ எல்லாவற்றையும்‌, ஒருங்கு – ஒரே காலத்‌தில்‌, விடல் வேண்டும்‌.
ஒருவன்‌ துறவி ஆகும்போது பெண்ணாசை, மண்‌ணாசை, மக்களாசை விட்டேன்‌, விட்டேன்‌, விட்டேன்‌ எனக்‌ கூறுதல்‌ யாவரும்‌ அறிந்ததே.
உண்மையாய்‌ அவற்றை விடுவதற்கு இன்றியமையாத காரணம்‌ அவன்‌, தனது இந்திரியங்களை முழுவதும்‌ அடக்குதலே யாகும்‌ என்பதை இக்குறள்‌ அறிவிக்கின்றது –

62. யானென தென்னுஞ் செறுக்கறுப்பான்‌ வானோர்க்கு
உயர்ந்த வுலகம்‌ புகும்‌.
(உடல்‌ உடலையும்‌) (ஐந்து ஐந்து இந்திரியங்‌களையும்‌), (வேண்டிய எல்லாம்‌ தேடிய பொருள்கள்‌ எல்லாவற்றையும்‌), யான்‌, எனது, என்னும்‌, செறுக்கு அறுப்பான்‌ -மயக்கத்தைப்‌ போக்குபவன்‌, வானோர்க்கு உயர்ந்த தேவதைகளுக்கும்‌ அடைதற்குச்‌. சிறந்த, உலகம்‌ பிரம்ம லோகத்தை, புகும்‌–அடைகின்றான்‌.
வானோர்க்கு உயர்ந்த உலகம்‌ என்பதற்குத்‌ தேவதைகள்‌ இருக்கும்‌ ஸ்வர்க்கத்திற்கும்‌ மேற்பட்ட உலகம்‌ எனப்‌ பொருள்‌ கூறினும்‌ பொருந்தும்‌, –
உலகம்‌ என்பதற்கு ப்ரம்மாவின்‌’ உலகம்‌ என்றும்‌: பிரம்மம்‌ ஆகிய உலகம்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌,-
சுத்தமான தியான யோகத்தால்‌ நிர்மமர்களாயும்‌, நிரஹங்க்ருதர்களாயும்‌ இருக்கும்‌ மகாத்மாக்கள்‌ மேலான்‌ லோகத்தை. யடைகின்றனர்‌ என
தியான -யோக -பாஙத்யேன . நிர்மமா:. நிரஹங்க்ரு தா௨ஆப்‌ – மஹாக்மான :-, மஹாந்தம்‌ – லோகம்‌ – உத்தமம்‌?” என்னும்‌. மகாபாரதம்‌ அஸ்வமேத பர்வம்‌ 51 வது அத்யாயம்‌ 22வது ஸ்லோகமும்‌,
“நிர்மமர்களாயும்‌ நிரகங்‌க்ருதர்களாயும்‌ இருப்பவர்கள்‌ திண்ணமாய்‌ முக்தியை அடைகின்றனர்‌?? “நிர்மமோ -நிரஹங்காரோ .- முச்யதே அத்ர-ஸம்பாய:”” என்னும்‌ மேற்சொன்ன பர்வம்‌ 36வது அத்யாயம்‌ 19 லது ஸ்லோகமும்‌ கூறும்‌.
இக் கருத்தையே, – ம்ருத்யு த்ர்யக்ஷரம்‌ – ப்ரஹ்ம- ஸு றாஸ்வதம்‌ – மமேதி-௪- வேத்‌ ம்ருத்யு :- ௩- மமேதி . ௪ . ஸமாஸாவதம்‌’ என்னும்‌ மேல் சொன்ன 51 வது அத்யாயம்‌ 29 வது சுலோகமும்‌ கூறுகிறது:

63. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப்‌ படும்‌.
பற்று, அற்ற கண்ணே-முற்றிலும்‌ நீங்கிய பொழுதே , பிறப்பு-மறு ஜன்மம்‌, அறுக்கும்‌ நீங்கும்‌; மற்று–அல்லாத இடத்து -நிலையாமை – நிலையில்லாத் தன்மை யாகிய பிறப்பும்‌ இறப்பும்‌, காணப்படும்‌ -தோன்றும்‌.
ஜனன மரணங்களாகிய காரியத்திற்குப்‌ பற்றே சிறந்த காரணம்‌ ஆகையால்‌ காரணமாகிய பற்று அழியாத வரையில்‌ காரியமாகிய ஜனன மரணங்கள்‌ அழியா என்பது கருத்து. பற்று இல்லையேல்‌ பஞ்சபூதங்களை வெல்லுகிறான்‌ என நிவ்ருத்தம்‌ . ஸேவமானஸ்து – பூசான்‌ – அத்யேதி – பஞ்ச – வை” என்னும்‌ மநுஸ்ம்ருதி-19-90-கூறும்‌

பொருள் அல்லாதவற்றைப் பொருளென்‌று உணரும்‌
மருளானா மாணாப்பி றப்பு
பொருளல்லவற்றை- _மெய்ப்பொருளல்லாத வற்றை, பொருள்‌ -மெய்ப்பொருள்‌, என்று, உணரும்‌ -அறியும்‌,-மருளான்‌ — அஞானத்தால்‌, மாணாப்பிறப்பு- சிறக்காத பிறப்பு, ஆம்‌ – உண்டாகும்‌,
பிறப்பு என்பது இறப்பிற்கும்‌ உபலக்ஷணம்‌ ஆகும்‌,
பிறப்பு துன்பமென்பதும்‌ அப்பிறப்பிற்கு முதற்காரணம்‌ (உபாதான காரணம்‌) அவிச்சை (அவித்யை) யென்பதுங்‌ கூறப்பட்டன. என “இக்குறளின்‌ உரையின்‌ இறுதியில்‌ கூறியிருக்கிறார்‌ பரிமேலழகர்‌, —
மருள்‌ என்பது யாது? ஒரு கயிற்றை யிருளில்‌ கண்டு பாம்பு எனத்‌ தவறி எண்ணுகிறோம்‌. ஆங்குள்ள பொருள்கள்‌ இரண்டு ஆகும்‌. ஒன்று கயிறு, மற்றொன்று பாம்பு, அவற்றுள்‌ கயிறு என்பது மெய்ப்பொருள்‌ ;பாம்பு என்பது மெய்யல்பொருள்‌, . அவ்வாறே உலகத்‌தில்‌ தோன்றும்‌ ஒவ்வொரு பொருள்களிலும்‌ கடவுளும்‌ தோற்றப் பொருள்களும்‌ உள; கடவுள்‌ கயிறு போன்‌றது .மரம்‌ முதலிய எல்லாப்பொருள்களையும்‌ கடவுளாக, நினைத்தல்‌ மருளின்மை; மரம்‌ முதலியவாக நினைத்தல்‌ மருள்‌. மருள்‌ என்பதையே அவித்யை என்பர்‌.
“யத்‌ – அவித்யா – விலாஸேன – வூஓத-வெளதிக ஸ்ருஷ்டய :”” என்று கூறுகிறது வேதாந்தபரிபாஷை.
கடோபனிஷத்தில்‌ முதல்‌ அத்யாயம்‌ 8 வத வல்லி 7,8 மந்த்ரங்கள் அக்ஞானத்தால்‌ பிறப்பையும்‌ ஞானத்தினால்‌ மறுபிறப்பற்ற பதவியையும்‌ ௮டையலாமென்று கூறுகின்றன.

68. இருணீங்கி யின்பம்‌ பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மருள்‌ -அஞ்ஞானத்தை , நீங்கி-நீக்கி, மாசறு காட்‌சியவர்க்கு குற்றமற்ற அறிவுடையோருக்கு, இருள்‌ -பிறப்பிற்குக்‌ காரணமாகியது, நீங்கி -நீங்க, இன்பம்‌ – பேரின்பமாகிய வீடு, பயக்கும்‌ -ஸித்திக்கும்‌, —
இருள்‌ என்பதும்‌ தமஸ்‌ என்பதும்‌ ஒருபொருட்‌ கிளவியாகும்‌:-தமஸ்‌ என்பதற்கு ஸம்ஸார நியாமகம்‌ எனசங்காாசார்ய ஸ்வாமிகள்‌ பிரஹதாரண்ய உபநிஷத் (4-4:10) பாஷ்யத்தில்‌ பொருள்‌: கூறியிருத்தல்‌ நோக்கத் தககது-
மருள்‌ என்பதும்‌ அவித்தை என்பதும்‌ ஒருபொருட்‌. கிளவி யாகும்‌, -ஆனந்த ஸ்வரூபமான பிரம்மமே மோக்ஷத்‌தின்‌ ஸ்வரூபம்‌ என்னும்‌ உபநிஷத் கொள்கையை யனுசரித்தே இங்கு ஆசிரியர்‌ மோக்ஷத்தை இன்பமெனக் கூறுகிறார் .
“வீடானது நிரதிசய பொருளுணர்வே என்பதும்‌-அதுக்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் உணர்வே என்பதும் கூறப்பட்டன -என இக்குறளுரையில்‌ பரிமேலழகர்‌ கூறுகிறார் –
“அவித்யா – நிவ்ருத்தி- உபலக்ஷித – ஆனந்த – ஸ்வரூப அவாப்தி :- மோஷ:””. என்று கூறும்‌ வேதாந்த நூல்கள் –
இங்கு கேவலப் பொருள்‌ என்பது குணம்‌ குறி இவற்‌றைக்‌ கடந்த பரம் பொருளையே குறிக்கும்‌, வீடு என்றும்‌ மோக்ஷம் ஒரு காரணத்தால்‌ உண்டாகின்ற என்றும்‌ வேதாந்த சாஸ்தாம்‌ கூறுவதில்லை. ஒரு நாள்‌ உண்டான பொருளாயிருந்தால்‌ அதற்கு என்றாவது ஒருநாள்‌ நாசம்‌: ஏற்பட்டே தீரும்‌. நாசமற்ற நித்யமான வஸ்துவே மோக்ஷம் என்பதும் எல்லாச் சமயங்களின்‌ கொள்கை யாகும்‌.வேதாந்‌தக் கொள்கையின்படி. ஒவ்வொரு ஆத்மாவும்‌, உண்மையில்‌ நித்ய முக்தமாகவே யுள்ளது. அது உண்‌மையில்‌ மோக்ஷ ஸ்வரூபமே. ஆதலால் மோக்ஷம்‌ புதிதாக உண்டாகும்‌ பொருளன்று. ஆதலாலேயே அதற்கு
முடிவுமில்லை, மூடிக் கொண்டிருந்த மேகம்‌ விலகுங்‌கால்‌ பூர்வமே யுள்ள சூர்யன்‌ ப்ரகாசிப்பது போல்‌ மெய்‌யறிவால்‌ மருள்‌ நீங்க, என்றும்‌ வீடாகவே யுள்ள ஆத்மா பிரகாஸிக்கின்றது. ஆதலால்‌ மோக்ஷம்‌ ஞானத்தால்‌ உண்‌டாகிறது என்ற, உலக வழக்கு பெயரளவிலேயே”ஒழிய ‘உண்மை யன்று.
‘ பகவத்‌ கீதையில்‌ ஸ்ரீ கிருஷ்ண பகவான்‌ அர்ச்சுனனைப்‌ பார்த்து கூறுவதாவது -துர்யோதனாதிகளையெல்லாம்‌. நான்‌ முன்னமேயே ..கொன்று விட்‌டேன்‌ (மயா – ஏவ – ஏதே – நிஹதா :- பூர்வம்‌ – ஏவ), நீ ‘பெயரளவில்‌. மாத்திரம்‌ (அதாவது நிமித்த மாத்திரமாக] அவர்களைக்‌ கொல்லுபவன்‌: ஆகுக (நிமித்த – மாத்ரம்‌ -பவ – ஸவ்யஸாசின்‌ ”?) 11 வது அத்யாயம்‌ 33 வது ஸ்லோகம்
கீதையில் நிமித்த மாத்ரம்‌” என்றுள்ள வாக்யத்தை யனுசரித்தே. பரிமேலழகர்‌ உரையிலும்‌ ஞானத்தை
மோக்ஷத்துற்கு நிமித்த காரணமென வழங்கப்பட்டிருக்கிறது-. இதைக் கொண்டு வீடு என்னும்‌ மோஷம்‌ ஞானமென்னும்‌ மெய்யுணர்வால்‌ ஆக்கப்பட்ட ஒரு பொருள்‌ என்று கொள்வதற்கில்லை. அவ்வீடு ஸூரியனைப்போல்‌ நிதய ப்ரகாசமாய்‌ விளங்கும்‌ நித்யானந்த மயமான ஆத்ம ஸ்வரூபமே.

66. – எப்பொரு ளெத்தன்மைத்‌ தாயினு மப்‌ பொருள்
மெய்ப்பொருள்‌ காண்பது அறிவு .
எப்பொருள்‌ – எந்தப்பொருளும்‌, எத்தன்மைத்து ஆயினும்‌ -எத்தன்மையை உடையதாகத்‌ தோற்றினும்‌-அப்பொருள்‌ – அப்பொருளிடத்தில்‌, (அதற்கு ஆதாரமாய்‌ நிற்கும்‌)-மெய்ப்பொருள்‌ – மெய்ப்பொருளாகிற கடவுளை, காண்பது-காண்டல்‌, அறிவு – அறிவு(ஆகும்‌)’
*இவர்‌ மறைத்து எப்பொருளிலும்‌ விளங்குகிறார்‌–இவர்‌ சூஷ்ம தர்சிகளால்‌ சூஷ்ம ச்ருஷ்டியால்‌ பார்க்கப்‌ படு கின்றார் ‘” என கடோபனிஷத்‌ (1-3-12) கூறுகிறது .
ஒரு பொருளில்லாக விடத்து அப்பொருளிருப்பாதாக நினைத்தலை சங்கராசாரிய ஸ்வாமிகள்‌ அத்‌யாஸம்‌ என்பர்‌,

67. கற்றீண்டு மெய்ப்பொருள்‌ கண்டார்‌ தலைப்‌ படுவர்‌
மற்றீண்டு வாரா கெறி.
ஈண்டு -இம்மக்கட்பிறப்பின்கண்‌, கற்று-ஆசிரியர் இடத்தில்‌ ஸ்ரவணம்‌ செய்து , மெய்ப் பொருள்‌ பரம்‌ பொருளாகிய கடவுளை, கண்டார்‌.-அபரோக்ஷமாகக் கண்டவர்‌, மற்று மறுபடியும்‌, ஈண்டு இவ்வுலகத்‌திற்கு, வாராகெறி -வாராத மார்க்கத்தின்‌ கண்‌, தலைப் படுவர்‌ தோன்றுவர்‌,
மெய்ப் பொருளை .அபரோஷமாகக்‌ காணும்‌ வரையில்‌ ஸ்ரவணம்‌ செய்ய வேண்டுமென்பது கருத்து.
இதனையே ப்ருகதாரண்யகஉபநிஷத்தில்‌ உள்‌ள கேள்வி”
என்பதற்கு அர்த்தமாக சங்கராசார்ய ஸ்வாமிகள்‌ கூறுதல்‌ நோக்கத்தக்கது. அக்னி ஹோத்ரத்திற்கு. அரிசி வேண்டுபவன்‌ அரிசி கிடைக்கும் வரை நெல்லுக்‌. குத்துதலை அவர்‌ உதாரணமாகக்‌ காட்டியதும்‌ நோக்கத் தக்கது –
இங்குப்‌ பரிமேலழகர்‌ கூறுவதாவது :- “கற்று? என்றதனால்‌ பலர் பக்கலினும்‌, பலகாலும்‌ பயிறலும்‌ “ஈண்டு?”என்றதனால்‌ வீடு பேற்றிற்கு உரிய மக்கட் பிறப்பினது பெறுதற்கருமையும்‌ பெற்றாம்‌.
ஈண்டு வராத நெறி-வீட்டு நெறி.
வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற் பொருளை உணர்தற்கு உபாயம்‌ மூன்று ; அவை கேள்வி,விமரிசனம்‌-பாவனை, என்பன. அவற்றுள்‌ கேள்வி இதனால்‌ சொல்‌லப்பட்டது,
கடவுளைத் தவிர வேறு எப்பொருளும்‌ கற்பனையே.-கடம்‌ என்பது சரீரத்தைக்‌ குறிக்கும்‌, ஸ்தூலம்‌,.ஸூஷ்மம்‌, காரணம்‌, என்னும்‌ மூவகைச் சரீரங்களுள்‌ உள் நின்ற பரம் பொருளே கடவுள்‌. இதையே உபனிடதங்கள்‌ * சாரீராணாம்‌ ஆத்மா? என்று கூறுகின்றன–ஆத்ம சாஸ்த்திற்கும்‌ “சரரீரக மீமாம்ஸை!” எனப்‌பெயர்‌ வழங்குகிறது. கடவுள்‌ மெய்ப் பொருள்‌ என்பதாலேயே மற்றைப் பொருள்கள்‌ பொய்ப் பொருள்கள்‌ எனப் பெறப் படுகிறது-.
சாந்தோக்ய உபநிஷத்தில்‌ பின்வரும்‌ முறையில்‌ தத்வ விசாரணைக்கு வழி காட்டப்பட்டிருக்கிற.து :-
ப்ரம்ம சத்யம்‌, ஜகன்மித்யா (மித்யா — கற்பனை) என்‌பது வேதாந்த ஸித்தாந்தம்‌. மட் குடத்திற்குக்‌ காரணம்‌ மண்‌ ;-மண்ணிற்குக்‌ காரியம்‌ மட்குடம, மட்குடத்தை ஆராய்ந்து பார்த்தால்‌ குடமென்பது கற்பனை என்றும்‌ உண்மையில்‌ மிஞ்சுவது மண்ணே. என்னும்‌ தெரிகிறது.
அவ்விதமே மண்ணுக்குச்‌ காரணமாயுள்ள ஒரு பொருளைக்‌ கண்டுபிடித்துவிட்டால்‌ அதுமெய்யாகவும்‌ மண்‌ கற்பனையாகவும ஆகி விடும் , அதற்கொரு காரணம்‌ அதற்கொரு காரணம்‌ என்று தேடிக் கொண்டே போகுமளவில்‌ எல்லாவற்றிற்கும்‌ பரம காரணமாம்‌ ப்ரஹ்மம் என்ற ஒரு பரம்பொருளே மிஞ்சுகிறது.௮துவே உண்மைப் பொருள்‌,-அதற்கு வேறொரு காரணமில்லை. தத்வ விசாரத்தால்‌ ஏற்படும் ஞானமானது தேஜோமயமான நெருப்பைப்‌ போன்றது- பொய்ப்பொருள்களை எல்லாம்‌ எரித்து விடுகிறது.
நெருப்பு அவ்விதம்‌ எரித்துவிட்டு வெண்மையான பஸ்‌மத்தை மிஞ்ச வைக்கிறது . நீற்றுப் போன. திருகீறாம்‌
அர்த பஸ்மக்தை எரிக்க நெருப்புக்கு சக்தியில்லை. அன்‌.
வெண்மைப்பொருளே உண்மைப்பொருள்‌, தத்வஞானம்‌-
என்னும்‌ நெருப்பு கற்பனைப்பொருள்கள்‌ , யாவற்றையும்‌ எரித்‌து விட்டு ப்ரஹ்மம் எனும் பரம் பொருளை மிஞ்ச வைக்‌கிறது -அதுவே வெண்மையாம்‌ உண்மைப் பொருள்‌. அதுவே வீடு, நான்‌ எனும்‌ அகங்காரத் தொகுதியில்‌ உள்ள ஸ்தூல ஸூஷ்ம காரண சரீரங்களை அத் தத்வ விசார
ஞானாக்னி எரிக்கும் போது மிஞ்சும்‌ சுத்த நித்ய அறிவே அம் மெய்ப்பொருள்‌. தன்னைத் தான்‌ காணும்‌. அறிவும்‌ அதுவே , அது பற்றி அதற்கு ஸ்வயம் ஜோதிஸ்‌ என்ற பெயர்‌ விளங்குகிறது.
விஷ்ண ஸஹஸ்ர நாமத்திலும்‌ “தத்‌வத்தை அறிவதும்‌ அத்தத்வமே. அறிவறும்‌ அறியப்‌ படுவதுமாயும் யுள்ள பொருள்‌ ஒரே ஆத்மாவே’? எனப்‌ பொருள்‌ படும்படி “தத்வம்‌, தத்வவித்‌, ஏகாத்ம -என்று மூன்று நாமங்கள்‌ வரிசையாய்‌ அமைந்திருக்கின்‌றன
ஸ்ரவண மனன நிதித்யாஸனங்களென-உபனிடதங்களில்‌ முதற்பொருளை உணர்தற்கு மூவகை. உபாயங்களாக சொல்லப்பட்டவைகளில்‌ முதல்‌ உபாயமாம்‌ ஸ்ரவணத்தை இக்குறள்‌ கூறுகின்றது,

68. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்‌
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
உள்ளம்‌ – மனம்‌- ஒர்த்து- -மனனஞ்செய்து, உள்ளது-மெய்ப்பொருளை, ஒரு தலையா -நிச்சயமாக, உணரில்‌ -அறிந்தால் -பேர்த்து – மறுபடியும்‌, பிறப்பு- மறுபிறப்பு-உள்ள வேண்டா -நினைக்க வேண்டா.
இக் குறளால்‌ விமர்சனம்‌ என்னும்‌! மனனம்‌ கூறப்‌ பட்டது.

பிறப்பென்னும்‌ பேதைமை நீங்கச்‌ சிறப்பென்‌னும்‌
செம்பொருள்‌ காண்ப தறிவு.
பிறப்பு என்னும்‌ பேதைமை-பிறப்பிற்குக்‌ காரணமாகிய அவித்யை, நீங்க, சிறப்பு வீடு, என்னும்‌ என்று சொல்லப்படும்‌, செம்பொருள்‌ -ஸ்வயம்‌ ஜோதியாகிய கடவுளை, காண்பது – அபரோக்ஷமாகப்‌ பார்த்தல்‌,-அறிவு-ஞானம்‌ ஆகும்‌,
இக்குறள்‌ நிதித்யாஸன மென்னும்‌ ஏகாக்ர தியானத்தைக்‌ கூறுகின்றது. பேதைமையே பிறப்பிற்குக்‌ காரணமென்பது அத்வைத வேதாந்தத்தின்‌ கொள்கை,
ஞானேன – து – தத்‌.- அக்ஞானம்‌ – யேஷாம்‌-நா சிஸிதம்‌ – ஆத்மன :- தேஷாம்‌ – ஆதித்யவத்‌- சஞானம்‌ – பிரகாஸயதி – தத்பரம்‌” (கீதை 5-16) என்பது கீதாச்சார்யனின் உபதேஸம்

70. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னும்‌
துன்பத்துட்‌ டுன்பங்‌ கெடின்‌.
அவா – பேராசை, என்னும்‌, துன்பத்துட்‌ துன்பம்‌ பெருந்துன்பத்தைக்‌ கொடுக்கும்‌ பொருள்‌, கெடின்‌ – அழிந்து போனால்‌, இடையறாது – இடைவிடாமல்‌, ஈண்‌டும்‌-இவ்வுலகத்‌தின்‌ கண்ணும்‌, இன்பம்‌ பேரின்பம்‌,வரும்‌.
ஆசை யறுபட்டால்‌ இந்த ஜன்மத்திலேயே, அதாவது ,
சாவதற்கு முன்னமேயே மோஷங்கிடைக்கும்‌. “ஸக்‌னோதி – இஹ- ஏவ -ய:-ஸோஷுும்‌- ப்ராக்‌ – சரீர விமோஷணாத்‌- காம-க்‌ரோத- உத்ஒவம்‌ – வேழம்‌ -ஸ-யுக்த –ஸ-ஸ-௦$-நர :*? (கீதை 5-23) என்பது: இவ்விஷயத்தில்‌ கீதையின்‌ உபதேசம்‌,
“ந – அஸ்தி-ரா.ழ- ஸமம்‌ – துக்கம்‌, ந – ௮ஸ்தி – த்யா.ம-ஸமம்‌ – ஸுங்வூம்‌””.சாந்தி – 337-6,

71. ஆரா வியற்கை யவாநீப்பி னந் நிலையே
பேரா வியற்கை தரும்‌.
ஆராவியற்கையவா – நிரம்பாத் தன்மையை யுடைய அவா,-நீப்பின் -நீங்கின்‌ (அத), அந் நிலையே அத்த நிலையின்‌ கண்ணே, பேரா வியற்கை -நித்‌தியமான வீட்‌டினை, தரும்‌–கொண்டுவரும்‌..
“ எப்பொழுது எம் மனிதனுக்கு எல்லா காமங்‌களும்‌ நீங்குகின்றனவோ, அப்போதே அவன்‌ ஈண்டு ப்ரம்மமாகிறான்‌?? 2-3-147 என கடோபனிக்ஷத்தும்‌,
“எவன்‌ காமமற்று பிரம்மத்தில்‌ ஈடுபடுகின்றானோ அவன்‌ பிராணன்‌ வெளிக்கிளம்புவதில்லை. பிரம்மமாக இருந்து
பிரம்மமாகவே ஆகின்றான்‌” (4-4-6) என ப்ருஹதாரண்ய:கோபனிஷத்தும்‌, “எவன்‌ ஒன்றையும்‌ விரும்பாமலும்‌:வெறுக்காமலும்‌ இருக்கின்றானோ அவன்‌ இவ்வுலகிலேயே பிரம்மமாக ஆகின்றான்‌ ”? “என:
யோ – ந – காமயதே-.இஞ்சித்‌ – ந – இஞ்சித்‌ – அவமன்யதே – இஹ – லோகஸ்‌-ய எவ- எஷ;ஃப்ரஹ்ம ஸூயாய – கல்பதே”’ என்‌னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 47 வது ௮த்யா
யம்‌ 8 வது ஸ்லோகமும்‌ .கூறும்‌,
ஆராயியற்கையவா-என்பது ந -ஜாது – காம :-காமானாம்‌-உபஸோ ஹேன ஸாம்யதி-ஹவிஷா – க்ருஷ்ணவர்த்மா – இவ-ஸூய – ஏவ -அ ஷிவர்யதே” என்னும்‌ மகாபாரதம்‌ ஆதி பர்வம்‌ 69 வது அத்யாயம்‌ 53 வது ஸ்லோகத்தினால்‌ கூறப்பட்டிருக்‌கிறது -. ஆசையை விட்டு ஒழிக்க வேண்டுமென்பதைப்‌ பற்றிக்‌ 8ீழ்‌ குதிப்பட்டிருக்கும் ஸ்லோகங்களும்‌ கவனிக்கத்தக்கன.
பத்‌. ப்ருதிவ்யாம்‌ வ்ரீஹியவா-ஹிரண்யம்‌ . பசவ உடஷித்றிமா ஏகஸ்மாபி . ந பர்யாப்தம்‌.தஸ்மாத்‌ ..தீருஷ்ணாம்‌ – பரித்யேஜேத்‌ |
யா – உமஸ்தீயஜா – ஐ-பர்மதிஹி யா . ௧. ஜீர்யதி . ஜீர்யத :|ய :–அ௮அளெள – ப்ராணாந்திக.. ேே ராம: தாம்‌ – தருஷ்ணாம்‌
ஆதிபர்வம்‌ 79-—13—14_
யத்‌.௪.-காம. ஸையூம்‌. லோகே யத்‌ .ச: திவ்யம்‌- மகத்ணாவும்‌ |
த்ருஷ்ணா . ஆய -ஸ-ம௦வ/ஸ்ய -ஏதே-௩ அர்ஹத:– 0 ஷா ஐஸ்மீ ம்‌: கலாம்‌-சாந்தி…282-.6.
திருக்குறளாசிரியர்‌ ஜீவன் முக்தியைத் தங்கொள்களை யாகக் கொண்டனர்‌ என்பதை இக்குறள்‌ அறிவிக்கின்‌றது ..

72. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும்‌ தான் முந் துறும்‌.
மற்றொன்று – ஊழைத்தவிர்ச்து வேறொன்றை, .-சூழினும்‌ — நினைத்தாலும்‌, தான்‌ -ஊழே, முந்து- முன்‌னர்‌, உறும்‌ நிற்கும்‌; (ஆதலான்‌), ஊழின்‌ -ஊழைக்‌காட்டிலும்‌, பெருவலி–அதிகவலியுள்ளது, யர -யாவைஇருக்கின்றன?
தைலமே.. அதிக பலமுடையது என மகாபாரதத்‌தில்‌ *மைவம்‌- ௪-பரமம்‌ – மன்யே – பெளருஒம்‌-௪- அபி – அனர்மகம்‌’” என்றும்‌ ஆதிபர்வம்‌ 21 வது அத்யாயம்‌ 5 வது லோகமூம்‌சபா பர்வம் 74-35-ஸ்லோகமும் கர்ணபர்வம்‌ 6 வது ௮த்‌யாயம்‌ 3 வது ஸ்லோகமும்‌, கூறும்‌,
மகாபாரதம்‌ கர்ணபர்வம்‌ 22 வது அத்யாயம்‌ 31 வது ஸ்லோகத்தில்‌ “டைவம்‌ -து – பலவததரம்‌” என்று கூறப்பட்டிருக்‌கிறது.
ஸ்ரீமத்‌ ராமாயணத்திலும்‌ அயோத்தியா காண்‌டம்‌
ெ ‘சளமித்ரே – யோத்யும்‌- உத்ஸஹதே – 4 மான்‌? என்னும்‌ 91 வத சுலோகத்திலும்‌, ஜைவம்‌ -௪ – தர- ப்ரபாவம்‌ ” என்னும்‌ 30 வது சலோகத்திலும்‌, இந்தக் கருத்தே கூறப்பட்டிருக்கிற து,
கர்மம்‌, தன்முயற்சி, இவ்விரண்டனுள்‌ அறத்தைச்‌ செய்ய தன்‌ மூயற்சிக்கு ஆற்றல்‌ அதிகமென்றும்‌, பொருளை அடைவதற்கும்‌ காமத்தை நுகர்வதற்கும் ஊழிற்கு ஆற்றல்‌ அதிகமெனவும்‌ உணர்க.

73-படை குடி. கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.
அரசருள்‌ -அரசர்களுள்‌, படை-சேனை, குடி = நாடு, கூழ் -பொக்கிஷம் -அமைச்சு -மந்திரி -நட்ப்பு -ஸ்நேஹிதர் -அரண் -கோட்டை -ஆறும்‌ – இவ்வாறினையும்‌, உடையான்‌-உடையவனே, ஏறு -சிறந்தவன்‌,(ஆவான்‌)
கூழ்‌ என்பதும்‌ கோசம்‌ என்பதும்‌ ஒரே பொருளைக்‌ கொண்டது. அமைச்சு, நட்பு, என்பது அமைச்சன்‌,நண்பன்‌ என்பன வற்றின்‌ கடைக்குறை . அமைச்சன்‌. என்பது வடமொழி அமாத்யன்‌ என்பதின்‌ தத்பவம்‌.
ஏறு. என்பது – வடமொழியில்‌ வ்ருஷன்‌ என்ற சொல்லைப் போல்‌ சிறப்பினைக்‌ குறிக்க வந்தது.
மகாபாரதம்‌ சாந்திபர்வம்‌ 68 வது அத்யாயம்‌
69, 70, 32,40 வது ஸ்லோகங்களில்‌ * தான்‌, அமாத்யன்‌ கோச ம்‌, பிண்டம்‌, மித்ரர்‌, ஜனபதங்கள்‌, புரம்‌, இவை எழும் அரசனால் போற்றத் தகுக்தவை-என்று
|சாக்ஞா.- ஸப்த – ஏவ – ரஷ்யாணி- தானி- ௪-ஏவ – நிவேபமே – ஆத்மா – அமாத்ய ௮௪ – உண்‌ல மித்ராணி – ௪ எவ – ஹி- ததர – ஜனபடிா : —ட ௪. ஏல – புரம்‌ – ௪- குருநந்தன. “மித்ர அமாத்மய -புரம்‌ – ராஷ்ட்ரம்‌ – உண்லம்‌ – கோபுய—ஸப்த -.அங்கஸ்ய – அஸ்ய – ராஜ்யஸ்ய – ** எனக்‌ கூறப்‌ பட்டதுகாண்க.
அவ்வாறே ஸ்வாமி – அமாத்ய – ஜன » பஉ-உுர் மு – கோு- உண்ம -மித்ராணி? என்றும்‌: _ “ஸ்வாமி -அமாத்ய-ஸுஹ்ருத்‌- கோமா -சரஷ்ட்‌ர-ஐ-பர்‌.ர வபலானி – ௪?” என்றும்‌. அர்த்த சாஸ்த்ரம்‌ கூறும்‌,
அங்கு ஆத்மா புரம்‌, இவற்றிற்கு ப்‌ரதியாக ஸ்வாமி,துர்க்கம்‌ என்று உள்ளன. இவ்வேழில்‌ தான்‌ என்பது சொல்லாமலே விளங்குமாதலால்‌ மற்ற ஆறும்‌ இக் குறளில்‌ கூறப்பட்டிருக்கிறது,
இக் குறளைக் கொண்டு தென்னாட்டு அரசு முறையும்‌. வடநாட்டு அரசு முறையும்‌ ஒருவகைப்பட்ட தென்‌பது தெளிவு –

74. முறைசெய்து காப்பாற்று மன்னவன்‌ மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும்‌.
முறை -அரச நீதியை -செய்து -அனுசரித்து -(மக்களைக் ) காப்பாற்றும்‌,” மன்னவன்‌, மக்கட்டு, இறை -கடவுள்‌, என்று, வைக்க – கருதப்படுதல்‌, படும்‌ -பொருக்தும்‌.
அரச நீதி மஹா பாரதத்திலும்‌ தர்ம சாஸ்த்ரங்களிலும்‌,-அர்த்த சாஸ்‌திரங்களிலும்‌ விஸ்தாரமாகக்‌ கூறப்‌பட்டிருக்கிறது. நீதிப்படி மக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னன்‌ ஆயிரம்‌ அச்வமேத யாகத்தின்‌ பயனை யடைவான்‌ என
அசுவமேய – ஸஹஸ்சேண .ய;-யஜேத்‌-பதி;-பாலயேத்‌ – வா – அமி – யூர்மேண -ப்‌. ரஜா :–துலயம்‌ . ஹலம்‌ – லேத்‌!” என்னும்‌ மகாபாரதம்‌ ஆச்ரம வாஸ பர்வம்‌ 8 வது அத்யரயம்‌ 23வது ஸ்லோகம் கூறும்‌. ்‌
௩ – அவிஷ்ணு;–ப்ர௬ு* வீபத?”ரம்‌. இந்திர – அனில- யம – அர்காணாம்‌ – அம்னேஸ்௪- வருணஸ்ய – ௪- சந்த்ர – வித்தேபாயேோ :–௪- ஏவ – ஜாத்ரா :–நிர்ஹ்ருத்ய – றாஸ்வதீ :- யஸ்மாத்‌-ஏஷாம்‌- மாதரரல”யோ -நிர்மிதோ -ந்ருப :” என்று கூறுகின்றன மனுஸ்ம்ருதி 7 வது அத்யாயம்‌ 4 வது 5வது ஸ்லோகங்கள்‌.

75-கொடையளி செங்கோல்‌ குடி.யோம்ப னான்கும்‌
உடையானாம்‌ வேந்தர்க்கு கொளி.
வேந்தர்க்கு-அரசர்க்‌குள்‌, கொடை வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தல்‌, அளி சிறந்தோர்‌க்குப்‌ பரிசு வழங்குதல்‌, செங்‌கோல்‌ -நேர்‌மையான ஆட்‌சி , குடியோம்பல்‌– தளர்ந்த குடிகளைக்‌ காத்தல்‌, நான்கும்‌ – இந்நான்கினையும் , உடையான்‌ – உடையவன்‌,-ஒளி சிறந்தவன்‌, ஆம்‌– ஆவான்‌.
கொடை, அளி இவற்றிற்கு உள்ள மாறுபாடு யாதெனின்‌, பிறர்‌ வேண்டக்‌ கொடுத்தலைக்‌ கொடை என்றும்‌ பிறர்‌ வேண்டாது இருக்க அவரைப்‌ போற்றிக்‌ கொடுத்‌தலை.அளி என்றும்‌ கூறலாம்‌, செங்கோன்மை என்ற பொருளில்‌ செங்கோல்‌ என்பது வழங்கப்பட்டது. குடியோம்பல்‌ என்னுமிடத்து குடி தளர்ந்த குடியையே குறிக்கும்‌. – இவ்வாறே மக்கண்‌ மெய்தீண்டல்‌ என்ற குறளில்‌ மக்கள்‌ தம் மக்களையே குறித்தல்‌ காண்க.

தளர்ந்து குடிகள்‌ யார்‌ எனின்‌, அவர்‌, விதவை அனாதையர்‌, அங்கஹீனர்‌, தரித்திரர்‌, முதலானவர்‌ என அரியுவா – அனா – விகலான்‌. – க்ருபணான்‌ – ச. வலாச -௮:..!? என்னும்‌ மகாபாரதம்‌ ‘ஆதிபர்வம்‌ 48-வது அத்‌பாயம்‌ 11-வது ஸ்லோகமும்‌,
“த்வம்‌ – ஹி- நாடு -.து – அ ஈரமாரா௦உரிஒ” சாணாம்‌ – என்னும் மேற் சொன்ன . ஆதிபர்வம்‌ 227-வது அத்யாயம்‌ 126- வது ஸ்லோகமும்‌ : கூறுகிறது,
‘ பாலன்‌, ‘வ்ருத்தன்‌, ரோகி ,வ்யசனி, அனாதை முதலியோரை அசசன்‌ போற்ற வேண்டும்‌ என்று அர்த்த சாஸ்த்ரம்‌ கூறுகிறது, ~~

76, எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விர[ண்டும்‌
கண்ணென்ப வாழு முயிர்க்கு. .
எண்‌ என்ப- எண்‌ எனக்‌ கூறப்படுவன, எனை —மாற்று -எழுத்து என்ப – எழுத்து எனக்‌ கூறப்படுவன -இவ்விரண்டும்‌ _.இவ்விரன்டினையும்‌, வாழும்‌ “உமிர்க்கு–வாழ்க்கையில்‌ உள்ள மக்கட்கு,கண்‌ கண்கள்‌, என்ப -என்று கூறுவர்‌,-(பெரியோர்‌),
எண்‌ என்பது லக்ஷண நூல்களையும்‌, எழுத்து என்பது லக்ஷ்ய நூல்களையுங்‌ குறிக்கும்‌. லஷ்ய தூல்கள்‌ கலைகள்‌ ஆகும்‌. லக்ஷண நூல்கள் அவற்றை ஆராயும்‌ கருவி நூல்கள்‌ ஆகும்‌,

“எண்‌ என்பது. இருமையின்பமும்‌ தமது உள்‌ளத்தால்‌ தெரிந்து பிரித்து எண்ணிக் கொள்வது,- எழுத்து என்பது தாம்‌ கற்கும்‌ கல்விக்குத்‌ துணையுறுப்‌.பாகிய எழுத்து என்றாயிற்று.” என்பர்‌ காலிங்கர்‌-
எண்‌ என்பது கணிதம்‌ என்பர்‌ பரிமேலழர்‌, “எண்ணித்‌ துணிக?” (குறள்‌. 467) போன்ற எண்ணுதல்‌ என்பதற்கு ஆராய்தல்‌ என்ற பொருள்‌ இருத்தலின்‌-எண்‌ என்பதற்கு ஆராய்ச்சி நூல்களாய சாஸ்த்ரங்கள்‌ எனப்‌, பொருள்‌ கொள்ளலாம்‌. எழுதல்‌ என்பதற்கு மனங்கிளர்தல்‌ என்ற. பொருள்‌ “*ஒள் வாயானை யுருத்‌தெழுந்தன்று (புற, வெ. 3-2) போன்ற விடங்களில்‌ இருப்பதால்‌, மனக் கிளர்ச்சியால்‌ தோன்று வதை எழுத்து எனல்‌ கூடும்‌. அவ்வாறாயின்‌ கலைகள்‌. எல்லாம்‌ எழுத்தின் பாற் படும்‌,
கண்‌ என்பது இயற்கையாய்ப்‌ பன்மைப் பெயர்‌: என்றும்‌ ஒருமையாகக்‌ கொள்ள வேண்டின்‌ அதற்குக்‌ தகுந்த அடைமொழியையோ வினைமுற்றையோ வழங்க: வேண்டும்‌ எனவுந்த்‌ தொல்காப்பியத்தால்‌ அறியப்படுகின்றது
அதனைப்‌ பன்மை சுட்டிய சினை நிலைக்கிளவி என்‌:பர்‌ தொல்காப்பியனார்‌, * எண்ணுமெழுத்துங்‌ கண்ணெனத்‌ தகும்‌–எண்ணெழுத்திகழேல்‌?’ என்பது ஒளவை:யார்‌ வாக்கு,

77–.கண்ணுடைய ரென்பர்‌ கற்றோர்‌ முகத்திரண்டு
புண்ணுடையர்‌ கல்லா தவர்‌. ‘
கற்றோர்‌ – படித்‌தவரே , கண்‌ -கண்களை, உடையார்‌ என்பவர்‌ -என்று கூறப்படுவர்‌ ; கல்லாதவர்‌-படியாதவர்‌, முகத்து முகத்தில்‌, இரண்டு, புண்-புண்‌களை, உடையர்‌,(அவர்‌), ்‌
ஒரே பொருளைப்‌ பலர்‌ பார்க்கும்போது, ஒவ்வொரு.வர்க்கும்‌ உண்டாம்‌ மனநிகழ்ச்சி வெவ்வேறாய் யிருக்கின்‌றது -. நன்கு கற்றவர்க்குச் சிறந்த எண்ணம்‌ உண்டாகிறது -; கல்லாதார்க்குத்‌ தீய எண்ணங்கள்‌ உண்ட.கின்றன. ௮க் காரணம்‌ பற்றியே எண்கள்‌ நல்லோரின்‌ நன்மைக்கும்‌, தீயோரின்‌ துன்பத்திற்கும்‌ காரணமாகின்றன. வித்யைக்குத் தக்க கண்‌ இல்லை என மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 2 77 வது அத்யாயம்‌ 35 வது ஸ்லோகம்‌ கூறுவதை நோக்கி- ஞானக்கண்ணுடைமையிற்‌ கற்றார்‌.கண்ணுடையர்‌ – எனப்‌ பரிமேலழகர்‌ கூறினர்‌. ஆனால்‌ இக்குறள்‌ ஊனக் கண்களைப்‌ பற்றியே கூறுகின்றன என்பதே பொருந்தும்‌, ,

78.-ஒருமைக் கட்‌ டான்கற்ற கல்வி யொருவற்கு
எழுமையு மேமாப்‌ புடைத்து. ்‌
ஒருவற்கு-ஒருவனுக்கு, ஒருமைக்கண்‌ -ஒருபிறப்‌பின்கண்‌,தான்‌, கற்ற, கல்வி, எமுமையும்‌-எழுபிறப்‌பின் கண்ணும்‌, ஏமாப்பு-நன்‌மையைத்‌ தருதலை, உடைத்து,
ஒருவன்‌ என்பது ஒருத்திக்கும்‌ உபல௯ஷணம்‌.. காளி:தாஸன்‌ குமார ஸம்பவத்தில்‌ “ தாம்‌ – ஹம்ஸமாலாஸ்ர
தீவ- மங்மாம்‌.- மஹளஷயிம்‌ – ஈக்தம்‌- இவ – ஆத்மஹாஸ்‌: | ஸ்ஸிர – உப3உாம்‌. – உபஷேஸறாகாலே -ப்ரபேரே – பிராக்தன – ஜன்மவிதீயா?? | * தாம்ஹூ என்ற ஸ்லோகத்தில்‌ பார்வதியின்‌ வித்யாப்யாஸச்தை வர்ணிக்கும்போது ஆசிரியன்‌ கற்பிக்கத்‌ தொடங்கும்‌
போதே முன்‌ ஜன்மங்களில்‌ கற்‌.ற கல்வியெல்லாம்‌ அவள்‌ முன்‌ நின்றன எனக்‌ கூறுதல்‌ நோக்கத்தக்கது.

70 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார்‌ கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர்‌ பாடு
கல்லாதார்‌ – படியாதவர்‌, மேற்பிறந்‌தார் ஆயினும்‌-உயர்ந்த ஜாதியிற் பிறந்‌திருந்தாலும்‌, பாடு – சிறப்பின் கண் -கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்து -தாழ்ந்த ஜாதியில் பிறந்து இருப்பினும் படித்தவரை ஒத்து
உடலோடு அழியும் ஜாதி உணர்வும் உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடையது என்கிறார் பரிமேல் அழகர்
மேற் பிறந்தார் கீழ் பிறந்தார் என்பதால் வர்ண விபாகங்களை ஒத்துக் கொள்கிறார் என்பதும்
ஸ்தூல சரீரம் காரணமாகக் கொண்ட ஜாதியைக் காட்டிலும் ஸூஷ்ம சரீரம் காரணமாகக் கொண்ட கல்வி சிறந்தது என்பதால்
ஸ்தூல ஸூஷ்ம சரீரங்களையும் ஒத்துக் கொள்கிறார் என்பதும் அறியலாம்
எக்குடிப்பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியில் கற்றோரை வருக என்பர் -நறுந்தொகை
வேற்றுமை தெரிந்த நால் பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன் கண் படுமே –புறநானூறு
மஹா பாரதம் விதுரர் தர்ம வ்யாதன் சரித்திரங்களை இத்தையே காட்டும் –

“தேர்ச்து- ஆராய்ந்து, இறன்‌ அருமையை, அறிர் தட
கொளல்‌ -கொள்ளவேண்டும்‌.
இவ்வஇகாரத்தில்‌ பின்வரும்‌ இரண்டு. குறள்களில்‌
மன்னவன்‌, மன்னன்‌, என்ற சொற்கள்‌ இருக்கின்றமை.
யரல்‌ இக்குறளும்‌ சிற்ப்பாக அரசனைப்பற்றிக்‌ கூறிய
எனக்‌ கொண்டு அரசன்‌ என்ற சொல்‌ உரையில்‌ வருவிக்‌
கப்பட்டது.
-“குணமுடையார்‌, பெருவகையார்‌, TF we GF,
சரதுக்கள்‌ இவளை அர்சன்‌ போற்றித்‌ சன்‌ வசப்படுத்த
வேண்டும்‌ என “கூணவர்த :–மஹோச்ஸாஹா தர்‌
மஜ்ஞா -ஸாயவ:–௪ – Cw-mbay5 HF – நருப :-தை :-
on – சர்ட்ரம்‌ – தர்மேண – பாலயன்‌ ”’ என்னும்‌ மகஈ
பரதம்‌ சாக்திபர்வம்‌ 08 வது அத்யாயம்‌ 18 வது சுலோ
கம்‌ கூறுவதை கோக்குக, அறனறிந்து என்றதால்‌ இவ்வா.
சிரியர்‌ தர்மசாஸ்திசங்களை ஒத்அக்கொள்கன்‌, Meer ne
என்பதை அறியலாம்‌. —

80- அரன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்தல் கொளல்
அரசன் -அறன் -தர்ம ஸாஸ்த்ரத்தை -அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை -வயது கல்வி முதலியவற்றில் சிறந்து இயற்க்கை அறிவு உடையாரது நட்ப்பினை -தேர்ந்து -ஆராய்ந்து திறன் -அருமையை அறிந்து கொளல் -கொள்ள வேண்டும்
குணமுடையார் -பெரு வகையார் -தர்மஞ்ஞர் -சாதுக்கள் இவர்களை அரசன் போற்றித் தன் வசப்படுத்த வேண்டும் -என
“குணவந் த :–மஹோச்ஸாஹா தர்‌மஜ்ஞா -ஸாயவ:–௪ – நருப :-தை :-சர்ட்ரம்‌ – தர்மேண – பாலயன்‌ ”’ என்னும்‌ மகஈ
பரதம்‌ சாந்திபர்வம்‌ 68 வது அத்யாயம்‌ 18 வது ஸ்லோகம்‌ கூறுவதை நோக்குக,
அறனறிந்து என்றதால்‌ இவ்வாசிரியர்‌ தர்ம சாஸ்திசங்களை ஒத்துக்கொள்கின்‌றார்
என்பதை அறியலாம்‌.

81. அளவறிக்து வாழாதான்‌ வாழ்க்கை யுளபோல.
இல்லாகித்‌ தோன்றாக்‌ கெடும்‌.
அளவு பொருள்‌, வலி முதலியவற்றின்‌ எல்லையை,-அறிந்து, வாழாதான் வாழ்க்கை – வாழாதவனுடைய. வாழ்க்கை முறைகள்‌, உள போல -சிறந்து விளங்குவது போல (இருந்து), இல்‌ .ஆகி –மங்கி, தோன்றா. -‘இருந்தவிடம்‌ தெரியாமல்‌, கெடும்‌ அழிந்துலிம்‌,
ஒவ்வொருவனும்‌ அவனது வர்ணம்‌, ஆச்ரமம்‌.இவற்றை யனுசரித்துத்‌ தன்‌ அளவிற்குத்‌ தக்கனவற்‌றைக்‌ கொண்டு அவ் வவற்றின்‌ தர்மங்களைாக்‌ கொண்‌டாலன்றி அவன்‌ கெடுவான்‌ என்பது கருத்து.
இங்கு “ ஆனமுதலி லதிகம்‌ செலவானால்‌, மான மழிந்து மதிகெட்டு, போன திசை – எல்லார்க்குங்‌ கள்னாய்‌ ஏழ்பிறப்புந்‌ தீயனாய்‌-நல்லார்க்கும்‌பொல்லனா நாடு *
என்ற ஒளவையார்பாடல்‌ கருதத்தக்கது
83. பகல்வெல்லுங்‌ கூகையைக்‌ காக்கை . மிகல்‌ வெல்லும்‌,
வேந்தர்க்கு வேண்டும்‌ பொழுது.
காக்கை, பகல்‌ – பகற்பொழுதில்‌, கூகையை =கூகையையும்‌, –ஆந்தையையும் வெல்லும்‌ – கொல்லும்‌, (ஆதலின்‌) ; இகல்‌-மேற்பட்ட வேந்தரை -வெல்லும்‌ வெல்ல நினைக்கும் ,வேந்தர்க்கு அரசர்க்கு, பொழுது தக்க காலம்‌.வேண்டும்‌ – அவசியமானது.
இலர்‌ காலத்தைச்‌ சிறப்பாகக்‌ கொண்டு பகலில்‌காக்கை கோட்டானைக்‌ கொல்லும்‌ உதாஹரணத்தைக்‌ கூறுகின்றார்‌’” என
* கால :- சேரேயான்‌ – இதி – எகே-இவா – காக; – கெளசிகம்‌ – ஹத்தி”? என்னும்‌ அர்த்தசாஸ்திரம்‌ இங்கு நோக்கத்தக்கது, அர்த்தசாஸ்த்‌ரத்தை அரசர்‌ நன்கு. அறியவேண்டும்‌ என ஆசிரியர்‌ கொண்டனர்‌ என்பதைக் காணலாம்

83. நெடும்புனலுள்‌ வெல்லு முதலை யடும்புனலின்‌
நீங்கி னதனைப்‌ பிற.
முதலை, நெடும்புனலுள்‌-ஆழமான நீர்நிலையில்‌,(பிற -பிற வற்றை யெல்லாம்‌), வெல்லும்‌ -கொல்லும்‌ ;புனலின்‌ நீரிலிருந்து, நீங்கின்‌ -வெளியில்‌ வந்தால்‌,அதளை, பிற, அடும்‌ -கொல்லும்‌, . :
தான்‌ வஸிக்குமிடத்தில்‌ முதலை சிறந்த யானையையும்‌ கொல்லும்‌; தன்னிடமிருந்து நீங்கின்‌ நாயும்‌ அதனைக் கொல்லும் என
நக்ர ஸ்‌ வஸ்‌தானம்‌ – ஆஸாதய – கஜேந்த்ரம்‌ – அபி- கர்ஷ்து – ஸ- ஏவ -ப்ரச்யுத :- ஸ்மானாக்‌ -ஸூ னா-அபி-பரிஹூ யதே? என்‌னும்‌ மகாபாரத ஸ்லோகமும்‌,
“தேசம்‌. சிறந்தது என்‌பர் சிலர்‌, தரையில்‌ நாயும்‌ முதலையைக்‌ கொல்லும்‌ தன்‌மையால்‌” என்னும்‌
“தே௪ :- ஸ்ரேயாரன்‌ – இதி எசே -N – முதேோர- ஸ்வா – நகரம்‌ – விகர்ஷூதி – நிம்ஈ .மதோ . ஈக்‌.ர:- ஸ்வானம்‌-இதஇி??என்னும்‌ அர்த்த சாஸ்‌திர வாக்கியமும்‌ இங்கு நோக்கத் தக்கது.

54, கடலோடா கால்வ னெடுந்தேர்‌ கடலோடும்‌.
நாவாயு“மோடா நிலத்து.
கால்வல்நெடுந்தேர்‌-உருளகளை வலுவாகக்‌ கொண்ட பெரியதொரு தேர்‌, கடல்‌ கடலின்கண்‌,ஓடா; கடல்‌-கடலின்கண்‌, ஓடும்‌ செல்லும்‌, நாவாயும்‌-கப்பலும்‌, நிலத்து -நிலத்தின்‌ கண்‌, ஓடா,
எல்லாரது இயற்கைகளும்‌ ஆற்றல்களும்‌ ஒன்றாகவே இராது –வெவ்வேறாகவே யிருக்கின்றன என்பதும்‌, |
ஒவ்வொருவர்க்கும்‌ சிறப்பு சில துறைகளிலேயே இருக்குமன்றி எல்லாத்துறைகளிலும்‌ -இருத்தல்‌ இல்லை என்‌பதும்‌, இக்குறளால்‌ அறியக் கிடக்கின்றன.
இந்தக் குறளின்‌ கருத்தையே *: நாவம்‌ -ஈ -ஸர்க்யம்‌-ஆருஹ்ய-ஸ்யலே – விபரிவர்‌ திதும்‌ – தமா -ஏவ- ரழும்‌-ஆருஹ்ய – ஈ – அப்ஹு – சர்யா – விய்யதே”’ என்னும்‌
மகாபரரதம்‌ அச்வமேதபர்வம்‌ 50 வது அத்யாயம்‌ 30 வது ஸ்லோகம்‌. கூறுகிறது.

85-அறம் பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்
நான்கிலும் சோதனையால் அறியவற்றைக் கற்று குற்றமில்லாதாரின் திறம் -மனநிலையை -தெரிந்து -ஆராய்ந்து -தேற -நிச்சயித்தல் -படும் -பொருந்தும் –
இவை நான்கினையும் -தர்ம உபாதை அர்த்த உபாதை காம உபாதை -பய உபாதை -என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறி நன்கு விளக்குகிறார்
அரசன் அதார்மிகன் எனவும் –அவனைக் கொன்றால் பெரும் பணம் கிடைக்கும் என்றும் -அரசன் மனைவி அவனை நேசிக்கிறான் என்றும் -அரசனைக்கொல்லுவோம் என்றும் ஒருவன் மற்ற ஒருவனைச் சோதிக்கச் சொல்லுதல் முறையே தர்ம உபாதை அர்த்த உபாதை காம உபாதை பய உபாதை ஆகும்
இவற்றுக்கு இணங்காதவனைத் தூயன் என்று அறிதல் வேண்டும்
இவற்றையே பரிமேல் அழகர்
அறவு உபாதை -தர்ம உபாதையாவது -புரோஹிதரையும் அறவோரையும் விட்டு -அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப்போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்ததற்கு எண்ணினம் -இது தான் யாவருக்கும் இயைந்து -நின் கருத்து என்னை – என்று சூளுறவோடு சொல்லுவித்தல்
பொருள் உபாதை யாவது –சேனைத்தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு அவரான் -இவ்வரசன் இவறன் மாலையானாகையால் இவனைப்போக்கி கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்ததற்கு எண்ணினம் -இது தான் யாவருக்கும் இயைந்து -நின் கருத்து என்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்
இன்பு உபாதை யாவது தொன்றுதொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளைவிட்டு, அவளால்‌, * உரிமையுள்‌ இன்னாள்‌ நின்னைக்‌ கண்டு வருத்தமுற்றுக்‌ கூட்டுவிக்க வேண்டுமென்று என்னை விடுத்தான்‌-அவளைக்‌ கூடுவையாமின்‌ நினக்குப்‌ பேரின்பமேயன்றிப்‌ பெபரும்‌ பொருளுங்‌ கைகூடும்‌? எனச்‌ ரூளுறவோடு சொல்லுவித்தல்‌,
௮ச்ச வுபதையாவது–ஒரு நிமித்தத்தின்‌ மேலிட்டு ஓரமைச்‌சனால்‌ ஏனையோரை அவனில்லின்கண்‌ அழைப்பிக்து,“இவர்‌ அறை போவான்‌ எண்ணற்குக்‌’குழீஇனார்‌ என்று தான்‌ காவல்‌ செய்து ஒருவனால்‌ *இவ்வரசன்‌ நம்‌மைக்‌ கொல்வான்‌ சூழ்கின்றமையின்‌ அதனை நாம்‌ முற்படச்‌ செய்து நமக்கு இனிய அரசனொருவள வைத்தல்‌ ஈண்டையாவர்க்கும்‌ இயைந்தது; நின்‌ கருத்து என்ன?”எனச்‌ ரூளுறவோடு சொல்லுவித்தல்‌.
இந் நான்கினும்‌ திரிபிலனாயவழி எதிர் காலத்தும்‌ திரிபிலன்‌ எனக்‌ கருத்‌தனவையால்‌ தெளியப்படும்‌ என்பதாம்‌.

.
86. குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியும்‌
நாணுடையான்‌ கட்டே தெளிவு.
குடி -நற்குடியில்‌, பிறந்து, குற்றத்தின்‌: குற்றங்‌களினின்றும்‌, நீங்கு, வடி -பழிக்கு , பரியும்‌ -அஞ்சும்‌ ,நாணுடையான் கட்டே- “இழி தொழிலினின்‌ கண்‌ மனம்‌ செலுத்தாதவனிடத்தே, (அரசனுக்கு), தெளிவு -தெளிந்த எண்ணம்‌, (படும்‌-பொருந்தும்‌),
படம்‌ என்பது முதற்குறளிலிருக்‌ து வருவிக்கப்பட்‌டது. குற்றத்தினின்றும்‌ நீங்குதல்‌, வடுப்பரிதல்‌, நாணுடைமை இம்மூன்றுக்கும்‌ குடிப்பிறத்தல்‌ சிறந்த காரணமாகையால்‌ அதனை ஆசிரியர்‌ முதலில் கூறினர்‌ என்னலாம்‌.

87-அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
மன்னவன் கோல் -அரசனுடைய செங்கோண்மை -அந்தணர் நூற்கும் -வேதத்திற்கும் அறத்திற்கும் -அதனால் அறியப்படும் தர்மத்திற்கும் -ஆதியாய் -காரணமாகி
நின்றது
அரசன் செங்கோலனாக இல்லாவிடில் பிராமணர் முதலியோர் வேதங்களை அத்யயனம் செய்யார் -அப்போது வேதங்களை அவர் அறியார் -அப்போது வேதங்களின் பூர்வ காண்டம் கூறும் இல்லறத்தையும் உத்தர காண்டம் கூறும் துறவறத்தையும் அவர் அறிவதற்கு இடம் இல்லாமல் போகும்
இங்கு கூறும் அந்தணர் நூலும் தொல்காப்பியர் கூறும் அந்தணர் மறையும் ஒன்றே
இக்குறளால் இவர் வைதிக மதத்தினர் என்பது தெளிவு
ஆறாம் இல்லறம் துறவறம் இரண்டையுமே குறிக்கும்
வேதம் அரசருக்கும் வணிகருக்கும் உரித்தது என்றாலும் தலைமை பற்றி அந்தணர் நூல் என்கிறார் என்பர் பரிமேல் அழகர்

88. ஆபயன்‌ குன்று மறுதொழிலோர்‌ நூன்‌ மறப்‌பர்‌
காவலன்‌ காவா னெனின்‌,
காவலன்‌- அரசன்‌, காவான்‌ எனின்‌ முறைப்படி ஆட்சி செய்யாவிட்டால்‌, ஆ– பசுக்கள்‌, பயன்‌ – பாலில்‌ குன்றும்‌– குறையும்‌ : அறுதொழிலோர்‌ – ஆறு தொழில்‌.களைக்‌ கொண்ட பிராம்மணர்‌, நூல்‌ வேதங்களை,மறப்பர்‌. பயன்‌என்பது வடமொழியில்‌ பயஸ்‌, என்பதன்‌ முதல்‌ வேற்றுமை யொருமையின்‌ தற்பவம்‌.
பிராம்மணனுக்குரிய அறுதொழிலாவன :-வேதத்‌தை ஓதல்‌, வேதத்தை ஓதுவித்தல்‌, யாகத்தைச்‌ செய்‌தல்‌, யாகத்தைச்‌ செய்வித்தல்‌, தானம்‌ கொடுத்தல்‌,தானம்‌ வாங்குதல்‌,
“மறப்பினும்‌ ஓத்துக்‌ கொளலாகும்‌” என்ற குறளின் கூறியபடி. இக்குறளிலும்‌ அறுதொழிலோர்‌ எனக்‌,கூறாது பார்ப்பார்‌ என ஏன்‌ ஆசிரியர்‌ கூறவில்லை எனின்‌,”
பிராமணர்க்குரிய ஆறுதொழில்களைச்‌ செய்யும்‌ பிராம்‌ணர்களையே ஈண்டுக்‌ குறித்தற்கு ௮வ்வாறு ஆசிரியர்‌ கூறினர்‌ என்னலாம்‌.
இக் காரணம்‌ பற்றியே புறநானூற்‌றுச்செய்யுளில்‌ * ஆனியற்பார்ப்பன மாக்கள்‌ (பூற நானூறு -6)” என்ற விடத்து ஆனியல்‌ என்ற அடைமொழியை அச்செய்யுளாசிரியர்‌ வழங்கினர்‌. பசுக்‌களிடம்‌ பால்‌ குன்றினமையால்‌ உலகிற்கு எல்வளவு கேடு வருமோ அவ்வளவு கேடு பிராமணர்‌ வேதத்தை மறத்தலால்‌ உலகிற்கு வரும்‌ என இவ்வாசிரியர்‌ கூறினமையின்‌ இவர்‌ வைதிக மார்க்கக்தினர்‌, என்பதற்னு.
ஐயமில்லை, :
பசுக்கள்‌ பால் குன்றிய வழி அவி இன்மையாலும் அது கொடுத்தற்குரியார்‌ மந்த்ரம்‌ கற்பம்‌ என்பன ஓதாமையாலும்‌ வேள்வி நடவாதாம்‌. ஆகவே வானம்‌ .பெயல்‌ ஒல்லாது!” (மழை பெய்யாது) என்பதாயிற்று என்றார்‌ பரிமேலழகர்‌,
“யஜ்ஞாத்‌-ஹவதி – பர்ஜன்ய :” என்பது சீதாவாக்கியம்‌, :
அல்ப – உற்கா ட. தயரா – மேவா :…அல்ப =ஸஸ்யா . வஸுந்யூஅல்பக்ஷீரப்ரஉ அல்ப – வித்யா – உ விஜாதய:–என்பது பவிஷ்யபுசாண வசனம்‌…
இக்குறளின்‌ உண்மையையே நோ்முகமாகக்‌ கூறுவது வஸ்‌ இ – ப்ரஜாஹ்ய பரிபாலயந்தாம்‌ – நயாய்‌யே – மார்மமேண மஹீம்‌ – மஹீஸாா மா-வ” சாஹ்மணேஹிய பாரம்‌ – அஸ்து-நிக்யம்‌ – லோகா :…ஸமஹஸ்தா. a § பஹு லவங்க?” என்னும்‌ ராமாயணம்‌ முதலிய நூல்களில்‌ இறுதியில்‌ பாராயணம்‌ செய்யப்படும்‌. மங்கள வாக்யம்‌, இதன்‌ பொருள்‌, அரசு: புரிவோர்‌ நன்முறையில்‌ மக்களைப்‌ பாதுகாக்கட்டும்‌ ;:(அதனால்‌) பசுக்களுக்கும்‌ அந்தணர்களுக்கும்‌ சுபம்‌.உண்டாகட்டும்‌; (அதனால்‌) உலகமாந்தர்‌ எல்லோரும்‌ சுகமாக வாழட்டும்‌, என்பதே.
ப்ரதி அம்ரஹாரம்‌ –
ப்ரதி – வோஷம்‌ – ஏவனிப்ரை -கீரிவேத – – வாவதூஉ-டுகை -மோவி :-௪ . தருண்யா ஃ. கபளாம்‌ ஸலாஷி மஜீயதே – யத்ர
மனு:–ஹவிபர்ச?” என்னும்‌ கவி வாக்யெமும்‌ இங்குக்‌
பொருந்தும்‌, [
வாழ்க -அந்தணர்‌ – வானவர்‌-அன்‌-இனம்‌ – வீழ்கதண்புனல்‌ – வேந்தனும்‌ – ஓங்குக – ஆழ்க – தீயது -எல்லாம்‌ – அரன்‌ – காமமே – சூழ்க – வையகமும்‌ -துயர் தீர்க்கவே ” என்பது சம்பந்த ஸ்வாமிகளின்‌ திருப்‌பதிகம்‌.
இந்த குறளில்‌ சொல்லும்‌ அறு தொழிலோர்‌ நூல் மறப்பர்‌ என்னும்‌ கருத்தையே “ப்‌. ரரஹ்மணா :-—. சதுரசோ-வே௨ான்‌ -௩-அதிட்யீரன்‌ ௨ யலி – ரரஜரஈ – பாலயேத்‌” என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 67 வது அத்யாயம்‌ 26 வத ஸ்லோகமும்‌ கூறுகிறது.
ந – ப்ரஹ்மசாரீ – அம்மீத – ஈ- கால்யம்‌ – உஹதே – ச௪-மெள; « * 4 யலி- ௨ண்ஒு:_௨௩- பாலயேத்‌ சாந்தி பர்வம் – 15 – 87.சொல்லும்

889, ஒற்றொற்‌ றுணராமை யாள்க வுடன்மூவர்‌
சொற்றொக்க தேறப்‌ படும்‌,
ஒற்று – ஓர்‌ ஒற்றன்‌, ஒற்று – மற்றோர்‌ ஒற்றனை,உணராமை – அறியாமல்‌, ஆள்க; மூவர்‌, உடன்‌,சொல்‌, ஓக்க – ஓத்திருக்க,-தேற – தெளிதல்‌, படும்‌ -பொருந்தும்‌.
சொல்லோக்க என்பது சொற்றோக்க என விகாரப்‌பட்டது என்னலாம்‌.
ஒற்று என்பது ஒற்றன்‌ என்பதன்‌ கடைக்குறை,-௮ரசனால்‌ ஏவப்படும்‌ ஒற்றர்கள்‌ ஒருவர்க்கொரு ஒற்றர்‌ என அறியாமல்‌ இருக்குமாறு அரசன்‌ ஜாக்‌ரதையாய்‌ இருக்க வேணடும்‌. என்பதும்‌, மூன்று ஒற்றர்கள் ஒரே விதமாய்‌ஒரு பொருளைக்‌ கூறின்‌ அதனை உண்‌மையென அரசர்‌ அறிந்து கொள்ளலாம்‌ என்பதும்‌,
“ப்ரணிய ௪ – தத.குர்யாத்‌. உ உ * யதா. ந…விது; அன்யோன்யம்‌ – ப்ரணியேயா : ததா – தே? என்னும்‌ மகாபாரதம்‌ சாந்திபர்வம்‌ 108 வது அத்யாயம்‌ 8 முதல்‌ 10-வரையான ஸ்லோகங்களும்‌
ந -ஈ – அன்ய:.-அன்யம்‌ – ஸம்ஸ்மா:-தே.. வா. வித்ய: த்ரபாணாம்‌ – எகவாக்யே -ஸம்ப்‌ரத்யய: என்னும்‌ அர்த்‌தசாஸ்திரம் (12) வாக்கியமும்‌ கூறுவதைக்‌ காண்க;

90, மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்‌
தா௮ய தெல்லா .மொருங்கு,.
அடியளந்தான்‌ – அடியால்‌ (உலகங்களை) அளந்த வாமனர்‌,-தாஅயது எல்லாம்‌ – அளந்த. எல்லாவுலகங்‌களையும்‌,-ஒருங்கு – ஒரே காலத்தில்‌, மடியிலா மன்னவன்‌-சோம்பல்‌ இல்லாத அரசன்‌, எய்தும்‌ – அடைகிறான் .
தாஅயது என்பது தாவியது’ என்பதன்‌ இடை.க்குறை, மஹா விஷ்ணு மூன்று உலகங்களையும்‌ மூன்று அடிகளால்‌ அளந்தனர்‌ என்பது ருக்வேதம்‌ முதல்‌ மண்டலம்‌154 வது ஸூத்ரத்திலும்‌ மகாவிஷ்ணு வாமன ரூபத்தைக்‌ கொண்டு பலியினிடத்தில் யாசித்து மூன்று உலகங்களையும்‌ஆக்ரமிக்தனர்‌ என்பது ஸ்ரீமத்‌ வால்மீகி ராமாயணம்‌ பால காண்டம்‌ 29 சர்க்கத்‌திலும்‌, ஸ்ரீமத்பாகவதம்‌ 8 வது ஸ்கந்தம்‌ 18-21 அத்யாயங்களிலும்‌ கூறப்‌பட்டிருக்கிறது , வலு
இவ்வாசிரியர்‌ அத்வைதானுபவி என்பது அறத்‌துப்‌
பாலிலுள்ள பல குறள்களினால்‌ வெளிப்படையாய்‌ அறியப்படுகிறது -அதோடு ஸகுணோபாஸந விஷயத்தில்‌
அடிக்கடி “அடியளந்தான் , உலகளநதான்‌ ‘ என்ற சொற்களால்‌ கடவுளைக்‌ குறிப்பதால்‌” இவர்‌ வாமன மூர்த்தியை உபாஸிப்பலர்‌ என்று ஊூகிக்க வேண்டியிருக்கிறது

91, – முயற்சி திருவினை யாக்கு. முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்‌.
முயற்சி திருவினை – செல்வத்தை, ஆக்கும்‌ – உண்‌டாக்கும்‌ ; முயற்றின்மை – முயற்சி யின்மை, இன்மை -திருவின்‌ இன்மையை, புகுத்திவிடும்‌ – கொண்டு வரும் .
மக்கள்‌ ஒவ்வொருவரும்‌. தம்மால்‌ இயன்றவரை ப்ரயத்தினம்‌ செய்ய வேண்டும்‌ என்பது கருத்து. மக்கிளின்‌ நிலைக்குக்‌ காரணம்‌ தைவம்‌ மாத்‌திரமே யன்றி புருஷப் பிரயத்தினமும்‌ ஆகும்‌ என்பது இதனால்‌ அ.றியப்படுகிறது இக்கருத்தினையே சேனாவரையர்‌ “முயற்சியும்‌ தெய்வமுமாகிய காரணங்களுள்‌ ”எனத்‌ தொல்காப்‌பியம்‌ சொல்லதிகாரம்‌. 242 வது ஸூத்திரத்தின்‌ உரையில் கூறுகின்றனர்‌.

92. அறிகொன்்‌ றறியா னெனின முறுதி
உழையிருக்தான்‌ கூறல்‌ கடன்‌,
(அரசன்‌) அறி – (பிறர்‌) அறிந்து கூறலை -கொன்று-கேட்காமல்‌ அவமதித்து, : அறியான்‌ -(தானும்‌) அறியாமல்‌ இருந்தான்‌, எனினும்‌. உழையிருந்தான் -அமைச்சன்‌,உறுதி -(அவனுக்கு) நன்மை பயக்கும்‌ பொருளை, கூறல்‌, கடன்‌ -கடமை, (ஆகும்‌)
உழையிருக்தான்‌ என்ப தும்‌ வடமொஜியில்‌ அமாத்ய என்பதும்‌ ஒருபொருட்கிளவி, இக்குறளில்‌ அச்‌ சொல் மிகப் பொருத்தம்
ஏன் எனில் அச்சொல்லில் இருந்து யாரது உழை இருந்தான் என்ற கேள்வி பிறக்க கொன்று அறியான் என்பதற்கு எழுவாயாக அரசன் என்று கிடைக்கிறது
அறி என்பது பெயர்ச்சொல்
ராகம் மானம் மதம் இவை நிரம்பித் தவறிய அரசனுக்கு நட்புற்ற மந்திரியின் செயல் கை கொடுத்து உதவும் என்னும் மஹாபாரதச் செய்யுள் நோக்கத் தக்கது

93-ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
அமைச்சன் -ஈன்றாள் பசி -கண்டாலும் பெரியோர் பழிக்கும் செயல்களை செய்தல் தகாது
நூற்றுக்கணக்கான அகாரத்தை செய்தாலாகிலும் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று மனு ஸாஸ்த்ரம் -11-11- சொல்லி இருக்க
இங்கு இவ்வாறு சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னில்
அவ்விதி அனைவருக்கும் பொது -அமைச்சனுக்கு விதி விலக்கு என்பதும்
ஒரு காரணம் பற்றிச் செய்யத்தகாத காரியத்தை அரசர் செய்தலை தர்ம சாஸ்திரங்களும் ஆதரிக்காதே என்றவாறு செய்தலை

(94- சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசு மட்
கலத்துணீர் பெய்திரீ இயற்று
அமைச்சன்‌) சலத்தரல்‌ மோசடியினால்‌–பொருள்‌ -. பொருளை, செய்து – சம்பாதித்து, ஏம்‌ஆர்த்தல்‌ – க்ஷேமத்தை அடைதல்‌, பசுமட்கலத்துள்‌ -சூளையில்‌ வைக்கப்படாத மட்பானையில்‌, நீர்‌ – நீரை,-பெய்து இரீ இயற்று – இருக்குமாறு செய்ததை ஒத்தது
சுடாத பானையில்‌ வைத்த நீர்‌ விரையில்‌ . அதை விட்டு நீங்குமாறு வஞ்சனையால்‌ சம்பாதித்த பணம்‌ விரைவில்‌ கெடும்‌ என்பதம்‌, ௮க் காரணம்‌ பற்றி அமைச்‌சன்‌: “சலத்தை ஏற்றல்‌ தகாது என்பதும்‌, கருத்து.
சலம்‌ என்ப வஞ்சனை என்ற பொருளைக் கொண்ட
வடமொழிச்சொல்லின்‌ தற்பலம்
எம்‌ என்பது ஏமம்‌ என்பதன்‌ இடைக்குறை, ஏமம்‌
என்பன்‌ வடமொழி ஷேமத்தின்‌ தத்பவம்‌.
சலம்‌ என்னும்‌ பதப்‌ரயோகம்‌ செய்திருப்பதிலிருந்து திருவள்ளுவர்‌ தேர்ந்த ஸம்ஸ்க்ருத பாண்டித்யம் உள்ளவரென்பது விளங்குகிற து.

95. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல்‌ வேந்தவாம்‌
பண்புடைமை தூதுரைப்பான்‌ பண்பு,
தூது உரைப்பான்‌ பண்பு == தூதுரைப்பான் தன்மை, அன்‌புடைமை- அன்புடன்‌ பேசுந்தன்மை, ஆன்ற குடிப்‌ பிறத்தல் = உயர்ந்‌ த. வம்சத்தில்‌ பிறப்பு, வேந்து . அவாம்‌,பண்புடைமை- அரசன்‌ கொண்டாடும்‌. சீலமுடைமை, ஆகும்‌.
குலீனனாயும் சீல சம்பன்னனாயும்‌, வாக்மியாயும்‌-தக்ஷனாயும் ப்ரியம்வ;தனாயும்‌, யதோக்தவாதியாயும்‌, ஸ்ம்ருதிமானாயும்‌, தூதன்‌ இருக்கவேண்டும்‌”என
சாந்திபர்வம் -85-28 ஸ்லோகமும் –83–6 ஸ்லோகமும் கூறும்
சபா பர்வம் –119-6 ஸ்லோகமும் –
மனு அம்ருதி 7-64 ஸ்லோகமும் தூதர் லக்ஷணங்கள் கூறும் –

96- இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்படும்
அரசர் -இளையர்-வயதில் சிறியவர் – இன முறையர்-உறவினர் – என்று-என நினைத்து இகழார்-அவமதிக்காமல் -நின்ற ஒளியோடு -இட்ட ஆணைப்படி -ஒழுகப்படும் -ஒழுகுதல் பொருந்தும்
ஒளி பிரதாபம் பர்யாயம் -பிரதாபத்தால் இட்ட ஆணை –
எல்லையைக் கடந்த மகன் -பேரன் உடன் பிறந்தான் -இவரை மன்னர் போற்றார் என விராட பர்வம் -5-20- சாந்திபர்வம் -41-24- மனு ஸ்ம்ருதி –7-8- ஸ்லோகங்கள் கூறும்

97. தள்ளா விளையுளுச்‌ தக்காரும்‌ தாழ்விலாச்‌
செல்வருஞ்‌ சேர்வது நாடு.
நரடு, தள்ளா விளையுளும்‌ -குறைவற்ற விளைபொருள்‌களோடும்‌, தக்காரும்‌ தகுதியுடையாரோடும்‌.(தார்‌மிகரோடும்‌) தாழ்விலாச்‌ “செல்வரும்‌ – குறைவு படாத
செல்வத்தை உடையாரோடும்‌, சேர்வது- சேர்ந்திருத்தல்‌ வேண்டும்‌,
குறையாத விளைவுசெய்யும்‌ குடிகளும்‌, இல்லறம்‌-துறவறம்‌ இவற்றில்‌ தவறாத யோக்யரும்‌, பல வகையாலும் பொருள்‌. ஈட்டும்‌ வணிகரும்‌. கூடி வாழ்வதே. நாடாகும்‌;
விளை பொருள்‌ நிறைந்த. காடு, செல்வம்‌ ௮ரசனிடம்‌
பக்தி இவை கூடிய மக்கள்‌,-திருப்தி முற்றிய அமைச்சர்‌ இவற்றை யுடைய அரசனை அசைத்தல்‌ இயலாது என
யஸ்ய – ஸ்ஷீத: – .ஜனப£: – ஸம்பன்ன – ப்ரிய – சாஜக :-ஸந்துஷ்ட: – புஷ்ட-ஸ.விவ:- தரு ஷ-மூல:-ஸபசர்‌ஸிவ :-என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 94-வது அத்‌
யாயம்‌ 3-வது சுலோகம்‌ கூறுதல்‌ நோக்கத் தக்கது –
.
96. பிணியின்மை செல்லம்‌ விளைவின்ப மேமம்‌
அணியென்ப நாட்டி.ற்கிவ்‌ வைந்து.
பிணியின்மை- நோய் இன்மை, செல்வம்‌, விளைவ =நல்ல விளைச்சல்‌, இன்பம்‌ -செளக்கியம்‌, ஏமம்‌ காவல்‌-இவ்வைந்தும்‌, நாட்டிற்கு, அணி அலங்காரம்‌, என்ப
என்று கூறுவர்‌ (புலவர்‌),
ஆதலின்‌ இவ்வைந்தும்‌ நாட்டில்‌ நிலைத்திருக்குமாறு-
அரசன்‌ முயல வேண்டும்‌,

99. ஓதி யுணர்ந்தும்‌ பிறர்க்குரைத்தும் தானடங்காப்‌
பேதையிற்‌ பேதையா ரில்‌.
ஓதியும் -மனம் மொழி மெய்கள்‌ அடங்குவதற்கு ஏதுவாய நூல்களை) கற்றும்‌, உணர்ந்தும்‌ மனனம்‌ செய்‌தும் “பிறர்க்கு உரைத்தும்‌ -உபதேஸித்தும்‌, தான்‌, அடங்கா-அதன்படி நடவாத, பேதையின் — அவிவேகியைக்‌ காட்டிலும்‌, பேதையர்‌ – சிறந்த அவிவேகியர்‌, இல்‌-இல்லை.
ஓதியும்‌ என்றவிடத்‌து உம்மை தொக்கது.
பேதைபார்‌ என்னுமிடத்து ஆர்‌ விகுதி இழிவினைக்‌ குறிக்கும்‌, பிறர்க்குரைத்தும்‌ என்றமையால்‌ இக்குறள்‌
சிறப்பாகப்‌ பிராம்மணரைப்‌ பற்றியது, மறப்பினுமோத்துக்கொளலாகும்‌”” என்னும்‌ (41-வது) குறள்‌ ஈண்டு நோக்கத் தக்கது,-

100. வழி நோக்கான்‌ வாய்ப்பன செய்யான்‌ பழி நோக்கான்‌
பண்பிலன்‌ பற்ரறார்க்கு இனிது.
வழி- தர்மசாஸ்திரங்களை, நோக்கான்‌ படியாமலும்‌, “வாய்ப்பன (அவற்றின்‌) கூறப்பட்ட விதிகளை, செய்யான்‌-அனுஷ்டிக்காமலும்‌, பழி – பாவம்‌ (நேரிடமென்று),-நோக்கான்‌ – பயப்‌ படாமலும்‌, பண்‌ Lj =நற் குணங்களை, இலன்‌ – உடைக்தாய் இராமலும்‌ இருப்பவன்‌-பற்றார்க்கு-பகைவரால்‌ (தீங்குசெய்யப்பட), இனிது எளிதாக ஆவான்‌.
தர்ம சாஸ்த்ரங்களைக்‌ கற்று, அறமுறைப்படி நடந்த பழி பாவத்திற்கஞ்சுபவனைப்‌ பகைவர்‌ எளிதில்‌ வெல்லமுடியாது என்பது குறிப்புப்பொருள்‌.

101. பகையென்னும்‌ பண்பி லதனை யொருவன்‌
நகையேயும்‌ வேண்டற்பாற்‌ றன்று.
ஒருவன்‌, பகை -விரோதி,என்னும் என்ற பண்பிலதனை -கெட்ட பொருளை -நகையேயும்‌ — விளையாட்டிற் காகவும்‌, வேண்டற்பாற்று அன்று – விரும்பிக்கொள்ளக்‌கூடாது,

102. ஏந்திய கொள்கையார்‌ சீறினிடை முரிந்து
வேந்தனும்‌ வேந்து கெடும்‌.
ஏந்திய கொள்கையார்‌-சிறந்த தவமுடையார்‌,சீறின்‌ -கோபித்தால்‌, (௮து ) வேந்தனும்‌ -தேவேந்த்ரனையும்‌, இடை-இடம்‌, முரிந்து = கெட்டு, வேந்து -௮ரசத்‌ தன்மையை -, கெடும்‌ -கெடச்‌ செய்யும்‌.
ஈண்டு ஐந்தவித்தானாற்றல்‌ அகல் விசும்‌புளார் கோமான்‌ இந்திரனே சாலுங்கரி என்னும்‌ (12-வது ) குறள்‌
ஒப்பிடத்தக்கது,
ஆகையால்‌ ஏந்திய கொள்கையரும்‌ அரசரும்‌ சேர்‌ந்து நாட்டை ஆளவேண்டுமென்பனு . அறியத்தக்கது,
ஏந்திய கொள்கையரை ஸ ஸூஹ்ருத : என்ற சொல்‌லால்‌ சாஸ்த்ரம்‌ குறிக்கும்‌,

103- இமை யாரின் வாழினும் பாடிலரே இல்லான்
அமையார் தோள் அஞ்சுபவர்
இல்லான் அமையார் தோள் அஞ்சுபவர் –மூங்கில் போல் அழகுற்ற மனைவின் தோள் காரணமாக அவளிடம் பயப்படுவார் – இமை யாரின் -கண் இல்லாத தேவர்களைப்போல் -வாழினும் –வாழ்ந்தாலும் -பாடிலரே-சிறப்பினை உடையார் அல்லர்
தனது மனையாள் இடத்திலும் காமத்தில் மூழ்கிக்கிடத்தல் தவறு என்றவாறு

104-இரு மனப்பெண்டிரும் கள்ளும் கவரும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு
ஸ்த்ரீகள் சூதாட்டம் வேட்டை பானம் -இந்நான்கும் காமத்தால் உண்டாகும் நால்வகைத் துன்பங்கள் –அவற்றால் மனிதன் செல்வத்தை இழக்கிறான் –
இதே கருத்தையே வனபர்வம் -13-7-ஸ்லோகமும் சபாபர்வம் -90-20-21 ஸ்லோகங்களும் சாந்தி பர்வம் -146-26 ஸ்லோகமும்
அர்த்த ஸாஸ்த்ரம் -119 வாக்கியமும் மனு தர்ம ஸாஸ்த்ரம் -7–50 ஸ்லோகமும் கூறும்
லஷ்மீ கடாக்ஷம் வேண்டுபவர்கள் இவற்றில் ஈடுபடுதல் தகாது அன்றோ

105–தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்து ஒழுகலான்
கயவர் -இழிந்த ஆசாரமுடையவர் -தாம் மேவன -விரும்பிய பொருளை -செய்து ஒழுகலான்-தேவர் அனையர் – தேவர்களை ஒப்பர்
தேவர்கள் சுய நன்மையையே கருதுமாறு கயவர் சுய நலத்திற்காக நினைத்தபடி எல்லாம் அக்கிரமம் செய்வர் என்பது குறிப்பு

106. அச்சமே கீழ்கள தாசார மெச்சம்‌
அவாவுண்டே லுண்டாஞ்‌ சிறிது.
கீழ்களது- இழிந்தோருடைய, ஆசாரம்‌ செயல்‌கள்‌, அச்சமே-௮ச்சத்தையே காரணமாகக்‌ கொண்‌டன; எச்சம் அவற்றைத்‌ தவிர்த்து ஏனைய “செயல்‌கள்‌, அவா விருப்பம்‌,உண்டேல்‌ இருப்பின்‌,சிறுது உண்டாம்
செய்யாவிடின்‌ தண்டிப்பார்கள்‌ என நினைத்து இழிந்தோர்‌ தாங்கள்‌ செய்ய வேண்டியவற்றைச்‌ செய்‌கிறார்களே யன்றி விருப்பத்‌துடன்‌ அவற்றை அவர்கள்‌ செய்யவில்லை என்பது கருத்து,
தத்தம்‌ வர்ண தர்மங்களையும்‌, ஆஸ்ரம தர்மங்களையும்‌ செய்யாது இழிந்த நிலையில்‌ உள்ளோரையே கீழ்கள்‌ என்ற சொல்லால்‌ ஆசிரியர்‌ குறிக்கின்றனர்‌. அவர்களிடம்‌ தமக்குள்ள வெறுப்பைக்‌ கீழ்கள்‌ என்று விடத்து அஃறிணை விகுதியாகய கள்‌, என்பதால்‌ அறிவிக்கிறார்

மனுஸ்ம்ருதி 7 வது அத்தியாயம்‌ 22 சுலோகமும்‌
மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 15 வது அத்தியாயம்‌ 34 வது ஸ்லோகமும்‌.குறித்திருக்கும்‌
மகாபாரத ஸ்லோகங்களும்‌ சாந்தி பர்வம் 15- 5-2-13- ஸ்லோகங்களும் இந்தக் கருத்தையே குறிக்கும்

107-தாம்‌ வீழ்வார்‌ மென்றோட்‌ டுயிலினி னிது கொல்
தாமரை க்கண்ணா னுலகு,
தாம்வீழ்வார்‌ மென்றோட்டுயிலின்‌ – தாம்‌ விரும்பும்‌ மகளின்‌ மெல்லிய தோளின் கண்‌ துயில்போல, இனிது கொல்‌-வருந்தாமல்‌ எய்தலாமோ, தாமரைக்கண்ணுனுலகு–செங்கண்மாலுலகம்‌.
தாமரைக் கண்ணான்‌ என்பதற்குத்‌ தாமரையைப்‌ போன்ற கண்களை யுடையவன்‌ எனப்‌ பொருள்‌ கொண்டு-அச் சொல்‌ திருமாலைக்‌: குறிக்கின்றது என்று கெரள்ளப்‌ ,பட்டது, தாமரை என்பதற்குப்‌ பத்மம்‌என்‌.ற (அற்புதம்‌,அப்ஜம்‌ என்‌.ற சங்க்யையுள்‌ கூறப்பட்ட) பேரெண்ணைப்‌பொருளாகக்‌ கொண்டு அச்சொல்‌ இந்திரனைக்‌ குறிக்குமென்பாரும்‌ உளர்‌,
மலர் மிசை ஏகினான்‌ என்‌ற சொல்லை நோக்கின்‌ அச் சொல்‌ ப்ரம்மாவைக்‌ குறிக்கின்றது-என்று சொல்வாரும்‌ உளர்‌,
“நீவி- மோக்ஷ;:- ஹி-மோஷ :” என்கிருர்‌ பர்த்ரு ஹரி ச்ருங்கார சதகத்தில்‌,

108-புலத்தலிழ்‌ புத்தேணே டுண்டோ நிலத்தொடு
நீரியைந்‌ தன்னா ரகத்து,
நிலத்தொடு, நிர்‌, இயைந்தன்னாரகத்து -இயைந்த தன்மையை யுடைய காதலர் இடத்தில் -புலத்தலின் -புலத்தலைக் காட்டிலும் – இனிது – மிக்க இன்பத்தை தருவது , புத்தேணாடு -தேவருலகம்‌, உண்டோ?
ஸ்வர்க்கத்தில்‌ அமையும்‌ இன்பத்தைக் காட்டிலும்‌ ஒத்த அன்பினையும்‌, பிறர்மனை நோக்காச் சிறப்பினையும்
கொண்ட கணவரோடு ப்ரணய கலகஞ்‌ செய்தலால்‌ வரும்‌ இன்பம்‌ சிறந்தது என்பது குறிப்பு,
.
தம்பதிகட்கு ஸெளமன்ஸ்பம்‌ வேண்டும்‌. என ருக்வேதம்‌ அதனையே பலவிடத்துத்‌ தொகுத்தும்‌ விரித்துங்‌ கூறிஉள்ளதே ,

இவ்வாசிரியரின்‌ சமயம்‌ வைதிக சமயமும்‌, “உபாஸ்னா மூர்த்தி வாமன மூர்த்தியும்‌, தத்வநிலை ௮த்வைத அனுபவமும்‌ என்பது தெளிவாகிறது.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மனு ஸ்ம்ருதி-ஸ்ரீ மனு தர்ம சாஸ்திரம்

February 10, 2024

மனு ஸ்மிருதி

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்

மனு-ஸ்மிருதி , (சமஸ்கிருதம்: “மனுவின் சட்டங்கள்” அல்லது “மனுவின் நினைவுகூரப்பட்ட பாரம்பரியம்”) மானவ-தர்ம-சாஸ்திரம் (“மனுவின் தர்ம உரை”) என்றும் அழைக்கப்படுகிறது, இது பாரம்பரியமாக இந்து குறியீட்டின் புத்தகங்களில் மிகவும் அதிகாரப்பூர்வமானது ( இந்தியாவில் தர்ம சாஸ்திரம் மனு-ஸ்மிருதி என்பது படைப்பின் பிரபலமான பெயர், இது அதிகாரப்பூர்வமாக மனித-தர்ம-சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது . இது பழம்பெரும் முதல் மனிதன் மற்றும் சட்டமியற்றியவருக்குக் காரணம்.மனு . பெறப்பட்ட உரை சுமார் 100 சி .

மனு -ஸ்மிருதி இந்துக்களுக்கு அவர்களின் தர்மத்தை பரிந்துரைக்கிறது – அதாவது, நான்கு சமூக வகுப்புகளில் ( வர்ணங்கள் ) ஒரு உறுப்பினராக மற்றும் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றில் ( ஆசிரமங்கள் ) ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமைகளின் தொகுப்பு. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன, அவை மொத்தம் 2,694. இது பிரபஞ்சத்துடன் தொடர்புடையது; தர்மத்தின் வரையறை; சடங்குகள் ( சம்ஸ்காரங்கள் ); தீட்சை ( உபநயனம் ) மற்றும் வேத ஆய்வு(இந்து மதத்தின் புனித நூல்கள்); திருமணம், விருந்தோம்பல், இறுதி சடங்குகள், உணவு கட்டுப்பாடுகள், மாசுபாடு மற்றும் சுத்திகரிப்பு வழிமுறைகள்; பெண்கள் மற்றும் மனைவிகளின் நடத்தை; மற்றும் அரசர்களின் சட்டம். கடைசியாக, 18 தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த விஷயங்களைப் பரிசீலிக்க வழிவகுக்கிறது, அதன் பிறகு, தொண்டு, பரிகாரச் சடங்குகள், கர்மாவின் கோட்பாடு, ஆன்மா மற்றும் நரகம் போன்ற மத தலைப்புகளுக்கு உரை திரும்புகிறது . மதச் சட்டம் மற்றும் நடைமுறைகள் மற்றும் மதச்சார்பற்ற சட்டம் ஆகியவற்றுக்கு இடையே எந்த வகையிலான வேறுபாட்டையும் உரை செய்யவில்லை . இந்து சிந்தனையின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக சாதி அமைப்பின் நியாயப்படுத்தல் , அதன் செல்வாக்கு ஆழமாக உள்ளது.

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் மீண்டும் 1882-இல் ஜார்ஜ் புஃலர் என்பவர் ஆங்கில மொழியில் வெளியிட்டார்.இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.

இது தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்நூலுக்கு மானவ தர்ம சாஸ்திரம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்பது பொருளாகும்.

மனு தர்மம் அல்லது மனு ஸ்ம்ருதி என்ற புத்தகத்தை எழுதியவர் மனு எனப்படும் அரசர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனு என்பவர் ஒரு நபர் கிடையாது. மன்வந்தரம் என்பது பலவிதமான காலகட்டங்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு மனு தலைவராக இருந்து இந்த உலகை ஆட்சி செய்வார் என்ற வழக்கம் உள்ளது. அதில் 14 விதமான மன்வந்தரங்கள் சொல்லப்படுகிறது.

இப்போது வைவஸ்வத மன்வந்தரம் என்று சொல்லக்கூடிய வைவஸ்வத மனு என்பவருடைய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆறு மனுக்கள் கடந்து இப்போது இந்த ஏழாவது மனுவின் காலத்தில் உள்ளோம். மனு என்பவர் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர். அவரால் மக்களுக்கான நெறிமுறைகள் வழிகாட்டுதலுக்காக உருவாக்கப்பட்டதே மனு தர்மம் எனும் நூல்.

இது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. இதற்கான ஆதாரம் என்பது, வழிவழியாக அந்த நூல்கள் கிடைக்ககூடிய ஓலைச்சுவடிகளிலும், பலவிதமான கிரந்த சாலைகளிலும் கிடைக்கக் கூடியது தான். இப்போது ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் எங்கிருந்து கிடைத்ததோ அவ்வாறே தான் எந்த நூலுமே நமக்குக் கிடைக்கிறது. காலங்காலமாக அரிய நூல்கள் பலதும், பல படையெடுப்பின் காரணமாக அழிந்துவிட்டன. படையெடுப்பின் முதல் நோக்கம் பண்பாட்டினை அழிப்பது. அதற்கன முதல்படி நூல்களை அழிப்பது. அதனால் பல நூல்கள் காணாமல் போனது. இந்த காரணத்தால் தான் பல நூல்கள் இன்றைக்குமே முழுமையாக கிடைக்காததற்கு காரணம். இது எல்லாமே ஒலைக்கட்டுகளிலும், சுவடிகளிலும் இருந்ததை இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டு, எவ்வாறு திரு உ. வே. சாமிநாதய்யர் தமிழ் சுவடிகளைத் தேடி எடுத்தாரோ அது போல பல தர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் பாரத பூமி முழுவதிலும் இன்றும் கிடைக்காமல் பல இடங்களில் இருக்கிறது. தேடினால் பல பொக்கிஷங்கள் கிடைக்கத்தான் போகிறது. வரும் காலங்களில் கிடைக்கவும் செய்யும். அப்படி காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல நூல்களில் ஒன்று மனுஸ்ம்ருதி.

பாகவத புராணம், பதிணென் புராணங்களில் ஒன்று. அந்த வடமொழி புராணத்தில் சொல்லும்போது, ஒரு மனுவைப் பற்றி சொல்லியிருக்கிறது. அந்த மனுவைப் பற்றி சொல்லும் போது, மனுவை ‘த்ராவிடேஸ்வர:’, அதாவது தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் என்று சொல்கிறது. தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் வைகை நதிக்கரையோரத்தில் இருந்தார் என்ற குறிப்புகளையும் நாம் காண்கிறோம். இப்போது போலியாக சொல்லப்படும் ஆரிய-திராவிடப் பிரிவினைகள் எதுவுமே அந்தகாலத்தில் இல்லை என்பதற்கு இது மற்றொரு ஒரு சாட்சி. இது போன்று மற்றைய நூல்களில் கிடைக்கும் குறிப்புகளும், மனு என்பவரைக் குறித்த புரிதலை நமக்குத் தருகிறது.

மனு தர்மம் மன்னர் ஆட்சி காலம் வரை முறையாகவே பின்பற்றப்பட்டது. தமிழ்நாடே ஒரு காலகட்டத்தில், சேர, சோழ, பாண்டிய, பல்லவ என்று நான்கு தேசங்களாக இருந்தது. இன்று தான் தமிழ்நாடு என்று நாம் ஒன்றாக சொல்கிறோம். பண்டைய தமிழகம் என்பது கேரளத்தையும் சேர்ந்தது. ‘வடவேங்கடம் முதல் தென்குமரி வரை’ என்கிறோம். திருப்பதி மலையும் நம்முடன் தான் இருந்தது. தமிழ்நாடே ஒரு நாடு கிடையாது. பல ஆட்சியாளர்கள் பல தேசங்களாக பிரிந்து தான் ஆட்சி இருந்தது. தமிழகத்தில் மனுநீதிச் சோழன் என்ற வரலாற்றினை படிக்கிறோம். மனுஸ்ம்ருதியின் வழி நின்று நீதி பரிபாலனம் செய்து ஆட்சி நடத்திய காரணத்தால் தான் அவனுக்கு “மனுநீதிச் சோழன்” என்றே பெயர் உண்டானது. இப்படி பாரம்பரியமான மன்னர்கள் ஆட்சி காலம் வரை நடைமுறையில் இருந்த விஷயம். அதற்கு பிறகு மன்னர் ஆட்சி மாறி அடுத்த ஆட்சி வரும்போதும், அது கொஞ்சம் கொஞ்சமாக காலமாற்றம், மக்களுடைய செயல்பாடுகள், நம்பிக்கைகள், நடைமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது தர்மசாஸ்திரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட போது மாறியது. இதனால் நாம் மனுஸ்ம்ருதியை சரியாக புரிந்து கொள்ளாமல் பலரது திரிக்கப்பட்ட வாதங்களை இன்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய மூல நூல்களை முறையாக நாம் படிக்காத காரணத்தால் தான், இந்த ஆங்கிலேயருடைய மொழிபெயர்ப்பை அண்டி இருக்க வேண்டிய நிலைமை நமக்கு வந்திருக்கிறது. மனு தர்மம் மட்டும் அல்ல. எல்லா நூல்களுமே நமக்கு மூல நூல்களிலிருந்து தமிழுக்கு பல பண்டிதர்கள் மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் நாம் அதை சரியாகப் படிக்காமல் இருந்து விட்டோம். நம் நெறிமுறைகளைப் படிப்பதும், நம் தர்மத்தின்படி வாழ்வதும் ஏதோ கேலிக்குரிய செயலாக திட்டமிடப்பட்டு நம் மனதுக்குள் புகுத்தப்படுகிறது என்றே கூறலாம்.

நம்முடைய வேதங்களுடைய பெருமையோ, நம்முடைய கலாசாரத்தினுடைய பெருமையோ, நம்முடைய முன்னோர்கள் சொன்னால் நாம் கேட்கமாட்டோம். மாக்ஸ் முல்லர் முதலான அயல்நாட்டு அறிஞர்கள் வந்து சொன்னால் நாம் இதை ஏற்றுக்கொள்வோம் என்ற பாணியில் சொல்வோம்.

அப்படித்தான், மனு தர்மத்தை ஆங்கிலேயர்களும் மேலை நாட்டவர்களும் படித்து, இது மிக அருமையான நூல் என்று சொல்லி மொழி பெயர்த்ததை நாம் பார்க்கிறோம். ஜெர்மானிய தத்துவ மேதை ஆகிய நீட்ஷே என்ன சொல்கிறார் எனில், “பைபிளை மூடுங்கள். மனு தர்மத்தைப் படியுங்கள்”, என்கிறார்.  ஆனால் அதற்கு முன்னமேயே பல மொழிகளில் மொழி பெயர்ப்பு உள்ளது. 1890களில் வந்த மனுநீதியின் மொழி பெயர்ப்பு தமிழிலேயே உள்ளது. அதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை.

மூல நூலைப் படித்தால் என்ன அர்த்தம் வருமோ, மொழிபெயர்ப்பில் கட்டாயம் அது மாறுதலை அடையும். நம்முடைய தமிழ் மொழியிலேயே இருக்கும் திருக்குறளை, ஆங்கிலத்தில் படித்துப்பார்த்தால், அந்த மொழிபெயர்ப்பில் என்னவெல்லாம் மாறுதல்கள் இருக்கின்றன என்பது புரியும். அப்படிபார்க்கும் போது ஆங்கிலேயர்கள் தான் கொடுத்தார்கள் என்று இல்லை. அதற்கு முன்னமேயே மனுநீதி இருந்தது. அதனுடைய புரிதல் சரியாக இல்லாததனால், நாம் மூல நூலைப் படிக்காததனால் ஆங்கிலேயர்கள் அவர்கள் புரிந்து கொண்டதைக் கொண்டு எழுதிய  மொழிபெயர்ப்பை வைத்து தப்பும் தவறுமாக படித்து கொண்டிருக்கிறோம்.

பெண்களை படிக்க வைப்பது தவறு. சொத்துரிமை வழங்க கூடாது என்று மனுதர்மம் ஒரு புரட்டு ஓடுகிறது ! 

மனு தர்மத்தை முதலில் அணுகுவதற்கு முன்னர் அந்த காலகட்டம் எப்படி இருந்தது என்பதை புரிந்து கொண்டு அணுக வேண்டும். அன்றைய சமூகம் வேறு. இன்று நாம் பார்க்கக் கூடிய நம்முடைய சமூகம், அதனுடைய பார்வை வேறு. அப்படி இருந்தாலும், நாம் என்னவோ மனு தர்மம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்றோ, அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது போன்ற தோற்றம் மக்களிடம் கொடுக்கப்படுகிறது. அது தவறு.

ஏனென்றால், மனு தர்மத்தில் 9வது அத்தியாயம், அது தான் பலரும் மேற்கோள் காட்டும் அத்தியாயமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லக்கூடிய அத்தியாயமாக 9வது அத்தியாயம் இருக்கிறது. அதில் பொருளாதாரத்திற்கு பெண்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லப்படுகிறது. வீட்டினுடைய பொருளாதாராம், தூய்மை, திருமணங்கள் முதலான எல்லா விஷயங்களிலும் பெண்களுடைய கருத்து முக்கியம் என்று சொல்லி 9வது அத்தியாயம் 11வது ச்லோகத்தில் மனு மிகத் தெளிவாக சொல்கிறார்.

அர்த்தஸ்யஸங்க்ரஹேசைனாம்வ்யயேசைவநியோஜயேத்

சௌசேதர்மேஅன்னபக்த்யாம்பாரிணாஹ்யஸ்யசேக்ஷணே

வீட்டின்பொருளாதாரம்தூய்மைசுகாதாரம்வீட்டில்நடக்கும்வழிபாடுகள்உண்ணும்உணவுஆகியவிஷயங்களில்பெண்கள்முழுசுதந்திரத்துடன்செயல்படவேண்டும்.

அடுத்தது சொத்துக்கு உரிமை. கட்டாயம் பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று அதே 9வது அத்தியாயம் 130வது ச்லோகத்தில் மனு சொல்கிறார். அதாவது,

யதைவாத்மாததபுத்ரபுத்ரேணதுஹிதாஸமா

தஸ்யாம்ஆத்மனிதிஷ்டந்த்யாம்கதம்அன்யோதனம்ஹரேத்

மகனுக்குநிகராகமகளையும்கருதவேண்டும்தன்னுடையஉதரத்திலிருந்துஉதித்தபெண்இருக்கும்போதுவேறுஒருவனுக்குசொத்தைஎப்படிகொடுப்பது?”, எனும்கேள்வியைமனுநமக்குமுன்னேவைக்கிறார்.

அப்படி இருக்கும்போது, “மனு நமக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை, பெண்களை அடிமைபடுத்தி வைத்திருந்தார், உரிமைகளை வழங்கவில்லை”, என்பது ஒரு தவறான புரிதல்.

திருமண விவாகரத்து பற்றி சொல்லவில்லை! அதனால் பெண் சுதந்திரத்தை அந்த நூல் மறுக்கிறது என்கிறார்கள் !

விவாகரத்து செய்யக்கூடாது என்பதை எந்த பழைய நூலுமே சொல்லாது !  மனு தர்மம் மட்டும் அல்ல. நம்முடைய தர்ம சாஸ்திர நூல் எதுவுமே கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்று சொல்கிறது. இது தர்ம சாஸ்திரம் அடிப்படையாக சொல்லக்கூடிய விஷயம். இந்த சாஸ்திர நூல்கள் அனைத்துமே, நம்முடைய மனித வாழ்வு என்பது எதை நோக்கி பயணப்படுகிறது என்பதைத்தான் இலட்சியமாக வைத்திருக்கிறது.

சாஸ்திர நூல்கள் படி பார்க்கும்போது மனு தர்மம் மட்டும் இல்லாமல், விவாஹ மந்திரங்களைப் (அதாவது கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள்) பார்த்தாலே, “நாம் 100 ஆண்டு காலம் இணைந்து வாழ வேண்டும். நம்மால் நம் சந்ததிகள் நல்லவிதமாக உருவாகி, அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு சந்ததியாக உருவாக வேண்டும்”, என்பதைத் தான் இந்த மந்திரங்களோ, சடங்குகளோ, விஷயங்களோ சொல்கிறது. அதில் விவாகரத்து என்ற விஷயமே இல்லை. இன்று சட்டத்தில், நாம் ஒரு புதிய சட்டம் ஒன்று உருவாக்கி, ஆங்கிலேயர்களுடைய தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தை வைத்து பழைய நூல்களை பார்க்கும்போது இவை விநோதமாகத் தெரிகிறது. இது நம் பார்வையின் குற்றம் ! நூலின் குற்றமல்ல ! திருக்குறளில் கூடத்தான் விவாகரத்தைப்பற்றி பேசவில்லை. தமிழ்மறை மற்றும் நீதி நூல்கள், நன்னூல் முதலானவைகளில் கூட விவாகரத்தைப்பற்றி பேசப்படவில்லை. அப்படி இருக்கும்போது, அன்றைய வாழ்வியல் முறையில் விவாகரத்து என்பது அவசியமில்லாத விஷயமாக இருந்தது. அன்றைய நடைமுறையை இன்றைய சட்டத்துடன் பொருத்திப் பார்க்கும்போது கண்டிப்பாக குழப்பம் தான் வரும்.

அன்று இருந்த சமூக சூழ்நிலைகளை அனுசரித்து சில விஷயங்களை நாம் இன்று பார்க்கும் போது, சில விஷயங்கள் இன்றைய காலகட்டத்துக்கு மாறுதலாக இருக்கும். ஒரு நூலை அணுகும் போது அந்த நூல் எந்த காலகட்டத்தில் பழக்கத்தில் இருந்தது, அந்த நூல் எப்போது உருவானது, அன்றைய வாழ்வியல் எப்படி இருந்தது முதலான பார்வைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம் – (மனு ஸ்ம்ருதி 9-90)

வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

என்று பெண்ணுக்கு உரிமையைத் தரும் மனு தர்மம் விவாகரத்தைப்பற்றி பேசவில்லையா? என்றால், கட்டாயம் பேசாது. ஏனென்றால், அன்றைய வாழ்வியல் நெறிமுறையில், கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இருந்தது.

சுதந்திரமாக வாழ பெண்களுக்கு உரிமை இல்லை என மனு சொல்கிறார் என்று கூறுகிறார்கள்

இது திரும்பவும், முக்கியமான ச்லோகத்தை வைத்துதான் இவர்கள் பேசுகிறார்கள். அந்த ச்லோகத்தை முதலில் பார்ப்போம்

பிதாரக்ஷதிகௌமாரேபர்த்தாரக்ஷதியௌவனே

ரக்ஷந்திஸ்தவிரேபுத்ராஸ்த்ரீவிவிக்தம்அர்ஹதி– (மனு ஸ்மிருதி 9-3)

இளம்பிராயத்தில்பெண்ணைப்பாதுகாக்கவேண்டியதுதந்தையுடையகடமைவளர்ந்தபிறகுயௌவனபிராயத்தில்அவளைக்காக்கவேண்டியதுகணவனின்கடமைவயதானகாலத்தில்அவளைக்காக்கவேண்டியதுமகனுடையகடமைபெண்கள்எல்லாகாலத்திலும்தனித்துவிடாமல்காக்கப்படவேண்டியவர்கள்

இதைத்தான் திரித்து, “பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. என்றைக்குமே அவர்கள் ஆணை அண்டிதான் வாழ வேண்டிய வாழ்க்கையை உடையவர்கள்” என்று மனு சொன்னதாக திரித்து சொல்லப்படுகிறது. ஏற்கனவே பலமுறை கூறியது போல, மூல நூல்களைப் படித்தால் மட்டுமே அதில் என்ன சொல்லப்படுகிறது என்பது நமக்கு தெளிவாகப் புரியும். அது மட்டுமல்லாமல், ஒரு ச்லோகத்தை தனியாக எடுத்துப் பார்த்தால் அர்த்தம் விபரீதமாகத் தான் இருக்கும்.

உதாரணமாக பகவத் கீதையில் ஒரு ச்லோகம் இருக்கிறது : “மாம் அனுஸ்மர யுத்ய ச” என்று கண்ணன் சொல்லும் அந்த வரியின் பொருள், “என்னை மனதில் எண்ணிக் கொண்டு, துணிந்து போர் செய்” – இதை மட்டும் எடுத்துக் கொண்டு, கண்ணன் தன்னை எண்ணாதவர் எல்லோரையும் கொல்லச் சொல்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம் ? பகவத் கீதை சொல்லப்பட்ட காலம், இடம், சூழ்நிலையில் அர்ஜுனனின் மனச்சோர்வை நீக்கி உனக்கான கடமையில் பின் வாங்காதே என்று அதனை பொருள் கொள்ளுதல் வேண்டும். அது கீதையை முழுதும் படித்தாலே விளங்கும். அதுபோலத் தான் மனுஸ்ம்ருதியையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் பார்த்தால் தப்பும் தவறும் தான் தெரியும்.

மனுஸ்ம்ருதி ஆண்களுக்கும் பெண்களுக்குமான கடமைகளைச் சொல்லும் போது,

“பெண் என்பவள் ஒரு விலை மதிப்பில்லாத ஒரு ரத்தினம் போன்றவள்”, என்று கூறுகிறார் மனு. அந்த ரத்தினதை எப்படி நாம் பாதுகாத்து வைக்க வேண்டுமோ அதுபோல, ஆண் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் பெண்ணைக் காக்க வேண்டியவன் ஆகிறான் என்று ஆணின் கடமையை அந்த நூல் சொல்கிறது.

விஷ(ம) பிரச்சாரம்

உண்மை இப்படி இருக்க, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மனு தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று திட்டமிட்டு விஷப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படி எதுவுமே மனு தர்ம சாஸ்திரத்தில் கிடையாது என்பது தான் சத்தியம். பெண்களை மிகவும் உயர்வாகப் போற்றி தான் மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது. எங்கேயுமே கற்பு பிறழ்ன்றவர்களாக சித்தரிக்கப்படவில்லை. இது தெளிவான ஒரு விஷயம். ஏனென்றால், நடுவிலிருந்து ஒரு ச்லோகத்தை எடுத்துப்பார்த்தால் கட்டாயம் அப்படி தப்பாகத்தான் தெரியும்.

உதாரணத்திற்கு, இவர்கள் எந்த ச்லோகத்தை சொல்கிறார்கள் என்பதையே சொல்கிறேன். அதை வைத்தே விளக்குகிறேன்.

ஏவாரூபம்பரிக்ஷந்தேஅஸாம்வயஸிஸம்ஸ்திதி:

ஸுரூபம் வா விரூபம் வா புமான் இத்யேவ புஞ்சதே (9.14)

ஒருபெண்ணுக்குஓர்ஆண்மேல்விருப்பம்உண்டாகவயதோஅழகோதோற்றப்ப்பொலிவோகாரணமென்றுசொல்லமுடியவில்லைஅழகனானாலும்அழகற்றவனானாலும்ஆண்என்பவன்மேல்பெண்ணுக்குஈர்ப்புஏற்படுகிறது.

இதைப் பொத்தாம் பொதுவாகப் பார்த்தால் தவறாகவே தெரியும். ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் பார்வையில் பார்த்தால் இதன் அர்த்தம் விளங்கும். இது இன்றளவும் நடைமுறையில் இருப்பதால் தானே, பெண்ணுக்கு திருமணம் செய்யுமுன்னர் பலமுறை விசாரிக்கிறோம் ? பெண் கண்மூடித்தனமாக ஒருவன் மேல் காதல் கொள்வதும் பின்னர் விபரீதங்களைச் சந்திப்பதும் நடக்காத ஒன்றில்லையே?

ஏற்கனவே ஒரு ச்லோகம் சொல்லப்பட்டது. பிதா ரக்ஷதி கௌமாரே  என்று.. பெண்கள் ஆணை சார்ந்திருக்க வேண்டும் என்று. அது ஆண்களுக்காக சொல்லப்பட்டது. ஆண்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட நீதி.

அதேபோல, திருவள்ளுவர் ஒரு கருத்தை சொல்கிறார்.

தற்காத்துத்தற்கொண்டாற்பேணித்தகைசான்ற

சொற்காத்துச்சோர்விலாள்பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது.

அதையே தான் மனுவும் சொல்கிறார். “ஒரு பெண்ணினுடைய பாதுகாப்பு என்பது முதலில் அவளிடமிருந்து துவங்குகிறது” என்கிறார். இதை வைத்து அவர் பெண்ணை கேவலமாக சித்தரித்திருக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. ஒரு பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் அவளுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவள் தன்னை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதற்கு கூடுதலான பாதுகாப்புகள் இருக்க முடியுமே தவிர வேறு யாரும் அவளை கட்டுப்படுத்த முடியாது என்றே மனு சொல்கிறார். இது எல்லாவற்றுக்குமே பொருந்தும். பெண் என்பவள் சக்தி ஸ்வரூபம். பஞ்சபூதங்களுமே சக்தி ஸ்வரூபம் தான். நெருப்போ, நீரோ, காற்றோ எதுவானாலும், அது தாண்ட வேண்டும் என்று நினைத்தால் நம் யாராலும் தடுக்க முடியாது. இது தவிர்க்க முடியாத உண்மை. சுனாமி, சூறாவளி, நெருப்பு முதலானவைகள் அது எல்லை மீற வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை யாருமே தடுக்க முடியாது. அது கட்டுக்குள் இருக்கும் வரை தான் நமக்கும் நல்லது அதற்கும் நல்லது. பெண்ணை அப்படி சக்தி வடிவமாக மனு உருவகப்படுத்துகிறார். அப்போது நாம் என்னதான் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண் அவளே தன் பாதுகாப்பிற்கு முதல் படி எடுத்துவைக்க வேண்டும் என்று ஒரு விஷயம் சொல்கிறார். இது தான் திரித்து சொல்லப்படுகிறது. இதற்கு முன்னும் பின்னும் பார்த்தால் புரிந்து விடும்.

அவர் என்ன சொல்கிறார் எனில்,

யத்ரநார்யாஸ்துபூஜ்யந்தேரமந்தேதத்ரதேவதா

அர்த்தம் : பெண்கள்எந்தஇடங்களில்பூஜிக்கப்படுகின்றார்களோஅந்தஇடத்தில்தெய்வம்சந்தோஷமாகிஅவர்களுக்குஅருளைவாரிவழங்கும்.

இது ஒரு முக்கியமான ஒரு வாக்கியம். பெண்களை தெய்வத்திற்குச் சமமாகச் சொல்கிறார். அதே ச்லோகத்தில் அடுத்த வரி,

யத்ரைதாஸ்துபூஜ்யந்தேஸர்வாஸ்தத்ரஅபலாக்ரியா– (மனு ஸ்மிருதி 3-56)

எங்கேபெண்கள்பூஜிக்கப்படவில்லையோஅவர்களுக்குதெய்வசக்திகுன்றிஎல்லாவிதமானஅழிவும்ஏற்படும்என்றுகூறுகிறார்

ஜாமயோயானிகேஹானிசபந்திஅப்ரதிபூஜிதா

தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத– (மனு ஸ்ம்ருதி 3-58)

எந்தெந்தஇடங்களில்பெண்கள்தகாதஅறுவறுக்கத்தக்கவார்த்தைகளால்இகழப்பட்டுஅவமானப்படுத்தப்படுகிறார்களோஅந்தஇடமேவிஷம்உண்டவன்அழிவதுபோல்அழிந்துபோகும்.

எவன் தன் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ அவன் தன் உடன் பிறந்த சகோதரியை, தன்னுடைய மகளை, தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்துக்கோள்ள வேண்டும்.

“பெண்களுடைய மனம் சந்தோஷப்பட்டால் உன் வாழ்வில் நலம் ஏற்படும். பெண்களுடைய மனம் வருத்தத்தை அடைந்தால் உனது வாழ்வில் நாசம் உண்டாகும்”, என்று மனு சொல்கிறார். இதில் எங்கே பெண்கள் குறைவாகவோ தாழ்வாகவோ சித்தரிக்கப்படுகிறார்கள் ?

பித்ருபிர்ப்ராத்ருபிச்சைதைபதிபிர்தேவரைஸ்ததா

பூஜ்யாபூஷயிதவ்யாச்சபஹுகல்யாணம்ஈப்ஸுபி– (மனு ஸ்மிருதி 3-55)

உன்னுடையவீட்டில்இருக்கக்கூடியஉன்னுடையமகளையோசகோதரியையோஅண்ணியையோஉன்னுடையமனைவியையோநீபோற்றிகௌரவித்தால்மட்டுமேநீநலமாகவாழமுடியும்

மனு தெளிவாக சொல்கிறார். இதைக் காட்டிலும் எப்படி பெண்களுடைய குண நலன்களை நாம் விளக்க முடியும்?

இதே போல தான் பெண்களும் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை மட்டும் சொல்லிவிட்டு, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தவறு. பெண்கள் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்லிய அதே இடத்தில் தான் கணவனும் பெண்ணைப் போற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது தான் வாழ்க்கை என்பது தான் நடைமுறையிலிருக்ககூடிய விஷயம்.

ப்ரஜனார்த்தம்மஹாபாகாபூஜார்ஹாக்ருஹதீப்தய

ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன– (மனு ஸ்ம்ருதி 9-26)

தாய்க்குலமானபெண்கள்போற்றத்தக்கவர்கள்வணங்கத்தக்கவர்கள்இல்லத்தின்விளக்காய்விளங்குபவர்கள்வீட்டின்மகாலட்சுமியாய்த்திகழ்பவர்கள்.

வேறு எந்த மதத்திலாவது, சுமங்கலி பூஜை என்று ஒரு பெண்ணை உட்கார்த்தி வைத்து பெண்ணை வழிபடக்கூடிய வழக்கம் இருக்கிறதா? ஒரு கன்யா பூஜை என்று 5 வயது பெண் குழந்தையை உட்கார்த்தி, 80 வயதிற்க்கு மேற்பட்டவர் அந்தக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கும் மரபு எந்த மதத்திலிருக்கிறது? எந்த நாட்டிலிருக்கிறது?

நம்முடைய மரபில் தான் பெண்களை தெய்வமாக வணங்கக் கூடிய ஒரு மரபைச் சார்ந்து நாம் இருக்கிறோம். ராமக்ருஷ்ண பரமஹம்சர் தன்னுடைய மனைவியான சாரதா தேவியை அம்பிகையின் வடிவமாகப் பார்த்து வணங்கினார் என்று நாம் கேட்கிறோம். அப்படி, ஒரு சின்னக் குழந்தையாக இருந்தாலும், வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், தன்னுடைய மனைவியாக இருந்தாலுமே, அம்பிகையினுடைய வடிவமாக, சக்தி வடிவமாக பார்க்கக்கூடிய மதத்தைச் சேர்ந்து நாம் இருக்கும் போது, அந்த மதத்தினுடைய தர்ம சாஸ்திர நூல்களில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்திச் சொல்லுவோம்?

இந்த மாதிரி பெண்களை இழிவு படுத்தி சொல்வது என்று நம் நூல்களைச் சொல்வது எல்லாமே திரிபு படுத்தப்பட்ட வாதங்கள். நாம் அதனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், இப்போது திருக்குறளில்கூட இடையில் ஒரு வாக்கியத்தை எடுத்துப்பார்த்தால் தப்பாகதான் தெரியும்.

மனைவிழைவார்மாண்பயன்எய்தார்வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது– (குறள் 901)

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே.

தையல்சொல்கேளேல் (ஆத்திசூடி 62) என்கிறார் அவ்வையார்

இதெல்லாம் நாம் முன்னும் பின்னும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இதெல்லாம் பெண்களை இழிவுபடுத்தக்கூடியதா? நாம் அதனுடைய இடம், பொருள் ஏவலைக் காண வேண்டும். எந்த இடத்தில் எதற்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் நடுவில் பார்த்தால் அப்படித் தான் புரியும்.

இடையிலிருந்து ஒரே ஒரு வரியை மாத்திரம் நம்முடைய வசதிக்காக எடுத்துக்கொண்டால், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”, என்பது போல, முன்னும் பின்னும் பார்த்தால் தான் அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் புரியும்.

பல இடங்களில் கீதாசாரம் என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.”

என்பது பல அலுவலகங்களிலும் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு வாக்கியம் பகவத்கீதை மூல நூலில் இல்லவே இல்லை. ஆனால் கீதாசாரம் இது தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், மூல பகவத் கீதையை நாம் படித்ததே இல்லை. படித்தது முழுவதும் மொழிபெயர்ப்பு. மூல நூல்களைப் படித்தவர்களுக்குத் தெரியும் பகவத் கீதையில் இப்படி ஒரு வாக்கியம் கிடையாது என்று.

அதுபோலத்தான், மூல நூல்களைப் படிக்கும்போது, நமக்கு அதனுடைய தெளிவு ஏற்படும். மனு தர்மத்திலேயே என்ன சொல்லப்படுகிறது என்றால். பொருளாதாரத்தில் பெண்களுக்கு அதிகாரம் உண்டு. இதை மிகத் தெளிவாக சொல்கிறது. வயதிற்கு வந்த பெண் தன்னுடைய மனதிற்குப் பிடித்தமான கணவனை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. இதெல்லாம் மனு தர்மம் சொல்லக்கூடியது. அப்போது பெண்களை ஆட்சியில் அமர்த்திப் பார்ப்பதும், பெண்கள் அதிகாரத்தோடு இருப்பதும் மற்ற நாடுகளுக்கும் மற்ற மதங்களுக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், நம்முடைய மதத்தில் அது புதிது கிடையாது. பெண்ணை போற்றிப் பாதுகாப்பதே தர்ம சாஸ்த்ர நூலின் நோக்கம். ஆதவற்ற நிலையில் இருக்கும் பெண்களை அரசே காக்க வேண்டும் என்று கருணையுடனே  மனு ஸ்ம்ருதி  பேசுகிறது.

வசாஅபுத்ராஸுசைவம்ஸ்யாத்ரக்ஷணம்நிஷ்குலாஸு

பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச (8-28)

பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எந்த ஒரு ஆண் மகனாவது தனியாக இருக்க முடியுமா? ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பெண்ணை சார்ந்து தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது அம்மாவை சார்ந்து தான் இருக்கிறோம். இளமை பருவத்தில் மனைவியை சார்ந்திருக்கிறோம். நம்முடைய வாழ்வியல் அமைப்பே, அதனால் தானே கல்யாணம் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறார்கள். அப்படி, நம் வாழ்வியல் நெறிமுறை ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்க கூடியதற்குப் பெயர் தான் நெறிமுறைகள்.

அதெல்லாம் எனக்கு வேண்டாம், என் இஷ்டம் போல நான் இருப்பேன் என்று இருப்பவருக்கு தர்ம சாஸ்திரம் எதற்கு? அவர்களுக்கு அவசியமே இல்லை. அதை கடைபிடிக்கப் போவதில்லை, அதில் நம்பிக்கை இல்லை என்பவர் அந்த புத்தகத்தைப் பற்றி பேசவே வேண்டாம். இந்த நெறிமுறைப்படி வாழ்வேன், தர்மத்தின்படி வாழ்வேன், எனக்கு என்று ஒரு கோட்பாடு இருக்கிறது, அந்த நெறிகளின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்று நினைப்பவர்களுக்கு இந்த தர்ம சாஸ்திர நூல்களெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று இருப்பவர்களுக்கு எந்த நூலுமே பயன் தராது. நீதி நூல் மட்டும் அல்ல. அதன்படி பார்க்கும்போது மனுநீதி மட்டும் அல்ல, எந்த தர்ம சாஸ்திர நூலும் வாழ்வியல் நெறிமுறையைத்தான் சொல்கிறது. வாழ்வியல் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் இவற்றை கேட்கமாட்டேன் என்று இருந்தால், அது அவரவர்களுடைய பிரச்சனை, நூலினுடைய பிரச்சனை அல்ல.

இன்றையநடைமுறை

மனு தர்ம விதிகள் இப்போது நடைமுறையில் இருக்கிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி தான். மனு தர்மம் மட்டும் அல்ல, பல தர்ம நூல்கள் பரவலாக நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒரு சில இனக்குழுக்கள், ஒரு சில மக்கள் கட்டாயமாக அதை கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், வேறு முறையில் அது மாறி வந்துள்ளது. தர்மம் அதே தான் –  அதை நடைமுறைப்படுத்துதல் என்பது பல விஷயங்களில் மாறுதலை அடையத்தான் செய்திருக்கிறது.

உதாரணமாக மனு தர்மம் சொல்லக்கூடிய விஷயம் ஒன்றை பார்ப்போம்.

பரதாராபிமர்சேஷுப்ரவ்ருத்தான்ந்ரூன்மஹீபதி

உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்– (மனு ஸ்ம்ருதி 8-352)

பெண்களின்கற்புக்குக்கேடுவிளைவிக்கும்ஆண்களுக்குஅதிகபட்சதண்டனைகொடுக்கவேண்டும்பிறர்இத்தகையதவறைச்செய்வதற்கேஅஞ்சும்அளவுக்குஅந்ததண்டனைஇருக்கவேண்டும்.

“ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துபவன் அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்துபவன் இருந்தானானால், அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அது அரசுடைய கடமை”, என்று மனு தர்மம் சொல்கிறது. கொடுக்கக்கூடிய தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்றால், அந்த தண்டனையைப் பார்த்து, அந்த தப்பை இன்னொருவன் செய்வதற்கு பயம் உண்டாகும்படி, அந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.

இது அப்படியே நடைமுறையில் உள்ளதா என்றால் வேறு விதமாக மாறுதல் அடைந்து இருக்கத்தான் செய்கிறது. அப்போது, அன்றைய காலகட்ட சூழ்நிலைகளில் இருந்த பலவிஷயங்கள் இன்றைய காலகட்டத்தில் இல்லை. உதாரணத்திற்கு, அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான திருமண வயது மிகக் குறைவாக இருந்தது. ஆண்களுக்கும் அவ்வாறே இருந்தது. இன்று திருமண வயது என்பது, அரசு 18லிருந்து 21 ஆக அதிகரித்து, இன்னும் கூடுதலாக்கப்போவதாக நமக்கு செய்திகள் வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த விஷயங்களை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த முடியாது. அந்தமாதிரியான மாறுதல்கள் அடையத்தான் செய்திருக்கிறது. மனு தர்மம் மட்டுமல்ல எல்லா தர்மங்களுமே அந்த மாதிரி காலகட்டத்தை, சட்டத்தை அனுசரித்து பல காரணங்களுக்காக மாறுதலை அடைந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

நம்முடைய அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கும் தான் ஒரு மனித வாழ்க்கையினுடைய இலட்சியம். அதைத்தான் மனு என்பவர் வழிகாட்டுகிறார். அந்த வாழ்வியலுக்கான சட்ட திட்ட நெறிமுறைகள்.

அறத்தின் வழி நின்று, தர்மத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி, அதாவது எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்படவில்லை.

இன்று கூகுளுடைய தத்துவக் கோட்பாட்டைப் படிக்கும்போது, “You can make money without doing evil”, என்கிறார்கள். எந்த விதமான தவறான காரியமும் செய்யாமல் பணம் ஈட்ட வேண்டும் என்பது கூகுளுடைய ஒரு தத்துவக் கோட்பாடு. அதை நாம் ஒரு பெரிய விஷயமாகப் பாராட்டுகிறோம். இதைத்தான் நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன. நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லக்கூடிய சத்தியம் இது தான்.

“தர்மத்தின் வழி நடந்து, அப்படி தர்மத்தின் வழி நடந்ததனால் ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு, அப்படி ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு உன்னுடைய மனதில் ஏற்படக்கூடிய ஞாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு, இப்படி ஒரு வாழ்வியல் வாழ்ந்து வீடுபேறு என்று சொல்லக்கூடிய மோக்ஷத்திற்கு உன்னை நீ தயார் படுத்திக்கொள்ள வேண்டும்”. இது தான் தர்ம சாஸ்திரங்கள் கூறக்கூடிய நெறிமுறை. இதைத்தான் மனு தர்மமும் சொல்கிறது.

மனுவின் காலமும் வாழ்ந்த பகுதியும்

மனு வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சௌராஷ்ட்டிர மத வேதநூலான அவெத்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத கால ஆறுகளான சரசுவதி ஆறு மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் (தற்கால சிந்து மாகாணம், பஞ்சாப், வடக்கு இராஜஸ்தான் மற்றும் தெற்கு அரியானா) பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள், விந்திய மலைக்கு வடக்குப் பகுதிகளில் (தற்கால நேபாளம், உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராஜஸ்தான்) குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரியவர்த்தம் எனற பெயரால் அழைக்கப் பெற்றது. அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்துக் கொடுத்ததே மனுஸ்மிருதி ஆகும்.

சிறப்பம்சங்கள்

பிரித்தானிய இந்தியா ஆட்சி வரை “மனு தர்ம சாத்திரம்” என்பது இந்து மதத்திற்கு ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதுமாக இருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர்.மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.

தாக்கங்கள்

மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக் கிடைக்கிறது. சங்க கால அரசர்கள் பின்பற்றி வந்த வாழ்க்கை முறை, இந்த மனு தர்மத்தின் அடிப்படையில் தான் அமைந்தது-

உள்ளடக்கம்

பரம் பொருளாகிய பகவான் தமது விருப்பத்தின் காரணமாக பிரம்மா மூலம் அண்ட சராசரங்களை படைத்தார். மனித குலத்தை பெருக்கவே மரிசி, ஆங்கிரசர், அத்திரி, புலத்தியர், புலகர், கிருது, பிரசேதகர், வசிட்டன், பிருகு மற்றும் நாரதர் எனும் பத்து பிரசாபதிகளை படைத்தார். இந்த பிரசாபதிகள் மூலம் சுவாயம்பு மனு உட்பட எழு மனுக்களும், தேவர்கள், சுவர்க்கலோகம், மாமுனிகள், யட்சர்கள், காந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், அசுவனிகுமாரர்கள், அட்டதிக்கு பாலகர்கள், அசுரர்கள், அப்சரசுகள், மருத்துக்கள், இராக்கதர்கள், பைசாசர்கள், நாகர்கள், கருடர்கள், சர்ப்பங்கள், பிதுர்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நீர் வாழ் பிராணிகள் தோன்றின. பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க வர்ண மற்றும் ஆசிரம தருமங்களை மனு வகுத்து கொடுத்தார். இது ஆசாரப்பகுதி, விவகாரப்பகுதி, பிராயச்சித்தப் பகுதி என மூன்று பகுதிகளையும் 12 அத்தியாங்களையும் கொண்டது.

1வது அத்தியாயம்

உலகத் தோற்றம்:-அண்ட சராசரங்களின் தோற்றம், தேவர்கள்,மானிடர்கள், அசுரர்கள், தோற்றம் , காலக்கணக்கீடு, நால்வகை வர்ண சமூகம், நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.

2வது அத்தியாயம்

பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது.

3-5 அத்தியாயங்கள்

அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள், உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.

6வது அத்தியாயம்

வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள்.

7வது அத்தியாயம்

சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள், தலைநகரம், போர் அறம், உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல், பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல், பகை நாட்டை முற்றுகையிடல், போர் செய்யும் முறைகள், வெற்றி வாகை சூடல், புலவர்களுக்கு பரிசு வழுங்குதல், வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல், வேள்விகள் செய்தல், சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது.

8வது அத்தியாயம்

நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது.

9வதுஅத்தியாயம்

வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.

10வது அத்தியாய ம்

சூத்திரர் & வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.

11வது அத்தியாயம்

குற்றங்களும் அதற்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது.

12வது அத்தியாயம்

வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம், முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.

மனுதரும சாத்திரமும் பெண்களும்

மனு தரும சாத்திரத்தில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,

ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225

ஒரு பெண் தான் பருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானே தேடிக்கொள்ளவும்.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 90

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.

—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

ஈன்று, புரந்து, விருந்தோம்பி, இல்லம் புரிதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக்கிடைக்கிறது.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 27

வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156

—————–

அத்தியாயம் -1

ஏகாக்ர  சித்தத்தோடு  அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள்.-1-

பகவானே, நான்கு வர்ணத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும் இவர்களுக்குள் கலப்பு சம்பந்தங்களால் ஏற்பட்ட வர்ணத்தாருடைய தர்மங்களைப் பற்றியும் எமக்கு எடுத்துரைப்பீராக.–2-

பிரபுவே, வேதங்களில் கூறப்பட்ட அனைத்தையும், பிரம்ம சொரூபத்தையும், தத்துவங்ளையும் அறிந்தவர் தாங்கள் ஒருவரே.  தாங்களே நாங்கள் கேட்ட விஷயத்தை தெளிவுபடுத்தக் கூடியவர்.–3-

மஹான்களான மஹரிஷிகள் இவ்வாறு வினவ, அளப்பரிய ஞானம் கொண்டவரான மனுபகவான் அந்த மகரிஷிகளைத் தக்கபடி உபசரித்து, அவ்வாறே ஆகட்டும்” கூறுகிறேன், கேளுங்கள் என்றருளினார்.–4-

இவ்வுலகம் இருட்டாகவும், பார்வைக்குப் புலப் படாததாகவும் ஊகிக்க முடியாததாகவும் , உருவமற்றதாகவும், ஒலியற்றதாகவும் தூங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது.–5-

ஐஸ்வர்யங்களோடு கூடியவரும், யோகாப்யாசத்தால் அறியக் கூடியவரும், இடையூறு ஏதுமின்றி சிருஷ்டிக்கக் கூடியவருமான பரமாத்மா பஞ்ச பூதங்களைப் பிரகாசிக்கச் செய்த படி தாமாக வெளிப் பட்டார்.–6-

வெளிப் புலன்களால் அறிய முடியாதவரும்,பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவரும், அருவமானவரும், நித்யமானவரும், ஊகிக்க முடியாதவருமான பரமாத்மா தாமாகவே சிருஷ்டி புரிவதற்காக வெளிப் பட்டார்.–7-

அப்படி வெளிப்பட்ட அவர்,  சிருஷ்டி செய்ய மனங் கொண்டவராக, முதலில் அப்புவை(ஆதிநீர்) சிருஷ்டி செய்தார். அந்த நீரில் தம் சக்தியின் ரூபமான ஒரு விதையை வைத்தார்.-8-

அந்த விதை சூரிய ஒளிக்கு நிகரான ஒளியோடும், தங்கமென தகதகத்த நிறத்தோடும்  ஒரு அண்டமாக அதாவது  ஒரு முட்டை வடிவமாக ஆனது. அந்த அண்டத்தில் பரமாத்மாவானவர் தாமே பிரம்மாவாக ஜன்மமெடுத்தார்–9-

தண்ணீருக்கு நாரம்  என்றும் பெயருண்டு. ஒரு செயலில் ஈடுபட்டு, தண்ணீரில் இயங்கத் தொடங்கியதால் பரமாத்மாவான அவர் நாராயணன் என்ற நாமம் பெற்றார்.–10-

சிருஷ்டிக்கப் பட்டவற்றுக் கெல்லாம் காரணமாய், வெளிப் புலன்களுக்கு எட்டாத படியாக, தோற்றமும் அழிவும் அற்று, நித்தியமான, அநித்தியமான பொருட்களின் உருவமாய் எந்த பரமாத்மா உள்ளாரோ, அந்த பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப் பட்ட அந்த புருஷன் உலகத்தில் ” பிரம்மா” என்றழைக்கப் பட்டார்–11-

அந்த அண்டத்தில் பிரம்மா ஒரு வருடம் முழுமையும் தவமியற்றிய பிறகு,(தேவர்களுக்கு வேறு காலக் கணக்கு) ” இந்த அண்டம் இரண்டாகப் பிளக்கட்டும்” என்று நினைத்த அளவில்அண்டம் இரண்டானது.-12-

பிரம்மா, பிளவுண்ட அண்டத்தின் மேல் பாதியில் ஆகாயத்தையும், கீழுள்ள பாதியில் பூமியையும்,நடுவில் வெளியையும் ( அண்ட வெளியையும்) எட்டு திசைகளையும், கடலையும் படைத்தார்.–13-

பிரம்மா பரமாத்மாவிடமிருந்து  சத், அசத் ரூபமான மனத்தைப் பெற்றார். அந்த மனத்திலிருந்து தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் தக்கதான அஹங்காரத்தைப் பெற்றார்.-14-

மஹத்” என்னும் தத்வத்தையும், ஆத்மாவுக்கு உதவியாக இருப்பதான சத்வ குணத்தையும், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களையும், விஷயங்களைக்கிரகிக்கும் சக்தி கொண்ட பஞ்சேந்திரியங்களையும் முறையாகப் படைத்தார்-15

அகங்காரத்தையும்,  அதன் தன் மாத்திரைகளையும், சூட்சும அவயவங்களையும் ஆறு  விகாரங்களையும் சேர்த்து சகல பூதங்களையும் படைத்தார்.-16-

அஹங்கார தன்  மாத்திரை வடிவங்களான சூட்சும அவயவங்கள் ஆறும், பூதேந்திரியங்களும் காரிய ரூபமாக பிரம்மாவிடம் சேருவதால் பிரம்மாவை அவற்றின் சேர்க்கை கொண்டவர் என்று பொருள் படும் விதமாக, சரீரம்” என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.–17-

பஞ்ச மகா  பூதங்களும் தங்கள் காரியங்களுடன் கூடியும், மனம் வெளியில் புலப் படாத சூட்சுமமான அவயவங்களோடு கூடியும் சரீரத்தில் பிரவேசிக்கின்றன–18-

பஞ்ச பூதங்கள், ”மஹத்” தத்துவம்”, ” அஹங்காரம்” என்னும் இரண்டு, ஆக ஏழின் காரணமாக உலகம் தோன்றுகிறது.-19-

ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், மண் என்னும் பஞ்ச பூதங்களில் முதலில் உள்ளதன் குணம் அடுத்ததன் குணத்தோடு சேர்ந்திருக்கும். இவற்றின் குணங்கள் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளதோடு சேர்ந்திருக்கும்.–20-

பிரம்மா தன்னால் படைக்கப் பட்ட அனைத்துக்கும் வேதத்திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார்.–21-

பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார்–22-

யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை  என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை , அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார்.–23-

பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் , நதிகளையும், கடல்களையும், மலைகளையும், படைத்தார்-24-

அவ்வாறே சமவெளியையும், மேடு பள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார்.–25-

செய்யத்தக்கது இது. தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வேறு படுத்தினார். மேலும் மக்களை சுகம், துக்கம் என்னும்  இரட்டைகளோடும்  விருப்பு, வெறுப்பு என்னும் இரட்டைகளோடும் இணைத்தார்.-26-

பஞ்ச பூதங்களின் சொரூபங்களோடு, இனி சொல்லப்போகின்ற அனைத்தையும் படைத்தார்.–27-

பிரம்மா, முதன் முதலில், ஆதியில் சிருஷ்டித்தபோது எந்தெந்த காரியங்களைச் செய்வதற்காக எந்தெந்த வர்ணங்களைப் படைத்தாரோ, அந்தந்த  வர்ணங்கள் மீண்டும் படைக்கப் படும் போதும் பழைய படியே ஒழுகுகின்றன.–28-

சிருஷ்டியின்போது பிரம்மா ஹிம்சிக்கும் குணம், அஹிம்சை, மிருதுவான குணம் , குரூர குணம், தர்மம், அதர்மம், பொய் உண்மை முதலானவைகளை எவை எவைகளுக்கு எவை என்று நியமித்தாரோ, அதே போன்றே அவையவை மீண்டும் படைக்கப் படும் போதும் அதே குணங்களோடு ஒழுகுகின்றன–29-

எவ்வாறு ருதுக்கள்  தாமே தத்தமது குணங்களை அடைகின்றனவோ அவ்வாறே பிராணிகளும் தத்தமது குணங்களை அடைகின்றன(ஒரு வருடத்தை ஆறு ருதுக்களாகக் கூறுகிறோம்).-30-

உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு, உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை- நான்கு வருணத்தாரைப் படைத்தார்.–31-

பரம் பொருளானவர், தம் தேகத்தை  இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ” விராட்” புருஷனை சிருஷ்டித்தார்.( அகில உலகங்களையும் தம் சரீரமாகக் கொண்ட விஸ்வரூபிக்கு விராட் புருஷன் என்று பெயர்)–32-

இப்போது  மனுபகவான், பிரம்ம தேவர் தம் கூற்றாக மனுவுக்கு  எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.-நானே விராட் புருஷனின் தவத்தால்  தோன்றிய பிரம்மா. உலக சிருஷ்டியை செய்வதற்காக விராட் புருஷனால் படைக்கப் பட்டவன்.–33-

 நான் பிரஜைகளை சிருஷ்டிப்பதற்கான அளப்பரிய சக்தியை அடைவதற்காக கடும் தவமியற்றினேன்.முதலில் பத்து  பிரஜாபதிகளை சிருஷ்டித்தேன். ( பிரஜாபதி என்பவர்கள், உலகில் சிருஷ்டியை செய்வதற்காக பிரம்மாவால் படைக்கப் பட்டவர்கள்)-34-

மரீசி, அத்ரி, அங்கிரஷ், புலஸ்தியன், புலஹன்,க்ரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன் என்னும் பத்துப்பேர்களே முதலில் நான் படைத்த பிரஜாபதிகள்” இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்.–35-

தேஜஸ் மிகுந்த  அவர்கள், தங்களைப் போல் தேஜஸ் கொண்ட ஏழு மனுக்களையும், தேவர்களையும் , தேவ உலகங்களையும்,   மிகுந்த தேஜஸ் கொண்டமகரிஷிகளையும் சிருஷ்டித்தனர்.–36-

யக்ஷர்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள் , அப்சரஸ்கள், அசுரர்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கருடன், முதலான பறவைகள் முதலாக பித்ருக்களுடைய பல்வேறு  கணங்களையும் படைத்தனர்.–37-

மின்னல்கள், இடிகள், மேகங்கள், ரோஹிதம் எனப்படும் நீண்ட நட்சத்திரம், வானவிற்கள், வால் நட்சத்திரங்கள், உற்பாதங்கள், எரி நட்சத்திரங்கள் முதலான பலவித நட்சத்திரங்களையும் படைத்தனர்.-38-

கின்னரர்கள், வானரர்கள், மீன்கள்,விதவிதமான பறவைகள்,பசுக்கள், மான்கள், கொடிய மிருங்கள், மனிதர்கள் முதலான வற்றை படைத்தனர்.–39-

கிருமிகள், புழு  பூச்சிகள், வண்டுகள்,விட்டில் பூச்சிகள், பேன்கள், ஈக்கள், கொசுக்கள், முதலானவற்றையும் மரங்களையும், மலைகளையும் கூட படைத்தனர்.–40-

மஹரிஷிகள் தவம் புரிந்து என் ஆணைப்படி இங்கே தென்படுகின்ற தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ரூபமான உலக முழுதையும், அதனதன் வினைப்படி படைத்தனர்.–41-

இனி எந்தெந்த பூதங்களுக்கு அதாவது எந்தெந்த  உயிரினங்களுக்கு எந்தெந்த கர்மாக்கள் சொல்லப் படுகின்றனவோ அந்தந்த பூதங்களுடைய கர்மாக்களையும் ஜன்மாவினுடைய கிரம யோகத்தையும் உங்களுக்கு  உரைக்கிறேன்.–42-

பசுக்கள், மான்கள், கொடிய மிருகங்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், மனிதர்கள்,  முதலானோர் கர்ப்பத்தினின்று பிறந்தவர்கள்–43-

பறவைகள், சர்ப்பங்கள். மீன்கள், ஆமைகள் போன்றவை முட்டையினின்று  தோன்றுவன். இவற்றில்  சில  நீரில் வாழ்வன. சில நிலத்தில் வாழ்வன–44-

காட்டு ஈக்கள், கொசுக்கள், பேன்கள், ஈக்கள், மூட்டைப் பூச்சிகள், மேலும் இவற்றைப்போன்று எவையெல்லாம் வெப்பத்தினால் ( புழுக்கத் திலிருந்து) பிறக்கின்றனவோ , அவை யனைத்தும் ஸ்வேதஜங்கள் எனப்படும்.–45-

மரங்களனைத்தும்  விதைகளைப் பிளந்து கொண்டு, பூமியையும் பிளந்து கொண்டு பிறப்பன.

 விதைகளினின்று பிறப்பவை போக, சில கிளைகளை பூமியில் ஊன்றுவதால், மரங்களாகின்றன. நெல் போன்ற தானியங்களும், இன்னும் சில தாவரங்களம், பயிர் வளர்ந்து பலன் தந்தவுடனே அழிகின்றன.–46-

மலர்கள் இல்லாமலே பழங்களைத் தரும் மரங்களுக்கு வனஸ் பதிகள் என்று பெயர். பூத்துப் பலன் தரும்  மரங்களுக்கு விருட்சங்கள் என்று பெயர்.–47-

கொத்துக் கொத்தாக ப் பூப்பவை ”குச்சம்” என்று சொல்லப் படும். புதராக மண்டி வளர்பவை ” குல்மம்” என்று சொல்லப் படும். சில புல்வகைகளும், படரும் தாவரங்களும், கொடிவகைகளும் விதைகளினின்றும் பிறந்தவை மேலும் சில  கிளைகளை பூமியில் ஊன்றுவதால் வளர்பவை.–48-

இந்தத் தாவரங்கள் அனைத்துமே, கர்மஹேதுவான தமோ குணத்துடன் கூடியதாக,, உணர்வுகளுடன் கூடிய மனமும் பெற்றிருப்பதால் சுகதுக்கங்களை அனுபவிப்பவையாக உள்ளன.–49-

பயங்கரமானதாகவும், எப்போதும்  அழிவுக்கு ஆட்படுவதாகவும் உள்ள இந்த பூத சம்சாரத்தில் பிரம்மா முதல் தாவரங்கள் ஈறாக உள்ள சகல ஜீவசிருஷ்டிகளும் கூறப் பட்டன.–50-

இவ்வாறு என்னையும் சர்வத்தையும் படைத்த, அளவற்ற பராக்ரமம் பொருந்திய பிரம்மா, காலத்தை காலத்தோடு சேர்த்து, அதாவது சிருஷ்டி காலத்தை பிரளயகாலத்தோடு சேர்த்து, தன்னுள் தான் கலப்பார்.–51-

எப்போது அவர் விழிப்புறுவரோ, அப்போது இந்த உலகம் இயங்கத் தொடங்கும். எப்போது அவர் சாந்தமாக உறங்கத் தொடங்குகிறாரோ, அப்போது அனைத்தும் ஒடுங்கும்.–52-

எப்போது அவர் உறங்கிக் கொண்டிருக்கிறாரோ, அப்போது கர்மாவின் உருவங்களான ஜீவன்களனைத்தும் காரியங்கள் ஏதுமற்று இருக்கும். அனைத்து இந்திரியங்களோடு மனமும் ஓய்வெடுத்துக் கொள்ளும்.–53-

எப்போது ஜீன்களெல்லாம் ஒரே தருணத்தில் அந்த மஹாத்மாவிடம் கலக்கின்றனவோ, அப்போது அவர் அனைத்து இயக்கங்களையும் விட்டு சுகமாக உறங்குகிறார்.(ஒடுக்கம்)–54-

எப்போது இந்த ஜீவன் இந்திரியங்களுடன், ஞானமற்றுப் போய், மூச்சுவிடும் செயலைச் செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இந்த ஜீவன் உடலிலிருந்து விலகுகிறது.–55-

எப்போது ஜீவன் இந்திரியங்களுடன் கூடியதாகிறதோ, அப்போது விதையை அடைந்து தாவரமாகவோ அல்லது மனித தேகத்தை அடைந்து மனிதனாகவோ பிறப் பெடுக்கிறது.–56-

இவ்வாறாக பிரம்மா, விழிப்பு, உறக்க நிலைகளை மேற்கொண்டு , இந்த உலகத்தைப் படைக்கவும் செய்கிறார். அழிக்கவும்(ஒடுக்கவும்) செய்கிறார்.–57-

இந்த தர்ம சாஸ்திரத்தை முதலில் உருவாக்கியவர் பிரம்மா. அவரே எனக்கு(மனுவுக்கு)  இந்த சாஸ்திரத்தை விதி முறைப் படி உபதேசித்தார். நான் இதை மரீசி முதலான முனிவர்களுக்கு உரைத்தேன்–58-

இந்த ப்ருகுமுனி  இந்த சாஸ்திரம் முழுவதையும் என்னிடம் பயின்றிருப்பதால், இவர் உங்களுக்கு இதை உரைக்கத் தக்கவர்.–59-

இவ்வாறு மனு கூறவும், எவ்வளவோ முனிவர்கள் இருக்கும் போது,தன் குருவான  மனு இந்த சாஸ்திரத்தை எடுத்தியம்ப, தன்னை நியமித்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமுற்று கேட்கக் காத்திருக்கும்  அம்முனிவர்களைப் பார்த்து  ” கேளுங்கள்” என்றார்.–60-

( இதிலிருந்து தொடர்வது ப்ருகு முனிவர் வாயிலாக வெளிப் பட்டவை)

மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர். சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள்.–61-

ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹா தேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள்.–62-

மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழு பேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில்( காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர்.–63-

இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.-முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.- முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும்.–64-

சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும், பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டன.–65

மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக்களுடைய இரவும் பகலுமான ஒரு நாள் எனப்படும். அதில் தேய்பிறை கர்மானுஷ்டானங்களுக்கும், வளர்பிறை உறக்கத்துக்கும் ஏற்பட்டவை.-( அதாவது தேய்பிறை பித்ருக்களுடைய ஒரு பகல் பொழுது. வளர்பிறை பித்ருக்களுடைய ஒரு இரவுப்பொழுது)–66-

மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு இரவும் பகலுமான ஒரு நாள். இதில் உத்தராயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு பகல் பொழுது. தட்சிணாயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு இரவுப் பொழுது–67-

பிரம்ம தேவருடைய இரவு பகலுக்கான  காலக் கணக்கையும் யுகங்களின் காலக் கணக்கையும்  கூறுகிறேன் , கேளுங்கள்–68-

நாலாயிரம் தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.-மேலும் காலையில் சந்த்யாகாலம் என்று நானூறு வருடங்களும், மாலையில் சந்த்யா காலம் என்று நானூறு வருடங்களும் சேரும். மொத்தத்தில் நாலாயிரத்து எண்ணூறு தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்–69

மற்ற யுகங்களில் சந்தியைகளுக்கும் யுகத்துக்கும் நூறும் ஆயிரமுமாக குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்படி யென்றால், திரேதா யுகத்துக்கு மூவாயிரம் தேவ வருடங்கள், அதில் இரண்டு சந்தியைகளுக்குமாக முந்நூறு, முந்நூறு தேவ வருடங்கள் . ஆக மூவாயிரத்து அறு நூறு தேவ வருடங்கள் கொண்டது திரேதாயுகம்.–இவ்வாறாகப் பார்க்கும் போது, துவாபர யுகம் இரண்டாயிரத்து நானூறு தேவ வருடங்கள் கொண்டது.–கலியுகம் ஆயிரத்து இரு நூறு தேவ வருடங்கள் கொண்டது–70-

மானிட யுகங்கள் நான்கும் சேர்ந்தால் மொத்தம் பன்னிரண்டாயிரம் தேவ வருடங்கள். இது தேவர்களின் ஒரு யுகம்.–71-

இப்படிப்பட்ட தேவ யுகங்கள்ஆயிரம் கொண்டது பிரம்மாவின் ஒ ரு பகல். அவ்வாறே ஆயிரம் தேவ யுகங்கள் கொண்டது ஒரு இரவு. எனவே இரண்டாயிரம் தேவ யுகங்கள் கொண்டது பிரம்மாவின் ஒரு நாள்.–72-

இவ்வாறான தேவ யுகங்கள் ஆயிரம் கொண்ட பிரம்மாவின் பகல் பொழுதை ” புண்ணிய தினம்” என்பார்கள். அவ்வாறே அதே அளவுள்ள பிரம்மாவின் இரவுப் பொழுதை” புண்ணிய இரவு” என்பார்கள். இவ்வாறான பிரம்மாவின் இரவு பகல் கணக்கை அறிந்தவர்களை, ” அஹோராத்ரி யறிந்தவர்கள்” என்பார்கள்.–73-

பிரம்மா தன்னுடைய இரவு நேரத்தில் உறங்குவார். இரவு நேரம் முடியும் தருவாயில் எழுந்திருப்பார். அப்படி எழுந்திருப்பவர் சத் அசத் ரூபமான சிருஷ்டியைச் செய்யத் தொடங்குவார்.–74-

பிரம்மாவால் மனம் மஹத் சிருஷ்டியில் ஏவப்பட்டு மஹத் சிருஷ்டியிலிருந்து ஆகாயம் தோன்றியது. ஆகாயத்துக்கு ” சப்தம்” குணமாய் அமைந்தது–75-

ஆகாயத்திலிருந்து இனிய வாசனைகளையும், துர்வாசனைகளையும் கொண்டு செல்வதும், பவித்ரமானதும் ,  மிகுந்த பலம் கொண்டதுமானவாயு தோன்றியது. வாயு ” ஸ்பரிசம்” என்னும் குணம் கொண்டதாகக் கூறுகிறார்கள்–76-

வாயுவிலிருந்து மிக்க பிரகாசம் கொண்டதும், இருட்டைப்போக்கடிப்பதுமான ஜோதி ( நெருப்பு) தோன்றியது. அந்த ஜோதி ” உருவம்” என்னும் குணம் கொண்டது என்று கூறுகிறார்கள்.–77-

நெருப்பிலிருந்து தண்ணீர் தோன்றியது. தண்ணீர்”ரஸம்” என்னும் குணம் கொண்டது. தண்ணீரிலிருந்து பூமி தோன்றியது. பூமி ”வாசனை” என்னும் குணம் கொண்டது.–இப்படித் தோன்றியதே ஆதி சிருஷ்டி–78-

பன்னிரண்டாயிம் வருடங்கள் எண்ணிக்கையில் மனிதர்களின் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு ” தேவ யுகம்” என்று முன்னர் கூறப் பட்டது. அப்படிப்பட்ட தேவ யுகங்கள் எழுபத்தொன்று நிறைந்தால், அது ஒரு மன்வந்தரம் எனப்படும்.–79-

சிருஷ்டியும், சம்ஹாரமும் எண்ணற்றவையாதலின், மன் வந்தரங்களும் எண்ணற்றவையே.–சிருஷ்டியை, பிரம்மா விளையாட்டாகவே மீண்டும் மீண்டும் செய்கிறார்–80-

கிருத யுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும்.  எங்கும் சத்யமே நிறைந்திருக்கும்.–81-

மற்ற யுகங்களில் தர்மம் ஒவ்வொரு பாதமாக குறைந்து கொண்டே வரும். திருட்டு, பொய், வஞ்சனை, இவற்றால் தர்மம் குறைந்து கொண்டே போகும்.–82-

கிருதயுகத்தில் மனிதர்கள் நோயற்றவர்களாகவும், எல்லா வித விருப்பங்களும் நிறைவேறியவர்களாயும், நானூறு வருடங்கள் ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தனர். திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் மனிதர்களின் ஆயுள் ஒவ்வொரு பாதமாக குறைபடும்.-83-

வேதங்களில் கூறப்பட்ட ஆயுளும், காம்ய  கர்மாக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்களும், சாபங்களும், வரங்களும், பிரபாவங்களும், மனிதர்களுக்கு அந்தந்த யுகத்துக்கு தக்கபடி பலன்  கொடுக்கும்.–84-

கிருத யுக தர்மங்கள் வேறு. திரேதா யுக தர்மங்கள் கிருத  யுக தர்மங்களை விடக் குறைவானவை. அவற்றைவிட குறைவானவை துவாபர யுக தர்மங்கள். கலி யுக தர்மங்களோ இவற்றிலிருந்தும் குறைந்து இருக்கும். இவ்வாறாக யுகங்களைப் பொறுத்து தர்மங்கள் வேறு பட்டவையாக இருக்கும்.–85-

கிருதயுகத்தில் தவம் செய்வதே மேலான தர்மம். திரோதா யுகத்தில் தவம் குறைந்து, ஆத்ம ஞானம் மேலான தர்மமாக  இருக்கும். துவாபர யுகத்தில் அதுவும் குறைந்து  யக்ஞம் செய்தல் மேலான தர்மம் என்றாகும். கலி யுகத்தில் தானம் செய்தலே சிறந்த தர்மமாக கூறப் படும்.–86-

மிக்க தேஜஸ் பொருந்தியவரான பிரம்மா அனைத்து உயிர்களையும் காப்பதற்காக தன்னிலிருந்து  நான்கு வருணத்தாரைத் தோற்றுவித்தார். அவரவர்க்குரிய தர்மங்களையும் ஏற்படுத்தினார்.-87

வேதங்களை ஓதுவதும் , வேதத்தை கற்பித்தலும், தனக்காக யக்ஞங்கள் செய்தலும், பிறருக்குகாக யக்ஞங்கள் செய்வித்தலும், பிறருக்கு தானம் கொடுத்தலும், பிறரிடமிருந்து தானம் வாங்குதலும் என்னும்  ஆறையும் பிராம்மணனுக்குரிய தர்மங்களாக ஏற்படுத்தினார்-(யாகம் என்றால் பிரதிபலனை கருதி செய்யப்படும் செயல். யக்ஞம் என்றால் பிரதிபலன் கருதாமல் செய்யப்படும் செயல்)–88-

மக்களைக் காத்தல், தானமளித்தல், யாகம் செய்தல், வேத மோதுதல், விஷயசுகங்களில் மூழ்காமலிருத்தல் முதலானவைகளை க்ஷத்ரியர்களுடைய தர்மங்களாக ஏற்படுத்தினார்.–89-

பசுக்களைக் காத்தல், யாகங்கள் செய்தல், வேத பாராயணம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்குப் பணம் கொடுத்து  ஜீவித்தல், விவசாயம் செய்தல் இவைகள் வைசியர்களின் தர்மங்கள்.–90-

பிரம்ம தேவர், சூத்ரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்று தான் .அது. அசூயையின்றி(சோம்பலின்றி) முதலில் கூறப்பட்ட மூன்று  வர்ணத்தாருக்கும்  பணிவிடை புரிதல்–91-

நாபிக்கு கீழுள்ள  பாகங்களை விட மேலுள்ள பாகங்கள் பரிசுத்தமானவை என்று கூறப் பட்டுள்ளது. -அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானதுஎன்பது பிரம்மாவின் கூற்று.–92-

வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப் பட்டவர்களுள் பிரம்மணன் மேலானவன்.–93-

ஹவ்ய, கவ்யங்களை அளிப்பதற்காகவும், உலகம்  காக்கப்படுவதற்காகவும் , பிரம்மா பிராம்மணனைப் படைத்தார்.–94-

யாருடைய வாயினின்றும் வெளிப்படும் மந்திரங்களால் தேவர்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஹவ்யத்தை உண்பார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் கவ்யத்தை உண்பார்களோ, அதை விட உயர்ந்தது யாதுளது?–95-

பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்ட வற்றுள் பிராணிகள் உயர்ந்தவை. பிராணிகளில்  புத்தியால் ஜீவனம் செய்பவை உயர்ந்தவை. புத்தியுடையவற்றில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்–96-

பிராம்மணர்களிலேயும் வித்வான்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள்  அனுஷ்டானங்களில் புத்திரியைச் செலுத்துபவர்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு  இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட பிரம்மஞானிகள்  உயர்ந்தவர்கள்.–97-

பிரார்த்தணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமான சரீரம் . பிராம்மணன் தர்மத்தை கடைப் பிடிப்பதற்காகவே  படைக்கப் பட்டவன். அத்தகு தர்மத்தை கடைப் பிடிப்பதனால்  பிரம்மபதத்தை அடைவான்.–98-

எல்லா  உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் பிராம்மணன்.–99-

பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது.  எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.–100-

பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.-பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. 

பிராம்மணன் தன்னுடைய  செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான்.-101-

ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.-102-

இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த  தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.-103-

இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும்  வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே  செய்ய மாட்டான்.-104-

இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலை முறையினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறையினரையும் புனித மாக்குகிறான். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடையவனாகிறான்.–105-

இந்த தர்ம  சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தை பெருக்குவது, புகழைத் தருவது, தீர்காயுளைத் தருவது. மோட்சமடைய மேலான சாதனமானது.–106-

இந்த தர்ம சாஸ்திரத்தில் அனைத்து  தர்மங்களும் கூறப் பட்டுள்ள, செய்யத் தக்கவைகளும், தகாதவைகளுமான தர்ம  விஷயங்களும், அதர்ம விஷயங்களும் அவற்றின் பலன்களும் கூறப் பட்டுள்ளன. மேலும் நான்கு வர்ணத்தார் நித்தியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப் பட்டுள்ளன.-107-

வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆசாரங்களே மேலான தர்மங்கள். எனவே மக்களின் நலன் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும்.( பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் என்னும் மூவர்ணத்தாரும் துவிஜர்கள்)–108-

ஆசாரத்திலிருந்து விலகிய பிராம்மணனுக்கு, வேதாத்ய யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே  ஸம்பூர்ணமான பலனை ப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை, தூய்மையான  அனுஷ்டானங்களை, பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.-109-

இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.-110-

உலக  உற்பத்தியும், ஸ்ம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மசரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–111-

விவாஹ முறைகளையும், விவாஹத்துக்கான லக்ஷணங்களையும், யக்ஞங்களின் லக்ஷணங்களையும், சிராத்த விஷயங்களையும், இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.–112-

ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லக்ஷணங்களையும் இல்லறத்தானின் நியமங்களையும்,சாப்பிடத்தக்கவை எவை, தகாதவை எவை என்ற விஷயங்களைப் பற்றியும், மரண காலங்களில் ஏற்படும் தீட்டுகளைப் பற்றிய விவரங்களையும் பொருட்களுக்கு தண்ணீர்  முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகளைப் பற்றியும் இந்த தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.–113-

பெண்களுக்குரிய தர்ம விஷயங்களும், வான பிரஸ்தர்களுக்குரிய தர்ம  விஷயங்களும், சந்யாஸ தர்ம விஷயங்களும், மன்னனுக்குரிய தர்ம விஷயங்களும், மோக்க்ஷத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப் பட்டுள்ளன.–114-

சாட்சிகளை விசாரிக்கும் முறைகளும், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய  முறைகள், பாகப் பிரிவினை ,  சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–115-

வைசியர்கள் சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக் காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–116-

தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த  தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–117-

தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மாதர்மங்கள், முதலானவற்றையும் இந்த தர்ம சாஸ்திரத்தில்  எடுத்துரைத்துள்ளார்.–118-

முனிவர்களே, நான் வினாவியபோது, மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கேளுங்கள்.–119-

அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது

———–

அத்தியாயம் -2-

வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள்.-1-

விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம். 

வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும்.(வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.)–2-

இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்கல்பம் தோன்றுகிறது. யக்ஞங்கள் செய்வதில் விருப்பம் சங்கல்பத்தாலேயே ஏற்படுகிறது. விரதங்கள், நியமங்கள், போன்றவை அனைத்துமே சங்கல்பத்தாலேயே ஏற்படுகின்றன.–3-

ஆசையற்றவனுக்கு எந்தச் செயலும் இல்லை. மனிதர்கள், செய்யும்  ஒவ்வொரு செயலும் ஆசையின் காரணமாகவே செய்யப் படுகிறது.–4-

முறையாக நல்லபடி காரியங்களைச் செய்பவன் அமரனாகிறான்(மரணமற்றவன்). இவ்வுலகிலும், அவனுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.–5-

வேதமே உலகில் தர்மத்துக்கு மூலம், வேதமறிந்தவர்களால் இயற்றப்பட்ட ஸ்ம்ருதிகளும் அவர்களது  ஒழுக்கமுமே பிரமாணங்கள். சாதுக்கள் கடைப்பிடிக்கும் ஆசாரங்களும், அவர்களது ஆத்மானந்தமும் பிரமாணங்கள்–6-

எவருக்கு  எந்தெந்த தர்மங்கள் மனுவினால் சொல்லப்பட்டுள்ளதோ, அவை அனைத்தும் வேதத்தில் சொல்லப் பட்டுள்ளவையே. சர்வ ஞான சொரூபன் மனு பகவான். அவர் கூறிய அனைத்தும் வேதம் கூறியதே.(ஏற்கனவே வேதத்தில் இருப்பதையே மனு கூறினார்)–7-

இந்த தர்ம சாஸ்திரம் முழுவதும் ஞானக் கண்ணால் கண்டது என்பதையும் , வேதம் கூறியது என்பதையும் அறிந்து விவேகமுள்ளவன் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்.–8-

மனிதன் வேதங்களிலும் , தர்ம சாஸ்திரங்களிலும் கூறப் பட்டுள்ள தர்மத்தை அனுஷ்டித்தால், இவ்வுலகில் கீர்த்தியையும் மேலுலகத்தில் மோட்சத்தையும் அடைவான்.-9-

வேதங்கள் ” ஸ்ருதிகள்” எனப்படும். தர்ம சாஸ்திரங்கள் ” ஸ்மிருதிகள்” எனப்படும். இவைகளைக் குறித்து எதிர் மறையான தர்க்கங்களைச் செய்தல் கூடாது. இவை இரண்டிலுமே தர்மம்  பிரகாசிக்கிறது.–10-

பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும்.–11-

வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர்.–12-

அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும்.–13-

எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிடிக்கலாம்.-14-

சூரியோதயம் ஆன பிறகு ஹோமம் செய்ய வேண்டும். இது ஒரு வேத வாக்கியம். உதிப்பதற்கு முன்பே நட்சத்திரங்கள் தெரியும்.அருணோதய காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.-இது ஒரு வேத வாக்கியம். ஒன்றுக் கொன்று முரணானவை இவை.  இப்படி ஒன்றுக் கொன்று முரண்பாடு தென்படும் போது இரண்டு விதங்களில் எந்த விதமாகவும் செய்யலாம்.–15-

கர்ப்பாதானம் முதலான அனுஷ்டானங்கள் எவனுக்கு விதிக்கப் பட்டுள்ளதோ அவனுக்கே இந்த மனு தர்மத்தைப் படிக்கும் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை.

(கர்பாதானம் செய்யும் அதிகாரம் உள்ளவன் திருமணமான ஆண்.அவன் மட்டுமே இந்த ஸ்மிருதியை படித்துபின்பற்ற அதிகாரம் உள்ளவன். கர்பாதானம் செய்ய விரும்பாத துறவிகள் இதை படிக்கவும் பின்பற்றவும் தேவையில்லை)–16-

ஸரஸ்வதீ நதிக்கும் திருஷத்வதீ என்னும் நதிக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை ”தேவநிர்மிதம்” என்றும்” பிரம்மாவர்த்தம்” என்றும் கூறுவார்கள்–17-

அந்த தேசத்தில் நால்வர்ணத்தாருக்கும் கலப்பு வர்ணத் தாருக்கும் பாரம்பரியமாக வரும் ஆசாரமே ”சதா சாரம்” எனப்படும்.-18-

குரு க்ஷத்திரம், மத்ஸ்ய தேசம், பாஞ்சாலம், சூரசேநகம் என்னும் தேசங்களுக்கு ” பிரம்மரிஷி தேசம்” என்று பெயர். இது பிரம்மாவர்த்த தேசத்துக்கு அடுத்தது.-19-

இந்தத் தேசத்தில் பிறந்த பிராம்மணர்கள் மூலமாக உலக மாந்தர் தத்தமக்குரிய ஆசாரங்கள் எவை எவை என்று அறிய வேண்டும்.-20-

இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர்.-21-

கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர்.(தென்னிந்தியா)-22-

கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும்.-23-

பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம்.-24-

இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய விஷயமும் கூறப் பட்டது. இனி  வர்ணதர்மங்களையும், ஆசிரம தர்மங்களையும் கூறுகிறேன்.கேளுங்கள்–25-

பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கர்ப்பாதானம் முதலான வைதிகக் கிரியைகளைச் செய்ய வேண்டும். இவையே ஒருவனை  பரிசுத்தமாக்குகின்றன. பரலோக வாழ்வையும்பெற்றுத் தருகின்றன–26-

கர்ப்பாதானம் முதலான ஹோம சடங்குகளாலும், ஜாதகர்மா, சவுலம், மௌஞ்சீபந்தனம், உபநயனம் முதலான சடங்குகளாலும், பெற்றோரால் ஏற்பட்ட பீஜதோஷம், கர்ப்பவாச தோஷம் முதலான வற்றால் ஏற்பட்ட  தோஷங்கள் நீங்கி பிராம்மணர்களும் க்ஷத்ரியர்களும், வைசியர்களும் பரிசுத்தமாகிறார்கள்.–27-

வேத மோதுவதாலும் , விரத நியமங்களாலும், ஹோமங்களாலும் காலை மாலை செய்யும் ஔ பாசனம் முதலான கிரியைகளாலும் மூன்று வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெறுவதாலும், புத்ரோத்பத்தியாலும், தர்ப்பணங்களாலும், பஞ்சமஹா யக்ஞங்களாலும் பெரிய யாகங்களாலும் இவ்வுடலானது பிரம்ம பதத்தை அடைவதற்கு ஏற்றதாக ஆகிறது.–28-

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பே ஜாதகர்மா என்னும்  சடங்கு செய்ய வேண்டும். தங்கம், நெய், தேன் இவைகளை மந்திரபூர்வமாக நாவில் தடவ வேண்டும்.-29-

பத்தாவது நாள் கடந்த பிறகு, பதினோராவது நாள் அல்லது பன்னிரண்டாவது நாள் அல்லது வேறு ஏதாவது சிறந்த  நன்னாளில், நல்ல முகூர்த்தத்தில், நல்ல நட்சத்திரத்தில் பிராம்மணனுக்கும்,  க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும் நாமகரணம்(பெயர்சூட்டுதல்) செய்ய வேண்டும்.–30-

பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.-31-

பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். (க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும்)வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும்.(வைசியனுக்கு குப்தா என்றபதம் அல்லது  பாலன் என்ற பதம்  பெயரோடு சேர்க்கப் படவேண்டும்.) சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும்.-32-

பெண்களுக்கு இடும் பெயர்கள் சுகமாக உச்சரிக்கக் கூடியதாகவும், குரூரமான அர்த்தம் கொடுக்கும் சொல்லாக இல்லாமலும், பொருளற்றதாக இல்லாமலும், மனத்துக்கு ஆனந்தத்தைக்  கொடுக்கக் கூடியதாகவும், மங்களமான   சொல்லாகவும் நெடில் எழுத்து ஈற்றாக இருப்பதாகவும், அதாவது  நீட்டி தீர்க்கமாகச் சொல்லும் அட்சரத்தோடு முடிவதாகவும்( உதாரணமாக ரமா, உமா, என்ற பெயர்களைக் கூறலாம் ) ஆசிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ( காயத்ரீ தேவி, லக்ஷ்மீ தேவி முதலான பெயர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.)–33

நான்காம்  மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று சூரியனை தரிசிக்கச் செய்ய வேண்டும். ஆறாவது  மாதம் அன்னம் ஊட்டும் சடங்கைச் செய்ய வேண்டும். அல்லது அவரவர் குல வழக்கப் படி அந்தந்த சடங்குகளைச் சுபதினங்களில் செய்ய வேண்டும்.( இந்தச் சடங்குக்கு அன்னபிராசனம்  என்று பெயர்)-34

” சூடாகர்மா” என்னும் குடுமி வைக்கும் சடங்கானது பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்கு முதலாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில் செய்யப் பட வேண்டியது. அல்லது அவரவர் வழக்கப் படி செய்ய வேண்டியது.-35-

பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்ரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் உபநயனம் செய்ய வேண்டும்.-இது பொது விதி. -36-

பிரம்ம தேஜஸை விரும்பும் பிராம்மணனுக்கு ஐந்தாவது வயதிலும், பலத்தை க்கோரும் க்ஷத்ரியனுக்கு ஆறாவது வயதிலும், வாணிபம் கோரும் வைசியனுக்கு எட்டாவது வயதிலும் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.–37-

பிராம்மணனுக்கு பதினாறாவது வயது வரையும், க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாவது வயது வரையும்,  வைசியனுக்கு இருபத்து நான்காவது வயது வரையும் காயத்ரி அழியாமலிருக்கும். அதாவது அந்த வயதுக்குள்ளாவது காயத்ரி உபதேசம் நடை பெற வேண்டும்-தவிர்க்க முடியாமல் தள்ளிப்போனாலும் இந்த வயதுக்குள் செய்ய வேண்டும், -செய்யலாம் என்பதற்காகக் கூறப்பட்டது..–38-

அது வரையிலும் உபநயனம் செய்யாதவர்கள் காயத்ரீ உபதேசம் பெறும் அருகதையை  இழந்தவர்களாவர். இவர்கள் சான்றோர்களால் நிந்திக்கப் படுவார்கள். வைதீகச் சடங்குகளுக்கு இவர்களைச்சேர்க்க மாட்டார்கள்.–39

இவ்வாறு தூய்மை இழந்து விதிப்படி பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனோடு பிராம்மணன், யாகம், கன்யாதானம், முதலான எந்தச் சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது.–40-

பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும்,–வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.-பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.-க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.-வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.–41-

பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.-அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.-வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.-(இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்)–42-

முஞ்சிப் புல் முதலானவை கிடைக்காத போது, தர்ப்பை , நாணல், கோரை முதலானவற்றை முப்புரிகளாகத் திரித்து அதை ஒரு முடிச்சோடு  பிராம்மண பிரம்மசாரியும், மூன்று முடிச்சுகள் போட்டு  க்ஷத்ரிய பிரம்ம சாரியும், ஐந்து முடிச்சுகள் போட்டு வைசியப் பிரம்ம சாரியும் அணிய வேண்டும்.–43-

வலது புறமாக சுற்றிய ஒன்பது  இழைகள் கொண்டதாக பூணூல் இருக்க வேண்டும். பிராம்மண பிரம்மசாரிகளின் பூணூல்  பஞ்சினால் ஆனதாகவும், க்ஷத்ரிய பிரம்ம சாரிகளின் பூணூல் சணலாலான தாகவும், வைசிய பிரம்ம சாரிகளின் பூணூல் வெள்ளாட்டு முடியினாலானதாகவும் இருக்க வேண்டும்–44-

பிராம்மண பிரம்மசாரி வில்வம், புரசு இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.–க்ஷத்ரிய பிரம்மசாரி ஆல், கருங்காலி இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.-வைசிய பிரம்மசாரி அத்தி, பைலம் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.–45-

பிராம்மணன் ஏந்தும் தண்டம் தலை வரை உயரமுடையதாக இருக்க வேண்டும். க்ஷத்ரியன்  ஏந்தும் தண்டம் நெற்றி வரை இருக்க வேண்டும். வைசியன் ஏந்தும் தண்டம் மூக்கு வரை இருக்க வேண்டும்.–46-

அந்த தண்டங்கள் கோணலாக இருக்கக் கூடாது. வெட்டுப் பட்ட வடுக்கள் அற்றவையாக இருக்க வேண்டும். பார்க்க அழகாக இருக்க  வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் வண்ணம் இருக்கக் கூடாது. மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்புப் பட்டதாக இருக்கக் கூடாது–47-

ஒவ்வொரு நாளும் தண்டத்தைக் கையில் ஏந்தி, சூரிய நமஸ்காரம் செய்து, தீயை வலம் புரிந்து, பிறகு முறைப்படி பிஷை ஏற்கச் செல்ல வேண்டும்.–48-

பிராம்மண பிரம்மச் சாரி ”பவதி பிக்ஷாம் தேஹி” என்று கூறி  பிஷை கேட்க வேண்டும்.-க்ஷத்ரிய பிரம்மச் சாரி ” பிக்ஷாம் பவதி தேஹி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.-வைசிய பிரம்மச்சாரி ” பிக்ஷாம் தேஹி பவதி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.–49-

முதலில் தாயிடம் அல்லது சகோதரியிடம் அல்லது தாயின் சகோதரியிடம்,  அல்லது யார் இவனை அவமானப் படுத்த மாட்டார்களோ, அந்தப் பெண்ணிடம் பிட்ஷை  ஏற்க வேண்டும்.–50-

இவ்வாறாக பிக்ஷான்னத்தைக் கொண்டு, குருவுக்குக் கொடுத்து, அவரது அனுமதியின் பேரில் அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து,  (மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை நீரால் வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மார்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைக்கவேண்டும்)கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.–51-

தீர்க்காயுளை வேண்டுபவன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-கீர்த்தியை  விரும்புபவன் தெற்கு திசை  நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-செல்வத்தை விரும்புபவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-மோட்சத்தை விரும்புபவன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.–52-

பிரம்மச்சாரி தினமும் ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வேறு நினைப்பின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு கை கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, நீரினால் இந்திரியங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.–53-

எப்போதும் அன்னத்தை பூஜிக்க வேண்டும். அன்னத்தை நிந்திக்காமல்  சாப்பிட வேண்டும். மனத்திலுள்ள  கலக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு  சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது நிர்மலமான மனத்தோடு சாப்பிட வேண்டும். இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.–54-

இவ்வாறாக  தினமும் துதிக்கப்பட்டு உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அளிக்கும். மாறாக, துதிக்கப் படாமல் உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அழிக்கும்.–55-

எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது. மத்தியானமும் இரவும் உணவு உண்ண வேண்டும். அது தவிர நடுநடுவே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாகாது. மத்தியானமும் இரவும் சாப்பிடும் போது கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் போகக் கூடாது.–56-

மிகுந்த படியாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவதால், ஆரோக்கியம் கெடும். ஆயுள் குறையும். சுவர்க்கம் முதலான புண்ணிய உலகங்களை அடைவதற்கு இது எதிரி. அதாவது அதிக அளவில் சாப்பிடுவது புண்ணியலோக பிராப்திக்கு தடையாகி விடும். அவ்வாறே நற்காரியங்களைச் செய்வதற்கும் இது தடையாகும். மேலும் உலகத்தாரின் தூற்றுதலுக்கும் ஆளாக  நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.–57-

பிராம்மணர் முதலானோர் பிரம்ம தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யவேண்டும். அன்றேல், காய தீர்த்தத் தாலோ  தேவ தீர்த்தத்தாலோ ஆசமனம் செய்யலாம். அதன்றி பித்ரு தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யலாகாது.–58-

பெருவிரலில்  முதல் பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு   விரலில் முதல் பாகத்தில்  காய தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், பெருவிரல்சுட்டு விரல்களுக்கிடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாகவும் கூறப் டுகிறது.–59-

பிரம்ம தீர்த்தம் முதலானவைகளால் மூன்று முறைகள் ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக் கொண்டு நீரினால் வாயைத் துடைக்க வேண்டும். பிறகு இடது கரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தலையில் இருக்கின்ற இந்திரியங்களான கண்கள், காதுகள், மூக்கு முதலியவைகளையும், மார்பையும் தலையையும் துடைக்க வேண்டும்.–60-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ:  “சாரீரக பரிபாஷா” என்னும் ஸ்ரீ: யதீந்த்ர மத தீபிகை–

February 6, 2024

ஸ்ரீ:யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது ஸ்ரீ:சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் ஸ்ரீ:இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.

இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக் க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டி விட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.

இந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். 

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் -1-
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்
–2-

ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.

  • இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
  • ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
  • ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
    • தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்ய வர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
    • வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
    • சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்கமுகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – (சி. திருமடல்)
    • வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமல(க்ருஷ்ணேந ஸஹ யதி ராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
    • க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
    • அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
    • அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
    • க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
    • அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்
    • யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
      கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2
    • யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு  யதீந்த்ர மத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.
    • இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குரு பரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
    • யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத் திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
    • பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க
    • ஸ்ரீமந் நாராயண ஏவ சிதசித் விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்தி ப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்த வாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாத யாமுன முனி யதீச்வர ப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பால போதனார்த்தம் வேதாந்த அநுஸாரிணி யதீந்த்ர மத தீபிகாக்யா சாரீரக பரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதா மதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||
    • க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் –
    • அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி.  “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.
    • இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.
    • தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று
    • ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
    • வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
    • நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
    • யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)
    • ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.
    • (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த🙂 இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.
    • இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.
    • ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
    • இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.
    • இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக் கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.
    • இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.
    • நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
    • (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம்  செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
    • வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்
    • வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
    • என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.
    • ———————
    • ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ராமாண ப்ரமேய பேதேன த்விதா பிந்நம் ॥ 4
    • இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
    • ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5
    • ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.
    • அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
    • ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
      • கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே
      • ஸர்வம் -வஸ்து –பிரமாணம் ப்ரமேயம் -என்ற இரண்டு
      • பிரமாணம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் -என்ற மூன்றும்
      • ப்ரமேயம்-த்ரவ்யம் அத்ரவ்யம் என்ற இரண்டும்
      • த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6
      • த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.
      • ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச் சதுர்விம்ஶதி தத்வாத்மிகா । காலஸ்து உபாதி பேதேந த்ரிவித: ॥7
      • ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.
      • அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்ய விபூதி:, தர்ம பூத ஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8
      • அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)
      • நித்ய விபூதியும் தர்மபூத ஞானமும் பராக் –
      • ஜீவனும் பரமாத்மாவும் ப்ரத்யக்
      • ஜீவ: த்ரிவித: பத்த முக்த நித்ய பேதாத் ॥  9
      • ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.
      • பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.
      • (அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள்.  லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,
      • ஒண்டொடியாள் – அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண் டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே;  செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக –வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்;  சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந: – இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி)ந நமேயம் – ஒருவனையும் வணங்க மாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலா விபூதியிலுள்ளார் படி);  மனை யடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானே யென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு
      • (மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)
      • பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;
      • (மூலம்) “மிக்கார் வேத விமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்
      • மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் –தோஷமில்லாதவர்கள் வேத விமலர் –  வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.
      • (மூலம்)  “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்ய ஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலா மனிசராய் (திருமாலை 13), ஒளிக் கொண்ட சோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,
      • அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;
      • (மூலம்)  விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),
      • விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன்  – நித்ய ஸூரிகளால் துதிக்கப் படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ் வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கது
      • (மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3)தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),
      • உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமா போலே கொள்ள வேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;
      • (மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),
      • ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரம பதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று  – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று
      • (மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக் கடவராயிருப்பர்கள்.
      • ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கை கழிய வோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்
      • பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10
      • பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு
      • புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11
      • புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.
    • முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12
    • முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.
    • மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
    • த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்
    • ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23
    • ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபத நாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.
    • தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்தி கொண்டு நோக்க வேண்டியது.
    • அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.
    • இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,
    • சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
    • ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
    • * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
      • இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
    • ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.
    • அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24
    • அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.
    • —————–
    • ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |
    • இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.
    • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்
    • தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |
    • ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவ் வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதி வ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.
    • லக்ஷணம், அதி வ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.
    • யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |
    • உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.
    • ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.
    • அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகி விடும்.
    • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.
    • விபரீத ஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.
    • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
    • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
      • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
      • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
    • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
    • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது
    • லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |
    • லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.
    • உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.
    • கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.
    • இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.
    • மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.
    • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
      • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.
    • இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.
    • ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |
    • கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.
    • இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.
    • ———-
    • தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |
    • இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.
    • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
    • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
    • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.
    • தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |
    • இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.
    • நிர்விகல்பகம்
    • ஸவிகல்பகம்.
    • நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.
    • உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.
    • பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.
    • இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.
    • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர்  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
    • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
    • – பலவாகக் கல்பிக்கப்படுவது
    • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
    • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
    • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
    • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.
    • க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||
    • ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.
    • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.
    • இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.
    • வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.
    • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.
    • ——–
    • நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |
    • நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.
    • தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.
    • யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
    • திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
    • இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.
    • அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.
    • உபநிஷதானது [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.
    • ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்
    • நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||
    • இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.
    • இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?
    • பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.
    • ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.
    • ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |
    • ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்
    • ஒற்றுமை,
    • அத்ருஷ்டம்,
    • சிந்தை
    • சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்
    • (1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.
    • (2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,
    • (3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.
    • (4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.
    • நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.
    • யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||
    • எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.
    • இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.
    • அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||
    • பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.
    • இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.
    • அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.
    • புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.
    • ————
    • “யதார்தம் ஸர்வவிஜ்ஞானமிதி வேதவிதாம் மதம்” இத்யுக்தத்வாத் ப்ரமாதி ப்ரத்யக்ஷஞானம் யதார்தமேவ, அக்யாதி – ஆத்மக்யாதி – அநிர்வசனீயக்யாதி – அன்யதாக்யாதி வாதினோ நிரஸ்ய ஸத்க்யாதி பக்ஷஸ்வீகாராத் | ஸத்க்யாதிர்நாம ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தர்ஹி ப்ரமத்வம் கதமிதி சேத், விஷயவ்யவஹாரபாதாத் ப்ரம: | ததுபபாதயாம: – பஞ்சீகரணப்ரக்ரியா ப்ருதிவ்யாதிஷு ஸர்வத்ர ஸர்வபூதானாம் வித்யமானத்வாத், அத ஏவ ஶுக்திகாயாம் ரஜதாம்ஶஸ்ய வித்யமானத்வாத் ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தத்ர ரஜதாம்ஶஸ்ய ஸ்வல்பத்வாத்து ந வ்யவஹார இதி தஞ்ஞானம் ப்ரம: | ஶுக்தயம்ஸபூயஸ்த்வஞானாத் ப்ரமநிவ்ர்த்தி: |
    • இதுவரையில் ப்ரத்யக்ஷத்தின் லக்ஷணம் மற்றும் அவற்றின் பிரிவுகள் ஆகியவற்றை விசாரித்துவிட்டு, இப்பொழுது ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் அறியப்படுபவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார். ஸர்வவிஜ்ஞானம் – அனைத்து ஞானங்களும்; யதார்த்தம் – யதார்த்தமே – வஸ்துக்களை உள்ளபடி காட்டுகின்றன; இதி வேதவிதாம் மதம் – என்று வேதம் அறிந்தவர்களுடைய, ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோருடைய மதம் – என்று ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் அருளியுள்ளார்.
    • ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய ந்யாய தத்வத்தில் – [ஷஷ்டீம் சேயம் க்யாதியதார்த்தக்யாதி] என்றருளியுள்ளார்.  அதாவது (1) அஸத்க்யாதி, (2) ஆத்மக்யாதி, (3) அநிர்வசநீயக்யாதி, (4) அந்யதாக்யாதி, (5) அக்யாதி என்று 5 விதமான க்யாதிகள் இல்லாமல் ஆறாவதான யதார்த்தக்யாதி என்பதே நம் ஆசார்யர்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
    • குறிப்பு – இப்போது சில விஷயங்கள் அறிந்து கொள்வது, மேல் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அவசியம் ஆகிறது.
    • ஶுக்தி எனப்படும் முத்துச் சிப்பியை சில சமயம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது – அது வெள்ளி போன்று தோன்றுகிறது. பின்பு நெருங்கிச் சென்று அதை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளியன்று என்று ப்ரமம் நீங்கி விடுகிறது. இதை பலவாறாகப் பல மதங்களிலே கொண்டுள்ளார்கள்.
    • (1) அஸத்க்யாதி,
    • இது மாத்யாமிகனுடைய மதம் சார்ந்தது. ஜ்ஞானமும் ஆகட்டும், வெளியிருக்கிற வஸ்துக்களாகட்டும் ஒன்றும் இல்லை – சூந்யம் தான் உள்ளது. அஸத் தோன்றுவதால் இது அஸத்க்யாதி என்னப்பட்டது.
    • (2) ஆத்மக்யாதி
    • இது பௌத்தர்களுடையதாகும் (யோகாசாரர்களுடையது). ஆத்மாவான ஞானம் ஒன்று தானிருக்கிறது. இது வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது, வஸ்துக்கள் இல்லை. ஜ்ஞானம் தான் இவைகள். ஜ்ஞானம் இல்லாத பொழுது இவை தோன்றவில்லையே! ஆகவே ஜ்ஞானமே ப்ராந்தியால் விஷயமாகத் தோன்றுகிறது என்பது இவர்கள் கொள்கை.
    • (3) அநிர்வசநீயக்யாதி,
    • இது அத்வைதிகளின் பக்ஷம். முத்துச்சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியானது ப்ரத்யக்ஷமாய் இல்லை. கடையில் இருக்கும் வெள்ளி ப்ரத்யக்ஷமாகத் தோன்றாது. இது தன்னை ஸ்ம்ருதி என்றும் சொல்ல முடியாது. எனவே சிப்பியில் வெள்ளி தோன்றும் பொழுது, அது எல்லாராலும் கடையில் காணப்படும் வெள்ளியினைக் காட்டிலும் அவித்யையின் மஹிமையால் வேறொரு வெள்ளி உண்டாகிறது. இது இப்படி என்று சொல்ல முடியாதாகையாலே இது அநிர்வசநீயம் என்னப்பட்டது. இது ப்ரஹ்ம வ்யதிரிக்தமான பதார்த்தம் (ப்ரஹ்மத்தைத் தவிர்த்த வேறு பதார்த்தம்) ஆகையாலே இதை ஸத் என்றும் சொல்லமுடியாது (அவர்கள் கொள்கைப்படி ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்), தோன்றுவதால் அதை அஸத் என்றும் சொல்லமுடியாது
    • (4) அந்யதாக்யாதி,
    • இது தார்க்கிகர்களின் மதம் ஆகும். ஆபரணம் செய்வதற்கு உபயோகப்படும் வெள்ளியானது தோஷத்தாலே சிப்பியிலே தோன்றுகிறது. சிப்பியானது அந்யத்தாக (வேறாக) தோன்றுவதால் இது அந்யதாக்யாதி
    • (5) அக்யாதி
    • மீமாம்ஸகர்கள் மதம் அக்யாதி வாதத்தினை கொண்டுள்ளது. சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிக்கும் பொழுது,
    • இதம் (இது) என்றும் ரஜதம் என்றும் இரண்டு ஜ்ஞானங்கள்
    • இது என்பது ப்ரத்யக்ஷம் – கண்ணால் காண்பது.
    • ரஜதம் என்பது ஸ்ம்ருதி அல்லது ஸ்மரணம்.
    • இவை இரண்டின் பேதத்தை அறியாமையே ப்ரமம் (சிப்பியை வெள்ளி என்று எண்ணுவது).
    • இந்த பேத க்ரஹணம் இல்லாமையே அக்யாதி.
    • க்யாதி: பேத க்ரஹ: – க்யாதி (ஜ்ஞானம்) என்பது பேத க்ரஹணம்.
    • ததபாவ: – அக்யாதி – அது இல்லாமை அக்யாதி.
    • இவற்றுள் முதலாவதான அஸத்க்யாதிக்கு நிரதிஷ்டான க்யாதி என்றும் பெயர். அவர்கள் பக்ஷத்தில் தோன்றும் அனைத்தும் அஸத்.
    • ஆத்மக்யாதியும் நிலை நிற்காது. ஜ்ஞானமும் விஷயமும் சேர்ந்தே தோன்றுகிறது. அப்படித் தோன்றினாலும் அவை வெவ்வேறே! ஜ்ஞானமாவது வஸ்துவை க்ரஹிக்கிறது. “अहम् घटम् जानामि” என்பதால் நான் கடத்தை அறிகிறேன் என்னும்பொழுது, அறியக்கூடிய ஜ்ஞானமும் அறியப்பட்ட கடமும் ஒன்றாக ஆகமுடியாது.
    • அநிர்வசநீயமும் ஸத்தா அஸத்தா என்று கேட்டால் அதுவும் நிற்காது. அநிர்வசநீயம் என்பது எப்படி அறியப்படுகிறது? இன்னதென்று சொல்ல முடியுமா என்று கேட்டால் – ஆம் என்று விடையளிப்பார்களாயின், அது அநிர்வசநீயமே அன்று. இல்லை என்றால் – அஸத்தான ஒன்றைக் கொண்டு நிர்வாஹம் செய்ய முடியாதாகையாலே, அதுவும் தள்ளுண்டதாகும்.
    • எனவே மீமாம்ஸகர்களுடைய விளக்கத்தையோ அல்லது தார்க்கிகர்களின் விளக்கத்தையோ கொண்டு தான் மேல் விவரிக்க வேண்டும். இதில் அக்யாதி எனப்படும் மீமாம்ஸகர்களின் கொள்கையானது அனுபவத்திற்க்கும், நமது மதத்திற்க்கும் ஒத்து வருகிறது.
    • யதார்த்தக்யாதி
    • இனி நாம் நம் ஆசார்யர்கள் கொண்ட யதார்த்தக்யாதி எனப்படும் ஸத்க்யாதியினைப் பார்க்கலாம்.
    • தூரத்தில் இருந்து சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியினுடைய அம்சமான பளபளப்பு தோன்றுகிறது.
    • சிப்பியில் இந்த அம்சம் தோன்றுவதன் காரணம் பஞ்சீகரணம் ஆகும். (பஞ்சீகரணம் மேலே விளக்கப்படுகிறது).
    • இதனால் இது வெள்ளி என்று நினைத்து அதை ஒருவன் எடுத்துக் கொள்ள எத்தனிக்கிறான்.
    • அருகில் பார்த்ததும், அது சிப்பி (வெள்ளியின் அம்சம் குறைவானது) என்பது தெரிந்து கொள்கிறான்.
    • இதில் அனைத்து ஜ்ஞானமும் உண்மையே. பின்பு ஏன் சிப்பியினை வெள்ளி என்று கொள்வதில்லை என்றால் – அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் வ்யவஹாரம் பாதிக்கப்படுகிறது.
    • பஞ்சீகரணம்
    • பஞ்சீகரணமாவது ப்ருத்வியாதி ஐந்து பூதங்களிலும் மற்ற நான்கு பூதங்களை 50% சேர்ப்பது. உதாரணத்திற்கு ஆகாசம் என்னும் பூதத்தில் ஆகாசம் 50 சதவிகிதமும், மற்றைய பூதங்கள் (அக்னி, வாயு, நீர், ப்ருதிவீ) சேர்ந்து 50% உள்ளன. ஒவ்வொரு பூதத்தில் நின்றும் 1/8 பங்கு பிற பூதங்களில் உள்ளன. இந்த பஞ்சீகரணம் ஸ்ருஷ்டிக்கு அவசியமாகிறது.
    • இங்குக் கீழே ஆகாசம் காட்டப்பட்டுள்ளது. இது போன்றே பிற பூதங்களையும் கொள்ள வேண்டியது.
    • இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் தத்வத்ரயம் – 116 சூர்ணிகையில் ” ஆகாசாதி பூதங்களைந்தையும் தனிதனியே இரண்டு கூறுகளாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறுகளாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வ பூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை.” என்றருளியுள்ளது நோக்கத் தக்கது.
    • இனி மூலத்தில் உள்ளபடி விளக்கப்படுகிறது.
    • ஸத்க்யாதி என்றால் ஜ்ஞானத்தின் ஸத்யத்வம். ஜ்ஞானம் ஸத்யம் என்றால், ப்ரமம் எப்படி உண்டாகிறது என்னில், ப்ரமமானது வ்யவஹாரத்தைப் பாதிப்பது. அதாவது சிப்பியில் சிறிதளவு பார்த்திபாம்சம் இருப்பதனால், அதை வெள்ளி என்று பார்க்கும் ஜ்ஞானம் ஸத்யமாய் இருந்தாலும், அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் அதை வெள்ளி என்று வ்யவஹரிப்பதை (அதைக் கடையில் கொடுத்து ஆபரணம் ஆக்க முடியாது) பாதிக்கிறது.
    • பஞ்சீகரணப் ப்ரக்ரியையினாலே ஸர்வ பூதங்களிலும் மற்ற பூதங்கள் அம்சம் சிறிதளவு கலந்து இருப்பதினால் சிப்பி, வெள்ளி போன்று தோற்றம் அளிக்கிறது. அந்த ரஜதாம்சம் ஸ்வல்பம் என்று அறியாமல் இருப்பது ப்ரமம். அதை அறிவது ப்ரம நிவ்ருத்தி ஆகும்.
    • ஸ்வப்நாதிஞானம் து ஸத்யமேவ | தத்தத்புருஷானுபாவ்யதயா தத்தத்காலாவஸானாந் ரதாதீந் பரமபுருஷ: ஸ்ரூஜதீதி ஹி ஶ்ருத்யா அவகம்யதே |
    • இனி சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல இருக்கும் வேறு சிலவற்றை நிர்வஹித்தருளுகிறார். ஸ்வப்நத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களும் உண்மையே. அந்த அந்த புருஷர்களின் புண்யபாபங்களுக்கு ஏற்ப, எம்பெருமான், அவன் மட்டும் அனுபவிக்குமாறு அவற்றை ஸ்ருஷ்டிப்பதாலே.
    • ஸ்வப்ன காலத்தில் ரதங்களோ, குதிரைகளோ, பாதைகளோ இல்லை, அந்த சமயம் ரதங்களையும், குதிரைகளையும், பாதைகளையும் (ஸவப்னம் அனுபவிப்பவன் மட்டும் பார்க்கும் படி ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான் – அவனல்லவோ ஸர்வ கர்த்தா – என்னும் ப்ருஹதாரண்ய உபநிஷத்தை திருவுள்ளத்தில் கொண்டு ஶ்ருத்யா அவகம்யதே என்றார்.
    • பீதஶ்ஶங்க இத்யாதௌ நயநவர்திபித்தத்ரவ்யஸம்பின்னா நாயனரச்மயஶ்ஶங்காதிபி: ஸம்யுஜ்யன்தே: | தத்ர பித்தகதபீதிமாபிபூதச்ஶங்ககதஶுக்லிமா ந க்ருஹ்யதே | அத: ஸுவர்ணானுலிப்தச்ஶங்கவத் “பீதஶ்ஶங்க:” இதி ப்ரதீயதே | ஸுக்ஷ்மத்வாத் பீதிமா ஸ்வநயநநிஷ்க்ராந்ததயா ஸ்வேநைவ க்ருஹ்யதே, நத்வன்யை: |
    • வெண்மையான ஶங்கம் மஞ்சளாகத் தோற்றுவது இந்த்ரியத்தின் தோஷத்தாலே. கண்ணில் இருக்கும் பித்தத்துடன் கலந்த சக்ஷுரிந்த்ரியத்தின் கிரணங்கள் க்ரஹிப்பதால் அவனுக்கு மாத்திரம் வர்ணம் மஞ்சளாகத் தெரிகிறது.
    • ஜபாகுஸுமஸமீபவர்திஸ்படிகமநிரபி ரக்த இதி க்ருஹ்யதே | தத்ஞானம் ஸத்யமேவ |
    • செவ்வரத்தம்பூவின் பக்கத்திலுள்ள ஸ்படிகம் சிவப்பாக அறியப்படுவதும் ப்ரமை தான். பூவிலுள்ள சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தின் வெண்மையை மறைத்துவிடுகிறது
    • மரீசிகாயாம் ஜலஞானமபி பஞ்சீகரணப்ரக்ரியயா பூர்வோக்தவதுபபத்யதே | பஞ்சீகரணப்ரக்ரியா து உத்தரத்ர வக்ஷ்யதே |
    • கானல் நீர் தோற்றுவதும் முன்பு சொன்ன பஞ்சீகரணத்தாலே. பஞ்சீகரண ப்ரக்ரியை முன்பு விளக்கப்பட்டது.
    • திக்ப்ரமோபி ததைவ. திஷி திகந்தரஸ்ய வித்யமானத்வாத் அவச்சேதக-மன்தரேன திகிதி த்ரவ்யான்தரானங்கீகாராச்ச |
    • ஒரு திக்கை வேறு திக்காக எண்ணுவதும் அப்படியே. திக்கு என்பது வஸ்துவின் இடத்தைப் பொறுத்து மாறுவதாலும்.
    • அலாதசக்ராதௌ து ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹநாத்தத்தத்தேஸஸம்யுக்த தத்தத்வஸ்துந ஏவ சக்ராகாரேந க்ரஹணம் | ததபி ஸத்யமேவ |
    • ஒரு கொள்ளிக்கட்டையை வேகமாகச் சுற்றும் பொழுது இடைவெளி தோன்றாமல் அது சக்ரமாகத் தோன்றுகிறது. அதனாலே ஒரு சக்ரமாகப் பார்க்கப்பட்டதும் உண்மையில் இருப்பது தான்.
    • தர்பணாதிஷு நிஜமுகாதிப்ரதீதிரபி யதார்தா | தர்பணாதிப்ரதிஹதகதயோ நாயநரஷ்மயோ தர்பணாதி க்ரஹநபூர்வகம் நிஜமுகாதி க்ருஹ்ணன்தி | தத்ராப்யதி ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹணாத்ததா ப்ரதீதி: |
    • கண்ணாடி முதலியவற்றில் தெரியும் முகமும் ஸத்யமே. கண்ணாடியில் பட்டு கண்ணில் இருந்து வரும் கிரணங்கள் திரும்பி வருகின்றன. முதலில் கண்ணாடியைப் பார்த்துப் பின் முகத்தைப் பார்க்கின்றன. இவை அனைத்தும் வேகமாக நடப்பதால் நம்மால் பிரித்து உணர முடியவில்லை. எனவே கண்ணாடியில் முகம் இருப்பது போன்று தோன்றுகிறது.
    • த்விசந்த்ரஞானதாவபி அங்குல்யவஷ்டம்ப திமிராதிபிர்நயனதேஜோகதிபேதாத் ஸாமக்ரீத்வயமந்யோந்யநிரபேக்ஷம் த்விசந்த்ரக்ரஹநஹேதுர்பவதி | ஸாமக்ரீத்வயம் பாரமார்திகம் | தேன த்விசந்த்ரஞானம் பவதி | அதஸ்ஸர்வம் ஞானம் ஸத்யம் ஸவிசேஷவிஷயம் ச; நிர்விஶேஷவஸ்துநோSக்ரஹணாத் ||
    • கண்ணில் விரலை வைத்துப் பார்த்தால் சந்த்ரன் இரண்டாகத் தெரிவது – கண்ணில் இருந்து புறப்படும் கிரணங்கள் இரண்டாகப் பிரிந்து தனித்தனியே போய் சந்த்ரனுடன் ஸம்பந்தப்படுகின்றன. ஆகையால் சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது.
    • ஆகையால் எல்லா ஜ்ஞானங்களும் ஸத்யமாகவும், விசேஷணங்களுடன் கூடியே தான் இருக்கும் என்பது காட்டப்பட்டது. நிர்விசேஷ க்ரஹணம் என்பது ஸம்பவிக்காது.
    • ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் ப்ரதமதோ பேதமேவ க்ருஹ்ணாதி | பேத இதி வ்யவஹாரே து ப்ரதியோக்யபேக்ஷா, ந து ஸ்வரூபே | தேநாவஸ்தான்யோந்யாஶ்ரயதோஷோSபி நாஸ்தி | உபர்யுபரி த்வபேக்ஷா அநவஸ்தா | பரஸ்பராபேக்ஷா அந்யோந்யாஶ்ரய: ||
    • வஸ்துக்களை க்ரஹிக்கும் பொழுது விஶேஷணங்களுடன் சேர்ந்தே க்ரஹிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த விஶேஷணம் அந்த வஸ்துவின் தர்மமாகவே இருக்கிறது. இதனை நையாயிகர்கள், அந்த வஸ்துவின் ஜாதியைக் காட்டிலும் வேறான பேதமாகக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஒரு பசு மாட்டினை பார்க்கும் பொழுது அதன் ஜாதியான கோத்வம் (பசுவாயிருக்கும் தன்மை) என்பது விஶேஷணம். இதனை அவர்கள் வேறு பேதம் என்று கொள்கிறார்கள். அப்படிக் கொண்டால் அந்யோந்யாஶ்ரயணம், அநவஸ்தா என்கிற தோஷங்கள் வரும். எனவே அது கூடாது.
    • அந்யோந்யாஶ்ரயணம் – பசுமாட்டையும், வேறு ஒரு விலங்கு – ஆட்டினையும் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த விஶேஷணம் பேதம் என்று கொண்டால், அது ஆட்டில் இருந்து வேறுபட்டது என்று தெரிய ஆட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். ஆட்டின் விஶேஷணம் அறிய, அது மாட்டின் விஶேஷணத்தில் இருந்து வேறுபட்டது என்று அறிய மாட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். இப்பொழுது அறிந்து கொள்ள ஆரம்பித்ததே மாட்டின் விஶேஷணத்தைத் தான்!
    • அநவஸ்தா – ஆட்டின் விஶேஷணம் மாட்டைக் காட்டில் வேறாகில், அது மாட்டின் விஶேஷணத்தை காட்டிலும் வேறு என்றறிவதற்கு ஒரு பேதத்தையும், அதை மாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட ஒரு பேதத்தையும் கொள்ள வேண்டும். இது முடிவே இல்லாமல் போகும்
    • நநு தஶதத்வமஸி இத்யேததபி ப்ரத்யக்ஷம் கிம் நஸ்யாதிதி சேந்ந; த்வமிதேதஸ்ய ப்ரத்யக்ஷத்வேSபி தஶமோSஹமித்யேதஸ்ய வாக்யஜன்யத்வாத் | யதி தஶமோஹமித்யேதஸ்ய ப்ரத்யக்ஷவிஷயத்வம் தர்ஹி தர்மவாம்ஸ்த்வமித்யேத்ஸ்யாபி ப்ரத்யக்ஷத்வம் ஸ்யாத் | அங்கீகாரேSதிப்ரஸங்காத் | அத ஏவ தத்வமஸி இதி வாக்யஸ்ய நாபரோக்ஷஞானஜனகத்வம் ||
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்று கூறும் அத்வைதிகள் பக்ஷத்தினைக் கண்டிக்கிறார். தன்னை மறந்த 10 மூடர்கள் கதை எனப்படும் – அதாவது ஒரு ஆற்றினை பத்துப் பேர் கடக்கிறார்கள். ஆற்றினை கடந்த பின்பு அனைவரும் கடந்து விட்டோமா என்று பார்ப்பதற்க்காக அனைவரையும் எண்ணுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை எண்ணாமல் மற்ற 9 பேர்களை எண்ணி, ஒருவனைக் காணவில்லை என்று துக்கிக்கும் பொழுது – ஒரு அறிவாளி அதனைப் பார்த்து – நீ தான் அந்த பத்தாவது நபர் என்று அறிவுரை கூறியவுடன். நாம் பத்துப் பேர்கள் என்கிற ஜ்ஞானம் வந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
    • அதுபோன்று தன்னையொழிந்த பதார்த்தங்கள் அனைத்தும் மித்யை என்று தெரியாத ப்ரஹ்மமானது, ஒரு ஆசாரியன் “தத்வமஸி” என்று உபதேசம் பெற்றவுடன் அந்த மித்யை நீங்கி, மோக்ஷம் அடைகிறான் எனவும், தத்வமஸி என்னும் வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் என்றுமே ப்ரத்யக்ஷம் ஆக முடியாது. அப்படிக் கொண்டால் ப்ரமாணத்தின் வரைமுறையே போய்விடும். தனது வருங்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆசையுடைய ஒருவன் ஒரு ஜோஸ்யனிடம் சென்று பார்க்கிறான். அந்த ஜோஸ்யன் அவனை நோக்கி “நீ தர்மவானாக இருக்கிறாய்” என்றால் – இவர்கள் கொள்கைப்படி – தர்மவான் என்பது ப்ரத்யக்ஷம் ஆகிவிடும்!
    • ஏதேந ப்ரத்யக்ஷப்ரமாகரணம் ப்ரத்யக்ஷப்ரமாணம் | ப்ரமா சாத்மசைதன்யமேவ, சைதன்யம் ச த்ரிவிதம் – அந்த:கரணாவச்சிந்ந சைதன்யம், வ்ருத்த்யவச்சிந்ந சைதன்யம், விஷயாவச்சிந்ந சைதன்யம் சேதி | யதா த்ரயாணாமைக்யம் தா ஸாக்ஷாத்கார: | ஸோSபி நிர்விஶேஷவிஷய ஏவ, அபேதமேவ க்ருஹ்ணாதி-இத்யாதி குத்ருஷ்டிகல்பநா நிரஸ்தா | நிர்விகல்பகம் நாம ஜாத்யாதியோஜனாஹீனம் வஸ்துமாத்ராவகாஹி கிஞ்சிதிதமிதி ஞானமிதி நையாயிகாநாம் மதமபி நிரஸ்தம் |
    • இனி அத்வைதிகள், ப்ரமையாவது ஆத்மசைதந்யமாகும். அதுவும் மூன்று வகைப்படும்.
    • 1) அந்த:கரணத்தோடு சேர்ந்த சைதந்யம்,
    • 2) செயல்படும் சைதந்யம்,
    • 3) விஷயத்தோடு சேர்ந்த சைதந்யம்
    • எப்போது இந்த மூன்றும் ஒன்று சேருகின்றதோ, அப்போது ஸாக்ஷாத்காரம் உண்டாகிறது. அவ்வறிவும் பேதமின்மையே காட்டுகிறது. அதற்கு விஷயம் நிர்விஶேஷ ஜ்ஞானமாத்திரமான ப்ரஹ்மமேயாகும். என்பது அவர்கள் பக்ஷமாகும்.  இவையனைத்தும் ப்ரமாணத்திற்கு விருத்தமாகயாலே பொருந்தாது.
    • இவ்விடத்தில், ப்ரமாண விருத்தம் என்றதற்கு
    • [இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநுவிதீயதே – ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி]-2-67) விஷயங்களில் ஈடுபடும் இந்த்ரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ, அந்த மனம்  (சைதந்ய திரிவிதமோ அந்த:கரணமோ இங்கு அருளவில்லை என்பது )- என்கிற பகவத் கீதா வாக்யமும்,
    • ஸ்ரீ பாஷ்ய ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் மஹா ஸித்தாந்தத்தில் ஸ்வாமி பாஷ்யகாரர் ஸ்ரீஸுக்திகளையும்
    • திருவுள்ளம் பற்றி ப்ரமாணத்திற்கு விருத்தம் என்று அருளுகிறார்.
    • ஆத்மா வஸ்துக்களை க்ரஹிக்கிற விதம் கீழேயே அருளப்பட்டது.
    • இனி நையாகிகர்கள் (தார்க்கிகர்கள்) பக்ஷம் விலக்கப்படுகிறது. அவர்கள் பக்ஷத்தில் “நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் என்பது ஜாதி (ஜாதி என்றால் பசு மாடுகள் அனைத்தும் ஒரு ஜாதி, ஆடுகள் அனைத்தும் ஒரு ஜாதி என்பன போன்று) முதலான விசேஷணங்கள் இல்லாமல் வஸ்து மாத்திரத்தைத் தெரிவிக்கிறது” என்பதாகும். அதுவும் தள்ளப்பட்டது. நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானங்கள் கீழே விளக்கப்பட்டது காண்க.
    • நநு “காணாதம் பானிணீயஞ்ச ஸர்வஸாஸ்த்ரோபகாரத்வகம்” இத்யுக்த்வாத் கதம் கௌதமமதநிராஸ இதி சேத்; உச்யதே – நாஸ்மாபி: கார்த்ஸ்ன்யேனாஸ்ய மதஸ்ய நிராஸ: க்ரியதே, யாவதிஹ யுக்தியுக்தம், தாவத் ஸ்வீக்ரீயதே; பரகல்பிததடாகோபஜீவனவத் | ந கலு தடாகஸ்த: பங்கோSபி ஸ்வீக்ரீயதே | அத: பரமாணுகாரணத்வம், வேதபௌருஷேயத்வம், ஈஶ்வரானுமானிகத்வம், ஜீவவிபுத்வம், ஸாமான்யவிசேஷஸமாவாயானாம் பதார்தத்வேன ஸ்வீகார:, உபமானாதே: ப்ரமாணாத்வகல்பனம், ஸங்க்யாபரிமாநப்ருதக்த்வ பரத்வாபரத்வகுருத்வத்ரவத்வாதீனாம் ப்ருதக்குணத்வ கல்பனம், திஶோSபி த்ரவ்யத்வகல்பனம் இத்யாதிஸூத்ரகாராதிவிருத்தா ப்ரக்ரியா நாஸ்மாBஹி: ஸ்வீக்ரியதே | அவிருத்தானி ஸ்வீக்ரியந்தே இதி விரோத: |
    • காணாதரால் ப்ரவர்த்திப்பிக்கப்பட்ட தர்க்கமும், பாணினியை முதல்வராகக் கொண்ட வையாகரண மதமும் எல்லா ஶாஸ்த்ரங்களுக்கும் உபகாரம் செய்கின்றன என்று சொல்லி இருக்க – அம் மதங்களைத் தள்ளலாமா என்று கேள்வியை அனுவாதம் (அனுமதித்து) செய்து, அதற்கு உத்தரம் அருளுகிறார்.
    • வேதவிருத்தமான விஷயங்கள் அம்மதங்களில் இருப்பதினால் வைதிகர்கள் அம்மதங்களைக் கொள்ளமாட்டார்கள். அவைகளாவன,
    • ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம் என்று பொருட்களைக் கற்பிப்பது,
    • ஸங்க்யை, பரிமாணம், ப்ருதக்த்வம், பரத்வம், அபரத்வம், குருத்வம், த்ரவத்வம் – என்ற ஏழும் தனிக்குணங்கள்
    • வேதம் பரமபுருஷனால் செய்யப்பட்டது
    • பரமாணுக்கள் ஜகத் காரணம் என்பது
    • ஜீவனை விபு என்பது
    • உபமானம் முதலானவற்றை தனிப் ப்ரமாணம் என்பது
    • திக்கை தனி த்ரவ்யமாகக் கொள்வது
    • முதலான கொள்கைகளால் வேத விருத்தமானவற்றை ஆதரிப்பதால், வைதிகர்கள் அவற்றைக் கைக்கொள்ளார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தக்கதாயிருந்தாலும், அதில் உள்ள சேறு உபயோகப்படாதாப் போலே, அவர்கள் மதத்தில் உள்ள வேத விருத்தமில்லாதவற்றைக் கைகொள்ளலாம் என்பதே “ஸர்வஶாஸ்த்ரோபகாரகம்” என்பதின் விஷயமாகும்.
    • —–
    • ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத ஜ்ஞானங்களை விவரித்து, லக்ஷணத்தின் தோஷங்களைக் காண்பித்து, அத்தோஷங்கள் கீழ்ச் சொன்ன லக்ஷணத்தில் இல்லை என்பது விளக்கியருளி, நிர்விகல்பகம் – ஸவிகல்பகம் ஆகியவற்றை விளக்கி, நிர்விகல்பகம் வஸ்து மாத்ரம் க்ரஹிப்பது அன்று என்று விளக்கியருளி, ப்ரத்யக்ஷ ஜ்ஞானம் உண்டாகும் விதத்தினைக் காட்டி, நிர்விகல்பக ஜ்ஞானத்தின் பிரிவுகள் காட்டியருளி, ஸ்ம்ருதி, ப்ரத்யபிஞை ஆகியவைகள் தனிப் ப்ரமாணம் அன்று – அவைகள் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது என்பதையும் காட்டி அபாவத்தின் அநங்கீகாரத்தையும் காட்டி, ஜ்ஞானங்கள் அனைத்தும் உண்மையே என்கிற ஸத்க்யாதி பக்ஷத்தைக் விளக்கியருளி, அதன் காரணத்தையும் காட்டி, வாக்யஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் அன்று என்பதையும் விளக்கியருளி, காணாதம் எனப்படும் ந்யாய மதம் முதலானவற்றை ஏற்காத காரணங்களையும் அருளிச் செய்து இந்த ப்ரத்யக்ஷ அவதாரத்தைத் தலைக்கட்டியருளுகிறார்.
    • முதல் அவதாரம் முற்றிற்று.
    • ————————-
    • ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    • ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–-ஸ்ரீ மன் நாராயணனே பர ப்ரஹ்மம் -ஸ்ருதி ஸ்ம்ருதி பரிபாடல் பிரமாணங்கள் -ஸ்ரீ புருஷ ஸூக்தம்-

January 24, 2024

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8– ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6-என்கிறபடியே பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை

நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம் இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

ஸ்ரீ நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே-ஸ்ரீ ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

———————–

ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-10-5-3-

—————–

தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
ஸ்ரீ நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மை யிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனை யிட்டல்லது சொல்லப் போகாது.
கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிற தன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக்கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண் கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————-

நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -ஸ்ரீ திருப்பல்லாண்டு -4-

நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12-

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -ஸ்ரீ பெரியாழ்வார்-1-8-11 – –

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே – -2 3-2 – –

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

நம்பி நீ பிறந்த நல் நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் -3-7-5 –

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –

நாராயணன் செய்த தீமை என்றும் எமரர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ – 3-8 2- –

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின் நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 1-

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 7-

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-2 –

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –

ஓவாதே நமோ நாரணா என்பன் –
பிரயோஜனம் பெற்றவாறே குலையும் ஐஸ்வர்ய காமற்கு
அங்கி கைப் பட்டவாறே குலையும் உபாசகர்க்கு
இது தானே பிரயோஜனம் ஆகையாலே -பிரபன்னர்க்கு குலையாது
ஓவாதே –இது மாறினால் எனக்கு சத்தை குலையும் –

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1 6-

கண்ணா –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி சுலபன் ஆனவனே
நான்முகனைப் படைத்தானே –
இப்படி சுலபனானவன் தான் யார் என்னில் -பிரம்மாவை திரு உந்தியில் ஸ்ருஷ்ட்டித்தவன்
காரணா –
பிரம்மாவுக்கும் முன்புண்டான ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிணவனே
கரியாய் –
காரணத்வமும் -சௌலப்யமும் அன்றிக்கே -துர்லபனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
காரணா -நான் முகனைப் படைத்தானே -கண்ணா -கரியாய் -என்று அந்வயம்
இது என் ஸ்வரூபம் –உம்முடைய ஸ்வரூபம் இருந்தபடி என் -என்ன –
அடியேன் நான் –
உனக்கு அனந்யார்க்க சேஷ பூதனான நான் –
ஆனாலும்-தேகம் கிடைக்கையினாலே இதுக்கு தாரகம் என் என்னில் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-
பசிப்பது எப்போதோ என்னில் –
ஓவாதே –
மறவாதே
நமோ நாராயணா என்று எண்ணா நாளும்-
நமோ நாராயணா -என்கையாலே –
தேக ஆத்மா அபிமானத்தையும் குலைத்து கொண்டு -திரு நாமத்தை அனுசந்திக்கிறார் –
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு –
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு-
அவை தத்துறுமாகில் -என்கையாலே -அவை கூடாது
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-என்கையாலும் –
ஓவாதே நமோ நாராயணா -என்கையாலும் -கூடாது –
கூடில் -நாளும் அது -பட்டினியும் அது –
நாள் மலர் கொண்டு நண்ணுகைக்கு பிரமாணம் -வேதம்
நாடாத மலர் நாடி –
த்ருஷ்டாதிர்ஷ்டம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாயம் உபேயம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாசகருக்கு உபாயம் -தங்கள் கையிலே -உபேயம்-ஈஸ்வரன்
உண்ணா நாள் -உன பாதம் நண்ணா நாள் — உண்ணும் நாள் உன பாதம் நண்ணும் நாள் –
பசி ஆவது -பசிப்பது என்ற படி
ஓவாதே நண்ணும் நாள் பசி கெடுவது —
ஓவாதே எண்ணா நாள் -இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொள்ளா நாள் -அவன் கொள்ளா நாள் –
அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே-
தத்துறுகை-தட்டுப் படுகை
இத்தால் மாறுமாகில் என்றபடி
தத்துறுமாகில் – மாறாட்டு படுமாகில் என்னவுமாம் –
மாறாட்டு படுகையாவது -அநந்ய பிரயோஜனமாகம் அன்றிக்கே –
பிரயோஜனாந்தரங்களை கணிசிக்கை –

————-

நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை 1-

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–10-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே–ஸ்ரீ நாச்சியார் திரு மொழி-2-1-

இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

———–

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-4-

————–

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –-ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி–2-9-1-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் –!–3-8-1-

வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

——————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —ஸ்ரீ முதல் திருவந்தாதி-—–5-

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி 1-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

——————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

———

பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என–ஸ்ரீ சிறிய திருமடல்

—————

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–ஸ்ரீ திருவாய் மொழி -1-2-10-

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில்,நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே–4-4-7-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அழித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே –7-5-3-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதோர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே -8-6-10–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-9-3-1-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

———

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -2-

———————–

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-1-7-

கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இனி இந்த சாமா நாதி கரண்யமானது ஜெகதீஸ்வரயோக சரீராத்ம நிபந்தம் என்று சொல்லுகிறது –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இந்த சரீரத்தை இவ்வாத்மா நியந்தருதயா வியாபித்து இருந்தால் போலே எம்பெருமானும் அபாதித பிராமண ஸித்தமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகங்களையும்
தத் ஆராப்தங்களான ஸமஸ்த வஸ்துக்களையும் நியந்தருதயா வியாபித்து இருக்கும் -இப்படி காரிய காரண உபய அவஸ்திதா சித்தவஸ்துவில் காட்டிலும்
பத்த முக்த நித்ய சித்த த்ரிவித சேதனரில் காட்டிலும் விலக்ஷண ஞான ஆனந்த அமல ஸ்வரூபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந அபரிமித குண விபூதிகனாய்
அகில புவனா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் சர்வ ஜகத் ஆத்மாவாய் -சர்வ ஜகச் சரீரனாய் ஸ்வதா ஏவ அகர்ம வச்யனாகையாலே
ஸ்வ சரீர பூத சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துகத ஸூக துக்க விகாராதி சர்வ தோஷைரா சம்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் –

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம/ ஆனந்தோ ப்ரஹ்ம / எஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் / பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச /
மநோமய பிராண சரீரோபாரூபஸ் சத்யா சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாமஸ் சர்வ கந்தஸ் சர்வ ரஸஸ் ஸர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர/
தஸ்ய நாம மஹத் யஸ /அத பரா ஸ்ரோத்ரம் தத் பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூஷ்மம் தத் ஸ்வயம் யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா /
அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ அபிபாஸஸ் சத்யகாமஸ் சத்ய சங்கல்ப /
ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ/
சர்வே நிமேஷா ஐஜ்ஞிரே வித்யுத புருஷாததி/ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் /ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே /
நீல தோயத மத்யஸ்தா வித்யுலேகே வபாஸ்வாரா /மஹா ரஜநம் வாச /அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ /ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம்/
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா /யத்ரர்ஷப பிரதமஜா யே புராணா/தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் /
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய/ யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமன் /பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச /
ஷரம் பிரதானம் அம்ருதாசாரம் ஹாரா ஷராத்மாநாவீசதே தேவ ஏக /ச காரணம் கரணாதி பாதிப
/த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பர்ஷஸ்வ ஜாதே-தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந்யோ அபிசாக சீதி/
சமாநே வ்ருஷே புருஷோ நிமக்நோ அநீசயோ சோசதி முஹ்யமாந ஜுஷ்டம் யதா பஸ்யத் யன்யமீசமஸ்ய மஹிமாநமிதி வீத சோக /
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா/போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா /
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க்ரம்ய /ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தீ பவதி /ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி /
சோஸ்நுதே சர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதேதி /
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்த ரோயம் ஆத்மா ந வேத
யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத/
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண /அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஐநாநாம் சர்வாத்மா /ச தேவ சோம்யேதமக்ர ஆஸீத் /
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே /ப்ரஹ்ம வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / சர்வானி ஹவா இமாநி பூதாந் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே /
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாநோ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி /
ந தஸ்யேசே கஸ்ஸந /பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் / யச்ச கிஞ்சிஜ் ஜக தயஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித/
ச ப்ரஹ்மா ச சிவா சேந்த்ர சோஷர பரம ஸ்வராட் –இத்யாதியாய்
அவிகாரய ஸூத்தாய /ஸூத்தே மஹா விபூதியாக்யே /ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் /ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் /
சமஸ்தா சக்த யஸ் சைநா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர் மஹத் /
பூஷணாஸ்த்ரா ஸ்வரூபஸ்தம் /ந பூத சங்க சமஸ்தா நோ தேஹோஸ்ய பரமாத்மன/தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீவத்ச வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய ஸாஸ்வதோ த்ருவ/
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ /தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய/
திவ்யம் ஸ்தானம் அஐரஞ்சாப்ரமேயம் துர் விஜ்ஜேயஜ் சாகமைர்கம்ய மாத்யம் /
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுரா சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ/
கலா முஹுர்த்தாதி மயஸ்ச கால /காலம் ச பசதே/ பூ பிராணிந சர்வ ஏவ குஹாச யஸ்ய/ சர்வம் ஸமாப்நோஷி ததோ அசி சர்வ /தாநி சர்வானி தத்வபு /
தத் சர்வம் வை ஹரேஸ்தநு /ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூப யதோ அவ்யய / ஜகத் சர்வம் சரீரம் தே /ஜகாத் வியாபார வர்ஜம் பிரகரணாத சந்நிஹிதத் வாச்ச/
போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச /ஜகத் வியாபார வர்ஜம் சமாநோ ஜ்யோதிஷா/ இதம் ஞானம் உபாச்ரித்ய மாமா சாதரம்யா மாகதா சரக்கேபி நோப ஜா யந்தே பிரளயே ந வ்யதந்தி ச /விஷ்ணோஸ் ஸகாசா நுத் பூதம் —
இத்யாதி ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –
ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின —
—————–

அவதாரிகை –

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

—————————————————–

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1

——————————————————-

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது

ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது

உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –

உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே

அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உயர் வேத நேர் கொண்டு உரைத்து
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்

பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்

தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது

அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இறே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே-ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாக
ஆ பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி

அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

———————————————————

1. ஸ்ரீ மன் நாராயணனே உலகனைத் தையும் படைத்து அளித்து அழிக்கும் ஜகத் காரணன்.

“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் த்வாதஸாதித்யா ருத்ரா வஸவ:”
[நாராயணோபநிஷத்]

[நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறான்(பிரமனுக்கு அந்தர் யாமியான) நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான். (கஸ்யபருக்கு அந்தர்யாமியான) நாராயணனிடமிருந்தே இந்திரன் உண்டாகிறான்….நாராயணனிடமி ருந்து(இவ்வண்ணமாக) பன்னிரு ஆதித்யர்களும், பதினொரு உருத் திரர்களும் எட்டு வஸுக்களும் தோன்றினார்கள்]

“ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந” [மஹோபநிஷத்]

[நாராயணன் ஒருவனே(ப்ரளய காலத்தில்) இருந்தான். பிரமனுமில்லை சிவனுமில்லை.]

“மா அயோயே மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!…
விதியின்மக்களும் மாசுஇல் எண்மரும் பதினொரு கபிலரும் தாமாஇருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழுலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதரவலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை ப்பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்”[பரிபாடல் -3]

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” [நான்..திருவ-1]

“போதுதங்கு நான்முகன் மகன் அவன் மகன்சொலில் மாதுதங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”
[திருச்சந்தவிருத்தம்-72]

“கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளுர்தி கழல்பணிந்து ஏத்துவரே”
[திருவாய்மொழி-2-2-10]

2. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துலகையும் வியாபிக்கும் அந்தர்யாமியாகவும் , அதனாலேயே அனைத்துமாகச் சொல்லத்தக்கவனாகவும் இருப்பவன்.

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:|
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ||
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா |
அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||–[தைத்திரீய நாராயணவல்லி]

[நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா, இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவுமாக எந்தெந்தப் பொருள்கள் உள்ளனவோ, அவையனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து விளங்குபவன் நாராயணனே]

ப்ரஹ்மா நாராயண: ஸிவஸ்ச நாராயண:…நாராயண ஏவேதம் ஸர்வம்” [நாராயணோப நிஷத்]

[பிரமனும் நாராயணனே. சிவனும் நாராயணனே. நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்]

ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-

யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-

வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி / தண்ணீர் /-வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
-புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –

ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ….
பூவனும் நாற்றமும் நீ” [பரிபாடல்-1]

“இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை”
“அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்”
[பரிபாடல்-3]
“கெடுஇல் கேள்வியில் நடு ஆகுதலும்”              [பரிபாடல்-2]

“ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்” [திருவாய்-4-7-6]

“நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” திருவாய் -6-9-1]

3. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனாகவும் எல்லாம் வல்ல ஸர்வசக்தனாக வும் இருப்பவன்.

“அத புருஷோ ஹவை நாராயணோகாமயத- ப்ரஜாஸ்ருஜேயேதி | நாராயணாத் ப்ராணோ ஜாயதே மந: ஸர்வேந்த்ரியாணி ச | கம் வாயு: ஜ்யோதிராப: ப்ருதிவீ விஸ்வஸ்ய தாரிணி || [நாராயணோபநிஷத்து]

[புருஷன் எனப்படும் நாராயணன்
‘அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டிக்கக் கடவேன்’ என்று ஸங் கல்பித்தான். நாராயணனிடமிருந் தே ப்ராணன் உண்டாகிறது; மனமும் எல்லா இந்திரியங்களும், ஆகாயமும், வாயுவும், அக்னியும், நீரும், அனைத்தையும் தரிக்கும் பூமியும் உண்டாகின்றன.]

“யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:” [முண்டக..-1-1-10]

[எந்தப் பரமாத்மா அனைத்தையும் அறிகிறானோ, அனைத்தையும் அடைந்திருக்கிறானோ அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டியாகிற தவம் ஸங்கல்பமயமாயிருக்கிறது.]

“பராஸ்ய ஸக்தி: விவிதைவ ஸ்ருயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச” [ஸ்வேத..6-7]

[இந்தப் பரமாத்மாவினுடைய சக்தியும் ஜ்ஞானமும் செயலும் மேலானதாகவும், பலவிதமாகவும், இயல்வானதாகவும் உள்ளன.]

“நூறு ஆயி ம் கை ஆறுஅறி கடவுள் நின்னைப் புரைநினைப்பின் நீஅலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ!”

“நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபிணோயே!”
“இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை” [பரிபாடல் 3]

“எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதேகொண்டு  எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன்” [திருவாய் -3-10-8]

4. ஸ்ரீ மன் நாராயணனே தலைசிறந்த மோக்ஷத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிப்பவன்.

“உதாம்ருதத்வஸ்யேஸந: ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ— இஷ்டம் மநிஷாண”[புருஷஸூக்தம்]

[மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே; லக்ஷ்மிதேவியும், பூமி தேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள் உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தையும் பெறக் கடவோம்.]

“தத்விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய:”
[ரிக் வேதம் மண்டலம் -5-22-5]

[விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.]

“மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!”         [பரிபாடல்-3]

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதில் பெறல் உரிமை”                   [பரிபாடல் -15]

“வீடு முதலாம்”        [திருவாய்-2-8-1]

“சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று வீடு தரும் நின்று நின்றே”     [திருவாய்-3-9-9]

“இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்”[திருவாய்-10-10-11]

5. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய், தாழ்ந்த குணங்கள் எதுவும் இல்லாதவ னாய் இருப்பவன்.

நிஷ்கலங்கோ நிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸுத்தோ தேவ ஏகோ நாராயண: ந த்விதீயோஸ்தி கஸ்சித்||”-[நாராயணோபநிஷத்]

[ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய்,சுத்தனா ய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.]

“தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண:|.. உத்பவ: ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:||”-[ஸுபாலோபநிஷத்]

[அனைத்தையும் தரிப்பவனும், அனைத்தையும் விதிப்பவனும், செய்பவனும், சிறந்த விகாரங்க ளையுடையவனும், பரமபதத்திலிரு க்கும் தேவனான நாராயணன் ஒருவனே; பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே.]

நின் ஒக்கும் புகழ் நிழலவை…. எண்ணிறந்த புகழவை”[பரிபாடல்1]

“வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்”                 [பரிபாடல்-2]

“நின் புகழ் உருவின கை”[பரிபாடல்-3]
“சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை”            [பரிபாடல்-13]

“அன்பது மேஎய் இருங்குன்றத்தான்”[பரிபாடல்-15]

“நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்”                 [பரிபாடல் திரட்டு]

“தாவா விழுப்புகழ் மாயோன்”[தொல்காப்பியம் பூவைநிலை]

“தேயா விழுப்புகழ் தெய்வம்”[முல்லைக்கலி-3]

“புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை”    [புறநானூறு-56]

“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன[புறநாநூறு-57]

“ஈறில வண்புகழ் நாரணன்”[திருவாய்-1-2-10]

“உயர்வற வுயர்நல முடையவன்யவனவன்”[திருவாய்-1-1-1]
“வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்”[திருவாய்-8-1-8]
“தோற்றக்கேடவை இல்லவன்”[திருவாய்-3-6-6]

6. ஸ்ரீ மன் நாராயணனே தேவர்களுக் கெல்லாம் முதல்வனான தேவாதி தேவன்.

“அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:”[யஜூஸ்ஸம்ஹிதா-5-5]

[தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்]

“தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்”             [ஸ்வேதாஸ்வர]

[தேவதைகளுக்குள் மேலான தேவதையாயிருப்பவன் அந்தப் பரமாத்மாவே]

“அமரர்க்கு முதல்வன் நீ”[பரிபாடல்]

“மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ”[திருவாய்-8-1-3]

“தேவாதிதேவனை” [திருப்பாவை8]

7. ஸ்ரீ மன் நாராயணனே எவராலும் அளத்தற்கரியவன்.

“ந ஸந்தருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்சநைநம்”
[தைத்திரீய நா..1-10]

[அந்தப் பரமாத்மாவின் உருவம் எவனுடைய கண்ணுக்கும் புலனா காது; எவனும் அவனைக் கண்ணால் பார்த்ததில்லை.]

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”[தை-ஆந-9]

[எந்தப் பரமாத்மாவிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அவனை அறிய முடியாமல் திரும்பி வருகின்றனவோ.]

“அன்னமரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?”
[பரிபாடல்-1]

“நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ”
[பரிபாடல்-4]
“அளப்பரியவை”    [பரிபாடல்-4]

“இலனது உடையனிது என நினவரியவன்”    [திருவாய்-1-1-3]

“யானுமேத்தி ஏழுலகும் முற்றும் ஏத்திப் பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்”    [திருவாய்-4-3-10]

8. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துயிர்களுக்கும் எல்லா உறவுமாய் இருக்கும் உறவினன்.

“மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:|”              [ஸுபால உப]

[தாய், தந்தை ஸகோதரன் முதலான எல்லா உறவாகவும், புகலிடமாகவும், உபாயமாகவும், நண்பனாகவும், ப்ராப்யமாகவும் இருப்பவன் நாராயணனே]

“அன்னை என நினைஇ நின் அடிதொழுதனெம்”  [பரிபாடல்-18]

“எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மண்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமோய் இருங்குன்றத்தான்”
[பரிபாடல்-15]

“பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ பேசில்”               [பெரிய திருவ-5]

“தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் அவை அல்லனாய்”
[திருவாய்-3-6-9]

9. ஸ்ரீ மன் நாராயணனே வேதங்களின் முழுமுதல்வனாக முழங்கப்படுபவன்.

“த்வே வித்யே வேதிதவ்யே…பரா சைவாபரா ச | தத்ராபரா ரிக்வேதோ யஜூர்வேத: ஸாமவேத: அதர்வவேத:||
[முண்டக 1-1-4-5]

[பரமாத்மாவைக் காட்டும் இரண்டு வித்யைகளை ஜீவன் அறிய வேண்டும். பக்தியானது மேலான வித்யை. வேதங்கள் இரண்டாவதான வித்யை. அந்த வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நாலு வகைப் படுகின்றன.]

“வாய்மொழிப் புலவ”
“நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ”

“நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்”                       [பரிபாடல்-1]

வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்”
“என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே”

“கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு”  [பரிபாடல்-2]

“மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து  வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்”

“பதினாயிரம் கை முதுமொழி முதல்வ”

“முன்னைமரபின் முதுமொழி முதல்வ”

“தொல் இயல் புலவ”

“வேதத்து மறை நீ”   [பரிபாடல்-3]

“அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை”

“பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்”
[பரிபாடல்-13]

“நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்”           [பரிபாடல்-15]

“உளன் சுடர் மிகு சுருதியுள்”
[திருவாய்-1-1-7]

“மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”        [திருவாய்-3-1-10]

“நம்முடைய நாயகனே! நான்மறையின் பொருளே”
[பெரியாழ்திரு 1-5-3]

“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே”[பெரியாழ்திரு4-3-11

“அரன் நாரணன் நாமம் உரை நூல்மறை”     [முதல் திருவ 5]

“போதில் மங்கை பூதலக்கிழத்திதேவி … என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”  [திருச்சந்த -72]

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————————————————-

ஸ்ரீ புருஷ ஸூக்தம்

ஸ்ரீ புருஷஸூக்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூக்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் – அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையையும் சொல்லி சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது

#சகஸ்ர_சீர்ஷம்_தேவம்_விஸ்வாஷம் #விஸ்வ_சம்புவம்
#விஸ்வம்_நாராயணம்_தேவம்_அக்ஷரம்_பரமம்_ப்ரபும் –1-

#சகஸ்ர_சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூக்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
#விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
#விஸ்வ_சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
#விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
#நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதைகதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
#தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
#அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
#பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
#ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்

——————————–

#விச்வத_பரமம்_நித்யம்_விஸ்வம் #நாராயணம்_ஹரிம்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்_தத் #விஸ்வ_முபஜீவதி–2

#பதிம்_விஸ்வஸ்_யாதமேஸ்வரம் #சாஸ்வதம்_சிவமச்யுதம்
#நாராயணாம்_மஹாஜ்ஜேயம் #விச்வாத்மநாம்_பாராயணம் -3

#விச்வத_பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் –இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
#நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
#விச்வத_பரமம்_விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
#நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் –சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
#ஹரிம்_நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
#தத்_விஸ்வ_முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வாஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
#பதிம்_விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –

“#யாதமேஸ்வரம்”

ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்

சாஸ்வதம்”

ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே

“சிவம்”

மங்கள கரமாய் இருப்பவன்

“சாஸ்வதம் சிவம்”

எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன

“அச்யுதம்”

நழுவ விடாதவன் –வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –

“அச்சுதன்-
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –

“நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் –ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் – பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் –
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் – விச்வாத்மநாம் கடக சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் – ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்

“பாராயணம்”

பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க –பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –

——————————————————————–

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4

யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5″

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“நாராயண பரம் ப்ரஹ்ம”

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே –த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –

“தத்துவம் நாராயண பர”

நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –

நாராயண பரோ ஜ்யோதிர்”

ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக

“ஆத்மா நாராயண பர”

ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் – தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
“யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-“
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –

—————————————-

“அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6”

எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே

“அநந்தம்”

கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அநு வாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே

“அநந்தம்”

தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் – விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் –
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு

“அவ்யயம்”

குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி –விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
“கவிம்”

நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்

“கவிம்”

வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே

“சமுத்ரேந்தம்”

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –

“சமுத்ரேந்தம்”

குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே

“சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்”

சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்

“ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம்”

சிந்தையன்
-தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –

————————————————————————–

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8

தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9″

அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்”

தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –

“சாப்யதோ முகம்”

தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்

“அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி”

கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –

“அங்குஷ்ட மாத்ர புருஷ –”

கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்

“ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்”

அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –

“ஆயதனம் மஹத்”

நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்

“தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்”

அந்த ஹ்ருதயத்தில் நடுவிலு நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது

“தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்”

அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்

“அஜர”

எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி

“கவி”

எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –

——————————————————————–

“தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10″

“தஸ்ய மத்யே”

தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்

“வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித”

ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா “தஸ்ய சிகா வன்ஹி சிகா”
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –

“நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா”

நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –

“நீவார ஸூகவத் தன்வீ”

நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்

“பீதாபா”

மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்

“பீதாபா”

என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்

“ஸ்யாத் தநூபமா”

உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

———————————————-

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11″

“தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித”

ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை

“ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்”

அனைவருக்கும் அந்தர்யாமி –அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே –ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்

“சோஷர”

-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி

“பரமஸ் ஸ்வராட்”

கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான

———————————————————————-

“ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12″

பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –

“ருதம்”

சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே

“சத்யம்”

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம – ஏக ரூபி -ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் –

“பரம் ப்ரஹ்மம்”

பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்

“புருஷம்”

நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்

“க்ருஷ்ண பிங்களம்”

கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று –ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்

“ஊர்த்வ ரேதம்”

ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்

“விருபாக்ஷம்”

மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் –சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் –யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே

“விஸ்வ ரூபாய வை நம”

உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ 108 திவ்ய தேச எம்பெருமான் ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி பாடல் —

January 23, 2024

திருவரங்கன் கோயில் திருவரங்கேசன்
திருமகள் அழகிய மணவாளன் உறையூர்
திருத் தஞ்சை நீல மேக நரஸிம்ஹம்
திரு அன்பில் அமர் வடிவு அழகிய நம்பி

மரு கமழ் சோலை கரம்பனூர் உத்தமன்
மலர் மகள் வெள்ளறை புண்டரீகாக்ஷன்
திருப் புள்ளம் பூதங்குடி அமர் வேந்தே
திருப் பள்ளி உணர்த்தருள் புரிந்திடுவாயே

வார் புனல் பேரில் -அரவணைக் கிடந்தான்
வரம் திகழ் ஆதனூர் அளந்தருள் ஐயன்
பார் புகழ் தொல் நிறை நாதன் அழுந்தூர்
மணி துயில் உரு கடல் திரு சிறு புலியூர்

கார் மலி தண் சேறை திருச்சேறை நாதன்
கார் கடல் மல்லை தலைச் சங்கம் நாண் மதியே
ஏர் திகழ் குடந்தைக் கிடந்த என் அமுதே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கண்டியூர் ராமர் சாப விமோசனர்
கருணை பொழிந்திடும் விண்ணகர் அப்பன்
எண் திசை புகழ் கமழ் ஊர் சவுரி ராஜன்
எழில் மிகு திருவாலி வயலாலி அப்பன்

கண்டம் கமழ் சோலை இந்தளூர் மைந்தா
காசினியில் உயர் திருச்சித்ர கூடம்
அந்தணர் தேவன் அரன் அயன் காழி
யரும் தவ முனி தொழும் தில்லைக் கோவிந்தர்

சிந்தை கவர்ந்திடும் ஸ்ரீ ராமா விண்ணகர்
சீராக அளந்திடும் தாடாளன் அம்மா
நந்தருக்கு அருள் கூடலூர் ஜகன்னாதா
நாராயணா பள்ளி எழுந்தருளாயே

மாதவன் மகிழ்ந்து உறை தேவானார் தொகை
மறை திகழ் வண் புருஷோத்தமத்தானே
ஸ்ரீ நாதன் அருள் நாதன் செம் பொன் செய் கோயில்
திருத் தெற்றி அம்பல செங்கண் மாலே

போது அலர் பொழில் சூழும் மணிக் கூடல் நாதன்
புகழ் காவளம்பாடி வேணு கோபாலன்
சீர் மலி சோலை வெள்ளக்குளத்து அண்ணா
ஸ்ரீ தரா சீர் பள்ளி எழுந்தருளாயே

கண்ணங்குடி நின்ற கார் மேக வண்ணா
திருக்கண்ண மங்கை அபிஷேக ஈஸா
கரிக்கு அருள் பிரிந்திடும் கபிஸ்தா நாதா
கருணை புரி வெள்ளி யங்குடி ராமா
விண்ணோர் பணி மணி மாட விளக்கே
வைகுண்ட விண்ணகர் வைகுந்த நாத
எழில் அரி மேய விண்ணகர் அரவிந்தா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பார் புகழ் கூடலூர் ஆடுதுறை பெருமாள்
கார் கடல் நாகை அழகியார் பள்ளி எழுந்தருளாயே

தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி
கருணா வளம் தரு சோழ நன் புவியில்
மா மகள் கோன் உறை நாற்பது பதிகள்
மறை ஒலி புகழ் கமழ் மா நகர் என்பர்

காமனைப் படைத்த தோர் மா மேனி அழகர்
மாலிருஞ்சோலையில் மால் அலங்காரர்
சேமமுடை சவும்ய நாராயணான் கோஷ்ட்டி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

மெய்யத்து உறைகின்ற சத்ய கிரீஸ்வரன்
தெய்வச் சிலை நாதன் திகழும் புல்லாணி
வையத்து உயர் திருத் தண் காலில் அப்பன்
வழித்துணையாம் காள மேக ஸ்ரீ மோகூர்

வைகை நதி தீரம் தென் கூடல் அழகர்
வள நகர் ஸ்ரீ வில்லி புத்தூர் அரங்கர்
ஐயன் திருக்குருகூரில் பொலிந்தார்
அன்பனே திருப்பள்ளி எழுந்தருளாயே

தென் உயர் திருக்குறுங்குடி வைஷ்ண நம்பி
நிக்ஷேப மா நிதி நிறை திருக்கோளூர்
பொங்கும் பொருநல் சூழ் பாண்டிய நாட்டில்
புகழ் பெரு பதினெட்டு திருப்பதி என்பர்

பங்கஜ நாதன் அனந்த புரம் தன்னில்
வண் பரிசாரத்தில் திரு வாழும் மார்பன்
தங்கும் பெரும் புகழ் காட்கரை அப்பா
தாமோதரா பள்ளி எழுந்தருளாயே

செல்வம் திகழ் திரு மூழிக் களத்தான்
சேர் திகழ் மாயப்பிரான் திருப்புலியூரில்
நல் திருச் செங்கனூரில் மெய்ய வரை யப்பன்
நாரணன் அமர்ந்திடும் தென் திரு நாவாய்

வல்லவள் வாழ்ந்திடும் வல்லி மணாளா
வண்டூர் உறையும் என் பாம்பணை அப்பா
அல்லல் தவிர்ந்திடும் திரு வட்டாத்தில் ஆதி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

பக்தர் தொழும் திரு வித்துவக் கோடு
வண் குல சேகரன் பாடிடும் அம்மான்
அற்புதன் நாரணன் அமர் திருக்கடித்தானம்
அணி பொழில் விரலாழி வேய் குறள் அப்பன்

செப்புடை மலை நாடு ஓர் பதின்மூன்றும்
தெய்வ நாதன் திரு ஹரி நாதன் நகரே
முத்துடை பெண்ணை நிறை புவியில் திரு
விக்ரமாப் பள்ளி எழுந்தருளாயே

ஹரி ஹரி உறைந்திடும் அருளாள வரதா
கடு வினை களைந்திடும் அழகிய சிங்கா
நெடு பொழில் கச்சியில் அஷ்ட புஜத்தான்
தீபப் பிரகாசன் விளக்கொளி தண்கா

விரி பொழில் வேளுக்கை ஆளரி நாதன்
ஜெய் தூதன் பாடகம் சேர்வை விளங்கும்

நீள் கருணாகரன் திருக்காராகத்தாள் நிலையிலா
மணி மாட கார்வானக் கள்வன் விமல வராஹன்
திருக்கள்வனூரே மலி புகழ் பரமேஸ்வர நகர் நாதா
பவள வண்ணா திருப்பள்ளி எழுந்தருளாயே

புள்ளுக்கு அருள் செய்த புட் குழி ராமா
புனிதன் உறைகின்ற ஊர் பத்தராவி
உள்ளம் கவர் கின்ற வீர ராகவன் எவ்வுள்
உத்தம நீர் மலி நீர் வண்ணன் எம்மான்

துள்ளும் இடவெந்தை நித்ய கல்யாணர்
திரை கடல் மல்லை தலை சங்கம் நாண் மதியே
தெள்ளிய யோகத்தில் அமர் திருக்கடிகை
சிங்கப்பிரான் பள்ளி எழுந்தருளாயே

சீராரும் வேத வல்லி மணாளா
செல்வம் திகழ் திருவல்லிக்கேணி மன்னாதா
பார் புகழ் ருக்மிணி பார்த்தன் ஸஹாயன்
பக்தருக்கு அருள் புரியும் சக்ரவர்த்தி குமாரன்

வாரணம் துயர் தவிர் தேவப் பெருமான்
வல்வினை தீர்த்திடும் தெள்ளிய சிங்கா
ஏர் தொண்டை நாடும் ஓர் நாலாறும் மூவாறும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் திரு வேங்கடத்து அப்பன்
அரியா ஒண்ணாத நர சிங்க வேள் குன்றம்
தொண்டர்கள் வாழும் திரு ராமன் அயோத்யா
தொல் வன ரூபன் வாழ் நைமிசாரண்யம்

கொண்டல் தவழ் திரு சாளக்கிராமம்
குரு நர நாராயணன் பதரி உறை கோயில்
மண்டலம் தாம் தொழும் கண்டம் கடி வாழ்
மாதவனே பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் கொண்டல் தவழ் திருப் ப்ரிதி
பார் புகழ் ருக்மிணி துவராகா தீசன்
கோபிகள் கொண்டாடும் ஆய்ப்பாடி நாதன்
குன்று குடையாக எடுத்த கோவர்த்தன நேசா
நாச்சியார் உகந்து அருளும் வட மதுரையார் மைந்தன்
தேவர்கள் குறை தீர்க்கும் பாற் கடல் நாதா
வைகுந்தக் குட்டன் மகிழ்ந்து உறையும் பரம பத நாதா
உடையவர் போற்றிடும் சம்பத் குமாரா
ஸ்ரீ தரனே பள்ளி எழுந்து அருளாயா

மாதவன் பூ மகள் சேனையர் கோன் அருள் பெற்ற
மறைத் தமிழ் கூறும் மகிழ் மாறன்
முனி நாதன் புண்டரிகாஷர் மணக்கால் நம்பி
ஸ்ரீ யமுனா ஸ்ரீ மஹா பூர்ணர் பூதூரில் எதிராஜர்
பொருநல் குருகூரில் வந்தார் மணவாள மா முனி
முதலார் ஆதாரத்தோடும் உன்னைத் தொழ வந்தோம்
அந்த அச்யுதனே பள்ளி எழுந்தருளாயே

வேதம் தமிழ் செய்த மாறன் கொள் ஈசன்
விமலர்களாம் பொய்கை பூதம் பேயாழ்வார்
கோதை விஷ்ணு சித்தன் தொண்டர் அடிப்பொடி
குறையல் கலி கன்றி மா மழிசைப் பிரான்

நாதன் திருப்பாணான் நம்மாழ்வார் தம் கவி
நல் தமிழ் பாசுரம் பல்லாண்டு இசைப்பார்
ஏதங்கள் வாராது உலகினில் வாழ்வார்
எம்பெருமான் உன் தன கிருபையினாலே

ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வைஷ்ணவ தின சர்யை –ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய கிரந்தம் —

January 21, 2024

பஞ்ச கால பராயணம்

1-அபி கமனம்

2-உபா தானம்

3-இஜ்யா-பகவத் ஆராதனம் இதுவே இவ்வைந்துக்குள் பிரதானம்
4-ஸ்வாத் யாயம்–பக்தி வளர அருளிச் செயல்களின் சொல்லும் பொருளும் படித்தும் கேட்டும் மனனம் பண்ணுவது

5-யோகம்–இரவில் இந்திரியங்களை அடக்கி ப்ரத்யக்காக ஸ்வரூப ரூப குண விபூதி த்யானம்

ஸூர்ய மண்டலத்தைக் கீண்டு புக்கு -கலங்காப் பெரு நகரை அடைந்து மா மணி மண்டபத்து
ஒண் டொடியாள் திருமகள் கேள்வனான கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு
என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே
மாயோனை என்று கொலோ வாயார வாழ்த்தும் கொலோ
அந்தமில் பேர் இன்பத்து அடியார்கள் குழாங்களுடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசையை வளர்த்துக் கொள்வதாகும்

அதி காலையில் கண் விழித்து -படுக்கையில் உட்கார்த்த படியே இந்திரியங்களை அடக்கி –பழுதே பல காலும் போயின
என்பதை உணர்ந்து மனதில் துணுக்கமும் நிர்வேதமும் உடையனாய்
தாப த்ரயங்களால் சூழ்ந்த துன்பங்களை உணர்ந்து
காட்டுத் தீயினால் சூழப்பட்டு தப்ப வழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி அலையும் மான் போல் இருப்பதாக அனுசந்தித்து
சிறகு இழந்த பக்ஷி போல் சம்சார வலையில் அகப்பட்டு வெளி வர வழி அறியாமல் தன்னிடமே வெறுப்பு தோன்றி
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் இவற்றை உணர்ந்து
சரணாகதி செய்ததை நினைவு படுத்திக் கொண்டு நித்ய அனுஷ்டானங்கள் -நித்ய அநுஸந்தானங்கள் செய்ய வேண்டும்-

பாற் கடலில் பள்ளி கொண்டு அருளும் பரமனை உள்ளத்துக்கொண்டு மெள்ள எழுந்து
பரிவொடு பரவு நல்லடியவர் பழ வுரை அரி அரி அரி அரி அரி அரி அரியே -என்று திருநாமம் உச்சரிக்க
கஜேந்திராழ்வானை ரக்ஷிக்க த்வரித்து வந்து அருளியது போல் நம்மிடம் வந்து ரக்ஷித்து அருள்வான் அன்றோ

உபா தானம் -பகவத் ஆராதனை த்ரவ்ய சாம் பாதகம்
தனக்காக உபகரணங்களைச் சேர்ப்பவன் மீண்டும் மீண்டும் சம்சாரத்திலே உழல்வான்
ஸூத்தமான த்ரவ்யங்களை சம்பாதிப்பது போல் ஆத்ம குணங்களையும் சம்பாதிக்க வேண்டும் –

—————–

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய கிரந்தம் —

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் -என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி-த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –

திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமை காந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமை காந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமை காந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
தீர்த்தம் கத்வா ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா
அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமை காந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து

தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாகத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய
ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்

ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
போம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||

இக்கால கட்டத்தில் எரும்பியப்பா மாமுனிகளுக்கு ஆசார்ய நிஷ்டை புரிந்து அவரின் தினசரி அனுஷ்டானங்களை ஆவணம் செய்கிறார் அதுவே ஸ்ரீ வரவரமுனி தினசர்யை.

எரும்பியப்பா இவற்றை மாமுனிகளின் பூர்வ (காலை) மற்றும் உத்தர (மாலை) அனுஷ்டானங்கள் என பிரித்து ஸ்லோகங்களாக சாதித்துள்ளார். ஸ்ரீ வரவரமுனி தினசர்யை சமஸ்க்ருத ஸ்லோகங்கள் அநேக இடங்களில் கிடைக்கிறது, அடியேன் அதற்குள் புகாமல் அர்த்தங்களை மட்டும் இங்கே விண்ணப்பிக்க முயல்கிறேன்.

எரும்பியப்பா இரண்டு காவிரிக்கு நடுவில் ரங்கேச பீடத்தில் சுகமாய் ஜீவித்து வரும் மாமுனிகளின் அழகை இப்படி வர்ணித்து ஆரம்பிக்கிறார்.

  • திருமேனி நிறமோ திருப்பாற்கடலின் வெண்மையை மிஞ்சும் வெண்மை, தேஜஸோ குளிர்ந்த தெளிந்த சூரியன்
  • நடையோ கோவிலண்ணன் மற்றும் அப்பன் (சிஷ்யர்கள்) கை பிடித்து மிருதுவாக மேதினியில் அடிவைத்து
  • திருமேனியோ வாடா குறிஞ்சி மலர், அங்கியோ காஷாயம், திருமார்போ விசாலம், புஜங்களோ ஆபரணம்
  • நாபியோ யக்ஞோபவீத்தால் தாமரை தண்டின் நூல்களை போல் வெண்மையான ஒளி
  • திருமார்பிலோ ஊர்த்வபுண்ட்ரம், கழுத்திலோ பட்டு நூல், துளசி & தாமரை மணி மாலைகள்
  • தோள்களிலோ சங்கு சக்ர லட்சிணை, உத்தரீயமோ காஷ்மீரத்து குங்கும பூ நிறம்
  • அதரங்களிலோ த்வயம், மனத்திலோ எம்பெருமானார் (எம்பெருமானின் திருமேனி நம்மாழ்வார், நம்மாழ்வாரின் திருவடிகள் எம்பெருமானார்) அனுசந்தானம்
  • திருமுகமோ தாமரை, திருக்கண்களில் கருணை, அதரங்களில் புன்சிரிப்பு, மொழியில் ஆழ்ந்த அர்த்தமுள்ள மதுர சொற்கள்
  • எண்ணமோ ஜீவாத்மாவை பரமாத்மாவுக்கு தொண்டு புரியவைக்கும்
  • ஸ்வாமித்துவமோ அடியார்களாகிய சொத்தை தானே ரட்சிக்கும்
  • கிருபையோ பிறவி சூழலை அறுத்து எம்பெருமானடி சேர்ப்பிக்கும்

இனி மாமுனிகளின் தினசரி அனுஷ்டானங்களை அனுபவிக்கலாம்

1. பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து எம்பெருமான் தொடக்கமாக ஆசார்யரான திருவாய்மொழி பிள்ளை வரை உள்ள குரு பரம்பரையை தியானிக்கிறார்.

2. பின் ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை தியானிக்கிறார்.

திருமந்திரம் – ஜீவாத்மா(சேஷன்) & பரமாத்மா(சேஷி) ஸ்வரூபம்.
த்வயம் – ஸ்ரீ யுடன் கூடிய எம்பெருமானே உபாயம்.
சரம ஸ்லோகம் – சரணாகதிக்கான ஞானம்.

3. பின்பு எம்பெருமானின் ஐந்து நிலைகளை (பர, வ்யுஹ, விபவ, அந்தர்யாமி & அர்ச்சை) தியானிக்கிறார்.

4. அடுத்ததாக எம்பெருமானாரை மனதில் தியானித்து கொண்டு சூரியோதயத்துக்கு முன் (நான்கு நாழிகைகள்) திருக்காவிரியில் ஸ்நானம் செய்து, தூய வஸ்திரம் தரித்து, ஊர்த்வபுண்ட்ரம் அணிந்து, சந்தியாவந்தனம் செய்கிறார்.

5. பிறகு தனது மடத்திற்குள் (பல்லவராயன் மடம்) எழுந்தருளியிருக்கும் திருவாராதன பெருமாளை(அரங்கநகரப்பன்) வணங்கி தண்டம் சமர்ப்பித்து காலை திருவாராதனம் செய்கிறார்.

6. பின் மடத்தில் திருவாராதன பெருமாளின் சந்நிதிக்கு வெளியே உள்ள தூணின் அடியில் கிழக்கு முகமாய் அமர்ந்து த்வயத்தை ஜபிக்கிறார்.

7. பிறகு சிஷ்யர்கள் பெரிய திருவாராதனத்திற்கு தேவையான வஸ்துக்களை சேகரித்து கொண்டு வருவதை அங்கீகரிக்கிறார்.

8. அடுத்த கிரமமாக தன்னையே உபாயமாக பற்றிய சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கிறார்.

9. பின் மடத்தில் இருந்து சிஷ்யர்கள் புடைசூழ பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் சேவிப்பதற்காக நான்முகன் கோட்டை வாயில்(ரங்கா ரங்கா கோபுரம்) வழியாக எழுந்தருள்கிறார்.

10. பின்பு உள் ஆண்டாள், உடையவர், நம்மாழ்வார், பிரணவ விமானம், சேனை முதலி, உள் கருடன் ஆகியோருக்கு தண்டம் சமர்ப்பித்து திருமண தூண்களை அடைந்து பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் சேவிக்கிறார்.

11. பின் தாயாருக்கும் அடுத்ததாக பரமபதநாதனையும் மங்களாசாஸனம் சேவித்து மடத்துக்கு திரும்புகிறார்.

12. மாமுனிகள் மடத்திற்கு எழுந்தருளியதும் பின்புறம் உள்ள திருவாய்மொழி பிள்ளை கூடத்தில் சிஷ்யர்களுக்கு காலஷேபம் சாதிக்கிறார்.

13. அன்றைய காலஷேபம் முடிந்ததும் மாமுனிகளிடம் சிஷ்யர்கள் பிரார்த்திக்க, எம்பெருமானார் & தன்னுடைய ஆசார்யர் திருவாய்மொழி பிள்ளையின் திருவடிகளாக தன்னை எண்ணிக்கொண்டு ஸ்ரீபாத தீர்த்தம் தந்தருள்கிறார்.

14. பின்பு மாமுனிகள் மாத்யானிக அனுஷ்டானம் முடித்து, மடத்தின் எம்பெருமானான அரங்கநகரப்பனுக்கு பெரிய திருவாராதனம் செய்து பின் பிரசாதத்தை சிஷ்யர்களுக்கு ததீயாராதனம் சாதித்து தானும் ஸ்வீகரிக்கிறார்.

15. பின் மாமுனிகள் ஹ்ருதய கமலத்தில் அந்தர்யாமியாய் சேவை சாதிக்கும் எம்பெருமானை நோக்கி பத்மாசனத்தில் தியானிக்கிறார், தொடர்ந்து எம்பெருமானாரையும் தியானிக்கிறார்.

16. அடுத்ததாக மாமுனிகள் சாயம் சந்தியா காலம் வரை யதிராஜ விம்சதி திவ்ய கிரந்தத்தை  அனுசந்திக்கிறார்.

17. பின் சாயம் சந்தியாவந்தனம் முடித்து அரங்கநகரப்பனுக்கு திருவாராதனம் செய்கிறார்.

18. பின் மாமுனிகள் மடத்தில் உள்ள சிஷ்யர்களுடன் தன்னிச்சையாக அரங்க நிர்வாகத்தை பற்றியும், கிரந்தங்களை பற்றியும் மற்றும் சிஷ்யர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் உரைத்து கலந்துரையாடுகிறார்.

19. பின் சிஷ்யர்களால் ஆசார்ய பக்திக்கு பாத்திரமாய் அளிக்கப்பட்ட தர்ப்பம், மான் தோல், பட்டு வஸ்திரம் போடப்பட்ட தங்க ஆசனத்தில் அமர்ந்து பெருமானுக்கு உடுத்தி கலைந்த மாலைகள் சாற்றி கொண்டு எம்பெருமானை தியானிக்கிறார்.

20. பின்பு சிஷ்யர்களுக்கு விடைகொடுத்து திருக்கண் வளர்கிறார்(துயில்).

கோஷ்டி மற்றும் ததீயாராதனையில் ஸ்ரீ வரவரமுனி தினசர்யை சேவிப்பது அநேக திருமாளிகைகளில்/ மடங்களில் வழக்கம். பிரசாதத்திலோ அல்லது மனத்திலோ தெரிந்தோ தெரியாமலோ தோஷம் இருந்தால், மாமுனிகளை அனுபவித்தாலே நிவர்த்தியாகும் என்பது ஆசார்ய நியமனம்.

மாமுனிகளின் அடியார்களான நாமும் இவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எரும்பியப்பா ஸ்ரீ வரவரமுனி தினசர்யை எனும் இந்நூலை ஏடு படுத்தியிருக்கிறார்.

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ,

சடகோபன் தண் தமிழ் நூல் வாழ,

கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,

மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ எரும்பியப்பா திருவடிகளே சரணம்! ஸ்ரீ வரவரமுனி திருவடிகளே சரணம்! ஸ்ரீ எம்பெருமானார்  திருவடிகளே சரணம்!

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருக்குறளும் ஸநாதன தர்மமும்

December 20, 2023

கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • முதல் குறள் உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என கடவுள் இயல்பையும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பையும் கூறுகிறது.
  • 2 ஆம்குறள் என்ன கற்றிருந்தாலும் இறைவனை நினையாமல் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவது.
  • 3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.
  • 4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.
  • 5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.
  • 6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.
  • 7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.
  • 8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.
  • 9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.
  • 10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு–
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)

பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
(இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்து’ எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் – தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

(அஷராணாம்‌ – அகாரோ -அஸ்மி – பகவத்‌ கீதை – 10 வது அத்தியாயம்‌ 88 வது சுலோகம்‌)”

கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் கூறப்படுகிறது. நூலின் முதற்பாடல் என்பதால் பலராலும் இது மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.

தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேர் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் அவன் பெயரைச் சொன்னாலே எளிதில் விளங்கும்படி ஆதிபகவன் என்ற சொல்லால் கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக ‘கடவுள் தனக்குவமை இல்லாதவன்’ என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைப் பின்னர் (குறள் 7) சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்?
‘அ’ என்பது ‘இ’, ‘உ’ போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? ‘இ’யைவிட ‘அ’ முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் எழுப்பும் வினாக்களில் சில.
அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமையும் புலனாகிறது. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமை என்று சொல்ல முடியாது. எனினும் அளவையால் அளக்கப்படும் பொருள் அளக்கப்பட்ட அளவு அறியப்படும். இறைவனே மூல முதல்; அவனே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பன மொழியியல் துணைகொண்டு அளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எல்லையில்லாச் செம்பொருளாக இறைவன் ஒருவன் உளன் என்பதும் நிறுவப்பட்டது.

———–

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.-
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)

பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் – எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் – மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. ‘கொல்’ என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் ‘நற்றாள்’ என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

தூய்மையான அறிவினனான கடவுளின் நல்ல அடிகளை வணங்காராயின் என்ன கற்றிருந்தாலும் பயன் ஒன்றுமில்லை.
தமிழில் வாலறிவு என்று இங்கு குறிக்கப்பட்டது பிராகிருதச் சொல்லான “கேவல ஞானம்” என்பதன் தமிழாக்கம் எனவும். இச்சொல் “கடையிலா அறிவு”, “வரம்பற்றஅறிவு”, “முழுதுணர்”, “வினையின் நீங்கி விளங்கிய அறிவு”, “அலகிலா அறிவு”, “முற்றறிவு”, ‘குற்றமற்ற அறிவு’ எனப் பொருள்படும் எனவும் கூறுவர். அளப்பற்கரிய தூய அறிவினை உடையவன் வாலறிவன் ஆவன். அது கடவுளைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. வாலறிவன் என்று சொல்லப்பட்டதால் கடவுள் அறிவு வடிவினன் ஆகின்றான்.

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று ஆதிபகவானின் அடையாளம் சொன்னவாறு

தாள்கள் என்றால் மனித வடிவம் தோன்றிடலாம் என்பதால் தாள் என்று ஒருமையில் கூறினார். தோற்றமும் தரவேண்டும். அதே நேரத்தில் இயற்கைப் பொருளாகவும் இருந்துவிடக் கூடாது. எனவே இறை என்பது ஒற்றைத் தாள் உருவாக, அடி/தாள் என இங்கும் அதிகாரத்து மற்ற இடங்களிலும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். தாள் என்பதற்கு ‘நல்’ என்ற அடை கொடுத்து நல்தாள் எனச் சொல்லி இந்நற்றாளைத் தொழச் சொல்கிறார்.

தொழாஅர் எனின்’ என அளபெடுத்துச் சொல்லப்பட்டதால் தொழுதே ஆகவேண்டும் என்றாகிறது. அறிவுவடிவான இறைவனை எப்படித் தொழுவது? எங்கும் நிறைந்த கடவுளுக்கு நற்றாள் என்று தோற்றம் கூறப்பட்டதால், தாள் தொழல் என்பது இறைவனின் திருவடியை மனத்துக்குள் உறுதியாக வரித்துக் கொண்டு அவனது அருளை வேண்டுவது எனக் கொள்வர்.

அனைத்துக் கல்வியும் அறிவும், தூய குணமாகிய கடவுளை அறிதல் அல்லது தேடுதல் என்பதை நோக்கித்தான் செல்கிறது என்பதையும் அவன் அறிய வேண்டும். கல்வியின் நோக்கம் கடவுள் அறிதல் தவிர கடவுளின் நற்றாள் தொழுதலுமாகும் என்பதுவே வள்ளுவம்

——–

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)

பரிமேலழகர் உரை: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் – மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் – எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்  கண் அழிவின்றி வாழ்வார்.
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்” (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் ‘பூமேல் நடந்தான்’ என்பதோர் பெயர் பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
சேர்தல் – இடைவிடாது நினைத்தல்)

மலர்மிசை ஏகினான் என்ற தொடர்க்கு ‘மலர் மேல் நடந்தவன்’ ‘அண்டவெளியில் பரந்துள்ளான்’. ‘உள்ளக் கமலத்தின்கண் தோன்றுபவன்’. என்று மூன்று வகையான விளக்கங்கள் காணக் கிடக்கின்றன

இது சமண (ஜைன) சமயக் கடவுளான அருகனைக் குறித்தது என்பது பலரின் கருத்து. அருகப் பெருமான் எழுந்தருளும்போது தாமரைப் பூக்கள் தோன்றி அவருடைய திருப்பாதங்களைத் தாங்குகின்றன என்ற சமணர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது இது

இக்குறள் குறிப்பிடுவதும் அருகக் கடவுளே என்பதற்கு இவ்வரிகள் சான்றாயின என்றும் கூறுவர்.
மலர்மிசை ஏகினான் என்ற தொடர் புத்தரைக் குறிக்கிறது என்றும் சிலர் உரைத்தனர். இங்கு ‘மலர்’ என்பது தாமரைப் பூ.என்றும் புத்தர் பிறந்தவுடனேயே ஏழடி நடந்தார் என்றும் ஒவ்வொரு அடியை வைக்கும்போது தாமரைப்பூ தோன்றி அவருடைய பாதங்களைத் தாங்கிக் கொண்டன என்றும் புத்த சமயநூல்கள் கூறுகின்றன என்றும் மேலும் அவர்கள் விளக்கினர்.

ஆனால் சமணரின் ஆதிநாதர் அல்லது புத்தர் மலரிலே நடந்தவர் என்று பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் ‘நிலமிசை நீடுவாழ்தல்’ என்பது சமண-புத்தக் கொள்கைகளுக்குப் பொருந்தி வராது. அருகனும் புத்தனும் மனிதப் பிறவிகளே. மலர்மிசை ஏகினான் என்பது கடவுள் குறித்தது. அதற்கு மனிதரைச் சார்ந்து பொருள் கொள்ளமுடியவில்லை.
வள்ளுவர் எந்த இடத்திலும் சமயம் சார்ந்து குறள் படைக்கவில்லை. எனவே இக்குறள் அருகனையும் புத்தனையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.

‘மலர்தல்’ என்ற வினைச்சொல்லுக்கு ‘விரிதல், பரவுதல்’ என்று பொருள்; ‘மிசை’ என்னும் சொல்லுக்கு ‘மேலிடம்’ என்று பொருள்; வினைத்தொகை ஆகிய ‘மலர்மிசை’ என்பது ‘மலர்ந்த மிசை’ என்று விரிந்து ‘பரந்த மேலிடம்’ என்ற பொருள் தரும்; இது அண்டவெளியினைக் குறிக்கும்; ‘மலர்தலை’ என்பது பரந்த இடத்தையும், ‘மலர்தலை உலகம்’ என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல ‘மலர்மிசை’ என்ற தொடர் அண்டவெளியினைக் குறிப்பதாக இவர்கள் விளக்கம் தருவர்.

நெஞ்சமாகிய மலரில் இருப்பவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

சேர்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘இடைவிடாது நினைத்தல்’ என்று உரை தருகிறார். இடைவிடாமல் நினைத்தல் என்றதை மறவாதே எண்ணுதல் என்று கொள்வது சிறக்கும்.

மலர் அழகானது; சிறப்பானது; மென்மையானது; மணத்தையும், மகிழ்வையும் தருவது; தூய்மையானது. அழகிலும் தூய்மையிலும் ஒளியிலும் உள்ள இறைவன் மலர்மேல் இயங்குகிறான். எண்ணுவதற்கு எவ்வளவு இனிய காட்சி இது!
இறைவனைத் தேடி எங்கும் போகவேண்டாம். அவன் ஒவ்வொருவரது உள்ள மனமலரிலேயே வீற்றிருக்கிறான் அவனை மறவாமல் நினைந்திருப்பவர் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வர்.
நீண்ட நாட்கள் வாழ்தல் சிறப்புடையது என்பதும் இப்பாடலின் வழி பெறப்படுகிறது.

———————

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல–
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:4)

பரிமேலழகர் உரை: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல – எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
(பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

கெட்டவன் அடையும் ஆக்கமும் நல்லவன் உறும் கேடும் ஏன் என்று தமக்கு விளங்கவில்லை என்பதற்காக கடவுள் நடுநிலையில் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடவேண்டாம் என இங்கு அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்தான் என்பதை இக்குறள்வழி அழுந்தச் சொல்கிறார் வள்ளுவர்.

விருப்பும் வெறுப்புமற்ற இறைவனது அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் துன்பம் இல்லை என்பது இக்குறட்கருத்து.

————-

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு-
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:5)

பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
(இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்)

இக்குறளின் முதற்பகுதி ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்பது. இதிலுள்ள இருள் என்ற சொல்லுக்கு மும்மலம், அஞ்ஞானம், பிறவிமயக்கம், யான் என்னும் இருள், தன்னல மயக்கம் என்றபடி பொருள் கூறினர். சிலர் அதற்கு மயக்கம் எனப் பொருள் உரைத்து ‘ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது’ அதாவது இருள் நிறைந்த இடத்தில் கயிற்றினைப் பாம்பு எனப் புரிந்துகொள்வது போல என விளக்கம் செய்தனர். இருள் என்பதை விளக்கும் உரைப்பொருளாக அறியாமை என்பதையும் கூறினர். அறியாமையாவது, தெரியாத தன்மை ஆகும்.
‘இருள்சேர்’ என்பதற்கு மயக்கம் கலந்த அல்லது அறியாமை பொருந்திய என்பது பொருளாகும்.
‘இருவினை’ என்றதற்கு இன்ப துன்பங்களை உண்டாக்கும் நல்வினையும் தீவினையும், இருவகை வினையும், அறிவில்லாத வினைகள், நல்வினை தீவினையென்னும் இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள், சென்ற பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் செய்த வினைகள், நலம் தீங்குகள், பெரிய துன்பங்கள், நன்மை தீமைகள். நல்லது கெட்டது, காதிவினையும் அகாதிவினை, இருவின பற்றிய பாவம், கூற்றும் செயலும், நல்வினை தீவினைகளின் பயனாகிய பிறப்பிறப்புக்கள், தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகள், நன்மை தீமை பற்றிய தவறான கருத்துக்கள், தவறான எண்ணங்களினால் அல்லது பிறழ உணர்தலால் நற்செயல்களையும் தீச்செயல்களையும் கலந்து செய்தல் எனப்பலவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.
‘இருவினை’ என்ற தொடர் நல்வினை, தீவினை இவற்றைச் சுட்டுவது. நல்வினை என்பது நற்செயல் என்றும் தீவினை என்பது தீச்செயல் என்றும் பொருள்படும். நமது அனைத்துச் செயல்களுக்கும் பயன் உண்டு; நல்வினையானால் புண்ணியம் கிடைக்கும்; தீவினையானால் பாவம் உண்டாகும் என்னும் கோட்பாடு எல்லாராலும் விரும்பப்படுவது; அவ்விதமே உலக இயக்கம் உள்ளது என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்கிறோம். இவ்விருவினைகளால் உண்டாகும் பயன்களையே ‘இருவினை’ என்ற தொடர் குறிக்கிறது.
‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்ற பகுதிக்கு மயக்கம் கலந்த இருவினைப் பயன்களும் சென்றடையா என்பது பொருள்.

பாடலின் பிற்பகுதி ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்பது. ‘இறைவன் பொருள்’ என்ற தொடர் செம்பொருள் குறித்தது. செம்பொருள் என்பது மெய்ப்பொருள் அல்லது இறைத்தன்மை எனவும் அறியப்படுவது. இறைவன் பொருள்சேர் புகழ் என்றது இறைவனது பெருமைகள் அல்லது இறைமைக் குணங்கள் குறித்தது. ‘புரிந்தார்’ என்ற சொல்லுக்கு தங்கினார், விரும்பினார், வணங்குகிறவர், ஓதுவார் (இடைவிடாது சொல்லுவார்), போற்றுவார் என்று பலவாறாகச் சொல்லப்பட்ட பொருள்களுள் ‘போற்றுவார்’ என்பது பொருத்தம். ‘இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்ற பகுதிக்குக் ‘கடவுளது உண்மையான பெருமைகளை உணர்ந்து போற்றுவார்க்கு’ என்பது பொருள்.

இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து போற்றுவாரிடத்து அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.

—————————

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்–
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

பரிமேலழகர் உரை: பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் – பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. ‘கபிலரது பாட்டு’ என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர், நெடுங்காலம் இவ்வுலகின்கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பரிபாடல்–சிலப்பதிகாரம்-பெருந்தேவனார் பாரதம்- -திருமால் பாடல்கள்

December 20, 2023

கிளரொளியிளமை’ என்ற திருவாய்மொழியின் பொருளைத் தன்னகத்துக் கொண்டிருக்கின்ற பரிபாடலில் உள்ள பாடல் ஒன்றையும் அதன் உரையையும், அழகர் திருமலையின் சிறப்பைக் கூறுகின்ற சிலப்பதிகாரத்தில் உள்ள பகுதியையும் அதன் உரையையும்  இங்கு, அவ்விரண்டும் ஒருதலையாகப் படித்து உணர்ந்துகோடற்குரியவை.

பரிபாடல்–பதினைந்தாம் பாடல்-திருமால்

புலவரை யறியாப் புகழொடு பொலிந்து
நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத்
தொலையா நேமிமுத றொல்லிசை யமையும்
புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம்


5.  பலவெனின் ஆங்கவை பலவே; பலவினும்
நிலவரை யாற்றி நிறைபய னொருங்குடன்
நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே;
சிலவினுஞ் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலரகன் மார்பின் மைபடி குடிமிய


10. குலவரை சிலவே; குலவரை சிலவினும்

1-5. அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நில வெல்லையைத் தாங்கிய நிலைமை நீங்காத கெடாத சக்கரவாளமுதலாகத் தொல்லிசைப் புலவர் ஆராய்ந்துரைத்த கொண்டாடப்படும் நெடிய குன்றங்களைச் சிறப்பு வகையாற்கூறாது பொது வகையாற் பல வென்றுரைக்கின். ஆங்கு; அசை.


5-10. அப்பலவற்றுள்ளும் நிலத்துள்ளோரைப் பசி வெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்று சில; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற தடங்களுடனே மேகங்கள் படியும் சிகரத்தையுடையவாகிய குலவரைகள் சில சிறந்தன.

சிறந்தது, கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவே றுருவி னொருதொழி லிருவர்த்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்;

     15.   நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை
ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம்?
         அரிதிற்பெறு துறக்க மாலிருங் குன்றம்
          எளிதிற்பெற லுரிமை யேத்துகஞ் சிலம்ப!
                 அராவணர் கயந்தலைத் தம்முன் மார்பின்


20.   மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கு மருவி யார்த்திமிழ் பிழியச்
சிலம்பா றணிந்த சீர்கெழு திருவிற்
சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்
தாம்வீழ் காமம் வித்துபு விளைக்கும்


25.
   நாமத் தன்மை நன்கனம் படியெழ

10-14. அக்குலவரைகள் சிலவற்றிலும் கல்லென அறையும் கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் தம் முன்னோனையுந் தாங்கும் நீண்ட நிலைமையினையுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம் சிறந்தது. ‘புகழான்’ என்பது வருவிக்கப்பட்டது.


15. நல்கினல்லது – வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது.


17-8. அவ்வரிதிற்பெறு துறக்கத்தை எளிதிற்பெறுதலுரிமை யான் மாலிருங்குன்றத்தை எல்லோருங் கேட்க ஏத்தக் கடவோம்,’ என்று ஏத்துகின்றார்.


19. அரவின் மெல்லிய தலையாற்கவிக்கப்பட்ட தம்முன்.


20. மராம் – வெண்கடம்பு.


21-2.  அசையும் அருவி மிக ஆர்த்து இழிதலாற் சிலம்பாறு அழகு செய்த இவ்வியக்கத்தக்க இருங்குன்றத்து (26)


22-6. ‘அழகு பொருந்திய  ‘திரு’ என்னுஞ் சொல்லொடும் சோலை யென்னும் சொல்லொடும் மாலிருங்குன்றம் என்னுஞ் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலைமலையென்னும் நாமத்தினது பெருந்தன்மை நன்றாகப் பூமியின்கட்பரக்க, மகளிரும் மைந்தரும் தாம் வீழ்காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பையுடைய இவ்வையிருங் குன்றத்து’ எனக் கூட்டுக.

யாமத் தன்மையிவ் வையிருங் குன்றத்து
மன்புன லிளவெயில் வளாவவிருள் வளர்வெனப்
பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே
நினைமின் மாந்தீர்! கேண்மின் கமழ்சீர்


30.   சுனையெலா நீல மலரச் சுனைசூழ்
சினையெலாஞ் செயலை மலரக் காய்கனி
உறழ நனைவேங்கை யொள்ளிணர் மலர

மாயோ னொத்தவின் னிலைத்தே
சென்றுதொழு கல்லீர்! கண்டுபணி மின்னே


35.  இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது
கண்டுமய ரறுக்குங் காமக் கடவுள்

மகமுயங்கு மந்தி வரைவரை பாய
முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட   

26. குறிஞ்சிக்குச் சிறுபொழுதாகலான் யாமங் கூறினார்.


27-8. நிலை பெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலையொக்கப் பீதாம்பரத்தையுடையோன் தம்முன்னொடு கூடி அமர்ந்து நிற்கும் நிலையை.


29. மாந்தீர்! நினைமின்; இனி, அம்மலையது சிறப்பைக் கேண்மின்.


30-33. சுனையெல்லாம் நீலமலர அச்சுனை சூழ்ந்த செயலை சினையிடமெல்லாம் மலர்தலானும் காய்கனிகளொடு நிறம் மாறுபட வேங்கை இணர் மலர்தலானும் மாயோனையொத்த இனிய நிலைமையையுடைத்து.
நீலமலரைச் சூழ்ந்த செயலை மலர் அவன் பொன்புனை உடுக்கைக்கு ஒப்பு; குன்றத்துக் காய்கனியுறழ மலர்ந்த வேங்கை அவன் மணி முடிக்கு ஒப்பு.


34-7. பெருங்கலி ஞாலத்து இருங்குன்றென்னும் பெயர் பரந்த அத்துணையே பழைதாய் இயல்கின்ற புகழையுடைய அது காணமயரை அறுப்பதொரு வழிபடு தெய்வம்; அதனால், சென்று அவனைத் தொழமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின்.


38. மகவால் முயங்கப்பட்ட மந்தி ஒரு சிகரத்தினின்று ஒரு சிகரத்திற்பாய


39. முகிழ் நெருங்கின முல்லை, மகளிர் கற்பு நிகழ்ச்சியைக்காட்ட

40.   மணிமருணன் னீர்ச்சினை மடமயி லகவக்
          குருகிலை யுதிரக் குயிலினங் கூவப்
பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர்
நாநவில் பாடன் முழவெதிர்ந் தன்ன
சிலம்பிற் சிலம்பிசை யோவா தொன்னார்க்


     45.   கடந்தட்டான் கேழிருங் குன்று
தைய லவரொடுந் தந்தா ரவரொடும்
கைம்மக வோடுங் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்;
புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்


     50.   வவ்வற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயி னுலகத்துந் தோன்றி யவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ யிருங்குன் றத்தான்

 40-45. சினையிடத்தவாகிய மணிமருள் மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கணிருந்து குயிலினம் கூவவும், முழைக்கட் சிலம்புகின்ற எதிரொலி ஓவாது, அவுணரை நேரே பொருது கொன்றானது நிறத்தையுடைய குன்றத்தின்கண்.


42-3. சுருதியையுணர்த்துகின்ற குழலும் தாளமும் இயம்ப அவற்றைப் பாடுவாரது மிடற்றுப்பாடலும் முழவோசையும் எதிர்ந்தாற்போன்ற


இசையென்ற வழி, குழலொலியும் மிடற்றுப்பாடலும் குயிலினத்தது கூவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை. தாள ஒலியும் முழவொலியும் மயிலது அகவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை.


மந்தி பாய (38) முல்லை காட்ட (39) என நின்ற செயவெனெச்சங்கள், இசையோவாதென்னும் (44) பிற வினை கொண்டன.


46-8. அதனை நும் மனைவியரொடும் இருமுதுகுரவரொடும் குழவிகளோடும் சுற்றத்தோடுங்கூடத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.


49-53. தன் நாபிகமலத்தையொக்கும் கண்ணையுடையனாய், நீரை வௌவுதலையுடைய மேகமும் இருளும் நீலமணியும் போலுமேனியனாய், எல்லா உலகினும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்ப்பன்மையது மறுக்கத்தைச் செய்யும் பிறவித்துன்பத்தைக் களைவோன் அன்பு பட்டு இருங்குன்றத்தின்கண்ணான் ஆதலால்
புவ்வமென்பது (49) பாகதச் சிதைவு.

கள்ளணி பசுந்துளவினவை கருங்குன் றனையவை


55.   ஒள்ளொளியவை யொருகுழையவை
புள்ளணி பொலங்கொடியவை
வள்ளணி வளைநாஞ்சிலவை
சலம்புரி தண்டேந்தினவை
வலம்புரி வயநேமியவை


60.   வரிசிலை வயவம்பினவை
புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை
எனவாங்கு,
நலம்புரீஇ யஞ்சீர் நாம வாய்மொழி
இதுவென வுரைத்தலினெ முள்ளமர்ந் திசைத்திறை


65.   இருங்குன்றத் தடியுறை யியைகெனப்
பெரும்பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே.


கடவுள் வாழ்த்து


இளம்பெருவழுதியார் பாட்டு.
மருத்துவன் நல்லச்சுதனார் இசை.
பண் நோதிறம்.

இவ்வளவும் குன்றத்தையேத்திக் கண்டார்க்கும் அதன் சிறப்புக் கூறி மேல் அதன்கண் நின்ற இருவரையும் வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றார்:


57. கூர்மையணிந்த வளைநாஞ்சிலையுடையை.


58. கோபமிக்க தண்டினையேந்தினை.


59. வலம்புரியொடு வெற்றி நேமியையுடையை.


60. வரிசிலையோடு வெற்றி அம்பினையுடையை.


61. புகரொழுங்கு சூழ்ந்த பாராவளையினையுடையை.
இவ்வாழ்த்துக்களுள், ஒள்ளொளியவை, ஒரு குழையவை, (55) வள்ளணி வளைநாஞ்சிலவை, (57) சலம்புரி தண்டேந்தினவை, (58) என வந்தன
பலதேவன்; ஏனைய வாசுதேவன்.


63-6. அழகிய சீரையும் அஞ்சப்படுதலையுமுடைய வேதம் தனக்கு
நன்மையை விரும்பி அவர் பெருமை ஈதென்று சொல்லுதலால், யாமும் உள்ளம்
மேவி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப்
பெரும்புகழையுடைய இருவரையும் தொழுது வேண்டுதும், ‘எமக்கு
இவ்விருங்குன்றத்து அடியின்கண் உறைதல் எய்துக என்று,’ என்றவாறு.

——————————————————

சிலப்பதிகாரம்


மதுரைக்காண்டம்


11. காடு காண் காதை


         
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியொ


95.   டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;


100.  பவகா ரணிபடிந் தாடுவி ராயின்,
பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்;

திருமால் குன்றத்துச் செல்லக்கடவீராயின், அவ்விடத்தே மிக்க
மயக்கத்தைக் கெடுக்கும் பிலத்து நெறியுண்டு’ என்றான் என்க.
திருமால் குன்றம் – அழகர் திருமலை.


92. ஆங்கு – அப்பிலத்துக்குள்ளே.


93-7. விண்ணோரேத்தும்
  மூன்றுள.


‘தேவர்களாலேத்தப்படுதலின், யாவரும் வியக்கத்தகும் மரபினையுடைய
‘புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி’ என்னும் பெயர் எங்கும்
பரக்கப்பட்டு இடையறாத சிறப்பினையுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற
மூன்று பொய்கைகள் உள’ என்றான் என்க.

      97. ஆங்கு – அவற்றுள்.


98-9. புண்ணிய சரவணம்
  எய்துவிர்.
‘புண்ணிய சரவணமென்னாநின்ற பொய்கையில் ஆடுவிராயின்,
இந்திரனாற்செய்யப்பட்ட ஐந்திரவியாகரணமென்னும் இலக்கணத்தை உணர்வீர்,’
என்றானென்க.
இது நினைவின்றிப் பெறும் பேறு.
பொருந்துதல் – ஆடுதல். எய்துதல் – உணர்தல்.


100-101. பவகாரணி . . . . . . . . . . . எய்துவிர்.
‘அதுவன்றிப் பவகாரணியென்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின்,
இப்பிறப்பிற்குக் காரணமாகிய பழம்பிறப்பையுணர்வீர்’ என்றானென்க.

இட்ட சித்தி யெய்துவி ராயின்,
இட்ட சித்தி யெய்துவிர் நீரே;
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்,


105.  ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது
சிந்தையி லவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்


110.  கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்
தொடிவளைத் தொளி யொருத்தி தோன்றி

முன்னும் பின்னுமாகிய இரு பிறப்பையும் உய்த்துணர்தற்குக் காரணமாகிய
இப்பிறப்பிலே எப்பிறப்பையும் எய்த வுணர்வீர்’ என்றானெனினுமமையும், இனிப்
பவமென்பதனை விகாரமாக்கிப் ‘பாவத்தான் வரும் பிறப்புகளை’ எனலுமாம்.


102-3. இட்டசித்தி 
 நீரே.
‘அதுவன்றி இட்டசித்தியென்னும் பொய்கையில் ஆடுவீராயின், நீர் நினைத்தவெல்லாம் எய்துதலையுடையீர்,’ என்றானென்க.

     இனி, ‘எண்வகைச் சித்திகளையும் தவம் செய்து வருந்திப் பெறாமல்
நினைத்துழிப் பெறுவீர்,’  என்றான் எனினும் அமையும்.


104. ஆங்குப் பிலம்புக வேண்டுதிராயின் – ‘அங்ஙனமாகிய அப்பிலத்துக்கட்புகுதலை விரும்புவீராயின்’ என்றானென்க. 

     105-7. ஓங்குயர் மலையத்து மலை வலஞ்செய்தால்
‘மிகவுமுயர்ந்த அத்திருமலைக்கணுள்ள பெரியோன் சேவடிகளைக்
கையாற்றொழுது மனத்தானினைந்து வாக்காற்றுதித்தலுடனே அம்மலையை
மும்முறை வலஞ்செய்தால்’ என்க.
அத்து – சாரியை, வைத்தல் – நினைத்தல், தியானம். வந்தனை -ஈண்டுத்
துதித்தல். ‘தொழுது வைத்து வந்தனைநோடு வலஞ்செய்தால்’ என்க.


108-11. நிலம்பக வீழ்ந்த 
 ஒருத்தி தோன்றி
‘பாதாள கங்கைக்கு மேலுள்ள நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த
*சிலம்பாறென்னும் ( சிலம்பாற்றினை ‘நூபுரங்கை’ என்பர்.)அகற்சியையுடைய ஆற்றினது கரைக்

இம்மைக் கின்பமு மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையி னிற்பதுஞ் செப்புமி னீயிரிவ்

      115.  வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
            உரைத்தார்க் குரியே னுரைத்தீ ராயின்
          திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்

கண்ணதாகிய விளக்கத்தையுடைய முகைகள் அவிழ்ந்த மலரையுடையதோர்
கோங்கின் நிழற்கண்ணே ஒரு பொற்கொடி போலவும் மின் போலவும் புயல்
போலவும் ஐவகைக் கூந்தலையும் வளைந்த தொடி புனைந்த
தோளினையுமுடையாளொருத்தி தோன்றி’ என்க.

     சிலம்பாறு – அவ்வியாற்றின் பெயர், தலை – இடம், இன் – உவமவுருபு,
கன்னிகாரம் – கொங்கு, தொடி – வளைவு, ஒருத்தி -ஓர் இயக்கி.


112-7. இம்மைக் கின்பமும்
 . கதவெனும்.

     ‘அங்ஙனம் தோன்றினவள், ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறுபிறப்பிற்கு
இன்பமும் இவையிரண்டு மொழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க்
கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை
நீயிர் உரைமின்; யான் 1இத்தாள் வரைக் கண்ணே வாழ்வேன்;
வரோத்தமையென்று கூறப்படுவேன்; யான் வினாய இவற்றை உரைத்தார்
உளராயின், அவர்க்கு எத்தொழிற்குமுரியேன்; ஆதலின், திருத்தக்கீர்!
உரைத்தீராயின், உமக்கு இப்பொழுதே இப்பிலவாயிற்கதவம் திறந்து தருவேன்
என்று சொல்லும்’ என்றான் என்க.

     இம்மைக் கின்பம் – புகழ், மறுமைக் கின்பம் – புண்ணியம், செம்மையில்
நிற்பது – மோக்கம். இனி, ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு இன்பத்தைத் தந்து
பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்; 2‘ஒன்றாவுலகத
தொன்றில்’ (திருக். 233.)எனவும்,
3
‘இவணிசை யுடையோர்க் கல்லதவண, துயர்நிலை யுலகத் துறையு ளின்மை,
விளங்கக் கேட்ட மாறுகொல்’ (புறநா. 50.)எனவுங் கூறினாராகலின். ‘கதவந்
திறத்தற்குரியேன்’ எனவுமாம். திறந்தேன் – காலமயக்கம்; விரைபொருட்கண்
வந்தது.

கதவந்  திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன


     120.  வொட்டுப் புதவமொன் றுண்டத னும்பர்
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
‘இறுதியி லின்ப மெனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலுநீர் பேணிய பொருள்’ எனும்;
‘உரையீ ராயினு முறுகண் செய்யேன்


     125.  நெடுவழிப் புறத்து நீக்குவ னும்’எனும்;
உரைத்தா ருளரெனி னுரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்;

118-23. கதவந் திறந்தவள் பேணிய பொருளெனும்.

      ‘அவருரைப்பின், அவள் கதவைத் திறந்து இதுவென்று காட்டிய நல்ல
வழியில் நீண்ட இடைகழி வாயில்கள் பல உள; அவை கழிந்தால், இரட்டைக்
கதவையுடைய வாயிலொன்று உண்டு; அதற்கு மேலாகச் சென்றால்
வட்டிகையிலே எழுதின பாவை போல்வாளொருத்தி வெளிப்பட்டு, ‘ஈறில்லாத
இன்பம் யாது? அதனை உரைத்தீராயின் நீயிர் இம் முப்பொருளிலும் விரும்பிய
பொருளைப் பெறுவீர்’ என்னும் என்றாளென்க.

    புதவம் – வாயில், போகு – நெடுமை, ஒட்டுப்புதவம் – இரட்டைக் கதவம்,
உம்பர் – மேல், பூங்கொடி-உவமப்பெயர்; அன்றித் ‘துவார
வட்டிகையிற்பூங்கொடி அங்ஙனம் கேட்கும்’ எனவுமாம். இறுதியில் இன்பம் –
வீடு. பெறுதிர்- முன்னிலைப் பன்மை. போலி – ஒப்பில் போலி.


124-5. உரையீராயினும்  நீக்குவன நும்மெனும்.

    வினாயவள், ‘யான் வினாயதனை நும் பேதைமையான் உரையீராயினும் நும்மை
லருத்தஞ்செய்யேன்; நீர் போகக் கடவ நெடுநெறிக் கண்ணே நும்மைப்
போக்குவன்’ என்னும் என்றான் என்க.


126-7. உரைத்தாருளர் பெயரும்.

    ‘அவள் அங்ஙனங் கேட்ட பொருளை உரைத்தாருளராயின், முற்கூறப்பட்ட
பொய்கை மூன்றின் கரைக்கட்செலுத்தி அவை இவையென்று காட்டி மீளும்,’
என்றானென்க.

    ஆங்கு -அசை.

அருமுறை மருங்கி னைந்தினு மெட்டினும்
வருமுறை யெழுத்தின் மந்திர மிரண்டும்


    130.  ஒருமுறை யாக வுளங்கொண் டோதி
வேண்டிய தொன்றின் விரும்பினி ராடின்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தா ளுள்ளம் பொருந்துமின்;


135.  உள்ளம் பொருந்துவி ராயின், மற்றவன்
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்;

128-32. அருமறை மருங்கின் . . . . . . . . . . மற்றவை

    ‘ஓதவும் உணரவுமரிய மறையிடத்தனவாகிய ஐந்தானும் எட்டானும்
வருமுறைப்பட்ட எழுத்தினையுடைய மந்திரமிரண்டையும் ஒரு தன்மையாக
மனத்தானினைந்து வாக்காற்றுதித்து, அவற்றுள் வேண்டியது யாதொன்று,
அதனில் விரும்பினீராயாடின், அவற்றின் பயனாயவை, தவங்களைச்
செய்தோர்க்கும் காணத் தகும் மரபினையுடைய வல்ல’ என்றானென்க.

    இனி, ‘அங்ஙனமாகிய பொய்கைகளின் பயனை விரும்பினீராய்
ஒன்றினாடின், அதன் பயனை நுகர்ந்த நெஞ்சம் பிறிதொன்றனையும்
காதலியாது,’ எனலுமாம். இன்னும், ‘மற்றவை காண்டகு மரபினவல்ல’ என்பதற்கு,
‘இவையொழிந்த தீர்த்தங்கள் இவை போலக் கைமேற்காணத் தகும்
மரபினையுடையவல்ல,’ எனினும் அமையும்.

    138-8. மற்றைவை நினையாது துயர் கெடுக்கும்.

    ‘அங்ஙனமாகிய பொய்கைகளின் பயனை விரும்பீராயின், அவற்றை
நினையாதே அம்மலைமீது நின்றோனுடைய பொலிவு பொருந்திய தாமரை மலர்
போலும் தாள்களை நினைமின்கள்; அங்ஙனம் நினைப்பீராயின், அப்பொழுதே
அவனது கருடப்புள் எழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடத்தைக்
காண்பீர்; கண்டவளவிலே அவன் திருவடி நிலை நும்மை எடுத்துக்கொண்டு
பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்,’ என்றான் என்க.

    ‘நீயிர் ஆண்டுச் சென்று அது காண்பீர்’ என்பான், ‘தோன்றும்’
என்றான். கெடுக்கும் – முற்று.

 தோன்றிய பின்னவன் றுணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கு மின்ப மெய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்.

38-9. இன்பமெய்த ஏகுமின்.

    ‘அங்ஙனம் அது காண்டலிற் பின்னர்ப் பரமபதத்திற்குச் சேறலும் மெய்யென்று
இன்பமெய்தி, மாட்சிமை பொருந்திய மரபினையுடைய மதுரைக்குச்
சென்மின்கள்,’ என்றானென்க.


பெருந்தேவனார் பாரதம்


‘தேனோங்கு நீழல் திருவேங் கடம்என்றும்
வானோங்கு சோலை மலைஎன்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருஅத்தி யூர்என்றும்
             சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –