Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ அன்னமாச்சார்யாரும் ஸ்ரீ ஆழ்வார்களும்-

October 20, 2024

ஆளவந்தார் ‘சது:ச்லோகி’யில் முதலில் தாயாரின் வைபவம் கூறுகிறார். பெரிய
பிராட்டியார் சரணாகதி கத்யத்தில் முதலில் இடம் பெறுகிறார். ஸ்ரீ
ஸ்தவத்தில் கூரத்தாழ்வானும், குணரத்ந கோசத்தில் பட்டரும் பிராட்டியின்
புருஷகாரத்வத்தைப் புகழ்வர்.
அன்னமையா முதலில் பாடியது ’அலமேல் மங்காம்பிகா சதகம்’.

’நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின் தன்மை
’யில் ஒருபடிப்படாத எண்ணற்ற
உயிரினங்களினுள்ளும் சரண்யன் ஸர்வாந்தர்யாமியாக நிற்கும் நிலையைத்
திருமழிசைப் பிரான் தெரிவித்தார்.
அன்னமையாவின் புகழ்பெற்ற ‘ப்ரம்ஹம் ஒகடே’ பாடல் அரசன், பணியாள், யானை,
மரம் செடிகள் எல்லாவற்றிலும் உள்ளே உறையும் எம்பெருமானை ‘அந்தரிகி
ஸ்ரீஹரியே அந்தராத்மா’
என்று தெரிவிக்கிறது.

சுடர்மிகு சுருதியுள் சூரியர் தலைவன் விளங்குவதை ஸ்வாமி நம்மாழ்வார்
சுவைபடக் கூறுவார்.
‘பலிகேடி வேதமே ப்ரமாணமு தலிசினவாரிகி தத்வமு சுண்டோ’- என்னும் அன்னமையாவின் கீர்த்தனத்துக்கு ‘எம்பெருமானின் இருப்புக்கு வேதமே சான்று ; உண்மையை உணர்ந்து கொள்வோர் தத்வத்தில் நிலைப்பர்’ என்று பொருள் கொள்ளலாம்.

ஆலமாமரத்தின் மேலொரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட லீலையில் திருப்பாணாழ்வார்
மனம் நெகிழ்வார்.
தெப்பகா மர்ராகு மீத தேலாடு வாடு எப்புடு லோகமுலெல்ல ஏலேடி வாடு’ வடபத்ர சயனனின் வைபவம் கூறும்.

ஆழ்வார்கள் பன்னிரு திருநாமங்களைப் பாக்களில் அமைத்துப் பாடினர்.
அன்னமையாவின்’ நீ நாமமே நாகு நிதியு நிதானமு’ பாடல் பரமனின் இருபத்து
திருநாமங்களை உள்ளடக்கியது. காயத்ரியின் 24 அக்ஷரங்கள் இவை என்று
கூறுவோரும் உளர்.

’பொடமி நல்லனி பெத்த பூதமு’ அச்சுதனின் அவதாரங்களைக் கூறுகிறது.

பட்டின வாரிகி சே பிட்ட பரமாத்முடு’ – ‘பத்துடை அடியவர்க்கெளியவன்’
என்கிறார் அன்னமையா.

கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றி அருளினான்’ –
மதுரகவியாரின் நற்சிந்தனை
‘குருபக்தி கலிகின குணநிதிகி அரய பாப புண்யமு மரிலேது’ என்னும் பாடலில் புரிகிறது.

’மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு..….’ குலசேகரரின் தாலாட்டு;
ஜோ அச்சுதாநந்த ஜோ ஜோ முகுந்த ….’ பாடலைக் கேட்டுக் கொண்டே வேங்கடவன்
கண் வளர்கிறான்.

‘கொண்டலலோ நெலகொன்ன கோனேடி ராயடுவாடு’ கீர்த்தனை குருவ நம்பி, அநந்தாழ்வான், திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி ஆகிய பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறது.

தொண்டரடிப்பொடியாழ்வார் அரங்கனை மட்டுமே பாடியதுபோல் அன்னமையா வேங்கடவனை மட்டுமே பாடினார் என்பது மற்றுமோர் ஒற்றுமை.

(நன்றி: ‘கோல விளக்கு’ ஸ்ரீ வைஷ்ணவ மாத இதழ், ஜூன் ‘09)

ள்ளபாக்கா என்ற குடும்பப் பெயரைக் கொண்ட தள்ளபாக்கா அன்னமாச்சார்யர் தெலுங்கு இலக்கிய உலகில், இசையுலகில்  தனக்கெனத் தனியிடம் பெற்றவர். தமிழகத்தில்  ஆழ்வார்கள், கர்நாடகத்தில் தாசர்கள் போலவே தெலுங்கு இலக்கிய உலகில் போற்றப்படுபவர்.

நீண்டகாலம் குழந்தையின்றி வருந்திய பெற்றோர் நாராயணசூரி—அக்கலாம்பா தம்பதியருக்கு  இறைவனருளால் குழந்தை பிறக்கிறது. அன்னமையா எனப் பெயரிடுகின்றனர். இளவயது முதலே அவர் திருப்பதி வெங்கடாசலபதியிடம் அன்பு கொண்டவராக இருக்கிறார். எட்டு வயதில் அவருக்கு வெங்கடேசனின் தரிசனம் கனவில் கிடைக்க திருப்பதி போகிறார். நீண்ட தூரம் நடந்ததால் சோர்வு ஏற்பட வழியிலேயே தூங்கி விடுகிறார். கனவில் அலமேலுமங்கைத் தாயாரின் திவ்யதரிசனம் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் தாயாரின் புகழை நூறு பாடல்களில் அங்கேயே வெளிப்படுத்துகிறார். பின்பு திருப்பதி சென்று ஆண்டவனை வழிபடுகிறார். அந்த இடத்தின் பேரழகைக் கண்டு அங்கேயே தங்குகிறார். பதினாறு வயதுவரை அவர் வாழ்வு அங்கு கழிகிறது.

இறையருளால் மீண்டும் தள்ளபாக்கா வருகிறார். தாய் அக்கலாம்பா   அன்னமையாவை இல்லற வாழ்வில் ஈடுபடுத்த விரும்பி அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அக்கலம்மா, திம்மக்கா என்று இரு மனைவியர். திம்மக்கா மகாபாரதக் கதையை முன்வைத்து  “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை எழுதியவர். இவர் தெலுங்கு மொழியின் முதல் பெண்புலவராகக் கருதப்படுகிறார். வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். தொண்ணூற்றி ஐந்து வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

தென்னிந்தியாவிலுள்ள வைஷ்ணவ ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று இறைவனைத் தரிசித்து பல கீர்த்தனைகள் பாடுகிறார்.அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார். பாடல்களின்    கவித்துவத்தால் கவரப்பட்ட பெனுகொண்டாவை ஆண்ட சலுவ நரசிங்கராயர் அன்னமையாவைத் தன் அவைக்கு அழைத்து தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடும்படி வேண்டு கிறார். மனிதர்கள் புகழ்பாட [நரஸ்துதி]  தான் ஒரு நாளும் தயாரில்லை என்று அன்னமையா மறுத்துத் திருப்பதி வந்துவிடுகிறார். இளவயது முதலே திருப்பதி வெங்கடாசலபதியிடம் ஈடுபாடு கொண்ட அன்னமையாவுக்கு  இறையனுபவங்கள் அடிக்கடி கிடைக்கின்றன. அந்த அனுபவங்கள் அவர் இறைவசப்பட பெருங்காரணமாகிறது.

பக்தி வெளிப்பாடும், அதன் பிரிவும்  பலவகைகள்  உடையதாக இருந்தாலும் கடவுளிடம் தஞ்சமடைதல் மூலம்தான் அமைதி அடைய முடியும் என்பதும் அதுதான்  பிறவியிலிருந்து விடுதலை அடைய மனிதனுக்குத் துணை செய்யுமென்பதும்  அன்னமையாவின்  ஆழமான எண்ணமாகும். அதனால் சரணாகதி என்ற பின்னணியில்தான் அவருடைய பக்திக் கீர்த்தனைகள் அமைகின்றன. பொதுவாக மொழி இலக்கியங்களில் பாடல்கள் பதம் [பாடமென்றும் சொல்லப்படும்] என்றழைக்கப்படும். அது பத்ய கவிதையும், பத கவிதையுமாகும் என்று இரண்டு வகைப்படுகிறது. பத்ய கவிதை இலக்கண முறைப்படி அமைவதாகும். பத கவிதை என்பது  இலக்கணக் கட்டுப்பாடில்லாமல் ஆனால்  ஒரு வடிவ அமைப்பிற்குள் அ்மைகிறது. அவர் பின்பற்றியது பதகவிதை வடிவமாகும். பொதுவாகக் கீர்த்தனம், கிருதி, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் குறிப்பிடப் படுகின்றன. அன்னமாச்சார்யாரின்  கீர்த்தனைகள் சமூக நன்மையும் தத்துவமும் கொண்ட பக்தி [அத்யாத்ம சங்கீர்த்தனை],  காதலின் வழியிலான பக்தி [சிருங்கார கீர்த்தனை] என்ற   இரண்டு பிரிவுகளின்கீழ்     அடங்குவதாகும்.

அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். வெங்கடாச்சல மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இரண்டும் வடமொழியில் எழுதப்பட்டவை. திவிபத ராமாயணம், சிருங்கார மஞ்சரி, வெங்கடேசுவர சதகம் ஆகியவை தெலுங்கு மொழியில் எழுதப் பட்டவையாகும். தன் மீது அருள் காட்டிய தாயாரின் மீது பாடிய நூறு பாடல்கள் வெங்கடேசுவர சதகம் என்றழைக்கப் படுகிறது. இதற்கு அலமேலுமங்கா சதகம் என்றும் பெயருமுண்டு. பக்தியில் இரண்டாயிரத்து இருநூற்று ஒன்பது கீர்த்தனைகளும் சிருங்காரத்தில் ஆயிரத்து ஐநூற்று இருபத்தியாறு கீர்த்தனைகளும் கிடைத்துள்ளன. சண்டை போடுதல், விவாதித்தல், தொண்டுசெய்தல், அடைக்கலம் வேண்டுதல் என்ற நான்கு நிலைகளில் பக்தி வெளிப்பட்டாலும் சரணாகதி என்பது அவருடைய கீர்த்தனைகளின்    ஆழமான  பின்புலமாகிறது. கடவுளர்   நாமவரிசை, சரணாகதி, நாயகி பாவம் என்று  நாலாயிர திவ்யபிரபந்தத்தின்  பிரதிபலிப்பைப் பல இடங்களில் பார்க்கமுடிகிறது. இவருடைய கீர்த்தனைகள் ஒரு பல்லவியும், மூன்று சரணங்களும் கொண்டுள்ளன. பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு. பொதுவாக எல்லாக் கீர்த்தனைகளும் ஒரு முத்திரையைக் கொண்டுள்ளன வெங்கடேசா  என்பது  இவருடைய முத்திரையாகும்.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட சாதி, மத பேதங்களை, மனிதர்களிடமான வேறுபாடுகளை, சிந்தனைப் போக்குகளைச் சுட்டிக் காட்டி சமூகநலம் விரும்பும் பக்தி இலக்கியங்களைக் கொண்டதாக பொதுவில் அந்தக் காலகட்டம் [பதினைந்தாம் நூற்றாண்டு] அமைகிறது. அதைத் தன் படைப்புகளில் அன்னமையா தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடவுளோடு நேரடியாகப் பேசுவது போன்ற பாவனையைத்தான் அவர்  கீர்த்தனைகள் முன்வைக்கின்றன. இறையனுபவத்தையும், தன் பக்தியையும், இசையையும் மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு பக்தன் என்ற நிலையில் நின்றுவிடாமல் சமூகவாதியாக, சீர்திருத்த வாதியாக அவர் வெளிப்படும் இடங்கள் பலவாகும். சமுதாய  விழிப்புணர்வு வற்புறுத்தலுக்கும், சமூக போதனைக்கும் அடையாளமாக அவருடைய சில பிரபலமான கீர்த்தனைகள் சான்றாக அமைகின்றன.

இறைவன் இந்தத் தன்மை கொண்டவன் என்பது யாராலும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாததாகும். எது மனதிற்கு விருப்பமாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதில் ஞானிகளும், சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்திருக்கின்றனர். அன்னமையா அந்த மாதிரியான ஒரு பிரக்ஞையை மக்கள் முன் வைக்கிறார்.” எந்த முறையில் கடவுளைப் பார்க்க விரும்புகிறோமோ அதே வடிவில் நாம் பார்க்க முடியும். வைணவர்கள் உன்னை விஷ்ணு என்றழைக்கின்றனர். சைவர்கள் சிவனென்று அழைக்கின்றனர்.காபாலிகர்கள் ஆதிபைரவன் என்கின்றனர். சக்தி பூஜாரிகள் சக்தி என்றழைக்கின்றனர். எந்தெந்த பெயர்களில் அழைக்கிறோமோ அந்தந்த பெயர்களில்தான் இறைவன்”  என்று ஒரு கீர்த்தனையமைகிறது.[’அவனு  எந்தமாத்ரமுனா எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு ’] அது அன்றைய சமூகநிலையைக் காட்டி மக்களைத் தெளிவுபடுத்தி வழிபாடு அவரவர் மனதிற்கு உகந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இன்றும் இந்தச் சிக்கலில் மனிதர்கள் உழல்வதும், முடிவு காண இயலாமல் தவிப்பதும் நடைமுறையில் காணும் அவலநிலையாகும்.

சாதி வேற்றுமைகளில் சமூகம் அழுந்திக் கிடந்ததை அவரால் பொறுக்க முடியவில்லை .எந்தச் சாதியாக ,எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் எல்லோருக்கும் “கடவுள் ஒருவர்தான் என்பதைத் தன் கீர்த்தனையில் உறுதியாகச் சொல்கிறார். ஏழை,பணக்காரர் என்ற வேறுபாடு கடவுளுக்கில்லை.தூக்கம் என்னும் உணர்வு எல்லோருக்கும் ஒன்றே. இரவும்,பகலும் எல்லோருக்கும் ஒருமாதிரியானதுதான். உண்ணும் உணவு வித்தியாசப் பட்டாலும் அனைவருக்கும் நாக்கு ஒன்றுதான் நாயோ யானையோ சூரியன் பொதுதான். இப்படிக் கடவுளும் ஒன்றுதான் ”[பிரம்மம் ஒக்கட்டே,  பரபிரும்மம் ஒக்கட்டே “] என்று அக்கீர்த்தனை பொதுத்தன்மை பற்றிப் பேசுகிறது. இது அவருடைய பிரபலமான கீர்த்தனையுமாகும்.

சமூக விழிப்புணர்வை தான் வாழ்ந்த சமூகத்து மக்களுக்கு வெளிப்படுத்தும் மற்றொரு சிறந்த கீர்த்தனையும் உண்டு. “எந்தக் குலமாக இருந்தால் என்ன? எந்த இடத்தவராக இருந்தாலென்ன? எல்லோரும் ஒன்றுதான். இறைவன் சாதி,இனத்திற்கு அப்பாற்பட்டவன். உண்மை, அன்பு, கருணை, பகையற்றவுணர்வு, மனவொழுக்கம், தர்மசிந்தனை ஆகியவை தான் இறைவனோடு நம்மை இணைக்குமேதவிர வேறு எதுவுமில்லை. வெங்கடேசனுக்கு யாராக இருந்தாலென்ன” [“ஏ குலஜூடை யினமேமி ] என்று அந்தக் கீர்த்தனை அமைகிறது.’சாதி வீணானது. அஜாமிளனும் மற்றவர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்? சாதிவேறுபாடு உடலோடு   தோன்றி   உடலோடு மறைகிறது.ஆத்மா     பரிசுத்தமானது; அழிவற்றது. இறைவனோடு இணைவது [விகாதுலன்னிய விருதா] என்றொரு கீர்த்தனை அமைகிறது.

“சிறப்பான விஷ்ணுவின் கதைகளைக் கேளுங்கள்.அது நம் அதிர்ஷ்டம்.அவை நமக்கு முதுகெலும்பு போன்றவை. நாரதர் மற்றும் முனிவர்கள் விஷ்ணுவின் கதையைப் பரப்பினர். வியாசர் கதைகளைச் சொன்னார் என்பது உரையாடல் பாங்கில் அமைந்த கீர்த்தனை வகைக்குச் சான்றாகும்.“[ வினவோ பாக்யமு விஷ்ணு கதா]. கனவில் வந்ததை, இந்த நிமிடத்தில் வந்ததைக் கனவாகவே காட்டும் வகையில் “கனவு கண்டேன்; இப்பொழுது கனவு கண்டேன். என்று நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கு எவையெல்லாம் சாத்தியமோ அதை இறைவனோடு இணைத்து நட்பான நிலையை முன்னிறுத்துகிறார் [“தலங்கந்தி இப்புடிது கலங்கந்தி “]. ராமனுக்கு அவனிடம் சேவை செய்பவர்களைப் பற்றிச் சொல்லுவதுபோல ஒரு கீர்த்தனை அமைகிறது.இதில் ராமனுக்குச் செய்யப்படும் சேவை விளக்கப்படுகிறது. நாரதர் தன் பாடலால் மகிழ்விக்கிறார். ரம்பையும், மற்றவர்களும் நடனமாடி மகிழ்விக்கின்றனர்.ரிஷிகள் மனம் நிறைந்து   ஆசீர்வாதிக்கின்றனர்.லட்சுமணன் விசிறுகிறான் [“அவதாரு ரகுபதி அந்தரி நீ சித்தகிஞ்சு”]. “என் தலைவனே ! உன் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன் “என்று தொடங்கும் பாடலில் பாட்டு ஒன்றே போதும் எங்களை உய்விக்க என்று தானுணர்ந்ததை   தனக்குப் பிரியமான    பக்தியை முன்வைக்கிறார். இறைவன் சந்நிதானத்தில் தினமும் ஒரு பாடலைப் பாடுவது அவர் பழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பாடலைக் கேட்கக்  கடவுள் காத்திருந்தார் என்பதும் மக்களின் நம்பிக்கையாகிறது.

கடவுளுக்கும்,பக்தனுக்கும் இருக்கும் உறவு ஒருவரை ஒருவர் சார்ந்ததாகும். ஒருவர் இல்லையெனில் இன்னொருவர் இல்லை என்ற கருத்து அவரால் வெளிப்படுத்தப்படும்  தன்மையும், பார்வையும் சிறப்பாக உள்ளது. ”அடியேன் இல்லையெனில் யார் மீது அன்பைப் பொழிவாய்” என்று பாடல் தொடங்குகிறது.

அடியவன் இல்லாவிட்டால்  யார் மீது அன்பு காட்டுவாய்
என்னால்தான் நீ  உன் அன்பிற்குச் சிறப்புப் பெற்றாய்
உதவாக்கரையான என்னை  நீ காப்பாற்றினால்தான்
உன் கருணை பெருமையோடு பேசப்படும்
என்னால்தான்  உனக்குப் பெருமை
உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன்
ஏ வெங்கடேசா   நாமிருவரும்
ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்”.
நயமான, பாவம் நிறைந்த கீர்த்தனையாக இது போற்றப்படுவதும் குறிப்பிடத் தக்கது [“நீ நோக்கட்ட இகுதி” ] பாகவத புராணம் காட்டும்  ஒன்பது வகையான பக்தியில் நட்பு ஒன்றாகும். இந்தக் கீர்த்தனை அதைப் பிரதிபலிப்பதாகிறது..

இறைவனுக்கு சுப்ரபாதம் பாடி அவனை எழுப்பும் தன்மையை அறிமுகம் செய்தவர் அன்னமையாதான். “வெங்கடேசா! இது நீ எழுவதற்குரிய நேரம்..இரவு முடிந்துவிட்டது. சூரியன் வந்துவிட்டான். உன் திரையை விலக்கிக் கொண்டு எழுந்திருப்பாய். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்துநிற்கின்றனர். உன் தாமரைஇதழ் போன்ற கண்களைத் திறப்பாய்.பக்தர்களின் குறைகள் கேட்பாய்” என்று பாடி வெங்கடேசுவரனை விழிக்கும்படி வேண்டுவதான கீர்த்தனையும் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.[’வின்னபாலு வினவல”]

பொதுவில் மனிதர்கள் தவறு செய்பவர்களாகவும், பாவங்கள் செய்பவர்களாகவும் உள்ளனர். கடவுளின் கருணைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற  எப்போதும்  கடவுள் தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையைச் எல்லோருக்கும் தருவதான நிலையை ஒரு பாடல் வெளிப்படுத்துகிறது. நடைமுறை உலகிலும் கூட தவறு செய்பவனுக்குக் கடவுளினருள் இருக்காது  என்ற கருத்து நிலவும் போதும்கூட அன்னமையா போன்ற ஞானிகள் அதைத் தவறென்று காட்டி மாறுவதற்கும்,உணர்வதற்கும்    வழிகாட்டுகின்றனர். ”நான் துன்பத்தால் வருந்தும் அற்பமனிதன்: என்னுடைய வெறுக்கத்தக்க நிலையையும், அசுத்தத் தன்மையையும் நான் கவனிக்கவில்லை. அப்படியான நிலையில் உன்னுடைய கருணைப் பார்வையை எப்படி கவனிக்க முடியும்? ஆனாலும் எனக்குத் தெரியும் நீ என்னைக் கைவிடமாட்டாயென்று” என்று என்றாவது தன்னையறியும் தன்மையை ஒரு கீர்த்தனை வெளிப்படுத்துகிறது.

இறைவனின் திருப்பாதங்களின் பெருமையும்,செயல்களையும் விளக்குவதாக  “பிரம்மன் கழுவிய பாதமிதுவே; முழுமுதற்கடவுளின் உட்கருத்தை விளக்கும் பாதமிதுவே” என்ற கீர்த்தனை  அமைகிறது. வாமனாவதாரம் எடுத்து பலியின் செருக்கை அடக்கினாய்: இந்திரனுக்கு அவனுடைய எதிரி பலியிடமிருந்து சுவர்க்கத்தை மீட்டுத்தந்தாய். அகலிகையின் பாவத்தை பாதம் பட்டு நீக்கினாய்; கண்ணன் அவதாரத்தில் காளிங்கன் மீது நடனமாடினாய். கல்கி அவதாரத்தில் தீயசக்திகளை அழிக்கக் குதிரை மேல்வருவாய் ”என்று இறப்பும், நிகழ்வும்,எதிகாலமும் குறித்த நிலைவெளிப்படுகிறது. [“பிரம்ம கடிகின பாதமு “ ].

பாசாங்குகளும், பயனற்ற தொழில்கள் நிறைந்ததுமான ஒரு நாடகமாக வாழ்க்கை அவருக்குத் தெரிகிறது.

“நாடக நடிப்பைத் தவிர  வேறொன்றுமில்லை இவ்வுலக வாழ்வு இடைவிடாத முயற்சியால் அடைவது முக்தி-பிறப்பும் நிச்சயம் இறப்பும் நிச்சயம்-வாழ்க்கை ஆரம்பிப்பதற்கும்  முடிவதற்கும் இடையேயுள்ள காட்சி  நாடக நடிப்பைத் தவிர வேறொன்றுமில்லை வெங்கடேசா !”[ “நானதி பதுக்கு நாடகமு]என்று சொல்லி  நாடகத்திலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறார்.

“பாட்டொன்றே போதும் எங்களை உய்விக்க என்னுடைய மற்ற பாடல்கள்  உன்னுடைய கருவூலத்தில் தூங்கட்டும் வலிமையுள்ளது உன் நாமம்.  உங்கள் கைகளில் நானொரு கருவியே. என் பாடல்களுக்குரிய பெருமை  என்னைச் சேர்ந்ததல்ல  உன்னடிமை நான் “ என்று ஒரு கீர்த்தனை அன்போடு வெளிப்படும் அடிமைநிலைக்குச் சான்றாகும். “மனிதர்களே, உங்கள் பாவங்களைப் பணம் போல பையில் வைத்துக் கொண்டு சந்தைக்கு வாருங்கள். பிறப்பு,இறப்பு, உலக மகிழ்ச்சி  எல்லாவற்ரையும் இங்கு மலிவாகப் பெற்றுக் கொள்ளுங்கள். வெங்கடேசன் மேலேயிருந்து உங்களை கவனித்தபடி இருப்பான் “என்ற பொருளில் அமைந்த ஒரு கீர்த்தனை மனிதர்களுக்கு அன்றாடம் பரிச்சயமான பணம்,சந்தை,மகிழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லி அவைகளால் மட்டும் நிம்மதியடைய முடியாது,தவறுகளுக்கான சாட்சியாக இறைவன் இருப்பான்.அதனால் மனசாட்சியோடு வாழ்வது உயர்வு  என்ற தத்துவமான கருத்தைக் காட்டுகிறார்.[ கோலாடி  புண்யா பாவாயி] இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை போலத்  தெரிந்தாலும் வாழ்க்கை, மனம், கர்மம் சார்ந்த பொருளாகும். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை நாமறிந்த வகையில் சொல்கிறார்.

காதல் பாவமும் அவரால் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. அலமேலு மங்கையை அவர் வியப்பதும்,போற்றுவதும் பல கீர்த்தனைகளின் சிறப்பாகிறது. ”அலமேலுமங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு [’அலமேலுமங்கா நீ அபிநவ ரூபமு’].

இன்னொரு கீர்த்தனையில் அவள் அழகாக நடனமாட பூக்கள் அவள் மீது பொழிகின்றன. மெல்ல திரைச்சீலைக்குப் பின்னால் மெட்டியொலிக்க அவள் நடனமாடும்போது வெங்கடேசன் அதை ரசிக்கிறார் என்ற நயமான  காதல் வெளிப்பாடு கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அவ்வுணர்வழகு ஏற்படும் வகையிலமைகிறது  [அலரலு குரியகா]. இந்தக் கீர்த்தனை குச்சிப்புடி நடனத்தில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அலமேலு மங்கையின் முகம் அழகானது. அவள் அசைவுகள்     நளினமானவை.   கருமையான மேகமூட்டம் நிறைந்த வானத்தில் இடையிடையே ஒளிவிடும் மின்னல்  போல வெங்கடேசனின் அருகில் அவள் இருக்கிறாள் என்ற கருத்திலமைந்த கீர்த்தனை எல்லோராலும் போற்றப்படுவதும், விரும்பிக் கேட்கப்படுவதுமாகும் [ஒக்கபரி  கொக்கபரி].

இறைவனின் அருகிலிருக்கும் அலமேலுமங்கையின் காதல் மட்டுமல்ல என் காதலும் தாபமும்,வேகமும் நிறைந்ததுதான் என்று நாயகி பாவத்தை கொண்டு வருகிறார் இன்னொரு கீர்த்தனையில் ஏக்க உணர்வில் தாபத்தோடு,

கூரை மேலிருந்து உன்னைக் பார்த்துக் கொண்டு உன் காதலுக்கு ஏங்குகிறேன் முனகிக் கொண்டே நாட்களைக் கழிக்கிறேன் வெங்கடேசா எங்கே போனாய் இவ்வளவு நேரம்?” என்று செல்லமாகக் கோபிக்கிறார்.

“ஏ மனமே கடவுளை அடைவதற்கு இசை,பக்தியைத் தவிர வேறு சிறந்த வழி இருக்கிறதா? என்றறிந்த   ஓர் உண்மையை சந்தேகம் போல பல கீர்த்தனைகளில் கேட்டு இரண்டின் ஆழத்தையும் உணரவைக்கிறார்.

பல கீர்த்தனைகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நாட்டுப்புறப் பின்னணியில் அமைந்துள்ளன.  இவை “ஜானபதளு” என்றழைக்கப் படுகின்றன. ”சுவ்வி சுவ்வி சுவ்வாலம்பா” என்ற கீர்த்தனை கிருஷ்ணன் பிறப்பை  பெண்கள்  கூட்டமாகக்     கூடிப்பாடுவதாகிறது. விழாக்கள், பண்டிககளின் போது பெண்கள் மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே செய்யும் நெல்குத்துதல்   நிகழ்வை  கீர்த்தனை வெளிப்படுத்துகிறது. இக்கீர்த்தனையில் அன்னமையா வெங்கடேசுவரனை ”சோனேடப்பா “என அழைக்கிறார்.கோயில் அருகேயுள்ள குளத்திற்கு சோனே என்பது பெயர். அதைக் காட்டும் வகையில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இது வடமொழிச் சொற்கள் கலக்காத முழுவதுமான தெலுங்கில் உள்ள கீர்த்தனை  என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பாலோடு விளக்கெண்ணைய் மற்றும் பிற மருந்துப் பொருட்கள் சேர்த்து குழந்தைக்கு செரிமானம் வளரக் கொடுக்கும் மருந்து சடங்கிற்கு  ’உக்கு’ என்ற பெயருண்டு.  குழந்தை அதைக் குடிக்க  மறுக்கும். தாய்  யசோதா  அதைக் கொடுக்கும்படி கோபிகையரிடம் வேண்டுகிறாள். என்றாலும் அதைக் குடிக்கக் கண்ணன் மறுக்கும்போது அவனை அதட்டக்  கூடாது எனக் கண்டிப்பும் வேண்டுதலுமான நிலையில் அமையும் கீர்த்தனையான இதில் நாட்டுப்புறச் சொற்கள் இயல்பாக இடம் பெறுகின்றன. “சின்னத் தங்கையே” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அலமேலுமங்கையே தசாவதாரம் பற்றிச் சொல்வதை   ஒரு கீர்த்தனை காட்டுகிறது. நாட்டு புறப் பின்னணியில் அமைந்த இதுவும் வடமொழிச் சொற்கள் கலக்காத தன்மையுடையது.[“சிறுத நவ்வுலா’] ,”ராவே ராவே கோடலா ரட்டடி கோடலா   “சந்தமாவே ராவோ, ஜாதிபிலி ராவோ”,”ராரா சின்னண்ணா, ராரோரி சின்னவடா “ என்பன போன்ற கீர்த்தனைகளும் நாட்டுப்பாடல் வடிவம் பெற்று அமைகின்றன. இவற்றில் இறைவனின் லீலைகள் விரிவாக விளக்கம் பெறுகின்றன. தாலாட்டு வடிவிலான கீர்த்தனைகளும் அவரால் பாடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் இன்றும் அப்பாடல்கள் மிகப் பிரபலமாகவும், வழக்கிலுமுள்ளன. ”ஜோ ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ “ என்பது அதிலொன்றாகும்.

சில கீர்த்தனைகள் எளிமையான உவமையோடும், நடைமுறை வாழ்க்கையிலான அணுகுமுறையும் பெற்றுள்ளன. ”ஏன் இறைவனைக் குறை சொல்ல வேண்டும். மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு? குயிலும் ,காகமும் பார்க்க ஒன்றாக இருந்தாலும் வசந்தகாலத்தில் அவற்றின் திறமை வேறுபாடு  வெளிப்படுகிறது. அவரவர்     பாவ, புண்ணிய தன்மைக்கேற்றபடி தான்    வாழ்க்கை“ என்கிறார் [தய்வமு     துரங்கனேன]’. ’வேப்பமன்னு பலுவோசி ’ என்ற கீர்த்தனையில் வேப்பமரத்தைப் பாலூற்றி வளர்த்தாலும் கசப்பு அதைவிட்டு நீங்காது, என்றும் அரிவாளை நீண்டகாலம் தண்ணீரில் வைத்திருந்தாலும் அது மென்மையாக முடியாது என்றும் அன்போடு பாதுகாத்தாலும் தேள் கொட்டாமலிருக்காது என்றும் சாதாரண மக்களறிந்த இயல்பான உவமைகளை முன்வைத்து வாழ்க்கை நிலையை வெளிப்படுத்துகிறார். நாட்டுப்புற நடையில்  தத்துவக் கருத்துக்களை கீர்த்தனைகளாக்கிய சூழலில் மக்களறிந்த அன்றைய வழக்குச் சொற்களான  ஏலா, ஜஜரா, லாலி ,உய்யாலா, ஜோலா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

வந்தே வாசுதேவம், பாலபுண்யமுலோ, டோலாயாம், ஒக்கபுரி கொக்கபுரி, பாவயாமி கோபாலபாலம், வந்தேஜகத் வல்லபம் நாராயணட்டே, ஸ்ரீமன் நாரயணா ,நீலமேகமோ என்பவை அவரது பிரபலமான கீர்த்தனைகளில் சிலவாகும். அன்பும், தத்துவமும் கைகோர்த்த தன்மை இவர் பாடல்களின் சிறப்பாக இருப்பதால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகின்றன என்றும் மொழியை எளிமையாகவும், ‘ஒருமித்த‘ தன்மையிலும் அவர்   கையாண்டிருப்பதாகவும் இசையாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

அன்னமையாவின் சிறப்பறிந்து புரந்தரதாசர் அவரைச் சந்திக்க வருகிறார். அன்னமையாவைப் பார்க்கும் போது   புரந்தரதாசருக்கு வெங்கடேசப் பெருமானையே பார்ப்பது போல் இருக்கிறது, அன்னமையாவுக்கு புரந்தரதாசர் பாண்டுரங்கன் போலத் தெரிகிறார் என்று இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சொல்லப்படுகிறது.

வேதம், உபநிடதம், புராணம் ஆகியவற்றின் உயர்ந்த கருத்துக்களைச் சாதாரண மக்களுக்கும் எடுத்துச் சென்றது அன்னமையாவின் சிறப்பெனலாம். அவருடைய கீர்த்தனைகைகள் தொண்ணுறு  ராகங்களைக் கொண்டிருப்பதாக இசைவல்லுனர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர். அன்னமையாவின் பேரன் சின்னண்ணா எழுதிய ’அன்னமாச்சார்யா சரிதமு’ என்ற நூலின் அடிப்படையில்தான் அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தன் தாத்தாவை ’பதகவி பிதாமகர்’ என்று அவர் போற்றியுள்ளார். அன்னமையாவின் சிறப்பைக் காட்டும் வகையில் “அன்னமாச்சார்யா”என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உள்ளிட்ட   பலர் பாடியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் ’அன்னமையா ஆராய்ச்சித் திட்டம்” என்ற பெயரில் பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாடல் விளக்கம் : மோகன் ஜி
படமும் பாடலும் : தேவா

ராகம் : மோஹனம்

பல்லவி
அதெ சூடரே மோஹன ரூபம்
பதி கோட்லு கல பாவஜ ரூபம்

சரணம் – 1
வெலயக பதஹாரு வேலு மகுவலனு
அலமின கன மோஹன ரூபம்
வலசின நந்த வஜ்ரமு கொல்லெதல
குலுகு சூபுலகு குரியகு ரூபம்

சரணம் – 2
இந்த்ர வனித நெப்புடு தன வர
மந்து நிலிபின மோஹன ரூபம்
கண்டுவ பூஸதி கோகிட ஸொம்புல
விந்துலு மரிகின வேடுக ரூபம்

சரணம் – 3
த்ருபுர ஸதுல போதிஞ்சி ரமிஞ்ச்சின
அபுரூபபு மோஹன ரூபம்
கபுருல ஶ்ரீ வேங்கட பதியை இல
உபமிஞ்ச கரானி வுன்னத ரூபம்

கீர்ரத்தனையின் பொருள் :

பல்லவி
மோகனமாக ஈர்த்திடும் பேரழகைப் பாருங்கள்.
பத்துகோடி மன்மதர்களின் அழகையும்கூட விஞ்சியதே அவன் சௌந்தரி்ய ரூபமல்லவா?

சரணம் – 1
பதினாராயிரம் கோபியர்களையும்
மயக்கியது அந்தப் பேரழகு ரூபம்.
பிருந்தாவனத்தின் கன்னிகையரையும்,
இடைவிடாது வெறித்து நோக்க வைத்தது நந்த வம்ச இரத்தினமான கிருஷ்ணனின் அழகிய ஸ்வரூபம்.

சரணம் -2
அரம்பையரும் எந்நேரமும் தம் நெஞ்சில் நிறுத்திய அழகிய ரூபம்.
அவன் அணைப்பெனும் அன்பின் விருந்தை வழங்கும் விந்தை ஸ்வரூபம்.

சரணம் 3
நினைத்துநினைத்து ஒன்றி வணங்கும்படியாக, மூவுலகங்களிலும் உள்ள பெண்டிர்தம் இதயங்களைக் கவர்ந்ததும் அந்த அழகிய ரூபம்.
அந்த பேரழகு ஸ்வரூபமே இப்போது நம்மெதிரே ஶ்ரீவேங்கடேஸ்வரனாக வடிவெடுத்து நிற்கிறது.

சில விளக்கங்கள்:
கிருஷ்ணரின் ஈடில்லாத அழகை எண்ணியெண்ணி மாய்ந்து போகிறார் அன்னமாச்சார்யார்.

கோபிகைகளும், அரம்பையரும், மூவுலகைச் சேர்ந்த மங்கையரும் கிருஷ்ணரின் அதிரூப லாவண்யத்தில் மயங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

தத்துவபரமாக, ஶ்ரீகி்ருஷ்ண பரமாத்மா ஒருவனே ஆண். ஜீவர்களாகிய நாம் யாவரும் பால்பாகுபாடின்றி, அவனில் மயங்கியிருக்க வேண்டிய பெண்மக்களே! அந்தக் கிருஷ்ணனே வேங்கடவனாகவும் இருக்கிறான்.
கோடி மன்மத ஸ்வரூபம்: காமதேவனான மன்மதன் பிரம்மனின் மானசப்புத்திரன் ஆவார்.

மனிதகுலம் அறாது தொடர, ஆண் பெண் இருவரிடையே நிலைக்க வேண்டிய ஈர்ப்பையும் காமத்தையும் தூண்டுகின்ற தேவனாக படைக்கப்பட்டார். இவரை திருமாலின் புத்திரன் என்றுகூட குறிப்பிடுவதும் உண்டு.

ஈடுயிணையற்ற சௌந்தர்யத்தை உடையவன் மன்மதன். ‘மனதை உன்மத்தம் கொள்ளச் செய்பவன்’ என்பது அவன் பெயரின் அர்த்தம்.

யோகத்திலிருந்த பரமசிவனார் மேலேயே தன் புஷ்ப பாணத்தைப் பிரயோகித்ததால், சிவனும் சினங்கொண்டு நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்க, காமதகனம் ஏற்பட்டது.

பராசக்தியின் அருளால், அனங்கனாக (உருவமற்றவனாக) ரதிதேவி கண்களுக்கு மட்டும் தெரிகின்றபடியாக மாறினான்.

இந்தப் பாடலில், அன்னமாச்சாரியார் ஸ்ரீகிருஷ்ணனை ‘பத்துகோடி மன்மதர்களின் மொத்த அழகையும் ஒருங்கே பெற்றவன்’ என்று பாடுகிறார்.

ஶ்ரீகிருஷ்ண சௌந்தர்யம் மகத்தானது. விவரிக்கவொண்ணாதது.

ஸ்ரீ கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், முருகன், பரதன் முதலானோராக மன்மதனே மீண்டும் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஸ்ரீ கிருஷ்ணனின் பேரழகை ஆழ்வார்களும் சலிக்காமல் பாடி துதிக்கிறார்கள்.

அழகுக்கு பெயர்போனவர்கள் கந்தனும் கண்ணனும் அவர். அவர்களின் பேரழகை, சிறந்த கவிஞர்களும் ஓவியர்களும்கூட தமது கற்பனையின் எல்லைவரை மட்டுமே தொட முடியும்.

மன்மதனையும் பழிக்கும் அந்த பரம்பொருளின் எல்லையற்ற சௌந்தர்யத்தை, நம் ஊனக் கண்களாலும் மனக்கண்ணாலும்கூட காண முடியுமோ?!

இத்தனை பேரழகின் இருப்பிடமான நாராயணன், மோகினியாக பெண்ணுரு தாங்கி வந்து பஸ்மாசுரனை அழித்த கதை அறிவோம்.

ஆனானப்பட்ட சிவனே மோகினியின் ரூப லட்சணத்தில் மனம் பறிகொடுத்ததினால் ஹரிஹர புத்ரனாக சாஸ்தா பிறந்தார்.

மகாகவி பாரதியார் கண்ணனை காதலிக்கும் பெண்ணாக தன்னை வரித்துக்கொண்டு எழுதிய கண்ணன் பாடல்களில் ஒன்றைப் பார்ப்போம்.

‘ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி!’ என்று தொடங்கும் பாடலில்,‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்அதில் கண்ணன் அழகு முழுதில்லை

நன்னு முகவடிவு கானில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்!
கண்கள் புரிந்து விட்ட பாவம்-உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே-ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ…’
என்றும்,

‘கண்ணன் முகம் மறந்து போனால்- இந்தக்
கண்கள் இருந்தும் பயன் உண்டோ?
வண்ணப் படமும் இல்லை கண்டாய் –
இனி வாழும்
வாழும் வழி என்னடி தோழி?’
என்றும் நொந்து கொள்கிறார்.

மறக்கக் கூடியதா கண்ணன் அழகு? ஆனாலும், மனித மனத்தின் நினைவுகூர்தலில் உள்ள மாய விளையாட்டை இப்பாடலில் மஹாகவி காட்சிப்படுத்துகிறார்.

கோபியரும் கிருஷ்ணனும் :
கோகுலத்தில் வாழ்ந்த கோபியர்கள் கிருஷ்ண பரமாத்மாவின்மேல் வைத்த எதிர்பார்ப்புகள் இல்லாத தூய பேரன்பும், திடமான பக்தியும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்று இருக்கிறது. அந்தப் பரம்பொருளை அடைய வேண்டி, நாமும் அவ்விதம் தூயபக்தியைச் செலுத்துவது ஒன்றே உண்மையான ஆன்மீகமாகும்.

பிரார்த்தனை என்பது தூப தீபம் காட்டி, மனதை இறைவன் பாதத்தில் வைக்காமல், வாய் மட்டும் முணுமுணுக்கும் தோத்திரங்களால் பயனில்லை. நாம் யாவருமே மனதால் கோபியர்களாகவே இறையன்பு கொண்டு வணங்கினால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் கண்ணன்.
முற்பிறவிகளில் ஶ்ரீமன் நாராயணன்பால் பெரும் பக்திசெய்த பக்திமான்கள் கோபியர்களாக மண்ணுலகுக்கு வந்து, கிருஷ்ணர் உடன் கலந்து வாழ்ந்த பாக்கியம் அடைந்தவர்கள்.

இந்திரவனிதை:
ஸ்ரீமன் நாராயணனின்மேல் கொண்ட பக்தியால், தேவர்களாக பதவி பெற்ற பக்திமான்களே கோகுலத்துக்கு வந்தார்கள் என்று ஒரு தொன்மம் உண்டு ( சுவாமி சிவானந்தரும் கோபியர்கள் தேவமங்கையர் என்பார்). அவர்களையே ‘இந்திர வனிதா’ என்று அன்னமாச்சாரியார் குறிப்பிடுவதாக யூகிக்கலாம். இந்திரலோகத்தை சேர்ந்த அரம்பையரும் கிருஷ்ணபக்தி கொண்டு இருந்தவர்களாகவும் கொள்ளலாம். ஆனாலும், ஸ்ரீகிருஷ்ணனின் அணைப்பில், தூய அன்பின் சுகம் கண்டவர்கள் என்று பாடலின் அடுத்த அடியில் குறிப்பதால், அவருடன் ராச லீலை புரிந்த கோபியரையே குறிப்பிடுகிறார் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது

திருவேங்கட ரூபம் :
உற்றுக் கேட்டால், கடலலைகளின் ஓசை கேட்கும் வேங்கடவன் சிலாரூபம்.
குளிர்காலத்திலும் வெம்மையான திருமேனி; சுருள்சுருளான அளகபாரம்; அதன் மேல் ஒளிரும் கிரீடம்; அரைக்கண் வரையில் மூடிய பெரிய திருமண்; அழகிய நாசி; உதடுகளில் குமிண் சிரிப்பு; பாஞ்சஜன்யம் போலும் வடிவக் கழுத்து; திண்தோள்கள்; தோளினின்று நான்கு கரங்கள்; வலது மேற்கரம் சுதர்சனம் தாங்க, வலது கீழ்கரம் அபய ஹஸ்தம் காட்ட ; இடது மேற்கரம் பாஞ்சஜன்யம் ஏந்த, இடது கீழ்கரமோ இடது தொடையில் பதிந்து, ‘கத்யவலம்பிதம்’ எனும் முத்திரையில் இருக்கும் ;வீரம் செறிந்த மார்பு; மார்பின் இருபக்கங்களிலும் பதிந்த பத்மாவதியும் லஷ்மியும்; கச்சிதமாகக் குழைந்த வயிறு; கடிபந்தம் எனும் அரைக்கச்சு அணிந்த இடுப்பு; திடமான கால்கள்; பேரழகில் பதிய நின்ற பாதங்கள்.

கழுத்தில் சுவர்ண மாலைகள், சாளக்கிராம மாலை, விதவிதமாய் நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், முப்புரி நூல்; வாகுவலயங்கள், கட்கம், கங்கணம், பாதச் சிலம்புகள்இவ்விதமாய் பெரு மன்னர்களும், தனவந்தர்களும் சமர்ப்பித்த கணக்கிலடங்காத ஆபரணங்கள் தாங்கிய பேருருவம் திருவேங்கடவனின் சுந்தர ரூபம்.வேங்கடவனின் பேரழகைப் பலவிதமாய் ஆழ்வார்களும் வாக்கேயக்காரர்களும் அருளியிருக்கிறார்கள்.

அவனுடைய வாயின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுதல் செய்த குலசேகர ஆழ்வார் பாசுரத்தைப் பார்ப்போம்.

‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இந்தப் பாடல் கேட்ட அக்கணமே வேங்கடவன் இரங்கித் திருவுளம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஒரு பாடலின் தெய்வீகத் தன்மையாலே, திருமலையில் வேங்கடவன் சன்னதியின் படியை, ‘குலசேகரப் படி’ என்றழைக்கும் பேறு பெற்றார்.

நிவேதனத்திற்கான ததியன்னம் கொண்ட மண்கலயம் ஒன்றைத் தவிர, குலசேகரப் படியைத் தாண்டி வேறு பொருள் கருவறை புக அனுமதியில்லை.

மோட்சத்தை அளிக்கவல்ல அந்த மோகன ரூபத்தை மனவரதமும் எண்ணியபடி இருப்போம்.

———–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவான் -ஞானாதி ஷட் குண வர்ணனைகள்-நம் பூர்வாச்சார்யர்கள் விளக்கம்–

October 18, 2024

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே-மங்கள ஸ்லோகம்

யோ வேத்தி யுகபத் -உள்ளுவார் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்-

ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத் தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

நாத முனி
ஆதி முனி
ஓதும் முனி
கீதா முனி
தாத முனி
தூத முனி
ரெங்க நாத முனி
பாத முனி முனி
போத முனி
பேத முனி
அபேத முனி
மோத முனி
வேத முனி

——–

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–
1-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்
-2-

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன
-ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி-

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-
3-

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா
—24-

பகவந் –
ஜ்ஞானாதி குண பூரணரான
தேவருடைய பேறு என்னும் இடம்
நான் சொல்ல வேண்டுமோ -என்கை

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி
–39-

ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
இருவருமாய்ப் பரிமாறும் போது
அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு
ஆஸ்ரயமாய் இருக்குமவன் –
ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே
துகைத்துப் பரிமாறலாம் படியான
தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—
49-

பகவன்-
இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில்
ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும்
தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை
என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை –
இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப
—51-

பகவன் –
இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—
54-

பகவன் –ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால்
ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால் பூரணன் -என்கை –

பக்திமபி ப்ரயச்ச-யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்-அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –

—————————————-

ஓம் பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் பத்ம வநாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம் அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

பகவன் நாராயண –
பகவச் சப்தத்தாலே(-ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் ஸக்தி தேஜஸ்-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-அகில ஹேய ப்ரத்யநீகமும் சொல்லும் -இவனுக்கே முக்யார்த்தம் -மற்றவர்களுக்கு கௌண -இவன் சம்பந்தத்தால் லேசம் இருந்தாலும் பகவத் ஸப்த பிரயோகம் பண்ணுகிறோம்-சினத்தினால் செற்ற –மனத்துக்கு இனியான்   )
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது –

இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குண பூர்ணனுமாய்(ஸமஸ்த கல்யாண குண ஆர்ணவம் -குணக் கடல் )
பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் -என்கிறது-

நாராயண –
பகவச் சப்தத்திலே சர்வமும் இல்லையோ
இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்

அந்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு(ஸர்வத்ர ப்ருஹத் -இருப்பதிலேயே பெரியதாகியும் -ஆஸ்ரிதரை பெரியவராக்கி -அளவிலும் – குணங்களாலும் -ப்ருஹத்
ப்ரஹ்ம சப்தம் பிரக்ருதிக்கும் -ஆத்மாவுக்கும் பத பிரயோகம்
முடிவில் பெரும் பாழ் -நிர்தோஷ ஆத்மா முக்தனையும் ப்ரஹ்ம ஸப்தம் பிரயோகம் )

அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
யோக ரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
அத்தாலே விசேஷிக்கிறது-

(காரணப் பெயர் –பாசக -சமையல் காரர் –நாற்காலி போல் –யவ்க்கிகம்
இடுகுறிப் பெயர் -குடம் மாடு -புத்தகம் -பிரித்து அர்த்தம் கொள்ளாமல் இதுக்கு இந்தப் பெயர் -ரூடி -பிரசித்த
யோக ரூடம் -இரண்டும் -பங்கஜம் -சேற்றில் இருந்து தோன்றியவையும் -தாமரை -யோகமும் ரூடியும் உண்டே – நாற்காலி -பூனைக்கும் நான்கு கால்கள் இருந்தாலும் -பிரசித்த அர்த்தம் குறிப்பிட்ட வஸ்துவுக்கே
ஆக மூன்றுமே உண்டு-நாராயணன் யோக ரூடி -உலகில் உள்ள அனைத்துக்கும் இருப்பிடம் -காரணப் பெயர் -குறிப்பிட்ட வ்யக்திக்கே பிரயோகம் -ஆகவே ரூடி -)

(நார -அயன -பதங்கள் சேர்ந்து -நாராயண -ஆனதே
சூரப்ப -நகம் -சூர்ப்பணகை -முரம் போன்ற நகம் கொண்டவள் -இவளுக்கு மட்டுமே இவ்வாறு
தஷிணாயனம்
உத்தராயணம் -இங்கு மட்டும் ண)

ஆக –பகவன் நாராயண -என்று
சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனைச் சொல்லிற்று ஆயிற்று –

(பகவான் நாராயண
குண விபூதி புஷ்கல பரம் -ஸ்ருத ப்ரகாசகர்
ஈறில வண் புகழ் நாரணன் என்றும்
நாரணம் முழு ஏழு உலகுக்கும் நாதன் என்றும் சொல்லுமா போல்)

ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய சௌர்ய பராக்ரம சத்ய காம சத்ய
சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத் அசங்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

ஸ்வா பாவிக
ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை

அநவதிக அதிசய
நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
அவற்றில்

ஜ்ஞான –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –

பல –
சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய
சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்

வீர்ய
சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம் வேராத அநாயாமை
எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரதை என்னவுமாம்

சக்தி –
ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் என்னவுமாம்
ஜகத் உபாதான சக்தி என்னவுமாம் –

தேஜஸ் –
பராபிபவன  சாமர்த்தியம்-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல சத்ய காம சத்ய சங்கல்ப பர ப்ரஹ்ம பூத

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –3-பர ப்ரஹ்ம பூத –ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறது –யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -(ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்தி) என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கர்மீ பவித்து இருந்துள்ள அசங்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –

பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ஸ்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-

சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்-உபாதான சக்தி யாகவுமாம்

தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்

இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே

——————–

ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலம் அதுலம் ஐஸ்வர்யம் அகிலம்
விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச
பரம் தேஜஸ் ச இதி ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம்
குணா நாம் நிஸ்ஸீம் நாம் கணநவி குணாநாம் பிரசவ பூ –15-

ஹே வரத
ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் -சிறந்த ஞானம் என்ன
அதுலம் பலம் -ஒப்பற்ற பலம்
அகிலம் ஐஸ்வர்யம் -அநவதிகமான ஐஸ்வர்யம் என்ன
விமர்யாதம் வீர்யம் -எல்லை அற்ற வீர்யம் என்ன
பரமா சக்திரபி ச-ஸ்ரேஷ்டமான சக்தி என்ன
பரம் தேஜஸ் ச -சிறந்த தேஜஸ்ஸூ என்ன
இதி -ஆகிய இவையாகிற
பிரதமஜம் ப்ரவர குண ஷட்கம் -முதல் மூர்த்தியான ஸ்ரீ பர வாஸூ தேவ மூர்த்தி இடம் உள்ள சிறந்த ஆறு குணங்களானவை
நிஸ்ஸீம் நாம்-எல்லை அற்றதுகளும்
கணநவி குணாநாம்-எண்ணக் கூடாததுகளுமான
குணா நாம் பிரசவ பூ -கல்யாண குணங்களுக்குப் பிறப்பிடம் –

இந்த ஆறு குணங்களும் இன்ன இன்ன காரியத்தில் விநியோகம் என்னும் இடம்
ஸ்ரீ ரெங்க ராஜ சத்வ உத்தர சதகம் -யுகபத நிகமஷை -இத்யாதி சப்த ஸ்லோகங்களில் விசதம்

த்வ அநந்த குணஸ்யாபி ஷட் ஏவ ப்ரதமே குணா –இந்த ஆறுமே அஸங்க்யேயங்களான குண கணங்களுக்கு ஊற்றுவாய்
பிரதமஜம் -என்று குணங்களுக்குள் முதன்மையானது என்றுமாம்
நிஸ்ஸீம் நாம்-ஒரு பெரிய ராசியாகவும் எண்ண முடியாதவை —
ஒரு கூடை மண் ஒரு வண்டி மணல் போலே கூட முடியாதவை என்றவாறு –

————–

பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-

பகவாந் — அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர்
பகஹா — ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர்

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்},
(அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா},

563-பகவான் -குற்றம் அற்றதாய் குணங்களே நிரம்பிய ஸ்வரூபம் ஆனதால் பூஜிக்கத் தக்கவர் –
564-பகஹா -முன்னால் கூறியபடி ஜ்ஞானம் முதலிய ஆறு குணங்களை உடையவர் –

563-பகவான் –
பூஜைக்கு உரியவன் -உயர்வற உயர்நல உடையவன்

ஏவம் அஸேஷ தோ₃ஷ வித்₃வேஷி கல்யாண ஸ்வரூப தயா பரம பூஜ்யோ
ப₄க₃வான் ॥(அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண ஏக குண நிதி )

தீதில் சீர் நலம் திகழ் நாரணன்-உணர் முழு நலம் -அந்தமில் ஆதி அம் பகவன்
கணக்கறு நலத்தனன் அந்தமிலாதியம் பகவன் -1-3-5-

குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம் பகவதே நம:

‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.

ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்

பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. பகவான் – வழிபாட்டுக்குத் தகுதியானவர்

இந்த நாமத்திற்கு பின்வரும் அர்த்தங்கள் உள்ளன:

  • வணக்கத்திற்கு உரியவர்
  • ஆறு குணங்கள் அல்லது ஷட் குணங்கள் நிறைந்தவர். ஞானம் (அறிவு), சக்தி (ஆற்றல்), பலா (வலிமை), ஐஸ்வர்யா (இறையாண்மை அல்லது செல்வம்), வீரியம் (வீரம்), மற்றும் தேஜஸ் (பிரகாசம் அல்லது பிரகாசம்)
  • எல்லா உயிர்களின் தோற்றத்தையும் முடிவையும் அறிந்தவன்

பகவான் பின்வரும் 6 தெய்வீக குணங்களை போதுமான அளவில் பெற்றிருக்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் விளக்குகிறார். அவர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.74) மேற்கோள் காட்டுகிறார்:
ஐஸ்வர்யஸ்ய ஸமாக்ரஸ்ய தர்மஸ்ய யஷஸஸ் ஶ்ரியா |
ஞான வைராக்யயோஹ்ஸ் சைவ ஷன்னாம் பக இதீரணா ||
பக என்பது ஐஸ்வர்யம் (செல்வம்), தர்மம் (நீதி), யஷா (புகழ்), ஸ்ரீ (செழிப்பு), ஞானம் (அறிவு) மற்றும் இறுதியாக வைராக்யம் (இரக்கம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஆறு குணங்களும் பகவை வரையறுக்கின்றன, பகவை உடையவன் பகவான்’.

ஸ்ரீ சங்கரர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.78) மற்றொரு ஸ்லோகத்தின் அடிப்படையில் கூடுதல் விளக்கத்தை அளிக்கிறார்:
உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானம் ஆகதிம் கதிம்;
வேட்டி வித்யாம் அவித்யாம் ச ச வாச்யோ பகவான் இதி
எல்லா உயிரினங்களின் தோற்றம் மற்றும் முடிவு, வருகை மற்றும் வெளியேறுதல் மற்றும் அறிவு மற்றும் அறியாமை ஆகியவற்றை அறிந்தவர் என்பதால் அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து மங்களகரமான குணங்களையும் கொண்ட அவரது இன்றியமையாத இயல்பு காரணமாக அவர் வழிபாட்டிற்கு தகுதியானவர் என்று ஸ்ரீ பட்டர் நாமத்தை விளக்குகிறார். ‘பக’ என்ற சொல்லுக்கு ஆறு பண்புகளைக் குறிக்கும் சிறப்புப் பொருள் உண்டு, ஆனால் ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை விளக்குவதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்தவில்லை. மாறாக, “வணக்கத்திற்குரியவர்” என்று விளக்கம் தருகிறார். அமரகோஷத்தில், “பஜ்யத இதி பகஹ்” என்ற குறிப்பு உள்ளது, இது ஸ்ரீ பட்டரின் விளக்கத்திற்கு பொருத்தமானதாகத் தெரிகிறது.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. [2899]
இதயமே, எழுந்திரு, உயர்ந்த நன்மையை விட உயர்ந்தவனும், எப்போதும் இல்லாத வானங்களின் இறைவனுமான, எல்லா சந்தேகங்களையும் நீக்கி, தூய அறிவை வழங்குபவனின் பாதங்களை வணங்கு.

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. [ 2925 ]
வேதங்களின் வழிமுறையை ஏற்றுக்கொண்டு, அவரை உணர்தல் மூலம் அறிந்து கொள்ளுங்கள், அவர் ஆதியும் முடிவும் இல்லாத இறைவன் (பகவான்) எல்லையற்ற பண்புகளைக் கொண்டவர். எல்லா சந்தேகங்களையும் கைவிட்டு, அவரிடம் சரணடையுங்கள், ஏனென்றால் அவர் ஆறு சிந்தனைப் பள்ளிகளில் உள்ள மோதல்களைத் தீர்க்கிறார்.

ஸ்ரீ வைஷ்ணவ பள்ளிகளில் பழமையானது பாகவத மற்றும் பஞ்சராத்ர பள்ளிகள். பாஞ்சராத்ர பள்ளியின் வணக்கத்திற்குரிய பகவான் ‘வாசுதேவா’ என்ற பரா வடிவமாக இருக்கிறார் – இந்த நாமம் சர்வ வியாபக அல்லது அனைத்து வியாபகத்தையும் குறிக்கும். வாசுதேவரின் ஷட்-குணங்களின் காரணமாக, அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்:
ஞான-சக்தி-பல ஐஸ்வர்ய-வீர்ய-தேஜஸ் அஸ்யாஷே ஷதா |
பகவான் சாப்தவாச்யாநி வினா ஹேயைர்குணாதிபிஹ ||

பகவான் இந்த ஆறு குணங்களுடன் (அதாவது ஞானம், சக்தி, பலா, ஐஸ்வர்யம், வீரியம் மற்றும் தேஜஸ்) முழுமை பெற்றவர், மேலும் அவர் அனைத்து ஹேய குணங்களும் இல்லாதவர், எனவே அவர் பகவான் என்று குறிப்பிடப்படுகிறார்.


564-பகஹா
நல்ல குணம் உடையவன் -குண பூரணன்-ஹா அடைந்தவர் அர்த்தம் இங்கு

கு₃ணதோ(அ)பி ததா ₂,
ப₄க₃ஹா ।
ஐஸ்வர்யஸ்ய சமகர்ஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீயஸ் ஞான வைராக்ய யோச்சைவ ஷண்ணாம் பக இதீரனா–ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி செல்வம் ஞானம் வைராக்யம் ஆறுக்கும் பக என்று பெயர்

தம் ஹந்தி-க₃ச்ச₂தீதி; ஹந்திர் க₃மந கர்மா ।

அத்ர வைஷ்ணவே ஷஷ்டே ₂(அ)ஸே ப₄க₃வச் ச₂ப்₃த₃ நிர்வசந ப்ரகரணம் லேக்₂யம் ॥(ஆறாவது அம்சம் விரித்து உரைக்கும்-அங்கே கண்டு கொள்ளவும் )

வண் புகழ் நாரணன் -1-2-10-

நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

  1. ஓம் பகக்னே நம:

ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை

ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்

ஹந்தீதி அழிப்பதால்

பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.

————-

  1. பகஹா – அவர் மங்களகரமான பண்புகளை உடையவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஹா’ என்ற பின்னொட்டினால் அழிப்பவர் அல்லது நீக்குபவர் என்று விளக்குகிறார். ‘க்ரோதஹா – கோபத்தை அழிப்பவர்’ மற்றும் ‘காமஹா – ஆசைகளை அழிப்பவர்’ மற்றும் ‘துஷ்கிருதிஹா – தீயவர்களை அழிப்பவர்’ போன்ற நாமங்களை நாம் முன்பு பார்த்திருக்கிறோம். இதே ஒப்புமையால் சங்கரர் ‘ஐஸ்வர்யாதிகம் சம்ஹார ஸமயே ஹந்தி இதி பகஹா – பிரபஞ்சம் கரையும் அல்லது பிரளயத்தின் போது பகாவின் கீழ் வரும் 6 பண்புகளை அழிக்கிறார்’ என்கிறார். உயர்ந்த குணங்கள் உட்பட அனைத்தும் இறுதிப் பிரளயத்தில் செல்ல வேண்டும், பகவானைத் தவிர வேறு எதுவும் இந்த இறுதிச் செயலில் தப்பிப் பிழைக்காது.

பகஹாவிற்கு ஸ்ரீ பட்டரின் விளக்கம் ஆறு பண்புகளைக் குறிக்கும் பக என்ற பொருளைப் பயன்படுத்துகிறது, மேலும் ஸ்ரீ சங்கரரின் கடைசி நாமத்திற்கு (VP 6.5.74) பயன்படுத்தும் அதே விஷ்ணு புராணக் குறிப்பை இங்கே மேற்கோள் காட்டுகிறார். ஸ்ரீ பட்டர் தம் விளக்கத்தில் “ஹந்தி எனப் போகிறது” என்ற பொருளைப் பயன்படுத்தி, இந்த ஆறு தெய்வீக குணங்கள் பகவானுக்கு வழி காட்டுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ண தத்த பரத்வாஜும் இதே விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறார் – பாகம் மஹாத்ம்யம் ஜிஹிதே கச்சதி ப்ராப்நோதி இதி பகஹா.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த யோசனையின் ஒரு வித்தியாசமான விளக்கத்தைத் தருகிறார் – ‘பாகா’ என்பது பொருட்களின் பரந்த தன்மையைக் குறிக்கிறது, மேலும் ‘ஹா’ என்பது இந்த பரந்த தன்மையின் சுருக்கத்தைக் குறிக்கிறது. பிரளய நேரத்தில் அனைத்தையும் தன்னுள் சுருக்கிக் கொண்டு தனது படைப்பின் பரந்த தன்மையைக் குறைப்பதால் அவர் பக-ஹா என்று அழைக்கப்படுகிறார்.

சுவாமி சின்மயாஆனந்தா, இந்த அர்த்தத்தில், இது விஷயங்களை “அழித்தல்” அல்ல, ஆனால் முதலில் அவரிடமிருந்து வந்த விஷயங்களை தன்னிடமே உள்வாங்குதல் என்று சுட்டிக்காட்டுகிறார்.

செல்வம், புகழ் போன்றவற்றின் நிலையற்ற தன்மையே இங்கு நமக்குப் புகட்டப்படுவதாகவும், இதைப் புரிந்துகொண்டு இவற்றில் உள்ள பற்றுதலை நீக்கும் அளவுக்கு இந்த நாமத்தின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்றும் தர்மச் சக்கரம் எழுத்தாளர் கவனிக்கிறார். .

ஆறு குணங்கள் –

123- மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
126-பா நு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-

123-மஹா தபா –

சிறந்த ஞானம் உடையவன் –அதிகமாக பூஜிக்கத்தக்க ஞானம் யுடையவன்

தத்ர வராரோஹ இத்யேத தந்தைர்நாமபி ப்ரயாஸ பரத்வம் யுக்தம்
கிமேகம் தைவதம் லோகே கிம் வா அப் யேகம் பராயணம் இதி
ப்ராப்ய ப்ரஸ்நயோஸ் -தத் ப்ரதி வசனயோஸ் ச ப்ராயேணா மீஷ் மேவ விஸ்ராந்தி

அத ஸ்து வந்த கம் கம இத்யாதீநாம் உபாய -ப்ரஸ்ன ப்ரதி வசநாநாம் அதிகார வ்யூஹ

தத்ர வாஸூ தேவ பரத்வேந வ்யாக்யாத
இதா நீம் ஸங்கர்ஷண

இதுவரையில் அடையத்தக்க பர வஸ்து எது என்கிற வினாவுக்குத் தக்கபடி
பர ஸ்வரூபம் பெரும்பாலும் கூறப்பட்டது
இனி வ்யூஹத்தைக் கூறுவது
அந்த வ்யூஹம்
வாஸூ தேவன்
சங்கர்ஷ்ணன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
என நான்கு வகைப்படும்

அவற்றுள் வாஸூ தேவன் பர ரூபத்தில் சேர்ந்ததனால் தனித்துச் சொல்ல வேண்டியது இல்லை
ஆதலால் இதற்கு மேல் ஸங்கர்ஷண வ்யூஹம் சொல்லப்படுகிறது-

மஹா தபா
யஸ்ய ஞான மயம் தப -இதி மஹத் பூஜ்யம் ஞானம் அஸ்யேதி
ஷட் குணா வ்யாக்யாஸ் யந்தே
தேஷு ஞான பல சங்கர்ஷணஸ்ய குணவ் வ்யூடவ்
ஞானம் -ச ப்ராசீன பவ பரிஸ் ராந்தி ஸாந்தயே சஞ்ஜி ஹீர்ஷா லக்ஷண மாத்ர –

யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டக-1-1-ஞான மயமான தபம் கொண்டவன்

தொடர்ந்து ஆறு குணங்களும் கூறப்பட உள்ளன
இவற்றில் ஞானம் பலம் இரண்டும் சங்கர்ஷனின் தன்மையாக உள்ளன

இங்கு ஞானம் என்பது அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று தவிக்கும் ஜீவர்களைக் கரை ஏற்றும் செயலுக்குத் தக்க ஞானம்

ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்

சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரைப் போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் மஹா தபஸே நம

————

ஓம் மஹாதபஸே நம:

மஹத் மிகச்சிறந்த

ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும்

தபோ ‘தப’ என்றால்

ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்

மஹாதபா:பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யஸ்ய ஞானமயம் தப:’ (முண்டக உபநிஶத் 1.1.9)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின்

ப்ரதாபோ வா வீரத்தின்

தபோ காந்தி (ஒளி)

மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்

மஹாதபா:எனவே, பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் விளக்கத்தில் ‘தப’ என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் ‘தப’ என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

123. மஹாதபஹ்

மஹாதபா என்றால் சிறந்த அறிவை உடையவர் என்று பொருள். தபஸ் என்றால் பொதுவாக தவம் என்று பொருள், அது அறிவு என்றும் பொருள். உயர்ந்த தவம் இறுதி அறிவிற்கு வழிவகுக்கிறது, எனவே இரண்டும் சாராம்சத்தில் ஒத்ததாக இருக்கின்றன.

இந்தச் சூழலில் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘மஹத் ஸ்ரீஜ்ய விஷயம் தபோ ஞானம் அஸ்ய இதி மஹாதபாஹ் – அவருக்கு படைப்பின் உச்ச ஞானம் இருப்பதால் அவர் மஹாதபா‘ என்று விளக்குகிறார்.

இது முண்டக உபநிடதத்திலும் பிரதிபலிக்கிறது, இது ‘யஸ்ய ஞானமயம் தபஹ் – யாருடைய தபஸ் என்பது அறிவின் தன்மை.

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா ஆக்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் (இஹ லோக பர லோக ஐஸ்வர்யம் அளிக்கும் )- சாத்துவத சம்ஹிதை

ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதி விஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந –யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா

அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் -தத் அபேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்(நம் போல்வாரும் புல்லும் கூட விட்டுப்பிரியாமலே இருக்குமே )
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநாஸூ அபரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச(இவர்களும் படைக்கப்பட்டவர்களாகவே எண்ணப்படுகிறார்கள் )
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்(ஒரு லேச பிரபாவம் பெற்றவர்கள் )
ப்ராதுர் பாவ விசேஷ அதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே

அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்(அவதாரங்களில் இருந்து வேறுபட்டு உடைமையாக )
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் (ஆறாவது வேற்றுமை -அவனுடைய சேஷன் )தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் ச ஏதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதி இதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அனலசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ர அந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்(இனிப்பில் வேறுபாடு )

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச

புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வத் ஆகாராந்தரம்  ஆக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக்யைஸ் து கௌண முக்யை ஸூரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷுபிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் –ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நிஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

கோக்குல மன்னரை –போற்றும் புனிதன் ராமானுஜன்

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போகோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீநம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந் நியந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக

முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீமுதாச்சா அகிலா நாகா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ர அர்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி ஸாம்ய பண்டித ந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-128———2 திரு நாமங்கள்

முதல் 6-ஞானம் பலம் -சங்கர்ஷணனுக்கு –
அடுத்த 4 சங்கர்ஷணன் -ஸம்ஹாரம்
அடுத்த 2-ப்ரத்யும்னன் -ஸ்ருஷ்ட்டி
அடுத்த 4-அநிருத்தன் -ஸ்திதி
அடுத்த 8 -வாசுதேவன்

———-

124- ஸ்ர்வக –
எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது

தாரண ஸாமர்த்தய லக்ஷணேந பாலேந ஆத்மவத் தாரயன் ஸம் ஹ்ருதான் ஸர்வான் கச்சதீதி
ஸர்வக
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த ஷு ட
ஏவம் ஸங்கர்ஷணாத் தி ஸங்கர்ஷணம் நாம நிருச்யதே —அஷ்டாத்யாயீ -3-2-48-–செல்லுதல் என்ற பொருள் கொண்ட கம் என்பதன் பின் ட என்பதை இணைத்துக் கொள்கிறது -எப்போது என்றால்
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த -போன்ற சொற்களுடன் கூடும் போது ஆகும் –

கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
தாரண சாமர்த்தியம் -பலம் –சங்கர்ஷணன் -556-
அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று உயிர் படைத்தான் -4-10-1-
தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –

சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் -சம்ஹரிக்கப்பட்டவை எல்லாவற்றையும் தம்மிடம் வைத்துத் தாங்கும் வன்மை
இது கீழ் சொல்லிய ஞானத்துக்கு முக்கிய அங்கம் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆத்ம வடிவில் அனைவரையும் சென்று அடைபவன்
சங்கர்ஷம-556-அவன் தன்னில் அனைவரையும் வரவழைக்கிறான் என்றபடி

காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -கார்யமாதலால் காரணங்களில் எங்கும் வியாபித்து இருப்பவர் -சங்கரர் –

எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வகயா நம

————

ஓம் ஸர்வகாய நம:

ஸர்வத்ர எங்கும்

கச்சதீதி செல்வதால்

ஸர்வக: பகவான் ‘ஸர்வக’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்

வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்

ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் ‘ஸர்வக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

சர்வகா 

‘சர்வகா‘ என்றால் அனைவரையும் சென்றடைபவன் என்று பொருள். ‘சர்வத்ர கச்சதி இதி சர்வ-கா‘ என்றால் எல்லாவற்றையும் வியாபித்திருப்பவர் அல்லது எங்கும் செல்பவர். பகவான் அனைவரையும் சென்றடைகிறார், எல்லா இடங்களிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் அதை மேலும் விளக்குகிறார், ‘காரணத்வேன வியாப்தத்வாத் சர்வத்ரா – அவர் எங்கும் இருப்பது அவர் எல்லா இடத்தையும் ஆக்கிரமித்ததன் விளைவு.

நாராயண ஸூக்தம் சொல்வது போல் – ‘அந்தர் பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடங்களிலும் உறுதியாக நிற்கிறார்.’

தனது சம்கர்ஷண வியூகத்தில் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.


125- ஸர்வ வித் –
எல்லாவற்றையும் அடைபவன் –ஸ்ருஷ்டிக்க -ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யுமனுக்கு -இதில் ஐஸ்வர்யம் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்

அதஸ் ஸம் ஹ்ருதான் ஸிஸ்ரு ஷு –ப்ரத்யும்ந –ஸர்வ கார்ய விந்ததி ஸ்ருஷ்டயா லபதே இதி
ஸர்வ வித்
இதமத்ர ஜகத் க்ரியா ஸ்க்த் யுல்லாஸ ரூபம் ஐஸ்வர்யம்

யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –சர்வ வித் -ஞான பூர்த்தி

நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7–

சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியா சக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம்-மற்றும் பலம்-வீர்யம் -கூறப்படுகிறது -விசித்திரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை இங்கு கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி இருப்பவர் -ப்ரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -எல்லா இடங்களிலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி பிரகாசிப்பவர் -சங்கரர் –

அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வ வித் நம

————

ஓம் ஸர்வவித்பானவே நம:

ஸர்வம் அனைத்தையும்

வேத்தி அறிவதனாலும்

விந்ததீதி வா அடைவதனாலும்

ஸர்வவித் பகவான் ‘ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார்.

பாதீதி பானு: ஒளி வீசுவதால் ‘பானு’ என்று அழைக்கப்படுகிறார்.

தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்’ (கதோபநிஷத் 2.2.15)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).

இத்யாதிஸ்ம்ருதேஸ்சஇத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும்

பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும்

ஸர்வவித்பானு: பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

சர்வ-வித்

சர்வவித்‘ என்றால் அனைத்தையும் அறிந்தவர் என்று பொருள். ‘சர்வம் வேத்தி விந்ததா இதி வா சர்வ-வித்‘ – அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் பெறுபவர். முதல் விளக்கத்தில், பகவான் அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் அறிந்தவர். அவர் உள் ஆன்மா.

சர்வவித்தின் மற்றொரு விளக்கம் என்னவென்றால், அவர் ‘பிரத்யும்னா’ என்ற செயல்பாட்டைச் செய்கிறார் மற்றும் ‘சம்கர்ஷனா’ வடிவத்தில் தன்னுள் உறிஞ்சப்பட்ட அனைத்து ஜீவாக்களையும் மீட்டெடுக்கிறார் அல்லது பெறுகிறார்.


126-பாநு-
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்

வீர்யம் -ஸுர்யம் -பராக்ரமம்
தனக்கு விகாரம் இல்லாமல் செய்வதே வீர்யம்-நித்ய நிர்விகார தத்வம்

ஸர்வ நிர்மாணே அப் யவி குர்வாணோ பாதீதி
பாநு

உணாதி ஸூத்ரம் –தா பாப் யாம் நு –ஒளிர்தல் என்னும் பொருள் கொண்ட பா என்பதுடனும்
அளித்தல் என்னும் பொருள் கொண்ட தா என்பதடுடனும்
நு என்பது சேர்க்கிறது

ஸ ஏஷ ஸ்வயம் உத்வபவ் –அவன் தானாகவே ஒளிர்கிறான்

இதம் அவிகார ஆகாரம் வீர்யம் –தனது வீர்யம் காரணமாக மாறுபடாமல் உள்ளான்

வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் பானுவே நம

————

பானுஹ்

பானுஹ்‘ என்றால் பிரகாசிப்பவன் என்று பொருள். ‘பாதி இதி பானுஹ்‘ – அவரது படைப்பு மற்றும் பராமரிப்பு இருந்தபோதிலும், அவர் மாறாமல் இருக்கிறார் மற்றும் குறையாமல் தொடர்ந்து பிரகாசிக்கிறார். பகவத் கீதையில் (அத்தியாயம் 15, சுலோகம் 12) பகவான் கூறுகிறார், ‘யதாதித்ய கடம் தேஜஹ் ஜகத் பாஷயதே அகிலம் யத் சந்திரமஸி யத் ச அக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம்‘ சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பின் பிரகாசம் எனது முழு பூமியையும் ஒளிரச் செய்கிறது. அவற்றில் இருப்பு.

127-விஷ்வக்சேன
யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்-அவன் எஜமானனுடன் உள்ளதால் சேனன் ஆகிறான்

அநிருத்தன் -சக்தி- தேஜஸ் -ஜகத் ரக்ஷணம்-இரண்டும் வேண்டுமே –

அத ஸ்தாபகோ –அநிருத்தோ–
விஷ்வக் ஸேந
இநேந ஸ்வாமிநா ஸஹ வர்தத இதி ஸேநா (தலைவர் உடன் கூட இருப்பதால் சேனா )-ஸேஸ் வரேதி
யாஸ்க
அநேந ரக்ஷக வந்தோ ஜந்தவோ விஷ் வஞ்சோ -அஸ் யேதி
இயமத்ர ஸாமர்த்ய ஸரீரா ஸக்தி

ரஷிக்க சேனை உடையவன் –
அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –

எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -எதையும் ரக்ஷிக்கும் திறம் –இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுர சேனை சிதறி ஓடும்படி செய்தவர் -தன்னுடைய யோக சக்தியால் செய்பவர் -சங்கரர் –

பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் விஷ்வக் ஸேனாய நம

————

ஓம் விஶ்வக்ஸேனாய நம:

விஶ்வக் அவ்யயம் ‘விஶ்வ’ என்ற சொல்லிற்கு

ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள் |

விஶ்வ எங்கும்

கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று

தைத்யஸேனா அஸுரப் படைகளை

யஸ்ய எவர்

ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்

விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வ’ என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்


விஷ்வக்-சேனா

‘விஷ்வக்-சேனா’ என்றால் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக எல்லா திசைகளிலும் தனது படையை வைத்திருப்பவர் என்று பொருள். வைஷ்ணவ மரபில் விஷ்வக்சேனர் என்பது மகாவிஷ்ணுவின் படையின் உச்ச தளபதியின் பெயர். இந்த நாமம், தேஜஸ் மற்றும் சக்தி ஆகிய இரண்டு குணங்களைக் கொண்ட பாதுகாவலரான அநிருத்த வியூஹாவைக் குறிக்கிறது.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் இரண்டாவது பூர்வாங்க சரணம் கூறுகிறது:

யஸ்ய த்விரதா வக்த்ராத்யாஹ் பரிஷத்யாஹ் பரஸ்ஶதம்
விக்னம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேநம் தமாஶ்ரயே’

ஒருவரின் பாதையில் இருந்து தடைகளை அகற்ற அழைக்கப்படுவதால், இது விஷ்வக்சேனருக்கு ஒரு அஞ்சலி. இந்த நாமம் அவனுடைய சக்தி அல்லது அவனது திறனைக் குறிக்கிறது. அனிருத்தன் என்றால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதவன் என்று பொருள். இந்த நாமம் இறைவனின் குணத்தையும் குறிக்கிறது, அதன் மூலம் அவர் தனது பக்தர்களைக் காக்க எப்போதும் இருக்கிறார்.

திரௌபதி, பிரஹலாதா, கஜேந்திரன், அம்ப்ரீஷ் போன்றோரின் பக்தர்களின் அழைப்பை அவர் காப்பாற்றுகிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர், எதிர்க்கும் அசுரப் படையை போரில் எங்கும் ஓடச் செய்ததால், பகவான் விஷ்வக்சேனர் என்று அழைக்கப்படுகிறார் என்று விவரிக்கிறார்.


128-ஜனார்த்தன –
விரோதிகளை சம்ஹரிப்பவன் –தேஜஸ் -சொல்லும் -பராபிபவன சாமர்த்தியம்

வற்கலா ஜனார்த்தன பெருமாள் -ஜனி பிறப்பை அளிக்கும் ஜனார்த்தனன்-

ரஷா ப்ரதி பஷான் ஜநான் அநபேஷோ அர்த்தயதீதி
ஜனார்த்தந-

தஸ்யு த்ராணாத் ஜனார்த்தன -உத்யோக பர்வம்–71-6- –தீயவர்கள் இடம் ரக்ஷிப்பதால் ஜனார்த்தனன்
இதன் மூலம் யாருடைய உதவியும் இன்றி எதிரிகளை அளிக்கும் தேஜஸ் சொல்லப்படுகிறது

இதம் அநபேஷா லக்ஷணம் –தேஜஸ்
ப்ரதி மூர்தி குணா நாம் வ்யவஸ்தேயம் இயதாம் ஆவிஷ் காராத்
பகவதஸ் ஸர்வத்ரா நாவரண குணத்வாத் —

மூலே ஹி ஸ்ரூயதே–ஞாநேந ஐஸ்வர்யேன சக்த்யா (முதல் மூன்றையும் சொன்னது அடுத்த மூன்றுக்கும் உப லக்ஷணம் )இதி சர்வே பகவத அநூநா பூர்ணா –மூல ஸம்ஹிதை -பூரணமான ஞானாதி குணங்கள் கொண்டவன்

இதி ஏஷ ஆத்மா சதுர்வித
ஸர்வஞ்ஞ-ஸர்வ தர்சீ ஸர்வேஸ்வர ஸர்வ ஸக்திஸ் ஸம் ருத்தி மான் வா அக்ரன் திர நூந ஆப்தோ வஸீ ஸ்வாதீநோ அநாதி ரநந்தோ
வ்யபகத (ஒழிக்கப்பட்ட )நித்ரா பய க்ரோத தந்த்ரோ வ்யபகதேச்சா தம க்லம வியாதிர் நிர்தோஷா நிர நிஷ்டோ நிரவத்யோ யே பகவந்தம் வாஸூ தேவ மேவம் விது
ந தே விதுரிதி பகவான் வாஸூ தேவோ அநந்த ஏவ அபரிமிதோ அனந்தத்வேந அபரிமிதத்வேந பவதி(
முடிவற்ற அளவற்ற )-இதி ப்ரதி பர்யாயம் 

தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-

மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –

அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஜனார்த்தனாய நம

————

ஓம் ஜனார்தனாய நம:

ஜனான் துர்ஜனான் ‘ஜன’ என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்

அர்தயதி ஹினஸ்தி அவர்களை ‘அர்தனம்’ செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார்

நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை

அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக

நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த

யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

ஜனார்தனா

ஜனார்தனா என்ற நாமத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு.

  •   தீயவர்களை அழிப்பவர்;
  •   பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்காக அணுகுபவர்; மற்றும்
  •   துன்மார்க்கரிடமிருந்து பக்தர்களைக் காப்பவர்.

ஸ்ரீ ஆதி சங்கரர் பின்வரும் இரண்டு விளக்கங்களைத் தருகிறார்.

  •  முதல் விளக்கம் – தீயவர்களை அழிப்பவர். ‘ஜனன் துர்ஜனான் அர்தயாதி ஹினஸ்தி நரகாதீந் கமயதி இதி வா ஜனார்தனஹ் – தீயவர்களை அழிப்பவன் அல்லது அவர்களை நரகத்திற்குத் தள்ளுபவன்.’ பேய்களை வெல்ல அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை.
  • மற்றொரு விளக்கம் ‘அர்ட்’ என்ற மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது, இது பிச்சை எடுப்பது, கேட்பது – கதௌ யசநே ச ஜனைஹ் அர்த்யதே யச்யதே – தம் பக்தர்கள் எதைப் பெற விரும்புகிறாரோ அதை அணுகுபவர்.

ஸ்ரீ பராசர பட்டர் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி மூன்றாவது அர்த்தத்தை தருகிறார்.-‘தஸ்யு-த்ரானாத் ஜனார்தனா ( உத்யோக பர்வா 71.6) – தஸ்யுஸிலிருந்து (பேய்கள்) மக்களைப் பாதுகாப்பதால் அவர் ஜனார்தனா ஆவார்.’-

பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் பிரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப்பட்டு இருந்தாலும்
அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்து உரைத்தது-

——–

174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
178-மஹாத் யுதி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –

174-மஹாபல-
மிக்க வலிமை உடையவன் –

ஸஹாய அபேஷ கர்த்ரந்தர வ்யாவர்தகம் மஹத்₃ப₃ல மஸ்யேதி –
மஹா ப₃ல ।
அநேந ஹ்யய மபரிமித க்ரியோ(அ)ப்ய அநாகலித ஶ்ரம꞉ ஸ்வே மஹிம்நி திஷ்ட₂ன் அவதீ₄ரிதாத் –
ஆ₄ராந்தரோ து₃ர்வார வ்யாபார ஸந்தத ஸக்தி ஸமுல்லாஸ꞉
ஸரீரமிவ ஸகலம் பி₃ப₄ர்தி ।
*ப₃ஹுல யன் ப₃ஹு ம், இதி ச மௌல ꞉ ।
ஏதல் லேஸோ ஜீவந ஸமீரண- கி₃ரித₄ராதௌ₃ ॥(தண்ணீர் காற்று மண் மலை இவனது பலத்தில் ஏக தேசத்தால் தாங்கும் வலிமை கொண்டதாகும் )

பஹு ளயன் பஹுளம் –மவ்ல ஸம்ஹிதை –பல பொருள்களையும் உண்டாக்கி என்றபடி

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் -திறம்பாமல் மலை எடுத்தேன் என்னும் -திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் என்னும் -5-6-5-

வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———

ஓம் மஹாபலாய நம:

பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 

பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 

மஹாபல: பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——

மஹாபலா – அளவிட முடியாத வலிமை கொண்டவர் – சர்வ வல்லமை படைத்தவர்

ஸ்ரீ ஆதி சங்கரரின் வியாக்கியானம் “பலிநமபி பலவத்வத் மஹாபலஹ் – அவர் வலிமை மிக்கவர்களை விட வலிமையானவர் என்பதால் மஹாபலஹ் என்று அழைக்கப்படுகிறார். உண்மையில் அவர் அனைவருக்கும் பலத்தின் ஆதாரமாக இருக்கிறார். கீதை (7.11) சொல்வது போல் ‘பலம் பலாவதாம் சாஹம் – நான் வலிமையானவர்களின் பலம்’.

இந்த குணத்திற்கு பல உதாரணங்களைத் தருகிறார். மகாபலியை வெல்வதற்காக ராவணன் பாதாள லோகம் சென்றான். மகாபலியின் வாயில் காப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பகவான், தற்காலிகமாக தன்னை கண்ணுக்கு தெரியாதவராக ஆக்கிக் கொண்டார். நரசிம்ம பகவானால் வதம் செய்யப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதில் இருந்து விழுந்ததால் வீட்டு வாசலில் கிடந்த ஹிரண்யகசிபுவின் குண்டலத்தை ராவணன் நகர்த்த முயன்றான்.ராவணனின் கைகள் குண்டலத்தின் கீழ் சிக்கியது. பகவான் காட்சியில் தோன்றி, முயற்சியின்றி ராவணனை உதைக்க ராவணன் வெகுதூரம் பறந்து சென்றான்.

175-மஹா புத்தி –
எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –

அஸவர்ஜ்ஞ காரணமத வ்யவச்சே₂த₃மாஹ – மஹத் ஜ்ஞாநமஸ்யேதி
மஹா பு₃த்₃தி₄꞉ ।
இத₃ம் சாஸ்ய அசேஷ தேஸ கால ஸ்வ பாவ –விப்ரக்ருஷ்ட அவிப்ரக்ருஷ்ட விஷயம் ஸார்வஜ்ஞாத்-(மிச்சம் இல்லாமல் தேச கால வஸ்து இவற்றால் கட்டுப்படாத ஞானம் )
அவிஸய விபர்யா ஸதயா யதா₂ர்த₂ம்,-(உள்ளவற்றை உள்ளபடி அறிந்த ஞானம்)
க்லேஸ கர்ம விபாகா ஸயாத்₃ யபராமர்ஸாத் –ஸ்வ பா₄விகத் வாந்-(இயற்கையாகவே) -நித்யம் ச சக்ஷுராதி₃கரண நிரபேக்ஷம்
ச தத₃பேக்ஷம் ச ஸ்வாதந்த்ர்யேண, (ஸ்வ தந்த்ர ஸங்கல்ப சக்தியால் )புண்ட₃ரீகாக்ஷத்வ(ஆனாலும் தாமரைக் கண்ணன் -நாம் அனுபவிக்க-ஸாஸ்த்ரத்தால் திருத்த ஒண்ணாத நம்மை வைமுக்யம் மாற்றி -ஈடுபாடு உண்டாக்கி -உபாயமாகக் கொடுத்து -உபாயமாகப் பற்றினார்க்கு போக்யமாய் இருக்குமே  )ஸூசி ஶ்ரவஸ்த்வாதே ₃꞉ ।
ந ச ரூப ரஸாதி₃க்₃ரஹணே கரண நியம:, ஸர்வேண ஸர்வ கார்ய ஸக்தே (எல்லாப் புலன்களாலும் எல்லாம் அனுபவிப்பான் )꞉ ;
ஸர்போ (அ)பி ஹி திர்யக்ஷு சக்ஷுஷைவ பஶ்யதி ஶ்ருணோதி ச
கத₂மித₃ம் ஸர்வ ஸக்தே ꞉ து₃ஶ்ஸகம் ?

யதோ₂க்தம் ஜயாயாம்,
* ஸர்வத꞉ ஶ்ருதி மாம்-ஶ்சாஸௌ யதா₂ த்₃ருக்  ச்₂ராவ கோரக₃꞉ இதி ।
கர தல ஆமலக விலோகதவத் அபரோக்ஷம் ச வைஸைத்₃யாத், அமோக₄ம் ச ஸர்வ நிர்வஹணாத்(வீணாகாத ஞானம்-அனைத்தையும் நிர்வஹி க்கிறானே  )।

யதா–விஸ்வதஸ் சஷு உத விஸ்வதோ முக –தைத்ரியம் நாராயண வல்லி -1-12-
அவன் கண்களையும் முகத்தையும் எங்கும் கொண்டவன்

பஸ்யதி அசஷு ச ஸ்ருணோதி அ கர்ண–ஸ்வேதாஸ்வரா -3-19- கண்கள் உதவி இன்று காண்கிறான் -காதுகள் உதவி இன்றி கேட்கிறான்

ஸர்வதா அஷி ஸீரோ முகம் –ஸ்ரீ கீதை -13-13-எங்கும் கண்களும் தலையும் முகமும் உள்ளது

ஆஹுஶ்ச நாத₂முநிமிஶ்ரா꞉, –யோ வேத்தி 1-யுகபத் 2-சர்வம் 3-ப்ரத்யஷேண 4-சதா 5-ஸ்வத இதி (பல விசேஷணங்கள்)।
யத் கேசித் ஸர்வஜ்ஞமவஜஜ்ஞிரே ,–நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

எந்த ஹரி அனைத்தையும் ப்ரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறானோ

பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

ஸர்வஞ்ஞனான இவனை ஏளனம் பண்ணும் தொனியில்
ஏகே து ப்ரமாணேந சர்வஜ்ஜோ யேந கல்ப்யதே நூநம் ஸ சஷுஷா சர்வன் ரஸாதீன் ப்ரதிபத்யதே
ஒரு பிரமாணத்தின் மூலம் மட்டுமே அனைத்தும் அறிந்த ஸர்வேஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்று
அறிய முடிகிறது என்றால் அப்படிப்பட்டவன் தனது கண்கள் மூலமாகவே ருசி பார்ப்பது மற்றும்
இதர இந்திரியங்களை செய்யும் செயல்களை செய்பவன் என்று கொள்ளலாம் என்றும்
மேலும்

இதி, தத்₃
பவ் ₃த்₃தா₄த்₃ யநுமித ஸர்வஜ்ஞ விஷயம் (அனுமானத்தால் புத்த மத சர்வஞ்ஞத்வம் ); தத் ப்ரகரணாத், அந்யதா₂ ஸாஸ்த்ர விரோதா₄ச்ச ।
நித்யஸ் சேத அர்த்த வாதத்வம் தத் பரே ஸ்யாத் அநித்யதா 
ஸர்வேஸ்வரன் நித்தியமாக உள்ளவன் என்பது புகழ்ச்சிக்காகவே
அர்த்தவாதம் என்றால் அவன் நித்யன் அல்லன் ஸர்வஞ்ஞன் என்பவை இல்ல என்றதாகும் –

இதி ஸாஸ்த்ரீய
ஸர்வஜ்ஞத்வ வ்யுதா₃ஸநம் அத ஏவ அந்ய பரோக்தம் து₃ருக்தம் வா ;
சக்ஷு꞉ஶ்ரவ ꞉- ப்ரப்₄ருதிஷு காக உலூக க்₃ருதா₄தி₃ஷு(கழுகு கூர்மை கண் -காகம் ஏக கண் போல் )மந்த்ர ஸித்₃தௌ₄ஷத₄தப ꞉ ப்ரபா₄வாதி₃ஸம்ஸ்க்ருதேஷு ச கரணாநாம்
ஜ்ஞாந கார்ய வ்யதிஹார தந்த்ர தாப்ர கர்ஷ தாரதம்ய த₃ர்ஸ நாத் ;
ஸார்வஜ்ஞய ஸாஸ்த்ரஸ்ய அயோக்₃யார்த₂தா(அ)பி து₃ர்வதா₃ ।(இது தவறே ஆகும் -)

கு₃ணாந்தர வைசித்ரயே(அ)ப்யேஷைவ தி₃க் ।
அஸ்ய லவோ (சிறிய பகுதியாலேயே-சுடர் ஞான இன்பம் அன்றோ இவன்  )ப₃த்₃த₄முக்த நித்யேஷு சைதந்யம் ॥

எக் காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்லிக்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ஹரி அனைத்தையும் பிரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறான் –
நாகங்கள் கண்களாலே கேட்டு -காகம் ஒரே கண்ணால் காண்பது -ஆந்தை இரவில் காண்பது -கழுகு தூரத்தில் இருப்பதை காண்பது
நித்யர்களுக்கு உள்ள ஞானமும் இவனது ஞானத்தில் ஒரு அணு அளவே

ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாபுத்தயே நம:

புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும்

புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால்

மஹாபுத்தி:பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

மஹாபுத்தி – எல்லையற்ற அறிவை உடையவர்.

ஸ்ரீஆதிசங்கரர் இந்தச் சொல்லை ‘புத்திமாதம் அபி புத்திமத்வாத் மஹாபுத்திஹ் – அவர் கூர்மையை விட அறிவில் கூர்மையானவர்’ என்று விளக்குகிறார்.

பகவத் கீதை அத்தியாயம் 7 வது 10வது வசனத்தில், ‘புத்திர் புத்திமாதம் அஸ்மி – நான் புத்திஜீவிகளில் இருக்கும் புத்தி’ என்று பகவான் கூறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அவர் மஹாபுத்தி என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருடைய அறிவு அவரது புலன்களையோ அல்லது வெளிப்புற உதவியையோ சார்ந்து இல்லை.

புலன் உறுப்புகள் எதுவும் தேவையில்லாமல் அவர் ஒரே நேரத்தில் பார்க்கிறார், கேட்கிறார் மற்றும் உணருகிறார். இது போன்ற ஸ்ருதிகளின் பல பகுதிகள் ஆதரிக்கின்றன

  • விஷ்வதாஷ்சக்ஷுருதா விஷ்வதோமுகஹ் – எல்லாப் பக்கங்களிலும் கண்களையும், எல்லாப் பக்கங்களிலும் முகங்களையும் உடையவன் (தைத்ரிய நாராயண உபநிஷத் 1.12). பகவான் தனது அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தியாகும், எனவே அவர் மொத்தத் தொகையான மகாபுத்தி.
  • பஸ்யாத்_யசக்ஷு ச ஸ்ருநோதி அகர்ணஹ் – அவர் கண்கள் இல்லாமல் பார்க்கிறார் மற்றும் காதுகள் இல்லாமல் கேட்கிறார் (ஸ்வேதாஸ்வர உபநிஷத் 3.19);
  • ஸர்வதோக்ஷி சிரோமுகம் – அவருக்கு கண்கள், தலைகள், வாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன (பகவத் கீதை 13.13).

ஆச்சார்ய நாதமுனி கூறுகிறார் – ‘யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேந ஸதா ஸ்வதஹ் – அவர் நேரடியாகப் புலனுணர்வு மற்றும் அவரது விருப்பத்தின் மூலம் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்’ (நியாயதத்வா). பெயர் உருவான தாது வார்த்தை ‘புத்த ஞானே’ என்பது அறிவது, புரிந்துகொள்வது. பகவான் அவருடைய அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தி ஆவார், எனவே அவர் மகாபுத்தி ஆவார்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளின் நடத்தையும் அவர் அவற்றில் முதலீடு செய்த அறிவைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்தந்த நிலைகளிலும் சுற்றுப்பாதைகளிலும் நிலைநிறுத்தப்படுவது, பகவானின் மகா புத்தி அல்லது செயலில் உள்ள மகாபுத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நான்கு அந்த கரணங்களில் அல்லது மனிதனின் உள்ளார்ந்த திறன்களில் புத்தி மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டுகிறார். ‘அஹம்காரம்’ (ஈகோ) எடுத்துச் செயலைச் செயல்படுத்துவதற்கு முன், ‘சித்தம்’ (சிந்தனை) வழங்கிய அனைத்து முந்தைய அனுபவங்களின் நினைவுகளையும் கணக்கில் கொண்டு, ‘மனஸ்’ (மனம்) வழங்கிய விருப்பங்களுக்கு இடையே புத்தி தேர்வு செய்கிறார். புத்தி மோசமான தேர்வு செய்தால், அது அல்ப புத்தி அல்லது அற்ப புத்தியின் அடையாளம். புத்தி எப்பொழுதும் உன்னதமான விருப்பங்களைச் செய்தால், அது மஹாபுத்தியாகும், அதைத்தான் பகவான் உருவகப்படுத்துகிறார்.


176- மஹா வீர்ய –
மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

த₃தி₄பா₄வம் ஆபத்₃ய மாந து₃க்₃தா₄தி₃காரணேப்₄யோ (பால் தயிர் ஆவது போல் )பே₄த₃கம் ஸத்யபி ஹேது அவிகார லக்ஷணம் மஹத்₃ வீர்ய மஸ்யேதி
மஹாவீர்ய ꞉ ।
அக₃ரு ம்ருக₃மத₃ கஸ்தூரிகா- குஸும் ஆமோத₃வத் ஸம்நிதி₄மாத்ரேண நிர் மர்யாத₃கார்ய காரீ ஹ்யயம் । யதா₂

தஸ்ய சந்நிதி மாத்ரேண கந்த ஷோபாய ஜாயதே -மனசோ ந உப கர்த்ருத்வாத் ததா அசவ் பரமேஸ்வர —
நறு மணம் என்பது மனிதனின் அருகில் உள்ள போது அவனை இழுக்கிறது
இதே போல் எம்பெருமான் கஷ்டப்படாமல் சங்கல்பத்தாலே செயல் புரியுமவன்-

இந்தத் திறனில் ஓர் அனுவின் அளவு அவர்களிடம் உள்ளதால் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் உள்ளனர் –

இதி-ஏதத₃ணுர் யோகீ₃ஶ்வர ப்ரம்ருதிஷ்வஷு அப்₄யத்வம் (இவனது வீர்ய லேசத்தால் யோகிகள் )॥

பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் கரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாவீர்யாய நம:

மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)

உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான

அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்

வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான ‘வீர்யம்’ ஆதலால்

மஹாவீர்ய:பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————-

மஹா வீர்யா – மகத்தான சக்தி கொண்டவர்

அவர் மஹாவீர்யா, ஏனென்றால் அவர் காலப்போக்கில் மாறும் எல்லாவற்றையும் போல மாறாமல் இருக்கிறார். மலர்கள் எந்த முயற்சியும் இல்லாமல் தங்கள் சுற்றுப்புறங்கள் அனைத்திற்கும் நறுமணத்தை கொடுப்பது போல், பகவான் தனது அனைத்து செயல்களையும் சிறிய முயற்சியுடன் செய்கிறார், இது அவரது வீரியத்தின் அறிகுறியாகும்.

ஸ்ரீஆதிசங்கரர் கூறுகிறார் – ‘ஜகதுத்பத்தி காரணம் அவித்யாலக்ஷணம் வீர்யம் அஸ்ய இதி மஹாவீர்யஹ் – இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்குப் பின்னால் உள்ள அறியப்படாத சக்தி, பகவானின் அதீத வீரியத்திற்கு ஆதாரமேயன்றி வேறில்லை.

வீரியம் என்பது அனைத்து சுறுசுறுப்பு அல்லது படைப்புத் தூண்டுதலின் சாராம்சம் என்றும், படைப்பிற்கான அனைத்து ஆற்றல்களும் அவரிடமிருந்து மட்டுமே வெளிப்படும் உந்து சக்தியாக இருப்பதால் அவர் மகாவீர்யா ஆவார்.

எவ்வளவு கடினமாக இருந்தாலும் தன் குறிக்கோளை அடையும் குணம் வீரியம் என்று  விளக்குகிறார்கள். பகவானின் முதல் சாதனை, பிரகிருதி அல்லது ஆதிப் பொருளில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது, அவருடைய வீரியத்தின் விளைவாகும்.

தர்மச் சக்கரத்தில் உள்ள வியாக்கியானத்தில், வீரியம் அல்லது படைப்பாற்றல் கொண்ட ஒருவர், இந்த படைப்பாற்றலை மற்ற அனைவரின் நலனுக்காக கடத்த இந்திரியங்களின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பகவான் ஒருவரே மஹா வீர்யர் என்று அழைக்கப் படுவார்.


177-மஹா சக்தி –
மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

பஸூ பதிமதாவக₃தாே ந ஸக்தி விகல நிமித்த மாத்ர வ்யாவர்திகா மஹதீ।
ஸக்திரஸ்யேதி
மஹா ஸக்தி꞉ ।(பாசுபத நிரசனம் -நிமித்த மாத்திரம் என்பர் -தான் உலகம் ஆகாது என்பர்-உபாதான காரணமாகவும் உள்ள மஹா சக்தி -செய்தேனும் ஆவேனும் யானே என்னும்  )
ஸா ஹி ஸாத₄ந க்₃ராம விநியோக₃ லக்ஷணா ஸ்வ ஸரீர ஏகதேஸ –
ஶீக்ருத ப்ரக்ருதி பரிணாம யோக்₃யதா லக்ஷணா ஸத்யா (அ)ஸத்யா வா ஸாமக்₃ரயா
ஸர்வதா₃ ஸர்வ ஸம்பாதி₃நீ ।
ஊர்ணநாபி₄ப்ரப்₄ருதே ꞉ கீடஸ்யாபி நிமித்தஸ் யைவ உபாதா₃நா –
ஸக்திர் அதர்க்யா , கத₂மியம் ஸர்வஜ்ஞ ஸக்திஸ் தர்க்யா ? அஸ்யா விப்ருட் ப்ரதா₄ந த₃தி₄- து₃க்₃தா₄தௌ₃ ப்ரதி க்ஷண பரிணாமித்வம் ॥

தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாஶக்தயே நம:

மஹதி சிறந்த

ஶக்திஸாமர்த்யம் ‘ஶக்தி’ அல்லது திறமை உடையவர்

அஸ்யேதி எனவே

மஹாஶக்தி:பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், ‘ஶக்தி’ என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————

மஹாசக்தி – அவர் உலகத்தின் காரணம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அடிப்படை அர்த்தத்தை விவரிக்கிறார், ‘மஹாதீ சக்தி: சாமர்த்யம் அஸ்ய அஸ்தி இதி மஹாசக்தி: அவர் மஹாசக்தி, ஏனென்றால் அவர் செயல்படும் ஆற்றலுடன், அத்தகைய செயல்களுக்குத் தேவையான திறன்களைக் கொண்டவர்.

ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார், மகாசக்தி என்ற நாமம் பகவான் இந்த உலகத்திற்கு வெறும் உணர்வு காரணமல்ல, ஆனால் இந்த உலகத்திற்கு ஜடக் காரணமும் கூட, அதாவது, அவர் படைப்பின் மூளை மட்டுமல்ல, அவரே காரணமும் ஆவார். இது பிரகிருதியிலிருந்து இந்த உலகத்தை உருவாக்கியது.

கிரியா சக்தி (செயலின் சக்தி), இச்சா-சக்தி (ஆசையின் சக்தி) மற்றும் மூன்று சக்திகளின் தொடர்புக்கு காரணமானவர் என்பதால் அவர் மகாசக்தி என்று குறிப்பிடுகிறார். ஞான சக்தி (அறிவின் சக்தி). இந்த மூன்று சக்திகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் செல்கின்றன.

ஒரு சிலந்தி தனக்குள்ளிருந்து வலையை உருவாக்குவது போல, இறைவன் தனக்குள் இருந்து உலகைப் படைக்கிறான்.

முந்தைய நாமத்தின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டபடி, அவர் உலகின் நன்மைக்காக வலிமை மிக்க சக்தியைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்த சக்தியின் ஒவ்வொரு நிகழ்வும் அவருடைய மகாசக்தியை நமக்கு நினைவூட்ட வேண்டும்


178-மஹா த்யுதி –
மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்—பர நல் மலர் ஜோதி -ஜோதியாய் ஜோதி கீழ் உபாதான காரணத்வம் -இதில் சஹகாரி காரணத்வம்

ஸஹ கார்யபேஷா காரண வை லக்ஷண்ய கரம் தத₃ந பேக்ஷா லக்ஷணம் தேஜோ மஹத₃ஸ்யேதி
மஹாத்₃யுதி꞉ ।
யத் பா₃ஹ்யாந்தர தமோ விரோதி₄ ஸ்வ பர வர்க₃யோ꞉ க்ரமேண ரமணீயம் பீ₄ஷணம் ச ப₄வதி (அழகாகவும் பயங்கரமாயும் )।
அஸ்ய பி₃ந்து₃ர்  த்₄யு மணி மாணிக்யாதௌ₃ ப்ரகாஸ ꞉ ।

ஷட்ஸு சாமீஷு மஹத்த்வ விஸேஷேண (ஆறிலும் மஹத் அடைமொழி )நைதேஶே யத கு₃ணா꞉ கல யைவ பராவரம் கார்ய கலாபம் ப்ரவர்த்ய 
அஸேஷேண லப்₃தா₄மிஷா மஹோத₃தா₄விவ மஹௌகா₄ ப ₄க₃வத் யநந்தே மாந்தீதி நிவேத்₃யதே ।
அதி ப்ரதி₂தேயம் ப்ரகியா(மிகவும் பிரசித்தம் அன்றோ )

பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியா ச –ஸ்வேதாஸ்வர–6-8-
இவனுடைய சக்தி என்பது உயர்ந்ததும் பல விதமாகவும் காணப்படுகிறது
இவை இவனுக்கு இயற்கையாகவே உள்ளது
இப்படியாகவே இவனுக்கு ஞானம் பலம் ஸ்ருஷ்டிக்கும் திறன் போன்ற பலவும் உள்ளன

தேஜோ பல ஐஸ்வர்ய மஹா வபோத ஸூ வீர்ய சக்தியாதி குணைக ராசி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85-
தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் ஞானம் வீர்யம் மற்றும் சக்தி – ஆகிய பலவற்றுக்கும் இவனே இருப்பிடம் ஆவான்

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்சி அசேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-
தாழ்வான குணங்கள் என்பதற்கு எதிர்த்தட்டாகவும்
பூர்ணமாகவும் உள்ள ஞானம் பலம் சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்பதாகவும் உள்ள குணங்களே பகவான் என்ற பதம் மூலம் உணர்த்தப்படுகின்றது

இத்யாதௌ₃ ।
ப ₄க₃வச் சா₂ஸ்த்ராணி
காத்ஸ்ந்யேந இத₃மர்தா₂நி ।
ஏஷு ஷட்ஸ்வேவ ஸௌஶீல்ய வாத்ஸல்யாத₃யோ (அ)க₃ணித கு₃ணா꞉ கேநாபி ப்ரயோஜ(கே )ந அநந்தர் –
பா₄வ்யந்தே ॥

பகவத் ஸாஸ்த்ரம் இந்த பூரணமான ஆறு குணங்களும் இயற்கையாகவே இருப்பதையே காட்டும்
ஸுசீல்யாதி குணங்கள் இவற்றுக்குள்ளேயே அமைந்தவை –

173-தொடங்கி -178- வரை உள்ள ஆறு திரு நாமங்களிலும்
மஹா அடைமொழி –
எம்பெருமான் குணங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியே எத்தனை பெரிய செயல்களாக
இருந்தாலும் அல்பமாகவே முடிக்கும் படி ஆகும் என்பதைக் காட்டும்
பெரிய கடலில் நதி போலவே ஆகும் என்று காட்டும்

சோதியாய சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -திருச்சந்த -34-
பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
ஸூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது

இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

————

ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி மிகச்சிறந்த

த்யுதிர் ஒளி

பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும்

ச அஸ்யேதி உடையவராதலால்

மஹாத்யுதி:பகவான் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

ஜ்யோதிஶாம் ஜ்யோதி:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

மஹா த்யுதிஹ் – பெரும் தேகம் அல்லது பிரகாசம் கொண்டவர்

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘மஹாதீ த்யுதிஹ் பாஹ்யாப்யந்தரா ச அஸ்ய அஸ்தி இதி மஹாத்யுதிஹ் – அவர் அகத்திலும் வெளியிலும் மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவர்’ என்று வரையறுக்கிறார்.

இந்த நாமத்தின் தோற்றம் தாது த்யுத தீப்தௌ என்பதிலிருந்து பிரகாசிப்பது. த்யோததே இதி த்யுதிஹ் என்றால் பிரகாசிப்பவர் என்று பொருள். த்யுதி, த்யோதாயிதா வா த்யுதி – பொருட்களை பிரகாசிக்கச் செய்பவன் த்யுதி.

உபநிடதங்கள் அவரை ‘ஸ்வயம் ஜோதிஹ் – அவர் தனது சொந்த புத்திசாலித்தனத்தின் ஆதாரம்’ என்றும் ‘ஜோதிஷாம் ஜோதிஹ் – அவர் அனைத்து ஒளிகளையும் ஆற்றும் ஒளி’ என்றும் அழைக்கிறது. ‘தஸ்ய பாசா சர்வம் இடம் விபாதி – இங்குள்ள அனைத்தும் அவரது பிரகாசத்தால் பிரகாசிக்கின்றன’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார், இந்த நாமம் பகவானின் எந்தவொரு செயலுக்கும் வெளிப்புற உதவி தேவையில்லை என்பதை குறிக்கிறது, மேலும் அவரது தோற்றத்தில் உள்ள பெரிய தேஜஸ் (தேஜஸ்) இதை வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்திசாலித்தனம் நம்மில் உள்ள வெளி இருட்டையும் அக இருளையும் நீக்க வல்லது. சூரியனின் தேஜஸ் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளின் பிரகாசம் ஆகியவை இறைவனின் தேஜஸின் ஒரு சிறிய பகுதியாகும். இறைவனின் இந்த தேஜஸ் அவரது பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் அவரது எதிரிகளை மிகவும் பயமுறுத்துகிறது (நாம நரசிம்ம-வபுவின் விளக்கத்தை நாம் நினைவுகூரலாம், அவருடைய நரசிம்ம அவதாரத்தில் இந்த விஷயத்தை நாம் வலியுறுத்தினோம்). இதை ஆதரிக்கும் ஸ்ருதி குறிப்புகள்:

  • ஸ்வயம் ஜ்யோதிஹ் – அவரை பிரகாசிக்க வெளிப்புற வழிகள் தேவையில்லாமல் அவர் தூய்மையான பிரகாசமாக இருக்கிறார் (பிருஹதாரண்யக உபநிஷத் 4.3.9),
  • ஜோதிஷ்ஆம் ஜோதிஹ் என்றால் விளக்குகளுக்கு மத்தியில் ஒளி (முண்டக உபநிஷத் 2.2.9).

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மொத்தம் 43 பெயர்கள் ‘மஹா’ என்ற வார்த்தையில் தொடங்குவதாக சுட்டிக்காட்டுகிறார். இவற்றில், கடைசி ஆறு நாமங்கள் பகவானின் அதிபதி, வலிமை, அறிவு, வீரியம், சக்தி, பிரகாசம் ஆகிய குணங்களைக் குறிப்பிடுகின்றன. இந்த ஆறு குணங்களின் கலவையே பகவானை மஹாமாயா அல்லது அவரது விளையாட்டு அல்லது லீலா போன்ற அற்புதமான செயல்களைச் செய்பவராக ஆக்குகிறது.

இந்த உலகில் ஜொலிப்பவை அனைத்தும் அவருடைய பிரகாசத்தால்தான் –

யஸ்தே திவி ஸூர்யே மஹிமா ஸம்பபுவ|
தஸ்மை தே மஹிம்நே ப்ரஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா ||
யஸ்தே நக்ஷத்ரேஷு சந்த்ரமஸி மஹிமா ஸம்பபுவ |
தஸ்மை தே மஹிம்நே ப்ர்ஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா || (யஜூர் 23-2, 23-4)

இறைவனை வழிபடுவோருக்கு இயற்கையாகவே இந்த த்யுதியின் ஒரு பகுதி இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிறது என்பதை தர்மச் சக்கரம் விளக்குகிறது (முகம் என்பது மனதின் குறியீடு – அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் வாசகம்).

————-

227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –

227-விஸ்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து

தைஶ் ச தத் கார்ய ஜ்ஞாந க்ரியா ஸாமர்த்₂ய அநந்த்யம் லக்ஷ்யதே இத் யபி₄யுக்தா꞉ ;
ஔசித்யாத்₃ பஹு ஸாஸ்த்ர ஸங்க₃தேஶ்ச ॥
ஆப்₄யாம் ஜ்ஞாந ஸஹ நாப்₄யாம் விஶ்வ வ்யாபநாத்
* விஶ்வாத்மா; யதா₂

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா –புருஷ ஸூக்தம் —அனைத்து திசைகளிலும் பூமியை வியாபித்து

யேந ஏஷ பூத திஷ்டதி அந்தராத்மா –தைத்ரியம் –
யார் எங்கும் வியாபித்து உள்ளானோ அவனே அனைத்தின் அந்தர்யாமியாகவும் உள்ளான்

யேந ஸர்வம் இதம் ப்ரோதம் –தைத்ரியம்
ப்ரக்ருதி காலம் சம்சார ஜீவன் முக்த ஜீவன் மற்றும் நித்ய ஸூரிகள் பலருக்கும் இவனே அந்தராத்மா
அனைத்தும் இவனால் பரவப்பட்டு உள்ளன-ஆகியும் ஆக்கியும் -அவையுள் தனி முதல் அம்மான்

அஹமாத்மா குடாகேச ஸர்வ பூதா –கீதை -10-20-
சோம்பலை வென்ற அர்ஜுனா -அனைத்து உயிரிகளின் இருதயத்தில் நானே உள்ளேன்

உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

விஶ்வாத்மாபகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

விஷ்வாத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா
அவர் விஷ்வாத்மா, ஏனென்றால் அவர் தனது அறிவினாலும் பலத்தினாலும் முழு பிரபஞ்சத்தையும் வியாபித்துள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘விஸ்வஸ்ய ஆத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா‘ என்று விளக்குகிறார். உயிரற்ற பொருட்களை உயிருள்ள உயிரினங்களாக மாற்றும் முக்கிய சாரம் அவர். அவர் சர்வ வியாபி, எங்கும் இருப்பவர் மற்றும் சர்வ அந்தர்யமி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறார். அதனால்தான் சஹஸ்ரநாமத்தில் முதல் பெயர் விஸ்வம். அவர் பிரபஞ்சத்தை மைக்ரோகாஸ்மிக் மற்றும் மேக்ரோகோஸ்மிக் மட்டத்தில் அடையாளப்படுத்துகிறார்.

“அஹம் ஆத்மா குடாகேஷ ஸர்வபூதாஷாயஸ்திதா –10-20- அர்ஜுனா! நான் அனைத்து உயிர்களின் இதயத்திலும் வசிக்கும் ஆன்மா”.

நமது வெளித்தோற்றத்தில் உள்ள வேறுபாட்டையோ, எண்ணங்களில் உள்ள வேறுபாட்டையோ பார்க்காமல், எல்லா உயிரினங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை உணர்வதில்தான் இந்த நாமத்தின் உண்மையான முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்று தர்ம சக்கரத்தில் எழுதியவர் குறிப்பிடுகிறார். தோற்றம் அல்லது நம் எண்ணங்களில், காமம், க்ரோதா, லோபம், மோகம், மாதா மற்றும் மாத்சார்யம் மட்டுமே நம்மில் வளர்ந்து வளர்கின்றன. நம் உள்ளத்தின் பின்னால் உள்ள ஒற்றுமையைக் காணக் கற்றுக் கொள்ளும்போதுதான், அவருடைய தயாவைப் பெறத் தகுதி பெறுவோம்.

இதைத்தான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்கு உபதேசித்தார். ஒருவன் தன் மனைவியை நேசிக்கும் போது அவளுடைய தோற்றத்தை அல்ல, அவளில் உள்ள ஆத்மாவையே நேசிக்க வேண்டும். அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்.

—————————

454-சர்வஜ்ஞ -குறைவற்ற தன் மேன்மையை முற்றும் அறிந்தவர் –
455-ஜ்ஞானமுத்தமம் -பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அனைவரும் அறியக் காரணம் ஆனவர்

  • 454-ஸர்வஞ்ஞ-
    எல்லாமாகத் தன்னை அறிந்தவன்-ஞானம் உத்தமம் மேல் ஞானமாயும் –இங்கு ஞாதாவாகவும் -இருப்பவன் –ததா₂ ஸர்வாத்மநா(ஆ)த்மாநம் ஜாநாதீதி
    ஸர்வஜ்ஞ
    யுஞ்ஞானாம் ச ஸ்வமாத்மானம் பரஸ்மின் அவ்யயே பதே –
    அனைத்திற்கும் தான் ஆத்மாவாக அறிந்தும்
    தனது ஆத்மாவை அழியாத பரம பதத்துடன் இணைத்தும் உள்ளவன்இவர் சம்பந்தத்தால் தான் ஸ்ரீ வைகுண்டம் ஞானத்துக்கு தடுப்பே இல்லாமல் இருக்கும் கலங்காப் பெரு நகரம்கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -2-2-10-
    நிறைந்த ஞான மூர்த்தி
    மீண்டும் 821 வரும்தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –————
    1. ஓம்ஸர்வஜ்ஞாயநம:
    ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை————
  • சர்வஜ்ஞா – எல்லாம் அறிந்தவர்
  • ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘ஸர்வஶ்ச அஸௌ ஜ்ஞாஷ்ச இதி ஸர்வஜ்ஞாஹ் – அவரே எல்லாமும், அனைத்தையும் அறிந்தவர், எனவே அவர் சர்வஜ்ஞா’ என்று அழைக்கப்படுகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (2.4.6) ‘இடம் ஸர்வம் யதயம் ஆத்மா – இங்குள்ள அனைத்தும் பரமாத்மா’ என்கிறது.ஸ்ரீ பராசர பட்டர் எல்லாவற்றிலும் அந்தர்யாமி என்றும், அதனால் அவர் சர்வஜ்ஞா என்றும் அவர் அறிவார் என்று விளக்குகிறார். அவர் சிறந்த தர்மம், சிறந்த வழிமுறை மற்றும் சிறந்த குறிக்கோள் என்பதை அவர் அறிவார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் பெரிய திருமொழியை (4.9.6) ஆதரித்து மேற்கோள் காட்டுகிறார் – ‘உலகத்து எல்லாம் அறிவீர் – உலகில் நடக்கும் அனைத்தையும் அவர் அறிவார்’.ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ருதி பற்றி பல குறிப்புகளை கொடுத்துள்ளார் –
    • யாஹ் சர்வஜ்ஞா ஸர்வவித் – அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் அறிந்தவர் ( முண்டக உபநிஷத் 1.9);
    • ச சர்வஜ்ஞா ஸர்வோ பவதி – அவர் சர்வஞானம் மற்றும் அவர் அந்தர்யாமி ( பிரஷ்ண உபநிஷத் 10);
    • ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ ஸர்வஜ்ஞঃ ஏஷோ அந்தர்யமேஷ்ய யோநிঃ ஸர்வஸ்ய ப்ரபவ்யாப்யாயௌஹி பூதாநாம் – இதுவே அனைத்திற்கும் இறைவன். இவரே அனைத்தையும் அறிந்தவர். இது உள் கட்டுப்படுத்தி. இதுவே அனைத்திற்கும் ஆதாரம். இதுவே உயிரினங்களின் ஆரம்பமும் முடிவும். ( மாண்டுக்ய உபநிஷத் 6);
    • ——
    • 455-ஜ்ஞாநமுத்தமம்-
      மேலான ஞானமாய் இருப்பவன் –ஜ்ஞாயதே (அ)ஸ்மின் ஸர்வ꞉ பரோ வைஷ்ணவோ த₄ர்ம இதி
      ஜ்ஞாநமுத்தமம்படந்தம் அநிசம் சாஸ்திரம் பாஞ்சராத்ர புரஸ்சரம் –
      பாஞ்சராத்ரம் உள்ளிட்ட அனைத்து ஸாஸ்த்ரங்களையும் படிப்பவன்திரு மந்த்ரத்தை உபதேசித்து –
      இவனே பகவச் சாஸ்திரம் ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை வெளியிட்டான்
      மிக்க ஞான மூர்த்தியாய் வேத விளக்கு -4-7-10-இங்கு ஞானம் -அடுத்து ஸூவ்ரதஸ்-அனுஷ்டானம்-ஸ்ரோத்ரியனாயும் ப்ரஹ்ம நிஷ்டனாயும் இருக்க வேண்டுமேஎல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –————–
      1. ஓம்ஞானமுத்தமாயநம:
      ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்தஅஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாதஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியதுஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததானப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.
    • ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.இதிஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.—————
      1. ஞானம்-உத்தமம் – அவருக்கு மிகப்பெரிய அறிவு உள்ளது
    • இதை ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ஞானமுத்தமம் இதி ஏதத் சவிஷேஷணம் ஏகம் நாமம்; ஞானம் ப்ரகிருஷ்டம் ஆஜன்யம் அநவச்சின்னம் சர்வஸ்ய ஸாதகதம் இதி ஞானமுத்தமம் – அவனது ஞானமானது ஆரம்பம் இல்லாத, எல்லையற்ற, அனைத்தையும் அடையும் திறன் கொண்ட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது, எனவே அவர் ஞானம்-உத்தமம் என்று அழைக்கப்படுகிறார்.வைஷ்ணவ தர்மம் – சர்வ பரோ வைஷ்ணவோ தர்மா ஜ்ஞாயதே அஸ்மின் இதி ஞானம் – உத்தமம் – அனைத்து தர்மங்களிலும் மேலான தர்மத்தை வெளிப்படுத்தியவர் பகவான் என்று ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார். அவர் உத்தம ஞானம் – பத்தாந்தம் அனிஷம் சாஸ்திரம் பஞ்சராத்ர புரஸ்-சாரம் என்று பகவானால் பஞ்சராத்ரத்தை வெளிப்படுத்தியதையும் அவர் குறிப்பிடுகிறார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் திருவாய் மொழி (4.7.10) – மிக்க ஞான மூர்த்தியாகிய வேத விளக்கு – தூய அறிவின் சிறந்த சின்னம், வேதங்களின் ஒளி.ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் அதர்வ வேதத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து குறிப்பிடுகிறார் – “சூத்ரம் சூத்ரஸ்ய யோ வேதம், ச வேத ப்ராஹ்மணம் மஹத்” – எவன் பரம ஞானத்தைப் பற்றி அறிந்திருக்கிறானோ, அவன் அறிந்து கொள்ள வேண்டிய மிகப் பெரியதை அறிவான்.தைத்ரிய உபநிடதம் (2.1) கூறுகிறது ‘சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ஹ – பிரம்மன் என்பது சத்தியம், பிரம்மமே ஞானம், பிரம்மனே நித்தியம்’.பகவான் ஞானம்-உத்தமம், ஏனெனில் அவர் எல்லாம் அறிந்தவர் மற்றும் அனைத்து காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறார்.

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

யுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே
நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
கர தலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்
தத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-

ஹே ரங்காதி ராஜ

த்வம் -தேவரீர்

அக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்

ஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்

அஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்

நியமம் –ஒரு வியவஸ்தையோ

அநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே

ப்ராப்ய-அடைந்து

அநிசம்–எப்போதும்

அசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்

யுகபத் -ஏக காலத்தில்

கரதலவத்–உள்ளங்கையைப் பார்ப்பது போலே

பஸ்யசி–சாஷாத் கரிக்கிறீர்

ஸ்வ பிரகாசம்–ஸ்வமேவ பிரகாசிப்பதும்

அவரணம் –ஆவரணம் அற்றதும்

அமோகம்–யதார்த்தமுமான

தத் -அந்த சாஷாத் காரத்தை

ஞானம் ஆம்நாசிஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –

அனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று
எளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-

ஞானம் -என்பதை விளக்குகிறார் –

சஷுராதி த்வாரத்தால் ஆதல் –
தர்ம பூத ஞானத்தால் யாதல் –
இந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும்
அந்ய இந்திரிய விஷயங்களையும்
இப்படி சர்வத்தையும்-
க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக
ஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை
ஸ்வ ப்ரகாசமாயும் –
ஆவரண ரஹிதமாயும் –
யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –

——————

நயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது
கரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-

ஹே ரெங்க பதே

நயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்

த்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்

அத-பின்னையும்

கரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்

காம காரிண–இஷ்டப்படி செய்கின்ற

தே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு

கடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –

கண்களால் கேட்க முடியும்
காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –

தேவரீர் திருச் செவியால் பார்க்கிறது –
திருக் கண்களால் கேட்க்கிறது-
இப்படி கரணங்களால் யதேஷ்டமான
தேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்
போனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –

———————-

சார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்
சாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
அப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்
யத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-

ஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்

ஜகத்–இந்த உலகத்தை

அஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்

சார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –

யத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்

அப்ரேர்ய அந்யை–பிறரால் ஏவப்படாதவராய்

ஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ அதீனரான தேவரீர்

சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட

விஸ்வம் இச்சா லேசத-சகலத்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே

அகணயந்-அவலீலையாய் நினைத்தவராய்

யுகபத் –ஏக காலத்திலேயே

அப்ரதிஹதி -தடையின்றி

ஆவிச் சகர்த்த-படைத்தீரோ

சா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது

காரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை

சாங்க்ய யுக்தாத்–சாங்க்யரால் சொல்லப்பட்ட

சாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்

பரயதி–வேறு படுத்து கின்றது –

சாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் –

நீயோ சர்வஞ்ஞன்
ஸத்ய ஸங்கல்பன் –
சர்வ காரணன் –

இப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-

சாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்

நிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்

இவர்கள் பக்ஷம் நிரசித்து
பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்
புண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே
விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்
தேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய்
சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்

அபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்

——————–

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ

அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

சதா -எப்போதும்

யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

சிலந்தி த்ருஷ்டாந்தம்

———————

ஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருச க்ரிய அபி
அகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்
வபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்
தவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-

ஹே ஈச

ஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்

ப்ருச க்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்

அகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே

அசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்

வபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்

இதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –

தவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்

இதம் -இக் குணமானது

பர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது

வாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி

ஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே
சர்வ ஜகத்தையும் தேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது
அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு
காரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –

—————–

ம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்
நிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி
பிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே
ச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-

ஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே

த்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே

ஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே

நிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே

சகல அர்த்தாந்–சகல பதார்த்தங்களையும்

விக்ருனோஷி–விகாரப் படுத்துகின்றீர்

இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ

தத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று

வதந்தே–வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை
வியாவர்த்திக்க உரியது
விநிவாரயம் -வியவ

வீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு
சன்னிஹிதருடைய மனஸ்ஸூக்களை விகரிக்குமா போலே

தேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்

அத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்

—————-

ஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா
ரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்

ஹே ரங்க தந

ஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்

ஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு

இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத
காரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்

ஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று விளங்குகின்றது

இக் குணமானது

ப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்

பிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –

சிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –

தேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான
சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்
ஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு
இந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்

————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வைணவ குரு பரம்பரை–

October 6, 2024

ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள்

ஸ்ரீ வைணவ சித்தாந்தத்தில் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் இவர்களின் வரலாறுகளே சிறந்த வழிகாட்டிகள். அவை சேதநனுக்கு ஞானத்தையும் காட்டக் கூடியவை. அவர்கள் பரம்பரையை நாளும் சிந்திப்பார் இராமாநுசரின் திருவருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர்.

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது
நவ ரத்ன ஹாரம் -எம்பெருமானார் நடுநாயகம் -முன்னும் பின்னும் நவ ஆச்சார்யர்கள் உண்டே

ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு
ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரிய நம்பி
ராமாநுஜர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை
வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளைலோகாச்சாரியார்
திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மாமுனிகள்.

நவ கிரந்தங்கள் -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்ய காரர்
18 கிரந்தங்கள் -அருளிச் செயல்-ரஹஸ்ய கிரந்தங்கள் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ மா முனிகள்
சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம் என்று மற்ற பூர்வர்கள் அருளுக்கு இலக்கு
இவருக்கு-மா முனிகளுக்கு சீர் அருள்
மன்னிய சீர் மாறன் காலை உணவாவாகப் பெற்றோம்
முன்னவராம் குரவர் மொழி உள்ளப்பெற்றோம்
முன்னவர் கிரந்தங்களை வாசித்தும் சொல்லியும் அர்த்த விசேஷங்களை எழுதியும் இருந்ததால்
இவரைக் கொண்டே ஈடு வியாக்யானம் கேட்டு அருளினான்
அம்புயர் கோன் தன் குருவின்-மா முலைகளின் – தாள் இணையில் அன்பு செய்யாமல்
தன்னிடம் செய்தாலும் விண்ணாடு அளிக்க மாட்டானே

—————————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937 AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

——

1. பெரியபெருமாள் : (ஶ்ரீமந்நாராயணன் முதல் ஆசாரியர்) சீடர்கள் : பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், நீளாதேவி. திருநட்சத்திரம் – திருவோணம்.

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பெருமாள் :-

ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு,
அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள்.
அக் குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும்,
பின் எம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டுவந்தார்கள்.
இந் நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார்.
பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷணன், அங்கு எழுந்து அருளப்பட்ட இருக்கும் பெரிய பெருமாளைப் பார்த்து,
மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான்.
ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.

பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில்
மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏழப் பண்ணினான்.
நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில்,
அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை.
எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது
என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான்.
அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு,
பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.

பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாளன்று நக்ஷத்திரம் ரேவதி.

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

————

2. பெரிய பிராட்டியார் : சீடர்கள்: திருவனந்தாழ்வான், (ஆதிசேடன்),பெரியதிருவடி, விஷ்வக்சேநர் (சேனை முதலியர்) ஆகிய நித்திய சூரிகள். திருநட்சத்திரம் – பங்குனி உத்தரம்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

சமுத்திர ராஜனுக்கும் , காவிரித்தாய்க்கும் மகளாகப் பங்குனி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
பெரிய பெருமாளின் பத்தினியான பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்க நாச்சியார்.
தன் தனிச் சன்னதி பிராகாரங்களை விட்டு வெளியில் வராத பத்தினித் தாயான இவர் மிகக் கருணை மிகுந்தவர்.
இவரின் கருணை சொல்லி மாளாது. ஸேவித்து அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் தாயாரின் கருணைத் தன்மை.
தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பதில் இவருக்கு இணையில்லை.
தாயாரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ஒவ்வொரு சமயமும் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்.

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

————

3. விஷ்வக்சேநர் : சீடர்கள் : ஆழ்வார்கள், திருநட்சத்திரம் – ஐப்பசி பூராடம்.

மதுரகவியாழ்வாரின் சீடர் பராங்குசதாசர். இவர் தந்த் குறிப்பினால்தான் நாதமுனிகள் ‘கண்ணிநுண் சிறுதாம்பை’ப் பன்னிராயிரம் உரு நியமத்தோடு அநுசந்தித்து அர்ச்சை நிலையைக் கடந்து வந்த நம்மாழ்வார் மூலம் நாலாயிரமும் பெற்றனர் என்பது வரலாறு.

(ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர்.
எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ அதைப் போல பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர்.
கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது.
மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார்.
இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது
அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார்.
இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம் இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி ,
குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன்
முடிவடைவதாக முன்னோர் கூறுவர்.
பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி
ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெருவதாகவும்
அதுதான் இப்பொழுதைய வழக்கமாகவும் தொடருகிறது.

ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

—————

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

நம்மாழ்வார் , ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப் படுகின்றார்.
திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர் ,
விக்ஷ்வக்ஸேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீ ராமரின் ஜென்ம லக்னமான கடகம்.

நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்பு வரை திருநகரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர்,
ஆழ்வாரின் அவதாரத்திற்குப் பின் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுவது ஆழ்வாரின் மகிமையை பறைசாற்றுவதாக உள்ளது.
ஸ்வாமி நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்னமே திருநகரியில் புளிய மரமாக அனந்தாழ்வான் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறந்த பொழுது அழவும் இன்றி, பால் பருகவும் இல்லாமல் அசைவற்று ஒரு பிண்டம் போல் இருந்தார்.
திருக்குருகூர் ஆதிப்பிரானிடம் இவர் பெற்றோர்கள் வேண்ட, ஸ்வாமி தானே மெள்ள தவழ்ந்து ஆதிப்பிரான் ஸன்னதியில் உள்ள ,
அனந்தாழ்வான் புளிய மரமாக அவதரித்த மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்துக்குள், பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டார்.
இவ்வாறாக சுமார் 16 ஆண்டுகள் இவ்விடத்திலே ஆழ்வார் வாசம் செய்தார்.

இவர் காலத்திலே வாழ்ந்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவர்கள் வட தேஸத்திலே இருந்த பொழுது,
தெற்கிலிருந்து வானத்தில் ஒரு ஒளி வட்டம் தென்பட அதனைத் தொடர்ந்து அவர் தெற்கு நோக்கி வந்து,
திருநகரியிலே புளிய மரத்தடியில் இருக்கும் நம்மாழ்வாரைக் காண்கிறார். கண்கள் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரைக் கண்டதும்,
அவர் பெரிய ஞானியாக இருப்பார் என்ற எண்ணத்துடன், ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து
நம்மாழ்வார் அருகில் “தொப்பென்று ” போடுகிறார்.
சப்தத்தை கேட்ட ஆழ்வார் சற்றே கண் திறந்து மதுரகவிகளைப் பார்க்கிறார்.
நம்மாழ்வாரின் கண்களிலே ஒரு தேஜஸுடன் ஒளி வீசுவதைக் கண்டு, மதுரகவிகள்,
ஆழ்வாரிடம் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்க,
ஸ்வாமி நம்மாழ்வாரும் முதன் முதலாக தன் திருவாயிலிருந்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக
” அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் ” என்று அருளுகிறார்.
மதுரகவி ஆழ்வாரும், தான் முன்னமே நினைத்தபடி நம்மாழ்வார் பெரிய ஞானியாக இருப்பதை உணர்ந்து ,
அவரிடம் தன்னை அவர்தம் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, ஆழ்வாரும் அதற்கு சம்மதிக்கிறார்.
அன்று முதல் மதுரகவி ஆழ்வார் தனக்கு நம்மாழ்வாரை தெய்வமாக வரிந்து அவரைத் தவிர ” தேவு மற்று அறியாதவராக ” இருந்தார்.

வட மொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் தமிழ் படுத்த வேண்டி, அவற்றைத் தான் சொல்லச் சொல்ல,
அதனை ஏடுபடுத்த மதுரகவி ஆழ்வாரை பணிக்கிறார். அதன்படி முதல் முதலாக நம்மாழ்வாரின் ஈரச் சொல்
வார்த்தையாக அருளப்பெற்ற முதல் பாசுரம் ” பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும் ” என்று தொடங்கும்
திருவிருத்த பாசுரங்களாக நூறு பாசுரங்களை அருளிச் செய்தார்.
பின் ஆழ்வார் திருவாசிரியத்தின் ஏழு பாசுரங்களையும், என்பத்தேழு பாசுரங்களுடன் கூடிய பெரிய திருவந்தாதியையும்,
முற்றாக ஆயிரத்து நூற்று இரண்டு பாசுரங்களுடன் திருவாய் மொழியையும் அருளிச் செய்து
இவ்வுலகோர் உய்ய வழி அமைத்துக் கொடுத்தார்.

ஆழ்வாரின் கடைசி பாசுரமான ” அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி ” பாசுரத்தை முடிக்கும் பொழுது,
எம்பெருமான் அவருக்குக் காட்சி அருளி, தன்னுடன் வைகுண்டத்திற்குச் அழைத்துச் சென்றார்.

நம்மாழ்வார் தனது பாசுரங்களில் 36 திவ்ய தேஸ எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்துள்ளார்.
இத் திவ்ய தேஸ எம்பெருமான்கள் அனைவரும் இவர் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே வந்து
இவரிடம் தங்களைப் பற்றிய பாசுரங்களை பெற்றுச் சென்றனர்.

இப்படியாக உலகமும், உலகோர்களும் உய்ய வழிகாட்டிய ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு
ஒரு சிறிய வருத்தமும் உண்டு என்று பெரியோர் கூறுவர். அதாவது ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்தது கலியுகம் பிறந்து
சரியாக 43 வது நாளன்று. இன்னும் சிறிது காலத்திற்கு முன்பே – 43 நாள்களுக்கு முன்பாவது – அவதரித்திருந்தால்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்து வாழ்ந்த யுகத்திலே தாமும் பிறந்திருக்கலாம் என்றும்,
ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் கண்ணன் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட
அவருக்கு உண்டு என்று கூறுவர் பூருவாச்சாரியர்கள்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இன்று உலகோர்களால் ஸேவிக்கப் படுவதற்குக் காரணமும் இவரே.
ஆம். நாதமுனிகள் இவரிடம்” திருவாய்மொழி ” ப்ரபந்த பாசுரங்களை அருள வேண்டும் போது,
ஆழ்வார் நாதமுனிகளிடம் மற்ற ஆழ்வார்களும் அருளிச்செய்த திவ்யப் ப்ரபந்த பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

————

4. நாதமுனிகள் : (கி.பி. 823-903) கஜாவதாரம்சம். இவர் காட்டுமன்னார் கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் (தென்ஆர்க்காடு மாவட்டம்) ஈசுவரபட்டர் என்பாருக்குத் திருமகனாக அவதரித்தார். அரங்கநாதர் என்பது இவரது பிள்ளைத் திருநாமம். வேறு திருப்பெயர்கள் : ‘அரங்கநாதமுனிகள், நாதப்பிரம்மர், தேவிகள், அரவிந்தப் பாவை, குமாரர். ஈசுவர முனிகள் மாமியார், வங்கிபுரத்து ஆய்ச்சி. ஆசாரியர் நம்மாழ்வார் (ஆழ்வாரை யோகத்தில் கண்டவர்). சீடர்கள் : உய்யக் கொண்டார், குருகைக் காவலப்பன், திருக்கண்ணமங்கையாண்டான், தெய்வநாயக ஆண்டான், நம்பி கருணாகரதாசர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டுர் ஆச்சான் பிள்ளை,சோகத்துரர் ஆழ்வான்’ ஆகிய பதின்மர். திருநட்சத்திரம் – ஆனி அனுஷம். அருளிச் செயல்கள்; நியாச தத்துவம், புருஷ நிர்ணயம் முதலியன,

(ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்

ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் இன்று காட்டுமன்னார் கோயில் என்று அழைக்கப் படும்
அன்றைய வீர நாராயணபுரத்திலே அவதரித்தார். நாதமுனிகளும் இவர் திருத் தகப்பனார் ஈஸ்வர பட்டரும்
வீரநாராயணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மன்னாருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்துகொண்டு வந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து இவர்கள் குடும்பத்தாருடன் திவ்ய ஸ்தல யாத்திரையாக வட நாடு சென்றனர்.
அவ்வமயம் அவர்கள் வாரணாசி, பூரி, அஹோபிலம், திருமலை, திருக்கோவலூர், திருவரங்கம் முதலிய
திவ்ய ஸ்தலங்களையும் ஸேவித்துவிட்டு, வீரநாராயணபுரம் திரும்பினர்.

ஒரு நாள் ஸ்ரீ மன்னார் ஸன்னதியில், திருநாராயணபுரத்திலே இருந்து வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சிலர் கோஷ்டியாக ” ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே ” என்ற திருவாய்மொழி பாசுரங்களை
ஸேவித்துக் கொண்டிருப்பதை கண்டும் , கேட்டும் மகிழ்ந்தனர்.
பிறகு அக் கோஷ்டியார் அப் பாசுரங்களின் கடைசி பாசுரத்தை ஸேவிக்கும் பொழுது அதில் வரும்
” ஆயிரத்துள் இப்பத்தும் ” என்ற வரியைக் கேட்டு, மற்ற ஆயிரம் பாசுரங்களையும் ஸேவிக்கும்படி வேண்டினர்.
ஆனால் அக்கோஷ்டியார் தங்களுக்கு இந்தப் பதினோறு பாசுரங்கள் மட்டுமே தெரியும் என்று கூறி,
மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் ஸ்வாமி சடகோபன் அவதரித்த திருக்குறுகூரிலே சென்று அதுபற்றி விசாரிக்கக் கூறினர்.

நாதமுனிகளும் திருக்குறுகூர் சென்று அங்கு இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள்,
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய வம்சத்திலே வந்த பராங்குசதாஸரை பார்க்கும்படி சொல்ல, நாதமுனிகளும் அவரைப் பார்த்தார்.
பராங்குசதாஸரிடம் , தான் மன்னார் ஸன்னதியில் கேட்ட பாசுரங்களைப் பற்றிக் கூறி,
ஆழ்வாரின் மேலும் ஆயிரம் பாசுரங்களைப் பற்றி வினவினார்.
பராங்குசதாஸரும், நாதமுனிகளுக்கு மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களான ” கண்ணினுன் சிறுத்தாம்பு ”
பாசுரங்களைச் சொல்லி , ஸ்ரீ நம்மாழ்வார் வாசம் செய்த ஆதினாதன் ஸன்னதியிலே உள்ள
புளிய மரத்தடிக்கு சென்று அங்கே அவற்றை அனுஸந்திக்கச் சொன்னார்.

நாதமுனிகளும் நேராக புளியமரத்தடிக்கு வந்து, அங்கிருந்தபடியே ” கண்ணினுன் சிறுத்தாம்பு ” பதிகத்தின்
பதினோறு பாசுரங்களையும் மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டாயிரம் முறை ஸேவிக்க,
அப்பொழுது அவருக்கு ஸ்ரீ நம்மாழ்வாராகிய ஸ்ரீ சடகோபன் காட்சியளித்து, அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று கேட்க
நாதமுனிகளும் தான் வந்திருக்கும் காரணத்தைக் கூறி, ஆழ்வார் அருளிச் செய்துள்ள ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டினார்.
அப்பொழுது ஸ்ரீ நம்மாழ்வார் , தான் அருளிச்செய்த ப்ரபந்தங்களோடு, மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் அருளிச்செய்த
அனைத்துப் ப்ரபந்தங்களையும் பரிபூரணமாக அவரிடம் சொல்லி அருளினார்.

பின்னர் வீரநாராயணபுரம் திரும்பி, தான் அறிந்து கொண்ட ப்ரபந்தங்களை தம் மருமக்களான
கீழையகத்தாழ்வானையும், மேலயகத்தாழ்வானையும், திருக்கண்ணமங்கையாண்டானையும் அழைத்து அவர்களிடம்
இயல், இசையுடன் பாடி அருள அவர்களுடன் ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களும் பிரசித்தமாயின.
இன்றும் அரையர் ஸேவைகள் அபிநயத்துடன் திருவரங்கம் உட்பட சில திவ்யதேஸங்களில் ஸேவிக்கப்படுகின்றன.

ஒருநாள் அப்பிரதேஸத்து அரசன் வேட்டையாடிவிட்டு திரும்பும் பொழுது, நாதமுனிகளை ஸேவித்து ஆசி பெற்றுக் கொண்டு போனான்.
அங்கே சிறிது நேரத்தில் நாதமுனிகளின் திருமாளிகையிலிருந்து ஒரு பெண் வந்து, அவரிடம் தெண்டனிட்டு,
அவர் அகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு இரண்டு வில்லாளர்களும், ஒரு அழகிய ஸ்த்ரியும், ஒரு குரங்கும் வந்திருந்தனர் என்றும்,
அவர்கள் நாதமுனிகள் அகத்தில் எழுந்தருளியுள்ளாரா என்று வினவியதாகவும், பிறகு அவர் அங்கு இல்லை என்றவுடன் சென்றுவிட்டதாகவும்,
அவர்களை தேவரீர் வழியில் கண்டீர்களா என்று கேட்க, நாதமுனிகள் ஆச்சரியப்பட்டு அவ்வாறு வந்தவர்கள்
பெருமாளும் , பிராட்டியும், இளைய பெருமாளும் மற்றும் ஆஞ்சனேயரும்தான் என்று அறிந்து கொண்டு,
அவர்கள் சென்ற திசையிலேயே தாமும் சென்றார். வழியில் எதிரில் வந்தோரிடம் எல்லாம் அவர்களைப் பற்றி விசாரிக்க,
எல்லோரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினர். இதனால் மனம் மிகவும் ஏங்கி வழியிலேயே விழுந்து மோகித்தார்.

—————

5. உய்யக் கொண்டார்: (கி.பி. 826-931) ஐயத்தேனாம்சம். திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரையில் கார்த்திகைவேறு திருநாமங்கள் பத்மாட்சர், புண்டரீகாட்சர். தேவிகள், ஆண்டாள், ஆசாரியர் நாதமுனிகள் சீடர்கள்: மணக்கால நம்பிகள், திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரதாசர் புண்டரீகதாசர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகப் பெருமாள் நங்கை (நாதமுனிகளின் பேரர்- ஈசுவர முனிவர்களின்திருக்குமாரர்) நாதமுனிகளால் தம் திருப்பேரர் யமுனைத் துறைவருக்கு எல்லா இரகசியங்களை உபதேசிக்கவும், ஆழ்வார் தமக்குக் காட்டிக் கொடுத்த பவிஷ்யதாசார்ய விக்கிரகத்தைக் காட்டிக்கொடுத்து, இதையும் தாம் விரும்பிய பொருள் எனக் கூறித் தஞ்சமாகக் காட்டிக் கொடுக்கவும் நியமிக்கப்பட்டார்.

(சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

புண்டரிகாக்ஷன் என்ற பெயர் கொண்ட உய்யக்கொண்டார், சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில்
திருவெள்ளரையிலே அவதரித்தவர். ஆண்டாள் என்ற நங்கையை மணந்து கொண்ட இவருக்கு
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். நாதமுனிகளின் முக்கிய பத்து சிஷ்யர்களில் ப்ரதானமான இவர்,
திவ்யப் ப்ரபந்தம் முதலியவைகளை அவரிடம் கற்றார்.

ஒரு சமயம் நாதமுனிகள் இவரிடம் யோக ஸாஸ்த்திரத்தைக் கற்றுக் கொள்ளும்படி தெரிவித்தபொழுது,
ஆச்சாரியனின் க்ருபை உணர்ந்து ” பிணம் கிடக்க மணம் புணரலாமோ ” என்று வினவினார்.
அதாவது இப் பூவுலகிலே சம்ஸாரிகள் இறையுண்மை அறியாமல் உழன்று நடை பிணமாக தவிக்கும் போது,
தன்னுடைய நன்மைக்காக தான் மட்டும் எப்படி ” யோக ஸாஸ்திரம் ” கற்றுக் கொள்வது என்றும், அது தர்மமும் ஆகாது என்றும் கூறினார்.
உய்யக்கொண்டாரின் இந்த பதிலைக் கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகை கொண்டு, உலகம் உய்யவும்,
லோக க்ஷேமத்திற்காகவும் வைணவ ஸாஸ்திரங்களை எங்கும் பரப்பவும் என்று கூறினார்.

சில காலம் கழித்து உய்யக்கொண்டாரின் திருமேனி தளர்வடைந்து, பின் திருநாட்டுக்கு எழுந்தருளும் நேரம் வந்தது.
அவர் தம் ஸிஷ்யரான மணக்கால் நம்பியையும் மற்ற ஸிஷ்யர்களையும் அழைத்து, மணக்கால் நம்பியே
நம் வைணவ தர்மத்தை உலகம் எங்கும் பரப்ப வழி செய்வார் என்று கூறி, நாதமுனிகள் முன்னம் தம்மிடம் அளித்திருந்த
பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தை, அவரிடம் அளித்து ஒரு விவரத்தைக் கூறினார்.
பிற்காலத்தில் நாதமுனிகளின் புதல்வராகிய ஈஸ்வரமுனிக்கு ஒரு புதல்வன் பிறப்பார் என்றும்,
அவருக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயரிட்டு, அவர் மூலம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,
தர்ஸன ஸாஸ்திரங்களையும் வளர்க்கவும் என்று கூறிவிட்டு, நாதமுனிகளின் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

————

6. மணக்கால் நம்பி: (கி.பி.889-994) குமுதாம்சம் திருச்சி மாவட்டம் இலால்குடிக்கருகிலுள்ள (இது வட்டம்). மணக்கால் என்னும் சிற்றூரில் அவதரித்தார். திருநட்சத்திரம் – மாசிமகம். இவருக்கு இராமமிஸ்ரர் என்ற மற்றொரு திருப்பெயரும் உண்டு. ஆசாரியர் உய்யக்கொண்டார். சீடர்கள்: ‘யமுனைத் துறைவர் (ஆளவந்தார்), திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சொட்டைநம்பி, சிறு புள்குருடையார் பிள்ளை,திருமாலிருஞ் சோலைதாசர், வங்கிபுரத்து ஆய்ச்சி’. ஆசாரியர் பெண்களைதம் முதுகில் சுமந்து சேற்று வழியைக் கடந்தவர். யமுனைத் துறைவருக்கு தூதுளங்கீரை பரிமாறி ஒருநாள் நிறுத்தி அவருக்கு இரகசியங்களை உபதேசித்தவர்.

(மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

மணக்கால் நம்பி மாசி மாதம், மக நக்ஷத்திரத்தில் , ஸ்ரீரங்கத்துகு அருகிலே அமைந்துள்ள மணக்கால் என்னும்
சிறிய கிராமத்திலே அவதரித்தவர். இவருடைய இயற் பெயர் ராம மிஸ்ரர்.

உய்யக் கொண்டாரின் முதன்மை சிஷ்யரான இவர், அவருக்குப் பின் ஆச்சார்ய ஸ்தானத்தை ஏற்று,
வைஷ்ணவதர்மத்தை பிரச்சாரம் பண்ணினார். இளமைக் காலத்திலேயே தர்ம பத்தினியை இழந்த இவர்,
தன் ஆச்சாரியரான உய்யக் கொண்டாரின் திருமாளிகையிலேயே இருந்து , திருமாளிகை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் உய்யக் கொண்டாரின் இரு மகள்களும், நதியில் நீராடிவிட்டு திரும்புகையில், வழியில்
ஒரு குறுகலான வாய்க்காலில் சேறு படிந்துள்ளதைக் கண்ட அப் பெண்கள், வாய்க்காலைக் கடக்காமல் தயங்கி நின்றனர்.
அப்பொழுது மணக்கால் நம்பி சற்றென்று அவ் வாய்க்காலில் உள்ள சேற்றின் மீது குறுக்கே படுத்துக் கொண்டு,
தம் மீது அவர்களை நடந்து போக வேண்டினார். பின்னர் இதனை அறிந்த உய்யக் கொண்டார்
அவ்வாறு செய்யலாமா என்று கேட்க, ஆச்சாரியன் பணிவிடையே தனக்கு பாக்கியமும், போக்கியமும் என்று பதிலளித்து,
தன் ஆச்சாரிய அபிமானத்தை வெளிப்படுத்தினார்.

காலம் செல்லச் செல்ல இவரின் திருமேனியும் தளர்வடைந்து போக, நாதமுனிகள் இவருடைய ஸ்வப்னத்தில் தோன்றி,
தான் மணக்கால் நம்பியிடம் அளித்து, பின் இவரிடம் அளிக்கப் பெற்ற
” பவிஷ்யாதாசார்யரின் ” விக்ரஹத்தை ஆளவந்தாரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
மேலும் அவரை ஸ்ரீ ராமாநுஜரின் அவதாரத்தை எதிர் நோக்கி, அவரை நேரில் கண்டு,
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அவர் மூலம் வளர்க்க ஏற்பாடு செய்யும்படியும் உரைத்தார்.

பின்னர் மணக்கால் நம்பி, ஆளவந்தாரிடம் தான் ஸ்வப்னத்தில் கேட்ட விஷயத்தை சொல்லி,
கோயிலை நன்றாக பேணிக் காத்து, தீர்க்காயுசுடன் இருப்பாய் என்று ஆசிர்வதித்து,
தம் ஆச்சார்யர் உய்யக் கொண்டார் அவர்களின் திருவடிகளை த்யானித்து பரமபதம் அடைந்தார்.

———

7. யமுனைத்துறைவர் : (கி.பி.916-1041) இவர் ஆள வந்தார். சிம்மாசநாசம் அம்சம், இவர் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகளின் திருக்குமாரராகிய ஈசுவரமுனிகட்கு திருக்குமரராய் அவதரித்தார். திருத்தாயார், அரங்க நாயகி அம்மை. திருநட்சத்திரம் – ஆடி உத்திராடம். மாபாடியபட்டர் என்பாரை நாடி இலக்கணம் தருக்கம் முதலிய நூல்களைக் கற்றவர். அரசவைப் புலவர் ஆக்கியாழ்வானை வாதில் வென்றவர். வேறு திருப்பெயர்கள்: ‘யாமுனாசாரியர், யாமுநேயர்’. திருக்குமாரர்கள் :சொட்டை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பெரிய திருமலைநம்பி, பின்னை அரசுநம்பி, ஆசாரியர் மணக்கால்நம்பி. சீடர்கள்: ‘பெரிய நம்பி, பெரிய திருமலையாண்டான், திருமோகூரப்பன், மாறனேர் நம்பி, திருக்கச்சிநம்பி, அரசபத்தினி திருவரங்கத்தம்மன், திருவரங்கப் பெருமாளரையர், ஆளவந்தார் ஆழ்வான், வானமாமலை யாண்டான், தெய்வவாரி ஆண்டான், ஈசனாண்டான், சீயராண்டான், திருக்குருகூரப்பன், திருமோகூர் நின்றான்; தெய்வப்பெருமாள், வகுளாபரண சோமாசியார், திருமோகூர்தாசர், திருமாலிருஞ்சோலைதாசர், வடமதுரைப் பிறந்தான், ஆட்கொண்டி அம்மங்கி’ ஆக 20 திருநாமங்கள். இவருக்கு உடையவரையும் (இராமாநுசர்) சீடராகச் சொல்வர். இவர்தம் அருளிச் செயல்கள்: ‘சித்தித்திரயம் (ஆகம சித்தி ஸ்ம்வித்சித்தி, மோட்சசித்தி) திரயம் மூன்று, கீதார்த்தசங்கிரகம், ஆகமப்பிரமாண்யம் தோத்திரரத்னம் சதுஸ்லோகி, மகாபுருஷநிர்ணயம்’ என்ற ஆறு கிரந்தங்கள் –

(ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

நாதமுனிகளின் குமாரர் ஈசுவரமுனிகளின் திருப்புதல்வனாக ஆடி மாதம், உத்தராட நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இச் சுபசெய்தியை மணக்கால் நம்பிக்கு தெரிவிக்க அவரும்,
வீரநாராயணபுரம் வந்து மிக்க மகிழ்ச்சியுடன் அக் குழந்தைக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயர் சூட்டினார்.

யமுனைத்துறைவன் அவருடைய ஆறாம் வயதில் குருகுல வாஸம் செய்து எல்லா ஸாஸ்திரங்களையும் கற்று
மிகச் சிறந்த வல்லுனராக விளங்கலானார். இச் சமயத்தில் அரச சபையில் ” ஆக்கியாழ்வான் ” என்ற
எல்லா ஸாஸ்திரங்களையும் நன்கு கற்ற ஒரு வித்வான் மிகுந்த கர்வத்துடனும், இறுமாப்புடனும் விளங்கினான்.
தன்னை வெல்ல ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ஆக்கியாழ்வான், அரசனிடம் சொல்லி தன்னுடன்
வாதப் போர் செய்ய யாராவது வருகிறீர்களா என்று முறசறையச் சொன்னான். அரசரும் அவ்வாறே ஒப்புக்கொள்ள,
இதனைக் கேள்விப்பட்ட யுமுனைத்துறைவன் தான் அவனிடம் வாதம் செய்து அவனுடைய கர்வத்தை அடக்கத் தயார் என்று கூறினான்.
ஆச்சரியப்பட்ட அரசன் அவ்வாறு ஆக்கியாழ்வானை வாதப் போரில் வென்றால்
தன் நாட்டின் சரிபாதியை யமுனைதுறைவனுக்கு தருவதாக வாக்களித்தார்.

யமுனைத்துறைவனுக்கும், ஆக்கியாழ்வானுக்கும் தொடர்ந்து நடந்த வாதப் போரில் யமுனைத்துறைவன் வெற்றி பெற,
ஆக்கியாழ்வானும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற அரசனும்,
தான் வாக்களித்தபடியே தனது ராஜ்ஜியத்தின் பாதியை பகிர்ந்து யமுனைத்துறைவனுக்கு கொடுத்தார்.
ராஜ்ஜியத்தை ஆளவந்தவராகையால் , யமுனைத்துறைவன் அன்று முதல் ” ஆளவந்தார் ” என்று அழைக்கப்படலானார்.

ராஜ்ஜியத்தை ஆளவந்த ஆளவந்தாரும், ராஜ்ஜிய பரிபாலனத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க ,
வைஷ்ணவ ஸாஸ்திரங்களையும், அருளிச் செயல் அருமைகளையும் அவர் வளர்க்க வேண்டி இருப்பதை மறந்த நிலையில்
அதனை அவருக்கு உணர்த்த விரும்பினார் மணக்கால் நம்பி. ஆளவந்தாருக்கு தூதுவளை கீரை மிகவும் விருப்பமான ஒன்று.
எனவே ஆளவந்தாரின் உணவுக்காக தினசரி தூதுவளை கீரையை , மணக்கால் நம்பி அனுப்பி வரலானார்.
திடீரென்று சில காலத்திற்கு பிறகு அக் கீரையை அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
தான் அருந்தும் உணவில் தூதுவளை கீரை இல்லாததைக் கண்ட ஆளவந்தார், பரிசாகரிடம் அதுபற்றி வினவ,
அவரும் ஒரு வயோதிக வைஷ்ணவர் தான் தினமும் தூதுவளை கீரையை சமைக்க கொண்டுவருவார் என்றும்,
ஆனல் சில நாட்களாக அவர் வரவில்லை என்று கூறி, அதனால் தான் சமையலில் அக்கீரையை சேர்க்கவில்லை என்றும் கூறினார்.
தூதுவளை கீரை இல்லாத உணவினை உண்ண ஆளவந்தாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதனால் பரிசாரகரை அழைத்து, அந்த வயோதிக வைஷ்ணவர் மீண்டும் வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
சில நாட்களில் மீண்டும் தூதுவளை கீரையுடன் வந்த மணக்கால் நம்பி அவர்களை , ஆளவந்தாரிடம் அந்தப் பரிசாரகன் அழைத்துச் சென்றான்.

மணக்கால் நம்பியை கண்ட ஆளவந்தார் , அவரிடம் அவரின் திருநாமம் மற்றும் அவர் எங்கிருந்து வருவதாகக் கேட்க,
அவரும் தான் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவராகையால் தனக்கு மணக்கால் நம்பி என்ற பெயரும்,
தான் ஆளவந்தாரின் பாட்டனாரான நாதமுனிகள் சம்பாதித்த செல்வங்களை அவரிடம் ஒப்படைக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆளவந்தாரும் அச் செல்வம் எப்பேற்பட்டது என்று வினவ , மணக்கால் நம்பியும் அச் செல்வமானது காலத்தால் அழியாதது ,
இரு நதிகளுக்கு இடையேயும் , ஏழு ப்ராகாரங்களுக்கு நடுவிலும், ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பதிலுரைத்தார்.
ஆளவந்தாரும் அச் செல்வத்தைப் பெற தனது படை பரிவாரங்களுடன் புறப்படத் தயாரானார்.
ஆனால் மணக்கால் நம்பி, அவரிடம், அவர் மட்டுமே தனியாக வர வேண்டும் என்று தெரிவிக்க,
ஆளவந்தாரும் அதற்கு உடன்பட்டு அவருடன் புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்தார்.

திருவரங்கம் பெரிய கோவிலுனுள்ளே சென்ற ஆளவந்தார் அங்கு பாம்பணையிலே ஸயனித்திருக்கும் பெரிய பெருமாளைக் கண்டு,
மிக்க ஆனந்தித்து , அங்கேயே மணக்கால் நம்பியின் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவருடைய சிஷ்யரும் ஆனார்.
அதன் பின் மணக்கால் நம்பியின் உபதேசத்தின்படி, ஆளவந்தார் அரங்கனின் அந்தரங்கராகி,
திவ்யப் பிரபந்த ஸேவைகளையும், காலக்ஷேபங்களையும் செவ்வனே நடத்திக் கொண்டு,
நாதமுனிகள், மணக்கால் நம்பியின் மூலம் அளித்த ” பவிஷ்யதாச்சாரியர் ” விக்ரஹத்தையும் ஆராதித்து வரலானார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்த ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நலம் விசாரித்து விட்டு , பேரருளாளனை ஸேவிக்க,
தேவப் பெருமாள் திருக் கோயிலுக்கு எழுந்தருளினார். அவ்வமயம் அங்கே யாதவப் பிரகாசர் தம்முடைய ஸிஷ்யர்களுடன் வந்திருந்தார்.
பெருமாளை ஸேவித்துவிட்டு, ப்ராகாரத்திலே வரும்பொழுது, அக் கோஷ்டியினரைக் கண்ட ஆளவந்தார்,
அக் கோஷ்டியிலே வருபவர்களில் இளையாழ்வார் யார் என்று திருக்கச்சி நம்பிகளிடம் கேட்க,
அவரும் சிவந்த முகத்துடனும், நெடியவராய், முழங்கால் அளவு நீண்ட கைகளை உடையவருமாக இருப்பவரே அவர் என்று கூற ,
அவரைப் பார்த்த மாத்திரத்திலே சந்தோஷத்துடன் தன் மனத்திற்குள்ளே ” ஆ முதல்வன் இவன் ” என்று கூறிக் கொண்டார்.
மனதிற்குள்ளேயே அவரை ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு ஒரு சமயம் உடலிலே ” பிளவை ” நோய் ஏற்பட்டது.
அதன் காரணமாக அவரால் அரங்கனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்ய முடியாமலும்,
தினமும் காலக்ஷேபங்கள் நடத்த முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டார். பெருமாள் கைங்கர்யம் பண்ண முடியவில்லையே என்று கலங்க,
அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் ” உமது கோஷ்டியிலே யாரேனும் இந்த நோயை வாங்கிக் கொள்வார்களா என்று பாருமே” என்று சொன்னது.
ஆளவந்தாரும் மறுநாள் தனது காலக்ஷேப கோஷ்டியினரிடம் , யாரேனும் சில காலத்திற்கு
தன் பிளவை நோயை வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆளவந்தாரின் காலக்ஷேப கோஷ்டியிலே
பல இனத்தவரும் இருந்தனர். அவ்வாறு இருந்தவர்களில் அக்காலங்களிலே தீண்டத்தகாத இனத்தவராகக் கருதப்பட்ட
இனத்தைச் சேர்ந்த ” மாறனேர் நம்பி ” என்பவரும் இருந்தார். மற்றையவர்கள் எல்லாம் ஆளவந்தார் கேட்டதற்கு
பதில் அளிக்க முடியாமல் திகைத்து தயங்கி நிற்க, அச் சமயம் மாறனேர் நம்பி சற்றும் தயங்காமல்
ஆளவந்தாரின் பிளவை நோயை, தான் பகவத் ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறி,
உவந்து அந் நோயை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பிறகு ஆளவந்தாரிடம், அவரின் நோயை பெற்றுக் கொள்வதால் ,
அவரின் உடல் உபாதைகள் நீங்கி, பகவத் கைங்கர்யங்களை செவ்வனே மேற்கொள்ள முடியுமென்பதால்,
அது தனக்கு பாக்கியமே என்றும் கூறினார்.
இப்படியாக தனக்கு ஒரு பாகவதன் இருக்கிறான் என்று கண்டு, உள்ளம் பூரிப்படைந்தார்.
மாறனேர் நம்பியின் ஆச்சார்ய பக்தியைக் கண்டு வியந்து கொண்டிருந்த தன் ஸிஷ்யரான பெரிய நம்பியிடம்,
ஆளவந்தார், தம்மைப் போலவே மாறனேர் நம்பியையும் நினைத்துக் கொண்டு,
அவருக்கு சகல சிறப்புகளையும் செய்யும் என்று கட்டளையிட்டார்.

பிளவை நோய் நீங்கிய ஆளவந்தார் முன்பு போலவே பகவானுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டும்,
காலக்ஷேபங்கள் நடத்திக் கொண்டுமிருந்தார். பின் சிறிது காலத்தில் அவரின் உடல் தளர்வுற்ற நிலையில்,
தான் தினமும் ஆராதித்து வந்த “பவிஷ்யாதாச்சார்யர் ” விக்ரஹத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கொடுத்து,
இந்த மூர்த்திதான் அந்த இளையாழ்வார் என்று அருளினார். இதன் பின் பத்மாஸனம் இட்டுக் கொண்டு,
தம்முடைய ஆச்சார்யரான மணக்கால் நம்பியின் திருவடி அருகிலே அமர்ந்து கொண்டு,
கபாலம் விரிந்து வழிவிட , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

———

8. பெரியநம்பிகள் : (கி.பி. 997-1102); குமுதாம்சம். திருவரங்கத்தில் அவதரித்தார். திருநட்சத்திரம் – மார்கழி கேட்டை வேறு திருநாமங்கள்; பராங்குசதாசர், மகாபூர்ணர், பூர்வாசாரியர். குமரர் : புண்டரீகாட்சர். குமாரி அத்துழாய் அம்மாள். சீடர்கள் : ‘எம்பெருமானார், திருக்கச்சிநம்பி, மலைகுனிய நின்றார். சடகோபதாசர், அணிஅரங்கத்து அமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர்’ ஆகிய அறுவர். இவர் எம்பெருமானாரை மதுராந்தகத்தில் கண்டு பஞ்சசம்ஸ்காரம்[3] செய்தவர். இவர் மாறனேர் நம்பிக்கும் பணி விடைகள் செய்து பிரம்ம மேத சமஸ்காரம் பண்ணினார். அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான கந்தாடையண்ணன் முதலானவர்கள் மாறனேர் நம்பிக்கு பிரம்மசமஸ்காரம் செய்ததற்குப் பெரிய நம்பிகளைச் சமூகத்தினின்றும் நீக்கி வைத்தனர். பெருமாள் திருத்தேரில் அணி வீதியில் எழுந்தருளினபோது தேர்நின்றது. “பெரிய நம்பிகளை உனது திருத்தோளின்மேல் எழுந்தருளப் பண்ணி வாரும்” என்று கந்தாடை அண்ணனுக்கு பெருமாள் அர்ச்சகர் மூலமாக அருளிச் செய்ய, அப்படி அநுட்டித்துக் காட்டியபின்தான் திருத்தேர் நகர்ந்ததாம்.

(மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

பெரிய நம்பி, மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் , திருவரங்கத்திலே அவதரித்தவர் ஆவார்.
இவரது குமாரர் திருநாமம் புண்டரிகாக்ஷர், புதல்வி அத்துழாய். ஆளவந்தாரின் அடியார்களில்
பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப் பெருமாள் அரயர்,
திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகிய ஆறு பேருமே மிகச் சிறந்தவர்கள்.
ஸ்வாமி எம்பெருமானாரின் உயர்வுக்கு முக்கிய காரணகர்த்தர்கள். இவர்களில் முதலாவதாக இருப்பவர் பெரிய நம்பி.

ஸ்வாமி இராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தவர் பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் அரிய பெருமைகளை
இராமாநுஜருக்கு சொல்லியவர். ஆளவந்தார் உடல் நலம் குன்றியிருந்தபொழுது, அவரை தரிசிக்க இராமாநுஜரைக்
காஞ்சியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கும் போதே ஆளவந்தார் பரமபதித்து விட்டார்.
இது தெரிந்தவுடன் பெரிய நம்பிகள் மிகுந்த துயரமும், ஏமாற்றமும் அடைந்தார்.

ஒரு நாள் அத்துழாய் , அதிகாலையில் தீர்த்தமாட நதிக்குச் செல்லும் போது, துணைக்கு தன்னுடன் வரும்படி தன் மாமியாரை அழைத்தார்.
ஆனால் அவரோ ” உன் சீதன வெள்ளாட்டியை துணைக்கு அழைத்துக் கொண்டு போ ” என்று சொல்ல,
அத்துழாய் பெரிய நம்பியிடம் சென்று மாமியார் சொன்னதை வருத்தத்துடன் கூற,
அவர் இதனை உடையவரிடம் கேட்குமாறு சொல்லியனுப்பினார். அத்துழாயும் உடையவரை சந்தித்து
தன் தந்தையிடம் சொன்னதையும் அதனை அவர் உடையவரிடம் சொல்லும்படி கூறியதையும் சொல்ல,
உடையவரும் , முதலியாண்டானை அழைத்து, அத்துழாய்க்கு துணையாக ” சீதன வெள்ளாட்டியாகச் ” செல்லுமாறு பணித்தார்.

பெரிய நம்பியின் காலத்திலே சோழ தேஸத்தை ஆண்டு கொண்டிருந்தவன், அதி தீவிர சைவனான கிருமி கண்ட சோழன்.
இவன் நாலூரான் என்பவனின் தூண்டுதலால், சைவ சமயத்தை சாராத பலரிடமும்,
சிவனுக்கு மேம்பட்ட தெய்வம் எதுவும் இல்லை என்று மிரட்டி, கையொப்பம் பெற்று வருமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அவ்வாறு கையொப்பம் பெற இராமாநுஜரையும் பணிக்க விரும்பினான்.இதனை அறிந்து கொண்ட கூரத்தாழ்வான்,
இராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், தான் இராமாநுஜரைப் போல
காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, தன்னுடன் பெரிய நம்பியையும் அழைத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
அரசனின் ஆணைக்கு இணங்கி, கையொப்பமிட மறுத்த கூரத்தாழ்வான், பெரிய நம்பி இருவரின் கண்களையும் பிடுங்க ஆணையிட,
ஆனால் கூரத்தாழ்வான் தம் கண்களை தாமே பிடுங்கிக் கொள்ள,
பெரிய நம்பியின் கண்கள் மட்டும் பிடுங்கப் பட்டன. வயது முதிர்ச்சியின் காரணமாக வேதனை தாளமாட்டாமல்
பெரிய நம்பிகள் கீழே சாய்ந்து அவ்விடத்திலிருந்தே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————

9. இராமாநுசர் : (கி.பி. 1017-1137); சேஷாம்சம். திருப்பெரும்புதுரரில் கேசவ தீட்சிதருக்கும் காந்திமதி அம்மைக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரை-திருவாதிரை குடிஆசூரிகுலம். இவரை பகவதாம்சம், இலக்குமி அம்சம், சேனை முதலியார் அம்சம், பஞ்சாயுத அம்சம் என்றும் சொல்வர். வேறு திருநாமங்கள் ‘இளையாழ்வார், உடையவர், யதிராசர், இலட்சுமணமுனி, சடகோபன், பொன்னடி, கோயிலண்ணன், பாஷ்யக்காரர், எம்பெருமானார், பூதபுரீசர், தேசிகேந்திரர், திருப்பாவை ஜீயர்’ என்பன. திருத்தமக்கையார் நாச்சியாரம்மாள் தேவிகள், தஞ்சமாம்பாள் திருவேங்கடமுடையானுக்கு இலட்சத்தலத்தில் அலர்மேல் மங்கை நாச்சியாரை எழுந்தருளப்பண்ணி திருவாழி திருச்சங்கு சாதித்தருளினார். இதனால் அவனுக்கு மாமனாரும் ஆசாரியருமானார். திருக்குறுங்குடி நம்பிக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்து ‘இராமாதுசநம்பி’ என்ற தாசிய நாமம் சாத்தியருளினார். தில்லி பாட்சாவிடமிருந்த செல்வபிள்ளையை திரு நாராயணபுரத்தில் எழுந்தருளப் பண்ணினார். இவருக்கு ஆசாரியர்கள்: ‘பெரிய நம்பி, திருமாலையாண்டான், திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், பெரியதிருமலைநம்பி, திருக்கச்சி நம்பி’ சீடர்கள்: எம்பார், முதலியாண்டான், கூரத்தாழ்வான், கந்தாடையாண்டான், புண்டரீகாட்சர், (பெரிய நம்பியின் திருக்குமாரர்), தெற்காழ்வான், (திருக்கோட்டியூர்நம்பியின் திருக்குமாரர்) சொட்டைநம்பி (ஆளவந்தாரின் திருமகனார்), அணியரங்கத் தமுதனார் பிள்ளை, கோவிந்த சீயர் (யாதவப் பிரகாசர்), பிள்ளை உறங்கா வில்லிதாசர், பொன்னாச்சியார் (வில்லிதாசரின் தேவிகள்) இன்னும் பல அம்மையார்கள், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் சீயர், வடுகநம்பி, சுந்தரத் தோளுடையார் (திருமலையாண்டான் குமாரர்), பிள்ளைத் திருமலைநம்பி (பெரியதிருமலை நம்பி குமாரர்), திருக்குருகைப் பிரான் பிள்ளான், இன்னும் ஆயிரம் சீடர்கள், 12000 ஏகாங்கள், 74சிம்மாசனாதிபதிகள், 700கீடர்கள் 300 கொத்தை யம்மைஷியகளும்,சாத்தின.சாத்தாத முதலிகளும்,மகாராசர்களும், திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவரும் மற்றும் பலரும்.

இவருடைய திருமேனிகள் நான்கு (1) நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்தருளிய ‘பவிஷியதாசார்யர் அணிக்கிரகம், (2) உடையவர்தானே திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவர்க்காக ஏறியருளப் பண்ணியது; (3) கந்தாடையாண்டான் திருப்பெரும்புதூரில் நிறுவச் செய்து அதனை உடையவர் ஆலிங்கனம் செய்தது, (4) பின்பு கந்தாடை யாண்டான்நம்பெருமான் நியமனத்தினால் அருளப்பண்ணியது. கந்தாடையாண்டானும், பட்டரும் அவர் திருநட்சத்திரங்கள் தோறும் பெருவிழாவாக நடத்திக் கொண்டிருந்தனர். இவருக்குப் பாலமுதம் காய்ச்சும் கைங்கரிய பரர்கிடாம்பிப் பெருமாளும், வடுக நம்பியும், பிரசாதம் தயாரிக்கும் கிடாம்பியாச்சானும் திருமடைப்பள்ளித் தொண்டர்கள். இவர்தம் அருளிச் செயல்கள்; ‘ஸ்ரீபாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்ததீபம்,வேதாந்த சங்கிரகம், கத்தியத்திரயம், நித்தியம், கீதாபாஷியம்’ ஆகிய ஒன்பது வயது 120.

(சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக ,
சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும்,
வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள்,
தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும்,
பக்தியும் ஏற்பட்டது. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று,
அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது.
இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து,
அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.

யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும்
அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் ,
தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க,
இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார்.
அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார்.
இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார்.
அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். இதனை அறிந்து கொண்ட கோவிந்தர்,
இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார்.
காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து,
தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.

பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன்,
இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு,
ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார்.
ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன்
அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது,
அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத
அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு,
அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களையும் கூறினர். அவை :-

ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை
வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.

வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப் பட வேண்டும்.

ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க,
உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார்.
பெரிய திருமலை நம்பியிடம் ( அவரின் மாமாவும் ஆவார் ) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம்,
திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ( இவர் ஆளவந்தாரின் பேரன் )
அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை,
திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள்,
அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம்.
திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார்.
ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்,
இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட,
அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் ,
மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி,
இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.

இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும்,
தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து
அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார். இது போலவே பிறிதொரு சமயம்,
பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட
பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார்.
இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற,
பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி
அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். இவர்களை காணாது தவித்த
இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால்
மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.

தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில்
திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு,
காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.
அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர்.
இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.

ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் ,
சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர்
முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள்,
பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி
எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார்.
அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க ,
உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன்
இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார்.
அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.

திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு,
பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே
ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர வேண்டி,
இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார்.
ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் –
இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது.
தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும், மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும்,
தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால்
அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார்.
திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும்
திருக்கோயிலுக்கு திரண்டு வரச் சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.

இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு
நரகம் தான் கிடைக்குமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம்
அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள் என்றும்,
இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும்
தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர்
சீடனாக அமைந்தது கண்டு மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார்.
ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும்,
மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இச் சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம்
கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார்.
ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு அரசவை செல்ல,
இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார்.
அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி
அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். பின்னர் தில்லி சுல்தானின்
மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார்.
சுல்தானால் களவாடப்பட்ட , பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த
திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி,
உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே
” வாரும் செல்வப் பிள்ளாய் ” என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர,
அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். அன்று முதல்
இராமப் பிரியன் ” செல்வப் பிள்ளை ” என்றே அழைக்கப்படலானார்.
மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.

இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை
அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார்.
இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.

இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு
முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும்
மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார்.
குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது- ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும்,
கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும்.

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

———————-

(1). எம்பார் : (பிறப்பு. கி.பி. 1025); இராமாம்சம். திருப் பெரும்புதுரையடுத்த மழலை மங்கலத்தில் கமலநயனபட்டருக்கும், உடையவரின் சிறிய தாயாரான பெரிய பிராட்டியாருக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். தம் தாய்மாமனாகியபெரிய திருமலை நம்பியால் ‘கோவிந்தபட்டர்’ என்று திருநாமம் சாத்தப் பெற்றார். யாதவப்பிரகாசரிடம் உடையவருடன் வேதாந்தங்களைக் கற்று வந்தார். இவர் கங்கையில் நீராடும்போது ஒர் இலிங்கம் கையில் வந்து சேர ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்று திருநாமம் சாத்திக் காளத்தியில் வழிபாடு செய்து வந்தார். இவரைத் திருமலை நம்பி திருத்திப் பணி கொண்டார். இவரை ‘இராமாநுச பாதசாயை’ என்றும் சொல்லுவர். ஆசாரியர் ‘எம்பெருமானார்’ சீடர்கள் கூரத்தாழ்வான் குமாரர்களாகிய பெரிய பராசரபட்டரும், சீராமப்பிள்ளையும். வயது105.

(தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல் போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

தை மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில், த்யுதிமதி அம்மையாருக்கும், கமல நயன பட்டருக்கும் திருக்குமாரராக
அவதரித்தவர் எம்பார் அவர்கள். இவர் ஸ்வாமி இராமானுஜரின் தாய் வழி சிற்றன்னையின் திருமகனாவார்.
இவருடைய மாமா பெரிய திருமலை நம்பி இவருக்கு ” கோவிந்த பட்டர் ” என்று திருநாமம் சூட்டினார்.
இவருடைய உபனயனமும், விவாஹமும் இவர் பிறந்த ஊரான மதுரமங்கலத்தில் நடைபெற்றது.
இராமாநுஜர் , யாதவப் பிரகாசரிடம் வேதங்களைக் கற்றுக் கொள்வதை கேள்விப்பட்ட கோவிந்த பட்டர் ,
தாமும் அவருடன் சேர்ந்து வேதம் கற்றுக் கொள்ளச் சென்றார். அது முதல் அவருடன் இணை பிரியாமல் இருந்தார்.

இராமாநுஜருக்கு, அவர் குருவான யாதவப் பிரகாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,
காசிக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல சதி செய்த குருவின் சதிச் செயலை அறிந்து,
அவரிடமிருந்து இராமாநுஜரைக் காத்து, காஞ்ச்சிக்கு அனுப்பியதும் இவரே. ஒரு சம்யம் காசியில்,
கங்கை நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இவர் கையில் ஒரு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டுவிட்டது.
இதனால் சிவ பக்தி ஏற்பட்டு அதன் காரணமாக காளஹஸ்தி சென்று அங்கு சிவனை வழிபடலானார்.
இவரை ” உள்ளங்கை குளிர்ந்த நாயானார் ” என்று பலர் அழைத்தனர்.

இராமாநுஜர் ஸன்னியாஸம் மேற்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்த பொழுது,
கோவிந்த பட்டர் சிவ பக்தரானதைக் கேள்விப் பட்டு , மிக வருந்தி, அவரை மீண்டும் வைஷ்ணவத்திற்கு
திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்குப் பொருத்தமானவர் தங்கள் இருவருக்கும் மாமாவாகிய
பெரிய திருமலை நம்பி தான் என்று முடிவு செய்து அவருடன் மேலும் சில வைஷ்ணவர்களையும் காளஹஸ்திக்கு அனுப்பினார்.
கோவிந்த பட்டரைத் திருத்துவதற்கு பெரும் முயற்சியினை மேற்கொண்டார் பெரிய திருமலை நம்பி.
இவ்வாறு இரு முறைகள் முயன்று தோல்வியுற்ற நம்பிகள் மூன்றாம் முறையாக நம்மாழ்வாரின் திருவாய் மொழி
இரண்டாம் பத்தின், இரண்டாம் திருமொழியான
“திண்ணன் வீடு ” திருமொழியின் ” தேவும் எப்பொருளும் படைக்க * பூவில் நான்முகனைப் படைத்த
* தேவன் எம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும் தகுமே * என்ற நான்காம் பாசுரத்தினை மீண்டும், மீண்டும்
கோவிந்த பட்டரின் செவியில் விழும்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரும் ” தகாது , தகாது ” என்று கூறிக்கொண்டே
பெரிய திருமலை நம்பியின் திருவடியில் விழுந்தார். பிறகு பெரிய திருமலை நம்பியும் , கோவிந்த பட்டரை ஆசிர்வதித்து,
அவரை திருமலைக்கு அழைத்துச் சென்று, வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றி பயிற்சி அளித்தார்.

பெரிய திருமலை நம்பியின் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட்க வந்திருந்த இராமாநுஜர்,
காலக்ஷேபம் முடிந்து புறப்படத் தயாரான பொழுது, அவருக்கு தாம் ஒன்றும் கொடுக்க வில்லையே என்று அவர் கூற,
அதற்கு இராமாநுஜர், தமக்கு கோவிந்த பட்டரை தந்தருள வேண்டும் என்று ப்ரார்திக்க,
அவர் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றினார் பெரிய திருமலை நம்பி அவர்கள்.

ஞான பக்தி, வைராக்கியத்துடன் இராமாநுஜரிடம் அதீத ஈடுபாடு கொண்ட, கோவிந்த பட்டர் சன்யாஸம் மேற்கொண்டு
எம்பார் என்ற திருநாமம் பெற்று, பின்னர் இராமாநுஜரின் அர்த்த விஷேஷங்களையும், தர்சனத்தையும் நிர்வகித்து
வாழ்ந்தருள வேண்டும் என்று மங்களா ஸாஸனம் செய்து பட்டர் திருக்கைகளில் காட்டிக் கொடுத்து,
இராமாநுஜரின் திருவடிகளை தியானித்துக் கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

———

(2). பட்டர் : (பிறப்பு. கி.பி. 1062); பராசாரம்சம். திருவரங்கத்தில் கூரத்தாழ்வானுக்கும், கூரத்தாண்டாளுக்கும் திருமகனாக அவதரித்தார். திருநட்சத்திரம்: வைகாசி அனுஷம் வேறு திருநாமங்கள் : ‘பெரிய பட்டர், பராசாபட்டர், வேதாந்தாசாரியர் பட்டர், திருவரங்கப்பெருமாள் பட்டர்’. ஆசாரியர், எம்பார். கூர்மையான அறிவுடைய இவரைப்பற்றிய குறிப்புகள் வைணவ உரைகளில் வருகின்றன. ‘பட்டர் நிர்வாகம்’ என்பது மிகுப்புகழ் பெற்றது. எம்பெருமானாரின் கட்டளைப்படி விஷ்ணு சகஸ்ரநாமத்திற்குப் பேருரை வகுத்த பெருமகனார். திருநெடுந்தாண்டகத்தின் ‘மைவண்ணநறுங்குஞ்சி’ (21) என்ற பாசுரத்திற்கு இவர் அருளிய வியாக்கியானம் தனிப்பெருஞ்சிறப்புடையது. ஆசாரியர், எம்பார் சீடர்கள்; ‘நஞ்சீயர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், செடியெடுத்த நல்லான், நம்பி கோவர்த்தனதாசர், பிள்ளை விழுப்பரையர், அம்மன் ஆழ்வான், நலந்திகழ் நாராயண சீயர், உத்தண்ட பட்டர் என்னும் நடுவில் திருவீதிப் பிள்ளைபட்டர், கடகத்துப் பிள்ளை, வாக்விசயபட்டர், வீரசிகாமணி வில்லவராயன், அழகிய மணவாளப்பட்டர், அவர் காலத்தவர் அழகிய மணவாளப் பெருமாளரையர், ஆப்பன், ஆப்பன் திருநறையூரரையர், ஆப்பன் திருவழுந்துரரையர், இவர் குமாரர் உத்தண்டபட்டர், இவர் குமாரர் சீரங்கப்பட்டர், இவர் குமாரர் சுதர்சனபட்டர், இவர் குமாரர் சீரங்கராசபட்டர்,இவர் குமாரர் திருவேங்கடபட்டர்’. இவர் திருநெடுந்தாண்டகப் பாசுரம் (21) ஒன்றிற்குப் பொருள் அருளிச் செய்யாநிற்க, அப்போது வைகுந்த நாதன் பெரிய திருவடி மேலே எழுந்தருளக் கண்டு அதைத் தம் திருப்பவளத்தாலே அருளிச் செய்து திருக் கண்களை மலர விழித்து, திருமேனிபுளகாங்கிதமாய் முறுவல் செய்து, திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு கிரக்க பாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். வயது 28. இவர்தம் அருளிச் செயல்கள் : ஸ்ரீ ரங்க ராஜஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோசம், தத்துவதிரயசாரம், பிரவண விவரணம், இலட்சுமி கல்யாணம், விஷ்ணு சகஸ்ரநாம பாஷியம், கிரியாதீபம், அஷ்டசுலோகி, சதுலோகி, துவிசுலோகி, தனிசுலோகி, மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் ஆகியவை.

(வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

பெரிய பெருமாளின் அருள் பிரசாதமாக , கூரத்தாழ்வானுக்கும், ஆண்டாளுக்கும் திருமகனாக
வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் பட்டர்.
இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள், குழந்தையைப் பார்ப்பதற்காக இராமாநுஜரும், எம்பாரும் வந்தனர்.
அச் சமயம் எம்பார், திருமந்திரத்தை சொல்லிக் கொண்டே, குழந்தையை எடுத்து இராமாநுஜரிடம் கொடுக்க,
அவரும் ” நீரே இக் குழந்தைக்கு ஆச்சாரியனாக இரும் ” என்று சொல்லி, ஆளவந்தாருக்கு வாக்கு கொடுத்தபடி,
குழந்தைக்கு “பராசர பட்டர் ” என்னும் திருநாமத்தை சூட்டினார்.
ஸ்ரீரங்கனாதன் ஸன்னதியில், திருமணத் தூண் அருகில் தொட்டிலிட்டு, பெருமாளும், பிராட்டியுமாக குழந்தையை வளர்த்தனர்.

பட்டர் அவரது ஐந்து வயதில், வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது,
ஒரு பெரிய வித்வான் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார்.
கூட வந்த கட்டியக்காரன் “ஸர்வக்ஞர் ” ( எல்லாம் அறிந்தவர் என்று பொருள் ) வருகிறார் என்று
கட்டியம் கூறியதைக் கேட்ட பட்டர் , அவர் ஒரு பெரிய அஹங்காரராய் இருப்பார் என்று எண்ணி,
அவருடைய அகந்தையை அகற்ற எண்ணம் கொண்டார். தன் கையில் ஒரு கைப்பிடி மண்னை எடுத்துக் கொண்டு,
அந்த வித்வானிடம், தன் கையில் எவ்வளவு மண் இருக்கிறது என்று வினவ, பதில் சொல்ல முடியாமல் அந்த ஸர்வக்ஞன் முழித்தான்.
உடனே பட்டர் தன் கையில் இருப்பது ஒரு கைப்பிடி மண் என்று கூற, அந்த வித்வான் அஹங்காரம் அழிந்து தலை குனிந்து நின்றார்.

பட்டருக்கு உரிய பருவத்தில் உபநயனம் செய்துவைத்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவர் பெற்றோர்.
கேட்ட மாத்திரத்திலேயே தான் கற்றதை மனதில் பதிய வைத்துக் கொள்ளூம் ஆற்றல்
அவருக்கு இருப்பதைக் கண்டு எல்லோரும் வியந்தனர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நூல்களையும்,
ஆழ்வார்களின் ஈரச் சொல் பாசுரங்களையும், இதிகாச புராணங்களையும், மற்றைய தத்துவ நூல்களையும் கற்றார்.

ஒரு கைசிக துவாதசி அன்று, பட்டர் மிக அழகாக கைசிக புராணம்
வாசித்த நேர்த்தியைக் கேட்டு மகிழ்ந்த பெரிய பெருமாள் இவரிடம்
” பட்டரே உமக்கு பரம பதம் தந்தோம் ” என்று அருளினார்.
பட்டரும் மிகுந்த ஆனந்தத்துடன் இல்லம் திரும்பி, தம் தாயாரை தெண்டம் ஸமர்ப்பிக்க,
அவரும் ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் ” என்று வாழ்த்த, பட்டரும் ” அம்மா, அடியேன் வேண்டியது ஈதே ” என்று கூறினார்.
பிறகு பட்டர் திருநெடுந்தாண்டகம் உபன்யாசம் செய்ய தொடங்கி, விளக்கியருளும் போது,
பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தின் நான்காம் திருமொழியின்
ஒரு பாசுரமான ” பறவியேறு பரம புருடா * நீ என்னைக் கைக் கொண்ட பின் * பிறவி என்னும் கடலும் வற்றி * பெரும் பதமாகின்றதால் ”
பாசுரத்தை அனுஸந்தித்து, இரு கரம் கூப்பிக் கொண்டிருக்கும் போதே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————-

(3). நஞ்சீயர் (பிறப்பு. கி.பி.1173); இவர் திருநாராயண புரத்தில் அவதரித்தவர். திருநட்சத்திரம்-பங்குனி உத்தரம் இவர் வேதாந்தி என்று முதலில் திருநாமம் பெற்றிருக்கையில் வாதபிட்சைக்கு வந்த பட்டரிடம் வாதிட்டுத் தோற்றவர். பின்னர் பட்டரின் திருவடிச் சம்பந்தம் பெற்று அவருடைய சீடரானார். ஒரு நாள் பிச்சைக்கு வந்த வைணவருக்குப் பிச்சையிட மறுத்த தேவியாரை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்து தேவியாருக்கு அளித்து, குருதட்சினை கொண்டு சந்நியாச ஆசிரமத்தை ஏற்றார். தம் ஆசாரியரைக் காணச் செல்லுகையில் பட்டர் நம்சீயர் வந்தார் என்று கூற அன்று முதல் நஞ்சீயர் என்ற பெயர் உண்டாயிற்று. இவருக்குச் ‘ஸ்ரீராங்கநாதர்’, வேதாந்த வேதியர் மாதவாசார்யிர் என்ற வேறு திருநாமங்களும் உண்டு. சீடர்கள்; நம்பிள்ளை யூனிசேனாபதிசீயர், குட்டிக்குறி இளையாழ்வார். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி, திருப்பாவைக்கு ‘ஈராயிரப்படி’ திருவந்தாதிகள், கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு இவற்றிற்க்கு உரை. இவர் திருவாய்மொழியை நூறு உரு வியாக்கியானம் செய்தபடியால் திருவாய்மொழிக்குச் சதாபிஷேகம் பண்ணினர் என்ற புகழ் இவருக்கு உண்டு. பெற்றி என்பார் இவருக்கு அடிமைப்பட்டுச் சிறப்பான பொருளைக் கேட்டார். வயது 100,

(பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

திருநாராயணபுரத்தில் பங்குனி மாதம், உத்திர நக்ஷத்திரத்தில் அவதரித்த நஞ்சீயரின் இயற்பெயர் மாதவாச்சாரியார்.
வேதங்களில் கரைகண்டவரான வல்லவராக இருந்ததினால் இவர் வேதாந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு அந்தணர் பெரும் வேதாந்தியாகத் திகழ்ந்த மாதவாச்சாரியாரை, பட்டரின் பெருமைகளை சொல்லி
அவரிடம் ஈடுபாடு கொள்ளும்படி வேண்ட, இவருக்கும் பட்டரை நேரில் காண ஆவல் எழுந்தது.
பட்டர் திருநாராயணபுரம் ஏள்ளியிருந்த பொழுது, பரிவாரங்களுடன் வேதாந்தி மணி பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
மற்ற பிற அந்தணர்கள் உணவு பறிமாறும் இடத்திற்குச் செல்ல, பட்டர் ஒரு எளிய அந்தனர் போல் ,
மாதவாச்சாரியார் இருந்த இடத்திற்கு வந்தார்.

இவரைக் கண்ட வேதாந்தி ” எதற்கு இங்கு வந்தீர் ” என்று வினவ,
” பிட்சைக்கு வந்தேன் ” என்று பட்டர் பதிலுரைக்க, அதற்கு வேதாந்தி ” உணவு பறிமாறும் இடத்திற்கு போவதுதானே ” என்று சொன்னார்.
ஆனால் பட்டரோ, தான் தர்க்க பிட்சைக்குத்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார்.
இவர் யாரென்று ஊகித்த வேதாந்தி, பட்டரிடம் ” நீர்தான் பட்டரோ ? ” என்று கேட்க, அவரும் ” ஆம் ” என்று சொல்ல,
இருவருக்கும் வாதம் நடந்தது. முடிவில் பட்டர் வேதாந்தியை வெற்றி கொள்ள, அவரும் ” விஷிஷ்டாத்வைத மதமே”
உயர்ந்தது என்பதனை ஒப்புக் கொண்டு, பட்டர் திருவடிகளில் சரணம் அடைந்தார்.
பட்டர் அவருக்கு ” பஞ்ச ஸமஸ்காரம் ” செய்து வைத்தார்.

பின்னாளில் வேதாந்தியாகிய , மாதவாச்சாரியார் துறவறம் பூண்டு, அத் துறவறக் கோலத்துடனே ஸ்ரீரங்கம் வந்து,
பட்டரின் திருவடியை சரணமடைந்தார்.
பட்டரும் , அவரை வாரி அணைத்துக் கொண்டு, அவருக்கு ” நஞ்சீயர் ” என்று திருநாமம் சூட்டினார்.
பட்டரிடம் அளவற்ற பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலே நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்துள்ளார்.
நஞ்சீயர் காலக்ஷேபங்களைக் கேட்ட, நம்பிள்ளை, பிற்காலத்தில், தாம் காலக்ஷேபம் செய்யும் போது,
நஞ்சீயரின் குண நல விஷேங்களை பூரிப்போடு கூறுவாராம்.

நஞ்சீயர் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர் மிகவும் விரும்பிய,
திருமங்கை ஆழ்வாரின் ” தூவிரிய மலருழக்கி ” பதிகத்தை அரையர் ஸேவிக்க,
அப்பாசுரத்தின் பொருளில் ஈடுபட்டு பரமபதம் அடைந்தார்.

———

(4).நம்பிள்ளை: (பிறப்பு:கிபி.1252); இவர் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூரில் அவதரித்தார். இவருடைய பிள்ளைத் திருநாமம் ‘வரதராசர்’ என்பது. திருநட்சத்திரம் கார்த்திகையில் கார்த்திகை நஞ்சீயரால் நம்பிள்ளை எனத் திருநாமம் பெற்றவர். வேறு திருநாமங்கள் : ‘கலி வைரி, திருக்கலிகன்றிதாசர், லோகாசார்யர், பூர் சூக்தி சாகரர், உலகாரியன், அபயப்பிரதாசர். இவர் காலத்தவர் அப்பிள்ளை, அம்மங்கி பெரிய முதலியார், ஏறு திருவுடையதாசர், பெரிய கோயில் வள்ளலார் சீடர்கள். வடக்குத் திருவீதிப்பிள்ளை, கந்தாடை தோழப்பன், பின்பழகிய பெருமாள் சீயர், ஈயுண்ணி மாதவப்பெருமாள், வாதிகேசரி அழகிய மணவாளசீயர், நடுவில் திருவீதிப் பட்டர், வேல்வெட்டிப்பிள்ளை, பெரிய வாச்சான்பிள்ளை, ஏறுதிருவுடையதாசர், சீனிக்கரபிள்ளை இராமாநுசாசார்யர், வானமாமலைதாசர், திருக்குருகூர்தாசர். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படி, திருவிருத்தத்திற்கு ஈடு, கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு ஈடு, திருவாய்மொழிக்கு ‘இருபத்து நாலாயிரப்படி’ என்னும் வியாக்கியானம் வரையுமாறு பெரியவாச்சான் பிள்ளைக்குக் கட்டளையிட்டார். நம்பெருமாள் நம்பிள்ளையைக் கடாட்சித்து அவரைத் தம்முடைய திருமுடிப்பக்கத்திலிருந்து திருவாய்மொழியை நிர்வகிக்குமாறு நியமனம் செய்ய, நம்பிள்ளையும் “நாயினேன் தேவரீருடைய நியமனத்தைத் தப்பமுடியாது. ஆகிலும் அவ்விடம் முன்பு துரியோதனன்பற்றிய இடமாலையாலே, அடியார்க்குப் பற்றும் இடம் ஆகாது” என்று விண்ணப்பம் செய்ய பெருமாளும் உகந்து அதை ஆமோதிக்க, அது கண்டு அங்கிருந்தோர் அனைவரும் வியப்பெய்தினர்.

(கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

திருமங்கை ஆழ்வாரின் அவதார மாதமும், நக்ஷத்திரமுமான, கார்த்திகை மாதம் , கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்
நம்பிள்ளை. இவரின் இயற்பெயர் வரதர். பட்டருடைய வியாக்யானங்களை தம் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டிருந்தார்.
நஞ்சீயர் திருவாய்மொழிக்கு, உரை எழுதிக்கொண்டிருந்தார்.
அதனை ஏடு படுத்த அழகான கையெழுத்துடன் எழுதக் கூடியவரை தேடிக் கொண்டிருக்கும் போது,
அவருக்கு அப்பொழுது அறிமுகமானவர் வரதர். நஞ்சீயருக்கு,வரதரின் கையெழுத்து பிடித்துப் போக அவரைத் தம் சீடராக்கிக்
கொண்டார். திருவாய்மொழி உரையை, வரதருக்குக் கற்றுக் கொடுத்து, தான் எழுதி வைத்திருந்த
ஓலைச் சுவடிக் கட்டையையும் வரதரிடம் கொடுத்து அதனை அவரின் கைவண்ணத்தில் ஏடுபடுத்திக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்.

வரதர் சுவடிகள் அடங்கிய கட்டையை எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றினைக் கடந்து அக்கரையை அடைய ஆற்றில் இறங்கினார்.
அப்பொழுது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, நன்கு நீந்த வல்லவரான வரதர்,
ஓலைக் கட்டையை தம் திருமுடியில் கட்டிக் கொண்டு நீந்தினார்.
ஆனால் வெள்ளப் பெருக்கின் ஓட்டத்தில் அவருடைய திருமுடியில் கட்டப்பட்டிருந்த அவ்வோலை கட்டைகள்,
ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மிக்க துயரமுற்ற வரதர், புலம்பியபடியே கரையை கடந்து மறு பக்கம் வந்தார்.
பிறகு தம் மனதைத் தேற்றிக் கொண்டு, ஆச்சாரியனிடம் தாம் கற்று, தம் மனதில் நிறுத்திக் கொண்டதை நினைவில் கொண்டு,
எம்பெருமானின் அருளினை வேண்டி, தாமே அவ்வுரைகளை எழுதி முடித்து அதனை நஞ்சீயரிடம் கொண்டு ஸேர்ப்பித்தார்.
இதனைப் படித்துப் பார்த்த நஞ்சீயர் தாம் கற்றுக் கொடுத்ததை விட மிகச் சிறப்பாக திருவாய்மொழி உரை இருப்பதைக் கண்டு,
மிகவும் பரவசப்பட்டு, மனம் குளிர்ந்து வரதரைப் பாராட்டினார். வரதரும் நடந்த சம்பவங்களை நஞ்சீயரிடம்
கூற, மிகப் பூரிப்புடன் ” நீர் நம்பிள்ளையோ ” என்று ஆரத் தழுவிக் கொண்டார்.

திருவரங்கத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு, காலக்ஷேபங்கள் செய்து வந்த நம்பிள்ளை கோஷ்டியில் இடம் பெற்றிருந்த,
கூரத்தாழ்வானின் பேரனான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் விளக்க உரை கேட்டதைக் கொண்டு,
அதனை சுவடி படுத்திக் கொண்டு, ஆச்சாரியனிடம் சென்று காட்டினார். ஆனால் நம்பிள்ளையோ, தம்மிடம் இசைவு பெறாததாலும்,
அவர் எழுதிய உரையானது மிகவும் விஸ்தாரமாக இருந்ததாலும், ஆழ்பொருளை சரியான முறையில் தெரிவிக்காததாலும்,
கோபம் கொண்டு அச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கிவிடுகிறார்.

திருவரங்கத்தில், நம் பெருமாள் ஸன்னதியில் நடக்கும் இவரின் காலக்ஷேப பேருரைகளைக் கேட்க ,
பெருமளவில் அலை மோதும் பக்தர்கள் கூட்டத்தைக் கண்டு ” இது நம்பெருமாள் கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ ” என்று
அக்காலத்தில் மக்கள் வியப்பார்களாம்.
இவருக்கு உலகாச்சாரியர் என்ற பட்டப் பெயரும் உண்டு. 95 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்தார் நம்பிள்ளை.

——

(5).வடக்குத்திருவீதிப்பிள்ளை :(பிறப்பு. கி.பி.167-1285); ஐயாம்சம். திருவரங்கத்தில் பிள்ளை உலக ஆசிரியருக்கு திருமகனாய்த் திருவவதரித்தார். கோயில் வடக்குத் திருவீதியில் இவரது திருமாளிகை இருந்ததால் இப்பெயரால் வழங்கப் பெற்றவர். திருநட்சத்திரம்: ஆனி-சுவாதி. திருநாமங்கள் திராவிடவேதாந்த தேசிகர், ஸ்ரீகிருஷ்ணபாதர் தேவிகள், ஸ்ரீரங்கநாச்சியார். திருக்குமாரர்கள் : பிள்ளை உலக ஆசிரியர், (பாட்டன் பெயரை வைத்தனர் போலும்), அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். சீடர்கள் : தம் குமாரர்கள் இருவரும், ஈயுண்ணிமாதவர், பத்மநாமப் பெருமாள், பராங்குச சீயர், நாயனார் கூரகுலோத்தும் தாசர், வங்கிபுரம் சிரங்காசாரியர் வானமாமலை தாசர், அருளிச் செயல்கள்: திருவாய்மொழிக்கு ஈடு முப்பதாறாயிரப் படி (நம்பிள்ளை அருளியவற்றை மனத்திலிருந்து எழுதியவர்). வயது 97

(ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை , ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதம், சுவாதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பிரபலமானவர்.

நம்பிள்ளையின் திருவாய்மொழி வியாக்யான காலக்ஷேப கோஷ்டியில் ஈடுபாடு கொண்டு,
அங்கு விவரிக்கப்பட்டவற்றை குறித்துக் கொள்ள விழைந்தார்.
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரின் பிரயத்தனத்தின் மேல் நம்பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தினை மனதில் இருத்திக் கொண்டு,
நம்பிள்ளையின் காலக்ஷேப வியாக்யானங்களை முழுவதுமாக குறிப்பெடுத்துக் கொள்வார்.
அவ்வாறு குறிப்பெடுத்துக் கொண்டதை ஓலைச் சுவடியில் எழுதி, தம் திருமாளிகையில் கோவிலாழ்வார் ஸன்னதியில்
சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் நம்பிள்ளையை தமது திருமாளைகைக்கு அமுது செய்விக்க விரும்பி ப்ரார்த்தித்தார்.

அவரும் ஒப்புக் கொண்டு ஒருநாள் திருமாளைகைக்கு எழுந்தருளி, அங்கு அன்று தாமே பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதாகக் கூறி,
கோவிலாழ்வார் கதவுகளைத் திறந்தார். உள்ளே இருந்த சுவடிகளைக் கண்டு அவற்றை எடுத்து வாசித்துப் பார்த்தார்.
தம்முடைய வியாக்யானங்களே அவை என்றுணர்ந்து, அவை மிகச் சிறப்பாக குறிப்பெடுக்கப்பட்டதைக் கண்டு திருப்தியுற்று,
” பிள்ளாய் இது என்ன செயல்? ” என்று வினவ, வடக்குத் திருவீதிப் பிள்ளையும் தாம் மறக்காமல் இருப்பதற்காகத் தான்
இவற்றை ஏடு படுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்.

அலங்காரம் செய்யப்பட்ட யானை மிக கம்பீரமாக நடப்பதைப் போல, இந்தக் குறிப்புகள் இருப்பதாகக் கூறி,
வடக்குத் திருவீதிப் பிள்ளையை நன்றாக கடாக்ஷித்தார்.அந்த ஏடுகளை தாமே வைத்துக் கொள்வதாகக் கூறி, தம்முடன் எடுத்துச் சென்றார்.
பின்னர் அந்த ஈட்டை ஈயுண்ணி மாதவர்க்குக் கொடுத்தார். அவர் பின் அதனை தம் மகனான பத்மனாபனிடம் கொடுத்தார்.
பத்மனாபன் அதனை நாலூர் பிள்ளைக்குக் கொடுக்க, அவர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுக்க,
பின் அவர் தம் சிஷ்யர்களான திருவாய்மொழிப் பிள்ளை, திருநாராயணபுரம் ஆய் என்கிற ஜனனாச்சாரியர், இளம்பிலிசை பிள்ளை மூவருக்கும் கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அதனை மணவாள மாமுனிக்குக் கொடுக்க, அவர் அதனை நம்பெருமாள் முன்பு பிரகடனப்படுத்தினார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையின் காலஷேபங்களிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமையால், இல்லறத்திலே
நாட்டமில்லாதவராக இருந்தார். இதனால் பிள்ளையின் தாயார் அம்மி கவலையடைந்து, நம்பிள்ளையிடம் தெரிவிக்க,
அவரும் பிள்ளையை அழைத்து தக்க வகையில் உபதேசித்தார். ஆச்சார்ய உபதேசத்தைப் பெற்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை,
திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை நடத்தி, இரண்டு ஆண் புத்திரர்களைப் பெற்றார்.
தம் ஆச்சாரியரான நம்பிள்ளையின் பட்டப் பெயரான உலகாச்சாரியர் என்று தம் ஒரு மகனுக்கு பெயரிட்டார்.
அவர்தான் பிள்ளைலோகாச்சாரியர் ஆவர். துலுக்கர்களின் படை எடுப்பின் போது நம்பெருமாளைக் காக்க வேண்டி,
அவரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜ்யோதிஷ்குடிக்கு சென்றார்.
மற்றொரு புதல்வனுக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று திருநாமம் சூட்டினார்.
இவர் தான் ” ஆச்சார்ய ஹ்ருதயம் ” என்னும் மாபெரும் நூலை எழுதியவர்.
பிள்ளைலோகாச்சாரியர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று இரு மாபெரும் புதல்வர்களை
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரயதாயத்திற்கு அளித்த வடக்குத் திருவீதிப் பிள்ளை 106 ஆண்டுகள் வாழ்ந்து பின் பரமபதம் அடைந்தார்.

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

—————

(6). பிள்ளை உலகஆசிரியர்: (பிறப்பு. கி.பி. 1300); தேவப்பெருமாள் அம்சம். திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், சீரங்க நாச்சியாருக்கும் திருக்குமாரராக அவதரித்தவர். திருநட்சத்திரம்: ஐப்பசி திருவோணம், திருநாமம், உலக ஆசிரியர். துருக்கர் காலத்தில் பெருமாள் நாச்சியாருடன் வெளியேறிய பொழுது அவர் பிரிவற்றாது தாமும் முதலிகளுடன் புறப்பட்டு ‘சோதிடக்குடி’ என்னும் சிற்றூரில் பெருமாளுடைய எல்லாச் சொத்துகளையும் கள்வர் அபகரித்ததைக் கேட்டுத் தாமும் தம்முடைய அனைத்தையும் பறிகொடுத்தார். சாதிவேறுபாடின்றி,பேதையரும் பெண்களும் உய்யக்கருதி அரிய பெரிய பதினெண்கிரந்தங்களை (அஷ்டதசா இரகசியங்களை; அஷ்டம்-எட்டு தசா-பத்து)வெளியிட்ட ஆசார்யர்களில் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இலர். இவை தவிர, ‘தத்துவ விவேகம், நாலுவார்த்தை’ என்பவையும் இவர்தம் அருளிச் செயல்கள். இவர் கருத்தைப் பின்பற்றி மணவாள மாமுனிகள் வரைந்த வியாக்கியானத்தின் பொருளமைப்பும், நடையழகும் ஒருவராலும் அளவிடக்கூடியதல்ல. இவருடைய திருவடிசம்பந்தம் பெற்றவர்கள்: திருவாய்மொழிப் பிள்ளை, வங்கிபுரம் சீரங்காசாரியர், கோட்டுரிலண்ணன், விளாஞ்சோலைப்பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாளசீயர், கிடாம்பி இராமாதுசப்பிள்ளான், மணப்பாகத்தது நம்பி, சடகோப சீயர், நாலூர்பிள்ளையாச்சான் பிள்ளை, திருப்புட்குழி சீயர், நாலூர்பிள்ளை தாசர், கூரகுலோத்துமதாசர், திருவாய்மொழிப் பிள்ளை, தமப்பனாரண்ணர், திருவாய்மொழிப் பிள்ளை, திருத்தாயார், கொல்லிகாவல்தாசர், கோட்டுர் அழகிய மணவாளப்பிள்ளை, திகழக்கிடந்தாரண்ணன் ஈயுண்ணி அழகிய பெருமாள் நாயனார் ஆகியோர். வயது 105.

ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்தில், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், ஸ்ரீ ரங்க நாச்சியார் என்பருக்கும் புத்திரராக,
ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். நம்பிள்ளையின் பட்டப் பெயரான ” லோகாச்சாரியன் ” என்கிற பெயரோடு,
” பிள்ளை ” என்கிற அடைமொழியையும் சேர்த்து இவருக்கு ” பிள்ளை லோகாச்சாரியன் ”
என்று பெயரிட்டு அழைத்தனர். இவர் தம் தகப்பனாரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு, நைஷ்டிக பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
தகப்பனாரிடம் திருவாய் மொழி மற்றும் இதர பிரபந்தங்கள், ஈடு முதலான வ்யாக்யானங்கள், ஸ்ரீ பாஷ்யம்
ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு, பரந்த ஞானம் பெற்றார். சம்பிரதாய ரஹஸ்யங்கள் பற்றி காலஷேபங்கள் செய்து வந்தார்.

பிள்ளைலோகாச்சாரியார் , தம் சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்திலே உள்ள காட்டு அழகிய ஸிங்கர் திருக்கோயில்
ஸன்னதியில் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். மணப்பாக்கத்து நம்பி என்று ஒருவர்.
இவர் ஸ்வப்னத்திலே, காஞ்சி தேவப் பெருமாள் தோன்றி, விஷேஷார்தங்களை அருளிச் செய்து,
மேலும் இவரை ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வரச் சொல்லி அங்கே மேற்கொண்டு
இவ்வர்த்தங்களை விரிவாகச் சொல்வதாகச் சொன்னார்.

மணப்பாக்கத்து நம்பியும் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வந்த பொழுது, அங்கே பிள்ளைலோகாச்சாய்யாரின்
விஷேஷார்த்த காலஷேபத்தில் கலந்து கொண்டார். பிள்ளைலோகாச்சாரியார் அருளிய அர்த்தங்கள்,
காஞ்சி பேரருளாளன் அருளிச் செய்த அர்த்தங்களாகவே இருந்ததைக் கண்டு இவர்,
பிள்ளைலோகாச்சாய்யரிடம் சென்று ” அவரோ நீர் ? ” என்று ஆச்சரியத்துடன் சொல்லி, அவர்தம் திருவடிகளை சரணடைந்தார்.
பின்னர் பிள்ளைலோகாச்சாரியார் அவரை தம் சிஷ்யராக்கிக் கொண்டார்.

பிள்ளைலோகாச்சாரியார் , நம்பெருமாளுக்கு ஆற்றிய ஸேவை அளப்பறியது.
ஒரு சமயம் தில்லி பாதுஷாவான அலாவுதீன் கில்ஜி என்பவன் தன் தளபதியான மாலிக்காபூர் என்பவனை அழைத்து,
தமிழகத்தின் மீது படையெடுத்து, இங்கு திருக்கோயில்களில் உள்ள பொன்னையும், பொருள்களயும், களவாடி வரும்படி ஆனையிட,
அதன் பொருட்டு, வழியில் உள்ள பல சைவ , வைணவ திருத்தலங்களில் கொள்ளையடித்துக் கொண்டு,
ஸ்ரீரங்கத்தை நோக்கி அவன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டான்.

இதனை அறிந்து கொண்ட பிள்ளைலோகாச்சாரியார் இவர்களிடமிருந்து அரங்கனைக் காக்க விழைந்தார்.
பெரிய பெருமாள் ஸயனித்திருக்கும் ஸன்னதியை கற்சுவர் கொண்டு மூடிவிட்டு, நம்பெருமாளையும் அவர்
திருவாபரணங்களையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திவ்ய தேஸங்களுக்கு அருகிலே உள்ள ஜ்யோதிஷ்குடி என்னும் ஊரில்,
ஒரு மலை அடிவாரத்திலே , பெருமாளை எழுந்தருளப் பண்ணி, அங்கிருந்தபடியே அவருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்து கொண்டு வந்தார்.
வயோதிக்கத்தின் காரணமாக நோவு சாற்றி, உடல் தளர்ந்த நிலையில், நம்பெருமாளைக் காக்க தம் சிஷ்யர்களிடம் அறிவுறுத்தி,
தம் 105 ஆம் வயதில் நம்பெருமாளை தியானித்துக் கொண்டே ஆச்சாரியன் திருவடி சேர்ந்தார்.

——

(7).திருவாய்மொழிப்பிள்ளை :(பிறப்பு:கிபி.1380), குந்தீ நகரத்தில் அவதரித்தார். இவர் தாய், பிள்ளை லோகாசாரியர் கோயிலை விட்டு வெளியேறியதனால், அதனைத் தரியாது. உயிர்விட, சிறிய தாயாரிடம் வளர்ந்தனர். திருநாமங்கள்: திருமலையாழ்வான், ஸ்ரீசைலேசர், சடகோபதாசர், காட்டு வெட்டிஐயன் ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்வித்து சதுர்வேதிமங்கலம் என்னும் ஒர் ஊரை உண்டாக்கி உடையவருக்கு ஒரு கோயிலையும் கட்டிவைத்தார். திருவனந்தபுரத்தில் விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்து இரகசிய விசேடங்களைக் கேட்டு திருவாய்மொழியில் வல்லவராய் திருவாய்மொழிப்பிள்ளை என்ற திருநாமம் பெற்றார். ஆசாரியர்:பிள்ளை உலகஆசிரியர் சீடர்கள்:மணவாள மாமுனிகள், சடகோபசீயர் எம்பெருமானார் சீயர். வயது105

(வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

திருமலை ஆழ்வார் என்னும் இயற்பெயருடைய திருவாய்மொழிப் பிள்ளை, நம்மாழ்வாரின் அவதார மாதமான வைகாசி மாதத்தில்,
அவரின் அவதார நஷத்திரமான விசாக நஷத்திரத்தில் அவதரித்தார். அவரின் இளம் வயதிலேயே பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யராகி,
அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பாண்டிய மன்னனுக்கு ப்ரோஹிதராகவும் , பிரதான அமைச்சராகவும் இருந்து
அரசு பணி ஆற்றிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பாண்டிய மன்னன் அகால மரணமடைய,
அரசனின் மகன் மிகவும் இளம் வயதினராக இருந்த காரணத்தால், ராணியார், திருமலை ஆழ்வாரை
ராஜப் பிரதிநிதியாக நியமித்தார். இவரும் மிக்க புகழுடனும், பாராட்டுகளும் பெற்று, ராஜ்யத்தை நல்லபடியாக பரிபாலனம் செய்து வந்தார்.

இந்த சமயத்தில் தான், பிள்ளைலோகாச்சாரியார், நம்பெருமாளை, துலுக்கர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு,
அவருடன் ஜ்யோதிஷ்குடி எழுந்தருளியிருந்தார். அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, அவர்களை திருமலையாழ்வாருக்கு,
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாய விஷயங்களை கற்பித்து, அவரை தர்ஸன ப்ரவர்த்தகராக ஆக்க வேண்டும் என்று பணித்தார்.
சிஷ்யர்களும் ஆச்சாரியன் ஆக்ஞைப்படி, திருமலை ஆழ்வாருக்கு, ஸத்விஷயங்களைக் கற்பித்து,
அவரை ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபட வைத்தனர்.

நம்பெருமாளை பாதுகாப்பு கருதி, ஜ்யோதிஷ்குடியிலிருந்து மேலும் தெற்கு நோக்கி, மலையாள தேஸத்திலுள்ள கோழிக்கோடு
நகரத்திற்கு பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யர்கள் எழுந்தருளப் பண்ணியிருந்தனர். நம்பெருமாளைப் போலவே, பாதுகாப்புக் கருதி,
திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரையும் அங்கிருந்த பக்தர்கள்,
கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப் பண்ணியிருந்தனர். இவ்விருவரும் தேனைகிடம்பை என்ற ஊரிலே சிறிது காலம் எழுந்தருளியிருந்து,
பின் நம் பெருமாள், திருநாராயணபுரம் எழுந்தருள, நம்மாழ்வார், முந்திரிப்பு என்னும் ஊருக்கு எழுந்தருளப்பட்டார்.
அவ்வூரில் நிலவிய திருடர்கள் பயம் காரணமாக, ஆழ்வார் ஒரு பெட்டகத்தில் எழுந்தருளப்பட்டு,
அப்பெட்டகத்தை இரும்புச் சங்கிலியால் பிணைத்து , ஒரு மலைச்சரிவின் அடியில் பாதுகாக்கப்பட்டிருந்தார்.

துலுக்கர்கள் பயம் நீங்கிய நிலையில், நம்மாழ்வாரை மீண்டும் திருக்குறுகூருக்கு எழுந்தருளப் பண்ண விரும்பிய பக்தர்கள்,
மலைச் சரிவிலிருந்து, ஆழ்வாரை எழுந்தருளப்பண்ண உதவி வேண்டி, மதுரையில் ராஜப் பிரதிநிதியாக இருந்த
திருமலை ஆழ்வாரை, தோழப்பர் என்னும் அடியவர் மூலம் நாடினர். திருமலை ஆழ்வாரும் ,
கொச்சி அரசருக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டி ஒரு கடிதம் கொடுக்க, அதனை தோழப்பர் கொச்சி அரசரிடம் சென்று சமர்ப்பித்தார்.
பின் அவர் மூலம் உதவிகள் பெறப்பட்டு, நம்மாழ்வாரை மீண்டும் இரும்பு சங்கிலி கொண்டு மலை சரிவிலிருந்து மேலே கொண்டுவர முயன்றனர்.
அப்பொழுது தோழப்பர் இரும்புக் கம்பிகளுடன் மலைச் சரிவில் இறங்கி, நம்மாழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணினார்.
மீண்டும் கீழே இறக்கப் பட்ட அதே இரும்புக் கம்பியை பற்றி மேலே வர,
தோழப்பர் முயற்சிக்கையில் கம்பி அறுந்து விழ , அங்கேயே அவர் உயிர் நீத்தார்.

திருமலை ஆழ்வார் ராஜ்ய பரிபாலனங்களை தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபடலானார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீது அதீத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்ததால்,
இவர் திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்த பொழுது,
திகழக்கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் பிறந்த குமாரரான
அழகிய மணவாளனை சிஷ்யராக்கிக் கொண்டார். அழகிய மணவாளனாகிய இவர் தான் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயம்,
இன்றும் தழைத்தோங்கி இருப்பதற்குக் காரணகர்த்தரான ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஆவார்.

திருவாய் மொழிப் பிள்ளை திருமேனி நோய் வாய்ப்பட்டு, சிரம திசையில் இருந்த பொழுது,
எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து, மென் மேலும் வளர்க்கப் போகிறவர் யார் என்று வினவ,
உடனே அழகிய மணவாளன் தாம் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
உடனே ஸமஸ்கிருத சாஸ்திரங்களிலே ஸ்ரீ பாஷ்யத்தைக் கேட்டும், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே
அநவரதம் ஈடுபடுத்திக் கொண்டும், பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு,
மங்களா ஸாஸன கைங்கர்யபரராய் இருந்து கொண்டும், கோயிலிலே நித்ய வாசராய் எழுந்தருளியிரும் என்று
அழகிய மணவாளனை, திருவாய்மொழிப் பிள்ளை உபதேசித்து, ஆசிர்வதித்தார்.
பிறகு தம் சிஷ்யர்களை அழைத்து, அழகிய மணவாளன் ஒரு அவதார விஷேஷமானவன் என்று
ஆராதித்து வாருங்கள் என்று தெரிவித்து, தமது 120 வது வயதில் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

———

(8). மணவாள மாமுனிகள் : (பிறப்பு. கி.பி. 1371-1443); சேஷாம்சம். திருநட்சத்திரம்: ஐப்பசி-மூலம், பாண்டிநாட்டில் சிக்கில் கிடாரம் என்ற சிற்றூரில்அவதரித்தார்(திருக்குருகூரில் அவதரித்ததாகவும் கொள்வர் சிலர்). திருத்தந்தையார் திகழக்கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாசரண்ணர்; திருத்தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பார்பனமரபினர் அழகிய மணவாளன் என்பது இவர் இயற்பெயர். வேறு திருநாமங்கள்; ‘யதீந்திரப்பிரவனர், திருமலை தந்த பெருமாள், முப்பத்தாறாயிரப் பெருக்கர், செளமிய ஜாமாத்ரு யோகிந்தரர், காந்தேபாயந்தர், வரவரமுனி, வரயோகி, இராமாதுசன் பொன்னடி, ருசிர ஜாமாத்ருயோகீந்தரர், அழகிய மணவாளசீயர், பெரியசியர், துப்பில் குலமுடையார்தாசர், சடகோபசீயர் திருக்குமாரர், சீயர் நாயனார் (இராமாதுசய்யன்). ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை தாம் திருக்குருக்ரில் இராமாநுசருக்கு எடுப்பித்த குன்றம் அனைய திருக்கோயிலின் நிர்வாகத்தையும் தம் சீடராகிய இவரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் வடமொழி கிரந்தங்களில் பலகாலும் கண் வையாமல், ஶ்ரீபாஷ்யத்தை ஒருகால் கேட்டு, தமக்கும் எம்பெருமானார்க்கும் பிரியமான திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களை நாடோறும் ஒதிக்கொண்டு தென்னரங்கர் செல்வமுற்று அத்திருத்தலத்து மாறன் உரை செய்த தமிழ் மறையை வளர்த்து, இந்தலீலாவிபூதியை நித்திய விபூதியாக்கிக்கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்திய வாசம் செய்யும்படி பணித்தார். ஆசாரியரின் ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றினார் அருமைச் சீடர்.

பெரிய பெருமாள் ஆணைப்படி கோயிலின் பெரிய திருமண்டபத்தில் ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரப்படியுடன் ஒராண்டு முழுதும் காலட்சேபம் செய்து ‘முப்பத்தாறாயிரப்பெருக்கர்’ என்ற விருதையும் பெற்றார். சீடர்கள்: ‘வானமாமலை இராமாநுச சீயர், அப்பிள்ளை, அப்பிள்ளான், நம்மையதிராச ராமாநுசன், அழகிய மணவாளன் (நம்பெருமாள்), சிங்கரயர், கோயில் கந்தாடையண்ணன், பரவஸ்து பட்டர்பிரான் சீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், வண்சடகோப சீயர் என்கின்ற திருவேங்கட சீயர், எறும்பியப்பா, மகாராஜாக்களும் சாத்தின சாத்தாத ஶ்ரீவைணவர்கட்குக் கணக்கில்லை.

இவர் திருவடிசம்பந்திவேட்டுர் சிங்கராசாரியார், மதுரை மகாபலிராயனுக்கு இரகசியங்களை உபதேசித்து முத்தரசு என்னும் கிராமம் பெற்று, அதற்கு அழகிய மணவாளபுரம் என்று பெயரிட்டார். இவர் இருந்தவிடத்தைச் சிலர் தீயிட்டுக் கொளுத்தி விட, இவர் பாம்புருக் கொண்டு வெளிவந்ததாக ஒரு வரலாறும் உண்டு. ஆசாரியருக்குத் தமது உண்மை உருவமான சேஷாவதாரத்தைக் காட்டியதாக மற்றொரு வரலாறும் உண்டு. சடகோபக்கொற்றி என்னும் ஒர் அம்மையார் பெரிய சீயர் திருக்காப்புச் சோத்துக் கொண்டு தனியான ஓரிடத்தில் பகவதநுபவத்தில் இருக்கும்போது கதவின்புரையில் இவரைத் திருவனந்தாழ்வானாகக் கண்டதாக இன்னொரு வரலாறும் உண்டு.

மகாபலி வாணராயன் என்னும் அரசன் ஒருநாள் இரவில் பெரிய சீயருக்குத் தெரியாமல் அவருக்குச் சீபாதம் தாங்கிக் கொண்டுசென்றான். மறுநாள் சீயர் இதனை அறிந்து ஆச்சரியப்பட்டருளினார். இவர் நியமித்த அஷ்டதிக் கஜங்களாகிய ‘வானமாமலை சீயர், பட்டர்பிரான் சீயர், திருவேங்கட சீயர், கோயில் கந்தாடையண்ணன், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், எறும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளான்’ ஆகியோர் இவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்கள். கோயில் கந்தாடையண்ணன், உடையவருக்கு முதலியாண்டானைப் போலே இவருக்குப் பாதுகாவலராயிருப்பவர். எறும்பியப்பா வடுக நம்பியைப் போலே தேவுமற்றியாத அளவுக்கு மீறிய அன்பாயிருப்பவர். பிரதிவாதிபயங்கரம் அண்ணன் ஆழ்வானைப்போலே உசாத் துணையாயிருப்பவர். அப்பிள்ளார் மடத்தில் எல்லா நிகழ்ச்சி கட்கும் பொறுப்பாயிருப்பவர். வானமாமலை சீயர் பிரியாது அடிமை செய்பவர். பட்டர் பிரான் சீயர் எம்பாரைப் போலே பாதச்சாயாப்பன்னராயிருப்பவர். இறுதிக் காலத்தில் ஸ்ரீசடகோபர் சீயர் மூலம் இவர்துறவறத்தை (துரியாசிரமத்தை) மேற்கொண்டு அழகிய மாமுனிகள் என்ற திருப்பெயருடன் திகழ்ந்தார்.

அருளிச் செயல்கள்: தத்துவத்திரயம், இரகசியத்திரயம், பூர்வசனபூஷணம், ஆசாரிய ஹிருதயம், ஞானசாரம், பிரமேயசாரம், சப்தகாதை, ஏழு பாட்டு, பெரியாழ்வார் திருமொழி (401 பாசுரங்கள்), இராமாதுச நூற்றந்தாதி ஆகிய பத்து பிரபந்தங்கட்கு வியாக்கியானம் இட்டருளினார். திருவாய்மொழி, நூற்றந்தாதி, உபதேசரத்னமாலை, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, தத்துவத் திரயத்திற்குப் பிரமானத்திரட்டு, பூர்வசனபூஷணபிரமாணத்திரட்டு, ஆர்த்திப்பிரபந்தம், தேவ ராசமங்களம், எதிராச விம்சதி, திருவாராதானக் கிரமம், இயல் சாத்து முதலியன. மேலும் அவ்வப்பொழுது பாடிய தனிப்பாடல்களும், விடுதிச் சுலோகங்களும் உண்டு. இவர் வாழ்ந்த காலம் 74 ஆண்டுகள். –

(ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஐப்பசி மாதம் , மூல நக்ஷத்திரத்தில் ஆழ்வார் திருநகரியிலே,
திகழக்கிடந்தார் திருநாவீருடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் திருமகனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள்.
இவர் தம் இயற் பெயர் அழகிய மணவாளப் பெருமாள் என்பதாகும்.

சிறுவயதிலேயே சௌளம், உபநயனம் நடந்தேறியது. தம் திருத்தகப்பானாரிடத்திலே, அருளிச் செயல்களையும்,
வேத சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளை தமக்குப் பின் எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து,
வளர்க்கப் போகிறவர் யாரென்று வினவ, அழகிய மணவாளப் பெருமாள்” அடியேன் அதற்குத் தயார் ” என்று கூறினார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் இவருக்கு அருளிச் செயல்களையும் மேலும் தத்துவார்த்தங்களையும் கற்பித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை, இவரின் அருமை, பெருமைகளை தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு இவரை
ஸ்ரீரங்கம் சென்று அங்கு அழகிய மணவாளனுக்கு கைங்கர்யம் செய்யப் பணித்தார்.
ஸ்வாமி இராமாநுஜரின் மறு அவதாரமே, அழகிய மணவாளப் பெருமாள் எனபதனையும் உணர்ந்து,
அவரின் அவதார மகிமையை போற்றிக் காத்து, அவருக்கு துணை நிற்கவும் தம் எல்லா சிஷ்யர்களையும் பணித்தார்.

அழகிய மணவாளப் பெருமாளை உடையவர் ஸன்னதி கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார் திருவாய்மொழிப் பிள்ளை.
உடையவர் பெயரில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் இவருக்கு” யதீந்த்ரப்ரவனர் ” என்றும் திருநாமமிட்டார்.
எம்பெருமானார், பிள்ளைலோகாச்சார்யார் இவர்களின் வைபவங்களை நினைத்துக் கொண்டும்,
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய செயல்களை வியந்து கொண்டும்,
அவர்கள் எழுந்தருளியிருந்த இடங்களைக் கண்டும் பரம திருப்தி அடைந்தார்.

பிள்ளைலோகாச்சாரியாரின் திருமாளிகை வாசலில் கீழே விழுந்து வணங்கி,மண் புழுதியிலே புரண்டு “இது ரகசியம் விளைவித்த மண்”
என்று பெருமையுடன் மனம் மகிழ்வார். சிதிலம் அடைந்த ஓலைச் சுவடிகளை மீண்டும் ஏடுபடுத்தினார்.
இவருக்கு பிறந்த மகனுக்கு” ராமாநுஜப் பிள்ளை ” என்று ஆச்சாரியரின் ஆக்ஞைப்படி பெயரிட்டார்.
பின்னர் இவர் இல்லற வாழ்க்கையை விடுத்து, துறவற வாழ்க்கையான சன்யாசத்தை மேற்கொண்டார்.
பெரிய மங்களா ஸாஸனம் செய்து, பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளினார். அதுவே அவருடைய ஆஸ்தான மணபம் ஆயிற்று.
அது முதற் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள், மணவாள மாமுனிகள் என்று அழைக்கப்படலானார்.

மாமுனிகளின் பெருமையும் அவரின் வளர்ச்சியையும் பிடிக்காத சிலர், அவர் எழுந்தருளியிருந்த மடத்திற்கு
நடு நிசியில் தீ வைத்து, மடத்தை எரித்தனர். மாமுனிகள் ” திருவநந்தாழ்வான் ” வடிவம் கொண்டு,
திருமால் அடியார்களின் பக்கம் வந்து சேர்ந்தார். தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கு, அரசன் தண்டனை அளித்த போது,
மாமுனிகள் கருணை உள்ளத்துடன் மனமுவந்து அவர்களை மன்னித்து அருளினார்.

காஞ்சிபுரம், திருப்புட்குழி, திருக்கடிகை, எறும்பி, எம்பெருமான்களை ஸேவித்துக் கொண்டு
திருப்பதி, திருமலை எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்.
அங்கு அரசனின் உத்தரவு பெற்று ஒரு ஜீயரை நியமித்தார்.
அவரே எம்பெருமானார் ஜீயர் என்றும் சின்ன ஜீயர் என்றும் அழைக்கபடுபவர் ஆவார்.

திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப் படிக்கு மேற்கோள்களின் திரட்டு, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி,
யதிராஜ விம்ஸதி, ஆர்த்தி ப்ரபந்தம், தேவராஜ மங்களம், கோபால விம்சதி உட்பட பன்னிரண்டு நூல்கள் இயற்றினார்.
மேலும் ஸ்ரீவசனபூஷணம், மும்முஷூப்படி, ஆசார்ய ஹ்ருதயம் உட்பட எட்டு ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளினார்.
இவை தவிர மேலும் பல நூலகளையும், உரைகளையும் அருளிச்செய்தார்.

தென்னாட்டு திவ்ய தேஸங்கள் அனைத்தையும் ஸேவித்துக் கொண்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு,
வட நாட்டு திவய தேஸங்களை ஸேவிக்க இயலவில்லையே என்று வருந்தினார்.
அப்பொழுது ராமாநுஜ தாஸர் என்பவர், தாம் வடநாட்டு திவ்ய தேஸங்களுக்கு சென்று, அங்கு மாமுனிகளின் திருநாமத்தை ஓதி,
எம்பெருமான்களையும் ஸேவித்து, திருத்துழாய் பிரசாதத்தை அவரிடம் ஸமர்ப்பிப்பதாகக் கூறி, அவரின் சம்மதத்தைப் பெற்றார்.
ராமாநுஜரும் அவ்வண்ணமே பத்ரி, பிருந்தாவனம், அயோத்தி, ஹரித்வார், புஷ்கரம் உட்பட பல திவ்ய தேஸங்களையும் ஸேவித்துக் கொண்டு,
கங்கை, யமுனை, சரயு நதிகளில் தீர்த்தமாடி, அபய ஹஸ்தம், திருத்துழாய் பிரசாதங்களுடன் திரும்பி வந்து மாமுனிகளிடம் ஸமர்ப்பித்தார்.
மணவாள மாமுனிகளும் அப்பிரஸாதங்களைப் பெற்றுக் கொண்டு வட நாட்டு திவ்ய தேஸங்களை ஸேவித்த உணர்வை அடைந்தார்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்பவும், அருளிச் செயல்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கவும் ,
மிகவும் ப்ரஸித்தி பெற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு , அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் வானமாமலை ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ராமாநுஜ ஜீயர், கோவிலண்ணன்,
பிரதிவாதி பயங்கரம் அண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் ஆவர்.

கால வெள்ளத்தில் திருமேனியில் நோவு கண்டு, அரங்கனுக்கு நேரில் சென்று கைங்கர்யங்கள் செய்ய முடியவில்லையே என்றும்,
மேலும் பெருமாளையும் நேரில் ஸேவிக்க இயலவில்லையே என்றும் வருத்தமுற்றார்.
ஒரு நாள் அரங்கன் வீதி உலா வரும் பொழுது நேரில் கண்ணாரக் கண்டு ,சேவித்து மிகுந்த ஆனந்தமடைந்தார்.
74 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து எம்பெருமானார் தர்ஸனத்தை நிலைநிறுத்தி, கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெற
ஏற்பாடுகள் செய்வித்து, ஆழ்வார், ஆச்சார்யர்களின் அருளிச் செயல்களை மக்களிடையே பரப்பினார்.

இப்படியாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமேற் கொண்டு செவ்வனே நியமனப்படுத்திய ஸ்வாமி மணவாள மாமுனிகள்,
மாசி மாதம், க்ருஷ்ணபக்ஷ துவாதசியன்று, எம்பெருமானார், பிள்ளைலோகாச்சாரியார், திருவாய்மொழிப் பிள்ளை, இவர்களின்
திருவடிகளை நினைத்து கொண்டே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி
வளரச் செய்த நம் ஸ்வாமியை ” மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் ” என்று வேண்டிக் கொள்கிறோமே —

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

————

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

——————

—————–

வடகலை ஆசாரிய பரம்பரை

(1). திருக்குருகைப்பிரான் பிள்ளான் : (பிறப்பு. கி.பி. 1068) பிரசண்டாம்சம். திருமலையில் இவர் பெரிய திருமலை நம்பியின் திருமகனாக அவதரித்தவர், ‘பிள்ளான்’ என்றே வழங்குவர். உடையவருக்கு திருவடிசம்பந்தி, ஞானபுத்திரரும் ஆவார். உடையவரின் நியமனப்படி திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற முதல் வியாக்கியானம் அருளிய அருட் செல்வர். இவர் அருளிச் செய்த மற்றொரு நூல் ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான் பரமரகசியம்’ என்பது.

(2). எங்களாழ்வான் : (பிறப்பு கி.பி.108): விஜயாம்சம். இவர் திருவெள்ளறையில் சோழியர் குடியில் அவதரித்தவர். திருநட்சத்திரம் ஆனி – சுவாதி. எம்பெருமனார் நியமனத்தால் விஷ்ணுபுராணத்திற்கு விசிட்டாத்வைதபரமாக பரிபாவியத்திற்கிணங்க வியாக்கியானம் செய்தருளினார். திருக்குருகைப்பிரான் பிள்ளானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவித்தவர். நாடாதுரம்மாளைச் சுவீகரித்து பாஷ்யம் முதலிய கிரந்தங்களைச் சொல்லி வைத்தவர். ‘சாரார்த்த சதுஷ்டம்’, ‘சங்கதிமாலை இவர்தம் அருளிச் செயல்கள்.

(3). நடாதூரம்மாள் : (பிறப்பு கி.பி.1165), சுபத்திராம்சம். இவர் (பெண் அல்லர்) காஞ்சியில் தேவராசப்பெருமாள் என்பாருக்கு வரதகுரு என்று அவதரித்தார். திருநட்சத்திரம் : சித்திரையில் சித்திரை. இவர் உடையவரின் மருமகனாரான நடாதூர் ஆழ்வானுக்கு திருப்பேரர். வேறு திருநாமம் : வரதாச்சாரியார், ஆசாரியர், எங்காழ்வான். சீடர்கள் : சுருதப் பிரகாசிக பட்டர், வாதி ஹம்சம்பு, தாராசாரியர், கிடாம்பி அப்புள்ளார், ‘ஸ்ரீகிருஷ்ணபாதர்’ என்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை’. இவர் எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவிக்க விரும்பித் தந்தையாரின் கட்டளைப்படி எங்காழ்வானின் திருமாளிகையில் வாயிற்கதவினைத் திறக்க ஆழ்வான் ‘யார்?’ என்றனர். வரதகுரு மறுமொழியாக ‘நான்தான்’ என்றனர். இதைச்செவியுற்ற எங்களாழ்வான் “நான் செத்தபிறகு வருக” என்று கூறி அனுப்பினார். வரதகுரு நடந்ததைத் தந்தையாரிடம் தெரிவிக்க, தந்தையாரும் “ஆசாரியரிடம் நான் என்னும் அகங்காரத்தையொழித்து ‘அடியேன்’ என்று கூறிச் செல்க” என்று அறிவுறுத்தித் திரும்பவும் அனுப்பினார். வரதகுரு மீண்டும் சென்று அடியேன் இராமாதுசதாசன் என்று கூறித் தண்டன் சமர்ப்பித்தார். ஆசாரியரும் களிப்பு மிகுதியினால் புத்திரன்மீது கொள்ளும் பாசத்தைப்போல் அன்புடையராய் “எனக்கும் கொள்ளியிட்டு இறுதிச் சடங்கு செய்வதாய் வாக்குறுதி செய்து தருவீராகில் ரீபாஷ்யம் சேவிக்கலாம்” என்று கூறினார். வரதகுருவும் தந்தையாரின் அனுமதி பெற்று ஸ்ரீபாஷ்யம் படியைக் கையில் வைத்துக் கொண்டு வாக்குறுதி செய்து கொடுத்து ஸ்ரீபாஷ்யம் முதலிய கிரந்தங்களை ஐயம் திரிபு அறச் சேவித்தார்.

ஒருநாள் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பிக்கையில் பால் அதிக வெப்பமாய் இருப்பது கண்டு எம்பெருமானிடத்துப் பரிவாலே சாத்திர நியமத்தையும் கடந்து அப்பாலமுதை வாயிட்டு ஊதிப் ஆற்றப்புக பெருமாளும் மகனிடத்து மாதாவுக்கு உண்டான அன்பு தம் விஷமாக இவருக்கு உண்டானது கண்டு”எனக்கு நீர் அம்மாவோ’என்று உகந்தருளினான். அதுமுதல் இவருக்கு “அம்மாள்” என்ற திருநாமம் வந்து “நடாதூரம்மாள்” என வழங்கப்பெற்றார். மற்றொரு நாள் இவர் காட்டுவழியே திருவேங்கடத்தை நோக்கிச் செல்லுகையில் வழியில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கத் தகுந்த இடம் வாய்க்காமல் இருந்தது. இதனால் இவர் பெருமாளுக்குத் திருவாராதானம் செய்ய முடியாமல் உபவாசமாக இருந்தார்.திருவேங்கடமுடையானே ஒரு வேதியன் வடிவில் பிரசாதம் கொணர்ந்து ‘இது பெருமாளுக்கு ஆராதனம் செய்தது’ என்று சொல்லிக் கொடுக்க அதே அம்மாள் அமுது செய்ததும் வேதியனாக வந்த வேங்கடமுடையான் மறைந்தருளினான்.

(4). கிடாம்பிஅப்புள்ளார்: (பிறப்பு. கி.பி.1221), இவருக்கு ஆத்ரேய இராமாநுசர் என்ற பெயரும் உண்டு இராமாநுசருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் புரிந்து வந்த கிடாம்பி ஆச்சானின் கொள்ளுப் பேரர். வாத்சய வரதாசாரியரின் சீடர். ‘நித்தியகுலிசம்’ என்ற வாதத்திற்குரிய நூலின் ஆசிரியர். மாற்றுக் கருத்துக் குரியவர்கள் இவரைக் காணவே அஞ்சுவர்.அவ்வளவு வேகமாக வாதிடுவர்.

(5).வேதாந்ததேசிகர்:(பிறப்பு:கிபி.1268.1369)கண்டாம்சம். அவதாரத் தலம் காஞ்சி. துப்புல். திருத்தந்தையார் ஆனந்த சூரியர். திருத்தாயார் தோதாத்திரி அம்மை. திருக்குமாரர் நயினாராசாரியர். வேறு திருநாமங்கள் : ‘வேங்கடநாதன், கவிதார்க்கிக கேசரி, சர்வதந்திரசுவதந்திரர், துப்புல் பிள்ளை’ முதலியன. ஆசாரியர், நடாதூர் அம்மாளின் சீடரும், தம் மாதுலரும் உடையவர் திருவடி சம்பந்தியும் சுப்பிரதிஷ்டாம்சரான கிடாம்பி அப்புள்ளார். சீடர்கள்: நயினாராசாரியர் (தம் குமாரர்), பிரம்மதந்திரசுவதந்திர சீயர். திருவாராதனப் பெருமாள் : திருவேங்கடமுடையான், திருப்பாணாழ்வார். ஹயக்ரீவ உபாசகர். இவர் திருவடிகளை ஆச்ரயித்தவர்கள் : கந்தாடை எம்பார், குமாண்டுர் அப்பை, குமாண்டுர் பிள்ளை. இவர் திருவடிச் சம்பந்திகள் : கிடாம்பிப்பிள்ளை, குஞ்சம்பூர் இராமாநுசாசாரியர் துப்புல் அப்பை. அருளிச்செயல்கள். தேசிகப்பிரபந்தம் (தமிழ்ப்பிரபந்தங்களின் திரட்டு) இது தவிர மணிப்பிரவாளநடையில் அமைந்த ஸ்ரீமத்ரகசியதிரயசாரம் மிகுபுகழ் வாய்ந்தது. மற்றும் வடமொழியில் ஸ்தோத்ர கிரந்தங்கள் 28; காவிய கிரந்தங்கள் 4; நாடகக்கிரந்தம் 1; வேதாந்த கிரந்தங்கள் 14 வியாக்கியானகிரந்தங்கள் 8: அநுட்டானகிரந்தங்கள்2; இரகசிய கிரந்தங்கள் 32. இவர் அருளிச் செயல்கள் மொத்தம் 121 கிரந்தங்கள்.

(6)நயினாராச்சான்பிள்ளை: (பிறப்புகி.பி. 1316)வேதாந்த தேசிகரின் திருக்குமாரர். திருநட்சத்திரம் – ஆவணி-ரோகிணி. ஆசாரியர், தந்தையார் வேதாந்த தேசிகர். திருநாமங்கள்; குமார வேதாந்தாசாரியர், குமார வரதாசாரியர். சீடர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன். இவரும் தந்தையைப்போல் வாதத்தில் வல்லவர். திருவடி சம்பந்திகள் : எம்பெருமானாரப்பன், குமாண்டுர் ஆச்சான், பேராளிப்பாக்கம் நயனார். அருளிச் செயல்கள்: ‘பிள்ளை அந்தாதி, இது தவிர அதிரவச நீயகண்டம், விரோதி பரிகாரம் ஆசாரிய மங்களம்’ முதலியன.இவருடன் வடகலை ஆசாரியர் பரம்பரை முற்றுப் பெறுகின்றது.

ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்)

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

ஸ்ரீ பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்)

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

ஸ்ரீ சேனை முதலியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூராடம் (ஐப்பசி)
ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ நம்மாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: விசாகம் (வைகாசி)

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சித்திரை (சித்திரை)

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குஉதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரன்என்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

ஸ்ரீ பொய்கையாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவோணம் (ஐப்பசி)

செய்யதுலாவோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பூதத்தாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அவிட்டம் (ஐப்பசி)

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி யிட்டபிரான் வாழியே
எழில் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழ்உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பேயாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சதயம் (ஐப்பசி)

திருக்கண்டேன்என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: மகம் (தை)

அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்குஉதித்தான் வாழியே
எழிற் சந்தவிருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவர்கோன் வாழியே
முழுப்பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இருநற்பதங்கள் வாழியே

ஸ்ரீ குலசேராழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: புனர்பூசம் (மாசி)

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதன்னில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிடடான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி)

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூரம் (ஆடி)

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கேட்டை (மார்கழி)

மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தோன் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப்பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

ஸ்ரீ திருப்பாணாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (கார்த்திகை)

உம்பர் தொழும் மெய்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கர் அகம்புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொனடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கார்த்திகை (கார்த்திகை)

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்துஏழிந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

சித்திரையில் கார்த்திகை – ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திரு அவதார திருநக்ஷத்ரம்

ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்னும் ஸ்ரீ உய்யக்கொண்டார் -திருக்குருகூர்

ஸ்ரீ உய்யக்கொண்டாரின் வாழித்திருநாமம்–
“வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவாதிரை (சித்திரை மாதம்)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

ஸ்ரீ கூரத்தாழ்வான் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (தை மாதம் )

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்து இங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான்தன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (பங்குனி)

எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில் குடிவிளங்க இங்குவந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர்பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணியரங்கத் தமுதனார் அடியிணைகள் வாழியே
ஸ்ரீ வடுகநம்பி வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அஸ்வினி (சித்திரை மாதம்)

ஏராரும் சித்திரையில் அசுவதீ வந்தான் வாழியே
எழில் சாளக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே
எம்பெருமானாரே தெய்வம் என்று அனுஷ்டித்தான் வாழியே
அனவரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே
ஸ்வாசார்யர் அஷ்டோத்தர சத நாமங்களை அருளினான் வாழியே
ஸ்ரீராமானுஜர் வைபவமே நிரந்தரம் அநுஸந்தித்தான் வாழியே
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே
ஸ்ரீ வடுஹ நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (ஆவணி)

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்க வந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மண்புகழ் சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அனவரதம் வாழியே

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி)

வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்புஅறிந்தோன் வாழியே
திருமலை நம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்ரீ கூர குலோத்தம தாஸர் வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம் : திருவாதிரை (ஐப்பசி)

சந்தமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
உலகுதுலா வாதிரையில் இங்கு உதித்தான் வாழியே
இந்த உலகத்தோர்க்கு இதமுறைத்தோன் வாழியே
எழில்வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியே
குந்திநகர்ச் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தம தாசர் குரைகழல் வாழியே

ஸ்ரீ மணவாளமாமுனிகள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருமூலம் (ஐப்பசி)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பெரிய பெருமாள் பொது நின்ற பொன்னம் கழலே சரணம்
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத ஸ்ரீ பேர் அருளாளன் துயர் அறு சுடர் அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பராங்குச பரகால மஹாத்ம்யம்–

August 30, 2024

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்
மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை-முதல் திருவந்தாதி -57- -என்று
முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

(அங்க உபாங்க சேவை உண்டே -பவித்ர உத்சவம் பொழுது -ஜ்யேஷ்டாபிஷேகம் -அங்கங்கள் உப அங்கங்கள் சேவிக்கிறோம்
அத்யயன உத்சவம் தமிழர் திரு நாள் -247-பாசுரங்கள் மங்களா சாசனம் திருவரங்கத்துக்குத் தானே – )

1-பொய் நின்ற ஞானமும்-திருவிருத்தம் -1– –இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
பிரதமத்திலே -வாடினேன் வாடி–பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
5-அந்ய உபதேச பேச்சும்
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்
7-தூத ப்ரேஷணமும்
8-அநுகாரம்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

———–

நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கி அருளும் இடங்கள்-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –தாய்ப் பாசுரமாக நம்மாழ்வார் ஸர்வேஸ்வரனாக அநு கரித்து அருளிச் செய்த பதிகம் –5-6

திருமங்கை ஆழ்வார் –8-2-6-ஒரே பாசுரத்தில் அநு கரித்து அருளிச் செய்த பாசுரம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் –
இதுவும் தாய் பாசுரம்

——-

இதே போல் தூத ப்ரேஷணமும்
அஞ்சிறைய மடநாராய்
வைகல் பூங்கழிவாய்
பொன்னுலகு ஆளீரோ
எங்கானல் அகம் கழிவாய் -நான்கு பதிகங்களில் முழுவதும் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
தூவிரிய மலருழக்கி -3-6-பதிகத்தில் தூது விடுவதில் இறங்கி -நான்கு பாசுரங்களே அருளிச் செய்தார்
இதே போல் -காவார் மடற் பெண்னை -9-4- பதிகத்தில் இரண்டே பாசுரங்களே தூது விடல் அருளிச் செய்தார்

——

சொன்னால் விரோதம் –3-9-பதிகம் முழுவதும் சோறு கூறைக்காக -நர ஸ்துதி பண்ணி ஸ்வரூபம் நாசமடையும் சம்சாரிகளை நோக்கி -நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
ஒரே பாசுரத்தால் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் -சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற் பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் -நாராயணா என்னும் நாமம் -என்று அவற்றையே சுருக்கிப் பேசி அருளுகிறார்-

இதே போல் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் –9-1-sஆபாச பந்துக்களின் ஹேயத் தன்மைகளை விரித்து அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்
இவற்றையே-பெரிய திருமொழி-8–9-7-பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மாற்றாரும் பற்றிலேன் -என்று சுருக்கி அருளிச் செய்துள்ளார்

இதே போல் உயர் திண்ணன் அணைவது ஒன்றும் தேவும் -நான்கு பதிகங்களால் பரத்வத்தை அருளிச் செய்து இருப்பவற்றையே சுருக்கி
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி –11-6-ஒரே பதிகத்தால் அருளிச் செய்துள்ளார்

———-

2-நம்மாழ்வார் சுருக்கமாக அருளிச் செய்தவற்றுக்கு திரு மங்கை ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்தவை
மாசறு சோதி -5-3 பதிகத்தில் -குதிரியாய் மடலூர்துமே -என்றும்
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கையனைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்றும்
இரண்டு துண்டுகளால் மடலூர்தலைப் பிரஸ்தாபித்தார் –
இவ்வாறு சுருக்கி அருளிச் செய்தவற்றையே இரண்டு மடல்களாக விஸ்தரித்து அருளிச் செய்துள்ளார்

——–

நாராயண மந்திரத்தின் சிறப்பை
எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -10-5-1- என்றும்
சுருக்கமாக அருளிச் செய்தவற்றையே
பெரிய திருமொழியில்
வாடினேன் வாடி -1-1-என்றும்
கிடந்த நம்பி குடந்தை மேவி -6-10 என்றும்
இரண்டு பதிகங்களில்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றும்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்றும்
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் அருளிச் செய்துள்ளார்

————-

தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –


இன்னமும் எம்பருமான் ஸம்ஸாரி சேதன ஸம் ரக்ஷணார்த்தமாக பல திரு அவதாரங்கள் செய்து அருளும்படியை
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1- என்றும்
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் கானோர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-என்றும்
சுருக்கமாய் அருளிச் செய்தவற்றை
வானோர் அளவும் முது முந்நீர் –8-8-என்றும்
நிலையிடம் எங்கும் இன்றி –11-4- என்றும்
இரண்டு பதிகங்களாலே மிக விஸ்தாரமாக அருளிச் செய்துள்ளார்

—————-

நம்மாழ்வாருக்கு அபிநிவேச அதிசயம் வராஹ அவதாரம் என்பதை
திருவிருத்தத்தின் முடிவிலே -ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
திருவாய் மொழியின் முடிவிலும்-கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்றும்
ஈடுபட்டு அருளிச் செய்தவற்றை ஒட்டியே
பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே -பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே -என்று அருளிச் செய்துள்ளார்

———–

இதே போல் அர்ச்சாவதாரங்களில் திருக் குடந்தை யில் ஈடுபாட்டை
திருவாய் மொழியின் இறுதியிலும் -குடந்தை யங்கோவலன் குடி குடியார்க்கு தொடர்ந்து எங்கும் ஸ்தோத்திரம் சொல்லினர் -என்று அருளிச் செய்து
கோயில் திருமலை பெருமாள் கோயில் -எல்லாம் கிடக்க மூவரில் முதலான ஆராவமுத ஆழ்வாரின் மேல் ஈடுபாடு நாலாயிரமும் புனராவதாரம் செய்யப்பட்டு அருளப் போவதை ஸூசிப்பித்து அருளிச் செய்தவாறு
இந்த அபிநிவேச அதிசயத்தை உணர்ந்தே திருமங்கை ஆழ்வாரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2- என்றும்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் –1-1-7-என்றும் முதலிலேயே அருளிச் செய்து
சரம ப்ரபந்தமாகிய திருநெடும் தாண்டகத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமித்தும் அருளிச் செய்துள்ளார் –

மேலும் அடுத்த பாசுரத்திலேயே
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -என்று
நம்மாழ்வாருக்கு திரு நாட்டில் திருக்குடந்தை நினைவு வருவதற்கு உறுப்பான ஐதிக்யத்தையும் காட்டி அருளுகிறார்
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -151-
அன்னமாயும் முனிவராயுமுள்ள நாதமுனிகளுடன் திருக்குடந்தை நிலத்தேவர்களான ஸ்துதிக்க –
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை-என்று நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே –என்றபடி
அரும் தமிழ் மறையை வெளிப்படுத்தி அருளிய நம்மாழ்வார்
ஆராவமுதாழ்வாருக்கு பதிகம் அருளி சமர்ப்பித்த பின்னர் -தாமும் அவ்வாறு செய்யக் கூடாது என்று திரு உள்ளம் பற்றியே துணுக்குப் பாசுரங்கள் பரவி அருளிச் செய்துள்ளார்

———–

3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

3-1- ததீய சேஷத்வம்

பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

————————————————————————————————

4- கட்டுவிச்சி பேச்சு

தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

——————————————————————————————-

5- திருத் தாயாரை விட்டு செல்வது

உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘-

—————–

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –
தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —

சம்பந்த உபாய பலங்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

(சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

(ஞானத்தில் தம் பேச்சு வேதாந்தம் ஞானம் -என்றவாறு-திருமந்திர ஞானம் -பெண் பேச்சு
சம்பந்த ஞானம் -தோழி -/ உபாய அத்யாவசியம்–தாய் / பேற்றுக்கு த்வரிக்கை மகள்
பிரஞ்ஞா வேறே ஞானம் வேறே -எப்பொழுதும் உள்ள ஞானத்துக்கு பிரஞ்ஞா அவஸ்தை –
மூன்றுமே எப்பொழுதும் இருக்கும் -ஓன்று உந்த மூன்று அவஸ்தைகள்
நமக்கு முக்குணங்களும் இருந்து ஒவ் ஓன்று ஒவ் ஒரு காலத்தில் உயருமா போலே — )

சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
அதாவது –
தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
ஹேது -சம்பந்தம்-ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
(ஆதி -காரண கார்ய பாவம் -ரக்ஷக ரஷ்ய பாவம் -சேஷ சேஷி சம்பந்தம் இத்யாதிகள்)

உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
அதாவது
தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே-
அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய –
படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே –
சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே –
சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் –
அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் –
இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து –
சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற
மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்
அதாவது
தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு –
குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே
பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு –
சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து –
தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக்
கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு
மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–
பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

——

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –
தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை
ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–
(தோழி -கடகர் ஸமாச்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்
அனந்யார்ஹத்வமும் —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று
சார்வதே வலித்தமை ஸாதனம் ஆமோ என்று
மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யவசாயமும் –

புத்ரி பலகால் ஆள் விட்டு – ஆற்றாமை சொல்லி -கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து – கண் புதைய போக்கற்று- உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்ந்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று – சூழவும் பகை முகம் செய்ய- தடை நில்லாதே
புயக்கற்று – மாலையும் – காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரையும் தெரியும் —சூரணை -134-

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை )
அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்-
வெறி விலக்கி-
அதாவது
எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் –
மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி –
இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே –
பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு –
இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி -வெறியாடல் உற –
இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து –
அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி –
தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் –
உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே

(தலைமகள்) பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் ( தாயார் )கலங்கி-
தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -–
( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே –
தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு –
இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ( தோழியானவள் )இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக –
அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே
இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் —
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

ஆசை அறுத்து –
அதாவது
திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை
மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்-
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் –
இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –

அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் –
அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது —
பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த
துவளில் மா மணியும் —

அறத்தொடு நின்ற
அதாவது
தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க-
திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை
இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் –
இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய்
இருக்கிற இவளைக் கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள்
பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது –
தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –

அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு
அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று
மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை
உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே –
அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –
சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும்
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –
கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான
இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை —

ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன
இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
அதாவது

1-வாடி –
ஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
( காசை இழந்ததுக்கும் மேலும் பொன்னை இழந்ததுக்கும் மேலே மணியை இழந்த தசை அன்றோ )

2-மெலிந்து
பாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று
கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
(என்னுடை கோமளம் என் சொல்லும் என் வசமும் இல்லை நங்கைமீர் -உடல் மெலிய திருவடி மேலே சாத்திய
திருத்துழாய் கிடைக்காமல் -கை கழிந்தவற்றையும் ஆசைப்பட்டு -முடியானே -3-8-உடன் சங்கதி இதுக்கு –
இதில் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் –உலகமுண்ட பெரு வாயா போலே இங்கும் உண்டே -)

3-பித்தேறி –
மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
( ஏறிய பித்துடன் எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் -என்று சொல்லுவாள் -ஞானம் முற்றிய பித்து தானே இது
தேறியும் தேறாமல் மாயன் திறத்தனள் இவள் )

4-ஏறப்பேசி
கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே
அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
(திருக்குறுங்குடிக்கும் வானமா மாலைக்கும் தூரம் கடல் ஞாலம் உண்டே -சாடுவாகச் சொல்வர்
அநுகாரமும் ஆவேசமும் -கீழே தரிப்பும் தளர்வும் போலே )

5-கட்டு அழிந்து
மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
(துவளில் மா மணி மாடம் ஆசை அறுத்து -அதில் இருந்து தாய் பாசுரம் -மாலுக்கு சென்றதுக்கு அவதாரிகை –
த்வரை மிக்கு அனுபவ அலாபம்–ஆற்றாமை முறுகி-தோழி தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உறுப்பாகாமல்
தளர்ச்சிக்கு உறுப்பாக -உபாய அத்யாவசாயம் இத்தனைக்கும் கலங்காமல் இருந்து –
மாலுக்கு பாரவஸ்யத்தால் எறாளும் வேண்டாம் என்று உபேக்ஷித்தவை தன்னடையே இழந்தவற்றை அன்றோ அருளிச் செய்கிறார் )

6-அகன்று –
உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
(மூன்றாவது சேர்ந்தால் போலே பிரேம தசை திருவாய்மொழி
தன் சொத்தை பார்த்து போனவள் என் சொத்தையும் எடுத்து போக வேண்டுமோ –
கண்ணும் கண்ண நீருமான இவள் திரு முகம் தானே தாயாருக்கு சொத்து
தன் திருவும் என் திருவும் -திருமாலைத் தேடித் போனாள்-என் திருமகள் சேர் மார்பனே 7-2- )

7-சார்வதே வலித்தமை
கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி
அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
(வலித்தமை-அத்யாவசியம் -உறுதி உடைமை -சிக்கனவே -அவன் முன்னே முடியும் நிலை -பதினாறாயிரப்படி )
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும்
க்லானி கார்ச்யாதிகள் (வாட்டமும் மெலிவும் -துரும்பாக இளைத்து போவது ) போல சாதனத்தில்
மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று
( முகில் வண்ணன் -அரங்கன் -7-2-திருவாய் மொழிக்கும் இந்த திரு விருத்த பாசுரத்துக்கும் சம்பந்தம் உண்டே
உபாய அத்யாவசியம் ப்ராப்யம் அந்தர்கதம் ஒழிய உபாயாந்தரம் இல்லையே )
அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை –
(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு -இதுவே கிருபை -பக்தி உபாயம் இல்லை -)

ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் –
உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —
அதாவது –

1-2-3-4-புத்ரி பல கால் ஆள் இட்டு
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்-1-4-
வைகல் பூம் கழி-6-1–
பொன் உலகு ஆளீர்-6-8–
எம் கானல்-9-7–
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
( திருவாய் மொழி முழுவதுக்கும் மூன்று ஸங்க்ரஹம் -அதுக்கு முதல் மூன்று பாசுரங்கள் ஸங்க்ரஹம் –
அதுக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் )

5-ஆற்றாமை சொல்லி –
வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-

6-கவராதவை விட்டு –
ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
(ஏறாளும் இறையோனில்-4-8 -ஆத்மாத்மீயங்கள் வைராக்யம்
என்னையும் என் உடைமையையும் சக்கரைப்பொறி ஒற்றிக் கொண்டு-பெரியாழ்வார் –
மாம் மதியஞ்ச அகிலம் – -தேசிகன்-அனைத்தும் சேஷம் -இது இல்லை என்றால் வேண்டாமே ஆழ்வார்
லோக யாத்ரை வைராக்யம் கீழே-ஐஸ்வர்ய கைவல்யம் ஒரு நாயகம் )

7-இரைக்க மடல் எடுத்து –
மாசறு சோதியிலே-5-3- -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
(ஹஸ்திகிரி பிரதிவாதி பயங்கரம் அண்ணா-மா முனிகள் சார்பில் அவர் முன்னிலையில் -வேங்கடேச ஸூப்ரபாதம் – ஸ்தோத்ரம் –
மங்களம் இத்யாதி சமர்ப்பித்து -ஒன்றும் தேவும் பதிக வியாக்யானம் கேட்டு சமஸ்க்ருத பாண்டித்யம் அறிந்து அடி பணிந்தார் –
உபதேசம் கேட்டு பொலிக பொலிக பொலிக மங்களாசானம் -5-2-)

8-கண் புதைக்கப் போக்கற்று-
ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
( கிருஷ்ணை ரஷித்த இருள் அங்கு க்ருஷ்ண த்ருஷ்ண தத்துவத்தை சிஷித்த இருள் இங்கு-
பேர் அமர் காதல் பின்நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் 5-3-/-4-/-5-மொத்தமான நாயகி –
பின்பு மொத்தமாக தானான தன்மையில் சரணாகதி -நாயகி பாவத்திலும் சரணாகதியும் உண்டே – )

9-உரு நெஞ்சு உள் எழ
எங்கனேயோ அன்னைமீர்காள் -திருவாய்மொழியிலே -5-5– -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –

10-கூடு நாள் தேடி
மானேய் நோக்கிலே-5-9- -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
( அடி பிரஸ்தாபம் ஏழு பாசுரங்கள் இந்த பதிகத்திலும் உண்டே )

11-தாழ்த்ததுக்கு ஊடி
மின்னிடை மடவாரிலே-6-2- -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
(தானான தன்மை -ஞானத்தால் சரணாகதியும் பண்ணி -பிரேமத்தால் நாயகி பாவத்தால் தூதும் விட்டு
சற்றே காலம் தாழ்த்து வந்ததால் பிரணாய ரோஷம் )

12-உசாத் துணை அற்று
வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –
என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —

13-சூழவும் பகைமுகம் செய்ய
ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –

14-தடை நில்லாதே –
நங்கள் வரி வளையிலே-8-2- -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –

15-புயக்கற்று
இன் உயிர் சேவலிலே–9-5 -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்

16-17- மாலையும் காலையும் பூசல் இடுகிற-
( முழு இரவு வியசனம் ஊரெல்லாம் துஞ்சி–5-4-இப்பொழுது மிகவும் தளர்ந்து அவ்வளவும் தங்க மாட்டாரே )
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
வேய் மரு தோள் இணையிலே-10-3- -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால்
நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —
இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

திருமங்கை ஆழ்வார் தலைமகள் திருத்தாயார் பதிகங்களும் 27 ஆகும்
மானமரும் மென்னோக்கி பதிகம் தோழிமார் இருவரும் பரஸ்பரம் ஸம்பாஷிக்கும் முகத்தாலே பரத்வ ஸுலப்யங்களை வெளியிட்டு அருளுகிறார் -அது தோழி பதிகம் அன்று –
திருத்தாயார் பதிகங்கள் ஒன்பது -அவை
1-திவளும் வெண் மதி போல்
2-கள்வன் கொல் நான் அறியேன்
3-கவள யானை கொம்பு ஒசித்த
4-வெருவாதாள் வாய் வெறுவி
5-சிலையிலங்கு பொன்னாழி
6-தெள்ளியீர் தேவருக்கும் தேவர்
7-மூவரில் முன் முதல்வன்
8-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த
9-திருநெடும் தாண்டகத்தில் பட்டுடுக்கும் பதிகம்

தலை மகள் பதிகங்கள் -18
1- திரிபுரம் மூன்று எரித்தானும்
2-தூ விரிய மலர் உழக்கி
3-தந்தை காலில் பெரு விலங்கு
4-கரையெடுத்த சுரி சங்கம்
5-விண்ணவர் தங்கள் பெருமான்
6- தந்தை காலில் விலங்கற
7-பொன்னிவர் மேனி மரகதத்தின்
8-தன்னை நைவிக்கிலென்
9-காவார் மடற் பெண்ணை
10-தவள விளம்பிறை துள்ளு
11-காதில் கடிப்பிட்டு
12-திருத்தாய் செம்போத்தே
13-குன்றம் ஓன்று எடுத்தேந்தி
14-குன்றம் எடுத்து மழை தடுத்து
15-மன்னிலங்கு பாரதத்து
16-சிறிய திருமடல்
17-பெரிய திருமடல்
18- திருநெடும் தாண்டகத்தில் மை வண்ண நறுங்குஞ்சி -பதிகம்
ஆக இரண்டும் சேர்ந்து -அந்யாபதேச பதிகங்கள் 27 ஆயிற்று
இவற்றின் ஸா தர்ம்ய வைதர்ம்யங்களைப் பார்ப்போம் –

திவளும் வெண் மதி போல் பதிகம் கங்குலும் பகலும் போல்
அவருடைய தாய்ப்பேச்சில் அது முடிவு பதிகம்
இவருடைய தாய்ப் பேச்சில் இது உபக்ரமம்
இவள் திறத்து என் செய்கின்றாயே -என்று வினவுதல் அங்கு
நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று வினவுதல் இங்கு
இவ்வினா பாட்டுத்தோறும் ஒக்கும்

கள்வன் கொல் யான் அறியேன் -உண்ணும் சோறு பருகும் நீர்
தாயை விட்டு மகள் பிரிந்து போதல் இரண்டிலும் உண்டு
திருக்கோளூரை வினவிக்கொண்டு தனியாகப் போனாள் பராங்குச நாயகி
வயலாலி மணவாளன் கொண்டு போகப் போனாள் பரகால நாயகி

கவள யானை கொம்பு ஒசித்த –ஆடியாடி அகம் கரைந்து
இரண்டிலும் இசை பாடிப்பாடி உருகுதல் ஒக்கும்
என் வள்ளலே கண்ணனே என்னும் என்றாள் பராங்குச ஜனனி
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணனே என்கிறாள் பர கால ஜனனி

வெருவாதாள் வாய் வெருவி திருமொழி –பாலனாய் ஏழுலகு திருவாய் மொழியைப் போலவே
என் செய்கேன் என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்–என்றாள் பராங்குச ஜனனி
இதில் -தாய் வாயில் சொற் கேளாள் தன்னாயத் தோள் அணையாள் -என்கிறாள் பர கால ஜனனி

——-

சிலையிலங்கு திருமொழி–கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் ஈசன் வந்தேறக் கொலோ –பாட்டுத்தோறும்
இங்கு -கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -பாட்டுத் தோறும்

தெள்ளியீர் தேவர்க்கும் திருமொழியும் கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் யானே யானே என்று எம்பெருமானுடைய தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத்தாயார் அருளிச் செய்த படியே
இதில் -வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் -என்று தத் தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத் தாயார் அருளிச் செய்கிறாள்

—-

மூவரில் முன் முதல்வன் திரு மொழியும் -மண்ணை இருந்து துழாவி திருவாய் மொழியும்
அதில் பிரான் கிடக்கும் கடல் என்னும்
இதில் முழங்கார் கடலுள் கிடந்தது
அதில் எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
இதில் பூவலருமுந்தி தன்னுள் புவனம் படைத்து -என்றும் மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை –

புள்ளுருவாகி நள்ளிருள் திருவாய் மொழியிலும் -பட்டுடுக்கும் -திரு நெடும் தாண்டக பதிகத்திலும் பராங்குச ஜனனியின் பேச்சுக்களின் பிரபஞ்ச ப்ரணாளிகள் உய்த்து உணரத் தக்கது
திரு விருத்தத்தில் -அருளார் திருச்சக்கரத்தால் -என்னும் தாய்ப் பாசுரத்தில் -ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ -என்ற வார்த்தையே
புள்ளுருவாகியில் ஒன்பது பழமொழிகளால் விஸ்தரிக்கப்பட்டு அருளிச் செய்கிறார்

பட்டுடுக்கும் பாசுரத்தில்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் என்று பர கால நாயகி -வர்ணிக்கப் படுகிறாள்
நாம ஏகதேச க்ரஹண நியாயத்தாலே மணி வண்டு திருநாமம் ப்ரஸித்தம் ஆகிறது-
பெரிய திருமொழி-அம்பரமும் பெரு நிலமும் என்று தொடங்கும் திருநறையூர் பதிகத்தில் -6-6-
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று மணி வண்டானது முந்துற செண்பகப் பூவை அநுபவித்து விட்டுப் பிறகு மகிழ மலரிலேயே படுகாடு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதஸ் வகுலா மோத வாஸிதம் –யதிராஜ ஸப்ததி -என்றபடி திருவாய் மொழி அனுபவத்திலேயே ஊன்றி இருப்பதைக் குறித்த படி
இவர் கடைக்குட்டி ஆழ்வாராகையாலே மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அனுபவங்களில் -செண்பகத்தின் வாஸம் உண்டு -என்று முதலில் குறிப்பிட்டு பின்பு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று திருவாய் மொழி அனுபத்திலேயே கால க்ஷேபம் செய்தமையைச் சொன்னவாறு
இங்கு மணி வண்டு -என்று தம்மையே அருளிச் செய்து கொள்கிறார்
இத்தை முன்னமே உணர்ந்து அறிந்த நம்மாழ்வார் திரு விருத்தத்தில்
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகன் வாரும் மலருளவோ நும்மியல் இடத்தே -என்று
வண்டுகளோ வம்மின் என்று திருமங்கை ஆழ்வாரையே விளித்து
நீர் உகந்து அருளின திருப்பதிகள் தோறும் உழல்கின்றீரே -திருவாய் மொழி போல் பரம போக்யமான பிரபந்தம் கடல் சூழ்ந்த மண்ணுலகம் எங்கேனும் கண்டதுண்டோ -என்ற வினாவுக்கு இவர் விடை இறுத்து அருளுகிறார் —
ஸ்வாமிந் கண்டதில்லை-ஆனது பற்றியே வகுளத்தின் மலர் மேலே தானே வைகிக் கிடக்கிறேன் -என்று
இதுவரை திருத்தாயார் பதிகங்களில் விசேஷப் பொருத்தங்களை அனுபவித்ததோம்

————–

மேல் விசேஷப் பொருத்தங்களைப் பார்ப்போம்

1-தைத்ரிய யஜுர் ப்ராஹ்மண்யத்தில் –கிருத்திகா ப்ரதமம் விசாகே உத்தமம் -என்று இவருடைய திருவவதார திரு நக்ஷத்ரங்களும் விசேஷித்து ஒதப்பட்டுள்ளது
2-பாஹ்ய குத்ருஷ்டிகளின் செருக்கை அடக்கும் திறமையினால் பரகாலன் என்றும் பராங்குசன் என்றும் திரு நாமங்கள்
3-அடியார்களை உகப்பிக்கும் திறமையினால் -இன்ப மாரி
என்றும் அருள் மாரி என்றும் திருநாமங்கள்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -4-5-10-
அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி அடையார் சீயம் -3-4-10
ஆனந்த வர்ஷுகர்- -இன்ப மாரி
கருணா வர்ஷுகர்–அருள் மாரி
4-தன்னொப்பார் இல் அப்பன் -6-3-9-என்ற மங்களா ஸாஸனத்துக்கு ஏற்ப-ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா -8–1-2-என்று அதற்குச் சேமக் காப்பு சாற்றி அருளினார்
5-திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே -என்னும் -4-4-8-என்று பகவத் பக்தர்களான அரசர்களை மதித்து அருளிச் செய்ததை அடியொற்றியே
தென்னன் தொண்டையர் கோன் -மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடிமாலை வயிர மேகன் -பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழற் பல்லவன்-துளங்கு நீண் முடி அரசர் தங்குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவன் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் —
இருக்கிலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்
என்று இப்படி பகவத் பக்தரான சில சக்ரவர்திகளைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார்
6-கண்ணபிரான் திருவாய்ப்படியில்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் களவு காணப் புகும் இடத்தில்
தன்னிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெய் இருக்கும் இடம் தெரியாமல் தடவா நிற்கையில் யாதிருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த் தாழி தட்டின உவப்பினாலே பல்லைத் திறந்து சிரிக்க நேரும் -பூர்ண சந்த்ரனுடைய கிரணம் போலே திரு முத்துக்களின் ஒளி புறப்பட -அந்த ஒளியைக் கை விளக்காகக் கொண்டு வெண்ணெயை வாரி விழுங்குவான்
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவனே –3-8-3-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானே -2-10-6-
7-தீர்ப்பாரை யாமினி -7-6- தேவதாந்தர கட்டுவிச்சி
சிறிய திருமடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பகவத் ப்ரவணை
8-முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் –திருவிருத்தம்
முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
9-பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை போல் இவரும்
நண்ணாத வாள் அவுணரிலும் கண் சோர வெங்குருதியிலும் ததீய மஹாத்ம்யம்
10-ஊரெல்லாம் துஞ்சியிலே தனிமைக்கு வருந்தியது போல் இவரும்
தந்தை காலில் விலங்கற -திருக் கண்ணபுர பதிகத்தில் வருந்துகிறார்

11-ஒரு நாயகம் -பதிகம் ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம்
பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ -6-2-5- சுருக்கமாக அருளிச் செய்கிறார்
12-குரவை ஆய்ச்சியாரோடு -கிருஷ்ணாவதாரம் விரித்த பதிகம் போல் இவரும்
மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -திருமொழியில் அருளிச் செய்கிறார்
13-இன்னுயிர் சேவலில் -என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் -என்று இன்னாப்புடன் அருளிச் செய்தது
இவரும் திருத்தாய் செம்போத்திலே வெறுப்பின்றியே அநு நயமாக அருளிச் செய்கிறார்
14-மின்னிடை மடவார் ஊடல் ரஸம்
காதில் கடிப்பிட்டில் அதே ரஸம்
15-உண்ணிலாய ஐவரில் இந்திரியங்களுக்கு ஆற்ற உண்ணாமல் ஓலமிட்டபடியே திருவுக்கும் திருவாகிய திருமொழி
16-ஆழி எழ -திருவாய் மொழி போல் பல அவதான அனுபவ ரஸம் ஏழை ஏதலனிலும்
17- கடியன் கொடியன் நெடியமால் –ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்Kkruthamக்ருத தாஸ்யம் இன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யத்தை
வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்று நயவேன் -என்று அருளிச் செய்கிறார்
18-சூட்டு நன் மாலைகள் –பாசுரத்தில் -கண்ணன் வெண்ணெய் தொடு உண்பதற்க்காகவே-திருவாய்ப்பாடியில் திருவாவதரித்தான் என்று அருளிச் செய்தது போல்
இவரும்-கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் -என்று அருளிச் செய்கிறார்
19- எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஒருகால் சொல்லித் தரைப்பட்டார்
இவரோ அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே -என்று ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லித் தரைப்படுகிறார்
20- பக்தாம்ருதம் –நெஞ்சுக்கு இருள் கடி தீபம் -இரண்டு தனியன் களிலும் அமைந்த ஐந்து விசேஷணங்களும் தேனிலும் இனியவை
சீரார் சடகோபன் செந் தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெறவும்
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் பெறவும்
இராமானுச முனியை வணங்கி வேண்டுதல் ஒக்கும்

சதுர் முக சமாக்கயாபி சடகோப முனவ் ஸ்திதா -ஸ்வ வாஸா மாத்ரு துஹித்ரு ஸஹி வாஸா ச வர்ணநாத்
தாஸத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலவே ஸ்த்ரீத்வமும் ஸ்வா பாவிகமே -இயற்கையே -வந்தேறி அல்ல
பதி பத்நி பாவ சம்பந்தம் -ப்ரணவத்தில் உகாரத்தாலே அவதாரண அர்த்த்தாலே அவனுக்கே ஆட்ப்படும் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
கண்டார் இகழ் வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்-போல் இருக்க வேண்டும் அன்றோ
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -6-5-10- தோழி பாசுரம்
பெரிய திருமொழியில்-காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் -திருத்தாயார் பாசுரம்
மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –

————————————————————————

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

ஆக -சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே –
(சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
இந்த வேத அங்கங்களோடே வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன -என்றவாறு )
அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ குரு பரம்பரைப் புராண பாடல்கள் —

June 24, 2024

மாறன்‌ துதி
தேனறா மகிழ்த்‌ தொடையலும்‌ மவுலியும்‌ திருக்கிளர்‌ குழைக்காதும்‌
கானறா மலர்த்‌ திருமுகச்‌ சோதியும்‌ கயிரவத்‌ துவர் வாயும்‌:
மோன மாகிய வடிவமும்‌ மார்வமும்‌ முத்திரைத்‌ திருக்கையும்‌
ஞான தேசிகன்‌ சரண தாமரையு மென்‌ நயனம் விட்‌ டகலாவே.–1-

கான்‌ – வாசனை.
கயிரவம்‌ – செவ்‌ வாம்பல்‌.
ஞான தேசிகன்‌ – நம்மாழ்வார்‌.

பரம்பொருள்‌ துதி
மருதிறத்‌ தவழ்ந்தும்‌ சகடிற வுதைத்தும்‌ மறை துலங்‌கிட மலை எடுத்தும்‌
எருதொடு கரியும்‌ பரிவிழ முனிந்தும்‌ எண்ணரும்‌ ஆடல்கஎியற்றிப்‌
பொருது மல்‌லினர் கண்‌ பிதுங்கிட நெறித்தும்‌ புள்ளின் வாய்‌ விரிந்திடக்‌–2-

எண்ணரும்‌ ஆடல்கள்‌ – அலகிலா விளையாட்டு–கவிச்‌சக்ரவர்த்தி
மல்லினர்‌ -, மல்லர்‌.*மல்லாண்ட திண்‌ தோள்‌’ என்பர்‌ பெரியாழ்வார்‌.

அடியார்‌ துதி
திரு வாழி திருச் சங்கம்‌ திருத் தண்டம்‌ திருச் சார்ங்கம்‌ திருவாள்‌ என்னும்‌
செருவாரும்‌ அரக்கர்கள் தம்‌ சிரமுருட்டும்‌ ஐம்படையும்‌, தேவர்‌ போற்றும்‌
மருமாலை அயக்கிரிவர்‌ விச்சுவசேனரும்‌ செம்பொன்‌ வரையாம்‌ என்னப்‌
பொரு மேனிக்‌ கருடனும்‌, அஞ்‌சனை மகனும்‌ காப்பாகப்‌ பொருந்தும்‌ மாதோ.–3-

நூற்பயன்‌
பாலாழி நாரணன்‌ சீர் பாடியும் பரி பாலனித்தும்‌
மேலாம்‌ பதம் பெற்ற ஆழ்வார்கள்‌ ஆரியர்‌ மெய்ச்சரிதம்‌
நாலாயிரத்து முந்‌ நூற்றறு பத்தொரு நற் கவிக்குள்‌
மாலா யொருகவி கற்கினும்‌ நல்கிடும்‌ வைகுந்தமே.–4-

தற் சிறப்புப்‌ பாயிரம்‌ ‘
திரு வளரூறை விஜய ராகவன் செந்‌ தமிழினில்‌ செங்கண் மாலருளால்‌
மருவளரும் சீர்ப்‌ பொய்கையார்‌ முதலாழ்‌வார்கள் தம்‌ சரிதம துடனே
அருண்மிகு நாத முனிவனே முதலாம்‌ ஆரியர்‌ சரிதமி தாமிக்‌
குரு பரம்‌பரையாம்‌ பிரபந்தம்‌ இதனைக்‌ கூறினன்‌ விருத்தப் பாக்‌ கொண்டே.–5-

ஊறை–ஊற்றத்தூர்

———–

பதிகம்‌ —
பொய்கையார்‌ பூதத்தார்‌ புகழ் பேயார்‌ மூவர்களும்‌ .புவி வந்‌ துற்ற
செய்கை யானதுவுமவர்‌ தமிழ் பாடிப்‌ பரம பதம்‌ சேர்ந்த வாறும்‌;
மெய் கையா மகிழ் பெரியார்‌ புவியில் வந்‌தரிபரமாய்‌ விளம்பி யாறு
வைகையான்‌ கட்டிய பொற்‌க் கிழி யறுத்துத் தமிழ் பாடும்‌ வண்ணந்‌ தானும் –1-மெய்‌ கையா – உண்மையை -வெறுக்காத..

திருமங்கை மன்னர் பிறந்‌ தரி தனையே வழி மறித்துத்‌ திருமந்த்‌ ரங் கொள்‌
கருமங்கள்‌ பலவும்‌ அவர்‌ தமிழ் பாடிப்‌ பரமபதங்‌ கலந்த வாறும்‌;
தருமங்கொள்‌ பாற்கவர் பால்‌ மழிசையர் கோன்‌ உதித்துப் பல்‌ சமய நூலால்‌
தெருமந்து மால் பரமென்‌ றறிந்துதமிழ்‌ பாடி யடி சேர்ந்த வாறும்‌; –2–, தெருமந்து – மனம்‌ கலங்கி,

தொண்டரடிப்‌ பொடியர் பர மாதர்‌ தமை விரும்பிப் பின்‌ தொண்ட ராகி
வண்டமிழின்‌ கவிபாடி யரங்கருடன்‌ மெய் கலந்த வாறு தானும்‌;
மண்டு விடப்‌ பணி குடங்கை வைத்த குல சேகரனார்‌ மனது தன்னில்‌
விண்டு பர மென வறிந்து தமிழ் பாடிப்‌ பரம பதம்‌ மேவு மாறும்‌; –3-

விண்டு.- திருமால்‌.
“இடர்‌ துடைத்‌ தேக விண்டு பிறந்தனன்‌” என்பர்‌ கவிச்சக்ரவர்‌ த்திகள்‌ (சுந்தர காண்டம்‌),

உறையூரிற்‌ பாணனுதித்‌து இராகமொடு சங்கீத முவந்து பாடிக்‌
கறை நேமி நாரணனாந்‌ திருவரங்க ரடி யிணையிற்‌ கலந்த வாறும்‌;
நறையாருந்‌ துளவணி மால்‌ சடகோபனாய்‌ உதித்து நான்கென்‌ றோதும்‌
மறையாரும்‌ பொருளினையே தமிழ் செய்து தம் பதம் போய்‌ மருவு மாறும்‌; –4-

சடகோபன்‌ – தம்மாழ்வார்‌. சடம்‌ எனும்‌ வாயுவை வென்றவர்‌.
*சடம்வளை சடத்தை முனிந்தருள்‌ முனிவன்‌” -சடம்‌, ஆன்ம ஞானத்தை அழிக்கும்‌,

மதுரகவி யுணர்ந்து திரு வாய் மொழியைப்‌ புவியிடையே மலியச்‌ செய்து
சதிருடனே சடகோபர்‌ தமைப் பாடிப்‌ பரமபதஞ்‌ சார்ந்த வாறும்‌;
புதுவையற்குக்‌ கோதை குழல்‌ சூடிய பூ மாலை தனைப்‌ பொருந்த நல்கி
முதிர் சுவை சேர்‌ தமிழ் பாடி யவளரங்கர்‌ தம்மை மணம்‌ முடித்த வாறும்‌; –5–

“துன்பற்ற மதுரகவி தோன்றக்‌ காட்டும்‌ தொல் நெறி’ என்பர்‌ வேதாந்த தேசிகர்‌.
பெரிய ஜீயர்‌ (மதுரகவி சொற்படியே நிலையாகப்‌ பெற்றோம்‌” என்பர்‌,

வேதமதைப்‌ பன்னிருவர்‌ தமிழ் செயு நாலாயிரமும்‌ விளிந்த வாற்றால்‌
நாதமுனி விக்கிரமாம்‌ மாறனுரைத்‌ திட வெழுதி நாட்டு மாறும்‌;
ஓது திரு மந்திரமே முதலான பொருள்களெலா முய்யக்‌ கொண்டார்‌
கோதில் மணக்‌ கால் நம்பிக்‌ குபதேசத்‌தவர் பதத்திற்‌ குறுகு மாறும்‌–6-

விக்கரமாம்‌ மாறன்‌ – அர்ச்சாவதாரமான நம்மாழ்வார்‌. விக்ரஹம்‌ என்ற வடமொழிச்‌ சொல்லை * விக்கிரம்‌ * என்று திரித்துக் கொண்டார்
மந்திரமே முதலான பொருள்கள் -1–திருமந்திரம் -2-த்வயம் – 3. சரமஸ்லோகம்‌,

வாளமருங்‌ கரச் சோழன்‌ குருவா மாக்‌கி யாழ்வானை வாது தன்னில்‌
ஆளவந்தார்‌ வென்று மணக்‌ கால் நம்பி யிடத்து மந்த்ரம் அறிந்திட்‌ டாங்கோர்‌
நாள தனில்‌ பெரிய நம்பி முதலானோர்க்‌ குபதேசம்‌ நவின்ற வாறும்‌;
மீள வந்த தெரிசனத்தைப்‌ பெரிய நம்பிக்‌ களிக்க வவர்‌ விரும்பு மாறும்‌; –7-

பரசமய மதகரியை வென்‌ றிடுங்கோ ளரியெனவே பரவி வானம்‌
தரைமுழுதும்‌ புகழ்சீர்த்திப்‌ பெரும்பூதா ரெதிராசர்‌ சரிதந்‌ தானும்‌;
அரன்பரனென்‌ றெழுதுபடத்‌ துடனடைந்த கிருமிகண்ட னஹறைறந்த கட்சி
உரைகள்‌ தனக்‌ கெதிருரைக ளுரைத்துரைத்துக்‌ கூரத்தா னுரைவெல்‌ .பாங்கும்‌; 8–இராமானுஜரைச்‌ சிங்க ஏறு” என்பர்‌ மணவாளதாசர்‌.

———-

(வேறு)
மகுத்துவ முடையவிவ்‌ வாற தாயதில்
மிகுத்திடுங்‌ கதைகளும்‌ விரித்து ணர்ந்திட
வகுத்துரை மணிப்பிர வாளத்‌’ தின்வகை
தொகுத்துப்பா விருத்தமாய்த்‌ தமிழிற்‌ சொல்வனால்‌. 9

‘ அவையடக்கம்‌
பொருதிரைக்‌ கடலினிற்‌ பொருந்து நீரெலாம்‌
ஒருசிறு குருவிசென்‌ றுண்ணல்‌ போலவே
பெருகிய காதலாற்‌ பேச ரும்பெருங்‌ :
குருபரம்‌ பரையினைக்‌ கூறல்‌ மேயினேன்‌| 1

நாறுசெந்‌ தாமரை தாண்ம லர்பெருஞ்‌
சேறிடை யெழுகனுந்‌ தேவர்‌ கொள்வபோல்‌
தேறுமாழ்‌ வார்கள்தம்‌ கதையைத்‌ இமையேன்‌
கூறினும்‌ பெரியர்கள்‌ உவந்து கொள்வரால்‌, 2

மெல்லிய பாலர்கள்‌ விளம்பி டும்மிளஞ்‌ .
சொல்லினை த்‌ தந்தைதாய்‌ சூழ்ந்து கேட்பபோல்‌
நல்லியல்‌ நாவுடைப்‌ புலவர்‌ நன்கிலேன்‌.
புல்லிய சொல்லையும்‌ பொறுத்துக்‌ கேட்ப்ரால்‌. 2

குலவுமென்‌ மொழியுடைக்‌ கோ லத்துஎதிர்‌
நலமிலாப்‌ புன்கொடி நவிற்றல்‌ போலவே
அலஇூலாப்‌ பல்கலை யறிந்து ஸணர்ந்திடும்‌
புலவர்முன்‌ பரிவிலேன்‌ புகல்கன்‌ றேனரோ. – 4

பூவரு: நான்முகப்‌ புனிதன்‌ தன்னுடை
நாவரு வெண்கம லத்து நாயகி
மாவருள்‌ மாட்சியால்‌ வைய: மீதுளோர்‌
யாவரு முணரவீ தறைகின்‌ றேனரோ. –5-

நாட்டுச்‌ சிறப்பு
வான்சி றந்து மழைபொழிந்‌ தோங்களீர்‌
தான்ம லிந்து நதிகள்‌ பெருகிட
ஊன்பொ ருந்தி யுயிர்கள்‌ செழித்திட
ஆன்சு ரந்து அமுத மளிக்குமே. 1

சென்னெ லோங்கி வயல்கள்‌ செழித்திடும்‌
கன்ன லோடு கமுகுங்‌ கவின்கொாளும்‌
வன்ன மாமலர்ச்‌ சோலை வளம்பெறும்‌
அன்னம்‌ வாழுந்‌ தடங்க ளமைந்தவே. 2

வாழ்த்து
விரைசெய்‌ யந்தணர்‌ வேதம்‌ விளம்புக
துரைகள்‌ நீதிச்செங்‌ கோலுந்‌ துலங்குக
உரைசெய்‌ தேவ ரடியரு மோங்குக
திரைக உற்புவி வாழ்வு செழிக்கவே. 3

பயன்‌
இந்த மாக்கதை யின்பொருள்‌ யாவையுஞ்‌
ந்தை கொண்டு தெளிந்துரைப்‌ போர்களும்‌
உந்து காத லுடன்செவி யுள்ளுற வந்து கேட்டு மகழ்நரும்‌ வாழ்கவே! –4-

———

தோற்றுவாய்‌
உலக மோடய ஸுருத்திர னும்பர்கோன்‌ முதலாம்‌
புலவர்‌ பல்லுயிர்‌ யாவையும்‌ பூத்தளித்‌ தழிக்கும்‌
அலகில்‌ பல்விளை யாடல்செய்‌ தெவற்றையு மகட்டுற்று
இலகப்‌ பாலடை வளருமால்‌ வைகுந்தத்‌ திருந்தே. 1

உலகை இறைவன்‌ அழித்தான்‌ .என்றால்‌ இல்லாது செய்துவிட்டான்‌ என்று கருதக்கூடாது, இதனைச்‌ “சற்காரியவா தம்‌”என்பர்‌.
கவிச்சக்ரவர்த்தியார்‌ ஒருவரே இந்‌ நுட்பம்‌ உணர்ந்து ‘உளவாக்கல்‌, திலைபெறுத்தல்‌, நீக்கல்‌” என்பர்‌. புதியபயொருள்‌ தோன்றாது: பழைய பொருள்‌ அழியாது.

பால்‌ அடை, பாற்சகடலிலும்‌ ஆலிலையிலும்‌ என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌.

தொடுத்த பல்லுயிர்த்‌ தொகுதிகள்‌ துவக்கறு மாறாய்‌
எடுத்த நம்மவ தாரங்க ளெண்ணில வ்வற்றை
அடுத்து நல்லறி விலாமையின்‌ அறிகில ராக்‌
கடுத்தெ இர்ந்திறந்‌ தாரசு ரேசர்நங்‌ கையினால்‌. 2

மானி டர்சிலர்‌ பரம்பொருள்‌ நாமென மதித்து
சரூன மல்கிநல்‌ லொழுக்கராய்‌ நாடொறும்‌ அன்பு
தானி ழைத்திருந்‌ துலகமா மாயையைத்‌ தடிந்து
வான வர்க்குமெட்‌ டாதவிப்‌ பதவிமன்‌ ஸனினரால்‌. 3–உலக மா மாயை என்றும்‌ உலகமாம்‌ மாயை என்றும்‌ பிரிக்கலாம்‌.

இன்ன வாறுசெய்‌ இவணடைந்‌ தனம்‌இனி யுலகின்‌
முன்னர்‌ செய்தவல்‌ வினைகளான்‌ முடிவிலாச்‌ சனனம்‌
மன்னி வாழ்பல வுயிரெலா மாய்தலுற்‌ பவித்தல்‌ ..
தன்னை யெவ்வகை யொழித்துதம்‌ பதந்தனிற்‌ சார்வார்‌. 4

நவ்வி காட்டியே வலையினால்‌ நவ்விகள்‌ தமையே
வவ்வு மாறென விவர்களா லவர்மயங்‌ குளத்தைச்‌
செவ்வி தாக்கியே சேர்த்திடும்‌ செயல்புரி குதலே
ஐஒவ்வு மென்னவண்‌ டுணுமதுத்‌ துளவமால்‌ ஓர்ந்தான்‌. 5

தவ்வி- மான்‌, *மாசைக்‌ கொண்டு மானைப்‌ பிடிப்பவர்போல்‌ இவர்‌களால்‌ அவர்கள்‌ உளத்தைச்‌ -செவ்வீதாக்குவோம்‌; “பிறகு நம்‌ பரமபதத்தில்‌
சேர்த்துக் கொள்வோம்‌” என்று தி ருமால்‌ கருதினான்‌.

பாயிரம்‌ முற்றும்‌

—-

முதலாழ்வார்கள்‌ திருவவதார அத்தியாயம்‌

ஐப்பசியில்‌ ஓணம்‌ அவிட்டம்‌ சுதையமிவை.
ஒப்பிலா நாள்கள்‌ உலகத்தீர்‌ — எப்புவியும்‌
பேசுபுகழ்ப்‌ பொய்கையார்‌ .பூதத்தார்‌ பேயாழ்வார்‌
தேசுடனே தோன்றுசிறப்‌ பால்‌. (உபதச ரத்‌இனமாலை, 6.)

திருமாலின்‌ கட்டளை
முத்த ரானவற்‌ குருத்தனை யளித்‌திடா முகுந்தன்‌ பத்தி செய்திருந்‌ தவர்களில்‌ மூவரைப்‌ பாரா
நித்தர் கேண்மினோ உலகுடை நீருதித்‌ தெவரும்‌
இத்த லம் பெறத்‌ திருத்தி மீண்‌ டெய்திடும்‌ எனலும்‌; 6

மூவர்‌ மறுப்புரை
கே ட்ட மூவரும்‌ பிரிவெனு மருந்துயர்‌ கிளர
வாட்ட மோடுன *தடிபிரியோ’ மென மறுக்க
மீட்டு மாங்கவர்‌ பொருந்துற மிகுநற வருந்துப்‌
பாட்டு வண்டிமிர்‌ துளவினான்‌ பகர்தன்மே யினனால்‌, 7

திருமால்‌
வருந்த லீரும துளத்தையா மகல்கிலம்‌ வடிவேற்‌
கருந்த டங்கணார்‌ புழுமல்கு மகட்டினிற்‌ கருவாய்ப்‌
பொருந்து றாதுநல்‌ விருந்தெனக்‌ களிப்பொடும்‌ புகுவண்‌
டருந்து தேன்றுளி மலர்மிசை யதவரித்‌ திடுமின்‌. 8

சன்று கூறியுண்‌ மயர்வரு மதியுமீந்‌ தஇடலால்‌
ஒன்றும்‌ வேறுரை யுரைத்திடா துரந்தனி லருந்தேன்‌
துன்று தாரணி மூவரும்‌ சுரபிவிட்‌ டகலும்‌
கன்‌ று போலவே விடைகொடு மீண்டனர்‌ கடிதில்‌. 9

முதலாழ்வார்கள்‌ அவதாரம்‌
ஆமி தேயென. ஐப்பசி ஓணநாள்‌ அதனில்‌
மாம திதவழ்‌ மாடமார்‌ கச்சிவந்‌ தொருவர்‌
காமர்‌ வண்டினங்‌ களித்துணத்‌ துளிமதுக்‌ கமழ்பூந்‌
தாமரைதனிற்‌ பொய்கைய ராயவ தரித்தார்‌. 10

மருக்கொண் மாலைய ரொருவர்‌ ஐப்‌பசிஅவிட்‌ டத்தில்‌
அருக்கன்‌ தேரிடறிட வுயர் மேடைகள் அமைந்த
திருக்க டன்மல்லை நகரில்‌ பூதத்தராய்த்‌ இகழும்‌
குருக்கத்‌ தஇம்மல ரதனிலே யுதித்தனர்‌ குறித்தே 11

பயிலும்‌ ஐப்பசி சதையநாள்‌ பேயராய்ப்‌ பரவும்‌
வெயிலை மாற்றிடும்‌ சோலையும்‌ வெண்சுதை மேலிக்‌
கயிலை போலுயர்‌ மாடமா ளிகைகளுங்‌ கவினும்‌
மயிலை மாநகர்‌ நெய்தலி னொருவர் வந்‌ தனரால்‌. 12

தேவ ரும்மலர்‌ சொரிந்திடத்‌ தஇங்களொன்‌ றினிலம்‌
மூவ ரும்பதி மூன்றிடை மூன்றுநாள்‌ தெய்வப்‌
பூவ ரும்மணி போலவிம்‌ முப்பெயர்‌ புளைந்து
யாவ ரும்பத மணுகுறும்‌ படியவ தரித்தார்‌. 13

செந்தி ௬ப்பதி யானநார ணன்‌ றிரு வடியாம்‌
அந்த மூவரு மொருவரை யொருவர்கண்‌ டறியார்‌
பந்த மாகிய காமமுங்‌ குரோதமும்‌ படரார்‌
வந்த மாநக ரங்களில்‌ வளருமந்‌ நாளில்‌. 14

மாதேவர்‌ கட்கு ஞயர்தேவ னாகி
வனசப்‌ பொகுட்டி லமரும்‌
சதேவி நாத னலதில்லை வேறு
துணையென்று சிந்தை யவராய்‌
மீதே யெழுத்த குமிழ்போ லழிந்து விடுதேக மேவ லிதுதான்‌
இதே யெனப்பி றவிசா கரத்தை
யொழிக்கின்ற சிந்தை யவராய்‌; 15

ஆனந்த மெய்து மால்லோக மேவி
யணைகன்ற சந்தை யவராய்‌-
ஞானம்‌ சுரந்த வுளமோ டெவற்கும்‌
நயமா மொழிப்பு கல்வராய்த்‌
தானம்‌ விளங்கு தருமங்க ளென்ற
துவமே யிழைக்கு மவராய்‌
மோனம்‌ பொருந்தி யுடையோர்கள்‌ பாத
மூளரித்‌ தொழுது மெனவே; 16

திருக்கோவலூரை அடைதல்‌
நாடித்‌ தரும்பொய்கை யார்கச்‌ச யாம்பொன்‌
நகரைத்‌ துறந்து லகெலாம்‌
தேடிப்‌ புகன்று பெரியோர்கள்‌ தம்மைத்‌
தெரிசித்‌ துயர்ந்த பலநீர்‌
ஆடித்‌ திருப்ப திகடோறு மெய்தி
அரிதாள்கள்‌ தமது முடிமேல்‌. ௭
சூடிப்‌ புகழ்ந்து இருக்கோ வலூரை
மகிழ்வில்‌ தொடர்ந்த ணுகியே; 17

பெருமாளைப்‌ பணிதல்‌
சந்‌ தாகு லம்தவிர்செ யானாய ஸனாரைத்‌
தெரிசத்‌ தழைத்த கரிமுன்‌ வந்தாய்‌ அயன்ற னுடனண்டம்‌ யாவும்‌
வளருந்தி மாம லரிலே
தந்தாய்‌ அரற்கு விதிசாபம்‌ நீக்கு
தலைவா நினைத்தெ ஸளிவர்யார்‌? | ப
எந்தாய்‌உ னம்பொ னடிபோற்றி! போற்றி.
எனமந்த்ர மோதித்‌ தொழுதார்‌… ……. 18

மூவர்‌ -சந்திப்பு
இவ்வாறு மீண்டு தொழுதந்த. வூரி. : னிடையன்‌ றிருந்த வளவில்‌
அவ்வாறு மற்ற விருவோரு மெண்சி –
யவர்வைகு மூர்கள்‌ , அகல்‌:எவ்வாறு மாடி யடியா ரிணங்கு
பதிதகோறு மெய்தி மகிழா
ஒவ்வாத கோவல்‌ நகராய னாரை
யுசுவிற்‌ புகழ்ந்து தொழுதார்‌. 19

தொழுதந்த வூரி னிடைவைக வன்று
தொலையாது காலு மழையும்‌
பொழுதத்தி மல்கு மிரவிற்‌ செறிந்து
பொழியெல்லை பொய்கை யருநூல்‌
முழுதும்‌ தெரிந்த வொருவேத ஸில்லின்‌
முடுகிப்‌ புகுந்து நடையில்‌ பழுதொன்றி லர்த சிறுதிண்ணை கண்டு
பரிவோடு பள்ளி கொளலும்‌; 20

பொய்கையார்‌ வேதன்‌ இல்லில்‌ உள்ள இண்ணையில்‌ பள்ளிகொண்
டார்‌. வேதன்‌ – வேதங்களைத்‌ தெரிந்தவன்‌. பரிவோடு – அன்புடன்‌.

பூதத்த ரம்பெய்‌ மழையால்‌ வருந்தி
யிடநாடிப்‌ பொய்கை துயிலும்‌
வேதத்த ஸில்லின்‌ மணிவாயில்‌ வந்துள்‌
விழைவோ டிருப்ப வர்கள்யார்‌?
ஊதற்‌ பெருக்கு தடியேன்‌ படுக்க
உளதோ இடமெ னலுமே
இதற்ற பொய்கை யவர்கண்‌ திறந்து
இருவாய்‌ மலர்ந்து மொழிவார்‌, 21

ஒருவர்‌ படுக்க இடமுள்ள திங்கண்‌
. உறைவேன்‌ விரும்பி வரில்நம்‌
இருவர்க்‌ கிருக்க இடமாகும்‌ வாரு
மெனவே யெழுந்து கதவைத்‌ துருவித்‌ இறக்க வவருட்‌ புகுந்து துணையாக நள்ளி ருளின்வாய்‌
மருவிச்‌ சிறந்த விருவோரு முள்ளம்‌
மக௫ழ்வோ டிருந்த விடையில்‌. – 22

பேயாரு மந்தத்‌ தலைவா யிடத்துப்‌
பிறழ்மேனி யோடு மணுகா
நாயேன்‌ தனக்கு முளதோ விருக்கை
-நவில்வீ ரெனப்பு கலவத்‌
தூயோரு மிங்க ணிருவர்க்‌ இருக்கும்‌
இடம்நீர்‌ தொடர்ந்த ணுகிடிற்‌ சாயாது நிற்கு மிடமாகும்‌ என்று
தாழைத்‌ திறந்து விடலும்‌. 23

இறைவன்‌ நெருக்குதல்‌
நெய்தற்‌ சிறந்த மலரிற்‌ பிறந்த
நிமலன்‌ மகிழ்ந்து விரைவாய்‌
எய்தப்‌ பொருந்து மவர்மூவர்‌ தாமும்‌
இனிதோடு நின்ற விடையிற்‌
கைதக்க வைந்து படையாய ஸனாருள்‌
கருதித்‌ இருப்பொ லியவே
நொய்திற்‌ புகுந்து புகலங்‌ கவர்க்குள்‌
நுழையா நெருக்கி யிடலும்‌. –24-

ஐந்து படையாயளனார்‌-
ஐந்து ஆயுதங்களைக்‌ கையில்‌ ஏந்திய ஆயன்‌ (இருக்கோவலார்ப்‌ பெருமான்‌
பெயர்‌ ஆயனார்‌; ஆனாயன்‌). நொய்தில்‌-எளிதாக, மற்றவர்‌ இடர்ப்பட்டு
நுழைந்தனர்‌. ஆயன்‌ எளிதே புகுந்து நெருக்கினான்‌.

தன்னேரி லாத திருமால்‌ புகுந்த
தனைநின்று ளோர்க எளறியார்‌
முன்னே யிருந்த ததிலும்‌ நெருங்கு முறையால்‌ வினவு தல்செயாப்‌
பின்னே யொருத்தர்‌ வரவில்லை வேறு
குரலில்லை பேச்சு தொனியா
என்னே நெருக்க மிதுகாண வேணு
மெனவந்த மூவர்‌ களுமே, 25

விளக்கேற்றுதல்‌
உள்ளத்து ஞள்ளி யரிதான ஞான
வொளிதீப மேந்தி யடர்பால்‌
வெள்ளத்து வந்த இருமார்பின்‌ மல்க
மிளிரைம்‌ படைக்க ரமின
நள்ளிற்‌ சிறந்த கருமேக மென்ன
வுருமல்க நார ணரெனுங்‌
கள்ளத்‌ தடைந்த திருவாய னாரைக்‌
கனிவோடு கண்டு ரகனார்‌. 26

இங்கு *பாவரும்‌ புகழால்‌ பேர்பெறு
பனுவல்‌ பாவலர்‌ பாதிநானிரவில்‌-மூவரும்நெருக்கி மொழி விளக்கேற்றி முதத்‌
தளைத்‌ தொழுத நன்னாடு” என்ற வரந்தருவார்‌ பாடல்‌ அனுசந்திக்க வேண்டும்‌, .

இறைவனைக்‌ காணுதல்‌
ஆனந்த மாவர்‌ புகழ்வார்‌ நடிப்பர்‌
அப்பார்‌ விழுந்து புரள்வர்‌
மோனம்‌ பொருந்தி யுரையா திருப்பர்‌
எழுவார்கள்‌ ஓடி. முதிர்தேன்‌

பானஞ்செய்‌ தோரில்‌ புரிகின்ற செய்கை
யுணரார்‌ பரிந்து தொழுவார்‌
ஞானம்‌ விளங்கு பரிவான. வோடை
யதுமூழ்கி யேந வில்வரால்‌. 27
துதிப்பாடல்கள்‌
ஆதியே! எம்மை யாளு மையனே! வைய முண்ட
சோதியே! அடியர்‌ நெஞ்சிற்‌ சுடரொளி யாகி தின்ற
வேதியா! முகுந்தா। கண்ணா! விண்டுவே[ அரியே! மாலே!
நீதியாய்‌! உலகம்‌ தாங்கு நிமலனே! கமலை .மார்பா! 28
உந்திமா மலரி னீரேழ்‌ —
புவனம தளித்த தோங்க
முந்திவே தன்ற னோடு
முக்கணான்‌ தனைச்சிட்‌ டித்துத்‌
தொந்தநால்‌ வகைப்பி றப்பேழ்‌
தோற்றமெண்‌ பத்து நான்காம்‌
அந்தமா ரிலக்க மான
சராசர மவையுண்‌ டாக்கி, ்‌ 29

நால்‌
வகைப்‌ பிறப்பையும்‌, எழுவகையான தோற்றத்தையும்‌ எண்பத்து நான்கு லட்ச
யோனி பேதத்தையும்‌ தோன்றச்‌ செய்து.
நால்வகைப்‌ பிறப்பு:. 7, பையில்‌ பிறப்பவை. 2. முட்டையில்‌ பிறப்பவை.
9. திலத்தில்‌ பிறப்பவை. 4, வியர்வையிற்‌ பிறப்பவை,
“தோற்றம்‌ நான்காம்‌ ; அவை பை, முட்டை, நிலம்‌, வியர்வையில்‌ திகழும்‌
என்ப” (பொருட்டொகை நிகண்டு).
எழுவகைத்‌ தோற்றம்‌, .. தேவர்‌ 8. மக்கள்‌ 8. விலங்கு 4, புள்‌ 5, ஊர்வன
6. நீர்‌ வாழ்வன 7. நிற்பன: எண்பத்து நான்காம்‌ சராசரம்‌: 1. தேவர்‌ 14 இலட்சம்‌;
. 2, மக்கள்‌ 9 லட்சம்‌; 8. விலங்கு 10 லட்சம்‌; 4. புள்‌ 10 லட்சம்‌; 5, நீர்‌ வாழ்வன
0 லட்சம்‌;: 6. ஊர்வன 11 லட்சம்‌; 7, நிற்பன 80 லட்சம்‌; சரம்‌-௮அசைவன.
அசரம்‌-அசையாதன.

உருப்பவித்‌ இடுதல்‌ காத்த
லொழித்திட லெனுமூச்‌ செய்கை
விருப்பொடு புரியு மக்கா ரணனென விளங்கும்‌ தன்மை கருத்திடை மதித்துத்‌ தேர்ந்து கண்கணீர்‌ பெருகச்‌ சோர
வுருக்கமாய்த்‌ தொழுதக்‌ கார்கள்‌
ஒருவரை யேனும்‌ காணேம்‌. 90

அத்தியின்‌ கனியி னுள்ளே
யறிவரி தாக வைகும்‌
வித்தெனத்‌ தெரியா வண்ண
மெய்யுயி ரனைத்தி னுள்ளும்‌
ஓத்துறை கின்ற நின்னை உருத்திரன்‌ பிரமன்‌ வானோர்‌
முத்தரு மறியார்‌ எம்மால்‌
அறியலா முறையுண்‌ டாமோ. ‘ 94

இறைவன்‌ கட்டளை
என்றுகொண் டிறைஞ்சி யுள்ளம்‌
இழுதென வுருகி நின்றே ஒன்றையு மறியா வெங்கட்‌
குணர்வளித்‌ தருள்வா யென்ன
நன்றுநன்‌ ஹறென்ன வுள்ளம்‌
நயந்திள நகையுந்‌ தோன்றக்‌
கன்றைவந்‌ தடைந்த ஆனிற்‌
கண்ணருள்‌ பெருக நோக்கா. 32

ஏரியு நிரம்பிக்‌ கொள்ளா
இருங்கரை யுடைத்திட்‌ டேகும்‌
நீரினைச்‌ சனெவா தெய்தி

யடைத்ததை நிரப்பு மாபோற்‌ சீரிய நுங்கள்‌ தம்மை
விடுகிலேம்‌ தெளிமி னென்னாப்‌
பாரினை விழுங்கிக்‌ காக்கும்‌
பச்சைமால்‌ பகர்ந்தா னன்றே. _ 33

இந்தவா சகங்கள்‌ கேளா
வெமக்கருள்‌ புரியு மந்நாள்‌
எந்தநாள்‌ அந்த நாளை
யியம்பிட வேண்டு மென்ன
– அந்தமா யாதி யாகி
யடிமுடி தெரியொ ணாத
செந்திரு மணாள னம்பொன்‌
இருவடி வணங்கி ஸனாரால்‌. 34

வணங்கலு மகிழ்ந்து மாயன்‌
மார்பினோ டிறுகப்‌ புல்லிப்‌
பணங்களி னரவு தாங்கும்‌
பாரினுற்‌ றோர்க ளெல்லாங்‌
குணங்கமழ்‌ தருமா நந்த பதத்திடைக்‌ குறுகி யாங்கண்‌
இணங்குநம்‌ மடியா ரோடு மினிதுவீற்‌ றிருக்கு’ மாறாய்‌. 35

மன்னெறி பொருந்து மப்போ
குனைகளை மறையைச்‌ சார்ந்த
குன்னைமா மாலை யாஞ்செந்‌
தமிழினாற்‌ கவிகள்‌ பாடிப்‌ பன்னுமிப்‌ புவியின்‌ மீது
பற்பகல்‌ வைகடிப்‌ பின்னர்‌
துன்னுமின்‌ அங்கென்‌ றோதித்‌
துளபமால்‌ மறைந்தான்‌ அன்றே. 36

மூவர்களின்‌ அருளிச்‌ செயலின்‌ மாண்பு
மறைந்து போதலு மற்றைய மூவரும்‌ மறுகி
நிறைந்த ஞானமும்‌ கல்வியும்‌ விளங்கிட நிணம்தோய்ந்‌
துறைந்த நேமிசங்‌ குடையமால்‌ உவப்புடன்‌ வாய்விண்‌
டறைந்த வாசக முறைவழா தரியநூல்‌ நூற்றார்‌. 37

மாயை யாம்பெரும்‌ பிணிதனை மாற்றுநன்‌ மருந்தாய்‌
நேய மாம்பெரும்‌ பசியினை நீக்குமா ரமுதாய்‌
மேய காமவேள்‌ வேட்கையாம்‌ வெயிலொழி நிழலாய்‌
ஓய்வி லாப்பிற விக்கட னீந்துமோ டமதாய்‌. 38

துன்னி ர௬ுட்பட ஞானம்நல்‌ இடும்சுட ரொளியாய்‌
பன்னி டும்பர சமயக்கா னொழிபடைத்‌ துணையாய்‌
அன்ன மின்மையின்‌ வாடுயிர்ப்‌ பயிர்க்கரு மழையாய்‌
மன்னு நற்பத மேற்செலற்‌ கேணியாய்‌ மலிய, 39

பொய்கை யாழ்வா ரெனும்நாமம்‌ புனைந்த புலவர்‌ பொய்ம்மையிலா
மெய்ம்மை யுளம்சேர்‌ பாகவதர்‌ விரும்பி யருந்து நறுந்தேனிற்‌ செய்ய மறையோ திடும்பொருளைத்‌ தெளிந்தே யோர்ந்து தஇருவாக்கால்‌
வையந்‌ தகளி யெனநூறு வெண்பா நவின்றார்‌ வளம்பெறவே. 40

பொய்கையாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
அந்த நூறு வெண்பாவென்‌
றமைந்த திருவந்‌ தாதிதனின்‌ முந்து பதிபாற்‌ கடலரங்கம்‌
முதிர்வேங்‌ கடம்பொன்‌ இருவெஃகா
விந்தை யுறையும்‌ திருக்கோவ
லூர்நல்‌ வளஞ்சேர்‌ விண்ணகரம்‌
இந்த வாறு தஇிருப்பதியும்‌ பொருந்திச்‌ றந்த விசைபெறவே. 41-பொய்கையார்‌ பாடிய பதிகள்‌ ஆறு.

முன்பே யுலகம்‌ புரிதவத்தான்‌
்‌ முதுமா மறையின்‌ பொருளுணர்ந்தே
தன்போ லிங்குப்‌ பலவுலகந்‌
… தனில்வா ழுயிர்கள்‌ சறப்படையப்‌
பொன்போல்‌ மேனிப்‌ பூதத்து
ஆழ்வார்‌ நாமம்‌ புனைபுலவர்‌
அன்பே தகளி யெனநூறு
வெண்பா வுரைத்தா ரழகுறவே. 42

பூதத்தாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
வடவேங்‌ கடம்தென்‌ னரங்கமுநீர்‌ மலைபா டகமா லிருஞ்சோலை
யிடவெந்‌ தைபாற்‌ கடல்பேரை யெழிலார்‌ கோவ லூர்தஞ்சை கடன்மல்‌ லை? ரத்திநகர்‌
கோட்டி நகர்தண்‌ காலூரும்‌ குடந்தை யீரே முடனென்றவ்‌
வந்தா தியினுட்‌ கூறியதே. – 43 இவர்‌ பாடிய பதிகள்‌ பதினான்கு,

திருக்கண்‌ டேனென்றோ துறுஞ்சீர்‌
சிறந்தே யொளிர்வெண்‌ பாவதனைச்‌
சருக்க ரைகொண்‌் டரூந்துவபோற்‌
றரையோ ரருந்திக்‌ களிப்புறவே
யிருக்கு முதலா நான்மறையி
னியலும்‌ பொருளை யறிந்துணர்ந்தே
யுருக்க முடன்பே யாழ்வாராம்‌
நாமம்‌ புனைந்தோ ருகந்துரைத்தார்‌. 44

பேயாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
அவ்வந்‌ தாதி தனிற்பதினைந்‌
தூர்பாற்‌ கடல்வேங்‌ கடமரங்கம்‌
ஒவ்வுங்‌ குடந்தை யிடவெந்தை
கோட்டி யூர்வே ளுக்கையுடன்‌
செவ்வெஃ காவை குந்தமட்ட
புயம்விண்‌ ணகர்‌€ ரலிக்கேணி
கவ்வி விசும்பார்‌ சோலைமலை
கடிகை கச்சிப்‌ பாடகமே. 45-பேயாழ்வார்‌ பாடிய இவ்யதேசங்கள்‌ பதினைந்து.

இந்த முறையா லிருக்கினில்வீற்‌
றிருக்கும்‌ பொருளை யம்மூவர்‌
செந்த மிழின்மூன்‌ றத்தாதி இருந்தப்‌ புகன்று பரசமயத்‌தந்தி தனக்கா ளரிபோலுந்‌
குயங்குள்‌ ளிருட்கா தவன்போலும்‌
எந்த வுலகத்‌ துள்ளோரும்‌
ஏத்தித்‌ தொழவாழ்ந்‌ தஇனிதிருந்தார்‌. 46

பரமபதம்‌ உறுதல்‌
அலகில்‌ பலநா ஸஎிரும்புவிமே
லவ்வா நிருந்து பரமபத
உலகத்‌ துளர்வந்‌ தெதுிர்கொளப்பொன்‌
னோங்கு விமான மதன்மிசைபோய்த்‌
இலக நுதற்செந்‌ திருமார்பன்‌
இருவம்‌ புயத்தாள்‌ தொழுதேத்தி, இலகு மணியா தனமிசைவீற்‌
றிருந்தார்‌ பிரிந்த விடாய்நீங்கி. 47–திலக நுதல்‌ செந்திரு – திலகமணித்த நெற்றியை உடைய பெரிய பிராட்டி.

தோன்று ஞான முடையவராய்த்‌
துலங்கு மாயை கடந்தவராய்‌
ஆன்ற மறையந்‌ தணர்முதலாய்‌
அறையும்‌ நான்கு வருணத்தார்‌
மூன்று திருவந்‌ தாதிக்குள்‌ முழுகிக்‌ காப்பிட்‌ டுணர்ந்தோதி
யேன்ற பரம பதந்தனிற்சென்‌
றிருந்தார்‌ சிறந்தார்‌ அடியரொடும்‌. 48 -கோவிலுக்குள்‌ செல்பவர்‌ நதியில்‌ மூழ்கிச்‌ செல்வது மரபு. பரமபதம்‌ செல்பவர்‌ மூன்று “இருவந்தாதியாம்‌ நதியில்‌ மூழ்கவேண்டும்‌,

இக்கா தையையன்‌ புடனேட்டில்‌
எழுதி னவரும்‌ படித்தவரும்‌ மிக்க விதனுட்‌ பொருள்கடமை
விரித்தே விளம்பி னவருமிதை
யொக்கு மெனக்கேட்‌ டுணர்ந்தவரு
மூலகிற்‌ பலநாள்‌ மகழ்ந்திருந்து
தக்க ஞானந்‌ தழைத்தனந்த சயனன்‌ பதம்போய்ச்‌ சார்ந்திடுவார்‌. 49

பெரியாழ்வார்‌ வரலாறு பேசுவோம்‌
முதன்மூன்‌ றாழ்வார்‌ களுமலர்மேன்‌
முளைத்த சரித மதனையிந்த
விதமா மெனவே விளம்பினம்சீர்‌
விளங்குந்‌ திருமால்‌ கமலவிரு
பதமார்‌ புயத்தி லணிகருட
பகவான்‌ புவிவந்‌ தவதரித்த
இதஞ்சேர்‌ பெரியாழ்‌ வார்சரித
மிதுவென்‌ றெடுத்திட்‌ டியம்பிடுவாம்‌. 50

பெரியாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
. இன்றைப்‌ பெருமை யறிந்திலையோ ஏழைநெஞ்சே
இன்றைக்கென்‌ னேற்ற மெனிலுரைக்கேன்‌ – நன்றிபுனை
பல்லாண்டு பாடியநம்‌ பட்டர்பிரான்‌ வந்துதித்த
நல்லாவனிச்சோதி நாள்‌, –உபதேசரத்தினமாலை…… 16

உலகநிலை
இவ்வாறினி தம்மூவரு மேகப்பல நாணீங்‌
கவ்வேலைமெய்ஞ்‌ ஞானம்மகன்‌ றஞ்ஞானம டைந்தே
யொவ்வாதவைம்‌ புலவேடருக்‌ குட்பட்டவ ராகி
வெவ்வேலையு டுக்கும்புவி மேல்வாழ்பவ ரெல்லாம்‌. 1

இறைவன்‌ கருடனுக்கிட்ட பணி
தருமத்துறை நடவாமல தருமத்துறை படவக்‌
கரமத்தினி லடைமூடவி லங்குற்றுளங்‌. கலங்கி
யொருவர்க்கெனும்‌ நலமென்பது நிலையாதவிவ்‌ வுலகு
திருமித்தத ளிக்குந்திரு நெடுமாலுள நினைந்தே. –2-தெருநல்‌ உளன்‌ ஒருவன்‌ இன்றில்லை என்னும்‌ பெருமை யுடைத்திவ்‌ வுலகு” என்பர்‌ திருவள்ளுவர்‌.

அருகற்பெரு வரையைப்பொரு முருவத்துட னணுகும்‌
கருடப்பெய ரவனைத்தன திருகட்கடை யருளாப்‌
பொருவற்றவ ரிவர்வாருஇப்‌ புவிவிட்டணு uses
மருவுற்றது பெருகிற்றிருண்‌ மலிமாயைக எதனால்‌. 3

நீபோய்பெரி யாழ்வாரென நிலமீதவ தரித்தே
மாபாவகொ டும்பாம்பினை மலியாமல டக்ூக்‌ :
காபாலிமுப்‌ புரமட்டவ னிருண்மாயைக எளைந்து
பூபாலுயர்‌ ஞானம்மது பெருகும்‌படி புரிவாய்‌, 4

கருடன்‌ விடைபெற்றான்‌
எனவேயுரை மொழிமேவித ஸிருசெஞ்செவி குறுகும்‌
மூனமேயவ னடிமாமலர்‌ முடிமீதுற வணியா
மனமேகொடு மதியாவிழி வழியேகொடு பருகா
கனவாய்கொடு துதியாவிடை. கொடுமேல்பதி கடவா. 5

பெரியாழ்வா அவதாரம்‌ y,
கனமேனிக ரியமேதி கலக்கும்மடு விடைவாழ்‌
சனமேவுவ ரால்பாய்தரத்‌ தென்னங்களனி யுதிரப்‌
புனமேவுக ரும்பிற்றுதிர்‌ மணிகள்பொழி நிலவின்‌
இனமாமெனக்‌ குமுதங்களி னிதழ்விண்டிடும்‌ வயலார்‌ 6

இதன்‌ உள்ளுறை. மேதிகள்‌ சமயவாதிகள்‌. மீன்‌-மீனையே கொடியாகக்‌
மொண்ட பாண்டியன்‌. உதிர்ந்த காய்கள்‌-சமயவாதிகளின்‌ ஆரவாரம்‌, கரும்பு
முறிந்து மணி வெளிப்பட்டது-பெரியாழ்வார்‌ சினந்து பரத்துவ நிர்ணயம்‌
செய்தது. குமுதம்‌ மலர்ந்தது- திருமால்‌ காட்சி வழங்கியது.

இருவில்லிபுத்‌ தாரென்றுரை செயுமப்பெரு நகரின்‌
மருவந்தணர்‌ குலமென்றிசை வகையிற்புனி தமதாய்‌
குருவென்றுய ரியசோழிய குலனிற்பிர மனைநேர்‌
ஒருவன்குல மணியென்னமு குந்தப்பெய ௬டையான்‌ 7

அறையும்மறை யவன்மாமனை யவள்பற்புமை யென்பாள்‌
பொறையிற்புவி யனையாளெழில்‌ பொலிவிற்றிரு நிகர்வாள்‌
நிறைகற்பினில்‌ வடமீனினை நிகர்வாள்குயின்‌ மொழியாள்‌
பிறையொத்திடு நுதலாளனப்‌ பெடையொப்பிடு நடையாள்‌ 8

அம்மாமட மகளின்றிரு வகடாமிட மதனுள்‌
இம்மாநில மிடைவாழ்ந்தினி திருக்கும்பல வுயிர்க்கும்‌
செம்மாவறி வினைமூடிடச்‌ செறியைம்புல விருளை
விம்மாதொழி வகைசெய்திடு மெய்ஞ்ஞான முகிழ்க்க. 9

ஒருமாகதி ரவனாயினி துதயஞ்செயு மதுபோற்
கருவாகவ மைந்தேகலந்‌ திடுநாளது முதலாய்‌
வரும்ாதம னைத்துங்குறி யவள்பால்மலி தர ஐ
யிருமாதமு நிறைவாய்முடி வெனலாகிய திருநாள்‌. 10

திருவவதரித்த நாள்‌
மிதுனத்திரு மதியிற்பிறை மிளிர்சுக்கல பக்கம்‌
அதனுக்குளி னுதிசோதிய தெனுமத்திரு நாளின்‌ மதனொத்தொளி ர௬ுருவத்தொடு வளையுற்றிடு மணிகள்‌
அதுமுற்றிட சிறகிற்பொரு தரித்தானவ தரித்தான்‌. 11

தந்தையின்‌ செயல்‌
மைந்த னங்குவந்‌ துதித்தலு முளமது மஇழ்வாய்த்‌
தந்தை யாகிய முகுந்தனுஞ்‌ சதுர்மறை நெறியைச்‌ சிந்தி யாசதஞ்‌ சீவவென்‌ றேயெடுத்‌ தெடுத்து
முத்த வாசிகள்‌ பலபல புகன்றனன்‌ முறையால்‌. 12

முகுத்தர்‌ மைந்தனைக்‌ கண்டு, சதம்‌ சீவ!” என்று வாழ்த்தினார்‌.
“இன்னுமொரு நூற்றாண்டிரும்‌’ என்று பல்லாண்டு பாடுவது வைணவ மரபு.
சதம்‌-நூறாண்டு, சீவ-வாழ்க/

புதையி ருட்பிழம்‌ பனையமா மாயையைப்‌ பொடியாச்‌
சிதையு மாறழித்‌ தொழித்திடச்‌ செங்கதி ரவன்வந்‌
துதைய மாயின னெனவுகஇத்‌ திடுமக வினுக்காய்‌
விதைமு தற்பல தானமும்‌ விதம்விதம்‌ வழங்கி. 13

மாயையைப்‌ பொடி யாய்ச்‌ செய்யும்‌ கதிரவன்‌ போல்‌ தோன்றிய மகவுக்காக விதை முதலான தானங்‌கள்‌ செய்தார்‌ முகுத்தர்‌.

மற்றும்‌. செய்வன யாவையுஞ்‌ செய்தனர்‌ ம௫ழ்வால்‌
வெற்றி யாழிநா ரணன்றிரு வருளினால்‌ விரைவோ
டுற்ற பாற்கடல்‌ கடைந்தநா ளூதத்தவா ரமுதம்‌ பெற்ற வானவ ரொத்தன ரந்நகர்ப்‌ பெரியோர்‌. 14

பெரியாழ்வார்‌ வளர்ந்தார்‌
ஊட்டி யும்முலை யுச்சிநெய்‌ தடவிமஞ்‌ சனநீ
ராட்டி யும்மணித்‌ தொட்டிலிட்‌ டசக்கியம்‌ புலியைக்‌
காட்டி யும்மடி மிசைவைத்தும்‌ கண்ணிறை கழித்தும்‌
ஈட்டி யிம்முறை பலபல்‌ ம௫ழ்வினோ டிழைப்ப. –15-

கிடந்த சைந்தும்பின்‌ கவிழ்ந்திட்டுந்‌ தவழ்தலாய்க்‌ கெழுமிப்‌
படர்ந்தி ருந்தும்பின்‌ பார்மிசை நின்றுதத்‌ தடியாய்‌
நடத்தும்‌ விம்மியும்‌’ நகைசெய்துந்‌ தந்தையும்‌ நல்கும்‌
மடத்தை யுங்களிப்‌ புறப்பல செய்கைகள்‌ மருவி. 16

சுதிர்செய்‌ நேமிநா ரணன்பத மலருளங்‌ கருஇத்‌
துதிசெய்‌ தேயுய ரியபதந்‌ தொடர்ந்திடப்‌ புவிமேல்‌
வதிப வர்க்குமெய்ஞ்‌ ஞானத்தை வளர்ப்பவந்‌ துதித்தோன்‌
மதிதி னங்கலை வளர்வபோல்‌ வளருமந்‌ நாளில்‌. 17

பெயர்‌ வைத்தல்‌
உட்பட்‌ டியாவரும்‌ பொருந்துற வூர்தியாய்க்‌ கருடப்‌
புட்ப டைத்தவர்க்‌ கேபரப்‌ பெயர்புனை விக்கும்‌
மூட்பொ திந்ததாட்‌ டாமரை தநிகர்தரு முகற்கு
விட்டு சித்தனென்‌ றேதிருப்‌ பெயர்புனை வித்தார்‌. 18
காப்பிடுதல்‌
விண்ணி டைப்பெருங்‌ கருடன்மேற்‌ றோன்றுவிண்‌ டுவுக்கு
மண்ணி டைக்குலப்‌ பாண்டிய னவையின்மா ஸிடர்தங்‌
கண்ணி றைப்பொருந்‌ தாதுபல்‌ லாண்டுகாப்‌ பிடுமப்‌
புண்ணி யர்க்குநற்‌ காப்புமிட்‌ டனர்பொருந்‌ துறவே. 19
அணிகலன்‌ புனைதல்‌
வண்டு ணும்மது மலரினை மாலையாய்த்‌ தொடுத்து
பண்டு மாநிலப்‌ பரப்பெலாம்‌ பாலன மெனவே
யுண்டு கந்தவற்‌ களிப்பவற்‌ குயாந்தபல்‌ கலங்கள்‌
கொண்டு மெய்யெலா மணிந்தனர்‌ குறைவில தாக. 20–பாலனம்‌-சிலேடை. பால்‌-அன்னம்‌ என்றும்‌, பாலனம்‌ என்றும்‌ கொண்டு நயம்‌ காண்க,

அன்னமுூட்டுதல்‌ .
மன்னு நால்வகை வருணருஞ்‌ செவியெனும்‌ வாயால்‌
பன்னி டுந்திரு வாய்மொழி யமுதினைப்‌ பருகப்‌
பின்ன ஸித்திடும்‌ விட்ணுசித்‌ தப்பெய ரவனுக்‌
கன்ன மாமமு தளித்தன ரன்புட னருந்த. 21
சடங்குகள்‌
தவள நேர்வளை யாழிமாற்‌ கோதுசெந்‌ தமிழாந்‌
திவளும்‌ வாள்கொடு தெய்வம்வே றுளதெனத்‌ தியங்க
உ.வளு மாயநூ லிருண்மயி ருகுத்தறுப்‌ பவர்க்குச்‌
சவள மாவதும்‌ கதிமுறைத்‌ தகவுட ஸிழைத்தார்‌. 22

இருபிறப்பாளராதல்‌
ஏலும்‌ வேதசாத்‌ -திரம்புரா ணங்களா யினவும்‌
மேலும்‌ தத்துவ முதலிய பலவென விளம்பும்‌
நூலெல்‌ லாமறிந்‌ தகத்தணி பவற்குநூன்‌ முறைய
தால ஸணிந்தனர்‌ முப்புரி நூலுமன்‌ புறவே. 23

இவ்வி – தம்புரி வனவிதி முறையெலா மியற்று
மவ்வி தம்புரிந்‌ தார்மகிழ்‌ வாயினர்‌ : அவனுஞ்‌
செவ்வி தாகிய பிரமசா ரியத்தொடும்‌ சிலநாள்‌ ்‌
ஒவ்விவாழ்ந்திருந்‌ தனனுவந்‌ துறையுமந்‌ நாளில்‌. 24

திருப்பணி
ஊர மித்தவன்‌ தந்தையாம்‌ பிரமனை யுதவும்‌
நார ணன்தஇிரு வுலகெலா மளந்திடு :நளினச்‌
சீர டிக்குமுன்‌ னுலகுதூ ளென்பதைத்‌ தெளிவு
கூர கத்திடை. யறிந்தன னாதியிற்‌ குமரன்‌. _ 25

அந்த வூரூறை வடபெருங்‌ கோயிலி லமர்ந்த
செந்தி ௬ப்பதி யானமா யவன்றிரு வடியை
முந்து காதலோ டணுகியே முறைமுறை வணங்கிச்‌
சிந்தை யோடிரு நயனமுஞ்‌ சிறந்திடக்‌ களித்தான்‌. 26

அடிமை செய்திடும்‌ தொழில்களில்‌ யாதினா லிந்த
நெடிய மால்திரு வுளமகழ்ந்‌ தஇடுமென நினையாக்‌
கடிகொண் மாமலரிதழொடுந்‌ தெளிமதுக்‌ கமழ்பூஞ்‌
செடிகள்‌ வைத்துப்பூ மாலைசாத்‌ திடலெனத்‌ தெளியா, 27

இதுவ லாற்பிரி திலையெனச்‌ சென்றிரு வாட்ட
மதுபொ மிந்துடுந்‌ துளவமல்‌ லிகைமுல்லை யலரிப்‌
புதும ணத்தசெவ்‌ வந்தியும்‌ புன்னைசெண்‌ பகமென்‌
பதுமு தற்பல சாதிபூ வனந்தனைப்‌ படைத்தே. 28

தேன்பொ ருந்துசெந்‌ தாமரை குமுதஞ்செங்‌ கழுநீர்‌
கான்பொ ருந்தும்வண்‌ டுறையும்வெண்‌ கமலமே முதலாம்‌
வான்பொ ருந்திடும்‌ தேவரும்‌ விரும்புமன்‌ மலர்க டான்பொ ருந்திடும்‌ பொய்கையும்‌ அமைத்தனன்‌ றகவாய்‌. 29

விடியு முன்றின மெழுந்துபோய்ப்‌ பொய்கையின்‌ மிளிர்நீர்‌
படித லேமுதற்‌ காலைசெய்‌ பலகடன்‌ முடித்து
நெடிய னாம்வட பத்திர சாயிபொன்‌ னிகர்சீர்‌
அடிவ ணங்கியே தந்தன வனந்தனை யணுகி. 30

கொத்தி டல்புனல்‌ விடலெருக்‌ கொணர்ந்துபூஞ்‌ செடிவேர்‌
வைத்தி டல்தண்ணீர்‌ பாய்ச்சுதல்‌ மலிகளை களைதல்‌
ஒத்து டச்சுவர்‌ வேலிவைத்‌ திடல்புழு வெடுத்தல்‌
இத்தி றம்புகல்‌ பக்குவம்‌ குறைவிலா திழைப்பார்‌. 31

விண்ட… லர்ந்தபூ மலர்களைப்‌ பத்தியால்‌ விரைந்து
வண்டு ஸணும்முனம்‌ மணமுறா மற்பரி வட்டால்‌
கொண்டு நாயைப்‌ பூட்டிப்பூக்‌ கூடையி லெடுத்துச்‌
செண்டு மாலைக டொடுத்திடு வான்தினந்‌ தோறும்‌. 32

வாசனை நாசியில்‌ புகாதபடி திருப்பரிவட்டத்தால்‌ பூட்டிக்‌ கொள்வார்‌. -* பூக்களைத்‌
தெரித்து புழுக்கடி போக்கிப்‌ பொய்யிலா மெய்யனார்‌ புரைதீர்‌ மூக்கலம்‌ மணம்‌
செள்‌ நடைந்திடா வண்ணம்‌ மூடிவாய்‌ புதைத்து”” என்பர்‌ வடிவழகய நம்பிதாசர்‌
(குருபரம்பரை). தமது நாசியில்‌ வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தாற்‌
கட்டிக்‌ கொண்டு” என்று குருபரம்பரை ப்ரபாவம்‌ பேசும்‌ (பன்னீராயிரப்படி).

தொடுத்த: செண்டொடு மாலையைத்‌ துலங்குபாற்‌ கடலிற்‌
படுத்தி டும்வட பத்திர சாயிக்குப்‌ பகல்போய்‌
அடுத்த சந்தியிற்‌ கொண்டுசென்‌ . றற்சகர்‌ கரத்திற்‌
கொடுப்ப னிம்முறை நடக்குநா ஸூற்றகூ றுதுமால்‌. 33

பகல்‌ போய்‌ அடுத்த சந்தியில்‌ என்‌.றதால்‌ ஆழ்வார்‌ மாலைக்காலச்‌
சந்திக்கு மாலை முதலானவற்றை வழங்கினார்‌ என்று தெரிகிறது. ** பகற்‌ பொழு
தைக்‌ கழித்ததற்பின்‌ எய்த்த நறு மலர்ந்தித்‌ திருமாலை நேயத்தால்‌-பரமனுக்குச்‌
சமைத்தளித்தே” என்பர்‌ வடிவழகய நம்பிதாசர்‌ (குருபரம்பரை),

பாண்டிமன்னன்‌ செயல்‌ ஆழ்வார்‌ கிழியறுத்தல்‌
முருகவிழ்‌ தாமரை முத்தை. யீன்றிடும்‌
கருவென வனங்கிடை காக்கு மாவயல்‌
மருவிய செந்நெலுங்‌ கரும்பு மல்இடுந்‌
இருவளர்‌ பாண்டிய தேய வேந்தனே. 34

நறைகொள்தார்‌ வேந்தராங்‌ கடன டுங்கியே
முறையெனப்‌ புலம்பியுள்‌ கலங்க மொய்ம்புணீர்‌
கறைகொள்வேல்‌ மலையினாற்‌ கலக்கி யேதரும்‌
திறைகொள்சீர்‌ வல ராய னென்பவன்‌. 35

பாண்டிய நாட்டு வளம்‌-தாமரை
ஈன்ற முத்தை முட்டை என்று கருதி அன்னம்‌ அடைகாக்கும்‌ நாடு பாண்டிய
நாடு. இங்கு நுட்பமான உள்ளுறை உண்டு, அன்னம்‌ முத்தை முட்டை என்று
அடைகாக்கிறது. * எத்தனை நாட்கள்‌ அடை கிடப்பினும்‌ அதில்‌ அன்னக்‌ குஞ்சு
தோன்றாது, அன்னம்‌ சமயவாதிகள்‌. முத்துக்கள்‌ லோகாயதம்‌ முதலான
புறச்சமயங்கள்‌. அச்சமயங்களால்‌ பயன்‌ இல்லை என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌.
முருகு- வாசனை, தேன்‌. கர௬-முட்டை. கிடைகாக்கும்‌-அடைகாத்தல்‌.

அறங்களாம்‌ எருவையிட்‌ டறம்பி ழைத்திடுங்‌
குறும்பராங்‌ களைகளைக்‌ குறைத்திட்‌ டன்பெனு
நறும்புனல்‌ பாச்சநல்‌ லோர்க ளாமெனும்‌
உறும்பயிர்‌ விளைத்துச்‌ செங்கோலை யோச்சு நாள்‌. 36

ஒருதினம்‌ நகரசோ தனைக்கென்‌ றுற்றுநள்‌
ளிருளிடை யொருவானா யிலங்கும்‌ வாளொடும்‌
மருவுமம்‌ மதுரைமா நகரின்‌ மல்கஇிடுந்‌
தெருவெலாந்‌ . துருவியே செல்லு மெல்லையில்‌. 37

காவலர்‌ பாரிப்போர்‌ மிடைதல்‌ காண்குறாச்‌
சீவல தேவ னென்‌ றுரைக்குஞ்‌ செவ்வியோன்‌
தாவியாங்‌ கொருதெருத்‌ திண்ணை தன்மிசை
மேவியாங்‌ இறைப்பொழு திருந்த வேலைவாய்‌. 38

பாரிபோட்‌ டடைந்தவ ரகலப்‌ பாருடை
கூரிய வேலினா னாங்கு பள்ளிகொள்
சீரிய னொருவனைச்‌ சேர்ந்தெ முப்பிநீ
யாரிசைப்‌ பாயென வதட்டிக்‌ கேட்டலும்‌. 39:

அன்ன வனுணர்ந்து நீ யாரென்றோதலும்‌
இன்னகர்‌ காத்திடும்‌ வேந்தன்‌ யானெனச்‌
சொன்னது கேட்டவத்‌ தூய வேதியன்‌
குன்னுடை வரவினைச்‌ சாற்று வானரோ. 40

மறையவர்‌ குலத்தன்யான்‌ மறைகள்‌ காணொணா
நறைகமழ்‌ துளவநா ரணன்ப தத்திடை
பிறையணி சடையினன்‌ கொண்டு பின்விடுந்‌
துறைபடுங்‌கங்கைநீர்‌ தோய்தற்‌ கேகியே. 41

ஒதுகங்‌ கையையடுத்‌ துகப்பி னாடியே
மாதுகா ரணத்திரா சகுவன்வ குத்திடுஞ்‌ :
சேதுவைத்‌ தெரிசனம்‌ செய்தற்‌ கெய்துவேன்‌
ஈதுகான்‌ வரவென வர? யம்புவான்‌. 42

அய்ய நீபற்பல தேயத்தி யாவையும்‌
கையிலா மலகம்போற்‌ காணும்‌ பெற்றியால்‌
செய்யநற்‌ சுதைபல தெரிந்தி ருப்பையான்‌
உய்யவோர்‌ நற்கதை யுரையென்‌ றோதலும்‌. 43

யானுணர்ந்‌ திலன்கதை யாயி னும்மொரு
தூனலனு டையதாஞ்‌ சுலோகங்‌ கற்றுளேன்‌
ஊளனுணும்‌ வேலவென்‌ றுரைப்ப வேந்துநீ
தானதை யுரையென வவனுஷஞ்‌ சாற்றினான்‌. 44

கேட்டிதன்‌ பொருளைநீ கிளத்து வாயென
வாட்டிறன்‌ மன்னவன்‌ வணங்கி யேத்தலும்‌
ஈட்டிய விரவினுண்‌ டிடுதற்‌ கஇயொாவையும்‌
. நாட்டிய பகலிடைக்‌ கொள்ளல்‌ நன்றரோ. 45

மாரி காலத்தினுண்‌ பவைகண்‌ மற்றைய
சரிய கோடையிற்‌ சேர்த்தல்‌ செவ்விதாஞ்‌
சேரிய முதுமையி ஸூண்டி சேர்த்தடுங்‌
காரிய மிளமையாங்‌ காலத்‌ தாகுமால்‌:-46

:* வர்ஷார்த்தம்‌ அஷ்டெள ப்ரயதேத மாஸான்‌7
நிஸார்த்த அர்த்தம்‌ இவஸம்‌ யதேந வார்த்ததய ஹேதோர்வயஸா நவேன பரத்ர
ஹேதோர்‌ இஹ ஜன்ம நாச”,-இரவில்‌ உண்பதற்கு
வேண்டியவற்றைப்‌ பகலில்‌ சேர்க்க வேண்டும்‌. ‘ மழைக்‌ காலத்துக்கு’ வேண்டிய
பொருளைக்‌ கோடைக்‌ காலத்தில்‌ ஈட்ட வேண்டும்‌. முதுமைக்‌ காலத்திற்கு
வேண்டியவற்றை இளமையில்‌ தேட வேண்டும்‌. இவற்றைப்‌ போல மறுமைக்கு
வேண்டிய உறுதிப்‌ பொருளை இம்மையில்‌ பெற வேண்டும்‌

அம்மையில்‌ வேண்டுநல்‌ லேது வானதை
யிம்மையிற்‌ றேடிட வேண்டு மென்னவே
மும்மையு முணருமந்‌ தணனு முன்புசொற்‌ செம்மைசேர்‌ சுலோகத்தின்‌ பொருளைச்‌ செப்பினான்‌. 47

மன்னனும்‌ கேட்டுள மகிழ்ந்து ருக்கமாய்‌
நன்னய மொழிபல நவின்று போநற்றிசெய்‌
தன்னவன்‌ றன்னொடு மவிடம்‌ நீங்கிப்போய்த்‌
தன்னர மனையிடைச்‌ சார்ந்திட்‌ ‘டானரோ. 48

சார்ந்தரு மறையவன்‌ -றனக்குக்‌ கண்ணருள்‌
கூர்ந்துவேண்‌ டுவவெலாங்‌ கொடுத்த ஸனுப்பியே
தேர்ந்தவ னுரைத்தநல்‌ லுரையைச்‌ சந்தைகொண்
டோர்ந்துயிர்க்‌ குறுதியை யுன்னு மெல்லையில்‌. ்‌ 49

அன்னவ ஸனுளத்திரு ளழித்து நீக்கிட மன்னுவன்‌ புதுவையா யென்னும்‌ வாய்மையை
முன்னர்வந்‌ துரைசெய்வான்‌ முடுகல்‌ போலவே
துன்னிருள்‌ ஒழிந்திட விரவி தோன்றினான்‌. : 50

காலையி னெழுந்துபல்‌ கடன்கண்‌ -முற்றியே
நூலையோர்‌ முனிவரா சிகணு வன்‌ றிட
வேலையின்‌ மிஞ்சொலி ..விம்ம வேகொல்ச்‌. . ட்ட
சாலைவந்‌ தரியணை தன்னின்‌ மன்னினான்‌. . 51

மந்திரித்‌ தலைவரும்‌ மற்று ளோர்களும்‌
வந்திரு மருங்கினு ணெருங்கி வைகட
அந்தரத்‌ தவர்புடை சூழ வாதனத்‌ இந்திர னிருந்தென விருத்த வெல்லையில்‌. 52

செல்வரஈம்பியின்‌ பண்பு
ஓவ்விய மோக்கமா முலகு தன்னையே
எவ்வித மடைகுவ தெனநி ஸனைத்திடும்‌
அவ்வயின்‌ நாரணன்‌ அடியர்‌ தங்களிற்‌
செவ்விய மாணியன்‌ சிறந்த மேன்மையான்‌ ; 59

பல்கலை நூல்களும்‌ பயில்நற்‌ கேள்வியான்‌ ;
குலமறை யோர்கடங்‌ கொழுந்து போன்றுளான்‌ ;
நலமலா துரைசெயா நாவு கொண்டுளான்‌ !
அலகிலாக்‌ கல்விசே ரறிவு மிக்குளான்‌ :54

செல்வநம்‌ பிப்பெயர்‌ சேர்ந்து ளான்‌௮அவன்‌
மல்கிய வவையிடை வந்து தோன்றலும்‌
மல்கவி ராசனும்‌ வணங்கு யாதனம்‌
நல்கலு மதன்மிசை நண்ணி னானரோ | 55

மன்னன்வினா
இருந்தவே தியன்முக னோக்கி யேந்தலும்‌
பொருந்துமிப்‌ பொய்மையாஞ்‌ சமயம்‌ புல்லியே
UGG Gumus மோக்கம்‌ மன்னியான்‌
இருந்துறும்‌ வகையைநீ செப்பு கென்னலும்‌ ;–56-

நம்பிவிடை
எண்ணிலா தத்துவ நூல்கள்‌ யாவையு
மண்ணிலே யுணர்ந்துடி லறிவுண்‌ டாகியே
விண்ணவர்க்‌ கரியதா மோக்க வீட்டினை
நண்ணலா மென்றனன்‌ செல்வ நம்பியே.–57-
என்னலுந்‌ தத்துவக்‌ கியானம்‌ யாவும்தேர்ந்‌

துன்னிடும்‌ பெரியவ .’ர௬ல, லுண்டுசொல்‌
அன்னவர்‌ தன்னை நீ : யறிந்து ளாயெனிற்‌
பன்னிட வேண்டுமென்‌ றரசன்‌ பன்னலும்‌;–58-

இவ்வுலகி யாவையு மினிதி ணாண்டது .- லொவ்வுசெல்‌ வந்தனை யோழியும்‌ புன்னுனிக்‌
கவ்விய பனியெனக்‌ கருதி மாறிலாச்‌
செவ்விய முத்தியைச்‌ சேர்த லுன்னினாய்‌,–59-

ஆதலா லியாதினு மறுக்கொ ணாதென
ஒது மாயா விருளதனை யுண்மையாம்‌
நீதியா லொழித்திடு நினைவுண்‌ டாகியே
இதிலா முத்திவீ டணையுஞ்‌ செய்கையை.–60

புல்நுனி கவ்விய பனி – புல்லின்‌ நுனி பற்றிக்‌ கொண்டுள்ள. பனி. *கவ்விய’- என்ற தொடர்‌ நயமானது செல்வ நிலையாமை விளக்கப்படுகிறது. :’புல்‌நுனிமேல்‌ நீர்போல்‌ நிலையாமை’* என்று நாலடி நிலையாமையைப்‌ பேசும்‌,

அறிவிக்க வல்லவர்‌ யாவ ரோவெனின்‌
நெறிதக்க வேதநூ னிறைந்த நெஞ்சிடை
குறிதக்க வல்லவ ராங்கும்‌ கொற்றவா
செறிதக்க வுள்ளர்நீ வெருவல்‌ . தேர்குவாய்‌ 61

என்றுரைத்‌ திடுதலு மினியர்‌ தங்களிப்பு
ஒன்‌. றிய மனத்தொடு மந்த வுத்தமர்‌ துன்றிய தெத்தலஞ்‌? சொல்லி னாங்கடைந்‌ –
இன்றடி தொழுதவர்க்‌ கடிமை யெய்துவேன்‌. 62

இனையவா சகந்தனை யேந்த லோதலும்‌
. இனையள வாயினும்‌ பெருமை தேர்கொணா
வனையரை யடைந்துகாண்‌ பரிய தாதலால்‌
நினையுமோ ருபாயத்தி னிரப்பல்‌ வேண்டுமால்‌. 63

என்னலு மொருவன்‌ வீடெய்த வெய்தியோர்‌
நன்னதி மூழ்கிட வேண்டு நாளிடை
யன்னதி யெதிரிடை யணுகி நீயுமென்‌
றன்னிடை மூழ்கெனச்‌ சார்ந்த தன்மைபோல்‌ ; 64

ஆயதிம்‌ மொழியென வரச ஸுண்மகழ்ந்‌
தேயவிச்‌ செயலலாற்‌ பிறிதொன்‌ றநில்லெனத்‌
துரயவ னடிதொழு துபாயஞ்‌ சொல்லென
நேயமோ டவனிது நிகழ்த்தன்‌ மேயினான்‌. 65

வேறு
கேட்டறிநீ அரச[விது பரமபுரு
டோத்தமனாய்க்‌ கிளருந்‌ தேவன்‌
ஈட்டியமா மயமெனும்‌ வினோதத்தால்‌
பலசமய மியைந்த தாமால்‌ ;66

நாட்டியவச்‌ சமயமெலாந்‌ தனித்தனியே
பெரிதென்று நயந்து சொல்லும்‌ ;
ஏட்டினிடை யேயெழுதா நான்மறையு
மவ்வாறா யிசைக்கு மன்றே, 67

அச்சமயத்‌ துற்றவரும்‌ பிறசமய
மாகாதென்‌ றறைவா ரந்த
இச்சைபெறும்‌ சமரமெலா நிருமித்த
பரனாகு மிறைவன்‌ றன்னை
நிச்சயங்கண்‌ டறிவார்கள்‌ அப்பரம
னடியார்கள்‌ ; நிறைந்த வேதத்‌
துச்சிமிசை யிருப்பதனை யத்திருநான்‌
மறைதானு முணரா தன்றே.” ட ்‌ 67

ஆதலினாற்‌ பலவாகுஞ்‌ சமயற்களிற்‌
* சிலபோர்க ‘ள்துவி ‘தென்றே
யோதுவர்கள்‌ சலபேர்கள்‌ பொதுவெனவே யுரைத்திடுவர்‌ உண்மை முற்றும்‌ஈதெனக்கண்‌ டியாவர்களும்‌ தெஸிந்துரையார்‌ ;
மாணிக்க மெனுங்கல்‌ லோடும்‌
தீதுபெறு புன்கல்லுங்‌ கலந்திடின்மற்‌
றாங்கதனைத்‌ தெரியத்‌ தக்கோர்‌. 68

சாணைதனிற்‌ பிடித்தறிவார்‌ ; அங்கதுபோல்‌
நீயிளகும்‌ தண்மை யெண்ணி
ஆணையொடு மறையுரைக்கும்‌ பரமபுரு
டோத்தமனை யறிந்து சொல்லும்‌
நாணையஞ்சே ரடியவர்க ளூளங்களிந்துள்‌
நணுக்கெவோர்‌ நயங்காண்‌ பித்தால்‌
வீணைபயி லின்னிசைகேட்‌ டசுணமா
வடைவதுபோல்‌ மேவு வாரால்‌. 69

மாணிக்கக்‌ கல்லுடன்‌ புல்லிய கல்‌ சேர்ந்துவிட்டால்‌
சாணையினில்‌ இட்டுத்‌ தேய்த்து அறிவார்கள்‌. அதுபோல்‌ சமயங்களைப்‌ பட்டை
தீட்டிக்‌ காட்டவல்ல பெரியவர்கள்‌ ஒன்றுசேர உபாயம்‌ செய்ய வேண்டும்‌.
அப்போது வீணையிசை கேட்டு ௮சுணமா வருவதுபோல்‌ சான்றோர்கள்‌ வரு
வார்கள்‌, ்

அன்னயம்யா. தெனிற்கேண்மோ நினதுதிரு
வரமனையா சார வாயில்‌
முன்னரிற்பொற்‌ கிழிதாூக்கிப்‌ பரமுரைத்திஃ
தறப்பாடு மொய்ம்பு ளோருக்‌
இன்னபொரு ஸூரியதெனத்‌ திருமுகத்தைப்‌
பொறித்தனுப்பி னெங்கு ளோரும்‌
மன்னிடுவர்‌ 2 அவரினதை விழப்பாடு
மவற்குருவாய்‌ வ௫க்க லாமால்‌. 70

குருவெனவே வகுத்துமல ரடிபோற்றிப்‌
பணிந்தவன்றான்‌ கூறு கின்ற
பொருவரிய நெறியிடைநின்‌ றாழ்கிடின்வெள்‌
ளோலையிடை பொறியா வேதத்‌
இருமுடியின்‌ வீற்றிருக்கும்‌ பரமபுரு டோத்தமனை -தெரி௫த்தி யார்க்கும்‌
மருவரிய பதவியதா மோக்கவீடதினடைந்து வாழ லாமால்‌. 71

ஈதலவே றுபாயமிலை யெனவெடுத்துச்‌
. செல்வதம்பி யினிதி னோடும்‌
ஒதுதலு மரசனுமவ்‌ வாரமுத மெனுமொழிகேட்‌ டுளத்தி abn
மாதுயர மதுநீங்கிப்‌ புளகமுடனி
ருபுயங்கண்‌ மலைபோ லோங்கப்‌
போதவுப சரித்தவர்க்குப்‌ பசும்பொன்மணி
கலன்பலவும்‌ பொருந்த . நல்கி. 72

கிழியுயர்த்தினான்‌
அவனுளத்தி னிடைகுறித்திட்‌ டுரைத்திடுமு பாயவகை யதனை யேசெய்‌
குவதுயர்நற்‌ பதவிபெறற்‌ குறுதியெனத்‌ இருவுளத்துக்‌ கொண்டா னாகி
இவனுமொரு .பொற்கிழியை யிழைத்ததனை
யுயரவெடுத்‌ தெழில்வா னோங்கித்‌
, துவளுமணிக்‌ கொடிபொருந்துந்‌ தனதுதிரு
மனைவாயிற்‌ றூக்குப்‌ பின்னர்‌ ; 73

அகலுமலை கடலுடையம்‌ புவியிடைப்பற்‌
பலசமயத்‌ தமைந்து ளோரிற்‌
புகலரிய சதுர்மறையும்‌ பலபலசாத்‌
தஇிரவகையும்‌ போத மார்ந்த
சகலகலை களுமூணரும்‌ தன்மையினர்‌
பலபலநூல்‌ நுவலத்‌ தக்கோர்‌
பகலிரவென்‌ றறியாத்‌ தனிப்பொருளாம்‌
பரஞ்சுடர்போற்‌ படிவங்‌ கொண்டோர்‌. . 74

பூவருமெண்‌ டோளுடைப்புங்‌ கவன்படைத்த
நான்கெனவே புகல்வர்‌ ணத்தின்‌
யாவரெனு மோக்கமதை யடையும்வழி
துன்னையடை விப்போர்‌ தங்கள்‌
தேவர்நிலை தனைத்தெரித்திட்‌ டெனையடிமை
கொண்டுசெம்பொற்‌ கிழியுங்‌ கொண்டு
போவதற்குக்‌: கருத்துடையோர்‌ மதுரைநக
ரிடைவந்து பொருது கென்றே. 75-எண்‌ தோளுடைப்‌ புங்கவன்‌ -பிரமன்‌.

சமயவாதியர்‌ செயல்‌
இருமுகங்கள்‌ பொறித்துவந்து தூதர்கள்‌ தங்‌
கைகொடுத்துத்‌ இசைக ளோர்தநா
லிருமுகத்தும்‌ விடுப்பவவர்‌ களுங்கொடுபோய்‌
கொடுத்ததனை யியம்ப லோடும்‌
மருவுமுவப்‌ பொடுஞ்சைவர்‌ வாமிகள்வை
சேடியர்மா விரதர்‌ புத்தர்‌
அருகருல காயுதர்க ளாமுகர்மீ
மாங்கெசர்சாங்‌ இயோக ரானோர்‌. 76

பாசுபதர்‌ மாயாவா தியர்முதலாஞ்‌
சமயத்தோர்‌ பலரும்‌ வந்தார்‌ :
பூசுரர்கண்‌ முதலாநால்‌ வருணத்துற்‌
பெரியோரும்‌ பொருந்தி வந்தார்‌ :
ஆசில்புக ழிமையவருஞ்‌ சித்தர்வித்யா
தரர்கண்‌ முதலானோர்‌ தாமும்‌
வீசுதிரைக்‌ கடற்புவியி னிதையறிவான்‌ மதுரைநகர்‌ மேவி னாரால்‌. 77

வேறு
– ஆழ்வாரின்‌ செயல்‌
‘இவ்வகை யாவரு மினிதி னடைந்தார்‌
அவ்வகை செய்யர சவ்வவ ருக்குச்‌
செவ்வகை செய்வ முறைப்படி செய்தா
ரொவ்விய புதுவை யினுற்ற துரைப்பாம்‌. 78

மருவிய விட்டுணு சித்தனும்‌ மாலாம்‌
பொருவட பத்திர சாயி பொருட்டு
ஒருபகல்‌ பொன்மலர்‌ மாலை யுஞற்றி
வருபக லின்னொரு வைக லிருட்கண்‌. 79

நித்திரை வேளையி ஸில்லா, விந்தம்‌
ஒத்துள கண்ணளி யு.ற்றவண்‌ விட்ணு
சித்த வெனப்பெயர்‌ செப்பி யெழுப்ப
அத்தலை மேனிய சக்கி யெழுந்தே. 80

சிக்கென நோக்கத்‌ திருவரு ளாலே
பக்கமி ர௬த்தருண்‌ மாலைப சுங்கார்‌
ஓக்கு நிறத்தோ டுற்றுத்‌ தன்னுளம்‌ மிக்க களிப்போ டவனடி மீதே. 81

விழும்‌; புரளும்‌; புவியிற்‌ ; பரிவின்மீண்‌
டெழும்‌; புகழும்‌;நட மிட்டுகை கூப்பித்‌
தொழும்‌ உருகும்‌; பரிவோடு துதிக்கும்‌ ;
அமும்‌;பரிசன்ன தறிந்திட லாகா. 82

இத்தக வாகி யெழுந்தெதிர்‌ நின்றே
கைத்தல மீது கவித்து விளித்த
மத்தகெ ஜத்தெதிர்‌ வந்தருள்‌ செய்த வித்தக நின்னை வியந்தவர்‌ யாவர்‌? 83

ஆதியு மாகி யனாதியு மாகிச்‌
சோதியு மாகிச்‌ சுடரொளி யாகி
நீதியி னாலுல கெங்கும்‌ நிறைந்த .
வேதிய னேயுனை யானறி வேனோ? ்‌ 84

நின்னடி யான்றொழு தற்கு நினைந்தோ?
வின்ன தொழில்புரி யென்பத னுக்கோ?
துன்னு பிறப்பை துலைத்திடு தற்கோ?
வென்னிவ ஸணுற்றது? இயம்புதி யென்றான்‌. 85

என்றது தன்செவி யின்னிடை யெய்த
நன்றென நாரண னும்நகை செய்யா
இன்று நினக்குரை செய்திடு மின்சொல்‌
ஒன்றுள கேளென என்னென லோடும்‌. ‘ 86

மற்பொரு தோண்மது ரைப்பதி யான்றன்‌
இற்பொலி வாயி லிடத்தெதி ராகப்‌
பொற்கிழி கட்டின னாதலி னீபோய்‌
யெற்பர மென்ன விசைத்த தறுத்தே | 87

அக்கிமி கொண்டிவ ணணுகென லோடும்‌
மிக்க விருப்பும்‌ வெறுப்பு மிலாதோன்‌
றக்க மறைப்பல சாத்திர நூலுந்‌
தொக்க வறிந்து சொலத்தகு வோரை,.-88

வாதினில்‌ வென்றிட வல்லவ ரன்றோ
ஓதுகி மிக்கொள லுக்குரி யோர்கள்‌ ?
ஏதெனு மொன்றுண ராவடி யேன்போ
யாதுப கர்ந்த தறுத்திட லாகும்‌?-89

கொட்டுகை பற்றி குனிந்தடி யேன்மண்‌
வெட்டுத மும்பை விரித்து தெரிக்கிற்‌
கட்டுகி மிப்படு மோ2படி னுங்கண்‌
டிட்டிடர்‌ சொற்கறி வின்மை யுணர்ந்தால்‌.–90

பொறுத்தல்‌ செயானவன்‌ பார்த்திப னென்னா
மறுத்திட மாலும்‌ வளக்கிழி யைப்போய்‌
யறுத்திட லுன்கடன்‌ : நான்மறை முடிவை
நிறுத்துரை.. செய்கட னென்சகட ஸேர்வாய்‌,-91

கொட்டு – மண்வெட்டி, கொட்டுசைபற்றி – மண்‌ வெட்டியதால்‌
உண்டான தழும்பைக்‌ காட்டினால்‌ இழி அறுபடுமோ? ஒருவேளை உன்‌ அருளால்‌
அது அறுபட்டாலும்‌, பாண்டியன்‌ பொறுத்துக்‌ கொள்வானோ, என்று கூறி
ஆழ்வார்‌ மறுத்தார்‌. “அறுத்தல்‌ உன்‌ கடன்‌; மறை முடிவை நிறுத்தல்‌ என்‌ கடன்‌”*
என்றான்‌ பெருமான்‌. தேர்வாய்‌-உடன்படுவாயாக,

என்னலும்‌ மேலவர்‌ யாரும்‌ நெருங்கித்‌
துன்னவை யின்னொரு சொல்லு மெழுத்தும்‌
இன்ன தெனத்தெளி யாவெளி யேன்போய்‌
மின்னுவ தெவ்வண மானமி லாமல்‌.–92-

ஆதலி னேகுத னன்கல வென்ன
மாதவ ஸனும்நகை செய்து மறித்தும்‌
ஓதுவ னென்வயி னுள்ளன வாகும்‌
வேத முனக்கரி தோதெளி விப்பேன்‌ 93

என்னுரை கொண்டவ ஸணேகுது யென்ன
அன்னவ னும்‌அமை வாகி யவன்றன்‌
பொன்னடி தன்மூடி மீது புனைந்து
நன்னய மெய்த நவின்று துஇத்தே. டடத–94-

ஏக விடைதரு கென்றவ னைத்தன்‌
ஆக முறத்தமி யன்போ டளித்தே
மேக நிறத்திரு மால்விரை விற்போய்‌
வாக மணித்திரு கோயிலின்‌ வாழ்ந்தான்‌. 95

ஆழ்வார்‌ மதுரையடைதல்‌
விடைகொண்‌ டுயர்விட்‌ டுணு9த்‌ தனிரு
புடையும்‌ மடியார்‌ கள்புகன்‌ றுவரக்‌
குடைவெ ஸண்மதியிற்‌ குலவச்‌ சிவிகை
இடைவெங்‌ கதிரென்‌ நிடவே றினனே. 96

பூவின்‌ மழைதே வர்பொழித்‌ இடமுன்‌
நாவின்‌ மதிபட்‌ டர்நலம்‌ புகழ
வீவின்‌ மிளிர்விண்‌ டுவினுந்‌ இவரும்‌
தேவின்‌ மகிழ்வோ டுிறந்‌ தனனே. 97

கதுவிப்‌ பொலிவாய்க்‌ ககனத்‌ துவரும்‌
விதுவைத்‌ தொடுமா டம்விளங்‌ தியசர்‌ ‘
புதுவைப்‌ பதிவிட்‌ டுபுலன்‌ கொடிசேோர்‌
மதுரைத்‌ இருமா நகர்கண்‌ டனனால்‌ 98

வேறு
மூதிர்மறை வாதினின்‌ முனைகு வோர்தமைச்‌
சதிர்பெற வெல்கநீ யொல்லை சார்கெளாக்‌
கதிர்மணி கொடியெனுங்‌ கரங்க ஸணீட்டியே
மதுரைமா தெதிரின்வந்‌ தழைத்தல்‌ மானுமால்‌. 99–*பர சமய வாதிகளை வெல்ல வருக!* என்று மதுரை கொடிகளாகிய
சுரங்கள்‌ நீட்டி அழைப்பது போன்றிருந்தது.

அலைகட லென்னவந்‌ தடைந்த out Bust
நிலைதளர்ந்‌ இடநெடு நாணி நெஞ்சுறத்‌
குலைவளைக்‌ தலின்முதிர்‌ கதிர்கொள் சாலியுங்‌
குலைதளு மரம்பையும்‌ குனிந்து காட்டுமால்‌. 100

வாதியர்‌ தளர்ந்திட வரசும்‌ மற்றுள
நீதியர்‌ களுந்தலை நிமிர்தல்‌ போலவே
சோதிசெய்‌ கழைகளுங்‌ கமுகுந்‌ துன்னிவான்‌
மீதினி லோங்கியே விளங்கிக்‌ காட்டுமால்‌. “101-அரசனும்‌, நீதிமான்களும்‌ உண்மை உணர்ந்தோம்‌ என்று நிமிர்வது
போல்‌ கரும்பும்‌, கமுகும்‌ விண்ணை யளாவி நிற்குமாம்‌. கழை – கரும்பு,
பாக்குமரம்‌,

இன்னர்‌ மதுரையுள்‌ ளேகிக்‌ கூடலின்‌
மன்னிய வழகர்தாள்‌ வணங்கி வாழ்த்தியே
துன்னிய களிப்பொடு நிற்குந்‌ தூாயனை
யன்னமா லிருகணா லமைய நோக்கியே, 102

பாண்டிய னவையிடை படர்ந்து வாதியர்‌
ஈண்டியர்‌ தமையெலா மினிதின்‌ வென்றுநீ
மீண்டிடு கென்னவாய்‌ விண்டு ரைத்தபின்‌
வேண்டிய வரங்களும்‌ விருப்பி னல்கினான்‌. 108

செல்கென விடையொடுஞ்‌ செங்கண்‌ ணாரணன்‌
நல்கிய வரங்களுங்‌ கொண்டு நண்ணியே
பல்பல மணிமுடிப்‌ பாண்டி யன்கொலு
மல்கிடு மண்டப மன்னு மெல்லையில்‌. 104

மதியென வெண்குடை மலியக்‌ காலையின்‌
கதிரென மணிமுடி கவின்கொண்்‌ டோங்கிட
விதிருடை வாடக மின்ன மாறனும்‌
அதிர்முர சொலியோடா தனத்தி ருந்தனன்‌. 105

மற்றுள வேந்தரும்‌ மந்திரி மார்களுங்‌
கொற்றவெஞ்‌ சேனையுங்‌ குடிக ளும்படை
வெற்றிசேர்‌ தலைவரும்‌ வேறு ளோர்களுஞ்‌
சுற்றும்வந்‌ தவரவர்‌ நெருங்கித்‌ துன்னினார்‌. 106

மறையவர்‌ குழாங்களும்‌ செல்வ நம்பியும்‌
அறைபல சமயமுற்‌ றடைந்து ளோர்களும்‌
முறைமுறை மண்டப முன்னி னார்கள்‌ ;வாள்‌
நிறைதரத்‌ தேவரு நெருங்கி நண்ணினார்‌. 107

“*இருக்கு,
எசு, சாம வேத நாண்மலர்‌ கொண்டு உன்பாதம்‌ நண்ணாதநாள்‌ அவை தத்து
றுமாகில்‌ ௮ன்று எனக்கு அவை பட்டினிநாளே””-என்பது பெரியாழ்வாரின்‌
அனுபூதி.

அவ்வணங்‌ கொலுவமைத்‌ திருக்கு மாயிடைச்‌
செவ்விய மறைபயில்‌ விட்ணு சித்தனும்‌
மொவ்விவத்‌ தடைந்தமை யுணர்ந்திட்‌ டானரோ
இவ்விய வுணர்வுடைச்‌ செல்வ நம்பியே. 108

அரசன்‌ உபசரிப்பு
உணர்ந்தவன்‌ வரவினை யரசுக்‌ கோதலும்‌
நிணங்கமழ்‌ வேலினா னெடிது சென்றடி
வணங்கலு மாசுகள்‌ வழங்கி னானரோ
மணங்கமழ்‌ துவளமா லடிவ ணங்குவோன்‌. 109

அரசனு மகழ்வினோ டவனை தோக்கியே
விரசுமா மணிகளின்‌ விளங்கு மாமுடிச்‌, .
சிரசின்மேல்‌ தாமரைச்‌ செங்கை கூப்பியே
பிரசமொத்‌ தினியசொல்‌ பெருகக்‌ கூறுவான்‌. . 110

கொடியதீ வினையுநல்‌ வினையுங்‌ கொண்டவிச்‌
சடிலநா ஸளெடுத்திமன்‌ றன்கை பட்டுயிர்‌
நெடிதுநாள்‌ வருந்திடல்‌ நீக்கி வீடுறும்‌
யடியருள்‌ புரிந்தெனைப்‌ பரித்தல்‌ வேண்டியோ. -111

அல்லது மாயையென்‌ றமையும்‌ வல்லிருள்‌
தொல்லுல குறாததைத்‌ துரத்த லுன்னியோ பல்லுயி ரினும்வளர்‌ பரம சோதியிந்‌
நல்லுருக்‌ கொண்டது நவில்க வென்னலும்‌ 112-::பீதக
ஆடைப்‌ பிரம குருவாக வந்து”, என்று பெரியாழ்வார்‌ திருவாய்‌ மலர்ந்த
ருளியுள்ளார்‌.

இருவுள மகிழ்ந்தருள்‌ விட்ணு சித்தனோ
டிருவிசும்‌ பினைப்பொர வெழுந்து மல்கிய
பொருவின்மண்‌ டபமதிற்‌ பொருந்தி வேந்தனுங்‌
குருமணி யாதனங்‌ கொடுத்திட்‌ டானரோ,. 113

கொடுத்தவா: தனமிசைக்‌ குரைதி ரைக்கட
லுடுத்தமா ஸனிலத்தின்மீ துற்று ளோர்தமி
லடுத்துவந்‌ துரைந்திடு மறிவில்‌ வாதியர்‌
நடுக்குற விரவியின்‌ னண்ணி வைகினான்‌. 114

இந்திரன்‌ வாதம்‌ செய்ய பிரஹஸ்பதியை அனுப்புதல்‌
வைகிய துணர்ந்திவ னறிவு மல்்‌கடச்‌ ,
செய்தலி லரசன்‌ வான்செல்வ னாகுவான்‌
எய்தியிங்‌ கதையழித்‌: இடுதல்‌ வேண்டுமென்‌
றையிருந்‌. தர்மதத்‌ ர்ச்‌ ‘மெண்ணியே. 115

தங்குலக்‌ * கரும்க நோக்கித்‌ தன்னிரு
செங்கைமா முடிமிசைச்‌ சேர்த்து நீயடைந்‌
தங்கதை யழித்திடென்‌ ‘றவனி யம்பவென்‌
பங்கென மானிடப்‌ படிவந்‌ தாங்கியே. ்‌ 116

புவியின்வந்‌ தவையிடைப்‌ புகுதக்‌ கண்டுவெண்‌
கவிகைநீ ழலிற்புவி புரக்கும்‌ காவலன்‌ :
குவிகரத்‌ தொடுமவ ஸணிருக்கக்‌ கோதிலாத்‌
தவிசளித்‌ தயாவனீ சாற்று கென்னலும்‌. 117

யானொரு மறையவன்‌ அறிதி யென்றுபின்‌
வானொரு வியசுரர்‌ குருவ ழங்கிவான்‌
தேனொழு இியபுதுத்‌ தெரியல்‌ வேந்த நீ
தானொரு பொற்கிழி தன்னைத்‌ தூக்கியே. 118

வேதமே முதலிய விளங்கு நூல்களால்‌
வாதுசெய்‌ தவர்களில்‌ வல்ல மேலவர்‌
ஈதறுத்‌ ததனைக்கொண்‌ டேகு மின்‌எனத்‌
தூதரை விடுத்திட விவர்கள்‌ துன்னினார்‌. 119

துன்னினோர்‌ தங்களிற்‌ சுருதி நூல்களா
லென்னைவென்்‌ றனனெனி லிந்த வேதியன்‌
றன்னடி வணங்கினை சாற்று கென்னலும்‌
மன்னவை யடைந்துள மற்று ளோர்களும்‌ 120

அவ்வுரைக்‌ கொன்றியே யரச ருட்களித்‌
தொவ்விய திருமூக னோக்கி யோதுவார்‌
இவ்வயி னெம்முனி தொழவி ருந்துளோன்‌
செவ்விய இழியையு மறுத்தல்‌ செய்தபின்‌. 121

இவனுட௨ன்‌ வாதுசெய்‌ திடுவோம்‌ யாமென
வவனையுல்‌ லங்கன மவர்கள்‌ கூறலும்‌
குவறிலாப்‌ புரோகிதன்‌ தன்னை நோக்கியிவ்‌
வவமதிக்‌ கென்செய லாகு மென்றனன்‌. 122

என்றவவ்‌ வரசனை யினிதி நோக்குறா
வின்றிதை யறுப்பது மிவரை வாதினில்‌
வென்றிடு வதுமிந்த விட்ணு சித்தனே
யொன்றுநீ வருந்தலை யென்ன வோதினான்‌. 123

வள்ளலும்‌ புரோ௫தன்‌ வழங்கும்‌ வாய்மையால்‌
உள்ளம துவப்புற உறைந்த காலையிற்‌
கள்ளவிழ்‌ துளவமால்‌ கழற்குத்‌ தொண்டுறும்‌
தெள்ளிய ஸுடன்சுரர்‌ குருவும்‌ செப்புவான்‌. 124

ஆழ்வாரும்‌ பிரஹஸ்பதியும்‌
பரத்துவ மிதுவெனப்‌ பகர்ந்த பின்புநீ
யுரத்துரு கிழியறென்‌ றுரைப்ப வேதத்தின்‌
சிரத்துறும்‌ பரம்பொருள்‌ செய்ய வாழிசேர்‌
கரத்துநா ரணனெனக்‌ கழற லோடுமே. 125

நாரணன்‌ பரமல நாலு மாமுகத்‌.
தாரணன்‌ பரமென வவனி யம்பலும்‌,
வாரண முறையிட வந்து காத்தருள்‌
காரண ஸடியனுங்‌ கழறன்‌ மேயினான்‌. 126

நன்றுநீ மொழிந்தனை நான்மு கன்றலை
யன்றறுப்‌ புண்டதை யறிந்திலாய்‌ கொலோ?
என்றுபுத்‌ தூரனு மியம்பக்‌ கேட்டுளோன்‌
நன்றுமச்‌ சுரர்குரு விதனைச்‌ செப்புவான்‌. 127

ஆகிலும்‌ சிவன்பர மாகு மென்னவே
போகிமுன்‌ விடுத்திடும்‌ புனிதன்‌ கூறலும்‌
நாகணைப்‌ பள்ளியான்‌ விடுப்ப நண்ணிய
யோடியு நகைத்திதை யோது வானரோ. 128

தானறுத்‌ திடுந்தலை தன்கை மீதுற லானதை யொழித்திட லாகா மையால்‌
வானமும்‌, வையமுந்‌ திரிந்து மாழ்கிடத்‌
தேனமர்‌ துளவமால்‌ தீர்த்த தோர்கிலாய்‌. 129

எனச்சொலப்‌ பிரபதி யியைந்த காலத்தால்‌
அனத்தவன்‌ றலைவிட்ட தந்தக்‌ காலமே
மனத்துணர்‌ பரமென மறுத்துச்‌ சொல்லலும்‌
புனத்துழா யவன்விடும்‌ புனிதன்‌ கூறுவான்‌. 130

காலமே பரமெனிற்‌ கால மூன்றிற்கும்‌
மேலுமக்‌ கடவுள்யா ரென்னக்‌ கேட்கலும்‌
ஞானமீ திருளெலாம்‌ ஒழித்து ஞானத்தின்‌
மேலுறு பொருளெலாம்‌ விளக்க வெய்யவன்‌ 131

எல்லியே பரம்பொரு ளென்ன வாங்கவன்‌
சொல்லிய புன்மொழி செவியிற்‌ றுன்னலும்‌
வில்லிபுத்‌ தூரனும்‌ நகைப்ப வேந்திடை
யல்லியம்‌ புயமுக மதனை நோக்குறா. 132

ஈங்கு னுரைத்தசொல்‌ லென்னென்‌ றோதலுந்்‌
தீங்குற விறத்தலோர்‌ காலை சேர்ந்துபின்‌
பாங்குறப்‌ பிறத்தலோர்‌ காலை பாற்கரன்‌
ஆங்கவன்‌ பரமென லாகு மோவெனா. 133

தேர்ந்திடா ரிம்மொழி செப்ப லல்லதிங்‌
கார்ந்தநா லுணர்வின ரறைந்தி டார்களென்‌
ஹறோர்ந்தர சவையிடை யுரைத்தல்‌ கேட்டுளஞ்‌
சோர்ந்துவே றுரைக்கடந்‌ தோன்றி டாமையால்‌. 134

தேவகுரு தோற்றார்‌
ஊமரிற்‌ சுரர்குரு வுற்றி ௬ுந்தபின்‌ றாமரு வியயல சமயத்‌ தோரெலாங்‌
காமர்தந்‌ தம்பெருங்‌ கடவு ளேபர ்‌
மாமென வவரவ ரறைத லோடுமே. , 135

எவ்வவ ரென்னென விசைத்த போதெலாம்‌
மவ்வவர்க்‌ கெதிர்மொழி யறைந்திட்‌ டாங்கவ
ரொவ்வநுந்‌ தெவம்பர மெனலொவ்‌ வாதெனச்‌
செவ்விசேர்‌ புதுவையான்‌ செப்புங்‌ காலையில்‌. . 136

செல்வஈாம்பியின்‌ விண்ணப்பம்‌
என்னிவ ருடன்விளை யாட. லோமறை
குன்னிடை வளர்பரஞ்‌ சோதி தன்னைநீ
மின்னிட வெளியிடல்‌ வேண்டு மென்றனன்‌
சென்னியங்‌ கரங்கொடு செல்வ நம்பியே. ்‌ 137

(வேறு)
அந்தசொற்‌ கேளா வாமிகா ஸனடுமீர்‌
வாளதாய்‌ அருகபஞ்‌ சினுக்கோர்‌ —
செந்தழ லாய்வை சேடியாட்‌ டினுக்கோர்‌
சீறுவெம்‌ புலியதாய்‌ பவுத்த.
குந்தமால்‌ கரிக்கோ ரரிய தாய்ச்‌
சைவ சற்பத்துக்‌ குவணமாய்‌ மற்றும்‌
வந்தபல்‌ சமய விருட்கிர வியதாய்‌ மலிந்திடும்‌ புதுவைமா நகரோன்‌. . 138

அவையுளோர்‌ திருமுன்‌ கடவுளர்‌ பணிய
வருமறை முடியின்மீ தமர்ந்தும்‌
சுவையமு தருள்வெண்‌ பாற்கடல்‌ வடத்தின்‌
றுளிரின்மீ தமர்ந்துகண்‌ வளரும்‌
நவையினா ரணனாஞ்‌ சற்பரம்‌ பொருளே
நற்பரம்‌ பொருளென நாட்டி
இவையெடுத்‌ துரைத்தான்‌ கேட்டுளோர்‌ மகிழ்வோ
டிருசெவிக்‌ கமுதெனப்‌ பருக. 139

பொற்கிழியறுந்து வந்தது
அத்தரத்‌ தவர்துந்‌ துமிமுழக்‌ குடன்வந்‌ தவர்மழை சலசலென்‌ றுதிர்ப்பச்‌,
செந்தழன்‌ முனிவோ ராசிக எியம்பச்‌
செந்தமிழ்ப்‌ புலவர்க டுதிப்ப
முந்துறும்‌ பெரியாழ்‌ வார்திரு வடிமுன்‌
மொழிந்திடும்‌ பொற்கிழி யறுந்து
வந்துற வதனைத்‌ திருக்கரத்‌ தெடுத்து மாறன்றன்‌ றிருமுன்வைக்‌ திடலும்‌. 140

மாறனு மகிழ்வோ டெழுந்திரு கரத்தான்‌
மாமுடி மருவுறப்‌ பொருத்தி வீறுமா மறையின்‌ றிருமுடி யதன்மேல்‌ வீற்றிடும்‌ பொருளென வுரைத்த நாறுபூந்‌ துளவ மாலையா. பரண
தாரண ஸிவனென்‌ மனத்திற்‌
ஹேறியங்‌ கவன்ற ஸிருபெருங்‌ கமலத்‌
இருவடி. பணிந்துநின்‌ றனனால்‌. . 141

மற்புய வரசன்‌ றமைநயந்‌ தருளி
மற்றுள சமயவா தியர்கள்‌
அற்புத மடையுஞ்‌ சிந்தைகொண்‌் டுருகி
யவரவர்‌ முறைமுறை யணுகடப்‌
பொற்புறு முதயக்‌ கதிரென விளங்கும்‌
‘புதுவைமா நகர்மறை யவன்றன்‌
நற்பத மிரண்டிற்‌ றமதுமா முடிகள்‌
நண்ணிடத்‌ -தொழுது நின்றனரால்‌, 142

தேவகுரு மறைந்தான்‌
ஆயவா றெவரு மனையரும வன்பொன்‌
னடிகளுக்‌ கடிகளா னதுகண்‌
டேயவிங்‌ இவனை யாதினும்‌ வெலுதற்‌
இயைந்திடா தெனமனம்‌ வெறுத்து
ஞாயிறெய்‌ திடும்போ தெதிரிலா திருந்த
நள்ளிருள்‌ தளர்ந்துளம்‌ நாணி
மாயமா – யினபோன்‌ மாயமாய்‌ மறைந்தான்‌
வாசவன்‌ விடுத்தரு மறையோன்‌. «148

ஆழ்வார்‌ திருவுலா
யாவரு மிவ்வா றடிதொழு மணியா
தனமிசை யிருந்தவாழ்‌ வாரைக்‌
கோவமை செயலின்‌ சிறப்பெலா மமையக்‌ குலூரி நிகர் கசப்‌ பிடர்மேல்‌ றேவர்கற்‌ பகப்பூச்‌ செழுமழை பொழியத்‌ இருந்திட வேற்றி மந்திரிகள்‌ வாவுமான்‌ றடந்தேர்‌ மதகரி. பரியாள்‌
மருங்குற நெருங்கிவந்‌ தடவும்‌; 144 –க௪ப்பிடர்‌ மேல்‌-யானையின்‌ பிடரியில்‌,

வருமுழு மதிபோல்‌ வெண்குடை நிழற்ற
_ மகரகுண்‌ . டலஞ்செவி யிலங்க
விருபுற மதிலுஞ்‌ சாமரை யிரட்ட
-விரவியிற்‌ பலகலன்‌ விளங்கப்‌
பொருகட லெனமா முரசொலி கறங்கப்‌
பூரிகா களம்பல முழங்க
அருமறை: யதுகொண் டிருடிக ளுடனே
யந்தணர்‌ மங்கல மூரைப்ப ; 145

மூன்றுல கினரும்‌ திருப்புகழ்‌ புகழ முறைமுறை யரரர்வந்‌ இறைஞ்ச
ஆன்றநல்‌ லறமும்‌ துதிசெய மகிழ்வோ
டைம்புல னாதுிதோத்‌ தரிக்க
மான்றுடர்‌. விழியார்‌ நடித்திடப்‌ பலர்கள்‌
மணிவிளக்‌ காலம தெடுப்ப
ஏன்றவிம்‌ முறையோ டஉரசன்வேண்ட
எழுந்தனன்‌ பவனிவந்‌ திடவே. 146

சகரர்தொட்‌ டிடுமக்‌ கருங்கட லடுத்த
தரணிமேல்‌ நிகரில தாக
மகுரதோ ரணங்களு யர்த்திப்பன்‌ முறையால்‌
வளம்பெறத்‌ திருத்தியும்‌ மதுரை நகரமுள்‌ வலமாய்‌ அரசவீ தியின்வாய்‌ –
நண்ணுறு கோலமஃ துணர்வான்‌
அகரமே மூதலா மக்கரத்‌ தெல்லாம்‌
அமருநா ரணனுமுள்‌ ஸணர்ந்தான்‌. 147

பெருமாள்‌ விண்ணில்‌ தோன்றினான்‌
இருடனை துரக்கு நவமணி பசும்பொன்‌
னிழைமுடி முடியின்மே லிலங்க
அருடரு கமலக்‌ கண்முகத்‌ இலங்க
வைம்படைக்‌ கரங்கண்‌ மீதசையச்‌
FGL_G குழற்பூந்‌ ‘திருவினோ டுரத்திற்‌
றலங்கொளி கவுத்துவம்‌ துளங்கக்‌
கருடன்மீ தெழுந்தான்‌ பொன்மலை மிசையோர்‌
கருமலை வருதலைக்‌ கடுப்ப. 148-பொன்‌ மலை மிசை கருமலை போல்‌ திருமால்‌ வந்தான்‌.
சுருடன்‌ – சிவந்த நிறமுடையவன்‌. திருமால்‌ கரிய நிறமுடையவன்‌,

அம்புயத்‌ துறையு மயன்கயி லையர்கோன்‌
அமரர்கோன்‌ முறைதொழு தேத்தத்‌;
தும்புரு வுடனா ரதனியாழ்‌ மிழற்றத்‌; தூயமா முனிவர்வாழ்த்‌ துரைப்ப
உம்பர்க ளியக்கர்‌ கருடகந்‌ தருவ
ருயர்பத்த நித்தமுத்‌ தர்களும்‌ பம்பியெம்‌ மருங்கும்‌ நெருங்குற வாடல்‌
பாடல்க ளரம்பையர்‌ பயில. 149

அந்தரத்‌ தெழுந்து துந்துமிக்‌ குழாங்க ளதிரவை குந்தம்விட்‌ டகலா
வந்தரு டிருநா ரணன்றிரு மேனி
வடிவமு நிறைமதி நிகருஞ்‌ சுந்தர வதன விலாசமுங்‌ கருணைத்‌
துணைமலர்க்‌ கண்களி னொளியும்‌
சிந்தையுள்‌ ஞரூருகக்‌ கண்களால்‌ விட்டு
சித்தனுந்‌ தெளிவுறக்‌ கண்டான்‌. 150-வடிவமும்‌, வதன விலாசமும்‌, கண்களின்‌ ஓளி
யும்‌, சிந்தை உருக, விஷ்ணு சித்தனும்‌ கண்டான்‌ என இணைக்கவும்‌.

திருப்பல்லாண்டு
விண்ணவர்‌ மகுட கோடிகள்‌ இறைஞ்ச
விளங்குபொற்‌ கலுழன்றன்‌ புயமேல்‌
நண்ணுநா ரணன்றன்‌ நிருவுரு வொளிதன்‌
னலமுரு முளத்துணர்ந்‌ இவரை
மண்ணவ ரெவரு மிருகணு மூளமு
மகிழ்வுற நோக்‌இடிற்‌ கதுவுங்‌
கண்ணிறை யெனப்பல்‌ லாண்டெனும்‌
பதிகக்‌ கவிதையால்‌ காப்பணிந்தனனால்‌, 151

முன்னமோர்‌ மடுவிற்‌ கராவின்வாய்ப்‌ படலான்‌
மூலமென்‌ றழைத்திடுங்‌ கரிமுன்‌
மன்னுமச்‌ செயல்போ லிந்நகர்க்‌ கோலம்‌
மருவுற வீங்கெழுந்‌ தருளும்‌ | நின்னைமா துடன்கண்‌ . களிப்புறக்‌ காணல்‌
நிலையிலா வுருவுகொண்‌ டிடும்யான்‌
என்னமா தவம்செய்‌ தனனெனப்‌ பல்கா லேத்தினன்‌ தொழுதனன்‌ மகிழ்ந்தான்‌. 152-பெரியாழ்வார்‌, உன்னைக்காணத்‌ திருமாலே! யான்‌ என்ன மாதவம்‌
. செய்தேன்‌ என்றார்‌

இத்தகை யினனாய்‌ மீண்டுமா மாலை
யிசைக்கவென்‌ நிதையத்துள்‌ நினையா
வத்தகை யுணந்தந்‌ நாரணன்‌ மகிழ்வா
யவன்றலை மீதுதன்‌ பதங்கண்‌
டொத்தகைத்‌ தலங்கொண் டஃஇவன்‌ வருடி
யுணர்ந்தவா றின்னதென்‌ றுணர்ந்திட்‌
டெத்தகை யெனக்கொண்‌ டியம்பலா மெனக்கா
யிரமிலை நாவெடுத்‌ தியம்ப. 153

இருமால்‌ தன்னுடைய திருவடியை ஆழ்வார்‌ தலையில்‌ வைத்தான்‌.
அப்போது ஆழ்வார்‌ அடைந்த நிலையை யியம்ப எனக்கு ஆயிரம்‌ நாக்கள்‌
இல்லையே என்கிறார்‌ ஆசிரியர்‌. **பருப்பதத்துக்‌ கொடி பொறித்த பாண்டியன்‌
குலபதிபோல்‌ திருப்பொலிந்த சேவடியென்‌ சென்னிமிசை வைத்தாய்‌” என்று
பெரியாழ்வாரே கூறியுள்ளார்‌. பெருமான்‌ தன்பதத்தை வைத்த போது ஆழ்வார்‌
தம்முடைய கரங்களால்‌ வருடினார்‌. இருமகளார்‌ வருடும்‌ பதத்தை வருடும்பேறு
பெரியாழ்வாருக்குக்‌ இட்டிற்று.

சமயவாதியர்‌ புகழ்ந்தனர்‌
சைவரே முதலாஞ்‌ சமயவா இயரும்‌
தத்தமச்‌ சமயதே வர்களைக்‌
கைவிடு பவராய்க்‌ கருத்துளே திருவின்‌
கணவனே பரமெனத்‌ தெளிந்தம்‌
மைவரை யனையான்‌ திருவடி யதன்‌€ழ்‌
வணங்கினர்‌; நடித்தனர்‌; குதித்தார்‌;
செய்வகை யுணரார்‌; களிப்பெனும்‌ நறவும்‌
தெவிட்டவுண்‌ டிடுதலாற்‌ றியங்கி, : 154

மாறனு செல்வ நம்பியே முதலா
வளைகடற்‌ புவிமருங்‌ இனருந்
தேறுமிப்‌ பரம புருடார்த்த மதனாற்‌
றேவரு முணர்கிலாப்‌ பரமாம்‌
நாறுபூந்‌ துளவ நாரண ஸனுருவ நங்கணாற்‌ கண்டனம்‌; எனக்கொண்
டூறுபே ர௬ுவகைச்‌ சிறந்தநல்‌ லுணர்வோ டுற்றெதஇர்‌ வணங்கி னரன்றே. 155

இவராலன்றோ நாம்‌ திருமாலைக்‌ கண்டோம்‌ என்று பாண்டியன்‌
செல்வதம்பி முதலானவர்கள்‌ ஆழ்வாரைப்‌ பணிந்தனர்‌,

வேண்டுதன்‌ வேண்டு மவ்விதம்‌ அருளும்‌
வேதமீ துறைந்திடுந்‌ திருமால்‌ மீண்டுமவ்‌ வாழ்வார்‌. திருமுகம்‌ நோக்கி
விளம்புவன்‌ ; இன்றுதொட்‌ டுனக்கு
மாண்டகும்‌ பட்டர்‌ பிரானெனு மொருபேர்‌
வழங்கினம்‌ இன்னமும்‌ சிலநாள்‌
பூண்டுறு நமது கயிங்கிரிய மதனைப்‌
.. பொருந்துறும்‌ படிபுரித்‌ திருந்து. 156

புவியிலஸஞ்‌ ஞான மடைந்துளோர்‌ ஞானம்‌
பொருந்துறச்‌ செந்தமி ழதனாற்‌:
கவிபல வியம்பிப்‌. பின்புவை குந்தங்‌
கலந்துநீ யணைகென வவன்றன்‌.
செவியுறப்‌ புகன்று கருணைகூர்ந்‌ தருளித்‌
தேவர்சென்‌ றடிதொழுந்‌ திருமால்‌
குவிமுலைத்‌ துவர்வாய்த்‌ இருவொடு மடியார்‌
குழாத்தொடும்‌ தன்பதி யடைத்தான்‌. 157

ஆழ்வார்‌ திருவோலக்கம்‌
(வேறு)
நாரண ஸனகன்றபின்‌ னலங்கொண் மாநகர்‌
தோரண வீதிகள்‌ பலவும்‌ சுற்றிவந்‌
தாரண வொலியுட னானை விட்டிழிந்‌
தேரணி மண்டப மினிதி னெய்தினான்‌. 158–ஏரணி மண்டபம்‌- அலங்கரிக்கப்பட்ட மண்டபம்‌,

முத்தவெண்‌ குடைமுழு “மதியின்‌ மீதுறக்‌
கத்தைவெண்‌ கவரிகா லசையக்‌ கைகொடு
புத்தரே முதலினர்‌ வணங்கிப்‌ போற்றிடச்‌
சித்திர வாதனஞ்‌ சேர்ந்து வைகனான்‌. 159:

சீவலதேவன்‌ பரம வைஷ்ணவனானான்‌
சவல தேவனென்‌ றுரைக்கும்‌ செவ்விசோர்‌
காவலற்‌ காழிசங்‌ குக்கு றிப்பொறித்‌
தேவல்செய்‌ தொண்டுகொண் டினிய வொண்பொரு
ளாவலோ டவனருள்‌ யாவும்‌ கைக்கொளா, . 160

கூடலி னழகர்தம்‌ கொடிய பாம்பின்மேல்‌
ஆடிய பதம்பணிந்‌ தவண்விட்‌ டேகுியே
நீடிய நெறியெலாங்‌ கடந்து நீள்கொடி
மாடமார்‌ புதுவையின்‌ மன்னி னானரோ. 161.

வடபெருங்‌ கோயிலின்‌ மருவி மாதவன்‌
அடிமலர்‌ . முடியுற வணிந்து மன்னருட்‌
படியவ ணடைந்துள பலவு மீதெனா ்‌
மு.டியவுஞ்‌ செவியுற மொழித்து மீண்டனன்‌. ்‌ 162

குன்பெருங்‌ கோயிலைச்‌ சார்ந்து வைகியே
முன்புபல்‌ லாண்டெனு மொழிந்த தாதியாய்‌
அன்பொடுஞ்‌ சென்னியோங்‌ கந்த மாகவே
இன்புறு மிசையினின்‌ றமிழி யம்பினான்‌. 163

நான்குநூ றெழுபதின்‌ மூன்று நன்கமைந்‌ தான்நவத்‌ திருமொழி யதனு ளாழிகைத்‌
தேன்கமழ்‌ துளவமால்‌ இருவு ருக்கொடு
தோன்றுமூ ரிருபதின்‌ மூன்று சொன்னதே. 164

வேறு
அரங்கம்‌ வெள்ளறை குறுங்குடி குடந்தை வதரிகாச்‌
சிரமம்‌ வேங்கடங்‌ கோட்டியூர்‌. சீர்கங்கைக்‌ கரையின்‌
மருவு கண்டஞ்சோ லைமலை சாளக்கி ராமம்‌
பொருவி லாதசர்‌ பொருந்துபேர்‌ திருக்கண்ண புரமே. 165

இருவை குந்தமோ டாயர்தம்‌ பாடிசீர்‌ வடம
துரைய யோத்திகோ வர்த்தனம்‌ வில்லிபுத்‌ தூரது
வரையொோ டுஞ்சித்ர கூடமு மதுரையிற்‌ கூடல்‌
புருட வுத்தமம்‌ பாற்கட லெனும்பெயர்‌ பொருந்தும்‌. 166-பெரியாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திருப்பதிகள்‌ பதின்‌
மூன்று. அவற்றின்‌ பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.

முதும்‌ றைப்பொரு எருஞ்சுவை முகந்துகொண்டு ரைக்கும்‌
அதுத னைத்தெரிந்‌ தறிந்துணர்ந்‌ தோதுயம்‌ புவியோர்‌
கதுவி டும்பெரு மாயையா மிருளினைக்‌ கடிந்தே
மதுபொ ருந்திடும்‌ துளவமால்‌ பதத்தின்மன்‌ னினரால்‌, 167

இனைய பாடல்க எளிசைத்தரு ளெம்பட்டர்‌ பெருமான்‌
அனைய மாநகர்‌ தனிலிருந்‌ தவணுறை திருமால்‌
புனையு மாலைகட்‌ டொழில்புரி தவனடி போற்றி
நிணையு நெஞ்சக மகிழ்வுட னெடிதுநா ஸிருந்தான்‌. 168

இன்ன காதையை யெழுதுவோர்‌ கஞமிதன்‌ பொருளைப்‌
பன்னு வோர்களும்‌ பன்னிடும்‌ பொருள்களைப்‌ பரிவாய்‌
கன்ன முடுறக்‌ கேட்பவர்‌ களுங்கடற்‌ புவிமேல்‌
மன்னு நாளிருந்‌ துயர்பத மருவிவாழ்‌ குவரால்‌, 169

திருமங்கைமன்னன்‌ வரலாறு புகல்வோம்‌
அங்கண்‌ மாநிலப்‌ பரப்பினில்‌ புதுவைவந்‌ தருளும்‌
நங்கள்‌ சீர்ப்பெரி யார்செய லினைநவின்‌ றனமால்‌
திங்கள்‌ சூடிதன்‌ குடியரிற்‌ குறையலூர்‌ செனித்த மங்கை யார்புரிந்‌ தருள்செயல்‌ வகுத்தினி துரைப்பாம்‌. 170

பெரியாழ்வார்‌ இருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

——————

திருமங்கையாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
பேதைநெஞ்சே! யின்றைப்‌ பெருமை யறிந்தஇலையே |
யேது பெருமையின்றைக்‌ கென்னெனின்‌- வோதுகின்றேன்‌
வாய்த்தபுகழ்‌ மங்கையர்கோன்‌ மாநிலத்தில்‌ வந்துதித்த
கார்த்திகையில்‌ கார்த்திகைநாள்‌ காண்‌.(உபதேச ரத்தினமாலை, பக்கம்‌ ; 8)

அகம்படியர்‌ குலம்‌
நிறையு மாமதி முகத்திய ரிளநகை நிலவான்‌
நறைகொ எளாம்பலின்‌ நாண்மலர்‌ நனைமுருக்‌ கவிழும்‌
நிறையு நீர்மலித்‌ தடங்களும்‌ வயல்களும்‌ நிரம்பும்‌
குறைய லூரதன்‌’ பெருமையைக்‌ கூறுத லரிதால்‌. 1

அந்த மாநக ரந்தனிற்‌ வெனடி யவரில்‌
வந்து வாழகம்‌ படியர்தங்‌ குடிவளம்‌ பெறவே
செந்தி ர௬ப்பகி யானநா ரணன் இரு வடியைச்‌
சிந்தை கொண்டுல கோர்தொழச்‌ செயும்பர காலன்‌. 2

ழ்வார்‌ அவதாரம்‌
ஆர்த்தெ முந்துமெய்ஞ்‌ ஞானநல்‌ லறிவணு இடவும்‌
வேர்த்து மாயையம்‌ புவிதனை விட்டகன்‌ . நிடவும்‌ .
தீர்த்த னாகிய நாரணன்‌ நிருவரு ளதனாற்‌
கார்த்தி கைத்திரு மதியினிற்‌ கார்த்திகை நாளின்‌. 3

ஒன்ப தாகியகோட்களு முச்சனன்‌ குறைந்திட்‌
டன்ப ராடுிநற்‌ பலன்றர வமையுமோ ரையினின்‌
முன்ப கன்றமெய்ஞ்‌ ஞானத்தின்‌ முளைத்திடுங்‌ கொழுந்தோர்‌
தென்ப டும்புவி யிடைச்சிறந்‌ தெழுந்தது போலும்‌. 4

ஆர ணன்முத லண்டங்கள்‌ பலவுமற்‌ றவையும்‌
நார ணன்றிரு வுந்தியிற்‌ னோன்றுதன்‌ மகமைக்‌
கார ணந்தெரி யாமதக்‌ கசடரைப்‌ பிளக்கும்‌
ஏர ணிந்தகோ டாலிவந்‌ தெழுந்தது போலும்‌. 5

தோன்றி னானவண்‌ தோன்றிய தோன்றலை நோக்கி
ஈன்று ளோனவற்‌ இயற்றுவ யாவையு மினிதின்‌
ஆன்ற கேள்வியர்‌ விதித்தநான்‌ முறையது வாகச்‌
சான்று ளோரெலா மகிழ்வுற வழங்கினான்‌ தானம்‌. -6-

அந்த மாநக ரந்தனி லணுகுவர்‌ பலருஞ்‌ சிந்தை யோடிரு கண்களும்‌ ம௫ழ்சிறந்‌ தோங்கச்‌
சந்திரன்கலை நாடொறும்‌ வளர்வபோற்‌. றழைத்து
மைந்த னுந்தினஞ்‌ சிறப்பொடு வளருமன்‌ னாளில்‌. _- 7

ஞால மதினிற்‌ காமகை வலமென நவிலுஞ்‌
சீல மில்லவச்‌ சமயமா யும்படி திருத்தும்‌
பால னாம்பர காலனுக்‌ கொருபெயர்‌ பரிவாய்‌
நீல னாமென நவின்றன னீன்றவ னென்போன்‌. 8

வேத நான்கினு முறுநல்ல தாகமே வமுதைத்‌
தீதில்‌ செந்தமி மாற்‌ றிரு மொழியெனத்‌ திருத்திக்‌ கோதி லாதவர்‌ செவியுறக்‌ கொடுப்பவர்க்‌ ன்ற .
மாத ருந்திடு மன்னமு மூட்டினண்‌ மகஒழ்வாய்‌. 9

மாயையின்‌ வன்மை
துள்ளி யம்மனத்‌ தெழுதரு மாயையின்‌ றொடர்பால்‌
நள்ளி ர௬ுட்களை பவனுக்குச்‌ சவளநன்‌ கிழைத்தார்‌
வள்ளி யோர்க்குமெய்ஞ்‌ ஞானத்தை வகுத்துறை வள்ளல்‌
பள்ளி யின்வட மொழியொடுந்‌ தென்மொழி பயின்றான்‌. 10

அனைய தன்மையி னாயறு பத்துநான்‌ கெனவே
நினையு றுங்கலைக்‌ கியானங்‌ கணிலையெலா முணர்ந்து
வினையி லாப்பரஞ்‌ சோதியி னிலைவெளிப்‌ படுத்தக்‌ கனைக டற்புவி மீதுவந்‌ தெழுந்தகண்‌ மணியை. 11

மயக்கி யேவருந்‌ திருவிளை யாட்டினை மதிப்பான்‌
வியக்கு நெஞ்சொடுந்‌ இருமகட்‌ கொழுனனும்‌ விரும்பி
நயக்கு மாயையை விடுத்தலு நண்ணுமங்‌ கதனான்‌
முயக்கு நெஞ்சின னாயினன்‌ முழுமதி யுள்ளன்‌. 12

ஏன்ற நீர்மிசை யமைவுறுஞ்‌ சைவல மதுபோன்‌
மூன்று லோகமு முந்தியின்‌ முறைமுறை வழுவா
இன்று சார்ந்தரு ளிறைவனை யிருத்துநல்‌ லறிவு தோன்று நெஞ்சினை மறைத்தது மாயையுந்‌ துடர்ந்து. 13-

வெங்க ணைக்கொலை வாள்சதை வேல்முத லியவாந்‌
தங்கு லத்தொழிற்‌ பரிசையு முணர்ந்தனன்‌ றகவாய்‌
எங்கும்‌ யாரினு மித்தொழிற்‌ பயிற்சிய ரெவரும்‌
அங்கி வந்தவ னடிகளுக்‌ கபயமென்‌- டைய. 14

மாயை யானது மலிந்துமூண்‌ டிடவுள மயங்கி. .
நேய மோடதை நீக்குவான்‌ நினைந்துநீக்‌ குதலுந்
தோய மபேற்றுடர்‌ சைவல மலம்பினும்‌ தொடர்ந்து
மேய தாமென ஈண்டவன்‌ றன்னைமே விடுமால்‌. 15

பந்தன்மீதுறப்‌ படர்ந்திடும்‌ பசியமென்‌ கொடியை
வந்து சூறைமா ருதம்விழுத்‌ இடுகின்ற வகைபோல்‌
சிந்தை மீதுறக்‌ கொழுந்துவிட்‌ டெழுந்திடு மறிவை
முந்து மீதுறுங்‌ காமக்கால்‌ முட்டிவீழ்த்‌ இடுமால்‌. 16

அரசர்‌ மாமணி முடிகளை யறுத்திடுங்‌ கூர்வாள்‌
நிரவு பஞ்சணை மிசையுறின்‌ மழுங்குமந்‌ நெறிபோல்‌
விரவு நாரணன்‌ பதத்துற நிரப்பு மெய்ஞ்ஞானம்‌
பரவு மங்கையர்‌ விருப்பினிற்‌ படமழுங்‌ இயதால்‌. 17

இன்ப ஞானவீ டறிந்துயர்‌ வேதமென்‌ றியம்பும்‌
அன்பு றுந்திரு மடலெனு மாலைசெய்‌ பவனுந்‌
துன்பு றுந்திரைக்‌ கடலெனுஞ்‌ இற்றின்பத்‌ துறையின்‌
றன்பெ ருங்கலை நாூலெலா முணர்ந்தனன்‌ றகவாய்‌. 18

மலையி ஸனும்பல கடத்தினு மற்றுள நிலத்தின்‌
றலைதொ றும்பெயு நீரெலாம்‌ தஇுதனிற்‌ செலல்போல்‌
நிலையு ஞானமும்‌ கல்வியும்‌ வேறுள நெறியும்‌
விலைம டந்தையர்‌ மலையெனு முலைவிழுங்‌ . 19

இனய ஸாய்ப்பதி னாறெனும்‌ வயதுமெய்‌ இயபின்‌
புனைம லர்க்குழமன்‌ மடந்தையர்‌ புந்தியள்‌ ளவனை
நினைவ ரைங்கணைக்‌ கழவனாமென தெடிதவனும்‌
அனையர்‌ தங்களை யிரதிய ராய்நினை குவனால்‌. 20

இவ்வி தத்தனாய்ப்‌ பரத்தைய ரின்ப்சா கரத்தின்‌:
ஓவ்வி யுற்றலைந்‌ தவரித மமுதமுண்‌ டுவப்பால்‌
யெவ்வி தத்தினுந்‌- தணிகிலா திழைந்தனன்‌ இழையும்‌.
அவ்வி த்த்தினை .யுரைத்திட முடியொணா தென்னால்‌.: 21

குமுதவல்லியார்‌
பூவின்‌ மெல்லியர்‌ சுனவிள முலையினர்‌ பொருத்தும்‌
ஏவு கண்ணியர்‌ முழுமூகத்‌ தெரிவையர்‌ எழில்சேர்‌
தேவ கன்னியர்‌ திரண்டொரு விமானமேற்‌ சேர்ந்து
மேவ மிக்களி கூர்ந்திட விசும்பைவிட்‌ டிழிந்தே. .. , 22

காலி மேதிகள்‌ கன்றினை நினைதொரறுங்‌ கனியும்‌
பாலி னோடிறா .லொழுகுதேன்‌ தினம்சென்று பாய்ந்து ்‌
சாலி யோடுசெங்‌ கன்னலுந்‌ தழைத்து வானோ்கும்‌
ஆவி மாநக ரதனில்வந்‌ தடைகுவா ரன்றே. -23

பொய்கை யார்ந்தறீ ராடுவார்‌ ; பூம்பொழிற்‌ களிற்போய்‌
கொய்கு வார்மலர்‌ ஆலிதநா . தன்குரை கழலிழ்‌
பெய்கு வார்‌;பணிந்‌ தேத்துவார்‌ ; பின்புவே றியற்றுஞ்‌
செய்கை நேர்ந்துபின்‌ விமானமேல்‌ விசும்பிடைச்‌ சேர்வார்‌. 24

இன்ன வாறுபற்‌ பலபல புரிந்திடு மிடையின்‌
மன்னு மோர்பகற்‌ றனித்தொரு மாநெடுந்‌ தூரம்‌
துன்னி மாமலர்‌ கொய்குவான்‌ றுருவிமற்‌ நுள்ளோர்‌ அன்ன தோர்கிலா ரவளைவிட்‌ டேகின ரன்றே. 25

பிரிந்து நீங்கிய மாதுமீண்‌ டவர்தமைப்‌ பேணிப்‌
பரிந்து நோக்கலும்‌ காண்கிலள்‌ ; பதைத்துள நெடுங்கண்‌ .
சொரிந்த நீர்களும்‌ சரிந்தவிழ்‌ குழல்களுந்‌ தோன்ற
விரிந்த மாமலர்ப்‌ பொய்கையின்‌ கரையின்மே வினளால்‌. 26

ஆங்கு நோக்கலு மாலிமா தவர்க்கனு தினமும்‌
பாங்கி னோடுமா ராதனம்‌ பரிவோடு புரியுந்‌
“தீங்கி லாமறை யவனிருந்‌ இிடத்தெளிந்‌ தவன்றன்‌
பூங்க ழற்கணின்‌ முடியுறப்‌ பணிந்திது புகல்வாள்‌. 27

ஐய ! கேட்டியான்‌ றேவ கன்னிகை யனேகருடன்‌
வைய மீதிழிந்‌ இந்தவான்‌ பொய்கைநீர்‌ மருவிச்‌
செய்ய மாமலர்‌ கொய்குவான்‌ சென்றபோ தியானத்‌
தைய லார்தமைப்‌ பிரிந்தொரு தமியளா யினனால்‌. 28

தேடி னேன்பல விடந்தொறும்‌ தெரிகிலேன்‌ றிகைத்து
வாடி னேனுளம்‌ வருந்தி வந்திவ்விட மருவிக்‌
கூடி னேன்படர்ந்‌ துளசெயல்‌ நின்செவி குறுகப்‌
பாடி னேனவர்‌ தமைக்கண்ட துண்டுகொல்‌ பகர்வாய்‌. 29

என்ன வோதவம்‌ மொழிகள்‌ தன்னிரு செவியுறலும்‌
அன்ன மாதுதன்‌ திருமுக நோக்கியங்‌ கவர்கள்‌
முன்ன ரேயொரு விமானத்தின்‌ மீமிசை முடுகி
மன்னி யேகினர்‌ வானிடை யென்றனன்‌ மறையோன்‌. 30

உ.ந்தன்‌ மாமக ளாகும்யாம்‌
தந்தை யாகுமென்‌ றவனடித்‌ தலத்துவீழ்ந்‌

ஆழ்ந்த வன்பினோ டந்தணன்‌ றனதடி யதன்மேல்‌
வீழ்ந்த மங்கையை நோக்கிநீ வெருவிடேல்‌ வெகுநாள்‌
வாழ்ந்து மல்கவென்‌ றாசிகள்‌ பற்பல வழங்கித்‌
தாழ்ந்தெ டுத்துமார்‌ பிருகுறத்‌ தழீஇனன்‌ றகவாய்‌. 32

னீர்துடைத்‌ துச்சிமோந்‌ இந்தமெல்‌ லியல்வீட்‌
ளாளெனி லுலகன ரொவ்விடார்‌; நமது
வழிய ளோர்களும்‌ வசைமொழி புகல்குவர்‌ வளரப்‌
பழியு ‘மெய்துமென்‌ றஐஞ்சியே பன்முறை நினைந்தே. 38

ஆலி நாதர்தன்‌ கோயிலில்‌ நடனஞ்செய்‌ பவர்க்குண்‌
மேலி நாள்தனை -வியரிலா தயர்ந்துபெண்‌ விருப்பா
மாலி னோடுற லுணர்ந்தவ னாகியம்‌ மடவாள்‌ ்‌
பாலி னிங்கிவ டனைவிடிற்‌-.பரிவொடும்‌ வளர்ப்பாள்‌. 34

என்ன வேதியன்‌ கன்னியோ டாங்கவ ஸிவின்வாய்த்‌
துன்ன லோடுமவ்‌ வேசையு மடுத்தெதிர்‌ தோன்றிப்‌“.
பொன்ன டிப்பணிந்‌ தேத்திய பூங்கொடி நிகரும்‌
கன்னி யாரெனக்‌ கேட்டலும்‌ வே.தியன்‌ கழறும்‌. –35-

முன்பெ டுத்துள சனனங்க: டொறுமுயன்‌ நிழைத்த
என்பெ : ரந்தவத்‌ தளித்தது: மகளிலா மையின்‌ நீ
, துன்பு றத்தெளிந்‌ தவையொழித்‌ தஇடும்வகை தோன்றும்‌
அன்பி னாலிவள்‌ தனையுன்க்‌ களிக்குமா றடைந்தேன்‌. 36

என்று ரைத்தவ உடன்வர லாற்றையு மியம்பி
நின்ற வக்கொடி தன்னையு நெறிமுறை யளித்துச்‌
சென்ற டைந்தனன்‌ தனதகம்‌ அளித்தசே யிழையை
porn னத்தன தகத்தினுட்‌ கொண்டுநண்‌ ணினளால்‌. 37

நாட்க அணங்கு நங்கையை வளர்த்தாள்‌ ‘
நாக மங்கையர்‌ நானில மடந்தையர்‌ நவிலும்‌ —
மாக மங்கையர்‌ மலரயன்‌ சவென்குகன்‌ மதன்றம்‌ >
போக மங்கையர்‌ எவர்களும்‌ புனிதநா
ஆக மங்கையு நிகரிலரி வளழ கறிந்தேன்‌. ப 38

துமுதம்‌ உற்றெழ மதித்தநாள்‌ தூயபாற்‌, கடலில்‌ அமுத முற்றெனத்‌ தோன்றிய வணங்தர்‌ சமுதைக்‌
குழுத வல்லியென்‌ ஹறொருபெயர்‌. குறித்தழைத்‌ தனளால்‌;
நமது நாயக வாலியாண்‌. கோயிலின்‌ நடிப்பாள்‌. 39

பவள வாயிதழ்‌ குவளைகண்‌ பகியகார்க்‌ கூந்தல்‌
இவட ஸனால்நமக்‌ .களவிலாப்‌ : பேருறு மெனக்கொண்
டவளை யாதர வுடன்சுமந்‌ தளித்தபெண்‌ ணாகத்‌
தவள வாயழு தூட்டியத்‌ தையலும்‌ வளர்ந்தாள்‌. 40

கோதி லாடனக்‌ கமைவன வகைவகை குறிக்கும்‌.
பாத மேமுதன்‌ முடியள வாகவே பலவா
யோது மாவவ யங்களுக்‌ கொழுகொளி பரப்புஞ்‌
. சோதி யாமணிப்‌ பசும்பொனின்‌ ‘ கலன்கள்சூட்‌ டினளால்‌ ;47:

பாட கம்செழும்‌ பதுமம்‌ நேரிய பதம்வருந்த
நாட கத்தொழில்‌ புரிபவள்‌: யாவுநன்‌ கறிந்தாள்‌ ;
சூடகக்‌ கையின்‌ விரல்களாற்‌ றுவன்‌ றிடத்‌ தெரித்திட்‌
டாகப்‌ பசுந்தந்‌ இயாழ்‌ பயில்வது மறிந்தாள்‌. 42

இனைய தாயதந்‌ தொழிலெலாங்‌ கற்றபின்‌ துளவம்‌
புனையு மாலிதா யகன்றிரு முன்ந்டம்‌ புரிந்து
வினைய கற்றுபொற்‌ படிகநீர்த்‌ துளவமு மிசைந்து
மனைய ணைந்துவா இத்திடு பள்ளிமன்‌ னுவளால்‌. 43

ஆலை யின்கரும்‌ பனையமா .தெழில்வள மறிந்து
வேலை சூழ்புவிப்‌ பரப்பெலாம்‌ விலங்கிடக்‌ தனிச்செங்‌ –
கோலை யோச்சிடு மரசர்கள்‌ குலவுமிங்‌ இவளைமாலை சூட்டிடக்‌ கிடைக்குமோ எனமருண்‌ டனரால்‌. 44

னியும்‌ பாகும்நற்‌ பாலுடன்‌ கைத்திட மிழற்றும்‌
இனிய சொல்லினாட்‌ கேவலிந்‌ திரியத்‌ தையவித்த
புனிதவ ரும்மதன்‌ னூன்முறை புரிகுவ ரென்னின்‌
மனித ராயினோர்‌ யாவரே மருளுறா தவரே? 45

பரகாலரின்‌ காதல்‌
வேறு
அன்னவ ஸிவ்வா றாக விருக்கும்‌ மதுதன்னைப்‌
பன்னரும்‌ €ர்த்திக்‌ குறையலூர்‌ வாழும்‌ பரகாலன்‌
nora லுணர்ந்தே யங்கவ ளாசைத்‌ தளைமேலும்‌
துன்னிட்‌ வவ்வூ ரேகுவ தற்குத்‌ துணிவானான்‌. 46

தங்க மூடன்பன்‌ மணியொளி ருந்தண்‌ டிகையேறிப்‌
பொங்க ரெனும்திண்‌ புயவலி தோழர்‌ புடைசூழ
மங்கு லளாவும்‌ .பொன்மதி டன்னை. மதியோடுஞ்‌
செங்க இருஞ்சூ ழாலி நகர்க்கண்‌ சென்றனனால்‌. 47

ஆங்கொ ரிடத்திற்‌ றுன்னி யிருந்திட்‌ டதன்பின்னர்‌
தீங்கனி யொக்குஞ்‌ சொல்லினண்‌ மேனித்‌ இறயோடும்‌
பாங்குற வைகும்‌ நல்லிட முங்கண்‌ படனோக்கி
ஈங்க டைமின்னென்‌ றேவிட நால்வ ரினிதோடும்‌. 48

அன்னவள்‌ வைகும்‌ பொன்மனை சென்றா ரதில்காணார்‌
துன்னி நடஞ்செய்‌ சாலையி ஸும்துன்‌ வினர்காணார்‌
நன்னரி யாழ்வல்‌ லாரொடு கற்றே நவில்கூடந்‌
குன்னில டைந்தே யங்குறு பெண்ணமு தந்தன்னை. 49

கண்ட னரம்பொன்‌ மேனியின்‌ வடிவம்‌ கண்ணென்னும்‌
புண்டரி கங்கொள்‌ ளாம லுளமற்‌ புதமெய்தி
எண்டிசை யுள்ளும்‌ கண்டில மிப்பே ரெழிலுக்குத்‌
தொண்டுறும்‌ நந்தம்‌ தோழனு மென்னத்‌ துணிவுற்றே. 50

மீண்டனர்‌ தாமுன்‌ வைகுறு மிலின்மே வினர்தம்மைக்‌
காண்டலு முள்ளங்‌ களிமகழ்‌ துன்னக்‌ கலிகன்றி
பூண்டிடு மன்பின்‌ ச௪ண்டுளி ரோநீர்‌ புகல்வீரென்‌
றாண்டவ னோதக்‌ கேட்டலு மவள்வடி வறைகன்தார்‌. 51

மழையள ‘கம்தண்‌ பிறைநுதல்‌ விற்புரு வம்வாட்கண்‌ ;
குழையணி வள்ளைக்‌ கன்ன மெளின்பூ |
அழகமை யும்கண்‌ ணாடிக போலும்‌ அமுதஞ்சொல்‌
பழமுதிர்‌ தொண்டை யிதழ்தர எங்கள்‌ பல்லாமால்‌; 52

விதுவ தனம்வளை கந்தரம்‌ வேய்த்தோள்‌ யாழ்முன்கை
பதுமம கங்கைத்‌ தளிர்விரல்‌ கிளிபாலி கையினுகிர்‌
புதுமலை முலையா லிலைவயி றாமெறும்‌ பூரோமம்‌
உதக மெழுந்திரை வரைதுடி யிடைசுழி யுந்தியதே. 53

அராவ. நிதம்பம்‌ கதலிகுறங்‌ கலவன்‌ சரணாம்‌
வராலின்‌ கணைக்கா லாமைப்‌ புறவடி. மன்னும்சர்‌
குராசு பரட்டாம்‌ பந்துகுதித்‌ துகிர்தான்‌ விரலாம்‌
பராவிய தாள்ங்‌ கந்திகழ்‌ பஞ்சு பதந்தானே. 54

அன்ன மெனப்படர்‌ மெல்லிய நடைமயி லஞ்சாயல்‌
இன்னக னமைதிக ளொப்பிட ஒவ்வா எழிலுற்ற
கன்னியை யாயிர மாதரு ளோர்பெண்‌ கனியென்ன
மூன்ன ரிழைத்துள நின்றவ மேமுன்‌ னியதென்ன. 55

அண்டர்‌ மத்திட வெண்கடல்‌ வந்தெழு மமுதென்னக்‌
கொண்ட. லுதஇித்தெழு முன்னெழு மின்னற்‌ கொடியென்னப்‌
புண்டரி கத்திரு மலரிடை வாழும்‌ பொன்னென்னக்‌
கண்டன மெம்மிரு கண்கள்‌ களிப்பக்‌ கடிதென்றார்‌. 56

அச்சொற்‌ கேளா வுள்ள மதற்குள்‌ ளவளாசைப்‌
பிச்சுற்‌ றேயங்‌ கேகு தலுன்னிப்‌ பெயர்போதின்‌
மச்சுத்‌. தேரோ டாதவ னாழி மறைவுற்றான்‌ நச்சுற்‌ கென்ன நள்ளிருள்‌ உள்ளில்‌: நணுஇியதால்‌. 57

வேறு .
இந்த வுலகம்‌ தனில்பிறந்திட்‌
டிறக்கும்‌ பிறவி தன்னையொழித்‌
குந்த வுலகம்‌ பெறுநான
மறிய வுரைக்கும்‌ குருபரனை நிந்தித்‌ இகழ்ந்திட்‌ டஞ்ஞான நெறியோ துவர்த மதியுள்ள
சந்தைக்‌ கருப்போ டியதெனவே
இசையோர்‌ எட்டு மிருண்டனவால்‌. 58

துன்னிச்‌ சிறந்த நள்ளிருள்வாய்த்‌ .
தோழ ரொடுமவ்‌ விடமகன்‌ றக்‌
கன்னி யுறைபொன்‌ மாடமதைக்‌
கலந்தாங்‌ இருந்தோர்‌. தமைவினவி
யன்ன மடமா தாடலுக்காய்‌
யாலிப்‌ பெருமான்‌ றிருக்கோயின்‌
மன்னி யடைந்த துளந்தெளிந்தம்‌
மணியா லயம்போய்‌ மன்னினனால்‌. 59

பரகாலர்‌ குமுதவல்லியைக்‌ கண்டார்‌
அங்கண்‌ பிரான்முன்‌ குமுதவல்லி
ஆடல்‌ புரியும்‌ போதினிலே
திங்க ளனைய முகத்தாடன்‌ ‘
இருமே னியினைப்‌ பதமுதலாய்‌
மங்கு லளக மீறாய்த்தன்‌
மலர்க்கண்‌ களிப்பக்‌ கண்டுருப்‌
பொங்கு ம௫ழ்வோ டாலியன்‌ நாட்‌
“பேர்துிற்‌ பணிந்து நின்றனனால்‌. — 60

தின்றங்‌ இருந்தப்‌ பேரழகன்‌
நிகரில்‌ வடிவந்‌ தனைக்காணா
மன்றல்‌ கமழுங்‌ : குழல்மடவாள்‌
மதனோ வானத்‌ திந்திரன்றான்‌
இன்றிங்‌ கிழிந்து வந்தனனோ?
வெனவே குவளை யிருத்டங்கண்‌
ஒன்ற வவன்றன்‌ றிருமேனி
முழுதும்‌ நோக்கி யுன்னுவளால்‌. 61

மருமந்‌ துளவ மணிகாணேம்‌;
வதனதந்‌ திருமண்‌ குறிகாணேம்‌;
மிருமந்‌ தரநேர்‌ மணிப்புயத்தி
லெஃகம்‌ வளையின்‌ பொறியிலையால்‌ ;
இருவின்‌ மகழ்நர்க்‌ கடியனலன்‌
எனவே இந்தை தெளிந்தவன்பாற்‌
கரும மிலையென்‌ நுளமுமிரு
கண்ணும்‌ திருப்பிக்‌ கசிந்தனளால்‌. 62

கசந்த மடந்தை திருவாலிக்‌
கண்ணன்‌ நறிருமுன்‌ னரிற்காலில்‌
-விசிந்த சதங்கை கலகலென
வேற்கண்‌ சுழலக்‌ கரமசைய
ஓ௫ந்த கொடியி னிடைநுடங்க
வொளிர்வா ரிறுக்குந்‌ தனங்குலுங்கப்‌
பசந்த மேனி வெயர்வரும்ப வுரோமம்‌ பொடிப்ப நடம்பயின்றாள்‌. 63

நடனம்‌ புரிந்து பெறுவதெலா
நல்கு வதுகொண் டவணீங்கி
மடம தருள்வார்‌ கள்புடைசூழ
மாட மணுடுப்‌ பசுங்கிளிக
ஞுடன்நன்‌ மொழிகள்‌ பலபயின்‌றிட்‌
டுணவு பொசித்திட்‌ டுறைபள்ளி
இடமங்‌ கணுகிப்‌ பஞ்சணைமே
லிசைந்தே திருக்கண்‌ வளர்ந்தனளால்‌, — 64-திருக் கண்‌ வளர்த்தாள்‌ – உறங்கினாள்‌. ‘**:அம்‌ மா மலர்க் கண்‌ வளர்‌கின்றான்‌”’ என்பர்‌ சடகோபர்‌

பாரகாலரின்‌ விரகம்‌
பரகா லனுந்தங்‌ கிடமணுகிப்‌ _
பஞ்ச சயனத்‌. இனிதமர்ந்திட்‌
டிரவான்‌ மதிபெய்‌ கொடுங்கனலால்‌
எய்தும்‌ பொதியத்‌ தென்றலினால்‌:
அரவார்‌ கடலி னொலிக்கூற்றால்‌
அன்றிற்‌ புலியால்‌ வென்‌ நிமதன்‌
கரவாய்ப்‌ பொழிஐங்‌ கணைவிடத்தாற்‌
கலங்கி யுறங்கா துருகினனால்‌, 65-பஞ்ச சயனம்‌-படுக்கை, அஞ்சுருவிட்டுச்‌ செய்த படுக்கை. பஞ்சவிதமான படுக்கை.
அழகு, குளிர்த்தி, மார்த்தவம்‌, பரிமளம்‌, தாவன்யம்‌ ஆக ஐந்துருவிட்டுச்‌ செய்த
படுக்கை” என்பர்‌ வியாக்யான சக்ரவர்த்தி பெரியவாச்சான்‌ பிள்ளை

உருகி யுருக நினைந்துநினைந்‌ துண்ட காம விடமதனாற்‌
கருக மேனி யவளையின்னும்‌
காணு மாசை யெனுமமுதம்‌
பருகி யுயிர்பெற்‌ றிவ்வகையா
யிரவை யொழித்தான்‌ பகலோனும்‌.
பெருகி யொளிருங்‌ கிரணமுடன்‌
பிறந்தான்‌ குணபாற்‌ பெருங்கடலின்‌. . 66

காலைப்‌ பொழுதி னஸெழுந்துசெய்யுங்‌
கரும மியற்றி முடித்திடுமவ்‌ வேலை தனதா ருயிர்த்தோழர்‌
மேவ வவர்தம்‌ முகம்தோக்கி
மேலைப்‌ படருங்‌ கருமமெலா
மூணர்வீர்‌ நீவிர்‌ விரைந்தெய்தி
யாலைக்‌ கரும்பின்‌ மொழியளெனை
யனையும்‌ வகைசெய்‌ தர௫ுண்மினென்றான்‌. 67

அந்த மொழியை தோழர்கள்சென்‌
றகல்வா னொழிந்திங்‌ கடைந்தவடன்‌
தந்தை தாயா ர௬ுடன்மொழிய
வவருங்‌ கேட்டுச்‌ சாற்றுமவர்‌
எந்த வூர்யார்‌ குலம்பெயரென்‌
.னெனவே கேட்க வுளதுரைக்கச்‌
சிந்தை மஒூழ்ந்திட்‌ டவற்கவளைத்‌ ட்ட
இருமா மணஞ்செய்‌ திடநேர்ந்தார்‌. 68

குமுதவல்லியாரின்‌ திருவுள்ளம்‌
அதனை யறிந்தக்‌ குமுதவல்லி யவன்றன்‌ செய்கை யறிந்ததனால்‌
விதனத்‌ துடன்யா ஸிவ்வுலகின்‌ விண்விட்‌ டிழிந்த துணர்வீரான்‌ தனொத்‌ துளனே யாயினும்பல்‌ வளத்தின்‌ மிகுந்தோ னாயினுமச்‌
சுதனுக்‌ கடியா னல்லனவன்‌ சுடலை யாடிக்‌ கடிமையுளான்‌. . 69

ஆத லாலங்‌ சுவர்க்களித்த
லடுக்கா தவனைச்‌ சேர்வதிலும்‌
வீத லேநன்‌ செனவடியேன்‌
விரும்பி யனலிற்‌ புகுவனென
வோத லோடு மம்மொழிகேட்‌
்‌ டுனது நினைவஃ தெனிலுன்மேற்‌
காத லாலங்‌ கவன்றிருமால்‌
கழற்குத்‌ தொண்டா குவன்கண்டாய்‌. 70

என்ன வந்த வவன்றோழ
ரிதனை யெடுத்திட்‌ டியம்புதலும்‌
அன்ன செய்கை யவன்புரியி
லவனை மண.நான்‌ புரிவனெனச்‌
சொன்ன மொழிகேட்‌ டவர்களுந்தந்‌
தோழ ரிடத்தில்‌
பன்ன வதனைப்‌ பரிவுடனே
பரகா லனுங்கேட்‌ டுளமகழ்ந்தான்‌. 71-

பரகாலர்‌ மாலடியாரானார்‌
அந்த மடமா தென்னுடனோர்‌
அணியா தனத்தி னிருப்பளெனில்‌
இந்தவ கைசெய்‌ இடவரிதோ’வென்றக்‌ கணத்தென்‌ றலை௫ரைத்து மூந்து மிரண்டு புயந்தனிலு | மாழி வளைமுத்‌ திரைபொறித்துச்‌
சிந்தை தெளிகே சவவாதித்‌
திருமண்‌ காப்புந்‌ தரித்தனனால்‌. 72

தோழர்கள்‌ குமுதவல்லியாரின்‌ கருத்தை உரைத்தலும்‌ பரகாலர்‌
காம்பறத்‌ தலை சிரைத்து, தோளில்‌ சங்கு சக்கரம்‌ பொறித்து, இருமண்‌ காப்பு-அணிந்து, வைணவரானார்‌. மதம்‌ மாறும்‌ போது தலை ிரைப்பது மரபு
என்பதை வடிவழகியாரும்‌ குறிப்பர்‌

-தளங்கொள்‌ வனமா லிகையினொடுந்
தாளார்‌ தண்ணந்‌ தாமரையின்‌
வளங்கொள்‌ மணியின்‌ றாழ்வடமும்‌
மணப்பூண்‌ டயங்குந்‌ திருமார்பில்‌
விளங்கும்‌ படியாய்த்‌ தரித்தவனும்‌
விரைந்து வருத லறிந்துமுயற்‌ களங்க மிலாத மதிமுகக்கா
ரிகையு மணத்தற்‌ கொருமித்தாள்‌. 73

ஒருமித்‌ திடப்பொற்‌ நூணிறுத்தி யுயரச்செழும்பட்‌ டதுவிரித்துக்‌
குருநித்‌ திலச்சா லர்கள்தூக்கி
குலமா மணியின்‌ விளக்கேற்றி
யருகிற்‌ கமுகுங்‌ கதலியுஞ்சேர்த்‌
குண்டி மனுக்கட வுள்தச்சன்‌
நிருமித்‌ திடுமோ ரண்டமென
மணிப்பந்‌ தலினை நிரப்பினரால்‌. 74

சாந்தால்‌ மெழுடச்‌ சுண்ணத்தாற்‌
றயங்கும்‌ கோலந்‌ தனையெழுதி
பூந்தா மரைகள்‌ பூத்ததுபோற்‌
பொற்பா லிகையைம்‌ பதுமுதலாய்‌

மாந்தர்‌ பலர்சேர்ந்‌ தவரவர்கள்‌ .
மற்று மியற்று வகையெல்லாம்‌
வேந்தர்‌ தமக்கு மிவ்வளமை ட
விளையா தெனவே யமைவித்தார்‌. 75

மங்கல நாண்‌ புனைந்தார்‌
உருமின்‌ முரச வகைமுழங்க
வொளிர்சங்‌ இனங்கள்‌ பலகுமுற
விருவர்‌ தமையு மணக்கோலம்‌
இயைவித்‌ தோரா தனமிசையே
மருவ விருத்தக்‌ கனன்முகஞ்செய்‌ ‘
வகைக ஸணிரப்ப மகிழ்வினொடுந்‌
இருமங்‌ கிலியங்‌ குமுதவல்லிக்‌
கணிந்தா ஸுயர்சீர்ப்‌ பரகாலன்‌. 76

மணமார்‌ முறைகள்‌ பலவும்விதி
வகையின்‌ வழுவா தஇயற்றியபின்‌
குணமார்‌ மடந்தை யொடுமறையுட்‌
குறுகி யணையுட்‌ பொருந்துதலும்‌
கணவ னாக வந்தபர
காலன்‌ றிருமே னியையரவின்‌
பணமா ரல்குற்‌ குமுதவல்லி
பாரா விதனைச்‌ இந்தித்தாள்‌. 77

தடனம்‌ புரியத்‌ தமதுருவ
மாற்றி வேறோர்‌ நற்கோலஞ்‌
சடல மணியு மவர்போலத்‌ தாங்குங்‌ கோல மகத்தினுளே அடல்சே ராழிக்‌ கரத்திருமா
லணுகக்‌ காணோம்‌ ஆதலினால்‌
தொடலா காதென்‌ றணைதனைவிட்‌
டெழுந்தா ளவனுஞ்‌ சோர்ந்துரைப்பான்‌. 78

என்னே யென்னை யிகழ்ந்தெழுந்த
இயம்பு கெனவாங்‌ கவன்கேட்பப்‌
பொன்னே யனையா ஸணினைந்ததனைப்‌
புகலக்‌ கேட்டாங்‌ கவன்மகிழ்வாய்‌
முன்னே நீயென்‌ னண்பருடன்‌
மொழிந்த நெறியின்‌ முறைபுரிந்தே னின்னே புரியும்‌ வகையுரைக்கி
னதையு மிழைப்ப னெனவுரைத்தான்‌. . 79

குமுதவல்லியாரின்‌ நிபந்தனை
அனைய மொழிகேட்‌ டாங்கவளும்‌
அவனம்‌ புயமா முகனோக்கி
யெனை நீ தொடவேண்‌ டினையென்னிற்‌
நிருமா லிருநா லெழுத்ததனை : நினைபா கவதர்‌ நூற்றெண்மர்‌
மருந்தா ரமூதளித்து வினைநீங்‌ கவர்தம்‌ பதவுதக
மிசைந்து வரவேண்‌ டிடுமென்‌ றாள்‌. 80-

திருமால்‌ இருநால்‌ எழுத்து-அஷ்டாட்சரம்‌, 108 பாகவதர்களுக்கு அமுதம்‌ வழங்க வேண்டும்‌,
பதவுதகம்‌-திருவடித்தீர்த்தம்‌.

அன்ன திழைத்து வருவேனென்‌
றம்மா நகர்வா மந்தணர்கள்‌
பன்னு மொருநூற்‌ றெண்மருக்குப்‌
பரிவிற்‌ றேவா வமிர்தமென  மன்னு மிருமூ வகைச்சுவையின்‌
மலியா ரமுத மருத்தியிவர்‌
_.. துன்னும்‌ பததீர்த்‌ தமுமருந்தித்‌ த தூயோ ஸனாய்மீண்‌. டடைந்தனனால்‌–81-

கண்டா ளவனுட்‌ டிருமாலுங்‌ ர
கலந்த பரிசா னுளங்கனிந்தவ்‌
வண்டார்‌ குழலி யவனுடனோ
ப ரணையின்‌ மருவி யிதழமுதம்‌
உண்டா ரொருவர்க்‌ கொருவர்முலை
யுடன்மார்‌ பிறுகும்‌’ படிதழுவிக்‌
கொண்டார்‌ மதனூல்‌ வழுவாம ட்ப
லின்பக்‌ கடலுட்‌ குளித்தெழுந்தார்‌. ‘–82-

வேறு
இம்மா முறையே திளம்நூற்‌ .
றெண்பே ரும்மா னகர்வாழ்‌ –
செம்மா மறையோ ரண்டு
தெவிட்டும்‌ படி யாரமுதம்‌.
எம்மா நிலமும்‌ புகழும்‌ OR ee tl
படியங்‌ கவனு மியைவித்‌ ௩1.
.” தம்மா னிதழ்வா யமுதுண்‌ ன ன ரோ
டுறையு மன்னா டனிலே. 83

கையிற்‌ பொருணீங்‌ இயபின்‌
கடன்கொண் டதிலம்‌ – முறையே ©
செய்யு மளவிற்‌ பலநாள்‌
சென்ற பின்னர்‌ கடனும்‌.வையத்‌ தெவரும்‌ நல்கா
தொழிப்ப மனமங்‌ கவனும்‌
நையுற்‌ தொருநாள்‌ புரியா
துறைவீ டதைநண்‌ ஸணுதலும்‌. ்‌ 84

மன்றன்‌ மலர்சே ரளகக்‌
குமுத வல்லிப்‌ பெயர்மான்‌
நன்றங்‌ கெதிர்சென்‌ றவனை
தோக்கா விதனை யறைவா
ளென்றும்‌ நின்னோ டாலிக்‌
கிறைவன்‌ வருவா னவனும்‌
இன்றுன்‌ னுடனே கூடி
வருதல்‌ காணா மென்னா. 85

கதவந்‌ தனைமூ டித்தாழ்‌ காப்புக்‌ சடிதிட்‌ டிடலும்‌
மதனொத்‌ திடுமக்‌ கலியன்‌
வாடித்‌ தெருவின்‌ கண்ணின்‌
இிதமுற்‌ நிடநல்‌ வசனம்‌ மவடன்‌ ஸிருகா துறுமவ்‌
விதமொத்‌ தடவோ தினனாய்‌
மீண்டும்‌ பகர்வா னானான்‌. -86

மானேர்‌ விழியாய்‌ தனமும்‌
பிரியா துடனே வருமத்‌
தேனார்‌ கமலைக்‌ திறைவ
னின்றென்‌ னுடனே செல்லாதேனோ வதனைகத்‌ தெளிய
வுரைநீ யெனலும்‌ மவளும்‌
ஆனா வன்னாள்‌ ததியா
ரதனஞ்‌ செய்வா யதனால்‌. , 87

உன்னோ டே. ராலித்‌
இருமா லுற்றா. னவைதா
னின்னாள்‌ புரியா தமையா
லெய்தா தொழிந்தா னறிறீ
யென்னா மொழியக்‌ கேளா
வென்கைப்‌ பொருளுள்‌ ளனவும்‌
பொன்னே யனையாய்‌ பலநாள்‌
புரிந்தே னதுபோ யினபின்‌.- 88

சிலனாள்‌ கடன்கொண்‌ டதனைச்‌
செய்தேன்‌ கொடுப்போர்‌ வேறிந்‌
நிலமீ தலையா லதையா
னிகழ்த்தும்‌ வகையே தென்னக்‌
குலமா மணியே யனைய
குமுத வல்லிக்‌ கொடியும்‌
பலர்தம்‌ பொருணிீ வழியிற்‌ ‘
பறித்தா லுஞ்செய்‌ தடைவாய்‌, 89

என்றங்‌ கவளும்‌ புகல்வ
இருசெஞ்‌ செவிவந்‌ துறலும்‌
நன்றென்‌ றவண்விட்‌ டே .
நலிசெய்‌ தொழிலின்‌ மிக்கோர்‌
குன்றம்‌ பொருதோட்‌ பலரைக்‌
கூட்டிக்‌ கொண்டே தானிற்‌
சென்றங்‌ கடைவோர்‌ பொருளைப்‌பறிக்கும்‌ செய்கை யறைவாம்‌. 90-பலர்‌-நீர்மேல்‌ நடப்‌
பான்‌, நிழல்‌ ஓதுங்குவான்‌, தாமூதுவான்‌, தேலா வழக்கன்‌, முதலானோர்‌.

பரகாலர்‌ கள்வராதல்‌
குடபாற்‌ கடலின்‌ கிழக்கில்‌
குணபாற்‌ கடலின்‌ மேற்கில்‌
வடமே ருவினிற்‌ றெற்கில்‌
வதிதென்‌ கடலின்‌ வடக்கில்‌
இடமெங்‌ கணினும்‌ வழியின்‌
னியல்வோர்‌ பொருள்கொண் டிடவே
கடவீ ரென்றே பலரை
யேவிப்‌ பரகா லனுமே. 91

சேரன்‌ சோழன்‌ மாறன்‌
தேசத்‌ இடைபா தைகளின்‌
ஓரங்‌ களில்பல்‌ லோரை
யேவி யுறுமங்‌ கவர்கள்‌
ஆரத்‌ துடனே பொருளு
மாடை பலவுங்‌ கொண்டு
வாரும்‌ மெனவே தானோர்‌
மரநீ ழலின்வை கனனால்‌. 92

ஏவும்‌ பலசே கவர்க
ளெங்கும்‌ வழிபா தைகளின்‌
மேவும்‌ மவர்கைப்‌ பொருளும்‌
மிளிரா பரணம்‌ முதலாய்‌.
யாவுங்‌ கொடுமென்‌ . றடியா
வதட்டா வெருட்டா வெருவி
நாவும்‌ மனமும்‌ முடலும்‌
நடுங்கப்‌ பறித்தா ரன்றே. -93-

அவர்கைப்‌ பறியுண்‌ டவர்செய்‌
கதுதனா லெவரும்‌ வழியுந்‌
தவருற்‌ றேகும்‌ மவரைத்‌ , தனியங்‌ ‘ குறையுங்‌ கலியன்‌-எவரிம்‌ முறைசெய்‌ தனரென்‌
றறியான்‌ போலிம்‌ முறைசெய்‌
குவரு மூளரோ வென்ன
மொழிதன்‌ பலவுங்‌ கூறா. 94

ஒருவே ளையினுக்‌ குணவும்‌
பழவத்‌ திரமொன்‌ நுந்தத்‌ குருகாய்‌ வருவித்‌ தவரை
‘யாற்றிப்‌ போமென்‌ ௰னுப்பித்‌ .
தருவார்‌ நிழல்வை குதலுந்‌ தன்றூ துவர்போய்ப்‌ பறித்து
வருமாப்‌ பொருள்கள்‌ பலவும்‌
கொண்டே. யூர்போய்‌ மருவி. ‘:95

இருவின்‌ கொழுனன்‌ னடியார்‌
நாூற்றெண்‌ டிருநா மங்கள்‌
பருகும்‌ படியா ரமுதம்‌ — ‘
முன்பிற்‌ பரிவின்‌ னமையாப்‌
பொருவில்‌ லவர்தம்‌ பதனீர்‌ .
கொண்டே புனிதத்‌ துடனே
வருமங்‌ கவனைக்‌ குழுத
வல்லிப்‌ பெயராள்‌ கண்டே, 96

இன்றுன்‌ னுடனெம்‌ பெருமான்‌
வந்தா னென்றே மகஒிழ்வா
யன்றங்‌ கவனை யழையா
வளாயுள்‌ ளணுகி யவனோ
டொன்றும்‌ மனதாயனைமே
லொருமித்‌ இன்பந்‌ தந்தஇட்‌
டென்றும்‌ மிவ்வா றாகவெய்தத்‌ தகும்நீ யென்றாள்‌. -97-

எம்பெருமான்‌ தடுத்தாட்‌ கொள்ளல்‌
அவ்வா றிவனும்‌ புரியா
பலனா ளவளோ டணுகுற்‌
றொவ்வா வின்பந்‌ துய்த்திட்‌
டுறைநாள்‌ குனின்முன்‌ னாள்வாய்‌
செவ்வாய்‌ திருமாழ்‌ மார்பத்‌
தேவன்‌ ஏவும்‌ மாயை
யெவ்வா றிவனோ டுறைவ
தெனநா ஸணுற்றே கியதால்‌. 98

மாயைத்‌ தொடர்பாங்‌ sae
மயர்வற்‌ றிடுநன்‌ மதியைக்‌
காயைத்‌ தின்போ ஸுக்குத்‌
கனியீ வதுபோ லருளச்‌
சேயைப்‌ பரிவிற்‌ றேடி
விரைந்தே யதன்பின்‌ செல்லும்‌
தாயைப்‌ போலத்‌ திருமால்‌
கலியன்‌ றன்பா லுறவே. 99-

காயைத்‌ தின்போனுக்குக்‌ கனியை யீவதுபோல்‌, மயர்வற்றிடு நன்மதியை அருள, சேயைத்‌.
தேடும்‌ தாயைப்‌ போல திருமால்‌ கலியன்பாலுற, என்று கொண்டு கூட்டுக, .

நினையும்‌ பொழுதிற்‌ பின்னும்‌
வேறிந்‌ நினைவுங்‌ கொண்டான்‌
அனையன்‌ களவின்‌ ஹறொழிலின்‌
னகப்பட்‌ டவன்செய்‌ திடுமவ்‌
வினையந்‌ தனையும்‌ பறிசெய்‌
வேடிக்‌ கைகளுங்‌ கண்டு
குனைபின்‌ பவனுக்‌ கறியும்‌  படிசாற்‌ றுதுமென்‌ பவனாய்‌. 100

குன்பொற்‌ பாதம்‌ தொழுமவ்‌
விதிசங்‌ கரனிந்‌ திரனை ‘
யன்பிற்‌ பாரா நீவி
ரமரர்‌ கூட்டத்‌ துடனே
முன்பிற்‌ செலுமென்‌ றுரையம்‌
மொழியின்‌ மனையா ர௬டனே
இன்புற்‌ றவரும்‌ மவ்வா
ஹேகற்‌ இவ்வா- றமைவார்‌. 101

பிரமன்‌ கலைமா துடன்மா
தவர்தம்‌ வடிவம்‌ பெறலும்‌
பரமன்‌ னுமையா ளொடுசங்‌
கமர்தம்‌ -படிவங்‌ கொண்டான்‌
சுரமன்‌ னயிரா ணியோடும்‌-:- ்‌
நரர்தம்‌ சொருபங்‌ கொளலும்‌
வரமன்‌ ஸிடுறித்‌ தர்களும்‌
இருமுத்‌ தர்களும்‌ மற்றும்‌. 102

வானந்‌ தனில்வை குவரும்‌
மவர்தம்‌ மனையா ௬டனே
மோனம்‌ பெறுசித்‌ தர்களும்‌
முனிவோர்‌ களுமா ஸிடராய்‌
கானந்‌ தனிலா பரணம்‌
கவினப்‌ :பலருஞ்‌ செல்லத்‌
தானும்‌ இருமா துடனே
மறையோர்‌ படிவம்‌ தாங்கா… : 103

பின்னே கிடலும்‌ மதன்முன்‌
பெருங்கா னிடையே வைகும்‌
தன்னே ரில்பர காலப்‌
பேரார்‌ வருவா ர௬ண்டோ
வென்னா வுயரும்‌ மரசத்‌
தருமீ தேறிப்‌ பாரா
வன்னோர்‌ வரவைக்‌ காணா
வகமுண்‌ மகிழ்வா யிழியா. 104

தன்சே வகரைக்‌ கூவா
தடிவாள்‌ வேல்கைக்‌ கொள்ளா
வன்போ டெதிர்சென்‌ றவரை
வழியின்‌ மறியா வுமது
பொன்பூ டணமுள்‌ ளவெல்லா
மேல்விட்‌ டாவி போக்கா
முன்போ டுமெனா மொழியா
முனிவாய்‌ வரன்மே ஸளனோசக்கா. 105

தனனே முதலாம்‌
புலவோர்‌ நித்தர்‌ முத்தர்‌ அருமா முனிவர்‌ சத்த
ரெவரும்‌ மவர்தே வியரும்‌
வெருவா மிரட்டிட்‌ டவர்தம்‌
மேலுள்‌ ளவத்தி ரம்மும்‌
குருமா மணியா பரணம்‌
எவையும்‌ வலுவிற்‌ கொண்டான்‌. 106

அவரே 7கியபின்‌ கமலத்‌
்‌ தயலுந்‌ தளவெண்‌ முளரித்‌
துவர்வா யவளு மிகலூர்‌
துணிவா யவர்தம்‌ பொருளுங்‌
கவர்வா நினைப்போ டவிடம்‌
கடிகித்‌ தடியா னதுகொண்
டிவரே குதலும்‌ வெருவா:
விதனைக்‌ கலைப்பெண்‌ பகர்வாள்‌. 107

ஐயா நீவீ ரெம்மை
அடித்துத்‌ துடிக்கக்‌ கொலைதான்‌
செய்யா துயிரோ டேகும்‌
படியே யருள்கொண்‌ டிடிலெம்‌
மெய்யா பரணம்‌ பலவும்‌
மேல்வத்‌ திரமு முதலாய்க்‌
கையாற்‌ றருவோ மென்னக்‌
கழற்றித்‌ தந்தே கனரால்‌. 108

உடனே சிவனும்‌ முமையும்‌
வரலும்‌ மொளிர்வா ஞடனே
அடல்சேர்‌ தடிகொண்‌ டிவனும்‌
மதட்டிச்‌ செல்லு மளவிற்‌
குடலும்‌ வயிறும்‌ முயிருங்‌
குலையப்‌ ‘பயமுற்‌ றுமையுங்‌
கடலின்‌ விடமுண்‌ டவன்மெய்‌
யுடனே கரவா யினளால்‌. 109

மறையக்‌ கிழிசங்‌ கமநின்‌
னுடனே வந்தா ளெங்கென்‌
றறையப்‌ பயமுற்று றுவனும்‌ மறியே னெனவே செவியுள்‌
உறைகுண்‌ டலமே முதலா
யுளதுங்‌ காவி யுடையுங்‌
குறையற்‌ பதியுற்‌ றவன்கைக்‌
கொடுத்திட்‌ டவனும்‌ போனான்‌. ‘ 110

இவ்வா றெவருந்‌ ததந்திட்‌ டேகும்‌ பொழுதோ ரொருவர்‌
செவ்வாய்‌ மடமங்‌ கயருக்‌
கொருசே லையுமா யவருக்‌
கொவ்வா வொருகோ வணமும்‌
மூதவா மற்றுள்‌ ளவெலாம்‌
எவ்வா வெருட்டிப்‌ பறியா
ஏகும்படிவிட்‌ டனனால்‌, –111

அனைய பொருண்கண்‌ முழுதும்‌
மாலிப்‌ பதியின்‌ னமது
மனையிற்‌ கொடுபோ யடைமின்‌
னெனமற்‌ றவரை யேவி
தனையொத்‌ துயரு மரசின்‌
றருவின்‌ னடிநீ ழலின்வாய்‌
தனையொப்‌ பவரும்‌ நிகராக்‌
கலியன்‌ றனிவை குதலும்‌. 112

வேறு
– வானி லுணரப்‌ படுமயனும்‌
மமுவா எளியுமவ்‌ வாறேகத்‌
தேனி லினிய விளங்குதலைத்‌ இருபின்‌ றுடருந்‌ திருமாலும்‌மேனி முழுது மாபரணம்‌
விளங்க நடந்து வருவதனைக்‌
கானி லுறையும்‌ பரகாலன்‌
காணா விதனைக்‌ கருதினனால்‌, 113

முனிவோ ரிமையோ ருனற்கரிதாய்‌
மூதுமா. மறையின்‌ முடிவிளங்கும்‌
குனிமா முதல்வேற்‌ றுருவமதாய்த்‌
தன்னைத்‌ திருத்தக்‌ கருகியுளம்‌ கனிவா யடைத லுணரானங்்‌
…. கவர்தம்‌ பொருளைக்‌ கவர்ந்துகொளில்‌
இனிநா. மென்றும்‌’ வேறுபொருட்‌
கிச்சை வேண இலையென வே.-1i4

உள்ளங்‌ களிப்பாய்‌ ஏவனடநீ
யோடா தேநில்‌ லெனவெதிர்போய்‌
புள்ளந்‌ தனைவான்‌ மிசைசு ழந்றிச்‌
போவ தெங்கென்‌ றதட்டியுன்வாய்‌
விள்ளப்‌’ புகுவென்‌ : றங்கவர்பால்‌
விளங்கும்‌ பணிதிக்‌ ககமகழ்வாய்‌
துள்ளித்‌ துள்ளி நடம்புரித்‌ ணரா மறையோ னிவைசொல்வான்‌. 115

அப்பா! கேணாம்‌ வேட்டகம்போய்‌
யாங்குற்‌ நிடுமென்‌ மனையவளாம்‌
இப்பா வையொ டுமுனதாலிக்‌ ்‌
கேகு வெனநீ யெகிர்வந்தே -கைப்பா யிடுங்கட்‌ குடித்தாடுங்‌
களிபோற்‌ குதித்த லெவனெனவே
– செப்பா வதற்குத்‌ திருமங்கை
மன்ன ஸனிதனைச்‌ செப்பிடுவான்‌,–116-

பரகாலர்‌ நிகழ்ந்தவை கூறல்‌
மறையோய்‌! கேட்டி யுயிர்போல .
மருவு மெனது மனையவளாம்‌
மிறைபோ ஸுதற்சேர்‌ குழுதவல்லிப்‌
பெயராள்‌ இனமு மிவ்வூரில்‌
உறைபா கவதர்‌ நூற்றெண்ம
ருண்ணத்‌ ததியா ராதத்தை முறையோ டிழைக்கி னலாலென்மேன்‌
முனிவாய்த்‌ தன்னைத்தொட வொட்டாள்‌.–117-

அதனாற்‌ பொருள்கை யுள்ளனவு
மந்த முறைசெய்‌ தனன்பின்னர்‌
இதமாய்ப்‌ பிறர்பாற்‌ கடன்கொண்டிட்‌
டிழைத்தேன்‌ அதற்பின்‌ கடன்யாரு
முதவா தொழிய வுற்றதற்பின்‌ . இதெலா மவளோ டுரைத்தினியான்‌
புரிவ தெனக்கேட்ப
விவ்வா றிழையென்‌ றவளுரைத்தாள்‌.–118-

அந்த முறையால்‌ வழிபறித்தங்‌
கதனை முயல்வேன்‌ பலர்பொருளோ
டிந்தந்‌ இனமும்‌ வரப்பறித்தெம்‌ – மில்லத்‌ ததனை தூதுவர்பான்‌
முந்த வனுப்பி யினும்வருவா
ருண்டோ வெளவிம்‌ முறையிருக்க
வந்த வுமது பொருள்பறியா விடுகேன்‌; எனக்கு வழக்கீதே.–119-

ஆத லாலும்‌ மிடத்துளதாம்‌
பொருள்க ளனைத்து மெனக்களித்‌
போத லேநன்‌ கல்லவெனிற்‌
புடைத்துப்‌ பறித்திட்‌ டுமதுயிரைக்‌
காது வென்கை யுடைவாளா.. :
லென்னக்‌ சுதித்திட்‌ டருகணைய
மாது தாட்டா மரைவதனம்‌
நோக்கி மறையோன்‌ வகுத்துரைப்பான்‌. 120

மனையா டனது காதலினால்‌
வழியில்‌ வருவோர்‌ தமதுபொருள்‌
தனையாங்‌ கவர்கள்‌ துயரமுற
வாள்கொண்‌ டடர்த்துக்‌ கவர்ந்திடுமிவ்‌
வினையான்‌ கள்வ னோவலதிம்‌
மிகுந்த பொருள்கொண்‌ டருந்தியிடும்‌
அனையார்‌ கள்ள ரோ?விதனை
யறிய வுரைநீ யென்றனனே. 121

கேட்ட மடவா எளிக்கொடியோன்‌
கிடைத்தற்‌ கரிதா யெனையளித்தோர்‌
பூட்டும்‌ பணிகள்‌ பலவுமது
போதா தெனவீன்‌ றவரையருள்‌
பாட்டன்‌ பாட்டி யவரிடுதற்‌
பணிதி பலவும்‌ பலபலவாய்‌
வேட்ட வகத்தோ ரிட்டதுவும்‌ ன
விரும்பிப்‌ பறிக்கத்‌ துணிந்ததனால்‌, ட. ட. 122

அந்த பயத்தால்‌ எனக்கொன்றும்‌
‘தோன்ற விலையென்‌ றவளுரைப்ப
இந்த விதமா யொருவர்முகம்‌
, “ஒருவர்‌ தோக்கி யிருந்திடலும்‌
சிந்தை முனிவாய்ப்‌ பரகாலன்‌
செங்கை யுறைவாள்‌ தனைச்சுழற்றா
வுந்தன்‌ முடியான்‌ றுணிப்பனென்றவ்‌
வொளிர்வாள்‌ தன்னன யோங்குதலும்‌. 123

அஞ்சி நடுங்கு மவர்போன்மெய்‌
நடுந்கா வவனை நோக்கியெமைத்‌
துஞ்சப்‌ பொருதா லஇிலுனக்கென்‌
பயனோ சொல்‌ ?லெம்‌ பாலுளவாம்‌
விஞ்சு மணியா பரணமெலாந்‌
தருவே மெனவேண்‌ டுதலாகக்‌
கஞ்சன்‌ றனையுந்‌ இயினளித்த
. கடைமா மறையோன்‌ கழறலுமே. 124

அதுவெஞ்‌ செவியுற்‌ றிடலுமுறை யணிவா எிட்டுக்‌ கதைகரத்திற்‌
கதுவப்‌ பிடித்திட்‌ டடிப்பதுபோற்‌
கப்பி யிடவம்‌ மறையவனும்‌
மதுகைப்‌ புயத்தோய்‌! நீயடியே
லென்னா மேல்வத்‌ திரமதனை
இதுகைக்‌ கொள்ளென்‌ றெறிந்திடலு
மவனு மிதனை யியம்பிடுவான்‌. 125

உனதுத்‌ தரியம்‌ தந்ததனா
லென்னோ பலனுள்‌ ளதுமேலும்‌
மனதுக்‌ இசைய மனையவளென்‌றுரைதந்‌ திடுமிம்‌ மடமங்கைதனது பணிக ளஞூள்ளவெலாந்
. தரிக்கு மொருவத்‌ திரம்தவிர
வெனது இருமுன்‌ வைத்திடுவா
-யெனமங்‌ கையர்கோன்‌ அதட்டலுமே. 126

மறையோ ஸனெனுமத்‌ திருமாலு
மணியா பரணந்்‌, தனைமடவாண்‌ –
முறையோ வெனத்தன்‌ தநிருக்கரத்தாற்‌
கழற்ற வேகு முறையறிந்து நிறைநா ணொன்றும்‌ வேண்டேன்மற்‌
றுளவெ: லாம்நீ தருகென்றே
_ கறைவாட்‌ டொழிலில்‌ நிகரில்பர
கால ஸுரைப்ப .வதுகேளா. .–127

நீல னுரைத்த படிமடவா
ணிறைநா ஸணொணன்றும்‌ தவிர்ப்பித்துச்‌ ்‌
சால வணியும்‌ பணிகளெலாஙம்‌: .
கழற்றி யவன்கை தந்தனனால்‌;
கால னளெளப்பூந்‌ ‘தடத்தடருங்‌
கராவின்‌ வாய்ப்பட்‌ டுளங்கலங்கி
மூல மெனவன்‌ றழைத்தகரி
முன்வந்‌ ததன்பே ரிடர்தவிர்த்தோன்‌. 128

அந்த மணியா பரணங்கள்‌
யாவும்‌ கைக்கொண் டதன்பின்னர்‌
உந்தன்‌ மேனி தொடுகிலன்யானொளியா துன்மே லுள்ளவெலாந்‌ – குந்தி டெனக்கை விரலணியுந்‌
இருவா ழிதனைத்‌ தவிர்ந்திடமற்‌ றெந்த வெந்த வாபரண .
மெல்லாங்‌ கழற்றி யீந்தனனால்‌. 129

அதுவுங்‌ கரத்திற்‌ கொண்டதற்பின்‌ னம்மா மறையோன்‌ மேனிதனைப்‌
பதும நிகரும்‌ பதமுதலாய்‌
முடியீ றாகப்‌ பார்த்திடலும்‌
கதுவுங்‌ கரத்தி லாழிதனைக்‌
கண்ணிற்‌ காணாப்‌ பெருங்களவா
இதுநீ யொளித்தால்‌ விடுவேனோ?
வதையும்‌ தருக வென்றனனால்‌. 130

கொழுந்து பொருந்திப்‌ படர்கீர்த்திக்‌
கலிய னிதனைக்‌ கூறுதலும்‌
எழுந்து பெருகு முவகையையுள்‌
ளடக்கி யிஃதென்‌ கைவிரலில்‌
அழுந்து முறையாற்‌ கழற்றுதலுக்‌
கொவ்வா வெனக்கேட்‌ டாங்கவனும்‌
செழுந்து ளவன்றி ருக்கரத்தைக்‌
கையாற்‌ பிடித்துச்‌ செப்பிடுவான்‌. 131

இவ்வா றாகக்‌ கழற்றுகென்றங்‌
குலியைக்‌ கரத்தாற்‌ பிடித்திழுக்க
அவ்வா ழியுங்கை வராமையினா
லதனை வாய்கொண்‌ டீர்த்தனனால்‌
கவ்வா விழுக்கும்‌ பொழுதெமது
““கலியனோ” வென்றவன்‌ முடிமேல்‌
ஓவ்வா வலது கரந்தனைவைத்‌துகந்தா னனைபா லுண்டுகந்தோன்‌. 132

பரகாலர்‌, சைவிரலில்‌ உள்ள இருவாழியை வாய்‌ கொண்டு கடித்து
இழுத்தார்‌. அப்போது பெருமான்‌ உவந்து **எமது ஈலியனோ”’ என்று கூறி அவர்‌
முடிமேல்‌ வலதுகரத்தை வைத்தான்‌,

தலைமேல்‌ கரம்வைத்‌ துகந்இடவுந்‌
தெரியா னாகி யதைத்தவிர்த்தே
மலைபோற்‌ குவித்த பணிமூட்டை
தனைச்சென்‌ றெடுக்க வதுபுவியின்‌
நிலையா யழுந்தி வராமையினை
யறிந்தாங்‌ இதனை நினைவுற்றான்‌
வலைபீ றநிடுஞ்சேற்‌ றடம்பலவாய்‌
மருவுங்‌ குறைய லூர்வள்ளல்‌. – ட 133

முன்னே யடைந்தோர்‌ தமதிடத்துங்‌
கவர்ந்த தெடுத்தோம்‌ இவன்பணிகள்‌.
என்னே புவியிற்‌ பொருதந்லிவன்‌ ்‌
செய்மந்‌ இரிப்பா மெனவுணர்ந்திட்‌
டன்னோன்‌ தனைப்பார்த்‌ ததட்டியடா
மறையோய்‌ யறிமந்‌ இரவன்மை
றன்னால்‌ கவ்வை யழுந்திடச்செய்‌
குனைசொல்‌ சாற்று கென்னலுமே. 134

அந்த வுரைகே ளாமூனங்கற்‌
றிந்த திருமத்‌ திரமதனால்‌ இந்த முறைசெய்‌ தவன்யானே
யிதனை யறிநீ யென்றுரைத்தான்‌
முந்த வொருவா ளவுணனிடம்‌
குறளாய்‌ மண்மூ வடியிரந்துட்‌ –
டெந்த வுலகும்‌ ஓஒரடிகொண்டளந்தே கவர்ந்த வெம்பெருமான்‌. 135

ஆழ்வார்‌ மந்திரம்‌ பெறல்‌
ஆனா லந்த மந்திரத்தை அறியும்‌ படியிங்‌ கெனக்குரைத்துப்‌
.,போனா யெனிலுன்‌ றனையுனதூரா்‌
போக விடுப்பேன்‌ அலையெனிலுன்‌
னானா (HO தனையென்கை
யொளிர்வா .ளதனாற்‌ றுணித்துயிர்போய்‌
வானா டாளும்‌ படிவிடுப்பேன்‌
மறையோய்‌ யிதைநீ யறியென்றான்‌. 136

கொடியோ னான பரகாலன்‌
கொதிப்பா யுள்ளங்‌ களிப்பெய்தி
வடிவா ளதனை யுறைகழற்றா
வையம்‌ நடுங்கும்‌ படிநடந்துன்‌
முடியான்‌ றுணிப்பே னெனவவனும்‌
முடிகி வரலும்‌ பயந்தவன்போல்‌
படிமீ தவ்வாள்‌ வைத்துவரிற்‌
பகர்வே னென்றான்‌ படியுண்டோன்‌. 137

புகலு மொழிகேட்‌ டவ்வாளை
யுறையுட்‌ புகுவித்‌ தருகணையும்‌ இகலோன்‌ வளது திருச்செவியி
லுள்ளத்‌ இருளை வெகுண்டெரிக்கும்‌
பகல்போ லிருநா லக்கரமாந்‌
இருமந்‌ தரத்தைப்‌ பகர்ந்திட்டான்‌
அகல்பூ விடைவா முயிரளித்த வயனுக்‌ கனமாய்‌ மறையறைந்தோன்‌. 138

சூரியன்‌ இருளை
ஓட்டுவான்‌. அதனால்‌ அவ்விருள்‌ மீளவும்‌ வருகிறது, ஆனால்‌ அஷ்டாட்சரமோ
உள்ள இருளை எரித்து விடுகிறது. அயனுக்கு அறைந்த மந்திரம்‌-ஹம்ச சதை.
“அன்னமாக அருமறைகள்‌ அருளிச்‌ செய்த அமலன்‌”? என்று பெரிய திருமொழி
பேசும்‌. ”அன்னமாய்‌ அறைந்தாய்‌ நீ” என்பர்‌ கவிச்சக்ரவர்த்திகள்‌,

மாயை நீங்கியது
வானே முதலாம்‌ பலவுலகும்‌
வயிற்றுள்‌ எடக்கு நாரணனுந்‌
தானே தன்னை யவனறியச்‌
சாற்றுந்‌ இருமந்‌ இரமதனால்‌ கானே வருவோர்‌ தம்மைவாள்‌
்‌. காட்டிப்‌ பறித்த பரகாலன்‌
ஊனே யுடல்சோ ஷித்தாந்தி
யங்க ஞம்விட்‌ டோடினவால்‌. 139

குன்னுள்‌ ளிருந்த கொடுமாயை
தனைவிட்‌ டொழிதந்த தன்மையும்பூ
மன்னுந்‌ திருமா துடன்திருமா
லுகந்த செயலும்‌, மற்றவர்தம்‌
பொன்னம்‌ பதங்க ள.றியுணர்வும்‌,
பரம பதத்திற்‌, புகும்வழியும்‌, துன்னு முயிர்கள்‌ பெறுவாழ்வுந்‌,
இருமந்‌ திரத்துட்‌ டோன்றலுமே. 140-

இருமந்திரத்தால்‌ ஆழ்வார்‌ உணர்ந்தவற்றை ஆரியர்‌ விவரிக்கிறார்‌.
கொடு மாயை ஒழிந்த தன்மையும்‌, திருமால்‌ உகந்த செயலும்‌, பதங்கள்‌ அறி
உணர்வும்‌, பரமபதத்திற்‌ புகு வழியும்‌, உயிர்கள்‌ பெறுவாழ்வும்‌, இரும்ந்திர த்தால்‌
தெரிந்தன. இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ** அர்த்த பஞ்சகம்‌ ** என்பர்‌.

மனம்வாய்‌ யொருமித்‌ தவன்றுருத்தி ்‌
வைத்தூ திடுமக்‌ கொல்லனுலைக்‌
கனல்வா யுருகு மெழுகெனலாய்க்‌
கந்து கசிந்திட்‌ டுளமுருகித்‌
தனதா முடலந்‌ தனதுவசந்‌ தானா காமற்‌ றனிமுதலின்‌
முனமே விழுந்து புரண்டுபுரண்‌ ‘டெழுந்தே முறையா னோக்கலுமே. 141

இறைவன்‌ கோலங்‌ காட்டல்‌
மறையோ னான திருவுருவம்‌
மாற்றிக்‌ கமலத்‌ இருவுடனே
சறையார்‌ கருட னெருத்தமிசைச்‌
செம்பொன்‌ முடிமா முடியோங்கக்‌
கறையா ராழி வளைசிலைவாள்‌
கதையைம்‌ படையும்‌ புடைதயங்க
நறையார்‌ துளவப்‌ படலையொடுங்‌
கவுத்து வமும்நன்‌ மார்பொளிர. ்‌ 142

அரையிற்‌ பீதாம்‌ பரம்விளங்க
வணியம்‌ புயத்தின்‌ வலயமின
வுரைசெய்‌ நயன மணிவாய்கை
யுந்திச்‌ சரண மெனவொளிரும்‌
விரைசெய்‌ கமல வனமலர்ந்தோர்‌
மேகம்‌ விசும்பி னிடைபசும்பொன்‌
வரையின்‌ மிசையுற்‌ ெழுந்திருந்து
வருத லெனலாய்‌ மாணுறவே. ்‌ 143

நயனம்‌, வாய்‌, கை, உந்தி, சரணம்‌, இவைகள்‌ தாமரைக்காடு போன்றி
ருந்தன. திருமால்‌ கமலவனம்‌ பூத்த மேகம்‌ போன்‌ றிருந்தான்‌. கருடன்‌ பொன்‌
மலை போன்‌ றிருந்தான்‌. “கருமுகில்‌ தாமரைக்காடு பூத்து, செம்பொற்குன்றின்‌
மேல்‌.வருவயபோல்‌ கருடன்‌ மேல்‌ வந்து தோன்றினான்‌ “என்ற கவிச்சக்கரவர்த்த
களின்‌ (பால) பாடலுக்கு விரிவுரை இங்கு உள்ளது.

வனும்‌ வேளும்‌ கரிமுகனுஞ்‌
செங்கேழ்‌ கமலந்‌ தனிலுறையும்‌
அவனும்‌ புருகூ. தனும்வானத்‌
. தனைவோர்‌ களுமைம்‌ புலனவித்த தவரும்‌ நித்தர்‌ முத்தர்கள்கின்‌
னரர்கந்‌ தருவர்‌ சத்தர்முதல்‌
எவரும்‌ புடையி.ற்‌ சயசயவென்‌
றஹேத்துித்‌ தொழுது வணங்கவும்‌. 144

அண்டத்‌ துறுதுந்‌ துமியினங்க
ளலைமாக்‌ கடல்போல்‌ அதிர்ந்தொலிக்க
கண்டொத்‌ இடுஞ்சொல்‌ லரம்பையர்க
. ஸணடனம்‌ புரியக்‌ கைப்பிரம்பாற்‌
றெண்டித்‌ தெதிரிற்‌ சேனையர்கோன்‌
விலக்கத்‌ திருந்து முலகமெலாம்‌
உண்டிட்‌ டுமிழ்ந்த திருமாலா
மொருவன்‌ விளங்கல்‌ தனைக்கண்டான்‌. 145

கண்டான்‌ பின்னும்‌ புவியின்‌ மிசை
விழுந்தான்‌ எழுந்தான்‌ கரந்தலைமேற்‌
கொண்டான்‌ நந்தா தோடினன்பின்‌
குதித்தான்‌ நடித்தான்‌ களிநறவ
முண்டான்‌ போலச்‌ செயல்களொன்று
முணரான்‌ — யொருமுறையே
வண்டார்‌ துளவன்‌ நிருமேனி
மகிழ்ந்து நோக்கா வகுத்துரைப்பான்‌. 146

வேறு
உன்னைநீ யுணர்கிலா யுனது மாயைகள்‌
துன்னையா னறிந்திடுஞ்‌ தகைய தாகுமோ?
வன்னையா யத்தனா யகில முந்தரும்‌
பொன்னைமார்‌ பகத்தணி புனித மூர்த்தியே |. 147

காலநேர்‌ கனகனை கடிந்த வன்றரும்‌
பாலனைப்‌ பரித்தருள்‌ பரம சோதியே |
மூலமென்‌ றழைத்திடுங்‌ கரிதன்‌ முன்பினோர்‌
நீலமால்‌ வரையென நின்ற மூர்த்தியே. 148

ஆலமுண்‌ டவற்கருந்‌ துயர கற்றியே
சூலமு மளித்தருள்‌ சுருதி நாதனே / நீலவாண்‌ கண்ணழற்‌ பிறந்த நேரிழை
யோலமிட்‌ டரற்றிட வுடைவ ழங்கனோய்‌, 149

அராவணை துயிறுறந்‌ தமரர்க்‌ காகவே
மராமர மனையதோள்‌ வலியி ராவணன்‌
விராதகனே முதலினோர்‌ தமைவி எளித்திட
இராமனென்‌ நயோத்தியி னெய்து மையனே. 150

அடியனை யொருபொரு ளாக வெண்ணியே
கொடியிடை முூளரிவாழ்‌ கோதை யோடுமிப்‌
பொடியுடைக்‌ கானம்நீ புகுத வாளொடும்‌
தடியொடும்‌ வழியிடை தடுத்திட்‌ டேனரோ. 151

பதைபதைத்‌ திடவுயிர்‌ பாரித்‌ திட்டவிக்‌
கதையினா லடிக்க வுங்‌ கருதி வாட்கொடு
வகைசெய நினைந்தனன்‌ வலிய பாவியேன்‌
இதைவிடப்‌ பிறிதின்ன மென்செய்‌ இன்றதே. 152

உனதுநற்‌ பணியெலாம்‌ பறித்திவ்‌ வுத்தமி
தனதுயர்‌ பணிகள்கொண் டாழி தன்விரல்‌
எனதுபுன்‌ வாயினாற்‌ கவ்வி யீர்த்திட
மனதுகொண் டிழைத்தனன்‌ மற்றென்‌ செய்வதே. 153

நல்லிய லல்லபுன்‌ மொழிக ணாவினாற்‌
“சொல்லியும்‌ பலகொடுந்‌ தொழிலி யற்றுமிப்‌
புல்லிய னுய்வினிற்‌ பொருந்தப்‌ புன்றலை
கல்லிடை மோதியான்‌ கழித்தல்‌ நன்றரோ. 154

என்றுகொண் டினையன பன்னி யேடவிழ்‌
மன்றவிழ்‌ துளவணி . மாலை மார்பினான்‌
றன்றிரு முன்னரில்‌ கலியன்‌ றானுமே
கன்றிய மனதொடு முருகும்‌ காலையில்‌. 155

அம்மொழி பலவுங்கேட்‌ டருளி னாழியான்‌
விம்முறு கலியனை விருப்பி நோக்கித்தன்‌
செம்மைசேர்‌ பவளவாய்‌ நகை சிறந்திட
இம்மொழி தனையெடுத்‌ தியம்பு வானரோ. 156

யாமே மயக்கினோம்‌
உன்னைநீ வெறுத்திடே லுனது நல்லுளந்‌
குன்னையாம்‌ மயக்கவித்‌ தகைமை செய்துளோம்‌
முன்னைய துவக்கெலா முடிந்து நீங்கின
வென்னைகொ லின்னமும்‌ மிரங்க லய்யனே. 157

அன்றியுஞ்‌ செய்விளை யாட்டு மின்சொலும்‌
தன்றிரு மகன்செயத்‌ தந்‌ைத கொள்வபோல்‌
இன்றுள மகிழ்ந்தனன்‌ நீயி ழைத்ததற்‌ ப கொன்றுநீ யஞ்ச டே லுளங்கொள்்‌ வாயரோ. 158

இன்னமும்‌ புகல்வதொன்‌ றுளது யாதெனில்‌
அன்னது கேட்டியா லாழி சேர்விரல்‌
குன்னை நீ கவ்விடைத்‌ தமிழின்‌ வாசனை
யுன்னணி வாயில்வந்‌ துற்ற தாதலால்‌. 159

இமிழ்திரைக்‌ கடற்புவி இடைவந்‌ துற்றுளோர்‌
அமிழ்தெனப்‌ பருகிவீ டணையு மாறதாய்‌
யுமிழ்மணங்‌ கமழிசை யுற்றி டுஞ்செழுந்‌ தமிழ்கொடு கவிதைகள்‌ பலவும்‌ சாற்றியே. 160

இரங்குமா கடலென விரைத்தி ரைத்துத்தன்‌ ்‌
கரங்களால்‌ வருடல்போற்‌ கவினு முத்துறும்‌
தரங்கமார்‌ காவிரித்‌ தார ணிந்துள
வரங்கமா நகரினை யணுகி யாங்கதில்‌. 161

ாற்கடலைப்‌ போலத்‌ திருவடிகளை
வருடும்‌ திரைகளைக்‌ கொண்டுள்ள திருக்கர்விரியை மாலையாகக்‌ கொண்டுள்ள
திருவரங்கம்‌. “பொன்னி திரைக்கையால்‌ அடிவருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணி” *
என்பர்‌ குலசேகரர்‌,

இருப்பணி வேலைகள்‌ செய்து முற்றியே
விருப்பொடுங்‌ காதலி யோடு மேவிப்பின்‌
னிருப்பதாம்‌ வைகுந்த மென்னு நற்பதப்‌
பொருப்புறழ்‌ தோளினாய்‌ பொருந்து கென்றனன்‌. 162

என்று பற்பல மொழி யியம்பி யாவரும்‌
மொன்றியே திரண்டிரு மருங்கு முற்றிடக்‌
கன்றைவிட்‌ டகன்றிடுங்‌ கறவை போலவே. தன்றிரு வுலகிடைச்‌ சார்ந்திட்‌ டானரோ. 163

மாயவன்‌ றிருவொடும்‌ மறைந்து நீங்கலும்‌
ஆயவன்‌ நிருவடி யதனை யுன்னியே
துரயவ னாம்பர காலன்‌ துன்புறாத்‌
தாயகண்‌ நிடுங்குழந்‌ தையினி ரங்கினான்‌. “164

பிறிவாற்றாமை
ஐயனே! யமலனே ! அடியருக்‌ கெலாம்‌
மெய்யனே [ சுருதியின்‌ முடிவி ளங்வடுந்‌
துய்யனே ! சிவன்முத லோர்க்குந்‌ தோன்றுறாப்‌
பொய்யனே ! யென்னவும்‌ புலம்பி னானரோ. 165

செந்திருப்‌ பொலிந்திடச்‌ வன யன்றனோ
டிந்திரன்‌ முதலினோர்‌ ஏற்றிப்‌’ போற்றிட
வந்தரத்‌ தடைவரு மமல! யானினி :
எந்தநாள்‌ காண்பதென்‌ றேங்கி னானரோ. 166

ஏங்கின னொருமுறை தெளிவு மெய்தியே
ஆங்குவிட்‌ டணிநக ரதில டைந்துதன்‌
இங்கரும்‌ பனையசொற்‌ றேவி தன்னொடும்‌
பாங்குற வாலியான்‌ பதம்வ ணங்கியே. ட. -167

ஆரண மறிந்திடற்‌ கரிய சோதியாம்‌
நாரணன்‌ புவித்திருப்‌. பதியி. னல்லுருப்‌ பூரண மாகவே :பொருந்தி வைகுறும்‌ .
காரணந்‌ தனையுளே கருதி னானரோ. 168

ஆழ்வார்‌ அர்ச்சையின்‌ சறப்பை உணர்ந்தார்‌. சோதி வடிவமான
திருமால்‌ அற்பப்‌ பூமியில்‌ திவ்யமங்கள விக்ரகத்துடன்‌ இருப்பதன்‌ காரணத்தை
உள்ளத்தில்‌ இந்தித்தார்‌.

அன்னமால்‌ மருவிடு மலைகொள்‌ பாற்கடற்‌
றன்னையும்‌ . பரமவை குந்தம்‌ தானெனப்‌
பன்னுமிவ்‌ விருநகர்‌ தவிரப்‌ பார்மிசை
மன்னுனூற்‌ றாறெனும்‌ பதிவ ணங்குவான்‌. 169

அமுதமொத்‌ தினியசொல்‌ லிரதியோ வெனும்‌
குமுதவல்‌ லிப்பெயர்க்‌ கோதை தன்னொடும்‌
கமலமொத்‌ திடுமுகம்‌ கவின வாலியாம்‌
அமலநற்‌ பதிதொழு ததைவிட்‌ டேகினான்‌. 170

ஆழ்வாரின்‌ திவ்யதேச யாத்திரை
அத்தியூர்‌ புட்குமி யரங்கம்‌ வேங்கடம்‌
வித்துவக்‌ கோட்டிபோர்‌ பேரை விண்ணகர்‌
பத்தவி லோசனங்‌ குடந்தை பாடகஞ்‌
சித்ரகூ டம்முத லாகச்‌ செப்பிடும்‌. 171

நூறுட னாறென நுவறி ருப்பதி
வீறுமங்‌ களங்கொள்விக்‌ கறக மாகிய
துளவணி நார ணன்பத
மூறுமன்‌ புடன்பணிந்‌ துருகி னானரோ. 172

உரியனாய்ப்‌ பற்பல உயிரு ணன்றுறை
கரியமால்‌ பெருமையைக்‌ கண்ண கன்றிடும்‌
லுலகெலாம்‌ விளங்கு மாறதாய்‌
அரியசெந்‌ தமிழினா லறைத லுன்னியே. 172

பெருந்திரு மொழியொடும்‌ பெருமை சேர்மடல்‌
இருந்திரண்‌ டொடுமெழு கூற்றி ருக்கையும்‌
பொருந்திருத்‌ தாண்டக மிரண்டும்‌ பொய்யிலிங்‌ கரும்பொரு ளாறையும்‌ மறைந்து பின்னரின்‌. 174

கருவரங்‌ கந்தனை யொழிக்குங்‌ கார்முகில்‌
பெருவரங்‌ காதலித்‌ தவர்பெ றும்படி
இருவரங்‌ கந்தனி லிருப்பப்‌ பள்ளிகொள்
இருவரங்‌ கந்தனைச்‌ சேர்ந்திட்‌ டானரோ. | 175

அத்தலத்‌ தற்புத மனைத்துங்‌ காண்குறா வெத்தலங்‌ களுமொவ்வா இதற்கென்‌ றெண்ணியே
சித்திர மிழைத்த்கோ புர்த்துட்‌ செம்மைசேர்‌-
கைத்தலந்‌ தலைமிசை கவினச்‌ சென்றனன்‌. 176

அந்தர மிசையடைந்‌ தலர்க டூவியே
சந்திர மவுலியான்‌ றாம ரையுளான்‌
இந்திரன்‌ முதலினோ ரெட்டெ ,ழுத்தெனும்‌
மந்திர மோதியே வணங்கி வாழ்த்திட. 777

பன்னக வணைமிசைப்‌ பள்ளி கொண்டிடும்‌
அன்னமா மலரடி யதனைப்‌ பூந்திரு
முன்னிலை யாய்முடி யுறவ ணங்கியே
கதுன்னர மனையிடை சார்ந்து வைடனான்‌. 178

அந்தநாள்‌ நாரண னறைந்தி டும்பணி
யெந்தவா நிழைத்திட லாகு மென்னவோர்‌
குந்திரம தற்செயல்‌ தகுதி யாமெனச்‌
சிந்தையி னொருமுறை தெளிவு கொண்டனன்‌. 179

ஆழ்வார்‌ திருப்பணி
புத்தர்தம்‌ பொருள்புவி புதைத்தி டும்பொருள்‌.
பத்தர்தம்‌ பொருள்‌அரன்‌ பட்டு ளோர்பொருண்‌
மித்திரர்‌ பொருண்முடி வேந்தர்‌ தம்பொருள்‌
இத்தகை யாகிய பொருளு மின்னமும்‌. 180

ஊளமர்தம்‌ பொருள்முட முற்று ளோர்பொருள்‌
வாமியர்‌ தம்பொருள்‌ வல்ல : டிப்பொருள்‌
ஆமிதென்‌ றவைகள்கொண் ட்ீணுகு வீரென
நேமியா வருவர்பின்‌ ஒதுங்கு நீர்மையான்‌. 181

நீர்மிசை நடப்பவ னிழலொ துங்குவோன்‌
தோர்விலா வழக்கின னுயரத்‌ தொங்குவான்‌
தேரினா னாதுவோ நேர்ந்து தந்திரம்‌
சோர்வுறப்‌ பலபொருள்‌ தொகுத்திட்‌ டாரரோ. 182

விற்பொலி யட்டகோ புரங்கள்‌ வேறிரண்‌
டுற்றிடு மதின்மடைப்‌’ பள்ளி யோங்்‌இடும்‌
நெற்களஞ்‌ கஇயமழுநெற்‌ குத்து மண்டபம்‌
பற்பல வாந்திருப்‌ பணிகள்‌ செய்தனன்‌. 183

புத்தர்க ளருகர்கள்‌ பொருந்து ‘றுஞ்சிவ
பத்தர்கள்‌ மாயவா தியர்கள்‌ பற்பல
இத்தகை யாம்பர சமயத்தி யாவரும்‌ யெத்தகை வாதின்வந்‌ தெவரி யம்பினும்‌. 184

அவ்வவைக்‌ கெதிருறை வேத மாதிகொண்
டிவ்வித மாமென வெடுத்தெ டுத்துரைத்‌
தொவ்வுற வாதுவென்‌ றவரு ரைத்திடும்‌ .
செவ்விநேர்‌ நாமங்கள்‌ பல? றந்தனன்‌.–185-

இந்தநன்‌ முறையினால்‌ எவரு மேத்திடச்‌
செந்திரு வனையசர்‌ தேவி தன்னொடும்‌
மந்திர மனையதோண்‌ மங்கை வேந்தனும்‌
அந்தமா நகரிடை யமரும்‌ நாடனின்‌.–186-

ஒருபக லரங்கர்பா லடைந்து வப்பொடும்‌
இருவனந்‌ தன்மிசை துயிலும்‌ செவ்வியோய்‌ }
இருவினை யொழிந்துள தெனக்கு நற்பதந்‌
தருதியென்‌ றநிருபதம்‌ தாழ்ந்து நின்றனன்‌.–187

ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தது
நின்றவக்‌ கலியனை நீல மால்வரை
யொன்‌ நிய வுருவினா னுவந்து நோக்கியே
நன்றது புரிகுதும்‌ நமக்கோ ரில்லதாம்‌
“தென்றிருக்‌ குறுங்குடி சேர்தி யென்றனன்‌.–188

என்னவாட்‌ கலியனும்‌ மினிய வானந்தம்‌
துன்னிட. வவன்பதந்‌ தொழுது .போற்றிசெய்‌
தன்ன ந.ந்‌ .குறுங்குடிக்‌ கணுக லுன்னியே
பொன்னிவர்‌ தண்டிகை பொலிய மேவினான்‌–189.

சுற்றினு மடியர்தங்‌ குழாந்து வன்றிடக்‌
கொழற்றமெய்‌ இடும்பர சமய கோளரி
யுற்றன னெனத்திருச்‌ சன்ன மூதிடப்‌ ,
பொற்றிரு வரங்கம்‌ விட்டரிதஇற்‌ போயினான்‌.–190

ஆலைசா ஐறடும்புகை புயலென்‌ றண்மியே
காலைமா மயிலினங்‌ களிந டஞ்செயும்‌
சோலைமா மலையினைத்‌ துன்னி யேவன
மாலைமார்‌ பழகரை வணங்கி யேகினான்‌. 191

வெதிரினா லொழுகுதேன்‌ மேவிப்‌ பாய்தலில்‌
கதிருடை செந்நெல்வான்‌ கவின்கொாண்‌ டோங்கிடும்‌
மதுரையிற்‌ கூடலின்‌ அழகர்‌ வண்பதம்‌
சதிருடன்‌ முடியுறத்‌ தாழ்ந்து போற்றினான்‌. 192

வில்லிபுத்‌ தூாரினை யணுகி மேல்வரும்‌
மல்லரைக்‌ குமைவட பத்திர சாயிதாள்‌
அல்லியின்‌ வணங்கிப்‌ பல்லாண்‌ டெனுந்தமிழ்‌
சொல்லிய பெரியரைத்‌ தொழுது போயினான்‌. 193

குருமணி யினம்பல கொழித்தி ரைத்தலை
இருபுற மொதுக்கும்வே றிணையி லாதசர்ப்‌
பொருளையின்‌ வடகரை பொலியப்‌ பெற்றிடை
மருவுவை குந்தநா தரைவ ணங்கினான்‌. 194.

வைத்தமா நிதிக்குழைக்‌ காதர்‌ வண்டினம்‌
மொய்த்ததா மரைக்கணர்‌ மாயக்‌ கூத்தர்முன்‌
பெய்த்தவெம்‌ மிடர்கடி வாறெண்‌ ணார்தமைக்‌
கைத்தொழி காசினி வேந்தைக்‌ காண்குநா. 195

அவ்வவ ரிணைத்திரு வடியம்‌ போருகம்‌
ஓவ்வுறத்‌ தன்முடி தனைக்கொண் டொற்றியே
யெவ்வமற்‌ றுளமகழ்‌ வெய்இப்‌ போற்றியச்‌
செவ்விய நகரினைத்‌ தீர்ந்திட்‌ டேகினான்‌. 196

முருகவிழ்‌ முளரிமுத்‌ இளநி லாவினால்‌
அருகுறு குழமுதம்விண்‌ டலரு மாவயல்‌
குருகையா திப்பிரான்‌ குலவு தண்முடி
மருவுற வணங்கியே வாழ்த்தி யேனான்‌. 197

கூனிலாம்‌ பிறைமணிக்‌ கோயின்‌ மேற்றவழ்‌
வானமா மலைதனை யணுகி வண்டுணுந்
தேனமர்‌ துளவதோக்‌ தாத்ரி நாதர்செம்‌
பூனிகர்‌ பதந்தொழு தேத்துப்‌ போயினான்‌. 198

தறுங்குழன்‌ மடந்தையர்‌ நடைந டந்திடுத்‌ தொறுங்களி சிறந்திடத்‌ துடர்வ தற்கவா
வுறுங்குலப்‌ பெடையன முறையு மாவயல்‌
குறுங்குடித்‌ திருநகர்‌ குறுகி னானரோ.  199

அத்தலத்‌ தருச்சகர்‌ முதல யாவருங்
கொத்துடன்‌ ம௫ழ்த்துவந்‌ தெதிர்கொண்‌
முத்தெறி பாற்கடன்‌ முழுகிப்‌ பன்னிரண்‌
டொத்திடு தஇிருமண்காப்‌ புவந்து சாற்றியே. 200

இரண்டெனும்‌ துயந்தனை துதிசெய்‌ இயாவரும்‌
இரண்டிரு மருங்குறச்‌ சேர்ந்து கோயிலுள்‌
-கரண்டமா டிடும்பொய்கைக்‌ கரும்ப னைக்களனி
-மிரண்டிள வாளைபாய்ந்‌ தெழும்ப வீழ்வதை,. 201

“அரண்ட மாடு பொய்கையுள்‌ கரும்பனைப்‌ பெரும்‌ பழம்‌
புரண்டுவீழ, வாளைபாய்‌ குறுங்குடி நெடுந்தகாய்‌’” என்ற தஇிருமழிசைப்‌ பிரான்‌
பாடலின்‌ சாரமாகும்‌.

இருகணு மழைக்கண்‌ டிருந்த மானம்பி
இருமலை நம்பிபாற்‌ கடலி னம்பிசர்‌
பெருகதநின்‌ றருணம்பி கிடந்த நம்பிப்பேர்‌
மருவுமை வர்கண்மல ரடிவ ணங்கினான்‌. 202

அழூய நம்பிபொன்‌ னடியிற்‌ கண்ணநீர்‌
ஒழுகுறும்‌ படியணிந்‌ துகந்தெ ழுந்துகைத்‌ தொழுதடி யேற்கரு டூய வீடெனா
இழுதென வுருகிநின்‌ றேத்து மெல்லையில்‌. — 203

அளித்தனம்‌ முத்திவீ டணைதி யென்றுதேன்‌
துளித்திடும்‌ துளவமா லுரைப்பத்‌ தூவுளம்‌
களித்துயர்‌ விமானமேற்‌ கவின்கொண் டோங்கியே
குளித்தனன்‌ விரசயிற்‌ குலவு நீரிடை. 204.

படிகந்ன்‌ மேனியாய்ப்‌ பரம வான்பதி
நெடியசெம்‌ பொன்மணி நிரப்பு மண்டபத்‌
தடியவர்‌ குழுவொடு மணுகி வாழ்ந்தனன்‌
வடியுடை வாட்கர மங்கை மன்னனே. 205

மறுவிலான்‌ பிரபந்தம்‌ வகுத்த வாறினுள்‌
ona யாயிரத்‌ தொடுமுந்‌ நூறுடன்‌
அறுபது மொன்றதா மதனுட்‌ செங்கண்மால்‌
பெறுபதி யெண்பதோ .டிரண்டும்‌ பேசுவாம்‌.–206-

ஆழ்வார்‌ பாடிய பாசுரத்தொகை 1961, மங்களாசாசனம்‌, செய்த
இவ்ய தேசங்கள்‌ .88,

வேறு
சீரங்கம்‌ வேங்கடம்‌ மாதனூர்தஞ்சை
சேறை வெஃகா: நின்றவூர்‌
காரகம்‌ நந்திபுர விண்ணகர்நைமிசார்‌.
ணியம்‌ விண்ணகர்‌ கணபுரம்‌ :
நீரகந்‌ தேவனார்‌ தொகையயிந்‌ திரபுரம்‌
நிலாத்துங்க டுண்ட நறையூர்‌
ஊரகம்‌ புல்லாணி இத்திரகூ டமெவ்வ
ளூர்வதரியாச்‌ ரமே. : 207

அரிமேய விண்ணகரம்‌ நாகையட்‌ டப்புய
மலிக்கேணி யாலிமோகூர்‌
பிரிதிவெள்‌ ளறைகுறுங்‌ குடிதெற்றி யம்பலம்‌
போர்தலைச்‌ சங்க மெய்யம்‌
புருடோத்த மங்கவளம்‌ பாடிகூ டறிருப்‌
புட்குழி கண்ண மங்கை
பரமேச்‌ சுரவிண்‌ ணகர நீர்மலை
வேளுக்கை பாடகம்‌ மூழிக்களம்‌. 208

கடன்‌. மலைக்‌ காழிசீ ராமலிண்‌ ணகரம்வை
குந்த விண்ணகர்‌ கண்டியூர்‌
இடவெந்தை செம்பொன்செய்‌ கோயில்‌ பார்த்தன்‌
பள்ளி. இந்தளூர்‌ கண்ணங்குடி
குடந்தைவெள்‌ ளக்குளம்‌ அழுந்தூர்‌ கரம்பனூர்‌
கோவ லிடைகழி கூடலூர்‌
கடிகை நாங்கூ ரின்மணி மாடகோ .விற்சிங்க வேள்குன்று கார்வானமே. ~ 209

வேறு
இருக்கச்சியில்‌ சர்ப்பபள வண்ணம்‌
இருப்பாற்கடல்‌ சீராய்ப்பாடி
இருப்பேரகஞ்‌ Fran. wagons
இருநாவாய்‌ சீர்புலியூரே. 210

வேறு
புள்ளம்‌ பூதங்‌ குடித்தண்‌ காசிறு புலியூர்‌ சோலை
வெள்ளி யங்குடி கோட்டியூர்‌ விளங்கு சாளக்‌ கிராமங்‌
களவனூர்‌ வல்ல வாழ்தங்‌ கால்மணிக்‌ கூட மாகுந்‌
தெள்ளுசீர்க்‌ கமலை மார்பன்‌ செழுத்திரு பதிகண்‌ மாதேர்‌. 211

அன்னசெந்‌ தமிழைப்‌ பார்மேல்‌ அநேகர்கற்‌ றுணர்ந்து தம்முன்‌
றுன்னுமஞ்‌ ஞான நீங்கித்‌ தூயநல்‌ லறிவுண்‌ டாகி
மின்ணுசக்‌ கரஞ்சேர்‌ செங்கை விண்டுவாழ்‌ திருவை குந்தந்‌
தண்ணிடை களிப்பினோடுஞ்‌ சார்ந்துவீற்‌ றிருந்தா ரன்றே. 212

பயன்‌
இந்தமாக்‌ கதையை யன்போ
டெழுதினோர்‌ பரிவிற்‌ கற்றோர்‌
சிந்தையுள்‌ ளூருகக்‌ கேட்டோர்‌
செப்பினோர்‌ யாவ ரேனும்‌
முத்துக்‌ வினைக ணீங்கி
முளரிமா : மலர்மேல்‌ வாழுஞ்‌
செந்திரு வருளுண்‌ டாகிச்‌
சீர்பதம்‌ பெறுகு வாரே. 213

திருமங்கையாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

————

திருமழிசையாழ்வார்‌ வரலாறு பேசுவோம்‌
மங்கையார்‌ குறைய லூரில்‌ வந்தவ தாரஞ்‌ செய்திட்‌
டங்கண்மா ஞால மேத்த வருந்தமிழ்க்‌ கவிகள்‌ செய்தே
செங்கண்மால்‌ பதவிதன்னுட்‌ சேர்ந்தமை யுரைக்தோ மிப்பால்‌
நங்கள்்‌€ர்‌ மழிசை யான்றன்‌ சரிதமு நவில்வா மன்றே. 214

வெண்பா
தையில்‌ மகமின்று தாரணியி லேற்றமிந்த
தையில்‌ மகத்துக்குச்‌ சாற்றுன்றேன்‌ – றுய்யமதி
பெற்ற மழிசைப்‌ பிரான்‌ பிறந்த நாளென்று
நற்றவர்கள்‌ கொண்டாடு நாள்‌.
(உபதேச ரத்தினமாலை: 18.)

திருவிருத்தம்‌
இன்னவா றாகப்‌ பன்னா ளேகவைம்‌ புலன்வென்‌ றோராய்‌
மன்னியே கானந்‌ தன்னில்‌ வளம்பெறு வரையின்‌ சார்பில்‌
பன்னருந்‌ தவங்கள்‌ செய்யும்‌ பாற்கவன்‌ முதலா னோர்கள்‌
உன்னின ரொருநா ஞள்ளத்‌ தொருமுறை யாக மன்னோ. 1

மும்மையா முலகோ டீசன்‌
முளரியன்‌ முதலா: னோர்கள்‌
தும்மையுள்‌ ளடக்கி யாலந்‌
குழவி யாகிச்‌ செம்மைசேர்‌. கரத்தாற்‌ பார்மின்‌
இிருவொடும்‌ வருடத்‌ தங்கும்‌
நம்மையாண்‌ டருளுஞ்‌ சோதி
நாரணன்‌ அமல நாதன்‌. ” 2

இப்புவி தனிலும்‌ வந்துற்‌ றெழில்பெறப்‌ பலவென்‌ ஹோதும்‌
ஒப்புவே றிலாத தாகும்‌
பதிகளி னுறைந்து வாழ்வான்‌
அப்பெருந்‌ தலங்கட்‌ குள்ளாய்‌
அகன்றிடா தோரூர்‌ தன்னில்‌
செப்புமம்‌ மாலெப்‌ போதுஞ்‌
சேர்ந்துறைந்‌ இருப்பா னன்றோ. 3

அனையவாந்‌ தலம்யா தென்றா
ராய்ந்திட வேண்டு மென்னும்‌
நினைவுகொண்‌் டறிவிப்‌ பார்கள்‌ .:
்‌ ணீனிலத்‌ திலையென்‌ றோர்ந்தும்‌ ‘
மனையென மலரின்‌ வாழும்‌:
மறையவ னுலகந்‌ தன்னை
வினையற. நோற்று நின்ற
மேலவ ரடைந்தா ரன்றே. ்‌ 4

சென்றடைந்‌ தவர்க எந்தத்‌
இசைமுகன்‌ செழும்பொற்‌ பாதம்‌
. ஒன்றிட முடிகள்‌ சேர்த்தித்‌ ்‌ தொழுதெழுந்‌ துகப்பின்‌ முன்னர்‌ நின்றிட லோடுஞ்‌ .ஞான
நெறியுளீ ௬மையொப்‌ பார்யார்‌
என்றவர்ப்‌ புகழ்ந்திட்‌ டாசி
யியம்பியாங்‌ இருமி னென்றான்‌. 5

என்றவாங்‌ . டந்த
விருஞ்சிறைத்‌ தாவிச்‌ செங்கால்‌
அன்னமூ ரெண்கண்‌ ஸணான்றன்‌
அம்புய முகத்தை நோக்கா ்‌
முன்னர்நா ணின்னை யுந்தி
முன்னின ஸனீன்று Cares
தன்னைச்சிட்‌ டிக்கு மாறு.
சாற்றியோர்‌ சோதி தானாய்‌. | 6

அஞ்சுபூ தங்கட்‌ குள்ளும்‌ அந்தரி யாமி யாய்நின்று
உஞ்சுமா றவைக :ளெல்லா |
மோங்குறக்‌ காவல்‌ பூண்டுந்‌
துஞ்சுதல்‌ பிறத்த லென்ப
திலாதவச்‌ சுருப னாகி
விஞ்சுவை குந்தத்‌ தும்பார்‌
மிகுபல தலத்தும்‌ வாழ்வோன்‌. 7

மருவுமப்‌ பதிக டன்னில்‌
வளங்களோர்‌ காலந்‌ தன்னுள்‌
ஒருபக லேனும்‌ நன்றா.
. யொருகண மேனுநீங்‌. காமல்‌

இருவொடு மிருந்து வாழ்வா
னென்னவே தெளியு மாறாய்ப்‌
பொருவிலா மறைக டன்னிற்‌
புகன்றுளாய்‌ நீயு மன்றே. 8

அந்தநற்‌ றலமீ தென்ன வறிகிலே மறியு மாறாய்‌
எந்தமக்‌ குரைத்தி யென்ன
வியம்பினன்‌ அயல்நீங்‌ காமல்‌
செந்திரு வுடனே செங்கண்‌
மால்செழு மறையோர்‌ போற்ற
வந்துவாழ்‌
மழிசையென்‌ றுணர்மி னென்றான்‌. 9

அத்திரு நகர்க்கு நேராய்‌
அங்கண்மா ஞாலந்‌ தன்னுள்‌
எத்திரு நகரு மோங்கு மெழில்வளம்‌ புனிதம்‌. தன்னால்‌
ஒத்திடா துணர்மி னென்னா ்‌
வுயர்தவ முனிவோர்‌ தங்கள்‌
சித்தம துவக்கு மாறு ்‌
மீளவும்‌ தெரிவித்‌ தானால்‌. 10

கேட்டவம்‌ முனிவோர்‌ மீட்டக்‌
இளர்வளம்‌ பெறுந்த லத்தின்‌
மாட்டுள மேன்மை யாங்கள்‌
மனந்தெளி வுறுமா நாகக்‌
காட்டிட வேண்டு மென்னக்‌
கருஞ்சிறை யறுகால்‌ பொம்மென்‌
பாட்டுவண்‌ டிமிரும்‌ பங்கேருகத்தயன்‌ பரிவி னோடும்‌. –11

ஆங்கவர்‌ தம்மோ டண்மி
யத்திரு நகரின்‌ மேன்மை
– பாங்குற வுணர்த்த லுன்னிப்‌
பணிகள்‌ புற்றடைவ தாக
ஓங்கிவா னுயருங்‌ காவி
லுறுஞ்சிறைக்‌ கருட னேபோல்‌
மாங்குயிற்‌ றொகுதஇு கூவும்‌
மழிசைவந்‌ தடைந்தா னன்றே. . 12

வந்ததொரு துலைகோல்‌ தன்னை
மனத்தினா னிருமித்‌ தன்னோன்‌
முந்தொரு தட்டி லேசர்‌
மழிசையை முயல வைத்திட்(டு)
இந்தபே ௬லகை மற்றோர்‌
தட்டினிட்‌ டெடுத்துக்‌ காட்ட
அந்தமார்‌ மழிசைத்‌ தட்டு
மழுந்திக்கீ மிருந்த தாலோ. 13

உலகுறு தட்டு மேலிட்‌
டோங்குற வதனைக்‌ காணா
இலகுமிம்‌ மழிசைக்‌ கொப்பா
யில்லையிப்‌ புவியின்‌ வேறென்‌(று)
அலகின்மா தவர்கள்‌ யாரு
மற்புத மடைந்தா ராகி
மலரவ னம்பொற்‌ றாளின்‌
வணங்கிவாழ்த்‌ தினர்கள்‌ மாதோ. 14

இம்முறை தெளிவித்‌ தந்த விருந்தவர்க்‌ காசி நல்கிப்‌
பொம்மென வறுகாற்‌ பாடும்‌
மலரயன்‌ போய பின்னர்‌
கொம்மைமா முலைப்பூ மாதின்‌
கொழுநனைக்‌ குறித்திட்‌ டாங்குச்‌
செம்மைசேர்‌ யாகம்‌ செய்வான்‌
பார்தனைக்‌ &ண்டிட்‌ டானால்‌, 15

வேண்டுவ கலப்பை கொள்ளா
விதிமுறை துடங்கி யுள்ளம்‌
தூண்டுள முவகை துள்ளித்‌
துள்ளிமீ தெழுந்த தென்ன
மூண்டெழு கனற்க ணானெய்‌
முதலிய சொரிந்து முற்றும்‌ ஆண்டதொன்‌ றதனில்‌ நந்தும்‌
அருமகம்‌ முடித்தான்‌ அன்றே. 16

மகமது முடித்த லோடும்‌
வைகுந்த வாசு தேவன்‌
-அகமகிழ்த்‌ தரவிந்‌ ‘தம்வாழ்‌
பவளுட னணுகித்‌ தோன்றிச்‌
செகமதி னின்போல்‌ யாகம்‌ ்‌
செய்துளோ ரிலையென்‌ தேத்தித்‌
தருதும்‌ வேண்டும்‌
வரந்தனைச்‌ சாற்று கென்றான்‌. 17

என்னலு மூவகை யுள்ளத்‌
தெழுந்துமீ தோங்க வென்கண்‌
– மூன்னரென்‌ னன்னை யான மூளரிமா ‘ தோடு நீவந்‌ துன்னிடத்‌- தெரிசத்‌ தேற்குத்‌. தூயன விஃத லான்மற்று :
இன்னமும்‌ வேண்ட லென்னென்‌(று)
இருந்தவ னியம்பி னானால்‌. 18

கேட்டவத்‌ இருமால்‌ – பின்னும்‌
இளர்த்துவா னினிது ளத்தின்‌ .
மாட்டுள துணர்கு வோமால்‌, ஆயினு மகத்திற்‌ கெய்தி. நாட்டுமொன்‌ றேனு நல்கா ©
தேகல்நல்‌ லறம தாமோ?
சேட்டிளம்‌ பருதி போலோர்‌.
சிறுவனை யளித்தோ மென்றான்‌. 19

ஆழ்வார்‌ அவதாரம்‌
அவ்வர மளித்துச்‌ செங்கேழ்‌
அணிமலர்‌ மாதி னோடும்‌
செவ்விசேர்‌ இருவை குந்தஞ்‌
சிறப்புற வடைந்தான்‌ ; மேனாள்‌
வெவ்விய விடங்கர்‌ கானின்‌
விரைமல ரோடை தன்னுள்‌
கவ்விடத்‌ தளர்ந்து கூவும்‌
கரியருந்‌ துயரந்‌ ர்த்3தோன்‌, டட 20

ஆங்கவ ஸிவ்வா றாக
அகன்றபின்‌ தைமா தத்தில்‌
பாங்குறும்‌ மகநாள்‌ தன்னிற்‌
பார்க்கவ னென்னு நாமத்‌  தீங்கலா முனிவன்‌ றன்பால்‌
செனித்திடு மகவைக்‌ காணில்‌
தேங்குழ லுமையோர்‌ பாகச்‌
சிவனயன்‌ மகிழ்வர்‌ மாதோ. 21

செந்திருப்‌ புதல்வன்‌ றன்போற்‌
றினகர ஸுூருவந்‌ தாங்கி
வந்திரும்‌ புவிமே லுற்ற வாறென வந்து தோன்றும்‌
அந்தநன்‌ மகவைக்‌ காணா
அம்முனி மகவுள்‌ ளோரர்க்குச்‌
இந்தையுட்‌ கடவுட்‌ டியானந்‌ .
இருப்புமென்‌ றுள்ளந்‌ தேர்ந்தான்‌. 22

தேர்ந்தவம்‌ முனிவன்‌ றானுந்‌
சிந்தையுண்‌ மகவி னாசை
இர்ந்துசெங்‌ கரங்கண்‌ மீதச்‌
சிறுகுழ வியைக்கொண்‌் டவ்வூர்‌
பேர்ந்துபோ மளவி னாங்கோர்‌
பிரம்புறு புதரின்‌ &ழாய்ச்‌
சேர்ந்ததை வளர்த்தி னானோர்‌
சிறியவத்‌ தரத்தின்‌ மீதே. 23

இத்ததற்‌ குழவி தன்னைப்‌
புரந்தரல்‌ இதனை நம்பால்‌
தந்தவர்‌ கடனென்‌ நுன்னித்‌
தவஞ்செயும்‌ சாரல்‌ தன்னில்‌ அந்தமா முனிவன்‌ சார்ந்த
துறிந்துல கன்னை யான
செந்திரு வன்புற்‌ றாங்குச்‌ சேர்ந்தழுஞ்‌ செய்கை நோக்கா; 24

திருமகளின்‌ திருவருள்‌ .
மனதினுள்‌ இரக்கம்‌ கொண்டோர்‌
மதுரிக்கும்‌ தேனி றாலாய்‌
தனதுமா முலைப்பால்‌ தன்னைச்‌
சமைத்துமே லிருத்தி வைத்திட்‌(டு)
அனையதப்‌ பாலன்‌ வாய்விண்‌(டு)
அழுதுண வதனை யுன்னி
நினைதொறுந்‌ துளிக்கு மாறாய்‌
நியமித்திட்‌ டேகி னாளால்‌. 25

திருமகள்‌ தனது-பாலைத்‌ தேனிறாலாய்‌ மாற்றி ௮க்‌ குழவியின்‌ வாயில்‌ தேன்‌
துளி படும்படி நியமித்துவிட்டுப்‌ போய்விட்டாள்‌. மதுரிக்கும்‌ – இனிக்கின்ற.
சமைத்து – அமைத்து. வாய்விண்டு – வாய்திறந்து. நினைதொறும்‌ – நினைக்கும்‌
போதெல்லாம்‌. (அரிசமய தீபம்‌ திருமகளே பால்‌ வழங்கியதாகவும்‌, திருமகள்‌
தனது பால்‌ குழவியின்‌ பெருவிரலில்‌ உண்டாகும்படி செய்துவிட்டுப்‌ போனதாக
வும்‌ கூறியுள்ளது.)

உழுவைகாத்‌ தளிப்பக்‌ .காவிக்‌ —_
கதிரிள வெயிலு றாமல்‌
நிழலுறப்‌ பணம்வி ரித்தே ட
நீளர வுறைய மீதாய்‌
ஓழுகுதேன்‌ றுளிவாய்‌ வீழ்வ
துண்டுண்டு மகிழ்வி னோடப்‌
பழுதில்சேப்‌ வளரு மன்னாள்‌
உற்றது பகர லுற்றாம்‌. 26 -வெய்யில்‌ படாதபடி பாம்பு விரித்தது.

திருவாளன்‌ ஆழ்வாரை வளர்த்தது
அத்திரு மழிசையென்‌ றறையு மாநகர்‌
ஓத்துவாழ்‌ மேதையர்‌ குலத்தி லுற்றிடும்‌ உத்தம னாந்திரு வாள னென்றுளோன்‌
பத்தினி பங்கய வல்லி பண்புளாள்‌. 27

அவ்விரு வோர்களு மனமொன்‌ றநாகியே
வெவ்விய கானிடை விரைவி ஸனெய்தியாங்‌(கு) _
ஒவ்விய பிரம்புகொண் டூரின்‌ மேவியே
செவ்விய கூடைகள்‌ திருந்தக்‌ கட்டுவார்‌. 28

ஆங்கதை விலைசெயற்‌ கமைந்து கொண்டுசென்‌(று)
ஓங்குமம்‌ மாநக ருறுமவ்‌ வீதிவாய்‌
வாங்குவார்‌ தருபொருள்‌ வாங்கி வந்ததில்‌
பாங்குறு வனம்‌ பண்ணு வார்களால்‌. 29

ஆயவ ரம்முறை யணுகு நாளிடை
சேயிலா மையினுளந்‌ தியங்கி யேங்கியே
தூயவ ருளத்தினுஞ்‌ சுருதியுள்‌ ஞம்வாழ்‌ மாயனை மகிழ்வொடு மனத்தி லுன்னியே. 30

ஒருபகற்‌ பிரம்புகொண் டறுத்த லுன்னியத்‌
இருநகர்‌ கடந்துகான்‌ செல்லு மெல்லையில்‌
கருடனும்‌ வலியனுங்‌ கருது றும்மிடம்‌
வருதலும்‌ அகமிக மகிழ்வுற்‌ றேகினார்‌. 31

ஏகவப்‌ புதரின்‌€ ழிளங்கு ழந்தையுஞ்‌
சோகமுற்‌ றழுங்குரல்‌ தொனிசெ விக்கணுற்(று)
ஓகைகொண் டவனிலங்‌ குறுமுன்‌ காத்துறை
நாகமு முழுவையு நழுங்கிப்‌ போயதால்‌. . 32

போயபின்‌ பிவர்களு மருகற்‌ புக்கியச்‌
சேயினை யிருகரஞ்‌ சேர்த்தெ டுத்துமுன்‌
பாயின சகுனமும்‌ அதனுக்‌ கொவ்வுற
மாயவ னருளின னெனம இழ்ந்தனர்‌. 33

அங்குவிட்‌ டூர்புகுந்‌ தகத்துட்‌ சேரலும்‌
பங்கய வல்லியாம்‌ பெயர்ப டைத்துள
செங்கய லனையகட்‌ டிருவ னாட்டரு
கொங்கையுஞ்‌ றந்துபால்‌ சுரப்புக்‌ கொண்டதால்‌, 34

சுரந்துறு மமுதையச்‌ சுதற்க ளித்திட
நிரந்தர முண்டுபன்‌ னேயங்‌ காட்டலால்‌
பரந்த€ ரவர்கண்முன்‌ படைந்த துன்பநோய்கரந்தகன்‌ நிடவுளங்‌ களிப்புற்‌ றாரரோ. , 35

தூயதே வஇிவயின்‌ மதுரை தோன்றியுற்(று)
ஆயர்பா டியினடைந்‌ தசோதை யாள்திருச்‌
சேயென வளர்ந்துபன்‌ னடனஞ்‌ செய்திடும்‌
மாயனென்‌ றியாவரும்‌ மகிழ வைகினான்‌. 36

ஆளனும்‌ பங்கய வல்லி யாளெனும்‌
தாளதா மரைமுகத்‌ தவளும்‌ தாம்பெறுங்‌
காளையிங்‌ கிவனெனக்‌ கருத்து ஞன்னியே
நாளுற வளர்த்தனர்‌ நயப்புற்‌ றென்பவே. 37

மைந்தனு மாங்கவர்‌ மகிழ்வொ டுந்தனைத்‌
தந்திடுந்‌ தந்தையும்‌ தாயு மாமெனச்‌ சிந்தையுள்‌ மஒழ்ச்சியுஞ்‌ சிறப்பு மோங்கெ
இந்தநன்‌ முறையதாய்‌ வளரு மெல்லையில்‌. 38

தங்குல வியற்கையிற்‌ றகுவ யாவையும்‌
அங்கவர்க்‌ கிழைத்துற வவனு மாயையாங்‌
கங்குலை யொழித்திடக்‌ காலை யுற்றெழுஞ்‌ .
செங்கதி ரவனெனச்‌ சறெந்திட்‌ டானரோ. 39

ஆழ்வாரின்‌ யோகம்‌
மறந்துடர்‌ சனமுங்கா மமும்ம னத்திடைத்‌
துறந்துய ரியபரஞ்‌ சுடரைக்‌ காணுமா(று)
அறந்துடர்‌ யோகவப்‌ பியாச மாகவே
சிறந்துற வாண்டெழு நாறு சென்றதால்‌. 40

மறம்‌ துடர்‌ – பாவத்தைப்‌ பின்பற்றிச்‌ செல்கிற. மனத்திடைத்‌ துறந்து –
மனத்திலிருந்து விலக்கி, யோகாப்பியாசத்திலேயே எழுநூறு வருடம்‌ கழித்தது.

இறைவன்‌ காட்சி வழங்கல்‌
அரியதா இயெதன்னந்‌ தாமத்‌ தின்னுடைச்‌
சொருபமத்‌ திருமழி சையினுட்‌ டோன்றிடத்‌
தெரிவுறு ஞானக்கண்‌ திருந்த வேயளித்‌(து) இருசிறைக்‌ கலுழன்மே லிவர்ந்து தோன்‌ நினான்‌. 46

சோமனை முடியணிச்‌ சுடலை யாடியும்‌
நாமகள்‌ கொழுநனு நவிலு மோர்சத
மாமகன்‌ முதலினோர்‌ களும்வ ணங்கிடப்‌
பூமக ளொடுமெதிர்‌ பொலிந்து ளான்றனை; 47

இன்னவாறு உளம் களித்து உருகி ஏத்திடும் விண்ணுற நோக்குவான்‌ மீண்டும்‌ தன்னுடல்‌
மண்ணுற வணங்குவான்‌ வாழ்த்து வான்புகழ்ந்‌(.து)
எண்ணுவ னவன்‌ றிரு வெழிலை யென்பவே. “ 48

இன்னவா றுளங்களித்‌ துருகி யேத்திடும்‌
அன்னவன்‌ கண்படா தகன்று போயினான்‌
பன்னகத்‌ திடைநடம்‌ பயின்றி டைக்குலக்‌
கன்னியர்‌ துயில்கவர்‌ கரிய கோவலன்‌. 49

கோவல ஸனகன்றிடுங்‌ கொள்கை கண்டுளத்‌(து)
ஆவலோடி ரங்கியீன்‌ றளித்த ழித்திடும்‌
மூவராம்‌ வடிவுகொள்‌ முகுந்த னாந்திருத்‌ தேவனே பரமெனத்‌ தெளிவுண்‌ டாகியே; 50

பலசம யங்களிற்‌ படிந்த வற்றிலே
அலகில்நா ளொழித்ததுக்‌ ககம்நெ கழ்ந்துபின்‌(பு)
இலகுமூ லப்பொரு ளினைய டைந்தனம்‌. ட்ட)
நலமிதின்‌ வேறென நயக்க லாவதே. 51

திவ்ய தேச யாத்திரை
என்னவா னந்தமுள்‌ ளெழுந்து பொங்கவே
அன்னமா மழிசைவிட்‌ டாம்ப லும்செழுங்‌ ‘
கன்னலுஞ்‌ சாலியுங்‌ கவினு மாவயல்‌
மன்னுசீர்‌ .திருவல்லிக்‌ கேணி மன்னினான்‌.  52

சீர்த்ததா மரையுதிர்‌ மணிசெ ழித்திடும்‌
நீர்த்தட மாடியும்‌ நிமலன்‌ ஆகிய
பார்த்தசா ரதிப்பதம்‌ பணிந்து மிம்முறை
திர்த்தனாண்‌. டேழெழு நூறு. சென்றபின்‌; 53-700 வருடம்‌ ஆழ்வார்‌ இருவல்லிக்‌
கேணியில்‌ வாழ்ந்தார்‌.

ஒருபகல்‌ மழிசையுத்‌ தமனை யோங்கெழில்‌
பெருகுவெஃ காவெனும்‌ பெரும்ப தக்கணீ
வருகவென்‌ றுணர்த்தினன்‌ மலரின்‌ வைகுறும்‌ இருமகள்‌ மகணனாந்‌ தேவ தேவனே.–54-

அம்முறை கச்சவெஃ காவ டைந்தெணார்‌
தம்முள மாமனை சார்ந்‌ திடாதொழி
செம்மைசேர்‌ நாரணன்‌ திருப்ப தந்தொழு(து)
இம்முறை யேழுநூ றாண்டி ருந்தனன்‌. 55

கணிகண்ணன்‌ வரலாறு
்அந்தநா டனிற்கணி கண்ண ஸும்பெயர்ச்‌
செந்தமிழ்ப்‌ புலவரிற்‌ சிறந்து மாண்புடன்‌
வந்துமா மழிசையன்‌ பதம்வ ணங்கியே
சந்தத முளந்தனி லன்பு சார்ந்தரோ. 56

மழிசையன்‌ றன்புகழ்‌ வளங்கள்‌ பாடியே
அழிவில்சீர்‌ இருத்திய னணுக வோர்பகல்‌
மொழியுமந்‌ நகர்மனு முறையி னாண்டருள்‌
எழில்பெறு மரசனு முலாவந்‌ தெய்தினோன்‌; 57

புவியுடை வேந்தனும்‌ புலவன்‌ வைகிடத்‌
குவிசொடும்‌ பலபொரு டந்தென்‌ மீதிலோர்‌
கவிசொலென்‌ நுரைத்தசொற்‌ கனலிற்‌ காய்ச்சியே
செவியுடு மூசியொப்‌ பாகச்‌ சேர்தலும்‌; 58

இனியவெம்‌ பரன்புக ழியம்பு நாவினால்‌
மனிதர்மேற்‌ கவிதையான்‌ வழங்கு கின்றிலேன்‌
பனியென வழிவுறும்‌ வாழ்வைப்‌ பற்றியே
குனிசிலை வயங்கொளேன்‌ என்று கூறுவான்‌. 59

அரும்பொரு ளிஃதெலா மற்ப வோடதாம்‌
துரும்பதாம்‌ நீயெனச்‌ சொல்லி வீறுடன்‌
பெரும்புக ழமாளனும்‌ பெயர்தல்‌ காண்குறா
இரும்புவிக்‌ கரசனு மிதையி யம்புவான்‌. 60

அன்னதே யாமெனி லருந்த மிழ்வலோய்‌ ‘
என்னதாந்‌ தேயமீ திருக்க லாகுமோ
பன்னுக : நீயெனப்‌ பாரை யாள்பவன்‌
சொன்னசொல்‌ லவன்‌ செவி கருக்குற்‌ றெய்தலும்‌; 61

கணிகண்ணனும்‌ ஆழ்வாரும்‌ பெருமாளும்‌
கச்சியை விடுத்தல்‌
உன்றிருத்‌ தேயமீ துறைவ தில்லையான்‌
என்றுரைத்‌ தக்கணம்‌ விரைவி னெய்தியே
துன்றுசீர்‌ மழமிசையன்‌ றூய டித்துணை
குன்றலை மீதுறத்‌ தரித்து யம்புவான்‌. 62

(வேறு),
ஐய கேட்டியின்‌ றென்னையித்‌
தேயமா எரசனும்‌ வருவித்துச்‌
செய்ய வோர்கவி தன்மிசைப்‌
பாடெனச்‌ செப்பிட மறுத்தேனால்‌
வெய்ய னும்‌எனைத்‌ தனதுதே
யந்தனை விட்டக லெனச்சொன்னான்‌
துய்ய நின்பதந்‌ தொழுதகல்‌
குவனெனச்‌ சொற்றனன்‌; நடவுற்றான்‌. 63

அனைய ஸனேகலும்‌ நின்னைவிட்‌
டிங்ஙனம்‌ அணுகிலன்‌ யானென்ன
– . வினையி லாமழி சையனுநா ்‌
கணைமிசை விளங்குற வளர்கின்ற
புனைது மாய்வெஃகு மார்பினன்‌
பொன்னடிப்‌ போதினைப்‌ பணிந்தேத்தி
இனைய சற்கணி கண்ணனித்‌
தேயம்விட்‌ டேகுதற்‌ கமைந்தானால்‌; — 64

அவனை நீங்கியா னீங்குறை
இன்றிலே. னாதலா லவன்பின்னே
குவனின்‌ னாகணை சுருட்டிக்கொண்
டென்னுடன்‌ கூடவா வெனலோடுஞ்‌
சிவனுந்‌ தேர்கொணான்‌ வேறொரு
தேயநீர்‌ சேறலென்‌ னோவென்னாப்‌
்‌ பூவன வேந்தனும்‌ தன்மிசை
. ‘கவியிவன்‌ புகல்கிலா மையினாலே. | 65

இந்தத்‌ தேயம்விட்‌ : டேகென
இவன்றனக்‌ கியம்பின னெனலோடும்‌
அந்தப்‌ பேரவ மதியுன
தடியற்கன்‌’ றஇினிற்பதின்‌ மடங்காக
எந்தனைச்‌ செய்த தாகுமா
லுனைப்பிரிந்‌ இருக்கல னிவண்விட்டே
உந்த னோடுசெல்‌ குவனென
வுரைத்துவந்‌ துறங்குநா கணைதன்னை; 66

சுருட்டு றாவெடுத்‌ தேகலும்‌ .
மருகுறு தூய்மையார்‌ மடவார்கள்‌
மருட்டு றும்மிவ. ரொடுமறு ்‌
தேயம்யான்‌ மருவுவன்‌ இன்றென்னா
இருட்டி ஸீங்குவிட்‌ டேகலென்‌
னெனவவ ரிசைத்தலு மடியார்தம்‌
பொருட்டெ. னாநடந்‌ தமையெலாம்‌
புகன்றனன்‌ புவிதனை யளித்துண்டோன்‌. 67

அம்மொ ழித்திரு மகளொடும்‌
புவிமக ளாகிய விருவோர்கள்‌
தம்மி ௬ஞ்செவி யுறுதலுந்‌ இயங்கியே தனித்திவ ணுறையேம்யாம்‌
உம்மு டன்துடர்ந்‌ இடுவமென்‌
றெழுந்தவ ர௬டன்வர விரைவோடுஞ்‌
செம்மை சேரும்வெஃ காவைவிட்‌
டேமறு தேயஞ்சென்‌ றனர்மாதோ. 68

இச்செ யற்கண்மற்‌ றுளதிருப்‌
. பதிகள்வா. ழிறைவர்தேர்ந்‌ துடனேக
நிச்ச யித்தவ ரவர்கடந்‌
தேவியர்‌ நெருங்கித்தம்‌ முடன்செல்ல
கச்சி தன்னைவிட்‌ டேகினர்‌
மறுதினங்‌ காலையிற்‌ புனறோய்ந்து
குச்சி னிற்கத வந்திறந்‌
தர்ச்சகர்‌ கோயிலுட்‌ புகுந்தாரால்‌. 69

புகுந்து நோக்கலு முபயநாச்‌ சியார்களாம்‌ பூவைய ரொடுஞ்செந்தேன்‌
உகுந்து ழாய்முடி நாரணர்‌
தங்களை யொருவருங்‌ காணாராய்‌
மிகுந்த வற்புத மடைந்தவ ராகியே மீண்டொரு விடத்தொளன்றித்‌
தகுந்த யோசனை புரிந்த னர்திருத்‌ தலங்கள்வாழ்‌ மறையோர்கள்‌. 70

முரச றைந்திடு படைத்தலை
யுடையவம்‌ முதுநகர்ப்‌ புரந்தோம்பும்‌
அரசன்‌ மாடணைந்‌ தித்திறம்‌
யாவுமங்‌ கறைதலு மதுகேளாப்‌
புரசை யானைய ஸனூள்மிக
நடுங்கியிப்‌ புதுமையை அமைச்செய்தும்‌
பிரச மாலையீர்‌[ புகலுமி
னென்னவப்‌ பெரியரு மிதைச்சொன்னார்‌. 71

பணிமு டித்தலை சுமந்திடு
மிரும்புவி பரித்திடுந்‌ திணிதோளாய்‌
கணிக ணற்குநீ பிழைத்திடும்‌
பிழைகளக்‌ கணிகணன்‌ ..றனக்கல்ல :
மணிவ ஸணற்கிழைத்‌ துளதென .:
வுணர்திமற்‌ றவன்றிரு மலர்போன்ற
அணிப தத்தினிற்‌ றொழுதுப
– சரித்திடி லவரணை குவரென்ன? 72

கேட்ட போதுவெஃ காவிடை
யேகியே கேட்கலு முளதாமிந்‌
நாட்டி லில்லையக்‌ கணிகண
னிவ்வழி நடந்தன னென்வாங்குக்‌
கூட்ட மிட்டவ ர௬ரைத்தலு
மந்நெறி குறித்துப்பா ரளப்பான்போல்‌
ஓட்ட மிட்டொரு நொடியினிற்‌
சென்றன னொளிர்மணி முடிவேந்தன்‌. 73

மின்னி ழிந்திரும்‌ புவிமிசை
நடந்தென விரைவொடும்‌ நடந்தேகும்‌
பொன்னி னோடுமம்‌ புவிமகள்‌
தமதடிப்‌ போதினைப்‌ பணிந்தேத்து
என்னி லென்பிழை கண்டுநீ
ரேகுவ தியம்புவி ரெனலோடும்‌
உன்னி லோர்பிழை யாங்கள்கண்‌
டுணர்கில முலகிய லதுகேண்மோ. : 74

கணவன்‌ போம்வழி மனைவிய
ரேகுதல்‌ கடமையா மதனாலெம்‌
மணவன்‌ போகயாம்‌ பின்றுடர்ந்‌
தேகுவ மன்னனீ யவரைக்கேட்‌ (டு)
உணர்கு வாயென வாங்கவ
ருரைத்தலு மொளிர்மணி முடிவேந்தன்‌
பணவ ராவணை சுருட்டிமுன்‌
பெயருமப்‌ பச்சைமாற்‌ கெதிர்சென்றே; 75

இருவ டிக்கணின்‌ றடியனே
னென்பிழை செய்தன னெனநீயும்‌
மருவு கோயில்விட்‌ டேகுவ
தென்னலும்‌ மன்னவன்‌ றனைநோசக்கி
முருக விழ்த்தபூநர்‌ தொடையவ ரென்வயின்‌ முளரிசேர்‌. வண்டென்னப்‌
பெருகு மன்பின ரார்தினம்‌
யானெனப்‌ பேசுத லுணர்வாயால்‌. 76

ஆத லாலென தடியனாம்‌
மழிசைய ஸின்னகர்‌ தனைறீங்கிப்‌
._ போத லோடுமங்‌ கவனுடன்‌
யானுமே போகின்ற தறியுன்பால்‌
ததுண்‌ டாமெனி. லவனை நீ
வினவிடிற்‌ றெரிந்திடு மெனமாயன்‌
ஒத லோடுமன்‌ னவனுமன்‌
னவனிடத்‌ .துகந்துசென்‌ றனன்மாதோ. _ 77

சென்ற வன்றிருப்‌ பாதவம்‌
புயங்கடன்‌. நிருமுடி யுறச்சூடி இன்று நான்பிழை யிழைத்துள “
தென்கொனீ யேகுதற்‌ கெனலோடும்‌
வென்றி வேலினோய்‌ நின்னுட ்‌
னொருமொழி விளம்பிய திலையான்மற்(று)
ஒன்று நீயப .சாரமெற்‌
கிழைத்தது முணர்கில மதுகேண்மோ. 78

பிரிய மூற்‌ெ றனைச்‌ சார்ந்துள
கணிகணப்‌ பெயர்பெறும்‌ புலவோனும்‌ ட்‌
புரியு நின்புவி யெழுந்துவிட்‌
டேனெனப்‌ போயின னவன்றன்பால்‌
பரிவு கொண்டயான்‌ அடைந்துளே
னவனிடம்‌ படர்ந்துநீ வினவுற்றால்‌
தெரியு மாங்கவன்‌ திரும்புறில்‌ ்‌
அவன்பினே’ இரும்புவன்‌ யானென்றான்‌.  79

என்ன வோதலு மலைகட
லுடையுடை யிரும்புவி தனையாளும்‌
மன்ன வன்விரைந்‌ தடைந்துதன்‌
முடியுறு மணிமுடி கணிகண்ணன்‌
பொன்ன டித்துணைப்‌ போதுவைத்‌
இங்கியான்‌ புரிந்துள பிழையாவும்‌
அன்னை பாலிளங்‌ குழவிசெய்‌
துளதென வகம்பொறுத்‌ திடல்வேண்டும்‌. 80

மூவரும்‌ திரும்பினர்‌
என்று பற்பல வினியநன்‌
மொழிபுகன்‌ றேத்திவேண்‌ டுதலோடும்‌
நன்றெ னாநயந்‌ தவன்வெஃ
காவழி நடக்கலு மவன்பின்னே
கன்றி னைத்துடர்‌ பசுவென
மழிசையன்‌ கடுகின னவன்பின்பாய்‌
வென்றி யாழிய னடந்திட
அவன்பினே மின்னனார்‌ களுஞ்சென்ஜறார்‌. 81

வேந்த ஸனும்மகிழ்‌ வுடன்வரப்‌
பின்செல விரைந்து£ர்‌ வெஃ்காவுள்‌
காந்து பன்மணிக்‌ கோயிலுள்‌
யாவருங்‌ கலந்துபின்‌ மலையொன்றை-ஏத்தி மாமழை தடுத்திளங்‌. கோவிய ரிளமுலை வளம்வேட்ட
பூந்து மாய்முடி மாயனை
நோக்கியம்‌ மழிசையன்‌ புகல்வானால்‌. 82

மன்னி னன்சகணி கண்ணன்யா
னவன்பினே வந்துளே ஸினியுன்றன்‌
பன்ன கப்பெரும்‌’ பாயலை
விரித்ததிற்‌ படுமெனப்‌ படுத்தானால்‌.
அன்ன நாண்முத லத்திருப்‌ பதியின்வா மாழியங்‌ கையற்குச்‌
சொன்ன வண்ணஞ்செய்்‌ தருள்பெரு
மாளெனத்‌ தோன்றிய தொருநாமம்‌. 82

மற்ற வத்திருப்‌ பதியுறை பவர்களும்‌ மனைவிய ரொடு தம்மூர்‌
உற்ற டைந்துயர்‌ கோயிலுண்‌ ்‌
மகிழ்வொடு முறைந்தனர்‌; புவியாளும்‌
வெற்றி வேந்தனு முளங்களித்‌
தரமனை மேவிவாழ்ந்‌ தனனவ்வூர்‌
சொற்ற பார்க்கவன்‌ மதலையுஞ்‌
சிலபக றநுன்னிவாழ்ந்‌ ததன்பின்னர்‌; 84.

(வேறு)
மருவுவெஃ காவை நீங்கி
மாங்கனித்‌ தேற லும்பார்‌
பருகிள மேகிப்‌” பாலும்‌
பாசமா ரிறாலின்‌ றேனுங்‌  குருமணிக்‌ கரும்பின்‌ சாறுங்‌. *
குளம்பல நிரம்பப்‌ பாயும்‌:
இருவளர்‌ குடந்தை யென்னுந்‌ ட. 3 தெய்வமா நகரஞ்‌ சேர்ந்தான்‌. 85

அத்திருப்‌ பதிவா மாரா
வழுதரின்‌ அம்பொற்‌ பாதஞ்‌
சித்தமுள்‌ ஞருக யன்பு
செழிப்பவா லயத்துட்‌ சேர்ந்தே
நித்தமும்‌ வணங்கிப்‌ போற்றி ட்ப
நிகமுமாண்‌ : டதுவோ ராயி
ரத்துநா னூறவ்‌ வூரி: ன
னமர்ந்துவாழ்ந்‌ இருந்த பின்னர்‌; 86–ஆராவமுதனை வணங்கி ஆழ்வார்‌ குடந்தையில்‌ 1400 வருடம்‌ வாழ்ந்தார்‌.

பெரும்புலியூர்‌ நிகழ்ச்சி
குரும்பையங்‌ கொங்கை “நீலக்‌.
கூர்விழிப்‌ பணையின்‌ மென்றோள்‌
சுரும்பிமிர்‌ கரிய கூந்தல்‌
ஹறோகையர்‌ முத்த ளக்க.
அரும்பின நிலவில்‌ வாய்விண்‌
டலர்ந்திடுங்‌ குவளைப்‌ பண்ணைப்‌
பெரும்புலி யூரின்‌ வாழும்‌ பிரபல னொருவ னன்னோன்‌/ 87

செகந்தனி லுயர்ந்த சர்த்திச்‌
செழுமறை யவன்றா னாங்கோர்‌
மகந்தனை யியற்றல்‌ கேட்டம்‌
மாமகம்‌ காண்பா னாய்த்தன்‌
அகந்தனி னினைவுற்‌ றாங்கண்‌
அணுகியவ்‌ .வூர்வாழ்‌ கோயில்‌
உ.கந்துறை செங்கண்‌ மாலை
யுணர்ந்திவன்‌ வலம்வந்‌ தானால்‌, . 88:

வலமதாய்‌ வரும்போ தந்த
மண்டபம்‌ கோயிற்‌ றம்பம்‌
_ இலகுறு பெருமான்‌ மற்றும்‌
இயைவன மற்றும்‌ யாவும்‌
நலமுறு மழிசை யான்பின்‌
நடத்தல்போற்‌ _றிரும்பல்‌ காணாப்‌
பலருமாங்‌ கதிச௪ யித்தங்‌ ட
சுவர்பதம்‌ பணிந்து போற்றி; 89 ்‌

இந்தமாப்‌ புருடன்‌ யாவன்‌?
இவன்மகத்‌ துவந்தா னென்னோ?
பைந்தலை யரவி ஸாடும்‌
பரமனிவ்‌ வுருவந்‌ தாங்கி
வந்தன னாம லாவிவ்‌
வணஞ்சுழன்‌ நிடுமோ வென்னாச்‌
சந்தையின்‌ மகிழ்ந்து கொண்டா
டினர்களச்‌ சீரோன்‌ றன்னை. ்‌ 90

மழிசையன்‌ றானு மவ்வூர்‌
வைகினன்‌ மகம்செய்‌ வோனும்‌
விழிதுயி லுணர்ந்து காலை
விதிமுடித்‌ தெக்ய சாலை
உழிமிகு நியம மாய்ச்சென்‌
றுற்றவ னேக லோடும்‌
வழியினோர்‌ மடவாள்‌ தன்கால்‌
நீட்டலும்‌ மறையோன்‌ காணா; 91

வேலைவென்‌ நிடுங்கார்க்‌ கண்ணாய்‌।
வேலையின்‌ வளர்வ ஸத்தாய்‌/
மாலைசேர்‌ மாலை நோக்கி
மகம்புரிந்‌ இடுமவ்‌ வெக்ய
சாலையான்‌ சால நேமந்‌
தன்னுடன்‌ விரைவி னேகுங்‌
காலைநீ காலை நீட்டிற்‌
றென்னெனக்‌ கனன்று சொன்னான்‌. 92

சொன்னவம்‌ மொழிதன்‌ காதற்‌
சுருக்குற முத்த மூரல்‌ மின்னிட நகைசெய்‌ இிப்பார்‌
மிசையொரு கடவு ளாக
இன்னகர்‌ தனில்வந்‌ தெய்து
யிருக்குமம்‌ மழிசை யான்றன்‌
பொன்னடி. வணங்கிப்‌ பூசை
புரிந்திடு புலமை யில்லோய்‌. 93

தினக்கொரு மொழியு முண்டோ?
நின்மகம்‌ மகந்தா னாமோ?
எனக்கொடி மடவாள்‌ கூற
இருசெவி. புகுத லோடும்‌
கனக்கவு நாணங்‌ கொண்டக்‌
கன்னியைப்‌ புகழ்ந்து வாழ்த்தி
மனக்கவ லையினோ டேயம்‌
மறைவலான்‌ சாலை புக்கான்‌. ்‌ 94

புக்கவன்‌ மடவாள்‌ சொற்ற
புனிதனை விரைவி னோடுஞ்‌
சிக்கென வவ்வூர்‌ முற்றும்‌
தேடினன்‌ தெரியா னாகி
மிக்கவாந்‌ துயரி னோடும்‌
மெய்தளர்ந்‌ துயிர்த்து வாடித்‌
தக்கதே தறிதற்‌ கென்னாத்‌
தன்னகஞ்‌ சார்ந்தா னன்றே. 95

மனதுவெந்‌ துயரொ : டுங்க
வளர்வுமி மழிசை யுற்றோன்‌
தனதுரு விதுதேர்‌ கென்னத்‌
தானவ ஸூருவந்‌ தாங்கக்‌
கனவினிற்‌ றெரித்துப்‌ போனான்‌
கஞ்சனா ருயிர்போய்த்‌ துஞ்சச்‌
சினவரா வணையை நீங்கித்‌ தேவகி வயித்தின்‌ வந்தோன்‌. 96

கண்டுயி லுணர்ந்து பின்பவ்‌
வுருவினைக்‌ கண்கா ணாமல்‌
விண்டுவந்‌ துணர்வித்‌ தானென்‌
றுளந்தனில்‌ வியப்புற்‌ றானால்‌!
மண்டுறு முவகை யோடம்‌
மறைவலோன்‌ றிருமா லுக்குத்‌
தொண்டுறு மவனை நாடித்‌
துரிதமுற்‌ றெழுந்து காலை; 97

ஆங்கொரு வனுமா யுற்றோர்‌
ஆவண வீதி யின்கண்‌
பாங்குறு பிரப்பங்‌ கூடை
பரிவொடு .முடைந்திட்‌ டந்தத்‌
குங்கிலான்‌ விற்றல்‌ காணாச்‌
செழுந்துயில்‌ கனவிற்‌ கண்டோன்‌
ஈங்கிவ னாகு மென்னா
வெண்ணியுள்‌ மகஇழ்வுற்‌ நானாய்‌; : 98

ஐய/நீ யிவ்வா றுற்ற தறிந்திலே னறியத்‌ தக்கோர்‌ .
வையமீ தில்லை; இந்த
மானிட வடிவங்‌ கொண்டு
உய்யுமா றுற்ற தேவே:
எனவுள முருகி யன்னோன்‌
செய்யபங்‌ கயத்தாள்‌ மேலே
இருமுடி சேர்த்துச்‌ சொல்வான்‌. 99

என்பெருந்‌ தவமோ? முன்னோர்‌
இழைத்திடுத்‌ தவமோ? இப்பார்‌
தன்பெருந்‌ தவமோ? இந்தத்‌
தனிமகந்‌ தனக்குற்‌’ றோர்கள்‌
முன்புரி தவமோ? யாதோ?
…. தெரிகிலேன்‌; முளரி யொப்பாம்‌
நின்றிரு வடிச)ு ணோவ
வந்திவ ணடைந்த தென்னா; 100

என்னநன்‌ மொழிகள்‌ பேசி
யான்புரி கின்ற வேள்வி
தன்னைநீ காணு மாறு
சார்ந்திட வேண்டு .மென்னா
்‌ ௮அன்னமா மறையோன்‌ வேண்டி .
அழைத்துடு மின்சொல்‌ யாவுங்‌. –
கன்னமூ டுறலு முள்ளங்‌ : :
காப்புட னவன்பின்‌ சென்றான்‌. 101

யாகசாலையில்‌ நிகழ்ந்தது
மகம்புரி சாலை யெய்தி.
மறைமுறை வழுவா தங்கி
யுகந்திட வாவி நெய்கொண்
டோமமுற்‌ றியபின்‌ தேவர்‌ :
முகந்திட வவிக ணல்கி
. முடிந்தபின்‌ மழிசை யானுக்(கு) “-அகங்களித்‌ தெழுந்து சம்பா
வனைமுன மளித்தா னன்றே. 102

அன்னவர்க்‌ களித்தல்‌ காணா
ஆங்கணுற்‌ றிருந்தோ ரெல்லாம்‌
இன்னவன்‌ மகத்திற்‌ கெய்தி
யிருந்துள மேலோர்‌ தம்மில்‌
மூன்னரிற்‌ பூசை கொள்வோன்‌
முறமொடு கூடை தட்டும்‌
பின்னிவிற்‌ பவனோ வென்ன?
வெகுண்டனர்‌ பெரிது மன்னோ. 103

நிருபர்கள்‌ பலரை வென்று
நெறிவழா திராய சூயந்‌ தருமன்செய்‌ தஇிடுதாள்‌ முற்பூ சனையுயர்‌ வசுதே வன்றன்‌
இருமகற்‌ களித்த காலை
தனிற்சசு பாலன்‌ வெம்பி
உருமெனத்‌ தெழித்தற்‌ கொப்பாய்‌
உதாசனம்‌ பலவும்‌ சொன்னார்‌. 104

அவ்வுரை பலவுங்‌ கேளா
வந்தணன்‌ மழிசை யான்றன்‌
செவ்விய முளரி யொப்பாந்‌
திருவடி தனது சென்னி ஒவ்வுறப்‌ பணிந்திட்‌ டின்னார்‌
உரைத்தபுன்‌ மொழிகள்‌ எண்ணா
இவ்வயி னடியேற்‌ காப்பாற்‌
றருள்மிகப்‌ புரிவை யென்ன; 105

பன்மொழி நயக்கு மாறாய்ப்‌ |
பண்புறப்‌ பகர்ந்து போற்றி,
சின்மயப்‌ பொருளா யிப்பார்‌
– செனித்துறை சோதி யான
நின்மகத்‌ துவமிப்‌ புல்லோர்‌ ன ரர
நெஞ்சுறத்‌ தெரித்தி யென்னா. ‘
நன்மகத்‌ தலைவ னான
மறைவலோ னவில லோடும்‌; . 108:

இறைவன்‌ காட்சி
அந்தநன்‌ மொழிகள்‌ கேளா
அவனுமைம்‌ படையோன்‌ றன்னைச்‌
சிந்தையுள்‌ ஞணர்த்த லோடுஞ்‌ ~ சுவனய னுடனே யண்டத்‌
இந்திரன்‌ முதல்வா னோர்க ,
ளேத்தவந்‌ தரத்தின்‌ மீதாய்ச்‌ ்‌
செந்திரு வுடனே மாயோன்‌
உவணன்மேற்‌ சிறந்து தோன்ற; 107°

ஐம்படையோன்றன்னை – ஐந்து ஆயுதங்கள்‌ தாங்கிய.
இருமாலை.. இறைவனை ஆழ்வார்‌ சிந்தித்தார்‌. உடனே மாயோன்‌ கருடன்‌!
மேல்‌ சாட்சி தந்தான்‌, உவணன்மேல்‌ – சுருடன்மீது. :
இச்‌ சமயத்தில்‌, ஆழ்வார்‌,
**அக்கரங்கள்‌ .அக்கரங்கள்‌ என்றுமாவ தென்கொலோ
இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல்‌
சக்கரங்கொள்‌ கையனே சடங்கர்வா யடங்கி௪
“உட்டிடத்த வண்ணமே புறம்பொ௫ிந்து
என்று பாடியதாக வரலர்று பேசும்‌.

காண்டலு மழிசை யான்றன்‌
_ கண்களித்‌ துளத்தி னூடு
பூண்டபே ரன்பி னோடும்‌
புவியுற வணங்கி யென்னை ஆண்டருள்‌ பரம மூர்த்தி
அண்ணலே விண்ணோர்‌ காணாத்‌
தூண்டருஞ்‌ சுடரே யென்னப்‌
புகழ்ந்துகை தொழுது சொல்வான்‌. 108

அஞ்சனை யளித்தாய்‌ போற்றி!
அலகைமா முலைவைத்‌ தாட்ட
நஞ்சமுண்‌ டுவந்தாய்‌ போற்றி!
நாகமே ஸனடித்தாய்‌ போற்றி!
கஞ்சனை வதைத்தாய்‌ போற்றி!
கரிபரி யிடப மெல்லாந்‌
துஞ்சுறப்‌ பொருதாய்‌ போற்றிர
தூயனே. போற்றி । போற்றி! 109

எனதுமா தவத்தி னால்வந்‌
தெய்தினை யினிநா யேன்வந்து
உனதுமாப்‌ பதாம்பு யத்தை
யுறும்வகை யளித்தி யென்றான்‌
மனதுவந்‌ தருளி யன்னான்‌
மாமூகந்‌ தன்னை நோக்கிப்‌
புனைதுழாய்ப்‌ படலை எம்மான்‌
புகல்குவ னிதனை மன்னோ. .. 110

இன்னமும்‌ சலநா ஸளிப்பா
ரிடையிருந்‌ துலகு ‘ளோர்பால்‌
துன்னுமா மாயை நீங்கி
“.. உயர்பதந்‌ துடரு மாறாய்‌ -பன்னுசெந்‌ தமிழி னாற்பல்‌
பாடல்க ளிசைத்துப்‌ பின்னர்‌
மன்னுதி யென்னத்‌ தன்செவ்‌
வாய்மலர்ந்‌ தருளி னானால்‌, 111

அப்பொழு தாழி மாய ,
னடியினை வணங்கி யேத்தி :
இப்பெரும்‌ புருட. னாலுன்‌
னிணையடி தொழுது யான்செய
ஒப்பரு மகத்தி னுற்ற வுயர்பல னடைந்தே ஜனென்னாச்‌
செப்பரு மகிழ்வி னோடுஞ்‌ ,
சிந்தையுள்‌ ளூருகி நின்றான்‌. 112

மற்றுமவ்‌ வேள்விக்‌ குற்றோர்‌ ட்‌…
மனமகிழ்ந்‌ தடைந்து ளோரும்‌ ்‌
நற்றுணை யா௫க்‌ காக்கும்‌
நாரண ஸனென்னு நாமம்‌
வெற்றிசே ராழி சங்கம்‌
விற்கதை வாள்கைக்‌ கொண்டோன்‌
பொற்றிரு வடியின்‌ வீழ்ந்து , புகழ்ந்தனர்‌ துதிசெய்‌ தாரால்‌. ்‌ 113

பாங்கொடு மிவ்வா றாகப்‌
பரிந்தடி தொழுது போற்றும்‌
ஆங்கவர்‌ தமக்குக்‌ காட்சி
யளித்துத்தன்‌ பதவி சார்ந்தான்‌;
பூங்கம லத்து வாழும்‌
புனிதனன்‌ நிட்ட சாபம்‌ – ட்ட
தாங்கிய வரனுக்‌ கையந்‌ ்‌
.தனையழித்‌ தொழித்த நாதன்‌. ப்‌. 114,

மாயவ னகுன்ற பின்னர்‌
* மகம்புரி மறையோ னண்மி
ஆயநன்‌ மகத்திற்‌ காவந்‌
துளபல ரும்யாஞ்‌ செய்த
இயன பொறுத்தி யென்னத்‌
்‌…. திருச்செவி யின்ப முற்ற
தூயவன்‌ கமல பாதந்‌
தொமுதன ரேத்திச்‌ சொன்னார்‌. 115

யாவரு மினிதி னோடும்‌
பின்னரு மியற்றல்‌ யாவும்‌
முடித்தபின்‌ னிருக்கை தன்னில்‌
அன்னவ ரடைந்து வாழ்ந்தா
ரப்பெரும்‌ புலியூ ரென்னும்‌
பொன்னகர்‌ மழிசை யானும்‌
பொருந்திவீற்‌ றிருக்கும்‌ நாளில்‌. ்‌ 116

ஒருநாட்‌ கிழிந்த வத்திரந்தத்‌ துறுபோ துமையு முருத்திரனாம்‌
எருதே —கயிலையெனு
மில்லம்‌ விடுத்தந்‌ தரமிசையே
வருபோ தவர்மே ஸிச்சாயல்‌
மற்றிம்‌ மழிசை யாழ்வார்தன்‌
இருமே ஸனியிற்றாக்‌ குதலுமுளந்‌ இகைத்துப்‌ பின்பா லொதுங்கினனால்‌. 117

கண்ட வுமையா ஸிவனிடையும்‌
கருமம்‌ யாதென்‌ றிடக்கேட்டு
வண்டுண்‌ துளவத்‌ திருநெடுமால்‌
மலர்நே ரடிமைக்‌ கடிமையுறும்‌
தொண்ட னதனா ஸஊஞ்சாயற்‌
ஹறோயா திடைந்தா னெனக்கடல்நஞ்‌
சுண்ட பெருமான்‌ கூறிடக்கேட்‌
டொருபா கத்தி னுமையுரைப்பாள்‌. 118

படியை யிரந்தோ ரடியதனுட்‌
படுமா றளந்து கொண்டருள்புட்‌
கொடியை யுயர்த்தும்‌ திருமாலின்‌
குரைபொற்‌ கழலார்‌ கோகனக
அடியை வழுத்தும்‌ . திருத்தொண்ட .
னாமே யெனினு மரவொடுவெண்
பொடியை யணிநீ கடவுளன்றோ? :
புவியிற்‌ பிறந்தோர்‌ தமக்கெல்லாம்‌.119-

அதையா மெய்தி யுணர்த்துமென
.அரனு மவன்பா லடையினமை
மதியா னெனலும்‌ மதியான்பால்‌
மதிப்பா யெய்தி மற்றவன்பால்‌
எதுவேண்‌ டினுமஃ தளித்தல்கடன்‌ ‘ ன
எனக்கேட்‌ டவளின்‌ மொழிமறுக்கும்‌
விதமின்‌ மையினா லுடன்பட்டு
மேவு மவன்மா முகநோக்க;–120-

வேண்டும்‌ வரங்கே ளெனவுசி
மேவும்‌ வழியவ்‌ வூசிதனிற்‌
பூண்ட நூல்போம்‌ வரந்தருதி
யெனவே புகலப்‌ பொற்கண்ணான்‌
ஈண்டுன்‌ வறுமைதவிர்‌ வரங்கே
ளெனலுந்‌ தனது முதுகதனைத்‌ தண்டி வெயர்வை தனையுருட்டிச்‌
சிந்திப்‌ புவிமேற்‌ றெரித்தனனால்‌. 121

பொன்னின்‌ மலைபோ லதுகுவியப்‌
பொருணின்‌ றனக்கு வேண்டிலிது
தன்னைக்‌ கொடுபோ வெனமழிசை
– தனில்வந்‌ துதித்தோன்‌ சாற்றுதலும்‌ அன்ன மொழிவந்‌ திருசெவியுள்‌
ளனல்போற்‌ புகுதப்‌ பொறாமையினால்‌
கன்னி பாகன்‌ வெகுண்டுநெற்றிக்‌
கண்ணைத்‌ திறந்தான்‌; திறந்திடலும்‌, 122

புகைகொண்‌ டெழும்பும்‌ வடவனல்போற்‌
பொங்கும்‌ கனல்விண்‌ தொடர்ந்தெழும்ப
நகைகொண் டருளி யணிமழிசை
நகர்வந்‌ துதித்தோ னவைநணுகா
வகைதன்‌ பதத்தார்‌ விரல்நகக்கண்‌
மலியா ரழலைத்‌ திறந்துவிடப்‌
பகைகொண் டதனை வளைந்துறழ்வாய்‌
படுத்திக்‌ கணத்திற்‌ பருகியதே. 123

பின்னும்‌ வெகுண்டு புரமட்ட
பெருமான்‌ வேறு நிகரிலதாய்‌
மன்னுஞ்‌ சூலந்‌ தனைவிடுப்ப
மதித்தாங்‌ கதனைக்‌ கைக்கொளலும்‌
அன்ன துணர்ந்த வசரீரி ்‌
யமரர்‌ தமக்கு மறிவறியாய்‌ ்‌
இன்ன படைநீ விடுத்திடினும்‌
எய்தி யவனா லழிவெய்தும்‌. 124.

ஆத லாலிங்‌ கிதனைவிடா
தகல்தி யெனவம்‌ மொழிகேட்டுச்‌
– சீத மதியுங்‌ கங்கையுந்தண்‌
செழுங்கொன்‌ றையுஞ்சேர்‌ செஞ்சடையோன்‌
பாதி யுடலங்‌ கொண்டமலை
பயந்த மடவா டனைவெறருத்துப்‌
போத நாணுற்‌ றிடபமிசைப்‌
பொருந்தி விசும்பிற்‌ போயினனால்‌. 125:

(வேறு)
ஆங்கவன்‌ போய பின்னர்‌
அணிமழி சையின்வந்‌ துற்ற
இங்கிலா வுளத்தா னந்த
செழுநக ரதனிற்‌ சின்னாள்‌
தேங்கமழ்‌ துளவப்‌ பைந்தார்‌
தஇருமக டலைவன்‌ செய்ய ,
பூங்கழன்‌ மதிக்கு முள்ளம்‌
பொருந்திவீற்‌ றிருக்கும்‌ நாளில்‌. 126,

குடந்தையி லமர்ந்த பொன்னங்‌
கோயிலுட்‌ டிருவ னந்தன்‌
படந்தனிற்‌ றுயிலு மாரா
வமுதினைப்‌ -பரிவி னோடுந்‌
தொடர்ந்தனு பவித்த வானந்‌
குத்தினைத்‌ தொடர்பை யெல்லாம்‌
கடந்தவம்‌ மழிசை யானுங்‌
கருதிப்பா விசைக்க லுற்றே; 127

நான்முகன்‌ இருவந்‌ தாதி நாற்பதோ டைம்பத்‌ தாறும்‌
தேன்பொழி யாநீர்‌ பத்துத்‌
திருச்சந்த விருத்தம்‌ தானும்‌ வான்மரு வமூத மென்ன
மண்ணுளோர்‌ துய்க்கு மாறாய்த்‌
தான்கனிந்‌ துரைத்தா னஃதைச்‌
சாற்றிவீ டடைந்தார்‌ பல்லோர்‌. 128

அவ்விரு நூற்றுப்‌ பத்தோ
டாறெனுங்‌ கவிதை தன்னு
ளொவ்வியே கமலை கேள்வ
னுவந்துறை கின்ற வாகும்‌
திவ்விய தேச மீரெண்‌
செப்பிய ததனுக்‌ குற்ற
செவ்விசேர்‌ நகரந்‌ தன்னைத்‌
தெரிவுறப்‌ புகல்வா மன்றே. 129

சீரரங்‌ கம்வெஃ காவுந்‌
இருவல்லிக்‌ கேணி தன்னோ
டூரகங்‌ குடந்தை கோட்டி
யூர்குறுங்‌ குடியோ டோதும்‌
பேரெவ்வுள்‌ வேங்க டம்‌அன்‌
பில்திருப்‌ பாட கம்து
வாரகைக்‌ கூடலும்‌ பாற்க
டலும்வை குந்த மாமே. 130

இப்ரபந்‌ தங்கள்‌ பாடி
யினிதொடுஞ்‌ சிலநாள்‌ வாழ்ந்து
முப்பரம்‌ பொருளாய்‌ வைகும்‌
முகுந்தனா ரருடன்‌ னாலே
ஒப்பிலா விமான மேறி
.யுயர்ந்திடும்‌ விரசை யாடிச்‌
செப்பிடும்‌ அமான ஸார்தந்‌
இருவடி சென்னி சூடி; ~ 131

படிகநன்‌ மேனி தாங்கிப்‌
பரமமா பதத்துட்‌ சார்ந்து
குடியதாய்ச்‌ சாம வேத
கீதங்கள்‌ குலவிப்‌ பாடி
நெடியநா ரணனோ டண்மிப்‌
பொருந்தின னிகழிக்காதை
அடிதொடங்‌ குதலாய்க்‌ கற்பார்‌
அடைகுவர்‌ பதவி மாதோ. 132

தொண்டரடிப்பொடியாழ்வார்‌ வரலாறு பகர்வோம்‌
சுமிகட லாடை யாகச்‌
சூழ்ந்தபா ரதனி ன்மீதே அழிவில்சீர்‌ மழிசை தன்னி
லவதரித்‌ தருளுஞ்‌ சீர்த்தி மழிசையான்‌ சரிதந்‌. தன்னை
வகுத்துரைத்‌ தனமால்‌ இப்பால்‌
மொழிகுதுந்‌ தொண்டர்‌ தங்காற்‌
பொடிகதை முழுதுந்‌ தானே. 133

திருமழிசையாழ்வார்‌ தஇருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

————-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌
திருவவதார அத்தியாயம்‌
வெண்பா
மன்னியசர்‌ மார்கழியில்‌ கேட்டையின்று மாநிலத்தீர்‌
என்னிதனுக்‌ கேற்ற மெனிலுரைக்கேன்‌–துன்னுபுகழ்‌
ஆமறையோன்‌ தொண்ட ரடிப்பொடி யார்பிறப்பால்‌
நாமறையோர்‌ கொண்டாடு நாள்‌. (உபதேசரத்தினமாலை, -11)

மண்டங்குடிச்‌ சிறப்பு :
வண்டங்குடி யிதின்வேரிலை யெனவேவளம்‌ விட்டே
கண்டங்குடி விலினேவுக ணையர்கார்க்‌ குழலுறல்போல்‌
அண்டங்குடி துறவாகட , வுளர்வந்தணு குறுசீர்‌ ,
மண்டங்குடி யெனுமோர்பதி வளமேவிய பதியே, 1,

ஆழ்வார்‌ அவதாரம்‌
அம்மாணக ரிடைவாழ்மறை யவர்தங்குல மதனில்‌
இம்மாணில முழுதும்புக ழிசைகொண்டுறு மொருவன்‌
செம்மாமட வரல்கற்பினில்‌ தெளிநீர்மையி னிறையில்‌
எம்மாதரு மொவ்வாத்திரு வெழிலாளவள்‌ வயிற்றின்‌.–2-

நாராயண ஸனூருவாமென நவில்மார்கழி யெனுமச்‌
சீரார்மதி தனிலிந்திர தினமாகிய திருநாள்‌
ஏராரற மொழியோங்குற இருமாகட. லெழுமவ்‌ ்‌
ஆராவழு தெனவந்தவ தரித்தான்வினை யெரித்தான்‌. 3

அண்டர்களி கூரப்பெறு மாயத்தனு மகிழ்வாய்‌
தொண்டர்கழல்‌ பொடியர்க்குறு சுபகாப்பணிந்‌ ததற்பின்‌
உண்டிட்டிடு மன்னத்தொடு சவளம்‌ உப நயனம்‌
பண்டைக்குல மறையின்முறை பலவும்புரி வித்தார்‌. 4

திருமணம்‌
உருவம்மத னெனலாயணை குறுநாடனின்‌ மதனூல்‌
பருவம்வரு தலுமன்பொடு பனிமாமலர்‌ வளருந்
இருவும்நிக ரலவென்றுரை செயுமொப்பில வடிவம்‌
மருவுங்குல மடமங்கையை மணமும்புரி வித்தார்‌. 5

துவளுங்கொடி யிடையொல்கிது வண்டெய்திட வரைபோல்‌ ்‌
இவளுந்தன மகலும்‌ உரம்‌ ஜெழுங்கத்தரு வணைமேல்‌ |
பவளம்பொரு மிதழின்சுவை பருகும்படி யொருமித்‌ t
துவளும்மிவ னொடுகூடிய ணைந்தின்பம டைந்தாள்‌. 6

கயற்கண்‌ வலையில்‌ படல்‌
இவ்வாறவ ளொடுகூடியி ருந்தும்பிற வழகார்‌ ச
செவ்வாய்மட வியர்தங்கடி றத்தாசைசெ லுத்தா
ஓவ்வாவவ ரொடுகூடியு றைந்தாரமு தெனவே
கவ்வாவிதழ்‌ பருகாமிகு கனிவாயணை குவனால்‌. -7

தவரும்முள னெகிழும்படி தங்கண்வலை தனைவீ க
சவர்சுந்தர வடிவங்களி லகமுந்துற வொழுகா,
துவர்செவ்விதழ்‌ முதல்யாவையுந்‌ துஇியாற்புக முதலால்‌
எவரும்மிவன்‌ மதனாமென இயைவுற்றணை குவரால்‌. . 8

(வேறு) ச |
இறைவன்‌ தடுத்தாட்கொளல்‌
படியெ லாமுட்‌ படிய வளர்த்திடும்‌ ட
நெடிய நாரணன்‌ நீள்பத பங்கயத்‌(து) அடிய ராக வகையுளத்‌ தொண்டர்கால்‌ ச
பொடிய ஸிவ்வணம்‌ நாள்பல போக்கலும்‌.-9-

பொய்ய தாகும்‌ புலவ னடத்தையை
மெய்யெ னாமனம்‌ வீணிற்‌ செலுத்தியே .
செய்ய வாய்மட மங்கையர்ச்‌ சேர்வுறும்‌
மையல்‌ கொண்டு மறந்தனன்‌ நம்மையே. 10
ஆத லாலிவ னுள்ளமம்‌ மங்கையர்‌
மீது றாதுதன்‌ மேனி யொளியிடைக்‌
காத லெய்து கருத்தரு ளத்திரு மாது கேள்வன்‌ மனத்திடை யுன்னியே. 1!

மடை மாறிற்று
அந்த —ளிச்செயச்‌
சிந்தை தன்னைத்‌ திருத்தி யடைகெனப்‌
பந்தெ னுந்தனப்‌ பாவையர்‌ காதலை
நொந்து விட்டுளம்‌ நோன்மைய ஸாயினான்‌. 12

ஆங்க வன்றெறு மாழியன்‌ பாலிறை
யோங்க வுள்ள முருகி யுருகிநைந்‌
தேங்கி யேங்கி யிருக்குமவ்‌ வெல்லையத்‌
தீங்கி லானுளங்‌ தேறிய தோர்ந்தரோ,. 13

இறைவன்‌ காட்சி
மூல காரண ஸாயிய லுந்திரு ‘
மாலு மாதுடன்‌ மாவயி னன்மிசை
நாலு மாமுகன்‌ நாகர்‌ முனிவர்கள்‌
கால காலனுங்‌ கைதொழு தேத்தவே. 14

விண்ணின்‌ மீதுவி எங்கித்தன்‌ மேன்மையைக்‌
கண்ணி னூடுறை காட்சி யளித்தலும்‌
மண்ணி ஸனின்றவம்‌ மண்டங்‌ குடியனும்‌
எண்ணி யுள்ள மிழுதென லாயினான்‌. 15

ஆடி னான்விழுந்‌ ‘தானெழுந்‌ தானெழுந்‌ :
தோடி னஸால்குதித்‌ தானுரு கிப்புகழ்‌ பாடி னானவன்‌ பங்கயச்‌ சேவடி
சூடி னான்றொழு தான்களி துள்ளவே: 16

கழிந்தகாலங்‌ கருதிக்‌ கனிந்தார்‌
அகந்தெ ஸிந்திவ்‌ வமுத மிருக்கவே
உகந்து மங்கையர்‌ பாலுற வாம்விடம்‌
முகந்து கால முடித்தன மேயெனா
இகழ்ந்து ளத்தைப்பின்‌ பின்னணம்‌ பன்னுவான்‌. 17

‘ நார ணாசிவன்‌ நான்முகன்‌ நாடிடுங்‌
கார ணாஅடி யார்தங்‌ கருத்துறை ‘
பூர ணாமுகுந்‌ தாபுனி தாவளர்‌ ‘ ஆர ணாஉனை யாரறி வார்களே. 18

ருந்‌ மா றம ரர்க்கன்‌ றலைகடல்‌
மருந்து கந்து வழங்கினை வாணகை
.மாதர்‌ கலைகொடு முன்வளர்‌
_ குருந்து: றுங்கருங்‌ கொண்ட ஸிறத்தனே. 19

கத்தி னம்‌௮ழு தேங்கக்‌ கனவரை
அத்தி னஞ்சுமந்‌ தாயென்‌ விழிகணீர்‌
முத்தி னஞ்சொரித்‌ தானந்த முத்திட இத்தி னம்மெதிர்ந்‌ தாயென தய்யனே. 20

என்னை யோர்பொரு ளாமென எண்ணியென்‌
அன்னை யாகு மமுதிடைத்‌ தோன்றிய
பொன்னை மார்பிற்‌ பொருத்திவந்‌ தெய்திய
உன்னை யான்கண்‌ டுரைக்கத்‌ தகுவனோ. 21

என்று பற்பல கூறி யிரங்கிமுன்‌
நின்று கைதொழு தேநெட்‌ டுயிர்த்தலும்‌
நன்று நன்றென்‌ றிளநகை தோன்‌ நிடக்‌
குன்று தாங்கிய கோவலன்‌ கூறுவான்‌. 22

பெருமாள்‌ தேற்றினான்‌
எனது மாயை யெனுமிரு ளெய்தியே
உனது நல்லறி வைமயக்‌ குற்றிட
மனதவ்‌ வாறு மயங்கினை யாகும்நின்‌
தனது ளத்தைத்‌ திருத்துறச்‌ சார்ந்தனம்‌. 23

வருந்து றேலினி மாயையும்‌ நீங்கிற்றால்‌
பொருந்து சீரங்கம்‌ வந்து புகுகெனாத்‌
இருந்தும்‌ இம்மொழி செப்பி மறைந்தனன்‌ விருந்து முன்னம்‌ விதுர னிடத்துண்டோன்‌. 24

(வேறு)
திருவரங்கம்‌ அடைந்தார்‌
மாயன்‌ மாயம தாக மறைதலுந்‌
தூய னானவன்‌ சிந்தை துளங்குறா
ஆய காலையொ ரவகை. யாறியே
சாயை போலுந்‌ தொடர்பைத்‌ தவிர்த்தரோ. 25

முன்னர்‌ அம்கம லத்துறை வோன்‌சவன்‌
அன்ன ரங்க மமர வனந்தனை
மன்ன ரங்க மதாய்த்திரு மால்வளர்‌
பொன்ன ரங்கம்‌ புகுந்தன னென்பவே. 26

அங்கு வைகு மடியர்க ளாயினோர்‌
தங்கள்‌ பொன்னடி தன்முடி தாங்கினான்‌
செங்க . ரங்கொ டவரிவன்‌ சேவடி.
பொங்கு மன்பொடு பூசித்‌ துளாரரோ. 27

ஒருவர்‌ தம்மை யொருவ ருபசரித்‌
துருவ மாத லிறத்தலென்‌ தோடும்‌.
இருமை யெய்த லிறுக்கு மவரொடுங்‌
குரும ணிச்செழுங்‌ கோயிலுட்‌ போயினான்‌. 28

நச்சு றும்பணை நாகணை மேற்றுயில்‌
பச்சை மாமலை மேனிப்‌ பவளவாய்‌
மொச்சு வண்டிமி ரும்முள ரிச்செங்கண்‌
அச்சு தற்பணிந்‌ தானந்த முற்றனன்‌. 29

ஆழ்வார்‌ திருப்பணி
இந்த மாயனுள்‌ ஸஎின்புற்‌ றுகக்குமாறு
எந்த வேலை யிழைத்திட லாமெனச்‌
சிந்தை யூடு நினைப்ப வதுதெரிந்‌
தந்த மாலு மிதனை யறைகுவான்‌. 30

(வேறு)
தொண்டர்தங்‌ காற்பொடி யேசொல்‌ லென்னிலன்‌
புண்டெனக்‌ கதுகவி யுகக்கு முண்மையே
கண்டறி மஞ்சனக்‌ காப்பொ டும்பல
கொண்டிழைப்‌ பதுமது வாகுங்‌ கோதிலாய்‌. 31

ஆதலாற்‌ கவியணி மாலை சாத்தியே
‘ததொழித்‌ தெந்தனைச்‌ சேர்தல்‌ வேண்டும்பா
வோதிட முடிவுறா தெனின்மற்‌ றொன்றுகேள்‌
போதணி மாலையைப்‌ பொருந்தச்‌ சாத்தியே. 32

என்னைவந்‌ தடைந்திட வேண்டு மீதலால்‌
பின்னையொன்‌ நிலையென வுரைத்துப்‌ பின்னரும்‌
முன்னைநாள்‌ விட்ணுசித்‌ தன்மு யன்றிது குன்னையே யிழைத்தன னெனவுஞ்‌ சாற்றினான்‌. 33

அவ்வுரை கேட்டலு மவ்வி ரண்டையும்‌
வெவ்வியேற்‌ கருள்செய வேண்டு மென்றிவன்‌
ஒவ்விய மனதொடு முரைப்ப வாழியான்‌
செவ்வியோ யம்முறை செய்கென்‌ றோதியே. -34

திருப்பள்ளியெழுச்சி உதயம்‌
அன்னவன்‌ திருமுடி யதிற்பொ ருந்துறத்‌ : தன்னிரு பதந்தனைச்‌ சார்த்த லோடுமே
இன்னிசை திருப்பள்ளி யெழுச்சி யென்பதைப்‌
பன்னினன்‌ கதிரவ னென்னும்‌ பத்தரோ. 35.

திருமாலை புனைந்தார்‌
தலங்களிற்‌ இறந்த? ரரங்கந்‌ தன்னிலே
யிலங்குமா லலதுவே றறிந்தி லேனென்றே
அலங்கலை யிசைபெறு மன்ப றைந்தனன்‌
நலங்கெழு செய்யுளோர்‌ நாற்பத்‌ தைந்தரோ. 36 :

“g7has SoG Qamgd மால்‌ அல்லது வேறு 2 NGwer” என்பது
தொண்டரடிப்பொடியாரின்‌ உறுதிப்பாடும்‌ உளப்பாடுமாகும்‌, இருவேங்கட
முடையான்‌. இது குறித்து வருந்தியதாகச்‌ சொல்லப்பட்டு வருகின்றது.
**தெண்டிரைசூழ்‌ அரங்கரையே தெய்வமென்றான்‌ வாழியே”’ என்பர்‌ அப்பிள்ளை. 1!
**தென்னரங்க . மணவாளற்‌ கன்பு மிக்குச்‌ செப்பிய நற்றிருமாலை’” என்பர்‌ ;
கவிதார்க்கக சிம்ஹர்‌ (பிரபந்த சாரம்‌).

நந்தவனப்‌ பணி
இம்முறைப்‌ பாவைம்ப தைந்தி சைத்தபின்‌
விம்முறு முவகையின்‌ விரைவி னேகியே
மும்முதல்‌ ஆகுமம்‌ முகுந்த னோதிய .
அம்முறை திருநந்த வனம்வைத்‌ தானரோ. 37

குல்லைபா திரிமருக்‌ கொழுந்து ௯விளம்‌
முல்லைபுன்‌ னைகரு முகைகு ருக்கத்தி
மல்லிகை யொடுமிரு வாட்டி யேமுதல்‌
சொல்லுபூஞ்‌ செடியெலாந்‌ துன்ன வைத்தனன்‌. 38

பக்குவம்‌ செய்தவன்‌ யாவும்‌ செய்தலால்‌
மிக்கபூ மாலைகள்‌ விளங்கு றத்தொடுத்‌
தொக்குமா றரங்கர்க்கு மரங்கம்‌ வாழ்த்திட
மிக்குறச்‌ சாத்துவன்‌ விருப்பி னோடுமே. 39

அரங்கன்‌ அருளிப்பாடு
இன்னணம்‌ பலபக லியற்ற வோர்பகல்‌
பொன்னரங்‌ கேசர்பூ மாலை கொண்டணை
யன்னவன்‌ மாமுக தோக்கி யன்றுநீ
சொன்னபா மாலையைச்‌ சொல்லு கென்னலும்‌. 40

இப்பெரும்‌ பாக்கிய மெய்திற்‌ றெற்கெனா
ஓப்பரு மகிழ்சிறந்‌ தோங்கத்‌ தான்முனஞ்‌
செப்புமப்‌ பாடல்கள்‌ செவியு றும்படி
அப்பொழு தோதினா னடிவ ணங்கியே. 41

பாடினார்‌ உருகினார்‌
பண்கொளப்‌ பாடல்கள்‌ பாடல்‌ தோறுந்தன்‌
கண்களா ஸந்தநீர்‌ கனிந்து திர்ந்திடப்‌
புண்களா ர௬டல்மயிர்‌ பொடித்திட்‌ டோங்குறும்‌
எண்கொளா வுருக்கமுற்‌ நிரங்கி நின்றனன்‌. 42

ஆழ்வார்‌ அரங்கனில்‌ கரைந்தார்‌
இரங்கிறின்‌ நிடுமவற்‌ கிரங்கி யின்பமோ
டரங்கரு மருகழைத்‌ தழுந்த வேதன. துரந்தனி லணைந்திட வவனு மொன்தறியே
கரந்தனன்‌ நீர்ப்பனிக்‌ கரைந்த தொப்பவே. 43

பயன்‌
ஆங்கவ ஸிம்முறை யரங்கர்‌ தந்திருப்‌ –
பூங்கழற்‌ பாடியே பொருந்தி யுற்றவித்‌ இங்கிலாச்‌ சரிதத்தைச்‌ செவியி னுள்ளுறப்‌
பாங்குடன்‌ கேட்பவர்‌ பதவி சேர்வரே. 44-

அன்னசீர்க்‌ கவிகளோ ரைம்பத்‌ தைந்தினில்‌
பன்னக வணையினான்‌ பதிகள்‌ மூன்றதாம்‌
பொன்னரங்‌ கம்வட மதுரைப்‌ பூம்பொழில்‌
மன்னு£ ரயோத்திமா நகர மென்பவே. -45-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌. மங்களாசாசனம்‌ செய்த இவ்விய
தேசங்கள்‌ மூன்று. அரங்கம்‌, வடமதுரை, அயோத்‌இ. பாடியபதி- திருவரங்கம்‌
ஒன்றே. மற்றைய இரண்டு இிவ்ய தேசங்கள்‌ சார்பாகப்‌ பேசப்பட டுள்ளன,

குலசேகரர்‌ வரலாறு கூறுவோம்‌
தோகைய ரின்பங்கொள் தொண்டர்‌ காற்பொடி
நாகணை யானைநண்‌ ஸணியது ரைத்தனஞ்‌
சாகரம்‌ சூழ்புவி தன்னை யாள்குல
சேகரன்‌ சரிதமுஞ்‌ செப்பு வாமரோ. 46-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றிற்று.

——–

குலசேகராழ்வார்‌ திருவவதார அத்தீயாயம்‌
வெண்பா
மா? புனர்பூசங்‌ காண்மினின்று மண்ணுலகீர்‌
தேசத்‌ இவசத்துக்‌ கேதென்னிற்‌- பேசுகின்றேன்‌
கொல்லி நகர்க்கோன்‌ குலசே கரன்பிறப்பால்‌
நல்லவர்கள்‌ கொண்டாடும்‌ நாள்‌.
(உபதேசரத்தினமாலை, 14.)

வஞ்சியர்‌ மன்னர்‌
நாடக வரங்கினு ணடம்ப யின்றிடும்‌
ஆடர வல்குலார்‌ யாழி னாங்கிசைப்‌
பாடலைக்‌ குயிலினம்‌ பயிலுஞ்‌ சோலைகுூழ்‌
கூடலிற்‌ கோத்துரை கொண்டிட்‌ டாள்பவன்‌. 1

நஞ்சினுங்‌ கொடுந்தொழில்‌ நடத்தும்‌ இயரை
அஞ்சுற வடக்கிநல்‌ லறத்தி னுற்றுளோர்‌
விஞ்சுறத்‌ தனிச்செங்கோல்‌ விளங்க வோச்சிடும்‌
வஞ்சியர்‌ வேந்தனாம்‌ மன்னர்‌ மன்னனே.–2-

ஆழ்வார்‌ அவதாரம்‌
அன்னவன்‌ தவத்தினா லவன்றன்‌ தேவியாம்‌
பொன்னனாள்‌ வயிற்றிடைப்‌ பூவு ளாரயன்‌
தன்னொடும்‌ வேதமுந்‌ தரும மும்ம௫ழ்‌
துன்னிடப்‌ புகழ்ந்துமூன்‌ துதிசெய்‌ தேத்தவே. 3

வைகுந்தத்‌ தமரும்‌ நாரணன்‌
நேசமா ரருட்படி நிமல மாமதி
மா௫ியிற்‌ புனர்த்தநாள்‌ வளமுற்‌ றோங்குறத்‌
தேசுறு புதல்வனும்‌ செனித்து ளானரோ. 4

வானுளோர்‌ மலரின்மா மழைபொ ழிந்தனர்‌
மோனமா ர௬ுளங்கொளும்‌ முனிவர்‌ வாழ்த்தினர்‌
ஞானமுந்‌ தருமமும்‌ நனிம கிழ்ந்தன
தானமும்‌ மெய்மையுந்‌ தலையெ டுத்ததால்‌. 5

சடங்குகள்‌ செய்தனர்‌
இத்தக வாசுவந்‌ தெழுந்த மைந்தனுக்‌
கத்தனு மன்னையு மடுத்து ளோர்களுஞ்‌
சித்தமுள்‌ மகழ்வுறச்‌ செய்வ செய்துபின்‌
வித்தமும்‌ வழங்கினர்‌ விதிவ மாமையே, 6

தன்னிகர்‌ தனத்தின்பாற்‌ றாய எளிப்பவேழ்‌
துன்னுநற்‌ .நினத்திடைக்‌ காப்பு மிட்டனர்‌
மன்னுமோ ராறெனும்‌ மாம தஇிக்கணே அன்னபி ராசன மதுவுஞ்‌ செய்தனர்‌. 7-ஆனெனும்‌ . மதிக்கண்‌ – ஆற வது மாதத்தில்‌ அன்னப்‌ பிராசனம்‌ – அன்னம்‌ ஊட்டுதல்‌.

வில்லிடு பானுவின்‌ விளங்கு மெய்யெலாம்‌
புல்லிடப்‌ பலபல பணிகள்‌ பூட்டியே
கொல்லியங்‌ கோன்குல சேக ரன்‌எனச்‌
சொல்லின ரொருதிரு நாமந்‌ துன்னவே. 8

அம்புலி யழைத்தலு மணிகொள்‌ சிற்றிலை
வெம்பீயே சிதைத்தலும்‌ விலங்குஞ்‌ சற்றிர
தம்புவி நடத்தலுஞ்‌ சாற்று பற்றவும்‌ பம்புமப்‌ பருவத்திற்‌ பயிற்று வித்தனர்‌.-9

ஓத்திடச்‌ சவளமோ டுபன யம்பல
வித்தையப்‌ பியாசமும்‌ வேலும்‌ வாளொடும்‌
சித்திரச்‌ சலைமுத லாகச்‌ செப்புமுப்‌
பத்துட னிரண்டெனும்‌ படைப யிற்றலும்‌. 10

திருமணமும்‌—ஆட்சியும்‌
ஈதெலா மமைவுற வியற்று வித்தபின்‌
ஓதுமங்‌ கலத்தின முறுநல்‌ லோரையில்‌
சூதெனு மிருதனத்‌ துவர்த்த செய்யவாய்‌
மாதினை விதிமுறை மணஞ்செய்‌ தாரரோ,. 11

பணிமுடி சுமந்தபார்‌ பரிக்க வவ்விரு
இணிபுய வரைகுல சேக rer menor
அணியரி யாசனகத்‌ இருத்தி யம்பொனின்‌
மணிமுடி. தரித்தனர்‌ மகழ்வி னென்பவே. 12

ஆங்கவன்‌ புவிபுரந்‌, தருளு நாளினில்‌ | ்‌
தீங்குறு கலிமுகம்‌ சிறுத்து நைந்தது; 3 ஓங்கெே நல்லறம்‌; உரைத்‌ திடும்மிடி
நீங்கின; செல்வமும்‌ நிலைபெற்‌ நிட்டதால்‌. 13

ஆழ்வார்‌ மாண்புகள்‌ ட
தேறுள மதனிற்றன்‌ றேவி பாலலால்‌ F
வேறொரு மடந்தையர்‌ விருப்பு றான்‌;மனு
கூறிய நூன்முறைக்‌ குடிகள்‌ பாலிறை ்‌
ஆறினி லொன்றலா லதிகங்‌ கொள்கிலான்‌. -14

வலிவுறும்‌ பசியிலான்‌ கன்றி னம்வரும்‌
புலிமுலைப்‌ பாலினைப்‌ பொருந்தி யுண்டிடும்‌
நலிவுறும்‌ பூனையின்‌ முலையை நாவுகொண்
“டெலியினம்‌ பற்றொடு மினித ருந்துமால்‌. 15

மாந்தர்தங்‌ குலத்தரு மத்தி னுண்மையைத்‌, தாந்திறம்‌ பாவகை சமைத்தி ழைப்பரால்‌;
ஏந்திள முலைநலா ரிசைகொள்‌ கற்பினின்‌
றார்ந்தத னிலுந்தவி ராது தாங்குவார்‌. 16

மதிதொறு மும்மழை வழங்கும்‌; மாவயல்‌.
கதிர்பெறுஞ்‌ செந்நெலுங்‌: கரும்பும்‌ வாழையும்‌
முதிர்சுவைக்‌ கனிபலா முதல வோங்கி௨
நதிகளுங்‌ குளங்களு நிறைந்து நண்ணுமால்‌. : 17

இத்திறம்‌ யாவுமாங்‌ கெழில்பெற்‌ றோங்கடைத்‌
துத்தம நெறிமுறை தவிர்கி லாதமை
சித்திரச்‌ சலையிரா கவன்றன்‌ செல்வநா
டொத்திட வவனுல கோம்பு நாளிடை. 18

(வேறு)
இறைவன்‌ திருவருள்‌ பெறல்‌
ஒருபக லிரவின்‌ வேந்த
னுறுதுயில்‌ வளருங்‌ காலைப்‌
பெருகுறு தனது நித்ய விபூதிலீ லாவி பூதப்‌
பெருமைக ஸஎிரண்டுங்‌ காண்பித்‌
தரிதினிற்‌ பெயர்ந்து போனான்‌
மருதிறத்‌ தவழ்ந்து வஞ்ச மல்லரைக்‌ குமைத்த மாயோன்‌. 19

இறைவன்‌ தன்னுடைய லீலா விபூதியையும்‌
தித்திய விபூதியையம்‌ காண்பித்தான்‌. லீலாவிபூதியைக்‌ காட்டியது பந்தபாசங்‌
கள்‌ நீங்குதற்காக; நித்திய விபூதியைக்‌ காட்டியது உள்ளத்தில்‌ ஞானமும்‌
வைராக்கியமும்‌ வருவதற்காக,

அந்தநல்‌ லுருவங்‌ காணா
வதிசய மிகவுந்‌ தோன்றிச்‌
சந்தையா னந்த வெள்ளந்‌
தேக்கிட வெண்க ணான்வாழ்‌
உந்திநா ரணன்வி பூதி
களையனு பவித்து றாமல்‌
இந்தநா ளளவும்‌ எல்லே
யிழந்தன மெனநைந்‌ தானால்‌, 20

ஆழ்வாரின்‌ விரக்தி
ஆயவ னிவ்வா றாய்நொந்‌ |
“… தழுங்கநெஞ்‌ சுருகுங்‌ காலை
மாயிரு ஞாலத்‌ தூடு
மஇழ்ந்துபல்‌ லிடங்கள்‌ தோறும்‌
பாயிரு ளகலக்‌ க&ீழ்பாற்‌
. பருப்பதத்‌ துதித்த வெய்யோன்‌,
சேயிரு விசும்பின்‌ மேலாய்ச்‌ —
செலுத்தின னெழுமாத்‌ திண்தேர்‌. . 21-

பருதிவந்‌ துதித்த லோடும்‌ படர்வுறுங்‌ கருமந்‌ தம்முள்‌
கருதியோ தமைச்சர்‌ தானைத்‌
தலைவர்கள்‌ கணித நூலோர்‌
சுருதியந்‌ தணர்‌ களேவற்‌
ஹறொழில்வலோர்‌ பலருந்‌ தெவ்வர்‌
குருதிதோய்‌ வடிவாள்‌ வேந்தன்‌
கொலுமணிக்‌ கூடஞ்‌ சார்ந்தார்‌. 22

சார்ந்தவ ர௬ுதையங்‌ கண்டோர்‌
சாமநே ரளவும்‌ பள்ளி
தீர்ந்தர செழுந்தி லாத செய்கைதேர்ந்‌ தென்னோ வென்னா,
பேர்ந்தவ ரணுடுத்‌ தாதிப்‌ | பேதையர்க்‌ குணர்த்த, அன்னோர்‌
சார்ந்தரு குணரு மாறு
சைகைகள்‌ பலவுஞ்‌ செய்தார்‌. 23

ஆதலா லரச ஸூள்ளந்‌
தணிந்தெழுந்‌ தவர்க ளோடும்‌
கோதிலா சார வாசல்‌
குறுகியே குறுகி னோர்கட்‌
கோதரும்‌ பணிகள்‌ நாளு
முரைத்தலி னுரைத்தி டாதோர்‌
– மூதறி வமைச்ச னோடும்‌:
மின்னணம்‌ மொழிய லுற்றான்‌. 24

ஆழ்வார்‌ மொழிகள்‌
உதியுற்ற குமிழி போலா
யொழியுமிவ்‌ வுடலத்‌ தோடும்‌
பதிமனை தனங்கள்‌ தாரம்‌
பாலர்கள்‌ மாதா என்ன
மதிமருண்‌ டுறுமிப்‌ பொய்யாம்‌
வாழ்வினில்‌ நிசங்க ஞண்டோ?
கதியுயிர்‌ பெறுமா றுன்னா
தவத்தினிற்‌ கழிந்த இந்நாள்‌. 25

இன்னுமெத்‌ தனைநா ஸளிவ்வா
ஹொழிக்கலா மினிமே லேனும்‌
மன்னுசாத்‌ மீக ரோடும்‌
மருவியங்‌ கவர்க ளான்மற்‌
றென்னுயிர்க்‌ குறுதி நாடல்‌
வேண்டும்நீ யிதற்கு பாயம்‌.
பன்னுதி மதிவ லோயெொன்‌
றன்னவன்‌ பகர்த லோடும்‌. 26

அடியார்களின்‌ நட்பு
நல்லுரை பகர்ந்தான்‌ வேந்தன்‌
எனவுளம்‌ நயந்தா னாக௫ிச்‌
, சொல்லுமுன்‌ பரம பாக
வதர்கள்கூழ்ந்‌ தணுகு மாறாய்‌ மல்லுறுந்‌ தோளான்‌ முன்னர்‌
வரவழைகத்‌ திருத்த லோடும்‌
அல்லல்கீர்ந்‌ தவாரக ளம்பொன்‌
‘னடிபணிந்‌ இருக்கை நல்கி; 27

அவருடன்‌ சிறந்த காலச்‌
சேபஞ்செய்‌ ததற்பின்‌ மற்றோர்‌
எவர்களு முடன்சென்‌ றெய்த
வெழிற்கொலுக்‌ கூட மெய்தி.
இவர்மணி யணையின்‌ மேல்வீற்‌
றிருத்தர சாட்டி மேவி
உவர்க்கட லுடுத்த பாரோம்‌
புறுதொழில்‌ நத்தி லானால்‌. 28

ஆழ்வார்‌ சுவைத்த பாசுரங்கள்‌
இன்னவா நாகப்‌ பன்னா
ளிசைபெறு முதன்மூன்‌ றாழ்வார்‌
மன்னுசீர்‌ பெரிய ஆழ்வார்‌
மங்கையர்‌ மழிசை யாழ்வார்‌-துன்னுநற்‌ றொண்டர்‌ தங்காற்‌
பொடியிவர்‌ சுருதி சாரம்‌ .
பன்னுசெந்‌ தமிழ்க ளெல்லாம்‌
பரிவினோர்ந்‌ துருகி னானால்‌; 29

வேறுள முனிவர்‌ பல்லோர்‌
விளம்புநல்‌ லிரத மூறும்‌
நாறுபூந்‌ துளவ மாலை
நாரணன்‌ சரிதம்‌ கேளாப்‌
பாறுசூழ்‌ வடிவாள்‌ வேந்தன்‌
பரிவினாள்‌ தொறுமிவ்‌ வாறாய்த்‌
தேறுளத்‌ துடனே செங்கோல்‌
செலுத்தினன்‌ வருமந்‌ நாளில்‌; 30

பாம்புக்‌ குடத்தில்‌ ஆழ்வார்‌ கைவிடல்‌
ஒருபக லதனில்‌ வந்த
உயர்குல சேக ரன்றன்‌
திருமனைக்‌ கருவூ’ லத்தில்‌
இகழிரத்‌ தனப்பொன்‌ னாழி
பொருவில தொன்று கெட்டுப்‌
போகலுங்‌ காவ லாளர்‌
வெருவிமந்‌ திரியி னோடு
விளம்பினர்‌; விளம்ப லோடும்‌, 31

மந்திரத்‌ தலைவர்‌ சென்றவ்‌
வள்ளலுக்‌ குரைத்த லோடும்‌
அந்தவா சகங்கள்‌ கேட்டவ்‌
வரசனு மவரை யாங்கண்‌
வந்தவர்‌ யாவர்‌? வந்த
வாறுணர்ந்‌ ததனை நம்பால்‌
தந்திடு மாறன்‌ ஜனோர்க்குச்‌.
சாற்றுமென்‌ றுரைத்தான்‌ அன்றே. 32

இனையவா றவர்கள்‌ சென்றாங்‌
தியம்பலு மதனைக்‌ கேளா
அனையகா வலரு மெவ்வா
றாய்ந்திட .லாகு மென்றோர்‌
நினைவுகொண் டரவந்‌ தன்னை
நிறைகுடம்‌ பொருந்த விட்டுத்‌
தனையணி முடிகொள்‌ வேந்தன்‌
தன்றிரு முன்னர்‌ வைத்தே; 33

இங்குளோ ரிதனிற்‌ றங்கை
யிட்டிட வேண்டு மென்று
அங்கவர்‌ மொழியைக்‌ கேளா…
அரசனிவ்‌ வவையி ஸனுற்றோர்‌
குங்களி லெவார்மே லையஞ்‌
சாற்றுமி னென்ன லோடும்‌
துங்கமா முடியோய்‌ கேட்டி
யெனவவர்‌ சொல்ல லுற்றார்‌. 34

அந்தக னேவல்‌ கொண்டா
ருயிர்கவர்‌ வார்க ளேனும்‌
வந்தணு குதற்கொவ்‌ வாறின்‌
மணியர மனையின்‌ வாயில்‌
இந்தபா கவத ரல்லால்‌
யாருமிங்‌ கெய்திற்‌ றில்லைச்‌
சிந்தையுள்‌ ளிவர்மே லைய
மெனவவர்‌ செப்ப லோடும்‌; 35

(வேறு)
செப்பு மம்மொழி யிருசெவி குறுகலுஞ்‌
செங்கண்மாற்‌ கடியாராம்‌
விப்பி ரர்குடம்‌ பாம்பினிற்‌ றங்கர
மேவவைக்‌ திடுதற்காய்‌
ஒப்பு றாவுள மமைந்த னருலகினை
யோம்பிடு முடிவேந்தன்‌
குப்பு றாஅரி அரியென விருகரங்‌
கொடுசெவி மறைத்தானால்‌. 36

வார ணம்முறை யிடுதலின்‌ விரைவொடு
வந்துகாத்‌ தருள்செய்த
நார ணன்றி ர௬வடியர்மேற்‌ கொடுமொழி
நாடியிங்‌ குரைசெய்யுங்‌
கார ணம்நினை வுறிலிவர்‌ மேற்குறை
கருதுதல்‌ வழக்கென் றால்‌
தார ஸணிப்புரந்‌ திடலினம்‌ பாலினோர்‌ கதுவறெனத்‌ தளர்வுற்றான்‌. 37

உருக னானுளந்‌ தியங்கினான்‌ பசும்பொனொத்‌ தொளிர்ந்திடுந்‌ இருமேனி கரக னானவை தநினைதொறு நினைதொறுங்்‌
கண்களா ஸீர்முத்தம்‌
பெருகி னான்வரை கொடுகடன்‌ _மதித்ததாட்‌
பிறந்தெழுங்‌ கொடுநஞ்சம்‌
பருக னானென ஊசலா டிடவுயிர்‌
பதைபதைத்‌ தனன்‌;பின்னும்‌, 38

ஆழ்வார்‌ குடத்தில்‌ கை
விட்ட அருமைப்பாட்டை **வாரங்கொடு குடப்பாம்பிற்‌ கையிட்டவன்‌”’ என்பர்‌
மணக்கால்‌ நம்பிகள்‌, :*குடப்பால்‌ விடப்பெரும்‌ பாந்தள்வாய்‌ கையிட்ட
கோவேந்தன்‌ அரசர்‌ ஏறு; கோப்பெருஞ்‌ சேரமான்‌” என்பது அழகர்‌ பிள்ளைத்‌
தமிழ்‌.

ஆழியைக்‌ குடத்தில்‌ இருந்து எடுத்தார்‌
சந்தை யோர்முறை தெளிவுகொண்
டரியணை தீர்ந்தெழுந்‌ தெதிர்சென்றே
இந்த மெய்யடி யார்களவ்‌ வாழியை
எடுத்தில ரெனவேதான்‌
முந்தி யேயர வுறுங்குட மதிற்கர
முறையினிட்‌ டதற்குள்ளாய்‌
அந்த காவலர்‌ வைத்திடு மணிவிர
லாழியை பெடுத்தீந்தான்‌. 39

கண்ட பேரவை யமைச்சர்கள்‌
முதலினோர்‌ காவல ஸனடிவீழ்ந்தார்‌
தொண்டர்‌ யாவரும்‌. மன்புகூர்ந்‌ தின்புறத்‌
தொழுதுரைத்‌ தெழுந்தார்த்தார்‌ அண்டர்‌ யாவரு மந்தர மிசையெழுத்‌
குலர்மழை பெய்தார்நஞ்‌
சுண்ட சங்கரன்‌ பிரமனே முதலினோ ்‌
ருளமகிழ்ந்‌ தனர்மாதோ. 40

திருவரங்கக்‌ காதல்‌
பின்ன ரும்பல நாள்குல சேகரன்‌
பெருகுவப்‌ பொடும்வாழ்நாள்‌
மன்னு மிவ்வுட லெடுத்திடுஞ்‌ சலுகினை
மாய்த்தொழித்‌ இடுமாறு
இன்ன ரங்கொடு தும்புரு நாரதர்‌
களர்த்துமின்‌ னிசையோங்கும்‌
பொன்ன ரங்கமா நகரினைக்‌ காண்குறப்‌
பொருந்துமோ நமக்கென்னா; 41

“நெஞ்சி ஜூடுற நினைந்திரு எிரியவின்‌ றேனிரம்‌ புறும்பாடல்‌
அஞ்சி ரண்டினை யாதுமுப்‌ பதுமிசைத்‌ ‘
குழகிய மணவாளர்‌
நஞ்ச ராவணை மிசையிலங்‌ காபுரி
நகரமா னதைநோக்கா ்‌
விஞ்சு கண்வளர்‌ கோலமே மனதினுள்‌
விளங்குற வியப்புற்றான்‌. 42

குரங்க மாகடல்‌ வளைபுவி புரந்திடற்‌
றணந்துதன்‌ சுதனான
உரங்கொ டோளினன்‌ றன்வயப்‌ படுத்திப்பொன்‌
னொளிர்மணி முடிசூட்டிக்‌
குரங்கு ளங்கதிர்‌ செங்கனி யாமெனக்‌
குதிகொளும்‌ பொற்கோயில்‌
அரங்கு மாநகர்‌ யாத்திரைக்‌ கேகுவான்‌
அமைந்தவ ணடைந்தானால்‌. 43

ஆழ்வார்‌, புதல்வனுக்கு முடிகுட்டிவிட்டுத்‌ திருவரங்கம்‌ அடைந்தார்‌.
புவி புரந்திடல்‌ தணந்து- பூமிகாவலை விட்டு. **கம்பமத யானை கழுத்தகத்தின்‌
மேலிருந்து இன்பமரும்‌ செல்வமும்‌ இவ்வரசும்‌ யான்‌ வேண்டேன்‌”* என்னும்‌.
பெருமாள்‌ திருமொழிப்‌ பாசுரம்‌

அரங்கம்‌ அடைந்தார்‌
கடைந்த பாற்கட லிடைவரு மமுதினைக்‌
கண்டவா னவரென்ன
அடைந்து ளான்றனை யெதிர்கொளத்‌ தலத்தடி
யவர்களிப்‌ புளங்கொள்ளா
உடைந்து கண்வழி யொழுகுநீ ராறெனு
முயர்விர சையின்‌ நன்னீர்‌
குடைந்து வைணவ ரடிமலர்‌ தொழுதலும்‌
்‌ ஆசிகள்‌ பலகூறி, –44

ஐய நீயிவண்‌ வந்ததெங்‌ குலத்தவ
மாமென வுபசாரம்‌
செய்யு மாங்கவ ரொடுமிவ னலைமணி
சிந்துகா விரியாற்றின்‌
துய்ய நீர்படிந்‌ தாறிரு இருமணும்‌
துலங்கெட வளங்கண்டு
பைய வேகடந்‌ துட்புகுந்‌ இிருகணீர்‌
பனித்துமுத்‌ துதிர்த்தானால்‌. 45

கண்டார்‌ அரங்கனை
திருந்து றுந்திருப்‌ பெட்டகந்‌ தனைப்பிர தக்கணம்‌ ‘புரிந்தாங்குப்‌
பொருந்‌ துறும்மணத்‌ தூணரு
காகியே புதியதா மரைபூத்தோர்‌
கருந்த டங்கிரி யெனவளர்‌
மாயனைக்‌ கண்டிரு கணினாலும்‌
அருந்து வானென
, இருகியே ஆனந்த மடைந்தானால்‌. .. 46.

திருவரங்கக்‌
கோவிலைப்‌ பெட்டகம்‌ என்கின்றனர்‌. அரிசமய இீபம்‌ ஐந்து இடங்களில்‌ இவ்வாறே பேசுகிறது.
“*பூரங்கு பெருந்திரு வைத்நூற்‌ றிரட்டிப்‌ பணவிடையில்‌
தூங்கு மதிலொரு மாவேற்‌ றமுண்டு சு.ரர்முனிவர்‌
ஆங்கவர்‌ செப்பிற்‌ கடங்கா துலகமனைத்‌ தும்பெறும்‌
ஓங்கு மரங்கத்‌ திருப்பெட்‌ டகத்து ளொருமணியே””
என்ற பாடல்‌ தனிப்பாடல்‌ திரட்டில்‌ உள்ளது; சுவைமிச்கது. இருந்த
குலக்குமரர்‌ தமை இருகண்ணின்‌ முகந்தழகு பருக நோக்கி£” என்பர்‌ கவிச்‌ சக்ரவர்த்திகள்‌ (பாலகாண்டம்‌),
**தஇிருவனுரு நயனமுற நாடிமணத்‌ தாணதனைப்‌ பற்றி மன்னன்‌ மருவுமனம்‌ வாய்ந்தவடி யாருடனே கூடிமிக வாழ்த்தி நின்‌. றான்‌’*

முகுந்தமாலை தொடுத்தார்‌
மிகுந்து மேல்வரும்‌ பிறப்புடன்‌
இறப்பையும்‌ விடுத்துயர்‌ வைகுந்தம்‌
புகுந்து ளோர்களும்‌ மீண்டுற
அருத்திகொள்‌ பொன்னரங்‌ கனைவாழ்த்தத்‌
தகுந்த தேதென நினைவுகொண்
டேதிறத்‌ தமிழினால்‌ தொடுத்தாற்போல்‌
முகுந்த மாலையொன்‌ wo me Gouri
கலைவட மொழியினால்‌ துதிசெய்தான்‌. 47

வேங்கடம்‌ செல்க
பாத தாமரை மீதுதன்‌
முடியுறப்‌ பணிந்தெதி ரிடைநின்ற இதி லாக்குல சேகரற்‌
குகந்தவன்‌ இருமுகந்‌ தனைநோக்கி
தாது சேர்மலர்ப்‌ பொழில்வட
வேங்கடந்‌ தனைமதித்‌ தெய்தென்னா
ஓ.தி னானிக்கு வாகுவாற்‌ சத்திய உலகநீத்‌ இவண்வந்தோன்‌. 48

“*பணியரங்கப்‌ பரஞ்‌
சுடரை யாங்‌ காண–அணியரங்கந்‌ தந்தானை அறியாதார்‌ அறியாதார்‌’* என்பர்‌
கவிச்சக்ரவர்த்திகள்‌ (பால காண்டம்‌),

இருசெ விக்கணவ்‌ வாசக
மூறுதலு மிதுவதென்‌ றிரண்டூரார்‌ ஒருவ ராமென வுளந்தெளிந்‌ .
குற்புத முறப்பெரு குவப்போடும்‌
வருவ :-னாங்குநின்‌ மலர்ப்பதந்‌
தொழற்கென மறித்தவன்‌ றனைப்போற்றிக்‌
குரும ணிச்செழுங்‌ கோயிலன்‌
பர்களுளங்‌ கொண்டன னடந்தானே. 49

திவ்ய தேசு யாத்திரை
வச்சி ரப்படை வானவர்‌ .
வேந்தனும்‌ மலர்மிசை யுறைவோனும்‌:
முச்சி ரப்படைச்‌ சுடலையி
னாடியு -முளரியங்‌ கரம்தங்கள்‌
உச்ச கைக்கொடு முறைதொழு
தேத்திட வுவந்தவர்க்‌ கருள்செய்யும்‌
கச்சி யம்பதி பேரரு ,
ளாளர்தம்‌ கழல்பணிந்‌ தவணீங்கி; 50

மரும லைச்செழு மணியின
மெறிதரும்‌ வளமலி மலரோடை
செரும லைக்கொடு விடங்கரின்‌
வாய்ப்படுஞ்‌ சறுகண்மும்‌ மதவேழம்‌
பொரும லைத்தவிர்த்‌ திடவொரு
கருமலை போலவந்‌ தவன்வாழும்‌
இரும லைத்தல மடைந்தனன்‌வளமெலாஞ்‌ ிந்தையுள்‌. தெளிவுற்றான்‌. 51

திருவேங்கடம்‌ அடைந்தார்‌
மூவ ரும்‌அயன்‌ கயிலைவா .
மிறையவன்‌ புரந்தரன்‌ முதலாய
தேவ ருங்கண நாதரும்‌
முத்தரும்‌ சித்தர்மற்‌ றுரைசெய்யும்‌
யாவ ரும்‌அவ ரவர்களோ
ருருவமைந்‌ தணுகுறும்‌ பெருஞ்சீர்த்தி மேவ ருந்திரு வேங்கட மகிமையை வியந்துளங்‌ கனிவுற்றே. 52

(வேறு)
பதிகம்‌ பாடினார்‌
ஊனேறு செல்வமென வோர்பதினோர்‌ பாவுரைத்து
மானேர்‌ விழியலர்மேன்‌ மங்கைஇரு முன்னிலையில்‌
தானே தனக்குறிக ரானான்றன்‌ தாள்வணங்க்‌
்‌ . கோனேரி யாடிக்‌ குலவிப்பன்‌ னாளுறைந்து; 53:

வித்துவக்கோடு
அம்மா நகர்விட்‌ டணிவித்‌ துவக்கோடாம்‌
செம்மா நகரடைந்து சிந்தை தளர்ந்தழைத்த
கைம்மா இடுக்கண்‌ களையக்‌ கரைசார்ந்த
பெம்மான்‌ கழலிணையைப்‌ பேணித்‌ தொழுதனனால்‌, 54

தருதுயரந்‌ தடாயேலுன்‌ சரணல்லாற்‌ சரணிலையென்‌
தொருபதிகந்‌ தன்னை யுகந்தாங்‌ குரைத்தருளிப்‌ பொருவில்‌ புகமாளன்‌ போயொழியப்‌ பற்பலநாள்‌ மருவி யுறைந்துபினம்‌ மாநகர்விட்‌ டேகனனால்‌. 55-

திருவாய்ப்பாடி
தாய்ப்போல்‌ வடிவாகத்‌ . தன்னுருவம்‌ மாற்றிவந்த
பேய்ப்பா டுறமுலையிற்‌ பெய்விடத்தோ டாருயிரை
வாய்ப்பா லுறிஞ்சியிடும்‌ மாதவனார்‌ தாம்வாழும்‌
ஆய்ப்பாடி ‘ சென்றே யடைந்தவன்தாள்‌ பூசித்தே;–56-

முத்தாரம்‌ பூணும்‌ முகிண்முலைச்செவ்‌ வாம்பலின்வாய்‌’ ்‌
கொத்தார்‌ மலரின்‌ குழற்கோ வியாகூடி :
வித்தார மாக விரித்துரைக்குஞ்‌ சொற்பொற்பா 4
பத்தாங்கு பாடிப்‌ பலநா ரறைந்தனனால்‌. 57

வட மதுரை
மூன்புசன னத்தில்‌ முயன்ற பெருந்தவந்தான்‌
பின்பு தொடர்ந்தடுத்த பெற்றியால்‌ பேருலகில்‌
அன்பு மிகுந்தே யடுத்தோர்‌ தமக்குதவ
என்பு முரியான்‌ வடமதுரைக்‌ கெய்தினான்‌. 58

தேவகியாதல்‌
தேவகுியா டானீன்ற செல்வத்‌ இருமதலை
்‌-. நாவி லினிதாக நவில்குதலைச்‌ சொற்கடமை
ஆவலொடுங்‌ கேட்டிலமே யென்றாங்‌ கவளுரைத்த
பாவனையா கப்பதினோர்‌ பாட லுரைத்தனனால்‌, 59

கண்ணபுரத்தில்‌ உறைதல்‌ ‘
அப்பதியி லன்னோ னடைவுடனே வைகுதலும்‌
செப்பமுடன்‌ பற்பலநாள்‌ செல்ல வவணீங்கி
எப்புவியி னுள்ளு மிணைதனக்குத்‌ தானல்லால்‌
ஒப்பிலாக்‌ கண்ணபுரத்‌ துற்றாங்‌ குறைந்தனனால்‌, . 60

தாலாட்டுப்‌ பாடினார்‌ —
கண்ண புரத்தானைக்‌ கவுசலையா டானீன்ற
விண்ணவர்க டந்துயர வேர்களைந்த ராகவனை
வண்ணமணித்‌ தொட்டில்‌ வளர்த்தித்தா லாட்டுதலாய்‌
பண்ணியலும்‌ பாடல்களோர்‌ பதினொன்று பாடினனால்‌, 61

தசரதனானார்‌
பின்னுந்‌ தசரதனார்‌ பிள்ளைவனம்‌ போயிடலும்‌
அன்ன தனைக்‌ கேட்டவனும்‌ ஆராமை பட்டதனைப்‌
பன்னும்‌ பனுவல்களோர்‌ பதினொன்‌ றி னளைப்பாடி
மன்னி யிருந்தானம்‌ மாநகரிற்‌ பற்பலநாள்‌. 62

சித்திரகூடம்‌
அம்மா நகர்விட்‌ டணி௫த்ர கூடமெனும்‌
செம்மா நகரதனைச்‌ சேர்ந்தணுடுத்‌ தில்லையுறை
கைம்மா வுரித்துகந்த கண்ணுதலான்‌ போற்றிடவாழ்‌
பெம்மான்‌ இருவடியைப்‌ பேணித்‌ தொழுதனனால்‌. 63-கைம்மா உரி – யானை
யின்‌ தோல்‌.

இராம காதை இசைத்தார்‌
வானவர்க ளேத்துபுகழ்‌ வான்மீக னென்றுரைக்கும்‌
மோனமுனி முன்னாள்‌ மொழிந்தவிரா மாயணத்தை
‘ரானமொமழி யாந்தமிழி லைந்தோ டறுகவிதை
கானமுட னேயிசைத்தான்‌ கன்னலிர தம்மெனவே, 64

தில்லைச்சித்‌ திரகூடத்‌ துட்சேர்ந்‌ இனிதுறையும்‌
தொல்லைச்‌ செழுமறைக்கும்‌ தோன்றாதான்‌ தாள்தொழுது
கொல்லி மலைக்கோன்‌ குலசே கரப்பெருமாள்‌
எல்லையில்சீ ரின்பத்‌ தினிதுறையு நாளின்கண்‌. 65

ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தார்‌
நாரா யணனெனவே தான்மறையால்‌ விப்பிரர்கள்‌
பாரா யணஞ்செய்‌ பரந்தாமன்‌ றன்னருளால்‌ ‘
ஆராய்ந்‌ துணர்த்தற்‌ கரிதாம்வை. குந்தத்தின்‌ சீரார்‌ மணிமண்‌ டபஞ்சேர்ந்‌ தஇனிதிருந்தான்‌. 66

அன்ன குலசேக ராழ்வாருந்‌ தண்தமிழால்‌
பன்னும்‌ பனுவல்க ளோர்பத்துப்‌ பதிகங்கள்‌
மன்னுங்‌ கவிதையில்‌ மாதுகுடி. வாழ்மார்பன்‌
துன்னுந்‌ திருப்பதிக ளெட்டெனவே’ சொல்லுவரால்‌. 67

இவர்‌ பாடியது பத்துப்‌ பதிகங்களாகும்‌.-மங்களாசாசனம்‌ செய்த பதிகள்‌ எட்டாகும்‌.

சீராரும்‌ பொன்னரங்கஞ்‌ சத்திரகூ டத்துடனே
ஏராரும்‌ வித்துவகக்கோட்‌ டெமுனைநதி கண்ணபுரம்‌
காரார்‌ வடவேங்‌ கடம்வல்லை வாழொடுமேற்‌
பேராரயோத்தி நகரெனவே பேசுவரால்‌. «68

பயன்‌
இந்தப்‌ பெருங்கதையை யின்பமுடன்‌ கேட்பவரும்‌
ஒந்தை தெளிந்துரைக்குஞ்‌ செய்கையருந்‌ தேனாரும்‌
பைந்துளவோன்‌ பாதம்‌ பரிவுடனே தான்பணியுஞ்‌
மைந்தருண்டாய்‌ வாழ்ந்துிருந்து வைகுந்தம்‌ மன்னுவரால்‌. 69

பாணர்‌ காதை பகர்வோம்‌
நலமார்‌ பெருஞ்சீர்த்தி நண்ணுதிருக்‌ கூடல்வரும்‌
குலசே கரன்சரிதம்‌ கூறினோம்‌ மாகடல்குழ்‌
தலமேலு றையூர்‌ சனித்ததிருப்‌ பாணர்கதை
சொலவே தெரிந்தளவுஞ்‌ சொல்வாந்‌ தொகுத்தினியே. 70

குலசேகராழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ மூற்நிற்று.

———–

திருப்பாணாழ்வார்‌ திருவவதார ,
| அத்தியாயம்‌ ப
வெண்பா ்‌
கார்த்திகையில்‌ ரோகிணிநாள்‌ காண்மினின்று காசினியீர்‌
வாய்த்த புகழ்ப்பாணர்‌ வந்துதிப்பால்‌ — ஆத்தியர்கள்‌
அன்புடனே தானமல ஸாதிபிரான்‌ கற்றதன்பின்‌
நன்குடனே கொண்டாடும்‌ நாள்‌. ’
்‌ (உபதேசரத்தினமாலை, 10.)’

உறையூர்‌
பிறைவாணுதல்‌ மடவாரெழில்‌ பெருகுந்திரு முகமும்‌
நறையார்மது கமழுஞ்செழு நளினப்புது மலரும்‌
சிறையாரறு பதவண்டுக டெரியாவல மருசர்‌ :
உறையூரெனும்‌ பெயர்மேவிடு மொருமாநக ருளதால்‌, 1

தாமரைக்கும்‌ முகத்துக்கும்‌ வண்டுகட்கு’
வேற்றுமை தெரியாமல்‌ இருப்பதுபோல்‌, அறிஞர்கட்கு, அமலனாத பிரானுக்கும்‌
வேதத்துக்கும்‌ வேற்றுமை தெரியாது என்பது உள்ளுறை.

ஆழ்வார்‌ அவதாரம்‌
வளமேவுநு மம்மாநகர்‌ மருவுங்கடை யவரென்‌
– நுளபஞ்சம குலமிக்கட லுலகற்புகழ்‌ Oi mayb
தளமார்செழு மணிமேவுறு தண்டாமரை மலர்வந்து
அளறாமதில்‌ வளருஞ்செய லதுவேநிக ரெளவும்‌. 2’

கண்ணார்நுத லிடைவைகுறு கயிலைப்பெரு மானுந்‌
தண்ணாருமம்‌ புயமாமலர்‌ தனில்வாழிறை யவனும்‌
பண்ணார்செழு மறையும்முனி வரரும்பல பலவாம்‌
மண்ணாடரும்‌ விண்ணாடரு மெவருமகஇழ்‌ வுறவும்‌. 3

(வேறு)
கார்த்திகை யெனும்பெயர்‌ கவினுந்‌ இங்களில்‌
சீர்த்திடு முரோகிணி நாள்‌ றந்திடத்‌ –
Sigs தருளினால்‌ செந்நெ லின்மிசை
பார்த்தவர்‌ களிப்புறப்‌ பாணன்‌ தோன்றினான்‌. 4

பாணன்‌ வளர்த்தான்‌
அத்தகை யுறவவ தரித்த மைந்தனைப்‌
புத்திர னிலாவொரு புலையன்‌ கொண்டுபோய்‌
சித்தமின்‌ புற்றிளந்‌ இங்க ளின்கலை
ஒத்திட வளர்த்தன னுரிமை யோடுமே. 5

இசைப்புலமை
ஆன்றவம்‌ மைந்தனு மரிய தும்புரு
சான்றநா ரதருமே சமான மில்லென
ஏன்றநல்‌ லிராசுகா னங்க ளென்பவை -:
மூன்றெனும்‌ வயதுளே முயன்று ளானரோ. 6

ஏவிரி இணறுமுன்‌ பெழுந்து தாமரைப்‌
பூவிரி கதிர்குணப்‌ பொருப்பு றாமுனம்‌
மீவிரி கங்கையின்‌ மேன்மை யெய்திய காவிரி படிந்துசெய்‌ கடன்க ளாற்றியே. 7

அரங்கன்‌ காதல்‌ பண்‌ பாடுதல்‌
வரங்களா ரணனரன்‌ வழங்கப்‌ பெற்றுளான்‌
ஓரங்களீ ரைந்தொடுஞ்‌ சிலையோ டம்புகொள்்‌
கரங்கணா ஸன்கைந்தையுங்‌ கடிந்த மித்தசர்‌
அரங்கநா யகரிடத்‌ தன்பு கூரவே. 8

கல்லொடு மலைகளும்‌ கடுஞ்சு வர்களும்‌
புல்லொடு மரங்களும்‌ புள்ளின்‌ கூட்டமும்‌ 4
வல்லிய முதல்விலங்‌ கனமும்‌ மற்றவாம்‌
பல்லுயிர்‌ யாவுமா லுருகப்‌ பாடுவான்‌. 9

சந்திர மவுலியும்‌ சரச வாயும்‌
இந்திரன்‌ முதலிமை யவரும்‌ யாழ்வல
கந்தரு வருமுளங்‌ கரையு மாறதாய்‌
அந்தரத்‌ தடைந்துகேட்‌ டஇச யிப்பரால்‌, 10.

அன்னகா விரிக்கரை யநேக நாழிகை
யின்னவா யாழிசை யினிது பாடிப்பின்‌
பொன்னணி விமானத்தைப்‌ பணிந்து போற்றியே ்‌
தன்னக மதனிடை சார்கு வானரோ,. –11

நாடொறு மிம்முறை நயந்து பாணனும்‌
ஆடர வமளிசே ரரங்கர்‌ தம்புகழ்‌
– பாடுறு மிசையின்முன்‌ பட்டு லர்ந்துவீழ்‌
காடுறும்‌ மரங்களும்‌ கப்பு மல்குமால்‌. 12

பற்பல நாளவன்‌: பாடும்‌ பாடல்கேட்‌
டற்புத மடைந்தன எளரங்க நாயகி
உற்பல நயனமு மொளிமி குந்திட
விற்பொலி புருவமும்‌ விளங்கு வாளரோ. 13

அரங்கநாயகி புருஷகாரம்‌ ்‌
்‌ நாயகி மகிழ்வொடு நாக ணைத்துயில்‌
மாயவ னணிபெறும்‌ வதனம்‌ நோசக்குபு
ஏயவவ்‌ வடியனாங்‌ கிசைக்கு மின்னிசை
தூயநும்‌ மிருசெவி துன்னிற்‌ நில்லையோ? 14

அன்னவன்‌ வீணைகொ டரிய கானத்திற்‌
பன்னுமின்‌ னிசைகொளும்‌ பனுவற்‌ கொப்பதாய்‌
என்னிலதக்‌ தினுமிலை யென்ன வானுறை
இன்னரர்‌ மூதலினோர்‌ கீழ்மை யெய்தினார்‌. 15

அன்புநம்‌ பிடந்தனி னதிக மாகக்கொண் ்‌
டென்புமுள்‌ ஞருகிட. இசைக்கு மின்னிசை
இன்புற விதிசிவன்‌ முதலி னோரவன்‌ ன்‌
முன்புவந்‌ தந்தர முயன்று கேட்டின்‌ நார்‌. 16

ஆதலின்‌ நாம்புறம்‌ பாக வைப்பது
நீதியன்‌ றவனைநின்‌ ஸனருகு றும்படி
காதலோ டழைத்திடல்‌ கரும மாமென
மாதுகூ றலுமண வாள ஸனோதுவான்‌. ்‌ 17

என்கருத்‌ இனுமதே யாயிற்‌ றென்னினும்‌
நின்கருத்‌ துணர்குவா னேர்ந்த தாமினி
உன்கருத்‌ துருகிட்ப்‌: பாடு வோன்றனை
நன்குநீத்‌ துடன்வரு விப்பன்‌ நாய. 18

பாணனை அழைக்கப்‌ பரமன்‌ பகர்ந்தான்‌
என்றுகொண் டவளுள மிசையு மாறுரைத்‌
தொன்றிய மனத்தொடு முலக முண்டுளோன்‌ . ட்‌
சென்றுநம்‌ தொண்டனாஞ்‌ சிறந்த பாணனை
இன்றுநீர்‌ கொணர்மினென்‌ நியம்ப லோடுமே. .19

அவ்வுரை கேட்டெதி ரணுகும்‌ வாயிலோர்‌ 1
ஒவ்விய மனதொடும்‌ விரைவி னோடியே
திவ்விய மணிபல சிதறுங்‌ காவிரி
செவ்விய திருமூகத்‌ துறையிற்‌ சேர்ந்தரோ. “20

பாலுறு பிரையெனப்‌ பல்லு .யிர்களுற்‌
றேலுமற்‌ றவைகடன்‌ ஸிடத்திற்‌ கொண்டுசேர்‌
ஆலிலை துயிலொழிந்‌ தரங்க முள்வளர்‌
மாலினை யிதயமேல்‌ வளர்த்தி வான்றனை; 21

பன்னிரு திருமணும்‌ பன்னிடந்‌ தொறும்‌
துன்னிட மார்பினிற்‌ றுளவ மாலிகை
மன்னிட யாழ்முறை வழங்கப்‌ பாடுறுங்‌
கன்னலா ரமுதெனுங்‌ கானத்‌ தான்றனை; 22

பாணர்பிரான்‌ திடுக்குற்றார்‌
கண்டன ரரங்கனாங்‌ கமலப்‌ பூவடித்‌
தொண்டனென்‌ றவனடித்‌ தொழுது நின்றுளோர்‌
புண்டரீ கந்தனைப்‌ பொருவ டிக்கணில்‌
தெண்டனிட்‌ டிம்மொழி தெரிப்ப தாயினார்‌. 23

என்‌ கருதி வந்தீர்‌?
ஐயநீர்‌ புரிந்திடற்‌ கடுக்கொ ணாததைச்‌
செய்யநும்‌ பான்மனஞ்‌ சேர்ந்த தென்கொலோ
வெய்யனே னிதனிடை வினையொ ழித்துமேல்‌
உய்யுமா றெவண்கொலென்‌ நுருடிப்‌ பின்னரும்‌. 24

ஈங்குநீ ரடைந்துள தென்கொ லென்னிடை
ஆங்கதை யுணருமா றறிவிப்‌; பீரெனத்‌
தங்கிலா னுரைத்தசொற்‌ செவியிற்‌ சேர்தலும்‌-பாங்குற வவர்களும்‌ பகர்தல்‌ மேயினார்‌. 25

அரங்கன்‌ கட்டளை
யாந்தொழ லரிதல யாவை யும்தரும்‌ க
பூந்தவி சுறைந்துளோன்‌ புராரி இந்திரன்‌ ்‌ தாந்தொழு குவர்‌்இறை தாளி ரண்டையும்‌
யேந்தினை திருவுளத்‌ இன்பம்‌ ஓங்கவே. 26

அன்னது கிடக்கயா மடைந்த காரணம்‌
என்னெனில்‌ நின்னுளத்‌ திருக்கும்‌ பைந்துழாய்ப்‌
பன்னக வணையரங்‌ கேசர்‌ பண்பொடுஞ்‌
சொன்னசொல்‌ உண்டதைச்‌ சொல்ல: வந்தனம்‌. 27

அம்மொழி யாதெனி லறியக்‌ கேட்டிநீ
தம்மரு கணைந்திதைச்‌ சாற்று மாறதாய்‌
உம்மரு – கணைந்தழைத்‌ துறுமி னின்றென
எம்மொடு முரைத்ததால்‌ வருதி யென்றனர்‌. 28

அரங்கம்‌ புக அருகனல்லேன்‌ :
என்னலுஞ்‌ சாதியிற்‌ கடையி னெய்இினேன்‌ i . தன . i பொன்னரங்‌ கந்தனிற்‌ புகுதப்‌ போதுமோ?
அன்னது தகுதியென்‌ றறிகி லேனெனப்‌ ‘
பன்னலு மீண்டனர்‌ படர்ந்து ளோர்களே,. 29

மீண்டவ ரரங்கர்பால்‌ மேவி யெந்தமை
ஆண்டுளோய்‌ அருட்பெரி யவனை யாம்வர
வேண்டினம்‌ அவனுந்தான்‌ விரும்பி மேல்வரத்‌
இண்டரும்‌ புலைக்குலஞ்‌ செனித்த தாதலால்‌; 30

அரங்கன்‌ மாற்றம்‌
வருகிலே னென்றவன்‌ வழங்கி னான்‌என
மருவிய வாயிலோர்‌ வகுத்துக்‌ கூறலும்‌
முருகவி ழிதழவிழ்‌ முளரி வைகுறுந்‌ இருமரு மார்பனு மிதனைச்‌ செப்புவான்‌. 31

வேதியர்‌ முதற்குலத்‌ தருமம்‌ வேதங்கள்‌ ‘
நீதிசார்ந்‌ திருப்பினும்‌ நிகழ்த்தும்‌ யாவையும்‌
ஆதியில்‌ யானுரைத்‌ தவர்க ளுற்றிடுஞ்‌ சாதிதான்‌ இனதெனச்‌ சாற்றற்‌ பாலதோ? 32

பிறப்பால்‌ சாதியில்லை சிறப்பால்‌ உண்டாம்‌
செம்மையாந்‌ தெளிவிலார்‌ செப்புங்‌ கீழ்மையால்‌
அம்மையாங்‌ கீழ்மைய ராவர்‌; சார்தலால்‌
எம்மர புஇக்கினு மவர்க ளெய்துடும்‌
அம்மர பேயிழி பாகு மாதலால்‌; 33

துக்கநல்‌ லறிவுளந்‌ தரித்து ளார்களே
மிக்கவ ராகுவர்‌; விளம்பு மாங்கவர்‌
– எக்குலத்‌ துதிப்பினு மவர்க ளெய்திடும்‌ அக்குல மேகுலத்‌ ததக மாகுமால்‌. 34

மீளவும்‌ அடியாரை அனுப்பினான்‌
ஆதலா லவனமக்‌ கடிமை பூண்டுளோன்‌ 4
போதமுங்‌ கல்வியும்‌ புகலுஞ்‌ சாத்திர ்‌
வேதமு மவன்வயின்‌ விளங்கும்‌ மெய்ம்மையே :
ஈதுவைத்‌ தழைத்திவண்‌ வருதி ரென்னலும்‌; 35

என்ன வோதலு மினிதி னால்வர்கள்‌
பொன்னரங்‌ கத்துறு புரிசை நீங்கியே is
துன்னு சீர்முகத்‌ துறையி டந்தனில்‌ ,
மன்னு பாணர்பால்‌ மருவி; யன்னவர்‌, . 36

வேத மென்பதின்‌ முடிவி ளங்கடும்‌
மாத வன்புகல்‌ வாச கந்தனை
ஒதி நீவரு கெனவு ரைத்தலுங்‌ கோதி லாதவ ஸிதனைக்‌ கூறுவான்‌. 37

மாலே பகரினும்‌ வாரேன்‌ அரங்கம்‌ ு
என்னை யுஞ்சரர்‌ சரமி ரும்புவி ்‌
தன்னை யுந்தருந்‌ தூய தாமலர்ப்‌
பொன்னை யாளுடைப்‌ புனித னாயகன்‌
சொன்ன சொற்சரி யாகுந்‌ தூய்மையீர்‌[ 38

ஆயி ஸனுூம்பொன்‌ னரங்கம்‌ மேவிய
மாய ஸனார்கடல்‌ சூழும்‌ வையகம்‌
காய சரடி சார்ந்து போற்றிடத்‌
தூய, ராம்திருத்‌ தொண்ட ருக்கலால்‌; 39-

மாசு றும்முளந்‌ தனில்வ ரீச்சிறை
மூசு வண்டிமிர்‌ முளரி யாமெனத்‌
தேசு றும்மவன்‌ சர டிக்கொளா
நீச ருக்கது நீதி யல்லவாம்‌. 40

ஆத லாலர வணையின்‌ மீமிசைப்‌
போத மார்ந்துளோன்‌ புரமெ ரித்துளோன்‌
மாத வத்தினோர்‌ வணங்க வேதுயில்‌
நாத ஸனார்திரு நகரந்‌ தன்னிலே. ்‌ 41

ர௬ுண்மிகுந்‌ தீய னாகிய
நாயி னேனிடம்‌ நலமி லாததால்‌
தோயு றும்படி துன்னி லேனென
ஆய பாணனா ரனுப்பப்‌ பின்னரும்‌; 42

சிந்தை யுள்ளவன்‌ தெளியு மாறதாய்‌
எந்த வாறவ ரொடுமி யம்பினும்‌
வந்தி லேனென மறுத்துக்‌ கூறல்கேட்‌
டந்த வேதிய ரவனை நோக்கியே; 43

உலக முண்டுமிழ்‌ ஒருவ னெம்மொடுஞ்‌
சொலுமொ .ழிப்படி துன்னி டாயெனில்‌
வலுவி லம்மண வாளர்‌ பாற்கொடு
செலுது மென்றவர்‌ செப்ப லோடுமே; 44

இட்டி வாவெனச்‌ செப்பி னுந்தலைக்‌
குட்டி யுங்கதை கொண்டு மோதியுங்‌
கட்டி யீர்ப்பினுங்‌ கடியவாள்‌ கொடு
வெட்டி னும்வரே. ரெனனவி எம்பியே; : 45

அடியவர்‌ பற்ற ஆழ்வார்‌ தென்கரையுற்றார்‌
ணத்தெழுந்‌ தவனு மேதனைப்‌
புக்க ணைந்திட வேபொ ருந்தினோர்‌
கைக்கொ ளக்கனிந்‌ தோடிக்‌ காவிரி
தெக்க ணக்கரை சேர்ந்து ளானரோ. 46

அனையர்‌ பேர்ந்தவ ரரங்கர்‌ பாலணைந்‌
. இனைய “செய்திக ளியம்பு தும்மெனா
வனையுங்‌ காவிரி வடக ரைத்தலை .
நினையு முன்னரின்‌ நீங்கி யேகினார்‌. 47

ஏடி னோர்களாங்‌ கெய்து செய்கைகள்‌
நாக ணைத்துயி னாத ஸனாகிவாழ்‌
ஆக மம்புய வனம லர்ந்தகார்‌
மேக மொத்துளா னொடுவி எம்பினார்‌. 48

சாரங்கமாமுனிக்கு இட்ட கட்டளை
விளம்ப லோடுமின்‌ மேதி ஸிப்பதத்‌
களந்து ளான்றனை யர்ச்ச னைசெயும்‌
வளம்பொ ருந்துசா ரங்க மாமூனிக்‌ .
குளங்க னிந்திட விதனை யோதுவான்‌: 49

தான லம்பெறும்‌ சாதி யிற்கடை
மீன னென்றன னேவ லிற்புகல்‌
வானி ரூம்புகழ்‌ வளரும்‌ பாணனை
நான வன்னவன்‌ னானெ ஸனக்கொடே; 50

கோயின்‌ மேவிடும்‌ கொத்து டன்வர
நீய டைந்திட நேர்ந்திடா னெனில்‌
தூய நின்றிருத்‌ தோண்மி சைக்கொடு
நேய மோடுபல்‌ வளம்நி ரம்பவே; 51

சுந்த ரம்பெறத்‌ துலங்கு வீதிசூழ்‌ இந்த மாநகர்‌ வலம தெய்தியே
வந்து சேரென வழங்கும்‌ வார்த்தைகேட்‌
டந்த -வாறதா யவனு மெய்தினான்‌. 52

குரும ணித்திரை கொழிக்குங்‌ காவிரித்‌
தருமு குத்துறை சேர்ந்து நெஞ்சகம்‌ உருகு பாடல்க ளோதுி நின்றிடும்‌
பொருவி லானொடும்‌ புகறல்‌ மேவினான்‌. 53

முனி மொழிகள்‌
ஐய்ய! கேட்டிநம்‌ அரங்க நாயகர்‌
பைய்ய வேதினை யனுப வித்திட
எய்த லாதமெய்‌ இயம்பி னானினிச்‌-செய்வ இல்லையென்‌ றன்பிற்‌ செப்பினான்‌. 54

மீளச்‌ சார்ங்கமா முனியும்‌ மெய்யரை
ஆளு நாயகன்‌ அருள்வ மாமலென்‌
தோளின்‌ மீதுனைச்‌ சுமப்பன்‌ ஐயனே! –
_ ஏளு கென்றவ ணெய்தி னானரோ. ்‌ 55

பாணர்‌ ஒதுங்கினார்‌ .
சென்ற போதினில்‌ இய சாதியன்‌
“என்ற வென்னைநீ சுமப்ப தேற்குமோ?
நன்று நன்றெனா நவின்று மெய்விதிர்த்‌.
தொன்ற வேபயந்‌ தோடி னானரோ. 56

ஓடு வான்றனை யோடிக்‌ கைக்கொளா
மாடு சென்றெதிர்‌ வளைத்து நிற்றலும்‌
பாடு நாயகன்‌ .பனுவல்‌ நொந்துளம்‌
வாடு -றத்திரு மதிலைச்‌ சார்கிலேன்‌; 57

நீச னீசனா னென்னை நீள்மொழி .
பேசிப்‌ பேசியே பிடித்தல்‌ ‘ இதெனாக்‌
கூசி யோடலுங்‌ கூவல்‌ மேவினான்‌
மாசி லாதொளிர்‌ மணியின்‌ மேனியான்‌. ‘ 58

எத்தி சைக்கணும்‌ எய்திப்போந்‌ தொறும்‌
அத்தி சைபுகுந்‌ தடைகி லேனெனத்‌
துத்தி நாகணைச்‌ சோதி தன்னுளக்‌ கொத்தி டுங்கொலென்‌ றுள்ள யர்ந்தனர்‌. 59

ஆழ்வார்‌ முனிவாகனர்‌ ஆனார்‌ .:
பின்னு மெங்கணும்‌ பெயர்க்கொ ணாமையால்‌
இன்னு மவ்விளை யாட்டெ லாம்விளைத்‌
தன்ன பாணனை அம்பு யந்தனில்‌
உன்னி யேற்றினன்‌ உவமை வேறிலான்‌. 60

இடரி னாற்கலுழ்ந்‌ திருந்த மெய்யன்தாள்‌
மடன விழ்ந்தநன்‌ மனதி னுள்ளுறு முடலை நீங்கிட முத்தமே கொடுத்‌
குடலின்‌ ஏந்தினான்‌ அன்பை ஏந்தினான்‌. 61

மருவு சூரன்முன்‌ மரைம லர்ந்தென
உருகு காதலால்‌ உளத்தொ எிர்ந்திடப்‌
பெருகும்‌ அன்பினிற்‌ பிறங்கு வோன்றனைப்‌
பொருவில்‌ தோளினிற்‌ பொலிய வைத்தனன்‌. 62

முனிவர்‌ கருடன்போலிருந்தார்‌
அளவி லாதநல்‌ லன்புக்‌ காழியைப்‌
பளகு வெம்பவம்‌ பாற்று மருந்தினை –
இளகு மன்பினால்‌ ஏந்திச்‌ செல்பவன்‌
களவில்‌ நெஞ்சுடைக்‌ கலுழ னாயினான்‌ 62

அனுமனுமானார்‌
க்க. ௫ ஒப்பிலா ரகுகுலம்‌ தனிலு கித்கருள்‌ |
அப்பனை யப்பினு எமுதொப்‌ பான்‌ ற்னைத்‌,… ர்
துப்பணைப்‌ பியன்மிசை சுமந்து வாந்க்கொள்‌ 7
எய்ப்பிலாக்‌ கான்மக னெனலு மாயினான்‌, ்‌ 64

முனிவன்‌ பூரிப்பு
தகவுறு பாணன்றன்‌ சரண்கைத்‌ தாங்கினோன்‌
உகவையின்‌ திருவுளம்‌ ஓங்கி டத்தவ
மகமிழைப்‌ பவருறு மகிழ்ச்சி யெய்தினான்‌
துகளிலா வாச்சியம்‌ துவைத்த தெங்குமே. 65

நிதியின்‌ மிக்கொளிர்‌ நெடிய கற்பகப்‌ — ப
புதிய மாமழை பொழிய, வானவர்‌
அதி௪ யித்துமா தவர்க ளன்பொடுந்‌
துதிசெய்‌ யப்புகழ்‌ பட்டர்‌ சொல்லவே. 66

துன்று தோரண முதல்து லங்குற அன்ற ரங்கம தலங்க ரித்துளது
என்றும்‌ இச்சிறப்‌ பில்லை என்றிடச்‌
சென்ற டைந்தனன்‌ தேவர்‌ செய்கையான்‌. 66

நீலமேனியன்‌ முன்‌ நிறுத்தினார்‌
நாலு வீதியு நண்ணி யன்புடன்‌
._ கோல மாமணிக்‌ கோவி லின்கணே
மூல மென்றுகூம்‌ முனியின்‌ முன்வரும்‌
நீல மேனியன்‌ முன்னி றுத்தினான்‌. 68.

ஆழ்வார்‌ அனுபூதி
அந்த மாதவன்‌ கேச வன்திருப்‌ .
பைந்து மாயணி பாதமே முதல்‌
சுந்த ரங்களின்‌ சோபை யாவையும்‌
முந்த வர்க்குறும்‌ முறையிற்‌ காட்டினான்‌. 69

புண்ட ரீகம்வாழ்‌ போத ஸும்விடம்‌
உண்ட பேயனும்‌ உம்பர்‌ யாவரும்‌
தொண்ட ராயடி தொழமும ரங்கரைக்‌
கண்ட கண்கள்‌ களித்த பாணற்கே; 70

ஒளித்தி லந்தொறு முறியில்‌ வெண்ணைபால்‌
களித்த ருந்திடுங்‌ கள்வ னேகரி
விளித்த ழைப்பமுன்‌ விரைவி னோடிவந்‌
தளித்த கார்வணா! அரங்க நாதனே! 71

என்று போற்றிசெய்‌ இறைவன்‌ மேனிமேல்‌
சென்ற அன்பெலாந்‌ திரட்டி. அன்பளாய்‌
அன்று பாடினா னமல ஸனாதியென்‌
தொன்றோ டொன்பது முவப்பி னோடுமே. 72

பாடி யேகளிப்‌ பாழி யிற்படிந்
. தாடி யாடிப்பொன்‌ னடியின்‌ வீழ்ந்தெழுந்‌
தோடி யோடிமெய்‌ யுருகி வேர்வெழக்‌
கூடி வந்தெ௫இர்‌ குறுகி நின்றனன்‌.–73

துன்று மன்புறும்‌ தொண்டன்‌ நீண்முடி
ஒன்ற நற்பத முவந்து வைத்தனன்‌
கன்றி னால்விள வெறிந்து கன்மலி
குன்றை யேந்திடும்‌ கரிய கோவலன்‌. 74

அரங்கக்‌ கடலில்‌ பாண நதி: கலந்தது
பன்னு கூவங்கள்‌ படுகு லைக்கணே
புன்னை யார்கடல்‌ புகுந்த டங்குறும்‌
உன்னு மன்பினால்‌ உருகு பாணனும்‌
மன்னி யொன்றினான்‌ மாயன்‌ றாட்குளே. . 75.

திருப்பாணாழ்வார்‌ அரங்கன்‌ இருவடிகளில்‌ கலந்தனர்‌.
*-கூவத்தின்‌ சிறு புனலைக்‌ கடலயிர்த்தல்‌ ஓவ்வாதோ கொற்ற வத்த.
என்பர்‌ சவிச்சக்ரவர்த்திகள்‌ (யுத்த காண்டம்‌).

கண்டு போற்றினர்‌ கண்ணி மைத்திடா
அண்டர்‌ யாவரும்‌ அஇச யித்தலர்‌
கொண்டி றைத்தனர்‌ கோயின்‌ மேவிவாழ்‌
ணட ன  தொண்டர்‌ யாவரும்‌ களிது ளங்கினார்‌. 76

அன்ன செய்கையான்‌ ஆய பாணனும்‌
பன்னு செந்தமிழ்ப்‌ பனுவல்‌ பத்தினுள்‌
பொன்ன ரங்கநற்‌ புகழ்கொள்‌ வேங்கடம்‌ ்‌
என்னு மிப்பதி யிரண்டு மெய்துமே. 77-ழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்ய தேசங்கள்‌ இரண்டு, –

பயன்‌
இப்பெ ருங்கதை யெழுதிக்‌ கற்றுளோர்‌
செப்பு வோரிரு செவியிற்‌ கேட்டுளோர்‌
ஒப்பு வேறிலா உயர்வை குந்தமாம்‌
அப்பெ ரும்பதி யணுகி வாழ்குவார்‌. 78

நம்மாழ்வார்‌ புகழ்‌ நவில்வோம்‌
ஒப்பென விளங்கு பாணர்செய்‌
வாறி தாமென வழங்கி னோமினி
நாறு பூத்துழாய்‌ நாத னாருரு
மாற னாங்கதை வகுத்துக்‌ கூறுவாம்‌. 79

திருப்பாணாழ்வார்‌ தருவவதார அத்தியாயம்‌
மூற்றிற்று.

———

சடகோபாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
வெண்பா
ஏரார்வை காசி விசாகத்தின்‌ ஏற்றத்தைப்‌
பாரோ ரறியப்‌ பகர்கின்றேன்‌ — சீராரும்‌
வேதந்‌ தமிழ்செய்த மெய்யன்‌ எழிற்குருகை
நாதன்‌ அவதரித்த நாள்‌.
(உபதேசரத்தினமாலை, 14,)

எம்பெருமான்‌ சிந்தனை
மருவை குந்தன மலிந்ததா மரையே ………
பொருவை குந்தனுக்‌ ததற்கு ……………..
கருவை குந்தமே முதலினோர்‌ களையும்‌ ………
இருவை குந்தமா நகரதன்‌ சீர்மையா ருரைப்பார்‌. 1

முதல்‌ பாடல்‌ தைந்துள்ளமையால்‌ பொருள்‌ புலப்படவில்லை. இதனை
**மருவை கும்தளம்‌ மலிந்ததா மரைமூதற்‌ பூக்கள்‌
பொருவை குந்தனுக்‌ கிருப்பிட மாகிமுப்‌ புவனக்‌
கருவை குந்தமம்‌ முதலினோர்‌ களையும்‌ஆண்‌ டருளும்‌
தருவை குந்தமா நகரதன்‌ சீர்மையா ருரைப்பார்‌?’”
என்று திருத்தத்‌ தோன்றுகிறது.
மரு- வாசனை. வைகும்‌ -தங்கியிருக்கின்ற. தாமரை முதல்‌ பூக்கள்‌ – தாமரை
நீலோற்பலம்‌ முதலான மலர்களை. பொரும்‌ – ஓத்திருக்கின்‌ ஐ. வைகுந்த்னுக்கு
இருமாலுக்கு. இருப்பிடமாய்‌ – தங்கும்‌ இடமாய்‌, முப்புவனம்‌ – மூன்று உலக
மாகிய. SH – மூட்டையில்‌, வைகும்‌ – சிறையிடப்பட்ட. தமம்‌ முதலி
னோர்‌ – தமம்‌ என்று கூறப்படும்‌ நரகத்துக்கு உரியவர்களையும்‌, ஆண்டருளும்‌ *
பாதுகாக்கும்‌ திருவைகுந்தம்‌ என்சு,

அச்ச றந்தநா டதனிடை அருள்விளக்‌ கிடும்நல்‌
வச்சி ரஞ்செழு மரகத முதலிய – மருவ – ்‌
வுச்சி தந்தனை விச்சுவ கருமனே உஞற்ற
மெச்சு றுந்திரு மாமணி மண்டபம்‌ விளங்கும்‌. 2

அந்த மண்டபத்‌ தரியணைப்‌ புறத்தினில்‌ அயனோ
டிந்தி ரன்முதற்‌ கடவுள ரெவர்களு மீண்டி.
வந்து வந்தவக்‌ சணம்நெருங்‌ குறப்பிரம்‌ பதுகொண்
டுந்தி யுந்திருச்‌ சேனையர்‌ கோன்விலக்‌ குறவே. . 8

இருபு றத்தினு மரிவைசா மரங்கள்கொண் டிரட்ட
பொருவில்‌ முத்தவெண்‌ மதித்திருக்‌ கவிகைமேற்‌ பொலிய
குருக வின்கவுத்‌ துவமணி மார்பினிற்‌ குலவத்‌
இருவொ டும்பொலிந்‌ திருந்தனன்‌ நாரணன்‌ சிறப்பால்‌. 4

இருந்த கோவிய ரணியுடை களைக்கவர்ந்‌ தெடுத்துக்‌
குருந்த மேலுறுங்‌ கோவலன்‌ கொன்றையன்‌ -முதலாம்‌
அருந்த போதனர்‌ வரங்கள்பெற்‌ றகன்றதன்‌ பின்னர்‌ இருந்த வேயுளத்‌ தோர்முறை இந்திப்ப தானான்‌. 5

அருளில்‌ வைகுறத்‌ தக்க€ வாத்மகோ டிகளவ்‌
விருளெ லாம்தடிந்‌ திரிந்திடும்‌ நல்லறி வெய்தஇத்‌ .
தெருள்கொள் அன்பினால்‌ நம்வயின்‌ -சேர்தரு போதில்‌
மருளு றப்புரி வஞ்சரை மாய்த்திட வேண்டி, 6

நைதல்‌ ஒட்டுநன்‌ னீரராய்‌ நன்னலம்‌ பொருந்தும்‌
செய்கை யோர்களைப்‌ புவிமிசை செனிப்பித்தங்‌ சுவரால்‌
உய்தல்‌ வேண்டினோம்‌ உற்றுணர்‌ ஞானங்க சூரைத்த
மெய்மை யோர்களை வெறுப்பொடும்‌ தடிந்தன ரல்லால்‌, 7

கப்படும்‌ உணர்வொடும்‌ உறுபகை யொழித்தெம்‌
அருக ணைந்திலர்‌; இன்னம்யாம்‌ வருந்தியங்‌ கவர்பால்‌
கருணை கூர்தரப்‌ பிறந்திடக்‌ கருதினோம்‌; உதவ
வருதல்‌ ஆரியர்‌ செயலெனத்‌ திருவுளம்‌ மதித்தே, 8:

பெருமாள்‌ கட்டளை *
பாய லாயுறும்‌ அரசையும்‌ பணிக்குலந்‌ தன்னைக்‌
காயும்‌ வெஞ்சிறை ஊர்தியாம்‌ பொற்கரு டனையும்‌
கூய ழைத்துநீர்‌ புவியினில்‌ விரைவொடுகங்‌ குறுகி
நேய மோடிரும்‌ எனஅடி தொழுதெதிர்‌ நின்றார்‌. 9

நின்று ளோர்முகம்‌ நோக்கி,யாம்‌ நிலமிசை யுருவம்‌
ஒன்றி யேபிறந்‌ இடவுளத்‌ தோர்ந்தன மதனால்‌
சென்று நீர்முனம்‌ வழுதஇுநாட்‌ டிடைத்திருக்‌ குருகூர்‌
என்று கூறுமா நகரினு மன்னகர்க்‌ இணையாய்‌, 10

சிறந்தொ எிர்ந்தகோ ஸூரினுந்‌ திருப்புளி யெனவும்‌
அறந்த ழமைத்தசீர்‌ மறையுண ரந்தண னெனவும்‌
பிறந்தி டும்மெனப்‌ பேருல குண்டசெம்‌ பவளம்‌
இறந்து ரைத்தலு மங்கவ ரிம்மொழி தெரிப்பார்‌: 11

இருமால்‌ ஆதிசேடனையும்‌ கருடனையும்‌ அழைத்தான்‌ ; அவர்‌
கள்‌ வந்து பணிந்து நின்றனர்‌. அவர்களை தோக்கிய இறைவன்‌ யாம்‌ fos wf
பிறந்திட நினைந்துள்ளோம்‌, : நீங்கள்‌, திருக்குருகூரிலும்‌ இருக்கோளூரிலும்‌,
இிருப்புளியாகவும்‌ அந்தணனாசவும்‌ பிறந்திருங்கள்‌ என்‌ மனன்‌.

கடவு ளோர்களு முனிகளும்‌ வேண்டவாங்‌ கவர்கட்‌
இடர்பு ரிந்தவாள்‌ வேல்கெழு மிராக்கதக்‌ குழுவைப்‌
படியின்‌ மீதுவேற்‌ றுருவமாய்ப்‌ பலவவ தாரம்‌
அடிகள்‌ கொண்டடைந்‌ தழித்துமீண்‌ டிவ்விட மடைந்தீர்‌. 11

மாறு மோர்பகை : புவிமிசை யுளதுகொல்‌? மதித்துக்‌
கூறு தற்கிலை மீண்டுமோ ருருக்கொளக்‌ குறிக்கின்‌
வேறு காரணம்‌ யாது?யாம்‌ முன்னுரைத்‌ இட்ட
வாறு இத்திடில்‌ அடிகளெவ்‌ வுருக்கொள்வீ ரறைமின்‌? 12

எந்த வூர்தனி லெந்தநா ளினில்‌உல களந்த
உந்த மம்புய வடிகளைப்‌ பிரியும்கதீ தறுவோம்‌;
வந்து காண்குறும்‌ வகையையும்‌ மாறுத லின்றி-முந்த வோதிலம்‌ முறைபுரி குதுமென்றார்‌; முறையாய்‌, 14

மொழிந்த — கேட்டலும்‌ முகுந்தன்மற்‌ nor Gu
பொழிந்த கண்களால்‌ நோக்கினன்‌; புகழ்பரந்‌ தாமம்‌
ஒழிந்த கன்றிட விம்மொழி உவப்புட னுரைத்தான்‌
வழிந்து தேன்பொழி துழாய்முடி புனையுமா தவனே. 15

அறிஞர்கள்‌ பேயராயினர்‌ !
௪த நீர்க்கடல்‌ வரைப்பினிற்‌ றெளிவுளோர்‌ உணர
வேத மெந்தனை யுண்மையாய்‌ விளம்பியும்‌ வேதம்‌
ஓது மந்தண ரந்நிலை யுணரகில்‌ லாராய்ப்‌
பேதா பேதமா யுரைத்திடும்‌ பேயரா. யினரால்‌. 16–பேயராயினர்‌ என்று ஆசிரியர்‌ பொய்ம்மை வாதிகளைக்‌ கண்டிக்கிறார்‌,

கற்ற வேதிய ரிவ்வகைக்‌ கழறினர்‌ என்னில்‌
மற்று ளோர்களெவ்‌ வாறினி வாழ்வர்முக்‌ காலம்‌
மூ.ற்று மோர்தவ முனிவரு மயங்கினர்‌; முறைசேர்ந்‌
துற்ற மாயையின்‌ வலிமையவ்‌ வாறதா மூணரில்‌ ‘ 17

அன்ன தன்மையை தாதலால்‌ அளப்பரும்‌ புவியோர்‌
என்னை யுண்மைதேர்ந்‌ தெவருமிப்‌ பதியின்வந்‌ தெய்தி
மன்னி வாழ்ந்திடும்‌ வகையுணர்ந்‌ திலார்மதி யருள்வ
துன்னி யோதுமி னெனவவர்க்‌ குரைத்தபின்‌ விடுத்தேம்‌. 18

அவர்கள்‌ சென்றுறுப்‌ படைந்திடு மளவி லிம்மாயை
கவியு மாங்கதற்‌ இங்குபல்‌ வலிமைகாட்‌ டுகினும்‌
புவியி லெய்தினர்‌ பொலியுமெய்ஞ்‌ ஞானபோ தகத்தைச்‌
செவியின்‌ மேவுறத்‌ தெளிவுறப்‌ புகட்டிச்சின்‌ னாளில்‌; 19

மருவி யோங்கிடும்‌ வெவ்வினை மருவுமற்‌ றவர்கள்‌
இருநி லத்திழிந்‌ தடாமலெச்‌ சரிக்கைசெய்‌ தவராய்‌
பொருவில்‌ நல்லறம்‌ புகன்றனர்‌; புவிமிசை வதியும்‌
அருள்கொ ளந்தண ரரசர்கள்‌ வ௫ூயர்பின்‌ னவர்கள்‌; 20

இடிந்த நெஞ்சொடும்‌ இவர்மறித்‌ தன்னைதன்‌ வயிற்றிற்‌ படிந்து இத்துப்பின்‌ இறந்துடும்‌ பிறவியாம்‌ பவ்வம்‌
கடந்தி டும்திறம்‌ அறிந்திலர்‌ காசினி யதன்மேல்‌
நடந்தொமிந்தனர்‌ மையலால்‌ நவிலவே நிலையால்‌, 21

தமிழ்மறை ஓத அவதரிப்போம்‌
ஆத லாலிவர்‌. யாவர்க்கு மினியதா யமைந்து
பூத லத்தினில்‌ இழிகுலத்‌ தவரும்பூ வையரும்‌ ஓதி யின்புறற்‌ கடமதாம்‌ யோக்கிய முறவவ்‌
வேத –தமிழினால்‌ விரித்தினி துரைத்து;–22-

சொற்றி டும்பொருள்‌ நுட்பமும்‌ முறைமையின்‌ தொகுப்பும்‌
கற்று ணர்ந்திடும்‌ கலைஞரும்‌ மாந்தர்தம்‌ கணமும்‌
மற்றும்‌ மேவிடும்‌ சணங்களும்‌ மாண்புறப்‌ பெருநூல்‌
பெற்றி டும்படி நடத்துவித்‌ துறல்கடைப்‌ பிடித்தேம்‌.-23-

அதனுக்‌ கொத்திடக்‌ குருகைவாழ்‌ காரிமா றனுஞ்சர்‌
-சுதனி லாமையின்‌ மனைவியோ டருந்தவந்‌ தொடங்கி
. இதமு றத்தவம்‌ இயற்றுவ னினிச்சில நாளில்‌
– உதவு வேம்மக வெனவளித்‌ தவருவப்‌ புறவே,–24

கலியு கத்தினி லவதரித்‌ தனைத்துக்கும்‌ கலங்கா
வலிகெ முந்திரு வனந்தனீ குருகைமா நகரின்‌
ம்லித ருஞ்சினைப்‌ புளியெனுந்‌ தருவதாய்‌ வளரில்‌’.. _
பொலியு மத்தரு நிழலில்யாம்‌ பொருந்திவை குதுமால்‌, -25-

அந்த மாநகர்க்‌ கடுத்தகோ ஞூர்வயின்‌ அருளே
முந்து வஞ்சிறைக்‌ கலுழன்நீ முறைவழு வாமல்‌
செந்த மிழ்க்கவி யாகிநாம்‌ செப்புவாய்‌ மொழிக்கு
வந்து றைந்துபட்‌ டோலைநீ மடகழ்வொடு பிடிக்க; 26

அறிந்து நீவிர்க ளிருவரு மாஜிசூ முலகற்‌ பிறந்து வைகுமி னெனவரி பிறங்குபாட்‌ டிசைக்கும்‌
நறுந்து மாயணி மாலையான்‌ நவிறலு மிரவிற்‌
செறிந்த தாமரை மலரெனத்‌ திருமுகம்‌ குவிந்தார்‌. 27

ஐய! நின்மொழிக்‌ கெதுரெவ ரறைகுவர்‌? ஆனால்‌
வெய்ய இக்கொடு மொழிகளை விளம்பினை; ஆயின்‌
செய்ய வேண்டுமென்‌ றியம்பினை; செய்குதும்‌ என்றே
வைய மீதுற விடைகொடு நடந்தனர்‌ மஇழ்ந்தே. 28

(வேறு)
மதுரகவி அவதாரம்‌
நடந்தவரிற்‌ கலுழன்‌ நண்ணியடி யார்கள்‌
தொடர்ந்துகுடை யும்புனலிற்‌ றோய்ந்துள whips
படர்ந்தரவ மேற்றுயில்‌ பதிக்கண்மலர்‌ மேவும்‌
மடந்தைநிக ராகுமொரு மங்கைவயி றுற்றான்‌. 29

(வேறு)
அருமா மறையின்‌ வடிவா மமலன்‌
உருமா மதன்வந்‌ துலகத்‌ திடையே
வருமா னுடனாய்‌ மருவுற்‌ றிடல்போல்‌
இருநாள்‌ பொலியச்‌ செகமுற்‌ றனனே. . 30

(வேறு)
வந்த மதலைத்‌ திருமுகமும்‌ வடிவத்‌ தெழிலும்‌ புன்னகையும்‌
முந்த வருமா மகளிரெலாம்‌
முறையின்‌ நோக்கிக்‌ கண்களுடன்‌
சிந்தை மகிழ்ந்து நிறைவுற்றார்‌. தேவன்‌ இவனே என்றுரைத்தார்‌
அந்த நகர்வா யுறையுயிர்கள்‌ ்‌
அனைத்தும்‌ இன்பத்‌ தோங்கென வே. 31

மதுரகவி ஆழ்வாரின்‌ கல்விப்பயிற்சி
அறிய வொண்ணா மறைகளைக்காட்‌
டம்மா மறையோர்‌ அமைவிதிகள்‌
நெறியிற்‌ பகர இருகுரவர்‌ நிகழ்வித்‌ தன்பின்‌ வளர்க்குங்கால்‌
நறிய புனிதத்‌ துளவமென
நாளும்‌ வளர்ந்து வடகலையும்‌
செறியும்‌ இன்பத்‌. தென்கலையும்‌
சேர வுணர்ந்தான்‌ சின்னாளில்‌. 32

தீர்த்த யாத்திரை
சீரார்‌ மறையின்‌ பொருளுணர்சோத்‌
இரபண்‌ டிதனாய்ச்‌ சாற்றுபல
பாரார்‌ கலைதேர்‌ சால்புடையோர்‌
பரவிப்‌ புகழ வுறைந்ததன்பின்‌
நாரா யணன்வாழ்‌ பதுிபணிந்து
நல்லோர்‌ பாதம்‌ பணிந்தேத்தி
ஆரா மஞ்சூழ்‌ கங்கைகண்‌
டாட நினைந்தான்‌ அயர்வில்லான்‌. 33

நிகரில்‌ வளஞ்சார்‌ திருக்கோளூர்‌
நீங்கி நெடிதாம்‌ நெறிகடந்து ககன வமரர்‌ தினந்தோயும்‌
கங்கா நஇகண்‌ டந்நீரில்‌
மகிழ்வின்‌ இன்பப்‌ புனலாடி
மருவிப்‌ புரிதற்‌ கரியதவம்‌
புகலும்‌ மாயை தனைவிடுத்துப்‌
போக இருந்தான்‌ புகழ்வல்லோன்‌. 34

திருப்புளி ஆழ்வார்‌ அவதாரம்‌
பன்னற்‌ கினியான்‌ உவப்பெய்தப்‌
பலவே டங்கொள்்‌ திருவனந்தன்‌
தென்னன்‌ முதலாம்‌ வேந்தர்களும்‌
தேவர்‌ குழுவும்‌ இத்தர்களும்‌
கன்னல்‌ மொழிகொள்‌ அரம்பையரும்‌
கலந்தோர்‌ முகமா யடைந்துதொழப்‌
பொன்னின்‌ ஒளியை நனிநல்கும்‌nபுனிதம்‌ பெறுஞ்சீர்‌ குருகூர்வாய்‌; – 35

குலவு மாதி நாதன்றன்‌
– கோவில்‌ வடபாற்‌ பொருளைநதி
அலகில்‌ வளஞ்சார்‌ தீர்த்தநுகர்ந்‌
. தணிசேர்‌ இளையார்‌ திருப்புளியாய்‌
மலர்சூழ்‌ பொய்கைக்‌ இடையொடுங்க
வருக மூலம்‌ எனப்போந்த
நலமார்‌ திருமால்‌ எனஓங்கி .
நாகம்‌ முற்றும்‌ அளந்தனனே. 36

காரிமாறன்‌ கவலை
வாட யில்லாச்‌ சான்றோர்கள்‌
மறையோன்‌ எனவும்‌ புளிஎனவும்‌.
மால்‌ லாமற்‌ பொலிந்தார்கள்‌;
மதியோன்‌ கதிரோன்‌ வலம்செய்யும்‌
காசற்‌ ஹறொளிருங்‌ குருகூரில்‌
காரி மாறன்‌ உலகுபுகழ்‌
தேசுற்‌ றிலங்கு முடையநங்கை
. தேவி யுடனே சேர்ந்திருந்தான்‌. 37

பூடும்‌ வாடப்‌ பொறாதவர்கள்‌
புதல்வ னில்லாக்‌ காரணத்தால்‌
வாடி வாடி உளந்தளர்ந்தார்‌; .
ம$ழ்விற்‌ புரிந்த தருமமெலாம்‌ வீடி யொழிந்து போயினவோ?
மேவும்‌ கொடுமை யாதென்னா
நாடி மேலோ ரொடும்புகல
நயந்து கேட்டோ ரிவைபகர்ந்தார்‌. 38

கற்றாவும்‌ குன்றும்‌ கதறப்‌ பிரித்ேதோமோ 2
பெற்றாரைப்‌ பார்த்துப்‌ பெருமூச்‌ செறிந்தோமோ?
பேதலித்து முற்பிறப்பில்‌ பிள்ளைப்பால்‌ வார்த்தலமோ?
காதலித்து மைந்தருண்ணும்‌ சையைப்‌ பிடித்தோமோ?
என்னும்‌ நம்மாழ்வார்‌ தாலாட்டுப்‌ பாடல்‌

**குதலைமொழிக்‌ கன்கிணிக்கால்‌ கோகனகச்‌
– செவ்வாய்‌ மதலையரை யில்லாத வாழ்வுமொரு வாழ்வாமோ ? புக்கடிசில்‌
உண்டு புறம்புல்கிக்‌ கூத்தாடும்‌ மக்கள்‌ முகம்‌ காணாத வாழ்வுமொரு வாழ்வாமோ?
ஐந்தடக்கி, வேண்டும்‌ அறங்கோடி செய்தாலும்‌ மைந்தரைப்‌ பெற்றுய்யாத
வாழ்வுமொரு வாழ்வாமோ? மிகப்பேறளித்து விரசை நீராட்டும்‌ மகப்பேறடை
யாத வாழ்வுமொரு வாழ்வாமோ?’”’-என்னும்‌ நம்மாழ்வார்‌ தாலாட்டுப்‌ பாடல்‌

சான்றோர்‌ இன்னுரை
காரார்‌ குழல்சேர்‌ மனைவியொடும்‌
கலங்க வேண்டா; நன்மையுறும்‌;
ஏரார்‌ புதல்வர்‌ தமைவேண்டி
இளமா மதியம்‌ தவழ்கின்ற
சீரார்‌ மாடக்‌ குறுங்குடியைச்‌
சேர்ந்து புனிதப்‌ பாற்கடலில்‌
நீராடி யபின்‌ இருமாலை
நினைந்து தவங்கள்‌ செயுமென்‌ றார்‌. 39

தம்பதியர்‌ கண்ட கனா
நடுநாள்‌ தவஞ்செய்‌ போதினிலே
நிகரில்‌ கதிரோன்‌ உதயகிரி
படுகா லையினில்‌ கனவின்சண்‌
பரவுந்‌. இருப்பா லாழிவரும்‌
‘கொடுமா விடத்தை யரற்களித்த
கோமான்‌ நிரம்பிப்‌ பெருகிடுமன்‌
பொடுமாங்‌ கவர்தம்‌ தஇருமுன்னர்‌
உற்றுத்‌ இருவாய்‌ மலர்ந்தனனால்‌.-40-

மகவி லாத கொடுந்துயரால்‌ ‘
மறுகி யிரவும்‌ வெயில்காயும்‌
பகலும்‌ அரிய தவம்புரிந்தீர்‌;
படாத துன்பம்‌ நனிபெற்நீர்‌;
புகலு முமக்கிப்‌ பிறவியினிற்‌
புதல்வற்‌ பெறும்பே நிலை;ஆனால்‌
அகமுட்‌ பொருந்தி யித்தலம்வந்‌
தடைந்தோர்‌ நினைந்த தெய்துவரால்‌. 41

துதிசெய்‌ பவர்கள்‌ அருந்துயரைத்‌
துடைப்ப தெமது கடனாகும்‌
அதினா லுமையுற்‌ நிடுவினைகள்‌
அனைத்தும்‌ போக்கிச்‌ சோதிடத்தின்‌ விதியை யொழித்திட்‌ டுமதிடத்தில்‌
விரும்பி மகவாய்‌ அவதரிப்போம்‌;
பதிசென்‌ றடைமின்‌ எனப்பகர்ந்து
பரந்த விண்ணிற்‌ கரந்தனனால்‌, 48

அந்தக்‌ கனவை கண்டுணர்ந்திட்‌
டருளார்‌ காரி வியப்புடனே
சிந்தை களிகூர்ந்‌ தியம்புதலும்‌
இகழும்‌ அலர்மேல்‌ மகள்போலும்‌
கந்தம்‌ மேவுங்‌ குழலாளும்‌
கண்டேன்‌ கண்டேன்‌ ஈதேஎன்‌
றுந்து காத லுடன்மொழிய
உவந்தான்‌ வமுகு நன்னாடன்‌. 43

ஆழி முதலைம்‌ படையொடும்பால்‌
ஆமி நடுவிற்‌ றுயில்மாயன்‌
மாமி பலவாங்‌ கோடிகளென்‌
றுரைக்கும்‌ காலம்‌ கணமென்ன
வாழி யெனவக்‌ குறுங்குடிவாழ்‌
்‌ வார்க்குப்‌ பல்லாண்‌ டினிதோதிச்‌
சூழி மதமா கரியனையான்‌
துணைவி யொடுந்தன்‌ நகரடைந்தான்‌. 44

நம்மாழ்வார்‌ திருவவதாரம்‌
அடைந்து துயர்நீத்‌ துறைநாள்வாய்‌ ப
ஆமி தனைமந்‌ தரவரையால்‌
கடைந்து மருந்தன்‌ றளித்தான்றன்‌ கழற்றொண்‌ டியற்றி வருநாளில்‌
முடங்கி நலிந்த சிறியவரும்‌
முயற்சி யின்றிப்‌ பதவிபெறக்‌
குடைந்து தேனுண்‌ சுரும்பார்க்கும்‌ j
குழலார்‌ நங்கைத்‌ திருவயிற்றில்‌; 45

கடல்சூழ்‌ உலகம்‌ புகழ்ந்தேத்தக்‌
காரி யெனும்பேர்‌ .புனைந்தோன்செய்‌ – ்‌
*… திடமார்‌ தவத்தால்‌ துவாபரத்தில்‌ :
இகழும்‌ அந்தத்‌ தாவணியில்‌ |
இடமார்‌ இருபத்‌ தேழென்னும்‌ ்‌
இசைசேர்‌ தேதி தனிலொளியாய்‌ ,
அடல்சேர்‌ கலியின்‌ வெப்பகற்ற ்‌ ர
அருள்மா முகில்போல்‌ சென்றுற்றான்‌.–46-மூன்றாம்‌ யுகத்தில்‌ உடைய நங்கையார்‌ வயிற்றில்‌ திருமால்‌ சென்று தங்காள்‌.

மங்கு லனையான்‌ தாய்வயிற்றில்‌
மருவிக்‌ கருவாய்‌ உருவாகத்‌
தங்கள்‌ வதனம்‌ விளர்ப்பெய்தத்‌
தெரிய்‌ மருங்குல்‌ பெருந்தனத்துப்‌
பொங்கு முகத்துக்‌ கருமைநனி
பொலிய வியர்வோ டயர்வெய்த
மங்கை: தென்றல்‌ நடைகற்க
வளர்த்தான்‌; மதியை யிரண்டளவும்‌,–47-

மெலியும்‌ கலிவை காசியினில்‌
மேவும்‌ விசாக நன்னாளில்‌
பொலிவு மிக்க கடகமெனப்‌
புகழ்சேர்‌ ஓரை தனில்பொங்கி
மலியுங்‌ கடல்கள்‌ அத்தனையும்‌
மகிழ்வி னெழும்பி மறிதிரையாம்‌
ஒலிகொள்‌ முரசம்‌ இனிதார்ப்ப
உதித்தான்‌ ஒருசு ரியனெனவே. 48

காரியாரும்‌ உடைய நங்கையும்‌ உற்ற களிப்பு
பெற்றி மிக்க அறம்வளரப்‌
பேரார்‌ இராமன்‌ தோன்றியநாள்‌
சற்றும்‌ பொய்யில்‌ தசரதன்கா
சலையோ டந்நாட்‌ டவர்கள்முகம்‌
செற்றம்‌ நீங்கப்‌ பேரன்பில்‌
சிறந்த தென்னக்‌ காரியுடன்‌
பற்று மிக்க நங்கையரும்‌
பதிவாழ்‌ வாரும்‌ களிப்புற்றார்‌. 49

பேரிற்‌ றந்து நிறைசடரைப்‌
பெற்ற கொடியு முளங்களிப்பக்‌
காரி யாரும்‌ விரைந்துற்றுக்‌
கவினார்‌ சேயின்‌ முகங்கண்டு வேரி மலர்ச்சந்‌ தனமுடைபொன்‌
விதையா பரணம்‌ சருக்கரையும்‌
மாரி பொழிவ தெனத்தானம்‌.
வழங்கி யுளத்தின்‌ ம௫ழ்வடைந்தார்‌. 50

மாறன்‌ என்று வைத்தனர்‌ நற்பேர்‌ :
புரமட்‌ டவனும்‌ நான்முகனும்‌
…. புருகூ தனும்விண்‌ ணாட்டவரும்‌
பரவிப்‌ புகழ்தற்‌ கரிதாமப்‌ ட.
பரமன்‌ செயல்க எளாராய்ந்தார்‌;
மரபிற்‌ புகலும்‌ பெயர்காரி
மாறன்‌ என்று சுற்றத்தார்‌ .
கரமிட்‌ டுழக்க வைத்திட்டார்‌ ட
களிப்பா மமுதம்‌ அளித்திட்டார்‌. 51

மாறன்‌ மாயையை வெல்லுதல்‌ –
இம்முறை யவர்களெல்‌ லாரு மின்புறச்‌ ்‌
செம்மலு மாயையைச்‌ சதைய வென்றதால்‌
விம்மிவாய்‌ திறந்தழான்‌ விழிதி றந்திடான்‌
௮ம்மலர்‌ பொருவுதா ளசைந்தி டானரோ. 52 ‘

மலமொடு சலம்விடான்‌ மருவிப்‌ பாலுணான்‌
இலகுயோ கந்தனி லினிதி ருந்தனன்‌
உலகுடை ஒப்பிலா வுருவந்‌ தாங்கியும்‌
அலகிலா இன்பங்கள்‌ அளித்தி டானரோ, 53

தாய்வயிற்‌ றுஇத்திடில்‌ சார்ந்து வாட்டிடும்‌
மாயையைக்‌ தடிந்ததெவ்‌ வாறு? மற்றிதற்‌
காயதோ ருபாயம்யா மறிந்து லேமெனத்‌
தூயநன்‌ மனத்தினர்‌ தொடர்ந்து நோக்கினார்‌. 54

(வேறு)
மேனிவா டாமல்‌ உள்ளம்‌
வெதும்புதல்‌ சற்றும்‌ இன்றி
மோனியாய்‌ நாளும்‌ நாளும்‌
முகமலர்‌ விளக்கம்‌ பெற்று
வேனிலான்‌ இவனே என்று
‘விளம்பிட வனப்பை யுற்றான்‌
வானிடை உறைவோர்‌ பூவின்‌
மழைபொழிந்‌ தார்த்திட்‌ டாரால்‌. 55

இசைதரு புனித மைத்தன்‌
எழிலுறு முகார விந்தம்‌ ்‌. அசைவிலா திருப்ப நோக்கி
யருந்தவத்‌ தினிதின்‌ ஈன்ற வசையிலா மயிலை யொப்பாள்‌
காரியார்‌ மாழ்கி நைந்து
நசைநனி பெருகி யோங்க-இன்னணம்‌ நவில்வ தானார்‌: 56

உடைய நங்கையின்‌ புலம்பல்‌
அந்தமில்‌ காலம்‌ யாம்செய்‌
அருந்தவப்‌ பயனால்‌ வந்த
விந்தையார்‌ மகனே! தூய
விர தியே! உனக்கு நாயேன்‌
சிந்தையால்‌ செய்கீங்‌ கென்னோ?
இரண்டஎன்‌ முலையை உன்பொன்‌
சுந்தர வாயிற்‌ சவ்விச்‌
சுவைத்தும்பா அணவொ ணாதோ? 57

கண்ணினுள்‌ மணியே பொன்னே
கண்டிகை ஒதுக்கி என்றன்‌ ச
தண்ணமு தனைய பாலைத்‌
ககவுடன்‌ சுவைத்தல்‌ இதோ?
புண்ணியத்‌ தாள்க ளாலெம்‌
புயத்திடை யுதைக்கொ ணாதோ?
நண்ணுநின்‌ இரிப்பால்‌ யாங்கள்‌
நற்களிப்‌ புறலா காதோ? 58:

என்றும்நீ யன்பின்‌ மேவும்‌
எழிலுறு புதல்வ னாக
ஒன்றிய வுள்ளத்‌ தோடும்‌
உலகளந்‌ தவனை நோக்கி.
நின்றுபன்‌ னாட்கள்‌ நோன்பில்‌
நிறைந்தநின்‌ தந்த -யானோன்‌
தன்றிரு வுளத்தி லன்பு தழையநீ நோக்கி டாயோ? 59

நலமெலா மினிதின்‌ ஓங்க
நான்மக வுயிர்த்த காலைப்‌
பல.மணிக்‌ கணங்கள்‌ மேவிப்‌
பயின்மணித்‌ தொட்டில்‌ ஏற்றி
யலம்வரல்‌ முற்றும்‌ தீர்த்திட்‌
டம்புலீ! வருக என்னக்‌
கலமென இனிய தாகக்‌
காண்தவம்‌ செய்தி லேனோ? ்‌ 60

அருத்தியில்‌ லானென்‌ றோரா
ஐயவிக்‌ கொங்கைத்‌ தீம்பால்‌ :
உருத்தலால்‌ வருத்து கின்ற துயரேனும்‌ ஒஓழிக்கொ ணாதோ?
உரத்தலர்‌ மங்கை வாழும்‌
ஒருவனன்‌ றினிதின்‌ ஈன்ற
வரத்திலென்‌ வயிற்றில்‌ வந்த
மைந்தனே! முறையோ? சொல்லாய்‌. 61

பெருமைசால்‌ பரிசா ரம்வாழ்‌
பெருந்தகை யுனது பாட்டன்‌
அருமைமீ தூரப்‌ பொன்னால்‌
அழகுறப்‌ புனைந்து தந்த குருமணித்‌ தொட்டில்‌ குற்றும்‌
கோலமார்‌ வெயிலி னாலே
இருமுகம்‌ மலர்ந்து கண்கள்‌ சிறப்பயாம்‌ நோக்கொ ணாதோ? 62

ஓவிய மனையாய்‌! நின்பே
ரொளியினிற்‌ கண்வை யாதே
காவியங்‌ கண்வேற்‌ கொண்ட
காரிகை மார்கள்‌ தம்முள்‌
நாவினால்‌ ஏசி ஏ
நகைசெயல்‌ பிறர்வாய்க்‌ கேட்டேன்‌
பாவியேன்‌ இதலால்‌ வேறு
படுமொழி கேட்கொ ணாதோ? 63-

**சமஸ்கிருத சாஸ்இரங்களிலே பல
காலும்‌ சுண்‌ வையாமல்‌…… திருவாய்மொழி முதலான அருளிச்செயலிலே
பரிசலனம்‌ பண்ணிக்கொண்டு”” என்பது ‘*யதீந்த்ர ப்ரணவப்‌ பிரபாவம்‌””.

உன்திரு முகத்தின்‌ கோலத்‌
தோங்கிநல்‌ லுவகை காட்டும்‌
புன்சரிப்‌ பூடரனே என்னோ
புரிந்துநீ நோக்குப்‌ பாரா
இன்பமுற்‌ றிருக்கின்‌ றாற்போல்‌
இருந்தனை யோடு போலத்‌
தென்படு கின்ற தையா
இருமுலைப்‌ பாலு ணாயோ? 64

உள்ளத்து ஞணருந்‌ தன்மை
யுற்றுளாய்‌[ வாட கில்லாய்‌/
வள்ளலோ டலதென்‌ னோடிம்‌
மர்மத்தை. யுரைக்கொ ணாதோ?
மெள்ளவாய்‌ மலரொ ணாதோ?
விம்மிநன்‌ கழவொ ணாதோ?
-கள்ளமோ? எம்மோ டென்னோ காழ்ப்புனக்‌’ குற்ற தைய 65

உடையநங்கையார்‌ பாங்கிமாரொடு புலம்பல்‌
இன்னணம்‌ பலவா றாக
எடுத்தெடுத்‌ தியம்பும்‌ போதும்‌
அன்னமா மதலை மேனி
யசைத்திடான்‌; விழியால்‌ காணான்‌;
மன்னுமவ்‌ வாறு காண
மலர்க்கண்‌ ரருவி சோரப்‌
பின்னரும்‌ பாங்கி மாரோ
டின்னணம்‌ பேச லுற்றாள்‌: . 66

இங்கே வடிவழகிய தம்பிதாசர்‌ உடைய நங்கையார்‌ வாயிலாகப்‌ பாடும்‌
பாடல்கள்‌ யாவும்‌ கல்லையும்‌ கனியச்‌ செய்யும்‌ நீர்மையன, “தப்பா நிலையார்‌
கவமே! தமிழ்மாறா — அப்பா முலையிரண்டும்‌ விம்மிநான்‌ ஆற்றகல்லேன்‌. —
ஒப்பாரில்லாதாய்‌! சுரந்து பீர்‌ ஓடுகின்றது; — இப்‌ பால்‌ அருந்தாய்‌! நான்‌ என்‌
பிழைத்தேன்‌ இன்னமுதே’* — :*ஓக்கலைமேல்‌ வைத்தோர்‌ கரத்தால்‌ உனைத்‌
தாங்கித்‌ -தக்கமுலை யூட்டத்‌ தவம்‌ முன்பு செய்யாதேன்‌: — மக்கடமைப்‌ பெற்ற
மடவார்‌ முகம்‌ நோக்கி. வெட்கினேன்‌ மைந்தா, விதியிலியேன்‌ ஆனேனே”*
என்னும்‌ பாடல்கள்‌ முற்றும்‌ சோகமயமானவை.

வரமிருந்‌ தடியேன்‌ பெற்ற
மதலைபோற்‌ செய்கை தானும்‌ .
இரமுறும்‌ வடிவும்‌ பெற்ற சிறுவரை உததி கூழும்‌ கரையிலா வுலகில்‌ யாண்டும்‌
கண்ட துண்டோ?மற்‌ றோர்கள்‌
பிரமையாய்‌ உரைத்த ,துண்டோ?
பேசுவீர்‌[ பேசு வீரால்‌. 67

செகமெனுங்‌ கவளந்‌ தம்மைச்‌
சிறுபச வந்த வாற்றால்‌
அகமுவப்‌ புடனே உட்கொண்‌.
டணிகுறுங்‌ குடிசேர்ந்‌ தாங்குத்‌’ துகவுடன்‌ மேவு பெம்மான்‌
தான்பிறக்‌ குதுமென்‌ றாற்போல்‌ .
மகமுயர்‌ வெய்தி யோங்க |
மாயனே உதித்திட்‌ டாலும்‌; 68!

கண்ணிய அன்பு ளாள்போற்‌ : ்‌
சார்ந்தபூ தனையாம்‌ வஞ்சப்‌ ந
பெண்ணுவப்‌ புளாள்போல்‌ தந்த
பெருந்தனி விடத்தோடம்‌ பொன்‌
வண்ணமார்‌ முலைப்பா லுண்டு
மகழ்ந்துளோன்‌, வருந்திப்‌ பெற்று
நண்ணியான்‌ தருபா லுண்ண j
நாணமுற்‌ நிருக்கன்‌ றானோ? 69

குருகை மான்மியம்‌ பாடிய கவியரசர்‌
இருக்குருகைப்‌ பெருமாள்‌ கவிராயர்‌, மாறன்‌ இருவவதாரச்‌ சருக்கத்தில்‌, .
*அலகை வஞ்சகக்‌ கஞ்சன்‌ என்‌ பான்விடும்‌ ;
அலகை மாமுலை உண்டுஅதன்‌ ஆவியுண்டு ந
உலக முண்டவன்‌ உள்ளமுண்‌ டான்குலத்‌ ்‌
இலக நங்கை தஇிருமுலை உண்கிலான்‌” ர்‌
.. என்றும்‌, ச
. “வெள்ளத்‌ தாலிலை மேற்றுயில்‌ வித்தசு ;
உள்ளத்‌ தானை உணர்வெனும்‌ கண்ணினுள்‌ (1
ட்‌ ஆ
கொள்ளப்‌ பார்வை குறிப்பல்‌ லால்புறக்‌
கள்ளத்‌ தால்வரும்‌ காட்சிகள்‌ காண்கலான்‌”*
” என்றும்‌ இருவாய்‌ மலர்ந்தருளி உள்ளார்‌,

மருவுமாய்ப்‌ பாடி யின்கண்‌ ்‌
‘வளரும்நாள்‌ மனத்தி னூடே ்‌ |
வெருவுறு வஞ்சத்‌ தோடு
வேற்றுரு வமதாய்‌ வந்து  கருதரும்‌ துயர்செய்‌ தோனைக்‌
காலினால்‌ உதைத்தோன்‌, தன்னை
அருகுறும்‌ என்னை மெல்ல .:
அசைத்துதைத்‌ தழவொண்‌ ணாதோ? 70
உறுசுவைத்‌ தயிர்பால்‌ வெண்ணெய்‌
உறிக்குட மிறக்கி யுண்ணச்‌
செறுவுடன்‌ ஆய்ச்சி வந்து
சினந்துபின்‌ தொடர்ந்து பற்றிப்‌
பெறுகுறுங்‌ கயிற்றால்‌ அந்நாள்‌
பிணித்தகல்‌ லுரலி னோடு
மறுகிடத்‌ தவழ்ந்தோன்‌ என்கண்‌
மலரமுன்‌ தவழொ ணாதோ? 71
சருவமும்‌ செய்ய வல்ல
…. தலையயன்‌ எழுத்திவ்‌ வாறோ?
மருவுநீர்ச்‌ ரத்தா னோடு
மலர்மிசை யிருந்து வாழும்‌
ஒருவனும்‌ அறியொ ணாத
ஒப்பிலான்‌ புனித மூர்த்தி
தஇருமகிழ்‌ துளவத்‌ தாரான்‌
திருவிளை யாட லாமோ? 72

படுக்கவைத்‌ திடிலவ்‌ வாறே
-படுத்தவா நிருப்பன்‌; மார்பத்‌
இடத்தில்வைத்‌ திடிலவ்‌ வாறே:
இசைந்தசை வற்றி ருப்பன்‌;
எடுத்திடை தனில்வைக்‌ திட்டால்‌
இருந்தவா நிருப்பன்‌; நங்காய்‌
அடுக்குமோ இவ்வா றெங்கும்‌
அவனியிற்‌ கண்ட துண்டோ? 73

சான்றோர்‌ உரை
இத்தவா நாகத்‌ தான்தன்‌ பாங்கியோ டிரங்கிக்‌ கண்ணீர்‌
ஓந்திநித்‌ திலம்போல்‌ வீழச்‌
சந்தையில்‌ தளருங்‌ காலை
வந்திடுங்‌ குரவ ரோடவ்‌
வாசகம்‌ முற்றுங்‌ கூறத்‌
தந்தம துளந்தேர்ந்‌ தங்குச்‌
சாற்றினர்‌ ஏற்றம்‌ மிக்கார்‌. 74

அம்மகே ளிவ்வா றெய்தும்‌
அருந்துயர்‌ முற்றும்‌ ஆதிச்‌
செம்மறன்‌ வதனம்‌ நோக்கிச்‌
செப்பிடில்‌ நீங்கி டும்மென்‌
றெம்முள மதனிற்‌ றோன்றும்‌;
இதனைநீ ராய்ந்து கேண்மின்‌;
உம்முளத்‌ திட்ட தேவை யுகந்துநீர்‌ வேண்டிக்‌ கொள்வீர்‌. 75

என்றுகொண் டவர்க ளெல்லாம்‌
இயம்புதல்‌ கேட்ட லோடும்‌
நன்றுநன்‌ றென்னச்‌ சிந்தை
நலமருள்‌ உவப்பின்‌ மூழ்கித்‌
துன்றிருத்‌ துணைவ னோடுஞ்‌
சஞ்சலம்‌ முற்றும்‌ ஓட
ஒன்றிய மனத்த ராகி
யுள்ளினார்‌ பரிவு மிக்கார்‌. 76

வையம்‌: முழுதும்‌ தரிந்துழன்று ்‌. வாடி வாடிப்‌ பிறைசூடி
கையம்‌ படையாய்‌ எனை உகந்து
காத்தி காத்தி எனப்பணிய
ஐயம்‌ பெய்தன்‌ றிரப்பகற்றும்‌
அமலன்‌ ஆகித்‌ தனிமூர்த்தி, செய்யும்‌ பரிசங்‌ கஇவையல்லால்‌
பிரிதொன்‌ றில்லை எனத்தேர்ந்தார்‌. – 77

ஆதிநாதன்‌ கோயிலை அடைந்தார்‌
அதுவுந்‌ தெளிது மெனவுளங்கொண்
டம்பொன்‌ மணித்தொட்‌ டினிலோடும்‌
புதல்வன்‌ றனைக்கொண்‌் டக்குருகூர்‌
பொருந்து மாதிப்‌ பெருநாதன்‌
குதுக லத்தோ டினிதமரும்‌
கோயில்‌ முக்கால்‌ வலம்வந்து
இதயந்‌ தெளிந்து மிக்குறுமன்‌
பெழிலார்‌ தொட்டி லுடன்வைத்தார்‌. 78

ஆழ்வார்‌ தவழ்ந்து திருப்புளி உற்றார்‌
வைத்த உடனே வைத்திட்ட
‘வாறே கடக்கும்‌ தவக்குழவி
கைத்து. நெகழ்வார்‌ தமைப்பார்த்துக்‌
கண்கள்‌ களிப்பாய்‌ நங்கையெனும்‌
மைத்த டங்கண்‌ பெருந்தேவி
மகிழ தோக்கி முறுவலித்துத்‌ .
தனிமா முகில்போல்‌ தவழ்ந்தேகி; — 79

நம்மாழ்வாரின்‌ திருக்கோலம்‌
ஒப்பில்‌ பெருமான்‌ கோவில்புறத்‌ |
துற்ப வித்த தஇிருப்புளிக்கீழ்‌
வைப்பென்‌ றமரர்‌ புகழ்ந்தேத்த ட ச
மருவி மகிழ்வோ டினிதஇிருந்து .
செப்பற்‌ கரிய பொருளுணர்த்தும்‌ .
இருமெய்ஞ்‌ ஞான முத்திரையை
நட்பில்‌ வலப்பாற்‌ கரங்காட்ட *
நவில்செங்‌ கரத்தை மடியிருத்தி; ்‌ 80

பாரோர்‌ வியப்பின்‌ மயமாகப்‌
பதும மலர்க்கண்‌ விழியாமல்‌’
ஏரார்‌. மவுனக்‌ குகையின்கண்‌ ட ன ஏ
.. எய்தா. வாக்கி -னைச்செலுத்தி ட:
ஓரா உணரா நம்பெருமான்‌ :
ஒருகால்‌ வருவா னோவெனவோ
சீரார்‌ தென்றல்‌ முகம்வருடத்‌ . தெற்கு முகமாய்த்‌ திகழ்ந்திருத்தான்‌. 81

இரு முதுகுரவரும்‌ பிரியாதிருந்தனர்‌
கருதற்‌ கரிய தவக்கோலம்‌
கண்ட காரி மாறனும்கார்‌
மருவு வண்ணக்‌ குழற்செங்கை
மடவாள்‌. தானும்‌ அந்தநாளில்‌
. பொருவில்‌ கனவிற்‌ பகர்ந்தபடி
போந்த நாரா யணன்‌என்றே
இருளில்‌ நெஞ்சிற்‌ றெளிவெய்தி
யென்றும்‌ பிரியா திருந்தனரால்‌. – 82

மதுரகவியின்‌ வரலாறு
– இங்கனம்‌ இன்னவர்‌ இருக்கு நாளிடை
சங்கையில்‌ பகிரதன்‌ தவத்திற்‌ றோன்றிய
கங்கையா டிடச்செலும்‌ கனத்த மாதவ மங்கலத்‌ தணுகிய மதுர கவியரோ. 83

மதுரகவியார்‌ சோதி கண்டார்‌
– ஓர்‌இனம்‌ .தெக்கண முவந்து நோக்கலும்‌ :
பார்மிசை யிருந்துபல்‌ கோடி கோடியாம்‌ ”
– சூரிய ராமெனத்‌ துலங்கி யோங்இிடும்‌ ட
பேரொளி -விண்மிசை பிறங்கக்‌ கண்டனன்‌. 84

சோதியைத்‌ தொடர்ந்தார்‌ – யமுனை உற்றார்‌ த
கண்டுள மதனிடைக்‌ கலக்க நெஞ்சகம்‌ od
கொண்டதை யறிகுவம்‌ என்னும்‌ கொள்கையால்‌ : .
தெண்டிரைக்‌ கங்கையை நீத்துச்‌ சேந்தநெய்‌ ‘ ன
உண்டமா தவனுறை யமுனை யுற்றனன்‌. – ’85

வேங்கடம்‌ பணிந்தார்‌
தங்கட லெண்ணியச்‌ சிறுமை செய்தவர்‌ i
தாங்கடை தேறவே சார்ந்து காத்தவன்‌ . !
Came மெய்தியே விரும்பிப்‌ போற்றினன்‌ i
தேங்கட மாலினின்‌ னருளைத்‌ தேக்கினான்‌. ‘ +, , 5 OE 86

திருவரங்கம்‌ சேவித்தார்‌
கரங்களாற்‌ பணிந்துளங்‌ க௫யுந்‌ தொண்டர்போல்‌ ‘
கரங்களா லேற்றியே கனியும்‌: பொன்னிகூழ்‌ :
அரங்கமா நகரினை அன்பின்‌ உற்றனன்‌ ட்‌ அரங்கமாய்‌ வளர்மனத்‌ தாசை பொங்கவே. , 87

அழகரைப்‌ போற்றினார்‌
காலையும்‌ மாலையுங்‌ கனிந்து தேவர்சூழ்‌
சோலையம்‌ பொருப்பினைத்‌ துன்னி யன்புடன்‌
பாலையுந்‌ தயிரையும்‌ பாடி யில்நுகர்‌
மாலையவ்‌ வழகரை வணங்கிப்‌ போற்றினான்‌. 88

கூடலழகரைப்‌ பரவினார்‌
பாடலும்‌ மனைதொறும்‌ பந்தொ டம்மனை
ஆடலும்‌ அணைமிசை யணையு மன்பரோ
டூடலும்‌ மலிந்தசீர்‌ மதுரை யுற்றுப்பொழ்‌
கூடலின்‌ அழகன்தாள்‌ குறுகிப்‌ போற்றினான்‌. 89

வில்லிபுத்தூர்‌ மேவினார்‌
மிகுந்தவத்‌ துயரினை மேவி டாதுநல்‌
வகுந்தினை யருள்வட பத்ர சாயிவான்‌
புகுந்திருப்‌ பாதமும்‌ புகழ்ப்பல்‌ லாண்டினாற்‌
சுகந்தரு பதங்களுந்‌ தொழுது வாழ்த்‌ இனான்‌. 90

வைகுண்டக்‌ கள்ளபிரானை வாழ்த்தினார்‌.
இரும்பொழிற்‌ காரிரு ளெறிந்தி டுந்திரை
பெருந்திரு மணிகளால்‌ பிறங்கு சீர்பெறும்‌
இருந்துநற்‌ பொருளையைச்‌ சேர்ந்த மாநகர்‌ வருங்களப்‌ பிரானடி வணங்கி வாழ்த்தினான்‌. 91

தகவுறும்‌ தனியிடஞ்‌ சார்ந்துள்‌ ளன்பொடும்‌
அகமறப்‌ பொருநைநீ ராடித்‌ தென்கரை ‘
சகமெலாம்‌’ வியப்புறத்‌ தயங்கு மாடமேல்‌
முகில்தவழ்‌ குருகைமா நகரம்‌ முன்னினான்‌. 92

மதுரகவியாழ்வார்‌ கண்ட சோதி |
நாடியா யிரம்பண ரேந்தி நாடொறும்‌ _
பாடுற உயருபு படர்ந்து மீதெழும்‌
பீடுறு புளியினிற்‌ ப்ரகாச மொன்றியே
. ஆடலார்‌ பொந்தினு எடங்கக்‌ கண்டனன்‌. 93

கண்டுளங்‌ கனிந்துநின்‌ றவர்க்குக்‌ காசினி
உண்டவன்‌ திருவருள்‌ உவப்பின்‌ நல்கலும்‌
பிண்டமாம்‌ வினையறப்‌ பிரதெக்‌ கணம்‌்புரிந்‌
தண்டரும்‌ எய்திடா அகமுற்‌ றானரோ. 94

வலம்புரி காலையில்‌ வடபு றத்தினில்‌
– இலங்குறு கண்களா லினிது நோக்கலும்‌
துலங்குறப்‌ பொலிதவச்‌ சோதுக்‌ காதியை நலங்கெழு புளியுளே நாடிக்‌ கண்டனன்‌. 95

இந்தசிற்‌ நிடந்தனில்‌ எங்கும்‌ யாவுமாய்‌
அந்தநற்‌ பராபரன்‌ அடைந்து ளானெனச்‌
சிந்தையுட்‌ டெளிந்திடத்‌ தேர்ந்து காதலால்‌
வந்தவ ணிருந்துளோர்‌ வதனம்‌: நோக்குபு; . 96

மதுரகவிகள்‌ வினா
ஈங்குறும்‌ அதிசயம்‌ ஏது? கூட்டமாய்‌ ்‌
நீங்களெல்‌ லோர்களும்‌ நின்று நோக்கல்‌என்‌?
. பாங்குற விழைந்திடாப்‌ பரமன்‌ யாவனோ?
்‌. ஆங்கதை விளம்புமென்‌ றன்பின்‌ ஓதினான்‌. 97

காரிமாறன்‌ விடை
நீரிய னுரைத்தசொல்‌. நெறியிற்‌ கேட்டவர்‌
– ஆரியர்‌ திலகநீ யறிதி யாலெனா
மாரியிற்‌ பொழிகர வள்ளல்‌ மாதவக்‌
காரிமா றனுமெதிர்‌ கழறல்‌ மேவினான்‌. 98

புத்திர னிலாமையாற்‌ புந்தி நொந்தழும்‌ பத்தினி யுடனடி பேணிப்‌ பற்றுடன்‌
எத்திசை களும்புகழ்‌ எழிற்கு றுங்குடி அத்தல மதனிடை யணுகிப்‌ போற்றினோம்‌. 99

அருந்தவ மிழைத்திட ‘ வந்தக்‌ கங்குலில்‌ – –
-பொருந்துறக்‌ கனவினிற்‌ புகுந்து மாதவன்‌
திருந்துறு புதல்வரிச்‌ செனனத்‌ தஇில்லையால்‌
-வருந்தியெம்‌ மிடந்தனில்‌ வந்து வேண்டினீர்‌; 100

ஆதலா லுமதிடத்‌ தன்பு கொண்டுயாங்‌
காதல ஸனாகுவங்‌ கருத்து .ஸசூற்றிடும்‌
வாதனை தீர்ந்துமா நகர மன்னுமென்‌
ஹோதினான்‌ மகழ்வொடிவ்‌ வூர்வந்‌: துற்றனம்‌. – 101

உற்றபின்‌, என்மனை ஒருசு தன்றனைப்‌
பெற்றனள்‌; அன்னவன்‌ பேச லுண்ணுதள்‌
அற்றனன்‌; மலசலம்‌ யாதும்‌: கண்டிலோம்‌;
மற்றுமன்‌ பிலாமலே :-மவுனி யாயுளான்‌. 102

இங்கே நம்மாழ்வார்‌ தாலாட்டைப்‌ பார்க்கவும்‌.
… பாலுண்ண வில்லை, பசித்தழவோ தானுமில்லை;
்‌ மேலுண்பான்‌ என்றால்‌ விழியும்‌ திறக்கவில்லை;
உச்சி குளிரவில்லை; உள்ளங்கால்‌ வேர்க்கவில்லை;
அச்சங்கை யுண்டாம்‌ அரிவையரிங்‌ செய்தவில்லை’*
என்று நயம்படப்‌ பாடப்பட்டுள்ள

மாசிலா அன்புளாய்‌/ வைய மீதுறப்‌
பூசுரர்‌ பெருந்தவம்‌ பொருந்திற்‌ றாதலால்‌
கூசியாம்‌ எம்தவக்‌ குலமு றைப்படி ்‌
வாசியார்‌ ௪ருடை மதலை யைக்கொமே; .103

செம்மலே! எம்துயர்‌ இர்த்தி நீயென
இம்மகன்‌ றன்னொடும்‌ எய்து யாம்மிக
விம்மலுற்‌ றமுதருள்‌ வேண்டிச்‌ செப்பியே
மைம்முகில்‌ மாதவன்‌ முன்பு வைத்தனம்‌. 104

வைத்தலும்‌ சரிய மதலை யாங்கணே
சத்துவம்‌ பொலிவுறத்‌ தவழ்ந்து சென்‌ றிவண்‌
இத்திறம்‌ நிட்டையி லிருந்த திவ்வணம்‌
புத்திர ரிருப்பதுப்‌ புவியு லுண்டுகொல்‌! _ 105

அன்றுதொட்‌ டின்றள ours ஆண்டுகள்‌
சென்றன எட்டிரண்‌ டிதனைத்‌ தேர்ந்திட
என்றுமிங்‌ கெய்துவர்‌; இவர்கள்‌ யாவரும்‌
ஒன்றியே காணவந்‌ துற்று ளோர்களாம்‌. 106

தேன்றுளி துளவணி செங்கண்‌ மாயவன்‌
யான்றவ மிழைத்ததற்‌ கமைய என்மனை
யீன்றவிம்‌ மதலையா மென்று வெம்பினோன்‌
சான்றுளோ ஸூணர்ந்திடச்‌ சாற்றி னானரோ. 107:

துரகவிகள்‌ வினாவும்‌ ஆழ்வார்‌ விடையும்‌
அன்னது கேட்டதும்‌ அருளின்‌ ஆழியாய்‌
மன்னுமாழ்‌ வார்மருங்‌ கெய்தி மாண்புறக்‌
கன்னமாங்‌ இரண்டினிற்‌ கதுமெ னப்புகத்‌ துன்னிட வெடுத்திது சொல்ல லுற்றனன்‌. 108

சிற்றிதின்‌ வயிற்றினிற்‌ சிறிய தாயதொன்‌
றுற்றிடி லெதனைத்தின்‌ றுறையும்‌ எவ்விடம்‌
மற்றிது புகலென மதுர மாக்கவி
சொற்றலு மவன்விடை சொல்லி னான்ரோ. 109

தெய்வம்‌ ரீயே எனப்‌ பணிதல்‌
றெவ்விடம்‌ இருக்கும்‌ என்றனை
அத்தைத்தின்‌ றங்கனே அமையும்‌ என்றுயர்‌
உத்தரஞ்‌ சொல்லலும்‌ ஒப்பில்‌ வேதியன்‌
சித்தமுள்‌ ஞூறைந்திடும்‌ தெய்வம்நீ என்றான்‌. 110

எத்தைத்‌ தின்று எங்கே கிடக்கும்‌ என்று வினாவினாய்‌. அத்தைத்‌
தின்று அங்கே Be deeb”? என்று ஆழ்வார்‌ உத்தரம்‌ சொன்னார்‌. சேட்ட வேதி
யன்‌ “தெய்வம்‌ நீ’ என்று கூறினான்‌.
செத்தது – பிரகிருதி (உலகம்‌ – உ.டல்‌). சிறியது – ஆன்மா. எத்தைத்‌
தின்று – எதை அனுபவித்து. எங்கே கிடக்கும்‌ – எங்கே இருக்கும்‌ (வினா).
அத்தைத்‌ தின்று- அப்‌ பிரகிருதியை அனுபவித்து. அங்கே கடக்கும்‌ – அந்தப்‌
பிரகிரு தியிலேயே வாழும்‌ (விடை). :
நம்மாழ்வாரைக்‌ கண்டதும்‌ மதுரகவிகள்‌ ”இச்சோதியோ என்‌ இதயம்‌
உருக்கெயது; முச்சோஇியினும்‌ முழுச்சோதி என்றிறைஞ்சினார்‌” என்று பேசிய
தாசுத்‌ தாலாட்டுக்‌ கூறும்‌.

(வேறு)
படியின்‌ மீதினில்‌ — வடிவு கொண்டருள்‌
அடிகள்‌ மீதுதன்‌ — முடிய ணிந்தனன்‌. 111

காரி மாறனும்‌ — பாரி நங்கையும்‌
சேரு மானந்த — வாரி மூழ்கினார்‌. . 112

போரி யங்குகோ – ளூரில்‌. வந்தருள்‌சீரி யோனுமுள்‌ — வாரி யாயினான்‌. 113

மன்னு மன்பினான்‌ — தன்னை யீன்றவர்‌
உன்ன ருங்களி — துன்ன ஓதுவான்‌. 114

மதுரகவிகளின்‌ புகழுரை
ஓப்பி லாப்பரம்‌ — குப்புற்‌ றெய்தநீர்‌
செப்பருந்‌ தவம்‌ — நட்பிற்‌ செய்துளீர்‌. 115

பொங்கு மாழியில்‌ — அங்கு பாலனாய்த்‌
தங்கு மாதவன்‌. — இங்கு வந்தனன்‌. 116

இங்கு, தாலாட்டு, நம்மாழ்வாரைப்‌ பார்த்து, **கரிய திருமேனி எங்கே? கை
நான்கில்‌ இரண்டெங்கே? பெரிய திருவுந்இயினில்‌ பெற்ற பிரமனெங்கே?
பாக்த்தில்‌ வாழும்‌ பரசுதரித்தோன்‌ எங்கே? ஆகத்தில்‌ வாழும்‌ அலர்மேல்‌ மடந்தை
யெங்கே? ௮ண்டமுண்ட செவ்வாய்‌ அரவிந்தப்‌ பூ விதுவோ? பண்டகலம்‌ ஏழும்‌
பரந்தளந்த தாளிதுவோ? : ஆலம்‌ தளிரில்‌ அடங்கும்‌ வடிவிதுவோ? சலம்‌ பலவுந்‌
தெளித்துணரக்‌ கூடுமோ”’ என்று மதுரகவிகள்‌ பேசியதாகக்‌ கூறுகிறது. ்

நேச மோடிருந்
தாசில்‌ நற்றவம்‌ — தே௫ற்‌ செய்குளீர்‌. 117

பூர ணன்றனைச்‌  பெற்றுளீர்‌
தேர தாதினோர்‌ — பாரி லில்லையால்‌. . 118

நன்று செய்துளீர்‌ — ஒன்று மஞ்சலீர்‌
என்று ரைத்துணர்ந்‌ — தன்று வைகினான்‌. 119
120.
_ “121

சிவனு நான்முகத்‌ — தவனு மேத்துமா |
தவனிவ்‌ வாறதாய்‌ — புவன . மெய்இனான்‌. – 122

காத லாலினி — வேத மாவதை
ஓது. வான்றமிழ்‌– போத மாகவே, ~ (123

என்ன வேயுளத்‌ — துன்னி யங்கதை
முன்னர்‌ நாளரி — சொன்ன வாறினே. 124

மதுரகவிகள்‌ பட்டோலை பிடித்தார்‌
‘சட்ட மோடுகை — தொட்டுப்‌ பண்புடன்‌
பட்டி னோலையைக்‌ — இட்டி யேந்தினான்‌. – 125

மதுரகவிகள்‌ விண்ணப்பம்‌
அம்மா றன்றன்‌ அருகினில்வந்‌
தழகார்‌ நான்கு புயம்மறைத்து
* இம்மா நிலத்தை மேன்மேலும்‌,
இனிதாய்‌ உயர்த்த வேண்டுமென
நம்மாழ்‌ வாராய்ப்‌ புவியுற்றாய்‌[
நாரங்‌ களினுள்‌ ஞூறுபொருளே
தம்மா மனத்தி லுணராமல்‌
சலிக்கின்‌ றார்கள்‌ இவரெல்லாம்‌. 126

மாய்கை யியற்று ம௫மையதால்‌
மண்ணில்‌ தோன்றும்‌ ஆன்மாக்கள்‌
தாயி. னகமுற்‌ றிடுமனிதன்‌ சகத்தை உணராத்‌ தன்மையைப்போல்‌ நேய முடையான்‌ றனைமறந்தார்‌;
நிகரில்‌ பெரியோய்‌! இப்போதே
ஆய வருக்குற்‌ றுபதேசம்‌ |
அளிப்பாய்‌ என்றான்‌ கோளூரான்‌. 127

நான்கு புயம்‌ மறைத்து என்ற இடத்தில்‌,
“சேமம்‌ குருகையோ்‌ 2? செய்யதிருப்‌ பாற்கடலோ?
தாமம்‌ பராங்குசமோ ? நாரணமோ ?-* தாமம்‌
துளவோ ? வதுளமோ? தோளிரண்டோ ? நான்கோ?
உளவோ பெருமான்‌ உனக்கு”* :
என்ற சங்கத்தார்‌ பாடலை ஒப்பிட்டுக்‌ காண்ச,

பெருமாள்‌ காட்சி வழங்கல்‌
எண்ணி யுளத்திற்‌ கருடன்மிசை
ஏறி உலகம்‌ உவப்பெய்தக்‌
கண்ணு தலும்பூ வுறைவோனும்‌
கரங்கள்‌ கூப்பி மருங்குவர
– விண்ண வரும்பூ வடிபணிந்து
விரும்பிப்‌ போற்றக்‌ கடல்குழும்‌
மண்ணி லுறையும்‌ சடகோபன்‌
மருங்கு வந்தான்‌ மாயவனே. 128

நறவ வனமா லிகையணியும்‌
நலமார்‌ மகுடந்‌ தருசுடரும்‌
பறவை யினங்கள்‌ தமக்கரசாய்ப்‌ பயிலும்‌ பெருமான்‌ விடமகற்றும்‌ சிறகி னொலியும்‌ விசும்பிடையே
சிறப்பக்‌ கரிய ஞாயிறென
உறலு மகழ்மா றனுமிதெனோ
ஓலியென்‌ நுறப்பிற்‌ கண்விழித்தான்‌. 129

இருகண்‌ விழித்து நோக்குதலும்‌ எழிலார்‌ கடலின்‌ புனல்‌உண்ட
கருமா முகில்செந்‌ தாமரையின்‌
கானம்‌ மலர்ந்து தடித்திலங்கும்‌
பருதி யொடுவெண்‌ மதியினொடும்‌
பலவா முடுவின்‌ குலமுடனும்‌
உருமே றுடனுங்‌ ககனமிசை
யொளிர்ந்துப்‌ புவிக்க ணுறுவதுபோல்‌; 130

வயங்கு கங்கை தருபொற்றாள்‌
வதனம்‌ இருகண்‌ வாய்கரங்கள்‌
தயங்கு மகுடம்‌ . மணிக்குழைகள்‌
சங்கம்‌ H&A வாள்தண்டம்‌
இயங்கு கதைபொற்‌ பணிதியுடன்‌
சீரார்‌ விசும்பில்‌ மலர்பூத்த
கயங்கொள்்‌ எழிலோ டமலன்வரக்‌
கண்டு மாறன்‌ களிப்புற்றான்‌. 131

ஏரார்‌ கோலந்‌ தனைக்கண்டான்‌;
எதிர்சென்‌ றாடிப்‌ புவியுறவே .
வேரா விதுரா அழலினிடும்‌
மெழுகா யுருகி யெதிர்நின்‌ றான்‌;
ஆரா வமுதே[ எனப்புகன்‌ றான்‌:
அழுதான்‌ இரித்தான்‌ பாடிட்டான்‌;
சீரார்‌ மலர்ப்பூந்‌ இருவடிக்கீழ்‌
சென்னி யிருத்தித்‌ துதிசெய்வான்‌. 132

நம்மாழ்வார்‌ துதித்தல்‌ *
ஓயா! போற்றி! கருணைநிறை;
அத்தா! போற்றி! ஓம்படைசேர்‌
கையாய்‌! போற்றி! பேரன்பிற்‌
களித்தாய்‌] போற்றி! கருங்கொண்டல்‌
மெய்யாய்‌! போற்றி! வேதாந்த
விளக்கே! போற்றி! மாணிக்கப்‌
பையாய்‌! போற்றி! ஒப்பில்லாப்‌
பரமா! நின்பொற்‌ பதம்போற்றி 133

மாயா! போற்றி மரசுதமா
மலையே! போற்றி! செம்பவள .
வாயா! போற்றி! மறைதேடும்‌
வடிவோய்‌! போற்றி! பாடிவளர்‌
ஆயா! போற்றி! விதிக்கு மறை :
யறைந்தாய்‌! போற்றி! பூவையொடுங்‌
காயா மலர்மே னியா/போற்றி/
கருணா கரநின்‌ கழல்போற்றி! ்‌.. 134

ஆழி மதித்த புத்தமுதை யமரர்க்‌ களித்தாய்‌! தொலையாத
ஊழி பலவாங்‌ கோடிகளும்‌
ஒழியாய்‌! புகழ வாயில்லாத்‌
தாழி தனக்கும்‌. உயர்வீடு
தந்தாய்‌! இடங்கர்‌ வாய்ப்பட்ட
சூழிமா மதமா கரியினருந்
துயரந்‌ துடைத்தாய்‌!’ பல்லாண்டு. . 135

விண்ணி லுறையும்‌ கடவுளர்கள்‌
மேவிக்‌ காப்பாய்‌ என்றுரைப்ப,
மண்ணி லயோத்தித்‌ தயரதன்சர்‌
மகவாய்‌ உதித்தாய்‌! அருள்மீஇட்‌
டெண்ண லரிய கோடிகளாய்‌
இலங்கு மரக்கர்‌ தமைக்காலற்‌
குண்ண அளித்த கோதண்ட
முடைய பரனே! பல்லாண்டு! 136

என்னப்‌ .பலவாம்‌’ செய்கைகளை
எண்ணி யெண்ணி மனங்குளிர்ந்து
பன்னி மகழ்விற்‌ றுதிசெய்து
பரமா! பரமா! தேனுண்டு
தென்ன தெனவென்‌ றளிமழுரலும்‌
சரார்‌ துளபம்‌ பொலிமார்பா।
பன்னு மிதனைக்‌ கேட்டியெனப்‌
பராங்கு .சனுமீ துரைத்திட்டான்‌. 137

கூவிக்கொள்
இந்த வுடலத்‌ துடன்புவியில்‌
இந்நாள்‌ காறு மிருந்தலுத்தேன்‌; உந்த னடியைப்‌ பிரிந்தடியேன்‌
உழன்றேன்‌; மாலே, இனியா ற்றேன்‌;
வந்து மாயை தொடருமுனம்‌
வந்தே யெய்தத்‌ துடிக்கின்றேன்‌;
அந்தப்‌ பரம பதவுலகம்‌
அடைய விழைந்தேன்‌ என்றனனே. 138

பெருமாள்‌ விருப்பம்‌ –‘வேதம்‌ பாடுக
ஏரின்‌ மிக்க மொழிகேட்டுச்‌
சிவனோ டயனே முதலானோர்‌
பாரில்‌ தவங்கள்‌ புரிந்தாலும்‌
படிவம்‌ தெரியாப்‌ பரஞ்சுடராய்‌
வேரி மருவும்‌ இங்களனியாய்‌
வித்தாய்‌ இலங்க, வரையளித்த
நாரி விரும்பு முயர்ந்ததிரு நாம முடையோன்‌ இதைதநவில்வான்‌: 139

உலகை எழுப்பும்‌ கதிரவன்போல்‌
ஒளியார்‌ மணிகள்‌ கொழியாழி
இலகு திரைபோல்‌ வரும்பிறவி
இடரால்‌ உயிர்கள்‌ வாடினகாண்‌ மலரு முளத்தாய்‌] அருளின்றி
வருவேன்‌ என்னில்‌ அக்கருமம்‌
தலமீ தன்பி னுடன்புரியத்‌
தக்கோர்‌ எவரே சாற்றுவையால்‌. : 140

கோதில்‌ வேத உச்சியினிற்‌
கூறு முடிவாம்‌ பொருளதனை
நாத முறுசெந்‌ தமிழ்மொழியில்‌
நான்கு வருணத்‌ தவர்தமக்கும்‌
சாத னஞ்செய்‌ யோகியர்கள்‌
தமக்கு மாகும்‌ படியோதி
மாத வத்தின்‌ பெரும்பயனை
மாந்தர்‌ இனிதே பெறவுஞற்றி; — – 141

(வேறு) | ்‌
வாய்மொழி வழங்கி வருக
மருவு மிச்செயல்‌ புரிதற்கு முன்வரல்‌ வழக்கன்‌
ஐருமை யாம்செயல்‌ புரிகுதி; மாயையென்‌ பதுதான்‌. ….
இருமை யுங்கெடுத்‌ தெய்திடும்‌; இதன்வயப்‌ படாமல்‌
வெருவு றாமல்நீ வாய்மொழி வெளியிட்டு வருவாய்‌! 142

மாயம்‌ வல்லவன்‌ இன்னவா றியம்பி,வை குந்தத்‌
தேயும்‌ ஆசையான்‌ இப்புவி இருப்பனோ என்று
நேய மாய்வெகுண்‌ டென்மொழி நீமறேல்‌; அருளின்‌
நாய .காரஎனப்‌ பகர்ந்தனன்‌: நான்மறை முதல்வன்‌. 143

பந்தம்‌ யாவையும்‌ நீக்கிடும்‌ பசியகார்க்‌ கொண்டல்‌
இந்த வாறுரைத்‌ தேகினன்‌; ஏகலும்‌ கலங்கும்‌
சிந்தை யிற்றெளி வெய்தினன்‌; திருவுளங்‌ களித்தேற்‌
த்த மாறனும்‌ அயர்வெலா மகற்றினன்‌ அம்மா! 144

மாறன்‌ பெயர்ந்திலன்‌
மூன்பு: தானமைந்‌ திருந்துள முறைமையைத்‌ தேர்ந்து துன்ப மாமெனச்‌ சொலும்பெருஞ்‌ சாகரம்‌ துறக்க
இன்ப மாமெனும்‌ மரக்கலங்‌ கொடுக்கவந்‌ இடுதல்‌
பின்பு தானமைந்‌ இடுதலால்‌ பெயர்ந்திலன்‌ மாறன்‌. 145

திலமி ருந்துமா மாயையை நீக்குதற்‌ கரிதாம்‌
பலவு யிர்களும்‌ படித்துநல்‌ லுணர்வினைப்‌ படைத்‌்தஇட்‌
டலகன்‌ மாதவத்‌ தவர்களு மறியொணா வமலன்‌
உலக மேவியாங்‌ குறையடி யார்களோ டுறவும்‌; 146

மாய னாருரை வழுவுறா தியற்றவும்‌ மனதுள
நேய மாய்மறைப்‌ பொருளினைத்‌ தமிழ்செய்வா னினைந்திட்‌
டாய மாறனு மத்திருப்‌ புளியிடை யமர்ந்து
தூய மாமது ரக்கவி சுடர்முக நோக்கா; 147

வேதம்‌ அவதரித்தது — இருக்கு வேதம்‌
நன்று நீயெழு துகவெனா நவின்றருங்‌ கவியாய்‌ :
ஒன்று மாறுபொய்‌ நின்றஞா னமும்பொல்லா வொழுக்கும்‌
என்றெ டுத்துயர்‌ இருவிருத்‌ தம்மென இருக்கில்‌
துன்று கின்றசா ரந்தனைத்‌ துலங்கநா றுரைத்தான்‌. 148

யசுர்‌ வேதம்‌ — அதர்வண வேதம்‌
விரிவ தாமெசுர்‌ வேதசா ரந்தனைத்‌ திருவா
சிரிய மென்றெழு: கவிதையாய்ச்‌ செப்பினன்‌; அதன்பின்‌
பரிவி னோடதர்‌ வணம்பகர்‌ சாரத்தைப்‌ பெரிய
திருவந்‌ தாதியென்‌ றெண்பத்தேழ்‌ கவியதாய்ச்‌ செய்தான்‌. 149

சாம வேதம்‌ _..திருவாய்மொழியின்‌ மாண்பும்‌ கருத்தும்‌
செழியுஞ்‌ சாமவே தத்தின்சா ரந்தனைத்‌ திருவாய்‌
மொழியோ ராயிர நூற்றிரண்‌ டோடுகவி மொழிந்தான்‌;
அழிவி, லாதுயர்‌ பதவிசென்‌ றணுகுறு வோர்க்கு
‘வழியெ. லாங்குளிர்‌ மரங்களே மல்கட வம்மா! 150

அப்பெ ருந்திரு வாய்மொழி தனிலறைந்‌ ததுவோ.
இப்பெ ருங்கட லுலகெலா மீன்றுகாத்‌ தழிக்கும்‌
_முப்ப ரம்பொரு ளாகியும்‌ முடியுமன்‌ னாள்வாய்‌
ருந்திருப்‌ பாலனா யோருரு வமைந்தே. 151.

அடைய லைக்கடல்‌ வண்ணமோ! டயனரன்‌ முதலாய்‌
அடைய வுந்தன துருவினுள்‌ ளடக்கியோ ராலின்‌
அடைய டைந்திடு நாரண னேபர மவன்றாள்‌
அடைய வேண்டுமிவ்‌ வுடலமோ- நிலையிலா தழியும்‌. 152

: I படிய ளந்தநா ளயனொடு பரமனும்‌ . பிறரும்‌
முடியொ டுங்கழற்‌ றெரிவுற தோக்குதன்‌ முடியா
நெடிய தாந்திரு விக்ரம வடிவநேர்ந்‌ துவனோ
அடிய ராமவர்க்‌ கெளியவன்‌ பிறர்தமக்‌ கரியான்‌. 153

பரவு மப்பெரும்‌ பராபரன்‌ பாடியின்‌ வளர்நாள்‌
கரவி னூடுநெய்‌ ‘பால்ததி பருகுதல்‌ காணா
அரவ வல்குலி னாய்ச்சியர்‌ வெகுண்டுவந்‌ தடித்திட்‌
டுரலு டன்பிணித்‌ இடவெவ்வா, றுறைந்தனன்‌ என்னா; 154

ஆழ்வாரின்‌ மோக பரவசம்‌
தேறு ளந்தனி னினைதொறும்‌. நினைதொறும்‌ தியங்கா
கூறு தற்கருஞ்‌ சோகமுட்‌ கொளப்பொதா மையினால்‌
வேறு மோருரை விளம்புறா மோகமே விளங்கி
ஆறு தஇிங்கள்தன்‌ வாய்திற வாமலங்‌ இருந்தான்‌. ்‌ 155

தாயார்‌ பாசுரம்‌
்‌. மீள வுந்தெளிந்‌ தொருமூறை விளம்பியே தானோர்‌.
“வாள மைந்தகண்‌ மடமங்கை யாகவும்‌ வளர்முள்‌
தாள தாமரை மலர்மிசைச்‌ சார்ந்துறை திருவை
ஆளு நாரணன்‌ புருடனா கவுமுளத்‌ தமைத்து? 156

கள்ள லம்புபைந்‌ துளவவக்‌ காகுத்த ரிடத்தில்‌.
புள்ளி னங்களைத்‌ தூதுதான்‌ விடுவது போலும்‌
உள்ள மைந்தவா தனத்திடத்‌ துறுவது போலும்‌
தெள்ளு செந்தமிழ்க்‌ கவிபல செய்திடு மமைதி. 157

நூற்றெண்மர்‌ காட்சி வழங்கல்‌
ஒளிய ரங்கமே முதலநூற்‌ .றெண்பதி யுறையும்‌
துளிம துக்கமழ்‌ துளவணி மாலைமார்‌ பினரும்‌
களிது லங்கவக்‌ கவிகளைக்‌ கேட்குதல்‌ கருதிப்‌
புளியென்‌ றோதுமத்‌ தருவரு கனிற்பொருந்‌ தினரால்‌. 158

பனுவல்‌ பாடுமின்‌
பின்ன ருங்களி துலங்கிப்பற்‌ பலவிதம்‌ பெறவே
மன்னு மாறன்முற்‌ றுணர்ந்தவ னாமென மனதுள்‌
உன்னி நன்குணர்ந்‌ துகந்துகந்‌- துருகுறப்‌ புகழ்ந்து பன்னு செந்தமிழ்ப்‌ பனுவல்கள்‌ பாடுமின்‌ என்றும்‌; 159

௪னையு மாகடல்‌ sae pone மருந்தைமோ: கினியாய்‌
நனைகொள்‌ கற்பக, நாடருக்‌ களித்தரு ணாதன்‌
நினைவு றும்பொழு (தேநெடி தாம்பல வின்பந்‌
தனையு எளங்களி துளங்கிடத்‌ தருகுவ னெனவும்‌; 160

கதிர வன்றனை யமரிடை த்‌ துற்களைக்‌ கணவன்‌
மதிம ருண்டுயிர்‌. மாளவும்‌ வானுறை புலவோர்‌
அதிசெ யம்பெரி தடையவு மறைத்தவா ியர்க்குத்‌
– துதிசெய்‌ தேத்துமத்‌;தோத்ரமே முக்கிய மெனவும்‌; 161

சவையி னிற்றுரோ !பதியபி மானந்தாங்‌ கெனவே
கவலை யுற்றழைத்‌ ,திடவுடை யருள்கண்ண ஸனடியார்‌
அவய வங்களி லணுகிவீற்‌ -நிருந்தவர்‌ தம்பால்‌
எவையு மின்புற வனுபவித்‌ இடுபவ னெளவும்‌; 162

(வேறு)
துவரிதழ்க்‌ கருங்குழற்‌ றூய மெய்த்தவச்‌
சவரியுற்‌ நிடப்பதந்‌ தந்த மாண்பினான்‌
எவரிடத்‌ இினுங்கைமா றெதுவும்‌ நோக்குறா
தவரிடத்‌ தன்புவைத்‌ களித்து ளானென்றும்‌; 163

மாத்துய ரங்கொளும்‌ வார ணந்தனைக்‌
காத்தரு ஞம்செழுங்‌ கமல நாபனைப்‌
பார்த்திடா தனை நிக ராகப்‌ பாருளோர்‌ தோத்திரிக்‌ கின்றனர்‌ துயருற்‌ றென்னவும்‌; 164

சிந்தையுண்‌ ணினைந்திடச்‌ சக்கி ரத்தெதிர்‌
வந்தருள்‌ புரிபவன்‌ வஞ்ச முற்றெதிர்‌ |
முந்திவந்‌ தமர்புரி முட்டி கன்னொடும்‌ ்‌
தந்தமா கரிபடச்‌ சாடினோ ஸனென்றும்‌; 165

எருதுகைக்‌ கரிபரி யெதிர்ப்பக்‌ காய்ந்திடும்‌
அருமறை முடிவனை அனுப வித்திட
மருவியுற்‌ றென்னொடும்‌ வரத்த குந்துளோர்‌
இருநில மிசையெ வரிருக்கின்‌ றாரென்றும்‌; 166

தென்புறப்‌ பகைவர்மேல்‌ தரி யேவினோன்‌
முன்படைந்‌ தொழிவிலா முத்தர்‌ தம்மொடும்‌
அன்புடன்‌ கண்டனு பவிக்கன்‌ றேனென்றும்‌; 167
்‌
வன்புறப்‌ புகலிலா துலகில்‌ வாழுயிர்‌ [
‘ ச
….. திரைக்குலங்‌ காத்திட நீள்வி ரல்கொடு
| வரைக்குடை. பிடித்துக்கன்‌ மாரி மாற்றிய |
இரைக்கடல்‌ வண்ணர்பாற்‌ சேர்ந்தென்‌ செய்கைகள்‌ ட
உரைப்பரோ விவர்களென்‌ றுரைத்த தாகவும்‌; 168°

பன்னருந்‌ துயரினைப்‌ பாங்கி மார்களும்‌
அன்னையர்‌ களுமடைந்‌ தம்பு யத்துவாழ்‌
“பொன்னையா ஸூடைப்புரு .டோத்த மன்னொடுஞ்‌ |
சொன்னதா” கவுங்கவி சொல்லுங்‌ காலையில்‌; 169:

பெருமாள்‌ பரமபதக்‌ கோலங்‌ காட்டினான்‌
அந்தபா சுரங்களுக்‌ கன்புற்‌ றாங்கவன்‌
சிந்தையுட்‌ டோன்றியே சிறப்ப மைந்தவை
குந்தநல்‌ லிருப்பதாங்‌ கோலங்‌ காட்டினான்‌
பைந்தலை யரவணைப்‌ பள்ளி நாரணன்‌. 170

தூண்டருஞ்‌ சுடர்விளக்‌ கனைய சோதியைக்‌
காண்டலு முளந்தனிற்‌ களிப்புற்‌ றோங்கிட
மீண்டுபா சுரங்களை விளம்பி யேத்தினான்‌
யீண்டிது வேயழ காகு மென்றனன்‌. 171

கடுவமர்‌ களனொடுங்‌ கமலத்‌ தோனொடும்‌
நெடுமுகன்‌ மேனியோய்‌ நிகரி லாதறின்‌
வடிவிலுன்‌ றிருவடி. வலிந்து ளேனினி
விடுகில னென்னவும்‌ விளம்பு மெல்லையில்‌; 172°

இரு முதுகுரவர்கள்‌ பரமபதம்‌ பெறல்‌
சிரீதரன்‌ பணிவிடை செய்து வைகுவோர்‌
காரியார்‌ நங்கையார்‌ கழறுஞ்‌ சுற்றத்தவ்‌
ஊரரினோர்‌ தமக்குமே லுலகம்‌ நல்கினான்‌ வேரியந்‌ துளவணி விமல மாதவன்‌, : 173

அன்னதை யுணர்ந்தமா றனுமுள்‌ ளன்பொடும்‌
பின்னரு மோதுவான்‌: பிரமன்‌ றாதையார்‌
என்னையொப்‌ பாகவென்‌ சுற்றத்‌ தார்களும்‌
மன்னிட வுயர்பதம்‌ வழங்கி னாரென்றும்‌; 174

இத்திற முயர்பத முமெமக்கு மெய்திடற்‌
குத்திடு முலகுளீ ௬லகம்‌ யாவையும்‌
வைத்திடு மகடுள மாத வன்மலர்‌
ஒத்திடு மடித்தொழி லுஞற்று மென்னவும்‌:; 175

வேதமுற்‌ றுரைதவம்‌ விழைந்தி ழைத்திடு மாதவ ர௬ுளந்தொறும்‌ வாழு மாதவ
நாதனை யளித்திடு நளின மாமலர்ப்‌
பாதனைத்‌ துதஇிசெயும்‌ பதவிக்‌ கென்னவும்‌; 176 :

குரைகடல்‌ வண்ணர்தங்‌ கோல மெய்துதா
——வாழ்வு வேண்டினோர்‌
தரைபுகழ்‌ சோலைகள்‌ ளழகர்‌ தம்மிடம்‌
விரைவுட னேவரு வீர்க ளென்னவும்‌; 177

மீண்டும்‌ சேவை சாதித்தல்‌
இவ்விதங்‌ களிற்கவி யிசைக்குங்‌ காலையில்‌
அவ்விய மவித்தநெஞ்‌ சவனுக்‌ கன்பொடும்‌
செவ்விய திருவுருச்‌ சேவை காட்டினான்‌ ஒவ்வியா லடைக்கட லுறங்கு நாரணன்‌. 178°

திவ்விய மேனி வேண்டினார்‌
அவ்வுரு வனுபவித்‌ ததற்பின்‌ பாசுரம்‌
பவ்வனே ரியவதை யனுப வித்திடற்‌
இவ்வுரு வமைந்ததா காதெ னக்கினித்‌
இவ்விய வுருவருள்‌ செய்யு மென்னவும்‌; 179

அந்தநல்‌ லுருவின்வேங்‌ கடவர்க்‌ காட்செய்யுஞ்‌
சிந்தைகொண் டலரின்மேல்‌ மங்கை தேவனே
இந்தபூ வுலகுட னேழி ரண்டுடன்‌ எந்தபே ருலகமும்‌ யாரு மென்றனன்‌. 180

கனிவுறு முளந்தனிற்‌ கருதி யன்புடன்‌
தனுவளைத்‌ திலங்கையர்‌ தானை செற்றவன்‌
பனிமல ரடியினைப்‌ பணிந்து போற்றிசெய்‌
– தனுபவி யார்தமை யிகழ்ந்த தாகவும்‌; 181

குண்டுவா எளிருஞ்சிலை சங்கு சக்கரம்‌
கொண்டுளான்‌ நிருவுருக்‌ கோலச்‌ சேவையைக்‌
கண்டுள மகழ்ந்திரு கண்க ஸஎளிப்புடன்‌
தொண்டுநு மவர்புகழ்‌ சொன்‌ னதாகவும்‌; 182

அந்தரி யாமியா முருவ மாவதைச்‌
சிந்தைநேர்ந்‌ தறிகுத லரிது சீதரன்‌ வந்தவர்ச்‌ சாவதா ரமதை வன்மையோ
டுந்தமுட்‌ பற்றலே யுற்றவீ டென்றும்‌; 183

பாகவதர்‌ சிறப்பைப்‌ பேசினார்‌
பொன்னையா ரூடையவப்‌ புனிதன்‌ பார்மிசை
மன்னிய திருவர்ச்சா வதார மாவது
தன்னைநெஞ்‌ சதுகொடு தரித்து ளோர்களே
என்னையா: ரூடையவ ரென்ப தாகவும்‌; 184

வடிவது குறளின்மூ வடிமண்‌ வாங்கியே
– படியெலாம்‌ கொண்டடிப்‌ படுத்தி மாவலி
முடிமிசை யடிகவித்‌ துளமு குந்தனார்‌
அடியவர்க்‌ கடியனா னாகு மென்ளவும்‌; 186

மக்களைப்‌ பாடாதீர்‌
பாங்குறு மனிதரைப்‌ புகழ்ந்து பாடியே யேங்கியுற்‌ நிழித்திடா இனிதி வோடுமுந்‌ இங்கடப்‌ புலவர்காள்‌ தேவ. தேவனாம்‌
வேங்கட வனைக்கவி விளம்புவீ ‘ ரென்றும்‌; 186

காற்றருண்‌ மதலையாற்‌ கண்ணி லானருள்‌
‘நூற்றுவ ராவியை நுதிகொள்‌ சூலவெங்‌
.கூற்றுணா வளித்தகோ விந்த னல்லது வேற்றொரு வரைக்கவி விளம்பிடே னென்றும்‌; 187

செல்வமே நிலையிலை தெளிவுற்‌ றொல்லையில்‌
கல்வடி. வகன்றக லிகைக வின்பெறும்‌
நல்வண மெய்தமுன்‌ னடந்த நாரணன்‌ ்‌
பல்வளம்‌ பொருந்துதாள்‌ பற்றுவீ ரென்றும்‌; 188

அன்றிரா வணன்வலி யழித்தொ மித்துப்போர்க்‌
இன்றுபோய்‌ நாளைவா வென்றி யம்பிய
வென்‌ றிவெஞ்‌ சலையனை மேவி யன்பணி
மன்றலர்‌ மாலையை வழங்கு. கென்றனன்‌. … 189

உவந்தவ னிவ்வண மோதுங்‌ காலையில்‌
கவந்தனைக்‌ காய்ந்தகா குத்தன்‌ றானணி
நிவந்தபைந்‌ துளவொடு நிரம்ப வைத்திடும்‌
சிவந்தபூ மாலையைச்‌ சேர்ந்த ளித்தரோ,. 190

பெருமாள்‌ சேவை —
அந்தமாப்‌ புகழ்ச்சட கோப னாயினோன்‌
சிந்தைகன்‌ னையும்புகல்‌ செய்யு டன்னையும்‌
சந்தனம்‌ பணியு டையாகத்‌ தாங்கியே
வந்தவன்‌ நிருமுனம்‌ மருவி நின்றனன்‌. 191

நின்றவச்‌ செய்கையை நெடிது நோக்குறா
ஒன்றுமவ்‌ வாறவ னுவந்து பாடலும்‌
கன்றினால்‌ விளவினை யெறிந்த கார்வணன்‌
அன்றது கேட்டுவந்‌ தகன்று போயினான்‌. 192

Beroybd auivien Sra wpa
வாள்பொரு கண்ணினார்‌ வாச கந்தனை
தாளினாற்‌ சகடிற வுதைத்துச்‌ சாடினோன்‌
கேள்வியுற்‌ நிடும்வகை கிளர்த்தும்‌ வாறதாய்‌; 193

பாட்டிவன்‌ பாடலும்‌ பைய ராவின்மேல்‌
ஆட்டினோ -னாங்கவ ரறைந்த வாசகம்‌
கேட்டுள மஇூழ்ந்துதன்‌ கிருபை கிட்டியே
காட்டலு மிருகணுங்‌ களிப்புக்‌ கொண்டரோ; .194

இத்தக வுடையனா மென்க ணான்றனக்‌
கத்தனைப்‌ பாடுவேற்‌ கரிய துண்டுகொல்‌
சித்தமுட்‌ குறையெனோ வென்று செய்யபா
ஒத்திடத்‌ தனைவியந்‌ துரைக்கு மெல்லையில்‌; 195

ஆழ்வாரின்‌ பிரிவாற்றாமை
பின்னரு மாயவன்‌ .பெயர்ந்து போகலும்‌
அன்னதற்‌ கரங்கிமா தரின முங்கியே
பன்னரும்‌ விரகவா ழியிற்ப டிந்திடக்‌
கன்னியா்ச்‌ செயலினைக்‌ காண்ட லோடுமே; 196

அனையதோய்‌ இரவே வலிதி னாட்கொள
நினையவு மதுதனை நீக்கித்‌ துன்புடன்‌
soo pat வேறிலாத்‌ தன்மை யுள்ளவன்‌
எனையுறப்‌ பிடித்தன னென்ப தாகவும்‌; 197

சானகி யெனுந்திரு தன்னை நாடியே
கானினும்‌ வரையினுங்‌ கடுகச்‌ சென்றுள
மீனமாக்‌ கடல்வணன்‌ வேண்டி லானெனில்‌ .
நானு ம்வேண்‌ டிலனென நவில்வ தாகவும்‌; 198

உலகுளோர்‌ கொடுமையை யுள்ளத்‌ துன்னியிந்‌
நிலமிசை யிருந்திடேன்‌ நீல மேனியாய்‌
சலசலோ சனமுளாய்‌ தயர தன்றவக்‌
குலமணி’ யேயெனைக்‌ கூவிக்‌ கொள்ளென்றும்‌; 199

இருக்குரு கூரெனும்‌ பதியிற்‌ சேர்ந்துவாழ்ந்‌ இருக்குமால்‌ பரம்பிற தேவர்‌ யாவரும்‌
தருக்கிலா வபரமா மெனவுந்‌ தன்னுளத்‌
துருக்கமுற்‌ றுறுங்கவி யோது மெல்லையில்‌; 200

சமயவாதியர்‌ வருகை
(வேறு)
இருமா நிலத்தில்‌ உறுபொருள்க
“ளெவையும்‌ பெருவாய்‌ மலர்ந்துண்ட
பெருமான்‌ ஒப்பில்‌ பரமென்றும்‌
அபரம்‌ பிறதே வர்களென்றும்‌
அருமா மறைகள்‌ விரித்துரைக்கும்‌
அவ்வா றெடுத்துச்‌ ச௪டகோபன்‌
இருவாய்‌ மொழியாம்‌ பிரபந்த மதனுள்‌ வகுத்துச்‌ செப்புதலும்‌; 201

சைவ ரலகா யதர்பவுத்தர்‌
சமணர்‌ முதலாஞ்‌ சமயர்கள்நீ
செய்வ தாமிவ்‌ வருந்தமிழின்‌
இருவாய்‌ மொழியில்‌ வேண்டுபொருள்‌
கைவந்‌ தணுகா மலகமெனக்‌
காட்டி யருள்செய்‌ இடுமெமது
தெய்வங்‌ கள்கமை யபரமமெனச்‌ ;
செப்ப லெவ்வா றெதுகொண்டே? 202

வேதங்‌ .களினு மிவ்வாறாய்‌
விளம்பக்‌ காணோம்‌; . நீர்தாமே
ஓது கன்ற வகையோவென்‌
நுரைப்ப; அதற்கு நகைத்தருளிப்‌ பேதித்‌ துரைத்த திலைவேகம்‌;
பேசு முறையே யுரைத்தேனென்‌
றாதி பரனாம்‌ மகஇழ்மாற
.னருளிச்‌ செய்தும்‌; அவரறைவார்‌; 203

அருமா மறையின்‌ முறைவழுவா
குறைந்தே னென்றாய்‌! அம்மறைகள்‌ –
ஒருநான்‌ கனையு முழுதுணர்ந்தே யோதி னவரு முரைத்ததில்லை;
குருபோ தனைசெய்‌ இடவுணராய்‌;
குறிக்குந்‌. தெய்வ வருளதனால்‌
வருமோ வென்னோ? வந்திருந்தால்‌
வகுப்பா யதையிவ்‌ வாறெனவே; , 204

என்ன வவர்க ஸியம்புதல்கேட்‌
டிவ்வா றுங்கட்‌ கம்மறையை
வன்ன பேத மாதலினால்‌
வகுத்திட்‌ டுணர்த்த லாகாவே;
அன்ன மறையு ளெப்பொருணீ
ரறிய லாகா மெய்ப்‌ பொருள்கள்‌
இன்ன விதமென்‌ றெடுத்துரைப்பி
னியம்பு வேனென்‌ நியம்பினனே. 205

அந்த மொழிகேட்‌ டவர்களெலா
மதனுள்‌ தமக்கு வேண்டுவன .:
எந்த வெந்தச்‌ சங்கிதைக
ளெவ்வெவ்‌ விதமாய்‌ வினவினதற்‌
இந்த விதமா மதன்பொருளென்‌
நெடுத்துப்‌ பொருந்த விசைத்திடலும்‌ –
குந்தம்‌ முளத்தில்‌ பரமாவோன்‌ ்‌
தனிநா ரணனென்‌ றவர்தெளிந்தே; 206

ஐய மிலதா மிப்பொருள்தேர்ந்‌
தறியா மையினால்‌ அடியேங்கள்‌
வெய்ய மொழிகள்‌ பல.பலவாய்‌
…. விளம்பிற்‌ றெல்லாம்‌ பொறுத்தருள்‌ நீ
செய்ய வேண்டு மெனவவர்கள்‌ .
இருமா லுருவாய்த்‌ திகழ்மாறன்‌
துய்ய How worry udev
தொழுதாங்‌ ‘கெதிர்தின்‌ நிவைசொல்வார்‌. 207

வைய மதன்மேற்‌ பரநூல்கள்‌
– வகுத்துக்‌ கூறுங்‌ கடவுளெலாம்‌
பொய்ய தெனவும்‌ மெய்ஞ்ஞானம்‌
பொருந்திப்‌ பலவா முயிரெனவும்‌
உய்யும்‌ வகைநீ செயுங்கவிக்குள்‌
ளுரைத்த பொருளாம்‌. நாரணனே
மெய்ய தாமப்‌ பரமெனவும்‌
விளங்க வுணர்ந்தோ மாதவினால்‌; ட்‌ 208

சமயவாதியர்‌ திருந்தல்‌’:
எமையிங்‌ கடிமை கொளவேண்டு .
மெனவாங்‌ கவர்க ளதற்குமுனம்‌
அமையுங்‌ கோலந்‌’ தனைமாற்றி
யாழித்‌ இருநா ரணனடியார்‌
குமையொப்‌ பாகும்‌ திருவேடந்‌
்‌.. தாங்கி நிகழ்ந்தோர்‌.. துமைநோக்கு
உமையெம்‌ பெருமான்‌ களிப்பாக
உகந்தாட்‌ கொள்வா னெனவுரைத்தான்‌. : 209

பெருமாள்‌ காட்சி
மாற னவர்கள்‌ உரைத்ததிரு.
வாக்கெட்‌ கடையும்‌ வழுவாதவ்‌
வாறுற்‌ றுரைத்தான்‌; அருள்வேண்ட
வயினத்‌ தருவா கனமதன்‌.மேல்‌ நாறுந்‌ துளவப்‌ படலையணி
நாரா யணன்வந்‌ தெய்தினனால்‌
நீறு ‘புனையுஞ்‌, சவன்முதலோர்‌
நெருங்கிப்‌ பணிந்து துதிசெயவே. 210

விண்ணிற்‌ பொலியுங்‌ கருடன்மிசை
. விளங்குந்‌ திருநா ரணனுருவம்‌
மண்ணுற்‌ றிருந்த பரசமயம்‌
மருவித்‌ துறந்த அவர்கள்தம்‌ “ கண்ணுற்‌ றிடலும்‌ மகிழ்வடைந்து
கருத்துள்‌ ளூருகிக்‌ கரையவெதிர்‌
நண்ணிப்‌ பணிந்து துதித்தேத்தி நணுகா ஸனந்தக்‌ கடல்படிந்தார்‌. 211

மங்களாசாசனம்‌
உகமோர்‌ கோடி தவஞ்செயினு
மொருவர்க்‌ கெனுந்தோன்‌ றாயடியேன்‌
புகலு மளவீ லடைந்துவர்கள்‌
புகழ வெகிர்வந்‌ தணுகினையால்‌
மிகவுஞ்‌ சிறந்த பலனருள
வேண்டு மெனவே பராங்குசனும்‌
அகமுண்‌ மடஒழ்ந்தே இருமங்க
ளாச னத்தை யருள்செய்தான்‌. 212

ஏய வருக்கிங்‌ கிவ்வாறா
யெழில்சேர்‌ காட்சி யளித்ததற்பின்‌
தூய பரம பதமதனைக்‌
தொடர்ந்தாங்‌ கணைந்து வீற்றிருந்தான்‌ ஆயர்‌ பாடி தனின்மதுரை , Line
யதைவிட்‌ டடைந்து முடையடு குப்த
தோயுந்‌ தயிர்பால்‌ நவநீதம்‌ 213

புயலார்‌ மேனித்‌ இருநெடுமால்‌
பூங்கண்‌ மலரா திருந்ததனால்‌
கயலார்‌ கருங்கண்‌ மடந்தையர்போற்‌
காரி மாறன்‌ தானுமிக
மயலாய்‌ மெழுகிற்‌ கரைந்துருகி
வாடித்‌ தருமே னியுந்தளர்ந்திட்‌ டியலா ௬ளத்திற்‌ றிருமடலூர்ந்‌ இருந்தா னிருந்த வெல்லையின்வாய்‌; 214

காம ரிளங்கன்‌ நினையடையுங்
கறவை போலக்‌ குறுங்குடிவாழ்‌
தாமஞ்‌ சிறந்த வழகியசீர்‌
நம்பி யுளத்தின்‌ நயப்புறவே
சோமன்‌ றவழு மதிள்குருகூர்‌
துலங்கும்‌ புளிக்‌ முறைவகுளத்‌
தாமம்‌ புனைந்த சடகோபன்‌
றனக்குக்‌ காட்சி யளித்திடலும்‌; ்‌ 215

யானே அனைத்தும்‌ செய்தேன்‌
சீரா ரிருகண்‌ களிப்பெய்தத்‌
தெரிசித்‌ துளத்தின்‌ மட௫ழ்வெய்தி
நீரார்‌ கடல்சூழ்‌ புவியனைத்தும்‌ நிறைபல்‌ லுயிர்க்குள்‌ ளுயிராகி வேராய்‌ மூல காரணனாய்‌-
விளங்கி மருவுந்‌ திருவுருவ நாரா யணனார்‌ புரிந்ததெலாம்‌
நானே புரிந்த தாமென்றும்‌;. – .. 216

கான மதனில்‌ நட்பமையுங்‌
கதிரோன்‌ புதல்வன்‌ கலக்கமற
வானந்‌ தொடரும்‌ ஏழமுமரா
மரமன்‌ றுருவ வாளிதொட்டோய்‌!
மோனம்‌ பொருந்தும்‌ அடியவர்சேர்‌.
மோட்ச வீட்டிற்‌ பேரின்பம்‌
ஞான முதலா யினவெயையும்‌
நண்ண வெனக்கு நல்கெளவும்‌; 217

சீறு மரவா பரணனெடுஞ்‌
இலையை முறித்துச்‌ சான$க்கு
நாறு மலர்மா லையைப்புனைந்த
நளினக்‌ கரத்தோய்‌! அயடியேற்கு
வீறும்‌ பதவி யளித்திடினும்‌
அளியா விடினும்‌ உனையல்லால்‌
வேறு மொருவ ராதரவாய்‌
விரும்பி விளம்பற்‌ இலையெனவும்‌; 218

மறையோர்‌ செயுமா மகப்புகையும்‌
மடவார்‌ நனைகார்க்‌ குழற்புலர்த்தும்‌
நறையா ரகிலின்‌ கொழும்புகையும்‌ ்‌
நண்ணி யெழலும்‌ புயலெனவே
Keo mun மயில்கள்‌ நடம்பயிலுஞ்‌
சீரார்‌ வல்லை வாழுறுமெம்‌
மிறையோ னடைந்து காட்சியளித்‌
திடலும்‌ நீயே கதியென்றும்‌; 219

காண்ட வனத்தைப்‌ படிபொருந்துங்‌
கனலி யருந்த’ வளித்தருளும்‌ ‘பாண்ட’ வர்க்குண்‌’ ணடுப்பிறந்த
பார்த்தன்‌ மணியா ழியினிரதம்‌. ‘
பூண்ட கவனத்‌ தவளநிறப்‌
புரவி நடத்தும்‌ புயல்வண்ணா/
ஈண்டிங்‌ கடியேன்‌ றன்னையுவந்‌:
இரட்சித்‌ தருளு வாயெனவும்‌; 220

அறுகால்‌ பொம்மென்‌ றிசையுடன்சார்ந்‌
கணுகி யுறுந்தேன்‌ களித்துண்ணும்‌
நறவார்‌ துளவ வலங்கறிரு :
வண்ண நாய கன்னிடத்தில்‌
உறுகா .தலினை விரைவினடைந்‌
துரைமி: னெனவாங்‌ குறுதூதாய்‌
பறவை யினங்க டனக்குரைத்துப்‌ பரிவின்‌ விடுத்த பரிசாயும்‌; 221

ஊடலும்‌ கூடலும்‌
(வேறு)
நாடியம்‌ மாறன தருகு நண்ணிட
வாடிய மனம்தெளி வாய்ம ருங்கிருந்‌
தூடியுந்‌ தேற்றிட வுளங்க லங்கியும்‌ கூடியு மிருந்துள கொள்கை செப்பியும்‌; 222

அக்தர்யாமித்துவம்‌
மூந்திய விண்ணகர்‌ மாயன்‌ மோகமாய்க்‌
கந்தமா மலரிடைக்‌ கலந்த வாறுபோல்‌
அந்தரி யாமியா யணுட வைகுதல்‌
சிந்தியா ஞானமே இறக்கச்‌ செப்பியும்‌; 223

குறைவிலேன்‌
கருமுகி லெனவொளிர்‌ கண்ண ஸனாகியே
மருவுகோ வியரொடு மகிழ்ந்து லீலைசெய்‌
இருவிளை யாடல்கள்‌ செப்பு மென்றனக்‌
கொருகுறை யும்படர்ந்‌ துற்றிடா தென்றும்‌; 284

அலைபுனற்‌ றஐடவரா லருகற்‌ றெங்கினின்‌
குலைபழ முதிர்தரக்‌ குதித்த றைந்திடும்‌ துலைவிலா மங்கலந்‌ துன்னு சார்ங்கவெஞ்‌ சிலைவல மாறனைச்‌. சேர்ந்த தாகவும்‌; 225

வான்பொழி கன்மழை வரையின்‌ மாற்றியே
ஆன்புரந்‌ தளித்தவவ்‌ வாழி யானொடும்‌
தான்படுந்‌ துயரங்கள்‌ தனைத்தன்‌ தாயர்‌3பாய்‌
தேன்பொழி மொழியிற்செப்‌ பியது போலவும்‌; 226

உண்பது முதலிய வுரைக்கும்‌ யாவையும்‌
தண்படு புனற்றடஞ்‌ சாக ரம்மென
விண்படிந்‌ தருந்துகோ ஸூரின்‌ மேவிவாழ்‌
பண்படு மளிவனப்‌ படலை மாலென்றும்‌; 227

அந்தசெங்‌ சுதிருமி மாழி -மாலுக்கென்‌
சிந்தனை பகர்ந்துடச்‌ செல்லும்‌ புள்ளுகட்‌
கந்தமில்‌ லாதமூன்‌ றடுக்கு லோகமும்‌
தந்தன னாமெனச்‌ சாற்றிற்‌ றாகவும்‌; 228

இருவிசும்‌ புறைபவ ரிறைஞ்சி யேத்திட
மருவுவேங்‌ கடமெனும்‌ வரையின்‌ மீதுவாழ்‌
கருமுகில்‌ வண்ணச்செங்‌ கமலக்‌ கண்ணனைத்‌
திருமகள்‌ முதன்மையிற்‌ சேவித்தே னென்றும்‌; 229

இன்னவா முறைமையி ஸிசைபெ றுங்கவி
பன்னுமா றனுமது வரையிற்‌ பண்பொடுந்‌
குன்னையம்‌ மாயவன்‌ தனது யர்ப்பதம்‌மன்னிடும்‌ படிவர வழைத்தி டாமையால்‌; 230

மயலைப்‌ போக்க வேண்டல்‌
அம்புவி யளந்ததாட்‌ கடிமை யாமென
நம்பினோர்‌ தமக்குவீ டளிக்கும்‌ நாரணா
வெம்பியிவ்‌ வுடலினை வெதுப்பு கின்றதாம்‌.
ஐம்புலன்‌ வயத்தெனை பளித்தியோ வென்றும்‌; 231

மயல்கொடிவ்‌ வாறதாய்‌ வ்ருத்து மாதினைக்‌
கயல்விழி யன்னையர்‌ கடிது கொண்டுபோய்‌
புயல்வணம்‌ மால்முனம்‌ பொருந்தி யிட்டவள்‌
செயல்களை யவரொடுஞ்‌ செப்பு கின்றதும்‌; 232

தாட்டிய தறியுளே நார சிம்மமாய்க்‌
காட்டிய திருவுருக்‌ கமல நாபியான்‌
வேட்டைசென்‌ நுறுந்திருப்‌ பேரை மேயவன்‌
தாட்டுணை. யடைந்திடுஞ்‌ சார்ப தாகவும்‌; 233

சித்தமுள்‌ ஞருகிடச்‌ செய்ய கண்முகம்‌
கைத்தலம்‌ உந்திதாள்‌ கமல மாமலர்‌
ஒத்திடுங்‌ கருமுகி லுருவ நாரணன்‌
பத்தவ தாரமும்‌ பணிதல்‌ வேண்டியும்‌; .284

உடுத்திடு முடைக்கட லுடைய பார்மிசை
எடுத்தவவ்‌ வுருவுக டோறு மெம்பிராற்‌
கடுத்துள வரும்பகை யகலு மாறதாய்‌
சுடுத்தொழி கருமமுங்‌ காண வேண்டியும்‌; 235

இச்சைகொண்‌் டுரைப்பதை யுள த்தி லெண்ணியே
பச்சைமா மலையெனும்‌ படிவ வச்சுதன்‌
மச்சமே முதலுரு வமைந்து வாய்த்துள
அச்செயல்‌ யாவையு மறியத்‌ தோன்றலும்‌; 236

வெந்திற லவுணர்கள்‌ முதல வெம்பகை
வத்தது மவைகளை மாற்றக்‌ கொண்டுள
அந்தமில்‌ கோலமு மமைந்த யாவையும்‌
சிந்தைகொண் டுணர்ந்திடுஞ்‌ செய்கை தன்னையும்‌; 237

சீருறு காரணச்‌ செம்ம லாதியில்‌
ஈருரு வங்களி னியந்த இயாவுமோர்‌
ஒருரு வங்களா யுற்ற செய்திகள்‌
பாருளோ ரணர்வகைப்‌ பரிவிற்‌ பாடியும்‌; 238

பரிந்துள த்‌. தழைத்தபாண்‌ டவர்தம்‌ பத்தினிக்‌
குரிந்தவத்‌ இரமுவந்‌ துதவு மாலுரு தெரிந்திடா தகன்றிடச்‌ சந்தை வாடியே
பிரிந்துள துயர்களைப்‌: பின்பு சொல்லியும்‌; 239

உருவெளிக்‌ காட்சி உரைத்தது
அருவென வுருவென்‌ அதல மாமுதல்‌ a
இருநிலம்‌ விசும்புபல்‌ லிடத்து முற்றுமாய்ச்‌ ்‌
சுருபமா னவவெலாந்‌ துலங்கு மாறதாய்‌
உருவெளி கண்டதை யுரைத்த தாகவும்‌; 240

கூவிக்கொள்ளாக்‌ காரணம்‌ யாதோ?
அன்னமாய்‌ மறையயற்‌ கறைந்த மாதவா
நின்னுயர்‌ பதந்தனை நேர்ந்து வைகுதற்‌ இன்னமு மடியனை யழைத்தி டாததிங்‌
கென்னகா ரணமென விசைக்குங்‌ காலையில்‌; 241

கவியிசைப்பதற்கே
மாதவ னவனேதிர்‌ வந்து மன்னியே
பூதலந்‌ தனிலுனைப்‌ பொருந்த வைத்துள
தேதுகா ரணமெனி லிசைபெ றுங்கவி
ஓதுதற்‌ காமென வுரைத்துப்‌ போயினான்‌. 242

சொன்னசொல்‌ லிருசெவி துன்னீ யெய்தலும்‌
இன்னணம்‌ வாழுப கார மேற்கிலேன்‌
அன்னமா யவன்றனக்‌ கரிய மாமறை
என்னகை மாறுள திழைத்த தென்கையும்‌; 243

அத்தகை யியற்றுமா றனைவி வப்பதி
ஒத்துறை நாரண ஸனொளிருந்‌ தாள்களில்‌
சித்தமுற்‌ றடிமையான்‌ செய்தி டுந்தினம்‌
எத்தின மோவறிந்‌ திடுகிலே னென்றும்‌; 244

மாசிலா முழுமதி யனைய வாண்முகக்‌
கோசலை திருவயி றுஇத்த கோவலன்‌ .
ஓளசசயுற்‌ றுளகட லுலக வாழ்க்கையின்‌
ஆசைவிட்‌ டவர்வய மாவ னென்ளவும்‌; 245

முருகவிழ்‌ துளவணி முகுந்த னம்புயத்‌ திருவடி யிணைகளைத்‌ தமது சிந்தையுள்‌ மருவவைத்‌ திடுமவர்‌ வைகுந்‌ தத்தினுக்‌
கருகர்க ளாகவே யமைவ ரென்னவும்‌; 246

அத்தகைய மாயவ ஸனமருங்‌ சீர்வைகுந்‌
குத்தினுக்‌ கருகர்க ளாகச்‌ சார்ந்திடும்‌
முத்தரைத்‌ தெரிசியா முகம லர்ச்சியாய்‌
சித்தமுள்‌ ம௫ழ்ந்திடுஞ்‌ செய்கை யாகவும்‌; 247

முத்தர்கள்‌ தம்மொடு முளரி வாழயற்‌
கத்தனாம்‌ மாதவ னாங்க மைந்தொரு
மித்துறை – பெருமித விதங்க .ணோக்கியே
புத்தமு தருந்தலிற்‌ களிபொ ருந்தியே; ட 248

ர்மடையாயினான்‌
க௱ர்நிற வவுணர்தங்‌ குலத்தைக்‌ காய்ந்திடுங்‌
கூர்வளர்‌ இஇரிகை மாயக்‌ கூத்தனார்‌
வார்மழை: யுறும்புனல்‌ வரத்தன்‌ னுள்ளகால்‌–யாமென நேய மாயினான்‌. 249

எம்பெருமான்‌ ஆழ்வார்‌ உள்ளக்‌ கோவிலில்‌ வாழ்தல்‌
நேயமுட்‌ கொண்டவ Glow ou ழாமலே
தூயநல்‌ லுள்வழி யாகத்‌ துன்னியுற்‌
றாயவ ஸுயிர்ப்புலத்‌ தணுகி வைகினான்‌
மாயமான்‌ பின்தொடர்‌ மாய. னென்பவே. 250

கனைக்குமா இரைக்கருங்‌ கடலின்‌ வண்ணமால்‌
நினைக்குழமுன்‌ றனதுயி ரெனநி ரப்பிய
மனைக்கலந்‌ துறைந்தமை மனங்கொண்‌. டிவ்வணம்‌
எனைப்பிரி யாதுநீ யிருந்து டென்னவும்‌; . 251

முலைமிசைப்‌ பிறைறிகர்‌ முத்தின்‌ றாழ்வடக்‌
கலையணி மாதரிற்‌ கரிய மாணிக்க
மலையவ னேயென மற்ற வன்புகழ்‌
நிலைமையைப்‌ பின்னரும்‌ நேர்ந்து சொல்லியும்‌; 252

அடியார்க்கடியேன்‌
படியினைச்‌ சுருட்டுமோர்‌ பாயெ னக்கொளும்‌
கொடியனை ஏனமாய்க்‌ கொலைபு ரிந்திடும்‌
நெடியமால்‌ திருவடி நேயங்‌ கொண்டுள
அடியவர்க்‌ சடியவர்க்‌ கடியன்‌ யானென்றும்‌; 253

மல்லலம்‌ புவியுளீர்‌ வழங்கி டும்கைமா
றில்லது புரப்பவ ரிலங்கு மாலடி
அல்லது வேறிலை யதனை. நீரறிந்‌
தொல்லையி லவன்பதத்‌ துறுமி னென்னவும்‌; . 254

திருப்பதிகள்‌ மங்களாசாசனம்‌-
பொருப்பென மாளிகை பொருந்து செம்மணி
அருக்கனென்‌ றம்புய முகைய ‘விழ்ந்திடும்‌
இருப்புளிங்‌ குடிகிடந்‌ இடுமத்‌ தேவனை
விருப்புடன்‌ கவிபல விளங்கப்‌ பாடியும்‌; 255

குவித்திரு கண்ணிற்‌ கண்டுளோர்‌
பரகஇ யணுகுறும்‌ படிய எளித்தருள்‌
வரகுண மங்கைவீற்‌ றிருந்த மால்புகழ்‌
விரகுடன்‌ கவிபல விரித்துப்‌ பாடியும்‌; ‘ 256

வைகுந்த மல்குல்க டெரிய வாவிகோர்‌
வைகுந்த . மனையகண்‌ மாத ரார்புட
வைகுந்த மதன்மிசை மருவ வைத்இடும்‌
வைகுந்த நின்றமால்‌ வளங்கள்‌ பாடியும்‌; 257

மீண்டுமப்‌ புளிங்குடி. விளங்கப்‌ பள்ளிகொள்
தாண்டுறு திரைக்கருஞ்‌ சலதி வண்ணனை
ஈண்டுணர்ந்‌ தெனக்கொரு கைங்கிரி யஞ்சொல
வேண்டுமென்‌ றுளந்தனில்‌ விரும்பிக்‌ கூறலும்‌; 258

கேட்டுள wR yb Daur Gris இளர்த்து மின்னிசைப்‌ ட
பாட்டினா லவன்றனைப்‌ படலை மாதவன்‌
ஈட்டுறு முளந்தெளிந்‌ தெழுந்து செய்வினை
யாட்டுறு கயிங்கிரிய மதனைச்‌. செப்பினான்‌. 259

மாயவா வருக!
அம்மொழி யிருசெவி யணுகத்‌ தன்னுளம்‌
விம்முறு முவகையின்‌ மீண்டு மாயவா
, கைம்மலர்‌ மிசைகதி ராழி சங்குடன்‌
வம்மென வழைத்தனன்‌ மகிழ மாலையான்‌. ்‌ 260

வந்தனன்‌ பிரான்‌
அழைத்தவம்‌ முறைகதி ராழி சங்குடன்‌
துழைத்தவன்‌ பொடுமவன்‌ முன்பு சார்ந்தனன்‌
பிழைத்தன வுளங்கொளா தடியர்‌ பேணிமூன்பு ்‌
இழைத்தத$ வினையெலா மிரிக்கும்‌ நாரணன்‌. 261

மறைய வருந்துதல்‌
(வேறு)
சார்ந்த கேசவன்‌ றனையறிந்‌ தாவலார்ந்‌ தொழியச்‌
சேர்ந்த வன்றிரு வடிவினைச்‌ ஈறந்தபே ரன்பு
கூர்ந்த நெஞ்சொடு மனுபவித்‌ தடலுமக்‌ கோலம்‌
தீர்ந்து — இடுதலுந்‌ தனதுளந்‌ இகைத்தே; 262

பறவை கூவுபே சொலியொடு: பாவைய ரொலிகா துறலு மஞ்சிநெஞ்‌ சழிந்துபற்‌ பலவகை யுரைத்தும்‌ நறவ லங்கல்நா ரணனினி நணுகிலாங்‌ கவர்க்குத்‌
இிறமு டன்பல கைங்கிரியங்‌ செய்கருத்‌ இருந்தான்‌. 263 |

இறைவன்‌ அடியன்‌ ஆதல்‌
இருக்கு மெல்லையவ்‌ வடியருக்‌ கெளியனா மவனும்‌
பொருக்கெ னாவடைந்‌ திவர்க்குப்பூங்‌ கேசமே முதலாய்‌
இருக்க ழன்மல ரளவதாய்ச்‌ செயுங்கயிங்‌ இரியம்‌
உருக்க மோடிழைத்‌ இடுதலும்‌ அதையுள முணர்ந்தே. 264

நம்மிருவருக்கும்‌ பேதமில்லை
ஈதெ னோவென மாறனாங்‌ கியம்பலும்‌ எழிற்பூ
மாது கேள்வனு மகிழ்வொடு நம்மிரு வருக்கும்‌
பேத மில்லையொன்‌ றாயிடும்‌ பேரின்ப மெனவே
ஓத லோடுமவ்‌ வாசகங்‌ கேட்டுப்பின்‌ புரைப்பான்‌. 265

தடியெ யிற்றிரா வணன்றனை தனதுவால்‌ கொண்டே
முடியு றப்பிணித்‌ தெழுந்துசென்‌ றிடுமுரண்‌ வாலி
நெடிய மார்பக முருவிடக்‌ கணைவிடு நெடுமால்‌
அடிய ருக்கடி யவனென அகமகிழ்ந்‌ துரைத்தும்‌; 266

தூதனுப்புதல்‌
கார்ப்பெ ரங்கடற்‌ பிரமகற்‌ பந்தனிற்‌ கலிசெய்‌
ஆர்ப்புங்‌ கோடையின்‌ முகின்முழக்‌ கதிர்ச்சியு மவிய
வார்ப்பெ ரும்முழ வதிருமூ மிக்கள மால்பாற்‌
பார்ப்பி னங்களைத்‌ தாதனுப்‌ பியதெனப்‌ பகர்ந்தும்‌; 267

குருதி வேல்வை ரிழந்தநாட்‌ டினைப்பெருங்‌ கொள்கை
௧ர.இ மாநக ரடைந்துகாந்‌ தாரிகா தலநீ
தருதி யென்றுரை தூதனைத்‌ தாதிபோய்‌ சார்ந்து
வருதி யென்றழைத்‌ துறுதன்முன்‌ மனம்பொறா மையினால்‌.–268

திருநாவாய்‌ அணைய விரும்பினார்‌
மன்னர்‌ மூவெழு குலத்தைவேர்‌ களைந்தபோர்‌ மழுவோன்‌
கன்னி ருஞ்சிலை வாங்கியெய்‌ கணை தனக்‌ கன்னோன்‌
முன்ன ருந்தவந்‌ தனையிலக்‌ கருளிய முகுந்தன்‌
துன்னி வாழுநா வாயினைத்‌ தொடர்ந்திட நினைத்தும்‌; 269

மெய்‌ தளர்ந்தார்‌
ஆங்கு மெய்துதற்‌ கமைந்திடா தன்றிலின்‌ தொனியும்‌
மாங்கு யின்முழங்‌ கொலியும்யாழ்‌ வழங்கிடு மொலியும்‌
தேங்க மழ்ந்தபூந்‌ தென்றலும்‌ வருந்திடத்‌ Hoss Oe டேங்கி மெய்தளர்ந்‌ இதயமுங்‌ கலங்கியே யிருந்தும்‌; : 270.

வணங்குமின்‌
அந்த ரத்தவ ரலைகடல்‌ கடைந்தநா எழுந்தும்‌
மந்த ரத்தினைக்‌ கமடமாய்‌ தாங்கிய மாலைக்‌
கந்த ரத்தமர்‌ கடுவ?னா டயன்கட வுளர்கள்‌:
வந்தி செய்கண புரம்சென்று வணங்குமி னெளவும்‌; 271

மதத்த வாரணம்‌ அழைத்திட வந்திடங்‌ கரினைக்‌
கதத்த ழித்தமோ கூரில்வாழ்‌ கண்ணனே பரம
பதத்தி னுக்கருந்‌ துணையென வருகுவன்‌ பாரீர்‌
இதத்து டன்நலத்‌ திருவடி வணங்குமி னெளவும்‌; 272

குரும ணிச்செழுங்‌ கோயின்மேற்‌ குளிர்ந்துகண்‌ ணுறங்கும்‌
தருவ னந்தமா புரமெனச்‌ சறந்தமா நகரே
பொருவில்‌ சீர்ப்பர மப்பத மாகுமம்‌ புவியீர்‌
மருவி யாங்குவாழ்‌ மால்பதம்‌ வணங்குமி னெளவும்‌; 273

அவன்‌ அடியவர்க்கு எளியவன்‌
மீண்டு மாயர்தம்‌ பாடியின்‌ மதுரைவிட்‌ டணுகி
வேண்டு றும்விளை யாட்டெலாம்‌ விரும்பிச்செய்‌ விதங்கள்‌
தூண்டு மன்பொடு :சொல்லியு மாங்கவன்‌ தொண்டு
பூண்ட அன்பருக்‌ கெளியவ னாமெனப்‌ புகன்றும்‌; 274

பின்ன ருங்கவி புகலுவான்‌ கண்ணபி ரானே
பன்னு சீர்ப்பரம்‌ பொருளதா மாதலிற்‌ பாரீர்‌
துன்னு மன்பொடு தொடர்ந்துசென்‌ றெதிர்தொழு தேத்தி
அன்ன வன்திருப்‌ பதமல ரடைகுமி னெனவும்‌; 275

மேனியுடன்‌ பரமபதம்‌ வருக
அன்ன காலைவாட்‌ டாறுடை யச்சுதப்‌ பெருமான்‌
குன்னை யன்பொடு பாடலும்‌ ம௫ழ்ந்தவன்‌ றனைத்தான்‌
பன்னு சீர்ப்பர மப்பத வீட்டின்மெய்‌ யுடனே
மன்னு மாறுகொண்‌ டேகுவான்‌ மனத்திடை நினைந்தான்‌. 276

ஆழ்வார்‌ மறுப்பு
அச்சு தன்துரு வுளந்தனை யறிந்துநம்‌ மாழ்வார்‌
பச்சை மாமுகில்‌ மேனியோய்‌ பல்புமுக்‌ கூடாம்‌
இச்ச ரீரம-தனைக்கொடு போவதற்‌ கஇிதையத்‌ டட
துச்ச ரித்திட லொழித்திட வேண்டுமென்‌ நுரைத்தான்‌. 277

எம்பிரான்‌ வேட்கை
எனக்கு கப்பெனி லென்னிடை யிருந்துவந்‌ துதித்த
உனக்கு கப்புறா தெனாதுட லுடன்கொடு போவேன்‌
மனக்கொள்‌ நீமறுத்‌ தஇடலென மனமகிழ்ந்‌ துரைத்தான்‌
தனக்குத்‌ தானலா தொருவரு நிகரில்மா தவனே. 278

மாயவன்‌ மடிபிடித்திழுத்தான்‌
ஏது ரைப்பினு மினியவ னணுகுற வியையிக்‌
கோது றும்பல புழுமல்கு கூடுகொண் டவணி
போத வீரெழு புவனமோ டகிலமும்‌ பூத்த
மாது கேள்வனே தகாதென மடிபிடித்‌ கிழமுத்தான்‌. 279

அர்ச்சராதி மார்க்கம்‌
இழுத்தி! டும்பராங்‌ குசன்தனக்‌ இதயமுட்‌ கனிந்து
பமூத்த வன்பொடர்ச்‌ சராதிமார்க்‌ கப்பரி சறிவித்‌
துழுத்து கைமடி. யதுதனை விடுவித்துக்‌ கொண்டான்‌
வழுத்து வார்தமக்‌ குயர்பத மருளுமா தவனே, 280

காட்டு மர்ச்சரா மார்க்கமே கடிதுசென்‌ றாழ்வார்‌
மீட்டு மானிட வுருவமாய்‌ மிகுமலப்‌ புழுசோர்‌
கூட்டு வைகின மாதலாற்‌ கூடியே .பரம
நாட்டு றும்மடி யவருடன்‌ பொருந்துதல்‌ நயந்து) 281

பெருமாள்‌ ஆணை
பரம பத்திமீ தோங்குறப்‌ பலவுமீன்‌ றருளும்‌
பிரம னைத்தருந்‌ தாதையைப்‌ பேரன்பிற்‌ றலைமேற்‌
கரம லர்க்குவித்‌ தாணையிட்‌ டடியனைக்‌ கடுக
வரவ ழைத்திடென்‌ றானைபோற்‌ கூவினன்‌ மாதோ. 282

எம்பெருமான்‌ காட்சி வழங்கினான்‌
கூவு பேரொலி யிருசெவி குறுகநா ரணனும்‌
வாவு வெஞ்சிறைக்‌ கலுழன்‌ மேல்‌ மரகத மலைபோல்‌
தேவர்‌ கின்னரர்‌ சத்தர்கள்‌ சவனயன்‌ முதலோர்‌
யாவ ருந்தொழு தேத்திடத்‌ திருவொடு மடைந்தான்‌. 288

ஆழ்வார்‌ பெற்ற பேறு
தெள்ளு தண்புனல்‌ பெருகியே யருகுறச்‌ சேர்ந்த
பள்ள மெய்துறு பான்மையிற்‌ பராங்குசப்‌ பெருமான்‌
புள்ளின்‌ மேல்மச கதமலை போலவந்‌ தருளும்‌
கள்ளு றுந்துள வணியுநா ரணனொடுங்‌ கலந்தான்‌. 284

(வேறு)
இத்தன்மை யாக வுயர்நா ரணன்ற
னெதிர்பேசி யேக மனதாய்‌
ஓத்துச்‌ சிறந்த பரிசும்‌ அவன்ற
னொடுதான்‌ கலந்த செயலும்‌
சித்தம்‌ மகிழ்ந்து ரகஸ்யார்த்‌ தமான
தருவா சகங்கள்‌ பலவும்‌
வைத்துச்‌ சிறந்த தருவாய்‌ மொழிக்கண்‌ வகையோ டுரைக்கு மளவில்‌; 285

அவ்வா றிசைத்த கவிதன்‌ செவிக்கண்‌
அணுகக்‌ குளிர்ந்த மதியும்‌
ஒவ்வாத கோல முறுமா முகங்க
வினவே யொளிர்ந்த பவளச்‌
செவ்வாய்‌ திறந்து நகர்நீ செலற்கு
இருகென்ன வெய்து கெனவே
இவ்வாறு மாலு மாழ்வாரு மமான்றி
யுரையாடு மெல்லை யதின்வாய்‌; 266

கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு
மறுவொன்றி லாத மதிமா முகத்து
மதுரக்‌ கவிச்சொ லவனும்‌
உறுகாத லோடு மனதுள்‌ எிரங்குி
யுருகா மகிழ்ந்து கணினுண்‌ சிறுதாம்‌. பெனச்சொல்‌ பதினொன்று பாடல்‌
* செழியச்‌ இறந்து வகுள த
நறுமாலை சூடு சடகோபன்‌ மீது
நவிலா அளித்து நவில்வான்‌. 287

மதுரகவியாழ்வாரின்‌ துயரம்‌
அனையைப்‌ பிரிந்த தனமுண்‌ குழந்தை:
யதுபோ லருந்து யரினோ
டுனையின்‌ றிழந்து கடல்கூழு மிந்த
வுலகிற்‌ பொருந்தி டுவனோ’
புனையுங்‌ கவுத்வ மணிநார ணன்றன்‌ r
புகழ்வீட்‌ டினிற்பு குதுநீ
எனையுங்‌ கனிந்த மனதோ டுடன்கொ டேகென்‌ றுரைத்த வளவில்‌; 288

திருமால்‌ கட்டளை
அஞ்சக்‌ கரன்முளரி யயன்மா வரங்கள்‌
அவைகொண்டு வையம்‌ நலியும்‌
வஞ்சக்‌ கரன்ற சக்கிரிப னாதி
மாவா எரக்கர்‌ மடியச்‌
செஞ்சக்‌ கரம்வெள்‌ வளையும்‌ துறந்து
கலையும்‌ வயங்கொள் கணையும்‌
கஞ்சக்‌ கரங்கொள் இருமால்‌ மஇழ்ந்து
கனிவாய்‌ மலர்ந்து ரைசெய்வான்‌; 289

மதுரம்‌ பொருந்து தமிழா லெடுத்து
மகிழ்வோ டுரைத்த கவியோர்‌
பதினொன்று தானு மெனையே துஇத்த
பரிசாகு மாற னையுநீ
நிதமும்‌ கனிந்து பிரியா இருக்கு
நெறிகே ளிவன்ற ஸனிகராய்‌
சதிரொன்று மூர நிகழ்விக்ர கத்தை
சமைவித்‌ தெழிற்கொ ளதனை) 290

நீரார்‌! செழும்பொ ருனையாறு தன்தென்‌
கரையில்‌ .நிகழ்ந்து வளரும்‌
ஏராரு மிந்தப்‌ புளியென்‌ றியம்பி
யிடுமா மரத்தி னடியில்‌
சீரா யெழுந்த ௬ளுமா றநுஞற்றித்‌ தினமும்‌ விதித்த முறையே ஆரா தனஞ்செய்‌ திவனாம தென்ன
வகமுட்‌ பொருந்த நினைவாய்‌. 291

மாறன்‌ மறையை விளக்குக
பின்னும்‌ இவன்செய்‌ மறைநான்‌ கெனச்சொல்‌
பிரபந்த நான்க வையையும்‌
மன்னும்‌ புவிக்க ணிடையே விளங்கி
யிடுமாறு மானி டரெலாம்‌
பன்னும்‌ படிக்கு முன்ஞான மெய்து
பலர்க்கும்‌ உயர்ந்த பதவி
துன்னும்‌ படிக்கும்‌ அறிவித்து மாயை
தொடர்பைக்‌ கழித்து விடுவாய்‌; 292

அத்தன்மை யெய்தி புலிமீ இருந்து
பலநா ளகன்ற வவதஇ
இத்தன்மை யாக யிவணெய்துி யாமும்‌
இவனுக்‌ களிக்கு முறையே
சித்தங்‌ கனிந்து நினையும்‌ உயர்ந்த
இருநாடு .மீது கொடுபோய்‌
வைத்தும்‌ கலங்க லெனவன்பி னோடு
மதுரக்‌ கவிக்குரை செய்தான்‌. 293

மாறனுடன்‌ திருமால்‌ பரமபதம்‌ உறுதல்‌
படிமீ துதித்துப்‌ பெருமாயை தானும்‌
படரா தொழித்து மறையின்‌
-மூடிமீ துறத்தி டமாயி ருந்த
முளரிச்‌ சிறந்த மலர்நேர்‌
அடி.மீது சேர்த்து விடுமா றுரைத்த
தமிழ்மாற னாகு மவனை
மடிமீ இருத்தி மிசைதேவர்‌ இந்து
மலர்மாரி பந்தர்‌ நிழலில்‌; 294

இருபாலி னங்கை யொருபாலு ளானு
மலரோனு மேத்தி வரவும்‌
புருகூத னாதி முடிவெண்ணி லாத
புலவோர்‌ பணிந்து வரவும்‌
அருமாத வத்து முனிவோர்கள்‌ வேத
மதுநாலு மோதி வரவும்‌
இருமா லெவைக்கு முயர்வா யுயர்ந்த
இருநா டடைந்த னனரோ. 295

மாறன்‌ பனுவலால்‌ மாண்புற்றார்‌ பலர்‌
(வேறு)
அனைய வாறுமா லுடன்திரு வைகுந்த மடைந்த
வினையி லாச்சட கோபனார்‌ விளம்பிய பாடல்‌
தனையு ஸணர்ந்திரு வினைகளுந்‌ தடிந்துதண்‌ டுளவம்‌
புனையு மாயவ ஸுூயர்பதம்‌ புகுந்தனர்‌ புவியோர்‌. 296

ஆழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த பதிகள்‌
அந்த நான்கென வுரைசெயும்‌ பிரபந்த மதனுள்‌
பைந்து ழமாயணி மாதவ ஸனுவந்துவாழ்‌ பதிகள்‌
வந்த தைந்தொடு முப்பதாம்‌ வடமது ரையும்வை
குந்தஞ்‌ சீவர மங்கைர்‌ குறுங்குடி வெஃகா; 297

அரங்கம்‌ வேங்கடம்‌ விண்ணகர்‌ செங்குன்றூர்‌ அனந்த
புரம யோத்திபாற்‌ கடல்துவ ரைப்புளிங்‌ குடிகாட்‌
கரை குளந்தைவாட்‌ டாறு மூழிக்களம்‌ மோகூர்‌
குருகை வல்லவாழ்‌ துலைவிலி மங்கலங்‌ கோஞூர்‌; 298

சீர்பெ றுந்திரு மாலிருஞ்‌ சோலைவெற்‌ புபரி
சார மாம்பதி திருக்கடித்‌ தானநா வாய்வண்‌
டூர்கு டந்தையா றன்விளை கணபுரம்‌ புலியூர்‌
பேரை சீவர குணமங்கை பேரெனும்‌ நகரே. 299

நம்மாழ்வாரால்‌ மங்களாசாசனம்‌ செய்யப்பட்ட திவ்ய
தேசங்கள்‌ முப்பத்தைந்தின்‌ பெயர்கள்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்‌
இந்த மாக்கதை கேட்பவ ரநிரும்புவி யதன்மேல்‌
மைந்த தரும்பல வளங்களுஞ்‌ செல்வமும்‌ மருவிச்‌
சிந்தை யின்புற வாழ்ந்துநாள்‌ சென்றிடுங்‌ கடையில்‌
பைந்து ழாய்மது மாலையன்‌ பதம்பெறு வாரால்‌, 300

மூதிரு நான்மறை தனையருந்‌ தமிழினால்‌ மொழிந்து சதிரு டன்பராங்‌ குசன்பதஞ்‌ சார்ந்துள சரித
விதமி யம்பின மவன்விளம்‌ பியகவி வரைந்த
மதுர மாக்கவி பரமவீட டைந்ததும்‌ வகுப்பாம்‌. 301-

சடகோபாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

———

மதுரகவியாழ்வார்‌ மோட்சமடைந்த
அத்தியாயம்‌
வெண்பா
ஏரார்‌ மதுரகவி இவ்வுலகில்‌ வந்துதித்த
சிராருஞ்‌ சித்திரையில்‌ சித்திரைநாள்‌ — பாருலகின்‌
மற்றுமுள ஆழ்வார்கள்‌ வந்துதித்த நாள்களினு முற்றதெமக்‌ கென்றுநெஞ்சே ஓர்‌.
(உபதேசரத்தினமாலை, 25.

மதுரகவியாழ்வார்‌ திருப்பணி
மாயவ ரருட்படி மதுர மாக்கவி
ஏயவம்‌ மாறனல்‌ லெழிலு ருத்தனை
தூயவிக்‌ இரமதாய்த்‌ துலங்கச்‌ செய்ததை
ஆயவப்‌ புளிமரத்‌ தடியில்‌ வைத்தரோ; 1

பொன்னொடு மரகதம்‌ புட்ப ராகமும்‌
மின்னிடு மணிகளும்‌ மேய்ந்து ழைத்துவான்‌
மன்னிடு மண்டப மதிள்வி மானமும்‌
துன்னிடு கோபுரந்‌ துலங்கச்‌ செய்தனன்‌. 2

பூடண வகைகளும்‌ பொருந்து வத்திரம்‌
ஏடவிழ்‌ பூமலர்‌ முதல யாவையும்‌
சூடிட லருத்துதல்‌ முதல சோர்விலா நாடொறு முபசரிப்‌ புடன்ந டத்தியே; 3

கருமுகின்‌ மேனியுங்‌ கமலக்‌ கண்களும்‌
முருகவிழ்‌ துளவமும்‌ .பொலிழு குந்தனார்‌
மருவுமா லயமுறை வழுவு றாமலே
திருவிழா முதலவுஞ்‌ செய்வித்‌ தானரோ. –4

வருதனம்‌ பலவுமவ்‌ வாற்‌ தாய்ப்புரிந்‌
தொருபக லாய்நொடி உளம்வ ருத்திட
மருமகழ்‌ தொடையணி மாற ஸனம்புயத்‌
இருவடி பிரிகிலான்‌ சேர்ந்து வாழுநாள்‌;–5-

(வேறு)
காசி லாவருந்‌ தமிழினாற்‌ பராங்குசன்‌ கவிசெய்‌
ஆச லாதவா இரியமும்‌ விருத்தமந்‌ தாதி
தேசு ஐுந்திரு வாய்மொழி யாமெனச்‌ செப்பும்‌
மா? லாப்பிர -பந்தங்கள்‌ மலிவுசெய்‌ வகையாய்‌; 6

மாத வர்க்கும்வே இயர்முதல்‌ நால்வரு ணருக்கும்‌
ஓது வித்துமாங்‌ கதன்பொரு ஞணர்வுற வுரைத்தும்‌
ஏத மில்லென வருடநூற்றி ௬பதி ஸிரட்டி
பூத லத்தவர்‌ புகழ்ந்திடப்‌ பொருந்தியங்‌ கிருந்தான்‌. : 7

ஆழ்வாரின்‌ பரமபத வேட்கை
இருக்கு நாளிடை யுயர்பத மடைகுவா னெண்ணிப்‌
பொருக்கெ னாஎனைக்‌ கொண்டணைந்்‌ தஇிடுஎனப்‌ பொருவில்‌
இருப்பு ளிக்கிடை யமர்ந்தருள்‌ மாறன்சே வடியை உருக்க மோடுதன்‌ மனத்துற நினைந்தன னொருநாள்‌. 8

விமானம்‌ வந்தது
நினைந்த காலையி லவ்வண நேர்ந்துள வகுளம்‌
புனைந்து ளான்றன தருளினாற்‌ புவியுளோர்‌ புகழக்‌
கனைந்த ணிந்தமா மணியொலி கறங்கடக்‌ கனகம்‌
வனைந்தி டுந்திரு வைகுந்த விமானம்வந்‌ துளதால்‌, 9

வந்த பொன்மணி விமானமேன்‌ மருவிவீற்‌ றிருப்பச்‌
சிந்தை யன்பொடு மதுரமா கவிதமைத்‌ திகழுநீ
குந்த மம்புய நிகர்கரங்‌ கொடுதழீஇ யெடுத்துச்‌
சுந்தரம்‌ பெற விருத்தினர்‌ சூழ்ந்துடு மடியார்‌. 10

மணிமண்டபம்‌ அடைந்தார்‌
அந்த ரத்தவர்‌ மீமிசை யலர்மழை பொழிந்து
துந்து மிக்குழா முழக்குறப்‌ பதவிபோய்த்‌ துடர்ந்து பைந்து மாயனை வகுளனை யன்பொடு பணிந்து
முந்து மாமணி மண்டப முத்தரோ டமர்ந்தான்‌. 11

மாற னேபர மெனமது ரக்கவி வகுத்துக்‌
கூறு Deis ழினிலிசை குலவுமப்‌ பாடல்‌
ஆறோ டைந்தையு முளமகழ்‌ வொடுபடித்‌ தனேகர்‌
மாறி லாதுயர்‌ பதவிசென்‌ .றெய்தினர்‌ மாதோ. 12-

பயன்‌
இவ்வ ருங்கதை மனம௫இழ்ந்‌ தெழுதஇடு மவரும்‌
செவ்வி திற்படிப்‌ பவர்களுஞ்‌ செப்பிடு மவரும்‌
எவ்வ மற்றிடக்‌ கேட்டிடு மவர்களும்‌ மிணைவேறு
ஓவ்வி லாதுயர்‌ வைகுந்த பதவிசென்‌ றுறுவார்‌. 13

மதுர மாக்கவி பதவிசேர்ந்‌ தமைவகுத்‌ துரைத்தேம்‌;
பதும மாமுகக்‌ கோதையாய்ப்‌ பார்மகள்‌ சிறந்த
புதுவை மாநக ருதித்ததும்‌ புரிந்தது – மரங்கர்‌ வதுவை செய்ததும்‌ இவ்வித மெனவகுத்‌ துரைப்பாம்‌. 14

மதுரகவியாழ்வார்‌ மோட்சமடைந்த அத்தியாயம்‌ மூற்றும்‌.

——–

ஆண்டாள்‌ திருவவதார அத்தியாயம்‌ .
வெண்பா
பெரியாழ்வார்‌ பெண்பிள்ளை ஆண்டாள்‌ பிறந்த
இருவாடிப்‌ பூரத்தின்‌ சீர்மை — ஒருநாளுக்கு உண்டோ? மனமே! உணர்ந்துபார்‌ ஆண்டாளுக்கு |
உண்டாகில்‌ ஒஓப்பிதற்கும்‌ உண்டு.
்‌ (உபதேசரத்தினமாலை, 24.)

நாரணன்‌ சிறப்பு
மராமரம்‌ அனையதோள்‌ வாலி தன்னொடும்‌
“இராவணன்‌ முதலினோர்‌ உயிர்‌இ ழந்திட
அராவணை துயில்துறந்து அயோத்து எய்திய
பராபர வத்துவாம்‌ படிவ நாரணன்‌; I

புண்டரீ கன்செவென்‌ முதற்புத்‌ தேளிரோடு
அண்டங்கள்‌ பலசரா சரம்‌அ னைத்தையும்‌
உண்டுஒரு பாலனாய்‌ உருவம்‌ தாங்கியே வெண்டிரைப்‌ பாற்கடல்‌ பள்ளி மேவியே; : 2

‘யோகநித்‌ திரைதனை ஒருவி தம்தெளிந்து
– ஆகமுற்று உரைஇரு அணங்கு பார்மகள்‌ :
பாகுசொல்‌ நீளையாம்‌ பாவை மூவரும்‌
்‌.. மோகம்‌உற்‌ நிடும்வகை முகமன்‌ கூறியே; 3

இருபுறம்‌. மருவிவீற்‌ நிருப்ப அம்பொனின்‌
குருமணி அரியணை மிசையில்‌ கோலமார்‌
முருகவிழ்‌ தாமரை வனம்ம லர்‌.ந்ததோர்‌ ட்ட
கருமுகில்‌ எனஒளி கவின வைகினான்‌. 4

பூமிதேவியின்‌ வினா
வைகிய காலையில்‌ மருங்கு வையே ‘
மைகணார்‌ புவிமகள்‌ எழுந்து வாள்விழிக்‌
கைகயன்‌ மகள்தரும்‌ கானம்‌ சென்றுள
செய்கழல்‌ வணங்கிஓர்‌ . மொழியைச்‌ செப்பினாள்‌. 5

கரியமா முகில்நிறக்‌ .கடவுள்‌ மூர்த்தியே
விரிகடல்‌ உலகனர்‌ இடத்தில்‌ மேவிநீர்‌
பிரியம்உற்று இருப்பதுஆ ரிடத்தில்‌? பெண்மையேன்‌ ‘
தெரிதரு மாறுஅகைச்‌ செப்பு கென்னவே.: : 6

எம்பெருமான்‌ விடை
அம்மொழி கன்னமூடு அணுகும்‌ காலையில்‌
இம்மொழி தனை எடுத்து இனிது இயம்புவான்‌
நம்மலர்‌ அடிகளைப்‌ பற்றி நண்ணுறச்‌
செம்மனத்து அன்புடன்‌ சேர வைத்தரோ; 7

பாடுறும்‌ அருந்தமிழ்ப்‌ பாவின்‌ மாலையும்‌
ஏடவிழ்‌ நறுமல ரினிற்செய்‌ மாலையும்‌
நாடொறும்‌ இயற்றியே நாம்‌அ௮ ஸணிந்திடச்‌
சூடுறு செய்கையார்‌ தொழில்பு ரிந்துளோர்‌; 8

பூமிதேவியின்‌ விருப்பம்‌
எவர்கள்‌ஆ யினும்‌அதற்கு உளம்‌இ ரங்கியாம்‌
அவதரித்து அனுதினம்‌ அணுகு வோம்‌எனா
aon Ht வண்ணன்‌ஆங்கு ஓதக்‌ கேட்டுஉளம்‌
துவர்‌இதழ்ப்‌ புவிமகள்‌ தொழுது சொல்லுவாள்‌. 9

நாத[இம்‌ முறையெனில்‌ நளினம்‌ ஓக்கும்நின்‌
பாதமேல்‌ பத்தியும்‌ பரிவும்‌ எய்தியான்‌
ஓதும்‌அம்‌ முறைவழாது உஞற்றின்‌ அல்லது
மாதெனப்‌ பிறந்துள பயன்வந்து எய்துமோ? 10

ஆதலால்‌ அடிச்சியேன்‌ ஆழி சூழ்வுறும்‌ பூதலத்து உதித்துப்பூ மாலை தன்னொடும்‌
– ஓதுபா மாலையும்‌ உகப்பச்‌ செய்திடப்‌ .
போதல்‌என்‌ கடன்‌எனப்‌ போற்றி நின்றனள்‌. 11

பெரியாழ்வாரின்‌ புகழ்‌
நின்றவள்‌ மாமுகம்‌ நோக்கி நேமிமால்‌
மன்றலங்‌ கோதைநின்‌ மனம்‌அவ்‌ வாறெனில்‌
ஒன்றுரைத்‌ தஇடுவன்யான்‌ உவந்து கேட்டுஅதை –
நன்ழெனக்‌ கொள்கென நவில்வது ஆயினான்‌. – 12

வில்லிபுத்‌ தூர்வரும்‌ விப்பி ரோத்தமன்‌,
நல்லியல்‌ உடையவன்‌; நகைகொள்‌ வாண்முகன்‌;
மெல்லிய: மொழியினன்‌; ‘ விளையும்‌ மாயையைக்‌
கல்லிய செய்கையன்‌; கருணைஉள்‌ எத்தான்‌. 13

எப்புவி தன்னினும்‌ இணைத ஸனக்குவேறு
ஒப்பிலா நிறைவுபெற்று உறும்மெய்ஞ்‌ ஞானத்தான்‌;
செப்பிடும்‌ பெயர்விட்டு சித்தன்‌ என்பவன்‌;
துப்புற எனதுஅடித்‌ தொண்டு பூண்டுளோன்‌; -14

இன்னவன்‌ மடியைப்பெற்று எழிலின்‌ ஓங்கிட
அன்னமா நகரிடை அணுகு வாய்‌;அவன்‌
குன்னுடைச்‌ சறுவியாய்‌ அவத ரித்தபின்‌
நின்னுளத்து உறும்‌இடர்‌ நீக்கு கென்றனன்‌. 15

சொன்னமா -மொழியெனும்‌ அழுதம்‌ தாயதன்‌
கன்னம்‌ஊ டுறஉளம்‌ களிது ளங்கியே
பின்னரும்‌ புவிமகள்‌ என்னும்‌ பெண்கொடி
நன்னய முடனிவை நவில்வது ஆயினாள்‌: 16

பூமிதேவியின்‌ வினர்‌.
வில்லிபுத்‌ தூர்‌எனும்‌ விளங்கு மாணகர்‌
தொல்லைநாள்‌ யாவரால்‌ தோன்றிற்று; அஆங்கதும்‌
நல்லவந்‌ நகரில்நீ நணுகும்‌ ஆறதும்‌ சொல்லும்‌அவ்‌ விட்டுணு சித்தன்‌ தோற்றமும்‌; : 17

ஆங்கவன்‌ செயும்கைங்‌ கரிய மாவதும்‌
ஈங்கிது முதலிய யாவும்‌ ஏழையேன்‌
பாங்குற .உணர்வகை. பகர்தி என்னலும்‌
தேங்கமழ்‌ துளவினான்‌ செப்பல்‌ ஆயினான்‌. 18

வில்லிபுத்தூரின்‌ மான்மியம்‌
– பூதலம்‌ தனில்சம்புத்‌ : இவில்‌ பொங்கு௮லை
மோதுதென்‌ கடலினுக்கு அருகில்‌ மொய்ம்புஉஉடை
– நீதிசேர்‌ பாண்டிய நெடிய நாட்டினில்‌ —
சேதுவிற்‌ குமரிமா வரையின்‌ கீழ்த்திசை; 19

காவதம்‌ ஒன்றினில்‌ கருதும்‌ ஒர்தலம்‌
ஆவதுஉண்டு; அதனிடை ஆதி காலம்யாம்‌
மூவகை உலகமும்‌ பொருமு ரண்வலி ‘
மேவும்‌ஓர்‌ வராகமாய்‌ விளங்கத்‌ தோன்றியே. 20

நினையனாள்‌ தன்னிடை நெடிய தாங்கொடு
விளைபுரி இரணிய வக்க வெய்யவன்‌
குனைவதை புரிந்துபல்‌ தருமம்‌ என்பவை அனையயா வையும்‌உனக்கு அருளிச்‌ செய்தனம்‌. 21

அத்தரு மங்களை அனைத்துங்‌ கேட்டறிந்து
இத்தலம்‌ “அதனில்‌எக்‌ காலும்‌ நீங்குறாது
ஓத்துஉறைந்‌ திடுதிஎன்று உள்ளம்‌ அன்பொடு
மெத்தவும்‌ வருந்தியே வேண்டல்‌ செய்தனை, . 22

ஓதும்‌௮ம்‌ மொழிப்படி யாம்‌உவந்து உனோடு
ஏதமில்‌ கற்பங்கள்‌ அனந்தம்‌ எய்திடப்‌
பேதியாது உறைதலால்‌ அதனுக்கு ஓர்பெயர்‌
ஆதியில்‌ வ்ராகக்ஷேத்‌ இரம்‌என்று ஆயதால்‌. 23

௩ அன்புறக்‌ கேட்டி;யான்‌ உறையும்‌ அத்தலம்‌:
பின்புறு நெடியநாள்‌ பிறஉ யிர்க்குறு
துன்புஇழை உழுவையும்‌ அரியும்‌ சூழ்ந்திடும்‌
வன்புஉறு வன்மதாய்‌ மருவி உற்றதால்‌, 24

… காலநேமி வதம்‌
அரியஆ ரணியமாம்‌ அத்த லம்தனில்‌
உரிமையோடு எந்தனை உளம்‌இ ருத்தியே
பிருகுமார்க்‌. கண்டனே முதல பெற்றியோர்‌’
மருவியுற்று’ .அரியமா தவம்‌இ ழைத்தனர்‌. 25

்‌ இழைத்திடுந்‌. தவத்தரைக்‌ கால நேமிஎன்று
அழைத்திடும்‌ பெயருடை அரக்கன்‌ எய்தியே.
குழைத்துளம்‌ ‘ வெருவுறக்‌ கொடிய தாம்பல
பிழைத்தனை இழைத்தனன்‌ பெருக என்பவே. 26

அத்துயர்‌ பொறுக்கொணாது அவர்கள்‌ யாவரும்‌
இத்திருப்‌ பாற்கடல்‌ எய்தி எம்மொடும்‌
குத்தமக்கு அவன்தனால்‌ சார்ந்த யாவையும்‌ சித்தமது இரங்கிடச்‌. செப்பி னார்களால்‌: 27

ஓலம்‌இட்டு உரைத்தல்கேட்டு உவண னஊாய்‌உறும்‌
சூலபா ணியன்மிசை துரிதத்து எய்தியே
காலனை அனையஅ௮க்‌ கால நேநமிதன்‌
மேலுற நேமியை விடுத்து வீட்டினேம்‌. 28

முக்குளம்‌
மாய்ந்தவன்‌ உடல்புண்நீர்‌ மற்ற வன்தனைக்‌
காய்ந்துள கொடியசெங்‌ கதிர்கொள்‌ நேமியில்‌
தோய்ந்திட அதனைநீர்‌ கொண்டு தொல்நிறம்‌
வாய்ந்துற ‘அலம்பு’என வருணற்கு ஓதினேம்‌. 29

என்றஎம்‌ மொழிவழாது எமுனை சான்னவி
சான்றமா சரஸ்வதி என்னச்‌ சார்ந்திடும்‌
மூன்றுமா நதியையும்‌ அழைத்து மொய்ம்புண்நீர்‌
கான்றதே மியைஅவன்‌ கழுவித்‌ தந்தனன்‌. 30

அக்கடி. நகரிடை வருணன்‌ ஆனவன்‌
சக்கரம்‌ அலம்பும்நீர்‌ மூன்றும்‌ சார்ந்துஒரு
.. முக்குளம்‌ என்னவே. மொழியும்‌ பேரொடு
மிக்கநல்‌ தீர்த்தமும்‌ விளங்கிற்று என்பவே. 31

ஓதும்‌௮வ்‌ அரக்கன்செய்‌ உபத்ர வந்தனால்‌
போதநேர்ந்து அயர்வொடு புழுங்கி நொத்துள
– மாதவர்‌ தமையினி வருந்த லீர்என
ஆதர வுரைகள்யாம்‌ அறையும்‌ எல்லையில்‌; 32

முனிவர்‌ கேட்ட வரம்‌
மீண்டும்‌ எந்தமை இவண்விளங்கு மாதவம்‌
பூண்டுள இருடியர்‌ பொருந்தும்‌ ஓர்வரம்‌
. ஈண்டுநீ மறுத்திடாது எமக்கு அருள்செய
வேண்டும்‌என்று உளந்தனில்‌ விரும்பிக்‌ கேட்டனர்‌. 33

என்னநீர்‌ வேண்டுவ தியம்பு மென்றலும்‌
அன்னவர்‌ ஓதினர்‌ அணிகொள்‌ பாற்கடல்‌
மன்னுதல்‌ ஒழிந்துஇவண்‌ வந்து தோன்றியே முன்‌எமை நலிந்தவெம்‌ மூர்க்கன்‌ தன்னையே; 34

பொங்குஒளி நேமியால்‌ பொருது அழித்துநீ
எங்கள்‌ஆ பத்துஓழித்‌ இடும்‌இ யற்கையால்‌
இங்குநீ உறைந்திடு வரம்‌௮து என்னலும்‌
அங்குஅவர்க்கு அவ்வரம்‌ தனை௮ ளித்துளேம்‌. 35

ஆதலால்‌ அத்தலம்‌ அதனுக்கு ஒப்பதாய்‌
ஓதமுன்‌ னாள்தனில்‌ ஒளிர்வ டத்துஇலை
மீதுகண்‌ வளர்வபோல்‌ விளங்கு௮ ராவின்மேன்‌
காதலோடு அமர்ந்துகண்‌ காட்‌ நல்கினேம்‌. 36

ஆங்குநம்‌ பெயர்வட வேச்சு ரன்‌எனப்‌
பாங்குற ஆங்குஅவர்‌ பகர்ந்து பின்னரும்‌
தீங்கிலா அத்தலம்‌ தனக்கும்‌ செவ்விதாய்‌
ஓங்கும்‌௮ப்‌ பெயர்கொளும்‌ புரம்‌என்று ஓதினார்‌. 37

அத்தலத்து அவ்விதத்து அமர்ந்த மாதவர்‌ சித்தர்கள்‌ முதலினோர்‌ வணங்கச்‌ சேர்வைகுந்‌
தொத்துரு சதுரமா முகம தோரறு
பத்துநான்கு அணுகுறும்‌ . அளவும்‌ பண்பொடும்‌; 38

உன்னையும்‌ அம்புயத்து உ.கந்து வாழ்வுறும்‌
பொன்னையும்‌. அருகுஉறப்‌ பொருந்தி வைகினேம்‌.
பன்னும்‌௮வ்‌ உகங்கள்‌ தீர்ந்து உறலும்‌ பார்மினே
பின்னரும்‌ வனமதாய்ப்‌: பெருகிற்‌ றாம்‌அரோ.. 39

குருவொடு செடிகளும்‌ சார்ந்தது அவ்வனத்து
அருகுபுத்‌- தூர்என அறையும்‌ ஓர்சிறு இருநகர்‌ உண்டு;அதைச்‌ சேர வேமிகும்‌
பெருவலி வேடர்கள்‌ பிரப லித்தனர்‌, . 40

முன்னுறும்‌ உழுவையே முதல்வி லங்கெலாம்‌
உன்னரும்‌ கொலைத்தொழில்‌ ‘ உஞற்று வேடரே
அன்னகர்‌ தன்ன்கத்து அதிக ராயினார்‌
பின்னருற்று அடைந்தமை பேசு வாம்‌அரோ. 41

வில்லியும்‌ கண்டனும்‌
அல்லி௮ம்‌ புயமலர்‌ அனைய மாமுக
மல்லிஎன்‌ றுரைபெறு மாது அகட்டினில்‌
கல்லியல்‌ தோளினர்‌; கமலக்‌ கண்ணினர்‌;
வில்லியும்‌: கண்டனும்‌, விளங்கத்‌ தோன்றினார்‌. . 42

அன்னவர்‌ நாள்தொறும்‌ அமுத அம்புலித்‌
துன்னரும்‌ கலையென எளர்ந்து . சோர்விலாப்‌
பன்னுதம்‌ குலமுறைத்‌ கொழில்ப யிற்றியே
மன்னுறு, காட்சியாய்‌ வாழும்‌ நாளிடை; :-: 43

அனையவர்‌ இருவரும்‌ வேட்டை. யாடுவான்‌
நினைவுகொண்டு ஒருபகல்‌ நிறைந்த தூணியும்‌
புனைமணிச்‌’ சிலையும்புங்‌ கவமும்‌ கொண்டுதம்‌
மனைஒழிந்து அரியஅவ்‌ வனத்தின்‌ ஏகியே; 44

மானொடு கலைகளும்‌ கடம்பும்‌ வைகுகோட்டு
ஏனமும்‌ உழுவையும்‌ எண்குஇ ஸனங்களும்‌
தானமார்‌ கரிகளும்‌ சரியச்‌ சாடியே
கானக முழுவதும்‌ கலக்கி னார்களால்‌. » 45

கூறுறு நிணங்களும்‌ குருதித்‌ தோயமும்‌ பாறுநாய்‌ நரிகழு கனம்ப ரிந்துண
வேறுள மிருகமும்‌ வேட்டை யாடிநாம்‌ க
மாறிலாது &உறங்கும்‌௮வ்‌ விடத்து வந்தனர்‌. 46

இளையவன்‌ புலியால்‌ இறத்தல்‌
அவ்விடந்‌ தனில்‌இளை யவனும்‌ மற்றொரு
வெவ்விய புலிதனைக்‌. கண்டு வெங்கணை
எவ்வினன்‌ பலபல ஏவும்‌ அம்பினுக்கு
ஒவ்விடாது அதுவிரைந்து ஓட –47

ஓடிடும்‌ அதைத்தொடர்ந்து இவனும்‌ ஓடலும்‌
நீடிய புதலிடை மறைந்து நின்றிட வாடிய மனதொடும்‌ இவனும்‌ மற்றதைத்‌
தேடிஅங்கு அதன்முனம்‌ செல்லும்‌ எல்லையில்‌; 48

பின்தொடர்ந்‌ துறும்‌ஓலி பெறவெ குண்டுமேல்‌
சென்றுறப்‌ பாய்ந்துஅவன்‌ சிதைவு றும்படி
கொன்றுடல்‌ கஇழித்துவெங்‌ குருதி சோர்வுற
வென்றிகொண்டு அப்புலி விரைவில்‌ போயதால்‌. 49

தம்பியைக்‌ காண்கிலான்‌ தமய னானவன்‌
வெம்பிய கானிடை விரைந்து தேடலும்‌
செம்புண் நீர்‌ ஒழுகடச்‌ சிலைக்கை அம்பொடும்‌
அம்புவி மேற்கடந்‌ தவனைக்‌ கண்டனன்‌. 50

அண்ணன்‌ புலம்பல்‌
– (வேறு)
கண்டான்‌; புலியாற்‌ கிழிபட்ட
செய்கை தெளிந்தான்‌; கண்மலரை
விண்டான்‌; கொட்டினான்‌; உரத்திற்‌
புடைத்தான்‌; பொருந்தா வெந்துயரங்‌
கொண்டான்‌; அவன்பொன்‌ மேனியெல்லாம்‌
தடவித்‌ தடவி கொடுநஞ்சம்‌
உண்டான்‌ போல மெய்தளர்ந்தான்‌;
உயிர்த்தான்‌; கரைந்தான்‌; உருகினான்‌. 51

ஆவி அழிந்திட்‌ டவர்போலுள்‌
அழிந்தே புலம்பத்‌ தொடங்கினான்‌
வாவி அறைந்த கொடும்புலியை
வதைப்பத்‌ துணையாய்‌ உடன்வாராப்‌
பாவி என்றன்‌ கொடியமுகம்‌
பார்க்கொ ணாதென்‌ றுளங்கருகுத்‌
தாவி வானம்‌ படர்ந்தனையோ?
என்னோ? ஐயா! சாற்றாயால்‌! 52

பனிமா மலரோன்‌ விதிமுறையோ?
பாவி யேன்செய்‌ கொடுவினையோ?
தனியா யொருவர்‌ துணையின்றித்‌
தரக்கின்‌ உஇர்க்கை குனிலகப்பட்டு
அனியா யமதாய்‌ உயிர்‌இழந்த
ஐயா! உலகத்‌ துனையிழந்திட்டு
இனிநான்‌ உயிர்வா ழேன்வாழேன்‌;
உடனே வருவேன்‌ என்‌ உயிரே! 52

அன்னை தந்தை குருதெய்வம்‌:
அண்ணன்‌ தம்பி மனைமக்கள்‌
பொன்னை முதலாம்‌ பலபலவாம்‌
பொருளும்‌ நீயாம்‌ எனநம்பும்‌
என்னை விடுத்துஅம்‌ பரம்புகுதற்கு
எண்ணிச்‌ சென்றாய்‌ கொடியன்‌ இலை?
உன்னை விடுத்தும்‌ இவண்‌இருந்தேன்‌;
உன்னிற்‌ கொடியேன்‌ நான்‌அன்றோ? 54

எந்தை யேஇங்கு எனைத்தனிவிட்டு
ஏக மனமுந்‌ துணிந்தனையோ?
சிந்தை கனிவாய்‌ வனம்சென்ற
சிறுவர்‌ வருவார்‌ எனப்பார்க்கும்‌
நந்தாய்‌ உனைஎங்கு எனக்கேட்டில்‌
நான்என்‌ நவில்வேன்‌? நவில்‌என்னா
இந்த வகையால்‌ பற்பலவாய்‌
எடுத்தே புலம்பி மெய்தளர்ந்தே; 55

விழுந்தான்‌; புவிமேல்‌ புரண்டுஅழுதான்‌;
வெதும்பித்‌ தேம்பி வெகுண்டுவிரைந்து
எழுந்தான்‌; புலிபோம்‌ வழிசென்றான்‌;
காணாது ஏங்கித்‌ திரும்பினான்‌;
செழுந்தார்‌ அனுசன்‌ கிடந்தவிடஞ்‌
சேர்ந்தான்‌; அவனோடு உடன்படுத்தான்‌;
அழுந்தாத்‌ துன்பக்‌ கடல்படிந்தான்‌;
ஆவி சோகித்து உறங்கினான்‌. 56

வில்லியின்‌ கனவு
உறக்கம்‌ கொள்ளும்‌ அவன்கனவில்‌
உறங்கு வேமிங்‌ குளமுவப்ப
நிறக்கு மணிபொன்‌ கோபுரமும்‌
நெடுமா மதிளும்‌ மண்டபமும்‌
துறக்கம்‌ எனவே அமைத்தாரும்‌
துலங்க வமைத்துக்‌ குடியேற்றிச்‌
சிறக்கும்‌ படி.நீ செய்விப்பாய்‌,
என, யாம்‌ அடைந்து செப்பினோம்‌. 57

அன்னது ஆகும்‌ மொழிதனைக்கேட்டு
அடர்வெம்‌ புலிஎன்‌ உயிர்த்தம்பி
குன்னை வீட்டிற்‌ றதுவல்லாற்‌
சமைக்கும்‌ கோயிற்‌ பணிகளுக்குப்‌
பொன்னும்‌ வெகுவாய்‌ வேண்டியிடும்‌
அதற்குஎங்‌. கேயான்‌ போவன்‌ என
இன்னது ஆகும்‌ மொழியதனை
அவனங்‌ கெடுத்திட்டு இயம்பினனால்‌, 58

அம்மா மொழிகேட்டு ‘உனதுதம்பி
அவனை எழுப்பி அவற்கொன்ற
வெம்மா புலியங்‌ கதுதனையும்‌
… வீட்டி யதுவாழ்‌ குகையிடத்தில்‌
செம்மாப்‌ பொருள்கள்‌ பலவுளது
காண்பித்‌ தஇடுவேம்‌ தெளிந்திடு’கென்று
இம்மா மொழியை மீண்டும்‌அவர்க்கு
இயம்பிக்‌ கனவின்‌ மறைதந்தனமே. 59

எழுந்தான்‌ தம்பி
அந்தக்‌ கனவு தனைக்சண்டிட்டு
அவனும்‌ மலர்க்கண்‌ விழித்தென்னோ
விந்தை உளதாம்‌; இதுபொய்யோ?
மெய்யோ? அறிய வேண்டுமெனச்‌
சிந்தை யுணர்ந்தாங்கு .இருந்திடலும்‌; சீறும்‌ புலியால்‌ மடியனுசன்‌
முந்தத்‌ துயில்கொடு எழுந்தவன்போல்‌ உணர்ந்தாங்கு எழுந்தான்‌ முகமலர்ந்தே. 60

எழுந்த தம்பி தனையணைத்தங்கு
இருகை யாலு மணிமார்பில்‌
அழுந்தப்‌ புல்லி உச்சியைமோந்து
அலர்க ணீர்மஞ்‌ சனம்‌ஆட்டி
கொழுந்துஉற்று ஓங்கும்‌ களிக்கடலில்‌
குளித்தான்‌; புலியாற்‌ றான்புவிமேல்‌
விழுந்த செயல்கள்‌ அனைத்தினையும்‌
விளைந்த வாறே விளம்பினனால்‌,–61

விளம்பு மொழிகள்‌ தனைக்கேளா
வில்லி தானும்‌ தன்கனவில்‌
களங்கம்‌ இலை;இங்கு உறங்குவம்யாம்‌;
எமக்குக்‌ கனக கோபுரமும்‌
வளங்கொள்‌ நகரும்‌ படையெளவும்‌
இருமால்‌ வந்து பகர்ந்தவெலாம்‌
உளங்கொண்டு உணரும்‌ படிதம்பிக்கு
உரைத்தான்‌; அவனும்‌ களிப்புற்றான்‌.–62-

இருவர்‌ களும்‌௮வ்‌ விடம்நீங்கிச்‌
லதா ரம்சென்று ஏகிடலும்‌
உருவும்‌ கணைகள்‌ – பலதைத்து
உடலம்‌ துறந்த வழியதன்வாய்‌
பெருகும்‌ குருதி மழையதுபோல்‌
பெய்யப்‌ .புவியும்‌ சிவப்புஎய்தப்‌
பொருவெம்‌ புலிசெற்று அவண்கிடக்க
அதனைக்‌ கண்டுஅற்‌ புதமடைந்தார்‌. -63

பின்னும்‌ அவண்விட்டு இருவர்களும்‌
கடிதிற்‌ சென்றுஅ௮ப்‌ பெரும்‌உழுவை
மன்னி யிருந்த வரைக்குகையில்‌
மருவிப்‌ பார்க்க வகைவகையாய்ப்‌. பொன்னும்‌ மணியும்‌ பணிதிகளும்‌
பொருந்தக்‌ கிடத்தல்‌ தனைக்கண்டே
துன்னும்‌ கனவில்‌ கண்டதெலாம்‌
மெய்யென்று உளத்தில்‌ — 64

இத்த இடத்தில்‌ அத்திருமால்‌. இருத்தற்கு ஐய மிலை;உறையும்‌
அந்த இடம்நாம்‌ அறிகுதும்‌என்று அவண்விட்டு ஏகி, அவ்வனத்தில்‌
எந்த இடத்தும்‌ புதல்புதலாய்‌
இருகண்‌ இமையாது ஆராய்ந்து
சிந்தை கனிவாய்‌ விரைவினொடும்‌
தேடித்‌ தேடி திரியுங்கால்‌; 65

வேடர்கள்‌ வடபத்ரசாயியைக்‌ கண்டது
முன்னாள்‌ தனில்‌ஆ ராதஇுத்தோர்‌
முயன்ற அணிஆ லயம்கிலமாப்‌
பின்னாள்‌ முளைத்த வடவிருக்கப்‌
பெருக்கால்‌ மூடு பட்டதனுள்‌
பன்னா கணையும்‌ அதன்மிசையே
படுத்த எமையும்‌ தாமரைவாழ்‌
பொன்னோடு உணையும்‌ ‘இருகண்ணும்‌
பொருந்தக்‌ கண்டே ‘ மகிழ்வாடு; 66

துயிலுங்‌ காலை யுறுங்கனவில்‌
களிப்பத்‌ தோன்றித்‌ தகவுடனே
பயிலுங்‌ கடவுள்‌ இவராம்‌என்று உன்னிப்‌ பலகா லம்புவியில்‌யிலம்‌ பொருவும்‌. இணிதோளார்‌
தாழ்ந்து வணங்கி அடிபோற்றி
அயில்வெங்‌ கண்ணாய்‌! கனவிலுரை ச
அவ்வாறு அமைக்கச்‌ சிந்தித்தே; 67

கோவில்‌ எழுந்தது
மலையின்‌ குகையின்‌ இடைகிடந்து
வளம்சேர்ந்‌ இரவைப்‌ பகலாக்கும்‌
விலையில்‌ மணியும்‌ பணிதிகளும்‌
மிளிரும்‌ பைம்பொன்‌ முதலியவாய்‌
நிலைகொண்டு அதைப்பண்‌ டியில்பொதியில்‌
நிரப்பிப்‌ பின்னும்‌ மனிதர்கள்தம்‌
தலையின்‌ மிசையும்‌ வருவித்தும்‌
தன்கைப்‌ பொருளும்‌ உடன்கலந்தே; 68

நிலைபெற்று உயர்பொன்‌ கோபுரமும்‌
நிரப்பு மணிமண்‌ டபம்மதிலும்‌
அலையுற்று எழுநீர்ப்‌ பொய்கையும்மற்று
அவைபோற்‌, பலவாம்‌ இருப்பணியும்‌
மலையொத்து உயரும்‌ மணிமாட
கூடங்‌ களுஞ்சேர்‌ வள.நகரும்‌
தஇலைபொற்‌ கரம்சேர்‌ வில்லியக்கான்‌
அழித்துச்‌ சிறக்கச்‌ செய்வித்தே; 69

வில்லிபுத்தூர்‌ மலர்ந்தது.
அருகில்‌ உறையும்‌ திருப்புத்தார்‌
அந்த ணாளர்‌ தமைஅழைத்துத்‌ திருவை குறயாம்‌ அமைத்திடும்‌இத்‌
இருமா நகரம்‌ அதனிடைநீர்‌
_ மருவி உறைந்து பெருவாழ்வு
மலியச்‌ சிறப்புஎய்‌ திடும்குடியாய்‌
வருதல்‌ வேண்டும்‌ எனஉரைப்ப
மற்றுஅங்கு அவர்கள்‌ வகுத்துரைப்பார்‌., 70

நன்று புகன்றது இத்திருமா
நகரத்‌ தனக்கும்‌ அழகுசிறப்பு
ஒன்று நாமம்‌ புத்தூர்‌ என்று
உரைத்தால்‌ யாங்கள்‌ அவண்வருவேம்‌
என்று புகல அப்பெயர்தன்‌
பெயரோடு இசையு மாறுஉரைத்தான்‌;
அன்று குடியாய்‌ அவர்களும்சேர்ந்து
அணுகச்‌ இறக்க வாழ்ந்தனரால்‌. 71

அதனால்‌ அவ்வூர்‌ அமைத்தவன்போர்‌
அருகு புத்தூர்‌ கலந்துஇரண்டு விதமாய்‌ ஒன்றி வில்லிபுத்தூர்‌
எனும்‌ஓர்‌ நாமம்‌ விளங்கியதால்‌;
மதிசேர்‌ சகரக்‌ கோபுரமும்‌
வளமா நகரும்‌ புராதனத்தைப்‌
புநிதாய்ச்‌ செய்த தால்‌ஒருபோர் புதுவை எனவும்‌ பொருந்தியதால்‌. 72

சீரார்‌ அனுமன்‌ பொற்கருடன்‌
சிவிகைப்‌ பரிதண்‌ டிகைசேடன்‌
தேர்‌ னைஇன முதலாகும்‌
இருவூர்‌ திகள்பல செய்வித்து
ஆரா தனம்பிரம்‌ மோற்சவமோடு
அணியார்‌ மற்றைத்‌ திருவிழாவும்‌
தோராது அமரர்‌ தாமும்‌அதி
சயித்துத்‌ துதிக்கப்‌ புரிவித்தான்‌. 73

அவ்வா றாக நாடொறும்‌ஆங்கு
அவன்செய்‌ பலவும்‌ குறைவுஇலகாய்ச்‌
செவ்வே புரிந்து வருநாளில்‌
Avant லம்சென்‌ நுற்றபினர்‌
எவ்வேறு உலகங்‌ களினும்‌இதற்கு
இணைளஎன்று எடுத்திட்டு இயம்பிடுதற்கு
ஒவ்வாது உயர்நம்‌ பரமபதத்து
உற்றான்‌ அவன்தம்‌ பியினோடும்‌. 74

பெரியாழ்வாரின்‌ வரலாறு
மண்நா டினையே முதற்பலவாய்‌
வகுத்தும்‌ புகல்‌௮அண்‌. டங்களினும்‌
நண்ணாப்‌ புகழ்நண்‌ ஸணிடும்‌௮ந்த
நகரின்‌ சரிதம்‌ ;நவின்றனமால்‌;
விண்ணா டர்களும்‌ புகழ்ந்துஏத்தும்‌
விட்ணு சித்தன்‌ சரிதம்‌அதைப்‌
பெண்ணார்‌ அமுதம்‌ அனையாய்‌!(யாம்‌ பேசக்‌ கேட்டி எனப்பேசும்‌. 75

(வேறு)
ஆழிசூழ்‌ உலடல்‌ அவதரித்‌ துடையோர்‌
அனைவரும்‌ நமைஅறி கிலராய்ச்‌
சழ்உறு மலமூத்‌ இரஉடல்‌ எடுக்கும்‌
செனனசா கரம்கடந்‌ திலராய்ச்‌
சூழ்‌்உ.று மாயை வயத்தராய்‌ நரகில்‌
துன்னுதற்கு இரங்கிஆங்கு அவர்கள்‌
வாழ்உறும்‌ பரம பதம்தனில்‌ புகுந்து
மகிழ்வுற யாம்‌உளம்‌ மதித்தே; 76

பெரியாழ்வார்‌ அவதாரம்‌
மருள்தரும்‌ உளம்சேர்‌ மாநிலத்து எவர்க்கும்‌
_ மயக்கற விளங்குமெய்ஞ்‌ ஞானப்‌
பொருள்தனை விரித்துஉள்‌ உணர்ந்திடு மாறாய்ப்‌
புகன்றுபின்‌ வருஇநீ என்னக்‌
கருடனுக்கு உரைப்ப அவனும்‌அம்‌ முறைக்‌
கடிநகர்‌ முகுந்தன்பத்‌ தினியாம்‌
இருள்தரு குழல்சேர்‌ பற்புமை வயிற்றி
னிடைவிட்ணு சத்தன்‌என்று உஇத்தே; 77

திருப்பணிகள்‌
துஞ்சுறு மாயை இருளினைத்‌ துறக்கும்‌
சுடரவ னாம்‌என விளங்கி
அஞ்சுமா வயதின்‌ ஞானஉற்‌ பவமாய்‌ அன்புநம்‌ மிடத்தில்உண்‌ டாகி விஞ்சுமல்‌ லிகைமுல்‌ லையும்நறுந்‌ துளவும்‌
விளங்குறு திருநந்த வனமும்‌
கஞ்சமும்‌ கழுநீர்‌ முதலிய மலர்கள்‌
கவின்பெறு தடமும்‌ஆங்கு இயற்றி; 78

கிழியறுத்தல்‌
காலையில்‌ கடன்கள்‌ கழித்துப்பூ மலர்கள்‌
கசங்குறாக்‌ கூடையின்‌ எடுத்து
மாலைகள்‌ தொகுத்து நமக்குஅணி வித்தே
வருகுவன்‌ அதுவும்‌அல்‌ லாமல்‌
வேலைகூழ்‌ புவியின்‌ மிகுவளம்‌ பொருந்தி
மேவுசீர்ப்‌ பாண்டிய வேந்தன்‌
மேலைநாள்‌ பரம வத்துஎவன்‌? என்ன
விளங்குறத்‌ தெரிகுவான்‌ விரும்பி; 79

தனதுவா யிலினோர்‌ கிழிதனைத்‌ தூக்கத்‌
குர்க்கத்தில்‌ வென்றுள பெரியோர்‌ :
இனதுகொண் டடைமின்‌ எனத்திரு முகங்கள்‌
எங்கணும்‌ பரவிட விடுத்தான்‌
அனதுணர்ந்து உலகிற்‌ பல்பல விதமாய்‌
அறையும்‌அச்‌ சமயவா தியர்கள்‌
மனதுவந்து அமைதம்‌ விருதுடன்‌ மதுரை
மாநகர்‌ வந்துஅணு கினரால்‌. 80

ஓத்தடைந்‌ தவர்கள்‌ தமதுநூன்‌ முறைகொண்டு
உரைத்திடும்‌ தர்க்கமா முறைகள்‌
எத்தனை விதத்தால்‌ கேட்பினும்‌ அதனுக்கு
இசைவுறத்‌ தனதுநூல்‌ எடுத்திட்டு அத்தனை விதங்கட்கு எண்மடங்கு உரைத்திட்டு
– ஆங்குஅவர்‌ தமையெலாம்‌ விட்ணு
சித்தன்வென்று அவைமுன்‌ நமைப்பரம்‌ எனவே
செப்பி௮க்‌ இழியையும்‌ அறுத்தான்‌. 81

ஏனைய சமயத்‌ தவர்களும்‌ துதிசெய்து
… ஏத்தும்‌அப்‌ பட்டர்பி ரானைச்‌
சோனைஅம்‌ புயலின்‌ பொழிகர அரசன்‌
‘தொழுதுபொன்‌ னடிமுடி யணிந்து
சேனை நால்‌ வகையும்‌. செயசெய என்னத்‌
தேவர்கள்‌ மலர்மழை பொழிய
ஆனைமேல்‌ ஏற்றி அணிமுரசு அதிர்வித்‌
குந்நகர்‌ வலம்வரும்‌ போதில்‌; 82

பல்லாண்டு
சவனயன்‌ முதலோர்‌ சேவடி வணங்கச்‌
செம்பொன்‌அங்‌ இரியினை நிகரும்‌
உவணமிீ இவர்ந்து திருவுளம்‌ பொலிய
உலகுளோர்‌ பலரும்‌ஆங்கு உணரப்‌
பவனிவந்‌ இடுவோன்‌ கண்டுஉளம்‌ உருகும்‌
படிஎதஇர்‌ எளியதாய்‌ அடைந்தேம்‌;
அவனும்‌அன்‌ புடனே தொழுதுபல்‌ லாண்டுஎன்று அணிபெறும்‌ காப்புஅணிந்‌ தனனால்‌. 83

முன்புறு சைவ சமயமாம்‌ அதனை:
விடுத்துப்பொன்‌ முடியுடை அரசன்‌
அன்புடன்‌ வேண்டத்‌ திகிரிசங்கு அவன்தன்‌
அணிபுயம்‌ இரண்டினும்‌ அணிந்தே
பின்புஉவந்து அளித்த பொருள்மணி முதலாம்‌
– பெருவெகு. மதிகள்கொண்‌ டருளித்‌
கன்புகழ்‌ எவரும்‌: துதிசெய மதுரை
தனைவிடுத்து அணிநகர்‌ அணுகி; 84

பாமாலையும்‌ பூமாலையும்‌ அணிவித்தல்‌
கண்ணனாய்‌ உதித்துயாம்‌ இருந்தபோது இயலும்‌
காரிய சம்ப்பரமம்‌ அதன்தன்‌
வண்ணம்யா வையும்செந்‌ தமிழினால்‌ கவியாய்‌
வழங்கும்‌௮அப்‌ பாவின்மா லைகளும்‌
தண்ணறாத்‌ துளிக்கும்‌ மலரினால்‌ தொடுத்துச்‌
சமைத்தபூ மாலையும்‌ சாத்தி ்‌
எண்ணரும்‌ கால மாய்‌இருக்‌ இன்றான்‌;
அவன்‌ உளத்து யாமும்வீற்‌ றிருப்போம்‌. 85

இந்தவா றாம்‌௮த்‌ தலம்‌அமைந்‌ துளதும்‌
யாம்அவண்‌ உறைந்துள செயலும்‌
செந்தமிழ்க்‌ கவிவல்‌ விட்டுணு இத்தன்‌
செனித்தசெய்‌ கையும்புவி மானே!
சிந்தைகொண்டு உணர்தி; எனவழங்‌ கஇனனால்‌, .
செழித்தபாற்‌ கடல்முகட்டு ஆலின்‌
பைந்தளிர்‌ அதன்மேல்‌ பாலனாய்‌ உறங்கும்‌ பராபர னானநா ரணனே. ட்ட 86

புவிமகள்‌ விண்ணப்பம்‌
உரைசெயும்‌ தருவா சகம்பல பலவும்‌
உற்றுவந்து இருசெவி யுருக
விரைசெய்பூந்‌ தொடையல்‌ கரியகார்க்‌ குழலின்‌
மிலைந்தசீர்‌ அம்புவி மகளும்‌
கரைசெயற்கு அரிதாம்‌ களிக்கடல்‌ அழுந்தி
ஓர்விதம்‌ கரைஉணர்ந்து எழுந்து
திரைகடல்‌ நிறத்தான்‌ இணைந்ததா மரைப்பூந்‌
“திருவடி பணிந்துஇவை தெரிப்பாள்‌:–87

பூமிததேவியின்‌ அவதாரம்‌
இருவுளப்‌ படியான்‌ புதுவையில்‌ பட்டர்‌
பிரான்‌எனுந்‌ இருப்பெயர்‌ புனைந்து
மருவும்‌௮ப்‌ பெரியாழ்‌ வார்மக எளாய்ப்பூ
மாலைபா மாலைஎன்று உரைக்கும்‌
இருவகைக்‌ கயிங்கி ரியமும்யான்‌ இழைப்பான்‌
இசைந்தனன்‌; ஏகுஎன விடைதந்து
அருளெனக்‌ கேட்டாள்‌; அம்முறை புரியென்று
ஆமிமா யனும்‌அளித்‌ தனனால்‌. 88

(வேறு)
விடைகொண் டதன்பின்‌ திருவெனவும்‌
நீளை எனவும்‌ விளம்பிடும்‌அப்‌
படைகண்‌ ஸணினர்தம்‌ மொடும்புகன்று
பலதே வர்கள்சித்‌ தர்கள்‌இயக்கா்‌
௪டைகொள்‌ முனிவோர்‌ முதலானோர்‌
தாழ்ந்து வணங்கக்‌ கடலாலின்‌
அடைகண்‌ வளர்மால்‌ உளம்தொடர ட்ட
்‌ அவைவிட்டு அகல்‌அம்‌ புவியடைந்தே; 89

வில்லி புத்தூர்‌ எனும்நாமம்‌.
‘விளங்கு நகரில்‌ பெரியாழ்வார்‌
அல்லும்‌ பகலும்‌ ஓழிவிலதாய்‌
அமைத்த நந்த வனத்தினிலே
எல்லும்‌ துளவ நறுஞ்செடியில்‌
ஏரார்‌ சிறுபெண்‌ வடிவுடனே
சொல்லும்‌ கடக மதிஅதனில்‌
துணையில்‌ கணையில்‌ தோன்‌ றினளால்‌. 90

அந்தத்‌ துளவம்‌ எனும்மடவாள்‌
அகலம்‌ புவிமான்‌ தனதுஇடத்தில்‌
வந்துஉற்‌ பவிக்கப்‌ பூரூவநாள்‌
வகுத்த தவம்யா தென்னஇட.ந்‌
குந்து பலவாய்‌ உபசரித்துத்‌
தளிர்க்கை கொடுபொற்‌ றாள் தடவிச்‌
சிந்தை கனிந்து ம௫ழ்சறக்கத்‌
இருமா முடியில்‌ தாங்கினளால்‌. 91

பெரியாழ்வாரின்‌ செயல்‌
பெரியாழ்‌ வாரும்‌ அன்றுஉதயம்‌
பெறுமுன்பு அமையும்‌ துயில்‌உணர்ந்து
விரியார்‌ புனலின்‌ தடந்தோய்ந்து
விதியிற்‌ காலைக்‌ கடன்பலவும்‌
புரியா துளவம்‌ அணிதிருமண்‌
பொலியத்‌ திருப்பூங்‌ கூடையுடன்‌
பரிவாய்‌ இதழ்விண்டு அலர்ந்தமலர்‌
பறிப்ப நந்த வனம்‌அடைந்தான்‌. 92

சோதியைக்‌ கண்டார்‌
வந்து நோக்கும்‌ பொழுதுஅவன்‌ தன்‌
மனமும்‌ மலர்க்கண்‌ களும்களிப்பக்‌
கந்தம்‌ பரந்து நெடுந்தூரம்‌ கமமும்‌ தளவம்‌ அதன்மிசைஓர்‌
சந்த்ர வதனப்‌ .பெருங்கதிரோன்‌
தான்வந்து உதய மானதுபோல்‌
முந்தும்‌ சோதி தோன்றுதலும்‌ முதிரும்‌ பெரிதுஅற்‌ புதம்‌அடைந்தே; 93,

அருகுஉற்று அமைய நோக்குதலும்‌ மதிமா முகமும்‌ அம்புயம்நேர்‌
இருகண்‌ கரம்பா தமும்‌ஒளிரும்‌
– பெண்கண்‌ மணிதன்‌ எழில்தோக்கி
முருகுஉற்று ஒளிரத்‌ துளவுஅணியும்‌ முகுந்தப்‌ பெருமான்‌ தனக்குஉகப்பாம்‌
இருமற்று இவளாம்‌ எனஉளத்துற்‌
சிந்தித்து அநேக விதம்துஇத்தே. -94

– இங்கே இம்மாது இரத்தினம்வந்து }
இருக்கும்‌ செயல்‌என்‌ னோ?இதெல்லாம்‌
பங்கே ர௬கம்வாழ்‌ இருவினொடும்‌
பார்மின்‌ னோடும்‌ பாம்பணையில்‌
செங்கேழ்‌ மலர்க்கண்‌ வடபத்ர ‘
சாயி தன்னை வினவியிடில்‌
அங்கே உணர லாம்‌எனத்தன்‌
அகம்‌உள்‌ தெளிந்துஆ னந்தமொடும்‌; 95

ஆழ்வார்‌ காணிக்கை
அந்த காந்த மணிவிளக்கை
உபய கரஅம்‌ புயம்‌அதுகொண்டு
உந்தி எடுத்துத்‌ தாங்கிவிரைந்து
ஒளிர்நந்‌ தனமா வனந்தனைவிட்டு
இந்து தவழும்‌ உயர்த்தவட
பெருங்கோ யில்முன்‌, எய்தித்தான்‌
தந்த பெருங்கா ணிக்கைஎனத்‌
தரைமேல்‌ வளர்த்தி இவைபுகன்றான்‌: 96

இவள்‌ யார்‌?
துமுதம்‌ தெரிக்கும்‌ பாற்கடலின்‌
துயில்நீத்து இவண்வந்து உறைந்திடுவோய்‌/
குமுதம்‌ பொருவாய்‌ கரியகுழல்‌
மதிமா முகம்கூ ரியவேல்கண்‌
அமுத மொழிஇப்‌ பெண்‌அணங்கார்‌?
இவண்வந்‌ ததும்மேல்‌ அமைவனவும்‌
உமது திருவாய்‌ மலர்ந்திடும்‌என்று
உபய மலர்த்தாள்‌ வணங்கினனால்‌. ர 97

நின்‌ திருமகளாய்‌ வளர்க்க எனல்‌
அன்போடு அவ்வாறு உரைத்துவணங்கு
ஆழ்வார்‌ அணிமா முகம்நோக்கி
மின்போல்‌ ஒளிரும்‌ திருமேனி
விளங்கு மணித்தா மரைவளரும்‌
பொன்போல்‌ வாள்நின்‌ இருமகளாம்‌;
அதனால்‌ பொலிவு சிறந்தோங்கும்‌
தின்மா ளிகையி னிடைகொடுபோய்‌ நேய முடனே வளர்த்திடுவாய்‌. 98

கோதை .எனப்‌ பெயரிடுக
முன்பின்‌ இயைந்த -செயலும்‌இவட்கு
இனிமேல்‌ முயலும்‌ செய்கைகளும்‌
பின்பின்‌ உணர்தி என அருளப்‌
பெருகப்‌ புகன்று பின்பும்‌இவள்‌
குன்பேர்‌ கோதை யாகுமெனத்‌
தரிப்பாய்‌ எனவும்‌ சாத்தினனால்‌;
வன்போடு அடைந்த மல்லரைமுன்‌
மலைந்து குமைத்த மாமாயன்‌. 99

உரைசெய்‌ மொழியார்‌. அமுதுசெவி
.. வழிவந்‌ துறலும்‌ பட்டர்பிரான்‌
கரைசெய்‌ திடுதற்கு. அரியபெருங்‌
களியா முவரி ‘தனில்‌அழுந்தி
விரைசெய்‌ துளவம்‌ கமழ்பதத்தோய்‌/
விளம்பு முறைசெய்‌ வேன்‌எனத்தா
மரைசெய்‌ , மலர்போல்‌ .முகங்கவின
மறித்தும்‌ வணங்கி நிற்றலுமே; 100

இறைவன்‌ கட்டளை
ஈண்டுடும்‌ மடவார்‌ இரத்தின த்தை
மணிபொற்‌ . சிவிகை. யிடையேற்றித்‌
தாண்டுந்‌: தரங்கக்‌ கடலின்‌ ஓலி
. தரும்வாத்‌ இயங்கள்‌ uss mms
வேண்டும்‌ “சம்ப்ரம :முடன்கொடுபோய்‌
விட்ணு சித்தன்‌ மனைவிடுத்து
மீண்டுஇங்கு உறுமின்‌ என்னபரி
சனத்தாற்கு அருள்மால்‌ விடையருளா; கு 101

நன்றுஎன்று அவர்கள்‌ திருவுள்ளம்‌
நயந்துஅம்‌ பொன்னின்‌ நவமணியும்‌
துன்றும்‌ சிவிகை மிசைஅணங்கின்‌
._ தூய்மா மணியை இருகரம்கொண்டு
ஒன்றும்‌ படியாய்‌ எழுந்தருளச்‌
செய்தே முழங்கா ரொலிஓங்கிச்‌
சென்றுஎண்‌ திசையின்‌ உறைவோர்தம்‌
செவியுற்று அடைந்து களிப்பாக; 102

மேளம்‌ பேரி நாகசுரம்‌
விளங்குந்‌ தாரை திருச்சின்னம்‌
தாளம்‌ ஒளிர்மத்‌ தளம்மற்றும்‌
சாற்றும்‌ பலவாத்‌ தியமுடனும்‌
வாளங்‌ கண்ணார்‌ நாடகமும்‌
மருவச்‌ சிறந்த மாநகர்வாய்‌
நீளுந்‌ தெருக்கள்‌ வலம்புரிந்தந்‌ நெடியோன்‌ மனைவிட்டு அவர்போனார்‌. 103

நாச்சியாரை ஆழ்வார்‌ வளர்த்தல்‌
(வேறு)
மனைய டைந்துறு மங்கலந்‌ தினந்தொறும்‌ வளர
வினையி லாதவவ்‌ விட்டுணு சித்தனும்‌ விதியால்‌
அனைய பெண்ணினுக்கு அழகுறக்‌ கோதையாம்‌ என்னப்‌
புனைது மாயவன்‌ மொழிப்படி நாமமும்‌ புனைந்தே; 104

வச்சி ரம்வயி . டூரியம்‌ செழியுமா ஸணிக்கம்‌
பச்சை யோடுகோ மேதகம்‌ புகர்புட்ப ராகம்‌
தச்சி ழைத்தசெம்‌ பொன்னினார்‌ வடமொடு தயங்கி
உச்சி தம்பெறும்‌ தொட்டிலும்‌ ஒளிபெற அமைத்தே; 105

ஆட்டுந்‌ தோழியர்‌; ‘ தொட்டிலிட்டு அஞ்சன மலர்க்கண்‌
இட்டும்‌ பாங்கியர்‌; மடிமிசைத்‌ இருத்தி அம்புலியைக்‌ .
காட்டும்‌ தாதியர்‌; கண்ணிறை கழித்துஅருந்து அமுதம்‌ ஊட்டும்‌ சேடியர்‌ முதலினர்‌ உபசரிப்‌ புறவே; 106

பேதை யாம்பரு வந்தனில்‌ இயைவன பெரியோர்‌
ஓதும்‌ அம்முறை யாவையும்‌ வழுவிலாது . உ.ஞற்றிக்‌
கோதி லாத்தனிக்‌ கலன்களும்‌ குறைவிலாது அணிந்து
இதி லாமதிக்‌ கலையெனத்‌ தினம்தினம்‌ வளர்த்தார்‌. 107

வளரும்‌ நாளிடை பெதும்பையாம்‌ பருவம்வந்‌ துறலும்‌
அளகம்‌ சூழிய மாய்முடித்து அலங்கலும்‌ புனைந்தே
ஒளிரும்‌ நெற்றியில்‌ பிறையெனத்‌ திருமண்காப்‌ புடனே
தளத எத்திருச்‌ சூரணம்‌ தன்னையும்‌ அணிந்தார்‌. 108

காதில்‌ கல்லிழை கம்மல்நற்‌ சிமிக்கெகத்‌ தரிப்பால்‌
இதி லாநவ மணிஇழை செம்பொனின்‌ முருகும்‌
கோதி லாமயிர்‌ மாட்டிசேர்‌ அழகுறும்‌ கொப்பும்‌
ஓது மற்றுள வகைகளும்‌ ஒளிபெற அணிந்தார்‌. 109

6தசு லாம்செழுங்‌ குவளைநேர்‌ கண்களில்‌ திகழக்‌
காச லாதொளிர்‌ அஞ்சனம்‌ கவின்பெ.ற அணிந்து
மாசி லாஇள நகைபெறு மதிமுகத்‌ தொளிரும்‌
நாசி தன்னின்மூக்‌ குத்திபி லாக்குடன்‌ அணிந்தார்‌. 110

சங்கம்‌ போன்றுள கழுத்தினில்‌ -தாழ்வடம்‌ பதக்கம்‌
பொங்கு ஒளிக்கட்டு வடம்பொலி மோகன மாலை
செங்க .இிர்ச்செழும்‌ பருதிபோல்‌ சரப்பளி’ பதக்கம்‌ –
தங்கு முத்தினா ரமும்பல பொலிவுறத்‌ தரித்தார்‌. 111

ஏட லர்ந்தபூங்‌ கரங்களில்‌ எழில்செய்‌ :மதாணி
ஆட கப்பசுந்‌ தோள்வளை அணிகொள்கே யூரம்‌
சூட கத்தொடு வளையலும்‌ நவமணித்‌ தொடியும்‌:
நீடு றும்விர லாழியும்‌ அணிமுறை நிறைத்தார்‌. 112.

அய்ய மெய்தியுண்‌ டிலையெனு மிடையிடை யழகாய்‌
செய்ய பட்டின்சிற்‌ றாடையும்‌ சிறுமடி சாறும்‌
துய்ய பொன்னரை ஞாணொடு துலங்கும்‌ஓட்‌ டியாணம்‌ .
வெய்ய வன்‌ஒளி காந்துறும்‌ படிமிலைந்‌ தனரால்‌. 113

பளப ளென்னசெம்‌ பஞ்சணிந்து அம்பொன்பா. டகமும்‌
மாமணித்‌ தண்டையும்‌ கெச்சையும்‌ கொலுசும்‌
முளரித்‌ தாள்களின்‌ மோதிர வகையுடன்‌ அழகு
வளமு றும்படி அணிந்தவை யாவரே வகுப்பார்‌? 114

இன்ன வாறதாய்‌ வானகத்‌ இடையிருந்து இழிந்த
மின்ன னாள்‌ஒளிர்‌ மெல்லிய மேனியின்‌ நிறையப்‌
பொன்னின்‌ மாமணி நிரப்புபல்‌ பூடணம்‌ அணிந்தார்‌
வன்ன முற்றபொன்‌ ஓவியம்‌ நிகர்த்திட மாதோ. 115

பொன்னின்‌ மாறுகோ லொடுமணி முச்சிலும்‌ பொலியும்‌ –
மின்னு வெண்கல வடுப்பொடு தாம்பலா விறகும்‌.
வன்ன வெண்பொனின்‌ பலபல: பாண்டத்தின்‌ வகையும்‌.
அன்ன மென்னடை யாள்விளை யாடுதற்கு அமைத்தார்‌. 116

இனைய யாவும்கொண்டு எழில்பெறும்‌ தோழிய ௬டனே
அனைய நாள்தனில்‌ நடைபெறும்‌ இருவிளை யாடல்‌
கதனைஓவ்‌ வாதஅக்‌ கோதையும்‌ நாள்தொறும்‌ தமது
மனையின்‌ ஊடுஇருந்து ஆடுவள்‌ மகழ்வொடு மாதோ. 17

நாச்சியார்‌ திருப்பணி
அந்த நாள்தனி லேபத்தி தலைஎடுத்‌ தவளாய்‌
கந்தை அன்பினோடு உஞற்றிடும்‌ தன்மைபோல்‌ தானும்‌
நந்த மாவன கயிங்கர்யம்‌ இயற்றுவான்‌ நலஞ்சேர்‌
,_ சிந்தை ஊடு௨உற நினைந்துஇது செய்யல்‌உற்‌ றனளால்‌. 118

உதைய காலையில்‌ தந்தையோடு இயல்வன உஞநற்றி
– இதையம்‌ அன்புற நந்தன வனந்தனில்‌ ஏ௫த்‌
-ததையு மாமலர்‌ எடுத்துத்தண்‌ ணீர்தனைப்‌ பாய்ச்சி
– அதையும்‌ ஓர்விளை யாட்டுஎன அனுதினம்‌ இழைப்பாள்‌. 110

சூடிக்கொடுத்தாள்‌
இன்ன வாகப்பற்‌ பலதினம்‌ இயைவுறும்‌ அமைதி
“பன்னு மோர்பகல்‌ பன்மலர்‌ பறித்துவந்‌ ததனைத்‌
துன்னு மாலைகள்‌ அணிபெற வகைவகை தொடுத்து
மன்னு பூந்திருக்‌ கூடையுள்‌ நிறப்புற வைத்தே; 120

ஆய ௬௯டைஓ ரிடத்துவைத்து உலவலுக்கு ஆழ்வார்‌
போய காலையில்‌ கோதைஎன்று உரைசெய்பூங்‌ கொடியும்‌
ஏய மாலைகள்‌ தன்னின்‌ஓர்‌ மாலையை எடுத்துத்‌தூய நாசியின்‌ அதன்மணம்‌ சோதிப்பான்‌ மோந்தாள்‌. 121

மோந்த போதினில்‌ பரிமள மிகுந்துற முழுதும்‌
காந்து மாமணித்‌ தொடியுறும்‌ கரங்களால்‌ எடுத்து
வாய்ந்து றும்படி அளகத்தும்‌ வளைகமுத்‌ தகத்தும்‌
வேய்ந்து தன்திரு மேனியின்‌ விளங்கு௮அழகு உணர்வாள்‌. 122

தோன்று சின்றகண்‌ ணாடியின்‌ கிணற்றிடைத்‌ தொடர்ந்தே
ஏன்ற பேரொளி யழகுகண்டு இன்புறும்‌; மீண்டும்‌
சான்ற தந்தையார்‌ வருவர்‌என்று அதன்முனம்‌ தரித்த
ஆன்ற மாலைகள்‌ அனைத்தையும்‌ அமைவுற வாங்கி; 123

இருந்து மாமலர்க்‌ கூடையிற்‌ சிக்கென முறையிற்‌
பொருந்த வைத்துஅதை உணர்ந்திடா வகைமுன்பு போல
இருந்தி டந்தனிற்‌ கொண்டுபோய்‌ இயைவுறத்‌ தூக்கிக்‌
கருந்த டங்கணாள்‌ பாங்கியர்‌ உறும்‌இடம்‌ கலந்தாள்‌. 124

மாத வற்குஅர சாகிய பெரியஆம்‌ வாரும்‌
கோதை செய்தமை உணர்ந்திலார்‌; இருமனை குறுகிப்‌
போது மாலையின்‌ குடலையை எடுத்துத்தன்‌ புயத்தின்‌
மீது தாங்கியே விரைவொடும்‌ வீதிகள்‌ கடந்தே; 125

வடபெ ருந்திருக்‌ கோயிலின்‌ மருவிநஞ்‌ சமரும்‌
படஅ ரா௮அணை அதன்மிசை பள்ளிகொள்‌ பவர்க்குக்‌
குடலை மாலையை அருச்சகர்‌ இருக்கரங்‌ கொடுத்திட்டு
அடைவு டன்‌உகப்பு எய்துறு மூறைஅணி வித்தே; 126

தீர்த்த மும்பிர சாதமும்‌” இகழ்வுறும்‌ இருகை ஏர்த்து வாங்கித்தன்‌ இதயமும்‌ இருகணும்‌ களிப்பச்‌
சீர்த்த நாரணன்‌ அம்புயச்‌ சீரடி வணங்கிப்‌
டூபர்த்து மாளிகை குறுகிவீற்‌ நிருந்தனன்‌ பெரியோன்‌, ..127

என்றும்‌ ஆங்குஅவன்‌ கொணர்ந்துதற்‌ கணிந்திடு தலினும்‌
அன்ற லங்களில்‌ பரிமளம்‌ அதிகமாய்‌ உறலும்‌
இன்று இதற்குள்டும்‌ முறையுறல்‌ எவ்விதம்‌ எனவே
குன்றி னால்மமை விலக்கிய கோவலன்‌ குறியா; : 128

வென்றி வேல்கண்௮ம்‌ கோதையாள்‌ விட்டுணு இத்தன்‌
சென்று நீங்கிய காலைத்தன்‌ குழலிடைச்‌ சேர்த்த
மன்ற லாம்‌என நடந்துள வாறுஉணர்ந்‌ தருளி
நன்று நன்றுஎன ஆனந்தம்‌ மிகவும்நண்‌ ணினனால்‌. 129

ஆங்குஅவ்‌ வாறதாய்‌ மாலையைக்‌ தொடுத்துவைத்து ஆழ்வார்‌
நீங்கு காலையில்‌ நாடொறும்‌ நிர்மலக்‌ கோதை
தேங்கு ழற்கணே அணிந்துகண்‌ ணாடிநேர்‌ கணெற்றில்‌
பாங்கி னோடுஅழ குணர்ந்துஅதைப்‌ பண்டுபோல்‌ வைப்பாள்‌.-130

குந்தை அச்செயல்‌ உணர்ந்திடாது அதைப்பின்பு தகவாய்‌
வந்தெ டுத்துப்போய்க்‌ கொடுப்பவை வடபத்ர மாலும்‌
சந்தை இன்புற அணிந்துஉளம்‌ ஆனந்தம்‌ சேர்வன்‌
இந்த வாறதாய்‌ நாள்தொறும்‌ இயலும்‌அந்‌ நாள்வாய்‌; 131

உவரி போல்நிற வடபெருங்‌ கோயில்‌உள்‌ உறைவோரன்‌ :
புவனி மங்கையாள்‌ கோதையாம்‌ திருப்பெயர்‌ பொருந்தி
அவத ரித்துதற்கு இயற்றுறு கயிங்கர்யம்‌ அதனை
cots ஞம்தெரிந்து உணர்வகை புரிகுவான்‌ எண்ணி; 132

வடபத்ரசாயி நாச்சியார்‌ சிறப்பை உலகுக்குணர்த்தல்‌
ஒருதி னம்பெரி யார்கொணர்ந்து உதவுபூங்‌ குடலை
இருக ரங்களால்‌ அருச்சகர்‌ இனிதொடும்‌ ஏந்தி
மருவு’ மாலையில்‌ ஒன்றுஎடுத்‌ திடலும்மற்று அதின்ஓர்‌
கருமயிர்தெரி வுறும்வகை காண்குவித்‌ தானால்‌, 133

காண்ட லும்‌அதைச்‌ சாத்துறாது அர்ச்சகர்‌ கருத்தில்‌
ஈண்டு இதன்‌இடை பங்கிஉற்‌ நிடுதலால்‌ எவரோ
பூண்ட மாலையைப்‌ போன்றுளது எனஜயம்‌ பொருந்தி
ஆண்டு உறும்பெரி யார்முகம்‌ அமைவுற நோக்கா; 134

அர்ச்சகர்‌ செயல்‌
அய்ய இக்கரு மயிர்தனைக்‌ கண்டிரோ? அதலால்‌
செய்ய மாலையும்‌ கசங்கியது; இச்செயல்‌ இதனுக்கு
எய்த வேணகா ரணம்‌எனோ? உணர்கிலன்‌; இதனைப்‌
பைய ராஅணை யார்தமக்கு அணிதல்பண்‌ பாமோ? 135

தீதி லார்கள்கொண்டு ‘அடைதலில்‌ இம்முறை சேரின்‌
ஓதும்‌ மற்றவர்‌ கொணர்வதை என்‌என உரைப்பேன்‌?
பேதை யேன்நினது அடிக்குஅப சாரமே பெறினும்‌
ஈது மாதவர்‌ தமக்கு௮ணி குதல்‌இழி வாமால்‌. – 136

அல்ல வென்றுநான்‌ அணிந்திடில்‌ பவம்தனக்கு ஆளாய்‌
தொல்லை மாநர கம்தனில்‌ தொடர்ந்துற அழுந்தி
எல்லை யில்லதாம்‌ காலம்‌.ஆங்கு எய்திடல்‌ வேண்டும்‌;
நல்லை நீ௨ண ருறாததை அடியன்‌என்‌ நவில்வேன்‌? 137

ஆய வாற்றினால்‌ யான்‌இதை அணிகுவன்‌ எனஇம்‌
மாய ஸனார்மனம்‌ உகப்பினும்‌ மனம்‌அறிந்து அடியேன்‌
நேய மோடுஅணி வித்திலன்‌ எனதில மிசைஅத்‌
தூய மாமலர்க்‌ குடலையைச்‌ சோரவிட்‌ டனனால்‌. 138

மாயனார்‌
உகப்பினும்‌ அணிவியேன்‌ என்றது அர்ச்சகரின்‌ திருத்தொண்டின்‌ உறைப்பைக்‌
காட்டுகிறது,

எடுத்த மாலையோடு அம்மலர்க்‌ குடலையை எதிரில்‌
கடுத்த மாமுகத்து அருச்சகர்‌ புவியிற்காண்‌ குறவே mo
விடுத்த வாறும்‌அங்கு அதுதுவண்டு ஒருமயிர்‌ விளங்க
அடுத்தி ருந்ததும்‌ அகமுறப்‌ பெரியரும்‌ அறிந்தே; 139.

வடுவில்‌ அம்புய. மலர்முக மண்டலம்‌ வதங்கிச்‌
சுடுகை .யாய்மனம்‌ பதைத்திடத்‌ துடைகளும்‌ கரமும்‌
நடுந டுங்கிட மேனியும்‌ குலைந்திட நலியும்‌
கடுவுண்‌ டார்களின்‌ உடலுயிர்‌ கலங்கிடக்‌ கரைந்தான்‌. 140

வெருவ. லோடுவீழ்ந்து அழுந்திய வெந்துயர்க்‌ கடலை
ஒருவி தம்கடந்து அக்கணம்‌ விரைவினில்‌ ஓடித்‌
தெரு௮ கன்றுநந்‌ ‘தனவனம்‌: அதனிடைச்‌ சேர்ந்து
மருவு றும்மலர்‌ தேடிஉள்‌ ளனமறித்து எடுத்தே; டட மதிரி–141

சரங்கள்‌ தம்மொடும்‌ தார்தொடுத்து ஆலயம்‌ சார்ந்து
தரங்க மாக்கடல்‌ வண்ணருக்கு அருச்சிப்பான்‌ தன்பொற்‌
‘கரங்கள்‌ தன்னில்‌௮க்‌ கடிமலர்க்‌ குடலையை அளித்திட்டு
இரங்கு உளத்தொடும்‌ அவன்தனது எழில்முகம்‌ நோக்கு; 142

அடியன்‌ நெஞ்சறி யாமல்‌இங்கு அடுத்துஉள தாகும்‌
கொடிய தீவினை யாவையும்‌ உளம்கொளாது அருளி
நெடிய நாரணற்கு இங்குஇகை நேரம்‌எய்‌ இடுமுன்‌
கடிது சாத்திட வேண்டும்‌என்று இருகரம்‌ குவித்தான்‌. 143

அனைய மாலையை வாங்கிஅவ்‌ அரவுஅணை அமலன்‌
புனையு மாறுஅணிந்‌ தருச்சகன்‌ உலகெலாம்‌ புகழும்‌
வினையி லான்முக மண்டலம்‌ நோக்கியே மீட்டும்‌
இனைய மாமொழி தனைஎடுத்து இயம்புவான்‌ நன்றே.144

அய்ய! கேட்டருள்‌; ஐயுறேல்‌; நின்னொடும்‌ அடியேன்‌
பொய்ய தாம்மொழி புகல்கிலேன்‌; புகலும்‌இங்கு இதனை
மெய்ய தாம்‌என உணர்தி; மேனாளிடைக்‌ கொணர்ந்த
செய்ய மாலைகள்‌ போன்றில பின்பின்‌ னாளாய்‌; 145

கொணரு மாலையில்‌ வதக்கமும்‌ கசக்கமுங்‌ குறுகி
நணுகு மாங்குஅதை நவின்றிடில்‌ நல்லுளத்து என்‌என்று
உணர்வை யோள௭ன்றும்‌ உனதிடத்து என்‌அப சாரம்‌
அணுகுமோ என்றும்‌ அறிவியாது இருந்தனன்‌ அன்றே, 146

அந்த மாலைகள்‌ துமைஅவர்க்கு அணிந்துவந்‌ துதனால்‌
சிந்தை ஊடுஅதை இன்றுநீ தெளிந்தனை அலவோ?
இந்த வாறுநம்‌ மாலையின்‌ எய்துமாறு ஓதி
வந்தது என்‌2அதை வகுக்கஎன; மற்றுஅவன்‌ வகுப்பான்‌. 147

விளங்கு மாலைகள்‌ தமைஎன்றும்‌ ஓர்விதம்‌ பெறவே
வளங்கொ ஸும்படி தொடுத்துஇவண்‌ வருவன்‌ மற்று அதனில்‌ ‘
களங்கம்‌ உள்ளதுஎன்று உணர்ந்திலன்‌ கண்டிலன்‌ என த்தன்‌
உளங்க லங்கிஆ ராமையி னோடுஉரைகத்‌ தலுமே, 148

கேட்ட லோடும்‌உள்‌ இரக்கமாய்ப்‌ பெரியரே ! கெழுமும்‌
வாட்ட மோடுஉளம்‌ வருந்தலீர்‌।| இனிபுனை மாலை
-ஈம்டல்‌ எச்சரிக்‌ கையினுடன்‌ இயற்றுக என்றுஇயம்பி வீட்ட கம்தனில்‌ அருச்சகன்‌ மேவினன்‌ அன்றே. 149

(வேறு)
ஆழ்வார்‌ தானும்‌ கிலேசமுடன்‌
்‌ அரவின்‌ அணையின்‌ மிசைடடந்து
வாழ்வாய்‌ உனது திருவிளையாட்டு
ஆமோ? மறித்துஉன்‌ இருவடிக்குத்‌ தாழ்வாம்‌ கருமம்‌ புரிந்துளனோ?
எனத்தாள்‌ வணங்கி இவ்வாறு –
சூழ்வார்‌ எவரோ? எனதநினைத்து வ
திருமா ளிகையில்‌ தொடர்ந்தடைந்தான்‌. 150

ஒப்பாய்‌ எடுத்து உரைப்பதனுக்கு
ஒவ்வாத்‌ துயர்உற்று உளந்தன்னில்‌
இப்பூங்‌ கூடை தனைத்தாரோடு
இருத்தி உலாவல்‌ தனசக்கெய்தும்‌
அப்போ தேதா வதுசங்கை
அடைதல்‌ உளவோ? அங்குஅதனைத்‌
குப்பாது உணர்தல்‌ வேண்டும்‌என
நினைந்துஅன்று இரவைத்‌ தான்கழித்தான்‌. 151:

உண்மை தெரிந்தது
மறுநாள்‌ அருணோ தயத்துஎழுந்து
வாவி நீர்தோய்ந்து ஆதவனுக்கு
உறும்‌௮க்‌ கடன்கள்‌ விதியின்மூடித்து
ஒளிர்நந்‌ தனமா வனம்‌அணுகி
அறுகால்‌ முகர்முன்‌ பரிவட்டம்‌
அதனை நாசி தனக்கு௮ணிந்து நறுமா மலர்கள்‌ எடுத்துஅகத்தில்‌-நண்ணி அலங்கல்‌ தனைத்தொடுத்தே; 152

நாசிதனக்கும்‌ பரி
வட்டம்‌ அணிந்து ஆழ்வார்‌ மலர்‌ கொய்வார்‌.
**தமது நாசியில்‌ வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தால்‌ கட்டிக்கொண்டு
வண்டுகள்‌ மொய்த்து எச்சில்படுத்தா முன்னமே திருவுகிர்‌ படாதபடி, பக்குவ
மாகக்‌ கொய்து, இருப்பூக்‌ கூடையிற்‌ சேர்த்துக்‌ கொண்டுவந்து, பிணையல்‌,
கண்ணி, கோவை முதலாகப்‌ பலவித மாலைகளாகக்‌ சுட்டிக்கொண்டு டுபோய்‌ வட
பெருங்‌ கோவிலுடையானுக்குச்‌ சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்‌’” என்ற குருபரம்‌
பரை (பன்னீராயிரப்படி) நோக்குக.

என்றும்‌ இருத்தும்‌ இடந்தன்னில்‌ இருத்தி உலாவற்கு .எய்துவன்போல்‌
அன்றும்‌ எய்தி ஓர்‌இடத்தில்‌
கரவாய்‌ அதனைப்‌ பார்த்திடலும்‌
சென்ற தாதை ஒளித்திருத்தல்‌ தெரியாள்‌ தொல்நா ளைப்போல
மன்‌ றல்‌ கமழ்பூங்‌ குழற்கோதை :
மருவார்‌ அலங்கல்‌ தனைஎடுத்தே;: 153

கோதையாரின்‌ அச்சம்‌
அளகம்‌ தனிலும்‌ மார்புஅகத்தும்‌
அணிந்திட்டு அதன்பே ரழகுஉணர்வான்‌
புளக: மொடும்கண்‌ ஸணாடியுறும்‌
இணற்றில்‌ பொருந்தி நிழல்பார்க்க
உளம்‌உட்‌ புழுங்கப்‌ பெரியாழ்வார்‌
அதுகண்டு ஓடி வரலும்மனம்‌
இளகிக்‌ கோதை வெருவலொடும்‌
இருகால்‌ கரம்மெய்‌ நடுக்குறவே; 154

சூடி யுறும்‌௮ம்‌ மாலைஎலாம்‌
துரிதத்‌ துடனே வாங்கி௮அப்பூங்‌
கூடை யுறவைத்து அதன்‌அருகில்‌
குருதி வாள்போல்‌ செவ்வரிதோய்‌ ஓடை மலர்க்கண்‌ நித்திலங்கள்‌
உதிர்தல்‌ தனைஒத்து ஒழுகிடுநீர்‌ ஆடை நனைந்து . புவியினில்வீழ்ந்து
ஆறாய்ப்‌ பெருக அழுதுநின்றாள்‌. 155 ,

ஆழ்வார்‌ மொழிகள்‌
விம்மா அழுதல்‌ தனைநோக்கி
விட்ணு சித்தன்‌ மனம்‌இளகி,
அம்மா! கிளியே! மடமயிலே!
அனமே! குயிலே! ஆரமுதே!
இம்மா அலங்கல்‌ அரவணைமேல்‌ :
எழிலார்‌ திருக்கண்‌ வளர்ந்தருளும்‌
நம்மா தவனுக்கு அணிவதுஎன
நாடாய்‌ கொல்லோ! என்நினைந்தாய்‌? 156

அடியேன்‌ புரிந்த தவப்பயனால்‌
அமுதத்து எழுந்த திருமகள்போல்‌ கடியார்‌ துளவந்‌ .தனில்‌உ தித்தாய்‌/
காலி மேய்த்து வரைஎடுத்த
வடிஆ மியனும்‌ எனக்கு௨ன்னை
மகளாம்‌ என்னும்‌ வகைபுகன்‌ றான்‌;
படிமீது ஒருவர்‌ நிகர்‌இலைஎன்று ‘ .
இருந்தேன்‌; பெற்ற பயன்‌ இதுவோ? _ 157

புதனைப்‌ பயந்தோன்‌ நிகர்முகத்தாய்‌। –
புவியில்‌ பலவாம்‌ உயிர்பூப்ப
மதனைப்‌ பயந்த மாயவற்கு
வனைந்து கழிக்கும்‌ மருமாலை
– அதனைப்‌ புனைய லாம்யாம்‌;யாம்‌
அணிமா லைகள்‌அங்கு அவர்க்குஆமோ?
இதனைத்‌ தெளிய நினக்குஒருவர்‌
இயம்பக்‌ கேட்டும்‌ உணராயோ? 158

என்ன கருமம்‌ புரிந்தனை? இம்‌
முறையார்‌ இழைப்பர்‌? எவர்களுக்கும்‌
பன்னும்‌ அறிவு விளங்குமுறை
பகரும்‌ தகைமை உனக்குஉளதே!
துன்னு மதியும்‌ மமுங்கினைகொல்‌/
துலங்கா மதியார்க்கு ஒவ்வுசலாம்‌;
இன்ன புரிதல்‌ நின்போல்வார்க்கு
ஒவ்வா ஒவ்வா ஏந்திழையேர 158

மனங்குளிரச்‌ செய்தார்‌
இவ்வா றாக நன்மையொடும்‌
பலநன்‌ மொழிகள்‌ எடுத்துஇயம்பி
வெவ்வாட்‌ கண்கள்‌ ஒஓழுூடும்நீர்‌’
முத்தம்‌ துடைத்து விளம்பிஅவள்‌
ஒவ்வா மதியின்‌ முகம்தடவி
உச்சி மோத்திட்டு உறத்தழுவி
செவ்வே அவள்தன்‌ மனங்குளிரச்‌ செய்து மறித்துஇங்கு இதுசெய்வான்‌: 160

நந்த வனம்பேர்ய்‌ மீதியுள
‘நறுமா மலர்கள்‌ தனைஎடுத்து –
வந்து சிறந்த மாலைகளாய்‌
வகுத்துஅங்கு அதனைக்‌ கொடுசென்றே
சிந்தை கலங்கிக்‌ கொடியவிடங்
கரின்வாய்ச்‌ சக்கி யகப்பட்ட
தந்த மலைஅன்று அழைத்தபிரான்‌
தனக்குச்‌ சமர்ப்பித்து அகம்சார்ந்தான்‌, 161

திருமால்‌ கனவில்‌ கூறுதல்‌
அன்றை இரவில்‌ பெரியாழ்வார்‌
அமுதம்‌ பருகத்‌ இருவணைமேல்‌
சென்று மலர்க்கண்‌ வளர்பொழுதில்‌
. திருமால்‌ அவன்தன்‌ கனவினிடைத்‌
துன்றி யுததி யுடைபுவிமான்‌ நமக்குச்‌ சொலும்பா மாலையொடும்‌
மன்றல்‌ மாலை கயிங்குரியம்‌
வகுப்பான்‌ துளவின்‌ உற்பவித்தே;. 162

உனது மகளாய்‌ வளர்கின்‌.றாள்‌;
உவளும்‌ இந்நாள்‌ உவப்பினொடும்‌
தனது குழற்கண்‌ அணித்துநிழல்‌—ணாடி தனில்‌உணர்ந்து மனது மகிழ்விற்‌ கழித்தருள்பூ மாலை அதனை நீகொணர்ந்து
இனமும்‌ அளித்தாய்‌; அதுநறவம்‌
இகழ்ந்திட்டு அழகும்‌ சிறந்துளதால்‌. 162

அன்ன அழகார்‌ அலங்கலையாம்‌
அணிந்துஆ —
நென்ன லொடுஇன்று அவள்‌அணியா
வெறுமா லையினை நீகொணர்ந்தாய்‌!
இன்ன அலங்கல்‌: நனிநறவ
முடனே எழில்‌என்‌ பதுிறிதும்‌
துன்ன விலை;அங்கு அதனால்‌எம்‌ —
உ.ளமும்‌ உவப்புத்‌ தோன்றிலதால்‌. 164

ஆத லால்பின்‌ னாள்முதலாய்த்‌
தொடுக்கும்‌ அலங்கல்‌ தனைஎல்லாம்‌
தீதி லாநின்‌ திருமகளாய்த்‌
இகழ வளர்அம்‌ . புவிமாதாம்‌
கோதை குழலில்‌ அணிவித்துஆங்கு
அவள்பின்‌ கழித்துக்‌ கொடுக்கஅதை
நீதி உடையோய்‌! கொணர்ந்தளித்தி।
எனஆங்கு அதனை நிகழ்த்தினனால்‌. 165

அத்த கவின்‌அவ்‌ வில்லிபுத்தூர்‌
எனும்மா நகரின்‌ அமர்ந்துறைவோர்‌
சித்த. மகிழ்வை ணவரர்ச்ச
காதி யரசர்‌ முதலனைத்துக்‌
கொத்து தனக்கும்‌ பாலர்முதல்‌
குரவர்‌ ஈறாய்‌ யாவர்கட்கும்‌
குத்தப்‌ கனவில்‌ உணர்வகையாய்ச்‌
சாற்றித்‌ தன்துஆ லயம்சார்ந்தான்‌. 166

களையுற்று இரங்கு நள்ளிருளார்‌
்‌ இரவும்‌ துயிலும்‌ கழிந்துஅகல நினைவுற்று உணர்ந்து காலையின்வாய்‌
நியமம்‌ முடித்துஅங்கு எவர்களும்தம்‌
மனைவிட்டு எழுந்து வீதியின்வாய்‌
-வந்துஅன்று இரவில்‌ உணர்கனவு
தனையுற்று ஒருவர்‌ ஒருவரொடுஞ்‌ சாற்றி மிகஅற்‌ .புதம்‌அடைந்தே;. – 167

பெரியாழ்‌ வார்தன்‌ ம௫ூமையும்‌ஆங்கு
அவர்பெண்‌ கோதை மகத்துவமும்‌
தெரியாது இருந்தோம்‌ இந்தாள்வாய்‌; ்‌
தெரிந்தோம்‌ இன்றுஇங்கு இவர்தமைப்போல்‌
வரியார்‌ அரவின்‌ அணைமிசைகண்‌
வளரும்‌ Boar ரணன்பதங்கட்கு
உரியார்‌ யாவர்‌? என எவரும்‌ .
உவந்து போற்றித்‌ துஇசெய்தார்‌. 168

சூடிவழங்கினாள்‌ ‘சுந்தரக்கோதை
அந்நாள்‌ முதலாய்த்‌ தொடுத்திடும்பூ ்‌ ‘ அணியார்‌ அலங்கல்‌ தனைளஎல்லாம்‌ |
மூந்நாள்‌ தனைப்போல்‌ கோதைகுழல்‌
்‌ முடித்துக்‌ கழித்துக்‌ கொடுப்பஅதைப்‌
பொன்னாம்‌ மடந்தை ஒருபுறத்தும்‌
புவிமாது ஒருபா லினும்பொருந்தப்‌
பன்னா கணையில்‌ துயில்முகுந்தற்கு அணிந்தார்‌. அவரும்‌ பரிவடைந்தார்‌. 170

ஆடிக்‌ களிக்கும்‌ பணஅரவின்‌
அணைமாற்கு அணிபா மாலைதனைப்‌
பாடித்‌ தருமுன்‌ அணிஅலங்கல்‌
அணிந்தஇிட்டு அளித்த பரிசுஅதனால்‌
வாடி.த்‌ துவளும்‌ கொடியிடைசேர்‌
கோதை எனும்‌அம்‌ மடவாட்குச்‌
சூடிக்‌ கொடுத்தாள்‌ எனும்‌ஒருபேர்‌
அதுவும்‌ துலங்கப்‌ பொருந்தியதால்‌, 170

கோதை காதல்‌
(வேறு)
அம்மா. நகரில்‌ பெரியார்‌
மகளாய்‌ வளர்அம்‌ புவிமாது
இம்மா முறையில்‌ புகலும்‌
இருபே ரடனும்‌ வளர்நாள்‌
நம்மால்‌ நவிலற்கு அரிதாம்‌
பரம பத்தி நாளும்‌
விம்மா வரியை யணையும்‌
. பருவம்‌ உடன்மே விடலும்‌; 171

பாராய்‌ வானாய்‌ நரகாய்ப்‌:
பகரும்‌ பலவாம்‌ உயிரின்‌
வேராய்‌ முளையும்‌ வித்தாய்‌
விளைவிப்‌ பவனும்‌ தானாம்‌
நாரா யணனைத்‌ தழுவும்‌
வகையா தெனவே ஒருநாள்‌
சீரார்‌ உள்ளத்‌ தனில்‌அங்கு அவளும்‌ சந்இத்து உணர்வாள்‌. 172

அளகம்‌ தனில்யாம்‌ அணியும்‌
மணிபூந்‌ தொடையாம்‌ அதனைப்‌
புளகம்‌ முடனே அணிசெய்‌ க
அரவத்து அணையிற்‌ பொலியும்‌
களவின்‌ கனிவண்‌ ணனுமர்ச்‌
சாரூ பமதா கையினால்‌
இளகும்‌ மனதோடு அவரைப்‌
புணர்தற்‌ இசையா ததனால்‌; 173

இதனுக்கு இசையும்‌ படியாம்‌
்‌.. என்செய்‌ வோம்‌என்று உணர்கானள்‌
மதனிக்‌ குவில்கொண்டு எறியும்‌
.. மலர்ஐங்‌ கணைவந்து உருவ
விதனத்‌ நுடன்‌உற்‌ றிடும்‌௮அவ்‌
விரகம்‌ பலவும்‌ தனிநெஞ்சு
அதனுக்கு குள்ளே பிறர்கண்டு
அறியாது அடைவுற்‌ றனளால்‌. 174

உபாயம்‌ தேடல்‌
இருமா லினையாம்‌ அணையும்‌
செயல்யார்‌ புரிவார்‌? என;௮ப்‌
பெருமா நகர்வாய்‌ மடவார்‌
அவரிற்‌ பெரியா ராகி
வருகா ரணமும்‌ நிகழ்‌ அவ்‌
வகையும்‌ செலும்கா ரியமும்‌
அருகாய்‌ கண்டுஉற்‌ றவர்போல்‌ அறைவார்‌ தம்மைத்‌ துடரா; 175

அவரோடு இவளும்‌ மகிழ்வாய்‌,
அம்மா நீவிர்‌ .புவிமேல்‌
துவர்வாய்‌ மடவார்‌ உருவாய்த்‌
தோன்றுற்‌ றவர்கள்‌ தம்மில்‌
எவரா யினுமுன்‌ னொருவர்‌
இறைவா யரவிற்‌ றுயிலும்‌
உவரா மியின்வண்‌ ணரினோடு
உறவாய்க்‌ கலந்தார்‌ உண்டோ? 176

உண்டாம்‌ .எனில்‌இங்கு என்னோடு
ஓளியாது உளவா றுங்கண்‌
— அதையும்‌ அலது
காதில்‌ கேள்வி தனையும்‌
வண்டார்‌ குழலீர்‌, பகர்வீர்‌.
எனவே .கோதை மடவாள்‌
தண்டா மரைநேர்‌ வதனம்‌
கவினச்‌ சாற்று தலுமே; 177

திருப்பாவை உதயம்‌
அம்மா! கோதாய்‌!/ கேளென்று
அறியும்‌ கதையாம்‌ எனவே
தம்மா மனம்‌இன்‌ புறவங்கு
அவர்தாம்‌ இதுசாற்‌ றுவரால்‌:
எம்மா உலகும்‌ புகழ்‌ஆய்ப்‌
பாடி எனுமா நகரில்‌
நம்மால்‌ கண்ணன்‌ எனவே
நந்தன்‌ மனையில்‌ வளர்நாள்‌; 178

அனம்‌ஓத்து இளமா நடை-சேர்‌
ஆயக்‌ குலமா மடவார்‌
கனம்‌ஓத்து இருள்‌௮ங்‌ குழலும்‌ கலையும்‌ கலையச்‌ சயிலத்‌
துனம்‌ஓத்து அணிமார்பு இறுகக்‌, ‘
கரமா மலரில்‌ தழுவி
மனம்‌ஓத்து அவரைக்‌ கலவா
மருவிற்று உண்டுஎன்‌ றனரால்‌. 179

கோதையின்‌ ஏக்கம்‌
என்றுஅங்கு அவர்சொன்‌ மொழிவந்து
இருசெஞ்‌ செவியில்‌ குறுக
மன்றல்‌ கமழும்‌: குழலங்‌
கோதை மனது மகிழ்வாய்‌
அன்றங்கு அவர்கள்‌ புரியும்‌
விரதம்‌ என்னோ? அதனால்‌
குன்றம்‌ குடைகோ வலனைக்‌
கூடிச்‌ சேர்ந்தார்‌ கொல்லோ? ்‌ 180

. என்னோ? அதனை இனதுஎன்று
எளிதா நெஞ்சே! உணரேம்‌;
அன்னாள்‌ தனில்‌ஆய்ப்‌ பாடி
அதனுள்‌ பிறவாது ஒழிந்தேம்‌;
பொன்னாள்‌ அணையும்‌ புனிதன்‌
நமைஓர்‌ பொருளாய்‌ நினையா
இந்நாள்‌ தனில்‌ஓர்‌ உருவம்‌
எடுக்கும்‌ தகவுஎய்‌ இடுமோ? | ்‌ 181.

நந்தன்‌ மனையா ஞூடனே-:
நயனம்‌ மகிழ்வுஎய்‌ துறவே
அந்தத்‌ திருவாய்ப்‌ பாடி அதனில்‌ கண்ணன்‌ எனவே
வந்துஅத்‌ திருநா ரணனும்‌ வளரும்‌ அந்நாள்‌ தன்னில்‌
இந்தப்‌ புவி௮ங்கு அவர்தம்‌
இருதாள்‌ மிதிபட்‌ டுளதால்‌. 182

மெருகுற்‌ றுளஅந்‌ நிலமும்‌ மேகம்‌ பொழிகல்‌ மழையால்‌
விருகத்‌ இனமோ டிடையர்‌
மிகவும்‌ தளர்வுற்று அலறப்‌
பரிவுற்‌ றவர்கை விரலிற்‌
படியும்‌ படிகொண்டு அழகாய்‌
தரிபொற்‌ குடைஓத்து ஒளிரும்‌
கோவர்த்‌ தனமா வரையும்‌; 183

மண்ணார்‌ அளகம்‌ குதிகால்‌
மருவப்‌ பெருகி வளர்‌ஆயப்ப்‌
பெண்ணார்‌ அமுதம்‌ அனையார்‌
உடனே காமம்‌ பெருகப்‌
பண்ணார்‌ குழலார்‌ மருவிப்‌
பரிவின்‌ விளையா டிடும்‌அத்‌
தண்ணார்‌ புனலின்‌ மணியார்‌
எமூனா நதஇித்தண்‌ கரையும்‌; 184

மற்றும்‌ விளையாட்‌ ‘ட்வர்செய்‌
வகையால்‌ அமைமற்‌ றதுவும்‌
a. Hong ஒளிரும்‌ அதனால்‌
உளதாம்‌ பலவும்‌ காணப்‌
பெற்றுஅங்கு உறுவா னுளமுள்‌
பெருகும்‌ காதல்‌ வளரா
இற்றைப்‌ பொழுதே’ அடைவேம்‌
எனவே அவளுற்‌ றெழலும்‌; : ்‌ 185

கவசத்‌ தொடுகுண்‌ டலம்நல்‌
தருமங்‌ சுவருங்‌. கருடத்‌
துவசத்‌ தனன்மீது அமையும்‌
– விரகத்து எழுவெந்‌ துயரால்‌
அவசத்‌ துடனே. யுடலம்‌
அயர்வாய்‌ கைகா லவைதன்‌
சுவசப்‌ படலுற்‌ நிலதாய்ச்‌
சோர்வுற்று அவண்தின்‌ றனளால்‌. 186

நின்றாள்‌ நிலமீது அசையா
நிலைபெற்‌ – நிடும்‌ஓ வியமாய்‌
தன்றாள்‌ தரைபா .வாமற்‌
; றளர்வா யசைவுற்‌ றுளமுள்‌
துன்றா விதனம்‌ துன்றக்‌
கனலில்‌ துவள்பூங்‌ கொடிபோல்‌
குன்றா உடலம்‌ குன்றக்‌ குறியா இவைஉன்‌ னுவளால்‌. 187

**இனி, அவன்‌
உலாவிப்‌ போன அடிச்சுவடும்‌, அவனும்‌ பெண்களுமாகத்‌ திளைத்த யமுதையும்‌,
“அவன்‌ எடுத்த கோவர்த்தனமும்‌ கிடைத்ததாகில்‌, அவற்றைக்‌ கண்டாலும்‌ ‘தரிப்போம்‌ என்று பார்க்க” என்ற திருப்பாவை வியாக்கியான அவதாரிகை

கோதை நினைவு
கனகம்‌ மணியால்‌ அமையும்‌
கனமார்‌ மதில்கசுழ்‌ மிதிலைச்‌
சனகன்‌ மடமா மகளாம்‌
சனிப்‌ பெயர்சேர்‌ திருவும்‌
பனகம்‌ துயில்விட்டு அணிரா
கவனாய்ப்‌ படியில்‌ வரும்‌௮வ்‌
:- அனகன்‌ தனைக்கண்‌ டமையா
விரகம்‌ அதுகொண் டனளால்‌. 188

தனதத்‌ தனுரைப்‌ படிபோற்‌ சயிலத்‌ தினைஒத்து ஒளிரும்‌ கனவில்‌ தனையம்‌ புயம்நேர்‌
கைக்கொண் டணிதோள்‌ வலியால்‌
குனிவிடுத்‌ திடுபின்‌ பவரைக்‌
கூடுஞ்‌ செயலுண்‌ டெனவே
– மனதில்‌ துணிவாய்‌ தயிர்யம்‌
வைத்தங்கு உற்றா என்றே. 189

பொன்னைத்‌ தழுவும்‌ புனீதன்‌
புவியில்‌ கண்ணன்‌ எனவே
முன்னைப்‌ பகலின்‌ வருநாள்‌
காணா விரகம்‌ முடுகும்‌ பின்னைப்‌ பெயர்கொண்‌ .டிடும்‌௮ப்‌
பிராட்டி தனையே மிடபம்‌’:
தன்னைத்‌ தழுவி அடக்கித்‌ தழுவும்‌ திறம்‌உற்‌ றனளால்‌. ட… 190

உள்ளஞ்‌ சோர்ந்தாள்‌
நாம்என்‌ வலிமை அதனால்‌
நணுகுற்‌ நிடவே கொடிய
“காமன்‌ புரியும்‌ விரகம்‌
களைவோம்‌? எனவே மனதுள்‌
காமம்‌ துடர்வா ரவர்போல்‌
.உரையாது அதனை அடையாத்‌
தாமம்‌ கமழும்‌ குழலாள்‌
தளர்வாய்‌ உள்ளஞ்‌ சோர்ந்தாள்‌: 191

சோர்வுஉற்‌் றிடும்‌௮அங்கு அவள்தன்‌
மனதுள்‌ துடர்பைக்‌ குறியால்‌
தேர்வுஉற்று உணரா இவரில்‌
பலவும்‌ தெரியும்‌ பெரியாள்‌
நீர்வற்று இளமைப்‌ பயிரில்‌
நிறைகார்‌ பொழிகின்‌ றதுபோல்‌
ஆர்வத்‌ துடன்‌இம்‌ மொழியை அவள்தே நிடஅங்கு அறைவாள்‌: 192

ராஜன்‌ திருமகளைப்‌ போல வில்‌” என்று ஒரு அவதி பெறுதல்‌; நப்பின்னைப்‌
பிராட்டியைப்‌ போலே ‘ரிஷபங்கள்‌” என்ற ஒரு அவதி பெறுதல்‌ செய்யப்பெறாமை
யாலே மிகவும்‌ தளர்ந்து” என்ற திருப்பாவையின்‌ அ௮வதாரிகை

(வேறு)
முன்னர்நாள்‌ தன்னில்‌ கோவியர்‌ பலரும்‌
முயன்றுள விரதமும்‌ அதனைத்‌
” துன்னுமாறு இழைக்க விடுத்தகா ரணமும்‌
சூழ்ந்ததற்கு அவர்கள்செய்‌ உபாயம்‌
தன்னையும்‌ இவ்வாறு. எனத்தெளி வுறஅச்‌
சரிதங்கள்‌ நடந்துள படியே
பன்னுவன்‌ அதனைச்‌ செண்பகக்‌ கோதாய்‌/
பரிவொடுங்‌ கேட்டுஉளம்‌ உணர்வாய்‌. 193

கோவியர்‌ காதல்‌ நோன்பு
விரிகடல்‌ உடையாய்‌ அணியும்‌அம்‌ புவியாம்‌
மின்‌அனாள்‌ பரம்தொலைத்‌ தஇிடுவான்‌
.வரிஅர வணையில்‌ துயிலும்நா ரணனும்‌
கண்ணனாய்‌ வளரும்‌அந்‌ நாள்வாய்‌
பரிவொடும்‌ அவன்தன்‌ விரியுரம்‌ அதனைப்‌
பாடிவாழ்‌ கோவியர்‌ பலரும்‌
சரிகரம்‌ அதனால்‌ இறுகுற முலையில்‌
தழுவியே அனுபவித்‌ திருந்தார்‌. 194

விரி உரம்‌ – விரித்த மார்பு.
சரிசுரம்‌ – வளையல்‌ அணிந்த கை. “அங்கைச்‌ சரிவளையும்‌ நாணும்‌” என்பர்‌ பெரி
யாழ்வார்‌.

கமுதுயர்‌ முலைகொள்‌ விடமுடன்‌ அருந்தும்‌
கண்ணனைத்‌ தம்துமா மடவார்‌
தழுவுமாறு அவர்தாம்‌ நடந்துள குறிப்பின்‌
சாயலால்‌ உணர்ந்தகோ பாலர்‌
இழுதுஎன உருகா .இவர்புரி வதுதநம்‌
குலம்தனக்கு ஓக்குமாறு அலதாம்‌
பழுதுறும்‌ பிறர்தாம்‌ உணர்ந்துிடில்‌ எனவே
்‌ பதைபதைத்து உளமுற நினைந்தார்‌. 195

அவ்ர்கள்‌ என்கொல்யாம்‌ இதற்கும்‌
நிரப்புவது எனஒரு விதமாய்‌
அனையமா மடவார்‌. தமையெலாம்‌ அங்கங்கு
அவரவர்‌ அணுகும்‌ஓர்‌ பகலில்‌
தினையளவு உறும்‌௮ப்‌ பொழுதெனும்‌ பிறர்பால்‌
செல்லொணா வகையதாய்த்‌ தத்தம்‌
மனையிடைப்‌ பதன மாக்கஅ௮க்‌ கண்ணன்‌
மருவுறா வகையின்வைத்‌ தனரால்‌. ” 196

வைத்தபோது அந்த மடந்தையர்‌ காமம்‌
மருவுறு பருவநாண்‌ முதலாய்ச்‌
சித்தசன்‌ கணையுள்‌ ளஎகப்படா வண்ணம்‌
சேர்ந்துதம்‌ கொவ்வைவா யமுதம்‌
நித்தமும்‌ அருந்துங்‌ கண்ணனை அந்நாள்‌
‘நெருங்குறா வகையில்தம்‌ உள்ளம்‌ * –
பித்தரின்‌ மயங்கிப்‌ புரிகல்தோன்‌ மல்‌ பெருந்துயர்க்‌ கடல்‌உழந்‌ தனரால்‌. — 197

எண்ணரும்‌’ துயர்கொண் டிடுமட வார்்‌அ௮ம்‌
எழிலிபோல்‌ நிறக்கண்ண னஸார்தம்‌.
வண்ணமா முகமண்‌ டலத்தின தழகும்‌
மங்கலக்‌ குணஅதி சயமும்‌
பண்ணமை குழல்சேர்‌ பவளவாய்‌ ஒளியும்‌
பாங்குடன்‌ உற்றனு பவித்துக்‌
கண்ணினால்‌ காண்பது என்றுகொல்‌ எனவே
கருத்துற நினையும்‌ அக்காலை; 198

ஆங்குஅவர்‌ பலரும்‌ ஒருதினம்‌ பிறர்தாம்‌
அறிவுறாது ஓர்‌இடத்து அணுகி
ஈங்குஇதற்கு யாம்‌என்‌ செய்திட லாம்‌என்று
எண்ணுறும்‌ தத்தம துணர்வைப்‌
பாங்குற ஒருவர்‌ ஒருவரொடு உரைத்து
வினவும்‌அப்‌ பரிசுஉணர்தந்‌ தவரில்‌
தீங்கிலாள்‌ ஒருத்தி மற்றவர்‌ தமக்குத்‌ தெரியவோர்‌ உபாயம்செப்‌ புவளால்‌: 199

கொம்மைமா முலையீர்‌। சகடுஇற உதைத்துச்‌
குன்‌. றினால்‌: கல்மழை தடுத்து
வெம்மைசேர்‌ பாந்தள்‌ பணமிசை நடித்து
வெவ்விடப்‌ பேய்முலை அருந்தி
நம்மைஆ ஞடைய தகைமையிற்‌ பெருகும்‌
நந்தகோ பன்இரு மகனை
மும்மையாம்‌ உலகும்‌ ஈன்றுகாத்‌ தழிக்கும்‌
மூவர்க்கும்‌ முதல்வனே. எனலாம்‌. 200

ஆதலால்‌ அவனால்‌ அமைகலாக்‌ கருமம்‌ —
யாதொன்றும்‌ இலை;அவன்‌ அருளால்‌
பூதலம்‌ அதன்மேல்‌ சிலபகல்‌ வானம்‌
பொழிகிலாது அமையுமாறு உஞற்றில்‌
சீதளம்‌ அடங்கி வெம்மைமேல்‌ எழுந்து
செழிப்பெலாம்‌ தீய்ந்தழிந்து ஒடுங்கும்‌;
போதவா ஸிரைநொந்‌ தருந்துநீ ரொடுமேய்‌
புல்லுமற்‌ றல்லல்‌எய்‌ துறுமால்‌. 201

அத்தகவு அமையின்‌ இத்திரு நகரத்து
அணுகுறும்‌ தலைவர்கள்‌ பலரும்‌
சித்தம்நொந்‌ தவராய்‌ நமதுஇடத்து அணுத்‌ திருந்துநல்‌ லுரைபல புகன்று கத்தினம்‌ செழியு மாறுவான்‌ பொழியக்‌
கவின்பெறு வருணநோன்பு அதனை
ஒத்துஇழைத்‌ திடுமின்‌ எனஉரைத்‌ திடுவார்‌
அதற்குநாம்‌ ஓத்துளோம்‌; ஆனால்‌, . 202

“அனையமா, விரதம்‌ வழுவுறாது உளுற்றல்‌
அன்றுஇளங்‌ கன்றினைச்‌ சுழற்றி
நனைவிளா எறிந்த கண்ணனை அலது
நடந்திடாது ஆதலி னாலே
இனையவ ரொடுசென்‌ றனையகா ரியம்நீ
முடித்திட வேண்டும்‌என்று அன்னான்‌
தனையவர்‌ (வேண்டி நல்லுரை புகன்று : தம்முடன்‌ சார்கென விடுப்பார்‌. .203

விடுத்திடில்‌ அவனோடு அடைந்துஉரை செயும்‌அவ்‌
விரதமும்‌ வழுவுறாது இயற்றித்‌ தொடுத்தஎண்‌ -ணமும்நாம்‌ முடிக்கலாம்‌ எனஅத்‌
தோகையாள்‌ உரைத்தல்கேட்டு அதனுக்கு
அடுத்ததன்‌ மையைநீ உரைத்தனை எனஆங்கு
அனைவரும்‌ அவள்தனைப்‌ புகழா
எடுத்தபே ௬வகைக்‌ கடல்படிந்‌ தவராய்‌
இன்னதே முடித்தும்‌என்று இசைந்தே; 204

அனநடை மடவார்‌ அனைவரும்‌ ஒருமித்து
அலர்க்கரம்‌ குவித்துநீர்‌ அருந்துங்‌
கனநிற வணம்சேர்‌ கண்ண[இந்‌ நாட்டில்‌
கலந்துகார்‌ மழைபொழிந்‌ இடுது;
நினதுபே ரருளால்‌ சில்பகல்‌ பொழியாது ஒழித்திட நீசெய்க! என்றே மனதுற நினைந்து துதிசெய்து தத்தம்‌ மனைதனிற்‌ கலந்துஉறைந்‌ திருந்தார்‌. . 205

கண்ணனும்‌ அருளார்‌ இதயமா மலருள்‌
கனதனக்‌ கொடியிடைத்‌ துவர்வாய்‌
பண்ணமை இளஞ்சொற்‌ கிளிஅன மடவார்‌
பரிவொடும்‌ தனதுதாள்‌ மலரை
எண்ணிவேண்‌ டுறும்‌௮வ்‌ வாறுஉணர்ந்‌ தருளி
இனிதொடும்‌ ஆங்குஅவர்‌ குறித்த
வண்ணம்‌அந்‌ நாட்டில்‌ சலபகல்‌ வானம்‌ ்‌
வழங்கிடா வகைபுரிந்‌ தனனால்‌, 206

மழையிலாது ஒழியப்‌ பெருகும்‌௮க்‌ குளங்கள்‌
மருவுநீர்‌ சுவறியே பசும்புல்‌
கதுழைவிலாது எரிந்து. விடுதலால்‌ நிரைகள்‌
தயங்கட இவ்வகை யுறும்‌அப்‌
பிழைஎனோ எனத்தம்‌ முள்ளம்‌ ஊடு எழுந்து
பெருகுறுந்‌ துயர்‌ அடைந்‌ தவராய்‌
குழையுறு செவிநந்‌ தனேமுத லாகும்‌ , கோவலர்‌ பலர்களும்‌ குறித்தே; 207

குறைவிலாது எவர்க்கும்‌ நிறையமா தானம்‌
கொடுத்தும்வான்‌ பொழிகிலாது ஆக
மறையவர்‌ இணை௮ம்‌ . புயமல ரடியை
“வணங்கியே பின்னரும்‌ .அவர்‌இம்‌
முறைமழை யிலதாய்‌ ஒழிந்ததுஎன்‌? இதற்குயாம்‌
முயல்வதுஎன்‌? ,மொழிகுமின்‌ எனவாங்கு
அறைதலும்‌ அதனைக்‌ கேட்டுறும்‌ அவர்கள்‌
அரியநூல்‌ முறைஎடுத்து அறைவார்‌. 208

சேட்டுறு மதிநேர்‌ திருமுகம்‌ உடையீர்‌
இனகரன்‌ .முதலிய ஒன்பான்‌
கோள்தவ றுதலால்‌ வக்கிரித்‌ இடலால்‌
குவலயம்‌ அதன்மிசைக்‌ குறியின்‌
நாட்டிடை வானம்‌ பொழிந்திடாது எவரும்‌
நலம்பெற மழைபொழி வதனுக்கு
ஈட்டுறும்‌ முறையும்‌ இயம்புதும்‌ கேண்மின்‌
என்னமீண்டு இவைஎடுத்து இசைப்பார்‌; 209

வாட்டொழில்‌ நெடுங்கண்‌ மடந்தையர்‌ எனஇம்‌
மாநகர்‌ மருவுவோர்‌ பலரும்‌ ்‌
கூட்டமுற்று எமுனா நதிக்கரை அருகில்‌
வருணனைக்‌ குறித்துஒரு விரதம்‌ சூட்டுறு மலரின்‌ அருச்சனை முதலாம்‌
சோடச உபசரிப்‌ புடனே
நாட்டிய முறையின்‌ வழுவுறாது இழைக்கில்‌
நல்லன மழைபொழிந்‌ திடுமால்‌. 210

அவ்விர தத்த உளஞற்றிடாது ஒழியில்‌ அகல்விசும்‌ படைந்துகார்‌ முகில்கள்‌
எவ்விதத்‌ தேனும்‌ ஓர்துளி வழங்காது
ஆயிடும்‌; இழைக்கும்‌ஆங்கு அதனுக்கு
ஓவ்வுறும்‌ உபசா ரம்புரி குதலில்‌
ஒன்றெனும்‌ வழுவுதல்‌ உறினோ
இவ்வுலகத்தின்‌ மழைத்துளி என்பது
இலாமையாய்‌ முடிந்திடும்‌; இன்னும்‌, 211

ததியுறு மணலுள்‌ பெருகுநீர்‌ அதுவும்‌ நண்ணுறாது ஒழிவதும்‌ அல்லால்‌
பதியுறு கணற்றுள்‌ உறும்சிறு புனலும்‌ பலித்திடா; அழல்கொளும்‌; அதனால்‌
சதிர்பெறும்‌ அந்நோன்‌ பினுக்கு௨று பொருள்கள்‌
தருவித்துப்‌ பராமரித்‌ இடற்கு மதியுறும்‌ சர்வக்‌ கியர்‌இருந்து அதில்‌ஓர்‌
வழுவுறாது இயற்றவேண்‌ டிடுமால்‌. 212

ஆதலால்‌ இவ்வாறு இழைமின்‌என்று அவர்கள்‌
அறைதலும்‌ ஆயர்கள்‌ பலரும்‌
ஓதும்‌௮வ்‌ வாறே புரிகுதும்‌ எனஉள்‌
உவப்பொடும்‌ விரைவினோடு எழுந்து
தீதிலா எமுனைக்‌ கரையின்‌ஒர்‌ சாலை
செய்வித்துஅங்கு அகனிடைத்‌ தமது
மாதர்க ளானோர்‌ தமையெலாம்‌ நீர்போய்‌
மருவுமீன்‌ எனவகுத்‌ துரைத்தார்‌. 213

அவ்வகை அவர்போய்‌ அடைந்தபின்பு அவர்கள்‌
அவ்விர தந்தனை வழுவாது
ஒவ்வுறப்‌ புரிவிப்‌ பவர்கள்யா ரெனஆங்கு ட
ஒருவரை யொருவர்கள்‌ வினவி .
எவ்வகை யவற்கு மொவ்வொரு செயலால்‌
இயைவுறா தெனவுநம்‌ மிறையாஞ்‌
செவ்விசேர்‌ நந்த குமரனால்‌ முடியும்‌
என்னவும்‌ சிந்தைசெய்‌ தவராய்‌; 214

‘கண்ணனை வருவித்து அந்தணர்‌. புகன்ற
. காரணம்‌ பலவும்‌ஓர்ந்‌ தனையால்‌
பண்ணுறு .மொழிநம்‌ பாவையர்‌ பலரும்‌
பரிவொடு புரியும்நோன்பு அதனுக்கு
எண்ணரும்‌ பொருள்கள்‌ யாவையும்‌ வருவித்து
ஈந்துஒரு முறையினும்‌- வழுவா
வண்ணம்நீ நிறைவேற்று; ஆங்குஅடைந்து எனஉள்‌”
மகிழ்வொடும்‌ வகுத்துஉரைத்‌ தனரால்‌. 215

அம்மொழி பலவும்‌ இருசெவி உறவந்து
அணுகலும்‌ ஆங்குஇடங்‌ கொள்ளா
விம்முறும்‌ உவகைக்‌ கடலைஓர்‌ கரைசெய்‌
விதம்பெற அகத்தினுள்‌ அடக்கி
இம்மொழி களைஇங்கு என்னொடு நீவிர்‌
இசைத்தது நன்றுநன்று எனவே செம்மனம்‌ அதனில்‌ சனம்கொளும்‌ அவர்போல்‌
சிலமொழி தெரித்திடல்‌ ஆனான்‌. 216

முன்னர்நாள்‌ தனில்‌ஒர்‌ களங்கமாம்‌ அதனை
மொழிதந்திடற்கு இடமிலா உமது
கன்னிய ரொடுயான்‌ கலந்துபே Au gave
பழியுரை கழறியும்‌ மனைவாய்‌
அன்னமா மடவார்‌ தமைநில வறையுள்‌
அடைத்துவைத்‌ திருந்துவந்து இத்நாள்‌ இன்னமா மொழிகள்‌ இயம்பினீர்‌ இதனுக்கு
இயைகிலன்‌ எனஎழுந்து அகன்றான்‌. 217

அகன்நிடு பொழுதுஅவ்‌ வாயர்கள்‌ பலரும்‌
அருந்ததி நிகர்‌அசோ தையின்சர்‌
மகன்தனை விரைவில்‌ பின்துடர்ந்து ஓடி
வழிமறித்து அறிவிலாது அத்நாள்‌ புகன்றுள எமது கொடியமா வசையாம்‌
பொய்மொழி யானவை பலவும்‌
மிகுந்திடும்‌ புகழோய்‌ உளந்தனில்‌ பொறுத்தல்‌
வேண்டும்‌என்று உபசரித்‌ தவராய்‌; 218

அய்ய[ என்பவரும்‌; அத்த! என்பவரும்‌;
அருந்தெய்வ மே([எனும்‌ அவரும்‌;
துய்யபங்‌ கயத்தா எளினைவரு டுவரும்‌;
துணைக்கர மலர்பிடிப்‌ பவரும்‌;
. செய்யமோக்‌. கட்டை தனைப்பிடிப்‌ பவரும்‌;
செழுங்கரம்‌ குவித்துவேண்‌ டுவரும்‌;
வையமீது எதிர்வீழ்‌ பவரும்‌ஆ யினர்‌அவ்‌
வகைஎடுத்து உரைக்குமாறு இலதால்‌: 219

இத்தகை பலவாய்‌ வருந்திஆங்கு அவர்கள்‌:
யாவரும்‌ அந்தணர்‌ உரைத்த : ்‌
அத்தகை விரதம்‌ தனைவழு வாமல்‌ .i
அமைத்திட வேண்டும்நீ எனவே ்‌
சத்தமது இரங்கி உரைத்தல்கேட்‌ டரூளிச்‌
‘சிறுநகை நிலவுஎழ அதனுக்கு ஓத்துஉளம்‌ மகிழ்வாய்‌ எமுனையின்‌ கரைபோய்‌
உற்றனன்‌ புற்றுஅரா அணையான்‌. ்‌ 220

ஆங்குஅடைந்து அந்நோன்பு அதற்குவேண்‌ டுவதாம்‌ அரும்பொருள்‌ குறைவிலாது யாவும்‌
பாங்குற வருவித்து அவர்களால்‌ இயற்றும்‌
பரிசெலாம்‌ முறைவழு விலதாய்‌
தேங்குழல்‌ மடவார்‌ செங்கரம்‌ அதனில்‌
திருந்து றப்‌ புரிமுறை கதிரோன்‌ வீங்குநீர்‌ மேல்பாற்‌ கடலிடை மருவி
வீழுறும்‌ அளவும்‌ஆங்கு இயற்றி;–221

நள்ளிருள்‌ அடையும்‌ காலையில்‌ எழுந்துஅந்‌
நதிக்கரை இசையுநல்‌ லிடத்துஅக்‌
கள்ளவிழ்‌ மலர்ப்பூங்‌ குழலினர்‌ பலர்க்கும்‌
ஒவ்வொரு கணவனாய்‌ அவரோடு
உள்ளம்‌ஓத்து அணையா அவர்கள்வா ‘ யிதழ்த்தேன்‌
உண்டுஉழன்று: அழுந்திய காம
வெள்ளம்நீத்து அர்த்த ராவினில்‌ தத்தம்‌
வீடுஅணைந்து உண்டுஉறங்‌ குவரால்‌. 222

மற்றநாண்‌ முதல்‌அவ்‌ வாறதாய்‌ நந்தன்‌
மகனொடும்‌ பாடியின்‌ மருவும்‌
பொற்றொடி மகளிர்‌ பலரும்‌ஆங்கு ஒருவர்‌
ஒருவரை புரிதுயில்‌ உணர்த்தி
நற்றுரை யமுனா நதிக்கரை அணு
‘நலம்புரி நோன்டையும்‌ நடத்தி
உற்றமை காமக்‌ களிநற வருந்தி
யூர்புகுந்து அணிமனை உறைவார்‌. 223

. இந்தநன்‌ முறையே பலதினம்‌ அவர்கள்‌
இனி9தொாடும்‌ கண்ணனை அணைந்தார்‌;
அந்தநன்‌ னாட்டின்‌ வானமும்‌. பொழிந்திட்டு
ஆனினங்‌ களும்செழித்‌ துளதால்‌;
முந்துநாள்‌ நடந்த செயல்கள்‌இம்‌ முறையாம்‌;
முழுமதி நிகர்முகக்‌ கோதாய்‌[
சிந்தையூடு உணர்து என்னஅ௮ம்‌ மடவாள்‌ தெரிதரப்‌ புகன்றனள்‌ மாதோ. : . 224

பாவை நோன்பு
(வேறு)
கேட்டவம்‌ மயிலின்‌ சாயல்‌
கஇளிமொழி மடவாள்‌ தானும்‌
வாட்டமுற்று உளத்தி னூடு மகிழ்சிறந்‌ தோங்க அவ்வா
.மீட்டுதும்‌ யாமும்‌ என்றாங்கு
அவள்்‌இணை அடிகள்‌ ஏத்தி
வீட்டகம்‌ தன்னில்‌ சென்றோர்‌ தி
வினையமது இழைக்க லுற்றாள்‌. 225

ந்ண்ணுசர்‌ புதுவை என்னும்‌
நகரம்‌ஆய்ப்‌ பாடி யாயும்‌
வண்ணமா மணிகள்‌ ஆர்ந்த
வடபெருங்‌ கோயில்‌ தானே
விண்ணவர்‌ புகழும்‌ நந்தன்‌ \
வீடதாய்க்‌ கோவி லின்மால்‌
கண்ணனாம்‌ எனவும்‌ தன்சீர்‌ கருத்துளே திருத்தி; பின்னும்‌, 226

ஸ்ரீ வில்லிபுத்தாரே ஆயர்பாடியாகவும்‌, அங்குள்ள பெண்களே
இடைப்‌ பெண்களாசவும்‌, தானும்‌ அவர்களில்‌ ஒருத்தியாகவும்‌, வடபெருவ்‌
கோவிலே ஸ்ரீ நந்தர்கோன்‌ தஇிருமாளிகையாகவும்‌, உள்ளே நிற்ன்றவன்‌
இருஷ்ணனாகவும்‌ அனுசந்தித்து’* என்ற திருப்பாவை வியாக்கியானம்‌

*சீர்‌ புதுவை ஆயர்பாடியாகவும்‌, வடபெருங்கோவில்‌ நந்தன்‌ வீடாகவும்‌, அக்‌
கோவில்‌ மால்‌ சண்ணன்‌ ஆகவும்‌, தோழப்‌ பூவையர்‌ கோபாலர்‌ மகளிராகவும்‌,
தான்‌ அவர்களில்‌ ஒருத்தியாகவும்‌ பாவித்து, அம்‌ மடந்தையர்களை எழுப்புவ
தாகவும்‌ கருஇத்‌ இருப்பாவையைத்‌ திருவாய்மலர்ந்தருளினார்‌”-.. **அண்டர்‌
இருவாய்ப்பாடியாய்‌’” என்று தொடங்கும்‌ ஆண்டாள்‌ பிள்ளைத்தமிழ்‌

புனைமலர்க்‌ குழல்சேர்‌ தோழப்‌
பூவையர்‌ புகழ்கோ பாலர்‌
மனைவிய ராயும்‌ அம்மா
மடந்தையர்‌ தங்கட்‌ குள்ளாய்‌
தனைநிகர்‌ தான்‌௮ லாதாள்‌
தானும்‌ஓர்‌ மடந்தை யாயும்‌
இனையவாம்‌ தன்மை யாக
நியமித்துஇங்கு இனிதி னோடும்‌; 227

அப்பெரு மடவார்‌ தம்மை
அருந்துயில்‌ உணர்த்தல்‌ போலும்‌
செப்பரு வருண நோன்பு
செய்தபா வனைய தாயும்‌
இப்புவி தணிய வானம்‌
வழங்கிய தெனவும்‌ பாவை
முப்பது கவிதைத்‌ தந்தேன்‌ தமிழினால்‌ மொழிந்தா என்றே, 228

ஏழிரு புவனத்‌ துள்ளும்‌ இணையில்செந்‌ தமிழின்‌ பாவை
வாழிய உரைத்தும்‌ அண்டம்‌
அனைத்தையும்‌ வயிற்றுள்‌ வைத்து
ஊழிகள்‌ பற்பல்‌ கோடி
உலப்பிலாது உறங்கும்‌ செங்கேழ்‌
ஆழிமா யவனும்‌ இன்புற்று அணுகிடா முறைமை தன்னால்‌; 229

நாச்சியார்‌ திருமொழி நவின்றது
சித்தசன்‌ தன்னை யன்னாள்‌ இருந்துறப்‌ போற்றி செய்து பைத்தலைப்‌ பணியின்‌ வாழும்‌
பரமனை யடியேன்‌ தன்னோ
டொத்துவாழ்ந்‌ திடுமா றாக
வுனதுகைக்‌ கருப்பு வில்லில்‌
வைத்தபூங்‌ கணையே வென்னா
வழங்கெள்‌ கவீதை மாதோ, ‘ 230

“வித்தக வேங்கடவாணன்‌ விளக்கினிற்‌ புக என்னை விதிக்கித்‌ நியே’* என்ற நாச்சியார்‌ மொழியை நோக்குக (பதிகம்‌ — தையொருஇங்களும்‌).
வேதாந்த தே௫கர்‌ சங்கற்ப சூர்யோதயத்தின்‌ தொடச்சகத்‌இல்‌, “quant dada
ஜீவாத்மா என்ற அம்பைத்‌ தொடுத்துத்‌ திருமால்‌ என்கின்ற குறிபார்த்து ஒருவன்‌
வில்லாளியின்‌ நிலையில்‌ இருந்து எய்தால்‌ அந்த ஜீவன்‌ அவன்‌ இருமார்பில்‌
கெளவுத்துவம்‌ போல்‌ விளங்குவான்‌”’ என்றது அனுசத்திக்க வேண்டும்‌. இதுவே
தையொருஇங்களின்‌ உள்ளுறை.

ஆங்கணவ்‌ வாற தாக
அனங்களை வேண்‌ டலாகப்‌
பாங்குறு கவிகள்‌ தம்மைப்‌
பாடலு மதனைக்‌ கேளாப்‌ பூங்கழல்‌ திருமால்‌ தானும்‌
புவீமிசை விரைவின்‌ வந்தே
தேங்கமழ்‌ குழலி னாட்குச்‌
சேவைதந்து அருளி னானால்‌, 231

அன்னமால்‌ அடைந்து சேவை
அளித்தலும்‌ ௮ன்னம்‌ அன்னாள்‌
இன்னதோ ரளவு மிங்ங
ணெய்திடா திருந்த செய்கை
என்னவென்‌ றநுரைத்துச்‌ சிந்தை
யிடையுறு வெகுளி பொங்கப்‌
பின்னரொன்‌ றுரையா தூடற்‌
பிணக்குறு செய்கை யாளாய்‌; 232

வீழிவாய்க்‌ குவளைப்‌ பூங்கண்‌
விற்பிறை புருவ நெற்றித்‌ தோழிய ர௬டனே இற்றில்‌
தொகுத்தவ ளஞூறைத லோடும்‌
தாழியாம்‌ அதற்கும்‌ வீடு தந்தகோ விந்தன்‌ என்னும்‌
ஆழியான்‌ அதனைக்‌ தாள்கொண்டு
அழிவுறச்‌ சதைத்தா னன்றே, 233

மற்றும்‌௮அச்‌ செய்கை தேறா
மயிலியற்‌ குயிலின்‌ மென்சொற்‌
பொற்றொடி மடவாள்‌ தான்‌அப்‌
புண்ணியன்‌ வதனம்‌ நோக்கி உற்றுயாம்‌ வருத்தம்‌ தோன்ற
உகப்பொடு உஞற்றும்‌ இந்தச்‌.
சிற்றிலைச்‌ சதையேல்‌ என்னச்‌
செய்யவாய்‌ மலர்ந்து சொன்னாள்‌. 234

கன்னியர்‌ தமக்கெ லாம்‌ர்‌ ‘
கண்மணி துவர்வாய்‌ விண்டு
சொன்னசொற்்‌ புணர்ச்சி யாகத்‌
தூயமா மனத்துட்‌ கொண்டு
தன்னுரு தெரிந்தி டாதுஓர்‌ “சார்பதாய்‌ மறைந்து போனான்‌. .
அன்னமாய்‌ அயனுக்கு அந்நாள்‌
அருமறை புகன்ற மாயோன்‌. ~ 235

மாயவன்‌ இருகண்‌ காணா.
தோர்முறை மாய மாகப்‌
போயகன்‌ றிடலு’ மந்தப்‌
பூங்குழற்‌ கோதை யாளும்‌
சேயரிக்‌ கண்க ளோடு
சிந்துநீர்‌ முத்தம்‌ பொங்கத்‌
– தூயநல்‌ லுளமுட்‌ கொண்ட
துயரமும்‌ அடைந்தா ளாகி; 236

பாங்கியர்‌ எனும்‌அம்‌ மாதர்‌
பலர்களும்‌ உடன்சென்று எய்த
ஆங்கொரு பொய்கை தன்னை அணுகிஆங்கு அதனிற்‌ பூத்ததேங்கமழ்‌ முளரி யோடும்‌
செங்கழு நீர்ப்பூக்‌ கொய்தே
நீங்கரும்‌ உவகை தோன்ற —
நீர்விளை யாடும்‌ எல்லை; 237

மருந்துண வமரர்க்கு அந்நாள்‌
வழங்கிநல்‌ விதுரன்‌ இல்வாய்‌
விருந்துண வமைந்த மாயோன்‌
மிளிர்தடக்‌ கரையின்‌ மீது௮க்‌
கருந்தடங்‌ கண்ணார்‌ வைத்த
கலையெலாம்‌ கைக்கொண்‌ டேர்‌
குந்தமீ தேறித்‌ தோள்கள்‌
குலுங்குற நகைகொண் டானால்‌,. ~ 238

குலுங்குற நகைசெய்‌ வோனைக்‌
கோதையாள்‌ நயந்து நோக்கி
இலங்கிழை மடவா ரெல்லாம்‌
என்சொலார்‌? நகைத்துஏ சாரோ?
துலங்குற யாமுன்‌ வைத்த தூசெலாம்‌ அளித்தி என்னா
நலங்கெழு கவிதை யாக
நவின்றனள்‌ என்ப மன்னோ. 239

தலைமிசை கரங்க ளோடு
தன்னைவேண்‌ டிடுத லாய்‌அம்‌
மூலைமலைக்‌ கொடியின்‌ அன்னாள்‌
மொழிந்திடும்‌ கவிகள்‌ கேளா விலையிதென்று யாவ ராலும்‌
விளம்புதற்கு அரிதாம்‌ பாட்டில்‌
“கலையெலாம்‌ அளித்து மீளக்‌
கண்ணனும்‌ அகன்று போனான்‌. 240

சூடிய மாலை தன்னைத்‌
துளவமாற்‌ களித்தாள்‌ பின்னும்‌
வாடிய மனதோ டெந்நாள்‌
வருவரோ வவர்தா மென்னாக்‌
கூடலாங்‌ கிழைத்திட்‌ டேயக்‌
கொள்கையைக்‌ கவிக்‌ ளாகப்‌
பாடினாள்‌ பாடி யும்‌ஆய்ப்‌
பாடியான்‌ வராமை தன்னால்‌; 241

மயில்‌இயல்‌ கிளியின்‌ இன்சொல்‌
மடவன நடைபோர்‌ வேலும்‌
அயில்விழித்‌ தடங்கண்‌ கோதை
யாள்‌அர வணையின்‌ மீது
துயிலமை நறவப்‌ பைந்தேன்‌
துளவமால்‌ அணுகு மாறாய்க்‌
குயிலினைக்‌ கூவு கென்னக்‌
கவிகளும்‌ கூறி னாளால்‌. 242

கோதையார்‌ கனா
இக்குநேர்‌ கவிதை பாடி
இரங்குதல்‌ உணர்ந்தி ராவில்‌
புக்கவன்‌ கனவின்‌ மேற்றான்‌
புரிவது வையினிற்‌ செய்யும்‌அக்குறி யனைத்தும்‌ காண்பித்‌ .
தகன்றனன்‌ அன்பா லன்பு
மிக்கவ ரளத்தும்‌ வேதச்‌
சரத்தினும்‌ விளங்குந்‌ தாளான்‌.243

மத்தளங்‌ கொட்ட
கனவுறும்‌ இரவில்‌ கண்ட
கடிமணக்‌ கோலம்‌ யாவும்‌
மனதுற உணர்ந்த வாற்றை
மருங்குறும்‌ உயிரொப்‌ பாகும்‌
தனதுபாங்‌ கியர்க ளோடும்‌
சாற்றிய வாறு தன்னை
– அனநடைக்‌ கோதை தானும்‌
கவிகளாய்‌ அறைந்தா ளன்றே.244

கருப்ழரம்‌. நாறுமோ! பட்ட
“மின்னுறும்‌ இரவின்‌. காலம்‌ ன க
பெருகுறும்‌ கனவிற்‌ கண்ட
பன்னுறும்‌ அனுப வத்தைப்‌
பாஞ்சசன்‌ னியமே! நீசேர்‌
அன்னசீர்ப்‌ பவள வாயின்‌
சுவைதனை யறியு மாறாய்‌
கு என்னுடன்‌ புகறி யென்ன
இயம்பினள்‌ கவிகள்‌ மாதோ. 245

நீருறு வெள்ளம்‌ எங்கும்‌
நிரம்பிட மிகுந்து பெய்யும்‌
காருறு காலம்‌ தோன்றக்‌ கனந்தனை தோக்கி அன்பால்‌ ஏறுரு கடலின்‌ வண்ணர்‌ –
எய்துவர்‌ கொல்லோ என்னச்‌
சிருறு பாடல்‌ தன்னைச்‌
செப்பினள்‌ மறித்து மன்றே. 246

ஈங்கிவ்வா றாகப்‌ பாடல்‌
ஈறெழு பதின்மூன்‌ றோடும்‌
ஓங்குறும்‌ பாவை முப்ப
தொன்றிநூற்‌ றெழுப இன்மூன்‌ “றாங்கவள்‌ மகிழ்விற்‌ பாடி
யனுபவஞ்‌ செய்யா வாற்றால்‌
எங்கள்‌. எழித்து சோகித்‌
நிலைமை காணா
உயிரினி தெறுமென்‌ றஞ்சி–247

முருகவிழ்‌ துளவ மாலை
முகுந்தனு முளத்து என்பு பெருகுற வீரைவின்‌ வந்தப்‌
பிறைநுகற்‌ பவள வாயாள்‌
அருகுற மருவி யன்போ
– டளித்துமீண்‌ டகன்று போனான்‌. 248

-அன்பின்தாம்‌ அணிந்த மாலை
அணித்தருள்‌ ஆழி யான்தன்‌ இன்பமுண்‌ டதற்பி னுள்ளத்‌
தெழுந்த பேருவகை யோடும்‌ தன்புகழ்த்‌ தாதை யாகும்‌ பெரியர்பால்‌ விரைவிற்‌ சார்ந்து
பொன்புரை சரணஞ்‌ சென்னி ்‌
புனைந்துஇவை புகல்வது ஆனாள்‌: 249

அரங்கம்‌ செல்லல்‌
அய்ய/யான்‌ அரங்கம்‌ என்னும்‌
அணிபெரு நகரம்‌ தன்னுள்‌
பையரா வணையின்‌ மீது
பசியகார்‌ முகிலே போலச்‌
செய்யகண்‌ வளர்த லாகச்‌
செழிக்குநம்‌ பெருமா ளின்பொன்‌
துய்யதாள்‌ இணைகள்‌ தம்மைத்‌
தொழுதிட வேண்டு மன்றே. 250

ஆதலால்‌ அடியேனைக்‌ கொண்டு
அரைக்கண மெனுந்தங்‌ காமல்‌
போதுதல்‌ வேண்டும்‌ இந்தக்‌
கணத்துஎனப்‌ புகழ்ந்து கூறு
மாதவர்‌ தமக்கெ லாமோர்‌
மணியனான்‌ அதனைக்‌ கேளா,
ஓதும்‌௮அம்‌ முறைசெய்‌ வேனென்று உரைத்துஉள மகிழ்வி னோடும்‌; 251

வடபெருங்‌ கோயில்‌ தன்னை
விரைவொடு மருவி நஞ்சப்‌
படவர வணையிற்‌ நஞ்சும்‌
. பரமனைப்‌ பணிந்து போற்றிக்‌
குடமுலை, கழையின்‌ மென்றோள்‌
கோவியார்‌ மலர்க்கை கோத்து
நடனம்‌௮அன்று இழைத்துஅன்‌ னார்பால்‌
நயமொழி நவின்ற நாதா) 252

சரிகரக்‌ கோதை என்னும்‌
தையலாள்‌ அரங்கம்‌ தன்னுள்‌
வரியர வணையின்‌ மீதோர்‌
மஞ்சென வளர்கின்‌ றானைப்‌
பரிவொடு வணங்கு மாறாய்ப்‌
பகர்ந்தனள்‌; அதற்கு நாயேன்‌
புரிதல்வேண்‌ டுவதை யின்னே
– புகன்றிட வேண்டும்‌ என்றான்‌. 253

உரைத்தமா மொழிகள்‌ கேளா
உகப்பொடும்‌ அவனை நோக்கி
வரைத்தடங்‌ கொங்கை யாள்நின்‌
மகள்‌ தனை மணிகள்‌ தன்னால்‌
நிரைத்தபொற்‌ சிவிகை ஏற்றி
நீயுடன்‌ கொண்டு சென்று
இரைத்தவழ்‌ மணிகா வேரி சூழூம்தென்‌ ன்ரங்கம்‌ சென்றே; 254

ஆங்குறை அரங்க நாதர்‌
அடியிணை மலர்கள்‌ தம்மைப்‌
பாங்கொடு மனமும்‌ கண்ணும்‌
பரிவுறத்‌ தொழுது போற்றி ஈங்கடைந்‌ இடுமின்‌ என்ன
இசைத்தலும்‌; விடைபெற்று அன்னோன்‌ :
பூங்கழல்‌ தொழுது வாழ்த்திப்‌
பொன்மனை புகுந்தா னன்றே. 255

அத்தினம்‌ அதனில்‌ அந்தக்‌
கணத்திலம்‌ புவிமா னாகும்‌
-. தத்தைமென்‌ மொழியி னாளைத்‌
தமனியத்‌ தகட்டின்‌ Cube
த்தணி. சிவிகை: யேற்றி… வட சட்ட க்யா ட
ட: ஆங்கதைம்‌. பட்டால்‌: மூடி. ட ர ரர ர
ஒத்திடன்‌’ த்ர்னும்‌.வேறோரர்‌’
சிவிகைமீ துகந்து சென்றான்‌. 256

அந்தரத்து அமரர்‌ மேன்மேல்‌
அலர்மழை பொழிந்து வானத்‌
துந்துமி முழங்கக்‌ கோதைத்‌
தாழியர்‌ பலரும்‌ சூழச்‌
செந்திரு மணாளன்‌ கோயில்‌
பரிசனம்‌ பலரும்‌ சேர்ந்து
வந்திட மேள தாள
வாத்திய முழங்க மாதோ, 257

கதுவிஎண்‌ திசையும்‌ போற்றக்‌
கவின்புகழ்‌ பட்டர்‌ பாடச்‌
சதுர்மறை யவர்கள்‌ வாழ்த்தச்‌
சகலசம்‌ பிரமத்‌ தோடும்‌
முதுமலர்க்‌ குழலார்‌ மூரல்‌
மதியெனக்‌ குமுதம்‌ விள்ளும்‌
புதுவைமா நகரம்‌ நீங்கிப்‌
பொன்மதில்‌ மதுரை புக்கார்‌. 258

பணித்தலை வைப்பின்‌ ஒப்பாய்ப்‌
.பகருதற்கு இணைவே றில்லா
அணிக்கெழு கூடல்‌ தன்னில்‌
அமர்ந்தமல்‌ லாண்ட தோளன்‌
பாதம்‌ டில்‌ அண்ு தாழ்ந்தவா. றேத்திப்‌ போனார்‌. 259

மதுரையிற்‌ கூட ஸனீங்கி
மாலிருஞ்‌ சோலை யென்னும்‌
விதுவொடு கதிரோன்‌ சூழ்ந்து
விலங்குற வுயர்ந்த வெற்பில்‌
சதிர்பெற உறையுஞ்‌ சீர்கள்‌
ளழகர்பொற்‌ சரணந்‌ தன்னைத்‌
துதிசெய்து மூழ்ந்து வாழ்த்தித்‌ தொழுதன ரகன்று போனார்‌. 260

ஏகும்‌௮க்‌ காலை மூடுஞ்‌ —
சிவிகையின்‌ இருந்த வாறே
நாகரும்‌ புகழும்‌ சீர்த்தி
நலம்புனை தாதை யோடும்‌
மேகமொத்‌ திருண்ட கூந்தல்‌
வெற்பிளந்‌ தனத்துக்‌ கன்னல்‌
பாகன மொழியாள்‌ சாலப்‌
பரிவுடன்‌ இதனைச்‌ சொன்னாள்‌. 261

கோதை விருப்பம்‌
அய்ய/கேள்‌; நமது மால்வாழ்‌
அரங்கமா நகரத்‌ துற்ற துய்யமா மதிளும்‌ டொன்னின்‌
துலங்குகோ புரமும்‌ சேவை
செய்யநின்‌ மலர்ப்பூங்‌ கண்ணில்‌
தெரிவுறில்‌ அடியேன்‌ தானும்‌
வையமீ திழிந்து போற்றி .
வணங்குறத்‌ தெரித்தி என்றாள்‌. 262

ஆங்கவள்‌ உரைத்த பின்னர்‌
அருநெறி கடந்து செல்ல
வீங்கலை மணி௫ந்‌ துங்கா
விரிக்கரை யருகி ஞூடு
பாங்குட னேகுங்‌ காலைப்‌
பன்மணி மதிளும்‌ வான்மீ
தோங்குகோ புரமுந்‌ தோன்ற வுரைத்தனன்‌ தோன்றிற்‌ றென்றே. 263

(வேறு)
அடர்ந்த மும்மல மறுத்துவெம்‌ பிறவியங்‌
கடந்த தாதையா முரைமொழி
மடந்தை போன்றவக்‌ கோதையும்‌ வையமீ–264

நயந்த வாற்றினை யுந்தியி னான்முகத்‌ தவளைப்‌
பயந்த சீரம கியமண வாளரும்‌ பரிவாய்‌
வியந்து தன்திருத்‌ தேவியும்‌ மெல்லிய பதவம்‌
புயந்த னக்கிடர்‌ பொருந்துற வருந்துவ ளென்றே.; 265

அரங்கன்‌ திருவிளையாடல்‌
கஞ்ச நாண்மல ரூடுறும்‌ அளியினைக்‌ சடுப்ப,
பஞ்ச ரத்துறுந்‌ தத்தையிற்‌ பல்லக்கின்‌ வருமவ்‌
வஞ்சி நேரிடை யாள்திரு மேனியு மருவும்‌
நெஞ்சி னூடுதன்‌ னிடமணைத்‌ திடநிரு மித்தான்‌. 266

அரங்கன்‌, கோதையார்‌
நடந்தால்‌ பாதமலர்‌ வாடூம்‌ என்று கருதினான்‌. கருதிய திருவரங்கன்‌, மலரில்‌
உள்ள வண்டைப்‌ போலவும்‌, கூட்டில்‌ உள்ள கிளியைப்‌ போலவும்‌ வருகின்ற
கோதை நாச்சியார்‌ பிறரறியாமல்‌ தன்னிடம்‌ வரும்படி சங்கற்பித்தான்‌.

அவன ருட்படி பிறரொரு வருமறி யாமல்‌
துவரி தழ்க்குயின்‌ மழலையாள்‌ கோயிலுட்‌ டொடர்ந்திட்‌
டுவரி வண்ணர்தம்‌ பதமல ர௬ுவப்பொடும்‌ வணங்கி
நவமு றத்திரு வுளத்திடை தண்ணிவீற்‌ நிருந்தாள்‌. 267

ஆங்க ரங்கனோ டம்முறை யவடொடர்ந்‌ தணைந்தாள்‌
ஈங்கவ்‌ வேந்திழை யுறுஞ்சிவி கையைப்புய மேந்தித்‌
தாங்கு வோர்கண்முன்‌ பரமது சமைந்திடா மையினால்‌
ஏங்கி யீதென மாயமென்‌ றெண்ணிறின்‌ றனரால்‌. 268

கன்று காவுறுஞ்‌ சுரபியிற்‌ கலந்துபின்‌ சிவிகை
யொன்றி மேவுமப்‌ பெரியரென்‌ நுரைக்குமுத்‌ தமனும்‌
நின்று ளார்தமை நோக்கிநீர்‌ நின்றுள தென்னோ
என்று ரைத்தல்கேட்‌ டாங்கவ ரிம்மொழி யிசைப்பார்‌. 269

இன்ன செய்கையென்‌ றெவ்வித மிதையியம்‌ பிடுவோம்‌
அன்ன மென்னடை யாரணங்்‌ கமர்ந்துள பரந்தான்‌
முன்னர்‌ போலவிச்‌ சிவிகையின்‌ இலைமுயன்‌ றாய்ந்து
என்ன மாயமென்‌ றேங்கியா மிருந்தன — 270

ஆங்க வர்புகன்‌ றுளமொழி செவியின்வந்‌ தணுக
வீங்கெ னோவசதி சயமெனச்‌ சிவிகைவிட்‌ டிழிந்து
பாங்கொ டும்மகள்‌ சிவிகைமேன்‌ மூடுபட்‌ டதனை
வாங்கி யேயுற விருகண்மா மலரில்நோக்‌ இனனால்‌. 271

நோக்க லும்மக ளிலாமையி னுணங்குகேள்‌ வியினான்‌
போக்கெ னோலெனத்‌ திருவளம்‌ புழுங்கனன்‌; துடித்தான்‌;
ஏக்க மோடயர்ந்‌ திரங்வென்‌; நடுங்கினன்‌; இனைந்தான்‌;
வாக்கினாலவன்‌ துயரினை வகுத்திட லரிதால்‌. — 272

ஆய தன்மைய ஸனாகியே பின்னரு மறிவுற்‌
றஹேய காரணம்‌ பிறிதிலை யரங்கமுள்‌ எழிலார்‌
பாய லாய்விடப்‌ பைந்தலை யரவின்மேற்‌ படுத்த
மாய னார்செயுங்‌ களவென மனத்துற மதித்தே; 273

விரைவி னோடுடன்‌ மேவிவந்‌ தவர்களு மேவ
தரையின்‌ மீதுகா னடையொடுஞ்‌ சென்றுதண்‌ டரளந்‌
இரையெ றிந்துயர்‌ காவிரி கடந்துசெங்‌ கனகம்‌
நிரைசெய்‌ கோயிலுட்‌ புகுந்தரங்‌ கேசர்முன்‌ நின்றே; 474

ஆழ்வாரின்‌ முறையீடு
இருக ரங்குவித்‌ தடியுற வணங்கிமீண்‌ டெழுத்து
பொருத ரங்கவெண்‌ கடலி?னோ ராலடை பொருந்தல்‌
ஒருவி வந்தவ ணரவின்மே லுவப்பொடு முறங்கும்‌
கருமு கிற்கொழுந்‌ தேயெனக்‌ கட்டுரைத்‌ திடுவான்‌? 275

தளிரின்மேல்‌ துயிலும்‌
போது இருந்த கருணை அரவின்‌ சார்பால்‌ குறைந்ததோ என்பது உள்ளுறை.
“பள்ளித்‌ தோழமை பலித்தபடி’” என்பர்‌ நம்பிள்ளை.

அடியன்‌ மேலையம்‌ பிறவியு ளருமையுற்‌ நிழைத்த
நெடிய மாதவப்‌ பேற்றினால்‌ நேர்ந்தவோர்‌ மலர்ப்பூங்‌
கொடிய னாள்தனைக்‌ கொண்டுநின்‌ பதமலர்‌ குறுகி
முடியுறப்பணிந்‌ தேகுமம்‌ முறைமைகொண்‌ டடைந்தேன்‌. 276

அடைந்து. ளேன்மல ரடியரு கணுகுமுன்பு அளிகள்‌
குடைந்த -ரந்துதேன்‌ பூங்குழற்‌ கோதையைக்‌ குறுக
முடைந்து ‘யர்ந்துறி யாச்சி.பர்‌ முறைபடுக்‌ குறும்பால்‌
கடைந்த வெண்ணையிற்‌ களவிழைத்‌ திடுவது கணக்கோ? 277

கணக்க லாமலென்‌ மகள்தனைக்‌ கவர்ந்துள துணரின்‌
வணக்க மோடலை சகடலுடை வையகத்‌ தடையே
மணக்கு மாமலர்க்‌ குழன்மடந்‌ தையருமா டவரும்‌
இணக்க மோடுவந்‌ தெவருனது இணையடி தொழுவார்‌? 278

வடுத்த விர்ந்தமா மதிமுகத்‌ திருவினோ டுரைக்கின்‌
அடுத்தி லாதென நகைசெய்வ ளாதலாற்‌ களவில்‌
எடுத்து வந்தவென்‌ மகள்தனைக்‌ காண்பியு மென்னாக்‌
கடுத்த சிந்தையான்‌ போலுளத்‌ தன்பொடுங்‌ கழறி; 279

நகசைசெய்வான்‌ – பரிகப்பான்‌. **நப்பின்னை
கர்ணிழற்‌ இரிக்கும்‌” என்றவர்‌ அல்லவா? (பெரியாழ்வார்‌ திருமொழி — வெண்ணெ
யளைந்த என்ற்‌ பதிகம்‌ காண்க). இிருமகள்‌ சிரிப்பாள்‌ . அவள்‌ சிரிப்பதற்கு முன்‌
என்‌ மகளைக்‌ காண்பியும்‌,

ஓதி மாமறை முறைமையி னொளிர்மல ரவனும்‌
பாதி மாமதி சூடியும்‌ பணிந்துசண்‌ டறியாச்‌
சோதி யேகரி மூலமாம்‌ பெயர்‌ சொலி யழைத்த
ஆதி யேயெனத்‌ துதிசெய்தாங்‌ கெதி.ரில்நின்‌ றனனால்‌. 280

அரங்கன்‌ மாற்றம்‌
நின்ற வில்லிபுத்‌ தூாரவ னிகழ்த்துரை செவிக்குள்‌
ஒன்ற லோடுநெஞ்‌ சுருகுறப்‌ பெருகுவப்‌ புடனே
கன்று கொண்டுயர்‌ விளவினை யெறிந்தகார்‌ முகிலும்‌
நன்று நன்றென விளநகை தோன்றிட நவில்வான்‌. 281

ஒன்று மஞ்சலை யுன்மக ஞுந்தனி நடந்தஇங்‌
தின்று றும்படி நினைந்தன ளெண்ணுமம்‌ முறையே
சென்று றிற்பதஞ்‌ சிவப்புறு மெனத்தெறும்‌ புலனைவென்று ளாய்வருந்‌ தாவரு வித்தனம்‌ வெகுளேல்‌. 282

என்ன வேபல நன்மொழி புகன்றெமில்‌ பெறுநின்‌
கன்னி யிங்குறை கன்றனள்‌ காண்கெனக்‌ காட்ட
அன்ன மாதினைக்‌ க)ண்டலு மானந்த மூடனே
பின்னு மோர்மொழி யாங்கருண்‌ மகஇழ்வுறப்‌ பேசும்‌, 283

முறைப்படி மணக்க மொழிந்தனர்‌ ஆழ்வார்‌
மாய னே [இருப்‌ பாடியுள்‌ வளருமந்‌ நாள்வாய்‌
ஆய ரீன்றரு ளிளமுலை யனநடை யவரை
நேய மோடடைந்‌ திணைந்துள கள்ளமா நெறிபோல்‌
நாயி னேன்றிரு மகளையு நயந்திட நினையேல்‌. 284

உலகம்‌ யாவினு முறைபவ ரொவ்வுமவ்‌ வகையாய்ப்‌
பலருங்‌ காண்குறப்‌ பந்தருட்‌ பழமறை விதியின்‌
அலகின்‌ மாதவர்‌ வளர்க்குமவ்‌ வனலின்முன்‌ னிலையில்‌
இலகு மங்கலம்‌ புனைந்தபின்‌ னிணங்குத லியல்பாம்‌. 285

ஆத லாலடி யேனுறை புதுவைவந்‌ தணைந்திம்‌
மாத ராள்தனை விதிமுறை வதுவைசெய்‌ திடுமக்‌
கோதி லாமணக்‌ கோலமுட்‌ குளிர்ப்புறக்‌ காணுங்‌
காதல்‌ கொண்டுளே னெனக்கழல்‌ பணிந்துநின்‌ றனனால்‌, 286

உலகறிய மணப்போம்‌
நின்ற வன்திரு மாமுக நோக்கிநீ டூலகோர்‌
ஓன்று மாறுரைத்‌ தனையலாற்‌ பிறிதுரைத்‌ திலையால்‌
நன்றி தென்றுள முவந்தனம்‌ புதுவைமா நகரில்‌
சென்ற டைந்துநற்‌ றினந்தனிற்‌ றீருமணம்‌ புரிவேம்‌. 287

மங்க லந்தரித்‌ திடுதலுக்‌ குன்மகள்‌ தனக்குப்‌
பங்கு னித்திரு வுத்திரப்‌ பகற்பொருந்‌ துறுமன்‌
றங்கு வந்துநா மடைகுது மதற்குமுன்‌ பாக
இங்கி ருந்துநின்‌ சிறுவியோ டேகென விசைத்தே; 288

வில்லிபுத்தூர்‌ மேவுதல்‌ Los வரு
விடைய எளித்தலுங்‌ கோயிலில்‌ மேவுவோர்‌ தமக்கும்‌
படைநெ டுங்கணா ரொடுப கவர்கள்‌ தமக்கும்‌ ‘>
புடைதி ரண்டுபோ யிவர்தமைப்‌ புதுவையின்‌ விடுத்திங்‌ :
கடையு மென்றுரைத்‌ தவற்கிரு சவிகையு மளித்தான்‌. 289

அளித்த தன்மிசைக்‌ கோதையும்‌ பெரியஆழ்‌ வாரும்‌ :
களிப்பொ டும்புகத்‌ துந்துமி முழக்கியே கடிதின்‌
தளிர்த்த பூமழை சொரிந்திடச்‌ சாமரை தயங்க
விளித்த சங்கின முரசொலிக்‌ கறங்க மென்மேல்‌.. 290

ஆட கத்தியாழ்த்‌ தும்புரு நாரத ரிசைத்துப்‌
பாட வின்னிசை : முனிவரர்‌ பரிந்துதோத்‌ திரிக்கச்‌ ?
சூட கக்கர. மடந்தையர்‌ சோபனஞ்‌ சொல்ல ௩
நாட கத்தொழில்‌ வல்லவ ரெதிருற நடிப்ப; 291

விருதொ லித்திடப்‌ பட்டர்கள்‌ புகழவே நுலகில்‌ .
பொருவில்‌ வேங்கடப்‌ பொருப்பனு முடன்சென்று புகுதக்‌
குரும ணிச்செழுங்‌ கோயில்வீட்‌ டூயர்சுர நதியுங்‌- ்‌
கருது காவிரி யெனுந்திரு நதியினைக்‌ கடந்தே; 292

சோழ நாடது பின்படத்‌ துருவிப்பாண்‌ டியன்றான்‌
வாழு நாடுறு மாலிருஞ்‌ சோலைவந்‌ துறலும்‌
ஆழு மன்புட னத்தலத்‌ துறையனை வோரும்‌
சூழ வந்துப சரித்திடக்‌ கோயிலுள்‌ தொடர்ந்தே; 293

அழகர்‌ பூந்திரு வடிகளாம்‌ அம்புய மதனைக்‌:
குழையு நெஞ்சொடுந்‌ துதிசெய்து வணங்கியே கொடுத்த
தீழைது மாயுறு தீர்த்தப்பிர சாதமு மருந்தி .
விழைவி னோடுமத்‌ தலத்திடை யன்றுவீற்‌ நிருந்தே; 294

மறுதி னந்துடர்ந்‌ தழகரு முடன்வர மதுரை
யுறுத லோடுமத்‌ தலந்தனி லுறைபவ ரெவரும்‌
குறுகி வந்தெதிர்‌ கொண்டிடக்‌ கடலுண்‌ மருவி
நறும லர்பொரு மழகிய நம்பிதாள்‌ வணங்க) 295

மன்ற லார்வன படிகநீ ராங்கவர்‌ வழங்கித்‌
துன்று நற்பிர சாதமு மளித்திடத்‌ துய்த்தாங்‌ கன்று வைகுூயவ்‌ வழகரு முடன்கலந்‌ தணுகச்‌
சென்ற டைந்தனர்‌ புதுவையின்‌ மற்றைய இனமே. 296

ஆங்கு றும்வட பத்திர சாயியம்‌ புயச்செம்‌
பூங்க ழற்றொழு தரங்கர்பாற்‌ போயடி பணிந்திட்‌
டீங்கு வந்தன மெனதடந்‌ துளவெலா பெடுத்துப்‌
பாங்கொ டும்மவர்‌ செவியுறப்‌ பு.த;வையன்‌ பகர்ந்தான்‌, 297

கேட்ட வாறதாய்‌ நடத்துக கேள்வியோ யெனவச்‌
சூட்ட ராவணை யவன்சொலக்‌ களித்தனன்‌ துடர்ந்த
கூட்டம்‌ யாவர்க்கும்‌ இர்த்தப்பிர சாதமுங்‌ கோயின்‌
மாட்டு ளோரளித்‌ இடக்கொண்டு : மாளிகை கலந்தார்‌. 298

வேங்க டாசல மதன்மிசை விளங்கிவாழ்‌ பவரும்‌
ஒங்கு மாலிருஞ்‌ சோலைவெற்‌ புகந்துறை பவரும்‌
இங்கி லாச்செழுங்‌ கூடலிற்‌ சேர்ந்துவை குவரும்‌
தாங்கள்‌ தாங்களுற்‌ றுறைதலஞ்‌ சார்ந்துவை கனரால்‌, 299

அருந்து மாறதா யணிகெழு மரங்கமா நகரத்‌
இருந்து வந்துளோர்க்‌ கருங்கடல்‌ கடைந்திட வெழுந்த
மருந்து நேரென அறுசுவைப்‌ பதார்த்தம தோடும்‌
விருந்து செய்துசெய்‌ வெகுமதி வழங்கியே விடுத்தான்‌. 300

விடுத்த லோடுமாங்‌ சுவர்களும்‌ விடைகொடு விசும்பின்‌
எடுத்த பொன்மதி எரங்கர்முன்‌ னெய்திப்பாம்‌. பணையில்‌
படுத்து ளான்பதம்‌ பணிந்துதாம்‌ போய்வரு மளவும்‌
அடுத்த வாறெலாம்‌ அறைந்துதம்‌ மாளிகை யடைந்தார்‌. 301

(வேறு)
அங்கவ ரம்முறை யகன்று போயபின்‌
கொங்குறு மலர்க்குழற்‌ கோதை யென்பவள்‌
“சங்குறை கரவரங்‌ கேசர்‌ சாற்றுமப்‌
பங்குனி யுத்தரம்‌ பலிப்பதென்‌ றென்றும்‌; 302

செங்கம லம்பல இறக்கப்‌ பூத்ததோர்‌
மங்குலி னழகய வடி.வந்‌ தாங்கினோன்‌
இங்குவந்‌ துறுமந்நா ளெந்தநா ளென்றும்‌ கங்குலும்‌ பகலுந்தன்‌ கருத்து ளூன்னியே; 303

இன்னவா றன்றீயே வேறொன்‌ றெண்ணிலா
தன்னவள்‌ வைகவவ்‌ வாறு தந்தையும்‌
_தன்னுள மதனிடை தரித்து வைகினான்‌
– பின்னருற்‌ றடைந்தமை பேசு வாமரோ. . 304

ஆழ்வார்‌ மணநாள்‌ அறிதல்‌
ஒருபக லதனிடை யுவப்பு எத்தொடுத்‌
இருநகர்‌ வாழுறுஞ்‌ சீர்கொள்‌ வைணவர்‌
பெருமிதம்‌ பொருந்துமப்‌ பெரிய ரின்புற
மருவுமா ளிகையிடை வந்து ளார்களால்‌, 305

வந்துளோர்‌ பெரியர்தாள்‌ வணங்க லும்மவர்‌
தந்தம தடிகளைத்‌ தானுந்‌ தாழ்ந்தபின்‌
அந்தவே தியரருந்‌ தவனை நோக்கியே இந்தவா சகமெடுத்‌ தியம்பு வார்களால்‌. 306

அய்ய[நின்‌: தனையளை யரங்கர்‌ மாமணஞ்‌
செய்யுநாள்‌ நாளையென்‌ . றவர்கள்‌ செப்பவத்‌
ட. துய்யமா .மொழியது துஞ்சி யெஞ்சினோர்‌
“மையிலாச்‌ செவியுறு மருந்து போன்றதால்‌. 307

ஆயமா தவர்களம்‌ மொழிய றைந்துதம்‌
தூயமா -ளிகையிடைத்‌ துடர்ந்து வை௫னார்‌;
ஏயவப்‌ பெரியரு: மிதய. மூடெழும்‌ ்‌
நேயமோ டிவ்வகை நிரப்ப லுற்றனன்‌. 308

நகரவலங்காரம்‌
தேனைவென்‌ றுளசொனஞ்‌ சிறுவி கோதையாம்‌
மானையவ்‌ வரங்கர்செய்‌’ வதுவை நாளையால்‌
ஏனைய ரின்னக .ரெழில்சேய்‌ வாறதாய்‌
ஆனைமேன்‌ -மணிமுர சறையு மின்றெனன்‌. 309

அந்தவா சகஞ்செவி யுறவரங்‌ கம்வாழ்‌
சேர்திரு ‘ மணைனைச்‌ சேர்ந்த ழைத்திட
முந்துற வேகுவான்‌ போன்மு ழங்கலைச்‌
இந்துவின்‌ மறைந்தனன்‌ தினஞ்செய்‌ வோனுமே. 310

அன்னவன்‌ மறையமா முரசம்‌ அஆனைமேல்‌
மன்னு?ீர்க்‌ கோதைக்கும்‌ அரங்கற்‌ கும்மணம்‌
பின்னைநா ணகரணி பெருக்கு மின்னெனப்‌
பொன்னகர்‌ முழுவதும்‌ புகுந்து சாற்றினார்‌, 311.

முரசறை தரவெழு முழக்கங்‌ கேட்டலும்‌
விரசுமம்‌ மாணகர்‌ மேவு மாந்தரும்‌
பிரசமென்‌ இளவியும்‌ பேதை யார்களும்‌
கரைசெயற்‌ கருங்களிக்‌ கடலுள்‌ ஆழ்த்தனர்‌. 312

கோதையாள்‌ வதுவையைக்‌ குறித்துப்‌ பூந்திரு
மாதைமார்‌ பணியரங்‌ கேசர்‌ வந்திடுஞ்‌
சேதியை யாவருந்‌ தெரியு மாறுமுன்பு
ஓதவந்‌ தெனஇன ஸனுதைய மாயினான்‌. 313

மதுகமழ்‌ மலர்த்தரு மகளை மற்றொரு
சதுர்பெற வணியுமகத்‌ தன்மை யாமெனப்‌
புதுவையென்‌ றுரைக்குமப்‌ பொன்னின்‌ மாநகர்‌
கதிர்செய முறவலங்‌ கரிப்ப தாயினார்‌.315

கடலிடை யுறுதுயில்‌ கழித்து வந்தொரு
படவர வணைமிசை பள்ளி கொண்டுளான்‌
வடபெருங்‌ கோயிலை வகைவ கைபுரிந்‌
தடவுடன்‌ புதுக்கினர்‌ அழுது துன்னவே. 316

அந்தர வுலகினை நகைத்த லாமென
மந்தர மனைய?ர்‌ மாட மாளிகை
சுந்தரம்‌ பெறவடி முடி துடங்கியே
சந்திர னொளியைவெல்‌ சாந்து தீற்றுவார்‌. 317

ஒத்திட வாயின்முன்‌ புயர்ச்ச யெய்திட
முத்தணி பந்தர்கண்‌ முடுகிப்‌ போடுவார்‌;
கொத்துறு மலர்ச்சரங்‌ குலவத்‌ தூக்குவார்‌;
வைத்திழை மணிக்கொடி மலிய நாட்டுவார்‌. 318

பூரண பொற்கல சம்பொ ருத்துவார்‌;
ஏரணி பாலிகை யினம்நி ரப்புவார்‌;
காரணி மகரதோ ரணங்கள்‌ கட்டுவார்‌;
சீரணி பதுமைகள்‌ செழியத்‌ தூக்குவார்‌. 319

.பொன்னிறச்‌ சுளைபலா: முதற்பு கன்றிடும்‌
மன்னுநற்‌ சுவைகனி வகைகள்‌ தூக்குவார்‌;
கன்னலும்‌ வாழையுங்‌ கழுகும்‌ நாட்டுவார்‌;
: பன்னக ‘மணிவிளக்‌ கொளிப ரப்புவார்‌. 320 :

அரைபடு கலவைசேர்ந்‌ தமைத்த சாந்தினால்‌
குரையுற மெழுகுவார்‌; சார்ந்த பாங்கெலாம்‌
நிரைநிரை விளங்குகோ லமும்நி ரப்புவார்‌;
– விரைபனி நீர்தெரு வீதி வீசுவார்‌.321

ஆடைக ளழகுற வணிகு வார்‌;புதுப்‌
பாடகஞ்‌ சரிவளை பதக்க மாதிபல்‌
பூடண வகைகளும்‌ பொருந்தப்‌ பூணுவார்‌;
ஏடவிழ்‌ நறுமல ரிலங்கச்‌ சூடுவார்‌. 322

கந்தமார்‌ புனுகுபல்‌ கலவை சேர்த்தியே
சந்தனக்‌ குழம்புடல்‌ தணியப்‌ பூசுவார்‌;
சிந்துரஞ்‌ சூரணந்‌ இருமண்‌ சாத்துவார்‌;
“ சுந்தர மாயிரந்‌ துலங்கல்‌ காணுவார்‌. 323

அன்னமந்‌ தணர்தமக்‌ கருத்து வார்‌;புவி
பொன்னிவர்‌ மணியுடைப்‌ பூட ணம்ப்சு
இன்னவாம்‌ பலபல தான மேற்றுளோர்‌
. உன்னிய. முறையவ ருவப்ப நல்குவார்‌. 324

இன்னவை யாவையு மெழில்பெ றும்படி
பொன்னக ரொப்பவப்‌ புதுவை மாதகர்‌
தன்னையாங்‌ கவரலங்‌ கரித்த தன்மைகள்‌
£.* பன்னநா வாயிரம்‌ படைத்தி லேனரோ. 325

விட்டுணு சத்தன்மா ளிகைவி ளங்குற
மட்டிலா வைகுந்த மண்ட பந்தனக்‌
கெட்டுணை யாயினும்‌ வழுவி லாமலே
: திட்டமாய்ச்‌ செய்முறை யாவுஞ்‌ செய்தபின்‌; 326

பணங்கெழு பணித்துயில்‌ பயில ரங்களார்‌.
குணஞ்சிறந்‌ துடையபூங்‌ கோதை யாஸல்தனை
மணம்புரி. வதற்குச்சசய்‌ வகைகள்‌ யாவையும்‌
்‌ இணங்குமா றவரவ ரியைவித்‌ தாரோ. : 327

பேரிகை மத்தளம்‌ பிறங்குதா எங்கள்‌
தாரைகள்‌ திருச்சினம்‌ சங்க மற்றுள
தூரிய வகையெலாந்‌ . தொனிக்கு மோதையால்‌
2 வாரியின்‌ முழக்கமும்‌ மறைந்தொ ஸஎித்ததால்‌. 328

வாடுற விடைதன வரைகு லுங்குற
_ நாடக மாதர்கள்‌ நடம்ப யின்‌ றிட
-சூடுபூங்‌ குழலினர்‌ சோப னஞ்சொலப்‌
பாடகர்‌ இன்னர கதம்‌ பாடவே. ‘ 329

மணங்காண வந்தவர்‌
இங்கெ ரிவ்வண்‌ மிசையு மெல்லையில்‌
பொங்கரீன்‌ றருளிய பூவை யாளிடந்‌
தங்கவெள்‌ ளிடபமாம்‌ ஊர்தி தன்மிசை
– சங்கரன்‌ மகிழ்வொடுஞ்‌ சார்ந்து ளானரோ. 330

தேவரும்‌ பணிதிருத்‌ தேவ ஸுந்தியம்‌
பூவரு மெண்புயப்‌ புனித நான்முகன்‌ :
_நாலரு மயில்விழி நங்கை தன்னொடும்‌
தூவிசே ரனமிசை வந்து தோன்றினன்‌. – 331

அத்தர வுலஇனர்க்‌ கரச னாய |
“இந்திரன்‌ சீரயி ராணி யென்னுமச்‌
சுந்தர மதிமுகத்‌ தோகை யாளொடுந்
– தந்தவெண்‌ கரிமிசை சார்ந்து சானரோ. 332

மற்றுள மூனிவர்கள்‌ சித்தர்‌ வானவர்‌
‘வெற்றிவே லரசர்விஞ்‌ சையர்க ளாதிதம்‌
பொற்றொடி யவரொடும்‌ புதுவை மாநகர்‌
_ முற்றிலு மிடங்கொளா முறைவந்‌ தீண்டினர்‌. 333

கோதையாரின்‌ மணக்கோலம்‌
இங்கிவர்‌ யாவரு மீண்டி யுற்றபின்‌
– வெங்கொலைத்‌ தொழில்வல வேற்கண்‌ கோதையைச்‌
சங்கரி கலைமகள்‌ சசியிம்‌ மூவரும்‌
மங்கலக்‌ கோலஞ்செய்‌ வான்தொ டங்கியே; 334

கங்கையே முதலெழு கடவுண்‌ மாநதி
சங்யெ தீர்த்தங்கள்‌ தமைக்கொ —
பொங்கலை யாழியின்‌ புனித நீர்கலந்‌
௩ தங்கவர்‌ மஞ்சன மாட்டி னார்களால்‌. 335

மூகமலர்‌ மஞ்சளின்‌ முயங்கப்‌ பூசியே
அகில்முத லிந்தன மனலி லிட்டதின்‌
புகைகொடு முடற்குழல்‌ புலர்த்திக்‌ கைவிரல்‌
: நகமதிற்‌ கோதிநன்‌ குறமு டித்தனர்‌. 336

ஈரநீத்‌ துயர்ந்தபட்‌ டிலங்கச்‌ சாத்திநூல்‌
நேரிடை வருந்துற நிமிர்ந்த கொங்கையில்‌
வாரணிந்‌ திருகுற வலிந்து வாளைவேல்‌
_ கூர்விழிக்‌ கஞ்சனங்‌ குளிர இட்டனர்‌. 337

மறைமுதல்‌ வன்குறி வைத்த தென்னவே
கறையின்மா மதிமுகங்‌ கவினு மாறிளம்‌
பிறையெனக்‌ தஇிருமணும்‌ பிறங்கச்‌ சந்துரம்‌
நிறைதிருச்‌ சூரணம்‌ நிரம்பச்‌ சாத்தினார்‌.338

பொன்னினா லமைந்திடும்‌ புதிய பாவையின்‌
வன்னமார்ந்‌ தொளிபெற வரையு மாறெனப்‌
பன்னறு நவமணி யிழைத்த பைம்பொனின்‌
– மின்னுபல்‌ பூடணம்‌ விளங்கச்‌ சாத்தினார்‌. 339

கந்தமோர்‌ காவதங்‌ ௬மக மத்தசெஞ்‌
சந்தனம்‌ புனுகுசவ்‌ வாத ஸணிந்துபின்‌
சுந்தர நறுமல ரலங்கல்‌ சூட்டினார்‌
்‌ அந்தரத்‌ தவர்களு மஇச .யிப்பவே. 340

இன்னவை யாவையு மியைந்த பின்றிருப்‌
பொன்னரங்‌ கந்துயில்‌ புரியு நாரணன்‌
துன்னுமந்‌: நெறிகளைத்‌ தூய கண்களால்‌
அன்னவர்‌ தோக்கியங்‌ கிருக்கு மாயிடை; 341

பிரம்மன்‌ வினா
மட்டவிழ்‌ தாமரை மலரின்‌ வைகயன்‌
விட்டுணு சித்தனை விருப்பின்‌ நோக்கியே
அட்டதிக்‌ கினும்புக ழரங்கம்‌ வாழுறும்‌ த
வட்டச்செந்‌ இகிரிமால்‌ வருவதென்‌ றென்றான்‌. 342

என்றலு மணவினை யியற்று மங்கலம்‌
குனிமதி யுத்தி ரம்மெனும்‌
இன்றுவந்‌ தெய்துவ மென்ன யானடை அன்றுரைத்‌ தருளினா ரரங்க ரென்றனன்‌. 343

அவ்வுரை கேட்டலு மமரர்‌ கோமகன்‌
இவ்வுரை யானுமன்‌ நறிருந்து கேட்டனன்‌,
இவ்விய வுருவமை திருவ ரங்கனார்‌.
ஓவ்விய மாய்கையா ர௬ணர்வர்‌ என்றனன்‌. 344

எனவுரைத்‌ தவனொடு மேறு வாகனும்‌
அனமதை யூர்தியு மனைத்து ளோர்களுங்‌
கனறநிற மேனிமால்‌ கமலத்‌ தாள்களை
_ மனமுற நினைந்தவர்‌ வருந்து மெல்லையில்‌; 345

கோதைபாற்‌ பெரியருங்‌ குறுகி யம்ம[பூ
மாதுறை மார்பக மணிய ரங்களார்‌
ஏதுகா ரணமின மெய்தி லாததைன்‌
… வேதனே முதலினோர்‌ வினாவு கின்றனர்‌. . 346

வருதுமென்‌ றத்தினம்‌ வழங்கும்‌ வாறதாய்‌
மருதிறத்‌ தவழ்ந்தமால்‌ வந்த. லானினங்‌
கருதுவ தென்னினிக்‌ கழறு கென்னலும்‌
பொருதுவெல்‌ வேற்கணாள்‌ புகல்வ தாயினாள்‌, 347

கோதையின்‌ செயல்‌ — கருடன்‌ வருதல்‌
அன்னவர்‌ யாவரு மகங்க ஸிப்புற
இன்னமோர்‌ கடிகையி ஸனுள்வந்‌ தெப்துவார்‌
நின்னுளம்‌ வருந்தலை யெனநி கழ்த்தியே பின்னர்வே  லிருந்தப்‌ பெண்கொடி; . 348

பன்னக வயிரிதோத்‌ திரம்ப ரிவ்வொடுந்‌ -:
தன்னக மதனிடைத்‌ தரித்த வன்வர ‘
உன்னலு மக்கணத்‌ தோங்கல்‌ போன்றிரு : ்‌
பொன்னவீர்‌ சறகொலி பொருந்த வந்தனன்‌. -349

வந்தவன்‌ றிருமூக நோக்கி மாண்புறும்‌
உந்தலைக்‌ காவிரி யுடைய ரங்களார்‌
இந்தநா ளின்னகர்க்‌ கெய்து வேமென
அந்தநா ளடியனோ டறைந்து ளானரோ,. 350

அன்னமா மொழிமுறை யந்த மாதவன்‌
இன்னமு மிங்குவந்‌ தெய்தி லாமையால்‌
என்னகா. ரணம்வரா தெனவிங்‌ கியாவரும்‌
_ பன்னுகின்‌ றதற்கெனோ பகர லாகுமால்‌. 351

ஆதலா லிக்கணத்‌ தணிய ரங்கரென்‌
மீதுறு கருணையால்‌ விரைவி னோடடைந்‌
தீதெலா மிசைத்தவ ரெய்து மாறழைத்‌
தோதுமோர்‌ கடிகையுள்‌ ஞூறுதல்‌ வேண்டுமால்‌, 352

கருடனிடம்‌ கோதையார்‌, “*அரங்களார்‌ இன்று வருவேன்‌ என்று கூறினார்‌. ஆனால்‌ வரவில்லை. அரங்கன்பால்‌ இவற்றைக்‌ ong
அழைத்து வருக. அரங்கரை அழைத்து வந்தால்‌ யானும்‌ அவரும்‌ அமரும்‌ ஆத
னத்தில்‌ உன்னையும்‌ எழுந்தருளச்‌ ௦ செய்வேன்‌ ‘* என்று கூறினார்‌. இப்போதும்‌ ுரீவில்லிபுத்தூரில்‌ கருடாழ்வார்‌ அரங்கமன்னாருடன்‌ எழுத்தருளியிருப்பதைச்‌
சேவிக்கலாம்‌.

இன்னவா றழைத்துவந்‌ தெய்தி லாங்கவர்‌
தன்னொடும்‌ யானொரா தனத்து வைகுபோ
துன்னையு மந்தவா .தனத்தி னோக்கவே
_ மன்னுறப்‌ புரிகுவ னேனவ ழங்கினாள்‌. 353

வழங்குரை கேட்டவல்‌ வயின ஸூங்களித்‌
தீழங்குற லிக்கணஞ்‌ சார்ந்த ரங்கம்வாழ்‌
– முழங்குகார்‌ வணரையோர்‌ கடிகை மூன்‌ றினில்‌
கழங்குறு தருக்கையாய்‌ கொணர்உன்‌; காண்டியால்‌, 354

எனப்புகள்‌ றிருசிறை புடைத்தி யாதினுந்‌
தனக்குநேர்‌ தானலான்‌ தாவி வான்மிசை
மனக்கொடு வேகமோ டே வண்டுறை
.. புனைத்துழா யரங்கர்தாள்‌ போற்றி நிற்றலும்‌. 355

அரங்கன்‌ வினா.
எங்கிருந்‌ தெய்தினை யெனச்செஞ்‌ சக்கரம்‌
சங்கொடு மணிகரன்‌ சாற்ற மேருவாம்‌’
பொங்கரி ளனோங்கெழில்‌ பொருந்து மேனியான்‌
னிருசெவி யணுக வோதுவான்‌. 356

(வேறு)
பாதிமா மதியம்‌ புனைசடைச்‌ இவனும்‌
பங்கய மலருறை யயனும்‌
– ஆதிமா மறைகொண்‌ டனுதினதந்‌ துதிசெய்‌
தலர்சொரிந்‌ தடிமிசை வணங்குஞ்‌
சோதியே! விரிகா வீரியிரு புறமுஞ்‌
சூழ்ந்தபொன்‌ னரங்கநா யகனே!
மாதிரம்‌ புகழும்‌ புதுவை மாநகரி
னீருந்துவந்‌ தேனென வகுத்தான்‌. 357

என்னகா ரியமிங்‌ கடைந்ததென்‌ றுணரான்‌
எனவவ ஸியம்பவப்‌ புதுவைப்‌
பொன்னக ரிடைவாழ்‌ பொருந்துமப்‌ பெரியார்‌
புதல்விேகா தைப்பெயர்‌ புனைந்தாள்‌
நின்னுடை யெழிலுக்‌ குகந்தபே ரழகாள்‌
நிகழ்த்துமா றடைந்தனன்‌ எனவே
அன்னவள்‌ வடிவத்‌ தெழிலெலா மவர்கா
தறிவுறும்‌ வகையெடுத்‌ தறைவான்‌. 358

செளந்தர்ய லகரி
இருளொளிர்‌ மதிய முறிலகன்‌ தநிடும்‌;கார்‌
எனில்வெயர்ப்ப்‌ புதிர்த்துள மறுகும்‌;
பொருதிரை கொரழிக்கு மறலில்வெண்‌ மணலும்‌
பொருந்திடும்‌; சைவலங்‌ கூயும்‌;
மூருகவிழ்‌ மலரும்‌ நானமும்‌ புழுகும்‌
மு.திரகிற்‌ புகைகளுங்‌ கதுவிக்‌
‘கருநிறங்‌ கவினும்‌ வளர்குழல்‌ நிகராய்க்‌nகருதுதற்‌ யொதுமொன்‌ றிலையேல்‌. 359

கறைமிடன்‌ நூதற்க ணென்னச்‌ ிந்தூரங்‌
கவினுறத்‌ தீட்டுவா ணுதற்குப்‌
பிறைநிக ரென்னிற்‌ பிறைதனிற்‌ றிலதம்‌
பெறாமையிற்‌ பேசுத லெளிதாம்‌;
நீறைதுள வரங்க நினதுளங்‌ குழைக்க
நயனவம்‌ பேவுதற்‌ கெனவே
மறைமுதற்‌ இழவன்‌ வெஞ்சலை யெனவே
வகுத்ததோ?. புருவங்கண்‌ டிலனால்‌. 360

வேலெனில்‌ மழுங்கும்‌; வாளெனின்‌ மடியும்‌;
விடமெனி லரன்மிடற்‌ றொளிக்கும்‌;
சேலெனில்‌ நீருட்‌ பதுங்கிடும்‌; கயலின்‌
செய்கையு மஃதெனில்‌; அவள்தன்‌
பாலென்‌ வெளிறி நீலமொத்‌ திருண்டு
செவ்வரி பரவிமை தோய்ந்து
காலனிற்‌ கொலைசெய்‌ தொழில்பயின்‌ றுளகூர்ங்‌ ‘ கண்ணினுக்‌ கொப்புக்காண்‌ கலனால்‌. 361

கொள்ளையபோர்‌ ‘புரியுங்‌ ‘கூரிய வேற்கண்‌
கூடுறுஞ்‌ செவிதனக்‌ குவமை
வள்ளையென்‌ றுரைக்கின்‌ மகரமாக்‌ குழைகள்‌
மருவிடா; வேறுமொன்‌ நிலையால்‌;
கள்ளவிழ்‌ மலரைங்‌ கணைமதன்‌ நிருத்தேர்‌
கடாவுதற்‌ கமைத்தவீ இகொலோ?
எள்ளினன்‌ மலரோ? குமிழ்கொலோ? அவள்மூக்‌ .ஃ
te – இணையென யாதினை யிசைப்பாம்‌?. : 362

மண்ணவர்‌ விபுதர்‌ விஞ்சைய ரூரகர்‌
மதன்முத வினர்வடி வழகைக்‌
கண்ணீனால்‌ நோக்கற்‌ சென்னவே அயனார்‌
அமைத்தகண்‌ ணாடியோ கபோலம்‌?
பண்ணினின்‌ னிசையைக்‌ கன்னலை அமுதைப்‌
பாகினைத்‌ தேனினை வெகுண்ட
பெண்ணினுக்‌. கணங்கின்‌ கிளிமொழிக்‌ குவமை.
.”….. பெற்றுள தேதென வுரைப்பாம்‌. 363

முல்லையி னரும்பை முருந்தினை முத்தை
முகிண்முலைத்‌ தடங்கண்மெல்‌ லியல்தன்‌
பல்லினுக்‌ குவமை யுரைத்திடி லதன்பாற்‌. ட
பரவுசெங்‌ .காவிதோய்ந்‌ இலையால்‌; –
சொல்லில வலரிற்‌ றூதுளை _
தொண்டையங்‌. கனிகளி லமழுதம்‌
இல்லையா தலினான்‌ மதுரமூ றிதமுக்“தஇணையென வுரைக்குமா றெளிதோ? – 364

முழுமதி தனக்கோர்‌ முயற்கறை கதுவும்‌;
முளரியில்‌ வண்டினந்‌ துவைக்கும்‌;
வழுவிலா நிறைகற்‌ பருந்ததிக்‌ கருள்வாள்‌
வதனத்துக்‌ கணையெதை வகுப்பாம்‌?
விமுகதிர்‌ பாளை மடலவி மாத
கமுகமோ? நினதுகை மேவும்‌
பழுதிலா வளையோ? கந்தர மதனை
யாதெனப்‌ பகர்ந்திட லாமால்‌? 365

பூரண கலசம்‌ அதன்மிசை யணிந்த
பூர்தொடை பொலிதலைப்‌ பொருவ
வாரணி தனங்கண்‌ மிசையுறக்‌ கவிந்து
வளைந்தவேய்‌ நிகர்தடந்‌ தோளாள்‌;
சீரணி யரங்கத்‌ இறைவ[நின்‌ புகழ்கள்‌
இருத்துநா ரதன்செழுங்‌ கரங்கொள்
ஏரணி யாழ்முன்‌ கைக்குநா ணிடுமென்‌
றிசைக்கின்மற்‌ றெவைநிக ரிசைப்பாம்‌? _ 366

திங்களி னொளியாற்‌ பங்கயம்‌ மலரும்‌;
செமித்தசெங்‌ காந்தளின்‌ அரும்புஞ்‌
செங்கதி ரோளிக்குங்‌ குவியுமால்‌; அங்கைக்‌
கணையெனச்‌ செப்பவே றிலையாஷ்‌;
அங்குலிக்‌ கணையாய்ச்‌ செங்கணங்‌ கெளிற்றை
யறையலாம்‌; செழுமலர்ச்‌ சோலைப்‌
பைங்கிளி யணிழுக்‌ கதனையம்‌ மடவாள்‌
நகறிகர்‌ பகருத லெளிதால்‌. 367

சக்கர வாகஞ்‌ சறைகொளும்‌; இளநீர்‌
சந்தன மணிதந்திடா; சூதின்‌
மிக்கவட்‌ டதுதான்‌ வெட்டுணும்‌; கலசஞ்‌
சுணங்குறா; மேருமா வரைதான்‌
நக்கனால்‌ வளையும்‌; நளினமென்‌ முகைதான்‌
நாயிறாங்‌ குதித்தகா லலரும்‌;
மைக்கருங்‌ குழலாள்‌ மணிகணார்‌ தனத்துக்‌
கேதினை யிணையென வகுப்பாம்‌? 368

புடவியை முதலா மனைத்தையும்‌ மகட்டுள்‌
பொருந்திநீ விளங்குகண்‌ வளரும்‌
வடவிலை யதனை யொருமழுறை யவள்தன்‌
வயிற்றினுக்‌: இணையென லாகும்‌;
கடலெழு தரங்கம்‌ வரையென லாகும்‌;
கட்டெறும்‌ பூர்மயி ரொழுங்காம்‌;
துடியதோ? தந்தோ? அனங்கவே ளூருவோ?
யாதெனத்‌ தொகுக்கலா . மிடையே? 369

நீருறு சுழியை யுந்தியை நிகராய்‌ நிகழ்த்துதல்‌ அரிது;நீர்‌ வளரிப்‌
பேரராப்‌ பணமோ? இனித்ததேன்‌ கூண்டோ?
பெருகுபோர்‌ மதனன்பொக்‌ கஇசமோ?
தேரதோ? வாச நிலைகொலோ? பரந்த
செம்பொ னாலவட்‌ டமதோ?
வாருறை தனத்தா எல்குலா மதனை
யாதென வகுத்துரைத்‌ திடலாம்‌? 370

வாழையோ? மோகக்‌ கடலினைக்‌ கடக்க
வகுத்திடுந்‌ தெப்பமோ? வசஞ்செய்‌
வேழமா மதனைப்‌ பிணித்திடுந்‌ தறியோ?
மென்றொடை யாதென விசைப்பாம்‌?ஆழியைக்‌ கரந்தந்‌ தாழிசூ மிலங்கைக்‌ ட்ட
கன்றுநீ செல்கென விடுத்த ‘ ்‌ ்‌
பாழியந்‌ தடந்தோள்‌ தூதனை மருட்டும்‌
பரிசமை யணிமுழந்‌ தாளாள்‌. 371

சனைவரால்‌ கணைக்கா லென்னலாம்‌; கமடஞ்‌
செப்பலாம்‌ புறவடிக்‌ இணையாய்‌;
நினையுன தழகுஞ்‌ தனதுமா வழகும்‌ நிறுத்தறிந்‌ திடுமுறை முளரி மனையுறை யயன்‌ றான்‌ வகுத்திடுஞ்‌ துலையோ?:
மற்றவள்‌ பரடு;மென்‌ குஇக்குப்‌
புனைமலர்க்‌ குழலா ராடுகந்‌ துகந்தான்‌
பொரும்விரற்‌ றுகிரென லாமால்‌. , . 372

தேங்கம ழனிச்ச மலர்மிசை நடந்தோ? —
செய்யபஞ்‌ சூட்டியோ? கரத்தால்‌
பாங்கியர்‌ வருடப்‌ பொறாமையி னாலோ?
பாரெலா :மலைந்துபோர்‌ வயங்கொள்-

பூங்கணை மதனன்‌ மகுடமா முடிமேல்‌
பொருத்தியோ? யாதினோ சிவந்த?
மாங்குயின்‌ மொழியா ளன நடை வனச
மலரடிக்‌ கொப்புவே நிலையால்‌. 373

இந்தமா வடிவத்‌ தருந்ததி கற்பி னிரும்புவிப்‌ பொறைத்திரு வெழில்சேர்‌
அந்தமா இனைநீ மணம்புரி வதற்கின்‌
றணைவையென்‌ றாங்கவ ளூடனே
முந்துநாள்‌ நவின்ற தாகவவ்‌ வதுவை
முடிப்பதற்‌ கியாவையு மமைத்துத்‌
தந்தியன்‌ றுரித்தோன்‌ முதலினோர்‌ சார்ந்துன்‌
றன்வழி பார்த்திருக்‌ .இன் றார்‌. 374

ஆதலாற்‌ புதுவை நகர்க்குகந்‌ தணுகா யாயிடிற்‌ பெரியரோ டந்த
கோதையே முதலோர்‌ பொறுத்திடன்‌ முடியாக்‌
கொள்கைய ராவர்‌;என்‌ புயத்தின்‌
மீதமர்ந்‌ இடிலிக்‌ கணமவண்‌ கொடுபோய்‌
விடுகுவ னேறுக வெனவிப்‌
பூதனை யெடுத்துண்‌ டுமிழ்ந்திடந்‌ தளந்தோன்‌ பொன்னடி பணிந்துநின்‌ றனனால்‌. ‘ 375

அரங்கன்‌ புதுவையை அடைக்தான்‌
நின்றவன்‌ புயமேற்‌ பொன்மலை மிசையோர்‌
நீலமால்‌ வரைபடிந்‌ தெனலாய்‌
நன்றென மகழ்வோ டரங்கம்வா மிறைவன்‌
நணுகலு மேந்திவான்‌ வழியாய்ச்‌
சென்றுதன்‌ மனமும்‌ பிற்பட விசைத்துச்‌
செஞ்சிறை புடைத்திடும்‌ வளியால்‌
குன்றொடுந்‌ தருவேர்‌ பரிந்துபின்‌ தொடரக்‌ ‘கோதிலாப்‌ புதுவைசென்‌ றடைந்தான்‌. 376

அடையுமா முகில்நே ராழிமா தவனை
யாழியை மந்தர வரையால்‌
கடையுநா ளெழுந்த வமுதினைக்‌ கண்ட
காட்சியிற்‌ கண்டுளங்‌ கனிவாய்‌
சடையவ ஸனயனிந்‌ திரன்முதற்‌ பலருஞ்‌
சயசயென்‌ றடிதொழு தவர்மேல்‌
மடைதிறந்‌ ‘ தருளார்‌ கடைக்கணித்‌ தருளி
வயினனம்‌ புயத்தைவிட்‌ டிழிந்தான்‌. . 377

மீனமார்‌ கடல்போற்‌ றுந்துமி முழக்கி ‘
விண்ணவர்‌ மழையெனப்‌ பொழியும்‌
தேனமர்‌ மலரின்‌ பந்தரின்‌ நிழற்கீழ்த்‌
தேவார்கோன்‌ பாதுகை தாங்கப்‌
போனகங்‌ கடுவோன்‌ விதியிரு புறத்தும்‌
புகுந்துகை லாகுதந்‌ தடைய
வானக மளவா. யுயர்ந்தபொன்‌ மணியார்‌
வடபெருங்‌ கோயில்புக்‌ கனனால்‌. . 378

புக்கபின்‌ னாங்கோர்‌ செழுமணி யினங்கள்‌
பொருந்துமண்‌ டபத்தின்மத்‌ இயினோர்‌ .
தக்கவா தனமேல்‌ வெண்குடை. நிழற்றச்‌
சாமரை யிருபுறம்‌ இரட்ட
மிக்கசர்‌ மதிவீற்‌ றிருந்தென விருந்தான்‌;
மீனினம்‌ பலவிளங்‌ குவபோல்‌
அக்கர வணிந்தோன்‌ முதலினோர்‌ பலரு
மமையுமா தனத்தரு கஇிருந்தார்‌. 379

இருந்த வவ்வமைதி யிந்திரன்‌ வதனம்‌
இடைச்சிய ௬டைகவர்ந்‌ தெடுத்துக்‌
குருந்தமீ தடைந்த கோவல ஸஜனோசக்கிக்‌
கோதிலாப்‌ பெரியர்பாற்‌ குறுடக்‌
கருந்தட நயனக்‌ கோதையாள்‌ தனையாம்‌
கடிமணம்‌ புரிந்திடு வதற்குப்‌
பொருந்துமா நுரைத்து வருகவென்‌ நிசைப்பப்‌ புரிவனம்‌ முறையெனப்‌ போனான்‌. 380

போனவன்‌ ‘விரைவிற்‌ பெரியவாழ்‌ வார்தம்‌
பொன்மனை புகுந்துநின்‌ மகளாம்‌
மாவினோக்‌ கனளை யரங்கநா யகனார்‌ os
மணஞ்செய்வா னடைந்திருக்‌ கின்றார்‌;
ஆனதா லுனதுள்‌ ளறிகுவா னவரின்‌
றனுப்பவந்‌ தனன்புக லெனுமவ்‌
வானவ ரரசன்‌ றிருமுகம்‌ நோக்கி –
ட மற்றவன்‌ இதைவகுத்‌ துரைப்பான்‌ 381

மூன்னர்நா ஸிழைத்த அருந்தவத்‌ தீன்ற முயற்கறை யிலாமதி முகத்தென்‌
கன்னியைத்‌ கருவே னென்னயாத்‌ திரையாக்‌
கடிநகர்க்‌ கேகிய ஞான்றில்‌
அன்னவற்‌ குரைத்த தொனியுமஃ தறிவாய்‌; i
ஆதலா லம்மொழி மறுத்துப்‌
பின்னரொன்‌ நுரைப்ப துளகொலோ? எனதும்‌ ‘ : பெற்றிகண்‌ டறிந்திலாய்‌ போலும்‌! 382

அளித்திடு வதனுக்‌ கையமொன்‌ றிலையா
லாங்குநீ விரைந்தடை.ந்‌ தியானை
விளித்தமா முதலை யழைத்து வாவெனலும்‌
மீண்டவன்‌ கடிதுசென்‌ றருந்தேன்‌ ‘
துளித்தபைந்‌ துளவோ ஸனம்புய மலரின்‌
துணையடி வணங்கியப்‌ பெரியார்‌
களிப்புடன்‌ மகளைத்‌ தருவதற்‌ சசைந்தார்‌கடிதெழுந்‌ தருள்கெனப்‌ பணித்தான்‌. ” 383

பணித்தசொற்‌ றன்து திருச்செவி யுறலும்‌ பரிவினோ டாங்குவீற்‌ நிருந்த
மணித்தவி சனைவிட்‌ டெழுந்தழ தெறிக்கும்‌
மரக;தச்‌ சவிகைமேற்‌ பொருந்தித்‌
திணித்தட வரைத்தோட்‌ கணிச்சியன்‌ முதலோர்‌
சேர்ந்திரு புறத்தினும்‌ நெருங்கக்‌
கணித்தநான்‌’ முறைநல்‌ லோரையிற்‌ பெரியார்‌
கனகமா ளிகைகலந்‌ தனனால்‌, 384

கலந்தமா தவனைக்‌ கண்டவப்‌ பெரியார்‌
கனலிகா ணம்புய மலரின்‌
மலர்ந்திட வதன முளங்களி துளங்க
வந்தெதிர்‌ பணிந்துநீ வருக
நலம்புரிந்‌ துளதிக்‌ குடிகொலோ? கோதை
நங்கையோ? அடியனோ? நாயேன்‌
குலங்கொலோ? உணரேன்‌; எளப்புகழ்ந்‌ தேத்திக்‌
குருமணித்‌ தவிசினுய்த்‌ தனனால்‌. . 385

அரங்கன்‌ மணக்கோலம்‌
தஞ்சமென்‌ றடியிற்‌ றாழ்ந்துளோர்க்‌ கெல்லாம்‌
தாமரைக்‌ கடைக்கணித்‌ ததற்பின்‌
அஞ்சன வண்ண ஸெழுகநன்‌ முகூர்த்த
மகலுமுன்‌ றிருமண முடிப்பான்‌:மஞ்சன .மாட வேண்டும்நீ யெனவவ்‌
வானவற்‌ கிறைவனுஞ்‌ இவனுங்‌ |
கஞ்சனு மணிநீ ராடுமண்‌ டபத்துட்‌
கடி. துகொண் டடைந்தனர்‌ மாதோ. 386

தாண்டிய தரங்கப்‌ பெருகடல்‌ நீருஞ்‌
சத்தமா. நதிகணீர்‌ முதலாய்‌
– வேண்டுவ வருவித்‌ தவற்குநீ ராட்டி மெய்யெலாம்‌ பட்டினாற்‌ றடவி
மீண்டலங்‌ கரிக்குங்‌ கூடமுட்‌ கொடுபோய்‌
விளங்குபொன்‌ னுடைமுடி முதலாம்‌
பூண்டயங்‌ கஇிடுமா றணிந்துசந்‌ தனமும்‌
பூந்தொடை முதலெலாந்‌ தரித்தார்‌. _ 387

திருமணக்‌ கோல்‌ மமைத்தபின்‌ பவர்பூஞ்‌
செங்கர மணிவிர லதற்குள்‌
ஒருவிர லதனைச்‌ சங்கரன்‌ பிடித்திட்‌
டுவப்பொடு மழைத்துவந்‌ தனனவ்‌
்‌ விரு௨ரு மிருபா’ லினுமிரு புயமு
மேத்தி௦யெச்‌ சரிக்கையோ டெழிலாம்‌
குருநவ மணிக எளிழைத்தகல்‌ யாண
மண்டப முட்கொடு புகுந்தார்‌. 388

புகுந்தவ ணமைத்த பைம்பொனா தனமேற்‌
பொருந்துறக்‌ குணதிஎ.௪ முகமாய்‌
-மூகுந்தனை யிருத்தித்‌ தமதுமா மடவார்‌
.முகந்தனை .நோக்கவாங்‌ கவரும்‌
மிகுந்தவன்‌ பொடுபோய்க்‌ கோதையைக்‌ கொணர்ந்தல்‌
வேதநா யகன்வலப்‌ புறத்தில்‌
தகுந்தவம்‌ முறையோ ராதன மிசையே
சார்வுற இருத்தினர்‌ மாதோ. 389

ஏற்றனன்‌
தூரிய வசைகள்‌ கறங்கிடு முழக்குஞ்‌
சுரிமுகங்‌ களினெழு முழக்கும்‌
* ஆரியர்‌ வாழ்த்தும்‌ மங்கல வொலியும்‌
அருமறை முனிவரோ தொலியும்‌
வாரியின்‌ முழங்கப்‌ பெரியர்வந்‌ தென்பெண்‌
கோதையை வழங்கின னுமக்கென்‌
Cont கரத்தும்‌ நீர்பொழிந்‌ தளித்தான்‌
உலகளந்‌ தவனுமேற்‌ றனனால்‌. 390

மாதவன்‌ மங்கல நாண்‌ புனைந்தான்‌
– மருவமை முளரி மலருறை யயனார்‌
மங்கலச்‌ சடங்குகள்‌ உழுவா
தருமறை முறையில்‌ பலவுமாங்‌ இயற்றி
யாவீனெய்‌ சொரிந்தெரி வளர்த்தித்‌திருமரு -மார்பன்‌ கோதையாள்‌ கழுத்திற்‌
இருந்துமங்‌ இலியமங்‌ கரத்தால்‌
பொருவுமா றணிந்தான்‌; அந்தரத்‌ தவர்கள்‌
பூமழை பொழிந்துவாழ்த்‌ தினரால்‌. 391

மற்றுள சடங்கு நடந்தபின்‌ பெரியார்‌
மகிழ்ந்துபல்‌ லாண்டெடுத்‌ தோதப்‌
பொற்றொடி மடவார்‌ பலர்இரண்‌ டிசை?ர்‌
பொருந்துசங்‌ சர்த்தன மிசைப்ப
விற்றிரு நுதற்சூ டிக்கொடுத்‌ தவள்்‌ தன்‌
மெல்வீரல்‌ பிடி த்தம்மி மிதித்திட்‌
டுற்றெழு சனலை வலம்புரிந்‌ தாழி
யுதகமார்‌ குடத்திலிட்‌ டெடுத்தே; 392

எதிருற அடையு மருந்ததி தனையு
மெழிற்கணா னோக்கவந்‌ திருப்ப
. . ..மதிதவழ்‌ சடையா னெழுந்துவெண்‌ பொரிகை
்‌ வாரியிட்‌ டிடுதலு மஇழ்வாய்‌
கதிர்செயு மணி3மா இரமழ குறவாங்‌
கவர்இரு விரற்கணிந்‌ தெவரும்‌
அதிசய முடனே துதிசெய மடவா ்‌
-ராலநீர்‌ சுழற்றிட வெழுந்தார்‌. 393

எங்கிருந்‌ தெம்மாப்‌ பொருளையு மெடுத்திட்‌
டெய்திடு மிரவலர்‌ பலர்க்கும்‌
தங்கண்மா மனதுள்‌ வெறுப்புறும்‌ வகையோர்‌
சாமமா மளவுமோய்‌ வீலதாய்ச்‌
செங்கன கமுமா மணியும்பட்‌ டுடையுஞ்‌
செழித்தவா பரணமும்‌ பிறவும்‌
மங்குலி னுதவி யறுசுவை பதார்த்த
வகையமு தியாவரு மருந்தி; 394

வெண்கரி யத்னை யலங்கரித்‌ ததன்மேல்‌
வீதியிற்‌ கோலமாய்‌ விளங்கி
மண்படு துகளுந்‌ தூரிய வொலியும்‌
வானகம்‌ ‘போர்த்திடப்‌ பலருங்‌
கண்படு காட்சிக்‌ கடங்குறா வணம்‌அ௮க்‌
கடி நகர்‌ முழுவதும்‌ வலமாய்‌
விீண்படு கனக மாளிகை யதனின்‌
மேவினார்‌ மீட்டுமின்‌ பு.றவே. 395

விஞ்சொளி மணிகள்‌ பைம்‌பொனி ஸனிழைத்து
விளங்குறச்‌ சித்திர வறைக்குள்‌
அஞ்சன வண்ணத்‌ தரங்கநா யகனும்‌ .
2 அனநடைக்‌ கோதையும்‌ புகுந்து
பஞ்சணை மருவிக்‌ காமமாங்‌ கடலிற்‌
படிந்தின்ப நறவமுண்‌ டுறங்கிச்‌
செஞ்சுடர்க்‌ கதிரோன்‌ குணகட லெழலுஞ்‌
செழித்தபஞ்‌ சணையைவிட்‌ டெழுந்தார்‌. 396

ஆழ்வார்‌ சீர்வரிசை செய்தல்‌
அனங்கவேள்‌ தனைவென்‌ றுளபெரி யாழ்வார்‌
அரங்கமா நகரிற்பைந்‌ தலைகொள்‌ ல >
சனங்கெழு மரவிற்‌ .றுயிலுமா தவனார்‌
சேர்ந்துதன்‌ இிருமக ளாகுங்‌
கனங்குழை கோதை தனைமணம்‌ புணர்ந்த
காட்சியைக்‌ கண்டுகண்‌ களித்து
மனங்கொளா மடஒழ்வுற்‌ றவர்க்கரு ளிடுஞ்சீர்‌
வரிசைகள்‌ பலவுமீந்‌ தனரால்‌. 397

சய்ந்தபின்‌ பலவா முபசரிப்‌ புடன்றன்‌ ட்டா
இணையடி தொழுதிடும்‌ பெரியார்‌ _
வாய்ந்தவம்‌ புயமா மலர்முகம்‌ நோக்கி,
மாதவன்‌, மறைமுதற்‌ பலநூல்‌
ஆய்ந்தநல்‌ லுளத்தோ யினிச்சில நாளின்‌
“அரங்கமா நகரம்வந்‌ தணைகென்‌்
ஹேய்ந்தநல்‌ லுரைகள்‌ பலபல வாக
எடுத்தவன்‌ களிப்புற விசைத்தே; ்‌ 398

மணமக்கள்‌ அரங்கம்‌ அடைந்தனர்‌
“ மாதினுக்‌ கரசாங்‌ கோதையா ளஞூடனே
வயினனா மேறுவெற்‌ பதன்தோள்‌
மீதெழுந்‌ தருளி யரங்கமா நகர
மேவிவாழ்தந்‌ இருந்தனன்‌; விரிஞ்சன்‌
பூதமார்‌ படையோன்‌ புரந்தரன்‌ முதலாம்‌
; புலவர்க ளாதிமற்‌ றெவரும்‌
தீதிலாத்‌ தத்தம்‌ மடந்தைய ௬டனே ்‌
சேர்ந்துதம்‌ பதியில்வாழ்ந்‌ தனரால்‌, 399

(வேறு)
அனையவர்‌ யாவரு மகன்ற பின்னரின்‌
வினையற நோற்றவவ்‌ விட்டு சித்தனும்‌
கனைகுரன்‌ முரசதீர்‌ கனக மாளிகை
புனைகொடி. விசும்பினார்‌ புதுவை வைகினன்‌. 400

ஆழ்வார்‌ அரங்கம்‌ அடைதல்‌
பற்பல நாளகன்‌ றதற்பி னோர்பகல்‌
“ வெற்பமை வடபெருங்‌ கோயின்‌ மேவியே
சற்பமேற்‌ றுயில்வட பத்ர சாயிதன்‌
பொற்பதம்‌ பணிந்திவை புகல்வ தாயினான்‌: 401

விரிபுக ழரங்கமுள்‌ விளங்கிக்‌ கண்வளர்‌
வரியர வணையினான்‌ வருக வென்றெனைப்‌
பரிவொடு மற்றைநாள்‌ பணித்த தற்கியான்‌
புரியவேண்‌ டுவதெனோ புகல்கி யென்றனன்‌. 402

என்னலும்‌ யாமுவவ்‌ வெழில ரங்கரும்‌
ஒன்றென வுளந்தெளிந்‌ தொளிய ரங்கமுள்‌
சென்றணைந்‌ தாங்கவர்‌ செப்பு மம்முறை
நன்றெனப்‌ புரிகென விடையும்‌ நல்கினான்‌, 403

நல்கிய விடைகொடு நளினம்‌ போன்முகம்‌
மல்கிடப்‌ புதுவைமா நகரம்‌ நீங்கியே
பல்கலைக்‌ கேள்வியர்‌ பரவுங்‌ ௯டல்சேர்ந்‌
குல்கலி லழகர்பொன்‌ னடிவ ணங்கியே; 404

விழைவொடு மாலிருஞ்‌ சோலைமே விக்கள்‌
ளழகரம்‌ புவிமல ரடிவ ணங்கியே
முழவொலி யுருமென முடுகிூப்‌ புற்றரா
நுழையரங்‌ கந்தனை நோக்கிப்‌ புக்கனன்‌. . 404

புக்குநல்‌ இருவடி போற்றி நின்றவத்‌ குக்கசீர்ப்‌ பெரியர்தா மரையின்‌ றண்மலர்‌
ஒக்குமா முகந்தனை நோக்கி யொண்கதகுர்‌
சக்கரக்‌ கரவரங்‌ கேசர்‌ சாற்றுவார்‌? 406

ஈங்கொரு கோயிலொன்‌ றநியற்றி யெம்மையித்‌
தேங்குழற்‌ கோதையைக்‌ கருட தேவனைப்‌
பாங்குற விக்ரக மாகப்‌ பண்ணியே
ஆங்கொரா சனமிசை யணுக வைத்தரோ; 407

பத்தியோ டுச்சவா திகள்பல்‌ பூடணம்‌
நித்யவா ராதனம்‌ நிகழ்த்தும்‌ யாவையும்‌
ஒத்திடப்‌ புரிந்திவ ணுறைதி யென்னலும்‌ அத்தகை புரிந்தவ ணணுகு நாளிடை) 408
ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தார்‌
கோதில்பூ மாலை சூடிக்‌ கொடுத்தவம்‌
மாதுமுன்‌ னிலைத்திரு மந்தி ரந்தனை ஓதியப்‌ பெரியரு மொருதஇி னத்திடை
ஆதிநா ரணன்இரு வடிய டைந்தனர்‌. 409

கோதையாரின்‌ பாசுரம்‌
அன்னவ ஞூரைத்தபா மாலை யாமதை
– துன்னிய வன்பொடுந்‌ துதித்து நாவினாற்‌
பன்னியுங்‌ கேட்டுமிப்‌ படியின்‌ மீதுளோர்‌
மன்னின ரனேகர்‌ வைகுந்த மாதகர்‌, 410

(வேறு)
உரையப்‌ பாமா லையிற்றிருமா
லுறையும்‌ பதிகள்‌ பதினாறாம்‌
அரங்கம்‌ பிருந்தா வனங்குடந்தை
யணியா ரெமுனைக்‌ கரைக்கண்ண
புரமா லிருஞ்சோ லைவில்லி
புத்தூர்‌ பாண்டி வடம்வ௪ைம
துரைபத்‌ தவிலோ சனந்துருவேங்‌
கடஞ்சீர்‌ துவரா பதியோடும்‌; 411
(

வேறு)
நீரார்‌ பாற்கடலும்‌ — ஏரா ராய்ப்பாடிப்‌

பேரார்‌ வைகுந்தம்‌ — சீர்கோ வர்த்தனமே. 412

ஆண்டாள்‌ சிறப்பு
(வேறு)
. . உலகந்‌ தனில்வாழ்‌ மானிடற்குள்‌
உயர்ந்த பெரியோர்‌ முனிவர்களாம்‌;
இலகு மூனிவோர்‌ தமக்குயர்ந்தோ
ரெழிலாழ்‌ வார்க ளாம்‌;அவற்குள்‌
நலமார்‌ பெரியாழ்‌ வாருயர்வாம்‌;
அவர்க்கும்‌ நாச்சி யாரென்னும்‌
திலக நூதற்சூ டிக்கொடுத்தா
ளுயர்வாம்‌ அதன்செய்‌ கையுந்தெரிப்பாம்‌. 413

இனிதாம்‌ புண்ய மிதுபாப
மிதுநன்‌ மைகளீ திதுதின்மை
அனியா யந்௫ திதுநியாய
மெனவே யனைத்து மறிவகையாய்‌
முனிவோர்‌ பலசாத்‌ திரநூல்கள்‌
புகன்ற முறையா லிவ்வுலகின்‌
மனிதர்‌ தமக்குள்‌ எம்முனிவோர்‌
பெரியோ ரெனவைக்‌ கப்படுமால்‌. 414

காயைத்‌ தின்னு மவர்தமக்குக்‌
கனியைத்‌ தருமங்‌ கவர்போல
மாயைத்‌ தொடர்புள்‌ ஞழல்வோரம்‌
மயக்கைக்‌ கழிக்கும்‌ வகையயனாஞ்‌ : சேயைத்‌ தருமுத்‌ தியங்கமலத்‌
திருநா ரணனைச்‌ செப்பியீடும்‌
ஆய வாற்றா லாழ்வார்கள்‌ –
முனிவோர்க்‌ கதிக மெனவறைவார்‌. 415

மாயன்‌ றனக்குக்‌ கண்‌இிட்டி
வாரா வகைகாப்‌ பணிந்திடுமா
றாய பல்லாண்‌ டினையிசைத்தும்‌
அவரே பரமா மெனவிசைத்திட்‌
டேய கிழியும்‌ அறுத்ததனா
லிசைக்கு மாழ்வார்‌ தங்களுக்குள்‌
தூய பெரியாழ்‌ வார்பெரியா
ரெனவே சொல்லும்‌ முறைதெளிமின்‌. 416

சூடும்‌ நறும்பூ மாலைகளுஞ்‌
_. சுருபம்‌ பெண்ணாய்ப்‌ பத்தியொடும்‌
பாடு மிசைசேர்‌ பைந்தமிழின்‌
பாமா லைகளும்‌ பணவரவின்‌
ஆடுந்‌ திருமாற்‌ களித்தவரைப்‌ புணர்ந்த வதனா லருவினையைச்‌
சாடும்‌ பெரியாழ்‌ வாற்குமவள்‌ பெரியாள்‌ எனவே சாற்றுவரால்‌. 417

மலர்மாலையைச்‌ சூடிக்‌ கொடுத்ததனாலும்‌,
பெண்ணாகப்‌ பிறந்ததால்‌ காதல்‌ பள்ளமடையாயிருத்தலினாலும்‌, பெருமாளைத்‌
திருமணம்‌ செய்துகொண்டமையாலும்‌ சூடிக்கொடுத்த சுடர்க்‌ கொடியே
பெரியவள்‌

இந்தக்‌ கதையைப்‌ படித்தவரும்‌
எழுது மவரு மிதன்பொருளைச்‌
சிந்தை தெளிய வுரைப்பவருங்‌
கேட்கும்‌ செய்கை யுடையவரும்‌
முந்தை வினையைக்‌ களைந்துபத்தி
முயன்று பலபாக்‌ கியங்களொடும்‌
மைந்தர்ப்‌ பெருஞ்செல்‌ வமுமடைந்து.
கடையிற்‌ பதவி மன்னுவரால்‌. 418

ஆசாரியர்களின்‌ வரலாறு பேசுவோம்‌
புதுவைப்‌ பெரியாழ்‌ வார்மகளாய்ப்‌
புவிமா துதித்திட்‌ டரங்கர்தமை
வதுவை புரிந்த சரித்ரமதின்‌
வகைகள்‌ பலவும்‌ விரித்துரைத்தோம்‌;
இதுகா றாழ்வார்‌ களின்சரிதம்‌;
இனியா ரியாக எளியற்சரிதம்‌;
அதனுள்‌ நாத முனிசரிதம்‌
அதனை யிவ்வா றெனவறைவாம்‌. 419

ஆண்டாள்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.
(முதலாம்‌ காண்டம்‌ முற்றும்‌)
ஆழ்வார்‌ எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌,

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஷட்பதீ –வண்டு- ஸ்தோத்ரம்–ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள்–

June 16, 2024

திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,

மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

என்கிறார்.

வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.

நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |

பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.

மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.

ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத் தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!

ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.

ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்று வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலததில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!

————

ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத:
(1)

அவிநய – மபநய விஷ்ணோ

தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |

பூத – தயாம் விஸ்தாராய

தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||

ஹே விஷ்ணு
எனது பணிவின்மையைப் போக்கு
மனதை அடங்கச் செய்
ம்ருக த்ருஷ்ணாம்-தாகம் கொண்ட மான் போல்-புலன்கள் ஓடுவதைத் தவிர்த்து -சம தம பிரார்த்தனை–பேராசையையும் தவிர்த்து அருள்
எல்லா ஜீவ ராசிகளிடமும் தயையை வரச் செய்
சம்சாரக்கடலில் இருந்து அக்கரை சேர்த்து அருள்

——–

திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
(2)

திவ்ய – துநீ மகரந்தே

பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |

ஸ்ரீபதி பதாரவிந்தே

பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும்
ஸச் சித் ஆனந்தம் ஆகியவற்றை வைசனையாகக் கொண்டதும்
உலகில் துன்பத்தைப் போக்குவதுமான
ஸ்ரீயப்பதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்

———-

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க:
(3)

ஸத்யபி பேதாபகமே

நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |

ஸாமுத்ரோ ஹி தரங்க:

க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||

ஜீவாத்மாவான எனக்கும் பரமாத்மாவான உனக்கும் இடையில் வேற்றுமை இல்லை எனினும்
ஹே ஸ்வாமிந்
அடியேன் உனக்கு சேஷ பூதனே
யானும் நீ என்னுடைமையும் நீயே
அலை தானே ஸமுத்ரத்தை அண்டி இருக்கும்
கடல் அலையை அண்டி இருக்காதே

———–

உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசி த்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார:
(4)-அந்தாதி அமைப்பில் ஸ்லோகம்

உத்த்ருத நக -நகபிதநுஜ

தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |

த்ருஷ்டே பவதி ப்ரபவதி

ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||

கோவர்த்தன மலையைத் தூக்கியவரே
இந்திரனின் இளையவராக உம்மை ஆக்கிக் கொண்டவரே
அசுரக் கூட்டத்தை அழித்தவரே
ஸூர்ய ஸந்த்ரர்களைக் கண்களாகக் கொண்டவரே
தங்கள் கண்களுக்கு எதிரே வந்து காட்சி அருளும் பொழுது எவருக்குத் தான் உலகியலிகளின் தாழ்மை தோற்றாது

——————

மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (
5)

மத்ஸ்யாதிபி – ரவதாரை –

ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |

பரமேச்வர பரிபால்யோ

பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||

மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கி வந்து அருளி
பூமியைக் காத்து அருளும் தங்களால்
ஸம்ஸார தாபத் த்ரயங்களால் மருண்ட அடியேன்
உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்து அன்றோ

———

தாமோதர குண மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே
(6)

தாமோதர குண மந்திர

ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |

பவ – ஜலதி – மதந மந்தர

பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||

தாமோதரன்
குணங்களுக்கு கோயிலானவனே
அழகிய தாமரையை ஒத்த திரு முகம் கொண்டவனே
கோவிந்தா
ஸம்ஸாரக் கடலைக் கடையும் மந்த்ர மலை போன்றவனே i
எனது பெரும் துன்பத்தைப் போக்கி அருள்வாய்

————

நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது
(7)

நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ

இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||

ஹே நாராயணா
கருணைக் கடலே
உனது திருவடித் தாமரைகளை சரணம் அடைகிறேன்
என்ற இந்த ஆறு சொற்கள் எப்போதும் என்னிடம் தங்க அருள்வாய்

————

இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக் கவலையும் கிரஹ தோஷமும் நீங்கும்.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு-

June 2, 2024

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

ச்லோக குருபரம்பரை (ச்லோகம்)

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.

திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய

த்வயம்
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

சரம ச்லோகம் (ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஓராண் வழி ஆசார்ய தனியன்கள் (https://acharyas.koyil.org/index.php/thanians/)

  • பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந:

  • பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||

  • ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||

  • நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

  • ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||

  • உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||

  • மணக்கால்நம்பி (மாசி – மகம்)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||

  • ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||

  • பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

  • எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

  • எம்பார் (தை – புனர்பூசம்)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||

  • பட்டர் (வைகாசி – அனுஷம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

  • நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||

  • நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

  • வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||

  • பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||

  • திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே ||

  • மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்
துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள்

ஸாஷ்டாங்கமாக சேவித்துப் பின்வரும் ச்லோகங்களைச் சொல்லவும்:

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு || (ஸ்தோத்ர ரத்நம் 48)

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)

தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் |
ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜ
உத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா
 நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 16)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 23)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 24)

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே || (புராண ச்லோகம்)

மூன்று முறை கையைத்தட்டி ஓசை செய்து, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அங்கண்மா ஞாலத்து அரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 22)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: || (புராண ச்லோகம்)

முந்தைய நாளில் சாற்றிய புஷ்பங்களை, இப்பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு களையவும்

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு 9)

ஸ்நாநாஸநம் செய்யவும் – புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம், பெரியாழ்வார் திருமொழி வெண்ணெயளைந்த குணுங்கு பதிகம் முதலியவைகளை கால அவகாசத்து ஏற்ப அநுஸந்திக்கவும்.

அலங்காராஸநம் ஆரம்பிக்கவும்.

முதலில் இந்த ச்லோகம்/பாஸுரம் சேவிக்கவும்.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் || (ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)

தூபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி (ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
பரிவதில் ஈசன்படியை பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று
உரிமையுடன் ஓதியருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு (திருவாய்மொழி நூற்றந்தாதி 6)

தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச || (மஹா நாராயண உபநிஷத்)

வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் (முன்பே உள்ளது)

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பனிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்
குடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள் கடலுள்,
என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும் அணையாம் திருமார்க்கு அறவு (முதல் திருவந்தாதி 53)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பெயரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா (உபதேச ரத்தின மாலை 38)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி || (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா || (யதிராஜ விம்சதி 1)

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

சாற்றுமுறை சேவிக்கவும்:

பர்யங்காஸனம்

இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்):

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: || (முகுந்த மாலா)

ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:
உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ||

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு
ஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச்சுடரே தனி உலகே என்றென்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே (பெரியாழ்வார் திருமொழி 5.4.9)

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

May 29, 2024

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

—————

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக் கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்-பாம்பணை சயனம்திரு மெய்யம் 
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்-திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்-பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 

2. விமலாக்குருதி விமானம்  

3. சுத்தஸ்த்வ விமானம்      

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்      

6. வைதிக விமானம்  

7. உத்பலா விமானம்        

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்   

10. வேதசக்ர விமானம்  

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்     

14. ஸ்ரீகர விமானம்      

15. ரம்ய விமானம்   

16. முகுந்த விமானம்- 

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்      

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப் போகிறது.

———
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்-திரு அயோத்தியை-திருக் கண்ணபுரம்–திருக் கோட்டியூர்-திருத் துவாரகை-திரு வடமதுரை-திருக் கோவர்த்தனம்-திரு விருந்தாவனம்-திரு வெக்கா
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –திருக்குறுங்குடி-திருப்பாடகம்–திருப்பேர் நகர்
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –திரு அத்திகிரி-திரு வல்லிக் கேணி-திரு ஆய்ப்பாடி–திருக் கோவலூர்-திரு விண்ணகர்
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்-திரு அட்டபுயகரம் /திருவாலி –/திரு ஊரகம் /திருக்கடிகை /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்–இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

————–

அ காரம் நடுவில் உ காரமும்  ம காரமும் ஏக சிம்காசனம் -பொன்னும் முத்தும் மாணிக்கமும் –
அணி புதுவை தண்  தெரியல்
–ஸ்ரீ மிதிலை பிறந்து ஸ்ரீ அயோதியை புகுந்தாள்
ஸ்ரீ நப்பின்னை கும்பன்  இடம் பிறந்து –ஸ்ரீ ஆய்ப்பாடி புகுந்தாள்  
ஸ்ரீஆண்டாளோ பிறந்த புகுந்த இடம் இது -ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை —
ஸ்ரீ விஷ்ணு சித்தர்–மார்பம் என்பதோர் கோவில் அமைத்து -மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி-ஆர்வம் என்ற  ஓர் பூவை சேர்த்து–

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம்.
அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை:
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும்,
தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க,
சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும்,
அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு- மாதுளம் பூ;
மரவல்லி இலை- கிளியின் உடல்;
இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;
கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;
கட்டுவதற்கு வாழை நார்;
கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.
இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய
இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன.
இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி.
இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர்.
சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மற்றும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில்,
பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும்,
அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
———————————————————————————————————-———————————

ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.

அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.

த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.

கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.

ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்

வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.

கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான்  கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ.  எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.

இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில்  கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு

பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால்

நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.

தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.

துவஜ அவரோஹணம்  – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.

த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக  ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.

சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு  புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.

விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.

பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.

வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.

கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.

ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது

பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.

ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி  ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.

ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.

ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.

நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.

விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது

தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்

கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.

அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம் 

ஸ்ரீ திருவல்லிக்கேணி -ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவ விவரணம்

முதல் நாள் காலை -தர்மாதி பீடம் -ஸ்ரீ உபய விபூதி நாத ஸூசகம் – -ஸ்ரீ முதல் திருவந்தாதி -திரு வீதியில்

மாலை புன்னை மர வாஹனம் -ஸ்ரீ கண்ணன் திருப் புல்லாங்குழல் ஊதும் திருக்கோலம்
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் புத்தூர் பெறாத அன்று
பாரதம் கை செய்த அத்தூதன் -ஸ்ரீ பெரியாழ்வார் -2-1-1-

இரண்டாம் நாள் காலை -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி சேவை –
விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் -71-என்றும் பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்
பாம்பணை மேல் சேர்ந்தாய் -97-என்பதற்கு ஏற்ப சேஷ வாஹனம்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -81-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்

இரண்டாம் நாள் மாலை -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே
என் சிற்றாயர் சிங்கமே -ஸ்ரீ பெரியாழ்வார் –3-3-5-என்பதற்கு ஏற்ப ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள் காலை -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி சேவை -பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன் மேல் கண்டாய் தெளி –57-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கருட வாஹனம் சேவை

ஏகாந்த சேவையில் திருக்கண்டேன் — என் ஆளி வண்ணன் பால் இன்று -1-சேவை

மூன்றாம் நாள் மாலை –உரக மெல்லணையான் கையில் உரை சங்கம் போலே மட அன்னங்கள் –ஸ்ரீ பெரியாழ்வார் –4-4-4-
என்பதற்கு ஏற்ப ஹம்சா வாகனத்தில் பறவை ஏறு பரம் புருடனாக-5-4-2-சேவை
இவன் தானே உலகினில் பேர் இருள் நீங்க அன்று அன்னமதாய்-1-8-10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

நான்காம் நாள் காலை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி சேவை -நீயே எரி சுடரும் -20-என்பதற்கு ஏற்ப –
நான்முகனை படைத்த நாராயணன் -1-என்பதால் பரத்வம் பொலிய ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -ஸூர்ய பிரபையில் சேவை

நான்காம் நாள் மாலை -ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ நாச்சியார் திருமொழி சேவை –
கதிர் மதியம் போல் முகத்தான் -1-என்றும்
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -7-4-என்பதற்கு ஏற்ப சந்த்ர பிரபை சேவை –

ஐந்தாம் நாள் காலை -ஸ்ரீ திருவிருத்தம் சேவை -நாயகா பாவனையில் பூர்ணமாக அருளிச்செய்த
ஸ்ரீ திவ்ய பிரபந்தம் அன்றோ ஆகவே நாச்சியார் திருக்கோலம்

ஐந்தாம் நாள் மாலை -ஸ்ரீ பெருமாள் திருமொழி சேவை –
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை -10-11-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள் காலை -திருச்சந்த விருத்தம் சேவை -ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ -8-என்பதற்கு ஏற்ப
திரு அபிஷேகம் அணிந்து பரத்வம் பொலிய ஆனந்த விமானத்தில் எழுந்து அருளுகிறார் –

ஆறாம் நாள் மாலை ஸ்ரீ முதல் ஆயிரம் நிகமித்து-
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி -28-என்றும்
விண்ணுளார் வியப்ப வந்த ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா -44 -என்பதற்கு என்ற ஆனை வாஹனம்

ஏழாம் நாள் காலை ஸ்ரீ திருவெழு கூற்று இருக்கை சேவிக்கப் பெற்று ஸ்ரீ பெரிய திருமொழி சேவை -என்பதற்கு ஏற்ப திருத்தேரில்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -2-3-1-என்றும்
பார்த்தன் தன் செல்வத் தேர் ஏறி சாரதி -2-10-8-என்பதற்கு ஏற்பவும் திருத்தேரில் சேவை –

எட்டாம் நாள் காலை முதலில் ஸ்ரீ சிறிய மடல் சேவிக்கப் பெற்று பின்பு ஸ்ரீ பெரிய திருமொழி தொடர்ந்து சேவை
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி-என்றும்
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப-3-3-3-என்றும்
ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து -3-9-7-என்றும்
பாடல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமார –4-4-3-என்பதற்கும் ஏற்ப
வெண்ணெய்த் தாழிக் கண்ணனாக சேவை

எட்டாம் நாள் மாலை -ஆடல் மா வலவன் கலிகன்றி பாசுரங்கள் சேவைக்கு ஏற்ப குதிரை வாஹனம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு ஆபரணங்கள் கொள்ளை அடிக்க எழுந்து அருளுவதும் –
ஸ்ரீ திருமந்திர உபதேசம் செய்து திருத்திப் பணி கொள்வதும் –
மீண்டும் வாடினேன் வாடி வருந்தினேன் -முதல் பதிகம் அனுசந்திப்பதும் -முக்கிய நிகழ்வுகள்

ஒன்பதாம் நாள் காலை -மட்டை அடி உதவும் -எட்டாம் நாள் மாலை சேர்த்தியில் எழுந்து அருளி –
வேடு பறியின் போது தொலைத்த திரு மோதிரத்தை தேடிக்கொண்டு தனியாக எழுந்து அருளி –
ஸ்ரீ நம்மாழ்வார் -பெரியவருக்காக பொறுத்தோம் என்பதும் -மின்னிடை மடவார் –திருவாய் மொழி -7-2-சேவித்து

அன்று இரவில் காதில் கடிப்பிட்டு -10-8-பதிகம் சேவை -உத்சவத்தில் பூர்த்தியாலும்
ஸ்ரீ பெரிய திருமொழி பூர்த்தியை முன்னிட்டும் தங்க சப்பரத்தில் எழுந்து அருளி சேவை

பத்தாம் நாள் -துவாதச ஆராதனம் -பூர்ணமாக ஸ்ரீ திருவாய் மொழி திருச்செவி சாத்தி அருளுகிறார்

அன்று இரவில் குளிர்ச்சியாக வெட்டிவேர் திருத்தேரில் புறப்பாடு –
ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் குளிரும்படி ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி சேவை

ஸ்ரீ திருவரங்கம்
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!”

திருவேங்கடம்
“கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு!
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு!
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு!
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு!
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு!
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே!”

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே –

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்

செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும் அடைவதில்லை.

காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் ||

அர்ச்சாவதாரத்தில், இருந்தும் கிடந்தும் நின்றும் பகவான் ஸ்ரீமந் நாராயணன்,
அவன் குழந்தைகளாகிய நம்மைத் திரும்பப் பெறுவதில் வைகுண்டத்தில்
தொடங்கிப் பல திவ்யதேசங்களில்,முயற்சித்தாலும், அவனது திருவுள்ள வேட்கை
பூலோக வைகுண்டத்தில் –திருவரங்கத்தில், வெற்றி அடைந்தது

ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |
ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பேசும் அரங்கன் -ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள்-

May 19, 2024

மன்னிய சீர் மணவாள மாமுணிகள் ஈடு உகந்து

இன்னொரு ஸ்ரீசைலேசாயெனப் பேசும் அரங்காயெச்சரீகை!”

இது நம்பெருமாள் புறப்பாட்டின் போது நம் திருக்கோவில் சாத்தானி ஸ்ரீவைஷ்ணவர்களின் கட்டியமாகும். அரங்கனின் வருகை குறித்து நம்மை எச்சரிக்கின்றனர். தோன்றினது முதல் தற்காலம் வரை நம்மை அரவணைத்துப் பேசுக்கொண்டிருக்கும் அரங்கன் வருகின்றார் – தாங்கள் கவனம் சிதையாமல் இம்முதல்வனை தியானியுங்கள் – இவனிடம் மனம் விடடு பேசுங்கள் என்று குறிப்பால் உணர்த்துகின்றனர். அன்றும் சரி, இன்றும் சரி அரங்கன் பலருடனும் பேசிய வண்ணம்தான். பல்வேறு லீலைகள் புரிந்த வண்ணம்தான். ஏனைய தெய்வங்கள் போல் அவனால் வாளாதிருக்க முடியாது. இவன் இல்லாவிடின் ஏனைய தெய்வங்களேது? இவன்தானே அனைத்திற்குமே ஆதாரமானவன்!. இதனால்தான் தொண்டரடிப்பொடியாழ்வார் தனது திருமாலையில்

“மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்!

உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்,

அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை,

கற்றினம் மேய்த்த எந்தை கழலினைப் பணிமின்நீரே!”

“மற்ற தெய்வங்களைப் போல இவன் ஆராதிப்பதற்கு அரியவன் அல்லன். பசு கன்றுகளுக்கும் கூட தோழனாயிருந்து எளியவனாயிருப்பவன்” என்று அறுதியிட்டுரைத்தார்.

இவன் வந்தாரை வாழ வைப்பவன் –

தன்னோடு உறறாரோடு உரையாடுபவன்.

——-

திருத்துழாய் இலையுண்டாகும் போதே பரிமளத்தோட அங்குரிக்கும். அது போன்று ஸ்வாமி நம்மாழ்வாரும் மற்றைய ஆழ்வார்கள் போன்று இவ்வுலக உணர்ச்சி ஏதும் அடையாமல், தத்துவஞானத்தோடு இயற்கையான ஞான பக்தியையுடையவராய், சதா தியானபரராய், இந்நிலை என்றும் மாறதிருந்த மாறன் ஆவார். இவர் அவயவி. மற்றைய ஆழ்வார்களெல்லாரும் இவருக்கு அவயம்..

இவருக்கு
– பூதத்தாழ்வார் : சிரம்
– பொய்கை மற்றும் பேயாழ்வார்கள் : இரண்டு கண்கள்
– பெரியாழ்வார்: முகம்
– திருமழிசை: கழுத்து
– குலசேகராழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார்: இரண்டு கைகள்.
– தொண்டரடிப்பொடியாழ்வார்: திருமார்பு
– திருமங்கையாழ்வார்: கொப்பூழ்
– மதுரகவியாழ்வார் : திருப்பாதங்கள்.

இந்த பூமியில் சுமார் 35 ஆண்டுகள் எழுந்தருளி, எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் தாமிருக்கும் இடத்திலே தரிசித்து களித்த ஸ்வாமி நம்மாழ்வார் பரமபதம் செல்லத் திருவுள்ளம் கொண்டார். மிக மிக துக்கித்த அவரின் சீடர் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருமேனியை வேண்டினார். ஆழ்வார் தாமிரபரணியின் ஆற்று நீரை கொணர்ந்து சுண்ட காய்ச்சினால் தமதுருவம் கிடைக்கும் எனத் தேற்றினார். மதுரகவிகள் ஒரு பொற்குடத்தில் தாமிரபரணியாற்றின் நீரை இடைவிடாமல் வேத விற்பன்னர்களின் வேதகோஷத்தோடு காய்ச்சினார்.

ஏழாம் நாள் கூப்பிய கையுடனும், திரிதண்டத்துடனும், ஒரு திவ்வய மங்கள விக்ரஹம் யாரும் எதிர்பாராவண்ணம் தோன்றிற்று. அதனைக் கண்ட நம்மாழ்வார் ‘பொலிக பொலிக பொலிக” எனத் திருவாய் மலர்ந்தருளி அது வருங்காலத்தில் வைணவத்தை ஸ்திரமாக நிலைநாட்டப் போகும் ஸ்வாமி இராமானுஜரின் ‘பவிக்ஷதாச் சார்ய’ திருமேனி என்று அருளி, தனது வலது திருவடியை அங்கு காண்பித்தார். அதில் இராமானுஜருடைய உருவத்தினை அனைவரும் தரிசித்தனர். அந்த விக்ரஹத்தினை அங்கேயே ஆராதித்து வரும்படி பணித்தார்.

மீண்டும் ஒருமுறை காய்ச்சச் சொன்னார். மீண்டும் முன்பு செய்தது போல செய்யும்போது, இன்று நாமனைவரும்
ஆழ்வார் திருநகரியில் தரிசித்துக் கொண்டிருக்கும் இந்த ஸ்வாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் சின்முத்திரையோடு அப்போது உண்டாயிற்று. அப்போது நம்மாழ்வாரின் திருமேனியிலிருந்து ஒரு அருள்ஒளி விக்ரஹ திருமேனியில் பாய்ந்தது. இதன் பின்பு நம்மாழ்வார் ”சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின’ என்கின்றபடியே பரமபதம் எழுந்தருளினார். மதுரகவியாழ்வார் அவரது சரமத்திருமேனியை திருப்புளியாழ்வாரினடியில் திருப்பள்ளிப்படுத்தி, திருவரசு ஏற்படுத்தி வழிப்பட்டு வரலானார்.

முடிவு இவன் தனக்கு ஒன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே! என்னும் –
கடிகமழ்கொன்றைச் சடையனே! என்னும்
நான்முகக் கடவுளே! என்னும் –
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்
வண் திருவரங்கனே! என்னும்
அடியடையாதார் போல் இவளணுகி
அடைந்தனள் முகில் வண்ணனடியே!.

இந்த பெண் இவ்வாறு சிரமப்படும் நேரங்களில் தனக்கோ அல்லது தன்னுடைய சிரமங்களுக்கோ எந்தவித முடிவும் தெரியவில்லை என்கிறாள். மூன்று லோகங்களையும் ஆண்டு வரும் இந்திரனுக்கு ஆத்மாவாக உள்ளவனே என்கிறாள். மிகுந்த மணம் உடைய கொன்றை மாலையை தனது சடையில் தரித்துள்ள சிவனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். நான்முகனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். உன்னுடைய வடிவினை உடைய வானோர்களின் தலைவனே என்கிறாள். அனைவருக்கும் அருள்புரிகின்ற திருவரங்கப் பெரியபெருமாளே என்கிறாள். அவனது திருவடிகளை அடைய மாட்டாள் என்று எண்ணும்படியிருந்தபோது, நீர் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய அவன் திருவடிகளை அவள் பெற்றுவிட்டாள்.

மூவுலகாளியே என்பதை மூ + உலகு + ஆளியே என்று பிரிக்க வேண்டும். திருமலையாண்டன் உரைக்கையில் ”மூன்று உலகையாளும் இந்திரன் எனப்படும், சிவன் எனப்படும், பிரம்மன் எனப்படும் வடிவுடைய வானோர்கள் மற்றும் தேவர்களின் தலைவனே’ என்று கூறுகின்றார். எம்பெருமானார் கூறுகையில் அவர்களது தலைவன் என்பதோடு அந்தர்யாமி என்று சேர்க்கின்றார்.

இந்த மூவலகின் தலைவன் என்று கூறும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.

திருவரங்கம் கோவிலில், காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் கர்ப்பகிரஹத்தில் பச்சரிசி மாவை நீர் கொண்டு குழைத்து பூர்ணம் போன்று செய்து நடுவில் நெய் திரி ஏற்றி ஆறு மங்களஹாரத்தியும், கற்பூரத்தினால் மூன்று கற்பூரஹாரத்தியும் பெரியபெருமாளுக்கு காண்பித்தருளுவர். சுமார் இரண்டு வருடங்களிருக்கும். அன்று ஒரு ஏகாதசி. நம்பெருமாள் புறப்படுவதற்கு முன் மங்களஹாரத்தி செய்தேன். வெளியில் ஆந்திரா ஸ்ரீதிரிதண்டி நாராயண ஜீயர் ஸ்வாமிகள் ஸேவித்துக் கொண்டிருந்தார். அவர் கூட உபன்யாஸகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீகண்ணன் ஸ்வாமிகளும் உடனிருந்தார். ஏளப்பண்ணுவதற்கு என்னுடன் கூட இரண்டு மூத்த அர்ச்சகர்களும் உடனிருந்தனர். நம்பெருமாளை தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து ஒவ்வொருவராக துவாரபாலகர்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். ஜீயர் ஸ்வாமிகளுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். எதற்காக ஆறு பூரணம் போன்று செய்யப்பட்ட மங்கள ஹாரத்தி? எதற்காக மூன்று கற்பூர ஹாரத்தி? என்று. இரண்டு மூத்த அர்ச்சகளிடமும் கேட்டார். அவர்களால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை. ஸ்ரீ கண்ணன் ஸ்வாமிகள், ‘ முரளீ! உனக்குத் தெரியுமா?’ என்றார். நான் பட்டென்று நம்பெருமாள் ஷாட்குண்யபரிபூரணர் (ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களையும் முழுமையாக பெற்றவன்) அதனால் ஆறு மங்களஹாரத்தி என்றேன். ‘மூன்று கற்பூரஹாரத்தி?’ வினவினார்
ஜீயர் ஸ்வாமிகள். த்ரைலோக்ய பூஜிதர்! (மூன்று உலகிலும் ஆளும் இந்திரன், சிவன், பிரம்மனால் பூஜிக்கப்படுபவர்) 

——————-

நாயனாராச்சான்பிள்ளைக்குப் பிறகு ஈயுண்ணி மாதவப்பெருமாள் குமாரரான பத்மநாபப்பெருமாள் தம் தந்தையிடமிருந்து திருவாய்மொழி ஈடு முப்பதாறாயிரமும் (வடக்குத்திருவீதிபிள்ளை அருளியது) தெளிவாகக் கற்று ரஹஸ்யார்த்தங்களையும் கற்று தர்ஸன ப்ரவர்த்தகராயிருந்தார்.

இவருக்குப்பின் இவரது அந்தரங்க சிஷ்யரான கோலவராஹநாயனார் என்னும் நாலூர் பிள்ளை இவரிடமிருந்து அனைத்ததும் கற்றித் தெளிந்து தர்ஸனத்தினை நடத்தி பின்னர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு அனைத்தும் போதித்து தர்ஸனத்தினை வழிநடத்திடச் செய்தார்.  இவர் தாம் கற்ற ஈட்டின் பொருளை, மணவாளமாமுனிகளின் நேர் ஆச்சார்யனான திருவாய்மொழிப் பிள்ளைக்கும், திருநாராயணபுரத்தாயி (திருவாய்மொழியாச்சான்) ஆகியோருக்கு திருவாய்மொழியின் ஈட்டினைப் பரஸாதித்து அருளினார்.

————–

அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின் திருமேனியை அவருக்கு அருளுகின்றார்.  இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.  ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது, இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.

அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!.  எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும், எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.

உத்தமனே!  உலகாரியனே!  மற்றொப்பாரையில்லா
வித்தகனே!  நல்ல வேதியனே!  தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே!  சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?

என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார். 

அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார். ”காலம் கலிகாலமாகையாலே
ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு இத்தை வளர்த்துப்போவார் யார்?”
 என்று மிகவும்
க்லேசமுடையவராய் கேட்கின்றார். 

அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது.  தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று. 

திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம். 

பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார். 

குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார். 

குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!  அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.

-” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.

ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும். 

பூர்வர்களைப் போல  மங்களாசாஸனபரராய் ஸ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”

என்று நியமிக்கின்றார். 

அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி, ”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள்.  இவர் ஒரு அவதார விசேஷம்.  ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.

வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததையெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி, ‘மாகவைகுந்தம்
காண்பதற்கு என் மனமேகமென்னும்
” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின் திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.


ஆச்சார்யனின் திருவடி ஸம்பந்தத்தினால் விஷ்ணுதூதர்களுடன் விமானத்தில் மண்ணுலகை துறந்து விண்ணுலகிற்கு பயணிக்கின்றது அவரது சூக்கும சரீரம்!

ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.

“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”

ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார். நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார். அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.

யார் இவர்கள் ?

வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள், தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள், தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து, அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.

இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது. திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார். அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.

பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார். அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக்கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று. அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.

இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.
ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.

ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார். மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?

ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.

அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்). ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார். அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர். பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது. இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.

இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும், அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில் இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும். ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம், அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல், அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.
ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து, ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது. இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட, அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.

———

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ரஹஸ்ய அர்த்தங்கள்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 16, 2024

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே
வேத ப்ராசேதஸாத் ஆஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா

ஸ்ரீ வைகுண்ட நாதனே பரம் பொருள்
வேதங்களால் ப்ரதிபாதிக்கப் படுகிறவன்
அவனே ஸ்ரீ ராமனாக திரு அவதரிக்கும் பொழுது வேதமே ஸ்ரீ ராமாயணமாக திருவவதரித்தது

வேதங்கள் சொல்லுகின்ற பரம புருஷன் ஸ்ரீராமனே ஆவான் -அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன . அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.
அவன் திரு நாமத்தை சொல்வதும், கேட்பதும், நமது பிறவியின் தோஷத்தை போக்க வல்லது

இந்தப் பெருமையால் தான் ஸ்ரீ ராமாயணத்துக்கு வ்யங்க்ய காவ்யம் என்று புகழ் பெற்று பல வேதாந்த ரஹஸ்யமான உட்ப் பொருள்களைக் கொண்டது என்று போற்றப்படுகிறது –

த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமா நம் வ்ருஷம் பரி க்ஷஸ்வஜாதே
தயோரந்யஸ் பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நன் அந்யஸ் அபிசாகவீதி
-முண்டக

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் -ஒரு பறவை மரத்தில் பழுத்த பழங்களை உண்டு ஒளி குன்றியது
மற்றொரு பறவை பலத்தை உண்ணாமல் ஒளி விஞ்சியது
நம் உடல் என்னும் மரத்தில் ஜீவாத்மா -பரமாத்மா என்னும் இரண்டு பறவைகள் வாழ்கின்றன
உடலால் செய்த புண்யம் பாபம் ஆகிய கர்மங்களால் ஏற்படும் ஸூ கமும் துக்கமும் மரத்தில் ப்ளுத்ஹ பழங்கள்
ஜீவாத்மா கர்ம பலனை அனுபவித்து ஒளி குன்றுகிறார் –
பரமாத்மா கர்மத்தின் தொடர்பே இல்லாமல் ஒளி விஞ்சுகிறார்
இப்பொருள் மனத்தை ஈர்க்கிறது அன்றோ

இதே போல்
யாவத் ஸ்தாஸ் யந்தி கிரயஸ் ஸரிதஸ் ச மஹீ தலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி —

எதுவரை மலைகள் நிற்குமோ -நதிகள் ஓடுமோ -அதுவரை ஸ்ரீ ராமாயணம் உலகில் புகழோடு விளங்கும் என்று பிரமன் வால்மீகியிடம் அருளினார்

மநந சீல முநி –மனனம் செய்பவர் முனி -அறிந்தத்தை விடாமல் சிந்தித்து உறுதிப் படுத்துபவரே முனி
ஸநா தனமான தர்மத்தை உண்மையாக உணர்ந்து -இக்காவியத்தை இயற்றியபடியால் இது காலம் கடந்து நிற்குமே –

இதில் குறிப்பிட்ட அனைத்து இடங்களும் -அயோத்யா தொடங்கி ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கை வரை இன்றும் சாக்ஷியாக உள்ளனவே-

——

நால்வரின் திருவவதாரப் பலன்கள்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ் க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸ்ரீ பெருமாளும்
குகன் ஜடாயு விபீஷணன் போன்ற சாதுக்களை ரஷித்து அருளினார் –
ராவணன் கும்பகர்ணன் போன்ற துஷ்டர்களை அழித்தார்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் -தாய் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிதல் -உண்மை பேசுதல் -நேர்மை தவறாது நடத்தல் போன்ற ஸாமான்ய தர்மங்களை நிலை நாட்டினார்
அத்துடன் நிற்காமல் தானும் தம்பிகளுமாகச் சேர்ந்து சிறப்பான விசேஷ தர்மங்களையும் நிலை நாட்டினார்

பெருமாள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை -நேர்மை ஆகியவற்றுக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்
வீரம் நீதி தவறாமை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களைக் காத்தல் போன்ற அரச தர்மங்களைக் காத்தார்
இறுதியாக அனைத்து ஜீவா ராசிகளிடமும் கருணை -பறவைக்கும் முக்தி அளித்தல் போன்ற திருமாளுக்கே உரிய சிறப்பான தர்மங்களையும் கடைப்பிடித்தார்

ஆந்ரு ஸம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத -என்று பிராட்டி ராவணனுக்கு உபதேசிக்கும் பொழுது இரக்கமே பெருமாளுடைய சிறப்பான தர்மம் -என்று அருளிச் செய்து
இதுவே பெருமாளின் அவதாரப்பலன் என்று காட்டி அருளினாள்

ஆசார ப்ரபவோ தர்மஸ் தர்மஸ்ய ப்ரபுரச்யுத -என்று சொல்லும்படி நன்னடத்தை ஒழுக்கம் ஆகியவற்றால் தர்மம் காக்கப்படும்
உலகில் தர்மத்தை நிலை நாட்டி அதைக் கடைப் பிடிப்பவர்களுக்குப் பலன் அளிப்பவன் அச்யுதனான பெருமாள்

இரண்டாவதாக லஷ்மணன் –
தம்பிகள் வரிசையில் பரதன் இரண்டாவதாக இருப்பினும் -பெருமாளை க்ஷண நேரமும் விட்டுப்பிரியாமல் தொண்டு செய்த படியால் லஷ்மணனே பெருமாளுக்குப் பின் எண்ணப்படுகிறார்
ஒரு ஜீவாத்மாவுக்கு இன்றியமையாத அடையாளமான சேஷத்வமாகிய தர்மத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இலக்குவன்

சேஷத்வம் என்றால்
பர கத அதிசய ஆதாநேச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ பர சேஷீ —ஸ்வாமி ராமானுஜருடைய விளக்க ஸ்ரீ ஸூக்திகள்

அதாவது -பெருமானுக்கு அடிமையாய் -இடைவிடாமல் தொண்டு பட்டிருத்தல் -பகவானுக்கு எது பெருமை சேர்க்குமோ அவருக்கு எது பிடிக்குமோ அதையே செய்தல்
இஷ்ட விநியோக அர்ஹத்வம் சேஷத்வம் -என்றும் சொல்வர்
பெருமாள் தனது இஷ்டப்படி நம்மைப் பயன்படுத்திக்கொள்வது தகுதி யுடையவனாய் இருத்தல்
ஜீவன் பரமனுக்கு அடிமை என்று காட்டியதே இவரது அவதாரப் பலன் –

பரதன் -சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் என்ற சிறப்பான பண்பின் படி வாழ்ந்து காட்டினார்
தொண்டு செய்யும் நம் விருப்பத்தை விட பெருமானின் திரு உள்ளபடியே நடக்க வேண்டும்
தந்த்ரம் -என்றால் ப்ரதானம் -முக்யம் -என்று பொருள்-பேரனின் விருப்பமே முக்கியம் -சித்ரா கூடத்தில் பெருமாள் ஆணையை மறுக்காமல் திரும்பினார் அன்றோ
மீண்டும் இளவரசு பட்டம் பெருமாள் சூட ஏற்றுக் கொண்டார் அன்றோ
இஷ்ட விநியுஜ்வ மாநத்வம் பாரதந்தர்யம்
பெருமானின் இஷ்டப்படி பயன்படும் தகுதி இருத்தல் சேஷத்வம் -பயன்படுத்தல் பாரதந்தர்யம் -இதை வெளிப்படுத்தியதே பரதனின் அவதாரப் பலன் –

சத்ருக்னன் சேஷத்வம் பாரதந்தர்யம் ஆகிய இரண்டுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து
அதிலும் பெருமாளுக்கு இருப்பதை விட பாரதனுக்கே என்று வாழ்ந்து காட்டியவர் –
அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
மூவரைக் காட்டிலும் இவருக்கே ஏற்றம் –

புத்ர காமேஷ்டி யாகம் செய்து பெற்று பாயாசம் மிகச்சிறந்த பகுதி சுமத்தரை தேவி உண்டு லஷ்மணன் சத்ருக்கனன் இருவரையும் பெற்றாள்
த்ருஷ்டத்வ வன வாஸம் -என்று தொண்டு செய்யவே இலக்குவனைப் பெற்றாள்
பெருமாளைத் தவிர மற்ற ஒருவரை அறியாத பரதனைத் தவிர மற்று ஒருவரையும் அறியாமல் வாழ்ந்து காட்டினார்-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –ஸ்ரீ ராம கைங்கர்யமே இங்கு நிலை நிற்கும் செல்வம் –
தொட்டிலில் இருக்கும் பொழுதே -ஸஹஜ பக்தி -காட்டி அருளியவர்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த –கூடவே பிறந்து கூடவே விருத்தி –
திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்துடன் கூடியே அங்குரிக்குமா போலே –
பெருமாளுக்கு ஜடாயுவுக்கு மோக்ஷம் அருளி ஸ்வா பாவிகமான சேஷித்வம் ஸ்புடமானால் போல்
இலக்குவனும் குடில் கட்டுவது மரக்கட்டைகளால் மிதவை செய்து பிராட்டியும் பெருமாளும் நதிகளைக் கடிக்கச் செய்வது போன்றவற்றை
குருகுலத்தில் கற்காமலேயே அறிந்து வைத்தவர்
சுற்றம் எல்லாம் பின் தொடர என்று கொண்டாடும்படி பின் தொடர்ந்தார் அன்றோ

அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் றன்னையே தான் வேண்டுஞ் செல்வம் ” என்ற பெருமாள் திருமொழி-

———-

விஸ்வாமித்திரர் 12 திரு நக்ஷத்திரத்தில் பெருமாளையும் இலக்குவனையும் கால் நடையாகக் கூட்டிச் சென்று கங்கை சோணா நதியைக் கடந்து ஸித்தாஸ்ரமம் என்னும் புண்ய பூமியை அடைந்தார்
இவ்விடம் இன்றும் பீஹாரில் கங்கைக் கரையில் பக்ஸர் என்னும் இடத்தில் உள்ளது
விஸ்வாமித்ரர் ஆறு நாட்கள் யாகம் செய்தார் -இறுதி நாள் யாகத்தை அளிக்க மாரீசன் ஸூபாஹு என்ற இரண்டு அரக்கர்கள் வர -அம்பு எய்து ஸூபாஹு வை அழித்தார் -மாரீசனைக் கொள்ளாமல் அவ்விடத்தில் நின்றும் ஓட்டினார்
பூர்வ ஆகம் -முன் செய்த குற்றங்களைத் தீயில் இட்ட பஞ்சு போல் அழித்து விடுவதையும்
உத்தர ஆகத்தை தாமரை இலைத்தண்ணீர் போல் ஓட்டே இல்லாமல் சுவடு தெரியாமல் விலக்கி விடுகிறார்

தத் யதா இஷீக தூலம் அஃனவ் பிரேதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -என்றும்
தத் யதா புஷ்கர பலாஸே ஆப ந ஸ்லிஷ் யந்தே ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே -என்றும் உபநிஷத்தில்
தததிகமே உத்தர பூர்வாகயோ -அஸ்லேக்ஷ விநாசவ்–என்று ப்ரஹ்ம ஸூத்ரம்

ப்ராக்ருதங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய -முக்குண மயம் -ரஜோ குணத்தில் இருந்து பிறப்பது காமமும் க்ரோதமும்
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ
தாடகை -ரஜோ குணத்தின் அடையாளம்
காமத்தை ஒழித்தால் தானே கோபம் விலகி விடும்
ரஜோ குணமாகிய தாடகையை அழித்து
காமம் என்னும் ஸூ பாஹுவையும் அழிக்கவே
க்ரோதம் என்னும் மாரீசன் தானே ஓடிப்போனதே
பின்பு அந்த மாரீசனையும் அழித்தார்
ஸ்ரீ ராம நாமத்தைச் சொல்லவே ரஜோ குணம் தமோ குணம் காமம் க்ரோதம் அனைத்து தீமைகளும் விலகும்-

———

ஸேவா ஸ்வ வ்ருத்தி ராக்யாதா தஸ்மாத் தாம் பரி வர்ஜயேத் -மனு
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிறபடியே அனைத்து ஆத்மாக்களும் இயற்கையிலேயே பரமாத்வாவுக்கு தாஸர்கள்
ஸ்வரூப க்ருத தாஸ்யம் என்றும்
குண க்ருத தாஸ்யம் என்றும் இருவகை
இவற்றில் ஸ்வரூப க்ருத தாஸ்யமே உயர்ந்தது
அநஸூயை -ஸீதாப்பிராட்டி ஸம்வாதம் இத்தை உணர்த்தும் –
யத் யப்யேக்ஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித -என்று ஒரு நிமிடம் கூட குணங்கள் பெருமாளை விட்டுப் பிரிவதில்லையே என்று நொந்து கொண்டாள்

அதே போல் லஷ்மணனும் –அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத-

ஆகவே அவன் ஸ்வாமி என்று கொண்டே தாஸ்யம் புரிவோம்
நம் பாக்யத்தால் அவன் ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாகவும் உள்ளான்

————

ப்ரணவம் -முன்பும் -பின்பு நான்காம் வேற்றுமை உருபுடன் நாமமும் -பின்பு நம-சேர்ந்து மந்த்ரமாகும்
ணு -என்னும் தாது -ஸ்தோத்ரம் செய்தல் என்னும் பொருளில் வரும்
ப்ரகர்ஷேண ஸ்தூயதே பகவான் அநேந இதி ப்ரணவ –இந்தச்சொல்லால் பகவான் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுகிறார் என்ற பொருளில் வரும்
ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அநுஸ்மரன்
ஆத்மாநம் யுஞ்ஜீத
-ஓம் சொல்லி ஆத்மாவை ஸமர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது
அகாரார்த்தோ விஷ்ணு
மந ஞாநே
உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீ –உகாரேண உச்யதே ஸதா
அக்ரத பிரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ்து தனுஷ் பாணி லஷ்மண அநு ஜகாம
நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ
பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்

அகார வாஸ்யனான பெருமாள் முன்பு போக
உக்கார வாஸ்யளான ஸீதாப்பிராட்டி நடுவில் நடுக்க
மகார வாஸ்யனான இலக்குவன் அவர்களுக்குத் தொண்டு செய்யவே பின் தொடர்ந்து
மூவரும் சென்றதை பார்த்தால்
அகார உகார மகார எழுத்துக்கள் கால் கொண்டு நடந்தால் போலே இருந்ததே
பிராட்டியாரும் கூடிப்பிடிக்கும் மெல்லடிகள் கொண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று உருகும் படி அன்றோ நடந்தார்
நல்ல நடத்தையுடன் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார் அன்றோ

அற வழி நடந்து காட்டிய பெருமாள் திருவடிகள் வாழி

——–

ராம-அயனம்-சேர்ந்து ராமாயணம்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா சரிதம் மஹத்
முதலில் இருந்து முடிவு வரை ஸீதா பிராட்டி சரிதமே
ராமாயணம் என்று சொல்லும் பொழுது அடைமொழி ஒன்றுமே இடாமல் ஸீதா சரித்ரத்துக்கு முழுமையாக சொல்லப்பட்டது என்ற அடைமொழியுடன் அருளிச் செய்கிறார்
வேதம் -கர்ம காண்டம் -ப்ரஹ்ம காண்டம் –
உப ப்ரும்ஹணங்கள் -ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றமே சொல்லிற்று
லங்கையில் சிறைப்பட்ட தேவப்பெண்களை விடுவிக்கவே தானே வலிய சிறை புகுந்தாள்

வ்யாஸர் ஒன்றேகால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட மஹா பாரதம் எழுதியும் திருப்தி பெறாமல் நாரதரின் உபதேசம் கேட்டு ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்தார்
வால்மீகியோ நாரதருக்கும் தந்தையான நான்முகனின் அருளால் நேரே ஸ்ரீ ராமாயணம் அருளிச் செய்து திருப்தி அடைந்தார்
ந தே வாக ந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று உன் காவ்யத்தில் ஒரு சொல்லும் பொய்யாக இருக்காது என்றும் நான்முகன் அருளிச் செய்தார்

மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.


மேலும் –யாவத் ஸ்தாஸ் யந்தி கிரய ஸரிதஸ் மஹீ தலே தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரஸரிஷ்யதி –என்று
உலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை ஸ்ரீ ராமாயணம் எல்லா உலகங்களிலும் பெருமையோடு விளங்கும் -என்றும் அருளினார்
பெருமாள் தானே அமர்ந்து லவ குசர்கள் பாட தன் சரிதை கேட்டு அருளினார்

ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”

(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.

ஸூந்தரி ரகு நாதஸ்ய ஸூர ஸ்த்ரீ துக்க ஸாந்தயே தசாநதஸ்ய பவநே தசமாஸாந் உவாஸ ஹ -என்றபடி தேவ ஸ்திரீகளை விடுவிக்கவே வலிய சிறை புகுந்தாள்
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -நம்மாழ்வார்

ராமஸ்ய அயனம் எனப் பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.

வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.

————-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நன் கொள்ளுமீதே
பிரபல தர விரோதி -களை அற்ற கைங்கர்யம்
ரமதே யத்ர பைதேஹீ த்வம் அஹம் சைவ லஷ்மண
–என்று பெருமாள் அருளிச் செய்ய
நான் எங்கு ஆனந்தம் அடைவேனோ என்று தனித்துச் சொல்லி -என்னை அஹங்காரத்தில் சிக்க வைப்பீரோ
நான் என்று அஹங்காரப்பட்டால் தானே எனக்கு என்று ஒரு ஆனந்தம் உண்டு
அடியேன் என்று தொண்டனான தன்மை புரிந்தால் எனக்கு என்று தனியாக ஒரு ஆனந்தம் இல்லையே
அறிவும் ஆனந்தமும்-ஞாத்ருத்வமும் சேஷத்வமும் ஆத்மாவுக்கு அடையாளமாக இருந்தாலும் சேஷமாக இருப்பதே இன்றியமையாத முதல் அடையாளம் –
நான் போக்தா -அனுபவிப்பவன் என்ற எண்ணம் தவறு
அடியேன் போக்யம் -பகவானால் அனுபவிக்கப்படும் வஸ்து என்பதே -சரி
சேஷி உகந்த கைங்கர்யமே புருஷார்த்தம்
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
மற்றை நம் காமங்கள் மாற்று
அவன் நம்மை அனுபவித்து ஆனந்தப்பட அது கண்டு நாமும் ஆனந்தப்படுவதே கர்தவ்யம்

———

ஸ்வாமி தானே சொத்துக்களைக் காத்து அருள வேண்டும்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி யத் பரயந்தி ப்ரபி ஸம் விசந்தி
அனைத்துப் பொருள்களும் யாரிடமிருந்து உருவாகுமோ -படைக்கப்பட்டவை எல்லாம் யாரால் காக்கப்படுமோ -அனைத்தும் யாரிடத்தில் லயிக்குமோ அவரே ப்ரஹ்மம் -என்றதாயிற்று

கௌஸல்யா லோக பர்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபிவாதய –-ஸீதாப்பிராட்டி திருவடியிடம்

உலகத்தைக் காக்கும் பிள்ளை பெர்ஸ் வேண்டும் என்று கௌஸல்யா தேவி விருப்பப்பட்டுப் பெருமாளைப் பெற்றார் -காக்கும் பொறுத்து ராமனதே என்பதை வலியுறுத்தி பேசினாள்

நல்கித்தான் காதலிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
–என்று இதே கருத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா பர பலார்தந
மாம் நயத்வேதி காகுத்ஸ்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றுக்கு மாசு என்று அஞ்சி வீசினேன்

ஆகவே நம்மை ஸ்வாமியிடம் ஒப்படைத்து நிர்ப்பரோ நிர்பயோ மாக இருப்போம் –

———–

கொள் கொம்பு மூலம் கொடி படர்தல் -படித்துறையில் இறங்கி நீராடுதல் -போல் அடியார்கள் மூலமாகவே நாமும் அவனைப் பற்ற வேண்டும் -அவனும் பாகவர் மூலமாகவே தான் ஏற்றுக் கொண்டு அருளுவான்

வாலி ஸூக்ரீவன் யுத்தம் -கஜ புஷ்பிகா மாலையை இலக்குவன் சூட வாலி வாதம் -ஸூக்ரீவ மஹாராஜருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் இலக்குவன் மூலமே முடி சூட்டி அருளினார்
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
ஸர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
-என்று வானர முதலிகள் மூலமே பற்றி
ஆநய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா -என்று சுக்ரீவ மஹாராஜர் மூலமாகவே ஏற்றார்

இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிட்டும் –இருவர் முன்னிடுகிறதும் தம் தாம் குற்றங்களை சாமிப்பிக்கைக்காக -ஸ்ரீ வசன பூஷணம்

இங்கு பக்தனுக்கு குற்றம் -வெகு காலமாக பெருமாளிடம் பாராமுகமாய் உலக இன்பங்களில் ஈடுபட்டு -பகவானது ஆணைகளை மீறு -பாபங்களையே சேர்த்து வைத்தது
இக்குற்றம் பகவானுடைய திரு உள்ளத்தில் பட்டு சீற்றம் வராதபடி குளிர்விக்கிறார்கள் கடகர்

பகவானுக்குக் குற்றமாவது -விட்டுப் பிரிக்க முடியாத உறவு இருந்த போதிலும் -அவனைக் காத்து ஆட்க்கொள்ளாமல் கர்மவசப்படி மாறி மாறி பல பிறவிகளில் பிறந்து உழலும் படி உதாசீனனாய் இருக்கை-

——————

ஸ ச பூஜ்ய யதாஹ் யஹம் -ஸ்ரீ கருட புராணத்தில் -என்னை விட உயர்வாக எனது அடியார்களை பூஜிக்க வேண்டும் என்கிறான்
பூஜிக்காததுக்கு மேல் பாகவத அபசாரப்படுவது பெரும் குற்றம்

ஹிரண்யன் -பிரகலாதன் இடம் அபசாரப்பட்டதால் நரசிம்ஹன் கொண்ட சீற்றம் ப்ரஸித்தம்
அர்ஜுனன் பேரில் அம்பு பட்டதும் தானே திருமுகத்தில் ஏற்று பார்த்தசாரதியாக இன்றும் நாம் ஸேவிக்கும் படி அருள்கிறான்
ராவணன் -திருவடியிடம் அஸ்திரம் விட பெருமாள் கொண்ட சீற்றம் பிரசித்தம்

க்யாத -பிராஜ்ஞா -க்ருதஜ்ஞஸ் ச -ஸ அநு க்ரோஸஸ் ச ராகவ
ஸத் வ்ருத்த நிர் அநு க்ரோஸ சங்கே மத் பாக்ய சங்க்ஷ யாத்
–ஸூ ந்தர -26-11-என்று
புத்திமானும் -செய் நன்றி மறவாதவரும் –நன்னடத்தை உள்ளவரும் -கருணையும் உள்ளவருமான பெருமாள்
எனது விஷயத்தில் இரக்கமற்று மீட்க வராமல் இருப்பது எனது துர்பாக்யமே -என்று அவர் இடம் குற்றம் இல்லை -தன்னிடத்திலேயே குற்றங்கள் உள்ளன என்றும்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய –ஸூந்தர -38-6-என்று
அம்மான் அருகில் இருக்க அம் மானை வேண்டியது சிறிய குற்றம்
மஹாத்மாவான இலக்குமன் இடம் அபசாரப்பட்டது மஹத் குற்றம் –
ஆகவே பாகவத அபசாரம் இல்லாமல் வாழ்வோம்

—————

நாரீணாம் உத்தம வதா
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர்ஷிபி
-ரிஷிகள் கொண்டாடுகிறார்கள்
அவனது கல்யாண குணங்கள் நீறு பூத்த நெருப்புப் போலே நிரங்குச ஸ்வா தந்தயத்தாலே மூடி இருக்க புருஷனை புருஷனாக நடக்க வைப்பதே புருஷகாரம்
நம்மையும் அருளால் திருத்தி தைரியமாக முன் வரும்படி ஆக்கி அருள்கிறாள்

அவோசத் யதி தம் தத்யம் பவேயம் சரணம் ஹி வ –என்று கொடுமைகளையே செய்து கொண்டு இருக்கும் சரண் அடையாத ராக்ஷஸிகளைத் தானே காப்பாற்றுவேன் முன் வந்து வாக்களித்து
லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -என்று ஆக்கி அருளினாள்

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் தருணம் ஆர்யேண ந கஸ்சித் ந அபராத்யதி
–பிராட்டியுடைய சரம ஸ்லோகம்

———–

கை கூப்பி வணங்கி ஆகிஞ்சன்யம் காட்டி
கால்களை சேர வைத்து அநந்ய கதித்வம் காட்டி
உத்ப பாத கதா பாணி சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷசை -என்று வந்ததும்
ஏஷ ஸர்வ ஆயுதோ பேதஸ் சதுர்பிஸ் ஸஹ ராக்ஷஸை ராக்ஷஸோப் யேதி பஸ்யத்வம் அஸ்மாந்

ஹந்தும் ந ஸம்சய
கைகளைக் கூப்பிய அஞ்சலியைப் பார்த்தே இவ்வாறு சொன்னான்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ
விபீஷணனுக்கு கிட்டிய பேறு கூட வந்த தொண்டர்களுக்கும் கிட்டியதே
அடியார்களின் நிழல் போல் இருந்தால் பெருமானுடைய அருள் தன்னடையே நமக்கும் கிட்டும் –
ஏழு ஏழு தலைமுறைகளுக்கும் பேறு கிட்டும் அன்றோ –

———————-

முதலும் முடிவும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் வஸிஷ்டோபி மஹா தேஜா –யே சேமே தபஸிஸ்திதா —

புலஸ்த்ய வம்சத்தில் பிறந்து கடுமையான தவம் புரிந்து நான்முகனிடம் வரங்களைப் பெற்றான்
விபீஷணன் -ஸத்வ குணம் உடையவன்
சூர்ப்பணகை -ரஜோ குணம் நிரம்பியவள்
கும்பகர்ணன் தமோ குணம் நிரம்பியவன்
ராவணன் ஸத்வ குணத்தை வெளிய தள்ளி ரஜோ குண தமோ குணங்களை அருகே வைத்துக் கொண்டான்

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக ஸர ஜாலேந சமம் நயதி யோகிராட்

ஜீவனுக்குக் கட்டுக்கு அடங்காத மனமே ராவணன்
பத்து இந்திரியங்கள் அவன் தலைகள்
விவேகம் என்னும் அம்பால் மனம் என்னும் அரக்கனை அழிக்கிறான்
மனதில் இருக்கும் தீங்குகளை போக்கி பெருமானிடம் சேர்க்க வேண்டும்

யாந்தி நியாய ப்ரவ்ருத்தஸ்யதிர்யஞ்சோபி சஹா யதாம் அபந்தாநம் து கச்சந்தம் ஸோதரோபி விமுஞ்சதி-என்று

ஸாஸ்த்ரம் படி நடந்தால் விலங்குகளும் துணை புரியும்
தவறான வழியில் நடப்பவனுக்கு உடன் பிறந்தவனும் விட்டு விலகுவான்

இவ்வாறு ஸ்லோகங்கள் தோறும் வேதாந்த உள்ளுறைப்பொருள்கள் நிறைந்தே இருக்கும் ஸ்ரீ ராமாயணம்

————-

வித்யா சர்வாபீ
வாக்ய விரோதம்
அகில ஸத் தர்மங்கள்
ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
அர்த்தானாம் பஞ்சகம்
ஸ்ரீ ரகுபதி பரத்வம்

——–

வித்யா சர்வாபீ
வேதவடிவே ஸ்ரீ ராமாயணம் –சக்ரவர்த்தி திருமகன் -வால்மீகி குழந்தை -ஆறு அங்கங்களின் பெருமை சொல்லும்

சிஷா -உச்சரிப்பு -வியாகரணம்- சந்தஸ் -நிருக்தம் அகர முதலி -ஜ்யோதிஷம் –கல்பம் செயல்முறைகள்
அயோத்யா 91-22-சிஷா பெருமை -பரத்வாஜர் பாரத ஸேனைக்கு உணவு –

ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தஂ தபஸா சாப்ரவீந்முநிஃ৷৷2.91.22৷৷

ஸமாதிநா in profound meditation, அப்ரதிமேந incomparable, தேஜஸா ச with radiance, தபஸா ச with the power of penance, யுக்தஂ filled with, முநிஃ ascetic, ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தம் with accent in conformity with Vedic instruction, ஏவம் in this way, அப்ரவீத் said.

The valiant ascetic of incomparable lustre and power of penance in profound meditation said this in an accent in conformity with Vedic instruction.
மநஸா த்யாயதஸ்தஸ்ய ப்ராங்முகஸ்ய கரிதாஞ்ஜலேஃ.

ஆஜக்முஸ்தாநி ஸர்வாணி தைவதாநி பரிதக்பரிதக்৷৷2.91.23৷৷

தஸ்ய his, ப்ராங்முகஸ்ய facing east, கரிதாஞ்ஜலேஃ with folded palms, மநஸா in mind, த்யாயதஃ while meditating, ஸர்வாணி all, தாநி தைவதாநி those deities, பரிதக்பரிதக் one by one, ஆஜக்முஃ arrived.

ஆயாதாஷா –ஸர்வ பூஷண -நான்கு தோள்கள் கண்டு வியாகரணம் படி திருவடி -புகழ்ந்து பெருமாள் -கிஷ்கிந்தா 3-15-dual சொல்லாமல் pulural -சொல்லின் செல்வன் வாக்ய விரோதம்

மண்டோதரிக்கும் சங்கசக்ர கதாதரனாக காட்சி

அனுஷ்டுப் பெரும்பாலும் -பாதம் தோறும் எட்டு எழுத்துக்கள் –
வில்லைத் தள்ள 500 பேர்-வால்மீகி தூக்கி போக 60000 பேர் கம்பர்
உடைத்து பிரித்து -வத்ஸ ராம தனுஸ் பஸ்ய -ஸ்லோகம் –
நாண் ஏற்றினால் மட்டும் போதாதே -வார்த்தையை உடைத்தது போல் நீ உடைத்து வா -என்றாராம்

நிருக்தம்–dictionary-ரம்யதே ராம -மனதுக்கு இணையான -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -நற் செல்வன் -பரதன் -பழி என்னும்-பரிக்கும் சக்தன் -சத்ருக்கனன் -நித்ய சத்ரு –

காய்கறி திருத்துவது -பரிடம் திருத்துவது -வேறே வேறே
மஹா வ்ருக்ஷம் கள்ளிச்ச்செடி -விபரீத லக்ஷனை
அஸ்ய ராமஸ்ய -பஸ்யதி -ராமனுக்கும் இருக்கும் ராமனை ராவணா நீ பார்ப்பாய் -மனதுக்கு இனியானின் கோபத்தைப் பார்ப்பான்

ஜ்யோதிஷம்
ஜடாயு -ஆயுஷ்மன் -பெரிய உடையார் -சீதையுடன் சேர்த்து உய்ரிரையும் கொண்டுபோனான் -13 ஸ்லோகம் -விந்தோ முஹூர்த்தம் -காணாமல் போன பொருள் போனபடியே மாறுதல் இல்லாமல் திரும்பிக் கிடைக்கும்

கல்பம்
சந்த்யா காலத்தில் ஆரண்ய காண்டம் 7-24 -உண்ணக் கூடாது -சுஷீஷ்ணர் -ஸாஸ்த்ரம் படி நடந்து விருந்து பரிமாறினார் –

———–

வாக்ய விரோதம்
பாஹ்ய த்யஜனம்
விலகி நிற்க வேண்டும்
தசரதனை நிந்திக்காமல் -பெருமாள் –
ஒரே இடத்தில் -ஜாபாலி -அயோத்யா 109-சர்க்கம்-39-define பண்ணவே தெரியாத நாஸ்திகன் பகவான் இல்லை என்பது போல்

——–

அகில ஸத் தர்மங்கள்
சாதாரண தர்மங்கள் நிறைந்தவை
பாலகாண்டம் 77-33-பிரியா சீதை ராமஸ்ய -தாரா பித்ருகிருத -அப்பா ஐயர் பார்த்து திருமணம்
அத்ரி அநஸூயா -சீதா வார்த்தை –

அயோத்யா 72-48-பரதன் கைகேயி சம்வாதம் -ராமன் செய்த தப்புக்கள் என்ன –

ராமோ த்விர் ந பாஷயே
சத்யம் மீது சத்யம் செய்து சுக்ரீவன் இடம்

பொய் சொன்னால் அத்தை நாம் காப்பாற்ற வேண்டும்
மெய் சொன்னால் அது நம்மைக் காக்கும்-ஜடாயு மோக்ஷம் -சத்யான் லோகான் ஜயதி

ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
திருவடியே ஆச்சார்யர் -கடக க்ருத்யம் -ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -இலங்கை -ஸம்ஸாரம்-முக்குணங்கள் விபீஷணன் கும்பகர்ணன் சூர்ப்பணகை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவவில்லையே

அர்த்தானாம் பஞ்சகம்
மிக்க இறை நிலையும் இத்யாதிகளை நன்கு காட்டும்-காண்டம் தோறும் அர்த்தபஞ்சகம்
வில் வில்லனாக -பராக்ரமத்தால் -உடைத்து -சேர்த்துக் கொள்கிறான்-அயோத்யாகாண்டம் -பரதனின் கைங்கர்யத்துக்கு விரோதி கைகேயி வரன்கள் -சரணாகதி -பாதுகையே பெற்று -ஆரண்யகாண்டம் -ரிஷிகளை ரக்ஷித்து -கரதூஷணாதிகளை அழித்து -கிஷ்கிந்தா ஸுக்ரீவன் தனக்கு ராஜ்ஜியம் வாலி தடை -போக்கி -ஸூந்தர -அஞ்சிலே ஓன்று பெற்றான் -யுத்த காண்டம் -ராவணனை அழித்து -ஆச்சார்யர் பரிந்துரை –

ஸ்ரீ ரகுபதி பரத்வம்
ஸூந்தர 38-33-காகாஸுரன் -வ்ருத்தாந்தம் ஓடினால் பாணமுமோடி நின்றால் நின்று திரு உள்ளபடி –

51-45 ஸ்லோகம் திருவடி உபதேசம் ராவணனுக்கு -சர பலம் வர பலத்தை விட -நான்முகன் முக்கண்ணன் இந்த்ர மஹேந்த்ரனை விட உயர்ந்தவன்
தோலாத தனிவீரன் –
பிறக்க பிறக்க தேஜஸ்ஸூ விஞ்சி –

வேத பெருமை -பாஹ்ய விலகி -ஸத் தர்மம்-செய்து -ஆத்யாத்மீக ஞானம் பெற்று -அர்த்த பஞ்சகம் உணர்ந்து பரத்வம் இவனே என்று -புரிந்து செய்வதை மேல் பார்ப்போம்

சரணாகதிக்கு முன்பு வேண்டிய யாரையும் கீழே சொல்லி
மேல் பிரபத்தி -ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்திரம் தானே
காண்டம் தோறும் உண்டே
லஷ்மண சரணாகதியை விட ராமானுஜ சரணாகதிக்கு ஏற்றம் அனைத்து உலகும் வாழப்பிறந்த யாத்திராசர் அன்றோ
பரத சரணாகதி மும்மடங்கு பலித்ததே -பாதுகா பட்டாபிஷேகம் -பின்பு ராம ஆலிங்கனம் -மடியில் வைக்கப்பெற்றான் -அயோத்யா புல் எறும்பு முதலாக வைகுந்தம் ஏற்றியதும் பரதன் அனைவரையும் கூட்டிச் சென்று சரணாகதி செய்த பலன்

7 ரஹஸ்யம் சரணாகதி
8- வாழ்வின் லக்ஷணம் -கைங்கர்ய பிரார்த்தனை -புமர்த்த-அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -ஆரண்யம் 15-29- பிதா மம -பெருமாளே கொண்டாடும் படி-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே-

9-சேஷத்வம்–அவனது உகப்புக்காகவே -களை அற்ற கைங்கர்யம்
10-பாரதந்தர்யம்–ஸ்ரீ பாதுகா தேவி பூர்ண த்ருஷ்டாந்தம்
11-தத் அவதி-ததீய பர்யந்தம் சேஷத்வம்-ததீய பர்யந்தம் பாரதந்தர்யம்-12- அகதித்வம்

13-விரக்தி–உறங்கா வில்லி -கைங்கர்ய பிரதிபந்தகங்கள் போக வேண்டுமே
14-ஆச்சார்ய கடாக்ஷம் அறிதல் -குரோர் க்ருத்யம்–சபரி மோக்ஷ சாக்ஷி பூதராகப் பெருமாள்
15-ஸ்ரீ பார்ஸ்யம்
16-நிர்பரத்வம் நிர்பயோஸ்மு
17- ஸூ வஸதி -இருப்பிடம்
18-எதிர்பார்த்து வாழ வேண்டியது

வாழ்க்கை நடைமுறை விளக்குவதே ஸ்ரீ ராமாயணம் -முதல் அடியில் இழியவே மேல் மேலே கூட்டிப்போகுமே

———-

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே –
37-

ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே-ஸ்ரீ வால்மீகி மலை -ஸ்ரீ ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்ரீ ஸ்வாமி உள்ளத்தில் –
பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –

சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து- வால்மிகியைக் குறித்து நியமித்தும்
உபதேசித்தும் போருகையாலே -இதனுடைய கீரத்தி ஊர்த்த லோகங்களிலும் இறே பிரசித்தமாய் இருப்பது

ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் – என்று இருந்தாலும்
யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே
ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை
பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது –
தத் குண சாரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே
அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல்
இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்

படி கொண்ட கீர்த்தி –
படி-
ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –
அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி
படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி –
மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –

இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய ஸ்ரீ இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி ஸ்ரீ வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-
வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
ஸ்ரீ வால்மீகி என்னும் மலையில் தோன்றி ஸ்ரீ இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
ஸ்ரீ இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-
ஸ்ரீ இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி
வெள்ளம் -கடலுமாம் –
வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
ஸ்ரீ இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று ஸ்ரீ இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

வெள்ள நீர் சடையன் -வெள்ளம் தண்ணீர் பக்தி வெள்ளம் -உருகி நைந்து ஈரமான நெஞ்சம் -என்றுமாம்

குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் –
ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –

இராமானுசன் –
அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-
வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது

குடி கொண்ட கோயில் இராமானுசன் –
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த ஸ்ரீ எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான ஸ்ரீ இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக ஸ்ரீ எம்பெருமானாரே அமைகிறார் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை ஸ்ரீ எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –

ஸ்ரீ இராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று ஸ்ரீ வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் ஸ்ரீ இராமாயணத்தை-
சித்தாந்த ஸ்த்தாபகராகிய ஸ்ரீ எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய ஸ்ரீ திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-
ஸ்ரீ இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க

ஸ்ரீ திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை
பின்பற்றி ஸ்ரீ எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் –
மற்றைய அவதார சரித்ரங்களை ஸ்ரீ இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
ஸ்ரீ கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஸ்ரீ ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று ஸ்ரீ இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –
ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் ஸ்ரீ இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-
ஸ்ரீ இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி –
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில்

ஸ்ரீ இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் –
பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –

பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் ஸ்ரீ இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –
அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசேதச மகல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி அடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன்
என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் ஸ்ரீ அயோத்தியில் வாழ்ந்த ஸ்ரீ இராமானுசனை -ஸ்ரீ இளைய பெருமாளை -விலக்குகிறது
ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-
சகல கல்யாண குணங்களை கொண்டவர் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ சுவாமியும்.
ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்ரீ ஸ்வாமி இன்றும்
ஸ்ரீ பெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ஸ்ரீ ராமனைக் கற்றார் .
காட்டிக் கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஸ்ரீ ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை ஸ்ரீ வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு –
அனைத்தும் ஸ்ரீ சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் –விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-
கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை–
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்தது போல
இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே –
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை-விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமியும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி–
ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-