ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்
யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .
திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்: நாயனாரச்சான் பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால தாசர் முதலியவர்கள்
நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.
ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தை பெற்றார்.
மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே“[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]
என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார். “உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர். அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன் அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டுஅருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான். அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.
பெரியவாச்சான் பிள்ளைக்கு “பரம காருணிகர்” மற்றும் “அபார கருணாம்ருத சாகரர்” என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் “அபயப்ரதராஜர்” என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், “இராமாயணப் பெருக்கர்” என்றும் இவருக்கு ஒரு பெயர்உண்டு.
பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான “நாயனாச்சான் பிள்ளை” என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.
அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும் நம் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களின் மூலமும் அறிந்து கொள்ளலாம். அவைகளில் சில கீழே:
- “நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம் உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம் [நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள். ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார். - இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று. பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது, உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது (சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது. இவையே பாரதந்த்ரியம்”.
- மற்றொருவர் கேட்கிறார். “உபாயம் என்றால் என்ன? நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”. பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல. எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
- ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”. அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து, அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
- ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது, பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே இருக்கச் சொல்கிறார். பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ – பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும் அதுவும் நன்மைக்கே’ என்கிறான். ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார். இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே, அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
- ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
- ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச்செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
“தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே.”-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய கிரந்தங்கள்
- அபய ப்ரதான வியாக்கியானம்
- அனுசந்தான ரஹஸ்யம்
- ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
- உபகார ரத்னம்
- கத்ய த்ரய வ்யாக்யானம்
- கலியன் அருள்பாடு
- சகல ப்ரமான தாத்பரியம்
- சரம ரகசியம்
- தனி ஸ்வோகி வ்யாக்யானம்
- திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
- நவரத்னமாலை
- நிகமனப் படி
- பரந்த படி
- பரந்த ரகசிய விவரணம்
- பாசுரப்படி இராமாயணம்
- மாணிக்கமாலை
இந்த விரிவுரை நூல்களுடன் பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார். 1. ரகஸ்யத்ரய விவரணம் 2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம் 3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம் 4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம் 5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம் 6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம் 7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம் 8. திருமாலை வ்யாக்யாநம் 9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம் 10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம் 11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம் 12. பெரியதிருமொழி வ்யாக்யாநம் 13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம் 14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம் 15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம் 16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம் 19. திருவிருத்தம் வ்யாக்யாநம் 20. திருவாசிரியம் வ்யாக்யாநம் 21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம் 22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம் 23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம் 24. பெரிய திருமடல் வ்யாக்யாநம் 25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம் 26. பரந்த ரஹஸ்ய விவரணம் 27. மாணிக்கமாலை 28. நவரத்னமாலை 29. ஸகல ப்ரமாண தாத்பர்யம் 30. உபகார ரத்னம் 31. கத்யத்ரய வ்யாக்யானம் 32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம் 33. சதுச்லோகி வ்யாக்யானம் 34. சரம ரஹஸ்யம் 35. அநுஸந்தான ரஹஸ்யம் 36. நிகமனப்படி 37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி 38. பாரதாதி தனி ஸ்லோகம் 39. அபய ப்ரதான சாரம் 40. ரகஸ்ய தீபிகை 41. பரந்தபடி 42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம் 43. கலியனருள்பாடு 44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம் பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.
————-
ஸ்ரீ யபதியாய்
விஷ்ணு வாஸூதேவ நாராயணாதி ஸப்த வாஸ்யனான
ப்ரஹ்மம் ஒன்றுமே முமுஷுவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று
ஸகல ப்ராமண தாத்பர்யம்
(ப்ரமாணம் -நல்ல அறிவுக்கு வழி –ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் போல்வன-தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி ந அந்நிய பந்தா-பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -திருவில்லாததேவரை தேறேன் மின்
ப்ரஹ்மம் தான் பெரியவனாய் தன்னை ஆஸ்ரயித்த அனைவரையும் பெரியவனாக்கும்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-)
அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும் விசேஷ்யம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
விசேஷணம் ஆகிறது விசேஷ்யத்தோடே பிரிந்து இராத தர்மம் –
விசேஷ்யம் ஆகிறது ஸ்வ விசேக்ஷணத்தோடே பிரித்து இராத தர்மம்
(விசேஷணம் -சார்ந்து இருக்குமது -பூவைச் சார்ந்த மணம் –ரத்னத்தைச் சார்ந்த ஒளி -தர்மம் குணம் -குணியை- தர்மியைச் சார்ந்து இருக்கும்-விசேஷணங்கள் வ்யாவர்த்தி அர்த்தம்-வேறுபடுத்திக் காட்டும்-சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸமஸ்த குண -ஞான ஸக்த்யாதி -விஸிஷ்ட ப்ரஹ்மம் -திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஸர்வ வியாபகம் ஸர்வாந்தர்யாமி)
(ஸரீராத்மா பாவம் நமது அசாதாரண தர்மம்–யஸ்ய சேதனஸ்ய யத்–த்ரவ்யம் ஸர்வாத்மனா ஸ்வார்தே நியந்தும் தாரயிதம் ச ஷக்யம் தத் .–அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷ சாயினேI நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று-சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்-நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்)
(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்—உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –-உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டதுசர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்-நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்)
விசேஷணமும் போக உபகரணம் என்றும்
லீலா உபகரணம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
போகமாகிறது–இஷ்ட பல அநு பாவம்
லீலையாகிறது காலாந்தரத்திலே ஒரு பலம் அன்றிக்கே தாத் காலிக ரஸ ஹேதுவான வியாபாரம்
(கர்த்தா உபகரணங்களைக் கொண்டு கர்மாவைச் செய்கிறான்
குயவன் சக்கரம் கொண்டு மண் குடம் பண்ணுகிறான்
ப்ரஹ்மமே ப்ரஹ்மத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் -போக ஸ்ரீ நிவாஸன் -பேரர் உண்டே திருமலையில்-
இதற்கு லோக த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே)
போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனன் என்றும் த்விவிதம்
சேதனமாகிறது ஞான ஆஸ்ரய வஸ்து
அசேதனம் ஆகிறது ஞான சூந்ய வஸ்து
அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வி விதம்
நித்ய வர்க்கமாகிறது ஒரு நாளும் ஸம்ஸாரத்தை ஸ்பர்ஸியாதே பகவந் நித்ய கைங்கர்ய நிரத ரஸராய் இருந்துள்ள அநந்த வைநதேய விஷ்வக் ஸேநாதி ஸூரி (வர்க்கம்)சங்கம்-(அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தமே இல்லாதவர்-ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் கூரத்தாழ்வான் -இவர்களையும் கீழே அனுப்பி கார்யம் கொள்ளுவான்)
முக்த வர்க்கமாகிறது (நிர்ஹேதுகமான)பகவத் கிருபையால் அநாதியான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு நித்ய வர்க்கத்தோடே கலந்து அது முதலாக யாவதாத்மபாவி (நித்தியமாக)பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –
அசேதனம் ஆகிறது ஸூத்த ஸத்வாத்மகமாய் தன்னோடே சம்பந்தித்த சேதனர்க்கு ஸ்வரூப ப்ரகாசகமாய் –நித்யமாய்- ஸ்வயம் ப்ரகாசகமாய் -கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே திவ்ய விக்ரஹங்களாய் -திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஜன பதங்களாய் அபரிச்சின்னமாய் நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும்
(உபய விபூதி நாயகன் உத்தம புருஷன் திரு வயிற்றில் மூன்று மடிப்புக்கள்- த்ரிவித சேதன அசேதன –கீழ் போக -நித்ய விபூதி பார்த்தோம் -மேல் லீலா விபூதி பார்க்கப் போகிறோம்)
இனி லீலா உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதிலே சேதன ஜாதியும் -சம்சாரிகளை யென்றும் முமுஷுக்கள் என்றும் த்வி விதம்
ஸம்ஸாரிகள் ஆகிறார் அநாதியான அசித் ஸம் ஸம்பந்தத்தாலே திரோஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய்
அது அடியாக அந்யதா ஞான விபரீத ஞானங்களை யுடையராய் -(அந்யதா ஞான-குணமே மாறாடுவது -வெளுத்த சங்கத்தை மஞ்சளாகப் பார்ப்பது -சேஷத்வம் அடிமைத்தனம்-குணம் பார்க்காமல் ஸ்வ தந்திரம் என்று நினைக்க-விபரீத ஞானங்களை –பொருளையே மாறாடிப் பார்ப்பது யுடையராய் -தேஹமே ஆத்மா என்று பிரமித்து)
தத் கார்யங்களான ராக த்வேஷாதி (விருப்பு வெறுப்பு முதலாக)ஜன்யங்களான புண்ய பாப ரூப நாநா வித கர்மங்களை யுடையராய் அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர் வித நாநா சரீரங்களிலே நிரந்தரமாக ப்ரவேசியா நின்று கொண்டு அந்த சரீரங்களிலும் சரீர அனுபந்திகளிலும் அஹங்கார மமகாரங்களாலே வருகிற துக்கங்களில் ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு விஷய ப்ரவணராய் தாப த்ரய தஹ்மானராய் நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள்
(காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“
ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?)
முமுஷுக்களும் (ஸம்ஸாரம் விடுபட ஆசை கொண்டவர்)ஆத்ம பிராப்தி காமர் என்றும் பகவத் பிராப்தி காமர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்–ஆத்ம பிராப்தி காமர் ஆகிறார் (கேவலர்)-ராஜ பதம் அளவாக யுடைத்தான ஐஹிக ஐஸ்வர்யமும் பிரம பதம் பர்யந்தம் உள்ள ஆமுஷ்மிக ஐஸ்வர்யமும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விவேகித்து -ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் இருக்கையாலே ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுமவர்கள் -இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள்
பகவத் பிராப்தி காமர் ஆகிறார் -ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய் -ஞான ஆனந்த மயனாய் -அபரிச்சின்னமான குணகனுமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷமாகையாலே -அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு ஸ்வ அனுபவம் அணுவாய் -ஸ்வ தந்திரமுமாகையாலே -ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து –
நித்தியமாய் -நிர்மலமாய் -அபரிச்சின்ன ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய் -ஸர்வ சேஷியாய் -ஸர்வ சரண்யனாய் -ஸர்வ ப்ராப்யனான -ஸ்ரீ யபதியுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பரம புருஷார்த்தமாக நிச்சயித்து -ஒரு தேச விசேஷத்திலும் தேஹ விசேஷத்திலும் அன்றியே சித்திப்பதாகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான தேச சம்பந்தமும் தேஹ சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள்
இவர்களும் உபாஸக நிஷ்டர் என்றும் ந்யாஸ நிஷ்டர் என்றும் த்வி விதம்
உபாஸக நிஷ்டர் ஆகிறார் -பல சங்க பரித்யாக பூர்வகமாக -யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்ட்டிக்க விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸுக்கள் நன்றாக நசித்து -யதா ஞான ஹேதுவான ஸத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஞானம் யுண்டாய்
அது ஸாஷாத் கார ஸமானமாய் -அந வரத பாவனை யுண்டாய் -பக்தி ரூபா பன்னமாய்
ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய்-
ஸாஸ்திரங்களிலே மோக்ஷ சாதன தயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள்
(வேதந – ஸ்மரண – த்யான -உபாஸன–அன்பு கலந்த பக்தி -அறிந்து -உபாயம் -சமீபத்தில் அழைத்துச் செல்லும்-நம் யத்னம் -சாதன உபாயம் -ஸாத்ய உபாய நிஷ்டை -ஞான தர்சன பிராப்தி தசைகள் -பர பக்தி பர ஞான பரம பக்தி –
மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷
என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-
ஸ்வா தந்திரம் லேசமும் இல்லாமல் பாரதந்த்ரம் கொண்டு – -அவனைப் பற்றுவதே சரணாகதி பிரபத்தி ந்யாஸம் -ப்ரஹ்மமே ந்யாஸம் -ஸித்த உபாயம்
சரணம் இதி ஆகதி -நீயே உபாயம் என்று வந்து விடுவதால் -நம்புவதே சரணாகதி -ஸித்த உபாய நிஷ்டை -அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் -)
ந்யாஸ நிஷ்டராகிறார் -உபாஸனமும் அநேக ஜன்ம ஸாத்யமாகையாலே துஷ் கரம் என்றும் -தேச கால அதிகாரி ப்ரப்ருத் யனேக நியம அபேக்ஷமாகையாலே ஸ அபாயம் என்றும்
ப்ராரப்த கர்மாவஸாந பலமாகையாலே ஸ விளம்பம் என்றும்
அசேதனமாகையாலே அஸமர்த்தம் என்றும்
ஸ்வ யத்ன ஸாத்யமாகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
பின்னையும் சொல்லப்படுகிற உபாய ஆபாசங்கள் எல்லாவற்றையும் ஸ அங்கமாகவும் ஸ வாஸநமாகவும் விட்டு
அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
நிவ்ருத்தி சாத்யமாகையாலும்
ஸக்ருத் அநுஷ்டேயமாகையாலும்
ஸூ கரமாயும்
ஒரு நியமமும் வேண்டி இராமையாலே நிர் அபாயமாயும்
தேஹ அவஸாந பலிதமாகையாலே சீக்ர பல ப்ரதமாயும்
பரம சேதனமாகையாலே பல ப்ரதாநத்தில் ஸ்வயம் ஸமர்த்தமாயும்
நிருபாதிகமாகையாலே ஸ்வரூப அநு ரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலக்ஷண உபாயமாக நிச்சயித்து
அதிலே ந்யஸ்த பரராய் இருக்குமவர்கள்
இந்த ந்யாஸ நிஷ்டரும் ஸ்வயம் ந்யஸ்த பரர் என்றும் பர ந்யஸ்த பிறர் என்றும் த்வி விதம்
ஸ்வயம் ந்யஸ்த பரராகிறார் -ஸதாச்சார்ய கிருபையாலே லப்த ஞானராய் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து ஹித பரனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தைத் தாங்களே ஆஸ்ரயிக்க அஞ்சி -ஸர்வேஸ்வரனுக்குப் பத்நியாய் -வல்லபையாய் -ஸர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநியாய் -மாதாவாய் -அவனோடே நித்ய ஸம் யுக்தையான பிராட்டி பிரஸாதத்தாலே பயம் கெட்டு
வாத்சல்யாதி ஸமஸ்த கல்யாண குண கண விஸிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளைத் தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள்
பர ந்யஸ்த பரராகிறார் -தங்களுக்காக ஆசார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட ஏதாத்ருஸ ந்யாஸத்தை யுடையவர்கள்
இவரும் ஸ நிபந்தன பர ந்யஸ்த பரர் என்றும் நிர் நிபந்தன பர ந்யஸ்த பரர் என்றும் த்வி விதமாய் இருப்பார்கள்
ஸ நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தம்முடைய அநு வர்த்தநாதிகளாலே மந்த்ர பிரதனனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்
நிர் நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தனக்கு ப்ராப்தமான புருஷார்த்தத்தினுடைய யுக்த வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அது இவர்களுக்கு இல்லாத மாத்திரம் அன்றிக்கே இவர்கள் படுகிற துர்க் கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்
இவர்களில்
ஸம்ஸாரிகள் ஈஸ்வரனுடைய சிக்ஷைக்கு விஷயமானவர்கள்
கேவலர் -உபேக்ஷைக்கு விஷயமானவர்கள்
உபாஸகர் அனுக்ரஹத்துக்கு விஷயமானவர்கள்
ப்ரபன்னர் கிருபைக்கு விஷயமானவர்கள்
(அருள் தயா அனுக்ரஹம் கிருபை அனுகம்பா -பர்யாய பதங்கள்
அனு க்ரஹம் பின் தொடர்வது அனு பத பிரயோகம் -யாத்திரை அனு யாத்ரை -யாகம் அநுயாகம்
அனு க்ராஹதம் -பண்ணினதால் பலன் -பக்தி செய்வதால் அருள் -சோபாதிகம் -உபாதி இருக்க வேண்டுமே
கிருபா -நிருபாதிகம் -அளவுக்கு உட்படாமல் -)
ப்ரபன்னர் எல்லாருக்கும் தேஹ அவசானத்திலே பலமே ஒக்கும்
உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரிகள்
இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்வி விதம்
ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் (கூண்டுக்குள்)இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோற்றித் தந் நிவ்ருத்திக்குத் த்வரிக்குமவர்கள்
(இனி இனி இருப்பதின் கால் -திரு விருத்தத்தில் 3 தடவையும் திருவாய் மொழியில் 17 தடவையும் கூப்பிடடாலும் இங்கேயே வைத்தான்
இனி என்றதும் உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று ஆக்காமல்
பிரபந்தம் தலைக் கட்ட -நச்சுப் பொய்கை ஆகாதற்காக -ஆர்த்தி பெருக்க -வீடு திருத்த -இங்கே வைத்தான்-த்யாஜ்ய தேகத்தில் பிராவண்யம் மிக்கு இத்துடன் கூட்டிச் செல்லப் பார்த்தான் -அவனுக்கும் மங்க ஒட்டு உன் மா மாயை உபதேசித்தார் அன்றோ)
த்ருப்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான தேஹாந்தர ஸம்பந்தமும் ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய் தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள்
இவரும் ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் என்றும் ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்
ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் –சரீர அவசானத்திலே போகம் எத்தனையேனும் விலக்ஷணமானாலும் ருசி வாசனைகளாலே இத்தை விட்டு விட த்வரியாதவர்கள்
ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் -தனக்கும் அவனுக்கும் உண்டான நிருபாதிக சரீர சரீரி ஸம்பந்தத்தை அனுசந்தித்து அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக போக தாஸ்யத்திலே மண்டி இருக்குமவர்கள்
ஆர்த்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோன்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள்
இவரும் பிரதி கூல போக ஆர்த்தர் என்றும் அநு கூல போக ஆர்த்தர் என்றும் த்வி விதம்
பிரதி கூல போக ஆர்த்தர் ஆகிறார் -ப்ரத்யக்ஷ ஸித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் ஸஹமாய்த் தோன்றி அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும் தேசிகருடைய ஸஹ வாஸத்தையும் பொறாதே ஸாஸ்த்ர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்களுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய் -அந்த துக்க கந்தமும் இன்றிக்கே நிரதிசயமான பகவத் பிராப்தி ரூப ஸூகத்திற்கு த்வரைப் படுமவர்கள்
அநு கூல போக ஆர்த்தர் ஆகிறார் -நிரந்தரமான த்வய அநு சந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தினுடைய வைலக்ஷண்யம் விசதமாக பிரகாஸிக்க அது இல்லாத க்ஷண காலமும் கல்ப ஸஹஸ்ரமாய்த் தோன்றும்படி (ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ)ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கின்றவர்கள் –
இந்த ப்ரபந்ந விஷயமான உபாய க்ருத்யம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்தியும் என்று த்வி விதமாய் இருக்கும்(அநிஷ்டமும் இஷ்டமும் அதிகாரிகளுக்குத் தக்க வேறு வேறாகவே இருக்கும்)
அநிஷ்டம் தான் பூர்வாகம் என்றும் உத்தராகம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அகமாகிறது புண்ய பாப ரூபமான கர்மம் –
ஸ்வர்க்காதி சாதனமாக புண்யமும் பாபம் போலே பேற்றுக்கு பிரதிபந்தகமாகையாலே அகம் எனப்பட்டது
இதிலே பூர்வாகம் ஆகிறது -ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –
இதுவும் ஸஞ்சிதம் என்றும் ப்ராரப்தம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
ஸஞ்சிதமாகிறது -பல ப்ரதானத்துக்கு உத் யோகியாமல் இருக்கிறது
ப்ராரப்தமாகிறது -பல பிரதானத்துக்கு உத் யோகிக்கிறது
ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்தராரப்தம் என்றும் த்வி விதம்
உத்தராகமாகிறது –ஆஸ்ரயணக்கு அநந்தரம் தேஹ அவசான பர்யந்தம் வாஸநா பலத்தாலே செய்யப்பட கர்மம்
இதுவும் ஞான க்ருதம் என்றும் அஞ்ஞான க்ருதம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
இதுவும் ஸ அநுதாபம் என்றும் நிரநுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்வி விதமாய் இருக்கும்
இப்படிப்பட்ட பேதங்களை யுடைத்தான அநிஷ்டத்தை இவன் இடத்திலே ப்ரீதி அதிசயத்தாலே உபாய பூதனான ஈஸ்வரன் போக்கும்படி எவ்வாறு என்னில்
(ஸஞ்சித பிராரப்த ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -நானும் வேண்டா நீயும் வேண்டா -தன்னடையே போகும்)
(போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-மாரீசனை ஒட்டி ஸூ பாஹுவை முடித்தால் போல்-ஏழு வர்க்க பாபங்கள் -ஸஞ்சித கர்மா மூட்டை பெரியது –
பக்தி உபாசகனுக்கும் ப்ரபன்னனுக்கும் முடிக்கும் முறை -அநுகூல பிரதிகூல இடம்
சரீராராப்த ஆரப்த கர்மம் -தீயில் இட்ட பஞ்சு போல் அழித்தே விடுகிறான் -பக்தனுக்கு இது இல்லை
மூன்றாவது வர்த்தமான சரீர ஆரப்த கர்மாவை ப்ரபன்னனுக்கு தேக அவசா னத்திலே அதற்குள்ள அனுபவம் கொடுத்து தீர்க்க வேண்டும்
ஆகவே ஸரணாகதி செய்த உடன் ஸுகமீ என்று சொல்ல முடியாது -மோக்ஷம் நிச்சயம்-அஜ் ஞான க்ருத பாபம் அப்படியே காணாக் கண் இட்டு இருப்பான்-
சிந்தையந்திக்கு அப்போதே -வேணுகானம் கேட்டு ஆனந்தம் புண்யங்களைப் போக்கி -கண்ணனைப் பார்க்கப் போகாமல் துக்கப்பட்டு பாபங்களை போக்கி அப்போதே பேறு -அவள் ஆர்த்த ப்ரபந்தனை
நம்மாழ்வார் தீர்க்க சிந்தையந்தி)
வர்த்தமான சரீரார்ப்பத்தை ஒழித்து பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை இவனை ஸ்நேஹித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
பாப அம்சத்தை த்வேஷித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
ஸரீராரப்தத்தை ஸரீரத்தோடே போக்கும்
இவனுக்கு எப்போதும் அநு கூல போகார்த்தி யுண்டாம்
அந்த ஆர்த்தி ரூபமான மஹா துக்கத்தினாலும் தத் ஹேதுவான அநுபவ ஆஹ்லாத ரூபமான மஹா ஸூகத்தினாலும் சரீர அநுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
உத்தராகத்தில் அஞ்ஞான க்ருதமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றிக்கே போம்
ஸ அநுதாபமான ஞான க்ருதமும் அவனுடைய க்ஷமைக்கு விஷயமாம்
அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அநு தாபத்தாலே போம்
பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அநு தாபத்தாலே போம் –
நிரநுதாப ஞான க்ருதமும் சரீர அநு பாவ்யம் போலே அனுபவித்துப் போக்குவன்
ஸாமான்ய நிஷித்த அநுஷ்டானமும் பகவந் நிக்ரஹ ஹேதுவாகையாலும் சிஷ்ட ஐந கர்ஹிதமாகையாலும் க்ரூரம்
பகவத் விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தரம்
பாகவத விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தமம்
ஆகையாலே ப்ரபந்நன் பகவத் பாகவத் ப்ரஸாதத்துக்கு ஒழிய க்ஷமைக்கு விஷயமாகை அநுரூபம் அல்லாமையாலே ஸாவதாநத்தோடே நடக்க வேணும்
ஆகையாலே ஞான க்ருதமான் ஸ அநு காமமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அநுதாப சூந்யமும் தூரதோ நிரஸ்தம்
ஆனாலும் ஈத்ருஸ கடிந ப்ரக்ருதிகள் உண்டாகுவாரோ என்று ஸாஸ்த்ரம் சொல்லிற்று ஆயிற்று
இப்படி ஸர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் யாகையாலே தத் கார்யமான தேஹ ஸம்பந்தம் இல்லை
தேஹ ஸம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை
இம் மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாஸநா ருசிகள் இல்லை
ஆகையாலே ப்ரபன்னனுக்கு சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர க்ரியைகளும் உபாயம் அன்று
ஆனாலும் உத்தர க்ரியைகளும் ஆந்ரு ஸம்ஸ்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை
இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்வி விதம்
ஐஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்வி விதம்
கைங்கர்யமாவது -இஷ்டம் செய்கை (கிம் கரோ -என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்து கேட்டு செய்ய வேண்டுமே)-அது தான்
ஸாமான்ய விஹித அநுஷ்டானமும் (வர்ணாஸ்ரம தர்ம அநுஷ்டானம்)பகவத் ஸந்தோஷமாகையாலே கைங்கர்யம் என்னக் கடவது இறே
பகவானுக்கு இஷ்டம் ஸாஸ்த்ர முகத்தாலே அறிய வேணும்
பாகவதருக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும் –
ஆக கைங்கர்யமும் மாநஸம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
மாநஸ மாகிறது -அந்நிய பரமாகாமல் தத் பரமாக்குகை (கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நாம் கொள் சிறப்பே)-அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும் -செய்யக் கடவ உபகாரத்தை அபேக்ஷிக்கையும் என்று த்வி விதம்
இதில் ஈஸ்வரன் செய்த உபகாரமாகிறது -ஸதாசார்யனை ஆஸ்ரயிப்பிக்கையும் -தத் அர்த்தமான அதிகாரி ஸம்பத்தும்
ஆமுஷ்மிகமான கைங்கர்யமும் இதுவே
அந்தக் கைங்கர்யமும் வாசிகம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
வாஸிகமாகிறது -ஸ்துதி -திருநாம ஸங்கீர்த்த நாதிகள்(வாசிகமான அங்கு கைங்கர்யம் செய்தான் மொய் மாம் பொழில் -பதிகம்)
காயிகமாகிறது -ஸம்மார்ஜமான மாலா பந்தநாதிகள்
பாகவத கைங்கர்யமும் ஆசார்ய கைங்கர்யம் என்றும் தத் துல்யரான பாகவத கைங்கர்யமும் என்றும் த்வி விதம்
ஆசார்யரும் மந்த்ர ப்ரதர் என்றும் -மந்த்ர ரத்ன பிரதாரி யென்றும் த்வி விதம்
இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்த ஸமமாய் இருக்கும்
பகவானுடைய திருவடிகள் இரண்டிலும் வைஷம்யம் உண்டாகில் இறே ஆசார்ய விஷயத்தில் வைஷம்யம் உண்டாவது
(மந்த்ரத்திலும் மந்த்ர ப்ரதிபாத்ய வஸ்துவிலும் மந்த்ர ப்ரதான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கணக்கா உண்டாக வேணுமே -பெரிய திருமொழி முதல் நான்கு பதிகமும் இத்தைக் காணலாம்
மந்த்ரம் கொடுத்த திருநறையூர் நம்பி மந்த்ரார்த்தம் கொடுத்தக திருக்கண்ணபுரத்துக்கும் 100 பாசுரங்கள் மங்களா சாசனம்
ஸ்ரீ ரெங்கம் மட்டுமே 50 பாசுரம் -வேறே யாருக்கும் இல்லையே)
இப்படிப்பட்ட ஆசார்யர்கள் செய்த உபகாரமாகிறது -அநாதி காலம் விமுகனான சேதனனை பகவத் விஷயத்தில் அபி முகனாகச் செய்கையும் -மந்த்ரார்த்த முகத்தாலே அஞ்ஞானத்தை நிரஸித்து ஞானத்தை யுண்டாக்கி தத் அநு ரூபமான வ்ருத்தியிலே நியமித்து ததீய அந்தர் பவாத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகையும்
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-
உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி ————-62-
ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-
தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-
இனி பாகவதர் செய்த உபகாரமாவது -குண லேசமும் இன்றிக்கே தோஷங்களினாலே பூர்ணனான தன்னை ஆசார்ய ஸம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அநு ரூபமான போகத்திலே கூட்டிக் கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயமாக்குகை
(-அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆஸ்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்.-திருவேங்கடமுடையான் அனந்தாழ்வானுக்கு சமர்ப்பித்த தனியன்)
இனி லீலோ உபகரணமான அசேதனமும் ப்ரக்ருதி என்றும் காலம் என்றும் த்வி விதம்
ப்ரக்ருதி யாகிறது -ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய் நித்யமாய்- தன்னோடே சம்பந்தித்த சேதனருக்கு தத் தத் கர்ம அநு குணமான தேஹ இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -ஸப்தாதி விஷய ப்ராவண்யத்தையும் பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்
காலமாகிறது -நித்தியமாய் -நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹு விகாரங்களை யுடைத்தாய் சேதனருடைய கர்மத்துக்கும் தத் அநு குண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்
இனி லீலா பரிகரமும் போக பரிகாரமுமான சேதன அசேதன வர்க்கம் -ஸ்வ விஸேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு வ்யாப்யமாய் –தார்யமாய் -நியாம்யமாய் -சரீரமாய்- சேக்ஷமாய் இருக்கும்
இனி விசேஷ்யமும் அகில ஹேய ப்ரத்ய நீகமாய்- கல்யாணை கதாநமாய் -ஸதைக ரஸமாய் -விபுவாய்- நித்யமாய் -ஞான ஆனந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய் -ஞான ஸக்த்யாதி அநந்த குண கண பூஷிதமாய் -ஸ்வ விசேஷணமான ஸகல சேதன அசேதனங்களுக்கும் வ்யாபகமாய் -தாரகமாய் -நியாமகமாய் -ஸரீரியாய் -சேஷியாய் -விலக்ஷண விக்ரஹ யுக்தமாய்- லஷ்மீ பூமி நீளா ஸமேதமாய் -நித்ய முக்தர் அநு பாவ்யமாய் -ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய் -ஸர்வ லோக சரண்யமாய் -ஸகல பல ப்ரதமாய் -ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும்- ஸநக ஸநந்தாதி யோகிகளுக்கும் -அவாங் மநஸகோசரமாய் -ஸ்ருத் ஏக ஸமதி கம்யமாய் -ஸமாஸ்ரித ஏக ஸூலபமாய் -தத் உஜ்ஜீவந ஏக ப்ரயோஜனமாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார ரூபங்களை யுடைத்தாய் இருக்கும்
இப்படிப்பட்ட ஸமஸ்த விசேஷண விஸிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன்
இந்த அதிகாரியே ஞானாதிகரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நித்ய முக்தர்களுக்கும் ஆசார்யனுக்கும் பிராட்டிக்கும் ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த பிரிய தமன்
ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம் முற்றிற்று
——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply