மாறன் துதி
தேனறா மகிழ்த் தொடையலும் மவுலியும் திருக்கிளர் குழைக்காதும்
கானறா மலர்த் திருமுகச் சோதியும் கயிரவத் துவர் வாயும்:
மோன மாகிய வடிவமும் மார்வமும் முத்திரைத் திருக்கையும்
ஞான தேசிகன் சரண தாமரையு மென் நயனம் விட் டகலாவே.–1-
கான் – வாசனை.
கயிரவம் – செவ் வாம்பல்.
ஞான தேசிகன் – நம்மாழ்வார்.
பரம்பொருள் துதி
மருதிறத் தவழ்ந்தும் சகடிற வுதைத்தும் மறை துலங்கிட மலை எடுத்தும்
எருதொடு கரியும் பரிவிழ முனிந்தும் எண்ணரும் ஆடல்கஎியற்றிப்
பொருது மல்லினர் கண் பிதுங்கிட நெறித்தும் புள்ளின் வாய் விரிந்திடக்–2-
எண்ணரும் ஆடல்கள் – அலகிலா விளையாட்டு–கவிச்சக்ரவர்த்தி
மல்லினர் -, மல்லர்.*மல்லாண்ட திண் தோள்’ என்பர் பெரியாழ்வார்.
அடியார் துதி
திரு வாழி திருச் சங்கம் திருத் தண்டம் திருச் சார்ங்கம் திருவாள் என்னும்
செருவாரும் அரக்கர்கள் தம் சிரமுருட்டும் ஐம்படையும், தேவர் போற்றும்
மருமாலை அயக்கிரிவர் விச்சுவசேனரும் செம்பொன் வரையாம் என்னப்
பொரு மேனிக் கருடனும், அஞ்சனை மகனும் காப்பாகப் பொருந்தும் மாதோ.–3-
நூற்பயன்
பாலாழி நாரணன் சீர் பாடியும் பரி பாலனித்தும்
மேலாம் பதம் பெற்ற ஆழ்வார்கள் ஆரியர் மெய்ச்சரிதம்
நாலாயிரத்து முந் நூற்றறு பத்தொரு நற் கவிக்குள்
மாலா யொருகவி கற்கினும் நல்கிடும் வைகுந்தமே.–4-
தற் சிறப்புப் பாயிரம் ‘
திரு வளரூறை விஜய ராகவன் செந் தமிழினில் செங்கண் மாலருளால்
மருவளரும் சீர்ப் பொய்கையார் முதலாழ்வார்கள் தம் சரிதம துடனே
அருண்மிகு நாத முனிவனே முதலாம் ஆரியர் சரிதமி தாமிக்
குரு பரம்பரையாம் பிரபந்தம் இதனைக் கூறினன் விருத்தப் பாக் கொண்டே.–5-
ஊறை–ஊற்றத்தூர்
———–
பதிகம் —
பொய்கையார் பூதத்தார் புகழ் பேயார் மூவர்களும் .புவி வந் துற்ற
செய்கை யானதுவுமவர் தமிழ் பாடிப் பரம பதம் சேர்ந்த வாறும்;
மெய் கையா மகிழ் பெரியார் புவியில் வந்தரிபரமாய் விளம்பி யாறு
வைகையான் கட்டிய பொற்க் கிழி யறுத்துத் தமிழ் பாடும் வண்ணந் தானும் –1-மெய் கையா – உண்மையை -வெறுக்காத..
திருமங்கை மன்னர் பிறந் தரி தனையே வழி மறித்துத் திருமந்த் ரங் கொள்
கருமங்கள் பலவும் அவர் தமிழ் பாடிப் பரமபதங் கலந்த வாறும்;
தருமங்கொள் பாற்கவர் பால் மழிசையர் கோன் உதித்துப் பல் சமய நூலால்
தெருமந்து மால் பரமென் றறிந்துதமிழ் பாடி யடி சேர்ந்த வாறும்; –2–, தெருமந்து – மனம் கலங்கி,
தொண்டரடிப் பொடியர் பர மாதர் தமை விரும்பிப் பின் தொண்ட ராகி
வண்டமிழின் கவிபாடி யரங்கருடன் மெய் கலந்த வாறு தானும்;
மண்டு விடப் பணி குடங்கை வைத்த குல சேகரனார் மனது தன்னில்
விண்டு பர மென வறிந்து தமிழ் பாடிப் பரம பதம் மேவு மாறும்; –3-
விண்டு.- திருமால்.
“இடர் துடைத் தேக விண்டு பிறந்தனன்” என்பர் கவிச்சக்ரவர் த்திகள் (சுந்தர காண்டம்),
உறையூரிற் பாணனுதித்து இராகமொடு சங்கீத முவந்து பாடிக்
கறை நேமி நாரணனாந் திருவரங்க ரடி யிணையிற் கலந்த வாறும்;
நறையாருந் துளவணி மால் சடகோபனாய் உதித்து நான்கென் றோதும்
மறையாரும் பொருளினையே தமிழ் செய்து தம் பதம் போய் மருவு மாறும்; –4-
சடகோபன் – தம்மாழ்வார். சடம் எனும் வாயுவை வென்றவர்.
*சடம்வளை சடத்தை முனிந்தருள் முனிவன்” -சடம், ஆன்ம ஞானத்தை அழிக்கும்,
மதுரகவி யுணர்ந்து திரு வாய் மொழியைப் புவியிடையே மலியச் செய்து
சதிருடனே சடகோபர் தமைப் பாடிப் பரமபதஞ் சார்ந்த வாறும்;
புதுவையற்குக் கோதை குழல் சூடிய பூ மாலை தனைப் பொருந்த நல்கி
முதிர் சுவை சேர் தமிழ் பாடி யவளரங்கர் தம்மை மணம் முடித்த வாறும்; –5–
“துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல் நெறி’ என்பர் வேதாந்த தேசிகர்.
பெரிய ஜீயர் (மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்” என்பர்,
வேதமதைப் பன்னிருவர் தமிழ் செயு நாலாயிரமும் விளிந்த வாற்றால்
நாதமுனி விக்கிரமாம் மாறனுரைத் திட வெழுதி நாட்டு மாறும்;
ஓது திரு மந்திரமே முதலான பொருள்களெலா முய்யக் கொண்டார்
கோதில் மணக் கால் நம்பிக் குபதேசத்தவர் பதத்திற் குறுகு மாறும்–6-
விக்கரமாம் மாறன் – அர்ச்சாவதாரமான நம்மாழ்வார். விக்ரஹம் என்ற வடமொழிச் சொல்லை * விக்கிரம் * என்று திரித்துக் கொண்டார்
மந்திரமே முதலான பொருள்கள் -1–திருமந்திரம் -2-த்வயம் – 3. சரமஸ்லோகம்,
வாளமருங் கரச் சோழன் குருவா மாக்கி யாழ்வானை வாது தன்னில்
ஆளவந்தார் வென்று மணக் கால் நம்பி யிடத்து மந்த்ரம் அறிந்திட் டாங்கோர்
நாள தனில் பெரிய நம்பி முதலானோர்க் குபதேசம் நவின்ற வாறும்;
மீள வந்த தெரிசனத்தைப் பெரிய நம்பிக் களிக்க வவர் விரும்பு மாறும்; –7-
பரசமய மதகரியை வென் றிடுங்கோ ளரியெனவே பரவி வானம்
தரைமுழுதும் புகழ்சீர்த்திப் பெரும்பூதா ரெதிராசர் சரிதந் தானும்;
அரன்பரனென் றெழுதுபடத் துடனடைந்த கிருமிகண்ட னஹறைறந்த கட்சி
உரைகள் தனக் கெதிருரைக ளுரைத்துரைத்துக் கூரத்தா னுரைவெல் .பாங்கும்; 8–இராமானுஜரைச் சிங்க ஏறு” என்பர் மணவாளதாசர்.
———-
(வேறு)
மகுத்துவ முடையவிவ் வாற தாயதில்
மிகுத்திடுங் கதைகளும் விரித்து ணர்ந்திட
வகுத்துரை மணிப்பிர வாளத்’ தின்வகை
தொகுத்துப்பா விருத்தமாய்த் தமிழிற் சொல்வனால். 9
‘ அவையடக்கம்
பொருதிரைக் கடலினிற் பொருந்து நீரெலாம்
ஒருசிறு குருவிசென் றுண்ணல் போலவே
பெருகிய காதலாற் பேச ரும்பெருங் :
குருபரம் பரையினைக் கூறல் மேயினேன்| 1
நாறுசெந் தாமரை தாண்ம லர்பெருஞ்
சேறிடை யெழுகனுந் தேவர் கொள்வபோல்
தேறுமாழ் வார்கள்தம் கதையைத் இமையேன்
கூறினும் பெரியர்கள் உவந்து கொள்வரால், 2
மெல்லிய பாலர்கள் விளம்பி டும்மிளஞ் .
சொல்லினை த் தந்தைதாய் சூழ்ந்து கேட்பபோல்
நல்லியல் நாவுடைப் புலவர் நன்கிலேன்.
புல்லிய சொல்லையும் பொறுத்துக் கேட்ப்ரால். 2
குலவுமென் மொழியுடைக் கோ லத்துஎதிர்
நலமிலாப் புன்கொடி நவிற்றல் போலவே
அலஇூலாப் பல்கலை யறிந்து ஸணர்ந்திடும்
புலவர்முன் பரிவிலேன் புகல்கன் றேனரோ. – 4
பூவரு: நான்முகப் புனிதன் தன்னுடை
நாவரு வெண்கம லத்து நாயகி
மாவருள் மாட்சியால் வைய: மீதுளோர்
யாவரு முணரவீ தறைகின் றேனரோ. –5-
நாட்டுச் சிறப்பு
வான்சி றந்து மழைபொழிந் தோங்களீர்
தான்ம லிந்து நதிகள் பெருகிட
ஊன்பொ ருந்தி யுயிர்கள் செழித்திட
ஆன்சு ரந்து அமுத மளிக்குமே. 1
சென்னெ லோங்கி வயல்கள் செழித்திடும்
கன்ன லோடு கமுகுங் கவின்கொாளும்
வன்ன மாமலர்ச் சோலை வளம்பெறும்
அன்னம் வாழுந் தடங்க ளமைந்தவே. 2
வாழ்த்து
விரைசெய் யந்தணர் வேதம் விளம்புக
துரைகள் நீதிச்செங் கோலுந் துலங்குக
உரைசெய் தேவ ரடியரு மோங்குக
திரைக உற்புவி வாழ்வு செழிக்கவே. 3
பயன்
இந்த மாக்கதை யின்பொருள் யாவையுஞ்
ந்தை கொண்டு தெளிந்துரைப் போர்களும்
உந்து காத லுடன்செவி யுள்ளுற வந்து கேட்டு மகழ்நரும் வாழ்கவே! –4-
———
தோற்றுவாய்
உலக மோடய ஸுருத்திர னும்பர்கோன் முதலாம்
புலவர் பல்லுயிர் யாவையும் பூத்தளித் தழிக்கும்
அலகில் பல்விளை யாடல்செய் தெவற்றையு மகட்டுற்று
இலகப் பாலடை வளருமால் வைகுந்தத் திருந்தே. 1
உலகை இறைவன் அழித்தான் .என்றால் இல்லாது செய்துவிட்டான் என்று கருதக்கூடாது, இதனைச் “சற்காரியவா தம்”என்பர்.
கவிச்சக்ரவர்த்தியார் ஒருவரே இந் நுட்பம் உணர்ந்து ‘உளவாக்கல், திலைபெறுத்தல், நீக்கல்” என்பர். புதியபயொருள் தோன்றாது: பழைய பொருள் அழியாது.
பால் அடை, பாற்சகடலிலும் ஆலிலையிலும் என்று பொருள் கொள்ளவேண்டும்.
தொடுத்த பல்லுயிர்த் தொகுதிகள் துவக்கறு மாறாய்
எடுத்த நம்மவ தாரங்க ளெண்ணில வ்வற்றை
அடுத்து நல்லறி விலாமையின் அறிகில ராக்
கடுத்தெ இர்ந்திறந் தாரசு ரேசர்நங் கையினால். 2
மானி டர்சிலர் பரம்பொருள் நாமென மதித்து
சரூன மல்கிநல் லொழுக்கராய் நாடொறும் அன்பு
தானி ழைத்திருந் துலகமா மாயையைத் தடிந்து
வான வர்க்குமெட் டாதவிப் பதவிமன் ஸனினரால். 3–உலக மா மாயை என்றும் உலகமாம் மாயை என்றும் பிரிக்கலாம்.
இன்ன வாறுசெய் இவணடைந் தனம்இனி யுலகின்
முன்னர் செய்தவல் வினைகளான் முடிவிலாச் சனனம்
மன்னி வாழ்பல வுயிரெலா மாய்தலுற் பவித்தல் ..
தன்னை யெவ்வகை யொழித்துதம் பதந்தனிற் சார்வார். 4
நவ்வி காட்டியே வலையினால் நவ்விகள் தமையே
வவ்வு மாறென விவர்களா லவர்மயங் குளத்தைச்
செவ்வி தாக்கியே சேர்த்திடும் செயல்புரி குதலே
ஐஒவ்வு மென்னவண் டுணுமதுத் துளவமால் ஓர்ந்தான். 5
தவ்வி- மான், *மாசைக் கொண்டு மானைப் பிடிப்பவர்போல் இவர்களால் அவர்கள் உளத்தைச் -செவ்வீதாக்குவோம்; “பிறகு நம் பரமபதத்தில்
சேர்த்துக் கொள்வோம்” என்று தி ருமால் கருதினான்.
பாயிரம் முற்றும்
—-
முதலாழ்வார்கள் திருவவதார அத்தியாயம்
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சுதையமிவை.
ஒப்பிலா நாள்கள் உலகத்தீர் — எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் .பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்றுசிறப் பால். (உபதச ரத்இனமாலை, 6.)
திருமாலின் கட்டளை
முத்த ரானவற் குருத்தனை யளித்திடா முகுந்தன் பத்தி செய்திருந் தவர்களில் மூவரைப் பாரா
நித்தர் கேண்மினோ உலகுடை நீருதித் தெவரும்
இத்த லம் பெறத் திருத்தி மீண் டெய்திடும் எனலும்; 6
மூவர் மறுப்புரை
கே ட்ட மூவரும் பிரிவெனு மருந்துயர் கிளர
வாட்ட மோடுன *தடிபிரியோ’ மென மறுக்க
மீட்டு மாங்கவர் பொருந்துற மிகுநற வருந்துப்
பாட்டு வண்டிமிர் துளவினான் பகர்தன்மே யினனால், 7
திருமால்
வருந்த லீரும துளத்தையா மகல்கிலம் வடிவேற்
கருந்த டங்கணார் புழுமல்கு மகட்டினிற் கருவாய்ப்
பொருந்து றாதுநல் விருந்தெனக் களிப்பொடும் புகுவண்
டருந்து தேன்றுளி மலர்மிசை யதவரித் திடுமின். 8
சன்று கூறியுண் மயர்வரு மதியுமீந் தஇடலால்
ஒன்றும் வேறுரை யுரைத்திடா துரந்தனி லருந்தேன்
துன்று தாரணி மூவரும் சுரபிவிட் டகலும்
கன் று போலவே விடைகொடு மீண்டனர் கடிதில். 9
முதலாழ்வார்கள் அவதாரம்
ஆமி தேயென. ஐப்பசி ஓணநாள் அதனில்
மாம திதவழ் மாடமார் கச்சிவந் தொருவர்
காமர் வண்டினங் களித்துணத் துளிமதுக் கமழ்பூந்
தாமரைதனிற் பொய்கைய ராயவ தரித்தார். 10
மருக்கொண் மாலைய ரொருவர் ஐப்பசிஅவிட் டத்தில்
அருக்கன் தேரிடறிட வுயர் மேடைகள் அமைந்த
திருக்க டன்மல்லை நகரில் பூதத்தராய்த் இகழும்
குருக்கத் தஇம்மல ரதனிலே யுதித்தனர் குறித்தே 11
பயிலும் ஐப்பசி சதையநாள் பேயராய்ப் பரவும்
வெயிலை மாற்றிடும் சோலையும் வெண்சுதை மேலிக்
கயிலை போலுயர் மாடமா ளிகைகளுங் கவினும்
மயிலை மாநகர் நெய்தலி னொருவர் வந் தனரால். 12
தேவ ரும்மலர் சொரிந்திடத் தஇங்களொன் றினிலம்
மூவ ரும்பதி மூன்றிடை மூன்றுநாள் தெய்வப்
பூவ ரும்மணி போலவிம் முப்பெயர் புளைந்து
யாவ ரும்பத மணுகுறும் படியவ தரித்தார். 13
செந்தி ௬ப்பதி யானநார ணன் றிரு வடியாம்
அந்த மூவரு மொருவரை யொருவர்கண் டறியார்
பந்த மாகிய காமமுங் குரோதமும் படரார்
வந்த மாநக ரங்களில் வளருமந் நாளில். 14
மாதேவர் கட்கு ஞயர்தேவ னாகி
வனசப் பொகுட்டி லமரும்
சதேவி நாத னலதில்லை வேறு
துணையென்று சிந்தை யவராய்
மீதே யெழுத்த குமிழ்போ லழிந்து விடுதேக மேவ லிதுதான்
இதே யெனப்பி றவிசா கரத்தை
யொழிக்கின்ற சிந்தை யவராய்; 15
ஆனந்த மெய்து மால்லோக மேவி
யணைகன்ற சந்தை யவராய்-
ஞானம் சுரந்த வுளமோ டெவற்கும்
நயமா மொழிப்பு கல்வராய்த்
தானம் விளங்கு தருமங்க ளென்ற
துவமே யிழைக்கு மவராய்
மோனம் பொருந்தி யுடையோர்கள் பாத
மூளரித் தொழுது மெனவே; 16
திருக்கோவலூரை அடைதல்
நாடித் தரும்பொய்கை யார்கச்ச யாம்பொன்
நகரைத் துறந்து லகெலாம்
தேடிப் புகன்று பெரியோர்கள் தம்மைத்
தெரிசித் துயர்ந்த பலநீர்
ஆடித் திருப்ப திகடோறு மெய்தி
அரிதாள்கள் தமது முடிமேல். ௭
சூடிப் புகழ்ந்து இருக்கோ வலூரை
மகிழ்வில் தொடர்ந்த ணுகியே; 17
பெருமாளைப் பணிதல்
சந் தாகு லம்தவிர்செ யானாய ஸனாரைத்
தெரிசத் தழைத்த கரிமுன் வந்தாய் அயன்ற னுடனண்டம் யாவும்
வளருந்தி மாம லரிலே
தந்தாய் அரற்கு விதிசாபம் நீக்கு
தலைவா நினைத்தெ ஸளிவர்யார்? | ப
எந்தாய்உ னம்பொ னடிபோற்றி! போற்றி.
எனமந்த்ர மோதித் தொழுதார்… ……. 18
மூவர் -சந்திப்பு
இவ்வாறு மீண்டு தொழுதந்த. வூரி. : னிடையன் றிருந்த வளவில்
அவ்வாறு மற்ற விருவோரு மெண்சி –
யவர்வைகு மூர்கள் , அகல்:எவ்வாறு மாடி யடியா ரிணங்கு
பதிதகோறு மெய்தி மகிழா
ஒவ்வாத கோவல் நகராய னாரை
யுசுவிற் புகழ்ந்து தொழுதார். 19
தொழுதந்த வூரி னிடைவைக வன்று
தொலையாது காலு மழையும்
பொழுதத்தி மல்கு மிரவிற் செறிந்து
பொழியெல்லை பொய்கை யருநூல்
முழுதும் தெரிந்த வொருவேத ஸில்லின்
முடுகிப் புகுந்து நடையில் பழுதொன்றி லர்த சிறுதிண்ணை கண்டு
பரிவோடு பள்ளி கொளலும்; 20
பொய்கையார் வேதன் இல்லில் உள்ள இண்ணையில் பள்ளிகொண்
டார். வேதன் – வேதங்களைத் தெரிந்தவன். பரிவோடு – அன்புடன்.
பூதத்த ரம்பெய் மழையால் வருந்தி
யிடநாடிப் பொய்கை துயிலும்
வேதத்த ஸில்லின் மணிவாயில் வந்துள்
விழைவோ டிருப்ப வர்கள்யார்?
ஊதற் பெருக்கு தடியேன் படுக்க
உளதோ இடமெ னலுமே
இதற்ற பொய்கை யவர்கண் திறந்து
இருவாய் மலர்ந்து மொழிவார், 21
ஒருவர் படுக்க இடமுள்ள திங்கண்
. உறைவேன் விரும்பி வரில்நம்
இருவர்க் கிருக்க இடமாகும் வாரு
மெனவே யெழுந்து கதவைத் துருவித் இறக்க வவருட் புகுந்து துணையாக நள்ளி ருளின்வாய்
மருவிச் சிறந்த விருவோரு முள்ளம்
மக௫ழ்வோ டிருந்த விடையில். – 22
பேயாரு மந்தத் தலைவா யிடத்துப்
பிறழ்மேனி யோடு மணுகா
நாயேன் தனக்கு முளதோ விருக்கை
-நவில்வீ ரெனப்பு கலவத்
தூயோரு மிங்க ணிருவர்க் இருக்கும்
இடம்நீர் தொடர்ந்த ணுகிடிற் சாயாது நிற்கு மிடமாகும் என்று
தாழைத் திறந்து விடலும். 23
இறைவன் நெருக்குதல்
நெய்தற் சிறந்த மலரிற் பிறந்த
நிமலன் மகிழ்ந்து விரைவாய்
எய்தப் பொருந்து மவர்மூவர் தாமும்
இனிதோடு நின்ற விடையிற்
கைதக்க வைந்து படையாய ஸனாருள்
கருதித் இருப்பொ லியவே
நொய்திற் புகுந்து புகலங் கவர்க்குள்
நுழையா நெருக்கி யிடலும். –24-
ஐந்து படையாயளனார்-
ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்திய ஆயன் (இருக்கோவலார்ப் பெருமான்
பெயர் ஆயனார்; ஆனாயன்). நொய்தில்-எளிதாக, மற்றவர் இடர்ப்பட்டு
நுழைந்தனர். ஆயன் எளிதே புகுந்து நெருக்கினான்.
தன்னேரி லாத திருமால் புகுந்த
தனைநின்று ளோர்க எளறியார்
முன்னே யிருந்த ததிலும் நெருங்கு முறையால் வினவு தல்செயாப்
பின்னே யொருத்தர் வரவில்லை வேறு
குரலில்லை பேச்சு தொனியா
என்னே நெருக்க மிதுகாண வேணு
மெனவந்த மூவர் களுமே, 25
விளக்கேற்றுதல்
உள்ளத்து ஞள்ளி யரிதான ஞான
வொளிதீப மேந்தி யடர்பால்
வெள்ளத்து வந்த இருமார்பின் மல்க
மிளிரைம் படைக்க ரமின
நள்ளிற் சிறந்த கருமேக மென்ன
வுருமல்க நார ணரெனுங்
கள்ளத் தடைந்த திருவாய னாரைக்
கனிவோடு கண்டு ரகனார். 26
இங்கு *பாவரும் புகழால் பேர்பெறு
பனுவல் பாவலர் பாதிநானிரவில்-மூவரும்நெருக்கி மொழி விளக்கேற்றி முதத்
தளைத் தொழுத நன்னாடு” என்ற வரந்தருவார் பாடல் அனுசந்திக்க வேண்டும், .
இறைவனைக் காணுதல்
ஆனந்த மாவர் புகழ்வார் நடிப்பர்
அப்பார் விழுந்து புரள்வர்
மோனம் பொருந்தி யுரையா திருப்பர்
எழுவார்கள் ஓடி. முதிர்தேன்
பானஞ்செய் தோரில் புரிகின்ற செய்கை
யுணரார் பரிந்து தொழுவார்
ஞானம் விளங்கு பரிவான. வோடை
யதுமூழ்கி யேந வில்வரால். 27
துதிப்பாடல்கள்
ஆதியே! எம்மை யாளு மையனே! வைய முண்ட
சோதியே! அடியர் நெஞ்சிற் சுடரொளி யாகி தின்ற
வேதியா! முகுந்தா। கண்ணா! விண்டுவே[ அரியே! மாலே!
நீதியாய்! உலகம் தாங்கு நிமலனே! கமலை .மார்பா! 28
உந்திமா மலரி னீரேழ் —
புவனம தளித்த தோங்க
முந்திவே தன்ற னோடு
முக்கணான் தனைச்சிட் டித்துத்
தொந்தநால் வகைப்பி றப்பேழ்
தோற்றமெண் பத்து நான்காம்
அந்தமா ரிலக்க மான
சராசர மவையுண் டாக்கி, ் 29
நால்
வகைப் பிறப்பையும், எழுவகையான தோற்றத்தையும் எண்பத்து நான்கு லட்ச
யோனி பேதத்தையும் தோன்றச் செய்து.
நால்வகைப் பிறப்பு:. 7, பையில் பிறப்பவை. 2. முட்டையில் பிறப்பவை.
9. திலத்தில் பிறப்பவை. 4, வியர்வையிற் பிறப்பவை,
“தோற்றம் நான்காம் ; அவை பை, முட்டை, நிலம், வியர்வையில் திகழும்
என்ப” (பொருட்டொகை நிகண்டு).
எழுவகைத் தோற்றம், .. தேவர் 8. மக்கள் 8. விலங்கு 4, புள் 5, ஊர்வன
6. நீர் வாழ்வன 7. நிற்பன: எண்பத்து நான்காம் சராசரம்: 1. தேவர் 14 இலட்சம்;
. 2, மக்கள் 9 லட்சம்; 8. விலங்கு 10 லட்சம்; 4. புள் 10 லட்சம்; 5, நீர் வாழ்வன
0 லட்சம்;: 6. ஊர்வன 11 லட்சம்; 7, நிற்பன 80 லட்சம்; சரம்-௮அசைவன.
அசரம்-அசையாதன.
உருப்பவித் இடுதல் காத்த
லொழித்திட லெனுமூச் செய்கை
விருப்பொடு புரியு மக்கா ரணனென விளங்கும் தன்மை கருத்திடை மதித்துத் தேர்ந்து கண்கணீர் பெருகச் சோர
வுருக்கமாய்த் தொழுதக் கார்கள்
ஒருவரை யேனும் காணேம். 90
அத்தியின் கனியி னுள்ளே
யறிவரி தாக வைகும்
வித்தெனத் தெரியா வண்ண
மெய்யுயி ரனைத்தி னுள்ளும்
ஓத்துறை கின்ற நின்னை உருத்திரன் பிரமன் வானோர்
முத்தரு மறியார் எம்மால்
அறியலா முறையுண் டாமோ. ‘ 94
இறைவன் கட்டளை
என்றுகொண் டிறைஞ்சி யுள்ளம்
இழுதென வுருகி நின்றே ஒன்றையு மறியா வெங்கட்
குணர்வளித் தருள்வா யென்ன
நன்றுநன் ஹறென்ன வுள்ளம்
நயந்திள நகையுந் தோன்றக்
கன்றைவந் தடைந்த ஆனிற்
கண்ணருள் பெருக நோக்கா. 32
ஏரியு நிரம்பிக் கொள்ளா
இருங்கரை யுடைத்திட் டேகும்
நீரினைச் சனெவா தெய்தி
யடைத்ததை நிரப்பு மாபோற் சீரிய நுங்கள் தம்மை
விடுகிலேம் தெளிமி னென்னாப்
பாரினை விழுங்கிக் காக்கும்
பச்சைமால் பகர்ந்தா னன்றே. _ 33
இந்தவா சகங்கள் கேளா
வெமக்கருள் புரியு மந்நாள்
எந்தநாள் அந்த நாளை
யியம்பிட வேண்டு மென்ன
– அந்தமா யாதி யாகி
யடிமுடி தெரியொ ணாத
செந்திரு மணாள னம்பொன்
இருவடி வணங்கி ஸனாரால். 34
வணங்கலு மகிழ்ந்து மாயன்
மார்பினோ டிறுகப் புல்லிப்
பணங்களி னரவு தாங்கும்
பாரினுற் றோர்க ளெல்லாங்
குணங்கமழ் தருமா நந்த பதத்திடைக் குறுகி யாங்கண்
இணங்குநம் மடியா ரோடு மினிதுவீற் றிருக்கு’ மாறாய். 35
மன்னெறி பொருந்து மப்போ
குனைகளை மறையைச் சார்ந்த
குன்னைமா மாலை யாஞ்செந்
தமிழினாற் கவிகள் பாடிப் பன்னுமிப் புவியின் மீது
பற்பகல் வைகடிப் பின்னர்
துன்னுமின் அங்கென் றோதித்
துளபமால் மறைந்தான் அன்றே. 36
மூவர்களின் அருளிச் செயலின் மாண்பு
மறைந்து போதலு மற்றைய மூவரும் மறுகி
நிறைந்த ஞானமும் கல்வியும் விளங்கிட நிணம்தோய்ந்
துறைந்த நேமிசங் குடையமால் உவப்புடன் வாய்விண்
டறைந்த வாசக முறைவழா தரியநூல் நூற்றார். 37
மாயை யாம்பெரும் பிணிதனை மாற்றுநன் மருந்தாய்
நேய மாம்பெரும் பசியினை நீக்குமா ரமுதாய்
மேய காமவேள் வேட்கையாம் வெயிலொழி நிழலாய்
ஓய்வி லாப்பிற விக்கட னீந்துமோ டமதாய். 38
துன்னி ர௬ுட்பட ஞானம்நல் இடும்சுட ரொளியாய்
பன்னி டும்பர சமயக்கா னொழிபடைத் துணையாய்
அன்ன மின்மையின் வாடுயிர்ப் பயிர்க்கரு மழையாய்
மன்னு நற்பத மேற்செலற் கேணியாய் மலிய, 39
பொய்கை யாழ்வா ரெனும்நாமம் புனைந்த புலவர் பொய்ம்மையிலா
மெய்ம்மை யுளம்சேர் பாகவதர் விரும்பி யருந்து நறுந்தேனிற் செய்ய மறையோ திடும்பொருளைத் தெளிந்தே யோர்ந்து தஇருவாக்கால்
வையந் தகளி யெனநூறு வெண்பா நவின்றார் வளம்பெறவே. 40
பொய்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள்
அந்த நூறு வெண்பாவென்
றமைந்த திருவந் தாதிதனின் முந்து பதிபாற் கடலரங்கம்
முதிர்வேங் கடம்பொன் இருவெஃகா
விந்தை யுறையும் திருக்கோவ
லூர்நல் வளஞ்சேர் விண்ணகரம்
இந்த வாறு தஇிருப்பதியும் பொருந்திச் றந்த விசைபெறவே. 41-பொய்கையார் பாடிய பதிகள் ஆறு.
முன்பே யுலகம் புரிதவத்தான்
் முதுமா மறையின் பொருளுணர்ந்தே
தன்போ லிங்குப் பலவுலகந்
… தனில்வா ழுயிர்கள் சறப்படையப்
பொன்போல் மேனிப் பூதத்து
ஆழ்வார் நாமம் புனைபுலவர்
அன்பே தகளி யெனநூறு
வெண்பா வுரைத்தா ரழகுறவே. 42
பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள்
வடவேங் கடம்தென் னரங்கமுநீர் மலைபா டகமா லிருஞ்சோலை
யிடவெந் தைபாற் கடல்பேரை யெழிலார் கோவ லூர்தஞ்சை கடன்மல் லை? ரத்திநகர்
கோட்டி நகர்தண் காலூரும் குடந்தை யீரே முடனென்றவ்
வந்தா தியினுட் கூறியதே. – 43 இவர் பாடிய பதிகள் பதினான்கு,
திருக்கண் டேனென்றோ துறுஞ்சீர்
சிறந்தே யொளிர்வெண் பாவதனைச்
சருக்க ரைகொண்் டரூந்துவபோற்
றரையோ ரருந்திக் களிப்புறவே
யிருக்கு முதலா நான்மறையி
னியலும் பொருளை யறிந்துணர்ந்தே
யுருக்க முடன்பே யாழ்வாராம்
நாமம் புனைந்தோ ருகந்துரைத்தார். 44
பேயாழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள்
அவ்வந் தாதி தனிற்பதினைந்
தூர்பாற் கடல்வேங் கடமரங்கம்
ஒவ்வுங் குடந்தை யிடவெந்தை
கோட்டி யூர்வே ளுக்கையுடன்
செவ்வெஃ காவை குந்தமட்ட
புயம்விண் ணகர்€ ரலிக்கேணி
கவ்வி விசும்பார் சோலைமலை
கடிகை கச்சிப் பாடகமே. 45-பேயாழ்வார் பாடிய இவ்யதேசங்கள் பதினைந்து.
இந்த முறையா லிருக்கினில்வீற்
றிருக்கும் பொருளை யம்மூவர்
செந்த மிழின்மூன் றத்தாதி இருந்தப் புகன்று பரசமயத்தந்தி தனக்கா ளரிபோலுந்
குயங்குள் ளிருட்கா தவன்போலும்
எந்த வுலகத் துள்ளோரும்
ஏத்தித் தொழவாழ்ந் தஇனிதிருந்தார். 46
பரமபதம் உறுதல்
அலகில் பலநா ஸஎிரும்புவிமே
லவ்வா நிருந்து பரமபத
உலகத் துளர்வந் தெதுிர்கொளப்பொன்
னோங்கு விமான மதன்மிசைபோய்த்
இலக நுதற்செந் திருமார்பன்
இருவம் புயத்தாள் தொழுதேத்தி, இலகு மணியா தனமிசைவீற்
றிருந்தார் பிரிந்த விடாய்நீங்கி. 47–திலக நுதல் செந்திரு – திலகமணித்த நெற்றியை உடைய பெரிய பிராட்டி.
தோன்று ஞான முடையவராய்த்
துலங்கு மாயை கடந்தவராய்
ஆன்ற மறையந் தணர்முதலாய்
அறையும் நான்கு வருணத்தார்
மூன்று திருவந் தாதிக்குள் முழுகிக் காப்பிட் டுணர்ந்தோதி
யேன்ற பரம பதந்தனிற்சென்
றிருந்தார் சிறந்தார் அடியரொடும். 48 -கோவிலுக்குள் செல்பவர் நதியில் மூழ்கிச் செல்வது மரபு. பரமபதம் செல்பவர் மூன்று “இருவந்தாதியாம் நதியில் மூழ்கவேண்டும்,
இக்கா தையையன் புடனேட்டில்
எழுதி னவரும் படித்தவரும் மிக்க விதனுட் பொருள்கடமை
விரித்தே விளம்பி னவருமிதை
யொக்கு மெனக்கேட் டுணர்ந்தவரு
மூலகிற் பலநாள் மகழ்ந்திருந்து
தக்க ஞானந் தழைத்தனந்த சயனன் பதம்போய்ச் சார்ந்திடுவார். 49
பெரியாழ்வார் வரலாறு பேசுவோம்
முதன்மூன் றாழ்வார் களுமலர்மேன்
முளைத்த சரித மதனையிந்த
விதமா மெனவே விளம்பினம்சீர்
விளங்குந் திருமால் கமலவிரு
பதமார் புயத்தி லணிகருட
பகவான் புவிவந் தவதரித்த
இதஞ்சேர் பெரியாழ் வார்சரித
மிதுவென் றெடுத்திட் டியம்பிடுவாம். 50
பெரியாழ்வார் திருவவதார அத்தியாயம்
. இன்றைப் பெருமை யறிந்திலையோ ஏழைநெஞ்சே
இன்றைக்கென் னேற்ற மெனிலுரைக்கேன் – நன்றிபுனை
பல்லாண்டு பாடியநம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லாவனிச்சோதி நாள், –உபதேசரத்தினமாலை…… 16
உலகநிலை
இவ்வாறினி தம்மூவரு மேகப்பல நாணீங்
கவ்வேலைமெய்ஞ் ஞானம்மகன் றஞ்ஞானம டைந்தே
யொவ்வாதவைம் புலவேடருக் குட்பட்டவ ராகி
வெவ்வேலையு டுக்கும்புவி மேல்வாழ்பவ ரெல்லாம். 1
இறைவன் கருடனுக்கிட்ட பணி
தருமத்துறை நடவாமல தருமத்துறை படவக்
கரமத்தினி லடைமூடவி லங்குற்றுளங். கலங்கி
யொருவர்க்கெனும் நலமென்பது நிலையாதவிவ் வுலகு
திருமித்தத ளிக்குந்திரு நெடுமாலுள நினைந்தே. –2-தெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு” என்பர் திருவள்ளுவர்.
அருகற்பெரு வரையைப்பொரு முருவத்துட னணுகும்
கருடப்பெய ரவனைத்தன திருகட்கடை யருளாப்
பொருவற்றவ ரிவர்வாருஇப் புவிவிட்டணு uses
மருவுற்றது பெருகிற்றிருண் மலிமாயைக எதனால். 3
நீபோய்பெரி யாழ்வாரென நிலமீதவ தரித்தே
மாபாவகொ டும்பாம்பினை மலியாமல டக்ூக் :
காபாலிமுப் புரமட்டவ னிருண்மாயைக எளைந்து
பூபாலுயர் ஞானம்மது பெருகும்படி புரிவாய், 4
கருடன் விடைபெற்றான்
எனவேயுரை மொழிமேவித ஸிருசெஞ்செவி குறுகும்
மூனமேயவ னடிமாமலர் முடிமீதுற வணியா
மனமேகொடு மதியாவிழி வழியேகொடு பருகா
கனவாய்கொடு துதியாவிடை. கொடுமேல்பதி கடவா. 5
பெரியாழ்வா அவதாரம் y,
கனமேனிக ரியமேதி கலக்கும்மடு விடைவாழ்
சனமேவுவ ரால்பாய்தரத் தென்னங்களனி யுதிரப்
புனமேவுக ரும்பிற்றுதிர் மணிகள்பொழி நிலவின்
இனமாமெனக் குமுதங்களி னிதழ்விண்டிடும் வயலார் 6
இதன் உள்ளுறை. மேதிகள் சமயவாதிகள். மீன்-மீனையே கொடியாகக்
மொண்ட பாண்டியன். உதிர்ந்த காய்கள்-சமயவாதிகளின் ஆரவாரம், கரும்பு
முறிந்து மணி வெளிப்பட்டது-பெரியாழ்வார் சினந்து பரத்துவ நிர்ணயம்
செய்தது. குமுதம் மலர்ந்தது- திருமால் காட்சி வழங்கியது.
இருவில்லிபுத் தாரென்றுரை செயுமப்பெரு நகரின்
மருவந்தணர் குலமென்றிசை வகையிற்புனி தமதாய்
குருவென்றுய ரியசோழிய குலனிற்பிர மனைநேர்
ஒருவன்குல மணியென்னமு குந்தப்பெய ௬டையான் 7
அறையும்மறை யவன்மாமனை யவள்பற்புமை யென்பாள்
பொறையிற்புவி யனையாளெழில் பொலிவிற்றிரு நிகர்வாள்
நிறைகற்பினில் வடமீனினை நிகர்வாள்குயின் மொழியாள்
பிறையொத்திடு நுதலாளனப் பெடையொப்பிடு நடையாள் 8
அம்மாமட மகளின்றிரு வகடாமிட மதனுள்
இம்மாநில மிடைவாழ்ந்தினி திருக்கும்பல வுயிர்க்கும்
செம்மாவறி வினைமூடிடச் செறியைம்புல விருளை
விம்மாதொழி வகைசெய்திடு மெய்ஞ்ஞான முகிழ்க்க. 9
ஒருமாகதி ரவனாயினி துதயஞ்செயு மதுபோற்
கருவாகவ மைந்தேகலந் திடுநாளது முதலாய்
வரும்ாதம னைத்துங்குறி யவள்பால்மலி தர ஐ
யிருமாதமு நிறைவாய்முடி வெனலாகிய திருநாள். 10
திருவவதரித்த நாள்
மிதுனத்திரு மதியிற்பிறை மிளிர்சுக்கல பக்கம்
அதனுக்குளி னுதிசோதிய தெனுமத்திரு நாளின் மதனொத்தொளி ர௬ுருவத்தொடு வளையுற்றிடு மணிகள்
அதுமுற்றிட சிறகிற்பொரு தரித்தானவ தரித்தான். 11
தந்தையின் செயல்
மைந்த னங்குவந் துதித்தலு முளமது மஇழ்வாய்த்
தந்தை யாகிய முகுந்தனுஞ் சதுர்மறை நெறியைச் சிந்தி யாசதஞ் சீவவென் றேயெடுத் தெடுத்து
முத்த வாசிகள் பலபல புகன்றனன் முறையால். 12
முகுத்தர் மைந்தனைக் கண்டு, சதம் சீவ!” என்று வாழ்த்தினார்.
“இன்னுமொரு நூற்றாண்டிரும்’ என்று பல்லாண்டு பாடுவது வைணவ மரபு.
சதம்-நூறாண்டு, சீவ-வாழ்க/
புதையி ருட்பிழம் பனையமா மாயையைப் பொடியாச்
சிதையு மாறழித் தொழித்திடச் செங்கதி ரவன்வந்
துதைய மாயின னெனவுகஇத் திடுமக வினுக்காய்
விதைமு தற்பல தானமும் விதம்விதம் வழங்கி. 13
மாயையைப் பொடி யாய்ச் செய்யும் கதிரவன் போல் தோன்றிய மகவுக்காக விதை முதலான தானங்கள் செய்தார் முகுத்தர்.
மற்றும். செய்வன யாவையுஞ் செய்தனர் ம௫ழ்வால்
வெற்றி யாழிநா ரணன்றிரு வருளினால் விரைவோ
டுற்ற பாற்கடல் கடைந்தநா ளூதத்தவா ரமுதம் பெற்ற வானவ ரொத்தன ரந்நகர்ப் பெரியோர். 14
பெரியாழ்வார் வளர்ந்தார்
ஊட்டி யும்முலை யுச்சிநெய் தடவிமஞ் சனநீ
ராட்டி யும்மணித் தொட்டிலிட் டசக்கியம் புலியைக்
காட்டி யும்மடி மிசைவைத்தும் கண்ணிறை கழித்தும்
ஈட்டி யிம்முறை பலபல் ம௫ழ்வினோ டிழைப்ப. –15-
கிடந்த சைந்தும்பின் கவிழ்ந்திட்டுந் தவழ்தலாய்க் கெழுமிப்
படர்ந்தி ருந்தும்பின் பார்மிசை நின்றுதத் தடியாய்
நடத்தும் விம்மியும்’ நகைசெய்துந் தந்தையும் நல்கும்
மடத்தை யுங்களிப் புறப்பல செய்கைகள் மருவி. 16
சுதிர்செய் நேமிநா ரணன்பத மலருளங் கருஇத்
துதிசெய் தேயுய ரியபதந் தொடர்ந்திடப் புவிமேல்
வதிப வர்க்குமெய்ஞ் ஞானத்தை வளர்ப்பவந் துதித்தோன்
மதிதி னங்கலை வளர்வபோல் வளருமந் நாளில். 17
பெயர் வைத்தல்
உட்பட் டியாவரும் பொருந்துற வூர்தியாய்க் கருடப்
புட்ப டைத்தவர்க் கேபரப் பெயர்புனை விக்கும்
மூட்பொ திந்ததாட் டாமரை தநிகர்தரு முகற்கு
விட்டு சித்தனென் றேதிருப் பெயர்புனை வித்தார். 18
காப்பிடுதல்
விண்ணி டைப்பெருங் கருடன்மேற் றோன்றுவிண் டுவுக்கு
மண்ணி டைக்குலப் பாண்டிய னவையின்மா ஸிடர்தங்
கண்ணி றைப்பொருந் தாதுபல் லாண்டுகாப் பிடுமப்
புண்ணி யர்க்குநற் காப்புமிட் டனர்பொருந் துறவே. 19
அணிகலன் புனைதல்
வண்டு ணும்மது மலரினை மாலையாய்த் தொடுத்து
பண்டு மாநிலப் பரப்பெலாம் பாலன மெனவே
யுண்டு கந்தவற் களிப்பவற் குயாந்தபல் கலங்கள்
கொண்டு மெய்யெலா மணிந்தனர் குறைவில தாக. 20–பாலனம்-சிலேடை. பால்-அன்னம் என்றும், பாலனம் என்றும் கொண்டு நயம் காண்க,
அன்னமுூட்டுதல் .
மன்னு நால்வகை வருணருஞ் செவியெனும் வாயால்
பன்னி டுந்திரு வாய்மொழி யமுதினைப் பருகப்
பின்ன ஸித்திடும் விட்ணுசித் தப்பெய ரவனுக்
கன்ன மாமமு தளித்தன ரன்புட னருந்த. 21
சடங்குகள்
தவள நேர்வளை யாழிமாற் கோதுசெந் தமிழாந்
திவளும் வாள்கொடு தெய்வம்வே றுளதெனத் தியங்க
உ.வளு மாயநூ லிருண்மயி ருகுத்தறுப் பவர்க்குச்
சவள மாவதும் கதிமுறைத் தகவுட ஸிழைத்தார். 22
இருபிறப்பாளராதல்
ஏலும் வேதசாத் -திரம்புரா ணங்களா யினவும்
மேலும் தத்துவ முதலிய பலவென விளம்பும்
நூலெல் லாமறிந் தகத்தணி பவற்குநூன் முறைய
தால ஸணிந்தனர் முப்புரி நூலுமன் புறவே. 23
இவ்வி – தம்புரி வனவிதி முறையெலா மியற்று
மவ்வி தம்புரிந் தார்மகிழ் வாயினர் : அவனுஞ்
செவ்வி தாகிய பிரமசா ரியத்தொடும் சிலநாள் ்
ஒவ்விவாழ்ந்திருந் தனனுவந் துறையுமந் நாளில். 24
திருப்பணி
ஊர மித்தவன் தந்தையாம் பிரமனை யுதவும்
நார ணன்தஇிரு வுலகெலா மளந்திடு :நளினச்
சீர டிக்குமுன் னுலகுதூ ளென்பதைத் தெளிவு
கூர கத்திடை. யறிந்தன னாதியிற் குமரன். _ 25
அந்த வூரூறை வடபெருங் கோயிலி லமர்ந்த
செந்தி ௬ப்பதி யானமா யவன்றிரு வடியை
முந்து காதலோ டணுகியே முறைமுறை வணங்கிச்
சிந்தை யோடிரு நயனமுஞ் சிறந்திடக் களித்தான். 26
அடிமை செய்திடும் தொழில்களில் யாதினா லிந்த
நெடிய மால்திரு வுளமகழ்ந் தஇடுமென நினையாக்
கடிகொண் மாமலரிதழொடுந் தெளிமதுக் கமழ்பூஞ்
செடிகள் வைத்துப்பூ மாலைசாத் திடலெனத் தெளியா, 27
இதுவ லாற்பிரி திலையெனச் சென்றிரு வாட்ட
மதுபொ மிந்துடுந் துளவமல் லிகைமுல்லை யலரிப்
புதும ணத்தசெவ் வந்தியும் புன்னைசெண் பகமென்
பதுமு தற்பல சாதிபூ வனந்தனைப் படைத்தே. 28
தேன்பொ ருந்துசெந் தாமரை குமுதஞ்செங் கழுநீர்
கான்பொ ருந்தும்வண் டுறையும்வெண் கமலமே முதலாம்
வான்பொ ருந்திடும் தேவரும் விரும்புமன் மலர்க டான்பொ ருந்திடும் பொய்கையும் அமைத்தனன் றகவாய். 29
விடியு முன்றின மெழுந்துபோய்ப் பொய்கையின் மிளிர்நீர்
படித லேமுதற் காலைசெய் பலகடன் முடித்து
நெடிய னாம்வட பத்திர சாயிபொன் னிகர்சீர்
அடிவ ணங்கியே தந்தன வனந்தனை யணுகி. 30
கொத்தி டல்புனல் விடலெருக் கொணர்ந்துபூஞ் செடிவேர்
வைத்தி டல்தண்ணீர் பாய்ச்சுதல் மலிகளை களைதல்
ஒத்து டச்சுவர் வேலிவைத் திடல்புழு வெடுத்தல்
இத்தி றம்புகல் பக்குவம் குறைவிலா திழைப்பார். 31
விண்ட… லர்ந்தபூ மலர்களைப் பத்தியால் விரைந்து
வண்டு ஸணும்முனம் மணமுறா மற்பரி வட்டால்
கொண்டு நாயைப் பூட்டிப்பூக் கூடையி லெடுத்துச்
செண்டு மாலைக டொடுத்திடு வான்தினந் தோறும். 32
வாசனை நாசியில் புகாதபடி திருப்பரிவட்டத்தால் பூட்டிக் கொள்வார். -* பூக்களைத்
தெரித்து புழுக்கடி போக்கிப் பொய்யிலா மெய்யனார் புரைதீர் மூக்கலம் மணம்
செள் நடைந்திடா வண்ணம் மூடிவாய் புதைத்து”” என்பர் வடிவழகய நம்பிதாசர்
(குருபரம்பரை). தமது நாசியில் வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தாற்
கட்டிக் கொண்டு” என்று குருபரம்பரை ப்ரபாவம் பேசும் (பன்னீராயிரப்படி).
தொடுத்த: செண்டொடு மாலையைத் துலங்குபாற் கடலிற்
படுத்தி டும்வட பத்திர சாயிக்குப் பகல்போய்
அடுத்த சந்தியிற் கொண்டுசென் . றற்சகர் கரத்திற்
கொடுப்ப னிம்முறை நடக்குநா ஸூற்றகூ றுதுமால். 33
பகல் போய் அடுத்த சந்தியில் என்.றதால் ஆழ்வார் மாலைக்காலச்
சந்திக்கு மாலை முதலானவற்றை வழங்கினார் என்று தெரிகிறது. ** பகற் பொழு
தைக் கழித்ததற்பின் எய்த்த நறு மலர்ந்தித் திருமாலை நேயத்தால்-பரமனுக்குச்
சமைத்தளித்தே” என்பர் வடிவழகய நம்பிதாசர் (குருபரம்பரை),
பாண்டிமன்னன் செயல் ஆழ்வார் கிழியறுத்தல்
முருகவிழ் தாமரை முத்தை. யீன்றிடும்
கருவென வனங்கிடை காக்கு மாவயல்
மருவிய செந்நெலுங் கரும்பு மல்இடுந்
இருவளர் பாண்டிய தேய வேந்தனே. 34
நறைகொள்தார் வேந்தராங் கடன டுங்கியே
முறையெனப் புலம்பியுள் கலங்க மொய்ம்புணீர்
கறைகொள்வேல் மலையினாற் கலக்கி யேதரும்
திறைகொள்சீர் வல ராய னென்பவன். 35
பாண்டிய நாட்டு வளம்-தாமரை
ஈன்ற முத்தை முட்டை என்று கருதி அன்னம் அடைகாக்கும் நாடு பாண்டிய
நாடு. இங்கு நுட்பமான உள்ளுறை உண்டு, அன்னம் முத்தை முட்டை என்று
அடைகாக்கிறது. * எத்தனை நாட்கள் அடை கிடப்பினும் அதில் அன்னக் குஞ்சு
தோன்றாது, அன்னம் சமயவாதிகள். முத்துக்கள் லோகாயதம் முதலான
புறச்சமயங்கள். அச்சமயங்களால் பயன் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.
முருகு- வாசனை, தேன். கர௬-முட்டை. கிடைகாக்கும்-அடைகாத்தல்.
அறங்களாம் எருவையிட் டறம்பி ழைத்திடுங்
குறும்பராங் களைகளைக் குறைத்திட் டன்பெனு
நறும்புனல் பாச்சநல் லோர்க ளாமெனும்
உறும்பயிர் விளைத்துச் செங்கோலை யோச்சு நாள். 36
ஒருதினம் நகரசோ தனைக்கென் றுற்றுநள்
ளிருளிடை யொருவானா யிலங்கும் வாளொடும்
மருவுமம் மதுரைமா நகரின் மல்கஇிடுந்
தெருவெலாந் . துருவியே செல்லு மெல்லையில். 37
காவலர் பாரிப்போர் மிடைதல் காண்குறாச்
சீவல தேவ னென் றுரைக்குஞ் செவ்வியோன்
தாவியாங் கொருதெருத் திண்ணை தன்மிசை
மேவியாங் இறைப்பொழு திருந்த வேலைவாய். 38
பாரிபோட் டடைந்தவ ரகலப் பாருடை
கூரிய வேலினா னாங்கு பள்ளிகொள்
சீரிய னொருவனைச் சேர்ந்தெ முப்பிநீ
யாரிசைப் பாயென வதட்டிக் கேட்டலும். 39:
அன்ன வனுணர்ந்து நீ யாரென்றோதலும்
இன்னகர் காத்திடும் வேந்தன் யானெனச்
சொன்னது கேட்டவத் தூய வேதியன்
குன்னுடை வரவினைச் சாற்று வானரோ. 40
மறையவர் குலத்தன்யான் மறைகள் காணொணா
நறைகமழ் துளவநா ரணன்ப தத்திடை
பிறையணி சடையினன் கொண்டு பின்விடுந்
துறைபடுங்கங்கைநீர் தோய்தற் கேகியே. 41
ஒதுகங் கையையடுத் துகப்பி னாடியே
மாதுகா ரணத்திரா சகுவன்வ குத்திடுஞ் :
சேதுவைத் தெரிசனம் செய்தற் கெய்துவேன்
ஈதுகான் வரவென வர? யம்புவான். 42
அய்ய நீபற்பல தேயத்தி யாவையும்
கையிலா மலகம்போற் காணும் பெற்றியால்
செய்யநற் சுதைபல தெரிந்தி ருப்பையான்
உய்யவோர் நற்கதை யுரையென் றோதலும். 43
யானுணர்ந் திலன்கதை யாயி னும்மொரு
தூனலனு டையதாஞ் சுலோகங் கற்றுளேன்
ஊளனுணும் வேலவென் றுரைப்ப வேந்துநீ
தானதை யுரையென வவனுஷஞ் சாற்றினான். 44
கேட்டிதன் பொருளைநீ கிளத்து வாயென
வாட்டிறன் மன்னவன் வணங்கி யேத்தலும்
ஈட்டிய விரவினுண் டிடுதற் கஇயொாவையும்
. நாட்டிய பகலிடைக் கொள்ளல் நன்றரோ. 45
மாரி காலத்தினுண் பவைகண் மற்றைய
சரிய கோடையிற் சேர்த்தல் செவ்விதாஞ்
சேரிய முதுமையி ஸூண்டி சேர்த்தடுங்
காரிய மிளமையாங் காலத் தாகுமால்:-46
:* வர்ஷார்த்தம் அஷ்டெள ப்ரயதேத மாஸான்7
நிஸார்த்த அர்த்தம் இவஸம் யதேந வார்த்ததய ஹேதோர்வயஸா நவேன பரத்ர
ஹேதோர் இஹ ஜன்ம நாச”,-இரவில் உண்பதற்கு
வேண்டியவற்றைப் பகலில் சேர்க்க வேண்டும். ‘ மழைக் காலத்துக்கு’ வேண்டிய
பொருளைக் கோடைக் காலத்தில் ஈட்ட வேண்டும். முதுமைக் காலத்திற்கு
வேண்டியவற்றை இளமையில் தேட வேண்டும். இவற்றைப் போல மறுமைக்கு
வேண்டிய உறுதிப் பொருளை இம்மையில் பெற வேண்டும்
அம்மையில் வேண்டுநல் லேது வானதை
யிம்மையிற் றேடிட வேண்டு மென்னவே
மும்மையு முணருமந் தணனு முன்புசொற் செம்மைசேர் சுலோகத்தின் பொருளைச் செப்பினான். 47
மன்னனும் கேட்டுள மகிழ்ந்து ருக்கமாய்
நன்னய மொழிபல நவின்று போநற்றிசெய்
தன்னவன் றன்னொடு மவிடம் நீங்கிப்போய்த்
தன்னர மனையிடைச் சார்ந்திட் ‘டானரோ. 48
சார்ந்தரு மறையவன் -றனக்குக் கண்ணருள்
கூர்ந்துவேண் டுவவெலாங் கொடுத்த ஸனுப்பியே
தேர்ந்தவ னுரைத்தநல் லுரையைச் சந்தைகொண்
டோர்ந்துயிர்க் குறுதியை யுன்னு மெல்லையில். ் 49
அன்னவ ஸனுளத்திரு ளழித்து நீக்கிட மன்னுவன் புதுவையா யென்னும் வாய்மையை
முன்னர்வந் துரைசெய்வான் முடுகல் போலவே
துன்னிருள் ஒழிந்திட விரவி தோன்றினான். : 50
காலையி னெழுந்துபல் கடன்கண் -முற்றியே
நூலையோர் முனிவரா சிகணு வன் றிட
வேலையின் மிஞ்சொலி ..விம்ம வேகொல்ச். . ட்ட
சாலைவந் தரியணை தன்னின் மன்னினான். . 51
மந்திரித் தலைவரும் மற்று ளோர்களும்
வந்திரு மருங்கினு ணெருங்கி வைகட
அந்தரத் தவர்புடை சூழ வாதனத் இந்திர னிருந்தென விருத்த வெல்லையில். 52
செல்வரஈம்பியின் பண்பு
ஓவ்விய மோக்கமா முலகு தன்னையே
எவ்வித மடைகுவ தெனநி ஸனைத்திடும்
அவ்வயின் நாரணன் அடியர் தங்களிற்
செவ்விய மாணியன் சிறந்த மேன்மையான் ; 59
பல்கலை நூல்களும் பயில்நற் கேள்வியான் ;
குலமறை யோர்கடங் கொழுந்து போன்றுளான் ;
நலமலா துரைசெயா நாவு கொண்டுளான் !
அலகிலாக் கல்விசே ரறிவு மிக்குளான் :54
செல்வநம் பிப்பெயர் சேர்ந்து ளான்௮அவன்
மல்கிய வவையிடை வந்து தோன்றலும்
மல்கவி ராசனும் வணங்கு யாதனம்
நல்கலு மதன்மிசை நண்ணி னானரோ | 55
மன்னன்வினா
இருந்தவே தியன்முக னோக்கி யேந்தலும்
பொருந்துமிப் பொய்மையாஞ் சமயம் புல்லியே
UGG Gumus மோக்கம் மன்னியான்
இருந்துறும் வகையைநீ செப்பு கென்னலும் ;–56-
நம்பிவிடை
எண்ணிலா தத்துவ நூல்கள் யாவையு
மண்ணிலே யுணர்ந்துடி லறிவுண் டாகியே
விண்ணவர்க் கரியதா மோக்க வீட்டினை
நண்ணலா மென்றனன் செல்வ நம்பியே.–57-
என்னலுந் தத்துவக் கியானம் யாவும்தேர்ந்
துன்னிடும் பெரியவ .’ர௬ல, லுண்டுசொல்
அன்னவர் தன்னை நீ : யறிந்து ளாயெனிற்
பன்னிட வேண்டுமென் றரசன் பன்னலும்;–58-
இவ்வுலகி யாவையு மினிதி ணாண்டது .- லொவ்வுசெல் வந்தனை யோழியும் புன்னுனிக்
கவ்விய பனியெனக் கருதி மாறிலாச்
செவ்விய முத்தியைச் சேர்த லுன்னினாய்,–59-
ஆதலா லியாதினு மறுக்கொ ணாதென
ஒது மாயா விருளதனை யுண்மையாம்
நீதியா லொழித்திடு நினைவுண் டாகியே
இதிலா முத்திவீ டணையுஞ் செய்கையை.–60
புல்நுனி கவ்விய பனி – புல்லின் நுனி பற்றிக் கொண்டுள்ள. பனி. *கவ்விய’- என்ற தொடர் நயமானது செல்வ நிலையாமை விளக்கப்படுகிறது. :’புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை’* என்று நாலடி நிலையாமையைப் பேசும்,
அறிவிக்க வல்லவர் யாவ ரோவெனின்
நெறிதக்க வேதநூ னிறைந்த நெஞ்சிடை
குறிதக்க வல்லவ ராங்கும் கொற்றவா
செறிதக்க வுள்ளர்நீ வெருவல் . தேர்குவாய் 61
என்றுரைத் திடுதலு மினியர் தங்களிப்பு
ஒன். றிய மனத்தொடு மந்த வுத்தமர் துன்றிய தெத்தலஞ்? சொல்லி னாங்கடைந் –
இன்றடி தொழுதவர்க் கடிமை யெய்துவேன். 62
இனையவா சகந்தனை யேந்த லோதலும்
. இனையள வாயினும் பெருமை தேர்கொணா
வனையரை யடைந்துகாண் பரிய தாதலால்
நினையுமோ ருபாயத்தி னிரப்பல் வேண்டுமால். 63
என்னலு மொருவன் வீடெய்த வெய்தியோர்
நன்னதி மூழ்கிட வேண்டு நாளிடை
யன்னதி யெதிரிடை யணுகி நீயுமென்
றன்னிடை மூழ்கெனச் சார்ந்த தன்மைபோல் ; 64
ஆயதிம் மொழியென வரச ஸுண்மகழ்ந்
தேயவிச் செயலலாற் பிறிதொன் றநில்லெனத்
துரயவ னடிதொழு துபாயஞ் சொல்லென
நேயமோ டவனிது நிகழ்த்தன் மேயினான். 65
வேறு
கேட்டறிநீ அரச[விது பரமபுரு
டோத்தமனாய்க் கிளருந் தேவன்
ஈட்டியமா மயமெனும் வினோதத்தால்
பலசமய மியைந்த தாமால் ;66
நாட்டியவச் சமயமெலாந் தனித்தனியே
பெரிதென்று நயந்து சொல்லும் ;
ஏட்டினிடை யேயெழுதா நான்மறையு
மவ்வாறா யிசைக்கு மன்றே, 67
அச்சமயத் துற்றவரும் பிறசமய
மாகாதென் றறைவா ரந்த
இச்சைபெறும் சமரமெலா நிருமித்த
பரனாகு மிறைவன் றன்னை
நிச்சயங்கண் டறிவார்கள் அப்பரம
னடியார்கள் ; நிறைந்த வேதத்
துச்சிமிசை யிருப்பதனை யத்திருநான்
மறைதானு முணரா தன்றே.” ட ் 67
ஆதலினாற் பலவாகுஞ் சமயற்களிற்
* சிலபோர்க ‘ள்துவி ‘தென்றே
யோதுவர்கள் சலபேர்கள் பொதுவெனவே யுரைத்திடுவர் உண்மை முற்றும்ஈதெனக்கண் டியாவர்களும் தெஸிந்துரையார் ;
மாணிக்க மெனுங்கல் லோடும்
தீதுபெறு புன்கல்லுங் கலந்திடின்மற்
றாங்கதனைத் தெரியத் தக்கோர். 68
சாணைதனிற் பிடித்தறிவார் ; அங்கதுபோல்
நீயிளகும் தண்மை யெண்ணி
ஆணையொடு மறையுரைக்கும் பரமபுரு
டோத்தமனை யறிந்து சொல்லும்
நாணையஞ்சே ரடியவர்க ளூளங்களிந்துள்
நணுக்கெவோர் நயங்காண் பித்தால்
வீணைபயி லின்னிசைகேட் டசுணமா
வடைவதுபோல் மேவு வாரால். 69
மாணிக்கக் கல்லுடன் புல்லிய கல் சேர்ந்துவிட்டால்
சாணையினில் இட்டுத் தேய்த்து அறிவார்கள். அதுபோல் சமயங்களைப் பட்டை
தீட்டிக் காட்டவல்ல பெரியவர்கள் ஒன்றுசேர உபாயம் செய்ய வேண்டும்.
அப்போது வீணையிசை கேட்டு ௮சுணமா வருவதுபோல் சான்றோர்கள் வரு
வார்கள், ்
அன்னயம்யா. தெனிற்கேண்மோ நினதுதிரு
வரமனையா சார வாயில்
முன்னரிற்பொற் கிழிதாூக்கிப் பரமுரைத்திஃ
தறப்பாடு மொய்ம்பு ளோருக்
இன்னபொரு ஸூரியதெனத் திருமுகத்தைப்
பொறித்தனுப்பி னெங்கு ளோரும்
மன்னிடுவர் 2 அவரினதை விழப்பாடு
மவற்குருவாய் வ௫க்க லாமால். 70
குருவெனவே வகுத்துமல ரடிபோற்றிப்
பணிந்தவன்றான் கூறு கின்ற
பொருவரிய நெறியிடைநின் றாழ்கிடின்வெள்
ளோலையிடை பொறியா வேதத்
இருமுடியின் வீற்றிருக்கும் பரமபுரு டோத்தமனை -தெரி௫த்தி யார்க்கும்
மருவரிய பதவியதா மோக்கவீடதினடைந்து வாழ லாமால். 71
ஈதலவே றுபாயமிலை யெனவெடுத்துச்
. செல்வதம்பி யினிதி னோடும்
ஒதுதலு மரசனுமவ் வாரமுத மெனுமொழிகேட் டுளத்தி abn
மாதுயர மதுநீங்கிப் புளகமுடனி
ருபுயங்கண் மலைபோ லோங்கப்
போதவுப சரித்தவர்க்குப் பசும்பொன்மணி
கலன்பலவும் பொருந்த . நல்கி. 72
கிழியுயர்த்தினான்
அவனுளத்தி னிடைகுறித்திட் டுரைத்திடுமு பாயவகை யதனை யேசெய்
குவதுயர்நற் பதவிபெறற் குறுதியெனத் இருவுளத்துக் கொண்டா னாகி
இவனுமொரு .பொற்கிழியை யிழைத்ததனை
யுயரவெடுத் தெழில்வா னோங்கித்
, துவளுமணிக் கொடிபொருந்துந் தனதுதிரு
மனைவாயிற் றூக்குப் பின்னர் ; 73
அகலுமலை கடலுடையம் புவியிடைப்பற்
பலசமயத் தமைந்து ளோரிற்
புகலரிய சதுர்மறையும் பலபலசாத்
தஇிரவகையும் போத மார்ந்த
சகலகலை களுமூணரும் தன்மையினர்
பலபலநூல் நுவலத் தக்கோர்
பகலிரவென் றறியாத் தனிப்பொருளாம்
பரஞ்சுடர்போற் படிவங் கொண்டோர். . 74
பூவருமெண் டோளுடைப்புங் கவன்படைத்த
நான்கெனவே புகல்வர் ணத்தின்
யாவரெனு மோக்கமதை யடையும்வழி
துன்னையடை விப்போர் தங்கள்
தேவர்நிலை தனைத்தெரித்திட் டெனையடிமை
கொண்டுசெம்பொற் கிழியுங் கொண்டு
போவதற்குக்: கருத்துடையோர் மதுரைநக
ரிடைவந்து பொருது கென்றே. 75-எண் தோளுடைப் புங்கவன் -பிரமன்.
சமயவாதியர் செயல்
இருமுகங்கள் பொறித்துவந்து தூதர்கள் தங்
கைகொடுத்துத் இசைக ளோர்தநா
லிருமுகத்தும் விடுப்பவவர் களுங்கொடுபோய்
கொடுத்ததனை யியம்ப லோடும்
மருவுமுவப் பொடுஞ்சைவர் வாமிகள்வை
சேடியர்மா விரதர் புத்தர்
அருகருல காயுதர்க ளாமுகர்மீ
மாங்கெசர்சாங் இயோக ரானோர். 76
பாசுபதர் மாயாவா தியர்முதலாஞ்
சமயத்தோர் பலரும் வந்தார் :
பூசுரர்கண் முதலாநால் வருணத்துற்
பெரியோரும் பொருந்தி வந்தார் :
ஆசில்புக ழிமையவருஞ் சித்தர்வித்யா
தரர்கண் முதலானோர் தாமும்
வீசுதிரைக் கடற்புவியி னிதையறிவான் மதுரைநகர் மேவி னாரால். 77
வேறு
– ஆழ்வாரின் செயல்
‘இவ்வகை யாவரு மினிதி னடைந்தார்
அவ்வகை செய்யர சவ்வவ ருக்குச்
செவ்வகை செய்வ முறைப்படி செய்தா
ரொவ்விய புதுவை யினுற்ற துரைப்பாம். 78
மருவிய விட்டுணு சித்தனும் மாலாம்
பொருவட பத்திர சாயி பொருட்டு
ஒருபகல் பொன்மலர் மாலை யுஞற்றி
வருபக லின்னொரு வைக லிருட்கண். 79
நித்திரை வேளையி ஸில்லா, விந்தம்
ஒத்துள கண்ணளி யு.ற்றவண் விட்ணு
சித்த வெனப்பெயர் செப்பி யெழுப்ப
அத்தலை மேனிய சக்கி யெழுந்தே. 80
சிக்கென நோக்கத் திருவரு ளாலே
பக்கமி ர௬த்தருண் மாலைப சுங்கார்
ஓக்கு நிறத்தோ டுற்றுத் தன்னுளம் மிக்க களிப்போ டவனடி மீதே. 81
விழும்; புரளும்; புவியிற் ; பரிவின்மீண்
டெழும்; புகழும்;நட மிட்டுகை கூப்பித்
தொழும் உருகும்; பரிவோடு துதிக்கும் ;
அமும்;பரிசன்ன தறிந்திட லாகா. 82
இத்தக வாகி யெழுந்தெதிர் நின்றே
கைத்தல மீது கவித்து விளித்த
மத்தகெ ஜத்தெதிர் வந்தருள் செய்த வித்தக நின்னை வியந்தவர் யாவர்? 83
ஆதியு மாகி யனாதியு மாகிச்
சோதியு மாகிச் சுடரொளி யாகி
நீதியி னாலுல கெங்கும் நிறைந்த .
வேதிய னேயுனை யானறி வேனோ? ் 84
நின்னடி யான்றொழு தற்கு நினைந்தோ?
வின்ன தொழில்புரி யென்பத னுக்கோ?
துன்னு பிறப்பை துலைத்திடு தற்கோ?
வென்னிவ ஸணுற்றது? இயம்புதி யென்றான். 85
என்றது தன்செவி யின்னிடை யெய்த
நன்றென நாரண னும்நகை செய்யா
இன்று நினக்குரை செய்திடு மின்சொல்
ஒன்றுள கேளென என்னென லோடும். ‘ 86
மற்பொரு தோண்மது ரைப்பதி யான்றன்
இற்பொலி வாயி லிடத்தெதி ராகப்
பொற்கிழி கட்டின னாதலி னீபோய்
யெற்பர மென்ன விசைத்த தறுத்தே | 87
அக்கிமி கொண்டிவ ணணுகென லோடும்
மிக்க விருப்பும் வெறுப்பு மிலாதோன்
றக்க மறைப்பல சாத்திர நூலுந்
தொக்க வறிந்து சொலத்தகு வோரை,.-88
வாதினில் வென்றிட வல்லவ ரன்றோ
ஓதுகி மிக்கொள லுக்குரி யோர்கள் ?
ஏதெனு மொன்றுண ராவடி யேன்போ
யாதுப கர்ந்த தறுத்திட லாகும்?-89
கொட்டுகை பற்றி குனிந்தடி யேன்மண்
வெட்டுத மும்பை விரித்து தெரிக்கிற்
கட்டுகி மிப்படு மோ2படி னுங்கண்
டிட்டிடர் சொற்கறி வின்மை யுணர்ந்தால்.–90
பொறுத்தல் செயானவன் பார்த்திப னென்னா
மறுத்திட மாலும் வளக்கிழி யைப்போய்
யறுத்திட லுன்கடன் : நான்மறை முடிவை
நிறுத்துரை.. செய்கட னென்சகட ஸேர்வாய்,-91
கொட்டு – மண்வெட்டி, கொட்டுசைபற்றி – மண் வெட்டியதால்
உண்டான தழும்பைக் காட்டினால் இழி அறுபடுமோ? ஒருவேளை உன் அருளால்
அது அறுபட்டாலும், பாண்டியன் பொறுத்துக் கொள்வானோ, என்று கூறி
ஆழ்வார் மறுத்தார். “அறுத்தல் உன் கடன்; மறை முடிவை நிறுத்தல் என் கடன்”*
என்றான் பெருமான். தேர்வாய்-உடன்படுவாயாக,
என்னலும் மேலவர் யாரும் நெருங்கித்
துன்னவை யின்னொரு சொல்லு மெழுத்தும்
இன்ன தெனத்தெளி யாவெளி யேன்போய்
மின்னுவ தெவ்வண மானமி லாமல்.–92-
ஆதலி னேகுத னன்கல வென்ன
மாதவ ஸனும்நகை செய்து மறித்தும்
ஓதுவ னென்வயி னுள்ளன வாகும்
வேத முனக்கரி தோதெளி விப்பேன் 93
என்னுரை கொண்டவ ஸணேகுது யென்ன
அன்னவ னும்அமை வாகி யவன்றன்
பொன்னடி தன்மூடி மீது புனைந்து
நன்னய மெய்த நவின்று துஇத்தே. டடத–94-
ஏக விடைதரு கென்றவ னைத்தன்
ஆக முறத்தமி யன்போ டளித்தே
மேக நிறத்திரு மால்விரை விற்போய்
வாக மணித்திரு கோயிலின் வாழ்ந்தான். 95
ஆழ்வார் மதுரையடைதல்
விடைகொண் டுயர்விட் டுணு9த் தனிரு
புடையும் மடியார் கள்புகன் றுவரக்
குடைவெ ஸண்மதியிற் குலவச் சிவிகை
இடைவெங் கதிரென் நிடவே றினனே. 96
பூவின் மழைதே வர்பொழித் இடமுன்
நாவின் மதிபட் டர்நலம் புகழ
வீவின் மிளிர்விண் டுவினுந் இவரும்
தேவின் மகிழ்வோ டுிறந் தனனே. 97
கதுவிப் பொலிவாய்க் ககனத் துவரும்
விதுவைத் தொடுமா டம்விளங் தியசர் ‘
புதுவைப் பதிவிட் டுபுலன் கொடிசேோர்
மதுரைத் இருமா நகர்கண் டனனால் 98
வேறு
மூதிர்மறை வாதினின் முனைகு வோர்தமைச்
சதிர்பெற வெல்கநீ யொல்லை சார்கெளாக்
கதிர்மணி கொடியெனுங் கரங்க ஸணீட்டியே
மதுரைமா தெதிரின்வந் தழைத்தல் மானுமால். 99–*பர சமய வாதிகளை வெல்ல வருக!* என்று மதுரை கொடிகளாகிய
சுரங்கள் நீட்டி அழைப்பது போன்றிருந்தது.
அலைகட லென்னவந் தடைந்த out Bust
நிலைதளர்ந் இடநெடு நாணி நெஞ்சுறத்
குலைவளைக் தலின்முதிர் கதிர்கொள் சாலியுங்
குலைதளு மரம்பையும் குனிந்து காட்டுமால். 100
வாதியர் தளர்ந்திட வரசும் மற்றுள
நீதியர் களுந்தலை நிமிர்தல் போலவே
சோதிசெய் கழைகளுங் கமுகுந் துன்னிவான்
மீதினி லோங்கியே விளங்கிக் காட்டுமால். “101-அரசனும், நீதிமான்களும் உண்மை உணர்ந்தோம் என்று நிமிர்வது
போல் கரும்பும், கமுகும் விண்ணை யளாவி நிற்குமாம். கழை – கரும்பு,
பாக்குமரம்,
இன்னர் மதுரையுள் ளேகிக் கூடலின்
மன்னிய வழகர்தாள் வணங்கி வாழ்த்தியே
துன்னிய களிப்பொடு நிற்குந் தூாயனை
யன்னமா லிருகணா லமைய நோக்கியே, 102
பாண்டிய னவையிடை படர்ந்து வாதியர்
ஈண்டியர் தமையெலா மினிதின் வென்றுநீ
மீண்டிடு கென்னவாய் விண்டு ரைத்தபின்
வேண்டிய வரங்களும் விருப்பி னல்கினான். 108
செல்கென விடையொடுஞ் செங்கண் ணாரணன்
நல்கிய வரங்களுங் கொண்டு நண்ணியே
பல்பல மணிமுடிப் பாண்டி யன்கொலு
மல்கிடு மண்டப மன்னு மெல்லையில். 104
மதியென வெண்குடை மலியக் காலையின்
கதிரென மணிமுடி கவின்கொண்் டோங்கிட
விதிருடை வாடக மின்ன மாறனும்
அதிர்முர சொலியோடா தனத்தி ருந்தனன். 105
மற்றுள வேந்தரும் மந்திரி மார்களுங்
கொற்றவெஞ் சேனையுங் குடிக ளும்படை
வெற்றிசேர் தலைவரும் வேறு ளோர்களுஞ்
சுற்றும்வந் தவரவர் நெருங்கித் துன்னினார். 106
மறையவர் குழாங்களும் செல்வ நம்பியும்
அறைபல சமயமுற் றடைந்து ளோர்களும்
முறைமுறை மண்டப முன்னி னார்கள் ;வாள்
நிறைதரத் தேவரு நெருங்கி நண்ணினார். 107
“*இருக்கு,
எசு, சாம வேத நாண்மலர் கொண்டு உன்பாதம் நண்ணாதநாள் அவை தத்து
றுமாகில் ௮ன்று எனக்கு அவை பட்டினிநாளே””-என்பது பெரியாழ்வாரின்
அனுபூதி.
அவ்வணங் கொலுவமைத் திருக்கு மாயிடைச்
செவ்விய மறைபயில் விட்ணு சித்தனும்
மொவ்விவத் தடைந்தமை யுணர்ந்திட் டானரோ
இவ்விய வுணர்வுடைச் செல்வ நம்பியே. 108
அரசன் உபசரிப்பு
உணர்ந்தவன் வரவினை யரசுக் கோதலும்
நிணங்கமழ் வேலினா னெடிது சென்றடி
வணங்கலு மாசுகள் வழங்கி னானரோ
மணங்கமழ் துவளமா லடிவ ணங்குவோன். 109
அரசனு மகழ்வினோ டவனை தோக்கியே
விரசுமா மணிகளின் விளங்கு மாமுடிச், .
சிரசின்மேல் தாமரைச் செங்கை கூப்பியே
பிரசமொத் தினியசொல் பெருகக் கூறுவான். . 110
கொடியதீ வினையுநல் வினையுங் கொண்டவிச்
சடிலநா ஸளெடுத்திமன் றன்கை பட்டுயிர்
நெடிதுநாள் வருந்திடல் நீக்கி வீடுறும்
யடியருள் புரிந்தெனைப் பரித்தல் வேண்டியோ. -111
அல்லது மாயையென் றமையும் வல்லிருள்
தொல்லுல குறாததைத் துரத்த லுன்னியோ பல்லுயி ரினும்வளர் பரம சோதியிந்
நல்லுருக் கொண்டது நவில்க வென்னலும் 112-::பீதக
ஆடைப் பிரம குருவாக வந்து”, என்று பெரியாழ்வார் திருவாய் மலர்ந்த
ருளியுள்ளார்.
இருவுள மகிழ்ந்தருள் விட்ணு சித்தனோ
டிருவிசும் பினைப்பொர வெழுந்து மல்கிய
பொருவின்மண் டபமதிற் பொருந்தி வேந்தனுங்
குருமணி யாதனங் கொடுத்திட் டானரோ,. 113
கொடுத்தவா: தனமிசைக் குரைதி ரைக்கட
லுடுத்தமா ஸனிலத்தின்மீ துற்று ளோர்தமி
லடுத்துவந் துரைந்திடு மறிவில் வாதியர்
நடுக்குற விரவியின் னண்ணி வைகினான். 114
இந்திரன் வாதம் செய்ய பிரஹஸ்பதியை அனுப்புதல்
வைகிய துணர்ந்திவ னறிவு மல்்கடச் ,
செய்தலி லரசன் வான்செல்வ னாகுவான்
எய்தியிங் கதையழித்: இடுதல் வேண்டுமென்
றையிருந். தர்மதத் ர்ச் ‘மெண்ணியே. 115
தங்குலக் * கரும்க நோக்கித் தன்னிரு
செங்கைமா முடிமிசைச் சேர்த்து நீயடைந்
தங்கதை யழித்திடென் ‘றவனி யம்பவென்
பங்கென மானிடப் படிவந் தாங்கியே. ் 116
புவியின்வந் தவையிடைப் புகுதக் கண்டுவெண்
கவிகைநீ ழலிற்புவி புரக்கும் காவலன் :
குவிகரத் தொடுமவ ஸணிருக்கக் கோதிலாத்
தவிசளித் தயாவனீ சாற்று கென்னலும். 117
யானொரு மறையவன் அறிதி யென்றுபின்
வானொரு வியசுரர் குருவ ழங்கிவான்
தேனொழு இியபுதுத் தெரியல் வேந்த நீ
தானொரு பொற்கிழி தன்னைத் தூக்கியே. 118
வேதமே முதலிய விளங்கு நூல்களால்
வாதுசெய் தவர்களில் வல்ல மேலவர்
ஈதறுத் ததனைக்கொண் டேகு மின்எனத்
தூதரை விடுத்திட விவர்கள் துன்னினார். 119
துன்னினோர் தங்களிற் சுருதி நூல்களா
லென்னைவென்் றனனெனி லிந்த வேதியன்
றன்னடி வணங்கினை சாற்று கென்னலும்
மன்னவை யடைந்துள மற்று ளோர்களும் 120
அவ்வுரைக் கொன்றியே யரச ருட்களித்
தொவ்விய திருமூக னோக்கி யோதுவார்
இவ்வயி னெம்முனி தொழவி ருந்துளோன்
செவ்விய இழியையு மறுத்தல் செய்தபின். 121
இவனுட௨ன் வாதுசெய் திடுவோம் யாமென
வவனையுல் லங்கன மவர்கள் கூறலும்
குவறிலாப் புரோகிதன் தன்னை நோக்கியிவ்
வவமதிக் கென்செய லாகு மென்றனன். 122
என்றவவ் வரசனை யினிதி நோக்குறா
வின்றிதை யறுப்பது மிவரை வாதினில்
வென்றிடு வதுமிந்த விட்ணு சித்தனே
யொன்றுநீ வருந்தலை யென்ன வோதினான். 123
வள்ளலும் புரோ௫தன் வழங்கும் வாய்மையால்
உள்ளம துவப்புற உறைந்த காலையிற்
கள்ளவிழ் துளவமால் கழற்குத் தொண்டுறும்
தெள்ளிய ஸுடன்சுரர் குருவும் செப்புவான். 124
ஆழ்வாரும் பிரஹஸ்பதியும்
பரத்துவ மிதுவெனப் பகர்ந்த பின்புநீ
யுரத்துரு கிழியறென் றுரைப்ப வேதத்தின்
சிரத்துறும் பரம்பொருள் செய்ய வாழிசேர்
கரத்துநா ரணனெனக் கழற லோடுமே. 125
நாரணன் பரமல நாலு மாமுகத்.
தாரணன் பரமென வவனி யம்பலும்,
வாரண முறையிட வந்து காத்தருள்
காரண ஸடியனுங் கழறன் மேயினான். 126
நன்றுநீ மொழிந்தனை நான்மு கன்றலை
யன்றறுப் புண்டதை யறிந்திலாய் கொலோ?
என்றுபுத் தூரனு மியம்பக் கேட்டுளோன்
நன்றுமச் சுரர்குரு விதனைச் செப்புவான். 127
ஆகிலும் சிவன்பர மாகு மென்னவே
போகிமுன் விடுத்திடும் புனிதன் கூறலும்
நாகணைப் பள்ளியான் விடுப்ப நண்ணிய
யோடியு நகைத்திதை யோது வானரோ. 128
தானறுத் திடுந்தலை தன்கை மீதுற லானதை யொழித்திட லாகா மையால்
வானமும், வையமுந் திரிந்து மாழ்கிடத்
தேனமர் துளவமால் தீர்த்த தோர்கிலாய். 129
எனச்சொலப் பிரபதி யியைந்த காலத்தால்
அனத்தவன் றலைவிட்ட தந்தக் காலமே
மனத்துணர் பரமென மறுத்துச் சொல்லலும்
புனத்துழா யவன்விடும் புனிதன் கூறுவான். 130
காலமே பரமெனிற் கால மூன்றிற்கும்
மேலுமக் கடவுள்யா ரென்னக் கேட்கலும்
ஞானமீ திருளெலாம் ஒழித்து ஞானத்தின்
மேலுறு பொருளெலாம் விளக்க வெய்யவன் 131
எல்லியே பரம்பொரு ளென்ன வாங்கவன்
சொல்லிய புன்மொழி செவியிற் றுன்னலும்
வில்லிபுத் தூரனும் நகைப்ப வேந்திடை
யல்லியம் புயமுக மதனை நோக்குறா. 132
ஈங்கு னுரைத்தசொல் லென்னென் றோதலுந்்
தீங்குற விறத்தலோர் காலை சேர்ந்துபின்
பாங்குறப் பிறத்தலோர் காலை பாற்கரன்
ஆங்கவன் பரமென லாகு மோவெனா. 133
தேர்ந்திடா ரிம்மொழி செப்ப லல்லதிங்
கார்ந்தநா லுணர்வின ரறைந்தி டார்களென்
ஹறோர்ந்தர சவையிடை யுரைத்தல் கேட்டுளஞ்
சோர்ந்துவே றுரைக்கடந் தோன்றி டாமையால். 134
தேவகுரு தோற்றார்
ஊமரிற் சுரர்குரு வுற்றி ௬ுந்தபின் றாமரு வியயல சமயத் தோரெலாங்
காமர்தந் தம்பெருங் கடவு ளேபர ்
மாமென வவரவ ரறைத லோடுமே. , 135
எவ்வவ ரென்னென விசைத்த போதெலாம்
மவ்வவர்க் கெதிர்மொழி யறைந்திட் டாங்கவ
ரொவ்வநுந் தெவம்பர மெனலொவ் வாதெனச்
செவ்விசேர் புதுவையான் செப்புங் காலையில். . 136
செல்வஈாம்பியின் விண்ணப்பம்
என்னிவ ருடன்விளை யாட. லோமறை
குன்னிடை வளர்பரஞ் சோதி தன்னைநீ
மின்னிட வெளியிடல் வேண்டு மென்றனன்
சென்னியங் கரங்கொடு செல்வ நம்பியே. ் 137
(வேறு)
அந்தசொற் கேளா வாமிகா ஸனடுமீர்
வாளதாய் அருகபஞ் சினுக்கோர் —
செந்தழ லாய்வை சேடியாட் டினுக்கோர்
சீறுவெம் புலியதாய் பவுத்த.
குந்தமால் கரிக்கோ ரரிய தாய்ச்
சைவ சற்பத்துக் குவணமாய் மற்றும்
வந்தபல் சமய விருட்கிர வியதாய் மலிந்திடும் புதுவைமா நகரோன். . 138
அவையுளோர் திருமுன் கடவுளர் பணிய
வருமறை முடியின்மீ தமர்ந்தும்
சுவையமு தருள்வெண் பாற்கடல் வடத்தின்
றுளிரின்மீ தமர்ந்துகண் வளரும்
நவையினா ரணனாஞ் சற்பரம் பொருளே
நற்பரம் பொருளென நாட்டி
இவையெடுத் துரைத்தான் கேட்டுளோர் மகிழ்வோ
டிருசெவிக் கமுதெனப் பருக. 139
பொற்கிழியறுந்து வந்தது
அத்தரத் தவர்துந் துமிமுழக் குடன்வந் தவர்மழை சலசலென் றுதிர்ப்பச்,
செந்தழன் முனிவோ ராசிக எியம்பச்
செந்தமிழ்ப் புலவர்க டுதிப்ப
முந்துறும் பெரியாழ் வார்திரு வடிமுன்
மொழிந்திடும் பொற்கிழி யறுந்து
வந்துற வதனைத் திருக்கரத் தெடுத்து மாறன்றன் றிருமுன்வைக் திடலும். 140
மாறனு மகிழ்வோ டெழுந்திரு கரத்தான்
மாமுடி மருவுறப் பொருத்தி வீறுமா மறையின் றிருமுடி யதன்மேல் வீற்றிடும் பொருளென வுரைத்த நாறுபூந் துளவ மாலையா. பரண
தாரண ஸிவனென் மனத்திற்
ஹேறியங் கவன்ற ஸிருபெருங் கமலத்
இருவடி. பணிந்துநின் றனனால். . 141
மற்புய வரசன் றமைநயந் தருளி
மற்றுள சமயவா தியர்கள்
அற்புத மடையுஞ் சிந்தைகொண்் டுருகி
யவரவர் முறைமுறை யணுகடப்
பொற்புறு முதயக் கதிரென விளங்கும்
‘புதுவைமா நகர்மறை யவன்றன்
நற்பத மிரண்டிற் றமதுமா முடிகள்
நண்ணிடத் -தொழுது நின்றனரால், 142
தேவகுரு மறைந்தான்
ஆயவா றெவரு மனையரும வன்பொன்
னடிகளுக் கடிகளா னதுகண்
டேயவிங் இவனை யாதினும் வெலுதற்
இயைந்திடா தெனமனம் வெறுத்து
ஞாயிறெய் திடும்போ தெதிரிலா திருந்த
நள்ளிருள் தளர்ந்துளம் நாணி
மாயமா – யினபோன் மாயமாய் மறைந்தான்
வாசவன் விடுத்தரு மறையோன். «148
ஆழ்வார் திருவுலா
யாவரு மிவ்வா றடிதொழு மணியா
தனமிசை யிருந்தவாழ் வாரைக்
கோவமை செயலின் சிறப்பெலா மமையக் குலூரி நிகர் கசப் பிடர்மேல் றேவர்கற் பகப்பூச் செழுமழை பொழியத் இருந்திட வேற்றி மந்திரிகள் வாவுமான் றடந்தேர் மதகரி. பரியாள்
மருங்குற நெருங்கிவந் தடவும்; 144 –க௪ப்பிடர் மேல்-யானையின் பிடரியில்,
வருமுழு மதிபோல் வெண்குடை நிழற்ற
_ மகரகுண் . டலஞ்செவி யிலங்க
விருபுற மதிலுஞ் சாமரை யிரட்ட
-விரவியிற் பலகலன் விளங்கப்
பொருகட லெனமா முரசொலி கறங்கப்
பூரிகா களம்பல முழங்க
அருமறை: யதுகொண் டிருடிக ளுடனே
யந்தணர் மங்கல மூரைப்ப ; 145
மூன்றுல கினரும் திருப்புகழ் புகழ முறைமுறை யரரர்வந் இறைஞ்ச
ஆன்றநல் லறமும் துதிசெய மகிழ்வோ
டைம்புல னாதுிதோத் தரிக்க
மான்றுடர். விழியார் நடித்திடப் பலர்கள்
மணிவிளக் காலம தெடுப்ப
ஏன்றவிம் முறையோ டஉரசன்வேண்ட
எழுந்தனன் பவனிவந் திடவே. 146
சகரர்தொட் டிடுமக் கருங்கட லடுத்த
தரணிமேல் நிகரில தாக
மகுரதோ ரணங்களு யர்த்திப்பன் முறையால்
வளம்பெறத் திருத்தியும் மதுரை நகரமுள் வலமாய் அரசவீ தியின்வாய் –
நண்ணுறு கோலமஃ துணர்வான்
அகரமே மூதலா மக்கரத் தெல்லாம்
அமருநா ரணனுமுள் ஸணர்ந்தான். 147
பெருமாள் விண்ணில் தோன்றினான்
இருடனை துரக்கு நவமணி பசும்பொன்
னிழைமுடி முடியின்மே லிலங்க
அருடரு கமலக் கண்முகத் இலங்க
வைம்படைக் கரங்கண் மீதசையச்
FGL_G குழற்பூந் ‘திருவினோ டுரத்திற்
றலங்கொளி கவுத்துவம் துளங்கக்
கருடன்மீ தெழுந்தான் பொன்மலை மிசையோர்
கருமலை வருதலைக் கடுப்ப. 148-பொன் மலை மிசை கருமலை போல் திருமால் வந்தான்.
சுருடன் – சிவந்த நிறமுடையவன். திருமால் கரிய நிறமுடையவன்,
அம்புயத் துறையு மயன்கயி லையர்கோன்
அமரர்கோன் முறைதொழு தேத்தத்;
தும்புரு வுடனா ரதனியாழ் மிழற்றத்; தூயமா முனிவர்வாழ்த் துரைப்ப
உம்பர்க ளியக்கர் கருடகந் தருவ
ருயர்பத்த நித்தமுத் தர்களும் பம்பியெம் மருங்கும் நெருங்குற வாடல்
பாடல்க ளரம்பையர் பயில. 149
அந்தரத் தெழுந்து துந்துமிக் குழாங்க ளதிரவை குந்தம்விட் டகலா
வந்தரு டிருநா ரணன்றிரு மேனி
வடிவமு நிறைமதி நிகருஞ் சுந்தர வதன விலாசமுங் கருணைத்
துணைமலர்க் கண்களி னொளியும்
சிந்தையுள் ஞரூருகக் கண்களால் விட்டு
சித்தனுந் தெளிவுறக் கண்டான். 150-வடிவமும், வதன விலாசமும், கண்களின் ஓளி
யும், சிந்தை உருக, விஷ்ணு சித்தனும் கண்டான் என இணைக்கவும்.
திருப்பல்லாண்டு
விண்ணவர் மகுட கோடிகள் இறைஞ்ச
விளங்குபொற் கலுழன்றன் புயமேல்
நண்ணுநா ரணன்றன் நிருவுரு வொளிதன்
னலமுரு முளத்துணர்ந் இவரை
மண்ணவ ரெவரு மிருகணு மூளமு
மகிழ்வுற நோக்இடிற் கதுவுங்
கண்ணிறை யெனப்பல் லாண்டெனும்
பதிகக் கவிதையால் காப்பணிந்தனனால், 151
முன்னமோர் மடுவிற் கராவின்வாய்ப் படலான்
மூலமென் றழைத்திடுங் கரிமுன்
மன்னுமச் செயல்போ லிந்நகர்க் கோலம்
மருவுற வீங்கெழுந் தருளும் | நின்னைமா துடன்கண் . களிப்புறக் காணல்
நிலையிலா வுருவுகொண் டிடும்யான்
என்னமா தவம்செய் தனனெனப் பல்கா லேத்தினன் தொழுதனன் மகிழ்ந்தான். 152-பெரியாழ்வார், உன்னைக்காணத் திருமாலே! யான் என்ன மாதவம்
. செய்தேன் என்றார்
இத்தகை யினனாய் மீண்டுமா மாலை
யிசைக்கவென் நிதையத்துள் நினையா
வத்தகை யுணந்தந் நாரணன் மகிழ்வா
யவன்றலை மீதுதன் பதங்கண்
டொத்தகைத் தலங்கொண் டஃஇவன் வருடி
யுணர்ந்தவா றின்னதென் றுணர்ந்திட்
டெத்தகை யெனக்கொண் டியம்பலா மெனக்கா
யிரமிலை நாவெடுத் தியம்ப. 153
இருமால் தன்னுடைய திருவடியை ஆழ்வார் தலையில் வைத்தான்.
அப்போது ஆழ்வார் அடைந்த நிலையை யியம்ப எனக்கு ஆயிரம் நாக்கள்
இல்லையே என்கிறார் ஆசிரியர். **பருப்பதத்துக் கொடி பொறித்த பாண்டியன்
குலபதிபோல் திருப்பொலிந்த சேவடியென் சென்னிமிசை வைத்தாய்” என்று
பெரியாழ்வாரே கூறியுள்ளார். பெருமான் தன்பதத்தை வைத்த போது ஆழ்வார்
தம்முடைய கரங்களால் வருடினார். இருமகளார் வருடும் பதத்தை வருடும்பேறு
பெரியாழ்வாருக்குக் இட்டிற்று.
சமயவாதியர் புகழ்ந்தனர்
சைவரே முதலாஞ் சமயவா இயரும்
தத்தமச் சமயதே வர்களைக்
கைவிடு பவராய்க் கருத்துளே திருவின்
கணவனே பரமெனத் தெளிந்தம்
மைவரை யனையான் திருவடி யதன்€ழ்
வணங்கினர்; நடித்தனர்; குதித்தார்;
செய்வகை யுணரார்; களிப்பெனும் நறவும்
தெவிட்டவுண் டிடுதலாற் றியங்கி, : 154
மாறனு செல்வ நம்பியே முதலா
வளைகடற் புவிமருங் இனருந்
தேறுமிப் பரம புருடார்த்த மதனாற்
றேவரு முணர்கிலாப் பரமாம்
நாறுபூந் துளவ நாரண ஸனுருவ நங்கணாற் கண்டனம்; எனக்கொண்
டூறுபே ர௬ுவகைச் சிறந்தநல் லுணர்வோ டுற்றெதஇர் வணங்கி னரன்றே. 155
இவராலன்றோ நாம் திருமாலைக் கண்டோம் என்று பாண்டியன்
செல்வதம்பி முதலானவர்கள் ஆழ்வாரைப் பணிந்தனர்,
வேண்டுதன் வேண்டு மவ்விதம் அருளும்
வேதமீ துறைந்திடுந் திருமால் மீண்டுமவ் வாழ்வார். திருமுகம் நோக்கி
விளம்புவன் ; இன்றுதொட் டுனக்கு
மாண்டகும் பட்டர் பிரானெனு மொருபேர்
வழங்கினம் இன்னமும் சிலநாள்
பூண்டுறு நமது கயிங்கிரிய மதனைப்
.. பொருந்துறும் படிபுரித் திருந்து. 156
புவியிலஸஞ் ஞான மடைந்துளோர் ஞானம்
பொருந்துறச் செந்தமி ழதனாற்:
கவிபல வியம்பிப். பின்புவை குந்தங்
கலந்துநீ யணைகென வவன்றன்.
செவியுறப் புகன்று கருணைகூர்ந் தருளித்
தேவர்சென் றடிதொழுந் திருமால்
குவிமுலைத் துவர்வாய்த் இருவொடு மடியார்
குழாத்தொடும் தன்பதி யடைத்தான். 157
ஆழ்வார் திருவோலக்கம்
(வேறு)
நாரண ஸனகன்றபின் னலங்கொண் மாநகர்
தோரண வீதிகள் பலவும் சுற்றிவந்
தாரண வொலியுட னானை விட்டிழிந்
தேரணி மண்டப மினிதி னெய்தினான். 158–ஏரணி மண்டபம்- அலங்கரிக்கப்பட்ட மண்டபம்,
முத்தவெண் குடைமுழு “மதியின் மீதுறக்
கத்தைவெண் கவரிகா லசையக் கைகொடு
புத்தரே முதலினர் வணங்கிப் போற்றிடச்
சித்திர வாதனஞ் சேர்ந்து வைகனான். 159:
சீவலதேவன் பரம வைஷ்ணவனானான்
சவல தேவனென் றுரைக்கும் செவ்விசோர்
காவலற் காழிசங் குக்கு றிப்பொறித்
தேவல்செய் தொண்டுகொண் டினிய வொண்பொரு
ளாவலோ டவனருள் யாவும் கைக்கொளா, . 160
கூடலி னழகர்தம் கொடிய பாம்பின்மேல்
ஆடிய பதம்பணிந் தவண்விட் டேகுியே
நீடிய நெறியெலாங் கடந்து நீள்கொடி
மாடமார் புதுவையின் மன்னி னானரோ. 161.
வடபெருங் கோயிலின் மருவி மாதவன்
அடிமலர் . முடியுற வணிந்து மன்னருட்
படியவ ணடைந்துள பலவு மீதெனா ்
மு.டியவுஞ் செவியுற மொழித்து மீண்டனன். ் 162
குன்பெருங் கோயிலைச் சார்ந்து வைகியே
முன்புபல் லாண்டெனு மொழிந்த தாதியாய்
அன்பொடுஞ் சென்னியோங் கந்த மாகவே
இன்புறு மிசையினின் றமிழி யம்பினான். 163
நான்குநூ றெழுபதின் மூன்று நன்கமைந் தான்நவத் திருமொழி யதனு ளாழிகைத்
தேன்கமழ் துளவமால் இருவு ருக்கொடு
தோன்றுமூ ரிருபதின் மூன்று சொன்னதே. 164
வேறு
அரங்கம் வெள்ளறை குறுங்குடி குடந்தை வதரிகாச்
சிரமம் வேங்கடங் கோட்டியூர். சீர்கங்கைக் கரையின்
மருவு கண்டஞ்சோ லைமலை சாளக்கி ராமம்
பொருவி லாதசர் பொருந்துபேர் திருக்கண்ண புரமே. 165
இருவை குந்தமோ டாயர்தம் பாடிசீர் வடம
துரைய யோத்திகோ வர்த்தனம் வில்லிபுத் தூரது
வரையொோ டுஞ்சித்ர கூடமு மதுரையிற் கூடல்
புருட வுத்தமம் பாற்கட லெனும்பெயர் பொருந்தும். 166-பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகள் பதின்
மூன்று. அவற்றின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதும் றைப்பொரு எருஞ்சுவை முகந்துகொண்டு ரைக்கும்
அதுத னைத்தெரிந் தறிந்துணர்ந் தோதுயம் புவியோர்
கதுவி டும்பெரு மாயையா மிருளினைக் கடிந்தே
மதுபொ ருந்திடும் துளவமால் பதத்தின்மன் னினரால், 167
இனைய பாடல்க எளிசைத்தரு ளெம்பட்டர் பெருமான்
அனைய மாநகர் தனிலிருந் தவணுறை திருமால்
புனையு மாலைகட் டொழில்புரி தவனடி போற்றி
நிணையு நெஞ்சக மகிழ்வுட னெடிதுநா ஸிருந்தான். 168
இன்ன காதையை யெழுதுவோர் கஞமிதன் பொருளைப்
பன்னு வோர்களும் பன்னிடும் பொருள்களைப் பரிவாய்
கன்ன முடுறக் கேட்பவர் களுங்கடற் புவிமேல்
மன்னு நாளிருந் துயர்பத மருவிவாழ் குவரால், 169
திருமங்கைமன்னன் வரலாறு புகல்வோம்
அங்கண் மாநிலப் பரப்பினில் புதுவைவந் தருளும்
நங்கள் சீர்ப்பெரி யார்செய லினைநவின் றனமால்
திங்கள் சூடிதன் குடியரிற் குறையலூர் செனித்த மங்கை யார்புரிந் தருள்செயல் வகுத்தினி துரைப்பாம். 170
பெரியாழ்வார் இருவவதார அத்தியாயம் முற்றும்.
——————
திருமங்கையாழ்வார் திருவவதார அத்தியாயம்
பேதைநெஞ்சே! யின்றைப் பெருமை யறிந்தஇலையே |
யேது பெருமையின்றைக் கென்னெனின்- வோதுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்.(உபதேச ரத்தினமாலை, பக்கம் ; 8)
அகம்படியர் குலம்
நிறையு மாமதி முகத்திய ரிளநகை நிலவான்
நறைகொ எளாம்பலின் நாண்மலர் நனைமுருக் கவிழும்
நிறையு நீர்மலித் தடங்களும் வயல்களும் நிரம்பும்
குறைய லூரதன்’ பெருமையைக் கூறுத லரிதால். 1
அந்த மாநக ரந்தனிற் வெனடி யவரில்
வந்து வாழகம் படியர்தங் குடிவளம் பெறவே
செந்தி ர௬ப்பகி யானநா ரணன் இரு வடியைச்
சிந்தை கொண்டுல கோர்தொழச் செயும்பர காலன். 2
ழ்வார் அவதாரம்
ஆர்த்தெ முந்துமெய்ஞ் ஞானநல் லறிவணு இடவும்
வேர்த்து மாயையம் புவிதனை விட்டகன் . நிடவும் .
தீர்த்த னாகிய நாரணன் நிருவரு ளதனாற்
கார்த்தி கைத்திரு மதியினிற் கார்த்திகை நாளின். 3
ஒன்ப தாகியகோட்களு முச்சனன் குறைந்திட்
டன்ப ராடுிநற் பலன்றர வமையுமோ ரையினின்
முன்ப கன்றமெய்ஞ் ஞானத்தின் முளைத்திடுங் கொழுந்தோர்
தென்ப டும்புவி யிடைச்சிறந் தெழுந்தது போலும். 4
ஆர ணன்முத லண்டங்கள் பலவுமற் றவையும்
நார ணன்றிரு வுந்தியிற் னோன்றுதன் மகமைக்
கார ணந்தெரி யாமதக் கசடரைப் பிளக்கும்
ஏர ணிந்தகோ டாலிவந் தெழுந்தது போலும். 5
தோன்றி னானவண் தோன்றிய தோன்றலை நோக்கி
ஈன்று ளோனவற் இயற்றுவ யாவையு மினிதின்
ஆன்ற கேள்வியர் விதித்தநான் முறையது வாகச்
சான்று ளோரெலா மகிழ்வுற வழங்கினான் தானம். -6-
அந்த மாநக ரந்தனி லணுகுவர் பலருஞ் சிந்தை யோடிரு கண்களும் ம௫ழ்சிறந் தோங்கச்
சந்திரன்கலை நாடொறும் வளர்வபோற். றழைத்து
மைந்த னுந்தினஞ் சிறப்பொடு வளருமன் னாளில். _- 7
ஞால மதினிற் காமகை வலமென நவிலுஞ்
சீல மில்லவச் சமயமா யும்படி திருத்தும்
பால னாம்பர காலனுக் கொருபெயர் பரிவாய்
நீல னாமென நவின்றன னீன்றவ னென்போன். 8
வேத நான்கினு முறுநல்ல தாகமே வமுதைத்
தீதில் செந்தமி மாற் றிரு மொழியெனத் திருத்திக் கோதி லாதவர் செவியுறக் கொடுப்பவர்க் ன்ற .
மாத ருந்திடு மன்னமு மூட்டினண் மகஒழ்வாய். 9
மாயையின் வன்மை
துள்ளி யம்மனத் தெழுதரு மாயையின் றொடர்பால்
நள்ளி ர௬ுட்களை பவனுக்குச் சவளநன் கிழைத்தார்
வள்ளி யோர்க்குமெய்ஞ் ஞானத்தை வகுத்துறை வள்ளல்
பள்ளி யின்வட மொழியொடுந் தென்மொழி பயின்றான். 10
அனைய தன்மையி னாயறு பத்துநான் கெனவே
நினையு றுங்கலைக் கியானங் கணிலையெலா முணர்ந்து
வினையி லாப்பரஞ் சோதியி னிலைவெளிப் படுத்தக் கனைக டற்புவி மீதுவந் தெழுந்தகண் மணியை. 11
மயக்கி யேவருந் திருவிளை யாட்டினை மதிப்பான்
வியக்கு நெஞ்சொடுந் இருமகட் கொழுனனும் விரும்பி
நயக்கு மாயையை விடுத்தலு நண்ணுமங் கதனான்
முயக்கு நெஞ்சின னாயினன் முழுமதி யுள்ளன். 12
ஏன்ற நீர்மிசை யமைவுறுஞ் சைவல மதுபோன்
மூன்று லோகமு முந்தியின் முறைமுறை வழுவா
இன்று சார்ந்தரு ளிறைவனை யிருத்துநல் லறிவு தோன்று நெஞ்சினை மறைத்தது மாயையுந் துடர்ந்து. 13-
வெங்க ணைக்கொலை வாள்சதை வேல்முத லியவாந்
தங்கு லத்தொழிற் பரிசையு முணர்ந்தனன் றகவாய்
எங்கும் யாரினு மித்தொழிற் பயிற்சிய ரெவரும்
அங்கி வந்தவ னடிகளுக் கபயமென்- டைய. 14
மாயை யானது மலிந்துமூண் டிடவுள மயங்கி. .
நேய மோடதை நீக்குவான் நினைந்துநீக் குதலுந்
தோய மபேற்றுடர் சைவல மலம்பினும் தொடர்ந்து
மேய தாமென ஈண்டவன் றன்னைமே விடுமால். 15
பந்தன்மீதுறப் படர்ந்திடும் பசியமென் கொடியை
வந்து சூறைமா ருதம்விழுத் இடுகின்ற வகைபோல்
சிந்தை மீதுறக் கொழுந்துவிட் டெழுந்திடு மறிவை
முந்து மீதுறுங் காமக்கால் முட்டிவீழ்த் இடுமால். 16
அரசர் மாமணி முடிகளை யறுத்திடுங் கூர்வாள்
நிரவு பஞ்சணை மிசையுறின் மழுங்குமந் நெறிபோல்
விரவு நாரணன் பதத்துற நிரப்பு மெய்ஞ்ஞானம்
பரவு மங்கையர் விருப்பினிற் படமழுங் இயதால். 17
இன்ப ஞானவீ டறிந்துயர் வேதமென் றியம்பும்
அன்பு றுந்திரு மடலெனு மாலைசெய் பவனுந்
துன்பு றுந்திரைக் கடலெனுஞ் இற்றின்பத் துறையின்
றன்பெ ருங்கலை நாூலெலா முணர்ந்தனன் றகவாய். 18
மலையி ஸனும்பல கடத்தினு மற்றுள நிலத்தின்
றலைதொ றும்பெயு நீரெலாம் தஇுதனிற் செலல்போல்
நிலையு ஞானமும் கல்வியும் வேறுள நெறியும்
விலைம டந்தையர் மலையெனு முலைவிழுங் . 19
இனய ஸாய்ப்பதி னாறெனும் வயதுமெய் இயபின்
புனைம லர்க்குழமன் மடந்தையர் புந்தியள் ளவனை
நினைவ ரைங்கணைக் கழவனாமென தெடிதவனும்
அனையர் தங்களை யிரதிய ராய்நினை குவனால். 20
இவ்வி தத்தனாய்ப் பரத்தைய ரின்ப்சா கரத்தின்:
ஓவ்வி யுற்றலைந் தவரித மமுதமுண் டுவப்பால்
யெவ்வி தத்தினுந்- தணிகிலா திழைந்தனன் இழையும்.
அவ்வி த்த்தினை .யுரைத்திட முடியொணா தென்னால்.: 21
குமுதவல்லியார்
பூவின் மெல்லியர் சுனவிள முலையினர் பொருத்தும்
ஏவு கண்ணியர் முழுமூகத் தெரிவையர் எழில்சேர்
தேவ கன்னியர் திரண்டொரு விமானமேற் சேர்ந்து
மேவ மிக்களி கூர்ந்திட விசும்பைவிட் டிழிந்தே. .. , 22
காலி மேதிகள் கன்றினை நினைதொரறுங் கனியும்
பாலி னோடிறா .லொழுகுதேன் தினம்சென்று பாய்ந்து ்
சாலி யோடுசெங் கன்னலுந் தழைத்து வானோ்கும்
ஆவி மாநக ரதனில்வந் தடைகுவா ரன்றே. -23
பொய்கை யார்ந்தறீ ராடுவார் ; பூம்பொழிற் களிற்போய்
கொய்கு வார்மலர் ஆலிதநா . தன்குரை கழலிழ்
பெய்கு வார்;பணிந் தேத்துவார் ; பின்புவே றியற்றுஞ்
செய்கை நேர்ந்துபின் விமானமேல் விசும்பிடைச் சேர்வார். 24
இன்ன வாறுபற் பலபல புரிந்திடு மிடையின்
மன்னு மோர்பகற் றனித்தொரு மாநெடுந் தூரம்
துன்னி மாமலர் கொய்குவான் றுருவிமற் நுள்ளோர் அன்ன தோர்கிலா ரவளைவிட் டேகின ரன்றே. 25
பிரிந்து நீங்கிய மாதுமீண் டவர்தமைப் பேணிப்
பரிந்து நோக்கலும் காண்கிலள் ; பதைத்துள நெடுங்கண் .
சொரிந்த நீர்களும் சரிந்தவிழ் குழல்களுந் தோன்ற
விரிந்த மாமலர்ப் பொய்கையின் கரையின்மே வினளால். 26
ஆங்கு நோக்கலு மாலிமா தவர்க்கனு தினமும்
பாங்கி னோடுமா ராதனம் பரிவோடு புரியுந்
“தீங்கி லாமறை யவனிருந் இிடத்தெளிந் தவன்றன்
பூங்க ழற்கணின் முடியுறப் பணிந்திது புகல்வாள். 27
ஐய ! கேட்டியான் றேவ கன்னிகை யனேகருடன்
வைய மீதிழிந் இந்தவான் பொய்கைநீர் மருவிச்
செய்ய மாமலர் கொய்குவான் சென்றபோ தியானத்
தைய லார்தமைப் பிரிந்தொரு தமியளா யினனால். 28
தேடி னேன்பல விடந்தொறும் தெரிகிலேன் றிகைத்து
வாடி னேனுளம் வருந்தி வந்திவ்விட மருவிக்
கூடி னேன்படர்ந் துளசெயல் நின்செவி குறுகப்
பாடி னேனவர் தமைக்கண்ட துண்டுகொல் பகர்வாய். 29
என்ன வோதவம் மொழிகள் தன்னிரு செவியுறலும்
அன்ன மாதுதன் திருமுக நோக்கியங் கவர்கள்
முன்ன ரேயொரு விமானத்தின் மீமிசை முடுகி
மன்னி யேகினர் வானிடை யென்றனன் மறையோன். 30
உ.ந்தன் மாமக ளாகும்யாம்
தந்தை யாகுமென் றவனடித் தலத்துவீழ்ந்
ஆழ்ந்த வன்பினோ டந்தணன் றனதடி யதன்மேல்
வீழ்ந்த மங்கையை நோக்கிநீ வெருவிடேல் வெகுநாள்
வாழ்ந்து மல்கவென் றாசிகள் பற்பல வழங்கித்
தாழ்ந்தெ டுத்துமார் பிருகுறத் தழீஇனன் றகவாய். 32
னீர்துடைத் துச்சிமோந் இந்தமெல் லியல்வீட்
ளாளெனி லுலகன ரொவ்விடார்; நமது
வழிய ளோர்களும் வசைமொழி புகல்குவர் வளரப்
பழியு ‘மெய்துமென் றஐஞ்சியே பன்முறை நினைந்தே. 38
ஆலி நாதர்தன் கோயிலில் நடனஞ்செய் பவர்க்குண்
மேலி நாள்தனை -வியரிலா தயர்ந்துபெண் விருப்பா
மாலி னோடுற லுணர்ந்தவ னாகியம் மடவாள் ்
பாலி னிங்கிவ டனைவிடிற்-.பரிவொடும் வளர்ப்பாள். 34
என்ன வேதியன் கன்னியோ டாங்கவ ஸிவின்வாய்த்
துன்ன லோடுமவ் வேசையு மடுத்தெதிர் தோன்றிப்“.
பொன்ன டிப்பணிந் தேத்திய பூங்கொடி நிகரும்
கன்னி யாரெனக் கேட்டலும் வே.தியன் கழறும். –35-
முன்பெ டுத்துள சனனங்க: டொறுமுயன் நிழைத்த
என்பெ : ரந்தவத் தளித்தது: மகளிலா மையின் நீ
, துன்பு றத்தெளிந் தவையொழித் தஇடும்வகை தோன்றும்
அன்பி னாலிவள் தனையுன்க் களிக்குமா றடைந்தேன். 36
என்று ரைத்தவ உடன்வர லாற்றையு மியம்பி
நின்ற வக்கொடி தன்னையு நெறிமுறை யளித்துச்
சென்ற டைந்தனன் தனதகம் அளித்தசே யிழையை
porn னத்தன தகத்தினுட் கொண்டுநண் ணினளால். 37
நாட்க அணங்கு நங்கையை வளர்த்தாள் ‘
நாக மங்கையர் நானில மடந்தையர் நவிலும் —
மாக மங்கையர் மலரயன் சவென்குகன் மதன்றம் >
போக மங்கையர் எவர்களும் புனிதநா
ஆக மங்கையு நிகரிலரி வளழ கறிந்தேன். ப 38
துமுதம் உற்றெழ மதித்தநாள் தூயபாற், கடலில் அமுத முற்றெனத் தோன்றிய வணங்தர் சமுதைக்
குழுத வல்லியென் ஹறொருபெயர். குறித்தழைத் தனளால்;
நமது நாயக வாலியாண். கோயிலின் நடிப்பாள். 39
பவள வாயிதழ் குவளைகண் பகியகார்க் கூந்தல்
இவட ஸனால்நமக் .களவிலாப் : பேருறு மெனக்கொண்
டவளை யாதர வுடன்சுமந் தளித்தபெண் ணாகத்
தவள வாயழு தூட்டியத் தையலும் வளர்ந்தாள். 40
கோதி லாடனக் கமைவன வகைவகை குறிக்கும்.
பாத மேமுதன் முடியள வாகவே பலவா
யோது மாவவ யங்களுக் கொழுகொளி பரப்புஞ்
. சோதி யாமணிப் பசும்பொனின் ‘ கலன்கள்சூட் டினளால் ;47:
பாட கம்செழும் பதுமம் நேரிய பதம்வருந்த
நாட கத்தொழில் புரிபவள்: யாவுநன் கறிந்தாள் ;
சூடகக் கையின் விரல்களாற் றுவன் றிடத் தெரித்திட்
டாகப் பசுந்தந் இயாழ் பயில்வது மறிந்தாள். 42
இனைய தாயதந் தொழிலெலாங் கற்றபின் துளவம்
புனையு மாலிதா யகன்றிரு முன்ந்டம் புரிந்து
வினைய கற்றுபொற் படிகநீர்த் துளவமு மிசைந்து
மனைய ணைந்துவா இத்திடு பள்ளிமன் னுவளால். 43
ஆலை யின்கரும் பனையமா .தெழில்வள மறிந்து
வேலை சூழ்புவிப் பரப்பெலாம் விலங்கிடக் தனிச்செங் –
கோலை யோச்சிடு மரசர்கள் குலவுமிங் இவளைமாலை சூட்டிடக் கிடைக்குமோ எனமருண் டனரால். 44
னியும் பாகும்நற் பாலுடன் கைத்திட மிழற்றும்
இனிய சொல்லினாட் கேவலிந் திரியத் தையவித்த
புனிதவ ரும்மதன் னூன்முறை புரிகுவ ரென்னின்
மனித ராயினோர் யாவரே மருளுறா தவரே? 45
பரகாலரின் காதல்
வேறு
அன்னவ ஸிவ்வா றாக விருக்கும் மதுதன்னைப்
பன்னரும் €ர்த்திக் குறையலூர் வாழும் பரகாலன்
nora லுணர்ந்தே யங்கவ ளாசைத் தளைமேலும்
துன்னிட் வவ்வூ ரேகுவ தற்குத் துணிவானான். 46
தங்க மூடன்பன் மணியொளி ருந்தண் டிகையேறிப்
பொங்க ரெனும்திண் புயவலி தோழர் புடைசூழ
மங்கு லளாவும் .பொன்மதி டன்னை. மதியோடுஞ்
செங்க இருஞ்சூ ழாலி நகர்க்கண் சென்றனனால். 47
ஆங்கொ ரிடத்திற் றுன்னி யிருந்திட் டதன்பின்னர்
தீங்கனி யொக்குஞ் சொல்லினண் மேனித் இறயோடும்
பாங்குற வைகும் நல்லிட முங்கண் படனோக்கி
ஈங்க டைமின்னென் றேவிட நால்வ ரினிதோடும். 48
அன்னவள் வைகும் பொன்மனை சென்றா ரதில்காணார்
துன்னி நடஞ்செய் சாலையி ஸும்துன் வினர்காணார்
நன்னரி யாழ்வல் லாரொடு கற்றே நவில்கூடந்
குன்னில டைந்தே யங்குறு பெண்ணமு தந்தன்னை. 49
கண்ட னரம்பொன் மேனியின் வடிவம் கண்ணென்னும்
புண்டரி கங்கொள் ளாம லுளமற் புதமெய்தி
எண்டிசை யுள்ளும் கண்டில மிப்பே ரெழிலுக்குத்
தொண்டுறும் நந்தம் தோழனு மென்னத் துணிவுற்றே. 50
மீண்டனர் தாமுன் வைகுறு மிலின்மே வினர்தம்மைக்
காண்டலு முள்ளங் களிமகழ் துன்னக் கலிகன்றி
பூண்டிடு மன்பின் ச௪ண்டுளி ரோநீர் புகல்வீரென்
றாண்டவ னோதக் கேட்டலு மவள்வடி வறைகன்தார். 51
மழையள ‘கம்தண் பிறைநுதல் விற்புரு வம்வாட்கண் ;
குழையணி வள்ளைக் கன்ன மெளின்பூ |
அழகமை யும்கண் ணாடிக போலும் அமுதஞ்சொல்
பழமுதிர் தொண்டை யிதழ்தர எங்கள் பல்லாமால்; 52
விதுவ தனம்வளை கந்தரம் வேய்த்தோள் யாழ்முன்கை
பதுமம கங்கைத் தளிர்விரல் கிளிபாலி கையினுகிர்
புதுமலை முலையா லிலைவயி றாமெறும் பூரோமம்
உதக மெழுந்திரை வரைதுடி யிடைசுழி யுந்தியதே. 53
அராவ. நிதம்பம் கதலிகுறங் கலவன் சரணாம்
வராலின் கணைக்கா லாமைப் புறவடி. மன்னும்சர்
குராசு பரட்டாம் பந்துகுதித் துகிர்தான் விரலாம்
பராவிய தாள்ங் கந்திகழ் பஞ்சு பதந்தானே. 54
அன்ன மெனப்படர் மெல்லிய நடைமயி லஞ்சாயல்
இன்னக னமைதிக ளொப்பிட ஒவ்வா எழிலுற்ற
கன்னியை யாயிர மாதரு ளோர்பெண் கனியென்ன
மூன்ன ரிழைத்துள நின்றவ மேமுன் னியதென்ன. 55
அண்டர் மத்திட வெண்கடல் வந்தெழு மமுதென்னக்
கொண்ட. லுதஇித்தெழு முன்னெழு மின்னற் கொடியென்னப்
புண்டரி கத்திரு மலரிடை வாழும் பொன்னென்னக்
கண்டன மெம்மிரு கண்கள் களிப்பக் கடிதென்றார். 56
அச்சொற் கேளா வுள்ள மதற்குள் ளவளாசைப்
பிச்சுற் றேயங் கேகு தலுன்னிப் பெயர்போதின்
மச்சுத். தேரோ டாதவ னாழி மறைவுற்றான் நச்சுற் கென்ன நள்ளிருள் உள்ளில்: நணுஇியதால். 57
வேறு .
இந்த வுலகம் தனில்பிறந்திட்
டிறக்கும் பிறவி தன்னையொழித்
குந்த வுலகம் பெறுநான
மறிய வுரைக்கும் குருபரனை நிந்தித் இகழ்ந்திட் டஞ்ஞான நெறியோ துவர்த மதியுள்ள
சந்தைக் கருப்போ டியதெனவே
இசையோர் எட்டு மிருண்டனவால். 58
துன்னிச் சிறந்த நள்ளிருள்வாய்த் .
தோழ ரொடுமவ் விடமகன் றக்
கன்னி யுறைபொன் மாடமதைக்
கலந்தாங் இருந்தோர். தமைவினவி
யன்ன மடமா தாடலுக்காய்
யாலிப் பெருமான் றிருக்கோயின்
மன்னி யடைந்த துளந்தெளிந்தம்
மணியா லயம்போய் மன்னினனால். 59
பரகாலர் குமுதவல்லியைக் கண்டார்
அங்கண் பிரான்முன் குமுதவல்லி
ஆடல் புரியும் போதினிலே
திங்க ளனைய முகத்தாடன் ‘
இருமே னியினைப் பதமுதலாய்
மங்கு லளக மீறாய்த்தன்
மலர்க்கண் களிப்பக் கண்டுருப்
பொங்கு ம௫ழ்வோ டாலியன் நாட்
“பேர்துிற் பணிந்து நின்றனனால். — 60
தின்றங் இருந்தப் பேரழகன்
நிகரில் வடிவந் தனைக்காணா
மன்றல் கமழுங் : குழல்மடவாள்
மதனோ வானத் திந்திரன்றான்
இன்றிங் கிழிந்து வந்தனனோ?
வெனவே குவளை யிருத்டங்கண்
ஒன்ற வவன்றன் றிருமேனி
முழுதும் நோக்கி யுன்னுவளால். 61
மருமந் துளவ மணிகாணேம்;
வதனதந் திருமண் குறிகாணேம்;
மிருமந் தரநேர் மணிப்புயத்தி
லெஃகம் வளையின் பொறியிலையால் ;
இருவின் மகழ்நர்க் கடியனலன்
எனவே இந்தை தெளிந்தவன்பாற்
கரும மிலையென் நுளமுமிரு
கண்ணும் திருப்பிக் கசிந்தனளால். 62
கசந்த மடந்தை திருவாலிக்
கண்ணன் நறிருமுன் னரிற்காலில்
-விசிந்த சதங்கை கலகலென
வேற்கண் சுழலக் கரமசைய
ஓ௫ந்த கொடியி னிடைநுடங்க
வொளிர்வா ரிறுக்குந் தனங்குலுங்கப்
பசந்த மேனி வெயர்வரும்ப வுரோமம் பொடிப்ப நடம்பயின்றாள். 63
நடனம் புரிந்து பெறுவதெலா
நல்கு வதுகொண் டவணீங்கி
மடம தருள்வார் கள்புடைசூழ
மாட மணுடுப் பசுங்கிளிக
ஞுடன்நன் மொழிகள் பலபயின்றிட்
டுணவு பொசித்திட் டுறைபள்ளி
இடமங் கணுகிப் பஞ்சணைமே
லிசைந்தே திருக்கண் வளர்ந்தனளால், — 64-திருக் கண் வளர்த்தாள் – உறங்கினாள். ‘**:அம் மா மலர்க் கண் வளர்கின்றான்”’ என்பர் சடகோபர்
பாரகாலரின் விரகம்
பரகா லனுந்தங் கிடமணுகிப் _
பஞ்ச சயனத். இனிதமர்ந்திட்
டிரவான் மதிபெய் கொடுங்கனலால்
எய்தும் பொதியத் தென்றலினால்:
அரவார் கடலி னொலிக்கூற்றால்
அன்றிற் புலியால் வென் நிமதன்
கரவாய்ப் பொழிஐங் கணைவிடத்தாற்
கலங்கி யுறங்கா துருகினனால், 65-பஞ்ச சயனம்-படுக்கை, அஞ்சுருவிட்டுச் செய்த படுக்கை. பஞ்சவிதமான படுக்கை.
அழகு, குளிர்த்தி, மார்த்தவம், பரிமளம், தாவன்யம் ஆக ஐந்துருவிட்டுச் செய்த
படுக்கை” என்பர் வியாக்யான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை
உருகி யுருக நினைந்துநினைந் துண்ட காம விடமதனாற்
கருக மேனி யவளையின்னும்
காணு மாசை யெனுமமுதம்
பருகி யுயிர்பெற் றிவ்வகையா
யிரவை யொழித்தான் பகலோனும்.
பெருகி யொளிருங் கிரணமுடன்
பிறந்தான் குணபாற் பெருங்கடலின். . 66
காலைப் பொழுதி னஸெழுந்துசெய்யுங்
கரும மியற்றி முடித்திடுமவ் வேலை தனதா ருயிர்த்தோழர்
மேவ வவர்தம் முகம்தோக்கி
மேலைப் படருங் கருமமெலா
மூணர்வீர் நீவிர் விரைந்தெய்தி
யாலைக் கரும்பின் மொழியளெனை
யனையும் வகைசெய் தர௫ுண்மினென்றான். 67
அந்த மொழியை தோழர்கள்சென்
றகல்வா னொழிந்திங் கடைந்தவடன்
தந்தை தாயா ர௬ுடன்மொழிய
வவருங் கேட்டுச் சாற்றுமவர்
எந்த வூர்யார் குலம்பெயரென்
.னெனவே கேட்க வுளதுரைக்கச்
சிந்தை மஒூழ்ந்திட் டவற்கவளைத் ட்ட
இருமா மணஞ்செய் திடநேர்ந்தார். 68
குமுதவல்லியாரின் திருவுள்ளம்
அதனை யறிந்தக் குமுதவல்லி யவன்றன் செய்கை யறிந்ததனால்
விதனத் துடன்யா ஸிவ்வுலகின் விண்விட் டிழிந்த துணர்வீரான் தனொத் துளனே யாயினும்பல் வளத்தின் மிகுந்தோ னாயினுமச்
சுதனுக் கடியா னல்லனவன் சுடலை யாடிக் கடிமையுளான். . 69
ஆத லாலங் சுவர்க்களித்த
லடுக்கா தவனைச் சேர்வதிலும்
வீத லேநன் செனவடியேன்
விரும்பி யனலிற் புகுவனென
வோத லோடு மம்மொழிகேட்
் டுனது நினைவஃ தெனிலுன்மேற்
காத லாலங் கவன்றிருமால்
கழற்குத் தொண்டா குவன்கண்டாய். 70
என்ன வந்த வவன்றோழ
ரிதனை யெடுத்திட் டியம்புதலும்
அன்ன செய்கை யவன்புரியி
லவனை மண.நான் புரிவனெனச்
சொன்ன மொழிகேட் டவர்களுந்தந்
தோழ ரிடத்தில்
பன்ன வதனைப் பரிவுடனே
பரகா லனுங்கேட் டுளமகழ்ந்தான். 71-
பரகாலர் மாலடியாரானார்
அந்த மடமா தென்னுடனோர்
அணியா தனத்தி னிருப்பளெனில்
இந்தவ கைசெய் இடவரிதோ’வென்றக் கணத்தென் றலை௫ரைத்து மூந்து மிரண்டு புயந்தனிலு | மாழி வளைமுத் திரைபொறித்துச்
சிந்தை தெளிகே சவவாதித்
திருமண் காப்புந் தரித்தனனால். 72
தோழர்கள் குமுதவல்லியாரின் கருத்தை உரைத்தலும் பரகாலர்
காம்பறத் தலை சிரைத்து, தோளில் சங்கு சக்கரம் பொறித்து, இருமண் காப்பு-அணிந்து, வைணவரானார். மதம் மாறும் போது தலை ிரைப்பது மரபு
என்பதை வடிவழகியாரும் குறிப்பர்
-தளங்கொள் வனமா லிகையினொடுந்
தாளார் தண்ணந் தாமரையின்
வளங்கொள் மணியின் றாழ்வடமும்
மணப்பூண் டயங்குந் திருமார்பில்
விளங்கும் படியாய்த் தரித்தவனும்
விரைந்து வருத லறிந்துமுயற் களங்க மிலாத மதிமுகக்கா
ரிகையு மணத்தற் கொருமித்தாள். 73
ஒருமித் திடப்பொற் நூணிறுத்தி யுயரச்செழும்பட் டதுவிரித்துக்
குருநித் திலச்சா லர்கள்தூக்கி
குலமா மணியின் விளக்கேற்றி
யருகிற் கமுகுங் கதலியுஞ்சேர்த்
குண்டி மனுக்கட வுள்தச்சன்
நிருமித் திடுமோ ரண்டமென
மணிப்பந் தலினை நிரப்பினரால். 74
சாந்தால் மெழுடச் சுண்ணத்தாற்
றயங்கும் கோலந் தனையெழுதி
பூந்தா மரைகள் பூத்ததுபோற்
பொற்பா லிகையைம் பதுமுதலாய்
மாந்தர் பலர்சேர்ந் தவரவர்கள் .
மற்று மியற்று வகையெல்லாம்
வேந்தர் தமக்கு மிவ்வளமை ட
விளையா தெனவே யமைவித்தார். 75
மங்கல நாண் புனைந்தார்
உருமின் முரச வகைமுழங்க
வொளிர்சங் இனங்கள் பலகுமுற
விருவர் தமையு மணக்கோலம்
இயைவித் தோரா தனமிசையே
மருவ விருத்தக் கனன்முகஞ்செய் ‘
வகைக ஸணிரப்ப மகிழ்வினொடுந்
இருமங் கிலியங் குமுதவல்லிக்
கணிந்தா ஸுயர்சீர்ப் பரகாலன். 76
மணமார் முறைகள் பலவும்விதி
வகையின் வழுவா தஇயற்றியபின்
குணமார் மடந்தை யொடுமறையுட்
குறுகி யணையுட் பொருந்துதலும்
கணவ னாக வந்தபர
காலன் றிருமே னியையரவின்
பணமா ரல்குற் குமுதவல்லி
பாரா விதனைச் இந்தித்தாள். 77
தடனம் புரியத் தமதுருவ
மாற்றி வேறோர் நற்கோலஞ்
சடல மணியு மவர்போலத் தாங்குங் கோல மகத்தினுளே அடல்சே ராழிக் கரத்திருமா
லணுகக் காணோம் ஆதலினால்
தொடலா காதென் றணைதனைவிட்
டெழுந்தா ளவனுஞ் சோர்ந்துரைப்பான். 78
என்னே யென்னை யிகழ்ந்தெழுந்த
இயம்பு கெனவாங் கவன்கேட்பப்
பொன்னே யனையா ஸணினைந்ததனைப்
புகலக் கேட்டாங் கவன்மகிழ்வாய்
முன்னே நீயென் னண்பருடன்
மொழிந்த நெறியின் முறைபுரிந்தே னின்னே புரியும் வகையுரைக்கி
னதையு மிழைப்ப னெனவுரைத்தான். . 79
குமுதவல்லியாரின் நிபந்தனை
அனைய மொழிகேட் டாங்கவளும்
அவனம் புயமா முகனோக்கி
யெனை நீ தொடவேண் டினையென்னிற்
நிருமா லிருநா லெழுத்ததனை : நினைபா கவதர் நூற்றெண்மர்
மருந்தா ரமூதளித்து வினைநீங் கவர்தம் பதவுதக
மிசைந்து வரவேண் டிடுமென் றாள். 80-
திருமால் இருநால் எழுத்து-அஷ்டாட்சரம், 108 பாகவதர்களுக்கு அமுதம் வழங்க வேண்டும்,
பதவுதகம்-திருவடித்தீர்த்தம்.
அன்ன திழைத்து வருவேனென்
றம்மா நகர்வா மந்தணர்கள்
பன்னு மொருநூற் றெண்மருக்குப்
பரிவிற் றேவா வமிர்தமென மன்னு மிருமூ வகைச்சுவையின்
மலியா ரமுத மருத்தியிவர்
_.. துன்னும் பததீர்த் தமுமருந்தித் த தூயோ ஸனாய்மீண். டடைந்தனனால்–81-
கண்டா ளவனுட் டிருமாலுங் ர
கலந்த பரிசா னுளங்கனிந்தவ்
வண்டார் குழலி யவனுடனோ
ப ரணையின் மருவி யிதழமுதம்
உண்டா ரொருவர்க் கொருவர்முலை
யுடன்மார் பிறுகும்’ படிதழுவிக்
கொண்டார் மதனூல் வழுவாம ட்ப
லின்பக் கடலுட் குளித்தெழுந்தார். ‘–82-
வேறு
இம்மா முறையே திளம்நூற் .
றெண்பே ரும்மா னகர்வாழ் –
செம்மா மறையோ ரண்டு
தெவிட்டும் படி யாரமுதம்.
எம்மா நிலமும் புகழும் OR ee tl
படியங் கவனு மியைவித் ௩1.
.” தம்மா னிதழ்வா யமுதுண் ன ன ரோ
டுறையு மன்னா டனிலே. 83
கையிற் பொருணீங் இயபின்
கடன்கொண் டதிலம் – முறையே ©
செய்யு மளவிற் பலநாள்
சென்ற பின்னர் கடனும்.வையத் தெவரும் நல்கா
தொழிப்ப மனமங் கவனும்
நையுற் தொருநாள் புரியா
துறைவீ டதைநண் ஸணுதலும். ் 84
மன்றன் மலர்சே ரளகக்
குமுத வல்லிப் பெயர்மான்
நன்றங் கெதிர்சென் றவனை
தோக்கா விதனை யறைவா
ளென்றும் நின்னோ டாலிக்
கிறைவன் வருவா னவனும்
இன்றுன் னுடனே கூடி
வருதல் காணா மென்னா. 85
கதவந் தனைமூ டித்தாழ் காப்புக் சடிதிட் டிடலும்
மதனொத் திடுமக் கலியன்
வாடித் தெருவின் கண்ணின்
இிதமுற் நிடநல் வசனம் மவடன் ஸிருகா துறுமவ்
விதமொத் தடவோ தினனாய்
மீண்டும் பகர்வா னானான். -86
மானேர் விழியாய் தனமும்
பிரியா துடனே வருமத்
தேனார் கமலைக் திறைவ
னின்றென் னுடனே செல்லாதேனோ வதனைகத் தெளிய
வுரைநீ யெனலும் மவளும்
ஆனா வன்னாள் ததியா
ரதனஞ் செய்வா யதனால். , 87
உன்னோ டே. ராலித்
இருமா லுற்றா. னவைதா
னின்னாள் புரியா தமையா
லெய்தா தொழிந்தா னறிறீ
யென்னா மொழியக் கேளா
வென்கைப் பொருளுள் ளனவும்
பொன்னே யனையாய் பலநாள்
புரிந்தே னதுபோ யினபின்.- 88
சிலனாள் கடன்கொண் டதனைச்
செய்தேன் கொடுப்போர் வேறிந்
நிலமீ தலையா லதையா
னிகழ்த்தும் வகையே தென்னக்
குலமா மணியே யனைய
குமுத வல்லிக் கொடியும்
பலர்தம் பொருணிீ வழியிற் ‘
பறித்தா லுஞ்செய் தடைவாய், 89
என்றங் கவளும் புகல்வ
இருசெஞ் செவிவந் துறலும்
நன்றென் றவண்விட் டே .
நலிசெய் தொழிலின் மிக்கோர்
குன்றம் பொருதோட் பலரைக்
கூட்டிக் கொண்டே தானிற்
சென்றங் கடைவோர் பொருளைப்பறிக்கும் செய்கை யறைவாம். 90-பலர்-நீர்மேல் நடப்
பான், நிழல் ஓதுங்குவான், தாமூதுவான், தேலா வழக்கன், முதலானோர்.
பரகாலர் கள்வராதல்
குடபாற் கடலின் கிழக்கில்
குணபாற் கடலின் மேற்கில்
வடமே ருவினிற் றெற்கில்
வதிதென் கடலின் வடக்கில்
இடமெங் கணினும் வழியின்
னியல்வோர் பொருள்கொண் டிடவே
கடவீ ரென்றே பலரை
யேவிப் பரகா லனுமே. 91
சேரன் சோழன் மாறன்
தேசத் இடைபா தைகளின்
ஓரங் களில்பல் லோரை
யேவி யுறுமங் கவர்கள்
ஆரத் துடனே பொருளு
மாடை பலவுங் கொண்டு
வாரும் மெனவே தானோர்
மரநீ ழலின்வை கனனால். 92
ஏவும் பலசே கவர்க
ளெங்கும் வழிபா தைகளின்
மேவும் மவர்கைப் பொருளும்
மிளிரா பரணம் முதலாய்.
யாவுங் கொடுமென் . றடியா
வதட்டா வெருட்டா வெருவி
நாவும் மனமும் முடலும்
நடுங்கப் பறித்தா ரன்றே. -93-
அவர்கைப் பறியுண் டவர்செய்
கதுதனா லெவரும் வழியுந்
தவருற் றேகும் மவரைத் , தனியங் ‘ குறையுங் கலியன்-எவரிம் முறைசெய் தனரென்
றறியான் போலிம் முறைசெய்
குவரு மூளரோ வென்ன
மொழிதன் பலவுங் கூறா. 94
ஒருவே ளையினுக் குணவும்
பழவத் திரமொன் நுந்தத் குருகாய் வருவித் தவரை
‘யாற்றிப் போமென் ௰னுப்பித் .
தருவார் நிழல்வை குதலுந் தன்றூ துவர்போய்ப் பறித்து
வருமாப் பொருள்கள் பலவும்
கொண்டே. யூர்போய் மருவி. ‘:95
இருவின் கொழுனன் னடியார்
நாூற்றெண் டிருநா மங்கள்
பருகும் படியா ரமுதம் — ‘
முன்பிற் பரிவின் னமையாப்
பொருவில் லவர்தம் பதனீர் .
கொண்டே புனிதத் துடனே
வருமங் கவனைக் குழுத
வல்லிப் பெயராள் கண்டே, 96
இன்றுன் னுடனெம் பெருமான்
வந்தா னென்றே மகஒிழ்வா
யன்றங் கவனை யழையா
வளாயுள் ளணுகி யவனோ
டொன்றும் மனதாயனைமே
லொருமித் இன்பந் தந்தஇட்
டென்றும் மிவ்வா றாகவெய்தத் தகும்நீ யென்றாள். -97-
எம்பெருமான் தடுத்தாட் கொள்ளல்
அவ்வா றிவனும் புரியா
பலனா ளவளோ டணுகுற்
றொவ்வா வின்பந் துய்த்திட்
டுறைநாள் குனின்முன் னாள்வாய்
செவ்வாய் திருமாழ் மார்பத்
தேவன் ஏவும் மாயை
யெவ்வா றிவனோ டுறைவ
தெனநா ஸணுற்றே கியதால். 98
மாயைத் தொடர்பாங் sae
மயர்வற் றிடுநன் மதியைக்
காயைத் தின்போ ஸுக்குத்
கனியீ வதுபோ லருளச்
சேயைப் பரிவிற் றேடி
விரைந்தே யதன்பின் செல்லும்
தாயைப் போலத் திருமால்
கலியன் றன்பா லுறவே. 99-
காயைத் தின்போனுக்குக் கனியை யீவதுபோல், மயர்வற்றிடு நன்மதியை அருள, சேயைத்.
தேடும் தாயைப் போல திருமால் கலியன்பாலுற, என்று கொண்டு கூட்டுக, .
நினையும் பொழுதிற் பின்னும்
வேறிந் நினைவுங் கொண்டான்
அனையன் களவின் ஹறொழிலின்
னகப்பட் டவன்செய் திடுமவ்
வினையந் தனையும் பறிசெய்
வேடிக் கைகளுங் கண்டு
குனைபின் பவனுக் கறியும் படிசாற் றுதுமென் பவனாய். 100
குன்பொற் பாதம் தொழுமவ்
விதிசங் கரனிந் திரனை ‘
யன்பிற் பாரா நீவி
ரமரர் கூட்டத் துடனே
முன்பிற் செலுமென் றுரையம்
மொழியின் மனையா ர௬டனே
இன்புற் றவரும் மவ்வா
ஹேகற் இவ்வா- றமைவார். 101
பிரமன் கலைமா துடன்மா
தவர்தம் வடிவம் பெறலும்
பரமன் னுமையா ளொடுசங்
கமர்தம் -படிவங் கொண்டான்
சுரமன் னயிரா ணியோடும்-:- ்
நரர்தம் சொருபங் கொளலும்
வரமன் ஸிடுறித் தர்களும்
இருமுத் தர்களும் மற்றும். 102
வானந் தனில்வை குவரும்
மவர்தம் மனையா ௬டனே
மோனம் பெறுசித் தர்களும்
முனிவோர் களுமா ஸிடராய்
கானந் தனிலா பரணம்
கவினப் :பலருஞ் செல்லத்
தானும் இருமா துடனே
மறையோர் படிவம் தாங்கா… : 103
பின்னே கிடலும் மதன்முன்
பெருங்கா னிடையே வைகும்
தன்னே ரில்பர காலப்
பேரார் வருவா ர௬ண்டோ
வென்னா வுயரும் மரசத்
தருமீ தேறிப் பாரா
வன்னோர் வரவைக் காணா
வகமுண் மகிழ்வா யிழியா. 104
தன்சே வகரைக் கூவா
தடிவாள் வேல்கைக் கொள்ளா
வன்போ டெதிர்சென் றவரை
வழியின் மறியா வுமது
பொன்பூ டணமுள் ளவெல்லா
மேல்விட் டாவி போக்கா
முன்போ டுமெனா மொழியா
முனிவாய் வரன்மே ஸளனோசக்கா. 105
தனனே முதலாம்
புலவோர் நித்தர் முத்தர் அருமா முனிவர் சத்த
ரெவரும் மவர்தே வியரும்
வெருவா மிரட்டிட் டவர்தம்
மேலுள் ளவத்தி ரம்மும்
குருமா மணியா பரணம்
எவையும் வலுவிற் கொண்டான். 106
அவரே 7கியபின் கமலத்
் தயலுந் தளவெண் முளரித்
துவர்வா யவளு மிகலூர்
துணிவா யவர்தம் பொருளுங்
கவர்வா நினைப்போ டவிடம்
கடிகித் தடியா னதுகொண்
டிவரே குதலும் வெருவா:
விதனைக் கலைப்பெண் பகர்வாள். 107
ஐயா நீவீ ரெம்மை
அடித்துத் துடிக்கக் கொலைதான்
செய்யா துயிரோ டேகும்
படியே யருள்கொண் டிடிலெம்
மெய்யா பரணம் பலவும்
மேல்வத் திரமு முதலாய்க்
கையாற் றருவோ மென்னக்
கழற்றித் தந்தே கனரால். 108
உடனே சிவனும் முமையும்
வரலும் மொளிர்வா ஞடனே
அடல்சேர் தடிகொண் டிவனும்
மதட்டிச் செல்லு மளவிற்
குடலும் வயிறும் முயிருங்
குலையப் ‘பயமுற் றுமையுங்
கடலின் விடமுண் டவன்மெய்
யுடனே கரவா யினளால். 109
மறையக் கிழிசங் கமநின்
னுடனே வந்தா ளெங்கென்
றறையப் பயமுற்று றுவனும் மறியே னெனவே செவியுள்
உறைகுண் டலமே முதலா
யுளதுங் காவி யுடையுங்
குறையற் பதியுற் றவன்கைக்
கொடுத்திட் டவனும் போனான். ‘ 110
இவ்வா றெவருந் ததந்திட் டேகும் பொழுதோ ரொருவர்
செவ்வாய் மடமங் கயருக்
கொருசே லையுமா யவருக்
கொவ்வா வொருகோ வணமும்
மூதவா மற்றுள் ளவெலாம்
எவ்வா வெருட்டிப் பறியா
ஏகும்படிவிட் டனனால், –111
அனைய பொருண்கண் முழுதும்
மாலிப் பதியின் னமது
மனையிற் கொடுபோ யடைமின்
னெனமற் றவரை யேவி
தனையொத் துயரு மரசின்
றருவின் னடிநீ ழலின்வாய்
தனையொப் பவரும் நிகராக்
கலியன் றனிவை குதலும். 112
வேறு
– வானி லுணரப் படுமயனும்
மமுவா எளியுமவ் வாறேகத்
தேனி லினிய விளங்குதலைத் இருபின் றுடருந் திருமாலும்மேனி முழுது மாபரணம்
விளங்க நடந்து வருவதனைக்
கானி லுறையும் பரகாலன்
காணா விதனைக் கருதினனால், 113
முனிவோ ரிமையோ ருனற்கரிதாய்
மூதுமா. மறையின் முடிவிளங்கும்
குனிமா முதல்வேற் றுருவமதாய்த்
தன்னைத் திருத்தக் கருகியுளம் கனிவா யடைத லுணரானங்்
…. கவர்தம் பொருளைக் கவர்ந்துகொளில்
இனிநா. மென்றும்’ வேறுபொருட்
கிச்சை வேண இலையென வே.-1i4
உள்ளங் களிப்பாய் ஏவனடநீ
யோடா தேநில் லெனவெதிர்போய்
புள்ளந் தனைவான் மிசைசு ழந்றிச்
போவ தெங்கென் றதட்டியுன்வாய்
விள்ளப்’ புகுவென் : றங்கவர்பால்
விளங்கும் பணிதிக் ககமகழ்வாய்
துள்ளித் துள்ளி நடம்புரித் ணரா மறையோ னிவைசொல்வான். 115
அப்பா! கேணாம் வேட்டகம்போய்
யாங்குற் நிடுமென் மனையவளாம்
இப்பா வையொ டுமுனதாலிக் ்
கேகு வெனநீ யெகிர்வந்தே -கைப்பா யிடுங்கட் குடித்தாடுங்
களிபோற் குதித்த லெவனெனவே
– செப்பா வதற்குத் திருமங்கை
மன்ன ஸனிதனைச் செப்பிடுவான்,–116-
பரகாலர் நிகழ்ந்தவை கூறல்
மறையோய்! கேட்டி யுயிர்போல .
மருவு மெனது மனையவளாம்
மிறைபோ ஸுதற்சேர் குழுதவல்லிப்
பெயராள் இனமு மிவ்வூரில்
உறைபா கவதர் நூற்றெண்ம
ருண்ணத் ததியா ராதத்தை முறையோ டிழைக்கி னலாலென்மேன்
முனிவாய்த் தன்னைத்தொட வொட்டாள்.–117-
அதனாற் பொருள்கை யுள்ளனவு
மந்த முறைசெய் தனன்பின்னர்
இதமாய்ப் பிறர்பாற் கடன்கொண்டிட்
டிழைத்தேன் அதற்பின் கடன்யாரு
முதவா தொழிய வுற்றதற்பின் . இதெலா மவளோ டுரைத்தினியான்
புரிவ தெனக்கேட்ப
விவ்வா றிழையென் றவளுரைத்தாள்.–118-
அந்த முறையால் வழிபறித்தங்
கதனை முயல்வேன் பலர்பொருளோ
டிந்தந் இனமும் வரப்பறித்தெம் – மில்லத் ததனை தூதுவர்பான்
முந்த வனுப்பி யினும்வருவா
ருண்டோ வெளவிம் முறையிருக்க
வந்த வுமது பொருள்பறியா விடுகேன்; எனக்கு வழக்கீதே.–119-
ஆத லாலும் மிடத்துளதாம்
பொருள்க ளனைத்து மெனக்களித்
போத லேநன் கல்லவெனிற்
புடைத்துப் பறித்திட் டுமதுயிரைக்
காது வென்கை யுடைவாளா.. :
லென்னக் சுதித்திட் டருகணைய
மாது தாட்டா மரைவதனம்
நோக்கி மறையோன் வகுத்துரைப்பான். 120
மனையா டனது காதலினால்
வழியில் வருவோர் தமதுபொருள்
தனையாங் கவர்கள் துயரமுற
வாள்கொண் டடர்த்துக் கவர்ந்திடுமிவ்
வினையான் கள்வ னோவலதிம்
மிகுந்த பொருள்கொண் டருந்தியிடும்
அனையார் கள்ள ரோ?விதனை
யறிய வுரைநீ யென்றனனே. 121
கேட்ட மடவா எளிக்கொடியோன்
கிடைத்தற் கரிதா யெனையளித்தோர்
பூட்டும் பணிகள் பலவுமது
போதா தெனவீன் றவரையருள்
பாட்டன் பாட்டி யவரிடுதற்
பணிதி பலவும் பலபலவாய்
வேட்ட வகத்தோ ரிட்டதுவும் ன
விரும்பிப் பறிக்கத் துணிந்ததனால், ட. ட. 122
அந்த பயத்தால் எனக்கொன்றும்
‘தோன்ற விலையென் றவளுரைப்ப
இந்த விதமா யொருவர்முகம்
, “ஒருவர் தோக்கி யிருந்திடலும்
சிந்தை முனிவாய்ப் பரகாலன்
செங்கை யுறைவாள் தனைச்சுழற்றா
வுந்தன் முடியான் றுணிப்பனென்றவ்
வொளிர்வாள் தன்னன யோங்குதலும். 123
அஞ்சி நடுங்கு மவர்போன்மெய்
நடுந்கா வவனை நோக்கியெமைத்
துஞ்சப் பொருதா லஇிலுனக்கென்
பயனோ சொல் ?லெம் பாலுளவாம்
விஞ்சு மணியா பரணமெலாந்
தருவே மெனவேண் டுதலாகக்
கஞ்சன் றனையுந் இயினளித்த
. கடைமா மறையோன் கழறலுமே. 124
அதுவெஞ் செவியுற் றிடலுமுறை யணிவா எிட்டுக் கதைகரத்திற்
கதுவப் பிடித்திட் டடிப்பதுபோற்
கப்பி யிடவம் மறையவனும்
மதுகைப் புயத்தோய்! நீயடியே
லென்னா மேல்வத் திரமதனை
இதுகைக் கொள்ளென் றெறிந்திடலு
மவனு மிதனை யியம்பிடுவான். 125
உனதுத் தரியம் தந்ததனா
லென்னோ பலனுள் ளதுமேலும்
மனதுக் இசைய மனையவளென்றுரைதந் திடுமிம் மடமங்கைதனது பணிக ளஞூள்ளவெலாந்
. தரிக்கு மொருவத் திரம்தவிர
வெனது இருமுன் வைத்திடுவா
-யெனமங் கையர்கோன் அதட்டலுமே. 126
மறையோ ஸனெனுமத் திருமாலு
மணியா பரணந்், தனைமடவாண் –
முறையோ வெனத்தன் தநிருக்கரத்தாற்
கழற்ற வேகு முறையறிந்து நிறைநா ணொன்றும் வேண்டேன்மற்
றுளவெ: லாம்நீ தருகென்றே
_ கறைவாட் டொழிலில் நிகரில்பர
கால ஸுரைப்ப .வதுகேளா. .–127
நீல னுரைத்த படிமடவா
ணிறைநா ஸணொணன்றும் தவிர்ப்பித்துச் ்
சால வணியும் பணிகளெலாஙம்: .
கழற்றி யவன்கை தந்தனனால்;
கால னளெளப்பூந் ‘தடத்தடருங்
கராவின் வாய்ப்பட் டுளங்கலங்கி
மூல மெனவன் றழைத்தகரி
முன்வந் ததன்பே ரிடர்தவிர்த்தோன். 128
அந்த மணியா பரணங்கள்
யாவும் கைக்கொண் டதன்பின்னர்
உந்தன் மேனி தொடுகிலன்யானொளியா துன்மே லுள்ளவெலாந் – குந்தி டெனக்கை விரலணியுந்
இருவா ழிதனைத் தவிர்ந்திடமற் றெந்த வெந்த வாபரண .
மெல்லாங் கழற்றி யீந்தனனால். 129
அதுவுங் கரத்திற் கொண்டதற்பின் னம்மா மறையோன் மேனிதனைப்
பதும நிகரும் பதமுதலாய்
முடியீ றாகப் பார்த்திடலும்
கதுவுங் கரத்தி லாழிதனைக்
கண்ணிற் காணாப் பெருங்களவா
இதுநீ யொளித்தால் விடுவேனோ?
வதையும் தருக வென்றனனால். 130
கொழுந்து பொருந்திப் படர்கீர்த்திக்
கலிய னிதனைக் கூறுதலும்
எழுந்து பெருகு முவகையையுள்
ளடக்கி யிஃதென் கைவிரலில்
அழுந்து முறையாற் கழற்றுதலுக்
கொவ்வா வெனக்கேட் டாங்கவனும்
செழுந்து ளவன்றி ருக்கரத்தைக்
கையாற் பிடித்துச் செப்பிடுவான். 131
இவ்வா றாகக் கழற்றுகென்றங்
குலியைக் கரத்தாற் பிடித்திழுக்க
அவ்வா ழியுங்கை வராமையினா
லதனை வாய்கொண் டீர்த்தனனால்
கவ்வா விழுக்கும் பொழுதெமது
““கலியனோ” வென்றவன் முடிமேல்
ஓவ்வா வலது கரந்தனைவைத்துகந்தா னனைபா லுண்டுகந்தோன். 132
பரகாலர், சைவிரலில் உள்ள இருவாழியை வாய் கொண்டு கடித்து
இழுத்தார். அப்போது பெருமான் உவந்து **எமது ஈலியனோ”’ என்று கூறி அவர்
முடிமேல் வலதுகரத்தை வைத்தான்,
தலைமேல் கரம்வைத் துகந்இடவுந்
தெரியா னாகி யதைத்தவிர்த்தே
மலைபோற் குவித்த பணிமூட்டை
தனைச்சென் றெடுக்க வதுபுவியின்
நிலையா யழுந்தி வராமையினை
யறிந்தாங் இதனை நினைவுற்றான்
வலைபீ றநிடுஞ்சேற் றடம்பலவாய்
மருவுங் குறைய லூர்வள்ளல். – ட 133
முன்னே யடைந்தோர் தமதிடத்துங்
கவர்ந்த தெடுத்தோம் இவன்பணிகள்.
என்னே புவியிற் பொருதந்லிவன் ்
செய்மந் இரிப்பா மெனவுணர்ந்திட்
டன்னோன் தனைப்பார்த் ததட்டியடா
மறையோய் யறிமந் இரவன்மை
றன்னால் கவ்வை யழுந்திடச்செய்
குனைசொல் சாற்று கென்னலுமே. 134
அந்த வுரைகே ளாமூனங்கற்
றிந்த திருமத் திரமதனால் இந்த முறைசெய் தவன்யானே
யிதனை யறிநீ யென்றுரைத்தான்
முந்த வொருவா ளவுணனிடம்
குறளாய் மண்மூ வடியிரந்துட் –
டெந்த வுலகும் ஓஒரடிகொண்டளந்தே கவர்ந்த வெம்பெருமான். 135
ஆழ்வார் மந்திரம் பெறல்
ஆனா லந்த மந்திரத்தை அறியும் படியிங் கெனக்குரைத்துப்
.,போனா யெனிலுன் றனையுனதூரா்
போக விடுப்பேன் அலையெனிலுன்
னானா (HO தனையென்கை
யொளிர்வா .ளதனாற் றுணித்துயிர்போய்
வானா டாளும் படிவிடுப்பேன்
மறையோய் யிதைநீ யறியென்றான். 136
கொடியோ னான பரகாலன்
கொதிப்பா யுள்ளங் களிப்பெய்தி
வடிவா ளதனை யுறைகழற்றா
வையம் நடுங்கும் படிநடந்துன்
முடியான் றுணிப்பே னெனவவனும்
முடிகி வரலும் பயந்தவன்போல்
படிமீ தவ்வாள் வைத்துவரிற்
பகர்வே னென்றான் படியுண்டோன். 137
புகலு மொழிகேட் டவ்வாளை
யுறையுட் புகுவித் தருகணையும் இகலோன் வளது திருச்செவியி
லுள்ளத் இருளை வெகுண்டெரிக்கும்
பகல்போ லிருநா லக்கரமாந்
இருமந் தரத்தைப் பகர்ந்திட்டான்
அகல்பூ விடைவா முயிரளித்த வயனுக் கனமாய் மறையறைந்தோன். 138
சூரியன் இருளை
ஓட்டுவான். அதனால் அவ்விருள் மீளவும் வருகிறது, ஆனால் அஷ்டாட்சரமோ
உள்ள இருளை எரித்து விடுகிறது. அயனுக்கு அறைந்த மந்திரம்-ஹம்ச சதை.
“அன்னமாக அருமறைகள் அருளிச் செய்த அமலன்”? என்று பெரிய திருமொழி
பேசும். ”அன்னமாய் அறைந்தாய் நீ” என்பர் கவிச்சக்ரவர்த்திகள்,
மாயை நீங்கியது
வானே முதலாம் பலவுலகும்
வயிற்றுள் எடக்கு நாரணனுந்
தானே தன்னை யவனறியச்
சாற்றுந் இருமந் இரமதனால் கானே வருவோர் தம்மைவாள்
். காட்டிப் பறித்த பரகாலன்
ஊனே யுடல்சோ ஷித்தாந்தி
யங்க ஞம்விட் டோடினவால். 139
குன்னுள் ளிருந்த கொடுமாயை
தனைவிட் டொழிதந்த தன்மையும்பூ
மன்னுந் திருமா துடன்திருமா
லுகந்த செயலும், மற்றவர்தம்
பொன்னம் பதங்க ள.றியுணர்வும்,
பரம பதத்திற், புகும்வழியும், துன்னு முயிர்கள் பெறுவாழ்வுந்,
இருமந் திரத்துட் டோன்றலுமே. 140-
இருமந்திரத்தால் ஆழ்வார் உணர்ந்தவற்றை ஆரியர் விவரிக்கிறார்.
கொடு மாயை ஒழிந்த தன்மையும், திருமால் உகந்த செயலும், பதங்கள் அறி
உணர்வும், பரமபதத்திற் புகு வழியும், உயிர்கள் பெறுவாழ்வும், இரும்ந்திர த்தால்
தெரிந்தன. இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் ** அர்த்த பஞ்சகம் ** என்பர்.
மனம்வாய் யொருமித் தவன்றுருத்தி ்
வைத்தூ திடுமக் கொல்லனுலைக்
கனல்வா யுருகு மெழுகெனலாய்க்
கந்து கசிந்திட் டுளமுருகித்
தனதா முடலந் தனதுவசந் தானா காமற் றனிமுதலின்
முனமே விழுந்து புரண்டுபுரண் ‘டெழுந்தே முறையா னோக்கலுமே. 141
இறைவன் கோலங் காட்டல்
மறையோ னான திருவுருவம்
மாற்றிக் கமலத் இருவுடனே
சறையார் கருட னெருத்தமிசைச்
செம்பொன் முடிமா முடியோங்கக்
கறையா ராழி வளைசிலைவாள்
கதையைம் படையும் புடைதயங்க
நறையார் துளவப் படலையொடுங்
கவுத்து வமும்நன் மார்பொளிர. ் 142
அரையிற் பீதாம் பரம்விளங்க
வணியம் புயத்தின் வலயமின
வுரைசெய் நயன மணிவாய்கை
யுந்திச் சரண மெனவொளிரும்
விரைசெய் கமல வனமலர்ந்தோர்
மேகம் விசும்பி னிடைபசும்பொன்
வரையின் மிசையுற் ெழுந்திருந்து
வருத லெனலாய் மாணுறவே. ் 143
நயனம், வாய், கை, உந்தி, சரணம், இவைகள் தாமரைக்காடு போன்றி
ருந்தன. திருமால் கமலவனம் பூத்த மேகம் போன் றிருந்தான். கருடன் பொன்
மலை போன் றிருந்தான். “கருமுகில் தாமரைக்காடு பூத்து, செம்பொற்குன்றின்
மேல்.வருவயபோல் கருடன் மேல் வந்து தோன்றினான் “என்ற கவிச்சக்கரவர்த்த
களின் (பால) பாடலுக்கு விரிவுரை இங்கு உள்ளது.
வனும் வேளும் கரிமுகனுஞ்
செங்கேழ் கமலந் தனிலுறையும்
அவனும் புருகூ. தனும்வானத்
. தனைவோர் களுமைம் புலனவித்த தவரும் நித்தர் முத்தர்கள்கின்
னரர்கந் தருவர் சத்தர்முதல்
எவரும் புடையி.ற் சயசயவென்
றஹேத்துித் தொழுது வணங்கவும். 144
அண்டத் துறுதுந் துமியினங்க
ளலைமாக் கடல்போல் அதிர்ந்தொலிக்க
கண்டொத் இடுஞ்சொல் லரம்பையர்க
. ஸணடனம் புரியக் கைப்பிரம்பாற்
றெண்டித் தெதிரிற் சேனையர்கோன்
விலக்கத் திருந்து முலகமெலாம்
உண்டிட் டுமிழ்ந்த திருமாலா
மொருவன் விளங்கல் தனைக்கண்டான். 145
கண்டான் பின்னும் புவியின் மிசை
விழுந்தான் எழுந்தான் கரந்தலைமேற்
கொண்டான் நந்தா தோடினன்பின்
குதித்தான் நடித்தான் களிநறவ
முண்டான் போலச் செயல்களொன்று
முணரான் — யொருமுறையே
வண்டார் துளவன் நிருமேனி
மகிழ்ந்து நோக்கா வகுத்துரைப்பான். 146
வேறு
உன்னைநீ யுணர்கிலா யுனது மாயைகள்
துன்னையா னறிந்திடுஞ் தகைய தாகுமோ?
வன்னையா யத்தனா யகில முந்தரும்
பொன்னைமார் பகத்தணி புனித மூர்த்தியே |. 147
காலநேர் கனகனை கடிந்த வன்றரும்
பாலனைப் பரித்தருள் பரம சோதியே |
மூலமென் றழைத்திடுங் கரிதன் முன்பினோர்
நீலமால் வரையென நின்ற மூர்த்தியே. 148
ஆலமுண் டவற்கருந் துயர கற்றியே
சூலமு மளித்தருள் சுருதி நாதனே / நீலவாண் கண்ணழற் பிறந்த நேரிழை
யோலமிட் டரற்றிட வுடைவ ழங்கனோய், 149
அராவணை துயிறுறந் தமரர்க் காகவே
மராமர மனையதோள் வலியி ராவணன்
விராதகனே முதலினோர் தமைவி எளித்திட
இராமனென் நயோத்தியி னெய்து மையனே. 150
அடியனை யொருபொரு ளாக வெண்ணியே
கொடியிடை முூளரிவாழ் கோதை யோடுமிப்
பொடியுடைக் கானம்நீ புகுத வாளொடும்
தடியொடும் வழியிடை தடுத்திட் டேனரோ. 151
பதைபதைத் திடவுயிர் பாரித் திட்டவிக்
கதையினா லடிக்க வுங் கருதி வாட்கொடு
வகைசெய நினைந்தனன் வலிய பாவியேன்
இதைவிடப் பிறிதின்ன மென்செய் இன்றதே. 152
உனதுநற் பணியெலாம் பறித்திவ் வுத்தமி
தனதுயர் பணிகள்கொண் டாழி தன்விரல்
எனதுபுன் வாயினாற் கவ்வி யீர்த்திட
மனதுகொண் டிழைத்தனன் மற்றென் செய்வதே. 153
நல்லிய லல்லபுன் மொழிக ணாவினாற்
“சொல்லியும் பலகொடுந் தொழிலி யற்றுமிப்
புல்லிய னுய்வினிற் பொருந்தப் புன்றலை
கல்லிடை மோதியான் கழித்தல் நன்றரோ. 154
என்றுகொண் டினையன பன்னி யேடவிழ்
மன்றவிழ் துளவணி . மாலை மார்பினான்
றன்றிரு முன்னரில் கலியன் றானுமே
கன்றிய மனதொடு முருகும் காலையில். 155
அம்மொழி பலவுங்கேட் டருளி னாழியான்
விம்முறு கலியனை விருப்பி நோக்கித்தன்
செம்மைசேர் பவளவாய் நகை சிறந்திட
இம்மொழி தனையெடுத் தியம்பு வானரோ. 156
யாமே மயக்கினோம்
உன்னைநீ வெறுத்திடே லுனது நல்லுளந்
குன்னையாம் மயக்கவித் தகைமை செய்துளோம்
முன்னைய துவக்கெலா முடிந்து நீங்கின
வென்னைகொ லின்னமும் மிரங்க லய்யனே. 157
அன்றியுஞ் செய்விளை யாட்டு மின்சொலும்
தன்றிரு மகன்செயத் தந்ைத கொள்வபோல்
இன்றுள மகிழ்ந்தனன் நீயி ழைத்ததற் ப கொன்றுநீ யஞ்ச டே லுளங்கொள்் வாயரோ. 158
இன்னமும் புகல்வதொன் றுளது யாதெனில்
அன்னது கேட்டியா லாழி சேர்விரல்
குன்னை நீ கவ்விடைத் தமிழின் வாசனை
யுன்னணி வாயில்வந் துற்ற தாதலால். 159
இமிழ்திரைக் கடற்புவி இடைவந் துற்றுளோர்
அமிழ்தெனப் பருகிவீ டணையு மாறதாய்
யுமிழ்மணங் கமழிசை யுற்றி டுஞ்செழுந் தமிழ்கொடு கவிதைகள் பலவும் சாற்றியே. 160
இரங்குமா கடலென விரைத்தி ரைத்துத்தன் ்
கரங்களால் வருடல்போற் கவினு முத்துறும்
தரங்கமார் காவிரித் தார ணிந்துள
வரங்கமா நகரினை யணுகி யாங்கதில். 161
ாற்கடலைப் போலத் திருவடிகளை
வருடும் திரைகளைக் கொண்டுள்ள திருக்கர்விரியை மாலையாகக் கொண்டுள்ள
திருவரங்கம். “பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி” *
என்பர் குலசேகரர்,
இருப்பணி வேலைகள் செய்து முற்றியே
விருப்பொடுங் காதலி யோடு மேவிப்பின்
னிருப்பதாம் வைகுந்த மென்னு நற்பதப்
பொருப்புறழ் தோளினாய் பொருந்து கென்றனன். 162
என்று பற்பல மொழி யியம்பி யாவரும்
மொன்றியே திரண்டிரு மருங்கு முற்றிடக்
கன்றைவிட் டகன்றிடுங் கறவை போலவே. தன்றிரு வுலகிடைச் சார்ந்திட் டானரோ. 163
மாயவன் றிருவொடும் மறைந்து நீங்கலும்
ஆயவன் நிருவடி யதனை யுன்னியே
துரயவ னாம்பர காலன் துன்புறாத்
தாயகண் நிடுங்குழந் தையினி ரங்கினான். “164
பிறிவாற்றாமை
ஐயனே! யமலனே ! அடியருக் கெலாம்
மெய்யனே [ சுருதியின் முடிவி ளங்வடுந்
துய்யனே ! சிவன்முத லோர்க்குந் தோன்றுறாப்
பொய்யனே ! யென்னவும் புலம்பி னானரோ. 165
செந்திருப் பொலிந்திடச் வன யன்றனோ
டிந்திரன் முதலினோர் ஏற்றிப்’ போற்றிட
வந்தரத் தடைவரு மமல! யானினி :
எந்தநாள் காண்பதென் றேங்கி னானரோ. 166
ஏங்கின னொருமுறை தெளிவு மெய்தியே
ஆங்குவிட் டணிநக ரதில டைந்துதன்
இங்கரும் பனையசொற் றேவி தன்னொடும்
பாங்குற வாலியான் பதம்வ ணங்கியே. ட. -167
ஆரண மறிந்திடற் கரிய சோதியாம்
நாரணன் புவித்திருப். பதியி. னல்லுருப் பூரண மாகவே :பொருந்தி வைகுறும் .
காரணந் தனையுளே கருதி னானரோ. 168
ஆழ்வார் அர்ச்சையின் சறப்பை உணர்ந்தார். சோதி வடிவமான
திருமால் அற்பப் பூமியில் திவ்யமங்கள விக்ரகத்துடன் இருப்பதன் காரணத்தை
உள்ளத்தில் இந்தித்தார்.
அன்னமால் மருவிடு மலைகொள் பாற்கடற்
றன்னையும் . பரமவை குந்தம் தானெனப்
பன்னுமிவ் விருநகர் தவிரப் பார்மிசை
மன்னுனூற் றாறெனும் பதிவ ணங்குவான். 169
அமுதமொத் தினியசொல் லிரதியோ வெனும்
குமுதவல் லிப்பெயர்க் கோதை தன்னொடும்
கமலமொத் திடுமுகம் கவின வாலியாம்
அமலநற் பதிதொழு ததைவிட் டேகினான். 170
ஆழ்வாரின் திவ்யதேச யாத்திரை
அத்தியூர் புட்குமி யரங்கம் வேங்கடம்
வித்துவக் கோட்டிபோர் பேரை விண்ணகர்
பத்தவி லோசனங் குடந்தை பாடகஞ்
சித்ரகூ டம்முத லாகச் செப்பிடும். 171
நூறுட னாறென நுவறி ருப்பதி
வீறுமங் களங்கொள்விக் கறக மாகிய
துளவணி நார ணன்பத
மூறுமன் புடன்பணிந் துருகி னானரோ. 172
உரியனாய்ப் பற்பல உயிரு ணன்றுறை
கரியமால் பெருமையைக் கண்ண கன்றிடும்
லுலகெலாம் விளங்கு மாறதாய்
அரியசெந் தமிழினா லறைத லுன்னியே. 172
பெருந்திரு மொழியொடும் பெருமை சேர்மடல்
இருந்திரண் டொடுமெழு கூற்றி ருக்கையும்
பொருந்திருத் தாண்டக மிரண்டும் பொய்யிலிங் கரும்பொரு ளாறையும் மறைந்து பின்னரின். 174
கருவரங் கந்தனை யொழிக்குங் கார்முகில்
பெருவரங் காதலித் தவர்பெ றும்படி
இருவரங் கந்தனி லிருப்பப் பள்ளிகொள்
இருவரங் கந்தனைச் சேர்ந்திட் டானரோ. | 175
அத்தலத் தற்புத மனைத்துங் காண்குறா வெத்தலங் களுமொவ்வா இதற்கென் றெண்ணியே
சித்திர மிழைத்த்கோ புர்த்துட் செம்மைசேர்-
கைத்தலந் தலைமிசை கவினச் சென்றனன். 176
அந்தர மிசையடைந் தலர்க டூவியே
சந்திர மவுலியான் றாம ரையுளான்
இந்திரன் முதலினோ ரெட்டெ ,ழுத்தெனும்
மந்திர மோதியே வணங்கி வாழ்த்திட. 777
பன்னக வணைமிசைப் பள்ளி கொண்டிடும்
அன்னமா மலரடி யதனைப் பூந்திரு
முன்னிலை யாய்முடி யுறவ ணங்கியே
கதுன்னர மனையிடை சார்ந்து வைடனான். 178
அந்தநாள் நாரண னறைந்தி டும்பணி
யெந்தவா நிழைத்திட லாகு மென்னவோர்
குந்திரம தற்செயல் தகுதி யாமெனச்
சிந்தையி னொருமுறை தெளிவு கொண்டனன். 179
ஆழ்வார் திருப்பணி
புத்தர்தம் பொருள்புவி புதைத்தி டும்பொருள்.
பத்தர்தம் பொருள்அரன் பட்டு ளோர்பொருண்
மித்திரர் பொருண்முடி வேந்தர் தம்பொருள்
இத்தகை யாகிய பொருளு மின்னமும். 180
ஊளமர்தம் பொருள்முட முற்று ளோர்பொருள்
வாமியர் தம்பொருள் வல்ல : டிப்பொருள்
ஆமிதென் றவைகள்கொண் ட்ீணுகு வீரென
நேமியா வருவர்பின் ஒதுங்கு நீர்மையான். 181
நீர்மிசை நடப்பவ னிழலொ துங்குவோன்
தோர்விலா வழக்கின னுயரத் தொங்குவான்
தேரினா னாதுவோ நேர்ந்து தந்திரம்
சோர்வுறப் பலபொருள் தொகுத்திட் டாரரோ. 182
விற்பொலி யட்டகோ புரங்கள் வேறிரண்
டுற்றிடு மதின்மடைப்’ பள்ளி யோங்்இடும்
நெற்களஞ் கஇயமழுநெற் குத்து மண்டபம்
பற்பல வாந்திருப் பணிகள் செய்தனன். 183
புத்தர்க ளருகர்கள் பொருந்து ‘றுஞ்சிவ
பத்தர்கள் மாயவா தியர்கள் பற்பல
இத்தகை யாம்பர சமயத்தி யாவரும் யெத்தகை வாதின்வந் தெவரி யம்பினும். 184
அவ்வவைக் கெதிருறை வேத மாதிகொண்
டிவ்வித மாமென வெடுத்தெ டுத்துரைத்
தொவ்வுற வாதுவென் றவரு ரைத்திடும் .
செவ்விநேர் நாமங்கள் பல? றந்தனன்.–185-
இந்தநன் முறையினால் எவரு மேத்திடச்
செந்திரு வனையசர் தேவி தன்னொடும்
மந்திர மனையதோண் மங்கை வேந்தனும்
அந்தமா நகரிடை யமரும் நாடனின்.–186-
ஒருபக லரங்கர்பா லடைந்து வப்பொடும்
இருவனந் தன்மிசை துயிலும் செவ்வியோய் }
இருவினை யொழிந்துள தெனக்கு நற்பதந்
தருதியென் றநிருபதம் தாழ்ந்து நின்றனன்.–187
ஆழ்வார் திருநாடலங்கரித்தது
நின்றவக் கலியனை நீல மால்வரை
யொன் நிய வுருவினா னுவந்து நோக்கியே
நன்றது புரிகுதும் நமக்கோ ரில்லதாம்
“தென்றிருக் குறுங்குடி சேர்தி யென்றனன்.–188
என்னவாட் கலியனும் மினிய வானந்தம்
துன்னிட. வவன்பதந் தொழுது .போற்றிசெய்
தன்ன ந.ந் .குறுங்குடிக் கணுக லுன்னியே
பொன்னிவர் தண்டிகை பொலிய மேவினான்–189.
சுற்றினு மடியர்தங் குழாந்து வன்றிடக்
கொழற்றமெய் இடும்பர சமய கோளரி
யுற்றன னெனத்திருச் சன்ன மூதிடப் ,
பொற்றிரு வரங்கம் விட்டரிதஇற் போயினான்.–190
ஆலைசா ஐறடும்புகை புயலென் றண்மியே
காலைமா மயிலினங் களிந டஞ்செயும்
சோலைமா மலையினைத் துன்னி யேவன
மாலைமார் பழகரை வணங்கி யேகினான். 191
வெதிரினா லொழுகுதேன் மேவிப் பாய்தலில்
கதிருடை செந்நெல்வான் கவின்கொாண் டோங்கிடும்
மதுரையிற் கூடலின் அழகர் வண்பதம்
சதிருடன் முடியுறத் தாழ்ந்து போற்றினான். 192
வில்லிபுத் தூாரினை யணுகி மேல்வரும்
மல்லரைக் குமைவட பத்திர சாயிதாள்
அல்லியின் வணங்கிப் பல்லாண் டெனுந்தமிழ்
சொல்லிய பெரியரைத் தொழுது போயினான். 193
குருமணி யினம்பல கொழித்தி ரைத்தலை
இருபுற மொதுக்கும்வே றிணையி லாதசர்ப்
பொருளையின் வடகரை பொலியப் பெற்றிடை
மருவுவை குந்தநா தரைவ ணங்கினான். 194.
வைத்தமா நிதிக்குழைக் காதர் வண்டினம்
மொய்த்ததா மரைக்கணர் மாயக் கூத்தர்முன்
பெய்த்தவெம் மிடர்கடி வாறெண் ணார்தமைக்
கைத்தொழி காசினி வேந்தைக் காண்குநா. 195
அவ்வவ ரிணைத்திரு வடியம் போருகம்
ஓவ்வுறத் தன்முடி தனைக்கொண் டொற்றியே
யெவ்வமற் றுளமகழ் வெய்இப் போற்றியச்
செவ்விய நகரினைத் தீர்ந்திட் டேகினான். 196
முருகவிழ் முளரிமுத் இளநி லாவினால்
அருகுறு குழமுதம்விண் டலரு மாவயல்
குருகையா திப்பிரான் குலவு தண்முடி
மருவுற வணங்கியே வாழ்த்தி யேனான். 197
கூனிலாம் பிறைமணிக் கோயின் மேற்றவழ்
வானமா மலைதனை யணுகி வண்டுணுந்
தேனமர் துளவதோக் தாத்ரி நாதர்செம்
பூனிகர் பதந்தொழு தேத்துப் போயினான். 198
தறுங்குழன் மடந்தையர் நடைந டந்திடுத் தொறுங்களி சிறந்திடத் துடர்வ தற்கவா
வுறுங்குலப் பெடையன முறையு மாவயல்
குறுங்குடித் திருநகர் குறுகி னானரோ. 199
அத்தலத் தருச்சகர் முதல யாவருங்
கொத்துடன் ம௫ழ்த்துவந் தெதிர்கொண்
முத்தெறி பாற்கடன் முழுகிப் பன்னிரண்
டொத்திடு தஇிருமண்காப் புவந்து சாற்றியே. 200
இரண்டெனும் துயந்தனை துதிசெய் இயாவரும்
இரண்டிரு மருங்குறச் சேர்ந்து கோயிலுள்
-கரண்டமா டிடும்பொய்கைக் கரும்ப னைக்களனி
-மிரண்டிள வாளைபாய்ந் தெழும்ப வீழ்வதை,. 201
“அரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம்
புரண்டுவீழ, வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய்’” என்ற தஇிருமழிசைப் பிரான்
பாடலின் சாரமாகும்.
இருகணு மழைக்கண் டிருந்த மானம்பி
இருமலை நம்பிபாற் கடலி னம்பிசர்
பெருகதநின் றருணம்பி கிடந்த நம்பிப்பேர்
மருவுமை வர்கண்மல ரடிவ ணங்கினான். 202
அழூய நம்பிபொன் னடியிற் கண்ணநீர்
ஒழுகுறும் படியணிந் துகந்தெ ழுந்துகைத் தொழுதடி யேற்கரு டூய வீடெனா
இழுதென வுருகிநின் றேத்து மெல்லையில். — 203
அளித்தனம் முத்திவீ டணைதி யென்றுதேன்
துளித்திடும் துளவமா லுரைப்பத் தூவுளம்
களித்துயர் விமானமேற் கவின்கொண் டோங்கியே
குளித்தனன் விரசயிற் குலவு நீரிடை. 204.
படிகந்ன் மேனியாய்ப் பரம வான்பதி
நெடியசெம் பொன்மணி நிரப்பு மண்டபத்
தடியவர் குழுவொடு மணுகி வாழ்ந்தனன்
வடியுடை வாட்கர மங்கை மன்னனே. 205
மறுவிலான் பிரபந்தம் வகுத்த வாறினுள்
ona யாயிரத் தொடுமுந் நூறுடன்
அறுபது மொன்றதா மதனுட் செங்கண்மால்
பெறுபதி யெண்பதோ .டிரண்டும் பேசுவாம்.–206-
ஆழ்வார் பாடிய பாசுரத்தொகை 1961, மங்களாசாசனம், செய்த
இவ்ய தேசங்கள் .88,
வேறு
சீரங்கம் வேங்கடம் மாதனூர்தஞ்சை
சேறை வெஃகா: நின்றவூர்
காரகம் நந்திபுர விண்ணகர்நைமிசார்.
ணியம் விண்ணகர் கணபுரம் :
நீரகந் தேவனார் தொகையயிந் திரபுரம்
நிலாத்துங்க டுண்ட நறையூர்
ஊரகம் புல்லாணி இத்திரகூ டமெவ்வ
ளூர்வதரியாச் ரமே. : 207
அரிமேய விண்ணகரம் நாகையட் டப்புய
மலிக்கேணி யாலிமோகூர்
பிரிதிவெள் ளறைகுறுங் குடிதெற்றி யம்பலம்
போர்தலைச் சங்க மெய்யம்
புருடோத்த மங்கவளம் பாடிகூ டறிருப்
புட்குழி கண்ண மங்கை
பரமேச் சுரவிண் ணகர நீர்மலை
வேளுக்கை பாடகம் மூழிக்களம். 208
கடன். மலைக் காழிசீ ராமலிண் ணகரம்வை
குந்த விண்ணகர் கண்டியூர்
இடவெந்தை செம்பொன்செய் கோயில் பார்த்தன்
பள்ளி. இந்தளூர் கண்ணங்குடி
குடந்தைவெள் ளக்குளம் அழுந்தூர் கரம்பனூர்
கோவ லிடைகழி கூடலூர்
கடிகை நாங்கூ ரின்மணி மாடகோ .விற்சிங்க வேள்குன்று கார்வானமே. ~ 209
வேறு
இருக்கச்சியில் சர்ப்பபள வண்ணம்
இருப்பாற்கடல் சீராய்ப்பாடி
இருப்பேரகஞ் Fran. wagons
இருநாவாய் சீர்புலியூரே. 210
வேறு
புள்ளம் பூதங் குடித்தண் காசிறு புலியூர் சோலை
வெள்ளி யங்குடி கோட்டியூர் விளங்கு சாளக் கிராமங்
களவனூர் வல்ல வாழ்தங் கால்மணிக் கூட மாகுந்
தெள்ளுசீர்க் கமலை மார்பன் செழுத்திரு பதிகண் மாதேர். 211
அன்னசெந் தமிழைப் பார்மேல் அநேகர்கற் றுணர்ந்து தம்முன்
றுன்னுமஞ் ஞான நீங்கித் தூயநல் லறிவுண் டாகி
மின்ணுசக் கரஞ்சேர் செங்கை விண்டுவாழ் திருவை குந்தந்
தண்ணிடை களிப்பினோடுஞ் சார்ந்துவீற் றிருந்தா ரன்றே. 212
பயன்
இந்தமாக் கதையை யன்போ
டெழுதினோர் பரிவிற் கற்றோர்
சிந்தையுள் ளூருகக் கேட்டோர்
செப்பினோர் யாவ ரேனும்
முத்துக் வினைக ணீங்கி
முளரிமா : மலர்மேல் வாழுஞ்
செந்திரு வருளுண் டாகிச்
சீர்பதம் பெறுகு வாரே. 213
திருமங்கையாழ்வார் திருவவதார அத்தியாயம் முற்றும்.
————
திருமழிசையாழ்வார் வரலாறு பேசுவோம்
மங்கையார் குறைய லூரில் வந்தவ தாரஞ் செய்திட்
டங்கண்மா ஞால மேத்த வருந்தமிழ்க் கவிகள் செய்தே
செங்கண்மால் பதவிதன்னுட் சேர்ந்தமை யுரைக்தோ மிப்பால்
நங்கள்்€ர் மழிசை யான்றன் சரிதமு நவில்வா மன்றே. 214
வெண்பா
தையில் மகமின்று தாரணியி லேற்றமிந்த
தையில் மகத்துக்குச் சாற்றுன்றேன் – றுய்யமதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடு நாள்.
(உபதேச ரத்தினமாலை: 18.)
திருவிருத்தம்
இன்னவா றாகப் பன்னா ளேகவைம் புலன்வென் றோராய்
மன்னியே கானந் தன்னில் வளம்பெறு வரையின் சார்பில்
பன்னருந் தவங்கள் செய்யும் பாற்கவன் முதலா னோர்கள்
உன்னின ரொருநா ஞள்ளத் தொருமுறை யாக மன்னோ. 1
மும்மையா முலகோ டீசன்
முளரியன் முதலா: னோர்கள்
தும்மையுள் ளடக்கி யாலந்
குழவி யாகிச் செம்மைசேர். கரத்தாற் பார்மின்
இிருவொடும் வருடத் தங்கும்
நம்மையாண் டருளுஞ் சோதி
நாரணன் அமல நாதன். ” 2
இப்புவி தனிலும் வந்துற் றெழில்பெறப் பலவென் ஹோதும்
ஒப்புவே றிலாத தாகும்
பதிகளி னுறைந்து வாழ்வான்
அப்பெருந் தலங்கட் குள்ளாய்
அகன்றிடா தோரூர் தன்னில்
செப்புமம் மாலெப் போதுஞ்
சேர்ந்துறைந் இருப்பா னன்றோ. 3
அனையவாந் தலம்யா தென்றா
ராய்ந்திட வேண்டு மென்னும்
நினைவுகொண்் டறிவிப் பார்கள் .:
் ணீனிலத் திலையென் றோர்ந்தும் ‘
மனையென மலரின் வாழும்:
மறையவ னுலகந் தன்னை
வினையற. நோற்று நின்ற
மேலவ ரடைந்தா ரன்றே. ் 4
சென்றடைந் தவர்க எந்தத்
இசைமுகன் செழும்பொற் பாதம்
. ஒன்றிட முடிகள் சேர்த்தித் ் தொழுதெழுந் துகப்பின் முன்னர் நின்றிட லோடுஞ் .ஞான
நெறியுளீ ௬மையொப் பார்யார்
என்றவர்ப் புகழ்ந்திட் டாசி
யியம்பியாங் இருமி னென்றான். 5
என்றவாங் . டந்த
விருஞ்சிறைத் தாவிச் செங்கால்
அன்னமூ ரெண்கண் ஸணான்றன்
அம்புய முகத்தை நோக்கா ்
முன்னர்நா ணின்னை யுந்தி
முன்னின ஸனீன்று Cares
தன்னைச்சிட் டிக்கு மாறு.
சாற்றியோர் சோதி தானாய். | 6
அஞ்சுபூ தங்கட் குள்ளும் அந்தரி யாமி யாய்நின்று
உஞ்சுமா றவைக :ளெல்லா |
மோங்குறக் காவல் பூண்டுந்
துஞ்சுதல் பிறத்த லென்ப
திலாதவச் சுருப னாகி
விஞ்சுவை குந்தத் தும்பார்
மிகுபல தலத்தும் வாழ்வோன். 7
மருவுமப் பதிக டன்னில்
வளங்களோர் காலந் தன்னுள்
ஒருபக லேனும் நன்றா.
. யொருகண மேனுநீங். காமல்
இருவொடு மிருந்து வாழ்வா
னென்னவே தெளியு மாறாய்ப்
பொருவிலா மறைக டன்னிற்
புகன்றுளாய் நீயு மன்றே. 8
அந்தநற் றலமீ தென்ன வறிகிலே மறியு மாறாய்
எந்தமக் குரைத்தி யென்ன
வியம்பினன் அயல்நீங் காமல்
செந்திரு வுடனே செங்கண்
மால்செழு மறையோர் போற்ற
வந்துவாழ்
மழிசையென் றுணர்மி னென்றான். 9
அத்திரு நகர்க்கு நேராய்
அங்கண்மா ஞாலந் தன்னுள்
எத்திரு நகரு மோங்கு மெழில்வளம் புனிதம். தன்னால்
ஒத்திடா துணர்மி னென்னா ்
வுயர்தவ முனிவோர் தங்கள்
சித்தம துவக்கு மாறு ்
மீளவும் தெரிவித் தானால். 10
கேட்டவம் முனிவோர் மீட்டக்
இளர்வளம் பெறுந்த லத்தின்
மாட்டுள மேன்மை யாங்கள்
மனந்தெளி வுறுமா நாகக்
காட்டிட வேண்டு மென்னக்
கருஞ்சிறை யறுகால் பொம்மென்
பாட்டுவண் டிமிரும் பங்கேருகத்தயன் பரிவி னோடும். –11
ஆங்கவர் தம்மோ டண்மி
யத்திரு நகரின் மேன்மை
– பாங்குற வுணர்த்த லுன்னிப்
பணிகள் புற்றடைவ தாக
ஓங்கிவா னுயருங் காவி
லுறுஞ்சிறைக் கருட னேபோல்
மாங்குயிற் றொகுதஇு கூவும்
மழிசைவந் தடைந்தா னன்றே. . 12
வந்ததொரு துலைகோல் தன்னை
மனத்தினா னிருமித் தன்னோன்
முந்தொரு தட்டி லேசர்
மழிசையை முயல வைத்திட்(டு)
இந்தபே ௬லகை மற்றோர்
தட்டினிட் டெடுத்துக் காட்ட
அந்தமார் மழிசைத் தட்டு
மழுந்திக்கீ மிருந்த தாலோ. 13
உலகுறு தட்டு மேலிட்
டோங்குற வதனைக் காணா
இலகுமிம் மழிசைக் கொப்பா
யில்லையிப் புவியின் வேறென்(று)
அலகின்மா தவர்கள் யாரு
மற்புத மடைந்தா ராகி
மலரவ னம்பொற் றாளின்
வணங்கிவாழ்த் தினர்கள் மாதோ. 14
இம்முறை தெளிவித் தந்த விருந்தவர்க் காசி நல்கிப்
பொம்மென வறுகாற் பாடும்
மலரயன் போய பின்னர்
கொம்மைமா முலைப்பூ மாதின்
கொழுநனைக் குறித்திட் டாங்குச்
செம்மைசேர் யாகம் செய்வான்
பார்தனைக் &ண்டிட் டானால், 15
வேண்டுவ கலப்பை கொள்ளா
விதிமுறை துடங்கி யுள்ளம்
தூண்டுள முவகை துள்ளித்
துள்ளிமீ தெழுந்த தென்ன
மூண்டெழு கனற்க ணானெய்
முதலிய சொரிந்து முற்றும் ஆண்டதொன் றதனில் நந்தும்
அருமகம் முடித்தான் அன்றே. 16
மகமது முடித்த லோடும்
வைகுந்த வாசு தேவன்
-அகமகிழ்த் தரவிந் ‘தம்வாழ்
பவளுட னணுகித் தோன்றிச்
செகமதி னின்போல் யாகம் ்
செய்துளோ ரிலையென் தேத்தித்
தருதும் வேண்டும்
வரந்தனைச் சாற்று கென்றான். 17
என்னலு மூவகை யுள்ளத்
தெழுந்துமீ தோங்க வென்கண்
– மூன்னரென் னன்னை யான மூளரிமா ‘ தோடு நீவந் துன்னிடத்- தெரிசத் தேற்குத். தூயன விஃத லான்மற்று :
இன்னமும் வேண்ட லென்னென்(று)
இருந்தவ னியம்பி னானால். 18
கேட்டவத் இருமால் – பின்னும்
இளர்த்துவா னினிது ளத்தின் .
மாட்டுள துணர்கு வோமால், ஆயினு மகத்திற் கெய்தி. நாட்டுமொன் றேனு நல்கா ©
தேகல்நல் லறம தாமோ?
சேட்டிளம் பருதி போலோர்.
சிறுவனை யளித்தோ மென்றான். 19
ஆழ்வார் அவதாரம்
அவ்வர மளித்துச் செங்கேழ்
அணிமலர் மாதி னோடும்
செவ்விசேர் இருவை குந்தஞ்
சிறப்புற வடைந்தான் ; மேனாள்
வெவ்விய விடங்கர் கானின்
விரைமல ரோடை தன்னுள்
கவ்விடத் தளர்ந்து கூவும்
கரியருந் துயரந் ர்த்3தோன், டட 20
ஆங்கவ ஸிவ்வா றாக
அகன்றபின் தைமா தத்தில்
பாங்குறும் மகநாள் தன்னிற்
பார்க்கவ னென்னு நாமத் தீங்கலா முனிவன் றன்பால்
செனித்திடு மகவைக் காணில்
தேங்குழ லுமையோர் பாகச்
சிவனயன் மகிழ்வர் மாதோ. 21
செந்திருப் புதல்வன் றன்போற்
றினகர ஸுூருவந் தாங்கி
வந்திரும் புவிமே லுற்ற வாறென வந்து தோன்றும்
அந்தநன் மகவைக் காணா
அம்முனி மகவுள் ளோரர்க்குச்
இந்தையுட் கடவுட் டியானந் .
இருப்புமென் றுள்ளந் தேர்ந்தான். 22
தேர்ந்தவம் முனிவன் றானுந்
சிந்தையுண் மகவி னாசை
இர்ந்துசெங் கரங்கண் மீதச்
சிறுகுழ வியைக்கொண்் டவ்வூர்
பேர்ந்துபோ மளவி னாங்கோர்
பிரம்புறு புதரின் &ழாய்ச்
சேர்ந்ததை வளர்த்தி னானோர்
சிறியவத் தரத்தின் மீதே. 23
இத்ததற் குழவி தன்னைப்
புரந்தரல் இதனை நம்பால்
தந்தவர் கடனென் நுன்னித்
தவஞ்செயும் சாரல் தன்னில் அந்தமா முனிவன் சார்ந்த
துறிந்துல கன்னை யான
செந்திரு வன்புற் றாங்குச் சேர்ந்தழுஞ் செய்கை நோக்கா; 24
திருமகளின் திருவருள் .
மனதினுள் இரக்கம் கொண்டோர்
மதுரிக்கும் தேனி றாலாய்
தனதுமா முலைப்பால் தன்னைச்
சமைத்துமே லிருத்தி வைத்திட்(டு)
அனையதப் பாலன் வாய்விண்(டு)
அழுதுண வதனை யுன்னி
நினைதொறுந் துளிக்கு மாறாய்
நியமித்திட் டேகி னாளால். 25
திருமகள் தனது-பாலைத் தேனிறாலாய் மாற்றி ௮க் குழவியின் வாயில் தேன்
துளி படும்படி நியமித்துவிட்டுப் போய்விட்டாள். மதுரிக்கும் – இனிக்கின்ற.
சமைத்து – அமைத்து. வாய்விண்டு – வாய்திறந்து. நினைதொறும் – நினைக்கும்
போதெல்லாம். (அரிசமய தீபம் திருமகளே பால் வழங்கியதாகவும், திருமகள்
தனது பால் குழவியின் பெருவிரலில் உண்டாகும்படி செய்துவிட்டுப் போனதாக
வும் கூறியுள்ளது.)
உழுவைகாத் தளிப்பக் .காவிக் —_
கதிரிள வெயிலு றாமல்
நிழலுறப் பணம்வி ரித்தே ட
நீளர வுறைய மீதாய்
ஓழுகுதேன் றுளிவாய் வீழ்வ
துண்டுண்டு மகிழ்வி னோடப்
பழுதில்சேப் வளரு மன்னாள்
உற்றது பகர லுற்றாம். 26 -வெய்யில் படாதபடி பாம்பு விரித்தது.
திருவாளன் ஆழ்வாரை வளர்த்தது
அத்திரு மழிசையென் றறையு மாநகர்
ஓத்துவாழ் மேதையர் குலத்தி லுற்றிடும் உத்தம னாந்திரு வாள னென்றுளோன்
பத்தினி பங்கய வல்லி பண்புளாள். 27
அவ்விரு வோர்களு மனமொன் றநாகியே
வெவ்விய கானிடை விரைவி ஸனெய்தியாங்(கு) _
ஒவ்விய பிரம்புகொண் டூரின் மேவியே
செவ்விய கூடைகள் திருந்தக் கட்டுவார். 28
ஆங்கதை விலைசெயற் கமைந்து கொண்டுசென்(று)
ஓங்குமம் மாநக ருறுமவ் வீதிவாய்
வாங்குவார் தருபொருள் வாங்கி வந்ததில்
பாங்குறு வனம் பண்ணு வார்களால். 29
ஆயவ ரம்முறை யணுகு நாளிடை
சேயிலா மையினுளந் தியங்கி யேங்கியே
தூயவ ருளத்தினுஞ் சுருதியுள் ஞம்வாழ் மாயனை மகிழ்வொடு மனத்தி லுன்னியே. 30
ஒருபகற் பிரம்புகொண் டறுத்த லுன்னியத்
இருநகர் கடந்துகான் செல்லு மெல்லையில்
கருடனும் வலியனுங் கருது றும்மிடம்
வருதலும் அகமிக மகிழ்வுற் றேகினார். 31
ஏகவப் புதரின்€ ழிளங்கு ழந்தையுஞ்
சோகமுற் றழுங்குரல் தொனிசெ விக்கணுற்(று)
ஓகைகொண் டவனிலங் குறுமுன் காத்துறை
நாகமு முழுவையு நழுங்கிப் போயதால். . 32
போயபின் பிவர்களு மருகற் புக்கியச்
சேயினை யிருகரஞ் சேர்த்தெ டுத்துமுன்
பாயின சகுனமும் அதனுக் கொவ்வுற
மாயவ னருளின னெனம இழ்ந்தனர். 33
அங்குவிட் டூர்புகுந் தகத்துட் சேரலும்
பங்கய வல்லியாம் பெயர்ப டைத்துள
செங்கய லனையகட் டிருவ னாட்டரு
கொங்கையுஞ் றந்துபால் சுரப்புக் கொண்டதால், 34
சுரந்துறு மமுதையச் சுதற்க ளித்திட
நிரந்தர முண்டுபன் னேயங் காட்டலால்
பரந்த€ ரவர்கண்முன் படைந்த துன்பநோய்கரந்தகன் நிடவுளங் களிப்புற் றாரரோ. , 35
தூயதே வஇிவயின் மதுரை தோன்றியுற்(று)
ஆயர்பா டியினடைந் தசோதை யாள்திருச்
சேயென வளர்ந்துபன் னடனஞ் செய்திடும்
மாயனென் றியாவரும் மகிழ வைகினான். 36
ஆளனும் பங்கய வல்லி யாளெனும்
தாளதா மரைமுகத் தவளும் தாம்பெறுங்
காளையிங் கிவனெனக் கருத்து ஞன்னியே
நாளுற வளர்த்தனர் நயப்புற் றென்பவே. 37
மைந்தனு மாங்கவர் மகிழ்வொ டுந்தனைத்
தந்திடுந் தந்தையும் தாயு மாமெனச் சிந்தையுள் மஒழ்ச்சியுஞ் சிறப்பு மோங்கெ
இந்தநன் முறையதாய் வளரு மெல்லையில். 38
தங்குல வியற்கையிற் றகுவ யாவையும்
அங்கவர்க் கிழைத்துற வவனு மாயையாங்
கங்குலை யொழித்திடக் காலை யுற்றெழுஞ் .
செங்கதி ரவனெனச் சறெந்திட் டானரோ. 39
ஆழ்வாரின் யோகம்
மறந்துடர் சனமுங்கா மமும்ம னத்திடைத்
துறந்துய ரியபரஞ் சுடரைக் காணுமா(று)
அறந்துடர் யோகவப் பியாச மாகவே
சிறந்துற வாண்டெழு நாறு சென்றதால். 40
மறம் துடர் – பாவத்தைப் பின்பற்றிச் செல்கிற. மனத்திடைத் துறந்து –
மனத்திலிருந்து விலக்கி, யோகாப்பியாசத்திலேயே எழுநூறு வருடம் கழித்தது.
இறைவன் காட்சி வழங்கல்
அரியதா இயெதன்னந் தாமத் தின்னுடைச்
சொருபமத் திருமழி சையினுட் டோன்றிடத்
தெரிவுறு ஞானக்கண் திருந்த வேயளித்(து) இருசிறைக் கலுழன்மே லிவர்ந்து தோன் நினான். 46
சோமனை முடியணிச் சுடலை யாடியும்
நாமகள் கொழுநனு நவிலு மோர்சத
மாமகன் முதலினோர் களும்வ ணங்கிடப்
பூமக ளொடுமெதிர் பொலிந்து ளான்றனை; 47
இன்னவாறு உளம் களித்து உருகி ஏத்திடும் விண்ணுற நோக்குவான் மீண்டும் தன்னுடல்
மண்ணுற வணங்குவான் வாழ்த்து வான்புகழ்ந்(.து)
எண்ணுவ னவன் றிரு வெழிலை யென்பவே. “ 48
இன்னவா றுளங்களித் துருகி யேத்திடும்
அன்னவன் கண்படா தகன்று போயினான்
பன்னகத் திடைநடம் பயின்றி டைக்குலக்
கன்னியர் துயில்கவர் கரிய கோவலன். 49
கோவல ஸனகன்றிடுங் கொள்கை கண்டுளத்(து)
ஆவலோடி ரங்கியீன் றளித்த ழித்திடும்
மூவராம் வடிவுகொள் முகுந்த னாந்திருத் தேவனே பரமெனத் தெளிவுண் டாகியே; 50
பலசம யங்களிற் படிந்த வற்றிலே
அலகில்நா ளொழித்ததுக் ககம்நெ கழ்ந்துபின்(பு)
இலகுமூ லப்பொரு ளினைய டைந்தனம். ட்ட)
நலமிதின் வேறென நயக்க லாவதே. 51
திவ்ய தேச யாத்திரை
என்னவா னந்தமுள் ளெழுந்து பொங்கவே
அன்னமா மழிசைவிட் டாம்ப லும்செழுங் ‘
கன்னலுஞ் சாலியுங் கவினு மாவயல்
மன்னுசீர் .திருவல்லிக் கேணி மன்னினான். 52
சீர்த்ததா மரையுதிர் மணிசெ ழித்திடும்
நீர்த்தட மாடியும் நிமலன் ஆகிய
பார்த்தசா ரதிப்பதம் பணிந்து மிம்முறை
திர்த்தனாண். டேழெழு நூறு. சென்றபின்; 53-700 வருடம் ஆழ்வார் இருவல்லிக்
கேணியில் வாழ்ந்தார்.
ஒருபகல் மழிசையுத் தமனை யோங்கெழில்
பெருகுவெஃ காவெனும் பெரும்ப தக்கணீ
வருகவென் றுணர்த்தினன் மலரின் வைகுறும் இருமகள் மகணனாந் தேவ தேவனே.–54-
அம்முறை கச்சவெஃ காவ டைந்தெணார்
தம்முள மாமனை சார்ந் திடாதொழி
செம்மைசேர் நாரணன் திருப்ப தந்தொழு(து)
இம்முறை யேழுநூ றாண்டி ருந்தனன். 55
கணிகண்ணன் வரலாறு
்அந்தநா டனிற்கணி கண்ண ஸும்பெயர்ச்
செந்தமிழ்ப் புலவரிற் சிறந்து மாண்புடன்
வந்துமா மழிசையன் பதம்வ ணங்கியே
சந்தத முளந்தனி லன்பு சார்ந்தரோ. 56
மழிசையன் றன்புகழ் வளங்கள் பாடியே
அழிவில்சீர் இருத்திய னணுக வோர்பகல்
மொழியுமந் நகர்மனு முறையி னாண்டருள்
எழில்பெறு மரசனு முலாவந் தெய்தினோன்; 57
புவியுடை வேந்தனும் புலவன் வைகிடத்
குவிசொடும் பலபொரு டந்தென் மீதிலோர்
கவிசொலென் நுரைத்தசொற் கனலிற் காய்ச்சியே
செவியுடு மூசியொப் பாகச் சேர்தலும்; 58
இனியவெம் பரன்புக ழியம்பு நாவினால்
மனிதர்மேற் கவிதையான் வழங்கு கின்றிலேன்
பனியென வழிவுறும் வாழ்வைப் பற்றியே
குனிசிலை வயங்கொளேன் என்று கூறுவான். 59
அரும்பொரு ளிஃதெலா மற்ப வோடதாம்
துரும்பதாம் நீயெனச் சொல்லி வீறுடன்
பெரும்புக ழமாளனும் பெயர்தல் காண்குறா
இரும்புவிக் கரசனு மிதையி யம்புவான். 60
அன்னதே யாமெனி லருந்த மிழ்வலோய் ‘
என்னதாந் தேயமீ திருக்க லாகுமோ
பன்னுக : நீயெனப் பாரை யாள்பவன்
சொன்னசொல் லவன் செவி கருக்குற் றெய்தலும்; 61
கணிகண்ணனும் ஆழ்வாரும் பெருமாளும்
கச்சியை விடுத்தல்
உன்றிருத் தேயமீ துறைவ தில்லையான்
என்றுரைத் தக்கணம் விரைவி னெய்தியே
துன்றுசீர் மழமிசையன் றூய டித்துணை
குன்றலை மீதுறத் தரித்து யம்புவான். 62
(வேறு),
ஐய கேட்டியின் றென்னையித்
தேயமா எரசனும் வருவித்துச்
செய்ய வோர்கவி தன்மிசைப்
பாடெனச் செப்பிட மறுத்தேனால்
வெய்ய னும்எனைத் தனதுதே
யந்தனை விட்டக லெனச்சொன்னான்
துய்ய நின்பதந் தொழுதகல்
குவனெனச் சொற்றனன்; நடவுற்றான். 63
அனைய ஸனேகலும் நின்னைவிட்
டிங்ஙனம் அணுகிலன் யானென்ன
– . வினையி லாமழி சையனுநா ்
கணைமிசை விளங்குற வளர்கின்ற
புனைது மாய்வெஃகு மார்பினன்
பொன்னடிப் போதினைப் பணிந்தேத்தி
இனைய சற்கணி கண்ணனித்
தேயம்விட் டேகுதற் கமைந்தானால்; — 64
அவனை நீங்கியா னீங்குறை
இன்றிலே. னாதலா லவன்பின்னே
குவனின் னாகணை சுருட்டிக்கொண்
டென்னுடன் கூடவா வெனலோடுஞ்
சிவனுந் தேர்கொணான் வேறொரு
தேயநீர் சேறலென் னோவென்னாப்
் பூவன வேந்தனும் தன்மிசை
. ‘கவியிவன் புகல்கிலா மையினாலே. | 65
இந்தத் தேயம்விட் : டேகென
இவன்றனக் கியம்பின னெனலோடும்
அந்தப் பேரவ மதியுன
தடியற்கன்’ றஇினிற்பதின் மடங்காக
எந்தனைச் செய்த தாகுமா
லுனைப்பிரிந் இருக்கல னிவண்விட்டே
உந்த னோடுசெல் குவனென
வுரைத்துவந் துறங்குநா கணைதன்னை; 66
சுருட்டு றாவெடுத் தேகலும் .
மருகுறு தூய்மையார் மடவார்கள்
மருட்டு றும்மிவ. ரொடுமறு ்
தேயம்யான் மருவுவன் இன்றென்னா
இருட்டி ஸீங்குவிட் டேகலென்
னெனவவ ரிசைத்தலு மடியார்தம்
பொருட்டெ. னாநடந் தமையெலாம்
புகன்றனன் புவிதனை யளித்துண்டோன். 67
அம்மொ ழித்திரு மகளொடும்
புவிமக ளாகிய விருவோர்கள்
தம்மி ௬ஞ்செவி யுறுதலுந் இயங்கியே தனித்திவ ணுறையேம்யாம்
உம்மு டன்துடர்ந் இடுவமென்
றெழுந்தவ ர௬டன்வர விரைவோடுஞ்
செம்மை சேரும்வெஃ காவைவிட்
டேமறு தேயஞ்சென் றனர்மாதோ. 68
இச்செ யற்கண்மற் றுளதிருப்
. பதிகள்வா. ழிறைவர்தேர்ந் துடனேக
நிச்ச யித்தவ ரவர்கடந்
தேவியர் நெருங்கித்தம் முடன்செல்ல
கச்சி தன்னைவிட் டேகினர்
மறுதினங் காலையிற் புனறோய்ந்து
குச்சி னிற்கத வந்திறந்
தர்ச்சகர் கோயிலுட் புகுந்தாரால். 69
புகுந்து நோக்கலு முபயநாச் சியார்களாம் பூவைய ரொடுஞ்செந்தேன்
உகுந்து ழாய்முடி நாரணர்
தங்களை யொருவருங் காணாராய்
மிகுந்த வற்புத மடைந்தவ ராகியே மீண்டொரு விடத்தொளன்றித்
தகுந்த யோசனை புரிந்த னர்திருத் தலங்கள்வாழ் மறையோர்கள். 70
முரச றைந்திடு படைத்தலை
யுடையவம் முதுநகர்ப் புரந்தோம்பும்
அரசன் மாடணைந் தித்திறம்
யாவுமங் கறைதலு மதுகேளாப்
புரசை யானைய ஸனூள்மிக
நடுங்கியிப் புதுமையை அமைச்செய்தும்
பிரச மாலையீர்[ புகலுமி
னென்னவப் பெரியரு மிதைச்சொன்னார். 71
பணிமு டித்தலை சுமந்திடு
மிரும்புவி பரித்திடுந் திணிதோளாய்
கணிக ணற்குநீ பிழைத்திடும்
பிழைகளக் கணிகணன் ..றனக்கல்ல :
மணிவ ஸணற்கிழைத் துளதென .:
வுணர்திமற் றவன்றிரு மலர்போன்ற
அணிப தத்தினிற் றொழுதுப
– சரித்திடி லவரணை குவரென்ன? 72
கேட்ட போதுவெஃ காவிடை
யேகியே கேட்கலு முளதாமிந்
நாட்டி லில்லையக் கணிகண
னிவ்வழி நடந்தன னென்வாங்குக்
கூட்ட மிட்டவ ர௬ரைத்தலு
மந்நெறி குறித்துப்பா ரளப்பான்போல்
ஓட்ட மிட்டொரு நொடியினிற்
சென்றன னொளிர்மணி முடிவேந்தன். 73
மின்னி ழிந்திரும் புவிமிசை
நடந்தென விரைவொடும் நடந்தேகும்
பொன்னி னோடுமம் புவிமகள்
தமதடிப் போதினைப் பணிந்தேத்து
என்னி லென்பிழை கண்டுநீ
ரேகுவ தியம்புவி ரெனலோடும்
உன்னி லோர்பிழை யாங்கள்கண்
டுணர்கில முலகிய லதுகேண்மோ. : 74
கணவன் போம்வழி மனைவிய
ரேகுதல் கடமையா மதனாலெம்
மணவன் போகயாம் பின்றுடர்ந்
தேகுவ மன்னனீ யவரைக்கேட் (டு)
உணர்கு வாயென வாங்கவ
ருரைத்தலு மொளிர்மணி முடிவேந்தன்
பணவ ராவணை சுருட்டிமுன்
பெயருமப் பச்சைமாற் கெதிர்சென்றே; 75
இருவ டிக்கணின் றடியனே
னென்பிழை செய்தன னெனநீயும்
மருவு கோயில்விட் டேகுவ
தென்னலும் மன்னவன் றனைநோசக்கி
முருக விழ்த்தபூநர் தொடையவ ரென்வயின் முளரிசேர். வண்டென்னப்
பெருகு மன்பின ரார்தினம்
யானெனப் பேசுத லுணர்வாயால். 76
ஆத லாலென தடியனாம்
மழிசைய ஸின்னகர் தனைறீங்கிப்
._ போத லோடுமங் கவனுடன்
யானுமே போகின்ற தறியுன்பால்
ததுண் டாமெனி. லவனை நீ
வினவிடிற் றெரிந்திடு மெனமாயன்
ஒத லோடுமன் னவனுமன்
னவனிடத் .துகந்துசென் றனன்மாதோ. _ 77
சென்ற வன்றிருப் பாதவம்
புயங்கடன். நிருமுடி யுறச்சூடி இன்று நான்பிழை யிழைத்துள “
தென்கொனீ யேகுதற் கெனலோடும்
வென்றி வேலினோய் நின்னுட ்
னொருமொழி விளம்பிய திலையான்மற்(று)
ஒன்று நீயப .சாரமெற்
கிழைத்தது முணர்கில மதுகேண்மோ. 78
பிரிய மூற்ெ றனைச் சார்ந்துள
கணிகணப் பெயர்பெறும் புலவோனும் ட்
புரியு நின்புவி யெழுந்துவிட்
டேனெனப் போயின னவன்றன்பால்
பரிவு கொண்டயான் அடைந்துளே
னவனிடம் படர்ந்துநீ வினவுற்றால்
தெரியு மாங்கவன் திரும்புறில் ்
அவன்பினே’ இரும்புவன் யானென்றான். 79
என்ன வோதலு மலைகட
லுடையுடை யிரும்புவி தனையாளும்
மன்ன வன்விரைந் தடைந்துதன்
முடியுறு மணிமுடி கணிகண்ணன்
பொன்ன டித்துணைப் போதுவைத்
இங்கியான் புரிந்துள பிழையாவும்
அன்னை பாலிளங் குழவிசெய்
துளதென வகம்பொறுத் திடல்வேண்டும். 80
மூவரும் திரும்பினர்
என்று பற்பல வினியநன்
மொழிபுகன் றேத்திவேண் டுதலோடும்
நன்றெ னாநயந் தவன்வெஃ
காவழி நடக்கலு மவன்பின்னே
கன்றி னைத்துடர் பசுவென
மழிசையன் கடுகின னவன்பின்பாய்
வென்றி யாழிய னடந்திட
அவன்பினே மின்னனார் களுஞ்சென்ஜறார். 81
வேந்த ஸனும்மகிழ் வுடன்வரப்
பின்செல விரைந்து£ர் வெஃ்காவுள்
காந்து பன்மணிக் கோயிலுள்
யாவருங் கலந்துபின் மலையொன்றை-ஏத்தி மாமழை தடுத்திளங். கோவிய ரிளமுலை வளம்வேட்ட
பூந்து மாய்முடி மாயனை
நோக்கியம் மழிசையன் புகல்வானால். 82
மன்னி னன்சகணி கண்ணன்யா
னவன்பினே வந்துளே ஸினியுன்றன்
பன்ன கப்பெரும்’ பாயலை
விரித்ததிற் படுமெனப் படுத்தானால்.
அன்ன நாண்முத லத்திருப் பதியின்வா மாழியங் கையற்குச்
சொன்ன வண்ணஞ்செய்் தருள்பெரு
மாளெனத் தோன்றிய தொருநாமம். 82
மற்ற வத்திருப் பதியுறை பவர்களும் மனைவிய ரொடு தம்மூர்
உற்ற டைந்துயர் கோயிலுண் ்
மகிழ்வொடு முறைந்தனர்; புவியாளும்
வெற்றி வேந்தனு முளங்களித்
தரமனை மேவிவாழ்ந் தனனவ்வூர்
சொற்ற பார்க்கவன் மதலையுஞ்
சிலபக றநுன்னிவாழ்ந் ததன்பின்னர்; 84.
(வேறு)
மருவுவெஃ காவை நீங்கி
மாங்கனித் தேற லும்பார்
பருகிள மேகிப்” பாலும்
பாசமா ரிறாலின் றேனுங் குருமணிக் கரும்பின் சாறுங். *
குளம்பல நிரம்பப் பாயும்:
இருவளர் குடந்தை யென்னுந் ட. 3 தெய்வமா நகரஞ் சேர்ந்தான். 85
அத்திருப் பதிவா மாரா
வழுதரின் அம்பொற் பாதஞ்
சித்தமுள் ஞருக யன்பு
செழிப்பவா லயத்துட் சேர்ந்தே
நித்தமும் வணங்கிப் போற்றி ட்ப
நிகமுமாண் : டதுவோ ராயி
ரத்துநா னூறவ் வூரி: ன
னமர்ந்துவாழ்ந் இருந்த பின்னர்; 86–ஆராவமுதனை வணங்கி ஆழ்வார் குடந்தையில் 1400 வருடம் வாழ்ந்தார்.
பெரும்புலியூர் நிகழ்ச்சி
குரும்பையங் கொங்கை “நீலக்.
கூர்விழிப் பணையின் மென்றோள்
சுரும்பிமிர் கரிய கூந்தல்
ஹறோகையர் முத்த ளக்க.
அரும்பின நிலவில் வாய்விண்
டலர்ந்திடுங் குவளைப் பண்ணைப்
பெரும்புலி யூரின் வாழும் பிரபல னொருவ னன்னோன்/ 87
செகந்தனி லுயர்ந்த சர்த்திச்
செழுமறை யவன்றா னாங்கோர்
மகந்தனை யியற்றல் கேட்டம்
மாமகம் காண்பா னாய்த்தன்
அகந்தனி னினைவுற் றாங்கண்
அணுகியவ் .வூர்வாழ் கோயில்
உ.கந்துறை செங்கண் மாலை
யுணர்ந்திவன் வலம்வந் தானால், . 88:
வலமதாய் வரும்போ தந்த
மண்டபம் கோயிற் றம்பம்
_ இலகுறு பெருமான் மற்றும்
இயைவன மற்றும் யாவும்
நலமுறு மழிசை யான்பின்
நடத்தல்போற் _றிரும்பல் காணாப்
பலருமாங் கதிச௪ யித்தங் ட
சுவர்பதம் பணிந்து போற்றி; 89 ்
இந்தமாப் புருடன் யாவன்?
இவன்மகத் துவந்தா னென்னோ?
பைந்தலை யரவி ஸாடும்
பரமனிவ் வுருவந் தாங்கி
வந்தன னாம லாவிவ்
வணஞ்சுழன் நிடுமோ வென்னாச்
சந்தையின் மகிழ்ந்து கொண்டா
டினர்களச் சீரோன் றன்னை. ் 90
மழிசையன் றானு மவ்வூர்
வைகினன் மகம்செய் வோனும்
விழிதுயி லுணர்ந்து காலை
விதிமுடித் தெக்ய சாலை
உழிமிகு நியம மாய்ச்சென்
றுற்றவ னேக லோடும்
வழியினோர் மடவாள் தன்கால்
நீட்டலும் மறையோன் காணா; 91
வேலைவென் நிடுங்கார்க் கண்ணாய்।
வேலையின் வளர்வ ஸத்தாய்/
மாலைசேர் மாலை நோக்கி
மகம்புரிந் இடுமவ் வெக்ய
சாலையான் சால நேமந்
தன்னுடன் விரைவி னேகுங்
காலைநீ காலை நீட்டிற்
றென்னெனக் கனன்று சொன்னான். 92
சொன்னவம் மொழிதன் காதற்
சுருக்குற முத்த மூரல் மின்னிட நகைசெய் இிப்பார்
மிசையொரு கடவு ளாக
இன்னகர் தனில்வந் தெய்து
யிருக்குமம் மழிசை யான்றன்
பொன்னடி. வணங்கிப் பூசை
புரிந்திடு புலமை யில்லோய். 93
தினக்கொரு மொழியு முண்டோ?
நின்மகம் மகந்தா னாமோ?
எனக்கொடி மடவாள் கூற
இருசெவி. புகுத லோடும்
கனக்கவு நாணங் கொண்டக்
கன்னியைப் புகழ்ந்து வாழ்த்தி
மனக்கவ லையினோ டேயம்
மறைவலான் சாலை புக்கான். ் 94
புக்கவன் மடவாள் சொற்ற
புனிதனை விரைவி னோடுஞ்
சிக்கென வவ்வூர் முற்றும்
தேடினன் தெரியா னாகி
மிக்கவாந் துயரி னோடும்
மெய்தளர்ந் துயிர்த்து வாடித்
தக்கதே தறிதற் கென்னாத்
தன்னகஞ் சார்ந்தா னன்றே. 95
மனதுவெந் துயரொ : டுங்க
வளர்வுமி மழிசை யுற்றோன்
தனதுரு விதுதேர் கென்னத்
தானவ ஸூருவந் தாங்கக்
கனவினிற் றெரித்துப் போனான்
கஞ்சனா ருயிர்போய்த் துஞ்சச்
சினவரா வணையை நீங்கித் தேவகி வயித்தின் வந்தோன். 96
கண்டுயி லுணர்ந்து பின்பவ்
வுருவினைக் கண்கா ணாமல்
விண்டுவந் துணர்வித் தானென்
றுளந்தனில் வியப்புற் றானால்!
மண்டுறு முவகை யோடம்
மறைவலோன் றிருமா லுக்குத்
தொண்டுறு மவனை நாடித்
துரிதமுற் றெழுந்து காலை; 97
ஆங்கொரு வனுமா யுற்றோர்
ஆவண வீதி யின்கண்
பாங்குறு பிரப்பங் கூடை
பரிவொடு .முடைந்திட் டந்தத்
குங்கிலான் விற்றல் காணாச்
செழுந்துயில் கனவிற் கண்டோன்
ஈங்கிவ னாகு மென்னா
வெண்ணியுள் மகஇழ்வுற் நானாய்; : 98
ஐய/நீ யிவ்வா றுற்ற தறிந்திலே னறியத் தக்கோர் .
வையமீ தில்லை; இந்த
மானிட வடிவங் கொண்டு
உய்யுமா றுற்ற தேவே:
எனவுள முருகி யன்னோன்
செய்யபங் கயத்தாள் மேலே
இருமுடி சேர்த்துச் சொல்வான். 99
என்பெருந் தவமோ? முன்னோர்
இழைத்திடுத் தவமோ? இப்பார்
தன்பெருந் தவமோ? இந்தத்
தனிமகந் தனக்குற்’ றோர்கள்
முன்புரி தவமோ? யாதோ?
…. தெரிகிலேன்; முளரி யொப்பாம்
நின்றிரு வடிச)ு ணோவ
வந்திவ ணடைந்த தென்னா; 100
என்னநன் மொழிகள் பேசி
யான்புரி கின்ற வேள்வி
தன்னைநீ காணு மாறு
சார்ந்திட வேண்டு .மென்னா
் ௮அன்னமா மறையோன் வேண்டி .
அழைத்துடு மின்சொல் யாவுங். –
கன்னமூ டுறலு முள்ளங் : :
காப்புட னவன்பின் சென்றான். 101
யாகசாலையில் நிகழ்ந்தது
மகம்புரி சாலை யெய்தி.
மறைமுறை வழுவா தங்கி
யுகந்திட வாவி நெய்கொண்
டோமமுற் றியபின் தேவர் :
முகந்திட வவிக ணல்கி
. முடிந்தபின் மழிசை யானுக்(கு) “-அகங்களித் தெழுந்து சம்பா
வனைமுன மளித்தா னன்றே. 102
அன்னவர்க் களித்தல் காணா
ஆங்கணுற் றிருந்தோ ரெல்லாம்
இன்னவன் மகத்திற் கெய்தி
யிருந்துள மேலோர் தம்மில்
மூன்னரிற் பூசை கொள்வோன்
முறமொடு கூடை தட்டும்
பின்னிவிற் பவனோ வென்ன?
வெகுண்டனர் பெரிது மன்னோ. 103
நிருபர்கள் பலரை வென்று
நெறிவழா திராய சூயந் தருமன்செய் தஇிடுதாள் முற்பூ சனையுயர் வசுதே வன்றன்
இருமகற் களித்த காலை
தனிற்சசு பாலன் வெம்பி
உருமெனத் தெழித்தற் கொப்பாய்
உதாசனம் பலவும் சொன்னார். 104
அவ்வுரை பலவுங் கேளா
வந்தணன் மழிசை யான்றன்
செவ்விய முளரி யொப்பாந்
திருவடி தனது சென்னி ஒவ்வுறப் பணிந்திட் டின்னார்
உரைத்தபுன் மொழிகள் எண்ணா
இவ்வயி னடியேற் காப்பாற்
றருள்மிகப் புரிவை யென்ன; 105
பன்மொழி நயக்கு மாறாய்ப் |
பண்புறப் பகர்ந்து போற்றி,
சின்மயப் பொருளா யிப்பார்
– செனித்துறை சோதி யான
நின்மகத் துவமிப் புல்லோர் ன ரர
நெஞ்சுறத் தெரித்தி யென்னா. ‘
நன்மகத் தலைவ னான
மறைவலோ னவில லோடும்; . 108:
இறைவன் காட்சி
அந்தநன் மொழிகள் கேளா
அவனுமைம் படையோன் றன்னைச்
சிந்தையுள் ஞணர்த்த லோடுஞ் ~ சுவனய னுடனே யண்டத்
இந்திரன் முதல்வா னோர்க ,
ளேத்தவந் தரத்தின் மீதாய்ச் ்
செந்திரு வுடனே மாயோன்
உவணன்மேற் சிறந்து தோன்ற; 107°
ஐம்படையோன்றன்னை – ஐந்து ஆயுதங்கள் தாங்கிய.
இருமாலை.. இறைவனை ஆழ்வார் சிந்தித்தார். உடனே மாயோன் கருடன்!
மேல் சாட்சி தந்தான், உவணன்மேல் – சுருடன்மீது. :
இச் சமயத்தில், ஆழ்வார்,
**அக்கரங்கள் .அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கி௪
“உட்டிடத்த வண்ணமே புறம்பொ௫ிந்து
என்று பாடியதாக வரலர்று பேசும்.
காண்டலு மழிசை யான்றன்
_ கண்களித் துளத்தி னூடு
பூண்டபே ரன்பி னோடும்
புவியுற வணங்கி யென்னை ஆண்டருள் பரம மூர்த்தி
அண்ணலே விண்ணோர் காணாத்
தூண்டருஞ் சுடரே யென்னப்
புகழ்ந்துகை தொழுது சொல்வான். 108
அஞ்சனை யளித்தாய் போற்றி!
அலகைமா முலைவைத் தாட்ட
நஞ்சமுண் டுவந்தாய் போற்றி!
நாகமே ஸனடித்தாய் போற்றி!
கஞ்சனை வதைத்தாய் போற்றி!
கரிபரி யிடப மெல்லாந்
துஞ்சுறப் பொருதாய் போற்றிர
தூயனே. போற்றி । போற்றி! 109
எனதுமா தவத்தி னால்வந்
தெய்தினை யினிநா யேன்வந்து
உனதுமாப் பதாம்பு யத்தை
யுறும்வகை யளித்தி யென்றான்
மனதுவந் தருளி யன்னான்
மாமூகந் தன்னை நோக்கிப்
புனைதுழாய்ப் படலை எம்மான்
புகல்குவ னிதனை மன்னோ. .. 110
இன்னமும் சலநா ஸளிப்பா
ரிடையிருந் துலகு ‘ளோர்பால்
துன்னுமா மாயை நீங்கி
“.. உயர்பதந் துடரு மாறாய் -பன்னுசெந் தமிழி னாற்பல்
பாடல்க ளிசைத்துப் பின்னர்
மன்னுதி யென்னத் தன்செவ்
வாய்மலர்ந் தருளி னானால், 111
அப்பொழு தாழி மாய ,
னடியினை வணங்கி யேத்தி :
இப்பெரும் புருட. னாலுன்
னிணையடி தொழுது யான்செய
ஒப்பரு மகத்தி னுற்ற வுயர்பல னடைந்தே ஜனென்னாச்
செப்பரு மகிழ்வி னோடுஞ் ,
சிந்தையுள் ளூருகி நின்றான். 112
மற்றுமவ் வேள்விக் குற்றோர் ட்…
மனமகிழ்ந் தடைந்து ளோரும் ்
நற்றுணை யா௫க் காக்கும்
நாரண ஸனென்னு நாமம்
வெற்றிசே ராழி சங்கம்
விற்கதை வாள்கைக் கொண்டோன்
பொற்றிரு வடியின் வீழ்ந்து , புகழ்ந்தனர் துதிசெய் தாரால். ் 113
பாங்கொடு மிவ்வா றாகப்
பரிந்தடி தொழுது போற்றும்
ஆங்கவர் தமக்குக் காட்சி
யளித்துத்தன் பதவி சார்ந்தான்;
பூங்கம லத்து வாழும்
புனிதனன் நிட்ட சாபம் – ட்ட
தாங்கிய வரனுக் கையந் ்
.தனையழித் தொழித்த நாதன். ப். 114,
மாயவ னகுன்ற பின்னர்
* மகம்புரி மறையோ னண்மி
ஆயநன் மகத்திற் காவந்
துளபல ரும்யாஞ் செய்த
இயன பொறுத்தி யென்னத்
்…. திருச்செவி யின்ப முற்ற
தூயவன் கமல பாதந்
தொமுதன ரேத்திச் சொன்னார். 115
யாவரு மினிதி னோடும்
பின்னரு மியற்றல் யாவும்
முடித்தபின் னிருக்கை தன்னில்
அன்னவ ரடைந்து வாழ்ந்தா
ரப்பெரும் புலியூ ரென்னும்
பொன்னகர் மழிசை யானும்
பொருந்திவீற் றிருக்கும் நாளில். ் 116
ஒருநாட் கிழிந்த வத்திரந்தத் துறுபோ துமையு முருத்திரனாம்
எருதே —கயிலையெனு
மில்லம் விடுத்தந் தரமிசையே
வருபோ தவர்மே ஸிச்சாயல்
மற்றிம் மழிசை யாழ்வார்தன்
இருமே ஸனியிற்றாக் குதலுமுளந் இகைத்துப் பின்பா லொதுங்கினனால். 117
கண்ட வுமையா ஸிவனிடையும்
கருமம் யாதென் றிடக்கேட்டு
வண்டுண் துளவத் திருநெடுமால்
மலர்நே ரடிமைக் கடிமையுறும்
தொண்ட னதனா ஸஊஞ்சாயற்
ஹறோயா திடைந்தா னெனக்கடல்நஞ்
சுண்ட பெருமான் கூறிடக்கேட்
டொருபா கத்தி னுமையுரைப்பாள். 118
படியை யிரந்தோ ரடியதனுட்
படுமா றளந்து கொண்டருள்புட்
கொடியை யுயர்த்தும் திருமாலின்
குரைபொற் கழலார் கோகனக
அடியை வழுத்தும் . திருத்தொண்ட .
னாமே யெனினு மரவொடுவெண்
பொடியை யணிநீ கடவுளன்றோ? :
புவியிற் பிறந்தோர் தமக்கெல்லாம்.119-
அதையா மெய்தி யுணர்த்துமென
.அரனு மவன்பா லடையினமை
மதியா னெனலும் மதியான்பால்
மதிப்பா யெய்தி மற்றவன்பால்
எதுவேண் டினுமஃ தளித்தல்கடன் ‘ ன
எனக்கேட் டவளின் மொழிமறுக்கும்
விதமின் மையினா லுடன்பட்டு
மேவு மவன்மா முகநோக்க;–120-
வேண்டும் வரங்கே ளெனவுசி
மேவும் வழியவ் வூசிதனிற்
பூண்ட நூல்போம் வரந்தருதி
யெனவே புகலப் பொற்கண்ணான்
ஈண்டுன் வறுமைதவிர் வரங்கே
ளெனலுந் தனது முதுகதனைத் தண்டி வெயர்வை தனையுருட்டிச்
சிந்திப் புவிமேற் றெரித்தனனால். 121
பொன்னின் மலைபோ லதுகுவியப்
பொருணின் றனக்கு வேண்டிலிது
தன்னைக் கொடுபோ வெனமழிசை
– தனில்வந் துதித்தோன் சாற்றுதலும் அன்ன மொழிவந் திருசெவியுள்
ளனல்போற் புகுதப் பொறாமையினால்
கன்னி பாகன் வெகுண்டுநெற்றிக்
கண்ணைத் திறந்தான்; திறந்திடலும், 122
புகைகொண் டெழும்பும் வடவனல்போற்
பொங்கும் கனல்விண் தொடர்ந்தெழும்ப
நகைகொண் டருளி யணிமழிசை
நகர்வந் துதித்தோ னவைநணுகா
வகைதன் பதத்தார் விரல்நகக்கண்
மலியா ரழலைத் திறந்துவிடப்
பகைகொண் டதனை வளைந்துறழ்வாய்
படுத்திக் கணத்திற் பருகியதே. 123
பின்னும் வெகுண்டு புரமட்ட
பெருமான் வேறு நிகரிலதாய்
மன்னுஞ் சூலந் தனைவிடுப்ப
மதித்தாங் கதனைக் கைக்கொளலும்
அன்ன துணர்ந்த வசரீரி ்
யமரர் தமக்கு மறிவறியாய் ்
இன்ன படைநீ விடுத்திடினும்
எய்தி யவனா லழிவெய்தும். 124.
ஆத லாலிங் கிதனைவிடா
தகல்தி யெனவம் மொழிகேட்டுச்
– சீத மதியுங் கங்கையுந்தண்
செழுங்கொன் றையுஞ்சேர் செஞ்சடையோன்
பாதி யுடலங் கொண்டமலை
பயந்த மடவா டனைவெறருத்துப்
போத நாணுற் றிடபமிசைப்
பொருந்தி விசும்பிற் போயினனால். 125:
(வேறு)
ஆங்கவன் போய பின்னர்
அணிமழி சையின்வந் துற்ற
இங்கிலா வுளத்தா னந்த
செழுநக ரதனிற் சின்னாள்
தேங்கமழ் துளவப் பைந்தார்
தஇருமக டலைவன் செய்ய ,
பூங்கழன் மதிக்கு முள்ளம்
பொருந்திவீற் றிருக்கும் நாளில். 126,
குடந்தையி லமர்ந்த பொன்னங்
கோயிலுட் டிருவ னந்தன்
படந்தனிற் றுயிலு மாரா
வமுதினைப் -பரிவி னோடுந்
தொடர்ந்தனு பவித்த வானந்
குத்தினைத் தொடர்பை யெல்லாம்
கடந்தவம் மழிசை யானுங்
கருதிப்பா விசைக்க லுற்றே; 127
நான்முகன் இருவந் தாதி நாற்பதோ டைம்பத் தாறும்
தேன்பொழி யாநீர் பத்துத்
திருச்சந்த விருத்தம் தானும் வான்மரு வமூத மென்ன
மண்ணுளோர் துய்க்கு மாறாய்த்
தான்கனிந் துரைத்தா னஃதைச்
சாற்றிவீ டடைந்தார் பல்லோர். 128
அவ்விரு நூற்றுப் பத்தோ
டாறெனுங் கவிதை தன்னு
ளொவ்வியே கமலை கேள்வ
னுவந்துறை கின்ற வாகும்
திவ்விய தேச மீரெண்
செப்பிய ததனுக் குற்ற
செவ்விசேர் நகரந் தன்னைத்
தெரிவுறப் புகல்வா மன்றே. 129
சீரரங் கம்வெஃ காவுந்
இருவல்லிக் கேணி தன்னோ
டூரகங் குடந்தை கோட்டி
யூர்குறுங் குடியோ டோதும்
பேரெவ்வுள் வேங்க டம்அன்
பில்திருப் பாட கம்து
வாரகைக் கூடலும் பாற்க
டலும்வை குந்த மாமே. 130
இப்ரபந் தங்கள் பாடி
யினிதொடுஞ் சிலநாள் வாழ்ந்து
முப்பரம் பொருளாய் வைகும்
முகுந்தனா ரருடன் னாலே
ஒப்பிலா விமான மேறி
.யுயர்ந்திடும் விரசை யாடிச்
செப்பிடும் அமான ஸார்தந்
இருவடி சென்னி சூடி; ~ 131
படிகநன் மேனி தாங்கிப்
பரமமா பதத்துட் சார்ந்து
குடியதாய்ச் சாம வேத
கீதங்கள் குலவிப் பாடி
நெடியநா ரணனோ டண்மிப்
பொருந்தின னிகழிக்காதை
அடிதொடங் குதலாய்க் கற்பார்
அடைகுவர் பதவி மாதோ. 132
தொண்டரடிப்பொடியாழ்வார் வரலாறு பகர்வோம்
சுமிகட லாடை யாகச்
சூழ்ந்தபா ரதனி ன்மீதே அழிவில்சீர் மழிசை தன்னி
லவதரித் தருளுஞ் சீர்த்தி மழிசையான் சரிதந். தன்னை
வகுத்துரைத் தனமால் இப்பால்
மொழிகுதுந் தொண்டர் தங்காற்
பொடிகதை முழுதுந் தானே. 133
திருமழிசையாழ்வார் தஇருவவதார அத்தியாயம் முற்றும்.
————-
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவவதார அத்தியாயம்
வெண்பா
மன்னியசர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனிலுரைக்கேன்–துன்னுபுகழ்
ஆமறையோன் தொண்ட ரடிப்பொடி யார்பிறப்பால்
நாமறையோர் கொண்டாடு நாள். (உபதேசரத்தினமாலை, -11)
மண்டங்குடிச் சிறப்பு :
வண்டங்குடி யிதின்வேரிலை யெனவேவளம் விட்டே
கண்டங்குடி விலினேவுக ணையர்கார்க் குழலுறல்போல்
அண்டங்குடி துறவாகட , வுளர்வந்தணு குறுசீர் ,
மண்டங்குடி யெனுமோர்பதி வளமேவிய பதியே, 1,
ஆழ்வார் அவதாரம்
அம்மாணக ரிடைவாழ்மறை யவர்தங்குல மதனில்
இம்மாணில முழுதும்புக ழிசைகொண்டுறு மொருவன்
செம்மாமட வரல்கற்பினில் தெளிநீர்மையி னிறையில்
எம்மாதரு மொவ்வாத்திரு வெழிலாளவள் வயிற்றின்.–2-
நாராயண ஸனூருவாமென நவில்மார்கழி யெனுமச்
சீரார்மதி தனிலிந்திர தினமாகிய திருநாள்
ஏராரற மொழியோங்குற இருமாகட. லெழுமவ் ்
ஆராவழு தெனவந்தவ தரித்தான்வினை யெரித்தான். 3
அண்டர்களி கூரப்பெறு மாயத்தனு மகிழ்வாய்
தொண்டர்கழல் பொடியர்க்குறு சுபகாப்பணிந் ததற்பின்
உண்டிட்டிடு மன்னத்தொடு சவளம் உப நயனம்
பண்டைக்குல மறையின்முறை பலவும்புரி வித்தார். 4
திருமணம்
உருவம்மத னெனலாயணை குறுநாடனின் மதனூல்
பருவம்வரு தலுமன்பொடு பனிமாமலர் வளருந்
இருவும்நிக ரலவென்றுரை செயுமொப்பில வடிவம்
மருவுங்குல மடமங்கையை மணமும்புரி வித்தார். 5
துவளுங்கொடி யிடையொல்கிது வண்டெய்திட வரைபோல் ்
இவளுந்தன மகலும் உரம் ஜெழுங்கத்தரு வணைமேல் |
பவளம்பொரு மிதழின்சுவை பருகும்படி யொருமித் t
துவளும்மிவ னொடுகூடிய ணைந்தின்பம டைந்தாள். 6
கயற்கண் வலையில் படல்
இவ்வாறவ ளொடுகூடியி ருந்தும்பிற வழகார் ச
செவ்வாய்மட வியர்தங்கடி றத்தாசைசெ லுத்தா
ஓவ்வாவவ ரொடுகூடியு றைந்தாரமு தெனவே
கவ்வாவிதழ் பருகாமிகு கனிவாயணை குவனால். -7
தவரும்முள னெகிழும்படி தங்கண்வலை தனைவீ க
சவர்சுந்தர வடிவங்களி லகமுந்துற வொழுகா,
துவர்செவ்விதழ் முதல்யாவையுந் துஇியாற்புக முதலால்
எவரும்மிவன் மதனாமென இயைவுற்றணை குவரால். . 8
(வேறு) ச |
இறைவன் தடுத்தாட்கொளல்
படியெ லாமுட் படிய வளர்த்திடும் ட
நெடிய நாரணன் நீள்பத பங்கயத்(து) அடிய ராக வகையுளத் தொண்டர்கால் ச
பொடிய ஸிவ்வணம் நாள்பல போக்கலும்.-9-
பொய்ய தாகும் புலவ னடத்தையை
மெய்யெ னாமனம் வீணிற் செலுத்தியே .
செய்ய வாய்மட மங்கையர்ச் சேர்வுறும்
மையல் கொண்டு மறந்தனன் நம்மையே. 10
ஆத லாலிவ னுள்ளமம் மங்கையர்
மீது றாதுதன் மேனி யொளியிடைக்
காத லெய்து கருத்தரு ளத்திரு மாது கேள்வன் மனத்திடை யுன்னியே. 1!
மடை மாறிற்று
அந்த —ளிச்செயச்
சிந்தை தன்னைத் திருத்தி யடைகெனப்
பந்தெ னுந்தனப் பாவையர் காதலை
நொந்து விட்டுளம் நோன்மைய ஸாயினான். 12
ஆங்க வன்றெறு மாழியன் பாலிறை
யோங்க வுள்ள முருகி யுருகிநைந்
தேங்கி யேங்கி யிருக்குமவ் வெல்லையத்
தீங்கி லானுளங் தேறிய தோர்ந்தரோ,. 13
இறைவன் காட்சி
மூல காரண ஸாயிய லுந்திரு ‘
மாலு மாதுடன் மாவயி னன்மிசை
நாலு மாமுகன் நாகர் முனிவர்கள்
கால காலனுங் கைதொழு தேத்தவே. 14
விண்ணின் மீதுவி எங்கித்தன் மேன்மையைக்
கண்ணி னூடுறை காட்சி யளித்தலும்
மண்ணி ஸனின்றவம் மண்டங் குடியனும்
எண்ணி யுள்ள மிழுதென லாயினான். 15
ஆடி னான்விழுந் ‘தானெழுந் தானெழுந் :
தோடி னஸால்குதித் தானுரு கிப்புகழ் பாடி னானவன் பங்கயச் சேவடி
சூடி னான்றொழு தான்களி துள்ளவே: 16
கழிந்தகாலங் கருதிக் கனிந்தார்
அகந்தெ ஸிந்திவ் வமுத மிருக்கவே
உகந்து மங்கையர் பாலுற வாம்விடம்
முகந்து கால முடித்தன மேயெனா
இகழ்ந்து ளத்தைப்பின் பின்னணம் பன்னுவான். 17
‘ நார ணாசிவன் நான்முகன் நாடிடுங்
கார ணாஅடி யார்தங் கருத்துறை ‘
பூர ணாமுகுந் தாபுனி தாவளர் ‘ ஆர ணாஉனை யாரறி வார்களே. 18
ருந் மா றம ரர்க்கன் றலைகடல்
மருந்து கந்து வழங்கினை வாணகை
.மாதர் கலைகொடு முன்வளர்
_ குருந்து: றுங்கருங் கொண்ட ஸிறத்தனே. 19
கத்தி னம்௮ழு தேங்கக் கனவரை
அத்தி னஞ்சுமந் தாயென் விழிகணீர்
முத்தி னஞ்சொரித் தானந்த முத்திட இத்தி னம்மெதிர்ந் தாயென தய்யனே. 20
என்னை யோர்பொரு ளாமென எண்ணியென்
அன்னை யாகு மமுதிடைத் தோன்றிய
பொன்னை மார்பிற் பொருத்திவந் தெய்திய
உன்னை யான்கண் டுரைக்கத் தகுவனோ. 21
என்று பற்பல கூறி யிரங்கிமுன்
நின்று கைதொழு தேநெட் டுயிர்த்தலும்
நன்று நன்றென் றிளநகை தோன் நிடக்
குன்று தாங்கிய கோவலன் கூறுவான். 22
பெருமாள் தேற்றினான்
எனது மாயை யெனுமிரு ளெய்தியே
உனது நல்லறி வைமயக் குற்றிட
மனதவ் வாறு மயங்கினை யாகும்நின்
தனது ளத்தைத் திருத்துறச் சார்ந்தனம். 23
வருந்து றேலினி மாயையும் நீங்கிற்றால்
பொருந்து சீரங்கம் வந்து புகுகெனாத்
இருந்தும் இம்மொழி செப்பி மறைந்தனன் விருந்து முன்னம் விதுர னிடத்துண்டோன். 24
(வேறு)
திருவரங்கம் அடைந்தார்
மாயன் மாயம தாக மறைதலுந்
தூய னானவன் சிந்தை துளங்குறா
ஆய காலையொ ரவகை. யாறியே
சாயை போலுந் தொடர்பைத் தவிர்த்தரோ. 25
முன்னர் அம்கம லத்துறை வோன்சவன்
அன்ன ரங்க மமர வனந்தனை
மன்ன ரங்க மதாய்த்திரு மால்வளர்
பொன்ன ரங்கம் புகுந்தன னென்பவே. 26
அங்கு வைகு மடியர்க ளாயினோர்
தங்கள் பொன்னடி தன்முடி தாங்கினான்
செங்க . ரங்கொ டவரிவன் சேவடி.
பொங்கு மன்பொடு பூசித் துளாரரோ. 27
ஒருவர் தம்மை யொருவ ருபசரித்
துருவ மாத லிறத்தலென் தோடும்.
இருமை யெய்த லிறுக்கு மவரொடுங்
குரும ணிச்செழுங் கோயிலுட் போயினான். 28
நச்சு றும்பணை நாகணை மேற்றுயில்
பச்சை மாமலை மேனிப் பவளவாய்
மொச்சு வண்டிமி ரும்முள ரிச்செங்கண்
அச்சு தற்பணிந் தானந்த முற்றனன். 29
ஆழ்வார் திருப்பணி
இந்த மாயனுள் ஸஎின்புற் றுகக்குமாறு
எந்த வேலை யிழைத்திட லாமெனச்
சிந்தை யூடு நினைப்ப வதுதெரிந்
தந்த மாலு மிதனை யறைகுவான். 30
(வேறு)
தொண்டர்தங் காற்பொடி யேசொல் லென்னிலன்
புண்டெனக் கதுகவி யுகக்கு முண்மையே
கண்டறி மஞ்சனக் காப்பொ டும்பல
கொண்டிழைப் பதுமது வாகுங் கோதிலாய். 31
ஆதலாற் கவியணி மாலை சாத்தியே
‘ததொழித் தெந்தனைச் சேர்தல் வேண்டும்பா
வோதிட முடிவுறா தெனின்மற் றொன்றுகேள்
போதணி மாலையைப் பொருந்தச் சாத்தியே. 32
என்னைவந் தடைந்திட வேண்டு மீதலால்
பின்னையொன் நிலையென வுரைத்துப் பின்னரும்
முன்னைநாள் விட்ணுசித் தன்மு யன்றிது குன்னையே யிழைத்தன னெனவுஞ் சாற்றினான். 33
அவ்வுரை கேட்டலு மவ்வி ரண்டையும்
வெவ்வியேற் கருள்செய வேண்டு மென்றிவன்
ஒவ்விய மனதொடு முரைப்ப வாழியான்
செவ்வியோ யம்முறை செய்கென் றோதியே. -34
திருப்பள்ளியெழுச்சி உதயம்
அன்னவன் திருமுடி யதிற்பொ ருந்துறத் : தன்னிரு பதந்தனைச் சார்த்த லோடுமே
இன்னிசை திருப்பள்ளி யெழுச்சி யென்பதைப்
பன்னினன் கதிரவ னென்னும் பத்தரோ. 35.
திருமாலை புனைந்தார்
தலங்களிற் இறந்த? ரரங்கந் தன்னிலே
யிலங்குமா லலதுவே றறிந்தி லேனென்றே
அலங்கலை யிசைபெறு மன்ப றைந்தனன்
நலங்கெழு செய்யுளோர் நாற்பத் தைந்தரோ. 36 :
“g7has SoG Qamgd மால் அல்லது வேறு 2 NGwer” என்பது
தொண்டரடிப்பொடியாரின் உறுதிப்பாடும் உளப்பாடுமாகும், இருவேங்கட
முடையான். இது குறித்து வருந்தியதாகச் சொல்லப்பட்டு வருகின்றது.
**தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே”’ என்பர் அப்பிள்ளை. 1!
**தென்னரங்க . மணவாளற் கன்பு மிக்குச் செப்பிய நற்றிருமாலை’” என்பர் ;
கவிதார்க்கக சிம்ஹர் (பிரபந்த சாரம்).
நந்தவனப் பணி
இம்முறைப் பாவைம்ப தைந்தி சைத்தபின்
விம்முறு முவகையின் விரைவி னேகியே
மும்முதல் ஆகுமம் முகுந்த னோதிய .
அம்முறை திருநந்த வனம்வைத் தானரோ. 37
குல்லைபா திரிமருக் கொழுந்து ௯விளம்
முல்லைபுன் னைகரு முகைகு ருக்கத்தி
மல்லிகை யொடுமிரு வாட்டி யேமுதல்
சொல்லுபூஞ் செடியெலாந் துன்ன வைத்தனன். 38
பக்குவம் செய்தவன் யாவும் செய்தலால்
மிக்கபூ மாலைகள் விளங்கு றத்தொடுத்
தொக்குமா றரங்கர்க்கு மரங்கம் வாழ்த்திட
மிக்குறச் சாத்துவன் விருப்பி னோடுமே. 39
அரங்கன் அருளிப்பாடு
இன்னணம் பலபக லியற்ற வோர்பகல்
பொன்னரங் கேசர்பூ மாலை கொண்டணை
யன்னவன் மாமுக தோக்கி யன்றுநீ
சொன்னபா மாலையைச் சொல்லு கென்னலும். 40
இப்பெரும் பாக்கிய மெய்திற் றெற்கெனா
ஓப்பரு மகிழ்சிறந் தோங்கத் தான்முனஞ்
செப்புமப் பாடல்கள் செவியு றும்படி
அப்பொழு தோதினா னடிவ ணங்கியே. 41
பாடினார் உருகினார்
பண்கொளப் பாடல்கள் பாடல் தோறுந்தன்
கண்களா ஸந்தநீர் கனிந்து திர்ந்திடப்
புண்களா ர௬டல்மயிர் பொடித்திட் டோங்குறும்
எண்கொளா வுருக்கமுற் நிரங்கி நின்றனன். 42
ஆழ்வார் அரங்கனில் கரைந்தார்
இரங்கிறின் நிடுமவற் கிரங்கி யின்பமோ
டரங்கரு மருகழைத் தழுந்த வேதன. துரந்தனி லணைந்திட வவனு மொன்தறியே
கரந்தனன் நீர்ப்பனிக் கரைந்த தொப்பவே. 43
பயன்
ஆங்கவ ஸிம்முறை யரங்கர் தந்திருப் –
பூங்கழற் பாடியே பொருந்தி யுற்றவித் இங்கிலாச் சரிதத்தைச் செவியி னுள்ளுறப்
பாங்குடன் கேட்பவர் பதவி சேர்வரே. 44-
அன்னசீர்க் கவிகளோ ரைம்பத் தைந்தினில்
பன்னக வணையினான் பதிகள் மூன்றதாம்
பொன்னரங் கம்வட மதுரைப் பூம்பொழில்
மன்னு£ ரயோத்திமா நகர மென்பவே. -45-
தொண்டரடிப்பொடியாழ்வார். மங்களாசாசனம் செய்த இவ்விய
தேசங்கள் மூன்று. அரங்கம், வடமதுரை, அயோத்இ. பாடியபதி- திருவரங்கம்
ஒன்றே. மற்றைய இரண்டு இிவ்ய தேசங்கள் சார்பாகப் பேசப்பட டுள்ளன,
குலசேகரர் வரலாறு கூறுவோம்
தோகைய ரின்பங்கொள் தொண்டர் காற்பொடி
நாகணை யானைநண் ஸணியது ரைத்தனஞ்
சாகரம் சூழ்புவி தன்னை யாள்குல
சேகரன் சரிதமுஞ் செப்பு வாமரோ. 46-
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதார அத்தியாயம் முற்றிற்று.
——–
குலசேகராழ்வார் திருவவதார அத்தீயாயம்
வெண்பா
மா? புனர்பூசங் காண்மினின்று மண்ணுலகீர்
தேசத் இவசத்துக் கேதென்னிற்- பேசுகின்றேன்
கொல்லி நகர்க்கோன் குலசே கரன்பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்.
(உபதேசரத்தினமாலை, 14.)
வஞ்சியர் மன்னர்
நாடக வரங்கினு ணடம்ப யின்றிடும்
ஆடர வல்குலார் யாழி னாங்கிசைப்
பாடலைக் குயிலினம் பயிலுஞ் சோலைகுூழ்
கூடலிற் கோத்துரை கொண்டிட் டாள்பவன். 1
நஞ்சினுங் கொடுந்தொழில் நடத்தும் இயரை
அஞ்சுற வடக்கிநல் லறத்தி னுற்றுளோர்
விஞ்சுறத் தனிச்செங்கோல் விளங்க வோச்சிடும்
வஞ்சியர் வேந்தனாம் மன்னர் மன்னனே.–2-
ஆழ்வார் அவதாரம்
அன்னவன் தவத்தினா லவன்றன் தேவியாம்
பொன்னனாள் வயிற்றிடைப் பூவு ளாரயன்
தன்னொடும் வேதமுந் தரும மும்ம௫ழ்
துன்னிடப் புகழ்ந்துமூன் துதிசெய் தேத்தவே. 3
வைகுந்தத் தமரும் நாரணன்
நேசமா ரருட்படி நிமல மாமதி
மா௫ியிற் புனர்த்தநாள் வளமுற் றோங்குறத்
தேசுறு புதல்வனும் செனித்து ளானரோ. 4
வானுளோர் மலரின்மா மழைபொ ழிந்தனர்
மோனமா ர௬ுளங்கொளும் முனிவர் வாழ்த்தினர்
ஞானமுந் தருமமும் நனிம கிழ்ந்தன
தானமும் மெய்மையுந் தலையெ டுத்ததால். 5
சடங்குகள் செய்தனர்
இத்தக வாசுவந் தெழுந்த மைந்தனுக்
கத்தனு மன்னையு மடுத்து ளோர்களுஞ்
சித்தமுள் மகழ்வுறச் செய்வ செய்துபின்
வித்தமும் வழங்கினர் விதிவ மாமையே, 6
தன்னிகர் தனத்தின்பாற் றாய எளிப்பவேழ்
துன்னுநற் .நினத்திடைக் காப்பு மிட்டனர்
மன்னுமோ ராறெனும் மாம தஇிக்கணே அன்னபி ராசன மதுவுஞ் செய்தனர். 7-ஆனெனும் . மதிக்கண் – ஆற வது மாதத்தில் அன்னப் பிராசனம் – அன்னம் ஊட்டுதல்.
வில்லிடு பானுவின் விளங்கு மெய்யெலாம்
புல்லிடப் பலபல பணிகள் பூட்டியே
கொல்லியங் கோன்குல சேக ரன்எனச்
சொல்லின ரொருதிரு நாமந் துன்னவே. 8
அம்புலி யழைத்தலு மணிகொள் சிற்றிலை
வெம்பீயே சிதைத்தலும் விலங்குஞ் சற்றிர
தம்புவி நடத்தலுஞ் சாற்று பற்றவும் பம்புமப் பருவத்திற் பயிற்று வித்தனர்.-9
ஓத்திடச் சவளமோ டுபன யம்பல
வித்தையப் பியாசமும் வேலும் வாளொடும்
சித்திரச் சலைமுத லாகச் செப்புமுப்
பத்துட னிரண்டெனும் படைப யிற்றலும். 10
திருமணமும்—ஆட்சியும்
ஈதெலா மமைவுற வியற்று வித்தபின்
ஓதுமங் கலத்தின முறுநல் லோரையில்
சூதெனு மிருதனத் துவர்த்த செய்யவாய்
மாதினை விதிமுறை மணஞ்செய் தாரரோ,. 11
பணிமுடி சுமந்தபார் பரிக்க வவ்விரு
இணிபுய வரைகுல சேக rer menor
அணியரி யாசனகத் இருத்தி யம்பொனின்
மணிமுடி. தரித்தனர் மகழ்வி னென்பவே. 12
ஆங்கவன் புவிபுரந், தருளு நாளினில் | ்
தீங்குறு கலிமுகம் சிறுத்து நைந்தது; 3 ஓங்கெே நல்லறம்; உரைத் திடும்மிடி
நீங்கின; செல்வமும் நிலைபெற் நிட்டதால். 13
ஆழ்வார் மாண்புகள் ட
தேறுள மதனிற்றன் றேவி பாலலால் F
வேறொரு மடந்தையர் விருப்பு றான்;மனு
கூறிய நூன்முறைக் குடிகள் பாலிறை ்
ஆறினி லொன்றலா லதிகங் கொள்கிலான். -14
வலிவுறும் பசியிலான் கன்றி னம்வரும்
புலிமுலைப் பாலினைப் பொருந்தி யுண்டிடும்
நலிவுறும் பூனையின் முலையை நாவுகொண்
“டெலியினம் பற்றொடு மினித ருந்துமால். 15
மாந்தர்தங் குலத்தரு மத்தி னுண்மையைத், தாந்திறம் பாவகை சமைத்தி ழைப்பரால்;
ஏந்திள முலைநலா ரிசைகொள் கற்பினின்
றார்ந்தத னிலுந்தவி ராது தாங்குவார். 16
மதிதொறு மும்மழை வழங்கும்; மாவயல்.
கதிர்பெறுஞ் செந்நெலுங்: கரும்பும் வாழையும்
முதிர்சுவைக் கனிபலா முதல வோங்கி௨
நதிகளுங் குளங்களு நிறைந்து நண்ணுமால். : 17
இத்திறம் யாவுமாங் கெழில்பெற் றோங்கடைத்
துத்தம நெறிமுறை தவிர்கி லாதமை
சித்திரச் சலையிரா கவன்றன் செல்வநா
டொத்திட வவனுல கோம்பு நாளிடை. 18
(வேறு)
இறைவன் திருவருள் பெறல்
ஒருபக லிரவின் வேந்த
னுறுதுயில் வளருங் காலைப்
பெருகுறு தனது நித்ய விபூதிலீ லாவி பூதப்
பெருமைக ஸஎிரண்டுங் காண்பித்
தரிதினிற் பெயர்ந்து போனான்
மருதிறத் தவழ்ந்து வஞ்ச மல்லரைக் குமைத்த மாயோன். 19
இறைவன் தன்னுடைய லீலா விபூதியையும்
தித்திய விபூதியையம் காண்பித்தான். லீலாவிபூதியைக் காட்டியது பந்தபாசங்
கள் நீங்குதற்காக; நித்திய விபூதியைக் காட்டியது உள்ளத்தில் ஞானமும்
வைராக்கியமும் வருவதற்காக,
அந்தநல் லுருவங் காணா
வதிசய மிகவுந் தோன்றிச்
சந்தையா னந்த வெள்ளந்
தேக்கிட வெண்க ணான்வாழ்
உந்திநா ரணன்வி பூதி
களையனு பவித்து றாமல்
இந்தநா ளளவும் எல்லே
யிழந்தன மெனநைந் தானால், 20
ஆழ்வாரின் விரக்தி
ஆயவ னிவ்வா றாய்நொந் |
“… தழுங்கநெஞ் சுருகுங் காலை
மாயிரு ஞாலத் தூடு
மஇழ்ந்துபல் லிடங்கள் தோறும்
பாயிரு ளகலக் க&ீழ்பாற்
. பருப்பதத் துதித்த வெய்யோன்,
சேயிரு விசும்பின் மேலாய்ச் —
செலுத்தின னெழுமாத் திண்தேர். . 21-
பருதிவந் துதித்த லோடும் படர்வுறுங் கருமந் தம்முள்
கருதியோ தமைச்சர் தானைத்
தலைவர்கள் கணித நூலோர்
சுருதியந் தணர் களேவற்
ஹறொழில்வலோர் பலருந் தெவ்வர்
குருதிதோய் வடிவாள் வேந்தன்
கொலுமணிக் கூடஞ் சார்ந்தார். 22
சார்ந்தவ ர௬ுதையங் கண்டோர்
சாமநே ரளவும் பள்ளி
தீர்ந்தர செழுந்தி லாத செய்கைதேர்ந் தென்னோ வென்னா,
பேர்ந்தவ ரணுடுத் தாதிப் | பேதையர்க் குணர்த்த, அன்னோர்
சார்ந்தரு குணரு மாறு
சைகைகள் பலவுஞ் செய்தார். 23
ஆதலா லரச ஸூள்ளந்
தணிந்தெழுந் தவர்க ளோடும்
கோதிலா சார வாசல்
குறுகியே குறுகி னோர்கட்
கோதரும் பணிகள் நாளு
முரைத்தலி னுரைத்தி டாதோர்
– மூதறி வமைச்ச னோடும்:
மின்னணம் மொழிய லுற்றான். 24
ஆழ்வார் மொழிகள்
உதியுற்ற குமிழி போலா
யொழியுமிவ் வுடலத் தோடும்
பதிமனை தனங்கள் தாரம்
பாலர்கள் மாதா என்ன
மதிமருண் டுறுமிப் பொய்யாம்
வாழ்வினில் நிசங்க ஞண்டோ?
கதியுயிர் பெறுமா றுன்னா
தவத்தினிற் கழிந்த இந்நாள். 25
இன்னுமெத் தனைநா ஸளிவ்வா
ஹொழிக்கலா மினிமே லேனும்
மன்னுசாத் மீக ரோடும்
மருவியங் கவர்க ளான்மற்
றென்னுயிர்க் குறுதி நாடல்
வேண்டும்நீ யிதற்கு பாயம்.
பன்னுதி மதிவ லோயெொன்
றன்னவன் பகர்த லோடும். 26
அடியார்களின் நட்பு
நல்லுரை பகர்ந்தான் வேந்தன்
எனவுளம் நயந்தா னாக௫ிச்
, சொல்லுமுன் பரம பாக
வதர்கள்கூழ்ந் தணுகு மாறாய் மல்லுறுந் தோளான் முன்னர்
வரவழைகத் திருத்த லோடும்
அல்லல்கீர்ந் தவாரக ளம்பொன்
‘னடிபணிந் இருக்கை நல்கி; 27
அவருடன் சிறந்த காலச்
சேபஞ்செய் ததற்பின் மற்றோர்
எவர்களு முடன்சென் றெய்த
வெழிற்கொலுக் கூட மெய்தி.
இவர்மணி யணையின் மேல்வீற்
றிருத்தர சாட்டி மேவி
உவர்க்கட லுடுத்த பாரோம்
புறுதொழில் நத்தி லானால். 28
ஆழ்வார் சுவைத்த பாசுரங்கள்
இன்னவா நாகப் பன்னா
ளிசைபெறு முதன்மூன் றாழ்வார்
மன்னுசீர் பெரிய ஆழ்வார்
மங்கையர் மழிசை யாழ்வார்-துன்னுநற் றொண்டர் தங்காற்
பொடியிவர் சுருதி சாரம் .
பன்னுசெந் தமிழ்க ளெல்லாம்
பரிவினோர்ந் துருகி னானால்; 29
வேறுள முனிவர் பல்லோர்
விளம்புநல் லிரத மூறும்
நாறுபூந் துளவ மாலை
நாரணன் சரிதம் கேளாப்
பாறுசூழ் வடிவாள் வேந்தன்
பரிவினாள் தொறுமிவ் வாறாய்த்
தேறுளத் துடனே செங்கோல்
செலுத்தினன் வருமந் நாளில்; 30
பாம்புக் குடத்தில் ஆழ்வார் கைவிடல்
ஒருபக லதனில் வந்த
உயர்குல சேக ரன்றன்
திருமனைக் கருவூ’ லத்தில்
இகழிரத் தனப்பொன் னாழி
பொருவில தொன்று கெட்டுப்
போகலுங் காவ லாளர்
வெருவிமந் திரியி னோடு
விளம்பினர்; விளம்ப லோடும், 31
மந்திரத் தலைவர் சென்றவ்
வள்ளலுக் குரைத்த லோடும்
அந்தவா சகங்கள் கேட்டவ்
வரசனு மவரை யாங்கண்
வந்தவர் யாவர்? வந்த
வாறுணர்ந் ததனை நம்பால்
தந்திடு மாறன் ஜனோர்க்குச்.
சாற்றுமென் றுரைத்தான் அன்றே. 32
இனையவா றவர்கள் சென்றாங்
தியம்பலு மதனைக் கேளா
அனையகா வலரு மெவ்வா
றாய்ந்திட .லாகு மென்றோர்
நினைவுகொண் டரவந் தன்னை
நிறைகுடம் பொருந்த விட்டுத்
தனையணி முடிகொள் வேந்தன்
தன்றிரு முன்னர் வைத்தே; 33
இங்குளோ ரிதனிற் றங்கை
யிட்டிட வேண்டு மென்று
அங்கவர் மொழியைக் கேளா…
அரசனிவ் வவையி ஸனுற்றோர்
குங்களி லெவார்மே லையஞ்
சாற்றுமி னென்ன லோடும்
துங்கமா முடியோய் கேட்டி
யெனவவர் சொல்ல லுற்றார். 34
அந்தக னேவல் கொண்டா
ருயிர்கவர் வார்க ளேனும்
வந்தணு குதற்கொவ் வாறின்
மணியர மனையின் வாயில்
இந்தபா கவத ரல்லால்
யாருமிங் கெய்திற் றில்லைச்
சிந்தையுள் ளிவர்மே லைய
மெனவவர் செப்ப லோடும்; 35
(வேறு)
செப்பு மம்மொழி யிருசெவி குறுகலுஞ்
செங்கண்மாற் கடியாராம்
விப்பி ரர்குடம் பாம்பினிற் றங்கர
மேவவைக் திடுதற்காய்
ஒப்பு றாவுள மமைந்த னருலகினை
யோம்பிடு முடிவேந்தன்
குப்பு றாஅரி அரியென விருகரங்
கொடுசெவி மறைத்தானால். 36
வார ணம்முறை யிடுதலின் விரைவொடு
வந்துகாத் தருள்செய்த
நார ணன்றி ர௬வடியர்மேற் கொடுமொழி
நாடியிங் குரைசெய்யுங்
கார ணம்நினை வுறிலிவர் மேற்குறை
கருதுதல் வழக்கென் றால்
தார ஸணிப்புரந் திடலினம் பாலினோர் கதுவறெனத் தளர்வுற்றான். 37
உருக னானுளந் தியங்கினான் பசும்பொனொத் தொளிர்ந்திடுந் இருமேனி கரக னானவை தநினைதொறு நினைதொறுங்்
கண்களா ஸீர்முத்தம்
பெருகி னான்வரை கொடுகடன் _மதித்ததாட்
பிறந்தெழுங் கொடுநஞ்சம்
பருக னானென ஊசலா டிடவுயிர்
பதைபதைத் தனன்;பின்னும், 38
ஆழ்வார் குடத்தில் கை
விட்ட அருமைப்பாட்டை **வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன்”’ என்பர்
மணக்கால் நம்பிகள், :*குடப்பால் விடப்பெரும் பாந்தள்வாய் கையிட்ட
கோவேந்தன் அரசர் ஏறு; கோப்பெருஞ் சேரமான்” என்பது அழகர் பிள்ளைத்
தமிழ்.
ஆழியைக் குடத்தில் இருந்து எடுத்தார்
சந்தை யோர்முறை தெளிவுகொண்
டரியணை தீர்ந்தெழுந் தெதிர்சென்றே
இந்த மெய்யடி யார்களவ் வாழியை
எடுத்தில ரெனவேதான்
முந்தி யேயர வுறுங்குட மதிற்கர
முறையினிட் டதற்குள்ளாய்
அந்த காவலர் வைத்திடு மணிவிர
லாழியை பெடுத்தீந்தான். 39
கண்ட பேரவை யமைச்சர்கள்
முதலினோர் காவல ஸனடிவீழ்ந்தார்
தொண்டர் யாவரும். மன்புகூர்ந் தின்புறத்
தொழுதுரைத் தெழுந்தார்த்தார் அண்டர் யாவரு மந்தர மிசையெழுத்
குலர்மழை பெய்தார்நஞ்
சுண்ட சங்கரன் பிரமனே முதலினோ ்
ருளமகிழ்ந் தனர்மாதோ. 40
திருவரங்கக் காதல்
பின்ன ரும்பல நாள்குல சேகரன்
பெருகுவப் பொடும்வாழ்நாள்
மன்னு மிவ்வுட லெடுத்திடுஞ் சலுகினை
மாய்த்தொழித் இடுமாறு
இன்ன ரங்கொடு தும்புரு நாரதர்
களர்த்துமின் னிசையோங்கும்
பொன்ன ரங்கமா நகரினைக் காண்குறப்
பொருந்துமோ நமக்கென்னா; 41
“நெஞ்சி ஜூடுற நினைந்திரு எிரியவின் றேனிரம் புறும்பாடல்
அஞ்சி ரண்டினை யாதுமுப் பதுமிசைத் ‘
குழகிய மணவாளர்
நஞ்ச ராவணை மிசையிலங் காபுரி
நகரமா னதைநோக்கா ்
விஞ்சு கண்வளர் கோலமே மனதினுள்
விளங்குற வியப்புற்றான். 42
குரங்க மாகடல் வளைபுவி புரந்திடற்
றணந்துதன் சுதனான
உரங்கொ டோளினன் றன்வயப் படுத்திப்பொன்
னொளிர்மணி முடிசூட்டிக்
குரங்கு ளங்கதிர் செங்கனி யாமெனக்
குதிகொளும் பொற்கோயில்
அரங்கு மாநகர் யாத்திரைக் கேகுவான்
அமைந்தவ ணடைந்தானால். 43
ஆழ்வார், புதல்வனுக்கு முடிகுட்டிவிட்டுத் திருவரங்கம் அடைந்தார்.
புவி புரந்திடல் தணந்து- பூமிகாவலை விட்டு. **கம்பமத யானை கழுத்தகத்தின்
மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்”* என்னும்.
பெருமாள் திருமொழிப் பாசுரம்
அரங்கம் அடைந்தார்
கடைந்த பாற்கட லிடைவரு மமுதினைக்
கண்டவா னவரென்ன
அடைந்து ளான்றனை யெதிர்கொளத் தலத்தடி
யவர்களிப் புளங்கொள்ளா
உடைந்து கண்வழி யொழுகுநீ ராறெனு
முயர்விர சையின் நன்னீர்
குடைந்து வைணவ ரடிமலர் தொழுதலும்
் ஆசிகள் பலகூறி, –44
ஐய நீயிவண் வந்ததெங் குலத்தவ
மாமென வுபசாரம்
செய்யு மாங்கவ ரொடுமிவ னலைமணி
சிந்துகா விரியாற்றின்
துய்ய நீர்படிந் தாறிரு இருமணும்
துலங்கெட வளங்கண்டு
பைய வேகடந் துட்புகுந் இிருகணீர்
பனித்துமுத் துதிர்த்தானால். 45
கண்டார் அரங்கனை
திருந்து றுந்திருப் பெட்டகந் தனைப்பிர தக்கணம் ‘புரிந்தாங்குப்
பொருந் துறும்மணத் தூணரு
காகியே புதியதா மரைபூத்தோர்
கருந்த டங்கிரி யெனவளர்
மாயனைக் கண்டிரு கணினாலும்
அருந்து வானென
, இருகியே ஆனந்த மடைந்தானால். .. 46.
திருவரங்கக்
கோவிலைப் பெட்டகம் என்கின்றனர். அரிசமய இீபம் ஐந்து இடங்களில் இவ்வாறே பேசுகிறது.
“*பூரங்கு பெருந்திரு வைத்நூற் றிரட்டிப் பணவிடையில்
தூங்கு மதிலொரு மாவேற் றமுண்டு சு.ரர்முனிவர்
ஆங்கவர் செப்பிற் கடங்கா துலகமனைத் தும்பெறும்
ஓங்கு மரங்கத் திருப்பெட் டகத்து ளொருமணியே””
என்ற பாடல் தனிப்பாடல் திரட்டில் உள்ளது; சுவைமிச்கது. இருந்த
குலக்குமரர் தமை இருகண்ணின் முகந்தழகு பருக நோக்கி£” என்பர் கவிச் சக்ரவர்த்திகள் (பாலகாண்டம்),
**தஇிருவனுரு நயனமுற நாடிமணத் தாணதனைப் பற்றி மன்னன் மருவுமனம் வாய்ந்தவடி யாருடனே கூடிமிக வாழ்த்தி நின். றான்’*
முகுந்தமாலை தொடுத்தார்
மிகுந்து மேல்வரும் பிறப்புடன்
இறப்பையும் விடுத்துயர் வைகுந்தம்
புகுந்து ளோர்களும் மீண்டுற
அருத்திகொள் பொன்னரங் கனைவாழ்த்தத்
தகுந்த தேதென நினைவுகொண்
டேதிறத் தமிழினால் தொடுத்தாற்போல்
முகுந்த மாலையொன் wo me Gouri
கலைவட மொழியினால் துதிசெய்தான். 47
வேங்கடம் செல்க
பாத தாமரை மீதுதன்
முடியுறப் பணிந்தெதி ரிடைநின்ற இதி லாக்குல சேகரற்
குகந்தவன் இருமுகந் தனைநோக்கி
தாது சேர்மலர்ப் பொழில்வட
வேங்கடந் தனைமதித் தெய்தென்னா
ஓ.தி னானிக்கு வாகுவாற் சத்திய உலகநீத் இவண்வந்தோன். 48
“*பணியரங்கப் பரஞ்
சுடரை யாங் காண–அணியரங்கந் தந்தானை அறியாதார் அறியாதார்’* என்பர்
கவிச்சக்ரவர்த்திகள் (பால காண்டம்),
இருசெ விக்கணவ் வாசக
மூறுதலு மிதுவதென் றிரண்டூரார் ஒருவ ராமென வுளந்தெளிந் .
குற்புத முறப்பெரு குவப்போடும்
வருவ :-னாங்குநின் மலர்ப்பதந்
தொழற்கென மறித்தவன் றனைப்போற்றிக்
குரும ணிச்செழுங் கோயிலன்
பர்களுளங் கொண்டன னடந்தானே. 49
திவ்ய தேசு யாத்திரை
வச்சி ரப்படை வானவர் .
வேந்தனும் மலர்மிசை யுறைவோனும்:
முச்சி ரப்படைச் சுடலையி
னாடியு -முளரியங் கரம்தங்கள்
உச்ச கைக்கொடு முறைதொழு
தேத்திட வுவந்தவர்க் கருள்செய்யும்
கச்சி யம்பதி பேரரு ,
ளாளர்தம் கழல்பணிந் தவணீங்கி; 50
மரும லைச்செழு மணியின
மெறிதரும் வளமலி மலரோடை
செரும லைக்கொடு விடங்கரின்
வாய்ப்படுஞ் சறுகண்மும் மதவேழம்
பொரும லைத்தவிர்த் திடவொரு
கருமலை போலவந் தவன்வாழும்
இரும லைத்தல மடைந்தனன்வளமெலாஞ் ிந்தையுள். தெளிவுற்றான். 51
திருவேங்கடம் அடைந்தார்
மூவ ரும்அயன் கயிலைவா .
மிறையவன் புரந்தரன் முதலாய
தேவ ருங்கண நாதரும்
முத்தரும் சித்தர்மற் றுரைசெய்யும்
யாவ ரும்அவ ரவர்களோ
ருருவமைந் தணுகுறும் பெருஞ்சீர்த்தி மேவ ருந்திரு வேங்கட மகிமையை வியந்துளங் கனிவுற்றே. 52
(வேறு)
பதிகம் பாடினார்
ஊனேறு செல்வமென வோர்பதினோர் பாவுரைத்து
மானேர் விழியலர்மேன் மங்கைஇரு முன்னிலையில்
தானே தனக்குறிக ரானான்றன் தாள்வணங்க்
் . கோனேரி யாடிக் குலவிப்பன் னாளுறைந்து; 53:
வித்துவக்கோடு
அம்மா நகர்விட் டணிவித் துவக்கோடாம்
செம்மா நகரடைந்து சிந்தை தளர்ந்தழைத்த
கைம்மா இடுக்கண் களையக் கரைசார்ந்த
பெம்மான் கழலிணையைப் பேணித் தொழுதனனால், 54
தருதுயரந் தடாயேலுன் சரணல்லாற் சரணிலையென்
தொருபதிகந் தன்னை யுகந்தாங் குரைத்தருளிப் பொருவில் புகமாளன் போயொழியப் பற்பலநாள் மருவி யுறைந்துபினம் மாநகர்விட் டேகனனால். 55-
திருவாய்ப்பாடி
தாய்ப்போல் வடிவாகத் . தன்னுருவம் மாற்றிவந்த
பேய்ப்பா டுறமுலையிற் பெய்விடத்தோ டாருயிரை
வாய்ப்பா லுறிஞ்சியிடும் மாதவனார் தாம்வாழும்
ஆய்ப்பாடி ‘ சென்றே யடைந்தவன்தாள் பூசித்தே;–56-
முத்தாரம் பூணும் முகிண்முலைச்செவ் வாம்பலின்வாய்’ ்
கொத்தார் மலரின் குழற்கோ வியாகூடி :
வித்தார மாக விரித்துரைக்குஞ் சொற்பொற்பா 4
பத்தாங்கு பாடிப் பலநா ரறைந்தனனால். 57
வட மதுரை
மூன்புசன னத்தில் முயன்ற பெருந்தவந்தான்
பின்பு தொடர்ந்தடுத்த பெற்றியால் பேருலகில்
அன்பு மிகுந்தே யடுத்தோர் தமக்குதவ
என்பு முரியான் வடமதுரைக் கெய்தினான். 58
தேவகியாதல்
தேவகுியா டானீன்ற செல்வத் இருமதலை
்-. நாவி லினிதாக நவில்குதலைச் சொற்கடமை
ஆவலொடுங் கேட்டிலமே யென்றாங் கவளுரைத்த
பாவனையா கப்பதினோர் பாட லுரைத்தனனால், 59
கண்ணபுரத்தில் உறைதல் ‘
அப்பதியி லன்னோ னடைவுடனே வைகுதலும்
செப்பமுடன் பற்பலநாள் செல்ல வவணீங்கி
எப்புவியி னுள்ளு மிணைதனக்குத் தானல்லால்
ஒப்பிலாக் கண்ணபுரத் துற்றாங் குறைந்தனனால், . 60
தாலாட்டுப் பாடினார் —
கண்ண புரத்தானைக் கவுசலையா டானீன்ற
விண்ணவர்க டந்துயர வேர்களைந்த ராகவனை
வண்ணமணித் தொட்டில் வளர்த்தித்தா லாட்டுதலாய்
பண்ணியலும் பாடல்களோர் பதினொன்று பாடினனால், 61
தசரதனானார்
பின்னுந் தசரதனார் பிள்ளைவனம் போயிடலும்
அன்ன தனைக் கேட்டவனும் ஆராமை பட்டதனைப்
பன்னும் பனுவல்களோர் பதினொன் றி னளைப்பாடி
மன்னி யிருந்தானம் மாநகரிற் பற்பலநாள். 62
சித்திரகூடம்
அம்மா நகர்விட் டணி௫த்ர கூடமெனும்
செம்மா நகரதனைச் சேர்ந்தணுடுத் தில்லையுறை
கைம்மா வுரித்துகந்த கண்ணுதலான் போற்றிடவாழ்
பெம்மான் இருவடியைப் பேணித் தொழுதனனால். 63-கைம்மா உரி – யானை
யின் தோல்.
இராம காதை இசைத்தார்
வானவர்க ளேத்துபுகழ் வான்மீக னென்றுரைக்கும்
மோனமுனி முன்னாள் மொழிந்தவிரா மாயணத்தை
‘ரானமொமழி யாந்தமிழி லைந்தோ டறுகவிதை
கானமுட னேயிசைத்தான் கன்னலிர தம்மெனவே, 64
தில்லைச்சித் திரகூடத் துட்சேர்ந் இனிதுறையும்
தொல்லைச் செழுமறைக்கும் தோன்றாதான் தாள்தொழுது
கொல்லி மலைக்கோன் குலசே கரப்பெருமாள்
எல்லையில்சீ ரின்பத் தினிதுறையு நாளின்கண். 65
ஆழ்வார் திருநாடலங்கரித்தார்
நாரா யணனெனவே தான்மறையால் விப்பிரர்கள்
பாரா யணஞ்செய் பரந்தாமன் றன்னருளால் ‘
ஆராய்ந் துணர்த்தற் கரிதாம்வை. குந்தத்தின் சீரார் மணிமண் டபஞ்சேர்ந் தஇனிதிருந்தான். 66
அன்ன குலசேக ராழ்வாருந் தண்தமிழால்
பன்னும் பனுவல்க ளோர்பத்துப் பதிகங்கள்
மன்னுங் கவிதையில் மாதுகுடி. வாழ்மார்பன்
துன்னுந் திருப்பதிக ளெட்டெனவே’ சொல்லுவரால். 67
இவர் பாடியது பத்துப் பதிகங்களாகும்.-மங்களாசாசனம் செய்த பதிகள் எட்டாகும்.
சீராரும் பொன்னரங்கஞ் சத்திரகூ டத்துடனே
ஏராரும் வித்துவகக்கோட் டெமுனைநதி கண்ணபுரம்
காரார் வடவேங் கடம்வல்லை வாழொடுமேற்
பேராரயோத்தி நகரெனவே பேசுவரால். «68
பயன்
இந்தப் பெருங்கதையை யின்பமுடன் கேட்பவரும்
ஒந்தை தெளிந்துரைக்குஞ் செய்கையருந் தேனாரும்
பைந்துளவோன் பாதம் பரிவுடனே தான்பணியுஞ்
மைந்தருண்டாய் வாழ்ந்துிருந்து வைகுந்தம் மன்னுவரால். 69
பாணர் காதை பகர்வோம்
நலமார் பெருஞ்சீர்த்தி நண்ணுதிருக் கூடல்வரும்
குலசே கரன்சரிதம் கூறினோம் மாகடல்குழ்
தலமேலு றையூர் சனித்ததிருப் பாணர்கதை
சொலவே தெரிந்தளவுஞ் சொல்வாந் தொகுத்தினியே. 70
குலசேகராழ்வார் திருவவதார அத்தியாயம் மூற்நிற்று.
———–
திருப்பாணாழ்வார் திருவவதார ,
| அத்தியாயம் ப
வெண்பா ்
கார்த்திகையில் ரோகிணிநாள் காண்மினின்று காசினியீர்
வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால் — ஆத்தியர்கள்
அன்புடனே தானமல ஸாதிபிரான் கற்றதன்பின்
நன்குடனே கொண்டாடும் நாள். ’
் (உபதேசரத்தினமாலை, 10.)’
உறையூர்
பிறைவாணுதல் மடவாரெழில் பெருகுந்திரு முகமும்
நறையார்மது கமழுஞ்செழு நளினப்புது மலரும்
சிறையாரறு பதவண்டுக டெரியாவல மருசர் :
உறையூரெனும் பெயர்மேவிடு மொருமாநக ருளதால், 1
தாமரைக்கும் முகத்துக்கும் வண்டுகட்கு’
வேற்றுமை தெரியாமல் இருப்பதுபோல், அறிஞர்கட்கு, அமலனாத பிரானுக்கும்
வேதத்துக்கும் வேற்றுமை தெரியாது என்பது உள்ளுறை.
ஆழ்வார் அவதாரம்
வளமேவுநு மம்மாநகர் மருவுங்கடை யவரென்
– நுளபஞ்சம குலமிக்கட லுலகற்புகழ் Oi mayb
தளமார்செழு மணிமேவுறு தண்டாமரை மலர்வந்து
அளறாமதில் வளருஞ்செய லதுவேநிக ரெளவும். 2’
கண்ணார்நுத லிடைவைகுறு கயிலைப்பெரு மானுந்
தண்ணாருமம் புயமாமலர் தனில்வாழிறை யவனும்
பண்ணார்செழு மறையும்முனி வரரும்பல பலவாம்
மண்ணாடரும் விண்ணாடரு மெவருமகஇழ் வுறவும். 3
(வேறு)
கார்த்திகை யெனும்பெயர் கவினுந் இங்களில்
சீர்த்திடு முரோகிணி நாள் றந்திடத் –
Sigs தருளினால் செந்நெ லின்மிசை
பார்த்தவர் களிப்புறப் பாணன் தோன்றினான். 4
பாணன் வளர்த்தான்
அத்தகை யுறவவ தரித்த மைந்தனைப்
புத்திர னிலாவொரு புலையன் கொண்டுபோய்
சித்தமின் புற்றிளந் இங்க ளின்கலை
ஒத்திட வளர்த்தன னுரிமை யோடுமே. 5
இசைப்புலமை
ஆன்றவம் மைந்தனு மரிய தும்புரு
சான்றநா ரதருமே சமான மில்லென
ஏன்றநல் லிராசுகா னங்க ளென்பவை -:
மூன்றெனும் வயதுளே முயன்று ளானரோ. 6
ஏவிரி இணறுமுன் பெழுந்து தாமரைப்
பூவிரி கதிர்குணப் பொருப்பு றாமுனம்
மீவிரி கங்கையின் மேன்மை யெய்திய காவிரி படிந்துசெய் கடன்க ளாற்றியே. 7
அரங்கன் காதல் பண் பாடுதல்
வரங்களா ரணனரன் வழங்கப் பெற்றுளான்
ஓரங்களீ ரைந்தொடுஞ் சிலையோ டம்புகொள்்
கரங்கணா ஸன்கைந்தையுங் கடிந்த மித்தசர்
அரங்கநா யகரிடத் தன்பு கூரவே. 8
கல்லொடு மலைகளும் கடுஞ்சு வர்களும்
புல்லொடு மரங்களும் புள்ளின் கூட்டமும் 4
வல்லிய முதல்விலங் கனமும் மற்றவாம்
பல்லுயிர் யாவுமா லுருகப் பாடுவான். 9
சந்திர மவுலியும் சரச வாயும்
இந்திரன் முதலிமை யவரும் யாழ்வல
கந்தரு வருமுளங் கரையு மாறதாய்
அந்தரத் தடைந்துகேட் டஇச யிப்பரால், 10.
அன்னகா விரிக்கரை யநேக நாழிகை
யின்னவா யாழிசை யினிது பாடிப்பின்
பொன்னணி விமானத்தைப் பணிந்து போற்றியே ்
தன்னக மதனிடை சார்கு வானரோ,. –11
நாடொறு மிம்முறை நயந்து பாணனும்
ஆடர வமளிசே ரரங்கர் தம்புகழ்
– பாடுறு மிசையின்முன் பட்டு லர்ந்துவீழ்
காடுறும் மரங்களும் கப்பு மல்குமால். 12
பற்பல நாளவன்: பாடும் பாடல்கேட்
டற்புத மடைந்தன எளரங்க நாயகி
உற்பல நயனமு மொளிமி குந்திட
விற்பொலி புருவமும் விளங்கு வாளரோ. 13
அரங்கநாயகி புருஷகாரம் ்
் நாயகி மகிழ்வொடு நாக ணைத்துயில்
மாயவ னணிபெறும் வதனம் நோசக்குபு
ஏயவவ் வடியனாங் கிசைக்கு மின்னிசை
தூயநும் மிருசெவி துன்னிற் நில்லையோ? 14
அன்னவன் வீணைகொ டரிய கானத்திற்
பன்னுமின் னிசைகொளும் பனுவற் கொப்பதாய்
என்னிலதக் தினுமிலை யென்ன வானுறை
இன்னரர் மூதலினோர் கீழ்மை யெய்தினார். 15
அன்புநம் பிடந்தனி னதிக மாகக்கொண் ்
டென்புமுள் ஞருகிட. இசைக்கு மின்னிசை
இன்புற விதிசிவன் முதலி னோரவன் ன்
முன்புவந் தந்தர முயன்று கேட்டின் நார். 16
ஆதலின் நாம்புறம் பாக வைப்பது
நீதியன் றவனைநின் ஸனருகு றும்படி
காதலோ டழைத்திடல் கரும மாமென
மாதுகூ றலுமண வாள ஸனோதுவான். ் 17
என்கருத் இனுமதே யாயிற் றென்னினும்
நின்கருத் துணர்குவா னேர்ந்த தாமினி
உன்கருத் துருகிட்ப்: பாடு வோன்றனை
நன்குநீத் துடன்வரு விப்பன் நாய. 18
பாணனை அழைக்கப் பரமன் பகர்ந்தான்
என்றுகொண் டவளுள மிசையு மாறுரைத்
தொன்றிய மனத்தொடு முலக முண்டுளோன் . ட்
சென்றுநம் தொண்டனாஞ் சிறந்த பாணனை
இன்றுநீர் கொணர்மினென் நியம்ப லோடுமே. .19
அவ்வுரை கேட்டெதி ரணுகும் வாயிலோர் 1
ஒவ்விய மனதொடும் விரைவி னோடியே
திவ்விய மணிபல சிதறுங் காவிரி
செவ்விய திருமூகத் துறையிற் சேர்ந்தரோ. “20
பாலுறு பிரையெனப் பல்லு .யிர்களுற்
றேலுமற் றவைகடன் ஸிடத்திற் கொண்டுசேர்
ஆலிலை துயிலொழிந் தரங்க முள்வளர்
மாலினை யிதயமேல் வளர்த்தி வான்றனை; 21
பன்னிரு திருமணும் பன்னிடந் தொறும்
துன்னிட மார்பினிற் றுளவ மாலிகை
மன்னிட யாழ்முறை வழங்கப் பாடுறுங்
கன்னலா ரமுதெனுங் கானத் தான்றனை; 22
பாணர்பிரான் திடுக்குற்றார்
கண்டன ரரங்கனாங் கமலப் பூவடித்
தொண்டனென் றவனடித் தொழுது நின்றுளோர்
புண்டரீ கந்தனைப் பொருவ டிக்கணில்
தெண்டனிட் டிம்மொழி தெரிப்ப தாயினார். 23
என் கருதி வந்தீர்?
ஐயநீர் புரிந்திடற் கடுக்கொ ணாததைச்
செய்யநும் பான்மனஞ் சேர்ந்த தென்கொலோ
வெய்யனே னிதனிடை வினையொ ழித்துமேல்
உய்யுமா றெவண்கொலென் நுருடிப் பின்னரும். 24
ஈங்குநீ ரடைந்துள தென்கொ லென்னிடை
ஆங்கதை யுணருமா றறிவிப்; பீரெனத்
தங்கிலா னுரைத்தசொற் செவியிற் சேர்தலும்-பாங்குற வவர்களும் பகர்தல் மேயினார். 25
அரங்கன் கட்டளை
யாந்தொழ லரிதல யாவை யும்தரும் க
பூந்தவி சுறைந்துளோன் புராரி இந்திரன் ் தாந்தொழு குவர்்இறை தாளி ரண்டையும்
யேந்தினை திருவுளத் இன்பம் ஓங்கவே. 26
அன்னது கிடக்கயா மடைந்த காரணம்
என்னெனில் நின்னுளத் திருக்கும் பைந்துழாய்ப்
பன்னக வணையரங் கேசர் பண்பொடுஞ்
சொன்னசொல் உண்டதைச் சொல்ல: வந்தனம். 27
அம்மொழி யாதெனி லறியக் கேட்டிநீ
தம்மரு கணைந்திதைச் சாற்று மாறதாய்
உம்மரு – கணைந்தழைத் துறுமி னின்றென
எம்மொடு முரைத்ததால் வருதி யென்றனர். 28
அரங்கம் புக அருகனல்லேன் :
என்னலுஞ் சாதியிற் கடையி னெய்இினேன் i . தன . i பொன்னரங் கந்தனிற் புகுதப் போதுமோ?
அன்னது தகுதியென் றறிகி லேனெனப் ‘
பன்னலு மீண்டனர் படர்ந்து ளோர்களே,. 29
மீண்டவ ரரங்கர்பால் மேவி யெந்தமை
ஆண்டுளோய் அருட்பெரி யவனை யாம்வர
வேண்டினம் அவனுந்தான் விரும்பி மேல்வரத்
இண்டரும் புலைக்குலஞ் செனித்த தாதலால்; 30
அரங்கன் மாற்றம்
வருகிலே னென்றவன் வழங்கி னான்என
மருவிய வாயிலோர் வகுத்துக் கூறலும்
முருகவி ழிதழவிழ் முளரி வைகுறுந் இருமரு மார்பனு மிதனைச் செப்புவான். 31
வேதியர் முதற்குலத் தருமம் வேதங்கள் ‘
நீதிசார்ந் திருப்பினும் நிகழ்த்தும் யாவையும்
ஆதியில் யானுரைத் தவர்க ளுற்றிடுஞ் சாதிதான் இனதெனச் சாற்றற் பாலதோ? 32
பிறப்பால் சாதியில்லை சிறப்பால் உண்டாம்
செம்மையாந் தெளிவிலார் செப்புங் கீழ்மையால்
அம்மையாங் கீழ்மைய ராவர்; சார்தலால்
எம்மர புஇக்கினு மவர்க ளெய்துடும்
அம்மர பேயிழி பாகு மாதலால்; 33
துக்கநல் லறிவுளந் தரித்து ளார்களே
மிக்கவ ராகுவர்; விளம்பு மாங்கவர்
– எக்குலத் துதிப்பினு மவர்க ளெய்திடும் அக்குல மேகுலத் ததக மாகுமால். 34
மீளவும் அடியாரை அனுப்பினான்
ஆதலா லவனமக் கடிமை பூண்டுளோன் 4
போதமுங் கல்வியும் புகலுஞ் சாத்திர ்
வேதமு மவன்வயின் விளங்கும் மெய்ம்மையே :
ஈதுவைத் தழைத்திவண் வருதி ரென்னலும்; 35
என்ன வோதலு மினிதி னால்வர்கள்
பொன்னரங் கத்துறு புரிசை நீங்கியே is
துன்னு சீர்முகத் துறையி டந்தனில் ,
மன்னு பாணர்பால் மருவி; யன்னவர், . 36
வேத மென்பதின் முடிவி ளங்கடும்
மாத வன்புகல் வாச கந்தனை
ஒதி நீவரு கெனவு ரைத்தலுங் கோதி லாதவ ஸிதனைக் கூறுவான். 37
மாலே பகரினும் வாரேன் அரங்கம் ு
என்னை யுஞ்சரர் சரமி ரும்புவி ்
தன்னை யுந்தருந் தூய தாமலர்ப்
பொன்னை யாளுடைப் புனித னாயகன்
சொன்ன சொற்சரி யாகுந் தூய்மையீர்[ 38
ஆயி ஸனுூம்பொன் னரங்கம் மேவிய
மாய ஸனார்கடல் சூழும் வையகம்
காய சரடி சார்ந்து போற்றிடத்
தூய, ராம்திருத் தொண்ட ருக்கலால்; 39-
மாசு றும்முளந் தனில்வ ரீச்சிறை
மூசு வண்டிமிர் முளரி யாமெனத்
தேசு றும்மவன் சர டிக்கொளா
நீச ருக்கது நீதி யல்லவாம். 40
ஆத லாலர வணையின் மீமிசைப்
போத மார்ந்துளோன் புரமெ ரித்துளோன்
மாத வத்தினோர் வணங்க வேதுயில்
நாத ஸனார்திரு நகரந் தன்னிலே. ் 41
ர௬ுண்மிகுந் தீய னாகிய
நாயி னேனிடம் நலமி லாததால்
தோயு றும்படி துன்னி லேனென
ஆய பாணனா ரனுப்பப் பின்னரும்; 42
சிந்தை யுள்ளவன் தெளியு மாறதாய்
எந்த வாறவ ரொடுமி யம்பினும்
வந்தி லேனென மறுத்துக் கூறல்கேட்
டந்த வேதிய ரவனை நோக்கியே; 43
உலக முண்டுமிழ் ஒருவ னெம்மொடுஞ்
சொலுமொ .ழிப்படி துன்னி டாயெனில்
வலுவி லம்மண வாளர் பாற்கொடு
செலுது மென்றவர் செப்ப லோடுமே; 44
இட்டி வாவெனச் செப்பி னுந்தலைக்
குட்டி யுங்கதை கொண்டு மோதியுங்
கட்டி யீர்ப்பினுங் கடியவாள் கொடு
வெட்டி னும்வரே. ரெனனவி எம்பியே; : 45
அடியவர் பற்ற ஆழ்வார் தென்கரையுற்றார்
ணத்தெழுந் தவனு மேதனைப்
புக்க ணைந்திட வேபொ ருந்தினோர்
கைக்கொ ளக்கனிந் தோடிக் காவிரி
தெக்க ணக்கரை சேர்ந்து ளானரோ. 46
அனையர் பேர்ந்தவ ரரங்கர் பாலணைந்
. இனைய “செய்திக ளியம்பு தும்மெனா
வனையுங் காவிரி வடக ரைத்தலை .
நினையு முன்னரின் நீங்கி யேகினார். 47
ஏடி னோர்களாங் கெய்து செய்கைகள்
நாக ணைத்துயி னாத ஸனாகிவாழ்
ஆக மம்புய வனம லர்ந்தகார்
மேக மொத்துளா னொடுவி எம்பினார். 48
சாரங்கமாமுனிக்கு இட்ட கட்டளை
விளம்ப லோடுமின் மேதி ஸிப்பதத்
களந்து ளான்றனை யர்ச்ச னைசெயும்
வளம்பொ ருந்துசா ரங்க மாமூனிக் .
குளங்க னிந்திட விதனை யோதுவான்: 49
தான லம்பெறும் சாதி யிற்கடை
மீன னென்றன னேவ லிற்புகல்
வானி ரூம்புகழ் வளரும் பாணனை
நான வன்னவன் னானெ ஸனக்கொடே; 50
கோயின் மேவிடும் கொத்து டன்வர
நீய டைந்திட நேர்ந்திடா னெனில்
தூய நின்றிருத் தோண்மி சைக்கொடு
நேய மோடுபல் வளம்நி ரம்பவே; 51
சுந்த ரம்பெறத் துலங்கு வீதிசூழ் இந்த மாநகர் வலம தெய்தியே
வந்து சேரென வழங்கும் வார்த்தைகேட்
டந்த -வாறதா யவனு மெய்தினான். 52
குரும ணித்திரை கொழிக்குங் காவிரித்
தருமு குத்துறை சேர்ந்து நெஞ்சகம் உருகு பாடல்க ளோதுி நின்றிடும்
பொருவி லானொடும் புகறல் மேவினான். 53
முனி மொழிகள்
ஐய்ய! கேட்டிநம் அரங்க நாயகர்
பைய்ய வேதினை யனுப வித்திட
எய்த லாதமெய் இயம்பி னானினிச்-செய்வ இல்லையென் றன்பிற் செப்பினான். 54
மீளச் சார்ங்கமா முனியும் மெய்யரை
ஆளு நாயகன் அருள்வ மாமலென்
தோளின் மீதுனைச் சுமப்பன் ஐயனே! –
_ ஏளு கென்றவ ணெய்தி னானரோ. ் 55
பாணர் ஒதுங்கினார் .
சென்ற போதினில் இய சாதியன்
“என்ற வென்னைநீ சுமப்ப தேற்குமோ?
நன்று நன்றெனா நவின்று மெய்விதிர்த்.
தொன்ற வேபயந் தோடி னானரோ. 56
ஓடு வான்றனை யோடிக் கைக்கொளா
மாடு சென்றெதிர் வளைத்து நிற்றலும்
பாடு நாயகன் .பனுவல் நொந்துளம்
வாடு -றத்திரு மதிலைச் சார்கிலேன்; 57
நீச னீசனா னென்னை நீள்மொழி .
பேசிப் பேசியே பிடித்தல் ‘ இதெனாக்
கூசி யோடலுங் கூவல் மேவினான்
மாசி லாதொளிர் மணியின் மேனியான். ‘ 58
எத்தி சைக்கணும் எய்திப்போந் தொறும்
அத்தி சைபுகுந் தடைகி லேனெனத்
துத்தி நாகணைச் சோதி தன்னுளக் கொத்தி டுங்கொலென் றுள்ள யர்ந்தனர். 59
ஆழ்வார் முனிவாகனர் ஆனார் .:
பின்னு மெங்கணும் பெயர்க்கொ ணாமையால்
இன்னு மவ்விளை யாட்டெ லாம்விளைத்
தன்ன பாணனை அம்பு யந்தனில்
உன்னி யேற்றினன் உவமை வேறிலான். 60
இடரி னாற்கலுழ்ந் திருந்த மெய்யன்தாள்
மடன விழ்ந்தநன் மனதி னுள்ளுறு முடலை நீங்கிட முத்தமே கொடுத்
குடலின் ஏந்தினான் அன்பை ஏந்தினான். 61
மருவு சூரன்முன் மரைம லர்ந்தென
உருகு காதலால் உளத்தொ எிர்ந்திடப்
பெருகும் அன்பினிற் பிறங்கு வோன்றனைப்
பொருவில் தோளினிற் பொலிய வைத்தனன். 62
முனிவர் கருடன்போலிருந்தார்
அளவி லாதநல் லன்புக் காழியைப்
பளகு வெம்பவம் பாற்று மருந்தினை –
இளகு மன்பினால் ஏந்திச் செல்பவன்
களவில் நெஞ்சுடைக் கலுழ னாயினான் 62
அனுமனுமானார்
க்க. ௫ ஒப்பிலா ரகுகுலம் தனிலு கித்கருள் |
அப்பனை யப்பினு எமுதொப் பான் ற்னைத்,… ர்
துப்பணைப் பியன்மிசை சுமந்து வாந்க்கொள் 7
எய்ப்பிலாக் கான்மக னெனலு மாயினான், ் 64
முனிவன் பூரிப்பு
தகவுறு பாணன்றன் சரண்கைத் தாங்கினோன்
உகவையின் திருவுளம் ஓங்கி டத்தவ
மகமிழைப் பவருறு மகிழ்ச்சி யெய்தினான்
துகளிலா வாச்சியம் துவைத்த தெங்குமே. 65
நிதியின் மிக்கொளிர் நெடிய கற்பகப் — ப
புதிய மாமழை பொழிய, வானவர்
அதி௪ யித்துமா தவர்க ளன்பொடுந்
துதிசெய் யப்புகழ் பட்டர் சொல்லவே. 66
துன்று தோரண முதல்து லங்குற அன்ற ரங்கம தலங்க ரித்துளது
என்றும் இச்சிறப் பில்லை என்றிடச்
சென்ற டைந்தனன் தேவர் செய்கையான். 66
நீலமேனியன் முன் நிறுத்தினார்
நாலு வீதியு நண்ணி யன்புடன்
._ கோல மாமணிக் கோவி லின்கணே
மூல மென்றுகூம் முனியின் முன்வரும்
நீல மேனியன் முன்னி றுத்தினான். 68.
ஆழ்வார் அனுபூதி
அந்த மாதவன் கேச வன்திருப் .
பைந்து மாயணி பாதமே முதல்
சுந்த ரங்களின் சோபை யாவையும்
முந்த வர்க்குறும் முறையிற் காட்டினான். 69
புண்ட ரீகம்வாழ் போத ஸும்விடம்
உண்ட பேயனும் உம்பர் யாவரும்
தொண்ட ராயடி தொழமும ரங்கரைக்
கண்ட கண்கள் களித்த பாணற்கே; 70
ஒளித்தி லந்தொறு முறியில் வெண்ணைபால்
களித்த ருந்திடுங் கள்வ னேகரி
விளித்த ழைப்பமுன் விரைவி னோடிவந்
தளித்த கார்வணா! அரங்க நாதனே! 71
என்று போற்றிசெய் இறைவன் மேனிமேல்
சென்ற அன்பெலாந் திரட்டி. அன்பளாய்
அன்று பாடினா னமல ஸனாதியென்
தொன்றோ டொன்பது முவப்பி னோடுமே. 72
பாடி யேகளிப் பாழி யிற்படிந்
. தாடி யாடிப்பொன் னடியின் வீழ்ந்தெழுந்
தோடி யோடிமெய் யுருகி வேர்வெழக்
கூடி வந்தெ௫இர் குறுகி நின்றனன்.–73
துன்று மன்புறும் தொண்டன் நீண்முடி
ஒன்ற நற்பத முவந்து வைத்தனன்
கன்றி னால்விள வெறிந்து கன்மலி
குன்றை யேந்திடும் கரிய கோவலன். 74
அரங்கக் கடலில் பாண நதி: கலந்தது
பன்னு கூவங்கள் படுகு லைக்கணே
புன்னை யார்கடல் புகுந்த டங்குறும்
உன்னு மன்பினால் உருகு பாணனும்
மன்னி யொன்றினான் மாயன் றாட்குளே. . 75.
திருப்பாணாழ்வார் அரங்கன் இருவடிகளில் கலந்தனர்.
*-கூவத்தின் சிறு புனலைக் கடலயிர்த்தல் ஓவ்வாதோ கொற்ற வத்த.
என்பர் சவிச்சக்ரவர்த்திகள் (யுத்த காண்டம்).
கண்டு போற்றினர் கண்ணி மைத்திடா
அண்டர் யாவரும் அஇச யித்தலர்
கொண்டி றைத்தனர் கோயின் மேவிவாழ்
ணட ன தொண்டர் யாவரும் களிது ளங்கினார். 76
அன்ன செய்கையான் ஆய பாணனும்
பன்னு செந்தமிழ்ப் பனுவல் பத்தினுள்
பொன்ன ரங்கநற் புகழ்கொள் வேங்கடம் ்
என்னு மிப்பதி யிரண்டு மெய்துமே. 77-ழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்கள் இரண்டு, –
பயன்
இப்பெ ருங்கதை யெழுதிக் கற்றுளோர்
செப்பு வோரிரு செவியிற் கேட்டுளோர்
ஒப்பு வேறிலா உயர்வை குந்தமாம்
அப்பெ ரும்பதி யணுகி வாழ்குவார். 78
நம்மாழ்வார் புகழ் நவில்வோம்
ஒப்பென விளங்கு பாணர்செய்
வாறி தாமென வழங்கி னோமினி
நாறு பூத்துழாய் நாத னாருரு
மாற னாங்கதை வகுத்துக் கூறுவாம். 79
திருப்பாணாழ்வார் தருவவதார அத்தியாயம்
மூற்றிற்று.
———
சடகோபாழ்வார் திருவவதார அத்தியாயம்
வெண்பா
ஏரார்வை காசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோ ரறியப் பகர்கின்றேன் — சீராரும்
வேதந் தமிழ்செய்த மெய்யன் எழிற்குருகை
நாதன் அவதரித்த நாள்.
(உபதேசரத்தினமாலை, 14,)
எம்பெருமான் சிந்தனை
மருவை குந்தன மலிந்ததா மரையே ………
பொருவை குந்தனுக் ததற்கு ……………..
கருவை குந்தமே முதலினோர் களையும் ………
இருவை குந்தமா நகரதன் சீர்மையா ருரைப்பார். 1
முதல் பாடல் தைந்துள்ளமையால் பொருள் புலப்படவில்லை. இதனை
**மருவை கும்தளம் மலிந்ததா மரைமூதற் பூக்கள்
பொருவை குந்தனுக் கிருப்பிட மாகிமுப் புவனக்
கருவை குந்தமம் முதலினோர் களையும்ஆண் டருளும்
தருவை குந்தமா நகரதன் சீர்மையா ருரைப்பார்?’”
என்று திருத்தத் தோன்றுகிறது.
மரு- வாசனை. வைகும் -தங்கியிருக்கின்ற. தாமரை முதல் பூக்கள் – தாமரை
நீலோற்பலம் முதலான மலர்களை. பொரும் – ஓத்திருக்கின் ஐ. வைகுந்த்னுக்கு
இருமாலுக்கு. இருப்பிடமாய் – தங்கும் இடமாய், முப்புவனம் – மூன்று உலக
மாகிய. SH – மூட்டையில், வைகும் – சிறையிடப்பட்ட. தமம் முதலி
னோர் – தமம் என்று கூறப்படும் நரகத்துக்கு உரியவர்களையும், ஆண்டருளும் *
பாதுகாக்கும் திருவைகுந்தம் என்சு,
அச்ச றந்தநா டதனிடை அருள்விளக் கிடும்நல்
வச்சி ரஞ்செழு மரகத முதலிய – மருவ – ்
வுச்சி தந்தனை விச்சுவ கருமனே உஞற்ற
மெச்சு றுந்திரு மாமணி மண்டபம் விளங்கும். 2
அந்த மண்டபத் தரியணைப் புறத்தினில் அயனோ
டிந்தி ரன்முதற் கடவுள ரெவர்களு மீண்டி.
வந்து வந்தவக் சணம்நெருங் குறப்பிரம் பதுகொண்
டுந்தி யுந்திருச் சேனையர் கோன்விலக் குறவே. . 8
இருபு றத்தினு மரிவைசா மரங்கள்கொண் டிரட்ட
பொருவில் முத்தவெண் மதித்திருக் கவிகைமேற் பொலிய
குருக வின்கவுத் துவமணி மார்பினிற் குலவத்
இருவொ டும்பொலிந் திருந்தனன் நாரணன் சிறப்பால். 4
இருந்த கோவிய ரணியுடை களைக்கவர்ந் தெடுத்துக்
குருந்த மேலுறுங் கோவலன் கொன்றையன் -முதலாம்
அருந்த போதனர் வரங்கள்பெற் றகன்றதன் பின்னர் இருந்த வேயுளத் தோர்முறை இந்திப்ப தானான். 5
அருளில் வைகுறத் தக்க€ வாத்மகோ டிகளவ்
விருளெ லாம்தடிந் திரிந்திடும் நல்லறி வெய்தஇத் .
தெருள்கொள் அன்பினால் நம்வயின் -சேர்தரு போதில்
மருளு றப்புரி வஞ்சரை மாய்த்திட வேண்டி, 6
நைதல் ஒட்டுநன் னீரராய் நன்னலம் பொருந்தும்
செய்கை யோர்களைப் புவிமிசை செனிப்பித்தங் சுவரால்
உய்தல் வேண்டினோம் உற்றுணர் ஞானங்க சூரைத்த
மெய்மை யோர்களை வெறுப்பொடும் தடிந்தன ரல்லால், 7
கப்படும் உணர்வொடும் உறுபகை யொழித்தெம்
அருக ணைந்திலர்; இன்னம்யாம் வருந்தியங் கவர்பால்
கருணை கூர்தரப் பிறந்திடக் கருதினோம்; உதவ
வருதல் ஆரியர் செயலெனத் திருவுளம் மதித்தே, 8:
பெருமாள் கட்டளை *
பாய லாயுறும் அரசையும் பணிக்குலந் தன்னைக்
காயும் வெஞ்சிறை ஊர்தியாம் பொற்கரு டனையும்
கூய ழைத்துநீர் புவியினில் விரைவொடுகங் குறுகி
நேய மோடிரும் எனஅடி தொழுதெதிர் நின்றார். 9
நின்று ளோர்முகம் நோக்கி,யாம் நிலமிசை யுருவம்
ஒன்றி யேபிறந் இடவுளத் தோர்ந்தன மதனால்
சென்று நீர்முனம் வழுதஇுநாட் டிடைத்திருக் குருகூர்
என்று கூறுமா நகரினு மன்னகர்க் இணையாய், 10
சிறந்தொ எிர்ந்தகோ ஸூரினுந் திருப்புளி யெனவும்
அறந்த ழமைத்தசீர் மறையுண ரந்தண னெனவும்
பிறந்தி டும்மெனப் பேருல குண்டசெம் பவளம்
இறந்து ரைத்தலு மங்கவ ரிம்மொழி தெரிப்பார்: 11
இருமால் ஆதிசேடனையும் கருடனையும் அழைத்தான் ; அவர்
கள் வந்து பணிந்து நின்றனர். அவர்களை தோக்கிய இறைவன் யாம் fos wf
பிறந்திட நினைந்துள்ளோம், : நீங்கள், திருக்குருகூரிலும் இருக்கோளூரிலும்,
இிருப்புளியாகவும் அந்தணனாசவும் பிறந்திருங்கள் என் மனன்.
கடவு ளோர்களு முனிகளும் வேண்டவாங் கவர்கட்
இடர்பு ரிந்தவாள் வேல்கெழு மிராக்கதக் குழுவைப்
படியின் மீதுவேற் றுருவமாய்ப் பலவவ தாரம்
அடிகள் கொண்டடைந் தழித்துமீண் டிவ்விட மடைந்தீர். 11
மாறு மோர்பகை : புவிமிசை யுளதுகொல்? மதித்துக்
கூறு தற்கிலை மீண்டுமோ ருருக்கொளக் குறிக்கின்
வேறு காரணம் யாது?யாம் முன்னுரைத் இட்ட
வாறு இத்திடில் அடிகளெவ் வுருக்கொள்வீ ரறைமின்? 12
எந்த வூர்தனி லெந்தநா ளினில்உல களந்த
உந்த மம்புய வடிகளைப் பிரியும்கதீ தறுவோம்;
வந்து காண்குறும் வகையையும் மாறுத லின்றி-முந்த வோதிலம் முறைபுரி குதுமென்றார்; முறையாய், 14
மொழிந்த — கேட்டலும் முகுந்தன்மற் nor Gu
பொழிந்த கண்களால் நோக்கினன்; புகழ்பரந் தாமம்
ஒழிந்த கன்றிட விம்மொழி உவப்புட னுரைத்தான்
வழிந்து தேன்பொழி துழாய்முடி புனையுமா தவனே. 15
அறிஞர்கள் பேயராயினர் !
௪த நீர்க்கடல் வரைப்பினிற் றெளிவுளோர் உணர
வேத மெந்தனை யுண்மையாய் விளம்பியும் வேதம்
ஓது மந்தண ரந்நிலை யுணரகில் லாராய்ப்
பேதா பேதமா யுரைத்திடும் பேயரா. யினரால். 16–பேயராயினர் என்று ஆசிரியர் பொய்ம்மை வாதிகளைக் கண்டிக்கிறார்,
கற்ற வேதிய ரிவ்வகைக் கழறினர் என்னில்
மற்று ளோர்களெவ் வாறினி வாழ்வர்முக் காலம்
மூ.ற்று மோர்தவ முனிவரு மயங்கினர்; முறைசேர்ந்
துற்ற மாயையின் வலிமையவ் வாறதா மூணரில் ‘ 17
அன்ன தன்மையை தாதலால் அளப்பரும் புவியோர்
என்னை யுண்மைதேர்ந் தெவருமிப் பதியின்வந் தெய்தி
மன்னி வாழ்ந்திடும் வகையுணர்ந் திலார்மதி யருள்வ
துன்னி யோதுமி னெனவவர்க் குரைத்தபின் விடுத்தேம். 18
அவர்கள் சென்றுறுப் படைந்திடு மளவி லிம்மாயை
கவியு மாங்கதற் இங்குபல் வலிமைகாட் டுகினும்
புவியி லெய்தினர் பொலியுமெய்ஞ் ஞானபோ தகத்தைச்
செவியின் மேவுறத் தெளிவுறப் புகட்டிச்சின் னாளில்; 19
மருவி யோங்கிடும் வெவ்வினை மருவுமற் றவர்கள்
இருநி லத்திழிந் தடாமலெச் சரிக்கைசெய் தவராய்
பொருவில் நல்லறம் புகன்றனர்; புவிமிசை வதியும்
அருள்கொ ளந்தண ரரசர்கள் வ௫ூயர்பின் னவர்கள்; 20
இடிந்த நெஞ்சொடும் இவர்மறித் தன்னைதன் வயிற்றிற் படிந்து இத்துப்பின் இறந்துடும் பிறவியாம் பவ்வம்
கடந்தி டும்திறம் அறிந்திலர் காசினி யதன்மேல்
நடந்தொமிந்தனர் மையலால் நவிலவே நிலையால், 21
தமிழ்மறை ஓத அவதரிப்போம்
ஆத லாலிவர். யாவர்க்கு மினியதா யமைந்து
பூத லத்தினில் இழிகுலத் தவரும்பூ வையரும் ஓதி யின்புறற் கடமதாம் யோக்கிய முறவவ்
வேத –தமிழினால் விரித்தினி துரைத்து;–22-
சொற்றி டும்பொருள் நுட்பமும் முறைமையின் தொகுப்பும்
கற்று ணர்ந்திடும் கலைஞரும் மாந்தர்தம் கணமும்
மற்றும் மேவிடும் சணங்களும் மாண்புறப் பெருநூல்
பெற்றி டும்படி நடத்துவித் துறல்கடைப் பிடித்தேம்.-23-
அதனுக் கொத்திடக் குருகைவாழ் காரிமா றனுஞ்சர்
-சுதனி லாமையின் மனைவியோ டருந்தவந் தொடங்கி
. இதமு றத்தவம் இயற்றுவ னினிச்சில நாளில்
– உதவு வேம்மக வெனவளித் தவருவப் புறவே,–24
கலியு கத்தினி லவதரித் தனைத்துக்கும் கலங்கா
வலிகெ முந்திரு வனந்தனீ குருகைமா நகரின்
ம்லித ருஞ்சினைப் புளியெனுந் தருவதாய் வளரில்’.. _
பொலியு மத்தரு நிழலில்யாம் பொருந்திவை குதுமால், -25-
அந்த மாநகர்க் கடுத்தகோ ஞூர்வயின் அருளே
முந்து வஞ்சிறைக் கலுழன்நீ முறைவழு வாமல்
செந்த மிழ்க்கவி யாகிநாம் செப்புவாய் மொழிக்கு
வந்து றைந்துபட் டோலைநீ மடகழ்வொடு பிடிக்க; 26
அறிந்து நீவிர்க ளிருவரு மாஜிசூ முலகற் பிறந்து வைகுமி னெனவரி பிறங்குபாட் டிசைக்கும்
நறுந்து மாயணி மாலையான் நவிறலு மிரவிற்
செறிந்த தாமரை மலரெனத் திருமுகம் குவிந்தார். 27
ஐய! நின்மொழிக் கெதுரெவ ரறைகுவர்? ஆனால்
வெய்ய இக்கொடு மொழிகளை விளம்பினை; ஆயின்
செய்ய வேண்டுமென் றியம்பினை; செய்குதும் என்றே
வைய மீதுற விடைகொடு நடந்தனர் மஇழ்ந்தே. 28
(வேறு)
மதுரகவி அவதாரம்
நடந்தவரிற் கலுழன் நண்ணியடி யார்கள்
தொடர்ந்துகுடை யும்புனலிற் றோய்ந்துள whips
படர்ந்தரவ மேற்றுயில் பதிக்கண்மலர் மேவும்
மடந்தைநிக ராகுமொரு மங்கைவயி றுற்றான். 29
(வேறு)
அருமா மறையின் வடிவா மமலன்
உருமா மதன்வந் துலகத் திடையே
வருமா னுடனாய் மருவுற் றிடல்போல்
இருநாள் பொலியச் செகமுற் றனனே. . 30
(வேறு)
வந்த மதலைத் திருமுகமும் வடிவத் தெழிலும் புன்னகையும்
முந்த வருமா மகளிரெலாம்
முறையின் நோக்கிக் கண்களுடன்
சிந்தை மகிழ்ந்து நிறைவுற்றார். தேவன் இவனே என்றுரைத்தார்
அந்த நகர்வா யுறையுயிர்கள் ்
அனைத்தும் இன்பத் தோங்கென வே. 31
மதுரகவி ஆழ்வாரின் கல்விப்பயிற்சி
அறிய வொண்ணா மறைகளைக்காட்
டம்மா மறையோர் அமைவிதிகள்
நெறியிற் பகர இருகுரவர் நிகழ்வித் தன்பின் வளர்க்குங்கால்
நறிய புனிதத் துளவமென
நாளும் வளர்ந்து வடகலையும்
செறியும் இன்பத். தென்கலையும்
சேர வுணர்ந்தான் சின்னாளில். 32
தீர்த்த யாத்திரை
சீரார் மறையின் பொருளுணர்சோத்
இரபண் டிதனாய்ச் சாற்றுபல
பாரார் கலைதேர் சால்புடையோர்
பரவிப் புகழ வுறைந்ததன்பின்
நாரா யணன்வாழ் பதுிபணிந்து
நல்லோர் பாதம் பணிந்தேத்தி
ஆரா மஞ்சூழ் கங்கைகண்
டாட நினைந்தான் அயர்வில்லான். 33
நிகரில் வளஞ்சார் திருக்கோளூர்
நீங்கி நெடிதாம் நெறிகடந்து ககன வமரர் தினந்தோயும்
கங்கா நஇகண் டந்நீரில்
மகிழ்வின் இன்பப் புனலாடி
மருவிப் புரிதற் கரியதவம்
புகலும் மாயை தனைவிடுத்துப்
போக இருந்தான் புகழ்வல்லோன். 34
திருப்புளி ஆழ்வார் அவதாரம்
பன்னற் கினியான் உவப்பெய்தப்
பலவே டங்கொள்் திருவனந்தன்
தென்னன் முதலாம் வேந்தர்களும்
தேவர் குழுவும் இத்தர்களும்
கன்னல் மொழிகொள் அரம்பையரும்
கலந்தோர் முகமா யடைந்துதொழப்
பொன்னின் ஒளியை நனிநல்கும்nபுனிதம் பெறுஞ்சீர் குருகூர்வாய்; – 35
குலவு மாதி நாதன்றன்
– கோவில் வடபாற் பொருளைநதி
அலகில் வளஞ்சார் தீர்த்தநுகர்ந்
. தணிசேர் இளையார் திருப்புளியாய்
மலர்சூழ் பொய்கைக் இடையொடுங்க
வருக மூலம் எனப்போந்த
நலமார் திருமால் எனஓங்கி .
நாகம் முற்றும் அளந்தனனே. 36
காரிமாறன் கவலை
வாட யில்லாச் சான்றோர்கள்
மறையோன் எனவும் புளிஎனவும்.
மால் லாமற் பொலிந்தார்கள்;
மதியோன் கதிரோன் வலம்செய்யும்
காசற் ஹறொளிருங் குருகூரில்
காரி மாறன் உலகுபுகழ்
தேசுற் றிலங்கு முடையநங்கை
. தேவி யுடனே சேர்ந்திருந்தான். 37
பூடும் வாடப் பொறாதவர்கள்
புதல்வ னில்லாக் காரணத்தால்
வாடி வாடி உளந்தளர்ந்தார்; .
ம$ழ்விற் புரிந்த தருமமெலாம் வீடி யொழிந்து போயினவோ?
மேவும் கொடுமை யாதென்னா
நாடி மேலோ ரொடும்புகல
நயந்து கேட்டோ ரிவைபகர்ந்தார். 38
கற்றாவும் குன்றும் கதறப் பிரித்ேதோமோ 2
பெற்றாரைப் பார்த்துப் பெருமூச் செறிந்தோமோ?
பேதலித்து முற்பிறப்பில் பிள்ளைப்பால் வார்த்தலமோ?
காதலித்து மைந்தருண்ணும் சையைப் பிடித்தோமோ?
என்னும் நம்மாழ்வார் தாலாட்டுப் பாடல்
**குதலைமொழிக் கன்கிணிக்கால் கோகனகச்
– செவ்வாய் மதலையரை யில்லாத வாழ்வுமொரு வாழ்வாமோ ? புக்கடிசில்
உண்டு புறம்புல்கிக் கூத்தாடும் மக்கள் முகம் காணாத வாழ்வுமொரு வாழ்வாமோ?
ஐந்தடக்கி, வேண்டும் அறங்கோடி செய்தாலும் மைந்தரைப் பெற்றுய்யாத
வாழ்வுமொரு வாழ்வாமோ? மிகப்பேறளித்து விரசை நீராட்டும் மகப்பேறடை
யாத வாழ்வுமொரு வாழ்வாமோ?’”’-என்னும் நம்மாழ்வார் தாலாட்டுப் பாடல்
சான்றோர் இன்னுரை
காரார் குழல்சேர் மனைவியொடும்
கலங்க வேண்டா; நன்மையுறும்;
ஏரார் புதல்வர் தமைவேண்டி
இளமா மதியம் தவழ்கின்ற
சீரார் மாடக் குறுங்குடியைச்
சேர்ந்து புனிதப் பாற்கடலில்
நீராடி யபின் இருமாலை
நினைந்து தவங்கள் செயுமென் றார். 39
தம்பதியர் கண்ட கனா
நடுநாள் தவஞ்செய் போதினிலே
நிகரில் கதிரோன் உதயகிரி
படுகா லையினில் கனவின்சண்
பரவுந். இருப்பா லாழிவரும்
‘கொடுமா விடத்தை யரற்களித்த
கோமான் நிரம்பிப் பெருகிடுமன்
பொடுமாங் கவர்தம் தஇருமுன்னர்
உற்றுத் இருவாய் மலர்ந்தனனால்.-40-
மகவி லாத கொடுந்துயரால் ‘
மறுகி யிரவும் வெயில்காயும்
பகலும் அரிய தவம்புரிந்தீர்;
படாத துன்பம் நனிபெற்நீர்;
புகலு முமக்கிப் பிறவியினிற்
புதல்வற் பெறும்பே நிலை;ஆனால்
அகமுட் பொருந்தி யித்தலம்வந்
தடைந்தோர் நினைந்த தெய்துவரால். 41
துதிசெய் பவர்கள் அருந்துயரைத்
துடைப்ப தெமது கடனாகும்
அதினா லுமையுற் நிடுவினைகள்
அனைத்தும் போக்கிச் சோதிடத்தின் விதியை யொழித்திட் டுமதிடத்தில்
விரும்பி மகவாய் அவதரிப்போம்;
பதிசென் றடைமின் எனப்பகர்ந்து
பரந்த விண்ணிற் கரந்தனனால், 48
அந்தக் கனவை கண்டுணர்ந்திட்
டருளார் காரி வியப்புடனே
சிந்தை களிகூர்ந் தியம்புதலும்
இகழும் அலர்மேல் மகள்போலும்
கந்தம் மேவுங் குழலாளும்
கண்டேன் கண்டேன் ஈதேஎன்
றுந்து காத லுடன்மொழிய
உவந்தான் வமுகு நன்னாடன். 43
ஆழி முதலைம் படையொடும்பால்
ஆமி நடுவிற் றுயில்மாயன்
மாமி பலவாங் கோடிகளென்
றுரைக்கும் காலம் கணமென்ன
வாழி யெனவக் குறுங்குடிவாழ்
் வார்க்குப் பல்லாண் டினிதோதிச்
சூழி மதமா கரியனையான்
துணைவி யொடுந்தன் நகரடைந்தான். 44
நம்மாழ்வார் திருவவதாரம்
அடைந்து துயர்நீத் துறைநாள்வாய் ப
ஆமி தனைமந் தரவரையால்
கடைந்து மருந்தன் றளித்தான்றன் கழற்றொண் டியற்றி வருநாளில்
முடங்கி நலிந்த சிறியவரும்
முயற்சி யின்றிப் பதவிபெறக்
குடைந்து தேனுண் சுரும்பார்க்கும் j
குழலார் நங்கைத் திருவயிற்றில்; 45
கடல்சூழ் உலகம் புகழ்ந்தேத்தக்
காரி யெனும்பேர் .புனைந்தோன்செய் – ்
*… திடமார் தவத்தால் துவாபரத்தில் :
இகழும் அந்தத் தாவணியில் |
இடமார் இருபத் தேழென்னும் ்
இசைசேர் தேதி தனிலொளியாய் ,
அடல்சேர் கலியின் வெப்பகற்ற ் ர
அருள்மா முகில்போல் சென்றுற்றான்.–46-மூன்றாம் யுகத்தில் உடைய நங்கையார் வயிற்றில் திருமால் சென்று தங்காள்.
மங்கு லனையான் தாய்வயிற்றில்
மருவிக் கருவாய் உருவாகத்
தங்கள் வதனம் விளர்ப்பெய்தத்
தெரிய் மருங்குல் பெருந்தனத்துப்
பொங்கு முகத்துக் கருமைநனி
பொலிய வியர்வோ டயர்வெய்த
மங்கை: தென்றல் நடைகற்க
வளர்த்தான்; மதியை யிரண்டளவும்,–47-
மெலியும் கலிவை காசியினில்
மேவும் விசாக நன்னாளில்
பொலிவு மிக்க கடகமெனப்
புகழ்சேர் ஓரை தனில்பொங்கி
மலியுங் கடல்கள் அத்தனையும்
மகிழ்வி னெழும்பி மறிதிரையாம்
ஒலிகொள் முரசம் இனிதார்ப்ப
உதித்தான் ஒருசு ரியனெனவே. 48
காரியாரும் உடைய நங்கையும் உற்ற களிப்பு
பெற்றி மிக்க அறம்வளரப்
பேரார் இராமன் தோன்றியநாள்
சற்றும் பொய்யில் தசரதன்கா
சலையோ டந்நாட் டவர்கள்முகம்
செற்றம் நீங்கப் பேரன்பில்
சிறந்த தென்னக் காரியுடன்
பற்று மிக்க நங்கையரும்
பதிவாழ் வாரும் களிப்புற்றார். 49
பேரிற் றந்து நிறைசடரைப்
பெற்ற கொடியு முளங்களிப்பக்
காரி யாரும் விரைந்துற்றுக்
கவினார் சேயின் முகங்கண்டு வேரி மலர்ச்சந் தனமுடைபொன்
விதையா பரணம் சருக்கரையும்
மாரி பொழிவ தெனத்தானம்.
வழங்கி யுளத்தின் ம௫ழ்வடைந்தார். 50
மாறன் என்று வைத்தனர் நற்பேர் :
புரமட் டவனும் நான்முகனும்
…. புருகூ தனும்விண் ணாட்டவரும்
பரவிப் புகழ்தற் கரிதாமப் ட.
பரமன் செயல்க எளாராய்ந்தார்;
மரபிற் புகலும் பெயர்காரி
மாறன் என்று சுற்றத்தார் .
கரமிட் டுழக்க வைத்திட்டார் ட
களிப்பா மமுதம் அளித்திட்டார். 51
மாறன் மாயையை வெல்லுதல் –
இம்முறை யவர்களெல் லாரு மின்புறச் ்
செம்மலு மாயையைச் சதைய வென்றதால்
விம்மிவாய் திறந்தழான் விழிதி றந்திடான்
௮ம்மலர் பொருவுதா ளசைந்தி டானரோ. 52 ‘
மலமொடு சலம்விடான் மருவிப் பாலுணான்
இலகுயோ கந்தனி லினிதி ருந்தனன்
உலகுடை ஒப்பிலா வுருவந் தாங்கியும்
அலகிலா இன்பங்கள் அளித்தி டானரோ, 53
தாய்வயிற் றுஇத்திடில் சார்ந்து வாட்டிடும்
மாயையைக் தடிந்ததெவ் வாறு? மற்றிதற்
காயதோ ருபாயம்யா மறிந்து லேமெனத்
தூயநன் மனத்தினர் தொடர்ந்து நோக்கினார். 54
(வேறு)
மேனிவா டாமல் உள்ளம்
வெதும்புதல் சற்றும் இன்றி
மோனியாய் நாளும் நாளும்
முகமலர் விளக்கம் பெற்று
வேனிலான் இவனே என்று
‘விளம்பிட வனப்பை யுற்றான்
வானிடை உறைவோர் பூவின்
மழைபொழிந் தார்த்திட் டாரால். 55
இசைதரு புனித மைத்தன்
எழிலுறு முகார விந்தம் ். அசைவிலா திருப்ப நோக்கி
யருந்தவத் தினிதின் ஈன்ற வசையிலா மயிலை யொப்பாள்
காரியார் மாழ்கி நைந்து
நசைநனி பெருகி யோங்க-இன்னணம் நவில்வ தானார்: 56
உடைய நங்கையின் புலம்பல்
அந்தமில் காலம் யாம்செய்
அருந்தவப் பயனால் வந்த
விந்தையார் மகனே! தூய
விர தியே! உனக்கு நாயேன்
சிந்தையால் செய்கீங் கென்னோ?
இரண்டஎன் முலையை உன்பொன்
சுந்தர வாயிற் சவ்விச்
சுவைத்தும்பா அணவொ ணாதோ? 57
கண்ணினுள் மணியே பொன்னே
கண்டிகை ஒதுக்கி என்றன் ச
தண்ணமு தனைய பாலைத்
ககவுடன் சுவைத்தல் இதோ?
புண்ணியத் தாள்க ளாலெம்
புயத்திடை யுதைக்கொ ணாதோ?
நண்ணுநின் இரிப்பால் யாங்கள்
நற்களிப் புறலா காதோ? 58:
என்றும்நீ யன்பின் மேவும்
எழிலுறு புதல்வ னாக
ஒன்றிய வுள்ளத் தோடும்
உலகளந் தவனை நோக்கி.
நின்றுபன் னாட்கள் நோன்பில்
நிறைந்தநின் தந்த -யானோன்
தன்றிரு வுளத்தி லன்பு தழையநீ நோக்கி டாயோ? 59
நலமெலா மினிதின் ஓங்க
நான்மக வுயிர்த்த காலைப்
பல.மணிக் கணங்கள் மேவிப்
பயின்மணித் தொட்டில் ஏற்றி
யலம்வரல் முற்றும் தீர்த்திட்
டம்புலீ! வருக என்னக்
கலமென இனிய தாகக்
காண்தவம் செய்தி லேனோ? ் 60
அருத்தியில் லானென் றோரா
ஐயவிக் கொங்கைத் தீம்பால் :
உருத்தலால் வருத்து கின்ற துயரேனும் ஒஓழிக்கொ ணாதோ?
உரத்தலர் மங்கை வாழும்
ஒருவனன் றினிதின் ஈன்ற
வரத்திலென் வயிற்றில் வந்த
மைந்தனே! முறையோ? சொல்லாய். 61
பெருமைசால் பரிசா ரம்வாழ்
பெருந்தகை யுனது பாட்டன்
அருமைமீ தூரப் பொன்னால்
அழகுறப் புனைந்து தந்த குருமணித் தொட்டில் குற்றும்
கோலமார் வெயிலி னாலே
இருமுகம் மலர்ந்து கண்கள் சிறப்பயாம் நோக்கொ ணாதோ? 62
ஓவிய மனையாய்! நின்பே
ரொளியினிற் கண்வை யாதே
காவியங் கண்வேற் கொண்ட
காரிகை மார்கள் தம்முள்
நாவினால் ஏசி ஏ
நகைசெயல் பிறர்வாய்க் கேட்டேன்
பாவியேன் இதலால் வேறு
படுமொழி கேட்கொ ணாதோ? 63-
**சமஸ்கிருத சாஸ்இரங்களிலே பல
காலும் சுண் வையாமல்…… திருவாய்மொழி முதலான அருளிச்செயலிலே
பரிசலனம் பண்ணிக்கொண்டு”” என்பது ‘*யதீந்த்ர ப்ரணவப் பிரபாவம்””.
உன்திரு முகத்தின் கோலத்
தோங்கிநல் லுவகை காட்டும்
புன்சரிப் பூடரனே என்னோ
புரிந்துநீ நோக்குப் பாரா
இன்பமுற் றிருக்கின் றாற்போல்
இருந்தனை யோடு போலத்
தென்படு கின்ற தையா
இருமுலைப் பாலு ணாயோ? 64
உள்ளத்து ஞணருந் தன்மை
யுற்றுளாய்[ வாட கில்லாய்/
வள்ளலோ டலதென் னோடிம்
மர்மத்தை. யுரைக்கொ ணாதோ?
மெள்ளவாய் மலரொ ணாதோ?
விம்மிநன் கழவொ ணாதோ?
-கள்ளமோ? எம்மோ டென்னோ காழ்ப்புனக்’ குற்ற தைய 65
உடையநங்கையார் பாங்கிமாரொடு புலம்பல்
இன்னணம் பலவா றாக
எடுத்தெடுத் தியம்பும் போதும்
அன்னமா மதலை மேனி
யசைத்திடான்; விழியால் காணான்;
மன்னுமவ் வாறு காண
மலர்க்கண் ரருவி சோரப்
பின்னரும் பாங்கி மாரோ
டின்னணம் பேச லுற்றாள்: . 66
இங்கே வடிவழகிய தம்பிதாசர் உடைய நங்கையார் வாயிலாகப் பாடும்
பாடல்கள் யாவும் கல்லையும் கனியச் செய்யும் நீர்மையன, “தப்பா நிலையார்
கவமே! தமிழ்மாறா — அப்பா முலையிரண்டும் விம்மிநான் ஆற்றகல்லேன். —
ஒப்பாரில்லாதாய்! சுரந்து பீர் ஓடுகின்றது; — இப் பால் அருந்தாய்! நான் என்
பிழைத்தேன் இன்னமுதே’* — :*ஓக்கலைமேல் வைத்தோர் கரத்தால் உனைத்
தாங்கித் -தக்கமுலை யூட்டத் தவம் முன்பு செய்யாதேன்: — மக்கடமைப் பெற்ற
மடவார் முகம் நோக்கி. வெட்கினேன் மைந்தா, விதியிலியேன் ஆனேனே”*
என்னும் பாடல்கள் முற்றும் சோகமயமானவை.
வரமிருந் தடியேன் பெற்ற
மதலைபோற் செய்கை தானும் .
இரமுறும் வடிவும் பெற்ற சிறுவரை உததி கூழும் கரையிலா வுலகில் யாண்டும்
கண்ட துண்டோ?மற் றோர்கள்
பிரமையாய் உரைத்த ,துண்டோ?
பேசுவீர்[ பேசு வீரால். 67
செகமெனுங் கவளந் தம்மைச்
சிறுபச வந்த வாற்றால்
அகமுவப் புடனே உட்கொண்.
டணிகுறுங் குடிசேர்ந் தாங்குத்’ துகவுடன் மேவு பெம்மான்
தான்பிறக் குதுமென் றாற்போல் .
மகமுயர் வெய்தி யோங்க |
மாயனே உதித்திட் டாலும்; 68!
கண்ணிய அன்பு ளாள்போற் : ்
சார்ந்தபூ தனையாம் வஞ்சப் ந
பெண்ணுவப் புளாள்போல் தந்த
பெருந்தனி விடத்தோடம் பொன்
வண்ணமார் முலைப்பா லுண்டு
மகழ்ந்துளோன், வருந்திப் பெற்று
நண்ணியான் தருபா லுண்ண j
நாணமுற் நிருக்கன் றானோ? 69
குருகை மான்மியம் பாடிய கவியரசர்
இருக்குருகைப் பெருமாள் கவிராயர், மாறன் இருவவதாரச் சருக்கத்தில், .
*அலகை வஞ்சகக் கஞ்சன் என் பான்விடும் ;
அலகை மாமுலை உண்டுஅதன் ஆவியுண்டு ந
உலக முண்டவன் உள்ளமுண் டான்குலத் ்
இலக நங்கை தஇிருமுலை உண்கிலான்” ர்
.. என்றும், ச
. “வெள்ளத் தாலிலை மேற்றுயில் வித்தசு ;
உள்ளத் தானை உணர்வெனும் கண்ணினுள் (1
ட் ஆ
கொள்ளப் பார்வை குறிப்பல் லால்புறக்
கள்ளத் தால்வரும் காட்சிகள் காண்கலான்”*
” என்றும் இருவாய் மலர்ந்தருளி உள்ளார்,
மருவுமாய்ப் பாடி யின்கண் ்
‘வளரும்நாள் மனத்தி னூடே ் |
வெருவுறு வஞ்சத் தோடு
வேற்றுரு வமதாய் வந்து கருதரும் துயர்செய் தோனைக்
காலினால் உதைத்தோன், தன்னை
அருகுறும் என்னை மெல்ல .:
அசைத்துதைத் தழவொண் ணாதோ? 70
உறுசுவைத் தயிர்பால் வெண்ணெய்
உறிக்குட மிறக்கி யுண்ணச்
செறுவுடன் ஆய்ச்சி வந்து
சினந்துபின் தொடர்ந்து பற்றிப்
பெறுகுறுங் கயிற்றால் அந்நாள்
பிணித்தகல் லுரலி னோடு
மறுகிடத் தவழ்ந்தோன் என்கண்
மலரமுன் தவழொ ணாதோ? 71
சருவமும் செய்ய வல்ல
…. தலையயன் எழுத்திவ் வாறோ?
மருவுநீர்ச் ரத்தா னோடு
மலர்மிசை யிருந்து வாழும்
ஒருவனும் அறியொ ணாத
ஒப்பிலான் புனித மூர்த்தி
தஇருமகிழ் துளவத் தாரான்
திருவிளை யாட லாமோ? 72
படுக்கவைத் திடிலவ் வாறே
-படுத்தவா நிருப்பன்; மார்பத்
இடத்தில்வைத் திடிலவ் வாறே:
இசைந்தசை வற்றி ருப்பன்;
எடுத்திடை தனில்வைக் திட்டால்
இருந்தவா நிருப்பன்; நங்காய்
அடுக்குமோ இவ்வா றெங்கும்
அவனியிற் கண்ட துண்டோ? 73
சான்றோர் உரை
இத்தவா நாகத் தான்தன் பாங்கியோ டிரங்கிக் கண்ணீர்
ஓந்திநித் திலம்போல் வீழச்
சந்தையில் தளருங் காலை
வந்திடுங் குரவ ரோடவ்
வாசகம் முற்றுங் கூறத்
தந்தம துளந்தேர்ந் தங்குச்
சாற்றினர் ஏற்றம் மிக்கார். 74
அம்மகே ளிவ்வா றெய்தும்
அருந்துயர் முற்றும் ஆதிச்
செம்மறன் வதனம் நோக்கிச்
செப்பிடில் நீங்கி டும்மென்
றெம்முள மதனிற் றோன்றும்;
இதனைநீ ராய்ந்து கேண்மின்;
உம்முளத் திட்ட தேவை யுகந்துநீர் வேண்டிக் கொள்வீர். 75
என்றுகொண் டவர்க ளெல்லாம்
இயம்புதல் கேட்ட லோடும்
நன்றுநன் றென்னச் சிந்தை
நலமருள் உவப்பின் மூழ்கித்
துன்றிருத் துணைவ னோடுஞ்
சஞ்சலம் முற்றும் ஓட
ஒன்றிய மனத்த ராகி
யுள்ளினார் பரிவு மிக்கார். 76
வையம்: முழுதும் தரிந்துழன்று ். வாடி வாடிப் பிறைசூடி
கையம் படையாய் எனை உகந்து
காத்தி காத்தி எனப்பணிய
ஐயம் பெய்தன் றிரப்பகற்றும்
அமலன் ஆகித் தனிமூர்த்தி, செய்யும் பரிசங் கஇவையல்லால்
பிரிதொன் றில்லை எனத்தேர்ந்தார். – 77
ஆதிநாதன் கோயிலை அடைந்தார்
அதுவுந் தெளிது மெனவுளங்கொண்
டம்பொன் மணித்தொட் டினிலோடும்
புதல்வன் றனைக்கொண்் டக்குருகூர்
பொருந்து மாதிப் பெருநாதன்
குதுக லத்தோ டினிதமரும்
கோயில் முக்கால் வலம்வந்து
இதயந் தெளிந்து மிக்குறுமன்
பெழிலார் தொட்டி லுடன்வைத்தார். 78
ஆழ்வார் தவழ்ந்து திருப்புளி உற்றார்
வைத்த உடனே வைத்திட்ட
‘வாறே கடக்கும் தவக்குழவி
கைத்து. நெகழ்வார் தமைப்பார்த்துக்
கண்கள் களிப்பாய் நங்கையெனும்
மைத்த டங்கண் பெருந்தேவி
மகிழ தோக்கி முறுவலித்துத் .
தனிமா முகில்போல் தவழ்ந்தேகி; — 79
நம்மாழ்வாரின் திருக்கோலம்
ஒப்பில் பெருமான் கோவில்புறத் |
துற்ப வித்த தஇிருப்புளிக்கீழ்
வைப்பென் றமரர் புகழ்ந்தேத்த ட ச
மருவி மகிழ்வோ டினிதஇிருந்து .
செப்பற் கரிய பொருளுணர்த்தும் .
இருமெய்ஞ் ஞான முத்திரையை
நட்பில் வலப்பாற் கரங்காட்ட *
நவில்செங் கரத்தை மடியிருத்தி; ் 80
பாரோர் வியப்பின் மயமாகப்
பதும மலர்க்கண் விழியாமல்’
ஏரார். மவுனக் குகையின்கண் ட ன ஏ
.. எய்தா. வாக்கி -னைச்செலுத்தி ட:
ஓரா உணரா நம்பெருமான் :
ஒருகால் வருவா னோவெனவோ
சீரார் தென்றல் முகம்வருடத் . தெற்கு முகமாய்த் திகழ்ந்திருத்தான். 81
இரு முதுகுரவரும் பிரியாதிருந்தனர்
கருதற் கரிய தவக்கோலம்
கண்ட காரி மாறனும்கார்
மருவு வண்ணக் குழற்செங்கை
மடவாள். தானும் அந்தநாளில்
. பொருவில் கனவிற் பகர்ந்தபடி
போந்த நாரா யணன்என்றே
இருளில் நெஞ்சிற் றெளிவெய்தி
யென்றும் பிரியா திருந்தனரால். – 82
மதுரகவியின் வரலாறு
– இங்கனம் இன்னவர் இருக்கு நாளிடை
சங்கையில் பகிரதன் தவத்திற் றோன்றிய
கங்கையா டிடச்செலும் கனத்த மாதவ மங்கலத் தணுகிய மதுர கவியரோ. 83
மதுரகவியார் சோதி கண்டார்
– ஓர்இனம் .தெக்கண முவந்து நோக்கலும் :
பார்மிசை யிருந்துபல் கோடி கோடியாம் ”
– சூரிய ராமெனத் துலங்கி யோங்இிடும் ட
பேரொளி -விண்மிசை பிறங்கக் கண்டனன். 84
சோதியைத் தொடர்ந்தார் – யமுனை உற்றார் த
கண்டுள மதனிடைக் கலக்க நெஞ்சகம் od
கொண்டதை யறிகுவம் என்னும் கொள்கையால் : .
தெண்டிரைக் கங்கையை நீத்துச் சேந்தநெய் ‘ ன
உண்டமா தவனுறை யமுனை யுற்றனன். – ’85
வேங்கடம் பணிந்தார்
தங்கட லெண்ணியச் சிறுமை செய்தவர் i
தாங்கடை தேறவே சார்ந்து காத்தவன் . !
Came மெய்தியே விரும்பிப் போற்றினன் i
தேங்கட மாலினின் னருளைத் தேக்கினான். ‘ +, , 5 OE 86
திருவரங்கம் சேவித்தார்
கரங்களாற் பணிந்துளங் க௫யுந் தொண்டர்போல் ‘
கரங்களா லேற்றியே கனியும்: பொன்னிகூழ் :
அரங்கமா நகரினை அன்பின் உற்றனன் ட் அரங்கமாய் வளர்மனத் தாசை பொங்கவே. , 87
அழகரைப் போற்றினார்
காலையும் மாலையுங் கனிந்து தேவர்சூழ்
சோலையம் பொருப்பினைத் துன்னி யன்புடன்
பாலையுந் தயிரையும் பாடி யில்நுகர்
மாலையவ் வழகரை வணங்கிப் போற்றினான். 88
கூடலழகரைப் பரவினார்
பாடலும் மனைதொறும் பந்தொ டம்மனை
ஆடலும் அணைமிசை யணையு மன்பரோ
டூடலும் மலிந்தசீர் மதுரை யுற்றுப்பொழ்
கூடலின் அழகன்தாள் குறுகிப் போற்றினான். 89
வில்லிபுத்தூர் மேவினார்
மிகுந்தவத் துயரினை மேவி டாதுநல்
வகுந்தினை யருள்வட பத்ர சாயிவான்
புகுந்திருப் பாதமும் புகழ்ப்பல் லாண்டினாற்
சுகந்தரு பதங்களுந் தொழுது வாழ்த் இனான். 90
வைகுண்டக் கள்ளபிரானை வாழ்த்தினார்.
இரும்பொழிற் காரிரு ளெறிந்தி டுந்திரை
பெருந்திரு மணிகளால் பிறங்கு சீர்பெறும்
இருந்துநற் பொருளையைச் சேர்ந்த மாநகர் வருங்களப் பிரானடி வணங்கி வாழ்த்தினான். 91
தகவுறும் தனியிடஞ் சார்ந்துள் ளன்பொடும்
அகமறப் பொருநைநீ ராடித் தென்கரை ‘
சகமெலாம்’ வியப்புறத் தயங்கு மாடமேல்
முகில்தவழ் குருகைமா நகரம் முன்னினான். 92
மதுரகவியாழ்வார் கண்ட சோதி |
நாடியா யிரம்பண ரேந்தி நாடொறும் _
பாடுற உயருபு படர்ந்து மீதெழும்
பீடுறு புளியினிற் ப்ரகாச மொன்றியே
. ஆடலார் பொந்தினு எடங்கக் கண்டனன். 93
கண்டுளங் கனிந்துநின் றவர்க்குக் காசினி
உண்டவன் திருவருள் உவப்பின் நல்கலும்
பிண்டமாம் வினையறப் பிரதெக் கணம்்புரிந்
தண்டரும் எய்திடா அகமுற் றானரோ. 94
வலம்புரி காலையில் வடபு றத்தினில்
– இலங்குறு கண்களா லினிது நோக்கலும்
துலங்குறப் பொலிதவச் சோதுக் காதியை நலங்கெழு புளியுளே நாடிக் கண்டனன். 95
இந்தசிற் நிடந்தனில் எங்கும் யாவுமாய்
அந்தநற் பராபரன் அடைந்து ளானெனச்
சிந்தையுட் டெளிந்திடத் தேர்ந்து காதலால்
வந்தவ ணிருந்துளோர் வதனம்: நோக்குபு; . 96
மதுரகவிகள் வினா
ஈங்குறும் அதிசயம் ஏது? கூட்டமாய் ்
நீங்களெல் லோர்களும் நின்று நோக்கல்என்?
. பாங்குற விழைந்திடாப் பரமன் யாவனோ?
். ஆங்கதை விளம்புமென் றன்பின் ஓதினான். 97
காரிமாறன் விடை
நீரிய னுரைத்தசொல். நெறியிற் கேட்டவர்
– ஆரியர் திலகநீ யறிதி யாலெனா
மாரியிற் பொழிகர வள்ளல் மாதவக்
காரிமா றனுமெதிர் கழறல் மேவினான். 98
புத்திர னிலாமையாற் புந்தி நொந்தழும் பத்தினி யுடனடி பேணிப் பற்றுடன்
எத்திசை களும்புகழ் எழிற்கு றுங்குடி அத்தல மதனிடை யணுகிப் போற்றினோம். 99
அருந்தவ மிழைத்திட ‘ வந்தக் கங்குலில் – –
-பொருந்துறக் கனவினிற் புகுந்து மாதவன்
திருந்துறு புதல்வரிச் செனனத் தஇில்லையால்
-வருந்தியெம் மிடந்தனில் வந்து வேண்டினீர்; 100
ஆதலா லுமதிடத் தன்பு கொண்டுயாங்
காதல ஸனாகுவங் கருத்து .ஸசூற்றிடும்
வாதனை தீர்ந்துமா நகர மன்னுமென்
ஹோதினான் மகழ்வொடிவ் வூர்வந்: துற்றனம். – 101
உற்றபின், என்மனை ஒருசு தன்றனைப்
பெற்றனள்; அன்னவன் பேச லுண்ணுதள்
அற்றனன்; மலசலம் யாதும்: கண்டிலோம்;
மற்றுமன் பிலாமலே :-மவுனி யாயுளான். 102
இங்கே நம்மாழ்வார் தாலாட்டைப் பார்க்கவும்.
… பாலுண்ண வில்லை, பசித்தழவோ தானுமில்லை;
் மேலுண்பான் என்றால் விழியும் திறக்கவில்லை;
உச்சி குளிரவில்லை; உள்ளங்கால் வேர்க்கவில்லை;
அச்சங்கை யுண்டாம் அரிவையரிங் செய்தவில்லை’*
என்று நயம்படப் பாடப்பட்டுள்ள
மாசிலா அன்புளாய்/ வைய மீதுறப்
பூசுரர் பெருந்தவம் பொருந்திற் றாதலால்
கூசியாம் எம்தவக் குலமு றைப்படி ்
வாசியார் ௪ருடை மதலை யைக்கொமே; .103
செம்மலே! எம்துயர் இர்த்தி நீயென
இம்மகன் றன்னொடும் எய்து யாம்மிக
விம்மலுற் றமுதருள் வேண்டிச் செப்பியே
மைம்முகில் மாதவன் முன்பு வைத்தனம். 104
–
வைத்தலும் சரிய மதலை யாங்கணே
சத்துவம் பொலிவுறத் தவழ்ந்து சென் றிவண்
இத்திறம் நிட்டையி லிருந்த திவ்வணம்
புத்திர ரிருப்பதுப் புவியு லுண்டுகொல்! _ 105
அன்றுதொட் டின்றள ours ஆண்டுகள்
சென்றன எட்டிரண் டிதனைத் தேர்ந்திட
என்றுமிங் கெய்துவர்; இவர்கள் யாவரும்
ஒன்றியே காணவந் துற்று ளோர்களாம். 106
தேன்றுளி துளவணி செங்கண் மாயவன்
யான்றவ மிழைத்ததற் கமைய என்மனை
யீன்றவிம் மதலையா மென்று வெம்பினோன்
சான்றுளோ ஸூணர்ந்திடச் சாற்றி னானரோ. 107:
ம
துரகவிகள் வினாவும் ஆழ்வார் விடையும்
அன்னது கேட்டதும் அருளின் ஆழியாய்
மன்னுமாழ் வார்மருங் கெய்தி மாண்புறக்
கன்னமாங் இரண்டினிற் கதுமெ னப்புகத் துன்னிட வெடுத்திது சொல்ல லுற்றனன். 108
சிற்றிதின் வயிற்றினிற் சிறிய தாயதொன்
றுற்றிடி லெதனைத்தின் றுறையும் எவ்விடம்
மற்றிது புகலென மதுர மாக்கவி
சொற்றலு மவன்விடை சொல்லி னான்ரோ. 109
தெய்வம் ரீயே எனப் பணிதல்
றெவ்விடம் இருக்கும் என்றனை
அத்தைத்தின் றங்கனே அமையும் என்றுயர்
உத்தரஞ் சொல்லலும் ஒப்பில் வேதியன்
சித்தமுள் ஞூறைந்திடும் தெய்வம்நீ என்றான். 110
எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்று வினாவினாய். அத்தைத்
தின்று அங்கே Be deeb”? என்று ஆழ்வார் உத்தரம் சொன்னார். சேட்ட வேதி
யன் “தெய்வம் நீ’ என்று கூறினான்.
செத்தது – பிரகிருதி (உலகம் – உ.டல்). சிறியது – ஆன்மா. எத்தைத்
தின்று – எதை அனுபவித்து. எங்கே கிடக்கும் – எங்கே இருக்கும் (வினா).
அத்தைத் தின்று- அப் பிரகிருதியை அனுபவித்து. அங்கே கடக்கும் – அந்தப்
பிரகிரு தியிலேயே வாழும் (விடை). :
நம்மாழ்வாரைக் கண்டதும் மதுரகவிகள் ”இச்சோதியோ என் இதயம்
உருக்கெயது; முச்சோஇியினும் முழுச்சோதி என்றிறைஞ்சினார்” என்று பேசிய
தாசுத் தாலாட்டுக் கூறும்.
(வேறு)
படியின் மீதினில் — வடிவு கொண்டருள்
அடிகள் மீதுதன் — முடிய ணிந்தனன். 111
காரி மாறனும் — பாரி நங்கையும்
சேரு மானந்த — வாரி மூழ்கினார். . 112
போரி யங்குகோ – ளூரில். வந்தருள்சீரி யோனுமுள் — வாரி யாயினான். 113
மன்னு மன்பினான் — தன்னை யீன்றவர்
உன்ன ருங்களி — துன்ன ஓதுவான். 114
மதுரகவிகளின் புகழுரை
ஓப்பி லாப்பரம் — குப்புற் றெய்தநீர்
செப்பருந் தவம் — நட்பிற் செய்துளீர். 115
பொங்கு மாழியில் — அங்கு பாலனாய்த்
தங்கு மாதவன். — இங்கு வந்தனன். 116
இங்கு, தாலாட்டு, நம்மாழ்வாரைப் பார்த்து, **கரிய திருமேனி எங்கே? கை
நான்கில் இரண்டெங்கே? பெரிய திருவுந்இயினில் பெற்ற பிரமனெங்கே?
பாக்த்தில் வாழும் பரசுதரித்தோன் எங்கே? ஆகத்தில் வாழும் அலர்மேல் மடந்தை
யெங்கே? ௮ண்டமுண்ட செவ்வாய் அரவிந்தப் பூ விதுவோ? பண்டகலம் ஏழும்
பரந்தளந்த தாளிதுவோ? : ஆலம் தளிரில் அடங்கும் வடிவிதுவோ? சலம் பலவுந்
தெளித்துணரக் கூடுமோ”’ என்று மதுரகவிகள் பேசியதாகக் கூறுகிறது. ்
நேச மோடிருந்
தாசில் நற்றவம் — தே௫ற் செய்குளீர். 117
பூர ணன்றனைச் பெற்றுளீர்
தேர தாதினோர் — பாரி லில்லையால். . 118
நன்று செய்துளீர் — ஒன்று மஞ்சலீர்
என்று ரைத்துணர்ந் — தன்று வைகினான். 119
120.
_ “121
சிவனு நான்முகத் — தவனு மேத்துமா |
தவனிவ் வாறதாய் — புவன . மெய்இனான். – 122
காத லாலினி — வேத மாவதை
ஓது. வான்றமிழ்– போத மாகவே, ~ (123
என்ன வேயுளத் — துன்னி யங்கதை
முன்னர் நாளரி — சொன்ன வாறினே. 124
மதுரகவிகள் பட்டோலை பிடித்தார்
‘சட்ட மோடுகை — தொட்டுப் பண்புடன்
பட்டி னோலையைக் — இட்டி யேந்தினான். – 125
மதுரகவிகள் விண்ணப்பம்
அம்மா றன்றன் அருகினில்வந்
தழகார் நான்கு புயம்மறைத்து
* இம்மா நிலத்தை மேன்மேலும்,
இனிதாய் உயர்த்த வேண்டுமென
நம்மாழ் வாராய்ப் புவியுற்றாய்[
நாரங் களினுள் ஞூறுபொருளே
தம்மா மனத்தி லுணராமல்
சலிக்கின் றார்கள் இவரெல்லாம். 126
மாய்கை யியற்று ம௫மையதால்
மண்ணில் தோன்றும் ஆன்மாக்கள்
தாயி. னகமுற் றிடுமனிதன் சகத்தை உணராத் தன்மையைப்போல் நேய முடையான் றனைமறந்தார்;
நிகரில் பெரியோய்! இப்போதே
ஆய வருக்குற் றுபதேசம் |
அளிப்பாய் என்றான் கோளூரான். 127
நான்கு புயம் மறைத்து என்ற இடத்தில்,
“சேமம் குருகையோ் 2? செய்யதிருப் பாற்கடலோ?
தாமம் பராங்குசமோ ? நாரணமோ ?-* தாமம்
துளவோ ? வதுளமோ? தோளிரண்டோ ? நான்கோ?
உளவோ பெருமான் உனக்கு”* :
என்ற சங்கத்தார் பாடலை ஒப்பிட்டுக் காண்ச,
பெருமாள் காட்சி வழங்கல்
எண்ணி யுளத்திற் கருடன்மிசை
ஏறி உலகம் உவப்பெய்தக்
கண்ணு தலும்பூ வுறைவோனும்
கரங்கள் கூப்பி மருங்குவர
– விண்ண வரும்பூ வடிபணிந்து
விரும்பிப் போற்றக் கடல்குழும்
மண்ணி லுறையும் சடகோபன்
மருங்கு வந்தான் மாயவனே. 128
நறவ வனமா லிகையணியும்
நலமார் மகுடந் தருசுடரும்
பறவை யினங்கள் தமக்கரசாய்ப் பயிலும் பெருமான் விடமகற்றும் சிறகி னொலியும் விசும்பிடையே
சிறப்பக் கரிய ஞாயிறென
உறலு மகழ்மா றனுமிதெனோ
ஓலியென் நுறப்பிற் கண்விழித்தான். 129
இருகண் விழித்து நோக்குதலும் எழிலார் கடலின் புனல்உண்ட
கருமா முகில்செந் தாமரையின்
கானம் மலர்ந்து தடித்திலங்கும்
பருதி யொடுவெண் மதியினொடும்
பலவா முடுவின் குலமுடனும்
உருமே றுடனுங் ககனமிசை
யொளிர்ந்துப் புவிக்க ணுறுவதுபோல்; 130
வயங்கு கங்கை தருபொற்றாள்
வதனம் இருகண் வாய்கரங்கள்
தயங்கு மகுடம் . மணிக்குழைகள்
சங்கம் H&A வாள்தண்டம்
இயங்கு கதைபொற் பணிதியுடன்
சீரார் விசும்பில் மலர்பூத்த
கயங்கொள்் எழிலோ டமலன்வரக்
கண்டு மாறன் களிப்புற்றான். 131
ஏரார் கோலந் தனைக்கண்டான்;
எதிர்சென் றாடிப் புவியுறவே .
வேரா விதுரா அழலினிடும்
மெழுகா யுருகி யெதிர்நின் றான்;
ஆரா வமுதே[ எனப்புகன் றான்:
அழுதான் இரித்தான் பாடிட்டான்;
சீரார் மலர்ப்பூந் இருவடிக்கீழ்
சென்னி யிருத்தித் துதிசெய்வான். 132
நம்மாழ்வார் துதித்தல் *
ஓயா! போற்றி! கருணைநிறை;
அத்தா! போற்றி! ஓம்படைசேர்
கையாய்! போற்றி! பேரன்பிற்
களித்தாய்] போற்றி! கருங்கொண்டல்
மெய்யாய்! போற்றி! வேதாந்த
விளக்கே! போற்றி! மாணிக்கப்
பையாய்! போற்றி! ஒப்பில்லாப்
பரமா! நின்பொற் பதம்போற்றி 133
மாயா! போற்றி மரசுதமா
மலையே! போற்றி! செம்பவள .
வாயா! போற்றி! மறைதேடும்
வடிவோய்! போற்றி! பாடிவளர்
ஆயா! போற்றி! விதிக்கு மறை :
யறைந்தாய்! போற்றி! பூவையொடுங்
காயா மலர்மே னியா/போற்றி/
கருணா கரநின் கழல்போற்றி! ்.. 134
ஆழி மதித்த புத்தமுதை யமரர்க் களித்தாய்! தொலையாத
ஊழி பலவாங் கோடிகளும்
ஒழியாய்! புகழ வாயில்லாத்
தாழி தனக்கும். உயர்வீடு
தந்தாய்! இடங்கர் வாய்ப்பட்ட
சூழிமா மதமா கரியினருந்
துயரந் துடைத்தாய்!’ பல்லாண்டு. . 135
விண்ணி லுறையும் கடவுளர்கள்
மேவிக் காப்பாய் என்றுரைப்ப,
மண்ணி லயோத்தித் தயரதன்சர்
மகவாய் உதித்தாய்! அருள்மீஇட்
டெண்ண லரிய கோடிகளாய்
இலங்கு மரக்கர் தமைக்காலற்
குண்ண அளித்த கோதண்ட
முடைய பரனே! பல்லாண்டு! 136
என்னப் .பலவாம்’ செய்கைகளை
எண்ணி யெண்ணி மனங்குளிர்ந்து
பன்னி மகழ்விற் றுதிசெய்து
பரமா! பரமா! தேனுண்டு
தென்ன தெனவென் றளிமழுரலும்
சரார் துளபம் பொலிமார்பா।
பன்னு மிதனைக் கேட்டியெனப்
பராங்கு .சனுமீ துரைத்திட்டான். 137
கூவிக்கொள்
இந்த வுடலத் துடன்புவியில்
இந்நாள் காறு மிருந்தலுத்தேன்; உந்த னடியைப் பிரிந்தடியேன்
உழன்றேன்; மாலே, இனியா ற்றேன்;
வந்து மாயை தொடருமுனம்
வந்தே யெய்தத் துடிக்கின்றேன்;
அந்தப் பரம பதவுலகம்
அடைய விழைந்தேன் என்றனனே. 138
பெருமாள் விருப்பம் –‘வேதம் பாடுக
ஏரின் மிக்க மொழிகேட்டுச்
சிவனோ டயனே முதலானோர்
பாரில் தவங்கள் புரிந்தாலும்
படிவம் தெரியாப் பரஞ்சுடராய்
வேரி மருவும் இங்களனியாய்
வித்தாய் இலங்க, வரையளித்த
நாரி விரும்பு முயர்ந்ததிரு நாம முடையோன் இதைதநவில்வான்: 139
உலகை எழுப்பும் கதிரவன்போல்
ஒளியார் மணிகள் கொழியாழி
இலகு திரைபோல் வரும்பிறவி
இடரால் உயிர்கள் வாடினகாண் மலரு முளத்தாய்] அருளின்றி
வருவேன் என்னில் அக்கருமம்
தலமீ தன்பி னுடன்புரியத்
தக்கோர் எவரே சாற்றுவையால். : 140
கோதில் வேத உச்சியினிற்
கூறு முடிவாம் பொருளதனை
நாத முறுசெந் தமிழ்மொழியில்
நான்கு வருணத் தவர்தமக்கும்
சாத னஞ்செய் யோகியர்கள்
தமக்கு மாகும் படியோதி
மாத வத்தின் பெரும்பயனை
மாந்தர் இனிதே பெறவுஞற்றி; — – 141
(வேறு) | ்
வாய்மொழி வழங்கி வருக
மருவு மிச்செயல் புரிதற்கு முன்வரல் வழக்கன்
ஐருமை யாம்செயல் புரிகுதி; மாயையென் பதுதான். ….
இருமை யுங்கெடுத் தெய்திடும்; இதன்வயப் படாமல்
வெருவு றாமல்நீ வாய்மொழி வெளியிட்டு வருவாய்! 142
மாயம் வல்லவன் இன்னவா றியம்பி,வை குந்தத்
தேயும் ஆசையான் இப்புவி இருப்பனோ என்று
நேய மாய்வெகுண் டென்மொழி நீமறேல்; அருளின்
நாய .காரஎனப் பகர்ந்தனன்: நான்மறை முதல்வன். 143
பந்தம் யாவையும் நீக்கிடும் பசியகார்க் கொண்டல்
இந்த வாறுரைத் தேகினன்; ஏகலும் கலங்கும்
சிந்தை யிற்றெளி வெய்தினன்; திருவுளங் களித்தேற்
த்த மாறனும் அயர்வெலா மகற்றினன் அம்மா! 144
மாறன் பெயர்ந்திலன்
மூன்பு: தானமைந் திருந்துள முறைமையைத் தேர்ந்து துன்ப மாமெனச் சொலும்பெருஞ் சாகரம் துறக்க
இன்ப மாமெனும் மரக்கலங் கொடுக்கவந் இடுதல்
பின்பு தானமைந் இடுதலால் பெயர்ந்திலன் மாறன். 145
திலமி ருந்துமா மாயையை நீக்குதற் கரிதாம்
பலவு யிர்களும் படித்துநல் லுணர்வினைப் படைத்்தஇட்
டலகன் மாதவத் தவர்களு மறியொணா வமலன்
உலக மேவியாங் குறையடி யார்களோ டுறவும்; 146
மாய னாருரை வழுவுறா தியற்றவும் மனதுள
நேய மாய்மறைப் பொருளினைத் தமிழ்செய்வா னினைந்திட்
டாய மாறனு மத்திருப் புளியிடை யமர்ந்து
தூய மாமது ரக்கவி சுடர்முக நோக்கா; 147
வேதம் அவதரித்தது — இருக்கு வேதம்
நன்று நீயெழு துகவெனா நவின்றருங் கவியாய் :
ஒன்று மாறுபொய் நின்றஞா னமும்பொல்லா வொழுக்கும்
என்றெ டுத்துயர் இருவிருத் தம்மென இருக்கில்
துன்று கின்றசா ரந்தனைத் துலங்கநா றுரைத்தான். 148
யசுர் வேதம் — அதர்வண வேதம்
விரிவ தாமெசுர் வேதசா ரந்தனைத் திருவா
சிரிய மென்றெழு: கவிதையாய்ச் செப்பினன்; அதன்பின்
பரிவி னோடதர் வணம்பகர் சாரத்தைப் பெரிய
திருவந் தாதியென் றெண்பத்தேழ் கவியதாய்ச் செய்தான். 149
சாம வேதம் _..திருவாய்மொழியின் மாண்பும் கருத்தும்
செழியுஞ் சாமவே தத்தின்சா ரந்தனைத் திருவாய்
மொழியோ ராயிர நூற்றிரண் டோடுகவி மொழிந்தான்;
அழிவி, லாதுயர் பதவிசென் றணுகுறு வோர்க்கு
‘வழியெ. லாங்குளிர் மரங்களே மல்கட வம்மா! 150
அப்பெ ருந்திரு வாய்மொழி தனிலறைந் ததுவோ.
இப்பெ ருங்கட லுலகெலா மீன்றுகாத் தழிக்கும்
_முப்ப ரம்பொரு ளாகியும் முடியுமன் னாள்வாய்
ருந்திருப் பாலனா யோருரு வமைந்தே. 151.
அடைய லைக்கடல் வண்ணமோ! டயனரன் முதலாய்
அடைய வுந்தன துருவினுள் ளடக்கியோ ராலின்
அடைய டைந்திடு நாரண னேபர மவன்றாள்
அடைய வேண்டுமிவ் வுடலமோ- நிலையிலா தழியும். 152
: I படிய ளந்தநா ளயனொடு பரமனும் . பிறரும்
முடியொ டுங்கழற் றெரிவுற தோக்குதன் முடியா
நெடிய தாந்திரு விக்ரம வடிவநேர்ந் துவனோ
அடிய ராமவர்க் கெளியவன் பிறர்தமக் கரியான். 153
பரவு மப்பெரும் பராபரன் பாடியின் வளர்நாள்
கரவி னூடுநெய் ‘பால்ததி பருகுதல் காணா
அரவ வல்குலி னாய்ச்சியர் வெகுண்டுவந் தடித்திட்
டுரலு டன்பிணித் இடவெவ்வா, றுறைந்தனன் என்னா; 154
ஆழ்வாரின் மோக பரவசம்
தேறு ளந்தனி னினைதொறும். நினைதொறும் தியங்கா
கூறு தற்கருஞ் சோகமுட் கொளப்பொதா மையினால்
வேறு மோருரை விளம்புறா மோகமே விளங்கி
ஆறு தஇிங்கள்தன் வாய்திற வாமலங் இருந்தான். ் 155
தாயார் பாசுரம்
். மீள வுந்தெளிந் தொருமூறை விளம்பியே தானோர்.
“வாள மைந்தகண் மடமங்கை யாகவும் வளர்முள்
தாள தாமரை மலர்மிசைச் சார்ந்துறை திருவை
ஆளு நாரணன் புருடனா கவுமுளத் தமைத்து? 156
கள்ள லம்புபைந் துளவவக் காகுத்த ரிடத்தில்.
புள்ளி னங்களைத் தூதுதான் விடுவது போலும்
உள்ள மைந்தவா தனத்திடத் துறுவது போலும்
தெள்ளு செந்தமிழ்க் கவிபல செய்திடு மமைதி. 157
நூற்றெண்மர் காட்சி வழங்கல்
ஒளிய ரங்கமே முதலநூற் .றெண்பதி யுறையும்
துளிம துக்கமழ் துளவணி மாலைமார் பினரும்
களிது லங்கவக் கவிகளைக் கேட்குதல் கருதிப்
புளியென் றோதுமத் தருவரு கனிற்பொருந் தினரால். 158
பனுவல் பாடுமின்
பின்ன ருங்களி துலங்கிப்பற் பலவிதம் பெறவே
மன்னு மாறன்முற் றுணர்ந்தவ னாமென மனதுள்
உன்னி நன்குணர்ந் துகந்துகந்- துருகுறப் புகழ்ந்து பன்னு செந்தமிழ்ப் பனுவல்கள் பாடுமின் என்றும்; 159
௪னையு மாகடல் sae pone மருந்தைமோ: கினியாய்
நனைகொள் கற்பக, நாடருக் களித்தரு ணாதன்
நினைவு றும்பொழு (தேநெடி தாம்பல வின்பந்
தனையு எளங்களி துளங்கிடத் தருகுவ னெனவும்; 160
கதிர வன்றனை யமரிடை த் துற்களைக் கணவன்
மதிம ருண்டுயிர். மாளவும் வானுறை புலவோர்
அதிசெ யம்பெரி தடையவு மறைத்தவா ியர்க்குத்
– துதிசெய் தேத்துமத்;தோத்ரமே முக்கிய மெனவும்; 161
சவையி னிற்றுரோ !பதியபி மானந்தாங் கெனவே
கவலை யுற்றழைத் ,திடவுடை யருள்கண்ண ஸனடியார்
அவய வங்களி லணுகிவீற் -நிருந்தவர் தம்பால்
எவையு மின்புற வனுபவித் இடுபவ னெளவும்; 162
(வேறு)
துவரிதழ்க் கருங்குழற் றூய மெய்த்தவச்
சவரியுற் நிடப்பதந் தந்த மாண்பினான்
எவரிடத் இினுங்கைமா றெதுவும் நோக்குறா
தவரிடத் தன்புவைத் களித்து ளானென்றும்; 163
மாத்துய ரங்கொளும் வார ணந்தனைக்
காத்தரு ஞம்செழுங் கமல நாபனைப்
பார்த்திடா தனை நிக ராகப் பாருளோர் தோத்திரிக் கின்றனர் துயருற் றென்னவும்; 164
சிந்தையுண் ணினைந்திடச் சக்கி ரத்தெதிர்
வந்தருள் புரிபவன் வஞ்ச முற்றெதிர் |
முந்திவந் தமர்புரி முட்டி கன்னொடும் ்
தந்தமா கரிபடச் சாடினோ ஸனென்றும்; 165
எருதுகைக் கரிபரி யெதிர்ப்பக் காய்ந்திடும்
அருமறை முடிவனை அனுப வித்திட
மருவியுற் றென்னொடும் வரத்த குந்துளோர்
இருநில மிசையெ வரிருக்கின் றாரென்றும்; 166
தென்புறப் பகைவர்மேல் தரி யேவினோன்
முன்படைந் தொழிவிலா முத்தர் தம்மொடும்
அன்புடன் கண்டனு பவிக்கன் றேனென்றும்; 167
்
வன்புறப் புகலிலா துலகில் வாழுயிர் [
‘ ச
….. திரைக்குலங் காத்திட நீள்வி ரல்கொடு
| வரைக்குடை. பிடித்துக்கன் மாரி மாற்றிய |
இரைக்கடல் வண்ணர்பாற் சேர்ந்தென் செய்கைகள் ட
உரைப்பரோ விவர்களென் றுரைத்த தாகவும்; 168°
பன்னருந் துயரினைப் பாங்கி மார்களும்
அன்னையர் களுமடைந் தம்பு யத்துவாழ்
“பொன்னையா ஸூடைப்புரு .டோத்த மன்னொடுஞ் |
சொன்னதா” கவுங்கவி சொல்லுங் காலையில்; 169:
பெருமாள் பரமபதக் கோலங் காட்டினான்
அந்தபா சுரங்களுக் கன்புற் றாங்கவன்
சிந்தையுட் டோன்றியே சிறப்ப மைந்தவை
குந்தநல் லிருப்பதாங் கோலங் காட்டினான்
பைந்தலை யரவணைப் பள்ளி நாரணன். 170
தூண்டருஞ் சுடர்விளக் கனைய சோதியைக்
காண்டலு முளந்தனிற் களிப்புற் றோங்கிட
மீண்டுபா சுரங்களை விளம்பி யேத்தினான்
யீண்டிது வேயழ காகு மென்றனன். 171
கடுவமர் களனொடுங் கமலத் தோனொடும்
நெடுமுகன் மேனியோய் நிகரி லாதறின்
வடிவிலுன் றிருவடி. வலிந்து ளேனினி
விடுகில னென்னவும் விளம்பு மெல்லையில்; 172°
இரு முதுகுரவர்கள் பரமபதம் பெறல்
சிரீதரன் பணிவிடை செய்து வைகுவோர்
காரியார் நங்கையார் கழறுஞ் சுற்றத்தவ்
ஊரரினோர் தமக்குமே லுலகம் நல்கினான் வேரியந் துளவணி விமல மாதவன், : 173
அன்னதை யுணர்ந்தமா றனுமுள் ளன்பொடும்
பின்னரு மோதுவான்: பிரமன் றாதையார்
என்னையொப் பாகவென் சுற்றத் தார்களும்
மன்னிட வுயர்பதம் வழங்கி னாரென்றும்; 174
இத்திற முயர்பத முமெமக்கு மெய்திடற்
குத்திடு முலகுளீ ௬லகம் யாவையும்
வைத்திடு மகடுள மாத வன்மலர்
ஒத்திடு மடித்தொழி லுஞற்று மென்னவும்:; 175
வேதமுற் றுரைதவம் விழைந்தி ழைத்திடு மாதவ ர௬ுளந்தொறும் வாழு மாதவ
நாதனை யளித்திடு நளின மாமலர்ப்
பாதனைத் துதஇிசெயும் பதவிக் கென்னவும்; 176 :
குரைகடல் வண்ணர்தங் கோல மெய்துதா
——வாழ்வு வேண்டினோர்
தரைபுகழ் சோலைகள் ளழகர் தம்மிடம்
விரைவுட னேவரு வீர்க ளென்னவும்; 177
மீண்டும் சேவை சாதித்தல்
இவ்விதங் களிற்கவி யிசைக்குங் காலையில்
அவ்விய மவித்தநெஞ் சவனுக் கன்பொடும்
செவ்விய திருவுருச் சேவை காட்டினான் ஒவ்வியா லடைக்கட லுறங்கு நாரணன். 178°
திவ்விய மேனி வேண்டினார்
அவ்வுரு வனுபவித் ததற்பின் பாசுரம்
பவ்வனே ரியவதை யனுப வித்திடற்
இவ்வுரு வமைந்ததா காதெ னக்கினித்
இவ்விய வுருவருள் செய்யு மென்னவும்; 179
அந்தநல் லுருவின்வேங் கடவர்க் காட்செய்யுஞ்
சிந்தைகொண் டலரின்மேல் மங்கை தேவனே
இந்தபூ வுலகுட னேழி ரண்டுடன் எந்தபே ருலகமும் யாரு மென்றனன். 180
கனிவுறு முளந்தனிற் கருதி யன்புடன்
தனுவளைத் திலங்கையர் தானை செற்றவன்
பனிமல ரடியினைப் பணிந்து போற்றிசெய்
– தனுபவி யார்தமை யிகழ்ந்த தாகவும்; 181
குண்டுவா எளிருஞ்சிலை சங்கு சக்கரம்
கொண்டுளான் நிருவுருக் கோலச் சேவையைக்
கண்டுள மகழ்ந்திரு கண்க ஸஎளிப்புடன்
தொண்டுநு மவர்புகழ் சொன் னதாகவும்; 182
அந்தரி யாமியா முருவ மாவதைச்
சிந்தைநேர்ந் தறிகுத லரிது சீதரன் வந்தவர்ச் சாவதா ரமதை வன்மையோ
டுந்தமுட் பற்றலே யுற்றவீ டென்றும்; 183
பாகவதர் சிறப்பைப் பேசினார்
பொன்னையா ரூடையவப் புனிதன் பார்மிசை
மன்னிய திருவர்ச்சா வதார மாவது
தன்னைநெஞ் சதுகொடு தரித்து ளோர்களே
என்னையா: ரூடையவ ரென்ப தாகவும்; 184
வடிவது குறளின்மூ வடிமண் வாங்கியே
– படியெலாம் கொண்டடிப் படுத்தி மாவலி
முடிமிசை யடிகவித் துளமு குந்தனார்
அடியவர்க் கடியனா னாகு மென்ளவும்; 186
மக்களைப் பாடாதீர்
பாங்குறு மனிதரைப் புகழ்ந்து பாடியே யேங்கியுற் நிழித்திடா இனிதி வோடுமுந் இங்கடப் புலவர்காள் தேவ. தேவனாம்
வேங்கட வனைக்கவி விளம்புவீ ‘ ரென்றும்; 186
காற்றருண் மதலையாற் கண்ணி லானருள்
‘நூற்றுவ ராவியை நுதிகொள் சூலவெங்
.கூற்றுணா வளித்தகோ விந்த னல்லது வேற்றொரு வரைக்கவி விளம்பிடே னென்றும்; 187
செல்வமே நிலையிலை தெளிவுற் றொல்லையில்
கல்வடி. வகன்றக லிகைக வின்பெறும்
நல்வண மெய்தமுன் னடந்த நாரணன் ்
பல்வளம் பொருந்துதாள் பற்றுவீ ரென்றும்; 188
அன்றிரா வணன்வலி யழித்தொ மித்துப்போர்க்
இன்றுபோய் நாளைவா வென்றி யம்பிய
வென் றிவெஞ் சலையனை மேவி யன்பணி
மன்றலர் மாலையை வழங்கு. கென்றனன். … 189
உவந்தவ னிவ்வண மோதுங் காலையில்
கவந்தனைக் காய்ந்தகா குத்தன் றானணி
நிவந்தபைந் துளவொடு நிரம்ப வைத்திடும்
சிவந்தபூ மாலையைச் சேர்ந்த ளித்தரோ,. 190
பெருமாள் சேவை —
அந்தமாப் புகழ்ச்சட கோப னாயினோன்
சிந்தைகன் னையும்புகல் செய்யு டன்னையும்
சந்தனம் பணியு டையாகத் தாங்கியே
வந்தவன் நிருமுனம் மருவி நின்றனன். 191
நின்றவச் செய்கையை நெடிது நோக்குறா
ஒன்றுமவ் வாறவ னுவந்து பாடலும்
கன்றினால் விளவினை யெறிந்த கார்வணன்
அன்றது கேட்டுவந் தகன்று போயினான். 192
Beroybd auivien Sra wpa
வாள்பொரு கண்ணினார் வாச கந்தனை
தாளினாற் சகடிற வுதைத்துச் சாடினோன்
கேள்வியுற் நிடும்வகை கிளர்த்தும் வாறதாய்; 193
பாட்டிவன் பாடலும் பைய ராவின்மேல்
ஆட்டினோ -னாங்கவ ரறைந்த வாசகம்
கேட்டுள மஇூழ்ந்துதன் கிருபை கிட்டியே
காட்டலு மிருகணுங் களிப்புக் கொண்டரோ; .194
இத்தக வுடையனா மென்க ணான்றனக்
கத்தனைப் பாடுவேற் கரிய துண்டுகொல்
சித்தமுட் குறையெனோ வென்று செய்யபா
ஒத்திடத் தனைவியந் துரைக்கு மெல்லையில்; 195
ஆழ்வாரின் பிரிவாற்றாமை
பின்னரு மாயவன் .பெயர்ந்து போகலும்
அன்னதற் கரங்கிமா தரின முங்கியே
பன்னரும் விரகவா ழியிற்ப டிந்திடக்
கன்னியா்ச் செயலினைக் காண்ட லோடுமே; 196
அனையதோய் இரவே வலிதி னாட்கொள
நினையவு மதுதனை நீக்கித் துன்புடன்
soo pat வேறிலாத் தன்மை யுள்ளவன்
எனையுறப் பிடித்தன னென்ப தாகவும்; 197
சானகி யெனுந்திரு தன்னை நாடியே
கானினும் வரையினுங் கடுகச் சென்றுள
மீனமாக் கடல்வணன் வேண்டி லானெனில் .
நானு ம்வேண் டிலனென நவில்வ தாகவும்; 198
உலகுளோர் கொடுமையை யுள்ளத் துன்னியிந்
நிலமிசை யிருந்திடேன் நீல மேனியாய்
சலசலோ சனமுளாய் தயர தன்றவக்
குலமணி’ யேயெனைக் கூவிக் கொள்ளென்றும்; 199
இருக்குரு கூரெனும் பதியிற் சேர்ந்துவாழ்ந் இருக்குமால் பரம்பிற தேவர் யாவரும்
தருக்கிலா வபரமா மெனவுந் தன்னுளத்
துருக்கமுற் றுறுங்கவி யோது மெல்லையில்; 200
சமயவாதியர் வருகை
(வேறு)
இருமா நிலத்தில் உறுபொருள்க
“ளெவையும் பெருவாய் மலர்ந்துண்ட
பெருமான் ஒப்பில் பரமென்றும்
அபரம் பிறதே வர்களென்றும்
அருமா மறைகள் விரித்துரைக்கும்
அவ்வா றெடுத்துச் ச௪டகோபன்
இருவாய் மொழியாம் பிரபந்த மதனுள் வகுத்துச் செப்புதலும்; 201
சைவ ரலகா யதர்பவுத்தர்
சமணர் முதலாஞ் சமயர்கள்நீ
செய்வ தாமிவ் வருந்தமிழின்
இருவாய் மொழியில் வேண்டுபொருள்
கைவந் தணுகா மலகமெனக்
காட்டி யருள்செய் இடுமெமது
தெய்வங் கள்கமை யபரமமெனச் ;
செப்ப லெவ்வா றெதுகொண்டே? 202
வேதங் .களினு மிவ்வாறாய்
விளம்பக் காணோம்; . நீர்தாமே
ஓது கன்ற வகையோவென்
நுரைப்ப; அதற்கு நகைத்தருளிப் பேதித் துரைத்த திலைவேகம்;
பேசு முறையே யுரைத்தேனென்
றாதி பரனாம் மகஇழ்மாற
.னருளிச் செய்தும்; அவரறைவார்; 203
அருமா மறையின் முறைவழுவா
குறைந்தே னென்றாய்! அம்மறைகள் –
ஒருநான் கனையு முழுதுணர்ந்தே யோதி னவரு முரைத்ததில்லை;
குருபோ தனைசெய் இடவுணராய்;
குறிக்குந். தெய்வ வருளதனால்
வருமோ வென்னோ? வந்திருந்தால்
வகுப்பா யதையிவ் வாறெனவே; , 204
என்ன வவர்க ஸியம்புதல்கேட்
டிவ்வா றுங்கட் கம்மறையை
வன்ன பேத மாதலினால்
வகுத்திட் டுணர்த்த லாகாவே;
அன்ன மறையு ளெப்பொருணீ
ரறிய லாகா மெய்ப் பொருள்கள்
இன்ன விதமென் றெடுத்துரைப்பி
னியம்பு வேனென் நியம்பினனே. 205
அந்த மொழிகேட் டவர்களெலா
மதனுள் தமக்கு வேண்டுவன .:
எந்த வெந்தச் சங்கிதைக
ளெவ்வெவ் விதமாய் வினவினதற்
இந்த விதமா மதன்பொருளென்
நெடுத்துப் பொருந்த விசைத்திடலும் –
குந்தம் முளத்தில் பரமாவோன் ்
தனிநா ரணனென் றவர்தெளிந்தே; 206
ஐய மிலதா மிப்பொருள்தேர்ந்
தறியா மையினால் அடியேங்கள்
வெய்ய மொழிகள் பல.பலவாய்
…. விளம்பிற் றெல்லாம் பொறுத்தருள் நீ
செய்ய வேண்டு மெனவவர்கள் .
இருமா லுருவாய்த் திகழ்மாறன்
துய்ய How worry udev
தொழுதாங் ‘கெதிர்தின் நிவைசொல்வார். 207
வைய மதன்மேற் பரநூல்கள்
– வகுத்துக் கூறுங் கடவுளெலாம்
பொய்ய தெனவும் மெய்ஞ்ஞானம்
பொருந்திப் பலவா முயிரெனவும்
உய்யும் வகைநீ செயுங்கவிக்குள்
ளுரைத்த பொருளாம். நாரணனே
மெய்ய தாமப் பரமெனவும்
விளங்க வுணர்ந்தோ மாதவினால்; ட் 208
சமயவாதியர் திருந்தல்’:
எமையிங் கடிமை கொளவேண்டு .
மெனவாங் கவர்க ளதற்குமுனம்
அமையுங் கோலந்’ தனைமாற்றி
யாழித் இருநா ரணனடியார்
குமையொப் பாகும் திருவேடந்
்.. தாங்கி நிகழ்ந்தோர்.. துமைநோக்கு
உமையெம் பெருமான் களிப்பாக
உகந்தாட் கொள்வா னெனவுரைத்தான். : 209
பெருமாள் காட்சி
மாற னவர்கள் உரைத்ததிரு.
வாக்கெட் கடையும் வழுவாதவ்
வாறுற் றுரைத்தான்; அருள்வேண்ட
வயினத் தருவா கனமதன்.மேல் நாறுந் துளவப் படலையணி
நாரா யணன்வந் தெய்தினனால்
நீறு ‘புனையுஞ், சவன்முதலோர்
நெருங்கிப் பணிந்து துதிசெயவே. 210
விண்ணிற் பொலியுங் கருடன்மிசை
. விளங்குந் திருநா ரணனுருவம்
மண்ணுற் றிருந்த பரசமயம்
மருவித் துறந்த அவர்கள்தம் “ கண்ணுற் றிடலும் மகிழ்வடைந்து
கருத்துள் ளூருகிக் கரையவெதிர்
நண்ணிப் பணிந்து துதித்தேத்தி நணுகா ஸனந்தக் கடல்படிந்தார். 211
மங்களாசாசனம்
உகமோர் கோடி தவஞ்செயினு
மொருவர்க் கெனுந்தோன் றாயடியேன்
புகலு மளவீ லடைந்துவர்கள்
புகழ வெகிர்வந் தணுகினையால்
மிகவுஞ் சிறந்த பலனருள
வேண்டு மெனவே பராங்குசனும்
அகமுண் மடஒழ்ந்தே இருமங்க
ளாச னத்தை யருள்செய்தான். 212
ஏய வருக்கிங் கிவ்வாறா
யெழில்சேர் காட்சி யளித்ததற்பின்
தூய பரம பதமதனைக்
தொடர்ந்தாங் கணைந்து வீற்றிருந்தான் ஆயர் பாடி தனின்மதுரை , Line
யதைவிட் டடைந்து முடையடு குப்த
தோயுந் தயிர்பால் நவநீதம் 213
புயலார் மேனித் இருநெடுமால்
பூங்கண் மலரா திருந்ததனால்
கயலார் கருங்கண் மடந்தையர்போற்
காரி மாறன் தானுமிக
மயலாய் மெழுகிற் கரைந்துருகி
வாடித் தருமே னியுந்தளர்ந்திட் டியலா ௬ளத்திற் றிருமடலூர்ந் இருந்தா னிருந்த வெல்லையின்வாய்; 214
காம ரிளங்கன் நினையடையுங்
கறவை போலக் குறுங்குடிவாழ்
தாமஞ் சிறந்த வழகியசீர்
நம்பி யுளத்தின் நயப்புறவே
சோமன் றவழு மதிள்குருகூர்
துலங்கும் புளிக் முறைவகுளத்
தாமம் புனைந்த சடகோபன்
றனக்குக் காட்சி யளித்திடலும்; ் 215
யானே அனைத்தும் செய்தேன்
சீரா ரிருகண் களிப்பெய்தத்
தெரிசித் துளத்தின் மட௫ழ்வெய்தி
நீரார் கடல்சூழ் புவியனைத்தும் நிறைபல் லுயிர்க்குள் ளுயிராகி வேராய் மூல காரணனாய்-
விளங்கி மருவுந் திருவுருவ நாரா யணனார் புரிந்ததெலாம்
நானே புரிந்த தாமென்றும்;. – .. 216
கான மதனில் நட்பமையுங்
கதிரோன் புதல்வன் கலக்கமற
வானந் தொடரும் ஏழமுமரா
மரமன் றுருவ வாளிதொட்டோய்!
மோனம் பொருந்தும் அடியவர்சேர்.
மோட்ச வீட்டிற் பேரின்பம்
ஞான முதலா யினவெயையும்
நண்ண வெனக்கு நல்கெளவும்; 217
சீறு மரவா பரணனெடுஞ்
இலையை முறித்துச் சான$க்கு
நாறு மலர்மா லையைப்புனைந்த
நளினக் கரத்தோய்! அயடியேற்கு
வீறும் பதவி யளித்திடினும்
அளியா விடினும் உனையல்லால்
வேறு மொருவ ராதரவாய்
விரும்பி விளம்பற் இலையெனவும்; 218
மறையோர் செயுமா மகப்புகையும்
மடவார் நனைகார்க் குழற்புலர்த்தும்
நறையா ரகிலின் கொழும்புகையும் ்
நண்ணி யெழலும் புயலெனவே
Keo mun மயில்கள் நடம்பயிலுஞ்
சீரார் வல்லை வாழுறுமெம்
மிறையோ னடைந்து காட்சியளித்
திடலும் நீயே கதியென்றும்; 219
காண்ட வனத்தைப் படிபொருந்துங்
கனலி யருந்த’ வளித்தருளும் ‘பாண்ட’ வர்க்குண்’ ணடுப்பிறந்த
பார்த்தன் மணியா ழியினிரதம். ‘
பூண்ட கவனத் தவளநிறப்
புரவி நடத்தும் புயல்வண்ணா/
ஈண்டிங் கடியேன் றன்னையுவந்:
இரட்சித் தருளு வாயெனவும்; 220
அறுகால் பொம்மென் றிசையுடன்சார்ந்
கணுகி யுறுந்தேன் களித்துண்ணும்
நறவார் துளவ வலங்கறிரு :
வண்ண நாய கன்னிடத்தில்
உறுகா .தலினை விரைவினடைந்
துரைமி: னெனவாங் குறுதூதாய்
பறவை யினங்க டனக்குரைத்துப் பரிவின் விடுத்த பரிசாயும்; 221
ஊடலும் கூடலும்
(வேறு)
நாடியம் மாறன தருகு நண்ணிட
வாடிய மனம்தெளி வாய்ம ருங்கிருந்
தூடியுந் தேற்றிட வுளங்க லங்கியும் கூடியு மிருந்துள கொள்கை செப்பியும்; 222
அக்தர்யாமித்துவம்
மூந்திய விண்ணகர் மாயன் மோகமாய்க்
கந்தமா மலரிடைக் கலந்த வாறுபோல்
அந்தரி யாமியா யணுட வைகுதல்
சிந்தியா ஞானமே இறக்கச் செப்பியும்; 223
குறைவிலேன்
கருமுகி லெனவொளிர் கண்ண ஸனாகியே
மருவுகோ வியரொடு மகிழ்ந்து லீலைசெய்
இருவிளை யாடல்கள் செப்பு மென்றனக்
கொருகுறை யும்படர்ந் துற்றிடா தென்றும்; 284
அலைபுனற் றஐடவரா லருகற் றெங்கினின்
குலைபழ முதிர்தரக் குதித்த றைந்திடும் துலைவிலா மங்கலந் துன்னு சார்ங்கவெஞ் சிலைவல மாறனைச். சேர்ந்த தாகவும்; 225
வான்பொழி கன்மழை வரையின் மாற்றியே
ஆன்புரந் தளித்தவவ் வாழி யானொடும்
தான்படுந் துயரங்கள் தனைத்தன் தாயர்3பாய்
தேன்பொழி மொழியிற்செப் பியது போலவும்; 226
உண்பது முதலிய வுரைக்கும் யாவையும்
தண்படு புனற்றடஞ் சாக ரம்மென
விண்படிந் தருந்துகோ ஸூரின் மேவிவாழ்
பண்படு மளிவனப் படலை மாலென்றும்; 227
அந்தசெங் சுதிருமி மாழி -மாலுக்கென்
சிந்தனை பகர்ந்துடச் செல்லும் புள்ளுகட்
கந்தமில் லாதமூன் றடுக்கு லோகமும்
தந்தன னாமெனச் சாற்றிற் றாகவும்; 228
இருவிசும் புறைபவ ரிறைஞ்சி யேத்திட
மருவுவேங் கடமெனும் வரையின் மீதுவாழ்
கருமுகில் வண்ணச்செங் கமலக் கண்ணனைத்
திருமகள் முதன்மையிற் சேவித்தே னென்றும்; 229
இன்னவா முறைமையி ஸிசைபெ றுங்கவி
பன்னுமா றனுமது வரையிற் பண்பொடுந்
குன்னையம் மாயவன் தனது யர்ப்பதம்மன்னிடும் படிவர வழைத்தி டாமையால்; 230
மயலைப் போக்க வேண்டல்
அம்புவி யளந்ததாட் கடிமை யாமென
நம்பினோர் தமக்குவீ டளிக்கும் நாரணா
வெம்பியிவ் வுடலினை வெதுப்பு கின்றதாம்.
ஐம்புலன் வயத்தெனை பளித்தியோ வென்றும்; 231
மயல்கொடிவ் வாறதாய் வ்ருத்து மாதினைக்
கயல்விழி யன்னையர் கடிது கொண்டுபோய்
புயல்வணம் மால்முனம் பொருந்தி யிட்டவள்
செயல்களை யவரொடுஞ் செப்பு கின்றதும்; 232
தாட்டிய தறியுளே நார சிம்மமாய்க்
காட்டிய திருவுருக் கமல நாபியான்
வேட்டைசென் நுறுந்திருப் பேரை மேயவன்
தாட்டுணை. யடைந்திடுஞ் சார்ப தாகவும்; 233
சித்தமுள் ஞருகிடச் செய்ய கண்முகம்
கைத்தலம் உந்திதாள் கமல மாமலர்
ஒத்திடுங் கருமுகி லுருவ நாரணன்
பத்தவ தாரமும் பணிதல் வேண்டியும்; .284
உடுத்திடு முடைக்கட லுடைய பார்மிசை
எடுத்தவவ் வுருவுக டோறு மெம்பிராற்
கடுத்துள வரும்பகை யகலு மாறதாய்
சுடுத்தொழி கருமமுங் காண வேண்டியும்; 235
இச்சைகொண்் டுரைப்பதை யுள த்தி லெண்ணியே
பச்சைமா மலையெனும் படிவ வச்சுதன்
மச்சமே முதலுரு வமைந்து வாய்த்துள
அச்செயல் யாவையு மறியத் தோன்றலும்; 236
வெந்திற லவுணர்கள் முதல வெம்பகை
வத்தது மவைகளை மாற்றக் கொண்டுள
அந்தமில் கோலமு மமைந்த யாவையும்
சிந்தைகொண் டுணர்ந்திடுஞ் செய்கை தன்னையும்; 237
சீருறு காரணச் செம்ம லாதியில்
ஈருரு வங்களி னியந்த இயாவுமோர்
ஒருரு வங்களா யுற்ற செய்திகள்
பாருளோ ரணர்வகைப் பரிவிற் பாடியும்; 238
பரிந்துள த். தழைத்தபாண் டவர்தம் பத்தினிக்
குரிந்தவத் இரமுவந் துதவு மாலுரு தெரிந்திடா தகன்றிடச் சந்தை வாடியே
பிரிந்துள துயர்களைப்: பின்பு சொல்லியும்; 239
உருவெளிக் காட்சி உரைத்தது
அருவென வுருவென் அதல மாமுதல் a
இருநிலம் விசும்புபல் லிடத்து முற்றுமாய்ச் ்
சுருபமா னவவெலாந் துலங்கு மாறதாய்
உருவெளி கண்டதை யுரைத்த தாகவும்; 240
கூவிக்கொள்ளாக் காரணம் யாதோ?
அன்னமாய் மறையயற் கறைந்த மாதவா
நின்னுயர் பதந்தனை நேர்ந்து வைகுதற் இன்னமு மடியனை யழைத்தி டாததிங்
கென்னகா ரணமென விசைக்குங் காலையில்; 241
கவியிசைப்பதற்கே
மாதவ னவனேதிர் வந்து மன்னியே
பூதலந் தனிலுனைப் பொருந்த வைத்துள
தேதுகா ரணமெனி லிசைபெ றுங்கவி
ஓதுதற் காமென வுரைத்துப் போயினான். 242
சொன்னசொல் லிருசெவி துன்னீ யெய்தலும்
இன்னணம் வாழுப கார மேற்கிலேன்
அன்னமா யவன்றனக் கரிய மாமறை
என்னகை மாறுள திழைத்த தென்கையும்; 243
அத்தகை யியற்றுமா றனைவி வப்பதி
ஒத்துறை நாரண ஸனொளிருந் தாள்களில்
சித்தமுற் றடிமையான் செய்தி டுந்தினம்
எத்தின மோவறிந் திடுகிலே னென்றும்; 244
மாசிலா முழுமதி யனைய வாண்முகக்
கோசலை திருவயி றுஇத்த கோவலன் .
ஓளசசயுற் றுளகட லுலக வாழ்க்கையின்
ஆசைவிட் டவர்வய மாவ னென்ளவும்; 245
முருகவிழ் துளவணி முகுந்த னம்புயத் திருவடி யிணைகளைத் தமது சிந்தையுள் மருவவைத் திடுமவர் வைகுந் தத்தினுக்
கருகர்க ளாகவே யமைவ ரென்னவும்; 246
அத்தகைய மாயவ ஸனமருங் சீர்வைகுந்
குத்தினுக் கருகர்க ளாகச் சார்ந்திடும்
முத்தரைத் தெரிசியா முகம லர்ச்சியாய்
சித்தமுள் ம௫ழ்ந்திடுஞ் செய்கை யாகவும்; 247
முத்தர்கள் தம்மொடு முளரி வாழயற்
கத்தனாம் மாதவ னாங்க மைந்தொரு
மித்துறை – பெருமித விதங்க .ணோக்கியே
புத்தமு தருந்தலிற் களிபொ ருந்தியே; ட 248
ர்மடையாயினான்
க௱ர்நிற வவுணர்தங் குலத்தைக் காய்ந்திடுங்
கூர்வளர் இஇரிகை மாயக் கூத்தனார்
வார்மழை: யுறும்புனல் வரத்தன் னுள்ளகால்–யாமென நேய மாயினான். 249
எம்பெருமான் ஆழ்வார் உள்ளக் கோவிலில் வாழ்தல்
நேயமுட் கொண்டவ Glow ou ழாமலே
தூயநல் லுள்வழி யாகத் துன்னியுற்
றாயவ ஸுயிர்ப்புலத் தணுகி வைகினான்
மாயமான் பின்தொடர் மாய. னென்பவே. 250
கனைக்குமா இரைக்கருங் கடலின் வண்ணமால்
நினைக்குழமுன் றனதுயி ரெனநி ரப்பிய
மனைக்கலந் துறைந்தமை மனங்கொண். டிவ்வணம்
எனைப்பிரி யாதுநீ யிருந்து டென்னவும்; . 251
முலைமிசைப் பிறைறிகர் முத்தின் றாழ்வடக்
கலையணி மாதரிற் கரிய மாணிக்க
மலையவ னேயென மற்ற வன்புகழ்
நிலைமையைப் பின்னரும் நேர்ந்து சொல்லியும்; 252
அடியார்க்கடியேன்
படியினைச் சுருட்டுமோர் பாயெ னக்கொளும்
கொடியனை ஏனமாய்க் கொலைபு ரிந்திடும்
நெடியமால் திருவடி நேயங் கொண்டுள
அடியவர்க் சடியவர்க் கடியன் யானென்றும்; 253
மல்லலம் புவியுளீர் வழங்கி டும்கைமா
றில்லது புரப்பவ ரிலங்கு மாலடி
அல்லது வேறிலை யதனை. நீரறிந்
தொல்லையி லவன்பதத் துறுமி னென்னவும்; . 254
திருப்பதிகள் மங்களாசாசனம்-
பொருப்பென மாளிகை பொருந்து செம்மணி
அருக்கனென் றம்புய முகைய ‘விழ்ந்திடும்
இருப்புளிங் குடிகிடந் இடுமத் தேவனை
விருப்புடன் கவிபல விளங்கப் பாடியும்; 255
குவித்திரு கண்ணிற் கண்டுளோர்
பரகஇ யணுகுறும் படிய எளித்தருள்
வரகுண மங்கைவீற் றிருந்த மால்புகழ்
விரகுடன் கவிபல விரித்துப் பாடியும்; ‘ 256
வைகுந்த மல்குல்க டெரிய வாவிகோர்
வைகுந்த . மனையகண் மாத ரார்புட
வைகுந்த மதன்மிசை மருவ வைத்இடும்
வைகுந்த நின்றமால் வளங்கள் பாடியும்; 257
மீண்டுமப் புளிங்குடி. விளங்கப் பள்ளிகொள்
தாண்டுறு திரைக்கருஞ் சலதி வண்ணனை
ஈண்டுணர்ந் தெனக்கொரு கைங்கிரி யஞ்சொல
வேண்டுமென் றுளந்தனில் விரும்பிக் கூறலும்; 258
கேட்டுள wR yb Daur Gris இளர்த்து மின்னிசைப் ட
பாட்டினா லவன்றனைப் படலை மாதவன்
ஈட்டுறு முளந்தெளிந் தெழுந்து செய்வினை
யாட்டுறு கயிங்கிரிய மதனைச். செப்பினான். 259
மாயவா வருக!
அம்மொழி யிருசெவி யணுகத் தன்னுளம்
விம்முறு முவகையின் மீண்டு மாயவா
, கைம்மலர் மிசைகதி ராழி சங்குடன்
வம்மென வழைத்தனன் மகிழ மாலையான். ் 260
வந்தனன் பிரான்
அழைத்தவம் முறைகதி ராழி சங்குடன்
துழைத்தவன் பொடுமவன் முன்பு சார்ந்தனன்
பிழைத்தன வுளங்கொளா தடியர் பேணிமூன்பு ்
இழைத்தத$ வினையெலா மிரிக்கும் நாரணன். 261
மறைய வருந்துதல்
(வேறு)
சார்ந்த கேசவன் றனையறிந் தாவலார்ந் தொழியச்
சேர்ந்த வன்றிரு வடிவினைச் ஈறந்தபே ரன்பு
கூர்ந்த நெஞ்சொடு மனுபவித் தடலுமக் கோலம்
தீர்ந்து — இடுதலுந் தனதுளந் இகைத்தே; 262
பறவை கூவுபே சொலியொடு: பாவைய ரொலிகா துறலு மஞ்சிநெஞ் சழிந்துபற் பலவகை யுரைத்தும் நறவ லங்கல்நா ரணனினி நணுகிலாங் கவர்க்குத்
இிறமு டன்பல கைங்கிரியங் செய்கருத் இருந்தான். 263 |
இறைவன் அடியன் ஆதல்
இருக்கு மெல்லையவ் வடியருக் கெளியனா மவனும்
பொருக்கெ னாவடைந் திவர்க்குப்பூங் கேசமே முதலாய்
இருக்க ழன்மல ரளவதாய்ச் செயுங்கயிங் இரியம்
உருக்க மோடிழைத் இடுதலும் அதையுள முணர்ந்தே. 264
நம்மிருவருக்கும் பேதமில்லை
ஈதெ னோவென மாறனாங் கியம்பலும் எழிற்பூ
மாது கேள்வனு மகிழ்வொடு நம்மிரு வருக்கும்
பேத மில்லையொன் றாயிடும் பேரின்ப மெனவே
ஓத லோடுமவ் வாசகங் கேட்டுப்பின் புரைப்பான். 265
தடியெ யிற்றிரா வணன்றனை தனதுவால் கொண்டே
முடியு றப்பிணித் தெழுந்துசென் றிடுமுரண் வாலி
நெடிய மார்பக முருவிடக் கணைவிடு நெடுமால்
அடிய ருக்கடி யவனென அகமகிழ்ந் துரைத்தும்; 266
தூதனுப்புதல்
கார்ப்பெ ரங்கடற் பிரமகற் பந்தனிற் கலிசெய்
ஆர்ப்புங் கோடையின் முகின்முழக் கதிர்ச்சியு மவிய
வார்ப்பெ ரும்முழ வதிருமூ மிக்கள மால்பாற்
பார்ப்பி னங்களைத் தாதனுப் பியதெனப் பகர்ந்தும்; 267
குருதி வேல்வை ரிழந்தநாட் டினைப்பெருங் கொள்கை
௧ர.இ மாநக ரடைந்துகாந் தாரிகா தலநீ
தருதி யென்றுரை தூதனைத் தாதிபோய் சார்ந்து
வருதி யென்றழைத் துறுதன்முன் மனம்பொறா மையினால்.–268
திருநாவாய் அணைய விரும்பினார்
மன்னர் மூவெழு குலத்தைவேர் களைந்தபோர் மழுவோன்
கன்னி ருஞ்சிலை வாங்கியெய் கணை தனக் கன்னோன்
முன்ன ருந்தவந் தனையிலக் கருளிய முகுந்தன்
துன்னி வாழுநா வாயினைத் தொடர்ந்திட நினைத்தும்; 269
மெய் தளர்ந்தார்
ஆங்கு மெய்துதற் கமைந்திடா தன்றிலின் தொனியும்
மாங்கு யின்முழங் கொலியும்யாழ் வழங்கிடு மொலியும்
தேங்க மழ்ந்தபூந் தென்றலும் வருந்திடத் Hoss Oe டேங்கி மெய்தளர்ந் இதயமுங் கலங்கியே யிருந்தும்; : 270.
வணங்குமின்
அந்த ரத்தவ ரலைகடல் கடைந்தநா எழுந்தும்
மந்த ரத்தினைக் கமடமாய் தாங்கிய மாலைக்
கந்த ரத்தமர் கடுவ?னா டயன்கட வுளர்கள்:
வந்தி செய்கண புரம்சென்று வணங்குமி னெளவும்; 271
மதத்த வாரணம் அழைத்திட வந்திடங் கரினைக்
கதத்த ழித்தமோ கூரில்வாழ் கண்ணனே பரம
பதத்தி னுக்கருந் துணையென வருகுவன் பாரீர்
இதத்து டன்நலத் திருவடி வணங்குமி னெளவும்; 272
குரும ணிச்செழுங் கோயின்மேற் குளிர்ந்துகண் ணுறங்கும்
தருவ னந்தமா புரமெனச் சறந்தமா நகரே
பொருவில் சீர்ப்பர மப்பத மாகுமம் புவியீர்
மருவி யாங்குவாழ் மால்பதம் வணங்குமி னெளவும்; 273
அவன் அடியவர்க்கு எளியவன்
மீண்டு மாயர்தம் பாடியின் மதுரைவிட் டணுகி
வேண்டு றும்விளை யாட்டெலாம் விரும்பிச்செய் விதங்கள்
தூண்டு மன்பொடு :சொல்லியு மாங்கவன் தொண்டு
பூண்ட அன்பருக் கெளியவ னாமெனப் புகன்றும்; 274
பின்ன ருங்கவி புகலுவான் கண்ணபி ரானே
பன்னு சீர்ப்பரம் பொருளதா மாதலிற் பாரீர்
துன்னு மன்பொடு தொடர்ந்துசென் றெதிர்தொழு தேத்தி
அன்ன வன்திருப் பதமல ரடைகுமி னெனவும்; 275
மேனியுடன் பரமபதம் வருக
அன்ன காலைவாட் டாறுடை யச்சுதப் பெருமான்
குன்னை யன்பொடு பாடலும் ம௫ழ்ந்தவன் றனைத்தான்
பன்னு சீர்ப்பர மப்பத வீட்டின்மெய் யுடனே
மன்னு மாறுகொண் டேகுவான் மனத்திடை நினைந்தான். 276
ஆழ்வார் மறுப்பு
அச்சு தன்துரு வுளந்தனை யறிந்துநம் மாழ்வார்
பச்சை மாமுகில் மேனியோய் பல்புமுக் கூடாம்
இச்ச ரீரம-தனைக்கொடு போவதற் கஇிதையத் டட
துச்ச ரித்திட லொழித்திட வேண்டுமென் நுரைத்தான். 277
எம்பிரான் வேட்கை
எனக்கு கப்பெனி லென்னிடை யிருந்துவந் துதித்த
உனக்கு கப்புறா தெனாதுட லுடன்கொடு போவேன்
மனக்கொள் நீமறுத் தஇடலென மனமகிழ்ந் துரைத்தான்
தனக்குத் தானலா தொருவரு நிகரில்மா தவனே. 278
மாயவன் மடிபிடித்திழுத்தான்
ஏது ரைப்பினு மினியவ னணுகுற வியையிக்
கோது றும்பல புழுமல்கு கூடுகொண் டவணி
போத வீரெழு புவனமோ டகிலமும் பூத்த
மாது கேள்வனே தகாதென மடிபிடித் கிழமுத்தான். 279
அர்ச்சராதி மார்க்கம்
இழுத்தி! டும்பராங் குசன்தனக் இதயமுட் கனிந்து
பமூத்த வன்பொடர்ச் சராதிமார்க் கப்பரி சறிவித்
துழுத்து கைமடி. யதுதனை விடுவித்துக் கொண்டான்
வழுத்து வார்தமக் குயர்பத மருளுமா தவனே, 280
காட்டு மர்ச்சரா மார்க்கமே கடிதுசென் றாழ்வார்
மீட்டு மானிட வுருவமாய் மிகுமலப் புழுசோர்
கூட்டு வைகின மாதலாற் கூடியே .பரம
நாட்டு றும்மடி யவருடன் பொருந்துதல் நயந்து) 281
பெருமாள் ஆணை
பரம பத்திமீ தோங்குறப் பலவுமீன் றருளும்
பிரம னைத்தருந் தாதையைப் பேரன்பிற் றலைமேற்
கரம லர்க்குவித் தாணையிட் டடியனைக் கடுக
வரவ ழைத்திடென் றானைபோற் கூவினன் மாதோ. 282
எம்பெருமான் காட்சி வழங்கினான்
கூவு பேரொலி யிருசெவி குறுகநா ரணனும்
வாவு வெஞ்சிறைக் கலுழன் மேல் மரகத மலைபோல்
தேவர் கின்னரர் சத்தர்கள் சவனயன் முதலோர்
யாவ ருந்தொழு தேத்திடத் திருவொடு மடைந்தான். 288
ஆழ்வார் பெற்ற பேறு
தெள்ளு தண்புனல் பெருகியே யருகுறச் சேர்ந்த
பள்ள மெய்துறு பான்மையிற் பராங்குசப் பெருமான்
புள்ளின் மேல்மச கதமலை போலவந் தருளும்
கள்ளு றுந்துள வணியுநா ரணனொடுங் கலந்தான். 284
(வேறு)
இத்தன்மை யாக வுயர்நா ரணன்ற
னெதிர்பேசி யேக மனதாய்
ஓத்துச் சிறந்த பரிசும் அவன்ற
னொடுதான் கலந்த செயலும்
சித்தம் மகிழ்ந்து ரகஸ்யார்த் தமான
தருவா சகங்கள் பலவும்
வைத்துச் சிறந்த தருவாய் மொழிக்கண் வகையோ டுரைக்கு மளவில்; 285
அவ்வா றிசைத்த கவிதன் செவிக்கண்
அணுகக் குளிர்ந்த மதியும்
ஒவ்வாத கோல முறுமா முகங்க
வினவே யொளிர்ந்த பவளச்
செவ்வாய் திறந்து நகர்நீ செலற்கு
இருகென்ன வெய்து கெனவே
இவ்வாறு மாலு மாழ்வாரு மமான்றி
யுரையாடு மெல்லை யதின்வாய்; 266
கண்ணிநுண் சிறுத்தாம்பு
மறுவொன்றி லாத மதிமா முகத்து
மதுரக் கவிச்சொ லவனும்
உறுகாத லோடு மனதுள் எிரங்குி
யுருகா மகிழ்ந்து கணினுண் சிறுதாம். பெனச்சொல் பதினொன்று பாடல்
* செழியச் இறந்து வகுள த
நறுமாலை சூடு சடகோபன் மீது
நவிலா அளித்து நவில்வான். 287
மதுரகவியாழ்வாரின் துயரம்
அனையைப் பிரிந்த தனமுண் குழந்தை:
யதுபோ லருந்து யரினோ
டுனையின் றிழந்து கடல்கூழு மிந்த
வுலகிற் பொருந்தி டுவனோ’
புனையுங் கவுத்வ மணிநார ணன்றன் r
புகழ்வீட் டினிற்பு குதுநீ
எனையுங் கனிந்த மனதோ டுடன்கொ டேகென் றுரைத்த வளவில்; 288
திருமால் கட்டளை
அஞ்சக் கரன்முளரி யயன்மா வரங்கள்
அவைகொண்டு வையம் நலியும்
வஞ்சக் கரன்ற சக்கிரிப னாதி
மாவா எரக்கர் மடியச்
செஞ்சக் கரம்வெள் வளையும் துறந்து
கலையும் வயங்கொள் கணையும்
கஞ்சக் கரங்கொள் இருமால் மஇழ்ந்து
கனிவாய் மலர்ந்து ரைசெய்வான்; 289
மதுரம் பொருந்து தமிழா லெடுத்து
மகிழ்வோ டுரைத்த கவியோர்
பதினொன்று தானு மெனையே துஇத்த
பரிசாகு மாற னையுநீ
நிதமும் கனிந்து பிரியா இருக்கு
நெறிகே ளிவன்ற ஸனிகராய்
சதிரொன்று மூர நிகழ்விக்ர கத்தை
சமைவித் தெழிற்கொ ளதனை) 290
நீரார்! செழும்பொ ருனையாறு தன்தென்
கரையில் .நிகழ்ந்து வளரும்
ஏராரு மிந்தப் புளியென் றியம்பி
யிடுமா மரத்தி னடியில்
சீரா யெழுந்த ௬ளுமா றநுஞற்றித் தினமும் விதித்த முறையே ஆரா தனஞ்செய் திவனாம தென்ன
வகமுட் பொருந்த நினைவாய். 291
மாறன் மறையை விளக்குக
பின்னும் இவன்செய் மறைநான் கெனச்சொல்
பிரபந்த நான்க வையையும்
மன்னும் புவிக்க ணிடையே விளங்கி
யிடுமாறு மானி டரெலாம்
பன்னும் படிக்கு முன்ஞான மெய்து
பலர்க்கும் உயர்ந்த பதவி
துன்னும் படிக்கும் அறிவித்து மாயை
தொடர்பைக் கழித்து விடுவாய்; 292
அத்தன்மை யெய்தி புலிமீ இருந்து
பலநா ளகன்ற வவதஇ
இத்தன்மை யாக யிவணெய்துி யாமும்
இவனுக் களிக்கு முறையே
சித்தங் கனிந்து நினையும் உயர்ந்த
இருநாடு .மீது கொடுபோய்
வைத்தும் கலங்க லெனவன்பி னோடு
மதுரக் கவிக்குரை செய்தான். 293
மாறனுடன் திருமால் பரமபதம் உறுதல்
படிமீ துதித்துப் பெருமாயை தானும்
படரா தொழித்து மறையின்
-மூடிமீ துறத்தி டமாயி ருந்த
முளரிச் சிறந்த மலர்நேர்
அடி.மீது சேர்த்து விடுமா றுரைத்த
தமிழ்மாற னாகு மவனை
மடிமீ இருத்தி மிசைதேவர் இந்து
மலர்மாரி பந்தர் நிழலில்; 294
இருபாலி னங்கை யொருபாலு ளானு
மலரோனு மேத்தி வரவும்
புருகூத னாதி முடிவெண்ணி லாத
புலவோர் பணிந்து வரவும்
அருமாத வத்து முனிவோர்கள் வேத
மதுநாலு மோதி வரவும்
இருமா லெவைக்கு முயர்வா யுயர்ந்த
இருநா டடைந்த னனரோ. 295
மாறன் பனுவலால் மாண்புற்றார் பலர்
(வேறு)
அனைய வாறுமா லுடன்திரு வைகுந்த மடைந்த
வினையி லாச்சட கோபனார் விளம்பிய பாடல்
தனையு ஸணர்ந்திரு வினைகளுந் தடிந்துதண் டுளவம்
புனையு மாயவ ஸுூயர்பதம் புகுந்தனர் புவியோர். 296
ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பதிகள்
அந்த நான்கென வுரைசெயும் பிரபந்த மதனுள்
பைந்து ழமாயணி மாதவ ஸனுவந்துவாழ் பதிகள்
வந்த தைந்தொடு முப்பதாம் வடமது ரையும்வை
குந்தஞ் சீவர மங்கைர் குறுங்குடி வெஃகா; 297
அரங்கம் வேங்கடம் விண்ணகர் செங்குன்றூர் அனந்த
புரம யோத்திபாற் கடல்துவ ரைப்புளிங் குடிகாட்
கரை குளந்தைவாட் டாறு மூழிக்களம் மோகூர்
குருகை வல்லவாழ் துலைவிலி மங்கலங் கோஞூர்; 298
சீர்பெ றுந்திரு மாலிருஞ் சோலைவெற் புபரி
சார மாம்பதி திருக்கடித் தானநா வாய்வண்
டூர்கு டந்தையா றன்விளை கணபுரம் புலியூர்
பேரை சீவர குணமங்கை பேரெனும் நகரே. 299
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய
தேசங்கள் முப்பத்தைந்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பயன்
இந்த மாக்கதை கேட்பவ ரநிரும்புவி யதன்மேல்
மைந்த தரும்பல வளங்களுஞ் செல்வமும் மருவிச்
சிந்தை யின்புற வாழ்ந்துநாள் சென்றிடுங் கடையில்
பைந்து ழாய்மது மாலையன் பதம்பெறு வாரால், 300
மூதிரு நான்மறை தனையருந் தமிழினால் மொழிந்து சதிரு டன்பராங் குசன்பதஞ் சார்ந்துள சரித
விதமி யம்பின மவன்விளம் பியகவி வரைந்த
மதுர மாக்கவி பரமவீட டைந்ததும் வகுப்பாம். 301-
சடகோபாழ்வார் திருவவதார அத்தியாயம் முற்றும்.
———
மதுரகவியாழ்வார் மோட்சமடைந்த
அத்தியாயம்
வெண்பா
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சிராருஞ் சித்திரையில் சித்திரைநாள் — பாருலகின்
மற்றுமுள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களினு முற்றதெமக் கென்றுநெஞ்சே ஓர்.
(உபதேசரத்தினமாலை, 25.
மதுரகவியாழ்வார் திருப்பணி
மாயவ ரருட்படி மதுர மாக்கவி
ஏயவம் மாறனல் லெழிலு ருத்தனை
தூயவிக் இரமதாய்த் துலங்கச் செய்ததை
ஆயவப் புளிமரத் தடியில் வைத்தரோ; 1
பொன்னொடு மரகதம் புட்ப ராகமும்
மின்னிடு மணிகளும் மேய்ந்து ழைத்துவான்
மன்னிடு மண்டப மதிள்வி மானமும்
துன்னிடு கோபுரந் துலங்கச் செய்தனன். 2
பூடண வகைகளும் பொருந்து வத்திரம்
ஏடவிழ் பூமலர் முதல யாவையும்
சூடிட லருத்துதல் முதல சோர்விலா நாடொறு முபசரிப் புடன்ந டத்தியே; 3
கருமுகின் மேனியுங் கமலக் கண்களும்
முருகவிழ் துளவமும் .பொலிழு குந்தனார்
மருவுமா லயமுறை வழுவு றாமலே
திருவிழா முதலவுஞ் செய்வித் தானரோ. –4
வருதனம் பலவுமவ் வாற் தாய்ப்புரிந்
தொருபக லாய்நொடி உளம்வ ருத்திட
மருமகழ் தொடையணி மாற ஸனம்புயத்
இருவடி பிரிகிலான் சேர்ந்து வாழுநாள்;–5-
(வேறு)
காசி லாவருந் தமிழினாற் பராங்குசன் கவிசெய்
ஆச லாதவா இரியமும் விருத்தமந் தாதி
தேசு ஐுந்திரு வாய்மொழி யாமெனச் செப்பும்
மா? லாப்பிர -பந்தங்கள் மலிவுசெய் வகையாய்; 6
மாத வர்க்கும்வே இயர்முதல் நால்வரு ணருக்கும்
ஓது வித்துமாங் கதன்பொரு ஞணர்வுற வுரைத்தும்
ஏத மில்லென வருடநூற்றி ௬பதி ஸிரட்டி
பூத லத்தவர் புகழ்ந்திடப் பொருந்தியங் கிருந்தான். : 7
ஆழ்வாரின் பரமபத வேட்கை
இருக்கு நாளிடை யுயர்பத மடைகுவா னெண்ணிப்
பொருக்கெ னாஎனைக் கொண்டணைந்் தஇிடுஎனப் பொருவில்
இருப்பு ளிக்கிடை யமர்ந்தருள் மாறன்சே வடியை உருக்க மோடுதன் மனத்துற நினைந்தன னொருநாள். 8
விமானம் வந்தது
நினைந்த காலையி லவ்வண நேர்ந்துள வகுளம்
புனைந்து ளான்றன தருளினாற் புவியுளோர் புகழக்
கனைந்த ணிந்தமா மணியொலி கறங்கடக் கனகம்
வனைந்தி டுந்திரு வைகுந்த விமானம்வந் துளதால், 9
வந்த பொன்மணி விமானமேன் மருவிவீற் றிருப்பச்
சிந்தை யன்பொடு மதுரமா கவிதமைத் திகழுநீ
குந்த மம்புய நிகர்கரங் கொடுதழீஇ யெடுத்துச்
சுந்தரம் பெற விருத்தினர் சூழ்ந்துடு மடியார். 10
மணிமண்டபம் அடைந்தார்
அந்த ரத்தவர் மீமிசை யலர்மழை பொழிந்து
துந்து மிக்குழா முழக்குறப் பதவிபோய்த் துடர்ந்து பைந்து மாயனை வகுளனை யன்பொடு பணிந்து
முந்து மாமணி மண்டப முத்தரோ டமர்ந்தான். 11
மாற னேபர மெனமது ரக்கவி வகுத்துக்
கூறு Deis ழினிலிசை குலவுமப் பாடல்
ஆறோ டைந்தையு முளமகழ் வொடுபடித் தனேகர்
மாறி லாதுயர் பதவிசென் .றெய்தினர் மாதோ. 12-
பயன்
இவ்வ ருங்கதை மனம௫இழ்ந் தெழுதஇடு மவரும்
செவ்வி திற்படிப் பவர்களுஞ் செப்பிடு மவரும்
எவ்வ மற்றிடக் கேட்டிடு மவர்களும் மிணைவேறு
ஓவ்வி லாதுயர் வைகுந்த பதவிசென் றுறுவார். 13
மதுர மாக்கவி பதவிசேர்ந் தமைவகுத் துரைத்தேம்;
பதும மாமுகக் கோதையாய்ப் பார்மகள் சிறந்த
புதுவை மாநக ருதித்ததும் புரிந்தது – மரங்கர் வதுவை செய்ததும் இவ்வித மெனவகுத் துரைப்பாம். 14
மதுரகவியாழ்வார் மோட்சமடைந்த அத்தியாயம் மூற்றும்.
——–
ஆண்டாள் திருவவதார அத்தியாயம் .
வெண்பா
பெரியாழ்வார் பெண்பிள்ளை ஆண்டாள் பிறந்த
இருவாடிப் பூரத்தின் சீர்மை — ஒருநாளுக்கு உண்டோ? மனமே! உணர்ந்துபார் ஆண்டாளுக்கு |
உண்டாகில் ஒஓப்பிதற்கும் உண்டு.
் (உபதேசரத்தினமாலை, 24.)
நாரணன் சிறப்பு
மராமரம் அனையதோள் வாலி தன்னொடும்
“இராவணன் முதலினோர் உயிர்இ ழந்திட
அராவணை துயில்துறந்து அயோத்து எய்திய
பராபர வத்துவாம் படிவ நாரணன்; I
புண்டரீ கன்செவென் முதற்புத் தேளிரோடு
அண்டங்கள் பலசரா சரம்அ னைத்தையும்
உண்டுஒரு பாலனாய் உருவம் தாங்கியே வெண்டிரைப் பாற்கடல் பள்ளி மேவியே; : 2
‘யோகநித் திரைதனை ஒருவி தம்தெளிந்து
– ஆகமுற்று உரைஇரு அணங்கு பார்மகள் :
பாகுசொல் நீளையாம் பாவை மூவரும்
்.. மோகம்உற் நிடும்வகை முகமன் கூறியே; 3
இருபுறம். மருவிவீற் நிருப்ப அம்பொனின்
குருமணி அரியணை மிசையில் கோலமார்
முருகவிழ் தாமரை வனம்ம லர்.ந்ததோர் ட்ட
கருமுகில் எனஒளி கவின வைகினான். 4
பூமிதேவியின் வினா
வைகிய காலையில் மருங்கு வையே ‘
மைகணார் புவிமகள் எழுந்து வாள்விழிக்
கைகயன் மகள்தரும் கானம் சென்றுள
செய்கழல் வணங்கிஓர் . மொழியைச் செப்பினாள். 5
கரியமா முகில்நிறக் .கடவுள் மூர்த்தியே
விரிகடல் உலகனர் இடத்தில் மேவிநீர்
பிரியம்உற்று இருப்பதுஆ ரிடத்தில்? பெண்மையேன் ‘
தெரிதரு மாறுஅகைச் செப்பு கென்னவே.: : 6
எம்பெருமான் விடை
அம்மொழி கன்னமூடு அணுகும் காலையில்
இம்மொழி தனை எடுத்து இனிது இயம்புவான்
நம்மலர் அடிகளைப் பற்றி நண்ணுறச்
செம்மனத்து அன்புடன் சேர வைத்தரோ; 7
பாடுறும் அருந்தமிழ்ப் பாவின் மாலையும்
ஏடவிழ் நறுமல ரினிற்செய் மாலையும்
நாடொறும் இயற்றியே நாம்அ௮ ஸணிந்திடச்
சூடுறு செய்கையார் தொழில்பு ரிந்துளோர்; 8
பூமிதேவியின் விருப்பம்
எவர்கள்ஆ யினும்அதற்கு உளம்இ ரங்கியாம்
அவதரித்து அனுதினம் அணுகு வோம்எனா
aon Ht வண்ணன்ஆங்கு ஓதக் கேட்டுஉளம்
துவர்இதழ்ப் புவிமகள் தொழுது சொல்லுவாள். 9
நாத[இம் முறையெனில் நளினம் ஓக்கும்நின்
பாதமேல் பத்தியும் பரிவும் எய்தியான்
ஓதும்அம் முறைவழாது உஞற்றின் அல்லது
மாதெனப் பிறந்துள பயன்வந்து எய்துமோ? 10
ஆதலால் அடிச்சியேன் ஆழி சூழ்வுறும் பூதலத்து உதித்துப்பூ மாலை தன்னொடும்
– ஓதுபா மாலையும் உகப்பச் செய்திடப் .
போதல்என் கடன்எனப் போற்றி நின்றனள். 11
பெரியாழ்வாரின் புகழ்
நின்றவள் மாமுகம் நோக்கி நேமிமால்
மன்றலங் கோதைநின் மனம்அவ் வாறெனில்
ஒன்றுரைத் தஇடுவன்யான் உவந்து கேட்டுஅதை –
நன்ழெனக் கொள்கென நவில்வது ஆயினான். – 12
வில்லிபுத் தூர்வரும் விப்பி ரோத்தமன்,
நல்லியல் உடையவன்; நகைகொள் வாண்முகன்;
மெல்லிய: மொழியினன்; ‘ விளையும் மாயையைக்
கல்லிய செய்கையன்; கருணைஉள் எத்தான். 13
எப்புவி தன்னினும் இணைத ஸனக்குவேறு
ஒப்பிலா நிறைவுபெற்று உறும்மெய்ஞ் ஞானத்தான்;
செப்பிடும் பெயர்விட்டு சித்தன் என்பவன்;
துப்புற எனதுஅடித் தொண்டு பூண்டுளோன்; -14
இன்னவன் மடியைப்பெற்று எழிலின் ஓங்கிட
அன்னமா நகரிடை அணுகு வாய்;அவன்
குன்னுடைச் சறுவியாய் அவத ரித்தபின்
நின்னுளத்து உறும்இடர் நீக்கு கென்றனன். 15
சொன்னமா -மொழியெனும் அழுதம் தாயதன்
கன்னம்ஊ டுறஉளம் களிது ளங்கியே
பின்னரும் புவிமகள் என்னும் பெண்கொடி
நன்னய முடனிவை நவில்வது ஆயினாள்: 16
பூமிதேவியின் வினர்.
வில்லிபுத் தூர்எனும் விளங்கு மாணகர்
தொல்லைநாள் யாவரால் தோன்றிற்று; அஆங்கதும்
நல்லவந் நகரில்நீ நணுகும் ஆறதும் சொல்லும்அவ் விட்டுணு சித்தன் தோற்றமும்; : 17
ஆங்கவன் செயும்கைங் கரிய மாவதும்
ஈங்கிது முதலிய யாவும் ஏழையேன்
பாங்குற .உணர்வகை. பகர்தி என்னலும்
தேங்கமழ் துளவினான் செப்பல் ஆயினான். 18
வில்லிபுத்தூரின் மான்மியம்
– பூதலம் தனில்சம்புத் : இவில் பொங்கு௮லை
மோதுதென் கடலினுக்கு அருகில் மொய்ம்புஉஉடை
– நீதிசேர் பாண்டிய நெடிய நாட்டினில் —
சேதுவிற் குமரிமா வரையின் கீழ்த்திசை; 19
காவதம் ஒன்றினில் கருதும் ஒர்தலம்
ஆவதுஉண்டு; அதனிடை ஆதி காலம்யாம்
மூவகை உலகமும் பொருமு ரண்வலி ‘
மேவும்ஓர் வராகமாய் விளங்கத் தோன்றியே. 20
நினையனாள் தன்னிடை நெடிய தாங்கொடு
விளைபுரி இரணிய வக்க வெய்யவன்
குனைவதை புரிந்துபல் தருமம் என்பவை அனையயா வையும்உனக்கு அருளிச் செய்தனம். 21
அத்தரு மங்களை அனைத்துங் கேட்டறிந்து
இத்தலம் “அதனில்எக் காலும் நீங்குறாது
ஓத்துஉறைந் திடுதிஎன்று உள்ளம் அன்பொடு
மெத்தவும் வருந்தியே வேண்டல் செய்தனை, . 22
ஓதும்௮ம் மொழிப்படி யாம்உவந்து உனோடு
ஏதமில் கற்பங்கள் அனந்தம் எய்திடப்
பேதியாது உறைதலால் அதனுக்கு ஓர்பெயர்
ஆதியில் வ்ராகக்ஷேத் இரம்என்று ஆயதால். 23
௩ அன்புறக் கேட்டி;யான் உறையும் அத்தலம்:
பின்புறு நெடியநாள் பிறஉ யிர்க்குறு
துன்புஇழை உழுவையும் அரியும் சூழ்ந்திடும்
வன்புஉறு வன்மதாய் மருவி உற்றதால், 24
… காலநேமி வதம்
அரியஆ ரணியமாம் அத்த லம்தனில்
உரிமையோடு எந்தனை உளம்இ ருத்தியே
பிருகுமார்க். கண்டனே முதல பெற்றியோர்’
மருவியுற்று’ .அரியமா தவம்இ ழைத்தனர். 25
் இழைத்திடுந். தவத்தரைக் கால நேமிஎன்று
அழைத்திடும் பெயருடை அரக்கன் எய்தியே.
குழைத்துளம் ‘ வெருவுறக் கொடிய தாம்பல
பிழைத்தனை இழைத்தனன் பெருக என்பவே. 26
அத்துயர் பொறுக்கொணாது அவர்கள் யாவரும்
இத்திருப் பாற்கடல் எய்தி எம்மொடும்
குத்தமக்கு அவன்தனால் சார்ந்த யாவையும் சித்தமது இரங்கிடச். செப்பி னார்களால்: 27
ஓலம்இட்டு உரைத்தல்கேட்டு உவண னஊாய்உறும்
சூலபா ணியன்மிசை துரிதத்து எய்தியே
காலனை அனையஅ௮க் கால நேநமிதன்
மேலுற நேமியை விடுத்து வீட்டினேம். 28
முக்குளம்
மாய்ந்தவன் உடல்புண்நீர் மற்ற வன்தனைக்
காய்ந்துள கொடியசெங் கதிர்கொள் நேமியில்
தோய்ந்திட அதனைநீர் கொண்டு தொல்நிறம்
வாய்ந்துற ‘அலம்பு’என வருணற்கு ஓதினேம். 29
என்றஎம் மொழிவழாது எமுனை சான்னவி
சான்றமா சரஸ்வதி என்னச் சார்ந்திடும்
மூன்றுமா நதியையும் அழைத்து மொய்ம்புண்நீர்
கான்றதே மியைஅவன் கழுவித் தந்தனன். 30
அக்கடி. நகரிடை வருணன் ஆனவன்
சக்கரம் அலம்பும்நீர் மூன்றும் சார்ந்துஒரு
.. முக்குளம் என்னவே. மொழியும் பேரொடு
மிக்கநல் தீர்த்தமும் விளங்கிற்று என்பவே. 31
ஓதும்௮வ் அரக்கன்செய் உபத்ர வந்தனால்
போதநேர்ந்து அயர்வொடு புழுங்கி நொத்துள
– மாதவர் தமையினி வருந்த லீர்என
ஆதர வுரைகள்யாம் அறையும் எல்லையில்; 32
முனிவர் கேட்ட வரம்
மீண்டும் எந்தமை இவண்விளங்கு மாதவம்
பூண்டுள இருடியர் பொருந்தும் ஓர்வரம்
. ஈண்டுநீ மறுத்திடாது எமக்கு அருள்செய
வேண்டும்என்று உளந்தனில் விரும்பிக் கேட்டனர். 33
என்னநீர் வேண்டுவ தியம்பு மென்றலும்
அன்னவர் ஓதினர் அணிகொள் பாற்கடல்
மன்னுதல் ஒழிந்துஇவண் வந்து தோன்றியே முன்எமை நலிந்தவெம் மூர்க்கன் தன்னையே; 34
பொங்குஒளி நேமியால் பொருது அழித்துநீ
எங்கள்ஆ பத்துஓழித் இடும்இ யற்கையால்
இங்குநீ உறைந்திடு வரம்௮து என்னலும்
அங்குஅவர்க்கு அவ்வரம் தனை௮ ளித்துளேம். 35
ஆதலால் அத்தலம் அதனுக்கு ஒப்பதாய்
ஓதமுன் னாள்தனில் ஒளிர்வ டத்துஇலை
மீதுகண் வளர்வபோல் விளங்கு௮ ராவின்மேன்
காதலோடு அமர்ந்துகண் காட் நல்கினேம். 36
ஆங்குநம் பெயர்வட வேச்சு ரன்எனப்
பாங்குற ஆங்குஅவர் பகர்ந்து பின்னரும்
தீங்கிலா அத்தலம் தனக்கும் செவ்விதாய்
ஓங்கும்௮ப் பெயர்கொளும் புரம்என்று ஓதினார். 37
அத்தலத்து அவ்விதத்து அமர்ந்த மாதவர் சித்தர்கள் முதலினோர் வணங்கச் சேர்வைகுந்
தொத்துரு சதுரமா முகம தோரறு
பத்துநான்கு அணுகுறும் . அளவும் பண்பொடும்; 38
உன்னையும் அம்புயத்து உ.கந்து வாழ்வுறும்
பொன்னையும். அருகுஉறப் பொருந்தி வைகினேம்.
பன்னும்௮வ் உகங்கள் தீர்ந்து உறலும் பார்மினே
பின்னரும் வனமதாய்ப்: பெருகிற் றாம்அரோ.. 39
குருவொடு செடிகளும் சார்ந்தது அவ்வனத்து
அருகுபுத்- தூர்என அறையும் ஓர்சிறு இருநகர் உண்டு;அதைச் சேர வேமிகும்
பெருவலி வேடர்கள் பிரப லித்தனர், . 40
முன்னுறும் உழுவையே முதல்வி லங்கெலாம்
உன்னரும் கொலைத்தொழில் ‘ உஞற்று வேடரே
அன்னகர் தன்ன்கத்து அதிக ராயினார்
பின்னருற்று அடைந்தமை பேசு வாம்அரோ. 41
வில்லியும் கண்டனும்
அல்லி௮ம் புயமலர் அனைய மாமுக
மல்லிஎன் றுரைபெறு மாது அகட்டினில்
கல்லியல் தோளினர்; கமலக் கண்ணினர்;
வில்லியும்: கண்டனும், விளங்கத் தோன்றினார். . 42
அன்னவர் நாள்தொறும் அமுத அம்புலித்
துன்னரும் கலையென எளர்ந்து . சோர்விலாப்
பன்னுதம் குலமுறைத் கொழில்ப யிற்றியே
மன்னுறு, காட்சியாய் வாழும் நாளிடை; :-: 43
அனையவர் இருவரும் வேட்டை. யாடுவான்
நினைவுகொண்டு ஒருபகல் நிறைந்த தூணியும்
புனைமணிச்’ சிலையும்புங் கவமும் கொண்டுதம்
மனைஒழிந்து அரியஅவ் வனத்தின் ஏகியே; 44
மானொடு கலைகளும் கடம்பும் வைகுகோட்டு
ஏனமும் உழுவையும் எண்குஇ ஸனங்களும்
தானமார் கரிகளும் சரியச் சாடியே
கானக முழுவதும் கலக்கி னார்களால். » 45
கூறுறு நிணங்களும் குருதித் தோயமும் பாறுநாய் நரிகழு கனம்ப ரிந்துண
வேறுள மிருகமும் வேட்டை யாடிநாம் க
மாறிலாது &உறங்கும்௮வ் விடத்து வந்தனர். 46
இளையவன் புலியால் இறத்தல்
அவ்விடந் தனில்இளை யவனும் மற்றொரு
வெவ்விய புலிதனைக். கண்டு வெங்கணை
எவ்வினன் பலபல ஏவும் அம்பினுக்கு
ஒவ்விடாது அதுவிரைந்து ஓட –47
ஓடிடும் அதைத்தொடர்ந்து இவனும் ஓடலும்
நீடிய புதலிடை மறைந்து நின்றிட வாடிய மனதொடும் இவனும் மற்றதைத்
தேடிஅங்கு அதன்முனம் செல்லும் எல்லையில்; 48
பின்தொடர்ந் துறும்ஓலி பெறவெ குண்டுமேல்
சென்றுறப் பாய்ந்துஅவன் சிதைவு றும்படி
கொன்றுடல் கஇழித்துவெங் குருதி சோர்வுற
வென்றிகொண்டு அப்புலி விரைவில் போயதால். 49
தம்பியைக் காண்கிலான் தமய னானவன்
வெம்பிய கானிடை விரைந்து தேடலும்
செம்புண் நீர் ஒழுகடச் சிலைக்கை அம்பொடும்
அம்புவி மேற்கடந் தவனைக் கண்டனன். 50
அண்ணன் புலம்பல்
– (வேறு)
கண்டான்; புலியாற் கிழிபட்ட
செய்கை தெளிந்தான்; கண்மலரை
விண்டான்; கொட்டினான்; உரத்திற்
புடைத்தான்; பொருந்தா வெந்துயரங்
கொண்டான்; அவன்பொன் மேனியெல்லாம்
தடவித் தடவி கொடுநஞ்சம்
உண்டான் போல மெய்தளர்ந்தான்;
உயிர்த்தான்; கரைந்தான்; உருகினான். 51
ஆவி அழிந்திட் டவர்போலுள்
அழிந்தே புலம்பத் தொடங்கினான்
வாவி அறைந்த கொடும்புலியை
வதைப்பத் துணையாய் உடன்வாராப்
பாவி என்றன் கொடியமுகம்
பார்க்கொ ணாதென் றுளங்கருகுத்
தாவி வானம் படர்ந்தனையோ?
என்னோ? ஐயா! சாற்றாயால்! 52
பனிமா மலரோன் விதிமுறையோ?
பாவி யேன்செய் கொடுவினையோ?
தனியா யொருவர் துணையின்றித்
தரக்கின் உஇர்க்கை குனிலகப்பட்டு
அனியா யமதாய் உயிர்இழந்த
ஐயா! உலகத் துனையிழந்திட்டு
இனிநான் உயிர்வா ழேன்வாழேன்;
உடனே வருவேன் என் உயிரே! 52
அன்னை தந்தை குருதெய்வம்:
அண்ணன் தம்பி மனைமக்கள்
பொன்னை முதலாம் பலபலவாம்
பொருளும் நீயாம் எனநம்பும்
என்னை விடுத்துஅம் பரம்புகுதற்கு
எண்ணிச் சென்றாய் கொடியன் இலை?
உன்னை விடுத்தும் இவண்இருந்தேன்;
உன்னிற் கொடியேன் நான்அன்றோ? 54
எந்தை யேஇங்கு எனைத்தனிவிட்டு
ஏக மனமுந் துணிந்தனையோ?
சிந்தை கனிவாய் வனம்சென்ற
சிறுவர் வருவார் எனப்பார்க்கும்
நந்தாய் உனைஎங்கு எனக்கேட்டில்
நான்என் நவில்வேன்? நவில்என்னா
இந்த வகையால் பற்பலவாய்
எடுத்தே புலம்பி மெய்தளர்ந்தே; 55
விழுந்தான்; புவிமேல் புரண்டுஅழுதான்;
வெதும்பித் தேம்பி வெகுண்டுவிரைந்து
எழுந்தான்; புலிபோம் வழிசென்றான்;
காணாது ஏங்கித் திரும்பினான்;
செழுந்தார் அனுசன் கிடந்தவிடஞ்
சேர்ந்தான்; அவனோடு உடன்படுத்தான்;
அழுந்தாத் துன்பக் கடல்படிந்தான்;
ஆவி சோகித்து உறங்கினான். 56
வில்லியின் கனவு
உறக்கம் கொள்ளும் அவன்கனவில்
உறங்கு வேமிங் குளமுவப்ப
நிறக்கு மணிபொன் கோபுரமும்
நெடுமா மதிளும் மண்டபமும்
துறக்கம் எனவே அமைத்தாரும்
துலங்க வமைத்துக் குடியேற்றிச்
சிறக்கும் படி.நீ செய்விப்பாய்,
என, யாம் அடைந்து செப்பினோம். 57
அன்னது ஆகும் மொழிதனைக்கேட்டு
அடர்வெம் புலிஎன் உயிர்த்தம்பி
குன்னை வீட்டிற் றதுவல்லாற்
சமைக்கும் கோயிற் பணிகளுக்குப்
பொன்னும் வெகுவாய் வேண்டியிடும்
அதற்குஎங். கேயான் போவன் என
இன்னது ஆகும் மொழியதனை
அவனங் கெடுத்திட்டு இயம்பினனால், 58
அம்மா மொழிகேட்டு ‘உனதுதம்பி
அவனை எழுப்பி அவற்கொன்ற
வெம்மா புலியங் கதுதனையும்
… வீட்டி யதுவாழ் குகையிடத்தில்
செம்மாப் பொருள்கள் பலவுளது
காண்பித் தஇடுவேம் தெளிந்திடு’கென்று
இம்மா மொழியை மீண்டும்அவர்க்கு
இயம்பிக் கனவின் மறைதந்தனமே. 59
எழுந்தான் தம்பி
அந்தக் கனவு தனைக்சண்டிட்டு
அவனும் மலர்க்கண் விழித்தென்னோ
விந்தை உளதாம்; இதுபொய்யோ?
மெய்யோ? அறிய வேண்டுமெனச்
சிந்தை யுணர்ந்தாங்கு .இருந்திடலும்; சீறும் புலியால் மடியனுசன்
முந்தத் துயில்கொடு எழுந்தவன்போல் உணர்ந்தாங்கு எழுந்தான் முகமலர்ந்தே. 60
எழுந்த தம்பி தனையணைத்தங்கு
இருகை யாலு மணிமார்பில்
அழுந்தப் புல்லி உச்சியைமோந்து
அலர்க ணீர்மஞ் சனம்ஆட்டி
கொழுந்துஉற்று ஓங்கும் களிக்கடலில்
குளித்தான்; புலியாற் றான்புவிமேல்
விழுந்த செயல்கள் அனைத்தினையும்
விளைந்த வாறே விளம்பினனால்,–61
விளம்பு மொழிகள் தனைக்கேளா
வில்லி தானும் தன்கனவில்
களங்கம் இலை;இங்கு உறங்குவம்யாம்;
எமக்குக் கனக கோபுரமும்
வளங்கொள் நகரும் படையெளவும்
இருமால் வந்து பகர்ந்தவெலாம்
உளங்கொண்டு உணரும் படிதம்பிக்கு
உரைத்தான்; அவனும் களிப்புற்றான்.–62-
இருவர் களும்௮வ் விடம்நீங்கிச்
லதா ரம்சென்று ஏகிடலும்
உருவும் கணைகள் – பலதைத்து
உடலம் துறந்த வழியதன்வாய்
பெருகும் குருதி மழையதுபோல்
பெய்யப் .புவியும் சிவப்புஎய்தப்
பொருவெம் புலிசெற்று அவண்கிடக்க
அதனைக் கண்டுஅற் புதமடைந்தார். -63
பின்னும் அவண்விட்டு இருவர்களும்
கடிதிற் சென்றுஅ௮ப் பெரும்உழுவை
மன்னி யிருந்த வரைக்குகையில்
மருவிப் பார்க்க வகைவகையாய்ப். பொன்னும் மணியும் பணிதிகளும்
பொருந்தக் கிடத்தல் தனைக்கண்டே
துன்னும் கனவில் கண்டதெலாம்
மெய்யென்று உளத்தில் — 64
இத்த இடத்தில் அத்திருமால். இருத்தற்கு ஐய மிலை;உறையும்
அந்த இடம்நாம் அறிகுதும்என்று அவண்விட்டு ஏகி, அவ்வனத்தில்
எந்த இடத்தும் புதல்புதலாய்
இருகண் இமையாது ஆராய்ந்து
சிந்தை கனிவாய் விரைவினொடும்
தேடித் தேடி திரியுங்கால்; 65
வேடர்கள் வடபத்ரசாயியைக் கண்டது
முன்னாள் தனில்ஆ ராதஇுத்தோர்
முயன்ற அணிஆ லயம்கிலமாப்
பின்னாள் முளைத்த வடவிருக்கப்
பெருக்கால் மூடு பட்டதனுள்
பன்னா கணையும் அதன்மிசையே
படுத்த எமையும் தாமரைவாழ்
பொன்னோடு உணையும் ‘இருகண்ணும்
பொருந்தக் கண்டே ‘ மகிழ்வாடு; 66
துயிலுங் காலை யுறுங்கனவில்
களிப்பத் தோன்றித் தகவுடனே
பயிலுங் கடவுள் இவராம்என்று உன்னிப் பலகா லம்புவியில்யிலம் பொருவும். இணிதோளார்
தாழ்ந்து வணங்கி அடிபோற்றி
அயில்வெங் கண்ணாய்! கனவிலுரை ச
அவ்வாறு அமைக்கச் சிந்தித்தே; 67
கோவில் எழுந்தது
மலையின் குகையின் இடைகிடந்து
வளம்சேர்ந் இரவைப் பகலாக்கும்
விலையில் மணியும் பணிதிகளும்
மிளிரும் பைம்பொன் முதலியவாய்
நிலைகொண்டு அதைப்பண் டியில்பொதியில்
நிரப்பிப் பின்னும் மனிதர்கள்தம்
தலையின் மிசையும் வருவித்தும்
தன்கைப் பொருளும் உடன்கலந்தே; 68
நிலைபெற்று உயர்பொன் கோபுரமும்
நிரப்பு மணிமண் டபம்மதிலும்
அலையுற்று எழுநீர்ப் பொய்கையும்மற்று
அவைபோற், பலவாம் இருப்பணியும்
மலையொத்து உயரும் மணிமாட
கூடங் களுஞ்சேர் வள.நகரும்
தஇலைபொற் கரம்சேர் வில்லியக்கான்
அழித்துச் சிறக்கச் செய்வித்தே; 69
வில்லிபுத்தூர் மலர்ந்தது.
அருகில் உறையும் திருப்புத்தார்
அந்த ணாளர் தமைஅழைத்துத் திருவை குறயாம் அமைத்திடும்இத்
இருமா நகரம் அதனிடைநீர்
_ மருவி உறைந்து பெருவாழ்வு
மலியச் சிறப்புஎய் திடும்குடியாய்
வருதல் வேண்டும் எனஉரைப்ப
மற்றுஅங்கு அவர்கள் வகுத்துரைப்பார்., 70
நன்று புகன்றது இத்திருமா
நகரத் தனக்கும் அழகுசிறப்பு
ஒன்று நாமம் புத்தூர் என்று
உரைத்தால் யாங்கள் அவண்வருவேம்
என்று புகல அப்பெயர்தன்
பெயரோடு இசையு மாறுஉரைத்தான்;
அன்று குடியாய் அவர்களும்சேர்ந்து
அணுகச் இறக்க வாழ்ந்தனரால். 71
அதனால் அவ்வூர் அமைத்தவன்போர்
அருகு புத்தூர் கலந்துஇரண்டு விதமாய் ஒன்றி வில்லிபுத்தூர்
எனும்ஓர் நாமம் விளங்கியதால்;
மதிசேர் சகரக் கோபுரமும்
வளமா நகரும் புராதனத்தைப்
புநிதாய்ச் செய்த தால்ஒருபோர் புதுவை எனவும் பொருந்தியதால். 72
சீரார் அனுமன் பொற்கருடன்
சிவிகைப் பரிதண் டிகைசேடன்
தேர் னைஇன முதலாகும்
இருவூர் திகள்பல செய்வித்து
ஆரா தனம்பிரம் மோற்சவமோடு
அணியார் மற்றைத் திருவிழாவும்
தோராது அமரர் தாமும்அதி
சயித்துத் துதிக்கப் புரிவித்தான். 73
அவ்வா றாக நாடொறும்ஆங்கு
அவன்செய் பலவும் குறைவுஇலகாய்ச்
செவ்வே புரிந்து வருநாளில்
Avant லம்சென் நுற்றபினர்
எவ்வேறு உலகங் களினும்இதற்கு
இணைளஎன்று எடுத்திட்டு இயம்பிடுதற்கு
ஒவ்வாது உயர்நம் பரமபதத்து
உற்றான் அவன்தம் பியினோடும். 74
பெரியாழ்வாரின் வரலாறு
மண்நா டினையே முதற்பலவாய்
வகுத்தும் புகல்௮அண். டங்களினும்
நண்ணாப் புகழ்நண் ஸணிடும்௮ந்த
நகரின் சரிதம் ;நவின்றனமால்;
விண்ணா டர்களும் புகழ்ந்துஏத்தும்
விட்ணு சித்தன் சரிதம்அதைப்
பெண்ணார் அமுதம் அனையாய்!(யாம் பேசக் கேட்டி எனப்பேசும். 75
(வேறு)
ஆழிசூழ் உலடல் அவதரித் துடையோர்
அனைவரும் நமைஅறி கிலராய்ச்
சழ்உறு மலமூத் இரஉடல் எடுக்கும்
செனனசா கரம்கடந் திலராய்ச்
சூழ்்உ.று மாயை வயத்தராய் நரகில்
துன்னுதற்கு இரங்கிஆங்கு அவர்கள்
வாழ்உறும் பரம பதம்தனில் புகுந்து
மகிழ்வுற யாம்உளம் மதித்தே; 76
–
பெரியாழ்வார் அவதாரம்
மருள்தரும் உளம்சேர் மாநிலத்து எவர்க்கும்
_ மயக்கற விளங்குமெய்ஞ் ஞானப்
பொருள்தனை விரித்துஉள் உணர்ந்திடு மாறாய்ப்
புகன்றுபின் வருஇநீ என்னக்
கருடனுக்கு உரைப்ப அவனும்அம் முறைக்
கடிநகர் முகுந்தன்பத் தினியாம்
இருள்தரு குழல்சேர் பற்புமை வயிற்றி
னிடைவிட்ணு சத்தன்என்று உஇத்தே; 77
திருப்பணிகள்
துஞ்சுறு மாயை இருளினைத் துறக்கும்
சுடரவ னாம்என விளங்கி
அஞ்சுமா வயதின் ஞானஉற் பவமாய் அன்புநம் மிடத்தில்உண் டாகி விஞ்சுமல் லிகைமுல் லையும்நறுந் துளவும்
விளங்குறு திருநந்த வனமும்
கஞ்சமும் கழுநீர் முதலிய மலர்கள்
கவின்பெறு தடமும்ஆங்கு இயற்றி; 78
கிழியறுத்தல்
காலையில் கடன்கள் கழித்துப்பூ மலர்கள்
கசங்குறாக் கூடையின் எடுத்து
மாலைகள் தொகுத்து நமக்குஅணி வித்தே
வருகுவன் அதுவும்அல் லாமல்
வேலைகூழ் புவியின் மிகுவளம் பொருந்தி
மேவுசீர்ப் பாண்டிய வேந்தன்
மேலைநாள் பரம வத்துஎவன்? என்ன
விளங்குறத் தெரிகுவான் விரும்பி; 79
தனதுவா யிலினோர் கிழிதனைத் தூக்கத்
குர்க்கத்தில் வென்றுள பெரியோர் :
இனதுகொண் டடைமின் எனத்திரு முகங்கள்
எங்கணும் பரவிட விடுத்தான்
அனதுணர்ந்து உலகிற் பல்பல விதமாய்
அறையும்அச் சமயவா தியர்கள்
மனதுவந்து அமைதம் விருதுடன் மதுரை
மாநகர் வந்துஅணு கினரால். 80
ஓத்தடைந் தவர்கள் தமதுநூன் முறைகொண்டு
உரைத்திடும் தர்க்கமா முறைகள்
எத்தனை விதத்தால் கேட்பினும் அதனுக்கு
இசைவுறத் தனதுநூல் எடுத்திட்டு அத்தனை விதங்கட்கு எண்மடங்கு உரைத்திட்டு
– ஆங்குஅவர் தமையெலாம் விட்ணு
சித்தன்வென்று அவைமுன் நமைப்பரம் எனவே
செப்பி௮க் இழியையும் அறுத்தான். 81
ஏனைய சமயத் தவர்களும் துதிசெய்து
… ஏத்தும்அப் பட்டர்பி ரானைச்
சோனைஅம் புயலின் பொழிகர அரசன்
‘தொழுதுபொன் னடிமுடி யணிந்து
சேனை நால் வகையும். செயசெய என்னத்
தேவர்கள் மலர்மழை பொழிய
ஆனைமேல் ஏற்றி அணிமுரசு அதிர்வித்
குந்நகர் வலம்வரும் போதில்; 82
பல்லாண்டு
சவனயன் முதலோர் சேவடி வணங்கச்
செம்பொன்அங் இரியினை நிகரும்
உவணமிீ இவர்ந்து திருவுளம் பொலிய
உலகுளோர் பலரும்ஆங்கு உணரப்
பவனிவந் இடுவோன் கண்டுஉளம் உருகும்
படிஎதஇர் எளியதாய் அடைந்தேம்;
அவனும்அன் புடனே தொழுதுபல் லாண்டுஎன்று அணிபெறும் காப்புஅணிந் தனனால். 83
முன்புறு சைவ சமயமாம் அதனை:
விடுத்துப்பொன் முடியுடை அரசன்
அன்புடன் வேண்டத் திகிரிசங்கு அவன்தன்
அணிபுயம் இரண்டினும் அணிந்தே
பின்புஉவந்து அளித்த பொருள்மணி முதலாம்
– பெருவெகு. மதிகள்கொண் டருளித்
கன்புகழ் எவரும்: துதிசெய மதுரை
தனைவிடுத்து அணிநகர் அணுகி; 84
பாமாலையும் பூமாலையும் அணிவித்தல்
கண்ணனாய் உதித்துயாம் இருந்தபோது இயலும்
காரிய சம்ப்பரமம் அதன்தன்
வண்ணம்யா வையும்செந் தமிழினால் கவியாய்
வழங்கும்௮அப் பாவின்மா லைகளும்
தண்ணறாத் துளிக்கும் மலரினால் தொடுத்துச்
சமைத்தபூ மாலையும் சாத்தி ்
எண்ணரும் கால மாய்இருக் இன்றான்;
அவன் உளத்து யாமும்வீற் றிருப்போம். 85
இந்தவா றாம்௮த் தலம்அமைந் துளதும்
யாம்அவண் உறைந்துள செயலும்
செந்தமிழ்க் கவிவல் விட்டுணு இத்தன்
செனித்தசெய் கையும்புவி மானே!
சிந்தைகொண்டு உணர்தி; எனவழங் கஇனனால், .
செழித்தபாற் கடல்முகட்டு ஆலின்
பைந்தளிர் அதன்மேல் பாலனாய் உறங்கும் பராபர னானநா ரணனே. ட்ட 86
புவிமகள் விண்ணப்பம்
உரைசெயும் தருவா சகம்பல பலவும்
உற்றுவந்து இருசெவி யுருக
விரைசெய்பூந் தொடையல் கரியகார்க் குழலின்
மிலைந்தசீர் அம்புவி மகளும்
கரைசெயற்கு அரிதாம் களிக்கடல் அழுந்தி
ஓர்விதம் கரைஉணர்ந்து எழுந்து
திரைகடல் நிறத்தான் இணைந்ததா மரைப்பூந்
“திருவடி பணிந்துஇவை தெரிப்பாள்:–87
பூமிததேவியின் அவதாரம்
இருவுளப் படியான் புதுவையில் பட்டர்
பிரான்எனுந் இருப்பெயர் புனைந்து
மருவும்௮ப் பெரியாழ் வார்மக எளாய்ப்பூ
மாலைபா மாலைஎன்று உரைக்கும்
இருவகைக் கயிங்கி ரியமும்யான் இழைப்பான்
இசைந்தனன்; ஏகுஎன விடைதந்து
அருளெனக் கேட்டாள்; அம்முறை புரியென்று
ஆமிமா யனும்அளித் தனனால். 88
(வேறு)
விடைகொண் டதன்பின் திருவெனவும்
நீளை எனவும் விளம்பிடும்அப்
படைகண் ஸணினர்தம் மொடும்புகன்று
பலதே வர்கள்சித் தர்கள்இயக்கா்
௪டைகொள் முனிவோர் முதலானோர்
தாழ்ந்து வணங்கக் கடலாலின்
அடைகண் வளர்மால் உளம்தொடர ட்ட
் அவைவிட்டு அகல்அம் புவியடைந்தே; 89
வில்லி புத்தூர் எனும்நாமம்.
‘விளங்கு நகரில் பெரியாழ்வார்
அல்லும் பகலும் ஓழிவிலதாய்
அமைத்த நந்த வனத்தினிலே
எல்லும் துளவ நறுஞ்செடியில்
ஏரார் சிறுபெண் வடிவுடனே
சொல்லும் கடக மதிஅதனில்
துணையில் கணையில் தோன் றினளால். 90
அந்தத் துளவம் எனும்மடவாள்
அகலம் புவிமான் தனதுஇடத்தில்
வந்துஉற் பவிக்கப் பூரூவநாள்
வகுத்த தவம்யா தென்னஇட.ந்
குந்து பலவாய் உபசரித்துத்
தளிர்க்கை கொடுபொற் றாள் தடவிச்
சிந்தை கனிந்து ம௫ழ்சறக்கத்
இருமா முடியில் தாங்கினளால். 91
பெரியாழ்வாரின் செயல்
பெரியாழ் வாரும் அன்றுஉதயம்
பெறுமுன்பு அமையும் துயில்உணர்ந்து
விரியார் புனலின் தடந்தோய்ந்து
விதியிற் காலைக் கடன்பலவும்
புரியா துளவம் அணிதிருமண்
பொலியத் திருப்பூங் கூடையுடன்
பரிவாய் இதழ்விண்டு அலர்ந்தமலர்
பறிப்ப நந்த வனம்அடைந்தான். 92
சோதியைக் கண்டார்
வந்து நோக்கும் பொழுதுஅவன் தன்
மனமும் மலர்க்கண் களும்களிப்பக்
கந்தம் பரந்து நெடுந்தூரம் கமமும் தளவம் அதன்மிசைஓர்
சந்த்ர வதனப் .பெருங்கதிரோன்
தான்வந்து உதய மானதுபோல்
முந்தும் சோதி தோன்றுதலும் முதிரும் பெரிதுஅற் புதம்அடைந்தே; 93,
அருகுஉற்று அமைய நோக்குதலும் மதிமா முகமும் அம்புயம்நேர்
இருகண் கரம்பா தமும்ஒளிரும்
– பெண்கண் மணிதன் எழில்தோக்கி
முருகுஉற்று ஒளிரத் துளவுஅணியும் முகுந்தப் பெருமான் தனக்குஉகப்பாம்
இருமற்று இவளாம் எனஉளத்துற்
சிந்தித்து அநேக விதம்துஇத்தே. -94
– இங்கே இம்மாது இரத்தினம்வந்து }
இருக்கும் செயல்என் னோ?இதெல்லாம்
பங்கே ர௬கம்வாழ் இருவினொடும்
பார்மின் னோடும் பாம்பணையில்
செங்கேழ் மலர்க்கண் வடபத்ர ‘
சாயி தன்னை வினவியிடில்
அங்கே உணர லாம்எனத்தன்
அகம்உள் தெளிந்துஆ னந்தமொடும்; 95
ஆழ்வார் காணிக்கை
அந்த காந்த மணிவிளக்கை
உபய கரஅம் புயம்அதுகொண்டு
உந்தி எடுத்துத் தாங்கிவிரைந்து
ஒளிர்நந் தனமா வனந்தனைவிட்டு
இந்து தவழும் உயர்த்தவட
பெருங்கோ யில்முன், எய்தித்தான்
தந்த பெருங்கா ணிக்கைஎனத்
தரைமேல் வளர்த்தி இவைபுகன்றான்: 96
இவள் யார்?
துமுதம் தெரிக்கும் பாற்கடலின்
துயில்நீத்து இவண்வந்து உறைந்திடுவோய்/
குமுதம் பொருவாய் கரியகுழல்
மதிமா முகம்கூ ரியவேல்கண்
அமுத மொழிஇப் பெண்அணங்கார்?
இவண்வந் ததும்மேல் அமைவனவும்
உமது திருவாய் மலர்ந்திடும்என்று
உபய மலர்த்தாள் வணங்கினனால். ர 97
நின் திருமகளாய் வளர்க்க எனல்
அன்போடு அவ்வாறு உரைத்துவணங்கு
ஆழ்வார் அணிமா முகம்நோக்கி
மின்போல் ஒளிரும் திருமேனி
விளங்கு மணித்தா மரைவளரும்
பொன்போல் வாள்நின் இருமகளாம்;
அதனால் பொலிவு சிறந்தோங்கும்
தின்மா ளிகையி னிடைகொடுபோய் நேய முடனே வளர்த்திடுவாய். 98
கோதை .எனப் பெயரிடுக
முன்பின் இயைந்த -செயலும்இவட்கு
இனிமேல் முயலும் செய்கைகளும்
பின்பின் உணர்தி என அருளப்
பெருகப் புகன்று பின்பும்இவள்
குன்பேர் கோதை யாகுமெனத்
தரிப்பாய் எனவும் சாத்தினனால்;
வன்போடு அடைந்த மல்லரைமுன்
மலைந்து குமைத்த மாமாயன். 99
உரைசெய் மொழியார். அமுதுசெவி
.. வழிவந் துறலும் பட்டர்பிரான்
கரைசெய் திடுதற்கு. அரியபெருங்
களியா முவரி ‘தனில்அழுந்தி
விரைசெய் துளவம் கமழ்பதத்தோய்/
விளம்பு முறைசெய் வேன்எனத்தா
மரைசெய் , மலர்போல் .முகங்கவின
மறித்தும் வணங்கி நிற்றலுமே; 100
இறைவன் கட்டளை
ஈண்டுடும் மடவார் இரத்தின த்தை
மணிபொற் . சிவிகை. யிடையேற்றித்
தாண்டுந்: தரங்கக் கடலின் ஓலி
. தரும்வாத் இயங்கள் uss mms
வேண்டும் “சம்ப்ரம :முடன்கொடுபோய்
விட்ணு சித்தன் மனைவிடுத்து
மீண்டுஇங்கு உறுமின் என்னபரி
சனத்தாற்கு அருள்மால் விடையருளா; கு 101
நன்றுஎன்று அவர்கள் திருவுள்ளம்
நயந்துஅம் பொன்னின் நவமணியும்
துன்றும் சிவிகை மிசைஅணங்கின்
._ தூய்மா மணியை இருகரம்கொண்டு
ஒன்றும் படியாய் எழுந்தருளச்
செய்தே முழங்கா ரொலிஓங்கிச்
சென்றுஎண் திசையின் உறைவோர்தம்
செவியுற்று அடைந்து களிப்பாக; 102
மேளம் பேரி நாகசுரம்
விளங்குந் தாரை திருச்சின்னம்
தாளம் ஒளிர்மத் தளம்மற்றும்
சாற்றும் பலவாத் தியமுடனும்
வாளங் கண்ணார் நாடகமும்
மருவச் சிறந்த மாநகர்வாய்
நீளுந் தெருக்கள் வலம்புரிந்தந் நெடியோன் மனைவிட்டு அவர்போனார். 103
நாச்சியாரை ஆழ்வார் வளர்த்தல்
(வேறு)
மனைய டைந்துறு மங்கலந் தினந்தொறும் வளர
வினையி லாதவவ் விட்டுணு சித்தனும் விதியால்
அனைய பெண்ணினுக்கு அழகுறக் கோதையாம் என்னப்
புனைது மாயவன் மொழிப்படி நாமமும் புனைந்தே; 104
வச்சி ரம்வயி . டூரியம் செழியுமா ஸணிக்கம்
பச்சை யோடுகோ மேதகம் புகர்புட்ப ராகம்
தச்சி ழைத்தசெம் பொன்னினார் வடமொடு தயங்கி
உச்சி தம்பெறும் தொட்டிலும் ஒளிபெற அமைத்தே; 105
ஆட்டுந் தோழியர்; ‘ தொட்டிலிட்டு அஞ்சன மலர்க்கண்
இட்டும் பாங்கியர்; மடிமிசைத் இருத்தி அம்புலியைக் .
காட்டும் தாதியர்; கண்ணிறை கழித்துஅருந்து அமுதம் ஊட்டும் சேடியர் முதலினர் உபசரிப் புறவே; 106
பேதை யாம்பரு வந்தனில் இயைவன பெரியோர்
ஓதும் அம்முறை யாவையும் வழுவிலாது . உ.ஞற்றிக்
கோதி லாத்தனிக் கலன்களும் குறைவிலாது அணிந்து
இதி லாமதிக் கலையெனத் தினம்தினம் வளர்த்தார். 107
வளரும் நாளிடை பெதும்பையாம் பருவம்வந் துறலும்
அளகம் சூழிய மாய்முடித்து அலங்கலும் புனைந்தே
ஒளிரும் நெற்றியில் பிறையெனத் திருமண்காப் புடனே
தளத எத்திருச் சூரணம் தன்னையும் அணிந்தார். 108
காதில் கல்லிழை கம்மல்நற் சிமிக்கெகத் தரிப்பால்
இதி லாநவ மணிஇழை செம்பொனின் முருகும்
கோதி லாமயிர் மாட்டிசேர் அழகுறும் கொப்பும்
ஓது மற்றுள வகைகளும் ஒளிபெற அணிந்தார். 109
6தசு லாம்செழுங் குவளைநேர் கண்களில் திகழக்
காச லாதொளிர் அஞ்சனம் கவின்பெ.ற அணிந்து
மாசி லாஇள நகைபெறு மதிமுகத் தொளிரும்
நாசி தன்னின்மூக் குத்திபி லாக்குடன் அணிந்தார். 110
சங்கம் போன்றுள கழுத்தினில் -தாழ்வடம் பதக்கம்
பொங்கு ஒளிக்கட்டு வடம்பொலி மோகன மாலை
செங்க .இிர்ச்செழும் பருதிபோல் சரப்பளி’ பதக்கம் –
தங்கு முத்தினா ரமும்பல பொலிவுறத் தரித்தார். 111
ஏட லர்ந்தபூங் கரங்களில் எழில்செய் :மதாணி
ஆட கப்பசுந் தோள்வளை அணிகொள்கே யூரம்
சூட கத்தொடு வளையலும் நவமணித் தொடியும்:
நீடு றும்விர லாழியும் அணிமுறை நிறைத்தார். 112.
அய்ய மெய்தியுண் டிலையெனு மிடையிடை யழகாய்
செய்ய பட்டின்சிற் றாடையும் சிறுமடி சாறும்
துய்ய பொன்னரை ஞாணொடு துலங்கும்ஓட் டியாணம் .
வெய்ய வன்ஒளி காந்துறும் படிமிலைந் தனரால். 113
பளப ளென்னசெம் பஞ்சணிந்து அம்பொன்பா. டகமும்
மாமணித் தண்டையும் கெச்சையும் கொலுசும்
முளரித் தாள்களின் மோதிர வகையுடன் அழகு
வளமு றும்படி அணிந்தவை யாவரே வகுப்பார்? 114
இன்ன வாறதாய் வானகத் இடையிருந்து இழிந்த
மின்ன னாள்ஒளிர் மெல்லிய மேனியின் நிறையப்
பொன்னின் மாமணி நிரப்புபல் பூடணம் அணிந்தார்
வன்ன முற்றபொன் ஓவியம் நிகர்த்திட மாதோ. 115
பொன்னின் மாறுகோ லொடுமணி முச்சிலும் பொலியும் –
மின்னு வெண்கல வடுப்பொடு தாம்பலா விறகும்.
வன்ன வெண்பொனின் பலபல: பாண்டத்தின் வகையும்.
அன்ன மென்னடை யாள்விளை யாடுதற்கு அமைத்தார். 116
இனைய யாவும்கொண்டு எழில்பெறும் தோழிய ௬டனே
அனைய நாள்தனில் நடைபெறும் இருவிளை யாடல்
கதனைஓவ் வாதஅக் கோதையும் நாள்தொறும் தமது
மனையின் ஊடுஇருந்து ஆடுவள் மகழ்வொடு மாதோ. 17
நாச்சியார் திருப்பணி
அந்த நாள்தனி லேபத்தி தலைஎடுத் தவளாய்
கந்தை அன்பினோடு உஞற்றிடும் தன்மைபோல் தானும்
நந்த மாவன கயிங்கர்யம் இயற்றுவான் நலஞ்சேர்
,_ சிந்தை ஊடு௨உற நினைந்துஇது செய்யல்உற் றனளால். 118
உதைய காலையில் தந்தையோடு இயல்வன உஞநற்றி
– இதையம் அன்புற நந்தன வனந்தனில் ஏ௫த்
-ததையு மாமலர் எடுத்துத்தண் ணீர்தனைப் பாய்ச்சி
– அதையும் ஓர்விளை யாட்டுஎன அனுதினம் இழைப்பாள். 110
சூடிக்கொடுத்தாள்
இன்ன வாகப்பற் பலதினம் இயைவுறும் அமைதி
“பன்னு மோர்பகல் பன்மலர் பறித்துவந் ததனைத்
துன்னு மாலைகள் அணிபெற வகைவகை தொடுத்து
மன்னு பூந்திருக் கூடையுள் நிறப்புற வைத்தே; 120
ஆய ௬௯டைஓ ரிடத்துவைத்து உலவலுக்கு ஆழ்வார்
போய காலையில் கோதைஎன்று உரைசெய்பூங் கொடியும்
ஏய மாலைகள் தன்னின்ஓர் மாலையை எடுத்துத்தூய நாசியின் அதன்மணம் சோதிப்பான் மோந்தாள். 121
மோந்த போதினில் பரிமள மிகுந்துற முழுதும்
காந்து மாமணித் தொடியுறும் கரங்களால் எடுத்து
வாய்ந்து றும்படி அளகத்தும் வளைகமுத் தகத்தும்
வேய்ந்து தன்திரு மேனியின் விளங்கு௮அழகு உணர்வாள். 122
தோன்று சின்றகண் ணாடியின் கிணற்றிடைத் தொடர்ந்தே
ஏன்ற பேரொளி யழகுகண்டு இன்புறும்; மீண்டும்
சான்ற தந்தையார் வருவர்என்று அதன்முனம் தரித்த
ஆன்ற மாலைகள் அனைத்தையும் அமைவுற வாங்கி; 123
இருந்து மாமலர்க் கூடையிற் சிக்கென முறையிற்
பொருந்த வைத்துஅதை உணர்ந்திடா வகைமுன்பு போல
இருந்தி டந்தனிற் கொண்டுபோய் இயைவுறத் தூக்கிக்
கருந்த டங்கணாள் பாங்கியர் உறும்இடம் கலந்தாள். 124
மாத வற்குஅர சாகிய பெரியஆம் வாரும்
கோதை செய்தமை உணர்ந்திலார்; இருமனை குறுகிப்
போது மாலையின் குடலையை எடுத்துத்தன் புயத்தின்
மீது தாங்கியே விரைவொடும் வீதிகள் கடந்தே; 125
வடபெ ருந்திருக் கோயிலின் மருவிநஞ் சமரும்
படஅ ரா௮அணை அதன்மிசை பள்ளிகொள் பவர்க்குக்
குடலை மாலையை அருச்சகர் இருக்கரங் கொடுத்திட்டு
அடைவு டன்உகப்பு எய்துறு மூறைஅணி வித்தே; 126
தீர்த்த மும்பிர சாதமும்” இகழ்வுறும் இருகை ஏர்த்து வாங்கித்தன் இதயமும் இருகணும் களிப்பச்
சீர்த்த நாரணன் அம்புயச் சீரடி வணங்கிப்
டூபர்த்து மாளிகை குறுகிவீற் நிருந்தனன் பெரியோன், ..127
என்றும் ஆங்குஅவன் கொணர்ந்துதற் கணிந்திடு தலினும்
அன்ற லங்களில் பரிமளம் அதிகமாய் உறலும்
இன்று இதற்குள்டும் முறையுறல் எவ்விதம் எனவே
குன்றி னால்மமை விலக்கிய கோவலன் குறியா; : 128
வென்றி வேல்கண்௮ம் கோதையாள் விட்டுணு இத்தன்
சென்று நீங்கிய காலைத்தன் குழலிடைச் சேர்த்த
மன்ற லாம்என நடந்துள வாறுஉணர்ந் தருளி
நன்று நன்றுஎன ஆனந்தம் மிகவும்நண் ணினனால். 129
ஆங்குஅவ் வாறதாய் மாலையைக் தொடுத்துவைத்து ஆழ்வார்
நீங்கு காலையில் நாடொறும் நிர்மலக் கோதை
தேங்கு ழற்கணே அணிந்துகண் ணாடிநேர் கணெற்றில்
பாங்கி னோடுஅழ குணர்ந்துஅதைப் பண்டுபோல் வைப்பாள்.-130
குந்தை அச்செயல் உணர்ந்திடாது அதைப்பின்பு தகவாய்
வந்தெ டுத்துப்போய்க் கொடுப்பவை வடபத்ர மாலும்
சந்தை இன்புற அணிந்துஉளம் ஆனந்தம் சேர்வன்
இந்த வாறதாய் நாள்தொறும் இயலும்அந் நாள்வாய்; 131
உவரி போல்நிற வடபெருங் கோயில்உள் உறைவோரன் :
புவனி மங்கையாள் கோதையாம் திருப்பெயர் பொருந்தி
அவத ரித்துதற்கு இயற்றுறு கயிங்கர்யம் அதனை
cots ஞம்தெரிந்து உணர்வகை புரிகுவான் எண்ணி; 132
வடபத்ரசாயி நாச்சியார் சிறப்பை உலகுக்குணர்த்தல்
ஒருதி னம்பெரி யார்கொணர்ந்து உதவுபூங் குடலை
இருக ரங்களால் அருச்சகர் இனிதொடும் ஏந்தி
மருவு’ மாலையில் ஒன்றுஎடுத் திடலும்மற்று அதின்ஓர்
கருமயிர்தெரி வுறும்வகை காண்குவித் தானால், 133
காண்ட லும்அதைச் சாத்துறாது அர்ச்சகர் கருத்தில்
ஈண்டு இதன்இடை பங்கிஉற் நிடுதலால் எவரோ
பூண்ட மாலையைப் போன்றுளது எனஜயம் பொருந்தி
ஆண்டு உறும்பெரி யார்முகம் அமைவுற நோக்கா; 134
அர்ச்சகர் செயல்
அய்ய இக்கரு மயிர்தனைக் கண்டிரோ? அதலால்
செய்ய மாலையும் கசங்கியது; இச்செயல் இதனுக்கு
எய்த வேணகா ரணம்எனோ? உணர்கிலன்; இதனைப்
பைய ராஅணை யார்தமக்கு அணிதல்பண் பாமோ? 135
தீதி லார்கள்கொண்டு ‘அடைதலில் இம்முறை சேரின்
ஓதும் மற்றவர் கொணர்வதை என்என உரைப்பேன்?
பேதை யேன்நினது அடிக்குஅப சாரமே பெறினும்
ஈது மாதவர் தமக்கு௮ணி குதல்இழி வாமால். – 136
அல்ல வென்றுநான் அணிந்திடில் பவம்தனக்கு ஆளாய்
தொல்லை மாநர கம்தனில் தொடர்ந்துற அழுந்தி
எல்லை யில்லதாம் காலம்.ஆங்கு எய்திடல் வேண்டும்;
நல்லை நீ௨ண ருறாததை அடியன்என் நவில்வேன்? 137
ஆய வாற்றினால் யான்இதை அணிகுவன் எனஇம்
மாய ஸனார்மனம் உகப்பினும் மனம்அறிந்து அடியேன்
நேய மோடுஅணி வித்திலன் எனதில மிசைஅத்
தூய மாமலர்க் குடலையைச் சோரவிட் டனனால். 138
மாயனார்
உகப்பினும் அணிவியேன் என்றது அர்ச்சகரின் திருத்தொண்டின் உறைப்பைக்
காட்டுகிறது,
எடுத்த மாலையோடு அம்மலர்க் குடலையை எதிரில்
கடுத்த மாமுகத்து அருச்சகர் புவியிற்காண் குறவே mo
விடுத்த வாறும்அங்கு அதுதுவண்டு ஒருமயிர் விளங்க
அடுத்தி ருந்ததும் அகமுறப் பெரியரும் அறிந்தே; 139.
வடுவில் அம்புய. மலர்முக மண்டலம் வதங்கிச்
சுடுகை .யாய்மனம் பதைத்திடத் துடைகளும் கரமும்
நடுந டுங்கிட மேனியும் குலைந்திட நலியும்
கடுவுண் டார்களின் உடலுயிர் கலங்கிடக் கரைந்தான். 140
வெருவ. லோடுவீழ்ந்து அழுந்திய வெந்துயர்க் கடலை
ஒருவி தம்கடந்து அக்கணம் விரைவினில் ஓடித்
தெரு௮ கன்றுநந் ‘தனவனம்: அதனிடைச் சேர்ந்து
மருவு றும்மலர் தேடிஉள் ளனமறித்து எடுத்தே; டட மதிரி–141
சரங்கள் தம்மொடும் தார்தொடுத்து ஆலயம் சார்ந்து
தரங்க மாக்கடல் வண்ணருக்கு அருச்சிப்பான் தன்பொற்
‘கரங்கள் தன்னில்௮க் கடிமலர்க் குடலையை அளித்திட்டு
இரங்கு உளத்தொடும் அவன்தனது எழில்முகம் நோக்கு; 142
அடியன் நெஞ்சறி யாமல்இங்கு அடுத்துஉள தாகும்
கொடிய தீவினை யாவையும் உளம்கொளாது அருளி
நெடிய நாரணற்கு இங்குஇகை நேரம்எய் இடுமுன்
கடிது சாத்திட வேண்டும்என்று இருகரம் குவித்தான். 143
அனைய மாலையை வாங்கிஅவ் அரவுஅணை அமலன்
புனையு மாறுஅணிந் தருச்சகன் உலகெலாம் புகழும்
வினையி லான்முக மண்டலம் நோக்கியே மீட்டும்
இனைய மாமொழி தனைஎடுத்து இயம்புவான் நன்றே.144
அய்ய! கேட்டருள்; ஐயுறேல்; நின்னொடும் அடியேன்
பொய்ய தாம்மொழி புகல்கிலேன்; புகலும்இங்கு இதனை
மெய்ய தாம்என உணர்தி; மேனாளிடைக் கொணர்ந்த
செய்ய மாலைகள் போன்றில பின்பின் னாளாய்; 145
கொணரு மாலையில் வதக்கமும் கசக்கமுங் குறுகி
நணுகு மாங்குஅதை நவின்றிடில் நல்லுளத்து என்என்று
உணர்வை யோள௭ன்றும் உனதிடத்து என்அப சாரம்
அணுகுமோ என்றும் அறிவியாது இருந்தனன் அன்றே, 146
அந்த மாலைகள் துமைஅவர்க்கு அணிந்துவந் துதனால்
சிந்தை ஊடுஅதை இன்றுநீ தெளிந்தனை அலவோ?
இந்த வாறுநம் மாலையின் எய்துமாறு ஓதி
வந்தது என்2அதை வகுக்கஎன; மற்றுஅவன் வகுப்பான். 147
விளங்கு மாலைகள் தமைஎன்றும் ஓர்விதம் பெறவே
வளங்கொ ஸும்படி தொடுத்துஇவண் வருவன் மற்று அதனில் ‘
களங்கம் உள்ளதுஎன்று உணர்ந்திலன் கண்டிலன் என த்தன்
உளங்க லங்கிஆ ராமையி னோடுஉரைகத் தலுமே, 148
கேட்ட லோடும்உள் இரக்கமாய்ப் பெரியரே ! கெழுமும்
வாட்ட மோடுஉளம் வருந்தலீர்।| இனிபுனை மாலை
-ஈம்டல் எச்சரிக் கையினுடன் இயற்றுக என்றுஇயம்பி வீட்ட கம்தனில் அருச்சகன் மேவினன் அன்றே. 149
(வேறு)
ஆழ்வார் தானும் கிலேசமுடன்
் அரவின் அணையின் மிசைடடந்து
வாழ்வாய் உனது திருவிளையாட்டு
ஆமோ? மறித்துஉன் இருவடிக்குத் தாழ்வாம் கருமம் புரிந்துளனோ?
எனத்தாள் வணங்கி இவ்வாறு –
சூழ்வார் எவரோ? எனதநினைத்து வ
திருமா ளிகையில் தொடர்ந்தடைந்தான். 150
ஒப்பாய் எடுத்து உரைப்பதனுக்கு
ஒவ்வாத் துயர்உற்று உளந்தன்னில்
இப்பூங் கூடை தனைத்தாரோடு
இருத்தி உலாவல் தனசக்கெய்தும்
அப்போ தேதா வதுசங்கை
அடைதல் உளவோ? அங்குஅதனைத்
குப்பாது உணர்தல் வேண்டும்என
நினைந்துஅன்று இரவைத் தான்கழித்தான். 151:
உண்மை தெரிந்தது
மறுநாள் அருணோ தயத்துஎழுந்து
வாவி நீர்தோய்ந்து ஆதவனுக்கு
உறும்௮க் கடன்கள் விதியின்மூடித்து
ஒளிர்நந் தனமா வனம்அணுகி
அறுகால் முகர்முன் பரிவட்டம்
அதனை நாசி தனக்கு௮ணிந்து நறுமா மலர்கள் எடுத்துஅகத்தில்-நண்ணி அலங்கல் தனைத்தொடுத்தே; 152
நாசிதனக்கும் பரி
வட்டம் அணிந்து ஆழ்வார் மலர் கொய்வார்.
**தமது நாசியில் வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தால் கட்டிக்கொண்டு
வண்டுகள் மொய்த்து எச்சில்படுத்தா முன்னமே திருவுகிர் படாதபடி, பக்குவ
மாகக் கொய்து, இருப்பூக் கூடையிற் சேர்த்துக் கொண்டுவந்து, பிணையல்,
கண்ணி, கோவை முதலாகப் பலவித மாலைகளாகக் சுட்டிக்கொண்டு டுபோய் வட
பெருங் கோவிலுடையானுக்குச் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்’” என்ற குருபரம்
பரை (பன்னீராயிரப்படி) நோக்குக.
என்றும் இருத்தும் இடந்தன்னில் இருத்தி உலாவற்கு .எய்துவன்போல்
அன்றும் எய்தி ஓர்இடத்தில்
கரவாய் அதனைப் பார்த்திடலும்
சென்ற தாதை ஒளித்திருத்தல் தெரியாள் தொல்நா ளைப்போல
மன் றல் கமழ்பூங் குழற்கோதை :
மருவார் அலங்கல் தனைஎடுத்தே;: 153
கோதையாரின் அச்சம்
அளகம் தனிலும் மார்புஅகத்தும்
அணிந்திட்டு அதன்பே ரழகுஉணர்வான்
புளக: மொடும்கண் ஸணாடியுறும்
இணற்றில் பொருந்தி நிழல்பார்க்க
உளம்உட் புழுங்கப் பெரியாழ்வார்
அதுகண்டு ஓடி வரலும்மனம்
இளகிக் கோதை வெருவலொடும்
இருகால் கரம்மெய் நடுக்குறவே; 154
சூடி யுறும்௮ம் மாலைஎலாம்
துரிதத் துடனே வாங்கி௮அப்பூங்
கூடை யுறவைத்து அதன்அருகில்
குருதி வாள்போல் செவ்வரிதோய் ஓடை மலர்க்கண் நித்திலங்கள்
உதிர்தல் தனைஒத்து ஒழுகிடுநீர் ஆடை நனைந்து . புவியினில்வீழ்ந்து
ஆறாய்ப் பெருக அழுதுநின்றாள். 155 ,
ஆழ்வார் மொழிகள்
விம்மா அழுதல் தனைநோக்கி
விட்ணு சித்தன் மனம்இளகி,
அம்மா! கிளியே! மடமயிலே!
அனமே! குயிலே! ஆரமுதே!
இம்மா அலங்கல் அரவணைமேல் :
எழிலார் திருக்கண் வளர்ந்தருளும்
நம்மா தவனுக்கு அணிவதுஎன
நாடாய் கொல்லோ! என்நினைந்தாய்? 156
அடியேன் புரிந்த தவப்பயனால்
அமுதத்து எழுந்த திருமகள்போல் கடியார் துளவந் .தனில்உ தித்தாய்/
காலி மேய்த்து வரைஎடுத்த
வடிஆ மியனும் எனக்கு௨ன்னை
மகளாம் என்னும் வகைபுகன் றான்;
படிமீது ஒருவர் நிகர்இலைஎன்று ‘ .
இருந்தேன்; பெற்ற பயன் இதுவோ? _ 157
புதனைப் பயந்தோன் நிகர்முகத்தாய்। –
புவியில் பலவாம் உயிர்பூப்ப
மதனைப் பயந்த மாயவற்கு
வனைந்து கழிக்கும் மருமாலை
– அதனைப் புனைய லாம்யாம்;யாம்
அணிமா லைகள்அங்கு அவர்க்குஆமோ?
இதனைத் தெளிய நினக்குஒருவர்
இயம்பக் கேட்டும் உணராயோ? 158
என்ன கருமம் புரிந்தனை? இம்
முறையார் இழைப்பர்? எவர்களுக்கும்
பன்னும் அறிவு விளங்குமுறை
பகரும் தகைமை உனக்குஉளதே!
துன்னு மதியும் மமுங்கினைகொல்/
துலங்கா மதியார்க்கு ஒவ்வுசலாம்;
இன்ன புரிதல் நின்போல்வார்க்கு
ஒவ்வா ஒவ்வா ஏந்திழையேர 158
மனங்குளிரச் செய்தார்
இவ்வா றாக நன்மையொடும்
பலநன் மொழிகள் எடுத்துஇயம்பி
வெவ்வாட் கண்கள் ஒஓழுூடும்நீர்’
முத்தம் துடைத்து விளம்பிஅவள்
ஒவ்வா மதியின் முகம்தடவி
உச்சி மோத்திட்டு உறத்தழுவி
செவ்வே அவள்தன் மனங்குளிரச் செய்து மறித்துஇங்கு இதுசெய்வான்: 160
நந்த வனம்பேர்ய் மீதியுள
‘நறுமா மலர்கள் தனைஎடுத்து –
வந்து சிறந்த மாலைகளாய்
வகுத்துஅங்கு அதனைக் கொடுசென்றே
சிந்தை கலங்கிக் கொடியவிடங்
கரின்வாய்ச் சக்கி யகப்பட்ட
தந்த மலைஅன்று அழைத்தபிரான்
தனக்குச் சமர்ப்பித்து அகம்சார்ந்தான், 161
திருமால் கனவில் கூறுதல்
அன்றை இரவில் பெரியாழ்வார்
அமுதம் பருகத் இருவணைமேல்
சென்று மலர்க்கண் வளர்பொழுதில்
. திருமால் அவன்தன் கனவினிடைத்
துன்றி யுததி யுடைபுவிமான் நமக்குச் சொலும்பா மாலையொடும்
மன்றல் மாலை கயிங்குரியம்
வகுப்பான் துளவின் உற்பவித்தே;. 162
உனது மகளாய் வளர்கின்.றாள்;
உவளும் இந்நாள் உவப்பினொடும்
தனது குழற்கண் அணித்துநிழல்—ணாடி தனில்உணர்ந்து மனது மகிழ்விற் கழித்தருள்பூ மாலை அதனை நீகொணர்ந்து
இனமும் அளித்தாய்; அதுநறவம்
இகழ்ந்திட்டு அழகும் சிறந்துளதால். 162
அன்ன அழகார் அலங்கலையாம்
அணிந்துஆ —
நென்ன லொடுஇன்று அவள்அணியா
வெறுமா லையினை நீகொணர்ந்தாய்!
இன்ன அலங்கல்: நனிநறவ
முடனே எழில்என் பதுிறிதும்
துன்ன விலை;அங்கு அதனால்எம் —
உ.ளமும் உவப்புத் தோன்றிலதால். 164
ஆத லால்பின் னாள்முதலாய்த்
தொடுக்கும் அலங்கல் தனைஎல்லாம்
தீதி லாநின் திருமகளாய்த்
இகழ வளர்அம் . புவிமாதாம்
கோதை குழலில் அணிவித்துஆங்கு
அவள்பின் கழித்துக் கொடுக்கஅதை
நீதி உடையோய்! கொணர்ந்தளித்தி।
எனஆங்கு அதனை நிகழ்த்தினனால். 165
அத்த கவின்அவ் வில்லிபுத்தூர்
எனும்மா நகரின் அமர்ந்துறைவோர்
சித்த. மகிழ்வை ணவரர்ச்ச
காதி யரசர் முதலனைத்துக்
கொத்து தனக்கும் பாலர்முதல்
குரவர் ஈறாய் யாவர்கட்கும்
குத்தப் கனவில் உணர்வகையாய்ச்
சாற்றித் தன்துஆ லயம்சார்ந்தான். 166
களையுற்று இரங்கு நள்ளிருளார்
் இரவும் துயிலும் கழிந்துஅகல நினைவுற்று உணர்ந்து காலையின்வாய்
நியமம் முடித்துஅங்கு எவர்களும்தம்
மனைவிட்டு எழுந்து வீதியின்வாய்
-வந்துஅன்று இரவில் உணர்கனவு
தனையுற்று ஒருவர் ஒருவரொடுஞ் சாற்றி மிகஅற் .புதம்அடைந்தே;. – 167
பெரியாழ் வார்தன் ம௫ூமையும்ஆங்கு
அவர்பெண் கோதை மகத்துவமும்
தெரியாது இருந்தோம் இந்தாள்வாய்; ்
தெரிந்தோம் இன்றுஇங்கு இவர்தமைப்போல்
வரியார் அரவின் அணைமிசைகண்
வளரும் Boar ரணன்பதங்கட்கு
உரியார் யாவர்? என எவரும் .
உவந்து போற்றித் துஇசெய்தார். 168
சூடிவழங்கினாள் ‘சுந்தரக்கோதை
அந்நாள் முதலாய்த் தொடுத்திடும்பூ ் ‘ அணியார் அலங்கல் தனைளஎல்லாம் |
மூந்நாள் தனைப்போல் கோதைகுழல்
் முடித்துக் கழித்துக் கொடுப்பஅதைப்
பொன்னாம் மடந்தை ஒருபுறத்தும்
புவிமாது ஒருபா லினும்பொருந்தப்
பன்னா கணையில் துயில்முகுந்தற்கு அணிந்தார். அவரும் பரிவடைந்தார். 170
ஆடிக் களிக்கும் பணஅரவின்
அணைமாற்கு அணிபா மாலைதனைப்
பாடித் தருமுன் அணிஅலங்கல்
அணிந்தஇிட்டு அளித்த பரிசுஅதனால்
வாடி.த் துவளும் கொடியிடைசேர்
கோதை எனும்அம் மடவாட்குச்
சூடிக் கொடுத்தாள் எனும்ஒருபேர்
அதுவும் துலங்கப் பொருந்தியதால், 170
கோதை காதல்
(வேறு)
அம்மா. நகரில் பெரியார்
மகளாய் வளர்அம் புவிமாது
இம்மா முறையில் புகலும்
இருபே ரடனும் வளர்நாள்
நம்மால் நவிலற்கு அரிதாம்
பரம பத்தி நாளும்
விம்மா வரியை யணையும்
. பருவம் உடன்மே விடலும்; 171
பாராய் வானாய் நரகாய்ப்:
பகரும் பலவாம் உயிரின்
வேராய் முளையும் வித்தாய்
விளைவிப் பவனும் தானாம்
நாரா யணனைத் தழுவும்
வகையா தெனவே ஒருநாள்
சீரார் உள்ளத் தனில்அங்கு அவளும் சந்இத்து உணர்வாள். 172
அளகம் தனில்யாம் அணியும்
மணிபூந் தொடையாம் அதனைப்
புளகம் முடனே அணிசெய் க
அரவத்து அணையிற் பொலியும்
களவின் கனிவண் ணனுமர்ச்
சாரூ பமதா கையினால்
இளகும் மனதோடு அவரைப்
புணர்தற் இசையா ததனால்; 173
இதனுக்கு இசையும் படியாம்
்.. என்செய் வோம்என்று உணர்கானள்
மதனிக் குவில்கொண்டு எறியும்
.. மலர்ஐங் கணைவந்து உருவ
விதனத் நுடன்உற் றிடும்௮அவ்
விரகம் பலவும் தனிநெஞ்சு
அதனுக்கு குள்ளே பிறர்கண்டு
அறியாது அடைவுற் றனளால். 174
உபாயம் தேடல்
இருமா லினையாம் அணையும்
செயல்யார் புரிவார்? என;௮ப்
பெருமா நகர்வாய் மடவார்
அவரிற் பெரியா ராகி
வருகா ரணமும் நிகழ் அவ்
வகையும் செலும்கா ரியமும்
அருகாய் கண்டுஉற் றவர்போல் அறைவார் தம்மைத் துடரா; 175
அவரோடு இவளும் மகிழ்வாய்,
அம்மா நீவிர் .புவிமேல்
துவர்வாய் மடவார் உருவாய்த்
தோன்றுற் றவர்கள் தம்மில்
எவரா யினுமுன் னொருவர்
இறைவா யரவிற் றுயிலும்
உவரா மியின்வண் ணரினோடு
உறவாய்க் கலந்தார் உண்டோ? 176
உண்டாம் .எனில்இங்கு என்னோடு
ஓளியாது உளவா றுங்கண்
— அதையும் அலது
காதில் கேள்வி தனையும்
வண்டார் குழலீர், பகர்வீர்.
எனவே .கோதை மடவாள்
தண்டா மரைநேர் வதனம்
கவினச் சாற்று தலுமே; 177
திருப்பாவை உதயம்
அம்மா! கோதாய்!/ கேளென்று
அறியும் கதையாம் எனவே
தம்மா மனம்இன் புறவங்கு
அவர்தாம் இதுசாற் றுவரால்:
எம்மா உலகும் புகழ்ஆய்ப்
பாடி எனுமா நகரில்
நம்மால் கண்ணன் எனவே
நந்தன் மனையில் வளர்நாள்; 178
அனம்ஓத்து இளமா நடை-சேர்
ஆயக் குலமா மடவார்
கனம்ஓத்து இருள்௮ங் குழலும் கலையும் கலையச் சயிலத்
துனம்ஓத்து அணிமார்பு இறுகக், ‘
கரமா மலரில் தழுவி
மனம்ஓத்து அவரைக் கலவா
மருவிற்று உண்டுஎன் றனரால். 179
கோதையின் ஏக்கம்
என்றுஅங்கு அவர்சொன் மொழிவந்து
இருசெஞ் செவியில் குறுக
மன்றல் கமழும்: குழலங்
கோதை மனது மகிழ்வாய்
அன்றங்கு அவர்கள் புரியும்
விரதம் என்னோ? அதனால்
குன்றம் குடைகோ வலனைக்
கூடிச் சேர்ந்தார் கொல்லோ? ் 180
. என்னோ? அதனை இனதுஎன்று
எளிதா நெஞ்சே! உணரேம்;
அன்னாள் தனில்ஆய்ப் பாடி
அதனுள் பிறவாது ஒழிந்தேம்;
பொன்னாள் அணையும் புனிதன்
நமைஓர் பொருளாய் நினையா
இந்நாள் தனில்ஓர் உருவம்
எடுக்கும் தகவுஎய் இடுமோ? | ் 181.
நந்தன் மனையா ஞூடனே-:
நயனம் மகிழ்வுஎய் துறவே
அந்தத் திருவாய்ப் பாடி அதனில் கண்ணன் எனவே
வந்துஅத் திருநா ரணனும் வளரும் அந்நாள் தன்னில்
இந்தப் புவி௮ங்கு அவர்தம்
இருதாள் மிதிபட் டுளதால். 182
மெருகுற் றுளஅந் நிலமும் மேகம் பொழிகல் மழையால்
விருகத் இனமோ டிடையர்
மிகவும் தளர்வுற்று அலறப்
பரிவுற் றவர்கை விரலிற்
படியும் படிகொண்டு அழகாய்
தரிபொற் குடைஓத்து ஒளிரும்
கோவர்த் தனமா வரையும்; 183
மண்ணார் அளகம் குதிகால்
மருவப் பெருகி வளர்ஆயப்ப்
பெண்ணார் அமுதம் அனையார்
உடனே காமம் பெருகப்
பண்ணார் குழலார் மருவிப்
பரிவின் விளையா டிடும்அத்
தண்ணார் புனலின் மணியார்
எமூனா நதஇித்தண் கரையும்; 184
மற்றும் விளையாட் ‘ட்வர்செய்
வகையால் அமைமற் றதுவும்
a. Hong ஒளிரும் அதனால்
உளதாம் பலவும் காணப்
பெற்றுஅங்கு உறுவா னுளமுள்
பெருகும் காதல் வளரா
இற்றைப் பொழுதே’ அடைவேம்
எனவே அவளுற் றெழலும்; : ் 185
கவசத் தொடுகுண் டலம்நல்
தருமங் சுவருங். கருடத்
துவசத் தனன்மீது அமையும்
– விரகத்து எழுவெந் துயரால்
அவசத் துடனே. யுடலம்
அயர்வாய் கைகா லவைதன்
சுவசப் படலுற் நிலதாய்ச்
சோர்வுற்று அவண்தின் றனளால். 186
நின்றாள் நிலமீது அசையா
நிலைபெற் – நிடும்ஓ வியமாய்
தன்றாள் தரைபா .வாமற்
; றளர்வா யசைவுற் றுளமுள்
துன்றா விதனம் துன்றக்
கனலில் துவள்பூங் கொடிபோல்
குன்றா உடலம் குன்றக் குறியா இவைஉன் னுவளால். 187
**இனி, அவன்
உலாவிப் போன அடிச்சுவடும், அவனும் பெண்களுமாகத் திளைத்த யமுதையும்,
“அவன் எடுத்த கோவர்த்தனமும் கிடைத்ததாகில், அவற்றைக் கண்டாலும் ‘தரிப்போம் என்று பார்க்க” என்ற திருப்பாவை வியாக்கியான அவதாரிகை
கோதை நினைவு
கனகம் மணியால் அமையும்
கனமார் மதில்கசுழ் மிதிலைச்
சனகன் மடமா மகளாம்
சனிப் பெயர்சேர் திருவும்
பனகம் துயில்விட்டு அணிரா
கவனாய்ப் படியில் வரும்௮வ்
:- அனகன் தனைக்கண் டமையா
விரகம் அதுகொண் டனளால். 188
தனதத் தனுரைப் படிபோற் சயிலத் தினைஒத்து ஒளிரும் கனவில் தனையம் புயம்நேர்
கைக்கொண் டணிதோள் வலியால்
குனிவிடுத் திடுபின் பவரைக்
கூடுஞ் செயலுண் டெனவே
– மனதில் துணிவாய் தயிர்யம்
வைத்தங்கு உற்றா என்றே. 189
பொன்னைத் தழுவும் புனீதன்
புவியில் கண்ணன் எனவே
முன்னைப் பகலின் வருநாள்
காணா விரகம் முடுகும் பின்னைப் பெயர்கொண் .டிடும்௮ப்
பிராட்டி தனையே மிடபம்’:
தன்னைத் தழுவி அடக்கித் தழுவும் திறம்உற் றனளால். ட… 190
உள்ளஞ் சோர்ந்தாள்
நாம்என் வலிமை அதனால்
நணுகுற் நிடவே கொடிய
“காமன் புரியும் விரகம்
களைவோம்? எனவே மனதுள்
காமம் துடர்வா ரவர்போல்
.உரையாது அதனை அடையாத்
தாமம் கமழும் குழலாள்
தளர்வாய் உள்ளஞ் சோர்ந்தாள்: 191
சோர்வுஉற்் றிடும்௮அங்கு அவள்தன்
மனதுள் துடர்பைக் குறியால்
தேர்வுஉற்று உணரா இவரில்
பலவும் தெரியும் பெரியாள்
நீர்வற்று இளமைப் பயிரில்
நிறைகார் பொழிகின் றதுபோல்
ஆர்வத் துடன்இம் மொழியை அவள்தே நிடஅங்கு அறைவாள்: 192
ராஜன் திருமகளைப் போல வில்” என்று ஒரு அவதி பெறுதல்; நப்பின்னைப்
பிராட்டியைப் போலே ‘ரிஷபங்கள்” என்ற ஒரு அவதி பெறுதல் செய்யப்பெறாமை
யாலே மிகவும் தளர்ந்து” என்ற திருப்பாவையின் அ௮வதாரிகை
(வேறு)
முன்னர்நாள் தன்னில் கோவியர் பலரும்
முயன்றுள விரதமும் அதனைத்
” துன்னுமாறு இழைக்க விடுத்தகா ரணமும்
சூழ்ந்ததற்கு அவர்கள்செய் உபாயம்
தன்னையும் இவ்வாறு. எனத்தெளி வுறஅச்
சரிதங்கள் நடந்துள படியே
பன்னுவன் அதனைச் செண்பகக் கோதாய்/
பரிவொடுங் கேட்டுஉளம் உணர்வாய். 193
கோவியர் காதல் நோன்பு
விரிகடல் உடையாய் அணியும்அம் புவியாம்
மின்அனாள் பரம்தொலைத் தஇிடுவான்
.வரிஅர வணையில் துயிலும்நா ரணனும்
கண்ணனாய் வளரும்அந் நாள்வாய்
பரிவொடும் அவன்தன் விரியுரம் அதனைப்
பாடிவாழ் கோவியர் பலரும்
சரிகரம் அதனால் இறுகுற முலையில்
தழுவியே அனுபவித் திருந்தார். 194
விரி உரம் – விரித்த மார்பு.
சரிசுரம் – வளையல் அணிந்த கை. “அங்கைச் சரிவளையும் நாணும்” என்பர் பெரி
யாழ்வார்.
கமுதுயர் முலைகொள் விடமுடன் அருந்தும்
கண்ணனைத் தம்துமா மடவார்
தழுவுமாறு அவர்தாம் நடந்துள குறிப்பின்
சாயலால் உணர்ந்தகோ பாலர்
இழுதுஎன உருகா .இவர்புரி வதுதநம்
குலம்தனக்கு ஓக்குமாறு அலதாம்
பழுதுறும் பிறர்தாம் உணர்ந்துிடில் எனவே
் பதைபதைத்து உளமுற நினைந்தார். 195
அவ்ர்கள் என்கொல்யாம் இதற்கும்
நிரப்புவது எனஒரு விதமாய்
அனையமா மடவார். தமையெலாம் அங்கங்கு
அவரவர் அணுகும்ஓர் பகலில்
தினையளவு உறும்௮ப் பொழுதெனும் பிறர்பால்
செல்லொணா வகையதாய்த் தத்தம்
மனையிடைப் பதன மாக்கஅ௮க் கண்ணன்
மருவுறா வகையின்வைத் தனரால். ” 196
வைத்தபோது அந்த மடந்தையர் காமம்
மருவுறு பருவநாண் முதலாய்ச்
சித்தசன் கணையுள் ளஎகப்படா வண்ணம்
சேர்ந்துதம் கொவ்வைவா யமுதம்
நித்தமும் அருந்துங் கண்ணனை அந்நாள்
‘நெருங்குறா வகையில்தம் உள்ளம் * –
பித்தரின் மயங்கிப் புரிகல்தோன் மல் பெருந்துயர்க் கடல்உழந் தனரால். — 197
எண்ணரும்’ துயர்கொண் டிடுமட வார்்அ௮ம்
எழிலிபோல் நிறக்கண்ண னஸார்தம்.
வண்ணமா முகமண் டலத்தின தழகும்
மங்கலக் குணஅதி சயமும்
பண்ணமை குழல்சேர் பவளவாய் ஒளியும்
பாங்குடன் உற்றனு பவித்துக்
கண்ணினால் காண்பது என்றுகொல் எனவே
கருத்துற நினையும் அக்காலை; 198
ஆங்குஅவர் பலரும் ஒருதினம் பிறர்தாம்
அறிவுறாது ஓர்இடத்து அணுகி
ஈங்குஇதற்கு யாம்என் செய்திட லாம்என்று
எண்ணுறும் தத்தம துணர்வைப்
பாங்குற ஒருவர் ஒருவரொடு உரைத்து
வினவும்அப் பரிசுஉணர்தந் தவரில்
தீங்கிலாள் ஒருத்தி மற்றவர் தமக்குத் தெரியவோர் உபாயம்செப் புவளால்: 199
கொம்மைமா முலையீர்। சகடுஇற உதைத்துச்
குன். றினால்: கல்மழை தடுத்து
வெம்மைசேர் பாந்தள் பணமிசை நடித்து
வெவ்விடப் பேய்முலை அருந்தி
நம்மைஆ ஞடைய தகைமையிற் பெருகும்
நந்தகோ பன்இரு மகனை
மும்மையாம் உலகும் ஈன்றுகாத் தழிக்கும்
மூவர்க்கும் முதல்வனே. எனலாம். 200
ஆதலால் அவனால் அமைகலாக் கருமம் —
யாதொன்றும் இலை;அவன் அருளால்
பூதலம் அதன்மேல் சிலபகல் வானம்
பொழிகிலாது அமையுமாறு உஞற்றில்
சீதளம் அடங்கி வெம்மைமேல் எழுந்து
செழிப்பெலாம் தீய்ந்தழிந்து ஒடுங்கும்;
போதவா ஸிரைநொந் தருந்துநீ ரொடுமேய்
புல்லுமற் றல்லல்எய் துறுமால். 201
அத்தகவு அமையின் இத்திரு நகரத்து
அணுகுறும் தலைவர்கள் பலரும்
சித்தம்நொந் தவராய் நமதுஇடத்து அணுத் திருந்துநல் லுரைபல புகன்று கத்தினம் செழியு மாறுவான் பொழியக்
கவின்பெறு வருணநோன்பு அதனை
ஒத்துஇழைத் திடுமின் எனஉரைத் திடுவார்
அதற்குநாம் ஓத்துளோம்; ஆனால், . 202
“அனையமா, விரதம் வழுவுறாது உளுற்றல்
அன்றுஇளங் கன்றினைச் சுழற்றி
நனைவிளா எறிந்த கண்ணனை அலது
நடந்திடாது ஆதலி னாலே
இனையவ ரொடுசென் றனையகா ரியம்நீ
முடித்திட வேண்டும்என்று அன்னான்
தனையவர் (வேண்டி நல்லுரை புகன்று : தம்முடன் சார்கென விடுப்பார். .203
விடுத்திடில் அவனோடு அடைந்துஉரை செயும்அவ்
விரதமும் வழுவுறாது இயற்றித் தொடுத்தஎண் -ணமும்நாம் முடிக்கலாம் எனஅத்
தோகையாள் உரைத்தல்கேட்டு அதனுக்கு
அடுத்ததன் மையைநீ உரைத்தனை எனஆங்கு
அனைவரும் அவள்தனைப் புகழா
எடுத்தபே ௬வகைக் கடல்படிந் தவராய்
இன்னதே முடித்தும்என்று இசைந்தே; 204
அனநடை மடவார் அனைவரும் ஒருமித்து
அலர்க்கரம் குவித்துநீர் அருந்துங்
கனநிற வணம்சேர் கண்ண[இந் நாட்டில்
கலந்துகார் மழைபொழிந் இடுது;
நினதுபே ரருளால் சில்பகல் பொழியாது ஒழித்திட நீசெய்க! என்றே மனதுற நினைந்து துதிசெய்து தத்தம் மனைதனிற் கலந்துஉறைந் திருந்தார். . 205
கண்ணனும் அருளார் இதயமா மலருள்
கனதனக் கொடியிடைத் துவர்வாய்
பண்ணமை இளஞ்சொற் கிளிஅன மடவார்
பரிவொடும் தனதுதாள் மலரை
எண்ணிவேண் டுறும்௮வ் வாறுஉணர்ந் தருளி
இனிதொடும் ஆங்குஅவர் குறித்த
வண்ணம்அந் நாட்டில் சலபகல் வானம் ்
வழங்கிடா வகைபுரிந் தனனால், 206
மழையிலாது ஒழியப் பெருகும்௮க் குளங்கள்
மருவுநீர் சுவறியே பசும்புல்
கதுழைவிலாது எரிந்து. விடுதலால் நிரைகள்
தயங்கட இவ்வகை யுறும்அப்
பிழைஎனோ எனத்தம் முள்ளம் ஊடு எழுந்து
பெருகுறுந் துயர் அடைந் தவராய்
குழையுறு செவிநந் தனேமுத லாகும் , கோவலர் பலர்களும் குறித்தே; 207
குறைவிலாது எவர்க்கும் நிறையமா தானம்
கொடுத்தும்வான் பொழிகிலாது ஆக
மறையவர் இணை௮ம் . புயமல ரடியை
“வணங்கியே பின்னரும் .அவர்இம்
முறைமழை யிலதாய் ஒழிந்ததுஎன்? இதற்குயாம்
முயல்வதுஎன்? ,மொழிகுமின் எனவாங்கு
அறைதலும் அதனைக் கேட்டுறும் அவர்கள்
அரியநூல் முறைஎடுத்து அறைவார். 208
சேட்டுறு மதிநேர் திருமுகம் உடையீர்
இனகரன் .முதலிய ஒன்பான்
கோள்தவ றுதலால் வக்கிரித் இடலால்
குவலயம் அதன்மிசைக் குறியின்
நாட்டிடை வானம் பொழிந்திடாது எவரும்
நலம்பெற மழைபொழி வதனுக்கு
ஈட்டுறும் முறையும் இயம்புதும் கேண்மின்
என்னமீண்டு இவைஎடுத்து இசைப்பார்; 209
வாட்டொழில் நெடுங்கண் மடந்தையர் எனஇம்
மாநகர் மருவுவோர் பலரும் ்
கூட்டமுற்று எமுனா நதிக்கரை அருகில்
வருணனைக் குறித்துஒரு விரதம் சூட்டுறு மலரின் அருச்சனை முதலாம்
சோடச உபசரிப் புடனே
நாட்டிய முறையின் வழுவுறாது இழைக்கில்
நல்லன மழைபொழிந் திடுமால். 210
அவ்விர தத்த உளஞற்றிடாது ஒழியில் அகல்விசும் படைந்துகார் முகில்கள்
எவ்விதத் தேனும் ஓர்துளி வழங்காது
ஆயிடும்; இழைக்கும்ஆங்கு அதனுக்கு
ஓவ்வுறும் உபசா ரம்புரி குதலில்
ஒன்றெனும் வழுவுதல் உறினோ
இவ்வுலகத்தின் மழைத்துளி என்பது
இலாமையாய் முடிந்திடும்; இன்னும், 211
ததியுறு மணலுள் பெருகுநீர் அதுவும் நண்ணுறாது ஒழிவதும் அல்லால்
பதியுறு கணற்றுள் உறும்சிறு புனலும் பலித்திடா; அழல்கொளும்; அதனால்
சதிர்பெறும் அந்நோன் பினுக்கு௨று பொருள்கள்
தருவித்துப் பராமரித் இடற்கு மதியுறும் சர்வக் கியர்இருந்து அதில்ஓர்
வழுவுறாது இயற்றவேண் டிடுமால். 212
ஆதலால் இவ்வாறு இழைமின்என்று அவர்கள்
அறைதலும் ஆயர்கள் பலரும்
ஓதும்௮வ் வாறே புரிகுதும் எனஉள்
உவப்பொடும் விரைவினோடு எழுந்து
தீதிலா எமுனைக் கரையின்ஒர் சாலை
செய்வித்துஅங்கு அகனிடைத் தமது
மாதர்க ளானோர் தமையெலாம் நீர்போய்
மருவுமீன் எனவகுத் துரைத்தார். 213
அவ்வகை அவர்போய் அடைந்தபின்பு அவர்கள்
அவ்விர தந்தனை வழுவாது
ஒவ்வுறப் புரிவிப் பவர்கள்யா ரெனஆங்கு ட
ஒருவரை யொருவர்கள் வினவி .
எவ்வகை யவற்கு மொவ்வொரு செயலால்
இயைவுறா தெனவுநம் மிறையாஞ்
செவ்விசேர் நந்த குமரனால் முடியும்
என்னவும் சிந்தைசெய் தவராய்; 214
‘கண்ணனை வருவித்து அந்தணர். புகன்ற
. காரணம் பலவும்ஓர்ந் தனையால்
பண்ணுறு .மொழிநம் பாவையர் பலரும்
பரிவொடு புரியும்நோன்பு அதனுக்கு
எண்ணரும் பொருள்கள் யாவையும் வருவித்து
ஈந்துஒரு முறையினும்- வழுவா
வண்ணம்நீ நிறைவேற்று; ஆங்குஅடைந்து எனஉள்”
மகிழ்வொடும் வகுத்துஉரைத் தனரால். 215
அம்மொழி பலவும் இருசெவி உறவந்து
அணுகலும் ஆங்குஇடங் கொள்ளா
விம்முறும் உவகைக் கடலைஓர் கரைசெய்
விதம்பெற அகத்தினுள் அடக்கி
இம்மொழி களைஇங்கு என்னொடு நீவிர்
இசைத்தது நன்றுநன்று எனவே செம்மனம் அதனில் சனம்கொளும் அவர்போல்
சிலமொழி தெரித்திடல் ஆனான். 216
முன்னர்நாள் தனில்ஒர் களங்கமாம் அதனை
மொழிதந்திடற்கு இடமிலா உமது
கன்னிய ரொடுயான் கலந்துபே Au gave
பழியுரை கழறியும் மனைவாய்
அன்னமா மடவார் தமைநில வறையுள்
அடைத்துவைத் திருந்துவந்து இத்நாள் இன்னமா மொழிகள் இயம்பினீர் இதனுக்கு
இயைகிலன் எனஎழுந்து அகன்றான். 217
அகன்நிடு பொழுதுஅவ் வாயர்கள் பலரும்
அருந்ததி நிகர்அசோ தையின்சர்
மகன்தனை விரைவில் பின்துடர்ந்து ஓடி
வழிமறித்து அறிவிலாது அத்நாள் புகன்றுள எமது கொடியமா வசையாம்
பொய்மொழி யானவை பலவும்
மிகுந்திடும் புகழோய் உளந்தனில் பொறுத்தல்
வேண்டும்என்று உபசரித் தவராய்; 218
அய்ய[ என்பவரும்; அத்த! என்பவரும்;
அருந்தெய்வ மே([எனும் அவரும்;
துய்யபங் கயத்தா எளினைவரு டுவரும்;
துணைக்கர மலர்பிடிப் பவரும்;
. செய்யமோக். கட்டை தனைப்பிடிப் பவரும்;
செழுங்கரம் குவித்துவேண் டுவரும்;
வையமீது எதிர்வீழ் பவரும்ஆ யினர்அவ்
வகைஎடுத்து உரைக்குமாறு இலதால்: 219
இத்தகை பலவாய் வருந்திஆங்கு அவர்கள்:
யாவரும் அந்தணர் உரைத்த : ்
அத்தகை விரதம் தனைவழு வாமல் .i
அமைத்திட வேண்டும்நீ எனவே ்
சத்தமது இரங்கி உரைத்தல்கேட் டரூளிச்
‘சிறுநகை நிலவுஎழ அதனுக்கு ஓத்துஉளம் மகிழ்வாய் எமுனையின் கரைபோய்
உற்றனன் புற்றுஅரா அணையான். ் 220
ஆங்குஅடைந்து அந்நோன்பு அதற்குவேண் டுவதாம் அரும்பொருள் குறைவிலாது யாவும்
பாங்குற வருவித்து அவர்களால் இயற்றும்
பரிசெலாம் முறைவழு விலதாய்
தேங்குழல் மடவார் செங்கரம் அதனில்
திருந்து றப் புரிமுறை கதிரோன் வீங்குநீர் மேல்பாற் கடலிடை மருவி
வீழுறும் அளவும்ஆங்கு இயற்றி;–221
நள்ளிருள் அடையும் காலையில் எழுந்துஅந்
நதிக்கரை இசையுநல் லிடத்துஅக்
கள்ளவிழ் மலர்ப்பூங் குழலினர் பலர்க்கும்
ஒவ்வொரு கணவனாய் அவரோடு
உள்ளம்ஓத்து அணையா அவர்கள்வா ‘ யிதழ்த்தேன்
உண்டுஉழன்று: அழுந்திய காம
வெள்ளம்நீத்து அர்த்த ராவினில் தத்தம்
வீடுஅணைந்து உண்டுஉறங் குவரால். 222
மற்றநாண் முதல்அவ் வாறதாய் நந்தன்
மகனொடும் பாடியின் மருவும்
பொற்றொடி மகளிர் பலரும்ஆங்கு ஒருவர்
ஒருவரை புரிதுயில் உணர்த்தி
நற்றுரை யமுனா நதிக்கரை அணு
‘நலம்புரி நோன்டையும் நடத்தி
உற்றமை காமக் களிநற வருந்தி
யூர்புகுந்து அணிமனை உறைவார். 223
. இந்தநன் முறையே பலதினம் அவர்கள்
இனி9தொாடும் கண்ணனை அணைந்தார்;
அந்தநன் னாட்டின் வானமும். பொழிந்திட்டு
ஆனினங் களும்செழித் துளதால்;
முந்துநாள் நடந்த செயல்கள்இம் முறையாம்;
முழுமதி நிகர்முகக் கோதாய்[
சிந்தையூடு உணர்து என்னஅ௮ம் மடவாள் தெரிதரப் புகன்றனள் மாதோ. : . 224
பாவை நோன்பு
(வேறு)
கேட்டவம் மயிலின் சாயல்
கஇளிமொழி மடவாள் தானும்
வாட்டமுற்று உளத்தி னூடு மகிழ்சிறந் தோங்க அவ்வா
.மீட்டுதும் யாமும் என்றாங்கு
அவள்்இணை அடிகள் ஏத்தி
வீட்டகம் தன்னில் சென்றோர் தி
வினையமது இழைக்க லுற்றாள். 225
ந்ண்ணுசர் புதுவை என்னும்
நகரம்ஆய்ப் பாடி யாயும்
வண்ணமா மணிகள் ஆர்ந்த
வடபெருங் கோயில் தானே
விண்ணவர் புகழும் நந்தன் \
வீடதாய்க் கோவி லின்மால்
கண்ணனாம் எனவும் தன்சீர் கருத்துளே திருத்தி; பின்னும், 226
ஸ்ரீ வில்லிபுத்தாரே ஆயர்பாடியாகவும், அங்குள்ள பெண்களே
இடைப் பெண்களாசவும், தானும் அவர்களில் ஒருத்தியாகவும், வடபெருவ்
கோவிலே ஸ்ரீ நந்தர்கோன் தஇிருமாளிகையாகவும், உள்ளே நிற்ன்றவன்
இருஷ்ணனாகவும் அனுசந்தித்து’* என்ற திருப்பாவை வியாக்கியானம்
*சீர் புதுவை ஆயர்பாடியாகவும், வடபெருங்கோவில் நந்தன் வீடாகவும், அக்
கோவில் மால் சண்ணன் ஆகவும், தோழப் பூவையர் கோபாலர் மகளிராகவும்,
தான் அவர்களில் ஒருத்தியாகவும் பாவித்து, அம் மடந்தையர்களை எழுப்புவ
தாகவும் கருஇத் இருப்பாவையைத் திருவாய்மலர்ந்தருளினார்”-.. **அண்டர்
இருவாய்ப்பாடியாய்’” என்று தொடங்கும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
புனைமலர்க் குழல்சேர் தோழப்
பூவையர் புகழ்கோ பாலர்
மனைவிய ராயும் அம்மா
மடந்தையர் தங்கட் குள்ளாய்
தனைநிகர் தான்௮ லாதாள்
தானும்ஓர் மடந்தை யாயும்
இனையவாம் தன்மை யாக
நியமித்துஇங்கு இனிதி னோடும்; 227
அப்பெரு மடவார் தம்மை
அருந்துயில் உணர்த்தல் போலும்
செப்பரு வருண நோன்பு
செய்தபா வனைய தாயும்
இப்புவி தணிய வானம்
வழங்கிய தெனவும் பாவை
முப்பது கவிதைத் தந்தேன் தமிழினால் மொழிந்தா என்றே, 228
ஏழிரு புவனத் துள்ளும் இணையில்செந் தமிழின் பாவை
வாழிய உரைத்தும் அண்டம்
அனைத்தையும் வயிற்றுள் வைத்து
ஊழிகள் பற்பல் கோடி
உலப்பிலாது உறங்கும் செங்கேழ்
ஆழிமா யவனும் இன்புற்று அணுகிடா முறைமை தன்னால்; 229
நாச்சியார் திருமொழி நவின்றது
சித்தசன் தன்னை யன்னாள் இருந்துறப் போற்றி செய்து பைத்தலைப் பணியின் வாழும்
பரமனை யடியேன் தன்னோ
டொத்துவாழ்ந் திடுமா றாக
வுனதுகைக் கருப்பு வில்லில்
வைத்தபூங் கணையே வென்னா
வழங்கெள் கவீதை மாதோ, ‘ 230
“வித்தக வேங்கடவாணன் விளக்கினிற் புக என்னை விதிக்கித் நியே’* என்ற நாச்சியார் மொழியை நோக்குக (பதிகம் — தையொருஇங்களும்).
வேதாந்த தே௫கர் சங்கற்ப சூர்யோதயத்தின் தொடச்சகத்இல், “quant dada
ஜீவாத்மா என்ற அம்பைத் தொடுத்துத் திருமால் என்கின்ற குறிபார்த்து ஒருவன்
வில்லாளியின் நிலையில் இருந்து எய்தால் அந்த ஜீவன் அவன் இருமார்பில்
கெளவுத்துவம் போல் விளங்குவான்”’ என்றது அனுசத்திக்க வேண்டும். இதுவே
தையொருஇங்களின் உள்ளுறை.
ஆங்கணவ் வாற தாக
அனங்களை வேண் டலாகப்
பாங்குறு கவிகள் தம்மைப்
பாடலு மதனைக் கேளாப் பூங்கழல் திருமால் தானும்
புவீமிசை விரைவின் வந்தே
தேங்கமழ் குழலி னாட்குச்
சேவைதந்து அருளி னானால், 231
அன்னமால் அடைந்து சேவை
அளித்தலும் ௮ன்னம் அன்னாள்
இன்னதோ ரளவு மிங்ங
ணெய்திடா திருந்த செய்கை
என்னவென் றநுரைத்துச் சிந்தை
யிடையுறு வெகுளி பொங்கப்
பின்னரொன் றுரையா தூடற்
பிணக்குறு செய்கை யாளாய்; 232
வீழிவாய்க் குவளைப் பூங்கண்
விற்பிறை புருவ நெற்றித் தோழிய ர௬டனே இற்றில்
தொகுத்தவ ளஞூறைத லோடும்
தாழியாம் அதற்கும் வீடு தந்தகோ விந்தன் என்னும்
ஆழியான் அதனைக் தாள்கொண்டு
அழிவுறச் சதைத்தா னன்றே, 233
மற்றும்௮அச் செய்கை தேறா
மயிலியற் குயிலின் மென்சொற்
பொற்றொடி மடவாள் தான்அப்
புண்ணியன் வதனம் நோக்கி உற்றுயாம் வருத்தம் தோன்ற
உகப்பொடு உஞற்றும் இந்தச்.
சிற்றிலைச் சதையேல் என்னச்
செய்யவாய் மலர்ந்து சொன்னாள். 234
கன்னியர் தமக்கெ லாம்ர் ‘
கண்மணி துவர்வாய் விண்டு
சொன்னசொற்் புணர்ச்சி யாகத்
தூயமா மனத்துட் கொண்டு
தன்னுரு தெரிந்தி டாதுஓர் “சார்பதாய் மறைந்து போனான். .
அன்னமாய் அயனுக்கு அந்நாள்
அருமறை புகன்ற மாயோன். ~ 235
மாயவன் இருகண் காணா.
தோர்முறை மாய மாகப்
போயகன் றிடலு’ மந்தப்
பூங்குழற் கோதை யாளும்
சேயரிக் கண்க ளோடு
சிந்துநீர் முத்தம் பொங்கத்
– தூயநல் லுளமுட் கொண்ட
துயரமும் அடைந்தா ளாகி; 236
பாங்கியர் எனும்அம் மாதர்
பலர்களும் உடன்சென்று எய்த
ஆங்கொரு பொய்கை தன்னை அணுகிஆங்கு அதனிற் பூத்ததேங்கமழ் முளரி யோடும்
செங்கழு நீர்ப்பூக் கொய்தே
நீங்கரும் உவகை தோன்ற —
நீர்விளை யாடும் எல்லை; 237
மருந்துண வமரர்க்கு அந்நாள்
வழங்கிநல் விதுரன் இல்வாய்
விருந்துண வமைந்த மாயோன்
மிளிர்தடக் கரையின் மீது௮க்
கருந்தடங் கண்ணார் வைத்த
கலையெலாம் கைக்கொண் டேர்
குந்தமீ தேறித் தோள்கள்
குலுங்குற நகைகொண் டானால்,. ~ 238
குலுங்குற நகைசெய் வோனைக்
கோதையாள் நயந்து நோக்கி
இலங்கிழை மடவா ரெல்லாம்
என்சொலார்? நகைத்துஏ சாரோ?
துலங்குற யாமுன் வைத்த தூசெலாம் அளித்தி என்னா
நலங்கெழு கவிதை யாக
நவின்றனள் என்ப மன்னோ. 239
தலைமிசை கரங்க ளோடு
தன்னைவேண் டிடுத லாய்அம்
மூலைமலைக் கொடியின் அன்னாள்
மொழிந்திடும் கவிகள் கேளா விலையிதென்று யாவ ராலும்
விளம்புதற்கு அரிதாம் பாட்டில்
“கலையெலாம் அளித்து மீளக்
கண்ணனும் அகன்று போனான். 240
சூடிய மாலை தன்னைத்
துளவமாற் களித்தாள் பின்னும்
வாடிய மனதோ டெந்நாள்
வருவரோ வவர்தா மென்னாக்
கூடலாங் கிழைத்திட் டேயக்
கொள்கையைக் கவிக் ளாகப்
பாடினாள் பாடி யும்ஆய்ப்
பாடியான் வராமை தன்னால்; 241
மயில்இயல் கிளியின் இன்சொல்
மடவன நடைபோர் வேலும்
அயில்விழித் தடங்கண் கோதை
யாள்அர வணையின் மீது
துயிலமை நறவப் பைந்தேன்
துளவமால் அணுகு மாறாய்க்
குயிலினைக் கூவு கென்னக்
கவிகளும் கூறி னாளால். 242
கோதையார் கனா
இக்குநேர் கவிதை பாடி
இரங்குதல் உணர்ந்தி ராவில்
புக்கவன் கனவின் மேற்றான்
புரிவது வையினிற் செய்யும்அக்குறி யனைத்தும் காண்பித் .
தகன்றனன் அன்பா லன்பு
மிக்கவ ரளத்தும் வேதச்
சரத்தினும் விளங்குந் தாளான்.243
மத்தளங் கொட்ட
கனவுறும் இரவில் கண்ட
கடிமணக் கோலம் யாவும்
மனதுற உணர்ந்த வாற்றை
மருங்குறும் உயிரொப் பாகும்
தனதுபாங் கியர்க ளோடும்
சாற்றிய வாறு தன்னை
– அனநடைக் கோதை தானும்
கவிகளாய் அறைந்தா ளன்றே.244
கருப்ழரம். நாறுமோ! பட்ட
“மின்னுறும் இரவின். காலம் ன க
பெருகுறும் கனவிற் கண்ட
பன்னுறும் அனுப வத்தைப்
பாஞ்சசன் னியமே! நீசேர்
அன்னசீர்ப் பவள வாயின்
சுவைதனை யறியு மாறாய்
கு என்னுடன் புகறி யென்ன
இயம்பினள் கவிகள் மாதோ. 245
நீருறு வெள்ளம் எங்கும்
நிரம்பிட மிகுந்து பெய்யும்
காருறு காலம் தோன்றக் கனந்தனை தோக்கி அன்பால் ஏறுரு கடலின் வண்ணர் –
எய்துவர் கொல்லோ என்னச்
சிருறு பாடல் தன்னைச்
செப்பினள் மறித்து மன்றே. 246
ஈங்கிவ்வா றாகப் பாடல்
ஈறெழு பதின்மூன் றோடும்
ஓங்குறும் பாவை முப்ப
தொன்றிநூற் றெழுப இன்மூன் “றாங்கவள் மகிழ்விற் பாடி
யனுபவஞ் செய்யா வாற்றால்
எங்கள். எழித்து சோகித்
நிலைமை காணா
உயிரினி தெறுமென் றஞ்சி–247
முருகவிழ் துளவ மாலை
முகுந்தனு முளத்து என்பு பெருகுற வீரைவின் வந்தப்
பிறைநுகற் பவள வாயாள்
அருகுற மருவி யன்போ
– டளித்துமீண் டகன்று போனான். 248
-அன்பின்தாம் அணிந்த மாலை
அணித்தருள் ஆழி யான்தன் இன்பமுண் டதற்பி னுள்ளத்
தெழுந்த பேருவகை யோடும் தன்புகழ்த் தாதை யாகும் பெரியர்பால் விரைவிற் சார்ந்து
பொன்புரை சரணஞ் சென்னி ்
புனைந்துஇவை புகல்வது ஆனாள்: 249
அரங்கம் செல்லல்
அய்ய/யான் அரங்கம் என்னும்
அணிபெரு நகரம் தன்னுள்
பையரா வணையின் மீது
பசியகார் முகிலே போலச்
செய்யகண் வளர்த லாகச்
செழிக்குநம் பெருமா ளின்பொன்
துய்யதாள் இணைகள் தம்மைத்
தொழுதிட வேண்டு மன்றே. 250
ஆதலால் அடியேனைக் கொண்டு
அரைக்கண மெனுந்தங் காமல்
போதுதல் வேண்டும் இந்தக்
கணத்துஎனப் புகழ்ந்து கூறு
மாதவர் தமக்கெ லாமோர்
மணியனான் அதனைக் கேளா,
ஓதும்௮அம் முறைசெய் வேனென்று உரைத்துஉள மகிழ்வி னோடும்; 251
வடபெருங் கோயில் தன்னை
விரைவொடு மருவி நஞ்சப்
படவர வணையிற் நஞ்சும்
. பரமனைப் பணிந்து போற்றிக்
குடமுலை, கழையின் மென்றோள்
கோவியார் மலர்க்கை கோத்து
நடனம்௮அன்று இழைத்துஅன் னார்பால்
நயமொழி நவின்ற நாதா) 252
சரிகரக் கோதை என்னும்
தையலாள் அரங்கம் தன்னுள்
வரியர வணையின் மீதோர்
மஞ்சென வளர்கின் றானைப்
பரிவொடு வணங்கு மாறாய்ப்
பகர்ந்தனள்; அதற்கு நாயேன்
புரிதல்வேண் டுவதை யின்னே
– புகன்றிட வேண்டும் என்றான். 253
உரைத்தமா மொழிகள் கேளா
உகப்பொடும் அவனை நோக்கி
வரைத்தடங் கொங்கை யாள்நின்
மகள் தனை மணிகள் தன்னால்
நிரைத்தபொற் சிவிகை ஏற்றி
நீயுடன் கொண்டு சென்று
இரைத்தவழ் மணிகா வேரி சூழூம்தென் ன்ரங்கம் சென்றே; 254
ஆங்குறை அரங்க நாதர்
அடியிணை மலர்கள் தம்மைப்
பாங்கொடு மனமும் கண்ணும்
பரிவுறத் தொழுது போற்றி ஈங்கடைந் இடுமின் என்ன
இசைத்தலும்; விடைபெற்று அன்னோன் :
பூங்கழல் தொழுது வாழ்த்திப்
பொன்மனை புகுந்தா னன்றே. 255
அத்தினம் அதனில் அந்தக்
கணத்திலம் புவிமா னாகும்
-. தத்தைமென் மொழியி னாளைத்
தமனியத் தகட்டின் Cube
த்தணி. சிவிகை: யேற்றி… வட சட்ட க்யா ட
ட: ஆங்கதைம். பட்டால்: மூடி. ட ர ரர ர
ஒத்திடன்’ த்ர்னும்.வேறோரர்’
சிவிகைமீ துகந்து சென்றான். 256
அந்தரத்து அமரர் மேன்மேல்
அலர்மழை பொழிந்து வானத்
துந்துமி முழங்கக் கோதைத்
தாழியர் பலரும் சூழச்
செந்திரு மணாளன் கோயில்
பரிசனம் பலரும் சேர்ந்து
வந்திட மேள தாள
வாத்திய முழங்க மாதோ, 257
கதுவிஎண் திசையும் போற்றக்
கவின்புகழ் பட்டர் பாடச்
சதுர்மறை யவர்கள் வாழ்த்தச்
சகலசம் பிரமத் தோடும்
முதுமலர்க் குழலார் மூரல்
மதியெனக் குமுதம் விள்ளும்
புதுவைமா நகரம் நீங்கிப்
பொன்மதில் மதுரை புக்கார். 258
பணித்தலை வைப்பின் ஒப்பாய்ப்
.பகருதற்கு இணைவே றில்லா
அணிக்கெழு கூடல் தன்னில்
அமர்ந்தமல் லாண்ட தோளன்
பாதம் டில் அண்ு தாழ்ந்தவா. றேத்திப் போனார். 259
மதுரையிற் கூட ஸனீங்கி
மாலிருஞ் சோலை யென்னும்
விதுவொடு கதிரோன் சூழ்ந்து
விலங்குற வுயர்ந்த வெற்பில்
சதிர்பெற உறையுஞ் சீர்கள்
ளழகர்பொற் சரணந் தன்னைத்
துதிசெய்து மூழ்ந்து வாழ்த்தித் தொழுதன ரகன்று போனார். 260
ஏகும்௮க் காலை மூடுஞ் —
சிவிகையின் இருந்த வாறே
நாகரும் புகழும் சீர்த்தி
நலம்புனை தாதை யோடும்
மேகமொத் திருண்ட கூந்தல்
வெற்பிளந் தனத்துக் கன்னல்
பாகன மொழியாள் சாலப்
பரிவுடன் இதனைச் சொன்னாள். 261
கோதை விருப்பம்
அய்ய/கேள்; நமது மால்வாழ்
அரங்கமா நகரத் துற்ற துய்யமா மதிளும் டொன்னின்
துலங்குகோ புரமும் சேவை
செய்யநின் மலர்ப்பூங் கண்ணில்
தெரிவுறில் அடியேன் தானும்
வையமீ திழிந்து போற்றி .
வணங்குறத் தெரித்தி என்றாள். 262
ஆங்கவள் உரைத்த பின்னர்
அருநெறி கடந்து செல்ல
வீங்கலை மணி௫ந் துங்கா
விரிக்கரை யருகி ஞூடு
பாங்குட னேகுங் காலைப்
பன்மணி மதிளும் வான்மீ
தோங்குகோ புரமுந் தோன்ற வுரைத்தனன் தோன்றிற் றென்றே. 263
(வேறு)
அடர்ந்த மும்மல மறுத்துவெம் பிறவியங்
கடந்த தாதையா முரைமொழி
மடந்தை போன்றவக் கோதையும் வையமீ–264
நயந்த வாற்றினை யுந்தியி னான்முகத் தவளைப்
பயந்த சீரம கியமண வாளரும் பரிவாய்
வியந்து தன்திருத் தேவியும் மெல்லிய பதவம்
புயந்த னக்கிடர் பொருந்துற வருந்துவ ளென்றே.; 265
அரங்கன் திருவிளையாடல்
கஞ்ச நாண்மல ரூடுறும் அளியினைக் சடுப்ப,
பஞ்ச ரத்துறுந் தத்தையிற் பல்லக்கின் வருமவ்
வஞ்சி நேரிடை யாள்திரு மேனியு மருவும்
நெஞ்சி னூடுதன் னிடமணைத் திடநிரு மித்தான். 266
அரங்கன், கோதையார்
நடந்தால் பாதமலர் வாடூம் என்று கருதினான். கருதிய திருவரங்கன், மலரில்
உள்ள வண்டைப் போலவும், கூட்டில் உள்ள கிளியைப் போலவும் வருகின்ற
கோதை நாச்சியார் பிறரறியாமல் தன்னிடம் வரும்படி சங்கற்பித்தான்.
அவன ருட்படி பிறரொரு வருமறி யாமல்
துவரி தழ்க்குயின் மழலையாள் கோயிலுட் டொடர்ந்திட்
டுவரி வண்ணர்தம் பதமல ர௬ுவப்பொடும் வணங்கி
நவமு றத்திரு வுளத்திடை தண்ணிவீற் நிருந்தாள். 267
ஆங்க ரங்கனோ டம்முறை யவடொடர்ந் தணைந்தாள்
ஈங்கவ் வேந்திழை யுறுஞ்சிவி கையைப்புய மேந்தித்
தாங்கு வோர்கண்முன் பரமது சமைந்திடா மையினால்
ஏங்கி யீதென மாயமென் றெண்ணிறின் றனரால். 268
கன்று காவுறுஞ் சுரபியிற் கலந்துபின் சிவிகை
யொன்றி மேவுமப் பெரியரென் நுரைக்குமுத் தமனும்
நின்று ளார்தமை நோக்கிநீர் நின்றுள தென்னோ
என்று ரைத்தல்கேட் டாங்கவ ரிம்மொழி யிசைப்பார். 269
இன்ன செய்கையென் றெவ்வித மிதையியம் பிடுவோம்
அன்ன மென்னடை யாரணங்் கமர்ந்துள பரந்தான்
முன்னர் போலவிச் சிவிகையின் இலைமுயன் றாய்ந்து
என்ன மாயமென் றேங்கியா மிருந்தன — 270
ஆங்க வர்புகன் றுளமொழி செவியின்வந் தணுக
வீங்கெ னோவசதி சயமெனச் சிவிகைவிட் டிழிந்து
பாங்கொ டும்மகள் சிவிகைமேன் மூடுபட் டதனை
வாங்கி யேயுற விருகண்மா மலரில்நோக் இனனால். 271
நோக்க லும்மக ளிலாமையி னுணங்குகேள் வியினான்
போக்கெ னோலெனத் திருவளம் புழுங்கனன்; துடித்தான்;
ஏக்க மோடயர்ந் திரங்வென்; நடுங்கினன்; இனைந்தான்;
வாக்கினாலவன் துயரினை வகுத்திட லரிதால். — 272
ஆய தன்மைய ஸனாகியே பின்னரு மறிவுற்
றஹேய காரணம் பிறிதிலை யரங்கமுள் எழிலார்
பாய லாய்விடப் பைந்தலை யரவின்மேற் படுத்த
மாய னார்செயுங் களவென மனத்துற மதித்தே; 273
விரைவி னோடுடன் மேவிவந் தவர்களு மேவ
தரையின் மீதுகா னடையொடுஞ் சென்றுதண் டரளந்
இரையெ றிந்துயர் காவிரி கடந்துசெங் கனகம்
நிரைசெய் கோயிலுட் புகுந்தரங் கேசர்முன் நின்றே; 474
ஆழ்வாரின் முறையீடு
இருக ரங்குவித் தடியுற வணங்கிமீண் டெழுத்து
பொருத ரங்கவெண் கடலி?னோ ராலடை பொருந்தல்
ஒருவி வந்தவ ணரவின்மே லுவப்பொடு முறங்கும்
கருமு கிற்கொழுந் தேயெனக் கட்டுரைத் திடுவான்? 275
தளிரின்மேல் துயிலும்
போது இருந்த கருணை அரவின் சார்பால் குறைந்ததோ என்பது உள்ளுறை.
“பள்ளித் தோழமை பலித்தபடி’” என்பர் நம்பிள்ளை.
அடியன் மேலையம் பிறவியு ளருமையுற் நிழைத்த
நெடிய மாதவப் பேற்றினால் நேர்ந்தவோர் மலர்ப்பூங்
கொடிய னாள்தனைக் கொண்டுநின் பதமலர் குறுகி
முடியுறப்பணிந் தேகுமம் முறைமைகொண் டடைந்தேன். 276
அடைந்து. ளேன்மல ரடியரு கணுகுமுன்பு அளிகள்
குடைந்த -ரந்துதேன் பூங்குழற் கோதையைக் குறுக
முடைந்து ‘யர்ந்துறி யாச்சி.பர் முறைபடுக் குறும்பால்
கடைந்த வெண்ணையிற் களவிழைத் திடுவது கணக்கோ? 277
கணக்க லாமலென் மகள்தனைக் கவர்ந்துள துணரின்
வணக்க மோடலை சகடலுடை வையகத் தடையே
மணக்கு மாமலர்க் குழன்மடந் தையருமா டவரும்
இணக்க மோடுவந் தெவருனது இணையடி தொழுவார்? 278
வடுத்த விர்ந்தமா மதிமுகத் திருவினோ டுரைக்கின்
அடுத்தி லாதென நகைசெய்வ ளாதலாற் களவில்
எடுத்து வந்தவென் மகள்தனைக் காண்பியு மென்னாக்
கடுத்த சிந்தையான் போலுளத் தன்பொடுங் கழறி; 279
நகசைசெய்வான் – பரிகப்பான். **நப்பின்னை
கர்ணிழற் இரிக்கும்” என்றவர் அல்லவா? (பெரியாழ்வார் திருமொழி — வெண்ணெ
யளைந்த என்ற் பதிகம் காண்க). இிருமகள் சிரிப்பாள் . அவள் சிரிப்பதற்கு முன்
என் மகளைக் காண்பியும்,
ஓதி மாமறை முறைமையி னொளிர்மல ரவனும்
பாதி மாமதி சூடியும் பணிந்துசண் டறியாச்
சோதி யேகரி மூலமாம் பெயர் சொலி யழைத்த
ஆதி யேயெனத் துதிசெய்தாங் கெதி.ரில்நின் றனனால். 280
அரங்கன் மாற்றம்
நின்ற வில்லிபுத் தூாரவ னிகழ்த்துரை செவிக்குள்
ஒன்ற லோடுநெஞ் சுருகுறப் பெருகுவப் புடனே
கன்று கொண்டுயர் விளவினை யெறிந்தகார் முகிலும்
நன்று நன்றென விளநகை தோன்றிட நவில்வான். 281
ஒன்று மஞ்சலை யுன்மக ஞுந்தனி நடந்தஇங்
தின்று றும்படி நினைந்தன ளெண்ணுமம் முறையே
சென்று றிற்பதஞ் சிவப்புறு மெனத்தெறும் புலனைவென்று ளாய்வருந் தாவரு வித்தனம் வெகுளேல். 282
என்ன வேபல நன்மொழி புகன்றெமில் பெறுநின்
கன்னி யிங்குறை கன்றனள் காண்கெனக் காட்ட
அன்ன மாதினைக் க)ண்டலு மானந்த மூடனே
பின்னு மோர்மொழி யாங்கருண் மகஇழ்வுறப் பேசும், 283
முறைப்படி மணக்க மொழிந்தனர் ஆழ்வார்
மாய னே [இருப் பாடியுள் வளருமந் நாள்வாய்
ஆய ரீன்றரு ளிளமுலை யனநடை யவரை
நேய மோடடைந் திணைந்துள கள்ளமா நெறிபோல்
நாயி னேன்றிரு மகளையு நயந்திட நினையேல். 284
உலகம் யாவினு முறைபவ ரொவ்வுமவ் வகையாய்ப்
பலருங் காண்குறப் பந்தருட் பழமறை விதியின்
அலகின் மாதவர் வளர்க்குமவ் வனலின்முன் னிலையில்
இலகு மங்கலம் புனைந்தபின் னிணங்குத லியல்பாம். 285
ஆத லாலடி யேனுறை புதுவைவந் தணைந்திம்
மாத ராள்தனை விதிமுறை வதுவைசெய் திடுமக்
கோதி லாமணக் கோலமுட் குளிர்ப்புறக் காணுங்
காதல் கொண்டுளே னெனக்கழல் பணிந்துநின் றனனால், 286
உலகறிய மணப்போம்
நின்ற வன்திரு மாமுக நோக்கிநீ டூலகோர்
ஓன்று மாறுரைத் தனையலாற் பிறிதுரைத் திலையால்
நன்றி தென்றுள முவந்தனம் புதுவைமா நகரில்
சென்ற டைந்துநற் றினந்தனிற் றீருமணம் புரிவேம். 287
மங்க லந்தரித் திடுதலுக் குன்மகள் தனக்குப்
பங்கு னித்திரு வுத்திரப் பகற்பொருந் துறுமன்
றங்கு வந்துநா மடைகுது மதற்குமுன் பாக
இங்கி ருந்துநின் சிறுவியோ டேகென விசைத்தே; 288
வில்லிபுத்தூர் மேவுதல் Los வரு
விடைய எளித்தலுங் கோயிலில் மேவுவோர் தமக்கும்
படைநெ டுங்கணா ரொடுப கவர்கள் தமக்கும் ‘>
புடைதி ரண்டுபோ யிவர்தமைப் புதுவையின் விடுத்திங் :
கடையு மென்றுரைத் தவற்கிரு சவிகையு மளித்தான். 289
அளித்த தன்மிசைக் கோதையும் பெரியஆழ் வாரும் :
களிப்பொ டும்புகத் துந்துமி முழக்கியே கடிதின்
தளிர்த்த பூமழை சொரிந்திடச் சாமரை தயங்க
விளித்த சங்கின முரசொலிக் கறங்க மென்மேல்.. 290
ஆட கத்தியாழ்த் தும்புரு நாரத ரிசைத்துப்
பாட வின்னிசை : முனிவரர் பரிந்துதோத் திரிக்கச் ?
சூட கக்கர. மடந்தையர் சோபனஞ் சொல்ல ௩
நாட கத்தொழில் வல்லவ ரெதிருற நடிப்ப; 291
விருதொ லித்திடப் பட்டர்கள் புகழவே நுலகில் .
பொருவில் வேங்கடப் பொருப்பனு முடன்சென்று புகுதக்
குரும ணிச்செழுங் கோயில்வீட் டூயர்சுர நதியுங்- ்
கருது காவிரி யெனுந்திரு நதியினைக் கடந்தே; 292
சோழ நாடது பின்படத் துருவிப்பாண் டியன்றான்
வாழு நாடுறு மாலிருஞ் சோலைவந் துறலும்
ஆழு மன்புட னத்தலத் துறையனை வோரும்
சூழ வந்துப சரித்திடக் கோயிலுள் தொடர்ந்தே; 293
அழகர் பூந்திரு வடிகளாம் அம்புய மதனைக்:
குழையு நெஞ்சொடுந் துதிசெய்து வணங்கியே கொடுத்த
தீழைது மாயுறு தீர்த்தப்பிர சாதமு மருந்தி .
விழைவி னோடுமத் தலத்திடை யன்றுவீற் நிருந்தே; 294
மறுதி னந்துடர்ந் தழகரு முடன்வர மதுரை
யுறுத லோடுமத் தலந்தனி லுறைபவ ரெவரும்
குறுகி வந்தெதிர் கொண்டிடக் கடலுண் மருவி
நறும லர்பொரு மழகிய நம்பிதாள் வணங்க) 295
மன்ற லார்வன படிகநீ ராங்கவர் வழங்கித்
துன்று நற்பிர சாதமு மளித்திடத் துய்த்தாங் கன்று வைகுூயவ் வழகரு முடன்கலந் தணுகச்
சென்ற டைந்தனர் புதுவையின் மற்றைய இனமே. 296
ஆங்கு றும்வட பத்திர சாயியம் புயச்செம்
பூங்க ழற்றொழு தரங்கர்பாற் போயடி பணிந்திட்
டீங்கு வந்தன மெனதடந் துளவெலா பெடுத்துப்
பாங்கொ டும்மவர் செவியுறப் பு.த;வையன் பகர்ந்தான், 297
கேட்ட வாறதாய் நடத்துக கேள்வியோ யெனவச்
சூட்ட ராவணை யவன்சொலக் களித்தனன் துடர்ந்த
கூட்டம் யாவர்க்கும் இர்த்தப்பிர சாதமுங் கோயின்
மாட்டு ளோரளித் இடக்கொண்டு : மாளிகை கலந்தார். 298
வேங்க டாசல மதன்மிசை விளங்கிவாழ் பவரும்
ஒங்கு மாலிருஞ் சோலைவெற் புகந்துறை பவரும்
இங்கி லாச்செழுங் கூடலிற் சேர்ந்துவை குவரும்
தாங்கள் தாங்களுற் றுறைதலஞ் சார்ந்துவை கனரால், 299
அருந்து மாறதா யணிகெழு மரங்கமா நகரத்
இருந்து வந்துளோர்க் கருங்கடல் கடைந்திட வெழுந்த
மருந்து நேரென அறுசுவைப் பதார்த்தம தோடும்
விருந்து செய்துசெய் வெகுமதி வழங்கியே விடுத்தான். 300
விடுத்த லோடுமாங் சுவர்களும் விடைகொடு விசும்பின்
எடுத்த பொன்மதி எரங்கர்முன் னெய்திப்பாம். பணையில்
படுத்து ளான்பதம் பணிந்துதாம் போய்வரு மளவும்
அடுத்த வாறெலாம் அறைந்துதம் மாளிகை யடைந்தார். 301
(வேறு)
அங்கவ ரம்முறை யகன்று போயபின்
கொங்குறு மலர்க்குழற் கோதை யென்பவள்
“சங்குறை கரவரங் கேசர் சாற்றுமப்
பங்குனி யுத்தரம் பலிப்பதென் றென்றும்; 302
செங்கம லம்பல இறக்கப் பூத்ததோர்
மங்குலி னழகய வடி.வந் தாங்கினோன்
இங்குவந் துறுமந்நா ளெந்தநா ளென்றும் கங்குலும் பகலுந்தன் கருத்து ளூன்னியே; 303
இன்னவா றன்றீயே வேறொன் றெண்ணிலா
தன்னவள் வைகவவ் வாறு தந்தையும்
_தன்னுள மதனிடை தரித்து வைகினான்
– பின்னருற் றடைந்தமை பேசு வாமரோ. . 304
ஆழ்வார் மணநாள் அறிதல்
ஒருபக லதனிடை யுவப்பு எத்தொடுத்
இருநகர் வாழுறுஞ் சீர்கொள் வைணவர்
பெருமிதம் பொருந்துமப் பெரிய ரின்புற
மருவுமா ளிகையிடை வந்து ளார்களால், 305
வந்துளோர் பெரியர்தாள் வணங்க லும்மவர்
தந்தம தடிகளைத் தானுந் தாழ்ந்தபின்
அந்தவே தியரருந் தவனை நோக்கியே இந்தவா சகமெடுத் தியம்பு வார்களால். 306
அய்ய[நின்: தனையளை யரங்கர் மாமணஞ்
செய்யுநாள் நாளையென் . றவர்கள் செப்பவத்
ட. துய்யமா .மொழியது துஞ்சி யெஞ்சினோர்
“மையிலாச் செவியுறு மருந்து போன்றதால். 307
ஆயமா தவர்களம் மொழிய றைந்துதம்
தூயமா -ளிகையிடைத் துடர்ந்து வை௫னார்;
ஏயவப் பெரியரு: மிதய. மூடெழும் ்
நேயமோ டிவ்வகை நிரப்ப லுற்றனன். 308
நகரவலங்காரம்
தேனைவென் றுளசொனஞ் சிறுவி கோதையாம்
மானையவ் வரங்கர்செய்’ வதுவை நாளையால்
ஏனைய ரின்னக .ரெழில்சேய் வாறதாய்
ஆனைமேன் -மணிமுர சறையு மின்றெனன். 309
–
அந்தவா சகஞ்செவி யுறவரங் கம்வாழ்
சேர்திரு ‘ மணைனைச் சேர்ந்த ழைத்திட
முந்துற வேகுவான் போன்மு ழங்கலைச்
இந்துவின் மறைந்தனன் தினஞ்செய் வோனுமே. 310
அன்னவன் மறையமா முரசம் அஆனைமேல்
மன்னு?ீர்க் கோதைக்கும் அரங்கற் கும்மணம்
பின்னைநா ணகரணி பெருக்கு மின்னெனப்
பொன்னகர் முழுவதும் புகுந்து சாற்றினார், 311.
முரசறை தரவெழு முழக்கங் கேட்டலும்
விரசுமம் மாணகர் மேவு மாந்தரும்
பிரசமென் இளவியும் பேதை யார்களும்
கரைசெயற் கருங்களிக் கடலுள் ஆழ்த்தனர். 312
கோதையாள் வதுவையைக் குறித்துப் பூந்திரு
மாதைமார் பணியரங் கேசர் வந்திடுஞ்
சேதியை யாவருந் தெரியு மாறுமுன்பு
ஓதவந் தெனஇன ஸனுதைய மாயினான். 313
மதுகமழ் மலர்த்தரு மகளை மற்றொரு
சதுர்பெற வணியுமகத் தன்மை யாமெனப்
புதுவையென் றுரைக்குமப் பொன்னின் மாநகர்
கதிர்செய முறவலங் கரிப்ப தாயினார்.315
கடலிடை யுறுதுயில் கழித்து வந்தொரு
படவர வணைமிசை பள்ளி கொண்டுளான்
வடபெருங் கோயிலை வகைவ கைபுரிந்
தடவுடன் புதுக்கினர் அழுது துன்னவே. 316
அந்தர வுலகினை நகைத்த லாமென
மந்தர மனைய?ர் மாட மாளிகை
சுந்தரம் பெறவடி முடி துடங்கியே
சந்திர னொளியைவெல் சாந்து தீற்றுவார். 317
ஒத்திட வாயின்முன் புயர்ச்ச யெய்திட
முத்தணி பந்தர்கண் முடுகிப் போடுவார்;
கொத்துறு மலர்ச்சரங் குலவத் தூக்குவார்;
வைத்திழை மணிக்கொடி மலிய நாட்டுவார். 318
பூரண பொற்கல சம்பொ ருத்துவார்;
ஏரணி பாலிகை யினம்நி ரப்புவார்;
காரணி மகரதோ ரணங்கள் கட்டுவார்;
சீரணி பதுமைகள் செழியத் தூக்குவார். 319
.பொன்னிறச் சுளைபலா: முதற்பு கன்றிடும்
மன்னுநற் சுவைகனி வகைகள் தூக்குவார்;
கன்னலும் வாழையுங் கழுகும் நாட்டுவார்;
: பன்னக ‘மணிவிளக் கொளிப ரப்புவார். 320 :
அரைபடு கலவைசேர்ந் தமைத்த சாந்தினால்
குரையுற மெழுகுவார்; சார்ந்த பாங்கெலாம்
நிரைநிரை விளங்குகோ லமும்நி ரப்புவார்;
– விரைபனி நீர்தெரு வீதி வீசுவார்.321
ஆடைக ளழகுற வணிகு வார்;புதுப்
பாடகஞ் சரிவளை பதக்க மாதிபல்
பூடண வகைகளும் பொருந்தப் பூணுவார்;
ஏடவிழ் நறுமல ரிலங்கச் சூடுவார். 322
கந்தமார் புனுகுபல் கலவை சேர்த்தியே
சந்தனக் குழம்புடல் தணியப் பூசுவார்;
சிந்துரஞ் சூரணந் இருமண் சாத்துவார்;
“ சுந்தர மாயிரந் துலங்கல் காணுவார். 323
அன்னமந் தணர்தமக் கருத்து வார்;புவி
பொன்னிவர் மணியுடைப் பூட ணம்ப்சு
இன்னவாம் பலபல தான மேற்றுளோர்
. உன்னிய. முறையவ ருவப்ப நல்குவார். 324
இன்னவை யாவையு மெழில்பெ றும்படி
பொன்னக ரொப்பவப் புதுவை மாதகர்
தன்னையாங் கவரலங் கரித்த தன்மைகள்
£.* பன்னநா வாயிரம் படைத்தி லேனரோ. 325
விட்டுணு சத்தன்மா ளிகைவி ளங்குற
மட்டிலா வைகுந்த மண்ட பந்தனக்
கெட்டுணை யாயினும் வழுவி லாமலே
: திட்டமாய்ச் செய்முறை யாவுஞ் செய்தபின்; 326
பணங்கெழு பணித்துயில் பயில ரங்களார்.
குணஞ்சிறந் துடையபூங் கோதை யாஸல்தனை
மணம்புரி. வதற்குச்சசய் வகைகள் யாவையும்
் இணங்குமா றவரவ ரியைவித் தாரோ. : 327
பேரிகை மத்தளம் பிறங்குதா எங்கள்
தாரைகள் திருச்சினம் சங்க மற்றுள
தூரிய வகையெலாந் . தொனிக்கு மோதையால்
2 வாரியின் முழக்கமும் மறைந்தொ ஸஎித்ததால். 328
வாடுற விடைதன வரைகு லுங்குற
_ நாடக மாதர்கள் நடம்ப யின் றிட
-சூடுபூங் குழலினர் சோப னஞ்சொலப்
பாடகர் இன்னர கதம் பாடவே. ‘ 329
மணங்காண வந்தவர்
இங்கெ ரிவ்வண் மிசையு மெல்லையில்
பொங்கரீன் றருளிய பூவை யாளிடந்
தங்கவெள் ளிடபமாம் ஊர்தி தன்மிசை
– சங்கரன் மகிழ்வொடுஞ் சார்ந்து ளானரோ. 330
தேவரும் பணிதிருத் தேவ ஸுந்தியம்
பூவரு மெண்புயப் புனித நான்முகன் :
_நாலரு மயில்விழி நங்கை தன்னொடும்
தூவிசே ரனமிசை வந்து தோன்றினன். – 331
அத்தர வுலஇனர்க் கரச னாய |
“இந்திரன் சீரயி ராணி யென்னுமச்
சுந்தர மதிமுகத் தோகை யாளொடுந்
– தந்தவெண் கரிமிசை சார்ந்து சானரோ. 332
மற்றுள மூனிவர்கள் சித்தர் வானவர்
‘வெற்றிவே லரசர்விஞ் சையர்க ளாதிதம்
பொற்றொடி யவரொடும் புதுவை மாநகர்
_ முற்றிலு மிடங்கொளா முறைவந் தீண்டினர். 333
கோதையாரின் மணக்கோலம்
இங்கிவர் யாவரு மீண்டி யுற்றபின்
– வெங்கொலைத் தொழில்வல வேற்கண் கோதையைச்
சங்கரி கலைமகள் சசியிம் மூவரும்
மங்கலக் கோலஞ்செய் வான்தொ டங்கியே; 334
கங்கையே முதலெழு கடவுண் மாநதி
சங்யெ தீர்த்தங்கள் தமைக்கொ —
பொங்கலை யாழியின் புனித நீர்கலந்
௩ தங்கவர் மஞ்சன மாட்டி னார்களால். 335
மூகமலர் மஞ்சளின் முயங்கப் பூசியே
அகில்முத லிந்தன மனலி லிட்டதின்
புகைகொடு முடற்குழல் புலர்த்திக் கைவிரல்
: நகமதிற் கோதிநன் குறமு டித்தனர். 336
ஈரநீத் துயர்ந்தபட் டிலங்கச் சாத்திநூல்
நேரிடை வருந்துற நிமிர்ந்த கொங்கையில்
வாரணிந் திருகுற வலிந்து வாளைவேல்
_ கூர்விழிக் கஞ்சனங் குளிர இட்டனர். 337
மறைமுதல் வன்குறி வைத்த தென்னவே
கறையின்மா மதிமுகங் கவினு மாறிளம்
பிறையெனக் தஇிருமணும் பிறங்கச் சந்துரம்
நிறைதிருச் சூரணம் நிரம்பச் சாத்தினார்.338
பொன்னினா லமைந்திடும் புதிய பாவையின்
வன்னமார்ந் தொளிபெற வரையு மாறெனப்
பன்னறு நவமணி யிழைத்த பைம்பொனின்
– மின்னுபல் பூடணம் விளங்கச் சாத்தினார். 339
கந்தமோர் காவதங் ௬மக மத்தசெஞ்
சந்தனம் புனுகுசவ் வாத ஸணிந்துபின்
சுந்தர நறுமல ரலங்கல் சூட்டினார்
் அந்தரத் தவர்களு மஇச .யிப்பவே. 340
இன்னவை யாவையு மியைந்த பின்றிருப்
பொன்னரங் கந்துயில் புரியு நாரணன்
துன்னுமந்: நெறிகளைத் தூய கண்களால்
அன்னவர் தோக்கியங் கிருக்கு மாயிடை; 341
பிரம்மன் வினா
மட்டவிழ் தாமரை மலரின் வைகயன்
விட்டுணு சித்தனை விருப்பின் நோக்கியே
அட்டதிக் கினும்புக ழரங்கம் வாழுறும் த
வட்டச்செந் இகிரிமால் வருவதென் றென்றான். 342
என்றலு மணவினை யியற்று மங்கலம்
குனிமதி யுத்தி ரம்மெனும்
இன்றுவந் தெய்துவ மென்ன யானடை அன்றுரைத் தருளினா ரரங்க ரென்றனன். 343
அவ்வுரை கேட்டலு மமரர் கோமகன்
இவ்வுரை யானுமன் நறிருந்து கேட்டனன்,
இவ்விய வுருவமை திருவ ரங்கனார்.
ஓவ்விய மாய்கையா ர௬ணர்வர் என்றனன். 344
எனவுரைத் தவனொடு மேறு வாகனும்
அனமதை யூர்தியு மனைத்து ளோர்களுங்
கனறநிற மேனிமால் கமலத் தாள்களை
_ மனமுற நினைந்தவர் வருந்து மெல்லையில்; 345
கோதைபாற் பெரியருங் குறுகி யம்ம[பூ
மாதுறை மார்பக மணிய ரங்களார்
ஏதுகா ரணமின மெய்தி லாததைன்
… வேதனே முதலினோர் வினாவு கின்றனர். . 346
வருதுமென் றத்தினம் வழங்கும் வாறதாய்
மருதிறத் தவழ்ந்தமால் வந்த. லானினங்
கருதுவ தென்னினிக் கழறு கென்னலும்
பொருதுவெல் வேற்கணாள் புகல்வ தாயினாள், 347
கோதையின் செயல் — கருடன் வருதல்
அன்னவர் யாவரு மகங்க ஸிப்புற
இன்னமோர் கடிகையி ஸனுள்வந் தெப்துவார்
நின்னுளம் வருந்தலை யெனநி கழ்த்தியே பின்னர்வே லிருந்தப் பெண்கொடி; . 348
பன்னக வயிரிதோத் திரம்ப ரிவ்வொடுந் -:
தன்னக மதனிடைத் தரித்த வன்வர ‘
உன்னலு மக்கணத் தோங்கல் போன்றிரு : ்
பொன்னவீர் சறகொலி பொருந்த வந்தனன். -349
வந்தவன் றிருமூக நோக்கி மாண்புறும்
உந்தலைக் காவிரி யுடைய ரங்களார்
இந்தநா ளின்னகர்க் கெய்து வேமென
அந்தநா ளடியனோ டறைந்து ளானரோ,. 350
அன்னமா மொழிமுறை யந்த மாதவன்
இன்னமு மிங்குவந் தெய்தி லாமையால்
என்னகா. ரணம்வரா தெனவிங் கியாவரும்
_ பன்னுகின் றதற்கெனோ பகர லாகுமால். 351
ஆதலா லிக்கணத் தணிய ரங்கரென்
மீதுறு கருணையால் விரைவி னோடடைந்
தீதெலா மிசைத்தவ ரெய்து மாறழைத்
தோதுமோர் கடிகையுள் ஞூறுதல் வேண்டுமால், 352
கருடனிடம் கோதையார், “*அரங்களார் இன்று வருவேன் என்று கூறினார். ஆனால் வரவில்லை. அரங்கன்பால் இவற்றைக் ong
அழைத்து வருக. அரங்கரை அழைத்து வந்தால் யானும் அவரும் அமரும் ஆத
னத்தில் உன்னையும் எழுந்தருளச் ௦ செய்வேன் ‘* என்று கூறினார். இப்போதும் ுரீவில்லிபுத்தூரில் கருடாழ்வார் அரங்கமன்னாருடன் எழுத்தருளியிருப்பதைச்
சேவிக்கலாம்.
இன்னவா றழைத்துவந் தெய்தி லாங்கவர்
தன்னொடும் யானொரா தனத்து வைகுபோ
துன்னையு மந்தவா .தனத்தி னோக்கவே
_ மன்னுறப் புரிகுவ னேனவ ழங்கினாள். 353
வழங்குரை கேட்டவல் வயின ஸூங்களித்
தீழங்குற லிக்கணஞ் சார்ந்த ரங்கம்வாழ்
– முழங்குகார் வணரையோர் கடிகை மூன் றினில்
கழங்குறு தருக்கையாய் கொணர்உன்; காண்டியால், 354
எனப்புகள் றிருசிறை புடைத்தி யாதினுந்
தனக்குநேர் தானலான் தாவி வான்மிசை
மனக்கொடு வேகமோ டே வண்டுறை
.. புனைத்துழா யரங்கர்தாள் போற்றி நிற்றலும். 355
அரங்கன் வினா.
எங்கிருந் தெய்தினை யெனச்செஞ் சக்கரம்
சங்கொடு மணிகரன் சாற்ற மேருவாம்’
பொங்கரி ளனோங்கெழில் பொருந்து மேனியான்
னிருசெவி யணுக வோதுவான். 356
(வேறு)
பாதிமா மதியம் புனைசடைச் இவனும்
பங்கய மலருறை யயனும்
– ஆதிமா மறைகொண் டனுதினதந் துதிசெய்
தலர்சொரிந் தடிமிசை வணங்குஞ்
சோதியே! விரிகா வீரியிரு புறமுஞ்
சூழ்ந்தபொன் னரங்கநா யகனே!
மாதிரம் புகழும் புதுவை மாநகரி
னீருந்துவந் தேனென வகுத்தான். 357
என்னகா ரியமிங் கடைந்ததென் றுணரான்
எனவவ ஸியம்பவப் புதுவைப்
பொன்னக ரிடைவாழ் பொருந்துமப் பெரியார்
புதல்விேகா தைப்பெயர் புனைந்தாள்
நின்னுடை யெழிலுக் குகந்தபே ரழகாள்
நிகழ்த்துமா றடைந்தனன் எனவே
அன்னவள் வடிவத் தெழிலெலா மவர்கா
தறிவுறும் வகையெடுத் தறைவான். 358
செளந்தர்ய லகரி
இருளொளிர் மதிய முறிலகன் தநிடும்;கார்
எனில்வெயர்ப்ப் புதிர்த்துள மறுகும்;
பொருதிரை கொரழிக்கு மறலில்வெண் மணலும்
பொருந்திடும்; சைவலங் கூயும்;
மூருகவிழ் மலரும் நானமும் புழுகும்
மு.திரகிற் புகைகளுங் கதுவிக்
‘கருநிறங் கவினும் வளர்குழல் நிகராய்க்nகருதுதற் யொதுமொன் றிலையேல். 359
கறைமிடன் நூதற்க ணென்னச் ிந்தூரங்
கவினுறத் தீட்டுவா ணுதற்குப்
பிறைநிக ரென்னிற் பிறைதனிற் றிலதம்
பெறாமையிற் பேசுத லெளிதாம்;
நீறைதுள வரங்க நினதுளங் குழைக்க
நயனவம் பேவுதற் கெனவே
மறைமுதற் இழவன் வெஞ்சலை யெனவே
வகுத்ததோ?. புருவங்கண் டிலனால். 360
வேலெனில் மழுங்கும்; வாளெனின் மடியும்;
விடமெனி லரன்மிடற் றொளிக்கும்;
சேலெனில் நீருட் பதுங்கிடும்; கயலின்
செய்கையு மஃதெனில்; அவள்தன்
பாலென் வெளிறி நீலமொத் திருண்டு
செவ்வரி பரவிமை தோய்ந்து
காலனிற் கொலைசெய் தொழில்பயின் றுளகூர்ங் ‘ கண்ணினுக் கொப்புக்காண் கலனால். 361
கொள்ளையபோர் ‘புரியுங் ‘கூரிய வேற்கண்
கூடுறுஞ் செவிதனக் குவமை
வள்ளையென் றுரைக்கின் மகரமாக் குழைகள்
மருவிடா; வேறுமொன் நிலையால்;
கள்ளவிழ் மலரைங் கணைமதன் நிருத்தேர்
கடாவுதற் கமைத்தவீ இகொலோ?
எள்ளினன் மலரோ? குமிழ்கொலோ? அவள்மூக் .ஃ
te – இணையென யாதினை யிசைப்பாம்?. : 362
மண்ணவர் விபுதர் விஞ்சைய ரூரகர்
மதன்முத வினர்வடி வழகைக்
கண்ணீனால் நோக்கற் சென்னவே அயனார்
அமைத்தகண் ணாடியோ கபோலம்?
பண்ணினின் னிசையைக் கன்னலை அமுதைப்
பாகினைத் தேனினை வெகுண்ட
பெண்ணினுக். கணங்கின் கிளிமொழிக் குவமை.
.”….. பெற்றுள தேதென வுரைப்பாம். 363
முல்லையி னரும்பை முருந்தினை முத்தை
முகிண்முலைத் தடங்கண்மெல் லியல்தன்
பல்லினுக் குவமை யுரைத்திடி லதன்பாற். ட
பரவுசெங் .காவிதோய்ந் இலையால்; –
சொல்லில வலரிற் றூதுளை _
தொண்டையங். கனிகளி லமழுதம்
இல்லையா தலினான் மதுரமூ றிதமுக்“தஇணையென வுரைக்குமா றெளிதோ? – 364
முழுமதி தனக்கோர் முயற்கறை கதுவும்;
முளரியில் வண்டினந் துவைக்கும்;
வழுவிலா நிறைகற் பருந்ததிக் கருள்வாள்
வதனத்துக் கணையெதை வகுப்பாம்?
விமுகதிர் பாளை மடலவி மாத
கமுகமோ? நினதுகை மேவும்
பழுதிலா வளையோ? கந்தர மதனை
யாதெனப் பகர்ந்திட லாமால்? 365
பூரண கலசம் அதன்மிசை யணிந்த
பூர்தொடை பொலிதலைப் பொருவ
வாரணி தனங்கண் மிசையுறக் கவிந்து
வளைந்தவேய் நிகர்தடந் தோளாள்;
சீரணி யரங்கத் இறைவ[நின் புகழ்கள்
இருத்துநா ரதன்செழுங் கரங்கொள்
ஏரணி யாழ்முன் கைக்குநா ணிடுமென்
றிசைக்கின்மற் றெவைநிக ரிசைப்பாம்? _ 366
திங்களி னொளியாற் பங்கயம் மலரும்;
செமித்தசெங் காந்தளின் அரும்புஞ்
செங்கதி ரோளிக்குங் குவியுமால்; அங்கைக்
கணையெனச் செப்பவே றிலையாஷ்;
அங்குலிக் கணையாய்ச் செங்கணங் கெளிற்றை
யறையலாம்; செழுமலர்ச் சோலைப்
பைங்கிளி யணிழுக் கதனையம் மடவாள்
நகறிகர் பகருத லெளிதால். 367
சக்கர வாகஞ் சறைகொளும்; இளநீர்
சந்தன மணிதந்திடா; சூதின்
மிக்கவட் டதுதான் வெட்டுணும்; கலசஞ்
சுணங்குறா; மேருமா வரைதான்
நக்கனால் வளையும்; நளினமென் முகைதான்
நாயிறாங் குதித்தகா லலரும்;
மைக்கருங் குழலாள் மணிகணார் தனத்துக்
கேதினை யிணையென வகுப்பாம்? 368
புடவியை முதலா மனைத்தையும் மகட்டுள்
பொருந்திநீ விளங்குகண் வளரும்
வடவிலை யதனை யொருமழுறை யவள்தன்
வயிற்றினுக்: இணையென லாகும்;
கடலெழு தரங்கம் வரையென லாகும்;
கட்டெறும் பூர்மயி ரொழுங்காம்;
துடியதோ? தந்தோ? அனங்கவே ளூருவோ?
யாதெனத் தொகுக்கலா . மிடையே? 369
நீருறு சுழியை யுந்தியை நிகராய் நிகழ்த்துதல் அரிது;நீர் வளரிப்
பேரராப் பணமோ? இனித்ததேன் கூண்டோ?
பெருகுபோர் மதனன்பொக் கஇசமோ?
தேரதோ? வாச நிலைகொலோ? பரந்த
செம்பொ னாலவட் டமதோ?
வாருறை தனத்தா எல்குலா மதனை
யாதென வகுத்துரைத் திடலாம்? 370
வாழையோ? மோகக் கடலினைக் கடக்க
வகுத்திடுந் தெப்பமோ? வசஞ்செய்
வேழமா மதனைப் பிணித்திடுந் தறியோ?
மென்றொடை யாதென விசைப்பாம்?ஆழியைக் கரந்தந் தாழிசூ மிலங்கைக் ட்ட
கன்றுநீ செல்கென விடுத்த ‘ ் ்
பாழியந் தடந்தோள் தூதனை மருட்டும்
பரிசமை யணிமுழந் தாளாள். 371
சனைவரால் கணைக்கா லென்னலாம்; கமடஞ்
செப்பலாம் புறவடிக் இணையாய்;
நினையுன தழகுஞ் தனதுமா வழகும் நிறுத்தறிந் திடுமுறை முளரி மனையுறை யயன் றான் வகுத்திடுஞ் துலையோ?:
மற்றவள் பரடு;மென் குஇக்குப்
புனைமலர்க் குழலா ராடுகந் துகந்தான்
பொரும்விரற் றுகிரென லாமால். , . 372
தேங்கம ழனிச்ச மலர்மிசை நடந்தோ? —
செய்யபஞ் சூட்டியோ? கரத்தால்
பாங்கியர் வருடப் பொறாமையி னாலோ?
பாரெலா :மலைந்துபோர் வயங்கொள்-
பூங்கணை மதனன் மகுடமா முடிமேல்
பொருத்தியோ? யாதினோ சிவந்த?
மாங்குயின் மொழியா ளன நடை வனச
மலரடிக் கொப்புவே நிலையால். 373
இந்தமா வடிவத் தருந்ததி கற்பி னிரும்புவிப் பொறைத்திரு வெழில்சேர்
அந்தமா இனைநீ மணம்புரி வதற்கின்
றணைவையென் றாங்கவ ளூடனே
முந்துநாள் நவின்ற தாகவவ் வதுவை
முடிப்பதற் கியாவையு மமைத்துத்
தந்தியன் றுரித்தோன் முதலினோர் சார்ந்துன்
றன்வழி பார்த்திருக் .இன் றார். 374
ஆதலாற் புதுவை நகர்க்குகந் தணுகா யாயிடிற் பெரியரோ டந்த
கோதையே முதலோர் பொறுத்திடன் முடியாக்
கொள்கைய ராவர்;என் புயத்தின்
மீதமர்ந் இடிலிக் கணமவண் கொடுபோய்
விடுகுவ னேறுக வெனவிப்
பூதனை யெடுத்துண் டுமிழ்ந்திடந் தளந்தோன் பொன்னடி பணிந்துநின் றனனால். ‘ 375
அரங்கன் புதுவையை அடைக்தான்
நின்றவன் புயமேற் பொன்மலை மிசையோர்
நீலமால் வரைபடிந் தெனலாய்
நன்றென மகழ்வோ டரங்கம்வா மிறைவன்
நணுகலு மேந்திவான் வழியாய்ச்
சென்றுதன் மனமும் பிற்பட விசைத்துச்
செஞ்சிறை புடைத்திடும் வளியால்
குன்றொடுந் தருவேர் பரிந்துபின் தொடரக் ‘கோதிலாப் புதுவைசென் றடைந்தான். 376
அடையுமா முகில்நே ராழிமா தவனை
யாழியை மந்தர வரையால்
கடையுநா ளெழுந்த வமுதினைக் கண்ட
காட்சியிற் கண்டுளங் கனிவாய்
சடையவ ஸனயனிந் திரன்முதற் பலருஞ்
சயசயென் றடிதொழு தவர்மேல்
மடைதிறந் ‘ தருளார் கடைக்கணித் தருளி
வயினனம் புயத்தைவிட் டிழிந்தான். . 377
மீனமார் கடல்போற் றுந்துமி முழக்கி ‘
விண்ணவர் மழையெனப் பொழியும்
தேனமர் மலரின் பந்தரின் நிழற்கீழ்த்
தேவார்கோன் பாதுகை தாங்கப்
போனகங் கடுவோன் விதியிரு புறத்தும்
புகுந்துகை லாகுதந் தடைய
வானக மளவா. யுயர்ந்தபொன் மணியார்
வடபெருங் கோயில்புக் கனனால். . 378
புக்கபின் னாங்கோர் செழுமணி யினங்கள்
பொருந்துமண் டபத்தின்மத் இயினோர் .
தக்கவா தனமேல் வெண்குடை. நிழற்றச்
சாமரை யிருபுறம் இரட்ட
மிக்கசர் மதிவீற் றிருந்தென விருந்தான்;
மீனினம் பலவிளங் குவபோல்
அக்கர வணிந்தோன் முதலினோர் பலரு
மமையுமா தனத்தரு கஇிருந்தார். 379
இருந்த வவ்வமைதி யிந்திரன் வதனம்
இடைச்சிய ௬டைகவர்ந் தெடுத்துக்
குருந்தமீ தடைந்த கோவல ஸஜனோசக்கிக்
கோதிலாப் பெரியர்பாற் குறுடக்
கருந்தட நயனக் கோதையாள் தனையாம்
கடிமணம் புரிந்திடு வதற்குப்
பொருந்துமா நுரைத்து வருகவென் நிசைப்பப் புரிவனம் முறையெனப் போனான். 380
போனவன் ‘விரைவிற் பெரியவாழ் வார்தம்
பொன்மனை புகுந்துநின் மகளாம்
மாவினோக் கனளை யரங்கநா யகனார் os
மணஞ்செய்வா னடைந்திருக் கின்றார்;
ஆனதா லுனதுள் ளறிகுவா னவரின்
றனுப்பவந் தனன்புக லெனுமவ்
வானவ ரரசன் றிருமுகம் நோக்கி –
ட மற்றவன் இதைவகுத் துரைப்பான் 381
மூன்னர்நா ஸிழைத்த அருந்தவத் தீன்ற முயற்கறை யிலாமதி முகத்தென்
கன்னியைத் கருவே னென்னயாத் திரையாக்
கடிநகர்க் கேகிய ஞான்றில்
அன்னவற் குரைத்த தொனியுமஃ தறிவாய்; i
ஆதலா லம்மொழி மறுத்துப்
பின்னரொன் நுரைப்ப துளகொலோ? எனதும் ‘ : பெற்றிகண் டறிந்திலாய் போலும்! 382
அளித்திடு வதனுக் கையமொன் றிலையா
லாங்குநீ விரைந்தடை.ந் தியானை
விளித்தமா முதலை யழைத்து வாவெனலும்
மீண்டவன் கடிதுசென் றருந்தேன் ‘
துளித்தபைந் துளவோ ஸனம்புய மலரின்
துணையடி வணங்கியப் பெரியார்
களிப்புடன் மகளைத் தருவதற் சசைந்தார்கடிதெழுந் தருள்கெனப் பணித்தான். ” 383
பணித்தசொற் றன்து திருச்செவி யுறலும் பரிவினோ டாங்குவீற் நிருந்த
மணித்தவி சனைவிட் டெழுந்தழ தெறிக்கும்
மரக;தச் சவிகைமேற் பொருந்தித்
திணித்தட வரைத்தோட் கணிச்சியன் முதலோர்
சேர்ந்திரு புறத்தினும் நெருங்கக்
கணித்தநான்’ முறைநல் லோரையிற் பெரியார்
கனகமா ளிகைகலந் தனனால், 384
கலந்தமா தவனைக் கண்டவப் பெரியார்
கனலிகா ணம்புய மலரின்
மலர்ந்திட வதன முளங்களி துளங்க
வந்தெதிர் பணிந்துநீ வருக
நலம்புரிந் துளதிக் குடிகொலோ? கோதை
நங்கையோ? அடியனோ? நாயேன்
குலங்கொலோ? உணரேன்; எளப்புகழ்ந் தேத்திக்
குருமணித் தவிசினுய்த் தனனால். . 385
அரங்கன் மணக்கோலம்
தஞ்சமென் றடியிற் றாழ்ந்துளோர்க் கெல்லாம்
தாமரைக் கடைக்கணித் ததற்பின்
அஞ்சன வண்ண ஸெழுகநன் முகூர்த்த
மகலுமுன் றிருமண முடிப்பான்:மஞ்சன .மாட வேண்டும்நீ யெனவவ்
வானவற் கிறைவனுஞ் இவனுங் |
கஞ்சனு மணிநீ ராடுமண் டபத்துட்
கடி. துகொண் டடைந்தனர் மாதோ. 386
தாண்டிய தரங்கப் பெருகடல் நீருஞ்
சத்தமா. நதிகணீர் முதலாய்
– வேண்டுவ வருவித் தவற்குநீ ராட்டி மெய்யெலாம் பட்டினாற் றடவி
மீண்டலங் கரிக்குங் கூடமுட் கொடுபோய்
விளங்குபொன் னுடைமுடி முதலாம்
பூண்டயங் கஇிடுமா றணிந்துசந் தனமும்
பூந்தொடை முதலெலாந் தரித்தார். _ 387
திருமணக் கோல் மமைத்தபின் பவர்பூஞ்
செங்கர மணிவிர லதற்குள்
ஒருவிர லதனைச் சங்கரன் பிடித்திட்
டுவப்பொடு மழைத்துவந் தனனவ்
் விரு௨ரு மிருபா’ லினுமிரு புயமு
மேத்தி௦யெச் சரிக்கையோ டெழிலாம்
குருநவ மணிக எளிழைத்தகல் யாண
மண்டப முட்கொடு புகுந்தார். 388
புகுந்தவ ணமைத்த பைம்பொனா தனமேற்
பொருந்துறக் குணதிஎ.௪ முகமாய்
-மூகுந்தனை யிருத்தித் தமதுமா மடவார்
.முகந்தனை .நோக்கவாங் கவரும்
மிகுந்தவன் பொடுபோய்க் கோதையைக் கொணர்ந்தல்
வேதநா யகன்வலப் புறத்தில்
தகுந்தவம் முறையோ ராதன மிசையே
சார்வுற இருத்தினர் மாதோ. 389
ஏற்றனன்
தூரிய வசைகள் கறங்கிடு முழக்குஞ்
சுரிமுகங் களினெழு முழக்கும்
* ஆரியர் வாழ்த்தும் மங்கல வொலியும்
அருமறை முனிவரோ தொலியும்
வாரியின் முழங்கப் பெரியர்வந் தென்பெண்
கோதையை வழங்கின னுமக்கென்
Cont கரத்தும் நீர்பொழிந் தளித்தான்
உலகளந் தவனுமேற் றனனால். 390
மாதவன் மங்கல நாண் புனைந்தான்
– மருவமை முளரி மலருறை யயனார்
மங்கலச் சடங்குகள் உழுவா
தருமறை முறையில் பலவுமாங் இயற்றி
யாவீனெய் சொரிந்தெரி வளர்த்தித்திருமரு -மார்பன் கோதையாள் கழுத்திற்
இருந்துமங் இலியமங் கரத்தால்
பொருவுமா றணிந்தான்; அந்தரத் தவர்கள்
பூமழை பொழிந்துவாழ்த் தினரால். 391
மற்றுள சடங்கு நடந்தபின் பெரியார்
மகிழ்ந்துபல் லாண்டெடுத் தோதப்
பொற்றொடி மடவார் பலர்இரண் டிசை?ர்
பொருந்துசங் சர்த்தன மிசைப்ப
விற்றிரு நுதற்சூ டிக்கொடுத் தவள்் தன்
மெல்வீரல் பிடி த்தம்மி மிதித்திட்
டுற்றெழு சனலை வலம்புரிந் தாழி
யுதகமார் குடத்திலிட் டெடுத்தே; 392
எதிருற அடையு மருந்ததி தனையு
மெழிற்கணா னோக்கவந் திருப்ப
. . ..மதிதவழ் சடையா னெழுந்துவெண் பொரிகை
் வாரியிட் டிடுதலு மஇழ்வாய்
கதிர்செயு மணி3மா இரமழ குறவாங்
கவர்இரு விரற்கணிந் தெவரும்
அதிசய முடனே துதிசெய மடவா ்
-ராலநீர் சுழற்றிட வெழுந்தார். 393
எங்கிருந் தெம்மாப் பொருளையு மெடுத்திட்
டெய்திடு மிரவலர் பலர்க்கும்
தங்கண்மா மனதுள் வெறுப்புறும் வகையோர்
சாமமா மளவுமோய் வீலதாய்ச்
செங்கன கமுமா மணியும்பட் டுடையுஞ்
செழித்தவா பரணமும் பிறவும்
மங்குலி னுதவி யறுசுவை பதார்த்த
வகையமு தியாவரு மருந்தி; 394
வெண்கரி யத்னை யலங்கரித் ததன்மேல்
வீதியிற் கோலமாய் விளங்கி
மண்படு துகளுந் தூரிய வொலியும்
வானகம் ‘போர்த்திடப் பலருங்
கண்படு காட்சிக் கடங்குறா வணம்அ௮க்
கடி நகர் முழுவதும் வலமாய்
விீண்படு கனக மாளிகை யதனின்
மேவினார் மீட்டுமின் பு.றவே. 395
விஞ்சொளி மணிகள் பைம்பொனி ஸனிழைத்து
விளங்குறச் சித்திர வறைக்குள்
அஞ்சன வண்ணத் தரங்கநா யகனும் .
2 அனநடைக் கோதையும் புகுந்து
பஞ்சணை மருவிக் காமமாங் கடலிற்
படிந்தின்ப நறவமுண் டுறங்கிச்
செஞ்சுடர்க் கதிரோன் குணகட லெழலுஞ்
செழித்தபஞ் சணையைவிட் டெழுந்தார். 396
ஆழ்வார் சீர்வரிசை செய்தல்
அனங்கவேள் தனைவென் றுளபெரி யாழ்வார்
அரங்கமா நகரிற்பைந் தலைகொள் ல >
சனங்கெழு மரவிற் .றுயிலுமா தவனார்
சேர்ந்துதன் இிருமக ளாகுங்
கனங்குழை கோதை தனைமணம் புணர்ந்த
காட்சியைக் கண்டுகண் களித்து
மனங்கொளா மடஒழ்வுற் றவர்க்கரு ளிடுஞ்சீர்
வரிசைகள் பலவுமீந் தனரால். 397
சய்ந்தபின் பலவா முபசரிப் புடன்றன் ட்டா
இணையடி தொழுதிடும் பெரியார் _
வாய்ந்தவம் புயமா மலர்முகம் நோக்கி,
மாதவன், மறைமுதற் பலநூல்
ஆய்ந்தநல் லுளத்தோ யினிச்சில நாளின்
“அரங்கமா நகரம்வந் தணைகென்்
ஹேய்ந்தநல் லுரைகள் பலபல வாக
எடுத்தவன் களிப்புற விசைத்தே; ் 398
மணமக்கள் அரங்கம் அடைந்தனர்
“ மாதினுக் கரசாங் கோதையா ளஞூடனே
வயினனா மேறுவெற் பதன்தோள்
மீதெழுந் தருளி யரங்கமா நகர
மேவிவாழ்தந் இருந்தனன்; விரிஞ்சன்
பூதமார் படையோன் புரந்தரன் முதலாம்
; புலவர்க ளாதிமற் றெவரும்
தீதிலாத் தத்தம் மடந்தைய ௬டனே ்
சேர்ந்துதம் பதியில்வாழ்ந் தனரால், 399
(வேறு)
அனையவர் யாவரு மகன்ற பின்னரின்
வினையற நோற்றவவ் விட்டு சித்தனும்
கனைகுரன் முரசதீர் கனக மாளிகை
புனைகொடி. விசும்பினார் புதுவை வைகினன். 400
ஆழ்வார் அரங்கம் அடைதல்
பற்பல நாளகன் றதற்பி னோர்பகல்
“ வெற்பமை வடபெருங் கோயின் மேவியே
சற்பமேற் றுயில்வட பத்ர சாயிதன்
பொற்பதம் பணிந்திவை புகல்வ தாயினான்: 401
விரிபுக ழரங்கமுள் விளங்கிக் கண்வளர்
வரியர வணையினான் வருக வென்றெனைப்
பரிவொடு மற்றைநாள் பணித்த தற்கியான்
புரியவேண் டுவதெனோ புகல்கி யென்றனன். 402
என்னலும் யாமுவவ் வெழில ரங்கரும்
ஒன்றென வுளந்தெளிந் தொளிய ரங்கமுள்
சென்றணைந் தாங்கவர் செப்பு மம்முறை
நன்றெனப் புரிகென விடையும் நல்கினான், 403
நல்கிய விடைகொடு நளினம் போன்முகம்
மல்கிடப் புதுவைமா நகரம் நீங்கியே
பல்கலைக் கேள்வியர் பரவுங் ௯டல்சேர்ந்
குல்கலி லழகர்பொன் னடிவ ணங்கியே; 404
விழைவொடு மாலிருஞ் சோலைமே விக்கள்
ளழகரம் புவிமல ரடிவ ணங்கியே
முழவொலி யுருமென முடுகிூப் புற்றரா
நுழையரங் கந்தனை நோக்கிப் புக்கனன். . 404
புக்குநல் இருவடி போற்றி நின்றவத் குக்கசீர்ப் பெரியர்தா மரையின் றண்மலர்
ஒக்குமா முகந்தனை நோக்கி யொண்கதகுர்
சக்கரக் கரவரங் கேசர் சாற்றுவார்? 406
ஈங்கொரு கோயிலொன் றநியற்றி யெம்மையித்
தேங்குழற் கோதையைக் கருட தேவனைப்
பாங்குற விக்ரக மாகப் பண்ணியே
ஆங்கொரா சனமிசை யணுக வைத்தரோ; 407
பத்தியோ டுச்சவா திகள்பல் பூடணம்
நித்யவா ராதனம் நிகழ்த்தும் யாவையும்
ஒத்திடப் புரிந்திவ ணுறைதி யென்னலும் அத்தகை புரிந்தவ ணணுகு நாளிடை) 408
ஆழ்வார் திருநாடலங்கரித்தார்
கோதில்பூ மாலை சூடிக் கொடுத்தவம்
மாதுமுன் னிலைத்திரு மந்தி ரந்தனை ஓதியப் பெரியரு மொருதஇி னத்திடை
ஆதிநா ரணன்இரு வடிய டைந்தனர். 409
கோதையாரின் பாசுரம்
அன்னவ ஞூரைத்தபா மாலை யாமதை
– துன்னிய வன்பொடுந் துதித்து நாவினாற்
பன்னியுங் கேட்டுமிப் படியின் மீதுளோர்
மன்னின ரனேகர் வைகுந்த மாதகர், 410
(வேறு)
உரையப் பாமா லையிற்றிருமா
லுறையும் பதிகள் பதினாறாம்
அரங்கம் பிருந்தா வனங்குடந்தை
யணியா ரெமுனைக் கரைக்கண்ண
புரமா லிருஞ்சோ லைவில்லி
புத்தூர் பாண்டி வடம்வ௪ைம
துரைபத் தவிலோ சனந்துருவேங்
கடஞ்சீர் துவரா பதியோடும்; 411
(
வேறு)
நீரார் பாற்கடலும் — ஏரா ராய்ப்பாடிப்
பேரார் வைகுந்தம் — சீர்கோ வர்த்தனமே. 412
ஆண்டாள் சிறப்பு
(வேறு)
. . உலகந் தனில்வாழ் மானிடற்குள்
உயர்ந்த பெரியோர் முனிவர்களாம்;
இலகு மூனிவோர் தமக்குயர்ந்தோ
ரெழிலாழ் வார்க ளாம்;அவற்குள்
நலமார் பெரியாழ் வாருயர்வாம்;
அவர்க்கும் நாச்சி யாரென்னும்
திலக நூதற்சூ டிக்கொடுத்தா
ளுயர்வாம் அதன்செய் கையுந்தெரிப்பாம். 413
இனிதாம் புண்ய மிதுபாப
மிதுநன் மைகளீ திதுதின்மை
அனியா யந்௫ திதுநியாய
மெனவே யனைத்து மறிவகையாய்
முனிவோர் பலசாத் திரநூல்கள்
புகன்ற முறையா லிவ்வுலகின்
மனிதர் தமக்குள் எம்முனிவோர்
பெரியோ ரெனவைக் கப்படுமால். 414
காயைத் தின்னு மவர்தமக்குக்
கனியைத் தருமங் கவர்போல
மாயைத் தொடர்புள் ஞழல்வோரம்
மயக்கைக் கழிக்கும் வகையயனாஞ் : சேயைத் தருமுத் தியங்கமலத்
திருநா ரணனைச் செப்பியீடும்
ஆய வாற்றா லாழ்வார்கள் –
முனிவோர்க் கதிக மெனவறைவார். 415
மாயன் றனக்குக் கண்இிட்டி
வாரா வகைகாப் பணிந்திடுமா
றாய பல்லாண் டினையிசைத்தும்
அவரே பரமா மெனவிசைத்திட்
டேய கிழியும் அறுத்ததனா
லிசைக்கு மாழ்வார் தங்களுக்குள்
தூய பெரியாழ் வார்பெரியா
ரெனவே சொல்லும் முறைதெளிமின். 416
சூடும் நறும்பூ மாலைகளுஞ்
_. சுருபம் பெண்ணாய்ப் பத்தியொடும்
பாடு மிசைசேர் பைந்தமிழின்
பாமா லைகளும் பணவரவின்
ஆடுந் திருமாற் களித்தவரைப் புணர்ந்த வதனா லருவினையைச்
சாடும் பெரியாழ் வாற்குமவள் பெரியாள் எனவே சாற்றுவரால். 417
மலர்மாலையைச் சூடிக் கொடுத்ததனாலும்,
பெண்ணாகப் பிறந்ததால் காதல் பள்ளமடையாயிருத்தலினாலும், பெருமாளைத்
திருமணம் செய்துகொண்டமையாலும் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே
பெரியவள்
இந்தக் கதையைப் படித்தவரும்
எழுது மவரு மிதன்பொருளைச்
சிந்தை தெளிய வுரைப்பவருங்
கேட்கும் செய்கை யுடையவரும்
முந்தை வினையைக் களைந்துபத்தி
முயன்று பலபாக் கியங்களொடும்
மைந்தர்ப் பெருஞ்செல் வமுமடைந்து.
கடையிற் பதவி மன்னுவரால். 418
ஆசாரியர்களின் வரலாறு பேசுவோம்
புதுவைப் பெரியாழ் வார்மகளாய்ப்
புவிமா துதித்திட் டரங்கர்தமை
வதுவை புரிந்த சரித்ரமதின்
வகைகள் பலவும் விரித்துரைத்தோம்;
இதுகா றாழ்வார் களின்சரிதம்;
இனியா ரியாக எளியற்சரிதம்;
அதனுள் நாத முனிசரிதம்
அதனை யிவ்வா றெனவறைவாம். 419
ஆண்டாள் திருவவதார அத்தியாயம் முற்றும்.
(முதலாம் காண்டம் முற்றும்)
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்,
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply