ஸ்ரீ திவ்ய தேசங்கள்–ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

—————

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக் கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்-பாம்பணை சயனம்திரு மெய்யம் 
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்-திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்-பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 

2. விமலாக்குருதி விமானம்  

3. சுத்தஸ்த்வ விமானம்      

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்      

6. வைதிக விமானம்  

7. உத்பலா விமானம்        

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்   

10. வேதசக்ர விமானம்  

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்     

14. ஸ்ரீகர விமானம்      

15. ரம்ய விமானம்   

16. முகுந்த விமானம்- 

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்      

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப் போகிறது.

———
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்-திரு அயோத்தியை-திருக் கண்ணபுரம்–திருக் கோட்டியூர்-திருத் துவாரகை-திரு வடமதுரை-திருக் கோவர்த்தனம்-திரு விருந்தாவனம்-திரு வெக்கா
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –திருக்குறுங்குடி-திருப்பாடகம்–திருப்பேர் நகர்
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –திரு அத்திகிரி-திரு வல்லிக் கேணி-திரு ஆய்ப்பாடி–திருக் கோவலூர்-திரு விண்ணகர்
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்-திரு அட்டபுயகரம் /திருவாலி –/திரு ஊரகம் /திருக்கடிகை /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்–இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

————–

அ காரம் நடுவில் உ காரமும்  ம காரமும் ஏக சிம்காசனம் -பொன்னும் முத்தும் மாணிக்கமும் –
அணி புதுவை தண்  தெரியல்
–ஸ்ரீ மிதிலை பிறந்து ஸ்ரீ அயோதியை புகுந்தாள்
ஸ்ரீ நப்பின்னை கும்பன்  இடம் பிறந்து –ஸ்ரீ ஆய்ப்பாடி புகுந்தாள்  
ஸ்ரீஆண்டாளோ பிறந்த புகுந்த இடம் இது -ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை —
ஸ்ரீ விஷ்ணு சித்தர்–மார்பம் என்பதோர் கோவில் அமைத்து -மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி-ஆர்வம் என்ற  ஓர் பூவை சேர்த்து–

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம்.
அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை:
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும்,
தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க,
சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும்,
அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு- மாதுளம் பூ;
மரவல்லி இலை- கிளியின் உடல்;
இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;
கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;
கட்டுவதற்கு வாழை நார்;
கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.
இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய
இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன.
இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி.
இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர்.
சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மற்றும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில்,
பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும்,
அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
———————————————————————————————————-———————————

ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.

அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.

த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.

கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.

ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்

வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.

கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான்  கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ.  எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.

இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில்  கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு

பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால்

நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.

தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.

துவஜ அவரோஹணம்  – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.

த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக  ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.

சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு  புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.

விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.

பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.

வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.

கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.

ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது

பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.

ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி  ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.

ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.

ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.

நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.

விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது

தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்

கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.

அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம் 

ஸ்ரீ திருவல்லிக்கேணி -ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவ விவரணம்

முதல் நாள் காலை -தர்மாதி பீடம் -ஸ்ரீ உபய விபூதி நாத ஸூசகம் – -ஸ்ரீ முதல் திருவந்தாதி -திரு வீதியில்

மாலை புன்னை மர வாஹனம் -ஸ்ரீ கண்ணன் திருப் புல்லாங்குழல் ஊதும் திருக்கோலம்
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் புத்தூர் பெறாத அன்று
பாரதம் கை செய்த அத்தூதன் -ஸ்ரீ பெரியாழ்வார் -2-1-1-

இரண்டாம் நாள் காலை -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி சேவை –
விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் -71-என்றும் பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்
பாம்பணை மேல் சேர்ந்தாய் -97-என்பதற்கு ஏற்ப சேஷ வாஹனம்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -81-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்

இரண்டாம் நாள் மாலை -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே
என் சிற்றாயர் சிங்கமே -ஸ்ரீ பெரியாழ்வார் –3-3-5-என்பதற்கு ஏற்ப ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள் காலை -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி சேவை -பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன் மேல் கண்டாய் தெளி –57-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கருட வாஹனம் சேவை

ஏகாந்த சேவையில் திருக்கண்டேன் — என் ஆளி வண்ணன் பால் இன்று -1-சேவை

மூன்றாம் நாள் மாலை –உரக மெல்லணையான் கையில் உரை சங்கம் போலே மட அன்னங்கள் –ஸ்ரீ பெரியாழ்வார் –4-4-4-
என்பதற்கு ஏற்ப ஹம்சா வாகனத்தில் பறவை ஏறு பரம் புருடனாக-5-4-2-சேவை
இவன் தானே உலகினில் பேர் இருள் நீங்க அன்று அன்னமதாய்-1-8-10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

நான்காம் நாள் காலை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி சேவை -நீயே எரி சுடரும் -20-என்பதற்கு ஏற்ப –
நான்முகனை படைத்த நாராயணன் -1-என்பதால் பரத்வம் பொலிய ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -ஸூர்ய பிரபையில் சேவை

நான்காம் நாள் மாலை -ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ நாச்சியார் திருமொழி சேவை –
கதிர் மதியம் போல் முகத்தான் -1-என்றும்
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -7-4-என்பதற்கு ஏற்ப சந்த்ர பிரபை சேவை –

ஐந்தாம் நாள் காலை -ஸ்ரீ திருவிருத்தம் சேவை -நாயகா பாவனையில் பூர்ணமாக அருளிச்செய்த
ஸ்ரீ திவ்ய பிரபந்தம் அன்றோ ஆகவே நாச்சியார் திருக்கோலம்

ஐந்தாம் நாள் மாலை -ஸ்ரீ பெருமாள் திருமொழி சேவை –
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை -10-11-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள் காலை -திருச்சந்த விருத்தம் சேவை -ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ -8-என்பதற்கு ஏற்ப
திரு அபிஷேகம் அணிந்து பரத்வம் பொலிய ஆனந்த விமானத்தில் எழுந்து அருளுகிறார் –

ஆறாம் நாள் மாலை ஸ்ரீ முதல் ஆயிரம் நிகமித்து-
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி -28-என்றும்
விண்ணுளார் வியப்ப வந்த ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா -44 -என்பதற்கு என்ற ஆனை வாஹனம்

ஏழாம் நாள் காலை ஸ்ரீ திருவெழு கூற்று இருக்கை சேவிக்கப் பெற்று ஸ்ரீ பெரிய திருமொழி சேவை -என்பதற்கு ஏற்ப திருத்தேரில்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -2-3-1-என்றும்
பார்த்தன் தன் செல்வத் தேர் ஏறி சாரதி -2-10-8-என்பதற்கு ஏற்பவும் திருத்தேரில் சேவை –

எட்டாம் நாள் காலை முதலில் ஸ்ரீ சிறிய மடல் சேவிக்கப் பெற்று பின்பு ஸ்ரீ பெரிய திருமொழி தொடர்ந்து சேவை
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி-என்றும்
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப-3-3-3-என்றும்
ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து -3-9-7-என்றும்
பாடல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமார –4-4-3-என்பதற்கும் ஏற்ப
வெண்ணெய்த் தாழிக் கண்ணனாக சேவை

எட்டாம் நாள் மாலை -ஆடல் மா வலவன் கலிகன்றி பாசுரங்கள் சேவைக்கு ஏற்ப குதிரை வாஹனம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு ஆபரணங்கள் கொள்ளை அடிக்க எழுந்து அருளுவதும் –
ஸ்ரீ திருமந்திர உபதேசம் செய்து திருத்திப் பணி கொள்வதும் –
மீண்டும் வாடினேன் வாடி வருந்தினேன் -முதல் பதிகம் அனுசந்திப்பதும் -முக்கிய நிகழ்வுகள்

ஒன்பதாம் நாள் காலை -மட்டை அடி உதவும் -எட்டாம் நாள் மாலை சேர்த்தியில் எழுந்து அருளி –
வேடு பறியின் போது தொலைத்த திரு மோதிரத்தை தேடிக்கொண்டு தனியாக எழுந்து அருளி –
ஸ்ரீ நம்மாழ்வார் -பெரியவருக்காக பொறுத்தோம் என்பதும் -மின்னிடை மடவார் –திருவாய் மொழி -7-2-சேவித்து

அன்று இரவில் காதில் கடிப்பிட்டு -10-8-பதிகம் சேவை -உத்சவத்தில் பூர்த்தியாலும்
ஸ்ரீ பெரிய திருமொழி பூர்த்தியை முன்னிட்டும் தங்க சப்பரத்தில் எழுந்து அருளி சேவை

பத்தாம் நாள் -துவாதச ஆராதனம் -பூர்ணமாக ஸ்ரீ திருவாய் மொழி திருச்செவி சாத்தி அருளுகிறார்

அன்று இரவில் குளிர்ச்சியாக வெட்டிவேர் திருத்தேரில் புறப்பாடு –
ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் குளிரும்படி ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி சேவை

ஸ்ரீ திருவரங்கம்
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!”

திருவேங்கடம்
“கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு!
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு!
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு!
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு!
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு!
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே!”

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே –

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்

செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும் அடைவதில்லை.

காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் ||

அர்ச்சாவதாரத்தில், இருந்தும் கிடந்தும் நின்றும் பகவான் ஸ்ரீமந் நாராயணன்,
அவன் குழந்தைகளாகிய நம்மைத் திரும்பப் பெறுவதில் வைகுண்டத்தில்
தொடங்கிப் பல திவ்யதேசங்களில்,முயற்சித்தாலும், அவனது திருவுள்ள வேட்கை
பூலோக வைகுண்டத்தில் –திருவரங்கத்தில், வெற்றி அடைந்தது

ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |
ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading