திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,
மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே
என்கிறார்.
வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |
பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.
மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.
ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத் தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!
ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.
ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்று வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலததில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!
————
ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்
அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: (1)
அவிநய – மபநய விஷ்ணோ
தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |
பூத – தயாம் விஸ்தாராய
தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||
ஹே விஷ்ணு
எனது பணிவின்மையைப் போக்கு
மனதை அடங்கச் செய்
ம்ருக த்ருஷ்ணாம்-தாகம் கொண்ட மான் போல்-புலன்கள் ஓடுவதைத் தவிர்த்து -சம தம பிரார்த்தனை–பேராசையையும் தவிர்த்து அருள்
எல்லா ஜீவ ராசிகளிடமும் தயையை வரச் செய்
சம்சாரக்கடலில் இருந்து அக்கரை சேர்த்து அருள்
——–
திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே (2)
திவ்ய – துநீ மகரந்தே
பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |
ஸ்ரீபதி பதாரவிந்தே
பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||
கங்கையை மகரந்தமாகக் கொண்டதும்
ஸச் சித் ஆனந்தம் ஆகியவற்றை வைசனையாகக் கொண்டதும்
உலகில் துன்பத்தைப் போக்குவதுமான
ஸ்ரீயப்பதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்
———-
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க: (3)
ஸத்யபி பேதாபகமே
நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க:
க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||
ஜீவாத்மாவான எனக்கும் பரமாத்மாவான உனக்கும் இடையில் வேற்றுமை இல்லை எனினும்
ஹே ஸ்வாமிந்
அடியேன் உனக்கு சேஷ பூதனே
யானும் நீ என்னுடைமையும் நீயே
அலை தானே ஸமுத்ரத்தை அண்டி இருக்கும்
கடல் அலையை அண்டி இருக்காதே
———–
உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசி த்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார: (4)-அந்தாதி அமைப்பில் ஸ்லோகம்
உத்த்ருத நக -நகபிதநுஜ
தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி
ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||
கோவர்த்தன மலையைத் தூக்கியவரே
இந்திரனின் இளையவராக உம்மை ஆக்கிக் கொண்டவரே
அசுரக் கூட்டத்தை அழித்தவரே
ஸூர்ய ஸந்த்ரர்களைக் கண்களாகக் கொண்டவரே
தங்கள் கண்களுக்கு எதிரே வந்து காட்சி அருளும் பொழுது எவருக்குத் தான் உலகியலிகளின் தாழ்மை தோற்றாது
——————
மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)
மத்ஸ்யாதிபி – ரவதாரை –
ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |
பரமேச்வர பரிபால்யோ
பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||
மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கி வந்து அருளி
பூமியைக் காத்து அருளும் தங்களால்
ஸம்ஸார தாபத் த்ரயங்களால் மருண்ட அடியேன்
உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்து அன்றோ
———
தாமோதர குண மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே (6)
தாமோதர குண மந்திர
ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |
பவ – ஜலதி – மதந மந்தர
பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||
தாமோதரன்
குணங்களுக்கு கோயிலானவனே
அழகிய தாமரையை ஒத்த திரு முகம் கொண்டவனே
கோவிந்தா
ஸம்ஸாரக் கடலைக் கடையும் மந்த்ர மலை போன்றவனே i
எனது பெரும் துன்பத்தைப் போக்கி அருள்வாய்
————
நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)
நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||
ஹே நாராயணா
கருணைக் கடலே
உனது திருவடித் தாமரைகளை சரணம் அடைகிறேன்
என்ற இந்த ஆறு சொற்கள் எப்போதும் என்னிடம் தங்க அருள்வாய்
————
இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக் கவலையும் கிரஹ தோஷமும் நீங்கும்.
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply