கண்ணி நுண் சிறுத் தாம்பு – -5-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

ஐந்தாம் பாட்டில் –
உம்மை புன்மையாகவும்
உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர்
உம்முடைய புன்மையையும் –
உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும்
சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-நம்பினேன் மடவாரையும் முன் எலாம் –
இவருடைய புன்மை -இருந்தபடி
பிறர் நன் பொருள் நம்பினேன் –
பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை
நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை
பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த  ஜீவன்  அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ் வ இதர ஸமஸ்த வஸ்து  விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண  கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – )
விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது -உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இ றே
பொருள் -என்று த்ரவ்யம்
நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இ றே
அத்தை இ றே நான் அபஹரித்தது
நம்புதல் –ஆசைப்படுதல்
பர த்ரவ்யதை ஆசைப்படுகை இ றே -அபஹாரம் -வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார்
அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –
பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ
ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )
ததீய சேஷமான வன்று இ றே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது
அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்
அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இ றே –
ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இ றே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இ றே-விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இ றே ரத்னம் களவு காண்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இ றே -இருப்பது-

நம்பினேன் மடவாரையும்
ஈஸ்வரனுக்கு அபிமதமான வஸ்துவை அபஹரித்த நான் –
தேஹாத்ம அபிமாநிகள் -என்னது -என்று அபிமானித வஸ்துவை அபஹரிக்க சொல்ல -வேணுமோ
ராஜ ரத்னம் அபஹாரம் பண்ண அஞ்சாத  நான் –
ஷூ த்ரர் உடைய விற்கும் வைக்கோலும் அபஹரிக்க அஞ்சுவேனோ
-இத்தால்
ஈஸ்வர அபிமான வஸ்துவை அபஹரித்தேன்
அந்யர் உடைய அபிமத வஸ்துவையும் அபஹரித்தேன் -என்றபடி –
மடவார் -என்கையாலே -அங்கும் அனந்யார்ஹங்களை அபஹரித்தேன் -என்கை-

முன் எலாம் –
இப்படி தேஹாத்ம -அபிமாநியாயும் –
விஷய -ப்ரவணனாயும் –
போந்த காலம் தான் சாவதியாகப் பெற்றதோ –
ஈச்வரனோபாதி ஆத்மாவும் நித்யம்
காலமும் அநாதி
அசித் சம்பந்தமும் அநாதி
ஆகையாலே -முன்புள்ள காலம் எல்லாம் இதுவே யாத்ரை -என்கை-

உம்முடைய புன்மை குறைவற்று -இருந்தது
ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்த அளவு ஏது என்ன –
அத்தைச் சொல்லுகிறார் மேல் –
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு –
என்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஆராயும் அத்தனை அபூர்ணரோ ஆழ்வார்
என்னை உபேஷித்த காலம் இவ்வளவு பாபம் இவ்வளவு என்று பார்க்கும் படி அன்றே
ஆழ்வார் உடைய பூர்த்தி
ஆத்ம அபஹாரம் பண்ணினான் நான் -விஷய பிரவணன் ஆனேன் என்று கை விடும்படி அன்றே
ஆழ்வார் திருவடிகளை நீர் தான் கிட்டின படி என் -என்ன
விஷயங்களுக்கு அர்த்தம் தேடி –
அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க –
அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் –
இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இ றே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ )
ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
திருநகரியைக் கவி பாடுகிறார் –

இன்று அன்பனாம் –
இதுக்கு முன் எனக்கு ஒரு நினைவு இன்றிக்கே இருக்க அசிந்திதமாக ஆழ்வார் திருவடிகளிலே
ப்ரவணனாகக் கண்டேன் –
அநாதி காலம் ஆத்ம அபஹாரம் -பண்ணியும் விஷய ப்ரவணனாயும் போந்த இது
இழவுக்கு உடலாகை அன்றிக்கே –
சரண்ய ப்ரபாவத்தாலே
பேற்றுக்கு உடலாக கிருஷி பண்ணினாரைப் போலே பலித்துக் கொண்டு நிற்க கண்டேன் –
நான் -என்னது -என்று இருக்கை தவிர்ந்து
இதர விஷயங்களில் விரக்தராய்
பகவத் சேஷத்தளவு நில்லாதே அதின் எல்லையான ததீய சேஷத்தளவிலே நின்றார் ஆழ்வார்
இந்த க்ரம அபேஷை அன்றிக்கே
முதல் அடியிலே நான் ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணனாகப் பெற்றேன் –

அடியேன் –
ஆழ்வார் உடைய வைபவத்தை அனுசந்தித்து -அதுக்கு -தோற்று  அடியேன் -என்கிறார் -குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே அதுக்குத் தோற்று அடியேன் என்கிறார்
ஆச்சார்யர்களை நம்பி என்னக் கற்பித்தார் போலே
ஆசார்யர்கள் அழைத்தால் -அடியேன் -என்கிறதும் ஸ்ரீ மதுரகவிகள் வாசனையாலே யாயிற்று
-சதிர்த்தேன்
சதிரை உடையேன் ஆனேன்
ஈஸ்வர சேஷமான வஸ்துவை -என்னது -என்று இருக்கைக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் மேல் பட்ட சதிர் கேடு இல்லை இ றே
அவற்றை விட்டு –
பகவத் விஷயத் தளவில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படி சதிரை உடையேன் ஆனேன் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading