ஏழாம் பாட்டில் –
ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு –
இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் –
என்று அனுசந்தித்து –
இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று
எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் –
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–
கண்டு கொண்டு-
காணாததை கண்டு கொண்டு -தேடினதை கண்டு கொண்டு –
நான் கிட்டின அளவிலே ஆழ்வாருக்கு உண்டான திரு உள்ளம் நிதி எடுத்தாற் போலே
இருந்தது -என்கிறார் -(கண்ணால் கண்டார் -கைகளால் கொண்டார் –புதையல் போலே -கண்டுகொண்டார் -)
தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் -என்று தோற்றும்படி இருந்தது -என்கிறார் –
அவருடைய கிருபைக்கு அனுத்தமமான பாத்ரம் இ றே நான் -(ந உத்தமம்-உத்தமம் இல்லை / யத்தை காட்டிலும் உத்தமம் இல்லையோ அது அநுத்தமாம் -என்றுமாம் -நம்மாழ்வார் பாத்திரம் ஆக நீசத் தன்மை நிறைந்து இருக்க வேணுமே -)
என்னை –
நாட்டாரில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வாசி யறியாத என்னை -(இயம்புகேன் -என்றாலே- என்னை -வேண்டாமே -ஆழ்வார் பிரபாவம் தெரியாத என்னையும் என்றவாறு)
தம்முடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ப்ரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை –என்றுமாம்-
காரி மாறப் பிரான் –
ஆழ்வார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை நினைத்துப் பிரான் என்கிறார் –
காரி மாறப் பிரான் -என்கிற விசேஷணத்தாலே -ஆழ்வாருக்கு உபகாரகரான
ஈஸ்வரன் பக்கலில் போகாமைக்காக விசேஷிக்கிறார்-
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் என்கிறபடியே அவனுடைய உபகாரகம் சர்வ சாதாரணமாய் ஆயிற்று இருப்பது -(காரி மாறனைக் கொடுத்த பிரான் என்றுமாம் -உலக பிள்ளை இல்லையே -லோகத்துக்கு கொடுத்த உபகாரகன் -எதில் மாறி இருந்தார் -புன்மையாக கருதுவதால் கைக் கொண்டார் அன்றோ )
அந்த சாமான்யத்தில் புகாமைக்கு தம்முடைய ஸூ ஹ்ருதத்தை விசேஷிக்கிறார்-(என்னை காரிமாறப் பிரான் -)
பண்டை பல்வினை –
1-அநாதி காலம் சஞ்சிதமாய் -விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபம்
2-சூர்ப்பணகையை போலே -வகுத்த விஷயத்தை பற்றுகைக்கு வழி யல்லா வழியே
இழிகைக்கு ஈடான பாபம் –
3-பிரதம அவதியான பகவத் விஷயமே புருஷார்த்தம் -என்கிற புத்திக்கு அடியான பாபம்
இவை யாயிற்று பண்டை பல் வினை யாவது –
வல் வினை
பிராய சித்த சாத்தியமும் அன்றிக்கே-அனுபவ விநாச்யமே அன்றிக்கே -இருக்கை-
பாற்றி யருளினான் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி-சும்மனாதே கைவிட்டோடி தூறுகள் சாய்ந்தனவே -என்று சொல்லும் பிரகாரங்கள் அன்றிக்கே-உரு மாய்ந்து போம் படி பண்ணினான் –
தன் புகழ் ஏத்த அருளினான் என்றபடி தம்மையே வாய் புலத்தும்படி பண்ணினார் –
எண் திசையும் அறிய இயம்புகேன் –
விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்
அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் –
அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின
அருளுக்கு மேலே இ றே என்னை விஷயீ கரித்த அருள் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply