கண்ணி நுண் சிறுத் தாம்பு – 8-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

எட்டாம் பாட்டில் –
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் –
ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் –
நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம்  இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் -வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே  -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)

இன்புற –
ஆநந்த நிர்பரராக –
எண்ணாதனகள் எண்ணு நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்கிறபடியே –
சாதநத்தில் அந்வயம் இன்றிக்கே -பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படியாக -(உபாயமாக ஒன்றையும் செய்ய வேண்டாம் கைங்கர்யத்துக்காக அனைத்தையும் பண்ண வேண்டும் )

வருளினான் அவ் வருமறையின் பொருள் –
அவ்வரு மறை –
பிரசித்தமாய் -பெறுதற்கு அரிதாய் இருக்கிற மறை -அதாகிறது –
வேத ரஹஸ்யமான உபநிஷத் இ றே –
அவ்வரு மறையின் பொருளை அருளினான் –
நித்ய சத்வஸ்தர்க்கு அல்லது தோன்றாத உபநிஷத் அர்த்தத்தையும் அருளிச் செய்தார் –
பரம சாத்விகர்க்கு நித்தியமான ஐஸ்வர்யமும் -உபநிஷத் ரஹஸ்யமே   இ றே-
சா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இ றே -அதாவது சர்வ ரச என்றும் ரசோ வை ச -என்றும்-சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரசாதத்தாலே லபிக்கை
ஏஷ ஹ்யேவா நந்தயாதி – என்றும் -தத்ஹேது  வ்யபதேசாச்ச -ப்ரஹ்ம ஸூ த்ரம்-1-1-15–என்றும் சொல்லக் கடவது இ றே

அருள் கொண்டு –
இவர் தாம் ஸுவ புத்தியாலே அருளிச் செய்தார் அன்று –
மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே -ப்ரசாத லப்த ஜ்ஞாநத்தை முதலாகக்
கொண்டு -தத் ப்ரேரிரதராய் கொண்டு ஆயிற்று அருளிச் செய்தது –
என்னாகியே தப்புதலின்றி தன் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி -கவி பாடுகிற் தாமும் -விஸ்மிதர் ஆம்படி நிரவத்யமாக இ றே
கவி பாடுவித்துக் கொண்டது –

ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே-(500 சர்க்கம் ஆறு காண்டம் / 24000 ஸ்லோகம் -630 சர்க்கம் ஏழு காண்டம் -உத்தர காண்டம் சேர்த்தே 24000 ஸ்லோகங்கள் )ஆயிரமாக ஆயிற்று பாடிற்று –
ஓர் ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு ஒரோ பாட்டே அமையும் படி இ றே இருப்பது –
இன் தமிழ் பாடினான் –
துர் அவகாஹமான வர்த்தத்தை -பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-ரசகநகமகவும் -சர்வாதிகாரமாம் படியும் பாடினார் –

பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –
அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –
ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த
ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை

இவ் உலகினில் மிக்கதே –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –
அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான
அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading