கண்ணி நுண் சிறுத் தாம்பு – 9- மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

ஒன்பதாம் பாட்டில் –
ஆழ்வாருடைய அருள் உலகினில் மிக்கது -என்கைக்கு அடி என் என்னில் –
என்னுடைய தண்மை பாராதே-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை பாடி –
அத்தை எனக்கு உபகரித்தார் -என்கிறார் -(வேதம் -பொருள் -பகவத் சேஷத்வம் -உட் பொருள் பாகவத சேஷத்வம் )-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்று அவ் விஷயத்தில் ஆழ்வார் அருளிச் செய்தத்தை-ஆழ்வார் திருவடிகளிலே இவர் அருளிச் செய்கிறார்-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

மிக்க வேதியர் –
ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே –
அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –

வேதத்தின் உட் பொருள் –
சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இ றே
வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-

நிற்கப்பாடி –
துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –
எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இ றே-

என் நெஞ்சுள் நிறுத்தினான் –
பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –
கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே
நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்
இது இ றே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள்  ஏவ மாட்டாரே  -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )

தக்க சீர் சடகோபன் –
இது தொடங்கி (இப்பாட்டில் சேஷமும் மேல் பாட்டுக்களாலும் ) உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –
தக்க சீர் சடகோபன் –
சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இ றே-

என் நம்பிக்கு –
அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –
ஆட் புக்க காதல் –
அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )

அடிமைப் பயன் அன்றே –
இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாகபிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இ றே இருப்பது –
அங்கன் அன்றிக்கே
ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –
அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading