Archive for the ‘Boothath Aazlvaar’ Category

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -81-90–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 19, 2013

நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார்

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப் பெருமானுடைய
வான் திகழும்–பரம பதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

பகல் கண்டேன்
காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –
வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை –
எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –

நாரணனைக் கண்டேன் –
அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே –
பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –

மிகக் கண்டேன் ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான் வான் திகழும் சோதி வடிவு –
வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும்
ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய
பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான
திருமேனியைக் கண்டேன்

மேகம் போலே திகழா நின்ற ஜ்யோதிசை உடைய வடிவு
என்னவுமாம் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

————————————————————————–

கீழே நாரணனைக் கண்டேன் என்றார்–
இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

படிக் கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் (கோதாய் )கழித்தார் ஆரோ என்னில்
வடிக் கோல வாள் நெடுங்கண் மா மலராள்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய்
சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
செவ்வியை உடைத்தாய்
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு
காலம் எல்லாம் அகலாள்
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும்
கால் வாங்க மாட்டாமையும்

அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ கோலத்தால் இல்லை குறை –
அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்(இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து )
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற
விஷயம் என்று அறிந்த பின்பும்
ஸ்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் –
இவளுக்கு விசிஷ்டம் -(அத்திரு அவனைப்பற்றும் இத்திரு இருவரைப் பற்றும் )

இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
அடிக்கோலி -என்கிறது

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால்
கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது –
எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார்
குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே
அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –

கோல இத்யாதி –
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு
குறைவற்று இருக்கையாலே –
இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –

கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் –
பரப்பு உண்டாகையாலே
இவ் விஷயத்தை அனுபவிப்பாருக்கு பிரியமே உள்ளது –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

————————————————————————–

முன்பு (74-பாசுரத்தில்-)சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன்
பெரிய நல்லேன் என்று சொன்னார் –
இப்போது அவ்வஸ்து தன்னை லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு
விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார்

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

ஆங்கென உரைத்த
எல்லாரும் அது அது என வேதத்தால் உரைக்கப்பட்டவன் என்னுதல்
அது என்று போகிறது ஒழிய
இதம் இத்தம் என்று-பரிச்சேதித்து சொல்லப் படாதவன் என்னுதல்-

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி மறை யாங்கு என உரைத்த மாலை –
1-அபரிபூர்ண மாம்படியாகவும்
2-திரு உள்ளம் நோம் படியாகவும் வார்த்தை சொன்னேன்

வாக் விவ்ரு தாச்ச வேதா -என்று
சொல்லப் படுகிற சர்வாதிகனை
வேதம் -ஈத்ருசம் இதம் -என்று
சொல்லப் போகாதவனை -என்றுமாம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும் மாயன் கண் சென்ற வரம் 
விசத்ருசமாக சொன்ன அளவேயோ –

ஓன்று சொன்னேனாய்
அதுக்கு பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன்-

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

————————————————————————–

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத் தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை-

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத்தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவதைகள் பக்கலிலே வரம் பெற்றவனாய்
தேவதைகளுக்கும் அடியாய் இருந்துள்ள உன்னை வணங்காத
துர் அபிமானத்தை உடையனான ஹிரண்யனை
இதுக்கு முன்புள்ளதால் ஒன்றாலும் படாப்பேன் என்று
வேண்டிக் கொள்ள
முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய்
அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய
சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத
அமிர்தம்

திருவன் -என்றது
அழகியான் தானே அரி வுருவன் தானே –
நார சிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் -என்னும் வடிவு-

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

————————————————————————–

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது என்று பர்யாய சப்தம் போலே
காணும் ஆழியான் என்கை

அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
தன்னை வேண்டாதே
உப்புச் சாறு வேண்டுமவர்களுக்கு
அது கொடுக்குமவன்

அமுதன்ன சொன்மாலை எத்தித் தொழுதேன்
அவனையும்
தேவர்கள் அமுதத்தையும் ஒழிய
இவருடைய அமிர்தம்
அவனைப் பேசும் சொல்லும் –
சொலப்பட்ட
யஸ்மின் ந ச்ருத்ரிம கிராம் கதி ரேக கண்டா – என்று
பிரமாணங்களாலே சொல்லப்பட்ட –

நன் மாலை ஏத்தி நவின்று –
அமுதான சொன் மாலை ஏத்தித் தொழுதேன்-

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

————————————————————————–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-
சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால்  (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

நவின்று இத்யாதி –
நாவலர்களானவர்கள் செவ்விப் பூவைக் கொண்டு
சாதரமாக உரைப்பர்கள்

(நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்)

பயின்ற இத்யாதி –
பெற்றால் தான் சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெற்ற பேறு என்

பயின்றார் இத்யாதி –
ஆஸ்ரயித்தர்களுடைய உடம்பு நோவப் பண்ணின
தபஸ்ஸாலே காண வரிய
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை
இன்று என்ன தபஸ் பண்ணிக் கண்டேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே –

யாவர் நிகர் அகல் வானத்தே
யாவர் நிகர் அகல் வானத்தே –

வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே-

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த் தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று எத் தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

————————————————————————–

சாதனா அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார்

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

இன்றாக அறிகிறேனோ
அவன் அளக்கிற இடத்தில் பூமி சென்றதோ
பூமி கிடந்த இடம் எல்லாம் சென்று
அளந்தான் இத்தனை அன்றோ –
என் ஸ்வாமி இடையாட்டம்
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்தே கண்டேன்-(அறியாக் காலத்துள்ளே -முயல யோக்யதையே இல்லாத காலத்திலேயே )

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ-

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-

பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் )

————————————————————————–

அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது
வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று -புக ஒண்ணாதபடி சாத்திக் கொண்டது

தென்னரங்கம் இத்யாதி
மாம் ஏகம்-என்று அருளிச் செய்தபடியே
அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கு –
மாம் ஏகம் -என்றதிலும் சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ )

திறம்பா இத்யாதி –
தானே நூறு பண்ணப் பண்ணின சம்சாரத்தை
நீக்கிச் செல்லுமவர்களுக்கு
நித்ய ஸூரிகள் உடைய அரணை உடைத்தாய் இருந்துள்ள
கலங்கா பெரு நகரத்தில் கதவு திறம்பிற்று
என்னும் இடம் அறிந்தேன் –
தானே சம்சாரத்தை நீக்க இவனுக்கு காலம் போராது
பாபம் பண்ணின காலம் அநாதி ஆகையாலே
திறம்பிற்று இனி அறிந்தேன் -என்று அந்வயம்-

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூ ரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

————————————————————————-

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம் 

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக் கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலி யினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

கதஞ்சிறந்த கஞ்சனை
நெஞ்சில் அகற்றுதல் ஞானம்
சீற்றத்தை உடையனாய் இருந்துள்ள கம்சனை

கதவி முன் காய்ந்து –
சீறி முற் காய்ந்து
தலை மயிரைப் பற்றி முன்னே பிடித்து என்னவுமாம்

அதவிப் போர் யானை ஒசித்து
யானையை வ்யாபரியாத
படிக்கு ஈடாக அடர்த்து கொம்பை ஒசித்து

பதவியாய் மூலை யடி அன்றிக்கே
நீர்மையை உடையவனாய்
கம்சனைக் கொன்றாற் போலே
வழி கொடு வழியே என்றுமாம்

பாணியால் நீரேற்று-குடங்கையால் நீரேற்று-

பண்டு ஒரு நாள் மாவலியை -மாணியாய் கொண்டிலையே மண்
ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற
மாணியாய் அன்றோ கொண்டது-

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————

கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம்
என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ –
உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ் விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

மண்ணுலகம் ஆளேனே
ஓரடி வர நின்ற பூமியை ஆளுகை
எனக்கு ஒரு பணியோ –

வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகம் தன்னகத்து மேவேனே
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்
பரம பதத்தில் இருக்கை
எனக்கு ஒரு பணி உண்டோ –

நண்ணித் திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கை தொழுத பின்
ஸ்ரீ ய பதியாய்
சமாஸ்ரயணீயனான
எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக்
கை தொழுத பின்
போக மோஷங்களில் எனக்கு ஒரு குறை உண்டோ –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -71-80–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 19, 2013

கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது 

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப-
திரு உலகளந்த விஜயத்தை அனுசநித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆர்க்க

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)(

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
ஆர்க்கைக்கு அவசரம் (நேரம்)இன்றிக்கே
அக்நியை உமிழா நின்று கொண்டு
நமுசிப் பிரக்ருதிகளை வாய் வாய் என்று
ஒடுங்குவித்தது திரு வாழி

விடம்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான் பூவாரடி நிமிர்த்த போது-
கிடந்த இடத்தே கிடந்து
விஷத்தை உமிழா நின்ற
திரு அநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும்
சௌகுமார்யத்தை உடையனான ஈஸ்வரன்
பூமியை அளக்கைக்கு புஷ்பஹாச ஸூகுமாரமான
திருவடிகளை நிமிர்த்த போது
இப்படி ஆனது என்கிறது –

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————–

திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது-

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திரு நாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

போதறிந்து-
ப்ரஹ்மே முஹூர்த்தே உத்தாய -என்று
சத்வோத்தர காலம் அறிந்து

வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போதரிந்து கொண்டேத்தும்-
குரங்குகள் பூஞ்சுனையிலே புக்கு
அதில் செவ்விப் பூவை அரிந்து கொண்டு
ஏத்தா நின்றது

போது உள்ளம்-
ஹிருதயமே போரு –

அணி வேங்கடவன் பேராய்ந்து வேங்கடவன் மலரடிக்கே செல்ல போது மணி –
சம்சாரத்துக்கு ஆபரணமான
திருவேங்கடமுடையான் உடைய திரு நாமத்தைச் சொல்லி
அவன் திருவடிகளிலே புஷ்பத்தையும் அணி –
மணி வேங்கடவன் என்று சொல்லி

அணி என்று
கிரியை ஆகவுமாம்-(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -)

————————————————————————

துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்

துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திர கலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதி கொண்ட யான்
ஆதி நடு அந்தி வாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
எல்லா திருநாமங்களையும் ஆய்ந்து-ஆராய்ந்து- உரைப்பன் –
எல்லா அவஸ்தைகளிலும் –

வாய்ந்த மலர் தூவி-
கைக்கு எட்டின புஷ்பத்தைக் கொண்டு
வேண்டியபடியே பொகட்டு

வைகலும் –
காலம் எல்லாம்

ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
பிறை போலே ஏந்திய கொம்பை உடைத்தாய்
தர்ச நீயமான கண்ணை உடைத்தான
குவலயாபீடத்தை முடித்த
என்னுடைய ஸ்வாமிக்கு

இறைக்கு ஆட்பட துணிந்த யான் -ஆய்ந்து உரைப்பன் –
அவன் பிரதிபந்தகம் போக்க
நான் அடிமை செய்தேன் என்கிறார்-

(ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார் )

————————————————————————–

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே

யானே தவம் செய்தேன்
நானே தபஸ் பண்ணினவன் ஆகிறேன்

யானே தவம் உடையேன் எம்பெருமான்-
தபஸின் உடைய பலமுடையேனும் நானே
தபஸும் தபஸின் உடைய பலமும் உடையவன் நானே
என்கிறது எத்தாலே என்னில்

யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் –
விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை
சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் –
ஆகையால் –
பெரும் தமிழன்
பெரிய தமிழன் –

பெரிது நல்லேன்-
மிகவும் நல்லேன்-

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப்பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

————————————————————————–

பெரிய தமிழன் -மிகவும் நல்லேன் -என்று சொன்னீர்
ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார்

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

பெருகு மத வேழம்-
மதித்து சமைந்ததாகில் சிறிது அறிவு உண்டாம் –
மதம் பெருகா நின்று அறிவு கெட்ட சமயத்தில்

(திருமலைக்கு மேல் திருமலை -திருமலையில் கறு மலை போல்)

மாப் பிடிக்கு –
இப்படி அறிவு கெட்டத்தை
த்யான யுக்தரைப் போலே
தன் புருவம் நெறித்த இடத்தில் கார்யம் கொள்ள வற்றாகை

முன்னின்று –
அந்தேவாசிகளைப் போலே
பிடியினுடைய ஸ்வபாவத்தை அறிந்து
கண் வட்டத்திலே நின்று

இரு கண் இள மூங்கில்
இரண்டு கணு வளையச் செய்தே
பருவத்துக்கு உள்ள முற்றனவற்று இருக்கை

வாங்கி —
மூங்கிலினுடைய மென்மையும் களிற்றுன் உடைய
சாவதானத்தையும் சொல்லுகிறது(பறித்து என்று இல்லாமல் வாங்கி -ஜாக்கிரதையாக )

அருகிருந்த தேன் –
திரு மஞ்சனத்துக்கு சம்பாரித்து இருக்குமா போலே
குறைவற்று இருக்கிறபடி –

தேன் -கலந்து-
த்ரவ த்ரவ்யங்கள் இரண்டும் கலந்தாற் போலே இருக்கை(கடின த்ரவ்யம் போல் மூங்கில் இல்லாமல் த்ரவ்யமாக இளம் மூங்கில் )

நீட்டும் –
இதுக்கு கொடுக்கையே புருஷார்தமாய்
இருக்கிறபடியும்
அது அநாதரிக்கிறபடியும்(பங்குனி உத்தர திரு நாள் பிரணய ரோஷம் போல் )

திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை
வான் கலந்த என்கிறது உபமான உபமேயங்கள்
ஸூ சத்ருசமாய் இருக்கிறபடி –

(இப் பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப் பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45-என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ் வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2–என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

ஸ்ரீ ஈடு

பெருகு மத வேழம் – ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள மதத்தையுடைய யானையானது, மாப்பிடிக்கு முன் நின்று – மதித்து முன்னடி தோற்றாதே வருகிற இதனையும் தனக்குக் கையாள் ஆக்கிக்கொள்ளவற்றாய் ஆயிற்று இதனுடைய சீர்மை இருக்கிறபடி.

‘நான் இங்குத்தைக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று ஏவிற்றுச் செய்கைக்குக் காலத்தை எதிர் நோக்கி நிற்கின்றதாதலின், ‘முன்னின்று’ என்கிறது.

இரு கண் இள மூங்கில் வாங்கி – இரண்டு கண்ணேறி அதற்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இருக்கிற மூங்கிற்குருத்தை வாங்கி; என்றது, தான் மதித்து முன்னடி தோற்றாதே திரியச்செய்தேயும் பிடியின் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே குறிக்கோளோடே ஆதாரத்தோடு வாங்குதலைத் தெரிவித்தபடி.

அருகு இருந்த தேன் கலந்து – திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற தேன்களிலே வாங்கித் தோய்த்து. மூங்கிற்குருத்தையும் நீர்ப்பண்டத்தைப்போன்றதாக அருளிச் செய்கிறார்.

நீட்டும் – இதுதான் இரந்து கொடாநிற்க, அதனை, அது ‘உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்’ என்று நிற்குமாயிற்று.

மா பிடி -சிலாக்கியதை —பிடிங்கி -என்னால் -வாங்கி -ஜாக்ரதை ஆதரம் உடன் – த்வயார்த்தம் -ராமானுஜர் சிஷ்யர்களுக்கு -திரு மந்த்ரம் சரம ஸ்லோகார்த்தம் கலந்து அருளுவார் –

வான் கலந்த வண்ணன் வரை – மூங்கிற்குருத்தும் தேனும் கலந்தாற்போலே ஆயிற்று, மேகமும் அவன் திருநிறமும் கலந்திருக்கும்படி.

————————————————————————–

இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

வரைச் சந்தன குழம்பும்
சந்தன கிரியிலே உண்டான
சந்தனக் குழம்பும்
வான் கலனும்
தேசமான அணிகலனும்
பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும்
பரிமளம் மிக்கு தர்சநீயமான மல்லிகையும்

நிறைத்துக் கொண்டு ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே ஓதிப் பணிவது உறும்
இது எல்லாத்துக்கும் காரணமாய் நின்று
இத்தனையும் செய்தான் ஆகில்
இதற்கு மேல் செய்வது என் என்னும்
ஞானத்தை உடைய சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளையே ஏத்திப் பணிவது உறும் –

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

————————————————————————–

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகை யாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

(உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்)

சூத்திர பதார்தங்களினுடைய
காலைப் பற்றிக் கொண்டு திரிந்த உனக்கு
ஸூ ஹ்ருத்தானவனுடைய திருவடிகளைப் பற்றுகை உறும் –

(நல் நெஞ்சே விபரீத லக்ஷனையாக இங்கு வியாக்யானம் –
அப்பிள்ளை முந்துற்ற நெஞ்சே என்று கொண்டாடுகிறார் என்கிறார்)

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா
ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும்
ஆஸ்ரயணயம் தானே உறும்-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

————————————————————————–

ஆஸ்ரயணீய வஸ்து கை புகுந்த பின்பு(ஸத்ய லோகத்துக்கு வந்து அன்றோ தன்னைக் காட்டிக் கொடுத்தான் )
(த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனே
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

தபஸ் பண்ணினானும்
பலம் பெற்றானும் ப்ரஹ்மாவே
அன்யார்தமாக பிரவர்த்திகச் செய்தே
பலம் பெற்றான் என்கிறது
அநேக கை படைத்தால் உள்ள
லாபம் பெற்றான்

க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
திருவடி விளக்க அபேஷிதமானவாறே
தர்ம ஜலமானத்தைக் கையிலே கொண்டு
அனைத்து திரு நாமங்களைச் சொல்லி
பின்னை திருவடி விளக்கினான்-

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

————————————————————————–

திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்–பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

பின்னின்று தாய் இரப்பக் கேளான்
ஸ்ரீ கௌசல்யை
நான் ஏக புத்ரை
உம்மைப் பிரிந்து நான் ஜீவியேன்
நீர் காட்டுக்குப் போக வேண்டா
என்று சொன்னால் கேளான் –

பெரும் பணைத் தோள் முன்னின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள்
அக்ரதஸ்த்தேக மிஷ்யாமி -என்று
பிரார்திப்பாள் பெரிய பிராட்டியார்

சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல்
ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப் படா நின்ற
தோள் வலியை உடையனான பிள்ளையுடைய
குணங்களுக்கு

அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர் –
அன்று அளந்தத அத்தனையும்
அக் குணத்துக்கு நேர்-

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————–

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப் போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத் திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

நேர்ந்தேன் அடிமை –
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கிட்டினேன் –

நினைந்தேன் அது ஒண் கமலம் –
ஸ்ப்ருஹணீயகமான திருவடிகளை நினைந்தேன்

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் –
உன்னுடைய சிவந்த திருவடிகளிலே
ஸ்நேஹத்தை உடையனாய் பரி பூர்ணன் ஆனேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக் கோலம் கண்ட பகல் –
திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு
முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம்
என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது –

(ஆர்ந்தேன் -பூர்ணம் என்றும் பொருந்தினேன் என்றும்)

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -61-70–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 19, 2013

நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது 

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத் தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப –
இரந்து நின்ற நிலையிலே பூமி எல்லாம்
ஓர் அடியாலே மறைக்கும் படிக்கு ஈடாக

நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
கையிலே நீர் விழுந்தவாறே
அலாப்ய லாபம் போலே
வளர்ந்த தோளானது
திக்குகள் எல்லாம் சென்று அளந்தது என்பர்

அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –
உன்னைப் பேணாதே
உன்னுடைய விபூதியை எவன் தன்னது என்ன
அவன் பக்கலிலே இரந்தாயாய் -வஞ்சித்தாயாய் -செய்தது
இந்த்ரன் ஒருத்தனுக்கு செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும்
தூது போம்
சாரத்தியம் பண்ணும்
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து
உறங்கும்படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

————————————————————————–

நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக்
கொள்ளுகையாலே-நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

எருத்தம்  = ககுத்து / மாறு  = சத்ரு

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
பேறு ஓன்று உண்டாக முன்பு அறியேன்
அறியாமையே அன்று
பெற்றும் அறியேன் –
பெறாமைக்கு அடி அறிவு கேடு –

ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு-
எருத்தினுடைய பெருத்தக் கழுத்தும் கொம்புகளும்
ஒசியும்படிக்கு ஈடாக நப்பின்னைப் பிராட்டியை
பெறலாம் என்கிற நசையாலே எருத்து இறுத்த

நல் ஆயர் ஏறு
நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ )
————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கை விடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே கீறி யெடுத்து அளித்த–

ஒண் குருதி அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள்-அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

பாறு என்று பறைவையாய் பஷி என்றபடி –

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை
போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி
எரியினுடைய உருவை உடையனாய்
ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா
கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –

கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய
வாய் நிறையும்படிக்கு ஈடாக
அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில்
அது ஒரு மகா பாரதம்

ஏழு எருத்தை அடர்த்த விடத்தில்
அத்தால் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்க
ஒரு தலையை அறுத்ததுக்காக
பாதகியானவனுடைய சாபத்தை போக்கினவனோ ஈஸ்வரன்
பாதகி யானவனோ –
தலை அறுப்புண்டு சோக்யன் ஆனவனோ-
பார்த்துக் கொள்ளும் இத்தனை

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————

இதிஹாஸ புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில்
நிர்ணீ தமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது-

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

இதிஹாஸ புராணங்களிலே பிரதிபாதிக்கப் பட்ட
ஸ்ரீ ய பதியாய் இருந்துள்ள
உன்னை குறையற்ற சொல்லாலே ஏத்தி
அனுபவிக்கும்படி அருளிச் செய் –

அநவாப்தியான (நிறைவேறாத )சொல் அன்றிக்கே
உன்னைக் கண்டு ஹிருஷ்டனாய் ஏத்தப் பணி-

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப்பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

————————————————————————–

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன் )

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திரு மேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

பணிந்தேன் திரு மேனி –
கண்டேன் என்னும் சொல்லை
சேஷபூதர் ஆகையாலே
பணிந்தேன் -என்று சொல்லுகிறார்

பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன் –
உன் திருவடிகளிலே ஸ்நேகத்தை
உடையேனாய்
அழகிய பூவை அணிந்தேன் –

புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே-இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்-
உன்னை சேவித்து இருந்து- பார்த்து- ஏத்தி
பரம பதத்தில் இருக்கும் படியைப் பார்த்து
ஆங்கே இருந்து யேத்துகை தானே
வாழ்வாக இருக்கிற இத்தை
அத்யவசித்தேன்

பெருமாள் புக்கு அருளினால்
பின்னும் முன்னும் நின்று வைத்த
அனைத்தையும்
பின்பும் பிறகுவாளியையும்
கண்டு யேத்துகையில் துணிந்தேன்

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

புரிகை
சுற்றும் பார்க்கை-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————–

பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை-
ஏத்துகையில் துணிகை அன்று –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

(நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

நல் நெஞ்சே இப்பிறவியாவது இது கண்டாய் –
பாபத்தாலே நன்று என்று இருந்தது அன்று -பகவத் பிரசாதத்தாலே பொல்லாது என்று
தோற்றின இது கண்டாய் –
சம்சாரமாவது –

இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது
அங்குத்தைக்கு ( ஸ்ரீ கௌஸ்துப மணி போல் ) அசாதாரணமாய் இருக்கச் செய்தே
நாம் அனுபவித்தது எல்லாம் கண்டாய் இறே-
இதுக்கு ஒரு பிரமாணம் வேண்டாம் இறே –

இது கண்டாய் -இத்யாதி –
வகுத்தவனுடைய திரு நாமத்தைச் சொல்லி
நரக சமீபத்தில் செல்லாமைக்கு காரணம்
இதினுடைய தோஷ தர்சனமே –

வல்லையேல் காண் –
அனுபவித்து இருக்கச் செய்தே விடப் போகாது ஒழிகிறது பாபம்-
இல்லையேல் இதினுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணு-

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர் விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————–

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய -மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

கண்டேன் இத்யாதி
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம்
பிரத்யஷிக்கைக்கு ஆனைத் தாளான (கவாஸ்கம் -வாசலான )மனஸ்ஸாலே
புறப்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே
ஸ்வப்னதீ கம்யம் -என்கிறபடியே
மனஸ்ஸாலே காண்கை கனவிலே காண்கை யாவது

ஆங்கு இத்யாதி
அபாதிதமாகக் –கண்டேன்

கண்டேன் இத்யாதி
அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி
பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்

வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளி யவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

————————————————————————–

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே
உப்புச் சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது-

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
மிடுக்கை உடையராய
சாயுதரான அசுரர் முடிய

வலி மிக்க வாள் வரை மத்தாக –
கடையப் புக்கால் பிதிர்ந்து போகாதபடி
மிடுக்கை உண்டாக்கி
மந்தரத்தை மத்தாகக் கொண்டு

வலி மிக்க வாணாகம் சுற்றி
நாற்கால் கடைந்தவாறே
அற்றுப் போகாதபடி வாசுகிக்கு மிடுக்கைக் கொடுத்து

மறுகக் கடல் கடைந்தான்–
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி
கடலைக் கடைந்தான்

கோணாகம் கொம்பு ஒசித்த கோ –
நம்மை முடிக்க வந்த குவலயா பீடத்தை கொன்று
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான்-

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப் பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

————————————————————————–

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

தேவர்களை ஒழிய சிலர்
வாழாதே இருக்கச் செய்தே
சிலர் வாழ்ந்தாராய் இருக்கிற ராஜாக்களும்
அழகிய தாமரைப் பூவை திரு நாபியில்
உடையவனானவனுடைய திருவடிகளிலே
குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த -(அணிவித்த -)தமர்கள் இறே
ராஜாக்களாக திரிகிறவர்கள் –

(முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

————————————————————————–

தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ)

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப் பாற் கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக் கடன்மல்லை
கோவல்–திருக் கோவலூர்
மதிள் குடந்தை–திரு மதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.

தமருள்ளும் –
அவற்றில் முற்பட்டது
ஆஸ்ரிதர் உடைய ஹிருதயம்

(இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம்)

தஞ்சை
தஞ்சை மா மணிக் கோயில்

தலை யரங்கம்
திருப்பதிகளில் பிரதானமான கோயில்

தண் கால்
திருத் தண் கால்

தமருள்ளும் தண் பொருப்பு
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வஸ்வமான திருமலை

வேலை
திருப் பாற் கடல்

தமருள்ளும் மா மல்லை கோவல்
மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம்

மதிள் குடந்தை
திரு மழிசைப் பிரான் உகந்த இடம்

என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் —
சக்கரவர்த்தி திருமகனுக்கு
இடம் என்று சொல்லுவார்கள்

ஏ வல்ல
எய்ய வல்ல-

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -51-60–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 17, 2013

மதிக் கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்–51

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளை
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்-லாவண்யம் ஸூவுந்தர்யங்களை சொன்னவாறு –
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திருவடிகளை
நெஞ்சே மதிக் கண்டாய்
அவனுக்கு வாசகமான திரு நாமத்தை மதிக் கண்டாய்
கண் வளருகைக்கு போரும்படி
பெரிதான திருப் பாற் கடலிலே நின்றும் பேர்ந்து
பின்னை அத்தை கடைவதும் செய்து
நீரை உடைத்தான
கடல் போலே இருக்கிறவனுடைய
திரு நிறத்தை அனுசந்தி-

(கண்டாய் -ஒவ்வொன்றையும் நன்றாக அனுபவித்து அனுசந்திக்க -சாத் மிக்க சாத் மிக்க-மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் -)

(தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -விஸ்தாரமான திருமேனியோடே கண் வளரலாம் படியான பெரிய திருப்பாற் கடல்
கடல் கடையும் போதைக்கு ஒரு வெண் கடலை ஒரு கரும் கடல் கடைந்தால் போல் ரமணீயமாய்
கடல் போன்ற திரு நிறமுடையவனது அழகை பொறுக்கப் பொறுக்க அனுபவிக்கப் பாராய் என்கிறார் –

—————

(அகல்விக்கத் தானும் கில்லான் -ஆழ்வாரை விட அவர் திரு உள்ளம் ஸ்ரேஷ்டம்
அத்தை யுடையவர் ஆகையால் ஆழ்வாருக்கும் ஸ்ரேஷ்டம்
மிதுன -சேர்த்தி –அவளாலேயே தர்மம் சாஸ்தாபனம் -இங்கே தர்மம்-ஆன்ரு சம்சயம் கிருபை –
கிருபையையும் அழகையம் -அளவிட்டு அறிய யாவராலும் முடியாதே-தானும் தன் தன்மை அரியான்)

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காள மேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தை யுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்

ந்ருஸம் -கருணை இல்லாதவன் -ஆளவந்தார் நைச்யம் பாவித்து அருளிச் செய்துள்ளார் அன்றோ
ஆன்ரு சம்சயம் -தர்மம் -கருணை அதிசயம் –
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட் கையனான இராவணன் போன்ற மஹா பலியை
(இராவனைப் போலவே தலை யறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும் படியாக
உய்த்தான்–செலுத்தின அப் பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

(இந்திர லோகம் போல் பயப்பட வேண்டாத படி நீள் இருக்கையான பாதாள லோகம் என்றுமாம்)

ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
நீல மேகத்திலே மின்னற் போலே
பிராட்டியை திரு மார்பிலே உடையவனாய்
அவளோட்டை கலவியாலே
ஆன்ரு சம்சய பிரதானனான் ஆன படியை யார் அறிவார்

(சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே

யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்
அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்
மிதுனத்தில் அழகை யார் அறிவார் )

ராவணனோ பாதியும் வதத்துக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும்
இவன் பக்கலிலே ஔதார்ய குணம் கிடந்தது என்று
மன்வந்தரம் பூர்ண மபேத சத்ரு -என்னும்படியே
மேல் இந்திர பதம் செலுத்துவதாக வைத்தவனுடைய
ஆன்ரு சம்சயத்தை யார் அறிவார்-

(மிதுனச் சேர்த்தி அழகு –
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் -திரு விருத்தம் -29-
தயா ஸ ராஜ ரிஷி ஸூத அபி ராமயா ஸமேயிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாம் அரேஸ்வர -பால -77-80-
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
அவள் சம்பந்த்தாலேயே பேர் அருளாளன் ஆகிறான் –
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூந்தர -38-41- அவளுக்கும் அவன் உபதேசித்து அருளுவான்

அருளின் பெருமைக்கு உதாஹரணம் மேல் –

சுரி குழல் கனிவாய்த் திரு வினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திருமொழி -5-7-7-
கோபம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59-136-

யத்ராம்பு விந்யஸ்ய பலீர் மநோ ஜ்ஞாந் அவாப போகான் வஸூதா தலஸ்த
ததா மரத்வம் த்ரித ஸாதி பத்யம் மந்வந்தரம் பூர்ணம பேத ஸத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-30-
தான நீர் வார்த்ததாலேயே இவ் வுலக போகங்களை அடைத்து மேலே ஒரு மன்வந்தர காலம் எதிரிகளே அற்றவனாய் மூ வுலகையும் ஆளும் தேவேந்திர பதவியும் பெற்றானே
நெறி என்று ஸ்வர்க்கம் போல் சிறந்த பாதாள உலகையும் அருளையும் காட்டும் )

————————————————————————–

(கா மறு சீர் அவுணன் -அசுரர்களில் தாழ்ந்த நமக்காக அன்றோ திருவேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருளிகிறான்

நெறியார்-கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் -இதுவே நிரூபகம் இவர்களுக்கு -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே போல் பாகவத உத்தமர்கள் வழியிலேயே ஊன்றி இருப்பார்களே )

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தி யென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறு மலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலை யாகும்.

ஆஸ்ரயித்தவர்கள் உடைய
முன்னின்று பின் தாழ்ந்த குழல் கற்றையை அறியாதே
ஒரு சிறுமலை என்று எண்ணி
மூச்சு விடுதல்
உடம்பாடுதல்
செய்யாமையாலே
இன்ன மலை என்று அறியாமையாலே
பூக்களை உடைத்தான கொடிகள் தங்குகிற
பொரா நின்ற புனலை உடைத்தாய் இருந்துள்ள மலை
என்கிற திருவேங்கடமே நாம் ஆசைப்படும் மலை
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் –

(வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை யுடையேனாவேனே -பெருமாள் -4-8-
இதுவே உத்தேச்யம் என்று நெறியைக் கொண்டே இவர்கள் நிரூபகம் -)

————————————————————————–

இவன் திருமலையை விரும்பிப் புக்கவாறே-அவன் இவருடைய ஹிருதயத்தை விரும்ப
பிரானே -அவற்றை கை விடாத ஒண்ணாதே என்கிறார்

(திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –ஏறி வந்த ஏணி போல் -க்ருத்தஞ்ஞா கந்தம்)

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இளம் கோவில்–திருப் பாற்கடலாகிற பாலாலயத்தை
கை விடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

(உள்ளினேன்-உள்ளம் வைத்ததாய் என்பதை நான் நினைத்தேன் என்றும்
கை விடேல் என்றும் உள்ளினேன்)

வெற்பு என்று சொல்லப் படா நின்ற
தெற்கு திருமலை பெரிய திருமலை இவை போலே
என்னுடைய ஹிருதயத்தையும் உன்னுடைய கோயிலாக நினைத்தாய் என்று அறிந்து
நான் கிருதக்னனாக ஒண்ணாது என்று
ஹிருதயத்திலே புகுருகைக்கு
பாலாலயமாகக் கொண்ட
திருப் பாற் கடலை கை விடாதே கொள் என்று
இரக்கிறேன்-

(மதுர கவி ஆழ்வார் கரிய கோலத் திருக் கோயில் காண்பது ஆழ்வார் திரு உள்ளம் உகப்புக்காக
ஆழ்வார் திரு உள்ளம் உகப்பதால் பெருமாளையும் இவற்றைக் கைவிடக் கூடாது என்கிறார்
மதுரகவி நிஷ்டையை அவனும் உகப்பானே)

(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி –68-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–நான்முகன் திரு -36-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –பெரியாழ்வார் –5- 4-9 –

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் –ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -170-

அங்குத்தை வாசம் சாதனம் –இங்குத்தை வாசம் சாத்யம் –சூர்ணிகை-171-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே-இது சித்தித்தால் –அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –சூரணை -174-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –சூரணை -173-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்–க்ருதஞ்சதையாலும்–பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் —சூரணை -174-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்
க்ருதஜ்ஞதா கந்தம்-தாயப் பதியிலே–ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -176-)

————————————————————————–

உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் 
இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் –

(ஞானம் -மதி நலம் அருளினாய் -ஞப்த்தி பல முக்தி தலை சேர வேண்டாமோ -அதுக்குப் பலமாக பரம புருஷார்த்தமும் அருள வேண்டாமோ
இன்பக் கடலாழி நீ யருளிக் காண்–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -நம்மாழ்வார் இந்த பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
ஏழு பிறப்பும் -அதிலும் எப்பொழுதும் -எல்லா நிலைகளிலும் ஸ்திரமாக -நின்று அருளிய படியால்
என்றும் மறந்து அறியேன் –இந்த அவஸ்தை உண்டாக்கி கூப்பிட வைத்து அருளினாய்)

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

என்றும் மறந்து அறியேன்
ஒரு நாளும் உன்னை மறந்து அறியேன் –
ஸ்ரவண மனன நிதித்யாசன அநந்தரம்
பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதிகளாலேயோ
நீர் மறவாது ஒழிந்தது என்னில் –

ஏழ் பிறப்பும் எப்பொழுதும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்
எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் -என்னும்படி
எல்லா ஜன்மங்களிலும்
எல்லாக் காலத்திலும்

நீ நின்று
உன்னுடைய நினைவு மாறாத ஸ்வபாவத்தாலே
ஒரு நாளும் மறந்து அறியேன்

(பிராட்டி சொல்ல ஸ்ரோத்வயா கேட்டுக்கொண்டு
மனனம் பண்ணி
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட தப்பி ஒடம்ப பார்க்க
நிதித்யாசித்வய
ஏழு பிறப்பும் நினைத்தீர்
எப்பொழுதும் நினைத்தீர்
நிலை நின்று நினைத்தீர்
ஆக ஆத்மா கேட்டு மனனம் பண்ணி நிதித்யாஸவ்ய-பண்ணும் க்ருத்யம் நீயே ஏறிட்டுக் கொண்டாயே)

வென்றி அடல் ஆழி கொண்ட வறிவனே –
நான் செய்த அம்சம் செய்தோம் இறே
எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ -என்ன –
உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு
வைகல்யம் காண்கிறிலேன்

ஆன பின்பு
இன்பக் கடலாழி நீ யருளிக் காண் –
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்னும்படியே
உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளாய்-

(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -திருவாய் -2-7-6-என்கிறபடியே
எல்லாக் காலத்திலும் என்னைப் பற்றிய நிலையான நினைவு தன்மை உனக்கு இருக்கையாலே
நான் இப்பிறவியிலே உன்னை என்றும் அறியாத பெருமை பெற்றேன் –
என்னை நியமிக்க வல்ல உன்னாலே பெற்ற பேறு அன்றோ இது –
ஏழு பிறப்பு என்றது எக் காலத்தையும்
எப்பொழுதும் -எல்லா அவஸ்தைகளிலும் நிலைகளிலும் என்றவாறு
என்றும் மறந்து அறியேன் -என்னும்படியான ஞானத்தை விளைத்த நீயே அதன் பலனாக மோக்ஷத்தையும் தந்து அருள வேணும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்னுமா போலே –
இன்பக் கடல் ஆழி -பேர் இன்பம் -ஏஷ ஹ்யேவ ஆனந்தயாதி-தைத்ரியம் -7-1- இவனே ஆனந்தம் அடைவிக்கிறான்)

(மயர்வற மதி நலம் அருளி -தத் பலமான -அனுபவ ஜனித ப்ரீதி காரிய கைங்கர்யம் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்து
அத்தையும் நீயே-பிரபல பிரதிபந்தகங்களை அனாயாசன போக்குகைக்கு பரிகரம்
யுத்த உன்முகனான திரு வாழி யை எப்போதும் கையில் கொண்டு இருப்பவனாய்
அஞ்ஞான சக்திகளுக்கு கோலாகலமான -அஹம் அஸ்ய அபராத்தானாம் ஆலயம்
உன்னாலேயே உன்னைப் பெற வேண்டும்
அறிவு ஒன்றும் இல்லாத எங்களை குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
இந்த உண்மையை பத்தும் பத்துமாக அறிந்து இருக்கும் ஸர்வஞ்ஞனே –
எல்லா ஜென்மங்களிலும் எல்லா அவஸ்தைகளிலும் நிலை நின்று நினைக்கும் கர்த்தவ்யம் ஏறிட்டுக் கொண்ட பின்பு
அதன் பலனாக அந்தமில் பேர் இன்பத்து அடியார் உடன் இருந்து -கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும் என்கிறார்)

————————————————————————-

நீர் சேஷ பூதர் ஆனால் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாய் இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நியமிக்கக் கடவதோ -என்னில்-
அது விதேயமான போது இறே-
ஆசை மிக்கால் செய்யல் ஆவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப் படும் என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே-குணம் ஸ்வரூபம் காண முடியாதே -திருமேனி மூலமாகவே அறியலாம்
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பள்-உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் தந்து -பிரார்த்திக்கும் படி உண்டே

திருமாலை காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்-நாணப் படும் என்றால் நாணுமே-
சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால்
நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே
நிற்கப் போமோ –
கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் –
ஸாபராதன் என்று மீளவும் போகாது

கருமாலை பொன் மேனியாக காட்டுவதருக்கு  முன் காட்டும் திருமாலை நாங்கள் திரு –
எங்களுடைய புருஷகாரமாக பிராட்டி முன்னே காட்டா நின்றால்
ந கச்சின் ந அபராத்யதி -என்று
எங்கள் உடைய குற்றம் அவள்
பார்க்க ஒட்டாமையாலும்
முறையில் நிற்க ஒண்ணாது-

(திருமேனி உபாயம் -உபாய பாவத்தை அவன் காட்டும் முன்பு பிராட்டி புருஷகாரம் பண்ண வேண்டுமே
திருமேனி உபாயம் என்பதுக்கு சிந்தயந்தி உதாஹரணம் -மானஸ ப்ரத்யக்ஷம் ஒன்றாலே பேறு பெற்றாள்
மாலாகாரர் -திரு மேனி காட்ட வந்தாயே -ஸூவுந்தர்ய ஸுசீல்ய குண ஆவிஷ்காரத்தால் அக்ரூர மாலாகார்களை பரம பாகவதர்களாக ஆக்கி அருளினாய் -கீதா பாஷ்யம் -)

(கழிய மிக்கதோர் காதல் காதலள்-திருவாய் -5-5-10-பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -மூன்று திருவாய் மொழிகளில்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -திரு விருத்தம் – 97-காலம் கழிய கழிய காதல் மிக்கும் என்றும் -கண்டால் தான் கழியும் காதல் என்றுமாம்
புருஷகார பூதையான தாயாரும் அங்கே இருக்க -தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் -ஸூ ந்தர -39-30-என்று ஆறி இருக்க ஒண்ணாத தசை
சிந்த யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாஸ தயா முக்திம் கதான்யா கோப கன்யகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-22-
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவந -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21-
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்ய ப்ரவேஸம்
கிம் ஏதத் நிர்த்தோஷ க இஹ ஜகதி –ஸ்ரீ குணரத்ன கோசம் -உசித உபாயங்களால் அவன் கோபத்தை ஆற்றுவாள்
தேந மைத்ரீ பவது -ஸூ ந்தர -21-21- அருள் உபதேசத்தாலும் அருள் நோக்காலும் இவனைத் திருத்துவாள்
அவனை அழகாலே திருத்துவாள் -இவனை அருளாலே திருத்துவாள்
இவளை உபாயமாகக் கொண்டால் உபாய நைரபேஷ்யத்துக்குக் குறை வருமே
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர் ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -146-44-சேரவிடும் புருஷகார பூதையும் அங்கமு இருக்க ஆறி இருக்க ஒட்டுமோ -)

————————————————————————–

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிரா நின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோ வென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ் விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்படிமின்
பெரிய பிராட்டியார் நித்ய கடாஷம் பண்ணா நின்ற தெய்வத்தை
நா வாழ்த்துகை ஆகிய
கருமத்தை கை விடாதே

இரும் தடக்கை எந்தை பேர் நாற்றிசையும் கேட்டீரே –
பெரிய தோளை உடையனான
என் ஸ்வாமி உடைய பேர் அன்றோ
எல்லா திக்குகளிலும் உள்ளது
அது கேட்டிலி கோளோ
கண்டீர் –

நாம் உரிமையால் ஏத்தினோம் பாதம்
நாங்கள் அவனுடைய பேரையும்
திருவடிகளையும்
சேஷ பூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம்-

(ஸ்ரீர் இத்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஸ்ரீ சதுஸ்லோகி -1-
விஷ்ணோர் ஸ்ரீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உன் திரு -திருவாய் -10-10-2-
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி தத ஏவைஷ பகவான்
த்வதாயத் யர்த்தி த்வேப் யபவத் அபராதீன விபவ
ஸ்வயா தீப்த்யா ரத்னம் பவ மஹார்க்கம் ந வி குணம்
ந குண்ட ஸ்வா தந்தர்யம் பவதி ச ந சான்யா ஹித குணம் –ஸ்ரீ குணரத்ன கோசம்
ரத்ன பிரபா புஷ்ப பரிமள நியாயத்தாலே பர ப்ரஹ்மத்துவத்துக்குக் குறையில்லையே –
யுவதிஸ் ச குமாரிணி -யுவஸ்ய குமார –
அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத் —ஆழ்வான் அவளது பூர்ண கடாக்ஷத்தாலே பரம் பொருளானதே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி -பட்டர்
அகலகில்லேன் இறையும் -6-10-10-)

————————————————————————–

நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–(உனது அருளாலேயே )சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து
என்னை ஓதி வைத்தது என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து-நீர்மைக் கொண்டு
எம்மை–
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாக வுடைய ஸர்வேஸ்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து 
எங்களுக்கு இந்த நன்மை உண்டாயிற்று
நா மங்கை யானவள் ஹிருதயத்தில் இருந்து
நம்மை ஓம்பி ஒதுவித்ததாலே -ஓம்பி -வளர்ந்து கிளர்ந்து
ராஜ புத்ராதிகள்
ராஜ வைபவம் அறியாது இருக்கச் செய்தே
அத்தை சொல்ல அறியாமையாலே
விரசமானாலும் சரசாமாகத் தங்கள்
ஸ்வரூபத்துக்கு கற்பிக்கும் தாச வ்ருத்தைகளைப் போலே
அவள் ஹிருதயத்திலே இருந்து ஒதுவிக்கைக்கு அடி சொல்லுகிறது

வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த வருள் –
இனிய விது வேம்பு போலே கையா நின்றதே ஆகிலும்
பாடு என்று அருளி அல்லது நிற்கப் போகாதே
அவனுடைய நீர்மையாலே தந்த அருள் –
தந்த பிரசாதம் சரஸ்வதி ஒதுவிக்கைக்கு அடி-

(லோகே வநஸ் பதி ப்ருஹஸ் பதி தார தம்யம் யஸ்யா
கடாக்ஷ பரிணாம முதா ஹரந்தி ஸா பாரதீ பகவதீ -ஸ்ரீ ஸ்தவம்
கருக்கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம் -87-
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -திருவாய் -2-3-1-
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை )

————————————————————————–

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே-பொருள் அல்லாத -நம்மை பொருளாக ஆக்கி -கடாக்ஷத்தாலே பொருள் ஆவோம்
இருள் திரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படி யுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.-பிராபகமும் இதுவே

காண்குற்ற = கடாஷித்து அருளுகிற  –

(சேஷத்வ ஞானம் உள்ள )அடியோமான எங்கள் மேல்
அருள் புரிந்த சிந்தையை வைத்து

(அருள் புரிந்த சிந்தை அனைவர் இடமும் இருந்தாலும் அது கார்யகரமாவது நாம் சேஷபூதன் என்று இசைந்தாலே தானே)

அத்தாலே
நாங்கள் பதார்த்தங்களை அறிந்து காண உற்ற போது
நீ சேஷி நான் சேஷ பூதன் என்கிற ஞானத்துக்கு விரோதியான
அஞ்ஞானத்தைப் போக்கி
உணர்ந்து
உன்னுடைய கமலம் போன்ற திருவடிகளை
நினைத்தேன்
ஆராய்ந்து பார்த்து
பரதந்த்ரமாய் இருக்கையாலே
என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்

(அர்த்த பஞ்சக ஞானம் வந்தபின்பு என்று கீழே
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி என்பது கீழே)

அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை
எங்கள் மேல் வைத்து
எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம்-

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக் கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டான படியை அருளிச் செய்தார் ஆயிற்று )

————————————————————————–


எளிவரும் இயல்வினன் என்று சொல்லும் ஆழ்வார்களே மண் காப்பார் ஆவார்
அத்விதீயம் பரத்வம் ஒன்றை மட்டும் சொல்வார் அல்லர் -என்கிறார்

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆஸ்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆச்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆஸ்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

ஓர் உருவன் அல்லை
நித்யோ நித்யானாம் என்றபடி
சர்வ விசஜாதீயம் என்கிறது அன்று உனக்கு வடிவு

(என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் அன்றோ -ஆத்மாநாம் மானுஷம் மன்யே –
அஹம் வோ பாந்தவ ஜாத என்னுமவன் அன்றோ நீ )

ஒளி உருவம் நின் உருவம் –
பக்தாநாம் த்வம் பிரகாசசே –
என்கிறது உனக்கு ஸ்வரூபம் -ஸ்வபாவம்

இரு நிலத்தோர் ஈர் உருவன் என்பர்
அறியாதார் பெரிய ஈஸ்வரன் என்பர்கள்

ஓர் உருவம் ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று
(ஓர் -ஒப்பற்றது ஆஸ்ரித பாரதந்த்ரத்தால் அத்விதீயம் )எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பூமியை முறை குலையாமல் காப்பார்
தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே-

(நிரங்குச ஸ்வா தந்தர்யம் அவனுக்கு ஸ்வரூபம் அன்று ஆஸ்ரித பரதந்த்ரமே நிலை நின்ற ஸ்வரூபம் -என்கிறார் –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் -கட -2-5-13-
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வாம் ப்ரகாஸ ஸே -ஜிதந்தே
கிருபை தலை எடுக்கும் பொழுது ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து எப்போதும் உள்ள ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்குமே
அன்யாதீ நத்வம் தவ கில ஜகுர் வைதிக கிர
பரா தீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே -வரத ஸ்தவம் -20-
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-
சேதனன் தன்னை சர்வேஸ்வரனுக்கு ஆக்க நினைக்கும் போது கர்மம் தடுக்கலாம்
இவன் அவன் இட்ட வழக்காகும் போது தடை ஒன்றுமே இல்லையே -ஆள வந்தார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே –திருவாய் -4-3-11-
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாந் திரு -14-
அர்ச்சாவதார பர்யந்தமான அவனது க்ருஷீ பலனே தம்மை பகவத் பிரவணர் ஆக்கி அருளிற்று என்கிறார்
அஜாய மானோ பஹுதா விஜாயதே
பிதா புத்ரேண பித்ரு மான்யோ நியோ நவ்
சதைக ரூப ரூபாய
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந-
தத் ஈஷத பஹுஸ் யாம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திர் அபி சாப்யய
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் எப்போதுமே ஜகத்தை ரக்ஷிக்குமவர்கள் என்றபடி -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -41-50–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 15, 2013

(காமத்தால் பயன் இல்லை கீழ் -பொருளால் பயன் இல்லை இதில்
காமத்தாலும் பொருளாலும் பயன் இல்லை கீழ்
தர்மமும் அதன் பலனும் அவன் அதீனம் இதில்)

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–ஸ்வர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான ஸ்வர்க்க லோகத்தை-அஜத லக்ஷணை -விடாத லக்ஷணை –
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு-மறையோற்கு -ஒருமை –
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
பொருளாலே ஸ்வர்க்கத்தில் புக-யத்னம் பண்ணப் போகாது

அருளால் அறம் அருளும் அன்றே
கிருபையாலே இவை ஸ்வர்க்கத்தை-ஆசைப்பட்ட தாகில் ஸ்வர்க்கத்தை
கொடுக்கப் போம் என்று இருக்கும்

அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே-நீ மறவேல் நெஞ்சே நினை
தன் கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன்
திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை

மா மறையோர் என்றது-
சுகோ முக்தோ வாமதே வோபி முக்த -என்றவர்கள்
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் என்றுமாம்-
ஸ்ரீ மார்கண்டேயன் என்றுமாம்-

(கீழே போகத்தால் இல்லை பொருள் என்று காம புருஷார்த்தத்தால் பயனில்லை என்றார்
இதில் அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –
அறம் தர்மம் இங்கு அஜஹல் லக்ஷணையாலே தர்ம பலனைச் சொல்லும் -தர்ம மோக்ஷ புருஷார்த்தங்கள் அவன் அதீனம் என்கிறார் –
அருளாலே -கிருபையே ஏக ஸஹகாரி நிரபேஷ ஹேது
ரூப ஸம்ஹ நநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரூஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸிந -ஆரண்ய -1-13-
அவனது பாதமே என்றுமே மறக்காமல் நினைத்து இருப்பாய்
இப்போது இருக்கும் உடம்புடன் மறக்காதே அனுபவிக்கப் பெறுவோமாகில் பரமபதமும் வேண்டா
ஸதா பஸ்யந்தி இங்கேயே கிடைக்கப் பெற்றால் போதுமே –
நெஞ்சே -அறிவு பெருகும் இடமாய் இருக்கும் நீ அறிவாளிகள் செயலைச் செய்ய வேண்டுமே -)

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –-முதல் திருவந்தாதி –94-

ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –
(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

————————————————————————–

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பன்–(அவனது) சிறந்த திருத் தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒரு வகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத் தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்-வைராக்கியத்துடன் இருப்பர் .–(பேர் இன்பம் என்றது விபரீத லக்ஷணை )

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில்
பிராட்டியோடே வந்தார் போலே
நினையா நின்றேன் –
எதுக்கு நினைக்கிறது என்னில் –
அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று -(திருவை -ஆலிங்கனத்தால் பெருத்த தோள்கள் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து பெற்றவள் அன்றோ )

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் –
அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்(இதனாலே அது -இதுவே பிரதானம் -மால் பால் மனம் சுழிப்ப இத்யாதி )

மனைப்பால் பிறந்தார்  பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்-
சம்சார சுகத்தை துறந்தவர்கள்-
அத் தோளைத் தொழப் பெறுவார்கள்-

(விபரீத லக்ஷணம் என்றும் -அனுபவிக்கும் அவன் நினைவால் பேர் இன்பம் என்கிறார்)

(நினைப்பன் திருமாலை -இவளை முன்னிட்டுக் கொண்டு அவனைப் பற்றுகிறவர்களுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டுமே ஸித்திக்கும் என்றதாயிற்று –
நீண்ட தோள் காண -உத்த்ருதாஸி வராஹேண கிருஷ்ணேந சத பாஹு நா -தைத்ரியம் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் யார் காண்பாரே -திருவாய் -2-8-7-
ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் மஹா புஜம் -ஸ்தோத்ர ரத்னம் –44-
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் -14-
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-
நினைப்பான் என்ற நினைவையே பெரிதாகக் கொண்டு-அப்பரம புருஷன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்ட வேண்டுமது ஒழிய
யார் தான் தங்கள் முயற்சியால் சிற்றின்பங்களை ஒழித்து அத்தோள் அணைப்பைப் பெறப் பெறுவார் -என்று பரகத ஸ்வீ கார பரமான பொருள் தேறுகிறது )

————————————————————————

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்-வெட்ட வெட்ட முளைக்கும் அதனால் பிரித்து அருளிச் செய்கிறார்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)-எத்தனை சண்டாளராகிலும் -தாள் தொழுவாராக இருந்தாலே போதும் –
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.-பிடித்தார் பிடித்தாரைப் பற்றுமதே சிறப்பு

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

(அவர்கள் பகவத் சேஷபூதர்கள்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையவர்கள்
அடியேன் ததீய பாகவத சேஷ பூதன் -குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்தறியும் மதுரகவி நிலை
இதுவே வ்யாவ்ருத்தம்)

(சித்திர் பவதி வா நேதி ஸம்சய அச்யுத ஸேவி நாம்
ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யாரதாத்மநாம்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-
அவன் அடியார்களைத் தொழ நினைத்தால் பூரித்து எழுமே அவனுடைய திருத்தோள்கள்
செய்யும் சிறப்பு -அவனுடைய தோள் தொழுவாருடைய தாள் தொழுவதே என் தோள் எனக்குச் செய்யும் உபகாரம் -)

—————–

(அன்பினால் ஆள் செய்பவரை ஆதரித்தது கீழ்
அன்பிலாதவரை நிந்தித்து இது
எம்மானை –சொல்லிப்பாடி துள்ளாதார் பதிகம் போல்
பற்றினவனை தொழுவாரை அமரர் தேவர் தொழுவர்
பற்றாதவரை நிந்திக்க அடியேன் என்றார் அங்கே ஆழ்வார்)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு– பிடித்தார் பிடித்தாரைப் பற்றும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற(வழித்துணை பெருமாள் திரு மோகூர் ஆப்தன் )
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவி யழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

சிறந்தார்-இத்யாதி
திருநாமத்தை சொன்னவர்களுக்கு
பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து
உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் –

வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடைய
ஈஸ்வரனுடைய திருநாமத்தை மறந்தாரை
மனுஷ்யராக புத்தி பண்ணி இரேன்

அஞ்ஞரை சர்வஞ்ஞர் என்று இருப்பன்
அறிகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கையாலே
குருவிந்தக் கல்லை மாணிக்கம் என்று நினைத்து இருந்தால்
ரத்னம் ஆகாது இறே
ரத்ன பரீஷகன் ரத்னமாம் என்றது இறே ரத்னம் ஆவது –

அப்படியே (அறிந்த என் போல்வார் )நெஞ்சிலே மனிசர் என்று வைக்கப் பட்டவர்கள்
மனுஷ்யர் ஆவர் என்கிறார்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -என்கிறபடியே-

அறம் தாங்கும் இத்யாதி
ஆன்ரு சம்சயத்தாலே தரியா நின்ற
ஸ்ரீயபதியினுடைய திருநாமத்தை நாவினாலே
ஓத உள்ளு –

(ஸ்ரீ லஷ்மீ பதி என்பதால் தானே அறம் -தர்மம் தாங்கி -இவள் சந்நிதியால் உஜ்ஜீவனம்
இவளுக்கும் கிருபை எகிற கருணையே தர்மம் -( த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூந்தர -38- 41–நீ சொல்ல நான் கேட்டு இருக்கிறேன் சீதாப்பிராட்டி )உபதேசம்)

(த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –விஷ்ணு ஸூக்தம் -விஷ்ணுவை சங்கீர்த்தனம் செய்பவர் நிலையாய் இருப்பார்கள் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் -கீதை -7-18-ஞானிகள் எனது உயிர் நிலை -அறியார் உயிராவாய்
நயாமி பரமாம் கதிம்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –பெரிய திருமொழி -11-7-9-
ஆன்ரு சம்ஸ்யம் பரோ தர்ம -ஸூந்தர -38-41-
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூந்தர -38- 41-
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -ஸ்ரீ குண ரத்ன கோசம்
மா தவன் -அவள் சம்பந்தத்தாலேயே இவன் அறம் தாங்குபவனாகிறான்
அவன் பேர் நாவினால் ஒத்துவதே உள்ளு -த்வயத்தை நாவால் சொல்வதையே நினைப்பாய் மனமே என்கிறார் -)

————————————————————————–

நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயமானவனுடைய-திருவடிகளை பயிலுமவர்கள்
அர்த்ததினுடைய

லாப அலாபங்களுக்கு ஈடுபடார்-

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 27 –
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

 

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1- ​-தனியன் இப்பாசுரம் அடி ஒற்றியே)

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அநந்தாய வேத -அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

உளது என்று இறுமாவார் –
தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே
மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம்
பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள் –

இல்லை என்று தளர்தலதனருகும் சாரார் –இத்யாதி
இல்லை என்று தளரார் என்னாதே
உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில்
நித்ய தரித்திரன் சோகம் அறியான் –
ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே
பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம்
இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும்
தளர்த்திக்கு உடலாம் என்று -உண்டு இல்லை என்று தளரார் –
என்று சொல்லுகிறது

பகவத் விஷயத்தில் பிரிவு உத்தேச்யமோ என்னில்
அழு நீர் துளும்ப வலமருகின்றன வாழியரோ –
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம்-

சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில்
ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –

இத்தை அன்றோ
உண்ணும் சோற்றில் முற் கூறும்
துவளில் மா மணியும் சொல்லுகிறது –

முன்ன நோற்ற விதி கொலோ
முகில் வண்ணன் மாயம் கொலோ –
நன் பண்ணின ஸூ க்ருதமோ
இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –

நிர்க் குண பரமாத்மா சௌதேஹம் தேவ்யாப்ய திஷ்டதி -(

திருவடி திவ்ய மேனி முழுவதும் பெருமாள் வியாபித்து இருப்பதைக் கண்டு பீமா சேனன் அருளிச் செய்தல் )
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –

தளர்தல தனருகும் சாரார்-என்றது-
சோகம் உண்டாய் அனுதாபம் பிறந்து மீளார் என்கிறது

முதலிலே தளரார் என்கிறது -அஸ்திரம் -என்று நினைத்து
ஒரு கால் ஸ்திரம் என்று நினைத்து
ஒரு கால் அஸ்திரம் என்று நினைத்து இருக்குமவர்கள் அன்று இறே
ஸ்திரமானது அஸ்திரம் ஆயிற்று என்னில் இறே சோகம் உள்ளது

அளவரிய வேதத்தான் –
அபரிச்சின்னமான வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுமவன்

கண்ணாலே காண ஆசைப் படுமவனுக்கு
வேத பிரதிபாத்யன் என்றால் என்ன
பிரயோஜனம் உண்டு என்னில் –

வேங்கடத்தான் –
எல்லாரும் கண்டு ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாக
திருமலையிலே நின்றான் –
எங்களுடைய அர்த்தத்தோபாதி
உம்முடைய அர்த்தமும் பிரத்யஷம் ஆயிற்றோ என்னில் –

விண்ணோர் முடி தோயும் பாதத்தான் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –
அவனுடைய சத் பாவத்துக்கு இசைந்தால்
அவர்களுக்கும் கூட ஸ்ப்ருஹணீயனானவனே
இங்கே வந்து நிற்கிறான் என்று
ஆதரிக்க வேண்டாவோ பிரமாணிகர் ஆகில்
(வேங்கடத்தான் -)விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –
இவர்களுக்கு இறுமாக்கவும் தளரவும் அவசரம் இல்லை-

(ப்ரத்யக்ஷ மாத்ரமாக இருந்தால் அஸ்திரம் அல்பமாகவே இருக்கும் -இவனோ வேதத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுபவன் அன்றோ -)

(நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி ஆர் நிகர் நீள் நிலத்தே -திருவாய் -6-4-7-
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-விஸ்லேஷ கண்ணீருக்குப் பல்லாண்டு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் –ஸூ ந்தர –33-4-
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-தளர்ச்சியையும் பாக்கியமாக ஸ்லாகித்துப் பேசினாரே
பீமசேனன் திருவடியைக் கண்டு அவன் திருமேனியில் துவட்சியாலே பகவத் சம்பந்தமுடையவன் என்று அறுதியிட்டு
நிர்க்குண பரமாத்மா சவ் தேஹம் தே வியாப்ய திஷ்டதி -வன பர்வம் -14-68-
அநந்தா வை வேதா யஜுர் கடகம் -1-11-
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
அநந்த ஸ்திர பலமாய் இருப்பவனுடைய திருவடிகளிலே இடைவிடாமல் சேர்ந்து இருப்பவர்கள் அல்ப அஸ்திரமான இவ்வுலகச் செல்வங்களை இழப்பதாலும் பெறுவதாலும் துன்ப இன்பங்களை அடைய மாட்டார்களே -)

(துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –-ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —4-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-)

————————————————————————-

இவர்களை இப்படி பயிலப் பண்ணுகைக்கு-இவர்கள் பட்டது அன்று-அவன் படுவது -(கிருஷி -பக்தி உழவன் அன்றோ )

(அரங்கம் திருவேங்கடம் -சயனம்
வேங்கடம் -நின்ற
திரு நீர் மலை -ஒரே திவ்ய தேசத்தில்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -அன்றோ
எனவே பிரித்து அருளிச் செய்கிறார்-நான்கு திவ்ய தேசங்களை அருளிச் செய்தது -நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் சேவை சாதிக்கும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் )

(சாமான்ய ரஷணம் -ஆஸ்ரித விசேஷ ரக்ஷணம் -கை கூப்பி முதல் -மேல் அவனது ஆஸ்ரித விசேஷ ரக்ஷணத்துக்கு நாமும் அனைத்தும் செய்ய வேண்டுமே
மற்று அல்லால் -விசேஷ ரஷணம் -அவன் பரம் -நமக்கு கை கூப்புச் செயலுக்கு மேல்)

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணி போல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்-சர்வேஸ்வரன் -வ்யாமோஹம் உடையவன்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

மணி போலே ஸ்ரமஹரமான வடிவையும்
உதாரமான கையையும் உடைய சர்வேஸ்வரன்
பல கால் பயின்றது
கோயில்
திருக்கோட்டியூர்
திருமலை

பல நாள் பயின்றது –
தர்ச நீயமாய் திகழா நின்றுள்ள
சோலையை உடைத்தாய் சம்சாரத்துக்கு ஆபரணமாய் இருந்துள்ள திருநீர் மலையே-

(கிடை அழகையும் நின்ற அழகையும் ஒவ்வோர் இடத்திலே காட்டி இருப்பதில் திருப்தி உறாமல்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -பெரிய திருமொழி -2-4-1-
சேதனர்களை வசீகரிக்க உபகரணங்களாக திருமேனி அழகையும் குணங்களையும் உடையவன்
என் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ
நீல மணி போலே கண்டார் களைப்பை ஆற்றும் படி ஒளி விடும் திவ்ய மங்கள விக்ரஹம் யுடையனாய்க் கொண்டு
அந்தத் திருமேனியை சர்வருக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணி அருளும் உதார குண பூர்ணனாய்
கொடுத்துக் கொடுத்துப் பூரித்து இருக்கும் திருக்கைகளை யுடையவன் அன்றோ -)

————————————————————————-

அவன் ஸ்வ பாவம் இப்படி யான பின்பு-எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறது –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கை கோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக் கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கை கோலி தொழுது–கை கூப்பி வணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

அரி உருவன் பாத மலர் மாலை அணிந்து காலை தொழுது எழுமின்-
ஆஸ்ரித அர்த்தமான வடிவை தனக்கு வடிவாக உடையவன் உடைய
திருவடிகளிலே மலர்மாலையை அணிந்து கை கூப்பி
ப்ராஹ்மமான முகூர்த்தத்திலே தொழுது உஜ்ஜீவியுங்கோள் –

கை கோலி என்று
ஏற்கவே கோலி என்கிறது
கை கூப்பி என்றுமாம் –

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை –
சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –

மற்று அல்லால் -இத்யாதி –
மற்று நீங்கள் அனுசந்திக்கும் படி
எல்லாத்தையும் உணர்ந்து காலை தொழுது எழுமின்

மற்று எல்லாம் இதி பாடாந்தரம்-

(அந்தியம் போதில் அரியுருவாகி
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடே வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -திருவாய் -4-5-10-
அடியார்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உருகும்படி அவர்களுடைய நெஞ்சைப் பற்றிக் கிடைக்கும்
குணம் -செயல் -பிரகாரம் -முதலியவற்றின் கூட அறிந்து அனுசந்தித்துக் கொண்டு
அடியேனுக்கேயான நரசிங்கனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்றதாகிறது -)

————————————————————————–

எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் (ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாசங்கள் புராணங்கள் )உண்டாக்கினாய் –

(முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணானாயும் வெளியிட்டு அருளினான் அன்றோ -கீழ் வட திருவேங்கடம் -இதில் தென் திருவேங்கடம்)

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேஸ்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்-உரைத்தாய் அல்ல -அப்ருவஷேயம்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற் பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்-

உணர்ந்தாய் மறை நான்கும்-
சம்ஸ்காராத்மகமாக உன் திரு உள்ளத்தில் கிடந்த வேதத்தை
பிரகாசிப்பித்தாய்

ஓதினாய் நீதி –
வேத உப ப்ரும்ஹணமான
இதிஹாச புராணங்களை உண்டாக்கினாய்

மணந்தாய் மலர்மகள் தோள்-
வேத ப்ரதிபாத்யை யானவளுடைய
தோளை சம்ஸ்லேஷித்தாய்

போய் வேயிரும் இத்யாதி –
வேத பிரதிபாத்யன் ஆகில்
பரம பதத்திலே யிறே என்னாதபடி
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி
திருமலையை விரும்பினாய்-

(நயதீதி நீதி –வேதார்த்தங்களை நியாயங்களாலே நயப்பித்துத் தெளிவு படுத்துகையாலே உப ப்ரும்ஹணங்கள் நீதி எனப்படுகின்றன
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதை சஹ-
பித்தர் பனி மலர்ப்பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-
மாலிருஞ்சோலை வளம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -திருவாய் -2-10-8-
அடியார்கள் மறக்க ஒண்ணாதபடி நீ செய்து அருளின செயல்களுக்கு எல்லையே இல்லையே -)

————————————————————————–

திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-
அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார்

(பாபங்கள் அநேகம் என்கிற சந்தேகம் -வர -அதுக்கு சமாதானம் இப் பாசுரம் -திருநாம சங்கீர்த்தனம் பலமாக செய்ய அனைத்தும் தீருமே
எங்கும் அதிரும்படி கூக்குரல் – பூதநா ஸம்ஹாரம் செய்து அருளிய கண்ணனே –
பூதனை பட்டது அவை படுமே)

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான
கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலை யுண்ணும் போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-

குலை சூழ்
கரையாலே சூழப் பட்ட

மலை ஏழும் -இத்யாதி
முலை எங்கும் வியாபித்த நஞ்சாலே
மிடுக்கு உடையளான பூதனையை
முக்தமான சொலவுகளை அவள் முகத்தே சொல்லி
சுவையா நின்ற நாவை உடையவன் -என்று அழை

பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்
அஞ்சாது -பூதனை பட்டது படும் இத்தனை-

(ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட -திருவாய் -1-9-5-
பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயம் -பெரிய திருமொழி -1-8-1-
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி -1-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -திருவாய் -1-7-8-
உலகு எல்லாம் எதிர் ஒலிக்கும் படி அழைப்பாயாக -என்று அந்வயம்)

————————————————————————–

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

(கோபிகள் -அங்கு அப்பறை கொண்ட வாற்றை அனுகரித்து நாச்சியார் ஸ்ரீ ஸூக்திகள் போல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசி
பெரும் பெயர் -அறியாத பிள்ளைகளாய் முன்பு பேசிய நாராயணாதி நாமங்கள் போல் அல்லவே கோவிந்தன் -கோபாலன் -யாதவன் -போன்றவை இவை அன்றோ குற்றம் அற்ற பெரும் பெயர்கள்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -உன் தன்னை சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே )

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸு தேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல் பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

முகப்பும் -எல்லார் முன்பும்

அழைப்பன் திருமாலை
ஸ்ரீயபதியை அழைப்பன்

ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி –
திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை
அனுசந்திக்கப் புக்கால்
பிழைக்க அரிதாய்
அத்தாலே அரை ஷணம் விடப் போகாத
திரு நாமங்களைச் சொல்லி –

ஆங்கு அவர்கள் என்றது -திரு ஆய்ப்பாடியில் உள்ளவர்களை
பார்த்து நம்முடைய பக்கலிலே இரங்குவர் என்று –

இழைப்பரிய வாயவனே –
நினைக்க அரிதாம் படி பெண்களைப் படுத்தும்
கிலேசத்தை உடைய கிருஷ்ணனை

(நினைக்க அப்பால் பட்டு -மொழிக்கு அப்பால்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல் நம்மால் அறிய முடியாதே
நெஞ்சு ஆளும் கண் சுழலும் அன்றோ-கல் எடுத்து கல் மாரி காத்தது அவலீலை அவனுக்கு -இவளுக்கோ சொல் எடுத்து சொல்வது அரிதானதே )

யாதவனே என்றவனை –
(ஆயவனோ பாதி )இடைத் தனத்தோ பாதியும்
ஸ்ரீ வாஸூ தேவர் மகன் ஆனதுவும்
ஆகர்ஷகம் ஆனபடி

யார் முகப்பும் –
எல்லார் முகப்பும்

மாயவனே என்று மதித்து –
ஆச்சர்ய பூதனே என்று மதித்து
திருமாலை அழைப்பன்-

(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே
அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அருளிசெயல் அரங்கம் -இரண்டாம் திரு அந்தாதி சாரம் ..

December 6, 2011
வனத்திடை ஏரியாம்-மாரி யார் பெற்கிப்பார் மற்று -முக்யபாசுரம் –
அவன் திரு உள்ளமே மோஷ ஹேது–
பூத யோகி -பூதத் ஆழ்வார் -தமிழிலே திரு நாமம் கொண்டவர்
அயோநிஜர்-மூவரும்
சரத் யோகி-பொய்கையார் -யதோத்த காரி-வேகவதி நதி –
கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துஉதித்த -பொய்கையார் –
கவிஜர் போர் ஏறு -இவரை-அவன் போலே போற்றி –
அவிட்டம்-குருக்கத்தி மலரில்- திரு கடல் மல்லை-
சதயம்-பேய் ஆழ்வார்-வை மு கோபாலாச்சாரியார் ஸ்வாமி-வித்வான்-சொன்னது
மூவரும் சயனம் -பெருமாள் சந்நிதியில் தோன்றிய பெருமை
தல சயனத்து பெருமாள்-
திரு குருகை பிரான் பிள்ளான் தனியன் –
என் பிறவி தீர -கடல் மல்லை பூதத்தார் பெயர் அவன் போல்
முத்துகள் கொண்டு வந்து சேர்க்கும் இடம்
முத்து பிறக்கும் -நத்தை வயற்றில் முத்து /யானை தலையில் முத்து
மூங்கில் அடியிலும் முத்து –
தலை சயன பெருமாளே முத்து
-முத்து திரை கடல் சேர்ப்பன்-மூதறிவாளன்-பண்டு அன்று பட்டினம் காப்பே
பூதத் ஆழ்வார் /பிள்ளை லோகம் ஜீயர் -ஆகிய முத்துகள்
நித்தில தொத்து -திரு நின்ற  வூர் பெருமாளும் வந்தானே
புஷ்பம் வாங்கி கொள்ள வந்தான் -புண்டரீகர் மகரிஷி-
புண்டரீக புஷ்கரணி-இவர் பெயராலே -கானத்தின்-காடு நிறைந்த இடமாம்-
விலஷனமான புஷ்பம் கிடைக்க -திரு அடி தாமரை உடன் சேர்க்க ஆசை கொண்டு
திரு எவ்வுள்-பலன்-புஷ்பம் சொல்லி திரு வல்லி கேணி வந்து
கஜேந்திர வரத்தான் மங்களாசாசனம் செய்தார்
கையால் இறைக்க -பல ஆண்டுகள்-புஷ்பமும் வாட வில்லை/ஜலமும் குறைய வில்லை /இவரும் ஓயா வில்லை
பிராட்டி தூண்ட -முதியர் வேஷத்துடன்-பசி என்று வர –
திரு இட எந்தை போய் ததி ஆராதனம்–வருகிற வரை-கரையிலே மணலை குவித்து சயனம் -புஷ்பம் திரு அடியில் –
சீதத்தாரும் முத்துகள் சேரும் கடல் மல்லை -முதல் முத்து இவன்
குருக்கத்தி மரம்-கல்வெட்டு இன்றும் உண்டு-புஷ்கரணி
திரு மங்கை-கிடந்ததோர் கிடக்கை–கண்டியூர் மல்லை என்னும் மண்டினார்
10 பாசுரம் கிருஷ்ணாஅனுபவம் – 10 பாகவத பிரபாவம்
திரு சேறை பதிகத்திலும்   உண்டு பாகவத பிரபாவம்
மூவரையும் ஓன்று சேர்க்க பகவான் நினைத்து திரு கோவலூர் சேர்க்க-

வையத்து அடியவர்கள் வாழ விளக்கு ஏற்றி-
இரண்டு விளக்கு இரண்டு மாலை
அன்பே தகழி- முன்பு அனைத்தையும் – அவர் உபயோகித்து அதனால் ஞான சுடர் விளக்கு
பிரகாசிக்கும் அணையாதே
கடல் விட பெரியது அன்பு
ஆர்வமே -பூ சத்தாயாம்-பூதத் ஆழ்வார்
ஞான தமிழ் பாடினேன்-பெருமை உடன் அருளுகிறார் ..
திரு கண்டேன்-பொன் மேனி கண்டேன்-
நீல மேனி-பிராட்டி பிரகாசம் பொன்னாக காட்ட –
இன்புருகு சிந்தை இடு திரியா
திரி-விஷயம்-அமுதனார்–மறையின் பொருளும்-செம் தமிழ் கூட்டி ஒன்றை திரித்த
-அன்று எரித்த திரு விளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
வேத மயம் வீச -விளக்கு
இறைவனை காணும் இதயத்து இருள் கெட இவர் விளக்கு
ஞானம் என்னும் நிறை விளக்கு -நெஞ்சத்து கொண்டு இருக்கிறார் ஸ்வாமி
கண்டமை காட்டும்-பேய் ஆழ்வார் -தமிழ் தலைவன்- பொன் அடி போற்றும் -சென்னியில் சூடும்-
இரும் தமிழன்-பூதத் ஆழ்வார் சொல்லி கொள்கிறார் –
தேகளீசன்-ஆயன்-கொபாலனூர்-மருவி கோவலூர்
கரும்பு சாறு-தேசிகன்-மூவரும் குணம் எடுத்து அனுபவிக்க -அமிர்தம் –
திருமலை அனுபவம்-முதல் ஆழ்வார்
வெள்ளத்து அனைய மலர் நீட்டும் -தாமரை-ஆச்சர்ய சம்பந்தத்துக்கு எடுத்து காட்டு –
அலர்த்தும் ஆதித்யனே உலர்த்துவானே நீர் சம்பந்தம் இல்லை என்றால் .
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் –
பரம பதனை அனுபவிக்க-கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி மனம் போனதாம்-
பற்று கொம்பு வேண்டுமே –
பாரி-கடை ஏழு வள்ளலில் ஒருவன்-தங்க தேர் -கொடிக்கு கொடுத்தானே –
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி –
தமிழில் பாடினதே தவம்-இரும் தமிழன் -ரசமான பாட்டு பாட திரு வேம்கட முடையான் கேட்டானாம் –
பெருகு மத வேழம்-அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்  –
வேழம் களிறு-ஆண் யானை/பிடி பெண் யானை
பிடி சேர் களிறு பேராளா சேர்ந்தே பாடுவார்கள் ஆழ்வார்கள்
மா பிடிக்கு முன் நின்று-மதம் அடைந்த நிலையிலும் வேழம் சுவையான ஆகாரம் கொடுக்க
இரண்டு கண் கரும்பு ருசி-
இரு கண் இள மூங்கில் வாங்கி-
அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் திரு வேம்கட மலையே
யாத்ரை-விஷய பரிமாற்றம் உண்டே -தீர்தகரர்கள்
எம்பெருமானார் -துவைய அர்த்த உபதேசம்
மந்திர ரத்னம்-உதடு துடித்து கொண்டே இருப்பாராம்-அனுசந்தான பண்ணி கொண்டே
ராமானுச முனி வேழம்–சிஷ்யர் பெண் யானை-
இரு கண்-துவயம்
திரு மந்த்ரம்-சரம ஸ்லோகம்-அர்த்தம் கலந்து உபதேசம்-
தானாகவே நீட்டும்-கேட்காமல்-
போது-காலை அரும்பு மலர் எல்லாம் போதாகி
போது அறிந்து போது அரிந்து கொண்டு போகுமாம்-திர்யக் கூட இங்கு
அத்தி யூரான் புள்ளை ஊர்வான்—
தேவ பெருமாள்-மங்களாசாசனம்-ஹச்திகிரி-
ஐராவத மலை மேல் எழுந்து அருளி-
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி-
பட்டர் திரு வீதி-உடையவர் திரு மாளிகை மயில் வடிவத்தில் இருக்குமாம் மேல் இருந்து பார்த்தால்
கச்சி கிடந்தவனூ r கடல் மல்லை தலை சயனம்-திரு மங்கை-யத்தொதகாரி தான் தல சயனபெருமாள்
நச்சி தொழுவாரை சேவிக்க ஆசை படு-
ஊருககுள்  கோவில் 700 வருஷம் முன்பு கட்டி விஜய நகர அரசர் -சோபனம்-சாதித்து -கட்ட சொன்னாராம்
பிள்ளை லோகம் ஜீயர் மேர்பார்வையால்-
பாம்பு புற்றில்- உத்சவர் -உலகு உய்ய நின்றார் –
கல்கியை நான் கண்டு கொண்டேன்-கடல் மல்லை தலை சயனத்தே -கலியன்
புலன் கொள் நிலா –நவ மணி-சுமந்து எங்கும் –ஒசிந்து -கலங்கள் இயங்கும் -பல்லவர் சரித்ரம்
ஞானத்தின் ஒளி உருவை- திரு வல எந்தை பிரான்-
பிள்ளை லோகம் ஜீயர் வம்சத்தார் ஆராதனை இன்றும் செய்கிறார்.
பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

இரண்டாம் திருவந்தாதி-51-75- ஸ்ரீ கிருஷ்ணா பிரேமை ஸ்வாமிகள் ..

August 17, 2011
மதிக் கண்டாய் நஞ்சே ! மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்–51
உயர்ந்த விஷயம் அவனையே ஈடு பட்டு நினைந்து இருக்க வேண்டும்..மாயை–மேட்டில் தண்ணீர் ஏற்ற சிரமம் -மனசு தானாகவே ஈடு பட வேண்டி இருக்க -ஆழ்வார்கள் ஈடு படுத்த வேண்டி இருக்கிறது மூச்சு விடுவது போல் பக்தி சகஜமாய் இருக்கும்–அலைகின்ற ஸ்வாபம் மனசு-கொடி போல் அவனை பற்றி கொள்ள வேண்டும்..-மானச சஞ்சரரே -கீர்த்தனம் ஆழ்வார் பாசுரங்கள் ஒட்டியே இருக்கும்..-நெஞ்சே நினை-தியானம் பண்ணு-மணி வண்ணன்-பூர்ண திரு மேனி சொல்லி திரு அடியில் நிறுத்து என்கிறார்–நெஞ்சு என்னும் உள் கண்ணால்-நாமத்தால் ரூபம் நினைக்க முடியாது மானச கல்பனையால் தியானம்-ஆராதனம் பண்ண பண்ண சாநித்தியம் வந்து விடும்..-பெயரையே சொல்லி கொண்டு-அதுவே காக்கும்-திரு நாம பெருமை-அவனுக்கு சித்தம்–மூர்த்தி மகிமை விட சிறந்தது திரு நாம மகிமை–திரு மந்த்ரம் பிடித்து கொண்டு அனுசந்தித்து -மதிக் கண்டாய் -தியானம்-ரூபம்/நாமம்/திரு அடியில் நிறுத்தி–உபாயம் இவை நேராக சாஷாத் கரிக்க –தான் கிடந்த கடலை விட்டு எழுந்து பெயர்ந்து-அதிலே மந்தர பர்வதம் வாசுகி கொண்டு-கடைய -நிறம் சியாமள ஜோதி தியானம் பண்ணி அடைவாய்
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியன் ஆர் அது அறிவார் ?–மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்குத்  உய்த்தான்  நெறி –52
நிறம் கரியன்-அதற்க்கு தக்க செய்ய நிறம் அவள்–அறம்-தர்மம், கருணை செய்வதே அவன் தர்மம்–அடியார்க்கு என்ன செய்வன் என்று இருத்தி –காதல் ஆதாரம் கடலிலும் பெருக –தர்மம் பெருமை காட்ட தானே இரங்கி–தர்மஸ்ய கிலானி-வாட்டம் அடையும் பொழுது அவதரித்து சனாதன தர்மம் காத்து–மகா பலி-துஷ்டன்-ராவணன் போல்வானை –இருந்தாலும் அவன் குணத்தையே கொண்டு–பிராமண பக்தி சத்யன் உய்ரை கேட்டாலும் கொடுக்கும் குணம்–அவனை வாழ வைத்தான்–இந்திர பதவியை அடுத்த மன்வந்தரத்தில் கொடுத்தான்-ஸ்தானம் கொடுத்தான்–சுதலம் லோகம் கொடுத்து வாழ வைத்தான்-நிர்வாகனான இந்திர சுவர்க்கம் போல அதை கொடுத்து -அவனை போல் பரி கொடுத்து போக முடியாமல் தானே காவலும் இருந்து..கதா தரனாக பெருமாளே இருந்து..திருஅடியை கெட்டியாக பிடித்து கொண்டான் மகா பலி- சுவர்க்கம் போனால் போகட்டும் அது அல்பம்..நாக கன்னிகைகள் நாகரத்தினம் இருக்கும் -கிளம்ப வில்லை மகா பலி-கெட்டியாக பிடித்து கொண்டு இருக்க –அங்கு போ என்று -விரட்டினாலும்– எங்கு இருக்கிறாயோ கதாதரனாய் இருப்பேன் என்றார்–ஹிரண்ய கசிபி ஹிரஞாட்ஷன் த்வார பாலகர் தானே முன்பு –மகா பலி தாத்தா —
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி –பிரியாது
பூம் கொடிக் கள் வைக்கும் பொரு புனல் குன்று என்னும்
வேம்கடமே யாம் விரும்பும் வெற்பு –53
திரு மலையே விரும்பும் –நெறியார்=தபசு பண்ணுவார் –கண்ணில் தென் பட –சடை விழுந்து தொங்க -முன்னும் நின்றும் பின்னும் தொங்க-குன்றில் கொடிகள் படர்ந்தது போல் இருக்க -குன்று மூச்சு விடாதே அசையாதே -செய்யாமல் தியானம்  பண்ணி கொண்டு இருக்க –பார்த்து போகிறார்கள்–இளம் கிரி சின்ன மலை என்று எண்ணி–
வெற்பென்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் –நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம்கோயில் கை விடேல் என்று –54

விருப்பமான க்ரீடாசலம்–பிராட்டி உடன் -ரம்யா ராம மானாயா -ஸ்ரீ வைகுண்டம் விரக்தாயா -நிற்பு என்று நித்ய வாசம் பண்ணி கொண்டு இருக்கிறான்–மேல் கோட்டை கீழ் கோட்டை போல் புஷ்ப கிரி சிந்து வேம்கடம்–திரு மால் மதிப்பதால் திருமலை ஆனது..–அது போல் என் உள்ளமும் திவ்ய தேசம்-உகந்த நிலம் எல்லாம் திவ்ய தேசம்–உகப்பு காரணம் ஆழ்வார் மங்களா சாசனம்–உகந்து வாசம் பண்ணுவான்..-அது போல் புகுந்து பெறேன் என்று நிறைந்து இருக்க -திரு மலை திரு மால் இரும் சோலை என் உள்ளம் மூன்றும்–பழைய பால் கடலை விட்டு விட்டு வந்து விடாதீரும்–அங்கும் வருவார்களே –கை விடேல்–இளம் கோயில்-பாலாலயம்-கை விடாதே –திரு பணி நடக்கும் பொழுது–திரு வெள்ளியம்குடி–பாலாலயம்–ஆவாகனம் பண்ணி –சில வியாஜத்தால் சம்ப்ரோஷனம் தள்ளி போக –ஸ்தபதி சொன்ன வார்த்தை ஸ்ரீ கிருஷ்ண பிரேமை சுவாமி மனனம் வருத்தம்..-பெருமாள் போய் விட்டார் இல்லை-ஆபரேஷன்-உணர்வு மரத்து போகும் படி மருந்து கொடுப்பது போல் உயிர் போக வில்லை–நமக்காகா கட்டு பட்டு இருக்கிறார் தள்ளி போக கூடாது ஆபரேஷன் பொறுப்பாக நடப்பது போல் பாலாலயம் பண்ண வேண்டும்.தன உள்ளம் பெரிய கோயில் திரு பாற் கடல் இளம் கோவில்-அங்கு தபம் இருந்து இங்கு வந்தான்..–விடாதீர்–.

என்றும் மறந்து அறியேன் எழ பிறப்பும் எப் பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் –வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே ! இன்பக்
கடல் ஆழி நீ அருளிக் காண் –55
ஜன்ம ஜன்ம மாக மறக்கவில்லை–உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம்–ஆனந்த சாகரத்தில் எனை முழிக்காட்டி நீ சந்தோஷ படு-
காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே ? –பேணிக்
கரு மாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திரு மாலை நாங்கள் திரு –56
கழிய மிக்கதோர் காதல்-கண்ணார கண்டு கழியதோர் காதல்-நசிக்காது பார்த்த பின்பு-ஆறுதல் கொஞ்சம்-தாபத்துக்கு கொஞ்சம் தண்ணீர் போல்–பார்த்த பின்பு மிக்கதோர் காதல்-ருசி தெரியாது முன்பு பார்த்த பின்பு பிரிய முடியாது பூர்வ ராகம் முன்பு விரகதாபம் பின்பு..வஸ்துவின் அருமை–அறிந்து..கை மிக்கு கை கூடும் ஆகில்–பிரேமை ஆழம்–தசரதன் இடம் ஆழம்–பெருமாள் காட்டுக்கு போனதும் உயிர் போனதே ..–60000 வருஷம் இருந்தவர் மூப்பினால் போக வில்லை..–ஸ்ரீ ராம விரகத்தினால் போனதே–பொறுத்து இரு என்று சொன்னால் பொறுக்குமா நாணி-ஆறி போ –ஆறாது–கரு மாலை பொன் மேனி-அருமையான திரு மேனி சியாமள வர்ணன்-பேணி ஈடு பட்டு வந்த காதல்–காட்டும் திரு மாலை நாங்கள் திரு-தாயார் புருஷ காரம் பண்ணுவாள் என்று -அழுத்தமாக அருளுகிறார்-தாயார் தத்வம் சேர்ப்பிபதே நம்மை–ராசா லீலை-கோபிகள் கோபிகா கீதம்-ராதை மட்டும் கூட்டி போக -கொஞ்ச கொஞ்ச ராதைக்கு வேதனை தோழிகள் துடிப்பார்கள்–என்கிற எண்ணம்- திரு உள்ளம் அறிந்து மறைய –கோபிகள் வர பின்பு அனைவர் உடன் கூடினான்..-கருணா மயம் கொண்டவள் அபசாரம் பன்னுபவனுக்கும் புத்தி சொல்லும் -ராவணனுக்கும் பிராட்டி அருளினாள்-மித்ர பாவேன—அவன் வாரான் ஆகிலும் இழுத்து -காட்டாது போனாலும் காட்ட வைப்பாள் திரு
திரு மங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப் பிடிமின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக் கை எந்தை பேர்
நால் திசையும் கேட்டீரே? நாம் –57

கிருபை/கர்ம பல பிரதன் இரண்டு தன்மை–அவனுக்கு..சத்ருவின் பிள்ளைக்கும் அருளுவான்-மம துரோகி-ஸ்ருதி ஸ்மிர்த்தி மம வாகயா -மீரயால் தண்டனை…தாயார்-கட்டி அணைப்பாள்.ஜகன் மாதா -ராஷச ஸ்திரீகள் -சரண் அடையாமலே ரட்ஷித்து–தனி கோவில் நாச்சியார் உபய நாச்சியார் திரு மார்பு நாச்சியார் மூவரும் சேர்ந்து ரட்ஷிக்ககோவிந்தா பெயரினால்  நான்கு திசையும் கேட்க்கும் படி ஏத்து கின்றோம்..-எந்தை பெயர்–கோவிந்த நாம சங்கீர்த்தனம்-கேட்டீரே —

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை யோதுவித்து வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்  னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த அருள் –58
திரு நாம சங்கீர்த்தனம் நாம் பெற்ற நன்மை என்று தெரியாமல்–வேம்பு போல் முதலில் –நீர்மை-கைமை கசப்பு-ஸ்வாபம்–பித்த ஜுரம் –ஒ ராம நீ நாமம் எந்த ருசி-ராம தாசர் –அருள் நீர்மை தந்த அருள்- நீர்மை-இனிமை–சுகம் கண்ட பின் இதை போல் இனிமை வேற இல்லை-நா மங்கை –சரஸ்வதி- அறிந்து திரு நாமங்கள் வரும்படி செய்த அருள்.எம்பெருமானே சரஸ்வதி தேவியை கூட்டு பிரம தேவனின் வாக்கில் இருக்க செய்தான் எம்பெருமான்-
அருள்புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண் குற்ற வப்போது -இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59
பொருள் இல்லாத எங்களை பொருள் ஆக்கி–அஞ்ஞானம் விலக்கி–உன் திரு அடி கண்டு–நன்றிக்கு கைம்மாறு-என்னையே தாமரை போல் சமர்பித்த –உன் கருணையால் உயர்வு பெற்று- அறிந்து -ஓர்ந்து–அவன்பொருளை அவனுக்கு அர்பிக்கிறோம்..–நான் யார் சமர்ப்பிக்க
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் –ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று –60
வடிவம் இல்லை அவனுக்கு -ஜிதந்தே ஸ்தோத்ரம் –ந தி ரூபம் -பக்தாநாம் தும் பிரகாசா  சி – திவ்ய ஆயுதம் திவ்ய ஆபரணம் எல்லாம் பக்தர் களுக்கு -ஆதி மூலமே- இத்தம் விசேஷணம் அற்றபர பிரமம்-கூப்பிட சக்ராயுதன் வந்தான் –நிரா காரம்-வியாபித்து உலகுக்கு காரணம்–பக்தர் கூப்பிட்ட உடன் திவ்ய ரூபம் உடன் வருவான் ஒளி உருவம் ஞான ரூபம்..ஈர் உருவம் தியானம் பண்ண ஈர்க்கும் உருவம்..-இரு நிலம்=விஸ்தாரமான உலகம்..-நரசிம்கன் -ராமன் கண்ணன் -தாற் கால உருவமா–ஆதி ஆம் வண்ணம் -நிரந்தரம்-வெளி காட்டி மறைத்து வைக்கிறார்..-நித்ய மான திவ்ய மங்கள விக்ரகம்–தீர்தகரர்கள்-மண் காப்பார் ஞானிகள் அகண்ட தன்மை புரிந்தவர்கள் ஞானம் கலந்த பக்தர்–இரண்டு தன்மை உடையவன் என்று அறிந்தவர்
நின்றதோர் பாதம் நிலம் புதைப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே ! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு !–61
உலகு அளந்தார் என்பர்–அன்று கரு மாணியாய்-கருப்பு குள்ளன்-கள்வனே-காட்டுவது ஒரு அடி அளந்தது ஒரு அடி-அவன் உடையதை நம் உடையது என்பதே பெரிய குற்றம்–தன சொத்தை மீட்க்க பண்ணிய திரு விளையாடல்–திரு உள்ளத்தை பிரமாணித்தவர் யார் -திரு உருவம் பிரமாணிப்பது அப்புறம்–பலி புரிந்து கொண்டான்–அவன் பாக்கியம்-பெற்ற பேறு–
பேறு ஓன்று முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் –ஏறின
பெருத்து எருத்தம் கோடு ஒசியப் பெண் நசையின் பின் போய்
எருது இறுத்த நல் ஆயர் ஏறு  –62

முன்பு ஒன்றும் அறியேன்–பேறு பாக்கியம் எது என்று தெரியாது–பெற்றும் அறியேன்-தீர்த்தம் சடாரி பெற்றும் அறியேன்..மார் என்று பரிகாரம்-அர்த்தார்த்தி யாக ஆர்தனாக –ஏறினேன்–மேலே வைக்க –பிராணன் அவன் கல்யாண குணங்கள் ..கும்பகன் பெண் நப்பின்னை நீளா தேவி–நசையின் பின்-எருது இருத்த நல் ஆயர் ஏறு –திமில் உடைய ஏறு-எருத்தம்–பக்தி பிரேமை என்ன என்று புரிகிறது இப் பொழுது தான்–லீலைகளை கேட்டு சௌலப்யம் புரிந்து கொண்டேன்

ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி வுருவத்து
ஏறு ஏறி பட்ட விடு சாபம் –பாறேறி
வுண்ட தலை வாய் நிறையக் கோட்டம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை -63

மாதுர்யம் எளிமை–கபால சாபம் போக்கி–ஒண் குருதி -அர்த்த வாதம்–உள் கருத்து–ஞான சொரூபன் மார்பின் வியர்வை ரத்தம் எது -அப்க்ராக்ருத சரீரம் வேத சொரூபன் பிரம்மா கழுகு பறக்கும் சிரஸ் ஏது..-பொருள் புரிந்த கொள்ள வேண்டும்–

கதையின் பெரும் பொருளும் கண்ணா ! நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் –கதையும்
திரு மொழியாய் நின்ற திரு மாலே !உன்னைப்
பரு மொழியால் காணப் பணி –64
சாரம் கொண்டு அசாரம் தள்ள வேண்டும்…கோடி  பிரம்மா கத்தி சாபம் போக்கும் -திரு நாம சங்கீர்த்தன மகிமையால்..–ஏத்தில் -செய்தால்-திரு மொழியாய் அர்த்த வாதமும் வேதம் போல் ஆகும்..
பணிந்தேன் திரு மேனி பைம் கமலம் கையால்
அணிந்தேன் வின் சேவடி மெல் அன்பாய் –துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னைப் புகல் இடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது –65
சேவித்து -அடி பணிந்து -நீயே புகல் இடம் –ஸ்ரீ வைகுண்டம்-அவதாரம் பண்ணி பின்பு புகுந்த இடம்-திவ்ய தேசங்களும் புகல் இடம்..துணிந்து அங்கேயே இருக்க நிச்சயம் பண்ணினேன்..திவ்ய தேச வாசம்- புக்கு நீர் புக்கு உன்னை கண்டு கொண்டேன்..இருந்து ஏத்தி வாழும் இது
இது கண்டாய் நல் நெஞ்சே ! இப் பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது –இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத் தரு கணையா
காரணமும் வல்லையேல் காண் -66

இது என்ன உலகு இயற்க்கை–ஞானிகள் இங்கு வந்து ஒட்டாமல் இருப்பார்கள்–இது கண்டாய்–சாரம் என்பதே நாராயணன் பேர் ஓதுவது–

கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி –கண்டேன்
உரு நோய் வினை இரண்டும் ஒட்டு வித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி -67
அவன் திரு மேனி கண்டேன்..கனவில்-அனுபவம் இருப்பதால் இதுவும் மெய் தானே-மானச அனுபவம் சத்யம் -ஸ்ரீ பாஷ்யத்தில் சித்தாந்தம்..–ஹிருதயத்தில் தானே இருக்கிறான் மனசு பிராணன் சரீரம் உலகு -வெளியில் சுற்றி வந்து கண் எதிரில் காண்பதை விட கனவில் காண்பது -சுலபம்-போல் தோன்றினாலும் பாக்கியம் பண்ணிணவனே கனவில் காட்சி கொடுக்கிறான் ..-கை தளம் பற்ற கனா கண்டேன் தோழி நான்..சங்கு சக்கரமும் கண்டேன்-அவனை காண்பதே பிரயோஜனம்–பரி பக்குவம் கர்ம வாசனை போக்கி -வினைகள் இரண்டையும் போக்கி-சர்வ தர்மான் பரித்யஜ்ய -தியானத்தையே கொடுத்து ஆள் படுத்தி நேரில் காட்ஷி கொடுப்பான் -இது அவன் வலி -வலிமை பழம்.
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்தாக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்தகோ -69

கடல் கடைந்த அவனுக்கு இவை போக்குவது எளிது தானே

கோவாகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா வேகிச் செல்கின்ற மன்னவரும் –பூ மேயும்
செம் கமல நாபியான் சேவடிக்கே எழ பிறப்பும்
தன கமலம் யேய்ந்தார் தமர் -69

அரசன் -நம் கண் முகப்பே குதிரை மேல் செல்கின்ற மன்னவரும்–பத்ம நாபன் திரு அடியில் பூ சமர்ப்பித்த பலன்..அவள் கடாஷத்தாலே பாலை வனத்திலும் கல்பக விருட்ஷம் —

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தன் கால
தமர் உள்ளும் தன் பொருப்பு வேலை –தமர் உள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல வேந்தைக்கு இடம் -70

கோதண்ட பாணிக்கு உகந்த இடம்-தஞ்சை மணி குன்று சிங்க பெருமாள்–திரு தண்  கால ஊரான் -பிரசித்தம்–பொருப்பு திரு வேம்கடம்/-திரு அரங்கம் கடல் மலை போன்ற இவை எல்லாம் தமர் உள்ளம்-அடியார்களின் உள்ளம் அவன் உகந்த திவ்ய தேசங்கள் எல்லாம் –

இடம் கை வலம் புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்கு வித்த  தாழி –விடம் காலும்
தீ வாய் அரவு அணை மேல் தோன்றல் திசை அளப்பான்
பூவார் அடி நிமிர்த்த போது -71

விஷம்கக்கும் ஆதி சேஷன் மேல் சயனித்து — விடம் காலும் தீ வாய் அரவு ஆணை—கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் போல்–அசுரர்களை விரட்ட -அதை விட்டு உலகம் அளக்க -பிராட்டிமாரும் கூசி பிடிக்கும் மெல் அடி கொண்டு -பூவார் அடி நிமிர்த்த போது ..

போது அறிந்து வான் அரங்கன் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்து கொண்டுஏத்தும் போது –உள்ளம் ! போது
மணி வேம்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேம்கடவன் பேர் ஆய்ந்து -72
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நாடு வந்தி வாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் –ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செம் கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆள் பட துணிந்த யான் -73

முறைப் படி கற்று மூன்று வேளைகளிலும் சகஸ்ர நாமம் சொல்வேன்–பூ தூவி-வைகலும்-சதா காலமும்..-கரி-யானை-கஜேந்த்ரனை காத்த -அவனுக்கு ஆள் பட்டு ..பாகவதனாக ஆனேன் என்ன பாக்கியம்..-ஆள் பட்ட பிறகு

யானே தவம் செய்தேன் எழ பிறப்பும் எப் பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் !–யானே
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லேன் பெரிது -74

நானே தவம் செய்தேன்-இரும் தமிழ் நல் மாலை-வாயால் -இணை அடிக்கே -ஏற்ற திரு அடி-ஏற்ற பாசுரம்-சொன்னேன்-பெரும் தமிழன் அல்லேன் -பெரிது -தமிழன் என்ற சொல்வதில் பெருமை–பெரிய கவி இல்லை-அவை அடக்கம்-விநயம்–முதல் அர்த்தம்–வியாக்யானம்- நான் பெரும் தமிழன்–நல்லேன் பெரிது- பிரித்து -அவனை பாடினதால் –கவி சொல்லி காணும் என்ன பாடுகிறார்

பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி –அற்கு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை –75
வான் ஆகாசம்-முகில் வண்ணன்-திரு மலை-திரு வேம்கடம்-நீல வண்ணன் நித்ய வாசம் கண்டீர் -மலை போல் யானை ஓன்று சஞ்சரிக்க -மா பிடிக்கு முன் சென்று-மிதுனமாக சஞ்சரிக்க -மூங்கில்-இள மூங்கில்-தேன் தோய்த்து கொடுக்குமாம் -ஊட்டி விடுமாம் -நாயகன் நாயகி-திர்யக் தம் உடைய ரட்ஷிக்க பட வேண்டிய கார்யமே -அபிமானம் இதற்கே- ஸ்ரீனிவாசனுக்கும் ரட்ஷகம் ச்வாபமாக  உண்டு கேட்க்கனுமா
ஸ்ரீ   கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

இரண்டாம் திருவந்தாதி-21-50- ஸ்ரீ கிருஷ்ணா பிரேமை ஸ்வாமிகள் ..

August 16, 2011
தாம் உளரே தம் உள்ளம் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே –வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது –21
விசித்ரா தேக சம்பத் –தாம் உளரே —எல்லாம் அவன் அருள்–கொடுத்து அவனை அடைய –கண்ணால் பாகவதர்களை பார்த்து காதால் கதை கேட்டு நாவால் பாடி காலால் திவ்ய தேசம் சென்று –நரகம் செர்வதுஅரிது–நல்ல மனம் கொண்டு–உள்ளம் உளதே –பூ கொண்டு அர்ச்சிக்கலாம் -திரு அடியை சென்னியில் சேர்த்து திரு மண் ஸ்ரீ சூர்ணம் =வாமன் திரு உருவு  தாள் -சாத்திக் கொண்டாலே போதும்..-புள் கவ்வ -துளசி செடியில் விழுந்து இருக்க -யம தூதர் பயந்து சென்று – திரு அடி நெற்றியில் சாத்தி இருக்க கண்டு –பத்ம புராண கதை
அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் –கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்து அன்றே
தன் கோட்டு மா மலரால் தாழ்ந்து –22
ஆஸ்ரித்தவர்களுக்கு நினைத்தது நடக்கும் –அரியது எளியதாகும்–சர்வ சக்தன் அவன்–துப்புடையாரை அடைவர் எல்லாம் –புல்லாலே காகாசுரன்- குழந்தை விரலால் கோவர்த்தனம் தூக்கி காட்டினானே -கஜேந்த்ரனை காத்து -திருஅடியை கிட்டே கொண்டு வந்து காட்டி புஷ்பம் பெற்றானே
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் –தாழ்ந்த
விளம் கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம்
அளந்து அடி கீழ் கொண்ட வவன்–23
சத்ய லோகம் வரை எட்டியதாம் விளம் கனி எட்ட வில்லை தாழ்ந்து பழுத்த மரம்–உலகு அளந்தவன் உறி வெண்ணெய் எடுக்க உரல் தேடுகிறானாம் –எளியவர்க்கு எளியவன்–தாழ தாழ கிட்டே  வருவான்–
அவன் கண்டாய் நல நெஞ்சே !ஆர் அருளும் கேடும்
 அவன் கண்டாய்  ஐம் புலனாய் நின்றான் –அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கருவறை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று –24
எல்லாம் அவன் தான் –பஞ்ச பூதங்களும் –சர்வமும் வாசு தேவ மயம்–அருள் -ஸ்ரீ வைகுண்டமும் -கேடு -சம்சாரமும் அவன்
சென்றது இலங்கை மெல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறும் கால் –நின்றதுவும்
வேயோங்கு தன் சாரல் வேம்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25
இலங்கைக்கு ஒரு காலனாய் –பாகவத அபசாரம் -விபீஷணன் –சத கோடி ஸ்கந்தம் ஸ்ரீ ராமாயணம் -24000கிரந்த சங்கை மட்டும் நமக்கு தான் ..-வாய் ஓங்கி -நவாகம்- விரி உரை ஆற்றி -இருப்பார்கள் வந்தே ராமாயண மகார்ணவம் கடல் போல் –அஷ்ட திக் பாலர் லோகம்யானை மேல் ஸ்ரீ ராமாயணம் வைத்து ஊர்வலம்-தெரு கூத்து கம்பர் ஆழ்வார் -அனைவராலும் பாட பட்டு வேம்கட ராமன் ஸ்ரீனிவாச ராகவன்-வட்ச்தள லஷ்மி -அகலகில்லேன் இறையும் என்று -சீதை பிராட்டியே அலர் மேல் மங்கை —எவ்வளவு புகழ்ந்தாலும் மாளாத வைபவம்
வந்தித்து அவனை வழி நின்ற ஐம் பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் –உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரக்கு ஈந்த
படி யமரர் வாழும் பத்தி –26
திரு வேம்கட அனுபவம் தொடர்கிறது–தேவர்கள்/நித்ய சூரிகளும் வந்து வழி படுகிறார்கள்..தியானம் பண்ணி -தபசிகள் இருக்கும் இடம்–மனசை அடக்கி தியானம்-ஐம் பூதங்கள் நம் இடமே இருகிறதே –புலன் அடக்கம் -யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் -உடல் பிராணன் மனம் அடக்க படி படி -வந்தித்து வழி நின்ற-அடக்கி வழி பட வேண்டும்–அவனை வழி பட்டு அடக்குவது சுலபம் -பகவத் பக்தி மேல் இட்டால் இந்த்ரியங்கள் அடக்க முடியும் –விழாம் பழம் சரகு யமுனை நீர் காற்றை புசித்து அனைத்தையும் நிறுத்தி வெற்றி கண்டான் துருவன் ..–அடக்கி ஆகாரம் குறையும்-ஆர்வம் இதில் மிக மிக -அகத்து அடக்கி ஆர்வமாக -மாற்றத்தில் குறையும்–சம்சார நசை அரும் பாகவத ஆசை ஈடுபாடு பிறந்ததும்-அவன் உடைய ரசத்தால் மற்றவை விரசமாகும்..தேவ லோக சுகம் நசை அறுத்து தேவர்களும் நிற்கும் திருமலை..உந்தி முட்டி தள்ளி வழி படுகிறார்கள் தேவர்கள்–நித்யர் அடைந்து உள்ளே இருக்க -ஷ்ராப்தி நாதன் சீட்டுவாங்கி கொண்டு வந்தவர்கள்-வாழும் பதி–பரம பதம் திரு பாற் கடல் விட்டு வந்து சேவிக்க —
பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி வுரிஞ்சி வான் முகடு நோக்கி –கதி மிகுத்து அம்
கோல் தேடியோடும் கொழுந்தே போன்றதே
மால் தேடி யோடும் மனம் –27
பக்தி கொடி  போல்–அங்கோலம் போல் மரத்தை ஒட்டி கொண்டு-ஆதி சங்கரர்–அவனையே நாடி இருக்க வேண்டும்–விக்னம் இருந்து வளரும் பொழுது ஆச்சர்யம் -பிரகலாதன் போல் ..-மால் தேடி ஓடும் மனம்–ஹிரண்யன் தானே தோற்றான்—ஆறு கடல் நோக்கி ஓடுவது போல்–சதி பதி நோக்கி போவது போல்–காந்த ஊசி வடக்கே பார்த்து இருப்பது போல்–பதி -அமைந்து-திரு மலையில் உண்டான கொடி போல்–எருவும் மண்ணும் -பருத்து எழுந்து சந்தரன் வரை போகும் கொடி போல –நம் மனசும் திரு மலை நோக்கியே போக வேண்டும்
மனத்துள்ளான் வேம்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான் –எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் –28
கேசி குதிரை-பிடரி கேசம் இருப்பதால் கேசி-அசுரன்-மா வாய் பிளந்த மகன்-பிள்ளை வீரம் -பிடரி பிடித்து இழுத்து வாயை பிளந்தான் –கேசி காட்-கை அலம்பினானாம் –மனத்தில் உள்ளான் மனமே கோகுலம்-வேம்கடத்தான் –மா கடலான் திரு பாற் கடல் -சபல புத்தி பிள்ளைக்கு  108திவ்ய தேசம் அபிமான தேசம் சுத்தி கொண்டு போகிறான்..நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் –மகன் சொன்னாலும் தேவாதி தேவன்–
மகனாக கொண்டு எடுத்தாள் மாண் பாய கொங்கை
அகனார வுன்பன் என்று உண்டு –மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறாக வெய்து அழித்தாய் ! நீ–29
பூதனையும் தன் மகனாக கொண்டு எடுத்தாள்–தாய் உருவாக்கி வந்த பேய்–உண்பன் என்று உண்டு –தேறாத வண்ணம் திருத்தினாய்–அன்று பூதனை வந்தாளே–முதுகை தடவி திடுக்கிட்டு -இருந்தாளே யசோதை பிராட்டி–இலங்கை நீராக போக்கி இருந்தால் போல் இல்லாமல் அறியா பிள்ளை போல் இருந்தாய்
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திரு மாலே !
நீ யன்று உலகு இடந்தாய் என்பரால் நீ யன்று
காரோதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனி பிரான் !–30
உலகு அளந்தாய் அன்றே–பெரிய கார்யம் லுகுவாக பண்ணினாய் அன்று–உலகு இடந்து வராக அவதாரம்..–தானே சென்று கார்யம் பண்ணினான் –கடைந்தும் -தானே கூர்மமாய் இருந்தும் –தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்க –நீயே கடல் போல்–ஆழம் காண முடியாது ஆஸ்ரய கரம்/ குளிர்ச்சி /அழைக்கும் அலை ஆஹ்வான ஹஸ்தம் /சக்தி பொறுத்து பக்தி/அழகும் பயமும்/பிரசன்னா கம்பீரம் /
பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு –வராகத்
தணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி வுருவம் காண்பார் மகிழ்ந்து –31
அவதாரங்களில் ஈடு பாடு–செய்து நீல மணி போன்ற ஸ்ரீ வைகுண்ட நாதன் காணலாம்..-கைங்கர்யம் கொள்ள தான் இங்கு சேவை–அனைவருக்கும் அனுக்ரகம் செய்ய -கைங்கர்ய பாக்கியம் அனைவருக்கும் கிட்ட –வழி பாடு முக்கியம் –புலரி=காலை –கோவில் போக ஆசை நித்யம் வேண்டும்..குரா புஷ்ப வகை மணம் வீசும் –உத்தமர் ஸ்வாமிகள்-வராக பெருமாளை சேவிப்பவர் மணி உருவம் காண்பர்-அனுபவ ரீதி- சுவாமி புஷ் கரணி ஸ்ரீ வராக பெருமாளை சேவித்து ஆனந்த விமானம் அடியில் உள்ள திரு வேம்கடத்தான் மணி உருவம் காண்பர்
மகிழ்ந்தது சிந்தை திரு மாலே ! மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி –மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி யாடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து –32
பக்தி பண்ணினால் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம் -மேனியே திரு மேனி ஆகும் நம்பூதிரி -திரு மேனி -போத்தி- நடமாடும் -அர்ச்சகரே பகவான் அர்ச்சக முகே ன பேசுவான் ..அவனை தீண்டும் கையே பகவான் ஆகும்..–தேனில் விழுந்த ஈ தேனீ ஆவது போல்–கண்ணனை பார்த்து கண் கண்ணனாக ஆகும்–உடலே நம் உடையது இல்லை-கிருஷ்ண மயம்–சிந்தையில் மகிழ்ச்சி -அவனாகவே ஆகும் –வாக்கும் அவன் வயம் ..தொழிலும் ஆகம் =தேகமும் அவன் மயம் முக் காரணங்களும் அப்படி ஆனதும் அவனாகவே ஆவோம்..கோபிமார்கள் அனுபவம் போல் ..நீங்காத உறவு
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் –பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேம்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை –33
நிச்சயம்-துணிவு-சிந்தை துணிந்தது ஆள் செய்தே இருக்க –மூங்கில் புதர்கள் நிறைந்த மலை சாரல் திரு மலை எம்பெருமானுக்கே ஆள் செய்ய துணிந்தது -லஷ்மணன் பெருமாள் பின்னே போனது போல் ராமம் தசரதம் வித்தி -ஆத்மா பந்து நோக்கி சரீர பந்துவிட்டு-சாதனமும் சத்தியமும் அவனே -தாயே தந்தை  என்றும்…நோயே பட்டு ஒழிந்தேன் –உதறி தளி விட்டு நித்ய பந்து என்று துணிந்தது சிந்தை
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே –மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி–34
ஆசை படவே கோடி பாக்கியம் வேண்டும் -கிடைத்தால் -ஜன்ம சகஸ்ரம் ஆனால் தான் கிருஷ்ண பக்தி பண்ண ஆசை வரும்–எறும்பு –மிருகம்-மனிதன் -ஆஸ்திகன்- தேவதாந்த்ரம் விட்டுசலித்து சலித்து முத்து கொள்ளுவது போல் நம்மை கொள்கிறான் –பிரம பட்டம் கட்டி வைத்து நந்தகோப விரஜை கோபிமார்கள் என்ன பாக்கியம் என்று எண்ணினானே –பாக்கியம் உணர வேண்டும்-கருணை விசேஷம்–தனயோகம் கிருஷ்ணா தவ நாம கீர்த்தனம்-தூப புஷ்ப கைங்கர்யம்-அடிமை பட்டு அன்பு கொண்டு—இதுவும் என் செயல் இல்லை.. உன் உடைய கிருபை -இனி என்ன –வேற என்ன வேண்டும்…சர்வமும் அவன் தானே –ஹரி தாசர் சங்கம் கிட்டியபின் எனக்குஎன் புரந்தர தாசர் சந்தேகம் இல்லை கோவிந்தன் தயை கிட்டிய  பின்–
இனிது என்பர்காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் –இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீராகும் சிறிது –35
திரு அடி அடைவதே ஷேமம்-யோக ஷேமம் -வஹாம் யஹம் -அனன்யா சிந்தை யந்தோ –அவனே கதி என்று இருந்தால்–உலகம் மறந்து அவனையே பிடித்து -நாம தேவருக்கு எல்லாம் பண்ணினான் —ஷேமம் பக்தி தான் -அனுகூலம் பண்ண குடும்பம் ஷேமம் ஆக வைக்கிறார் சரீரம் ஷேமம் கொடுக்கிறார் பக்தனுக்கு –ஷேமமே கதி என்றால் காம்யார்த்த பக்தி–உண்டியே உடையே உகந்து இருக்காமல்–உண்ணும் சோறும் பருகும் நீரும் இனிது என்பர் எல்லாம்கண்ணன் என்பர் ஆழ்வார்–சரீரம் கோவில் வெளியில் உள்ளவை கடைபோல்–தாண்டி போனால் ஆனந்த மயன்-அந்தர்யாமி-அன்ன மயமே தாண்டாமல் இருந்தால்–இதையே தியானம் பண்ணி கொண்டு இருந்தால்–அன்னமும் பானமும் போரும் என்பர்–மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் -பாலை வானத்திலும் பக்தனுக்கு தண்ணீர் கொடுப்பான்–நின் பெருமைக்கு ஆசை பட்டால்- அதையே குண அனுபவம் பண்ணி கொண்டு-பசி தாகம் மறந்து-ஷேமம் ஆகும் அதுவே —
சிறியார் பெருமை சிறி தின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் –அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே ! இரு –36
சின்ன பெருமையை பெரியதாகவும்–பிறரின் சின்ன தோஷம் பெரியதாக சொல்லி கொண்டு..-மனிசர் பெரும பேசி கொண்டு பரமனான அவனை பேசாமல்-அறியாமை–மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த -மாயன் என்று–சர்வ லோகமும் அளந்து -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம் பண்ணின அவன் ஒருவனே பரன்

 

இரும் தன் கமலத் திரு மலரின் உள்ளே
திருந்து திசை முகனைத் தந்தாய் –பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு –37

விசாலமாககுளிர்ந்த நாபி கமலத்தில் உள்ள நான் முகனை நாராயணன் படைத்தான் –அவனை ஏத்தா தவர்கள் பிறந்துஇறந்து— உள்ள அவனை -சரண் அடைந்தால் மோஷம் இஷ்யாமி மாசுச –ஆச்ரயித்தவர்கள் மறு படி பிறக்க வேண்டாம்-

 

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து –நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஒத்து –38

பெரு நிதி இருக்கிறது என்று -இறுமாந்து-திரு நாம சங்கீர்த்தனமே-நிர்த்தனம் இல்லாதவனுக்கு தனம்–கபீர் தாஸ் -நமக்கு என்று மாதவன் என்று நினைந்து அவர் பேர் ஓதுவதே நிதி
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழை காள் –ஒத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –39
ஓதுவது வேதத்தை சுருக்கு -ஹரி நாராயண திரு நாமம் சொல்வதே -ஹரி திரு நாமம் சந்கீர்தனத்தால் வேதம் அத்யயனம் பண்ணும் பலன் கிட்டும்..-ஆதி மத்யம் இறுதி-அவனையே சொல்லும் –அனந்த வேத போயின -அபங்கமும் -நிற்ப்பது எல்லாம் நெடுமால் என்று ஓதாதார் படித்தது எல்லாம் கடை-ஸ்ரீ கிருஷ்ண சங்கீர்த்தனமே -ஒத்தின் சுருக்கம் அனைத்து சாஸ்திரம் -சுருக்கமே மாதவன் பேர் சொல்வது
சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –திரு பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள் –40
தெரிந்தும் அல்ப சுகத்தில் ஆசை கொண்டவர் –வ்யர்த்தம்–ஐயார் =கபம்–வாத பித்தம் -வரும் முன் -சொல்லி விட வேண்டும்-மூச்சு திணறல்-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொன்னேன்
பொருளால் அமர் உலகம் புக்கு அயல் ஆகாது
அருளால் ஆறாம் அருளும் அன்றே ?–அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே ! நினை –41
பொருளால் தேவ லோகம் புக முடியாது தர்மம் அறம் வேண்டுமே…புதைத்த பணம் பூமிக்குள்ளே இருக்கிறது..மா மறையோர் சுகர்-வாசு தேவன் பாதத்தையே நினைந்து -கொண்டு இருக்க வேண்டும்
நினைப்பான் திரு மாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுது ஆரத் தோள் –42
சுந்தர தோளினான் பார்க்க நினைக்க வேண்டும்–ஆர்வமே பக்தி ஆசை பட்டால் காட்டுவார்- மற்ற ஆசைகளைவிட்டு-இவை தான் விக்நம்-மண்ணில் பிறந்ததால் -இவர்களுக்கு பெரிசு-பேர் இன்பம்-பேயரே யாவர்க்கு எல்லாம் நானும் பேயனே–தனி தனி பேய்-உலகோடு ஒட்டாமல்-துரந்து–அவன் திரு அடியே கதி என்று
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே ? என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு –43
தோள்கள் விழும் படி யுத்தம் செய்த கோதண்ட பாணி–முடி அனைத்தும்–பத்து இல்லை- உதிர உதிர மீண்டும் பத்தாக தோன்றியதே—அதனால் அனைத்தும் –அவன் தலையை அவனே பார்க்கும் படி ஆனதாம்-ஹிருதயம் பிளந்து முடித்தார்–கோல வில்லி ராமன் தாள்களை தொழுவார்-கையே கைகள்–சர்வ லோக சரண்யாய ராகவாயா சரண்
சிறந்தார்க்கு எழு துணையாம் செம் கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே ! என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு –44
நாக்கு -வாக்கு-நாக்கு இருப்பவை களுக்கு எல்லாம் வாக்கு இல்லை..நாராயணா சொல்ல தானே–தாரக மந்த்ரம்..ஆத்ம ஸ்துதி பர நிந்தை பண்ணி கொண்டு தன்னை புகழ்ந்து பிறரை இகழ்ந்து-துணை ஆபதாரம் அபகத்தாராம்-திரு நாம பலன் -ராமோ விக்ரவான்-தர்மம் தாங்கும் -பொறுப்பு-அவன் திரு நாமம் சொல்வதே லஷ்யம்
உளது என்று இரும் ஆவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அறுக்கும் சாரார் –அளவரிய
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம்பயின்று –45
வேத உச்சியில் -அளவரிய-அனந்தன்-ஹரி ஓம் -வேம்கடத்தான் –அவனை ஆஸ்ரயிக்க வேண்டும்–லாபம் நஷ்டம்/வரவு செலவு இரட்டைகள்-இயற்க்கை–வாழ்க்கை மாறலாம் மனிதன் மாற கூடாது–குசேலர்-பிரபு-ஆனாலும் மாற வில்லை-அருளையே நினைந்து கொண்டு இருந்தார்..ஸ்ரிய பதி சகா என்ற நினைவாலே சுகம் ஏழ்மையிலும்..-வைரம் வைரம் தானே குப்பையிலோ சொர்ண பொட்டியிலோ இருந்தாலும்-பாகவத பிரபாவம் இல்லை என்று தளர்தல் இல்லை–
பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றது வேம்கடமே பன்னாள் –பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வன் தடக்கை மால்–46
திவ்ய தேசம் நினைவே கொண்டு–வாழ்ந்து–பயின்றது -நித்ய வாசம் பழகி போக வேண்டும்- சுவாதீனமாக கொண்டு–பன்னாள் -அழகிய சோலைகள் நிறைந்த திரு நீர் மலையும்–ஸ்ரீ ரெங்கமும் திரு வேம்கடமும்..நித்ய சந்நிதானம் இங்கு எல்லாம்
மாலை யரி வுருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி –ஞாலம்
அளந்தது இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து –47
அவனை நினைத்து மாளாது-லீலைகள் பல -அளந்து உண்டு உமிழ்ந்து -சேது பந்தம்-எடுத்து வராகன்-ஜீயர் ஆயர் தேவு-நாவல் பழம் வெண்ணெய் கொடு-போன்ற அனுபவம்-பக்தியில் நியமம் இல்லை- -உளம் கிடந்த வாற்றால் -பக்தியில் ஸ்வதந்த்ரம்–ரசிக்கும் படி ரசிக்க வேண்டும் தியானம் முக்கியம்
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே ! –மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை –48
வேதத்தாலே சொல்ல படுபவன் -வேத பிரதி பாத்தின்–வாதத்தை தானே வெளி இட்டான்-அர்த்தம் உண்மையானது அவன் ஒருவனுக்கு தான் தெரியும்–மற்றை நான்கும் உணர்ந்தாய்- ஓதினான் வசிஷ்டர் சாந்தீபன் இடம் ஓதினான் –சீதா ராமன் ருக்மிணி கிருஷ்ணன்-திரு மணம் -பரி மள ரெங்கன் சர்வ கந்தன்-மணந்தாய் பிராட்டி -திரு மால் இரும் சோலை சுற்றி-
மலை ஏழும் மா நிலங்களும் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் –முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என் நெஞ்சே ! அழை –49
எழு உலகமும் அதிர கடலும் பொங்க -நஞ்சை உண்டான் பூதனை- நவின்று -மழலை பேசி கொண்டே உயரை வாங்கினான் –அஞ்சாது பஜனை –செய்து–
அழைப்பன் திரு மாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி –இழைப்பு அரிய
ஆயவனே ! யாதவனே ! என்று அவனை யார் முகப்பும்
மாயவனே ! என்று மதித்து –50
திரு மால்- மோகனன் -பெரியவன்-அழைப்பன்–நித்யர் ரிஷிகள்–ஆயர் பாடிகள் -ஜகன் மோகன சுந்தரா ஆயா மாயா சொன்னால் உகப்பு அவனுக்கு –பெருமாள் =ராமன்..கண்ணன்=ஆயன்-ஏக வசனம் கண்ணா பிரான் கூட சொல்ல மாட்டார்கள்– முகம் மலரும் பிழைப்பு =குற்றம் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே ஓங்கி உலகு அளந்தான் நாராயணா -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா கோபால முகம் மலரும்..-பிழைப்பு இல் –குற்றம் இன்றி-கண்ணா -ஆங்கு அவர்கள்-கோபிமார்கள் ஆயவன் கோபாலா மாயவனே என்று –உகந்து -கோல கலா கோல கலா வாராய் செல்ல பிள்ளாய் கூப்பிட்டால் வந்து அமருவான் நம் பெருமாள் தக்கான் அக்கார கனி இவற்றுக்கு -ஆகாது ரிஷிகள்வைத்த ரிஷி கேசன் போன்றவை -கோயம் சப்தம்-பஜனை–குதித்து ஓடி வந்து மடியில் அமருகிறான்-
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..

இரண்டாம் திருவந்தாதி-1-20- ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

August 15, 2011
திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளி செய்த தனியன்

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளியாய் அளித்தானை –நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்-

ஐக ரசம்-ஹிருதய ஒற்றுமை- ஏக ரசம்-ஏக கண்டர்கள்- இரண்டு தீபம் மூன்றாவது தரிசனம் -அடுக்கு தீபாரனை -ஞான தீபம்–அத்யாத்மிக தீபம்-கார் இருள் அஞ்ஞானம்  அணையா விளக்கு இவை -தொடர்ச்சி அமைப்பை -அழகை அனுபவிக்க வேண்டும்-இருக்கிறான் முதலில் சொல்ல -வையம் தகளியா -உபநிஷத் போல நிரூபித்தது இந்த பாசுரம்- உலகம் பார்த்து காரணம் கர்த்தா இருக்க வேண்டும் பார்த்தோம்..அதற்க்கு ஞான தீபம் உபநிஷத் வியாசர் சூத்திரம் ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம்–அவரை பார்க்க வேண்டுமே -நம்மை படைத்தவர் என்பதால்-பக்தியால் பார்க்கலாம் இருக்கிறார் தெரிந்து கொள்வது ஞானம் அதை அடி படையாக கொண்ட பக்தி கொண்டு பார்க்க வேண்டும்.காம்யார்த்த பக்தி அஞ்ஞானர் பக்தி-லீலா குண சே ஷ்டிதங்கள் கேட்டு கேட்டு பிரேம பக்தி..
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா –நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் -1
அன்பே தகளி- உலகம் விட பெரியது —அவா மூன்று தத்வம் விட பெரியது என்கிறாரே ஆழ்வார் –ஞான சுடர் ஆர்வம் -நெய்–பார்க்க துடிக்கும் இன்புருகு சிந்தை -திரி–சம்பந்தம் -தாரக போஷகன் நித்ய போக்யன்-என்ற உணர்வு வேண்டும்..மாடு மேல் கண் வைக்கும் மாட்டு காரன் போல் அவன் நம்மை கண் காணித்து கொண்டு இருக்கிறான்—நம் பெருமாள் என் சுவாமி-நம் ஊர் திரு அரங்கம் என்று போனாரே -பரகாலனின் கனவில் வந்ததும் —அழுதாலும் நம் ஊர் என்றாரே -நம்மையும் பிரிக்காமல்-என் ஊர் என்று சொல்ல வில்லை அவன் சொத்தும் நமக்கு ஏக போகம் என்று தோற்றும் படி —காதலும் கடலாக பெருக நீ செய்ததற்கு கைம்மாறு இல்லை--அது போல் நாம் வேற அவன் வேற என்று பிரிக்காமல் தவம் ஆசி அஹம்ப்ரஹ்மாசி–நித்ய சம்பந்தம் காட்டும் என் சுவாமி -என் பர்தா சகி காதலனை பார்க்கும் ஆவல் போல இருக்க வேண்டும்-மம்தா பிரேமா சங்கத்தா அபிமானம் வேண்டும்..அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் அசமத் ஸ்வாமின்-நமக்கே சுவாமி-உலகம் தெரிந்து கொள்ளா விடிலும் ஸ்வாமி நாம் தெரிந்து கொண்டு இருப்பதால் அபிமானம் அதிகம் அநந்ய மமதை -வேண்டும்-திட நிஷ்ட்டை பிரேமம்= பக்தி –அன்பு பழுத்து ஆர்வம் -துடிப்பு -கை கூடா விடில் உருக்கம் அழுகை –அன்பு ஆர்வம் உருக்கம் -பக்தி திவ்யம் ததாமி சஷுஸ் -ப்ரீதி பூர்வகம் துஷ்யந்தே ராமயந்தே –ஞான கண் தருவான் –ஷேமுசி ஞானம் பக்தி ரூபா -நான் =அடியேன்–அவர் கொடுத்த ஞானத்தால் வந்த அன்பு–லாபோ மத் தர்சனம் அபி-அதற்க்கு பக்தி வேண்டுமே -நாம கீர்தனத்தால் பிரேமை வரும்..
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் –வானத்
தணியமரர் ஆக்கு விக்கும் அஹ்தன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு –2
சர்வ சரண்யன்-அவன் நம்மை விட மாட்டான் என்கிற ஞானம் போதும் நாம சங்கீர்த்தனம் பண்ண -உணர்ந்து  தெரிந்து சொல்பவனை கை விட மாட்டான் —தெரியாமல் சொல்லிய திரு நாமமே காக்கும்–சர்வோத்தமன் தெரிந்து மதிம பஜாமகே -சாஷாத்காரம் -திவ்ய மங்கள விக்ரகம் காட்டுவான்–தானம் =ஸ்தானம்-திரு நாம சங்கீர்த்தனம் பெரிய ஸ்தானம் –பாகவதர் என்பதே பெரிய -பாகவதர் இருக்கிறார் மந்த்ரி இல்லை-பதவி செற்றது-பெரிய பதவி இது தான்..-ஸ்தானம் ஸ்ரீ வெங்கடேசன் தஞ்சாவூர் சமஸ்தானம் கதை-ஸ்தலச்தார் உத்தம நம்பிகள்-பெருமாள் புறப்பாடும் இவர்கள் வந்ததும் தான் –அருமை தெரிந்து காத்து வருகிறார்கள்-கைங்கர்யம் பண்ண கொடுத்த ஸ்தானம்-எற்றைக்கும் ஏழ்  ஏழ் பிறவிக்கும் இது வேண்டும்..–நித்யர் ஒப்பாக வைத்து விடுவான் திரு நாமம் சொல்பவனுக்கு வைகுண்ட பதி ஸ்வாபம் பரமம் சாம்யம் உபயத்தி –அனைவரும் பரம் ஜோதி-ரூபம் அங்கு..
பரிசு நறுமலரால் பாற் கடலான் பாதம்
புரிவார் புகப் பெறுவார் போலாம் –புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலம் கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் –3
பரிசு=பக்தி–நறு மலர்-பாகவதன் கையில் கிடைத்த வாசனை– பாதம் புரிவார் புக பெறுவார் –தொல் அமரர்–சப்த கோசரன்-சாஸ்த்ரத்தில் கொண்டு பார்க்க முடியும் பிரம்மா  ஆதி தேவனுக்கு–ஆனால் திரு நாமம் சொல்பவர் தோற்றத்து கட்டுவான் –அசுரர் பிள்ளை சொன்னதுக்கு தரிசனம் கொடுத்தானே தூணில்–எங்கும் உளன் கண்ணன் என்ற மகனால் அனைவரும் தரிசனம் பெற்றார்கள்
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழு மணி வயிரம் சேர்த்து –நிகர் இல்லாப்
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி –4
ஹிருதயமே கோயில்-நகர் போல் இழைத்து –நவ ரத்னம் -நவ பக்தி–ஹிருதய பீடம் சரவணம் – கீர்த்தனம் –ஆத்ம நிவேதனம் –கண்ணீரே பாத்யம்–பத்ம ரமணாக -கீர்த்தனா வளி–பனி மலராள் அங்கம் -வலம் கொண்டான் அடி–நித்திலம் =பவளம் வயிரம் சேர்த்து மானச பூஜையில்- மாணிக்கம் கட்டு வயிரம் இடை கட்டி ஆணி பொன்னால் செய்த  வண்ண சிறு தொட்டில் போல்–பாசுர தொட்டில் பெரியாழ்வார் திரு மொழி -சொல் எல்லாம் ரத்னம் –சகஸ்ர தல கமலம் சாதிக்கலாமே மானச பூஜையில்–பக்தி இப் படி இருக்க வேணும்
அடி மூன்றில் இவ் வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –படி நின்ற
நீரோத மேனி நெடுமா!  நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து ?–5
உலகம் போல் பக்தன் தலை-மகா பலி தலை மேல் வைத்ததுக்கும் உலகம் வைத்ததுக்கும் சாம்யம்–மூன்றாவது அடி எங்கு வைத்தாய்-
அறிந்து ஐந்தை உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே –அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல் –6
தபசு வேணும்-காகிய தபச்துருவன் –100 கோடி தாரக மந்த்ரம் பாடி சுவாமி தியாக ராஜர் வேங்கடாத்ரி சுவாமி /ராமதாசர் -வாசு தேவ பீமம் போன்றோர்-செவ்வே செம்மையான திட பக்தி–பிரகலாதன் போன்றோர் பக்தி-செவ்வி–செறிந்த ஆழ்ந்த பக்தி–கொண்டே அவன் திரு அடி கிட்டும்-சொல்பம் பக்தர் -அஜாமிளன்-பலன் ஓன்று தான்–பார பட்ஷம் இல்லை–பிரகலாதன் போன்ற பக்திக்கு ஆசை பட வேண்டும்
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தை யராய் அஞ்ச —தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே ! உகந்து –7
திரு விக்கிரம அனுபவம்-கழல் எடுத்த அழகு–கழல்- நூபுரதுடன் கலீர் என்று எடுக்க -அசுரர் வாய் மடுத்து கண் சுழன்று -அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -நமுசி போல்வார்-மாற்றார் –ஆழி நெஞ்சே -ஆழ்ந்த நெஞ்சே தியானம் பண்ணு
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி –உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று –8
கிருஷ்ண அனுபவம்–வஞ்சனை செய்ய தாய் உருவாகி வந்த பேய்—கொங்கை அஹம் குளிர உண்ணு-திணிக்க -வஞ்சனை இருப்பார்க்கு இவனும் வஞ்சனை-ஆவி உடன் உறிஞ்சினான் அலை பண்பு -வஞ்சனை-
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இன் நீர்மைக்கு –அன்று
வரன் முறையால் நா அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து ?–9
யசோதை பிராட்டி இது கண்டும் அஞ்சாமல்–பிரேமை கனத்து–உலகம் அளந்த பெருமை இதற்க்கு சாம்யம் இல்லை-ஆயன் உலகு அளந்த பெருமாள் இரண்டையுமே அனுபவிகிறார்
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே –ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை –10
பஞ்ச அனைய மெல் அடியால்–முன்பு திரு அடி கொண்டு யாசகம் பண்ணும் வியாஜ்யத்தால் காத்தாய் காமனை கண்ணனை அலற்றி –உள்ளி தியானம்-அடியேன் பட்ட கடை கா -காப்பாற்று -இழுக்குகள் நீக்கி –
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற இன்பத்தர் ஆவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே ! நின்னடியை
யாரோத வல்லார் ஆவர் ?–11

வாசல் கடையில் -படியாய் கிடந்தது நின் பவள வாய் காண்பேனே -நேச நிலை கதவு-கோவில் வாசலில் நேசம் வேண்டும்-நாய் கூட நம் வாசலில் போ என்றாலும் நேசமாய் கிடக்குமே –அமரர்கள் கிடக்கிறார்கள்–கடைசியில் நின்று–அடியார்க்கு அடியார்-அடியானாக நின்று–எட்டி பார்ப்பான்-முதல் கடாஷம் நம் மேல்–நித்யர் சூரிகள் இடை-நடுவில் சேர்ப்பான்–புடை நின்ற நீர் சமுத்ரம் நான்கு பக்கம் சூழ்ந்து –உன் திரு அடி பெருமை சொல்லி முடிக்க முடியாது
அவை இவர் என்று இல்லை அரவு அனையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தார் எண்ணில் –பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண் நுதலோன் அன்றே ?
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து –12
அக்ரூரர் போல் விழுந்து புரள வேண்டும்–வேட்க்க படாமல்- முப்பத்து முக் கோடி தேவரும் சேவிக்க ஆதித்யன் -செழும் கதிரோன்..-பிரம தேவன் ஒண் மலரோன் கண் நுதலோன் சிவன் –நாளும் தொடர்ந்து நித்யம்-பின் சென்று சேவித்து போக -தேவ தேவன்-அனைவரும்-சர்வ சேவியன்–
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்குஅஞ்சி
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு –அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே ? வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு –13
சேவித்து பரம பதம் கிட்டும்-விரோதி போக்கி சேர்த்து கொள்வான்–தொடர் எடுத்த -சங்கிலி கட்டி இருந்தாலும்-கயம் =பொய்கை புக்கு -படர் =இதழ் -பிராரப்தம் இருக்கு அனுபவித்து வா என்றுசொல்லாமல் அதையும் கழித்து பரம பதம் கொடுத்தான் -முதலை மட்டும் போக்க வில்லை –
பண்டிப் பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே –ஏன் திசையும்
பேர்த்த கரம் நான்குடையான் பேர் ஓதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து –14
பண்டி =பெரும் வயிறே -திரு ஆராதனம் செய்து கொண்டு–இதையே பெரிய திரு பதியாக ஆக்கி கொண்டு –அந்தர்யாமி ஆயிடுத்தா சாப்பிட்டாச்சா -வைதிக வார்த்தை–திரு அரங்கத்துக்கு ஒரு பிடி -சொல்லி கொண்டாவது போட்டு கொள்ளாமல் உடம்புக்கு நல்லது -பழி பாவம் -இங்கு வாழ்வார் –அங்கு வாழ எண்ணம் இன்றி –வயிறை i உபாசனம் பண்ணி கொண்டு–அவனை ச்தியாமல் கூறாதே -அஷ்ட புஜன் -நான்கு புஜம் கொண்டவன்–தீர்த்தகரர்–பரம பவித்ரம் உடையவர் ஆவோம் –அவனையே பாடி சேவித்து -பாகவதர்கள் திரு அடி தீர்த்தமே  கங்கை போல் பவித்ரம் —நா கொண்டு மானிடம் பாடேன் –துணிவு உடைய நாபுலவன் திரு மழிசை–ஹஸ்த கிரி மேல் ஸ்ரீ இருக்கிறதே வைத்த மா நிதி —
திரிந்தது வெம் சமத்து தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் –புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே ! நாகத்தின்
தன்ண் பள்ளி கொள்வான் தனக்கு –15
சேஷ சயனம்-இருக்காமல்-வெம் சமத்து தேர் கடவி திரிந்ததும்–பிராட்டி கூட கூசி பிடிக்கும் மெல் அடியால்-அன்று மானை பிடிக்க போய் பிராட்டி பிரிந்ததும்–மனிசர்க்காய் படாததன பட்டு -கண் பள்ளி -தரையிலே பள்ளி கொண்டு–ரிஷ்ய முக மலையில்–
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை –வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்ப்பார் மற்று ?-16
எம்பெருமானுக்கு அடிமை சொரூப ஞானம் இன்றி–சகா அஹம்-ஞானி ஆத்மா தான் நான் -சோஹம்-தா சேர்த்து தாசோஹம்-நித்ய தாஸ்யன் ஆத்மதாச்யம் ஆட் பட்டவன் அவன் ஸ்வாமி என்கிற ஞானம் வேண்டும் –ஞானம் இன்றி த்யானம் பண்ண பண்ண ஞானம் வந்து விடும்–மழை பொழிய வேண்டியது அவன் பொறுப்பு விதைப்பது நம் பொறுப்பு வளர்த்து கொடுப்பது அவன் பொறுப்பு -லோக யாத்ரை இருவரும் சேர்த்து நடத்தி போக -பக்தி செய்ய வேண்டியது நம் பொறுப்பு -ஞானம் கொடுப்பது அவன் பொறுப்பு -ஏரி வெட்ட வேண்டுவது நம் பொறுப்பு–மழை பொழிய வைப்பது அவன் பொறுப்பு ..–பக்தி இருந்தால் ஞானம் கொடுப்பான்-வைராக்யமும்தானே தேடிவரும்
மற்று யார் இயலாவார்?
வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை –ஒற்றைப்
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு –17
காக்கும் சக்தி அவனுக்கு தானே –இந்த்ரன் பிரமன் சிவன் இவர்கள் குறைகளையும் தீர்த்து கொடுக்கும் அவன் ஒருவன் தானே –
கொண்டது உலகம் குறள் உருவாய் கோள் அரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர்வைத்து –உண்டதுவும்
தான் கடந்த வே ழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான்கடந்தான் செய்தவழக்கு –18
மண்ணை கேட்டு உலகம் அனைத்தையும் கொண்டான் -குறள் உருவாய் -பரசு ராமன் கோடரி-இவனோ நகத்தை வைத்து-கீற கூட வேண்டாம் வைத்தால் போதும்- தான் அளந்த உலகத்தை உண்டான் அளந்து சாப்பிட்டான் இரண்டு அடிக்கு அகப் பட்டதை—நம் கண்ணன் அப்படி தான் செய்வான் கோவர்த்தனம் பிடித்ததும் பெரிசு இல்லை கோபிமார்களுக்கு
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே !
பார் விளங்கச் செய்தாய் பழி –19
தூங்காமல் சகடம் உதைத்தாய் கால்நோவாதா யசோதை கேட்க்க -விளாம் பழம் எறிந்தாயே கை வலிக்க வில்லையா –
பழி பாவம் கை அகற்றி பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வாராம் மாதோ –வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம் –20
திரு நாம சங்கீர்த்தனம் பண்ணினால் பழி பாவம் தானே நீங்கும்–பாகவதர்களுக்கு பிராய சித்தம் வேற இல்லை சித்தம் சுத்தி ஆகும் -வாசனையால் வந்த தோஷம் போகும் -திரு நாம மகிமை–பாவம் பண்ணாத சுத்த சித்தம் வரும்–இதே ஜன்மாவில்-போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கன் -அவனுடைய கருணை-சத் சங்கம்-ஆச்சர்ய கடாஷம்- திரு மந்த்ரம் -படி படியாக கிட்டும்
————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்- ஸ்ரீ பூதத் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

வேத வேதாந்த  வேதார்த்த ஸங்க்ரஹம் –திரு வேங்கடம் உடையான் இடம் ஆசை கொண்டு ஸ்வாமி  ஸ்ரீ ராமானுஜர் அருளியது –
முழங்கால் முறித்தான் -காலை வைத்து நடக்காமல்-முதலில்-பெரிய திரு மலை நம்பி-ஸ்ரீ மத்  ராமாயணம் அருளி–
மாதவனே கண் உற நிற்கிலும் –வந்து தோன்றிய அப் பொழுதே நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆக்கினரே –
தீர்த்த கைங்கர்யம் ஆகாச கங்கையில் -நித்யம் கீழே வந்து ஸ்ரீ ராமாயணம் கொடுத்து அருளி-
படி கொண்ட கீர்த்தி  ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்  குடி கொண்ட கோவில் —
அசேஷ ..சித் அசித் வஸ்து சேஷினே  சேஷி -சேஷ சாயினி-.நிர்மல அனந்த கல்யாண நிதி –
திரு வேங்கடம் உடையானே அரங்கன்–பட்டர் கோஷ்ட்டியில்- திரு வேங்கடம்–கருவிலே திரு விலாதீர்–
திரு மங்கை ஆழ்வார்-வெருவாதாள் வாய் விரவி  வேங்கடமே வேங்கடமே என்கின்றாள் -தாய் பாசுரம்-பட்டர்-
பெண் சொன்னதை சரியாக தாயார் -கேட்க வில்லை அரங்கமே அரங்கமே என்று கேட்டதை தப்பாக சொன்னாள் என்றாராம்–
இருவரும் ஒன்றே அறியும் -என்றாராம்-இதே போல் — 9 பாசுரங்கள்- ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமி  அருளி —

சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து–25-

வந்தித்தவனை வழி நின்ற வைம் பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி–26-

பதி அமைத்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே  போன்றதே
மால் தேடி ஓடும் மனம்–27–பதி- திருப் பதி என்று கொண்டு-

கீழ் நின்ற படியை அனுசந்தித்தார் நன்றாக இருந்து நாடி

மனத்துள்ளான் வேம்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள்
மாவாய் பிளந்த மகன்–28

அன்னையாய் அத்தனாய்-அவனே நாதன்-வெங்கடேசன் விநா நாதன் இல்லை வேங்கடமே நாதன்- அநாதை யாரும் இல்லை–
அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம-அகதிம் -சரணாகதிம் க்ருபயா கேவலம் ஆத்மா சாத் குரு- வழி அற்று கதறுதல் -அழகர்-
ஸ்ரீ ராமானுஜர் பின் பிறந்தார் சொல்ல கூடாது -கதிக்கு பதறி—வெம் கானமும் கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன்–
விநா வேங்கடேசம்  நநாதோ நநாதோ-சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி – –கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை- –
விட்டு விடாத தாய் தந்தை-ஷேம கிருஷி பலம்–பத்தி உழவன்–ஏத்தும் பொழுது உண்டே–பட்டரை வைய சால்வை போத்தி–
இதற்க்கு எனக்கு பொழுது இல்லை-குணம் சொல்லவே பொழுது இல்லை-சு தோஷ சொல்ல முடியவில்லையே-அதை பண்ணினவனுக்கு சம்பாவனை– 

ஹரே வெங்கடேச பிரசீத பிரசீத -எந்தன் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -இட வகை கொண்டு –
சிந்தனைக்கு இனியாய் வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என்  சிந்தைனைக்கு இனியாய்-
பிரியம் வெங்கடேச பிரயச்ச பிரயச்ச –

பர வியூக விபவ அர்ச்சை-மனத்து உள்ளான்-அந்தர்யாமி- மற்றவை சாதனம்-இது தான் சாத்தியம்-தபஸ் இருந்து இதை பெற்றானாம் –
நெருப்புக்குள் காஞ்சி– கடலில்-ஷ்ராபதி   நாதன்– மலையில் திருவேம்கடத்தான்- ஆகாசத்தில் பரம பத நாதன்-தேவாதி தேவன்-
பரன்-புரோ ஹித -நல்லதையே -நினைக்கிறவன் –இருந்த திரு கோலம்-விண் மீது இருப்பாய் -பகல் ஓலக்கம் இருந்து -பாட்டு கேட்க்கும் இடம் —
ராஜ நீதி-தர்பார்- காரியம் மந்திரித்து -ஆலோசனை–ஏகாந்தம்-திரு பார் கடல் நாதன்-கூப்பீடு கேட்க்கும் இடம்–கருப்பு உடுத்து சோதித்து —
அந்தர்யாமி-கடவுள்-கடந்து உள்ளே இருகிறவன்- -உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிதி வெள்கி போய் –விலவர சிரித்திட்டேனே–
நினைவின் ஊற்று வாய் இருக்கிறானே–நினைவும் அவன் ஆதீனம்-இருந்தும் இல்லை சொல்லவும் அனுமதிக்கிறான்–
வேட்டை ஆடி-விபவம்-சிசுபாலன் ராவணன் மீனோடு -கல்கியும் ஆனான்–ஆராமமங்களில் விளை யாடும் –
அர்ச்சை–சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் –பாரோர் போற்றும் பதரி  வட மதுரை- விண் மீது இருப்பாய் –மலர் மேல் நிற்ப்பாய் –
தேவாதி தேவன்-மா கடலான் -மாவாய் பிளந்த மகன் -வேங்கடத்து உள்ளான்–மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான்-மனத்து உள்ளான் —
வாசுதேவ சங்கர்ஷன பிரத்யும்ன அனிருத்னன்–அம்பச்ய பாரே-புவனச்ய மத்யே -நாகசா ச்ப்ருஷ்டே –
ஸ்ரீ ரெங்கம் -பஷ பாதி–நினைப்பரிய–விசேஷணம்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று சயனித்தானே–
பரம சுலபன்–கிடந்த தோர் கிடை அழகு–மாவாய் பிளந்த -நடந்த -நின்றது -வேங்கடம்- இருந்தது -தேவாதி தேவன்-
கிடந்தது அரங்கம் மா கடல் /நின்றான் இருந்தான்  கிடந்தான் நடந்தான்-நீர்மலை– இப் படி எல்லா படியிலும் இருந்து –
தபஸ் பண்ணி-மனத்துள்ளான்–புளிங்குடி கிடந்தது-காய்ச்சின வேந்தன் – வர குண மங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று -கள்ள பிரான்- –
தெளிந்த என் சிந்தை–நின்றது எந்தை  ஊரகத்து இருந்தது  எந்தை பாடகத்து  அன்று வெக்கனை கிடந்தது அன்று நான் பிறந்திலேன் –
ஞான ஜன்மம் – பிறந்த பின் மறந்திலேன்  நின்றதும்  இருந்ததும் கிடந்ததும் -என் நெஞ்சுள்ளே —
பெரிய பெருமாள் கிடக்க நம் பெருமாள் நிற்க உபய நாச்சியார்கள் இருக்க பெரிய திருவடியும் இருந்து சேவை–

நள்ளி- அலவன்-பள்ளி கமலத்துஇடை பட்ட பகுவாய்  -திரு நறையூர்-கண் சிவந்து- பூ துகள் சேர்ந்து- கண் சோர்ந்து -நள்ளி ஊடும் நறையூரே–
நினைப்பரிய நீள் அரங்கம்-நாச்சியார் பெருமையால்- -இனிது இறைத்த -பனி அரும்பு -உடல் எனக்கு உருகுமாலோ-அரவின் அணை மிசை மேய மாயனார்–
குட திசை முடியை வைத்து –சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி–கரு மணியை கோமளத்தை–மாயோனை மண தூணை பற்றி நின்று–
கேசி அசுரனை முடித்தான்-பூதனை தொடக்கம் கேசி வரை- சத்ரு சேஷம் வைக்காதவன் கண்ணன்–
சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–வேதாது சாஸ்திரம் பரம் நாஸ்தி -சாசனம் விதிக்கும்-ந தெய்வம் கேசவாதி பரம்–
திரு குருங்குடி-நம் பாடுவான்-கைசிக ஏகாதசி மகாத்மயம்-எக் காலத்திலும் எந்தையாய் திரு வேங்கடம் உடையவன்-கற்பூர படி ஏற்றம் சேவை திரு அரங்கத்தில்-
அரையரும்  சேர்ந்து  ஆட-கைசிக  உத்சவம்-பச்சை கற்பூரம் வாரி வீசுவார்கள்–விஜயரேங்கர் சொக்க நாதர்–சேவிக்க வந்து கிடைக்காமல்
ஒரு வருஷம் அங்கேயே இருந்து சேவித்தாராம்யுகாதி பண்டிகை ஸ்ரீ ரெங்கத்தில் நடக்கும் சிறப்பாக–

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல்  அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல் கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேம்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை–33

துணிந்தது சிந்தை–துணிந்தது வாய்–அங்கம் பணிந்தன -மூன்றினாலும் –துழாய் அலங்கல் அணிந்தவன்–மனசு போக துணிய–
சொரூப நிரூபகம் -துழாய் மாலை- வன மாலை-ஸ்ரீ யபதி–பூ மகளார் தனி கேள்வன் -ஸ்ரீ நிவாசன்-ரிக் வேதம் ஸ்ரிம் பீடச்த கச்ச –
அவளுக்கு பீடம் என்பதே இவன் பெயர்–கோவிந்தா சொல்லி கொண்டே மலை ஏற ஸ்வாமி பணித்தார்–
திரு வடி பட்ட துழாயை முகர்வதே மூக்கு படைத்த பயன்-குலசேகரர் முகுந்த மாலை—நாற்ற துழாய் முடி நாராயணன்–ஆண்டாள்-
அம் தண்  துழாய் கமழ்தல்- குட்ட நாட்டு திரு புலியூர் மாய பிரான்–பராங்குச நாயகி நிலை தோழி தாயார் இடம் சொல்ல-
அவன் அங்கத்தில் துழாய் அலங்கல்–வேய்-மூங்கில் சேர்ந்த தாள் வரை -பள்ள தாக்கு- விறல் வேங்கடவன்-மிடுக்கு பலம் உள்ளவன்–
அழகால் -பிறந்த பலம்–சேவை பண்ணிய பின் கட்டி போடுகிறானே-ஏ வகாரம்–அவனை தவிர எங்கும் இல்லை–
திறங்கள்- குணங்கள்–சொரூப நிரூபக தர்மம்–லஷணம் சொல்லும் குணங்கள்–அடிப்படை அடையாளங்கள் –நிரூபித சொரூப விசேஷணங்கள்–

-ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் முதல் வகை ப க வ ஆன்-அடிப்படை-இதம் துவம் இத்தம் -இது இனியது மெருகு ஊட்டுவது
சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம –நிருபிக்க பட்ட பொருளின் விசேஷணங்கள்- வாத்சல்யம் சௌசீல்யம் சௌலப்யம் ஸ்வாமித்வம் —
வாய் திறங்கள் சொல்லும் வகை- திறங்கள் பன்மை- அலர்மேல் மங்கை உறை மார்பன்-அடிப்படை–
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய்  என்னை ஆள்வானே போல்வன –தனி மா தெய்வம்-
ஏ வகாரம் மூன்றிலும் சேர்த்து கொண்டு வாயும் மனமும் அங்கமும் அவனை தவிர வேறு ஒன்றையும் பேசாமல் நினைக்காமல் வணங்காமல்-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-நாராயணனே நமக்கே பறை தருவான்- மாம் ஏவ -மற்றை எல்லாம் ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல–
ஒப்பார் மிக்கார் இல்லாதவன் அவன் ஒருவனே –அவன் இடம் அவனையே கேட்டு பேரனும்- கதி திரைய மூலத்வம் அவன்–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர் தல தனரு குஞ்சாரார் அளவரிய
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று—45

அளவரிய வேதத்தான் அவன்–ஆனந்தம்-அளக்க-ஆசிஷ்டன்-யவனம்-அசன சீலத்வம்-மனுஷ்ய ஆனந்தம்–ஆசீர்வதனபாத்திர பூதத்வம்  –
அளியல் நம் பையல் என்ன அம்மாவோ கொடியவாறே —தேவ இந்திர பிருகஸ்பதி நான்முகன்-சொல்லி -சொல்ல முடியாமல் இறங்க-
அளப்பரிய வேதத்தான்-அனந்தன்-கால தேச வஸ்து பரிச்சேத ரகிதன்–மனன் உணர் அளவிலான் பொறி உணர் அவை இலன்–
வேதத்தால்-என்றும் -அளவரிய வேதத்தால் என்றும் -அவனை சொல்லி வேதத்துக்கு பெருமை-சாஸ்திர யோநித்வாத்–
அனுமானமோ பிரத்யட்ஷ்த்தாலோ சொல்ல முடியாதவன்–வேம்கடத்தான்-இறங்கி நமக்கு சேவை-எளிமை–
யாதுமோர் நிலைமை என அறிவரிய அறிவு எளிய எம்பெருமான்–நம்மால்
தோஷம்-வ்யாப்யகத தோஷம் கிட்டாது–விண்ணோர் முடி தோயும் பாதத்தான்-என்பதால்–

உளது என்று இறுமாந்து போகாமல்-உண்டு இல்லை என்று தளர்தல் அதன் அருகிலும் சாரார் –இறுமாப்பு தான் குற்றம்-
கவலையும் இல்லை -ஐஸ்வர்யம் பற்றி முதல்//–அவனை அடைந்தவர்கள் உண்டு என்று இறுமாப்பு கொண்டு–
விச்லேஷத்தில் தளர்ந்து கொண்டு-இருக்க வேண்டும்–அபிமானம் வேண்டும்–அவனை பற்றி-
அபிமான துங்கன் செல்வனை போல -அபிமான பங்கம் -ஆண்டாள் இரண்டும் வேண்டும்–

அவனை பெற்றவருக்கு எல்லாம் புல் தானே- கண்ணன்-ருக்மிணி –அஷ்ட பூஜை கரத்தான் -அனைத்து கொண்டு- என் இடம் ஒன்றும் இல்லை/
அடியார் இடமும் ஒன்றும் இல்லை–அடைய வேண்டியது இனி ஒன்றும் இல்லை- அவாத சமஸ்த காமன்–என்னையே பெற்ற பின்
வேறு ஒன்றும் எதிர் பார்க்க மாட்டார்கள்–ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கரு நாய் கவர்ந்த காலர் பெரு நாடு காண –
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்—தாமே கொள்வர்- ராஜாவாக இருக்கும் பொழுது பரிசை தான் கையால் தொடாமல் ஆள் இட்டு வாங்கினான்-
பிச்சை கொள்ள ஆள் கொண்டு வாங்க முடியாதே -பெரு நாடு -ஊர் எல்லாம் பார்க்கும் படி – கருப்பு நாய்-இரவில் தான் போகிறான்-
கரு உண்ட நாய்-வெளுப்பு நாய் இருந்தால் தெரிந்து இருக்கும் -திரு நாரணன் தாள் பெற காலம் பெற சிந்தித்து இருமினோ–
தனம் மதியம் தவம் பாத பங்கஜம்-ஆளவந்தார்-பீமன்-ஹனுமான் வாலை நகற்ற முடியவில்லை தோஷம் இன்றி பெருமாள் உம் இடம் இருப்பதால்–
அல்ப அஸ்திரம் விட்டு விட்டு அவனை பற்ற– மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்–மின்னல் -ஐந்து வினாடி-சொல்லலாம்-
உயிர் பிரியும் நாள் சொல்ல முடியாதே -வாழ்ந்தார்கள்  வாழ்ந்து மொக் குழில்-நீர் குமிழி- புறம்  சுவர் ஓட்டை மாடம் புரளும் பொழுது அறிய மாட்டீர் —
எடுக்க எடுக்க குறையும் இந்த ஐஸ்வர்யம்–அவனை கொடுக்க கொடுக்க வளரும்–

பயின்றது அரங்கம் திருகோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேம்கடமே பன்னாள் பயின்றது
அணி திகழும் அஓலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக் கை மால்–46

தபஸ் பண்ணின இடம்-மணி திகழும்-அழகு/மாலே மணிவண்ணா -நீர் ஓட்டம் தெரியும்–வண் தடக் கை ஒவ்தார்யம்-
மால்-வியாமோகம்–அழகை கொடுக்கிறான் எனக்கு–கொடுக்க தபஸ் பண்ணுகிறான்-பயின்றது -அப்யாசம்–பண்ணினான்-
எங்கு எல்லாம்–திரு அரங்கம்-சயனித்து -திரு கோட்டியூர்- இங்கும்-  போறாது தாயார் சொல்ல -அப்புறம் திரு வேங்கடம்–
ஒரே இடத்தில் நின்று பண்ணினால் பலன் இல்லை தாயார் சொல்ல -திரு நீர் மலை- நின்றது இருந்தது கிடந்தது நடந்தது எல்லாம் இருக்கும் நீர் மலை—
சொன்னது நான்கு- அனைத்துக்கும் உப லஷணம்–மணி திகழும் மால் -இங்கு மாலே மணி வண்ணா -அப்யாசம் —
கோட்டிபுரம்-தேவர்கள் சேர்ந்த இடம்-கண்ணன் அவதரிக்க- வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்-
கூடி ஆலோசனை -மூல காரணம் இங்கு தானே– மாதவ பெருமாள்- பல நாள் பயின்றானாம்–முதல் ஜன்மாவில் பக்தி இல்லை- –
பக்குவம் ஆவதற்கு–சரணமாகும் தனது தாள் அடைந்தவர்க்கு எல்லாம்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–மாறி மாறி பல பிறப்பும் பிறந்து —

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிறியாது
பூம் கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேம்கடமே யாம் விரும்பும் வெற்பு–53

நெறியார் -வழியில் இருப்பவர்கள் குழல் கற்றை—சின்ன மலை என்று எண்ணி–பூம் கொடிகள் வளர -குன்று-அந்த நிலை வேண்டும்–
நெறியாய் கிடக்கும் -அனைய ஊற -பெரு மக்களும் ஆதரிப்பார்கள்–
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் –அனந்தாழ்வான் கட்டு பிரசாதம் எறும்பு -எந்த நித்யரோ என்று மீண்டும் ஏறி விட்டாரே–

வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்ப்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்
திளம் கோயில் கை விடேல் என்று -54

தயா சதகம் -தயாம்போதி கருணை கடல் ஸ்ரீநிவாசன்–அதில் இருந்து ஓடும் தயை –பெரிய ஏரியில்  இருந்து வரும் –தாப த்ர்யத்தால்–
மடைகள் போல குரு பரம்பரை -மாதா பிதா யுவதி–குல பதி வகுளாபிராமம்-குளிர்ந்தவர்-சம்பந்தத்தால்
அணி புதுவை -தண்  தெரியல் பட்டர் பிரான்-குளிர்ந்த -வாசுதேவன் கதை கேட்டாலும் தாப த்ரயம் போகுமே-நிர்பயம்-மதகில் தீர்த்தம் —
லஷ்மி நாதன் -கடல்-ஜலதி மேகம் ஆழ்வார்-நாத முனிகள் மலையில் பொழிய- அறிவி-உய்யக் கொண்டார் மணக்கால்  நம்பி காட்டாறு-ஆளவந்தார்-
ஐந்து ஆச்சார்யர்–ஆறுகள்- ராமானுஜர் -ஏரி- 74மதகுகள் மூலம் நமக்கு -சிம்காசனாபதிகள்–ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் என்ற நெல்-
பரவாசுதேவனே சர்வம்-எங்கும் உளன் கண்ணன் என்று சொல்ல தான்–உப்பு கரிப்பு மாற்றி -ச்வாதந்த்ர்யம்-செருக்கு —
வைகாசி விசாகம் ஐந்தாம் நாள் ஒன்பது கருட சேவை தந்த குரிசில் மதுரகவி ஆழ்வார் ஹம்ச வாகனம் ஆழ்வார்–
நடை அழகு அனுஷ்டானம்-ஜலம்-ஷீரம் பிரித்து கொடுப்பார்–

பாலாலயம் –இளம் கோயில்–சக்தியை குடத்தில் ஆவாகனம் பண்ணி–பால ஆலயம்–ஆழ்வார் திரு உள்ளம் மகா ஆலயம்–
திரு வேம்கடம் போல்வன இளம் கோயில்–தென்னன் உயர் பொற்பும் -வட வேம்கடமும் -இரண்டும் முலை போல -பரம ஸ்வாமி-
சுந்தர தோள் உடையான்–உளம் கோயில்- உள்ளம் ஆகிய கோயில்- ஹிருதயம் ஆயதனம் மகத்–உள்ளினேன்–கேட்க்காமலே வந்தாய்–
வந்த பின் தடுக்காமல்-இருந்தார்-இளம் கோயில் கை விடாதே–திரு மால் இரும் சோலை மலையே- போன்ற திவ்ய தேசங்களில் —
இவன் சரீரம் ஏக தேசங்களில் பண்ணும்  –ஊழி முதல்வன் ஒரு மா நொடி பொழுதும் பிரியான்-
திரு மால் இரும் சோலை மலையே திரு  பாற் கடலே என் தலையே –இரண்டையும் சேர்த்தால் தான் ஆழ்வார் தலை–
துர்யோதனன்-விதுரன் -பீஷ்ம துரோணர் மாம் ஒருத்தனையும் விட்டாய் கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷா –
திரு மால் வைகுந்தமே தண் திரு வேம்கடமே என் உடலே–பணிவின் பூர்தியால் ஆழ்வார்-
ஆழ்வாரின் சரீரம் கூட ஒரு மா நொடியும் விடான்-த்யாஜ்ய தேக வியாமோகம்–அழுக்கு உடம்பும்–மங்க ஒட்டு உம் மா மாயை– 

ஞானம் பக்தி வைராக்கியம்மூன்றும் விளைந்த சரீரம் என்று — -ஞானியை விக்ரகத்தோடு ஆதரிக்கும் வேர் சூடுவார் மண்ணோடு கொள்வார்  போல –
அருள் தருவான் அமைகின்றான் அது நமதுவிதி வகையே–அங்குத்தை வாசம் சாதனம் ..இங்குத்தை வாசம் சாத்தியம்–
திரு கடி தானம்-சாத்திய -க்ருதக்ஜா கந்தம் தாய பத்தியில்- செய் நன்றி -ஏறி வந்த ஏணி உதையாமல்- திரு கடி தானமும் என் சிந்தையும் —
அங்கு நின்று இங்கு வந்தானே -தபசும் பலமும் -கல்லும் கனை கடலும் வைகுண்ட வா நாடும் புல் என்று ஒழிந்தன கோல்–
பனி கடலில்பள்ளி கோளை  பழக விட்டு  –மன கடலில் வாழ வந்தே மாய மணாளா நம்பி -தனி கடலே   தனி சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே–வாத்சல்யம்–விச்வச்ய ஆயதனம் மகத்–
அரவிந்த பாவையினோடும் தானும்  அரவத்  அமளி யினோடும்  அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை—-நெஞ்சினொடும் புள்ளை கடாகின்ற ஓசை-

போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டு ஏத்தும் போது உள்ளம் போது
மணி வேம்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேம்கடவன் பேர் ஆய்ந்து–72-

குரங்குகளுக்கு –சுனை புக்கு-குளித்து -புஷ்பங்களை -முக் கரணங்களால்-எத்துகின்றனவாம்–வாதத்மஜம்–
காலையில் ராஷசிகள் பார்த்து ஹரி- சொல்ல-வால்மீகி- பாகவத சரத்தை எப்படி வந்தது–பிரம முகூர்த்தம் அறிந்து -வானரங்கள் எழுந்து –
ஸ்வாமி புஷ்கரணி ரமயா –மோதே-அலர்மேல் மங்கை தாயார் உடன் சேர்த்தியில்-ஆனந்தம் -மோத-பிரமோத- —
ஆங்கு- இடத்துக்கு சொல்–மொட்டு விட்டு /நேற்று அலர்ந்தவை விட்டு/ அப் பொழுதே அலர்ந்த புஷ்பம்//
அந்த இடத்திலே- முதலை இருக்காதே திவ்ய தேசம்- ஆங்கு இருக்கிற புஷ்பம்-இது-திரு வேம்கட சம்பந்தம் உண்டே–
மனசால் நினைந்து கையால் புஷ்பம் பாரித்து வாயால் பாடி- உள்ளமே -போது-நினைப்பாய் வேம்கடவன் பேர் ஆய்ந்து -திரு நாமம் சொல்லி/
அணி வேம்கடம்- ஜகத்துக்கு ரத்ன ஹாரம் வேங்கடவனுக்குபோது அணி- புஷ்பம் ஆபரணமாக -இது செய்தாலும் வானரம் போல் தான்

பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இருகண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–75

நீல மேக சியாமளன்–ஆண் யானை பெண் யானை ஊடல்–பிடிக்கு கோபம்–சமாதானம் -மத வேழம் -உந்து மத களிற்றன்–
முன் நின்று–திரும்ப- இதுவும் திரும்பி முன் நின்று–கெஞ்சும் கண் காட்டி கொண்டு–
தத் இங்கித பராதீனம் பிராட்டி புருவ நெறிப்பை  எதிர் பார்த்து அவன் இருப்பது போல–இது தான் பிரமாணம் –ஆச்சார்யர் முன் சிஷ்யன் நிற்கிறார் போல–
மட்டை அடி பிரணய கலகம் உத்சவம் –உலகம் ஏத்தும் தென் ஆனாய்–நான்கு யானைகள்–இரு-இரண்டு கண் -இள மூங்கில் –முற்றின மூங்கில் இல்லை–
வாங்கி-பறித்து உடைத்து இல்லை–புஷ்பம் பறிப்பது போல–அருகு இருந்த தேன்–கோபத்தால் பசை அற்று வறண்டு இருக்கும் -தேன் கலந்து –நீட்டும் —
வாயில் பிழிந்து கரும்பு ரசமும் தேன் ரசமும் சேர்ந்து கொடுக்கிறதாம் -பெரும் தமிழர் அல்லேன்- முன் பாசுரம்-கற்பனை சக்தியால் சொல்லி காட்டுகிறார்–
ராமாநுச முனி வேழம்-வலி மிக்க சீயம்–ஞான பக்தி வைராக்கியம்-மூன்று மத ஜலம்– பெண் யானை- சிஷ்யர்கள்–இரு கண் —
துவய மகா மந்த்ரம்–திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் -வாங்கி–நீட்டும்- புரியும் படி உபதேசித்தார்–பங்குனி உத்தரம் ஊடலும் கத்ய த்ரயமும் சேர்த்து அருளுகிறார்

——————————-

25-26-27-28-33-45-46-53-54-72-75-ஆக -11-பாசுரங்கள்

சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25-

உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூதத் ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.