ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -41-50–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

(காமத்தால் பயன் இல்லை கீழ் -பொருளால் பயன் இல்லை இதில்
காமத்தாலும் பொருளாலும் பயன் இல்லை கீழ்
தர்மமும் அதன் பலனும் அவன் அதீனம் இதில்)

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–ஸ்வர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான ஸ்வர்க்க லோகத்தை-அஜத லக்ஷணை -விடாத லக்ஷணை –
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு-மறையோற்கு -ஒருமை –
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
பொருளாலே ஸ்வர்க்கத்தில் புக-யத்னம் பண்ணப் போகாது

அருளால் அறம் அருளும் அன்றே
கிருபையாலே இவை ஸ்வர்க்கத்தை-ஆசைப்பட்ட தாகில் ஸ்வர்க்கத்தை
கொடுக்கப் போம் என்று இருக்கும்

அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே-நீ மறவேல் நெஞ்சே நினை
தன் கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன்
திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை

மா மறையோர் என்றது-
சுகோ முக்தோ வாமதே வோபி முக்த -என்றவர்கள்
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் என்றுமாம்-
ஸ்ரீ மார்கண்டேயன் என்றுமாம்-

(கீழே போகத்தால் இல்லை பொருள் என்று காம புருஷார்த்தத்தால் பயனில்லை என்றார்
இதில் அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –
அறம் தர்மம் இங்கு அஜஹல் லக்ஷணையாலே தர்ம பலனைச் சொல்லும் -தர்ம மோக்ஷ புருஷார்த்தங்கள் அவன் அதீனம் என்கிறார் –
அருளாலே -கிருபையே ஏக ஸஹகாரி நிரபேஷ ஹேது
ரூப ஸம்ஹ நநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரூஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸிந -ஆரண்ய -1-13-
அவனது பாதமே என்றுமே மறக்காமல் நினைத்து இருப்பாய்
இப்போது இருக்கும் உடம்புடன் மறக்காதே அனுபவிக்கப் பெறுவோமாகில் பரமபதமும் வேண்டா
ஸதா பஸ்யந்தி இங்கேயே கிடைக்கப் பெற்றால் போதுமே –
நெஞ்சே -அறிவு பெருகும் இடமாய் இருக்கும் நீ அறிவாளிகள் செயலைச் செய்ய வேண்டுமே -)

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –-முதல் திருவந்தாதி –94-

ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –
(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

————————————————————————–

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பன்–(அவனது) சிறந்த திருத் தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒரு வகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத் தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்-வைராக்கியத்துடன் இருப்பர் .–(பேர் இன்பம் என்றது விபரீத லக்ஷணை )

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில்
பிராட்டியோடே வந்தார் போலே
நினையா நின்றேன் –
எதுக்கு நினைக்கிறது என்னில் –
அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று -(திருவை -ஆலிங்கனத்தால் பெருத்த தோள்கள் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து பெற்றவள் அன்றோ )

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் –
அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்(இதனாலே அது -இதுவே பிரதானம் -மால் பால் மனம் சுழிப்ப இத்யாதி )

மனைப்பால் பிறந்தார்  பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்-
சம்சார சுகத்தை துறந்தவர்கள்-
அத் தோளைத் தொழப் பெறுவார்கள்-

(விபரீத லக்ஷணம் என்றும் -அனுபவிக்கும் அவன் நினைவால் பேர் இன்பம் என்கிறார்)

(நினைப்பன் திருமாலை -இவளை முன்னிட்டுக் கொண்டு அவனைப் பற்றுகிறவர்களுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டுமே ஸித்திக்கும் என்றதாயிற்று –
நீண்ட தோள் காண -உத்த்ருதாஸி வராஹேண கிருஷ்ணேந சத பாஹு நா -தைத்ரியம் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் யார் காண்பாரே -திருவாய் -2-8-7-
ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் மஹா புஜம் -ஸ்தோத்ர ரத்னம் –44-
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் -14-
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-
நினைப்பான் என்ற நினைவையே பெரிதாகக் கொண்டு-அப்பரம புருஷன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்ட வேண்டுமது ஒழிய
யார் தான் தங்கள் முயற்சியால் சிற்றின்பங்களை ஒழித்து அத்தோள் அணைப்பைப் பெறப் பெறுவார் -என்று பரகத ஸ்வீ கார பரமான பொருள் தேறுகிறது )

————————————————————————

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்-வெட்ட வெட்ட முளைக்கும் அதனால் பிரித்து அருளிச் செய்கிறார்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)-எத்தனை சண்டாளராகிலும் -தாள் தொழுவாராக இருந்தாலே போதும் –
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.-பிடித்தார் பிடித்தாரைப் பற்றுமதே சிறப்பு

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

(அவர்கள் பகவத் சேஷபூதர்கள்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையவர்கள்
அடியேன் ததீய பாகவத சேஷ பூதன் -குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்தறியும் மதுரகவி நிலை
இதுவே வ்யாவ்ருத்தம்)

(சித்திர் பவதி வா நேதி ஸம்சய அச்யுத ஸேவி நாம்
ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யாரதாத்மநாம்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-
அவன் அடியார்களைத் தொழ நினைத்தால் பூரித்து எழுமே அவனுடைய திருத்தோள்கள்
செய்யும் சிறப்பு -அவனுடைய தோள் தொழுவாருடைய தாள் தொழுவதே என் தோள் எனக்குச் செய்யும் உபகாரம் -)

—————–

(அன்பினால் ஆள் செய்பவரை ஆதரித்தது கீழ்
அன்பிலாதவரை நிந்தித்து இது
எம்மானை –சொல்லிப்பாடி துள்ளாதார் பதிகம் போல்
பற்றினவனை தொழுவாரை அமரர் தேவர் தொழுவர்
பற்றாதவரை நிந்திக்க அடியேன் என்றார் அங்கே ஆழ்வார்)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு– பிடித்தார் பிடித்தாரைப் பற்றும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற(வழித்துணை பெருமாள் திரு மோகூர் ஆப்தன் )
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவி யழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

சிறந்தார்-இத்யாதி
திருநாமத்தை சொன்னவர்களுக்கு
பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து
உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் –

வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடைய
ஈஸ்வரனுடைய திருநாமத்தை மறந்தாரை
மனுஷ்யராக புத்தி பண்ணி இரேன்

அஞ்ஞரை சர்வஞ்ஞர் என்று இருப்பன்
அறிகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கையாலே
குருவிந்தக் கல்லை மாணிக்கம் என்று நினைத்து இருந்தால்
ரத்னம் ஆகாது இறே
ரத்ன பரீஷகன் ரத்னமாம் என்றது இறே ரத்னம் ஆவது –

அப்படியே (அறிந்த என் போல்வார் )நெஞ்சிலே மனிசர் என்று வைக்கப் பட்டவர்கள்
மனுஷ்யர் ஆவர் என்கிறார்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -என்கிறபடியே-

அறம் தாங்கும் இத்யாதி
ஆன்ரு சம்சயத்தாலே தரியா நின்ற
ஸ்ரீயபதியினுடைய திருநாமத்தை நாவினாலே
ஓத உள்ளு –

(ஸ்ரீ லஷ்மீ பதி என்பதால் தானே அறம் -தர்மம் தாங்கி -இவள் சந்நிதியால் உஜ்ஜீவனம்
இவளுக்கும் கிருபை எகிற கருணையே தர்மம் -( த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூந்தர -38- 41–நீ சொல்ல நான் கேட்டு இருக்கிறேன் சீதாப்பிராட்டி )உபதேசம்)

(த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –விஷ்ணு ஸூக்தம் -விஷ்ணுவை சங்கீர்த்தனம் செய்பவர் நிலையாய் இருப்பார்கள் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் -கீதை -7-18-ஞானிகள் எனது உயிர் நிலை -அறியார் உயிராவாய்
நயாமி பரமாம் கதிம்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –பெரிய திருமொழி -11-7-9-
ஆன்ரு சம்ஸ்யம் பரோ தர்ம -ஸூந்தர -38-41-
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூந்தர -38- 41-
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -ஸ்ரீ குண ரத்ன கோசம்
மா தவன் -அவள் சம்பந்தத்தாலேயே இவன் அறம் தாங்குபவனாகிறான்
அவன் பேர் நாவினால் ஒத்துவதே உள்ளு -த்வயத்தை நாவால் சொல்வதையே நினைப்பாய் மனமே என்கிறார் -)

————————————————————————–

நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயமானவனுடைய-திருவடிகளை பயிலுமவர்கள்
அர்த்ததினுடைய

லாப அலாபங்களுக்கு ஈடுபடார்-

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 27 –
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

 

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1- ​-தனியன் இப்பாசுரம் அடி ஒற்றியே)

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அநந்தாய வேத -அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

உளது என்று இறுமாவார் –
தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே
மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம்
பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள் –

இல்லை என்று தளர்தலதனருகும் சாரார் –இத்யாதி
இல்லை என்று தளரார் என்னாதே
உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில்
நித்ய தரித்திரன் சோகம் அறியான் –
ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே
பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம்
இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும்
தளர்த்திக்கு உடலாம் என்று -உண்டு இல்லை என்று தளரார் –
என்று சொல்லுகிறது

பகவத் விஷயத்தில் பிரிவு உத்தேச்யமோ என்னில்
அழு நீர் துளும்ப வலமருகின்றன வாழியரோ –
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம்-

சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில்
ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –

இத்தை அன்றோ
உண்ணும் சோற்றில் முற் கூறும்
துவளில் மா மணியும் சொல்லுகிறது –

முன்ன நோற்ற விதி கொலோ
முகில் வண்ணன் மாயம் கொலோ –
நன் பண்ணின ஸூ க்ருதமோ
இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –

நிர்க் குண பரமாத்மா சௌதேஹம் தேவ்யாப்ய திஷ்டதி -(

திருவடி திவ்ய மேனி முழுவதும் பெருமாள் வியாபித்து இருப்பதைக் கண்டு பீமா சேனன் அருளிச் செய்தல் )
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –

தளர்தல தனருகும் சாரார்-என்றது-
சோகம் உண்டாய் அனுதாபம் பிறந்து மீளார் என்கிறது

முதலிலே தளரார் என்கிறது -அஸ்திரம் -என்று நினைத்து
ஒரு கால் ஸ்திரம் என்று நினைத்து
ஒரு கால் அஸ்திரம் என்று நினைத்து இருக்குமவர்கள் அன்று இறே
ஸ்திரமானது அஸ்திரம் ஆயிற்று என்னில் இறே சோகம் உள்ளது

அளவரிய வேதத்தான் –
அபரிச்சின்னமான வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுமவன்

கண்ணாலே காண ஆசைப் படுமவனுக்கு
வேத பிரதிபாத்யன் என்றால் என்ன
பிரயோஜனம் உண்டு என்னில் –

வேங்கடத்தான் –
எல்லாரும் கண்டு ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாக
திருமலையிலே நின்றான் –
எங்களுடைய அர்த்தத்தோபாதி
உம்முடைய அர்த்தமும் பிரத்யஷம் ஆயிற்றோ என்னில் –

விண்ணோர் முடி தோயும் பாதத்தான் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –
அவனுடைய சத் பாவத்துக்கு இசைந்தால்
அவர்களுக்கும் கூட ஸ்ப்ருஹணீயனானவனே
இங்கே வந்து நிற்கிறான் என்று
ஆதரிக்க வேண்டாவோ பிரமாணிகர் ஆகில்
(வேங்கடத்தான் -)விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –
இவர்களுக்கு இறுமாக்கவும் தளரவும் அவசரம் இல்லை-

(ப்ரத்யக்ஷ மாத்ரமாக இருந்தால் அஸ்திரம் அல்பமாகவே இருக்கும் -இவனோ வேதத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுபவன் அன்றோ -)

(நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி ஆர் நிகர் நீள் நிலத்தே -திருவாய் -6-4-7-
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-விஸ்லேஷ கண்ணீருக்குப் பல்லாண்டு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் –ஸூ ந்தர –33-4-
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-தளர்ச்சியையும் பாக்கியமாக ஸ்லாகித்துப் பேசினாரே
பீமசேனன் திருவடியைக் கண்டு அவன் திருமேனியில் துவட்சியாலே பகவத் சம்பந்தமுடையவன் என்று அறுதியிட்டு
நிர்க்குண பரமாத்மா சவ் தேஹம் தே வியாப்ய திஷ்டதி -வன பர்வம் -14-68-
அநந்தா வை வேதா யஜுர் கடகம் -1-11-
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
அநந்த ஸ்திர பலமாய் இருப்பவனுடைய திருவடிகளிலே இடைவிடாமல் சேர்ந்து இருப்பவர்கள் அல்ப அஸ்திரமான இவ்வுலகச் செல்வங்களை இழப்பதாலும் பெறுவதாலும் துன்ப இன்பங்களை அடைய மாட்டார்களே -)

(துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –-ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —4-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-)

————————————————————————-

இவர்களை இப்படி பயிலப் பண்ணுகைக்கு-இவர்கள் பட்டது அன்று-அவன் படுவது -(கிருஷி -பக்தி உழவன் அன்றோ )

(அரங்கம் திருவேங்கடம் -சயனம்
வேங்கடம் -நின்ற
திரு நீர் மலை -ஒரே திவ்ய தேசத்தில்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -அன்றோ
எனவே பிரித்து அருளிச் செய்கிறார்-நான்கு திவ்ய தேசங்களை அருளிச் செய்தது -நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் சேவை சாதிக்கும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் )

(சாமான்ய ரஷணம் -ஆஸ்ரித விசேஷ ரக்ஷணம் -கை கூப்பி முதல் -மேல் அவனது ஆஸ்ரித விசேஷ ரக்ஷணத்துக்கு நாமும் அனைத்தும் செய்ய வேண்டுமே
மற்று அல்லால் -விசேஷ ரஷணம் -அவன் பரம் -நமக்கு கை கூப்புச் செயலுக்கு மேல்)

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணி போல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்-சர்வேஸ்வரன் -வ்யாமோஹம் உடையவன்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

மணி போலே ஸ்ரமஹரமான வடிவையும்
உதாரமான கையையும் உடைய சர்வேஸ்வரன்
பல கால் பயின்றது
கோயில்
திருக்கோட்டியூர்
திருமலை

பல நாள் பயின்றது –
தர்ச நீயமாய் திகழா நின்றுள்ள
சோலையை உடைத்தாய் சம்சாரத்துக்கு ஆபரணமாய் இருந்துள்ள திருநீர் மலையே-

(கிடை அழகையும் நின்ற அழகையும் ஒவ்வோர் இடத்திலே காட்டி இருப்பதில் திருப்தி உறாமல்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -பெரிய திருமொழி -2-4-1-
சேதனர்களை வசீகரிக்க உபகரணங்களாக திருமேனி அழகையும் குணங்களையும் உடையவன்
என் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ
நீல மணி போலே கண்டார் களைப்பை ஆற்றும் படி ஒளி விடும் திவ்ய மங்கள விக்ரஹம் யுடையனாய்க் கொண்டு
அந்தத் திருமேனியை சர்வருக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணி அருளும் உதார குண பூர்ணனாய்
கொடுத்துக் கொடுத்துப் பூரித்து இருக்கும் திருக்கைகளை யுடையவன் அன்றோ -)

————————————————————————-

அவன் ஸ்வ பாவம் இப்படி யான பின்பு-எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறது –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கை கோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக் கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கை கோலி தொழுது–கை கூப்பி வணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

அரி உருவன் பாத மலர் மாலை அணிந்து காலை தொழுது எழுமின்-
ஆஸ்ரித அர்த்தமான வடிவை தனக்கு வடிவாக உடையவன் உடைய
திருவடிகளிலே மலர்மாலையை அணிந்து கை கூப்பி
ப்ராஹ்மமான முகூர்த்தத்திலே தொழுது உஜ்ஜீவியுங்கோள் –

கை கோலி என்று
ஏற்கவே கோலி என்கிறது
கை கூப்பி என்றுமாம் –

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை –
சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –

மற்று அல்லால் -இத்யாதி –
மற்று நீங்கள் அனுசந்திக்கும் படி
எல்லாத்தையும் உணர்ந்து காலை தொழுது எழுமின்

மற்று எல்லாம் இதி பாடாந்தரம்-

(அந்தியம் போதில் அரியுருவாகி
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடே வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -திருவாய் -4-5-10-
அடியார்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உருகும்படி அவர்களுடைய நெஞ்சைப் பற்றிக் கிடைக்கும்
குணம் -செயல் -பிரகாரம் -முதலியவற்றின் கூட அறிந்து அனுசந்தித்துக் கொண்டு
அடியேனுக்கேயான நரசிங்கனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்றதாகிறது -)

————————————————————————–

எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் (ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாசங்கள் புராணங்கள் )உண்டாக்கினாய் –

(முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணானாயும் வெளியிட்டு அருளினான் அன்றோ -கீழ் வட திருவேங்கடம் -இதில் தென் திருவேங்கடம்)

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேஸ்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்-உரைத்தாய் அல்ல -அப்ருவஷேயம்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற் பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்-

உணர்ந்தாய் மறை நான்கும்-
சம்ஸ்காராத்மகமாக உன் திரு உள்ளத்தில் கிடந்த வேதத்தை
பிரகாசிப்பித்தாய்

ஓதினாய் நீதி –
வேத உப ப்ரும்ஹணமான
இதிஹாச புராணங்களை உண்டாக்கினாய்

மணந்தாய் மலர்மகள் தோள்-
வேத ப்ரதிபாத்யை யானவளுடைய
தோளை சம்ஸ்லேஷித்தாய்

போய் வேயிரும் இத்யாதி –
வேத பிரதிபாத்யன் ஆகில்
பரம பதத்திலே யிறே என்னாதபடி
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி
திருமலையை விரும்பினாய்-

(நயதீதி நீதி –வேதார்த்தங்களை நியாயங்களாலே நயப்பித்துத் தெளிவு படுத்துகையாலே உப ப்ரும்ஹணங்கள் நீதி எனப்படுகின்றன
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதை சஹ-
பித்தர் பனி மலர்ப்பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-
மாலிருஞ்சோலை வளம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -திருவாய் -2-10-8-
அடியார்கள் மறக்க ஒண்ணாதபடி நீ செய்து அருளின செயல்களுக்கு எல்லையே இல்லையே -)

————————————————————————–

திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-
அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார்

(பாபங்கள் அநேகம் என்கிற சந்தேகம் -வர -அதுக்கு சமாதானம் இப் பாசுரம் -திருநாம சங்கீர்த்தனம் பலமாக செய்ய அனைத்தும் தீருமே
எங்கும் அதிரும்படி கூக்குரல் – பூதநா ஸம்ஹாரம் செய்து அருளிய கண்ணனே –
பூதனை பட்டது அவை படுமே)

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான
கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலை யுண்ணும் போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-

குலை சூழ்
கரையாலே சூழப் பட்ட

மலை ஏழும் -இத்யாதி
முலை எங்கும் வியாபித்த நஞ்சாலே
மிடுக்கு உடையளான பூதனையை
முக்தமான சொலவுகளை அவள் முகத்தே சொல்லி
சுவையா நின்ற நாவை உடையவன் -என்று அழை

பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்
அஞ்சாது -பூதனை பட்டது படும் இத்தனை-

(ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட -திருவாய் -1-9-5-
பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயம் -பெரிய திருமொழி -1-8-1-
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி -1-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -திருவாய் -1-7-8-
உலகு எல்லாம் எதிர் ஒலிக்கும் படி அழைப்பாயாக -என்று அந்வயம்)

————————————————————————–

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

(கோபிகள் -அங்கு அப்பறை கொண்ட வாற்றை அனுகரித்து நாச்சியார் ஸ்ரீ ஸூக்திகள் போல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசி
பெரும் பெயர் -அறியாத பிள்ளைகளாய் முன்பு பேசிய நாராயணாதி நாமங்கள் போல் அல்லவே கோவிந்தன் -கோபாலன் -யாதவன் -போன்றவை இவை அன்றோ குற்றம் அற்ற பெரும் பெயர்கள்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -உன் தன்னை சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே )

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸு தேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல் பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

முகப்பும் -எல்லார் முன்பும்

அழைப்பன் திருமாலை
ஸ்ரீயபதியை அழைப்பன்

ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி –
திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை
அனுசந்திக்கப் புக்கால்
பிழைக்க அரிதாய்
அத்தாலே அரை ஷணம் விடப் போகாத
திரு நாமங்களைச் சொல்லி –

ஆங்கு அவர்கள் என்றது -திரு ஆய்ப்பாடியில் உள்ளவர்களை
பார்த்து நம்முடைய பக்கலிலே இரங்குவர் என்று –

இழைப்பரிய வாயவனே –
நினைக்க அரிதாம் படி பெண்களைப் படுத்தும்
கிலேசத்தை உடைய கிருஷ்ணனை

(நினைக்க அப்பால் பட்டு -மொழிக்கு அப்பால்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல் நம்மால் அறிய முடியாதே
நெஞ்சு ஆளும் கண் சுழலும் அன்றோ-கல் எடுத்து கல் மாரி காத்தது அவலீலை அவனுக்கு -இவளுக்கோ சொல் எடுத்து சொல்வது அரிதானதே )

யாதவனே என்றவனை –
(ஆயவனோ பாதி )இடைத் தனத்தோ பாதியும்
ஸ்ரீ வாஸூ தேவர் மகன் ஆனதுவும்
ஆகர்ஷகம் ஆனபடி

யார் முகப்பும் –
எல்லார் முகப்பும்

மாயவனே என்று மதித்து –
ஆச்சர்ய பூதனே என்று மதித்து
திருமாலை அழைப்பன்-

(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே
அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading