வேத வேதாந்த வேதார்த்த ஸங்க்ரஹம் –திரு வேங்கடம் உடையான் இடம் ஆசை கொண்டு ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் அருளியது –
முழங்கால் முறித்தான் -காலை வைத்து நடக்காமல்-முதலில்-பெரிய திரு மலை நம்பி-ஸ்ரீ மத் ராமாயணம் அருளி–
மாதவனே கண் உற நிற்கிலும் –வந்து தோன்றிய அப் பொழுதே நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆக்கினரே –
தீர்த்த கைங்கர்யம் ஆகாச கங்கையில் -நித்யம் கீழே வந்து ஸ்ரீ ராமாயணம் கொடுத்து அருளி-
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில் —
அசேஷ ..சித் அசித் வஸ்து சேஷினே சேஷி -சேஷ சாயினி-.நிர்மல அனந்த கல்யாண நிதி –
திரு வேங்கடம் உடையானே அரங்கன்–பட்டர் கோஷ்ட்டியில்- திரு வேங்கடம்–கருவிலே திரு விலாதீர்–
திரு மங்கை ஆழ்வார்-வெருவாதாள் வாய் விரவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாள் -தாய் பாசுரம்-பட்டர்-
பெண் சொன்னதை சரியாக தாயார் -கேட்க வில்லை அரங்கமே அரங்கமே என்று கேட்டதை தப்பாக சொன்னாள் என்றாராம்–
இருவரும் ஒன்றே அறியும் -என்றாராம்-இதே போல் — 9 பாசுரங்கள்- ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமி அருளி —
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து–25-
வந்தித்தவனை வழி நின்ற வைம் பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி–26-
பதி அமைத்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்–27–பதி- திருப் பதி என்று கொண்டு-
கீழ் நின்ற படியை அனுசந்தித்தார் நன்றாக இருந்து நாடி
மனத்துள்ளான் வேம்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள்
மாவாய் பிளந்த மகன்–28
அன்னையாய் அத்தனாய்-அவனே நாதன்-வெங்கடேசன் விநா நாதன் இல்லை வேங்கடமே நாதன்- அநாதை யாரும் இல்லை–
அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம-அகதிம் -சரணாகதிம் க்ருபயா கேவலம் ஆத்மா சாத் குரு- வழி அற்று கதறுதல் -அழகர்-
ஸ்ரீ ராமானுஜர் பின் பிறந்தார் சொல்ல கூடாது -கதிக்கு பதறி—வெம் கானமும் கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன்–
விநா வேங்கடேசம் நநாதோ நநாதோ-சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி – –கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை- –
விட்டு விடாத தாய் தந்தை-ஷேம கிருஷி பலம்–பத்தி உழவன்–ஏத்தும் பொழுது உண்டே–பட்டரை வைய சால்வை போத்தி–
இதற்க்கு எனக்கு பொழுது இல்லை-குணம் சொல்லவே பொழுது இல்லை-சு தோஷ சொல்ல முடியவில்லையே-அதை பண்ணினவனுக்கு சம்பாவனை–
ஹரே வெங்கடேச பிரசீத பிரசீத -எந்தன் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -இட வகை கொண்டு –
சிந்தனைக்கு இனியாய் வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய்-
பிரியம் வெங்கடேச பிரயச்ச பிரயச்ச –
பர வியூக விபவ அர்ச்சை-மனத்து உள்ளான்-அந்தர்யாமி- மற்றவை சாதனம்-இது தான் சாத்தியம்-தபஸ் இருந்து இதை பெற்றானாம் –
நெருப்புக்குள் காஞ்சி– கடலில்-ஷ்ராபதி நாதன்– மலையில் திருவேம்கடத்தான்- ஆகாசத்தில் பரம பத நாதன்-தேவாதி தேவன்-
பரன்-புரோ ஹித -நல்லதையே -நினைக்கிறவன் –இருந்த திரு கோலம்-விண் மீது இருப்பாய் -பகல் ஓலக்கம் இருந்து -பாட்டு கேட்க்கும் இடம் —
ராஜ நீதி-தர்பார்- காரியம் மந்திரித்து -ஆலோசனை–ஏகாந்தம்-திரு பார் கடல் நாதன்-கூப்பீடு கேட்க்கும் இடம்–கருப்பு உடுத்து சோதித்து —
அந்தர்யாமி-கடவுள்-கடந்து உள்ளே இருகிறவன்- -உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிதி வெள்கி போய் –விலவர சிரித்திட்டேனே–
நினைவின் ஊற்று வாய் இருக்கிறானே–நினைவும் அவன் ஆதீனம்-இருந்தும் இல்லை சொல்லவும் அனுமதிக்கிறான்–
வேட்டை ஆடி-விபவம்-சிசுபாலன் ராவணன் மீனோடு -கல்கியும் ஆனான்–ஆராமமங்களில் விளை யாடும் –
அர்ச்சை–சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் –பாரோர் போற்றும் பதரி வட மதுரை- விண் மீது இருப்பாய் –மலர் மேல் நிற்ப்பாய் –
தேவாதி தேவன்-மா கடலான் -மாவாய் பிளந்த மகன் -வேங்கடத்து உள்ளான்–மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான்-மனத்து உள்ளான் —
வாசுதேவ சங்கர்ஷன பிரத்யும்ன அனிருத்னன்–அம்பச்ய பாரே-புவனச்ய மத்யே -நாகசா ச்ப்ருஷ்டே –
ஸ்ரீ ரெங்கம் -பஷ பாதி–நினைப்பரிய–விசேஷணம்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று சயனித்தானே–
பரம சுலபன்–கிடந்த தோர் கிடை அழகு–மாவாய் பிளந்த -நடந்த -நின்றது -வேங்கடம்- இருந்தது -தேவாதி தேவன்-
கிடந்தது அரங்கம் மா கடல் /நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான்-நீர்மலை– இப் படி எல்லா படியிலும் இருந்து –
தபஸ் பண்ணி-மனத்துள்ளான்–புளிங்குடி கிடந்தது-காய்ச்சின வேந்தன் – வர குண மங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று -கள்ள பிரான்- –
தெளிந்த என் சிந்தை–நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கனை கிடந்தது அன்று நான் பிறந்திலேன் –
ஞான ஜன்மம் – பிறந்த பின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் -என் நெஞ்சுள்ளே —
பெரிய பெருமாள் கிடக்க நம் பெருமாள் நிற்க உபய நாச்சியார்கள் இருக்க பெரிய திருவடியும் இருந்து சேவை–
நள்ளி- அலவன்-பள்ளி கமலத்துஇடை பட்ட பகுவாய் -திரு நறையூர்-கண் சிவந்து- பூ துகள் சேர்ந்து- கண் சோர்ந்து -நள்ளி ஊடும் நறையூரே–
நினைப்பரிய நீள் அரங்கம்-நாச்சியார் பெருமையால்- -இனிது இறைத்த -பனி அரும்பு -உடல் எனக்கு உருகுமாலோ-அரவின் அணை மிசை மேய மாயனார்–
குட திசை முடியை வைத்து –சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி–கரு மணியை கோமளத்தை–மாயோனை மண தூணை பற்றி நின்று–
கேசி அசுரனை முடித்தான்-பூதனை தொடக்கம் கேசி வரை- சத்ரு சேஷம் வைக்காதவன் கண்ணன்–
சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–வேதாது சாஸ்திரம் பரம் நாஸ்தி -சாசனம் விதிக்கும்-ந தெய்வம் கேசவாதி பரம்–
திரு குருங்குடி-நம் பாடுவான்-கைசிக ஏகாதசி மகாத்மயம்-எக் காலத்திலும் எந்தையாய் திரு வேங்கடம் உடையவன்-கற்பூர படி ஏற்றம் சேவை திரு அரங்கத்தில்-
அரையரும் சேர்ந்து ஆட-கைசிக உத்சவம்-பச்சை கற்பூரம் வாரி வீசுவார்கள்–விஜயரேங்கர் சொக்க நாதர்–சேவிக்க வந்து கிடைக்காமல்
ஒரு வருஷம் அங்கேயே இருந்து சேவித்தாராம்யுகாதி பண்டிகை ஸ்ரீ ரெங்கத்தில் நடக்கும் சிறப்பாக–
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல் கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேம்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை–33
துணிந்தது சிந்தை–துணிந்தது வாய்–அங்கம் பணிந்தன -மூன்றினாலும் –துழாய் அலங்கல் அணிந்தவன்–மனசு போக துணிய–
சொரூப நிரூபகம் -துழாய் மாலை- வன மாலை-ஸ்ரீ யபதி–பூ மகளார் தனி கேள்வன் -ஸ்ரீ நிவாசன்-ரிக் வேதம் ஸ்ரிம் பீடச்த கச்ச –
அவளுக்கு பீடம் என்பதே இவன் பெயர்–கோவிந்தா சொல்லி கொண்டே மலை ஏற ஸ்வாமி பணித்தார்–
திரு வடி பட்ட துழாயை முகர்வதே மூக்கு படைத்த பயன்-குலசேகரர் முகுந்த மாலை—நாற்ற துழாய் முடி நாராயணன்–ஆண்டாள்-
அம் தண் துழாய் கமழ்தல்- குட்ட நாட்டு திரு புலியூர் மாய பிரான்–பராங்குச நாயகி நிலை தோழி தாயார் இடம் சொல்ல-
அவன் அங்கத்தில் துழாய் அலங்கல்–வேய்-மூங்கில் சேர்ந்த தாள் வரை -பள்ள தாக்கு- விறல் வேங்கடவன்-மிடுக்கு பலம் உள்ளவன்–
அழகால் -பிறந்த பலம்–சேவை பண்ணிய பின் கட்டி போடுகிறானே-ஏ வகாரம்–அவனை தவிர எங்கும் இல்லை–
திறங்கள்- குணங்கள்–சொரூப நிரூபக தர்மம்–லஷணம் சொல்லும் குணங்கள்–அடிப்படை அடையாளங்கள் –நிரூபித சொரூப விசேஷணங்கள்–
-ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் முதல் வகை ப க வ ஆன்-அடிப்படை-இதம் துவம் இத்தம் -இது இனியது மெருகு ஊட்டுவது
சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம –நிருபிக்க பட்ட பொருளின் விசேஷணங்கள்- வாத்சல்யம் சௌசீல்யம் சௌலப்யம் ஸ்வாமித்வம் —
வாய் திறங்கள் சொல்லும் வகை- திறங்கள் பன்மை- அலர்மேல் மங்கை உறை மார்பன்-அடிப்படை–
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே போல்வன –தனி மா தெய்வம்-
ஏ வகாரம் மூன்றிலும் சேர்த்து கொண்டு வாயும் மனமும் அங்கமும் அவனை தவிர வேறு ஒன்றையும் பேசாமல் நினைக்காமல் வணங்காமல்-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-நாராயணனே நமக்கே பறை தருவான்- மாம் ஏவ -மற்றை எல்லாம் ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல–
ஒப்பார் மிக்கார் இல்லாதவன் அவன் ஒருவனே –அவன் இடம் அவனையே கேட்டு பேரனும்- கதி திரைய மூலத்வம் அவன்–
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர் தல தனரு குஞ்சாரார் அளவரிய
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று—45
அளவரிய வேதத்தான் அவன்–ஆனந்தம்-அளக்க-ஆசிஷ்டன்-யவனம்-அசன சீலத்வம்-மனுஷ்ய ஆனந்தம்–ஆசீர்வதனபாத்திர பூதத்வம் –
அளியல் நம் பையல் என்ன அம்மாவோ கொடியவாறே —தேவ இந்திர பிருகஸ்பதி நான்முகன்-சொல்லி -சொல்ல முடியாமல் இறங்க-
அளப்பரிய வேதத்தான்-அனந்தன்-கால தேச வஸ்து பரிச்சேத ரகிதன்–மனன் உணர் அளவிலான் பொறி உணர் அவை இலன்–
வேதத்தால்-என்றும் -அளவரிய வேதத்தால் என்றும் -அவனை சொல்லி வேதத்துக்கு பெருமை-சாஸ்திர யோநித்வாத்–
அனுமானமோ பிரத்யட்ஷ்த்தாலோ சொல்ல முடியாதவன்–வேம்கடத்தான்-இறங்கி நமக்கு சேவை-எளிமை–
யாதுமோர் நிலைமை என அறிவரிய அறிவு எளிய எம்பெருமான்–நம்மால்
தோஷம்-வ்யாப்யகத தோஷம் கிட்டாது–விண்ணோர் முடி தோயும் பாதத்தான்-என்பதால்–
உளது என்று இறுமாந்து போகாமல்-உண்டு இல்லை என்று தளர்தல் அதன் அருகிலும் சாரார் –இறுமாப்பு தான் குற்றம்-
கவலையும் இல்லை -ஐஸ்வர்யம் பற்றி முதல்//–அவனை அடைந்தவர்கள் உண்டு என்று இறுமாப்பு கொண்டு–
விச்லேஷத்தில் தளர்ந்து கொண்டு-இருக்க வேண்டும்–அபிமானம் வேண்டும்–அவனை பற்றி-
அபிமான துங்கன் செல்வனை போல -அபிமான பங்கம் -ஆண்டாள் இரண்டும் வேண்டும்–
அவனை பெற்றவருக்கு எல்லாம் புல் தானே- கண்ணன்-ருக்மிணி –அஷ்ட பூஜை கரத்தான் -அனைத்து கொண்டு- என் இடம் ஒன்றும் இல்லை/
அடியார் இடமும் ஒன்றும் இல்லை–அடைய வேண்டியது இனி ஒன்றும் இல்லை- அவாத சமஸ்த காமன்–என்னையே பெற்ற பின்
வேறு ஒன்றும் எதிர் பார்க்க மாட்டார்கள்–ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கரு நாய் கவர்ந்த காலர் பெரு நாடு காண –
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்—தாமே கொள்வர்- ராஜாவாக இருக்கும் பொழுது பரிசை தான் கையால் தொடாமல் ஆள் இட்டு வாங்கினான்-
பிச்சை கொள்ள ஆள் கொண்டு வாங்க முடியாதே -பெரு நாடு -ஊர் எல்லாம் பார்க்கும் படி – கருப்பு நாய்-இரவில் தான் போகிறான்-
கரு உண்ட நாய்-வெளுப்பு நாய் இருந்தால் தெரிந்து இருக்கும் -திரு நாரணன் தாள் பெற காலம் பெற சிந்தித்து இருமினோ–
தனம் மதியம் தவம் பாத பங்கஜம்-ஆளவந்தார்-பீமன்-ஹனுமான் வாலை நகற்ற முடியவில்லை தோஷம் இன்றி பெருமாள் உம் இடம் இருப்பதால்–
அல்ப அஸ்திரம் விட்டு விட்டு அவனை பற்ற– மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்–மின்னல் -ஐந்து வினாடி-சொல்லலாம்-
உயிர் பிரியும் நாள் சொல்ல முடியாதே -வாழ்ந்தார்கள் வாழ்ந்து மொக் குழில்-நீர் குமிழி- புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் பொழுது அறிய மாட்டீர் —
எடுக்க எடுக்க குறையும் இந்த ஐஸ்வர்யம்–அவனை கொடுக்க கொடுக்க வளரும்–
பயின்றது அரங்கம் திருகோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேம்கடமே பன்னாள் பயின்றது
அணி திகழும் அஓலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக் கை மால்–46
தபஸ் பண்ணின இடம்-மணி திகழும்-அழகு/மாலே மணிவண்ணா -நீர் ஓட்டம் தெரியும்–வண் தடக் கை ஒவ்தார்யம்-
மால்-வியாமோகம்–அழகை கொடுக்கிறான் எனக்கு–கொடுக்க தபஸ் பண்ணுகிறான்-பயின்றது -அப்யாசம்–பண்ணினான்-
எங்கு எல்லாம்–திரு அரங்கம்-சயனித்து -திரு கோட்டியூர்- இங்கும்- போறாது தாயார் சொல்ல -அப்புறம் திரு வேங்கடம்–
ஒரே இடத்தில் நின்று பண்ணினால் பலன் இல்லை தாயார் சொல்ல -திரு நீர் மலை- நின்றது இருந்தது கிடந்தது நடந்தது எல்லாம் இருக்கும் நீர் மலை—
சொன்னது நான்கு- அனைத்துக்கும் உப லஷணம்–மணி திகழும் மால் -இங்கு மாலே மணி வண்ணா -அப்யாசம் —
கோட்டிபுரம்-தேவர்கள் சேர்ந்த இடம்-கண்ணன் அவதரிக்க- வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்-
கூடி ஆலோசனை -மூல காரணம் இங்கு தானே– மாதவ பெருமாள்- பல நாள் பயின்றானாம்–முதல் ஜன்மாவில் பக்தி இல்லை- –
பக்குவம் ஆவதற்கு–சரணமாகும் தனது தாள் அடைந்தவர்க்கு எல்லாம்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–மாறி மாறி பல பிறப்பும் பிறந்து —
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிறியாது
பூம் கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேம்கடமே யாம் விரும்பும் வெற்பு–53
நெறியார் -வழியில் இருப்பவர்கள் குழல் கற்றை—சின்ன மலை என்று எண்ணி–பூம் கொடிகள் வளர -குன்று-அந்த நிலை வேண்டும்–
நெறியாய் கிடக்கும் -அனைய ஊற -பெரு மக்களும் ஆதரிப்பார்கள்–
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் –அனந்தாழ்வான் கட்டு பிரசாதம் எறும்பு -எந்த நித்யரோ என்று மீண்டும் ஏறி விட்டாரே–
வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்ப்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்
திளம் கோயில் கை விடேல் என்று -54
தயா சதகம் -தயாம்போதி கருணை கடல் ஸ்ரீநிவாசன்–அதில் இருந்து ஓடும் தயை –பெரிய ஏரியில் இருந்து வரும் –தாப த்ர்யத்தால்–
மடைகள் போல குரு பரம்பரை -மாதா பிதா யுவதி–குல பதி வகுளாபிராமம்-குளிர்ந்தவர்-சம்பந்தத்தால்
அணி புதுவை -தண் தெரியல் பட்டர் பிரான்-குளிர்ந்த -வாசுதேவன் கதை கேட்டாலும் தாப த்ரயம் போகுமே-நிர்பயம்-மதகில் தீர்த்தம் —
லஷ்மி நாதன் -கடல்-ஜலதி மேகம் ஆழ்வார்-நாத முனிகள் மலையில் பொழிய- அறிவி-உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி காட்டாறு-ஆளவந்தார்-
ஐந்து ஆச்சார்யர்–ஆறுகள்- ராமானுஜர் -ஏரி- 74மதகுகள் மூலம் நமக்கு -சிம்காசனாபதிகள்–ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் என்ற நெல்-
பரவாசுதேவனே சர்வம்-எங்கும் உளன் கண்ணன் என்று சொல்ல தான்–உப்பு கரிப்பு மாற்றி -ச்வாதந்த்ர்யம்-செருக்கு —
வைகாசி விசாகம் ஐந்தாம் நாள் ஒன்பது கருட சேவை தந்த குரிசில் மதுரகவி ஆழ்வார் ஹம்ச வாகனம் ஆழ்வார்–
நடை அழகு அனுஷ்டானம்-ஜலம்-ஷீரம் பிரித்து கொடுப்பார்–
பாலாலயம் –இளம் கோயில்–சக்தியை குடத்தில் ஆவாகனம் பண்ணி–பால ஆலயம்–ஆழ்வார் திரு உள்ளம் மகா ஆலயம்–
திரு வேம்கடம் போல்வன இளம் கோயில்–தென்னன் உயர் பொற்பும் -வட வேம்கடமும் -இரண்டும் முலை போல -பரம ஸ்வாமி-
சுந்தர தோள் உடையான்–உளம் கோயில்- உள்ளம் ஆகிய கோயில்- ஹிருதயம் ஆயதனம் மகத்–உள்ளினேன்–கேட்க்காமலே வந்தாய்–
வந்த பின் தடுக்காமல்-இருந்தார்-இளம் கோயில் கை விடாதே–திரு மால் இரும் சோலை மலையே- போன்ற திவ்ய தேசங்களில் —
இவன் சரீரம் ஏக தேசங்களில் பண்ணும் –ஊழி முதல்வன் ஒரு மா நொடி பொழுதும் பிரியான்-
திரு மால் இரும் சோலை மலையே திரு பாற் கடலே என் தலையே –இரண்டையும் சேர்த்தால் தான் ஆழ்வார் தலை–
துர்யோதனன்-விதுரன் -பீஷ்ம துரோணர் மாம் ஒருத்தனையும் விட்டாய் கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷா –
திரு மால் வைகுந்தமே தண் திரு வேம்கடமே என் உடலே–பணிவின் பூர்தியால் ஆழ்வார்-
ஆழ்வாரின் சரீரம் கூட ஒரு மா நொடியும் விடான்-த்யாஜ்ய தேக வியாமோகம்–அழுக்கு உடம்பும்–மங்க ஒட்டு உம் மா மாயை–
ஞானம் பக்தி வைராக்கியம்மூன்றும் விளைந்த சரீரம் என்று — -ஞானியை விக்ரகத்தோடு ஆதரிக்கும் வேர் சூடுவார் மண்ணோடு கொள்வார் போல –
அருள் தருவான் அமைகின்றான் அது நமதுவிதி வகையே–அங்குத்தை வாசம் சாதனம் ..இங்குத்தை வாசம் சாத்தியம்–
திரு கடி தானம்-சாத்திய -க்ருதக்ஜா கந்தம் தாய பத்தியில்- செய் நன்றி -ஏறி வந்த ஏணி உதையாமல்- திரு கடி தானமும் என் சிந்தையும் —
அங்கு நின்று இங்கு வந்தானே -தபசும் பலமும் -கல்லும் கனை கடலும் வைகுண்ட வா நாடும் புல் என்று ஒழிந்தன கோல்–
பனி கடலில்பள்ளி கோளை பழக விட்டு –மன கடலில் வாழ வந்தே மாய மணாளா நம்பி -தனி கடலே தனி சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே–வாத்சல்யம்–விச்வச்ய ஆயதனம் மகத்–
அரவிந்த பாவையினோடும் தானும் அரவத் அமளி யினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை—-நெஞ்சினொடும் புள்ளை கடாகின்ற ஓசை-
போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டு ஏத்தும் போது உள்ளம் போது
மணி வேம்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேம்கடவன் பேர் ஆய்ந்து–72-
குரங்குகளுக்கு –சுனை புக்கு-குளித்து -புஷ்பங்களை -முக் கரணங்களால்-எத்துகின்றனவாம்–வாதத்மஜம்–
காலையில் ராஷசிகள் பார்த்து ஹரி- சொல்ல-வால்மீகி- பாகவத சரத்தை எப்படி வந்தது–பிரம முகூர்த்தம் அறிந்து -வானரங்கள் எழுந்து –
ஸ்வாமி புஷ்கரணி ரமயா –மோதே-அலர்மேல் மங்கை தாயார் உடன் சேர்த்தியில்-ஆனந்தம் -மோத-பிரமோத- —
ஆங்கு- இடத்துக்கு சொல்–மொட்டு விட்டு /நேற்று அலர்ந்தவை விட்டு/ அப் பொழுதே அலர்ந்த புஷ்பம்//
அந்த இடத்திலே- முதலை இருக்காதே திவ்ய தேசம்- ஆங்கு இருக்கிற புஷ்பம்-இது-திரு வேம்கட சம்பந்தம் உண்டே–
மனசால் நினைந்து கையால் புஷ்பம் பாரித்து வாயால் பாடி- உள்ளமே -போது-நினைப்பாய் வேம்கடவன் பேர் ஆய்ந்து -திரு நாமம் சொல்லி/
அணி வேம்கடம்- ஜகத்துக்கு ரத்ன ஹாரம் வேங்கடவனுக்குபோது அணி- புஷ்பம் ஆபரணமாக -இது செய்தாலும் வானரம் போல் தான்
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இருகண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–75
நீல மேக சியாமளன்–ஆண் யானை பெண் யானை ஊடல்–பிடிக்கு கோபம்–சமாதானம் -மத வேழம் -உந்து மத களிற்றன்–
முன் நின்று–திரும்ப- இதுவும் திரும்பி முன் நின்று–கெஞ்சும் கண் காட்டி கொண்டு–
தத் இங்கித பராதீனம் பிராட்டி புருவ நெறிப்பை எதிர் பார்த்து அவன் இருப்பது போல–இது தான் பிரமாணம் –ஆச்சார்யர் முன் சிஷ்யன் நிற்கிறார் போல–
மட்டை அடி பிரணய கலகம் உத்சவம் –உலகம் ஏத்தும் தென் ஆனாய்–நான்கு யானைகள்–இரு-இரண்டு கண் -இள மூங்கில் –முற்றின மூங்கில் இல்லை–
வாங்கி-பறித்து உடைத்து இல்லை–புஷ்பம் பறிப்பது போல–அருகு இருந்த தேன்–கோபத்தால் பசை அற்று வறண்டு இருக்கும் -தேன் கலந்து –நீட்டும் —
வாயில் பிழிந்து கரும்பு ரசமும் தேன் ரசமும் சேர்ந்து கொடுக்கிறதாம் -பெரும் தமிழர் அல்லேன்- முன் பாசுரம்-கற்பனை சக்தியால் சொல்லி காட்டுகிறார்–
ராமாநுச முனி வேழம்-வலி மிக்க சீயம்–ஞான பக்தி வைராக்கியம்-மூன்று மத ஜலம்– பெண் யானை- சிஷ்யர்கள்–இரு கண் —
துவய மகா மந்த்ரம்–திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் -வாங்கி–நீட்டும்- புரியும் படி உபதேசித்தார்–பங்குனி உத்தரம் ஊடலும் கத்ய த்ரயமும் சேர்த்து அருளுகிறார்
——————————-
25-26-27-28-33-45-46-53-54-72-75-ஆக -11-பாசுரங்கள்
சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25-
உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply