Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ திருக் கச்சி நம்பி –18-படிகள் / ஸ்ரீ எம்பார் /ஸ்ரீ முதலி யாண்டான் – ஸ்ரீ ஸூ க்திகள்-உபதேச முத்துக்கள் –

June 2, 2015

ஸ்ரீ திருக்கச்சி  நம்பி -18 படிக்கட்டுகள் –

1-சம்சாரம் பீஜம்  நசிக்க வேண்டும்
2-அஹங்காரம் மமகாரம் தொலைந்து
3-தேகாத்ம அபிமானம் தொலைந்து
4-ஆத்ம ஞானம் பிறந்து
5-ஐஸ்வர்ய போகாதி உபேஷை பிறந்து
6- பகவத் ப்ரேமம் பிறந்து
7-விஷயாந்தரம் ருசி ஒழிந்து
8-பாரதந்த்ர்யம் ஞானம் பிறந்து
9-ராக த்வேஷாதிகள்  தொலைந்து
10-ஸ்ரீ வைஷ்ணவம்  பிறந்ததும் –
11-சாத்விக பரிக்ரகம் -ரஜோ தமோ குணம் ஜெயித்து
சாத்விகர் -பகவத் பக்தி உக்கும் சோறு அனைத்தும் கண்ணன்
12–பாகவத் பரிக்ரகம்
13-பகவத் பரிக்ரகம் -இப்பொழுது தான் கண் வைத்து கடாஷித்து
14-அநந்ய பிரயோஜனர்   -ஆக்கி அருளுகிறான் –
15-அனன்யார்க சேஷ பூதன் ஆக வேண்டும் -ஆண்டான் அடிமை -அதுவே பிரயோஜனம் அறிந்து –
ஆத்மா ஸ்வரூபம் சேஷத்வம்
பரகத அதிசய -அவன் சிரிப்பே
16-அநந்ய சரண்யன் ஆகி -அவனை பற்றி
திரு மந்த்ரார்தம் அறிந்து
அனன்யார்க சேஷ பூதன்
அவன் திருவடிகளே உபாயம்
அவனே பிரயோஜனம்
ஒழிவில் காலம்
17-அதிகாரி யோக்கியம் -பிறக்கும் -தகுதி திரு மந்த்ரம் பெற யோக்யதை
18–அதிகாரி புருஷனுக்கு திரு மந்த்ரம் கை கூடும் வேதத்தின் சுருக்காய்
வியாதி துர்பிஷை பஞ்சம் இல்லாமல்

————————————————————————————————-

ஸ்ரீ எம்பெருமானார்
அவரை காத்துக் கொடுத்த கோவிந்தர் -எம்பெருமானார் -எம்பார்
உள்ளம் கை நாயனார்
வித்த மாட்டுக்கு புல்லிடுவார் இல்லை –

பதச்சாயா
தண்டம்
பவித்ரம்
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுககர்களே-பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்கள்

உய்ய ஒரே வழி உடையவர் பாதங்களே-

1-சரீர அவதானத்திலே மோஷம்
2-அதுவும் அவனாலே பேறு என்று இருக்கை
3-தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து
4-சகவாசம் வருந்தியும் தவிர்ந்து
5-திவ்ய தேச பிரவணராய் கைங்கர்யம்
6-அனுகூல சங்கல்பம்
7-பகவத பாகவத  அசஹ்யா அபச்சாரம் தவிர்ந்து
8-இருக்கும் நாள் ஆழ்வார் அருளிச் செயல் அனுபவம் – சகவாசம்
9-ஆசார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருக்கை
10-ஆச்சார்ய கைங்கர்யம் செய்த  நாள் உகந்து இழந்த நாள்களுக்கு வருந்தி கால ஷேபம் செய்து இருக்கை

முதல் வார்த்தை —
எம்பெருமான் அருளையே நோக்கி இருக்க வேண்டும்
—பேற்றுக்கு துவரிக்கவும் வேணும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –திருவாய் -8–5–2-/–
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய் –7–2–1-/
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய் -4–7–10-

இரண்டாம் வார்த்தை –
அப் பேறும் அவனாலே என்று இருக்க வேணும்
-அதாவது
-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் –5–8–3-
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –பெரியாழ்வார் –3–3-
யானே நீ என் உடைமையும் நீயே –திருவாய் -2–9–7-
இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால்– திருவிருத்தம் –62-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு ஒன்றையே நினைந்து தேவதாந்த்ர பஜனம் இல்லாமல் –

மறந்தும் புறம் தொழா மாந்தர்–நான்முகன் -68-
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளின் கீழ் வாழ்ச்சி –திருவாய் -3–2–1-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலா மகள் போல் –பெருமாள் -5-2-

நான்காம் வார்த்தை –
தேவதாந்த்ர பஜனம் செய்பவர் ஸஹவாசம் வருந்தியும் கை விடுதல்

எண்ணாதே இருப்பாரை இமைப் பொழுதும் எண்ணோமே –பெரிய திரு -2- 6-1-
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே –பெரிய திரு -11-6–7-

ஐந்தாம் வார்த்தை –
உகந்து அருளினை திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து கைங்கர்யம் செய்வது

நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் –நாச் -11–5-
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே –பெருமாள் -4–10-

ஆறாம் வார்த்தை –
அனுகூல்ய சங்கல்பனாய் இருக்கை -சர்வ ரக்ஷகன் தன் பேறாக

நிர்ஹேதுகமாக ரஷிப்பான் என்கிற திட விசுவாசம் உடையவனாய் இருக்கை

ஏழாம் வார்த்தை –
ப்ராதிகூல்ய வர்ஜனம் -பகவத் அபசாரம் பாகவத அபசாரம் அஸஹ்ய அபசாரம்-காம க்ரோதம் –
அகங்கார மமகாரங்கள் இல்லாமல் இருக்கை –

எட்டாம் வார்த்தை –
அருளிச் செயல்களின் ஈரச் சொற்களை சதா அனுசந்தித்து நெஞ்சம் நெகிழ்க்கை

ஓவாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளும் –சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் தத்துறுமாகில் அவை எனக்கு பட்டினி நாளே –என்றும்
உன்னை வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது-நான்முகன் -63-

ஒன்பதாம் வார்த்தை –
அருளிச் செயல்களில் பிரவணராய் இருப்பாரோடு ஸஹவாசம் செய்கை

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்
தொண்டீர் எல்லோரும் வாரீர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ /
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலோமே-

பத்தாம் வார்த்தை –
ஆச்சார்யர் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வான் போலேயும்-எச்சான் பருத்தி கொல்லை அம்மாள் என்ற

அடியவரை அநாதரித்ததால் உடையவர் உதாசீனப் படுத்த தவறை உணர்ந்து திருந்தினானே –
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருக்கை –

———————————————————————————————–

ஸ்ரீ முதலி யாண்டான் -வார்த்தைகள்
1-சீதை பிராட்டி இளைய பெருமாள் மேல் சொல்லிய வார்த்தையால் பட்ட பிரிவை நினைப்பது –
பாகவத அபசாரம் கூடாதே காட்டி அருளி
பாகவதர் காலிலே விழுந்து போக்கி கொள்ள -அம்பரீஷன் வ்ருத்தாந்தம்
பாகவத அபசாரம் பொறாமையாலே ஆனைத் தொழில்கள்
விளைந்த சீற்றம் விண் வெதும்ப
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு-
ஸ்ரீ நர சிம்ஹம் -ஸ்ரீ ராகவ சிம்ஹம் -ஸ்ரீ கேசவ சிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்தர  சிம்ஹம் –
திருப்பாண் ஆழ்வார் –தத் விஷயம் -ததீய விஷயத்தில் பண்ணும் அபசாரம் திரு வடியில் நினைவை அகற்ற வைக்கும்

2-பிராட்டிக்கு அசோக வனம் போலே பிரகிருதி சம்பந்தமான தேகம்

3-பிராட்டிக்கு தந்த -மூலாதிகள் -தர்ஜன பந்தநாதிகள் –ராஷசிகள் கொடுத்தால் -போலே
நமக்கு புத்திர பித்ராதிகள்-
அல்லிக் கமலக் கண்ணனை –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே-கொண்ட பெண்டிர் -திரிஜடை நல்லவள் உண்டே

4-பிராட்டிக்கு மாரீச தர்சனம் போலே இவனுக்கு விஷய தர்சனம்
சிறிய அபசாரம் இது -பகவத் அபசாரம்
அம்மான் இருக்க அம்மானைக் கேட்டாளே

5-பிராட்டி திருவடியைக் கண்டது போலே இவனுக்கு ஆச்சார்ய சம்பந்தம்-
தேசிகன் -உப்புக்கடல் -சம்சார கடல்/ராவணன் -மனஸ்/பத்து தலை -கர்ம ஞான இந்த்ரியங்கள்/
மறந்த உறவை சம்பந்தம் நினைவு காட்டி -வியாபாரி பிள்ளை கதை
அவ்வானவர் மவ்வானவர் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார்

6-பிராட்டிக்கு திருவடி ஸ்ரீ ராம குணங்கள் காட்டியது போல்
ஸ்ரீ இராமாயண புராண ரத்னங்கள் அருளிச் செயல் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ கதிகள் காட்டி அருளுவார் –
புராண ரத்னம் விஷ்ணு புராணம்

7-ஸ்ரீ முத்தரை கணை யாழி கொடுத்து காட்டியது போலே –
ஆச்சார்யர் சங்க சக்கர லாஞ்சனம்-

வரவு சொல்லி -அருணோதயம் சூர்யோதயம் -யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
74 சிம்ஹாதிபதிகள்
வேத கால பழக்கம் -வரை முறை செய்து ஸ்தாபித்து அருளினார்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறியில் இட்டு -பெரியாழ்வார்

8-எட்டு எழுத்து மந்த்ரம் -சூடா மணி -பல சிஷ்யர்களுக்கு உபதேசித்து
மந்திர ராஜா

9-பிராட்டிக்கு -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மகளார் திரிஜடை போலே
பாகவத சஹாவாசம் போலே -சொத்து ஸ்வாமி அடைய நினைப்பவர்

அந்தமில் பேரின்பத்து அடியவர்
மெய்யடியார் ஈட்டம் கண்டிடக் கூடல்
சம்சார விஜ வருஷம் பகவன் பக்தி பாகவத பக்தி
கேசவ பக்தி இரண்டாம் பஷம் எம்பெருமானார்
போதயந்த பரஸ்பரம் துஷ்யந்த ச ரமஸ்ய-மத் சித்த மத் கத பிராண
அரங்கன் கோயில் –சேறு

10-பிராட்டிக்கு விரோதி ராவண கும்ப கர்ணாதிகள்  முடித்து சேர்த்து அருளியது போலே-
நம்மையும் பிறவி முடித்து தாள் இணையில் சேர்த்து அருளுவான்-

தேவதாந்திர  -பஜனம் தவிர்த்து
மந்த்ராந்தரங்களை மாற்றி –
பிரகிருதி சம்பந்த்தம் தொலைத்து –
உடையவன் இச் சேதனனை  திருத்தி பணி கொண்டு
நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாக நித்ய அனுபவம் செய்யும்படி அருளுகிறான் -பக்தி உழவன் -அஹம் அன்னம்

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த- -ஸ்ரீ மாணிக்க மாலை –

March 4, 2015

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

(யாமுனரின் மகனும், எம்பெருமானின் கடாக்ஷம் எம்பெருமானின் அருளை மிக எளிதாக நம் மீது விழச் செய்யும் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

அவருடைய தாமரை பாதங்களில் பணிந்து, நமது சம்பிரதாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை என்றும் நினைவு கூர்வோம்.)

(திரு நக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி
அவதார ஸ்தலம் : சங்கநல்லுர் (செங்கனூர்).
ஆச்சார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்: நாயன்அரசன் பிள்ளை , வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் , பரகால தாசர்,
செங்கனூரில் யாமுனரின் மகனாக கிருஷ்ணனாகப் பிறந்த அவர், பெரியவாச்சன் பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். அவர் நம்பிள்ளையின் முதன்மையான சிஷ்யர்களில் ஒருவரான இவர் , நம்பிள்ளையிடமிருந்தே அனைத்து சாஸ்திர அர்த்தங்களையும் கற்றவர் . நம்பிள்ளையின் அருளால் பெரியவாச்சன் பிள்ளை நம் சம்பிரதாயத்தில் ஆச்சாரியர் ஆனார்.
பெரியவாச்சன் பிள்ளை – நம்பிள்ளை
பெரிய திருமொழி 7.10.10 ல் அடையாளம் காணப்பட்டபடி, அனைத்துப் பொருளையும் கற்க எம்பெருமானார் அர்த்தத்தை எடுத்துக் கொண்டார். அருளிச்செயல். அவர் வியாக்கியான சக்கரவர்த்தி, அபய பிரதா ராஜா, முதலிய பெயர்களிலும் அறியப்படுகிறார். அவர் நாயன் அரசன் பிள்ளையை தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.
அவரது வாழ்நாளில், அவர் வியாக்கியானம் செய்துள்ளார்:
4000 திவ்ய பிரபந்தம் – அருளிச்செயல் அனைவருக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார். பெரியாழ்வார் திருமொழிக்கு ஏறத்தாழ 400 பாசுரங்களுக்கான வியாக்கியானம் தொலைந்து போனது, காணாமல் போன பாசுர வியாக்கியானங்களை மாமுனிகள் தான் எழுதினார்.
ஸ்தோத்ர கிரந்தங்கள் – ஸ்தோத்திர ரத்னம், சதுஸ் ஸ்லோகீ, கத்ய த்ரயம் போன்ற பூர்வாச்சார்ய ஸ்ரீஉக்திகளுக்காக வியாக்கியானங்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீ ராமாயணம் – அவர் ஸ்ரீ ராமாயணத்திலிருந்து முக்கியமான ஸ்லோகங்களைத் தேர்ந்தெடுத்து, ராமாயண தனி ஸ்லோகத்தில் உள்ளவர்களுக்கு விரிவான விளக்கத்தை எழுதியுள்ளார். விபீஷண சரணஅகதி அத்தியாயத்தின் தலைசிறந்த விளக்கத்திற்காக அவர் அபய பிரதா ராஜர் என்று அழைக்கப்பட்டார்.
மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், சகல பிரமனா தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய கிரந்தங்களையும் அவர் எழுதியுள்ளார், இது ரஹஸ்ய த்ரயத்தை சிறந்த முறையில் விளக்குகிறது. அவர் ரஹஸ்ய த்ரயத்தை ஆவணப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார் – பிள்ளை லோகாசார்யர் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் போதனைகளின் சாரத்தை எடுத்துக் கொண்டு தனது அஷ்டாதஸ ரஹஸ்ய கிரந்தங்களை எழுதினார்.
அருளிச்செயல் மற்றும் ஸ்ரீ ராமாயணம் ஆகியவற்றில் அவரது நிபுணத்துவத்தை பாசுரப்படி ராமாயணம் எனப்படும் அவரது கிரந்தம் மூலம் புரிந்து கொள்ள முடியும், அங்கு அவர் ஸ்ரீ ராமாயணம் முழுவதையும் மிருதுவான முறையில் விளக்குவதற்கு அருளிச் செயலிலிருந்து சொற்களைப் பயன்படுத்துகிறார்.

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரிடம் நடந்த சம்பவத்திலிருந்தும் அவருடைய அருளின் ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம் . ஜீயர், தனது பூர்வாஸ்ரமத்தில் பெரியவாச்சான் பிள்ளையின் திருமாளிகையின் திருமடப்பள்ளியில் (சமையலறையில்) சேவை செய்து வந்தார். அவர் ஒரு படிப்பறிவில்லாதவர், ஆனால் தனது ஆச்சார்யன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை ஸ்ரீவைஷ்ணவர்கள் சில வேதாந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டபோது, ​​அவர் அவர்களிடம் விவாதத்தின் தலைப்பைக் கேட்டார். அவர்கள் திமிர்பிடித்தவர்களாகவும், அவரைப் படிப்பறிவில்லாதவராகக் கருதியும், “முசல கிசலயம்” (புதிதாக மலர்ந்த பூண்டு) என்ற கிரந்தத்தைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினர். அவர் தனது ஆச்சாரியரிடம் சென்று இதைக் குறிப்பிட்டார் மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் அருளால் அவருக்கு எல்லாவற்றையும் கற்பிக்க முடிவு செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அனைத்து சாஸ்திரங்களிலும் மாஸ்டர் ஆனார் மற்றும் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஆனார் மற்றும் எங்கள் சம்பிரதாயத்தில் பல கிரந்தங்களை எழுதுகிறார்.

பெரிய பெருமாள் , பெரிய பிராட்டி , பெரிய திருவடி, பெரியாழ்வார் , பெரிய கோவில் போன்றே , ஆச்சான் பிள்ளையும் தன் பெருமையால் பெரியவாச்சான் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதும்படி பெரியவாச்சன் பிள்ளைக்கு நம்பிள்ளை தன் அருளால் கட்டளையிடுகிறார். அதை மனதில் கொண்டு, அனைத்து வேதங்களின் சாரமான நம்மாழ்வாரின் திருவாழிமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை மிகவும் சுவாரஸ்யமாக வர்ணனையை எழுதினார். வர்ணனை ஸ்ரீ ராமாயணத்தைப் போலவே எழுதப்பட்டது, அதாவது, 24000 படிகளைக் கொண்டது (ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள 24000 ஸ்லோகங்களைப் போன்றது)..

அவரது வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்கள் வர்த மலை கிரந்தம் மற்றும் பிற பூர்வாச்சார்ய கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலவற்றை இங்கே பார்ப்போம்:

பட்டர் அஷ்ட ஸ்லோகீ
இவர் தமிழில் பல ரஹஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளார்
தற்போது 8 மட்டுமே கிடைக்கின்றன

1-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்
2-ஸ்ரீ மாணிக்க மாலை
3-ஸ்ரீ சகல பிரமாண தாத்பர்யம்
4-ஸ்ரீ உபகார ஸ்ம்ருதி
5-ஸ்ரீ நிகமநப்படி
6-ஸ்ரீ ரஹஸ்ய த்ரய விவரணம்
7-ஸ்ரீ ரஹஸ்ய த்ரய தீபிகை
8-ஸ்ரீ கலியன் அருள் பாடு)

தைவாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தன் மந்தரம் ப்ராஹ்மணாதீனம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம் —என்கிறபடியே
உபய விபூதியும் ஸ்ரீ ஈஸ்வரன் இட்ட வழக்காய் இருக்கும் –
ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்ரீ திரு மந்தரம் இட்ட வழக்காய் இருக்கும் –
ஸ்ரீ திரு மந்த்ரம் ஸ்ரீ ஆச்சார்யன் இட்ட வழக்காய் இருக்கும் –

(மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரௌ |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதம ஸாதநம் ||
மந்த்ரத்திலும்
மந்த்ர ப்ரதானான ஆச்சார்யர் பக்கலிலும்
மந்த ப்ரதிபாத்யனான ஈஸ்வரன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க இருந்தால் கார்யகரம் ஆகும்)

ஆகையாலே உபய விபூதிக்கும் நிர்வாஹகனான ஸ்ரீ ஈஸ்வரனும் அவனை பிரதிபாதிக்கிற ஸ்ரீ திரு மந்த்ரமும்
ஸ்ரீ ஆச்சார்யன் இட்ட வழக்காகையாலே
ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதி பாதிக்கிற ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் ஸ்ரீ ஆசார்யனாலே என்னத் தட்டில்லை –

(இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே)

(அதமோ தேவதா பக்தோ மந்த்ர பக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குரு பக்தோத்த மோத்தம: ||)

(இது முதல் மாணிக்கம்
இதே போல் பல மாணிக்கங்கள் சேர்த்து அருளிச் செய்த கிரந்தம் இது)

———-

ஸ்ரீ ஆச்சார்யன் ஆவான் –
ஆச்சார்யோ வேத சம்பந்தோ விஷ்ணு பக்தோ விமத்சர -மந்த்ரஜ்ஞோ மந்திர பக்தஸ் ஸ சதா மந்திர ஆஸ்ரயஸ் ஸூசி -என்றும்(ஞானமும் அறிவும் ப்ரேமமும் பக்தியும் வேண்டுமே)
குரு பக்தி சமா யுக்த புராணஜ்ஞோ  விசேஷத-ஏவம் லஷண சம்பந்னோ- குருரித்யபி தீயதே -என்றும் சொல்லுகிறபடியே
வைதிக அக்ரேசரனாய்-ஸ்ரீ பகவத் பக்தி யுக்தனாய் -மாத்சர்ய வியுக்தனாய் -சகல வேத சார பூதமாய்
சகல மந்த்ரங்களுக்கும்  காரணமாய் -இரண்டு பங்குக்கு ஒரு கை யோலை போலே
ஸ்ரீ எம்பெருமானோடு இவ் வாத்மாவுக்கு யுண்டான அவிநாபூத  சம்பந்தத்தைக் காட்டக் கடவதாய்-
முமுஷூவுக்கு எய்ப்பினில் வைப்பான- ஸ்ரீ திரு மந்த்ரத்தை பக்தி ஸ்ரத்தைகளோடே அர்த்த சஹிதமாய் அனுசந்தித்துப் பெரிய மதிப்பனாய்
அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய் இருப்பான் ஒருவன் ஸ்ரீ ஆசார்யனாகக் கடவன் –

(அவிநாபூத  சம்பந்தத்தை-அப்ருதக் ஸித்தம் –
நான் உன்னை அன்றி இலேன் -நீயும் என்னை அன்றி இல்லையே –
உறவேல் ஒழிக்க முடியாதே -சர்வ சக்தனாலும் ஸம்பந்தம் இல்லை என்று அறுக்க முடியாதே -குடல் துவக்கு உண்டே)

(ஆச்சார்யர் திருவடிகளே ரக்ஷை -வெள்ளம் கடந்த கதை
என் திருவடிகளே சரணம் சொல்லி ஆச்சார்யர் அகப்படுத்திக் கொண்ட வ்ருத்தாந்த்தம்
தனது ஆச்சார்யர் திருவடிகளே ரக்ஷை இருக்க வேண்டுமே-ஞான ஸ்ருதி ரகு குணன் கதை
இரண்டு பறவைகள் சொல்லி அறிந்தான்-ரைக்குவாரோ -பறவை சொல்லி வந்தாயா-ஸ்ரத்தை கொடுத்து ஞானம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறியாமல்-)

அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய் இருப்பான் ஒருவன் ஸ்ரீ ஆசார்யனாகக் கடவன் -ஸம்ஸாரத்திலே இருந்து உபதேசித்து கால க்ஷேபம் -பற்று இல்லாமல் -மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்திலே

இது இரண்டாவது மாணிக்கம்)

———–

ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே சீறி அருளினார் என்று கேட்டு –
இவ் வாத்மா அவருக்கே சேஷமாய் இருந்ததாகில் அவருடைய இஷ்ட விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –

தன்னை ஆஸ்ரயித்து வைத்துத் தன் திறத்திலே தீங்கு நினைத்து த்ரோஹியான நாலூரானை
ஸ்ரீ பெருமாள் – ந ஷமாமி –என்று முனிந்து அருள –
ஸ்ரீ பெருமாளோடு எதிரிட்டு -அவன் நான் பெற்ற லோகம் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்தார் –

ஆக -இவ்விரண்டு அர்த்தத்தாலும் சிஷ்ய ஆச்சார்ய கிரமத்துக்கு சீமா பூமி ஸ்ரீ கூரத்  ஆழ்வான்  -என்று
அருளிச் செய்வர் -ஸ்ரீ வடுக நம்பி –

ஆச்சர்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது ஸ்ரீ எம்பெருமானாருக்கே யாயிற்று –
ஆகையால் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று விஸ்வசித்து இருங்கோள் -என்றாயிற்று –
தம்முடைய சிஷ்யர்களுக்கு அருளிச் செய்வது –

(இது மூன்றாவது மாணிக்கம்

மேல் சிஷ்யர்களைப் பற்றி அருளிச் செய்கிறார்)

———-

நல்லடிக் காலத்தில் நம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் அதிகாரிகளைப் பெற்றால் அல்லது ஸ்ரீ பகவத் சம்பந்தம்
இருக்கும்படி சொல்லக் கடவதாய் இராது –

அதிகாரிகள் ஆவார் –
கருந் தரையிலே தாங்கள் நின்ற நிலையை அனுசந்தித்து இந் நின்ற நீர்மை யினி யாமுறாமை -என்றும்
இன்னொரு நாளை என்றே எத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன்-என்றும்
ஏஹி பஸ்ய சரீராணி  -என்றும் –
இன்னம் கெடுப்பாயோ -என்றும் –
இவை என்ன யுலகு இயற்கை -என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது-என்றும்
நாட்டாரோடு  இயல் ஒழிந்து -என்றும் –
ஒ ஒ உலகினது இயல்வே -என்றும் –
கூவி -வெருவி -இந் நிலத்தில் பொருந்தாமை தோற்றத் துவண்ட -சேதனனுக்காயிற்று ஸ்ரீ பகவத் சம்பந்தம் சொல்லுவது –

அங்கன் அன்றிக்கே –
வாய்க் கரையிலே பொரி புறம் தடவின ஆனுகூல்யம் கண்டாதல் —
த்யாஜ்யமான அர்த்த காமங்களிலே  நசையாதல் –
நிலை நில்லாத ஒரு பிரபாவத்தை நச்சியாதல் –
ஒன்றாலே வந்ததுவும் துவட்சி யில்லாக் கழனி முண்டர்க்கு ஒரு நல் வார்த்தை சொன்னான் ஆகில்
தன் மதிப்பும் கெட்டு-
தன் கூற்றிலே ஒதுங்கின ஸ்ரீ பகவத் பிராப்தியும் நழுவ விட முடிந்து –
கேட்கிறவனையும் நாஸ்திகன் ஆக்குகிறான் இத்தனை –

(க்யாதி பூஜா லாபம் அபேக்ஷை இல்லாமல் உபதேஸிக்க வேண்டுமே-அவனே உபாயம் விஸ்வாஸம் குறையும்படி மற்ற ஒன்றில் கண் வைப்பவன் நாஸ்திகன் தானே)

(இது நான்காவது மாணிக்கம்)

———

ஸ்ரீ ஆச்சார்ய பேதமும் ஆத்ம பேதத்தோபாதி
பிதாவை -மாதுலனை -மாமனாரை -சாவித்ர் யுபதேசம் பண்ணினவனை -அத்யயனம் பண்ணு வித்தவனை –
ஒரு மந்த்ரம் உபதேசித்தவனை- (திரு மந்த்ரம் தவிர்ந்த மற்ற அனைத்து)ஸ்ரீ பகவன் மந்த்ரம் உபதேசித்தவனை –இப்படி ஆராய்ந்து   பார்த்தால் அநேகராய் இருப்பார்கள் –

(அறியாதன அறிவித்த அத்தா)

இவர்கள் அடைய முமுஷூக்களுக்கு த்யாஜ்யர்கள் -இது என்-
ஸ்ரீ பகவன் மந்த்ரம் உபதேசித்தவனையும் அப்படிச் சொல்லலாமோ -என்னில்
ஸ்ரீ பகவத் அவதாரங்களும்- ஸ்ரீ பகவத் குணங்களும் – எல்லையாய்  என்றும் இருந்து(இறந்து-பரந்து) இருக்கும்
ஸ்ரீ பகவத் அவதாரங்கள் தோறும் -ஸ்ரீ பகவத் குணங்கள் தோறும் -திவ்ய சேஷ்டிதங்கள் தோறும்- ஸ்ரீ திரு மந்த்ரங்களும் உளவாக இருக்கும் –

(பிறப்பில் பல் பிறவிப் பெருமான்-அஜாயமானோ பஹுதா வி ஜாயதே –
கர்ம வஸ்யன் அல்லவே இச்சாதீனம் தானே-குணங்களையோ தோஷங்களையோ எண்ண முடியாதே -இது அவனுக்கும் நமக்கும் ஸாம்யம்)

சம்சாரத்தில் ஸ்த்ரீ புமான்கள் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான ஸ்ரீ கோபால மந்த்ரத்தை உபதேசிப்பாரும்
புத்ர பிரதமான மந்த்ரத்தை உபதேசிப்பாரும் -ஐஸ்வர்யம்- என்ன- ஆரோக்கியம் என்ன -விஜயார்த்தம் என்ன -சத்ரு நிரசனம் என்ன –
இவற்றுக்குத் தக்க மந்த்ரங்களையும் உபதேசிப்பார் எல்லாரும் சம்சாரத்தை அர்த்திப்பார்கள் ஆகையாலே ஸ்ரீ ஆச்சார்யர்களாக மாட்டார்கள் –

(புத்ர பாக்யம் பெற ராம மந்த்ரம்-ஐஸ்வர்யம் பெற கோபால மந்த்ரம்-முமுஷுக்களுக்கு இவை அனைத்துமே த்யாஜ்யம் தானே-நோய்கள் போகும் -கைங்கர்ய தடை களாகிய நோய்கள் போகும் போகும் ஆழ்வார்கள் அருளிச் செய்யும் பலன்கள்-)

இவ் வர்த்தம் ஸ்ரீ திரு மந்த்ரத்தைக் குறித்து அன்று -விநியோகம் கொள்ளுகிற சேதனனுடைய நினைவைப் பற்ற –
விபரீத ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ எம்பெருமான் -நீச ஸ்பர்ஸம் யுடைய மந்த்ரம் -நீச ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ ஆச்சார்யன் –
இவர்கள் அடைய முமுஷூக்களுக்கு த்யாஜ்யர்கள் –

விபரீத ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ எம்பெருமான் ஆவான் -இதர தேவ ஆலயங்களில் இருக்குமவன் –

நீச ஸ்பர்ஸம் யுடைய மந்த்ரமாவது -ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத கைங்கர்ய ப்ராப்திக்கு அவ் வருகு யுண்டான ஆபாசங்களை அடையச் சொல்லுமது –

நீச ஸ்பர்ஸம் யுடைய ஆச்சார்யன் ஆவான் -இதுக்குப் புறம்பு சில சம்சாரத்தில் மினுக்கங்களைத் தோன்றச் சொல்லுமவன் –

————–

இனி ஸ்ரீ ஆச்சார்யன் யார் என்னில் –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதி பந்தகமான ஸ்வ வியாபார நிவ்ருத்தி ரூபமான ப்ரபத்தியை உபதேசிக்கிறவன் ஆச்சார்யன் ஆவான் –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானையே ரஷகன் என்று விஸ்வசித்து நிர்ப் பரனாய் இரும் -என்று அருளிச் செய்யுமவன் –

————–

ஸ்ரீ சதாச்சார்யன் சச் சிஷ்யனை ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவன் என்று மிகவும் ஆதரித்துக் கொண்டு போரும் –

சச் சிஷ்யனும் ஸ்ரீ சதாச்சார்யனுடைய ஆதரத்தைக் கண்டு இறுமாறாதே- தன் கருந்தரையை யுணர்ந்து
ஸ்ரீ பகவத் விமுகனாய் சப்தாதி விஷயங்களில் மண்டி உருமாய்ந்து கை கழிந்து நின்ற என்னை முதலடியிலே
அத்வேஷம் பற்றாசாகக் கொண்டு
தன்னுடைய நிரவதிக கிருபையாலே ரஷித்து அருளின மஹா உபகாரகன் -என்றும்

ஸ்ரீ ஆச்சார்யனாலே இப் பேறு பெற்றேன் என்றும் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் –
உனக்கு என் செய்கேன் -என்றும்

ஸ்ரீ ஆச்சார்யன் பண்ணின மஹா உபகாரத்துக்கு  பிரத் யுபகாரம் தேடிக் காணாமல் தடுமாறி
குருரேவ பரம் ப்ரஹ்ம-குருரேவ பராகதி -குருரேவ பரா வித்யா -குருரேவ பரம் தனம்
குருரேவ பர காம -குருரேவ பராயணம்- யஸ்மாத் தத் உபதேஷ்டாசௌ தஸ்மாத் குரு தரோ குரு-என்கிறபடியே
இஹ பர லோகங்கள் இரண்டும் ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளே என்றும்
திருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டும் அவனே என்றும் நினைத்து இருக்கும் –

(பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)

(பாட்டுக் கேட்க்கும் இடமும் –எல்லாம் வகுத்த இடமே என்று இருக்க வேண்டுமே
அத்ர பரத்ர)

————–

ஸ்ரீ ஆச்சார்யன் சிஷ்யனுடைய ஹிதத்தைச் செய்யுமவன் -சிஷ்யன் ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய பிரியத்தை செய்யுமவன் –

ஸ்ரீ ஆச்சார்யன் சிஷ்யனுடைய ஆத்ம யாத்ரையை தனக்கு தேக யாத்ரையாக நினைத்து இருக்கும் -என்று விஸ்வசித்து இருக்கிறதற்கு மேல் இல்லை –

சிஷ்யனும் அப்படியே ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய தேக யாத்ரையை தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்து இருக்கும்

ஸ்ரீ ஆச்சார்யன் ஆனவன் சிஷ்யனுடைய உயிரை நோக்கும் -சிஷ்யன் ஸ்ரீ ஆச்சார்யனுடைய யுடம்பை நோக்கும் –

(ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் ———65-)

சிஷ்ய வஸ்துவை ஸ்ரீ ஆச்சார்யன் விநியோகம் கொள்ளக் கடவன் அல்லன் —

சிஷ்ய வஸ்துவை விநியோகம் கொள்ளுகிறான் -என்று இருக்கும் ஸ்ரீ ஆச்சார்யனுடைய அறிவையும்  சங்கிக்க அடுக்கும்

(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம்)

சரீரமர்த்தம் ப்ராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் -என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்றும் -சிஷ்யனுக்கு பிரதிபத்தி யாகையாலும்
இந்த ருசியை விளைப்பித்தான் ஸ்ரீ ஆச்சார்யன் ஆகையாலும் -ஸ்ரீ ஆச்சார்யனுக்கும் சிஷ்யனுக்கும் ஒரு நினைவேயாக வேணும் –

(ஆத்ம ஸமர்ப்பணமாவது-சேர பாண்டியன் திருடி எடுத்து மீண்டும் சமர்ப்பித்த விருத்தாந்தம்)

———

ஸ்ரீ ஆச்சார்யன்  பொறைக்கு இலக்கான சிஷ்யனுக்கு பகவத் ஜ்ஞானமே கை வந்தது என்ன ஒண்ணாது –
ஸ்ரீ ஆச்சார்யன் கண் வட்டத்தில் வர்த்திக்கிற சச் சிஷ்யனுக்கும் ஆச்சார்யன் பிரியமே செய்கையாலே கோபத்துக்கு ஹேது இல்லை –
ஆகையால் பொறை குமரிருந்து போம் இத்தனை –
ஸ்ரீ ஆச்சார்யன் அர்த்த காமங்களில் நசை அற்றவன் ஆகையாலே த்யாஜ்யமான அர்த்த காமங்கள்
ஹேதுவாகப் பொறுக்கவும் வெறுக்கவும் ப்ராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தான் ஆகிலும் அதுவும் ப்ராப்ய அந்தர்க் கதமாகக் கடவது –

(இவையே ஸ்ரீ வசன பூஷணத்தில் 309-362 சூர்ணிகைகளில் விவரித்து அருளிச் செய்துள்ளார்)

———–

ஸ்ரீ மட்டியூர் அரங்கத்தானும் ஸ்ரீ மணிகையோசைப் பிள்ளானும் ஸ்ரீ பெற்றியும் -ஸ்ரீ நஞ்சீயருமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து
ஒரு வைஷ்ணவன் ஓர் ஸ்ரீ ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே பகவத் சம்பந்தத்தைப் பண்ணி  வேறு ஓர் ஸ்ரீ ஆச்சார்யன்
ஸ்ரீ பாதத்திலே ஸ்வரூப சிஷையாய்   இருந்து
இருவர் பக்கலிலும் இவன் அனுவர்த்திக்கும் படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –

யாரைத் தான் நீர் விடப் பார்க்கிறீர் -முற்படக் கருந் தரையிலே ஒரு வார்த்தையைச் சொல்லுமவர் –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடிகளையே விஸ்வசித்து நிர்ப்பரனாய் இரும் -என்று அருளிச் செய்யுமவர் –

(நினைக்க நினைக்க -விசுவாசம் பெருக பெருக பயம் -போகுமே
விலக விலக பயம் மிக்கு இருக்குமே)

பின்பு அவனைக் குறித்து ஒரு நல் வார்த்தை சொல்லுமவன் நீர் யார் ஸ்ரீ பாதத்திலே யுடையார் என்று கேட்டு
இவனை ரஷித்த ஸ்ரீ ஆச்சார்யனுக்கு ஒரு பிரியம் செய்தானுமுமாய் –
இவன் ஹிதத்தின் மேல் எல்லை நிலத்தைப் பிடித்து உன் ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளையே விஸ்வசித்து நிர்ப்பரனாய் இரும் –
என்றாயிற்று வார்த்தை சொல்லுவது –

ஆகையாலே இருவரும் உபாதேய தமர் -என்று அருளிச் செய்தார் –

ஏகாஷர ப்ரதாதாரம் ஆச்சார்யம் -யோ வமந்யதே -ஸ்வாந யோநி ஜாதம் ப்ராப்ய சண்டாளேஷ்வபி ஜாயதே -என்னக்  கடவது இறே-

————-

முமுஷூக்களுக்கு மாதா பிதாக்கள் யார் -என்று கேட்க –
சரீரமேவ மாதா பிதரௌ ஜனயாத -என்கிற மாதா பிதக்களும் –
த்வம் மாதா சர்வ லோகாநாம் தேவ தேவோ ஹரி பிதா –பிதா மாதா ச மாதவ -என்று
பொதுவான மாதா பிதாக்களும் இவனுக்கு அன்று அவர்களும் அல்ல –

இனி யார் என்னில் –
ஸ்ரீ திரு மந்த்ரம் மாதாவையும் -பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வர்

இத்தை நினைத்து இறே ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ அனந்தாழ்வான்
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டர் ஆனீர் -என்று வாழ்த்திற்றும் –
உத்பாதக ப்ரஹ்ம பிதரோ கரீயான் ப்ரஹ்மத பிதா  -என்றும் யுண்டு –

(வித்யை தாயாகப் பெற்று இத்யாதி –நாயனார்)

(ஞான பிரதன் ஸ்ரேஷ்டர்
வந்தே கோவிந்த தாதவ்)

———–

முமுஷூக்களுக்கு சம்சாரத்திலே இருக்கும் நாள் உசாத் துணை யார் -பொழுது போம் படி என்-என்று ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ பிள்ளை கேட்க –
முமுஷூ என்று ஒரு ஜாதி அன்று –ஒரு ஆஸ்ரமம் அன்று -மோஷத்தில் இச்சை யுடையவனை முமுஷூ என்றது இத்தனை –
இவனுக்கு உசாத் துணையும்  இவனோடு சேர்ந்து போது போக்கும் உள்ளதும் விரஜைக்கு அக் கரையிலே போனால் இறே-
இவ் விருப்பிலே ஓராசை யுடையவனுக்கு அன்றோ துணை வேண்டுவதும் போது போக்கும் உள்ளதும் –

இருக்கும் நாள் ஸ்ரீ பிராட்டிக்கு இலங்கையிலே உசாத் துணை யுண்டாகில் இவனுக்கும் சம்சாரத்தில் துணை யுண்டு –
அறிவு நடையாடின முமுஷூவுக்கு சம்சாரம் பிராட்டிக்கு இலங்கையோபாதி இறே –
அவளுக்கு ராவணன் அபிமானித்த அசோக வநிகையோபாதி- இவனுக்கு இவ் யுடம்பு
அவளுக்கு மாரீசனுடைய தோற்றரவோபாதி இவனுக்கு விஷய ப்ராவண்யம்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் -என்னக் கடவது இறே –

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

அவளுக்கு ராவணன் தோற்றரவோபாதி இவனுக்கு சம்சாரத்தின் தோற்றரவு –
அவளுக்கு தர்ஜன பர்த்சனாதிகளைப் பண்ணும் ராஷசிகளோபாதி இவனுக்கு புத்ர மித்ராதிகள் –
ஏகாஷி ஏக கர்ணிகைகளோபாதி இவனுக்கு அஹங்கார மமகாரங்கள் –
அவளுக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பெண் மகளும் போலே இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உசாத்  துணையாய் இருக்கும் படி –

அவளுக்கு ஸ்ரீ திருவடி தோற்றரவோபாதி இவனுக்கு ஸ்ரீ ஆசார்யன் தோற்றரவும்  –

அவளுக்குத் திருவடி வர்ஷித்த ஸ்ரீ ராம குணங்களோ பாதி இவனுக்கு ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ அருளிச் செயல்களும் –
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மஹா பாரதாதி ஸ்ரீ பகவத் கதைகளும் –
அவளுக்கு ஸ்ரீ திருவடி ஸ்ரீ மோதிரத்தோ பாதி இவனுக்கும் ஸ்ரீ ஆசார்யன்  திரு உள்ளமான ஸ்ரீ திரு மந்த்ரம் –

அவளுக்கு ஸ்ரீ திரு வாழி மோதிரம்   சாத்தின மணி விரலை  நினைப்பது -அணைத்த திருத் தோளை நினைப்பது –
அவ் வழியாலே திரு மேனியை முழுக்க நினைப்பதாய்-
இலங்கையிலே தனி இருப்பையும் மதியாதே  ஸ்ரீ பெருமாளோடு ஒரு படுக்கையிலே இருந்தால் போலே

இவன் ஸ்ரீ திரு மந்த்ரத்தில்  பிரதம அஷரத்தில் சொல்லுகிற ரஷகத்வ சேஷத்வங்களை நினைத்து –
அந்த ரஷகத்வ சேஷத்வங்களுக்கு  இடைச் சுவரான  அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிஷேதத்தைப் பண்ணித்  தன்னை  அனந்யார்ஹ சேஷம் ஆக்கின அவதாரணத்தை நினையா –
அவ் வனன்யார்ஹ சேஷ வஸ்துவுக்கு உஜ்ஜீவனம் நிருபாதிக  சேஷியானவனுக்கு கிஞ்சித் கரிக்கை என்கிற
அர்த்தத்தைக் காட்டும் ஸ்ரீ நாராயண பதத்தை நினையா –

இப்படி ஸ்ரீ திரு மந்த்ரத்தில் அர்த்த அனுசந்தானத்தாலே சம்சாரத்தில் இருப்பையும் மதியாதே
பாமரு மூவுலகத்துக்கு உள்ளே தெளிவுற்ற சிந்தையராய் வர்த்திப்பார்கள் –

ஸ்ரீ பிராட்டிக்கு இலங்கையிலே பொழுது போக்கு போலே- முமுஷூவுக்கு சம்சாரத்திலே பொழுது  போக்கு –

———–

சம்சாரிகளைக் காட்டில் முமுஷூவுக்கு வாசி எது போலே என்றால் -இலங்கையில் உள்ளார் தன்னிலமான வாசி தோன்ற
யுண்பார் யுறங்கு வாராய் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு போது போக்காய்
ஸ்ரீ பிராட்டி  -ஊண் உறக்கமும் இன்றிக்கே  பத்துக் கோடி செந்நாய்க்கு நடுவே ஒரு மான் பேடை இருந்தால் போலே

(திருவடி முதுகில் ஆரோஹணித்தால்
பரப்புருஷனை தீண்ட மாட்டேன் -என்னில் பிள்ளை அன்றோ
ராக்ஷசர் துரத்துவாரோ அஞ்சினேன்
ஆகாசம் செல்லும் போது பயப்படுவேன்
பல சொல்லியும் இறுதியில்
நான் எனது சக்தி கொண்டு உமது வாலில்நெருப்பு சுடாமல் இருக்க ஆணை இட்டேன்
ராமன் கையையே எதிர்பாரத்து இருப்பேன்
சொல்லினால் சுடுவேன் -அது தூயவன் வில்லக்கு ஆற்றலுக்கு தோஷம் -மாசு ஆகுமே
ஒரு ராஷசன் அங்கு வைக்க மற்ற ஒரு குரங்கு இங்கே கொண்டு வர ராமன் என்ன செய்தான் என்பார்களே
தத்த்ருஸ்ய ஸத்ருசம் பவேத் -போலவே
முமுஷு வும் பிர விருத்தி நிவ்ருத்திக்கு க்ஷ மர் இன்றிக்கே துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லாமல் இருக்க வேண்டுமே)

முமுஷூவுக்கும் -உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை -என்றும்
நாட்டு மாநிடத்தோடே எனக்கரிது -என்றும்
நாட்டாரோடு இயல் ஒழிந்து-என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இருக்கை-

——-

சம்சாரிகளுக்கு வாஸ ஸ்தானம்  ஒரு க்ராம மாத்ரமாய் -ஆஸ்ரயம் ஷேத்ரஜ்ஞனாய்  இருப்பானோர்
எலி எலும்பனாய்-பிரயோஜனம்  வயிறு வளர்க்கையாய் இருக்கும்  –

முமுஷூவுக்கு இருப்பிடம் ஸ்ரீ எம்பெருமானேயாய்-ஆஸ்ரயம் ஸ்ரீ எம்பெருமானேயாய் -பிரயோஜனமும் கைங்கர்யமேயாய் இருக்கும் –
வைத்த பரிசிது காண்மின் -என்று இந்நிலத்து பொருந்தாமையும்-
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும்  வடிவிலே தோற்றும் படியாய்
கண்கள் அசும்  பொழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்று இருப்பார்கள் -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

இவ் விருப்பில் பொருந்தாமை விளைப்பித்து இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே கருந் தரையில் புகுந்து
ஸ்ரீ பகவத் விஷயத்தை உபகரித்த ஸ்ரீ ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பண்ணும் உபகாரம் ஏது என்னில் –
ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு இவ்வருகு சிஷ்யன் நல் வழிக்கு உறுப்பாக நடக்கும் நடக்கைகளை யுடைய
ஸ்ரீ ஆசார்யனுக்கு உபகரித்தானாக வாயிற்று –
ஆச்சார்யன் திரு உள்ளத்தில் அனுசந்தித்து இருக்கும் அது –

அவை யாவன –
தன் முன்னடி பார்த்து நடக்கையும் –
பிறருடைய குணா குண நிரூபணம் பண்ணாது ஒழிகையும்-
ஸ்வ தோஷத்தில் சர்வ ஜ்ஞனாய் இருக்கையும் –
பர தோஷத்தில் அஜ்ஞ்ஞனாய் இருக்கையும் –
அந்ய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் தேஹாத்மாபிமானம் ஆத்ம ஸ்துதி பர நிந்தை என்கிற
எல்லை மயக்குகள் பரிஹரித்து நடக்கையும்
ஸ்ரீ எம்பெருமானுடைய வாய் புகு  சோற்றைப் பறியாது ஒழிகையும் -அதாவது –
ஸ்ரீ எம்பெருமானுடைய வகுத்த ரஷகத்வத்தை தான் தனக்கு ரஷகன் என்று இருக்கை –
ஸ்ரீ ஆச்சார்யனையும் திரு மந்தரத்தையும் எம்பெருமானையும்  அவமானம் பண்ணாது ஒழிகையும் –

ஸ்ரீ ஆச்சார்யனை அவமானம் பண்ணுகை யாவது –
தன் முன்னடி பார்த்து நடவாது ஒழிகையும் –
அவன் அருளிச் செய்த ஸ்ரீ திரு மந்த்ரத்தை  தரை இல்லாத் தரையிலே சிந்தி இழக்கையும் –

ஸ்ரீ திரு மந்த்ரத்தை அவமானம் பண்ணுகையாவது —ஸ்ரீ திரு மந்த்ரத்தை மறைக்கையும் -ஸ்ரீ திரு மந்த்ரம் அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்யனை அநாதரிக்கையும் –
ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாதிக்கிற அர்த்தத்தின் படி ஒழிய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்ய தேஹாத்ம அபிமாநாதிகளிலே
மொத்துண்டு கிட்டம் தின்ற மாணிக்கம் போலே உருமாய்ந்து போகையும் –

ஸ்ரீ எம்பெருமானை  அவமானம் பண்ணுகையாவது –
அவனுடைய ரஷகத்வத்துக்கு இடைச் சுவரான ஷேத்ரஜ்ஞரை ரஷகராக நினைத்து -அவர்கள் வாசல்கள் தோறும் நுழைந்து
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்துதிக்கிற நாக்கை இட்டு புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஷேத்ரஜ்ஞரை ஸ்துதிக்கையும்-

—————–

ஸ்ரீ எம்பெருமானுக்கும் ஆத்மாவுக்கும் ப்ராப்தி அவிநா பூதமாய் இருக்க -புருஷகாரம் வேண்டுவான் என் என்னில் –
இருக்கிற சம்சாரமும் -எடுத்த யுடம்பும் -இந்த ப்ராப்திக்கு இடைச் சுவரான
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்ய தேஹாபிமா நாதிகளை விளைப்பித்து-
தன்னை மறந்து -உருமாயப் பண்ணுமதாகையாலே  -சாபராதன் தன் படியையும் அபராதத்தையும்  அறிகைக்கு
ஸ்ரீ சர்வஜ்ஞனுமாய்  -அறிந்தபடி அனுபவிக்கைக்காக – சர்வ சக்தியுமாய்-
தான் ஸ்வ தந்த்ரனுமாய் இருக்கையாலே -இவன் அபராதத்தைக் கண்டு  -அழியச் செய்யாமைக்கு -புருஷகாரம் வேணும் –

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ஸ்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்)

ஆனால் ஸ்ரீ பிராட்டிக்கும் ஸ்ரீ எம்பெருமானுக்கும் ப்ராப்தி ஒத்து இருக்குமாகில்
ஸ்ரீ பிராட்டியை புருஷகாரமாகச் சொல்லுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டு குணம் யுண்டாகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுக்கு ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் யுண்டு
ஸ்ரீ பிராட்டிக்கு  வெறும் நீர்மையே  வடிவாய் இருக்கும் -எங்கனே என்னில் –
மத்திய ராத்ரியிலே காதுகரும் கூட இரங்கும்படியான   சரணாகதியை முன்னிட்டு கொண்டு வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும்   கூட
வத்யதாம் பத்யதாம் -என்ன ஒரு நிலை நின்று கைக் கொண்டது ஸ்ரீ பெருமாள் பிரகிருதி –
தன்னை நலிந்த ராஷசிகளை ஸ்ரீ திருவடி நலியப் புக ஸ்ரீ பெருமாள் பரிகரம் என்று மதியாதே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பிராட்டி பிரகிருதி –

(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்; ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு, தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: – எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான். காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: – மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான். ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான். ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே) ———–

ஆனால் ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ ஆசார்யனும் இரண்டு புருஷகாரம் வேண்டுவான் என் என்னில் –
சரண்யன் குறையும் சரணாகதன் குறையும் தீர்ந்து இருவருக்கும் ஸ்வரூபம் பெறுகைக்காக -என்று அருளிச் செய்தார் (நஞ்சீயர்)
குரு பரம்பரையை முன்னிடவே சரணாகதன் குறை தீரும் –
ஸ்ரீ பிராட்டியை முன்னிடவே சரண்யன் குறை தீரும்-

(உகாரம் -பிராட்டி
அவ் வானவருக்கே மவ்வானவர் சேஷப்பட்டவர் என்று உவ்வானவர் உரைத்தார் -உகாரம் ஆச்சார்யர்)

ஸ்ரீ சரண்யனுக்கு குறை யுண்டோ என்னில் -நித்ய விபூதி போலே தெளி விசும்பு இன்றிக்கே
இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே வர்த்திக்கிற  சேதனனை இந்நிலத்தின் தண்மை பாராதே
பிழை எழுதும் ஸ்வா தந்த்ர்யம் சரண்யனுக்கு குறை –
அக் குறை ஸ்ரீ பிராட்டியை முன்னிடவே தீரும் —

ஸ்ரீ எம்பெருமான் இவ் வாத்மாவைப் பற்றும் போது ஸ்ரீ பிராட்டியையும் ஸ்ரீ ஆசார்யனையும் முன்னிட்டாய் யாயிற்று பற்றுவது –
ஆத்மா எம்பெருமானை பற்றும் போது ஸ்ரீ பிராட்டியையும் ஸ்ரீ ஆசார்யனையும் முன்னிட்டாய் யாயிற்று பற்றுவது –
இவ் வர்த்தம் ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ விபீஷண பெருமாள் -ஸ்ரீ குஹப் பெருமாள் -ஸ்ரீ திருவடி -ஸ்ரீ மஹா ராஜர் –
உள்ளிட்டார்   பக்கலிலும் காணலாம் –

(அந்தரங்கர்களுக்கும் புருஷகாரம் வேண்டும்
திருக்கச்சி நம்பிக்கும் -வீசினத்துக்கு பேசினத்தோடே போம் -ஆச்சார்ய சம்பந்தம் அடியாகவே பேறு
ராமானுஜர் திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் அனைவருக்கும் பேறு
நம் ராமானுஜர் உடையார் அருளப் பாட்டில் பெரிய நம்பி வம்சத்தாரையும் வரச் சொல்லி அழகர் தீர்த்தம் பிரசாதித்த ஐதினம்)

ஸ்ரீ எம்பெருமானுக்கு ரஷித்தே ஸ்வரூபம் பெற வேணும் –
ஸ்ரீ பிராட்டிக்கு ரஷிப்பித்தே ஸ்வரூபம் ஸ்வரூபம் பெற வேணும் –
ஸ்ரீ ஆச்சர்யனுக்கும் இவ் வர்த்தம் அறிவிப்பித்தே ஸ்வரூபம் பெற வேணும் –

இவ் வர்த்தம் அறிந்து அத்யவசித்தே போதே ஸ்வரூப சித்தி –
சேதனனுக்கு அர்த்த காமத்தில் நசை யறவே ஆஸ்ரயம் நிறம் பெரும்  –
அஹங்கார மமகாரம் அற ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிறம் பெரும் –
இவை தான் ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதி பந்தகங்களாய் இருக்கும் –

ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு  பிரதிபந்தகமான ஸ்வ வியாபார நிவ்ருத்தி பிரபத்தி –
பிரபத்தியாவது -ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை -என்று ஸ்ரீ ஆழ்வான் பணிக்கும் –
அதாவது -அஜ்ஞனாய் அசக்தனாய் அப்ராப்தனான தன்னை விட்டு
சர்வஜ்ஞனாய் சர்வ சக்தியாய் ப்ராப்தனான ஸ்ரீ எம்பெருமானைப் பற்றுகை –

————-

ப்ரபத்திக்கு -ஸ்வரூபம் ஏது-அங்கம் ஏது -பிரமாணம் ஏது – -அதிகாரிகள் யார் -என்னில்

ஸ்ரீ திருவடியைக் கட்டின பிரம்மாஸ்திரம் சணல் கயிறு காண விட்டுப் போனால் போலே தன்னை ஒழிந்த
உபாயாந்தரங்களைப் பொறாது ஒழிகை -ஸ்வரூபம் –

இதர உபாயத் த்யாகம்-அங்கம் –

சகல பிரமாண பிரதிபாத்யனான ஸ்ரீ எம்பெருமான் தானே -மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று அருளிச் செய்கையாலே –
அது தானே பிரமாணம் –

தானும் பிறரும் தஞ்சம் என்று இருக்கும் நன்மைக்கு ஸ்ரீ எம்பெருமானுக்கு அவ் வருகு இல்லை என்று இருக்கையும்
பிறருடைய  அநர்த்த அப்யுதயங்கள்  தன்னது என்று இருக்கையும் -இவை தொடக்கமானவை அதிகாரி ஸ்வரூபம்

——-

அர்த்த ஸ்ரத்தை பிறந்த போது  தேஹாத்மாபிமானம் போயிற்றில்லை யாகக் கடவது
தன்னை உள்ளபடி ஆராயும் அன்று பிறருடைய குணா குண நிரூபணம் பண்ண அவசரம் இல்லை -பிராப்தியும் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானை உள்ளபடி ஆராயும் அன்று பிறருடைய குணா குண நிரூபணம் பண்ண அவசரம் இல்லை -பிராப்தியும் இல்லை –
சைதன்யம் நடையாடினவன்
தன்னைப் பார்த்துத் தளர்தல் -எம்பெருமானைப் பார்த்துத் தேறுதல் -செய்யும் இத்தனை ஒழிய பொழுதைப் போக்கான்-
இனி பிறருடைய குணா குண நிரூபணம் பண்ணுகிறது ஸ்ரீ பகவத் ஜ்ஞானம் நெஞ்சில் படாமையாலே –
உணர்த்தி அற்றவன்  உறங்குகிறானாய் இறே இருப்பது -மன ஜ்ஞானே -என்கிற தாது –

——-

அசித்துக்கும் ஒரு குணம் யுண்டு -ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் ஒரு குணம் யுண்டு –
அசித்து தன்னை அபிமாநித்தாரைப் பிறர் (ஈஸ்வரன்)காலில் துவள ஒட்டாது -தேஹாத்மாபிமானி பிறர் (ஈஸ்வரன்)காலில் துவளான்-
ந நமேயம் என்று இருக்குமது ஒழிய ஸ்ரீ எம்பெருமானை யாதல் -ஸ்ரீ வைஷ்ணவர்களே யாதல் வணங்கானே –

ஸ்ரீ எம்பெருமானும் தன்னை அபிமாநித்தாரைப் பிறர் (தேவதாந்தரர்)காலில் துவள ஒட்டான் -(என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே)

(யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்)

ஸ்ரீ திரு மந்திர நிஷ்டன் அசத்துக்கள் காலில் வணங்கான் –
ஆத்மா பிரகிருதியை அண்டை  கொண்டு ஸ்ரீ எம்பெருமானை உறுமுதல்-
ஸ்ரீ எம்பெருமானை அண்டை கொண்டு பிரக்ருதியை உறுமுதல் செய்யுமது ஒழிய ஒன்றில் நில்லாது –

ஹிரண்யன் பிரக்ருதியை அண்டை கொண்டு ஸ்ரீ எம்பெருமானோடே எதிரிட்டு முடிந்து போனான் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்  ஸ்ரீ எம்பெருமானை அண்டை கொண்டு பிரகிருதியை எதிரிட்டு வாழ்ந்து போனான் –
பிரக்ருதியைச் செறியச் செறிய அந்தகாரம் மிகும் -ஸ்ரீ எம்பெருமானைச் செறிய செறிய   வெளிச் சிறப்பு மிகும் –
ஹிரண்ய ராவணாதிகள் கைகேயி கூனி பக்கலிலே காணலாம்
திரிசடை ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கலிலேயும் காணலாம் –

பிரக்ருதியினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களை ஆசார்யன்  காட்டக் கண்ட சேதனனுக்கு இவ் வர்த்தம்
நெஞ்சில் படாதாகில் பகவத் ப்ராப்தி அளவும் பயம் கெட்டு இருக்க விரகு இல்லை –
தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை வேறே போக எஜ்ஞ்ஞான்றும் விடல் -என்பது-
மங்க ஒட்டு -என்பது –
இந் நின்ற நீர்மை -என்பது –
இது கண்டாய் -என்பதாய்-
வழித் தங்கு வல் வினையை மாற்றானோ -என்பதாய் –
நடுவே ஓர் உடம்பில்  இட்டு -என்று அஞ்சிக் கூப்பிடா நிற்பர்கள்-
ஸ்ரீ பகவத் சம்பந்தம் பண்ணின பின்பு இவ் வுடம்பை கண்டு  வைத்து அஞ்சாதே இருந்தவனுடைய ஜ்ஞானத்தை சோதிக்க வடுக்கும் –

ஆத்மா அச்சேத்யனாய்-அதாஹ்யனாய் – அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -சர்வ கதனாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய்-
ஸ்ரீ பகவத் சேஷ பூதனாய் -இருந்து வைத்து
பிரகிருதி சம்பந்தத்தாலே மக்னனாய் கொண்டு- உரு மாய்ந்து -அசந்நேவ ச பவதி -என்று யுண்டாய் இருக்கச் செய்தே –
இல்லாதார் கணக்காய் நின்ற நிலையை ஸ்ரீ ஆசார்யன் காட்டக் கண்ட அனந்தரம்
விரோதி கழிந்து ப்ராப்ய தேசத்திலே புகுரும் அளவும் –

(அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் த்வேத ஸந்த மேனம். ததோ விது: ப்ரஹ்மம் இல்லை என்று அறிபவன் இல்லாதவனாகிறான்)

ராஷசிகள் மத்யையில் இருந்த ஸ்ரீ பிராட்டியுடைய தனி இருப்பைப் போலேயும்
காலாக்னி மத்யையில் அகப்பட்டாரைப் போலேயும் –
ஹாலாஹல விஷத்தினிடை அகப்பட்டாரைப் போலேயும் –
இதனுடன் பொருந்தாமை தோற்ற பெரும் கூப்பீடாக கூப்பிட்டு இத்தை விடுவிக்க வல்ல  மஹா பாகவதர்களான
சத்துக்கள் யுடைய சஹ வாசங்களால் பெற்ற பகவத் கிருபையாலும்
ஸ்வரூப யாதாம்யத்தாலும் வெளிச் சிறப்பு பிறந்து
இவ் விரோதியை விடுவித்துக் கொள்ளுகையிலே த்வரை விஞ்சிச் செல்லா நிற்கும் –

—–

ஜ்ஞானான் மோஷ அஜ்ஞ்ஞாநாத் சம்சார -என்கிறது –
ஜ்ஞானம் ஆகிறது -ஜ்ஞேயமாகிற ஸ்ரீ பகவத் சம்பந்தத்தை அறிந்து –
சம்பந்தத்துக்கு விரோதியான சம்சார சம்பந்தம் பெறாது ஒழிகை இறே

அஜ்ஞாநாத்  சம்சாரம் ஆகிறது -ஸ்ரீ பகவத் சம்பந்தத்துக்கு விரோதியான
பிரகிருதி பராக்ருதங்களோட்டை செறிவு சம்சாரம் ஆகிறது என்றபடி –

அநாத்மநி ஆத்ம புத்தியும்  (அஹங்காரமும்)அஸ்வே ஸ்வம் புத்தியும்  (மமகாரமும்)கர்ம பரம்பரையும் சம்சார ஹேது
ஸ்ரீ பகவத் பிரசாத பரம்பரை மோஷ ஹேது –

(கிருபைக்கு பீஜம்
அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து -இரண்டாம்-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் -58-
-என்கிற சௌஹார்தம் என்கை-

ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி
பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே-

ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் –சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி)

———–

சேதனனுடைய அஹமர்த்தம்  அறியலாவது –
தேஹாத்மா அபிமானிகளோடு தனக்குத் தான் நன்மைகள் அடையத் தனக்கு நாசம் என்று இருக்கை –

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே யுடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய அந்திம தசையில் –
இவ் வஸ்தையில் எனக்குத் தஞ்சமாக நீ வைத்து இருக்கலாவது ஏது-என்று விண்ணப்பம் செய்ய
இப்போது இந் நினைவும் கூட அறுகை -என்று அருளிச் செய்தார் –

அதாவது –
ஜ்ஞானம் பிறந்த பின்பு ஜ்ஞான கார்யமான கைங்கர்யம் கை புகுரும் தேச விசேஷத்திலே செல்லும் அளவும்
அறிவு நடையாடின சேதனனுக்கு ஆபத்து என்றபடி –

ஆத்மா நோ  துர்தசாபத்திம் விம்ருசச்ய ச ஹரேர் குணான்-என்கிறபடியே –
ஆதலால் தன்னுடைய நினைவு மாறினால் அல்லது -ஸ்மராமியும் -நயாமியும் -பலியாது என்று அருளிச் செய்வர் –

(அவன் நினைவு எப்பொழுதும் உண்டே-அது கார்ய கரமாவது இவன் நினைவு மாறினால் தானே)

இவ்வளவு உபாயத்தை  ஓட வைத்தது ஏக பதம் –
உபேயத்தை ஓட வைத்தது  மேலில் நமஸ்ஸூ
உபாயத்தை நிலை இட்டார்கள் -ஸ்ரீ பிராட்டி -ஸ்ரீ த்ரௌபதி -ஸ்ரீ திருக் கண்ணமங்கை ஆண்டான் உள்ளிட்டார்கள்
உபேயத்தை  நிலையிட்டார்கள்  ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ பெரிய யுடையார்- ஸ்ரீ சிந்தயந்தி -ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –

எங்கனே என்னில்
சீதோபவ என்ன வல்லவள் தன்னுடைய தனி யிருப்பையும் மாற்ற வல்லளாய் இருக்க –
ஸ்ரீ பெருமாளுடைய வீரத்துக்கு கொத்தையாம் என்று துரும்பு நறுக்காது இருந்த படியாலும்

லஜ்ஜை யில்லாத கோஷ்டியிலே லஜ்ஜையை யுடையவன் கையிலே  தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு நிர் லஜ்ஜையாய் இருந்தபடியாலும்

தன் பரபரப்பை மாற்றா வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாது ஒதுங்கின படியாலும்
உபாயத்துக்கு சீமா பூமி அவர்கள் –

நில் -என்ன -குருஷ்வ (மாம் அநுரஜம்) என்றபடியாலும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றபடியாலும் –
க்ரியதாமிதி மாம் வத-என்றபடியாலும் –
லஷ்மணேந கதாம் கதிம் -என்கிறபடியான பிராப்தியாலும்
சஹஜ கைங்கர்ய விதய -என்கிற அர்த்தம்  கைப்பற்றது அவர்க்கே யாகையாலும்

ஸ்ரீ பெரிய யுடையாரும்- ஸ்ரீ சிந்தயந்தியும் -ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையரும் வகுத்த விஷயத்தைப் பிரித்து
தந்தாமுடைய யுடம்பைப் பேணாமையாலும்
வகுத்த விஷயத்தைக் கண்ட மாத்ரத்திலே விரோதியான யுடம்பை விடுகையாலும் –
உபேயத்துக்கு சீமா பூமி இவர்கள் –

இதர உபாய   த்யாக பூர்வகமாக அவனே உபாயமாக வேணும் என்னும் உபேய பிரார்த்தனையை -த்வயம் -என்கிறது –
இவ் வர்த்தம் நெஞ்சில் பட்டவர் ஸ்ரீ பிராட்டியைப் போலே துரும்பு நறுக்காதே ஒழியும்-
ஸ்ரீ த்ரௌபதியைப் போலே தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு இருக்கும் –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை ஆண்டானைப் போலே பரபரப்பு அற்று வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாதே ஒதுங்கும் –
ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரும் ஸ்ரீ சிந்த யந்தியும் போலே
தந்தாமை முடித்தும் ஸ்வரூபம் அழியாமல் நோக்கி நிற்பார்கள் –

———-

ஸ்ரீ ஆசார்ய அங்கீகார அநந்தரத்திலே-ஸ்ரீ குரு பரம்பரையையும் -ஸ்ரீ திரு மந்தரத்தையும் -ஸ்ரீ சரம ஸ்லோகத்தையும்  அனுசந்தித்து
இருந்த இடம் அறியாமல் தன்னை ஒருங்க விட்டுக் கொண்டு  தன்னைக் கரை ஏற்ற வல்லனாய்
அர்த்த காம உபஹதன் அல்லாதான் ஒரு பரம சத்வ நிஷ்டன்  கையிலே தன்னைப் பொகட்டு நிர்ப் பரனாய் இருக்கைக்கு மேலில்லை –

இவனுக்குப் பரிஹரிக்க வேண்டுவது –
ஸ்ரீ தேவதாந்திர பஜனம் பண்ணுவாரோட்டை சம்பந்திகளுடைய சஹவாசம் விநாசம் என்று அஞ்சித் தவிரவும்
ஸ்ரீ பகவத் ஸ்வத்தை வருந்தி யாகிலும் அபஹரித்து ஜீவியாது ஒழிகையும்
ஸ்ரீ பகவத் பிராப்திக்கு விரோதியான விஷய ப்ராவண்யம்  தன்னை முடிக்கும் என்று அஞ்சிப் போரவும்
ஸ்ரீ ஆசார்யன் அளவில் பிரகிருதி ப்ராக்ருதங்கள் நிமித்தமாக வரும் அநர்த்தம் பரிஹரித்துப் போரவும்
நிலை நின்ற ஸ்ரீ பகவதபசாரம் வருந்தியும் பரிஹரித்துப் போரவும் வேணும்  –

ஒரோ அவதாரங்களில் செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் ஒரோ பாகவத அபசாரம் பண்ணின பலம்
அனுபவிக்கைக்காக -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச்  செய்வர்

———-
நல்லடிக் காலத்தில்  நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும்
புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார்  இளையார் 
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம்  தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –

ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம்  ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –

ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-

அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –

இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை  அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம்
தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா  தரித்ரதா  குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-

அத்ருஷ்டமே தஞ்சம் என்று இருப்பார்கள் நித்ய முக்தர்கள் –
த்ருஷ்டமே தஞ்சம் என்று இருப்பார்கள் நித்ய சம்சாரிகள்
முமுஷூவுக்கு திருஷ்ட அத்ருஷ்டங்கள் செல்லா நிற்கச் செய்தே

அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு த்ருஷ்டம் யுண்டானால் த்ருஷ்டத்தை விட்டு அத்ருஷ்டத்தைப் பற்றுமவன் முமுஷூ –
அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு  த்ருஷ்டம் யுண்டானால் அத்ருஷ்டத்தை விட்டு த்ருஷ்டத்தைப் பற்றுமவன் நித்ய சம்சாரி –

இப்போது தன்னுடைய அஹம் அர்த்தம்  அறியலாவது இவ் விரண்டு அர்த்தமும் ஒரு எல்லை வந்தால் அல்லது காண ஒண்ணாது –
அல்லாத போது இருந்ததே குடியாக என்று இருக்கவும் –
வைஷ்ணவர்கள் தாங்களும் தங்கள் படியாலே வைஷ்ணவர்கள் என்று இருக்கவும் ஒரு தட்டில்லை –

———-

ஸ்ரீ பரத்வ அபஹாரிகள் சைவர் –
போக அபஹாரிகள் விஷய ப்ரவணர்-
குண அபஹாரிகள் மாயா வாதிகள் –

தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது –
த்யாஜ்யமான சிலவற்றில் வந்தால் -தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய நசை அற்று இருக்கையும்
உபாதேயம் யாதொன்று -அதிலும் வந்தால் -தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய நசை யுண்டாய் இருக்கையும்
தேசாந்தரமும் தேஹாந்தரமும் உண்டு என்று அறிந்து பயத்தோடு கூட வர்த்திக்க  அடுக்கும்-

———

நம் ஸ்ரீ முதலிகளுக்கு ஒரு மூர்த்தி நியதமும் -ஒரு மந்திர நியதியும் -ஒரு ஆசார்ய நியதியும் உண்டு –
அவை யாவன –
ஸ்ரீ பெருமாளும்–ஸ்ரீ த்வயமும்– ஸ்ரீ த்வயத்தை முதலடியிலே அருளிச் செய்த மகா உபகாரகனான ஸ்ரீ ஆசார்யனும்

ஸ்ரீ எம்பெருமான் முதலடியிலே ஷிபாமி -என்னும் —
புருஷகாரத்தை முன்னிடவே -ததாமி -என்னும் –
பின்பு -நயாமி -என்னும் –
அவன் ரஷிக்கைக்கு பரிகரம் ஆர்த்தி அல்லது இல்லை –இது குறைவற இருவர் ஸ்வரூபமும் குறைவறும்-
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் -இத்யாதி

(அவா அறச் சூழ்ந்தாய் -இதுவே ஆர்த்தி)

(படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-)

இத்தால் –
ருசி ஜனகன் ஸ்ரீ எம்பெருமான் என்னுமத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சகல பதார்த்தமும்  அவனாலே ஜன்யம் என்றும்  சொல்லிற்று ஆயிற்று –

இடைப்புக்கோர்-என்கையாலே சிருஷ்டி  சம்ஹாரங்களுக்கும்  நான் நான் என்கிற ப்ரஹ்மாதிகள் அன்றியே
மாதா பிதாக்களாக பிரமிக்கிறவர்களையும் சொல்லுகிறது –

ஆஹார த்வாரம் உபாதேயம் –விஹார த்வாரம்  த்யாஜ்யம் –ஆகையால் லஜ்ஜா புரஸ்ஸர நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –

காலத்துக்கும்  கர்மத்துக்கும்  வேதத்தில்  பூர்வ பாகத்தில் சொல்லப் பட்ட நாமத்துக்கும் ப்ரபன்னன்  குடிமகன் அல்லன் –

ஆத்ம விஸ்வாசமும் அத்யவசாயமும் உடையராய் -க்ருதஜ்ஞராய் இருப்பார்க்கு அல்லது ஸ்ரீ பகவத் விஷயம் சொல்லலாகாது
என்று பலகாலும் அருளிச் செய்வர் –

ஸ்ரீ ஆசார்ய விஸ்வாசமும் -அத்யவசாயமும் -தேவதாந்திர பஜன சம்பந்தம் அறுகையும்-
நிலை நின்ற ஸ்ரீ பாகவத அபசாரம் பரிஹரித்துப் போரவும் வேணும்  –

ஸ்ரீ ஆசார்யனுக்கு இவன் உபகரிக்குமதாவது -அவன் தந்த வஸ்துவை  நால் சந்தியிலே வையாது ஒழிகை –

ஸ்ரீ பகவத் பிரசாதம் பாகவத ருசியைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பாகவத ருசி ஆசார்ய அங்கீ காரத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ ஆச்சார்ய அங்கீ காரம்  ஸ்ரீ பகவத் ஸ்வீ காரத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பகவத் பிராப்தி தத் கைங்கர்யத்தைப் பிறப்பிக்கும் –
தத் கைங்கர்யம் விரோதி நிவ்ருத்தியை அபேஷித்து இருக்கும் –
சச் சிஷ்யன் ஸ்ரீ சதாசார்யன் பக்கல் பண்ணும் விசத ஸ்ரவணம் -சதா பஸ்யந்தி-க்கே அந்வயிக்கும்  –
இவ் வர்த்தம் ஸ்ரீ சதாசார்யன் சந்நிதி யுண்டாகத் தோற்றும் –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதீந்திர ப்ரவண பிரபாவம் -சாரம் –

January 12, 2015

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்
ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதஸ் சரணாரவிந்த சேவாம்ருதைக ரசிகான் கருணா ஸூ பூர்ணான்
பட்டார்வர்யா நிகமாந்த முநீந்திர லோக குர்வாதி தேக வரான் சரணம் ப்ரபத்யே
கூரத் ஆழ்வான்- பட்டர் – நஞ்சீயர்- நம்பிள்ளை அடியாக வந்த வாற்றை பிரதிபாதிப்பதாக-பிரதமம் பிள்ளை லோகாச்சார் உடைய வைபவம்
கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திரு மலை யாழ்வார் செழும் குரவை மணவாளர் ஓதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே-

நம்பிள்ளை –வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருத் தாயார் அம்மி தண்டன் சமர்ப்பித்து பிரார்த்த்க்க நம்  போன்ற திருக் குமாரர்
ஐப்பசி திருவோணம் -பிள்ளை லோகாச்சார்யார் திருவவதாரம்
நம்பெருமாள் போலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருவவதாரம்
தம்பியுடன் தாசரதி யானும் உன் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் -பொங்கு புனல்
ஓங்கு முடும்பை யுலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான் –

பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர்கள் –
கூர குலத்தம தாச நாயன்
மணப்பாக்கத்து நம்பி
கொல்லி காவல தாசர்
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை
கோட்டூரில் அண்ணரும்
விளாம் சோலைப் பிள்ளை
திருமலை ஆழ்வார் திருத் தாயார்-

ஆராயிரப்படிக்கு கனகாபிஷேகம் போலே ஒன்பதினாராயிரப்படி –நஞ்சீயர் -மாதவர் வேதாந்தி –முன்பு
தேவராஜரை உகந்து நம் பிள்ளை -பட்டர் சாதித்து அருளிய திரு மோதிரம் சமர்ப்பித்து
நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ-

சிறியான் ஆழ்வான்-ஈ யுண்ணி மாதவர்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் நம்பிள்ளை சிஷ்யர்
விஸ்மரித்தால் பார்த்துக் கொள்ளக் செய்தேன் -ஆச்சான் பிள்ளை மட்டும் பண்ணவா நாமும் பண்ண வேண்டாமா என்ற எண்ணத்தில்
செய்ய வில்லை என்றார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
ஒரு ச து போடாமல் எழுதினீர் உம்முடைய சாமர்த்தியம் என்னே என்று புகழ்ந்து
ஜகத் ரஷோபர அனந்தோ ஜனிஷ்யத்ய பரோ முனி
ததரஸ்யாஸ் சதா சரா சாத்விகாஸ் தத்வ தரிசின -என்று
பேரருளாளன் கந்தாடை தோழப்பர் ஸ்வப்பனத்தில் மா முனிகள் திருவதாரம் செய்யப் போவதையும்
அவரை ஆஸ்ரயிப்பவர் சதாசாரமும் சத்துவ குணமும் தத்துவ ஜ்ஞானமும் உடையராய் இருப்பார் –
ஈடு பெருக்கர் ஆவார் -பட்டோலைக் கட்டை பிரசாதித்து அருள
அவரும் தம் குமாரருக்கு பிரசாதித்து அருளினார்-

நம்பிள்ளை -இரண்டு தேவிமார் –திருக்குமாரார் தூவியம்புள் திரு நாமம் சாத்தி –
அவர் சாதித்த ஸ்ரீ ஸூக்திகள் –
1-குலம் தரும் -முருட்டுத் திருப்பதியானான வென்னை நம்பூர் குலத்துக்கு சேஷம் ஆக்கினால் குலம் தரும்
அதாவது பண்டைக் குலத்தை தவிர்ந்து தொண்டைக் குலத்தில் மாசில் குடியில்
ஸ்ரேஷ்ட ஜன்ம ஜாதனாய் ஆச்சார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோக அர்ஹனாகை-
2-அவதாரம் இருக்கும் படி என்-என்ன
மெய்  வெளுத்து நாக்கு வற்றி இருக்கும்
அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றாலும் பிரயோஜனாந்த பரர் ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு வற்றி இருக்கும் –
3-பெரிய கோயில் வள்ளலாரை -இவர்களுக்கு திரு நாமம் ஆகைக்கு அடி என் என்ன
ஸ்ரீ மான் பிதாவாகையாலும் ஸ்ரீ மாதா வாகையாலும் ஸ்ரீமான் உடைய வைபவத்தை அறிகையாலும்
ஸ்ரீ மத் பதத்தில் பிறக்கை யாலும்
ஸ்ரீ புருஷகாரமாக வளர்க்கை யாகையாலும்
இவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் ஆய்த்து-

4-பிரபன்னனுக்கு தஞ்சமாக விச்வசித்து இருக்கும் அர்த்தம்
சகல பிரமாண சாரதமமான மந்திர ரத்னத்தையே விஸ்வசித்து இருப்பன்
த்வயத்தில் அர்த்தத்தை விஸ்வசித்து இருந்தான் ஆகில் எம்பெருமானைப் பற்றி இருக்கும்
ஆச்சார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி இருக்கும்
இனி எம்பெருமானையே பற்றி இருக்கை தேவதாந்திர பஜனம் என்று ஆச்சார்யன் திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க
எம்பெருமான் இவன் அளவிலே பிச்சேறி இருக்கும்
இவன் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி இருக்க எம்பெருமானோபாதி ஆச்சார்யனும் இவன் மேலே பிச்சேறி இருக்கும்
இத்தால் தத் தேசிக ததீய சரம நிஷ்டை உண்டாகவே அம்மூவரும் இவன் விஷயத்திலே ஆசக்தர் ஆவார்கள் -என்றார்-

5-ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஈஸ்வரனுக்கு ஆத்ம சமாநர் -பிராண சமாநர் -திருஷ்டி சமாநர் -பாஹூ சமாநர் -ஆபரண சமாநர்
-ஆயுத சமாநர் -பாத சமாநர் -பாதரேகா சமாநர் -பாதுகா சமாநர் -சாயா சமாநர் -ஜிஹ்வா சமாநர் –
அது எங்கனே என்னில் ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் -அனன்ய பிரயோஜன ஜ்ஞானத்தைப் பற்றவும் –
மமபிராணா ஹி  பாண்டவ -என்கிற பர அபிமானத்தைப் பற்றவும்
யே ப்ரபன்ன மகாத்மா நஸ்தே மே நயன சம்பத –என்கிற பாமர ஜன உஜ்ஜீவனகர கடாஷ த்ருடித்வத்தைப் பற்றவும்
ராமஸ்ய தஷினோ பாஹூ -என்பதாலும்
சாபமாதாயாத்மா விபூஷணம் -என்பதாலும்
அலர்மகள் கேள்வன் கை யாழி-இராமானுச  நூற்றந்தாதி -33-என்பதாலும்
ஜங்கம ஸ்ரீ விமா நானி ஹ்ருதயாணி மநீஷிணாம்-என்பதாலும்
நடையாவுடைத் திரு நாரணன் -திருவாய் -3-7-4-
சடகோபன் -நிழலும் அடி தாறும் ஆனோம் -பெரிய திருவந்தாதி -31-என்பதாலும்
ரசான் பக்தச்ய ஜிஹ்வாயா மஸ் நாமி -என்பதாலும் -என்றார்-

6- ஸ்ரீ வைஷ்ணத்வம் மூன்று பிரகாரமாய் இருக்கும்
சத்கார யோக்யர் ஆவார் –ரூப நாம பிரதான்யர் -உச்சாரண பிரதான்யர் -அபிமான பிரதான்யர்
சஹவாச யோக்யர் ஆவார் -ஜ்ஞான பிரதான்யர் -அனுஷ்டான பிரதான்யர் -அங்கீகார பிரதான்யர்
சதானுபவ யோக்யர் ஆவார் -ஆர்த்தி பிரதான்யர் -அபி நிவேச பிரதான்யர் -அபிருசி பிரதான்யர்
இதில்
த்யாஜ்ய உபாதேயத்தை தெளிய அறியாதவர்களாய் சம்பந்த மாத்ரமே யானவர்கள் –நமஸ்கார யோக்யர்
தெளிந்த ஜ்ஞாநிகளான சப்ரஹ்மாசாரிகள் போதயந்த பரஸ்பரம் பண்ண யோக்யர்
ஆச்சார்யனும் சதாசார்யா சத்ருசரும் அனுவர்த்த நீயர் என்றபடி-

7-த்ருஷ்டத்தில் தனக்கு உண்டான சம்பத்தை தனக்கே என்கை நரகப்ராயம்
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்கபிராயம்
அவனுக்கும் அவன் அடியாருக்கும் என்கை பரமபத பிராயம் -என்று அருளினார் –
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் திரு மடியிலே திரு முடியையும்
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் திரு மடியிலே திருவடிகளையும் வைத்து
நஞ்சீயர் திருவடிகளை த்யானித்துக் கொண்டு
ப்ரஹ்மரந்த்ரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருள
பிள்ளை திருமகனார் தூவியம் புள்ளை சம்ஸ்கரிக்க-

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசே வேதார்த்த சார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்த மஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரி தாசம்-

நமாமி தௌ மாதவ சிஷ்ய பாதௌ யத் சந்நிதம் ஸூ க்திமயம் பிரவிஷ்டா
தத்ரைவ நித்யஸ்த்திதி மாத்ரியந்தே வைகுண்ட சம்சார விமுக்த சித்தா

வார்த்தோஞ்ச வ்ருத்த்யாபி  யதீய கோஷ்ட்யாம் ராணாம் பிரதமா பவந்தி
ஸ்ரீ மத் கவித்வம் சந்தாச நாம்னே தஸ்மை மனஸ் ஸூ கதி மஹார்ணவாய

நெஞ்சத்திருந்து   நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாயவாதியர்தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணாம்புயம் என் தலைக்கு அணிந்தே –

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் -நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருத் யாவதாத்மா பாவி நடக்கும் –

—————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை வைபவம்
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் -பெரியவாச்சான் பிள்ளையைப் பார்த்தருளி
குரு பரம்பரையும் த்வ்யத்தையும் உபதேசித்தவர்களோடு கேட்டவர்களோடு வாசி அற உத்தேச்யர் என்று பிரசாதித்தீர்
பரம சாத்விகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உம்மை அனுவர்த்திரதற்கு என் நினைந்து இருப்பீர் -என்று கேட்டு அருள
அடியேன் அஹன்காரி ஆஹ்கையாலே அடியேனுடைய அபிப்ராயத்தாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று நினைத்து இருப்பன்
ஈஸ்வரன் பெற்ற பிறவி  ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கும்
இனி இவர்கள் என் நினைத்து இருக்கிறார்கள் -என்று கூசிக் கொண்டு இருக்கும்
இவர்கள் என்னைக் கண்டு அனுவர்த்த்க்கையாலெ இவர்கள் பஷத்தாலும் ஸ்ரீ வைஷ்ணவத்வம் உண்டு என்று இருந்தது
ஆக த்ரிவித அபிப்ராயத்தாலும் அடியேனுக்கு முப்புரியூட்டின ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று நினைத்து இருப்பன் -என்று அருளினார்-

நாம் லீலைக்கு விஷயமோ -இரக்கத்துக்கு விஷயமோ
உடன் பட்டு இருந்தோம் ஆகில் லீலைக்கு விஷயம் ஆகிறோம்
அச்ப்ருஷ்ட அஹங்கா ரரான நித்தியரும் -நிவ்ருத்த அஹங்கா ரரான  முக்தரும் அவன் இனிமைக்கு விஷயம் ஆகிறார்கள்
அஹங்கார மமகார வச்யராய் இருந்து வைத்து அக்குறையும் கூட அறிய மாட்டாதே சம்சாரிகள் லீலைக்கு விஷயம் ஆகிறார்கள் –
சதாச்சார்ய பிரசாதம் அடியான பகவத் ப்ரசாதத்தாலே அஹங்கார மமகாரம் கழிய வேணும் என்று இருக்கிற நாம் அவன் இரக்கத்துக்கு விஷயம் ஆகிறோம் –
ஆக
சர்வ சேதனரையும் சர்வேஸ்வரன்
அஹம் மமதா புத்தி முக்தி விரக்த்யாசக்தி விசேஷத்தாலே ஸ்வ
மாதுர்ய
காருண்ய
லீலா
விஷயம் ஆக்கி விநியோகிக்கும்  என்றபடி

தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய
கலங்குகிறவனும் கலக்கிறதும் கலங்கிக் கிடக்கிறவர்களும்
தெளிவிக்கிறவனும் தெளிகிறவனும் -தெளிந்து இருப்பவனுமாய் இ றே இருப்பது
இதில் கலங்குகிறவன் ஜீவாத்மா
கலங்குகிறது -அசித்து
கலங்கிக் கிடக்கிறார்கள்- சம்சாரிகள்
தெளிவிக்கிறான் -ஆச்சார்யன்
தெளிகிறான் -சேதனன்
தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன்
ஆகையாலே ஆச்சார்ய உபதேசன தெளிந்தவன் கலங்குகிற தன்னையும் கலக்குகிற பிரக்ருதியையும் கலங்கிக் கிடக்கிற சம்சாரிகளையும்
தஞ்சம் அன்று என்று கை விட்டு
தெளிவிக்கிற ஆச்சார்யனையும் தெளிந்து இருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகை காண் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்வரூப பாரதந்த்ர்யம் இருக்கும் படி என்
ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக சர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில் கந்தல் அற்று
உபேயத்தில் த்வரை விஞ்சி  இருக்கை
காண் -பாரதந்த்ர்யா ஜ்ஞானம்
எல்லாம் பர ப்ரேரிதமாம் இத்தனை-

ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமோ பிராப்ய அனுரூபமான ஸ்வரூபமோ-என்று கேட்க
அவரும் முமுஷூ தசையில் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் முக்தி தசையில் ப்ராப்ய அனுரூபமாய் இருக்கும் ஸ்வரூபம் என்று அருளிச் செய்தார் –

ததீய தோஷம் சொல்லுவார் இடம்
தண்டதரனான யமன் பரிஹர-மதுசூதனன் அடியார்கள் இடம் போகாதீர்கள்
ந கச்சின் ந அபராத்யதி -என்றாள் பிராட்டி
ஈஸ்வரன் –செய்தாரேல் நன்று செய்தார் என்றான்
ஆழ்வார்கள் –அவன் தமர் எவ்வினையராகிலும் எம் கோன் அவன் தமரே -முதல் திரு -55 -என்றார்கள்
இப்படி இருக்க அவர் குற்றம் இவரை ஒழியச் சொல்லுவார் யார் -என்று அருளினார்-

வாதி கேசரி கார்ஹச்த்ய ஆஸ்ரம நிஷ்டராய் இருக்கும் போது-முசலகிசலயம்-
32 திரு நஷத்ரத்தில் அஷர சிஷைகளும் பண்ணுவித்து –
ஆஸ்ரம ச்வீகாரம் செய்து பன்னீராயிரம் தீப பிரகாச சதம் தத்வ நிரூபணம் –

நாயனார் ஆச்சான் பிள்ளை திருக் குமாரர் -தத்வ சங்க்ரஹம் -முக்த போகாவலீ- ஜ்ஞானார்ணவம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷ்யைக லஷ்யாணாம் ஸூ லபம் ஸ்ரீ தரஸ் சதா

நாயனார் ஆச்சான் பிள்ளை திரு நஷத்ரம் -சித்திரை –
ஸ்ருத்யர்த்த சரா ஜனகம் ஸ்ம்ருதி பாலமித்ரம்
பத்மோல்சத் பகவதங்க்ரி புராண பந்தும்
ஜ்ஞா நாதி ராஜ மபய பரதராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு நஷத்ரம் -மகம் –
ஸூ ந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம்
அசமத் வித பரித்ரான பரமே ப்ரத்ராண  மாசனம்
வாதி கேசரிணம் வந்தே ரம்யா ஜாமாதரம் முனிம் –

—————————————————————————————————————————————–

ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -நம்பிள்ளை இடம் பெற்ற ஈடு முப்பத்தாறாயிரம்
தமது குமாரரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாளுக்கு பிரசாதிக்க
அவர் தமக்கு அந்தரங்க சிஷ்யராய் கோல வராஹ நாயனார் என்ற
திரு நாமம் உடைய நாலூர் பிள்ளைக்கு பிரசாதித்து அருள
அவர் தமது நல்ல குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு பிரசாதித்து அருள
அவரும் திருவாய் மொழிப் பிள்ளைக்கும் திரு நாராயண புரத்தாயிக்கும் -திருவாய் மொழி ஆச்சான் –பிரசாதித்து அருள
ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -ஹஸ்தம்
வரதார்யக்ருபா பாத்ரம் ஸ்ரீ மாதவகுரும் பஜே
குருகாதீச வேதாந்த சேவான் மீலித வேதனம்-தனியன்
பத்மநாப பெருமாள் -சுவாதி
யே நாவகாஹ்ய விமலோச்மி சடாரி ஸூ நோர் வாணீ கனார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரனாப்ச மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரம-தனியன் –

நாலூர் பிள்ளை -புஷ்யம்
ஸ்ரீ பத்ம நாப குருத சடஜின் முநீந்திர ஸ்ரீ ஸூ கடி பாஷ்ய மதி கம்ய சம்ருத்த போத
தத்தேவ ராஜ குரவே ஹ்யதிசாஸ் சதுஷ் பூர்வா செத்த கோல வர தேசிகம் ஆஸ்ரயே தம்
நாலூர் ஆச்சான் பிள்ளை தனியன்
நமோஸ்து தேவராஜாய சதிர்க்ராம நிவாசனே
ராமாநுஜார்ய தாசச்ய ஸூ தாய குணசாலினே-

கோலாதிபாத் விதுவராப்ய சஹச்ர கீதோபாஷ்யம்  ஹி பூர்வதன தேசிக வர்யகுப்தம்
த்ரேதோ ப்ரவர்த்ய புவிய ப்ரத யாஞ்சகார ஸ்ரீ தேவராஜா குருவர்யம் அஹம் பஜே தம் –

ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்மாப்யாம் ஸ்ரீ ஸூ க்தி தேசிக வரேண ச யச்த்ரிதைவம்
வ்யக்தாஸ் சடாரிக்ருதி பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவ புங்க வேஷூ-

—————————————————————————————————————————————–

வடக்குத் திருவீதிப் பிள்ளை
ஆத்ம ஸ்வரூபம் இருக்கும் படி -அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியேன் –என்று இ றே என்று அருளினார்
ஈச்வரோஹம்-அஹங்காரம் அற்று -தாசோஹம்
நிலை நின்ற ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை
ஸ்வ சத்தையில் நித்யத்வமும் நிலை நின்ற பாகவத அபசாரமும் உண்டாம் அளவத்தனை அன்றோ –
இவர் திரு நஷத்ரம் சுவாதி
ஸ்ரீ கிருஷ்ண பாத பதாப்ஜே நமாமி சிரசா சதா யத் பிரசாத பிரபாவேன சர்வ சித்திரபூன் மம-தனியன் –

பிள்ளை லோகாச்சார்யர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்
தம்பியுடன் தாசரதியானும் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் பொங்கு புனல்
ஓங்கு முடும்பை உலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான்

கூர குலோத்தம தாசர்
மணப்பாக்கத்து நம்பியார்
கொல்லி காவலன் தாசர்
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை
கோட்டூரி வண்ணர்
திருமலை ஆழ்வார்
திருமலை ஆழ்வார் திருத்தாயார்
விளாம் சோலைப் பிள்ளை -ஆகியோர் பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர்கள்-

மா முடும்பை மன்னு மணவாள வண்ணனொடு
செமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று
தொட்டுரைத்த சொல்லும் த்வயம் தன்னின் ஆழ்  பொருளும்
எட்டெழுத்தும் இங்கு உரைப்பார் ஆர்
த்ராவிடம் நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம்
ரம்யா ஜாமாத்ரு தேவேன தர்சிதம்   கிருஷ்ண ஸூ நுனா-நாயனார் தனியன்-

கலகமிகு பஞ்சமுடன் கள்ளர் பற்றிலகத்து இருவர் காரியப்பேர் ஒருவர் வந்து
பலமறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல் வாங்கி நீங்கி
நல மிகுந்த தருமிதனை நம்பினோமேல் நம் பெருமாள் உம்பருடன் நயந்து வாழும்
இலகுமிகு பெரும் செல்வம் இல்லை என்று ஏர் முடும்பை யுலகாரியனும் உரை செய்தானே —
லோகார்ச்சார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-
கூர குலோத்தம தாசர் -ரகஸ்யங்கள் அர்த்தம் சாதிக்க
திருவாய் மொழியை திருக் கண்ணம் குடிப் பிள்ளைக்கும் திருப்புட்  குழி ஜீயருக்கும்
மூவாயிர வியாக்யானம் நாலூர்ப்பிள்ளைக்கும்
சப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை விளாம் சோலை பிள்ளைக்கும்
நியமித்து அருளி திருவாய் மொழிப் பிள்ளைக்கு
ஆனிதனில் வளர்பக்கத் தாறிரண்டா நாள் தன்னில்
ஊனமிலிவ் வுலகாரு முடும்பை யர் கோன் உயர் தீவைத்து
வானவர்கள் தற்சூழ வைகுண்ட குட்டநாடு
தானினிது வீற்றிருக்கத் திரு வுள்ளமாய்
பிள்ளை திருவடிகளை த்யானித்துக் கொண்டு
ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————————————————————————————————————————————–

ஆழ்வார் தோழப்பர்-அருளப்பாடும் வரிசைகளும் வழங்கி –
சாத்விகை அம்மையார் -திருக்குமாரர் -திருமலை ஆழ்வார்
கூர குலோத்தம தாசர் –திரு நஷத்ரம் -ஐப்பசி திருவாதிரை -திரு விருத்தம் -ரஹச்யார்த்தங்களை பிரசாதிக்க –
அவர் தனியன் –
லோகாசார்யா க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குணா வாசம் வந்தே கூர குலோத்தமம்
ஸ்வ யமா ஹூய சைலேச குரவேஸ்ர்த்த ப்ரதா நத
லப்தோ தாராபிதம் கூர குலோத்தம மஹம் பஜே   –

ஸ்ரீ சடகோபன் எழுந்து அருளப் பண்ணி வைத்து நாலூர் பிள்ளையை அருளாளர் திருவடி ஊன்றியவரே-என்று அழைத்து
திருமலை ஆழ்வாரை அவர் கையிலே காட்டிக் கொடுத்து
இவருக்கு மூவாயிரம் சாதிக்கும் படி ஜ்யோதிஷ் குடியிலே நியமித்தோம்
திருப்புட் குழி ஜீயர் பாடே திருவாய் மொழி இசை ஈடு கேளாத இலவு தீர அத்தையும் இவருக்கு சாதியையும் -என்று பரவசராய் நியமிக்க
அவரும் தனது திருக்குமாரர் -நாலூர் ஆச்சான் பிள்ளையை உமக்குத் தகும்படி சொல்ல வல்லவர் இவர் என்று காட்டிக் கொடுத்து அருள
திருநாராயண புரம் எழுந்து அருளி ஆயி சுவாமி யுடன் கேட்டு அருளினார்-

புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும்   புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்
மறைத் தமிழ் ஆயிரமும் திகழும்படி செய்த ஸ்ரீ  சைலேசர்
திருவனந்த புரம் எழுந்து அருளி விளாம் சோலை பிள்ளை இடம் ஸ்ரீ வசன பூஷணம் ஏழு காதையாக பிரசாதித்து அருளினார் –

பற்றாத வெங்கள் மணவாள யோகி பதம் பணிந்தோன்
நற்றே வராச நலம் திகள் நாரண தாதருடன்
கற்றார் எம் கூர குலோத்தம தாதன் கழல் பணிவோன்
மற்றாரும்  ஒவ்வாத் திருவாய்மொழிப் பிள்ளை வாழியவே –

வாழி நலம் திகழ் நாரண நாதன் வடிவும்
வாழி யவன் அமுத வாய் மொழிகள் வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாசிரியன் சொல்
தேறு திருவுடையான் சீர் –

—————————————————————————————————————————————–

திருமலை ஆழ்வார் தம்முடைய திரு மருமகனாரை புத்திர அபிமானம் பண்ணி தேவப் பெருமாள் என்று நாலூராச்சான் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார்

சிக்கல் கிடராம் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையர்-ஸ்ரீ ரெங்க நாச்சியார் -இருவரும் மா முனிகள் திருத் தந்தை திருத் தாயார்
கோட்டூர் அழகிய மணவாளப் பெறமால் பிள்ளை -மாதாமகர் –

கல்யப்தம் 4471-1292-சாதாரண வருஷம் துலா ராசி-
ஐப்பசி -26 நாள் -வியாழக் கிழமை -மூல நஷத்ரம்
சுக்ல பஷம் சதுர்த்தி திதி
ரம்ய ஜாமாத்ரு முனி -அழகிய மணவாளப் பெருமாள் திரு நாமம் சாத்தப் பட்டார்
-1293 பரிதாபி வைகாசி -கோயில் ஒழுகு -1290 பரிதாபி -வைகாசி -17 தேதி இதில் –திருவரங்கம் ஸ்தாபித்து அருள –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்து
இராமானுஜ சதுர் வேதி மங்கலம்
யதீந்திர ப்ரவணர்-வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லாரவிந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

கலாபத்தினால் ஆழ்வார் வலசையாக எழுந்து அருளின போது பவிஷ்யதாசார்யா உடையவர் திருப் புளி  யாழ்வார் அடியில் புதைத்து வைக்கப் பட்டு
திருமலை ஆழ்வாரால் கண்டு எடுக்கப் பட்டார் -எனபது வரலாறு
நாயனார் திருக்குமாரர் –எம்மையன் இராமானுசன் -என்று திருவாய் மொழிப் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார் –

இன்றோ வெதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள்
இன்றோ கலியிருள் நீங்கு நாள் இன்றோ தான்
வேதியர்கள் வாழ விரை மகிழோன் தான் வாழ
வாதியவர்கள்  வாழ் வடங்கு நாள் –திருவாய்மொழிப் பிள்ளை முதல் இரண்டு வரிகளையும்
மணவாள மா முனிகள் இறுதி இரண்டு வரிகளையும் சாதித்து அருளியது –

வடமாமலை முதல் மல்லனந்த புரி எல்லை மல்கித்
திடமாக வாழும் திருவுடைய மன்னரில் தேசுடையோன்
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோபதாதர் குருகூர் வாழ பிள்ளையைச் சேறு நெஞ்சே -என்றும்
செந்தமிழ் வேதத் திருமலை யாழ்வார் வாழி
குந்தி நகர்க் கண்ணல் கோடை வாழி உந்திய சீர்
வாழியவன முதவாய் மொழி கேட்டப் பொருளில்
தாழுமற்றன்பர் திருத் தாள் -என்றும் உகந்து தனியன் சாதித்து அருளினார்

உத்தமனே உலகாரியனே மற்று ஒப்பாரி இல்லா
வித்தகனே நல்ல வேதியனே தண் முடும்பை மன்னா
சுத்த நன் ஞானியர் நல துணையே சுத்த சத்துவனே
எத்தனை கால இருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே — வைகாசி பஹூலா அஷ்டமியில்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளை த்யானித்துக் கொண்டு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ பாஷ்யம் ஒருக்கால் -அனவரதம் அருளிச் செயல் -சர் ரெங்கம் நித்ய வாசம் -நியமித்து அருளி
இவரை அவதார விசேஷம் என்று ஆதரித்துபோருங்கோள்-என்று மற்றோருக்கு நியமித்து அருளினார்

நமஸ் ஸ்ரீ சைல நாதாய குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-

அழகிய வரதர் -ராமானுஜ ஜீயர் -பொன்னடிக்கால் ஜீயர்  ஆஸ்ரயித்தார்

மாடமாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திரு விக்ரமன் வீதியும்
ஆடல் மாறன் அளங்கன் வீதியும் ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல் வாழ் குலசேகரன் வீதியும் குலவு ராச மகேந்தரன் வீதியும்
தேடுதன் வன்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவா வரணமே –

திருமாலை தந்த பெருமாள் பட்டர் -கோயில் அதிபதி -இவர் முப்பத்தாறாயிரப் பெருக்கர்
-துவளில் மா மணி மாடம் ஆழ்வார் பிரகிருதி சொல்லும் திருவாய் மொழி அர்த்தம் கேட்டபின்பு –
இவ்வுலகம் தன்னில் எதிராசர் கொண்டருளும்
எவ்வுருவம் யான் சென்று இறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லாம் இனிதேலும் எழில் அரங்கத்து இருப்புப் போல்
நில்லாது என் நெஞ்சு நிறைந்து –

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய ஊர்

எந்தை எதிராசர் எம்மை எடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ சிந்தை
மருளோ தெருளோ மகிழ்  மாலை மார்பன்
அருளோ விப்பேற்றுக்கு அடி

என்நெஞ்சே எங்கள் இராமானுசன் என்னும்
நன்னெஞ்சே இன்னும் இன்னும்
பெரும்பூதூர் என்னாய் போரப் பெரும்
போகம் எல்லாம் பெற

ஸ்ரீ மத் ரங்கம்  ஜயது பரமம் தாம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவது குசலீ கோபி பூமா சஹாய
திவ்யம் தஸ்மை திசது விபவம் தேசீகோ தேசிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களா நி –

கோவிந்த தாசர் அப்பர் -ஆஸ்ரயித்து பட்டர் பிரான் ஜீயர்
திருமஞ்சனம் அப்பா ஆஸ்ரயம்
திருமஞ்சனம் அப்பா திருக் குமாராதி ஆச்சி -கந்தாடை ஐயங்கார் க்ருஹம் மாட்டுப்பெண் -ஆஸ்ரயம்

புக்ககத்தின் நின்றும் பிறந்தகத்தில் போந்தது போல்
தக்க புகழ் தென்னரங்கம் தன நின்றும் மிக்க புகழ்
மாறன் திரு நகரி வந்தோம் அரங்கன் தன
பேறன்றோ நெஞ்சே இப்போது –

கருதித் தமிழ் மொழியும் சடகோபர் தம் பாதத்தைக்
கருதிப் பரவும் எதிராசன் கவியமுதம்
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன் புகழ் போய்ப்
பருதிக் கதிர் செல்லு மண்டலம் ஏறப் பரந்ததுவே

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இ றே ஆனந்த ஷஷ்டிகள் உதயம் -ஆச்சார்யா ஹிருதயம் -22
ஆயி சுவாமி இடம் கேட்க திரு உள்ளம்
எண்ணின பலம் எதிரிலே வரப் பெறுவதே

பூதூரில் வந்த புண்ணியனோ பூங்கமழும்
தாதாரு மகிழ் மார்பன் தானிவனோ தூத்தூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –

மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய   மறையோரான பெற்றார் தீதற்ற
ஆசாரியவிதயம் பெற்றார் நம்மாயி இவர்
தேசாரத்தன் கண் நெஞ்சே காண்

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய மறையோரான பெற்றார்  நீதியினால்
ஆங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாள முனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று

மீண்டும் கோயில் ஏற –
பிறந்தகத்தில் சீராட்டுப் பெற்றாலும் தன்னைச்
சிறந்துகக்கும் சீர் கணவன் தன்னை மறந்திருக்கப்
போமோ மணவாளர் பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வியறிந்தால்–

எறும்பி அப்பா ஸ்வப்னத்தில்
சேஷ ஸ்ரீ மான் ஜநிஹிபுரா சௌம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ் தாதா நுபகவான் ராகவச்யா நுஜன்மா
பூத்வா பூயோ வரவர முநிர் பூய சாபா சமான
ரஷாத் யஸ்மான் ரகு குலபதே ராஸ்தி தோபத்ர பீடம்
பூத்வா பவ்யோ வரவர முநிர் போகி நாம் சார்வ பௌம
ஸ்ரீ மேட் ரெங்கே வசதி விஜயீ விஸ்வ சம்ரஷணார்த்தம்
தத்வம் கந்தும் வ்ரஜ சரமம் இத்யாதிசத் ராகவோயம்
ஸ்வப்னே சோயம் வரவர குருஸ் சமஸ்ரயோ மாத்ருசா நாம் -சக்கரவர்த்தி திருமகன் கட்டளை இட்டு அருளி-

யீச்வரச்ய சௌஹார்த்தம் யத்ருச்சா ஸூ க்ருதம்ததா
விஷ்ணோ கடாஷம் அத்வேஷம் ஆபிமுக்யம்ச சாத்விகை சம்பாஷணம் ஷடேதானி-
உத்தம நம்பிக்கு பெரிய பெருமாள் -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி இவர் கிடீர் ஜீயராக வந்து அவதரித்து அருளினார்
விஸ்வசித்து இரும்
ஆயிரம் பைந்தலையனான திருவனந்த ஆழ்வானாக சேவை சாதித்து அருள -ஆகில் ஒருவருக்கும் சொல்லாதே கொள் -என்று சாதித்து அருளினார்-

சீர் வசன பூடணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பார்த்தனைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் தேரில் நமக்கு
ஒப்பார் இனி யாருலகாசிரியன் அருள்
தப்பாமல் ஓதியபின் தான் –

வாக்பூஷணம் வகுளபூஷண சாஸ்திர சாரம்
யப் மாத்ரு சாஞ்ச ஸூகாமம் வ்யவ்ருணோத் தயாளு
ரம்யோ  பயந்த்ரு   முனையே யாமினாம் வரைய
தஸ்மை நமஸ் சம தமாதி குணார்ணவாய

மேவும் தவத்து வரயோகி விட்ட வியாக்கியையால்
தேவும் திகைக்கும் நல தத்துவ ரகச்யத்துடனே
தாவும் பெரும் புகழ் ஆசாரிய விதயத்திற்குமா
தாவும் பொருள் செறிச் சொல் ஆபரணச் சுருதிக்குமே-

நீங்களும் இவர்களைப் போலே ஸ்ரீ வசன பூஷண அதிகாரிகளோ அஹங்காரம் நடையாடி விவாதம் பண்ணுகைக்கு-என்ன
இத்தைக் கேட்டு லஜ்ஜா புரஸ் சரமாக அதில் நின்றும் நிவ்ருத்தரானார்கள்

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் ஆயிடினும்
அக்கணத்தே நம்மிறைவராவரே மிக்க புகழ்க்
காரார் பொழில் கோயில் கந்தாடை யண்ணன் எனும்
பேராளனை யடைந்த பேர்

மருமலர் கமழும் சோலை மதுரை மா நகர் வந்து எய்தி
அருள் மொழி பெரிய நம்பி யன்று எதிராசராற்கு
அரும் பொருள் வழங்கும் எங்கள் ஏரி காத்தருள்வார் கோயில்
திரு மகிழடி யில் செல்வீர் தீ வினை தீருமாறே

இதுவோ கிளியாறு இவ்வூரோ திரு மதுரை
இதுவோ திரு மகிழும் கோபுரமும் இதுவோ
பெரிய நம்பி தாமுகந்து பின்னும் எதிராசர்க்குத்
துயம் அளித்த தூயப்பதி –

ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ எழில் ஆலி என்னுமூர் ஈதோ தான்
வெட்டும் கலியன் வேலை வெட்டி நெடுமால்
எட்டெழுத்தும் பறித்த இடம் –

பொன்னி தனில் குளித்து ஆங்கம் தனில் புகுத்தப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள  மா முனிவன் என்னையன்
வாழ்ந்திருக்கும் மேடம் தன்னில் வந்திருக்கப் பெற்றோம் சென்னி தனிலவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை யாழ்வாரில் என்றும் சிறந்திருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கப் பொருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே

மண்ணாடு வாழ வந்தான் மணவாள மா முனிவன் வண்மை
கண்ணார் அருளுக்கு இலக்காக நல் வாழ்வும் கண்டு அவன் தன்
திண்ணார்  அடிகளில் குற்றேவல் செய்து திரியவும் நான்
எண்ணாது இருக்கவே நடுவே நமக்கு வந்து எய்தியதே –

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில்
நலமான வாவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை  வளர்பக்க நாளா நாளில்
செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நம் கண்
மணவாள மா முனி வழங்கினாரே —

ஆனந்த வருடத்தில் கீழ்மை யாண்டில்
அழகான ஆனிதனின் மூல நாளில்
பா நுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையின் ஆளியிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாத்த
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே-

பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை யண்ணன் எறும்பி அப்பா
ஏராரும் அப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரர் என்பேர்
ஆர்ந்த திக்கயம் சூழ் வர யோகியைச் சிந்தியுமே-

வானமா மலை ஜீயர் -பிரியாது ஆட்செய்து
கந்தாடை அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டான் போலே பாதுகா ஸ்தாநீயர்
எறும்பி அப்பா -வடுக நம்பி போலே அத்யந்த அபிமதராய்
பிரதிவாத பயங்கர அண்ணா -கூரத் ஆழ்வான் போலே ப்ரதிபஷ நிரசனம் ஸ்ரீ பாஷ்யம் உசாத்துணை
அப்பிள்ளை -சேனை முதலியார் அண்ணன் -சடகோப தாசர் -திருப்பாண்  ஆழ்வார் தாசர் -அருளிச் செயலுக்கு உசாத்துணை
அப்பிள்ளார் -அமுதுபடி சேவை
பட்டர்பிரான் ஜீயர் ஸ்ரீ பதாச்சாய ஆபன்னார்
ஜீயர் நாயனார் இளவரசராய் திருக் குறுகிப் பிரான் பிள்ளான் போலே அத்ய ஆதரணீயராய் இருப்பார்-

திரு நாளுக்காகத் திருவீதியில் அரங்கர்
வருநாளு மாற தெந்தைக்கு இன்று பெருமாள் தன்
அந்த வடிவழகைத் தானோர் நாளும் காணேனே
இந்த வுடம்போடினி-

இந்த உடல் நோய் வீழ்ந்து என்னை வல் வினையேன்
அந்தோ எனக்குத் தென்னரன்கா
இந்த வுடம்புடன் சேவை தனக்கு என் விரோதியாய்
வன்பரையே தானினி

எம்பெருமானார் தம்பிரான் என்னுமவரை
நம்பெருமான் தாமுகந்து நாள் தோறும் தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கை விடார்-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குறவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர் காள்
சூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான் இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர்

தென்னரங்கர் தேவியே சீரங்க நாயகியே
மன்னுயிர்கட்கெல்லாம் மாதாவே என்னையினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலங்காமல்
அவ் வுலகில் வாங்கி யருள்

சீரங்க நாயகியே தென்னரங்கன்   தேவியே
நாரங்கட் கெல்லாம் நல தாயே மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எந்தன் இடர்  தீராதது என்

இந்த உடம்போடு இனி இருக்கப் போகாது தான்
செங்கமலத் தாள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கரும் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருபபாயே இங்கு –

சென்று திருமால் அடியார் தெய்வக் குழாம் கூடும்
என்றும் ஒரு நாளாமோ ஆழ்வாரே துன்னு புகழக்
கமலம் பாடினீர் ஐயோ அடியேனும் இக்
கமலம் சேர் காயம் விட்டு

இந்த வுடம்போடு இருவினையால் இவ்வளவும்
உந்தன் அடி சேராது உழன்றேன் அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி

போதச் சிவந்த பரிமளம் விஞ்சும் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீர் ஏற வோட்டிச் சிறந்தடியேன்
எதத்தை மாற்றும் மணவாள யோகியினிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே

அருளிச் செயல் அனுசந்தானம்  கேட்டருளி
ருதிரோத்காரி சம்வத்சரம் மாசி மாத கும்ப ராசி சனிக் கிழமை கிருஷ்ண பஷம் த்வாதசி -திருவோணம் நஷத்ரம் -ஸ்ரீ வைகுண்டம் மீண்டு எழுந்து அருளினார்-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம்  –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பிரபன்ன கர்த்தவ்யம் –

January 10, 2015

முமுஷூவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு இருக்கும் நாள் கால ஷேபம் பண்ணும் பிரகாரம் எங்கனே
என்று உடையவர் திருவடிகளிலே முதலியாண்டான் விண்ணப்பம் பண்ண
ஸ்வாமியும்
1-குரு பரம்பரா பூர்வகமாக த்வ்யத்தை அனுசந்தானம் பண்ணுவான்
உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனும் நாய்ச்சிமாரும் நித்ய சூரிகளும் கூட எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் -பரம பதத்த்ல் கொலு வீற்று இருக்கும் -த்வய சிம்ஹாசனமாய் -இருக்கும் த்வயம்
2- பெரிய பெருமாள் திருவடிகளை சேவித்தவாறே பொது நின்ற  பொன்னம் கழல் –என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும்
3-அபய ஹஸ்தத்தை சேவித்தால் அநந்ய சரணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாராணமாய் இருக்கும்
4- திருமுக மண்டலத்தைக் கண்டால் நித்ய சூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும்
5-பிராப்யமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே -உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று பரம பிராப்யமாக  அனுசந்தானம் பண்ணுவான்
6-ப்ராபகமான சரம ஸ்லோஹத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்தில் அனுசந்தானம் பண்ணுவான்
7- இரண்டும் கூடி போக ரூபமான த்வ்யத்தை பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அனுசந்தானம் பண்ணுவான்
8- மத்ச்யத்தின் வடிவு எல்லாம் ஜலமயமாய் இருக்கும் போலே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதி களுக்கு
நிரூபக பூ தை யாகையாலே பெருமாள் அவயவம் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும்-
9-ஸ்ரிங் சேவாஸாம்-என்ற தாத்வர்த்த பிரகாசகமாய் புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப் பெரிய பெருமாள் திரு மார்பிலே அனுசந்தானம் பண்ணுவான்
10-மன்-என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அனுசந்தானம் பண்ணுவான்
11-நாராயண -என்று ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும்
ஆஸ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞான சக்த்யாதி  குணங்களையும்
உடையவன் என்று அனுசந்தானம் பண்ணுவான்
12-சரனௌ-என்று-பெரிய பெருமாள் திருவடிகளை அனுசந்தானம் பண்ணுவான்
13-சரணம் -என்று சரண்யனான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்தில் அனுசந்தானம் பண்ணுவான்
14-பிரபத்யே -என்று பிரபத்தாவான தன்னுடைய ஸ்வரூப அநுரூப ச்வீகாரம் என்று அனுசந்தானம் பண்ணுவான்
15-ஸ்ரீ மதே நாராயணாய -என்கிற பதங்களை
ஸ்வாமிநியாய –அவனுக்கு வல்லபையாய் –ப்ராப்யையாய் -கைங்கர்ய வர்த்தகையாய்
பகவத் முக உல்லாச ஜனகையாய்
தத்ப்ரீத்ய அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடு சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதி சம்பந்தாய் இருக்கும் அவனுடைய
தாரகத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஜ்ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷத் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்   என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன விஷயமான  சௌர்யாதிகள்   என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அங்க ரூபமான ஸ்ரீ வைகுண்ட திவ்ய  நகருள் த்வய மண்டபத்திலே திவ்ய மகிஷிகளோடே
திவ்ய பரிச்சதங்கள் சேவிக்க ச்வாமித்வ பிரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தானம் பண்ணுவான்
16- ஆய -என்று அவன் அரசன் ஆகையாலும் சேஷியாகையாலும்
பிரபன்னனான இவன் அடி சூடும் அரசன் ஆகையாலும் சேஷம் ஆகையாலும்
சர்வவித சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அனுசந்தானம் பண்ணுவான்
17-நம-
த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யு -என்றும்
மமேதி அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என்தனதே என்று இருந்தேன் -என்று சொல்லப் படுகிற ஷஷ்ட்யந்தமான பதத்தை
த்ரயஷரம் ப்ரஹ்மண பதம் என்றும்
ந மமேதி ச சாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் சொல்லுகிற
ந காரார்த்த பலத்தாலே ஷஷ்ட்யந்தமான  பதத்தை நிஷேதித்து-
18-தனக்கேயாக என்கிறபடியே அத்தலையில் நினைவே நினைவாம்படி கீழ்ச் சொன்ன சகல சேஷ வ்ருத்திகளையும் கொண்டருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து அனுசந்தானம் பண்ணுவான் –என்று அருளிச் செய்தார் -உடையவர் –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் –பகுதி -3-

January 10, 2015

65-சமர்ப்பண விரோதி
அநாதி காலமே பிடித்து தத் ததீய விஷயத்தில் ஆத்மாத்மீய சமர்ப்பணம் பண்ண வொட்டாத அஹம் மமதையும்(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ உன்னுடைமையும் நீயே -மாம் மதீயஞ்ச நிகலாம் சேதன சேதநாஞ்ச)
ஆத்ம சமர்ப்பண இச்சை பிறந்த பின்பு மதியம் என்று ஓன்று உண்டாய் சமர்ப்பிக்கப் பெறாமையும்
ததீயத்தை மதியம் என்று பிரமித்து சமர்ப்பிக்கையும்
முன்புத்தை ஆத்மாத்மீய அபஹாரத்தோடு ஒக்கும் இப்போதைய ஆத்மாத்மீய சமர்ப்பணம் என்று அறியாமையும்
அவன் உடைமையை நாம் சமர்ப்பிக்கையாவது என்  என்று சிஷ்டாச்சாரமான சமர்ப்பணத்தைத் தவிருகையும்
தன்னுடையமையைத் தான் கொள்ளுகிறான் என்று சமர்ப்பியாமையும்
என்னது என்னும் துரபிமான தூஷிதமானவற்றை சமர்ப்பிக்கையும்
பூர்ண விஷயம் என்று அறியாமல் சாபேஷம் என்று பிரமித்து சமர்ப்ப்க்கையும்
அங்குத்தைக்கு இல்லாத ஒன்றை  சமர்ப்பிக்கிறோம் என்று இருக்கையும்(அப்ருத் ஸித்த விசேஷணமே -ஸமஸ்த சேதன அசேதனங்களும் –அந் நலனுடை ஒருவனையே நணுகினம் நானே -உள்ளத்தில் இருந்து என்றுமே விலக வில்லையே -)
நிரபேஷமாய் பூர்ண விஷயமாய் இருந்து இத் தலையை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்றே இவற்றை அங்கீ கரித்து அருளுகிறான் என்று அறியாமையும்
அவன் உபகரித்ததற்கு பிரத்யுபகாரமாக சமர்ப்பிக்கிறோம் என்று பிரமிக்கையும்
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-முயல்கின்றேன் உந்தன் மொய் கழல்க்கு அன்பையே -என்று பிரத்யுபகாரம் தேடிக் காணாமல் நெஞ்சாரல் பட்டுத் தடுமாறாமையும்-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணும் இடத்தில் என்னதான ஆத்ம வஸ்துவை நான் சமர்ப்பிக்கிறேன் -என்ற நினைவும் -என்கை –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

நிரூபித்த விடத்து
எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே
உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று
பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு
அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக
பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே
ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து
ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே
ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி
பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது
ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்

எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)

66-தர்சன விரோதி –
ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ சங்கையும்
திருமூர்த்தி சாம்ய சங்கையும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ததீயத்வ ஆகாரத்தாலே ஆஸ்ரயணீயர் ஆனாலோ என்ற சங்கையும்
பௌத்த சைவ மாயாவாதி பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய குதர்க்க உக்திகளைக் கேட்டு பிரமிக்கையும்

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

சாமான்ய சாஸ்திர தாத்பர்ய நிஷ்டன் ஆகையும்(வர்ணாஸ்ரம தர்மம் பிரதானம் -விப்ரர் -கர்ம அனுஷ்டானம் -விசேஷ தர்மம் –பிரபன்னர் -பிரபன்ன காயத்ரியையும் அறிய வேண்டுமே)
நாம ரூபங்களை உடையராய் பாகவத் நிந்தை பண்ணுகையும்

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அற்று இருக்கையும்(பாஹ்ய -ஆந்தர லக்ஷணங்கள் -ஆத்ம குணங்கள் -சம தமாதிகள்)
த்வய அதிகாரி அல்லாமையும்
அருளிச் செயலில் அந்வயம் இல்லாமையும்
தத்வ ரஹஸ்ய பரிஷை இல்லாமையும்(நல்ல திருந்திய ஞானம் -ததீய பர்யந்தம் -அவர்கள் உகந்த கைங்கர்யம்-சிஷிக்கப்பட்ட ஞானம் வேண்டுமே)
சிஷ்டாசார நிஷ்டை இல்லாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்கியம் இல்லாமையும்
ஒரு ஜ்ஞாநாதிகர் அபிமானத்தில் ஒதுங்காது ஒழிகையும்
நம் தர்சனத்துக்கு விரோதிகளான பிரதி கூலரோடு சஹவாசம் பண்ணுகையும் –என்கை-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

67-ஆஸ்ரம விரோதி
குல தொல்லடியான தன்னை தத்தாஸ்ரமியாக (மட்டுமே)நினைக்கையும்(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -குல தொல் அடியேன் -)
உத்தமாஸ்ராமி என்று கர்விக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்லாத ஆஸ்ரமி ஸ்வ பசரில் கடை என்று அறியாமையும்
தத்தாஸ்ரமே அனுஷ்டானத்தில் தாஸ்ய அனுகுண அனுஷ்டான பிரதிபத்தி இல்லாமையும்
தத்தாஸ்ராம விபரீத உபசாரமும்
சரமார்த்தம் நெஞ்சில் பட்டும் சாமான்ய அனுஷ்டான த்யாக பீதி அனுவர்த்திக்கையும்
ஸ்வரூப அனுரூபமான ஆஸ்ரம விபரீத அனுஷ்டானமும்
அந்த ஸ்ரீ வைஷ்ணவத்வாதி ஆஸ்ரம விரோதியான கீழ் மேற் சொல்லும் விரோதங்களைப் பரிஹரித்து வர்த்தியாமையும்
ஆஸ்ரம மினுக்கம் கொண்டு ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணக் கூசுகையும்(பின்பு அழகு பெருமாள் ஜீயர் நம் பிள்ளைக்கும் நஞ்சீயர் பட்டருக்கும் கைங்கர்யம் செய்த விருத்தாந்தங்கள்)
ப்ரஹ்மசர்யாதி ஸ்வ ஆஸ்ரம விருத்த தர்மாசரணம் -என்கை –

68-ஜாதி விரோதி
அஜ்ஞர் ஜ்ஞாநாதிகர் பக்தி பரவசர் என்கிற ப்ரபன்ன ஜாதி தர்மமான மகா விஸ்வாச ஹானியும்
மனுஷ்யத்வ ஜாதிக்கு விருத்தமான தர்மா சரணமும்
ஸ்வ யத்ன பிரவ்ருத்தியும்
ப்ரபத்திக்கு ஸூத் யஸூத்திகள் தேடுகையும்(பெருமாள் விபீஷணன் -இருந்தபடியே அமையும் -ஸூத்தியும் அஸூத்தியும் தேட வில்லையே)
தாஸ்ய அனுகுண  நித்ய கர்ம த்யாகமும்
அநித்ய கர்மிகளுடன்(நித்ய கர்மங்களைச் செய்யாதவர்கள்) சஹ வசிக்கையும்
திரு மந்த்ரத்தில் பிறக்கையே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்று அறியாமையும்
தத் இதர மந்த்ரத்தில் உண்டான ஜன்மம் நிகர்ஷம் என்று அறியாமையும்
கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் என்னுமதே தனக்கு ப்ராப்தமான பிரசித்த வ்யபதேசம் என்று அறியாமையும்
க்ராம குலாதிகளால் வரும் வ்யபதேசம் அநர்த்த கரம் என்று அறியாமையும்
பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குசாதிகள் என்று இராமையும்
ஆஸாபாச பத்தரான சரகு தின்றிகளை கூடஸ்தர் என்று இருக்கையும்

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் —சூரணை -36-

ஸ்ரீ வைஷ்ணத்வ சித்தி கரமான சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆகாமையும்
அஹங்கார ஹேதுவாய் பாகவத அபசாரத்தை விளைக்கும் வர்ணம் த்யாஜ்யம் என்று அறியாமையும்
கான்றத்தைக் கவ்வப் பண்ணுமதாகையாலே பய ஜனகமாய் நைச்யம் பாவிக்க வேண்டும்படி அஹங்கார க்ரஸ்தமானது ஹீன ஜாதி என்று அறியாமையும்
பய ஹேதுவும் இன்றியே ஜன்ம சித்த நைச்ய முடைத்தாய்
ஹீன ஜாதி தோஷ அபஹந்த்ரி யானதுவே உத்தம ஜாதி என்று அறியாமையும்
ஹீன ஜாதியில் தோஷம் உத்தம ஜாதியான தர்சநாதிகளாலே அபஹ்ருதமாம் என்று அறியாமையும்
ஜாதிக் கொத்தை போகாமல் உத்தம ஜாதியுடன் கலந்து தூஷிக்கையும்
வேதகப் பொன்னான ஜாதி சம்பந்தத்தில் சங்கை அனுவர்த்திக்கையும்
விலஷண ஜ்ஞாநாதிகர் ஆச்சார்ய சத்ருசர் ஈஸ்வரனில் அதிகர் என்னும் பிரதிபத்தி பிறவாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ ஜாதிக் கொத்தையான தேவதாந்திர கந்த லேச ஸ்பர்சமும்
தர்சன ஹானியான ஜாத்யந்தர லஷண பரிக்ரஹமும் -என்கை
அத்யயன ஜ்ஞான அனுஷ்டானங்களாலே ப்ரஹ்மண்யம் ஆகிறாப் போலே சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லரானால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஆச்சார்ய ஹ்ருதயம் -37
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்  கடல் ஞாலத்துள்ளே -திருவாய் -5-5-11
நைச்சயம் ஜன்ம சித்தம் —

69-ஆப்த விரோதி
பகவத் விஷயத்திலே யாதல் -பாகவத் விஷயத்திலே யாதல்-வாசியுடையாரை அநாதரிக்கையும்
அது இல்லாதாரை ஆதரிக்கையும்
ஸ்வகீய ஸ்வீகார நிஷ்டையும்(அதுவும் அவனது இன்னருள் -உனது அனுக்ரஹத்தாலேயே சரணம் என்றும் சொல்கிறோம்)
ஸ்வ பிரயோஜன பிரவ்ருத்தியும்
பாரதந்த்ர்ய ஜ்ஞானம் அற்ற கேவல சேஷத்வ ஜ்ஞானமும்(பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் என்கிறோம் லஷ்மண ஆழ்வான் சொல்ல வில்லையே)
போக்யத்வ பிரதிபத்தி விருத்தியான போக்த்ருத்வ பிரதிபத்தியும்
பாரதந்த்ர்ய போக்யதா தர்சனத்தில் பிறக்கும் ரசம் பரகத மாகாதே ஸ்வ கதமாகையும்
ஸ்வரூபம் பர கதம் ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய குண விசேஷங்களும் பரகதங்கள் என்று அறியாமையும்
அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணும் ஸூலப  விஷயத்தில் (அறியாதன அறிவித்த அத்தா -ஆச்சார்யர் விஷயத்தில்)பரத்வ புத்தி பிறவாமையும்
சரம பர்வத்தில் சரம சாத்திய புத்தி இல்லாமையும் -என்கை(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -உபாயமும் உபேயமும் ஆச்சார்யர் தானே-அவரை அனுபவித்து கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம் -அத்ர பரத்ர சாபி இத்யாதி -)
திருமோகூர் ஆப்தன் -ஆத்தன் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-

70-அநாப்த விரோதி
பிரபத்தி விரோதியான உபாயாந்தர நிஷ்டையும்
பிரதிகூலரோடு சஹவாஸம் பரிஹரணீயம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும் சில உபாதிகளால் (பிரதிகூலரோடு சஹவாஸம்)வரில் செய்வது என் என்கிற நினைவும்
ப்ராப்ய விரோதியான பிரயோஜனாந்தர நிஷ்டையும்
அநந்ய தைவத்வ விரோதியான தேவதாந்திர நிஷ்டையும்
(ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான)த்வயைக நிஷ்டா விரோதியான மந்த்ராந்தர நிஷ்டையும்
அநந்ய போக்யத்வ விரோதியான விஷயாந்தர ப்ராவண்யமும்
மோஷ சாஸ்திர விரோதியான பந்த சாஸ்த்ர ஆலோசநமும்
சரம கைங்கர்ய விரோதியான ஸ்வ தேக யாத்ரா பாரவஸ்யமும் -என்கை-

71-ஸித்தாந்த விரோதி(ஸித்த -அந்தம் -வேதத்தில் அருளிச் செய்தபடி இருக்கும் -இதுவே இறுதியான முடிவு -)
வைதிக ஸித்தாந்த விருத்தமான பிரமாண (நல்ல அறிவுக்கு கருவி பிரமாணம்)ஸ்வீ காரமும்
பிரத்யஷாதி (ஆதி -அனுமானம்)பிரமாண விலஷணமான  வேதத்துக்கு ஸ்வத ப்ராமாண்யம் (அபாதித பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதி)கொள்ளாமையும்

திரி எண்ணெய் குறைய தீபம் மாறுகிறது -பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிதமாகிறதே- ஆகாசத் தாமரை வாசனையாக இருக்கிறது – தாமரையான படியால் -அனுமானம் தப்பாகுமே

வேத உப ப்ரும்ஹணம் பண்ணும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் திருட ப்ராமாண்ய புத்தி இல்லாமையும்(ஸ்ருதி ஸ்ம்ருதி -மமை ஆஜ்ஜை)
உப ப்ரும்ஹ்யோ ப்ரும்ஹணங்களில் சாத்விக அம்சமே சாத்விக க்ராஹ்யமான பிரபல பிரமாணம் என்று அறியாமையும்
ராஜஸ தாமஸரை விஷயீ கரித்த சாத்விக அம்சம் சாத்விக அனுபாதேயம் என்று அறியாமையும்
அம்ச பேதம் இன்றி பரம சாத்விக பரிக்ருஹீதமான அருளிச் செயலே களங்கம் அற்ற பிரமாணம் என்று விஸ்வாசம் இல்லாமையும்
பூர்வாசார்ய வசனமே சாத்விகர்க்கு மிகவும் விஸ்வாச நீயம்  என்று இராமையும்
ஸ்ரீ மன் நாராயண உக்தமான ஸ்ரீ பாஞ்சராத்தில் ப்ராமாண்ய பிரதிபத்தி குறைகையும்
சர்வ பிரமாண பிரமேயம் பகவத் ஸ்வரூபாதிகள் என்று இராமையும்(எல்லா வேதங்களிலாயே நான் சொல்லப் படுகிறேன்-அஹமேவ -நான் மட்டுமே சொல்லப்படுகின்றேன் -என்னை அறிவிக்காமல் நிற்காதே –)
லௌகிக வைதிக விபாகமற சர்வ சப்தமும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம வாசகம் என்னும் வ்யுத்பத்தி பிறவாமையும்(யானே நீ என்னுடைமையும் நீயே -சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் -அசித் உடன் கூடிய சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் நீயே-இதம் சரீரம் -க்ஷேத்ரம் -எனது விளைநிலம் என்று-அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன் சாபி அஹம் சப்த கோசாரன் ஜீவாத்மா இதம் சொன்னாலே அசித் -உணர்வது ஜீவன் பார்ப்பது சரீரம் -இருவரும் எனக்கு சரீரம் -ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம -தஜ்ஜலான் -தத்வ த்ரய ஸித்தாந்தம்)
சர்வ சரீரி அவன் என்று அறியாமையும்(இதம் சர்வம் ஐததாத்ம்யம் -இதம் -தத் சத்யம் -தத் த்வம் அஸி -ஸ்வேதகேது சொன்னாலே அந்தராத்மாவரை போகும்-அந்த ப்ரஹ்மமே இந்த ப்ரஹ்ம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமே உன்னுள்ளும் இருக்கும் ப்ரஹ்மம்)
சாமாநாதி கரண்யத்தில் விசேஷண அம்சத்தை விட்டு வஸ்து மாத்ரம் கொள்ளுகையும்(நீலக்குடம் -உயரமான பருமனான ஸ்வேதகேது -விசேஷண அம்சம் விடக் கூடாதே -)
அது(சாமாநாதி கரண்யம்) அவன் ஏக (அநேக)விசேஷண விசிஷ்ட ஐகார்த்ய  பரம் என்று அறியாமையும்(அவன் ஒருவனே -அநேக விசேஷண விஸிஷ்ட ஐகார்த்த -இவற்றுடன் கூடிய ப்ரஹ்மம் ஒருவனே)
நாநாத்வ நிஷேதம் அப்ரஹ்மாத்மக வஸ்து விஷயம் என்று அறியாமையும்(நேக நாநா அஸ்தி -இங்கு பலவாக இருப்பதாகப் பார்ப்பவன் மீண்டும் மீண்டும் சம்சரிக்கிறான் -அத்வைதி -தோற்றுகிறது -கானல் நீர் போல் -ஸாஸ்த்ர வாக்கியம் -சொல்ல வந்தது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாதே வஸ்துக்கள் கிடையாது சொல்ல வந்ததே –)
சம்ஹாரத்தில் சித் அசிந் நிஷேதம் தத் தத்  அநு குண சூஷ்ம தசா பத்தி விஷயம் என்று அறியாமையும்(நாம ரூப அநர்ஹம் –அசேதனத்துக்கு நாமம் ரூபம் உண்டு -ஜீவாத்மாவுக்கு ஸ்தூல தசையில் நாமம் ரூபம் இல்லையே -கர்மாதீனமாக அனுபவிக்கும் தசை தானே ஸ்தூலம் -ஆகவே தத் தத் -அவற்றுக்குத் தக்க)
சோதக வாக்யத்தில் குண நிஷேதம் ஹேய குண விஷயம் என்று அறியாமையும்(நிஷ் கலம் இத்யாதி -ஹேய குணங்கள் இல்லை-முக் குண வசமில்லையே -சுத்த சத்வம் -அப்ராக்ருதம்)
குண விதாயக வாக்யங்களில் கண் செம்பளிக்கையும்(உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக குண கணன்-இல்லை உண்டு -இரண்டும் சொல்லலாம் -)
விக்ரஹ நிஷேதம் கர்ம நிபந்தன தேக விஷயம் என்று அறியாமையும்(-இச்சா க்ருஹீத அபிமத தேஹம்–இஷ்ட க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கர்ம நிபந்தம் இல்லையே -)
ச விக்ரஹத்வ பிரகாசக வாக்யங்களில் குருடனாகையும்
உபய லிங்க விசிஷ்டனாய் -விலஷண விக்ரஹ விசிஷ்டனாய்- ஸ்ரீ யபதியான -அகார வாஸ்யனே -சர்வ ஸ்மாத் பரன் என்று அறியாமையும்
அவனே சகல ஜகத் காரணம் என்று அறியாமையும்
பிரதான பரம அணுவாத கலுஷ் சித்தனாகையும்
நாராயண கார்ய பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ காரணத்வ சங்கையும்
த்ரிமூர்த்தி சாம்யமும்
சர்வ ரஷகனை ஒழிய வேறு ஒரு ரஷகர் என்று இருக்கையும்
ஸ்ரீ யபதியை ஒழிய சேஷ்யந்தரம் உண்டு என்று அறிகையும்
முமுஷூபாஸ்யமான பர ப்ரஹ்மத்தை அல்லது உபாஸ்யாந்தரம் உண்டு பதைக்கையும்
மோஷ பிரதானான புருஷோத்தமனை யல்லது ஸ்வ அபிமத பல ப்ரதன் இல்லை என்று அறியாமையும்
சூத்திர தேவதா பஜனம் பண்ணுகையும்
சூத்திர பல அபிலாஷி யாகையும்
அநந்த ஸ்திர பலமான மோஷ அபேஷை பிறவாமையும்
முமுஷூவாய் இருந்து வைத்து சம்சார ஜிஹாசை பிறவாமையும்
கர்ம சாத்திய பலம் அல்ப அஸ்தரம் என்று அறிந்து நிர் விஷண்ணனாய் ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாசை பிறவாமையும்
நாராயண அனுவாக சித்த நாராயண வாஸ்யனே பர ப்ரஹ்ம வாஸ்யன் என்று அறியாமையும்(அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –கர்மங்களைப் பண்ணி -அதனாலே அல்ப அஸ்திர பலன்களையே பெறமுடியும் என்றும் அறிந்து ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசை பிறந்து உத்தர மீமாம்ஸா ஆராய வருகிறான்)
கர்ம பாகம் அவனுடைய ஆஜ்ஞ்ஞா விநாயகம் என்று அறியாமையும்
ப்ரஹ்ம பாகம் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபவாதி ஜ்ஞாபகமாய்க் கொண்டு தத் ப்ராப்தி விஷய பிரகாசகமாய்த் தலைக் கட்டும் என்று அறியாமையும்
தத் ப்ராப்தி ரூப புருஷார்த்தம் -ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தம் என்று அறியாமையும்
சமாரஸ்யமே சாம்யா பத்தி என்று அறியாமையும்(கல்யாண குணங்களை சேர்ந்து அனுபவித்து -ஸஹ ஸ்ருதி -சா தர்ம்ய ஸ்ருதி -சாம்ய ஸ்ருதி -ரஸம் இருவருக்கும் -ஆனந்தத்தில் சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்)
ஸ்வரூப ஐக்ய ப்ரமம் அனுவர்த்திக்கையும்(ஆதிப் பரனுடன் ஒன்றாம் , என்னும் அல்லால் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-கூடிற்றால் நல்லுறைப்பு -அவன் ஸ்வாமி-நாம் சேஷிகள் உணர வேண்டுமே)
முக்தியில் கைங்கர்யார்த்தமான அநேக விக்ரஹ பரிக்ரகம் உண்டு என்று அறியாதே அசரீரத்வ ப்ரமம் அனுவர்த்திக்கையும்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நித்ய விபூதியை ப்ராபிக்கை முக்தி என்று அறியாதே ஜீவன் முக்தி ப்ரமம் நடக்கையும்
கர்மம் இங்கே நசித்து இருக்கவும் பகவத் சங்கல்ப சக்தியாலே தத் கார்யமான ஸூஷ்ம சரீரம் விரஜா ஜல ஸ்பர்சத்தளவும் வரும் என்று அறியாமல் சங்கிக்கையும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி சாதனம் வேண்டாத விஹித பக்தி இத்தனை என்று இருக்கையும்
தத் சாதனம் பிரபத்தியே என்று அறியாமையும்(பக்தியே ஸ்வயம் பிரயோஜனம் -அதுக்கு சாதனம் அவனே)
பிரபத்தி சப்த வாச்யன் பிரபத்தவ்யனான எம்பெருமான் தானே சிஷியாமையும்
அதிகாரி விசேஷணமான சரண வரணத்திலே உபாய புத்தி நடக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் சரணம் புகுருகையும்
ஆச்சார்ய மாத்ரத்தில் புருஷகாரத்வ மாத்திர   பிரதிபத்தியும்
ஸ்வ தந்திர உபாய பிரதிபத்தி பிறவாமையும்
உபாய உபேய த்வித்தவ பிரதிபத்தியும்
பகவானுடைய ஜகச் சரீரத் வாதிகளை இசையாத மதாந்த்ரஸ்தரை விரும்புகையும்(துவைதிகள் -சரீராத்மா பாவம் இசையாமல் ஸ்வாமி தாஸ்ய பாவமே உண்டு என்பர்) –என்கை-

72-தத்வ விரோதி

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,–இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,-ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான-ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்

போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூப தத்வம் அல்லது வேறு தத்வம் இல்லை என்று அறியாமையும்-கோடி த்ரய அதீனனான உதாசீனன் என்றும் ஒருவன் உண்டு இருக்கையும்-
வைசேஷிகன்  சொல்லுகிற த்ரவ்யாதிகள் ஆறு தத்வங்கள் என்று கலங்குகையும்
நையாயிகன் சொல்லும் பிரமாணாதிகள் பதினாறு தத்வம் என்று கலங்குகையும்
சாங்க்யன் சொல்லுகிற மூல பிரகிருதி முதலான இருபத்தஞ்சு தத்வம் என்று கலங்குகையும்
பதஞ்சலி சொல்லுகிற இருப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(யோக மார்க்கம் -ப்ரஹ்மம் நிமித்த மாத்திரமே-உபாதானம் இல்லை என்பர்)
பாசுபதன் சொல்லுகிற முப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(சிவ சக்தி ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சதா சம்ஹாரம் ஈஸ்வர திரோதானம் -இத்யாதி ஐந்து சுத்த தத்வம் என்பர் அசுத்த 24-சுத்த அசுத்த ஏழும் –)
சார்வாகன் சொல்லுகிற ப்ருதிவ்யாதி பூதமே தத்வம் என்று கலங்குகையும்
பௌத்தன் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தாதிகள் தத்வம் என்று கலங்குகையும்-ஜைனர் சொல்லுகிற தர்ம அதர்மாதிகள் தத்வம் என்றும் கலங்குகையும்-மாயாவாதி சொல்லுகிற நிர்விசேஷ சின் மாத்திரமே தத்வம் என்று கலங்குகையும்-
பாட்டப் பிரபாகரர்கள் போலே ஆத்மாக்களை ஒழிய ஈஸ்வர சத்பாவம் இல்லை என்று கலங்குகையும்
குண த்ரய சாம்ய அவஸ்தையில் மூல பிரகிருதி என்று கலங்குகையும்
அஹங்கார கார்யமான இந்த்ரியங்களை பூத கார்யம் (நையாயிகர் போல்)என்று கலங்குகையும்
கர்மேந்த்ரியம் இல்லை என்று கலங்குகையும்(மீமாம்ஸகர் ஞான இந்திரியங்கள் இல்லை என்பர் )
மனஸ்ஸூ அனுத்பந்தம் நித்யம் என்று கலங்குகையும்-தன் மாத்திரைகள் ஒழிய பூதங்கள் இல்லை என்று கலங்குகையும்-
அவை தான் இந்த்ரிய பேதத்தாலே தூரம் என்று கலங்குகையும்
தன் மாத்ரைகள் ஐந்தும் பூதாதி ஒன்றின் (தாமஸ அஹங்காரத்தின்)நின்றும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதியின் நின்றும் சப்த தன்மாத்ரையும் ஆகாசமும் பிறக்கும்
சப்த தன்மாத்ரையின் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவும் பிறக்கும் என்றும்
இப்படி பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் உத்தர உத்தர தன் மாத்ரமும் தத் விசேஷமும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதி யின் நின்றும் (சப்த தன்மாத்திரை பிறந்து சப்த தன் மாத்ரையில் இருந்து) ஆகாசம் பிறக்கும் -அவ் வாகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை பிறக்கும்
அந்த ஸ்பர்ச தன் மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
என்று இப்படி சப்த தன் மாத்ரை ஒழிந்த (எல்லா)தன் மாத்ரைகளும் -பூமி ஒழிந்த(நான்கு) பூதங்களுக்கும் பூத கார்யத்வ தன் மாத்ரா காரணத்வம் உண்டு என்று கலங்குகையும்
தன் மாத்ரா க்ரமத்தை அநாதரித்து பூதாத் பூதாந்தர உத்பத்தி உண்டு என்று கலங்குகையும்
இந்த ஸ்ரௌத மதத்திலும் பூத வாசக சப்தம் தன் மாத்ரா லஷண ஆகாசாதி பூதங்களை விவஷிக்கிறது என்கிற ஹிருதயம் அறியாமையும்
பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் தத் விசேஷங்களும் உத்தர உத்தர தன் மாத்ரைகளும் பிறக்கும் என்கிற சிருஷ்டி க்ரமமும் பிரமாண சித்தம் சிஷ்ட பரிக்ருஹீதம் என்று அறியாமையும்
ஆவரண அபாவம் ஆகாசம் என்றும் (நையாயிகன் போல்)நித்யம் நிரவயவம் விபு என்று கலங்குகையும்
திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் என்று கலங்குகையும்
காலத்தை இல்லை என்று கலங்குகையும்
வாயு அப்ரத்யஷம் என்று கலங்குகையும்
அண்டத்துக்கு உள்ளும் புறம்பும் உண்டான பிரகிருதி பரிணாமம் ஒரு சேதன(பரமாத்மாவின்) சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(அண்டத்துக்கு உள்ளே -நான்முகன் -குயவன் போல்வார் -சேதனன் -மூலம் பரிணாமம் -புறம்பே -மஹத் -அகங்காரம் போல்வன -பரம சேதனனுடைய ஸங்கல்பம் அடியாகவே –)
ஜகத் பரிணாமம் அத்வாரக பகவத் சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(ஏஷ -ஆத்மா -பரமாத்மாவையை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மாக்கள் -ஐததாத்மா)
சகல வஸ்துக்களையும் பகவதாத்மகம் என்று அறியாமையும்
பகவதாத்மகத்வாத் சமஸ்த பதார்த்தங்களும் அனுகூலம் என்று அறியாமையும்
பிரதி கூலங்களாகத் தோற்றுகை தேஹாத்மா   ப்ரமம் என்று அறியாமையும்(அனைவரும் அவனுக்கு சரீரம் -ஆகவே அவனுக்கு அனுகூலம் -ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் அனுகூலம் -சரீர பாகம் ஓன்று மற்ற ஒன்றுக்கு அனுகூலம் தானே -நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -)
நித்ய விபூதி நித்ய ப்ரஹ்ம நித்ய இச்சையால் நித்யம் என்று அறியாமையும்
அப்ராக்ருத அசித் பரிணாமம் கேவல பகவத் இச்சா சித்தம் என்று அறியாமையும்
திவ்ய பூத பஞ்சகங்களுக்கு இல்லாத ஸூஷ்ம ஸ்தூல அவஸ்தா சங்கல்பங்களையும்
அங்கு தன் மாத்ரம் உண்டு என்கிற ப்ரமம் சாந்தத்வ கோரத்வாதி ராஹித்ய மாத்ரம் அத்தனை என்று அறியாமையும்(குணங்கள் தன் மாத்ரையில் வெளிப்படையாகத் தெரியாமல் அநுத்பூதமாக-சாந்தமாக — இருக்கும் அங்கு-இங்கு இப்படி இரண்டு நிலைகள் இல்லையே)
பஞ்சக சக்தி மயத்வமே அப்ராக்ருத பகவத் விக்ரஹ உபாதானம் (பரம சுடர் உடம்பாய் அங்கு -அழுக்கு பதிந்த உடம்பு இங்கு-பஞ்ச-சக்தி: பரமேஷ்டி, புருஷா, விஷ்வ, நிவ்ருத்தி மற்றும் சர்வ)என்று அறியாமையும்
பிரகாசகத்வ குணங்களைப் பற்ற ஷாட் குண்ய விக்ரஹம் என்கிறதுக்கு கருத்து அறியாமையும்(ஞான பல ஐஸ்வர்ய தேஜஸ் சக்தி வீர்யம் -ஸ்வரூப குணங்கள் -இவற்றை ஷாட் குண்ய -திவ்ய மங்கள விக்ரஹம் -விசேஷ க்ரஹணம் -விக்ரஹம் இங்கு -பிரகாசபடுத்த இவ்வாறு குணங்களும் வேண்டுமே –)
ஜாதி ஒன்றாகிலும் நித்ய ஸூரி விக்ரஹத்தை பற்ற தேஜஸ்ஸாலே வேறு பட்டு இருக்கும் அசாதாராண விக்ரஹம் என்று அறியாமையும்
அவதார விக்ரஹங்களும் அப்ராக்ருதங்களாய் இருக்க சைவாதி ப்ராக்ருத ஆகார தர்சனம் ஸ்வாகாரவிதானம் பண்ணுகிற பகவத் இச்சா காரியம் என்று அறியாமல் ப்ராக்ருத்வ சங்கை நடக்கையும்(சோதி வெள்ளத்து எழுவதோர் உரு–சகல மனுஷ நயன விஷயாதாங் கத-ஆகத -ஆக்கிக்கொண்டு -காட்டவே காண்கிறோம்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய்)
சிதசித்துக்கள் அடங்க பகவச் சரீரம் என்று அறியாமையும்
அதில் பகவச் சரீரமான ஆத்மாவை தேக இந்த்ரியாதிகள் என்று பிரமிக்கையும்
ஆத்மாவை ஜ்ஞான மாத்ரம் என்று பிரமிக்கையும்
சைதன்யம் ஆகந்துகம் என்று பிரமிக்கையும்
பரதந்திர ஸ்வரூபத்தை ஸ்வ தந்த்ரம் என்று பிரமிக்கையும்
பகவச் சேஷமான ஸ்வரூபத்தை அந்ய சேஷம் என்று பிரமிக்கையும்
மிதுன சேஷம் என்று அறியாமையும்(திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -)
ததீய சேஷம் என்று உணராமையும்
சர்வ சரீரியான சர்வ சேஷி சர்வேஸ்வரன் என்று அறியாமையும்(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மான தாரயிதும் நியந்தும்-சர்வ சரீரியாக இருப்பதால் சர்வ சேஷீ -ஸர்வேஸ்வரேஸ்வரன்)
அவனுக்கு ஸ்வா தந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இராமையும்
அத்தாலே பலித்தது ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்று அறியாமையும்(அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -)
அது நித்யம் என்று அறியாமையும்
அதுக்கடி பிரணயித்வம் என்று அறியாமையும்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
அதுக்கடி கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று இவர்களுக்கு ஜனனியான பிராட்டி பக்கல் பண்ணின ப்ரணய பரிணதி என்று அறியாமையும்

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப்பெற்று. இனிப்போக்குவனோ?”
அவள் அவனுக்கு அபிமதையாய் -அனுரூபையுமாய் -நிரூபகையுமாய் -நித்ய அனபாயிநியுமாய் -சேஷ பூதையுமான -மஹிஷியான ஜகன் மாதா என்று அறியாமையும்
(ஆத்ம)ஜாதி ஒன்றாகிலும் த்ரிவித ஆத்ம வ்யாவ்ருத்தை என்று அறியாமையும்(நித்யர்களிலும் வேறுபட்ட விசேஷ-விஷ்ணு பத்னீ)
இரண்டு ஆஸ்ரயத்தில் நில்லாத சர்வ ஈஸ்வரித்வம் இவளுக்கு உண்டு என்கையும்(ஸர்வேஸ்வரத்வம் இரண்டு இடத்தில் இருக்க முடியாதே)
ஸ்ரீ ஸ்ரீசர்களுக்கு விக்ரஹ பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை என்கையும்
பகவத் ஸ்வரூபம் உபய ஆகாரமுமாய் இருக்கும் என்கையும்-பகவத் ஸ்வரூபம் ஒழிய லஷ்மீ ஸ்வரூபம் தான் இல்லை என்கையும்
ஜ்ஞான குணகையான இவளை ஜ்ஞான சக்த்யாதி குண கோடியில் என்கையும்(ஆத்மா ஞானமயம்-ஞானம் உடையதாய் இருக்கும் -இங்கு ஆத்மா த்ரவ்யம் – -குணத்துக்கு குணம் இருக்காதே -ஞானத்துக்கு ஞானம் இருக்காதே -)
இவள் நிரூபகமான அஹந்தையாய் அவன் நிரூப்யமான அஹமர்த்தமாய் இருக்கும் என்று அறியாமையும்(அஹந்தை -தானான தன்மை பிராட்டிக்கு இருக்கும் -அஹமாய் அவன் இருப்பான்)
இவள் அணு ஸ்வரூபையாய் இருந்தும் -ஒரு சக்தி விசேஷத்தாலே (யதா சர்வகதா விஷ்ணு இத்யாதி -விஷ்ணு புராணம் –பத்னியத்வத்தால் பகவத் ஸங்கல்பத்தால்)பரம மஹத் பரிமாண விபு ஸ்வரூபத்தை தழுவிக் கொண்டு இருக்கும் என்று அறியாமையும்
ரசம் திருப் பாற்கடல் எங்கும் உண்டானாப் போலே பகவத் ஸ்வரூபாதிகள் எங்கும் உடன் இருக்கும் என்று அறியாமையும்(மீனுக்கு உடம்பெல்லாம் தண்ணீரைப் போலே -உப்புக்கட்டி முழுவதும் உப்பாய் இருக்குமா போலே- இவள் அவன் உடன் எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் பிரியாமல் இருப்பவள் அன்றோ)
இப்படி எங்கும் எப்போதும் உடன் இருக்கிறது தேச கால நிரபேஷமாக சேதனருக்கு புருஷீ கரிக்கைக்கு என்று அறியாமையும்
இப்படி இருக்கிற இவளை யிட்டு ஸ்ரீ யபதி என்றே பகவத் ஸ்வரூபத்தை நிஷ்கரிக்க வேணும் என்று அறியாமையும்
பகவத் ஸ்வரூபம் உணர் முழு நல ஜ்ஞான ஆநந்தைக   ஸ்வரூபமாய்
ஹேய பிரதிபடமாய்
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
ஸ்வரூபதோ குண தச்ச விபுவாய்
அவாப்த சமஸ்த காமத்வாத் நிரபேஷமாய் இருந்தும் அகில ஜகதுதய விபவ லய ஹேதுவாய் லீலா ரசம் அனுபவித்தும்(இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)
நித்ய விபூதியிலே திருமா மணி மண்டபத்திலே -திவ்ய சிம்ஹாசனத்திலே -திரு வனந்த ஆழ்வான் மேலே ஸ்படிக கிரி தடத்திலே மின் கொடிக்களுடன் காள மேகம் படிந்தால் போலே சியாமள கோமள விக்ரஹ பிரகாசகைகளான நாச்சிமார் உடன்
ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அயர்வறும் அமரர்களுடன் அபரிமித போக ரசத்தை அனுபவித்து உபாசக அனுக்ரஹார்த்தமாக வாசுதேவாத் யாகாரேண வ்யூஹித்து
ஒரு படுக்கையிலே உறங்குகிற சம்சாரியை உணர்த்தி ஒரு நீராகக் கலந்து அனுபவித்து கட்டிலிலே வாங்க ஆசைப்பட்டு
தத் தத் சஜாதீய வேஷம் கொண்டு நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் விபவத்தைக் காட்டியும்
ஒருவரும் எட்டுப் படாமையால் விஷய ப்ராவண்யம் மிக்கு இனிக்களவிலே பிடித்துக் கொள்வோம் என்று

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
பிறர்க்கும் காண ஒண்ணாத படி கரந்த சிலிடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து கட்கிலியாயும் ஒரு விஷயம் லபியாமல் முசித்து
வேட்க- ஆற்றாமை மிக்கு- மூச்சு விடுதல் செய்ய மாட்டாதே- ஆராமங்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாய்

நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே.
ஆள் பார்த்து அலமாக்கும்படி விஷய சபலனாய் கிடப்பது ஒரு பரத்வம் என்று அறியாமையும்
பரத்வம் நித்ய போகமாய் இருக்கும் அத்தனை -அவதாரம் பத்த முக்த நித்ய விபாகம் அற சர்வ ஜன போக்யம் என்று அறியாமையும்
முக்ய அவதாரங்களில் தத் சஜாதீயத்வ புத்தியும்
கௌண அவதாரத்தில் பூஜ்யத்வ புத்தியும்
அர்ச்சாவதாரத்தில் அசக்தத்வ புத்தியும்
பரம குருவான ஆச்சார்ய அவதாரத்தில் அபூர்ணத்வ புத்தியும்
பரத்வத்தில் அவதாரம் அதிகம் என்று அறியாமையும்
சரம அவதாரமான ஆச்சார்ய விக்ரஹத்தில் அப்ராக்ருத்வ புத்தி நடவாமையும் –என்கை-

(ஆத்மா இயற்கையாகவே ஞான ஆனந்த மயமாக இருப்பதால் கர்ம நிபந்தனமாக விரோதிகள் அழுக்குகள் போக -தானே ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும் -உண்மையான ஞானம் வர தானே பரிஹரிக்கும் -மேல் பரிஹரிக்க இந்த பலன்கள் கிட்டும் என்று நிகமித்து அருளுகிறார்)

73-பும்ஸ்த்வ  விரோதி –

(ஸ்த்ரீத்வம் -பர தந்த்ர அர்ஹதை -மனு பகவான் -பெண் வேஷம் -இயற்கையில் ஸ்வ தந்த்ரம் இல்லாததால் ஸ்த்ரீத்வ விரோதி கிடையாது -ஆண் உடை உடுத்த பெண் -புருஷன் என்று நினைப்பது விரோதி தானே -)
பறவை ஏறும் பரம புருடனான புருஷோத்தமன் ஆனவனை ஒழிய ஸ்திரீ ப்ராயரான தன்னை புருஷன் என்று நினைக்கையும்
புருஷ சரீர பூதர் ஆகையாலே புருஷர் எனப்படும் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பும்ஸ்த்வ புத்தி நடக்கையும்
அவனுடைய  பும்ஸ்த்வ பிரதியோகியான ஸ்த்ரீத்வமே தனக்கு ஸ்வதஸ் சித்த வேஷம் என்று அறியாமையும்
தோல் சட்டையான புருஷ வேஷ பரிகிரஹம் ஆகந்துகம் அநித்யம் என்று அறியாமையும்(மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று-ஸ்வதஸ் ஸித்தம் -கடி மா மலர்ப் பாவையோடு உண்டான சாம்ய ஷட்கம்)
தான் அநாதி காலமே பிடித்து மாறி மாறி பரிக்ரஹித்த ஸ்திரீ புருஷ வேஷம் இரண்டும்(ஆத்மாவுக்கு) நிலை நின்ற வேஷம் இல்லை என்று அறியாமையும்
பகவத் பாரதந்த்ர்ய ரூபத்வமே நிலை நின்ற ஸ்வரூப ப்ராப்த வேஷம் என்று அறியாமையும்
இந்த பாரதந்திர ஜ்ஞானம் பிறந்து ஸ்வா தந்த்ர்ய ரூப பும்ஸ்த்வ பிராந்தி அனுவர்த்திக்கையும்
இப்படி பர ஸ்திரீயான தனக்கு ஸ்வ ஸ்திரீ தேடி உழலுகையும்
எல்லாரும் பர ஸ்திரீ என்னும் ஜ்ஞானம் பிறவாமையும்(ராஸக்ரீடை -அவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்ற அனைவரும் ஸ்த்ரீ பிராயர் -அவன் அவர்களுக்கு அந்தராத்மாவாக இருந்து சத்தையும் நியமனத்தையும் பண்ணி அருளுகிறான் அன்றோ -)
தானும் தத் ததீய கைங்கர்ய அர்த்தமாக பரிக்ரஹித்த அவளும் ஸ்ரீ யபதியான பரம சேஷிக்கு  பெண் அடிமை என்று இராமையும்
தன்னை ஆண் அடிமை என்று இருக்கையும்
இந்த ஜ்ஞானம் பிறந்த பின் ஸ்திரீ போலே சஹ சயியாமையும் பும்ஸ்த்வ அபிமான பிரமராகம் அனுவர்த்திக்கையும்
ஆண்களாய் இருக்க பெண்களாக பாவித்து பகவத் விக்ரஹத்தை காங்ஷித்து ராகாந்தராய் துடித்த ஆழ்வார்கள்
பாசுரங்களை ஓதியும் கேட்டும் புனர் பவ பிரமம் விடாதே
இதர விஷயங்களிலே ஹேய சரீரங்களை உகந்து ராகாந்தராய்த் துடிக்கையும்(அத்தாலே இவன் அஸ்த்ரைணன் என்றும் ஸிஷ்ட கர்ஹிதனாகையும்)
ஆஸ்திக நாஸ்திகன் என்று ஆச்சார்யன் கை விடும் படியாய் விடுகையும்
சார அசார (சேஷத்வ பாரதந்தர்யமே சாரம் -ஆண் பெண் சரீரம் பார்ப்பது அசாரம்)விவேகம் பண்ண அறியாத படி சிஷ்ட கர்ஹிதனாகையும் -என்கை  –

74-அந்திம தசா விரோதி
க்ருக ஷேத்திர ப்ராவண்யம் புத்திர தாரா ப்ராவண்யம் சரீர அர்த்த ப்ராவண்யம் பின்னாடி(பின் தொடர்ந்து)
இவற்றை விட்டுப் போகிறோமே என்று கண்ண நீர் கலங்குகையும்
ஷேத்ராணி மித்ராணி என்கிறபடியே அவை பிரதிகூலத்வேன திருஷ்டி விஷயமாய்த் தோற்றாமையும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-(மா கம் -பரமாகாசம்)என்கிற ப்ராப்ய பூமியில் ப்ராவண்யம் அற்று இருக்கையும்
கொடு உலகம் காட்டலே என்று த்யாஜ்ய பூமி காண வெருவாமையும்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்று சரீர விஸ்லேஷ காலம் எப்போது லபிக்கும் என்று மநோ ரதம் அற்று இருக்கையும்
உன்னை எந்நாள் வந்து கூடுவன் -என்கிற பரம பதத்தில் இருப்பைக் கண்டு அல்லது தரியாத (பகவத்)பரத்வ ப்ராவண்யம் பரிபக்வம் ஆகாமையும்
மருள் ஒழி நீ -என்கிற அர்ச்சாவதார ப்ராவண்யம் அனுவர்த்திக்கையும்

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அந்திம தசையாய் இருந்து இப்போது எனக்குத் தஞ்சமேது என்று தளும்புகையும்
தஞ்சம் என்கிற நினைவு குலைகையே தஞ்சம் என்று அறியாமையும்
காஷ்ட பாஷாண  சந்நிபம் -என்று அத் தசையில் சைதன்யம் அற்று இராமையும்
அவஸ்ய அபேஷித தாதாத்விக ஸ்ம்ருதி சித்த சாதன நிஷ்டா ஹானியைப் பிறப்பிக்கும் என்று அறியாமையும்
பகவத் உன்மிஷிதையான அவர்ஜ நீய ஸ்ம்ருதி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
அப்போது ஆச்சார்ய நாம உச்சாரணம் அவசியம் வேணும் என்று இருக்கையும்
பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய நாம உச்சாரணம் தத் பிரயாண பாதேயமாய்க் கொண்டு தாரகமாம் இத்தனை என்று அறியாமையும்
அப்போது பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய பதாம் போருஹ  த்யானத்தில் சாதனத்வ புத்தி நடக்கையும்
பரம ஆப்தனான அவனே மார்க்க பந்து என்று அறியாமையும்
அவித்யாதி விரோதி நிவ்ருத்தியிலும் அர்ச்சிராதி கதி ப்ராப்தியான இஷ்ட ப்ராப்தியிலும் ஸ்வ பலித்வ புத்தி நடக்கையும்
விரோதி நிவர்தகனுமாய் இஷ்ட ப்ராபகனுமான ரஷகனான சேஷிக்கே தத் பலித்வம் உள்ளது என்று அறியாமையும்(ப்ராப்தாவும் ப்ராபகனும் பேற்றுக்கு உகப்பானும் அவனே என்ற எண்ணம் வேண்டுமே-நாம் அவன் அனுபவிக்கும் போக்யமான பொருள் என்ற எண்ணம் வேண்டுமே -)
இஷ்ட அநிஷ்டங்களில் மதீயத்வ புத்தி நடக்கையும்
அது (மதீயம்)அஹம் அர்த்த அபிமானியான பரம சேஷியது (யானே நீ என்னுடைமையும் நீயே)என்று அறியாமையும்
ஜ்ஞான பிரதனான நித்ய சேஷியே மோஷ ப்ரதன் என்ற துணிவு அற்று  இருக்கையும்  -என்கை-

75-அவிஸ்வாச விரோதி
விஸ்வசிக்கக் கூடாததான சம்சாரிகள் இடத்திலும்
தேவதாந்த்ரங்கள் இடத்திலும்
சாமான்ய சாஸ்திரங்கள் இடத்திலும் விஸ்வசிக்கை -என்கை-

(தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் -அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே -என் நான் செய்கேன் –களை கண் மற்றிலேன் -)

76-சங்கதி விரோதி –
பகவஜ் ஜ்ஞானம் பிறந்தவன் மதாந்தரஸ்தர்களான
சைவாதிகளோடு உறவு பண்ணுகை-என்கை –

77-சந்தான விரோதி –
தனக்குப் பிறந்து இருந்து
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் தூஷகனான தன் புத்ரனைத் த்யாஜியாமல் இருக்கை
ஸ்ரீ வராஹ புராண வசனம் -மாஜ நிஷ்ட  ச நோ வம்சே  ஜாதோவா த்ராக் விஸ்ருஜ்யதாம்
ஆஜன்ம மரணம்  யஸ்ய வாஸூ தேவோ ந தைவதம் –

78-வர்ண விரோதி
ஸ்வ ஸ்வ வர்ணங்களுக்கு அனுசிதங்களான க்ருத்யங்களைச் செய்கை -என்கை -(நமக்கு என்று விதித்த தர்மங்களைப் பற்று அற்று கைங்கர்ய ரூபமாகச் செய்வதே கர்ம யோகம்)

79- ஜப விரோதி –
மூல மந்த்ராதிகளை ஜெபிக்கும் இடத்தில்
தத்தத் மந்திர தேவதா ரூப த்யாநத்தை விட்டு
விஷயாந்தர தேவதாந்தரங்களை நினைக்கை -என்கை-

திருமந்திரம் -நாராயணன் -விஷ்ணு -வாஸூ தேவ-மூன்றும் மூன்று வியாபக மந்த்ரங்களை ஜெபிக்கும் இடத்தில் த்யானிக்க வேண்டும் அன்றோ

80-ஆராதன விரோதி
ஸ்வயம் பிரயோஜனமான பகவத் ஆராதனத்தில் பலாந்த்ர ஆகாங்ஷையும்
ஜாதி யாஸ்ரய நிமித்த துஷ்ட வஸ்து நிவேதனம் பண்ணுகையும்
சாஸ்திர நிஷித்த மத்ய (கள்)மாம்சம் முதலானதுகளை நிவேதனம் பண்ணுகையும் –என்கை-

81-பதித்வ விரோதி –
பதிம் விஸ்வஸ்ய என்று ஒதப்படுகிற பகவான் உடைய பதித்வத்துக்கு விரோதியான
பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி ஸூரபதி தனபதி  சேனாபதி கணபதிகள் உடைய பதித்வத்தை நினைக்கையும் -என்கை -(பரன் திறமன்றி பல்லுலகில் தேவர் மற்றில்லையே-பதித்தவம் பலான ஸாமர்த்யம்)

82-வர்ஜநீய (விடத் தக்க)விரோதி
சாஸ்திரங்களிலே  நிஷித்தங்களான தாமச ஆகாரங்களான மத்ய மாம்சாதி போஜனம் செய்கையும்
சாத்விக ஆகாரங்களையும் சாத்விக சாஸ்திரங்களையும் சாத்விக அனுஷ்டானங்களையும் த்யஜிக்கையும் -என்கை

83-அவர்ஜ நீய (விடக் கூடாத)விரோதி
முமுஷூ தசையில் அப்ராப்த புத்தி மறந்தும் பின்னாட்டும் அர்த்த காம த்ருஷ்ணையும்
அதடியான பாகவத அபசாரமும்
பிராக்ருத வஸ்துக்களில் போக்யத்வ பிரமமும்
முக்த தசையில் பகவத் ப்ராப்தியில் உகப்பு தன்னதாகையும்
அதுக்கடியான போக்த்ருத்வ புத்தி நடக்கையும்
அதடியாக பரைக போக்யத்வ புத்தி குலைகையும்
அத் தசையில் அத்மி என்று போக்த்ருத்வம் உண்டாய்  இருக்க அது பர ப்ரேரிதமாய் பர ப்ரீதி வர்த்தகமுமான பரம போக்யமாம்படி அவன் விநியோகிக்கையாலே விரோதி அல்லவாய் விட்டது

சாப்பிடுகிறவன் -அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -மற்றை நம் காமங்கள் மாற்று –அவன் ஆனந்தம் உகப்பைக் கண்டு உகக்க வேண்டுமே -அப்பொழுது தான் போக்யமாய் இருந்த நாம் பரம போக்யமாவோம்-
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -திரு விருத்தம் -33-என்று
அத் தசையிலும் ஸ்வாதீன ஸ்வார்த்த பிரதிபத்தி ரூப விரோதி புகுராதபடி படிந்ததும் பரமனுடைய நித்ய சங்கல்பம் இறே

அன்றிக்கே
அவர்ஜ  நீய விரோதியாவது
இங்கோடு அங்கோடு வாசியற ஆச்சார்ய கைங்கர்ய விரோதியான பகவத் சௌந்தர்யம் ஆகவுமாம்
அத்தை சாத்மிப்பித்து இறே அவனும் கைங்கர்யம் கொள்ளுவது
ஜன்மாந்தரீய கர்மங்களாலே உத்பன்னங்களாக நிஷித்த  ஆசரணங்களும்- என்கை –

(அநக -ராம பக்தியாகிய குற்றம் இல்லாத சத்ருக்ந ஆழ்வான்-)

—————————————————————————————————————————————–

விரோதிகள் பரிஹரிக்கப் பட்டால் உண்டாகக் கூடிய பலன்களை க்ரமேண அருளிச் செய்கிறார் –
1-சம்சார சங்கம் அறவே ஸ்வர்க்கம் லபிக்கும்
2- ஐஹிக போகத்தில் நசை அறவே ஸ்வர்க்க இச்சை பிறக்கும்
3- ஸ்வர்க்க அனுபவ இச்சை அறவே ஆத்ம ப்ராப்தி உண்டாம்
4-ஸ்வர்க்கத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே ஆத்ம அனுபவம் உண்டாம்
5-ஆத்ம அனுபவத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே பகவத் அனுபவம் சித்திக்கும்
6-ஸ்வ அனுபவத்தில் ஆசை அறவே பர அனுபவ ப்ரேமம் விளையும்
7-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சு நீங்கவே குண அனுபவ நிஷ்டை வர்த்திக்கும்
8-பகவத் சௌந்தர்யத்தில் கண்ணை மாற வைத்தால் கைங்கர்யம் வர்த்திக்கும்
9-பகவத் கைங்கர்யத்தில் ருசி அறவே பாகவத கைங்கர்யம் வர்த்திக்கும்
10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-

11-துஷ்கரத்வ க்ருதி சாத்யத்வ விளம்ப்ய பல ப்ரதத்வ ஹேதுக்களைத் தெரிந்து உபாயாந்தரங்கள் த்யாஜ்யம் என்று விடவே பிரபத் யுபாய நிஷ்டை சித்திக்கும்
12-அக்நி இந்த்ராதி தேவதாந்தர உத்தேச்யத்வேன செய்யும் கிரிசைகளில் நசை அறவே பகவத் விஷய கர்ம நிஷ்டை பிறக்கும்
13-தேவதாந்திர சேவா த்யாஜ்யத்வ ஜ்ஞானம் பிறக்கவே ஸ்வரூப ப்ராப்த பகவத் கைங்கர்ய நிஷ்டை ஜனிக்கும்
14-தான் பண்ணும் பிரபத்தியில் உபாய புத்தி அறவே ஈஸ்வரன் இடத்தில் உபாய புத்தி பிறக்கும்
15 -சாஸ்திர சித்தி அனுஷ்டானத்தில் ப்ரவ்ருத்தி உண்டாகவே சாதநாந்தரம் கை கூடும்
16-ஸ்வ உஜ்ஜீவன விஷயக ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யம் அறவே சித்த உபாயம் லபிக்கும்
17-உபாய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபாயத்வம் நிலை நிற்கும்
18-உபேய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபேயத்வம் நிலை நிற்கும்
19-உபேயத்ரி விரோதியை பரிஹரிக்கவே அநந்த ஸ்திரத்வ பரம போக்யத்வ ரூபமான உபேய ஆகார த்ரய பிரகாசம் நிலை நிற்கும்
20-முக்ய ப்ரமாண விரோதியைப் பரிஹரிக்கவே ப்ரமாணிகத்வம் நிலை நிற்கும்-

21-யாவதாத்ம விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம ஸ்வபாவம் நிலை நிற்கும்
22-நித்ய விரோதியைப் பரிஹரிக்கவே இதர விஷய விரக்தி நிலை நிற்கும்
23-அநித்ய விரோதியைப் பரிஹரிக்கவே நித்ய ஸூகம் நிலை நிற்கும்
24-ஸ்வரூப விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தின் பகவத் போக அனுரூபம் நிலை நிற்கும்
25-பர ஸ்வரூப விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறக்கும்
26-ஸ்வ அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ ரஸத்வ ராஹித்யம் நிலை நிற்கும்
27-பர அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ அதீன ப்ரவ்ருத்தி ராஹித்யம் நிலை நிற்கும்
28-சம்ஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி ஸூலபத்வம் நிலை நிற்கும்
29-விஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் சம்ஸ்லேஷ விளம்பத்வம் நிலை நிற்கும்
30-விஷய விரோதியை பரிஹரிக்கவே இந்த்ரிய ஜெயம் நிலை நிற்கும்-

31-விசுவாச விரோதியைப் பரிஹரிக்கவே சாமத்யவசாயம் நிலை நிற்கும்
32-ப்ரவ்ருத்தி விரோதியைப் பரிஹரிக்கவே பர பிரயோஜன  பிரவ்ருதித்வம் நிலை நிற்கும்
33-நிவ்ருத்தி விரோதியை பரிஹரிக்கவே தத் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி நிலை நிற்கும்
34-சயன விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தில் உணர்ச்சி நிலை நிற்கும்
35-உத்தான விரோதியைப் பரிஹரிக்கவே தத் தத் ஜ்ஞானம் நிலை நிற்கும்
36-கதி விரோதியைப் பரிஹரிக்கவே புநராக நிவ்ருத்தி நலை நிற்கும்
37-ஸ்திதி விரோதியை பரிஹரிக்கவே அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருக்கை நிலை நிற்கும்
38-ஆவஸ்யாக விரோதியைப் பரிஹரிக்கவே நிர்மல சரம தேஹத்வம் நிலை நிற்கு
39-சரீர சுத்தி விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம சுத்தி நிலை நிற்கும்
40-ஸ்நான விரோதியைப் பரிஹரிக்கவே விரஜா ஸ்நானம் பண்ணுகை நிலை நிற்கும்-

41-அனுஷ்டான விரோதியைப் பரிஹரிக்கவே பூர்வ அனுஷ்டானம் நிலை நிற்கும்
42-லஷண விரோதியைப் பரிஹரிக்கவே விலஷணத்வம் நிலை நிற்கும்
43-ஸ்மரண விரோதியைப் பரிஹரிக்கவே தத் குண ஸூத்தி நிலை நிற்கும்
44-சங்கீர்த்தன விரோதியைப் பரிஹரிக்கவே வாக் சுத்தி நிலை நிற்கும்
45-ஸ்ரவண விரோதியைப் பரிஹரிக்கவே சத் சம்ப்ரதாய ஸூத்தி நிலை நிற்கும்
46-சேவா விரோதியைப் பரிஹரிக்கவே சேவ்யன் உகந்து சேவை கொண்டு அருளுமது நிலை நிற்கும்
47-சமாராதான விரோதியைப் பரிஹரிக்கவே சமராத்யன் உகந்து அத்தைக் கொண்டு அருளுமது நிலை நிற்கும்
48-வந்தன விரோதியைப் பரிஹரிக்கவே வந்தனத்தை உகந்து ஸ்வீகரிக்குமது நிலை நிற்கும்(அவன் ஏற்றுக் கொள்ளுவதே பிரதானம் கார்யகரம்)
49-அஞ்சலி விரோதியைப் பரிஹரிக்கவே தச் சித்த ஆகர்ஷணத்வம் நிலை நிற்கும்
50-கால ஷேப விரோதியைப் பரிஹரிக்கவே தத்கால சமீசீ நத்வ ஸ்மரண சந்தோஷம் நிலை நிற்கும்-

51-ஆர்ஜன விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விகத்வம் நிலை நிற்கும்
52-க்ருக விரோதியைப் பரிஹரிக்கவே சாதாகமான தத் ஸ்பர்சாதி மகா லாபம் நிலை நிற்கும்
53-ஷேத்ர விரோதியைப் பரிஹரிக்கவே தல்லாப பாரார்த்யத்வம் நிலை நிற்கும்
54-போஜன விரோதியை பரிஹரிக்கவே பிரதாத்ரு போக்த்ரு ஸ்வரூப அனுரூபத்வம் நிலை நிற்கும்
55-போஜ்ய விரோதியைப் பரிஹரிக்கவே சத்வாபிவ்ருத்தி நிலை நிற்கும்
56-தீர்த்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் ஸ்வரூப உஜ்ஜீவனத்வம் நிலை நிற்கும்
57-பிரசாத விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ பாவநத்வ பிரதிபத்தி நிலை நிற்கும்
58-உக்தி விரோதியைப் பரிஹரிக்கவே சம்சாரி வ்யாவ்ருத்தி நிலை நிற்கும்
59-சங்க விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிலை நிற்கும்
60-சம்பந்த விரோதியைப் பரிஹரிக்கவே நிருபாதிக சம்பந்த ஜ்ஞானம் நிலை நிற்கும் –
61-சிநேக விரோதியைப் பரிஹரிக்கவே தத் ப்ராப்தி விஷய லாபம் நிலை நிற்கும்
62-பக்தி விரோதியைப் பரிஹரிக்கவே கைங்கர்ய மங்களா சாசனம் நிலை நிற்கும்
63-தாஸ்ய விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி நித்ய பிரதி சம்பந்தி ஜ்ஞானம் நிலை நிற்கும்
64-சக்ய விரோதியைப் பரிஹரிக்கவே சர்வ ஜன அனுகூல்ய ஜ்ஞானம் நிலை நிற்கும்
65-சமர்ப்பண விரோதியைப் பரிஹரித்தவாறே ஸ்வகீய ததீய ஜ்ஞானம் நிலை நிற்கும்
66-தர்சன விரோதியைப் பரிஹரித்தவாறே ஆச்சார்ய அங்கீகாரம் நிலை நிற்கும்
67-ஆஸ்ரம விரோதியைப் பரிஹரிக்கவே பரம ஏகாந்தித்வம் நிலை நிற்கும் 
68-ஜாதி விரோதியைப் பரிஹரிக்கவே ததீய சேஷத்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்
69-ஆப்த விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்-70-அநாப்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் தர்மம் நிர்மலத்வ ப்ரவ்ருத்தி நிலை நிற்கும்-
71-சித்தாந்த விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ த்ருட பிரமாண நிஷ்டை நிலை நிற்கும்
72-தத்வ விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்
73–பும்ஸ்தவ விரோதியைப் பரிஹரிக்கவே பத்நீ சாம்யம் நிலை நிற்கும் –
74-அந்திம தசா விரோதியைப் பரிஹரிக்கவே பிரபன்னத்வம் நிலை நிற்கும் –
75-அவிஸ்வாச விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாகவத ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்தியிலும் விசேஷ சாஸ்திரத்திலும் விஸ்வாசம் நிலை நிற்கும்
76-சங்கதி விரோதியை பரிஹரிக்கவே பகவத் விஷய ஜ்ஞானம் நிலை நிற்கும்
77-சந்தான விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் நிலை நிற்கும்
78-வர்ண விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம வர்ணமான சேஷத்வம் நிலை நிற்கும்
79-ஜப விரோதியைப் பரிஹரிக்கவே த்வய அனுசந்தாநம் நிலை நிற்கும்
80- ஆராதன விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஆராதனம் நிலை நிற்கும்-

81-பதித்தவ விரோதியைப் பரிஹரிக்கவே ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்
82-வர்ஜ நீய விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விக ஆகார சாத்விக சாஸ்திர சாத்விக அனுஷ்டானம் நிலை நிற்கும்
83-அவர்ஜ  நீய விரோதியைப் பரிஹரிக்கவே சரீர அவசான பிராப்தி நிலை நிற்கும்

இப்படி உடையராலே சாதிக்கப்பட்ட 83 விரோதிகளையும் நன்றாகத் தெரிந்து பரிஹரிக்கும் க்ரமத்திலே பரிஹரித்து பற்றுமவைகளைப் பற்ற யதாவத்தாக ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு நிர்ப்பரராய் இருந்த வங்கி புரத்து நம்பி பின்புல்லாரும் இவ்விரோதிகளை நன்றாக அறிந்து உஜ்ஜீவிக்கும்படி அவற்றுக்கு வியாக்யானம் அருளிச் செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களான முமுஷுக்கள் அனுஷ்டித்துப் போரும்படிக்கு ஆச்சார்ய ஆஜ்ஜை இட்டு அருளிச் செய்தார்

இவ்விரோதிகள் அடங்க ஒரு சேதனனுக்கு ஸ்வரூப சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளைப் பற்றி வரும்
பர ப்ரகார ஸ்வரூப அதீன சத்தா பிரகாசக ஸ்வரூப அதீன பிரணவ அர்த்த அனுசந்தானத்தாலே
ஸ்வரூப சத்தா விரோதிகள் கழியும்
நமஸ் சப்த சித்தமான பிரணவார்த்த அனுசந்தானத்தாலே ஸ்திதி விரோதி ச மூலமாகக் கழியும்
பர பிரேரித்த தத் பிரயோஜன ப்ரவ்ருத்தி பிரயோஜக நாராயண பதார்த்த அனுசந்தானத்தாலே ப்ரவ்ருத்தி விரோதிகள் கழியும் –

ஆகையாலே சதாச்சார்ய சேவை பண்ணி
பத த்ரய சித்தமான திரு மந்த்ரார்த்தை லபித்து
விரோதிகளை நீக்கி வாழக் கடவன் -என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் –பகுதி -2-

January 9, 2015

49-அஞ்சலி விரோதி(அம் ஜலதி -ப்ரத்யக்ஷமாக அவனை உருக வைக்கும்-நிராலம்பனம் -காட்டவே ஆகாசத்தில் விபீஷணன் -நின்று -ஸர்வாயுத பாணி -அஞ்சலியே ஸர்வாயுத சமம்)
பகவத் அங்க்ரியை உத்தேச்யம் பண்ணாமையும் -வ்யதிரிக்தரை விஷயீ கரித்துப் பண்ணுகையும்
அஞ்சலிக்கு கால நியதி இல்லை என்று இராமையும் -காலம் பார்த்து பண்ணுகையும்
-சர்வாதிகாரம் என்று உணராமையும்- அதிக்ருதாதிகாரம் என்று இருக்கையும்
-பிரகார நியதி இல்லை என்று இராமையும் -அது உண்டு என்று இருக்கையும்
-சக்ருத் என்று இராமையும் – அசக்ருதாவ்ருத்தி வேணும் என்று இருக்கையும்
-காலாந்தரத்திலே பலிக்கும் அத்தனை என்று இருக்கையும் -அப்போதே பலிக்கும் என்று இராமையும்
-ஒவ்வொரு அபராதத்துக்கு பிராயச்சித்தமாய் இருக்கும் என்று இருக்கையும்- சர்வ அபராத பிராயச்சித்தம் என்று அறியாமையும்
-சில பாபத்தையே போக்கும் என்று இருக்கையும் -சர்வ பாபங்களையும் சமூலோன்மூலனம் பண்ணும் என்று அறியாமையும்
-ஒரு நன்மையே தரும் என்று இருக்கையும் -எல்லா நன்மைகளையும் குறைவறத் தரும் என்று அறியாமையும்
-பல ப்ராப்தி யளவும் நிற்குமத்தனை என்று இருக்கையும் -பல அனுபவ வேளையிலும் நிலை நிற்கும் என்று அறியாமையும்
-கருட முத்ரை விஷத்தை அடக்குமா போலே ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தை ஆளவற்று என்னும் விசுவாசம் இல்லாமையும் –
-(அம் ஜலயதீதி அஞ்சலி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
அபராதா நிமான் சர்வான் ஷமஸ்வ புருஷோத்தம
ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -ஸ்தோத்ர ரத்னம்)
சேஷிக்கு அமைத்த கை ப்ராப்தம் ஆனாப் போலே சேஷ பூதனுக்கு அஞ்சலி அநந்ய கதித்வ ஸூசகமாய்க் கொண்டு ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்று அறிந்து பண்ணாமையும்-

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-28

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

-ஸ்வ ரஷணத்தில் கை வாங்காமல் அஞ்சலிக்கையும்
-அந்ய பல காமதயா அஞ்சலிக்கையும்
-அந்ய ஆலய சமீபங்களில் சட கோபனுக்கு அஞ்சலிக்கையும்
-அபாகவதர் அஞ்சலிக்கு பிரத்யஞ்சலி பண்ணுகையும் -பாகவதர் அஞ்சலிக்குப் பின் அஞ்சலிக்கையும்
-ஆச்சார்யனை தண்டன் இடாமல் அஞ்சலிக்கையும்
-நெஞ்சில் இடுக்குடன் (நேர்மை இல்லாமல்)அஞ்சலிக்கையும் -கையில் இடுக்குடன் அஞ்சலிக்கையும்
-சடகோபனுக்கு தலையில் அஞ்சலி பண்ணாமையும் -என்கை-

50-கால ஷேப விரோதி
தமோ குணா அபிபூதனாய்ப் பாதியில் உறங்கிப் போகையும்
-உணர்ந்தால் பரானர்த்தங்களை நெஞ்சினால் நினைந்து காலம் கழிக்கையும்
வேல் கணார் கல்வியே கருதி காலம் கழிக்கையும்
கரியான் கழல் காணக் கருதாதே காலம் கழிக்கையும்
வர்ண அனுகுண கர்ம கலாபங்களிலே காலம் கழிக்கையும்
த்வய அனுசந்தானத்தாலே காலம் கலியாமையும்
தேவதாந்திர பஜனத்தாலே காலம் கழிக்கையும்- பகவத் சமாராத நத்தால் காலம் கழியாமையும்
சாமான்ய சாஸ்த்ரார்த்த பட நாதிகளாலே காலம் கழிக்கையும்
தாத்பர்ய சாஸ்திர ஸ்ரவண மனநாதிகளால் காலம்   கழியாமையும்
அநர்த்த கரமான அர்த்தார்ஜன உபாயங்களாலே காலம் கழிக்கையும்
ஆத்மா உஜ்ஜீவன அர்த்த உபாயங்களால் காலம் கழியாமையும்
பர ஹிம்சையால் காலம் கழிக்கையும்- பர உபகாரத்தால் காலம் கழியாமையும்
பர அன்னம் புஜித்தே காலம் கழிக்கையும் ஸ்வ அன்ன லுப்தனாய்க் காலம் கழிக்கையும்
பர ஸ்திரீ பரவசனாய்க் காலம் கழிக்கையும் அத்தாலே ஸ்வ ஸ்திரீ விரக்தனாய்க் காலம் கழிக்கையும்
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியே காலம் கழிக்கையும்- ஸ்வ த்ரவ்ய விநியோக அசக்தனாய்க் காலம் கழிக்கையும்
சூது சதுரங்கம் பொருது காலம் கழிக்கையும்
(தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் காலம் கழியாமையும்-நான்முகன் திரு -63-
பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதியவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் களித்தேன் -ஆர்த்தி -28 -சூது பிரசங்கம் -ஸ்ரீ மஹா பாரதம் – ஸ்த்ரீ பிரசங்கம் ஸ்ரீ இராமாயணம் – களவு பிரசங்கம் -ஸ்ரீ பாகவதம்)
ஸ்வ க்ருஹம் இன்றிக்கே காலம் கழிக்கையும்
ஸ்வ உதர போஷண அர்த்தமாக்கத் தோட்டம் கழனி பண்ணியே காலம் கழிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக்கத் திரு நந்தவனம் செய்து காலம் கழியாமையும்
ஆச்சார்யன் திரு மாளிகை பிரிந்து இருக்கப் பேணாமல் காலம் கழிக்கையும்
ஸ்வ குடும்ப ரஷண அர்த்தமாக காலம் கழிக்கையும்
ஆச்சார்ய குடும்ப  ரஷண அர்த்தமாக காலம் கழியாமையும்
ஸ்வ சரீர ரஷணம் பண்ணியே காலம் கழிக்கையும் -ஆச்சார்யன் திரு மேனியை ரஷியாமல் காலம் கழிக்கையும்
தான் குளித்தே காலம் கழிக்கையும் -ஸ்ரீ  வைஷ்ணவர்களை நீராடப் பண்ணிக் காலம் கழியாமையும்
தான்  பாலும் சோறுமாக வயிறு வளர்த்துக் காலம் கழிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடும் அமுது செய்யப் பண்ணாமையும்
தான் உடுத்து முடித்து பூசிப் புலற்றிக் காலம் கழிக்கையும்
பகவத் விஷயத்தில் பூசும் சாந்து புனையும் கண்ணி வான் பட்டாடை சாத்திக் காலம் கழியாமையும்
ஹேயக் கூத்துக் கண்டு காலம் கழிக்கையும் -மாயக் கூத்துக் கண்டு காலம் கழியாமையும் -மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா-திருவாய் -8-5-1-
பொல்லாப் புன் கவி சொல்லிப் போது போக்குகையும் -நல்லின் கவி சொல்லி நாள் கடலைக் கழிக்காமையும்
என் நாவில் இன் கவி -திருவாய் -3-9-1-
புன் கவி –  தேவதாந்தரங்களைப்  பாடும் பாடல்கள்(இல்லாத ஒருவனுக்கு இல்லை என்றேன் -மொட்டைத் தலை அரசனைப் பாடிய கதை)
கேவல புண்ய தீர்த்தங்களை தேடிச் சென்று கால் தேய்ந்து காலம் கழிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் தேடிக் காணச் சென்று காலம் கழியாமையும்
கேவலம் புண்ய ஷேத்ரம் தேடித் போய்க் காலம் கழியாமையும் -பகவத் ஷேத்ரம் தேடிச் சென்று காலம் கழியாமையும்
காவ்ய நாடகம் கொண்டு காலம் கழிக்கையும் -பகவத் காவ்யமான ஸ்ரீ ராமாயணம் கொண்டு காலம் கழியாமையும்
பூர்வ பஷமான தர்சன கிரந்தாந்தரங்களிலே காலம் கழிக்கையும்
ஸ்வ சித்தாந்தமான தர்சநத்திலே ஊன்றிக்   காலம் கழியாமையும்(அருளிச் செயலில் பொழுது போக்கும் நம்பிள்ளை போல்)
கேவலம் பகவத் கைங்கர்யத்திலே காலம் கழிக்கையும்  -சதாச்சார்யா கைங்கர்யத்திலே காலம் கழியாமையும் -என்கை-

51-ஆர்ஜன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து தானம் ஏற்று ஆர்ஜிக்கையும்
பிராயச்சித்தம் விதித்து ஆர்ஜிக்கையும்
தீர்த்த பலம் தாரை வார்த்து ஆர்ஜிக்கையும்
காலன் கொண்டு ஆர்ஜிக்கையும்(காலன் கொண்டு மோதிரம் இடுதல்)
ஸ்ரார்த்தம் புஜித்து ஆர்ஜிக்கையும்
சடங்கு (பரிஹாராதிகள்)காட்டி ஆர்ஜிக்கையும்
க்ரஹ நிலை எண்ணி ஆர்ஜிக்கையும்
கிராமண்யம் பண்ணி ஆர்ஜிக்கையும்
பள்ளி வாசிப்பித்து ஆர்ஜிக்கையும்
பாண்டித்தியம் சொல்லி ஆர்ஜிக்கையும்
கவி சொல்லி ஆர்ஜிக்கையும்
களவு கண்டு ஆர்ஜிக்கையும்
வஞ்சித்து ஆர்ஜிக்கையும்
வழி பரித்து ஆர்ஜிக்கையும்
கோளானாய் ஆர்ஜிக்கையும்
கும்பீடு கள்ளனாய் (கள்ள கும்பீடு )ஆர்ஜிக்கையும்
புராண பட்டனாய் ஆர்ஜிக்கையும்
புஸ்தக  சோரனாய் ஆர்ஜிக்கையும்
குண்டலம் தூக்கி (தற் பெருமை பேசி)ஆர்ஜிக்கையும்
குலாதிகம் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஆசாரம் நடத்தி ஆர்ஜிக்கையும்
அஹம் ப்ரஹ்ம என்று பிரமித்து(சூதனாய் கள்வனாகி) ஆர்ஜிக்கையும்
வித்யா பிரபாவம் சொல்லி ஆர்ஜிக்கையும்
வீர வாதம் சொல்லி ஆர்ஜிக்கையும்
முகவச்யம் கொண்டு ஆர்ஜிக்கையும்-மூடரை வஸ்யம் கொண்டு-ஆர்ஜிக்கையும்
மருந்து செய்து ஆர்ஜிக்கையும் மாயம் செய்து ஆர்ஜிக்கையும்
நிதி தர்சனம் கானவிடுவோம் என்று ஆர்ஜிக்கையும்
நீச சேவை பண்ணி ஆர்ஜிக்கையும்
ரசவாதம் சொல்லிப் பகட்டி ஆர்ஜிக்கையும்
ராஜவச்யம் அறிவோம் என்று ஆர்ஜிக்கையும்
விஷய வர்த்தகம் சொல்லி ஆர்ஜிக்கையும் -விஷ வித்யை கற்று ஆர்ஜிக்கையும்
பகவத் விஷயம் சொல்லி ஆர்ஜிக்கையும்
பக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
அருளிச் செயல் சொல்லி ஆர்ஜிக்கையும்
அபிமானம் சொல்லி ஆர்ஜிக்கையும்
விரக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
விஸ்வாசம் பாவித்து ஆர்ஜிக்கையும்
அழு கண்ணனாய் ஆர்ஜிக்கையும்
அநந்ய கதித்வம் காட்டி ஆர்ஜிக்கையும்
கைங்கர்யம் பேரிட்டு ஆர்ஜிக்கையும்
காஷாயம் போர்த்து ஆர்ஜிக்கையும்
திரு நந்தவனம் செய்து ஆர்ஜிக்கையும்
திருமாலை பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
திருப்பதியின் பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆதரிப்பேன் என்று ஆர்ஜிக்கையும்
சிறப்பு விடுவேன் என்று ஆர்ஜிக்கையும்
பிரபந்தம் சாத்த வேணும் என்று ஆர்ஜிக்கையும்
திருவத்யயன நிமித்தமாக ஆர்ஜிக்கையும்
திருவடி விளக்கி ஆர்ஜிக்கையும்
மெய் வருத்திக் கை செய்து கிருஷி பண்ணி ஆர்ஜிக்கையும்
பிச்சை புக்கிலும் எம்பிரான் திரு நாமமே நச்சி -என்று முஷ்டிபுக்கு (பிச்சை புக்கு)ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து முஷ்டிபுகக் (உஞ்ச வ்ருத்தி)கூசுகையும்
அதில் வயிறு வளர்க்கைக்காக முஷ்டிக் கூடை பிடித்து உலாவி ஆர்ஜிக்கையும்
ஸ்வரூப அநுரூப ஆர்ஜனம் இது என்று முஷ்டி புகுராமையும்
சிஷ்டாசாரம் என்று முஷ்டி புகுராமையும்
முஷ்டி கூடையில் பெற்றது கொண்டு த்ருப்தனாகாமையும் -முஷ்டி சற்றே பரிமாறினார்கள் என்று  குறைவு படுகையும்
முஷ்டி மிகப் பரிமாறினார்கள் என்று கொந்தளிக்கையும்
கைக்குள் அடங்கினதுக்கு மேல் ஆகாது என்று இராமையும்
கேட்கத் திரு நாம உச்சாரணம் பண்ணாமையும்
முஷ்டி புகுரும் போது வாசல்கள் தோறும் திரு நாம உச்சாரணம் பண்ணுகை- மௌஷ்டிக வ்யாவ்ருத்தி ஸூசக விசேஷண  புத்த்யா சிஷ்டாச்சாரம் என்று உச்சரியாமையும்
திரு நாம உச்சாரணம் முஷ்டி யிடுகைக்கு சாதனம் என்று உச்சரிக்கையும்
தேவதாந்தரம் உள்ள க்ருஹங்களில் உலாவுகையும்
க்ருஹ பூஜா தூஷித க்ருஹங்களில் உலாவுகையும்
வெள்ளிக் கிழமையில் மெழுகின க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
திரு நாம உச்சாரணம் கேட்டு உகவாதார் க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
பகவத் பாகவத நிந்தை பண்ணும் நீசருடைய க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
ஸ்ரீ வைஷ்ணவ வ்ருத்தி என்று அறியாமல் ஷேபோக்தி பண்ணுவார் க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
தேவதாந்தர சேஷமான ஊரிலே சென்று முஷ்டி புகுருகையும்
திரு முற்றம் இல்லாத ஊரிலே முஷ்டி புகுருகையும்
திருவாராதனம் இல்லாத கிருஹத்திலே முஷ்டி புகுருகையும்
பிரபன்னனாய் இருந்து வைத்து விசேஷ திவசங்களிலே திருமொழி சொல்லி உலாவுகையும்-ஒழிந்த நாள் அருளிச் செயலில் சொல்லாமல் உலாவுகையும்
ரஹஸ்யங்கள் பிறர் கேட்கச் சொல்லி உலாவுகையும்
அசத் சஹாவாசம் பண்ணி உலாவுகையும்
விஷயாந்தர தர்சனம் பண்ணக் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்த -கண் இன்றி உலவாமையும்
முன்னடி பார்த்து நடந்து உலவாமையும்
தாந்தி (மன அமைதி)யற்று உலாவுகையும்
சதாச்சார்யன் திருக் கையாலே அமுதுபடி கூடை பிடித்து உலாவாமையும்
அமுது படி கூடை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அபிஷேகம் என்று அறியாமல் உலாவுகையும்
த்வய அஷர சங்க்யையான பர்வமற்ற முஷ்டிக் கூடை பிடித்து உலாவுகையும்
திரு விலச்சினை இல்லாதார் கையிலே முஷ்டி  ஏற்கையும்
காதில் பாம்பணி இட்டார் கையில் முஷ்டி ஏற்கையும்
அஹங்கார கிருஹஸ்தர் கையில் முஷ்டி ஏற்கையும்
உலாவிய  அளவில் ஆச்சார்யனுக்கு ஒரு கூறு சமர்ப்பியாது ஒழிகையும்
ஒரு கூறு ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவர்களை உத்தேசித்து வையாது ஒழிகையும்
ஒரு கூறு எம்பெருமானுக்கு என்னும் பிரதிபத்தி இல்லாமல் ஸ்வீகரிக்கையும்
உலாவின போது ஆச்சார்யன் சந்நிதியில் வைத்துத் திருக் கண் சாத்திக் கொடுக்கக் கொண்டு போகாமையும்
உலாவின அமுது படியில் அந்ய திருஷ்டி படாதபடி பேணாது ஒழிகையும்
இப்படி முஷ்டியில் பெற்ற கெரத்தார் மொழியக் கண்ட சம்சாரிகளை அனுவர்த்தித்து ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்கி  ஆர்ஜிக்கையும்
ஆச்சார்யன் ஸ்வத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்யத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுவார் பக்கல் யாசித்து ஆர்ஜிக்கையும் -என்கை-

52-க்ருஹ விரோதி –
தேவதாந்திர அபிமான தூஷித பிரதேசங்களில் க்ருஹமாகையும் –
பாஷாண்டிகள் இருக்கும் தெருவில் க்ருஹமாகையும்
சம்சாரிகளில் அலசான க்ருஹமாகையும்
சக்ர லாஞ்சனம் இல்லாத க்ருஹமாகையும்
பிராக்ருதர் என்னது என்று அபிமாநிக்கும் க்ருஹமாகையும்
ஆச்சார்ய அபிமானம் அற்ற க்ருஹமாகையும்
பாகவதருக்குப் புகு வாசல் அல்லாத க்ருஹமாகையும்
பிரகிருதி பந்துக்கள் புகுவது புறப்படுவதான க்ருஹமாகையும்
திருப்பள்ளி யறையும் எம்பெருமானும் இல்லாத க்ருஹமாகையும்
திரு முன்பில் சங்கிருக்கும் க்ருஹமாகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் இல்லாத க்ருஹமாகையும்
திரு நாமப்பையும் (திருமண் பெட்டி)அமுதுபடி கூடையும் இல்லாத கிருஹமாகையும்
ஜப வடம் தொங்கும் க்ருஹமாகையும்
கந்தா தரஷூ சர்மாதி (நாய் நாரி தோல்கள்)பாஷண்டி பரிக்ருஹீதங்கள் இருக்கும் கிருஹமாகையும்
சைவ பௌத்த (கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மான்)ஜைன சார்வாகாதி பாஹ்ய குத்ருஷ்டி மத கிரந்தம் இருக்கும் கிருஹமாகையும்
சுக்ரவார அமாவாஸ்யாதி திவசங்கள் தேடி (அன்று மட்டுமே)மெழுகும் க்ருஹமாகையும்
அந்ய திருஷ்டி படும் அடுகு வளம் (சமையல் பாத்ரம்)உள்ள கிருஹமாகையும்
கண்டவிடம் எங்கும் சாம்பல் சிதறி இருக்கும் க்ருஹமாகையும்
காடிச்சால் இருக்கும் க்ருஹமாகையும்(காழிச்சால் மூலையில் ஈஸான மூலையில் -பழைய சோற்றுப்பானை வைத்திருக்கும் க்ருஹம்)
ரஷை கட்டித் தூங்குகையும்
திருமஞ்சனச்சால் முதலான வற்றில் திரு நாமம் அற்று இருக்கையும்
ஏகும் பாகவத பாத பாம்ஸூ (திருவடித்தூள் -தொண்டரடிப்பொடி)பரிசுத்தம் ஆகாது இருக்கையும்(காய சுத்தி அன்ன சுத்தி ஸ்தல சுத்தி பண்ணின ஆச்சாரம்)
முற்றத்தில் பாஷாண்டிகள் வந்து போனால் அவ்விடத்து சுத்தி பண்ணாமையும்
தேவதாந்தர சிஹ்னம் உள்ள கன்று காலி கட்டி ஆளுகையும்
சிஷ்டர் தர்சியாத கோவை (சிஷ்டர்கள் இல்லாத கூட்டமாக)படருகையும்
திருத் துழாய் வளராமையும்
அருளிச் செயல் த்வனி அற்று இருக்கையும்-ஆச்சார்யன் எழுந்து அருளாத இடமாகையும் – -என்கை-

53-ஷேத்திர விரோதி
தேவதாந்திர சேஷமான ஷேத்ரமாகையும்(எல்லைக்கல் -உண்டே திருக் கோயில்களுக்கு)
தேவதாந்திர சிஹ்னம் உள்ள ஷேத்ரம் ஆகையும்
பகவத அபிமானம் அற்ற தேசத்தில் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த பகவத் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த அந்ய ஷேத்ரம் ஆகையும்
என்னது -என்று அபிமானித்து இருக்கும் ஷேத்ரம் ஆகையும்
ஆச்சார்யனுக்கு என்று காணப்படாத ஷேத்ரம் ஆகையும்
பகவத் பாகவத ஆச்சார்யர்களுக்கு விநியோகப் படாத ஷேத்ரம் ஆகையும் -என்கை

54-போஜன விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர் ஆதரத்தோடு பிரசாதம் இடப் புக்கால் -பிரசாதம் சூடுமவர் ஆகார சௌஷ்டவ ரச சௌஷ்டவ நிரூபணம் பண்ணுகையும்
பாகவத பிரசாதம் என்னும் கௌரவ நிரூபணம் பண்ணாமையும்
இடுகிற  பரிவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும்
பாக பேதம் பண்ணித் தான் சுவடு பட புஜிக்கையும்
நான் இடுகிறேன் என்று அபிமான தூஷிதம் ஆக்குகையும்
தம்முடைய பதார்த்தம் தாமே அங்கீ கரித்து அருளுகிறார் என்று இராமையும்
அமுது செய்கிறவர் கலத்தைக் கடைக் கணித்து  ஏற்றத் தாழ்வுகள் நினைக்கையும்
எனக்கு இப்படி இடுவதே -என்று குபிதராகையும்
கோபத்திலே -பரிமாரினவற்றை உதறி எழுந்து இருக்கையும்
இடுகிறவர் தாம்- உள்ளே இருக்கையும் -இவரைப் புறம்பே வைக்கையும்
தாம் முற்படவே புஜிக்கையும் இவருக்கு பிற்பாடு இடுகையும்
தாம் முற்பட எழுந்து இருக்கையும்
தாம் உள்ளே இருந்து என்னைப் புறம்பே வைத்தார் என்று கன்றுகையும்
தாம் முற்படவே புஜித்து நமக்குப் பிற்பட இட்டார் என்று பிற்காலிக்கையும்
மதியாமல் நமக்கு முற்பட எழுந்து இருந்தார் என்று நினைக்கையும்
இடுகிறவர் உபசாரம் சொல்ல வேண்டினார்க்குச் சொல்லாமையும்
வேண்டாதார்க்கு ஸ்வ கர்த்ருத்வ ஸூசகமான உபசார உக்தி சொல்லுகையும்
இவர் உபசார உக்தியும் இன்றி இருந்தார் என்று வெறுக்கையும்
கனக்க நம்மை உபசரித்தார் என்று இறுமாக்கையும்
அடியேனைக் குறித்து இத்தனை வேணுமோ என்று இராமையும்
திரு மாளிகையில் அவர் முற்பட இவர் அமுது செய்வதற்கு முன்பே தீர்த்தம் அமுது செய்கையும்
தம்முடைய சேஷத்வத்தை கொடுக்கையும்
இவர் அவர் சொல்லுவதற்கு முன்பே எடுத்து அமுது செய்கையும்
அமுது செய்த சேஷம் என்று பிற்காலிக்கையும்
ஆச்சார்ய அபிமான விசேஷ ஜ்ஞானம் அறியாமல் ரூப நாம மாத்ரம் கொண்டு அந்யோந்யம் பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
அறிந்த பின்பு பாகவத பிரசாதம் ஸ்வீகரியாது ஒழிகையும்
எச்சில் கையாலே அந்யோந்யம் பிரசாதம் ஏற்கையும்
இரந்து பிரசாதப் படாதே நலிய அள்ளுகையும்
போனகம் செய்த சேடம் தருவரேல் என்று அலாப்ய லாபம் என்று அறியாமையும்(பாண்ட சேஷம் பாத்ர சேஷம் இரண்டுமே உண்டு -போஜன இலை சேஷம் வேறே)
ஸ்ரீ வைஷ்ணவர் தாமே பிரசாதக் கலம் எடுக்கப் பார்த்து இருக்கையும்
கையில் நின்றும் பறித்து எடாமையும்
தாமும் தேவியாரும் எடாதே அடியாள் சம்சாரிகள் கையிலே எடுப்பிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகை என்று மதியாதே புசித்த கலத்தை வைத்து எழுந்து இருக்கையும்
அவர் வேண்டாம் என்னிலும் வலிய எடாமையும்
திரு மாளிகையில் பற்று உதிராதபடி பேணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முன்னே முந்திக் கொண்டு திருக் கை கழுவுகையும்
பிற்பட்டத்து என்று தச் சேஷ ஜலம் என்று பாகவத சேஷத்துக்கு அசலாகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்த இடங்களை சுத்தி பண்ணுகிறோம் என்று ப்ரோஷிக்கையும்
பஸ்மம் இட்டு ப்ரோஷிக்கையும்
அமுது செய்த இடங்களை மிதித்தால் அபசாரம் என்று திருக்கைத் தொடை கொள்ளாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பட சுருளமுது கொடாமல் தாம் முற்பட ஸ்வீகரிக்கையும்
தன்னுடைய சேஷமான மூன்றாவது இடுகையும்
வந்தவர் ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகையில் குறை கண்டு போகையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு உள்ளம் கன்றிப் போகாத படிக்கு அனுவர்த்தியாமையும் –என்கை-

55-போஜ்ய விரோதி
சம்சாரிகள் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
பிரகிருதி பாந்தவத்தை இட்டு ப்ராக்ருதர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஷூத்ர புருஷார்த்திகள் விட்ட சிறப்பில் ஸ்வீகரிக்கும் பகவத் பிரசாதமும்
திவ்ய தேசங்களில் பிரபாவத்தை இட்டு ஸ்வீகரியாது ஒழிகையும்
கேவல பகவத் பக்தர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளில் ஸ்வயம் பாக பார்க்கச் சோறும்
இட்டுக் கணக்கு என்னும் சோறும்
க்யாதிக்கு இடும் சோறும்
மணச் சோறும்
பிணச் சோறும்
விலைச் சோறும்
எச்சில் சோறும்
மடி தடவும் சோறும்
சங்கல்ப்பித்து இடும் சோறும்
அபிமான தூஷித சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்டமாய் மசப் பரலிட்ட சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்ட பாண்டங்களிலே  இட்ட சோறும்
அந்ய ஸ்மரண அசத் கீர்த்தர் பசித்த சோறும்
பகவத் ஸ்மாரணாதி திவ்ய பிரபன்ன பரர் சமையாத சோறும்
பகவத் பாகவதர்களை உத்தேசியாமல்   ஆத்ம காரணத்தால் பசித்த சோறும்
திருநாமம் அற்ற பாண்டங்களில் நின்றும் இடும் சோறும்
பகவன் நிவேதிதம் இல்லாத சோறும்
சாமான்யர் நிவேதித்ததும் அந்ய திருஷ்டி பரிஹரியாத பிரசாதமும்
சேஷ சேஷாச நாதி ஸூரிகளையும் ஆழ்வார்களையும் அமுது செய்யப் பண்ணாதே கேவல பகவன் நிவேதிதமும்
ஜாதி துஷ்டமான அன்னமும்
கிருமி கீட கேசாதி நிமித்த துஷ்டமான அன்னமும்
அபாகவதர் பங்க்தியில் புஜிக்கும் அன்னமும்
அசத் கீர்த்தனம் பண்ணி புஜிக்கும் அன்னமும்
த்வய அனுசந்தானத்துடன் பிரசாதப் படாத அன்னமும்
பதார்த்தங்களில் போகயதா புத்தியில் புஜ்க்கும் அன்னமும்
பகவத் பிரசாத ஸ்வீகாரப் பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பரமாத்மா சமாராதன பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
சமாராதன சமாப்தி பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பாகவத பிரசாத ச்வீகார பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
கேவலம் பஞ்ச வ்ருத்தி பிராண சேஷம் என்னும் துஷ் பிரதிபத்தியாலே புஜிக்கும் அன்னமும்
வேதகப் பொன்னான விலஷண தர்சனாதிகளில் பாவனா பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பங்க்தி பாவனர் ஆனவர்களைப் பெற்றும் உள் கலந்து பரிமாற சங்கித்து புஜிக்கும் அன்னமும்
ஸ்வ க்ருஹத்தில் நியத அன்னமும்
ஆச்சார்ய துல்யருடைய திரு மாளிகையில் நியத அன்னமும் –என்கை-

56-தீர்த்த விரோதி -(திருமஞ்சன-திருவாராதன -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்த -அருளிச் செயலில் கோஷ்ட்டி ஸ்ரீ பாத தீர்த்தம் -நான்கும் உண்டு -தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி –)
பிரயோஜனாந்தர பரர்களுடைய க்ருஹங்களில் எம்பெருமானை தீர்த்தம் கொள்ளுகையும்(அநந்ய ப்ரயோஜனர் க்ரஹங்களிலேயே கொள்ள வேண்டும்)
சாதநாந்தரர் உடைய முன்னல் தீர்த்தம் கொள்ளுகையும்
மந்த்ராந்தர பரருடைய முன்னில் தீர்த்தம் கொள்ளுகையும்
திவ்ய தேசங்களில் நிரூபித்து தீர்த்தம் கொள்ளுகையும்
ஒழிந்த இடங்களில் நிரூபியாமல் தீர்த்தம் கொள்ளுகையும்
சம்சாரிகளுடன் கலந்து நின்று தீர்த்தம் கொள்ளுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பாடனாய் தீர்த்தம் கொள்ளுகையும்-கிழக்கு திசையா என்று ஆராய்ந்து தீர்த்த கொள்ளுகையும்-
தீர்த்தம் கொண்டு கண்ணிலும் தலையிலும் ஒற்றிக் கொள்ளாமையும்
தீர்த்தம் கொண்டு கர ப்ரஷராலன ஆசமனங்களில் சுத்தி தேடுகையும்
ஆச்சார்ய பகவத் கைங்கர்யம் பண்ணும் இடத்து தீர்த்தம் பிரசாதப்பட்ட கை கழுவாமையும்
தீர்த்தம் சிந்துகையும்
அவிசேஷஜ்ஞர் போலத் தலையில் தெளித்துக் கொள்ளுகையும்
அந்ய சம்பாஷணத்துடன் கொள்ளுகையும்
சம்சாரிகள் கண்ட தீர்த்தம் கொள்ளுகையும்
பகவத் தீர்த்தத்திலும் ஸ்ரீ பாத தீர்த்தம் அதிகம் என்று அறியாமையும்
ரூப நாமம் கொண்டு கொள்ளும் தீர்த்தம் அறியாமையும்
உச்சாரண விசேஷம் கொண்டு ஒருக்கால் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
ஆச்சார்ய அபிமானம் கொண்டு பலகாலும் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
சதாச்சார்ய தீர்த்தமே திரு முன் வைத்து சதா சேவ்வியம் என்னும் சிஷ்டாசாரம் அறியாமையும்
வேதகப் பொன்னான விலஷண தீர்த்தம் விசேஷித்துப் பெற வேணும் என்னும் விசேஷ ஜ்ஞானம் இல்லாமையும்
கேவல பிரபாவ மாத்ரம் கொண்டு பேணாமல் கொள்ளுகையும்
ஸ்வரூபம் அழிந்தது என்று அஞ்சாமல் கொள்ளுமதும்
முற்பாட்டுக்கு முந்திக் கொடுக்குமதும்
பிற்பட்டது என்று கன்றிக் கொடுக்குமதும் -உஜ்ஜீவனமாக மாட்டாது என்று அறியாமையும்
பரம பாவனமான ஸ்ரீ பாத தீர்த்தத்திலே தன் பாத தோயம் கலந்தது என்று சங்கித்து புறக் கணிக்கையும்
பிரபன்னனாய் இருந்து பிராயச் சித்த தீர்த்தம் கொள்ளுகையும்
சிவாதி ஸ்பர்சம் நேர்கையில் தத் பிராயச் சித்தமாக ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளாமையும்
கேவல பாவனத்வ பிரதிபத்தியே நடந்து கொள்ளுகையும்
போக்யத்வ பிரதிபத்தி நடவாது ஒழிகையும்(கேவல பாவனத்வம் என்றும் மட்டுமே கொண்டு இல்லாமல் போக்யம் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டுமே)
ஒரு நாள் கொண்டது அமையும் என்று இருக்கையும் -ஸ்தன்ய பானம் பண்ணாவிடில் நாக்கொட்டும்படியான ஸ்தன்ய அவஸ்தை பிறந்து கொள்ளாமையும்
சதாச்சார்யன் விமல சரம தேஹி என்று அறியாது இழக்கையும்
ஆளிட்டுத் தீர்த்தம் கொள்ளுகையும்
தானே அள்ளிக் கொள்ளுகையும்
இரங்கிப் பிரசாதிக்கும் அத்தனையும் இரப்புடன் இல்லாமையும்
த்வயைக நிஷ்டனாய்க் கொடுத்துக் கொள்ளாமையும் -என்கை-

57-பிரசாத விரோதி –
பிராக்ருத கிராமங்களில் எம்பெருமான் பிரசாதம் என்று ஸ்வீகரிக்கையும்
திவ்ய தேசங்களில் கோயிலில் பிரசாதித்த போதே பிரசாதப் படக் கூசுகையும்
நிரூபித்து பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
உபவாசாதி நிமித்தம் பிரசாதத்தை உபேஷிக்கையும்
அப்போது ஸூத்த ஆசமன அபேஷை பிறக்கையும்
பாவனமான பாகவத பிரசாதத்தில் உச்சிஷ்ட பிரதிபத்தி நடக்கையும்
திரளில் ஆச்சார்ய பிரசாதத்தை பிரசாதப் படக் கூசுகையும்
தத் ஸ்பர்சத்தில் அஸூத்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
தத் பிரசாத ஸ்வீகாரத்தில் நாடொறும் வெறும் பசியனாய் இராமையும்
சுவடு பட்டிரா விடில் போக்யத்வ -பாக்யத்வ-பிரதிபத்தி குலைகையும்
ஆச்சார்யன் இரங்கி பிரசாதிக்கப் பெறாமையும்
அமுது செய்யா நிற்க பிரசாதப்படுகையும்
அமுது செய்யும் தனையும் பார்த்து நின்று பிரசாதப் படாது ஒழிகையும்
அமுது செய்து அருளின பிரசாதத்தைத் தானே அள்ளிக் கொள்ளுகையும்
அனுமதி இன்றி பிரசாதக் கலத்தில் ஸூடுகையும்
அமுது செய்யும் தளிகையை எச்சில் படுத்துகையும்
ச ப்ரஹ்மசாரிகளுக்குப் பகுந்து இடாமல் பிரசாதப் படுகையும்
பிரசாதக் கலத்தை சம்சாரி நாஸ்திக ஸ்வாதிகளுக்கு இடுகையும்
சிஷ்டாச்சார சித்த தத் பிரசாத ஸ்வீகார பிரகாரம் அறியாமையும்
பிரசாதத்தைப் பேணாமல் சிந்துதல் மிதித்தல் செய்கையும் -என்கை –

58-உக்தி (பேச்சு)விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைத்தால் ஏன் என்கையும் சம்சாரிகள் அழைத்தால் அடியேன் என்கையும்
அநவதாநத்தாலே  (கவனக் குறையாலே)மாறாடின போது அனுதாபம் அற்று இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து- விண்ணப்பம் அருளிச் செய்து அருள -திருக் கை விளக்கி அருள-சுருளமுது அமுது செய்து அருள -கண் வளர்ந்து அருள இத்யாதி -ப்ரபன்ன உக்திகளைப் பேணி விண்ணப்பம் செய்யாமையும்
பிராக்ருதரைக் குறித்து வார்த்தை சொல்லு -இரு -எண்ணெய்  இடு -உறங்கு இத்யாதி
சாமான்ய உக்திகளைச் சொல்லாதே அந்த பூஜ்ய உக்திகளைச் சொல்லுகையும்
தீர்த்தமாட -பிரசாதப்பட -அமுதுபடி -கறி யமுது -அடிசில் -பிரசாதம் -தீர்த்தம்- திரு மஞ்சனம் -இலை பிரசாதம் இலை அமுது -மூன்றாவது முதலான உக்தி விசேஷம் அறிந்து சொல்லாமையும்
குளிக்க -உண்ண- தின்ன -அரிசி சோறு- கறி -தண்ணீர் வெற்றிலை- சுண்ணாம்பு முதலான
ப்ராக்ருத உக்திகளைச் சொல்லுகையும்
திருப்பதி -திருச் சோலை -திருப் பொய்கை -திருக் கோபுரம் -திரு மதிள்- திரு வீதி -திரு மாளிகை- திரு வாசல்- திரு மண்டபம் –திருச் சுற்று – திரு வோலக்கம் -திருப் பள்ளி அறை- திருப் பள்ளிக் கட்டில்- திரு மேற்கட்டு -திருத் திரை- திருக் கொற்றொலியல்-(துளுவம் துடை துணி )-திரு வெண் சாமரம் -திருவால வட்டம் -திருவடி நிலை– திருப் படிகம் திரு மஞ்சனக் குடம் -திருப் பரிகரம் -திரு வந்திக் காப்பு -திரு விளக்கு –திருமாலை -திரு வாபரணம் -திருப் பள்ளித் தாமம் -திருவடி நிலைகள் தொடங்கி திரு அபிஷேகம் திருவழகு எரிந்த திரு மேனி திரு நாள் முதலானவற்றை திரு இல்லாத் தேவரான தேவதாந்தரங்களுக்குச் சொல்லுகையும்
ஸ்ரீ வைஷ்ணவனே இருந்து வைத்து கோயிலை ஸ்ரீ ரெங்கம் என்கையும்- தும்மித் திருவரங்கம் என்னாது ஒழிகையும்
மற்றொரு திருப்பதிகளின் பேர் சொல்லுகையும்
திருமலையை வெறும் வேங்கடம் என்கையும்
பெருமாள் கோயிலை காஞ்சீபுரம் என்கையும்
திரு வநந்த புரத்தை அனந்த சயனம் என்கையும்

(வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )

பெருமாளை ஸ்ரீ ராமன் என்கையும்
நாச்சியாரை சீதை என்று சொல்லுகையும்
இளைய  பெருமாளை லஷ்மணன் என்கையும்
கிருஷ்ணனை ஸ்ரீ கிருஷ்ணன் என்கையும்(பிறந்தவாறும் -பிறந்த மாயா -ஒருத்தி மகனாய் பிறந்து -நம் கண்ணன் அன்றோ)
அழகிய சிங்கரை ஸ்ரீ ந்ருசிம்ஹன் என்கையும்
ஞானப் பிரானை ஸ்ரீ வராஹன் என்கையும்
ஸ்ரீ குஹப் பெருமாளை குஹன் என்கையும்
திருவடியை ஹனுமான் என்கையும்
மகாராஜரை ஸூக்ரீவன் என்கையும்
பெரிய உடையாரை ஜடாயு என்கையும்
திருத் துழாயை துளசி என்கையும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்- ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -திருவாழி ஆழ்வான் -ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் –ஸ்ரீ பரத ஆழ்வான் -சத்ருக்ன ஆழ்வான் -கோயில் ஆழ்வான்- நம் ஆழ்வார் என்று சொல்லாமையும்
தீர்த்த நாயனாரை சாளக்ராமம் என்கையும்
ஸ்ரீ மத் த்வாராபதி நாயனார் -சேனை முதலியார் -திரு வாசல் காக்கும் முதலிகள்- நம்பி மூத்த பிரான் -ஸ்ரீ மாலா காரார் -ஸ்ரீ விதுரர் -ஸ்ரீ நந்த கோபர் இப்படிப் பூர்வர்கள் அருளிச் செய்யும் பூஜ்ய உக்தி விபாகம் அறியாமையும்
பூர்வர்கள் உச்சரியாத பகவன் நாமங்கள் உச்சரிக்கையும்
பூர்வர்கள் விசேஷித்து உச்சரிக்கும் சதாச்சார்ய நாம உச்சாரணம் பண்ணாமையும்
ஏகாந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை கிராம குல ஜன்ம நிரூபணம் பண்ணி வ்யவஹரிக்கையும்(பெரிய திருவடி -சாண்டில்யை இடமும் அபசாரப்பட்ட வ்ருத்தாந்தம்)
திருவடி சேர்ந்தாரை செத்தார் என்கையும்
பரம பதத்துக்குப் போனார் என்ன வேண்டுமவரை திருவடி சேர்ந்தார் என்கையும்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் எனத் தக்காரை பரம பதத்துக்குப் போனார் என்கையும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டரை ஆச்சார்யன் திருவடி யடைந்தார் என்று சொல்லாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளம் கன்றச் சொல்லுகையும்
கேட்டவர்கள் நெஞ்சு அதிர வார்த்தை சொல்லுகையும்
ஸ்வ தோஷம் சொல்லாமையும்
சம்சாரிகள் -பிறர்-குற்றம் சொல்லுகையும்
ஸ்வ குணம் சொல்லுகையும்
பகவத் பாகவத திவ்ய பிரபாவம் சொல்லாமையும்
கேவலம் ஈஸ்வர வைபவம் சொல்லுகையும் -ஆச்சார்ய வைபவம் சொல்லாமையும்
விசேஷஜ்ஞனாய் இருந்து ஆழ்வார்கள் பாசுரங்களையும் -ஆச்சார்யர்கள் பாசுரங்களையும் சொல்லாமையும்-வறை முறுகுதலான ஆர்ஷ வசனங்களை (ரிஷி வாசகங்களைச்) சொல்லுகையும்-
ஆச்சார்யன் உபதேசித்த குரு பரம்பரையும் -த்வயமும் ஒழிந்த மந்த்ராந்தர சப்த உச்சாரணம் பண்ணுகையும்
சதா ஜப்தவ்யத்தை விட்டு இருக்கையும் -என்கை –

59-ஸங்க விரோதி -யாவது
தேஹாத்ம அபிமானிகளோடு ஸம்ஸர்கிக்கையும்
விஷய பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஹங்கார க்ரஸ்தருடன் ஸம்ஸர்கிக்கையும்
தத் வர்த்தகருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர ஹிம்ஸா பர வஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாதகிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பர நிந்தா பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர குண அஸஹிஷ்ணுக்களுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸ்வர்க்க காமனுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸூஷ்க கர்மருடன் ஸம்ஸர்கிக்கையும்
ப்ரம ருத்ராதி தேவதாந்த்ர பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பவ்த்த மாயாவாதிகளான பாஷண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
திரு விலச்சினை திரு நாமம் இல்லாத முரரருடன் ஸம்ஸர்கிக்கையும்
முண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாகவத அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஸஹ்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
ஆச்சார்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
மந்த்ராந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
த்வய ஏக நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
உபயாந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் உபாய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
ஞான வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
பக்தி வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
சரம அதிகாரிகளான ஆச்சார்ய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
தேஹாதிகளிலே சங்கம் நடக்கையும்
சேக்ஷத்வாதிகளிலே சங்கம் நடவாமையும்
தத் இதர விஷயாதிகளிலே சங்கம் நடக்கையும்
ததீய சங்கம் நடவாமையும்
ஷூத்ர ப்ரயோஜந்தரங்களிலே சங்கம் நடக்கையும்
பரம ப்ரோஜனமான பகவத் பாகவத கைங்கர்யங்களிலே சங்கம் நடவாமையும்
ஆச்சார்ய கைங்கர்யங்களிலே அநவதிக சங்கம் நடவாமையும் –என்கை

60-சம்பந்த விரோதி
தேக சம்பந்திகள் பக்கல் பந்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
பகவத் சம்பந்திகள் பக்கல் பந்துத்வம் நடவாமையும்
பிரபன்னனாய் இருந்து ப்ராக்ருத பந்துக்கள் பக்கல் சம்பந்திக்கையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம்பந்தம் செய்யாமையும்
கேவல தேக உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இருக்கையும்
ஞான உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இராமையும்
ஒரு மாம்ச பிண்டத்திலே பிறந்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இருக்கையும்
ஒரு ஆச்சார்யன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இராமையும்
இதர சம்பந்தம் ஔ பாதிகம் என்று இராமையும் -பகவத் சம்பந்தம் நிருபாதிகம் என்று இராமையும்
அசித் சம்பந்தம் பகவத் பிரசாத நிவர்த்யம் அநித்தியம் என்று அறியாமையும்
அயன சம்பந்தம் அநிவர்த்யம் நித்யம் என்று அறியாமையும்
அசித் சம்பந்தம் ஸ்வரூப ஹாநி கரம் என்று இராமையும் -அயன சம்பந்தம் ஸ்வரூப உஜ்ஜீவன கரம் என்று இராமையும்
தச் சரீர பூத நார சம்பந்தம் ததீய பிரயுக்தம் என்று இராமையும்
சர்வ சரீரியான நாராயண சம்பந்தம் சத்தா பிரயுக்தம் என்று இராமையும்
தத் சரீர சாமான்யம் கொண்டு சம்சாரிகளுடன் சம்பந்தம் உண்டு என்று இருக்கையும்
பரி ஸூத்த அந்த கரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் நித்ய சம்பந்தம் உண்டு என்று இராமையும்
பகவத் சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும்  பொது என்று இராமையும்
ஆச்சார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேது என்று இராமையும்
அது சத்தா பிரயுக்தம் என்று அறியாதே உபதேச நிபந்தனம் என்று இருக்கையும் –என்கை –

61-ஸ்நேக விரோதி
பிரகிருதி பந்துக்கள் பக்கம் ஸ்நேஹம் நடக்கையும்
ஆத்ம பந்துக்கள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் விஷயத்தில் பக்தி இன்றியும் இதர லௌகிகமான விஷயங்களில் பற்றும் உண்டாகி இருக்கையும்-பகவத் விஷயத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும் இதர விஷயங்களில் ஸ்நேஹம் மிக்கு இருக்கையும்
ஸ்வ தேஹத்தில் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யன் விக்ரகத்தில் ஸ்நேஹம் நடவாமையும்
ஸ்வ புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்ய புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-

ஆச்சார்யன் திரு மேனியை தன் உடல் நலனை விட அக்கரை உடன் நோக்காமையும்
பிராக்ருத பதார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும்
திரு மந்த்ரார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-தான் இருந்த தேசத்திலே ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யர் இருக்கும் தேசத்திலே ஸ்நேஹம் நடவாமையும்-
தேக யாத்ரையில் ஸ்நேஹம் நடக்கையும் -ஆத்ம யாத்ரையில் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் பாகவத விரோதிகளாய் இருந்துள்ள புத்ர தார க்ருஹாதிகளில் சாஸ்திர நீத ஸ்நேஹம் ஒழிய காமார்த்தமாகப் பண்ணுகிற ஸ்நேஹமும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
அர்ச்சா ஸ்தல பிரதானமான கோயில் திரு மலைகளில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ஸ்நேஹம் நடக்கையும்
மந்திர ரத்ன ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் பெரிய திரு மந்திர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும் -என்கை –

(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?)

62-பக்தி விரோதி -(ஸ்நேஹம் -பூர்வ -அநு த்யானம் பக்தி-ஸ்நேஹமும் பக்தியும் காரண கார்ய பாவம் என்றுமாம்)
பக்தியை சாதனம் என்று இருக்கையும்
பக்தி யுபக்கிரம பூதமான ஸ்மரண சங்கீர்த்த நாதிகளும் (ஆதி -வந்தன ப்ரதக்ஷிணம் போல்வன)சாத்திய கோட்யந்தர் கதம்  என்று அறியாமையும்(இவையும் அவன் இன்னருளாலேயே வந்தவை என்ற நினைவு வேண்டுமே)
இதர பக்தி கலக்கையும் அநந்ய பக்தி கலவாமையும்
பிரபன்னனுக்கு சாத்திய பக்தி பிரபத்திகள்   இரண்டும் சமம் என்று இருக்கையும்(அவன் அருளாலே கிடைத்த பக்தி -ஸாத்ய பக்தி -அவன் உபாயமாக இருந்து ப்ராப்யமாக கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தியை அருளுவார் அன்றோ -இதுவே சாத்ய பக்தி -பிரபத்தி -காரணம் -சாத்திய பக்தி கார்யம் -கைங்கர்ய பிரார்த்தனை -முதல் நிலை -சாத்திய பக்தி -நடு நிலை -கைங்கர்யம் -இறுதி நிலை -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பரார்த்த கைங்கர்யம் -அவன் ஆனந்தத்துக்காக என்ற எண்ணம் வேண்டும் -சாதன பக்தி உபாசகனுக்கு-முற்றி போக்யம் அறிந்து ஸ்வயம் பக்தி நிஷ்டனாகலாமே -நிலைப்பாட்டில் மாறுதல் அல்ல -ஏறி வந்த வழிகள் வேறே தானே -)
பிரபன்னனுக்கு சாத்திய பக்தியில் பிரபத்தி நழுவி நிற்கும் என்று அறியாமையும்
பிரபத்தி நிஷ்டர் அபேஷிக்கும் பக்தி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
பகவத் கிருபையாலே ஆழ்வார்கள் லபித்த பக்தி (கைங்கர்யத்துக்கு)பூர்வ ஷண விருத்தியான சத்தா பிரயுக்த பத்தி என்று  அறியாமையும்
உக்த த்ரவ்யங்களில்  ஓன்று குறையாது ஒழிந்தால் பகவத் கிருபையை நினையாதே தம்முடைய த்ரவ்ய பூர்த்தியாலே இறே அவன் பிரசன்னனாவது என்று நினைக்கையும்
பக்தி உத்பத்தியும் பக்தி விவ்ருத்தியும் பரம பக்தியும் தயா சித்தம் என்று அறியாமையும்(என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித்தொழும் மனமும் தந்தாய் -இசைவித்து தாளிணைக் கீழ் வாழ்வித்தாய் -அதுவும் அவனது இன்னருளே-)
பக்தி பாக விசேஷ கார்யமான அநந்ய உபாயத்வ ஹானியாலே ஸ்வரூப ஹானி வாராது என்று அறியாமையும்
பக்தி தசையில் பண்ணும் மங்களா சாசனமே ஸ்வரூப அனுரூபம் என்று அறியாமையும் –என்கை –

63-தாஸ்ய விரோதி -(தாஸ பூத ஸ்வத ஸர்வே -இயற்கையிலே அனைவருக்கும் தாஸ்யம் உண்டே-ஞாத்ருத்வம் -அறிந்த உடன் போக்த்ருத்வம்-ஸ்வதந்த்ரமும் கூடவே வரும் -)
ஸ்வ தந்த்ரனாய் இறுமாக்கையும்
அந்ய சேஷ பூதனாய் அனர்த்தப் படுகையும்
அதில் வர்ண நிபந்தனமாக தேவதாந்திர சேஷம் என்று இருக்கையும்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
உத்பத்தி  நிபந்தனமாக மாதா பித்ரு சேஷம் என்று இருக்கையும்
கர்ம நிபந்தனமாக பர்த்ரு சேஷம் என்று இருக்கையும்
ஷூத்ர பிரயோஜனத்தை நச்சி ஒரு ப்ராக்ருதனுக்கு அடிமை புக்கு இருக்கையும்
ஷூத்ர விஷயத்தின் காலிலே விழுந்து சுணை கெடுகையும்
சர்வ வித பந்துவாய் சர்வ ரஷகனான சர்வ சேஷிக்கே சேஷம் என்று அறியாமையும்

(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே கோலத் திரு மா மகளோடு )
சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆகாமையும்
தத் இஷ்ட விநியோகம் ததீய சேஷத்வ பர்யந்தம் என்று அறியாமையும்
ஸ்வரூப க்ருத தாஸ்யமே குண க்ருத தாஸ்யம் விட பிரதானம் என்று அறியாமையும்
சேஷியினுடைய இஷ்ட அநிஷ்டமே தனக்கு இஷ்ட அநிஷ்டம் என்று அறியாமையும்
ஸ்வ விநாசத்துக்கு அஞ்சி சேஷிக்கு அதிசயத்தை விளையாது ஒழிகையும்
அவன் சேஷத்வத்தை அழிக்கும் போது பிற்காலிக்கையும்

போகத்தில் தட்டு மாறும் சீலம் -ஆட் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மா மாயன் -அவன் உகப்பே முக்கியம் -ஸ்வரூப நாஸம் பார்க்காமல் இருக்க வேண்டும் -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –
சேஷ வ்ருத்தியில் அந்வயியாது ஒழிகையும் வ்ருத்தி விரோதி  நடக்கையும்
ஆச்சார்ய சேஷத்வம் ஔ பாதிகம் என்று நினைக்கையும்
நித்ய சேஷி யானவனுக்கு நித்ய சேஷம் என்று உணராமையும்

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -ஆத்மாவும் சேஷத்வமும் நித்யம் -நித்ய ஸூரிகளைப் போல் –சம்பந்த ஞானமும் தான் மறந்து உணர்கிறோம்
தேவதாந்த்ரங்களையும் பித்ராதிகளையும் குறித்து தாஸ்யத்தை செய்கையும் –என்கை –

64-சக்ய விரோதி
தண்ணியரான சம்சாரிகளுடன் சக்யம் கொள்ளுகையும்
பெரியோரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம பிரதிபத்தியால் சக்யம் கொள்ளுகையும்
ஒருவருக்கு ஒருவர் சக்யம் கொண்டு உடன் கலந்து குறை காண்கையும்
ததீய புத்தியால் சர்வ ஜன மித்திரன் ஆகாமையும்
தச் சரீர பூதர் இடம் சாத்ரவம் கொண்டாடுகையும்(ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் -உணர வேண்டுமே)
ஸ்ரீ வைஷ்ணவர் உடன் கலந்து மடி தடவுகையும்
உபகார  பிரத்யுபகாரமாக ஸ்நேஹிக்கையும்(மடி தடவாத சோறும் -சுருள் மாறாது பூ -சுண்ணாம்பு கலசாத சந்தனம்-பிரதியுபகாரம் எதிர்பாராத -)
குற்றம் நற்றமாக தோற்றாமையும்
உகந்தாரை உகந்து பொடிந்தாரை பொடிந்து இருக்கையும்
ஆச்சார்ய விரோதிகளுடன் உறவு கொண்டாடுகையும்
ஆச்சார்ய பக்தர்களுடன் ஒரு மிடறாய் பரிமாறாமையும்-என்கை-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் –பகுதி -1-

January 8, 2015

ஸ்வாமி அந்தரங்க சிஷ்யர்கள் பலர்
முதலி ஆண்டான் -கூரத் ஆழ்வான்-தண்டும் பவித்ரமும் போல்வார் –
1-கந்தாடை ஆண்டான்-2- -எம்பார்–3-வங்கி புரத்து நம்பி -4- -வடுக நம்பி –5-அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்-ஐவரும் பஞ்ச ரத்ன சிஷ்யர் –
வங்கி புரத்து நம்பி -தளிகை பண்ணும் கைங்கர்யம் செய்து அருளியவர் –
இவர் –மணல்கால் நம்பி திருவடிகளில் ஆஸ்ரயித்த வங்கி புரத்து ஆச்சி திருக் குமாரர் –
இவர் தனியன் –
பாரத்வாஜ குலோத் பூதம் லஷ்மணார்யா பதாஸ்ரயம்
வந்தே வங்கி புராதீசம்   சம்பூர்ணார்யம் க்ருபா நிதிம் –

சிஷ்யர்: சிறியாத்தான்-

——————

உபய விபூதி நிர்வாஹகரான ஸ்ரீ உடையவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பிக்கு ஸாதித்தவை

வ்யாஸோ வா பகவான் பராசர முனி ஸ்ரீ சவ்நகோ வாண்த வா
ஸாஷான் நாரத ஸம்யமீ ஸடரி புர் வாகீஸ்வரோ வா ஸ்வயம்
லோகேஸே புருஷோத்தம பணிபதி ஸேஷோ ஜகச் ஸேஷிண
த்வித்யாக்யோ ஜகதாம் ஹிதாய ஸம்பூத் ராமாநுஜார்யோ முநி-

ஸ்ரீ சைல அத்தங்கி ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம திருகுமாரார் திரு வேங்கட தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ப்ரஸாதித்து அருளிய அவதாரிகை

ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் லீலா விபூதி சேதன ஸம்ரக்ஷண அர்த்தமாக -இத்தனை காலம் இவர்களை லீலைக்கு விஷயமாக்கினோமே என்று அநுதபித்து-இனி போகத்துக்கு விஷயமாக்கத் திரு உள்ளம் பற்றி அஜாய மாந-என்கிறபடியே பிறப்பிலியான தான் லீலா விபூதியில் பஹுதா விஜாயதே -என்கிறபடியே பலபிறப்பாய் திருவவதரித்து –ஸாது பரித்ராண -துஷ்ட சிஷண -தர்ம ஸம்ஸ்தாப நாதிகளாலே திருத்தப் பார்க்கிலும் -நெடு நாள் லீலைக்கு கர்மீபவித்து -ப்ரக்ருதியிலே அகப்பட்டு -கர்மா வாஸனையாலே -இத்தை விட்டு நீங்க மனமில்லாதவர்களாய் -ஹேயத்வம் தோற்றாமே -எடுக்க வந்தவனுடன் எதிர் அம்பு கோத்து -த்வம் மே அஹம் மே -என்று நீங்கிப் போனபடியைக் கண்டு –
இனி ஸஜாதீயரைக் கொண்டு திருத்துவோம் என்று ஆழ்வார் ஆச்சார்யர்களாக அவதரிப்பித்து -ஞான உபதேச த்வாரா திருத்துவோம் என்று அவதரிப்பித்த ஆழ்வார் ஆச்சார்யர்களாலும் பலிக்கக் காணாமையாலே அதற்க்கு என்று ஒரு மஹாநுபாவன் அவதரித்து ஈஸ்வரன் குறையைத் தீர்க்க வேண்டும் –கலியுகம் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லி வைத்து –இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் என்று இவ் வுலகை விட்டு தன்னுடைச் ஜோதிக்கு எழுந்து அருளினார்கள்-

இனி ஏது செய்வோம் என்று -இதுக்குத் தக்க மஹாநுபாவன் யார் என்று யோசித்து-லீலா விபூதி ஜன துர்கதியையும் -எனது மனக்குறையையும் தீர்க்கவல்ல ஸாமர்த்யம் உமக்கே உள்ளது என்று –ப்ரஹ்ம வாதிநோ வதந்தி -இத்யாதிப்படியே –ஆ முதல்வன் இவன் என்று உம்மையே சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள் -ஆகையால் நீரே அவதரித்து குறையைத் தீர்த்து வாரும் என்று தமக்கு அபிமதரான திருவநந்த ஆழ்வானை நியமிக்க
அவரும் இடையே இராமானுச முநி யாயின இந்நிலத்தே -என்கிறபடியே இராமானுச முனியாய் இவ்வுலகத்தில் திருவவதரித்து வாழும் காலத்திலே பெரியபெருமாள் தம் கோயிலேற வரவழைத்து -தீர்த்த ப்ரஸாத பஹுமாநங்களைச் செய்து -துயரரு திருவடிகளைத் திரு முடியில் வைத்து உம்மை அவதரிப்பித்த கார்யமான சேதன சமஷணத்தைப் பண்ண ஸகல ஆத்மாக்களை கரையேற்றி நம் கோயிலிலேயே நித்ய வாஸம் பண்ணக் கடவீர் என்று
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்குத் தந்தோம் இனி நீரே உடையவர் என்று பட்டம் கட்டி நியமித்து அருள -அன்று முதல் ஸகல சேதன சம்ரஷன தீஷிதராய் வாழும் காலத்திலே

கடலளவாய திசை எட்டினுள்ளும் கலியிருளே மிடை தரு காலத்து -என்று கலி தோஷத்தால் ஜனங்கள் படும் துயரத்தைக் கண்டு
செரு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவன் ராமானுஜன்-என்கிறபடியே தம்முடைய திவ்ய ஞானத்தாலே இவர்களுடைய அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படிக்குத் திரு உள்ளம் பற்றி அகில ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்தோடே பெரிய பெருமாளைத் திருவடி தொழுது அப்போது ஒரு சிந்தை செய்து அவ்வுகப்போடு திருமடத்துக்கு எழுந்து அருளி கோஷ்டியாக எழுந்து இருக்கும் காலத்தில்

அப்போது மத்யே ஸ்ரீ வங்கி புரத்து நம்பி எழுந்தருளி தாளும் தடக்கையம் கூப்பித் திருவடிகளிலே விழுந்து கிடக்க
நம்பீ இது என்ன -என்று உடையவர் கேட்க
அப்பொழுது எழுந்திருந்து இக்கொடு உலகத்தில் அநாதி கர்ம வாஸனையாலே இக்கலியிலே தேவரீர் நியமித்த ஸ்வரூபத்துக்கு விரோதிகளான பலவற்றிலும் அகப்பட்டு கட்டுண்டு உழல்கிற தாஸ வர்க்கங்களுக்கு
ஸ்வரூப விரோதிகள் இன்னது என்றும்
தத் பரிஹாரங்களும்
ஸ்வரூபம் வார்த்திக்கும் கிரமமும்
விசதமாக அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய

உகப்பின் மிகுதியாலே அஃகோக்ஷ்டியில் உள்ளார் எல்லாரும் அறிந்து கொள்ளும் படி வங்கி புரத்து நம்பியை முன்னிட்டு அருளிச் செய்த விரோதி பரிக்ரஹம் என்ற இவ் வர்த்தத்தை
முமுஷுவாய் -பஞ்ச ஸம்ஸ்காராதி ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமுடையவனான ஒருவனுக்கு அவஸ்யம் தெரிந்து கொண்டு அனுஷ்ட்டிக்க வேண்டியதாய் இருக்கும்
அவை எவை என்னில்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி
3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி

(ஞானம் இச்சை பிரயத்தனம் -மூன்று தசைகள் உண்டே
ஆகவே பிரித்து விரோதிகளை அருளிச் செய்கிறார்)
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
10-பிரபத்தி நிஷ்டனுக்கு கர்மாத் யுபாயங்கள் விரோதி-

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு தேவதாந்திர பஜனம் விரோதி-(கைங்கர்யத்துக்கு பூர்வ பாவி பக்தி ருசி வேண்டுமே -இதுக்கு தேவதாந்த்ர பக்தியே விரோதி என்றவாறு)
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
17-உபாய விரோதி –
18-உபேய விரோதி –
19-உபேய த்ரி விரோதி-(மூன்று விரோதிகள்)
20-முக்ய பிரமாண விரோதி

21-யாவதாத்மபாவி விரோதி
21-நித்ய விரோதி
23-அநித்திய விரோதி
24-ஸ்வ ஸ்வரூப விரோதி
25-பர ஸ்வரூப விரோதி –
26-ஸ்வ அனுபவ விரோதி –
27-பர அனுபவ விரோதி –
28-சம்ச்லேஷ விரோதி
29-விஸ்லேஷ விரோதி
30-விஷய விரோதி –

31-விஸ்வாச விரோதி –
32-பிரவ்ருத்தி விரோதி –
33-நிவ்ருத்தி விரோதி –
34-சயன விரோதி –
35-உத்தான விரோதி –
36-கதி விரோதி –
37-ஸ்திதி விரோதி –
38-ஆவஸ்யக விரோதி
39-சரீர சுத்தி விரோதி –
40-ஸ்நான விரோதி –

41-அனுஷ்டான விரோதி
42-லஷண விரோதி –
43-ஸ்மரண விரோதி
44-சங்கீர்த்தன விரோதி –
45-ஸ்ரவண விரோதி
46-ஸேவா விரோதி –
47-சமாராதன விரோதி-(சம்யக் ஆராதனை -நல்ல பகவத் பாகவாத ஆச்சார்ய ஆராதனை)
48-வந்தன விரோதி
49-அஞ்சலி விரோதி(வந்தனம் த்ரிவித-கரணங்களால் -அஞ்சலி -கைகூப்புதல்-
50-கால ஷேப விரோதி

51-ஆர்ஜன விரோதி
52-க்ருஹ விரோதி –
53-ஷேத்திர விரோதி
54-போஜன விரோதி –
55-போஜ்ய விரோதி-
56-தீர்த்த விரோதி –
57-பிரசாத விரோதி –
58-உக்தி விரோதி-
59-சங்க விரோதி
60-சம்பந்த விரோதி

61-சிநேக விரோதி
62-பக்தி விரோதி –
63-தாஸ்ய விரோதி –
64-சக்ய விரோதி-(ஸ்நேஹம் அன்பன் சக்யம் நண்பன்)
65-சமர்ப்பண விரோதி-
66-தர்சன விரோதி –
67-ஆஸ்ரம விரோதி
68-ஜாதி விரோதி
69-ஆப்த விரோதி
70-அநாப்த விரோதி

71-சித்தாந்த விரோதி
72-தத்வ விரோதி
73-பும்ஸ்த்வ தப விரோதி –
74-அந்திம தசா விரோதி
75-அவிஸ்வாச விரோதி
76-சங்க விரோதி –
77-சந்தான விரோதி –
78-வர்ண விரோதி
79- ஜப விரோதி –
80-ஆராதன விரோதி

81-பதித்வ விரோதி –
82-வர்ஜ நீய விரோதி
83-அவர்ஜ நீய விரோதி

—————————————————————————————————————————————–

இவற்றுக்கு ஸ்ரீ வங்கி புரத்து நம்பி அருளிச் செய்த வ்யாக்யானம்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
ஸ்வ தேகமும் -தேக அநு பந்திக்களுமான பித்ரு மாத்ரு தனம் ஸ்திரீ பான புத்ர மித்ர களத்ராதிகள்–என்கை(ஸ்வர்க்கமும் லீலா விபூதிக்குள்ளே தான் இருக்கும் -இது ஆமுஷ்மிக போகம் -இங்கு சம்சாரம் -ஐஹிக போகம்)

2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி-ஸ்வர்க்க ஸூக அபேக்ஷை யுடையவனுக்கு
இவ் வுலகத்தில் உள்ள கீழ்ச் சொன்ன பதார்த்தங்களுடைய அனுபவ இச்சை -என்கை


3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
கைவல்யானுபவத்துக்கு ஸ்வர்க்கத்தில் ஆசை விரோதி
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி(கர்மம் தொலைய வேண்டுமே கைவல்யார்த்திக்கும் -ஜனனம் மரணம் இவை அவனுக்கு கிடையாதே -இதுக்கும் பகவத் திருவடிகளே உபாயம் -கதி த்ரயத்துக்கும் அவனே உபாயம்-சுத்த ஆத்ம ஸ்வரூபம் -கைவல்யனுக்கு -அசித் மிஸ்ர சேதனன் போல் அல்லவா -சரீரம் கழித்த சேதனன் இவன்)
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி-ஸ்வரூப ரூப குண விபூதி யுக்த ப்ராப்த ஸேஷியான பரமாத்ம அனுபவத்துக்கு
அணுவாய் சேஷமாய் இருந்துள்ள ஸ்வ ஆத்ம அனுபவம் விரோதி என்கை
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி-ப்ராப்த பகவத் அனுபவ அபேஷாவானுக்கு-அப்ராப்த ஸ்வ ஆத்ம அனுபவ அபேக்ஷை பிறப்பது விரோதி தானே – அது பள்ளமடை -இது அல்பமாயும் மேட்டு மடையாக இருக்கும்-ஞான தசை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் -இயற்கையான தாஸ்யம் -ஸ்வத ஸித்தம் -அந்தமும் ஆதியும் இல்லாதது என்று அறிந்து-அதை அடைய இச்சை -இரண்டாம் தசை
மேல் அடைய முயற்சி யத்ன தசை இவ்வாறு மூன்றும் உண்டே -மூன்றுமே ப்ராப்ய வகுத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி-குணி -ஸ்வரூபம்-ஸஹ ஸ்ருதி –குணங்களை அவன் கூட இருந்தே அனுபவிக்கிறான் –
பரமம் ஸாம்ய உபைதி -ஸாம்ய சுருதி -ஆனந்தத்தில் ஸாம்யம் உண்டே
சாதர்ம்ய ஸ்ருதி -ஸாலோகம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் -அடைகிறோம்
இம் மூன்றும் விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு -அசாதாரணம் –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண  விபச்சிதா  -இத் யுக்த பகவத் கல்யாண குண அனுபவத்துக்கு -ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான் -ஸ்வரூப அனுபவம் -திவ்யாத்ம ஸ்வரூப அனுபவம் விரோதி
நெஞ்சால் நினைப்பரிதால் –வெண்ணெய் யூண் என்னும் ஈரச் சொல்லே -திரு விருத்தம் -98-
எத்திறம் உரலோனோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய் -1-3-1-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது -பெரிய திருவந்தாதி -86-ஸ்வரூபம் நினைத்து போக்க முடியாதே -சீர் கலந்த சொல்லாலே போக்கலாம்

நின் புகழில் வைகும் சிந்தியினிலும் மற்று இனிதோ நீ அவருக்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் நைகும் –உன் குணங்களை எண்ணியே -உடையவர் கல்யாண குண அனுசந்தானமே ஸ்ரேஷ்டம்
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி –காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் என்னப் பண்ணும் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான-பகவத் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்த்ர்யம் விரோதி-த்ரஷ்டத்வம் வந வாஸாயா -சுமத்ரா தேவி -அவன் நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்ய நிஷ்டையிலே இருக்க வேண்டும் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –அனைத்துமே அசேதனம் இப் பாசுரத்தில் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே –நறு மா விரை நாண் மலரடிக் கீழ்ப் புகுதல் உறுமோ –திருவாய் -8-10-3
ததா நர்ச்சிதஸ் சத் பக்தம் பகவான் நாபி நந்ததி –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க் கடிமை கண்ணபுரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் -நான் முகன் -18
சத்ருனோ நித்ய சத்ருக்ன –கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத 
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

10-பிரபத்தி நிஷ்டனுக்கு-பிரபத்தி ஸப்த வாஸ்ய ஸித்த சாதன பூத ஸர்வேஸ்வரனே உபாயம் என்று பற்றினவனுக்கு- கர்மாத் யுபாயங்கள் விரோதி-

பிரபத்தி என்கிற வாசகத்துக்கு வாஸ்ய ஸித்த ஸாதனான ஸர்வேஸ்வரன்
உபாயாந்தரங்களைப் பற்றியவனுக்கு இரக்கத்தாலும்
பிரபன்னனுக்கு ஆனந்தப்பட்டு வசீகரப்பட்டது அருளுவான்

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்த நா மதி –
சாஸ்திர ரூபமான பகவத் ஆஜ்ஞ்ஞைப் படி அவனுக்கு  செய்யும் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-பகவத் முக மலர்த்தியே பிரயோஜனமாக கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்
சரீர பூதர்கள் தேவதாந்த்ரர்கள் -தேவதாந்த்ர முக மலர்த்திக்காகச் செய்தவை விரோதியாகும் –ஸர்வ ஸப்த வாஸ்யன் -ஸர்வ அந்தர்யாமி -எண்ணத்துடன் செய்ய வேண்டுமே –
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு -பதிம் விஸ்வஸ்ய இத்யாதிப்படியே-தேவதாந்திர பஜனம் விரோதி

கீழ் கர்மங்கள்-இங்கு கைங்கர்யங்கள்-தனக்குத் தானே பதி -ஸர்வ லோகத்துக்கும் பதி -ப்ராப்த சேஷி கீழ் ஸர்வ அந்தர்யாமி எண்ணத்துடன் ஹித கர்மாக்களை செய்பவற்றைச் சொல்லிற்று
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
பண்ணின பிரபத்தியும் உபாயம் ஆகாதே-உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்-என்கிறபடியே எம்பெருமானையே உபாய உபேயமாகப் பற்றின உத்தம அதிகாரிக்கு உபாயாந்தர நிஷ்டனான மத்யம அதிகாரியைப் போலவே உபாயத்வேன உத்தேசித்துப் பண்ணின ப்ரபத்தியும் விரோதி யாகுமே-இசைவித்து என்னை உனது தாளிணைக் கீழ் இருத்தினாய்-பல பிரபத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை பெற என்ற எண்ணம் -அதிகாரி விசேஷம்
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி-சேதன ப்ரவ்ருத்தியாலே ஸ்வரூபம் பெற வேண்டிய-உபாயாந்தரங்களுக்கு- ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விரோதி என்கை-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாஸி தவ்ய -நான்கு படிகள் -கேட்டு ஆலோஸித்து -தியானித்து -காண்பது –
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்  களை கண் மற்றிலேன் –
செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யன் -வாழும் சோம்பர்
17-உபாய விரோதி –உபாயாந்தரங்கள் உடன் ஒக்க எம்பெருமானை நினைக்கையும்
நம்முடைய இசைவு கொண்டு அன்றோ உபாயமாயிற்று என்று நினைக்கையும் -இது இல்லாத போது ஸர்வ முக்தி ப்ரஸங்கம் பிறக்கும் என்கையும் -இது அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம் என்று இராமையும் -இது தானும் அவன் இட்ட வழக்காய் இருக்கும் என்று அறியாமையும் -என்கை-அசித்து போலே அவன் இட்ட வழக்காக இருக்க வேண்டும்

(உபாயம் என்றாலே பிரபத்தி -பகவான் என்பதையே குறிக்கும் நம் ஸம்ப்ரதாயத்தில் – பலத்துக்கு சத்ருச உபாயம் இவனே -உபாயாந்தரங்கள் அசேதன கிரியா கிலேசங்கள் இவனுக்கு கிட்டே கூட ஸமமாகாதே –
இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் இவன் தானே -என்னையும் என்னுடைமையும் சமர்ப்பித்தேன் அதுவும் அவனது இன்னருளே –
கர்மம் அடியாக சம்சாரத்தில் அழுந்தி இருக்க -கிருபை யடியால் விடுபட்டு பேறு அடைகிறோம் -மாறாடி நினைத்தால் அவத்யமே விளையும் –
இசையாத அன்றும் விடாதவன் -இசைந்த அன்று பேறு அளிப்பான் சொல்லவும் வேண்டாமே –
இசைவு இல்லாவிடில் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரும் என்றும் நினைத்து இசைந்ததால் பேறு என்றும் நினைக்கக் கூடாதே –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஸம்ஹாரமும் லீலா கார்யமே -இன்புறும் இவ் விளையாட்டுடையான் -லோக வத்து லீலா கைவல்யம் -)

18-உபேய விரோதி -பகவத் உபாயனாய் -அந்ய பலனாகையும்-அந்ய உபாயனாய் பகவத் பலனாகையும்-கர்த்தாவாய் கைங்கர்யம் பண்ணுகையும் -அகர்த்தா என்று கைங்கர்யத்தை அநாதரிக்கையும்-போக்தாவாய் ரசிக்கையும்-போக்யம் என்று வந்து அவன் முக மலர்த்தி கண்டு ரசியாமையும் –-விரோதி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
படியாய் கிடந்து   உன் பவள வாய் காண்பேனே
கதா பிரகர்ஷயிஷ்யாமி

என்னை ஆக்கி தன்னைத் தந்த கற்பகமாய் இருக்க-அவன் முக மலர்த்தி ஒன்றே பிரயோஜனமாகக் கைங்கர்யம் பண்ண வேண்டும் அன்றோ -மற்றை நம் காமங்கள் மாற்று -செய்வார்களைச் செய்வானும் யானே என்னும்-செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -இத்யாதி –

நாம் கர்த்தா அல்ல -கருவியாக என்னைக் கொண்டு செய்விக்கிறான் -சேஷத்வ போக்த்ருத்வம் போல் அன்றி பாரதந்தர்ய போக்த்ருத்வங்கள் -எதிர் விழி கொடுத்து பாரதந்தர்யம் வேண்டும்

19-உபேய த்ரி விரோதி
ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே –
1-பலாகாங்ஷையும் -2-திருஷ்ட பிரயோஜன அபேஷையும் -3-அத்ருஷ்ட  தேவதாந்திர அபேஷையும் –
1-பகவத் பிராப்தியை அபேஷியாது ஒழிகையும்
2-பாகவத கைங்கர்யத்தில் அபரத்வ புத்தியும்
3-ஆச்சார்ய கைங்கர்யத்தில் பர்யாப்தியும்  –

திருஷ்ட பிரயோஜன அபேஷை-திருவடி பாவோ நான்யத்ர பஸ்யதி -அமுதினைக் -பெருமாளைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே-முயல்கிறேன் உன் தன் மொய்கழற்கு அன்பையே -முயலத் தானே முடியும் -சத்ருஸமான பிரதியுபகாரம் செய்ய முடியாதே -இரண்டு ப்ராஹ்மும் நான்கு விபூதிகளும் வேண்டும் அன்றோ-

20-முக்ய பிரமாண விரோதி
நிர்த் தோஷ ஜ்ஞான ஜனகமான வேதாந்தத்தை  பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
அத்தை இதர பிரமாணங்களோடு ஒக்க நினைக்கையும்
மாஸூச வார்த்தையை விஸ்வசியாது ஒழிகையும்
அருளிச் செயல்களே முக்ய பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
பூர்வாச்சார்யர்கள் வாதங்களில் அவிஸ்வாசமும்-

உண்மை அறிவுக்குக் கருவியே பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்-ஊற்றமுடையாய் -பெரியாய் -வேத ஸாரம் -மாயன் அன்று ஓதிய மெய்மைப் பெரு வார்த்தை–சரம ஸ்லோகம் -அதுக்கும் மேல் அருளிச் செயல்கள் -அதுக்கும் மேல் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-தெளியாத மறைப்பொருள்கள் தெளியப் பெற்றோம்-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-

21-யாவதாத்மபாவி விரோதி
தேஹேந்த்ரியங்களில் ஆத்ம புத்தி பண்ணுகையும்-ஸ்வா தந்த்ர்ய புத்தி பண்ணுகையும் –
ஈஸ்வரனை அபூர்ணன் என்று இருக்கையும்
ப்ரம்மா ருத்ராதிகளை ஈஸ்வரராக நினைக்கையும்
எம்பெருமானை ஒழிந்தவர்களை ரஷகர்  என்று இருக்கையும்
நிலை நின்ற பாகவத அபசாரமும்   ஆச்சார்ய அபசாரமும்
ஈசான சீல நாராயண ஏவ -சங்கரர் திரு வாக்கு
நாராயண பர ப்ரஹ்ம -உபநிஷத்
பாகவத அபசாரம் செய்தோரை -ஷிபாமி ந ஷமாமி வஸூந்தரே
இராமானுச உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆள்படுத்தே-107-

ஈஸ்வரை ஒழிந்தவர்கள் ரக்ஷகர் அல்லர் என்றும் பிரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம் -காக்கும் இயலபினன் கண்ணபிரான் -சாலப் பலநாள் உகந்து உயிர்கள் காப்பான்

21-நித்ய விரோதி
இந்த்ரியங்கள் விரோதி அன்று என்று இருக்கையும்
இந்த்ரிய கிங்கரனாய் அவற்றுக்கு இறை தேடிக் கொடுக்கையும்
ஞானச் செருக்காலே இந்த்ரியங்களுக்கு அஞ்சாது ஒழிகையும்
பாகவத் கைங்கர்யத்தில் அந்வயியாதே கேவல பகவத் -பாகவத் சௌந்தர்யத்திலே  மக்னனாய் இருக்கையும்

ஸூஷ்ம இந்திரியங்கள் விடாமல் தொற்றிக் கொண்டே எடுக்கப் போகும் ஜென்மங்கள் தோறும் வருவதால் நித்ய விரோதி தானே இவை-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழன்று-இந்திரிய பய க்ரோசம் -அஞ்சினேன் -இந்திரியங்கள் கொண்டு பகவத் பாகவத ஆராதனம் செய்யாமல் இவற்றுக்கே தீனி போட்டு உழன்று-கீதை -2-51 தொடங்கி நான்கு ஸ்லோகங்கள் -யஜமான ஸம்ஹிதை -இத்யாதி -யோக ஆரம்ப விரோதிகள் -மாய வல் ஐம் புலன்கள் ஆமவை நன்கு அறிந்தேன்-விண்ணுளார் -பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் —

அநக –நித்ய சத்ருக்ந –நீக்கமில்லா அடியாரான லஷ்மணன் -சயமே அடிமை தலை நின்ற பரதன் -கோதில் அடியார் இவர் ஒருவரே

23-அநித்திய விரோதி
சுக துக்கங்கள் -தேகாத்ம பிரமத்தால் சந்தநாதிகளைக் கொண்டு சுகிக்க நினைக்கையும்
விஷ சஸ்த்ராதிகளை கண்டு வெருண்டு துக்கிக்கையும்
ப்ராக்ருத பதார்த்த லாபத்தாலே சந்தோஷிக்கையும்
அலாபத்திலே விஷண்ணனாகையும்

இவை எல்லாமே தாற்காலிக சுக துக்கங்கள் -அல்பம் அஸ்திரம் -என்று உணர வேண்டுமே

24-ஸ்வ ஸ்வரூப விரோதி
ஜ்ஞான அனுதய
அந்யதா ஜ்ஞான
விபரீத ஜ்ஞானங்களும்
போக தசையில் அவன் அழிக்கும் இடத்து சேஷத்வத்தையே நோக்கி பிற்காலிக்கையும்
பார தந்த்ர்யத்தை நோக்கி பர அதிசய கர ப்ரவ்ருத்தி அறுக்கையும்
ஆச்சார்ய பார தந்த்ர்யத்தில் அப்ரதான புத்தியும்-

அறிந்து அறிந்து தேறித் தேறி
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை-முமுஷுப்படி –சூரணை -92
அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே-போக்தாவான ஈஸ்வரன்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி- அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி – இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது – நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –

25-பர ஸ்வரூப (அனுபவ) விரோதி –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியான பிரகிருதி வச்யனாகையும் –
பிராக்ருதர் பக்கல் பரத்வ புத்தியும் -நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –
பராவரர்கள் பகவத் பரதந்த்ரர் என்று அறியாமையும்
சௌலப்யம் கொண்டு பரத்வத்தில் அதி சங்கை பண்ணுகையும்
பகவத் ஸ்வரூப ரூப விஷயத்தில் அஜ்ஞ்ஞாத அந்யதா ஜ்ஞானங்களும்  -என்கை–

இச்சா கிருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் உணர வேண்டுமே
நாட்டினான் -தெய்வங்களாக -அருளினால்
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் திருவரங்கம்

26-ஸ்வ அனுபவ விரோதி –
தேக வாசனையும் -தேக அனுபந்தி வாசனையும் -வாசனா கார்யமான தேகாதிகளில் ருசியும்

கைவல்ய அனுபவ விரோதிகளைக் காட்டி அருளுகிறார் -வாசநா – மனப் பதிவு =ருசி -இரண்டையும் விட வேண்டுமே

27-பர அனுபவ விரோதி –
ஸ்வ இச்சா பிரவ்ருத்தியும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
ஈஸ்வரனுடைய குணங்களைக் கேட்டால் அசூயையும்
இதர குணங்களைக் கேட்டால் தெளிகையும்
பரத்வம் கண்டு வெருவுகையும்-அவனை நாம் தேவர் என்று அஞ்சினோம்-

கீழ் பர ஸ்வரூப அனுபவம்-இங்கு பர ரூப குண விபூதிகள் அனுபவம்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34

28-சம்ஸ்லேஷ விரோதி
எம்பெருமானுடைய ஈஸ்வரத்வத்தைக் கண்டு வெருகையும்
ஸ்வ பாவத்தைக் கண்டு தரிக்கை யன்றிக்கே ஸ்வ நைச்சியத்தை அனுசந்திக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் கிட்டுகையும் -துர்லபம் என்று பிற்காலிக்கையும் –என்கை

தேவாதி ராஜனே ஆ மருவி அப்பன் என்றும் உணர்ந்து அநுபவித்தாரே கலியன்

அன்னையும் நோக்கும் என்றும் அஞ்சுகிறேன் அச்சோ ஒருவர் அழகிய வா
அவளும் நின் திரு ஆகத்தில் இருந்தது அறிந்தும் ஆசை விடாலாள்

29-விஸ்லேஷ விரோதி
பக்தி வஸ்யமற்றும் பொறுத்து ஆறி இருக்கையும்
போதயந்த பரஸ்பரம் பண்ணிப் பாடாற்றும் உசாத் துணை அறுகையும் -என்கை

துக்க அனுபவத்துக்கு மூலம் இவை -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -துக்க ஹேதுவாகுமே -பரவசம் -பரனான அவனுக்கு வசப்பட்டு துடிக்க வேண்டும் அன்றோ –

மச்-சித்த மத்-கத-ப்ராண போதயந்தঃ பரஸ்பரம்
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச-10-9-திருநெடும் தாண்டகம் -மூன்று பத்துக்களும் இவ் வகை –

ஈறும் வேம் ஈரியாய் உலர்த்த -சித்தம் சித்தாய் நின்னிடையேன் -அல்லேன் என்று நீங்க-உடல் ஆத்ம தர்மம் கொள்ள-உடலும் நீராய் அலைந்து உருக -முடியானேயில் கரணங்கள் அவையாக -ஓன்று மற்ற ஒன்றின் செயலில் விரும்ப-உள்ளதெல்லாம் தான் விரும்ப-காற்றும் கழியும் கட்டி அழ -கொண்ட பெரும் காதலுக்கு பக்தி நூல் வரம்பில்லையே-

கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகும் தூங்க -கதிரவன் -தேரும் போயிற்று -திசைகளும் மறைந்தன -செய்வது ஒன்றுமே அறியேனே –
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-
ஆழ்வார் அருளிச் செயல்களால் பக்தி வளரும் -ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் -வேதாந்தம் ஞானம் வளர்க்கும்

30-(பகவத்) விஷய விரோதி –
பகவத் வ்யதிரிக்த விஷயமங்களிலே பிரவணன் ஆகையும்
பாகவத நாமங்களை கேளாதே கேவல பகவன் நாமங்களைக் கேட்கையும்
பகவத் விக்ரஹத்தை பாராது இதர சரீரங்களைப் பார்க்கையும்
பாகவத சமூகத்தைக் காணாதே கேவலம் பகவத் விக்ரஹத்தைக் காண்கையும்
பகவன் நாம உச்சாரணம் பண்ணாதே இதர நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் ஷேத்ரங்களுக்கு போகாமல் இதர இடங்களுக்கு போகையும்
ததீயரை ஒழிந்த இதரரை ஸ்பர்சிக்கவும்
பாகவத உச்சாராணம் பண்ணாதே கேவல பகவன் நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் பாத துளசி கந்த க்ராணம் பண்ணாதே கேவல துளசி க்ராணம் பண்ணுகையும் என்கை-

காதுக்கும் கண்ணுக்கும் வாயுக்கும் காலுக்கும் —கேளாச் செவிகள் செவி அல்ல-நாவகாரியம் -நாவுக்கு அகாரியம் -சதுரா சதுர் அக்ஷரீ -நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-போந்தாரை போந்து எண்ணிக் கொள்-ஊரைச் சொன்னாய் பேரைச் சொன்னாய் அடியார் ஒதுங்கி நிழல் தந்தாய் -அஞ்ஞான ஸூஹ்ருதம்-கந்தம் கமழும் குழலி -அங்கும் பஞ்ச இந்திரியங்கள் விஷயம்-

31-விஸ்வாச விரோதி –
உபாய லகுத்வ பிரதிபத்தியும்- உபேய கௌரவ பிரதிபத்தியும்
விரோதி பாஹூல்ய பிரதிபத்தியும்
சரம உபாயத்தில் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்பதில் அவிச்வாசமும் –என்கை –

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
இணை திருவடிகள் -ஒன்றே ஒன்றுக்கு ஸத்ருசம்

32-பிரவ்ருத்தி விரோதி –
பகவத் கைங்கர்யத்தை கர்த்தவ்யதா புத்தி இல்லாதே விதிப் பொருளுக்கு பயப்பட்டு பண்ணுகையும்
ராக ப்ரேரிதனாய்ப் பண்ணாது ஒழிகையும்
பாரதந்த்ர்யத்தை நோக்கிப் பதற்ற மறுகையும்
ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தியும் -என்கை-

உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன்-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதாய்-பாட்டினால் என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே-கர்மங்கள் கைங்கர்யத்தில் புகும் –புருஷோத்தமன் -புஷ்ப்ப கைங்கர்யம் -தலையால் ஸ்வீ கரித்து அருளுகிறவன் -குறும்பு அறுத்த நம்பி விருத்தாந்தம்

33-நிவ்ருத்தி விரோதி –
இதர கர்ம த்யாக பூர்வகமான எம்பெருமானை பற்றி இருக்கச் செய்தேயும்
த்யாகத்தில் பாபம் வரில் செய்வது என்-என்று அநுசங்கிக்கையும்
மடங்கி அனுஷ்டிக்கையும்
அசக்தியால் விடுகையும் –
ஸ்வ சக்தியால் விடுகையும்
விட்டோம் என்னும் பிரதிபத்தி விடாமையும்
த்யாக அந்வயமும்–என்கை-

அப்ராப்தி -ஸ்வரூப ஹானி என்றே விட வேண்டும்-விடுவித்துப் பற்றச் செய்த அவனே உபாயம்-உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விட வேண்டும் -விடுகையில் அந்வயம் கூடாது -ஞானம் முக்கியம்-

34-சயன விரோதி –
சம்சாரிகள் க்ருஹங்களில் சயநிக்கையும்
அவர்களுடன் சயிக்கையும்
அவர்கள் படுக்கையில் சயநிக்கையும்
அவர்கள் காற் கடையில் சயநிக்கையும்
அவர்களுக்கு கீழாக சயநிக்கையும்
அவர்களுக்கு தான் சயனிக்க இடம் கொடுக்கையும்
அவர்கள் சயனிக்கும் இடத்தை சுத்தி பண்ணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ பவனன்களிலே சயநியாமையும்
அவர்களுடன் சம ப்ரதிபத்தியாய் சயநிக்கையும்
அவர்கள் திருப் படுக்கையில் மதியாமல் சயநிக்கையும்
அவர்கள் ஸ்ரீ பாத பிரதேசத்தில் சயனிக்க கூசுகையும்
அவர்கள் கீழே கண் வளர தான் உயரத்தில் சயநிக்கையும்
தான் அவர்களுக்கு சயனிக்கும் இடம் கொடாமல் சயநிக்கையும்
அவர்கள் கண் வளர்ந்து அருளும் இடத்துக்கு சுத்தி பண்ணுகையும்
விஹித விஷயம் என்று விஷய ப்ரவணனாய் சஹ சயிக்கையும்
ததீய பிரதிபத்தியால் சஹ சயியாமையும்
விஷயாந்தர ஸ்மரணத்துடன் சயநிக்கையும்
பகவத் ஸ்மரணம் இன்றி சயநிக்கையும்
ஆச்சார்ய ஸ்மரண நிஷ்டன் இன்றியே சயநிக்கையும்
தேக யாத்ரா பரவசனாய் சயநிக்கையும்
ஆத்ம யாத்ரா சிந்தா பரவசனாய் சயநியாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதிகளில் கூச்சம் இன்றி கால் நீட்டி சயநிக்கையும்
திரு முற்றம் திருப் பள்ளி யறை ஆச்சார்யன் திரு மாளிகைகளைக் காற்கடைக் கொண்டு சயநிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்யம் பண்ண வேண்டும் காலத்திலேயே சயநிக்கையும்
ஆச்சார்யன் கண் வளர்ந்து அருளுவதற்கு முன்னே சயநிக்கையும்
ஆச்சார்யன் எழுப்பச் செய்தே சயனித்து இருக்கையும் -என்கை –

முமுஷுக்கள் இல்லாமல்-ஈஸ்வரனையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் இடம் ஸஹ வாஸமும் கூடாதே

35-உத்தான விரோதி –
ஆச்சார்யர் மற்றும்  ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுப்ப மெள்ள எழுந்து இருக்கையும் –
ப்ராக்ருதர் எழுப்பப் பதறி எழுந்திருக்கையும்
பூர்வ அனுசந்தானம் இன்றியே எழுந்திருக்கையும்
ஆச்சார்யர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் தனது வரவு பார்த்து இருக்க அனுசந்தான தத் பரராய் எழுந்து இராது  இருக்கையும்
தனது மடியில் ஆச்சார்யன் முடியை வைத்துக் கண் வளரா நிற்க கால் கடுத்தது என்று எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் மத்யே எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அதிர நியமித்து தட்டி எழுப்புகையும்
ஆச்சார்யன் சயநிக்கிற காலத்திலேயே தான் எழுப்புகையும்
ஆச்சார்யன் எழுந்திருப்பதற்கு முன்னே தான் எழுந்திராமையும்
தன்னுடனே எழுந்திருக்கும் ச ப்ரமசாரிகள் மேலே மயிர் உதறுதல் சோம்பல் முறித்தல் கொட்டாவி கொள்ளுதல் செய்கையும்
எழுந்திரா நிற்க முந்தி அடியேன் என்று பரஸ்பரம் தண்டன் இடாமையும்
ஆச்சார்யன் தத் பத்னி பித்ராதிகள் எழுந்திருந்த போதே தண்டன் இடாது ஒழிகையும்-என்கை-

36-கதி விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண் வளர்ந்து அருளின திருப் படுக்கையை மிதித்தல் செய்கையும்
சந்தித்த ஸ்ரீ வைஷ்ணவர்ககளுக்கு எதிரே செல்லாமையும்
விநயம் பாவித்து சம்சாரிகளுக்கு எதிரே செல்லுகையும்
பகவத் கோபுராதிகளைக் கண்டு அஞ்சலித்து கண் குளிர நோக்காமல் கடைக் கணித்துப் போகையும்
தேவதாந்திர கோபுராதிகளைக் கண்டால் கண் புதைத்துக் கடுக நடவாமையும்
திரு முற்றங்களுக்கு பிரதஷிணமாகப் போகாமையும்
அருளிச் செயலில் த்வநியைக் கேட்டு சிறிது செவி கொடாமல்  கடுக நடை யிட்டுப் போகையும்
அந்ய கீரத்த த்வநியைக் கேட்ட போதே செவி புதைத்துக் கொண்டு சீக்கிரமாகப் போகாமையும்
ஆச்சார்யனுடையவும் இதர ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் சாயையை மிதித்தல் செய்து நடக்கையும்(எம்பார் ராமானுஜ பதச் சாயா)
தன் நிழல் அவர்கள் மேல் பட நடக்கையும்
சம்சாரிகள் நிழல் தன் மேல் படுத்தல் தன் நிழல் அவர் மேல் படுத்தல் செய்யும்படி கூச்சமற்று நடக்கையும்
பகவத் பாகவத சமாராதன அர்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ண நடக்கும் போது ப்ரஹ்ம ருத்ராதி வசதிகளை அணுகிப் போகையும்
ஸாண்டில்ய ஸ்ம்ருதி -பிரம்மா ருத்ராதி வஸதி ஸ்மஸாநம் சரமேவ ச -அபலீம் ராஜ தாலீம் ச தூரத பரி வர்ஜயேத்-தேவதாந்திர உச்சிஷ்டங்களை மிதித்து நடக்கையும்
பாஷண்டிகளுடன் வழி நடக்கையும்
வழி இடுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை பரிந்து பாராமல் போகையும்
எல்லை யளவும் சென்று எழுந்து அருளுகிறவர் மறையும் அளவும் நில்லாமல் மடங்குகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளா நின்றார்கள் என்று கேட்டு எதிரே போகாயையும்
சம்சாரிகளை எதிர் கொள்ளுதல் வழி விடுதல் செய்கையும்
கேவல தேக யாத்ரா பரவசனாய் சம்சாரி க்ருஹங்கள் தோறும் சென்று தட்டித் திரிகையும்
பகவத் பாகவத் தேசிக அபிமானம் உள்ள திவ்ய தேசத்தில் செல்லாமல் திரிகையும்
பிரகிருதி சம்பந்தத்தை இட்டு சம்சாரிகள் உத்சவங்களுக்குப் போகையும்
ஆத்ம சம்பந்த அநுரூப பகவத் பாகவத உத்சவங்களுக்குப் போகாமையும்
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் அலையும்படி அதிர நடக்கையும்
சதாச்சார்யன் பின் சென்று சேவியாமையும்
பிரயோஜனாந்தர பரனாய் பின் செல்லுகையும்
அவன் போ என்னப் போகாமையும் வா என்ன வாராமையும்
இயலில் முன்னே செல்ல முயலுகையும் பின் செல்லப் பிற்காலிக்கையும்
பெரும் கூட்டத்தில் நடக்க  மாட்டாதாரை விட்டுப் பறந்தோடுகையும்
ஆச்சார்யனுக்குத் திருக் கை கொடுத்துச் செல்லுமிடத்து சிநேக பயமின்றி பேணிச் செல்லாமையும் –என்கை  –

37-ஸ்திதி விரோதி –
சம்சாரிகளுடைய புடவை பட நிற்கையும்
ஏகாசனத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தன் புடவை பட நிற்கையும்
சம பிரதிபத்தியாலே ஏகாசனத்தில் இருக்கையும்
சம்சாரிகள் ஆசனத்தின் கீழ் இருக்கையும்
அவர்களுடன் ஏக க்ருஹத்தில் வசிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்கையும்
அவர்கள் திரளிலே இருக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசனத்தின் கீழ் இருக்க மாட்டாமையும்
ஏக பவனத்தில் இருக்கப் பிற்காலிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்க லஜ்ஜிக்கையும்
அவர்கள் திரளில் இருக்க முசிக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இராது ஒழிகையும்
ஆச்சார்யன் எம்பெருமான் திரு வீதியிலே எழுந்து அருள தான் உள்ளே இருக்கையும்
ஆச்சார்யனையும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்டு சடக்கெனத் துடித்துக் கொண்டு எழுந்து இராது இருக்கையும்
சம்சாரிகளைக் கண்டு த்ருணவத் கரித்து இருக்காதே விநயம் பாவித்து எழுந்து இருக்கையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வரவு கேட்டு சம் ப்ரம ந்ருத்யம் அற்று ஆறி இருக்கையும்
தான் பகவத் சமாராதானம் பண்ணும் வேளையில் ஒரு பாகவதர் எழுந்து அருளினால் உதறிக் கொண்டு எழுந்து இருந்து அவரை சத்கரியாதே சமாராதன வேளையில் எழுந்து இருக்கலாகாது என்று இருக்கையும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை தீர்த்தம் கொள்ளா நிற்க மற்றொரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளினால் அடியேன் அடியேன் என்கை ஒழிய ஸ்ரீ பாதத்தை விட்டு எழுந்து இருக்கையும்
கொடுக்கிறவரும்  அடியேன் அடியேன் என்று வணங்கும் அத்தனை யன்றி ஸ்ரீ பாத தீர்த்தத்தைப் பறித்து எழுந்திருக்கையும்
ஜங்கம அஜங்கம ஸ்ரீ விமானச் சாயையை மிதித்து நிற்கையும் -ஜங்கம ஸ்ரீ விமானம் -பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் வாகனம்-அஜங்கமம் -எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம் –
தேவதாந்தர ஆலய கோபுர தத் பக்தச் சாயை தன் மேல் பட நிற்கையும்
தேவதாந்தர அபிமானம் ஒழிய மர நிழலில் ஒதுங்குகையும்
தத் சேஷமான ஸ்தலங்களில் தங்குகையும்
பாகவத பவனங்களை விட்டு அபாகவத க்ருஹங்களிலே தங்குகையும்
ஆச்சார்யன் நிற்கத் தான் இருக்கையும்
ஆச்சார்யன் நடக்கத் தான் இருக்கையும்
அவன் நின்று இருக்கச் சொல்லாச் செய்யாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியில் மதியாமல் கால் நீட்டி இருக்கையும்
திரு முற்றங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு எழுந்து இராமையும்
பகவத் பாகவத சந்நிதில் செம்பளித்துத் த்யானம் பண்ணுகையும்–என்கை –

38-ஆவஸ்யக விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் திரு மாளிகையில் எல்லைக்குள்ளே எச்சிலாக்குகையும்
எம்பெருமானும் முதலிகளும் எழுந்து அருளும் திரு வீதியில் எச்சிலாக்குக்கையும்
நித்ய ஸூரிகள் திருப் பூ மரங்களாய் வந்து அடிமை செய்கிற திரு நந்தவனத்தில் எச்சிலாக்குகையும்
ஆச்சார்யன் இருக்குமிடத்தை எச்சிலாக்குகையும்
எச்சிலுடன் ஆச்சார்யன் பின் செல்லுகையும்
எச்சிலுடன் எம்பெருமானை ஸ்பர்சிக்கையும் -பாகவதர்களை ஸ்பர்சிக்கையும் -ஒதுங்கி நடவாது ஒழிகையும் -திரு மாளிகை திரு நந்தவனங்களில் புகுகையும் என்கை-

39-சரீர சுத்தி விரோதி –
திருமஞ்சனத் துறைகளை தூஷிக்கையும்
ஆச்சார்யனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் விநியோஹ அர்ஹமான திருமஞ்சனத்தை சேஷமாக்கி தூஷிக்கையும்
அவர்கள் விநியோகித்து ஒழிந்தது கொண்டு சரீர சுத்தி பண்ணுகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு மிக்க சேஷத்தைக் கொண்டு பாத ப்ரஷாலனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் திருக்கை விளக்கும் இடத்தில் தானும் கை கால் கழுவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மேனியில் தெறிக்கக் கொப்பளிக்கையும்
பாகவத தர்சனமே சுத்தி கரம் என்று அறியாமையும்
இத்தை விட்டு சரீர சுத்தியை அபேஷிக்கையும்–என்கை-

40-ஸ்நான விரோதி –
ஸூத்தி வேண்டி குளிக்கையும்
பிரபன்னனனாய் இருந்து விசேஷ திவசங்களில் குளிக்கையும்
ஆன்ருசம்ஸ் யார்த்தமாகவும் -தர்சன பரிபாலனார்த்த மாகவும் -லௌகிக அனுசாரம் பண்ணி அமுது செய்யும் இடத்து -தத் அநுசார ஹேதுவான சரீர ஸ்திதியைக் கண்டு பயம் அனுவர்த்தியாது ஒழிகையும்
திருமஞ்சனத் துறைகளிலே குளிக்கையும்
சம்சாரிகள் குளிக்கும் துறையிலே குளிக்கையும்
சம்சாரிகளை குளிக்கும் துறையிலே குளிக்கையும்  ஸ்ரீ சம்சாரிகளை முன்னிட்டு  குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பின்னிட்டு தீர்த்தமாடுகையும்
மந்திர ஸ்மரணத்துடன் குளிக்கையும்
கங்கா தீர்த்த ககதனம் பண்ணிக் குளிக்கையும்
பகவத் பாகவத உத்சவங்களில் அந்ய ஸ்பர்ச சந்கையால் குளிக்கையும்
அர்ச்சாவதாரவத் பரம பாவனமான விமல சர்ம விக்ரஹ ஸ்பர்ச சங்கையால் குளிக்கையும்
அபாகவாத ஸ்பர்ச சங்கையால்  ஸ்நானம் பண்ணாமையும்
ஆச்சார்ய தீர்த்த திவசங்களில் சிஷ்டா சரிதமான தீர்த்தமாடாது இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தெறிக்கத் தலை உதறுகையும்
வேதகப் பொன்னான விலஷண ஸ்பர்ச பாவனத்வம் அறியாமல் குளிக்கையும்
எம்பெருமானைத் திருமஞ்சனம் பண்ணிக் குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராடப் பண்ணித் தீர்த்தமாடுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை வழி விட்டு  முழுகுகையும்
சரீர யாத்ரா மாத்தரம் என்று முழுகாமையும்-என்கை-

41-அனுஷ்டான விரோதி
ஆச்சார்ய கைங்கர்யமும்- பகவத் கைங்கர்யமும் -பாகவத கைங்கர்யமும்- அல்லாதவற்றை செய்கையும்
பகவத் கைங்கர்யம் நிருபாதிகம் ஆச்சார்ய கைங்கர்யம் ஔபாதிகம் என்று செய்கையும்(சாஸ்தா நாராயண தேவதா -திருவடி ஸ்தானம் -காருண்யாத் ஸாஸ்த்ர பாணி -உலவும் பெருமாள்)
ஆன்ருசம்ஸ் யார்த்தமாக செய்யுமவற்றை லோக சங்க்ராஹார்த்தமாக செய்கையும்
ஸ்வரூப அனுகுணம் அல்லாத ஆன்ருசம்ஸ் யார்த்தமான கர்த்தவ்யங்களில் கைங்கர்ய புத்தியும்
எம்பெருமான் எழுந்து அருளா நிற்க திரு ஒலக்கமாக எழுந்து அருளி இரா நிற்க -ஆன்ரு சம்ச்ய ப்ரவ்ருத்தி வேணும் என்று நினைக்கையும்
கோஷ்டியாக இருந்து பகவத் குண அனுசந்தானம் பண்ணி நிற்க காருண்ய பிரவ்ருத்திக்குக் காலம் என்று கோஷ்டியைக் குலைத்துக் கொண்டு எழுந்து இருக்கையும்
திரு நாமம் சாத்துகை -தீர்த்த பிரசாதம் கொள்ளுகை -திருவடி விளக்குகை -அருளிச் செயல்  அனுசந்திக்கை-திரு விளக்கு ஏற்றுகை- திருமாலை சாத்துகை -திரு நந்தவனம் செய்கை- ஸ்ரீ வைஷ்ணவர்களை சத்கரிக்கை –தத்வ ரஹஸ்ய திவ்ய பிரபந்தம் ஒதுவிக்கை -ஒதுகை-துடக்கமான ஸ்வரூப அனுஷ்டானங்களில் மோஷ சாதன புத்தியும்
பூர்வர்கள் செய்யாதன செய்கையும்
பலாபிசந்தி பூர்வகமாக பகவத் கைங்கர்யமும்
அவன் உகந்த அடிமை செய்யாதே தான் உகந்த அடிமை செய்கையும் -என்கை –

42-லஷண விரோதி –
தோளில் திரு இலச்சினை தோன்றாது இருக்கையும்
அசிஷ்ட பரிக்ருஹீதமான பூ முத்ரையை தரிக்கையும்
சிஷ்ட பரிக்ருஹீதமான தப்த முத்ரையைத் தரியாமையும்
சரீர ரோக நாசார்த்தமாக தப்த முத்ரையை தரிக்கையும்
சம்சார ரோக நாசகம் என்று தரியாமையும்
ஸ்வாமி சின்னம் என்று தரியாமையும்
சம்சாரிகள் கைவிடுவார்கள் என்று கூச்சத்துடன் தரிக்கையும்
சத்துக்கள் கைக் கொள்வார்கள் என்று ஹர்ஷத்துடன் தரியாமையும் –
சிஷ்ட பரிக்ரஹம் அற்ற அப்ரசஸ்த தேசங்களில் திரு மண் கொண்டு திரு நாமம் இடுகையும்
சிஷ்ட பரிக்ரஹம் உள்ள திருமலை தொடக்கமான பிரசஸ்த திவ்ய தேசங்களில் உண்டான திரு மண் இடாமையும்
தத்தத் திவ்ய தேச வைபவம் அடியான கௌரவ பிரதிபத்தி இன்றிக்கே திருநாமம் இடுகையும்
முமுஷூவாய் இருந்து ஸ்வேத வர்ணமான திருநாமம் இடாமையும்
தத் தத் காம்ய பிரதமான வர்ணாந்தரம் உள்ளது கொண்டு திரு நாமம் இடுகையும்
மத்யே சித்ரமான ஹரி பாத க்ருதி ஒழிந்த தீபாகாராதியான ஊர்த்வ புண்ட்ரத்தை தரிக்கையும்
திரு நாமம் சொட்டளவே இடுகையும்
நுணுக்கி இருக்கையும்
பூர்வர்கள் சாத்தும் அளவும் அறிந்து இடாமையும்
பன்னிரண்டும் தரியாமையும்
கேசவாதி அடைவே தரியாமையும்
அனைத்தின்  இடம் அறிந்து இடாமையும்
உகிர் கொண்டு ஒடுக்குகையும்
நடுத் திருச் சூர்ணம் இன்றித் திருநாமம் இடுகையும்
மந்த்ராந்தரத்தினால் அபி மந்தரித்து இடுகையும்
யந்த்ரம் கீறி இடுகையும்
அந்ய சேஷமான ஜலம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடுகையும்
பாகவத சேஷம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடாமையும்(வைஷ்ணவ வாமனத்தில் -வடுகா -என்ன -நம்பி வைஷ்ணவ நம்பியான வ்ருத்தாந்தம்)
ஆச்சார்யனுக்கு வைத்த திரு மஞ்சனத்தை கொண்டு கரைத்து இடுகையும்
சம்சாரிகள் முன் திரு நாமம் இடுகையும்
ப்ராக்ருதர் கையில் திருமண் வாங்கி தரிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் என்று தரிக்கையே பிரயோஜனம் என்று தரியாமையும்
கேவல சாஸ்திர விஹிதம் என்று தரிக்கையும்
விசிஷ்ட பரிக்ருஹீத லஷணம் என்று தரியாமையும்
அழித்து அழித்து இடுகையும்
ஆச்சார்ய சேஷமான  திருமண் திருச் சூரணங்களை கொண்டு தரியாமையும்
ஆச்சார்யனை த்யானித்து தச் சேஷமாக தரியாமையும்
ஆச்சார்யன் சாத்துமவத்தை தான் சேஷமாக்கித் திருநாமம் இடுகையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியிலே திரு நாமம் இன்றி முகம் காட்டுகையும் –
ஒற்றைத் திரு மணி வடம் -ஒற்றைத் திருத் துழாய் வடம் தரிக்கையும்
தாவடமாகத் தரிக்காமையும்
முறுக்கறை நாண் கட்டுகையும்
அறையில் பின்னல் அற்று இருக்கையும்
வஸ்த்ர யுக்ம கௌபீ நங்கள் ஓன்று குறைகையும்
கிருஷ்ண கம்பள ஆச்சாதனம் பண்ணுகையும்
கந்தை போக்கையும்
முதலிகளாய் இருந்து கீழ் போக்கி உடுக்கையும்
முற்றி இல்லாத சேலை யுடுக்கையும்
வேஷ்டி தாங்கிப் பின்னல் இல்லாமையும்
கழுத்துக் கீழ் வபனம் -ஷவரம்- பண்ணுகையும்
ப்ரபன்னனான பின்பு கூம்பன் கட்டுகையும்-மீசை திருத்துகையும்
உகிர் ஒடுக்கி வளர்க்கையும் –
செம்பஞ்சி இடுகையும்
கழுத்தை வளைத்து சந்தனம் பூசுகையும்
களப பிரசாதம் அல்லாத சந்தனம் பூசுகையும்
பூ முடிக்கையும்
விசேஷித்து நம் பெருமாள் உகந்த புழுகு பூசுகையும் செங்கழு நீர் முடிக்கையும்
தேக பரனாய் சாந்து சந்தனம் பூசுகையும்
திருத் தாம்பூலம் பிரசாதம் அல்லாத வெறும் தாம்பூல சர்வணம் பண்ணுகையும்
காதில் அநந்த முடியிடுகையும் -அனந்ததோரம் தரிக்கையும் -திருத் துழாய் சொருகையும்
வெள்ளிக் கிழமை தந்தாவனம் பண்ணுகையும்
வச்யாஞ்சன சூர்ணம் தரிக்கையும் -ரஷை கட்டுகையும்
வெள்ளி மோதிரம் இடுகையும்
ஆயுதம் பிடிக்கையும்
ஆடை பகுந்து போர்க்கையும்
புள்ளடியான தலைக் கட்டுகையும்
குமிடுகையும் -தலையில் வணக்கம் அற்று இருக்கையும்
கண்ணில் தண்ணளி யற்று இருக்கையும்
வாயில் அருளிச் செயலும் பிரபந்த பேச்சும் அற்று இருக்கையும்
அதிரப் பேசுகையும்
அவிடு பேசுகையும்
வெடிச் சிரிப்பு சிரிக்கையும்
கையில் அஞ்சலி அற்று இருக்கையும்
முஷ்டிக் கூடித் தழும்பு அற்று இருக்கையும்
மார்பு இருமாந்து இருக்கையும்
அடியில் மென்னடை யற்று இருக்கையும் -பதறி நடக்கையும்
எத்தாப்பு கூட்டுகையும்
பகவத் குண ஸ்ரவணத்தில் பாகவத தர்ஸ நாதிகளில் ஆனந்தாஸ்ரு அற்று இருக்கையும் சரீரம் புளகியாமையும் -போஷியாமையும்
பாகவத விஸ்லேஷத்தில் வாடாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் வடிவிலே நிழல் எடுத்துத் தோற்றாமையும்
ஸ்ரீ வைஷ்ணவப் புகரற்று இருக்கையும் -என்கை-

43-ஸ்மரண விரோதி
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அன்யே து புருஷ வ்யாக்ர சேதஸா யேப் யபாஸ்ரயா
அஸூத்தாச்தே சமஸ்தாஸ் து தேவாத்ய கர்ம யோநய -என்கிறபடியே
ஸூ பாஸ்ரய விக்ரஹத்தை ஒழிய தேவதாந்திர ரூப தச் சரீரங்களை நினைக்கையும்
சதாச்சார்ய விக்ரஹத்தை த்யாநியாமை
ப்ராக்ருத சமூஹத்தை ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத அபிமானம் உள்ள திவ்ய ஸ்தலங்களை ஸ்மரியாமையும்- இதர ஸ்தலங்களை ஸ்மரிக்கையும்
பரம பாகவதருடைய ஆலோக ஆலாப அங்கீகார விசேஷாதிகளை நிரந்தரம் நினையாமையும் -இதரருடைய ஆலோக ஆலாப அங்கீகார திகளை ஒருக்கால் ஆகிலும் ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத குண சம்ருத்தியை மனனம் பண்ணாமையும்
அர்ச்சாவதாரத்தில் ப்ராக்ருத உபாதான ஸ்ம்ருத்தியும்
விலஷண பாகவத ஜன்மாதிகளில் அபகர்ஷத்வ ஸ்ம்ருதியும்
சாஷாத் பகவத் அவதாரமான ஆச்சார்யன் பக்கல் மானுஷ ஸ்ம்ருத்தியும்
ஆச்சார்யன் பக்கல் உபகார ஸ்ம்ருதி இல்லாமையும்
ஆச்சார்ய துல்யர் பக்கல் சமத்வ ஸ்ம்ருதியும்
ஆழ்வார்கள் பாசுரங்களில் நிகர்ஷ பாஷா ஸ்ம்ருதியும்
ஆத்ம யாத்ரையில் விஸ்ம்ருதியும் தேக யாத்ரா ஸ்ம்ருதியும்
பகவத் போக அனுரூபம் அல்லாத ஸ்வரூப ஸ்பாவ ஸ்ம்ருதியும்
சித்த சாதனா நிஷ்டா விஸ்ம்ருதியும்
சாத்திய சாதனா சத்பாவ ஸ்ம்ருதியும்
தத் கைங்கர்யத்தில் பூர்ண சாத்திய ஸ்ம்ருதியும்
ததீய கைங்கர்யத்தில் தத் ஸ்மரண ராஹித்யமும்
பகவத் பாகவத விஷயங்களில் தான் செய்த அனுகூல பிரவ்ருத்திகளை ஸ்மரிக்கையும்
பிரதிகூல பிரவ்ருத்திகளை ஸ்மரித்து பீதன் ஆகாமையும்
விசேஷித்து ஆச்சார்யன் செய்த உபகாரங்களை நினையாது ஒழிகையும்
சாதனாந்தர நிஷ்டர்க்கு அவஸ்யம் அபேஷிதமான அந்திம ஸ்ம்ருதியும் -என்கை –

அந்திம ஸ்ம்ருதி ப்ரபன்னனுக்கு விரோதி அல்ல -இது இல்லாவிடில் பேறு இல்லை என்ற நினைவு தான் விரோதி

44-சங்கீர்த்தன விரோதி –
குண கீர்த்தனம் பண்ணா நிற்கச் செய்தே குணாந்தரங்கள் பிரஸ்துதமானால் இகழாது ஒழிகையும்
க்யாதி லாப பூஜாதி பிரயோஜனாந்தரங்களைச் சொல்லிக் கீர்த்திக்கையும்
வக்த்ரு தோஷம் உள்ளவற்றை கீர்த்திக்கையும்
பாஷாந்தரம் என்று வக்த்ரு தோஷம் அற்றவற்றைக் கீர்த்தியாது ஒழிகையும்
பகவத் சங்கீர்த்தனம் பண்ணும் நாவாலே இதர சங்கீர்த்தனம் பண்ணுகையும்
சர்வாதிகாரம் ஆனவற்றை அதிக்ருதாதிகார பிரதிபத்தி பண்ணி கீர்த்திக்கையும்
விசேஷ ஜ்ஞானான பின்பு ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உடைய பாசுரங்களை ஒழியக் கீர்த்திக்கையும்
அவற்றை சதாச்சார்யன் பக்கல் ஓதாமல் விழுவேடு எடுத்தும் சுவர்ப் புறம் கேட்டுக் கீர்த்திக்கையும்
பகவன் நாமங்களை கேவல பாவநத்வ பிரதிபத்தியால்   கீர்த்திக்கையும் அவற்றில் போக்யதா புத்தி பிறவாமல் கீர்த்திக்கையும்
பாகவத கீர்த்தனம் கலசாதே பகவத் கீர்த்தனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் சந்நிதியில் அவர் சொல்லாமல் கீர்த்திக்கையும் அவர் சொல் என்னச் சொல்லாமையும்
திரளில் தான் முந்தி முதல் எடுக்கையும்
மற்று ஒருவர் முதல் எடுத்தால் பின்னுரு சொல்லாது இருக்கையும்
பின்னடிக்குப் பிற்காலிக்கையும்
திரு அஷரங்கள் நழுவும்படி ஒட்டுகையும்
திரளில் தவறிற்று என்று திருத்துகையும் ஷேபோக்தி பண்ணிச் சிரிக்கையும்
முதல் முடிவு இரண்டுரு அனுஸ்தியாமையும்
சடகோபனுக்கு அஞ்சலி செய்யாமையும்
திவ்ய பிரபந்தங்களை ஓதிச் சாத்தாமையும்
திருஷ்ட பிரயோஜனத்தை நச்சி ஒதுவிக்கையும்
கூலிக்கு திருவத்யயனம் சாத்துகையும்
நீச ஸ்பர்சமுள்ள துறையிலே நித்ய கர்மாநுஷ்டானம் பண்ணுவாரைப் போலே க்ருஹ பூஜாதி தேவதாந்தர ஸ்பர்சமுள்ள ஸ்பர்சமுள்ள க்ரஹங்களிலே திருவத்யயனத்தை நடத்தி ஸ்வரூப ஹானிப் படுகையும்
தன் வியாதிக்கு சஹஸ்ர நாமம் -ஏழை எதலன்- ஆழி எழச் சங்கு எழ -ஜபிக்கையும்
குரு ஸ்துதி பூர்வக பகவத் ஸ்துதி பண்ணுகையும்-என்கை-

குரு பரம்பர அனுசந்தானம் இல்லாத த்வய அனுசந்தானமும் தேவதாந்திர பஜனத்தோடு ஒக்கும் -ஸ்ரீ முதலி யாண்டான் திரு வாக்கு –

45-ஸ்ரவண விரோதி
பகவத் கதை நடக்கும் இடத்து அவிடியை இகழாது ஒழிகையும்
அந்ய மனஸ்கனாய் செவி ஏற்றுக் கேளாமையும்(வேண்டுவன கேட்டியேல் -கேளாய்)
பகவத் குணம் கேளா நிற்கப் புறம்பில் வார்த்தை செவிப்படுகையும்
இதுக்கு முன்பு தான் கேட்டு அறியாத ப்ரமேயங்களை கேட்கும் போது ஒக்கும் ஒக்கும் என்று அணுபாஷிக்கையும்
பாண்டித்ய பிரகட நார்த்தமாக நடுவே துஸ் சோத்யம் பண்ணுகையும்
சொல் மினுக்குக் கேட்டு அசூயைப் பட்டு முகம் கன்றுகையும்
நல் வார்த்தை கேட்டு நன்று என்று நா எழாமையும்
புத்திமான்களாய் ஸ்ரவிக்கும் ஸ ப்ரஹ்ம சாரிகளோடு அசூயை கொண்டாடுகையும்
வயிர வுருக்கான பகவத் குணங்களைக் கேட்டு நெஞ்சு உருகாமையும்
பக்தியுடன் கேளாமையும்
ஸ்வ நேத்ர அங்க விக்ரியை இல்லாமையும்
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
சதாச்சார்யன் பக்கல் கேளாமையும்
கேட்ட சீரிய அர்த்தத்தை அநதிகாரிகளுக்குச் சொல்லுகையும்
அவைஷ்ணவர்கள் சொல்லும் பகவத் கதையைக் கேட்கையும்
அசம்ப்ரதாயார்த்தங்களைக் கேட்கையும்
பகவத் பாகவத ஆச்சார்ய வைபவம் கேட்கும் செவியாலே தந் நிந்தைகளைக் கேட்கையும்
சரமார்த்தம் கேட்டு நெஞ்சில் படாமையும்
பகவத் கதை நடக்கும் இடத்தில் தேவதாந்திர கதைகள் பிரஸ்துதங்கள் ஆகையும் -என்கை –

46-ஸேவா விரோதி -(வணக்கம் -கைங்கர்யம் -சேவா காலம் -பல அர்த்தங்கள்)
பகவத் ஷேத்ரங்களைக் குறித்து யாத்ரை பண்ணா நிற்க இதர ஷேத்ரங்களிலே புகுவதும் அன்றியே அங்கே சில விசேஷம் கண்டு ஆச்சர்யப் படுகையும்
அந்ய கோபுராதிகளை விசாரியாமல் அஞ்சலிக்கையும் அறிந்த பின்பு அனுதாபம் இன்றி நிற்கையும்
பகவத் கோபுராதிகளை தூரத்தில் கண்ட போதே உகளித்து அஞ்சலித்து தண்டம் இடாமையும் செருப்பு கழற்றாமையும் வாகனங்களில் நின்று இழியாமையும்
திருப்பதிக்குள் செருப்புடன் செல்லுகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளுள் தண்டன் இடாமல் உள்ளுப் புகுருகையும்
அத் திரு மாளிகைக்குள் புகாமல் பெருமாள் கோயிலில் நேரே செல்லுகையும்
கோயில் வாசலிலே தண்டன் இடாமல் புகுருகையும்
புடவையைப் போர்த்துப் புகுருகையும்
எம்பெருமானுக்கும் பலி பீடத்துக்கும் நடுவே சென்று புகுருகையும்
அப்ரதஷிணமாக வந்து புகுருகையும்
திரு வாசல் படிகளை மிதிக்கையும்
முற்படச் சுற்றுக் கோயிலிலே சேவியாது ஒழிகையும்
திவ்ய விமானச் சாயையை மிதிக்கையும்
திரு வாசல் காக்கும் முதலிகளை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
சேனை முதலியாரை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
ஆச்சார்யனை முன்னிலையாகப் புக்கு சேவியாமையும்
எம்பெருமான்  சந்நிதியில் ஒதுங்கப் புகாமையும் எதிரே கூசாமல் புகுருகையும்
வலப் பக்கத்தில் இடம் உண்டாய் இருக்க இடப் பக்கத்திலே நின்று சேவிக்கையும்
சம்சாரிகளுடன் கலந்து சேவிக்கையும்
பாதாதி கேசாந்தமாகக் கண்ணார சேவியாமையும்
திருப் பல்லாண்டு முதலிட்டு இரண்டு பாட்டு துடங்கிப் பூர்வர்கள் அனுசந்தித்தவற்றை அனுசந்தியாது ஒழிகையும்
பிராக்ருதர் சொல்லுமவற்றைச் சொல்லி சேவிக்கையும்
பிரயோஜனாந்தரங்களை பிரார்த்தித்து சேவிக்கையும்
அந்ய சித்தனாய் சேவிக்கையும்
புதுப் பானையில் புக்க ஈ போலே பொருத்தம் இன்றி சேவியாமல் புறப்படுகையும்
திருவாதாரனத்தில் மத்யே மீளுகையும்-அமுது செய்கிற வேளையில் பலி பிரதானத்துக்கு முன்னே மீளுகையும்
தூப தீபம் திருவந்திக் காப்பு கண்டு அருளும் போது-அமுது செய்து அருளுகிற போது -பராக்கடித்து இருக்கையும் ததுசிதமான பாட்டுக்களை அனுசந்தியாமையும்
கூத்திலும் பாட்டிலும் சக்தனாய்  பகவத்  விக்ரஹத்தில் கண் வையாது இருக்கையும்
அவிகிற திரு விளக்கைக் கண்டு சடக்கு என்று நந்தாது இருக்கையும்
செத்தையைக் கண்டு திருவலகிடாதே போகையும்
சாத்தின திருமாலை திருப் பரிவட்டம் திரு ஆபரணங்களில் கண் இடுகையும் -ஆக்ரானம் பண்ணுகையும்(மோந்து பார்க்கையும்)
அமுது செய்து அருளுவதற்கு முன்னே எம்பெருமான் திருப்பாவாடை கண்டு நா நீருகையும்
திரு முற்றத்துக்குள் கால் நீட்டுதல் -எத்தாப் புகட்டுதல் -புடவை போடுதல் -கொட்டாவி கொள்ளுதல் -சோம்பல் முறிதல் மயிரு தட்டுதல் உகில் முறித்தல் மூக்கு சிந்துதல் காரித்து உம்முதல் -தாம்பூல சர்வணம் பண்ணுதல்
மேல் புடவை போர்த்தல் உறங்குதல் அவிடு சொல்லுதல் கை தட்டச் சிரித்தல் கதறி அழைத்தல் வைதல் சீறுதல் ஒடுக்கம் அற்று கர்வித்து இருத்தல் முதலான
அபசாரங்களை பரிஹரித்து வர்த்தியாமையும்
அங்கே சம்சாரிகளை வினவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமதி பண்ணுகையும் கேவல பகவத் சேவையை பண்ணித் திரிகையும் பாகவத சேவையில் நழுவித் திரிகையும்
ஆச்சார்ய சேவைக்கு அசலாய்த் திரிகையும்
அவனது பாதச் சாயையாய்க் கொண்டு பின் சென்று சேவியாமையும்-என்கை-

47-சமாராதன விரோதி(ஸம்யக் ஆராதனம் -ஆச்சார்யர் நியமனப்படி -நித்ய கிரந்தம் -ஜீயர் படி -ததீயாராதனமும் சமாராதானமே)
வித்யாதி க்ரம பீதியாலே செய்கையும் -ப்ரீதி ப்ரேரிக்கச் செய்யாமையும்
சோம்பிச் செய்கையும்
ஆளிட்டுச் செய்கையும்
ப்ராப்த காலத்தில் செய்யாமையும் -தனக்குக் கை ஒழிந்த போது செய்கையும்
க்யாதிக்குச் செய்கையும்
கூலிக்குச் செய்கையும்
பலத்தைக் கோலி செய்கையும்
அவன் தந்த கரணங்களுக்கு அடைத்த தொழில் என்று செய்யாமையும்
ஸ்வரூப அநுரூப ப்ரவ்ருத்தி என்று செய்யாமையும்
அவன் நிரபேஷன் பூரணன் என்று செய்யாமையும்- நம் கை பார்த்து இருக்கும் சாபேஷன் என்று செய்கையும்
தன் வஸ்துவைத் தான் கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்யாமையும்- நம் வஸ்துவை கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்கையும்(என்னையும் என்னுடைமையும் சக்கரப் பொறி பொறி ஓற்றிக் கொண்டு -சேஷத்வ ஞானமே ஆத்மாவுக்கு சக்கரப் பொறி)
தன் ஸூத்தியை முன்னிட்டு செய்கையும் -கைக் கொண்டு அருளுகிறவனுடைய ஸூத்தியை முன்னிட்டுச் செய்யாமையும்(புரா நீசனாகவே இருந்தாலும் ஸமாச்ரயே ஆதி தேவம் -சாது கோட்டியுள் கொள்ளப்படுவான் -பகவத் ப்ரபாவாத் -என்ற நினைவு வேண்டுமே)
பாவ ஸூத்தியே அவனுக்கு வேண்டுவது என்று செய்யாமையும்(பக்தியோடு உபகாரம் -பக்திக்கே அருளுகிறவன் உபகாரத்துக்காக அல்லவே)
பதார்த்த வைஷம்யம் பார்த்துக் கைக் கொள்ளும் என்று செய்யாமையும்
துஷ்கர பிரதிபத்தியால் செய்கையும் -பகவத் சமாராதானம் அத்யந்தம் ஸூகரம் என்று செய்யாமையும்
அத்யந்தம் சௌலப்யம் கொண்டு ஔதா ஸீந்யத்துடன் செய்கையும்
அர்ச்சாவதாரமே பர வஸ்து மூச்சுண்டு என்று செய்யாமையும்(அவன் இவன் என்று கூழேல் மின் -அவனாகும் நீள் கடல் வண்ணனே -வைகுண்ட நாத அரங்கமாளி என்னாளி —நவ களே பரம் –பூரி ஜெகந்நாதப் பெருமாள் -நீலாத்ரி நிவாஸாய -திருமேனி மற்றும் பொழுது -அன்று சக்கர லாஞ்சனம் பண்ணிய மரம் கிடைக்கும் -அமாவாசை நாடு இரவில் ஊரடங்கும் -பொழுது -பாண்டாக்கள் உள்ளே சென்று புதிய திருமேனி -தொப்புளில் -எடுத்து வைக்க மூச்சு விடும் ஸப்தம் கேட்க்குமாம்)
தன் ஆச்சார்யனை முன்னிட்டு அவனுக்கு எடுத்துக் கை நீட்டுகிறோம் என்று செய்யாமையும் -அவர்களது மதி -அனுமதி-கொண்டு செய்யாமையும்-
சம்சாரிகள் கண் படச் செய்கையும்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருக்கத் திருத் திரை வளைத்துச் செய்கையும்-
சாமான்ய சாஸ்த்ரமான முற்றல் சடங்குகள் கொண்டு செய்கையும் -சிஷ்டாசார சித்தமான திருவாராதன விசேஷம் அறிந்து செய்யாமையும்-
மந்த்ராந்தரம் கொண்டு செய்கையும்- குரு பரம்பரா பூர்வகமான மந்திர அனுசந்தான பரனாய்ச் செய்யாமையும்-(மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாமல் செய்ய வேண்டுமே -அவனே மந்த்ரம்)
விசேஷித்து அதின் விவரணமான ஆழ்வார்கள் பாசுரங்களையும் -அதின் கருத்தான ஆச்சார்ய வசனங்களையும் அனுசந்தித்திக் கொண்டு செய்யாமையும்-
திவ்ய ஸ்நபன தீப தர்சன வ்யவஹார ஸ்வீகார விஷயங்களில் பூர்வர்கள் அனுசந்திக்கும் ஆழ்வார்கள் பாசுரங்களை அனுசந்தியாமையும்-
விசேஷஜ்ஞர் உச்சரிக்குமவற்றை உச்சரியாமையும்-
அந்ய சித்தனாய் செய்கையும்-
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் அவனிலும் அதிகர் என்று அறியாதே வேறிட்டு அர்ச்சிக்கையும்-(விண்ணுள்ளாரிலும் சீரியர் -நான் பெரியன் நீ பெரியை என்றும் யார் அறிவர் -நம்மாழ்வார் -உம் பெருமாளை நீர் -என் பெருமாளை நான் -சேர்த்து வைக்கத் தட்டில்லையே -வடுக நம்பி)
கூடத் திருவடி விளக்கக் கூசுகையும்-
தழிகை  தாழ வைத்து அமுது செய்யப் பண்ணுகையும்-
ஆச்சார்யர்களை அவனிலும் அதிகர் என்று அறியாமையும் -இருந்தபடியே அமுது செய்யப் பண்ணக் கூசுகையும்-
சம்சாரிகள் க்ருஹத்தில் எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் எம்பெருமானையும் கூட ஒன்றியே திருவடி விளக்குகையும்-
சிஷ்டர்கள் ஆதரியாத ததி பக்தாதிகளை ஆராதிக்கையும்-
அசாதாரணமான அர்ச்சாவதாரம் இருக்க- சாதாரணமான ஆதித்ய மண்டலாதிகளில் எம்பெருமானை அர்ச்சிக்கையும்-
அந்தர் யாகத்திலும் பஹிர் யாகமே அதிகம் என்று செய்யாமையும்-
ஆச்சார்யன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதாரத்திலே ஆவாஹாந உத்வாசனம் பண்ணி அநர்த்தப் படுகையும்-
தத் ஆராதனத்திலும் ததீய ஆராதனமே பரம் என்று பண்ணாமையும்-
தனக்கு விசேஷித்து வேண்டுவது சதாச்சார்ய சமாராதனம் என்று அத்யவசித்து பண்ணாமையும்-
ஆச்சார்யனிலும் ஆச்சார்யன் திருவடிகளே திருவாராதானம் என்று உணர்ந்து ஆநுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் திருவடிகளிலும் திருவடிகளுடன் சம்பந்தம் உடைய திருவடி நிலையே சரம அதிகாரிகளுக்குத் திரு வாராதன விஷயம் என்று பழுக்க சிஷித்து தெளிந்து அனுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் ப்ரீதி வர்த்தகமான பகவத் பாகவத சமாராதனத்தை உபேஷிக்கையும் -த்விவித அர்ச்சனம் பண்ணுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைப்பறிந்து சடக்கெனத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணாமையும்-
தர்சநாத் க்ருஹ்யதே மயா-என்கிற தர்சன க்ரஹணத்தை காட்டிலும் -முக்ய க்ரஹணத்தில் பூர்த்தி உண்டு என்று ஆசரியாமையும்-(கண்டு அருளப் பண்ணுதல் -அமுது செய்யப் பண்ணுதல் -வாசி அறிய வேண்டுமே -)
ஆச்சார்யனுக்கும் தத் சத்ருசர்க்கும் எம்பெருமானுக்குப் பண்ணும் உபசாரங்களில் குறையச் செய்கையும்-
பகவத் சமாராதானம் பண்ணா நிற்க சாமான்ய சாஸ்த்ரங்களைக் கொண்டு உபய அர்ச்சனை பண்ணுகையும்-
ஆலயச்யத்தாலே யூஜ்ரும்பணாதிகளை-கொட்டாவி விடுதல் போன்ற -சோம்பல் செயல்கள் -பண்ணுகையும் -என்கை-

48-வந்தன விரோதி
நல்ல தரை பார்த்து தண்டணிடுகையும்
முடுக்கத் தண்டன் இடுகையும்
அந்ய மனஸ்கனாய் தண்டன் இடுகையும்(கைகள் கால்கள் தலை மனஸ் புத்தி அஹங்காரம் -சாஷ்டாங்க பிராணாமம்)
த்வய அனுசந்தானத்துடன் தண்டன் இடாமையும்
விதி ப்ரேரிதனாய் தண்டன் இடுகையும் -ப்ரீதி ப்ரேரிதனாய் தண்டன் இடாமையும்
பகவத் விஷயத்தில் போலே பாகவத விஷயத்திலே தண்டன் இடக் கூசுகையும்
ஆச்சார்யன் திருவடிகளிலே தலை பொருந்த தண்டன் இடாமையும்
ஒருக்கால் இட்டோம் என்று ஆறி இருக்கையும்
ஆச்சார்யன் எழுந்து இருக்கச் சொல்லுவதற்கு முன்னே தான் எழுந்து இருக்கையும்
வெறும் தண்டன் இட்டு ஸ்ரீ பாதங்களை சிரஸா வஹியாது ஒழிகையும்
முற்பட  ஆச்சார்யனுக்கு தண்டன் இடாதே எம்பெருமானுக்கு தண்டன் இடுகையும்
பகவத் சந்நிதியில் பாகவதர்களை தண்டன் இடக் கூசுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடும் தண்டனை சஹித்து தண்டன் இடுகையும்
அவரிடும் தண்டனுக்கு தன்னை ஸ்வீ கர்த்தாவாக நினைத்து பிரதி தண்டன் இடுகையும்
அவர்களுக்கு உகப்பாகில் தன் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் அவரிடும் தண்டனைப் பெறாதே உதறிப் போகையும்(போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –ஆளவந்தார் என்று நினைத்து பெரிய நம்பி விழுந்து சேவிக்க பிரதி வந்தனம் செய்யாமல் –வளர்த்ததனால் பயம் பெற்றேன் -கைக் கிளியை வணங்கி -பரகால நாயகி –)
திருவாராதன சமனந்தரம் தீர்க்க தண்டன் இடாமையும்
இயல் சாற்றி  ஒருவருக்கு ஒருவர் தண்டன் இடாமல் போருகையும்
கோஷ்டியில் முதலிலும் முடிவிலும் தண்டன் இடாது ஒழிகையும்
தூரஸ்தனானால் ஆச்சார்யன் எழுந்து அருளி இருந்த திக்கு நோக்கி நாடோறும் தண்டன் இடாது ஒழிகையும்
புரோடசத்தை நாய்க்கு இடுவாரைப் போலே  ப்ராக்ருத பந்துக்களுக்கு தண்டன் இடுகையும்-
வர்ண நிபந்தன வந்த நீயரை வணங்குகையும்
திருப் பிண்டி (அமரும் ஆஸனம்)பேணாது இடுகையும்
தேவதாந்திர ஆலய சமீபங்களிலும் பாஷண்டி சமீபங்களிலும் தண்டன் இடுகையும்
திருப்பதியில் திரு வாசலில் தண்டன் இடாமல் புகுருகையும்
ஆச்சார்யனையும் ஆச்சார்ய துல்யரையும் திரளில் தண்டன் இடக் கூசுகையும்
அத்யாத்ம வித்யாப்ரதர் அல்லாத வித்யாந்தர பிரதரை தீர்க்க பிரணாமம் பண்ணுகையும்-மந்த்ர ரத்ன பிரதர் அல்லாத மந்த்ராந்த்ர பிரதரை தீர்க்க பிராணாமம் பண்ணுகையும்
ஆபத்து வந்தது என ப்ராக்ருதர் காலிலே விழுகையும்
பகவத் வந்தனத்தில் ஆலஸ்யப் படுகையும்
தத் ஸன்னதியிலே அபாகவத நமஸ்காரம் பண்ணுகையும் பகவத் நமஸ்காரம் பண்ணாது ஒழிகையும்–என்கை-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -373-384….

December 11, 2013

வார்த்தை -373-
முதலியாண்டான் திருவாய்மொழி ஓதுகிற போது –
உடையவர் எழுந்து அருளி இருந்து
ஒரு பாட்டு சந்தை இட்ட அளவிலே
இதினுடைய அர்த்த அநுசந்தானத்திலே பரவசரானார் –

——————————————————

வரத்தை -374-
ஆழ்வார்கள் மடலூர்ந்தும் நோன்பு நூற்றும் தூது விட்டும் ஸ்வாமிக்கு
அசஹ்யமாம்படி செய்கை ஸ்வரூப வ்ருத்தமன்றோ -என்று எம்பாரை முதலிகள் கேட்க –
எம்பாரும் –
இவர்கள் செய்வது என் -ஜ்ஞானம் தலை மண்டி யிடும்படி அவனுடைய
சௌந்தர்யம் இப்படி செய்யுமாகில் அது அவன் சௌந்தர்யத்தின் குற்றம் அன்றோ –

எங்கனே என்னில் –
சக்கரவர்த்தி வாய் திறப்பதற்கு முன்னே நீங்கள் எல்லாரும்
பெருமாளை திருவபிஷேகம் செய்ய வேண்டும் என்பான் என் –
என் பக்கலில் குறை உண்டோ என்ன –

நாங்கள் செய்வது என் -பஹவோ ந்ருப கல்யாண குண
புத்ரச்ய சந்தி தே -குணான் குணவதோ தேவ -தேவ கல்பச்ய தீமத -என்று
பிள்ளையைப் பெற்ற உன் குறை யன்றோ என்றார்கள் -என்று அருளி செய்தார் –

———————————————————————–

வார்த்தை -375-

சோமாசியாண்டான் -அகளங்க நாட்டாழ்வான் காலத்திலே
ஒரு இடையன் பால் களவு கண்டான் என்று கட்டி யடிக்க –
பிள்ளை அத்தைக் கேட்டு மோஹித்து விழுந்தாராம் –

————————————————————————

வார்த்தை -376-
முலைகள் இலையான  யுவதியைப் போலே காணும்
ஊமை அல்லாத வைஷ்ணவன் அருளிச் செயலில் அந்வயியாது ஒழிகை -என்று ஆச்சான் பிள்ளை –

————————————————————————

வார்த்தை -377-
எம்பெருமான் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தாப் போலே
வேதங்களும் திருவாய்மொழியாய் வந்து அவதரித்தன –

————————————————————————

வார்த்தை -378-
பெரிய நம்பியும் -திருக்கோட்டியூர் நம்பியும் -திருமாலை யாண்டானும் கூடி
ஸ்ரீ சந்திர புஷ்கரணிக் கரையிலே திருப்புன்னைக் கீழே எழுந்தருளி இருந்து
தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளி இருக்கும்படியையும்
அவர் அருளிச் செய்த நல் வார்த்தைகளையும் நினைத்து அனுபவித்துக் கொண்டு
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆநந்த மக்னராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –

திருவரங்க செல்வர் பலி பிரசாதிப்பதாக எழுந்தருளி புறப்பட –
இவர்களுடைய சமாதி பங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டன் இட வேண்டுகையாலே –

கூட்டம் கலக்கியார் வந்தார் –
இற்றைக்கு மேல்பட ஸ்ரீ பலி எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம் -என்று
பிரதிக்ஜை பண்ணிக் கொண்டார்கள் –

—————————————————————————-

வார்த்தை -379-
(வார்த்தை–466)

அந்தர்யாமி அறியாதே அர்ச்சாவதாரத்தில் ஈடுபாடன் ஆகையாவது
ஏகாந்தத்தில் பார்த்தாவைப் பருஷித்துப் பரிஹரிப்பதாய்
ஓலக்கத்தே கொண்டாடும் பதி வ்ரதையைப் போலேயும்
திருப்பள்ளியறை இருட்டிக் கிடக்க திரு வீதியிலே அணி விளக்கு ஏற்றுமா போலேயும்
திருப்பள்ளியறை புல் எழுந்து இருக்க திரு வீதி சோதித்து அலங்கரிக்குமா போலேயும்
இருப்பதொன்று –

————————————————————————-

வார்த்தை -380-

ஸாஸ்த்ர விருத்தங்களான துர் விஷயங்களிலே சக்தனாகையும்
ஸாஸ்த்ரங்களுக்கு அவிருத்தங்களான ஸதா சாராதிகளில் விரக்தனாகையும்
ஸாஸ்த்ர விஹிதமாய் ஸ்வரூப அனுகூலமான அர்ச்சாவதாரங்களிலே அசக்தனாகையும்
இம்மூன்றும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான அனுகூலமான நித்ய ப்ரவ்ருத்தங்களுக்கு விருத்தங்களாய் இருக்கும் –

————————————————————————-

வார்த்தை -381–

வைஷ்ணவனுக்கு வஸ்தவ்யம் ஞான அர்த்தமாக ஓர் ஆச்சார்யன் ஸந்நிதியிலே ஒதுங்கி வர்த்தித்தல்
அதுவும் மாட்டானாகில்
வி லக்ஷணமாய் இருப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் திரு மாளிகையிலே ஒதுங்கி வர்த்தித்தல்
அதுவும் மாட்டானாகில்
மௌனியாய்க் கொண்டு ஒரு திரு முற்றத்திலே ஆனவளவு கைங்கர்யம் பண்ணி ஒதுங்கி வர்த்தித்தல் –

———————————————————————-

வார்த்தை -382-

நம்பி திருவழுதி நாடு தாஸர்க்கும்
பிள்ளை திரு நறையூர் அரையருக்கும்
பட்டர் அருளிச் செய்த வார்த்தை
உகந்து அருளின நிலங்களில் பொய்யேயாகிலும் புக்குப் புறப்பட்டது திரிய அமையும்
அந்திம தசையில் கார்யகரமாம் –

———————————————————————-

வார்த்தை -383-

எம்பெருமானுக்கு இல்லாதது ஒன்றாய் –
அவனைப் பெறுகைக்கு பெரு விலையாய் இருக்குமது அஞ்சலியே -இறே –
கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலே
அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடியே
இம் முத்ரையாலே அநாத்யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் என்று –

——————————————————————

வார்த்தை -384-
அனந்தாழ்வான் போசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுப் பிரசாதம்
கட்டிக் கொண்டு போய் ஒரு இடத்திலே அவிழ்த்தவாறே அடைய எறும்பாய் இருந்தது –

இத்தைக் கண்டு அனந்தாழ்வான் பயப்பட்டு –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்று அருளிச் செய்தவரிலே சிலராய் வர்த்திப்பர்கள் –
இப்படியே கொண்டு போய்த் திருமலையிலே வைத்து வாரும்கோள் -என்று அருளிச் செய்தார் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய சரம தசையிலே ஸ்ரீ முதலிகளுக்கு அருளிச் செய்த வார்த்தைகள் –

March 14, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

—

ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியிலே நோவு சாத்தி எழுந்து அருளி இரா நிற்கச் செய்தே
அவர் திருக்குமாரர் திருவரங்க பெருமாள் அரையர் புருஷகாரமாக
திருக் கோஷ்டியூர் நம்பியும் பெரிய நம்பியும் ஆளவந்தார் திருவடிகளிலே
தண்டன் சமர்ப்பித்து அடியோங்களுக்கு தஞ்சமாய் இருப்பதொரு அர்த்தம் பிரசாதித்து அருள வேணும் -என்ன

ஆளவந்தாரும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி –
உங்களுக்கு தஞ்சமாய் இருப்பதொரு அர்த்தம் இது –

கோயில் ஆழ்வாரே -(திருவாராதன பெருமாள் )-உங்களுக்கு உயிர் நிலை –
உங்களுக்கு தஞ்சம் என்று புத்தி பண்ணிப் போரும் கோள் -என்றும் –

பெரிய பெருமாள் திருவடிக் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கிற
திருப்பாண் ஆழ்வார் விக்ரஹத்தை பாதாதி கேசாந்தமாக சேவித்துக் கொண்டு போரும் கோள் என்றும் திரு உள்ளமாக(ஆளவந்தார் போல்வாருக்காக காட்டக் கண்டு அருளிச் செய்கிறார் –அவர் அரங்கனின் பாதாதி கேசாந்தமாகவே அனுபவித்துக் கொண்டு இருப்பது போல் நாமும் திருப் பாணாழ்வாரின் பாதாதி கேசாந்தமாக அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்)
திருவரங்க பெருமாள் அரையரையும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி –

இதுக்கு பிரமாணமாக திருமலை யாழ்வார் உயிர் நிலை அறிந்து போரும் குறும்பு அறுத்த நம்பியையும்
பேரருளாளப் பெருமாள் உயிர் நிலை அறிந்து போரும் திருக் கச்சி நம்பியையும்
பெருமாள் உயிர் நிலை அறிந்து போரும் திருப் பாண் ஆழ்வாரையும்
திருப் பாண் ஆழ்வார் உயிர் நிலை அறிந்து போரும் திருவரங்கப் பெருமாள் அரையரையும் காட்டி அருளி

(புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான
அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் ,மகா முனியும் அனுவர்தித்த க்ரமும்-சூரணை -85-அதாவது சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –

ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரைப் பார்த்து
நீர் பெருமாள் உயிர் நிலை அறிந்து சேவிக்கிற விக்ரஹமே (திருப்பாணாழ்வாரது திவ்ய மங்கள விக்ரஹமே)அடியேனுக்கு உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருவன் -என்று அருளிச் செய்ய –

திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே தண்டன் சமர்பித்து
தேவரீர் நித்ய விபூதியிலே பரம பத நாதனை சேவித்து -இமையாத கண்ணராய்க் கொண்டு -முதல் திருவந்தாதி -32
போரத் திரு உள்ளம் பற்றி அருளிற்றோ -என்று விண்ணப்பம் செய்ய –

(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்-32–இமையாதகண் என்றது-ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார்)

ஆளவந்தாரும் இவரைக் குறித்து -நீர் பர ஸம்ருத்திக்கு உகந்து அத்யவசித்து இரும் -என்ன –

இவரும் திரு உள்ளம் பற்றி இருக்கிற அளவிலே
ஆளவந்தாரும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி –
ஒருவன் பிரபன்னன் ஆனால் -பகவத் அதீனமான ஆத்ம யாத்ரையிலும் –
கர்ம அதீனமான தேக யாத்ரையிலும் அந்வயம் உண்டு என்று இருந்தான் ஆகில் –
ஆத்ம சமர்ப்பணமும் குலைந்து நாஸ்திகனாய் விடும் -ஆகையால் உபய யாத்ரையிலும்
அந்வயம் இல்லை –

நாராயணனுக்கு நைரந்தர்ய (நிரந்தர )வேஷம் -தம் பக்கல் பேற்றுக்கு
நம என்னாதவர்களையும் –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -திருவாய்மொழி -3-9-9-என்பதொரு ஔதார்ய விசேஷம் உண்டு

நாரங்களுக்கு நைரந்தர்ய (நிரந்தர )வேஷம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
தம் பேற்றுக்கு த்வரிகையும் ஸ்வரூப ஹாநி -எம்பெருமான் ரஷ்யன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹாநி –(மங்களாசாசனத்தில் மட்டுமே மாறாடி இருக்கும்)
அப்படி இருந்தான் ஆகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கும் -ஸ்வ ஸ்வாமி
சம்பந்தத்துக்கும் சேராது -என்று அருளிச் செய்ய

இவர்கள் மீளவும் ஸ்ரீ பாதத்திலே தண்டன் சமர்ப்பித்து -அடியோங்களுக்கு பற்றும் உபாயம் ஏது -என்று கேட்க
ஆளவந்தாரும்
நீங்கள் என்னை புத்தி பண்ணிப் போரும் கோள் என்கை அடியேனுக்கு ஸ்வரூப ஹாநி
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -பெரிய திருமொழி -7-4-2- என்ற இதுவே
உங்களுக்கு உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போரும் கோள் என்று அருளிச் செய்ய-

(அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2–நித்ய வசந்தமாய்-ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற
கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –நிதித்யாசி தவ்ய-என்கிற-ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண -என்கிற விஷயத்துக்கு
இடம் காண்கிறிலேன்  )

முதலிகளும் திரு உள்ளத்திலே முசித்து (வருந்தி)இருக்கிற அளவிலே
ஆளவந்தாரும் இவர்களைக் கண்டு -நீங்கள் முசிக்க வேண்டா
உங்களுக்கு திருமந்த்ரார்தம் போக மண்டபம் –
சரம ஸ்லோகார்த்தம் புஷ்ப மண்டபம் –
த்வயார்த்தம் த்யாக மண்டபம்
இதுக்கு பிரமாதாக்கள் திருக் கச்சி நம்பி முதலானார் என்று அருளிச் செய்தார் –

(மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்-16)

இத்தை திருவரங்க பெருமாள் அரையர் திரு உள்ளம் பற்றி –
தேவரீர் அவதாரம் தீர்த்தம் பிரசாதித்து போம் அளவில் க்ரிமி கீடாதிகளுக்கு(தங்களையே சொல்லிக் கொண்டார்கள்) ஓர் அழிவு வந்தால் சேதம் இல்லை -என்று அருளிச் செய்ய

இவ் வார்த்தையை முதலிகள் திரு உள்ளம் பற்றி -ஆளவந்தார் வியோகத்திலே நாம்
ஆத்ம த்யாகம் பண்ணக் கடவோம் -என்று நிச்சயித்து இருக்கிற அளவிலே –
பெரிய பெருமாள் திரு ஒலக்கத்திலே இவ் விசேஷம் பிறக்க -பெரிய பெருமாள் திரு உள்ளம் பற்றி
திருவரங்கப் பெருமாள் அரையர் -திருக் கோட்டியூர் நம்பி பெரிய நம்பி முதலான அருள் பாடிட்டு
ஆளவந்தார் திரு மேனிக்கு ஒரு வாட்டம் உண்டாயிற்றாகில் நீங்கள் வியோகம் பண்ணில் நம் ஆணை -என்று ஆஜ்ஞ்ஞாபித்து
திருவரங்க பெருமாள் அரையர் திருக் கையிலே இவர்களைக் காட்டிக் கொடுத்து அருள
இவரும் அவர்களைக் கை பற்றி ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே சென்று இவ் விசேஷத்தை
விண்ணப்பம் செய்ய –

அவரும் இத்தைக் கேட்டு -நம் பேற்றுக்கு சஹியாதவர்கள் -பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கும் நடுவே திருவாராதனம் கொண்டு அருள சஹியாதவர்கள் -என்று அருளிச் செய்து –
என்னுடைய வியோகத்தில் அவிவேகம் பண்ணினி கோள் ஆகில்
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி முதலாக பெரிய பெருமாள் நாதமுனிகள் சடகோபன்
திரு உள்ளத்தை மறுத்தவர்கள் ஆவுதி கோள் -என்று தம்முடைய திவ்ய ஆஞ்ஞை இட்டு

இவர்களும் திரு உள்ளம் நேர் நொந்து இருக்கிற அளவிலே ஆளவந்தாரும்
பகவத் பாகவத விஷயங்களிலே தரமிடாதே பகவத் விஷயத்திலே(மட்டுமே) நோக்கானவன்
குரு பரம்பரை முதலாக திருவாராதனம் பண்ணுமா போலே -பாகவத விஷயத்திலே
தன்  சத்தை மாண்டு ஆசார்ய விக்ரஹத்தை அனுசந்தித்து தீர்த்தம் கொண்டு போருகையும்

அவர்களும் தீர்த்தம் கொடுக்கும் அளவிலே அர்த்த காம பரவசர் அன்றிக்கே
தன்  ஆசார்யனை நோக்கி குரு பரம்பரை பூர்வகமாக த்வயத்தை அனுசந்தித்துக் கொண்டு கொடுக்கையும் இருவருக்கும் -உபாதேயம்
ஜ்ஞநாதிக விஷயமுமாய் சமூஹமுமாய் சென்ற அளவிலே இருவரும்
அர்த்த காம பரவசராய் -பிராக்ருத சரீரத்திலே நோக்காய்- சமூஹத்திலே சென்ற முதலிகளை இகழ்ந்து திரு உள்ளம் கன்றுமாகில் ஆசார்யனே யாகிலும் இவர்களுக்கு தீர்த்தம் உபாதேயம் அன்று என்று அருளிச் செய்தார் -(பாகவத அபசாரம் க்ரூரம் என்பதை அருளிச் செய்கிறார்)

இவர்களும் திரு உள்ளம் பற்றி இருக்கிற அளவிலே ஆளவந்தாரும் முதலிகளைப் பார்த்து
உங்களுக்கு சரம அர்த்தம் பெரிய பெருமாள் திருக் குழல் கற்றையிலே ஒரு கருமுகை வெடிக்கையும்(பூ சாத்துகை)
ஆசார்ய விஷயத்தில் பிரதம தசை மத்யம தசையிலும் நின்று சரம தசையை அனுசந்தித்து
சந்தித்துப் போருகையும்  உத்தாரக பிரதிபத்தி -என்று அருளிச் செய்து –

திருவரங்க பெருமாள் ஸ்ரீ பாதத்திலே தெண்டன் சமர்ப்பித்து -திருக்கோட்டியூர்
நம்பியையும் பெரிய நம்பியையும் திருமலை நம்பியையும் அவர் திருக்கையிலே
காட்டிக் கொடுத்தருள –

அவரும் கை பற்றி -நீங்கள் அவிவேகம் பண்ணினி  கோள் ஆகில்
உங்களுக்கு தேச விசேஷம் இன்றிக்கே நித்ய ஸூரி திரளிலும் புகரப் பெராதே இழப்புதி கோள்-என்று அருளிச் செய்ய –

ஆளவந்தாரும் இச் செய்தியைக் கேட்டு –
திரு உள்ளம் உகந்து -உங்களுக்கு திருவரங்க பெருமாள் அரையருடைய விக்ரஹமே
உபாய உபேயம் -என்று புத்தி பண்ணி யிரும் கோள் -என்று அருளிச் செய்ய –

இவர்களும் அப்படியே புத்தி பண்ணின பின்பு திருமேனியிலே நோவு வாடி
திரு மாளிகையிலே திருவரங்க பெருமாள் முதலான முதலிகள் உடன் நீராடி
திரள இருக்க –

பெரிய பெருமாளுக்கு அமுதுபடி சாத்துப்படி குறைவறுத்து
அங்குள்ள சேனை மறையோர் புண்டரீகர் முதலான அனைத்துக் கொத்தையும் –
திரள் விலக்கி -சுற்றுக் கோயில்களுக்கும் அமுதுபடி சாத்துப்படி குறைவறுத்து
பெரிய பெருமாளை பெரிய திருமஞ்சனம் பண்ணி சாத்துப்படி சாத்தி
அங்குள்ள முதலிகள் அனைத்துக் கொத்தும்  வந்து சேவிக்க –

பெரிய பெருமாளும்
அமுது செய்து அருளி நினைவற திரு வோலக்கத்து ஏற எழுந்து அருளி
திருவரங்க பெருமாள் அரையருக்கு அருள்பாடிட-அவரும் சேவிக்கிற இடம் ஒழிய
சூழ் விசும்பு அணி முகில் சேவிக்க -திரு வோலக்கம் அடைய இது என் என்று
விஸ்மயப்பட –

பெரிய பெருமாள் திரு நெற்றி மாலை நழுவி விழ
நம்பியார் -(அர்ச்சகர்) -எடுத்து பிரசாதிக்கிறோம் என்று இருக்கிற அளவில்
திருவரங்க பெருமாள் சடக்கென எடுத்து ஆளவந்தாருக்கு பிரசாதித்து அருள

அவரும் திரு உள்ளமுகந்து நிற்க -திருவடிக்கீழ் நின்றவரும் -உம்முடைய நினைவு
சித்தித்ததே -என்ன பெரிய பெருமாள் விடை கொடுத்தருள -திரு மாளிகையிலே சென்று
திருவரங்கப் பெருமாள் அரையர் திருக்கோட்டியூர் நம்பி முதலான முதலிகளைத்
தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி தெண்டன் சமர்ப்பித்து
சர்வ அபசாரங்களையும் பொறுத்தருள வேண்டும் -என்று ஷாபணம் பண்ணிக் கொண்டு
எழுந்து அருளா நிற்க –

திருவரங்கப் பெருமாள் அரையரும் -உமக்கு உண்டோ அவசாரம் –
என்று எடுக்க -எழுந்திருந்து பின்பு அமுது செய்து இவர்களுக்கு நல் வார்த்தை அருளிச் செய்ய –
இவர்களும் பெருமாள் திரு உள்ளம் ஏதோ -என்று தங்கள் அளவில் சிந்தித்து இருக்கிற
அளவிலே –

பேரருளாளப் பெருமாள் உடைய -அயன் கண்ட வைகாசி திரு நாளிலே
அவப்ருத திவசத்தின் அன்று ஆளவந்தாரும் நீராடி -பெரிய பெருமாளை திருவடி தொழச்
சென்று -உத்தம சந்தியும் (பெரிய அவசர தளிகை)அமுது செய்து -திருத் திரை நீக்கின அளவிலே தண்டன் சமர்ப்பித்து –
பாதாதி கேசமாகவும் -கேசாதி பாதமாகவும் -பெரிய பெருமாளை சேவித்து-
திருவடிக் கீழ் திருப் பாண் ஆழ்வாரையும் அநுபவித்து(சேவித்து மட்டுமே இல்லை அனுபவித்து -ஞானக் கண்ணால் அனுபவம் -அவனால் காட்டவே கண்டு அனுபவித்து)
அசங்கிதமாக-(எதிர்பாராமல்) -சடகோபன் சாதிக்கப் பெற்று திருப்பதியார் திருத்தளிகை பிரசாதம் பிரசாதித்து விடை கொடுத்தருள

முதலிகளும் திரு மாளிகையிலே சென்று
மீளவும் முதலிகளை தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி முஹூர்த்தம் இட்டு
வைகாசி மாசம் ஆறாம் தேதியிலே ஸ்ரவண நஷத்ரத்திலே அபிஜின் முஹூர்த்தத்திலே
முதலிகள் சேஷத்தை அங்கீகரித்து

ஆழ்வார்களை சரணம் புக்கு -ஆசார்யர்கள் முதலிகள் -ஸ்தாநத்தார் -முதலானவர்களை
அழைப்பித்து ஷமை பண்ணிக் கொண்டருள –

அவர்கள் -பெரிய பெருமாளுக்கு ஒரு அபசாரம் உண்டாகில் அன்றோ உமக்கு அபசாரம் உண்டாவது -என்ன
திருவரங்க பெருமாள் அரையர் முதலானவர்களை அங்குள்ள முதலிகள் கையிலே
கட்டிக் கொடுத்தருளி –

ஸ்தாநத்தாரைப் பார்த்து -பெரிய பெருமாள் திருவாராதனம்
திரு மந்திர புஷ்பம் கால காலத்திலே நடத்திக் கொண்டு போரும் கோள் -ஆச்சார்யர்கள்
முதலிகள் தேசாந்த்ரிகள் முதலானவரை அரவணைத்துக் கொண்டு போரும் கோள் –
என்று காட்டிக் கொடுத்தருள –

அவர்களும் அப்படியே ஆகிறது என்று அங்கீகரித்து
இது புதுமையாய் இருந்தது இது ஏதோ -என்று விடை கொண்டு போக –

———-

ஆளவந்தார் திருநாடு அலங்கரித்ததும் -அவருடைய விமல சரம விக்ரஹத்தை
திருப்பள்ளி படுத்த க்ரமமும்
பின்பு பத்மாசனத்திலே யோகமாக எழுந்து அருளி -மணக்கால் நம்பியைத்
த்யானித்து அவர் திருவடிகளை தம்முடைய நெஞ்சிலும் கண்ணிலும் திரு முடியிலும்
வைத்துக் கொண்டு -அவர் திருவடி நிலைகளை தம்முடைய முன்னே எழுந்தருளப்
பண்ணி வைத்துக் கொண்டு -ப்ரஹ்ம வல்லி -ப்ருகு வல்லி -புருஷ ஸூக்தம் –
அர்ச்சிராதி -சூழ் விசும்பு அணி முகில் முதலாக முதலிகள் சேவிக்க

திருச் சங்கு பரிமாற -சகல வாத்தியங்களும் முழங்க -ப்ரஹ்ம ரந்த்ரத்தாலே
ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருள -திருவரங்க பெருமாள் அரையர் முதலாக
எல்லாரும் வேரற்ற மரம் போலே கோஷித்து கொண்டு விழுந்து சோகிக்க

அங்குள்ளார் இவர்களை ஆற்றி -நம்பியைப் பார்த்து -முன் நடக்கும் க்ரமத்தை
செய்தருள -என்ன –

தாசிகள் திருவாசலிலே -திருவலகிட்டு -திரு நீர் விட்டு –(ஸ்தல ஸுத்தி பண்ணி) -திருப்பிண்டி இட்டு – (கோலமிட்டு )-திருக் காவணம் இட்டு -(பந்தல் இட்டு -)
கோடித்து -தர்ப்ப மாலை கட்டி செங்கழு நீர் மாலை கட்டி -பல பட்டுக்களாலே
திருமேல் கட்டுக் கட்டி திருக் காவணத்தின் நாலு வாசலிலும் கதளித் தாறுகள் உடன்
கமுகின் கன்றும் நட்டு -பல பலங்கள் நாற்றி -(பழங்கள் பல தொங்கவிட்டு )–
நாலு வாசலிலும் கொடியாடை கட்டி சித்ரபத்ரங்கள் வைத்து –

தெற்கு மேற்கு கிழக்கு வடக்கு வாசல் களிலே -பலாச அஸ்வத தகாதி ரௌதும்பர தோரணம் நாட்டி -த்ரோண வ்ரீஹி யைச் (நெல்லை)சொரிந்து பரப்பி நடுவே பூர்ண கும்பம் வைத்து -த்வாதஸ கலசங்களை நிறைத்து -கேசவாதியாக வைத்து -பூர்ண கும்பத்துக்கு குஸ தரப்பை தூர்வை விஷ்ணு க்ராந்தி புஷ்பாதிகளை இட்டு குரு பரம்பரா பூர்வகமாக த்வ்ய
அனுசந்தானத்துடன் கும்ப கலச அர்சனம் பண்ணி -த்வாதச நாமத்தாலே அந்த கலச ஸ்நானம் பண்ணி வைத்து பின்பு பஞ்சாம்ருதம் ஸ்நானம் பண்ணி வைத்து பின்பு

ஈசான்யமான சங்கர்ஷன கும்பம் ஒழிந்த நாலு கும்பங்களைக் கொண்டு
ஸ்ரீ புருஷ ஸூக்தத்தாலே திரு மஞ்சனம் பண்ணி வைத்து -முதலிகளை தீர்த்தம் கொண்டு
சுருளமுது பரிமாறி வேண்டிக் கொண்டு அவர்களை வலம் வந்து வாசல் முன்னில்
ஹேமக்ருத ஸ்தண்டிலத்தின் மேலே த்ரோண வ்ரீஹி (நெல்லை)பரப்பி -உலூகல முசலங்களை – (உரலையும் உலக்கையும்) -மந்திர ஸ்நானம் பண்ணி-வஸ்தர வேஷ்டனம் பண்ணி -அந்த உலூகலத்தை ஸ்தண்டிலோ பரிக்ருத வ்ரீஹியின் மேலே வைத்து -அதிலே ஹரித்ரா நிஷேபம் பண்ணி -(மஞ்சள் வைத்து) -சுத்த மலா அலங்க்ருதைகளாய் சக்ர முத்ரா முத்ரிதைகளாய் வைஷ்ணவிகளான விஷ்ணு தாசிகள் த்ரிவிக்ரமன் திரு வீதியை (உத்தர வீதியை )வலம் வந்து -திரு வாசலிலே ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துக்கு தண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுஞ்ஞையைக் கொண்டு நடுவே வந்து நவ வஸ்த்ர வேஷ்டித மேரு தைவத்யமான அந்த முசலத்தைக் (உலக்கையை)கொண்டு- த்வாதச நாம உச்சாரணம் பண்ணி திருச் சூர்ணம் இடிக்க

திருவரங்கப் பெருமாள் அரையர் நம்பி முதலான முதலிகள்
ஸ்தண்டில மத்யஸ்தமாய் நவ கண்டையான ப்ருதி வ்யாகாரமாக உல்லேகனம்
பண்ணின (சித்திரமாக வரைந்து)அந்த வ்ரீஹி யுபரி ஸ்தாபிதமாய் பூமி தைவத்யமான -உலூகலத்(உரலை) உல்லேகனத்தின் அஷ்ட திக்குகளிலும் -திவ்ய சூர்ண -திவ்ய தைலதி வ்யாநுலேபன –
திவ்ய மால்ய -திவ்ய லாஜ -திவ்ய -துக்த திவ்ய ததி -திவ்யஜல -பூர்ணங்களாய்
சுத்த தந்து வேஷ்டிதங்களாய் -தர்ப்ப பவித்ர அஸ்வத்த பத்ர பவித்ரிதங்களான
அஷ்ட கலசங்களை த்வய அனுசந்தானதுடனே ஸ்தாபித்து -பரமாகாசத் தைவத்யமான
நவ ஸூர்ப்பத்திலே(முறத்திலே) திவ்ய நஷத்ர தைவத்யமான நிஸ் துஷ நவ லாஜத்தை (உமி இல்லாத நெல்லை) நிறைத்து

பூர்வ (கிழக்கு)திக்கிலே வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு அந்த ஸ்ரீ பாதம் நிறைந்த கும்பத்தை மேற்கே வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பணீயமான
த்ர்வ்யத்தின் கிழியை வடவருகே வைத்து -பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டருளின
திருமலை பரியவட்ட பிரசாதங்களை பொற்றளிகை உடன் தென்னருகே வைத்து –

ஆளவந்தாரை தெண்டன் சமர்ப்பித்து விமல சரம விக்ரஹத்தை கண்ணிலும் நெஞ்சிலும்
தேக்கிக் கொண்டு சூழ எழுந்தருளி இருந்து-கண்ணி நுண் சிறுத் தாம்பும் திருப் பல்லாண்டும் சூழ் விசும்பணி முகிலும் திருவரங்கப் பெருமாள் இசையுடன் பாட பின்பு இயலாகவும் அனுசந்தித்து திவ்ய கீத ந்ருத்ய வாத்யத்துடன் திரு வீதியிலே இயலாக திரு விருத்தம் அனுசந்திதுக் கொண்டு வலம் வந்து -திரு மளிகை வாசலிலே இயல் சாத்தி

திவ்ய தைல -திவ்ய சூர்ண -திவ்ய மால்யாதிகளையும் பெருமாள் திருமஞ்சனம்
பண்ணி சாத்திக் களைந்து வரவிட்ட பட்டுப் பரியவட்டத்தையும் ஆளவந்தாருக்கு
சாத்தி அலங்கரித்து -ஆளவந்தார் திருமேனியிலே சாத்தி -தத் பிரசாதமாய் சேஷித்த
எண்ணெய் ஸ்ரீ சூர்ண பிரசாதங்கள் எல்லாம் திருவரங்கப் பெருமாள் அரையர் நம்பி முதலானோர் பிரசாதப்பட்டு அப்போது இருப்பை அகவாயில் ஸூபாஸ்ரயமாய் தேக்கிக் கொண்டு

ஸ்ரீ பாதத்திலே விழுந்து திருவடிகளை திருக் கண்ணிலும் திரு மார்புகளிலும்
திரு முடிகளிலும் தரித்துக் கொண்டு -அவர் ப்ரபத்தியை (ஸ்ரீ மன் யமுனா சரண சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே யாமுனாய நம)அனுசந்தித்து – திரு மிடறு தழு தழுப்ப திரு மேனிகள் வாட -திரு முத்து (கண்ணீர்)வீழ -திரு மூச்சு வெப்படிக்க ஆசார்ய விஸ்லேஷ அசஹிஷ்ணுக்களாய் -ஆர்த்தராய் -பரவசராக மற்றும் –

இங்குள்ள முதலிகள் வந்து இவர்கள் திருக் கண்களைத் துடைத்து ஆஸ்வசிப்பித்து
தேற்ற -வன்மையிலே மெள்ளப் பாடேறித் தேறி நின்று -பீட யானத்திலே ஆளவந்தாரை
ஏறி அருளப் பண்ணி -(பிரபத்தி)அனுசந்தானத்துடன் ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு திருச் சங்கு பரிமாற

திவ்ய வாத்தியங்கள் எங்கும் முழங்க வேத பாராயணம் பண்ணி இயல் அருளிச் செய்ய
நடைபாவாடை இட கரும்பும் குடமும் ஏந்த -பொரியும் புஷ்பமும் எங்கும் சிதறி
திருப்பதியில் சுமங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன் செல்ல -இரு பக்கமும் சாமரம்
இரட்டிக்க -வெள்ளை வட்டமிட -தர்சனத்தில் ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று ஒற்றை திருச் சின்னம் பரிமாற -திரு வீதிகள் தோறும் வலம் வந்து

திரு கரம்பன் துறைக்கு எழுந்தருளிவித்துக் கொண்டு போய் -ஒழிந்த சங்கர்ஷன கும்ப பூர்ண ஜலம் கொண்டு (பிரபத்தி)அனுசந்தானத்துடன் திவ்ய ஸ்தல சுத்தி பண்ணி -யதி சம்ஸ்கார வித்யுக்தமான படிகள் அடங்கச் செய்து கனித்து (பள்ளம் வெட்டி)பள்ளிப் படுத்துகிற அளவிலே

இளையாழ்வார் ஆளவந்தாரை சேவிக்க வேணும் என்னும் பேராசையோடே பெருமாள் கோயில் நின்றும் வந்து ஆளவந்தாரை திருமேனி உடன் சேவிக்கப் பெற்றிலேன் என்று அந்த சரம விக்ரஹத்தை சேவித்து

இவ்வளவாகிலும் பெற்றேனே -என்று அந்த விக்ரஹத்தை த்யான விஷயம் ஆக்கிக் கொண்டு ஆளவந்தாருக்கு நான் ஏகலைவன் என்று (ஆளவந்தார் கடாஷித்த ஏற்றம் உண்டே பரகத ஸ்வீ கார்யம்)யத்பதாம் போருஹத்யான – வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்து தாம் உபயா தோ ஸ ஹம யமுநேயம் நமாமி தம்-(கீதா பாஷ்ய த்யான ஸ்லோஹம்) -என்று ஆளவந்தார் உடைய கமல தயான தத் பரராய்க் கொண்டு பெருமாள் கோயிலுக்கு மீண்டு
எழுந்து அருளினார் என்று அருளிச் செய்வர்கள்

சரம உபதேச –
சரம நியமன –
சரம ததீய அனுவர்தன விசேஷ-
சரம கால ப்ரபோத (தெளிவு)-
சரம கால வ்யாவ்ருத்த –
ஸுக கமநங்கள் (அர்ச்சிராதி கதி)ஆகிற -சரம தச ஜ்ஞான அனுஷ்டான க்ரம சாதுர்யம் உள்ளது-பரமாசார்யரான இவர்க்கே இறே

————–

(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும் நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

—————————————————————————————

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -451-456-–அரும் பத விவரணத்துடன்–

March 12, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

—

வார்த்தை -451-
முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்கும் அவனுக்கு
நாளைக்கு கால ஷேப ப்ரகாரம் இருக்கும்படி எங்கனே -என்று –
உடையவர் திருவடிகளிலே விழுந்து முதலி யாண்டான் விண்ணப்பம் செய்ய –
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அநுசந்தானம் பண்ணுவான் –

உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனும் நாய்ச்சிமாரும் நித்ய ஸூரிகளும் கூட எழுந்து அருளி இருக்கும் பீடக் கட்டாய் இருக்கும் த்வயம்

பெரிய பெருமாள் திருவடிகளைப் பார்த்தவாறே –
பொது நின்ற பொன்னம் கழல் -மூன்றாம் திருவந்தாதி -88 என்கிறபடியே
சர்வாத்ம சாதாரணமாய் இருக்கும் –

பெரிய பெருமாள் (நம் பெருமாளைச் சொன்னவாறு)அபய ஹஸ்த்தத்தை பார்த்தவாறே –
அநந்ய சரணரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாரணமாய் இருக்கும் –(திருவடி உபாயமும் -ப்ராப்யமும் –மெல்லடியை பிடிக்க கூவுதல் வருதல் செய்யாய் – -அபய ஹஸ்தம் பிராபகம் மட்டுமே)

பெரிய பெருமாள் திருமுக மண்டலத்தை நித்ய ஸூரிகளுக்கே அசாதாரணமாய் இருக்கும்

ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தை –
பெரிய பெருமாள் திருவடிகளிலே அநுசந்தானம் பண்ணுவான்

ப்ராபக பரமான சரம ஸ்லோகத்தை –
பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநுசந்தானம் பண்ணுவான் –

இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தை
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநுசந்தானம் பண்ணுவான்

——————————————————-

வார்த்தை -452-
மத்ஸ்யத்தின் வடிவு எல்லாம் ஜலமாய் இருக்குமா போலே –
இவள் அவன் ரூபாதிகளுக்கு நிரூபக பூதை யாகையாலே –
ஸ்ரீ மான் அவயவம் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் –

ஸ்ரீ ஞ்சேவாயாம் என்கிற தாத்வர்த்த ப்ரகாசகமாய் –
புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திருநாமத்தை
பெரிய பெருமாள் திரு நன் மார்பிலே அனுசந்தானம் பண்ணுவான் –

(பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே.–20-)

மன் -என்று இப் புருஷாகாரம் நித்யம் என்று அனுசந்தானம் பண்ணுவான் –

நாராயண -என்று –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி (ஆதி -சவ் சீல்ய ஸுலப்ய ஸ்வாமித்வங்கள்)குணங்களையும்
ஆஸ்ரீத கார்ய ஆபாதகங்களான ஜ்ஞான சக்தியாதி (ஆதி–ப்ராப்தி பூர்த்தி)குணங்களையும் உடையவன்
என்று அனுசந்தானம் பண்ணுவான்

சரணவ் என்று
பெரிய பெருமாள் திருவடிகளை அனுசந்தானம் பண்ணுவான்

சரணம் -என்று
சரண்யரான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அனுசந்தானம் பண்ணுவான்

ப்ரபத்யே -என்று
ப்ரபத்தாவான தன்னுடைய ஸ்வரூப அநுரூபம் ஸ்வீகாரம் என்று அனுசந்தானம் பண்ணுவான்

ஸ்ரீ மதே நாராயண -என்கிற பதங்களை –
ஸ்வாமினியாய் –
அவனுக்கு வல்லபையாய் –
ப்ராப்யையாய் –
கைங்கர்ய வர்த்தகையாய் –
பகவன் முகோலாஸ ஜநகையாய் –
தத் ப்ரீத்ய  அநுபவைக யாத்ரையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரோடு

சேஷத்வ கார்யமான கைங்கர்ய ப்ரதி சம்பந்தியாய் இருக்கிறவனுடைய
தாரகத்வ –
வ்யாபகத்வ –
நியந்த்ருத்வ –
ஸ்வரூபம் என்ன

ஸ்வரூப குணங்களான
ஜ்ஞான
பலாதிகள் (ஆதி ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்)என்ன –
அதில் நின்றும் இழிந்த வாத்சல்யாதிகள் என்ன –

தத் தத் ஸ்வரூப குண ப்ரகாசகமான
பஞ்ச உபநிஷண்மய விக்ரஹங்கள் என்ன –

விக்ரஹ குணங்களான
சௌந்தர்ய சௌகுமார்யாதிகள் என்ன –
ஆஸ்ரீத விரோதி விஷயமான சௌர்யாதிகள் என்ன –

திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன

தத் அநுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன –

இவற்றுக்கு அநுரூபமான
ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரியிலே –
திவ்ய மண்டபத்திலே –

மற்ற திவ்ய மகிஷிகளோடு –
திவ்ய பரிஜன பரிச்சதங்கள் சேவிக்க
ஸ்வாமித்வ ப்ரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பிலே அனுசந்தானம் பண்ணுவான்

ஆய என்று –
அவன் அரசு அமர்ந்தான் ஆகையாலே -சேஷி யாகையாலும்
இவன் அடி சூடும் அரசு ஆகையாலே -சேஷம் ஆகையாலும்
அரசமர்ந்தான் அடி சூடும் அரசல்லால் -பெருமாள்  திருமொழி -10-7-போலே
சர்வவித சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அனுசந்தானம் பண்ணுவான்

(குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-)

நம -என்று த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு -என்றும் –
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு -என்றும் –
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் சொல்லப்படுகிற –
ம என்கிற ஷட் யந்த பதத்தை –

த்ரய ஷரம் ப்ரஹ்மண பதம் என்றும்
ந மமேதி ச சாஸ்வதம் -என்றும்
யானே நீ என் உடைமையும் நீயே -என்றும் சொல்லுகிற
நகார்த்த பலத்தாலே நிஷேதித்து

தனக்கேயாக -திருவாய்மொழி -2-9-4-என்கிறபடியே –
இத் தலையில் நினைவை அழிய மாறி அத் தலையில் நினைவே நினைவாம்படி பண்ணி
கீழ் சொன்ன சகல சேஷ வ்ருத்திகளையும் கொண்டருள வேணும் என்று
பெரிய பெருமாள் திருமுக மண்டலத்தைப் பார்த்து அனுசந்தானம் பண்ணுவான்
என்று அருளிச் செய்தார் –

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-)

—————————————————————————

வார்த்தை -453-
முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு அறிய வேண்டிய அர்த்தம் நாலு உண்டு
இதில் அத்யவசாயமாய் இருப்பனவும் நாலு உண்டு -அவை எவை என்னில்
1-ப்ராப்யமும் -ப்ராப்ய அத்யவசாயமும் –
2-ப்ராபகமும்  -பிராபக அத்யவசாயமும் –
3-ஆசாரமும்  -ஆசார அத்யவசாயமும் –
4-போஜனமும்  -போஜன அத்யவசாயமும் –

இதில் ப்ராப்யம் ஆவது –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமாக –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்திலே போய் –
அங்கு உண்டான பரிபூரணமான பகவத் அநுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –

இதில் அத்யவசாயம் ஆவது –
கைங்கர்யத்தை ஒழிந்துள்ள தர்ம அர்த்தங்களிலும்
மோஷத்தில் கைவல்யம் முதலாய் உள்ள புருஷார்த்தங்களிலும்
அபோக்யதா புத்தி பூர்வகமாக இக் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –

இதில் ப்ராபகம் ஆவது –
சௌலப்யாதி கல்யாண குண விசிஷ்டனுமாய் -விக்ரஹ விசிஷ்டனுமாய்
இருந்துள்ள ஈஸ்வரன்(பிரபத்தி சரணாகதி என்பதே இந்த எண்ணம் தானே- விடுவித்து பற்றுவிக்குமவன் அவனே பிராபகம் உபாயம் -ஸுலப்யம் குணபூர்த்தி உள்ள அர்ச்சாவதாரத்திலே ஆழ்வார்கள் பலகாலும் சரணாகதி செய்து காட்டி உள்ளார்கள் -)

இதில் அத்யவசாயம் ஆவது –
பெரிய பிராட்டியார் புருஷகாரத்தாலே
அவன் தானே உபாயம் என்று உபாயாந்தரங்களான கர்ம ஞான பக்திகளிலே
கால் தாழாதே இவ் உபாயமே நிர பேஷ உபாயம் என்று இருக்கை

இதில் ஆசாரம் ஆவது –
உபாய ஸ்வீகாரம் பண்ணினவன் யாவதாயுஷம் மநோ வாக் காயங்களாலும்
ஸ்வரூப அநுகூலமாக வர்த்திக்கும் வர்த்தனம் -(சம்பிரதாயத்தை ஒட்டி வாழும் வாழ்க்கை முறையே ஆசாரம்)
அதாவது
பர வியூஹ விபவாதிகளில் காட்டில் அர்ச்சாவதாரத்தின் நீர்மையிலே
அதி ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே
அநுகூல வ்ருத்திகளைப் பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிர்ந்து வர்த்திக்கையும்

இதில் அத்யவசாயம் ஆவது –
கீழ் சொன்ன அநுகூல வ்ருத்திகளை பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிருகையும்
செய்யும் இடத்து
க்யாதி லாப பூஜைகளைப் பற்றவும் –
த்ருஷ்டப் பிரயோஜனர்தமாகவும் –
பகவத் ப்ராப்திக்கு சாதனமாகவும் -பிரதிபத்தி பண்ணிச் செய்யாதே –
இவ் வாசாரமே ஸ்வயம் பிரயோஜனம் என்று இருக்கை –

இதில் போஜனம் ஆவது
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு குஷி பூர்த்தியிலே அந்வயியாதே
ஷூநிவ்ருத்தி மாத்ரமே பிரயோஜனமாக ஜீவிக்கும் ஜீவனம் -(வயிற்றை நிறப்பதற்காக சாப்பிடாமல் பசியைப் போக்கவே உண்ண வேண்டும்)

இதில் அத்யவசாயம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஜீவிக்கும் ஜீவனம் என்ன
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
அமுதுபடி சாத்துப்படிகளுக்கு அர்ஹமான த்ரவ்யங்களிலே சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
இவற்றில் கால் தாழாதே
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு தேக யாத்ரை நடத்துகை ப்ரபன்ன க்ருத்யம் –

—————————————————————-

வார்த்தை -454-
1-ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
2-ஸ்வ ரஷணத்தில் அசக்தியும்
3-ப்ராப்யத்தில் த்வரையும்
4-ப்ராபகத்தில் அத்யவசாயமும்
5-விரோதியில் பயமும் –
6-உத்தேச்ய விஷயத்தில் கௌரவமும்
7-உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞ்ஞதையும்
8-உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியும் —

ஸ்வரூபத்தில் உணர்த்தியாவது –
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திருமொழி -8-9-3-என்று இருக்கை(கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றி -அந்வயமும் தள்ள வேண்டியவற்றையும் அருளிச் செய்வார்கள்)

ஸ்வ ரஷணத்தில் அசக்தி யாவது –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -திருவாய்மொழி -5-8-3- என்று இருக்கை

ப்ராப்யத்தில் த்வரை யாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்று இருக்கை

ப்ராபகத்தில் அத்யவசாயம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -திருவாய்மொழி -5-8-8- என்று இருக்கை

விரோதியில் பயமாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றார் போல் -பெரிய திருமொழி -11-8-3- என்று இருக்கை

உத்தேச்ய விஷயத்தில் கௌரவமாவது –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் –இங்கே திரிய உறுமோ பாவியேனுக்கு -திருவாய்மொழி -8-10-3- என்று இருக்கை

உபகார விஷயத்தில் க்ருத்ஜ்ஞ்ஞதை யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7-
உனக்கு என் செய்கேன் –திருவாய்மொழி -2-7-8- -என்று இருக்கை

(அவன் பண்ணும் உபகாரங்கள் கிரமப்படி இருக்க வேண்டாமே ஆகையால்- மருவித் தொழும் மனமே தந்து -அடுத்து என்னைத் தீ மனம் கெடுத்தான்)

உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் –திருவாய்மொழி -10-10-3- என்று இருக்கை

ஸ்ரீயபதியான சர்வேஸ்வரனைப் பற்ற
ஜீவாத்மாக்களுக்கு அத்யந்த பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் ஸ்வரூபம் என்று
சதாசார்ய உபதேச முகத்தாலே சகல வேத சங்ரஹமான
ஸ்ரீ மத் அஷ்டாஷர மகா மந்த்ரத்திலே பிரதம மத்தியம பதங்களாலே தெளிய அறிந்து(பிரணவத்தால் சேஷத்வம் -நமஸ்ஸால் பாரதந்தர்யம் என்று கொள்ள வேண்டும்-பீஷ்மர் தர்மம் கேட்ட ஆறு கேள்விகளில் இறுதி கேள்விக்கு முதலில் பதிலல் சொல்லியது போல் இங்கும் சேஷத்வம் இறுதியில் இருப்பதால் பிரணவம் முதலில் உள்ளது)

ஸ்வ ரஷணத்தில் சக்தியும் பிராப்தியும் இல்லாமையாலே
மந்திர ரத்னம் என்கிற திரு நாமத்தை உடைத்தான த்வயத்தின் உத்தர வாக்யத்தாலே
பிரதிபாதிக்கப் பட்ட சித்த உபாய பூதனான ஸ்ரீயபதி திருவடிகளையே உபாயமாக
உடையனான அதிகாரிக்கு(பற்றுவது உபாயம் அல்லவே -அதிகாரி விசேஷணம் மட்டுமே தானே) ஸ்வ விசேஷணமான சக்ருத் பிரபத்திக்கு மேற்பட அபேஷிதமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே –

கீத உபநிஷத் ஆசார்யன்
த்யாஜ்ய தயா அகர்தவ்யமாக விதித்த அஷ்டாங்க யோக யுக்தமான கர்ம யோகமும்
தத் உபாயமான ஜ்ஞான யோகமும் –
தத் உபாயமான பக்தி யோகமும் –
எல்லாவற்றிலும் அங்கத் வேன அனுவர்திக்க கடவதான வர்ண ஆஸ்ரம யோக்யதா பாதக தர்மங்களும் த்யாஜ்யம்(வர்ணாஸ்ரம தர்மங்கள் நேராக த்யாஜ்யம் அல்லவே -உபாய புத்தியால் மட்டுமே த்யாஜ்யம்)

மாமேகம் சரணம் வ்ரஜ என்று உபாதேய தயா கர்தவ்யமாக விதித்த ஷட் அங்க யோக
யுக்தமான ந்யாச வித்யையே அதிகாரமாய் இருக்கும் –

(இத்தால் ரஹஸ்ய திரயங்களும் விவரண பாவங்களாக இருப்பதால் முமுஷுவுக்கு மூன்றும் அறிய வேண்டியவை என்பதை இந்த வார்த்தை அழகாக விவரிக்கிறது)

————————————————————————–

வார்த்தை 455

பிரபன்னனுக்கு கீழ் சொன்ன உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
உபேயத்தில் நிவ்ருத்தி ப்ராப்ய ருசி விரோதி –
இவ் விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் -ஸ்வ ரஷண ஷமராய் இருக்கச் செய்தேயும்
தன்னுடைய ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை முன்னிட்டுக்  கொண்டு அஸோக வநிகையிலே
எழுந்து அருளி இருந்த பிராட்டியும் – தத் தஸ்ய சத்ருசம் பவேத் சுந்தர காண்டம் -39-30(ஸ்வ சக்தியை விட்டாள் பிராட்டி- ஸ்வ லஜ்ஜையை விட்டாள் திரௌபதி-ஸ்வ வியாபாரத்தை விட்டார் திருமங்கை ஆண்டான்)
பெருமாள் நில் என்னச் செய்தேயும் தம்முடைய செல்லாமையைக் காட்டி பின் தொடர்ந்து
அடிமை செய்த இளைய பெருமாளும்

த்வயத்தில் பூர்வ கண்டத்தை அனுசந்தித்தால் -ஸ்வ ரஷண நிமித்தமாக
விலங்கிக் கிடந்த துரும்பு எடுக்க ப்ராப்தி இல்லை –

உத்தர கண்டத்தை அனுசந்தித்தால் மடல் எடுத்து புறப்படாது  இருக்க ப்ராப்தி இல்லை

இவ் விரண்டு கண்டத்திலும் உண்டான அர்த்த அனுசந்தானத்தாலே
முமுஷத்வ அதிகார விருத்தமான காம்ய கர்மங்களும் –
சாமான்ய சாஸ்த்ரத்தால் பிரதிபாதிகப்பட்ட த்வாதச -அஷ்டாதி பிராயச்சித்தாதிகளும் – அபசார த்ரயங்களும் –ஏவம் விதமான சாஸ்திர அனுஷ்டானங்கள் அடைய லஜ்ஜா புரஸ்ஸரமாக ஸ்வரூபேண விட்டு
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகை யான இஷ்ட ப்ராப்திக்கு ஸித்த உபாயத்தை ஸ்வீகரித்து
தத் அநந்தரம்
தன்னைப் பார்த்து நிர்ப் பரனுமாய் –
ஸித்த உபாய பூதனான ஸ்ரீ ய பதியைப் பார்த்தும் நிர்ப் பரனுமாய் -நிஸ் சம்சயனுமாய் –
காலம் போகா நின்றது -கர்மம் ஷயியா நின்றது -பரம ப்ராப்யம் குறுகா நின்றது -என்று
மேலே பெறப் போகிற பேற்றைப் பார்த்து
ஹ்ருஷ்ட மநாவாய் –

இப் ப்ரதிபந்தகத்தோடே இருக்கும் நாளும்
பகவத் விஷயத்திலும் -பாகவத விஷயத்திலும் -ஸ்வரூப அநுகூலமாக உபாய புத்தி இன்றியிலே –
அஹங்கார மமகார ரஹியதனாய்
ஸ்வயம் பிரயோஜனமாக கைங்கர்யங்களைப் பண்ணி இருக்குமவன் முக்த ப்ராயன் –

—————————————————————————–

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-5-2-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-4-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-7-7-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்–ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-11- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)–
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .