ஸ்ரீ யதீந்திர ப்ரவண பிரபாவம் -சாரம் –

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்
ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதஸ் சரணாரவிந்த சேவாம்ருதைக ரசிகான் கருணா ஸூ பூர்ணான்
பட்டார்வர்யா நிகமாந்த முநீந்திர லோக குர்வாதி தேக வரான் சரணம் ப்ரபத்யே
கூரத் ஆழ்வான்- பட்டர் – நஞ்சீயர்- நம்பிள்ளை அடியாக வந்த வாற்றை பிரதிபாதிப்பதாக-பிரதமம் பிள்ளை லோகாச்சார் உடைய வைபவம்
கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திரு மலை யாழ்வார் செழும் குரவை மணவாளர் ஓதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே-

நம்பிள்ளை –வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருத் தாயார் அம்மி தண்டன் சமர்ப்பித்து பிரார்த்த்க்க நம்  போன்ற திருக் குமாரர்
ஐப்பசி திருவோணம் -பிள்ளை லோகாச்சார்யார் திருவவதாரம்
நம்பெருமாள் போலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருவவதாரம்
தம்பியுடன் தாசரதி யானும் உன் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் -பொங்கு புனல்
ஓங்கு முடும்பை யுலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான் –

பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர்கள் –
கூர குலத்தம தாச நாயன்
மணப்பாக்கத்து நம்பி
கொல்லி காவல தாசர்
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை
கோட்டூரில் அண்ணரும்
விளாம் சோலைப் பிள்ளை
திருமலை ஆழ்வார் திருத் தாயார்-

ஆராயிரப்படிக்கு கனகாபிஷேகம் போலே ஒன்பதினாராயிரப்படி –நஞ்சீயர் -மாதவர் வேதாந்திமுன்பு
தேவராஜரை உகந்து நம் பிள்ளை -பட்டர் சாதித்து அருளிய திரு மோதிரம் சமர்ப்பித்து
நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ-

சிறியான் ஆழ்வான்-ஈ யுண்ணி மாதவர்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் நம்பிள்ளை சிஷ்யர்
விஸ்மரித்தால் பார்த்துக் கொள்ளக் செய்தேன் -ஆச்சான் பிள்ளை மட்டும் பண்ணவா நாமும் பண்ண வேண்டாமா என்ற எண்ணத்தில்
செய்ய வில்லை என்றார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
ஒரு ச து போடாமல் எழுதினீர் உம்முடைய சாமர்த்தியம் என்னே என்று புகழ்ந்து
ஜகத் ரஷோபர அனந்தோ ஜனிஷ்யத்ய பரோ முனி
ததரஸ்யாஸ் சதா சரா சாத்விகாஸ் தத்வ தரிசின -என்று
பேரருளாளன் கந்தாடை தோழப்பர் ஸ்வப்பனத்தில் மா முனிகள் திருவதாரம் செய்யப் போவதையும்
அவரை ஆஸ்ரயிப்பவர் சதாசாரமும் சத்துவ குணமும் தத்துவ ஜ்ஞானமும் உடையராய் இருப்பார் –
ஈடு பெருக்கர் ஆவார் -பட்டோலைக் கட்டை பிரசாதித்து அருள
அவரும் தம் குமாரருக்கு பிரசாதித்து அருளினார்-

நம்பிள்ளை -இரண்டு தேவிமார் –திருக்குமாரார் தூவியம்புள் திரு நாமம் சாத்தி –
அவர் சாதித்த ஸ்ரீ ஸூக்திகள் –
1-குலம் தரும் -முருட்டுத் திருப்பதியானான வென்னை நம்பூர் குலத்துக்கு சேஷம் ஆக்கினால் குலம் தரும்
அதாவது பண்டைக் குலத்தை தவிர்ந்து தொண்டைக் குலத்தில் மாசில் குடியில்
ஸ்ரேஷ்ட ஜன்ம ஜாதனாய் ஆச்சார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோக அர்ஹனாகை-
2-அவதாரம் இருக்கும் படி என்-என்ன
மெய்  வெளுத்து நாக்கு வற்றி இருக்கும்
அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றாலும் பிரயோஜனாந்த பரர் ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு வற்றி இருக்கும் –
3-பெரிய கோயில் வள்ளலாரை -இவர்களுக்கு திரு நாமம் ஆகைக்கு அடி என் என்ன
ஸ்ரீ மான் பிதாவாகையாலும் ஸ்ரீ மாதா வாகையாலும் ஸ்ரீமான் உடைய வைபவத்தை அறிகையாலும்
ஸ்ரீ மத் பதத்தில் பிறக்கை யாலும்
ஸ்ரீ புருஷகாரமாக வளர்க்கை யாகையாலும்
இவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் ஆய்த்து-

4-பிரபன்னனுக்கு தஞ்சமாக விச்வசித்து இருக்கும் அர்த்தம்
சகல பிரமாண சாரதமமான மந்திர ரத்னத்தையே விஸ்வசித்து இருப்பன்
த்வயத்தில் அர்த்தத்தை விஸ்வசித்து இருந்தான் ஆகில் எம்பெருமானைப் பற்றி இருக்கும்
ஆச்சார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி இருக்கும்
இனி எம்பெருமானையே பற்றி இருக்கை தேவதாந்திர பஜனம் என்று ஆச்சார்யன் திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க
எம்பெருமான் இவன் அளவிலே பிச்சேறி இருக்கும்
இவன் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி இருக்க எம்பெருமானோபாதி ஆச்சார்யனும் இவன் மேலே பிச்சேறி இருக்கும்
இத்தால் தத் தேசிக ததீய சரம நிஷ்டை உண்டாகவே அம்மூவரும் இவன் விஷயத்திலே ஆசக்தர் ஆவார்கள் -என்றார்-

5-ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஈஸ்வரனுக்கு ஆத்ம சமாநர் -பிராண சமாநர் -திருஷ்டி சமாநர் -பாஹூ சமாநர் -ஆபரண சமாநர்
-ஆயுத சமாநர் -பாத சமாநர் -பாதரேகா சமாநர் -பாதுகா சமாநர் -சாயா சமாநர் -ஜிஹ்வா சமாநர்
அது எங்கனே என்னில் ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் -அனன்ய பிரயோஜன ஜ்ஞானத்தைப் பற்றவும் –
மமபிராணா ஹி  பாண்டவ -என்கிற பர அபிமானத்தைப் பற்றவும்
யே ப்ரபன்ன மகாத்மா நஸ்தே மே நயன சம்பத –என்கிற பாமர ஜன உஜ்ஜீவனகர கடாஷ த்ருடித்வத்தைப் பற்றவும்
ராமஸ்ய தஷினோ பாஹூ -என்பதாலும்
சாபமாதாயாத்மா விபூஷணம் -என்பதாலும்
அலர்மகள் கேள்வன் கை யாழி-இராமானுச  நூற்றந்தாதி -33-என்பதாலும்
ஜங்கம ஸ்ரீ விமா நானி ஹ்ருதயாணி மநீஷிணாம்-என்பதாலும்
நடையாவுடைத் திரு நாரணன் -திருவாய் -3-7-4-
சடகோபன் -நிழலும் அடி தாறும் ஆனோம் -பெரிய திருவந்தாதி -31-என்பதாலும்
ரசான் பக்தச்ய ஜிஹ்வாயா மஸ் நாமி -என்பதாலும் -என்றார்-

6- ஸ்ரீ வைஷ்ணத்வம் மூன்று பிரகாரமாய் இருக்கும்
சத்கார யோக்யர் ஆவார் –ரூப நாம பிரதான்யர் -உச்சாரண பிரதான்யர் -அபிமான பிரதான்யர்
சஹவாச யோக்யர் ஆவார் -ஜ்ஞான பிரதான்யர் -அனுஷ்டான பிரதான்யர் -அங்கீகார பிரதான்யர்
சதானுபவ யோக்யர் ஆவார் -ஆர்த்தி பிரதான்யர் -அபி நிவேச பிரதான்யர் -அபிருசி பிரதான்யர்
இதில்
த்யாஜ்ய உபாதேயத்தை தெளிய அறியாதவர்களாய் சம்பந்த மாத்ரமே யானவர்கள் –நமஸ்கார யோக்யர்
தெளிந்த ஜ்ஞாநிகளான சப்ரஹ்மாசாரிகள் போதயந்த பரஸ்பரம் பண்ண யோக்யர்
ஆச்சார்யனும் சதாசார்யா சத்ருசரும் அனுவர்த்த நீயர் என்றபடி-

7-த்ருஷ்டத்தில் தனக்கு உண்டான சம்பத்தை தனக்கே என்கை நரகப்ராயம்
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்கபிராயம்
அவனுக்கும் அவன் அடியாருக்கும் என்கை பரமபத பிராயம் -என்று அருளினார் –
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் திரு மடியிலே திரு முடியையும்
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் திரு மடியிலே திருவடிகளையும் வைத்து
நஞ்சீயர் திருவடிகளை த்யானித்துக் கொண்டு
ப்ரஹ்மரந்த்ரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருள
பிள்ளை திருமகனார் தூவியம் புள்ளை சம்ஸ்கரிக்க-

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசே வேதார்த்த சார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்த மஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரி தாசம்-

நமாமி தௌ மாதவ சிஷ்ய பாதௌ யத் சந்நிதம் ஸூ க்திமயம் பிரவிஷ்டா
தத்ரைவ நித்யஸ்த்திதி மாத்ரியந்தே வைகுண்ட சம்சார விமுக்த சித்தா

வார்த்தோஞ்ச வ்ருத்த்யாபி  யதீய கோஷ்ட்யாம் ராணாம் பிரதமா பவந்தி
ஸ்ரீ மத் கவித்வம் சந்தாச நாம்னே தஸ்மை மனஸ் ஸூ கதி மஹார்ணவாய

நெஞ்சத்திருந்து   நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாயவாதியர்தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணாம்புயம் என் தலைக்கு அணிந்தே –

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் -நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருத் யாவதாத்மா பாவி நடக்கும் –

—————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை வைபவம்
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் -பெரியவாச்சான் பிள்ளையைப் பார்த்தருளி
குரு பரம்பரையும் த்வ்யத்தையும் உபதேசித்தவர்களோடு கேட்டவர்களோடு வாசி அற உத்தேச்யர் என்று பிரசாதித்தீர்
பரம சாத்விகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உம்மை அனுவர்த்திரதற்கு என் நினைந்து இருப்பீர் -என்று கேட்டு அருள
அடியேன் அஹன்காரி ஆஹ்கையாலே அடியேனுடைய அபிப்ராயத்தாலும் ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று நினைத்து இருப்பன்
ஈஸ்வரன் பெற்ற பிறவி  ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கும்
இனி இவர்கள் என் நினைத்து இருக்கிறார்கள் -என்று கூசிக் கொண்டு இருக்கும்
இவர்கள் என்னைக் கண்டு அனுவர்த்த்க்கையாலெ இவர்கள் பஷத்தாலும் ஸ்ரீ வைஷ்ணவத்வம் உண்டு என்று இருந்தது
ஆக த்ரிவித அபிப்ராயத்தாலும் அடியேனுக்கு முப்புரியூட்டின ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று நினைத்து இருப்பன் -என்று அருளினார்-

நாம் லீலைக்கு விஷயமோ -இரக்கத்துக்கு விஷயமோ
உடன் பட்டு இருந்தோம் ஆகில் லீலைக்கு விஷயம் ஆகிறோம்
அச்ப்ருஷ்ட அஹங்கா ரரான நித்தியரும் -நிவ்ருத்த அஹங்கா ரரான  முக்தரும் அவன் இனிமைக்கு விஷயம் ஆகிறார்கள்
அஹங்கார மமகார வச்யராய் இருந்து வைத்து அக்குறையும் கூட அறிய மாட்டாதே சம்சாரிகள் லீலைக்கு விஷயம் ஆகிறார்கள் –
சதாச்சார்ய பிரசாதம் அடியான பகவத் ப்ரசாதத்தாலே அஹங்கார மமகாரம் கழிய வேணும் என்று இருக்கிற நாம் அவன் இரக்கத்துக்கு விஷயம் ஆகிறோம் –
ஆக
சர்வ சேதனரையும் சர்வேஸ்வரன்
அஹம் மமதா புத்தி முக்தி விரக்த்யாசக்தி விசேஷத்தாலே ஸ்வ
மாதுர்ய
காருண்ய
லீலா
விஷயம் ஆக்கி விநியோகிக்கும்  என்றபடி

தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய
கலங்குகிறவனும் கலக்கிறதும் கலங்கிக் கிடக்கிறவர்களும்
தெளிவிக்கிறவனும் தெளிகிறவனும் -தெளிந்து இருப்பவனுமாய் இ றே இருப்பது
இதில் கலங்குகிறவன் ஜீவாத்மா
கலங்குகிறது -அசித்து
கலங்கிக் கிடக்கிறார்கள்- சம்சாரிகள்
தெளிவிக்கிறான் -ஆச்சார்யன்
தெளிகிறான் -சேதனன்
தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன்
ஆகையாலே ஆச்சார்ய உபதேசன தெளிந்தவன் கலங்குகிற தன்னையும் கலக்குகிற பிரக்ருதியையும் கலங்கிக் கிடக்கிற சம்சாரிகளையும்
தஞ்சம் அன்று என்று கை விட்டு
தெளிவிக்கிற ஆச்சார்யனையும் தெளிந்து இருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகை காண் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்வரூப பாரதந்த்ர்யம் இருக்கும் படி என்
ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக சர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில் கந்தல் அற்று
உபேயத்தில் த்வரை விஞ்சி  இருக்கை
காண் -பாரதந்த்ர்யா ஜ்ஞானம்
எல்லாம் பர ப்ரேரிதமாம் இத்தனை-

ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமோ பிராப்ய அனுரூபமான ஸ்வரூபமோ-என்று கேட்க
அவரும் முமுஷூ தசையில் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் முக்தி தசையில் ப்ராப்ய அனுரூபமாய் இருக்கும் ஸ்வரூபம் என்று அருளிச் செய்தார் –

ததீய தோஷம் சொல்லுவார் இடம்
தண்டதரனான யமன் பரிஹர-மதுசூதனன் அடியார்கள் இடம் போகாதீர்கள்
ந கச்சின் ந அபராத்யதி -என்றாள் பிராட்டி
ஈஸ்வரன் –செய்தாரேல் நன்று செய்தார் என்றான்
ஆழ்வார்கள் –அவன் தமர் எவ்வினையராகிலும் எம் கோன் அவன் தமரே -முதல் திரு -55 -என்றார்கள்
இப்படி இருக்க அவர் குற்றம் இவரை ஒழியச் சொல்லுவார் யார் -என்று அருளினார்-

வாதி கேசரி கார்ஹச்த்ய ஆஸ்ரம நிஷ்டராய் இருக்கும் போது-முசலகிசலயம்-
32 திரு நஷத்ரத்தில் அஷர சிஷைகளும் பண்ணுவித்து –
ஆஸ்ரம ச்வீகாரம் செய்து பன்னீராயிரம் தீப பிரகாச சதம் தத்வ நிரூபணம் –

நாயனார் ஆச்சான் பிள்ளை திருக் குமாரர் -தத்வ சங்க்ரஹம் -முக்த போகாவலீ- ஜ்ஞானார்ணவம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷ்யைக லஷ்யாணாம் ஸூ லபம் ஸ்ரீ தரஸ் சதா

நாயனார் ஆச்சான் பிள்ளை திரு நஷத்ரம் -சித்திரை –
ஸ்ருத்யர்த்த சரா ஜனகம் ஸ்ம்ருதி பாலமித்ரம்
பத்மோல்சத் பகவதங்க்ரி புராண பந்தும்
ஜ்ஞா நாதி ராஜ மபய பரதராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு நஷத்ரம் -மகம் –
ஸூ ந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம்
அசமத் வித பரித்ரான பரமே ப்ரத்ராண  மாசனம்
வாதி கேசரிணம் வந்தே ரம்யா ஜாமாதரம் முனிம் –

—————————————————————————————————————————————–

ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -நம்பிள்ளை இடம் பெற்ற ஈடு முப்பத்தாறாயிரம்
தமது குமாரரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாளுக்கு பிரசாதிக்க
அவர் தமக்கு அந்தரங்க சிஷ்யராய் கோல வராஹ நாயனார் என்ற
திரு நாமம் உடைய நாலூர் பிள்ளைக்கு பிரசாதித்து அருள
அவர் தமது நல்ல குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு பிரசாதித்து அருள
அவரும் திருவாய் மொழிப் பிள்ளைக்கும் திரு நாராயண புரத்தாயிக்கும் -திருவாய் மொழி ஆச்சான் –பிரசாதித்து அருள
ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -ஹஸ்தம்
வரதார்யக்ருபா பாத்ரம் ஸ்ரீ மாதவகுரும் பஜே
குருகாதீச வேதாந்த சேவான் மீலித வேதனம்-தனியன்
பத்மநாப பெருமாள் -சுவாதி
யே நாவகாஹ்ய விமலோச்மி சடாரி ஸூ நோர் வாணீ கனார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரனாப்ச மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரம-தனியன் –

நாலூர் பிள்ளை -புஷ்யம்
ஸ்ரீ பத்ம நாப குருத சடஜின் முநீந்திர ஸ்ரீ ஸூ கடி பாஷ்ய மதி கம்ய சம்ருத்த போத
தத்தேவ ராஜ குரவே ஹ்யதிசாஸ் சதுஷ் பூர்வா செத்த கோல வர தேசிகம் ஆஸ்ரயே தம்
நாலூர் ஆச்சான் பிள்ளை தனியன்
நமோஸ்து தேவராஜாய சதிர்க்ராம நிவாசனே
ராமாநுஜார்ய தாசச்ய ஸூ தாய குணசாலினே-

கோலாதிபாத் விதுவராப்ய சஹச்ர கீதோபாஷ்யம்  ஹி பூர்வதன தேசிக வர்யகுப்தம்
த்ரேதோ ப்ரவர்த்ய புவிய ப்ரத யாஞ்சகார ஸ்ரீ தேவராஜா குருவர்யம் அஹம் பஜே தம் –

ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்மாப்யாம் ஸ்ரீ ஸூ க்தி தேசிக வரேண ச யச்த்ரிதைவம்
வ்யக்தாஸ் சடாரிக்ருதி பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவ புங்க வேஷூ-

—————————————————————————————————————————————–

வடக்குத் திருவீதிப் பிள்ளை
ஆத்ம ஸ்வரூபம் இருக்கும் படி -அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியேன் –என்று இ றே என்று அருளினார்
ஈச்வரோஹம்-அஹங்காரம் அற்று -தாசோஹம்
நிலை நின்ற ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை
ஸ்வ சத்தையில் நித்யத்வமும் நிலை நின்ற பாகவத அபசாரமும் உண்டாம் அளவத்தனை அன்றோ –
இவர் திரு நஷத்ரம் சுவாதி
ஸ்ரீ கிருஷ்ண பாத பதாப்ஜே நமாமி சிரசா சதா யத் பிரசாத பிரபாவேன சர்வ சித்திரபூன் மம-தனியன் –

பிள்ளை லோகாச்சார்யர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்
தம்பியுடன் தாசரதியானும் சங்க வண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் பொங்கு புனல்
ஓங்கு முடும்பை உலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான்

கூர குலோத்தம தாசர்
மணப்பாக்கத்து நம்பியார்
கொல்லி காவலன் தாசர்
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை
கோட்டூரி வண்ணர்
திருமலை ஆழ்வார்
திருமலை ஆழ்வார் திருத்தாயார்
விளாம் சோலைப் பிள்ளை -ஆகியோர் பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர்கள்-

மா முடும்பை மன்னு மணவாள வண்ணனொடு
செமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று
தொட்டுரைத்த சொல்லும் த்வயம் தன்னின் ஆழ்  பொருளும்
எட்டெழுத்தும் இங்கு உரைப்பார் ஆர்
த்ராவிடம் நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம்
ரம்யா ஜாமாத்ரு தேவேன தர்சிதம்   கிருஷ்ண ஸூ நுனா-நாயனார் தனியன்-

கலகமிகு பஞ்சமுடன் கள்ளர் பற்றிலகத்து இருவர் காரியப்பேர் ஒருவர் வந்து
பலமறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல் வாங்கி நீங்கி
நல மிகுந்த தருமிதனை நம்பினோமேல் நம் பெருமாள் உம்பருடன் நயந்து வாழும்
இலகுமிகு பெரும் செல்வம் இல்லை என்று ஏர் முடும்பை யுலகாரியனும் உரை செய்தானே —
லோகார்ச்சார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-
கூர குலோத்தம தாசர் -ரகஸ்யங்கள் அர்த்தம் சாதிக்க
திருவாய் மொழியை திருக் கண்ணம் குடிப் பிள்ளைக்கும் திருப்புட்  குழி ஜீயருக்கும்
மூவாயிர வியாக்யானம் நாலூர்ப்பிள்ளைக்கும்
சப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை விளாம் சோலை பிள்ளைக்கும்
நியமித்து அருளி திருவாய் மொழிப் பிள்ளைக்கு
ஆனிதனில் வளர்பக்கத் தாறிரண்டா நாள் தன்னில்
ஊனமிலிவ் வுலகாரு முடும்பை யர் கோன் உயர் தீவைத்து
வானவர்கள் தற்சூழ வைகுண்ட குட்டநாடு
தானினிது வீற்றிருக்கத் திரு வுள்ளமாய்
பிள்ளை திருவடிகளை த்யானித்துக் கொண்டு
ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————————————————————————————————————————————–

ஆழ்வார் தோழப்பர்-அருளப்பாடும் வரிசைகளும் வழங்கி –
சாத்விகை அம்மையார் -திருக்குமாரர் -திருமலை ஆழ்வார்
கூர குலோத்தம தாசர் –திரு நஷத்ரம் -ஐப்பசி திருவாதிரை -திரு விருத்தம் -ரஹச்யார்த்தங்களை பிரசாதிக்க
அவர் தனியன் –
லோகாசார்யா க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குணா வாசம் வந்தே கூர குலோத்தமம்
ஸ்வ யமா ஹூய சைலேச குரவேஸ்ர்த்த ப்ரதா நத
லப்தோ தாராபிதம் கூர குலோத்தம மஹம் பஜே   –

ஸ்ரீ சடகோபன் எழுந்து அருளப் பண்ணி வைத்து நாலூர் பிள்ளையை அருளாளர் திருவடி ஊன்றியவரே-என்று அழைத்து
திருமலை ஆழ்வாரை அவர் கையிலே காட்டிக் கொடுத்து
இவருக்கு மூவாயிரம் சாதிக்கும் படி ஜ்யோதிஷ் குடியிலே நியமித்தோம்
திருப்புட் குழி ஜீயர் பாடே திருவாய் மொழி இசை ஈடு கேளாத இலவு தீர அத்தையும் இவருக்கு சாதியையும் -என்று பரவசராய் நியமிக்க
அவரும் தனது திருக்குமாரர் -நாலூர் ஆச்சான் பிள்ளையை உமக்குத் தகும்படி சொல்ல வல்லவர் இவர் என்று காட்டிக் கொடுத்து அருள
திருநாராயண புரம் எழுந்து அருளி ஆயி சுவாமி யுடன் கேட்டு அருளினார்-

புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும்   புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்
மறைத் தமிழ் ஆயிரமும் திகழும்படி செய்த ஸ்ரீ  சைலேசர்
திருவனந்த புரம் எழுந்து அருளி விளாம் சோலை பிள்ளை இடம் ஸ்ரீ வசன பூஷணம் ஏழு காதையாக பிரசாதித்து அருளினார் –

பற்றாத வெங்கள் மணவாள யோகி பதம் பணிந்தோன்
நற்றே வராச நலம் திகள் நாரண தாதருடன்
கற்றார் எம் கூர குலோத்தம தாதன் கழல் பணிவோன்
மற்றாரும்  ஒவ்வாத் திருவாய்மொழிப் பிள்ளை வாழியவே –

வாழி நலம் திகழ் நாரண நாதன் வடிவும்
வாழி யவன் அமுத வாய் மொழிகள் வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாசிரியன் சொல்
தேறு திருவுடையான் சீர் –

—————————————————————————————————————————————–

திருமலை ஆழ்வார் தம்முடைய திரு மருமகனாரை புத்திர அபிமானம் பண்ணி தேவப் பெருமாள் என்று நாலூராச்சான் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார்

சிக்கல் கிடராம் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையர்-ஸ்ரீ ரெங்க நாச்சியார் -இருவரும் மா முனிகள் திருத் தந்தை திருத் தாயார்
கோட்டூர் அழகிய மணவாளப் பெறமால் பிள்ளை -மாதாமகர் –

கல்யப்தம் 4471-1292-சாதாரண வருஷம் துலா ராசி-
ஐப்பசி -26 நாள் -வியாழக் கிழமை -மூல நஷத்ரம்
சுக்ல பஷம் சதுர்த்தி திதி
ரம்ய ஜாமாத்ரு முனி -அழகிய மணவாளப் பெருமாள் திரு நாமம் சாத்தப் பட்டார்
-1293 பரிதாபி வைகாசி -கோயில் ஒழுகு -1290 பரிதாபி -வைகாசி -17 தேதி இதில் –திருவரங்கம் ஸ்தாபித்து அருள –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்து
இராமானுஜ சதுர் வேதி மங்கலம்
யதீந்திர ப்ரவணர்-வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லாரவிந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

கலாபத்தினால் ஆழ்வார் வலசையாக எழுந்து அருளின போது பவிஷ்யதாசார்யா உடையவர் திருப் புளி  யாழ்வார் அடியில் புதைத்து வைக்கப் பட்டு
திருமலை ஆழ்வாரால் கண்டு எடுக்கப் பட்டார் -எனபது வரலாறு
நாயனார் திருக்குமாரர் –எம்மையன் இராமானுசன் -என்று திருவாய் மொழிப் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார் –

இன்றோ வெதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள்
இன்றோ கலியிருள் நீங்கு நாள் இன்றோ தான்
வேதியர்கள் வாழ விரை மகிழோன் தான் வாழ
வாதியவர்கள்  வாழ் வடங்கு நாள் –திருவாய்மொழிப் பிள்ளை முதல் இரண்டு வரிகளையும்
மணவாள மா முனிகள் இறுதி இரண்டு வரிகளையும் சாதித்து அருளியது –

வடமாமலை முதல் மல்லனந்த புரி எல்லை மல்கித்
திடமாக வாழும் திருவுடைய மன்னரில் தேசுடையோன்
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோபதாதர் குருகூர் வாழ பிள்ளையைச் சேறு நெஞ்சே -என்றும்
செந்தமிழ் வேதத் திருமலை யாழ்வார் வாழி
குந்தி நகர்க் கண்ணல் கோடை வாழி உந்திய சீர்
வாழியவன முதவாய் மொழி கேட்டப் பொருளில்
தாழுமற்றன்பர் திருத் தாள் -என்றும் உகந்து தனியன் சாதித்து அருளினார்

உத்தமனே உலகாரியனே மற்று ஒப்பாரி இல்லா
வித்தகனே நல்ல வேதியனே தண் முடும்பை மன்னா
சுத்த நன் ஞானியர் நல துணையே சுத்த சத்துவனே
எத்தனை கால இருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே — வைகாசி பஹூலா அஷ்டமியில்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளை த்யானித்துக் கொண்டு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ பாஷ்யம் ஒருக்கால் -அனவரதம் அருளிச் செயல் -சர் ரெங்கம் நித்ய வாசம் -நியமித்து அருளி
இவரை அவதார விசேஷம் என்று ஆதரித்துபோருங்கோள்-என்று மற்றோருக்கு நியமித்து அருளினார்

நமஸ் ஸ்ரீ சைல நாதாய குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-

அழகிய வரதர் -ராமானுஜ ஜீயர் -பொன்னடிக்கால் ஜீயர்  ஆஸ்ரயித்தார்

மாடமாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திரு விக்ரமன் வீதியும்
ஆடல் மாறன் அளங்கன் வீதியும் ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல் வாழ் குலசேகரன் வீதியும் குலவு ராச மகேந்தரன் வீதியும்
தேடுதன் வன்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவா வரணமே –

திருமாலை தந்த பெருமாள் பட்டர் -கோயில் அதிபதி -இவர் முப்பத்தாறாயிரப் பெருக்கர்
-துவளில் மா மணி மாடம் ஆழ்வார் பிரகிருதி சொல்லும் திருவாய் மொழி அர்த்தம் கேட்டபின்பு –
இவ்வுலகம் தன்னில் எதிராசர் கொண்டருளும்
எவ்வுருவம் யான் சென்று இறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லாம் இனிதேலும் எழில் அரங்கத்து இருப்புப் போல்
நில்லாது என் நெஞ்சு நிறைந்து –

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய ஊர்

எந்தை எதிராசர் எம்மை எடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ சிந்தை
மருளோ தெருளோ மகிழ்  மாலை மார்பன்
அருளோ விப்பேற்றுக்கு அடி

என்நெஞ்சே எங்கள் இராமானுசன் என்னும்
நன்னெஞ்சே இன்னும் இன்னும்
பெரும்பூதூர் என்னாய் போரப் பெரும்
போகம் எல்லாம் பெற

ஸ்ரீ மத் ரங்கம்  ஜயது பரமம் தாம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவது குசலீ கோபி பூமா சஹாய
திவ்யம் தஸ்மை திசது விபவம் தேசீகோ தேசிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களா நி –

கோவிந்த தாசர் அப்பர் -ஆஸ்ரயித்து பட்டர் பிரான் ஜீயர்
திருமஞ்சனம் அப்பா ஆஸ்ரயம்
திருமஞ்சனம் அப்பா திருக் குமாராதி ஆச்சி -கந்தாடை ஐயங்கார் க்ருஹம் மாட்டுப்பெண் -ஆஸ்ரயம்

புக்ககத்தின் நின்றும் பிறந்தகத்தில் போந்தது போல்
தக்க புகழ் தென்னரங்கம் தன நின்றும் மிக்க புகழ்
மாறன் திரு நகரி வந்தோம் அரங்கன் தன
பேறன்றோ நெஞ்சே இப்போது –

கருதித் தமிழ் மொழியும் சடகோபர் தம் பாதத்தைக்
கருதிப் பரவும் எதிராசன் கவியமுதம்
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன் புகழ் போய்ப்
பருதிக் கதிர் செல்லு மண்டலம் ஏறப் பரந்ததுவே

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இ றே ஆனந்த ஷஷ்டிகள் உதயம் -ஆச்சார்யா ஹிருதயம் -22
ஆயி சுவாமி இடம் கேட்க திரு உள்ளம்
எண்ணின பலம் எதிரிலே வரப் பெறுவதே

பூதூரில் வந்த புண்ணியனோ பூங்கமழும்
தாதாரு மகிழ் மார்பன் தானிவனோ தூத்தூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –

மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய   மறையோரான பெற்றார் தீதற்ற
ஆசாரியவிதயம் பெற்றார் நம்மாயி இவர்
தேசாரத்தன் கண் நெஞ்சே காண்

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய மறையோரான பெற்றார்  நீதியினால்
ஆங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாள முனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று

மீண்டும் கோயில் ஏற –
பிறந்தகத்தில் சீராட்டுப் பெற்றாலும் தன்னைச்
சிறந்துகக்கும் சீர் கணவன் தன்னை மறந்திருக்கப்
போமோ மணவாளர் பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வியறிந்தால்–

எறும்பி அப்பா ஸ்வப்னத்தில்
சேஷ ஸ்ரீ மான் ஜநிஹிபுரா சௌம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ் தாதா நுபகவான் ராகவச்யா நுஜன்மா
பூத்வா பூயோ வரவர முநிர் பூய சாபா சமான
ரஷாத் யஸ்மான் ரகு குலபதே ராஸ்தி தோபத்ர பீடம்
பூத்வா பவ்யோ வரவர முநிர் போகி நாம் சார்வ பௌம
ஸ்ரீ மேட் ரெங்கே வசதி விஜயீ விஸ்வ சம்ரஷணார்த்தம்
தத்வம் கந்தும் வ்ரஜ சரமம் இத்யாதிசத் ராகவோயம்
ஸ்வப்னே சோயம் வரவர குருஸ் சமஸ்ரயோ மாத்ருசா நாம் -சக்கரவர்த்தி திருமகன் கட்டளை இட்டு அருளி-

யீச்வரச்ய சௌஹார்த்தம் யத்ருச்சா ஸூ க்ருதம்ததா
விஷ்ணோ கடாஷம் அத்வேஷம் ஆபிமுக்யம்ச சாத்விகை சம்பாஷணம் ஷடேதானி-
உத்தம நம்பிக்கு பெரிய பெருமாள் -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி இவர் கிடீர் ஜீயராக வந்து அவதரித்து அருளினார்
விஸ்வசித்து இரும்
ஆயிரம் பைந்தலையனான திருவனந்த ஆழ்வானாக சேவை சாதித்து அருள -ஆகில் ஒருவருக்கும் சொல்லாதே கொள் -என்று சாதித்து அருளினார்-

சீர் வசன பூடணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பார்த்தனைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் தேரில் நமக்கு
ஒப்பார் இனி யாருலகாசிரியன் அருள்
தப்பாமல் ஓதியபின் தான் –

வாக்பூஷணம் வகுளபூஷண சாஸ்திர சாரம்
யப் மாத்ரு சாஞ்ச ஸூகாமம் வ்யவ்ருணோத் தயாளு
ரம்யோ  பயந்த்ரு   முனையே யாமினாம் வரைய
தஸ்மை நமஸ் சம தமாதி குணார்ணவாய

மேவும் தவத்து வரயோகி விட்ட வியாக்கியையால்
தேவும் திகைக்கும் நல தத்துவ ரகச்யத்துடனே
தாவும் பெரும் புகழ் ஆசாரிய விதயத்திற்குமா
தாவும் பொருள் செறிச் சொல் ஆபரணச் சுருதிக்குமே-

நீங்களும் இவர்களைப் போலே ஸ்ரீ வசன பூஷண அதிகாரிகளோ அஹங்காரம் நடையாடி விவாதம் பண்ணுகைக்கு-என்ன
இத்தைக் கேட்டு லஜ்ஜா புரஸ் சரமாக அதில் நின்றும் நிவ்ருத்தரானார்கள்

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் ஆயிடினும்
அக்கணத்தே நம்மிறைவராவரே மிக்க புகழ்க்
காரார் பொழில் கோயில் கந்தாடை யண்ணன் எனும்
பேராளனை யடைந்த பேர்

மருமலர் கமழும் சோலை மதுரை மா நகர் வந்து எய்தி
அருள் மொழி பெரிய நம்பி யன்று எதிராசராற்கு
அரும் பொருள் வழங்கும் எங்கள் ஏரி காத்தருள்வார் கோயில்
திரு மகிழடி யில் செல்வீர் தீ வினை தீருமாறே

இதுவோ கிளியாறு இவ்வூரோ திரு மதுரை
இதுவோ திரு மகிழும் கோபுரமும் இதுவோ
பெரிய நம்பி தாமுகந்து பின்னும் எதிராசர்க்குத்
துயம் அளித்த தூயப்பதி –

ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ எழில் ஆலி என்னுமூர் ஈதோ தான்
வெட்டும் கலியன் வேலை வெட்டி நெடுமால்
எட்டெழுத்தும் பறித்த இடம் –

பொன்னி தனில் குளித்து ஆங்கம் தனில் புகுத்தப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள  மா முனிவன் என்னையன்
வாழ்ந்திருக்கும் மேடம் தன்னில் வந்திருக்கப் பெற்றோம் சென்னி தனிலவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை யாழ்வாரில் என்றும் சிறந்திருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கப் பொருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே

மண்ணாடு வாழ வந்தான் மணவாள மா முனிவன் வண்மை
கண்ணார் அருளுக்கு இலக்காக நல் வாழ்வும் கண்டு அவன் தன்
திண்ணார்  அடிகளில் குற்றேவல் செய்து திரியவும் நான்
எண்ணாது இருக்கவே நடுவே நமக்கு வந்து எய்தியதே –

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில்
நலமான வாவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை  வளர்பக்க நாளா நாளில்
செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நம் கண்
மணவாள மா முனி வழங்கினாரே —

ஆனந்த வருடத்தில் கீழ்மை யாண்டில்
அழகான ஆனிதனின் மூல நாளில்
பா நுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையின் ஆளியிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாத்த
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே-

பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை யண்ணன் எறும்பி அப்பா
ஏராரும் அப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரர் என்பேர்
ஆர்ந்த திக்கயம் சூழ் வர யோகியைச் சிந்தியுமே-

வானமா மலை ஜீயர் -பிரியாது ஆட்செய்து
கந்தாடை அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டான் போலே பாதுகா ஸ்தாநீயர்
எறும்பி அப்பா -வடுக நம்பி போலே அத்யந்த அபிமதராய்
பிரதிவாத பயங்கர அண்ணா -கூரத் ஆழ்வான் போலே ப்ரதிபஷ நிரசனம் ஸ்ரீ பாஷ்யம் உசாத்துணை
அப்பிள்ளை -சேனை முதலியார் அண்ணன் -சடகோப தாசர் -திருப்பாண்  ஆழ்வார் தாசர் -அருளிச் செயலுக்கு உசாத்துணை
அப்பிள்ளார் -அமுதுபடி சேவை
பட்டர்பிரான் ஜீயர் ஸ்ரீ பதாச்சாய ஆபன்னார்
ஜீயர் நாயனார் இளவரசராய் திருக் குறுகிப் பிரான் பிள்ளான் போலே அத்ய ஆதரணீயராய் இருப்பார்-

திரு நாளுக்காகத் திருவீதியில் அரங்கர்
வருநாளு மாற தெந்தைக்கு இன்று பெருமாள் தன்
அந்த வடிவழகைத் தானோர் நாளும் காணேனே
இந்த வுடம்போடினி-

இந்த உடல் நோய் வீழ்ந்து என்னை வல் வினையேன்
அந்தோ எனக்குத் தென்னரன்கா
இந்த வுடம்புடன் சேவை தனக்கு என் விரோதியாய்
வன்பரையே தானினி

எம்பெருமானார் தம்பிரான் என்னுமவரை
நம்பெருமான் தாமுகந்து நாள் தோறும் தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கை விடார்-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குறவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர் காள்
சூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான் இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர்

தென்னரங்கர் தேவியே சீரங்க நாயகியே
மன்னுயிர்கட்கெல்லாம் மாதாவே என்னையினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலங்காமல்
அவ் வுலகில் வாங்கி யருள்

சீரங்க நாயகியே தென்னரங்கன்   தேவியே
நாரங்கட் கெல்லாம் நல தாயே மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எந்தன் இடர்  தீராதது என்

இந்த உடம்போடு இனி இருக்கப் போகாது தான்
செங்கமலத் தாள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கரும் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருபபாயே இங்கு –

சென்று திருமால் அடியார் தெய்வக் குழாம் கூடும்
என்றும் ஒரு நாளாமோ ஆழ்வாரே துன்னு புகழக்
கமலம் பாடினீர் ஐயோ அடியேனும் இக்
கமலம் சேர் காயம் விட்டு

இந்த வுடம்போடு இருவினையால் இவ்வளவும்
உந்தன் அடி சேராது உழன்றேன் அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி

போதச் சிவந்த பரிமளம் விஞ்சும் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீர் ஏற வோட்டிச் சிறந்தடியேன்
எதத்தை மாற்றும் மணவாள யோகியினிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே

அருளிச் செயல் அனுசந்தானம்  கேட்டருளி
ருதிரோத்காரி சம்வத்சரம் மாசி மாத கும்ப ராசி சனிக் கிழமை கிருஷ்ண பஷம் த்வாதசி -திருவோணம் நஷத்ரம் -ஸ்ரீ வைகுண்டம் மீண்டு எழுந்து அருளினார்-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம்  –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading