ஸ்வாமி அந்தரங்க சிஷ்யர்கள் பலர்
முதலி ஆண்டான் -கூரத் ஆழ்வான்-தண்டும் பவித்ரமும் போல்வார் –
1-கந்தாடை ஆண்டான்-2- -எம்பார்–3-வங்கி புரத்து நம்பி -4- -வடுக நம்பி –5-அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்-ஐவரும் பஞ்ச ரத்ன சிஷ்யர் –
வங்கி புரத்து நம்பி -தளிகை பண்ணும் கைங்கர்யம் செய்து அருளியவர் –
இவர் –மணல்கால் நம்பி திருவடிகளில் ஆஸ்ரயித்த வங்கி புரத்து ஆச்சி திருக் குமாரர் –
இவர் தனியன் –
பாரத்வாஜ குலோத் பூதம் லஷ்மணார்யா பதாஸ்ரயம்
வந்தே வங்கி புராதீசம் சம்பூர்ணார்யம் க்ருபா நிதிம் –
சிஷ்யர்: சிறியாத்தான்-
——————
உபய விபூதி நிர்வாஹகரான ஸ்ரீ உடையவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பிக்கு ஸாதித்தவை
வ்யாஸோ வா பகவான் பராசர முனி ஸ்ரீ சவ்நகோ வாண்த வா
ஸாஷான் நாரத ஸம்யமீ ஸடரி புர் வாகீஸ்வரோ வா ஸ்வயம்
லோகேஸே புருஷோத்தம பணிபதி ஸேஷோ ஜகச் ஸேஷிண
த்வித்யாக்யோ ஜகதாம் ஹிதாய ஸம்பூத் ராமாநுஜார்யோ முநி-
ஸ்ரீ சைல அத்தங்கி ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம திருகுமாரார் திரு வேங்கட தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ப்ரஸாதித்து அருளிய அவதாரிகை
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் லீலா விபூதி சேதன ஸம்ரக்ஷண அர்த்தமாக -இத்தனை காலம் இவர்களை லீலைக்கு விஷயமாக்கினோமே என்று அநுதபித்து-இனி போகத்துக்கு விஷயமாக்கத் திரு உள்ளம் பற்றி அஜாய மாந-என்கிறபடியே பிறப்பிலியான தான் லீலா விபூதியில் பஹுதா விஜாயதே -என்கிறபடியே பலபிறப்பாய் திருவவதரித்து –ஸாது பரித்ராண -துஷ்ட சிஷண -தர்ம ஸம்ஸ்தாப நாதிகளாலே திருத்தப் பார்க்கிலும் -நெடு நாள் லீலைக்கு கர்மீபவித்து -ப்ரக்ருதியிலே அகப்பட்டு -கர்மா வாஸனையாலே -இத்தை விட்டு நீங்க மனமில்லாதவர்களாய் -ஹேயத்வம் தோற்றாமே -எடுக்க வந்தவனுடன் எதிர் அம்பு கோத்து -த்வம் மே அஹம் மே -என்று நீங்கிப் போனபடியைக் கண்டு –
இனி ஸஜாதீயரைக் கொண்டு திருத்துவோம் என்று ஆழ்வார் ஆச்சார்யர்களாக அவதரிப்பித்து -ஞான உபதேச த்வாரா திருத்துவோம் என்று அவதரிப்பித்த ஆழ்வார் ஆச்சார்யர்களாலும் பலிக்கக் காணாமையாலே அதற்க்கு என்று ஒரு மஹாநுபாவன் அவதரித்து ஈஸ்வரன் குறையைத் தீர்க்க வேண்டும் –கலியுகம் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லி வைத்து –இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் என்று இவ் வுலகை விட்டு தன்னுடைச் ஜோதிக்கு எழுந்து அருளினார்கள்-
இனி ஏது செய்வோம் என்று -இதுக்குத் தக்க மஹாநுபாவன் யார் என்று யோசித்து-லீலா விபூதி ஜன துர்கதியையும் -எனது மனக்குறையையும் தீர்க்கவல்ல ஸாமர்த்யம் உமக்கே உள்ளது என்று –ப்ரஹ்ம வாதிநோ வதந்தி -இத்யாதிப்படியே –ஆ முதல்வன் இவன் என்று உம்மையே சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள் -ஆகையால் நீரே அவதரித்து குறையைத் தீர்த்து வாரும் என்று தமக்கு அபிமதரான திருவநந்த ஆழ்வானை நியமிக்க
அவரும் இடையே இராமானுச முநி யாயின இந்நிலத்தே -என்கிறபடியே இராமானுச முனியாய் இவ்வுலகத்தில் திருவவதரித்து வாழும் காலத்திலே பெரியபெருமாள் தம் கோயிலேற வரவழைத்து -தீர்த்த ப்ரஸாத பஹுமாநங்களைச் செய்து -துயரரு திருவடிகளைத் திரு முடியில் வைத்து உம்மை அவதரிப்பித்த கார்யமான சேதன சமஷணத்தைப் பண்ண ஸகல ஆத்மாக்களை கரையேற்றி நம் கோயிலிலேயே நித்ய வாஸம் பண்ணக் கடவீர் என்று
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்குத் தந்தோம் இனி நீரே உடையவர் என்று பட்டம் கட்டி நியமித்து அருள -அன்று முதல் ஸகல சேதன சம்ரஷன தீஷிதராய் வாழும் காலத்திலே
கடலளவாய திசை எட்டினுள்ளும் கலியிருளே மிடை தரு காலத்து -என்று கலி தோஷத்தால் ஜனங்கள் படும் துயரத்தைக் கண்டு
செரு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவன் ராமானுஜன்-என்கிறபடியே தம்முடைய திவ்ய ஞானத்தாலே இவர்களுடைய அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படிக்குத் திரு உள்ளம் பற்றி அகில ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்தோடே பெரிய பெருமாளைத் திருவடி தொழுது அப்போது ஒரு சிந்தை செய்து அவ்வுகப்போடு திருமடத்துக்கு எழுந்து அருளி கோஷ்டியாக எழுந்து இருக்கும் காலத்தில்
அப்போது மத்யே ஸ்ரீ வங்கி புரத்து நம்பி எழுந்தருளி தாளும் தடக்கையம் கூப்பித் திருவடிகளிலே விழுந்து கிடக்க
நம்பீ இது என்ன -என்று உடையவர் கேட்க
அப்பொழுது எழுந்திருந்து இக்கொடு உலகத்தில் அநாதி கர்ம வாஸனையாலே இக்கலியிலே தேவரீர் நியமித்த ஸ்வரூபத்துக்கு விரோதிகளான பலவற்றிலும் அகப்பட்டு கட்டுண்டு உழல்கிற தாஸ வர்க்கங்களுக்கு
ஸ்வரூப விரோதிகள் இன்னது என்றும்
தத் பரிஹாரங்களும்
ஸ்வரூபம் வார்த்திக்கும் கிரமமும்
விசதமாக அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
உகப்பின் மிகுதியாலே அஃகோக்ஷ்டியில் உள்ளார் எல்லாரும் அறிந்து கொள்ளும் படி வங்கி புரத்து நம்பியை முன்னிட்டு அருளிச் செய்த விரோதி பரிக்ரஹம் என்ற இவ் வர்த்தத்தை
முமுஷுவாய் -பஞ்ச ஸம்ஸ்காராதி ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமுடையவனான ஒருவனுக்கு அவஸ்யம் தெரிந்து கொண்டு அனுஷ்ட்டிக்க வேண்டியதாய் இருக்கும்
அவை எவை என்னில்
1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி
3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி
(ஞானம் இச்சை பிரயத்தனம் -மூன்று தசைகள் உண்டே
ஆகவே பிரித்து விரோதிகளை அருளிச் செய்கிறார்)
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
10-பிரபத்தி நிஷ்டனுக்கு கர்மாத் யுபாயங்கள் விரோதி-
11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு தேவதாந்திர பஜனம் விரோதி-(கைங்கர்யத்துக்கு பூர்வ பாவி பக்தி ருசி வேண்டுமே -இதுக்கு தேவதாந்த்ர பக்தியே விரோதி என்றவாறு)
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
17-உபாய விரோதி –
18-உபேய விரோதி –
19-உபேய த்ரி விரோதி-(மூன்று விரோதிகள்)
20-முக்ய பிரமாண விரோதி
21-யாவதாத்மபாவி விரோதி
21-நித்ய விரோதி
23-அநித்திய விரோதி
24-ஸ்வ ஸ்வரூப விரோதி
25-பர ஸ்வரூப விரோதி –
26-ஸ்வ அனுபவ விரோதி –
27-பர அனுபவ விரோதி –
28-சம்ச்லேஷ விரோதி
29-விஸ்லேஷ விரோதி
30-விஷய விரோதி –
31-விஸ்வாச விரோதி –
32-பிரவ்ருத்தி விரோதி –
33-நிவ்ருத்தி விரோதி –
34-சயன விரோதி –
35-உத்தான விரோதி –
36-கதி விரோதி –
37-ஸ்திதி விரோதி –
38-ஆவஸ்யக விரோதி
39-சரீர சுத்தி விரோதி –
40-ஸ்நான விரோதி –
41-அனுஷ்டான விரோதி
42-லஷண விரோதி –
43-ஸ்மரண விரோதி
44-சங்கீர்த்தன விரோதி –
45-ஸ்ரவண விரோதி
46-ஸேவா விரோதி –
47-சமாராதன விரோதி-(சம்யக் ஆராதனை -நல்ல பகவத் பாகவாத ஆச்சார்ய ஆராதனை)
48-வந்தன விரோதி
49-அஞ்சலி விரோதி(வந்தனம் த்ரிவித-கரணங்களால் -அஞ்சலி -கைகூப்புதல்-
50-கால ஷேப விரோதி
51-ஆர்ஜன விரோதி
52-க்ருஹ விரோதி –
53-ஷேத்திர விரோதி
54-போஜன விரோதி –
55-போஜ்ய விரோதி-
56-தீர்த்த விரோதி –
57-பிரசாத விரோதி –
58-உக்தி விரோதி-
59-சங்க விரோதி
60-சம்பந்த விரோதி
61-சிநேக விரோதி
62-பக்தி விரோதி –
63-தாஸ்ய விரோதி –
64-சக்ய விரோதி-(ஸ்நேஹம் அன்பன் சக்யம் நண்பன்)
65-சமர்ப்பண விரோதி-
66-தர்சன விரோதி –
67-ஆஸ்ரம விரோதி
68-ஜாதி விரோதி
69-ஆப்த விரோதி
70-அநாப்த விரோதி
71-சித்தாந்த விரோதி
72-தத்வ விரோதி
73-பும்ஸ்த்வ தப விரோதி –
74-அந்திம தசா விரோதி
75-அவிஸ்வாச விரோதி
76-சங்க விரோதி –
77-சந்தான விரோதி –
78-வர்ண விரோதி
79- ஜப விரோதி –
80-ஆராதன விரோதி
81-பதித்வ விரோதி –
82-வர்ஜ நீய விரோதி
83-அவர்ஜ நீய விரோதி
—————————————————————————————————————————————–
இவற்றுக்கு ஸ்ரீ வங்கி புரத்து நம்பி அருளிச் செய்த வ்யாக்யானம்
1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
ஸ்வ தேகமும் -தேக அநு பந்திக்களுமான பித்ரு மாத்ரு தனம் ஸ்திரீ பான புத்ர மித்ர களத்ராதிகள்–என்கை(ஸ்வர்க்கமும் லீலா விபூதிக்குள்ளே தான் இருக்கும் -இது ஆமுஷ்மிக போகம் -இங்கு சம்சாரம் -ஐஹிக போகம்)
2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி-ஸ்வர்க்க ஸூக அபேக்ஷை யுடையவனுக்கு
இவ் வுலகத்தில் உள்ள கீழ்ச் சொன்ன பதார்த்தங்களுடைய அனுபவ இச்சை -என்கை
3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
கைவல்யானுபவத்துக்கு ஸ்வர்க்கத்தில் ஆசை விரோதி
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி(கர்மம் தொலைய வேண்டுமே கைவல்யார்த்திக்கும் -ஜனனம் மரணம் இவை அவனுக்கு கிடையாதே -இதுக்கும் பகவத் திருவடிகளே உபாயம் -கதி த்ரயத்துக்கும் அவனே உபாயம்-சுத்த ஆத்ம ஸ்வரூபம் -கைவல்யனுக்கு -அசித் மிஸ்ர சேதனன் போல் அல்லவா -சரீரம் கழித்த சேதனன் இவன்)
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி-ஸ்வரூப ரூப குண விபூதி யுக்த ப்ராப்த ஸேஷியான பரமாத்ம அனுபவத்துக்கு
அணுவாய் சேஷமாய் இருந்துள்ள ஸ்வ ஆத்ம அனுபவம் விரோதி என்கை
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி-ப்ராப்த பகவத் அனுபவ அபேஷாவானுக்கு-அப்ராப்த ஸ்வ ஆத்ம அனுபவ அபேக்ஷை பிறப்பது விரோதி தானே – அது பள்ளமடை -இது அல்பமாயும் மேட்டு மடையாக இருக்கும்-ஞான தசை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் -இயற்கையான தாஸ்யம் -ஸ்வத ஸித்தம் -அந்தமும் ஆதியும் இல்லாதது என்று அறிந்து-அதை அடைய இச்சை -இரண்டாம் தசை
மேல் அடைய முயற்சி யத்ன தசை இவ்வாறு மூன்றும் உண்டே -மூன்றுமே ப்ராப்ய வகுத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி-குணி -ஸ்வரூபம்-ஸஹ ஸ்ருதி –குணங்களை அவன் கூட இருந்தே அனுபவிக்கிறான் –
பரமம் ஸாம்ய உபைதி -ஸாம்ய சுருதி -ஆனந்தத்தில் ஸாம்யம் உண்டே
சாதர்ம்ய ஸ்ருதி -ஸாலோகம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் -அடைகிறோம்
இம் மூன்றும் விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு -அசாதாரணம் –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -இத் யுக்த பகவத் கல்யாண குண அனுபவத்துக்கு -ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான் -ஸ்வரூப அனுபவம் -திவ்யாத்ம ஸ்வரூப அனுபவம் விரோதி
நெஞ்சால் நினைப்பரிதால் –வெண்ணெய் யூண் என்னும் ஈரச் சொல்லே -திரு விருத்தம் -98-
எத்திறம் உரலோனோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய் -1-3-1-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது -பெரிய திருவந்தாதி -86-ஸ்வரூபம் நினைத்து போக்க முடியாதே -சீர் கலந்த சொல்லாலே போக்கலாம்
நின் புகழில் வைகும் சிந்தியினிலும் மற்று இனிதோ நீ அவருக்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் நைகும் –உன் குணங்களை எண்ணியே -உடையவர் கல்யாண குண அனுசந்தானமே ஸ்ரேஷ்டம்
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி –காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் என்னப் பண்ணும் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான-பகவத் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்த்ர்யம் விரோதி-த்ரஷ்டத்வம் வந வாஸாயா -சுமத்ரா தேவி -அவன் நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்ய நிஷ்டையிலே இருக்க வேண்டும் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –அனைத்துமே அசேதனம் இப் பாசுரத்தில் –
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே –நறு மா விரை நாண் மலரடிக் கீழ்ப் புகுதல் உறுமோ –திருவாய் -8-10-3
ததா நர்ச்சிதஸ் சத் பக்தம் பகவான் நாபி நந்ததி –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க் கடிமை கண்ணபுரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் -நான் முகன் -18
சத்ருனோ நித்ய சத்ருக்ன –கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத –அயோ -1-1-
பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –
10-பிரபத்தி நிஷ்டனுக்கு-பிரபத்தி ஸப்த வாஸ்ய ஸித்த சாதன பூத ஸர்வேஸ்வரனே உபாயம் என்று பற்றினவனுக்கு- கர்மாத் யுபாயங்கள் விரோதி-
பிரபத்தி என்கிற வாசகத்துக்கு வாஸ்ய ஸித்த ஸாதனான ஸர்வேஸ்வரன்
உபாயாந்தரங்களைப் பற்றியவனுக்கு இரக்கத்தாலும்
பிரபன்னனுக்கு ஆனந்தப்பட்டு வசீகரப்பட்டது அருளுவான்
11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்த நா மதி –
சாஸ்திர ரூபமான பகவத் ஆஜ்ஞ்ஞைப் படி அவனுக்கு செய்யும் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-பகவத் முக மலர்த்தியே பிரயோஜனமாக கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்
சரீர பூதர்கள் தேவதாந்த்ரர்கள் -தேவதாந்த்ர முக மலர்த்திக்காகச் செய்தவை விரோதியாகும் –ஸர்வ ஸப்த வாஸ்யன் -ஸர்வ அந்தர்யாமி -எண்ணத்துடன் செய்ய வேண்டுமே –
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு -பதிம் விஸ்வஸ்ய இத்யாதிப்படியே-தேவதாந்திர பஜனம் விரோதி
கீழ் கர்மங்கள்-இங்கு கைங்கர்யங்கள்-தனக்குத் தானே பதி -ஸர்வ லோகத்துக்கும் பதி -ப்ராப்த சேஷி கீழ் ஸர்வ அந்தர்யாமி எண்ணத்துடன் ஹித கர்மாக்களை செய்பவற்றைச் சொல்லிற்று
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
பண்ணின பிரபத்தியும் உபாயம் ஆகாதே-உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்-என்கிறபடியே எம்பெருமானையே உபாய உபேயமாகப் பற்றின உத்தம அதிகாரிக்கு உபாயாந்தர நிஷ்டனான மத்யம அதிகாரியைப் போலவே உபாயத்வேன உத்தேசித்துப் பண்ணின ப்ரபத்தியும் விரோதி யாகுமே-இசைவித்து என்னை உனது தாளிணைக் கீழ் இருத்தினாய்-பல பிரபத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை பெற என்ற எண்ணம் -அதிகாரி விசேஷம்
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி-சேதன ப்ரவ்ருத்தியாலே ஸ்வரூபம் பெற வேண்டிய-உபாயாந்தரங்களுக்கு- ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விரோதி என்கை-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாஸி தவ்ய -நான்கு படிகள் -கேட்டு ஆலோஸித்து -தியானித்து -காண்பது –
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –
செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யன் -வாழும் சோம்பர்
17-உபாய விரோதி –உபாயாந்தரங்கள் உடன் ஒக்க எம்பெருமானை நினைக்கையும்
நம்முடைய இசைவு கொண்டு அன்றோ உபாயமாயிற்று என்று நினைக்கையும் -இது இல்லாத போது ஸர்வ முக்தி ப்ரஸங்கம் பிறக்கும் என்கையும் -இது அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம் என்று இராமையும் -இது தானும் அவன் இட்ட வழக்காய் இருக்கும் என்று அறியாமையும் -என்கை-அசித்து போலே அவன் இட்ட வழக்காக இருக்க வேண்டும்
(உபாயம் என்றாலே பிரபத்தி -பகவான் என்பதையே குறிக்கும் நம் ஸம்ப்ரதாயத்தில் – பலத்துக்கு சத்ருச உபாயம் இவனே -உபாயாந்தரங்கள் அசேதன கிரியா கிலேசங்கள் இவனுக்கு கிட்டே கூட ஸமமாகாதே –
இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் இவன் தானே -என்னையும் என்னுடைமையும் சமர்ப்பித்தேன் அதுவும் அவனது இன்னருளே –
கர்மம் அடியாக சம்சாரத்தில் அழுந்தி இருக்க -கிருபை யடியால் விடுபட்டு பேறு அடைகிறோம் -மாறாடி நினைத்தால் அவத்யமே விளையும் –
இசையாத அன்றும் விடாதவன் -இசைந்த அன்று பேறு அளிப்பான் சொல்லவும் வேண்டாமே –
இசைவு இல்லாவிடில் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரும் என்றும் நினைத்து இசைந்ததால் பேறு என்றும் நினைக்கக் கூடாதே –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஸம்ஹாரமும் லீலா கார்யமே -இன்புறும் இவ் விளையாட்டுடையான் -லோக வத்து லீலா கைவல்யம் -)
18-உபேய விரோதி -பகவத் உபாயனாய் -அந்ய பலனாகையும்-அந்ய உபாயனாய் பகவத் பலனாகையும்-கர்த்தாவாய் கைங்கர்யம் பண்ணுகையும் -அகர்த்தா என்று கைங்கர்யத்தை அநாதரிக்கையும்-போக்தாவாய் ரசிக்கையும்-போக்யம் என்று வந்து அவன் முக மலர்த்தி கண்டு ரசியாமையும் –-விரோதி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே
கதா பிரகர்ஷயிஷ்யாமி
என்னை ஆக்கி தன்னைத் தந்த கற்பகமாய் இருக்க-அவன் முக மலர்த்தி ஒன்றே பிரயோஜனமாகக் கைங்கர்யம் பண்ண வேண்டும் அன்றோ -மற்றை நம் காமங்கள் மாற்று -செய்வார்களைச் செய்வானும் யானே என்னும்-செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -இத்யாதி –
நாம் கர்த்தா அல்ல -கருவியாக என்னைக் கொண்டு செய்விக்கிறான் -சேஷத்வ போக்த்ருத்வம் போல் அன்றி பாரதந்தர்ய போக்த்ருத்வங்கள் -எதிர் விழி கொடுத்து பாரதந்தர்யம் வேண்டும்
19-உபேய த்ரி விரோதி
ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே –
1-பலாகாங்ஷையும் -2-திருஷ்ட பிரயோஜன அபேஷையும் -3-அத்ருஷ்ட தேவதாந்திர அபேஷையும் –
1-பகவத் பிராப்தியை அபேஷியாது ஒழிகையும்
2-பாகவத கைங்கர்யத்தில் அபரத்வ புத்தியும்
3-ஆச்சார்ய கைங்கர்யத்தில் பர்யாப்தியும் –
திருஷ்ட பிரயோஜன அபேஷை-திருவடி பாவோ நான்யத்ர பஸ்யதி -அமுதினைக் -பெருமாளைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே-முயல்கிறேன் உன் தன் மொய்கழற்கு அன்பையே -முயலத் தானே முடியும் -சத்ருஸமான பிரதியுபகாரம் செய்ய முடியாதே -இரண்டு ப்ராஹ்மும் நான்கு விபூதிகளும் வேண்டும் அன்றோ-
20-முக்ய பிரமாண விரோதி
நிர்த் தோஷ ஜ்ஞான ஜனகமான வேதாந்தத்தை பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
அத்தை இதர பிரமாணங்களோடு ஒக்க நினைக்கையும்
மாஸூச வார்த்தையை விஸ்வசியாது ஒழிகையும்
அருளிச் செயல்களே முக்ய பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
பூர்வாச்சார்யர்கள் வாதங்களில் அவிஸ்வாசமும்-
உண்மை அறிவுக்குக் கருவியே பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்-ஊற்றமுடையாய் -பெரியாய் -வேத ஸாரம் -மாயன் அன்று ஓதிய மெய்மைப் பெரு வார்த்தை–சரம ஸ்லோகம் -அதுக்கும் மேல் அருளிச் செயல்கள் -அதுக்கும் மேல் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-தெளியாத மறைப்பொருள்கள் தெளியப் பெற்றோம்-
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-
21-யாவதாத்மபாவி விரோதி
தேஹேந்த்ரியங்களில் ஆத்ம புத்தி பண்ணுகையும்-ஸ்வா தந்த்ர்ய புத்தி பண்ணுகையும் –
ஈஸ்வரனை அபூர்ணன் என்று இருக்கையும்
ப்ரம்மா ருத்ராதிகளை ஈஸ்வரராக நினைக்கையும்
எம்பெருமானை ஒழிந்தவர்களை ரஷகர் என்று இருக்கையும்
நிலை நின்ற பாகவத அபசாரமும் ஆச்சார்ய அபசாரமும்
ஈசான சீல நாராயண ஏவ -சங்கரர் திரு வாக்கு
நாராயண பர ப்ரஹ்ம -உபநிஷத்
பாகவத அபசாரம் செய்தோரை -ஷிபாமி ந ஷமாமி வஸூந்தரே
இராமானுச உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆள்படுத்தே-107-
ஈஸ்வரை ஒழிந்தவர்கள் ரக்ஷகர் அல்லர் என்றும் பிரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம் -காக்கும் இயலபினன் கண்ணபிரான் -சாலப் பலநாள் உகந்து உயிர்கள் காப்பான்
21-நித்ய விரோதி
இந்த்ரியங்கள் விரோதி அன்று என்று இருக்கையும்
இந்த்ரிய கிங்கரனாய் அவற்றுக்கு இறை தேடிக் கொடுக்கையும்
ஞானச் செருக்காலே இந்த்ரியங்களுக்கு அஞ்சாது ஒழிகையும்
பாகவத் கைங்கர்யத்தில் அந்வயியாதே கேவல பகவத் -பாகவத் சௌந்தர்யத்திலே மக்னனாய் இருக்கையும்
ஸூஷ்ம இந்திரியங்கள் விடாமல் தொற்றிக் கொண்டே எடுக்கப் போகும் ஜென்மங்கள் தோறும் வருவதால் நித்ய விரோதி தானே இவை-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழன்று-இந்திரிய பய க்ரோசம் -அஞ்சினேன் -இந்திரியங்கள் கொண்டு பகவத் பாகவத ஆராதனம் செய்யாமல் இவற்றுக்கே தீனி போட்டு உழன்று-கீதை -2-51 தொடங்கி நான்கு ஸ்லோகங்கள் -யஜமான ஸம்ஹிதை -இத்யாதி -யோக ஆரம்ப விரோதிகள் -மாய வல் ஐம் புலன்கள் ஆமவை நன்கு அறிந்தேன்-விண்ணுளார் -பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் —
அநக –நித்ய சத்ருக்ந –நீக்கமில்லா அடியாரான லஷ்மணன் -சயமே அடிமை தலை நின்ற பரதன் -கோதில் அடியார் இவர் ஒருவரே
23-அநித்திய விரோதி
சுக துக்கங்கள் -தேகாத்ம பிரமத்தால் சந்தநாதிகளைக் கொண்டு சுகிக்க நினைக்கையும்
விஷ சஸ்த்ராதிகளை கண்டு வெருண்டு துக்கிக்கையும்
ப்ராக்ருத பதார்த்த லாபத்தாலே சந்தோஷிக்கையும்
அலாபத்திலே விஷண்ணனாகையும்
இவை எல்லாமே தாற்காலிக சுக துக்கங்கள் -அல்பம் அஸ்திரம் -என்று உணர வேண்டுமே
24-ஸ்வ ஸ்வரூப விரோதி
ஜ்ஞான அனுதய
அந்யதா ஜ்ஞான
விபரீத ஜ்ஞானங்களும்
போக தசையில் அவன் அழிக்கும் இடத்து சேஷத்வத்தையே நோக்கி பிற்காலிக்கையும்
பார தந்த்ர்யத்தை நோக்கி பர அதிசய கர ப்ரவ்ருத்தி அறுக்கையும்
ஆச்சார்ய பார தந்த்ர்யத்தில் அப்ரதான புத்தியும்-
அறிந்து அறிந்து தேறித் தேறி
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை-முமுஷுப்படி –சூரணை -92
அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே-போக்தாவான ஈஸ்வரன்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி- அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி – இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது – நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –
25-பர ஸ்வரூப (அனுபவ) விரோதி –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியான பிரகிருதி வச்யனாகையும் –
பிராக்ருதர் பக்கல் பரத்வ புத்தியும் -நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –
பராவரர்கள் பகவத் பரதந்த்ரர் என்று அறியாமையும்
சௌலப்யம் கொண்டு பரத்வத்தில் அதி சங்கை பண்ணுகையும்
பகவத் ஸ்வரூப ரூப விஷயத்தில் அஜ்ஞ்ஞாத அந்யதா ஜ்ஞானங்களும் -என்கை–
இச்சா கிருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் உணர வேண்டுமே
நாட்டினான் -தெய்வங்களாக -அருளினால்
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் திருவரங்கம்
26-ஸ்வ அனுபவ விரோதி –
தேக வாசனையும் -தேக அனுபந்தி வாசனையும் -வாசனா கார்யமான தேகாதிகளில் ருசியும்
கைவல்ய அனுபவ விரோதிகளைக் காட்டி அருளுகிறார் -வாசநா – மனப் பதிவு =ருசி -இரண்டையும் விட வேண்டுமே
27-பர அனுபவ விரோதி –
ஸ்வ இச்சா பிரவ்ருத்தியும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
ஈஸ்வரனுடைய குணங்களைக் கேட்டால் அசூயையும்
இதர குணங்களைக் கேட்டால் தெளிகையும்
பரத்வம் கண்டு வெருவுகையும்-அவனை நாம் தேவர் என்று அஞ்சினோம்-
கீழ் பர ஸ்வரூப அனுபவம்-இங்கு பர ரூப குண விபூதிகள் அனுபவம்
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-
உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34
28-சம்ஸ்லேஷ விரோதி
எம்பெருமானுடைய ஈஸ்வரத்வத்தைக் கண்டு வெருகையும்
ஸ்வ பாவத்தைக் கண்டு தரிக்கை யன்றிக்கே ஸ்வ நைச்சியத்தை அனுசந்திக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் கிட்டுகையும் -துர்லபம் என்று பிற்காலிக்கையும் –என்கை
தேவாதி ராஜனே ஆ மருவி அப்பன் என்றும் உணர்ந்து அநுபவித்தாரே கலியன்
அன்னையும் நோக்கும் என்றும் அஞ்சுகிறேன் அச்சோ ஒருவர் அழகிய வா
அவளும் நின் திரு ஆகத்தில் இருந்தது அறிந்தும் ஆசை விடாலாள்
29-விஸ்லேஷ விரோதி
பக்தி வஸ்யமற்றும் பொறுத்து ஆறி இருக்கையும்
போதயந்த பரஸ்பரம் பண்ணிப் பாடாற்றும் உசாத் துணை அறுகையும் -என்கை
துக்க அனுபவத்துக்கு மூலம் இவை -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -துக்க ஹேதுவாகுமே -பரவசம் -பரனான அவனுக்கு வசப்பட்டு துடிக்க வேண்டும் அன்றோ –
மச்-சித்த மத்-கத-ப்ராண போதயந்தঃ பரஸ்பரம்
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச-10-9-திருநெடும் தாண்டகம் -மூன்று பத்துக்களும் இவ் வகை –
ஈறும் வேம் ஈரியாய் உலர்த்த -சித்தம் சித்தாய் நின்னிடையேன் -அல்லேன் என்று நீங்க-உடல் ஆத்ம தர்மம் கொள்ள-உடலும் நீராய் அலைந்து உருக -முடியானேயில் கரணங்கள் அவையாக -ஓன்று மற்ற ஒன்றின் செயலில் விரும்ப-உள்ளதெல்லாம் தான் விரும்ப-காற்றும் கழியும் கட்டி அழ -கொண்ட பெரும் காதலுக்கு பக்தி நூல் வரம்பில்லையே-
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகும் தூங்க -கதிரவன் -தேரும் போயிற்று -திசைகளும் மறைந்தன -செய்வது ஒன்றுமே அறியேனே –
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-
வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே —8-5-10-
ஆழ்வார் அருளிச் செயல்களால் பக்தி வளரும் -ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் -வேதாந்தம் ஞானம் வளர்க்கும்
30-(பகவத்) விஷய விரோதி –
பகவத் வ்யதிரிக்த விஷயமங்களிலே பிரவணன் ஆகையும்
பாகவத நாமங்களை கேளாதே கேவல பகவன் நாமங்களைக் கேட்கையும்
பகவத் விக்ரஹத்தை பாராது இதர சரீரங்களைப் பார்க்கையும்
பாகவத சமூகத்தைக் காணாதே கேவலம் பகவத் விக்ரஹத்தைக் காண்கையும்
பகவன் நாம உச்சாரணம் பண்ணாதே இதர நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் ஷேத்ரங்களுக்கு போகாமல் இதர இடங்களுக்கு போகையும்
ததீயரை ஒழிந்த இதரரை ஸ்பர்சிக்கவும்
பாகவத உச்சாராணம் பண்ணாதே கேவல பகவன் நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் பாத துளசி கந்த க்ராணம் பண்ணாதே கேவல துளசி க்ராணம் பண்ணுகையும் என்கை-
காதுக்கும் கண்ணுக்கும் வாயுக்கும் காலுக்கும் —கேளாச் செவிகள் செவி அல்ல-நாவகாரியம் -நாவுக்கு அகாரியம் -சதுரா சதுர் அக்ஷரீ -நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-போந்தாரை போந்து எண்ணிக் கொள்-ஊரைச் சொன்னாய் பேரைச் சொன்னாய் அடியார் ஒதுங்கி நிழல் தந்தாய் -அஞ்ஞான ஸூஹ்ருதம்-கந்தம் கமழும் குழலி -அங்கும் பஞ்ச இந்திரியங்கள் விஷயம்-
31-விஸ்வாச விரோதி –
உபாய லகுத்வ பிரதிபத்தியும்- உபேய கௌரவ பிரதிபத்தியும்
விரோதி பாஹூல்ய பிரதிபத்தியும்
சரம உபாயத்தில் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்பதில் அவிச்வாசமும் –என்கை –
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
இணை திருவடிகள் -ஒன்றே ஒன்றுக்கு ஸத்ருசம்
32-பிரவ்ருத்தி விரோதி –
பகவத் கைங்கர்யத்தை கர்த்தவ்யதா புத்தி இல்லாதே விதிப் பொருளுக்கு பயப்பட்டு பண்ணுகையும்
ராக ப்ரேரிதனாய்ப் பண்ணாது ஒழிகையும்
பாரதந்த்ர்யத்தை நோக்கிப் பதற்ற மறுகையும்
ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தியும் -என்கை-
உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன்-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதாய்-பாட்டினால் என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே-கர்மங்கள் கைங்கர்யத்தில் புகும் –புருஷோத்தமன் -புஷ்ப்ப கைங்கர்யம் -தலையால் ஸ்வீ கரித்து அருளுகிறவன் -குறும்பு அறுத்த நம்பி விருத்தாந்தம்
33-நிவ்ருத்தி விரோதி –
இதர கர்ம த்யாக பூர்வகமான எம்பெருமானை பற்றி இருக்கச் செய்தேயும்
த்யாகத்தில் பாபம் வரில் செய்வது என்-என்று அநுசங்கிக்கையும்
மடங்கி அனுஷ்டிக்கையும்
அசக்தியால் விடுகையும் –
ஸ்வ சக்தியால் விடுகையும்
விட்டோம் என்னும் பிரதிபத்தி விடாமையும்
த்யாக அந்வயமும்–என்கை-
அப்ராப்தி -ஸ்வரூப ஹானி என்றே விட வேண்டும்-விடுவித்துப் பற்றச் செய்த அவனே உபாயம்-உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விட வேண்டும் -விடுகையில் அந்வயம் கூடாது -ஞானம் முக்கியம்-
34-சயன விரோதி –
சம்சாரிகள் க்ருஹங்களில் சயநிக்கையும்
அவர்களுடன் சயிக்கையும்
அவர்கள் படுக்கையில் சயநிக்கையும்
அவர்கள் காற் கடையில் சயநிக்கையும்
அவர்களுக்கு கீழாக சயநிக்கையும்
அவர்களுக்கு தான் சயனிக்க இடம் கொடுக்கையும்
அவர்கள் சயனிக்கும் இடத்தை சுத்தி பண்ணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ பவனன்களிலே சயநியாமையும்
அவர்களுடன் சம ப்ரதிபத்தியாய் சயநிக்கையும்
அவர்கள் திருப் படுக்கையில் மதியாமல் சயநிக்கையும்
அவர்கள் ஸ்ரீ பாத பிரதேசத்தில் சயனிக்க கூசுகையும்
அவர்கள் கீழே கண் வளர தான் உயரத்தில் சயநிக்கையும்
தான் அவர்களுக்கு சயனிக்கும் இடம் கொடாமல் சயநிக்கையும்
அவர்கள் கண் வளர்ந்து அருளும் இடத்துக்கு சுத்தி பண்ணுகையும்
விஹித விஷயம் என்று விஷய ப்ரவணனாய் சஹ சயிக்கையும்
ததீய பிரதிபத்தியால் சஹ சயியாமையும்
விஷயாந்தர ஸ்மரணத்துடன் சயநிக்கையும்
பகவத் ஸ்மரணம் இன்றி சயநிக்கையும்
ஆச்சார்ய ஸ்மரண நிஷ்டன் இன்றியே சயநிக்கையும்
தேக யாத்ரா பரவசனாய் சயநிக்கையும்
ஆத்ம யாத்ரா சிந்தா பரவசனாய் சயநியாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதிகளில் கூச்சம் இன்றி கால் நீட்டி சயநிக்கையும்
திரு முற்றம் திருப் பள்ளி யறை ஆச்சார்யன் திரு மாளிகைகளைக் காற்கடைக் கொண்டு சயநிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்யம் பண்ண வேண்டும் காலத்திலேயே சயநிக்கையும்
ஆச்சார்யன் கண் வளர்ந்து அருளுவதற்கு முன்னே சயநிக்கையும்
ஆச்சார்யன் எழுப்பச் செய்தே சயனித்து இருக்கையும் -என்கை –
முமுஷுக்கள் இல்லாமல்-ஈஸ்வரனையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் இடம் ஸஹ வாஸமும் கூடாதே
35-உத்தான விரோதி –
ஆச்சார்யர் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுப்ப மெள்ள எழுந்து இருக்கையும் –
ப்ராக்ருதர் எழுப்பப் பதறி எழுந்திருக்கையும்
பூர்வ அனுசந்தானம் இன்றியே எழுந்திருக்கையும்
ஆச்சார்யர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் தனது வரவு பார்த்து இருக்க அனுசந்தான தத் பரராய் எழுந்து இராது இருக்கையும்
தனது மடியில் ஆச்சார்யன் முடியை வைத்துக் கண் வளரா நிற்க கால் கடுத்தது என்று எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் மத்யே எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அதிர நியமித்து தட்டி எழுப்புகையும்
ஆச்சார்யன் சயநிக்கிற காலத்திலேயே தான் எழுப்புகையும்
ஆச்சார்யன் எழுந்திருப்பதற்கு முன்னே தான் எழுந்திராமையும்
தன்னுடனே எழுந்திருக்கும் ச ப்ரமசாரிகள் மேலே மயிர் உதறுதல் சோம்பல் முறித்தல் கொட்டாவி கொள்ளுதல் செய்கையும்
எழுந்திரா நிற்க முந்தி அடியேன் என்று பரஸ்பரம் தண்டன் இடாமையும்
ஆச்சார்யன் தத் பத்னி பித்ராதிகள் எழுந்திருந்த போதே தண்டன் இடாது ஒழிகையும்-என்கை-
36-கதி விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண் வளர்ந்து அருளின திருப் படுக்கையை மிதித்தல் செய்கையும்
சந்தித்த ஸ்ரீ வைஷ்ணவர்ககளுக்கு எதிரே செல்லாமையும்
விநயம் பாவித்து சம்சாரிகளுக்கு எதிரே செல்லுகையும்
பகவத் கோபுராதிகளைக் கண்டு அஞ்சலித்து கண் குளிர நோக்காமல் கடைக் கணித்துப் போகையும்
தேவதாந்திர கோபுராதிகளைக் கண்டால் கண் புதைத்துக் கடுக நடவாமையும்
திரு முற்றங்களுக்கு பிரதஷிணமாகப் போகாமையும்
அருளிச் செயலில் த்வநியைக் கேட்டு சிறிது செவி கொடாமல் கடுக நடை யிட்டுப் போகையும்
அந்ய கீரத்த த்வநியைக் கேட்ட போதே செவி புதைத்துக் கொண்டு சீக்கிரமாகப் போகாமையும்
ஆச்சார்யனுடையவும் இதர ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் சாயையை மிதித்தல் செய்து நடக்கையும்(எம்பார் ராமானுஜ பதச் சாயா)
தன் நிழல் அவர்கள் மேல் பட நடக்கையும்
சம்சாரிகள் நிழல் தன் மேல் படுத்தல் தன் நிழல் அவர் மேல் படுத்தல் செய்யும்படி கூச்சமற்று நடக்கையும்
பகவத் பாகவத சமாராதன அர்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ண நடக்கும் போது ப்ரஹ்ம ருத்ராதி வசதிகளை அணுகிப் போகையும்
ஸாண்டில்ய ஸ்ம்ருதி -பிரம்மா ருத்ராதி வஸதி ஸ்மஸாநம் சரமேவ ச -அபலீம் ராஜ தாலீம் ச தூரத பரி வர்ஜயேத்-தேவதாந்திர உச்சிஷ்டங்களை மிதித்து நடக்கையும்
பாஷண்டிகளுடன் வழி நடக்கையும்
வழி இடுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை பரிந்து பாராமல் போகையும்
எல்லை யளவும் சென்று எழுந்து அருளுகிறவர் மறையும் அளவும் நில்லாமல் மடங்குகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளா நின்றார்கள் என்று கேட்டு எதிரே போகாயையும்
சம்சாரிகளை எதிர் கொள்ளுதல் வழி விடுதல் செய்கையும்
கேவல தேக யாத்ரா பரவசனாய் சம்சாரி க்ருஹங்கள் தோறும் சென்று தட்டித் திரிகையும்
பகவத் பாகவத் தேசிக அபிமானம் உள்ள திவ்ய தேசத்தில் செல்லாமல் திரிகையும்
பிரகிருதி சம்பந்தத்தை இட்டு சம்சாரிகள் உத்சவங்களுக்குப் போகையும்
ஆத்ம சம்பந்த அநுரூப பகவத் பாகவத உத்சவங்களுக்குப் போகாமையும்
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் அலையும்படி அதிர நடக்கையும்
சதாச்சார்யன் பின் சென்று சேவியாமையும்
பிரயோஜனாந்தர பரனாய் பின் செல்லுகையும்
அவன் போ என்னப் போகாமையும் வா என்ன வாராமையும்
இயலில் முன்னே செல்ல முயலுகையும் பின் செல்லப் பிற்காலிக்கையும்
பெரும் கூட்டத்தில் நடக்க மாட்டாதாரை விட்டுப் பறந்தோடுகையும்
ஆச்சார்யனுக்குத் திருக் கை கொடுத்துச் செல்லுமிடத்து சிநேக பயமின்றி பேணிச் செல்லாமையும் –என்கை –
37-ஸ்திதி விரோதி –
சம்சாரிகளுடைய புடவை பட நிற்கையும்
ஏகாசனத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தன் புடவை பட நிற்கையும்
சம பிரதிபத்தியாலே ஏகாசனத்தில் இருக்கையும்
சம்சாரிகள் ஆசனத்தின் கீழ் இருக்கையும்
அவர்களுடன் ஏக க்ருஹத்தில் வசிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்கையும்
அவர்கள் திரளிலே இருக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசனத்தின் கீழ் இருக்க மாட்டாமையும்
ஏக பவனத்தில் இருக்கப் பிற்காலிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்க லஜ்ஜிக்கையும்
அவர்கள் திரளில் இருக்க முசிக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இராது ஒழிகையும்
ஆச்சார்யன் எம்பெருமான் திரு வீதியிலே எழுந்து அருள தான் உள்ளே இருக்கையும்
ஆச்சார்யனையும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்டு சடக்கெனத் துடித்துக் கொண்டு எழுந்து இராது இருக்கையும்
சம்சாரிகளைக் கண்டு த்ருணவத் கரித்து இருக்காதே விநயம் பாவித்து எழுந்து இருக்கையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வரவு கேட்டு சம் ப்ரம ந்ருத்யம் அற்று ஆறி இருக்கையும்
தான் பகவத் சமாராதானம் பண்ணும் வேளையில் ஒரு பாகவதர் எழுந்து அருளினால் உதறிக் கொண்டு எழுந்து இருந்து அவரை சத்கரியாதே சமாராதன வேளையில் எழுந்து இருக்கலாகாது என்று இருக்கையும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை தீர்த்தம் கொள்ளா நிற்க மற்றொரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளினால் அடியேன் அடியேன் என்கை ஒழிய ஸ்ரீ பாதத்தை விட்டு எழுந்து இருக்கையும்
கொடுக்கிறவரும் அடியேன் அடியேன் என்று வணங்கும் அத்தனை யன்றி ஸ்ரீ பாத தீர்த்தத்தைப் பறித்து எழுந்திருக்கையும்
ஜங்கம அஜங்கம ஸ்ரீ விமானச் சாயையை மிதித்து நிற்கையும் -ஜங்கம ஸ்ரீ விமானம் -பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் வாகனம்-அஜங்கமம் -எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம் –
தேவதாந்தர ஆலய கோபுர தத் பக்தச் சாயை தன் மேல் பட நிற்கையும்
தேவதாந்தர அபிமானம் ஒழிய மர நிழலில் ஒதுங்குகையும்
தத் சேஷமான ஸ்தலங்களில் தங்குகையும்
பாகவத பவனங்களை விட்டு அபாகவத க்ருஹங்களிலே தங்குகையும்
ஆச்சார்யன் நிற்கத் தான் இருக்கையும்
ஆச்சார்யன் நடக்கத் தான் இருக்கையும்
அவன் நின்று இருக்கச் சொல்லாச் செய்யாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியில் மதியாமல் கால் நீட்டி இருக்கையும்
திரு முற்றங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு எழுந்து இராமையும்
பகவத் பாகவத சந்நிதில் செம்பளித்துத் த்யானம் பண்ணுகையும்–என்கை –
38-ஆவஸ்யக விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் திரு மாளிகையில் எல்லைக்குள்ளே எச்சிலாக்குகையும்
எம்பெருமானும் முதலிகளும் எழுந்து அருளும் திரு வீதியில் எச்சிலாக்குக்கையும்
நித்ய ஸூரிகள் திருப் பூ மரங்களாய் வந்து அடிமை செய்கிற திரு நந்தவனத்தில் எச்சிலாக்குகையும்
ஆச்சார்யன் இருக்குமிடத்தை எச்சிலாக்குகையும்
எச்சிலுடன் ஆச்சார்யன் பின் செல்லுகையும்
எச்சிலுடன் எம்பெருமானை ஸ்பர்சிக்கையும் -பாகவதர்களை ஸ்பர்சிக்கையும் -ஒதுங்கி நடவாது ஒழிகையும் -திரு மாளிகை திரு நந்தவனங்களில் புகுகையும் என்கை-
39-சரீர சுத்தி விரோதி –
திருமஞ்சனத் துறைகளை தூஷிக்கையும்
ஆச்சார்யனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் விநியோஹ அர்ஹமான திருமஞ்சனத்தை சேஷமாக்கி தூஷிக்கையும்
அவர்கள் விநியோகித்து ஒழிந்தது கொண்டு சரீர சுத்தி பண்ணுகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு மிக்க சேஷத்தைக் கொண்டு பாத ப்ரஷாலனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் திருக்கை விளக்கும் இடத்தில் தானும் கை கால் கழுவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மேனியில் தெறிக்கக் கொப்பளிக்கையும்
பாகவத தர்சனமே சுத்தி கரம் என்று அறியாமையும்
இத்தை விட்டு சரீர சுத்தியை அபேஷிக்கையும்–என்கை-
40-ஸ்நான விரோதி –
ஸூத்தி வேண்டி குளிக்கையும்
பிரபன்னனனாய் இருந்து விசேஷ திவசங்களில் குளிக்கையும்
ஆன்ருசம்ஸ் யார்த்தமாகவும் -தர்சன பரிபாலனார்த்த மாகவும் -லௌகிக அனுசாரம் பண்ணி அமுது செய்யும் இடத்து -தத் அநுசார ஹேதுவான சரீர ஸ்திதியைக் கண்டு பயம் அனுவர்த்தியாது ஒழிகையும்
திருமஞ்சனத் துறைகளிலே குளிக்கையும்
சம்சாரிகள் குளிக்கும் துறையிலே குளிக்கையும்
சம்சாரிகளை குளிக்கும் துறையிலே குளிக்கையும் ஸ்ரீ சம்சாரிகளை முன்னிட்டு குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பின்னிட்டு தீர்த்தமாடுகையும்
மந்திர ஸ்மரணத்துடன் குளிக்கையும்
கங்கா தீர்த்த ககதனம் பண்ணிக் குளிக்கையும்
பகவத் பாகவத உத்சவங்களில் அந்ய ஸ்பர்ச சந்கையால் குளிக்கையும்
அர்ச்சாவதாரவத் பரம பாவனமான விமல சர்ம விக்ரஹ ஸ்பர்ச சங்கையால் குளிக்கையும்
அபாகவாத ஸ்பர்ச சங்கையால் ஸ்நானம் பண்ணாமையும்
ஆச்சார்ய தீர்த்த திவசங்களில் சிஷ்டா சரிதமான தீர்த்தமாடாது இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தெறிக்கத் தலை உதறுகையும்
வேதகப் பொன்னான விலஷண ஸ்பர்ச பாவனத்வம் அறியாமல் குளிக்கையும்
எம்பெருமானைத் திருமஞ்சனம் பண்ணிக் குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராடப் பண்ணித் தீர்த்தமாடுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை வழி விட்டு முழுகுகையும்
சரீர யாத்ரா மாத்தரம் என்று முழுகாமையும்-என்கை-
41-அனுஷ்டான விரோதி
ஆச்சார்ய கைங்கர்யமும்- பகவத் கைங்கர்யமும் -பாகவத கைங்கர்யமும்- அல்லாதவற்றை செய்கையும்
பகவத் கைங்கர்யம் நிருபாதிகம் ஆச்சார்ய கைங்கர்யம் ஔபாதிகம் என்று செய்கையும்(சாஸ்தா நாராயண தேவதா -திருவடி ஸ்தானம் -காருண்யாத் ஸாஸ்த்ர பாணி -உலவும் பெருமாள்)
ஆன்ருசம்ஸ் யார்த்தமாக செய்யுமவற்றை லோக சங்க்ராஹார்த்தமாக செய்கையும்
ஸ்வரூப அனுகுணம் அல்லாத ஆன்ருசம்ஸ் யார்த்தமான கர்த்தவ்யங்களில் கைங்கர்ய புத்தியும்
எம்பெருமான் எழுந்து அருளா நிற்க திரு ஒலக்கமாக எழுந்து அருளி இரா நிற்க -ஆன்ரு சம்ச்ய ப்ரவ்ருத்தி வேணும் என்று நினைக்கையும்
கோஷ்டியாக இருந்து பகவத் குண அனுசந்தானம் பண்ணி நிற்க காருண்ய பிரவ்ருத்திக்குக் காலம் என்று கோஷ்டியைக் குலைத்துக் கொண்டு எழுந்து இருக்கையும்
திரு நாமம் சாத்துகை -தீர்த்த பிரசாதம் கொள்ளுகை -திருவடி விளக்குகை -அருளிச் செயல் அனுசந்திக்கை-திரு விளக்கு ஏற்றுகை- திருமாலை சாத்துகை -திரு நந்தவனம் செய்கை- ஸ்ரீ வைஷ்ணவர்களை சத்கரிக்கை –தத்வ ரஹஸ்ய திவ்ய பிரபந்தம் ஒதுவிக்கை -ஒதுகை-துடக்கமான ஸ்வரூப அனுஷ்டானங்களில் மோஷ சாதன புத்தியும்
பூர்வர்கள் செய்யாதன செய்கையும்
பலாபிசந்தி பூர்வகமாக பகவத் கைங்கர்யமும்
அவன் உகந்த அடிமை செய்யாதே தான் உகந்த அடிமை செய்கையும் -என்கை –
42-லஷண விரோதி –
தோளில் திரு இலச்சினை தோன்றாது இருக்கையும்
அசிஷ்ட பரிக்ருஹீதமான பூ முத்ரையை தரிக்கையும்
சிஷ்ட பரிக்ருஹீதமான தப்த முத்ரையைத் தரியாமையும்
சரீர ரோக நாசார்த்தமாக தப்த முத்ரையை தரிக்கையும்
சம்சார ரோக நாசகம் என்று தரியாமையும்
ஸ்வாமி சின்னம் என்று தரியாமையும்
சம்சாரிகள் கைவிடுவார்கள் என்று கூச்சத்துடன் தரிக்கையும்
சத்துக்கள் கைக் கொள்வார்கள் என்று ஹர்ஷத்துடன் தரியாமையும் –
சிஷ்ட பரிக்ரஹம் அற்ற அப்ரசஸ்த தேசங்களில் திரு மண் கொண்டு திரு நாமம் இடுகையும்
சிஷ்ட பரிக்ரஹம் உள்ள திருமலை தொடக்கமான பிரசஸ்த திவ்ய தேசங்களில் உண்டான திரு மண் இடாமையும்
தத்தத் திவ்ய தேச வைபவம் அடியான கௌரவ பிரதிபத்தி இன்றிக்கே திருநாமம் இடுகையும்
முமுஷூவாய் இருந்து ஸ்வேத வர்ணமான திருநாமம் இடாமையும்
தத் தத் காம்ய பிரதமான வர்ணாந்தரம் உள்ளது கொண்டு திரு நாமம் இடுகையும்
மத்யே சித்ரமான ஹரி பாத க்ருதி ஒழிந்த தீபாகாராதியான ஊர்த்வ புண்ட்ரத்தை தரிக்கையும்
திரு நாமம் சொட்டளவே இடுகையும்
நுணுக்கி இருக்கையும்
பூர்வர்கள் சாத்தும் அளவும் அறிந்து இடாமையும்
பன்னிரண்டும் தரியாமையும்
கேசவாதி அடைவே தரியாமையும்
அனைத்தின் இடம் அறிந்து இடாமையும்
உகிர் கொண்டு ஒடுக்குகையும்
நடுத் திருச் சூர்ணம் இன்றித் திருநாமம் இடுகையும்
மந்த்ராந்தரத்தினால் அபி மந்தரித்து இடுகையும்
யந்த்ரம் கீறி இடுகையும்
அந்ய சேஷமான ஜலம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடுகையும்
பாகவத சேஷம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடாமையும்(வைஷ்ணவ வாமனத்தில் -வடுகா -என்ன -நம்பி வைஷ்ணவ நம்பியான வ்ருத்தாந்தம்)
ஆச்சார்யனுக்கு வைத்த திரு மஞ்சனத்தை கொண்டு கரைத்து இடுகையும்
சம்சாரிகள் முன் திரு நாமம் இடுகையும்
ப்ராக்ருதர் கையில் திருமண் வாங்கி தரிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் என்று தரிக்கையே பிரயோஜனம் என்று தரியாமையும்
கேவல சாஸ்திர விஹிதம் என்று தரிக்கையும்
விசிஷ்ட பரிக்ருஹீத லஷணம் என்று தரியாமையும்
அழித்து அழித்து இடுகையும்
ஆச்சார்ய சேஷமான திருமண் திருச் சூரணங்களை கொண்டு தரியாமையும்
ஆச்சார்யனை த்யானித்து தச் சேஷமாக தரியாமையும்
ஆச்சார்யன் சாத்துமவத்தை தான் சேஷமாக்கித் திருநாமம் இடுகையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியிலே திரு நாமம் இன்றி முகம் காட்டுகையும் –
ஒற்றைத் திரு மணி வடம் -ஒற்றைத் திருத் துழாய் வடம் தரிக்கையும்
தாவடமாகத் தரிக்காமையும்
முறுக்கறை நாண் கட்டுகையும்
அறையில் பின்னல் அற்று இருக்கையும்
வஸ்த்ர யுக்ம கௌபீ நங்கள் ஓன்று குறைகையும்
கிருஷ்ண கம்பள ஆச்சாதனம் பண்ணுகையும்
கந்தை போக்கையும்
முதலிகளாய் இருந்து கீழ் போக்கி உடுக்கையும்
முற்றி இல்லாத சேலை யுடுக்கையும்
வேஷ்டி தாங்கிப் பின்னல் இல்லாமையும்
கழுத்துக் கீழ் வபனம் -ஷவரம்- பண்ணுகையும்
ப்ரபன்னனான பின்பு கூம்பன் கட்டுகையும்-மீசை திருத்துகையும்
உகிர் ஒடுக்கி வளர்க்கையும் –
செம்பஞ்சி இடுகையும்
கழுத்தை வளைத்து சந்தனம் பூசுகையும்
களப பிரசாதம் அல்லாத சந்தனம் பூசுகையும்
பூ முடிக்கையும்
விசேஷித்து நம் பெருமாள் உகந்த புழுகு பூசுகையும் செங்கழு நீர் முடிக்கையும்
தேக பரனாய் சாந்து சந்தனம் பூசுகையும்
திருத் தாம்பூலம் பிரசாதம் அல்லாத வெறும் தாம்பூல சர்வணம் பண்ணுகையும்
காதில் அநந்த முடியிடுகையும் -அனந்ததோரம் தரிக்கையும் -திருத் துழாய் சொருகையும்
வெள்ளிக் கிழமை தந்தாவனம் பண்ணுகையும்
வச்யாஞ்சன சூர்ணம் தரிக்கையும் -ரஷை கட்டுகையும்
வெள்ளி மோதிரம் இடுகையும்
ஆயுதம் பிடிக்கையும்
ஆடை பகுந்து போர்க்கையும்
புள்ளடியான தலைக் கட்டுகையும்
குமிடுகையும் -தலையில் வணக்கம் அற்று இருக்கையும்
கண்ணில் தண்ணளி யற்று இருக்கையும்
வாயில் அருளிச் செயலும் பிரபந்த பேச்சும் அற்று இருக்கையும்
அதிரப் பேசுகையும்
அவிடு பேசுகையும்
வெடிச் சிரிப்பு சிரிக்கையும்
கையில் அஞ்சலி அற்று இருக்கையும்
முஷ்டிக் கூடித் தழும்பு அற்று இருக்கையும்
மார்பு இருமாந்து இருக்கையும்
அடியில் மென்னடை யற்று இருக்கையும் -பதறி நடக்கையும்
எத்தாப்பு கூட்டுகையும்
பகவத் குண ஸ்ரவணத்தில் பாகவத தர்ஸ நாதிகளில் ஆனந்தாஸ்ரு அற்று இருக்கையும் சரீரம் புளகியாமையும் -போஷியாமையும்
பாகவத விஸ்லேஷத்தில் வாடாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் வடிவிலே நிழல் எடுத்துத் தோற்றாமையும்
ஸ்ரீ வைஷ்ணவப் புகரற்று இருக்கையும் -என்கை-
43-ஸ்மரண விரோதி
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அன்யே து புருஷ வ்யாக்ர சேதஸா யேப் யபாஸ்ரயா
அஸூத்தாச்தே சமஸ்தாஸ் து தேவாத்ய கர்ம யோநய -என்கிறபடியே
ஸூ பாஸ்ரய விக்ரஹத்தை ஒழிய தேவதாந்திர ரூப தச் சரீரங்களை நினைக்கையும்
சதாச்சார்ய விக்ரஹத்தை த்யாநியாமை
ப்ராக்ருத சமூஹத்தை ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத அபிமானம் உள்ள திவ்ய ஸ்தலங்களை ஸ்மரியாமையும்- இதர ஸ்தலங்களை ஸ்மரிக்கையும்
பரம பாகவதருடைய ஆலோக ஆலாப அங்கீகார விசேஷாதிகளை நிரந்தரம் நினையாமையும் -இதரருடைய ஆலோக ஆலாப அங்கீகார திகளை ஒருக்கால் ஆகிலும் ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத குண சம்ருத்தியை மனனம் பண்ணாமையும்
அர்ச்சாவதாரத்தில் ப்ராக்ருத உபாதான ஸ்ம்ருத்தியும்
விலஷண பாகவத ஜன்மாதிகளில் அபகர்ஷத்வ ஸ்ம்ருதியும்
சாஷாத் பகவத் அவதாரமான ஆச்சார்யன் பக்கல் மானுஷ ஸ்ம்ருத்தியும்
ஆச்சார்யன் பக்கல் உபகார ஸ்ம்ருதி இல்லாமையும்
ஆச்சார்ய துல்யர் பக்கல் சமத்வ ஸ்ம்ருதியும்
ஆழ்வார்கள் பாசுரங்களில் நிகர்ஷ பாஷா ஸ்ம்ருதியும்
ஆத்ம யாத்ரையில் விஸ்ம்ருதியும் தேக யாத்ரா ஸ்ம்ருதியும்
பகவத் போக அனுரூபம் அல்லாத ஸ்வரூப ஸ்பாவ ஸ்ம்ருதியும்
சித்த சாதனா நிஷ்டா விஸ்ம்ருதியும்
சாத்திய சாதனா சத்பாவ ஸ்ம்ருதியும்
தத் கைங்கர்யத்தில் பூர்ண சாத்திய ஸ்ம்ருதியும்
ததீய கைங்கர்யத்தில் தத் ஸ்மரண ராஹித்யமும்
பகவத் பாகவத விஷயங்களில் தான் செய்த அனுகூல பிரவ்ருத்திகளை ஸ்மரிக்கையும்
பிரதிகூல பிரவ்ருத்திகளை ஸ்மரித்து பீதன் ஆகாமையும்
விசேஷித்து ஆச்சார்யன் செய்த உபகாரங்களை நினையாது ஒழிகையும்
சாதனாந்தர நிஷ்டர்க்கு அவஸ்யம் அபேஷிதமான அந்திம ஸ்ம்ருதியும் -என்கை –
அந்திம ஸ்ம்ருதி ப்ரபன்னனுக்கு விரோதி அல்ல -இது இல்லாவிடில் பேறு இல்லை என்ற நினைவு தான் விரோதி
44-சங்கீர்த்தன விரோதி –
குண கீர்த்தனம் பண்ணா நிற்கச் செய்தே குணாந்தரங்கள் பிரஸ்துதமானால் இகழாது ஒழிகையும்
க்யாதி லாப பூஜாதி பிரயோஜனாந்தரங்களைச் சொல்லிக் கீர்த்திக்கையும்
வக்த்ரு தோஷம் உள்ளவற்றை கீர்த்திக்கையும்
பாஷாந்தரம் என்று வக்த்ரு தோஷம் அற்றவற்றைக் கீர்த்தியாது ஒழிகையும்
பகவத் சங்கீர்த்தனம் பண்ணும் நாவாலே இதர சங்கீர்த்தனம் பண்ணுகையும்
சர்வாதிகாரம் ஆனவற்றை அதிக்ருதாதிகார பிரதிபத்தி பண்ணி கீர்த்திக்கையும்
விசேஷ ஜ்ஞானான பின்பு ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உடைய பாசுரங்களை ஒழியக் கீர்த்திக்கையும்
அவற்றை சதாச்சார்யன் பக்கல் ஓதாமல் விழுவேடு எடுத்தும் சுவர்ப் புறம் கேட்டுக் கீர்த்திக்கையும்
பகவன் நாமங்களை கேவல பாவநத்வ பிரதிபத்தியால் கீர்த்திக்கையும் அவற்றில் போக்யதா புத்தி பிறவாமல் கீர்த்திக்கையும்
பாகவத கீர்த்தனம் கலசாதே பகவத் கீர்த்தனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் சந்நிதியில் அவர் சொல்லாமல் கீர்த்திக்கையும் அவர் சொல் என்னச் சொல்லாமையும்
திரளில் தான் முந்தி முதல் எடுக்கையும்
மற்று ஒருவர் முதல் எடுத்தால் பின்னுரு சொல்லாது இருக்கையும்
பின்னடிக்குப் பிற்காலிக்கையும்
திரு அஷரங்கள் நழுவும்படி ஒட்டுகையும்
திரளில் தவறிற்று என்று திருத்துகையும் ஷேபோக்தி பண்ணிச் சிரிக்கையும்
முதல் முடிவு இரண்டுரு அனுஸ்தியாமையும்
சடகோபனுக்கு அஞ்சலி செய்யாமையும்
திவ்ய பிரபந்தங்களை ஓதிச் சாத்தாமையும்
திருஷ்ட பிரயோஜனத்தை நச்சி ஒதுவிக்கையும்
கூலிக்கு திருவத்யயனம் சாத்துகையும்
நீச ஸ்பர்சமுள்ள துறையிலே நித்ய கர்மாநுஷ்டானம் பண்ணுவாரைப் போலே க்ருஹ பூஜாதி தேவதாந்தர ஸ்பர்சமுள்ள ஸ்பர்சமுள்ள க்ரஹங்களிலே திருவத்யயனத்தை நடத்தி ஸ்வரூப ஹானிப் படுகையும்
தன் வியாதிக்கு சஹஸ்ர நாமம் -ஏழை எதலன்- ஆழி எழச் சங்கு எழ -ஜபிக்கையும்
குரு ஸ்துதி பூர்வக பகவத் ஸ்துதி பண்ணுகையும்-என்கை-
குரு பரம்பர அனுசந்தானம் இல்லாத த்வய அனுசந்தானமும் தேவதாந்திர பஜனத்தோடு ஒக்கும் -ஸ்ரீ முதலி யாண்டான் திரு வாக்கு –
45-ஸ்ரவண விரோதி
பகவத் கதை நடக்கும் இடத்து அவிடியை இகழாது ஒழிகையும்
அந்ய மனஸ்கனாய் செவி ஏற்றுக் கேளாமையும்(வேண்டுவன கேட்டியேல் -கேளாய்)
பகவத் குணம் கேளா நிற்கப் புறம்பில் வார்த்தை செவிப்படுகையும்
இதுக்கு முன்பு தான் கேட்டு அறியாத ப்ரமேயங்களை கேட்கும் போது ஒக்கும் ஒக்கும் என்று அணுபாஷிக்கையும்
பாண்டித்ய பிரகட நார்த்தமாக நடுவே துஸ் சோத்யம் பண்ணுகையும்
சொல் மினுக்குக் கேட்டு அசூயைப் பட்டு முகம் கன்றுகையும்
நல் வார்த்தை கேட்டு நன்று என்று நா எழாமையும்
புத்திமான்களாய் ஸ்ரவிக்கும் ஸ ப்ரஹ்ம சாரிகளோடு அசூயை கொண்டாடுகையும்
வயிர வுருக்கான பகவத் குணங்களைக் கேட்டு நெஞ்சு உருகாமையும்
பக்தியுடன் கேளாமையும்
ஸ்வ நேத்ர அங்க விக்ரியை இல்லாமையும்
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
சதாச்சார்யன் பக்கல் கேளாமையும்
கேட்ட சீரிய அர்த்தத்தை அநதிகாரிகளுக்குச் சொல்லுகையும்
அவைஷ்ணவர்கள் சொல்லும் பகவத் கதையைக் கேட்கையும்
அசம்ப்ரதாயார்த்தங்களைக் கேட்கையும்
பகவத் பாகவத ஆச்சார்ய வைபவம் கேட்கும் செவியாலே தந் நிந்தைகளைக் கேட்கையும்
சரமார்த்தம் கேட்டு நெஞ்சில் படாமையும்
பகவத் கதை நடக்கும் இடத்தில் தேவதாந்திர கதைகள் பிரஸ்துதங்கள் ஆகையும் -என்கை –
46-ஸேவா விரோதி -(வணக்கம் -கைங்கர்யம் -சேவா காலம் -பல அர்த்தங்கள்)
பகவத் ஷேத்ரங்களைக் குறித்து யாத்ரை பண்ணா நிற்க இதர ஷேத்ரங்களிலே புகுவதும் அன்றியே அங்கே சில விசேஷம் கண்டு ஆச்சர்யப் படுகையும்
அந்ய கோபுராதிகளை விசாரியாமல் அஞ்சலிக்கையும் அறிந்த பின்பு அனுதாபம் இன்றி நிற்கையும்
பகவத் கோபுராதிகளை தூரத்தில் கண்ட போதே உகளித்து அஞ்சலித்து தண்டம் இடாமையும் செருப்பு கழற்றாமையும் வாகனங்களில் நின்று இழியாமையும்
திருப்பதிக்குள் செருப்புடன் செல்லுகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளுள் தண்டன் இடாமல் உள்ளுப் புகுருகையும்
அத் திரு மாளிகைக்குள் புகாமல் பெருமாள் கோயிலில் நேரே செல்லுகையும்
கோயில் வாசலிலே தண்டன் இடாமல் புகுருகையும்
புடவையைப் போர்த்துப் புகுருகையும்
எம்பெருமானுக்கும் பலி பீடத்துக்கும் நடுவே சென்று புகுருகையும்
அப்ரதஷிணமாக வந்து புகுருகையும்
திரு வாசல் படிகளை மிதிக்கையும்
முற்படச் சுற்றுக் கோயிலிலே சேவியாது ஒழிகையும்
திவ்ய விமானச் சாயையை மிதிக்கையும்
திரு வாசல் காக்கும் முதலிகளை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
சேனை முதலியாரை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
ஆச்சார்யனை முன்னிலையாகப் புக்கு சேவியாமையும்
எம்பெருமான் சந்நிதியில் ஒதுங்கப் புகாமையும் எதிரே கூசாமல் புகுருகையும்
வலப் பக்கத்தில் இடம் உண்டாய் இருக்க இடப் பக்கத்திலே நின்று சேவிக்கையும்
சம்சாரிகளுடன் கலந்து சேவிக்கையும்
பாதாதி கேசாந்தமாகக் கண்ணார சேவியாமையும்
திருப் பல்லாண்டு முதலிட்டு இரண்டு பாட்டு துடங்கிப் பூர்வர்கள் அனுசந்தித்தவற்றை அனுசந்தியாது ஒழிகையும்
பிராக்ருதர் சொல்லுமவற்றைச் சொல்லி சேவிக்கையும்
பிரயோஜனாந்தரங்களை பிரார்த்தித்து சேவிக்கையும்
அந்ய சித்தனாய் சேவிக்கையும்
புதுப் பானையில் புக்க ஈ போலே பொருத்தம் இன்றி சேவியாமல் புறப்படுகையும்
திருவாதாரனத்தில் மத்யே மீளுகையும்-அமுது செய்கிற வேளையில் பலி பிரதானத்துக்கு முன்னே மீளுகையும்
தூப தீபம் திருவந்திக் காப்பு கண்டு அருளும் போது-அமுது செய்து அருளுகிற போது -பராக்கடித்து இருக்கையும் ததுசிதமான பாட்டுக்களை அனுசந்தியாமையும்
கூத்திலும் பாட்டிலும் சக்தனாய் பகவத் விக்ரஹத்தில் கண் வையாது இருக்கையும்
அவிகிற திரு விளக்கைக் கண்டு சடக்கு என்று நந்தாது இருக்கையும்
செத்தையைக் கண்டு திருவலகிடாதே போகையும்
சாத்தின திருமாலை திருப் பரிவட்டம் திரு ஆபரணங்களில் கண் இடுகையும் -ஆக்ரானம் பண்ணுகையும்(மோந்து பார்க்கையும்)
அமுது செய்து அருளுவதற்கு முன்னே எம்பெருமான் திருப்பாவாடை கண்டு நா நீருகையும்
திரு முற்றத்துக்குள் கால் நீட்டுதல் -எத்தாப் புகட்டுதல் -புடவை போடுதல் -கொட்டாவி கொள்ளுதல் -சோம்பல் முறிதல் மயிரு தட்டுதல் உகில் முறித்தல் மூக்கு சிந்துதல் காரித்து உம்முதல் -தாம்பூல சர்வணம் பண்ணுதல்
மேல் புடவை போர்த்தல் உறங்குதல் அவிடு சொல்லுதல் கை தட்டச் சிரித்தல் கதறி அழைத்தல் வைதல் சீறுதல் ஒடுக்கம் அற்று கர்வித்து இருத்தல் முதலான
அபசாரங்களை பரிஹரித்து வர்த்தியாமையும்
அங்கே சம்சாரிகளை வினவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமதி பண்ணுகையும் கேவல பகவத் சேவையை பண்ணித் திரிகையும் பாகவத சேவையில் நழுவித் திரிகையும்
ஆச்சார்ய சேவைக்கு அசலாய்த் திரிகையும்
அவனது பாதச் சாயையாய்க் கொண்டு பின் சென்று சேவியாமையும்-என்கை-
47-சமாராதன விரோதி(ஸம்யக் ஆராதனம் -ஆச்சார்யர் நியமனப்படி -நித்ய கிரந்தம் -ஜீயர் படி -ததீயாராதனமும் சமாராதானமே)
வித்யாதி க்ரம பீதியாலே செய்கையும் -ப்ரீதி ப்ரேரிக்கச் செய்யாமையும்
சோம்பிச் செய்கையும்
ஆளிட்டுச் செய்கையும்
ப்ராப்த காலத்தில் செய்யாமையும் -தனக்குக் கை ஒழிந்த போது செய்கையும்
க்யாதிக்குச் செய்கையும்
கூலிக்குச் செய்கையும்
பலத்தைக் கோலி செய்கையும்
அவன் தந்த கரணங்களுக்கு அடைத்த தொழில் என்று செய்யாமையும்
ஸ்வரூப அநுரூப ப்ரவ்ருத்தி என்று செய்யாமையும்
அவன் நிரபேஷன் பூரணன் என்று செய்யாமையும்- நம் கை பார்த்து இருக்கும் சாபேஷன் என்று செய்கையும்
தன் வஸ்துவைத் தான் கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்யாமையும்- நம் வஸ்துவை கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்கையும்(என்னையும் என்னுடைமையும் சக்கரப் பொறி பொறி ஓற்றிக் கொண்டு -சேஷத்வ ஞானமே ஆத்மாவுக்கு சக்கரப் பொறி)
தன் ஸூத்தியை முன்னிட்டு செய்கையும் -கைக் கொண்டு அருளுகிறவனுடைய ஸூத்தியை முன்னிட்டுச் செய்யாமையும்(புரா நீசனாகவே இருந்தாலும் ஸமாச்ரயே ஆதி தேவம் -சாது கோட்டியுள் கொள்ளப்படுவான் -பகவத் ப்ரபாவாத் -என்ற நினைவு வேண்டுமே)
பாவ ஸூத்தியே அவனுக்கு வேண்டுவது என்று செய்யாமையும்(பக்தியோடு உபகாரம் -பக்திக்கே அருளுகிறவன் உபகாரத்துக்காக அல்லவே)
பதார்த்த வைஷம்யம் பார்த்துக் கைக் கொள்ளும் என்று செய்யாமையும்
துஷ்கர பிரதிபத்தியால் செய்கையும் -பகவத் சமாராதானம் அத்யந்தம் ஸூகரம் என்று செய்யாமையும்
அத்யந்தம் சௌலப்யம் கொண்டு ஔதா ஸீந்யத்துடன் செய்கையும்
அர்ச்சாவதாரமே பர வஸ்து மூச்சுண்டு என்று செய்யாமையும்(அவன் இவன் என்று கூழேல் மின் -அவனாகும் நீள் கடல் வண்ணனே -வைகுண்ட நாத அரங்கமாளி என்னாளி —நவ களே பரம் –பூரி ஜெகந்நாதப் பெருமாள் -நீலாத்ரி நிவாஸாய -திருமேனி மற்றும் பொழுது -அன்று சக்கர லாஞ்சனம் பண்ணிய மரம் கிடைக்கும் -அமாவாசை நாடு இரவில் ஊரடங்கும் -பொழுது -பாண்டாக்கள் உள்ளே சென்று புதிய திருமேனி -தொப்புளில் -எடுத்து வைக்க மூச்சு விடும் ஸப்தம் கேட்க்குமாம்)
தன் ஆச்சார்யனை முன்னிட்டு அவனுக்கு எடுத்துக் கை நீட்டுகிறோம் என்று செய்யாமையும் -அவர்களது மதி -அனுமதி-கொண்டு செய்யாமையும்-
சம்சாரிகள் கண் படச் செய்கையும்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருக்கத் திருத் திரை வளைத்துச் செய்கையும்-
சாமான்ய சாஸ்த்ரமான முற்றல் சடங்குகள் கொண்டு செய்கையும் -சிஷ்டாசார சித்தமான திருவாராதன விசேஷம் அறிந்து செய்யாமையும்-
மந்த்ராந்தரம் கொண்டு செய்கையும்- குரு பரம்பரா பூர்வகமான மந்திர அனுசந்தான பரனாய்ச் செய்யாமையும்-(மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாமல் செய்ய வேண்டுமே -அவனே மந்த்ரம்)
விசேஷித்து அதின் விவரணமான ஆழ்வார்கள் பாசுரங்களையும் -அதின் கருத்தான ஆச்சார்ய வசனங்களையும் அனுசந்தித்திக் கொண்டு செய்யாமையும்-
திவ்ய ஸ்நபன தீப தர்சன வ்யவஹார ஸ்வீகார விஷயங்களில் பூர்வர்கள் அனுசந்திக்கும் ஆழ்வார்கள் பாசுரங்களை அனுசந்தியாமையும்-
விசேஷஜ்ஞர் உச்சரிக்குமவற்றை உச்சரியாமையும்-
அந்ய சித்தனாய் செய்கையும்-
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் அவனிலும் அதிகர் என்று அறியாதே வேறிட்டு அர்ச்சிக்கையும்-(விண்ணுள்ளாரிலும் சீரியர் -நான் பெரியன் நீ பெரியை என்றும் யார் அறிவர் -நம்மாழ்வார் -உம் பெருமாளை நீர் -என் பெருமாளை நான் -சேர்த்து வைக்கத் தட்டில்லையே -வடுக நம்பி)
கூடத் திருவடி விளக்கக் கூசுகையும்-
தழிகை தாழ வைத்து அமுது செய்யப் பண்ணுகையும்-
ஆச்சார்யர்களை அவனிலும் அதிகர் என்று அறியாமையும் -இருந்தபடியே அமுது செய்யப் பண்ணக் கூசுகையும்-
சம்சாரிகள் க்ருஹத்தில் எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் எம்பெருமானையும் கூட ஒன்றியே திருவடி விளக்குகையும்-
சிஷ்டர்கள் ஆதரியாத ததி பக்தாதிகளை ஆராதிக்கையும்-
அசாதாரணமான அர்ச்சாவதாரம் இருக்க- சாதாரணமான ஆதித்ய மண்டலாதிகளில் எம்பெருமானை அர்ச்சிக்கையும்-
அந்தர் யாகத்திலும் பஹிர் யாகமே அதிகம் என்று செய்யாமையும்-
ஆச்சார்யன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதாரத்திலே ஆவாஹாந உத்வாசனம் பண்ணி அநர்த்தப் படுகையும்-
தத் ஆராதனத்திலும் ததீய ஆராதனமே பரம் என்று பண்ணாமையும்-
தனக்கு விசேஷித்து வேண்டுவது சதாச்சார்ய சமாராதனம் என்று அத்யவசித்து பண்ணாமையும்-
ஆச்சார்யனிலும் ஆச்சார்யன் திருவடிகளே திருவாராதானம் என்று உணர்ந்து ஆநுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் திருவடிகளிலும் திருவடிகளுடன் சம்பந்தம் உடைய திருவடி நிலையே சரம அதிகாரிகளுக்குத் திரு வாராதன விஷயம் என்று பழுக்க சிஷித்து தெளிந்து அனுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் ப்ரீதி வர்த்தகமான பகவத் பாகவத சமாராதனத்தை உபேஷிக்கையும் -த்விவித அர்ச்சனம் பண்ணுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைப்பறிந்து சடக்கெனத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணாமையும்-
தர்சநாத் க்ருஹ்யதே மயா-என்கிற தர்சன க்ரஹணத்தை காட்டிலும் -முக்ய க்ரஹணத்தில் பூர்த்தி உண்டு என்று ஆசரியாமையும்-(கண்டு அருளப் பண்ணுதல் -அமுது செய்யப் பண்ணுதல் -வாசி அறிய வேண்டுமே -)
ஆச்சார்யனுக்கும் தத் சத்ருசர்க்கும் எம்பெருமானுக்குப் பண்ணும் உபசாரங்களில் குறையச் செய்கையும்-
பகவத் சமாராதானம் பண்ணா நிற்க சாமான்ய சாஸ்த்ரங்களைக் கொண்டு உபய அர்ச்சனை பண்ணுகையும்-
ஆலயச்யத்தாலே யூஜ்ரும்பணாதிகளை-கொட்டாவி விடுதல் போன்ற -சோம்பல் செயல்கள் -பண்ணுகையும் -என்கை-
48-வந்தன விரோதி
நல்ல தரை பார்த்து தண்டணிடுகையும்
முடுக்கத் தண்டன் இடுகையும்
அந்ய மனஸ்கனாய் தண்டன் இடுகையும்(கைகள் கால்கள் தலை மனஸ் புத்தி அஹங்காரம் -சாஷ்டாங்க பிராணாமம்)
த்வய அனுசந்தானத்துடன் தண்டன் இடாமையும்
விதி ப்ரேரிதனாய் தண்டன் இடுகையும் -ப்ரீதி ப்ரேரிதனாய் தண்டன் இடாமையும்
பகவத் விஷயத்தில் போலே பாகவத விஷயத்திலே தண்டன் இடக் கூசுகையும்
ஆச்சார்யன் திருவடிகளிலே தலை பொருந்த தண்டன் இடாமையும்
ஒருக்கால் இட்டோம் என்று ஆறி இருக்கையும்
ஆச்சார்யன் எழுந்து இருக்கச் சொல்லுவதற்கு முன்னே தான் எழுந்து இருக்கையும்
வெறும் தண்டன் இட்டு ஸ்ரீ பாதங்களை சிரஸா வஹியாது ஒழிகையும்
முற்பட ஆச்சார்யனுக்கு தண்டன் இடாதே எம்பெருமானுக்கு தண்டன் இடுகையும்
பகவத் சந்நிதியில் பாகவதர்களை தண்டன் இடக் கூசுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடும் தண்டனை சஹித்து தண்டன் இடுகையும்
அவரிடும் தண்டனுக்கு தன்னை ஸ்வீ கர்த்தாவாக நினைத்து பிரதி தண்டன் இடுகையும்
அவர்களுக்கு உகப்பாகில் தன் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் அவரிடும் தண்டனைப் பெறாதே உதறிப் போகையும்(போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –ஆளவந்தார் என்று நினைத்து பெரிய நம்பி விழுந்து சேவிக்க பிரதி வந்தனம் செய்யாமல் –வளர்த்ததனால் பயம் பெற்றேன் -கைக் கிளியை வணங்கி -பரகால நாயகி –)
திருவாராதன சமனந்தரம் தீர்க்க தண்டன் இடாமையும்
இயல் சாற்றி ஒருவருக்கு ஒருவர் தண்டன் இடாமல் போருகையும்
கோஷ்டியில் முதலிலும் முடிவிலும் தண்டன் இடாது ஒழிகையும்
தூரஸ்தனானால் ஆச்சார்யன் எழுந்து அருளி இருந்த திக்கு நோக்கி நாடோறும் தண்டன் இடாது ஒழிகையும்
புரோடசத்தை நாய்க்கு இடுவாரைப் போலே ப்ராக்ருத பந்துக்களுக்கு தண்டன் இடுகையும்-
வர்ண நிபந்தன வந்த நீயரை வணங்குகையும்
திருப் பிண்டி (அமரும் ஆஸனம்)பேணாது இடுகையும்
தேவதாந்திர ஆலய சமீபங்களிலும் பாஷண்டி சமீபங்களிலும் தண்டன் இடுகையும்
திருப்பதியில் திரு வாசலில் தண்டன் இடாமல் புகுருகையும்
ஆச்சார்யனையும் ஆச்சார்ய துல்யரையும் திரளில் தண்டன் இடக் கூசுகையும்
அத்யாத்ம வித்யாப்ரதர் அல்லாத வித்யாந்தர பிரதரை தீர்க்க பிரணாமம் பண்ணுகையும்-மந்த்ர ரத்ன பிரதர் அல்லாத மந்த்ராந்த்ர பிரதரை தீர்க்க பிராணாமம் பண்ணுகையும்
ஆபத்து வந்தது என ப்ராக்ருதர் காலிலே விழுகையும்
பகவத் வந்தனத்தில் ஆலஸ்யப் படுகையும்
தத் ஸன்னதியிலே அபாகவத நமஸ்காரம் பண்ணுகையும் பகவத் நமஸ்காரம் பண்ணாது ஒழிகையும்–என்கை-
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply