49-அஞ்சலி விரோதி(அம் ஜலதி -ப்ரத்யக்ஷமாக அவனை உருக வைக்கும்-நிராலம்பனம் -காட்டவே ஆகாசத்தில் விபீஷணன் -நின்று -ஸர்வாயுத பாணி -அஞ்சலியே ஸர்வாயுத சமம்)
பகவத் அங்க்ரியை உத்தேச்யம் பண்ணாமையும் -வ்யதிரிக்தரை விஷயீ கரித்துப் பண்ணுகையும்
அஞ்சலிக்கு கால நியதி இல்லை என்று இராமையும் -காலம் பார்த்து பண்ணுகையும்
-சர்வாதிகாரம் என்று உணராமையும்- அதிக்ருதாதிகாரம் என்று இருக்கையும்
-பிரகார நியதி இல்லை என்று இராமையும் -அது உண்டு என்று இருக்கையும்
-சக்ருத் என்று இராமையும் – அசக்ருதாவ்ருத்தி வேணும் என்று இருக்கையும்
-காலாந்தரத்திலே பலிக்கும் அத்தனை என்று இருக்கையும் -அப்போதே பலிக்கும் என்று இராமையும்
-ஒவ்வொரு அபராதத்துக்கு பிராயச்சித்தமாய் இருக்கும் என்று இருக்கையும்- சர்வ அபராத பிராயச்சித்தம் என்று அறியாமையும்
-சில பாபத்தையே போக்கும் என்று இருக்கையும் -சர்வ பாபங்களையும் சமூலோன்மூலனம் பண்ணும் என்று அறியாமையும்
-ஒரு நன்மையே தரும் என்று இருக்கையும் -எல்லா நன்மைகளையும் குறைவறத் தரும் என்று அறியாமையும்
-பல ப்ராப்தி யளவும் நிற்குமத்தனை என்று இருக்கையும் -பல அனுபவ வேளையிலும் நிலை நிற்கும் என்று அறியாமையும்
-கருட முத்ரை விஷத்தை அடக்குமா போலே ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தை ஆளவற்று என்னும் விசுவாசம் இல்லாமையும் –
-(அம் ஜலயதீதி அஞ்சலி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
அபராதா நிமான் சர்வான் ஷமஸ்வ புருஷோத்தம
ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -ஸ்தோத்ர ரத்னம்)
சேஷிக்கு அமைத்த கை ப்ராப்தம் ஆனாப் போலே சேஷ பூதனுக்கு அஞ்சலி அநந்ய கதித்வ ஸூசகமாய்க் கொண்டு ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்று அறிந்து பண்ணாமையும்-
(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-28
காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)
-ஸ்வ ரஷணத்தில் கை வாங்காமல் அஞ்சலிக்கையும்
-அந்ய பல காமதயா அஞ்சலிக்கையும்
-அந்ய ஆலய சமீபங்களில் சட கோபனுக்கு அஞ்சலிக்கையும்
-அபாகவதர் அஞ்சலிக்கு பிரத்யஞ்சலி பண்ணுகையும் -பாகவதர் அஞ்சலிக்குப் பின் அஞ்சலிக்கையும்
-ஆச்சார்யனை தண்டன் இடாமல் அஞ்சலிக்கையும்
-நெஞ்சில் இடுக்குடன் (நேர்மை இல்லாமல்)அஞ்சலிக்கையும் -கையில் இடுக்குடன் அஞ்சலிக்கையும்
-சடகோபனுக்கு தலையில் அஞ்சலி பண்ணாமையும் -என்கை-
50-கால ஷேப விரோதி
தமோ குணா அபிபூதனாய்ப் பாதியில் உறங்கிப் போகையும்
-உணர்ந்தால் பரானர்த்தங்களை நெஞ்சினால் நினைந்து காலம் கழிக்கையும்
வேல் கணார் கல்வியே கருதி காலம் கழிக்கையும்
கரியான் கழல் காணக் கருதாதே காலம் கழிக்கையும்
வர்ண அனுகுண கர்ம கலாபங்களிலே காலம் கழிக்கையும்
த்வய அனுசந்தானத்தாலே காலம் கலியாமையும்
தேவதாந்திர பஜனத்தாலே காலம் கழிக்கையும்- பகவத் சமாராத நத்தால் காலம் கழியாமையும்
சாமான்ய சாஸ்த்ரார்த்த பட நாதிகளாலே காலம் கழிக்கையும்
தாத்பர்ய சாஸ்திர ஸ்ரவண மனநாதிகளால் காலம் கழியாமையும்
அநர்த்த கரமான அர்த்தார்ஜன உபாயங்களாலே காலம் கழிக்கையும்
ஆத்மா உஜ்ஜீவன அர்த்த உபாயங்களால் காலம் கழியாமையும்
பர ஹிம்சையால் காலம் கழிக்கையும்- பர உபகாரத்தால் காலம் கழியாமையும்
பர அன்னம் புஜித்தே காலம் கழிக்கையும் ஸ்வ அன்ன லுப்தனாய்க் காலம் கழிக்கையும்
பர ஸ்திரீ பரவசனாய்க் காலம் கழிக்கையும் அத்தாலே ஸ்வ ஸ்திரீ விரக்தனாய்க் காலம் கழிக்கையும்
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியே காலம் கழிக்கையும்- ஸ்வ த்ரவ்ய விநியோக அசக்தனாய்க் காலம் கழிக்கையும்
சூது சதுரங்கம் பொருது காலம் கழிக்கையும்
(தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் காலம் கழியாமையும்-நான்முகன் திரு -63-
பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதியவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் களித்தேன் -ஆர்த்தி -28 -சூது பிரசங்கம் -ஸ்ரீ மஹா பாரதம் – ஸ்த்ரீ பிரசங்கம் ஸ்ரீ இராமாயணம் – களவு பிரசங்கம் -ஸ்ரீ பாகவதம்)
ஸ்வ க்ருஹம் இன்றிக்கே காலம் கழிக்கையும்
ஸ்வ உதர போஷண அர்த்தமாக்கத் தோட்டம் கழனி பண்ணியே காலம் கழிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக்கத் திரு நந்தவனம் செய்து காலம் கழியாமையும்
ஆச்சார்யன் திரு மாளிகை பிரிந்து இருக்கப் பேணாமல் காலம் கழிக்கையும்
ஸ்வ குடும்ப ரஷண அர்த்தமாக காலம் கழிக்கையும்
ஆச்சார்ய குடும்ப ரஷண அர்த்தமாக காலம் கழியாமையும்
ஸ்வ சரீர ரஷணம் பண்ணியே காலம் கழிக்கையும் -ஆச்சார்யன் திரு மேனியை ரஷியாமல் காலம் கழிக்கையும்
தான் குளித்தே காலம் கழிக்கையும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராடப் பண்ணிக் காலம் கழியாமையும்
தான் பாலும் சோறுமாக வயிறு வளர்த்துக் காலம் கழிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடும் அமுது செய்யப் பண்ணாமையும்
தான் உடுத்து முடித்து பூசிப் புலற்றிக் காலம் கழிக்கையும்
பகவத் விஷயத்தில் பூசும் சாந்து புனையும் கண்ணி வான் பட்டாடை சாத்திக் காலம் கழியாமையும்
ஹேயக் கூத்துக் கண்டு காலம் கழிக்கையும் -மாயக் கூத்துக் கண்டு காலம் கழியாமையும் -மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா-திருவாய் -8-5-1-
பொல்லாப் புன் கவி சொல்லிப் போது போக்குகையும் -நல்லின் கவி சொல்லி நாள் கடலைக் கழிக்காமையும்
என் நாவில் இன் கவி -திருவாய் -3-9-1-
புன் கவி – தேவதாந்தரங்களைப் பாடும் பாடல்கள்(இல்லாத ஒருவனுக்கு இல்லை என்றேன் -மொட்டைத் தலை அரசனைப் பாடிய கதை)
கேவல புண்ய தீர்த்தங்களை தேடிச் சென்று கால் தேய்ந்து காலம் கழிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் தேடிக் காணச் சென்று காலம் கழியாமையும்
கேவலம் புண்ய ஷேத்ரம் தேடித் போய்க் காலம் கழியாமையும் -பகவத் ஷேத்ரம் தேடிச் சென்று காலம் கழியாமையும்
காவ்ய நாடகம் கொண்டு காலம் கழிக்கையும் -பகவத் காவ்யமான ஸ்ரீ ராமாயணம் கொண்டு காலம் கழியாமையும்
பூர்வ பஷமான தர்சன கிரந்தாந்தரங்களிலே காலம் கழிக்கையும்
ஸ்வ சித்தாந்தமான தர்சநத்திலே ஊன்றிக் காலம் கழியாமையும்(அருளிச் செயலில் பொழுது போக்கும் நம்பிள்ளை போல்)
கேவலம் பகவத் கைங்கர்யத்திலே காலம் கழிக்கையும் -சதாச்சார்யா கைங்கர்யத்திலே காலம் கழியாமையும் -என்கை-
51-ஆர்ஜன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து தானம் ஏற்று ஆர்ஜிக்கையும்
பிராயச்சித்தம் விதித்து ஆர்ஜிக்கையும்
தீர்த்த பலம் தாரை வார்த்து ஆர்ஜிக்கையும்
காலன் கொண்டு ஆர்ஜிக்கையும்(காலன் கொண்டு மோதிரம் இடுதல்)
ஸ்ரார்த்தம் புஜித்து ஆர்ஜிக்கையும்
சடங்கு (பரிஹாராதிகள்)காட்டி ஆர்ஜிக்கையும்
க்ரஹ நிலை எண்ணி ஆர்ஜிக்கையும்
கிராமண்யம் பண்ணி ஆர்ஜிக்கையும்
பள்ளி வாசிப்பித்து ஆர்ஜிக்கையும்
பாண்டித்தியம் சொல்லி ஆர்ஜிக்கையும்
கவி சொல்லி ஆர்ஜிக்கையும்
களவு கண்டு ஆர்ஜிக்கையும்
வஞ்சித்து ஆர்ஜிக்கையும்
வழி பரித்து ஆர்ஜிக்கையும்
கோளானாய் ஆர்ஜிக்கையும்
கும்பீடு கள்ளனாய் (கள்ள கும்பீடு )ஆர்ஜிக்கையும்
புராண பட்டனாய் ஆர்ஜிக்கையும்
புஸ்தக சோரனாய் ஆர்ஜிக்கையும்
குண்டலம் தூக்கி (தற் பெருமை பேசி)ஆர்ஜிக்கையும்
குலாதிகம் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஆசாரம் நடத்தி ஆர்ஜிக்கையும்
அஹம் ப்ரஹ்ம என்று பிரமித்து(சூதனாய் கள்வனாகி) ஆர்ஜிக்கையும்
வித்யா பிரபாவம் சொல்லி ஆர்ஜிக்கையும்
வீர வாதம் சொல்லி ஆர்ஜிக்கையும்
முகவச்யம் கொண்டு ஆர்ஜிக்கையும்-மூடரை வஸ்யம் கொண்டு-ஆர்ஜிக்கையும்
மருந்து செய்து ஆர்ஜிக்கையும் மாயம் செய்து ஆர்ஜிக்கையும்
நிதி தர்சனம் கானவிடுவோம் என்று ஆர்ஜிக்கையும்
நீச சேவை பண்ணி ஆர்ஜிக்கையும்
ரசவாதம் சொல்லிப் பகட்டி ஆர்ஜிக்கையும்
ராஜவச்யம் அறிவோம் என்று ஆர்ஜிக்கையும்
விஷய வர்த்தகம் சொல்லி ஆர்ஜிக்கையும் -விஷ வித்யை கற்று ஆர்ஜிக்கையும்
பகவத் விஷயம் சொல்லி ஆர்ஜிக்கையும்
பக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
அருளிச் செயல் சொல்லி ஆர்ஜிக்கையும்
அபிமானம் சொல்லி ஆர்ஜிக்கையும்
விரக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
விஸ்வாசம் பாவித்து ஆர்ஜிக்கையும்
அழு கண்ணனாய் ஆர்ஜிக்கையும்
அநந்ய கதித்வம் காட்டி ஆர்ஜிக்கையும்
கைங்கர்யம் பேரிட்டு ஆர்ஜிக்கையும்
காஷாயம் போர்த்து ஆர்ஜிக்கையும்
திரு நந்தவனம் செய்து ஆர்ஜிக்கையும்
திருமாலை பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
திருப்பதியின் பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆதரிப்பேன் என்று ஆர்ஜிக்கையும்
சிறப்பு விடுவேன் என்று ஆர்ஜிக்கையும்
பிரபந்தம் சாத்த வேணும் என்று ஆர்ஜிக்கையும்
திருவத்யயன நிமித்தமாக ஆர்ஜிக்கையும்
திருவடி விளக்கி ஆர்ஜிக்கையும்
மெய் வருத்திக் கை செய்து கிருஷி பண்ணி ஆர்ஜிக்கையும்
பிச்சை புக்கிலும் எம்பிரான் திரு நாமமே நச்சி -என்று முஷ்டிபுக்கு (பிச்சை புக்கு)ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து முஷ்டிபுகக் (உஞ்ச வ்ருத்தி)கூசுகையும்
அதில் வயிறு வளர்க்கைக்காக முஷ்டிக் கூடை பிடித்து உலாவி ஆர்ஜிக்கையும்
ஸ்வரூப அநுரூப ஆர்ஜனம் இது என்று முஷ்டி புகுராமையும்
சிஷ்டாசாரம் என்று முஷ்டி புகுராமையும்
முஷ்டி கூடையில் பெற்றது கொண்டு த்ருப்தனாகாமையும் -முஷ்டி சற்றே பரிமாறினார்கள் என்று குறைவு படுகையும்
முஷ்டி மிகப் பரிமாறினார்கள் என்று கொந்தளிக்கையும்
கைக்குள் அடங்கினதுக்கு மேல் ஆகாது என்று இராமையும்
கேட்கத் திரு நாம உச்சாரணம் பண்ணாமையும்
முஷ்டி புகுரும் போது வாசல்கள் தோறும் திரு நாம உச்சாரணம் பண்ணுகை- மௌஷ்டிக வ்யாவ்ருத்தி ஸூசக விசேஷண புத்த்யா சிஷ்டாச்சாரம் என்று உச்சரியாமையும்
திரு நாம உச்சாரணம் முஷ்டி யிடுகைக்கு சாதனம் என்று உச்சரிக்கையும்
தேவதாந்தரம் உள்ள க்ருஹங்களில் உலாவுகையும்
க்ருஹ பூஜா தூஷித க்ருஹங்களில் உலாவுகையும்
வெள்ளிக் கிழமையில் மெழுகின க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
திரு நாம உச்சாரணம் கேட்டு உகவாதார் க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
பகவத் பாகவத நிந்தை பண்ணும் நீசருடைய க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
ஸ்ரீ வைஷ்ணவ வ்ருத்தி என்று அறியாமல் ஷேபோக்தி பண்ணுவார் க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
தேவதாந்தர சேஷமான ஊரிலே சென்று முஷ்டி புகுருகையும்
திரு முற்றம் இல்லாத ஊரிலே முஷ்டி புகுருகையும்
திருவாராதனம் இல்லாத கிருஹத்திலே முஷ்டி புகுருகையும்
பிரபன்னனாய் இருந்து வைத்து விசேஷ திவசங்களிலே திருமொழி சொல்லி உலாவுகையும்-ஒழிந்த நாள் அருளிச் செயலில் சொல்லாமல் உலாவுகையும்
ரஹஸ்யங்கள் பிறர் கேட்கச் சொல்லி உலாவுகையும்
அசத் சஹாவாசம் பண்ணி உலாவுகையும்
விஷயாந்தர தர்சனம் பண்ணக் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்த -கண் இன்றி உலவாமையும்
முன்னடி பார்த்து நடந்து உலவாமையும்
தாந்தி (மன அமைதி)யற்று உலாவுகையும்
சதாச்சார்யன் திருக் கையாலே அமுதுபடி கூடை பிடித்து உலாவாமையும்
அமுது படி கூடை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அபிஷேகம் என்று அறியாமல் உலாவுகையும்
த்வய அஷர சங்க்யையான பர்வமற்ற முஷ்டிக் கூடை பிடித்து உலாவுகையும்
திரு விலச்சினை இல்லாதார் கையிலே முஷ்டி ஏற்கையும்
காதில் பாம்பணி இட்டார் கையில் முஷ்டி ஏற்கையும்
அஹங்கார கிருஹஸ்தர் கையில் முஷ்டி ஏற்கையும்
உலாவிய அளவில் ஆச்சார்யனுக்கு ஒரு கூறு சமர்ப்பியாது ஒழிகையும்
ஒரு கூறு ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவர்களை உத்தேசித்து வையாது ஒழிகையும்
ஒரு கூறு எம்பெருமானுக்கு என்னும் பிரதிபத்தி இல்லாமல் ஸ்வீகரிக்கையும்
உலாவின போது ஆச்சார்யன் சந்நிதியில் வைத்துத் திருக் கண் சாத்திக் கொடுக்கக் கொண்டு போகாமையும்
உலாவின அமுது படியில் அந்ய திருஷ்டி படாதபடி பேணாது ஒழிகையும்
இப்படி முஷ்டியில் பெற்ற கெரத்தார் மொழியக் கண்ட சம்சாரிகளை அனுவர்த்தித்து ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்கி ஆர்ஜிக்கையும்
ஆச்சார்யன் ஸ்வத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்யத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுவார் பக்கல் யாசித்து ஆர்ஜிக்கையும் -என்கை-
52-க்ருஹ விரோதி –
தேவதாந்திர அபிமான தூஷித பிரதேசங்களில் க்ருஹமாகையும் –
பாஷாண்டிகள் இருக்கும் தெருவில் க்ருஹமாகையும்
சம்சாரிகளில் அலசான க்ருஹமாகையும்
சக்ர லாஞ்சனம் இல்லாத க்ருஹமாகையும்
பிராக்ருதர் என்னது என்று அபிமாநிக்கும் க்ருஹமாகையும்
ஆச்சார்ய அபிமானம் அற்ற க்ருஹமாகையும்
பாகவதருக்குப் புகு வாசல் அல்லாத க்ருஹமாகையும்
பிரகிருதி பந்துக்கள் புகுவது புறப்படுவதான க்ருஹமாகையும்
திருப்பள்ளி யறையும் எம்பெருமானும் இல்லாத க்ருஹமாகையும்
திரு முன்பில் சங்கிருக்கும் க்ருஹமாகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் இல்லாத க்ருஹமாகையும்
திரு நாமப்பையும் (திருமண் பெட்டி)அமுதுபடி கூடையும் இல்லாத கிருஹமாகையும்
ஜப வடம் தொங்கும் க்ருஹமாகையும்
கந்தா தரஷூ சர்மாதி (நாய் நாரி தோல்கள்)பாஷண்டி பரிக்ருஹீதங்கள் இருக்கும் கிருஹமாகையும்
சைவ பௌத்த (கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மான்)ஜைன சார்வாகாதி பாஹ்ய குத்ருஷ்டி மத கிரந்தம் இருக்கும் கிருஹமாகையும்
சுக்ரவார அமாவாஸ்யாதி திவசங்கள் தேடி (அன்று மட்டுமே)மெழுகும் க்ருஹமாகையும்
அந்ய திருஷ்டி படும் அடுகு வளம் (சமையல் பாத்ரம்)உள்ள கிருஹமாகையும்
கண்டவிடம் எங்கும் சாம்பல் சிதறி இருக்கும் க்ருஹமாகையும்
காடிச்சால் இருக்கும் க்ருஹமாகையும்(காழிச்சால் மூலையில் ஈஸான மூலையில் -பழைய சோற்றுப்பானை வைத்திருக்கும் க்ருஹம்)
ரஷை கட்டித் தூங்குகையும்
திருமஞ்சனச்சால் முதலான வற்றில் திரு நாமம் அற்று இருக்கையும்
ஏகும் பாகவத பாத பாம்ஸூ (திருவடித்தூள் -தொண்டரடிப்பொடி)பரிசுத்தம் ஆகாது இருக்கையும்(காய சுத்தி அன்ன சுத்தி ஸ்தல சுத்தி பண்ணின ஆச்சாரம்)
முற்றத்தில் பாஷாண்டிகள் வந்து போனால் அவ்விடத்து சுத்தி பண்ணாமையும்
தேவதாந்தர சிஹ்னம் உள்ள கன்று காலி கட்டி ஆளுகையும்
சிஷ்டர் தர்சியாத கோவை (சிஷ்டர்கள் இல்லாத கூட்டமாக)படருகையும்
திருத் துழாய் வளராமையும்
அருளிச் செயல் த்வனி அற்று இருக்கையும்-ஆச்சார்யன் எழுந்து அருளாத இடமாகையும் – -என்கை-
53-ஷேத்திர விரோதி
தேவதாந்திர சேஷமான ஷேத்ரமாகையும்(எல்லைக்கல் -உண்டே திருக் கோயில்களுக்கு)
தேவதாந்திர சிஹ்னம் உள்ள ஷேத்ரம் ஆகையும்
பகவத அபிமானம் அற்ற தேசத்தில் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த பகவத் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த அந்ய ஷேத்ரம் ஆகையும்
என்னது -என்று அபிமானித்து இருக்கும் ஷேத்ரம் ஆகையும்
ஆச்சார்யனுக்கு என்று காணப்படாத ஷேத்ரம் ஆகையும்
பகவத் பாகவத ஆச்சார்யர்களுக்கு விநியோகப் படாத ஷேத்ரம் ஆகையும் -என்கை
54-போஜன விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர் ஆதரத்தோடு பிரசாதம் இடப் புக்கால் -பிரசாதம் சூடுமவர் ஆகார சௌஷ்டவ ரச சௌஷ்டவ நிரூபணம் பண்ணுகையும்
பாகவத பிரசாதம் என்னும் கௌரவ நிரூபணம் பண்ணாமையும்
இடுகிற பரிவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும்
பாக பேதம் பண்ணித் தான் சுவடு பட புஜிக்கையும்
நான் இடுகிறேன் என்று அபிமான தூஷிதம் ஆக்குகையும்
தம்முடைய பதார்த்தம் தாமே அங்கீ கரித்து அருளுகிறார் என்று இராமையும்
அமுது செய்கிறவர் கலத்தைக் கடைக் கணித்து ஏற்றத் தாழ்வுகள் நினைக்கையும்
எனக்கு இப்படி இடுவதே -என்று குபிதராகையும்
கோபத்திலே -பரிமாரினவற்றை உதறி எழுந்து இருக்கையும்
இடுகிறவர் தாம்- உள்ளே இருக்கையும் -இவரைப் புறம்பே வைக்கையும்
தாம் முற்படவே புஜிக்கையும் இவருக்கு பிற்பாடு இடுகையும்
தாம் முற்பட எழுந்து இருக்கையும்
தாம் உள்ளே இருந்து என்னைப் புறம்பே வைத்தார் என்று கன்றுகையும்
தாம் முற்படவே புஜித்து நமக்குப் பிற்பட இட்டார் என்று பிற்காலிக்கையும்
மதியாமல் நமக்கு முற்பட எழுந்து இருந்தார் என்று நினைக்கையும்
இடுகிறவர் உபசாரம் சொல்ல வேண்டினார்க்குச் சொல்லாமையும்
வேண்டாதார்க்கு ஸ்வ கர்த்ருத்வ ஸூசகமான உபசார உக்தி சொல்லுகையும்
இவர் உபசார உக்தியும் இன்றி இருந்தார் என்று வெறுக்கையும்
கனக்க நம்மை உபசரித்தார் என்று இறுமாக்கையும்
அடியேனைக் குறித்து இத்தனை வேணுமோ என்று இராமையும்
திரு மாளிகையில் அவர் முற்பட இவர் அமுது செய்வதற்கு முன்பே தீர்த்தம் அமுது செய்கையும்
தம்முடைய சேஷத்வத்தை கொடுக்கையும்
இவர் அவர் சொல்லுவதற்கு முன்பே எடுத்து அமுது செய்கையும்
அமுது செய்த சேஷம் என்று பிற்காலிக்கையும்
ஆச்சார்ய அபிமான விசேஷ ஜ்ஞானம் அறியாமல் ரூப நாம மாத்ரம் கொண்டு அந்யோந்யம் பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
அறிந்த பின்பு பாகவத பிரசாதம் ஸ்வீகரியாது ஒழிகையும்
எச்சில் கையாலே அந்யோந்யம் பிரசாதம் ஏற்கையும்
இரந்து பிரசாதப் படாதே நலிய அள்ளுகையும்
போனகம் செய்த சேடம் தருவரேல் என்று அலாப்ய லாபம் என்று அறியாமையும்(பாண்ட சேஷம் பாத்ர சேஷம் இரண்டுமே உண்டு -போஜன இலை சேஷம் வேறே)
ஸ்ரீ வைஷ்ணவர் தாமே பிரசாதக் கலம் எடுக்கப் பார்த்து இருக்கையும்
கையில் நின்றும் பறித்து எடாமையும்
தாமும் தேவியாரும் எடாதே அடியாள் சம்சாரிகள் கையிலே எடுப்பிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகை என்று மதியாதே புசித்த கலத்தை வைத்து எழுந்து இருக்கையும்
அவர் வேண்டாம் என்னிலும் வலிய எடாமையும்
திரு மாளிகையில் பற்று உதிராதபடி பேணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முன்னே முந்திக் கொண்டு திருக் கை கழுவுகையும்
பிற்பட்டத்து என்று தச் சேஷ ஜலம் என்று பாகவத சேஷத்துக்கு அசலாகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்த இடங்களை சுத்தி பண்ணுகிறோம் என்று ப்ரோஷிக்கையும்
பஸ்மம் இட்டு ப்ரோஷிக்கையும்
அமுது செய்த இடங்களை மிதித்தால் அபசாரம் என்று திருக்கைத் தொடை கொள்ளாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பட சுருளமுது கொடாமல் தாம் முற்பட ஸ்வீகரிக்கையும்
தன்னுடைய சேஷமான மூன்றாவது இடுகையும்
வந்தவர் ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகையில் குறை கண்டு போகையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு உள்ளம் கன்றிப் போகாத படிக்கு அனுவர்த்தியாமையும் –என்கை-
55-போஜ்ய விரோதி
சம்சாரிகள் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
பிரகிருதி பாந்தவத்தை இட்டு ப்ராக்ருதர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஷூத்ர புருஷார்த்திகள் விட்ட சிறப்பில் ஸ்வீகரிக்கும் பகவத் பிரசாதமும்
திவ்ய தேசங்களில் பிரபாவத்தை இட்டு ஸ்வீகரியாது ஒழிகையும்
கேவல பகவத் பக்தர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளில் ஸ்வயம் பாக பார்க்கச் சோறும்
இட்டுக் கணக்கு என்னும் சோறும்
க்யாதிக்கு இடும் சோறும்
மணச் சோறும்
பிணச் சோறும்
விலைச் சோறும்
எச்சில் சோறும்
மடி தடவும் சோறும்
சங்கல்ப்பித்து இடும் சோறும்
அபிமான தூஷித சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்டமாய் மசப் பரலிட்ட சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்ட பாண்டங்களிலே இட்ட சோறும்
அந்ய ஸ்மரண அசத் கீர்த்தர் பசித்த சோறும்
பகவத் ஸ்மாரணாதி திவ்ய பிரபன்ன பரர் சமையாத சோறும்
பகவத் பாகவதர்களை உத்தேசியாமல் ஆத்ம காரணத்தால் பசித்த சோறும்
திருநாமம் அற்ற பாண்டங்களில் நின்றும் இடும் சோறும்
பகவன் நிவேதிதம் இல்லாத சோறும்
சாமான்யர் நிவேதித்ததும் அந்ய திருஷ்டி பரிஹரியாத பிரசாதமும்
சேஷ சேஷாச நாதி ஸூரிகளையும் ஆழ்வார்களையும் அமுது செய்யப் பண்ணாதே கேவல பகவன் நிவேதிதமும்
ஜாதி துஷ்டமான அன்னமும்
கிருமி கீட கேசாதி நிமித்த துஷ்டமான அன்னமும்
அபாகவதர் பங்க்தியில் புஜிக்கும் அன்னமும்
அசத் கீர்த்தனம் பண்ணி புஜிக்கும் அன்னமும்
த்வய அனுசந்தானத்துடன் பிரசாதப் படாத அன்னமும்
பதார்த்தங்களில் போகயதா புத்தியில் புஜ்க்கும் அன்னமும்
பகவத் பிரசாத ஸ்வீகாரப் பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பரமாத்மா சமாராதன பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
சமாராதன சமாப்தி பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பாகவத பிரசாத ச்வீகார பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
கேவலம் பஞ்ச வ்ருத்தி பிராண சேஷம் என்னும் துஷ் பிரதிபத்தியாலே புஜிக்கும் அன்னமும்
வேதகப் பொன்னான விலஷண தர்சனாதிகளில் பாவனா பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பங்க்தி பாவனர் ஆனவர்களைப் பெற்றும் உள் கலந்து பரிமாற சங்கித்து புஜிக்கும் அன்னமும்
ஸ்வ க்ருஹத்தில் நியத அன்னமும்
ஆச்சார்ய துல்யருடைய திரு மாளிகையில் நியத அன்னமும் –என்கை-
56-தீர்த்த விரோதி -(திருமஞ்சன-திருவாராதன -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்த -அருளிச் செயலில் கோஷ்ட்டி ஸ்ரீ பாத தீர்த்தம் -நான்கும் உண்டு -தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி –)
பிரயோஜனாந்தர பரர்களுடைய க்ருஹங்களில் எம்பெருமானை தீர்த்தம் கொள்ளுகையும்(அநந்ய ப்ரயோஜனர் க்ரஹங்களிலேயே கொள்ள வேண்டும்)
சாதநாந்தரர் உடைய முன்னல் தீர்த்தம் கொள்ளுகையும்
மந்த்ராந்தர பரருடைய முன்னில் தீர்த்தம் கொள்ளுகையும்
திவ்ய தேசங்களில் நிரூபித்து தீர்த்தம் கொள்ளுகையும்
ஒழிந்த இடங்களில் நிரூபியாமல் தீர்த்தம் கொள்ளுகையும்
சம்சாரிகளுடன் கலந்து நின்று தீர்த்தம் கொள்ளுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பாடனாய் தீர்த்தம் கொள்ளுகையும்-கிழக்கு திசையா என்று ஆராய்ந்து தீர்த்த கொள்ளுகையும்-
தீர்த்தம் கொண்டு கண்ணிலும் தலையிலும் ஒற்றிக் கொள்ளாமையும்
தீர்த்தம் கொண்டு கர ப்ரஷராலன ஆசமனங்களில் சுத்தி தேடுகையும்
ஆச்சார்ய பகவத் கைங்கர்யம் பண்ணும் இடத்து தீர்த்தம் பிரசாதப்பட்ட கை கழுவாமையும்
தீர்த்தம் சிந்துகையும்
அவிசேஷஜ்ஞர் போலத் தலையில் தெளித்துக் கொள்ளுகையும்
அந்ய சம்பாஷணத்துடன் கொள்ளுகையும்
சம்சாரிகள் கண்ட தீர்த்தம் கொள்ளுகையும்
பகவத் தீர்த்தத்திலும் ஸ்ரீ பாத தீர்த்தம் அதிகம் என்று அறியாமையும்
ரூப நாமம் கொண்டு கொள்ளும் தீர்த்தம் அறியாமையும்
உச்சாரண விசேஷம் கொண்டு ஒருக்கால் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
ஆச்சார்ய அபிமானம் கொண்டு பலகாலும் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
சதாச்சார்ய தீர்த்தமே திரு முன் வைத்து சதா சேவ்வியம் என்னும் சிஷ்டாசாரம் அறியாமையும்
வேதகப் பொன்னான விலஷண தீர்த்தம் விசேஷித்துப் பெற வேணும் என்னும் விசேஷ ஜ்ஞானம் இல்லாமையும்
கேவல பிரபாவ மாத்ரம் கொண்டு பேணாமல் கொள்ளுகையும்
ஸ்வரூபம் அழிந்தது என்று அஞ்சாமல் கொள்ளுமதும்
முற்பாட்டுக்கு முந்திக் கொடுக்குமதும்
பிற்பட்டது என்று கன்றிக் கொடுக்குமதும் -உஜ்ஜீவனமாக மாட்டாது என்று அறியாமையும்
பரம பாவனமான ஸ்ரீ பாத தீர்த்தத்திலே தன் பாத தோயம் கலந்தது என்று சங்கித்து புறக் கணிக்கையும்
பிரபன்னனாய் இருந்து பிராயச் சித்த தீர்த்தம் கொள்ளுகையும்
சிவாதி ஸ்பர்சம் நேர்கையில் தத் பிராயச் சித்தமாக ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளாமையும்
கேவல பாவனத்வ பிரதிபத்தியே நடந்து கொள்ளுகையும்
போக்யத்வ பிரதிபத்தி நடவாது ஒழிகையும்(கேவல பாவனத்வம் என்றும் மட்டுமே கொண்டு இல்லாமல் போக்யம் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டுமே)
ஒரு நாள் கொண்டது அமையும் என்று இருக்கையும் -ஸ்தன்ய பானம் பண்ணாவிடில் நாக்கொட்டும்படியான ஸ்தன்ய அவஸ்தை பிறந்து கொள்ளாமையும்
சதாச்சார்யன் விமல சரம தேஹி என்று அறியாது இழக்கையும்
ஆளிட்டுத் தீர்த்தம் கொள்ளுகையும்
தானே அள்ளிக் கொள்ளுகையும்
இரங்கிப் பிரசாதிக்கும் அத்தனையும் இரப்புடன் இல்லாமையும்
த்வயைக நிஷ்டனாய்க் கொடுத்துக் கொள்ளாமையும் -என்கை-
57-பிரசாத விரோதி –
பிராக்ருத கிராமங்களில் எம்பெருமான் பிரசாதம் என்று ஸ்வீகரிக்கையும்
திவ்ய தேசங்களில் கோயிலில் பிரசாதித்த போதே பிரசாதப் படக் கூசுகையும்
நிரூபித்து பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
உபவாசாதி நிமித்தம் பிரசாதத்தை உபேஷிக்கையும்
அப்போது ஸூத்த ஆசமன அபேஷை பிறக்கையும்
பாவனமான பாகவத பிரசாதத்தில் உச்சிஷ்ட பிரதிபத்தி நடக்கையும்
திரளில் ஆச்சார்ய பிரசாதத்தை பிரசாதப் படக் கூசுகையும்
தத் ஸ்பர்சத்தில் அஸூத்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
தத் பிரசாத ஸ்வீகாரத்தில் நாடொறும் வெறும் பசியனாய் இராமையும்
சுவடு பட்டிரா விடில் போக்யத்வ -பாக்யத்வ-பிரதிபத்தி குலைகையும்
ஆச்சார்யன் இரங்கி பிரசாதிக்கப் பெறாமையும்
அமுது செய்யா நிற்க பிரசாதப்படுகையும்
அமுது செய்யும் தனையும் பார்த்து நின்று பிரசாதப் படாது ஒழிகையும்
அமுது செய்து அருளின பிரசாதத்தைத் தானே அள்ளிக் கொள்ளுகையும்
அனுமதி இன்றி பிரசாதக் கலத்தில் ஸூடுகையும்
அமுது செய்யும் தளிகையை எச்சில் படுத்துகையும்
ச ப்ரஹ்மசாரிகளுக்குப் பகுந்து இடாமல் பிரசாதப் படுகையும்
பிரசாதக் கலத்தை சம்சாரி நாஸ்திக ஸ்வாதிகளுக்கு இடுகையும்
சிஷ்டாச்சார சித்த தத் பிரசாத ஸ்வீகார பிரகாரம் அறியாமையும்
பிரசாதத்தைப் பேணாமல் சிந்துதல் மிதித்தல் செய்கையும் -என்கை –
58-உக்தி (பேச்சு)விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைத்தால் ஏன் என்கையும் சம்சாரிகள் அழைத்தால் அடியேன் என்கையும்
அநவதாநத்தாலே (கவனக் குறையாலே)மாறாடின போது அனுதாபம் அற்று இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து- விண்ணப்பம் அருளிச் செய்து அருள -திருக் கை விளக்கி அருள-சுருளமுது அமுது செய்து அருள -கண் வளர்ந்து அருள இத்யாதி -ப்ரபன்ன உக்திகளைப் பேணி விண்ணப்பம் செய்யாமையும்
பிராக்ருதரைக் குறித்து வார்த்தை சொல்லு -இரு -எண்ணெய் இடு -உறங்கு இத்யாதி
சாமான்ய உக்திகளைச் சொல்லாதே அந்த பூஜ்ய உக்திகளைச் சொல்லுகையும்
தீர்த்தமாட -பிரசாதப்பட -அமுதுபடி -கறி யமுது -அடிசில் -பிரசாதம் -தீர்த்தம்- திரு மஞ்சனம் -இலை பிரசாதம் இலை அமுது -மூன்றாவது முதலான உக்தி விசேஷம் அறிந்து சொல்லாமையும்
குளிக்க -உண்ண- தின்ன -அரிசி சோறு- கறி -தண்ணீர் வெற்றிலை- சுண்ணாம்பு முதலான
ப்ராக்ருத உக்திகளைச் சொல்லுகையும்
திருப்பதி -திருச் சோலை -திருப் பொய்கை -திருக் கோபுரம் -திரு மதிள்- திரு வீதி -திரு மாளிகை- திரு வாசல்- திரு மண்டபம் –திருச் சுற்று – திரு வோலக்கம் -திருப் பள்ளி அறை- திருப் பள்ளிக் கட்டில்- திரு மேற்கட்டு -திருத் திரை- திருக் கொற்றொலியல்-(துளுவம் துடை துணி )-திரு வெண் சாமரம் -திருவால வட்டம் -திருவடி நிலை– திருப் படிகம் திரு மஞ்சனக் குடம் -திருப் பரிகரம் -திரு வந்திக் காப்பு -திரு விளக்கு –திருமாலை -திரு வாபரணம் -திருப் பள்ளித் தாமம் -திருவடி நிலைகள் தொடங்கி திரு அபிஷேகம் திருவழகு எரிந்த திரு மேனி திரு நாள் முதலானவற்றை திரு இல்லாத் தேவரான தேவதாந்தரங்களுக்குச் சொல்லுகையும்
ஸ்ரீ வைஷ்ணவனே இருந்து வைத்து கோயிலை ஸ்ரீ ரெங்கம் என்கையும்- தும்மித் திருவரங்கம் என்னாது ஒழிகையும்
மற்றொரு திருப்பதிகளின் பேர் சொல்லுகையும்
திருமலையை வெறும் வேங்கடம் என்கையும்
பெருமாள் கோயிலை காஞ்சீபுரம் என்கையும்
திரு வநந்த புரத்தை அனந்த சயனம் என்கையும்
(வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-
பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )
பெருமாளை ஸ்ரீ ராமன் என்கையும்
நாச்சியாரை சீதை என்று சொல்லுகையும்
இளைய பெருமாளை லஷ்மணன் என்கையும்
கிருஷ்ணனை ஸ்ரீ கிருஷ்ணன் என்கையும்(பிறந்தவாறும் -பிறந்த மாயா -ஒருத்தி மகனாய் பிறந்து -நம் கண்ணன் அன்றோ)
அழகிய சிங்கரை ஸ்ரீ ந்ருசிம்ஹன் என்கையும்
ஞானப் பிரானை ஸ்ரீ வராஹன் என்கையும்
ஸ்ரீ குஹப் பெருமாளை குஹன் என்கையும்
திருவடியை ஹனுமான் என்கையும்
மகாராஜரை ஸூக்ரீவன் என்கையும்
பெரிய உடையாரை ஜடாயு என்கையும்
திருத் துழாயை துளசி என்கையும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்- ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -திருவாழி ஆழ்வான் -ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் –ஸ்ரீ பரத ஆழ்வான் -சத்ருக்ன ஆழ்வான் -கோயில் ஆழ்வான்- நம் ஆழ்வார் என்று சொல்லாமையும்
தீர்த்த நாயனாரை சாளக்ராமம் என்கையும்
ஸ்ரீ மத் த்வாராபதி நாயனார் -சேனை முதலியார் -திரு வாசல் காக்கும் முதலிகள்- நம்பி மூத்த பிரான் -ஸ்ரீ மாலா காரார் -ஸ்ரீ விதுரர் -ஸ்ரீ நந்த கோபர் இப்படிப் பூர்வர்கள் அருளிச் செய்யும் பூஜ்ய உக்தி விபாகம் அறியாமையும்
பூர்வர்கள் உச்சரியாத பகவன் நாமங்கள் உச்சரிக்கையும்
பூர்வர்கள் விசேஷித்து உச்சரிக்கும் சதாச்சார்ய நாம உச்சாரணம் பண்ணாமையும்
ஏகாந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை கிராம குல ஜன்ம நிரூபணம் பண்ணி வ்யவஹரிக்கையும்(பெரிய திருவடி -சாண்டில்யை இடமும் அபசாரப்பட்ட வ்ருத்தாந்தம்)
திருவடி சேர்ந்தாரை செத்தார் என்கையும்
பரம பதத்துக்குப் போனார் என்ன வேண்டுமவரை திருவடி சேர்ந்தார் என்கையும்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் எனத் தக்காரை பரம பதத்துக்குப் போனார் என்கையும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டரை ஆச்சார்யன் திருவடி யடைந்தார் என்று சொல்லாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளம் கன்றச் சொல்லுகையும்
கேட்டவர்கள் நெஞ்சு அதிர வார்த்தை சொல்லுகையும்
ஸ்வ தோஷம் சொல்லாமையும்
சம்சாரிகள் -பிறர்-குற்றம் சொல்லுகையும்
ஸ்வ குணம் சொல்லுகையும்
பகவத் பாகவத திவ்ய பிரபாவம் சொல்லாமையும்
கேவலம் ஈஸ்வர வைபவம் சொல்லுகையும் -ஆச்சார்ய வைபவம் சொல்லாமையும்
விசேஷஜ்ஞனாய் இருந்து ஆழ்வார்கள் பாசுரங்களையும் -ஆச்சார்யர்கள் பாசுரங்களையும் சொல்லாமையும்-வறை முறுகுதலான ஆர்ஷ வசனங்களை (ரிஷி வாசகங்களைச்) சொல்லுகையும்-
ஆச்சார்யன் உபதேசித்த குரு பரம்பரையும் -த்வயமும் ஒழிந்த மந்த்ராந்தர சப்த உச்சாரணம் பண்ணுகையும்
சதா ஜப்தவ்யத்தை விட்டு இருக்கையும் -என்கை –
59-ஸங்க விரோதி -யாவது
தேஹாத்ம அபிமானிகளோடு ஸம்ஸர்கிக்கையும்
விஷய பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஹங்கார க்ரஸ்தருடன் ஸம்ஸர்கிக்கையும்
தத் வர்த்தகருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர ஹிம்ஸா பர வஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாதகிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பர நிந்தா பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர குண அஸஹிஷ்ணுக்களுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸ்வர்க்க காமனுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸூஷ்க கர்மருடன் ஸம்ஸர்கிக்கையும்
ப்ரம ருத்ராதி தேவதாந்த்ர பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பவ்த்த மாயாவாதிகளான பாஷண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
திரு விலச்சினை திரு நாமம் இல்லாத முரரருடன் ஸம்ஸர்கிக்கையும்
முண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாகவத அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஸஹ்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
ஆச்சார்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
மந்த்ராந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
த்வய ஏக நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
உபயாந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் உபாய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
ஞான வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
பக்தி வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
சரம அதிகாரிகளான ஆச்சார்ய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
தேஹாதிகளிலே சங்கம் நடக்கையும்
சேக்ஷத்வாதிகளிலே சங்கம் நடவாமையும்
தத் இதர விஷயாதிகளிலே சங்கம் நடக்கையும்
ததீய சங்கம் நடவாமையும்
ஷூத்ர ப்ரயோஜந்தரங்களிலே சங்கம் நடக்கையும்
பரம ப்ரோஜனமான பகவத் பாகவத கைங்கர்யங்களிலே சங்கம் நடவாமையும்
ஆச்சார்ய கைங்கர்யங்களிலே அநவதிக சங்கம் நடவாமையும் –என்கை
60-சம்பந்த விரோதி
தேக சம்பந்திகள் பக்கல் பந்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
பகவத் சம்பந்திகள் பக்கல் பந்துத்வம் நடவாமையும்
பிரபன்னனாய் இருந்து ப்ராக்ருத பந்துக்கள் பக்கல் சம்பந்திக்கையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம்பந்தம் செய்யாமையும்
கேவல தேக உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இருக்கையும்
ஞான உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இராமையும்
ஒரு மாம்ச பிண்டத்திலே பிறந்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இருக்கையும்
ஒரு ஆச்சார்யன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இராமையும்
இதர சம்பந்தம் ஔ பாதிகம் என்று இராமையும் -பகவத் சம்பந்தம் நிருபாதிகம் என்று இராமையும்
அசித் சம்பந்தம் பகவத் பிரசாத நிவர்த்யம் அநித்தியம் என்று அறியாமையும்
அயன சம்பந்தம் அநிவர்த்யம் நித்யம் என்று அறியாமையும்
அசித் சம்பந்தம் ஸ்வரூப ஹாநி கரம் என்று இராமையும் -அயன சம்பந்தம் ஸ்வரூப உஜ்ஜீவன கரம் என்று இராமையும்
தச் சரீர பூத நார சம்பந்தம் ததீய பிரயுக்தம் என்று இராமையும்
சர்வ சரீரியான நாராயண சம்பந்தம் சத்தா பிரயுக்தம் என்று இராமையும்
தத் சரீர சாமான்யம் கொண்டு சம்சாரிகளுடன் சம்பந்தம் உண்டு என்று இருக்கையும்
பரி ஸூத்த அந்த கரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் நித்ய சம்பந்தம் உண்டு என்று இராமையும்
பகவத் சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது என்று இராமையும்
ஆச்சார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேது என்று இராமையும்
அது சத்தா பிரயுக்தம் என்று அறியாதே உபதேச நிபந்தனம் என்று இருக்கையும் –என்கை –
61-ஸ்நேக விரோதி
பிரகிருதி பந்துக்கள் பக்கம் ஸ்நேஹம் நடக்கையும்
ஆத்ம பந்துக்கள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் விஷயத்தில் பக்தி இன்றியும் இதர லௌகிகமான விஷயங்களில் பற்றும் உண்டாகி இருக்கையும்-பகவத் விஷயத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும் இதர விஷயங்களில் ஸ்நேஹம் மிக்கு இருக்கையும்
ஸ்வ தேஹத்தில் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யன் விக்ரகத்தில் ஸ்நேஹம் நடவாமையும்
ஸ்வ புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்ய புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-
ஆச்சார்யன் திரு மேனியை தன் உடல் நலனை விட அக்கரை உடன் நோக்காமையும்
பிராக்ருத பதார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும்
திரு மந்த்ரார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-தான் இருந்த தேசத்திலே ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யர் இருக்கும் தேசத்திலே ஸ்நேஹம் நடவாமையும்-
தேக யாத்ரையில் ஸ்நேஹம் நடக்கையும் -ஆத்ம யாத்ரையில் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் பாகவத விரோதிகளாய் இருந்துள்ள புத்ர தார க்ருஹாதிகளில் சாஸ்திர நீத ஸ்நேஹம் ஒழிய காமார்த்தமாகப் பண்ணுகிற ஸ்நேஹமும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
அர்ச்சா ஸ்தல பிரதானமான கோயில் திரு மலைகளில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ஸ்நேஹம் நடக்கையும்
மந்திர ரத்ன ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் பெரிய திரு மந்திர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும் -என்கை –
(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?)
62-பக்தி விரோதி -(ஸ்நேஹம் -பூர்வ -அநு த்யானம் பக்தி-ஸ்நேஹமும் பக்தியும் காரண கார்ய பாவம் என்றுமாம்)
பக்தியை சாதனம் என்று இருக்கையும்
பக்தி யுபக்கிரம பூதமான ஸ்மரண சங்கீர்த்த நாதிகளும் (ஆதி -வந்தன ப்ரதக்ஷிணம் போல்வன)சாத்திய கோட்யந்தர் கதம் என்று அறியாமையும்(இவையும் அவன் இன்னருளாலேயே வந்தவை என்ற நினைவு வேண்டுமே)
இதர பக்தி கலக்கையும் அநந்ய பக்தி கலவாமையும்
பிரபன்னனுக்கு சாத்திய பக்தி பிரபத்திகள் இரண்டும் சமம் என்று இருக்கையும்(அவன் அருளாலே கிடைத்த பக்தி -ஸாத்ய பக்தி -அவன் உபாயமாக இருந்து ப்ராப்யமாக கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தியை அருளுவார் அன்றோ -இதுவே சாத்ய பக்தி -பிரபத்தி -காரணம் -சாத்திய பக்தி கார்யம் -கைங்கர்ய பிரார்த்தனை -முதல் நிலை -சாத்திய பக்தி -நடு நிலை -கைங்கர்யம் -இறுதி நிலை -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பரார்த்த கைங்கர்யம் -அவன் ஆனந்தத்துக்காக என்ற எண்ணம் வேண்டும் -சாதன பக்தி உபாசகனுக்கு-முற்றி போக்யம் அறிந்து ஸ்வயம் பக்தி நிஷ்டனாகலாமே -நிலைப்பாட்டில் மாறுதல் அல்ல -ஏறி வந்த வழிகள் வேறே தானே -)
பிரபன்னனுக்கு சாத்திய பக்தியில் பிரபத்தி நழுவி நிற்கும் என்று அறியாமையும்
பிரபத்தி நிஷ்டர் அபேஷிக்கும் பக்தி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
பகவத் கிருபையாலே ஆழ்வார்கள் லபித்த பக்தி (கைங்கர்யத்துக்கு)பூர்வ ஷண விருத்தியான சத்தா பிரயுக்த பத்தி என்று அறியாமையும்
உக்த த்ரவ்யங்களில் ஓன்று குறையாது ஒழிந்தால் பகவத் கிருபையை நினையாதே தம்முடைய த்ரவ்ய பூர்த்தியாலே இறே அவன் பிரசன்னனாவது என்று நினைக்கையும்
பக்தி உத்பத்தியும் பக்தி விவ்ருத்தியும் பரம பக்தியும் தயா சித்தம் என்று அறியாமையும்(என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித்தொழும் மனமும் தந்தாய் -இசைவித்து தாளிணைக் கீழ் வாழ்வித்தாய் -அதுவும் அவனது இன்னருளே-)
பக்தி பாக விசேஷ கார்யமான அநந்ய உபாயத்வ ஹானியாலே ஸ்வரூப ஹானி வாராது என்று அறியாமையும்
பக்தி தசையில் பண்ணும் மங்களா சாசனமே ஸ்வரூப அனுரூபம் என்று அறியாமையும் –என்கை –
63-தாஸ்ய விரோதி -(தாஸ பூத ஸ்வத ஸர்வே -இயற்கையிலே அனைவருக்கும் தாஸ்யம் உண்டே-ஞாத்ருத்வம் -அறிந்த உடன் போக்த்ருத்வம்-ஸ்வதந்த்ரமும் கூடவே வரும் -)
ஸ்வ தந்த்ரனாய் இறுமாக்கையும்
அந்ய சேஷ பூதனாய் அனர்த்தப் படுகையும்
அதில் வர்ண நிபந்தனமாக தேவதாந்திர சேஷம் என்று இருக்கையும்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
உத்பத்தி நிபந்தனமாக மாதா பித்ரு சேஷம் என்று இருக்கையும்
கர்ம நிபந்தனமாக பர்த்ரு சேஷம் என்று இருக்கையும்
ஷூத்ர பிரயோஜனத்தை நச்சி ஒரு ப்ராக்ருதனுக்கு அடிமை புக்கு இருக்கையும்
ஷூத்ர விஷயத்தின் காலிலே விழுந்து சுணை கெடுகையும்
சர்வ வித பந்துவாய் சர்வ ரஷகனான சர்வ சேஷிக்கே சேஷம் என்று அறியாமையும்
(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே கோலத் திரு மா மகளோடு )
சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆகாமையும்
தத் இஷ்ட விநியோகம் ததீய சேஷத்வ பர்யந்தம் என்று அறியாமையும்
ஸ்வரூப க்ருத தாஸ்யமே குண க்ருத தாஸ்யம் விட பிரதானம் என்று அறியாமையும்
சேஷியினுடைய இஷ்ட அநிஷ்டமே தனக்கு இஷ்ட அநிஷ்டம் என்று அறியாமையும்
ஸ்வ விநாசத்துக்கு அஞ்சி சேஷிக்கு அதிசயத்தை விளையாது ஒழிகையும்
அவன் சேஷத்வத்தை அழிக்கும் போது பிற்காலிக்கையும்
போகத்தில் தட்டு மாறும் சீலம் -ஆட் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மா மாயன் -அவன் உகப்பே முக்கியம் -ஸ்வரூப நாஸம் பார்க்காமல் இருக்க வேண்டும் -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –
சேஷ வ்ருத்தியில் அந்வயியாது ஒழிகையும் வ்ருத்தி விரோதி நடக்கையும்
ஆச்சார்ய சேஷத்வம் ஔ பாதிகம் என்று நினைக்கையும்
நித்ய சேஷி யானவனுக்கு நித்ய சேஷம் என்று உணராமையும்
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -ஆத்மாவும் சேஷத்வமும் நித்யம் -நித்ய ஸூரிகளைப் போல் –சம்பந்த ஞானமும் தான் மறந்து உணர்கிறோம்
தேவதாந்த்ரங்களையும் பித்ராதிகளையும் குறித்து தாஸ்யத்தை செய்கையும் –என்கை –
64-சக்ய விரோதி
தண்ணியரான சம்சாரிகளுடன் சக்யம் கொள்ளுகையும்
பெரியோரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம பிரதிபத்தியால் சக்யம் கொள்ளுகையும்
ஒருவருக்கு ஒருவர் சக்யம் கொண்டு உடன் கலந்து குறை காண்கையும்
ததீய புத்தியால் சர்வ ஜன மித்திரன் ஆகாமையும்
தச் சரீர பூதர் இடம் சாத்ரவம் கொண்டாடுகையும்(ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் -உணர வேண்டுமே)
ஸ்ரீ வைஷ்ணவர் உடன் கலந்து மடி தடவுகையும்
உபகார பிரத்யுபகாரமாக ஸ்நேஹிக்கையும்(மடி தடவாத சோறும் -சுருள் மாறாது பூ -சுண்ணாம்பு கலசாத சந்தனம்-பிரதியுபகாரம் எதிர்பாராத -)
குற்றம் நற்றமாக தோற்றாமையும்
உகந்தாரை உகந்து பொடிந்தாரை பொடிந்து இருக்கையும்
ஆச்சார்ய விரோதிகளுடன் உறவு கொண்டாடுகையும்
ஆச்சார்ய பக்தர்களுடன் ஒரு மிடறாய் பரிமாறாமையும்-என்கை-
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply