Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-71-80—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

(தேஹ யாத்திரையே ஸமாஸ்ரயணமாகக் கொல்லுமவன் என்றார் கீழ்
அதற்கு வரும் பிரதிபந்தங்களையும் போக்கி அருளுபவனும் இந்த திருமலை என்கிறார்

சமன் கொள் வீடு தரும் சமன் குன்றம்-இங்கு யானைக்கு பிரமிப்பு –
கீழ் கடுவனுக்கு பார்த்தோம் -)

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

பதவுரை

களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை-மத யானை போல் எழுந்த மா முகில்கள்
குத்த–(எதிரி யானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–
கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –

ஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி —
கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –

பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–
யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று
சினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –

மேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–
சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று உகந்து நிற்கும் அவனுடைய திருமலை இறே –

திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்
அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இறே அவற்றுக்கும் –

(திவ்ய தேசங்களில் அனைத்துமே உத்தேச்யம்
போது அரிந்து வானவர்கள் -திவ்ய தேச முதலைகள் விரோதம் அல்லவே
இங்கு ஆகுமோ என்னில்
பலி கொடுக்கும் ஆட்டுக்கும் ஸ்வர்க்கம் கிட்டுமே
அறுவை சிகிச்சை -இப்பொழுது துன்பம் நீண்ட நாளுக்கு இன்பம் போல் ப்ரஸவ வலி ஹிம்ஸை அல்லவே
கட்டடம் கட்ட ஒத்தாசை பண்ணியவர்களுக்கு காவேரியில் தள்ளி மோக்ஷம் அருளிய கலியன்)

—————————————————————-

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

ஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த
மா முகிலை (8-9)(1-2)பிரதி கஜம் என்று புத்தி பண்ணி குத்த –

இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த நிறத்தை யுடைத்தான கொம்பை
அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு
அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு
பின்னையும் சீற்றம் மாறாத படியால்
இவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே
முன்பு ஒரு நாளிலே குழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-

(வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 

கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  )

—————————————————————————————————-

(மேலை இளங்குமரர் -உயரத்தில் – மேல் தன்மையில் மேலானவர் -யத்ர பூர்வ ஸாத்யா சந்தி தேவர்)

(நான்கு வியாக்கியானங்கள் இப்பாட்டுக்கு-வேங்கடத்தைப் பதியாக வாழ்வதால் வந்த ஏற்றங்கள்

திருமலையின் உயரம் -கையில் சக்தி -அடர்ந்த மூங்கில் -வளையலின் ஒளி சிறப்பு -நான்கையும் சொன்னவாறு

விளையாடுகிற கழலானது-அம்மானை ஆட -அது மேல் சென்று ராகுவை விடுவித்தது என்றும்
மூங்கில் சென்றும் என்றும் )

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழை  போய் -வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —–72-(தீங்கழை-தீம் கழல் பாட பேதம் )

பதவுரை

குன்று ஒன்றினாய–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மலை மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதி கோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.

குன்று ஒன்றினாய குற மகளிர் —
திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் –

கோல் வளைக் கை-சென்று விளையாடும் திங்கழை  போய் –
குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே-சென்று விளையாடுகிற கழலானது போய் –

வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை

இளங்குமரர்   கோமான் இடம் —-
உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று
வென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க
(த்வி) த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் -(பஞ்ச விம்சதி வார்ஷிகர் உபநிஷத் )

தீங்கிழை -என்று
இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –

(சிகரம் உயர ஏற்றம்-பெண்களின் கையின் திண்மை -இரண்டையும் சொன்னவாறு )

————————————————————

திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது –
பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும் அழகிய மூங்கில்களை வென்று

(வேய் போலும் எழில் தோளி -அழகு சொல்லக் கடவது
இங்கு குறப் பெண்களுடைய கை வென்றதை இங்கு சொல்லி மேல் ராகுவை வென்றதைச் சொல்லி)

அதுக்கு மேலே
உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற ராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே —
சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால் நித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன்
விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –

விளையாடும் குற மகளிர் கோல் வளைக் கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்

அன்றிக்கே –
அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச்
சந்திரன் மறுவையும் போக்கும் -என்றுமாம் –

அங்கனும் இன்றிக்கே –
குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல் ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது
போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –

——————————————————————————————————————–

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வட முக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

பதவுரை

ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட-ஏழு சந்தஸ்ஸுக்கள்
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்  பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வட திசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக் கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-
இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி
ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்
இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –

(துவாதச ஆதித்யர்கள் -காயத்ரி சந்தஸ்ஸுக்கள் -(6-12-அஷரம் பாதம் -காயத்ரி முக்காலி மூன்று -ஒவ்வொன்றும் 8 அக்ஷரம் )

(காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.)

வடமுக வேங்கடத்து மன்னும் –
வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –
குட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே

நாத் தன்னால் உள்ள  நலம் ——
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை
நாவால் படைக்கும் சம்பத்து –

குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –

———————————————————————-

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

மேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் –
ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் –
ஏழு குதிரை பூண்ட ஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி
வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே நித்ய வாசம் பண்ணா நின்றானுமாய்
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை உடையவனாய்
நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –)

(மன்றம் அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் )

(ஜிஹ்வே கீர்தய கேசவம் -முகுந்த மாலை)

——————————————————————————————————-

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

பதவுரை

சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனை யானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்து போய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ண பிரானை-தாய் முலை இருக்க பேய் முலை வாய் வைத்த பித்தன்
ஆய்ச்சி–யசோதை யானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!

நலமே வலிது கொல் —
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–

சலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–
தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –

(தாய் வடிவில் வந்த பேய் -கைகேயியை பரதன் குகன் இடம்-குகன் பெருமாள் திரு உள்ளம் புண் படும் -)

(பொய்யர்க்கே பொய்யனாகும் -இவள் சல புத்தி யுடன் போக அவன் சலமே தான் வெங்கொங்கை   யுண்டான் )

நிலமே புரண்டு போய் வீழ  –
நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக(பாலுடன் பிராணனும் வரும்படி இழுத்து உண்டான் )

வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான் தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——
விஷ முலை யுண்டத்துக்குப் நலமே வலிது கொல்-
அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-

———————————————————

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே
விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட கடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய்
விழும்படியாக வெவ்விய முலையை அமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை
அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்

விஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்
கால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –

ஆன பின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே —முதல் திருவந்தாதி —-34–

—————————————————————————————————–

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

(மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை போல் ஒக்கம்-திருமலையில் எல்லாமே உத்தேச்யம் தானே -)

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

பதவுரை

தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது-வேங்கை மரத்துக்கும் ஒருவகைப் புலிக்கும் பெயர்
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும் விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–
பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-

ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை –
போக்யதையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே
ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –

(பாலகன் என்று பரிபவம் செய்யேல் -நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ -பெரியாழ்வார்)

(தேய்க்கையாலே செயற்கை அழுக்கு போக -இயற்கை கரும்திட்டு -முயல் – போகாமல் விளங்குமே)

சேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே —
கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை -(முயல் பட்டுப்போகும் படி தீ விழி )

ஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–
இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இறே –

(காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான் -காட்டுப் பூவும் இவன் இருக்கவே கமழும் அன்றோ)

——————————————————————

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

பரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி
அங்குத்தை போக்யத்தையிலே கால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் –
கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்
இருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை –

கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு ஆமிஷமான முயலாகக் கருதி –
பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே
எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே

ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –

————————————————————————————————-

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

பதவுரை

(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

——————————————————————–

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

———————————————————————————————————

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

(நரகாந்தகன் -நரகத்தையே முடித்தவன் -உன்னை மறக்காமல் இருக்க அருள் -முகுந்த மாலை
வாழ் ஆட்ட பட்டு நின்று வல்லீரேல்-வாஸூ தேவம் சர்வம் பயின்று இருப்பார் -ஸூ துர்லபம் )

(திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-
எக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*
அக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே )

(அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-)

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

(நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு-80 பாசுரம் நெஞ்சமே -அத்தை இங்கே கூட்டிக் கொண்டு நெஞ்சுக்கு உபதேசம் இதிலும்)

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள் )

பதவுரை

ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓ நெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–
சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் –
வலவருகே திரு வாழி பிடிக்குமவன் போலே காணும் ரக்ஷகனாவான் –
தன்னைப் புரஸ்கரித்து (சுட்டிக்காட்டி )இறே -மாஸூச -என்றது –இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –

முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது
முரனுடைய ஆயுஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –

(நரகாந்தகன்-நரனை அளித்தவன் -நரகம் அளித்தவன் – முராரி -முரனை அளித்தவன்)

சரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே ஆழி வலவன்-அரணாம்–
ஆஸ்ரயணீயன் ஆகும் –
சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய-(9-20-) யோ அபி ஸ் யு பாபயோ நய–
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –

ஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து
அவன் திரு நாமங்களை சொல்லு –

(ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என் னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –)

(குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.)

————————————————————————

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

ரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின
மிடுக்கை யுடையனானவன் ரஷகனாகும் இடத்தில் -(துர்லபம் ஆல் )
ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று வித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே –
ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு சர்வ காலத்திலும் ரக்ஷகனாம் –

(வித்யா விருத்த ஜென்மம் -பிறப்பு யோக்யதை அல்ல -ஆசை அபேக்ஷையே வேண்டியது
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்)

ஆன பின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வ ஏகாந்தமான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து –
அவன் திரு நாமங்களை இடைவிடாமல் நெஞ்சே சொல்லு –

நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே(80) சொல்லுகிற நெஞ்சு இங்கும் முன்னிலைக்கு விஷயம் –

அன்றிக்கே
நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே
முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு உறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு
நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்

(எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

(தனக்கும் ஒரு வரம்பு இன்றி-என்நின்ற யோனியாம் பிறப்பில் -மாசு உடம்பில் -மானமிலா பன்றியாய் )

ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் –
ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –

(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள்)

—————————————————————————————————-

(ரிஷிகள் ஸ்வரூப த்யானம் -மனம் அடக்கினால் தான் ஸாத்யம்
ஆழ்வார்கள் ரூபத்தில் இழிந்து மேல் மேல் பலவும் உண்டாகும்
புலன்களை அடக்கி -சம்சாரம் தண்மை உணர்த்தி -தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனமே தந்து அருளுவான்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன்-ஆதாரம் பெறுக வைத்த அழகன் -அன்றோ

மால்பால் மனம்சுழிப்ப*  மங்கையர்தோள் கைவிட்டு,* 
நூல்பால் மனம்வைக்க நொய்விதுஆம்,*  நால்பால
வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடிதோயும்,*
பாதத்தான் பாதம் பணிந்து. 
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-

மால் பால் மனம் வைக்க -ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்–மேலே மேலே
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று-புலன் அடங்கிய பின்பே சம்சாரம் தண்மை அறிய முடியும் –
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.-யத்ர நான்யத்ர கச்சதி பூமா இதுவே -வேறு ஒன்றில் போக முடியாதே )

(ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?)

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

(ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -பாலே மருந்தும் விருந்துமாம் போல்
அநந்த கால பிரதிபந்தங்கள் சடக்கென போகுமே )

(விரையார் நறுந்துழாய்-மணம் செவ்வி இரண்டையும் என்றும்
திருமேனி சர்வ ரசம் சர்வ கந்தம் -அவனுக்கும் திருத்துழாய் மாலைக்கும் மணம் என்றுமாம்)

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

பதவுரை

கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்-அடியார்களைக் கண்டு பொங்கும் கடல் வண்ணன்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–
அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்
தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய்
சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –

நின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-
நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி
அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்

ஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் –
ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –

—————————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

பசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் –
தேங்கின கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் –
ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட
நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்

ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து –
சம்சார தோஷத்தை அனுசந்தித்து –அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக
வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-

அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –

————————————————————————————————————

(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

நெஞ்ச மே! நல்லை நல்லை உன் னைப்பெற்றால்
என் செய் யோம் இனி என்ன குறைவினம்
மைந்த னைமல ராள்மண வாளனைத்
துஞ்சும் போதும்வி டாது தொடர்கண்டாய்.-1-10-4-
 -கொண்டாடும் படி அன்றோ ஆழ்வார்கள் திரு உள்ளம்)

(நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7-4-8-)

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர் படு வான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

பதவுரை

நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரை மணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான-வலிய –
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே-நேர் படுவான்-சேஷ பூதனுக்கு அநு ரூபமான தாஸ்யத்துக்கு
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய –
தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத
ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –

வென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-
ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய
அநந்த சாயியுடைய திருவடிகளிலே

நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —
அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடு முடிகள் போலே முறிந்து விழுந்தன –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் 3-10என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

————————————————————————-

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ் விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

ருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல்
முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்
ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய
அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள ஆயிரம் தோளும் ஏக உத் யோகேந அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து –
அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –

கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயினுடைய
சிவந்த திருவடிகளிலே நெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-

ஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–
அரங்களை யுடைத்தாகை -என்றுமாம் – -(ஸஹஸ்ர ஆரங்கள் கொண்ட ஆழி )

வான் -வலி-

(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )

(இப்படி அவன் படியாய் இருக்க நெஞ்சு முற்பட கேட்க வேணுமோ)

(கச்ச ராம மயா ஸஹ -சீதாபிராட்டி முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்றி
சேதனர்களைத் திருத்திப் பணி கொண்டு பெருமாள் இடம் சேர்த்தாளே அன்றோ)

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–61-70— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

(திரு விண்ணகர் -திவ்யதேசம் பெரியவாச்சான் பிள்ளை –ஸ்ரீ வைகுண்டம் -அப்புள்ளார் -இருவரும் மாற்றி
திரு உள்ளம் வந்த பின்பு -எங்கு இருந்து வந்தார் ஆலோசிக்க
அர்ச்சையில் இருந்து வந்து -அதற்கு
பாற்கடலில் இருந்து வந்து -அதற்கு
வைகுந்தத்தில் இருந்து
என்று க்ரமமாக
அடுத்த இரண்டுமே திவ்ய தேச பாசுரங்கள்

பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம்:
ஆவரண் ஜலம் போலே பரத்வம்:
பாற்கடல் போலே வியூகம்;
பெருக்காறு போலே விபவம்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்:

இனியார் ஞானங்களால் எடுக்கல்  எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில்ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.-2-3-5-
 )

பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் –
சம்சாரத்திலே உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது
ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

பதவுரை

வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்—யுவா குமாரா -நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்-கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல்–
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -என்று பரம பதத்தோ பாதியாகத் திருமலையைச் சொல்கிறது

வைகுந்தம் கோயிலாகக் கொண்டு அங்கு உறைவார்க்கு -வேங்கடம் பாற் கடல் –
வண்டு-வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —-
விண்ணகரான இவை இளங்குமரனான தனக்கு இப்போது கோயில் போலே

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

—————————————————————————

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

ஸ்ரீ வைகுண்டத்தைத் தனக்கு அபிமத வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு –
அங்கே ஆதரித்து நித்ய வாசம் பண்ணுகிற வைபவத்தை உடையவர்க்கு –
திருப் பாற் கடலும் -திருமலையும் -வண்டுகளினுடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை யுடைத்தாய் அழகியதாய் போக்யமான திருக் கடிகையும்-
நித்ய யுவ ஸ்வ பாவனானவன் தன்னது என்று
ஆதரித்து வர்த்திக்கிற -இவ்வவ திவ்ய தேசங்கள் என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு
எல்லாம் உகப்புடன் எழுந்து அருளி இருக்கிற கோயில்கள் போலே இருந்தன –

என்னை அங்கீ கரித்த பின்பு அவ்வவ தேசங்களைக் காட்டிலும்
என்னுடைய ஹிருதயமே அவனுக்கு வாசஸ் ஸ்தானமாய் விட்டது என்று கருத்து-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -5- 4-9 –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–64-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–65-

இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்–66-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

———————————————————————————————————————–

(இதில் வாமனன் சீலம் தாழ்வு-ஸுசீல்யம் ஸுலப்யம் -இங்கு எல்லாம் கண்டேன் -ஏழு திவ்ய தேசங்களில் காட்டி அருளக் கண்டேன்
கீழ் வைகுந்தம் பாற் கடல் பரத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – ––வாமனன் சீலன்-சீரை -பாட பேதம்
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63–சங்கர நாராயணன் -திருமேனியில் இடம் கொடுத்த ஸுசீல்யம் -திரு வேங்கடத்தில் காணலாம் என்கிறார்
இங்கு எல்லாம் வாமனன் சீல குணம் போல் அங்கும் -உருவத்தை அல்ல)

கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ –
பரமபதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  ——62-

பதவுரை

விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து அலை யெறிகிற நீர் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர் போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்க மாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத் திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்–திரு விண்ணகரம் -வெக்கா –
விரிதிரை நீர் வேங்கடம்–திருமலையை ஒரு விசேஷண ரஹிதமாகச் சொல்ல மாட்டார் இறே

மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி-போக்யதை குறைவற்ற கோயில்

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  —-
மஹா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தித்தவம் தோற்றும்படி
அர்த்தியாய் நின்றால் போலே –
உகந்து அருளின தேசங்களில் தாழ்வு தோற்றும் படி நின்றான் —

(இங்கு எல்லாம் உடமைகளான நம்மைப் பெறவே வாமனுடைய சீல குணம் காட்டி தாழ்ந்து நின்று சேவை சாதிக்கிறான்)

—————————————————————————–

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

திரு விண்ணகரமும் திரு வெக்காவும் விஸ்தீர்ணமாய் அலை எறிகிற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலையும்
பூமியிலே யுண்டாய் வைகுண்ட மா நகர் போலே அவனுக்கு போக ஸ்தானமான திவ்ய நகராய்
பெரிய மாடங்களை யுடைத்தான திரு வேளுக்கையும் -பூமியிலே யுண்டான அழகிய திருக் குடந்தையும்
தேன் வெள்ளம் இடுகிற திருச் சோலையை யுடைத்தான திருவரங்கப் பெரு நகரும்
தெற்குத் திக்கில் யுண்டான திருக் கோட்டியூரும் ஆகிற இவ்விவ திருப்பதிகள் –

தன்னுடைய சிறாங்கித்த திருக் கையிலே(கோட்டங்கை வாமனனாய் )
நீர் ஏற்றுத் தன் உடமை பெறுகைக்கு அர்த்தியானவன்-இந்த ஆத்மாக்களை பெறுகைக்கு அர்த்தியாய்க் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே எப்போதும் உதவும்படி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

(ஆவரண ஜலம் போல் விண்ணாடு –பூ கத ஜலம் போல் அந்தர்யாமி –
திரு பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்–வியூகம் –பெருக்காறு போலே விபவங்கள்–
ஆற்றில் தேங்கிய மடுக்கள் போல் அர்ச்சை-பின்னானார் வணங்கும் ஜோதி )

————————————————————————————————————

(வில்வ மலரால் அர்ச்சனை -நாகாபரணம் சாத்தி -சங்கு சக்கரம் தொண்டைமானுக்கு அருளி
சைவர் இவன் திருமால் அல்லன்-வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் –
பிரமாணம் காட்டி -அவனே தன்னைக் காட்டி பரத்வ ஸ்தாபனம் முன்பு –
வேதம் புராணங்கள் இவனே திருமால் -பிரமாணம் விஸ்வசிக்காதவர்களுக்கு –
யோக சக்தியால் ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளினார் பாஷ்யகாரர்
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே-இன்றும் ஞான முத்திரையுடன் சேவை திருமலையில்

கீழ் குடங்கை நீர் ஏற்றான் -சீலவத்தை -ஸுசீல்யம் இங்கும் காட்டி அருளுகிறார்-

ஸம்ஸாரி மக்நராக போகாமல் இருக்கவே ஸாஸ்த்ர பாணியாக தானே அவதரித்துத் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் )

(உருவத்தை அல்ல என்றே கொள்ள வேண்டும்
சக்கரமும் -என்பதால் வலது பக்கம் -இருப்பது பிரபலம்
அர்த்த நாரீஸ்வரர் தான் வலப்புறம் பார்வதி இடப்புறம்
வலப் புறம் இருப்பதால் பிரபலம் அங்கும்
அதே போல் இங்கும் சிவபிரான் இடப்பக்கம்
நரஸிம்ஹம் -நரமா ஸிம்ஹமா பெரியது போட்டி அல்லவே
அதே போல் இங்கும் கொள்ள வேண்டும்
த்வந்த ஸமாஸம் -உத்தர பூர்வ ஸப்தம் -இரண்டுக்கும் சமானம்
பீதாம்பர தாரி -தரிக்கும் அவனுக்கு தானே பிரதானம்
அதே போல் சங்கர நாராயணன் -இறைவருக்கும் கொள்ளாமல் இந்த உருவம் கொண்ட அவனுக்கே பிரதானம்
ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.
–கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்

கூறாளும்  – -ஒரு கூறு -ஏக தேசம் கொடுத்து -பொதுவான உருவம் -ஜகத்தே அவனுக்கு சரீரம்
இங்கு சங்கர நாராயணன் உருவம்-இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.

மந்திபாய் –வானவர் சந்தி செய்ய -ஸுசீல்யம் திருவேங்கடத்தில்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த
நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -160-

வரத்தை மீறாமல் இருக்க நரஸிம்ஹ இரட்டை
ஸாதன வேஷ ஸித்த வேஷங்கள் இங்கு இரட்டை-ஒவ்வொன்றுக்கும் மூன்று அடையாளங்கள் இதில் -1-3-5 சிவனுக்கும் 2-4-6 நாராயணனுக்கு
நர நாராயணன் -தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாக இரட்டை

ஷத்ரிய ராஜர் ஆகாச ராஜன் மாமனார் கொடுத்த ஆபரணம்
சூடாமணி கொடுத்த சீதை -ஜனகர் தான் தசரதன் நினைவுக்கு வரக்கொடுத்தாள்
நமாமி வில்வ நிலையாம் -மஹா லஷ்மி திருமாலுக்கும் உகந்த
தொண்டைமான் சக்ரவர்த்தி -ஆழ்வார் தீர்த்தம் பின் வழியாக தனியாக செல்லும் வழி உண்டே
அம்பரீஷன் -துர்வாசர் -சக்கரம் கொடுத்தது போல்
குமரா தீர்த்தம் இங்கு உண்டு -புராணம் இங்கு இருந்து தபஸ்ஸு பண்ணினான்
வேங்கடாசல இதிஹாச மாலை -பூம் கொத்து போல் 10 -பாகங்கள் கொண்டது -)

ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே –
இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன் றாய் இசைந்து —-63-

பதவுரை

தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரை நாணுமாய்க் கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள் திரளாக அருவிகள்
பெருகப் பெற்ற திருமலை மேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்து விளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்-சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்-திரண்டருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு–
சூழத் திரண்டு அருவி பாயா நின்ற திருமலை மேலே-நிற்கிற என்னுடைய ஸ்வாமிக்கு –

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —
ஓன்று சாதகமாய் ஓன்று சித்தமானால் சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்னில்
இரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருக்கும் பொருந்தி இருக்கும் –

ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு(ஹந்த -என்ன ஆச்சர்யம் )

(அருவி சோர் வேம்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருகின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ ? 8-2-3-
ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி-எந்தைதந்தை தந்தைக்கே.
-நீங்கள் இங்கே வந்து ஆஸ்ரயியுங்கோள் என்று கூப்பிடுமே
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-
நெஞ்சால் நினைக்கவும் முடியாதே -ஸாம்யம் சொல்ல முடியாதே
அரியும் சிவனும் ஓன்று என்பது -ஸ்வரூபத்தால் அல்ல -சரீர பூதர் தானே -பிரகாரி பிரகார பாவம் சொன்னவாறு
பரன் திறம் அன்றி மற்ற தெய்வம் அல்லவே
நாராயணனே பரம் ஜோதி -நாராயணன் நான்முகனைப் படைத்தான்

வேதம் பிரமாணம் கர்மம் சரணாகதி -ஆச்சார்யர் சிஷ்யர் உபதேசம் -ஸம்ஸாரம் கழிந்து முக்தி –
ஸநாதன தர்ம சித்தம் சைவருக்கும் உண்டே )

(ஒரு பால் உலகளந்த மாயவனாம் மற்ற ஒரு பால் உமை யவளாம் -காரைக்கால் அம்மையார்
உலகு அளந்த ப்ராபல்யம் சொல்லி
அர்த்தம் ஹரஸ்ய -இரண்டும் இருவரால் -தானவர் வைரி -ஹிமாச்சல புத்ரி -அர்த்த நாரீஸ்வர கோலம்
அபர்ணா இலை கூட உண்ணாமல் தவம் இருக்க உ மா பண்ணாதே தாயார் சொல்ல உமா
பர்வத ராஜன் குமாரி பார்வதி)

——————————————————————–

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

சாதகத்வ ஸூசகமாம் படி -தாழக் கட்டின ஜடையும் –
ஆதி ராஜ்ய ஸூ சகமான ஒக்கத்தை யுடைத்தான திரு அபிஷேகமும்

கொலைக்குப் பரிகரமான அழகிய மழுவும் –
ரக்ஷணத்துக்கு பரிகரமான அருளார் திருச் சக்கரமும்

பயாவஹமாம் படி இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும்-
ஐஸ்வர்ய ஸூசகமாம் படி திருவரையிலே சாத்தின பொன்னரை நூலுமாகக் கொண்டு

ஒன்றுக்கு ஓன்று சேராச் சேர்த்தியாய் இருக்கும் இரண்டு வடிவும்

நாலு பாடும் சூழ்ந்து கொண்டு திரண்டு அருவிகள் வந்து குதியா நிற்கிற திருமலை மேலே
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள என் ஸ்வாமி யானவனுக்குத்
தன் திரு மேனிக்கு இதுக்கும் ஒரு வாசி தோற்றாத படி பொருந்தி ஒரு கோவையாய்க் கொண்டு தோற்றா நின்றது –

கெட்டேன் -(ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு )
இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

———————————————————————————————————

(கச்சி வெக்காவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – –
கச்சி வெஃகாவில் கிடந்து
கச்சி திருப்பாடகத்தில் இருந்து
கச்சி திரு ஊரகத்தில் நின்று

நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

பதவுரை

இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தர பர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்ததனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (திரு வூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?

(இசைந்த அரவும்
இசைந்த வெற்பு
இசைந்த கடல் -பொருத்தமாக மூன்றும்)

இசைந்த வரவும் வெற்பும் கடலும்–கடலிலே ஒரு மலையை நட்டு -ஒரு பாம்பைக் சுற்றிக் கடையா நின்றால்
சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்றால் -இசைந்த -தன்னில் பொருந்தி இருந்தபடி –

(கீழ் சாதனா சாதக சேர்த்தியும் சேராச் சேர்த்தி
நரஸிம்ஹர் போல்
யானை குதிரை விஷம் மஹா லஷ்மி பாரிஜாதம் இத்யாதி வந்ததும் சேராச் சேர்த்தி
இவன் ஸங்கல்ப மகிமையால் பொருந்தியவை)

பசைந்தங்கு அமுது படுப்ப —-அதிலே அமிருதம் வரும்படிக்கு ஈடாகப் பசை கொடுத்து –
அசைந்து-கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ

கச்சி வெக்காவில்-கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –

(தனியே -இவனே செய்த செயல்
ப்ரயோஜனாந்தர பரர் சம்பந்தம் கூடாதே
தேவர்கள் அசுரர்கள் மந்தரம் வாசுகி அனைத்துக்கும் அந்தர்யாமி
ஒல்லை நானும் கடைவன் அங்கு மட்டும் அவள் ஸ்பர்சம் உத்தேஸ்யம்
புலவர் நெருக்கு உகக்கும் பெருமான்)

————————————————————————–

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

கடை கயிறாகக் கொள்ளுகைக்கு தகுதியான வாஸூகியும் –
மத்தாக நாட்டுகைக்குத் தகுதியான மந்த்ர பர்வதமும்
தாழி யாக்குகைக்குத் தகுதியான கடலுமான இம் மூன்றையும் கொண்டு -நீர் கோதாம் படி கலக்கி

அந்தக் கடலிலே அமிர்தம் உண்டாக்குகைக்காக அலைச்சல் பட்டுக் கடைந்த ஆயாசமோ –
திருக் கச்சியிலே திரு வெஃகாவிலே கண் வளர்ந்து -அந்த திருக் கச்சி தன்னிலே திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருந்து
திரு ஊரகத்திலே எழுந்து அருளி நின்றதுவும் –கடல் கடைந்த இளைப்பாலே நிற்பது இருப்பது கிடப்பதாகக் கொண்டு

இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

(சொன்ன வண்ணம் செய்த பிரான் யாதோத்தகாரி -வேகா சேது
பிரமன் சொன்ன வண்ணமும் திருமழிசைப்பிரானும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்)

உத்சவம்-ஆயாஸம் தீர – விடாய் ஆற்ற -அதுக்கும் கூட்டம் உண்டே -அதே போல் இங்கும் அவனுக்கு ஆயாசம் -வயிறு பிடிக்கிறார்

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய் திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.–49

கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றே விப்
படிதான் நீண்டு தாவிய வசவோ பணியாயே –8-3-5-

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்ன யாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே !!

அஜிதன் -பாற் கடல் கடைந்த பெருமாள்
ஹரி -கஜேந்திர மோக்ஷம் அளித்தவன்

—————————————————————————————————–

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

(அங்கற்கு-பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜ -கடைக்குறை அங்க -அங்கு மகற்கு -அங்கனுக்கு -அங்கருக்கு என்றுமாம்
ப்ரஹ்மதுக்கு அங்கம் -ஆழ்வார் பிள்ளையாக ஸ்வீ காரம்-பள்ளியில் ஒதி வந்த தன் சிறுவன்
தன் மகனைக் காய்ந்து -போல் இங்கும் ஆழ்வாருக்கு அங்கன்-அங்கு மகற்கு -கடைக்குறை என்றுமாம் )

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரி யுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65–(கார் உருவம் பாட பேதம் )

பதவுரை

அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜன் -கடைக்குறை அங்க
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை-சிந்தையினால் இகழ்ந்தான் அன்றோ
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப் பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்-கோட்டுக்கால் கட்டில் நப்பின்னைக்கு

அங்கற்கு இடரின்றி — -பிள்ளை யுடைய விடாய் தீர —
அங்குக்கு இடர் இன்றி -என்ற பாடமாகில் -அவ் விடத்தில் விடாய் தீர –
அந்திப் பொழுதத்து-அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் காலத்திலே
மங்க விரணியன தாகத்தை–ஹிரண்யனுடைய ஹிருதயமானது மங்கும் படிக்கு ஈடாக
பொங்கி-அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் -பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -என்னும் படி –
அவனே கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து —அவனே குவலயா பீடத்தினுடைய கொம்பை ஓசித்தான் –
காய்ந்து –சீற்றம் இல்லாதவன் சீறி —

(பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-)

ஈஸ்வரன் செய்து அருளும் ஆனைத் தொழிலகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் -நஞ்சீயர்

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

—————————————————————————-

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

சிறு பிள்ளையான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு துக்கம் வாராத படி -அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் படியான
சந்த்யா காலத்திலே ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய வர பலாதிகளாலே பூண் கட்டின மார்வை
உருத் தெரியாத படி அழிந்து போம்படி யாக பெரும் கிளர்த்தியை யுடையனாய்க் கொண்டு
நரசிம்ஹ ரூபியாய் இடந்து பொகட்ட சர்வேஸ்வரனான அவனே –
சீறிக் கொண்டு குவலயா பீடத்தின் யுடைய கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்டவன்

அங்கர் என்றது அங்கன் என்ற படியாய் பிள்ளை என்றபடி –
அன்றிக்கே —
சர்வகத்வாத் அநந்தஸ்ய ச ஏவாஹ(சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.)

அங்கு -அவ்விடத்து -என்று பிரித்து –
மகற்கு என்கிறதை தலைக் குறைத்தலாய்க் கிடக்கிறது என்னவுமாம்

ஹிரண்யனுடைய மகனுக்கு இடர் இல்லாத படி -என்று பொருளாகக் கடவது –

அங்கற்க் கிடர் -என்ற பாடமான போது
அவ்விடத்து இடர் இல்லாத படி என்று பொருளாகக் கடவது –

————————————————————————————————————-

உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் -(பையத் துயின்ற பரமன் அன்றோ )

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

(மது ஸூ தனன் கைடபாரி திரு நாமங்கள் அவனுக்கு -கொழுப்பு இவர்கள் உருவம் -தொடையில் வைத்து முடித்தான்)

(திரு மெய்யம் -அகன்ற கர்ப்ப க்ருஹம் -ஆதி சேஷன் மூச்சு-ஜ்வாலை யுடன் ஓடுவதையும் சேவிக்கலாம்
மது ஸூதனன் கைடபாரி இவருக்கு திருநாமம்
ஆதிசேஷன் இவர் அங்கம் தானே -மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் போல் இங்கும்
மாணிக்கம் ஒளி மூச்சு ஒலி-ஸ்பர்சம் -ஒளி பட்டு விஞ்சி இருக்கும்-தேஜஸே மேல் கட்டி விதானம் )

(அனுகூல புத்தியால் கிட்டினால் வாழலாம் -பிரதிகூல புத்தியால் கிட்டினால் வீழ்ந்தே போவார்கள்)

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   ——-66-

பதவுரை

காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

காய்ந்திருளை மாற்றிக் சீறி இருளைப் போக்கி –கதிரிலகு மா மணிகள்-ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-
ஒளி விடா நின்றுள்ள மணிகள் சேர்ந்த பணத்தில் யுண்டான தேஜஸ்ஸின் மேலே நெடு மூச்சு விட
வாய்ந்த-மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்–
கிட்டின மது கைடபர்கள் வயிறு உருகி முடிந் தார்கள்

அது கேடவர்கு இறுதி யாங்கு   —-என்றும்
என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம் ஆவர்களே-3-3-7

(அங்கு அது கேடு இங்கு -அங்கனம் ஆவார்கள் -அங்கு -எனக்கு நிம்மதி பெரு மூச்சு வந்தது என்கிறார்)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் -3- 3-7 –

——————————————————————–

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

சஹாவஸ்தானம் இல்லாத மாத்திரம் இன்றிக்கே சீறிக் கொண்டு இருளைப் போக்கிக் கிரணங்கள் ஒளி விடா நின்றுள்ள
பெரு விலையனான ரத்தினங்கள் சேர்ந்து இருக்கிற தன்னுடைய பணங்களின் ஒளிக்கு மேலே திருவனந்த ஆழ்வான்
அனுபவ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு வெவ்விதாக உச்சவாச நிசுவாசங்களைப் பண்ண-
இவ்வளவிலே விரோதித்து வந்து கிட்டின மது கைடபர்களும் குடல் அழுகி முடிந்து விட்டார்கள் –

அனுகூலர்க்கு வாழவும் ஜீவிக்குமான அந்தக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்தலத்திலே பிரதிகூலித்து வந்து
கிட்டினவர்களுக்கு அந்தக் கிட்டினதுவே வாழ்வுக்கு பிரதி கோடியான கேடும்-

சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதி கோடியுமான விநாசமுமாய் விட்டது –

(சத்தை-சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப லாபம்-வாழ்வு -சத்தை -இதுக்கு பிரதி கோடி- இறுதி கேடு )

(கிடந்ததோர் கிடக்கை -அரவின் அணை மிசை மேய மாயனார் -ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்)

(சுந்தர பாஹு ஸ்தவம் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -இரண்டிலும் மது கைடப நிரசன  விருத்தாந்தம் உண்டே)

—————————————————————————————————————

ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்
இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  ——67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய
வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும்
உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் –
இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது
சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி –
வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று
ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்
இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திரு வாட்டாறு போல்)

———————————————————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்

(இங்குள்ள திர்யக்க்கின் தேஹ யாத்திரையும் உத்தேச்யம்-கீழ் மதியை கண்ணாடியாக கேட்டதையும் பார்த்தோம் )

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
களங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

பதவுரை

சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த களங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப் பழத்தைப் பறித்துத் தா வென்று கை நீட்டப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம் பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறி குணிலாகக் கொண்டு) வீசி யெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு–சுனை நீரிலே கடுவானானது தன்னுடைய நிழலைக் கண்டு

பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -வேறே தனக்கு எதிரியான கடுவன் எனப் பேர்ந்து

கார்த்த–களங்கனிக்கிக் கை நீட்டும் -பின்னையும் தன்னுடைய சாபலத்தாலே அருகில்-களாப் பழத்தை அறுத்துத் தா என்றும் கை நீட்டா நிற்கும் -வேங்கடமே -திருமலை -(இது பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்த கண்ணன் சேஷ்டிதத்துக்கு ஸ்மாரகம் )

மேனாள்-விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தவனுடைய திருமலை –

(ஸூ ந்த்தர பாஹு ஸ்தவம்
பிரதி பார்த்து நரஸிம்ஹம் கொண்ட சீற்றம்
பக்த ப்ரகலாதனைக் கண்ட மயக்கம்)

(திருமலையில் கர்ப்ப க்ருஹம் -சீதா ராமர்
நர்த்தன கண்ணன் -சேவை உண்டே)

——————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்(உருவகம் அழகு அங்கும் இங்கும் )

கரையிலே களாவிலே நின்று சுனையின் நீரைப் பார்த்த கடுவானானது –
நீருக்கு உள்ளே தன்னுடைய நிழலைக் கண்டு
இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே –
தனக்கு எதிரியான வேறு ஒரு கடுவன் என்று பிரதி பத்தி பண்ணி
தன் கையின் சிவப்புக்குப் பகைத் தொடையான கறுத்த நிறத்தை யுடைத்தான காளாவின் பழத்துக்கு
தான் நிற்கிற களாவின் நிழல் என்று அறியாதே
வேறு ஒன்றாகக் கருதி அதின் பழமும் பெற வேணும் என்னும்
சாபலத்தாலே அத்தை அறுத்துத் தா என்று கை நீட்டா நிற்கும் –

வேங்கடமே -பண்டு ஒரு நாளில் விளாம்பழத்துக்கு கன்று எறிந்தவன் வர்த்திக்கிற திருமலை –
இதினுடைய முஃத்யம் (அறிவின்மை பிள்ளைத்தனம் )போலே யாய்த்து அவனுடைய முஃத்யம் இருக்கும் படி –

(கடுவன் ஆண் குரங்கு மந்தி பெண் குரங்கு)

(பகைத் தொடை-மாற்று நிறம் -இணைத் தொடை ஒரே நிறம்)

———————————————————————————————————-

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

———————————————————————-

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(கடல் ஞானம் செய்தேனும் யானே என்னும் போல் அனுவதித்திக் கொண்டு பேசுகிறா)

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்காள் ஆகில்
திருமலையையே ப்ரீதி பிரேரிதையாய்ப் பேசா நிற்கும்

ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்
விஸ்மயமான திருத் துழாய் குல மரியாதைக்கு சேருவது ஓன்று என்று
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் -என்கிறபடியே
இருண்ட குழலின் மேலே சாதரமாகச் சூடா நிற்கும் –

மல்ல வர்க்கம் பொடி படும் படி வளர்ந்த திருத் தோள்களை யுடைய சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளின
பரந்த திருப் பாற் கடலிலே நீராடுகைக்காக விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும்

வேறு ஒரு மலையில் பேர் சொல்லுதல் –
நாறு பூச் சூடுதல் –
வேறு ஒரு நீர் நிலைகளில் குளித்தல் செய்யாள்

பாடுகை சூடுகை முதலான லோக யாத்திரை அடங்கலும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கிற படி

(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே –
வாஸூ தேவ ஸர்வம் -என்று இருக்கும் மஹாத்மா)

மால் கிடந்த -வியாமுக்தனானவன் பள்ளி கொண்டு அருளின என்னவுமாம் -(சர்வேஸ்வரனை என்றும் வ்யாமுக்தன் என்றும் மால்)

இங்கண் இன்றிக்கே கீழும் மேலும்
அந்யாபதேசம் அற்று இருக்க இது ஒன்றும் இப்படி கொள்கிறது என் என்று
பர உபதேசமாக நிர்வஹிப்பார்கள்

அப்போது அம்மலை இம்மலை என்று ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் பார்த்தீர்கள் ஆகில்
திரு மலையைப் பாடுங்கோள்
ஏதேனும் ஒரு பூச் சூட நினைத்தீர்கள் ஆகில் திருத் துழாயைச் சூடுங்கோள்
ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் புக்கு பிராதஸ் ஸ்நானம் பண்ணப் பார்த்தீர்கள் ஆகில்
அவன் சாய்ந்து அருளின கடலிலே நாள் தோறும் அவகாஹிக்கப் பாருங்கோள் என்று பொருளாகக் கடவது –

கற்பு என்று பாதி வ்ரத தர்மம் என்றுமாம் -(குல வரம்பு என்றும் )

——————————————————————————————————-

(இதிலும் திருமலையில் உள்ள களிறு செய்யும் கைங்கர்யம்
அர்க்யம் பாத்யம் ஆசமன்யம் செய்து புஷ்பம் சமர்ப்பித்து-

ஸ்ரீ கஜேந்திரன் போல் தொழும் காதல் களிறு இங்கு உள்ளவை எல்லாமே
இங்கு முதலை நீர் புழுக்களே இருக்காதே )

அனுகூலருடைய தேஹ யாத்திரையே எல்லாம் தனது ஸமாஸ்ரயணத்துக்கு உடலாகக் கொள்ளும்
அவன் எழுந்து அருளி இருக்கும் திருமலை
ஞான பக்திகள் எல்லாம் வேண்டாம் – இவையே யாகம் தவம் என்று கொள்ளும் அத்யந்த ஸுலப்யம்
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே, ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.-
உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

பதவுரை

களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ் வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.

புகு மதத்தால் வாய் பூசிக் —
வாயிலே புகுந்த மத ஜலத்தால் வாய் கழுவி

கீழ்த் தாழ்ந்து அருவி-உகு மதத்தால் கால் கழுவிக் —
கீழே தாழ்ந்த அருவி போலே உகா நின்ற மத ஜலத்தாலே கால் கழுவி

கையால் -மிகு மதத்தேன்-விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கையாலே மிக்க மதத்தை யுடைத்தாய் -அலரா நின்ற பூவைக் கொண்டு களிறு ஆனது

விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு —
விறல் வேங்கடவனையே-என்று திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )

ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –

(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )

(ஊரிலேன் காணி இலேன் -பாரிலேன் பற்றிலேன் -திவ்ய தேச வாஸம் இல்லா விடில் பற்று சமாஸ்ரயணம் பண்ண மாட்டோமே)

(அளித்த யானை கஜேந்திரன் -அழித்த யானை குவலயா பீடம்
நாகம் –பிரணார்த்தம் -ந அஹம் -இந்த உடலை ரக்ஷிக்க நான் உன்னை அழைக்க வில்லை
கரஸ்த கமலான் -ஸமர்ப்பிக்கவே கூப்பிட்டேன் -தொழும் காதல் களிறு அளிப்பான் தோன்றினையே)

(அசேஷ ஜககதித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி
அத்யர்த்தப்பிரிய -தத் பிராப்தி பல-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னுட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

——————————————————————

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

மஸ்தக ஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றின் நின்றும் பாய்ந்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணி கீழே தாழ்ந்து அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தாலே காலைக் கழுவி துதிக்கையாலே

மிக்க மதத்தைப் பண்ணிக் கடவ தேனை யுடைத்தாய்
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களை பொய்க்கைகளிலே புக்குப் பறித்துக் கொண்டு

சாஸ்திர வஸ்யம் அல்லாத திர்யக்குகளும் ஸ்வ விஷயத்தில் ஞான ப்ரேமங்களை விளைக்க வல்ல
பெரு மிடுக்கனான திருவேங்கடம் மேய எந்தையைக் கண்டு தலையார வணங்கி ஆஸ்ரியியா நிற்கும்
அங்குண்டான ஆனையானது –

மதம் என்று கந்தமாய் மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு என்னவுமாம் –

——————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–51-60— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

(ஸர்வ ரக்ஷகன்
ஆஸ்ரித பக்ஷபாதி
என்று அருளிச் செய்து ரக்ஷணமே இயல்பு ஊண் என்றும்
ரக்ஷணம் செய்த பின்பு நீல வண்ணன் ஆனான் முன்பு பார்த்தோம்)

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கு எல்லாம் (உபய ) உபாய பூதன் ஆவான் -என்கிறார்

(மூன்று முறையும் அவனே -ஸஹ கார்யம் நிரபேஷன் –
ஆபத் நிரசனத்துக்கும்-ப்ராபகத்துக்கும் -ஸம்பத் அருளி ப்ராப்யனாகவும் அவனே)

(ஸஹ காரி நைரபேஷ்யம் -மாம் ஏகம் -அர்த்தம் எதிர்பார்க்காமலும் பொறுக்காமலும் இரண்டுமே உண்டே —
அஸஹத்வம் -விரும்புவதும் இல்லை ஏற்பதுவும் இல்லை –
சணப்பனார்  கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போல் பிரதிபந்தகமே ஆகும்
இலங்கா புரம் எரித்தான் எய்து -இங்கும் அவனே என்றால்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -அம்புகள் கூட வேண்டாம்
வில்லெடுத்த ஒரு செயலால்
உலகங்கள் உய்ய செருவிலே செற்ற சேவகனார்
சங்கை இல்லா மூன்றுடன் சேர்த்து இத்தையும் அருளிச் செய்கிறார் )

(உபாயம்-சர்வேஸ்வரனான ஸித்த உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் பக்தி இரண்டையும் பொறுக்கும்
இது சரணாகதி இரண்டையும் பொறாதே -நாம் பற்றும் அதுவும் உபாயம் இல்லையே)

(அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -56-
உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –
இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –
அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –சூரணை -58-
இது இரண்டையும் பொறாது-சூரணை -59-
நிவ்ருத்தி ரூபமாய் இருக்க அங்கம் என்றால் பிரவ்ருத்தம் ஆகுமே அதனால் பொறுக்காது –
இது நிரபேஷ சித்தம் -சாதிக்க வேறே ஒன்றும் வேண்டாமே –
முன்னால் இதர த்யாஜ்யம் இருக்கிறதே என்னில் -அவை ஹேது வாகாதே –
ஆநுக்கூலஸ்யாதிகளும் அங்கங்கள் இல்லை சம்பாவிதங்கள் தானே இவை -உபாயமாக விதித்ததும் ஞான பாக அனுகுணமாக
சித்த உபாயத்தை பற்ற வழி படிக்கட்டு போலே
சரணாகதி -பண்ணி – ருசி வளர்ந்தவனுக்கு பிராப்தி சித்தம் –பிரியதமனாக விஷயாந்தர வெறுப்புக்கள் வேண்டுமே –)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே-11

அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

பதவுரை

அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்(இப்பொழுது 84 அடி உயரம் தான் )
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருத மரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒரு வகைக் கலக்கமுமில்லாத பரம பதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–
வர்ஷத்தாலே நோவு பட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத் தாம் ப்ரவர்த்தித்தது யுண்டோ –
அவனே யன்றோ -என்று
சஹ ஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது(அத்வேஷம் ஒன்றே வேணும் )

அவனே அணி மருதம் சாய்த்தான் —
நிரபேஷமாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே

அவனே-கலங்கா  பெரு நகரம் காட்டுவான் –
பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –

(நாயமாத்மா ஸ்ருதி ஸித்தம்

நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய- ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ॥ 3॥)

கண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——
லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –

(தத் தஸ்ய ஸத்ருசம் பவத் –பிராட்டியே அருளிச் செய்தாள் அன்றோ)

(எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன், அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்’)

———————————————————–

ஒருவராலும் சலிப்பிக்க அரிதான கோவர்த்தன பர்வதத்தாலே -(கல் எடுத்து கல் மாரி காத்தான் அன்றோ )
கல்  வர்ஷத்திலே அகப்பட்டு அழியப் புக்க பசுக்களை ஒரு நோவு வாராமல் குறைவற ரக்ஷித்து அருளி
தான் சஹாயாந்தர நிரபேஷமாக ரக்ஷிக்க வல்ல சக்திமானாவான் அவனே கிடீர்

தன்னிலே இடை வெளி யறச் சேர்ந்து நின்ற யமளார்ஜுனங்களை யசோதாதிகள் சஹகாரியாது
இருக்க தள்ளி விழ விட்டான் அவனே தானே கிடீர்

பிராட்டியைப் பெறுகைக்காக திருச் சரங்களை ப்ரேரித்து விட்டு ப்ரஹ்மாதிகளுக்கும் கணிசிக்க ஒண்ணாத
லங்கா புரத்தை அவர்கள் ஏக தேசமும் சஹகரியாது இருக்க
தக்தமாக்கி விழ விட்டான் அவன் தானே கிடீர்

அப்படியே ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
பெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் (3-9-9)என்கிறபடியே
அகிஞ்சனரான நமக்கு காட்டித் தருவானும் நிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்

(கலங்கா பெரு நகரம் அது -இதுவோ கலக்கும் வென் நரகம்)

(வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-)

(அபூர்வம் போல் அல்ல -நமக்கு சகஜமான-வானவர் நாட்டையும்
நீ- நித்யர்களைப் போல்- அத்தை அனுபவிக்கப் பிறந்தவன் அன்றோ)

அறிவில்லாத பசுக்களோடு
அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை

அறிவுக்கு பிரயோஜனம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை

அறியாமைக்கு பிரயோஜனம் –
பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –

——————————————————————————————————–

கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும்
ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

(புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.

ராமனைச் சொல்லி கண்ணனை நம்மாழ்வார் -இவர் கண்ணனைச் சொல்லி பின்பு ராமனைச் சொல்கிறார்)

(ஏழு மராமரம் எய்தவனையும் ஏழு உலகையும் ஓங்கி வளர்ந்தவனையும் சேர்த்து அருளிச் செய்கிறார் இவர் இங்கு)

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   ——-52-

பதவுரை

இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்த ஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீச மாயா மிருகக் குட்டியை-புரண்டு விழும் படி என்றும்
எய்தான்–பின் சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும் படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்-
இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –

எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் –
மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னாள் என்று எய்தான் -(நின் அன்பின் வழி நின்றே -பெரியாழ்வார் )

(மின்னொத்த நுண் இடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – 3-10 7- –)

எய்ததுவும்-தென்னிலங்கைக் கோன் வீழச் –
எய்ததும் ராவணனைக் கொல்லுகைக்காக

சென்று குறளுருவாய்-முன்னிலம் கைக் கொண்டான் முயன்று —
குறளுருவாய் சென்று மூன்று லோகத்தையும் அடங்கலும் கைக் கொண்டான் –

—————

கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும்
ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து அருளி
மஹா ராஜரை வீஸ்வசிப்பைக்காக மராமரங்கள் ஏழையும் பட்டுருவ எய்து விட்டான்

தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக —
அவ் வாபரண சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு மேல் விளைவது அறியாமல்
அந்த மாயா மிருகம் புரண்டு விழும்படியாக எய்து பொகட்டான்-

அவள் சிறை இருப்பு மாற்றுகைக்காக தெற்குத் திக்கில் யுண்டான
லங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் குட்டிச் சுவர் போலே உருண்டு விழும்படியாக எய்ததும் -(கிள்ளிக் களைந்தான் அன்றோ )

முன்பு ஒரு காலத்திலே ஸ்ரீ வாமனனாயக் கொண்டு மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது-
முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு மிகவும் உத்யோகித்து பூமியை வாங்கிக் கொண்டான்

இது ஒரு செயல்கள் இருக்கும் படியே என்று வித்தகராய் அனுபவிக்கிறார்

அம் மான் மறியை என்ற பாடமான போது-
அந்த மான் குட்டியை எய்தான் -என்றாகக் கடவது –

———————————————————————————————————

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை
ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

(திருக்கமல பாதம் வந்த பின்பு
வந்தாய் என் மனம் புகுந்தாய்
நாமும் கொஞ்சம் அத்வேஷம் காட்டாமல் இருக்க வேண்டுமே)

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-

பதவுரை

மூரி நீர் வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தரத்திலே
இயன்ற — ஸ்ரீபொருந்தியுள்ள
ஆல மரத்து இலையின் மேலால்–ஆல மரத்தின் இலை மீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.

முயன்று
துர்கடங்களை கடிப்பிக்க சேர்ப்பிக்க வல்லவன்

முயன்று தொழு நெஞ்சே-
யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பார் –

மூரி நீர் வேலை-இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று –
உலவா நின்ற நீரை யுடைத்தான கடலிலே யுண்டான மரத்தினுடைய பல்லவமான இருபத்தொரு
ஆலிலை மேலே பயின்று

அங்கோர்-மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்-
சேதனர்க்கு போக உபகரண -போக ஸ்தான போக்யமான பூமியை
அழியா நின்ற வெள்ளத்திலே ஆச்சர்யமான பிள்ளை யானவன்

தண்  அலங்கல் மாலையான் தாள்  —–
ஆலின் இலை மேலே கண் வளர்ந்து அருளுகிற போது பொகட்ட மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
அவனுடைய திருவடிகளை முயன்று தொழு நெஞ்சே –

————————————————————————–

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை
ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

சஞ்சரியா நின்றுள்ள நீரை யுடைத்தான சமுத்ரத்திலே பொருந்தி இருக்கிற
ஆல மரத்தின் யுடைய பவனாய் இருபத்தொரு ஆலின் இலை மேலே சிர காலம் சாய்ந்து அருளி –
அங்கே பூமியினுடைய –சேதனர்க்கு போக்யாதிகளாய் விநியோகிக்கப் படுகிற சாராம்சத்தை க்ரஸியா நின்றுள்ள
பிரளயத்தில் அக்கடிகடனா சாமர்த்தியம் ஆகிற ஆச்சர்ய சேஷ்டிதத்தை யுடைய
முக்த சிஸூ வானவன் ஸ்ரமஹரமாய அசைந்து வாரா நின்றுள்ள திருமாலையாலே
அலங்க்ருதனானவன் திருவடிகளை -நெஞ்சே –

(போக்யாதிகளாய்-போக்யம் போக உபகரணம் போக ஸ்தானங்கள்)

வரில் பொகடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார் –

அலங்கல் -அசைவு –

————————————————————————————————————–

வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

(இவளுக்கு அவன் இடம் காதல் -அவனுக்கு இவள் இடம் பெரிய காதல்
வாரிக் கொண்டு விழுங்குவன் என்று போக –முற்றப் பருகுமவன் அன்றோ)

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை  போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம்   காதல் பெரிது —–54-

பதவுரை

சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடை போய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம் மரங்களை) முறிந்து விழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹ ரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக் கட்டாமல் திரும்பி வருவதில்லை யென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண் கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு—நாரீணாம் உத்தம வது -ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பி யிருக்கின்ற திரு மார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.

தாளால் சகடமுதைத்துப்–
திருவடிகளாலே சகடாசூர நிரசனம் பண்ணி

பகடுந்தி–
குவலயா பீடத்தைத் தள்ளி

கீளா மருதிடை  போய்க்-
இரண்டாய் அருகே நின்ற மருதூடே போய் –

கீளா –
பிளவா மருதிடை போய் என்றுமாம் –

கேழலாய் -மீளாது-மண்ணகலம் கீண்டு –அங்கோர் மாதுகந்த மார்வற்குப்-
ஸ்ரீ வராஹ ரூபியாய் மீளாத படிக்கு ஈடாக பூமியைக் கீண்டு ஸ்ரீ பூமிப் பிராட்டியை உகந்த மார்பர்க்கு

பெண்ணகலம்   காதல் பெரிது —–
பிராட்டி பக்கலிலே ஸ்நேஹம் பெரிது –

—————————————————————–

வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

அஸூரா விஷ்டமாய் மேல் விழுகிற சகடத்தை முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே
உதைத்து விழ விட்டு

புகுவாய் நின்ற போதகம் என்னும் படி
வழியிலே நின்று நலிய புக்க குவலயா பீடத்தைத் திருக் கையாலே உருண்டு விழும் படி தள்ளிப் பொகட்டு

(பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6-பகுவாய் -பெரிய வாய்-)

இடை வெளி யறப் பொருந்தி நின்ற மருதுகளின் நடுவே
அவை அடி அற்று விழும் படி தவழ்ந்து கொண்டு போய்

ஸ்ரீ யபதியான தன் பெருமை பாராதே வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு
வடிவை அழிய மாறின அளவிலே மீளுகை இன்றிக்கே
அந்த பிரளயத்தில் முழுகி அண்ட பித்தியிலே ஒட்டிக் கிடக்கிற அத்விதீயமான
பரப்பை யுடைத்தான பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி-

நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று விரும்பும் படியான
திரு மார்வை யுடையவனுக்கு
ஸ்ரீ பூமிப் பிராட்டியுடைய அபரிச்சின்ன்ன போக்யமான திரு மேனியில் பிரேமம் கரை புரண்டு இருந்தது

பகடு -யானை –
கீளா மருதிடைபோய் –கிழித்துக் கொண்டு மருதுகளின் நடுவே போய் என்னவுமாம் –
காதல் பெரிது -அவள் பக்கல் பிரேமத்தின் கனத்தாலே இறே
அவள் அபிமானித்த பூமியை எடுத்தது என்கை

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்; தன்னுள் கரக்கும்; உமிழும்;
தடம் பெருந்தோள் ஆரத் தழுவும்;பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண் பாரே?–2-8-7-

ஊர்த்தம் மாஸம்-உகப்பு அவளுக்கு
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநாஸாம் அஸி தீக்ஷிணை -பெரிய காதல் அவள் மேல் இவனுக்கு

———————————————————————————————————

இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

பதவுரை

பெரிய வரை மார்வில்–பெரிய மலை போன்ற திருமார்பிலே
பேர் ஆரம் பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்து கொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காள மேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக் கண்களினுடைய
நிறம்–நிறத்தை (ராமக ரக்தாந்த ராஜீவ லோசன )
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவை யெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதி மதுரமாக) வண்டுகள் இருந்து பாடப் பெற்ற தாமரைப் பூவே காட்டித் தரும்.

திருக் கண்கள் நிறம்-தாமரை -வண்டு அறையும் தாமரை -அவற்றின் ரீங்காரம் பாண் ஒடுங்கும் படி -இப்படி அன்வயம்

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு–
ஆராத்தால் -ஹாரத்தால் -பரிச்சேதிக்கப் போகாத மார்பிலே —

பேராரம் பூண்டு-
மடித்துப் பூண வேண்டும் பெரிய ஹாரத்தைப் பூண்டு

கரிய முகிலிடை மின் போல் –
மார்புக்கும் ஹாரத்துக்கும் த்ருஷ்டாந்தம் –
மேகத்திலே மின்னினால் போலே
ஸ்யாமமான திரு மார்பிலே ஹாரம் கிடந்த படி

திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் –
அநுஸந்திக்கும் போது என்றும் -சஞ்சரிக்கும் காலத்தில் என்றுமாம் –

(அடியார்களை ஈர்க்கவே சஞ்சரிக்கிறான் என்று அனுசந்திக்க)

பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ——-
பாண் சாதியாக ஒடுங்கும் படி பாடா நின்ற வண்மை யுடைத்தான பங்கயமே
அவனுடைய பரிச்சதிக்கப் போகாத கண்ணினுடைய நிறத்தைக் காட்டா நின்றது –

(புல்லாங்குழல் கேட்டு ஆடல் பாடல் மறந்து வெட்க்கினார் போல்)

(கம்பீராம்ப ஸமுத் பூத ஸ்ம்ருஷ்ட நாள ரவிகர விகசித புண்டரீக தல அமலாய தீக்ஷண-நீண் நெடுங்கண்-நீண்டும் நெடியதாயும் -பரந்து -)

————————————————————————-

இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

ஹாரத்தால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி பெரிய மலை போலே பரந்து இருக்கிற திரு மார்பிலே
இரு மடி இட்டுச் சாத்த வேண்டும் படி பெருத்து இருக்கிற திரு வாரத்தைச் சாத்தி
மநோ ஹராமாம் படி சஞ்சரிக்கப் புக்கால்

காள மேகத்திலே மின் கொடி பரந்தால் போல் அத்தியாநுபாவ்யமாய் –
அதுக்கு மேலே அவனுடைய மிக்க அழகை யுடைத்தான திருக் கண்களுடைய நிறத்தை
பாட்டு என்று பேர் பெற்றவை அடக்கலும் லஜ்ஜித்து ஒடுக்கும் படிக்கு ஈடாக
வண்டுகளானவை சப்தியா நின்றுள்ள தாமரைப் பூவே காட்டா நிற்கும்

தெரியுங்கால் -என்று பாடமாகில் –
அவ் வழகை அநுஸந்திக்கும் போது -என்று பொருளாகக் கடவது –

——————————————————————————————————

என்னுடைய ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது –
பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –

(நிறம் -பாசுரம் -நிறம் கொண்ட வடிவைச் சொன்னபடி-ஸ்வாமியினுடைய ரூபத்தை
பச்சை வண்ணன்
பவள வண்ணன்)

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய
நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

(ஒரு வகையில் கார் மேகத்தில் மின்னல் -சொல்ல முயலலாம் ஒழிய சொல்லி முடிக்க முடியாதே
சொல்லாமலும் இருக்க முடியாதே-ஸாஷாத் மன்மத மன்மதன் அன்றோ –
நா படைத்த பயனுக்காகவும் காது படைத்த பயனுக்காகவும்
கடலின் கரையில் இருந்து திவலையை அனுபவிப்பது போல்)

(நான்கு யுகங்களிலும்
க்ருத யுகம் ஸத்வ குணம் மிக்கு -வெளுப்பாக
த்ரேதா ரஜோ -சிகப்பாக
த்வாபர -ரஜோ தமோ கலந்து மாந்தளிர் பச்சை
கலி யுகம் பிரார்த்திக்காமல் இருக்க ஸ்வா பாவிக கறுமை

பாலின் நீர்மை செம் பொன் நீர்மை*  பாசியின் பசும் புறம்,* 
போலும் நீர்மை பொற்பு உடைத்தடத்து*  வண்டு விண்டு உலாம்,*
நீல நீர்மை என்று இவை*  நிறைந்த காலம் நான்குமாய்,* 
மாலின் நீர்மை வையகம்*  மறைத்தது என்ன நீர்மையே?)

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

பதவுரை

இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ் வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறிய மாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–அழகையும் குணங்களையும் நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் —
இறையினுடைய வடிவானது
வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –

நிறைவுடைய-நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
நாமே மாட்டாதோமானால் மதிப்புடையளான சரஸ்வதி அங்குத்தைக்குத் தரமாகப் புகழ வல்லளோ-

பூ மங்கை கேள்வன் பொலிவு –
புகழப் போகாமை என் என்னில்
ஸ்ரீ யப்பதியுடைய ஸம்ருத்தியை சிலவரால் பேசப் போமோ –

(நீல தோயத மத்யஸ்தா வித்யுத் தைத்ரியம்
ஆதித்ய வர்ணம் தாமச பரம்
மஹா ராஜனும் வாசா –யதா இந்திரா கோப –யதா அக்னி –யதா புண்டரீகம் -யதா வித்யுத் -ப்ருஹதாரண்யம்
இப்படி ஸ்ருதிகள் இருக்க விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்று சொல்லுவார் மிடற்றைப் பிடிக்கும் படி
துயர் அறு சுடர் அடி
மதி நலம் -உயர்வற உயர் நலம் -குணவான்
உபய விபூதி நாதன்

யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் மாரீசன் புத்திக்கே எட்டாதே)

—————————————————————————–

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய
நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹமானது –
நிறத்தால் வெளுத்து இருக்கும் சிவந்திருக்கும்
பச்சென்று இருக்கும் கறுத்து இருக்கும் என்று ஆராயும் இடத்தில் ஏக தேசமும் அறிய மாட்டுகிறிலோம் –

இது கிடக்க எல்லாரும் அவனைப் பேசும் இடத்தில் தன்னைப் பற்ற வேணும் படியுமாய் –
தான் உள்ளபடி அறிந்து பேசுகைக்கு ஈடான
ஞான சக்த்யாதி பூர்த்தியை யுடையளான சரஸ்வதி யானவளும்
புஷ்ப நிவாசியான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனானவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை
அங்குத்தைக்குத் தகுதியாம் படி நன்றாகக் புகழ வல்லளோ-
ஸ்ரீ யப்பதியினுடைய ஸம்ருத்தியைச் சிலரால் சொல்லாய் இருந்ததோ என்றபடி –

(பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்றும் உணரலாகாது
பேசினார் பிறவி நீத்தார்
செலக் காண்பிப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியார்)

——————————————————————————————————————

கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –

(முயன்று தொழு நெஞ்சே (53-பாட்டில்) இருந்து நெஞ்சே வருவித்திக் கொண்டு நெஞ்சே தெளி -என்கிறார் இங்கு)

(கீழ் திரு மார்பில் ஹாரம் -இங்கு திரு-கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு)

ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

பதவுரை

திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து திரு இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் ஏற்றக் கொள்ளப் பட்டவனான(மேல் இருந்து நடத்தா நிற்கும் -பொறு சிறைப்புள் உவந்து ஏறும் )
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள் தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று-பக்தி ஞான விசேஷம் –
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு

(பக்தியே கழல் தெளி கண்டாய் -விஷய விஷயீ பாவ சாமானாதிகரண்யம்-பக்திக்கு விஷயமான கழல்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் போல் இங்கும் )

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி–மலிந்து திரு விருந்த மார்வன்–
சம்ருத்தமாய் இருண்ட கார் காலத்தில்
மேகத்தில் மின் போலே தோற்றித் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப்படா நின்ற
(இறையும் அகலகில்லேன் என்று )பெரிய பிராட்டியார் உகந்த திரு மார்வை யுடையவன் –

பொலிந்த-கருடன் மேல் கண்ட கரியான் கழலே
மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி (மைப்படி மேனியான் )இருந்தால் போலே சம்ருத்தனான பெரிய திருவடி மேலே
இருந்தவனுடைய திருவடிகளில் யுண்டான –

தெருடன் மேல் கண்டாய் தெளி -(தெருள் தன் மேல் கண்டாய் தெளி)
ஞான விபாகையான பக்தியை எல்லா வற்றுக்கும் மேலாகக் கொண்டு அநுஸந்தி

ஓலக்க வார்த்தை என்று இராதே கொள்–

(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)

(நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –ஸ்ரீ திருவிருத்தம் 29-)

————————————————————————-

ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்தில் மேகத்தில் யுண்டான
மின் போலே பிரகாசித்துப் பெரிய பிராட்டியார் ஆனவள்
ஸ்வரூப ரூப குணாதிகளாலே வந்த வைபவத்தை யுடையளாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற திரு மார்வை யுடையனாய்

(அவன் உள்ள இடங்களில் எல்லாம் இவள் விபு -ஆத்மாக்கள் அனைத்திலும் விலக்ஷணம்
போக்யத்தில் அவனில் விலக்ஷணம்
நாச்சியார் கண் அழகு விழிக்க ஒண்ணாதே
பாபானாம் வா -லுகுதாரா ராமஸ்ய கோஷ்டி)

அதுக்கு மேலே மிக்க வைபவத்தை யுடையனாய்க் கொண்டு –
மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே பொற்க்கென்று இருக்கிற நிறத்தை யுடைத்தாய் –
பெரிய திருவடி மேல் கொண்டு நடத்தா நின்றுள்ள கறுத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளே கிடாய்
உத்கர்ஷ ஹேதுவாக அனுசந்திக்கப்படும் ஸ்வ பாவம் எல்லா வற்றிலும் மேலான உத்கர்ஷம்-

நெஞ்சே நீ இத்தை நன்றாக புத்தி பண்ணு –
சேஷ பூதனுக்கு ஸ்வரூப அனுகுணமான உத்கர்ஷம் சேஷி திருவடிகளை அறிகை இறே

(அடியானுக்கு திருவடிகளை அறிந்து உணர்ந்து நித்தியமாக நினைப்பதே ஸ்வரூபம்)

பொலிந்த கருடன் என்ற பாடமான போது –
சம்ருத்தமான திருவடி என்ற பொருளாகக் கடவது

தெருடன் மேல் கண்டாய் —
தெருடல் தெருடப்படுமது-
அனுசந்திக்கப் படுமவற்றில் இதுவே கிடாய் மேலானது என்றபடி

அன்றிக்கே
தெருள் -என்று ஞானமாய்
ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் –
ஞான விபாக ரூபையான பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே என்றுமாம் –

(வேத ஸ்வரூபம் மேல் அவன் -ஞானத்துக்கு மேல் பக்தி பண்ண வேண்டிய அவன் தானே உத் கர்ஷம்)

முயன்று தொழு நெஞ்சே என்கிற பாட்டில்(53)
சொன்ன நெஞ்சே இங்கும் முன்னிலை –

——————————————————————————————————————-

(பரத்வத்திலும் அதுக்கு பிரதி நிதியான திரிவிக்ரம விபவ அவதாரத்தில் அதுக்கு பிரதிநிதியான
திருவேங்கடத்திலும் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள் அன்றோ)

(யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம்
ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம்
தர்ப்பண்ய பூத் த்ருதம் அபாங்க ச சாங்க ப்ருஷ்டம்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –6-

ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம் –அணியப்பட்ட ஊர்த்தவ புண்ட்ரம் ஆகிற
முக அலங்காரத்தாலே அலங்கரிக்கப் பட்டவர்கள்
யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம் –யாது ஒரு திருமலையினுடைய உன்னதமான சிகரத்தில்
வந்து சேர்ந்த தேவ மாதர்களுக்கு
த்ருதம பாங்க ச சாங்க ப்ருஷ்டம்-தர்ப்பண்ய பூத்–அ களங்க சந்த்ர மண்டல மானது கையிலே எந்தப்பட்ட கண்ணாடி ஆயிற்று
அபாங்கம் என்றது அபகதமான அங்கத்தை -களங்கம் அற்ற
நிஷ் களங்கனாக-தேவதாந்த்ர ஸ்பரிசத்தால் வந்த களங்கத்தை இத் திருமலையை சேவித்து தீர்த்துக் கொண்டமையை
அடுத்த ஸ்லோகம் விவரிக்கும்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –அந்த ஸ்தானம் ஸூந்தர தோளுடையானது திருமாலிருஞ்சோலையாம் –
மலமறு மதி சேர் மாலிருஞ்சோலை அன்றோ –

அதிசய யுக்தி அலங்காரத்தால் இங்கும் திருமலையின் வளர்த்தி அனுபவம்
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலையே
அவர்கள் நிர்மலமான சந்திரனையே கண்ணாடியாகக் கொண்டு ஊர்த்வ புண்ட்ர அலங்காரம் செய்து கொள்கிறார்கள்)

(மதி என்று ஞானம் -இத்தால் ஜீவன்-களங்கம் அற்ற மதி முக்தாத்மா
பிராட்டி புருஷகாரமாய் ஜீவாத்மாக்களை மேல் தூக்கி விட பிரார்த்திக்க
அவன் அருளுவதைச் சொன்னவாறு)

அஸ்மின் மயா சார்த்தம் -என்று
பிராட்டி செய்த செயலைத் திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –

(கோதாவரி நதிக்கரையில் பாறையில் பிராட்டி உடன் இருந்த விருத்தாந்தம் பற்றி பெருமாள் இளைய பெருமாள் இடம் சொன்னது போல்)

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோரு நாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

பதவுரை

தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலா தலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளிந்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படி இருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்-மதியினால் குறள் மாணாய்
கொண்டு–(மாவலி யிடத்தில் பெற்றுக் கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி-
ஸ்படிகப் பாறையில் இருந்த பெண் குரங்கு

அளிந்த கடுவனையே நோக்கி –
தன் பக்கல் ஸ்நேஹித்த ஆண் குரங்கை நோக்கி –

விளங்கிய வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே —
ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே
சந்திரனுடைய மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று உஜ்ஜவலமாய் இருந்துள்ள சந்த்ர மண்டலத்தை தா என்னா நின்றது
இழிந்து (குனிந்து )வாங்க வேண்டும் காண் திருமலையினுடைய உயர்த்தி –

(நாம் சந்திரனுக்கு கீழ் -களங்கம் உள்ள பாதியைத் தான் பார்க்கிறோம்
இங்கே மேல் பகுதி என்பதால் ஒரே பிரகாசம்-விளங்கிய வெண் மதியம்)

மேலோரு நாள்-மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-
பண்டு ஒரு நாள் பூமியை மதியால் கொண்டு
அலாப்யா லாபம் பெற்றானாய் உகந்தவனுடைய ஐஸ்வர்யம் –

——————————————————————-

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் -(சகல மனுஷ நயன விஷய தாங்கனாக )

ஸ்படிகமான சிலா தலத்திலே தன் வேண்டல் பாடு தோற்ற இருந்த பெண் குரங்கானது –
நம்மை ஏவிக் கார்யம் கொள்வது எப்போதோ என்று அவசர பிரதீஷமாய்-
ஸ்நேஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஆண் குரங்கை ப்ரணய ரோஷம்
மாறி சாதரமாகப் குளிரப் பார்த்து பார்க்கைக்குக் கண்ணாடி கொண்டு வந்து தா என்பாரைப் போலே
மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று ஒளி விடுகிற பூர்ண சந்த்ர மண்டலத்தைத் தா என்று
சொல்லும் படி இருக்கிற திருவேங்கடமே
பண்டு ஒரு காலத்திலே பூமியைத் தன் புத்தி யோகத்தாலே
மஹா பலி இருப்புக்குப் பொருந்தும்படி அர்த்தித்து வாங்கிக் கொண்டு அலாப்ய லாபம் பெற்றால் போலே
உகந்த சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –

—————————————————————————————————————

(வாமனன் ஸுலப்யம் ஸுசீல்யம்
திரிவிக்ரமன் -பரத்வம் பொலியும்
பரத்வம் -திரிவிக்ரமன் -திருவேங்கடம் -இவற்றிலே மண்டி இருப்பர் முதல் ஆழ்வார்கள் என்றாலும்
ஸுலப்யமும் வாத்சல்யமும் -அனைவரையும் தீண்டியதால் தோன்றுமே)

சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் -(எங்கள் மால் என்று அறிந்து கொண்டேன் )

(ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வியாபித்து -பொதுவான லக்ஷணங்கள்
தாமரைக் கண்ணன்- கறுமை திவ்ய மேனி -செங்கண் மால் -ஸ்ரீயப்பதி -எங்கள் மால்
வாத்சல்யம் சவுந்தர்யம் லாவண்யம் மிக்கு புருஷகாரமும் இருந்தால் தானே நாம் அணுகி அனுபவித்து வாழலாம்)

கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

பதவுரை

மை போல் நெடு வரை வாய்–மை போன்று இருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும்–இரு பக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல்–அருவி போலே
தார் கிடப்ப–மாலை சாத்தப் பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும்–ஒருக்ஷணமும் விட்டுப் பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு–பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால்–செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான்–எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
சேர பெற்று–அருகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன்–உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.

(அழகும் சம்பந்தமும் பிராப்தியும் புருஷகாரமும் இருக்க இங்கேயே வாழ்ச்சி உண்டே-
திருவேங்கடத்தானையும் திரிவிக்ரமனையும் சொன்னவாறு –
மீனுக்கு உடம்பு எங்கும் போல் திரு இவனுக்கு -சூழும் பத பிரயோகம் -இதனாலேயே —
பச்சை மா மலை -நீல மணி -கறுத்து பளபளத்து இருப்பதையே சொன்னவாறு – )

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்–தாழும் அருவி போல் தார் கிடப்ப–
அஞ்சன கிரியில் பாயா நின்ற அருவி போலே திரு மார்பிலே சாத்தின தோள் மாலை கிடப்ப

சூழும்-திரு- மா மணி வண்ணன் —
அதிலே ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –

செங்கண் மால்–
ஈஸ்வரத்வத்தை ஸூசிப்பியா நின்ற திருக் கண்களை யுடையவன் -( தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக ஏவம் அக்ஷிணீ )

எங்கள்-பெருமான் அடி சேரப் பெற்று —–
போக்ய பூதனாய் -என்னை யுடையவனாய் -வகுத்தவனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று

புத்தி நாஸாத் பிரணஸ்யதி-என்று சப்தாதிகளைப் பற்றாதே வாழும் பிரகாரம் அறிந்தேன் -(தாழும் வகை தவிர்ந்து வாழும் வகை அறிந்தேன்)

(த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் –தலை குப்புற விழ –

(க்ரோதாத் பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்–இப்படி படிக்கட்டு -கீழே விழ –

விஷயாந்தர ப்ராவண்யம் தொடங்கி -சங்கம் காமம் க்ரோதம் -அவி விவேகம்-சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான் -படிக்கட்டுக்கள்)

(மாதலி கவிதை வர்ணனை நீல மேக ஸ்யாமள கண்ணன் அணிந்த மாலைகளை பற்றி
நீல ஆகாசம் -முத்து மாலைகள் ஸாத்தினால் போல் ஆகாச கங்கை அருவிகள் )

——————————————————————-

(தெருடன் மேல் தெருள் ஞானம் அதன் மேல் அவன் பக்தி -கீழே பார்த்தோம் )

கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

அஞ்சனம் போலே இருண்ட நிறத்தை யுடைத்தான பெரிய மலையிடத்திலே இரண்டு அருகும்
தாழ விழுந்து பாயா நின்ற அருவி போலே திருத் தோள்களில் சாத்தின திருமாலையானது
அனுபாவ்யமாய்க் கிடந்தது பிரகாசியா நிற்க-

இவ் ஓப்பனை அழகைக் கண்டு -இறையும் அகலகில்லேன் (நித்ய அநபாயினி நிரவத்யாம் )-என்று
சூழ்ந்து போந்து அங்கே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –

பெரு விலையனான நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனுமாய்-
இவ் வைஸ்வர்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
சர்வாதிகனாய் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு வகுத்த சேஷியுமான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று
(சேஷத்வ பாரதந்த்ர  )ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

————————————————————————————————————

பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் –
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –

(பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து
பெற்றம் முற்றக் காத்து
பிணை மருதமூடு போய்
பேய் முலை உண்டு
மாச் சகடம் உதைத்து
நிரல் நிறை
அரவம் இத்யாதியில் – 10 சேஷ்டிதங்கள் உண்டே

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மற் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–)

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

பதவுரை

பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்(காப்பான் -சாலப் பல நாள் உயிர்கள் உகந்து காப்பான் )
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறி தடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜய சீலமான சங்கை(வெற்றியை இயல்பாக உடைய சங்கு )
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து —இது நிரல் நிறை–

பெற்றம் முற்றாக காத்து
பிணை மருதமூடு போய்
பேய் முலை யுண்டு
மாச்சகடம் உதைத்து -என்றபடி –

கற்றுக் குணிலை-விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான்
கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளங்கனிக்கு கொண்டு எறிந்தவன் –

வெற்றிப்-பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —
வெற்றியை விளைப்பதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்து உகந்தவன் –
பண்டு உண்டான பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கும் –

(சங்கர ஐயா உன் செல்வம் சால அழகியதே)

(அஷ்ட மஹிஷிகள் உரிமை உண்டு
16108-க்ருஹஸ்த தர்மம் -ஒவ்வொருவருக்கும் க்ருஹம் -அனைவருக்கும் ஒரு திவ்ய மங்கள விக்ரஹம்
கோபிகள் -ஐந்து லக்ஷம் -அனைவருக்கும் ஆனந்தம்
தர்ம பரிபாலனம் -விரோதி நிரஸனம் -போக்யம் அனைத்தையும் காட்டி அருளி-அனைத்துமே ஆழ்வாராதிகளுக்கு)

———————————————————————

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –

பசுக்களை ஓன்று ஒழியாமல் ரக்ஷித்து —
ஒன்றோடு ஓன்று பிணைந்து நிர் விவரமாய் நின்ற மருதுகளை ஊடறுத்துக் கொண்டு போய் விழ விட்டு —
பூதனையுடைய முலையை அவள் பிணமாக விழும் படி உண்டு –
பயாவஹமான பெரிய சகடத்தை முறிந்து விழும் படி உதைத்துப் பொகட்டு –
கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளவினுடைய பழத்துக்கு எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்டவன்-

முன்பு ஒரு நாளிலே விஜயத்தை யுண்டாக்குமதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
பிரதி பக்ஷம் நசிக்கும் படி திருப் பவளத்திலே மடுத்தூதி –
விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அருளினவன் கிடீர் –

(புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-இங்கும் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி-அடுத்து அடுத்து)

——————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

மண் ஒடுங்கத் தான் அளந்த மன்-  என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

(உலகமாக தீண்டியது கீழ் -ஊராகத் தீண்டியது இது
இந்திரனுக்காக செய்தது -மண் அளந்த மன் அது
அவனே எதிர்க்கும் அன்று ஆ காத்த கோ இதில்
ஸர்வ ஸ்வாமி அன்றோ)

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்   குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

பதவுரை

குன்றம் குடை ஆக–கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆ காத்த கோ–பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமி யானவன்,
அன்று–முன்பொரு காலத்தில்,
மன்னு மணி முடி–பொருந்தின ரத்னங்களை யுடைய கிரீடம்!
நீண்டு–ஓங்கி வளர்ந்து
அண்டம் போய்–அண்ட பித்தையைச் சென்று கிட்ட,
எண் திசையும்–எட்டு திக்குக்களையும்
துன்னு பொழில் அனைத்தும்–(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூ மண்டலம் முழுவதையும்
சூழ்–வியாபித்த
கழலே–திருவடியினாலேயே
மின்னை உடை ஆகக் கொண்டு உலகு அளந்தான்–மின்னலைப் பீதாம்பரமாக அணிந்து கொண்டு உலகங்களை யளந்தான்.

அண்டம் போய் எண்டிசையும்—மன்னு மணி முடி நீண்டு–
அண்டத்தையும் -எட்டுத் திக்குகளையும் ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகம் வியாபிக்கவும் –

துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே —
சேதனராலே செறியப் பட்ட பூமி யடங்கலும் திருவடிகளே யாகவும் –

மின்னை-உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்  –
மேக பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து அருளுகிற போது
மின்னைத் திருப் பீதாம்பரமாகக் கொண்டு உலகு அளந்தான் –

குன்றம்-குடையாக ஆ காத்த கோ ——-
த்ரை லோக்யத்தையும் தன்னுடைய திரு மேனியில் மறைத்தவன்
ஒரு மலையாலே தன்னுடைய திரு மேனியை மறைத்துக் கொண்டான் –

(ஓங்கி உலகு அளந்த உத்தமனே இன்று அஹம் வோ பாந்தவ ஜாதா என்னுமவன்)

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

கிரீட சூட ஆதி ராஜ்ய கல்பித பட்டர் -மூன்று முடிக்கு உரியவன் இவனே சர்வேஸ்வரேஸ்வரன்

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.–3-1-1-

————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

மண் ஒடுங்கத் தான் அளந்த மன் -என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மலையைக் குடையாக தரித்துக் கொண்டு நின்று வர்ஷத்திலே அழியப் புக்க
பசுக்களை ரக்ஷித்து அருளின நிருபாதிக ஸ்வாமியான கிருஷ்ணன்
உபய விபூதி நாதத்வத்துக்குத் தகுதியாய்க் கொண்டு பொருந்தி அழகிய ரத்னங்களாலே
சமைக்கப் பட்டு இருக்கிற திரு அபிஷேகம் ஆனது முசிவற வளர்ந்து அண்ட பித்தியிலே சென்று கிட்டும் படியாகவும்

(அண்டமும் எட்டு திக்குகளும் திரு அபிஷேகம் வியாபித்ததாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்)

எட்டுத் திக்குகளையும் பிராணிகள் நிறைந்து கிடக்கிற பூமி எல்லாவற்றையும் திருவடிகளே வியாபிக்கும் படியாகவும்
மேக பதத்துக்கு அவ்வருகே செல்ல வளருகையாலே அங்குண்டான மின்னலை திருப் பீதாம்பரமாகக் கொண்டு
மஹா பலி உதகம் பண்ணிக் கொடுத்த வன்று லோகத்தை அளந்து கொண்டான் –

——————————————————————————————————

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

(லோகமாக ரஷித்ததும்
ஊராக ரஷித்ததும்
தமப்பனே பகையானாலும் ரஷித்ததும்-மூன்று பாசுரங்கள்

கிழித்தமை கேசியையும் -ஹிரண்யன் துர்மானத்தையும் -என்பதால் ஸாம்யம் உண்டே

மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -என்று கேசியைக் கீண்ட கிருஷ்ண அனுபவமும்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்ட நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே -)

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரி யுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் —-42–(எரி உருவம் -கோபக்கனலுடன் என்றும் பாட பேதம் )

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள்–பசுக் கூட்டங்களை
மேய்த்து–புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி—லக்ஷம் பசுக்களை ஓன்று சேர்க்கவே -புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா–நாரதர் அஞ்சும்படி மிக்க வடிவுடன் வந்த குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட–ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற வடிவை யுடையனாயும்
மேவி அரி உருவம் ஆகி–பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம்–இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால்–நகங்களினால்
கீண்டான்–கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம்–சீற்றத்தை
தெரி–(நெஞ்சமே!) தெரித்து கொள்.

மிருக மனுஷ்ய -சேர்ந்த அவதாரம் சேவித்த பின்பு
உடனாய் தோன்ற-கொண்ட சீற்றம் ஓன்று உளது -கலியன் -அதுவே நமக்கு தஞ்சம்
வேறே அவதாராந்தரங்களில் நெஞ்சு போகாதே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி–
ப்ராஹ்மணானாய் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடை ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களையும் மேய்த்துக் குழலையும் ஊதி

மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அப் பருவம் -நிரம்பாமையிலே கேசியினுடைய வாயைக் கிழிக்க வல்லனாய்
விரோதியைப் போக்குகையாலே -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –

மேவி-அரியுருவமாகி இரணியனதாகம்-தெரியுகிரால் கீண்டான் சினம் —
மேவி -நரத்வ சிம்ஹத்வமான இரண்டு வடிவு கொண்டால் பொருந்தாதே இருக்குமோ என்னில் –
ஒரு வடிவு போலே பொருந்தின படி-

அன்றிக்கே –
மேவி என்று ஹிரண்யனுடைய வரத்தைக் கிட்டி -என்றுமாம் –

எரி உருவமாகி —
ஒளி யுண்டான ரூபத்தை யுடையவனாய்ச் சினத்தாலே இரணியன் ஆகத்தைக் கீண்டான்-

அன்றிக்கே
அருள் என்று நமக்கு உத்தேச்யம் –
ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்

அச் சினத்தை தெரி –
(நெஞ்சே)அநுஸந்தி -என்றுமாம் -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

(ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -என்றும் சொல்லுமா போல்
கோபத்தால் கிழித்தான் -நகத்தால் கிழித்தான் என்றும் சொல்லலாம் அன்றோ)

————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

பசு மேய்க்கைக்கு யோக்யதை யுண்டாம் படி இடையனாய் பிறந்து
ஜாதி உசிதமாக பசுக்கள் திரளைப் புல்லும் தண்ணீரும் உள்ள இடம் தேடி வயிறு நிறைய மேய்த்து –
திருக் குழலை ஊதி அந்தப் பருவத்தே தான் பிற்காலியாதே நினைத்தது செய்ய வல்ல சமர்த்தனாய்க் கொண்டு
கேசியினுடைய வாயைக் கிழித்தவனாய் விரோதி போகப் பெற்ற ஹர்ஷத்தாலே —
நீல ரத்னம் போலே -இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய்-

இரண்டு வடிவை ஏக காலத்திலே எடுத்துக் கொண்ட அளவிலே சேராச் சேர்த்தியாய் இராதே –
சேர்ப் பாலும் கண்ட சர்க்கரையும் போலே பொருந்தி இருக்கிற -நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு-
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பைத் திரு உகிராலே கிழித்துப் பொகட்டவனுடைய
ஆஸ்ரித விரோதி விஷயமாகக் கிளர்ந்த பரம ப்ராப்யமான சீற்றத்தை
நெஞ்சே -ஆராய்ந்து அநுஸந்தி -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

அன்றிக்கே
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்டான் என்னவுமாம் –

தெரி யுகிர் —
விசதமாகப் பிரகாசிக்கிற உகிர் என்றபடி –

(மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -என்று கேசியைக் கீண்ட கிருஷ்ண அனுபவமும்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்ட நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே -)

——————————————————————————————————-

அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் -(சத்தை பெற்று இருக்கிறது என்றவாறு )

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே
தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

(கீழ் எல்லாம் ரக்ஷணம் செய்த சேஷ்டிதங்களை அருளிச் செய்து
இதில் ஸங்கல்ப ரூப ஞானத்தாலேயே அனைத்து ரக்ஷணமும் செய்கிறான் என்கிற வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்
ஓரகலத்துள்ள உலகு-ஸங்கல்ப லேசத்தால் ஸமஸ்த வஸ்துக்களும் இவனே ஆதாரம் -தன்னில் தானே ஆதாரம் – ஆலிலை நீர் உளதோ -இத்யாதியில் கண்டோமே -கீழே அவதரித்து செய்து காட்டியது ஆஸ்ரிதர் தழுவு முழுசி அனுபவிக்கவே -)

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள்  ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

பதவுரை

சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்ப ரூபமான ஜ்ஞானத்தின் ஒரு சிறு பகுதியில்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.

ஓரகலத்துள்ள உலகு–ஓர் அகலத்து உலகு உள்ளது –
சங்கல்ப ஞான ரூபத்தில் ஏக தேசத்தில் உலகம் எல்லாம் நிலை பெற்று உள்ளது –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து–
சினத்தை யுடைத்தாய் -பெருத்து மதித்த குவலயா பீடத்தின் யுடைய
இரண்டு மருப்புகளையும் அநாயாசேன பறித்து –

புனமேய பூமி யதனைத் –
சேதனர்க்கு போக்யங்களை யுடைத்தான பூமியை –

தனமாகப்-பேரகலத்துள்  ஒடுக்கும் —-
தனம் போலே இருக்கத் திரு வயிற்றிலே வைத்துக் காக்கும் –

பேரார மார்வனார்–
தன்னுடைமையானது ரக்ஷிக்கப் பட்டது என்றத்தாலே
ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற படி –

(பேர் ஆரம் -பேர் மார்வன் என்றும் கொள்ளலாம்)

ஓரகலத்துள்ள உலகு —
அம்சமான சங்கல்பத்து உள்ளது லோகம் –
ஓரப்படுகிற சங்கல்பத்து உள்ளது -என்றுமாம் –

(ஓர் -தன்னிகர் அற்ற அத்விதீயம்
ஓர் -அனுசந்திக்கத் தக்க ஓர்தல் -நினைத்தல்
ஓர் -ஏக தேசம்)

(யஸ்ய அயுத அயுத -பத்தாயிர பத்தாயிர -அம்சம் -சுற்றி விஷ்ணு புராணம் -ப்ரஹ்மாண்டம் -)

(மேருவுக்கு அணு போல் பிரபஞ்சம் அவனுக்கு அன்றோ)

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே
தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

(கீழே அவதரித்து செய்து காட்டியது ஆஸ்ரிதர் தழுவு முழுசி அனுபவிக்கவே)

மிக்க கோபத்தையும் முரட்டு வடிவையும் யுடைத்தாய் –
மத முதிதமாய்க் கொண்டு -முன்னாடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தினுடைய திண்ணிதான கொம்புகளை அநாயாசேன முறித்து விழ விட்டு –
சேதனர்க்கு நல்ல போகங்களை விளைத்து கொள்ளுகைக்கு அனுரூபமான பிரதேசங்களோடு கூடின பூமியை
சீரிய நிதியாக நினைத்துக் கொண்டு பெரிய பரப்பை யுடைத்தான திரு வயிற்றுக்கு உள்ளே வைத்து நோக்கும்
ஸ்வபாவனாய் இரு மடியிட்டுச் சாத்த வேண்டு படி பெரிதாய் இருக்கிற திரு ஆரத்தாலே ஒப்பித்து இருக்கிற
திரு மார்வை யுடையவனுடைய -அத்விதீயமாய் அபரிச்சின்னமான சங்கல்ப ரூப ஞானத்தால் உண்டாய் இருக்கும் ஜகத்து

(ஏழு உலகும் உள்ளே வைத்தும் இடம் உடைத்த பேர் அகலம் -அன்றோ
விபரீத லக்ஷணம்  என்றுமாம்-முஃத ஸிஸூ அன்றோ ஆலிலை மேல் துயின்றான்)

அன்றிக்கே –
ஓரப்படுவதாய் –
அனுசந்திக்கப் படுமதான சங்கல்ப ரூப ஞானத்து என்னவுமாம் –

———————————————————————————————————-

நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்-அலர் கதிரும் செந்தீயும் ஆவான் —
லோகமும் -எல்லாம் ஸம்ஹ்ருதமாய்க் காலமே
சேஷித்த காலமும் –கடலும் –அழகியதாய் -அலரா நின்றுள்ள -ஒளியை யுடைத்தான ஆதித்யனும் -அக்னியும்
தனக்கு பிரகாரமாக யுடையவன் –
இத்தால் ஜெகதாகாரதையைச் சொல்கிறது –

பல கதிர்கள்-பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே—-
பரம பதத்திலே எழுந்து அருளி இருக்கும் படி
திவி ஸூர்ய சகஸ்ரஸ்ய பவேத் யுகபுதுத்திதா–(11 அத்யாயம்) -என்னும் படியே
நூறாயிரம் ஆதித்யர்களை ஓட வைத்த ஒளியை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமான
திரு அபிஷேகத்தை யுடையவனுடைய திருவடிகளிலே –

பூரித்து என்னெஞ்சே புரி –
ஸ்நேஹித்து ஆஸ்ரயி

(திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா—
யதி பாஸ் ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷

ஆயிரம் ஸூர்யர்கள் ஒளி ஆகாசத்தில் ஒரே சமயத்தில் தோன்றிற்று ஆகில் அந்த ஒளி
அந்த மஹா புருஷனுடைய ஒளிக்கு ஒத்ததாக இருக்கும்
ஆயிரம் ஸூர்யர்கள் –ஒரே காலத்தில் உதயமானால் –நிகழாதே -ஒரு வேளை நடந்தால் -இந்த விஸ்வரூபம் காட்டும்
தேஜஸ் ஸூக்கு ஒப்பாகுமோ என்ற சங்கை கொள்ளலாம் -அபூத உவமை –

சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளிக்கு ஒவ்வாதே

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–ஸ்ரீ திருவாசிரியம்–5-)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

லோகங்களும் -கால ஷேமமாம் படி சர்வமும் உப ஸம்ஹ்ருதமான சம்ஹார காலமும் -கடல்களும் –
அழகிய நிறத்தை யுடைத்தாய் விஸ்திருதம் ஆகா நின்றுள்ள கிரணங்களை யுடைய சந்த்ர ஸூர்யர்களும்
சிவந்த நிறத்தை யுடைத்தான அக்னியும் ஆகிற பதார்த்தங்களை பிரகாரமாக யுடையனாய் –

இவ்வளவு அன்றிக்கே

பரம பதத்திலே அசங்க்யாதமான கிரணங்களைப் புறப்பட விடா நிற்பதாய் –
அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்குமவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

(மேலைத் தொண்டு உகளித்து செய்ய வேண்டுமே0

————————————————————————————————

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் –என்று
பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் –
நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் என்கிறார் –

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி புஷ்காரணி தடே -வந்து நித்ய வாஸம் செய்கிறான் –

மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் வெற்பு
வானரமும் வேடும் வணங்கும்படி நமக்காக அன்றோ

மஹா வராஹன் க்ருத யுகத்திலே இங்கு வந்தான் -கலியுகத்தில் திருவேங்கடவன்

பரன் சென்று சேர் வேங்கடம் -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் அன்றோ -வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை-என்கிறார்-மஹா வராஹா ஸ்புட பத்ர லோசனன்

யானை தந்தம் நுனியில் முத்து -மஹா வராஹம் கோட்டில் பூமி -இவ்வாறு சாம்யம் -)

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

பதவுரை

மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–வீர ஸ்ரீ யுடைய -சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொரு நாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய-நில மடந்தை கோட்டிடை கொண்ட எந்தை –
மலை–திருமலையாம்.

மதித்து இருந்துள்ள யானை பிடியுடன் ஸம்ஸ்லேஷித்து இருந்ததால் வந்த மதிப்பு
ஊடலால் பிறந்த கோபத்தால் மாணிக்கம் கல்லே பாறை -மணிப்பாறையிலே பொருது மோதி முத்து உதிர்க்கும்

விரிந்த சீர்-வெண் கோட்டு –
வீர ஸ்ரீ யை யுடைய வெளுத்த கொம்புகளினின்று — கோடு-கோரப் பல்லின் மீது –

பொருகையால் வீர ஸ்ரீ யை யுடைத்தான வெள்ளைக் கோட்டிலே யுண்டான முத்தை யுதிரா நின்ற திருமலை –
பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –
திருமலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹ ரூபமான வடிவு –

(கலவி கிடைக்காததால் வந்த கோபத்தால் ரத்ன பாறையால் குத்தி -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
கலவி ஏற்பட்ட செருக்கால் குத்தி என்று ஸ்ரீ அப்பிள்ளை உரை)

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –

மதித்து இருந்துள்ள யானையானது முன்னடி தோற்றாத இருக்கும் இத் தசையிலும்
தன்னைக் ஏவிக் காரியம் கொள்ள பிடியுடன் கூடி
ஒன்றை வியாஜ்யமாக கொண்டு ஊடி
அநந்தரம் உடல் தீர்ந்து கூடி அபிமுகமாய் கூடி
கலவியால் வந்த செருக்கு உந்த-போக்குவீடாக – இதஸ் சதஸ்ஸாக சஞ்சரித்து
அங்கு உள்ள பளிங்கு -மாணிக்கப் பாறையின் நிழலாலே வேறே ஒன்றைக் கண்டதாகப் பிரமித்து

பெரிய சீற்றத்தை யுடைத்தாய் கொண்டு பொருது அத்தாலே விஸ்திருதையான வீர ஸ்ரீ யை யுடைத்தாய்-
வெளுத்த கொம்புகளினின்றும் முத்துக்களைச் சொரியா நிற்கும் வேங்கடமே முன்னொரு நாளிலே
ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

(கலவி கிடைக்காததால் வந்த கோபத்தால் ரத்ன பாறையால் குத்தி -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
கலவி ஏற்பட்ட செருக்கால் குத்தி என்று ஸ்ரீ அப்பிள்ளை உரை)

———————————————————————————————————

திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும்
அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த அமுதே-ஆராவமுதைக் கொண்டா உப்புச்சாறு கேட்பது -)

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –  ——46–

பதவுரை

பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூல-உபாதான- காரணமாக நின்ற எம்பெருமான்,

அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து-லக்ஷம் யோஜனை கூர்மத்தின் ஓடு இருந்ததாம்
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற் சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.

(பிண்டமாய் நின்ற பிரான் –  -உபாதான காரணமாய் நின்ற எம்பெருமான் –

பிரகிருதி விஸிஷ்ட ப்ரஹ்மமே உபாதான காரணம் -மாற வேண்டுமே
நிமித்த காரணம் ஞானம் ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-பஹுஸ்யாம் பிரஜாயேவ -)

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்–
ஓங்கி இருந்துள்ள மலையைத் தன் முதுகின்
மேலே வைத்து -அதிலே வாசுகியைச் சுற்றி –

(ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2- -இன்றும் கோமதி நதி துவாரகையில் -கடல் நீருடன் கலக்கும் அன்றோ)

தலை முகடு தான் ஒரு கை பற்றி –
கீழ் கடைகிறது குலையாமல் ஆமையாய்த் தாங்கி -மேலே வைத்த சிகரம்
அடிக் கிளர்ந்து போகாத படி ஒரு கையாலே பற்றி –

அலை முகட்டு-அண்டம் போய் நீர் தெறிப்ப —
இத்திறந்த திவலை போய்த் தெறிப்ப –அலை மேல்
நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப-

அன்று கடல் கடைந்தான்–பிண்டமாய் நின்ற பிரான் —
இதுக்கு உபாதான காரணமானவன் —
ஏகோ ஹவை நாராயண ஆ ஸீத்-

(மஹோ உபநிஷத்
ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுச்சொற்கள் கீழே சொல்லி நாராயணன் சொல்லுமே -ந ப்ரம்மா ந ஈஸா -என்றும் சொல்லி
சதேவ ஏக மேவ அத்விதீயம்

ஏகேன ம்ருத் பின்டேண -மண் மயமான -போல் ப்ரஹ்மம் மயமான ஜகாத் –
இதம் ஸர்வம் கலு ப்ரஹ்மம் -தஜ்ஜாலாந் -தஜ்ஜா -தல்ல -தலான்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1- )

(பிரான் -இத்தால் -இரண்டு உபகாரங்கள் -ஸ்ருஷ்டித்ததும் -இந்த்ராதிகளுக்கு உப்புச்சாறு கொடுத்ததும்)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும்
அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

உயர்ந்த சிகரத்தை யுடைத்தான மந்த்ர பர்வதத்தைக் கீழே ஆதார கூர்மமாய் இருக்கிற தன் மேலே வைத்து(கஸ்யமம் ஆதாரம் கூர்ம பீடம் )
வாஸூகியாகிற பாம்பை -அதன் நடுவே கடை கயிறாகச் சுற்றி -அது கொந்தளியாத படியாக அதன் தலையான
சிகரத்தைத் தான் ஒரு கையைக் கொண்டு அமுக்கி -கடைகிற வேகத்தால் அலைகளில் சிறு திவலைகள் ஆனவை
அண்டத்தினுடைய உச்சியிலே சென்று ஜலமானது தெறிக்கும் படியாக இந்த்ராதிகள் திருவடிகளில் வந்து விழுந்த அன்று
மஹத் தத்வமான கடலைக் குளப்படி போலே கலக்கிக் கடைந்து அருளினான் —

கட சராவாதிகளுக்கு காரணமான ம்ருத் பிண்டம் போலே (குடம் மடக்கு மண் உருண்டை )-ஏகமேவ என்னும் படி பிண்டமாய்
(ப்ரஹ்மம் ஓக்கடே )சகல காரியங்களும் தன்னோடு ஒன்றி நாம ரூப விபாக அநர்ஹ
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு
நிகில ஜகத் உபாதான காரண பூதனாய் நின்ற உபகாரகன் கிடீர் —

(சகல எல்லாம் என்றால் -சொல்வதை விட ஓன்று விடாமல் சொல்ல -அகில -நிகில-சொல்லலாம் –

மங்களமாக இருக்கவே அகில என்று தொடங்கி -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா-)

——————————————————————————————

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி
அடிமை கொள்ளுவான் -என்கிறார் -(சேஷன் தோன்றும்படி நிற்பதால் ஆள்கொண்டமையும் தோற்றுமே )

(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மட்டுமே இருந்தாலும் இஷ்ட பிராப்தி கைங்கர்யம் தன்னடையே கிட்டும் அன்றோ)

(நின் அன்னை சாபம் முடித்தனர் என்றதும் சதானந்தர் பதில் சொன்னாரே விச்வாமித்ரருக்கு –

அதே போல் நமக்கும் கார்யம் செய்பவன் என்கிறார் இதில்)

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

பதவுரை

நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி என்னும் அசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழா யணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்—(ஸுகம் பிரமிக்க வைத்து துன்பமே கொடுக்கும் -கொடிய வெந்நரகம் ஸம்ஸாரம் அன்றோ )நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?

நின்ற பெருமானே நீரேற்று–
மஹா பலி பக்கல் நீர் ஏற்று -சேஷித்வம் தோற்றும்படி நின்றவனே

உலகெல்லாம்-சென்ற பெருமானே —
லோகத்தை எல்லாம் அளந்து உடையவன் என்று தோற்றும்படி நின்றவனே –

செங்கண்ணா –
ஸ்நேஹம் தோற்றும்படி நின்றவனே –

(இந்திரன் கார்யம் செய்தோம்-இழந்த சொத்தை மீட்டோம் -குழந்தைகள் தீண்டினோம் -மூன்று காரணங்கள் – மகிழ-செங்கண்)

அன்று-துரக வாய் கீண்ட துழாய் முடியாய்–
வைத்த வளையம் வாடாமல் கேசி வாயைக் கிழித்தவனே –

நங்கள்-நரகவாய் கீண்டாயும் நீ ——–
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

————————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி
அடிமை கொள்ளுவான் -என்கிறார் -(சேஷன் தோன்றும்படி நிற்பதால் ஆள்கொண்டமையும் தோற்றுமே )

(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மட்டுமே இருந்தாலும் இஷ்ட பிராப்தி கைங்கர்யம் தன்னடையே கிட்டும் அன்றோ)

மஹா பலி பக்கலிலே சென்று உதக ஜலத்துக்குக் கை ஏற்றுக் கொண்டு சேஷித்வம் தோற்ற நின்று அருளின வனாய்
அவன் உதகம் பண்ணின அநந்தரம் சகல லோகங்களிலும் சென்று அளந்து கொண்ட சர்வ ஸ்மாத் பரனாய்(பெருமான் )
இந்திரன் கார்யம் தலைக் கட்டப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
ஜகத்து அஸ்தமிதமாகப் புக்க வன்று (நாரதர் பயந்து ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று அஞ்சினார் அன்றோ )குதிரை வடிவு கொண்டு வந்த கேசியினுடைய வாயை கிழித்துப் பொகட்டவனாய்-
அத்தசையிலும் திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு அவ் ஓப்பனை
குறி அழியாமே நின்றவனே -இப்படி விரோதி நிரசன சீலனாய் இருக்கிற நீயே யாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனரான எங்களுடைய சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டாயும்-

——————————————————————————————————————

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன –
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திருவாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )

(ஐந்து அபதானங்கள் இதில் உண்டே-கீழ் ஒன்றும் -இதில் ஐந்தும் -அடுத்ததில் நான்கும் -அடுத்ததில் இரண்டும் -அருளிச் செய்கிறார் )

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

பதவுரை

நீர் ஏற்று–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீ யன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக் கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீ யன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மரங்களின் இடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்-
உன்னுடைமைக்கு மஹா பலி பக்கலிலே நீர் ஏற்று அத்தை திருவடிகளால் அளந்தாய் –

நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்துப் பசு மேய்த்தாய் –

நீ யன்றே-மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த் தேவாசுரம் பொருதாய் செற்று —
கேசி வாயைப் பிளந்து மருதினிடை போய் –
ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கினதுவேயோ —
சேதனரான விரோதிகளையும் போக்கிற்று இல்லையோ –

—————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன –
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திரு வாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )

மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று -ஜகத்தை அடையத் திருவடிகளால் அளந்து கொண்டாய் நீ யன்றோ
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து ரக்ஷணத்திலே ஒருப்பட்டு நின்று -கையும் கோலுமாய்க் கொண்டு பசுக்களை
வயிறு நிறையும் படி மேய்த்தாய் நீ யன்றோ –
உன்னை விழுங்குவதாக வந்த கேசியினுடைய வாய் வலி குலையும் படி
வயிற்றைக் கிழித்துப் பொகட்டு -பெரிய மருதுகளின் நடுவே அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்-
தேவா ஸூர சங்க்ராமத்திலே அஸூர வர்க்கத்தை அழியச் செய்து யுத்தம் பண்ணின நீ யன்றோ

—————————————————————————————————————

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள்
அநேகம் அன்றோ -என்கிறார் –

(இதில் மேல் நான்கு அபதானங்கள்-நீ அன்றே கீழ் பாசுரத்தில் உள்ளதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் )

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பதவுரை

பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக் கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.

செற்றதுவும் சேரா இரணியனைச் –
ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனைக் கொன்றது –அவன் இழவுக்காக என்றவுமாம்

சென்றேற்றுப்-பெற்றதுவும் மா நிலம்-
மஹா பலி பக்கல் நீர் ஏற்றுப் பெற்றது பூமி –

பின்னைக்காய் -முற்றல்-முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்-
நப்பின்னைப் பிராட்டிக்காக திண்ணியதாய்
உலவா நின்ற ஏற்றினுடைய மிடுக்கை அழித்தாய்

மூரிச்-சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —
சூழ்ந்து -இடம் பார்த்து நின்று -கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவனே –

(மூரி-வளைந்த என்றும் கடலில் என்றும் உண்டே)

—————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள்
அநேகம் அன்றோ -என்கிறார்-

(இதில் மேல் நான்கு அபதானங்கள்-நீ அன்றே கீழ் பாசுரத்தில் உள்ளதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் )

நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக-மிடுக்கு யுடைத்தாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள ருஷபங்களின் முன்னே
பயப்படாதே உறைத்து நின்று -கொல்லும் விரகு விசாரித்து -அவற்றின் மிடுக்கைப் போக்கினவனாய் –
இடமுடைத்தாய் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திவாயுதமாக யுடையவனே –
இப்படி இருக்கிற நீ கை கூசாமல் முடித்துப் பொகட்டதுவும் உன்னுடனே பொருந்தோம் என்று இருக்கும்
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை -மஹா பலி பக்கல் சென்று நீர் ஏற்று
அலாப்ய லாபமாகப் பெற்றதுவும் உன்னதான மஹா பிருத்வியை

மூரி என்று -குனிவாய் –
அத்தாலே புடை பெருத்து இருக்கையை நினைக்கிறது

மூரி என்று கடலாய் –
கடலைப் பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -என்னவுமாம் —

————————————————————————————————————-

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி
அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தட வரை வாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணி மயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீல வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேஸ்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருவிகளை யுடைய பெரிய மலையின் கண் உள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்–
ஆக முதலியாய் இட்ட திருத் துழாய் மாலையையும்(முதல் திரு ஆபரணம் பிரதானம் இதுவே என்றவாறு )
ஆதி ராஜ்ய ஸூசகமான மணி முடியையும் யுடையவன் –

தாழ்ந்த வருவித் தடவரைவாய் —
தாழ்ந்த அருவிகளை யுடைத்தாய் இருந்துள்ள தடவரையில்(தட வரை -பெரிய வரை தாழ்வாரை என்றுமாம் )

ஆழ்ந்த-மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்–
ஆழ்ந்து நிர்மலமான நீரை யுடைத்தான சுனையில் வளர்ந்த பெரிய முதலையை
நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –

அணி நீல வண்ணத்தவன் ———–
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்று என்று ஸ்ரமஹரமான வடிவுடையவன் ஆனான் –

(ஸர்வேஸ்வர ஸூசகம் இரண்டுமே இங்கு -ஸ்ரீ அப்பிள்ளை இரண்டுமே ஒன்றாக -திருத்துழாய் சாத்திய திரு அபிஷேகம் -என்று உரை

நீல வண்ணன் செய்த கார்யம் என்கிறார் ஸ்ரீ  அப்பிள்ளை
ஸ்ரீ  பெரியவாச்சான் பிள்ளையோ இப்படி ஆஸ்ரித ரக்ஷணம் செய்ததால் நீல வண்ணன் ஆனான் என்கிறார்

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – -திருமாலை –35–

நீச பாவனை செய்து விலகாமல் சேந்ததால் மகிழ்ந்து செங்கண் மால் ஆனான்

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –2-5-1– —

இவற்றுடன் ஆவி சேர்ந்தான் பிள்ளான் -ஆவி சேர்ந்த பின்பு இவை உளவாயிற்று -இருப்பு பெற்றான் இப்போது தான் -உள -சத்தை

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -1-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -5 – –

(ஆழ்வார் சொல்லக்கேட்டு மகிழ்ந்து நீல மேனியானான் என்னவுமாம்
ஜென்ம கர்ம மே திவ்யம் என்றபடி தனக்கும் திவ்யமான சேஷ்டிதங்களைக் கேட்க்கப் பெற்று நீல மேனி யானான் என்னவுமாம்
சக்ரவர்த்தி பெருமாள் குணங்களை அயோத்யா மக்கள் சொல்லக் கேட்டு பெருமை -மகிழ்ச்சி -எய்தினால் போல் -இங்கும் நீல வண்ணத்தான் ஆனான் -)

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி
அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

வளையச் சாத்தின திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் மிக்க தேஜஸை யுடைத்தான ரத்னங்களோடே கூடின
திரு அபிஷேகத்தை யுடைய சர்வாதிகனாய் -கண்ட போதே சகல சிரமங்களும் போம்படி அழகிய நீல நிறத்தையும்
யுடையனான அந்த சர்வேஸ்வரன் -பூமி அளவும் வரத் தாழ்ந்த அருவிகளும் -தாழ் வரைகளையும் யுடைத்தான மலையிடத்து யுண்டான
ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான மடுவில் மனுஷ்யர் முகம் காணாமல் வளர்ந்த பெரிய முதலையை ஒரு நீர்ப் புழு
என்று பாராதே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கல் வாத்சல்யத்தால் தன் சினம் தீர முடித்துப் பொகட்டான் –

————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 31-40– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்   —–31–

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அவை செய்து–இருபிள வாக்க
அரி உருவம் ஆனான்–நரசிங்கமாகத் தோன்றினவனும்
செவி தெரியா நாகத்தான்–கண்ணையே செவியாக வுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்
நால் வேதத்து உள்ளான்–நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்
நறவு என்றான் பாகத்தான்–தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்
பாற்கடலுளான்–திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான
அவன்–அப்பெருமானுடைய
கோயில் இவை–கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.

செவி தெரியா-நாகத்தான் –
கண்ணையே செவியாக யுடையவன் ஆகையால் தனிப்பட செவி தெரியாமல் இருக்கிற
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனும்

நறவேற்றான்-பாகத்தான் –தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனுடைய /நறவையும் ஏற்றையும் யுடைய-ருத்ரனை
திருமேனியில் ஏக தேசத்திலே கொண்டவன் –

இரணியனதாகம்-அவை செய்தரியுருவமானான் —
உபசயாத்மகமான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பலவாகச் செய்து சிம்ம ரூபியானான் –

உபசயாத்மகமான-வளர்ந்து கொண்டே -பரியனாகி வந்த அவுணன் உடல் அன்றோ –(தேகம் வளர்ந்து -சரீரம் இளைத்து )

செவி தெரியா-நாகத்தான் —
ஒரு இந்த்ரியத்தாலே எல்லாவற்றையும் க்ரஹிக்குமவன் -சஷூஸ் ஸ்ரவா இறே -(ஸங்கல்பத்தாலே அனைத்தும் அறிபவன் )

நால் வேதத்துள்ளான் –
நாலு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்பட்டவன்

நறவேற்றான்-பாகத்தான்–
நறவை ஏற்றவன் –நறவையும் ஏற்றையும் யுடைய ருத்ரனுக்குத் திருமேனியிலே இடம் கொடுத்த சீலவானாவான்-

பாற் கடலுளான்–
திருப் பாற் கடலிலே உள்ளவன்

இவை யவன் கோயில்-கீழ்ச் சொன்னவை -நெஞ்சை வருந்தி அனுவர்த்தித்தபடி –

(ஆகவே நெஞ்சே இவ்வாறு எளியவனாகையாலே அவனை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்றவாறு)

—————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்

அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தலங்களாய் இருக்கும் கீழ்ச் சொன்ன இந்தத் திருப்பதிகள் எல்லாம்
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பை சின்னம் பின்னம் என்னும்படி பல கூறாம் படி பண்ணி அவன் வாரத்துக்கு
உள்ளடங்காத நரசிம்ஹ ரூபியானவன் –
சஷூஸ் ஸ்ரவா யாகையாலே சஷூர் இந்திரியம் கொண்டே ஸ்ரோத்ர இந்திரிய காரியமும்
கொள்ள வல்லவன் ஆகையால் செவியால் தெரியும் தெரிவின்றிக்கே இருக்கிற திருவனந்த ஆழ்வான் உடைய
திரு மேனியில் நிரந்தர சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்குமவனாய்
நிர்தோஷ ப்ரமாணமான நாலு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாய் வர்த்திக்குமவனாய் –
ஹேயமான மதுவையும் ருஷபத்தையும் யுடைய துர்மாணியான ருத்ரனைத் திருமேனியின் பார்ஸ்வத்திலே
யுடையவன் ஆகையால் அத்யந்தம் ஸூ சீலனுமான சர்வேஸ்வரன் ப்ரஹ்மாதிகளுக்கு ஆசிரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினான் –

——————————————————————–

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

பதவுரை

குருந்து–குருந்த மரத்தை
ஒசித்த–முறித்தொழித்த(மருத மரங்கள் சகடத்தால் முறித்தது வேறே சரித்திரம் )
கோபாலகன்–கண்ணபிரான்
பால் கடலும்–திருப்பாற் கடலையும்
வேங்கடமும் திருமலையையும்
பாம்பும்–திருவனந்தாழ்வானையும்–ஸுசீல்யம் சொல்ல வந்த இடம் என்பதால் இப்பத பிரயோகம்
பனி விசும்பும்–(ஸம்ஸார தாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரம பதத்தையும்
நூல் கடலும்–கடல் போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல் பால் பட்டிருந்தார் மனமும்–ஸூஷ்மமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட
ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றி யிருக்கும்படி யோகத்தில் நிலை நின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான்–வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்

நூற் கடலும் —
இதிஹாச புராணங்கள் ஆகிற கடலும் –

நுண்ணூல தாமரை மேல் –
இதிஹாச புராணங்களில் ஹ்ருதய கமலம் என்று

பாற் பட்டு-
சொல்லப் படுகிறதின் மேல் வைக்கப் பட்ட

இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்-
இந்திரியங்களை யுடைய மனஸை தனக்கு இருப்பிடமாகக் கொண்டான்

குருந்து ஒசித்த கோபாலகன் —-
விரோதியைப் போக்கி ஸூலபனானவன்-

இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம் என்கிறது –

(மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால் நெஞ்சம் நாடு குடி கொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில் மன்னு கோயில் கொண் டானே.–8-6-4-

நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும்.– ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத் விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

குருந்தத்தை அநாயாசேன முறித்துப் பொகட்ட கோப குல அவதீர்ணனான கிருஷ்ணன் -திருப் பாற் கடலும் -திரு மலையும்
திருவனந்த ஆழ்வானும் -சம்சார வெக்காயம் தட்டாத படி -குளிர்த்தி மிக்கு நிரதிசய போக்யமான ஸ்ரீ வைகுண்டமும்
ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான (ஆதி -இதிஹாஸ புராணங்கள் )சாஸ்திர சமுத்திரமும் –பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்று
(அதோமுகம் தலை கீழ் வைத்த ஹ்ருதய தாமரை )அதி ஸூ ஷ்மமான வேதாந்த சாஸ்திர ஸித்தமான ஹ்ருதய கமலத்தின் மேலே ஸமஸ்த கரணங்களும்
ப்ரவணமாம் படி யோகத்தில் ஸூ பிரதிஷ்டராய் இருக்கிற பரம யோகிகளுடைய மனஸ்ஸூம் ஆகிற
இவ்விவ ஸ்தலங்களை அபிமதமான இருப்பிடமாகக் கொண்டான் –

——————————————————————-

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

(இப்படி சர்வ ஸூலபனாய் இருந்தால் -நமது அபேக்ஷிதங்களைத் தர வல்லவனோ என்னில்
நாம் விரும்பாமல் இருந்த காலத்தும் தந்தவன் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கேட்டதை அளித்தவன் என்று சங்கதி)

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று —33–

பதவுரை

மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய்–சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல்–ஆலந்தளிரிலே
உலகு எல்லாம்–உலகங்களையெல்லாம்
பைய–மெல்ல
மெய்மையே–உண்மையாகவே
உண்டவனே–அமுது செய்து கிடந்தவனே!
மாலவனே–ஸர்வாதிகளே!
நீ–இப்படிப்பட்ட நீ,
அன்று–அன்றொருநாள்
மந்தரத்தால்–மந்தர மலையைக் கொண்டு
மா நீர்க் கடல் கடைந்து–மிக்க நீரை யுடைய கடலைக் கடைந்து
வான் அமுதம்–திவ்யமான அமிருதத்தை
அந்தரத்தார்க்கு–தேவர்களுக்கு
ஈந்தாய்–அளித்தாய்.

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்–
ஒரு பாவனாய் இருபத்தொரு ஆலிலையின் மேலே பருவம் நிரம்பாப் பிள்ளையாய் –

மேலோருநாள் உண்டவனே —
லோகங்களை எல்லாம் நோவு படாமல் மெள்ளத் திரு வயிற்றிலே வைத்தவன் –

(எஞ்சாமல் வயிற்றில் வைத்து –பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம்)

மெய்ம்மையே —
ஐந்த்ர ஜாலகரைப் போலே யன்றிக்கே சத்யமே–

மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று–
பிராணனைக் கொடுக்க வல்ல மிடுக்கை யுடைத்தான அம்ருதத்தை ஆகாசத்தே நிற்கிறவர்களுக்குக் கொடுத்தாய் நீ அன்று –

(வானமுதம்-சிறப்பு மிக்க அமுதம் அன்றோ)

(கீழே வந்ததாக இவர்களுக்கு நினைவே இருக்காதே -எண்ணம் ஸ்வர்க்கத்திலே இருப்பதாகவே உள்ள தேவர்கள்)

(இப்படிப்பட்டவர்களுக்கு அபேக்ஷிதங்களை அளிப்பவன் அவனைக் கேட்டால் நமக்குத் தராமல் இருப்பானோ நெஞ்சே என்றபடி)

———————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

தனக்கு சிலர் பரிய வேண்டும் படி முக்த சிஸூவான விக்ரஹத்தை யுடையவனாய்க் கொண்டு பவனாய் இருபத்தொரு
ஆலந்தளிரின் மேலே பூர்வ காலத்திலே லோகங்கள் எல்லாவற்றையும் நெருக்குப் படாதபடி மெள்ள இந்த்ர ஜாலமாக வன்றிக்கே
பரமார்த்தமாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் -(பிரளய ஆபத்தில் அபேக்ஷியாத காலத்திலேயே ரஷித்தவன் அன்றோ )
இந்த அகடிகடனா சாமர்த்தியத்தால் சர்வாதிகன் என்று தோற்ற இருக்கிறவனே-
ஏவம் விதமான சக்தி மஹாத்ம்யத்தை யுடைய நீ தேவர்கள் -சாகாமைக்கு மருந்து தேடித் தர வேணும் -என்று
அர்த்தித்த அன்று மந்த்ர பர்வதத்தாலே-மிக்க ஜலத்தை யுடைத்தான திருப் பாற் கடலைக் குளப்படி போலே கலக்கி
உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் உரப்பை யுடைத்தான அம்ருதத்தை ஸ்வர்க்க வர்த்திகளான தேவர்களுக்கு கொடுத்து அருளினாய் –

——————————————————————

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

அஞ்சும் குடியில் யுள்ளார் அருளிச் செயல்கள் இதே போல் பலவும் உண்டே
(நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே— திருச்சந்தவிருத்தம்
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் ,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,
இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.–8-3-5-

இப்பாட்டில் திருக்கோளூரையும் திருப்புளிங்குடியையும் பிரஸ்தாவித்தது மற்றுமுள்ள சயனத்திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம்.

* நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில் * என்று திருமழிசைப்பிரானும்,

* அரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை * என்று திருமங்கை மன்னனும் தொடுத்தருளின சயனத் திருப்பதிகள் பலவும் இங்கே விலக்ஷிதமாகலாம்.

இத்திருப்பதிகளிலே ஆடாமல் அசையாமல் நீ திருக்கண்வளர்ந்தள்வதற்கு என்ன காரணம்? மஹத்தான சிரம்மோ?

திருவடிகளிலே சரணம் புகுந்த இந்திராதி தேவர்களுக்காக ராவணாதிகளை அழியச்செய்து அவர்களது துக்கங்களைப் போக்கின. விளைப்போ? அன்றியே, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து. ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலகமெல்லாம் தாவியளந்த சிரம்மோ? என்கிறார்.

கொடியார் மாடம் – மாடங்களுக்கு கொடிகட்டியிருப்பதும் ஆழ்வார்க்கு அச்சத்தை விளைக்கிறதென்று நம்பிள்ளை திருவுள்ளம்பற்றி யருளிச் செய்யுமழகு பாரீர் – “சத்ருக்கள், கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி கொடி கட்டிக்கொண்டு கிடக்கவேணுமோ? கொடிக்கு பயப்படவல்லார் இவரைப் போலில்லை, கம்ஸ பயத்தாலே ஒளித்துவளர்ந்தாப்போலே யிருக்கலாகாதோ?“ என்பன ஈட்டு ஸ்ரீஸூக்திகள்

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

பதவுரை

நெஞ்சமே–மனமே!
அன்று–முன்பொரு காலத்தில்
நின்று–நின்று கொண்டே
இவ்வுலகம்–இவ்வுலகங்களை யெல்லாம்
அளந்த–அளந்ததனாலுண்டான
அசவே கொல்–சிரமத்தினாலேயோ
வேளுங்கை–திருவேளுக்கையிலே
இருந்து–வீற்றிருந்து
நீள் நகர் வாய்–(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்
அன்று–ஒரு காலத்தில்
கிடந்தானை-பள்ளி கொண்டவனும்–
கேடு இல் சீரானை-ஒரு காலு மழிவில்லாத திருக் குணங்களை யுடையவனும்
முன்–முன்னொரு கால் கம்ஸனை
கடந்தானை–கொன்று ஓழித்தவனுமான பெருமானை
காண்–ஸேவி

கேடில் சீரானை —
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையவனை —

முன் கஞ்சனைக் கடந்தானை நெஞ்சமே காண்–
கம்சன் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடு போம்படி முடித்து உபகாரகன் ஆனவனை –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி

(நீள் நகர் என்றதே திரு வெக்கா என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளம்)

————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை –
நினைவற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கிற அன்று
அநாயாசேன நின்று காடு மோடையுமான இஜ் ஜகத்தை அளந்து கொண்ட அலசுதலாலேயோ இருப்பது கிடப்பது ஆகிறது
என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

————————————————————————

நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

(ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணி த்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ர த்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோக்ய லோசந த்³வய ஹரேர் க³ச்சா²ங்க்⁴ரி யுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥–ஸ்ரீ முகுந்த மாலை 16॥)

கண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

பதவுரை

கண்கள்–என்னுடைய கண்களானவை
கதிர் இலகு–ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண்–திவ்ய ஆபரணங்களையும்
தார்–மாலையையும்
அகலத்தான்–திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி–அழகிய திருமேனியை
கண் காண் என விரும்பும்–காணவேணுங் காண வேணுமென்று ஆசைப்படா நின்றன.
வண்டு–வண்டுகளானவை
பாடி–இசைப்பாடிக்கொண்டு
அறையும்–ஒலி செய்யப் பெற்ற
தொங்கலான்–மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில்–சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி–ராகத்திலே அமைத்துப்பாடி
யாம்–நாம்
கை–கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும்–சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு பூண்டார கலத்தான் பொன் மேனி —
காண் காண் என விரும்பும் கண்கள்–ஒளி விடா நின்ற ஹாரத்தையும் தாரையும் யுடைத்தான –
திரு மார்பை யுடையவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக் கண்கள் காண் காண் என விரும்பா நின்றது –

பாண் கண்-தொழில் பாடி —
பாட்டிலே தொழில் யுண்டாக பாடி –பாண் தொழில் உண்டாகப் பாடி என்றுமாம்-
அவனுடைய தொழிலைப் பாட்டிலே வைத்துப் பாடி என்னவுமாம் –

வண்டறையும் தொங்கலான செம்பொற்-கழல் பாடி யாம் தொழுதும் கை —-
வண்டுகள் சப்தியா நின்றுள்ள மாலையை யுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக் கையாலே தொழுவோம் –

(ஸ்வரத்துடன் பாடி -பாணர்கள் தொழில் செய்து -அவன் உடைய அழகிய பாண் -அழகு -சேஷ்டிதங்களைப் பாடி மூன்று அர்த்தங்கள்)

————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு (முன்புற்ற கரணங்கள் ஆயினவே )அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

என்னுடைய கண்களானவை புகர் ஒளி விடா நின்றுள்ள ஆபரணங்களையும் திரு மாலையையும் யுடைத்தான
அகன்ற திரு மார்வை யுடைத்தானவனுடைய பொன்மலை போலே ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக்
காண வேணும் காண வேணும் என்று ஷாம காலத்தில் சிறு பிரஜைகள் சோறு சோறு என்று அலையுமா போலே
மிகவும் ஆசைப்படா நின்றன –

பாட்டினிடத்திலே அவனுடைய சேஷ்டிதங்களை வைத்துப் மதுபான மத்தமாய்க் கொண்டு
வண்டுகள் சப்தியா நின்றுள்ள திரு மாலையாலே அலங்க்ருதனானவனுடைய –சிவந்த பொன் மேலே அதி சிலாக்யமான
திருவடிகளை நாம் வாயாரப் பாடி –கையாலே அத்யபி நிவேசம் அடங்கும் படி -தொழுவோம்

பாண் -என்று பாட்டாய் -கண் என்று இடமாய் -பாட்டின் இடத்திலே தொழிலை வைத்துப் பாடி என்றபடி –

அன்றிக்கே -பாண் என்று அழகாய் அழகிய தொழிலைப் பாடி என்னவுமாம் –

பாணருடைய தொழிலிலே-ரீதியிலே பாடி -என்னுதல்

பாட்டுக்களைத் தொழில் யுடைத்தாம் (ஸ்வரங்களுடன்  )படி பாடி என்னவுமாம் –

—————————————————————————

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

(அவன் தொழிலைப் பாட ஆசைப்பட்டபடியே திவ்ய ஆயுதங்களின் சேர்க்கையும்
திரு அனந்தாழ்வான் மேல் திருப்பாற்கடலில் கண் வளர்ந்து அருளி
அங்கு இருந்தும் உலகு அளந்த சேஷ்டிதங்களைப் பாடி மகிழ்கிறார்-)

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

பதவுரை

பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரை யுடைய கடல் சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்து கொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.

அனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்-வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  –
செய்ய–படை –கைய-
இவை கையில் உள்ளன

செய்ய என்று -ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –

செய்ய என்று-ஆயுதமான போது விதேயமான ஆயுதங்கள் -கருதும் இடம் பொரும் அன்றோ
பரவை பாழி—-திருப் பாற் கடல் படுக்கை —

பனி நீருலகம்-அடியளந்த மாயரவர்க்கு —
கடல் சூழ்ந்த பூமி யளந்த சர்வேஸ்வரனுக்கு –

—————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

குளிர்ந்த நீரை யுடைத்தான கடல் சூழ்ந்த பூமியைத் திருவடிகளாலே அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனான அந்த
சர்வேஸ்வரனுக்கு பிரதி பக்ஷத்தின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு வாழி —
கறுத்த நிறத்தை யுடைத்தான கடல் இடத்தே பிறந்த வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
வெவ்விதான ஸ்ரீ கதை -அப்படி இருந்துள்ள ஸ்ரீ சார்ங்கம் -வெவ்விய தேஜஸ்ஸை யுடைய திருக் குத்துடை வாள் –
இவை யாகிற அழகிய திவ்ய ஆயுதங்கள்- திருக் கையிலே யுளவாய் இரா நின்றன –
திருப் பாற் கடல் படுக்கையாய் இரா நின்றது -என்று வித்தராய் அனுபவிக்கிறார் –

———————————————————————-

நாம் அடிமையில் அந்வயிக்க (35-36 பாசுரங்களில் )ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –

(ஆபாச விருத்திக்கு அங்கு -தர்மபூத வியாப்தி -இவனுக்கோ ஸ்வரூப வியாப்தி ப்ராப்ய விஷயத்தில்)

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணிலென்று
ஆர்வற்ற வென்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தானென்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே.–9-6-10- திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப் பாட்டு உயிரானதென்னலாம்.)

(ஈஸ்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா?  சேதந லாபம் ஈஸ்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு;  சேதந லாபந்தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம்.

எம்பெருமான் ஸ்ருஷ்டி யவதாரதி முகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ.

ஸஹஸ்ர சீர்ஷா -எங்கும் வியாபித்து -அத்யதிஷ்டதி தசாங்குலம்- பொருளைத் தாண்டி பத்து மடங்கு நின்று ரக்ஷணத்தில் பாரிப்பு இருந்தபடி –
அதே போல் என்னுள்ளும் உள்ளும் இருந்து ரக்ஷிக்கிறானே)

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவள வாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

பதவுரை

உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்–உப்புக் கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்–சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண்–பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம்–ஹாரங்களும்
திகழும்–விளங்கப் பெற்ற
திரு மார்வன் தான்–திருமார்பை யுடையனான எம்பிரான்-திரு வார மார்பன் -ஆரமும் திருவும் திகழும் மார்பன் அன்றோ
அகத்தான் புறத்தான்–உள்ளிலும் வெளியிலும் வாசி யறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு–அப்படிப்பட்ட பெருமானுக்கு-கீழ் சொன்னபடி திவ்ய ஆயுதங்கள் தரித்து உலகு அளந்த சர்வேஸ்வரனுக்கு
அடிமை பட்டேன்–ஆட்பட்டவனானேன்.

(அகத்தான் புறத்தான்-அனைத்து வாசகமும் இவனையே சொல்லும் -இந்திரா ஸகல ஐஸ்வர்யம் கொண்டவன் -என்றும் அந்தர்யாமிதயா என்றும் உண்டே)

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் —
திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக உடையனாய்

(இவர் திருமேனி நிழலீட்டால் -நீலக்கடல் கடைந்தாய் உன்னைப் பெற்றும் இனி போக்குவேனோ என்றார்)

துவர்க்கும்-பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் —-
பெரிய பிராட்டியாரையும் அநேகம் மாணிக்கங்களையும் யுடைத்தாய் இருந்துள்ள
பூண் ஆரத்தாலே திகழா நின்றுள்ள திரு மார்பையும் யுடையவன் -அவனுக்கு அடிமைப் பட்டவன்-

குறைவற்ற மேன்மையையும் -வடிவு அழகையும் யுடைய ஸ்ரீயபதியானவன் நான் அடிமையிலே அந்வயித்த
மாத்திரத்திலே உள்ளும் புறமும் விட சக்தன் ஆகிறிலன்-

(உப்புக் கரிக்கும் கடலிலும் உள்ளான் -மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -அதே போல் பாற் கடலிலும் கண் வளர்ந்து அருளுகிறான் என்றவாறு
அனுபவிக்க ஸ்தானம் -அனுபாவ்யம் -அனுபோக்தாக்கள் -குறைவற்ற அவன் அன்றோ இவ்வாறு என்னிடம் உள்ளான்)

(அந்தர் பஹிஸ்ய தத் சர்வம் வியாப்ய நாராயணன் ஸ்தித -எல்லார் இடமும் உண்டே
ஆழ்வார் போல்வாருக்கோ சரோ லஷ்மி விசிஷ்டானாய் சகல திவ்ய மங்கள விக்ரஹத்துடன் வியாபித்து இருப்பானே)

—————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

அப்படிப்பட்ட வைபவத்தை யுடையனானவனுக்கு ஒரு பிரகாரத்தாலே அடிமை புக்கேன் -அநந்தரம் பூமியைச் சூழ்ந்து
லவண உத்தரமாய் -கறுத்து இருந்த கடல் நீரிலே கண் வளர்ந்து அருளுமவனாய் -சிவந்த பவளம் போலே இருந்துள்ள
திரு அதரத்தை யுடையளான பெரிய பிராட்டியாரையும் -பல வகைப்பட்ட ரத்தினங்களை யுடைத்தான ஆபரணங்களையும் –
திரு ஆரத்தையும் யுடைத்தாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள திரு மார்வை யுடையனான அவன் தான் –
அந்த ஒப்பனையையும் குறைவற்ற மேன்மையையும் பிராட்டியுடைய ஆதாரத்தையும் புரிந்து பாராமல் ஸுபரியைப் போலே
பல வடிவு எடுத்துக் கொண்டு உள்ளொடு புறம்போடு வாசி அறக் கலந்து நின்று அனுபவியா நின்றான்-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

(அடியேன் ஒரு பிரகாரத்தாலே மட்டுமே -வாசிக கைங்கர்யத்தில் மட்டுமே அடிமை புக்கேன்-
அவனோ ஸர்வ பிரகாரத்தாலே அபி நிவேசம் மிக்கு இருக்கும் படியை -தானே நீரைப் படைத்து

அதனுள்ளே தானே கண் வளர்ந்து அருளும் இவன் அன்றோ இவ்வாறு உள்ளான் என்று நினைத்து ஈடுபடுகிறார் )

———————————————————————

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

பதவுரை

எவ் உருவும்–எல்லாப் பொருள்களும்
தன் உருவே–அவன் தனக்கு சரீரமாகவே யிருக்கும்,
தவம் உருவும்–தபஸ்ஸு பண்ணிப் புண்ய சரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும்–நக்ஷத்ரங்களும்
தானே–அவன் தன் வடிவாகவே யிருக்கும்,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டு திக்குகளும்
அண்டத்து–மேலுலகிலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
தானே ஆய இறை–தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்-ஸர்வ ஸ்வாமியானவன்
தனக்கு தானே உவமன்–(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.-அத்விதீயம் நம்மது -அத்வைதம் போல் அல்லவே

(நளிர் மதி சடையன் என்கோ -முனியே நான்முகன் முக்கண் அப்பா -அரி யயனை அலற்றி–நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -ஸரீராத்ம பாவத்தால் ஸாமாநாதி கரண்யம்-வியாப்த கத தோஷம் தட்டாதவன் -ஸர்வ ஸ்வாமியானவன் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் )

(சரீரம் பிரகாரம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -பூ மணம் மாணிக்கம் ஒளி –
பிரகாரமாக இருப்பவை எல்லாம் சரீரமாக இருக்க வேண்டாமே –
சரீரமாக இருப்பவை எல்லாம் பிரகாரமாகவே இருக்கும்
நம்மது -பிரகாரி அத்வைதம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் போல் இன்னும் ஓன்று இல்லையே -ஆகவே பிரகாரி அத்வைதம்)

தானே தனக்குமவன் –
தனக்கு உபமான ரஹிதன் —

உபமான ராஹித்யத்துக்கு அடி -சகல பதார்த்தங்களும் அவனுக்கு
பிரகாரங்களாய் -தான் பிரகாரியாய் -பிரகாரி யந்த்ரம் இன்றிக்கே இருக்கை –

தன்னுருவே எவ்வுருவும் -எல்லா பதார்த்தங்களும் அவனுக்கு சரீரம் –

(ஜகத் சர்வம் சரீரந்தே -பவான் நாராயணோ தேவ –ஆத்மநாம் மானுஷம் மன்யே)

தானே தவவுருவும் –தபஸ் ஸூ பண்ணி- புண்ய சரீரான -அதிகாரிகளும் அவனுக்குப் பிரகாரம் –

(யுக கோடி ஸ–த்ரை லோகாய ப்ராப்தாவான் -அடைந்தான்
மஹாதேவ்சன் சர்வமேத யாகத்தில் தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து சிவா பதவி பெற்றான்
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை(

————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தனக்கு சரீரமாய் இருக்கும் -தபஸ்ஸைப் பண்ணின புண்ய சரீரராய் –
ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அதிகரித்த ப்ரஹ்மாதி பதார்த்தங்களும் நக்ஷத்ரங்களும் தான் என்கிற சொல்லுக்குள்ளே
அடங்கும் படி தனக்கு பிரகாரமாயேயாய் இருக்கும் -ஜ்வலன ஸ்வபாவமான அக்னியும் -பெரிய குல பர்வதங்களும் –
எட்டு திக்குகளும் -அண்டாந்தர வர்த்திகளான சந்த்ர ஸூரியர்கள் ஆகிற இரண்டு வகைப்பட்ட தேஜஸ் பதார்த்தங்களும்-
தனக்கு பிரகாரமாய் இருக்கும் -இப்படி கார்ய காரண ரூபமான சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரமாய்-
தான் பிரகாரியாய் -தனக்கு ஒரு பிரகாரி யந்த்ரம் இன்றிக்கே இருக்கக் கடவ சர்வேஸ்வரன் தனக்குத் தானே
உபமானமாய் இருக்கும் –

இன்னமும் இப்படி இருப்பான் ஒரு ஈஸ்வரன் உண்டாகில் இறே ஒப்புக் சொல்லலாவது என்று கருத்து–

(ஜ்யோதி விஷ்ணு புவநாநி விஷ்ணு வனாநி விஷ்ணு ஏவ ஸர்வம் -யத் அஸ்தி நாஸ்தி ச விப்ரவர்யா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸர்வம் கலு ப்ரஹ்மம்–ப்ரஹ்மம் ஒக்கடே -)

——————————————————————–

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

(திருமலை-சாதனம் -உள்ளம் ஸாத்யம் -பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
மூன்று அடிகளால் கோர மா தவம் செய்து
உள்ளத்தின் உள்ளே வருவதற்காகவே)

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய்  மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே  உளன் —–39-

பதவுரை

இறை ஆய்–ஸர்வ ஸ்வாமியாய்
நிலன் ஆகி–பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய்–எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாக வுடையனாய்
மறை ஆய்–வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறை பொருள் ஆய்–அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய்–நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த–சந்திர பதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி–மிக்க ஜலத்தை யுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி–விளங்குகின்ற கோஷத்தை யுடைத்தான்
நீர்–நீரை யுடையதுமான
வேங்கடத்தான்–திரு வேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன்–என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்-மறையாய்
உபய விபூதி உக்தனாய் -பூமியும் எட்டுத் திக்குகளும் வேதங்களும் தான் இட்ட வழக்கு –

(வையம் தகளியாய் –ஆழியான் -என்ற போதே உபய விபூதி நாதத்வம் சொல்லி வருகின்றார்கள் அன்றோ)

மறைப் பொருளாய்
வேத ப்ரதி பாத்யனாய் –

வானாய்-பிறை வாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்-
சந்த்ர பதத்தில் கிட்டின வெள்ளத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையில் நின்று

உள்ளத்தின் உள்ளே  உளன்-
என்னுடைய ஹிருதயத்திலே புகுர அவசர பிரதீஷனாய் இருக்கிறான் –

(குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11-தாவி வையம் கொண்டவன் அன்றோ இன்று இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்)

ஸ்ரீ ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யம்; அவை வருமாறு; “(ஆலினிலை மேல துயின்றான்.) தன்னைக் கொண்டு காரியமுடையார் சிலரைக் கண்டிலன்; எல்லார்க்கும் ஆராய்ச்சிப் படும்படியான செயலைச் செய்வோமென்று பார்த்தான்; வேண்டாவென்பாரைக் கண்டதில்லை. அது ஸாத்மித்தவாறே நித்யஸூரிகளும் தானுமாகவந்து திருமலையிலே நின்றான்; அதுவும் ஸாந்மித்தவாறே இவருடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார்ல்லாமையாலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான்.* பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டோடி வந்து இவருடிடய மனக்கடலிலே வாழப் பு’கான்.’‘

————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

சர்வ ஸ்வாமியாய் -பூமிக்கு அந்தர்யாமியாய் -எட்டுத் திக்கில் யுண்டான ஸமஸ்த சேதனரையும் தனக்கு
பிரகாரமாக யுடையனாய் -சேதனர்க்கு ஹித அஹித ஞாபகமான வேதங்களுக்கு நிர்வாஹகனாய் –
பரம ஆகாச சப்த வாஸியான பரம பதத்தையும் பிரகாரமாக யுடையனாய் -சந்த்ர பதத்தைக் கிட்டி இருப்பதாய்-
மிக்க ஜலத்தை யுடைத்தான திரு அருவிகளினுடைய விளக்கத்தை யுடைத்தாய் த்வனியா நின்றுள்ள
ஜல ஸம்ருத்தியோடே கூடி இருப்பதுமான திருமலையை வாசஸ் ஸ்தானமாக யுடையனான சர்வேஸ்வரன்
திருமலையிலே நிலை இங்கே வந்து புகுருகைக்கு அவசரம் பார்த்து நின்ற நிலை என்று தோற்றும்படி
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

——————————————————

இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

(சத்தை சொல்ல வந்த இடம் இங்கு அல்லவே -தான் உளனாக அவன் திரு உள்ளம் நம்மை ரஷித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அன்று தானே
இசைவித்து இருத்துவான் அன்றோ -நாமோ யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட அதமர்கள்-விலக்காமையே வேண்டுவது
அனைத்தும் செய்தாலும் ருணம் ப்ரவர்த்தனாக நினைத்துக் கொள்ளுபவன் அன்றோ
என்றுமே உத்தமன் உளன் -நாம் இசையாத அன்றும் -அவன் திரு உள்ளம் இப்படியே அன்றோ -தீஷிதம் விரத ஸம்பன்னம்
உள்ளுவார் உள்ளத்து திவ்ய மங்கள ரூபம் காட்டி அருளி அதுவும் தனது பேறாகக் கொள்பவன் அன்றோ)

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!–அவனை உளனாகிய நன்மை
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-

(இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா
நித்யம் பிரியாஸ் தவ து கேசந தே ஹி நித்யா
நித்யம் த்வத் ஏக பரதந்த்ர நிஜ ஸ்வரூபா
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-

எம்பெருமானே சகல பதார்த்தங்களினுடைய சத்தையானது தேவரீருடைய இச்சையினாலேயே யாகும்
தேவரீருடைய நித்ய இச்சைக்கு விஷய பூதங்களான சில வஸ்துக்கள் நித்ய வஸ்துக்கள் ஆகும்
எப்போதும் தேவரீர் ஒருவருக்கே அதீனமான ஸ்வரூபத்தை யுடையவைகளான தேவரீரது
திருக்கல்யாண குணங்களே இவ்விஷயத்தில் நமக்கு உதாஹரணங்கள் ஆகும்)

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திராத அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

(விலக்காமையே வேண்டுவது-விலக்காமல் இருந்தால் தன்னுடைய க்ருஷி பலித்ததே என்று உகக்குமவன் அன்றோ)

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு உயரா நின்ற
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள
திருமலையிலே நின்றவன் பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்

இந்திரன் இழந்தது பெறுகையாலும் -மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே -நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும்
ஸ்வபாவனான சர்வேஸ்வரன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –

நாம் அவனுடைய உண்மைக்கு (சத்தைக்கும் நமது தாரகத்துக்கும் )இசைந்த இன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு உளனாய் இருக்குமவன் கிடாய் -அவன் தானே வந்து புகுரும் இடத்திலே
விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-

ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான -திருமலையை இருப்பிடமாக
உடையனானவன் பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 10, 2016

கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

(ஆ பால கோபாலர் அனைத்தவரையும் தீண்டி ஆஸ்ரித பாரதந்தர்யம் திரு உள்ளத்தில் பட இப்பாசுரம் உதயம் –
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய சேஷ்டிதம் பற்றி அருளிச் செயல்களில் மிகவும் குறைவாகவே உண்டு)

(எவ்வளவு உயரப் பேசினாலும் அவ்வளவுக்கு நிற்பவன் -எவ்வளவு குறைய பேசவே முடிந்தாலும் அதுக்குத் தக்க தன்னை அமைத்துக் கொள்கிறான்
அலங்காரம் -ஆபரண சேர்க்கை -ஆயுத சேர்க்கை -விரோதி நிரஸனம் -போன்றவை பேசி முடிக்க முடியாதே)

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு —21-

பதவுரை

வாசம் மலர் துழாய் மாலையான்–மணம் மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும்
தேசு உடைய சக்கரத்தான்–தேஜஸ்ஸை யுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான்–ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான்–சார்ங்க வில்லை யுடையவனும்
பொங்கு அரவம் வக்கரனை கொன்றான்–மிக்க ஆரவாரமுடையனாய் வந்த
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய
வடிவு–ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்)-படி எடுத்துக் காட்டும் படி அல்லவே -திரு மேனி அழகு என்றுமாம்
பேசுவர்–பேசுகின்றார்களோ
அவ்வளவே–அவ்வளவேயாம்.

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே-
பேசுமவர்களுக்கு யாதொரு அளவுண்டு அவ்வளவு பேசிப் போம் அத்தனை
விஷயத்தைப் பரிச்சேதித்துப் பேசப் போகாது

வாச மலர்த் துழாய் மாலையான் –தேசுடைய-சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்-
பரிச்சேதித்துப் போக ஒண்ணாமைக்கு இவை தனித் தனியே ஹேதுக்கள்

பொங்கரவ-வக்கரனைக் கொன்றான் வடிவு —
விஸ்திருதமான (பரந்து விரிந்த -வி ஸத்ருசமான -பொருந்தாத )சப்தத்தை யுடையனான தந்த வக்தரனைக்
கொன்றவனுடைய வடிவு பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே –

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 8 –

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

——————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

பரிமளம் அலை எறியா நின்றுள்ள பூத்தாரை யுடைத்தாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
நிரவதிக தேஜஸை யுடைத்தான திருவாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்(படை போர் புக்கு முழங்கும் )ஸ்ரீ சார்ங்கம் -இவற்றை யுடையவனாய்
பெரிய கிளர்த்தியோடே எங்கே எங்கே என்று பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு வந்த தந்த வக்ராசூரனை
முடித்துப் பொகட்டவனுடைய பிரகாரம் மாறு பாடுருவப் பேசுகைக்கு சக்தராய் இருக்கும் அவர்கள் தங்கள் ஞான சக்திகளைக்
கொண்டு எவ்வளவு பேச வல்லவர்கள் -அவ்வளவேயாய் இருக்கும் அல்லது -உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது -என்கை —

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே – நம்மாழ்வார் திருவிருத்தத்தில்,

விஷ்ணுவுக்கு துளசி மாலை, தழை, கொம்பு, வேர்
நின்ற மண், ஆகிய ஏதாயினும் ஒன்றால் அர்ச்சிக்க வேண்டும்.)

————————————————————

அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச்   செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு –22-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
வானவர்கள்–நித்ய ஸூரிகள்
வடிவு ஆர்–அழகு பொருந்திய
முடி–கிரீடங்களை
கோட்டி–தாழ்த்தி-வணங்கச் செய்து
கடி ஆர் மலர்–மணம் பொருந்திய புஷ்பங்களை
நாளும்–நாள்தோறும்
தூவி –ஸமர்ப்பித்து–முறை கெட -ந ஸாஸ்த்ரம் ந க்ரம
காணும் படியானை-ஸேவிக்கப் பெற்ற திரு மேனியை யுடையனான எம்பெருமானை
செம்மையால்–முறைப்படியே
உள் உருகி–உருக்கங்கொண்டு
செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மையே–உள்ள படியே
காண–ஸேவிப்பதற்கு
விரும்பு–ஆசைப்படு

(செம்மையால்–முறைப்படியே–உள் உருகி–உருக்கங்கொண்டு–செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மையே–உள்ள படியே–காண–ஸேவிப்பதற்கு–விரும்பு–ஆசைப்படு-நாளும் மலர் தூவி என்றும் நாளும் காணும் என்றுமாம் –
அனைத்தும் முடியாதவற்றுக் காரணம் -ஆசைப்படவே காட்டி -அனைத்தையும் செய்யும் படி அருளுவான் அவன் அன்றோ)

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்–கடியார் மலர் தூவிக் காணும் -படியானை–
தர்ச நீயமாய் இருந்துள்ள முடிகளை வணக்கித் தேவர்கள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்ப்பத்தை கார்ய புத்தி இன்றிக்கே
திருவடிகளிலே பொகட்டுக் காணும் ஸ்வ பாவத்தை யுடையனாய் உள்ளவனை

(ப்ரயோஜனங்களை அபேக்ஷிக்காமல் ஸ்வயம் பிரயோஜனமாக -அத்யந்த பக்தி யுக்தனாய்)

செம்மையால் உள்ளுருகிச்   —-
அவன் சேஷீ -நான் சேஷ பூதன்- என்னும் முறையாலே -ஹிருதயம் சிதிலமாய் –

(ஸ்வாமி அவஸ்துவான எனக்கும் வந்து காட்ட வந்தானே என்று எண்ண உள்ளம் உருகுமே)

செவ்வனே -அவன் காட்டும் வழியாலே

நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு–
பிரயோஜன நிரபேஷமாகக் காண ஆசைப்படு –

(சேஷ சேஷி பாவம் அறிந்த நெஞ்சமே -முன்புற்ற நெஞ்சே -அவன் காட்டக் காணலாம் என்று அறிந்த நெஞ்சமே
மெய்ம்மையே -பூர்ணமாக என்றும் ஸ்வயம் ப்ரயோஜனமாக என்றுமாம்)

———————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே- ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

அழகு மிக்கு இருந்துள்ள அபிஷேகங்களை வணக்கி (கோடி வளைத்து -தாழ்த்தி )நித்ய ஸூரிகள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்பங்களை அக்ரமமாக பணி மாறி -யத்ர பூர்வே சந்தி தேவா சதா பஸ்யந்தி -என்கிறபடியே
இவை விடாமல் கண்டு அனுபவிக்கும் வடிவு அழகை யுடையவனை –
அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் முறையாலே தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து ஹிருதயம் சிதிலமாய்
நாம் ஒரு யத்னம் செய்யாது இருக்கத் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் காண்கிற
செவ்வை வழியாலே மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ்கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே
விருப்பத்தைப் பண்ணு –

வானவர்கள் என்று ப்ரஹ்மாதிகள் ஆகவுமாம்
படி -விக்ரஹம் -(ஸ்வ பாவம் பிரகாரம் என்றுமாம்)

———————————————————————-

உபதேசம் பலித்த படி சொல்கிறது –

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு துளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் —23-

பதவுரை

வண் தார்–அழகிய மாலையிலே(பெண் வண்டுகள் இங்கு சுரும்பு மேல் ஆண் வண்டுகள் )
அம் சிறைய சுரும்பு–அழகிய சிறகுகளை யுடைய வண்டுகள்-
துளையில் சென்று ஊத–ரஸ நாடியிலே படிந்து ஊத (அதனால்)
அரும்பும்–அரும்புகள் உண்டாகப் பெற்ற
புனம் துழாய் மாலையான்–நல்ல திருத் துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய
விரும்பி விண் மண் அளந்த பொன் அம்கழற்கே–ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே
மனம்–எனது மனமானது
துழாய்–அவகாஹித்து
மால் ஆய் வரும்–மயங்கிக் கிடக்கின்றது.

சுரும்பு -ஆண் வண்டு-

(விரும்பி-உவந்த உள்ளத்தனாய் -பகவான் விரும்பி -சுரும்பு விரும்பி ஊத -மனம் விரும்பி மாலாய் வரும்
வந்து -மனம் -மண் அளந்த -தத்வ த்ரயங்களையும் சொன்னபடி
விரும்பி விண்ணையும் மண்ணையும் அளந்த வண்டார் சுரும்பு என்றும் -பொன் அம் கழல் என்றுமாம்)

விரும்பி விண் மண்ணளந்த —
பொன்னங்கழற்கே விரும்பி என்னவுமாம் –
விருப்பத்தோடு விண்ணும் மண் அளந்த

அஞ்சிறைய வண்டார்-சுரும்புதுளையில்  சென்றூத  –
அழகிய சிறகை யுடைத்தான வண்டார்க்கும் சுரும்பு நரம்பு அறிந்து ஊத

அரும்பும்-புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே மனந்துழாய் மாலாய் வரும் —
அரும்பா நின்றுள்ள புனந்துழாய் மாலையானுடைய விலக்ஷணமான கழலிலே
மனஸ்ஸானது வியாமோகத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –

———————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

அழகிய சிறகை யுடைத்தான வண்டும் -அத்தை விட்டு நீங்காதே சேர்ந்து வர்த்திக்கக் கடவ சுரும்பும் ஆகிற இவை
ரஸ சிரைகளிலே (நரம்புகளில்)வாய் வைத்தூத –அவற்றால் கணுத் தோறும் அரும்பிச் செல்லா நிற்பதாய்
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றால் போலே செவ்வி பெற்றுச் செல்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனாவனுடைய -ஆகாசம் பூமி முதலானவற்றை உகந்து அளந்து கொண்டு ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே
மனசானது முன்னடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிக் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மனசோடு சேர்க்கவுமாம் –

————————————————————————

ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

(விரும்பு விரும்பி விடாமல் விரும்பி மூன்று பாசுரங்களும் )

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

பதவுரை

ஆழி நெஞ்சே—பெரியவனை அனுபவிக்க வேண்டிய-கம்பீரமான மனமே!
இரு நிலனும்–விசாலமான பூமியும்
மால் விசும்பும்–அளவிறந்த ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
நெருங்கு தீ–செறிந்த தேஜஸ்ஸும்
நீர் உருவும் ஆனான்–ஜல தத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்
பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான்–பொருந்திய ஒரு சுடர்ச் சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய-உபய விபூதி நாதத்வம்
சூழ் கழலே–அடியாரை அகப்படுத்திக் கொள்ளுகிற திருவடிகளையே
வருங்கால் நாளும்–மேலுள்ள காலமெல்லாம்
தொழுது–வணங்கி
தொடர்–(அவனையே) பின்பற்றி யிரு.

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்-நெருங்கு தீ நீருருவு மானான் —
காரணமான பூத பஞ்சகமும் -லீலா விபூதிக்கும் உப லக்ஷணம் –

பொருந்தும்-சுடராழி ஒன்றுடையான்–
நித்ய விபூதிக்கும் உப லக்ஷணம் –

சூழ் கழலே நாளும்-தொடராழி நெஞ்சே தொழுது —
உபய விபூதி உக்தனுடைய சூழ் கழலே வரும் கால் நாளும்
ஆழி நெஞ்சே தொழுது தொடர் -கீழே விச்சேதித்து அநர்த்தப் பட்டது போரும் -முறையாலே ஆஸ்ரயி –

———————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

பரப்பை யுடைத்தான பூமியும் -அபரிச்சேத்யமான ஆகாசமும் வாயுவும் செறிந்த தேஜஸ்ஸும் ஜலமும் ஆகிற
இவ்வவ பதார்த்தங்களுக்கு அந்தர்யாத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி நிஷ்டனாய் –
திருக் கையிலே பொருந்தி இருக்கும் அத்விதீயமான தேஜோ ரூபமான திரு வாழியை யுடையவன் ஆகையால்
நித்ய விபூதி விசிஷ்டனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய -ஆஸ்ரிதரை ஸ்வ வைலக்ஷண்யத்தாலே
தப்பாத படி சூழ்த்துக் கொள்ளுகிற திருவடிகளையே அளவுடைய நெஞ்சே -ஸ்வரூப அனுரூபமாக தொழுது
மேல் வரும் காலம் எல்லாம் ஆறி இராதே நாள் தோறும் பின்பற்றி ஆஸ்ரயி –

———————————————————–

நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

(ஸம்ஸாரம் இருக்க எவ்வாறு என்றவாறே பிரதிபந்தகங்களைப் போக்கி அருளினவன்-நான்கு விஷயங்களைச் சொல்லி சமாதானம்
வயிற்றிலே வைத்து ரக்ஷகன் -அடியவர்க்கு எளியவன் -விரோதிகளை போக்கி -அடியவர்க்கு எளியவன்-வானவர்க்கு சேயன் நமக்கு அணியன் )

(நெஞ்சே சிறந்து
தூ நீருலகம் முழுதுண்டவனை தொழுதால் பழுதுண்டே
மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை தொழுதால் பழுதுண்டே
மால் விடை ஏழ் செற்றானை தொழுதால் பழுதுண்டே
வானவர்க்கும் சேயானை தொழுதால் பழுதுண்டே)

(விரும்பு விரும்பி விடாமல் விரும்பி மூன்று பாசுரங்களும் சொல்லி இதில் பிரதிபந்தகங்களைப் போக்கி அனுபவிப்பான் என்கிறார்)

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

பதவுரை

தூ நீர் உலகம்–நிர்மலமான நீரை யுடைய கடலோடு கூடின உலகங்களை
முழுது–முழுவதும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி–அழகிய கூந்தலை யுடையளான யசோதையினுடைய
விழுது–வெண்ணெயை
உண்ட வாயானை–அமுது செய்த வாயை யுடையவனாயும்–வாயிலே வெண்ணெய் நாற்றம் வீசும் என்பதால் வாயன் பத பிரயோகம்
மால் விடை ஏழ் செற்றானை–கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்
வானவர்க்கும் சேயானை–பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே
நெஞ்சே–நெஞ்சமே!
சிறந்து–சிறப்புற
தொழுதால்–வணங்கினால்
பழுது உண்டே–குற்ற மேதேனுமுண்டோ?

விழுது–semi solid -கடை வெண்ணெய் -நக்கியே உண்ண வேண்டுமே –
லேகியம் லிக்-lick / மாதா -mathar / கொல்-kill

தூ நீருலகம்—வைத்து -முழுதுண்டு–
சூழ்ந்த கடல் அலையாத படிக்கு ஈடாக லோகத்தை எல்லாம் வயிற்றிலே வைத்து –

மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை–
அனுகூலருடைய த்ரவ்யத்தால் அல்லது தரியாதவனை

மால் விடை ஏழ் செற்றானை-
நப்பின்னை பிராட்டியுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதியான மதித்த(மதம் பிடித்த )ஏறு ஏழையும் செற்றவனை

வானவர்க்கும்-சேயானை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு மனஸூக்கும் வாக்குக்கும் தூரஸ்தான் ஆனவனை

சிறந்து ——நெஞ்சே–தொழுதால் பழுதுண்டே —
ஆஸ்ரிதற்கு ஸூலபனானவனைக் கிட்டித் தொழுதால் பழுது உண்டோ –

———————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

நிர்மலமான ஜலத்தை யுடைத்தான கடலோடு கூடின பூமியாதி லோகங்களை ஒன்றும் பிரி கதிர் படாத படி
கடலின் நீரும் கலங்காமல் இருந்த கட்டளையிலே எடுத்து -திரு வயிற்றிலே வைத்து -அவ்வளவிலும்
வயிறு நிறையாமையாலே -அழகிய குழலை யுடையளான யசோதை பிராட்டியாருடைய வெண்ணெயை அமுது செய்த
திருப் பவளத்தை யுடையனாய் -நப்பின்னைப் பிராட்டியைக் கைப் பிடிக்கைக்கு இடைச்சுவரான முரட்டு ரிஷபங்கள்
ஏழையும் முடித்துப் பொகட்டவனாய் -மிகை மிடுக்காலே காண ஒருப்படும் ப்ரஹ்மாதிகளுக்கும் சால தூரஸ்தனாய் இருக்கிறவனை
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

—————————————————————————————————————

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

(இசைந்த பின்பு அனைத்து திவ்ய தேச அபிநிவேசங்களும் சிந்தையில் வைப்பான் -ஆகவே அத்தையே முதலில் அருளிச் செய்கிறார்

கடவார் கடமை யுடையவர் -நிர்வாஹகர் -என்றும் கடந்து போக மாட்டார் என்றுமாம் –
வெக்கா வேளுக்கை தனியாகச் சொல்லி -திருக்கச்சி யுள்ளும் –
கடவாமை இவ் விரண்டிலும் -ஆதி சேஷன் இடமும் எனது சிந்தையும் ஒரே அபிநிவேசம்
ஆறு இடங்களில் இருப்பத்தைச் சொல்லி -மற்ற நான்கிலும் உறைவார் -நம் திரு உள்ளத்துக்கு வர ஏணி போல் இவை என்றுமாம்

சிறந்த -ஹ்ருதயம் தானே விஸ்வஸ்ய ஆயத்தனம் மஹத் -நெஞ்சமே நீள் நகராகக் கொள்ளுமவன் அன்றோ –
என் பால் இடவகை கொண்டனையே -என்பார்களே )

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார்  ——–26–

பதவுரை

தண் துழாயார் தாம்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்
கடவார்–ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க் கொண்டு
உறைந்ததுவும்–நித்ய வாஸம் பண்ணுமிடங்கள் (எவை யென்றால்)
சிறந்த என் சிந்தையும்–சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்
செம் கண் அரவும்–சிவந்த கண்களை யுடைய திருவனந்தாழ்வானும்
நிறைந்த சீர்–நிறைந்த செல்வத்தை யுடைய
நீள்–பெரிய
கச்சி யுள்ளும்–கச்சித் திருப்பதியும்
வேங்கடமும்–திருமலையும்
வெஃகாவும்–திருவெஃகாவும்
வேளுக்கைப் பாடியுமே–திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
என்னுடைய சிந்தையுள்ளும் -திருவனந்த ஆழ்வான் மேலும்
கச்சியுள்ளும் சாதரமாக யுறைந்தது –

வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே-தாங்கடவார் —
திருமலையிலும் திரு வெஃகாவிலும் வேளுக்கை பாடியிலும் கடவரான மாத்திரம் –
கடவரான மாத்திரம் என்று சொன்ன உரம் எத்தாலே என்னில் –
தண் துழாயார்

நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் -வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே–உறைந்ததுவும்–
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-தாங்கடவார்–
உகந்த படுக்கையான திருவனந்த ஆழ்வானோபாதி என்னுடைய நெஞ்சை அதிக்ரமியார்-

(மற்ற திவ்ய தேசங்களைக் கடந்து என்னுள்ளத்திலே வந்தானே -இத்தைக் கடக்க மாட்டான் –
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –

பிராட்டியைப் பிரிந்து இருந்தாலும் இளைய பெருமாளை பிரிய இயலாமல் பெருமாள் இருந்தாரே -)

அன்றிக்கே
திரு வனந்த ஆழ்வானையும் என்னுடைய நெஞ்சையும் தம்மதாக அபிமானித்து இருப்பது –
அல்லாத வற்றில் உறைந்த மாத்திரமே என்றும் அருளிச் செய்வார் –

(எனது நெஞ்சத்துக்கு இருந்தமைக்கு சத்ருசமாகச் சொல்லலாவது
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி என்பதால் அத்தையும் இங்கு சேர்த்து அருளுகிறார்)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதனான பெருமையை யுடைய தாம் -திரு உள்ளத்திலே
உகப்புடன் நித்ய வாசம் பண்ணி அருளிற்றும் -தாம் விரும்பி மேல் விழுகைக்குத் தகுதியான என்னுடைய ஹிருதயத்திலும்
மதுபான மத்தரைப் போலே நிரந்தர அனுபவத்தால் சிவந்த கண்களை யுடையனான திருவனந்த ஆழ்வான் பக்கலிலும்
திருப்பதிகளாலே நிறைந்த ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் போக்யதை அளவிறந்த இருந்துள்ள திருக்கச்சியிலுமாய் இருக்கும் —

(எனது நெஞ்சத்துக்கு இருந்தமைக்கு சத்ருசமாகச் சொல்லலாவது
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி என்பதால் அத்தையும் இங்கு சேர்த்து அருளுகிறார்)

திருமலையும் திரு வெக்காவும் திரு வேளுக்கைப் பாடியும் ஆகிற இவ்விடங்களை –
நிர்வாஹகரான நமக்கு விட ஒண்ணாதே என்று பிராப்தி மூலமாக விரும்பி இருப்பர் -(கீழே ப்ரீதி மூலம் )

திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான
திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும் தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

(சென்றால் கு டையாம் –இத்யாதி போல் அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய ஆசை கொண்டவர் ஆழ்வாரும் என்றதாயிற்று)

——————————————————————-

அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம்
புஜிப்பார் யுண்டோ என்கிறார் –

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

(ஆஸ்ரிதர் மேல் இவ்வாறு அபிநிவேசம் கொண்டவன் என்று அறிந்த பின்பு-உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ )

ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை –  நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27–

பதவுரை

கார் மலிந்த கரு கடலே–மேகங்கள் நிறைந்த பெரிய  கறுத்த  கடலை
நேரே கடைந்தானை–தானே முன்னின்று கடைந்தவனும்(தேவாதிகள் அந்தராத்மா -ஒல்லை நான் கடைவான் ஸாஷாத்தாக )
நாரணனை–ஸகல ஜகத் காரண பூதனும்
நீரணை மேல் பள்ளி அடைந்தானை–திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின் மேல் பள்ளிக் கொண்டிருப்பவனுமான எம்பெருமானை
நாளும் அடைந்து–நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்)
துயர் உழந்தார்–துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும்
துன்பு உற்றார் ஆர்–துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்)
ஆண்டையார்–எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை)

காரே மலிந்த கருங்கடலை –  நேரே கடைந்தானைக்–
மேலே படிந்த மேகங்கள் சலியாதபடி அமிர்தம் படும் படிக்கு ஈடாகக் கடலைக் கடைந்தானை

காரணனை–ஜகத் காரண பூதனை -(மாதா நாராயணா பிதா நாராயணா இத்யாதி )

நீரணை மேல் பள்ளி-அடைந்தானை–
ஆஸ்ரிதர் கார்யம் செய்க்கைக்காக திருப் பாற் கடலிலே கிட்ட வந்து கிடந்தவனை

(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதனன் -கூப்பீடு கேட்க்கும் இடம் வந்து ப்ரயோஜனாந்தர பரர்களும் அண்டும்படி அடைந்தான் அன்றோ)

நாளும் அடைந்து –ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்–
தாம் தாம் பண்ணின நிஷித்த கர்மத்தினுடைய பலமான துக்கத்தை அவனை ஆஸ்ரயித்து அனுபவிப்பார் உண்டோ

ஆண்டையார் -என்றது
எங்குள்ளார் என்றபடி

நாளும் -என்றது
எக் காலத்திலும் என்றபடி

எக் காலத்தில் எத் தேசத்தில் யார் அவனைப் பற்றி துஷ் கர்ம பலத்தை அனுபவித்தார் –

(தேவதாந்த்ரங்களைப் பற்றி துன்பம் அடைந்தவர் பலர் உண்டே -பாணாசுரன் போல்வார் -)

(எழுவார் விடை கொள்வார் போல் அன்றிக்கே ப்ரீதியுடன் அநந்யார்ஹ ஸ்வயம் ப்ரயோஜன பரர்கள்
என்றுமே எப்பொழுதுமே வழுவா வகை நினைந்து தொழுவார்கள் அன்றோ)

——————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

மேகங்களால் நிறைந்த பெரிய சமுத்திரத்தை மேற்படிந்த மேகங்கள் சலியாதபடி நேர் கொடு நேரே நின்று கடைந்தவனாய்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான உறவை யுடையவனாய் (மாதா நாராயணா பிதா நாராயணா இத்யாதி )-

இவற்றை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாயக் கொண்டு
கடைந்த கடலின் நீரிலே திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே கண் வளர்ந்து அருளுகிறவனை-
தேவையாக அன்றிக்கே போக ரூபமாக நாள் தோறும் ஆஸ்ரயித்து வைத்து துக்க ஹேதுவான பாபங்கள்
உச்சி வீடு விடாதே பண்ணினவர்களில் யார் தான் அந்த பாப பலமான துக்கத்தை அனுபவித்தார்-
அவர்கள் தான் எக்காலத்தில் உள்ளவர்கள் –

பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகைக்கும் பாப பலம் அனுபவிக்கைக்கும்
அக்னி நாசிஞ்சேத் என்ன சேர்த்தி உண்டு என்றபடி -(நெருப்பால் நனைப்பாய் சொல்லுவார் உண்டோ )

————————————————————————–

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

(தீர்ப்பாரை யாம் இனி எங்கனம் நாடுதும் ? அன்னைமீர்
ஒர்ப்பால் இவ் ஒண் நுதல் உற்ற நல நோய் இது தேறினோம்
போர் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –4-6-1

தேர் பாகன் -போர் பாகு -தேரை முன்னும் பின்னும் நடத்தியே போர் முடித்தவன் இவனே)

(அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதே ரேவேத் யாத்மா நம் நிஷி பேத் புத -ஸ்ரீ ந்யாஸ சதகம்–1-

விஷயம் அறிந்தவன் -தனது ஆத்மா-ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு –
அவ்வாறே ஆத்மாவைக் காப்பதால் ஏற்படும் பிரயோஜனம் -எல்லாம் தன்னுடையது அல்ல –
திருமகள் கேள்வனுக்கே உரியது என்று ஆத்மாவை எம்பெருமான் இடம் சமர்ப்பிப்பான்)

(நான்கு சரித்திரங்கள் இங்கு சொல்லி -இவனது ரக்ஷண பிரகாரம் அருளிச் செய்கிறார்)

அடைந்தது அரவணை  மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால்  உண்ட   பிரான் –28-

பதவுரை

வாள் எயிறு–வாள் போன்ற பற்களை யுடையளான
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–உண்டு அவளை முடித்தவனான
பிரான்–ஸ்வாமியானவன்
அடைந்தது–பள்ளி கொண்டது
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மேலாம்
அன்று–முன்னொரு காலத்தில்
ஐவர்க்கு ஆய்–பஞ்ச பாண்டவர்களுக்காக
மிடைந்தது–நெருங்க நடத்தினது
வெம் பாரதம் போர்–கடுமையான பாரத யுத்தமாம்,
உடைந்ததுவும்–அஞ்சி நின்றதும்
ஆய்ச்சி பால்–இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான
மத்துக்கே–மத்துக்காகவாம்,
அம்மனே–அந்தோ!

(அஞ்சிய நோக்கும் அந்நோக்கும் -தொழுத கையும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே)

அடைந்தது அரவணை   மேல் —
உகந்தார்க்கு உடம்பு கொடுப்பது

ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் –
ஆஸ்ரிதர்க்காக தன்னுடம்பை அழிய மாறி அம்பேற்றது –

உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே–
பரிஹாரம் இன்றிக்கே ஒழிந்ததுவும் யசோதை பிராட்டிக்குப் பயப்பட்டு –

(அஞ்சலிக்கு பிரதி அஸ்திரம் இல்லாதவோ பாதி இவளது உடைந்த மத்துக்கும் பிரதி இல்லாமல் இருந்தானே)

வாள் எயிற்றுப்-பேய்ச்சி பால்  உண்ட   பிரான் —
பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடைய பூதனையை முடித்த உபகாரகன்
அனுகூலையாய் இருப்பாள் ஒரு இடைச்சிக்குப் பயப்பட்டு
பரிஹாரம் இன்றிக்கே இருப்பதே –

அம்மனே -எத் திறம் –

———————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடையளான பூதனையுடைய பாலை
வேற்று முலை என்று வாசி அறிந்து அமுது செய்து -ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்த உபகாரகன் ஆனவன்-
தன்னால் அல்லது செல்லாத திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் யாய்த்து தன் செல்லாமை தோற்றப்
பள்ளி கொண்டு அருளிற்று -ஆஸ்ரிதரான தர்ம புத்திராதிகளுக்காக அவர்கள் வெறுவியரான வன்று
தன்னை அழிய மாறி மேன்மேல் என நெருங்கி ப்ரவர்த்தித்தது பாரதம் ஆகிற கொடிய பூசல் –
யசோதை பிராட்டி பக்கல் யுண்டான மத்துக்கே ஒக்கும் -தனக்கு சத்ருக்கள் அஞ்சுமா போலே தான் அஞ்சி
சிதிலம் ஆயிற்றதும் -அம்மே -இவன் வல்லபடி என் என்று வயிறு பிடிக்கிறார் –

——————————————————————-

அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கு யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –

ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

(அச்சமும் அன்பும் -கீழ் அச்சம் பற்றிய பாசுரம் -இங்கு அன்பு பற்றிய பாசுரம்)

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப்பாலை
உண்ட–அமுது செய்த
பெருமானை–ஸ்வாமியானவனும்-ஸர்வேஸ்வரனை -விரோதி நிரசன காரியமே பூதனையை முடித்தது
வாய்ந்த இருள் ஆர் திருமேனி–அமைந்த இருள் போன்ற திருமேனியை யுடையவனும்-இருள் அன்ன திரு மேனி -பொருந்திய
இன் பவளம் செம்வாய்–அழகிய பழம் போற் சிவந்த அதரத்தை யுடையவனும்-பவளம் ஒளியே வாசி -மற்றவை எல்லாம் இருள் அவனும் பூதனையும்
தெருளா மொழியானை–உருத் தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை
சேர்ந்து–கிட்டி
ஆய்ச்சி–யசோதை யானவன்
பேர்ந்து எடுத்து–வாரி யெடுத்தணைத்து கொண்டு
அஞ்சாதே–சிறிதும் பயப்படாமல்
முலை கொடுத்தாள்–தன் முலையை உண்ணக் கொடுத்தாள்.

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் –
பூதனையை முடித்தவனை

வாய்த்த-இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்–
பூதனையினுடைய மடியிலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்

பவளம் போன்று இருந்துள்ள அதரத்தை யுடையனாய் தெருளா மொழியானைச் சேர்ந்து —
பேர்ந்து எடுத்து-ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –
பூதனை முகத்தில் முக்த ஜல்பிதம் பண்ணுகிறவனைக் கிட்டிக் கால் நடை தந்து எடுத்து
தாயானவள் அஞ்சாதே முலையைக் கொடுத்தாள்–
ஸ்வ ரூபத்தை அழிய மாறி முலையைக் கொடுத்தாள் -ஸ்த்ரீத்வ ப்ரயுக்தம் இறே அச்சம் –

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

(ஆய்ச்சி மத்துக்கே என்று )ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பூதனை பக்கல் யுண்டான முலைப் பாலை யுண்டு அவளை முடித்து -ஜகத்துக்கு சேஷியான தன்னை
யுண்டாக்கிக் தந்த உபகாரகனாய் -அவள் மடியிலே இருந்து முலை யுண்கிற போது ஆகர்ஷகமாய்த் தோற்றுகிற
அழகிய இருளோடு ஒத்த திரு மேனியையும் -உகப்புத் தோற்ற ஸ்மிதம் செய்த அழகிய பவளம் போன்ற
சிவந்த திரு வதரத்தையும் யுடையனாய்
அத் தசையில் அவள் முகத்தைப் பார்த்து ஆச்சி ஆச்சி என்றால் போலே சொல்லுகிற அறிவு கலசாத முக்த ஜலப்பிதங்களை
யுடையனுமானவனை -தாய் தன்னிடத்தும் நின்று போந்து கால் நடை தந்து வந்து கிட்டி யதா பூர்வம் சாதரமாக எடுத்துக் கொண்டு
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாயும் ஜென்மம் அடியாகவும் வரக் கடவ யுடையவள் அன்றிக்கே –
உண்ட நச்சுப் பாலுக்கு ப்ரத் ஒளஷதமாக முலை கொடுத்தாள் –
கெட்டேன்–(ஹந்த -இது என்ன ஆச்சர்யம் )ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

————————————————————

அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

(எளியவனாகையாலே அவள் அன்பு காட்டினாள் -நாங்கள் எவ்வாறு அன்பு காட்டுவது என்ற சங்கைக்கு பதில் இப்பாசுரம்)

(பெருமாள் இருக்கும் இடங்கள் எட்டும் என்கிறார்-திருத்துழாய் யத்ர யத்ர திருத்துழாய் தத்ர தத்ர கேசவன் மது ஸூதனன் -இத்துடன் ஒன்பது –

வாய்ந்த -நிறை -அனைத்து இடங்களிலும் அந்வயம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ -அனைத்திலும் பூர்ணம் –

கடலையும் சொல்லி அனந்தனையும் சொல்கிறார் ஆதர அதிசயத்தில்-கடல் -அநந்தன் இரண்டு திவ்ய தேசங்களும் ஒரே இடத்தில் இவருக்கு சேவை –
இறை திருமால் சேர்ந்த பாடி இவைகள் -என்றும் திருமால் சேர்ந்த- இறைபாடிகள் இவை என்றும் கொள்ளலாம் )

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை  —-30–

பதவுரை

கடல்–திருப்பாற் கடலென்ன
குடந்தை–திருக்குடந்தை யென்ன
வேங்கடம்–திருமலை யென்ன
நேர்ந்த என் சிந்தை–நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன-அவன் நேர்ந்த -கொடிய மா தவம் செய்தனன் கொல்
நிறை விசும்பும்–பரம்பின பரமபதமென்ன-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -எங்குமே பூர்ணம்
வாய்ந்த மறை–அமைந்த வேதமென்ன
பாடகம்–திருப்பாடகமென்ன
அனந்தன்–ஆதிசேஷனென்ன
ஆய இவை–ஆகிய இவையெல்லாம்
வண் துழாய் கண்ணி–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
திருமால் சேர்ந்த–எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற
இறை பாடி–ராஜதானிகளாம்.

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும்
ஸ்வாமிக்கு படை வீடான இவை —
ஸ்ரீ யபதி சேர்ந்த பாடியாய இவை –
இறையாய திருமால் சேர்ந்த -என்னவுமாம்

சிந்தை என்கையாலே
இத் திருப்பதிகளில் எல்லாம் வந்து இருக்கிறது எல்லாம் என் இருதயத்தில் புகுருகைக்காக என்கிறது

வாய்ந்த மறை -என்றதாலே
ப்ரமாணமான வேதத்திலே நின்றதோடு கண்ணாலே காணப்படுகிற
திருப்பதிகளோடு வாசியற இவர்க்கு பிரகாசமாய் இருக்கிற படி –

———————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

திருப் பாற் கடல் -திருக் குடந்தை –திருமலை -இவற்றிலும் காட்டில் ஆதரிக்கும் படி நேர்பட்ட என்னுடைய ஹிருதயம்-
த்ரிபாத் விபூதி -என்னும் படி பரப்பை யுடைத்தாய் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதம் –
அவனை உள்ளபடி பிரதிபாதிக்க வல்ல அழகிய வேதம் -திருப் பாடகம் -அனந்தாழ்வான் ஆகிற இத்திருப்பதிகள் எல்லாம்
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கிற சர்வ ஸ்வாமியான
ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானியாய் இருக்கும் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 10, 2016

(கீழ் பேர் ஓத என்றாரே )அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

(நுண்ணறிவினான்-அறிய நுட்பமானவன் -ஸூஷ்மமான அறிவு கொண்டே-அறிவதற்கு அப்பால் உள்ளவன் என்று அறிய முடியும்)

நன்கோது நால்  வேதத்துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11–

பதவுரை

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்–நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்
நறவு இரியும்–தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல்–கடல் போலவும் அருவி நீர் போலவுமுள்ளதான
வண்ணன்–திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான்–சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண் வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான்–சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்
பயின்று உரைப்பார் நூல் கடலான்–ஓதி யுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல் போன்ற சாஸ்த்ரங்களால்
பிரதபாதிக்கப் படுபவனுமான எம்பெருமான்
நுண் அறிவினான்–(தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.

(திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு போக்யத்வத்துக்கு ஒன்றும் வண்ணத்துக்கு இரண்டு த்ருஷ்டாந்தங்கள் சொல்லி -ஸர்வ ரஸ ஸர்வ கந்த வஸ்துவுக்கு ஸத்ருசம் ஆகாதே)

நற விரியும்–நறவு இரியும்-தேன் தோற்கும்படியான இனிமையை யுடைத்தாய் –
நுண்ணறிவினான்-தம் முயற்சியால் அறிவிற்கு அறிய முடியாதவன் –

நன்கோது நால்  வேதத் துள்ளான்–
பிரதி நியத விசேஷங்களோடே கூட -சாங்க அத்யயனம் பண்ணின வேதங்களாலே-
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய-என்கிறபடியே ப்ரதிபாதிக்கப் பட்டவன்–

(ஸ்வரம் தப்பின்னால் எஜமானனை இந்திரனுடைய வஜ்ராயுதம் எதிரிகளை முடிக்குமா போல் முடிக்கும்)

(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷)

(நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேதங்களாலேயே நான் அறியப்பட்ட தீருவேன்
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே)

நற விரியும்-தேன் தோற்கும்படியாகக் கிளர்ந்த கடல் போலேயும் –

பொங்கோதருவிப் புனல் வண்ணன்  –
அருவிப் புனல் போலேயும் இருந்துள்ள திருமேனியை யுடையவன்

சங்கோதப்-பாற்கடலோன்–சங்குகளோடு கூடின திரையை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுமவன்

பாம்பணையின் மேலான்-அனந்த சாயி -பயின்று  உரைப்பார்-நூற் கடலான்–
சாதரமாக உரைக்குமவர்களாலே-இதிஹாச புராணங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் –

(அடியார் திருமேனி ஸ்பர்சத்தில் அபி நிவேசம் கொண்டவன் -எளிமையும் இங்கு உண்டே
நம் முயற்சியால் அறிவதற்கு அரியவன் என்றும் அவனால் வரிப்பவருக்கு எளியவன் என்றும் உணரலாம்)

நுண்ணறிவினான் —-
ஸ்வ யத்னத்தாலே அறிவிற்கு துர்ஜ்ஜேயன் —

——————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

ஸ்வர வர்ணாதிகளாலே நழுவுதல் வாராத படி ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே நன்றாக ஒதப்படுமதாய்
ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய்
நன்றாக விஸ்திருதம் ஆகா நிற்பதாய் (இவர் உரையில் தேன் விஷயமே இல்லை -நறவு இரிய )-கிளர்த்தியை யுடைத்தான கடல் போலேயும் –
அறிவிப் புனல் போலேயும் இருக்கிற திருமேனியின் நிறத்தையும் யுடையனாய் –
சங்குகளை கொழித்து ஏறிடா நின்ற திரைகளை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனாய் –
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளுமவன் ஆகையால் –
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவனாய்-
தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து -தரிசித்து –
லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து —

——————————————————————-

ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி  ——12-

பதவுரை

மறை–வேதத்தை
என்றும்–இடைவிடாது
நன்கு ஓதி–நன்றாக அத்யயநம் பண்ணி
அறிவு என்னும்–ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி–(ஆத்ம பரமாத்ம ஞானம் ஆகிற )தாழ்ப்பாளை யிட்டு
ஐம்புலனும்–பஞ்சேந்திரியங்களையும்
தம்மில் செறிவு என்னும்–(வெளிச் சொல்லாமல்-தமக்கு வகுத்த விஷயத்தில் ) உள்ளே அடக்கி வைப்பதாகிற.
திண் கதவம் செம்மி–திடமான கதவை யடைத்து
நன்கு உணர்வார்–நன்றாக தியானிக்குமவர்கள்
பைங்கோதம் வண்ணன் படி–அழகிய கடலின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை
நாள் தோறும்–தினந்தோறும்
காண்பர்–ஸாக்ஷித்தகரிப்பான்

(ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –யதா ஸப்த க்ரமம் வரிசைப்படியே அன்வயித்து  -முதலில் ஞானம் சம்பாதித்து யோகம் வந்தாலும் பிரமாணங்களை விடாமல் வேதங்களையும் ஓத வேண்டும்
ஸ்ரீ அப்பிள்ளை -மறை ஓதி முதலில் சொல்லி பின்பு அடுத்த இரண்டும் -ஸாஸ்த்ர அப்பியாசம் பின்பே யோகம் இவர்)

அறிவென்னும் தாள் கொளுவி–
திண்ணிதான ஸ்ரவண ஞானத்தை மூட்டி –

ஐம்புலனும் தம்மில்-செறிவென்னும் திண் கதவம் செம்மி –
பாஹ்ய இந்திரியங்கள் மனஸ்ஸோடே கூடி –
மனஸ்ஸூ ஆத்மாவோடு கூடி -இருக்கிற இந்த செறிவாகிற திண்ணிய கதவை இந்திரியங்கள்
பாஹ்ய விஷயங்களில் போகாதபடி செம்மி –

மறை யென்றும் நன்கோதி —
யோகாத் ஸ்வாத்யாய மா மநேத் -யோகம் கை வந்தாலும் பிராமண பிரமேயங்களினுடைய சேர்த்தி அனுசந்திக்க வேணும் –

நன்குணர்வார் காண்பரே நாடோறும்-பைங்கோத வண்ணன் படி  ——
உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-(ஸ்ம்ருதி- நினைவு -அநு ஸ்ம்ருதி -தொடரும் நினைவு -த்ருவ அநு ஸ்ம்ருதி –விச்சேதம் இல்லாமல் அதே நினைவு -)
தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக உணர்ந்தவர்கள் நன்கு உணர்ந்தவர்கள் -ஆகிறார்
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி இப்படி யுணர்ந்தவர்கள் நாள் தோறும் காண்பார்கள் -(ஸதா பஸ்யந்தி ஸூரயா )

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற்பாரே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்–18-)

————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

ஸ்வாத்யாயோஸ் அத்யே தவ்ய -என்கிற விதியை அனுசரித்த்திக் கொண்டு –
அசேஷ ஜகத்துக்கும் ஹிதத்தை அநு சாஸிக்கை யாகிற நன்மையை யுடைத்தான வேதத்தை சக்ரமமாக ஓதி -(அங்கங்கள் உப அங்கங்களுடன் ஓதி )
ததர்த்த ஸ்ரவண ஜெனிதமாய்- -ஆத்ம பரமாத்ம விஷய பிரதானம் ஆகிற தாளை
பாஹ்ய விஷயங்களில் மனஸ்ஸூ ஒட்டாத படி உறைக்கக் கோத்து-
ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்திரியங்களும் தம் தாமுக்கு அடைத்த இருப்பிடமான ஸூபாஸ்ரயத்திலே செறிந்து-
நிற்கப் பண்ணுகை யாகிற பலிஷ்டமான கதவை -புகவிட்ட மனஸ்ஸூ புறப்பட இடம் அறும் படி
யோக- அப்யாஸத்திலே செம்மிப் பொகட்டு -இப்படி யோக ஜெனிதமான மனசாலே
த்யேய வஸ்துவை–பச்சை நிறத்தை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான திரு நிறத்தை யுடையனான-
சர்வேஸ்வரனுடைய ரூப குண விபூதி யாதிகளான ஸ்வ பாவங்களை -சதா பஸ்யந்தி -என்கிறபடியே-
இன்று ஒன்றோடு அன்றோடு வாசி அற எப்போதும் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-(இதிலும் காண அரியதே -காண்பரே -பிரிநிலை ஏவகாரம் )

இப் பாட்டிலும் கீழ் அறிய அரியன் என்றத்தை உபபாதித்தார் யாய்த்து –

(தாப்பாள் போட்டு  பின்பு கதவை சாத்த -மனஸ் அடக்கிய பின்பே -இதுவே தாழ்பாள் போடுவது -இது ப்ராதான்யம் என்பதால் இத்தைச் சொல்லி கதவவைச் சாத்துவது புலன்களை அடக்க வேண்டும்
இங்கு தான் ஸூபாஸ்ரய திருமேனி -2-61- பற்றி அருளிச் செய்கிறார்-கீழ் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் இந்திரியங்கள் மனசிலும் மனஸ் ஆத்மாவிலும் என்பதே உள்ளது

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –
எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –
குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் )

——————————————————————

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

(ஸ்ரீ த்ரிவிக்ரமனாய் உலகம் எல்லாம்-இவர்கள் அறியாமல் -பிரார்த்திக்காமல் – தனது பேறாகத் தானே தீண்டினானே)

படி வட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு ——–13-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்தில்,
உலகம் நீர் ஏற்று–பூமி தானம் வாங்கிக் கொண்டு
தாமரை படி வட்டம்–தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை
அடி வட்டத்தால் அளப்ப–திருவடி வளையத்தினாலே அளப்பதற்காக
மா காயம் ஆய் நின்றமாற்கு–பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,-மால் -சர்வேஸ்வரன்
நீண்ட முடி வட்டம்–நீண்ட திருவபிஷே வளையமானது
ஆகாயம் ஊடு அறுத்து–மேலுலகங்களின் வழியாகச் சென்று
அண்டம் போய் நீண்டதே–அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!

படிவட்டத் தாமரை –
பூ வலயம் ஆகிற தாமரைப் பூவை

(தாவி வையம் கொண்ட தடம் தாமரை அன்றோ -முற்றுவமை)

பண்டுலகம் நீரேற்று- அடிவட்டத்தால் அளப்ப —
அடி வலயத்தாலே அளப்ப –

நீண்ட -முடிவட்டம்- ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே-மாகாயமாய் நின்ற மாற்கு —
வடிவாலே பாரித்து வியாமோஹத்தை யுடையனானவனுக்கு திரு அபிஷேகமானது ஆகாசத்தை யூடறுத்து
அண்ட பித்திக்கு அவ் வருகே நீண்டது –

(ரஷ்யத்தின் அளவில்லாத ரக்ஷண பாரிப்பால் ஏழு உலகமும் அளந்தான்
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்த –நிவந்த நீள் முடியன் -திருவடியைச் சொல்லி திருமுடியை அங்கும் உண்டே)

———————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

முன்பு ஒரு நாளிலே லோகத்தை மஹா பலி பக்கலிலே சென்று நீர் ஏற்று வாங்கிக் கொண்டு பூ மண்டலம்
ஆகிற தாமரையைப் பாத வலயத்தாலே அளக்க -அண்ட கடாஹம் வெடிக்கும் படி விம்ம வளர்ந்த சர்வேஸ்வரனுக்கு
பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————————————————

அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ
அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –

(இந்திரிய ஜெயம் வேண்டுமானால் யோகம் கைவர வேண்டும் -யோகம் கை வந்தால் இந்திரிய ஜெயம் வரும் -அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வருமே என்ன கண்ணாலே காணலாம் படி அவனே இங்கே வந்து சந்நிஹிதனாய் இருக்க அவனைக் காணவே தானே எல்லாமே அமையும்-உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவுமே -ஸகல மனுஷ நயன விஷய தாங்கதன் -அர்ச்சையிலே ஆஸ்ரயிக்கலாமே என்கிறார் )

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

(பரமாத்மநி ரக்த விரக்த  அபராத்மநி -ஸமஸ்த ஸம்ஸார போகங்கள் போல் இங்கும் உறங்குவான் கைப் பண்டம் போல் நழுவுமே )

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள்  கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து –14-

பதவுரை

நாற்பால வேதத்தான்–நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும்
வேங்கடத்தான்–திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளை யுடையவனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
பணிந்து–ஆஸ்ரயித்து
மால் பால்–அந்த ஸர்வேஸ்வரனிடத்திலே
மனம் சுழிப்ப–நெஞ்சு பொருந்த (அதனாலே)
மங்கையர் தோள் கை விட்டு–ஸ்த்ரீகளின் தோளோடே அணைய வேணு மென்கிற காமத்தைக் கை விட்டு
நூல் பால்–(வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே
மனம் வைக்க–மனம் செலுத்துவதற்கு
நொய்விது ஆம்–எளிதாகும்.

நாற்பால வேதத்தான் –
நாலு வகையான வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் -வேதைக சமைதி கம்யன்
கண்ணாலே காண்கிற சப்தாதிகளை அனுபவிப்பார்க்குக் காண அரிது இறே என்னில்

வேங்கடத்தான்–
கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படி திரு மலையிலே வந்து நின்றவனை -ஆகில்
கண்ணாலே காணப் படுகிற சப்தாதிகளோடு ஒக்குமோ என்னில் –

விண்ணோர் முடி தோயும்-பாதத்தான் –
இப்படி திருமலையில் நிற்கிறவன் -நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன்-

(அங்குள்ளவன் இங்கு வந்துள்ளான் என்கிறார் அல்லர் -இங்கு உள்ளவனைக் காண அங்கு உள்ளவர்களும் வந்து ஆஸ்ரயிக்கும் படி அன்றோ இங்கு உள்ளான்)

பாதம் பணிந்து —
அவன் திருவடிகளிலே பணிந்து –

மாற்பால் மனம் கழிப்ப —
வியாமுக்தனாய் இருக்கிறவன் பக்கலிலே மனஸ்ஸூ சுழிக்க

(நாராயணன் -இத்யாதி -பதங்கள் இல்லாமல்- மால் -பித்தன் -ஏற்கனவே நம்மை அடைய க்ருஷி பண்ணி உள்ளம் புகுந்து -அத்வேஷம் போகும் அவகாசம் எதிர்பார்த்து உள்ளவன்)

மங்கையர் தோள்  கை விட்டு-
நரகத்திலே மூட்டக் கடவதான ஸ்த்ரீகளுடைய தோள்களைக் கை விட்டு (நாசமான பாசம் விட்டு )

நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்–
பிரமாணங்களிலே அல்பம் மனஸை வைக்க எளிதாம் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-42–

——————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

நாலு வகைப்பட்ட வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய் -இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகாதே
கண்டு அனுபவிக்கலாம் படி -திரு மலையிலே வந்து -நிற்கிற ஸுலப்யத்தை யுடையனாய் –
இப்படி ஸூலபனான நிலை தன்னிலே நித்ய ஸூரிகளும் திருவடிகளிலே தலை மடுத்து ஆஸ்ரயிக்கலாம் படி
பெரிய மேன்மையை யுடையனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து சர்வேஸ்வரன் பக்கலிலே மனஸ்ஸூ பிரவணமாக-
போக யோக்கியமான பருவத்தைக் காட்டி துவக்கக் கடவ ஸ்த்ரீகளுடைய தோளோடு அணைந்து அனுபவிக்க வேணும் என்னும்
நசையை சவாசனமாக விட்டு வேதாதி ஸாஸ்திரங்களில் மனஸை வைகைக்கு எளிதாம் –

(இங்கு உள்ளவன் ஸ்ரீ வைகுண்ட விரக்தனாய் வந்தமையை சொல்ல வில்லை -இங்கேயே வந்து அவர்கள் ஸுலப்யம் அனுபவிக்க வந்துள்ளார்கள் அன்றோ -கண்ணாவான் விண்ணோர்க்கும் வெற்பு அன்றோ)

———————————————————

அவனாலே ஸ்வயம் வரிக்கப் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது –

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள்  மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பதவுரை

பணிந்து உயர்ந்த–தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான
பௌவம் படு திரைகள்–கடலிலுண்டான அலைகளானவை
மோத–நாலு பக்கமும் அடிக்க,
பணிந்த–(அத் திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற
பணம்–படங்களிலுண்டான
மணிகளாலே–மாணிக்கங்களினாலே
அணிந்த–அலங்கரிக்கப்பட்டிருக்கிற
அனந்தன்–திருவனந்தாழ்வானாகிற
அணை–திருப் பள்ளி மெத்தையிலே
கிடக்கும்–திருக் கண் வளர்ந்தருளாகிற
அம்மான்–ஸர்வேஸ்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)
அங்கு–அங்கு நின்றும்
வந்து –புறப்பட்டு வந்து
அடியேன்–அடியேனுடைய
மனம் அணை–மனமாகிற படுக்கையில்
கிடக்கும்–சயனித்திரா நின்றான்

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத-
(பகவத் தர்சன அபி நிவேசத்தால் )தாழ்வது கிளறுவதான கடல் திரைகளை மோத-

மோத என்கிறது –
குறும் திவலை படிலும் திருமேனியிலே ஒரு மலை விழுந்தால் போலே இருக்கை -(ஸுகுமார்ய அதிசயம் இருந்த படி )

மோத பணிந்த பண மணிகளாலே —
அத் திவலைகள் திரு மேனியில் படாத படி காத்த பணத்தின் மணிகளாலே

அணிந்த -அங்கு-அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் –
அதினாலே அலங்க்ருதனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கிடக்கிற சர்வேஸ்வரன்

(ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலம் கொண்டவன் அன்றோ அநந்தன்)

அடியேன்-மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —-
அப் பெரிய படுக்கையிலே கிடக்குமவன் பரியவும் அறியாதே
அப் படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே இருக்க
வந்து என் மனசிலே தங்கா நின்றான் -எங்கே தங்குமவன் எங்கே தங்கா நின்றான்
கிடக்க ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே –
திரு அயோத்யையில் உள்ளார் அவனைச் சரணம் புக்குக் கிடக்க –ஆவாசந்த்வஹம் இச்சாமி என்று இருந்தால் போலே –

(ரிஷிகள் ஆஸ்ரமம் தேடி பெருமாள் வந்தது போல்)

————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

ஸ்வ சந்நிதானத்தாலே மேலே கிளர்ந்தும்-கீழே விழுந்தும் செல்லுகிற கடலில் உண்டான அலைகள் ஆனவை
நாலு பாடும் கண் பாராமல் அலைக்க-அத் திவலைகள் திரு மேனியில் படாத படி குடை பிடித்தால் போலே
கவிந்து இருக்கிற பணா மண்டத்தில் உண்டான மாணிக்கங்களாலே அழகு பெற அலங்கரித்திக் கொண்டு
இருக்கிற திருவனந்த ஆழ்வான் ஆகிற திருப் பள்ளி மெத்தையில் பள்ளி கொண்டு அருளா நின்றுள்ள
சர்வேஸ்வரன் அந்த படுக்கையில் பொருந்தாதே அங்கு நின்றும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
வந்து அநந்யார்ஹ சேஷ பூதனான என்னுடைய மனஸ்ஸூ ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு அருளா நிற்கும் –

(அநந்யார்ஹ சேஷத்வம் -சம்பந்த சாமான்யம் -அதிகாரி ஸ்வரூபம் -இசைவே வேண்டுவது)

————————————————————-

இப்படி வந்து தங்குகைக்கு அடி பிராட்டியோடே இருக்கை என்கிறார் –

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று   —-16–

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–ஒப்பற்றஅழகிய இதழ்களை யுடைய தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா –
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

அழகிய அல்லியை யுடைத்தான தாமரையை இருப்பிடமாக யுடையளாய் -நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார்
அமிருத மதன சமயத்திலே நிற்கிற தேவர்களை மதியாமல் சென்று -இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி
வர்த்திக்கும் படியான அழகிய திரு யுடைத்தான திரு வல்லிக் கேணியிலே தங்கினவன் எனக்கு ஸ்வாமி –

(திருக்கண்ண மங்கை அபிஷேக வல்லித்தாயார் -சந்நிதியில் தேன் கூடாக இன்றும் உண்டே)

ஒரு வல்லித் தாமரையாள் -சென்று- ஒன்றிய சீர் மார்வனாய் -வெண் திரைகள்–வந்துதித்த-செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்கான -திருவல்லிக் கேணியான்   –எந்தை-என்று அந்வயம் –

———————————————————————–

அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது
அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

முன்பு உள்ள நாள் இந்த நாள் பலிக்க காரணமானதால் அவையும் நல்ல நாள்

அவள் புருஷகார பலத்தால் அவனே நம்மை ஸ்வீ கரித்த ஒன்றை அறிந்த பின்பு எல்லாமே வாழ் நாளாகுமே
செங்கண் மால் -சர்வேஸ்வரனே -எங்கள் மால்–வ்யாமுக்தன் ஆனபின்பு – என்று அறிந்த பின்பு எல்லாமே வாழும் நாள்களாகும்
அறியாமல் இருந்தால் பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழ வேணுமே

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணை யடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

பதவுரை

என்றும் இறவாத எந்தை–ஒருநாளும் அழிவில்லாதவனான எம்பெருமானுடைய
இணை அடிக்கே–உபய பாதங்களுக்கே
ஆள் அய்–ஆட் பட்டு
மறவாது–மறவாமல்
என் வாய் வாழ்த்துக–என் வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்)
சென்ற நாள்–கீழ்க் கழிந்த காலங்களும்
செல்லாத–இனி மேல் வரப்போகிற நாள்களும்
செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள்–‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘
என்று சொல்லப் பெற்ற நிகழ் காலமுமாகிய
எந்நாளும்–எல்லாக் காலங்களும்
நாள் ஆகும்–நல்ல காலமே யாகும்.

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் —
சர்வேஸ்வரன் என் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் என்று அறிந்த நாள்
கழிந்த நாள் -வரக் கடவ நாளான எல்லா நாளும் நல் விடிவாம் -இந் நாள் வரும் படி கழிந்த நாள் ஆகையால்
போன நாளும் அழகிது -மேல் விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பெறுகையாலே வரும் நாளும் அழகிது –

(அத்யமே சபலம் ஜென்ம -அக்ரூரர் மகிழ்ந்தது போல் ஆகுமே)

என்றும்-இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் —-
ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இன்றிக்கே ஒழியும் உறவு இன்றிக்கே
நித்யனான பிதாவினுடைய வாக்கானது விச்சேதம் இன்றிக்கே வாழ்த்துக –

(வாக் -மானஸ காயிக -அனைத்துக்கும் உப லக்ஷணம்)

(ஆகாசம் கங்கை நீர் -மணல் எண்ண முடியாதது போல் பிறவிகளை எண்ண முடியாதே
இவன் தானே இறவாத எந்தை)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் அந்தக் கண்ணாலே குளிர நோக்கி நம் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் -என்னும்
அறிவு பிறந்ததொரு நாள் யுண்டானால் -இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு கழிந்த நாள்களும்
இப் பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு மேல் வரக் கடவ எல்லா நாள்களும்
அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இல்லையாய் இருக்கை அன்றிக்கே
பூதா நாம் யோ அவ்யய பிதா -என்கிறபடியே
சர்வ காலத்திலும் அழியாத என் பிதாவானவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளுக்கே அடிமையாய்க் கொண்டு
என்னுடைய வாக் இந்த்ரியமானது விஸ்ம்ருதி பிரசங்கம் இன்றிக்கே ஏத்துவதாக –

———————————————————————————————–

உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

(அனுக்ரஹம் இருந்தால் பிறவிக்கும் அஞ்ச வேண்டாமே -பிறந்த இடத்தில் அச்சம் இல்லாமல் தாண்டுவோம் என்கிற நிச்சய புத்தி இருக்குமே

ஸம்ஸாரத்தில் இருக்க கைங்கர்யத்துக்கு விச்சேதம் வருமே என்று அஞ்சி இருக்க -உனது அருள் கிட்டினால் அஞ்ச வேண்டாமே -என்றபடி)

(அடியேன் என்றுமே உடைமை பூமியைப் போலே -இசைவே வேண்டுவது -வஸ்து ஸ்திதிக்கு உள்ளே உறைந்தே இருப்பான் –
இசைந்த அன்று உவந்த உள்ளத்தனாய் கருடா வாஹனுமாயும் பரிஜன பத்னீ மார்கள் உடன் சேவை சாதிப்பானே)

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் —18-

பதவுரை

வாமனன் ஆய்–வாமந ரூபியாகி
மாவலி பால்–மஹாபலியினிடத்தில் (சென்று)
வாய் மொழிந்து–(மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண்–மூவடி நிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட–அதை அளந்து கொண்ட
நெடு மாலே–ஸர்வேஸ்வரனே!-வ்யாமோஹனே என்றுமாம்
எஞ்சா–சுருங்குதலின்றி
தாவிய–ஸர்வ வ்யாபியான
நின் இணை அடிக்கே–உனது உபய பாதங்களுக்கே-அநந்யார்ஹ சேஷ பூதன் என்று -இணை அடிக்கே -ஏவ காரம் –
ஏழ் பிறப்பும்–எல்லா பிறவிகளிலும்
ஆள் ஆகி–நான் ஆட்பட்டவனாகி
அஞ்சாது இருக்க–பயங்கெட்டிருக்கும் படி
நீ அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

வாய் மொழிந்து வாமனனாய் —
ஸ்ரீ வாமனனாய் -மாவலீ மூவடி மண் தா -என்று அருளிச் செய்து

மாவலி பால்-மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே —
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே

தாவிய நின்-எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க வருள் —
திரு உலகு அளந்து அருளினவனுடைய கல்யாணமான திருவடிகளிலே நிர்ப் பயனாய்
காலம் எல்லாம் அடிமை செய்து இருக்கும் படி அருள்

ஒவ்க்ஷதத்தை சேவித்தான் ஒருவன் தனக்கு பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கை கொடா நின்றான் இறே –
அவனுடைய அருள் பெற்ற வன்றே சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே —

(தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —பெரிய திருமொழி-11-8-3-)

—————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

சர்வாதிகனான நீ ஸ்ரீ வாமனனாகி ஆஸூர பிரக்ருதியான அவன் இரங்கும் படி -கொள்வன் நான் -என்றால் போலே
சில முக்த ஜலப்பிதங்களைப் பண்ணி -மஹா பலி பக்கலிலே சென்று மூன்றடி மண்ணை அபேக்ஷித்து
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே –
வகுத்த சேஷியான உன்னுடைய அநாயாசேன ஜகத்தை அளந்து கொண்டதாய்
அசங்கோசமான அழகை யுடைத்தாய் பரஸ்பர சத்ருசமான திருவடிகளுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும் அடிமை செய்து
இவ்வடிமைக்கு அழிவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே நிர்ப்பரனாய் இருக்கும் படி பண்ணி அருள வேணும்
நெடுமால் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தன் என்னவுமாம் –

(அறிவு இல்லா விட்டால் பிறவி பயங்கரம் -துக்க கரம் ஆகும்
அறிவு வந்தால் பிறவு சுக கரம் என்று இல்லை-பயங்கரமாய் இருக்காது என்பதே அர்த்தம்)

—————————————————-

அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க –
நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து
உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ
என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே –
நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

(தகுதி இன்மை -கர்ம வல் வினைகள் உண்டே -அவனுக்கும் மலை பேர்ப்பது போல் அன்றோ செய்ய வேண்டியது என்று கவலை வேண்டாமே
அவனது அகடிகடநா சாமர்த்தியம் கண்டு -அங்க ஹீந பிள்ளை பக்கல் தாய் முந்துற பரிவாள் அன்றோ
ஆகவே நமக்கே முன் அனுக்ரஹம் அருளுவான் -)

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம் மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய்–அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சை யுடையாய்க் கொண்டு
சே அடிக்கே–திருவடிகளுக்கு
செம் மலர் தூய்–நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது–அஞ்ஜலி பண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு–‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,
முன் அன்று–முன்பொரு காலத்தில்
தெருளாத பிள்ளை ஆய்–அறியாத சிறு குழந்தையாய்
ஆல் இலை மேல் சேர்ந்தான்–ஆலந்தளிரில் சயனித்த பெருமான்
அருளாது ஒழியுமே–கிருபை பண்ணாமற் போவனோ?

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று-தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் —
ஆலிலையிலே சேர்ந்து வியாமுக்தனான பிள்ளை நமக்கு அருளாது ஒழியுமோ

இருளாத-சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது-முந்தையராய் நிற்பார்க்கு முன் —
இருளாத சிந்தைகளை யுடையராய் திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு கைகளால் தொழுது
முற்பாடராய் இருக்கிறவர்களுக்கு முன் –

அருளாது ஒழியுமே-
முன்னே அருளானோ –

——————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து
உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ
என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே –
நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

பகவத் விஷயத்தில் அஞ்ஞான ஏக தேசமும் ஊடு கலசாத ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு சிவந்த திருவடிகளிலே
அழகிய செவ்விப் பூக்களை அடைவு கெடப் பணிமாறி -கைகளால் அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்து
முற்பாடராய் இருக்கிற அதிகாரிகளுக்கு முன்னே -ஜகத்து பிரளயத்தில் அழிய புக்க வன்று  ஒரு பவனாய்
இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே அறிவு கலசாத முக்த சிசுவாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளின
அகடிகடநா சமர்த்தன் அருளாது ஒழியுமோ —
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அகடிகடநா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

(பாலன்  தனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —ஸ்ரீ முதல் திருவந்தாதி–69-)

——————————————————-

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் அன்றோ என்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரருக்கே கார்யம் செய்து அருளியவன் அநந்ய ப்ரயோஜனராய் உள்ள நமக்கு அருளாது ஒழியுமோ
கீழ் தகுதி இல்லாத நமக்கும் அருளியே தீருவான் என்றார்
ஸ்ரத்தை ஒன்றே அதிகாரம் – -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -என்று அன்றோ இவர்களுக்கும் உபகாரம் செய்து அருளினான் அன்றோ

கீழ் பிரார்திக்கத் தெரியாத உலகை உண்டாய் -இங்கு பிரார்த்தித்த இந்திரனுக்கு கார்யம்
இரண்டும் இல்லாத அநந்ய பிரயோஜனான -அநந்யார்ஹ சேஷ பூதனான எனக்கு உதவாமல் போவானோ என்கிறார் )

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

பதவுரை

முன்–முன்பொரு காலத்தில்
உலகம்–உலகங்களை யெல்லாம்
உண்டு–திரு வயிற்றிலே வைத்திருந்து
உமிழ்ந்தாய்க்கு–பிறகு வெளிப்படுத்தின உனக்கு
அவ் வுலகம்–அந்த வுலகங்களை
பின்–பின்பொருகாலத்தில்
ஈர் அடியால்–இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல்–அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே–பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே–திருமகள்  நாதனே!
செம் கண் நெடியானே–சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வாதிகளே!
எங்கள் பெருமானே–எமக்கு ஸ்வாமியானவனே!
நீ இதனை பேசு–நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்ல வேணும்,
என்னே–இஃது என்னோ?

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே —
உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட இந்த லோகம் தன்னையே
பெறாது பெற்றாயாக அளந்து கொள்கை -இது பெரியது ஒன்றே

என்னே-திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ யிதனைப் பேசு —
உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும் -என்னே-எங்கே- சேர்த்தி யுண்டு
நீ இத்தைச் சொல்ல வேணும் என்று -எத்திறம் என்கிறார் –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் அன்றோ என்கிறார் –

முன்பொரு காலத்தில் ஜகத்தை எல்லாம் திரு உதரத்திலே எடுத்து வைத்து புறப்பட விடுவதாய்ச் செய்த உனக்கு
இப்படி இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமான (உண்டதும் உமிழ்ந்ததும் போல்வன )அந்த லோகத்தை
பின்பு ஒரு நாளிலே இரண்டு திருவடிகளால் அளந்து கொள்கையான இது ஒரு பெரிய செயலாகச் செய்தாயோ –

ஸ்ரீ யபதியாய் அவளோட்டைச் சேர்த்தியாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
ஒருவராலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையையாய்-
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -நீ இத்தை அருளிச் செய்ய வேணும் –

இந்திரன் பல் காட்டினது பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –

(விஷ்ணு பக்தி பரோ தேவா -இதுக்காகவாவது நம்மிடம் வந்தானே -என்ன உதாரன் என்று கொண்டாடினாயே)

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-தனியன் -அவதாரிகை – பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 10, 2016

ஞான தர்சன பிராப்தி -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -இடை கழி -உள்ளே சாதனாந்தர பரர் மிருகண்டு மஹரிஷிகள்
வெளியில் பிரயோஜனாந்தர பரர்கள்
இரண்டு விளக்கு -இருவரும் ஏற்ற -வருத்தும் புற இருள் -அஞ்ஞானம் – இறைவனைக் காண இதயத்து இருள் வாசனை ருசிகள் அனைத்தும் போக
இவர் -மன்னிய பேர் இருள் மாண்டபின் -மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பாலேய் தமிழர் -பெரும் தமிழன் நல்லேன்
அன்பு ஆர்வம் இன்பு மிக்கு -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இறைவனைக் காண இதயம் -வி ஸூத்தமான மனஸ்
ஞான அனுதயம் -விபரீத ஞானம் -மயர்வு அற -தேஹாத்ம அபிமானம் நீங்கி -ஸ்வ தந்திர தேவதாந்த்ர தேவதாந்த்ர உபாயாந்தர ப்ரயோஜனாந்தர அல் வழக்குகள் போக்கி –
அவிவிவேக துக்க வர்ஷம் போக்கி -ஆதித்ய வத் ஞானம்
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து -நல் தமிழால் நாட்டை உய்வித்த பெற்றிமையோர் முதல் ஆழ்வார்கள் –

மன்னிய பேர் இருள் -வெளி -உள் -அநாதி வாசனை ருசி -மாண்ட பின் –மாயனைக் கண்டமை காட்டி அருளியவர்-

காரண கார்ய பாவம் மூவருக்கும் உண்டே
ஞானம் -மதி காரணமாய் இருக்க- பக்தி நலம் பிறக்கும் -இவை இரண்டுமே காரணமாக – விளை நீராக சாஷாத்காரம் கிட்டும்

உபய விபூதி நாதன் -அவனே நாரணன் -அவனே ஸ்ரீ யபதி -நம் திரு உடை அடிகள் -என்று சாதிக்க வழி -மூவரும் காட்டி அருளி –
ஞான பக்தி சாஷாத்காரங்கள் -ஒண் சங்கு கதை வாள் -மூவரும்
ஸ்ரீ ரெங்கத்தில் முதல் ஆழ்வார் ஸந்நிதியில் கதவில் இவை இன்றும் சேவிக்கலாம்

————–

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த  சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

(ஓரா நெஞ்சு என்னும் உத்கண்ணால் அனுசந்தித்து
சீர்மை -ஸ்ரீ யபதியை சாஷாத்கரித்த சீர்மை
உணர்ந்த நெஞ்சு உகந்து பேச வேண்டுமே -)

பரபக்தி பர ஞான பரம பக்தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –
ஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி-தத் ஏக தாரகராய் -(வாஸூ தேவனே போஷக போக்ய தாரகம் -சர்வமுமாகக் கொண்டவர் )
லோக யாத்திரையில் கண் வையாதே அலௌகிகராய் வர்த்திக்கிற முதல் ஆழ்வார்களில் –
மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் –
அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்

(பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே–பெரிய திரு -2-10-8)

அதனுள் —
ஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படியான மாடங்களை யுடைத்தாய் –
அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற திருக் கோவலூர் என்றபடி –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் — வூர் -தானுகந்த வூர் –
பின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற
நீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி

இப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே
புற இருளும் இதயத்து இருளும் -போனவாறே –

காரார் கரு முகிலைக் காணப் புக்கு –
மழை முகிலே போல்வானான -அவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு —
புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு
உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –

(வாரணங்கொள் இடர்க் கடிந்த மாலை நீல மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே-பெரிய திருமொழி -2-10-10.)

காணப் புக்கு –
அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு -(அன்பு கூறும் அடியவர் முதல் ஆழ்வாருக்கு கலியன் பெயர் சூட்டுக்குகிறார் )

அதனுள் காரார் கரு முகில்–
குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –
காரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —
காள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு
மூவரை ஒழிய மற்று ஆர் என்று ஆராயும் இடத்து –என்றுமாம் –
ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு

ஓரா –
திரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி
ஓர்ந்து –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ் வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த

சீரான் கழலே –
இப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ஸ்ரீயை யுடையரான ஸ்ரீமானுடைய ஸ்ரீ பாதங்களே
மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –

உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து –
அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்–யத்தி மனஸா த்யாயதி தத் வாசா வததி இறே –

நெஞ்சே உகந்து –
இப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து
உகந்து பணி செய்து -என்னுமா போலே
தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே

(உற்றேன் உகந்து பணி செய்தேன் போல் இங்கும் உகந்தே ததீய வாசிக கைங்கர்யம்)

சீரான் என்று பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –

இத்தால் பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்
அவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –

——————————————————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -அவதாரிகை –

உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்-
திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

(காரண கார்ய பாவம் மூவருக்கும் உண்டே
ஞானம் -மதி காரணமாய் இருக்க- பக்தி நலம் பிறக்கும் -இவை இரண்டுமே காரணமாக – விளை நீராக சாஷாத்காரம் கிட்டும்)

—————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை உரை -அவதாரிகை-

பகவத் பிரசாத லப்தமான பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் –

(அறிந்தால் போதாதே அதுக்கும் மேல் ஆசையும் ஆர்வமும் வர வேண்டும்-ஞான விகாசமான பக்தியாலேயே அடைய முடியும் -முதிர்ந்த நிலையான ஞான விசேஷத்தாலே -பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே-பேறு )

ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி –வையம் தகளி கேட்க்கையாலே
பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –

(அறிகை நிலையில் கீழ் -காண்கை இங்கு -அறிவுக்கு விஷயமாக 10 விஷயம் சொத்து -அடுத்து விஸ்வரூபம் காட்டியது போல் –
அங்கும் வெறும் ஞான விசேஷம் இல்லை -பக்தியைப் பற்றியே -அறிவைக் கொண்டு முயற்சிக்கலாம் -பக்தனுக்கே அவன் தன்னைக் காட்டுகிறான்
காட்டவே கண்டார் திருப் பாண் ஆழ்வார் –
பக்தியை வளர்க்கவே ஸ்வரூபாதிகளை அறிவித்து தன்னையும் காட்டி அருளுகிறார்
கண்ணையும் கொடுத்து காட்சியும் அருளுகிறான் அன்றோ)

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே- பகவத் பிரசாதம் அடியாக- தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி

(முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீக்கித்
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம புத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து — -முனியே நான் முகனே -பரம பக்தி நிலை -சேர்ந்த பின்பே )

அத்தாலே கடலைக் கண்டவன் (ஆழி வண்ணனைக் கண்டவர் )-அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தர்யாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

(1-பெரும் புறக்கடலை –2- அடல் ஏற்றினை –3- பெண்ணை ஆணை –4- எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை —
4-முத்தின் திரள் கோவையைப் -5-பத்தராவியை –நித்திலத் தொத்தினை -6-அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–பிருஹத் பஹிர் சிந்து -திருக்கண்ண மங்கை-அரு சுவை-ஆறு சுவைகள் )

உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் –
அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
(மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை
காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

(ஆசை காண்கை அனுபவிக்கை -மூன்றும் மூவர் நிலைகள் -அந்தமில் பேர் இன்பத்து கூடி இருக்கை -பரம பக்தி அறிகை காண்கை அடைகை என்றுமாம்-சஞ்சாயதே வா ஸம் த்ருஷ்யதே வா அதி கம்யதே –பராசரர்-திருவோணத்தில் ஏற்றிய விளக்கு முதல் -வெளி இருள் போக்க
உள் இருள் நீங்க அவிட்ட நக்ஷத்திரத்தில்
மன்னிய பேர் இருள் நீங்கியதால் கண்டமை பேசுகிறார் )

———————————————————————

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

(ஐந்து கண்டேன் -அர்த்த பஞ்சகம் போலும்–தத் த்வம் அஸி ஸ்வேத கேது ஒன்பது தடவை சொல்லி -கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -நம்மை எல்லாம் கூட்டிக் கொண்டு -போல்-இன்று கண்டேன் இன்று உயர்ந்தேன் அமுதனார் -இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் வைத்தான் -இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்று யாருக்கு காட்ட திரு உள்ளம் கொண்டானோ அன்று அவருக்குக் காட்டி அருளுகிறான் -திருவிலே உபக்ரமம் உப ஸம்ஹாரம் -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு என்றும் )

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

பதவுரை

இன்று–எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்ற இப்பொது
என் ஆழி வண்ணன் பால்–கடல் வண்ணனான எம்பெருமானிடத்திலே
திரு–பெரிய பிராட்டியாரை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்,
பொன் மேனி–அழகிய திருமேனியையும்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
திகழும்–விளங்குகின்ற
அருக்கன்–பால ஸூர்யன் போன்று
அணி–உஜ்வலமான
நிறமும்–ப்ரகாசத்தையும்–வண்ணத்தைச் சொல்லாமல் ஒளியைச் சொன்னவாறு
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
செரு–யுத்த பூமியிலே
கிளரும்–பராக்ரமங்காட்டுகின்ற
பொன் ஆழி–அழகிய திருவாழியையும்
கை–திருக்கையில்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
புரி சங்கம்–வலம்புரிச் சங்கையும் (மற்றொரு திருக்கையிலே)-புரிந்து பார்க்கும் -புரிதல் வளைந்து- கூனல் சங்கு
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்.

(திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திரு மங்கை தன்னொடும் -செய்யாள் -ஹிரண்ய வர்ணாம் -பகைத்-தொடை -இணைத் தொடை -ஆழி வண்ணம் அனைத்தும் அவன் திருமேனியில் உண்டே -ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச- மதிப்பால் பொன் மேனி -)

திருக் கண்டேன்–
தர்மம் தன்னைக் கண்டேன் –

(தர்மி அவன் -இவள் ஸ்வரூப நிரூபக தர்மம் -அவன் தன்மையாகவே -இதம் இத்தஞ்ச என்று அறிவிக்கும் தர்மமே இவள் )
அஹம் நான் இவன்-அஹம் த்வம் அஹந்தா -நானாக தன்மை

பொன் மேனி கண்டேன்–
அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –

(இருவர் ஒளி சேர்ந்து -தங்கத்தின் பெருமை தங்க ஒளி கலந்து -லோக விஜாதீயம்-

இது எப்படி என்று தேடிப் பார்க்க பால ஸூர்யன் ஒளி -இருளின் ஒளியும் வெளிச்சமும் சேர்ந்தால் போல் -என்று சொல்லலாம் படி
சமுதாய சோபை பொன் மேனி ஸுந்தர்யம் -நீல மேனி ஐயோ -நீலமாக ஸ்ப்ருஹணீயமாய்
மேல் அவயவ சோபை லாவண்யம்)

செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்–
அஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்கிறபடியே திரு வாழியைக் கண்டேன் –

(இவருடைய திருப்பல்லாண்டு இருக்கிற படி)

புரிசங்கம் கைக் கண்டேன்-
ப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே(ராமாயணத்தில் வளைந்த பணிந்த -இளைய பெருமாளை போல் )

என்னாழி வண்ணன் பால் இன்று —–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்(திரு பிரபா -ஆஸ்ரயம் ப்ரபாவன் -பாஸ்கரேன ப்ரபா இவா -)
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் —
செருக்கிளரும்–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று —-
கடலிலே இறே பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –
இன்று -அவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை உரை

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

உனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே
ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி
பிரதானையான பெரிய பிராட்டியாரைக் கண்டேன்

(“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ)

(பரத்வாதி பஞ்ச பிரகாரங்களில் இவளே அவனுக்குத் தர்மம்
வடிவுடை மாதவன் வைகுந்தம் –பெரிய பிராட்டியாரும் நிழல் போல்வனர் இருவரும்
திரு மால் திருப்பாற்கடல் -வ்யூஹ நிலையிலும்
மைதிலி தன மணவாளா -விபவத்திலும்
அரவிந்தப்பாவையும் தானும் -மாதவன் கோயில்
திருமாலை சிந்தனையில் -அந்தர்யாமி
திருவாளன் திருப்பதி திருவரங்கம் -அலர் மேல் மங்கை உறை மார்பா – திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சல சாயனத்து அரு மா கடல் அமுதே –அர்ச்சாவதாரத்திலும்
அவளே ஸ்வரூப நிரூபக தர்மம்)

அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்

மரகத கிரியிலே-(பச்சை மா மலையிலே-)உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பால அர்க்கனைப் போலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி
விளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –

இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
யுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி
பொன் போலே நிறத்தை யுடைத்தான திரு வாழியைக் கண்டேன் –

திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி
வழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –

இன்று நிர்ஹேதுகமாக-என்னவுமாம்
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும்
ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் -(நமஸ் நமு -ப்ரஹ்வீ பாவத்தை- தாது ரத்தத்தால் காட்டும் )

—————————————————————-

கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று -(அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் )

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

(கீழ் ஆழி வண்ணன் என்றவன் திருவைக் கண்டு -ஸ்வீ கருத்து -கொண்டு திருமால் -அன்று அம்ருத மதன காலத்தில்
அவள் இருக்க இன்றே கழல் கண்டேன் -அதன் பலன் மேல் வயலாழி மணவானைப் பெற்றேன் -பெற்றதுவும் பிறவாமை பெற்றேன் -போல்இவரும்-
பேசிற்றெ பேசும் ஏக கண்டர்கள் -கீழ் அனுபவம்-அதுக்குத் தடை வரும் படி அன்றோ ப்ரக்ருதி -திருவடி பாஸ்கரன் இருக்க இருள் இருக்குமோ என்கிறார் )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

பதவுரை

பொன் தோய்–பொன் மயமான பூஷணங்கள் சேரப் பெற்றதும்
வரை–மலை போன்றதுமான
மார்பில்–திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த)
பூந்துழாய்–திருத்துழாயை
அன்று–கடல் கடைந்த வக்காலத்தில்
திரு–பெரிய பிராட்டியார்
கண்டு கொண்ட–அநுபவிக்கும்படியாக பெற்ற-அமுதினில் வரும் பெண்ணமுதம் கொண்டானே
திருமாலே–லக்ஷமீ நாதனே!
என் மனம்–அடியேனுடைய மனமானது
உன்னை–உன்னிடத்தே
மருக்கண்டு கொண்டு–பொருத்தப் பெற்றதனால்-மருவிக்கண்டு கொண்டு -விடாமல் பிடித்து சேவிக்கப் பெற்றேன்
யான் –அடியேன்
இன்றே–இன்று
கழல்–உனது திருவடிகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,
ஏழ் பிறப்பும்–ஜந்ம ப்ரம்பரைகளை யெல்லாம்
அறுத்தேன்–(இனி மேல் தொடராதபடி) ஒழித்திட்டேன்

மருக்கண்டு கொண்டு-பொருந்தி உன்னைப் பெற்றது -மருவிக்கண்டு கொண்டு -விடாமல் பிடித்து சேவிக்கப் பெற்றேன்

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்–
பிரதிபந்தகம் போயிற்று என்று தோற்றும்படி யாயிற்று –
(பாத தர்சனம் பாப விமோசனம்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறப்பும்
கைங்கர்யம் செய்யப் பெறுவேன் ஆகில் பெறுவேன் -ஆண்டாள் )

பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே —
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதியை –

(திவ்ய மால்ய அம்பர தராம் பூஷண பூஷிதாம் பஸ்யதாம் சர்வ தேவானாம் -யயவ் வக்ஷஸ்தல ஹரவ் –

பெண்கள் கோஷ்ட்டியில் இவள் மார்பில் ஏறி அமர வெட்கப்பட வேண்டாமே-திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திருமங்கை )

உன்னை-மருக்கண்டு கொண்டேன் மனம் —–
ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு போகை யன்றிக்கே
உன் பக்கலிலே மருவிற்று என் மனஸ் ஸூ —

(பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் ஆன பின்பு-மனஸ் மருவச் சொல்ல வேணுமோ )

————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

பொன் தோய்ந்த மலை போலே ஒளி பெற்று சிக்கென்று பரந்து ஸ்லாக்யமான திரு மார்பில் சாத்தின அழகிய
திருத் துழாயை யுடையனாய் -அம்ருத மதனம் பண்ணின அக் காலத்தில் –
தரித்ரன் நிதியைக் கண்டால் போலே பெரிய பிராட்டியால்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே –என்னும்படி கண்டு கொள்ளப் பட்டவனாய் உன்னளவில்
அவளுக்கு உள்ள அபி நிவேசம் குளப்படி என்னும் படி பிராட்டி பக்கலிலே
கடல் போலே பெருகி வருகிற அபி நிவேசத்தை யுடையவனே

(திருவைக் கண்டு கொண்டான் இவன் என்றும் -திரு இவனைக் கண்டு கொண்டாள் என்றுமாம்

மால் -திருவுக்கு இவன் மேல் -இவனுக்கு அவள் மேல் -ஓன்று குளப்படி ஓன்று கடல்படி-க ஸ் ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் – )

என்னுடைய மனசானது -ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்துப் பிற்காலியாதே
அவளோட்டை உறவை நினைத்துக் கூசாதே பொருந்திக் கொண்டு கிடந்து -ஆகையால் -அந்தப்புர பரிகரமான நான்
இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அனுபவ விரோதியான ஜென்ம பரம்பரையும் ச வாசனமாகப் போக்கினேன் –

மருக் கண்டு கொண்டு -மருவிக் கண்டு கொண்டு -என்றபடி –

—————————————————————

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –
அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –3–

பதவுரை

மாகடல் நீர் உள்ளான்–பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான்–பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன்–குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர்–சத்துருக்கனானவர்கள்
உக–அழியும்படி
சினத்து–சீற்றத்தினாலே
செற்று–த்வம்ஸம்பண்ணி
உகந்த–மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம்–தேங்கின கடல் போன்ற வடிவை யுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து–தப்பாமல் நேரக் கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான்–என் மனத்திலே வந்து சேர்ந்து விட்டான்

(கோர மா தவம் செய்தனன் கொல் எனது மனசில் இருக்க -இருந்தான் கண்டு கொண்டே -அலாப்ய லாபம் பெற்றவனாக –
மாகடல் நீர் உள்ளான்–மலராள் தனத்து உள்ளான்-தண் துழாய் மார்பன்-அலங்கரித்து வந்தான் -ஆதாரம் பெறுக அழகனாக வந்தான்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-ஆஸ்ரித விரோதம் போக்கப் பெற்றதால் உகந்து தேஜஸ் மிக்கு இருந்தான்
பெரிய பெருமாள் பதக்கம் இன்றும் பெரிய பிராட்டியார் திரு மார்பில் காணலாமே
இவை சாதனமாக வந்ததன் பயன் -வரு நரகம் தீர்க்கும் மருந்து ஆவதற்காகவே -)

சினத்து செரு நருகச் செற்று உகந்த—
சீற்றத்தினால் எதிரிகள் ஆனவர்கள் அழியும் படி அழித்து மகிழ்ந்தவன்

மனத்துள்ளான்-
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –

மா கடல் நீருள்ளான் மலராள்-தனத்துள்ளான் தண் துழாய் மார்வன்–
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகத் திருப் பாற் கடலிலே கிடந்து-
அவ்வோபாதி பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தையும் ஒரு ஸ்தானமாக யுடையனாய் –
தண் துழாய் மார்பனாய் –

சினத்தினாலே செருநரானவர்கள் மங்கும்படி செற்று ஆஸ்ரித விரோதிகள் போகப் பெற்றோம் என்று உகந்து
அத்தாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய் —
சினத்துச்-செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-வரு நரகம் தீர்க்கும் மருந்து —
அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் –

மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

(நிர்வாணம் பேஷஜம் பிஷக் -மோக்ஷ பலம் கொடுக்கும் மருத்துவன் –

பல ப்ரதா -பலத்துக்கு கரணம் கருவி மருந்து -உபேயமாயும் உபாகமாயும் இவனே

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-)

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

பிராட்டி மேல் விழுந்து அனுபவிக்கும் படி ஸ்ரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையனாய்-
தாமரைப் பூவை இருப்பிடமாக யுடையளான பெரிய பிராட்டியாருடைய அவயவாந்தரங்களில் அழகு குமர் இருக்கும் படி
திரு முலைத் தடத்திலே அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு அடங்கி கொண்டு அடங்கி வர்த்திக்குமவனாய்-
என் மனஸ்ஸூ பாங்காகும் அளவும் அவசர ப்ரதீஷினனாய்க் கொண்டு இடமுடைத்தான திருப் பாற் கடலிலே நீரிலே
கண் வளர்ந்து அருளுமவனாய் –

(இசைவித்து உனது தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ –

இதன் பின்பு இளம் கோயில் கைவிடேல் என்று நாம் பிரார்த்திக்க வேண்டுமே)

சத்ரு வர்க்கம் உருத் தெரியாத படி அழிக்கத் தக்கதாய் சீறி அழித்துப் பொகட்டு –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து (கொண்ட சீற்றம் ஓன்று உண்டே )

அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

(ஆதிசேஷனையும் பாற்கடலையும் ஓருவருக்கு ஓருவர் பழகிக் கொள்ள வைத்து அவற்றை விட்டு அன்றோ இங்கே வந்து பேரேன் என்று புகுந்தான்)

———————————————————–

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி —4—

பதவுரை

திருந்திய–இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான
செம் கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களையுடைய-திருந்திய செம் கண்
மால்–ஸர்வேஸ்வரனாயும்-திருந்திய மால்
ஆங்கே–உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே
நின்று பொருந்திய–நிலை நின்று பொருந்தினவனாயும்
உலகம்–உலகங்களை
உண்டு–பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்
அன்று–முன்பொரு காலத்தில்
நீர் ஏற்று–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று
மூ அடியால் உலகம் தாயோன்–மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய
அடி தானே–திருவடிகளே
மருந்தும்–மருந்து போலே ஸம்ஸார வியாதியைத் தொலைப்பனவாயும்
பொருளும்–பணம் போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்
அமுதமும்–அமிருதம் போலே போக்யமாயுமிருக்கின்றன.

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு –
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –

மருந்து என்று உபாயம் ஆக்கி –பொருளும் அமுதமும் தானே என்று உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

(அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் -ஸ்வயம் போக்யமான ப்ராப்யமாயும் இவனே-

ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அங்கு இஷ்ட பிராப்தி தன்னடையே வருமே ஆகவே சொல்ல வேண்டியது இல்லை )

திருந்திய செங்கண் மால் —
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம் படி திருந்தி சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன் —

திருந்திய –
இவ்வாத்மாக்கள் திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக்கு ஈடாகத் தன்னைத்
திருத்திக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரன் -என்னவுமாம் -(திருந்திய மால்)

(செலக் காண்கிப்பார்  காணும் அளவும் -செல்லும்  கீர்த்தி -ஆர்ஜவம்)

ஆங்கே பொருந்தியும்–
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்-அன்று உலகம் தாயோன் அடி –
ஸ்ரீயபதி வந்து நீர் ஏற்கிறான் என்று கூச வேண்டாத படி இரப்பிலே பொருந்தி நின்று -லோகத்தை நீர் ஏற்று
லோகத்தை வயிற்றிலே வைத்துக் காத்து -வெளி நாடு காண உமிழ்ந்து நேர் ஏற்ற லோகத்தை
மூவடியாலே அளந்தவனுடைய திருவடி மருந்தும் பொருளும் அமுதமும் தானே –

—————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

ஸர்வேஸ்வரன் இவன் என்னும் இடத்தை ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பிக்க வல்ல திருத்தத்தை யுடைத்தாய் –
ஐஸ்வர்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனாய் வ்யாமுக்தனானவன்
ஜகத் ரக்ஷணம் ஆகிற அந்தச் செயலில் ப்ரதிஷ்டித்தமான திரு உள்ளத்தை யுடையனாய்க் கொண்டு -லோகத்தை
திரு வயிற்றிலே வைத்துக் காத்து -வெளிநாடு காண புறப்பட விட்டுத்- தன்னது அல்லாததைப் பெறுவாரைப் போலே
அந்நிய அபிமானம் தீர நீர் ஏற்று வாங்கி -உதக ஜலம் கையிலே விழுந்த அப்போதே மூன்று அடியாலே
லோகத்தை அளந்தவனுடைய திருவடிகள் தானே அநிஷ்டமான சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-

திருந்திய என்கிறது –
சர்வேஸ்வரனுக்கு விசேஷணமான போது ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானேயாம் படி
திருந்தி இருக்குமவன் என்றும் –
இவர்கள் திருந்தாக் குறை தீரத் தான் இவர்களுக்குமாகத் திருந்தி இருக்கும் என்றும் பொருளாகக் கடவது –

நமுசி பிரப்ருதிகளை போக்குகையாலே மருந்து-
அர்த்தியாய் வருகையால் பொருள் —
தன் திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அமுதமானான் —

————————————————————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

பதவுரை

அன்று உலகம் தாயோன்–முன்பு உலகங்களைத் தாவி யளந்த பெருமானுடைய
அடி வண்ணம்–திருவடிகளின் நிறம்
தாமரை–தாமரைப்போலே சிவந்திராநின்றது
படி வண்ணம்–திருமேனியின் நிறம்
பார் கடல் நீர் வண்ணம்–பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது.
முடி வண்ணம்–கிரீடத்தினுடைய நிறம்
ஓர் ஆழி வெய்யோன்–ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது,
ஒளியும்–(அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும்
அஃது அன்றே–அந்த ஸூர்ய ப்ரகாசம் போன்றதே யன்றோ
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு–அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது.

(1-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்-அன்றுலகம் தாயோன்-அடி வண்ணம் தாமரை
2-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார் -அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் –
பாற் கடல் என்று வெளுத்த வண்ணம் பிச்சை எடுப்பது கிடைக்குமோ இல்லையோ -என்றும் ஆழ்வாரைப் பிரிந்த கவலையால் வெளுத்தவன் என்றுமாம்

3-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்–அன்றுலகம் தாயோன் ஒளியும்–முடி வண்ணம்–ஓர் ஆழி வெய்யோன்–
4-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்–அன்றுலகம் தாயோன் ஒளியும்- தேஜஸ்ஸும் அஃது அன்றே-)

அடி வண்ணம் தாமரை–
திருவடிகளின் நிறம் தாமரை(கை வண்ணம் தாமரை அடியும் அஃதே )

அன்றுலகம் தாயோன்-படி வண்ணம் —
லோகத்தை அடங்கலும் அளந்து கொண்டவனுடைய நிறம்

பார்க்கடல் நீர் வண்ணன்-
பார் சூழ்ந்த கடலின் நிறம் -வெளுப்புப் பேசுகிற இடமாகில் திருப் பாற் கடலினுடைய நிறம் என்னவுமாம் –

முடி வண்ணம்-ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே–
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன்(தீவி ஸூர்ய சஹஸ்ரஸ் ஸ -கதிர் ஆயிரம் கலந்து எறிந்தால்  போல் நீள் முடியன் )

ஒளியும் அக்தே அன்றே

ஆராழி கொண்டார்க்கு அழகு —-
கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது(ஆர்-ஆர்ந்த பொருந்திய )
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆகையால் அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

மஹா பலி நீர் வார்த்துக் கொடுத்த அன்று லோகத்தை அநாயாசேன அளந்து கொண்டவனுடைய திருவடிகளின்
நிறமானது தாமரை போலே சிவந்து இரா நின்றது –

(அன்று உலகு அளந்தான் அடி போற்றி -அடி -கறு நீலம் –இத்தையே அப்பொழுது சேவிக்க முடியும்
உள் திருவடி -குஞ்சித பாதம் -கன்று குணிலா எறிந்த கழல் சிவந்து இருக்கும் அன்றோ)

திரு மேனியின் நிறமானது -பூமியைச் சூழ்ந்த கடலின் ஜலம் போலே இருண்டு குளிர்ந்து இரா நின்றது-
திரு அபிஷேகத்தின் யுடைய நிறமானது -ஏக சக்ர ரதா ரூடனாய் ப்ரதாபோத்தரனான ஆதித்யன் போலே இரா நின்றது –
அவனுடைய தேஜஸ்ஸூ அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸூ போலே இரா நின்றது -அழகு பொருந்தின
திருவாழியைத் திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு பொருந்தின திரு வாழியைத்
திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு –பார்த்த அளவில் இப்படி இரா நின்றது என்று
அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

———————————————————-

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்(திரிவிக்ரமன் அனுசந்தானம் பின் தொடர்கிறது )

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்  —–6-

பதவுரை

ஆழியாற்கு–திருவாழியை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு
ஆழி நீர் வண்ணம்–கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது
அழகு அன்றே–மிகவுமழகிய நிறமன்றோ,
அண்டம் கடத்தல்–மேலுலகங்களை அளந்து கொண்டது
அழகு அன்றே–அழகன்றோ
அங்கை–அழகிய  உள்ளங்கையிலே
நீர் ஏற்றாற்கு–மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு
அலர் மேலான்–பிரமன்
கால் கழுவ–திருவடிகளை விளக்க, (அப்போது)
கங்கை நீர்–கங்கா தீர்த்தத்தை
கான்ற–வெளிப் படுத்திய
கழல்–அத் திருவடி
அழகு அன்றே–அழகன்றோ

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்–
சர்வேஸ்வரனுக்கு கடலின் நீரினுடைய நிறம் வெறும் நிறமாகுமதேயோ-அழகு அன்றோ –

அழகு அன்றோ –
இந் நிறம் யுடையவர்க்கு வேறு ஒரு ஒப்பனை வேணுமோ –

(கரியான் ஒரு காளை -கண்ணன் என்னும் கறும் தெய்வம்)

அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே-
செயலோ அழகியது அன்றோவாய் இருக்கிறது –(செயலும் )அழகு என்றவாறு

அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்  —
திருவடி தான் கங்கைக்கு காரணம் என்று பாவனத்வம் மாத்திரம் ஆகுமதேயோ-
அதுவும் அவனுக்கு அழகு அன்றோ -(சாணிச்சாறு மாத்திரம் அல்லவே )

——————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்(திரிவிக்ரமன் அனுசந்தானம் பின் தொடர்கிறது )

திருக்கையிலே திருவாழியை யுடையவனுக்கு (ஆழி எழ சங்கும் வாழி எழ இத்யாதி )கடலின் நீரினுடைய நிறம் வெறும் மாத்ரமேயாய் -அழகுக்கு உடல் அன்றோ

அந்தரிஷிதகளான லோகங்களை அளந்து கொண்டது வருந்திச் செய்த செயல் மாத்ரமோ(ச பூமிம் அத்யஷ்டித தச அங்குலம் -அளந்த வேகத்தைப் போல் பத்து மடங்கு சென்றதே ரக்ஷணத்தின் பாரிப்பு -இத்தை அனுசந்திக்க அழகு தோன்றுமே )

ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத் துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.-
திருவாய்மொழி–2-2-11-

கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே நீர் ஏற்றவனுக்கு– திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய
ப்ரஹ்மா திருவடிகளை விளக்க -கங்கா ஜலத்தைப் புறப்பட விட்ட திருவடிகள் -கங்கைக்கு உத்பாதகம் என்று
பாவானத்வ மாத்ரமேயோ –

வெண் துகில் கொடி என விரிந்து -என்கிறபடியே கங்கா ஜலத்தின்
வெளுப்பும் திருவடிகளின் சிவப்புமாய் அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ –

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  -பெரிய திருமொழி   -1-4-3-
ஸூ ந்தரம் வனம் அக்ஷரம் மந்த்ரங்கள் வனம் பிராட்டி திருவடி அனைத்துமே ஸூ ந்தரம் போல்

—————————————————————

அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

(திரிவிக்ரமன் அனுபவம் பின்னாட்ட அவனுக்கு -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ ப்ரகார கைங்கர்யங்களை-அவன் ஆனந்தத்துக்காகவே பண்ண வா என்று நெஞ்சை அழைக்கிறார்)

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

பதவுரை

நெஞ்சே-ஓ மனமே!
கார் கடல் நீர்–கறுத்த கடலின் நீரோட கூடின
வேலை–கரையை யுடைத்தான
பொழில்–பூமியை
அளந்த–அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி–கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன்–ஐஸ்வரிய முடையவனும்
எழில் அளந்து எண்ணற்கு அரியானை–அழகை எல்லை கண்டு நினைப்பதற்கும் முடியாதவனும்
எப்பொருட்கும் சேயானை–எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும்
நண்ணற்கு அரியானை–(யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
நாம் தொழுதும்–நாம் வணங்குவோம்,
வா–நீயும் உடன் படுவாயாக.

கார்க்கடல் நீர் வேலை -பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன்–
கடல் சூழ்ந்த பூமியை அளந்து -புள்ளூர்ந்து –அத்தாலே ஸ்ரீ மானாய்

எழில் அளந்தங்கு -எண்ணற்கரியானை —
எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை

(இயத்தா ராஹித்யன் -இன்னவன் என்று சொல்ல முடியாதே -யதோ வாஸோ நிவர்த்தந்தே )

எப்பொருட்க்கும் சேயானை -எல்லாப் பொருள்களுக்கும் தூரஸ்தனாய் உள்ளவனை –

நண்ணற்கரியானை –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு கிட்ட அரியனானவனை

நாம் கழல் தொழுதும் வா நெஞ்சே-அவர் காட்டக் காண இருக்கிற நாம் திருவடிகளைத் தொழுவோம் போரு –

(யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஒரு நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -நாம் அவன் காட்டக் கண்ட பின்பு கைங்கர்யம் செய்வதே அடுக்கும் அன்றோ)

———————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

(திரிவிக்ரமன் அனுபவம் பின்னாட்ட அவனுக்கு -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ ப்ரகார கைங்கர்யங்களை-அவன் ஆனந்தத்துக்காகவே பண்ண வா என்று நெஞ்சை அழைக்கிறார்0

கறுத்த கடலின் நீரோடு கூடின கரையை யுடைத்தான பூமியை அளந்து கொண்ட கருட வாஹனான ஸ்ரீ யபதியாய்
தன்னுடைய அழகை இவ்வளவு என்று பரிச்சேதித்துச் சொல்ல ஒண்ணாத அளவன்றிக்கே மனசாலே நினைக்கைக்கும் கூட
அரியனாய் இருக்குமவனாய் எல்லா பதார்த்தங்களும் அவ்வருகு பட்டு இருக்கிற வைலக்ஷண்யத்தை யுடையனாய்
ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் கிட்டுக்கைக்கு அறியனானவனை அவன் தானே காட்டக் கண்ட நாம்
அடிமை சுவடு அறியும் நெஞ்சே -திருவடிகளைக் கிட்டி அடிமை செய்வோம் போரு –

—————————————————————————————————————-

எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –

(நெஞ்சை கூப்பிட்டார் கீழ் -இதில் எல்லா இந்திரியங்களை அழைக்கிறார்-மானஸ வாசிக காயிக கைங்கர்யங்களைப் பண்ண வேணுமே )

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ———8–

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!-மற்ற இந்திரியங்களை நியமிக்க வல்ல நன்மை -முந்துற்ற நெஞ்சு என்பதால் நன்மை
நாராயணா என்று பல நாமம் சொல்லி–நாராயணன் முதலாகவுள்ள பல திரு நாமங்களைச் சொல்லி-

நாராயணன் ப்ராதான்யம் -ஒன்றைச் சொன்னாலே பலவும் சொன்னதாகுமே -ஒன்றைச் சொல்லி ஆறி இருக்க இயலாதே

அம் கையால்–அழகிய கையினாலே
நாம் தொழுதும்–நாம் தொழுவோம்
மருவி வா–இதற்கு நீயும் உடன்பட்டு வா
மண் உலகம்–பூமி முதலிய லோகங்களை
உண்டு உமிழ்ந்த–ஒரு கால் உள்ளே அடக்கி வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்
வண்டு அறையும் தண் துழாய்–வண்டுகள் படித்து ஒலி செய்யப் பெற்ற குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையவனுமான

ஆலத்தி வைக்குமா போல்-ஸாம கானம் பாடும் நித்ய ஸூரிகள் இவனை விடாமல் இங்கேயே இருந்து அனுபவிப்பார்கள் அன்றோ
கண்ணனையே–கண்ணபிரானையே
நம் கண்–நமது கண்கள்
காண்க–கண்டு களித்திடுக

நாமம் பல சொல்லி–கார்யா புத்தயா சொன்னால் ஆகில் இறே ஒன்றைச் சொல்லுவது –எல்லா திரு நாமங்களையும் சொல்லி –

(திரு நாமம் சொல்வதே இவருக்குக் கார்யம் -இத்தைச் சொல்லி வேறே பலனை எதிர்பார்க்கிறவர் இல்லையே
ஸ்வரூப ரூபம் குணம் சேஷ்டிதங்களை விளக்கும் திரு நாமங்கள் அன்றோ)

நாராயணா வென்று–அசாதாரண நாமத்தைச் சொல்லி -(ரூடியானாலும் யவ்கிகமானாலும் இவனையே குறிக்கும் அன்றோ )

நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே-எல்லா இந்திரியங்களுக்கும் அடி நீ இறே —

வா மருவி-
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ——–பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-
வெளி நாடு காண உமிழ்ந்து -போக்ய பூதனாய் -ஸூ லபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண் –

(ஸர்வ ரக்ஷகன் -ஸர்வ போக்ய பூதன்-வடிவு அழகன் -அவயவ சோபை- ஒப்பனை அழகன் – -ஸூலபன் -பாலைக் குடிக்கக் காலைப் பிடிப்பார் உண்டோ )

—————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

(நெஞ்சை கூப்பிட்டார் கீழ் -இதில் எல்லா இந்திரியங்களை அழைக்கிறார்-மானஸ வாசிக காயிக கைங்கர்யங்களைப் பண்ண வேணுமே )

என்னிலும் இவ்விஷயத்தில் முற்கோலி விழுகிற நல்ல நெஞ்சே -வாக் இந்த்ரியத்தில் நா யுறாவுதல் தீரும் படி
ஒரோ குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி –இவற்றுக்கு எல்லாம்
பிரதானமான ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு எல்லாம் பூர்ண வாசகமான அசாதாரணமான திரு நாமத்தைச் சொல்லி-
அங்குத்தைக்கு எடுத்துக் கை நீட்டக் கடவ அழகிய கையாலே நாம் அஞ்சலி பந்தம் பண்ணுகை முதலான
வ்ருத்தி விசேஷங்களை பண்ணுவோம் -நீ இறாயாதே பொருந்தி வாராய் —

பூமி முதலான லோகங்களை பிரளயம் வருவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி -அங்கிருந்து நெருக்குண்ணாத படி புறப்பட விட்டு ரஷித்தவனாய் – ரஷியா விடிலும் விட ஒண்ணாத படியாய் -மதுபான மத்தமாய்க் கொண்டு வண்டுகள் சப்திக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே
அலங்க்ருதன் ஆகையால் நிரதிசய போக்ய பூதனான கிருஷ்ணனையே காண வேணும் என்று மேல் விழுகிற
நம்முடைய கண்களானவை கண்டு களித்திடுக –

————————————————————————————————————————–

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கண்ணும் கமலம் கமலமே கைத் தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

பதவுரை

கரு மா முகில் வண்ணன்–கரிய பெரிய மேகம் போன்ற வடிவை யுடையவனும்
கார் கடல் நீர் வண்ணன்–கரிய கடல் நீரின் நிறம் போன்ற நிறமுடையவனும்
திரு மா மணி வண்ணன்–அழகிய நீல மணி போன்றவனுமான எம்பெருமானுடைய
தேசு–அழகை
எண்ணில்–ஆராய்ந்து நோக்குமளவில்,
கண்ணும்–திருக் கண்ணும்
கமலம்–தாமரைப் பூப் போன்றவை
கைத் தலமும்–திருக் கைத் தலங்களும்
கமலமே–அத் தாமரைப் பூப் போன்றவையே
மண் அளந்த பாதமும்–உலகளந்த திருவடிகளும்
அவையே–அத் தாமரைப் பூப் போன்றவையே.

(கறுமை பெருமை முகில் -கண்ணால் அளக்க முடியாதே கார் கடல் வண்ணன் -கண்ணுக்கு எட்டாதே -திரு மா மணி வண்ணன் -முந்தானையில் முடிந்து ஆளலாம் படி அன்றோ இவன்)

கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்-திருமா மணி வண்ணன் தேசு –எண்ணில்-
ஸ்ரமஹரமாய -கண்ணுக்கு அடங்காத திரண்டு குளிர்ந்து இருந்தவனுடைய
அழகை எண்ணில்-கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே -காடும் மோடுமாய் உள்ள பூமியை அளந்ததும் பூவையைக் கொண்டே

கறுப்பும் சிகப்பும் கலந்த கலவைக் கட்டி அனுபவம்-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி -–8-1-5-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –திரு நெடும் தாண்டகம்–21-

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –திருவாய் மொழி-2-5-1–

கரு மா முகில் தாமரைக் காடு பூத்தது போல் ராமன்-கம்பர்

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 73-
——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கறுத்துப் பெருத்த மேகம் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய் -கறுத்த கடலின் நீர் போலே கண்ணுக்கு
அடங்காமல் அபரிச்சேத்யமான திரு நிறத்தை யுடையவனாய் -அழகு மிக்குப் பெரு நிலையனான நீல ரத்னம் போலே
கண்ணாலே முகந்து அனுபவிக்க லாம் படி இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனுடைய அலகால் வந்த தேஜஸ்ஸூ
குமிழ் நீர் உண்ணாதே வருந்தி அனுசந்திக்கப் புக்கில் -வவ்வலிடும்படி குளிர நோக்குகிற
திருக் கண்களும் -தாமரை போலே குளிர்ந்து மலர்ந்த சிவந்து இரா நின்றது -ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும்
நிலமாய் காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும் அந்தக் கமலம் போலே இரா நின்றன –

————————————————————————————————————-

அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் -நாம்
அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்
பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

பதவுரை

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான்–வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய
பேர் ஓத–திரு நாமங்களை அப்யஸிக்க வேணுமென்று
பேசில்–சொன்ன மாத்திரத்தில்
தேசும்–தேஜஸ்ஸும்
திறலும்–பராக்ரமமும்
திருவும்–செல்வமும்
உருவமும்–அழகிய ரூபமும்
மாசு இல் குடி பிறப்பும்–குற்றமற்ற நற்குலமும்
மற்றவையும்–மற்றுமுள்ள நன்மைகளும்
நலம் புரிந்து நன்குசென்று அடையும்–தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும்.

தேசும் திறலும் திருவும் உருவமும்–
மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –

மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும் –
குற்றம் அற்ற பிறப்பும் -அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்கு

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவியிலும் உனக்கே நாம் ஆட் செய்யும் படி ஆகுமே)

பேசில்-
திரு நாமம் சொன்னதுக்குப் பலம் பேசப் போகாது -பிரயோஜனத்தில் பேசில் –

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத—-
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்ல –

நலம் புரிந்து சென்றடையும் நன்கு —
இஸ் ஸம்பத்து எல்லாம் தன் பேறாகச் சென்றடையும் –

ரதி மதி சரஸ்வதி திருத்தி ஸம்ருத்தி ஸ்திதி ஸ்ரீ -அஹர் அஹர் வந்து சேருமே-

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-32-

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

வலவருகே புரிந்து இருப்பதாய் -ஸ்யாமளமான திருமேனிக்கு பரபாகமான (பகைத்தொடை )வெளுத்த நிறத்தை யுடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் திருக் கையிலே தரித்து கொண்டு இருக்கிற சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு
வாசகமான திரு நாமங்களை சாதரமாகச் சொல்லி (ஓத என்பதால் ஆதரமாகச் சொல்ல என்றபடி )–தத் பலன்களை சிறிது சொல்லப் பார்க்கில் –
இருந்ததே குடியாகக் கொண்டாடும்படியான மதிப்பால் வந்த தேஜஸ்ஸூம் -பராபிபவன சாமர்த்தியமும் –
நிரவதிகமான சம்பத்தும் -அழகிய ரூப ஸ்ரீயும் -குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–
மற்றும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும்- நாம் இவ்விஷயத்தைக் கிட்டி ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று –
ஸ்நேஹ உன்முகமாய்க் கொண்டு தன் பேறாக வந்து அடையா நிற்கும் —

வான் சங்கம் என்றது வெளுத்த சங்கம் என்றபடி –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -81-100–திவ்யார்த்த தீபிகை —

October 7, 2014

இதில் முன்னடிகளிரண்டும் நெஞ்சை விளித்து உபதேசிப்பன்,
பின்னடிகளிரண்டும் தம்மில் தாம் வருந்திச் சொல்லிக் கொள்வன்.
என்னெஞ்சமே! (அவன்) நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றுப் பேசாய் – மனமே!
அப் பெருமானுடைய ஐச்வரியம் சிந்திக்கவும் முடியாதாகையாலே ‘இப்படிப்பட்ட பரமேச்வரனை நாம் எங்ஙனே பேசுவது?‘
என்று பின் வாங்கப் பாராமல், அவனது எளிமைக் குணங்களை நினைத்தாகிலும் கூசாமல் நிலை நின்று பேசப்பார் என்றபடி.

நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு –81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப்பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப்பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

இப்படி உபதேசித்த வளவிலும், நெஞ்சானது அவனுடைய பரத்வத்தையே நினைத்துக் கூசி நிற்பது கண்டு,
“நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ?“ என்கிறார்.
நாம் ஒருகால் நினைத்து விட்டாலும் அதையே வியாஜமாகக் கொண்டு நம் நெஞ்சை விட்டுப் பேராமல்
ப்ரதிஷ்டிதனாயிருக்கும் பரம ஸுலபனான பெருமானை நெஞ்சானது நினைக்கக் கூசுகின்றதே! இஃது என்ன பாவமோ! என்றவாறு.

உணர்வு என்ற சொல் – ஞானத்திற்கு வாய்த் தலையான நெஞ்சைச் சொல்லுகிறது இங்கு.

கீழ்ப் பாட்டில் “அரவணையான் சேவடிக்கே நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு“ என்று அருளிச் செய்தவர்
அடுத்த இப் பாட்டில் இங்ஙனே அருளிச் செய்யக் காரணமென்? என்று சங்கிக்கக் கூடும் கேண்மின்,
தம்முடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாட்டிற் கூறினது உண்மையே
அந்த பகவத் விஷயத்தின் பெருமையைப் பார்த்தவாறே அதற்குத் தகுந்த வளவான ப்ராவண்யம் உண்டாக வில்லையாக நினைத்து
‘பகவத் விஷயத்தில் நாம் இன்னம் அடியிடவே யில்லை போலும்‘ என்று தோன்றி இப் பாட்டருளிச் செய்தாரென்க.
ஒருவன் வித்வானாயிருந்தாலுங்கூட இன்னமும் கற்றுணர வேண்டிய கல்விகளின் எல்லை
யில்லாமையை நினைக்குங்கால் ‘நாம் என்னகற்றோம், ஒரக்ஷரமும் கற்றிலோம்‘ என்னும்படி
யாயிருக்குமன்றோ,
அது போலக் கொள்க.

இவ்வார்த்தைப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்கிற அழகு காண்மின், –
கீழ், ஸம்ஸாரிகளுக்கில்லாத்து தமக்குண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்றென்று கொண்டாடினார்,
விஷயத்தைப் பார்த்தவாறே அடியிட்டிலராயிருந்தார்.“ என்று.

————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில். “நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ!“ என்று வருந்தினார்,
இங்ஙனே நாம் வருந்துவது எதுக்கு? ஒருவர்க்கும் ஒருவகையாலும் அறியவெண்ணாதபடியன்றோ அப்பெருமானுடைய ஸ்வரூபமிருப்பது,
விஷணம் அப்படியிருக்கும்போது வீணாக நெஞ்சை நொந்துகொள்வதில் பயனென்?
இனி அவனை நாம் கிட்டிக்காணும் விரகு என்னோ! என்று தம்மில்தான் குழைகின்றார்.

உணர்வில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணையக்
கொங்கு அணைந்து வண்டறையும் தண் துழாய் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி –82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே)
உள்ளம் புகுந்து புணரிலும்–நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப்பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப்பெருமானை
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

‘உணரில் உண்மையுணர்வரியன், உள்ளம்புகுந்து புணரிலும் உண்மை காண்பரியன்‘ –நம்முடைய முயற்சியாலே அவனுடைய
உண்மை காணமுடியாதது என்பது மாத்திரமேயல்ல, “தாம் தம் பெருமையறியார்“ என்றும்
“தனக்குந்தன் தன்மையறிவரியான்“ என்றுஞ் சொல்லுகிறபடியே
அவன்றனக்கும் அறிய நிலமல்லாத உண்மையை அவன்றானும் நமக்கு அறிவிக்கவல்லனல்லன் என்றவாறு.

இணர் –பூங்கொத்து. எங்கு –எவ்விதமாக என்றுமாம்.

————————————————————————————————————————————————————————–

யார் எப்படி சொன்னாலும் எனக்கென்ன, அவன் மாயாவியாகவே யிருக்கட்டும், காண்பரியனாகவே யிருக்கட்டும்,
தன் உடைமையைப் பெறுகைகுத் தான் யாசகனாயச் சென்று அரிய பெரிய காரியஞ்செய்த அவன் என்னை
மறக்க வொட்டாதபடி என் ஹ்ருதயத்திலே வந்து புகுந்துவிட்டான்,
இனி அவனுடைய ஸ்வரூபம் எப்படிப்பட்டதா யிருந்தால் எனக்கென்ன? என்கிறார்.

இனி யவன் மாயன் என உரைப்பர் ஏலும்
இனியவன் காண்பு அரியன் ஏலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் -83

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்தஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமிதானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரமலாபமே போது மென்கை)

எம்பெருமான் பெரிய மாயக்காரன் என்று பலர் சொல்லுவர்கள், அதாவது
“வந்தாய்போலே வாராதாய் வாராதாய்போல் வருவானே“ என்னுமாபோலே –
கரைபுரண்ட மாநஸாநுபவமரத்தினால் கைக்கு எட்டினவனாக நினைக்கலாம் படி யிருந்தும்,
‘ஒருநாளும் அவன் கைக்கு எட்டமாட்டான்‘ என்றிருக்கச் செய்தேயும் ஸ்வேச்சையாலே வந்து கைக்கு எட்டியும்
இப்படி மாயாவியாயிருப்பவன் என்பர்கள்,
மற்றுஞ் சிலர் ‘அப்பெருமான் ஒருகாலும் ஒருவர்க்கும் காணமுடியாதவன்‘ என்பர்கள்,
யார் எப்படி சொன்னாலும் எனக்கென்ன, அவன் மாயாவியாகவே யிருக்கட்டும், காண்பரியனாகவே யிருக்கட்டும்,
தன் உடைமையைப் பெறுகைகுத் தான் யாசகனாயச் சென்று அரிய பெரிய காரியஞ்செய்த அவன் என்னை
மறக்க வொட்டாதபடி என் ஹ்ருதயத்திலே வந்து புகுந்துவிட்டான்,
இனி அவனுடைய ஸ்வரூபம் எப்படிப்பட்டதா யிருந்தால் எனக்கென்ன? என்கிறார்.

—————————————————————————————————————————————————————————-

வேதங்களினால் அறியக்கூடியவனான எம்பெருமான் என்னெஞ்சிலுள்ளான் என்னெஞ்சிலுள்ளான் என்று
ஒவ்வொரு வரும் சொல்லிக் கொண்டிருக்கலாமத்தனை யன்றி அப்புண்டரீகாக்ஷனை நேரே கண்ணாற் கண்டவர் யார்?
யாருமில்லை. அப்படியானால் எத்தனையோ பக்தர்கள் ‘கண்டேனே, கண்டேனே‘ என்று சொல்லக் காண்கிறோமே,
அஃது என்ன? என்று கேட்கில் உவப்பினால் கவி சொல்லி விடுகிறார்களித்தனை யல்லது வேறில்லை – என்கிறார்.

உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்-உளனாய
வண்டாமரை நெடும் கண் மாயவனை யாவரே
கண்டார் உகப்பார் கவி –84

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்யபூதனாக
உளனாபவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.

எம்பெருமானைக் கண்டேனென்று சொல்லிக் கொண்டால் அதனால் தங்களுக்கொரு ஸ்ந்தோஷம் விளைகிறபடியால்
கண்டேன் கண்டேனென்று பலரும் கவிப்பாக்கள் கூறுகின்றவளவால் பரம்பொருளை மெய்யே கண்டாரகளல்லர் என்றவாறு.

முதலடியில் “உட்பொருளை“ என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமை யுருபைப் பிரித்து
‘உளனாய‘ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. மேலிடத்தும் இங்ஙனமே.

———————————————————————————————————————————————————-

கீழ்ப்பாட்டில் “மாயவனை யாவரே கண்டார்“ என்று பரம்பொருளை உள்ளபடியே காணப் பெற்றாராருமில்லை யென்றார்
உள்ளபடியே பேசப்பெற்றவர்களாவது உண்டோவென்ன. இப்பூமியிலுள்ளாரடங்கலும் ஒன்று கூடிப் பேசினாலும்
சிறப்புறப் பேசித் தலைக்கட்டலாம்படி யிராது எம்பெருமானுடைய குண சேஷ்டிதங்கள் என்கிறாரிதில்.

கவியினார் கவி புனைந்து கண்ணார் கழல் போய்
செவியினர் கேள்வியாய்ச் சேர்ந்தார் -புவியினார்
போற்றி உரைக்கப் பொலியுமே பின்னைக்காய்
ஏறு உயிரை அட்டான் எழில் –85-

பதவுரை

கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலிபண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

வாயால் பலபல தோத்திரங்களைக் சொல்லிக் கொண்டும் கைகளைக் கூப்பிக்கொண்டும் கண்களை வேறொரு விஷயத்திலும்
செலுத்தாது அவனது திருவடித்தாமரைகளிலேயே செலுத்திக் கொண்டும். அப்பிரானது புண்யகீர்த்திகளையே செவிமடுத்துக் கொண்டும்
இப்பூமியிலுள்ளாடங்கலும் வந்து பணிந்து எல்லாருமொன்றுசேர்ந்து போற்றியுரைத்தாலும்,
கண்ணபிரான் நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களை முடித்திட்டு மணக்கோலமும் பெரு மிடுக்குமாக நின்ற அழகு
பேச்சுவாக்கு நிலமாகுமோ? என்றவாறு.

——————————————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய அழகானது ஒருவருடைய பேச்சுக்கு நிலமன்றாகிலும் பேசாதிருக்க முடியாதன்றோ,
‘திருவடி அப்படியிருக்கிறது, திருக்கண் இப்படியிருக்கிறது‘ என்றாற் போலே உவமையிட்டாவது சொல்லிக் கொண்டு
தானே யிருக்க வேண்டும், ஆகவே உபமாந முகத்தால் எம்பெருமானது வடிவைப் பேசி அநுபவிக்கிறார்
இப்பாட்டாலும் மேற்பாட்டாலும்.

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல
கார்வானம் காட்டும் கலந்து –86-

பதவுரை

எழில் கொண்ட–அழகையுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப்பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது.

கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தைக் கோட் சொல்லித் தருகின்றது.
கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து
வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும்.
எம்பெருமானுடைய காளமேகம் போன்ற திருமேனியும் மின்னற்கொடி போன்ற பெரிய பிராட்டியாரோடு கூடியும்,
ஸ்ரீகஜேந்திராழ்வான் போன்ற ஒடித் திரிந்துகொண்டும், ‘ஆணைவரும் பின்ன மணி யோசைவரும் முன்னே‘ என்கிறாப்போலே
அன்பர்களிடம் தான் வருவதற்க முன்னமே அறிகுறியாக முழக்கத்தைச் செய்து கொண்டிராநின்ற
ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடைத்தாகியுமிருக்கும். ஆகவே இங்குச் சொன்ன உபமாசோபமேயபாவம் நன்கு பொருந்துமென்க.

மின் + கொடி, மின்னுக்கொடி, புணர்ச்சியில் உகரச்சாரியை பெற்றது.
‘மின்னலைக் கொடியாக வெடுத்து‘ என்றும் பொருள் கொள்ளலாம்.
முதலடியில் “எழில்கொண்டு“ என்ற (வினையெச்சமான) பாடம் பெரும்பான்மையாக வழங்கிவந்தாலும்
அது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்கு இணங்காது,
“எழிலை யுடைத்தான மின்னை“ என்பது வியாக்கியான வாக்கியமாதலால் “எழில்கொண்ட“ என்ற (பெயரெச்சமான) பாடமே பொருந்தும்.

————————————————————————————————————————————————————————————————————–

இப்பாட்டும் உபமாநமுகத்தால் அநுபவிப்பதாம்.

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் -நலம் திகழும்
கொந்தின் வாய் வண்டறையும் தண் துழாய் கோமானை
அந்தி வான் காட்டுமது -87-

பதவுரை

மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடுகூடி
இமைக்கும்–விளங்காநின்ற
கண்ணா–கண்ணபிரானே!
மரதகம்–மரதகரத்னமானது
மலர்ந்து–ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திராநின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற
தண் துழாய்–திருத்துழாய் மாலையணிந்த
கோமானை–ஸர்வேச்வரனாகிய உன்னை
அந்தி வரன் அது காட்டும்–ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.

குருமாமணிப் பூண்குலாவித்திகழுந் திருமார்பையுடைய பெருமானே!
மரகதப் பச்சையானது உனது பச்சைமாமலை போன்றமேனியைக் கோட்சொல்லித தருகின்றது,
பசுகுபசுகென்ற திருத்துழாய்மாலை யணிந்திருக்குமழகை ஸந்த்யாராக ரஞ்ஜிதமான ஆகாசம் காட்டுகின்றது என்கிறார்.
திருத்துழாயின் பசுமயும் “கைவண்ணந் தாமரை வாய் கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்னும்படியான
திவ்யாவயவங்களிற் சிவப்புமான பரபாக சேரபையை அந்திவான் காட்டுமென்றபடி.

கோமானை –முன்னிலையில்வந்த படர்க்கை.

ஓரடைவிலே இப்பாசுரத்தை அழகிய மணவாளச்சீயர் உபந்ய ஸித்தருளுமளவில், இதற்கு இங்ஙனேயும்
பொருள் சொல்லலாமென்று அருளிச்செய்தபடி, கண்ணா! நின்மேனியை மரதகமே மலர்ந்துகாட்டும்,
கலந்து மணியிமைக்குத் தண்டுழாய்க் கோமானான வுன்னை அந்திவான் காட்டும் என்று யோஜித்து,
பச்சைமாமலைபோல் மேனியானது ஸமுதாயரூபேண மரதகப் பச்சைபோல் விளங்காநின்றது,
அதற்குமேல் திருவாபரண ரத்நப்ரபையும் திருத்துழாய் சோபையுமான அழகை உற்று நோக்குங்கால்
அந்திவான் போன்றிருக்கின்றது என்று வடமொழியிளாரின் நியாயம் தென்மொழியிலு முண்டாதலால்,
முதலடியிலுள்ள “கலந்து மணி யிமைக்கும் என்றதை மேலே அந்வித்தல் சாலும்.

—————————————————————————————————————————————————————

உலகத்தாரை நோக்கி யுரைக்கிறார். நன்மை தீமைகளைப் பகுத்துணரு முணர்வு உங்களுக்கில்லாமையினால்
‘எது நல்லது, எது தீயது‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டே காலங்கழிப்பதைத் தவிர்ந்து,
‘பகவத் விஷயத்தில் ப்ராவண்யங் கொண்டிருப்பதே நன்று, ஸம்ஸாரத்தில் ஆசை கொண்டிருப்பது தீது‘ என்று
உங்கட்கு நான் சொல்லும் விஷணத்தைத் திடமாகநம்பி, ஆச்ரித ரக்ஷணத்திற்குத் தனிமாலை யிட்டிருக்கு மெம்பெருமானுடைய
ஸர்வ ஸாதாரணமான திருவடிகளைத் தொழுங்கோள், தொழுதால் உங்களுடைய பரபங்களெல்லாம் தொலைந்து போம் என்கிறார்.

அது நன்று இது தீது என்று ஐயப் படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து –88-

பதவுரை

அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வஜந ஸாதாரணமான
பொன் அம்கழலே–விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸம்ஸ்த பாபங்களும்
முடிந்து–உருமாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.

முதலடிக்குப் பொருள் – அது பகவத்விஷயமானது, நன்று நல்லது, இது – ஸம்ஸாரமானது, தீது – பொல்லாத்து, என்று –
நான் சொல்லுமிவ்விஷயத்தில், ஐயப்படாதே எவ்வளவுமாம்.

பொது நின்ற – எம்பெருமானுடைய திருவடிகள் ஸர்வஸாதாரண மென்னத் தட்டுண்டோ?
ராவணசிசுபாலாதிகளுமுட்பட வந்து பணிந்தால் அங்கீகரிக்க ஸித்தமாயிருக்குந் திருவடிகளிறே.

முழுவினைகள் முன்னம் கழலும் –தொழவேணுமென்று நினைத்த மாத்திரத்தில் பாவங்கள் தொலையுமென்கை.
‘முடிந்து‘ என்றதனால் அப்பாவங்கள் வேறொருவரிடத்திற் போய்ச் சேர்வதற்கில்லாமே உரு மாய்ந்து ஒழியுமென்பது பெற்ப்படும்.

——————————————————————————————————————————————————————-

திருமலையின் நிலவளத்தையும் ஓக்கத்தையும் ஒரு சமத்காரமாகப் பேசுகிறாரிதில்.

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த -தடித்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலொரு நாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு –89

பதவுரை

முடிந்த பொழுதில் சூற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினைவிதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப்போட்ட பின்பும்
எழுந்த–(நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலேசென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப்பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒருநாள்–முன்பொருநாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

தேன் திரட்டுதல், வேட்டையாடி மிருகங்களைப் பிடித்துவருதல் முதலியன குறவர்களின் தொழிலாகும்.
இத்தொழில்கள் நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச் செய்ய இயலுமேயன்றி, கிழக்குறவர்கட்குச் செய்ய இயலா.
ஆகவே, அவர்கள் கிருஷியினால் ஜீவிக்கப் பார்ப்பார்கள், அது தன்னிலும் தாங்களே உழுது பயிரிடுதலும் அவர்கட்கு இயலாது.
கலப்பை பிடித்து உழமாட்டாத முடிந்தபொழுதிற்குறவாண ராதலால். பின்னை அவர்கள் என செய்வார்களென்னில்,
திருமலையிற் சில வீடாக மூங்கில்கள் வேர் பறியுண்டு விழத்தள்ளி அந்நிலங்களை மூக்காலே உரோசி ஒருகால் உழுதுவைக்கும்,
அத்தகைய நிலங்களிலே இக்கிழக்குறவர்கள் தினைகளை விதைத்து ஜீவிப்பார்கள்.
ஏற்கனவே பன்றிகள் தள்ளியிட்டிருந்த மூங்கில்கள் பயிர்க்குக்களையாக வொண்ணாதென்று அவற்றை இக்குறவர்கள்
நன்றாகக் களைந்து போட்டுவிட்டுப் போனாலும் அவை நிலப்பண்பினால் பண்டுபோவே வளர்ந்து ஆகாசத்தை அளாவுகின்றனவாம்.
இப்படிப்பட்டநிலவளம் வாய்ந்த திருமலை முன்பு ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவ்வதரித்து வேணுகாநம் பண்ணின பெருமான் வாழுமிடம் என்றாராயிற்று.

குறவர் தங்கள் சாதித்தொழிலை விட்டு க்ருஷியில் இறங்கினதற்குக் காரணங் கூறுவது போலும் ‘முடிந்தபொழுதின்‘ என்ற அடைமொழி.
சரமதசையிலே யிருக்கின்ற குறவர் என்கை வாணர் –வாழ்நர் குறவராக வாழ்பவர்கள என்கை.
சால் –‘ஒருசால் உழுத்து, இரண்டுசால் உழுத்து‘ என்று உலகவழக்க முள்ளமை உணர்க.

சிலம்பு –மலைக்குப் பெயர்.

—————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் திருமலையின் மூங்கிற்பணைகளின் வளர்த்தியைச் சொன்ன ப்ரஸங்த்தாலே
உலகளந்த பெருமானுடைய திருத்தோள்களின் திருவளர்த்தி நினைவுக்குவர, அதனைப் பேசி யநுபவிக்கிறாதில்,

சிலம்பும் செறி கழலும் சென்றிசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண் துழாய் மால் அளந்த மண் -90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
கே அடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத்தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போராவில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்துகொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

எம்பெருமானளந்த இப்பூமண்டலம் மிகப்பெரிது என்கிறார்களே, அப்படி பெரிதாக எனக்குத்தோன்ற வில்லை,
அவன் உலகளந்த காலத்து எண்டிசையும் விம்மவளர்ந்த திருத்தோள்கள் செருக்குண்ணாமல் விசாலமாக
அடங்கியிருப்பதற்று இடம் போதவில்லையே, அப்படியிருக்க, “பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறார்களே,
இது என்கொல் என்கிறார்.

“வண்டுழாய் மாலளந்தமண்“ என்றவிடத்து ‘அளந்த‘ என்பதை ‘அளந்தது‘ என்றதன் குறையாகக் கொண்டும் உரைக்கலாம்,
வண்டுழாய்மால் மண் அளர்ந்தது என்கொலோ அளப்பதாவது அடியை மாறிமாறியிட்டுச் செய்யவேண்டுவது,
திருத்தோள் வளர்த்திக்கே இடம் போரவில்லையென்றால் எம்பெருமான் மண்ணளந்தானென்று எப்படி சொல்லமுடியும்? என்கை.

———————————————————————————————————————————————–

எம்பெருமானுடைய சில லீலைகளை அநுபவித்துப் பேசுகிறார்.

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டுமாற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப்பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக்கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

இதில் “வயிற்றினோடாற்றாமகன்“ என்றருளிச்செய்த அழகை என் சொல்வோம்.
எத்தனை பொருள்களையிட்டு நிரப்பினாலும் நிரம்பாதே ‘இன்னமும் ஏதேனும் கிடைக்குமோ? இன்னமும் ஏதேனும் கிடைக்குமோ?
என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வயிறாகையாலே அதை வைத்துக்கொண்டு பரிக்கமாட்டாத மகன் என்றவாறு.
அவன் இப்படிப்பட்ட வயிறு படைத்தவனென்பது எங்ஙனே தெரிகின்றதென்ன, முன்னடிகளிலருளிச்செய்கிறார்.
உலகங்களையெல்லாம் அமுதுசெய்து பார்த்தான், அதிலும் வயிறு த்ருப்திபெறவில்லை,
பெற்ற தாய்போல் வந்தபேய்ச்சியின் பெருமுலையைச் சுவைத்துண்டுபார்த்தான் அதிலும் வயிறு த்ருப்திபெறவில்லை,
ஆய்ச்சிகள் உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயெல்லாம் வாரியுண்டான், ஒன்றிலும் த்ருப்திபெற்றிலன்,
வெண்ணெய் களவு செய்த குற்றத்திற்காகக் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டதொன்றினால் த்ருப்திபெற்றானத்தனை.

கண்ணபிரான் வெண்ணெய் களவுசெய்கிற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம்பினால்கட்டி வருத்துகின்றாளென்று
வீட்டிலுள்ள கயிற்றையெல்லாம் துண்டுதுண்டாக அறுத்து வைத்திட்டுப் பின்பே வெண்ணெய் திருடப்போவன்,
அவன் இவனைப் பிடித்துக்கொண்ட பின்பு துண்டுதுண்டான அக்கயிற்றையெல்லாம் ஒன்றோடொன்று முடிபோட்டு
ஒரு தாம்பு வடிவமாக்கி அதுகொண்டு கண்ணனைக்கட்டுவள், ஆனது பற்றிக் கயிற்றுக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான அத்தரம்பினால் தன்னைக் கட்டமுடியாதபடி
எளிதில் தன்னைத் தப்புவித்துக்கொள்ள வல்லவனாயினும்,
தனது ஸௌசீல்யம்
ஸௌலப்யம்
ஆச்ரித பாரதந்திரியம் முதலிய
சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்ந்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான்
உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளினால்தான் அக்குணங்களை விளங்கச்செய்து கொள்ள வேணுமென்று கொண்டு,
ஒரு சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக் கொள்வனாதலால் இது தோன்றக் “கட்டுண்டிருந்தான்“ எனப்பட்டது.

வெகுண்டு –இத்தனை வெண்ணெயை வாரியுண்டால் ஜரிக்குமோ என்று சீற்றங்கொண்டு.

———————————————————————————————————————————————————-

எம்பெருமானோவென்னில், தாயும், தந்தையுமா யிவ்வுலகினில் வாழும் வாயுமீசன்,
அவன் ஸகல்லோக பிதாவாய்க் கொண்டு எல்லாரையும் தனக்கு மக்களாக வுடையவனேயன்றித் தான்
ஒருவற்கும் மகனாயிருக்கத்தக்கவனல்லன்,

மகன் ஒருவர்க்கு அல்லாத மாமேனி மாயன்
மகனாமவன் மகன் தன் காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்து என் நெஞ்சே நினை –92

பதவுரை

என் நெஞ்சே–எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத–(கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப்பிறந்தத் தகாத (ஸர்வலோக பிதாவான)
மா மேனி–சிறந்த திருமேனியையுடைய
மாயன்==ஆச்சர்யபூதனாய்
மகன் ஆமவன்–(வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன்–தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை==இஷ்ட குமாரனான ஆநிருத்தாழ்வானை
சிறை செய்த–சிறையிலேவைத்த
வாணன்–பாணாஸுரனுடைய
தோள்–தோள்களாயிரத்தையும
செற்றான்–அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே–திருவடிகளையே
நிறை செய்து–பூர்த்தியாக
நினை–சிந்தை செய்வாயாக

அஸ்மதாதிகளைப் போலே கருமங் காரணமாக அவன் பிறவாவிடினும்
அநுக்ரஹம் காரணமாகப் பலபல யோனிகளிலும் பிறக்குமடைவிலே நந்தன் மகனாக ஒரு பிறவி பிறந்தான்.
அப்பிறவியில், தனக்கொரு மகனும் அவனுக்கொரு மகனும் ஆகப் பேரன்வரையில் பெற்றுவிட்டான்,
(தன் மகன் – ப்ரத்யம்நன் அவனது மகன் –அநித்ருதன்) பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷை என்பவள்
ஒருநாள் அவ்வநிருத்தனோடே தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு தனது தோழியான சித்திரலேகையின் யோகவித்தை
மஹிமையினால் அவனை த்வாரகையில் நின்றும் தூக்கிக்கொண்டுவரச்செய்து அவனோடுபோகங்களை அநுபவித்துக்கொண்டுவர
இச்செய்தியைக் காவலாளராலறிந்த பாணாசுரன் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே பொருது
நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க த்வாரகையிலே அநிருத்தனைக்காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது
நாரத முனிவனால் ஸமாசாரமறிந்த கண்ணபிரான் பெரியதிருவடியின் மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு
பாணபுரத்திற்கு எழுந்தருளிக் கார்த்திகையானுங் கரிமுகத்தானும் கனலும் முக்கண்மூர்த்தியும மோடியும் வெப்பும்
முதுகு காட்டிப் போகும்படிசெய்து சக்ராயுதத்தைப் பிரயோசித்துப் பாணனது தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்தான்,
அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளையே தமது திருவள்ளத்தில் நிறைத்துக்கொள்ள விரும்பினாராயிற்று.

————————————————————————————————————————————————————————–

நினைத்து லகிலார் தெளிவார் நீண்ட திரு மால்
அனைத்து லகுமுள் ஒடுக்கியால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத்துயின்றானை
உள்ளத்தேவை நெஞ்சே உய்த்து –93-

பதவுரை

நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்டதிருமால் –அப்ரமேயமான பெருமைபொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி–ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சாரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப்பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

———————————————————————————————————————————————————–

கீழ்ப்பாட்டில் “உள்ளத்தே வை நெஞ்சே! உய்த்து“ என்றபடியே பலிப்பது போல இருள் தருமாஞாலத்தில்
ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாத எம்பெருமானாகிற பரம்பொருளை ஞானமாகிற சிறந்த விளக்கின்
ஸஹாயத்தினால் தேடிக் கண்டுபிடித்து நெஞசாகிற வலைக்குள்ளே இருத்திவிட்டேன்.
அப்பெருமான் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போக மாட்டாமையாலே நெஞ்சு தன்னிலையே அவனுக்கு
என்னெஞ்சினுள்ளே யாயிற்று என்கிறார்.

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என்னெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து –94-

பதவுரை

உய்ந்து உணர்வு என்னும்–விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.

உலகத்திற்காணும் விளகுக்கு எண்ணெய் திரி முதலியவற்றின் சேர்க்கையினால் அழுக்கேறுதலுண்டு,
ஞானமாகிற விளக்கு அங்ஙனன்றியே நிர்மலமாயிருக்கு மென்பதைக் காட்டும் ‘ஒளி கொள்‘ என்ற அடைமொழி.

ஊரகமும் பாடகமும வெஃகாவும் பட்டபாடு படுகிறது என்னெஞ்சு என்கிறார் போலும் பின்னடிகளில்.

பொன்றாமை – நான் நசித்துப் போகாதபடியாக என்றுமாம்.
ஹ்ருதயத்தினுள்ளே நிற்றலிருத்தல் கிடத்தல்களுக்க விச்சேத மில்லாதபடியாக என்றுமாம்.

————————————————————————————————————————————————————-

புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம்-சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சம் வாழ்த்து -95

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயாக வாழ்த்து

அரியாய் – அரி என்பதைத்தற்சம வடசொல்லாகக் கொண்டால் இரணியனுக்கு அடைமொழியாக அந்வயிக்கும்
(வடமொழியில் அரி என்னுஞ்சொல் விரோதியென்னும் பொருளது) பகவத் பாகவத விரோதியாய்க் கொண்டு
தூஷித்து வந்த இரணியன் என்றதாகிறது. இனி, சிங்கமென்னும் பொருளதான ஹரி என்ற வடசொல்
அரியெனத் திரிந்த்தாகக் கொண்டு ‘நரசிங்க மூர்த்தியாகி‘ என்று எம்பெருமானிடத்து அந்வயித்தலும் பொருந்தும்.

சிந்த – ரத்தவெள்ளம் சிந்தும்படியாக (அன்றியே) உடல் சிந்நபிந்நமாம்படியாக என்றுமாம்.

—————————————————————————————————————————————————————-

“வடிவிணையில்லார் மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி“ என்கிற படியே
புஷ்பஹாஸ ஸுகுமாரமான திருக்கைகள் படைத்த பிராட்டிமார் பிடித்தாலும் கூசிப் பிடிக்க வேண்டும்படி
அவ்வளவு ஸுகுமாரமான திருமால் திருவடிகள் – ஸர்வகாலமும் நித்யஸூரிகள் தமது மணி மகுடங்களைச் சாய்ந்து
வணங்கப் பெறுதலால் தழும்பாமே என்று வயிறு பிடிக்கிறார்.

வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே-கேழ்த்த
அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன்
அடித்தாமரையா மலர் –96-

பதவுரை

கேழ்த்த அடி–பெருத்த தாளையுடைய
தாமரை மலர் மேல்–தாமரைப்பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்துகின்ற வராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத்திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.

பொய்கையாழ்வார் “தழும்பிருந்த தாள் சகஞ்சாடி“ என்று –கிருஷ்ணாவதாரத்தில் சகடத்தைச் சீறி உதைத்ததனால்
திருவடி தழும்பேறப் பெற்றதாக அருளிச்செய்தார்,
நித்யஸூரிகள் நித்தியம் வணங்குவதால் தழும்பேறி விடுவதாக இவ் வாழ்வார்ருளிச் செய்கிறார்
கிரீடங்கள் பட்டுப் பட்டுத் திருவடிகள் காய்ப்பு காய்த்தல் தகும்.

தழம்பாமே –இப்படி ஓயாமல் வானோர் வணங்கிக் கொண்டிருந்தால் திருவடிகள் தழும்பேறி விடாதோ என்கிறாரென்றுமாம்.

——————————————————————————————————————————————————————————–

வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பிரமன் சிவனிந்திரன் முதலானோர்க்கும் சிந்தைக்கும்
கோசரமல்ல னெம்பெருமான் என்கிறார்.

அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழிலாய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை –97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப்பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப்போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத்தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

முதலடியிலுள்ள அலர் என்றது தாமரைப்பூவைச் சொல்லுகிறது.
எம்பெருமானது திருநாபியில் தாமரைப்பூவுள்ளது ப்ரஸித்தமே.
இனி இரண்டாமடியில் மலர் என்றது காயம்பூவைச் சொல்லுகிறது,
எம்பெருமானது திருமேனிநிறம் காயாம்பூ வண்ணமென்பதும் ப்ரஸித்தமே.

இனி “அலரெடுத்த வண்ணத்தான்“ என்று இந்திரனுக்கு வாசகமானவிதனில்
அலர் என்றது காஞ்சிமலரைச் சொல்லுகின்றதென்றுண்ர்க.
திருவிளையாடற்புராணம் – திருவாலவாய்க் காண்டம் – தருமிக்குப் பொற்கிழியளித்தபடலத்தல் (ப்னிரண்டாவது செய்யுள்)
“செங்கதிர் மேனியான் போல விழ்ந்தன செழும்பலாசம், மங்குலூர்ச் செல்வன்போல மலர்ந்தன காஞ்சி,
திங்கட் புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மாவம், செங்கையங்கதிராழியான் போல்லர்ந்தன விரிந்தகாயா.“
என்றதில் இரண்டாமடியில் இந்திரனது நிறம் காஞ்சிமலர் நிறமென்று காட்டப்பட்டிருத்தல் காண்க.
(மங்குலூர்ச்செல்வன் –மேகாவாஹனனான இந்திரன்) காஞ்சிமலரென்பது கறுத்தபயறு நிறங்கொண்டிருக்குமென்று கூறுவர்.

———————————————————————————————————————————————————————————-

க்ருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்டு மிகப்பெரிய குதிரைவடிவங் கொண்டு
வந்த கேசி யென்னு மஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நாகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார்.

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் -நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு –98-

பதவுரை

இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்

முன்னடிகளிரண்டும் அவ்வசுரக் குதிரைக்கு அடைமொழி. பருமனில் மலையைவென்றிருந்த்தாம்,
உய்த்தியில் ஆகாயத்தை அதிக்ரமித் திருத்ததாம், லோகத்தில் (அல்லது வலிமையில்) வாயுவை வென்றிருந்ததாம்.
‘மலை‘ என்று பொதுவாகச் சொன்னால் போராதோ, ‘இமஞ் சூழ்மலை‘ என்று விசேஷித்துச் சொல்லுவானேன்? என்னில்,
ஸப்த குல பர்வதங்களில் இமயமலை முதலிற் கண்கிடப் பட்டிருப்பதால் இதனை உபலக்ஷணமாகக் கொண்டு
குலாசலங்களேழையுங் கொள்ளவேணு மென்பதற்காக வென்க.

அமஞ்சூழ்ந்து – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படாக,
எனவே இவைற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம்.
துரகம் – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி.

———————————————————————————————————————————————————————————–

இப்பாட்டும் மேற்பாட்டும் சா த்துப் பாசுரங்கள்,
திருக்கச்சி மாநகரில் திருக்கோயில் கொண்டிருக்கும் அஷ்டபுஜத் தெம்பெருமான் திருவடிகளே சரணம் என்கிறார்.

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்கு சார்வு –99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது
தாள் முதலே–பாதமூலமே
நங்கட்கு–எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்

தொட்டபடை யெட்டும் தோலாத வென்றியான் – திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் திருவட்டபுயகரத்
தெம்பெருமானை மங்களாசாஸ நஞ்செயும் திருப்பதிகத்தில் (2-8-3)
“செம்பொன்னிலங்கு வலங்கை வாளி தின்சிலை தண்டொது சங்க மொள்வாள், உம்பரிருசுட ராழியோடு
கேடக மொண்மலர் பற்றியெற்றே . . . அட்டபுயகரத்தே னென்றாரே“ என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
1. வாளி, 2. சிலை, 3. தணடு, 4. சங்கம், 5. வாள், 6. ஆழி, 7. கேடகம், 8. மலர் ஆக
திவ்யாயுதங்களெட்டையும் திருவுள்ளம் பற்றித் தொட்டப்டை யெட்டும் என்கிறாரிங்கு.
இப்படைகளைக்கொண்டு எங்கும் வெற்றியே பெற்றுனருவானென்கிறது.
இவற்றைத் தரிக்குமிடத்து ஒரு ஆயாஸமின்றியே பூவேந்தினாற்போலே எந்தியிருப்பது தோன்ற, ‘தொட்ட‘ எனப்பட்டது.

அட்ட புயகரத்தான் – அட்ட புயகரத்திலுள்ளவன் எறு பொருள். ‘அஷ்டபுஜன்‘ என்பது எம்பெருமானுடைய திருநாமம்.
எட்டுத் திருக்கைகளையுடையவன் என்று பொருள். க்ருஹம் என்னும் வடசொல் கரமெத்திரியும்,
ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் – அட்டபுயகரம். (திவ்யதேசத்தைச் சொன்னபடி) அவ்விடத்திலுள்ளவன் என்றதாயிற்று.
‘அட்ட புயவரகம்‘ என்பது அட்டபுயகரகம் என மருவிற்றென்றலும் பொருந்தும்.
அகரமாவது அக்ரஹாரம். திவ்யதேசத்தை முன்னிட்டே எம்பெருமானைப் பேசவேண்டுமென்னும் நியதி
ஆழ்வார்கட்கு உள்ள தாதலால் ‘அஷ்டபுஜன்‘ என்னாமல் ‘அட்டபுயகரத்தான்‘ என்ன வேண்டிற்றென்ப.

அப்பெருமான் பஞ்சேந்திரியங்களாகிற பலமுதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துடிக்கின்ற நம்மைக் காத்தருள
வேண்டித் திருவட்டபுயகரத்திலே வந்து ஸந்நிதிபண்ணா நின்றான், அவன் திருவடிகளே தஞ்சம் – என்றாராயிற்று.

——————————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் ‘எம்பெருமான் திருவடிகளே சரணம்‘ என்றார், இப்பாட்டில் ‘பிராட்டி திருவடிகளே சரணம் என்கிறார்.
எம்பெருமான் திருவடிகளே நேரே பற்றுவதற்கில்லையே,
“நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுகாக“
என்கிறபடியே ஸர்வாபராதங்களையும் பொறுப்பிக்கவல்ல பெரிய பிராட்டியார் புருஷகாரமாகவே எம்பெருமானைப் பற்ற
வேண்டியிருத்தலால் அப்புருஷகாரவரணத்தை இப்பாட்டால் செய்து இப்பிரபந்தத்தையும் தலைக்கட்டுகிறார்.

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் காரார்ந்த
வானமரும் மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண்
தேனமரும் பூ மேல் திரு –100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல்போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக்கண்களை யுடையளாய்
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

“தேனமரும் பூமேல் திரு நமக்கு என்றும் சார்வு“ என்று அந்வயிப்பது. நடுவிலுள்ளவை பிராட்டிக்கு விசேஷணங்கள்
“சக்கரத்தான் தண்டுழாய்த்தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும்“ என்பது ஒரு விசேஷணம்,
“காரார்ந்த வானமரும் மின்னிமைக்கும்“ என்பது இரண்டாம் விசேஷணம்,
“வண் தாமரை நெடுங்கண்“ என்பது மூன்றாம் விசேஷணம்.

இவளுடைய போக்யதையைக் கண்டு ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாமல் எம்பெருமான் இவளை
நித்ய ஸம்ச்லேஷம் செய்திருக்கிறானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து.
எம்பெருமானுடைய வைலக்ஷண்யம் சொல்லவேண்டில் “அகலகில்லேளிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா!“ என்று
பிராட்டிமேல் விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுவர்கள், பிராட்டிக்கு வைலக்ஷணயம் சொல்லவேண்டில் இவளை
அவன் தான் மேல்விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுங்கள் இரண்டு படியும் தகுமிறே.

நிலைநின்ற விளங்கமாட்டாத மின்னல்போன்றிராதே நிலைநின்று விளங்குவதொரு விலக்ஷணமான மின்னல்போலே
பிரகாசிப்பவளென்கிறது இரண்டாம் விசேஷணம். மின்னல் மேகத்திலே ஜ்வலிக்கும், இவளும் காளமேகத் திருவுருவிலே.

வண்தாமரை நெடுங்கண் – ஸ்த்ரீகளின் கண்ணழகை வர்ணிக்குமிடத்து
“குவளையங் கண்ணி“ எறும் “கருங்கண்ணி“ என்றும் “அஸிதேக்ஷணா“ என்றும் வர்ணிப்பதே
பொருத்தமுடைத்தென்றும் தாமரைமலர் போன்றதாக வருணித்தல் சிறவாதென்றும்,
அவ்வுவமை புருஷோத்தமானது திருக்கண்ணுக்கே பொருந்துமென்றும் சிலர் சொல்லுவர், அது பொருந்தாது,
‘பத்மாக்ஷி ‘பங்கஜாக்ஷி‘ என்ற விசேஷணங்களும் மஹாகவி நிபந்தங்களில் பெரும்பாலுங் காணாநின்றோம்,
அன்றியும், ஸ்ரீஸூக்தத்தில் “பத்மாலயே பத்மிநி பத்மஹஸ்தே பத்மப்ரியெ பத்ம தளாயதாக்ஷி“ என்று
ஓதப்பட்டிருத்தலால் அதை படியொற்றின வண்டாமரை நெடுங்கண் என்ற இவ்விசேஷணம் மிகப்பொருத்தமானதே யென்க.
கண்களின் நீட்சிக்குத் தாமரையிதழ்களும் கருமைக்கு குவளைமலரும் உவமையென்றுணர்க.

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று தலைக்காட்டினாராயிற்று.
ஆக பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று தாயார் திருமடியிலே தலை சாய்ப்போம்

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –