Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும் ஏழு பிராயத்தே செய்த காரியமும் லோகத்தையும் ஒரு ஊரையும் நோக்கின படி –

————-

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

விரோதியைப் போக்குகையாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு நின்றவன் –அப்போதை அழகு –
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்-ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –

———-

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –
அத்விதீயமாய் அபரிச்சேத்யமான சங்கல்பத்து உள்ளது ஜகத்து –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே கை தொட்டு செய்கிறது ஆஸ்ரித வாத்சல்யம் –

————

நெஞ்சே உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய் அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –பைம் பொன் முடி-திவி சூர்ய-என்றதுவும்
போந்து இருந்தது இல்லை –ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

———-

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது ஸ்ரீ வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து

———

திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–

கார்யமான இவை அழிந்து தானே யான அன்று இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க உடம்பு நோவக் கடல் கடைவதே என்ன சௌலப்யம் தான் –

————

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே-எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-
உன்னைப் பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

———

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன 0பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ-சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை முடித்துப் பொருதாய் நீ அன்றோ
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை இவருக்கு தோற்றுகிறது இல்லை

———–

இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பின்னைக்காய் –ரசிகத்வத்தாலே தன்னை அழிய மாறின படி –

———————-

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷபாதத்தை யருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

அணி நீல வண்ணத்தவன்-இத்தை முடித்துப் பின்னை தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அணி நீல வண்ணத்தவன் –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –
மா முதலை கொன்றான் –தன் விடாய் தீர்ந்தான் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய்
இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்-கீழ்ச் சொன்ன திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –
இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்-

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–

நற வென்று பொல்லாத மதுவாய்-தண்ணிதான மதுவைக் கையிலே ஏற்றுள்ள ருத்ரனுக்குத் தன் திரு மேனியிலே
இடம் கொடுக்கும் ஸ்வ பாவனாய் உள்ள சீலவான் –

————

இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் ஆவான் இப்படி இருக்கிற இவன் கிடீர் எனக்கு எளியன் ஆனான் –
இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம்-

———

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவரான தேவர்களுக்கு அன்று கொடுத்தாய்
சம்சாரத்தைப் பூண் கட்டி நடுவில் பரணிலே இருக்கிறவர்கள் –

–——-

காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்—-34-

உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்-நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ
பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ-திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும் என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

———–

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே – அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில் பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

—————-

யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

செய்ய படை என்கிறது-ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்

———-

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்-இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக
புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

அஹ்ருதயமாக அடிமை புக்கேன்-அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு பூஜியா நின்றான் -விட சக்தன் ஆகிறிலன்-
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி அவள் முறுவல் பெறுகைக்கு-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

————

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

உபமான ராஹித்யத்துவக்கு அடி-சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த் தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-
எல்லாம் தான் இட்ட வழக்கு-இவை எல்லாமாய் நின்ற சர்வேஸ்வரன் தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே-

————-

இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன் திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

திருமலையில் நின்று என்னுடைய ஹிருதயத்தில் புகுர அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு வந்து புகுந்தான் –
அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம் பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

———–

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பண்டு உளன் அன்றிக்கே-இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி – அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –
நாம் வேண்டாத காலமும் நம்மை வேண்டி இருக்குமவன் –சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
மன்-உடையவன் –இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்-மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –
தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்-அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு தனித் தனியே ஹேதுக்களை அருளிச் செய்து –வடிவு பிரகாரம்
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது-

—————

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

நாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் உண்ணுமோ பாதி எப்பொழுதும் தொழுமவர்கள் –சதா பஸ்யந்தி -இறே –
செம்மையால்–அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் புத்தி பண்ணி ஹ்ருதயம் சிதிலமாய் –
செவ்வனே –நீ ஓன்று கொண்டு அவனைக் காண இருக்கை அன்றிக்கே-ஒரு யத்னம் செய்யாது இருக்கத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டுவதாகக் கொண்டு –
மெய்ம்மையே –மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ் கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே
அவனைப் பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே யாதரி-
பிரயோஜன நிரபேஷமாக ஆசைப்படு–பிரயோஜனமும் அவனே-பிரயோஜனமும் அவனே -என்றபடி
முதல் தன்னிலே இவர் சாஷாத் கரித்தன்றோ அனுபவிக்கிறது -என்னில்-ஒருக்கால் கண்டோம் இறே என்றால்
அவ்வளவால் பர்யவசிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் இருந்து கண்டது சம்சாரத்தே ஆகையாலும் ஆறி இருக்க விரகு இல்லையே –

——————

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே – அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி-இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

மனஸ்ஸானது முன்னாடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிப் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு பிச்சேறா நிற்கும்-
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –வண்டுகள் பட்டது படா நின்றது –

————–

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

அவ்வோ பதார்த்தங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி விசிஷ்டனாய் –
தேஜோ ரூபமான திரு வாழியை யுடையனாகையாலே நித்ய விபூதி யுக்தனாய் யுள்ளான்-
தொழு வித்துக் கொள்ளப் பரிகரம் உண்டு-
சூழ் கழலே – ஆஸ்ரிதரை அகப்படுத்துக் கொள்ளுகிற திருவடிகளையே
புறம்பு போகாமல் சூழ்த்துக் கொள்ளும் திருவடிகளையே -என்னுதல்
இத்தால் அவன் எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால் அத்தை அறிந்த இன்றாகிலும் நீ தொடராயோ
கீழ் விச்சேதித்துப் பட்டது போரும் இனி மேல் உள்ள காலம் முறையாலே இடைவிடாதே தொடர்ந்து ஆஸ்ரயி-

———-

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து
இருந்தாப் போலே இருந்தது -அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால்
உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

ஜகத்துக்கு அவன் வயிறு தாரகமானால் போலேயும் நெய் அவனுக்கு தாரகமானால் போலேயும்
அடிமை உனக்கு தாரகம் அன்றோ –நான் சொல்லுகிற வேப்பங்குடி நீர் இது வன்றோ என்கிறார் –
வெண்ணெய் உண்ணா விடில் அவனுக்கு பிரளயம் வந்தது போலே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளத் த்ரவ்யத்தாலே அங்கு வயிறு நிறையாமையாலே வந்த குறை தீர்ந்தானாய் இருக்கிறவன் –
தனக்கு அசாதாரண பரிகரத்துக்குத் தானே விரோதியைப் போக்கும்-
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட அவ்வருகாய் இருப்பான் ஒருவன் ஆன பின்பு
இனி அவன் காலிலே விழுந்து பிழைக்கில் பிழைக்கும் அத்தனை-
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால்
உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

———-

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை
அருளிச் செய்கிறார் –கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே-யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது என் என்னில்
உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே-இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

அவனுடைய ஆதரத்துக்கு இவை இரண்டும் ஒரு கோவையாய் இருக்கிறது –
உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி என்னுடைய நெஞ்சும் –
திரு வநந்த ஆழ்வானையும்-என்னுடைய நெஞ்சையும் தன்னதாக அபிமானித்து இருப்பது –
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும்-இத்தையும் தாங்கடவார்-சாதரமாக யுறைந்து -அதிக்ரமியார்-
திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும்
தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு
முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-

அக்னி நா சிஞ்சேத்-நெருப்பினால் நனைத்தல் போல இருப்பது ஓன்று இறே
பகவத் பஜனம் பண்ணியும் பாப பலானுபவம் பண்ணுகை யாகிறதும் –
கடலுக்கு தொடுத்த அம்பு அவன் மேல் விடாமையே அன்றிக்கே அவன் சத்ருக்கள் மேலே விட்டது இல்லையோ
அனுக்ரஹ பலம் காணுதலே இறே உள்ளது –ஆஸ்ரித கார்யம் செய்கைக்காகக் கிட்டக் கிடக்கிற படி –
எக்காலத்தில் எத்தேசத்தில் யார் அவனைப் பற்று துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார் –

————-

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ் வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

உகந்தாருக்கு தன உடம்பைக் கொடுக்கும் –-ஆஸ்ரிதர்க்காகத் தன் உடம்பை அழிய மாறியும் நோக்கும்
இவன் அஞ்சாததும் பீஷ்மாதிகளுக்கே –அஞ்சுவதும் யசோதைப் பிராட்டிக்கே-
அம்மனே –இது ஒரு எத்திறம் இருக்கிறபடி –கெட்டேன் இவனால்

————

யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ஸ்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கும் யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை -ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

ஸ்த்ரீத்வ பிரயுக்தமான பயத்தைப் பொகட்டு கடுக வந்து எடுத்து ப்ரத்யௌஷதம் பண்ணுகையிலே ஒருப்பட்டாள் ஆய்த்து
கேட்ட விடத்தே மோஹித்து விழுகை அன்றிக்கே கால் நடை தந்து–வந்து— எடுத்து-பிரதிகிரியை பண்ண தொடங்கினாள் ஆய்த்து
மோஹித்து விழுமதுவும் பிரேம கார்யமே யாகிலும் -அவனைப் பெறும் படியும் கார்யம் பார்க்க வேணும் இறே
மயர்வற மதி நலம் பெற்றும் -யாம் மடலூர்ந்தும் -என்னப் பண்ணும் விஷயம் இறே –

——————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் –இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி கோயில்கள் எங்கும்
வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

நேர்ந்த வென் சிந்தை – என்கையாலே இத் திருப்பதிகளிலே வந்து நின்றது எல்லாம் என் ஹிருதயத்திலே
புகுந்து இருக்கைக்கு – என்கிறது –
வேதத்தில் நின்றதோடு கண்ணால் காணப் படுகிற திருப்பதிகளோடு வாசி அற இவருக்கு பிரகாசமாய் இருக்கிறபடி
இறைபாடி யாய இவை–ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானி

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 20, 2020

கூரிதான அறிவை  உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

நன்கோது நால் வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற் கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11-

அந்த நீர் உறுத்தாத படி திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின் படி
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய்-தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து –
தரிசித்து –லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து

————-

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே
காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப்பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக நன்கு உணர்ந்தவர்கள் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி நாள் தோறும் காண்பார்கள் –

—————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில் அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

இத்தால் இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————

எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து நிற்கிறவன் –நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹநீயன் ஆனவன்
நித்ய ஸூரிகள் வந்து ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடான திருவடிகளை யுடையவன் தாழ நின்ற இடத்திலும் மேன்மை குறைவற்று இருக்கிறபடி
அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் –
ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம்

——–

இப்படிப் பெரியனான சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத்துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பரியவும் அறியாதே –படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே -இருக்க வந்து என் மனசிலே தங்கா நின்றான் –
பரிவாரைக் கை விட்டுப் பரிய வறியா விடிலும் -முறை யுணர்ந்தாரை தானே வந்து உகக்கும் –
அங்கு வகுத்தது என்று கிடக்கும் இங்கு உகந்து கிடக்கும்-எங்கே தங்குமவன் எங்கே வந்து தங்குகிறான்
கிடைக்கைக்கு ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே தானே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு வந்து உகக்கும்-

————

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனம் தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம் உத்தமை –
மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்-
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்-

————-

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம்
ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் அவளோடே கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டில்லை –
இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக என்கிறது
எம்பெருமான் படி இதுவான பின்பு நாம் க்ருதக்ஞராய் இருக்கும் அத்தனை வேண்டும் –என்கிறார்
இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு
கழிந்த நாள்களும் இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு
மேல் வரக் கடவ எல்லா நாள்களும் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
இத்தை அசையிடும் நாள் இறே –

———–

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

சர்வேஸ்வரனே உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ-என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று அருளிச் செய்ய வேணும்-
இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்
ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே
அவனுடைய அருள் பெற்றவன்று சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

—————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்- திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

அவனுக்கு அருள ஒண்ணாதது இல்லை -அஞ்சாது இருக்க அருள் -என்று அபேஷிக்கவும் அறியாதார்க்கும்
அருளுமவன் நமக்கு அருளானோ-
தம்தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் உடையார் பக்கல் காணும் அவன் தாழ்ப்பது –
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அக்கடிகடனா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

————-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று எம்பெருமானைக் கேட்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப் பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே
இந்திரன் பல் காட்டின்து பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ–சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 19, 2020

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் – அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம்-

புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை – அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்

———

கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே – ஆகையாலே அன்றோ பேயர் ஆய்த்து-
பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்-

சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே
கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

————–

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

இவள் கடாஷம் பெறாத போது-அவனோடு அல்லாதாரோடு வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
பேணிக் கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –
திருக் கண்டேன்–-தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–-அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்-
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்-
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும்-
என் ஆழி வண்ணன் –இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே பிராட்டியும் சங்கும்ரத்னமும் எல்லாம் பிறப்பது –
இன்று –அவன் காட்டக் கண்ட இன்று-இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று

———–

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
அவள் விரும்புகிற விஷயம் என்றும் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்தும் பிற்காலியாதே மருவிக் கண்டு
கொண்டது என்னுடைய மனஸ்ஸூ –அந்தப்புர பரிகரமான நான் இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ – விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

———-

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-

மனத்துள்ளான் –உத்தேச்யம் அவ்விடமே-மனசைப் படுக்கையாகப் புகுந்தான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –
மலராள் தனத்துள்ளான் –அவனுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
தண் துழாய் மார்வன்-அவளுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –

——–

சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் – தமக்குச் செய்த படி சொன்னார் –இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –
அது ஸ்வஜன ரஷணம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-விரோதியைப் போக்குவானும் அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே –
சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே-சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து–அர்த்தியாய் வருகையாலே பொருளானான்
திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
உண்டு -மருந்தான படி–உமிழ்ந்து -பொருளான படி -செங்கண் மால் -அமுதமான படி

————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரச்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது – அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது-பேச ஒண்ணாது –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை-அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

————–

கீழ்ச் சொன்ன அழகையும்-அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

திருவாழி யோபாதி நிறமும் சிறந்து இருக்கும் -இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ –
திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல போக்யமும் என்றபடி-
ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே
அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ-

———–

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திச் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–அவர் காட்டக் காண இருக்கிற நாம்
திருவடிகளைத் தொழுவோம் போரு –

—————-

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின திரு நாமங்களை அடங்கச் சொல்லி –
அவை எல்லாவற்றுக்கும் அடியான பிரதான நாமத்தைச் சொல்லி-
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

——-

காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

ஜிதந்தே புண்டரீகாஷா எண்ணப் பண்ணும் கண் –முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –
ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும் நிலமாய் – காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும்
அந்தக் கமலம் போலே இரா நின்றன-
திருமா மணி வண்ணன் – காந்தி மிகுத்ததான பெரு விலையனான ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்
ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி-சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார் இறே
புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும் -இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

———–

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை-அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க-எல்லா சம்பத்துக்களும்-தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத்
தாமே வந்தடையும் என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு-இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ஸ்நேஹித்துச் சென்று மேல் விழும் தன் பேறாகச் சென்று அடையும்-
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே அவையும் இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 23, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே
முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

————

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –

கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று –
அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

———————

கீழ் இவருடைய மனஸ்ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில்

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –
அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –
இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவிக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3–

———————————–

சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் –தமக்குச் செய்த படி சொன்னார் –
இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –அது ஸ்வஜன ரஷணம் –

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

—————————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது பேச ஒண்ணாது –

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

—————————–

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

——————————-

அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவன் திருவடிகளிலே
நாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

——————————————

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –

எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

—————————–

காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

—————————————-

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க எல்லா சம்பத்துக்களும்
தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத் தாமே வந்தடையும் என்கிறார் –

அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் –
நாம் அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்
பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

——————-

கூரிதான அறிவை உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

நன்கோது நால் வேதத்துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11–

—————————–

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில்
நான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் –
இப் பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

———————————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில்-அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

—————————————–

அறிவென்னும் தாள் கொளுவி -என்கிற பாட்டில் படியே இந்த்ரிய ஜெயம் பண்ணுகை அரிதாய் இருந்ததீ-
பிரத்யஷத்தால் அல்லது இந்த்ரிய ஜெயம் பண்ண ஒண்ணாது
ஆனால்-எங்களுக்கும் இவனைக் கண்டு அனுபவிக்கலாமாவதொரு வழி இல்லையோ என்னில்
அசக்தர் ஆனாருக்கும் இழக்க வேண்டாத உபாயம் சொல்லுகிறது –
அவ்வருமையால் வரும் குறை தீர ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அவன் திருவடிகளை யாஸ்ரயித்து எளிதாகக் காணலாம் -என்கிறார்
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19-
மெய்ம்மையே காண்கிற்பார் -திருக் குறும் தாண்டகம் -18-என்னக் கடவது இறே
ஸ்ரீ எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு ஸ்ரீ உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ
அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆனபின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

———————————————-

இப்படிப் பெரியனான ஸ்ரீ சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத் துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

அவனாலே ஸ்வயம் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது –

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

——————————

ஸ்ரீ திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

இப்படி வந்து தங்குகைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோடே இருக்கை என்கிறார் –

ஸ்ரீ திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

————————————–

இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற
எல்லாம் ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது
அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக –

இப்படிப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

—————————-

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

————————————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்-திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல்
அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

———————————–

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானைக் கேட்கிறார் –

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20–

——————————

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

————————————–

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

———————————–

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி – இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ

உபதேசம் பலித்த படி சொல்கிறது –

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படி யைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

—————————-

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

————————————

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத்
தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது –
அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

—————————–

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை
அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே
யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது ஏன் என்னில்
ஸ்ரீ உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

————————————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு முன்பு
எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –
ஒருவன் பாபபலம் புஜிய நின்று உள்ளவனை
கெடுவாய் நீ ஒரு காலும் பகவத் சமாஸ்ரயணம் பண்ணிற்று இல்லையோ –என்பார் உண்டு இத்தனை இறே –
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
கெடுவாய் நீ நல்ல வழி போய்த்திலை யாகாதே -உன்னை நீ கெடுத்துக் கொள்வதே –
மித்ரா மௌபிகம் கர்த்தும் ராம ஸ்த்தானம் பரீப்சதா வதம் ச அநிச்சதா கோரம் த்வயா சௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-
என்னக் கடவது இறே
அனர்த்தத்தை வேண்டுவத்தைப் பண்ணிப் பரிகாரத்தில் இழிந்திலை யாகாதே –

அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம் புஜிப்பார் யுண்டோ என்கிறார் –

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27–

—————————————

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

———————————-

ஸ்ரீ யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே
அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கும் ஸ்ரீ யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே-மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை–ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –

அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கு ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –

ப்ரஸ்துதையான ஸ்ரீ யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

———————————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் – இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி
ஸ்ரீ கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
ஸ்ரீ கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

—————————————

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய்
ஸூசீலனுமாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்
கீழ்ச் சொன்ன ஸ்ரீ திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–

————————————–

இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

—————————

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது –

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

————————————

ஸ்ரீ காஞ்சி புரத்திலே பல ஸ்ரீ திருப்பதிகளிலே-நிற்பது-இருப்பது-கிடப்பதான
இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து இதுக்கடி
பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

————————————-

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –

நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

——————————-

யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்
வெய்யகதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் -செய்ய
படை பரவை பாழிபனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

—————————-

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்
இங்கனே இருந்துள்ள நான் அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே
அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –

நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

————————————-

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

————————————

இப்படி ஜகதாகாரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு எண் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

————————————–

இப்படி சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

———————————–

திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

——————————-

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார்

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

———————————-

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –

அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் –

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

——————————–

நெஞ்சே உபய விபூதி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –

நெஞ்சே -உபய விபூதி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

——————————-

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று ஸ்ரீ பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூலபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

———————————-

ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –

ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம்
பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–

——————————–

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்
நம்முடைய விரோதிகளைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

————————————–

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

———————————–

இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

————————————–

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில்
ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷ பாதத்தை யருளிச் செய்கிறார் –

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக் ஷபதித்து
ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

——————————-

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் –

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார்

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

———————————

கீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் –
கீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ
என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது –

கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

——————————

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு போலியான ஸ்ரீ வடதள சாயியை அனுபவிக்கிறார் –
ஸ்ரீ எம்பெருமான் படி இதுவான பின்பு
மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் – துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் –

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான ஸ்ரீ வட தள சாயியை ஆஸ்ரயி என்று
தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

—————————–

ஸ்ரீ வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான
ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

ஸ்ரீ வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

————————————

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் உள்ளவன் உடைய அழகை அனுபவிக்கிறார் –

இப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

——————————

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும்
என்று கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் –
பிரயோஜ்னத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை –

என்னுடைய ஸ்ரீ ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது –
பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால்
அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

————————————

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது என்கிறார் –
ஸ்ரீ கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் –

ஸ்ரீ கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –

ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

——————————-

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் –

அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை
ஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

———————————-

கீழ் ஸ்ரீ கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –
அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் –

ஸ்ரீ கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

————————-

உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது என்கிறார் –

பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் –
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

———————————–

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ – ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன்
சம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –
இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில்
தம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் -சம்சாரத்திலே உகந்து அருளின
ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

——————————-

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாதரமோ – ஸ்ரீ பரம பதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –

கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

——————————–

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –
தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் – சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே – என்கிறார் –

ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

——————————

இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

——————————

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும்
ஆயாச ஹேதுவான வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

—————————

தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –

உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து
அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-

———————————

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு-அலருவது-மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் –

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-

————————————

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
ஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
ஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

—————————————

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது-ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள்-

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட ஸ்ரீ திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி
தசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

————————————

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி-ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

———————————–

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமான ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நின்று அருளின ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

————————————

அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் –

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

—————————–

இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

———————————

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் ஸ்ரீ யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நமக்கு ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து-என்கிறார் –

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் ஸ்ரீ யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

——————————

இப்படி விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக
விரும்பி இருக்கும் ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

——————————-

உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு
இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி
தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு – என்கிறார் –
ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –என்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா –
ஸ்ரீ வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

—————————–

கீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –
இதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே
தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு
நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

கீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-

—————————–

நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே
புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

——————————–

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –
அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –
நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

—————————————–

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் –

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

—————————

கீழே-சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே
ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்தவாறே-முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
இவனை இம் மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்
இத்தால்-தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று
கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

———————————

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் –
அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய் நிரதிசய போக்யனுமான பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –

இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய்
இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

————————————

அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

—————————————

வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை
அல்லது ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

—————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில்-வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால்
பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும்
கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

———————————–

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு –
அதாகிறது அவன் வடிவுக்கு போலியான பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

————————————

பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –
ஸ்ரீ எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

——————————–

இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை
ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

———————————

இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் –
ஸ்ரீ திருமலையில்-குறவரோடு-மூங்கிலோடு-ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற
எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

ஸ்ரீ திருமலையிலே குறவரோடு -ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திரு மலையிலே கிடீர் என்கிறார் –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

——————————-

ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன்
உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –
ஸ்ரீ திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன்
உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் மூங்கில்களோ பாதி ஸ்ரீ திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

—————————–

ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் –

சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

—————————-

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் –
அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று
புத்தி பண்ணு -என்கிறார் –

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

———————————

இப்படி இருக்கிற ஸ்ரீ எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை –
ஆனாலும்-நெஞ்சே நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-

———————————-

இப்படி -வையம் தகளி-தொடங்கி-இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –
கீழில் பாட்டில்-நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –
இப் பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யபி நிவேசத்தோடே கூட
ஸ்ரீ எம்பெருமான் உள்ளே புகுந்து தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் –

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

———————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –
நெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-

——————————-

நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே ஸுகுமார்யத்தை உடையவன் -என்கிறது –
அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

———————————

கீழில் படியாய்-ஸ்ரீயபதியாய்-அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே
அவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெரும் அத்தனை -அல்லது
ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் –
அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் –

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-

—————————–

தன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் –
நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் ஸ்ரீ எம்பெருமான் என்றபடி –

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

———————————–

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் –

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

—————————–

ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் –

ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

—————————-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———1-

அவனையே உபாயமாகப் பற்றுகையாலே சாஷாத் கரிக்கிறார் –அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –

பொன் மேனி கண்டேன் – அவளுடைய சிம்ஹாசனம் கண்டேன்

திகழும் அருக்கன் -இத்யாதி
கூட்டரவால் உள்ள புகர்ப்பு –

செரு -இத்யாதி –
தனியே குமிழி நீர் உண்ணாமே கூட்டுப் பெற்றேன்

என்னாழி வண்ணன் பால் இன்று –
முழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே இன்று –பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று
ப்ராப்யத்ருஷ்ணை உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –
அவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை மிக வேண்டாவோ –
ஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —

————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 21, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
பிரவேசம் –

கீழ் இரண்டு ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய ப்ரசாதத்தாலே ரத்னாகாரத்தைக் கண்டாப் போலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானைப் பரிபூர்ணமாகக் காணப் பெற்றேன் –என்கிறார்
இத்திருவந்தாதி ஒருவருக்கு நிலம் அல்ல –கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே –
ஆகையாலே அன்றோ ஸ்ரீ பேயர் ஆய்த்து-
பேயரே எனக்கு -இத்யாதி -பெருமாள் திருமொழி -3-8-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றது

பக்தி ரூபா பந்நமான ஸ்ரீ முதல் திருவந்தாதி –
எந்தன் அளவன்றல் யானுடைய அன்பு -இரண்டாம் திரு -100–என்கையாலே
அது பர பக்தியாய்த் தலைக் கட்டிற்று கீழில் திருவந்தாதி –
அப் பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

——————

முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்

வையம் தகளி -ஞானத்தைச் சொல்லுகிறது
அதாகிறது
அவன் சேஷி என்றும்
நாம் சேஷம் என்றும் அறியும் அறிவு
அன்பே தகளி -ஞான விபாகமாய்
அது உண்டானால் உண்டாகக் கடவ பர பக்தியைச் சொல்லுகிறது
இனி அந்த பர பக்திக்கு அநந்தரம் ஆன சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது

ஸ்ரீ சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் ஸ்ரீ முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஸ்ரீ ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

ஸ்ரீ எம்பெருமான் கடல் கடைய-தேவர்கள் நடு நின்றால் போலே
முன்புற்றை ஸ்ரீ ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து

———————————————————————————————

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

வியாக்யானம் –
திருக் கண்டேன் –
எல்லா ஐஸ்வர் யத்துக்கும் உடலான ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –
தன்னை ஒழிந்தார் அடைய தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி ப்ரதானையான
ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –
இவள் கடாஷம் பெறாத போது
அவனோடு
அல்லாதாரோடு
வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே
அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே
சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
யதோ உபாசனம் பலம் இறே –
தத் க்ரது நியாயம் போலே உபாசனம் ஒன்றாய் பலம் ஒன்றாய் அல்லவே இருப்பது-இரண்டும் ஒன்றாய் இறே இருப்பது-

கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –

திருக் கண்டேன் –
நிரூபக தர்மமான பிராட்டியைக் கண்டேன்
பிரபையைக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –
பாஸ்கரேண பிரபா யதா -சுந்த -21-16-

பொன் மேனி கண்டேன் –
அவளும் தண்ணீர் தண்ணீர் எண்ணும்படியான நிறம் கண்டேன்
ருக்மாபம் ஸ்வனப்தீ கம்யம்
திரு உடம்பில் ஸ்லாக்யதை இருக்கிறபடி –

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இவருடைய சேர்த்தியாலும்
பாலார்க்கன் திகழா நின்ற நிறம் கண்டேன்
இள வெய்யில் கலந்தால் போலே
புகர் மிக்க நிறமும் கண்டேன் –
சோபயன் தண்ட காரண்யம் -ஆரண்ய -38-15-
இருவருடைய ஒளியும் கலசின் படி –

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்-
இருவருடைய சேர்த்திக்கும் என் வருகிறதோ என்று
அஸ்தானே
பய சங்கை பண்ணி
யுத்தோன் முகமாய்-கண்டார் மேல்சீறி விழுகிற திருவாழியைக் கண்டேன் –

பொன்னாழி –
தனக்குச் சிலர் பரிய வேண்டும் அழகு உடையவன்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –என்னும் படி இருக்கிற திருவாழியைக் கண்டேன் –

புரிசங்கம் கைக் கண்டேன் –
ஸ்ரீ ஆழ்வானைப் போலே சீறி விடுகை அன்றிக்கே-எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்துச் சீறுகிற
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கண்டேன் –
ஸ்ரீ பரதன் தம்பி யன்றோ என்று
ஸ்ரீ இளைய பெருமாளையும் அதி சங்கித்துக் கொண்டு திரியும்
ஸ்ரீ குஹப் பெருமாளைப் போலே
ஸ்ரீ திருவாழி தன்னையும் அதி சங்கை பண்ணிக் கொண்டு புகுகிற ஸ்ரீ சங்கை அழகிய கையிலே கண்டேன்
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமா ஸீ நம் -அயோத் -4-42-என்னும்படி யாகவுமாம்-

என்னாழி வண்ணன் பால் –
எனக்கு ஸ்வம்மாய்க்
கடல் போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் பக்கல் –
அபரிச்சேத்யனானவன் பக்கலிலே
இவ்வடிவு அழகை எனக்குக் காட்டினவன் பக்கல் -என்றுமாம் –

என் ஆழி வண்ணன் –
இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே
ஸ்ரீ பிராட்டியும்
ஸ்ரீ சங்கும்
ஸ்ரீ ரத்னமும்
எல்லாம் பிறப்பது –
கலைகளும் -இத்யாதி
மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்று இவர் -பெரிய திருமொழி -2-8-5-

இன்று –
அவன் காட்டக் கண்ட இன்று
இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று
என்றுமாம் –

——————-

அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

வியாக்யானம் –

சார்வு நமக்கென்றும் –
ஆபத்துக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் சார்வு –
ஆபத்து உள்ள போதும்-அல்லாத போதும்-என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
ஆத்மை வரிபுராத்மன -கீதை -6-5-என்று
நாம் தஞ்சம் அல்லாத போது ஸ்ரீ எம்பெருமான் உளன் –
அவன் ஸ்வா தந்த்ர்யத்தாலே அழன்ற போதைக்கு ஸ்ரீ பெரிய பிராட்டியார் உண்டு –

நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-அவனுக்கும் ஸ்ரீ பிராட்டிக்கும்
நாம் அநர்த்தம் சிந்திக்கும் இத்தனை-
அவன் சீறுபவன்-
ராகவத்தி பயம் கோரம் -சுந்தர -27-45-
ஸ்வ தந்த்ரன் சீறினால்-அவள் சார்வாகை யாவது பிரணயினி ஆகையாலே –
அவள் பிரியம் செய்து அல்லது நிற்க ஒண்ணாது –

சக்கரத்தான் –
ஸ்ரீ திரு வாழியை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ரஷணத்துக்கு பரிகரமான ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே யுடையவன்
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் –
ஸ்ரீ திருத் துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் -தான் –
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ திருத்துழாய் மாலையை யுடைத்தாய் –
மலை போலே இருக்கிற ஸ்ரீ திரு மார்வை யுடையவனான தானே –

தானே முயங்கும் –
போக உபகரணமான ஸ்ரீ திருத் துழாயை யுடையவன் தானே முயங்கும் –
முயங்குகை -தழுவுகை –
அபி நிவேசித்து சம்ஸ்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –
தான் முயங்கும் –
இப்படி இருக்கிற தான் –
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –
அவளை -அகலகில்லேன் -என்னும் –
தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே –
இதுக்கு உபமானம் மேல் –

காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் –
மேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்திலே மின்னினாப் போலே
கருப்புக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பதும் செய்யும் –

வண்டாமரை நெடுங்கண்-
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –
பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே ஷஷ்டி –
தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக் குளிர நோக்கினாள்-

தேனமரும் பூ மேல் திரு –
தேன் செறிந்து இருந்துள்ள பூவின் மேலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

தேனமரும் பூ மேல் திரு —
நிரதிசய போக்யையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் –

—————————————————————————————–

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———1-

திருக்கண்டேன் –
அவனையே உபாயமாகப் பற்றுகையாலே சாஷாத் கரிக்கிறார் –

திருக்கண்டேன் –
அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –

பொன் மேனி கண்டேன் –
அவளுடைய சிம்ஹாசனம் கண்டேன்

திகழும் அருக்கன் -இத்யாதி
கூட்டரவால் உள்ள புகர்ப்பு –

செரு -இத்யாதி –
தனியே குமிழி நீர் உண்ணாமே கூட்டுப் பெற்றேன்

என்னாழி வண்ணன் பால் இன்று –
முழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே
இன்று –
பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று
ப்ராப்ய த்ருஷ்ணை உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –
அவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை மிக வேண்டாவோ –
ஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —

—————————————————————————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

பரபக்தி பர ஞான பரம பக்தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –
ஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி தத் ஏக தாரகராய் -லோக யாத்திரையில் கண் வையாதே
அலௌகிகராய் வர்த்திக்கிற ஸ்ரீ முதல் ஆழ்வார்களில் -ஸ்ரீ மாட மா மயிலையில் அவதரித்து
மஹதாஹ்வயர்-என்னும்படி நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் -அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்
ஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படி யான மாடங்களை யுடைத்தாய் -அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற
ஸ்ரீ திருக் கோவலூர் என்றபடி –
ஸ்ரீ கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் / வூர் -தானுகந்த வூர் –
பின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற
நீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –
அதனுள் –
இப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே
புற இருளும் இதயத்து இருளும் -போனவாறே -காரார் கரு முகிலைக் காணப் புக்கு -மழை முகிலே போல்வானான
அவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு –புர மழைக்கு ஒதுங்கினவர்க்கு
உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செலவத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –

காணப் புக்கு –
அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அதனுள் காரார் கரு முகில்–
ஸ்ரீ குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –
காரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —
காள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு மூவரை ஒழிய மாற்றார் என்று
ஆராயும் இடத்து –என்றுமாம் -ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு

ஓரா –
திரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி
ஓர்ந்து –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த
சீரான் கழலே –
இப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ஸ்ரீயை யுடையரான ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாதங்களே
மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –
உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து -அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்–
யத்தி மனஸா த்யாயதி தத் வாசா வத தி இறே –

நெஞ்சே உகந்து –
இப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து
உகந்து பணி செய்து -என்னுமா போலே தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே
சீரான் என்று ஸ்ரீ பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –
இத்தால் ஸ்ரீ பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்
அவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –

——————————————————————————

அவதாரிகை –
உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் ஸ்ரீ முதல் ஆழ்வார்
அதுக்கு வாசக சப்தம் ஸ்ரீ நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ நடுவில் ஆழ்வார் –
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் ஸ்ரீ இவ் வாழ்வார் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் –
வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

—————————————————–

பகவத் பிரசாத லப்தமான பயபக்தி ரூபா பன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் ஸ்ரீ பொய்கையார் –
ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே ஸ்ரீ பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித்தனி கண்டு உகக்குமா போலே
ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ சங்க ஸ்ரீ கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
ஸ்ரீ எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் ஸ்ரீ பேயார்-

உபய விபூதி உக்தன் என்றார் ஸ்ரீ பொய்கையார் –
அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
(-மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

—————————————————————————————————————–

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

திருக் கண்டேன்–
தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–
அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –
செருக்கிளரும்-பொன்னாழி கண்டேன்–
அஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் அலையும் பல்லாண்டு -என்கிறபடியே ஸ்ரீ திரு வாழியைக் கண்டேன் –
புரிசங்கம் கைக் கண்டேன்-
ப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே
என்னாழி வண்ணன் பால் இன்று —–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
செருக்கி–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை
கிளரும்-பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று —-கடலிலே இறே ஸ்ரீ பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –
இன்று –
அவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –

——————————————————————–

உனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே ஸ்ரீ ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி பிரதானையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன்
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் -பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்
மரகத கிரியிலே உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பாலார்க்கனைப் போலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி
விளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –
இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
யுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி
பொன் போலே நிறத்தை யுடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கண்டேன் –
ஸ்ரீ திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி
வழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –
இன்று நிர்ஹேதுகமாக-என்னவுமாம்
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் –

——————————————————————————————————

ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –
ஆபத்துக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ரக்ஷணத்துக்கு உபகரணமான
ஸ்ரீ திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் -போக உபகரணமான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
போக உபகரணமான ஸ்ரீ திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான –இதுக்கு உவமானம் மேலே –
காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு –மேகங்கள் செறிந்து இருந்துள்ள
ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற
திருக் கண்களை யுடையாளாய் –
தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

———————-

ஸ்ரீ திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய் போக உபகரணமாய் சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த
ஸ்ரீ திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச் செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த
திரு மார்வை யுடையனான தான் அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி இருக்குமவளாய் –
மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே கறுத்த
திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் -ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற
உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய வேறு புகல் இன்றியே
இருக்கிற நமக்கு ஆபத்து உள்ள போதோடு இல்லாத போதோடு வாசியற சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

முதல் ஆழ்வார்கள் அனுபவம் / அருளிச் செயல்களில் அண்ணல் அப்பன் அண்ணன் அத்தன் -பத பிரயோகங்களின் தொகுப்பு —

January 29, 2018

பர பக்தி பர ஞானம் பரம பக்தி -மூன்றுக்கும் மூவரும்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையுமே இம் மூன்று சப்தங்கள்
ஞான தரிசன பிராப்தி நிலைகள் மூன்றையும் காட்டவே
உக்கமும் தட்டொளியும் நப்பின்னை மணாளனும் போலே இம் மூன்றும்
அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை அர்ச்சிராதி கதி இம் மூன்றும்
வையம் தகளியா -அன்பே தகளியா-திருக் கண்டேன் இம் மூன்றும் இவற்றையே காட்டி அருளும் அருளிச் செயல்கள்

பூதத்தாழ்வார் என் நெஞ்சமே யான் -நெஞ்சிலே திருக் கைகள் வைத்து நம் ஆழ்வார் போலே சேவை –
ஆழ்வார்கள் அனைவரும் உடையவர் சந்நிதியில் சேவை திருக் காஞ்சியில் /
மூவரும் மூன்று நாளும் -நடுவில் அந்த ஆழ்வார் திரு நக்ஷத்ரம் -அவருக்கு மட்டும் கிரீடம் மற்றவர்க்கு கொண்டை – /
ஸ்ரீ ரெங்கத்தில் சதயம் அன்று மட்டும் /

பூதத்தாழ்வார் -முதலில் பாகவத சேஷத்வம் -சரம் துரந்தான் தாழ் இரண்டும் யார் தொழுவார் அவர் பாதம்
தொழுவது என் தோளுக்கு சிறப்பு என்று காட்டி அருளி –
அதனால் தான் பாகவத சேஷத்வம் -இவரே முதலில் அருளிச் செய்தார் –

திருக் கடல் மல்லை பதிகம் -விசேஷமாக காட்டி அருளி திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
சிஷ்யர் ஸ்ரீ கூரத் தாழ்வான்–பெரியவர் /- ஆச்சார்யர் திருவரங்க பெருமாள் அரையர் -வைகாசி திருவதாரம் -1000-இவருக்கும் –சின்னவர்

ஆகஸ்த்யமும் அநாதி -செந்தமிழ் பாடுவார் என்று முதல் ஆழ்வார்களையே அருளிச் செய்கிறார் -என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை /-அஷ்ட புஜ பதிகம் –
சர்வாதிகம் -அருளிச் செயல் -எளிதில் -மான மேய சரமங்களில் -மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகாவே அளிக்கும் வீடு -/
தமிழ் ஆழ்வார்களுக்கு தொண்டு புரியுமே /
வரலாற்று மாற்றம் -ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சை / சம்சரிதம் தமிழ் -எல்லாருக்கும் -எப்போதும்–மோக்ஷம் எளிதில் கிடைக்குமே -சொல்வதே
செம்மை இது தானே / இவர்களை வைத்தே -வித்து பீஜம் –
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் -வெந்திறல் வீரரின் வீரம் ஒப்பார் -ராமனாக —
ராவண வத அனந்தரம் -தேவர்கள் வணங்க -பவான் -நாராயணோ தேவா
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ராமனா தேவனா -தெரிக்க மாட்டேன் —
திரு வேங்கடமுடையானோ -என்ற அர்த்தம் பெரியவாச்சான் பிள்ளை –
அனு கூலர் -கலப்பற்ற -பசும் தமிழ்-/ பெருமை வீரம் -எளிமை மூன்றும் கண்டார் கலியன் இவன் இடம் -/எளிமையும் பெருமையே –
பவான் -நாராயணோ தேவா -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-இங்கே -உள்ளான் -/
அந்தணர் கொல் திருவிக்ரமன் -வாமனன் -குறள் உருவாய் நிமிர்ந்து -மண் அளந்த அந்தணர் —
வந்து நிமிர்ந்து -திரு விக்ரமன் -ஒரே இடத்தில் எளிமையும் பெருமையும் –
முதல் ஆழ்வார்களை சொல்லும் ஸூ சகம் -இவை இரண்டும் -/

247-பாசுரம் வாங்கிக் கொண்ட தமிழ் கடவுள் அரங்கன் –
மா பிடிக்கு முன் நின்று -பெருகு மத வேழம்-இரு கண் /தூய தமிழ் – நல் தமிழ்- செந்தமிழ் -/
அட்டபுயகரத்தேன் -கழஞ்சு மண் கேட்ட அவதாரம் இல்லை -பெண்ணை கேட்டவன் -/
எனக்காக பிச்சை -இந்திரனுக்காக இல்லையே /
திருக்கண்ண மங்கை -பெரும் புறக்கடல் –தெள்ளியார் வணங்க்கப்படும் தேவன்-7-10-4- —
இங்கும் -முதல் ஆழ்வார்களால் -மாயனை மதில் கோவல் இடை கழி மைந்தனை மிடுக்கனை
மாயனாகவும் ஆயனாகவும் –கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /இவர்கள் தொடக்கம் தானே தெளிந்த ஞானம் –
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானம் உடையவர்கள் -/
இன்கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -திருவாய்மொழி-7-
இன்கவி தமிழையும் – பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் என்னப்படும் முதல் ஆழ்வார் -நம்பிள்ளை
மாலே- மாயப் பெருமானே -மா மாயனே என்று என்று –மாலே ஏறி -மயர்வற மதிநலம் அருளியது –
பாலேய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்து பாலே பட்ட இவை பத்தும் —
அபரியாப்தமருதன் -ஆராவமுதன் -இரண்டுக்கும் வாசி உண்டே –
பராங்குச தாசர் -/ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் / பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கூரத் தாழ்வான
முதல் ஆழ்வார்/ திருப் பாண் ஆழ்வார் / பெரியாழ்வார் -ஒரு நிர்வாகம்
அக இருள் போக்க பொய்கை பிரான் -அன்று எரித்த திரு விளக்கு – செந்தமிழ் தன்னையும் கூட்டி -திரி -அமுதனார் -/
தத்வ ஹித புருஷார்த்தம் -மாறாமல் / தமிழ்த்தலைவன் பேயாழ்வார் -திராவிட சாஸ்த்ர ப்ரவர்த்தகர் மூலம் –
வித்திட்டவர்கள் -திருக் கண்டேன் -நமக்கு சொல்லி அருளிய நம்மாழ்வார் அன்றோ –
இசைகாரர்-சீரிய நான் மறை செம் பொருள் செந்தமிழால் அளித்த பாண் பெருமாள் –
பழ மறையின் பொருள் என்றே பரவுகின்றோம் –

——————————————-

சாது கோஷ்டியுள் கொள்ளப் படுபவரே -பரம புருஷார்த்த ம் –
ரிஷ்ய சிங்கர் -அங்க தேசம் நுழையும் பொழுது மழை பெய்தால் போலே தபோ பலம் –
கொம்பு முளைத்ததா -கேட்டார்கள் -ரிஷ்ய சிங்கர் -தலை கோட்டு முனிவர் -நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பொழியும் மழை
பரத ஆழ்வானுக்கு விசனம் தீர -முற்ற முற்ற அயோத்யா மக்கள் மகிழ்ந்து -பெருமாள் கட்டாயம் சீக்கிரம் வருவாரே –
இவர்களும் கிருஷ்ணன் உடன் கூடினால் -சம்ச்லேஷம் -மழை பொழியுமே விச்லேஷம் அனாவருத்தி

ஓங்கி -பிறர் கார்யம் செய்ய உடம்பு பணைக்குமே -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து – –அண்டம் -அளந்த நீண் முடியன் -பனி பட்ட மூங்கில் போலே
பையத் துயின்ற பரமன் -பிறர் கார்யம் செய்வது சத்தா பிரத்யுக்தம் -ஆர்த்த நாதம் இவனுக்கு ஓங்க காரணம் -வளர்ந்த சடக்கு -கையில் விழுந்த நீரும்
பிரம்மா விட்ட நீரும் ஒக்க விழுந்ததே -சென்னி மேற ஏறக் கழுவிய நீரும் –
உலகளந்த -இருந்ததே குடியாக குணாகுணம் நிரூபணம் பாராமல் -ஏக் தேசம் இன்றிக்கே -ரஷித்து-
அகவாயில் வியாப்தி -ஸ்வரூப வியாப்தி -உயிர் மிசை எங்கும் கரந்து-விக்ரஹமும் அப்படியே வியாப்தி -அனைவர் உடன் கலந்து
தாரகமாக நின்றான் -இங்கு -அனச்னன்- அந்ய -அங்கு -இரண்டு பறவை -உண்ணாமல் ஸ்புஷ்டியாக இருப்பான் –
ந தே ரூபம் நிஷேதம் தன்னது என்பதை தவிர்ந்து -பக்தாநாம் – நாம் அஹம் அபி என் உடைமையும் உன் சக்கரப்படை ஒற்றிக் கொண்டு போலே
அவனும் ந தே ரூபம்
சர்வாதிகன் உத்தமன் -ஈஸ்வரர் காலில் -அடங்கப் பெற்றதால் உத்தமன் -திருவடி சேர்த்து மத்யமன் –
ஆசார்யர் -திருவடி வையாமல் அன்றோ நாம் கைங்கர்யங்கள் செய்ய முடியாமல் -அந்தராத்யாமா உடன் ஒக்கும்

பேர் -அம்மா என்னுமா போலே –
சித்தி -அஹங்காரம் -துரபிமானம் -அகலப் பண்ணும் —அவன் பண்ணும் சித்தி தான் சுத்து –
தானும் தன்னை விட்டு பிறரும் கை விட்டு எம்பெருமான் கைக் கொள்ள அர்ஹனாவான்-
புண்டரீகாஷன் -திருக்கண் நோக்காலே சுத்தி –த்வயம் உத்தர வாக்கியம் சொல்லி சுத்தி பண்ணனும் –
தங்கம் ஜலத்தால் -வெள்ளி திருதீயம் மூணாவது போட்டு -சுத்தி -பித்தளை
புளியால் -மரத்துக்கு மஞ்சளால் மண் பாத்ரம் புதிதாகவே -ஊறுகாய் -இரவில் தொட மாட்டார்கள் –
எவர்சில்வர் கூடவே கூடாது –
பேர் -பெரிய -திரு நாமம் பெரியது எம்பெருமானை விட -பேய் ஆழ்வார் -மஹத்-மஹதாவ்யஹ -மகான் என்று அழைக்கப் படுகிறவர் -பட்டர் –
பெரிய மழை பேய் மழை போலே
பாடி -அன்புடன் பாடி –
உத்தமன் பேர் பாடி -நாங்கள் நம் பாவைக்கு -பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாயாம்சம் அவனே -தாரகமும் திரு நாமம் சொல்வதே
நம் பாவை –அனுஷ்டானமும் அனநுஷ்டாமனும்-விகல்பிதமாக -சாதனம் என்று கொள்ளாமல் பிராப்ய ருசிக்காக செய்பவை –
அவனே உபாயம் என்ற போதுஅனுஷ்டிக்கா விடிலும் பலன் கிட்டும் –
பொறி வண்டு -ரசாயன சேவை பண்ணுவாரை போலே இளகிப் பறித்து -உள்ளது எல்லாம் உத்தேச்யம்-

உத்தமன் -நீ பண்ணின ஓரம் பஷபாதம் -பிரமாணித்தார் பெற்ற பேறு ஆஸ்ரித்தார் விஸ்வசிக்க –கரு மாணியாய் உலகு அளந்தாய் –
தார்மிகன் -துர்பலனான கோவிந்த நாம கீர்த்தனம் -கோவிந்த புண்டரீகாஷன் -த்ரௌபதி -பிரபலனை அண்டை கொண்டு நிர்பரனாய் –
வியாசர் -அர்ஜுனனும் விச்வசித்து -துப்புடையாரை -அடைவது சோர்வுக்கு துணை -ஆனைக்கு நீ அருள் செய்தது போலே அரியது எளிதாகும் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரை மால் யானை -ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் —
கழுத்திலே ஓலை கட்டி தூது போயும் மார்பிலே அம்பு ஏற்றி சாரத்தியம் பகலை இரவாக்கி சத்தியமும் செய்தும் அசத்தியம் ஆயுதம் எடுத்தும்
பொய் சொல்லியும் மெய் சொல்லியும் வார் கொத்து -எல்லை நடந்தும் -கார்யமே நிர்வாகியா நிற்கும்
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரை போலே கரை காணும் காலத்தை எண்ணி இருப்பார் -உத்தமர் பேர் பாடி நன்மை –
மந்திரத்தால் –திருவிக்கிரம -ஓங்கி -உத்தமன் -வாசகம் பேர் -மந்த்ரம் சொல்லி அர்த்தம் சொல்வது -நாரணன் திண் கழல் சேர் எண் பெறுக்கு அந்நலம்
ஈறில வண் புகழ் -நாராயணன் நங்கள் பிரான் பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் –

———————————————————————

நான் கண்ட நல்லதுவே –உபக்ரமித்து -மதியத்தில் ஸ்ரீ வானமா மலை பதிகத்திலும் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எம்மான் -உபஸம்ஹாரம் –
பன்றியாய் பாழியான்—திருமங்கை ஆழ்வாரும் உபக்ரமித்து -மேலே திருவிடவெந்தை பதிகம் முழுவதும்
பட்டர் இத்தை கொண்டே ஸ்ரீ வராஹாவதார மகிமை அருளினார்

———————————————-

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்

வெண்ணெய் கடையும் பொழுது பார்க்க வில்லையே / கடை வெண்ணெய் களவு -கடைகின்ற காலத்திலேயே வெண்ணெய் ஆனந்தம்
கும் கும் இதி கிம் ப்ரமதி–அம்பா ததி மத்ய
டிம்பா நஙு பூதம் இஹ தூரம்
அம்பா நவ நீதம் இதி -கிருஷ்ண
மந்த ஹஸிதம் மாதரம்-தொல்லை இன்பத்து இறுதி –
மிடறு மழு மழுத்தோட -கையிலும் வாயிலும் வைத்து ஒட வெண்ணெய் ஓன்று மட்டுமே
இப்படி ஸ்ருஷ்டித்த பின்பே அவதரித்தான் –
தேன் குழல் நாழியில் மாவை அடைப்பது போலே வெண்ணெய் வாயில் வைத்துக் கொண்டு போடலாமே

————————————————————-

அண்ணல் அண்ணன் –திருவேங்கடம் / அண்ணன் கோயில் / திரு விண்ணகர் மேயவனே -இராமானுஜர் -நால்வரும் –
உபாயம் உபேயம் -இடர் நீக்கி கைங்கர்யம் -இரண்டுக்கும் இரண்டு சப்த பிரயோகங்கள்

குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
வெண்ணெயும் மெத்தத் திருவயிறாற விழுங்கிய அத்தன்
பாலும் தயிரும் விழுங்கிய அப்பன்
கோபால கோளரி அத்தன்
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல்
புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணல்
அம்மா-அப்பா -அத்தா – உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
ஆழி மழைக்கு அண்ணா / பூவைப் பூ அண்ணா /
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
வித்துவக்கோட்டு அம்மா -வித்துவக்கோட்டு அம்மானே
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராயே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான்
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
ஆதியை அமுதை என்னை யாளுடை அப்பனை
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
அலை கடல் துயின்ற அம்மானை
திரு வெள்ளத்துக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றனர் பிறர் என்னை
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நறையூர் நம்பீ
கண் துயிலும் தண் சேறை எம்மான் தன்னை
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
அண்டத்துப் புறத்து உய்த்திடும் ஐயனை
அரியைப் பரி கீறிய அப்பனை
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பில்லா என்னப்பா என்கின்றாளால்
ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அணியுருவில் திருமாலை அம்மானை அமுதத்தை
வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேன்
அத்த எம்பெருமான் –அஞ்சினோம் தடம் பொங்கத் தம்பொங்கோ
மா மழை அன்று காத்த அம்மான்
ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக் கேணியான்
என்றும் இறவாத வெந்தை இணை யடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய்
பொங்கி அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே
வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த அம்மானை ஏத்தாது அயர்த்து
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை அம்மான்
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா
பொழில் ஏழும் உண்ட எந்தாய்
ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தன்னை
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யான் உன்னை அங்கு வந்து அணுகிற்பனே
உலகம் எல்லாம் தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அநந்தனை
அரவம் ஏறி அலை கடல் அரும் துயில் கொண்ட அண்ணலை
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார்
தூவி யம் புள்ளுடையான் அடலாழி யம்மான் தன்னை
ஆற்ற நல் வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
அப்பனே அடலாழி யானே
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
அலை கடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான் தன்னை
நிலம் கீண்ட அம்மானே
கை தவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்டு அழு கூத்த வப்பன் தன்னை
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
என் வாய் முதல் அப்பனை என்று
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் யமர்ந்து உறையும்
யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே
பெரிய வப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன்
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கருள் அருளும் அம்மானை
தேனை நன்பாலைக் கன்னளை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
அல்லி யம் தண்ணம் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக் கடித் தானமே
வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மானே
கூத்தவம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மதுஸூத வம்மான்
ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான்
திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே
அரியாய அம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே
ஈன் தண் துழாயின் அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நிச்சயித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிதுடையன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
என் மாய வாக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்
என் கொல் அம்மான் திருவருள்கள்
அலி வண்ணன் என்னம்மான்
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ் புகழ் நாரணன்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர்
உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர்
ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

சாமான்யேன ஜகத்தை யுண்டும்- பிரதிகூலருடைய பிராணனையும் -அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் -பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலை யுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக் கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ள மாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்–
ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனை யுடைய பிராணனை யுண்டும்
இரண்டாலும் அபரியாப்தனாய்

வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி –
இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இறே அவளுக்கு ரஷிக்கையிலும் –
வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –

கண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடுஆற்றா மகன் —–
பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட்டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து–(8-3-5)-

நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்
நீர் மல்கப் பையவே நிலையும்–5-10–3

முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும் -7-8

வயிற்றினோடு ஆற்றா மகன் –
இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–பெரியாழ்வார் -2-3-8-

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

—————————————————————————-

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

அனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் –
பிரதிகூலையான பூதனையுடைய முலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் –
இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த
வெண்ணெயைக் களவிலே அமுது செய்ய –

பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி
பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ்வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்
சர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்

வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –

————————————————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

பதவுரை

என் நெஞ்சே–எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத–(கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப் பிறக்கத் தகாத (ஸர்வ லோக பிதாவான)
மா மேனி–சிறந்த திருமேனியை யுடைய
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
மகன் ஆமவன்–(வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன்–தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை–இஷ்ட குமாரனான அநிருத்தாழ்வானை
சிறை செய்த–சிறையிலே வைத்த
வாணன்–பாணாஸுரனுடைய
தோள்–தோள்களாயிரத்தையும
செற்றான்–அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே–திருவடிகளையே
நிறை செய்து–பூர்த்தியாக
நினை–சிந்தை செய்வாயாக

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–
பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு
அலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் —
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹம் ஜனிப்பது

மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—
புத்ரனைக் காட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இறே —
ஸ்நிக்தனுமாய் பவ்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்
பாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை –
நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –

நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண தோள் கொண்ட வன்றே –7-4-8-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

——————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

கர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே –
(அகில காரணன் நிஷ் காரணன் அத்புத காரணன் இவன் ஒருவனே )சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்
அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் –
அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு
ஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனுக்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்
இருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும்-
அதுக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும் அறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை –
எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–

———————————————————————————————————————–

(யுகங்கள் தோறும் ஆழ்வார்கள் அவதாரம் உண்டே
அவன் இவர்கள் நாவில் புகுந்து தன்னைப் பாடுவித்துக் கொள்கிறான்
அருளிச் செயல்களைக் கண்ட ரிஷிகள் முனிகள்
விளக்கு ஏற்றி -ப்ரகாசப்படுத்திக் காட்டி அருளுகிறார்)

(தாரக போஷக போக்யமாக –உபாய உபேயமாக அவனை பூர்ணமாக நினைக்க வேண்டுமே -)

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–93-

பதவுரை

நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்ட திருமால் –அப்ரமேயமான பெருமை பொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர் பிள்ளை ஆய் –ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்-உள்ளத்தே வைத்தால் உஜ்ஜீவனம் அடையலாம் என்றுமாம் –
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப் பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவு பெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

(த்வன் நிர்மிதா -உனது சொத்து -இரந்தா கொள்ள வேண்டும் -அதிமானுஷ ஸ்தவம்
ஆழ்வார்கள் இவற்றைப் பாட -அதனால் பக்தி வளர -நீ செய்த செயல்கள் அன்றோ)

நினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –

நீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்
லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து –
அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே

கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–
சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்

மெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–
வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக மெள்ளக் கண் வளர்ந்தவனை —

உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-
கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விலக்காது ஒழிகை –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-உண்டு அளந்தது ஆழ்வார்கள் பலரும் ஒரே பாசுரத்தில்

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளினை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

———————————————————————–

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

சர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -(நீண்ட -அபரிச்சேத்யன் என்றும் உலக அலங்க ஓங்கியதுமாம் )
இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே ஏக தேசத்திலே அடக்கி வைத்து
ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு
கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில்
அத்விதீயமான முக்த சிஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு
வயிற்றிலே புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை –

நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று
அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி

அன்றிக்கே
நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் –
லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்
அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –

——————————————————————————————————–

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

பதவுரை

உய்த்து உணர்வு என்னும்—சித்த உபாய -நிஷ்டை ஞானம்- உணர்வு-விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி-விஸ்வாசம் முதலில் வேண்டுமே -இந்த விளக்கை ஏற்றிய பின்பு பேறு
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.

உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–
உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் (எண்ணெய் தீ இத்யாதிகளால் )யுண்டான அழுக்கு இன்றிக்கே-
திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –

உய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் –
கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு

(கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு -அவன் வலை
அனுகூல்ய லேசம் -நம் வலை)

மெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–
விச்சேதம் இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் –

பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்

ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –

——————

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

ஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி
அவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து –
ஆனு கூல்யம் ஆகிற வலையிலே தப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் –

அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் –
புறம்பு போக்கு இல்லை என்று தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் –

பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்

பொன்றாமை என்று
ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –

(மாயனாக இருப்பதால் புகுந்து கிடந்தான் -புகுந்து கிடந்ததால் மாயனானான் என்றுமாம்)

————————————————————————————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக் கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயார வாழ்த்து

(திருமால் திருவடியே-சேஷி ப்ராப்யம் -அறிந்து வணங்கி வாழ்த்த வேண்டுமே)

(சிந்தையினால் இகழ்ந்த -ஹிரண்யன் அன்றோ)

சந்த்யா புகுந்தது என்றும்
அரியுருவாய் சந்த்யா காலத்தில் புகுந்தான் என்றுமாம்

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —
ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த்யையிலே

புகுந்து இலங்கும் என்றது –
ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –

அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-
ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது என்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –

திருமால் திருவடியே–
ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –

திருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——
வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –

——————————————————————

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

வந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் –
அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான சந்த்யா சமயத்திலே –
அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு
நிர் நிபனந்தனமாகத் தன்னையும் ப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த
அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால் வளர்ந்த சரீரத்தை –
சீற்றத்தின் மிகுதியால் –
சின்னம் பின்னம் -என்கிறபடியே
பல கூறாக வகிர்ந்து
சர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை

என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு –

அந்தித்துப் பொழுதத்து இலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் –
சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –

திருமால் என்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –

(அந்தியம் பொழுது அரியுருவாகி அரியை அழித்தவன் அன்றோ)

(உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-)

———————————————————————————————————-

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை  மணாளன்
அடித் தாமரை யாமலர் ———-96-

பதவுரை

கேழ்த்த அடி–பெருத்த தாளை யுடைய-அழகிய சிவந்த என்றுமாம்
தாமரை மலர் மேல்–தாமரைப் பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்து கின்றவராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத் திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.

கேழ்ந்த-அடி–பெருத்த தாளை யுடைய

தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்-அடித் தாமரை யாமலர் —
திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்

அழகிய சிவந்த திருக்கைகளால் =கூசிப் பரிமாற வேண்டும் படியான ஸ்ரீ யபதியின் திருவடிகள்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே —
வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின கிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –

வயிறு பிடிக்கிறார்

————————

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

பெருத்த தாளை யுடைய
தாமரைப் பூவின் மேல் வர்த்திக்கிற நித்ய யவ்வன பிராட்டியாருக்கு போக்தவாய்
அவளும் கூசிப் பரிமாற வேண்டும்படி மிருதுவான திருவடிகள்
ஏத்து கையே தொழிலாகக் கொண்ட நித்ய ஸூரிகள்
வணங்க
ரத்ன பிரசுருமான திரு அபிஷேகம் பொருந்திய திருமுடியின் ஸ்பர்சம் பொறாமல் சிவக்க

வானோர் ப்ரஹ்மாதிகள் என்றுமாம்

கேழ் பெருமைக்கும் நிறத்துக்கும் கொள்ளலாம்

—————————————————————————————————————–

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப் பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப் போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சி மலர் போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத் தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் —
அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்
எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்

அலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான்   ஆமோ இமை –
இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ –

இமை -விசாரி –
சற்றுப் போது என்றுமாம்

——————————————————————-

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

சகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் –
அழகை யுடைத்தான பூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய
ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில் பூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன்
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா -தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று
பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ

இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் –
சற்றுப் போது என்றுமாம்

அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு –
அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –

——————————————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

(பூதனை தொடக்கமாக கேசி பர்யந்தம் -விரோதி நிரஸனம்
இவன் வடிவம் கண்டு -ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று -நாரதர் பயந்தாரே
பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்-மூன்று ஹிமாலயம் -ஆகாசம் -காற்று -மூன்று த்ருஷ்டாந்தங்கள்
இவற்றைக் கீழே தள்ளி -குதிரை -அதிசய யுக்தி -பொங்கும் பரிவால் இப்படிச் சொன்னவாறு
பகவானின் ஸ்வ பாவ யுக்தி –ஸர்வ வியாபகன் நம்மை ரக்ஷிக்கவே கண்ணனாய் திருவவதரித்தவன் என்றவாறும்-தொட்டாலே நிரஸனம் -)

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ் சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

பதவுரை

இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து-இவை கண்ணனைச் சொல்லி -அப்படி விபுவானவன் என்றுமாம்
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசி யென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக் கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்

(நரகம் ஸம்ஸாரம் என்றுமாம் -நம் அம் சூழ் -நம்மால் அழகாக சூழ்ந்த நரகம் என்றுமாம்)

அமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –
துரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்-அமஞ் சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–
ஹிமவானிலும் வாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற
துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்

நமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-
கேசியை ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்தவன்
நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –

————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

பனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் –
சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் –
சகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக்
கண் காண வந்து அவதரித்து –
ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
மிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் –
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் –
கேசியாகிற குதிரையைப் பிடித்து வாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் –

அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி காப்பான் என்னவுமாம் –

அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –

எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே.–பல பிறப்பாய் ஒளி விஞ்சி 
—————————————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

(சக்கரத்தான்–ஆபத்து போக்கி அருள
தாள் முதலே -ஸம்பத்து அருள-தாள் முதலே-வேறே ஒன்றை எதிர்பார்க்காமல் -சஹாயாந்தர அஸஹத்வம் –
நங்கட்குச் -அவனே உபாயம் உபேயம் என்று ஸ்வரூபம் உணர்ந்த நமக்கு
சார்வு–ஸூபஸாஸ்ரயம் -பாராயணம்
திண்ணிய கழல் -அவனும் அவளும் விட்டாலும் விடாமல் கைக் கொள்ளும் கழல்கள் –ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள்)

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந் நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத–அபராஜிதா -தேசத்துக்கே பெயர் உண்டே
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியை யுடைய பெருமானது
தாள் முதலே–பாத மூலமே-ஏவ காரம் -வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத உபாயம் உபேயம் -திண் கழல் சேரே
நங்கட்கு–ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே என்று ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்த -எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்-அபாஸ்ரயம் ப்ராப்யமும் பிராப்பகமும்

(சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-)

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–ஸ்தோத்ர ரத்னம் -22- -ஆளவந்தார்)

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான்  அந்நான்று–
ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால்
அவ்வாயுதத்தால் எதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய்
திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –

குட்டத்துக்-கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்னும் படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –

(ஸூ ப்ரவ்ருத்தி ஸூ ப்ரயோஜன நிவ்ருத்தி இல்லாமல்)

(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளே சரணம்
முதலே -நிரபேஷ உபாயம் -உபேயமுமாம்)

(செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-3-)

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-

——————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து –
வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய் –
இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே –
திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –

ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத் தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான
முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –
அவ் வாபத்திலும் (ஸூ ரக்ஷண ஸ்வாந்வயம் ஆபத்து போனதே )கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை யுடையவனுடைய பாத மூலமே
ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் –

அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே
சஹாயாந்தர நிரபேஷமான உபாயம் என்னவுமாம் -(ஸஹாய அஸஹத்வம் உண்டே அவனுக்கு )

(மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-)

————————————————————————————————————

எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

(திருவில் உபக்ரமித்து திருவிலே உப ஸம்ஹாரம்
மிதுனமே உத்தேச்யம்
அவளுக்கு அவன் என்றும் சார்வு
நமக்கு இவளே என்றும் சார்வு)

(எம்பெருமானைப் பற்றுவது சார்வு-ஆழியான் -ரக்ஷிக்கவும் சிஷிக்கவும் எம்பெருமான்
பிராட்டியைப் பற்றுவது என்றுமே சார்வு
அபராதங்களைப் பார்க்காமல் -நித்ய அஞ்ஞான நிக்ரஹ –
ராவணனுக்கும் உபதேசம் -சரணம் என்று வாயாலே கூடச் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த பிராட்டி
ரமஸ்ய கோஷ்ட்டியை லகுவாக்கிய பெருமை உண்டே)

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத் துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலை போன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப் படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே-மின்னல் நிலைத்து இருக்காதே -நித்ய அநபாயினி ஆகவே ஆர்ந்த விசேஷணம்
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல் போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக் கண்களை யுடையளாய்-அஸி தேக்ஷிணை
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் —
ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –
ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –

ரக்ஷணத்துக்கு உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் –
போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான —
இதுக்கு உவமானம் மேலே –

காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு —
மேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-
ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற திருக் கண்களை யுடையாளாய் –
தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் –
பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

(அவனை அழகாலே திருத்தும் நம்மையோ அருளாலே திருத்தும் அஸி தேக்ஷிணை)

——————————————————————-

எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய்
போக உபகரணமாய்
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச்
செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த திரு மார்வை யுடையனான
தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி இருக்குமவளாய் –
மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே
கறுத்த திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற
அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய
வேறு புகல் இன்றியே இருக்கிற நமக்கு
ஆபத்து உள்ள போதோடு
இல்லாத போதோடு வாசியற
சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

(ஆழியான்-விரோதி நிரஸனம் –திருத் துழாய் போக்யம் ஸ்ரீ யபதித்தவம் –ஸர்வேஸ்வரத்வ மூன்று அடையாளங்களையும் பாசுரம் காட்டுமே)

(பத்ம பிரிய பத்மாலய பத்ம வாஸிநி பத்ம லோசநே)

——————-

பாலேய் தமிழர்” (1.5.11)
இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6)
“செந்தமிழ் பாடுவார்”
“பலரடியார் முன்பருளிய” (7.10.5)
“செஞ்சொற் கவிகாள்” (10.7.1) –

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த –
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்
பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.

முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.

————

திரு மயிலை கேஶவப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார்.
இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதிபர் ஆகியவை ஆகும்.

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆஸ்ரயே–இவரது தனியன்:

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவே யிடை கழியில் நின்ற செல்வன் வாழியே
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திரு மழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை யிப் பெரு நிலத்தில் வாழியே–இவரது வாழி திருநாமம்:

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-81-90—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

(கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்,
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்,-சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை,
என் நினைந்து போக்குவர் இப் போது.– இப்போது சம்சாரிகளைப் பார்த்து ஆழ்வார்கள்
நினைக்க விரகு கேட்டால் -ஆழ்வார்கள் மறக்க விரகு இல்லையே என்பார்களே-

மறக்கவே முடியாதே –மறக்க விரகு குருகை காவல் அப்பன் அருளிய வார்த்தை –

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –-இது அன்றோ எத்திறம் என்னப் பண்ணும் )

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு –—–81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,-எனக்கு வசப்பட்ட நெஞ்சமே
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப் பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப் பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

நெஞ்சால் நினைப்பரியனேலும் —
நெஞ்சமே உன்னால் நினைக்கப் போகாதது ஆகிலும் –

நிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–
நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –

நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு விட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே

(நாக்குண்டா நா எழா-நெஞ்சுக்கு நாக்கு உண்டோ இருந்தால் பேசாமல் இருப்பதோ)

என் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–
அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —

(கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.-1-10-)
(எண்ணிலும்-நினைக்க -என்பது அல்ல ஓன்று இரண்டு என்று எண்ணி 26 சொல்லவே வருவான் அன்றோ
பேர் உந்தி எண் 26 வந்ததா சொன்னாலும் வந்து நிற்கும் பித்தன் அன்றோ)
சந்த மேதம் பவதி -அஸன்ன- அவன் உண்டு என்று அறிந்தால் உளன் ஆவான் -இல்லை என்றால் இவனும் இல்லை யாவான்
பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு —(முதல் திருவந்தாதி-67- ஞானம் த்வாரமே மனஸ் நெஞ்சு தானே -)

—————————————————————————-

(சம்சாரிகள் நெஞ்சு போலே அந்ய பரராய் இருக்கச் செய்தே
என் நெஞ்சு ப்ரவணராய் என்று கீழ் கொண்டாடினவாறே
விஷய வை லக்ஷண்யம் பார்த்த வாறே இதில் முதல் அடி இட்டதாகவே இல்லை
அவன் துர் ஜேயம் -என்றாவது அநு சந்திக்கப் பார்(அறிவுக்கு அப்பால் பட்டவன் என்றாவது புலம்பி அனுசந்திக்கலாமே )

(மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2– -கட்டுப்படாதவன்-அளவிட முடியாதவன்
திரு உள்ளத்தில் -இப்படி இருக்க நினையாமல் இருப்பது என் என்று தனக்கே அனுசந்தானம்)

பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத
பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்
அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
ஆஸ்ரித ஸூலபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று
எனக்கு பவ்யமான நெஞ்சே –
அவனைப் பேசப் பாராய் –

இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று (ஈடுபடாமல் )இருந்தவாறே-
தனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே நித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை
அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ

வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ –
சப்தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ

இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று
ஸ்வ கதமாக அனுசந்தித்தார் யாய்த்து –

(துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

தான் ஏற நாள் பார்த்து இருக்கும் )

————————————————————————————————————–

(மனசை நொந்து கொள்வது எதனால்
நித்ய ஸூரிகளும் அன்றோ முழுவதுமாக உணர முடியாமல் உள்ளார்கள்
நினைக்காமல் விடவும் முடியாது
அவனே உள்ளே வந்து புகுந்தாலும் வஸ்து ஸ்வ பாவம் அறிவுக்கு அப்பால் பட்டே இருக்குமே
நினைந்து முழுவதும் அறிய முடியாது என்கிறார்)

(இனியவன்-அடுத்த பாசுரத்தில் மூன்று தடவை இப்பத பிரயோகம் உண்டே
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனைக் கிட்ட விரகு உண்டோ
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனை விடவும் விரகு உண்டோ)

(நம சகண்ட-அகண்ட – -பிரித்து எனக்கு நான் அல்லன் -நமஸ்காரம் போல் இங்கும்-இனியவன்-இனி யவன்)

இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன்
உள்ளம் புகுந்து புணரிலும்–(அவன் தானே)நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்-வஸ்து ஸ்வ பாவம் தன்மையே அறிவுக்கு அரியனாய் இருக்கை அன்றோ
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்து கிட்டி (மதுவைப் பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப் பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப் பெருமானை-இது அன்றோ அசாதாரண சிஹ்னம் ஸர்வேஸ்வரனுக்கு
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

உணரில் உணர்வரியன் —
தன்னாலும் அறியப் போகாது –
இவனால் அறியப் போகாது –
தனக்கும் தன் தன்மை அறிவரியானை-(8-4-6)
ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது

உள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை –
தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது

இணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —
காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது –
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின
வண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டிக் காண்போம் இனி –

எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-

(இவ்வளவு பெருமை உள்ளவர் வந்தார் என்று மயங்கவே முடியும்
பிரசாத பரமவ் நாத மம கேஹம் உபாகதவ்- என்று மயங்கலாம்-எத்திறம் -என்னப் பண்ணுமே
விதுரர் மயங்கி வாழைப்பழம் தோல் கொடுத்தது போல் )

————————————————————————–

இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

யாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்
இவ் வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று
பரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் –

இது பரமார்த்தம் -இப் படியான பின்பு
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி
அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி
அதுக்கு போக்கு விட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டுக் காணக் கடவோம்

காண்பரியன் உண்மை -என்றான போது
ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான
வைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது –

இணர் -பூங்கொத்து-

(திருத்துழாய் அணிந்ததால் கோமான் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் -அவனுக்கே அசாதாரணம் என்றவாறு)

——————————————————————————————————–

(மூன்று இனியவன் -இனி அவன் இதில்
கிடைத்தவனை அனுபவிக்கலாம்
முழுவதும் அறிய வேண்டியது இல்லையே
விட்டுடவும் முடியாது
உன்னால் கிட்டு ஆரம்பிக்கவும் முடியாது
அவனே வந்த மஹா பாக்யம் கிட்டிய பின் அனுபவிப்பதில் என்ன குறை)

(மகா பலி போல் ஈஸ்வரோஹம் என்று இருந்தாலும் நாம் அறியாத படி உளன்
அவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தவன் அன்று
இனி உள்ளத்தில் இருக்க அனுபவிக்கலாம்
ஸம்பந்தம் -பந்தம் கிட்டும் -பிரகிருதி போல் -தேஹ சம்பந்தம்
அவன் ஸம்பந்தம் உணர்ந்து இனிமையில் மூழ்கலாமே)

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்த ஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘-ஆச்சர்ய பூதன்
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமி தானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்-பை -பரந்த
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரம லாபமே போது மென்கை)

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்–
வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து
மம மாயா துரத்யயா–(7-14)என்னும் படி காண அரியன் ஆகிலும்(பகவத் ஸ்வரூப திரோதானம் தானே பிரகிருதி )

இனியவன் காண்பரியனேலும் -இனியவன்-கள்ளத்தால் மண் கொண்டு
விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின் உள்ளே உளன் —
நெஞ்சுக்கு இனியனுமாய்த்
தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே வஞ்சித்தானாய்க் கொண்டு
அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

——————————————————————

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

பகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய் கரையர் ஆனவர்கள்
இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும் அறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் –
இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு அரியனாய் இருந்தானே யாகிலும் –
ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே
மஹா பலி பக்கலிலே பூமியை நீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு
ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அவன் –

இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி சந்நிஹிதனாய் இரா நின்றான் –
இவ்வம்சத்தை (இந்த அம்சத்தை )ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இறே -என்கை –

(பொருந்தாதவற்றைப் பொருந்த விடும் -அழகியான தானே அரி யுருவம் தானே )

(வாய் கரையர் ஆனவர்கள்-கடலை கடல் கரையில் நின்று பார்ப்பது போல் -பரத்வம் மட்டும் காணும் ரிஷிகள்
ஸுலப்யம் காணும் ஆழ்வார்கள் தானே ஆழ்ந்து கண்டு அனுபவித்து
அது வழிந்து அருளிச் செயல்கள் அருளினார்கள்
அந்த ஸுலப்யம் பயன் படுத்த நாம் அறிய வேண்டுமே)

இனி -என்று -இப்போது -என்றபடி –
அன்றிக்கே
இனியவன் என்று ஒரே சொல்லாய்
அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –

மாயன் -என்றது
மம மாயா துரத்யயா -என்கிறபடியே
தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு காண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் –

பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –

(விரிந்து பரந்த திருவடிகள் கீழே பார்த்தோம்)

(அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-)

———————————————————————————————————–

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்ய பூதனாக
உளனாமவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப் பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.-நா படைத்த பயன் பெற்று சத்தை பெறுவார்கள்

உளனாய நான் மறையினுள் பொருளை —
நிர் தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் –
வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை(உளன் -வஸ்து ஸத் பாவம் )

உள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்

உளனாய-வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே கண்டார் கவி ———–
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று
ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய சர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் –

(ஏக தேசம் கண்ணின் அழகையே அறியாமல் இருக்க ஸ்வரூப ரூப குண விபூதியை முழுவதுமாக அறிந்து இருப்பார் யாரும் இல்லை)

உகப்பார் கவி –
பின்னைக் காணும் படி எங்கனே என்னில்
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –

—————————————————————————

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

ருக்காதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே
உபநிஷத் பாக ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு
உளனாய் இருக்கிறவனை –

கர்ம யோக ஸித்தமான ஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து
ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்

(காண ஆசைப்படுவபவர்கள் பெரியவாச்சான்பிள்ளை -இங்கு அறிந்தவர்களே ஆகிலும்)

யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே
அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய
ஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்

கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்
கவியை உகந்தார்கள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –

(பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்று சொல்லும் படி அன்றோ)

—————————————————————————————————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில் –
வாழ்த்துவர் பலராக என்னும் படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும்
அறியவும்
ஏத்தவும் போமோ -என்னில்
ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

(யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-)

(குண ஏக தேசம் கூட ப்ரஹ்மாதிகளுமே ஒரு முகமாக பேசினாலும் சொல்லவே முடியாதே -ஸ்ரீ வராஹ புராணம்)

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

பதவுரை

கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலி பண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சேரப் பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

கவியினார் கை புனைந்து-
ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –

கண்ணார் கழல் போய்ச்-
கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –

செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–
செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –

போற்றி யுரைக்கப் பொலியுமே —–
எல்லாரும் கூடிப் போற்றி உரையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –

பின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–
நப் பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த
ஒரு செயலையும்
நடுவு அழகையும்
முடிவாகச் சொல்லப் போமோ –

——————————————————————-

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

நப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு
தத் சம்ஸ்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து
பொகட்டவனுடைய மணக் கோலமும் –
ஏறு தழுவின ஒரு செயலும்
வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –
கையாலே அஞ்சலியைப் பண்ணி –
கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி -(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் விடாத்திய திண்மை )
செவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு
கிட்டினாரான பூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி
அவர்கள் புகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச்
சிறிது வரையிட்டுக் காட்டுமோ-
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –

—————————————————————————————————————–

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

(மேகத்தை சிக்ஷித்து-எழில் கொண்ட ஒவ்வொன்றிலும் அன்வயம் -நீல தோயதா மத்யஸ்தா -இத்யாதி போல்)

கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார் வானம் காட்டும் கலந்து ——-86-

பதவுரை

எழில் கொண்ட–அழகை யுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப் பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப் பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக் கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திரு நிறத்தை அநுகரித்திரா நின்றது.

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து —
எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து

(மின்னலைத் தன்னுள் கொண்டு என்றும் கொடியாகக் கொண்டு என்றும்)

வேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்

எழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் கார்வானம் காட்டும் கலந்து —–
ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்
உடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –

——————————————————————————

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

(கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரை கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாம் காள் !
காட்டேன் மின் நும்  உரு என்  உயிர்க்கு  அது காலனே –9-5-7-ஸ்மாரக பதார்த்தம்)

அழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து
வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்
மிகவும் கோஷித்துக் கொண்டு தோற்றுகிற கார் காலத்திலே மேகமானது
கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய
நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –

(உடுத்து -தரித்து என்றும் பாட பேதம்)

——————————————————————————————————

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனி மலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின் வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

பதவுரை

மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடு கூடி
இமைக்கும்–விளங்கா நின்ற
கண்ணா–கண்ண பிரானே!
மரதகம்–மரதக ரத்னமானது
மலர்ந்து–ஒளிப் பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திரா நின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப் பெற்ற
தண் துழாய்–திருத் துழாய் மாலை யணிந்த
கோமானை–ஸர்வேஸ்வரனாகிய உன்னை
அந்தி வான் அது காட்டும்–ஸந்தியா காலத்து ஆகாசமானது ஒத்திரா நின்றது.

கலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனி மலர்ந்து மரகதமே காட்டும் —
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –

நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை-அந்தி வான் காட்டுமது —
அழகு நிகழா நின்ற கொத்திலே வண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய
சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது –

————————————————————————-

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

ஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான மரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு
ஸ்பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது

அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான
உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது

திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் என்றபடி –

அது போல் காட்டும் என்னவுமாம் –

—————————————————————————————————————

உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

பதவுரை

அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன் நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வ ஜந ஸாதாரணமான
பொன் அம் கழலே–விரும்பத் தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸமஸ்த பாபங்களும்
முடிந்து–உரு மாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே–
பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே

மது நின்ற தண்  துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் –
சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

முழு வினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——
நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –

——————————————————————————-

இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

சாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது –
ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும்
இவ் வர்த்தத்தில் சம்சயப்படாதே —

ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான
திரு மார்வை யுடையவனுடைய
சர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்

ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து
தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –

(தேவா நாம்-தானவானாம் -ஜிதந்தா ஸ்தோத்ரம்)

(பகவத் விஷயம் தான் நன்று உலக விஷயம் தீது என்று இருப்பதில் ஐயம் இல்லாமல் உறுதியாக விச்வாஸம் கொள்ள வேண்டும் என்கிறார் -)

(சர்வ லோக சரண்யாயா ராகவாயா மஹாத்மனே -எளிமை மேன்மை சேர்ந்த-ராவணனும் பற்றும்படி
பொது நின்ற பொன் அம் கழல்
சாமான்யம் அதி தெய்வதம்
உறுதியாக பற்ற வேண்டுமே)

—————————————————————————————————

திருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

(ப்ரத்யக்ஷ தெய்வம் திருமலை அப்பன் இருக்க விஸ்வஸிக்க குறை இல்லையே)

(ஆச்சார்யர்கள் திருக் கோயில் பிரதக்ஷணம் மெள்ள மெள்ள அனைத்தையும் அனுபவித்து செல்வார்களே)

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பதவுரை

முடிந்த பொழுதில் குற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப் பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி) படிந்து உழுத சால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினை விதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப் போட்ட பின்பும்
எழுந்த–(நில வளத்தினால்) ஓங்கி வளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலே சென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப் பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒரு நாள்–முன்பொரு நாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப் பவளத்தில் வைத்து ஊதின கண்ண பிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

முடிந்த பொழுதில் குறவாணர் —
சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் -(சாயம் காலம் என்றுமாம்)

ஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த –
தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த

தடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே –
தினை விரைக்காக வெட்டி எழுந்த வேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை

மேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———
பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்
உள்ளாரை வசீகரித்தால் போலே
ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –

(ஒரு சிலரை ஒரு காலே ஊதி வசீகரித்தவன் இன்று சர்வர்களையும் ஸதா காலமும் நின்ற நிலையிலே வசீகரிக்கிறான் அன்றோ)

———————————————————————

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

அப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி
சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள்
தங்கள் ஏர் பிடித்து உழ மாட்டாமையாலும்
ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும்
வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே –

உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினைகளை விதைக்க
பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்
வெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே
பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை — சிலம்பு -மலை –

அன்றிக்கே
அந்தி விட்டவாறே
குறவர்கள் ஏனம் படிந்து –
குறவர்களும் மூங்கில்களும் திருவேங்கடசமுடையானும் உத்தேச்யம் என்றவாறு

ஸ்வாபதேசம்
குற வாணர்கள் -சரம பர்வ நிஷ்டையில் உள்ளவர்களைச் சொன்னவாறு -பயம் நீங்கி -நாமாக உழுது பயிர் செய்யாமல்
இருக்கும் நாள் கைங்கர்யம்
வராஹ பெருமாள் காட்டிய வழியிலே சொல்லுபவர்கள்
ஈனச் சொல்லா -ஞானப்பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே
ஸூவ ப்ரயோஜன ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
மூங்கில் வெட்டி -அஹங்காரங்கள் மமகாரங்கள் போக்கி
பின் வளர்ந்தது –
ப்ராப்யமாக வளர்ந்து யாவதாத்மா பாவியாய்
பரார்த்த கைங்கர்யம் அங்கும் உண்டே
அதுவே விண் முட்ட வளர்ந்தது என்கிறார் –

—————————————————————————————————————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில்
அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத் தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
சேவடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்ட பித்தி யளவும் நீண்டு போன போது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத் தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போர வில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்து கொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார் அலம்பிய சேவடி போய் அண்டம் –
சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப

புலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த  மண் ——
சங்கைஸ் ஸூ ராணாம் என்ற தேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள்
எட்டுத் திக்கும் சூழ இடம் போராது
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————————

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

திருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று த்வனிக்க –
ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட
சிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க –
சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த திருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க –
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் அளந்த பூமியானது
அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –

———————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –