திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்
விபவ சம்வச்தரம்
தை மாசம்
கிருஷ்ண பஷம் தசமி
குரு வாரம்
மக நஷத்ரம் துலா லக்னம்
பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்
கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்
வளர்த்தவர் ஹரி தாசர் -பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி
ஸ்ரீ ஸூதர்சன அம்ச பூதர்
ஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –
திரு ஆராதன பெருமாள் -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சிஷ்யர் கணி கண்டன் -த்ருட வ்ரதர்
ஆசார்யர் பேயாழ்வார்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை முதிர்ந்த திரு நக்ஷத்திரத்தில் அருளிய வியாக்யானம்
ஆகவே சுருக்கமாகவே உள்ளது
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அதனாலே ஒரு வியாக்யான உரை அருளிச் செய்துள்ளார்
பட்டர் பிரான் போல் இவரும் திருமழிசைப் பிரான் –
இருவரும் உபகாரகர்
பர தத்வ ஸ்தாபனம்
வாத சதஸ்ஸில் அவர் பரதத்வ ஸ்தாபனம்
அனுபவ பரமான பிரபந்தம் பெரியாழ்வாரது
உள்ளத்தில் அனுபவம் நெடும் காலம்
பரிவாஹ ரூபமாக இப் பிரபந்தம்
அந்தர்யாமித்வத்தில் நோக்கு இவருக்கு
அவர் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஆழங்கால் பட்டவர்
அவர் ஸ்ரீ பெரிய திருவடி அம்சம் -வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை விஷ்ணு சித்தன் விரித்தார்
இவர் ஸ்ரீ ஸூ தர்சன அம்சம்
விரோதிகளைத் தொலைக்க-தேவதாந்த்ர விஷயாந்தர சம்பந்தம் தொலைத்து ததீய பர்யந்தம்
உறையில் இடாதவர் –திரு நாமம் இவருக்கு -நாவு தான் இவருக்கு வாள் –
பிரமாணத்துக்கு விரோதிகளை நிரஸித்து அருளியவர் –
நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே -இரண்டையும் சேர்த்தது
முதல் ஆழ்வார்கள் திருமழிசைப்பிரான் அருளியவற்றை சேர்த்து நம்மாழ்வார்
நாலாம் திருவந்தாதி என்றும் சொல்வர்
நான்முகன் திருவந்தாதி திரு நாமமே பிரசித்தம்
அமலனாதி பிரான் -கண்ணி நுண் சிறுத்தாம்பு போல் பாசுர முதல் பதம் கொண்டே இதுவும்
மங்களாசாசன திவ்ய தேசங்கள்–18-
கோயில் –திருமலை- பெருமாள் கோயில் –
யத்தோதகாரி -திருக் குடைந்தை -திருப்பேர் –
அன்பில் -கபிஸ்தலம் -திரு ஊரகம்
திருப் பாடகம் -திருக் குறுங்குடி -திரு வல்லிக் கேணி
திருக் கோட்டியூர்- திரு எவ்வுள்ளூர்- திருத் த்வாரகை
திருக் கூடல் -திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்
பிராஞ்ஞன் என்னும் சத் ஸூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை
ஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்
க்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-
வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –
—————–
தனியன் –
மகாயாம் மகரே மாசி சக்ராம்சம் பார்க்க வோத்பவம்
மகீசார புராதீசம் பக்தி சாரம் அஹம் பஜே
பார்க்கவர் -ப்ராஹ்மண பிருகு குலம் அவதாரம்
இரண்டு குலம் இவருக்கும்
க்ஷத்ரியர் வைசியர் -ஒரு பிறவியில் இரண்டு குலம் –
ருக்மிணி பிராட்டிக்கு நப்பின்னைப்பிராட்டிக்கும் -மணவாளன்
திருவாளர் பங்கயச் செல்வி வளர்க்கப்பட்டு -பிரம்பு அறுத்து வாழும் குலம்
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே
முக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-
அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே
நன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே
நங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே
————————————————————————–
ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –
இவரே ஸ்ரீ வேத வியாச பட்டர் -ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரர்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை –
சர்வேஸ்வரனுடைய ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூக்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி –
மனசே –
(ஸ்ரீ பக்தி சாரர்) மஹீஷார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பரன் அடியே வாழ்த்து –
பத உரை
நாராயணன் படைத்தான் நான்முகனை — ஸ்ரீ மன் நாராயணன் நான்கு முகம் கொண்ட ப்ரஹ்மாவை ஸ்ருஷ்ட்டித்தான்
இப்போது இது சொல்கிறது காரண வஸ்துவை தியானிக்க வேண்டுமே -காரணந்து த்யேய
நான்முகனுக்கு-அந்த ப்ரஹ்மாவுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் -சாதன அனுஷ்டானத்தால் வந்த சீர்மை -சடைமுடி உண்டே -ருத்ரனார் பிறந்தார்
என்னும் சொல் -சீரார் மொழி–என்று இந்த கம்பீரமான அர்த்தத்தை சொல்லும் பெருமை மிக்க
கல்யாண குணங்களால் நிறைந்த இப் பிரபந்தம்
செப்பி வாழலாம் -சொல்லியே-அனுசந்தான மாத்ரத்தாலே – உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சமே
மொய்பூ மழிசைப் பரன் அடியே வாழ்த்து -பூக்கள் ஆர்த்த திரு மழிசைப்பிரான்
திருவடிகளையே வாழ்த்து -மங்களா சாசனம் பண்ணு
வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா (மஹா உபநிஷத் )-என்றும்
நாராயணா பரஞ்சோதி (தைத்ரியம் நாராயண ஸ்ரீ ஸூக்தம் )-என்றும் –
(பரஞ்சோதி பரமாத்மா பர ப்ரஹ்மம் பர தத்வம் அனைத்தும் நாராயணனே )
நாரயணே ப்ரலீயந்தே (ருக்வேதம் நாராயண உபநிஷத் )-என்றும்
ஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மா ச ச நாராயண பிரபு (பாரதம் அநு ஸ்ம்ருதி )-என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்தகரணீம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகம் -என்று தொடங்கி –
ஏக ஏவ ஜனார்த்தன (பிறப்பை அறுக்கும் -ஜனார்த்தன-வர்கலா திவ்ய தேசம் சேவை )-என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமாந் அச்யுத பிரபு (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-17)-என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என் நாபி பத்மாத் அபவன் மகாத்மா பிரஜாபதி (மஹா உபநிஷத் )-என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் ருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய (ருக்வேதம் நாராயண உபநிஷத் )-என்றும்
(சில கல்பங்களில் நாராயணன் இடம் நேராக ருத்ரன் பிறந்தான் என்றும்
வேறே கல்பங்களில் நான் முகன் மூலம் பிறந்ததாகவும் சொல்லும் )
யத் தத் பத்ம மபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே
ப்ரஹ்மணஸ் சாபிசம் பூதச் சிவ இத்ய வதார்யதாம் (சாம வேதம் சாந்தோக்யம் )-என்றும்
அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும் சொல்லப்படும்
வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்
யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ் பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் (96 )-என்று தலைக் கட்டி
நற் கிரிசை நாரணன் நீ-(96 )-என்று இறே அருளிச் செய்தது –
அத்தை ஆயிற்று-
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே
ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் –
கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்
மொழி செப்பி –
ஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை
அனுசந்தித்து
வாழலாம் –
உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சே –
மனசே நீ சஹ கரிக்க வேணும்
மொய் பூ மழிசைப் பரன் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார்
திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போத (12 ) -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ –
செறிந்த பூ –
அழகிய பூ –
பூ என்றும்
அழகு என்று கொண்டு
மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ –
திரு மழிசைக்கும் திரு வடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
இப்படி விலக்ஷணமான இவர் திருவடிகளையே மங்களா சாசனம் பண்ணு
அவர்
வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ
ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-
அவர்
ஈசருக்கும் நான்முகற்கும் தெய்வம் என்றும்
குண பரனே என்றும்
எம்பெருமானையே பரத்வம் ஸாதித்தார்
நீ
ஆழ்வாரையே பரத்வமாகப் புத்தி பண்ணு –
————————————————————————–
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யமுநா ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா
சேங்கணூர் -திரு வெள்ளியங்குடி அருகில் அவதாரம் -ஆவணி திருவோணம் –
பரம காருணிகர்
வியாக்கியான சக்ரவர்த்தி
அவதாரிகை –
முதல் ஆழ்வார்கள் (எங்கும் தீர்த்தகரராய் திரிந்து )
அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க
அதுக்குக் களை பிடுங்குகிறார் –
(இவர் -உறையில் இடாதவர் )
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு
ஈஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதித்து
அவர்களை அநீஸ்வரர் என்கிறார் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை –
அவதாரிகை
முதல் ஆழ்வார்கள் மூவரும் பகவத் நிருபாதிக கடாக்ஷ விசேஷ லப்தமான
பக்தி ரூபா பன்ன ஞானத்தால்
அவன் படிகளைக் கட்டடங்க -எல்லை இல்லா -ஸ்வரூபாதிகளைக் கண்டு அனுபவித்து
அவ் வனுபவ பரிவாஹ ரூபமான நடை விளங்கு தமிழாலே
ஸ்ரீ மானே நாராயணனே ஸர்வ ஸ்மாத் பரன் -அனுபாவ்யமான பர வஸ்துவாக என்று
நிஷ்கர்ஷித்தார்கள் முதல் மூன்று திருவந்தாதிகளாலே
நால்வரும் த்வாபர யுகத்தில் அவதாரம்
இவரும் அவர்களைப் போலவே
மயர்வற மதிநலம் குறைவற உடையவராய்
அவரது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப ஆஸ்ரிதங்களான குணங்களையும்
தத் உபய ப்ரகாசகமான திவ்ய விக்ரஹத்தையும்
தலை நீர்ப் பாட்டில் இவற்றை அனுபவிக்கக்கடவ திவ்ய மஹிஷிகளையும்
அச் சேர்த்தியிலே கிஞ்சித் கரிக்கும் ஸூரிகளையும்
நித்ய கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான பரம பதத்தையும்
லீலா விபூதி யோகத்தையும்
அவன் காட்டக் கண்டு -யதா வஸ்தாக சாஷாத்கரித்து –
மார்க்கண்டேயர் போல் சிர காலம் -இருந்தும் 4800-காலம் சென்றதும் அறியாமல்
நாட்டில் சேதனர்கள் ரஜஸ் தமஸ் ஸூக்களால் பிறந்த அந்யதா விபரீத ஞானத்தால்
ஷேத்ரஞ்ஞராக சம் பிரதிபன்னரான ப்ரஹ்மாதிகளை
வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் -போலி வாதங்களாலும்
ஈஸ்வராக உபபாதித்து
வைதிக மார்க்கம் -ஓடி அறுத்து -தப்பி
குத்ருஷ்ட்டி மார்க்கம் பூண் கட்டி
மந்த மதிகளான சேதனரை பிரமிப்பித்து
ஸம்ஸார பந்தகராய் போருகையாலே
சேதனர் பகவத் விமுகராய் அநர்த்தப்படுவதைக் கண்டு
பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத பரம கிருபையால்
நிர்தோஷ பிரமாணங்களாலும்
ஸம்யக் நியாயங்களாலும்
தேவதாந்த்ர பரத்வத்தை நிராகரித்து
ஸ்ரீ வைதிக மார்க்கத்தை-பகவத் பரத்வத்தை – ஸ்தாபித்து
சேதனரை பகவத் பரராம் படி உபதேசித்து திருத்தி அருளுகிறார்
—————-
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க
பிரதானர் ஆனார் போலே–
தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
அப்பிள்ளை உரை
அவதாரிகை
மஹா உபநிஷத் இத்யாதி பிரசித்தமான நாராயணனே
ப்ரஹ்மாதிகள் சகல ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் அடங்கலும் கார்ய கோடி கடிதர்
அப்ரதிஹதமாக வேதாந்த அர்த்தம் தடங்கல் இல்லாமல் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாமல் கொள்ளுங்கோள் என்று
பர உபதேச ப்ரவர்த்தகர் ஆகிறார்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1
பதவுரை
நாராயணன்–பரம புருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பிரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத் திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
ஸம்ஸாரம் வர்த்தகம் அவரது -அதனால் நான்முகன் முக்யர்
ஸம்ஸாரம் நிவர்த்தகம் இவரது -இதனால் இவர் முக்யர்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ் வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.
நான்முகனை நாராயணன் படைத்தான் –
சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உபகரணமாக
நாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்
(நான்கு வேதங்களை சொல்ல நான்கு முகங்கள்
இந்த்ரீய அதீன வியாபாரம் உடையவர் என்றவாறு
அங்கு சங்கல்ப ஏக தேசத்தால் அவன் ஸ்ருஷ்டிப்பான்
வியஷ்டி ஸ்ருஷ்ட்டி மாத்திரம் -அதுவும் இவன் அந்தராத்மாவாக இருப்பதால்
சமஷ்டி வியஷ்டி ஸ்ருஷ்ட்டி -அத்வாரக சத்வாரக ஸ்ருஷ்ட்டி என்றும்- சொல்வர்
நாராயணன் -அசாதாரண திரு நாமம்
அவனே சர்வ வியாபி
ஸர்வ நியாந்தா
மோக்ஷ ப்ராப்யன் )
(நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -என்று நாராயண உபநிஷத்திலும்
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே -என்று ஸூபால உபநிஷத்திலும்
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் -என்று நாராயண வல்லியிலும்
ப்ரஹ்மா தேவா நாம் பிரதமஸ் சம்ப பூவ -என்று முண்டக உபநிஷத்திலும்
யந் நாபி பத்மாத பவந் மஹாத்மா பிரஜாபதி -என்று மஹா உபநிஷத்தில்
ஸ பிரஜாபதி ரேக புஷ்கர பர்ணே சமபவத் –என்று ஸ்ருதி யாந்தரங்களிலும்
ஸூ பிரசித்தமான பிரமன் பிறப்பை அருளிச் செய்ததே )
நான்முகனும் தான் முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-
பின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –
(விரூ பாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்றும்
த்ர்யஷ ஸூல பாணி புருஷோ அஜாயதே -என்றும்
ஸம்வத்சரே குமாரோ அஜாயதே -என்றும்
நாராயநாத் ருத்ரோ ஜாயதே -என்றும்
லலாடாத் க்ரோதஜோ ருத்ர -என்றும்
நேராகவோ அந்தராத்மாவாகக் கொண்டோ கல்பாந்தரங்களில் ருத்ரன் பிறந்தத்தை சொல்லும் )
யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-
இப்படி துர்வகாஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-
சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்லிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு
இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்
ஆழ் பொருளை -என்று
அறிய முடியாத ஆழ்ந்த பொருள் என்றும்
ஆழ்ந்து நசிக்கிற பொருளை -என்றுமாம் –
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்
(அரும்பத விளக்கம்
சம்சாரத்தை உண்டாக்கிக்
தத் அநு குணமான ப்ரயோஜனங்களையும் கொடுத்து
ஸம்ஸாரத்தைப் ப்ரவர்த்திகையாலே பிரதானர் என்கிறது
பரத்வ நிர்ணயம் பண்ணி மோக்ஷ உபாயத்தை உபதேஸிக்கையாலே
நிவ்ருத்தி பிரதான என்கிறது
ப்ரஹ்மாதிகளைப் பரத்வ சங்கை பண்ணிப் பற்றுகை நசிக்கிற பொருள் )
அப்பிள்ளை உரை
ஏகோ ஹை நாராயண ஆஸீத்
கார்ய ரூபமான சகல பதார்த்தங்களும் நாம ரூப விபாக அநர்ஹமாம் படி
தன் பக்கலிலே லயித்து
காரண ப்ரஹ்மம் ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
கார்ய ப்ரஹ்மம் ஸ்தூல சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சத்ய சங்கல்பத்தால் –
மஹதாதி -அண்ட பர்யந்தமான ஸமஸ்த பதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து -சமஷ்டி ஸ்ருஷ்டி-இதுவே
மஹான் -அஹங்காரம் –மனம் வரை
இவ்வருகு உண்டான வியஷ்ட்டி பதார்த்தங்களை சதுர்முகனைக் கொண்டு ஸ்ருஷ்டிக்க
ப்ரஹ்மாவைப் படைத்தான்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –இத்யாதி
பிரதமம் ப்ரஹ்மாவை ஸ்ருஷ்ட்டித்தான்
பூவில் நான்முகனைப் படைத்தான்
அனைத்து வேதங்களையும் அவனுக்கு உபதேசித்து அருளி
பிரளயத்தில் வேத சப்தங்கள் அநு பூர்வி அழியாமல் வைத்து அருளி
இந்தச் சொல்லுக்கு அடுத்து இது வரிசைக் கிரமம் அழியாது
தேவர்கள் முதலான அனைத்தும்
ஸ்ருஜ்ய பதார்த்தங்களின் -நாம ரூப கிருத்யங்கள் -பெயர் வடிவம் செயல் -இம் மூன்றையும்
வைதிக லௌகிக சொற்கள் -சொல்லுமே
இவற்றை ப்ரதிபாதிக்கும் -பழ ஒழுக்கு -நான்கு வேதங்களையும்
யுக பத் ஏக காலத்தில் உச்சரிக்க நான்கு முகங்கள் –
எம்பெருமான் இடம் மீண்டும் கேட்க வேண்டாதபடி தானே பிரதானமாக
ருத்ரனை ஸ்ருஷ்ட்டித்தான்
நாராயணா ருத்ரோ ஜாயதே இந்திர ஜாயதே
கருவியாக நான்முகனைக் கொண்டும்
கல்பாந்தரங்களில் நேராகவும் உண்டே
ஸ்ருதி சாஹரம் பலவும் இவற்றைச் சொல்லுமே
ப்ரஹ்மாவை கருவியாகக் கொண்டு இந்த ஸ்ருஷ்ட்டி
நான் பகவத் அருளால் தத்வ ஞானம் பெற்றேன்
பர தத்வ யாதாத்ம்ய ஞானத்தை
அந்தாதி ரூபமாக அடைவு மாறாமல் கல்லிலும் செப்பிலும் வெட்டுமா போலே
உங்கள் அனர்த்தம் கண்டு சகிக்க மாட்டாமல்
அர்த்தித்வ நிரபேஷமாக சொன்னேன்
அறிய யோக்யதை உண்டே உங்களுக்கு
ஸம்ஸார பொல்லாங்கையும்
நான் சொல்லும் அர்த்த அருமை பெருமைகளையும்
யுக்தி யுக்தமாக விசாரித்து
அநவதநாதிகளால் கவனக் குறைவு இத்யாதி இல்லாமல்
நெஞ்சில் இருந்தும் நழுவாமல் திடமாக கொள்ளுங்கோள்
நான் தானம் செய்த ரத்னத்தை நழுவ விடாமல் கொள்ளுங்கோள்
சொல்லா விட்டால் தரிக்க மாட்டாமல்
இத்தனையும் செய்ய வேண்டும் என்று காலைக் கட்டி இரக்கிறார்
பாலைக் குடிக்க காலைப் பிடிக்கிறார்
ஆழ் பொருள் நசிக்கும் பொருள் என்றுமாம்
————————————————————————–
கீழே வேதாந்த பிரகிரியையால் பரத்வ நிர்ணயம்
இதிஹாச ப்ரக்ரியையால் இதில்
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2
பதவுரை
தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பர தெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந் நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறிய மாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் (வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதந அநுஷ்டாநங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனை யளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.
விசாரித்தால் தேவன் என்பவன் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே என்று வியாஸாதிகள் சொல்லுவார்கள்
அந்த நாராயணனுடைய மஹிமையை ஒருவரும் அறியார்கள்
ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகளில் ப்ரதிபாதிக்கப்பட்ட பரதத்வ வஸ்துவின் பர்யவசானமும் அவ்வளவே
எவ்விதமான தபஸ்ஸூக்களை அனுஷ்டித்தவர்களுக்கும்
சக்ர தரன் பக்கலிலே உண்டான கிருபையினாலே தான்
அந்த தபஸ்ஸூக்களின் பலம் பெறும் படி முடியும்
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் –
தத்வம் ஜிஞ்ஞாச மாநாநாம் ஹேது பிஸ் சர்வதோ முகை
தத்வ மேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-என்னும்படியே
விசாரிக்கும் போது
சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –
(திவ்ய தேவ ஏகோ நாராயண
ஈஸதே தேவ ஏக
ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூட
ஏக ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ
பூதஸ்ய ஜாத பதிர் ஏக ஆஸீத்
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –போன்ற ஆயிரக் கணக்கான ஸ்ருதி வாக்கியங்களும்
ஏக ஸாஸ்தா ந த்விதீயோ அஸ்தி கஸ்ஸித்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமான் அச்யுத பிரபு
ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்ம ச ச நாராயணா
ஏக ஏவ ஜநார்த்தனா –ஆயிரக்கணக்கான ஸ்ம்ருதி வாக்கியங்களும் உண்டே )
ஆரும் அறியார் அவன் பெருமை-
ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –
(பரிச்சேதிக்க அறியார்கள் -கொஞ்சம் சில அம்சங்கள் அறியலாம் –
அளவு படுத்த முடியாதே )
(க இத்தா வேத் யத்ர ஸ
ஸோ அங்க வேத யதி வா ந வேத
யஸ்யா மதம் தஸ்ய மதம்
யாதோ வாஸோ நிவர்த்தந்தே
ந தே விஷ்ணோ ஜாயமாநோ ந ஜாதோ தேவ ம்ஹிம்ந பரமந்த மாத பஹ்வ்ருசம் விஷ்ணவே
ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ –என்று வேதங்களிலும்
த்வம் ஹி லோக கதிர் தேவ ந த்வாம் கேசந ஜாநதே -என்று ஸ்ரீ ராமாயணத்திலும்
ப்ரஜா பதிஞ்சு ருத்ரஞ்சாப் யஹமேவ ஸ்ருஜாமி வை
தவ் ஸ மாம் ந விஜாநீதோ மம மாயா ப்ரமோஹிதவ் -என்றும்
ந ஸ ஸக்யஸ் த்வயா த்ரஷ்டும் மயாந்யைர் வாபி சத்தம
ஸர்வேஷாம் ஸாக்ஷி பூதோ அசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் -என்றும் பாரத மோக்ஷ தர்மத்திலும்
ந யஸ்ய ரூபம் ந பல ப்ரபாவவ் ந ச ஸ்வபாவ பரமஸ்ய பும்ஸ
விஞ்ஞாயதே ஸர்வபிதா மஹாத்யைஸ் தம் வாஸூ தேவம் ப்ரணமாம்ய சிந்த்யம் –என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும்
யந்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் பதம்
தந்நதா ஸ்ம ஜகத்தாம தவ ஸர்வ கத அச்யுத -என்றும்
யந் ந தேவ ந முனயோ ந ச அஹம் ந சங்கர
ஜா நந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
அத்யாபி மாம் ஜா நந்தி ருத்ர இந்த்ராஸ் ஸ பிதா மஹ –என்று ஸ்ரீ வராஹ புராணத்திலும்
ந அஹம் ப்ரகாஸஸ் ஸர்வஸ்ய யோக மாயா ஸமா வ்ருதா
மூடோயயம் நாபி ஜா நாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் -என்றும்
மா து வேத ந கஸ்ஸன-என்றும் ஸ்ரீ கீதையிலும் )
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய
நிர்ணயமும் இவ்வளவே –
எத் தவம் செய்தார்க்கும் அருள் முடிவது ஆழியான் பால் –
எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-
(பலத்தைக் கொடுக்கை அருளின் கார்யம் ஆகையால்
அருள் முடிவு என்று பலத்தைச் சொல்கிறது
தேவதைகள் அழிவார்கள் -ஆகவே இவனே பல ப்ரதன் )
————-
அப்பிள்ளை உரை
ஸ்ருதி ப்ரக்ரியையால் கீழே நாராயணனே நிகில ஜகத் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி என்பதை ஸாதித்து அருளினார்
இதில் இதிஹாச பிரகிரியையால்
சர்வேஸ்வர பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு
ஸ்ருஷ்டிக்கு இப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் இவன் பிரஸாதத்தாலே என்கிறார்
தர்ம வீர்ய ஞானத்தால் தெளிந்து -ஸூவ அனுஷ்டித்த தபஸ் மூலம் பெற்ற ஞான விசேஷம் கொண்டு ஆராய்ந்தால்
தேவதா பாரமார்த்தம் -சிறப்பான உண்மைப் பொருள் -வித்துக்கள் வியாஸ பராசராதிகள்
(பரமார்த்த பாரமார்த்தம் -ரஹஸ்ய த்ரய சாரத்தில் தேசிகன் )
திவ்ய தேவ ஏக நாராயணன்
தேவ ஸப்த வாச்யன் நாராயணனே
ஈஸா தேவ ஏக
மறைந்து நிற்கும்
ஏக ஸ்வ தந்த்ர ஜகதோ
பூத ஏக பதி
ஏஷ ஸாஸ்தா ந த்விதீய
சக்திமான் பிரபு அச்யுத
ஏகமேவ ஜனார்த்தன
ஆயிரக்கணக்கான ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்யங்களால்
ஒருவனே என்று சொல்லப்பட்டதே
இத்தகையன் என்று யாரால் சொல்ல முடியும்
தனக்கும் தன் தன்மை அறியான்
யதோ வாசோ –நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
எத்தனையேலும் ஞான அதிசரராக இருந்தாலும்
அவனது பெருமையை பரிச்சேதிக்க வல்லார்கள் அன்றே
யுக கோடி ஸஹஸ்ரம் -விஷ்ணு ஆராத்யாம் சலிக்காமல் செய்து
ஸூவ அனுஷ்டித பலம் அவனே அருளுகிறார்
பல சித்தி ரக்ஷண பரிகரமாக திருவாழியைக் திருக் கையில் கொண்ட -கிருபையாலேயே
லோகத்துக்கு ஒரே கதி இவனே
அஹம் ஏவ ஸ்ருஜாயாம்
மம மாயா ப்ரமோதிதவ்
மோக்ஷ தர்மம் -உன்னால் பார்க்க முடியாது என்னாலும் மற்ற எவராலும் முடியாது
ஸர்வேஷாம் சாக்ஷி பூதன் அவன் ஒருவனே–நான்முகன் ருத்ரனுக்கு
விஷ்ணு தர்மமும் -அசிந்த்யம் -ஸ்வரூபம் ரூபம் பலம் ஸ்வபாவம் யாராலும் தெரிந்து கொள்ள முடியாதே
ஜகத் ஏக தாரகன்
பிறப்பற்றவன் அழிவற்றவன்
சரீரமாக இருக்கும் தேவதைகளை ஸ்ரத்தை உடன் பூஜிக்க -அத்தை நானே வளர்த்து விடுகிறேன் –
அதுக்குப் பலம் கொடுப்பதும் நானே –
மயா ஸ்ருஷ்ட புரா ப்ரஹ்மா -யுக கோடி ஸஹஸ்ரம் தபஸ்ஸூ செய்து பிரம்மா பதவி பெற்றார்
மஹா தேவ -ருத்ரன் தன்னையே ஆஹுதியாக கொடுத்து பலம் பெற்றார் -மஹா பாரதம் சொல்லும்
ராமோ விக்ரஹவான் தர்ம
கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –
————————————————————————–
(மூன்றாம் பாசுரத்திலேயே திவ்ய தேச ப்ரஸ்தாபம்
ஆழ்வார்கள் இதில் ஈடுபடமால் இரார்கள் அன்றோ )
வேறே ஒருவர் அறிவார் இல்லை
நானே என்றது -நான் அவன் காட்டக் கண்டேன் ஆகையாலே -என்கிறார்
(காட்டவே கண்ட பாத கமலம் -இத்யாதி )
(அவன் பெருமைகளின் ஒரு சில திவலைகளை அறிந்தார் உண்டு
அவனே காட்டாக கண்டா எங்கள் போல்வார் தான்
அவனது ஸுலப்யாதி மஹா குணங்களைக் காண முடியும் )
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3
பதவுரை
(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற் கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொரு கால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
ஒரே காரணப் பொருள் காரியப் பொருள்கள் மற்றை எல்லாம்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜல தத்வத்தினுள்
கண் வளரும் அரும் பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
பெரிய நீர் படைத்து -அத்தை கடைந்து-அடைத்து -உடைத்து – கிடந்து
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!
லீலா விபூதிக்கு அத்விதீயமான காரண வஸ்துவும்
நித்ய ஸூரிகளுக்கு யதார்த்தமாக ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கத் தகுந்த வஸ்துவும்
பிரளய ஆர்ணவத்தில் சயனித்து இருந்த நிருபமான வஸ்துவுமான ஸர்வேஸ்வரனையும்
அவன் முன்பு
திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டு இருந்ததையும்
ஸ்ரீ ரெங்கத்தில் பள்ளி கொண்டதையும்
ஆலந்தளரிலே கண் வளர்ந்ததையும்
நான் அறிந்த விதமாக
வேறே யார் அறிவார்கள் –
பாலில் கிடந்ததுவும்
அவதாரத்துக்கு உறுப்பாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்ததுவும் –
பண்டு அரங்கம் மேயதுவும் –
அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க
கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் –
(அரங்கம் எய்ததுவும் -எய்தியதும் -பாட பேதங்கள் )
(ச ஏகாகி ந ரமேத அங்கு
ஷீராப்திகளை விட்டு ஆசையுடன் இங்கே பொருந்தி
என்னில் முன்னம் பாரித்து -விழுங்க -பண்டு இங்கே )
(அவாக்ய அநாதர
பரமபதத்தில் சம்சாரிகள் நம்மை அடையாமல் என் படுகின்றனவோ என்று
வெறுப்புடன் அன்றோ எழுந்து அருளி இருப்பது
ஆனந்த பரிபூர்ணன் வெறுப்புடன் இருந்தான் என்பது உசிதமோ என்று ஒருவன் கேட்க பட்டர்
வ்யஸனேஷூ மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித என்றது
குண பிரகரணமா தோஷாப் பிரகரணமா என்று கேட்க மாட்டிற்றிலரோ
இது குணமாகில் குணம் என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஓன்று உண்டோ என்பர்
தன் இச்சை ஒழிய கர்ம நிபந்தனமாக வருமவை இல்லை என்னுமத்தனை போக்கி
அனுக்ரஹ காரியமாய் வருமவை இல்லை என்னில் முதலில் சேதனன் இன்றிக்கே ஒழியும் இறே
நித்ய விபூதியும் குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தே அன்றோ
ச ஏகாகீ ந ரமேத என்றது -நம்பிள்ளை -4-10-2- ஈட்டில் -)
ஆலில் துயின்றதவும் ஆர் அறிவார் ஞாலப் பொருளை –
கார்ய ஆகாரம் எல்லாம் அழிந்து –
ச தேவ -என்று நிற்கிறவனை –
(சத்தாகவே ஒன்றாகவே வேறே ஓன்று இல்லாமல்
சதேவ சோம்ய ஏக மேவ அத்வதீயம் அக்ர ஆஸீத்
ஸ்வேதகேது மகனுக்கு உத்தாலகர் )
(மூன்றும் அறிவார் அறியார்
பரத்வம் மட்டும் அல்ல
ஸுலப்யம் மிக்கவை
ஆலில் துயின்றதும் ஒரு நாளும் பிரியாமல்
மூன்றும் அவன் முயற்சி கிருஷி -சொத்தைப் பெற )
(பாலாழி நீ கிடக்கும் பண்பை நாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –என்கிறபடியே
நாங்கள் அறியும் அத்தனை ஒழிய சாத்தனாந்தரர் அறிவாரோ
கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமேயான் திசை -எங்களை ஒழிய
ப்ரதி மாஸ்வ ப்ரபுத்தா நாம் -அஞ்ஞானிகளுக்கு சர்ச்சை என்று இருப்பார் அறிவாரோ
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -என்று
அகடிகட நா சாமர்த்யத்தில் ஈடுபட்ட நாங்கள் அறிவோமே ஒழிய பிறர் அறிவாரோ )
வானவர் தம் மெய்ப் பொருளை –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யனாய் உள்ளவனை
அப்பில் அரு பொருளை –
அப ஏவ ஸ ஸ்ருஜா தௌ–(மனு ஸ்ம்ருதி )என்று
ஜல சிருஷ்டியைப் பண்ணி
அதிலே கண் வளர்ந்து அருளுகிறவனை
(நரன்-பரமாத்மா இடத்தில் பிறந்த நாரம்-ஜலம் அவனுக்கு இருப்பிடம் நாராயணன் )
யான் அறிந்தவாறு –
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது
(தேவதாந்த்ரம் பற்றியவர் இவனது பரத்வம் அறியார்
சாதனாந்தரம் பற்றுவார் அவனது நீர்மை அறியார்
பிராப்யாந்தரம் பற்றுவார் இவனது போக்யதை அறியார் )
அப்பிள்ளை உரை
உம்மை அல்லாதார் அறியார் என்று சொன்னீரே
நீர் அறிந்தபடி என்
அவன் பிரசாதத்தால் அவன் புக்க இடம் எங்கும் புக்கு நான் கண்டது போல் யார் தான் அறிவார்
என்னைப் போல் கண்டவர் நித்யர்கள் மட்டுமே
ஸதா பஸ்யந்தி ஸூரயா -நித்ய ஸூரிகளுக்கு பத்தும் பத்தாக பரம புருஷார்த்தம் -அனுபவ விஷயமாகி
கார்ய ரூபமான எல்லாம் அழிந்து லயம் அடைய
ஏக மேவ அத்விதீய காரண வஸ்துவாய்
குழந்தைகளை விட்டு பிரியாத தாய் போல்
காரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான்–எங்கும் உள்ளான்
ஸ்ருஷ்ட்டி உன்முகனாயக் கொண்டு அதிலே கண் வளர்ந்து அருளி
இணை இல்லாத காரண -அகில அத்புத காரண வஸ்து
ப்ரஹ்மாதிகள் ஸமாஸ்ரயணம் பண்ண ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளி
இவ்வருகு உள்ள சம்சாரிகளை தண்ணளி பண்ணி கோயிலிலே கண் வளர்ந்து
பிரளய சாகரத்தில் அழியாமல் தனது திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து
இவற்றை யான் அறிந்தவாறு யார் அறிவார்
ஸூ யத்ன பரராய் இருப்பார் யார் தான் அறிவார்
ஞாலத்து ஒரு பொருள்
பூமில் விலக்ஷணமான திரு அவதாரங்கள் திவ்ய தேசங்கள் என்றுமாம்
பாலாழி நீ கிடக்கும் பண்பை நான் கேட்டேயும் -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் —
பக்தியால் இருப்பதால் அலமாந்து போய் –
கருவரங்கத்தில் உள் கிடந்தே திருவரங்கம் கை தொழுதேன்
ஆலை நீர் உள்ளதோ –சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு
என்னைப் போல் காண்பார் அறிவார் யார் –
————————————————————————–
தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –
(ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயா யாத் அஸ்து
யோ தேவாநாம் ப்ரபவஸ் சோத் பவஸச விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி
ஹிரண்ய கர்ப்பம் ஜநயாமாஸ பூர்வம் ஸ நோ புத்த்ய சுபயா ஸம்யு நந்து –
தஸ்மாத் ஸர்வ கத சிவ
ஸர்வஸ்ய ப்ரபும் ஈஸாநாம்
மாயிநம் து மஹேஸ்வரம்
ஞாத்வா சிவம் சாந்தி மத்யந்த மேதி
சிவம் ஸர்வ பூதேஷு கூடம்
சிவ ஏவ கேவல
ஈஸஸ் ஸர்வ அதிபத்யம் குருதே
பாவ அபாவ கரம் சிவம்
தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
சிவ ஏகோ த்யேய
அஹம் ஏக பிரதமம் ஆஸம் வார்த்தாமி ச பவிஷ்யாமி ச அநந்ய கஸ்சிந் மத்தோ வ்யதிரிக்த –இத்யாதி
சுருதி வாக்யங்களால் –
ருத்ரன் ப்ரஹ்மாவைப் படைத்தான்
அவனே ஜகத் காரணன்
ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் இவனே என்றும்
சர்வ ஈசன் நியாந்தா மகேஸ்வரன் சர்வ அதிபதி என்றும் சிவனையே சொல்லிற்றே என்ன
இதில் ஸர்வ ஸப்த வாஸ்யன் இவனே
அதுக்கு பதில்
ஸர்வ ஸாஹா நியாயம்
சொல்லப்பட்ட சிவன் ருத்ர சப்தம் பத சேர்க்கையால்
ஈஸ்வரன் சிவன் சம்பு ஸ்தாணு — இவை அந்தராத்மாவான திருமாலையே குறிக்கும் என்கிறார்
எப்பொருளும் சொல்லானை -என்கிறார்
சிவன் மங்களம் )
ஆறு சடைக் கரந்தான் அண்டர் கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4
பதவுரை
ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேஸ்வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே-கொள்கையை உடைத்ததோ?–அங்கீகரிக்கத் தகுந்ததோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸர்வ சப்த வாஸ்யனாய்) உள்ளவனுமான
எல்லாப் பதார்த்தங்களுக்கும் தன்னைச் சொல்லும்படி
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.
கங்கா நதியைத் தன் தலையில் மறையச் செய்த ருத்ரனும்
அண்டாதிபதியான ஸர்வேஸ்வரனோடும் பாகம் உடையவன் ஸமமான ஐஸ்வர்யம் உடையவன்
என்னும் சொல்லை நம்பலாமா
வேறே ஒருவர் தனக்கு ஒப்பு இல்லாமல் எழுந்து அருளி இருக்கிறவனுமாய்
ஸமஸ்த வஸ்துக்களுக்கும் வாசகங்களான ஸகல ஸப்தங்களுக்கும் அர்த்தமாக ப்ரதிபாதிக்கப் பட்டவனுமான
என் ஸ்வாமியை ஸங்க்ரஹமாகச் சொன்னேன் –
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே
ஜடையிலே கங்கையை தரித்து
சாதகனான ருத்ரன்
சர்வ சேஷி யானவனோடு ஒக்க
சேஷித்வத்திலே கூறு உடையன் என்று
இதுவும் சேதனருக்கு புத்தி பண்ணப் படுமோ
(சடைமுடி சாதகர்
பொன்முடி கொண்டவன் அருளுபவர் சர்வ சேஷி
சர்வ வியாபி விபு முமுஷுக்களுக்கு உபாஸ்யன் இவன் ஒருவனே )
-வேறொருவர் இல்லாமை நின்றானை-
அஹம் சர்வஸ்ய ஜகத பிரபவ
பிரளயஸ்த தா -மத்த பரதரம் நாந்யத் கிஞ்சித ஸ்த்தி தனஞ்சய
என்னும்படி நின்றவனை
எம்மானை-
எனக்கு ஸ்வாமி யானவனை
(நிஹீனனான என்னையும் விடாமல் கைக்கொண்ட ஸ்வாமி )
எப் பொருட்கும் சொல்லானை
சர்வ சப்த வாஸ்யன் ஆனவனை
எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை -என்றுமாம்
சொன்னேன் தொகுத்து
தொகுத்துச் சொன்னேன் –
(பொது சொற்கள் -ஆத்மா -ஆகாசம் -ஜகத் காரணம் சொல்லும்
அக்ரம் நியதி அக்னி இதுவும் நாராயணனையே சொல்லும்
நீக்கமற வியாபிப்பதால் ஆகாசம்
சம்சாரக் கடலை உறிஞ்சுபவன் சூர்யன் என்றும் சொல்லலாம்
பர்யவசான விருத்தி என்றும்
அந்தராத்மாவா என்றும் கொள்ளலாம்
அதே போல் சிவ சப்தங்களும் இவனையே சொல்லும் -மங்களம் தருவதால்
இந்திர லோகம் ஆளும் அதுவும் வேண்டேன் -இதுவும் ஸ்ரீ வைகுண்டம்
இதே போல் நாராயணன் சொல்லுக்கு சிவன் அர்த்தம் கொள்ள முடியாதே
பாணினி ஸூத்ரம் தடுக்குமே
இது விசேஷண -அசாதாரண ஸப்தம் )
(சாஸ்வதம் சிவம் அச்யுதம்
ய பரஸ்ய மஹேஸ்வர
ஆதி தேவோ மஹா தேவோ
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பல சொல்லும் )
அப்பிள்ளை உரை
சர்வேஸ்வரனோடே ஓக்க வேறே சிலரை ஈஸ்வராக சொல்லலாமோ
ருத்ராதிகள் அனீஸ்வரர்
என்னை அடிமை கொண்ட அவனே ஸர்வேஸ்வரன்
பிராமண உபபத்திகளாலே
அறிந்தபடியே உப பாதிக்கிறார்
த்ரவீ பூதா த்ரவீ பூதா –ஹரி பக்தியால் உருக —ஹரி பக்தியால் உருக –
தர்ம தேவதை உருக ப்ரஹ்மாவின் கமண்டல தீர்த்தம் திருவடியை விளக்க
சிரஸால் தாங்கி -பாவநார்த்தம் ஜடா மத்யே
சிவத்வம் பெற -மங்களமாக ஆக -ஈஸ்வர சம்ஹிதை சொல்லும்
பதிம் விஸ்வஸ்ய -நிருபாதிக சேஷி
இவனுடன் ருத்ரன் கூறு கொண்டவன் -அறியாமை பேச்சு
பரீஷிகர்களால் கைக்கொள்ள முடியுமோ
திருவடி நீட்டியவன் ஒருவன் -நீராட்டுபவன் ஒருவன் -தலையில் தாங்கி மங்களம் பெறுபவன் ஒருவன்
ப்ரத்யக்ஷத்தாலே அறிவோமே
அரன் அதிகன் உலகு அளந்த ஹரி அதிகன் என்று பேசும் அறிவிலிகள் -கம்பர்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஆதித்ய சந்நிதியில் நக்ஷத்திரங்கள்-மின்மினி போல் -இவர்கள் இல்லாதார் கணக்காம் படி
வாசகமான சப்தங்கள் சரீரீயாய் -பிரகாரியான – தன் பக்கலில் பர்யவசிக்கும் படி
சரீரீ பிரகாரி
ஷரன் அஷரன் -அனைவரை விட உயர்ந்த
புருஷோத்தமன்
ந பரம் புண்டரீகாக்ஷன்
ந தைவம் கேஸவாத் பரம் -கேசவனே பரம புருஷன்
வேதமே ஸாஸ்த்ரம் போல்
தன்னுடைய ஸ்வபாவம் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் -ஸ்வாமி –
பிரதிபத்தி விஷயமாம் படி பிராமண உபபத்திகளாலே
நிஷ்கரிஷித்து சுருங்கச் சொன்னேன்
எல்லார் தலையிலும் திருவடிகள்
ஸமாப்யதிக தரித்ரன் -அவன் இடம் உள்ள வறுமை இது அன்றோ –
என்று ஷேபிக்கிறார்
————————————————————————–
அப்பிள்ளை உரை
அவதாரிகை
நாம் ஸர்வ ஸப்த வாச்யனாம் போது அனைத்தும் எனக்கு பிரகாரமாக வேணுமே
அது கூடுவது உண்டோ என்ன
நீயே எல்லா வற்றுக்கும் உபாதான காரணமாக இருப்பதால்
ஸமஸ்த வஸ்துக்களும் உனக்கு பிரகாரம் தானே –
அனைத்தையும் விழுங்கி உமிழ்ந்து ரஷித்தாயே -என்கிறார் –
தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5
பதவுரை
தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேஸ்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு சமயத்தில்
உயர்த்தி–(அவ் வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச் செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால் வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.
தபஸ்ஸூ பண்ணி ஸம்பாதித்த வரத்தை யுடையனாய்
தோலாமல் இருக்கிற ஹிரண்ய கசிபு வினுடைய மார்பைப் பிளந்தும்
வளைந்தும் இருக்கிற நகங்களையும் புஜங்களையும் யுடையனாய்
ப்ரஹ்லாதனிடத்தில் வியாமோஹத்தைப் பண்ணினவனே
ஸ்ருஷ்டி காலத்தில் ஒரு நாள் ஸம்ஹரித்த நீயே ஸ்ருஷ்டித்து
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான நாலுக்கும் அந்தர்யாமியானவனே
இதை நீயே அறிந்து அருள வேணும் –
தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம் வகிர்த்த
திரட்டின வரத்தை உடையவன் ஆகையாலே
வரம் கொடுத்தவர்களுக்கும் தோலாத
ஹிரண்யன் உடைய மார்பை பிளந்து –
வளை உகிர் தோள்
வளைந்த உகிரையும்
தோளையும் உடையையாய்
மாலே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே வ்யாமுக்தன் ஆனவனே
(சீற்றத்தோடு அருள் பெற்றவன் அன்றோ
பெண் ஸிம்ஹம் யானை உடன் சீற்றம் பிள்ளைக்கு பாலை ஊட்டுமே
இங்கே புருஷோத்தமன் -ஹிரண்யன் இடம் சீற்றம் ப்ரஹ்லாதன் இடம் வ்யாமோஹம் –
வரம் கொடுத்து துன்பம் பட்டவன் அவன்
போக்கி அருளினவன் இவன் )
-யுள் வாங்கி நீயே உகத்தில் ஒரு நான்று நீ உயர்த்தி-
ஜகத் அடைய சம்ஹரித்த நீயே
சிருஷ்டி காலத்தில் ஆதபகதம் -என்னும்படி நிற்கிற—
ஆதபதகதம் வெய்யிலானது எங்கும் ஒக்க வ்யாபிக்குமா போலே–
அந்தராத்மாவாக எங்கும் வ்யாபித்தான் -என்றபடி –
(இவன் கிரணங்கள் போல் மற்ற தேவதைகள் )
(உகக்கை -ஸ்ருஷ்டியாய் -ஸ்ருஷ்டி காலத்திலேயே உயர்த்தி )
உயர்த்தி –என்று
அவதரித்து என்னவுமாம்
(ஸுலப்யம் உயர்ந்து காட்டுவது அவதாரங்களில் தானே
பரத்வத்துடன் சேர்ந்த எளிமையே உத்தேச்யம்
மாம் அஹம் இரண்டுமே வேண்டுமே
தீரர் தான் உள்ளபடி இவனை அறிகிறார்கள் )
நான்கிலும் அருவாய் நின்றாய் –
அரு நான்கும் ஆனாய்
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே
அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற
(அரூபியான ஜீவனாயும் ஆனாய் ஷேத்ரஜ்ஜன் சா அபி
அந்தராத்மா தயா பிரவேசித்து -பிரகாசியா நிற்கிறார்
பொருளுக்குள் ஆத்மா -அதில் அந்தராத்மா -பொருளுக்குள்ளும் அவன் உண்டே )
நீயே அறி –
இவ் வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை –
தேவரே அறிந்து அருள வேணும் என்கை-
அப்பிள்ளை உரை
நெடும் காலம் தபஸ்ஸூ இருந்து
அதுக்குப் பலமாக
ப்ரஹ்மாதிகள் பக்கல் பெற்ற வர பலங்களை கொண்ட
ஹிரண்யன்
சிறுக்கன் பக்கல் அபசாரம்
மதகு திறந்து பாயும் வியாமோஹம்
இவை அதி பிரவ்ருத்தமான அன்று சகல ஜகத்தையும் உம் பக்கலிலே உப சம்ஹரித்து
மீளவும் ஸ்ருஷ்ட்டி காலத்தில்
பஹுஸ்யாம் ப்ரயாஜாயேய
உபாதான காரணமும் நிமித்த காரணமுமாய்
கொண்டு கார்ய ரூபமான ஜகத்தாய் பரிணமித்து
அநந்தரம்
தேவாதி பதார்த்தங்கள் நீ என்னும் சொல்லுக்குள்ளே பிரகாரமாய்
நீ பிரகாரியாய்
அவை தான் என்று சொல்லும்படி
இவ்வர்த்தம் ஸ்வத சர்வஞ்ஞன் நீயே அறிய வேணும்
இப்படி சர்வமும் பிரகாரமாய் ஆன பின்பு சர்வ ஸப்த வாஸ்யமும் நீயே தான் அன்றோ
யுகத்தில் –உயர்த்தி
யுகம் தோறும் -ருசிக்கு அனுகுணமாக விக்ரஹங்களைப் பரிகரித்துக் கொண்டு
வந்து அவதரியா நின்றீர் என்னவுமாம்
உன் பரத்வத்தைப் பொறாதவர்கள் உன் கையிலே ஹிரண்யன் பட்டது படுவார் என்று காட்டவே
இந்த சரித்திரம் இங்கு அருளிச் செய்கிறார் –
—————————————————————-
வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன –
பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-
பதவுரை
சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.
ஜைனர் உண்மையை அறியவில்லை
பவ்த்தர் யதார்த்தம் அறியாமல் பிரமித்தார்கள்
சைவர் அறியத்தக்க வஸ்துவை அறியாமல் அல்பர் ஆனார்கள்
இவர்களை சொல்லில்
ஸர்வ கந்தனாய்
ஆச்சர்ய சேஷ்டிதனாய்
ஆஸ்ர்ய வ்யாமுக்தனாய் இருக்கிற
ஸ்ரீ யபதியை இவர்கள் ஸ்தோத்ரம் செய்யார்கள்
ஆகையால்
இவர்கள் இப்போது ஹீநர்களே
அறியார் சமணர் –
ஸ்யாத் அஸ்த்தி ஸ்யான் நாஸ்தி (ஸ்ரீ பாஷ்யம் பூர்வ பக்ஷ உபன்யாசம் )-என்று-
அநேகாந்தமாகக் கொள்கையாலே
ஆர்ஹதர் தத்வம் உள்ளபடி அறியார் –
(அநேக அந்தமாக -எப்படி -ஏகாந்தம் எதிர்மறை -ஒருபடிப்பட என்று கொள்ளாமல்
ஸப்த பந்தி வாதம்
1-ஸ்யாத் அஸ்தி
2-ஸ்யாந் நாஸ்தி
3-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச
4-ஸ்யாத் அஸ்தீதி வக்தவ்யம்
5-ஸ்யாந் நாஸ்தீதி வக்தவ்யம்
6-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச இதி வக்தவ்யம்
7-ஸர்வதா வக்தவ்யம் ச
1-இருக்கலாம் -2-இல்லாமல் இருக்கலாம் -3-இருப்பதாகவும் இல்லாததாகவும் இருக்கலாம் –
4-இருப்பதாக சொல்லலாம் -5-இல்லாததாக சொல்லலாம் -6-இருப்பதாகவும் இல்லாததாகவும் சொல்லலாம்
7-எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
என் தாய் மலடி போல் சொல்லுவார்கள் )
(அங்கீ க்ருத்ய து சப்த பங்கி குஸ்ருதம் ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்
விஸ்வம் த்வத் விபவம் ஜகத் ஜிநமதே நைகாந்தம் ஆசஷதே
பின்னா பின்னம் இதம் ததா ஜகதுஷே வந்த்யா மம அம்பா இதிவத்
நூத்ந ப்ரஹ்ம விதே ரஹ பரம் இதம் ரெங்கேந்திர தே சஷதாம் –-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–12-
ஹே ரெங்கேந்திர
ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்-ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி -இத்யாதி ரூபமான
சப்த பங்கி குஸ்ருதம் அங்கீ க்ருத்ய -சப்த பங்கி என்னும் துர்மார்க்கத்தை அங்கீ கரித்து
ஸ்யாத் அஸ்தி -ஸ்யாந் நாஸ்தி-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச -ஸ்யாத் வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ச வக்தவ்யம் –
ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் –
த்வத் விபவம் -தேவருடைய விபூதியான
விஸ்வம் ஜகத்–சர்வ ஜகத்தையும்
ஜிநமதே–ஜைன மதத்திலே
நைகாந்தம் ஆசஷதே–அநேக அந்தமாக சொல்லுகின்றனர் –
தே ததா -அந்த ஜைனர்கள் அப்படியே
வந்த்யா மம அம்பா இதிவத்–என் தாய் மலடி என்பது போலே வ்யாஹதமாக
இதம் பின்னா பின்னம் ஜகதுஷே இவ் வுலகத்தை ப்ரஹ்மத்தோடே பின்னமாகவும் அ பின்னமாகவும் சொன்ன
நூத்ந ப்ரஹ்ம விதே –நூதன ப்ரஹ்ம வித்தான ம்ருஷா வாதி ஏக தேசியின் பொருட்டு
அபூர்வ ப்ரஹ்ம ஞானி என்று பரிஹஸித்த படி
ரஹஸ்யா பரம் இதம் சஷதாம்-இந்த சிறந்த பரம ரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கட்டும்
நம்மிடம் சொல்வதும் நாம் மறு மாற்றம் சொல்வதும் ஊமையரோடு செவிடன் வார்த்தை யாகுமே
அவர்களே பரஸ்பரம் பேசிக் கொள்ளட்டும் என்றபடி –
ஜைன வாத நிரசனம்
சப்த பங்கி வாதம் -தங்களைப் போலே -என்னுடைய மாதா வந்த்யை என்னுமா போலே
இந்த ஜகத்து ப்ரஹ்மத்தோடு பின்னமாயும் அபின்னமாயும் இருக்கும் என்று சொல்லுகிற
நூதன ப்ரஹ்ம வித்துப் பொருட்டு இந்த வசதஸ்யமான விருத்த பாஷணத்தை சொல்லக் கடவர்கள் என்கிறார் –)
அயர்த்தார் பவுத்தர் –
பிரதி சந்தானம் பண்ணுகைக்கு ஓர் அனுபவிதாவைக் கொள்ளாமையாலும்-
ஜ்ஞானத்தை ஷணிகமாகக் கொள்ளுகையாலும்
பௌத்தரும் தத்வ ஞானத்தில் அறிவு கெட்டு இருப்பர்கள்
(பிரதி சந்தானம் -ப்ரத்யபிஜ்ஜை
க்ஷணிகம் ஆகையால் ப்ரத்யபிஜ்ஜை பண்ணப் போகாது என்றபடி -பிழை
அறிய அறிவாளி வேணுமே
ஞானத்தையும் ஞாதாவையும் கொள்ளாமல் அறிவையும் க்ஷணிகம் என்பர் )
சிவப் பட்டார் சிறியார்-
பிரமாணத்தை ஒருபடிக் கொண்டு-
ப்ரமேயத்தை உள்ளபடி கொள்ளாமையாலே
ருத்ர சம்பந்திகள் ஆனவர்களும் எளியார் –
(மோஹ சாஸ்திரம் ஆகமம் கொண்டு மயங்கி இருப்பவர்கள்
நிமித்த மாத்திரம் என்றும்
அதுவும் சிவனே என்பர் இவர்கள் )
செப்பில் –
இவர்களைப் பேசில் –
வெறியாய மாயவனை மாலவனை மாதவனை
நிரதிசய போக்யனான
ஆச்சர்ய பூதனாய்
வ்யாமுக்தனாய்
ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –
அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும்
நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-
அப்பிள்ளை உரை
நீயே அறி என்கைக்கு
நம்மை ஒழிய வேறே அறிவார் இல்லையோ என்னில்
நிர்தோஷ பிராமண மான வேதத்தை இல்லை செய்தும்
வேத வேத்யரான உன்னையும் இல்லை செய்வாராம் அறியப் போமோ
ஸப்த பங்கி வாதம் அங்கீ கரித்துக் கொண்டு
த்ரவ்ய பர்யாய ரூபமான பதார்த்தம் சத்தாயும் அசத்தாயும் நித்யம் அநித்தியம் ஏகம் அநேகம் –
ஸமஸ்த ஜகத்தும் அநேக அந்தமாக இருக்கும்
தோற்றிற்று சொல்வார் ஆர்ஹதர் அறிவாரோ
ஞாத்ரு -ஜேயங்கள் அறிவாளி அறியப்படுபவை – க்ஷணிகம் என்றும்
ஸ்திரமான ஆத்மா இல்லை
மாறும் ஞானமே ஆத்மா
சத்தம் போட்டு சொல்லும் புத்த மதஸ்தர் அறிவாரோ
நேற்று கண்டத்தை இன்று நான் காணா நிற்கிறான் என்பார்
அபாதித–தடுக்கப்படாத –ப்ரதிபிஜ்ஜா ப்ரத்யக்ஷ பிரமாணம் ஸ்திரமாகத் தோற்றினாலும்
ஞானமும் க்ஷணிகம் தத் விஷயமாக ஜகத்தும் பொய் என்பர்
அன்று உணர்ந்த இன்றும் உணர்ந்தாலும் இல்லை
ஜகத் சர்வ சூன்யம்
வேதம் பிரமாணம் அங்கீ கரித்தும்
நிரீஸ்வரன் படைக்கப்பட்ட ருத்ரனை பர தத்வம் என்பார்
இப்படி பிரித்து சொல்லாமல்
சேர்த்து திரளச் சொல்ல
பரிமளமே வடிவாக கொண்ட அத்யந்த போக்யனாய்
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனாய்
அடியார்கள் இடம் வ்யாமுக்தனாய்
இவற்றுக்கு அடியான ஸ்ரீ யபதியை
ஸ்துதிக்க
பாக்யம் இல்லாமல்
ஹேயர்-இன்று
காலாந்தரத்தில் இவர்களும் உஜ்ஜீவிக்கலாம் –
———————————————————
நம்மால் வந்த ஏற்றம் இல்லை
அவனால் வந்த ஏற்றம் உண்டு என்கிறார் இதில்
இப்பாசுரம் ஒட்டியே அமுதனார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 —
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஹீனர் என்று இவர்களை நிகர்ஷித்து வார்த்தை சொல்லா நின்றீர்
உமக்குத் தான் ஏற்றம் என் என்ன
ஒருவரை ஒழிய ஒருவருக்குச் செல்லாமை இருவருக்கும் உள்ள சம்பந்தம்
பிதா ச –நவ வித சம்பந்தம் ஒழிக்க ஒழியாத சம்பந்தம்
சர்வ காலமும் உமது கிருபைக்கு பரிபூர்ண கிருபைக்குப் பாத்திரமான பின்பு
என் ஏற்றம் உமக்குத் தெரியாதோ
என்ன குறை என்கிறார் –
இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-
பதவுரை
நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.
இன்றாகவுமாம் நாளை ஆகவுமாம் இன்னம் சிறிது காலம் கழித்ததாகவுமாம்
உன் கிருபை என்னிடத்தில் பூர்ணமாக இரா நின்றது
ஸ்ரீ மன் நாராயணா அழகியதாக நான் உன்னை விட்டு வேறே ஒருவரை ரக்ஷகரை யுடையேன் அல்லேன்
நீ என்னைத் தவிர்த்துப் பரி பூர்ணன் ஆக மாட்டாய்
இத்தைப் பார்த்து அருள வேணும் –
இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்-
இன்றாகவுமாம்-நாளை ஆகவுமாம்-சிறிது காலம் கழித்தது ஆகவுமாம்-
கால விளம்பமே
உன்னுடைய பிரசாதம் என் பக்கலிலே
-நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் –
கால விளம்பம் என்று என் பக்கலில் என்றும்-சொல்லிற்று எத்தாலே என்னில்
அகிஞ்சநனாக சம் ப்ரதிபன்னனான-எனக்கு
உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை –
நாரணனே நீ என்னை அன்றி இலை –
பூர்ணனான உனக்கு
அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
(ஏழை ஏதலன் கீழ் மகன் இருப்பாரே அன்றோ நீர் தேடுவது
இத்தனை நாளும் நான் உன்னை விட்டு சம்பந்தம் அறியாமல் உழன்றேன்
அப்பொழுதும் நீர் என்னையே கைக்கொள்ள அவகாசம் பார்த்து இருந்தீரே )
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-
என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்
விடப் போகாது –
(நான் விட முடியாது என்பதிலும் இரண்டாலும் நீர் விட முடியாதே என்பதே நிச்சயம் )
அப்பிள்ளை உரை
இன்றாகவுமாம் நாளை ஆகவுமாம் நீரே உபாயம்-
நாரணனே பிரதானமான திரு நாமம்
நாரங்களுக்கு நீர் ஒருவனே அயனம்
நீரே ப்ராப்யம் ப்ராபகம்
நார சப்தம் ஜீவானாம் சமூகம் -கதிர் ஆலம்பனம் -உபாயம் உபேயம் -இதனாலே நாரணன் திரு நாமம்
நார சப்தேந ஜீவா நாம் ஸமூஹ ப்ரோஸ்யதே புதை கதிர் ஆலம்பனம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
நான் சந்தோஷிக்கும் முன் நீ சந்தோஷித்து துக்கம் படுவதன் முன் நீயே துக்கம் பட்டு
எப்போது ஆகிலும் வகுத்த சேஷி
உன்னுடைய கிருபை சேஷ பூதன் என்னிடம் தானே பாயும் -ஊற்று மாறாமல்
ஒருபடிப்பட்டு புரையற்று உண்டாயாயாய் இருந்ததே
என்னிடமே நின் அருள்
அழகியதாக சேஷ பூதன் பரிபூர்ணனான சேஷி உன்னை ஒழிய சத்தை இன்றி இருப்பேனே
நீயும் என்னை விட்டு உளன் அல்லவே
இப்படி இருக்க விட்டு இருக்க இயலுமோ
உன்னை ஒழிந்த ஸமஸ்த வஸ்துக்களும் பிரகாரி -பிரகார சம்பந்தம் உண்டே
விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருப்பதே இது
தத் புருஷ சமாசம் நாரங்களுக்கு அயனம் நான் உன்னை அன்றி இலன்
பஹு வரீஹி சமாசம் நீ என்னை இன்றி இலையே
என்னதாவி மேலதாய்–உன்னது என்னதாவியும் -என்னது உன்னதாவியும் -நம்மாழ்வார்
மம பிராணா பாண்டவ
நண்ணித் தொழுவார் சிந்தை பிரியாத நாராயணன் அன்றோ
ஆத்மாவின் ஸ்வரூபம் பகவான் இட்ட வழக்கு அறிவோம்
அவன் ஸ்வரூபம் நாம் இட்ட வழக்கு பொருந்துமோ -ஆளவந்தார் கோஷ்ட்டியில் விசாரம்
அவன் ஸ்வ தந்த்ரன் -ஸத்ய வாக்யன் -அவன் சேதனனுக்கு ஆதீனமாக இருக்கட்டும் சங்கல்பித்தால் மாறாதே
நம்மது -கர்ம வச்யமாகையாலே எத்தனை குளிக்கு நிற்க்கும் -இது தான் நியாயம் –
அத்தனை உறுதியாக இருக்க வேண்டும்
ஞானிகளுக்கு பெருமான் ஆத்மா உபநிஷத்
கிருஷ்ண சித்தாந்தம் அவனுக்கே நாம் ஆத்மா
இன்றாகவோ நாளையாகவோ என்றாகவோ பரம பதம் கொடுத்து நித்ய கைங்கர்யம் கொண்டு மகிழ்வாய்
கட்டிலே வைத்தால் என்ன காட்டிலே வைத்தால் என்ன
அந்தராத்மாவாக உள்ளேயே பதி கிடந்தது உள்ளாய் -நினைவு மட்டுமே அல்ல
திருமேனி உடன் உள்ளே இருந்து
தய நீயவான் -விதி கருணை -சத்ய சங்கல்பம் இந்த உறவை ஏற்படுத்திய பின்பு
அத்தை பாலனம் பண்ணிக்க கொள்ள வேண்டுமே -ஆளவந்தார் –
ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே தவம் தயனீயவான் ந ச
விதி நிர்மித மேததந்வயம் பகவன் பாலய மா ஸ்ம ஜீஹப –
ஆகையால் நான் உன்னை ஒழிய நாதன் உடையேன் அல்லேன்
நீயும் என்னை ஒழிய வேறே தயா பாத்திரம் உடையான் அல்லன்
இந்த சம்பந்தம் கேவல கிருபையால் நான் அறிந்தேன்
ஸர்வஞ்ஞனே இத்தை நான் மறவாமல் இருக்க அருள்வாய்
—————————————————-
புகையில் உண்பன் என்று கொண்டு சொல்லி-
உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது
என் என்னில்–
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே
என்கிறார் –
(புகையில் -வீட்டில் புகை இருந்தால் -தான் உண்பன்
மற்றவர் ரக்ஷகர் அல்லர் மட்டும் அல்ல -ரஷிப்பதையும் தடுப்பார்கள் அன்றோ )
அப்பிள்ளை உரை அவதாரிகை –
அவனை ஒழிய வேறே ஒரு ஆஸ்ரயர் இல்லை என்பது என்
வேறே ஒருவரைப் பற்றலாகாதோ
திரு உள்ளத்துக்கு கருத்தாக
தசரதாத்மஜன் ஒழிய வேறே துணை அல்லவே
தசரதன் பெற்ற மரகத தடாகம்
ராமோ விக்ரஹவான் தர்ம
உண்டாகில் கழுத்துக்கு கட்டியாவார் ஒழிய துணை ஆக மாட்டார்கள்
ஈஸ்வர சேஷத்வத்தை விட அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் –
மற்றவர் துணை ஆக மாட்டார்களே –
இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-
பதவுரை
என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்கா புரியை-லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வரின் அன்றோ
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.
என் ஹிருதயமே
ருத்ரனை ஜெயித்த தனுசைப் பிடித்த சிவந்த திருக்கண்களை யுடைய ஸர்வேஸ்வரனோடு பொருந்தாமல்
மரணம் அடைந்த தசக்ரீவனுடைய இலங்கையை அழியச் செய்த கூர்மையான வில்லையுடைய
சக்கரவர்த்தி திரு மகனை விட குறையைத் தீர்க்கும் படியான சகாயம் வேறே ஓன்று இல்லை
ஆனாலும் புகையில் உண்பன்-
நீ இத்தனை பொகட்டால் உண்பன்
இல்லாவிட்டால் பட்டினி -என்னுமா போலே-
இலை துணை மற்று
சர்வேஸ்வரன் துணை என்கை அன்று சாத்யம் –
மற்று உள்ளார் துணை அன்று என்கை –
என்நெஞ்சே –
இவ்வர்த்தம் சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட ஈரந் தலையான்-
இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை –
வேறு ஒருத்தர் துணை அல்ல என்றது-
வேறு ஒருவர் பூர்ணர் இல்லாமையால் என்கிறது –
(ஈசனை வெல்லுகை –ஸ்ரீ ராமாயணத்தில் இதன் விவரணம் உண்டே
பாலகாண்டத்தில் பரசுராமன் சொல்வதாக உள்ளது
தேவர்கள கூடி பரத்வம் நிர்ணயம் பண்ண விஸ்வ கர்மாவால் இரண்டு வில்களை உண்டாக்கி
இருவர் கையிலும் கொடுக்க
விஷ்ணு வில்லை எடுத்து எய்ய உத்யோகித்த உடனே -ஹூங்காரம் பண்ணிய உடனே
ருத்ரன் வில்லும் கையுமாக நடுங்கி விழுகையாலே என்றது என்கிறது
அந்த சிவ தனுஸ் ஜனக குலத்துக்கு வர
வில்லிறுத்து மேல் இயலாள் தோள் தோய்ந்தான் )
(இமே த்வே தநுஷீ ஷ்ரேஷ்டே திவ்யே லோகாபிவிஷ்ருதே.
தரிடே பலவதீ முக்யே ஸுகரிதே விஷ்வகர்மணா৷৷1.75.11৷৷
இமே these, த்வே two, தநுஷீ bows, ஷ்ரேஷ்டே excellent, திவ்யே celestial, லோகாபிவிஷ்ருதே well-known in the worlds,
தரிடே stout, பலவதீ powerful, முக்யே best of all, விஷ்வகர்மணா by Visvakarma, ஸுகரிதே are well made.
“These two excellent celestial bows are well-known throughout the worlds. They are stout and strong.
They are the best of all, well-made by Visvakarma.
அதிஸரிஷ்டஂ ஸுரைரேகஂ த்ர்யம்பகாய யுயுத்ஸவே.
த்ரிபுரக்நஂ நரஷ்ரேஷ்ட! பக்நஂ காகுத்ஸ்த! யத்த்வயா৷৷1.75.12৷৷
நரஷ்ரேஷ்ட! O! Best among men, காகுத்ஸ்த Rama, யத் which, த்த்வயா by you, பக்நஂ was broken, யுயுத்ஸவே wishing to fight,
த்ர்யம்பகாய for three-eyed Siva, ஸுரை: by devatas, அதிஸரிஷ்டஂ was given,
த்ரிபுரக்நம் destroyer of Tripuras, ஏகம் one (of the two).
O Best among men! O Descendant of Kakustha! one of these broken by you, was given by the gods
to the three-eyed Siva, who, wishing to fight the demon Tripura with this bow, destroyed him.
——————
இதஂ த்விதீயஂ துர்தர்ஷஂ விஷ்ணோர்தத்தஂ ஸுரோத்தமை:.
ததிதஂ வைஷ்ணவஂ ராம! தநு: பரமபாஸ்வரம்.
ஸமாநஸாரஂ காகுத்ஸ்த! ரௌத்ரேண தநுஷா த்விதம்৷৷1.75.13৷৷
துர்தர்ஷம் unassailable, இதம் this, த்விதீயம் second bow, ஸுரோத்தமை: chiefs of celestials, விஷ்ணோ: for Visnu,
தத்தம் given, காகுத்ஸ்த born in the race of Kakutsthsa, ராம! Rama, பரமபாஸ்வரம் highly radiant, தத் that,
இதம் this, வைஷ்ணவம் pertaining to Visnu, தநு: bow, ரௌத்ரேண தநுஷா with the bow of Rudra, ஸமாநஸாரம் equal to its energy.
This second bow which is unassailable was given by chief of the celestials to Visnu.
O Rama! born in the race of Kakutstha! this highly radiant bow of Visnu is as strong as the bow of Siva.
——————-
ததா து தேவதாஸ்ஸர்வா: பரிச்சந்தி ஸ்ம பிதாமஹம்.
ஷிதிகண்டஸ்ய விஷ்ணோஷ்ச பலாபலநிரீக்ஷயா৷৷1.75.14৷৷
ததா then, ஸர்வா: all, தேவதா: devatas, ஷிதிகண்டஸ்ய blue-throated, Siva’s, விஷ்ணோ: Visnu’s,
பலாபலநிரீக்ஷயா to ascertain the strengths and weaknesses, பிதாமஹம் grand-sire, Brahma, பரிச்சந்தி ஸ்ம enquired.
Then all the gods in order to ascertain the strength and weakness of Siva and Visnu enquired of the Grandsire, Brahma:
அபிப்ராயஂ து விஜ்ஞாய தேவதாநாஂ பிதாமஹ:.
விரோதஂ ஜநயாமாஸ தயோ ஸ்ஸத்யவதாஂ வர:৷৷1.75.15৷৷
ஸத்யவதாம் among truth speaking ones, வர: foremost, பிதாமஹ: grand-sire, Brahma, தேவதாநாம் devatas’,
அபிப்ராயம் intention, விஜ்ஞாய having come to know, தயோ: for both of them, விரோதம் quarrel, ஜநயாமாஸ instigated.
Foremost among the truthful, Grandsire Brahma come to know the intention of the
gods and triggered a conflict between the gods.
————–
விரோதே ச மஹத்யுத்தமபவத்ரோமஹர்ஷணம் .
ஷிதிகண்டஸ்ய விஷ்ணோஷ்ச பரஸ்பரஜிகீஷுணோ:৷৷1.75.16৷৷
விரோதே in that fight, பரஸ்பரஜிகீஷிணோ: each desirous of victory over the other, ஷிதிகண்டஸ்ய Siva’s,
விஷ்ணோஷ்ச Visnu’s, ரோமஹர்ஷணம் causing one’s hair to stand on its end, மஹத் great, யுத்தம் battle, அபவத் took place.
In that thrilling fight between Siva and Visnu, each desirous of victory over the other,
a ferocious battle took place causing one’s hair to stand on end.
—————–
ததா து ஜரிம்பிதஂ ஷைவஂ தநுர்பீமபராக்ரமம்.
ஹுங்காரேண மஹாதேவ ஸ்தம்பிதோத த்ரிலோசந:৷৷1.75.17৷৷
ததா then, ஹுங்காரேண with ‘Humkara’ by Visnu, பீமபராக்ரமம் dreadful prowess, ஷைவஂ தநு: Siva’s bow,
ஜரிம்பிதஂ yawned (stretched), அத thereafter, த்ரிலோசந: three-eyed, மஹாதேவ: Mahadeva, ஸ்தம்பித: was made motionless.
Then, with the ‘Humkara’ produced by Visnu, Siva’s bow of dreadful prowess was stretched,
which struck the three-eyed Mahadeva motionless.
தேவைஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸகை ஸ்ஸசாரணை:.
யாசிதௌ ப்ரஷமஂ தத்ர ஜக்மதுஸ்தௌ ஸுரோத்தமௌ৷৷1.75.18৷৷
ததா then, ஸர்ஷிஸஂகை: hosts of sages, ஸசாரணை: with charanas, தேவை: devatas, தத்ர there,
ஸமாகம்ய having assembled, யாசிதௌ beseeched, தௌ those two, ஸுரோத்தமௌ foremost of devatas,
ப்ரஷமம் peace, ஜக்மது: obtained.
Then hosts of sages, charanas and the gods assembled there and beseeched both of them,
the pre-eminent among the gods to keep peace.
—————–
ஜரிம்பிதஂ தத்தநுர்த்ரரிஷ்ட்வா ஷைவஂ விஷ்ணுபராக்ரமை:.
அதிகஂ மேநிரே விஷ்ணுஂ தேவா ஸ்ஸர்ஷிகணாஸ்ததா ৷৷1.75.19৷৷
விஷ்ணுபராக்ரமை: with the prowess of Visnu, ஜரிம்பிதம் made inert, தத் that, ஷைவம் relating to Siva,
தநு: bow, தரிஷ்ட்வா haivng seen, ததா then, ஸர்ஷிகணா: hosts of sages, தேவா: devatas,
விஷ்ணும் Visnu, அதிகம் as superior, மேநிரே thought over.
Now that the bow of Siva was made inert by Visnu’s prowess, hosts of sages and gods acknowlged Visnu as superior.)
ருத்ரனை வென்ற தனுஸ்ஸைப் பிடித்த-புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
(ராமன் ராஜீவ லோசனை -கமல பத்ராஜன் )
வந்து அவதரித்த இடத்திலும் –
ந நமேயம் (யுத்த காண்டம் )என்று -(வணங்கலில் அரக்கன் அன்றோ )
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய (பெரியாழ்வார் -1-10-3-)-என்னும்படி
பத்து தலையை உடைய ராவணனுடைய இலங்கையை மூலை அடியே-வழி போக்கின
அம்பின் கூர்மையை உடைய-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய-
தம்முடைய குறையில் வேறு ஒருவர் துணை இல்லை –
(த்விதா பஜ்யேய மப்யேவம் ந நமே யந்து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம –யுத்த –36-11
இரண்டாக்கப் பிளக்கப்பட்டாலும் படுவேனே ஒழிய வணங்க மாட்டேன் –
இது என்னுடன் பிறந்ததான தோஷம்-ஸ்வ பாவம் மீற முடியாதது அன்றோ )
உபாசகர்கள் அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இரார்கள்
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-
தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –
அப்பிள்ளை உரை
பண்டு ருத்ரனை தான் வென்ற வில்லை இது ஜனக குலத்துக்குப் போக
ஸ்ரீ பரசுராம ஆழ்வார் கையில் நின்றும் -வைஷ்ணவ சாபம் -தபஸ்ஸூ சக்தி யுடன் வாங்கிக் கொண்ட சக்ரவர்த்தி திருமகன்
தேவ விரோதிகள் ராவணாதிகள் இடம் -கோபத்தால் சிவந்த திருக் கண்கள் உடைய சர்வேஸ்வரன் உடன்
புண்டரீகாக்ஷன் -அழகாலும் கோபத்தால் வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும்
ஸ்வா தந்த்ர உறைப்பால் ந நமேயம் தன்னுடன் சேராதவனாய்
திரண்ட பத்துத் தலைகள் கொண்ட ராவணன் உணர்ந்து நோக்கும் -திக் பாலர்களும் நெஞ்சு உழுக்கும் படி -நுழைய முடியாதே
லங்கையை மூலை யடியே ஒடுக்கிய -மிடுக்கை உடைய சக்ரவர்த்தி திருமகன்
நம்முடைய குறை தீர்க்க வேறே யாரும் இல்லை
ஒரு வில்லால் –சேவகனார் –
உபாசகர் அசேதன கிரியா கலாபத்தை -கர்மாதி கூர்மையை விஸ்வஸித்து இருக்க
பிரபன்னர் சக்ரவர்த்தி திருமகன் அம்பின் கூர்மையையே நினைத்து இருப்பர்
————————————————————————-
வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-
பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு
தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-
தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –
அப்பிள்ளை உரை அவதாரிகை
வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-
நாட்டார் துணையாகப் பற்றும் ப்ரஹ்மாதிகளும்
தங்கள் வெறுமையை முன்னிட்டு இவனையே
ஆஸ்ரயித்து
தம் தாம் அபேக்ஷிதங்களைப் பெற்றுப் போகிறார்கள் -என்கிறார் –
(வெறுமையை-தாழ்ச்சியை -அபேக்ஷிதங்களை குறைகளை )
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9
பதவுரை
பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து-உண்டாக்கி-
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.
சதுமுகன் கையில் சதுர் புஜன் தாளில் சங்கரன் தலையிலே தங்கி ஓடி வரும் கங்கை -பெரியாழ்வார்
ப்ரஹ்மாவானவன் தன் நைச்யத்தை முன்னிட்டுக் கொண்டு கமண்டல தீர்த்தத்தை வார்த்து
வேதங்களிலே ஸாரமாகச் சொல்லப்பட்ட புருஷ ஸூக்தாதி மந்த்ரங்களினால் மங்களா ஸாஸனம் பண்ணி
அந்த த்ரிவிக்ரம அவதார காலத்தில் அண்டாதிபதியான ஸர்வேஸ்வரனுடைய அழகிய திருவடிகளை
நீல கண்டன் சிரஸ்ஸிலே விழும்படி திரு மஞ்சனம் செய்தான் –
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
ஆகிஞ்சன்யாதிகளை முன்னிட்டு
சதுர்முகனான தான் குண்டிகையிலே-
தர்மத்தை ஜலமாக உண்டாக்கி
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளாலே-மங்களா சாசனம் பண்ணி
அண்டத்தான் சேவடியை ஆங்கு கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-
அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ்ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே போய்
வழியே வர வேணும் என்று
தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –
(பாவ நார்த்தம் ஜடா மத்யே -தத் அம்பு பதிதம் -ஈஸ்வர சம்ஹிதை )
(குறை -அபேக்ஷிதம் என்றும் நைச்யம்-ஆகிஞ்சன்யம் என்றும் கொண்டு
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்மபா நீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய யர்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா தாந்யதா பஹுந் ந முமோச ததா ஹர –ஈஸ்வர சம்ஹிதை )
அப்பிள்ளை உரை
நினைவு அற திருவடிகள் தலையிலே வந்து இருக்கக் கண்ட ப்ரீதியாலே
செய்வது அறியாமையால்
தன்னுடைய வெறுமையையே பச்சையாக
ப்ரஹ்மாவானவன்
பக்தியால் உருகி தர்ம தேவதை தனது கமண்டலத்தில் பரிமாறி
சகல வேதங்களாலும் பிரமானமாகக் கொண்ட
புருஷ ஸூக்திகளாலே
நான்கு முகங்களும் ச ப்ரயோஜனமாம் படி ஸ்துதித்துக் கொண்டு
அக் காலத்தில்
காள கண்டனான ருத்ரன் தலையில் சென்று விழும்படியாக
அண்ட அவகாசம் எங்கும் விம்மி வளர்ந்த
சிவந்த திருவடிகளை விளக்கி
அவிநீய -பணியாத- பிள்ளைக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் தெளிப்பாரைப் போலே
விஷ பாத்ரமான ருத்ரன் தலையில் பிதாவானவன்
ஸ்நேஹம் தோற்ற திரிவிக்ரம ஸ்ரீ பாத தீர்த்தம் தெளித்தான் –
————————————————————————–
நீரும் குறைவாளர்
தேவர்களும் குறைவாளர்
ஆக என்ன வாசி என்ற கேள்விக்கு பதில் இதில்
திரிவிக்ரம அவதாரம் கீழே
ஜாம்பவான் பிரக்ருதிகள் ஜெய கோஷம் -ஆழி எழ இத்யாதி கேட்டு
அதி சங்கை பண்ணி
திருவானந்தாழ்வான் அழல் உமிழ
இப் பாசுரம்
அப்பிள்ளை உரை அவதாரிகை
அஹங்காரம் உள்ள தேவர்கள் போல் அன்றியே
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நமக்கு தான் காட்டவே கண்டேன் என்கிறார்
அகிஞ்சனராக நமக்கு ஸூலபன்
துர்மானிகளுக்கு கிட்ட அரியவன்
என்கிறார் இதில் –
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10
பதவுரை
ஆங்கு–பரம பதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரே யாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.
அக் காலத்தில் உண்டான மங்களா ஸாஸன த்வனியைக் கேட்டு
சத்ருக்கள் கோஷிக்கிறார்கள் என்று
நெருப்பைக் கக்கா நின்ற அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்த ஆழ்வானைப்
படுக்கையாக யுடைய ஸர்வேஸ்வரனுடைய அழகிய திரு மேனியை நாம் சேவிக்க ஸமர்த்தர் அல்லோமோ
அழகிய திரு நாபி கமலத்தில் பிறந்த ப்ரஹ்மாவும்
தொங்குகிற சடையை யுடைய ருத்ரனும்
அவனை ஸ்தோத்ரம் செயகைக்குத் தக்க சக்தியை யுடையவர்களாக ஆகார்களே –
ஆங்கு ஆரவாரமது கேட்டு-
திசை வாழி எழ (திருவாய் -7-4-1 )-என்னும்படி
திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
அழல் உமிழும் –
விடங்காலும் தீ வாய் அரவணை (இரண்டாம் திருவந்தாதி -71)-என்னும்படியே –
பூங்கார் அரவணையான் –
அழகிய சீற்றத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவனுடைய –
சேஷி பக்கல் பரிவாலே வந்த சீற்றம் ஆகையாலே-
ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிறபடி
(கார் -கறுப்பாய் -சீற்றம் )
பொன் மேனி யாம் காண வல்லமே யல்லமே –
அவனுடைய ஸ்ப்ருஹ ணீயமான திரு மேனி-
ஸ்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ
(ஸ்வரூபம் -விக்ரஹம் -பிரிய தமம் ரூபம் அத் அத்புதம் –
வல்லமே யல்லமே -அல்ல வல்லோமே -மாட்டுவோம் என்றபடி
இவர்களது அகங்கார ஹேது விசேஷணங்களால் காட்டி அருளுகிறார் )
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்-
ஜடை தரையிலே தாழும்படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும்
ஸ்வ சக்தியில் குறைய நினையாத-
ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே
(வல்லரே அல்லரே-வல்லார் அல்லரே -மாட்டார் -என்றபடி )
(சங்கைஸ் ஸூ ராணாம் ததா மனுஷியை —அனைவராலும் -ஸ்தோத்ரம் பண்ணப்பட்ட
ஆரவாரம் ஹரி மங்களம் வளர்க்கட்டும் )
அப்பிள்ளை உரை
திரு உலகு அளந்து அருளின அத் தசையிலே
திசை வாழி எழ என்கிறபடியே
அனுகூல வர்க்கம் அடங்கலும் என்னாகப் போகிறதோ வயிறு எரிந்து
திக்குகள் தோறும் நின்று மங்களா சாசனம் பண்ணிய ஆரவாரம் -பெரிய கோஷம் கேட்டு
தனது பரிவாலே
பிரதிகூலரான நமுசி பிரக்ருதிகள் மேலே அக்னியை உமிழா நிற்பானாய்
பரிவின் கார்யம் ஆகையால் அடிக் கழஞ்சு பெற்று கொள்ளும் படி
அழகிய சீற்றம் கொண்ட திருவானந்தாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும் ஸர்வேஸ்வரன்
அன்றிக்கே
பரம பதத்தில் நித்யர் முக்தர் ஹாவு ஹாவு சாம கானம் கேட்டு என்றுமாம்
பொன் போன்ற ஸ்லாக்யமான திருமேனியை
அகிஞ்சனரான நாம் கண்ணால் கண்டு அனுபவிக்க வல்லோம் அல்லோமோ
ஸ்லாக்யமான திரு நாபி கமலத்தில் உதித்தோம் என்று அபிமானித்து இருக்கும் நான்முகனும்
சடை கட்டி சாதன அனுஷ்டானம் ருத்ரனும்
வாழ்த்த சக்தர் அல்லரே –
————————————————————————-
அப்பிள்ளை உரை -அவதாரிகை –
இப்படி அகிஞ்சனருக்கு ஸூலபனான -எளியவனான பின்பு
நிரதிசய போக்யனான எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11
பதவுரை
சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்-வழுவுதல் இன்றி -மாறாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மதித்து-நினைத்து
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆஸ் ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனை) ஸ்துதிக்கட்டும்,(திரு நாமம் -அத்யாஹார்யம் )
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.
சுற்றப்பட்ட திருத்துழாய் மாலை பொருந்தி இருக்கிற நீண்ட திரு அபிஷேகத்தை யுடையனாய்
என்னிடத்திலே அநாதியாக வியாமோஹத்தை யுடையனான ஸர்வேஸ்வரனை
க்ஷண மாத்ரமும் விடாமல் அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி த் தலைகளை வணக்கி
சீதலமான புஷபங்களைக் கொண்டு ஆஸ்ரயியுங்கோள்
உங்கள் வாய் அவனை மங்களா ஸாஸனம் செய்யட்டும்
கண் சேவிக்கட்டும்
காது அவன் குணங்களைக் கேட்கக் கடவதாக —
வாழ்த்துக வாய் -இத்யாதி –
சர்வேஸ்வரனை
வாழ்த்தக் கண்ட வாயும் –
காணக் கண்ட கண்ணும் –
அவனுடைய குணங்களைக் கேட்க கேட்கும் செவியும் –
தம்தாமுக்கு வகுத்த தொழிலைச் செய்கை –
(சா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தவ்தி -எது ஹரியை ஸ்துபிப்பதோ அதுவே நாக்காகும்
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் கண்டக்கால்
புள்ளாய் ஒரு ஏனமாய் –பொன்னடிக்கு என்று உள்ளார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே
அவனுக்கு என்று எண்ணித் திருவடிகளிலே இடுகையை வேண்டுவது
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந -என்று ஸ்ரீ கீதையிலும்
புரிவதும் புகை பூவே -என்று ஆழ்வாரும் )
மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் –
அவன் திருவடிகளிலே வணங்கக் கண்ட தலையை ஆங்கே தாழ்த்தி-
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-
சூழ்த்த இத்யாதி –
வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது –
(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநம் -ஈஸ தே பிஸூ நயன் கில மௌலி –ஸ்ரீ கூரத்தாழ்வான் )
சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-
ஆதி ராஜ்ய ஸூசகமான முடியை உடைய சர்வேஸ்வரன் உடைய-
திரு நாமத்தை மாறாமல் நினைத்து-
உதாரமான கையைக் கூப்பி
மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள்
(தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும்
புனைந்த தண்ணம் துழாய் முடி அம்மான் -அன்றோ
உதாராஸ் ஸர்வ ஏவைத –மே மதம் -அவன் நினைவு அன்றோ )
தண் மலரால் -புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-
உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-
(சர்வேஸ்வரன் உடைய- திருநாமத்தை மாறாமல் நினைத்து–என்னும் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளால்
தொல்லை மால் நாமம் -என்று பாட பேதம்
விசித்ரா தேஹ சம்பந்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா பிரம்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை யல்லது தாம் தொழா -பேய் முலை நஞ்சு
ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணாக் கண் கேளாச் செவி –என்ற
முதல் ஆழ்வாரும் அருளிச் செய்த அர்த்தத்தை அனுஷ்ட்டித்து உய்யுங்கோள் -என்கிறார்
இத்தை செய் என்றும் வேறே எதுவும் செய்யாதே என்றும் உபதேசம் )
அப்பிள்ளை உரை –
வளையமாக வைக்கப்பட்ட திருத்துழாய் பொருந்தி வர்த்தியா நிற்பதாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான
நீண்ட திரு அபிஷேகத்தை யுடையவனாய்
கண்டவாற்றால் இவனே தேவாதி தேவன்-ஸமஸ்த லோக ஸர்வேஸ்வரேஸ்வரன் – என்று இருக்குமே
ஆஸ்ரிதரான எங்கள் பக்கலிலே பழையதாக அநாதி காலமாக வ்யாமுக்தனானவனை மனசால் அனுசந்தித்து
க்ஷணம் காலமும் நழுவாமல் உதாரமாய் இருக்கும் கைகளைக் கொண்டு
அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
அபிமான கனத்தாலே முடி சூடினால் போலே இறுமாந்து இருக்கும் தலையைத் தாழ்த்தி –
குளிர்ந்த புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு (பவ்யமாய்) பக்ந அபிமானராய் –அபிமான பங்கமாய் என்கிறபடி –
உங்களுடைய சஷூஸ் வாக்கு இந்திரியம் அவன் வடிவு அழகைக் கண்டு ஸ்துதிப்பதாகவும்
அவனுடைய திவ்ய குண சேஷ்டிதங்களைக் கேட்டு ஸ்ரோத்ர இந்திரியம் க்ருதார்த்தராக
(படைக்கப்பட்ட பயன் பெற்றதாக )ஆவதாகவும்
வழா வழுவாதே -ஒரு ஷணமும் விடாமல் என்றபடி
————————————————————————–
அப்பிள்ளை உரை அவதாரிகை
என்னை ஆஸ்ரயிக்குங்கோள் என்று சொல்லுகிறது என் என்ன
நீ உன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து
ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே என்கிறார்
பெருமானை மதியார் படும் பாடு சொல்லப்பட்டது
மதிப்பார் பெரும் பேறும் சொல்லப்பட்டது
(அவனை மதியாதார் படும் பாட்டையும்
ச து நாகவர ஸ்ரீ மான் மனஸா சிந்தயத் ஹரிம் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் மனத்தால் எண்ணியதால்
பெற்ற நன்மையையும் அறிந்தால் ஆகாதோ
இது அவனை நோக்கி அருளிச் செய்யப் பட்டதாகிலும்
முன்னும் பின்னும் போலே பர உபதேசத்தில் நோக்கு )
மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12
பதவுரை
மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால் வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
நான்கு வேதம் சாஸ்திரம் ஆராய்ந்தும் அறியாமல் என்றுமாம்
நான்கு வேதங்களில் போய் மதியார் நான்கில்-நான்கு யோனிகளில் போய் கீழ் வீழ மதித்தாய்
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றையொன்று விட்டுப் போய்
இரண்டின்–அவ் விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷ ஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.
ஆஸ்ரயி யாதவர்கள் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவரங்கள் ஆகிய நான்கு யோனிகளிலும்
போய் விழும்படி ஸங்கல்பித்தாய்
ஸந்த்ரனுடைய வியசனத்தைப் போக்கினாய்
மடுவில் இருந்த பெரிய முதலையின் பலத்தை அழிக்கைக்காக அங்கே எழுந்து அருளி
திருவாழியைப் ப்ரயோகிக்க ஸங்கல்பித்தாய்
ஆனையும் முதலையும் போய் இரண்டினுடைய ஸ்தானத்தை
முதலை கந்தர்வ பதவியையும்
யானை தன் திருவடிகளையும் அடையும்படி ஸங்கல்பித்தாய் –
இப்படி மூன்று சங்கல்பமே மூன்று மதித்தாய் பத அர்த்தம்
மதித்தாய் போய்-
நான்கின் மதியார் போய் வீழ மதித்தாய் –
வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் –
(நான்கில்
நாலு வேதம் ஆதல்
நான்கு யோனிகள் -தேவாதிகள் ஆதல்
மதித்தாய் போய் -மிகவும் நினைத்தாய் )
மதியார் நான்கில் போய் வீழ மதித்தாய் –
உன்னை மதியாதவர்களை
ஷிபாமி யஜஸ்ரம் அஸூபாந அஸூரீஷ்வே வை யோநிஷூ -என்னும்படியே
சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்
(சதுர்வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி
வேத பார பராக்ராந்தஸ் ச வை ப்ராஹ்மண கர்த்தப -என்று
நான்கு வேதங்களையும் அறிந்து வாஸூ தேவனை அறியாமல் இருக்கும் விப்ரன்
குங்குமம் சுமந்த கழுதை போல் ஆவான் )
(தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாமி யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
முன் கூறியபடி என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் –
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை
மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்)
மதி கோள் விடுத்தாய் –
சந்த்ரனுக்கு வ்யசனத்தைப் போக்கினவனே
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு
பொய்கையிலே கிடந்த பயாவஹமான முதலை-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-
விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-
திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
இரண்டும் போய் இரண்டின் வீடு மதித்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-
ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-
நினைத்தாய்-
(முதலைக்கு சாப விடுதலை சாப மோக்ஷமும்
கஜேந்த்ரனுக்கு ஸாஷாத் மோக்ஷமும் அருள சங்கல்பித்தாயே )
(துஷ்ட நிக்ரஹம் ஸங்கல்பத்தால் செய்யலாம் -இஷ்ட பரிபாலனமும் திருவாழி கொண்டு செய்யலாம்
திவ்ய மங்கள விக்ரஹமும் திவ்ய ஆயுத திவ்ய பூஷணங்களும் காண ஆசைப்பட்ட பக்தர்களுக்காக அன்றோ
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம் –பக்தாநாம் ப்ரஸாசாததே -ஜிதந்தே
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-)
அப்பிள்ளை உரை —
சர்வாதிகான உன்னை நிறைந்த அனுபவம் பண்ணி ஆஸ்ரியாதவர்கள் உன்னை அகன்று
தேவாதி சதுர்வித யோனிகளில் கர்ம அணுகுமாகப் போய்
கிருபை இல்லாமல் பிறவிச் சூழலில் சிக்கும் படி
சங்கல்பித்து அருளினாய்
நான்கு யோனிகளில் -தேவ யோனியில் உள்ளான் ஒருவன் -சந்திரன் –
ஷய ரோகத்தால் வந்த வியசனத்தை போக்கி அருளினாய்
உத்க்ருஷ்ட யோனியில் உள்ளார்க்கு மட்டும் அல்லாமல்
திர்யக் யோனியில் பிறந்த கஜேந்த்ரனுக்கும் மடுவிலே
பாகவத திருவடி பிடிக்க -அவசர பிரதீஷானாய் கிடந்து நலிந்த முதலையை விடுவிக்க
சங்கல்பம் இல்லாமல் திருவாழி விட நினைப்பிட்டு அருளினாய்
பக்தனுக்காக அன்றோ அவன் திருமேனிகள் திரு ஆயுதங்கள் எல்லாம் -நேராக வந்தால் தானே சேவை சாதிக்க முடியும்
முதலையும் யானையும் ஆகிய இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய்
இரண்டுக்கும் சாப மோக்ஷமும் சாஷாத் மோக்ஷமும் உண்டாகும் படி
அருளாலே திரு உள்ளம் பற்றி அருளினாய்
நான்கின் மதியார் போய் வீழ என்றது
நான்கு வேதங்களில் உள்புகுந்து உன்னை உணராதவர்கள் அதபதிக்கும் படி நினைத்தாய் –
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –