(ஆழ்வார் பிரார்த்தனை கேட்டதும்
மறப்பேன் என்று செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -திருவாய் 1-10-10-
நீரும் உம் மனமும் மறந்தாலும் நான் விடேன் என்று நெஞ்சிலே நிலை நின்றான்
மேல் விழுந்து ஸ்தாவர பிரதிஷ்டையாக இருப்பதைக் கண்டு ஆழ்வார்
இச் செல்வம் வேறே யாருக்கும் இல்லை என்று இனியர் ஆகிறார்
தானே ஒன்றி நின்ற திரு -நிர்ஹேதுக விஷயீ காரமான திரு -பெற்றேன் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக வந்து விஷயீ க்ருத சம்பத்து
எனக்கே இப்பொழுது தான் உள்ளது
மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61–
பதவுரை
மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று-கதி என்று – ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.
கேதம் துக்கம்
ஏதம் பொல்லாங்கு -அஞ்ஞானாதிகள்
தஞ்சமாகக் கொள்ளில் மனக்கேதம் சாரா
மனசுக்கு ஏதம் சாரா என்றுமாம்
தஞ்சமான செயலை செய்யுமவனை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில்
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று
தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –
அது தானும் இன்று-
(ஏழு உலகை ஒன்றி நின்றி ஆணை ஓட்டினான் தான்
சென்று ஒன்றி நின்ற திரு எனக்கு இன்று
என்று அன்வயித்து அர்த்தம் அருளிச் செய்கிறார் )
(அவனே இல்லை முதல் நிலை
அவன் தஞ்சமான செயல்களை செய்யும் உபகாரகன் என்று உணர்தல் அடுத்து
செய்தாலும் எனக்கு என்ன மூன்றாம் நிலை
இப்படி உள்ளவனை நான் பற்றினேன் -நான்காம் நிலை -ஸூவ கத ஸ்வீ காரம் –
இப்படி செய்பவன் தானே என்னைப் பற்றி திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுவான் ஐந்தாம் நிலை -பர கத ஸ்வீ காரம் )
(முதல் இரண்டு அடிகளால் ஸ்வ கத நிஷ்டர் விஷயத்தில் எம்பருமான் இருக்கும் படியும்
மேல் இரண்டு அடிகளால் பர கத நிஷ்டரான தம் விஷயத்தில் அவன்
ஏக சக்ராதிபதியாய் இருந்து வைத்து வலிய வந்து
தம்முடைய மனத்திலே பொருந்தி இருக்கப் பெற்ற பெரும் செல்வம்
ஆயர்கள் -ஆய்ச்சிகள் -செல்வச் சிறுமீர்கள் -பசுக்கள் -கன்றுகள் -உத்தர உத்தரோத்ரம்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
கன்று மேய்த்து இனிது உகந்த
காலி மேய்க்க வல்லான்
கன்று மேய்த்து விளையாட வல்லான்
ஆக இப்பாட்டால்
ப்ரஜாபதிஸ் த்வம் வேத -ப்ரஜாபதிம் த்வோ வேத -யம் ப்ரஜாபதிர் வேத ஸ புண்யோ பவதி –என்று
பரம புருஷன் ஒருவனைத் தானே அறிகிறான்
பரம புருஷனை ஒருவன் தானே சென்று அறிகிறான்
இவர்கள் இருவரில் எவனைப் பரம புருஷன் அறிகிறானோ அவனே சிறந்தவன் என்னும்
வேதாந்த அர்த்தம் வெளியிடப்பட்ட தாயிற்று -)
அப்பிள்ளை உரை
அங்கீகார விரோதிகளை
மது கைடபர்களைப் போக்கினால் போல் நிரசித்து
நிர்ஹேதுகமாக தானே வந்து விஷயீ கரிக்கும் சர்வேஸ்வரனை
பொதுவாக இல்லாமல்
அசாதாரணமாக -தனக்கே -மட்டும் -என்று உணர்ந்து
அவன் அபி நிவிஷ்டனாய் இருக்க
விசேஷணமான ரக்ஷகன் என்று இசைந்து கைக் கொண்டால்
அவனுக்கு ஒரு நாளும் மனசில் துக்கமே வராதே
இப்படி ஸ்வகத நிஷ்ட நிலை இருக்க
ஏகாக்ர சித்தனாய்
ஸமஸ்த லோகத்தையும் திவ்ய ஸாஸனம் -அப்ரதிஹதமாக -விடாதே நின்று தன் ஆணை செல்லும் படி நடத்தியவன்
தானே நிர்ஹேதுகமாக ஸாதரமாக வலிய வந்து பொருந்தி நின்று விஷயீ கரித்த இந்த சம்பத்தானது
இதுக்கு முன்பு இன்றிக்கே
இன்று எனக்கு ஒருவனுக்குமேயாய் உள்ளது
ஒன்றி நின்ற திரு எனக்கே தான் உள்ளது –
—————————————————————————————–
(தன் பெருமையைப் பார்த்து இன்புற்ற ஆழ்வார்
தேவதாந்த்ர பஜநம் பண்ணி சம்சாரிகள் இத்தை இழந்து போகிறார்களே என்று
வருந்தி அருளிச் செய்கிறார்
பிறர் துன்பம் கண்டு பொறுக்க மாட்டாமை அன்றோ ஸ்ரீ வைஷ்ணவத்வ லக்ஷணம் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்ரீ யபதியை சர்வேஸ்வரன் என்று அறியாதே
தங்களை ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரனாக அறிவு கேடருக்கு உபதேசிக்கிறார்களே –
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திரு விருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–
பதவுரை
திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கப் பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பர தத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற ப்ரஹ்மாதிகளில் சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பர தெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.
திரு மார்பில் ஸ்ரீ தேவி நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ தரனுடைய வண்டுகள் மோதுகிற
குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சுற்றிக் கொண்டு தரித்து
ஸ்ரீ தேவி வாஸம் செய்கிற வலது பக்கத்தை யுடைய ஸ்ரீ மன் நாராயணனே
அப்ரகம்யமான பரதத்வம் என்று அறியாதவர்கள்
கர்ப்ப வாஸம் பண்ணுகிற ஷூத்ர தேவதைகளை பரதேவதை என்று
வித்யையை அறியாத மூடர்களுக்கு உபதேசிப்பார்கள் –
திரு நின்ற பக்கம்-
அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே
இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்
அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
திறவிது என்று ஓரார்
திறவிதாவது
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய்
வேறு ஒன்றால் அறியாதது –
ஒரு சேதனர் ஆகில் அறியலாம் என்கை –
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர்-
தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்
கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த
அறிவு கேடருக்கு உபதேசிப்பார்கள் –
திருவிருந்த மார்பில் சிரீதரன் தண் வண்டுலவு தண்டுழாய் தார் தன்னைச் சூடித் தரித்து –
மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே
ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச்
சொல்லும்படி அன்றிக்கே
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்தருளி இருக்கையாலே
ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை உடையவன் ஆனவனுடைய
மது வெள்ளத்தாலே வண்டுகள் திரியா நின்றுள்ள
செவ்வியை உடைய திருத் துழாயை
சூடிக் களைந்தன சூடும் -என்னும்படியே
தலையால் தரித்து
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீய பதி தானே-
(ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ் னுதே –
அபாங்கா பூயாம்ஸோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத ஸிஹ்னைஸ் தரந்தி –
ஸ்ரீ மான் என்று பிறரைச் சொல்வது உபசார வார்த்தை யாகுமே
ஸ்ரீ தரனான இவனுக்கு உரித்தான அசாதாரணம் )
(1-ஸ்ரீ வத்ஸ வஷா –திரு மறு மார்பன்
2-ஸ்ரீ வாஸா –திருவுக்கு இருப்பிடம்
3-ஸ்ரீ பதி -திருவின் நாயகன்
4-ஸ்ரீ மதாம் வர -திருவாளர் தலைவன்
5-ஸ்ரீ த -திருவை அளிப்பவன்
6-ஸ்ரீ ஸ -திருவுக்கும் திருவாக இருப்பவன் ஸ்ரீக்கும் ஈசன்
7-ஸ்ரீ நிவாஸ -திருமகள் கொழுநன்
8-ஸ்ரீ நிதி -திருவின் பெட்டகம் -திருவுக்கும் திரு
9-ஸ்ரீ விபாவந–திருப் புகழாளன்
10-ஸ்ரீ தர -திருவைத் தரிப்போன்
11-ஸ்ரீ கர –திருவுடன் பிறப்போன்
12-ஸ்ரேய ஸ்ரீ மான் –திருவை உடையோன்
என்று 608–619-திரு நாமங்களை ஸ்ரீ வியாசர் வெளியிட்டார் )
அப்பிள்ளை உரை
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கிற திரு மார்பை யுடையவனாய்
அத்தாலே ஸ்ரீ தரன் என்ற திரு நாமம் யுடையவனாய்
ஸர்வேஸ்வரனுடைய
மது ஸம்ருத்தியாலே வண்டுகள் -இதஸ் ததஸ்- இங்கும் அங்கும் சஞ்சரியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாய் மாலையை
தொடுத்த –சூடிக் களைந்தன சூடும் அடியார்களான –
தலைக்கு அலங்காரமாகத் தரித்து
அத்தாலே லப்த சத்தாகரராய் -சத்தா லாபம் பெற்று -தரித்து
இறையும் அகலகில்லேன் என்று பெரிய பிராட்டியார் நிரந்தர வாஸம் பண்ணும் –
வலது பக்கம் பிராட்டி -பிரதானம் இதுவே -(ருத்ரனுக்கு இடப்பக்கம் -அப்ரதானம் அது )
வசன ஆபாச யுக்தி ஆபாசங்களால் சலிப்பிக்க ஒண்ணாத பர வஸ்து என்று யுக்தி யுக்தமாக அறுதி இட மாட்டாதே
தங்களோடு ஓக்க கர்ம வஸ்யராய் கர்ப்ப வாசம் பண்ணி பிறப்பது இறப்பதுமாகிய
ஸூத்ர தேவதைகளை சாஸ்த்ர அப்யாஸத்தில் புதியது உண்டு அறியாத தங்களோடு ஒத்த-
அறிவு கேடருக்கு கல்லாதவர்களுக்கு -உபதேசியா நிற்பார்கள் –
————————————————————————————
கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை –
இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –
(ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -பெரிய திருவந்தாதி –25-என்று
நெஞ்சை மீட்டு தாம் பெற்ற நன்மையைப் பேசுகிறார் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
கல்லாருக்கு உரைப்பர் என்று முதலில் அறிவில் புதியது உண்டு அறியாத
நாட்டாரை கர்ஹித்து சொல்லா நின்றீர்
அவர்களில் காட்டில் உமக்கு ஏற்றம் தான் என்
இது அன்றோ நான் சத்தை பெறும்படி தரிக்கைக்காக போது போக்கின படி-என்கிறார் –
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63–
பதவுரை
தாரா கணம்–நக்ஷத்ர கணங்களினுடைய
போர்–(ஸூபாஸூப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச் சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
பதஞ்சலி ஆதிசேஷ அவதாரம் யோக சாஸ்திரம் உபதேசித்ததும் உண்டே
தெரித்து–அநுஸந்தித்தும்
தெரிவித்து இருக்க முடியாதே முதல் நிலையிலேயே -தெரிந்து மருவி தெரித்து
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)-வாசித்தும் வாசிப்பித்தும் ‘
கேட்டும்–(ஆங் காங்கு) ஸ்ரவணம் பண்ணியும்-கேட்டும் கேட்பித்தும்
வணங்கி–நமஸ்காரம் பண்ணியும்
வழி பட்டும்–உபசாரங்களைச் செய்தும்
இரண்டு சப்தங்கள் -த்ருட விரத -பக்த்யா நமஸ்த்யந்த -கீதை போல் இங்கும் –
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக.
சத்த பெற நீங்களும் அப்படியே செய்யுங்கோள்
நக்ஷத்ர மண்டலங்களை யுடைய ஸஞ்சாரத்தை விசதமாகச் சொன்ன
(சாமா நாதி கரண்யத்தால் ஆத்மாவாக இருந்துள்ள உன்னை என்றபடி )
சத்ருக்களுக்குப் பயங்கரமான திருவனந்த ஆழ்வானைத் திரு மேனியாக யுடைய
உன்னை அனுசந்தித்தும்
எழுதியும்
வாசித்தும்
கேட்டும்
வணங்கியும்
அதுவே யாத்ரையாய் இருந்தும்
அர்ச்சித்தும்
போது போக்கினேனாகவே தரித்து இருந்தேன் –
தாரா கணப் போர் விரித்துரைத்த வென்னாகத் துன்னை தெரித்து-
நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை
விஸ்த்ருதமாகச் சொன்ன
திரு வனந்த ஆழ்வானுக்கு
ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை அனுசந்தித்தும்
எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும்
நிர்மமனாய் வணங்கி
அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன்
தரித்து இருந்தேனாகவே —
ஆகவே தரித்து இருந்தேன் –
தரித்து இருந்தேனாகவே –
தரித்து இருந்தேன் ஆகைக்காக
பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-
ஏவகாரம் அவ்யயம் -எல்லா வற்றாலும் தரித்து இருந்தேன் என்றவாறு
சத்தை உண்டாகைக்காக இப்படிக்கு காலத்தைப் போக்கினேன் என்று கிரியை யாதல் என்றுமாம்
(தெரித்தும் எழுதியும் வாசித்தும் கேட்டும் -தெரிவித்து என்று கொள்ளலாம் ஆகிலும்
முதலில் மனசால் அனுசந்தித்து என்பதே க்ரமத்துக்குச் சேரும்
கேட்டும் -முதல் ஆழ்வார்கள் அருளிச் செயல்களையும் உபதேச வசனங்களையும் கேட்டு
வணங்கி மமகாராம் அற்று அதுவும் அவனது இன்னருளே என்று திருவடிகளிலே வணங்கி
வழிபட்டும் பூசித்தும்
மநோ வாக் காயங்களால் ஆராதனம் செய்து
வழிபட்டும் பூசித்தும் -இரண்டு பத பிரயோகம் ஆராதனம் பொழுது போக்கு என்று காட்டவே
சத்தைக்காவே இவற்றைப் போது போக்காகக் கொண்டேன் என்றவாறு –
காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-9-10-2-
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-3-–என்று
கால ஷேப அர்த்தமாகவும் –
ஸ்வயம் போக்யமாகவும் –
பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்த அருளிச் செயல்கள் இதே போல் )
அப்பிள்ளை உரை –
நக்ஷத்ர கணங்களுடைய ஸூபாஸூப நிமித்தமான பரஸ்பர சஞ்சாரத்தை
லோக ரக்ஷண அர்த்தமாக ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகமாக பரக்க அருளிச் செய்த
பிரதிகூலருக்கு அணுக ஒண்ணாத வெம்மையை யுடைய
திரு அனந்தாழ்வானுக்கு அந்தர்யாத்மாவாய் நின்ற உன்னை
(இவனே அந்தராத்மாவாய் உபதேசித்தான் என்றுமாம் -வேதங்கள் அங்கங்கள் கொடுத்தவன் இவனே )
விசத தமமாக அனுசந்தித்து
அனுசந்தித்த பிரகாரத்தாலே எழுதியும்
நாத்தழும்பு எழும் படி பலகாலம் அத்தைப் படித்தும்
அதன் அர்த்தத்தை அறிந்தவர் -வேறே சிலர் இடம் கேட்டும்
(பெருமாள் ரிஷிகள் இடம் தாமே கேட்டுக் காட்டி அருளினார்)
பின்னையும்
சததம் கீர்த்யந்த –நமஸ்தந்த –ஸ்ரீ கீதை -என்கிறபடியே
நிர் மமனாய் -திருவடிகளில் அநவரதம் பிராணாமம் பண்ணியும்
மத் யாஜீ பவ –
(பக்தியையும் பக்தி யோகனையும் கொண்டாடி கடைசி ஸ்லோகத்தில்
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–34
மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.
மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.
மன்மனா பவ மத பக்த மத் யாஜீ மாம் நமஸ்க்ரு மாம் ஏவைஷிதி –மத் மத் -மீண்டும் மீண்டும் அருளி
மனதை செலுத்து -கையால் தொழுது-வாயால் ஸ்தோத்ரம் பண்ணி -கையால் தொழுது -உள்ளத்தால் நினைத்து –
வணங்கி -பக்தி பண்ணி ஒவ்வொரு தடவையும் என் விஷயத்தில் என்று காட்டி
கிருஷ்ண விஷயத்திலே பக்தி இருக்க வேண்டுமே )
தத் தத் காலங்கள் தோறும் சமாராதனம் பண்ணி
இப்படி கால ஷேபம் பண்ணினானாய் அன்றோ நான் தரித்து இருந்தேன்
தரித்து இருக்க இப்படி கால ஷேபம் பண்ணினேன் என்றுமாம்
(சம்சாரம் மறு காந்தாரம் -பாலை வனத்தில் சோலை வனம் போல் இருக்க )
————————————————————————
(தமது கால ஷேபத்தை அருளிச் செய்தவர்
பிறருக்கு கால ஷேப பிரகாரத்தை உபதேசிக்கிறார் இதில் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
என் நிலை இதுவான பின்பு நீங்களும் என்னைப் போல்
ஆகர்ஷகமான அழகை யுடையவனாய் சர்வாதிகனான ஸர்வேஸ்வரனை
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து ஏத்துங்கோள்
போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-
பதவுரை
பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆஸ்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல
திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேஸ்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
மநோ வாக் காயங்கள் வியாபாரங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு
ஸ்வர்ண மயமான மகர குண்டலங்களை அணிந்த திருச் செவிகளை யுடையவனாய்
ஜகத் காரணனாய்
சர்வாதிகனாய்
ஸர்வ சேஷியாய்
நல்லவனாய்
ஸர்வ அந்தர்யாமியாய்
நமக்கு மேல் வரும் ஜென்மங்களைப் போக்கும் திரு நாமங்களை யுடையனான
ஸர்வேஸ்வரனை அனுசந்திப்பதே நல்ல உபாயம்
ஆகையால் புஷ்பங்கள் என்றவைகளை ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –
போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ
இன்ன புஷ்பம் என்ற நியதி இல்லை –
பூவானதை எல்லாவற்றையும் கொண்டு
திருவடிகளிலே சமர்ப்பித்து வணங்கி
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்
பொன் மகரக் காதானை –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி
ஸ்ப்ருஹணீ யனானவனை –
ஆதிப் பெருமானை –நாதானை நல்லானை நாரணனை-
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே
நமக்கு உத்பாதகனானவன் –
ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய்
நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ் வாத்மாவுக்கு உறுவது –
(பத்ரம் புஷ்பம் பஃத்யுபஹ்ருதம் அஸ்நாமி
புரிவதுவும் புகை பூவே
பூசும் சாந்து என் நெஞ்சமே -புனைந்த கண்ணி –அணிகனும் என் கை கூப்பிச் செய்கையே
கள்ளார் துழாயும் கண்வலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் புள்ளாய்
ஓர் ஏனமுமாய் புக்கு இடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே
இட்டு இறைஞ்சி யேத்துமினோ
இட்டு -காயிக கைங்கர்யம்
இறைஞ்சி -வாசிக கைங்கர்யம்
ஏத்துமினோ -மானஸ கைங்கர்யம்
ஆதிப் பெருமானை நாரணனை
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே –திருவாய் –4-3-6-
நாதனை நாரணனை
நாதன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -திருவாய் -2-7-2-
நல்லானை நாரணனை
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -பெரிய திருமொழி –6-10-4-
நாரணனை நம் ஏழு -எழு -பிறப்பு அறுக்கும் சொல்லானை
ஸங்கீர்த்த நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்கோர் ஸூநீநோ பவந்தி
அடியார் படு துயராயின எல்லாம் நிலம் தரம் செய்யும் நாராயணா என்னும் நாமம் –பெரிய திருமொழி –1-1-9-
பிறப்பு அறுக்கும் சொல்லானை என்று
பொதுவான திரு நாம சங்கீர்த்தனம் என்றும் கொள்ளலாம்
யந் நாம சங்கீர்த்தநதோ விமுச்யதே
யந் நாம சங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோஷம் ஆப்நோதி )
அப்பிள்ளை உரை
ஸ்ப்ருஹணீயமான திரு மகர குண்டலங்களாலே அலங்க்ருதமான திருக் காதுகளை யுடையவனாய்
அழகு கண்டு மேல் விழுகை அன்றிக்கே
அழிந்து கிடக்கிற காலத்திலேயே இவற்றை உண்டாக்கின சர்வாதிகனாய்
சர்வருக்கும் நிருபாதிக சேஷியாய்
ஆஸ்ரித விஷயத்தில் அதி மாத்ரா வத்சலனாய்
பிரிவில் (தான்) தரியாமல் உள்ளே பதி கிடந்தது சத்தையை நோக்கிக் கொண்டு
(அப்ருஹாத்மக தத்வம் இல்லை உண்மை இங்கே அவன் சத்தைக்காக என்கிறார் )
நம்முடைய ஒன்றன் பின் ஒன்றாக ஓழுக்கு ஆறாமல் வரும் ஜென்ம பரம்பரைகளை
வேர் பற்றோடு அறுத்து விட வல்ல திரு நாமங்களை யுடையவனை
கைக்கு எட்டிய எல்லாப் பூக்களையும் பரிமாறி (ஏறிப் பறிக்க வேண்டாம்)
நிர்மமராய் -நிர்மலராய் திருவடிகளில் விழுந்து
(ப்ராப்யாந்த்ர ப்ரயோஜனாந்த பரராய் இல்லாமல் )
சொன்ன குணங்களுக்கு உண்டான திரு நாமங்களை சொல்வதே நல்ல வாய்ப்பு
———————————————————————–
(கீழே சொல்லுவதே சூது என்று
பிறருக்கு உபதேசித்த படியே தாம் அனுஷ்டித்த படியையும்
அதனால் பெற இருக்கும் பயனையும் பேசுகிறார் இதில் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்மர்த்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே
பரம பதத்துக்கு ஸ்மரணத்துக்கு மேல் அவ்வருகு உண்டோ என்கிறார்
சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன் மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-
பதவுரை
மாது ஆய–அழகு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆஸ்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச் சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்ல வாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என் மனத்தில் உறுதி கொண்டேன்.
ஸூந்தரனாய் ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ யபதியைப் பிரதிபாதிக்கிற பிரபந்தங்கள் எதை யாகிலும்
வந்தபடி அனுசந்தித்துக் கொண்டு இருக்கிற எனக்கு
ஸ்ரீ வைகுண்டத்தில் இடம் இல்லையா சொல்லுங்கோள்
இதுவே நல்ல உபாயம் என்று என் மனஸ்ஸில் எண்ணினேன் —
சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன்
உறுவதாவது என்னெஞ்சிலே மநோ ரதித்தேன்
சொன்மாலை -இத்யாதி
அழகு தான் வடிவு கொண்டாற் போலேயாய்
வ்யாமுக்தனாய் இருந்துள்ள
ஸ்ரீ ய பதியைச் சொல்லப்பட்ட பிரபந்தத்தை ஏதேனும் ஒருபடி
அனுசந்திக்கிற எனக்கு பரம பதத்தில்
இடம் இல்லையோ –
ஸ்ம்ருதி மாத்ரம் உடையாருக்கும்
பரம பதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே
பரம பத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ் வருகு வேண்டா என்று தாத்பர்யம்
மாதாய -அழகாய
மாது -அழகு-
(நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் –பெரிய திருவந்தாதி –58-
ஆயாஸ ஸ்மரணே கோஸ்ய ஸ்ம்ருதே யச்சதி ஸோபநம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-17-78–என்று
இவனை நினைக்க என்ன ஸ்ரமம் உள்ளது
நினைத்த மாத்திரத்திலே எல்லா நன்மைகளும் அளிப்பவன் அன்றோ
நினைவுக்கு மேல் வேறே ஓன்று வேண்டுமோ -)
அப்பிள்ளை உரை
அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போல் இருக்கிறவனாய் ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ யபதியை
சொன்ன ஸப்த சந்தர்ப்ப ரூபமாகிய
இந்தத் திரு வந்தாதி பிரபந்தத்தை
ஏதேனும் நல்லதொரு வல்லதொரு பிரகாரத்தால் பாடும் எனக்கு
(ஸ்ரீ மத் பாகவதாதிகள் என்று கீழே பார்த்தோம் )
பகவத் குண அனுபவத்துக்கு ஏகாந்தமான பரம பதத்தில் இடம் இல்லையோ சொல்லுங்கோள்
இங்கேயே பண்ணும் படி அருளின பின்பு
இதுவே நமக்கு நல்ல வாய்ப்பு என்று என் மனசில் அத்யவசித்தேன்
மாது அழகு
மாதாயா -அழகே அவன் –
அழகு என்றும் அழகுக்கு ஆஸ்ரயன் அழகன் என்றும் வேறே வேறே இரண்டு இல்லை
அழகே ஒரு வடிவு கொண்டவன்
அன்றிக்கே
மாதாயா
தாய் போல் பரிபவன் என்றுமாம்
மாயவனை பாட பேதம்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையவன் என்றவாறு
—————————————————————————————-
(என் நெஞ்சத்து எண்ணினேன் என்றார் கீழ்
எண்ணியவுடன் அவன் பட்ட பாட்டையும்
அதைக் கண்டு தாம் ஈடுபட்ட படியையும்
அருளிச் செய்கிறார் இப் பாட்டில் –
இடமாவது இன்றும் எல்லாம் மேல் உள்ள காலம் எல்லாம் என் நெஞ்சம் -சாத்யம்
இடமாவது பண்டு இடமாவது பட நாகணை -சாதனம் நெடுமாற்கு )
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்ரீ வைகுண்டத்தில் இடம் இல்லையோ என்று நான் மநோ ரதித்தவாறே
எம்பெருமான் வந்து என் நெஞ்சிலே புகுந்து அருளினான் என்று பிரீதர் ஆகிறார் –
(அத்தை விட உமது திரு உள்ளம் மிகவும் உத்தேச்யம் அன்றோ –
நெஞ்சமே நீள் நகராகக் கொண்ட தஞ்சன் )
இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்–66-
பதவுரை
பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்-சந்த்ர சேகரனையும்
அயனை–பிரமனையும்
ந ஜாயதே இதி அஜன் பிறப்பிலி நரஸிம்ஹ திரு நாமங்களில் இதுவும் ஓன்று
கர்ம வஸ்யன் நான்முகன் கர்ப்பத்தில் பிறவாமல் இருந்தாலும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.
முற்காலத்தில் விரிந்த படங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளின ஸர்வேஸ்வரனுக்கு
இப்போது எல்லாம் வாசஸ் ஸ்தானம் என்னுடைய ஹிருதயமாய் இருக்கும்
சந்த்ரனைத் தரித்த ருத்ரனோடே கூட ப்ரஹ்மாவை
தத்வ யாதாத்ம்ய ஞானமுடைய நான் ப்ராப்யமாக எண்ணேண்
அவர்களை ப்ரதக்ஷிணமும் செய்ய மாட்டேன் –
இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு வாசஸ் ஸ்தானம்
என்னோடு சம்ஸ்லேஷிப்பதுக்கு முன்பு எல்லாம்
தன்னோடு சம்ஸ்லேஷத்தாலே விஸ்த்ருமான பணத்தை உடைய திரு வநந்த ஆழ்வான் –
இப்போது எல்லாம் என்னுடைய ஹிருதயம் –
திடமாக வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் –
சந்த்ரனை தரித்தானாய் இருக்கிற ருத்ரனையும் –
திரு நாபீ கமலத்திலே உத்பன்னன் ஆகையாலே
அஜன் என்று இருக்கிற ப்ரஹ்மாவையும்
திருட பதார்த்தங்களாக நினையேன் –
வையேன் ஆட்செய்யேன் வலம் –
அதுக்கடி கூரியேனாய்(வை கூர்மை -வையேன்- கூரிய புத்தியை யுடைய நான் )
சார அசார விவேகஞ்ஞனாய் ஆகை
பிரதிபுத்தா ந சே வந்தே -என்று
கூரியர் ஆனவர்கள் தேவதாந்தர பஜனம்
பண்ணார்கள் இறே-என்கை-
வலம் –
இதுக்கு எல்லாவற்றுக்கும் அடி
பகவத் பரிக்ரகமான பலம்
வலம் செய்யேன்-
தேவதாந்த்ரங்கள் பக்கல்
ப்ரதக்ஷிணாதிகளைச் செய்யேன் என்றுமாம்
வையேன் –
மனசிலே வையேன் -நினையேன் என்றும்
வையேனான நான் -கூரியனான நான்-என்றும்
இரண்டு நிர்வாஹம் –
கூர்மை -ஜ்ஞானக் கூர்மை-
(ப்ராஹ்மாணம் ஸிதி கண்டஞ்ச யாச் சாந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -மோக்ஷ தர்மம் –
அல்ப பலமே கொடுப்பதால் புத்தி கூர்மை உள்ளார் ப்ரஹ்மாதிகளை ஆராதிக்க மாட்டார்கள் – )
(இடமாவது என் நெடிய மாற்கு
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -5- 4-9 –
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–64-
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–65-
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
அப்பிள்ளை உரை
என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திருவனந்தாழ்வான் மேல்
பள்ளி கொண்டு அருளும் சர்வேஸ்வரனுக்கு
இப்போது தொடங்கி மேல் உள்ள காலம் எல்லாம்
(முன் எலாம் திருச்சந்த விருத்தம் -இங்கு பண்டு
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே )
உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் வாசஸ் ஸ்தானம் என்னுடைய மனசாயிருக்கும்
கலா மாத்ர சந்திரனை தலையிலே தரித்து இருக்கிற ருத்ரனோடு தன்னோடே கூட
இதர விஜாதீயமான திரு நாபி கமலத்தில் பிறப்பாலே -அஜன் –
(மற்றவர் போல் கர்ப்ப வாஸம் இல்லாதவன் -சர்வேஸ்வரன் போல் பிறப்பு இல்லாதவன் அல்லவே )-
அத்தாலேயே அபிமானித்து இருக்கும் ப்ரஹ்மாவை
திட வஸ்துகளாக -பர வஸ்துவாக நினையேன்
பர அபர வஸ்துக்களை அலகு அலகாகக் காண வல்ல -(கூர்மை புத்தி உள்ள வை யேனான நான் )
அவர்கள் விஷயமாக பிரதக்ஷணம் நமஸ்காரம் ஆள் செய்தல் அனுவர்த்தனம் பண்ண மாட்டேன்
இவை அனைத்துக்கும் மூலம்
சர்வாதிகனான எம்பெருமானை அண்டை கொண்ட ராஜ குலத்தால் வந்த மிடுக்கு -பலம் -வலம்
சார அசார விவேகஞ்ஞர் தேவதாந்த்ர பஜனம் பண்ண மாட்டார்கள் என்றதே பாரதத்தில்
வையேன் -நான்
புரிந்து குறிக்க மாட்டேன்
அவர்களை வலத்திலே வையேன்
அல்லாத அடிமைத் தொழில்களும் செய்யேன்
—————————————————————————–
(நெஞ்சத்து எண்ணினேன் என்றும்
திடமாக வையேன் மதிசூடி தன்னோடு யயனை -என்றும் சொன்னீர்
நண்ணாதார் முறுவலிப்பதுவும் நல்லுற்றார் கரைந்து ஏங்குவதுவும் உலகு இயற்கை
துன்பம் வந்த போதும் உமக்கு இந்த உறுதி தளராது இருக்குமோ என்ன
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எம்பிரானை ஸ்துதிப்பதில் ஒரு குறையும் இராது என்று
தன் அத்யாவசாயத்தை அருளிச் செய்கிறார் இதில் –
என் நிலை மாறாது -துன்பம் வந்தாலும் விடேன்
அதுக்கும் மேலே அவன் நிலையும் மாறாதே -துன்பம் எவ்வாறு வரும்
பாடுகையே பிரயோஜனமாக கொண்ட அடியேன் -நா பதி
குலம் தரும் வலம் தரும் -கலியன் -தந்ததும் தராவிட்டாலும்
இந்த பிரயோஜனம் பெற்ற நான் எதுக்கு கலங்குவேன் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் இவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை
பஹு குணனான -எம்பெருமான் அவனை ஏத்துகையே உத்தேச்யம் என்கிறார்
வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67-(நம் பதியை பாட பேதம் )
பதவுரை
நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்-எல்லாருக்கும் ஸ்வாமியாய்
நா பதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை-சீர்மை அணனை -நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேஸ்வரனை
சீர்மை பொருந்தி -ஸ்ரீ தரன் என்றுமாம்
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக
(ஏத்துவதை நான் தவிர மாட்டேன்-இதுவே புருஷார்த்தம் என்று இருப்பேன் )
சர்வ சேஷியாய் -எனக்கு ஸ்வாமியாய் -ஞானாதிகனாய்
மற்ற கல்யாண குணங்களையும் யுடையனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் செய்கிற விதம்
ஞான சக்த்யாதி பலனைக் கொடுக்கினும் நலமே -கொடுக்கா விடினும் நலமே
ஸத் குலத்தைக் கொடுக்கிலும் நலமே -அதில் தோஷத்தை விளைக்கிலும் நலமே
எப்போதும் அவனை ஸ்தோத்ரம் செய்வதே எனக்கு உத்தேச்யம் –
நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச சீரணனை ஏத்தும் திறம் –
நன்றாக சர்வ ஸ்வாமியாய்(நலமாக நாரணனை-ஸர்வ வியாபியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமல் )
என் நாவுக்கு நிர்வாஹனாய்(நா பதியை)
ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்(ஞானப் பெருமானை- சீரணனை)
(சீருக்குள் ஞானமும் சேருமே என்னில் ஞானம் ஒரு தட்டுமாக மற்றவை எல்லாம் ஒரு தட்டாக
யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் -உன் அடியாருக்கு என் செய்வன் என்று இருக்கும்
அஞ்ஞனனையே ஞானப் பெருமான் )
இருக்கிறவனை நன்றாக ஏத்தும் பிரகாரம் –
வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாக குற்றம் தானாக
பலமாகவுமாம் –
ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –
அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –
இவை அன்று உத்தேச்யம்
அவனை ஏத்துகையே உத்தேச்யம்
சீரணன் -குணங்களை உடையவன்
இதனாலும் ஞானப் பெருமான் என்பதாலும்
ஞானம் குணங்கள் எல்லாவற்றுக்கும் ஆஸ்ரயம் என்கிறது
ரஷிக்கும் ஞானம் உடையவன்
ரஷிக்கும் போது பிராட்டி சம்பந்தம் உண்டாக வேணுமே
ஸ்ரீ தரன் என்றுமாம்
(கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–-ஸ்ரீ திருவாய் மொழி-5-3-5-
என்ற நம்மாழ்வாரின் உறுதியும் இங்கே நினைக்கத் தக்கது -)
அப்பிள்ளை உரை
நார சப்த வாச்யனான சர்வாத்மாக்களுக்கும்
நிருபாதிக ஸ்வாமி
அவர்கள் ஒரு தட்டுமாய் நாம் ஒரு தட்டுமாய் என்னும் படி
(நம் பதி-அரங்கம் ஆளி என்னாளி -அகில ஜகத் ஸ்வாமி அஸ்மத் ஸ்வாமி போல் இங்கும் -விசேஷ ப்ரீதி )
நமக்கு ஸ்வாமியாய்
உனக்கு என் செய்கேன் என்று கரைந்து இருக்கும் அறிவால் -(ஞானப் பெருமானை ) – மிகப் பெரியவனாய்
அல்லாத ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருக்குமவனை (சீரணனை )
எல்லாக் காலத்திலும் ( வைகல் ) அழகியதாய ஏத்தும் இந்த -திறன்-ஸ்வபாவம்
பலம் ஆகிலும் ஆகட்டும் பல ஹானியாகியும் ஆகட்டும்
பகவத் பரிக்ரஹ ரூபமான ஆபி ஜாதியத்துக்கு உடலாக ஆனாலும் ஆகட்டும் – அதற்கு குற்றமாகிலும் ஆகட்டும்
இவை அன்றே உத்தேஸ்யம்
இங்கனே சொல்லிற்று
நன்மையையே தரும் என்னும் கருத்தால்
அன்றிக்கே
நாரணன் -என்று -சர்வேஸ்வரன்
நா பதியை – நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
என்னை ரஷிகைக்கு உறுப்பான அறிவு கொண்டவனாய் – ஞானப் பிரான்
ஸ்ரீ தரனை என்றுமாம் –
——————————————————————————-
பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை
ஸ்வ புருஷமபி வீஷ்ய–என்கிற ஸ்லோகத்தின்
படியே விவரிக்கிறார்-(அஜாமள உபாக்யானம் ஸ்ரீ மத் பாகவதம்
திருநாம பலத்தால் -விஷ்ணு தூதர்கள் -சாது சமாஹம் ஏற்பட்டு
அதனால் பச்சாதாபமும் பிறந்து
மாயா -ஹரித்வாராவில் தொண்டு செய்து மோக்ஷம் பெற்றான் )
(பகவத் பஜனமும் தேவதாந்த்ர வைமுக்யமும் துன்பம் தருவதாகிலும் உத்தேச்யமே என்றார் கீழே
உண்மையில் பகவத் சம்பந்தமே பலம் தரும் என்பதை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் யம கிங்கர சம்வாதத்தில் -3-7-14-
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாஸ ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் பிரபுர் அஹம் அந்ய ந்ரூணாம் ந வைஷ்ணவா நாம்
இந்த ஸ்லோக மொழி பெயர்ப்பாகவும் வியாக்யானமாகவும் இப் பாசுரம் –
ஸ்தோத்ரம் செய்தால் பலம் தருமா தராதா அதி சங்கை கீழே பட்டீர்களே
திருநாம சங்கீர்தன பலம் அறியீர்களாய் இருந்தீர்கள் என்கிறார் இதில் )
(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாஸ ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் பிரபுர் அஹம் அந்ய ந்ரூணாம் ந வைஷ்ணவா நாம்
ஸ்வ புருஷம் -தன்னுடைய தொண்டர்களை
அபி வீஷ்ய -கண்ணாலே பார்த்தான் -பயம் தெரியும் படி -உங்கள் நன்மையில் ஹிதம் சொல்லும் பார்வை
பாஸ ஹஸ்தம் –கையிலே பாசக்கயிறு கொண்ட தனது தூதர்களுக்கு
வததி யம கில தஸ்ய கர்ண மூலே -கொடுமையில் பிரசித்தமான யமன் அவர்கள் காதிலே சொன்னான்
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் பிரபுர் அஹம் அந்ய ந்ரூணாம் ந வைஷ்ணவா நாம் -அறிய பொருள் உரைத்தான் –
பாகவதர் பெருமை அன்றோ உரைத்தான்-மற்றவர்களுக்குத் தான் நான் பிரபு -இவர்களே எனக்கு பிரபு
மதுசூதன பிரபன்னான்–திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் என்பது இதன் ஆழ்ந்த பொருள் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
பகவத் பரிக்ரஹமே பலம் என்பதை-
ஸ்வ புருஷமபி வீஷ்ய– ஸ்லோக கட்டளைப் படியே நிரூபிக்கிறார்
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–
பதவுரை
நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழா மாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவற வேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.
யமன் தன் தூதர்களை அழைத்து அவர்கள் காதில்
ஸர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை மறந்து இருந்தாலும்
தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயியாத மநுஷ்யர்களை வணங்கி அனுகூலராய்ப் போவீர்கள்
இத்தைத் தவிர வேண்டாம் என்றான் –
திறம்பேல்மின் கண்டீர் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது
நாலுபத்தோலை மறுக்கவுமாம் –
(திரும்புதல் சலிக்கையாய்
அத்தால்
அவன் வார்த்தையை மறுக்கையைச் சொல்லுகிறது
நாலு பத்து ஓலை நீங்கள் மறுக்கவுமாம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஜ்ஜைகளை அவர்கள் மறுக்கவுமாம் )
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி
மாந்தரை –
மனுஷ்யரை –
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது
பாச ஹஸ்தம் -என்கிற
க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய்
அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும் கோள்-என்கிறார் –
நமனும் –
சம இதி லோக ஹித (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்று சொல்லப் படுகிறவனும்-
ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –
தன் தூதுவரை
ஸ்வ புருஷம் -என்றபடி
செவிக்கு
கர்ண மூலே -என்றபடி
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று
நெஞ்சு பறை கொட்டுகிறது-
(பறை கொட்டுகை -திடுக்கு திடுக்கு என்கை )
(அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——ஸ்ரீ முதல் திருவந்தாதி-55-)
(மது ஸூதந ப்ரபந்நான் என்றதை அவ்யாப்தி முதலான தோஷங்கள் வாராத படி
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்-என்று விவரிக்கிறார் –
மாந்தர் -மனுஷ்யரை -சாமான்யர்களாக இருந்தாலும் )
(ஸ்வ புருஷம் -தன் தூதுவரை
கர்ணமூலே -காதினுள் -ரஹஸ்யமாக -மூன்று காரணங்கள் விஷ்ணு சித்தீயர்
பிரபுபிர் ஸ்வ ப்ரபாவ பங்க ஸ்தானம் ந பிரகாஸ்யம் இதி நீத்யா விஷ்ணு நாம ஸூச்சைருச்சாரி தேஷு
நாரகினோ அபி தச் ஸ்ரவணாதி நா நரகாந் முஸ்யேரந் தேந ஸ்வாதிகார ஹாநிரிதி பீத்யா
ச கர்ண மூலே கத நம் ராஜ தாரான் மா கா இதி வசனவத் ரஹஸி கதநீயத் வாச்சா -என்று
1-எஜமானர்கள் தங்கள் பெருமைக்கு குறை ஏற்படுவதற்குக் காரணமாயிருக்கும் விஷயத்தை
உரக்க வெளிப்படுத்தலாகாது என்னும் நியாயத்தாலும்
2-விஷ்ணு நாமத்தை உரக்கச் சொன்னால் அதைக் கேட்பது நினைப்பது சொல்லுவது ஆகிய செயல்களால்
முக்தி அடைவார்கள் அதனால் தனது பதவிக்கு அழிவு ஏற்படும் என்ற பயத்தாலும்
3-ராஜ மஹிஷியை அனுபவியாதே-வாக்கியம் போல் ரஹஸ்யமாகச் சொல்ல வேண்டிய விஷயம் என்பதாலும்
காதினுள் சொல்கிறான் -)
அப்பிள்ளை உரை
சேதனர் பண்ணும் பாபங்களை ஏற்றத் தாழ்வு பாராமல் நிரூபித்து சமமாக பார்க்கும் யமன்
தத் அனுக்தமாக சர்வேஸ்வரனாலே தூண்டி விடப்பட்ட யமனும் பத்து எட்டு ஓலை மறுத்து
தரம் பெற்று இருக்கும் அந்தரங்கமான தன் தூதுவரை
கார்ய கௌரவம் தோற்ற வாய் விட்டு அழைத்து (கூவி )
பிறர் கேட்க்கில் என்னாகப் போகிறதோ என்று பயப்பட்டு
அசல் அறியாதபடி செவியில் -ரஹஸ்யார்த்தம் –
நான் உங்களுக்கு ராஜ தர்பார் ஓலக்கத்தில் சொன்ன வார்த்தை போல் என்னாமல் தவிர விடாதே கிடிகோள்
(ராஜ ஓலக்கத்தில் சொன்னதாகில் ஒன்றை யாகிலும் விடலாம்
இது ரஹஸ்ய ஆணை விடாமல் முழுவதாகக் கொள்ள வேண்டுமே )
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை
ஒரு கால் கற்று பின்னை மறந்தார்களாகிலும்
தத் வியத்ரிக்தரான தேவதாந்தரங்களை ஆஸ்ரயியாத
மஹா ப்ரபாவ சாலிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை
போகாமல் இருந்து நிக்ரஹம் தவிர்த்து மாத்திரம் இல்லாமல்
அனுக்ரஹம் பெற அவர்கள் திருவடிகளில் தலையைத் தாழ்த்தி அனுவர்த்தித்து
கையும் சூலமும் பாசக் கயிறுமான க்ரூர வேஷம் விட்டு
விநீத வேஷராய் அனுகூலராய்க் கொண்டு போருங்கோள்
தன் தூதுவரை -என்று ஸூவ புருஷன்
கூவி என்று யபி வீஷ்ய பார்வையின் கருத்து வியக்தமாக்கிய படி
செவிக்கு என்று கர்ணமூல
பரிகர-இறைஞ்சியும் வியக்தமாக்கி
புறம் தொழா மாந்தர் என்று -மது ஸூதன ப்ரபன்னர் பதார்த்தம்
தேவதாந்த்ர பஜனம் பண்ணாமல் இருப்பதே பிரபன்னனாவது
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்த்ராந்தர பரிக்ரகம் அற்று இருப்பதே பதி விரதத்துக்கு வேண்டுவது
இது இறே அவர்களுக்கு ஆகாமைக்கு அடி
————————————————————————————————-
(யம வஸ்யத்தையைத் தவிர்க்கும் பெருமை மாத்திரம் அன்று
செவிக்கு இன்பமாயும்
பூமிக்கு புகலிடமாயும்
கவிகளுக்கு நிறை பொருளாகவும்
மறையின் முழுப் பொருளாகவும் அன்றோ பகவத் விஷயம் இருப்பது என்கிறார் இதில் –
நாம வைபவம் முதல் இரண்டு வரிகள்
நாமி வைபவம் அடுத்த இரண்டு வரிகள்
ரக்ஷகத்வம் பாவனத்வம் முதலில் திருமாலையில்
போக்யத்வம் அடுத்து போல்
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
உம்மைத் தொகையால் கீழே பாவனத்வம்
இங்கும் அடுத்து அடுத்த பாசுரங்களில் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
யம வஸ்யத்தையைத் தவிர்த்து பாவானத்வ மாத்ரமாய் அன்றிக்கே
அனுபவிப்பார்க்கு அத்யந்த போக்யமாய் இருக்கும் என்று
தனது ஆத்ம அனுபவத்தால் -ஸூய அனுபவத்தால் –
திரு நாமத்தினுடைய போக்யதையை அருளிச் செய்கிறார் –
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69–
பதவுரை
செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல் பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
நிவாஸ வ்ருஷ ஸாது நாம் -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.
செவிக்கும் பிரியமாய் இருப்பதும் சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வேஸ்வரன் உடைய திரு நாமமே
லோகத்தாருக்கும் ஸூகமான ஸ்தானமும் அத் திரு நாமமே
கவி பாடுகைக்கும் பூரண விஷயமாய் இருக்கும் ஸ்ரீ யபதியை அடைந்தேன்
விசாரித்துப் பார்த்த இடத்தில் வேதாந்த அர்த்தமும் அதுவே –
பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம் –
யம வஸ்யதையை தவிர்க்கும் அளவு அன்று
செவிக்கு இனியதுவும் புண்டரீகாஷனுடைய திருநாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் –
எனக்கு ஒருத்தனுக்குமேயோ
பூமியில் உள்ளாருக்கு எல்லாம் ஸ்தானம் திருநாமம்
கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே
ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்
குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக
லபித்தேன் –
பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –
யாத்ருச்சிகமாக அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்
அத்தனையே –
(திருநாமத்தை பெருமையையும்
அது உடையவரின் பெருமையையும்
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா கோரேஷு ச வியாதி ஷோ வர்த்தமாநா
சங்கீர்த்த நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகி நோ பவந்தி
அந்ய தீயான் குணான் அந்யத்ர த்வஸோ அதி ரோப்ய பணி தி -ஸ்ரீ ஸ்தவம் –8-என்று
மற்ற ஒருவனுடைய குணத்தை அது இல்லாத வேறே ஒருவன் இடம் ஏறிட்டுப் பாடுவதே ஸ்துதி –
இவனுக்கோ சொன்னவை அல்பமாய் சொல்லாதவை அசங்க்யேதமாய் இருப்பதால் கவிக்கு நிறை பொருளாய் நிற்கிறான்
நேர் பட்டேன் -யாதிருச்சிகமாக அடையப் பெற்றேன் -நிர்ஹேதுக கிருபையால் அடையப் பெற்றேன்
விதி வாய்க்கின்று காப்பார் யார் –5-1-1-
ஆழியான் அருள் தருவான் அமைகின்றன அது நமது விதி வகையே –10-6-1-
விதி நிர்மிதமேதத் அந்வயம் -ஸ்தோத்ர ரத்னம் –51-
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த விழுப்பொருளும் அதுவேயாய் இருந்தது
இடறி விழுந்த போது விலை மதிப்பற்ற மாணிக்கமே நம் கைப்பட்டது என்று உணர்ந்தேன் -)
அப்பிள்ளை உரை –
கேட்கிற எனக்கு செவிக்கு தென்றலும்-சிறு பனித் துளியும் பட்டால் போல்
நிரதிசய போக்யமாய் இருப்பதுவும்
வாத்சல்யத்தாலே -(செவ்வரியோடிய நீண்ட அப் பெரியவாய) -குதறிச் சிவந்த திருக்கண்களை யுடையவனாய்
ஆஸ்ரித வ்யாமுக்தனுடைய ஸர்வேஸ்வரனுடைய திரு நாமமாய் இருக்கும்
எனக்கு ஒருத்தனுக்கும் அன்றிக்கே பூமியில் உள்ளாருக்கு ஒதுங்கி வாழும் வாசஸ் ஸ்தானம்
ஸ்துத்யனுக்கு வஸ்துதா
ஒரு பூர்த்தி அன்றிக்கே இருக்க
ஸ்ரோதாவானவன் அங்கும் இங்கும் கதிர் பொருக்கி நிரப்ப வேண்டி இருக்கும் நாட்டார் படி இல்லாமல்
அந்தத் திருநாமம் கவி பாடுபவனுக்கு வேண்டிய ஸ்வரூபாதிகள்-(ரூப குண சேஷ்டியாதிகள் ) பரிபூர்ணமாய்
நிறை பொருள் -நிறைவைச் சொல்ல சொற்கள் இல்லை
பரிபூர்ணமான வாஸ்யனாக நின்றவனை யாதிருச்சிகமாகப் லபித்தேன்
நேர் பட்டேன்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் – பகவத் கிருபையால் லபிக்கப் பெற்றேன்
யாதிருச்சிகமாக அளவு அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்க
வேதாந்த பொருளின் ஸித்தமான அர்த்தமும் அதுவேயாய் இருந்ததே –
——————————————————————————
வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி
எங்கனே என்னில்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ
பிரசித்தம் அன்றோ -என்கிறார் –
அப்பிள்ளை உரை அவதாரிகை
வேத ஸித்தமான அர்த்தம் இங்கனே என்று நீர் அறிந்த படி எங்கனே என்ன
நான் ஒருவனுமா இன்றாக அறிந்தேன்
சர்வ லோக பிரசித்தம்
(லோகம் -வேதம் என்றும் உலகோர் என்றும் )
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-
பதவுரை
தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேஸ்வரனாயிருந்து
வாமனனாய் அழகிலும் வராஹமாய் அளவிலும் இரண்டிலும் குண ங்களிலும் பெருமையால் அத்விதீயம்
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப் படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக-இன்று முடிவாக வரை
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –
வாமநனான தான் தனியே சென்று பரந்த பூமியை பரிக்ரஹித்த காலத்தில்
திருவடிகளின் கீழ் அகப்படுத்தினத்தையும்
அத்விதீய வராஹமாய் பூமியைக் குத்தி எடுத்துக் கோரைப் பல்லிலே தரித்ததையும்
நான் ஒருவனுமே இப்போதாக அறியாது இருக்கிறேன் அன்று –
தான் ஒருவனாகித் –
வாமனனாய்
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் –
வாமனனாய்
(ஒருவன் என்றும் வாமனன் என்றும் பர்யாய சொற்கள் போலும் )
பரப்பான பூமியை
வியாபித்து தன் திருவடிக்குள்ளே அடங்கும்படி
இட்டுக் கொண்டு
அச் செயலாலே அத்விதீயனாய் –
தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்
பிரளயம் கொண்ட பூமியை
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடும்படி
இடந்து எடுத்து
மகா வராக ரூபியாய் பெரிய பூமியை
திரு எயிற்றில் ஏக தேசத்திலே தரித்ததும்
யானொருவன் இன்றா வறிகின்றேன் அல்லேன்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ –
(அறிகின்றேன் அல்லேன்
முழுச் சொல்லாய்
அறியாது இருக்கிறவன் இன்றாக நான் ஒருவனும் அல்லேன்
என்றும்
எல்லாரும் அறிகிறார்கள் )
(ஒருவனாகி -வாமணனுக்கு பர்யாயம் போல் -வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்ய ஸீமா –
ஒரு மாணிக் குறளாகி -திருவாய் -1-10-1
இரு நிலத்தை சென்று அங்கு அடிப்படுத்த சேய் -என்ற கடை அடியோடு தான் ஒருவனாகி கூட்டிப் பொருள் கொள்ளலாம்
மாசு உடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் -இதுவும் அத்விதீயம்
பல அறிவாளிகளும் இவற்றை அறிவார்களே
இதம் விஷ்ணோர் விசக்ரமே
த்ரீணி பதா விசக்ரமே
விசக்ரமே பிருத்வீ மேஷா ஏதாம் ஷேத்ராய விஷ்ணு
த்ரிர் தேவ ப்ருதிவீ மிதி ப்ரவிஷ்ணு
விஷ்ணோர் நுகம் –விசக்ரமாணஸ் த்ரே தாருகாய
உபே தே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே
ஸம் நோ விஷ்ணு ருருக்ரம
விஷ்ணு க்ராந்தே வஸூ ந்தரே
உத்த்ருதா அஸி வராஹேண கிருஷ்ணேந
என்ற வேத கோஷங்கள் உண்டே )
அப்பிள்ளை உரை
தான் அத்விதீயனாய் சர்வாதிகனாய் இருந்து மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று
பரப்பை யுடைத்தான பூமியை அத்தசையிலேயே
தன் திருவடிகளின் கீழ் அடங்கும்படி
ஸகல பலப்ரதன் – ஸ்ரீயப்பதியாய் இருந்தும் – கையேந்தி -ஆகவே ஒருவன்
இட்டுக்கொண்ட சிறு பிள்ளையாய்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே பின் வையாதே அத்விதீயமான அழகை யுடைய
உப மானம் அபிமானம் இல்லாத மானமிலா பன்றியாய்
அளவில்லாத பரிமாணம் இல்லாத -அழகில் அத்விதீயன்
பிரளயத்தில் மூழ்கி அண்ட பித்தியிலே ஒட்டிக்கிடந்த பூமியை எடுத்து
திரு எயிற்றிலே ஏக தேசத்தில்
நான் ஒருவனே இன்றாக அறிகிறேன் அல்லேன்
இது சர்வ லோக பிரசித்தமாய் இருந்தவை அன்றோ –
———————————————————————————
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்-
(சேயன் மிகப் பெரியன் துவரைக் கோனாய் நின்றவன் -அஹமின் அர்த்தம்
ஆயனாய் நின்றவன் அணியன் சிறியன்-மாமின் அர்த்தம்
இரு அவஸ்தையிலும் நின்ற மாயன்
இப்படி ஏழு பதங்களுக்கும் அர்த்தம் கூட்டிக் கொள்ள வேண்டும்
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர்
அரங்கன் ஆயன் கொண்டல் வண்ணன் கோவலன்
பத்துடை அடியார்களுக்கு எளியவன்
பிறருக்கு அறிய வித்தகன்)
அப்பிள்ளை உரை -அவதாரிகை
பிரளயம் கொண்ட பூமியை இடந்து எடுத்து ரஷித்ததை அறியாத அளவேயோ
சம்சாரப் பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்காக அவன் அருளிச் செய்த வார்த்தையை தான்
அறியப் பெற்றதோ என்கிறார்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–
பதவுரை
சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந் நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப் பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகா புரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ஸ்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.
தூரஸ்தனாயும் சமீபஸ்தனாயும்
மிக்க மேன்மையை யுடையனாயும் அத்யந்த ஸூலபனாயும்
ஆச்சர்ய சேஷ்டிதனாயும் துவாரகா நாதனாயும்
எழுந்து அருளி இருக்கிற கோபாலன் பாரத யுத்தத்தில் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தை
லோகத்தில் யதார்த்த ஞானம் இல்லாதவர்களாய்
சத்ருக்களாய்
அப்யஸியாத வர்கள் ஆவார்கள் –
சேயன் மிகப் பெரியன் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூகளுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரஸ்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யனாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாஹரணம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல -ஆச்சர்ய குணத்தை உடையவன் –
(மாயம் இதுவே என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு உள்ளம்
கிருஷ்ண சேஷ்டிதங்களில் தொட்ட தொட்ட இடங்களிலும் மாயம் உண்டே )
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் (சகல தூருக்கும் பொறுப்புக்கும் ) நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே
ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் (16-19)-என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்
(உலகத்து மெய்ஞ்ஞானமில் ஏதிலராய்க் கல்லார் என்றபடி
அவனைப் பகைக்கவே ஏதும் இல்லாதவர் ஆவார் )
(சேயன்
ந த்வாம் கேசந ஜாநதே
ய ந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-55-
ந ஸ ஸக்யஸ் த்வயா த்ரஷ்டும் மயாந்யைர் வாபி சத்தம
ஸர்வேஷாம் ஸாக்ஷி பூதோ அசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் –பாரதம் -மோக்ஷ தர்மம்
அத்யாபி மாம் ந ஜாநந்தி ருத்ரேந்தாஸ் ஸ பிதா மஹா –ஸ்ரீ வராஹ புராணம்
நா அஹம் ப்ரகாஸ ஸர்வஸ்ய –ஸ்ரீ கீதை
ந யஸ்ய ரூபம் ந பல ப்ரபாவவ் ந ச ஸ்வ பாவ பரமஸ்ய பும்ஸ
விஞ்ஞாய தே ஸர்வ பிதா மஹாத்யைஸ் தம் வாஸூ தேவம் ப்ரணமாம் ய சிந்த்யம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ந தே விஷ்ணோ ஜாய மாநோ ந ஜாதோ தேவ மஹிம்ந பரமந்தமாப –
மிகப்பெரியவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –தைத்ரியம்
சேயன்-அணியன் -மிகப் பெரியன் -சிறியன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் –திருவாய் –1-3-4-
பத்துடை அடியார்களுக்கு எளியவன்
பிறருக்கு அறிய வித்தகன்
நமோ நமோ வாங் மனஸாதி பூமயே நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா வீபூதயே நமோ நமோ அநந்த தயைக சிந்தவே -என்று
சேயன் அணியன் மிகப் பெரியன் சிறியன் -நான்கு திரு நாமங்களையும் அடி ஒற்றினார்
சிறியன் -அவதாரத்துக்கு காரணம் கருணையே -அநந்த தயைக சிந்தவே -என்கிறார்
ஆயன் -அணியன் சிறியன்
துவரைக் கோனாய் நின்ற மாயன் -சேயன் பெரியன் –
இடையனாய்ப் பிறந்த நீர்மையும்
ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகானாய் நிற்கும் பெருமையும் உடையனாய்
பதினாறாயிரம் ஸ்திரீகளுக்குப் பல வடிவு எடுத்துக் கொண்டு
ஏக காலத்திலே ஆடல் கொடுக்க வல்ல ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் -அப்பிள்ளையார் உரை
சரம ஸ்லோகம் கல்லாமைக்குக் காரணம் -தத்வம் ஹிதம் புருஷார்த்தம் பற்றிய மெய் ஞானம் இல்லாமல்
ஏதிலராம் -பகவத் த்வேஷிகளாய் இருக்கையை காரணம்
ஏதிலர்-பகைவர்
தாநஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான்
ஷிபாம் யஜஸ்ரம ஸூப அஸூரீஷ் வேவ யோநிஷூ –கீதை –16-19-
ஆஜ்ஜாஸ் சேதீ மம த்வேஷீ
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய
தண்ணளி மிக்க ஈஸ்வரனும் தனது திரு உள்ளத்திலே எதிரிகளாய் நினைக்கும் படி இருப்பவர்கள் -)
அப்பிள்ளை உரை
அனுகூலரான யசோதாதிகளுக்குக் கையிலே கோலைக் கொடுத்து
பசு மேய்த்து வா என்று நியமிக்கலாம் படி சிறு பிள்ளையாய்க் கொண்டு மிகவும் ஆசன்னனாய் –
வர்த்திக்கும் நீர்மையை யுடையவனாய் -(சிறியனாய் அணியனாய் )
அந்நிலை தன்னிலே
அநாஸ்ரிதரான
துரியோதனாதிகளுக்கு எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியவனாய்க் கொண்டு
தூரஸ்தானாய் (பெரியன் சேயன் )இருக்குமவனாய்
இவை இரண்டுக்கும் உதாஹரணம் என்னலாம் படி
இடையனாய் பிறந்த நீர்மையும்
துவாரகைக்கு நிர்வாஹனாய நிற்கும் பெருமையும் யுடையவனாய்
(மாமின் அஹமின் இரண்டின் அர்த்தம்
ஆஸ்ரய சவுகர்யண ஆபாதக -ஆஸ்ரித கார்ய ஆபாதக கல்யாண குணங்களை யுடையவன் )
பதினாறாயிரம் ஸ்த்ரீகளும் பல வடிவு எடுத்துக் கொண்டு ஏக காலத்திலேயே ஆடல் கொடுத்து நிற்கும் மாயம்
(ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -அவதாரத்தில் மூன்று குணங்களும் )
பாரத சமரம் அன்று
திருத் தேர் தட்டிலே -சரம ஸ்லோகம் -அர்ஜுனனைக் குறித்து அருளிச் செய்த
மெய்ம்மைப் பெரு வார்த்தையை அறியாதார் -அதிகாரியாதவர்கள் யதா ஞானத்தில் அந்வயிக்காமல்
நிக்ரஹத்துக்கு ஆளாகும் சத்ருக்களாய் இருப்பார்கள் என்கிறார்
———————————————————————–
நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்
என்னச் சொல்லுகிறார் –
(ஸ்ரீ மஹா பாரதத்துக்கு ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் போலவும்
ஸ்ரீ ராமாயணத்துக்கு ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் போலவும்
ஸ்ரீ திருமலைக்கு மேம்பொருள் பாசுரம் போலவும்
இப் பிரபந்தத்துக்கு இப் பாசுரம்
அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதா சாரம்
தத்வ விவேகம் தொடங்கி –பல விஷயங்கள் உண்டே
சரம ஸ்லோகம் ஒன்றே ஸாரம்
அத்தையே மற்றவை சொல் அல்ல -அறம் அல்ல
இவனே உபாயம் -அறம் என்கிறார் இதில் )
(கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் -உபாயம் என்னும் சொற்கள் பிரமாணங்கள் அல்ல –
இவை உபாயாந்தரங்கள் -அசேதன க்ரியா களேபரங்கள் -இவை அவனே உபாயம்
அவனே உபாயம் என்னும் சொல் ஒன்றே பிரமாணம் -கண்ணனே உபாயம் -ப்ரமேயத்தில் நோக்கு
விஷயம் ஒன்றே
விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
சொல் அல்ல பிரமாணம் ஆகாது -பிராமண பரம்
அறம் அல்ல -உபாயம் அல்ல– ப்ரமேய பரம்
கீழே மாமின் அஹமின் அர்த்தம்
இதில் ஸர்வ தர்மான் பரித்யஜ -வின் அர்த்தம்
நாரணனே -ஏகம் சரணம் வ்ரஜ -வின் அர்த்தம் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் –கல்லார் ஏதிலர் என்று நாட்டாரை கர்ஹிக்கறது என்
கற்ற நீர் தான் பொருள் சொல்லிக் காட்டும் என்ன
இப் பாட்டில் சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச்
இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-
பதவுரை
(முக்தி மார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் இல் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,-கர்ம யோகம் உபாயம் அல்ல என்றாகிலும்
இல்-உபாயம் சரணம் வீடு தஞ்சம் –
துறவறம் இல் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் இல் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திரு நாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந் நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ் வுண்மையை
அன்று என்பார் ஆர்–அது மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது)
வேதத்தில் உபாயங்களாகச் சொல்லப்பட்ட கிருஹஸ்த தர்மமும்
அல்லாத நிவ்ருத்தி தர்மமும்
இதிஹாஸ புராணங்களில் ப்ரதிபாதிக்கப்பட்ட அல்லாத தர்மமும் ஒரு சொல் அன்று
உபாயங்கள் ஆக மாட்டா
விலக்ஷணங்களான கர்ம ஞானாதிகளும்
நாலு வேதங்களில் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்லாக்யமான தபஸ்ஸூம்
நாராயணனுடைய ப்ரஸாதத்தாலே பல பிரதங்கள் ஆகும்
இப்படி அன்று என்று சொல்லுவார் யார் -ஒருவரும் சொல்லார்கள் —
இல்லறம் இல்லேல்-
கர்ம யோகம் (உபாயம் )அன்றாகில்
பிரவ்ருத்தி தர்மம் அன்றாகில் -என்னவுமாம்
துறவறம் இல் என்னும் சொல் –
நிவ்ருத்தி தர்மம் ஸ்தானம் பிரமாணம் அன்று –
ஜ்ஞான யோகம் என்னவுமாம்
அறம் அல்லனவும் சொல்லல்ல –
அல்லாத தர்மங்களை விதிக்கிறவை
பிரமாணங்களும் அன்று
அல்லாத தர்மங்கள் என்கிறதும்
கர்த்ருத்வ பலாபிசந்தி
ரஹிதமாக அனுஷ்டிக்கும் கர்மங்கள்
அன்றிக்கே
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தநாதிகள் ஆகவுமாம்
சொல்லறம் அல்லன -என்று
பதச் சேதமான போது பிரமேய பரம்
இல் என்னும் சொல் (சொல் அல்ல ) -என்ற போது பிரமாண பரம் –
நல்லறம் ஆவனவும் -நாரணனே ஆவது
பலாபிசந்தி ரஹிதமான கர்மங்கள்
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தனங்கள்
நால் வேத மாத்தவமும் –
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம்
இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
இதர தர்மங்களைச் சொல்லுகிறது பிரமாணங்கள் அன்று என்று நீர்
சொல்லுகிறது எத்தாலே என்னில்
அவை பல பிரதங்கள் ஆம் போது பகவத் பிரசாதம் வேணும் –
பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹ கரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
ஈதன்று என்பார் ஆர் –
அல்லாதவை போல் அன்றிக்கே
உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-
கிருஹஸ்தன் பண்ணுகிற தர்மம் -கர்மாதிகள் –
மோக்ஷ உபாயமான கர்மாதிகளைப் பிரதிபாதிக்கும் பிரமாணங்களும்
தத் ப்ரமேயமான கார்ஹஸ்த்யாதி தர்மங்களுமான இவை
பிரமாணங்களும் அன்று –
ப்ரமேயங்களும் அன்று
இனி பிரமாணம் சரம ஸ்லோகமே
தத் ப்ரமேயமும் ஸித்தோ உபாயமான ஈஸ்வரனே என்று பாட்டுக்குத் தாத்பர்யம் –
(இல் என்னும் இல்லறம் அறம் அல்ல -ப்ரமேய பரம்
இல்லறம் இல் என்னும் சொல் சொல் அல்ல -பிராமண பரம்
இதே போல் துறவறம் அல்லவறம்
இவை உபாயமாகும் பொழுது அவன் ஸஹ காரி ஆகவேனும்
அவன் உபாயம் ஆகும் போது மற்ற ஒன்றும் ஸஹ காரியம் வேண்டாமே
ஆகவே இவன் உபாயம் அல்ல என்று சொல்ல வல்லார் யார் -இதுவே பாசுர சுருக்க அர்த்தம் )
(இல்லறம்
கர்ம யோகத்தை சொல்லும் -யஜ்ஜம் தானம் தவம் போல்வன க்ருஹஸ்தனுக்கே தானே
இல் -உபாயே க்ருஹே ரஷித்ரோ ஸப்த சரணம் இத்யயம் வர்த்ததே
சரண சப்தமும் க்ருஹ சப்தமும் பர்யாயம்
ஆக இங்கு இல் என்று உபாயம
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:–கீதை -3-19-
தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
ஸமாசர-செய்து கொண்டிரு,
ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.–
ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி–கீதை -3-20-
ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும்,
கர்மணா ஏவ-செய்கையாலேயே,
ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்,
லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.
ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும்
நீ தொழில் புரிதல் தகும்.
யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:–கீதை -18-46
யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ,
யேந இதம் ஸர்வம் ததம் – எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ,
தம்-அந்த பரமாத்மாவை,
ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்,
மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.
உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய
கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
இவை பிரமாணம் அல்ல
துறவறம் இல் என்னும் சொல்லும் சொல் அல்ல
ஞான யோகம் ஞான விசேஷ பக்தியும் உபாயம் என்பவையும் சொல் அல்ல
இல்லறம் ப்ரவ்ருத்தி தர்மம்
துறவறம் -நிவ்ருத்தி தர்மம்
அல்லன அறம்-பக்தி யோகம் என்பர் அப்பிள்ளார்
பலன் தருவது நாராயணனே
ஸர்வே வேதாஸ் ஸர்வ வேத்யா ஸ ஸாஸ்த்ரா ஸர்வே யஜ்ஜாஸ் ஸர்வ இஜ்யாச்ச கிருஷ்ண
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜன் ஸர்வ யஜ்ஜாஸ் ஸமாப்த்தா -என்றும்
யே ச வேத விதோ விப்ரா யே சாத்யாத்ம விதோ ஜநா
தே விதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம் -வன பர்வம் -71-123-
பரம புருஷனே உபாயம்
நாராயணம் பராயணம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே
லோகாநாம் தவம் பரோ தர்ம
ராமோ விக்ரஹவான் தர்ம
பாவநஸ் ஸர்வ லோகாநாம் த்வம் ஏவ
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் உச்யதே
புண்யா நாம் அபி புண்யோ அசவ் மங்களாநாஞ்ச மங்களம் என்று ரிஷிகள் உத்கோஷித்தார்கள்
அவனும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தமேவம் சரணம் கச்ச
தமேவ சாத்யம் புருஷன் ப்ரபத்ய
சரணம் மாம் ப்ரபத்யஸ்வ -என்றான்
அறம் தானாய் திரிவாய்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு
நெறி வாசல் தானேயாய் நின்றானை
நாராயணனே நமக்கே பறை தருவான்
களை கண் நீயே -என்றனர் மற்றும் உள்ள ஆழ்வார்களும்
இப்படிப்பட்ட அரும் பொருளை இல்லை செய்வாரும் உண்டோ
இப் பாசுரம் சரம ஸ்லோகார்த்தம் ஆவது
இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -என்றது
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
நாரணன் என்று மாம் அஹம் அர்த்தம்
நாரணனே -ஏவகாரம் -ஏவம் அர்த்தம்
நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் ஆவது -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி யின் அர்த்தம்
ஈதன்று என்பார் ஆர்-மா ஸூச வின் அர்த்தம் )
(செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-
செய்த வேள்வியர் –
சித்தோபாய நிஷ்டர்கள். விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்தா –
அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு
எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.
ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”- பாரதம்
வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.
சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை க்ருதக்ருத்யர் -எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.)
அப்பிள்ளை உரை
செய்த வேள்வியர் எல்லா விதங்களிலும் என்னையே பற்றினவர்கள் ஆவார்கள் –
சர்வ யஜ்ஜா ஸமாப்தர் -ஈட்டில் காட்டிய அர்த்தம்
ஏதிலர் ஆக மாட்டோம் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
கிருஷ்ணம் தர்மம் சநாதநம்
ராமோ விக்ரஹவான் தர்ம
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
நெறி வாசல் தானேயாய் நின்றான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
மோக்ஷ சாதனம் அறியாதே சம்சாரத்தில் பரிப்ரமிக்கிற உழன்று இருக்கும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -பிரவிருத்தி தர்மம் -கர்ம யோகம் புகல் என்று சொல்லும் பிரமாணங்களும்
ஞான அம்ருதம் -கர்ம நிரபேஷ ஞான யோகம் புகல் என்று சொல்லும் பிரமாணங்களும்
தத் உபய ஸாத்யமான பக்தி யோகம் நாம சங்கீர்த்தனம் திவ்ய தேச வாசம் முதலான
அல்லாத உபாயங்கள் புகல் என்று சொல்லும் பிரமாணங்களும்
பிரமாணங்கள் அல்லவை ஆகும்
விலக்ஷண தர்மமான ஞான பக்தி யோகங்களும்
கர்ம யோகம் தபஸ்ஸாதிகள்
நிரபேஷ உபாய பூதனான நாராயணனுடைய பிரசாதத்தாலே பல பிரதங்கள் ஆகும்
ஸித்த உபாயமோ
ஸூசகம்
ஸ்வரூபத்துக்கு ஏற்றதாயும் -அனுரூபமாயும்
ஸ்வா தந்திரமே கலசாமல்
இதர உபாய நிரபேஷமான ஸித்த உபாயத்தை
இத்தை உபாயம் அல்ல என்று சொல்ல வல்லார் யார்
வேத வித்துக்களும் அன்று என்று சொல்ல மாட்டார்
அத்யாத்ம வித்துக்களும் அன்று என்று சொல்ல மாட்டார்கள்
பூர்வ பாக நிஷ்டரும் சொல்ல மாட்டார்
இல்லறம் தொடங்கி –அறம் அல்லவும் சொல் அல்ல -அம்சத்தாலே —
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய பதங்களின் அர்த்தம் சொல்லப்பட்டது
நாரணன் மாமின் அர்த்தம்
அவதாரணத்தால் ஏக பத அர்த்தம்
ஆவது இது அன்று -உபாயாந்தரங்களுக்கு எதிர்த் தட்டான இது அன்று -என்று
யாராலும் சொல்லுவார்களோ என்பதால் ஸித்த உபாயத்தின் ஏற்றம் சொன்னபடி
வேத புருஷனும் வேத்யனான ஈஸ்வரனும் வைதிகரான ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும்
வாசியற ஏக கண்டராக இத்தையே சொல்லுவார்கள்
ந்யாஸ இதி ப்ரஹ்ம ந்யாஸமே ப்ரஹ்மம் வேதம் சொல்லுமே
பாவநஸ் தர்ம லோகா நாம் த்மேவ ராகு நந்தன -இப்புடைகளில் வைதிகரான ரிஷிகள்
சரண்யன் வார்த்தையும் –
மாம் ஏக மேவ சரணம்
சரண்யம் மாம் ப்ரபத்யஸ்வ
அறம் தானாய் திரிவாய்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
களை கண் நீயே சகோதரிகளான ஆழ்வாராதிகள் வார்த்தை–ஆழ்ந்த நம்மை ஆளும் குலம்
ப்ராப்ய ப்ராபக ஐக்கியம் சொல்லும் குலம்
இல்லில் இருந்து செய்யும் தர்மம் இல்லறம் கர்ம யோகம் என்றபடி
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply